EPISODE 146
என்ன? இன்னும் ஆளைக் காணோம்! மாமா என்ன பண்றீங்க? என கேட்டுக்கொண்டே வண்டியில் தாளம் தட்டினான் ருத்ரன்.
அதற்குள் இன்னொரு பக்கம் கதவு திறக்கும் சத்தம் கேட்க,
மாமா இந்த பக்கம் வந்துட்டீங்களா? என்று ருத்ரன் திரும்பி பார்க்க..
அங்கே மிதுன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
ச்ச! மாமா என்ற வார்த்தைக்கு அர்த்தம் போயிடுச்சே! என்று அவன் முனகினான். டேய் என்ன டா என்ன மர்மரிங்? என மிதுன் கேட்டுக் கொண்டே அமர்ந்தான்.
ஹலோ! நான் உங்க கிட்ட பேசல. உங்க வேலைய நீங்க பாருங்க என்று ருத்ரன் திரும்பிக் கொண்டான்.
ஒரு பக்கம் ருத்ரன் திரும்பி மாமா! சக்தி மாமா! என அழைக்க, இன்னொரு பக்கம் ஹே என்ன டி பண்ற ரிதம் சீக்கிரம் வா! என அழைத்தான்.
டேய் காரை விட்டு இறங்குங்க டா! என கணீர் குரல்.
யாரென மிதுன் பார்த்தவன் முகம் அப்பட்ட அதிர்ச்சியில் விரிந்தது. வேற யார் மகி தான்.
மகி நீயா என நம்ப முடியாமல் மிதுன் கண்கள் விரிந்தது. அதை பார்த்ததும் ருத்ரன் வாய் விட்டு சிரித்தான்.
மகியின் அதட்டலில் அவமானத்தில் மிதுன் முகம் கருத்து போக என்ன டி? என்றான் ஆவேசத்துடன்.
இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா! என்ன ஆகும்னு தெரியுமா? என்னடா மித்துன் பொறுப்பில்லாம இருக்க? என்று கேட்டார் மகி.
இப்போ உனக்கு என்னடி வேணும்?. என்று அசால்ட்டாக அவன் கேட்க.. வார்த்தைக்கு வார்த்தை டி சொல்றீங்க? என்ன பழக்கம் இது? அம்மாவை மரியாதையோடு கூப்பிடரது சரி இல்ல என்று ருத்ரன் சொல்ல, உன் வேலையை நீ பாருடா என்கிட்ட அடி வாங்கிக்காத. நானும் போனா போகுது ரிதம்ட தம்பின்னு உனக்கு மதிப்பு கொடுத்து இருக்கேன். இல்லன்னா ஒரு அரை விட்டம்னா பல்லு கொட்டிப் போயிடும் என்று கூறினான் மிதுன் தேவ்.
மகி ருத்ரனை பார்த்தபடி தீரா கண் சொல்லிட்டு போறான் விடு. அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். விடு என்று கூறியவர். மிதுன் பக்கம் திரும்பி, அந்த கார்ல உனக்கு என்ன வேலை? இறங்கி வா என்று அதட்டினார்.
ருத்ரன் சிரிப்புடன் ம்ம் பார்த்தீர்களா? தேவைதான் உங்களுக்கெல்லாம்! என்று நினைத்தான்.
மிதுன் நான் ஏன் உக்கார கூடாது? என எதிர் கேள்வி கேட்க, உட்கார கூடாது! கேள்வி கேட்காத! இறங்கு என்று கூறினார் மகி. மிதுன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இருடி மகி உன்ன வெச்சிக்கிறேன் என்று வாயில் முனங்கி கொண்டே காரில் இருந்து இறங்கினான்.
ருத்ரன் மிதுனை பார்த்து சிரிக்க மகியின் பார்வை ருத்ரனின் மீது பட்டு கண்ணா தீரா!! என்று அழைக்க.. சொல்லுங்க மாமி என்றான்.
நீங்களும் கொஞ்சம் இறங்கினா நல்லா இருக்கும் என்று மகி சொல்ல, நானுமா! என்று ருத்ரன் அப்பட்டமான அதிர்ச்சியில் பார்த்தான்.
மிதுன் டேய் எறங்குடாகுறாங்களே! கேட்கலயா? இல்ல காது செவுடா? அதான் மகி….எங்க அம்மா சொல்றாங்களே! கேட்கல என்று அதட்டினான்.
ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக காரை விட்டு இறங்கிக் கொள்ள, உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டார். போங்க..
யாரு யாரு கூப்பிட்டா?
யாரை சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மகி அது வந்து இன்பா இன்பா அண்ணா உங்களை கூப்பிட்டாங்க போங்க. என்று கூறினாள்.
என்னா? நான் வரல என்று ஒரே நேரத்தில் இருவரும் கூறிக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
மகியின் முகத்தில் சட்டென பிரகாசம் மின்ன, இவங்க ரெண்டு பேரயும் சமாளிக்க ஒருத்தரால தான் முடியும். அது இன்ப அண்ணா மட்டும்தான் என்று நினைத்தவர்..ஆமா உங்க ரெண்டு பேரையும் உடனே வர சொன்னாரு! போங்க. சீக்கிரம் போங்க.. நீங்க நிக்காதீங்க! என்று இருவரையும் அடிக்காத குறையாக துரத்தினார்.
மகி என்னால முடியாது என்று மித்துன் மல்லு கட்டிக் கொண்டிருக்க.. நானும் போக மாட்டேன். நான் என் மம்மியை போய் பாத்துக்குறேன் என்று ருத்ரன் அங்கிருந்து விவேகாவை பார்க்க சென்றான்.
சரி டா மிதுன் அப்ப அப்பாவ போய் பாக்குறியா? உன்கிட்ட ஏதோ என்று ஆரம்பிக்க..
இப்ப உனக்கு என்னடி வேணும்? எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ற? என்று மிதுன் கேட்டான்.
தூறி உன்னை கூப்பிடுறா! உன்கிட்ட ஏதோ பேசணுமா போ டா? என்று துரத்திவிட்டார்.
மிதுன் தேவ் யோசித்துக் கொண்டே சென்றவன். இப்போ எதுக்கு எல்லாரையும் துரத்தி விட்டுட்டு இருக்க? Try to understand me! சொல்றதை கேளு. உனக்கு தெரியாது. நான் ஒரு பெரிய பிரச்சனையா டேக்கல் பண்றதுக்காக தான் அந்த காருக்குள்ள போறேன். சாரி அந்த காரில் வரேன்னு சொல்றேன். என்று கூறினான்.
என்ன பிரச்சனையை சரி செய்ய அந்த கார்ல வர? அப்படி என்ன அந்த கார்ல பிரச்சனை நடக்க போகுது? என்று மகி கேட்க..
அய்யோ மகி உன்னோட அவசரத்தினால தான் ரிதம் போயும் போயும் அந்த சக்திய கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவனை பத்தி உனக்கு தெரியாது. ரிதம்.. I mean ஒரு இடத்திலும் துளி கூட ஒட்டாது. நான்தான் போய் அவங்க ரெண்டு பேரையும் பஞ்சாயத்து பண்ணி, ரிதம்மை அவன்கிட்ட இருந்து காப்பாத்தணும். நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா? என்று விலிக்கினான்..
அதில் கடுப்பான மகி மித்துனை கோபமாக பார்த்து நீ என்கிட்ட அடிவாங்கி எவ்வளவு நாள் இருக்கும்? என்று கேட்க..
மகி நீ என்னை அடிச்சதே இல்லையடி நான் good soul டி! என்று அவன் தன் அன்னைய பார்த்தான்.
அதேதான் நானும் சொல்றேன் நீ என்கிட்ட அடி வாங்குனதில்லன்னு பொய் சொல்லிட்டு ஊரை ஏமாற்றலாம். சின்ன வயசுல சீப்புல தடுப்பு தடுப்பா வர்ற அளவுக்கு அடிச்சிருக்கேன். எனக்கு ஞாபகம் இருக்கு. உனக்கு மெமரி லாஸ்ல இருக்கும். இட்ஸ் ஓகே அதை நியாபக படுத்தவா? திரும்ப அடி வேணும்னா போ அந்த காருக்கு போ! நானும் சாட்டை எடுத்துட்டு வரேன். உனக்கு ரொம்ப வசதியா இருக்கும். என மகி உச்ச ஸ்தானியில் பேசினார் .
மிதுன் தேவ் உதட்டை பிதுக்க தன் அன்னையைப் பார்த்தவன். நீ ஓவரா பண்ற! என்ன ரொம்ப டேமேஜ் பண்ற! அவன்கிட்ட வேற பேசிட்ட! இனி உன்னை கைல பிடிக்க முடியாது. இருடி அது சீக்கிரம் ஆப்பு வைக்கிறேன்! என்று நினைத்துக் கொண்டே நேராக இதழ், சிவன்யா பவன்யா அனைவரும் இருக்கும் காருக்கு சென்றான்.
சத்யதேவ் மற்றும் ரிதம் இருவரும் காரின் பக்கம் வந்து சுற்றிலும் பார்த்தார்கள். அந்த இடத்திற்கு வந்த விவேகா சக்தி கண்ணா! உனக்கு தான் கார் ஓட்ட தெரியும்ல்ல என்று கேட்க
ஹான் மாமி! ஆமா எங்க பாப்பா எல்லாம் காணோம்? என்று சுற்றிலும் பார்த்தான். அது அவங்க எல்லாரும் முன்னாடி கார்ல கிளம்பிட்டாங்க. நாங்களும் இப்போ கிளம்பிடுவோம். இங்க சின்ன வேலை இருக்கு. ஆல்ரெடி அக்காவும் சூர்யா அண்ணாவும் கிளம்பிட்டாங்க. வீட்டுக்கு நேரமே போகனும். நீங்க ரெண்டு பேரும் இந்த கார்ல வந்துடுங்க. கண்டினியூவா வரணும். நடுவுல எங்கேயும் நிக்கக் கூடாது. என்று விவேகா படப்படவென ஒப்பித்தார்.
ரிதம் போனை நோண்டிக் கொண்டே எங்கம்மா ஆக்னஸ் வீணா ரெண்டு பேரையும் காணோம். என்று கேட்க..
அவங்க ரெண்டு பேரும் பவன்யா கார்ல போயிட்டாங்க வாங்க… சீக்கிரம் ஏறு! நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பனும். அப்பதான் அங்க போய் ரீச் ஆகிட்டு இன்னும் கொஞ்சம் சடங்கு எல்லாம் இருக்கு என்று கூறினார் விவேகா..
என்ன சடங்கு? எல்லா சடங்கும் இங்கேயே கிண்டுங்க! எனக்கு இன்னும் 3 டேஸ்ல டியூட்டி ஜாயின் பண்ணும் என்று ரிதம் கூறினாள்.
ஹே இஷ்டத்துக்கு பேசாத போ! சக்தி கூட்டிட்டு வந்துரு டா கண்ணா! அவளை பத்திரமா.. எனக்கு வேலை என்று அவர் திரும்ப..
அம்மா நில்லு என்று ரிதம் கூப்பிட.. சத்திய தேவும் மாமி என்று அழைத்தான்.
அது வந்து உள்ள மாமா வேற கூப்பிட்டுக்கிட்டே இருக்காருப்பா. நான் போகணும். படபடன்னு ஏறுங்க டைம் ஆச்சு இன்னும் ரெண்டு நிமிஷத்துல காரை ஸ்டார்ட் பண்ணிடனும். நல்ல நேரம் வேற போயிட்டு இருக்கு..ஏறுங்க நீங்கதான் முன்னாடி போகணும் என்று விவேமா அவசரப்படுத்த..
சத்யதேவ் வேற வழியில்லாமல் காரை ஸ்டார்ட் செய்தான். ரிதம் அதே இடத்தில் நிற்க, ஹே மாப்பிள்ளை ஏறிட்டங்கள! சீக்கிரம் ஏறு என்று அதட்ட..
நீ ஓவரா பண்ணிட்டு இருக்க என்று ரீதம் பேச..
என்கிட்ட அடி வாங்காத ரொம்ப நல்ல மைண்ட் செட்டில் இருக்கேன். ஒழுங்கா போய் ஏறிக்க. இல்ல… தோசை திருப்பி பழுத்துரும். உன் புருஷன் முன்னாடி அடிவாங்க உனக்கு சம்மதம்னா சொல்லு. இப்பவே போய் மேல இருக்கு எடுத்துட்டு வரவா? என்று கேட்க..
போடி என்று சொல்லிக்கொண்டு ரிதம் காரில் ஏறினாள்.
சத்யதேவ் இன்னொருமுறை ஜன்னலில் இருந்து எட்டிப் பார்க்க.. விவேகா பெருமூச்சு விட்டவள். அய்யோ என சத்திய தேவ் பார்ப்பதை பார்த்து என்னடா கண்ணா கிளம்பலையா? சீக்கிரம் சீக்கிரம் என்று அவள் சினுங்க..
சரி சரி இதோ புறப்படுறோம் என்ற அவன் காரில் காரை நகர்த்தினான். விவேகா போகும் அவர்களை பார்த்தவர். அப்பாடா எப்படியோ நல்லபடியாக கிளம்பிட்டாங்க! இந்த மகிய அக்கா ரொம்ப ரொம்ப மோசம். ருத்ரனையும் மிதுனையும் அவங்க ஹேண்டில் பண்ணிட்டு என்னை போய் இவங்க ரெண்டு பேரையும் ஹேண்டில் பண்ண சொல்லி விட்டுட்டாங்களே! சக்தி கூட அமைதியா இருக்கான். ஆனால் என் பொண்ணு! இவள வச்சு அவங்க எப்படி மேய்க்க போறானோ தெரியலையே? என்று நொந்து கொண்டே நின்றாள்.
அதற்குள் இன்பா வர சரி வாங்க கிளம்பலாம் என்று பார்க்க..
ஹே பேபி டயர்டா இருக்கு டி! வீட்டுக்கு போயிட்டு, காபி சாப்பிட்டு ஒரு நாள் ஸ்டே பண்ணிட்டு போலாம் டி! என்று கங்காவின் வீட்டுக்கு அழைக்க..
டேய் நாயே நிறைய வேலை இருக்கு. அவங்க ரெண்டு பேரும் எந்த நிலைமையில கல்யாணம் பண்ணாங்கன்னு தெரியும்தானே! என விவேகா ஆவேசப்பட்டாள்.
எனக்கு தெரியாமையா! எல்லாமே எனக்கு தெரியும்! என்று இன்பா சொல்ல..
அப்புறம் தெரிஞ்சும் இப்படி பேசுற! வாடா சீக்கிரம் காரை எடு! போகணும் போயிட்டு நிறைய சடங்கு எல்லாம் இருக்கு என்று விவேகா அவசர படுத்தினாள்.
என்ன சடங்கு? நைட்டு அந்த மாதிரி விஷயமா? என்று கேட்க..
வாய மூடுடா ராஸ்கல் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. தலைக்கு எண்ணெய் வைக்கணும். சின்ன சின்ன விளையாட்டலாம் இருக்கு.
புற விளையாட்டா பேபி என்று கண்ணக்குழி தெரிய சிரித்தவன். அவளை பார்த்து கண்ணடித்தான். செருப்பு பிஞ்சிடும் நாயே! டைவர்ஸ் இந்த வயசுல வாங்க நீ ரெடியா இருக்கியா? உனக்கு டயர்ட்டே ஆகாதாடா? என்று விவேகா கேட்க..
ஓவரா டேமேஜ் பண்ற சரியில்ல என்று இன்பா வேஷ்டியை மடித்து கட்டினார் .
கார எடு ராகவ்!
என்னால முடியாது என்று இன்பா அதே இடத்தில் நின்றார்.
சரிப்போ நான் தீராவை வர சொல்லி நானும் அவனும் போறோம் என்று சொல்ல வர ..
வாய மூடு எடுத்துட்டு வரேன் என்று அவர்கள் கிளம்பினார்கள்.
ரிதம் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். கொஞ்ச நேரம் கழித்து கார் ஓட்டும் நபரை கவனித்தாள். இப்படி கார் ஓட்டுறான்? என்று யோசித்தவள். அவளையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள். கல்யாண கலையில் அவள் அமர்ந்திருக்.. அவன் பாட்டு வேஷ்டி சட்டையில் இருந்தான். அப்போ நிஜமாகவே இந்த நாய் கூட நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்று ரிதமுக்கு ஒரு சின்ன கனவு போல இருந்தது.
இந்த திருமணம் அதையே யோசித்தவளுக்கு ருத்ரனிடம் சத்திய தேவ் கூறிய வார்த்தைகள் அனைத்தும் காதில் விழ, அதைவிட இன்று அவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்திலேயே ரிதம் கிடையாது. கோபம் தலைக்கு ஏறியது முகம் எல்லாம் சிவந்தது. அவன் பக்கம் திரும்பினாள். ரிதம்.
சத்ய தேவோ அவள் கீழே குனிந்து கொண்டு தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். அவ்வப்பொழுது மிரரையும் ரிதமையும் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.
சட்டென அவள் முகம் மாறுவதை பார்த்தவன். என்ன முகமெல்லாம் மாறுது ஒருவேளை மோஷன் வருமோ? என்று நினைத்தவன் சிரித்துக்கொண்டான். அவள் நிமிர்ந்து சத்தியத்தை பார்த்தாள்.
ஐயோ பாக்குறாளே என்று சத்ய தேவ் நினைத்துக்கொண்டு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
டேய் எதுக்கு என்ன கல்யாணம் பண்ண? என்ன அவன் கண்டு கொள்ளவில்லை..
டேய் உன்ன தான் எதுக்கு என்னை கல்யாணம் பண்ண யாரு யார கேக்குற என்று சுற்றிலும் பார்வையை சுழற்சியவன்.
கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் ரிதமுக்கு மேலும் கோபம் ஏறிட டேய் உன்ன தான் ராஸ்கல் கேட்டுட்டு இருக்கேன். எதுக்கு என்ன கல்யாணம் பண்ண? எதுக்குடா எனக்கு தாலி கட்டின? என்று மீண்டும் ரிதம் கேட்டாள்.
அப்படியா உனக்கு அதை பத்தி ஆக்சுவலி உனக்கு தெரியாதா? நான் எடுத்து கட்டினேன்? என்று அவன் அசால்ட் ஆக பதில் அளித்தான் .
ரிதம் கடுப்புடன் டென்ஷன் பண்ணாத சத்யதேவ் எதுக்கு என்னை கல்யாணம் பண்ண? நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லவே இல்லையே! என் விருப்பத்தை கேட்காமல் எதுக்குடா எனக்கு கல்யாணம் பண்ண ? என்று உடல் அதிர பேசினாள்.
அச்ச அச்சச்சோ விருப்பம் இல்லையா இப்ப என்ன பண்றது இத தாலி கட்டுறதுக்கு முன்னாடியே நீ சொல்லி இருக்கணும் சொல்லி இருந்தா நான் அப்பவே மணமேடையில் இருந்து எழுந்திருச்சு இருப்பேன் என்று கூறினான்.
ரிதம் அடுத்து பேச நினைத்தவள். எதையோ யோசித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து விட்டாள். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? ஏதாவது செய்ய வேண்டும்? யோசி! ரிதம் யோசி! இவன் உனக்கு வேண்டாம்! இவன் உனக்கு வேண்டவே வேண்டாம்! என்று அவனை காதல் கொண்ட மனது ஏமார்ந்த மனது உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தது.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக வர, என்னாச்சு மேடம்? எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க! என்று சத்யதேவ் அவளை சீண்டும் விதமாக கேட்க..
ரிதம் அவளை பார்த்து சரி எனக்கு டைவர்ஸ் கொடுத்திடு என கூறினாள் அசால்ட்டாக.
சட்டென சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான். சத்ய தேவ்.
அவளும் அவனை பார்த்தாள். அசராமல்.
என்ன கேட்ட? என சீட் பெல்ட்டை லூஸ் செய்தபடி அவள் புறம் திரும்பினான். சத்ய தேவ்
ரிதம்…?
தொடரும்..
EPISODE 147
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக வர, என்னாச்சு மேடம்? எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க! என்று சத்யதேவ் அவளை சீண்டும் விதமாக கேட்க..
ரிதம் அவளை பார்த்து சரி எனக்கு டைவர்ஸ் கொடுத்திடு என கூறினாள் அசால்ட்டாக.
சட்டென சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான். சத்ய தேவ்.
அவளும் அவனை பார்த்தாள். அசராமல்.
என்ன கேட்ட? என சீட் பெல்ட்டை லூஸ் செய்தபடி அவள் புறம் திரும்பினான். சத்ய தேவ்
டைவர்ஸ் கேட்டேன் காது கேட்கலையா மிஸ்டர் சத்யதேவுக்கு என்றாள்.
அவன் கண்களை அவனை வைத்த கண் வாங்காமல் அசராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரிதம்.
சத்யதேவ் அவளை உற்றுப் பார்த்தவன். ஒரு சில நொடிகளில் சிரித்தபடி “டைவர்ஸ் தானே! கொடுத்துட்டா போச்சு” என்றான்.
ரிதமுக்கு ஏமாற்றமாகி போனது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல். சரி இப்பவே நான் பேப்பரை ப்ராசஸ் பண்ண ரெடி பண்றேன். என அவள் சொல்லிக் கொண்டு திரும்பினாள்.
அவள் அதற்கான வேலையை ஆரம்பிக்க போனை எடுக்க போக..
ஹே வெயிட் பேபி வெயிட் வெயிட் அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? கொஞ்சம் வெயிட் பண்ணி நான் சொல்றத கேளுங்க. ஐபிஎஸ் மேடம் என்றான்.
என்ன என்பது போல் அதட்டலாக ஒரு பார்வை பார்த்தாள்.
டைவர்ஸ் பண்றீங்களா? ஓகே டைவர்ஸ்க்கு காரணம் சொல்லி பண்ண போற என்று கேட்டான்.
ரிதம் ஏகத்தாளமாக சிரித்துக் கொண்டே தெரியாத மாதிரி கேட்கிற? உனக்கு தான் என்ன பிடிக்கலையே! பிடிக்காம உங்க வீட்ல சொன்னாங்கன்னு தான என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட! இந்த ஒரு காரணம் போதாதா! ஈசியா டைவர்ஸ் கிடைச்சிடும். என்றாள்.
பிடிக்கலைன்னு யார் சொன்னது என்று சத்யதேவ் கேட்டான்.
அவள் இதயம் படபடக்க உடனே அவனைப் பார்த்தாள். அதாவது பிடிக்கலைன்னு சொல்ல முடியாது. பிடிக்கும்.. அது வந்து ஹான் எப்படியா இருந்தாலும் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண போறேன் தானே. அந்த பொண்ணு ஏன் நீயா இருக்க கூடாது. அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்று அவளை மீண்டும் மனது வேதனைப்படுத்தினான் சத்திய தேவ்.
அவள் உஷ்ண மூச்சுடன் அவனைப் பார்க்க.. அப்படி பார்த்தா? அதுக்கு என்ன அர்த்தம்? உண்மைய தான் சொல்ல முடியும். சரி அதுதான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்ல. டைவர்ஸ் கேன்சல் என்றான்.
ஆனால் எனக்கு பிடிக்கல டா என்றாள் வெடுக்கென..
பாருடா பாருடா மறுபடியும் பொய் சொல்ற? என்னை கல்யாணம் பண்ணிக்கோ! கல்யாணம் பண்ணிக்க சத்தியதேவ்னு, அன்னிக்கி என் மேல ஏறி.. I mean ஹிப்.. இடுப்பு மேல ஏறி கால ரெண்டையும் பின்னாடி போட்டு பின்னிக்கிட்டு முத்தம் கொடுத்தியே? மறந்து போச்சா? என்று அவன் ஏகாந்த நிலை பேச்சுக்கு அவளை கொண்டு சென்றான்.
ஹே செருப்பு பிஞ்சிடும் நாயே! எங்க வந்து என்ன பேசுற? என்று அவள் மூக்குப்பொடைக்க அவனை பார்த்தாள.
சத்திய தேவ் சிரித்தபடி உன்கிட்ட பேசாம.. பின்ன யார்கிட்ட பேசுவாங்க? சொல்லு?! என்றான்.
அவளால் பதில் பேச முடியவில்லை..
என்ன யோசிப்பது? என்று தெரியாமல் கைகளை திகைத்தவள். என்ன செய்வது என்று அது வந்து தெரியாமல், அப்போ வேற! இப்போ வேற! எனக்கு லவ் பண்ணனும். ரெண்டு பேரும் லவ் பண்ணனும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். நீ தான் என்னை லவ் பண்ணலையே! என்றாள் ஏக்கத்துடன்.
இப்போ லவ்வு இல்லன்னா என்ன? அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோமே என்று மடக்கினான் சத்யதேவ்.
அவள் வேக மூச்சுடன் இவனை இவனை எதுவும்… ச்ச நாயே! டார்ச்சர் பண்ற நாயே என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள். எனக்கு டைவர்ஸ் வேணும். சும்மா தேவையில்லாம பேசிட்டு இருக்காத? என்னை டென்ஷன் படுத்தாத. என்றாள்.
சத்திய தேவ் மீண்டும் சிரித்தபடி சரி தயவு செய்து காரணம் சொல்லு. அத பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்! என்று சீரியஸாக அவளை பார்த்தான்.
அதாவது என்று அவள் யோசிக்க.. என்ன சொல்ல போற? எங்க மகி மாமியார் கொடுமை என்று சொல்ல போறியா? இல்ல டௌரி வாங்கி உன்கிட்ட நகை பணம் அப்படின்னு வரதட்சணை கொடுமை சொல்ல போறியா? ஒரு குண்டு தங்கமணி கூட இல்லாம உன்ன கல்யாணம் பண்ணி இருக்கேன் டி! நீ கழுத்தில் போட்டிருக்க தாலி I mean மாங்கல்யத்துக்கு உங்க டாடி கிட்ட நான் பே பண்ணிடுவேன் புரியுதா. முழுசா நீ எனக்கு தான் சொந்தம். என்னோட செலவில் I mean உனக்கு எல்லாமே என்னால கொடுக்க முடியும். என்னோட ஆனுவல் சிடிசி 20 லேக்ஸ். சோ தேவையான அளவுக்கு பணம் இருக்கு. உன்கிட்ட இருந்தும், உங்க அப்பா கிட்ட இருந்து, ஹான் மிஸ்டர் இன்பராகவன் சார் கிட்ட இருந்து பத்து பைசா எனக்கு தேவையில்லை.
ரிதம் அவனை சோர்வுடன் பார்த்தாள். இத்தனை வாய் பேசுவானா? வாயே திறக்க மாட்டான் என இருந்தேனே! என அவனை பார்த்தாள்.
அத்தோடு சத்ய தேவ் நிறுத்தி விட வில்லை. எங்க அப்பா கிட்ட இருந்து எனக்கு எதுவும் தேவையில்லை. என்னால உன்ன நல்லா பாத்துக்க முடியும். என்று கூறினான்.
ரிதம் அவனை முறைத்தபடி பார்க்க..
முறைச்சா அதுக்கு அர்த்தம் என்ன? உண்மைதான சொல்றன். ஹான் முக்கியமா உனக்கு ஓடுறது, பறக்குறது, நீந்தறது என்ன வேணுமோ எல்லாமே எல்லாமே சாப்பிடு. நான் சைவம். ஆனால் நீ உனக்கு பிடிச்சத சாப்பிடலாம். நீ அசைவமா இருந்துட்டு போ. எப்படியும் வீட்ல ஒருத்தர் சைவம் அசைவம் . அப்புறம் சம்டைம்ஸ் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கூட சைவம் ட்ரை பண்ணலாம் என்று கூறினான் சத்திய தேவ்.
ரிதம் என்ன சொல்ல? வேற என்ன காரணம் இருக்கு? என்று யோசித்துக் கொண்டிருக்க…
ம்ம் சீக்கிரம் வேற ஏதாவது காரணம் வெயிட்டா வச்சிருக்கியா? என்று சத்யதேவ் கேட்டுக் கொண்டே காரை ஓட்டினான்.
ரிதம் யோசிக்க ஆரம்பித்தாள்.என்ன சொல்லலாம்? என்ன சொல்லலாம்? இவ என்ன ரொம்ப டார்ச்சர் பண்றானே? என்று அவள் நினைக்க..
ரொம்ப போர் அடிக்குதே சரி நீ யோசி நான் கொஞ்சம் பாட்டு கேட்கிறேன் என்று மியூசிக் பிளேயரை தட்டி விட்டான்.
பன் பன் நீ ஸ்வீட் பன்…
பட்டர் ஜாம் போலே நான்தான்…
உந்தன் மேலே தான்…
நான் ஒட்டி கொள்ளதான் வா… என்று முணுமுணுத்துக் கொண்டே அவளை பார்த்தான் மோக கண்களில்
ஒன் டூ த்ரி போர் பைவ்…
முத்தம் தந்தாலே தேன்தான்…
ஆண் : என் அன்பே மை பேர் லேடி நீதான்…
குழு : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…
உச்சம்!! என பாடிய சத்ய தேவ் அவளை பார்த்தபடி யோசிச்சீங்களா மேடம்ம்ம்!! என கேட்டான்.
யோசிச்ச்சியாஆஆஆ!! என அவளை பார்த்தான்.
யோசிச்சிட்டென் டா! என ரிதம் பற்களை கடித்துக் கொண்டே கூறினாள்.
ம்ம் சொல்லு என புன்னகைத்தான்.
எனக்கு sex ல வந்து சேட்டிஸ்ஃபைடு இல்லன்னு சொல்ல போறேன். என்றாள் ரிதம்.
சத்ய தேவ் அவளை புருவம் சுருக்கி பார்த்தவன். சட்டென புருவத்தை ஏற்றிய படி ட்ரை பண்ணாம எப்படி சொல்லுவ? என்று அவனுடைய கைகள் இப்பொழுதே அவள் மேல் பாய்ந்தது.
தொடாத! தொடாத டா! தொட்ட எட்டி I will kick you rascal.. அப்புறம் நீ வெளியே கிடப்ப என்று அவள் கார் கதவின் ஓரம் ஒட்டிக் கொண்டாள்.
சத்ய தேவ் சிரித்த படி try பண்ணலாம் டி இன்னிக்கு இல்ல நாளைக்கு. என்று கூறினான்.
டேய் வெட்கம் கெட்டவனே! என ரிதம் அப்பட்டமாக அவனை பார்க்க…இதுல என்ன வெட்கம் இருக்கு? என்று கூறியவன். அவளை ஓர கண்ணால் பார்த்தபடி வேண்டுமென்றே மீண்டும் “எப்படியா இருந்தாலும் நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணா கூடா, அந்த பொண்ணு கிட்ட இப்படித்தான் இருப்பேன். என கூறினான்.
மீண்டும் மீண்டும் முள் போல அவனது ஒவ்வொரு வார்த்தையும் ஏதாவது ஒரு பொண்ணு, ஏதாவது ஒரு பொண்ணு, அவள் கூட இப்படி என்றவன்.
அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…
கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…
இன்னும் அவளுக்கு கோபம் ஏறியது. கைகளை இறுக்கி மடக்கியவள். மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள். அவன் பாடிய பாடலிலேயே லீட் எடுத்துக் கொண்டவள்.
கண்களை மூடி ஆழ்ந்த பெரு மூச்சை விட்டவள். எனக்கு sex ல இன்ட்ரஸ்ட் இல்ல என்றான்.
அட அவ்வளவு தானா மேட்டரு. இதுக்கு தான் டைவர்ஸ் வாங்கப்போறியா? என்று கேட்டான் சத்யதேவ்.
ஆமா இதையே fix பண்ணிக்கலாம். இன்னிக்கு நைட்டே உனக்கு ஃபார்ம் ரெடி பண்ணி கொடுக்கிறேன். நீ fill பண்ணி கொடு. அப்ளை பண்ணலாம் என்று விடாப்படியாக கூறினாள் ரிதம்.
சத்ய தேவ் பெருமூச்சியை விட்டபடி அவளை காந்த கண்களில் பார்த்தவன். இன்ட்ரஸ்ட் இல்லனா விடு. நான் ட்ரை பண்ணிக்கிறேன்.
Pardon?? என ரிதம் அவனை பார்த்தாள்.
அவன் கண்களை அழுத்தி மூடிய படி மோகமாக பார்த்தவன். கடை உதட்டை கடித்த படி நான் டிரை பண்ணிக்கிறேன் டி! எப்போ ப்ராடக்ட் ரிலீஸ் பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று கூறியவன். உனக்கு இன்றஸ்ட் இல்லன்னா interest வரதுக்கு எப்போவும் வீட்ல இருக்கணும். சோ மேடம் என்ன பன்றீங்கன்னா? நீ ஐபிஎஸ் வேலையை ரிசைன் பண்ணிடு.. ஹான் நாளையில் இருந்து தொடர்ந்து என பெரு மூச்சை விட்டவன் உனக்கு இன்ட்ரஸ்ட் வர நான் இருக்கேன் என்று கண்ணடித்தான்.
ச்சீ! ச்சீ! ச்சீ! செருப்பு பிஞ்சிடும் டா! அப்படி கீதும் பக்கத்துல வந்த எட்டி ஒதச்சிடுவேன் என்று ஆவேசத்துடன் கூறினாள் ரிதம்.
சத்யதேவ் சிரித்தபடி இது தான் காரணமா இருந்தால் அதை நான் முடிச்சிடுறேன். வேற காரணம் இருந்தால் யோசி. யோசி என்றான்.
விளையாடாத சத்ய தேவ். நான் தான் சொல்றேன்ல. உன்கிட்ட இருந்து எனக்கு டைவர்ஸ் வேணும். அவ்வளவுதான். என்று அவள் மீண்டும் சொல்ல,
ஓரமாக காரை நிறுத்தினான். அவள் எதையும் கண்டு கொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்க்க, சத்யதேவ் அவள் பக்கம் திரும்பி ரிதம் என்று அழைத்தான். ஹேய் உன்ன தாண்டி கூப்பிடுறேன்! அப்பொழுதும் அவள் திரும்ப வில்லை.
இப்போ திரும்பல அப்புறம் திணற திணற இங்கேயே! என அவன் அவள் அருகில் நெருங்க.. திடீர் மாற்றத்தில் வெடுக்கென திரும்பியவள். என்னடா என்று முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் பார்த்தாள்.
சத்ய தேவ் முகத்தை தீவிரமாக வைத்தபடி இன்னிக்கு கல்யாணத்துல நீ நோட் பண்ணியா? இல்லையான்னு? எனக்கு தெரியாது. உங்க அம்மா அப்பா மேல உனக்கு அக்கறை இருக்கா? இல்லையா? அது எனக்கு தேவையில்லை. But நான் என்னோட மாம் அண்ட் டாட் மேலையும், at the same time என்னோட மாமா மாமி மேலயும் எனக்கு ரொம்ப அக்கறை இருக்கு. பாசம் இருக்கு. உனக்கு முன்னாடி அவங்களையெல்லாம் நான் பார்த்தவன் டி! அதனால அவங்களுக்கு ஒரு மனம் சங்கடம் வர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். உனக்கு டைவர்ஸ் வேணும்னா? வாங்கிக்கோ. அது உன்னோட திருப்திக்காக மட்டும் தான். இது தாலி இல்லை ஜென்ம ஜென்மான பந்தம். என்னை விட்டு நீ எப்பவும் பிரிய கூடாது. பிரிய விட மாட்டேன். That means என்கூட தான் நீ இருக்கணும். வேணும்னா அதான் சொன்னியே சில்லியா சில காரணம். நீ பாட்டுக்கு தனியா இரு உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
மீண்டும் முகத்தை கடுமையாக வைத்தவன். ஆனால் என்னை விட்டு பிரியணும்னு நினைச்சா. அப்புறம் வேற ஒரு சத்யதேவ பாப்ப. எப்போ பாரு என்கிட்ட சொல்லுவியே! நீ இது இல்லடா!! உன்னோட இயல்பு இது இல்லடான்னு… ஹான் என்னோட இயல்பான இன்னொரு முகம் இருக்கு. அதை பார்த்த தாங்க மாட்ட என்று கூறினான்.
இப்போ முடிவா என்ன சொல்ல வர? என்று விதம் கேட்க…
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்ட படி அவளின் முகத்துக்கு அருகில் வந்தான். இருவர் மூக்கும் மூக்கும் உதடும் உரச ஒரு இன்ச் தான் இடைவெளி ரிதம் அவனை கண்கள் விரிய பார்க்க, “டைவர்ஸ் தர முடியாதுடி!”என்று நேராக கூறியவன் மூக்கை பிடித்து கில்லினான்.
ஸ்ஹா என்று தள்ளி விட்டாள் ரிதம்.
சரி தொடல… ம்ம் பாக்குறேனே! எத்தனை நாளைக்கு இப்படி இருக்கேன்னு. என்று சத்யதேவ் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அதன் பிறகு அவள் அவன் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். இப்படியே பெங்களூர்ல அவர்கள் வீடு வரும் வரை ரிதம் அவன் பக்கம் திரும்பவே இல்லை. தூங்கிக் கொண்டு வந்தாள், பாடல் கேட்டாள்.
சத்ய தேவ் அவளின் ப்ளூ டூத் ஹெட் செட்டை பிடுங்கி காதில் வைத்தான். ஹே என்ன டா பண்ற? என பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
சத்ய தேவ் பார்வை கூர்மையாக சாலையில் கவனம் செலுத்திக் கொண்டு உன்னோட போனை கொடு என்றான்.
எதுக்கு?
தான்னு சொன்னேன். இல்ல இந்த யர் பட்ஸ்சை வெளியில் தூக்கி போட்டிடுவேன் என்றான்.
இம்சை! இம்சை! என போனை நீட்டினாள்..
எவ்ளோ சவுண்ட் வச்சிருக்க? நீ கேட்கிற சாங் வெளியே எனக்கு கேட்குது. .. 90 டெசிபல் கூடாது. சவுண்ட் 50 decibel ல வச்சுக்க. அது தான் ஒரு ஹெல்த்தியான காதுக்கு நல்லது. என சொல்லி சவுண்ட் குறைத்து அவளிடம் நீட்டினான்.
இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.. என அவள் அலட்சியமாக வைக்க போக,
ஹே சவுண்ட் அதிகம் பண்ண? அப்புறம் என் கிட்ட அடி வாங்குவ. அடிக்க மாட்டேன்னு நினைக்காத. கண்டிப்பா அடிப்பேன்.
உன்னை டாடி கிட்ட சொல்வேன் டா! அதை வச்சு டைவர்ஸ் வாங்குவேன் என ரிதம் சிரிக்க.
ஹி ஹி ஹி! என்றான் அவன் பங்குக்கு.
எதுக்கு நாயே பல்லை காட்டிற?
உன்னை திருப்பி படிக்க போட்டு பட் ல வலிக்கிற மாதிரி அடிப்பேன். போய் இதை சொல்லு. சொன்னால் உன்னை என கள்மிஷ புன்னகையுடன் கார் ஓட்டினான்.
ரிதம் கண்களை மூடி அய்யோ! என்றாள்.
அப்டின்னா நான் சொல்ற அளவுல சவுண்ட் வை. இதுக்கு முன்னாடி எப்படியோ அது எனக்கு முக்கியம் இல்ல. உன்னோட ஹெல்த் மேலே எனக்கு அக்கறை உன்னை விட அதிகம். ஏன்னா நீ எனக்கு முக்கியம்.
ரிதம் அவனை எதிர்பார்ப்புடன் பார்க்க.. சத்ய தேவ் நாக்கை கடைவாயில் அடக்கிக் கொண்டே புன்னகை சிந்தியவன். உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கேன். எப்படியோ போன்ன்னு விட முடியாது. நீ என் பொண்டாட்டி. என்றான் அவளை சீண்டும் விதமாக..
போடா நாயே! எருமை, ஹிப்போபாட்டமஸ் என திட்டியபடி திரும்பி விட்டாள்.
சத்ய தேவ் கூட அவளை தொந்தரவு செய்ய வில்லை. ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள்.
அங்கே மொத்த படைகளும் காத்திருக்க இவ்வளவு நேரமும் பொரிந்து கொண்டும் வந்தவன் இப்போது ஆஃப் ஆகி போனான். எப்போது வருவார்கள் என காத்துக் கொண்டிருப்பவர்கள் போல ருத்ரன் மற்றும் மிதுன் தேவ் இருவரும் போய் பசை போல ஒட்டிக் கொண்டார்கள்.
விவேகா மற்றும் மகி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒன்னும் பண்ண முடியாது கா! என நொந்த படி முதலில் அவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்தது சிவன்யா.
எடுத்தவள் சும்மா இல்லாமல் அண்ணி என அழைத்து விட்டாள். சத்ய தேவ் புன்னகையை மறைத்து கொண்டு நிற்க, ரிதம் சோர்வுடன் முனகிக் கொண்டே அவளை பார்த்து வைத்தாள்.
அடுத்த படியாக வாசல் பக்கம் பாய் மறைத்து இருந்தார்கள். என்ன இது என்பதை போல இருவரும் பார்க்க இன்பா கூட அதிசயித்து பார்த்தான்.
இந்த முறை பவன்யா ஆரத்தி எடுத்தவள். அண்ணி என அழைத்தாள். டாடி! என ரிதம் சினுங்க.. இதழ் முன்னால் வந்து நின்று ஹே அண்ணி! என்றாள் அதட்டலுடன்.
பதில் சொல்லு டிம்பிள் என இன்பா தலை அசைத்தார்.
ம்ம் சொல்லு டி! என்றாள் ரிதம்.
எனக்கு என மறந்து போனவளாக விவேகா பக்கம் திரும்பி என்ன மாமி கேட்கணும்? என பார்க்க..
விவேகா சிரித்த படி மருமகன்! என்றார்.
ஹான் அண்ணி எனக்கு மருமகன் கொடுப்பயா? இல்ல மருமகள் பெத்து கொடுப்பியா? என்றாள் சிரித்துக் கொண்டே.
சத்ய தேவ் உதட்டை கடித்து சிரிப்பை அடக்க ஆக்னஸ் அங்கு நடக்கும் அனைத்து சடங்கையும் வீடியோ எடுக்க, வீணா போட்டோ எடுத்தாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ரிதம் கோபத்தை அடக்கி கொண்டே பார்த்தாள்.
ஹே அண்ணி சொன்னால் உள்ளே விடுவோம். என இதழ், பவன்யா, சிவன்யா என மூவரும் வரிசையாக கட்டம் கட்டினார்கள்.
அவர்களின் கேள்வியில் கண்களில் நீர் கூட வந்து விடும் போல அவ்வளவு வெட்கம் அதை வேறு விதமாக வெளிப்படுத்தினாள் ரிதம்.
என்ன பாப்பா இதெல்லாம் அவளுக்கு ஆக்வடா இருக்கும் என சொன்னது மிதுன் தேவ்.
சூர்யா அவனை முறைத்து பார்த்த படி, என்ன அவள்? இனி அவள் சொன்ன? அவ்ளோ தான் ராஸ்கல். என்றார்.
என்ன சொல்லணும்? என்பது போல மிதுன் பார்க்க..
அண்ணி சொல்ற. மரியாதை கொடுக்கணும் என்றார் கண்டிப்புடன். அதற்கும் மேல் மிதுன் வாய் திறக்க வில்லை..
பதில் சொல்லு அண்ணி! எங்களுக்கு ஆளுக்கு ஒன்னு ஒன்னு வேணும் அப்போ மொத்தம் ஆறு. என்றாள் பவன்யா.
ஹே ஹே சும்மா என் தங்க புள்ளைய கிண்டல் பண்ணாதீங்க! இது சும்மா விளையாட்டு ரித்து மா! எதாவது சொல்லிட்டு உள்ளே வந்திடு என கூறினார்.
ரிதம் பாவமாக முகத்தை வைத்திருக்க, க்கும் மாப்பிள்ளை சொல்லலாமே! டேய் வழந்தா மண்டி நீ கேட்க மாட்டியா? என இன்பா ருத்ரணை பார்க்க..
இதழ் அருகில் வந்து நின்ற ருத்ரன். புன்னகையுடன் மாமா உங்களை மாதிரி அமைதியா எனக்கு ஒரு மருமகன் வேணும். உங்களை போலவே ஒரு லிட்டில் பிரின்ஸஸ் வேணும் கொடுப்பீங்களா? என கேட்டான்.
அப்போ அவனே தனியா பெத்து கொடுப்பான். என்றாள் வெடுக்கென.. வேறு யார் ரிதம் தான்.
அனைவரும் களுக் களுக் என சிரிக்க, ஹே என்ன டி பேச்சு மாப்பிள்ளைய அவன் இவன்னு சொல்ற என விவேகா முன்னால் வர..
அதை நீயா எனக்கு சொல்கிறாய் என்பதை போல பார்த்தாள் ரிதம்.
அனைவரும் மீண்டும் சிரிக்க, சத்ய தேவ் மெதுவான குரலில் அதுக்கென்ன தாராளமா கொடுத்திடலாம். கரெக்ட் தான என ரிதமை பார்த்தான்.
அனைவரின் முன்னும் இப்படி அவன் சொல்ல வீர மங்கை எங்கோ சென்று ஒளிந்து கொண்டாள் போல ரிதம் தலை குனிந்த படி நின்றாள்.
இன்னும் அண்ணி சொல்லலயே என தங்கைகள் சொல்ல, சத்ய தேவ் மெதுவான குரலில் மவுனம் சம்மதம் மச்சான் என ருத்ரனை பார்த்துக் கூறினான்.
ரிதம் அப்பட்டமான அதிர்ச்சியில் அவனை பார்க்க வீணா அவளின் காதுக்கு அருகில் வந்து சத்ய தேவ் full form ல இருக்கான். ஜாலி தான் டி dimple என கூற..
கடுப்புல இருக்கேன் ஓடிடு என்றாள் ஆத்திரத்துடன். இதழ் மற்றும் சிவன்யா, பவன்யா என மூன்று பெண்களும் சத்ய தேவ், ரிதம் இருவரின் ஜோடி பொருத்தத்தை பற்றி தான் பேச்சு. மிகவும் சந்தோசத்துடன் அப்போ அண்ணாவுக்கு படைக்கப்பட்ட பொண்ணு தான் ரிதம். இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே. இத்தனை வருஷம் ரெண்டு பேரும் எத்தனை சண்டை போட்டிருப்பாங்க என ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ருத்ரன் தன் தாயை ஃபாலோ செய்து சமையலறை பக்கம் சென்றான். இங்கே மகி பூஜை அறையில் சந்தோசத்துடன் விளக்கு ஏற்ற ஏற்ப்பாடு செய்தாள். அந்த விளக்கு? இந்த விளக்கு என உள்ளுக்குள் மீண்டும் மகிழ்ச்சி கூடியது.
விவேகா விவேகா! இங்கே வாயேன் என அழைத்து ஒரு விசயத்தை கூறினார்.
அது என்ன விசயமா இருக்கும். ரிதம் அவளோட அட்ராசிட்டிட நெக்ஸ்ட் EPI ல ஆரம்பிக்க போறா பார்க்கலாம்.
அந்த விளக்கு பத்தி எதுவும் ஐடியா இருக்கா?
நீந்துகின்ற வெண்ணிலா படிச்சவங்க எல்லார்ம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க? பார்ப்போம்.
யாரு கரெக்ட் ஆ கமெண்ட் பண்றீங்க பார்ப்போம்.
வருவான்.
EPISODE 148
வீட்டுக்குள் வந்ததும் சத்யதேவ் மற்றும் ரிதம் இருவரையும் சோபாவில் அமர வைத்தார்கள்.
அருகில் வீட்டின் குட்டி இளவரசிகள் அவர்களுடன் அமர பொண்ணுங்களா! உங்க எல்லாத்துக்கும் வேலை! அங்க போய் எல்லாம் உட்கார கூடாது. இங்க வாங்க என்று விவேகா அழைக்க..
மாமி! என்ன வேலை என்று கேட்டுக்கொண்டே சிவன்யா, பவன்யா, இதழினி, இனியா, இதயன், ஆக்னஸ் , வீணா என அனைவரும் விவேகாவின் பின்னால் செல்ல,ருத்ரன் கூட தன் தாயை ஃபாலோ செய்து சமையலறை பக்கம் சென்றான்.
சத்யதேவ் ரிதமின் முகத்தை பார்த்தான். அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலை மிகவும் கனமாக இருக்க, முகம் எல்லாம் களைத்து போயிருந்தது.
அவன் யோசனையாக எழுந்து செல்ல, சூர்யா அவனை பார்த்ததும்“ எங்கடா போற?” என்று கேட்க, நேராக தன் தந்தையின் அருகில் சென்றவன்.“ டாடி அவளுக்கு கழுத்துல போட்ருக்க மாலை ரொம்ப இறுக்குதுன்னு நினைக்கிறேன். அதனால அதை கழட்டி வைக்கலாமா? அது பற்றி மகி கேட்க தான் போறேன். ” என்று சாஷ்டாங்கமாக வேஷ்டியை பிடித்துக்கொணடே கேட்டான்.
சூர்யா தன் மகனை ஆழ்ந்து பார்த்தார். என்ன டாடி அப்படி பாக்குறீங்க?
அவனை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே “அதுக்குள்ள நீ ஹரிணிய மறந்துட்டியா? எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? கேட்கணும்னு நினைச்சேன். நீ உங்க அம்மா சொன்ன வார்த்தைக்காக கல்யாணம் பண்ணிக்கல தானே!” என்று கேட்டார்.
சத்தியதேவ் முகத்தில் திடீரென கலவரம் பரவ, அதை வெளிக்காட்டிக் கொல்லாமல் தீவிரமாக முகத்தை வைத்தவன். உங்களுக்கு தெரியாதா என்ன? நீங்க எப்படி சஞ்சு ஆண்டியை மறந்தீங்க?” என்று கேட்க.. “டேய் இப்ப ஏண்டா அதை இழுக்குற?” என்று கூறினான் சூர்யா.
“கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க டாடி” என்று சத்திய தேவ் மீண்டும் கேட்க, அது! அது.. வந்து…நான் வந்து அவளை அவளை நான் லவ் பண்ணவே இல்ல. அவ என்னை விட பெரிய பொண்ணு டா என்று சூர்யா பேக் அடித்தார்.
ஹி ஹி ஹி பெரிய பொண்ணு ஹஹ பெரிய பொண்ணு! என்று சிரித்தபடி அதே போலத்தான் ஹரிணி என்னை விட பெரியவ என்று கண்ணடித்தான் சத்திய தேவ்.
டேய் என சூர்யா அதட்ட, அவன் புருவத்தை சுருக்கிக் கொண்டே ஒரு விஷயம் I mean அது பொருளாக இருந்தாலும், ஒரு பெர்சனாக இருந்தாலும் சரி. நம்மளோட மனச விட்டு, நம்மளோட சிந்தையை விட்டு அது போறதுக்கு 12 மாசம் எடுத்துக்கும். நாம ஒவ்வொரு நிமிஷமும் 24 மணி நேரமும் அந்த பொருளை பத்தியே யோசிச்சுக்கிட்டு இருந்தா கூட, அந்த ஒரு வருஷத்தோட முடிவுல நிச்சயமா அந்த எண்ணம் நம்மளோட மைண்ட்ல இருக்காது.அது போல தான் இது என விளக்கம் கொடுத்தான் சத்ய தேவ்.
அப்படின்னா இன்று ஆர்வத்துடன் சூர்யா பார்க்க, அப்படின்னா அப்படி தான்! டாடிஇஇ! ஹரிணிஇஇ!..
அப்போ ஹரிணிய முழுசா மறந்துட்டியா? என்று சூர்யா கேட்க, அப்படி சொல்ல முடியாது. ஆனா நான் ரிதம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
அப்போ மகி கேட்டதால கல்யாணம் பண்ணிக்கிட்ட?
இல்ல அது அப்படி இல்ல. விடுங்க டாடி! என மலுப்ப… இப்படி எல்லாம் மழுப்பிட்டு சமாளிச்சுட்டு போகக்கூடாது. உண்மையை சொல்லு! ஏன்னா, இதுல நீங்க ரெண்டு பேரும் மட்டும் அடங்கல. என்னோட உயிர் நண்பனும் அடங்கிருக்கான். நாளை பின்ன ஏதாவது பிரச்சனை வந்துடுச்சுன்னா? அதுல பாதிக்கப்பட போறது நானும் அவனும் தான். எந்த நிலையிலும் அதுக்கு சின்ன பிரச்சனை வரக்கூடாதுன்னு நினைக்கிறேன். என்று சூர்யா சொன்னார்.
சத்யதேவ் தன் தந்தையை தீர்க்கமாக பார்த்து நான் மனப்பூர்வமா தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். போதுமா! என்று நகர்ந்தான்.
சூர்யா ஆர்வத்துடன் தன் மகன் அருகில் நெருங்கி ஏதோ பேச வர..
ப்ளீஸ் டாடி போதும்.. மறுபடியும் எதுவும் கேட்காதீங்க. எனக்கு ஆக்வடா இருக்கு என்று சொல்லிக்கொண்டே மஹிய தேடி சென்றான்.
டேய் ராஸ்கல்! என்ன சொன்ன? ஆக்வடா இருக்கா? அப்படின்னா இதுக்கு அர்த்தம் என்ன? டேய் சொல்லிட்டு போடா மகனே? என்று சூர்யா விசம புன்னகையுடன் அழைக்க. போங்க டாடி சும்மா அத பத்தி என்கிட்ட பேசாதீங்க என்று தப்பித்து விட்டான் சத்திய தேவ்.
சூர்யா சிரித்தபடி ரிதம் அருகில் சென்றவர் கன்னுக்குட்டி என்னடா ஆச்சு மால ரொம்ப மலப்பா இருக்கா என்று கேட்க சரிங்க மாமா என்று சொன்னவள் மாலையை கழட்டி அருகில் வைத்த படி தோலை கழுத்தை பிடித்துக் கொண்டே சோர்வாக சாய்ந்தாள்.
இன்பா வந்து விட தன் தந்தையின் தோலில் சாய்ந்து கொண்டாள்.
“டிம்பிள்”
ம்ம் டிம்பிள் என ரிதம் பதிலளிக்க, கவின் மேலே அவன்.. இப்படி இருப்பான்னு நான் expact பண்ணல. Secret investigation கூட பண்ணேன். அவங்க conversation officially அப்டின்னு தப்பா புரிஞ்சுகிட்டேன் பேபி! ஆனால் என இன்பா வின் குரல் உள்ளே செல்ல.. இட்ஸ் ஒகே டாடி எனக்கு பிரச்னை இல்ல. நான் நல்லாருக்கேன். என ரிதம் சொன்னாள்.
உன் கிட்ட தாத்தா பேசனுமாம்? என இன்பா கால் செய்து நீட்ட.. எதுக்கு என குழப்ப மன நிலையுடன் போனை வாங்கிக் கொண்டு வெளியே சென்றாள்.
ஹலோ தாத்து! என ரிதம் அழைக்க, உன்னோட லவ்வர் பாய், கிரஷ் யாரு? என எடுத்ததும் கேள்வி கணைகள் தொடுத்துக் கொண்டு நின்றது.
“அது நிதின் தாத்து” என ரிதம் உடனே கூற, ரவி அமைதியாக இருந்தார் எதுவும் பேச வில்லை. நீண்ட பெருமூச்சுடன் மெல்லிய குரலில் தாத்து கண்டுபிடிச்சிட்டீங்களா!! அ.. அது யார்ன்னு என்று கேட்டாள் ரிதம்.
நான் கண்டுபிடிச்சிட்டேன் ஆனா அத என் பேத்தி சொன்னா இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் என்று கூறினார் ரவி. ரிதம் பெயரை சொல்லாமல் சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.
சரி விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம். நான் போன வைக்கிறேன். இனி மேடம் ரொம்ப பிசியா இருப்பீங்க என்று கட் செய்ய போக, தாத்துஉஉஉ! சொல்றேன் வெயிட் பண்ணுங்க என்று கூறியவள். “அவன் தான்! என்னை கட்டிக்கிட்டானே! என் புருஷன்” என கண்களை மூடி கூறி விட்டாள்.
ஹ.. ஹ.. ஹா! என சிரித்து விட்டார்.
போ தாத்து! என இதயம் படபடக்க அழைத்தாள் சொல்லுமா என அவர் கேட்க டாடிக்கு தெரியுமா? இந்த விஷயம்? டாடி கிட்ட சொல்லிட்டீங்களா? எதுக்கு டாடி கிட்ட தனியா பேச போனீங்க? அப்போ எல்லா விஷயமும் அவருக்கு தெரியுமா? என்று பதட்டத்துடன் கேட்டாள்.
இல்ல எதுவும் தெரியாது. நான் உன் கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணாம எப்டி உன் அப்பா கிட்ட சொல்ல முடியும்.
Oh god! டாட்டூ இந்த விஷயத்தை நீங்க டாடி கிட்ட சொல்ல வேண்டாம் ப்ளீஸ் எனக்காக என்று கேட்டாள்.
சரி சொல்ல மாட்டேன்.அப்புறம் இனி என்ன என் பேத்தி ஹாப்பி தானே!
No தாத்து என சோகமாக பதில் வந்தது.
என்னாச்சு என்னோட டிம்பிள் குயின்க்கு? என்ன சொல்றான்? என் பேரன். உன்னை மிரட்டுறானா? என கேட்டார் ரவி.
ரிதம் உதட்டை கடித்துக் கொண்டே என்னை விட்டு பிரிய மாட்டானாம்! இது 7 8 9 10 ஜென்ம பந்தமாம்.
பரவாயில்லையே! என் பேரன். என புகழாரம் சூட்டினார்.
முழுசா சொல்ல விடு தாத்து! ஆனால் அவன் மாமி சொன்ன வார்த்தைக்காக தான் கல்யாணம் பண்ணானாம்! என்னோட இடத்தில் வேற பொண்ணு இருந்தாலும் மேரேஜ் பண்ணி இருப்பானாம். என்னை ஒவ்வொரு வார்த்தையும் கொல்ற மாதிரி பேசுறான் தாத்து. என நெஞ்சில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்தாள்.
உனக்கு இந்த கல்யாணம் நடந்ததில் சந்தோஷம் இல்லையா? ரிதம் என கேட்டார்.
ஒரு சில நொடி அமைதிக்கு பின் இஷ்டம் தான்! சந்தோசம் தான் ஆனால் என தயங்கினாள்.
ஆனால் இல்லை. நீயே உன்னை குறைவா நினைச்சுக்கக கூடாது பேபி! Be strong எதையும் பெருசா நினைக்கணும். வெளியே பார்க்க தான் ஆண்பிள்ளை கரடு முரடா பெரிய கழட்டி மாதிரி முகத்தை வச்சிருப்பாங்க. ஆனால் உள்ளே ரொம்ப weak!
என்ன சொல்றீங்க தாத்து ஏற்கனவே அவன் என்ன ரொம்ப குழப்பறான். இதுல நீங்களும் சேர்ந்து குழப்புறீங்களே!.
ரவிச்சந்திரன் பெருமூச்சு விட்டபடி விடாம விரட்டிக்கிட்டே இருக்கணும் பேபி! அவனை தான் நீ காதலிக்கிறியே? நீ நெனச்சவனையே கைபிடிச்சுட்ட! அவ எப்படி பேசினால் உனக்கு என்ன? அவன் மேல இருக்கிற காதல் என்னைக்குமே மாறாமதான இருக்கு. அதனால இப்போ அவன் உன்னோட ப்ராப்பர்ட்டி. நீ அவன என்ன வேணா பண்ணலாம். தட் மீன்ஸ் உன்னோட காதல அவனுக்கு ப்ரூவ் பண்ணு. அத டார்ச்சர் கூட வெளிப்படுத்தலாம். நீ இல்லாம அவன் இருக்கவே முடியாதுன்கிற ஸ்டேட் வரணும். அந்த அளவுக்கு உன்னோட காதல முழுமூச்சா காட்டு என்று கூறினார்.
அவளுடைய நகையை தொட்டு வருடிக் கொண்டே நீங்க வேற தாத்து. அவன் தான் என்னை கொடுமை பண்ணிட்டு இருக்கான். என்னை பேசி பேசி ரொம்ப கஷ்டப் படுத்துறான் தாத்தா என்று எல்கேஜி குழந்தை போலவும் கூறினாள் ரிதம்.
ரவிச்சந்திரன் ஒரு சிறிய அமைதிக்கு பின் நல்லா யோசி? நீ என்ன கொடுத்தியோ? அதை தான் அவன் உனக்கு திருப்பிக் கொடுப்பான். நீ இத்தனை வருஷமா அவனுக்கு என்ன கொடுத்த? என்று கேட்க,ரிதம் நாக்கை கடித்துக் கொண்டாள்.
அதற்கு ரவிச்சந்திரன் பதில் அளித்தார். உனக்கு ஹரிணியும் சத்யதேவும் லவ் பண்ற விசயம் பிடிக்காமல் தானே அவங்கள வேணும்னே டார்ச்சர் பண்ண? மிதுன், நித்தின் பிரகாஷ் இவங்களையெல்லாம் வச்சு கொடுமை பண்ண? தேவ் கேங், டெவில் கேங்னு ரெண்டா பிரிச்சு, ஹரிணியும் சத்யதேவும் மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்கிட்ட! உண்மையா? இல்லையா? உண்மையை மட்டும் என்கிட்ட சொல்லு பாப்போம்! என்றார்.
ஆமா உண்மை தான். நான் இருக்கும் போது எப்படி அவன் அந்த ஹரிணியை லவ் பண்ண முடியும்? என்று ரிதம் கேட்க, ரவிச்சந்திரன் சிரித்தபடி உண்மையான காதல் ( நிதின் ஹரிணி) சேர்ந்துடுச்சு. அதுக்குன்னு சத்யதேவ் ஹரிணிய லவ் பண்ணது பொய்ன்னு சொல்ல மாட்டேன். ஹரிணி transition state இருந்திருக்கா. அதனால அவன் நித்தினை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா. இப்ப பிரச்சனை அது இல்ல. நீ பண்ணத தான் அவன் திருப்பி உனக்கு பண்றான். சோ அத பெருசா எடுத்துக்காம உன்னோட லவ் டார்ச்சர் மட்டும் கொடு. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் இந்த தாத்தாவுக்கு வேணும் என்று கூறி முடித்தார்.
சரி டார்ச்சர் பண்ண சொல்லிட்டீங்கல்ல! இனி சத்ய தேவ் பார்ட்னரை வச்சு செஞ்சிடலாம்! விடுங்க தாத்தா என்று கண்ண குழி தெரிய சிரித்தாள் ரிதம்.
அதுதான் என் பேத்தி என்னைக்கும் என் பேத்திக்கு தோல்வியே கிடையாது என்று கூறி முடித்தார் ரவிச்சந்திரன்.
போனை வைத்தவள் தெளிவுடன் உள்ளே வந்தாள். வாடா மாப்ளை! இனி இருக்கு டா உனக்கு என அங்கே இருக்கும் திருஷ்டி கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
இங்கே சமையலறையில் விவேகா ஒரு பக்கம் அப்பளம் மட்டும் எண்ணெயில் பொரித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஒரு சில்வர் குடத்தில் பூ சுற்றி, அதில் தண்ணீரை போதுமான அளவு நிரப்பி பால் ஒரு பாக்கெட் எடுத்து அதில் ஊற்றினாள் பவன்யா.
இன்னொரு பக்கம் சிவன்யா மற்றும் இதழ் இருவரும் அமர்ந்து வெற்றிலையை விரலுக்கு தொப்பி போடுவது போல வடிவில் 20 செட்டு மடித்து வைத்தார்கள். இன்னொரு பக்கம் ஆக்னஸ் மற்றும் வீணா ருத்ரன் மூவரும் சேர்ந்து ஒரு பந்தில் பூவை சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
இன்னொரு தட்டில் ரிதம் மற்றும் சத்யதேவ் இருவருக்கும் பிடித்த இனிப்பு வகைகள் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த மிதுன் தேர் அதையெல்லாம் பார்த்துவிட்டு, மாமி இதெல்லாம் என்னது? என்று கேட்டான்.
இதெல்லாம் விளையாட்டு என்று விவேகா கூறினார்.
விளையாட்டுக்கு இத்தனை பொருளை வேஸ்ட் பண்ணுவாங்களா? என்று மிதுன் தேவ் கேட்க .
வாடா நல்லவனே! உன் கல்யாணத்திலேயும் இது பண்ணுவாங்க. அப்போ வேண்டாம்னு சொல்லிடுவியா என்று விவேகா கேட்க
அப்படியா சரி நான் இப்பவே என்னென்ன நடக்குதுன்னு பாக்குறேன் என்றான்.
இங்கே மகி பூஜை அறையில் சந்தோசத்துடன் விளக்கு ஏற்ற ஏற்ப்பாடு செய்தாள். அந்த விளக்கு? இந்த விளக்கு என உள்ளுக்குள் மீண்டும் மகிழ்ச்சி கூடியது.
சத்யதேவ் அவனது ஃபோனை நோண்டிக்கொண்டு ஒரு பக்கம் அமர்ந்திருக்க, மகி வேகமாக பூஜை அறையில் இருந்து சமையலறை பக்கம் புன்னகையுடன் அறிவு அறிவு! ப்ச் விவேகா விவேகா இங்கே வாயேன் என்று அழைக்க..
சூர்யா மற்றும் இன்ப ராகவன் , அப்பொழுது தான் போன் பேசிவிட்டு வந்திருந்த ரிதம் என அனைவரும் மகியின் செயலை பார்த்தார்கள். என்னடி ரொம்ப சந்தோஷமா இருக்க என்று சூர்யா கேட்க.. அவரைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் விவேகாவை அழைத்தார்.
என்ன கா? என்று சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்துக்கொண்டே விவேகா வெளியே வர, இங்க வா என பூஜை அறைக்கு வா.. அங்க வேலையெல்லாம் முடிஞ்சுதா? என்று கேட்க..
நான் நீங்க சொன்ன மாதிரி அப்பளம் பொரிச்சாச்சு எல்லா ஐட்டமும் ரெடிக்கா என்று கூறினார் விவேகா.
ரிதம் ஒரு பெருமூச்சு விட்டபடி மாமி எனக்கு ரொம்ப பசிக்குது என்று கூற, ஒரு நிமிஷம் விளக்கு ஏத்துனதும், நான் உனக்கு என்ன வேணுமோ செஞ்சு தரேன் சரியா சாமி. ஒரு அரை மணி நேரம் மட்டும்தான். கொஞ்சம் பொறுத்துக்கோங்க! என்று மகி ரிதமிடம் கூற..
சரி என்றாள்.
என்ன அக்கா முகத்தில் அவ்வளவு சந்தோஷம்? என்ன விஷயம்? என்று கேட்க..
மகி சிரித்தபடி வாங்க வாங்க எல்லார்கிட்டயும் சொல்லணும் என்று அனைவரையும் பூஜை அறை பக்கம் அழைத்து சென்றார்.
என்ன விஷயம் கா என்று விவேகா ஆர்வத்துடன் கேட்க.. மகி துள்ளி குதிக்காத குறையாக இன்பாவையும் விவேகாவையும் பார்த்தபடி அண்ணா இது ஞாபகம் இருக்கா? ஹே விவேகா! இந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் பண்ணும் போது நீ வாங்கி கொடுத்தியே? வெள்ளியில் காமாட்சி விளக்கு, இரண்டு குத்து விளக்கு.. அதை இத்தனை வருசமா என் மருமகளுக்காக பத்திரமா வச்சிருந்தேன். My goodness பாரேன். என்னோட மருமக அன்னைக்கே என் வீட்டுக்கு வந்துட்டா. என்று மகி சந்தோஷம் ஆர்ப்பரிக்க கூறினார்.
அப்போ இத்தனை வருஷமா அதுல நீங்க விளக்கு ஏத்தலையா என்று கேட்க, ஆமா தூரி பெரிய பொன்னாகும் போது எங்க அண்ணா சீர் கொண்டு வந்தான். அதுல தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுக்கு முன்னாடி எனக்கு என் அப்பா வாங்கி கொடுத்த விளக்கு யூஸ் பண்ணேன். ஆனால் இந்த விளக்கு. இதை என்னோட மருமகளுக்காகவே வைத்திருந்தேன். என் தங்க புள்ளையே எனக்கு மருமகளா வந்துட்டா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்று முகம் எல்லாம் புன்னகையுடன் மகி கூறினார்.
விவேகா அந்த விளக்கை வாங்கி பார்த்தபடி, அப்போ இது கடவுள் போட்ட முடிச்சு. என்ன தான் இருந்தாலும் திடீர் கல்யாணத்தில் கொஞ்சம் சங்கடம் இருந்தது. ஆனால் இப்போ உண்மையாவே எனக்கு இந்த நொடி ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்று விவேகாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
சத்ய தேவ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க.. உடனே மித்துன் தேவ் எல்லாமே கரெக்டு தான். ஆனா ஜோடி தான் மாறி போச்சு என்று கூறினான்.
சூர்யா அவனது காதல் பிடித்து திருக நெஜமாவே வலிக்குது. கையை எடுங்க! ஹே மகி சொல்லு டி! என்று தன் தாயை பார்க்க.. சின்ன பையன் விடுங்க என சமாளித்தார்.
ரிதம்!! வாடி செல்லம். என் தங்க புள்ள. வந்து விளக்கு ஏத்தி சாமி மட்டும் கும்பிடுங்க. அதுக்கப்புறம் ஒரு கால் மணிநேரம். சாடங்குக்காக சின்ன சின்ன விளையாட்டு. அது முடிச்சதும் சாப்பிடலாம். உனக்கு என்ன வேணுமோ! நான் எல்லாமே செஞ்சு கொடுக்கிறேன். என்று கூறினார்.
இன்ப அங்கு நடக்கும் விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்க ரிதம் முன்னாள் சென்று இரண்டு வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கு என அனைத்துக்கும் திரி வைத்து எண்ணெய் ஊற்றி அழகாக விளக்கை ஒளிரவிட்டவள். கண்களை மூடி நின்றாள்.
அங்கு இருக்கும் அனைவரும் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க இன்பா அங்கு நடக்கும் விஷயத்தை பார்த்துக் கொண்டிருந்தார். சிவன்யாவும் அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். கடவுள் நம்பிக்கை கிடையாது.
அனைவரும் சாமி கும்பிட்டபடி நிற்க மகி ரிதமிடம் அந்த ஆரத்தி தட்ட எடுத்து எல்லாருக்கும் காட்டு! ரிதம் அதை கையில் எடுத்தபடி அனைவருக்கும் காட்டிவிட்டு சத்யதேவ் அருகில் சென்றாள்.
மகி சத்திய தேவிடம் “சக்தி அவளுக்கு நெற்றி வகட்டிலும் திருமாங்கல்யத்துலயும் குங்குமத்தை வச்சு விடு” என்று கூற
தீப ஒளியை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவன். குங்குமத்தை எடுத்து தீவிரமான புருவங்களுடன் அவளின் நெற்றி வகட்டில் வைத்து விட்டான். அதேபோல குங்குமத்தை எடுத்து அவளின் கழுத்தை பார்க்க..
ரிதம் அசால்டாக நின்றுருந்தாள்.
சத்யதேவ் உடனே மஹிய பார்க்க..
எடுத்து வச்சு விடுடா நின்னுட்டு இருக்க என்ற மகி அதட்ட..
தாலிய அந்த ஜுவல்ஸ் எல்லாம் சுத்திட்டு இருக்கு என்று சத்திய தேவ் சொல்ல.. விவேகா சிரிப்புடன் எடுத்துவிடு சக்தி என்றார்.
ரிதம் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள சத்தி அருகில் வந்து நகையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் தாலியை மட்டும் பூ போல எடுத்து விட்டவன். குங்குமத்தை தொட்டு வைத்து விட்டான். ஓகே சாமி கும்பிட்டாச்சு. ஆரத்தி தட்டை என்கிட்ட கொடு பொண்ணு என்று வாங்கிக்கொண்டு, அதை மீண்டும் சாமிக்கு முன் வைத்தார்.
ம்ம் நம்முடைய குலதெய்வம் இவங்க தான் இவங்கள வேண்டிக்கோ என்று மகி கூற..
ரிதம் கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் சும்மா நின்றாள். இந்த நாயோட மனச மாத்துங்க அண்ட் முக்கியமா. சிவாவுக்கு நன்றி. சிவா டார்லிங் உன்னோட இடத்துல தானே கல்யாணம் ஆச்சு. Thanks love you உனக்கு நேர்ல வந்து நான் நன்றி சொல்கிறேன். இவன இனிமே டார்ச்சர் பண்ண போறேன். என்னை தப்பா எடுத்துக்க கூடாது என்று சாஷ்டாங்கமாக வேண்டினாள்.
சரி சீக்கிரம் வாங்க அப்பளம் நமத்து போயிடும் என்று அனைவரையும் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்கள்
இங்கு நடக்கும் காட்சிகளை வீடியோ எடுக்க ஆக்னஸ் மற்றும் வீணா நியமிக்கப்பட்டார்கள்.
ஒரு பக்கம் அப்பளம் அடுக்க பட்டிருக்க, இத சாப்பிடனுமா என்று ரிதம் கேட்க..
உடனே பவன்யா சிரித்தபடி இது சாப்பிடக்கூடாது நீ எங்க அண்ணாவோட தலையில வச்சு உடைக்கணும் பார்க்கலாம். இதுல யார் ஜெயிக்கிறார்கள்? என்று..
டெவில் தான் என்னைக்கும் ஜெயிக்கும் என்று ரிதம் கூறினாள். ருத்ரன், பவன்யா, இனியா மூவரும் சத்யதேவ பக்கம் வந்து நின்று கொள்ள, சிவன்யா மிதுன் இதயன் ரிதம் அருகில் அமர்ந்து கொண்டார்கள். ஆக்னஸ் வீனா சிரித்துக்கொண்டே அங்கு நடக்கும் காட்சிகளை பார்க்க..
சூர்யா ரிதமிடம் கன்னுகுட்டி நீ தான் ஜெயிக்கணும். பார்க்கலாம் என்று சொல்ல..
மகி சிரித்தபடி சக்தி தான் ஜெயிப்பான் என்று கூறினார்.
மிதுன் தேவ் நீ ஓவரா பண்ற? அவனுக்கே சப்போர்ட் பண்ற? ரிதம் தான் ஜெயிப்பா!
ரிதம் நீதாண்டி ஜெயிக்கணும் என்று கூற..
மகி அவன் தலையில் கொட்டு வத்து அண்ணி சொல்லு என்று மிரட்டினார்.
சரி சரி விளையாட்டு கவனிக்கலாம் என்று 10 அப்பளங்களை சத்தியதேவ் ரிதமின் தலையில் அடுக்கி மெதுவாக அழுத்தினான்.அப்பளங்கள் உடைந்து போய்விட..
இந்த பக்கம் ரிதம் கைகளை சரி செய்து கொண்டு இல்லாத மீசையை முறுக்கிவிட்டபடி அவன் தலையில் 10 அப்பளங்களை அடக்கியவள். ஓங்கி அடித்தாள்.
ஹே என்று பவன்யா ருத்ரன் இருவரும் சவுண்டு கொடுக்க.. மாமா வலிக்குதா? என இனியா கேட்டாள்.
வலிச்சதா! என்று ரிதம் வேண்டுமென்று கேட்டாள்.
வலிக்கல என்று சத்யதேவ் கூறி அதை முடித்தான்.
இதுல யார் ஜெயிச்சது என்று இதயன் கேட்க..
இதுல ரிதம் தான் ஜெயிச்சா என்று சத்திய தேவ் கூறினான்.
மாமி உங்க பையன் ஒன்னும் எனக்கு விட்டுக் கொடுக்க வேண்டாம் நான் தோத்து போயிட்டதாகவே இருக்கட்டும் என்றாள்.
சரி சரி அப்போ அண்ணா ஜெயிச்சாச்சு என்று இதழ் எழுதிக் கொண்டாள்.
அடுத்தபடியாக வெற்றிலை தொப்பி இருவரின் விரல்களுக்கும் போட்டு விட பட்டது. ரிதமின் இதை என்ன பண்ணனும் என்று சத்ய தேவ் கேட்க..
விவேகா நீ சொல்லு என்று மகியும்.. அக்கா நீங்களே சொல்லுங்களேன் என்று விவேகா கூற.. நான் சொல்றேன் என்று சூர்யா கூறினார்.
சத்திய தேவ் ரிதமுக்கு அவனோட வெரல்ல இருக்குற வெத்தலையை ஊட்டி விடணும். அதேபோல ரிதம் சத்யதேவ்க்கு ஊட்டி விடணும்.. இதுதான் கேம் என்று கூற..
ஓகே என்று கூறியவன் முதல்ல அவ தான் எனக்கு ஊட்டணும் என்று கூறினான்.
ஹிஹே ஊட்டு டி அண்ணி என இதழ் கிண்டலடிக்க..
ரிதம் அவளின் கையை நீட்டினாள். பெருவிரலை அழகாக சப்பி கொண்டான். உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது ரிதம்க்கு. அவளின் முகத்தில் ஏற்படும் வெட்கத்தை ஒன்று விடாமல் கிரகித்துக் கொண்டான் சத்திய தேவ்.
என்ன ஆச்சு டி? என்று மிதுன் கேட்க..
அது என்று அவள் தயங்க… கையில் அவளின் கையை லாபகமாக பிடித்தவன் ஆள்காட்டி விரலுக்கு வந்திருந்தான். டேய் கடிக்கிறியா? அவளுக்கு வலிக்கும் என்று மித்துன் சொல்ல..
ஆமா அவன் கடிக்கிறான் என்று பொய் கூறினாள் ரிதம். அடுத்த விரலையும் அதேபோல் எடுத்துக்கொண்டான். லாலி பப்பை சாப்பிடுவதைப் போல அவளின் ஒவ்வொரு விரல்களையும் சுவைத்து சாப்பிட்டான். ரிதமுக்கு முத்து முத்தாக வியக்க..
என்னடி வேர்க்குது என்று மித்துன் தேவ் கேட்க.. அவள் தலை குனிந்து கொண்டது. சத்யதேவ் கண்களில் சிரிப்புடன் உதட்டில் தீவிரமாக அவளின் கையில் இருந்த அனைத்து வெற்றிலையையும் மென்று விரலையும் கொஞ்சம் சேர்த்து விழுங்கினான்.
மிதுன் ரிதமிடம் இப்போ உன் turn அவனுடைய விரலை கடிச்சு வச்சிடு… சத்ய தேவ் அவளை பார்த்து வெயிட்டிங் என முணுமுணுக்க, உன்னை என்ன செய்கிறேன் பாருடா என்று நினைத்தவள்.
இன்பா சத்யதேவிடம் கையே நீட்டு மாப்பிள்ளை என்று கூற சத்யதேவ் 5 விரல்களையும் நீட்டினான். ஆள்காட்டி விரலை நறுக்கென கடித்தாள். அவன் முகத்தில் புன்னகை மட்டுமே. ஒவ்வொரு விரலாக அவள் ரத்தம் வரும் அளவுக்கு கடித்தாள் என்று சொல்லலாம்.
என்னடி அவன் சிரிச்சிட்டு இருக்கான் என்று மிதுன் கேட்க..
தெரியலையே என்று மொத்த வெற்றிலையும் சாப்பிட்டு முழுங்கினாள். ஆரோக்கியமான விளையாட்டு நல்லபடியா முடிஞ்சது. அடுத்ததா பூ பந்து என்று பூவால் சுற்றப்பட்டு இருந்த ஒரு பந்தை இதயன் ஓடிச்சென்று எடுத்து வர, இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி போட்டு விளையாடினார்கள். அனைத்து சிறுவர்களும் சிரித்து பேசி கொண்டாட்டமாக விளையாட ரி தம் அவனை முறைத்தபடியே விளையாடினாள்.
இன்னும் எத்தனை விளையாட்டு இருக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு என்று இதழ் கேட்க..
அவ்வளவுதான் அடுத்து மோதிரம் எடுப்பத எடுக்கறது என்று சில்வர் குடத்தில் இரண்டு மோதிரங்களை போட்டபடி மகி கொண்டு வந்து வைக்க யாரு எடுக்கிறது என்று பார்க்கலாம்? என்று இருவரையும் கைவிடச் சொன்னார்.
ரிதம் மற்றும் சத்யதேவிருவரும் குடத்தில் கைவிட்டபடி ஒரு சில நிமிடங்கள் இருக்க சத்தியதேவ் அசராமல் அவளை பார்த்தான். ரிதமோ அவனுடைய கைகளை அவளின் நகத்தை வைத்து பூறினாள்.
சத்திய தேவ் உதட்டில் புன்னகை மட்டுமே மிஞ்சி இருக்க கடைசியில் ஜெயித்தது சத்ய தேவ். இரண்டு மோதிரங்களையும் எடுத்து விட்டான்.
விவேகா அதை பார்த்துவிட்டு நீ தோத்து போயிட்டியா? சக்தி தான் ஜெயிச்சுருக்கான். சரி சக்தின்னு எழுதி இருக்க மோதிரத்தை அவளுக்கு போட்டு விடு என்று காட்ட.. அந்த புது சத்ய தேவ் என எழுதி இருந்த புது மோதிரத்தை அவளின் கையில் போட்டு விட்டான்.
அதே போல அவளும் ரிதம்னு எழுதி இருக்க மோதிரத்தை நீ சக்திக்கு போட்டு விடு என்று இன்பா சொல்ல அதேபோல் ரிதம் போட்டுவிட்டாள். அடுத்தபடியாக இனிப்புகளை ஊட்டிக் கொள்வது. சத்யதேவ் இனிப்புடன் சேர்த்து ரிதமின் கைகளையும் கொஞ்சம் சுவைத்துக்கொண்டான். அவனது எச்சில் பட்டதும் ரிதம் கூச்சத்தில் நெளிந்து கொண்டே கைகளை விளக்கிக் கொள்ள முயற்சி செய்ய.. என்னாச்சு என்று அனைவரும் கேட்க..
ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தாள். சத்திய தேவ் ஊட்டும் போது ரிதம் வேண்டும் என்றே நன்றாக கடித்து வைத்தாள். அவனை பழி வாங்கி விட்டோம் என்று சந்தோஷமாக அவள் முகத்தில் கண்ணகுழி ததும்ப சிரிக்க..
ஒரு வழியா விளையாட்டு முடிஞ்சது. அடுத்து சாப்பிட போலாம் வாங்க.. ஹான் பொண்ணு ரிதம் உனக்கு சக்தியோட ரூம்ல போய் டிரஸ் மாத்திக்கோ. சக்தி அவள கூட்டிட்டு போ! உன்னோட டிரஸ் ஆல்ரெடி இதழ் ரூமில் இருந்து எடுத்து வச்சிருக்கேன். போடி தங்கம்.. என்று அவர்களை அனுப்பி விட்டார்.
பிள்ளைங்களா எல்லாரும் வாங்க. உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு என்று அனைவரையும் மகி தனியாக அழைத்துச்செல்ல மிதுன் ரிதமை பின் தொடர..
டேய் அங்கே என்ன வேலை வாடா என்று இழுத்துச் சென்று விட்டார்.
ரிதம் திரும்பி தூறிகாவை அழைக்க.. போக இடையில் அவளை வழி மறித்து சத்ய தேவ் வந்து நின்றான்.
அவன் பார்வை ..?
தொடரும்..
EPISODE 149
ரிதம் இரண்டு படி ஏறியவள் சட்டென திரும்பி பார்த்தபடி யாரையாவது அழைக்கலாம் என எண்ணியவள். தூரி!! சிவி என கொஞ்சம் சத்தமாகவே கத்தினாள்.
அதற்குள் இடையில் வந்து நின்றான் சத்ய தேவ். அவனை கண்டு கொள்ளாதவள் மீண்டும் அழைக்க, இரண்டு படிகளையும் ஏறியவன் அவளை இடித்து விடும் அளவுக்கு அருகில் வந்து நின்றான்.
ரிதம் அவன் அருகாமையை பார்த்த கடுப்பானவள் அடுத்த படி ஏறிக் கொண்டே மீண்டும் அழைக்க போக, தேவையில்லாம கத்தி உன்னுடைய எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத! அவங்க யாரும் வர மாட்டாங்க. நான் வரேன். போ என்று அவனது வளைந்த வில் போன்ற புருவங்களும் உதட்டுடன் சேர்த்து பதில் கூறியது.
இல்ல எனக்கு தூரி! சிவி தான் வரணும். என்று ரிதம் மீண்டும் கூற, உனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி என் மகி மம்மி சொல்லி இருக்காங்க. அதனால ஏறுடி மேல? என்று அதட்டினான்.
தாய் சொல்லை தாட்டாத பிள்ளை! வந்துட்டான் பெரிய கழட்டி மாதிரி? ராஸ்கல்! நீ சொல்லி நான் ஏண்டா கேட்கணும்? போடா!! தள்ளுடா. நான் உங்களை கூட்டிட்டு வர போறேன். என்று அவள் அவனை விலக்கும் பொருட்டு கீழே ஒரு அடி வைக்க, சட்டென ஒட்டியானத்துடன் ஒட்டி இடை வளைத்து பிடித்துக் கொண்டான். டேய் ராஸ்கல் என்ன பண்ற நீ? என மூக்கு மேல் கோபம் முட்டிக் கொண்டு நிற்க, அவன் கண்களில் கள்ள வண்ணம் பூசி கொள்ள நான் தான் உனக்கு ஹெல்ப் பண்ணனும். இது என் மகி ஆடர் அதான். இப்போ கீழே இறங்கின உன்னை தோலில் தூக்கி போட்டுட்டு போவேன் டி! என சாதாரணமாக கூறினான்.
அவனை முரைத்தவள். வேகமாக கையை தள்ளி விட்டபடி மேலே ஏறினாள். கைய கடிக்கிற!! மேலே வாடி உன்னை.. என மீதியை முழுங்கிக் கொண்டான். அவன் வளைத்து பிடித்த வினையின் காரணமாக இடையில் உள்ள மடிப்பு இறங்கி எடுப்பான இடுப்பு கண்களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தது. அனைத்தையும் இனி தங்கு தடையின்றி ரசிக்க ஆரம்பித்தான். உள்ளுக்குள் நொடிக்கு நூறு முறை இடையை தழுவி தன் இடையில் ஒட்டி அடக்கிக் கொள்ள இதயம் துடித்து முன்னால் தள்ளிக் கொண்டிருந்தது.
அவனது அறைக்கு வந்தவள் வெளியே நின்றபடி அறையை பார்த்தாள். ம்ம் வா! என கதவை திறந்து விட்டான். மகி சொன்னதை போலவே ரிதமின் உடைகள் அங்கு அடுக்க பட்டிருந்தது. இன்னும் என்ன பண்றாரு மாமா? நான் எதுக்கும் ஒரெட்டு போய் பார்த்திட்டு வந்துடுறேன். என சொன்ன ருத்ரன் எழுந்து செல்ல போக, டேய் எருமை! என கர்ஜித்தார் இன்பா.
சொல்லுங்க ப்பா என்றான் நெடு நாள் கழித்து. இன்பா வின் கண்கள் ஆச்சரியத்தில் வளைந்தது. அவன் அப்பா என்று அழைத்த குரலில். ஹே இனி குட்டி எருமையோட அப்பா யாரு? என ருத்ரன் கேட்க, அது எருமை தான் தீரா இது கூட தெரியாதா என இனியா தன் அத்தைக்கு உதவி செய்து கொண்டே பதில் கூறினாள்.
நாயே! இப்போ எதுக்கு சத்ய தேவை பார்க்க போற? ஏன்? ஏன் நான் போக கூடாது. உங்களுக்கு பொறாமை? நானும் மாமாவும் எவ்ளோ க்லோஸ் தெரியுமா? நீங்க வருண் மாமாச்சிய நடத்துற மாதிரி என்னை சக்தி மாமா நடத்த மாட்டாரு என கூறினான் ருத்ரன்.
ஹே விவேகா! என பற்களை கடித்துக் கொண்டே அழைத்தார் இன்பா. என்னாச்சு என சொல்லிக் கொண்டே அருகில் வந்தார் விவேகா.
இந்த நாயி என்ன சொல்றான்னு கேளு. உன் பையனுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்லடி. அறிவு கெட்டவன். இவ சொல்றத கேட்டு, அதுக்கு சொல்யூஷன் சொல்லு. இம்சை புடிச்சவன் என்று உளறிக்கொண்டே போனை நோண்டியபடி சூர்யாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.
சூர்யாவுக்கும் இன்பாவுக்கும் நடுவில் மித்துன் தேவ் அமர்ந்திருந்தான். மகி தான் சூர்யாவின் அருகில் அமர வைத்து விட்டு சென்றார். என்ன ஆச்சு? என்று விவேகா கேட்க.
ருத்ரன் விஷயத்தை கூறவும் இன்பா இருவரையும் முறைத்துப் பார்த்தார். நீீ இரு நான் போய் பாத்துட்டு வரேன் என்று விவேகா நகர, நானும் வரேன் என்று எழுந்தான்.
சொல்றதை கேளேண்டா தீரா! ஏன்டா இப்படி பண்ற? ஐயோ இந்த பையன வச்சுக்கிட்டு, நான் என்ன பண்ணட்டும்? உங்க அப்பா மாதிரியே இருக்காத! என்னை டென்ஷன் படுத்தாத தீரா? என்று கோபத்தில் பேசினார்.
ஓ அது எப்படி கெட்டது பண்ணா மட்டும் என்னை மாதிரி இருக்கான்னு சொல்ற? அவனோட புத்தி எல்லாம் அப்படியே உன்ன மாதிரி தான் இருக்கு. மரத்துக்கு மரம் குரங்கு ஜம்ப் மாதிரி அவன் புத்தி தாவிட்டு இருக்கான். இன்னும் ஒரு வார்த்தை அவனை என்னோட பேசாத! அவனும் அவன் பிஹேவியரும், ச்சீ ச்சீ என்று இன்பா முகத்தை சுளித்தார்.
எதுக்கு இப்படி திட்ற? அவரும் திட்றாரு! நீயும் திட்ற. நான் அம்மாச்சி வீட்டுக்கு போறேன். நீ தனியா இருந்துக்கோ! என்று அவன் கூற, போய் தொல சீக்கிரமே! இப்பவே உனக்கு பிளைட் டிக்கெட் போடுகிறேன் என்று இன்பா முனகினார்.
விவேகா இன்பாவை முறைத்து விட்டு அது இல்ல தீரா குட்டி! உனக்கு எப்படி சொல்வேன்? நீயும் உன்னோட லவ்வரும் தனியா இருக்கும்போது உன் லவ்வரோட தம்பி வந்தா எப்படி இருக்கும்? அந்த மாதிரி புரியுதாடா! என்றாள்.
ஆனா மாமா ஒன்னும் அவளை லவ் பண்ணலையே! என்று ருத்ரன் கூறினான்.
Love மேரேஜ் வேற? அரேஞ் மேரேஜ் வேற. சோ இது கல்யாணத்துக்கு பின் வரும் காதல் அதை வர வைக்க தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம். நாங்க எல்லாம் சேர்ந்து ட்ரை பண்றோம். உனக்கு அக்கா புருஷனா சக்தி தானே மாமாவா வேணும்! சொல்றத புரிஞ்சுக்க சின்ன குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாதடா! உங்க அக்காளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அடுத்து உனக்கு கல்யாணம் ஆகப்போகுதரு! என விவேகா கூறிக் கொண்டிருக்க..
சுத்தம் இந்த நாயை ஒருத்தியும் திரும்பி பார்க்க மாட்டா! என அங்கிருந்து கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தார் இன்பா.
நல்ல வேலையாக உணவு மேஜையில் இதழினி, சிவன்யா, பவன்யா, இனியா, இதயன் என யாரும் இல்லை. அனைவரும் மகிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
ஆம் ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவை பாத்திரத்திற்கு மாற்றிககொண்டிருக்க ருத்ரன் சோகத்தில் இருந்தவன். மிதுன் சிரிப்பதை பார்த்துவிட்டு மாமா எதுக்கு உங்களோட தவப்புதல்வர் பக்கத்துல உட்கார்ந்து இருக்காரு? என்று கேட்க.. ரிதமை பாக்க போறேன்னு அவனும் ஒரு இங்கிதம் இல்லாம சொன்னான். என்றார் சூர்யா.
அப்போ சந்தோஷம்! நானும் போகல என்று ருத்ரன் அதே இடத்தில் அமர்ந்து கொண்டான்.
இந்த காதல் முயற்சி பத்தி இதையெல்லாம் போயி ரிதம் கிட்டயும் சத்யதேவ் கிட்டயும் கேட்டு வைக்க கூடாது. ரெண்டு பேருக்கும் சொல்றன் என்று விவேகா கூற..
நாங்க எதுக்கு கேக்க போறோம்? கண்டிப்பா அதெல்லாம் நடக்கவே நடக்காது! என்று மித்துனும் ருத்ரனும் ஒரே சமயத்தில் கூற, இன்பா அருகில் இருந்த பிளவர் வாஷை தூக்கி அவனை அடிக்க பாய, மிதுன் தொடையில் நறுக்கு என்று கிளினினார் சூர்யா.
விவேகா சிரித்தபடி அங்கிருந்து நகர, அம்மா எங்கே போற? இவரு என்னை அடிக்க வராரு! என்னை கொல்ல பாக்குறாரு என்று ருத்ரன் கூறினான்.
ரிதம் உள்ளே சென்றவள் நேராக உடையை தேட ஆரம்பித்தாள். நகைகள் அதைவிட மிகவும் வெயிட்டை தூக்கிக் கண்டு நடப்பது போல் இருக்கும் இந்த பட்டுப் புடவை கூடவே ஒப்பனை மற்றும் தலையில் சூடி இருக்கும் பூக்கள், ஒப்பனை நகைகள் என அனைத்தையும் களைவது என நினைத்து பார்க்கையில் மலைப்பாக இருந்தது. எப்பொழுதடா இந்த வேஷத்தில் இருந்து தன்னை களைத்துக் கொண்டு வெடுக்கென எளிமை உடையில் ஒரு குட்டி டாப் அதற்கு ஏற்றது போல சின்ன பாட்டம் உடைக்குள் தன்னை நுழைத்துக் கொள்ளலாம் என வேகமாக துலாவிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து விவேகாவின் குரல் கேட்டது. சக்தி சக்தி என்று அழைத்தார். மாமி என அறையைவிட்டு வெளியே வந்தவன். அப்படியே எட்டிப் பார்த்தான்.
அவள சிம்பிளா புடவை கட்டிக்கு சொல்லு. சின்ன டிரஸ் எதையும் போட வேணாம்னு சொல்லிடு. அதுக்கு தான் கூப்பிட்டேன். சரிங்க மாமி என்று சொன்னவன். அறைக்குள் சென்றான்.
ரிதம் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்பு அமர்ந்தவள் மெதுவாக அந்த வளையல்கள் நெக்லஸ் ஆரம் ஒட்டியானம் என அனைத்தையும் கலட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அவளின் சிரமத்தை பார்த்தவன். கதவை சாத்திவிட்டு அருகில் வந்தான்.“ ம்ம் எழுந்து என்னை பார்த்து உட்காரு”
“மாட்டேன் நானே கழட்டிக்கிறேன் நீ ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம். உன் ஹெல்ப் எனக்கு தேவையில்லை போடா”
பசிக்கிதின்னு சொன்னதா நியாபாகம். ம்ம் நீ எல்லாத்தையும் பண்ணிட்டு வரதுக்கு அடுத்த நாள் காலையில ஆகிடும்னு எனக்கு தோணுது.. அப்புறம் உன் இஷ்டம் போடி என்று அவன் போனை எடுத்துக் கொண்டு நகர..
ஹே ஹே போன்னு சொன்னா? அப்படியே போயிடுவியா வா! வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு! ம்ம் ஹெல்ப் இல்ல… இது உன்னோட கடமை என்று கூறியவள். அவன் முன் சென்று அமர்ந்தாள்.
சத்யதேவ் நுணுக்கமாக அவளின் கழுத்தில் இருக்கும் நெக்லஸ் மற்றும் ஆரம் என அனைத்தையும் மெதுவாக கழட்டி அருகில் வைத்தான். ரிதம் அப்படியே அமர்ந்திருக்க அவனது விரல்கள் அவளின் வதனத்தில் உரசும் போது உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் ஒரே நிலையில் தான் தவித்து தகித்து கொண்டிருந்தார்கள். ரிதமின் கழுத்தில் உரிமையாக தொங்கிக் கொண்டிருக்கும் தாலியைப் பார்த்தான். என் பொண்டாட்டிஇஇஇ! என்று உள்ளுக்குள் ஒரு அசரீரி கேட்டு கொண்டே இருந்தது. தாலியை வருடி பார்த்தான். அதில் சுயம் பெற்றவள். ஹே என்னடா பண்ற? என்ன அங்க தடவி பாக்குற என்று நெஞ்சை குனிந்து பார்த்தாள்.
இப்ப தொட்டா என்ன? என்றவன். அவளின் இரு கன்னங்களிலும் தன் கைகளை வைத்து ஏந்தி கொண்டான். ரிதமின் கண்கள் படபடக்க ராஸ்கல் கையை எடு! என இரு கைகளையும் தட்டி விட பாயிந்தாள்.
சிறு புன்னகை சிந்தியவன். ம்ம் அவ்ளோ ஆசையா?… உன்ன தொடலடி! தோடு கழட்ட தான் கன்னம் பிடித்தேன் என்று மெதுவாக அவளின் கன்னத்தை திருப்பினான்.
அவள் தேகம் தாபத்தில் தவிக்க, அவனது ஒவ்வொரு விரல்களும் மோகத்தில் தகித்துக் கொண்டிருந்தது. மெதுவாக அவளின் குடை ஜிமிக்கியை கழட்டினான். உள்ளுக்குள் ரணமாக கொதித்துக் கொண்டிருந்தது.
ஒரு மிருகம் உள்ளுக்குள் உருமிக் கொண்டே கமன்ட்றி கொடுத்தது. ஃபர்ஸ்ட் நைட்டா இருந்தா இந்நேரம் இதைதான் பண்ணிட்டு இருப்பேன். அவனை இன்னும் தூண்டி விட்டது.
அந்த எண்ணத்தை கொஞ்சம் எட்ட தள்ளி தூரத்தில் மிகவும் சிரமப்பட்டான். கழட்டிட்டியா என்று அவள் அதட்ட, மெதுவாக கன்னத்தை திருப்பியவன் இரண்டு காதுகளில் இருந்தும் கம்மலை கழட்டி இருந்தான்.
அவன் கைகள் மெதுவாக உச்சந்தலைக்கு சென்று நெத்திச்சுட்டியை கழட்டியது. சரி வளையல் கழட்டி விடு என்று கைகளை நீட்டினாள். ஏற்கனவே அவளின் அருகாமையில் தகித்து கொண்டுருந்தவனை சீண்டும் விதமாக இருந்தது அவளின் செய்கைகள்.
ம்ம் ஹிம்.. கழட்டக்கூடாது..இது திருமண வளையல். போட்டுக்கிட்டு தான் இருக்கணும் என்று சத்திய தேவ் கூறினான்.
அப்படியா ஆனா இது எனக்கு கவின் போட்டுவிட்டது என்று ரிதம் சொல்ல, அவனது பெயரை கேட்டதும் உள்ளுக்குள் கோபம் பொங்கிட, அவளின் கையை வெடுக்கென பிடித்து இழுத்தான்.
சக்தி! ஸ்ஸ்.. என அவனது பிடியில் இரண்டு கண்ணாடி வளையல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்து சிதறியது.
ரிதம் அவனை பார்த்து முறைக்க, அவன் பிடியில் மென்மை கூட்டி மெதுவாக கையைப் பிடித்து இரண்டு கைகளில் இருந்தும் வளையலை மொத்தமாக கழட்டி இருந்தான்.
அவனது அவஸ்தையான நிலையை அறியாத பெண்ணவள். இரண்டு கைகளையும் தூக்கி விட்டபடி ஹ.. ஹவுச் இந்த இடுப்புல கட்டி இருக்கிற ஒட்டியானாத்தை கழட்டி விட்ரா. ரொம்ப நேரமா என்ன குத்திக்கிட்டே இருக்கு. அன் -கம்பட்டபிலா இருக்கு என்று ரிதம் பார்த்தாள்.
உள்ளுக்குள் குறுகுறுக்க இடையை இறுக்கிப்பிடித்தான். அவனது பிடியில் அழுத்தமும் அதன் கூடவே சேர்ந்து மோகமும் முட்டிக்கொண்டு நின்றது. பிடியில் வித்தியாசம் உணர்ந்தவள். அவனது முகத்தைப் பார்த்தாள். அவன் கண்கள் சிவந்து போயிருந்தது. முகமெல்லாம் கொஞ்சம் கனன்று வெதுவெதுப்பாக இருக்க, wow இது கூட நல்லா இருக்கே! இவனை இப்படித்தான் டார்ச்சர் பண்ணனும் என்று நினைத்தவள்.
சீக்கிரம் கழட்டுடா என்று சினுங்கினாள். சத்ய தேவ் பெரு மூச்சுடன் மலைப்பாக அவளை பார்த்தான். ம்ம் பசிக்குது என மெதுவான குரலில் கூறினாள். “எனக்கு அதை விட” என அவளது நெஞ்சத்துக்கு கீழ் அவனது தலை உரசி கொண்டிருக்க, அப்படியே அவளை இடையோடு கட்டிக் கொண்டான்.
டேய் என்ன பண்ற என்று அவள் கேட்க வருவதற்குள் பின்னால் அவன் ஒட்டியானத்தை மெதுவாக ஹுக்க கழட்டிக் கொண்டிருந்தான்.
அவள் நிற்க அவன் அவளின் வயிற்றை கட்டி கொள்வது போல காட்சி எதிரில் இருக்கும் டிரெஸ்ஸிங் மற்றும் கப்பார்ட் கண்ணாடியில் இந்த காட்சி அழகாக தெரிய. மெல்ல சிரித்தாள்.
சிரிச்சியா என்ன?
ப்ச் நீ தொட்டாலேயே எனக்கு வெறுப்பா இருக்கு. இதுல சிரிக்கிறது ஒன்னு தான் கேடு என்று கூறினாள்.
அப்படியா உன்ன வெறுக்க வைக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பிடியில் இன்னும் கொஞ்சம் இறுக்கினான்.
டேய் விட்ரா! சக்திஇஇஇ! விடுஉஉஉ! என அவள் கிறங்கிக் கொண்டே கூற… மாட்டேன் என முகத்தை அவளின் வயிற்றில் புதைத்தான். இருவரும் ஏகாந்த நிலையில்… அது ஒரு நிமிடம் தான். அடுத்த நொடி மெதுவாக அதை கழட்டி விட்டவனுக்கு பளிங்கு போல வளவளத்து கொண்டிருந்த அவளின் இடையில் வைர கள் நாவள் பியர்ஸ் அவன் கண்களை ஊடுருவிக் கொண்டிருந்தது. அவனது பார்வை சென்ற இடத்தை பார்த்தவள். உதட்டை கடித்தபடி ஹே போதும் டா! இதுக்கு மேல எனக்கு இதை கழட்ட விடு. என அவன் பிடியில் இருந்து விலகினாள்.
நீ ரெஸ்ட் ரூம்ல போய் சேஞ்ச் பண்ணிட்டு வா. நான் இங்கதான் இருப்பேன்.
சரி அப்படியே குளிச்சுட்டு வரேன் என்று சொன்னவள் அருகில் இருக்கும் குட்டி டிரெஸ்ஸை எடுத்துக் கொண்டு போனாள்.
இந்த பிளவுஸ்சையும் இந்த ஸ்கட்டையும் போட்டுட்டு வா என்று எடுத்து நீட்டினான்.
எதுக்கு?
இது தான் என்னோட டிரஸ் என்று அந்த டாப் மற்றும் பாட்டம் இரண்டையும் காட்டினாள்.
இது பாட்டமே கிடையாது. இது ஜட்டி, அண்ட் அது டாப் இல்ல. இன்னர் என்று பச்சையாக கூறி விட்டான்.
அவனை ஏற இறங்க முறைத்தாள். அவனும் அசராமல் பார்த்தான்.
ரிதம் பற்களை கடித்த படி என்னால இதுதான் நைட்டுக்கு வியர் பண்ண முடியும்.
இத என் கூட இருக்கும்போது நீ நைட் வியர் பண்ணிக்கோ என்று அசால்டாக கூறினான் சத்தியதேவ்.
உன் கூட இருக்கும் போதுது நான் எதுக்கு இதை நைட் வியர் பண்ணனும்? என்று அவள் புருவம் சுருங்கி நிற்க..
சத்யதேவ் உதட்டில் புன்னகை… அப்போ எதுவுமே…
ஹே ஹே என்ன சொன்ன..
நத்திங்.. என்றான் ஆனால் உதட்டில் புன்னகை குறைய வில்லை.
பல்ல காட்டாத!! இப்படி சிரிக்காத! எனக்கு எரிச்சலா இருக்கு என்று கூறினாள்.
வீட்ல சொன்னாங்க நீ இந்த டிரஸ் போடக்கூடாது. ஐ மீன் புடவை தான் கட்டணுமாம். கொஞ்ச நாளைக்கு.. அதனால தான் போய் ப்ளவ்ஸ், இன்ஸ்கட் போட்டுட்டு வாடி என அதட்டினான்.
என்னால இதெல்லாம் வியர் பண்ணிட்டு இருக்க முடியாது. எனக்கு கம்ஃபர்டபிலா இருக்காது டா என்ற ரிதம் மீண்டும் சொல்ல..
ஃபர்ஸ்ட் வியர் பண்ணிட்டு வா நைட்டு தூங்கும்போது மாத்திக்கோ. இப்போதைக்கு சாப்பிடற வரைக்கும் போட்டுக்கோ போ என்று கூறினான்.
அவனை முறைத்தபடி திரும்பினாள். அப்பொழுதுதான் கூந்தலை கலைக்காமல் போனது தெரிந்தது. அவள் மீண்டும் ட்ரெஸ்ஸிங் டேபிள் அருகில் வந்தவள். அமர்ந்து ஜடையை கலைக்க ஆரம்பித்தாள்.
என்ன பண்ற என்று கேட்க..
ரொம்ப வெயிட்டா இருக்கு. நான் குளிக்கலாம்னு இருக்கேன். எனக்கு இந்த ஹேர் ஸ்டைலை பிரிக்கணும் என்று அவள் பிரிக்க அவனுக்கு மின்னல் வெட்டியது.
என்னடா என அவள் கண்ணாடி வழி அவன் முகத்தை பார்க்க, ஹெல்ப் வேணுமா என்று கண்களில் ஆர்வம் பொங்கியது.
தேவையில்ல என்று அவள் கூறி விட்டாள் கிராதகி.
ஓகே என்றான் ஆனால் அந்த இடத்தை விட்டு நகர வில்லை.
அப்புறம் எதுக்குடா இங்க நிக்கிற என்று அதட்டலடன் கேட்டாள்.
இது என்னோட ரூம். நான் எங்க வேணாலும் நிப்பேன். ரிதம் அவனை முறைத்த படி ஜடையை பிரிக்க முற்பட்டாள்.
பூக்கள் சுற்றி இருந்ததால் மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா? என்று மீண்டும் சத்யதேவ் கேட்க, வேண்டாம். உன் வேலையை பாரு என்று கூறியவள். ஒரு சில ஹர்பின் கழட்டி வைத்தாள்.
அப்பொழுதும் முடியாமல் போக சத்ய தேவ் மீண்டும் கேட்டான்.
நான் ஹெல்ப் பண்ணவா என்று அவனது குரல் மெதுவாக ஒலித்துக் கொண்டே அவளின் தோல் பட்டையில் விரல் பட அப்படியே சேரில் நன்றாக சாய்ந்து கொண்டாள்.
அவளது ஜடையை கையில் பிடித்தவன் பின்னலை மெதுவாக அவிழ்த்து விட்டான். அதில் சொருக்கப்பட்டு இருந்த செயற்கை ஜடையை பக்குவமாக அவிழ்த்து அருகில் எடுத்து வைத்தவன். அவளின் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்டு இருக்கும் அனைத்து நகையையும் கழட்டி வைத்தான்.
அவன் கைகள் மெல்ல மெல்ல அவளின் தலைப்பகுதிக்கு வந்து தொட்டது. சத்தியதேவ் மிகவும் மெதுவாக அவளின் தலையில் சூடி இருக்கும் மொட்டு மல்லிகைப்பூ, நந்தியாவட்டம் என இரண்டு சுற்றையும் கழட்டி வைத்தவன். அழகுக்காக வைக்கப்பட்டிருந்த செயற்கை மலரையும் மெதுவாக கழட்டினான். இப்பொழுது அவளது தலையில் பாரம் குறைந்தது போல இருக்க கண்ணகுளி கொஞ்சம் சிணுங்கியது.
அதாவது கூந்தலில் கைகளை நுழைத்து ஆதுரமாக கொஞ்சம் அழுத்தத்துடன் பிடித்தான். அந்தப் பிடித்தம்.. பெண்ணவளுக்கும் பிடித்துப் போனது. சட்டென பார்வையை உயர்த்தி அவனை பார்த்தாள். சத்ய தேவ் கண்ணாடி வழி அவளைை தன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து ரிதம் தன்னிலைக்கு வர, சத்யதேவியின் கைகள் கூந்தலில் இருந்து மட்டும் கையை எடுக்கவில்லை. அது ஏன் என்றே தெரியாது. அந்த குதிரைவால் கூந்தலில் அத்தனை மோகம். சிறுவயதில் இருந்தே. அவளின் கூந்தலை கட்டவிழ்க்க சத்ய தேவ் கைகள் பரபரக்கும்
முத்தமிட சொன்னால் கூட வேண்டாம் என்று சொல்வான். அவளது கூந்தலில் விழுந்து கிடப்பவன் போல. அந்த அளவுக்கு அவளுடைய கூந்தல் பிடிக்கும். அவன் கைகளை நுழைத்தபடி அப்படியே வருடி கொடுத்தான்.
சட்டென தன்னிலைக்கு வந்தவள். என்னடா பண்ற? என இரு புருவத்தை சுருக்கி கண்ணாடி வழி கேட்டாள்.
அது ஒன் ஒன்னும் இல்லை குரல்கள் கரகரக்க மெதுவாக விலக்கினான். இப்போ பேண்ட் வேணுமே? என்று தேடிக் கொண்டிருந்தாள். அருகில் இருக்கும் டிராவை அவள் மேல் மோதிக்கொண்டே திறந்து காட்டினான்.
அதில் மகி ஏற்கனவே செட்டப் செய்து வைத்திருந்தார். ரிதமுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அதில் இருக்க.. ஒன்றை எடுத்து மொத்த கொண்ட கூந்தலையும் அள்ளி முடிந்து பன் போல உச்சந்தலையில் போட்டுக் கொண்டாள். அவளின் பன் கொண்டையை பார்த்து சத்யதேவ் பெருமூச்சு விட்டான்.
அவளது உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றவள். எனக்கு சோப்பு வேணுமே என திரும்பி பார்க்க,
ப்ச்! இதெல்லாம் பண்ண மகி சோப்பு ரெடி பண்ணி இருக்க மாட்டாங்களா? என்பது போல அவன் பார்வை இருக்க..
இரு டா fresh ஆகிட்டு சாப்பிட்டு வந்து தென்பா உன்னை பழி வாங்குறேன். வாய் பேசுறயா ராஸ்கல் என நினைத்துக் கொண்டே தோள்களை குலுக்கியவள். ரெஸ்ட் ரூமுக்குள் கதவை அடைத்துக் கொண்டாள்.
அவள் சென்ற அடுத்த நொடி ஹரிணிக்கு கால் செய்தான் சத்ய தேவ்.
அடுத்து என்ன நடக்கும்?
– வருவா(ள்)ன்
EPISODE 150
ரிதம் குளிக்க சென்ற அடுத்த நொடி ஹரிணிக்கு கால் செய்தான் சத்ய தேவ். ரிங் சென்று கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை. நிதினுக்கு போன் செய்யலாமா? என யோசித்தான். ஆனால் இது அவனுக்கு தெரிய கூடாது. தேவையில்லாமல் அவர்களுக்குள் பிரச்னை வந்து விடும் என உள் நெஞ்சம் சொன்னது.
இப்போ என்ன பண்றது? என் தீவிரமாக யோசித்தான். திரும்ப திரும்ப அவளுக்கு அழைத்தான். சரி எதுவும் வேலையா இருப்பா! டிஸ்டர்ப் பண்ண வேணாம் என தோன்ற விட்டு விட்டான். பால் கணி பக்கம் சென்றவன். நட்சத்திரங்களுடன் மின்னும் வானத்தை பார்த்தான். நிலா மகள் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருந்தாள். உடலில் புத்துணர்ச்சி கூட சேர்ந்து கொண்டது.
அந்த நேரம் போன் சிணுங்கியது. மெல்ல திரும்பியவன் யாரென பார்க்க ஹனி பேபி என மின்னிக் கொண்டிருந்தது அந்த பெயர். உடனே போனை எடுத்தவன் சின்ன புன்னகையுடன் புருவம் சுருக்கி மெதுவாக போனை காதில் வைத்தான். ஹரிணி – நிதின் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. இருவரும் இன்னும் சேர்ந்து வாழ வில்லை என யாரோ ஒருவர் ( நிதின்) மூலமாக தெரிந்து கொண்டான்.
அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன் ஹலோ என்றான். ம்ம் சொல்லு என சுறத்தே இல்லாத பதில் ஹரினியிடம் இருந்து வந்தது. ம்ம் என்ன பண்ற? உன் கூட மினிஸ்டர் சாரு இருக்காரா? என கேட்டான்.
Professional ஆ பேசனும்னா என்னோட professional நம்பர்க்கு கூப்பிட்டு இருக்கலாமே! Reporter சார் எதுக்கு personal நம்பர்க்கு கூபூட்டீங்க? அப்போ personal ஆ எதுவோ பேசனுமா? இந்த ஒரு வருடத்தில் இப்போ தான் என் கிட்ட பேச தோணுச்சு போல என விரக்தியுடன் பதில் அளித்தாள் ஹரிணி.
சத்ய தேவ் அவள் பேச்சில் வித்தியாசத்தை தெரிந்து கொண்டவன். மெல்ல பால் கணி பக்கம் வந்தான்.
என்ன வேணும்? எதுக்கு கால் பண்ண?
என்னோட சிறு வயது காதலி என் பாசத்தில் பாதுகாப்பில் இருந்ததை விட நூறு மடங்கு என்னை விட பெட்டரா பாசத்தையும், பாதுகாப்பையும், அண்பயையும், அதுக்கு மேலே காதலை கொட்டி பார்த்துக்கும் ஒரு ஆள் கூடவே 24 மணி நேரம் இருக்கும் போது நான் அங்கே ராங் நம்பர் ஆ கால் பண்ணி டென்சனையும் பிரச்னையும் கொடுக்க கூடாதுன்னு தான் போன் பண்ணல என பதமாக கூறினான்.
பிளீஸ் சத்யா எனக்கு கஷ்டமா இருக்கு! என கண்களில் நீருடன் பேசினாள் ஹரிணி.
ஓகே ஓகே சும்மா சொன்னேன். என்றான் சத்ய தேவ். ஹரிணி அமைதியாக இருக்க, சத்ய தேவ் சிரித்த படி, எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு! அதுக்கு உன்னோட wish பண்ணவே இல்ல. என எதிர்பார்ப்புடன் கேட்டான்.
ஹரிணி அதற்கும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்ட படி, கோவில்லயே உன்னோட முகம் சரி இல்ல. என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? நிதின் மேலே எதுவும் தப்பிருக்காது. I know him. உனக்கு வேற எதுவும் பிரச்சனையா என கேட்டான்.
என்ன சொல்லணும்? என கேட்டாள் ஹரிணி.
சத்ய தேவ் உதட்டில் கொஞ்சம் புன்னகை அதன் கூடவே அவன் ஆராயும் நோக்கில் ஏன் என்னாச்சு?
சொல்ல ஒன்னும் இல்ல என்றாள்.
ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தாள். அவனும் எதுவும் பேச வில்லை. அமைதியாக இருந்தான். அப்படியே ஐந்து நிமிடங்களுக்கு மேல் செல்ல, சரி நீ பாரு ஹரிணி நான் வச்சிடுறேன். என கட் செய்ய போக,
பிளீஸ்.. என உடைந்து அழுதாள்.
சத்ய தேவ் மெதுவான குரலில் இப்போ எதுக்கு டி அழுகுற? என்றான் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.
அப்பொழுது தான் குளித்து முடித்து வெளியே வந்தாள் ரிதம்.
Console theory இங்கு வேறு மாதிரி போய் கொண்டிருப்பதை சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் அறிய வில்லை.
என்னால இதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல சத்யா! நீ! நீ வந்து எப்படி? எப்படி அவளை?.. என விம்மினாள்.
இப்போ என் கூட.. நான் கூப்பிட்டால் அவனை தூக்கி போட்டு வருவியா? என அவளின் மனதில் உள்ள குழப்பத்தை தெளிய வைக்க கேட்டான் சத்ய தேவ்.
அது மீண்டும் குழப்பம் ஆகிப் போனது. (இங்கு கேட்டல் இரண்டு பிரச்சனையை கொடுத்தது.) ரிதமுக்கு? வேக மூச்செடுக்க நிலையில்லாமல் அப்படியே படுக்கையில் அமர்ந்தவள். அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் வேகமாக பைஜாமா உடையை களைத்து போட்டு ஒன்றை அணிந்து கொண்டு வேக நடையுடன் உஷ்ண மூச்சுடன் கீழே இறங்கி சாப்பிட சென்று விட்டாள்.
அது என ஹரிணி தயங்கினாள். நீ யோசிக்கவே கூடாது. அப்படி நீ யோசிச்சா நிதின் மேலே நீ வச்சிருக்க காதல் தப்பா போயிடும். என்றான் சத்ய தேவ்.
ஹரிணி ஒரு சில நொடிகளில் நான் உன் கூட வர மாட்டேன். எனக்கு உன் மேலே அப்படி ஒரு ஃபீலிங் இல்ல சத்யா! என்றவள். உண்மைய சொல்ல போனால் அவள் உனக்கு பொருத்தம். எனக்கு பொறாமையாக இருக்கு. ஏத்துக்க முடியல..
இது ஆக்சிடன்ட்டல் மேரேஜ்! Unfortunately.. என சத்ய தேவ் கூற.. அது தான் iconic couple.. அது நீயும் அவளும் என்றாள் ஹரிணி.
நிஜமாவா? என உள்ளுக்குள் துள்ளலுடன் கேட்டான். என்னோட கெஸ் சரியா இருந்தால் இப்போ உன்னோட கண்களுக்கு கீழே சுருக்க மடிப்பு வந்து உன்னோட முடி காற்றில் ஆடி நீ உதடு அப்புறம் கொவுல் ரெண்டும் வளைய சிரிக்கனும் என ஹரிணி கூறினாள்.
சத்ய தேவ் நம்ப முடியா ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் உறைந்தான். களுக் சிரிப்பு சத்தத்துடன் என் சத்யா பத்தி எனக்கு தெரியாதா? என்றாள் உதடு வளைய.. இப்பொழுது மனதை லேசாக உணர்ந்தாள். அவளை இயல்பாக உணர வைத்தான். இனி அவர்களுக்குள் பொறாமை, குற்ற உணர்வு, தயக்கம் எதுவும் இருக்காது.
போதும் போதும் நீ சொல்ற மாதிரி எல்லாம் இல்லை என சத்ய தேவ் சமாளிக்க, நடிக்காத சத்ய தேவ் சின்ன வயசில இருந்தே அவள் மேலே உனக்கு soft corner ஜாஸ்தி அதை விட அவளும் சாதாரண ஆள் இல்லை. எப்போ பாரு குட்டி போனி டெயில் போட்டு கிட்டு அதை ஆட்டிகிட்டே ஆட்டுக் குட்டி மாதிரி பின்னாடி சுத்துவா. எனக்கு தெரியும். என்னமோ தெரியல எனக்கு அப்போ இருந்தே ரித்தமை பிடிக்காது. அவள் ருத்ரன் மாதிரி இல்ல. அவனும் கிட்ட தட்ட அப்படி தான் எங்கே போனாலும் உன் பின்னாடி வால் மாதிரி ஒட்டிப்பான். ஆனால் அதுக்கு அப்புறம் ரிதம் அப்படியே அவள் ரவுடி மாதிரி உன்னை வெறுத்ததை நினைச்சா கூட எனக்கு ஆச்சரியம் தான். அது ஒப்புக்கு பண்ற மாதிரி ஃபீல் கொடுக்கும் என்றாள்.
ம்ம் இத்தனை நோட் பண்ணி இருக்க? அப்புறம் ஏன் என் கிட்ட சொல்லல.. என கேட்டான் சத்ய தேவ்.
ஆமா என சிரித்தவள். சரி நீ பாரு! உனக்கு வேலை இருக்கும். என சொல்லி விட்டு போனை வைத்தாள். ஏனோ மனசு லேசாக ஆன ஒரு உணர்வு ஹரினிக்கு.
சத்ய தேவ் சிரித்த படி உள்ளே வந்தவன் இன்னுமா குளிக்கிறா? கரைஞ்சுட்டா என்ன பண்றது? என கதவை தட்டினான்.
ஹே ரிதம்! அடியெய்! ராவடி என அழைத்தான். பதில் வர வில்லை. கதவை தட்ட.. அது தானாக திறந்தது. ஹே என்ன டி பண்ற? பக்கத்தில் விட மாட்டேன் அப்டின்னு பில்ட் அப் கொடுத்த இப்போ கதவை திறந்து வச்சுட்டு நிக்கிற என தொண்டையில் எதோ உருல திறந்தான்.
அங்கு வெறும் குளியலறை மட்டுமே அவனை வரவேர்த்தது. எங்க போனா? ஒருவேளை ஜன்னல் வழியா தப்பிச்சிருப்பாலோ? என்று முட்டாள்தனமாக கண்டதை யோசித்தான். இது ஏன்? இப்படி சத்யதேவ் நடந்துக்கிறான்? அது அவன தன் கேட்கணும்!
சரி போலீஸ் மூளை.. சாரி சாரி ரிப்போர்ட்டர் மூளை கொஞ்சம் வேலை செய்தது. அவன் வெளியே வந்து உடையை பார்க்க, அந்த குட்டி உடை அதே இடத்தில் இருக்க, கபோர்டு கொஞ்சம் திறந்திருந்தது. திறந்து பார்த்தால், மொத்த துணியும் கலைக்கப்பட்டிருந்தது. “அப்போ இதுல இருந்து ஒரு டிரஸ் எடுத்து போட்டுட்டு போயிருப்பான்னு நினைக்கிறேன். என்ன விட்டுட்டு கீழ போயிட்டாளா? க்ராதகி ராவடி என்று நினைத்தவன்.
அந்த உடைகளை பெருமூச்சுடன் பார்த்தான். அவளை வந்து மடிச்சு வைக்கணும். கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே! இந்த பொண்ணுக்கு கிடையாது. என்று மொத்த உடைகளையும் எடுத்து மெத்தையில் போட்டவன். ஒரு பெருமூச்சை விட்டபடி கீழே எட்டிப் பார்த்துக் கொண்டே தன்னை சமன் செய்து கொண்டு மெதுவாக கீழே வந்தான்.
கீழே வந்தவனுக்கு மிகவும் ஏமாற்றமும் அதன் கூடவே சேர்ந்து கோபமும் வந்து சேர்ந்தது. மிதுன் தேவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட பாதிக்கு மேல் ஓடி இருக்கும்.
சத்யதேவ் அவளை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டிருக்க, உன்னோட புருஷர் வந்துட்டாரு! என்று மித்துன் தேவ் அவளின் காது பக்கம் சொல்ல, அவளின் பார்வை உணவின் மீது இருந்து மாறாமல் அப்படியே “யார் வந்தால் எனக்கென்ன? எனக்கு சோறு தான் முக்கியம். ஏன்டா இப்படி சாப்பிடற நேரத்துல மத்த விஷயத்தை பேசி கான்சன்ட்ரேட்ட டைவர்ட் பண்ற? உன்ன பத்தி நினைச்சா இன்னும் பசி எடுக்கும்! ஆனால் தேவையில்லாத பத்தி நினைச்சாலோ பார்த்தாலோ எனக்கு கான்ஸ்டிபேஷன் டயரியா லூஸ் மோஷன் எல்லாமே வரும் டா ஏன்டா மித்து” என்று மெதுவான சத்தத்தில் கொஞ்சினாள் ரிதம்.
சத்யதேவ் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க, சக்தி வாடகண்ணா! வந்து உட்காரு. என்னாச்சு? அங்கேயே நிக்கிற? என்று விவேகா கேட்க..
அது ஒன்னும் இல்ல மாமி! என்று அவனது பார்வை மொத்தமும் ரிதமின் மேல் இருந்தது.
மகி அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவர். நீதான் வேலை விஷயமா யார்கிட்டயும் சின்சியரா போன் பேசிக்கிட்டு இருந்தியாமா! அதனாலதான் ரிதம் அத டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு கிளம்பி வந்துட்டேன்னு சொன்னா. என்று கூற.. சத்யதேவின் பார்வை ரிதமின் மேல் ஆழமாக பதிந்தது அதை கண்டு கொண்டவர்.
அச்சோ! இவள் என்னத்த கேட்டு வச்சான்னு தெரியலையே? பாதில போனாளா? இல்ல முதல் இருந்து… என்று ஒரே குழப்பமாக இருந்தது.
விவேகாவின் பார்வை சத்யதேவின் மீது பட்டு என்ன மாப்ள? அவள அப்படி பாக்கறீங்க? பொய் சொல்லிட்டாளா? நீங்க போன் பேசவே இல்லையா? என்று ரிதமை குறை சொல்லும் பொருட்டு கேட்க..
ரிதம் கோபமாக விவேகாவை பார்த்தாள். அச்சோ அச்சோ மாமி நான் நிஜமாவே போன் பேசிட்டு தான் இருந்தேன். அவ குளிச்சுட்டு இருந்தா! நான் கவனிக்கல என்று சத்திய தேவ் சமாளித்தான்.
விவேகா அப்பொழுதும் கோபம் குறையாமல் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்து இருக்கலாம்ல்ல டி! இது என்ன பழக்கம்? என்று முகத்தை சுருக்கினார்.
ஆனால் அவன் வரும் வரை ஒரு ஜீவன் சாப்பிடாமல் இருந்தது. வேறு யார் மாமனும் மச்சானும் தான்.
மகி சிரித்தபடி சரி சரி போதும் விவேகா விடு எப்படி இருந்தா என்ன? மலை யேற மச்சான் போல இருந்தா போதும்னு சொல்லுவாங்க. இதோ சக்தி! உனக்காக ருத்ரன் காத்துகிட்டு இருக்கான்! என்று சொல்ல. இதழ், சிவன்யா, இனியா, பவன்யா, இதயன் என அனைவரும் சிரித்தார்கள்.
ஆனால் ரிதம் மட்டும் எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.
சத்யதேவ் அவளை அளந்துவிட்டான். மொத்தமாக.. “ அப்ப இவ ஏதோ நம்ம மேல கோபமா இருக்கா! தெரிஞ்சு போச்சு! அடுத்து என்னத்த பண்ண போறாளோ? தெரியலையே. என்று பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டே ருத்ரனை அழைக்க..
டேய் வாடா நீ இன்னும் சாப்பிடலையாமே என்று கேட்க..
ஆமா மாமா என்று அசடு முகத்துடன் அது மாமா என சிரித்தான்.
மீனாட்சி இவனுக்கு நல்ல புத்தியை கொடு என்று சத்யதேவ் கிண்டலடிக்க..
மாமா என்று அவன் அதட்டினான். .
என்னப்பா என்னாச்சு என்று மகி கேட்க ஒன்னும் இல்ல மகி என்று சிரித்தபடி எழுந்தான்.
மாமா என்ன மாமா சைக்கிள் கேப்ல என்ன போட்டு கொடுக்குறீங்களா? என்று ருத்ரன் சொல்ல… டேய் அடுத்து உங்க அக்காளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா! அடுத்து உனக்கு தாண்டா கல்யாணம்! என்று சத்திய தேவ் கூற
எனக்கு எப்படி மாமா கல்யாணம் ஆகும்? எனக்கு முன்னாடி சிவன்யா இருக்காங்க, பவன்யா, இதழ், இன்னும் நிறைய பேர் இருக்காங்க மாமா. என்று ருத்ரன் சமாளித்தான்.
சரி சரி ஏதோ முடிவோட தான் இருக்க! கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பண்ணிடாதடா! என்று சத்திய தேவ் எச்சரித்தான்.
மாமா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா அப்படி எல்லாம் நான் எதுவும் செஞ்சு விட மாட்டேன் என்ற பொண்ணுக்கு உடன் கூறியவன் சரி வாங்க சாப்பிடலாம் என்று இருவரும் சேர்ந்து அமர்ந்தார்கள் உணவு பரிமாறப்பட்டது சரியாக மற்றும் ருத்ரன் இருவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் ரிதம் எழுந்து கை கழுவச் சென்றால் அதுக்குள்ள சாப்டியா என்று ரிதம் மற்றும் மகி இருவரும் ஒரே நேரத்தில் கேட்க ஆமா நான் சாப்பிட்டேன் என்று பதில் கூறினார் சத்தியதேவ் அப்படியே அமர்ந்திருக்க மகி உள்ளே சென்று கிச்சனிலிருந்து டைனிங் டேபிள் பக்கம் இருந்த மாதிரி ரிதம் அங்கு கிச்சன்ல தனியா சாப்பாடு வச்சிருக்கேன் சத்தியத்தை எடுத்துட்டு வாம்மா என்று கூற
மாமி எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் போய் தூங்கட்டுமா என்று சமையலறையில் கை கழுவிக்கொண்டே பதில் அளித்தால்.. கூடவே சத்யதேவ் பற்றிய வார்த்தையை அப்படியே அந்த வார்த்தையை கத்தரித்தால்
விவேகாவுக்கு கோபம் தலைக்கேறிட இன்பாவை முறைத்தபடி ஏய் என்று கட்ட ஆரம்பித்தால் சத்தியத்தை பரவால்ல நானே போய் போட்டுக்கிறேன் என்று சத்யதேவி எழுந்தான்
மிதுன் கை துடைத்துக்கொண்டு வெளியே வர, சத்தியதேவ் தடாலடியாக உள்ளேன் நுழைந்தான். நான் வரேன் பா என்று மகி வர..
இல்ல நானே போட்டுக்கொள்கிறேன். நீங்க அங்கே இருங்க! என்று சொன்னவன் ரிதமின் மேல் மோதிக்கொண்டே நான் ஹேண்ட் வாஷ் பண்ணல பண்ணிட்டு போட்டுக்கிரென் என்று அவளை அப்படியே தழுவிக் கொண்டான்.
டேய் ஒழுங்கா நகந்திடு! இல்ல இங்கே கத்தி ஊர கூட்டுவேன் என்று ரிதம் கர்ஜிக்க..
இப்போ எதுக்குடி? முகத்தை மவுண்டன் மேல தூக்கி வச்சுட்டு இருக்க மாதிரி லுக் விடுற? என்ன நடந்து தொலைஞ்சது? சொல்லித் தொலை என்ற சத்திய தேவ் கேட்க..
நம்ம டைவர்ஸ் பத்தி இன்னும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. என்று கூறினாள் ரிதம்..
அதில் கடுப்பானவன் ரிதம் என்கிட்ட அடி வாங்க போற என்று சொல்ல..
எங்க டாடி உள்ள வராங்க! நான் கொஞ்சம் தொல என்று அவள் ஆக்டிங் விட..
யார் வந்தாலும் நான் இப்படித்தான் நிற்பேன். என்று அவளது கன்னத்தில் முத்தமிட அருகில் வந்தான்.
இப்ப மட்டும் நீ முத்தம் கொடுத்த? நான் இங்கேயே என் கையை கட் பண்ணிக்க போறேன். என ஆவேசமாக பேசினாள்.
அப்போ கொடுத்தே ஆகணுமே என்று கண்ணை சிமட்டியவன் வெடிக்கென கன்னத்தில் முத்தமிட.. ரிதம் ஆக்ரோஷத்துடன் அங்கிருந்த கத்தியை எடுத்து கையை வெட்டிக்கொள்ள போக, கத்தியை வாங்கி அவனது கைகளை வெட்டிக் கொண்டான்.
ரிதம் அவனை அப்பட்டமான அதிர்ச்சியுடன் பார்க்க, ஒழுங்கா டென்ஷன் பண்ணாத..இப்போ என்ன வந்தது? என்னத்த கேட்டு தொலைஞ்ச? எதற்கு எப்படி முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்க? என முதலில் இருந்து ஆரம்பித்தான்.
ப்ளீஸ் எனக்கு தலை வலிக்குது விடு என்று அவனை வேகமாக தள்ளிவிட்டவள். வெளியே வந்திருந்தாள்.
மூச்சு வாங்கியது. அதற்கு மேல் சத்தியதேவ் எதுவும் செய்யவில்லை. அவன் கைகளில் இடது கையில் அடிபட்டு இருக்க ரத்தம் வந்து கொண்டிருந்தது. இறக்கப்படுவாள் என்று நினைத்தான். ஆனால் ரிதமின் அகராதியில் இறக்கத்திற்கு இடமில்லை போல.. அவனை திரும்பிக் கூட பார்க்காமல் மிதுன் அருகில் அமர்ந்து கொண்டு கதை பேசியவள் போனில் pubg கேம் விளையாடினாள்.
சத்திய தேவ் கைகளை மறைத்து விட்டு வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அவன்தான் வீகன் அதனால் அவனுக்கு மட்டும் மகி வீட்டிலேயே சமைத்து இருந்தார்.
சக்தி அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பதற்குள், இதழ், சிவன்யா பவன்யா என அனைவரும் வந்துவிட.. சரி தூங்க போலாம் வாங்க என்று ரிதம் அவர்களுடன் கிளம்பினாள்.
மகி விவேகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, என்ன பண்றதுன்னு சொல்லுடி? எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று மகி பார்க்க..
அக்கா நான் ரெண்டே ரெண்டு பிள்ளைதான் பெற்றிருக்கேன். நீங்கதான் மூணு பிள்ளை பெத்து இருக்கீங்க. சத்தியமா என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல. இவ கிட்ட நான் எப்படி?? என்று விவேகா தயங்க..
மகி தலையை செரித்தபடி ரெண்டு பேரும் சண்டை தான் போட்டு இருக்காங்க. அந்த விஷயத்துக்கு அதுக்கெல்லாம் இன்னும் நாலாகும்.
ஆனா அதுக்காக நம்ம விட்டு வைக்க கூடாது. ரெண்டு பேரையும் கண்டிப்பா ஒரே கூண்டுல பிடிச்சு போட்டா தான் அட்லீஸ்ட் சண்டை போட்டுக்கிட்டாதுவும் ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக்கொண்டு கொஞ்சமாவது பேசி இயல்பாக ஆரம்பிப்பாங்க என்று விவேகா கூற..
அதை நீயே சொல்லிடு டி என பெரியவர்கள் ஒரு கணக்கு போட்டார்கள் அது சரியான நடக்குமா? சத்தியதேவ் கிட்டயும் ரிதம் கிட்டயும் அத பத்தி கேக்கணும். என இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க,
சூர்யா உதடு கடித்து சாப்பிட ஆரம்பித்தார். என்னடா உன் முகமே சரியில்லையே? என்று இன்பா கேட்க..
எனக்கு என்ன? நான் நல்லா தானே இருக்கேன். என்று சூர்யா சாப்பிட ஆரம்பித்தார்.
இல்லையே நீ இப்போ சிரிச்சியே என்று கேட்க..
நான் எதுக்கு சிரிக்க போறேன்? நீ தான் சிரிச்ச மாதிரி இருந்தது என்று சூர்யா கேட்டார்.
நானா நான் எதக்கு சிரிக்க போறேன் என்று இன்பா சொல்ல, இது ஆக்வடா இருக்குல்ல என்று இன்பா சொல்ல..
நெஜமா உனக்கு ஆக்வடா இருக்கா? இத நான் நம்பனுமா? உன் பொண்டாட்டி கூட ஒரு சந்து கிடைச்சா கூட அங்க நீ சிந்து பாடுவியே! என்ற சூர்யா கூறி விட..
டேய் நடக்கிறத பேசுடா. எங்களுக்கு வயசு ஆகிடுச்சு மச்சி என்று இன்பா சொல்ல, அத நான் நம்பணுமா மச்சி என்று சூர்யா கூறினார்.
இன்பா சிரித்தபடி எங்க வம்சத்துக்கு சீக்கிரமா சேடிஸ்பேக்சனை ஆகாது.
அப்படியா உனக்கு அத பத்தி கவலை என்ன? அதனால தான் ரெண்டோட முடிச்சுகிட்டயோ என்று சூர்யா வரும் அவனை லாவகமாக அடக்கி விட..
டேய் இப்ப கூட நான் பத்து புள்ள கொடுக்க ரெடியா தான் இருக்கேன். அதை அவளால தாங்க முடியாது.
வெளியே ட்ரை பண்ணலாமே என சூர்யா சொல்ல..
அதுக்கு நான் தூக்கமாட்டி தொங்கலாம் என்று இன்ப ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.
சிவன்யா பவன்யா இதழினி மூவரும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க.. ஆக்னஸ், இனியா, இதயன், வீனா நால்வரும் இன்னொரு இன்னோரு பக்கம் இருந்தார்கள்.
இதழ் சிரித்தாள்.
எதுக்கு பாப்பா சிரிக்கிற? என்று இருவரும் கேட்க..
அக்கா இன்னைக்கு அண்ணாவுக்கும் அண்ணிக்கும் ஃபர்ஸ்ட் நைட். ஆனா அது கூட தெரியாம அந்த டுபுக்கு மிதுன் அண்ணா கூட உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடிட்டு இருக்கா. சத்திய தேவ் அன்னாவுடய நிலைமைய நினைத்து பார்த்தேன் என்றாள்.
இது ஆக்குவாடா இல்லையா என்று பவன்யா கேட்க ,
நீ சொல்றது சரிதான் அக்கா..ஆனாலும் அத நினைச்சாலே சிரிப்பா இருக்கு
எதை?
ஐயோ ரிதம் பொண்ணு கெட்டப்புல போயி பால் சொம்போட அந்த கதவை தட்டி, உள்ள புகுந்து சத்யதேவ் அண்ணா அவளை கட்டிலிக் உக்கார வச்சு..
அடுத்து என்ன நடக்கும்?
வருவாள்.
EPISODE 151
இது ஆக்வடா இல்லையா என்று பவன்யா கேட்க, நீ சொல்றது சரிதான் அக்கா..ஆனாலும் அத நினைச்சாலே சிரிப்பா இருக்கு என சிவன்யா மெல்ல சிரித்தாள்.
எதை?..
ஐயோ அக்காஸ் அதான் நம்ம ரிதம் பொண்ணு கெட்டப்புல போயி பால் சொம்போட அந்த கதவை தட்டி, உள்ள புகுந்து சத்யதேவ் அண்ணா அவளை கட்டில்ல உக்கார வச்சு.. அப்புறம் என பவன்யா நகத்தை கடித்த படி கேட்க, சிவன்யா போனை நோண்டிய படியே பார்த்தாள்.
என்ன பேசுறீங்க? என அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள் இனியா!
போச்சு இவள் வந்துட்டா! சின்ன புள்ளை முன்னாடி இதை எப்படி பேச முடியும்? என இதழ் சொல்ல.
இனி குட்டி அக்காவுக்கு தண்ணி தாகன் ஓடி போய் மொண்டு வா! என பவன்யா அனுப்பி விட… இதழ் சிரித்த படி அக்கா அடுத்து உனக்கு தான் டும் டும் டும் என கூறினாள்.
சரி இதோ போறேன் என இனியா ஓடினாள்.
ஹே சொல்லு பாப்பா! அப்புறம் என்ன?
அப்புறம் என இதழ் ஆரம்பிக்க..
இதெல்லாம் ரிதம் பண்ணுவாளா? அண்ணா கிட்ட ஆசிர்வாதம் வாங்குவாளா? அண்ணாவை கத்தி எடுத்து குத்துவா! குத்துவாளே தவிர ஆசீர்வாதம் வாங்க மாட்டா!.. என சிவன் யா புன்னகையுடன் கூறிக் கொண்டிருக்கும் போதே போன் வந்தது.
வேறு யார் அவளோட பாஸ் தான் அதுவும் இந்த நேரத்தில்.
பாஸ் என பதில் கொடுத்தாள்.
உங்க அக்கேசன் முடிஞ்சுது தானே இல்ல பெண்டிங் இருக்கா என சைத்து கேட்டான்.
பாஸ் அது அது வந்து என பற்களை கடித்த படி பதில் கூறினாள் சிவன்யா.
நாளைக்கு காலையில வந்து ஜாயின் பண்ணுங்க. நிறைய பெண்டிங் ஒர்க் இருக்கு. உங்க கமிட்மெண்டை நீங்க தான் முடிக்கணும் புரியுதா என்று அதட்டலுடன் கட்டளையிட்டான்
சரிங்க சார் என்று வெறுப்புடன் கூறியவள் ஃபோனை கட் செய்தாள்.
அதற்குள் இனியா வந்துவிட அக்கா தண்ணி! என நீட்டினாள்.
பவன்யா சிறுத்தபடி பாப்போம் அந்த பாட்டு போட்டு ஆடு எப்படி இருக்கணும்னு சொல்லி காட்டேன் என்று குறும்புடன் கேட்க.. இதோ என சிரித்த படி இஞ்சி இடுப்பழகி!.. மஞ்ச சிவப்பழகி.. என இனியாவை கட்டி அணைத்து கோர்த்து ஆடினாள் இதழ்.
சூர்யா வைத்த கண் வாங்காமல் தன் மகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். என்னடா அப்படி பார்த்துட்டு இருக்க? என்ற இன்பா திரும்பி பார்க்க, “என் பொண்ணு பழையபடி ஆகிட்டா! அங்க பாரு அவளோட முகத்துல சந்தோஷம். இதுதான் நான் எதிர்பார்த்தேன். சத்திய தேவ் மகி கிட்ட பேசிட்டான். அவனுக்கு கல்யாணமும் ஆகிடுச்சு. என்னோட வீட்டு மருமக உன் பொண்ணு என் கண்ணுகுட்டி. அதே போல என்னோட உலகம் என்னோட குக்கு. பழைய நிலைமைக்கு வந்துட்டா. எனக்கு.. இதைவிட என்ன வேணும்? எல்லாமே இப்போ என்கிட்ட இருக்கு” என்று ஆத்ம திருப்தியுடன் பார்த்தார்.
சந்தோசம் என இன்பாவும் பதில் பதில் கூறினார். அவர்கள் மூவரும் கல கலவென என்று சிரித்த்துக் கொண்டிருக்க, அங்க என்ன சிரிப்பு சத்தம் என்ற ரிதம் கேட்டுக் கொண்டே வந்தாள்.
நான் இல்லப்பா! நானும் இல்ல பா என்று மூவரும் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள். ஹே எங்கடி போறீங்க? நானும் வரேன் என்று ரிதம் அடுத்த அடியை எடுத்து வைக்க,
சத்ய தேவ் மகி விவேகா மூவரும் ரிதமை பார்த்தார்கள். மிதுன் எழுந்தவன். ஹான் நானும் வறேன். நைட் ஃபுல்லா நம்ம விளையாடலாமா? என்று சொல்ல..
எடு செருப்ப நாயே என்று சூர்யா பற்களை கடித்தார்.
விழித்தென மிதுன் திரும்பி பார்க்க, ரிதம் சட்டென திரும்பி பார்த்தாள்.
என்ன இது மகி மாமி, விவேகா பேபி, சத்யதேவ் நாய் மூணு பெரும் ஏன் நம்மள ஒரு மாதிரி பாக்குறாங்க? பேபி எப்போவும் திட்ர போல பார்ப்பா! ஆனால் அது பிரச்னை இல்ல. அந்த சக்தி! அவன் நம்மள எப்பவும் திங்கிற மாதிரி தான் பாப்பான். கேட்டா பசிக்கலன்னு சொல்லுவான். ஆனால் மகி மாமி! அவங்க ஏன் இப்படி பாக்குறாங்க? என்று ரிதம் நினைத்துக் கொண்டிருக்க..
ஆர் யூ பின்னிஷ்? சக்தி? என அவன் சாப்பிடுவதை பார்த்து கேட்டார் மகி.
ஹான் நான் finished மகி! என எழுந்தான் சத்ய தேவ். அவன் வேகமாக கிச்சன் பக்கம் சென்று விட , சரி ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா என்றவர் பார்வை ரிதமின் மீது பட்டு ரித்து இங்க வாங்க!
என்ன மாமி என புன்னகையுடன் ரிதம் மஹியை நோக்கி வர, மகி பெண்கள் அனைவரிடமும் பொண்ணனுங்களா ஓடுங்க உங்க ரூமுக்கு. இனி மா இதயா இங்கே இருக்கீங்களா இல்ல உதயாவுக்கு கால் பண்ணி பிக் அப் பண்ணிக்க சொல்லவா?
இதழ் சிரித்த படி வேணாம் மா அவள் இங்கேயே இருக்கட்டும் நான் அக்காங்க, இனி எல்லாம் மை விழி சித்தி வீட்டுக்கு போறோம் என சொல்ல..
அங்கே நான் வர மாட்டேன் அக்கா. அத்தை நீ அப்பாவுக்கு கால் பண்ணு நான் வீட்டுக்கு போறேன் என அவள் சொல்லும் நேரம் வெற்றி வந்து நின்றான்.
ஹே நான் வரல நீ போ! அத்தை நான் மிதுன் மாமா கூட தூங்குறேன். அட வெற்றி மாமா வந்துட்டாங்க! நான் இங்கேயே இருக்கேன். போகல த்த! அங்கே போனால் திரும்ப அம்மா விட மாட்டாங்க. அத்தை பிளீஸ் என கெஞ்சினான் இதயன்.
எதுக்கு இதாயா இப்படி பொய் சொல்ற? அம்மா ஒன்னும் அப்படி இல்ல. நான் இப்போவே வீட்டுக்கு போறேன் என இனியா கிளம்ப..
இனி குட்டி என சக்தி அழைத்துக் கொண்டே வந்தான். மா.. மாமா நான் வீட்டுக்கு போறேன்.
பவன்யா அவளை பாவமாக பார்த்துவிட்டு இனி பாப்பு இங்கேயே இரு! நாங்க வீட்டுக்கு போகல சரியா! நம்ம சித்தி வீட்டிலேயே இருக்கலாம். சாரி உங்க அத்தை வீட்டில் இருக்கலாம். சரியா? என்று பார்க்க, சிவன்யா இனியாவை முறைத்தபடி ஓவரா சீன் போடாத! அப்படியே அங்க உன்னை யாரு என்ன பண்றா? என்று மை விழியைப் போலவே பேசினாள்.
மகி சிவன்யாவை பார்க்க ப்ச் அம்மா எப்பவுமே அப்படித்தான் சித்தி! அதுக்கு என்ன பண்ண முடியும்? வராமல் இருந்திட முடியுமா? என்று சரியாக பேசினாள்.
உங்க அம்மாகிட்டயும் பேச முடியாது. உங்ககிட்டையும் பேச முடியாது பிள்ளைங்களா. அவதான் ஆசைப்படறால்ல. இங்கே இருந்துட்டு போகட்டும். இதயா நீ மிதுன் கூட போ. இனியா செல்லம் என்று மகி அழைக்க..
அவளின் முகம் தொங்கி போயிருந்தது. இப்போ எதுக்கு கவலை? உனக்கு இங்க தான இருக்கணும் நீ எங்கேயும் போக வேண்டாம். தூரிகா அடி வெளுப்பேன் ராஸ்கொள் இனியா சொல்றது தான் எல்லாமே! எல்லாரும் இங்கதான் இருக்கணும் அங்க மை விழி வீட்டுக்கு யாரும் போகத் தேவையில்லை. என்று மிரட்டினார்.
இதழினி நேராக சூர்யாவின் அருகில் சென்றவள். டாடி உங்களுக்கு ஏன் ஒரு தங்கச்சி இல்ல? என்று கேட்க, என்னாச்சு குக்கு?
அது அம்மா எப்பவும் இனியாவையும் இதயனையும் தலைல தூக்கி வச்சு கொண்டாடாத குறை தான். அந்த அளவுக்கு குடம் குடமா பாசம்! ஆனால் எனக்கு I mean இதுவே உங்களுக்கு அக்காவோ தங்கச்சியோ இருந்திருந்தால் என்னையும் அப்படி கொஞ்சி கொண்டாட ஆள் இருந்திருக்கும்ல்ல என்று கூறினாள்.
ஹே புள்ள மனசுல என்னடி இப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்கிட்ட? மகி உன்னை வெளுத்து கட்டிடுவேன். என்று சூர்யா சொல்ல, மகி முறைத்துக் கொண்டே அருகில் வந்தவள். என்ன பாத்தா எப்படி தெரியுது? இவளை மொத்த கூட்டமும் கொண்டாடிட்டு இருக்கு. நித்தின் நிவாஷ், சத்யதேவ், மிதுன் தேவ், ருத்ரன், சிவன்யா, பவன்யா, ரிதம், ஹரிணி, ஆதவ் சொல்லப்போனா நிலா. இவளை விட சின்ன புள்ள தான். ஆனால் எல்லாரும் இவளை தூக்கி தான் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. ஏழு கழுதை வயசாச்சு. வாய பாரு கெலவி மாதிரி. என காட்டமாக பேசினாள் மகி.
அப்போ எங்க அம்மாவ பத்தி பேச வரியா? என்று சூர்யா கேட்க… ப்ச் இரண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்று சத்திய தேவ் கூறினான்.
பாருடா சக்தி என மகி திரும்ப, பிளீஸ் சைலண்ட் மாம். அது எப்படி நான் உங்க கூட வந்து சேர்ந்தால் மட்டும் எங்கிருந்துதான் சின்ன பிள்ளையை விட மோசமா நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறீங்கலோ? நீங்க இப்ப டீன் ஏஜ் இல்லம்மா. உங்க ரெண்டு பேருக்கும் 60வது கல்யாணமே வரப்போகுது என்று சத்திய தேவ் கூறினான்.
சரி சரி சூர்யா உன் புள்ள முன்னாடியே அவமான படாத என்று சொன்ன இன்பா, ஏய் வாடி வீட்டுக்கு போலாம் என்று விவேகாவை பார்த்து அழைக்க., ருத்ரன் எப்பொழுதும் போல மாமா இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் தூங்க போலாம் என்று வந்தான்.
சத்ய தேவ் நொந்து போன பார்வையுடன் அவனை பார்த்தான்.
நானும் தூங்க போறேன் என்று இதயன் நேராக மிதுன் பக்கம் திரும்ப அந்த இடத்திற்கு நிவாசும் வந்து சேர்ந்தான். வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. நிவா.. வா வா! என மிதுன் அழைக்க..
ஹை ஜாலி அப்போ சரி வாங்க போகலாம் என்று ரிதம் அவர்கள் அனைவரையும் அழைத்தாள்.
என்ன டா நடக்குது இங்கே? என சத்ய தேவ் பார்வை இருந்தது.
மகியின் பார்வை நிவாஸ் பக்கம் சென்றது. சாப்பிட்டாச்சா நிவா என்று கேட்க..
ம்ம் டின்னர் பினிஸ்ட் சித்தி என்றான்.
அப்போ சரி என்றவரின் பார்வை ரித்து குட்டி வா! ம்ம் சத்ய தேவ்! வாடா கண்ணா! வந்து சாமி கும்பிட்டு தூங்குங்க! போதும் போதும் ரொம்ப டயர்டா இருப்பீங்க! என்று அழைத்துச் சென்றார்.
அனைத்து கூட்டமும் மகியின் பின்னால் ஃபாலோ செய்ய, அக்கா! எல்லாரும் உங்க பின்னாடி வரான்க என விவேகா குறை பட்டுக் கொள்ள..
மகி திரும்பி அவர்கள் அனைவரையும் பார்த்தபடி எல்லாரும் போய் தூங்குங்க! மூணு தான் எண்ணுவேன் என மிரட்டினார்.
ஓகே என அனைவரும் சிரிப்பும் கும்மாளமுமாக ஓட ரிதம் அந்த கூட்டத்துக்குள் நழுவ பார்த்தாள். டேய் ருத்ரா! டேய் மிதுன் என்ன டா பண்றீங்க!
மாமி நான் மாமா கூட பேசிக்கிட்டே தூங்க போறேன். என ருத்ரன் கூற, நான் ரிதம் கூட மூணு மேட்ச் சாலஞ்ச் போட்டு விளையாடனும் என கூறினான்.
என்னங்க! என நொந்த படி மகி அழைக்க, யாரது என சூர்ய தேவ் வந்தார்.
மகி! உன்னை பாத்துக்கிறேன் டி என மிதுன் ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
மா என ருத்ரன் பேச வர, தீரா மானத்தை வாங்காதே டா! உன் கூட சக்தி படுத்து தூங்கவா ரிதம கல்யாணம் பண்ணி இருக்கான். இங்கிதம் இருக்கா டா தீரா! இனி சத்ய தேவ் கூட தூங்க ரிதம் இருக்கா அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே தூங்குவாங்க என ஒழுங்கா வீட்டுக்கு வா போலாம்! என அழைத்தார் விவேகா.
தலையை சொரிந்த படி சக்தியை பார்த்த ருத்ரன் எதுவும் பேசாமல் வாயில் கதவை நோக்கி நடந்தான். அவன் மனதில் ரெண்டு பேரும் பேசுறதா? அதுக்கு வாய்ப்பே இல்லையே! என் அக்கா ஒரு ஆடுகாலி கொட்டு காலி இராவடி!! ம்ம் மாமா பாவம் என சென்று விட்டான்.
ரெண்டு பேரும் சாமி கும்பிடுங்க!
கண்ணை மூடியா மாமி! என ரிதம் கேட்க..
ஆமா! கண்ணை மூடு தங்கம் என மகி சொல்ல இருவரும் கண்ணை மூடிக் கொண்டார்கள். அடுத்த ஒரு சில நொடியில் போன் கால் தான் வந்தது.
சத்ய தேவ் போனை எடுத்து யார் என பார்த்தவன் திடுக்கிட்டு மகி என்ன போன் பண்றீங்க? என்று கேட்க, அது ஸ்பீக்கர்ல போடு என லாக் செய்யும் சத்தம் கேட்டது.
ஹலோ ரித்து குட்டி!
மாமி! என்ன போன்ல வரீங்க? என ரிதம் கேட்க.. ஆமா நீ சத்ய தேவ் ரூம்ல அவன் கூட சேர் பண்ணி தூங்கிக்க. எனக்கும் ரொம்ப டயர்ட் என மிதுன், மற்றும் இதழ் அறையை சாவி வைத்து பூட்டிய படி நான் காலைல உன் கிட்ட பேசுறென் என மகி பேசி முடிக்க, மாமி என அவள் பேச வரும் நேரம் அதற்குள் போன் கட் செய்ய பட்டது.
உதட்டுக்குள் ஒளித்த புன்னகையுடன் அவளை பார்த்தான் சத்ய தேவ். அவளோ படபடத்த விழியுடன் நின்றிருந்தாள். அவளை சீண்டும் பொருட்டு “வீ…. வீட்ல யாராவது இருக்கீங்களா? ரொம்ப அமைதியாக்கிது!”என கொஞ்சம் சத்தமாகவே கத்தினான்.
ரிதம் கைகளை பிசைந்து கொண்டே அவனை திரும்பி பார்த்தவள் முறைத்து விட்டு மாடியை நோக்கி நடந்தாள். ஹே ரிதம் என்ன டி விட்டு போற? பயமா இருக்கு என அவளின் பின்னால் ஒட்டிய படியே நடந்தான்.
தள்ளி போ! தள்ளி நட என்னை கீழே தள்ளி விட்டுட்டாத. என வேகமாக ஏறினாள். சத்ய தேவ் துள்ளலுடன் அவளின் பின்னால் நடந்தான். ஆண் மகன் வெள்ளை கண்ணாடி சட்டை வெடுக்கென அணிந்திருக்க, மேல் பட்டன் அவிழிந்து அவனது வசீகர அழகை பறைசாற்றிக் கொண்டிருந்தது. அதே உணர்வுகளை ஊடுருவும் கண்கள், கூர் நாசி, அதற்கு கீழ் அடர்ந்த மீசை, திருமணம் என்பதால் கிளீன் சேவ்.. (அய்யயோ உலறிட்டேன் இந்த line மறந்திடுங்க)
அவனது அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி நேராக படுக்கையில் வந்து பொத்தென விழுந்தாள். வேகமாக ac ரிமோட் எடுத்து 20 வைத்தவள். போனை எடுத்து ஆக்னஸ் மற்றும் வீணா இருவருக்கும் அழைத்தாள்.
வீட்டுக்கு போயாச்சா! என்னோட ரூம் ல ஸ்டே பண்ணிக்கோங்க. மார்னிங் வீட்டுக்கு வரேன் என பேசி விட்டு போனை வைத்தாள்.
சத்ய தேவ் அவளுக்கு பின்னால் நுழைந்தவன். அறையின் கதவை சாத்திய படி, பால் கனி கதவுகளை லாக் செய்தான். அதற்குள் ரிதம் தலையணையை கட்டி பிடித்து அணைத்த படி ஹெட் செட் போட்டு பாடலை கேட்க ஆரம்பித்தாள். இன்று தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்தாள். யாரை கல்யாணம் பண்ணிக்க வேணும் காதல் செய்ய வேணும் தவமாக கிடந்தோமோ இன்று அவன் அருகில். ஆனால் அதில் ரசனையோ துள்ளலோ இல்லை.
சத்ய தேவ் முதலுதவி பெட்டியை திறந்து காயத்துக்கு மருந்து வைத்து பேன்டட் ஒட்டினான். அவளிடம் பேச வர அதற்காகவே காத்திருந்தவள் போல அவளும் அவனை பார்த்தாள்.
அவளின் அருகில் வந்து அமர்ந்தான். ஏனோ இதயத்தில் இனிய உணர்வு புதிய அவஸ்தை அவனை கீழ் நோக்கி இழுத்து மேல் நோக்கி உயர்ந்தது. வேக மூச்சுடன் அவளுக்கு எதிரில் புன்னகையுடன் அமர்ந்தான்.
ரிதம் படுக்கையில் சம்மணமிட்டு அவனை உற்று பார்த்தவள். டைவர்ஸ் கொடுத்திடு என் கிட்ட இருந்து எந்த பிசிக்கல் டச்சும் உனக்கு கிடைக்காது. என திட்ட வட்டமாக கூறினாள்.
அவ்ளோ தானா? என அவளின் முன் படுத்தவன் ஒரு கையை தலைக்கு கொடுத்த படி பார் கடலில் படுத்திருக்கும் திருமால் போல அவளை பார்த்தான்.
இப்போ உனக்கு என்ன கோபம்? என சத்ய தேவ் கேட்க, எனக்கென்ன கோபம்? சொல்றத கேளு! உனக்கு என் கிட்ட இருந்து எதுவும் கிடைக்காது. என மீண்டும் கூறினாள்.
சத்ய தேவ் கைகளை மெதுவாக ஊறிக் கொண்டே அவளின் மேல் பட, அவளை தொட்டு கொஞ்சிய கையாள என்னை தொடாதே! என்றாள் ஆவேசத்துடன்.
யாரு அது? என அவன் தீவிரமாக எழுந்து அமர்ந்தான்.
அலட்சியமாக பார்த்த ரிதம் சிரித்த படி, தம்பி பொண்டாட்டிய தான் பொண்டாட்டி மாதிரி என அவள் சொல்லி முடிக்க வில்லை. வெடுக்கென கழுத்தை பிடித்து இறுக்கினான்.
கொன்றுவேன் டி! என அவன் கண்கள் ஒரு நிமிடத்தில் சிவந்தது.
அவளும் அசராமல் பார்த்தாள். சட்டென அவனது பிடியை தளர்த்தினான். அவனது பிடியில் நசுங்கிய கழுத்து கன்னி சிவந்து அழகாக எடுத்துக் காட்டியது.
Im extremely sorry நான் என எதோ சொல்ல வந்தவன். வேகமாக அவளின் அருகில் நெருங்கி அவசர முத்தத்தை கொடுக்க எண்ணி உதட்டை கவ்வி பிடிக்க இருவரும் இணை உதட்டுக்கு நடுவில் ரித்தமின் விரல்கள் சிறை கம்பி போல தடுத்தது.
ப்ச்!! என அவன் கையை விலக்க முயற்சி செய்ய.. ரிதம் அவனது முகத்தை பார்த்த படி கண்கள் சொக்க யூ வான்ட் மி? என கேட்டாள்.
அது உதடுகளின் வழி சொல்ல வேண்டும் என நினைத்தான். சொல்லாக இல்லாமல் ஒவ்வொரு செல்லையும் தகிக்க வைக்கும் முத்தமாக கொடுக்க நினைத்தான். நேரம் ஆக ஆக உடலின் உஸ்னம் இன்னும் இரட்டிப்பு கூடிக் கொண்டே போனது. ஆனாலும் நிதானித்துக் கொண்டு மம்மிம் என்னோட மனைவி கிட்ட தானே இதை எதிர்பார்க்க முடியும். என சொன்னவன் அவளின் கையை பிடித்த படி முத்தமிட வர..
அதை விட எனக்கு நீ வேணும் என கூறினாள் ரிதம். இதை விட ஒரு ஆண் மகனுக்கு என்ன வேண்டும்? அவ்ளோ தான்! மொத்தமா சாச்சிட்டா! என தோன்றினாலும் சத்ய தேவ் மனதுக்குள் எதோ ஒரு ஏமாற்றம்.
சத்ய தேவ் விழிகள் அவளின் முகத்தை ஆராய்ந்த படி, முத்தமிட அருகில் வந்தது. அங்கே ரிதம் இல்லை.. அவளின் வாசனை அருகில் இல்லாமல் போக பெரு மூச்சுடன் கண் விழித்தான்.
அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விசயம் பேசணும். அதை முடிச்சிட்டு இப்போ உடனே பண்ணலாம். என அவள் கண்களில் ஆர்வம் மின்னியது.
என்ன? என சத்ய தேவ் கேட்க..
ரிதம் அவனுக்கு எதிரில் இருக்கும் சோபாவில் கால்களை விரித்து போட்ட படி அமர்ந்தவள். நீ என்னை தொட உன்னை விட ஆயிரம் மடங்கு ஆசை? ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன். இப்போ கூட அப்டின்னு சொல்ல மாட்டேன். பண்ணேன். இப்போ நீ இங்கே இல்ல என உதட்டை பித்துக்கினாள்.
குடிச்சியா டி? என சத்ய தேவ் கேட்க..
இல்லை என சொல்லி சிரித்த ரிதம். கப்போர்டை திறந்து eye mask எடுத்து அவன் முன் நீட்டிய படி. இந்தா உனக்கு எப்போ எல்லாம் மோட் வருதோ அப்போ எல்லாம் இந்த மாஸ்க்கை போட்டுட்டு தான் நீ என்னை நெருங்கி நம்ம intercourse பண்ணனும்.
Pardon? என சத்ய தேவ் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
கண்ணகுளி தெரிய சிரித்தவள் கண் சிமிட்டி கொண்டே that means என்னை காதலிக்காத ஒருத்தன் என்னை அங்கம் அங்கமா ரசிச்சு காதலே இல்லாத இந்த காமத்தில் பின்னி பிளா பிளா பண்ண எனக்கு விருப்பம் இல்ல. அதுக்கு பதிலா நீ eye mask போட்டுட்டு வந்து என் கூட matter பண்ணா உன்னோட தேவையும் பூர்த்தியாகும். அஃப் கோர்ஸ் நானும் நிம்மதியா இருப்பேன். என்றாள்
என்ன டி சொல்ற? நீ என்ன சொல்ற? என திடுக்கிட்டு பார்த்தான். சத்ய தேவ்.
வா வா என ஆர்வமாக அவன் அருகில் நெருங்கியவள். கையில் இருக்கும் eye maskஐ அவனது அருகில் கொண்டு வர, என்ன ரிதம் இது பைத்தியக்கார தனம். என அவன் அப்பட்டமான ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினான்.
நான் எல்லா பொண்ணுங்க மாதிரியும் பத்தோட பதினொன்னு இல்ல சக்தி! நான் ரிதம்! ரிதம் இன்ப ராகவன் காட் இட் என்றாள்.
சத்ய தேவ் அவளை சோர்வுடன் பார்க்க, ஆனால் அதுக்கு ஒரு சொல்லுசன் கூட இருக்கு.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அவளே தொடர்ந்தாள். ஒரு வேளை இப்போ இந்த நிமிடம் நீயே வெட்கத்தை விட்டு என் கிட்ட..
உன் காலில் விழுந்து கெஞ்சும் அவசியம் எனக்கு இல்ல டி! என்றான்.
ஹே கூல்! நீயே வெட்கத்தை விட்டு ரிதம் I love you di! உன்னை நான் sincere ஆ love பண்றேன். இப்போ இல்ல சின்ன வயசுல இருந்து. உன்னோட போனி டெயில்.. என ஆரம்பித்தவள். இந்த மாதிரி ம்ம் வேணாம் வேணாம் இப்போ லவ் பண்ணி இனிமே லவ் பண்ணி கூட உன்னோட பாணியில் எப்போ வந்து சொல்றயோ அன்னிக்கு தான் உனக்கு ( உலகத்திலேயே best theatre)
1. The National Theatre (London, UK)
2. The Metropolitan Opera (New York City, USA)
3. The Sydney Opera House (Sydney, Australia)
4. The Comédie-Française (Paris, France)
5. The Globe Theatre (London, UK)
6. The Bolshoi Theatre (Moscow, Russia)
7. The Teatro alla Scala (Milan, Italy)
8. The Royal Shakespeare Company (Stratford-upon-Avon, UK)
9. The Berlin Philharmonie (Berlin, Germany)
10. The Kennedy Center (Washington, D.C., USA) இதுல போடுற ஷோ போல உனக்கு என்னோட ஷோ டெய்லி மூணு வேளை! Same வேலை! என ரிதம் மூச்சு பிடிக்க பேசிய படி அவனை பார்த்தாள்.
சத்ய தேவ் அவளை உணர்வுகளாற்று பார்த்தான்.
அத்தோடு விட்டால் அது ரிதம் இல்லையே! End போட போனை எடுத்தாள்.
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை..
வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா!..
என தட்டி விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டவள். சொல்லு சொல்லு! உனக்கு theatre show வேணுமா இல்ல blind show அது கூடவே deaf and.. ஹான் dumb வராதுல்ல ஏன்னா உதட்டுக்கு வேலை இருக்குமே! என அவனை பார்த்தாள் ரிதம்.
நாளைக்கு பார்ப்போம்.
சத்ய தேவ் என்ன பண்ண போறான்?
ரிதம் revenge எப்படி இருந்தது?
வருவான்.
EPISODE 152
சொல்லு சொல்லு! உனக்கு theatre show வேணுமா இல்ல blind show அது கூடவே deaf and.. ஹான் dumb வராதுல்ல ஏன்னா உதட்டுக்கு வேலை இருக்குமே! என அவனை பார்த்தாள் ரிதம்.
சத்ய தேவ் கடுப்புடன் அவளை பார்த்த முகம் அப்படியே மாறியது. அவனது முகம் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது. ரிதம் புரியாமல் அவனை கொட்ட கொட்ட விழிகளில் பார்க்க, அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தவன் சோபாவில இரண்டு கைகளையும் சாய்த்து ஆளுமையாக அமர்ந்தான்.
இன்னும் வேற என்ன இருக்கு? சொல்லு கேட்கிறேன் என்றான். என்ன சொல்லணும்? எல்லாமே சொல்லிட்டேன்! என ரிதம் அவனை பார்த்தாள்.
இப்போ நான் பேசட்டுமா? என அவளை பார்த்தான்.என்ன பேச போற? என அவளின் பார்வை அவனை துளைத்தது.
கோவக்காரி! மக்கு பொண்டாட்டி என்றான். எழுத்தாளமாக.. இரிடேட் பண்ணாத! என அவள் முகத்தை திருப்ப.. சரி சொல்றேன் கேளு.. என்ன சொன்ன? நான் உன் கிட்ட வந்து லவ் சொல்லணும். அப்புறம் என்ன சொன்ன? சின்ன வயசுல இருந்தே உன்னை லவ் பண்றேன்னு சொல்லணும். வேற என்ன போனி டெயில்.. பிளா பிளா.. இது நான் தான் உன்ன லவ் பண்ணலன்னு சொல்ற இல்ல அப்புறம் எப்படி நான் உன்ன சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணன்னு பொய் சொல்ல முடியும் என்று பார்த்தான்.
ரிதம் அவனை சலிப்புடன் பார்த்தாள். அவளது முகத்தில் விரத்தியின் சாயல் தெரிய, ” இதுக்கு மேல உன்கிட்ட எதையும் எக்ஸ்பிளைன் பண்ண, என்னால முடியாது. நான் சொன்னது சொன்னது தான்.” என விடாப்பிடியாக நின்றாள்.
“சரி நான் உன்ன லவ் பண்ணல. நீ தான் என்ன சின்சியரா லவ் பண்ணி இருக்க. சின்ன வயசுல இருந்து லவ் பண்ணி இருக்க. நித்தின் பிரகாஷ் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து நிக்கும் போது, என் மனசுல வேற ஒருத்தர் இருக்காருன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே. ஏன் சொல்லல?”என்று கேட்டான். கேட்டவன் அத்தோடு மட்டுமில்லாமல் அவளின் அருகில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்தான்.
“அப்போ அது வந்து உன்னோட மனசுல நான் இருக்கேனா இல்லையான்னு எனக்கு தெரியல” என்று கூறினாள் ரிதம்.
“அப்படின்னா என்கிட்ட வந்து எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கணும்ல. நான் உன்ன சின்சியரா லவ் பண்றேன் சத்தியதேவ். அதுவும் சின்ன வயசுல இருந்து லவ் பண்றேன்னு நீ சொல்லி இருக்கணும்ல ஏன் சொல்லல?”
“எப்படி சொல்ல முடியும்? நீதான் ஹரணி கூட உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சே!” என ரிதம் கூறினாள்.
ஆமா சரி விடு நித்தின் பிரகாஷ் ஹரிணியை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் உனக்கு இரண்டாவது கல்யாணம் என்று கொஞ்சம் சிரித்தான் உடனே ரிதம் அவனைப் பார்த்து முறைக்க சாரி சாரி அடுத்ததா இன்னொரு கல்யாணம் ப்ராசஸ் நடந்ததா என்று கேட்டான்.
ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சத்யதே அவளின் அருகில் நெருங்கி தோல் மேல் கை போட்டுக் கொண்டவன் அப்ப போய் என்கிட்ட லவ்வா எக்ஸ்பிரஸ் பண்ணியா என்று கேட்டான் ஏய் நான் உன்கிட்ட வந்து சொன்னேன் என்றாள்.
சரி ஆமால சொன்ன மறந்துட்டேன் பாரு! என்று கூறியவன்.
நீ என்கிட்ட லவ் சொன்ன மாதிரி வீட்ல போயி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல்ல. நான் சத்தியதேவ லவ் பண்றேன். அவன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன்ன்னு, ஏன் சொல்லல? என்று கொடுக்கு பிடி போட்டான் சத்தியதேவ்.
அவனது கைகள் அவளின் தோள்பட்டையில் கொஞ்சம் அழுத்தமாக பதிந்தது. அது கோபமில்லை. அது என்ன உணர்வு? காமமும் இல்லை இடைப்பட்ட உணர்வு.
ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஏன் சொல்லல பதில் சொல்லு நான் நான் இப்படி சொல்ல முடியும் என்று அவனை ஓர கண்ணால் பார்த்தாள். சத்தியதேவ் சிரித்தபடி நீதான் என்னை லவ் பண்றேன்னு சொன்ன? அப்போ நீ தானே அதை போய் எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கணும். எனக்கு சத்ய தேவ்வ கல்யாணம் பண்ணி கொடுங்க. அப்டின்னு சொல்லி எல்லார் முன்னாடியும் என் கிட்ட கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ சொல்லியிருந்தா கண்டிப்பா இன்பா சாரு சாரி சாரி.. இப்போ நான் சார் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன் கரெக்டா? எனக்கு அவரு மாமா தானே? என்று அவளை ஒவ்வொரு வார்த்தையிலும் பழிவாங்கிக் கொண்டிருந்தான் சத்திய தேவ்.
ரிதம் எதுவும் பேசாமல் அவனைப் பார்க்க, உங்க மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்கீங்க? ஏன் உங்கள நாங்க தான் லவ் பண்றேன். கல்யாணம் பண்ணி குடுங்கன்னு கேட்கணுமா?. ஏன் நீங்க கேட்டா என்ன ஆகிடுவீங்க? எனக்கு அவனை பிடிச்சிருக்கு. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாருக்கும். உங்களுக்கு சம்மதமான்னு எங்க அப்பாட்டையும் மகி கிட்டயும் வந்து கேக்குறதுக்கு உனக்கு என்னடி கேடு? என்று கூறினான்.
அது எப்படி நான் கேட்க முடியும்? நீ தான் கேட்கணும் அடுத்த பதில் ஆக்ரோஷமாக வந்தது நான் தான் உன்ன லவ் பண்ணலையே நான் எப்படி கேட்க முடியும் என்று சத்தியத்தை குத்தி காட்டினான்.
ரிதம் அவனை உடைந்த மனதுடன் பார்க்க சத்ய தேவ் தீவிரமான பார்வையுடன், உன்னால உங்க அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிறார் தெரியுமா? அதைவிட உன் குடும்பத்தை சார்ந்த அத்தனை பேரும் கஷ்டப்பட்டு இருக்காங்க. முதல் கல்யாணம் பிடிக்கலைன்னாலும் போய் மணமடையில் உட்கார்ந்து ஒரு டிராமா பண்ண, இரண்டாவது கல்யாணத்தில் தேவையே இல்லாம பிரச்சனை பண்ணி இருக்க. உனக்கு முன்னாடியே தெரியும் விஷ்வா யவனிகாவ லவ் பண்றான்னு. நீ முட்டாள் இல்லன்னு எனக்கு நல்லா தெரியும் டி. அதையும் கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி உங்க அப்பா உங்க அம்மா எல்லாரோட மனசையும் கஷ்டப்படுத்தின. ஆதி அங்கில் வெண்பா ஆண்டி ரெண்டு பேருக்கும் கூடவே சுபா ஆண்டி, சரவணன் அங்கிள் எல்லாருக்கும் சேர்த்து மன கஷ்டத்தை கொடுத்திருக்க. முதல் ரெண்டு தடவையும் என்னை மனசுல வச்சிட்டு பண்ண கல்யாணம் நிண்ணு போகும்ன்னு உனக்கு தெரியும். என்றவன் கோபத்தை கட்டு படுத்த முயற்சி செய்தான்.
ஆனால் முடிய வில்லை. ஒரு பெரு மூச்சை விட்ட படி மூணாவது தடவை உன் கிட்ட இருக்க மொத்த ஈகோ கெட்ட எண்ணம், பொறாமை, திமிர், எல்லாத்தையும் காட்டி என்னை மனசுல வச்சுக்கிட்டு அந்த கவின் ராவ்வை போய் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒக்காந்து இருக்க? எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அப்படி என்ன டி உனக்கு திமிர்? வாயை திறந்து சொல்ல உனக்கு என்ன கேடு.என்று அவளின் தோள்பட்டையை அழுத்தி பிடித்தான்.
ஸ்ஸ்ஸ் என ரிதம் வலியில் முகம் மாறினாள். சத்ய தேவ் அதை பொருட்படுத்த வில்லை. நீ பேசுற எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா போயிடுவேன்னு நினைச்சியா? இதுக்கும் முன்னாடி நான் stranger. ஆனால் இப்போ உன்னோட புருஷன். எல்லா உரிமையும் எனக்குத் தான். நீ எனக்கு மட்டும் தான். நியாபகம் வச்சுக்க. என விடா பிடியாக கூறினான்.
அப்போ காதல்? உன்னோட காதல் எனக்கு கிடைக்காதா? நம்ம ரெண்டு பேரும் காதலர்கள் இல்ல கணவன் மனைவி அவ்ளோ தான்ல.. எங்க டாடிக்கும் விவிக்கும் வந்த காதல் எனக்கு கிடைக்கலல்ல! என அவள் நினைத்துக் கொண்டிருக்கவே, அடுத்த குண்டை போட்டான்.
அங்கே கனி வரலைன்னா? கவின் விசயம் தெரியாமல் அப்படியே இருந்திருந்தால் இந்நேரம் அவனுக்கு சொந்தமாகி அவன் கூட உனக்கு ஃபர்ஸ்ட் நைட் நீ சொன்ன theatre show sorry sorry blind show I mean உதட்டுக்கு வேலை இருக்கிறதால blind and talk murmuring , lock lips and hooked tongue அப்படி தானே என சொல்லி முடிக்க வில்லை. அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அவனை கன்னம் கண்ணமாக அரைய ஆரம்பித்தாள்.
சத்ய தேவ் கூட அதை தடுக்க வில்லை. ஏன் என்றால் அவன் பேசியது தவறு என தெரியும். அப்படியே இருந்தான். ஒரு சில நொடிகள் கழித்து மொத்தத்துல எல்லார் கிட்டயும் சத்ய தேவ்வ நான் லவ் பண்றேன் அப்டின்னு ரிதம் சொன்னால் அவளுக்கு அவமானமா இருக்கும் சரி தானே! நான் உனக்கு அவமானம். ஆனால் என் கூட நீ வாழணும்? அப்படியா ரிதம்? என கேட்டான்.
அப்போ கடைசி வரைக்கும் அவன் தன்னை காதலிக்கவே மாட்டான். தன்னை குத்தி காட்டி சொல் அம்புகளால் சித்ரவதை செய்வான். அவனை define பண்ண முடியல. அவள் மேல் வெறுப்பும் இல்லை. காதலும் இல்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்வான். தொடுவான் முத்தமிடுவான். கட்டி அணைப்பான். அங்கம் தொட்டு ரசிப்பான். தன்னுள் பின்னி பிணைவான் ஆனால் காதல் இல்லை. அடடே முடிந்து விட்டது முற்று புள்ளியுடன்.
ஒரு பெரு மூச்சை விட்டவள். கையில் இருக்கும் மாஸ்க்கை தூக்கி எறிந்தாள். எழுந்து நின்று அவனை பார்த்தாள். இரண்டு கைகளையும் விரித்த படி உனக்கு என்ன வேணும் எடுத்துக்க? முத்தம் கொடுத்துக்க கட்டி பிடிச்சுக்க! என்னை என்ன வேனா பண்ணிக்க ஆனால் என்னோட மனசு என சுட்டி காட்டியவள். இந்த இடத்தை உனக்கு காட்ட மாட்டேன். என்னோட ட்ரெஸ் அதை வியர் பண்ணிட்டு தான் உன் கூட நான் ரிலேசன் ஷிப்ல இருப்பேன். என நீர் திரள் கண்ணில் வழிய கூறியவள். அத்தோடு நில்லாமல் நான் இன்னொரு பிறவி எடுத்தால் கூட உன்னை பார்க்க கூடாது. அப்டின்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன். என மொத்தமாக உடைந்து போனவள். இனி நானும் உனக்கு பொண்டாட்டி மட்டும் தான். காதல் செத்து போச்சு.
நீ வருசா வருசம் கஜுராஹோ வருவேன்னு காத்து கிடந்து உனக்காக ஏங்கினேன் பைத்தியகாரி மாதிரி. ஆமா நீ தான் என்னை விரும்புறேன்னு எல்லார் கிட்டயும் சொல்லணும் அப்படின்றது என்னோட எதிர்பார்ப்பு. இப்போ அது நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு ஒருவேளை அப்படி ஒரு வார்த்தை இனி உன் வாயில் இருந்து வராது . அப்படி வந்தாலும் நான் உயிரோட இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். ஏன்னா கெஞ்சி வர காதல் கூட ஓகே உன்னோட பார்வையே பிச்சை கேட்கிற மாதிரி இருக்கு.
உனக்கு எந்த அளவுக்கு காதல் தெரியுமோ அது எனக்கு தெரியாது. ஆயிரம் பேர் என் டாடி மம்மி காதலை கல்யாணத்துக்கு முன்னாடி நான் பிறந்ததை தப்பா சொன்னாலும், எனக்கு அது கவலை இல்ல. ஏன்னா என் டாடி காதலை விட என் மம்மியோட காதல் பெருசு காதலுக்காக என் மம்மி சுயத்தையே விட்டு கொடுத்திருக்கா. என் டாடியோட காதல் அதை விட பெருசு இப்போ வரைக்கும் என் மம்மிய ஒரு இடத்தில பிரிஞ்சி இருந்தது இல்ல. அந்த மாதிரி எனக்கு அமையல.. எனக்கு கொடுத்து வைக்கல.. என பெரு மூச்சை விட்டவள். ம்ம் ஓகே அது என் தம்பிக்காவது அமையட்டும் ( தீரா உன் அக்கா உனக்காக பேசுரா அது எனக்கு பிடிக்கல சோ நீ என்ன பண்ற மீனாட்சிய விட்டு பிரிந்திடு) இத்தோடு ரிதம் love end . என்றவள் இப்போ என்ன பண்ணலாம்? சொல்லு நீ வரயா? இல்ல என்ன பண்ற? எனக்கு தூக்கம் வருது. என ஜடமாக மாறினாள்.
சத்ய தேவ் எழுந்து நின்றவன். ஒரு பெரு மூச்சுடன் எனக்கு தூக்கம் வருது வா தூங்கலாம் என்றான். ரிதம் அவனை பார்த்த படி நமக்குள்ள மேட்டர் இல்ல தானே!
டென்ஷன் பண்ணாத டி! தூக்கம் வருதுன்னு சொன்னேனே! சும்மா இதை பத்தி பேசாத! என்றான் கடுப்புடன். எனக்கு இந்த மொத்த படுக்கையும் வேணும் அதனாலே நீ சோபாவில் போய் படுத்துக்க..
புருசன் பொண்டாட்டி சேர்ந்து தான் தூங்கனும். என சத்ய தேவ் சொல்ல, வேணாம் அப்புறம் பின்னாடி ரொம்ப வறுத்த படுவ என ரிதம் கூற, பரவாயில்லை வா உன் கூட தான் தூங்குவேன். என விடா பிடியாக நின்றான் சத்ய தேவ்.
ஓகே என தோலை குழுக்கியவள். நேராக படுத்துக் கொண்டாள். சத்ய தேவ் அவன் அருகில் படுத்துக் கொண்டான். Spotify சென்று ஹெட் செட்டில் அவளுக்கு பிடித்த play list அதை தட்டி விட்டாள். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது தூக்கம் வரலைன்னா ஒன்னு குடிப்பா அப்படி இல்லன்னா பாட்டு கேட்பா அது தான் ரிதம்.
ரகுமான் ஹிட்ஸ் போட்டு காதில் வைத்தாள்.
“உள்ளே போகிற சுவாசம் என்பது
வெளியில் வருவது நியாயம் நியாயம்
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்” என கண்கள் உப்பிக் கொண்டது.
“கண்கள் காண்கிற கனவு என்பது
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்” உதட்டை மெதுவாக கடித்தவள் முகத்தை திருப்பிக் கொள்ள.. அவளின் காதில் இருக்கும் ஒரு ஏர் பட்சை அவனது காதில் வைத்துக் கொண்டான்.
“போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே ஞானம்
அடைந்தேனே..” என்ற வரிகள் உள்ளுக்குள் இனம் புரியா அவஸ்தையாகி போனது.
“உயிரே இதயம்”
“உனக்கே உனக்கே” என வருவதற்குள் வேகமாக பிடுங்கி கொண்டாள் ரிதம்.
ப்ச் எதுக்கு பிடுங்கின? என அவன் அவளின் போனை பிடிக்க.. இப்போ உனக்கு என்ன தான் பிரச்னை என அவளின் மொட்டு வாய் அவனது உதடுகளின் கீழ் சரியாக கொஞ்சம் நெருங்கினால் பொருந்தும் அளவுக்கு இருந்தது.
என்ன சொல்றீங்க? ஆமா அவளது கை வகைவுக்குள் மிகவும் நெருக்கமாக உடலும் உடலும் உரசும் அளவுக்கு கட்டி அணைத்த படி கிடந்தார்கள்.
“நீ தனியா கேளு! என்னோட டேஸ்ட் பட்ஸ் உனக்கு மேட்ச் ஆகாது. என வெடுக்கென கூறினாள்.
டேஸ்ட் பார்க்காமல் எப்படி சொல்ல முடியும் என அவனது வார்த்தையில் பல அர்த்தம் பொதிந்து கிடக்க.. அவளின் தீ விழி பார்வை அவனை சுட்டது.
அப்படியா என பற்களை கடித்தவள். பழைய பாடலுக்குள் சென்று இருந்தாள். அதிலும் peculier தேவைப்பட்டது. பனி விழும் இரவு நனந்தது (இது ravi play list) நிலவு. என வரவும் சத்ய தேவ் சிரித்து விட்டான்.
அவனது கைகள் அவளின் இடையை இறுக்கி கட்டிக் கொண்டு அவளின் கழுத்தில் முகம் புதைக்க சின்ன சின்ன பூனை முடிகள் அவனை குருகுறுக்க செய்தது. அவளின் முக சுணக்கம் நன்றாகவே தெரிந்தது.
அப்படி முகத்தை சுளிக்காத ஒரு புருஷனா உன் கிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் இப்படி தான் தூங்குவேன். மிகவும் பிடித்து போனது. அவளும் ராவடி நீ பிடிவாதகாரன்.
என்னை கொல்ற டா! என அவள் சொல்லி முடிக்க வில்லை கழுத்தை மென்மையாக திருப்பி உதட்டை கவ்விக் கொண்டான். அவனாக கொடுக்கும் முத்தம் ஆனால் ரசிக்க முடிய வில்லை.
அதை விட நெருப்பில் வெந்து தகிப்பது போல ஒரு உணர்வு. அவன் என்ன எதிர் பார்க்கிறான்? என அவளுக்கு இது வரை தெரிய வில்லை. அவள் நினைப்பதை அப்படியே பிரதிபலிக்கிறான். அதை ரிதம் எப்போ புரிந்து கொள்வாள்.
இப்போ மேட்டர் பண்ண போறயா. பாட்டம லூஸ் பண்ணாவா இல்ல ரிமூவ் பன்னவா?
வாயை பொத்தியவன் ரொம்ப பேசிட்டே ரெஸ்ட் வேணும். தூங்கு என அணைத்துக் கொண்டான்.
*
ஹலோ!! ஹலோஓஓஓ!! ஏன்னா இருக்கேளா? என கேட்டாள் மீனாட்சி.
ம்ம் என ஒற்றை பதில். ருத்ரன் கூறினான்.
இப்போ எதுக்கு இந்த கோபம்? நான் என்ன பண்றது? எல்லாமே ரெடி பண்ணிட்டா ஆத்துல. தட்டி கழிக்க முடியும்ன்னு தோணல என்றாள் மீனாட்சி.
பூஜை முடிச்சு எப்போ வருவ? ஏன் டி ராமேஸ்வரத்தில் அங்கே போய் தான் உன் பெருமாள தரிசிக்கனுமா? ஏன் நோக்கு இங்கே பெருமாள் நான் இருக்கேன் டி! என்றான் ருத்ரன்.
பெருமாளுக்கு ரெண்டு ஆத்துகாரி! அப்போ நோக்கு? என மீனாட்சி கோபத்துடன் மூச்சு விடுவது இங்கு கேட்டது.
எனக்கு ஒரு பொண்டாட்டி தான் கோல்ட் ஃபிஷ் என்றான் ருத்ரன்.
ஆமா யாரு கல்யாணத்துக்கு போற? என ருத்ரன் கேட்க, அது அப்படி நான் எதுவுமே சொல்லலையே! என மீனாட்சி மளுப்ப.. ஹே பொய் சொல்லாத கோல்ட் ஃபிஷ்! உங்க அக்காவுக்கு அப்டின்னு சொன்னதா நியாபகம். ஆமா உங்க அக்கா பேர் என்ன? என ருத்ரன் மீண்டும் துறுவினான்.
மாமா! என்ன பண்ற? எனக்கு சிக்கன் பிரியாணி சாப்பிட ஆசை மாமி கிட்ட சொல்லி எடுத்துண்டு வரியா? என அழகாக பேச்சை மாற்றினாள் மீனாட்சி. ஆம் அவளுடைய அக்காவின் திருமணத்துக்கு தான் ராமநாதபுரத்தில் உள்ள தேவி பட்டினத்துக்கு செல்கிறாள்.
என்ன மாமாவா? இன்னிக்கு என்ன மாமி மார்க்கமா இருக்கா! என ருத்ரன் உதடு கடித்த படி அவளிடம் கேட்க, தீரா ஒன்னு சொல்லவா?
ம்ம் சொல்லு!
நேக்கு வீட்டுக்கு போக பிடிக்கல உன்னை ஒரு நொடி கூட பிரிய மனசில்ல டா கடன்காரா! என்றாள் மீனாட்சி.
அப்போ வரவா இப்போவே உன்னை தூக்கிட்டு இங்கே வந்துடுறேன். வந்ததும் நம்ம கட்டிக்கிலாம். இன்னிக்கு என் சக்தி மாமாவுக்கும் எங்க அக்காவுக்கும் ஃபர்ஸ்ட் நைட்டு டி! என்றான் விசம புன்னகையுடன்.
மீனாட்சி கண்கள் விரிய பாவம் தீரா மண்ணி ரெண்டு தடவை அவாளுக்கு கல்யானம் நின்னிடுத்து நேக்கே கண்ணு கசங்கிடுத்து. என்றாள்.
அதுவும் நல்லத்துக்கு தான் டி இப்போ என் அக்கா சந்தோசமா இருப்பா! ஏன்னா சக்தி மாமா கோல்ட் pure gold என்றான் ருத்ரன்.
தீரா நேக்கு ரெண்டு இச்சு வேணும்! மீனாட்சி என சொல்லிக் கொண்டே வைப்ரேட் மோட் வைத்து பச்சக் பச்சக் என முத்தமிட்டான்.
நாளைக்கு வந்து என்னை சென்ட் ஆஃப் பண்ணுங்கோ. உங்களுக்காக காத்தின்றுப்பேன் என்றாள் மீனாட்சி.
ம்ம் கண்டிப்பா என் தங்கம் தூங்கு டி கோல்ட் ஃபிஷ் என இருவரும் தூங்கினார்கள்.
*
நடு சாம இரவை கடந்ததும் கூட இன்னும் அந்த விழிகளில் தூக்கம் வர வில்லை. நிலவுக்கு நிலா தன் மகளை வருத்தத்துடன் பார்த்தது.
நிலாபால் கனியின் பக்கம் சாயிந்தவள். இரவு வானத்தை வெறித்து பார்த்தாள். நான் ஆசைபட்டது ஏன் எனக்கு கிடைக்கல. என அவளின் கையை பார்த்தாள் அன்று ருத்ரன் தன் கையை பிடித்ததும் உடனே சென்று ஹேன்ட் வாஷ் செய்கிறான் அவ்ளோ அறுவருக்க தக்கவளா நான்! யாருக்கு என்ன பாவம் செய்தேன் என உள்ளுக்குள் உயிர் போனது.
உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள் ஊஞ்சலில் அமர்ந்து அப்படியே உறங்கி விட்டாள்.
*
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. விவேகா any time போனில் குடி இருந்தார். அக்கா வெளியே வந்தாச்சா?
மகி சிரிப்புடன் ஹே மனசாட்சி இருக்கா டி! எனக்கே ஃபர்ஸ்ட் நைட்டு நடக்க( 100 episode போச்சு டி! இந்த writer அம்மா எழுதுற கதையில உனக்கு மட்டும் தான் முன்னாடியே சம்பவம் பண்ணி இருக்கா! அப்படி இருக்கும் போது என் பையனுக்கும் உன் பொண்ணுக்கும் அவ்ளோ சீக்கிரம் மேட்டர் சீன் வைப்பாளா மில்லி மைக்ரோ கூட வைக்க மாட்டா ரம்பம் இளுப்பா.) ஆறு மாசம் ஆச்சு அவங்க ரெண்டும் எலியும் பூனையும் மாதிரி இருப்பாங்க எப்டி டி உடனே எல்லாம் நடக்கும்? என கேட்டார்.
ஒரு நப்பாசை தான் கா! சரி சரி அவங்க ரூம விட்டு வந்துட்டா எனக்கு போன் பண்ணுங்க கா! என சொல்லி போன் வைத்தாள் மகி. சமையல் கட்டில் உப்மா கிண்டி கொண்டிருந்தாலும் எண்ணம் போன் மேல் தான் இருந்தது.
என்ன டி பண்ணிட்டு இருக்க? யார் கிட்ட சும்மா உனக்கு போன்? என இன்பா அதட்டினார்.
அது ரிதம் சத்ய தேவ் ரெண்டு பேரும் இன்னும் ரூமை விட்டு வெளியே வரல. அதை பத்தி தான் கேட்டுட்டு இருந்தேன்.
ஆகவட் என முகத்தை சுழித்தார் இன்பா.
ஆளாளுக்கு ஆக்வேட் ஆக்குவேட் அப்படின்னா? இத யாரு தான் கேட்கிறது? நீ கேட்பியா டா? உனக்கு உன் பொண்ணு மேல அக்கறை இருக்கா? அவ சந்தோஷமா வாழ்ந்தாலான உனக்கு தெரியுமா? சும்மா எப்ப பாரு ஆக்குவாடு ஆக்வடுங்கற என்று விவேகா கடுப்பானார்.
ஏ அறிவு கெட்டவளே அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படி இதெல்லாம் நடக்கும்?
சொல்லு அப்போ நீ கல்யாணம் ஆகி தான் இதெல்லாம் பண்ணியா? என்று விவேகா கேட்க,
ஆமா . Ofcourse
டேய் என்று விவேகா அதட்ட..
அது வந்து நான் தான் உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு பண்ணேன் டி.என்று இன்பா சொல்ல..
நீ கிழிச்ச… மூடிட்டு போ என்று எரிந்து விழுந்தவள் மீண்டும் போன எடுக்கப் போக.
ஆமா கிழிச்சென் டி கரெக்டா சொல்லிட்ட! என இன்பா பேச வர சொம்பு எடுத்து வீசினார். அதை கேட்ச் பிடித்த இன்பா, விவேகா பேசாம நம்ம சூர்யா வீட்டுக்கு போயிடலாம். அங்கேயே நீ பக்கத்துல இருந்து பாப்பல்ல என்று கூறினார்.
உன் பொண்ணு மேல அவ்வளவு அக்கறையா என்று விவேகா சிரிப்புடன் கேட்க..
அம்மா எனக்கு உப்மா போடுங்க. நான் எனக்கு மகி மாமி சமையல் விட உங்க சமையல் தான் எப்பவும் ஸ்பெஷல். உன்னோட புருஷனுக்கு நீ செய்யற உப்மா பிடிக்கல போல. அதனால தான் கிச்சன் வந்து நோட்டம் விட்டுட்டு இத சொல்லிட்டு போறாரு என்று சொல்ல..
இன்ப வேகமாக சென்று ருத்ரனின் காதை பிடித்து திருகிய படி உனக்கு ஒரு கேடு வந்து தொலையாதா?! என்று வாய் வைத்தார்.
வாய் வைத்த நேரம்.. நல்ல முகூர்த்தம் பார்க்கலாம்.
அடுத்தடுத்த சம்பவங்கள் திருப்பங்கள் பல காத்திருக்கிறது.
இங்கே கட்டிலில் இறுக்கி அணைத்து படி ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
தொடரும்…
EPISODE 153
அந்த கட்டிலின் கால்கள் தவிப்புடன் ஜோடி சேர முடிய வில்லையே என்னும் அளவுக்கு தன் இணை கால்களை ஏக்கத்துடன் பார்த்து அந்த அறையின் தரையில் புதைத்து கொள்ள துடித்தது. அந்த தலையணைக்கு வாய் இருந்தால் கண்டிப்பாக உதட்டை பிதுக்கி இருக்கும். ஆமாம் தலையணை இரண்டும் தரையின் கீழ் தன் இணையை சேர முடியாமல் கிடக்க.. ஒவ்வொரு காலுக்கும் ஜோடிக்கும் மேல் ஜோடி போட்டு பின்னிக் கொண்டு, மார்பை தலையனையாக்கி லாவகமாக கையை போர்வை சிறையாக்கி அவளின் கூந்தலை விசிறியாக்கி ஒட்டி கொண்டு குட்டி குரட்டையுடன் தூங்கி கொண்டிருந்தது ஓர்ருயிர் ஈருடல் என்னும் உண்மையை பிடிவாதமாக மறுக்கும் தேவ் ரூபத்தில் இருக்கும் சத்ய தேவ் ராட்ச்சன். அவனது கை சிறையில் இருப்பவள் அழகான ராட்சசி ரூபத்தில் இருக்கும் தேவதை ரிதம்.
ஆம் கட்டிலில் இறுக்கி அணைத்து படி ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவளின் வழிசல் எட்சில் அமுதாய் அவனது இரும்பு மார்பில் ஊற்றிக் கொண்டிருந்தது. ஜொள்ளு ஊற்றிக் கொண்டே தூங்கினாள். பெண் வாசம் நாசியை துளைத்தது. முதலில் கண்ணை திறந்தது தேவ் தான்.
அவனது மார்பில் உறிமையானவள் தூங்குகிறாள். ஆனால் அவளின் கைகள் மார்பை மறைத்துக் கொண்டு இருந்தது. சத்ய தேவ் சிந்தையில் நேற்று நடந்த விடயங்கள் மெல்ல அசை போட்டது. எங்கே வேணாலும் பாரு என் பெண்மையை கூட களாவாடு ஆனால் என் இதயத்தை நீ பார்க்கவே கூடாது. உன் காதல் எனக்கு கிடைக்காத பட்சத்தில் என் இதய கூட்டை நீ பார்க்க கூடாது. என ரிதம் உடல்கள் அதிர அவனிடம் சொன்னது கண்ணில் ஓடியது.
அவளை ஆட்கொண்டு முத்தமிட்டு முத்தெடுத்து மான்ஸ்டர் பசியை தீர்த்துக் கொள்ள நொடிகள் கூட போதாது. ஆனால் அவளின் எதிர்பார்ப்பு அவளின் ஏக்கம் அதை விட தவிப்பு இன்னும் இன்னும் உறுக வைத்தது.( அப்புறம் ஏன் டா என்னை சாவடிக்கர அவள் கிட்ட சரண்டர் ஆகு டா! வாய்பில்லை வாயாடி என்கிறான் சத்ய தேவ்)
மொட்டு வாய் இதழ்கள் அழகாக பிறந்த குழந்தையின் வாசத்தை கொடுக்க அதை கவனிக்காமல் விட சத்ய தேவ்க்கு மனமில்லை. கடைசியாக அன்று மழையில் ஒரு முத்தமிட்டாளே! அது அல்டிமேட் உச்ச தலையில் இருந்து உள்ளங்கால் வரை விறைத்து கொண்டு நின்றதே அன்றே அதே இடத்தில் அவழுள் புதைந்து கொள்ள நினைத்தான். ஆனால்.. ம்ம் ஹி ம்ம்!! என்றது மனம்.
உடல்கள் சூடாக உதட்டுக்கு வேலை கொடுத்து வெப்பத்தை தணிக்க முற்பட்டான் சத்ய தேவ். காலையில் இனிய கானம் அவளின் மெல்லிய முனகல்கள் போதை தான்டா. இடையின் வழி அவளின் வளவளத்த இடையில் இன்னும் போதை ஏற்றியது. பாற்கடலில் கடைந்து எடுத்த அமிர்த பாத்திரத்தில் விழுந்தானோ என்னவோ? ரிதமின் மொட்டு வாய் உதடுகள் சப்பி கடித்து மென்று முழுங்கி ஒரு வழி செய்து விட்டான்.
அவள் எப்படி முழிப்பாள்? மேடம்க்கு எட்டு மணி தானே நடு சாமம். இப்பொழுது கூட அவனுக்கு நடு சாமம் வேண்டும் என்றே தான் தோன்றியது. முத்தம் ஆழ்ந்து கொண்டிருந்தது. உணர்வுகள் மேலோங்கியது. இவளை பார்த்தால் மட்டும் எனக்கு என்ன ஆகுது? என சத்ய தேவ்க்கு அரக்கன் போல இரண்டு பற்கள் முளைத்து இரத்தம் சுவைக்கும் அளவுக்கு மோகம் எட்டி பார்த்தது.
எனக்கு என்னாகுது? என மூச்சு மேலோங்கியது. ஒரு சில நொடியில் அவளின் உள் உதட்டில் இரத்த கசிவு ஏற்பட முகத்தை சுளித்த படி மெதுவாக கண்களை தேய்த்துக் கொண்டே முழிக்க ஆரம்பித்தாள் ரிதம்.
அவளின் முன் உஷ்ண மூச்சுடன் கண்கள் சிவக்க நின்றிருந்தான் சத்ய தேவ்.
*
கண்களின் முன் உஷ்ணத்துடன் அவனை உசுப்பி கொண்டிருந்தாள் ஹரிணி. பிளீஸ் தள்ளி போ! லீவ் மி என ஒட்டாமல் பேசினான் நிதின் பிரகாஷ்.
ஏன் என்னாச்சு? நிதின்! ஏன் இப்படி பேசுற? எப்போவும் என் பின்னாடி சுத்துவ? இன்னிக்கி நானே பக்கத்தில் வரேன் ஏன் தள்ளி போற? என அவளின் கழுத்தை வளைத்து பிடித்தாள் ஹரிணி.
அவன் முகம் பனி பாறையை வெட்டி எடுத்து செய்தது போல இருந்தது. நிதின் எனக்கு.. நம்ம எங்கேயும் ஹில்ஸ் ஸ்டேசன் போலாமா? என கேட்டுக் கொண்டே நெருங்கினாள் ஹரிணி.
எனக்கு நேரம் இல்ல ஹரிணி! நீங்க தனியா போங்க! என பேச்சுகள் அனைத்தையும் வெட்டி விட்டான் நிதின்.
ஹரிணி ஒன்றும் புரியாமல் அவனது முகத்தை பார்க்க, நிதின் அவளிடம் நான் உனக்கு இங்கே இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கும் இங்கே என் கூட ஒரு வருசம் ரொம்ப கஷ்ட பட்டுட்டே ஆல்ரெடி நான் உங்க மம்மி டாடி கிட்ட I mean ராம் சார் கீதா மேம் கிட்ட பேசிட்டேன். உன்னை கொண்டு போய் வுடவா! நீங்க அவங்க கூட பேசாம சேராமல் ஏங்கி இருப்பீங்க? என உடையை சரி செய்து கொண்டே கேட்டான்.
அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க சீக்கிரம் என்னன்னு சொல்லுங்க நான் எனக்கு டைம் ஆகிது என கதவை திறக்க சென்றான் நிதின். சடுதியில் கதவை திறக்கா வண்ணம் இடை புகுந்து வழி மறைத்தாள் ஹரிணி.
என்ன பண்றீங்க? என அவனது பேச்சு மிகவும் அந்நிய தன்மையாக இருந்தது. ஏன் இப்படி பேசுற? அவளின் கண்களில் தவிப்பு..
என்ன பண்றேன்? எப்போவும் போல தானே இருக்கேன். என்றவன் பார்வையில் எந்த உணர்வும் இல்லை. அவளை ஒரு முறை தான் பார்த்தான். ஹரிணிக்கு உள்ளுக்குள் என்னாச்சு இவனுக்கு என இருந்தது.
என்ன நிதின்? எதுக்கு இப்படி பேசுற? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அவனது கோபத்துக்கான காரணம் தான் புரிய வில்லை.
என் கூட இருக்கிறது உனக்கு கஷ்டமா இருக்குல்ல. உன்னை அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டேன்னு தோணுது. தப்பு பண்ணிட்டேன். என்றான்.
அய்யோ பிளீஸ் நீ எதுக்கு திடீர்னு இப்படி பேசுற? என ஹரிணி அவன் அருகில் நெருங்க..
அவன் ஒரட்டு பின்னால் அடி எடுத்து வைத்தவன். அத்தோடு நில்லாமல் நான் ரிதம் கிட்ட பேசுறன். ரெண்டு காதல் ஜோடிய வலு கட்டாயமா பிரிச்சு வச்ச பாவம் எனக்கு எதுக்கு? என நிதின் கூற,
என்ன சொல்ற? என ஹரிணி புரியாமல் அவனை பார்த்தாள்.
இப்போ கூட நீ கவலை பட வேணாம். சத்ய தேவ் கூட நான் உன்னை சேர்த்து வைக்கிறேன். என நிதின் சொல்லி விட்டான். அடுத்த நொடி அவனை வேகமாக அரைந்து இருந்தாள். அவளின் கண்களில் நீர் கொட்டியது. கூடவே கோபத்தில் மூக்கு சிவந்து போனது.
நிதின் உதட்டில் விரக்தி புன்னகை படற அவளை பார்த்தான். இப்போ கூட ஒன்னும் பிரச்னை இல்லை என்னை சமாளிக்க வேணாம் ஹரிணி. இப்படி என் கூட சகச்சிக்கிட்டு இருக்கறதுனால உனக்கு ஒன்னும் கிடைக்கப் போறதில்ல. சொல்றத கேளு என்ற மீண்டும் கூறினான் அவள் சக்தி ஓய ஓய அவனது கன்னத்தில் தோள்பட்டையில் மார்பில் வயிற்றில் என மாறி மாறி அடித்துக்கொண்ட இருந்தால் ஹரிணி அவனது அவளின் கையைப் பிடித்துக் கொண்டவன். என்னை அடிச்சா உனக்கு தான் வலிக்கும். என்று கைவிரலில் ஊதி ஊதினான்.
உனக்கு என்ன பைத்தியமா நித்தின் எதுக்கு இப்படி தேவையில்லாம பேசிட்டு இருக்க லூசு மாதிரி என்னை போக சொல்ற நான் உன்கிட்ட எப்போ அப்படி சொன்னேன் என்று ஹரிணி அவன் முகத்தை பார்த்து கேட்க..
நித்தின் பிரகாஷ் அவளை ஆழ்ந்து பார்த்தவன் உனக்கு பொய் சொல்லாத. உன் மனசுல சத்திய தேவ் தான் இருக்கான்னு நான் நேத்து நைட்டு புரிஞ்சுகிட்டேன். எல்லாமே.. என உதட்டை கடித்துக் கொண்டவன். எனக்கு அப்பதான் தெளிவா… என தயங்கியவன் மீண்டும் கடுமையை தத்தெடுத்த படி, நான் சக்தி கிட்ட பேசுறேன். எனக்கு அவனை…. என்னால அவனை தோக்கடிக்கவே முடியாது. அது தேவையும் இல்ல.. சின்ன பசங்க மாதிரி நான் தான் அவன் கூட போட்டி போட்டுட்டு இருக்கேன். இப்போ எனக்கு புரியுது. நான் ஒரு லூசு.. ஆனா.. நா.. நான் அவன் கிட்ட பேசுறேன். நான் சொன்னா வீட்ல எல்லாருமே கேட்பாங்க. நீ அவன கட்டுக்கிட்டா அவன் கூட நீ போயிட்டா ஈவன் உங்க அம்மா அப்பா எல்லாருக்குமே சந்தோஷம்தான். என்று நித்தின் பேசிக் கொண்டே போக..
அவனை ஆக்ரோஷமாக தள்ளி விட்டாள். அதில் நிலை இல்லாமல் தடுமாறியவன். தன்னை சரி செய்து கொண்டு நின்று அவளைப் பார்த்தான்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஹரிணி அவனை முறைத்து பார்க்க, நித்தின் அவளிடம் நான் சொல்றது கேளு! சொல்றத கேளு ஹரிணி என்று பக்கம் நெருங்கினான்.
கோபத்தில் ஒரு சில கணங்கள் அவனையே விழி விரித்துப் பார்த்தவள். நேத்து நேத்து நைட்டு என்னாச்சு? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.அப்போ நான் சத்ய தேவ் கிட்ட பேசினதை இவன் கேட்டுட்டானா? என்று உள்ளுக்குள் தோன்ற தன்னுடைய மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்து கொண்டவள். நேராக அவன் அருகில் வந்தாள்.
எதுக்கு நித்தின் இப்படி பேசுற? நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. என்று சொல்ல வர..
ப்ளீஸ் எனக்கு எதையும் எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டாம் ஹரிணி. ஒரு காதல நம்ம செயற்கையா வர வைக்க முடியாது. அதனால நீ சக்தி கூட இருக்கிறது தான் கரெக்ட் என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறினான் நித்தின் பிரகாஷ் .
பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காத நிதின், நீ பேசறது ரொம்ப டீன் ஏஜ் பசங்க பேசுற மாதிரி இருக்கு. கொஞ்சமாவது மெச்சூர்டா நடந்துக்க என்று கூறினாள் ஹரிணி.
மெச்சுர்டாவா? நானா என்று கேட்டான் நிதின் அவன் உதட்டில் விரக்தி புன்னகை…
ஆமா நான் எதுக்கு சத்யதேவ் கூட அவன் கூட நான் எதுக்கு போகணும்? உனக்கு என்ன பைத்தியமா? நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேன். என்று கூறினாள் ஹரிணி.
அதுதான் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று நித்தின் மீண்டும் விடாப்பிடியாக அவன் பேச்சிலேயே நிற்க,
டென்ஷன் பண்ணாத நித்தின் என்று கோபமாக பேசியவள். அவனை முறைத்து பார்த்தாள்.
எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை சத்திய தேவ் கூட போக சொல்வான்? இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? என்று நின்றாள்.
நித்தின் பிரகாஷ் அவளை மீண்டும் பார்த்து இன்னொரு தடவை யோசி. இது செட் ஆகும்னு தோணுது I mean சத்யதேவ் அவன் ஆரம்பிக்க..
நான் உன்ன லவ் பண்றேன் டா! நான் என்ன மயித்துக்கு அவன் கூட போகணும்? என்று கூறினாள் ஆக்ரோஷத்துடன்.
லவ்வா? என் மேலயா? அது எப்ப? உனக்கு எப்போ லவ் வந்தது? எப்போ என்னை காதலிக்கிறேனு சொன்ன? நான் உன்னை டார்ச்சர் பண்ணி இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன். நான் ஒரு அரக்கன்! ராட்சசன்! நீ வேற வழி இல்லாம தான் நீ என் கூட இருக்க. அது எனக்கு தெரியும் என்று நிதின் பிரகாஷ் மீண்டும் கூற,
அய்யோ என நொந்தவள். நான் எதுக்கு அப்படி நினைக்க போறன். ஏண்டா உனக்கு இப்படி ஒரு தாட்? உனக்கு என்ன பிரச்சனை? எத தெளிவுபடுத்தனும்? நீ எதையோ தப்பா நினைச்சுட்டு என்கிட்ட கேட்டுட்டு இருக்க? என்ன விஷயம்ன்னு சொல்லுன்னு? என்று அவள் கேட்க..
நான் எதையும் தப்பா நினைக்கல ஹரிணி. நான் சொல்றது உண்மைதான். என்று அவன் மீண்டும் பேச வர, வேகமாக அவன் அருகில் நெருங்கியவள் சட்டை என உதட்டோடு உதட்டை பொருத்திக் கொண்டாள். நிதின் பிரகாஷ் உச்ச பட்ச அதிர்ச்சியில் நின்றவன் கைகளை இறுக்கி மூடி அவனது உணர்வுகளை கட்டு படுத்த முயற்சி செய்தான். அவன் எந்த ஒரு எதிர் வினையும் புரியாமல் அப்படியே நிற்க, ஹரிணி அவனை கண்டு கொள்ளாமல் முத்தத்தில் தீவிரம் காட்டினாள்.
அவன் உணர்ச்சிகள் அனைத்து இடத்திலும் தகித்து கொண்டிருந்தது. ஒரு சில நொடிகளில் கழித்து விலகியவள். நான் உன்ன லவ் பண்றேன் டா! உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! இதுதான் உண்மை! இதுதான் நிதர்சனம்! சத்யதேவ் மேல எனக்கு எந்த ஒரு அபிப்பிராயமும் இருந்ததில்லை. அவன்கூட ஃப்ரண்டா மட்டும் தான் இருக்கேன். என்று மீண்டும் முத்தத்தை தொடர்ந்தவள். அவனது கீழ் உதட்டை கடித்து இழுத்து விட்டு, இப்போ இருந்து இல்ல சின்ன வயசுல இருந்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் அதை வெளிக்காட்டி கிட்டதில்லை. என்றாள்.
ஒரு நிமிடம் அவன் விழிகள் விரிந்தது. ஆனால் மீண்டும் கடுமையை தத்தெடுத்துக் கொண்டான். ஒரு பொண்ணை கட்டி போடுவது ஆளுமை தான். அது அன்பிலும் கூட.. ம்மிம் நிஜம் தான். உன்னோட ஆளுமையான அன்புக்கு எப்பவும் பிடிக்கும். Like ஆளுமையான அன்பு நம்மள திரும்பி பார்க்க வைக்கும். உன்கிட்ட ஆளுமை.. சின்ன வயசில ஒவ்வொரு தடவையும் நீ என்கிட்ட சொல்லுவியே? என் கூட வந்துடுன்னு.. அப்போ உன்ன நான் விசித்திரமா பார்ப்பேன். வித்தியாசமா எனக்கு ஒரு ஃபீலிங் வரும். அது காதல்னு எனக்கு தெரியல. அதைவிட நீ சின்ன பையன். அதனால் அதை நினைச்சு மனசுக்குள்ள இருக்கிற அந்த உணர்வுகளை வெளிப்படுத்தாமல் விட்டுட்டேன். அது என்னோட தப்பு அப்படின்னு சொல்ல முடியாது. எல்லாரும் உன்னையும் என்னையும் தப்பா பேசிடுவாங்களோனு நினைச்சேன். என்றவள் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து முத்தத்தை தொடர்ந்தாள்.
அதன் பின் அவனை விட்டவள். ஆனா நீ அப்படி ஆளுமையா எல்லாரும் முன்னாடியும் என் கழுத்துல தாலி கட்டுனப்ப, எனக்கு அந்த இடத்தில் நீ மட்டும் தான் தெரிஞ்ச. சத்திய தேவ் எனக்கு தெரியல என்று மீண்டும் முத்தத்தை தொடர்ந்தாள்.
நிதன் பிரகாஷ் அவளை விலக்கி விட்டபடி அப்புறம் எதுக்கு உனக்கு சத்யதேவும் ரிதமும் கல்யாணம் பண்ணிக்கிட்டது சுத்தமா பிடிக்கல. அவனுக்காக உன்னோட மனசு இப்போ ஏங்குது. அதுதான் உண்மை. எனக்கு தெரியும் ஹரிணி என்று அவன் கூற ஹரிணி..
ஒரு நிமிடம் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள். நீ முட்டாள்தனமாக யோசிக்கிற? என்று கூறினாள்.
நானா நான் முட்டாள் ஆமா நான் முட்டாள் தான் என்று அதை ஒப்புக் கொண்டான்.
ஹரிணி சலித்துக் கொண்டவள். அப்படி இல்லை நித்தின். ஆமா நான் வந்து அவங்க ரெண்டு பேரையும் பார்த்து வருத்தப்பட்டேன். அதுக்கு காரணம் என்னன்னா நீயும் நானும் தான் ஐகானிக் பேரா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா சத்ய தேவ் கூட ரிதம் இருக்கும் போது… எனக்கு பேசிக்கா எனக்கு ரிதம சுத்தமா பிடிக்காது. சின்ன வயசில இருந்து.. என்றாள் ஹரிணி.
நீ எந்த காரணமும் எனக்கு சொல்ல வேண்டாம் என்று நிதின் மீண்டும் கூற வர..
அதுக்கு காரணமே நீதாண்டா ஹரிணி கோபத்துடன் பற்களை கடித்தபடி கூறிவிட்டாள்.
நித்தின் பிரகாஷ் புரியாமல் அவளை பார்க்க…
நீயும் ஒரு காரணம் சத்ய தேவ் இன்னொரு காரணம்.
என்ன என நிதின் புருவம் அவளை சுருக்க பார்க்க,
ஹரிணி ..?
*
ரயில்யே ஸ்டேஷனில் ருத்ரன் மீனாட்சியின் கையில் தங்க மோதிரத்தை போட்டு விட்ட படி இப்போ நீ எனக்கு நிச்சயம் ஆனவ! பாரு என் அம்மா, என்னோட சக்தி மாமா ரெண்டு பேரும் உன்னையும் என்னையும் பிளஷ் பண்ணிட்டாங்க உங்க அக்கா கல்யாணம் முடியட்டும். நானே வந்து உங்க அப்பா கிட்ட பேசுறேன் என மீனாட்சியிடம் கூறினான்.
மீனாட்சி அவளை விழி விரிக்க ஆசையுடன் பார்க்க அவளை சீட்டில் அமர வைத்து விட்டு அவன் கிளம்பும் நேரம் உதட்டுடன் உதடு பொருத்தி ஒரு ஆல முத்தம். இருவரும் ஒருவரை ஒருவர் கிறங்கிய நிலையில் பார்த்துக் கொண்டார்கள்.
கஷ்ட பட்டு பிரிய மனம் இல்லாமல் வழி அனுப்பி வைத்தான் ருத்ரன்.
தொடரும்..
அடுத்து என்ன நடக்கும்?
EPISODE 154
கண்களை தேய்த்தபடி மெதுவாக தன் முன்னால் இருக்கும் மான்ஸ்டர் உருவத்தை பார்த்தாள் ரிதம்.
சத்யதேவ் வந்து ஒருவித வேக மூச்சுடனும் பரவசத்துடனும் அவளை பார்த்தவன் விழிகள் மொய்த்தது என்னவோ அந்த இருவரி இதழ்களில்..
அவனுக்கு பயமோ பதட்டமோ எதுவும் இல்லை. அவள் விழி விரித்தபடி அவனைப் பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் மொட்டு மோவாயை பற்றியவன். மீண்டும் இதழ் ஒற்றுதல் ஆரம்பித்தான். முத்த சத்தம் மொத்த அறையையும் கூசச் செய்தது. பச்சக் பச்சக்… அதுவே சம் டைம்ஸ் கடித்தல், கொக்கி போடுதல், சுருட்டி கொள்ளுதல் என ஆயிரம் வித்தைகளை பயின்று கொண்டிருந்தான். ஒத்த முத்தத்தில் அவள் உதட்டில்.
என்ன பண்ணிட்டு இருக்கான்? இவன் இஷ்ட மயிறுக்கு என் மேல பாயறான்? என்று காலையிலேயே அவனது முகத்தை பார்த்ததும் கோபம் கணன்று கொண்டு வந்தது அவளுக்கு..
ஆனால் அவள் சொன்ன வார்த்தை என்று ஒன்று இருக்கிறதே! என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ! ஆனா இதயத்தை மட்டும் நீ பார்க்க கூடாது. அந்த பக்கம் உன்னோட ஸ்பரிசமும் படக்கூடாது. உன்னோட பார்வையும் என்னை அந்த இடத்தில் தீண்ட கூடாது என்று காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது.
ரிதம் அவனது கண்களை பார்த்து சொக்கியவள். அவளின் நெஞ்சை பிடித்துக் கொண்டு அதாவது மறைத்துக் கொண்டு அவனது முத்தத்துக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள. “நான் மொத்தமும் அவனுக்கு சொந்தம் “என்று கூறுகிறான். அப்பொழுது அதற்கான அர்த்தம் அவன் தன்னை எதுவேனாலும் செய்து கொள்வான்.
ரிதம் ஒரு கையை நெஞ்சம் மறைத்து இன்னொரு கையை அவன் கழுத்தில் சுற்றிக்கொண்டு முத்தத்திற்கு துவண்டு துவண்டு அவன் மேலே விழுந்தாள். போதை பெரும் போதை ஆகி தீரா மயக்கம் கொடுப்பது வெறும் கள் இல்லை பெண்கள்.
சத்ய தேவ்வின் கைகள் அவளின் சிறுத்த இடையில் தாவி இருக்க, ஹூக் போல பிண்ணிக் கொண்டு இழுத்தது அந்த ஒட்டி வைத்த ஆரஞ்சு சுளைகள். அவன் கைகள் அப்படியே கழுத்தை வளைத்து பிடித்து முகம் புதைத்துக் கொள்ள.. அவனது எடையை தாங்க முடியாமல் அவள் நெஞ்சை ஒரு கை சிறையிட்டபடி கட்டிலில் அழுத்த பட்டாள்.
ஏனோ இந்த வாசனையும் இந்த பெண் போதை மயக்கமும் நெஞ்சுக்குள் தகித்து கொண்டிருந்தது. கழுத்தில் முத்தம் பதித்து அவளை குறுக்குறுக்க செய்தான். அப்படியே மெதுவாக நெஞ்சாங்கூட்டில் இறங்கும் போது இரு மான்களுக்கு சிறை செயும் விதமாக ஒரு கையை மறைத்து வைத்திருந்தாள் ரிதம்.
ப்ச் என அவளின் கையை சத்ய தேவ் விலக்கி விடும் பொருட்டு தொட்டு மெதுவாக இழுத்தான். கண்களை மூடி ஏகாந்த நிலையில் இருந்தவள் மென்மையான குரலில் பாட்டம் லூஸ் பண்ணவா என கரகரத்த குரலில் மோகம் கரை பிரண்டு ஓட கூறினாள்.
சத்ய தேவ்வின் கைகள் கீழே ஊர்வதற்கு பதிலாக மேலே நெஞ்சு கூட்டை நோக்கி படையெடுக்க, நான் உன்னோட மனைவி சத்ய தேவ்.. பிளீஸ் பிடிக்காத விசயத்தை வர்புறுத்தாதே. என்னையே உனக்கு கொடுக்க தயாரா இருக்கேன். இது வெறும் லஸ்ட் அதுல முக்தி பெற துடிக்கும் உடல் கூடு மட்டும் தான். ஆனால் எனக்கு இதை விட என் மனசு… என அவள் அடுத்து என்ன சொல்வாள் என அறிந்தவன் அந்த இடத்தில் திருப்பி துரத்த பட்டான். அடுத்து எட்டு வைக்க முடிய வில்லை. அடுத்த நொடி அவளை தீண்ட அங்கு யாரும் இல்லை. அவன் குளிக்க சென்று விட்டான்.
ரிதம் ஒரு பெரிய மூச்சுடன் இதயத்தை ஆசுவாச படுத்தியவள். தன் நிலையை எண்ணி எதிரில் பிரதிபலித்து கொண்டிருக்கும் கண்ணாடியை பார்த்தாள். கை கொட்டி சிரிக்காத குறை தான் அந்த கண்ணாடிக்கு.
தன் நெஞ்சை மறைத்திருக்கும் கையை ஒருவாறு விலக்கிக் கொண்டு அவள் வெளியே செல்ல கதவை திறக்க போக, வெளியே போகாதே என கணீர் குரல் குளியலறையில் இருந்து கேட்டது.
எங்கேயாவது கேமரா வச்சிருக்கானா? என சுற்றிலும் பார்த்தாள். அப்படி எதுவும் இல்லை. எப்டி இவனுக்கு இது தெரிந்தது. என நினைத்தவள் தலையணையை எடுத்து படுக்கையில் போட்டு கண்களை தேய்த்துக் கொண்டே மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள்.
இருபது நிமிடங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு வந்தான் சத்ய தேவ். அவள் உறங்கிக் கொண்டிருப்பது தெரிய கோபம். அருகில் சென்றவன் போர்வையை உருவி போட்டு விட்டு அவளின் பின் பகுதியில் அடித்தான். ஸஸ்ஸ் ஹா! F* you ராஸ்கல் யூ b* என சொல்ல வந்தவள் அவனது உணர்வை வெளிபடுத்தாத முகத்தை பார்த்து என்ன டா? எதுக்கு டா அடிச்ச? நாயே என அவளின் இயல்பான குணம் வெளியே வர.. பெண் எங்கே சென்றாள் என தெரிய வில்லை.
பசிக்குது!!
அதுக்கு என்னைய எதுக்குடா அடிச்ச? இறங்கி போய் சாப்பிடு நீ இல்லாம போக மாட்டேன். பசிக்குது என்று கூறினான்.ரிதமின் புருவங்கள் வளைய கூடவே கண்ணகுளி இன்னும் அழகு கூட்டியது.
அது ஐ மீன் உன்னோடதான் வெளியே போகணும்.. ஏன்னா நீ என் பொண்டாட்டி எப்படியும் நீ எனக்கு எதையும் சமைச்சு தர மாட்ட எங்க மம்மி எனக்கு ஆல்ரெடி செஞ்சு வச்சிருக்காங்க. உன்னோட தான் வெளிய போகணும் என்று கூறினான்.
அது தான பார்த்தேன் இடியட் ராஸ்கல் என்று திட்டிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
சத்யதேவ் அவளை பார்த்துக் கொண்டிருக்க, எதுக்குடா அப்படி பாக்குற? சொல்லிட்டியே போய் குளிக்கிறேன் போ என்று பற்களின் இடுக்கில் வார்த்தைகளை படித்து துப்பினாள்.
சரி போய் குளி என்று மீண்டும் பார்க்க போறேன் போறேன் என்று போனை எடுத்து நோண்டினாள். அந்த நேரம் அவளுக்கு புடவையை எடுத்து மெத்தையின் மேல் வைத்தான். இந்த கலரா நீ போட போற? இந்த ஷர்ட் காமெடியா இருக்கும் என்று ரிதம் கூற..
ஹே இது சட்டை இல்லை புடவை எனக்கு இல்ல உனக்கு என்று கூறினான்.
நோ வே என்று ரிதம் கத்த .
இததான் நீ போடுற! இப்போ டக்குனு குளிச்சிட்டு வா இல்ல அப்புறம் என்னோட பசியை நான் இங்கேயே தீத்துடுவேன் என்று கூறினான்.
எப்படி? குட்டி ஃப்ரிட்ஜில எதுவும் வச்சிருக்கியா? சரக்கு இருக்கா? என்று ரிதம் கேட்க
அப்பட்டமாக அவளை பார்த்தவன். அடியே அந்த பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. என்று கூறினான்.
அப்புறம் எப்படி சாப்பிட போற? ஆடர் பண்ண போறியா பண்ண போறியா?! நீ தான் வீகன் ஆச்சே! சைவ நாய் ஆச்சே என்று அவள் பேசிக் கொண்டிருக்க..
சைவம்தான் ஆனால் மிருகங்களோட உணவை தான் சாப்பிட மாட்டேன். மனுசியுடைய உணவை சாப்பிடுவேன்.
என்ன?
ம்ம் ஆமா கண்ணு காது மூக்கு வாய் கழுத்து கழுத்துக்கு கீழே அப்போ அப்போ கொஞ்சம் முத்த சோறு, இன்னும் கொஞ்சம் கடிக்க என்று அவன் சொல்ல வர.. ..
ரிதம் ஒன்றுமே புரியாமல் அவனைப் பார்த்தாள்.
ம்ம் மறுபடியும் சொல்லட்டுமா? கண்ணு என்று அவளின் கண்களை பார்த்தவன். உதட்டை கடித்துக் கொண்டு மூக்கு, லிப்ஸ் , கண்ணு, கழுத்து என்று அவனது பார்வை கழுத்துக்கு கீழ் சென்று அதுக்கு அப்புறம் என்று சத்ய தேவ் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.
அங்கிருக்கும் தலையணை இரண்டையும் எடுத்து அவன் மேல் வீசியவள். வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஹே அப்படியே வரப் போறியா என்று சத்திய தேவ் சிரித்துக்கொண்டே மீண்டும் வெளியே வந்தவள். இன்ஸ்கர்ட் பிளவுஸ், டவல் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு திரும்பவும் குளியல் அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள்.
சத்யதேவ் சிரித்துக்கொண்டே தயாராகினான் அடுத்த அரை மணி நேரத்தில் மணக்க மணக்க உணவு தயாரானது.
அவள் தான் சுட சுட குளியல் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். எனக்கு இந்த புடவை எல்லாம் கட்ட தெரியாது. என்று டவலை கழுத்தில் சுற்றி இருந்தவள் பிளவுஸுடன் இடை மட்டும் தெரிய அவன் முனனால் நின்றாள்.
சத்தியதேவுக்கு பெரு பாடாகி போனது. அவளையே மார்க்கமாக பார்த்துக் கொண்டிருக்க.. ரிதம் அந்த எண்ணத்திலிருந்து வெளிவரும் பொருட்டு ஹே இங்க மியூசிக் பிளேயர் இருக்கா? என்று கேட்டாள்.
சத்தியதேவ் அப்படியே சிலையாக நின்று கொண்டிருக்க, அவனைக் கண்டு கொள்ளாமல் அதில் பாட்டை வைத்துவிட்டாள். ராவடி ராவடி ராப்பரி ராவடி ரா ரா ரா ரா ரா ரா என துள்ளலுடன் இசை ஓடிக்கொண்டிருக்க.. கட்டிவிடு என்று புடவையை நீட்டினாள்.
எதுவும் சொல்லாமல் அவளின் இடையில் சொருகி இருந்தான். அந்த வைர மூக்குத்தி சாரி வயிற்றில் குத்தி இருக்கும் அந்த நாவல் பியர்சிங் பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
அந்த புடவை மிகவும் எடுப்பாக இருக்க, ஆமா எப்படி இது உனக்கு தெரியும்? ரிதம் என்று கேட்க..
அவளின் முகத்தை பார்த்தான்.
டேய் என்னை எதுக்குடா பார்க்கிற? என் கண்ண பாத்து பேசு என்று ரிதம் கூற..
உன்ன நான் எங்க வேணாலும் பார்க்கலாம். என சத்ய தேவ் கூற, அப்போ ரோட்ல ஒரு ஒரு பொண்ணு போனா? என ரிதம் கேட்டாள்.
அந்த பொண்ணுங்கள தான் நான் கண்ண பாத்து பேசுவேன். உன்னை எதுக்குடி நான் கண்ண பாத்து பேசணும்? என்று கேட்டான் சத்ய தேவ்.
இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. தண்டம் மாடு என்ற திட்டியவள்.
எப்படி புடவை கட்ட தெரியும் என்று கேட்டாள்.
இவளை…. இம்சை என்று நினைத்தவன். அது என்னோட கனவில் ஒரு பொண்ணு வரா. அவளுக்கு டெய்லியும் புடவை கட்டிவிடுவேன். அவளுக்கு கட்டி விட்ட பழக்கம் தான் என சத்ய தேவ் கூறினான்.
அப்படியா டெய்லி ஹரிணி கூட கனவோ பாவம் எத்தன பேர் என்று உதட்டை சுழித்தாள் ரிதம்.
ப்ச் இப்போ ஹரிணிய பத்தி நினைக்க முடியாது. என்றான் வெடுக்கென..
ஏன் என ரிதம் கேட்க, ஆமா என்னைக்கு ஹரிணி நித்தினுக்கு சொந்தம் ஆனாளோ அன்னிக்கே நான் அவளை என்னோட மனசுல இருந்து எடுத்துட்டேன்.
ஆ ஹாம் அப்புறம்? என அவள் அவனை பார்க்க, என்ன டீஇஇஇ! என இழுத்தான் சுதியை.
அப்போ கனவில் யாரு வரா? என ரிதம் கேட்க,
நீ இல்ல என சத்ய தேவ் கூறினான். எனக்கும் கனவில் ஒருத்தன் வரான்.
நான் தான? என சத்ய தேவ் சொல்லி விட.. ச்சீ!! நீ இல்ல என கண்ணக் குளி சிணுங்கியது.
அதில் சத்ய தேவ் கண்களில் கோபம் பொறாமை கலந்து அவளை பார்த்துக் கொண்டே இடுப்பில் உள்ள கொசுவத்தை அழுத்தம் கொடுத்து சொருகினான்.
ஹிஸ்ஸ் என்ன டா நாயே பண்ற? என சொல்லிக் கொண்டே அவனது கையை பிடித்தவள். அடங்காத அதிகாரன் ஒருத்தன் இருக்கான். அவன் தான் வரான் என்னா Structure தெரியுமா? என்னோட subconscious memory power ல அவன் தான் இருக்கான். என அடுத்த வார்த்தை அவளால் சொல்ல முடியவில்லை உதட்டை விரல் கொண்டு கசக்கி இருந்தான்.
ஹே வாக்கிது என அவள் உதடு ஒட்டாமல் சிரம பட, அவளிடம் இருந்து சட்டென விலகியவன். கண்ணாடியில் அவனையே சரி செய்து கொண்டு பார்த்தான்.
அவன் மேல் ஒரு வாசம். ஹே என்ன உன் மேலே பொண்ணு வாசம் அடிக்கிதி.
ஹே தப்பா பேசாதே டி! என அவன் கிளம்ப.. டேய் இல்லடா உன் மேலே ஒரு வாசம் அடிக்கிதே different ஆ இருக்கே.. ம்மமம் ஹஹா என்ன டா வாசம்?
அதுவா குளியல் பொடி என்றான் சத்ய தேவ்.
டேய் இரு இரு என அவனது அருகில் நெருங்கி வாசத்தை உள் இழுத்துக் கொண்டாள்.
என் பக்கத்தில் நீ கொஞ்ச நேரம் இருந்தால் கூட கண்ணு மூக்கு காதெல்லாம் இன்னும் இடம் மாறிடும். உனக்கு ஓகே வா என அவளின் கழுத்தை அழுத்திப் பிடித்தான். மோக பிடிப்பு.
நான் இல்லப்பா என அவள் ஓட பார்க்க, நில்லு கொஞ்சம் பொட்டு குங்குமம் வைக்கணும் என அவளை நிற்க வைத்து அழகாக ஒரு பொட்டு நெற்றியில் குங்குமம் என வைத்து விட்டவன். ஹே எங்கே டி தாலி! என சத்ய தேவ் கழுத்தை பார்த்தான்.
அதுவா தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணுச்சு அதான் கழட்டி அதோ அங்கே இருக்கு என கை காட்டினாள்.
பாவி பாவி பாவி என சொல்லிய படி அதை எடுத்து கழுத்தில் போட்டு விட்டான்.
போடா! இதுக்கெல்லாம் சென்டிமன்ட் பார்க்காதே என பேசிக்கொண்டே இருவரும் சண்டை போட்டுக் கொண்டே வெளியே வந்தார்கள்.
ஹே கம்முன்னு வாடி.. போடா!.. என அவள் பதில் சொல்லிக் கொண்டு வர, இர்ரி உன்னை மாமி கிட்ட சொல்றேன் நீ தாலி கழட்டி வச்ச விசயத்தை சொல்றேன் இரு என சொல்ல.. சொல்லேன் டா நானும் உன்னை பத்தி சொல்லுவேன்.
என்ன சொல்லுவ?
நான் என ரிதம் பேச வர வவ் வவ் என குரைத்துக் கொண்டே( சத்ய தேவ் மற்றும் ரிதம் dog family அவர்களின் காலை சுற்றி வந்தது.
அய்யோ சத்ய தேவ் செல்லம். செம்மையாக இருக்கியே டா! என நாயை தூக்கிக் கொண்டாள் ரிதம்.
அப்பொழுது தான் கண்களை தேய்த்து கொண்டு தூங்கி முளித்த படி அனைவரும் கீழே வந்தார்கள்.
சூர்யா சோபாவில அமர்ந்திருக்க, மகி சமையல் அறையில் இருந்து மெதுவாக வெளியே எட்டி பார்த்தாள். சத்ய தேவ் , ரிதம் என ஐந்து அறிவு ஜீவனும் அதனுடைய குடும்பமும் ஆறு அறிவு ஜீவன் அடங்காத அதிகாரன் ராவடியுடன் நின்றிருக்க அது ஒரு ஓவியம் போல காட்சி அளித்தது.
அந்த நேரம் விவேகா மற்றும் இன்பா இருவரும் சூர்யாவின் வீட்டுக்குள் நுழைந்தார்கள். நிஜமாவே இது உன் பொண்ணாடா புடவை கட்டி இருக்கா! பொட்டு வகிட்டில் குங்குமம் அய்யோ லட்சுமி கடாட்சம் என வாய் விட்டு கூறினார் விவேகா.
வா விவேகா! அண்ணா உள்ளே வாங்க என மகி அழைக்க,
டாடி என வேகமாக சென்று அணைத்துக் கொண்டாள் ரிதம்.
தீரா வரலையா? என சத்ய தேவ் கேட்க.. அவன் காலையிலேயே எதோ முக்கியமா வேலை இருக்குன்னு போயிட்டான். என விவேகா கூறிக் கொண்டே வந்தார்.
அதற்குள் ரிதமை அனைவரும் சுற்றி வளைத்தார்கள். ஹே அண்ணி நைட்டு எங்கே தூங்கின? என ஒரு பக்கம் இதழ் கேட்க.. இன்னொரு பக்கம் பவன்யா மற்றும் இனியா இருவரும் இருக்க பத்தாத குறைக்கு ஆக்னஸ் மற்றும் வீணா சேர்ந்து கொண்டார்கள்.
சிவன்யா நேரத்திலேயே அவளது வேலைக்கு கிளம்பி விட்டாள்.
*
நான் என்ன பண்ணேன்? என நிதின் கேட்க, அதுக்கு காரணம் நீங்க ரெண்டு பேரும் தாண்டா என்று ஆவேசமாக கத்தினாள் ஹரிணி.
நித்தின் பிரகாஷ் ஒன்றுமே புரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க, வயிற்றைப் பிடித்துக் கொண்டு அருகில் உள்ள மெத்தையில் அமர்ந்தாள்.
என்னாச்சு என்று வேகமாக அவளிடம் வந்தான்
அதுவா அது.. அது நான் வந்து என கண்களை இறுக்கி மூடியபடி பீரியட்ஸ் ஆயிட்டேன் என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.
ரொம்ப வலிக்குதா! என அவளின் அருகில் அமர்ந்தவன். இப்போ என்ன பண்றது என கேட்டான் நிதின்.
ஒன்னும் பிரச்னை இல்லை டேப்லட் சாப்பிட்டால் சரியா போயிடும். என அப்படியே படுக்கையில் சரிந்தாள் ஹரிணி.
மீனாட்சி – ருத்ரன் ரயில்வே காட்சிகள் நாளைக்கு..
கமெண்ட் பண்ணுங்க..
தொடரும்..
EPISODE 155
இப்படி பாக்காதிங்கோ இந்த பார்வை என்னை வாட்ரது? என சிணுங்கினாள் மீனாட்சி.
மெல்லிய குரலில் அவளின் காதுகளுக்கு கேட்கும் வண்ணம் என்னை மிஸ் பண்ணலயா கோல்ட் ஃபிஷ் என்றான் ருத்ரன்.
ரொம்ப மிஸ் பண்றேன் தீரா! என அவள் கண்களில் காதல் பெருக்கெடுத்த படி இருக்க, அவளின் கைகளை மென்மையாக வருடியவன். அப்போ என் கூடவே இருந்திடு டி! என காதல் ததும்ப கூறினான்.
எப்படி இருக்க முடியும்? என் கழுத்தில் கயிறு இல்லையே! நான் நோக்கு சொந்தமாகுல ன்னா. இன்னும் நான் மீனாட்சி பார்த்தசாரதி தான் என்றாள். அதற்குள் டிரெயின் வந்து விட அவளின் கோச்சில் ஏறிக்கொண்டு அமர்ந்தான்.
மீனாட்சியின் முகம் வாடிபோய் கிடக்க, சுற்றிலும் பார்வையை பதித்தான் யாரும் அங்கு இல்லை. அவளின் தோல் மேல் கைகளை போட்டவன். போனை எடுத்து சத்ய தேவ்க்கு அழைத்தான்.
என்னன்னா? யாருக்கு போன் பன்றேல்? என மீனாட்சி கேட்க, சக்தி மாமா என கண் சிமட்டியவன். அழைப்புக்காக காத்திருந்தான். ஹலோ மறுமுனை ஏற்க பட்டது.
எங்கே டா இருக்க? என சத்ய தேவ் கேட்க, மாமா அம்மா பக்கத்தில் இருக்காங்களா?
ம்ம் இங்கே தான் இருக்காங்க சாப்பிட போறோம் என சத்ய தேவ் பதில் கூற, சரி மாமா நீங்களும் அம்மாவும் மட்டும் வீடியோ கால் வரமுடியுமா இப்போவே என ருத்ரன் கேட்க.. என்ன டா திடீர்னு? எதுக்கு டா என கேட்டான் சத்ய தேவ்.
மீனாட்சி ருத்ரனை திடுக்கிட்டு பார்க்க, அவளின் கன்னத்தை வருடியவன் கண் சிமட்டிய படி கூப்பிடுங்க மாமா! சொன்னால் செய்வீங்களா மாட்டீங்களா? அம்மாவும் நீங்களும் மட்டும் என மீண்டும் அறிவுறுத்தினான்.
சரி இரு என சத்ய தேவ் விவேகாவை அழைக்க, என்ன மாப்பிள்ளை என கேட்ட படி சமையல் கட்டில் இருந்து வந்தாள்.
மாமி ஒரு நிமிசம் வாங்க என அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் சத்ய தேவ்.
ஏன்னா என்ன பன்றேள்? இப்போ எதுக்கு மாமிய கூப்பிடுரீங்கோ என மீனாட்சி படபடப்புடன் கேட்க, காரணமா தாண்டி என் தங்கம். என கூறினான் ருத்ரன்.
சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்த படி என்ன சக்தி? ரிதம் பத்தி எதுவும் சொல்லனுமா? அடங்க மாட்டிக்கிறாளா? என விவேகா கேட்க, இல்ல இல்ல என தலை ஆட்டியவன். போனில் வீடியோ காலை நீட்டினான்.
டேய் தீரா? என்ன வீடியோ கால் எங்கே இருக்க? என விவேகா கேட்க, மாம் இது மீனாட்சி ஐ மீன் தங்க மீனாட்சி உன்னோட மருமக! நம்ம வீட்டு பொண்ணு என அவளை வலுக்கட்டாயமாக திரை வட்டத்தில் கொண்டு வந்தான்.
விவேகாவை தயக்கத்துடன் பார்த்த மீனாட்சி ம.. மாமி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ என திரையை தொட்டு சாஷ்டாங்க குட்டி ஆசிர்வாதம் கேட்டாள் மீனாட்சி.
விவேகாவின் முகத்தை பார்த்து எதையும் கண்டு பிடிக்க முடியாமல் மீனாட்சி பதட்டத்துடன் பார்க்க, சத்ய தேவ் வாயின் மேல் கை வைத்து அதிர்ச்சியுடன் பார்த்தான். ருத்ரன் தன் தாயை பார்த்துக் கொண்டிருக்க, என்ன டா பண்ணி வச்சிருக்க? உன் மேலே கோபமா இருக்கேன்? எப்படி நீ இப்படி ஒரு காரியத்தை செய்யலாம் என விவேகாவின் கண்களில் கோபம் தெறித்தது.
மீனாட்சியின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அவள் ஒரு வித பதட்டத்துடன் ருத்ரனை பார்க்க, இதுக்கு நீயும் உடைந்தையா? சத்திய தேவ். என்ன இதெல்லாம்? என்று அவள் கோபமானாள். ருத்ரன் தன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருக்க, என்னம்மா நீயும்? ஹான் என்ன இது? என்று மீனாட்சியின் மீது பார்வை திரும்பியது.
மாமி என்று சத்திய தேவ் பேச வர ருத்ரன் தன் அம்மாவை பார்த்தபடி மீனாட்சியின் கைகளை வருடியபடி ஒன்னும் இல்ல என்று சைகை செய்தான்.
டேய் அங்க என்ன டா பார்வை? என்ன பார்த்து பேசு! என்று விவேகா கூற..
மீனாட்சியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. விவேகா சிரித்தபடி வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்னு பார்த்தா ட்ரெயின்ல இருந்து போன் பண்ற? உனக்கு அறிவு இருக்கா தீரா? அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்க? என்று சாதாரணமாக பேசினாள் விவேகா.
அதிர்ச்சி குறையாமல் மீனாட்சியும், சத்திய தேவும் ருத்ரனையும் விவேகாவையும் பார்க்க..
ருத்ரன் மீனாட்சியின் பக்கம் திரும்பி பாத்தியா எங்க அம்மாவ? என்று அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
மீனாட்சி அதிர்ச்சியுடன் வாயை திறக்க, சத்ய தேவோ இன்னும் அதிர்ச்சியில் இருந்தான்.
மாமி! அத்.. அது! நானு என்று விவேகா கேட்க மீனாட்சிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! மாமி உங்களுக்கு கோபம் இல்லையே? என் மேல!.. நான் தீராவ.. அது அவரை நான் என்று அவள் தயங்க, என் பையனோட செலக்சன் என்னைக்கும் கரெக்டா இருக்கும் என்று சொல்லும் போதே நுழைவு வாயில் திறந்தது.
அதாவது சூர்ய தேவ் மகியின் வீட்டின் நுழைவு வாயில் திறக்க அங்கே வந்தாள் நிலா. தேங்க்ஸ் மாமி லவ் யூ என மீனாட்சி சிரித்த முகத்துடன் கூற, உங்க ரெண்டு பேரு ஜோடி பொருத்தமும் அழகா இருக்கு. என் கண்ணே பட்டுடுச்சு என விவேகா கூற, மீனாட்சிக்கு வெட்கம், மாம் என ருத்ரன் அழைக்க, உன் மேலே கோபம் போடா! ராஸ்கல் என்றார் விவேகா.
மா என்னாச்சு? என ருத்ரன் கேட்க, நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கனும். என விவேகா வருத்தப்பட, சரி அதை விடுங்க மா இனி எங்கே போயிட போறா என அவளின் இடையில் பிடித்துக் கொண்டான். கைய எடுங்கோ ன்னா என மீனாட்சி நெளிய, க்கும் என தொண்டையை சிரும்பினான் சத்ய தேவ்.
மா அவள் ஊருக்கு போராளாம்! ஆனா என்னை விட்டு போறதுக்கு மனசு இல்லையாம்? அதனால்அஅஅ! என்ற ருத்ரன் தன் அன்னையையும் மாமனையும் பார்க்க..
என்னடா? இங்க கூட்டிட்டு வர போறியா? என சத்ய தேவ் கேட்க,
மீனாட்சியை சத்யதேவை பார்த்து புன்னகைத்தாள். ருத்ரன் தீர்க்க பார்வையுடன் இல்ல இப்போ அவளுக்கு நான் மோதிரம் போட போறேன். அதாவது நிச்சயம் பண்ணிக்க போறேன். என்று அசால்டாக கூறினான்
என்னடா சாதாரணமா சொல்ற என்று சத்திய தேவ் கொந்தளிக்க , அதே அதிர்ச்சியில் தான் மீனாட்சியும் இருந்தாள். ஏன்னா என்ன சொல்றேள்? இங்கே எப்படி? என அவள் சங்கடமாக உணர..
என்னோட எப்போவும் அவளுக்கு இருக்க மாதிரி. ஐ மீன் நான் கூட இருக்கிற மாதிரி இந்த நிமிஷம் நிச்சயம் பண்ண போறேன். என சொல்லியே படியே மா உங்களுக்கு ஓகே தான என கேட்க, ம்ம் பண்ணிட்டா போச்சு! இப்போ ஒரு தடவை பண்ணிக்கலாம். கல்யாணத்தில் ஒரு தடவை பண்ணிப்போம் என விவேகா வெகு இயல்பாக கூற, என் அம்மா லவ் யூ என அவனது கையில் இருக்கும் R மோதிரத்தை அவளின் கையில் போட்டு விட்டான்.
மீனாட்சி கண்ணை திறந்து மூடுவதற்குள் அனைத்தும் நடந்து விட விவேகா இங்கிருந்த படியே நெட்டி முறித்தார். சத்ய தேவ் சின்ன சிரிப்புடன் பார்த்தவன். எதுக்கும் மாமா கிட்ட ஒரு வார்த்தை? என சொல்ல, எதுக்கு மாமா? இப்படி உருகி மீனாட்சி என் கிட்ட இருக்கிறதை பார்த்து அவர் கண்ணு வச்சா இவள் என்னை விட்டுட்டு கூட போயிடுவா! என கூறினான் ருத்ரன்.
விவேகா சந்தோசத்துடன் என் பையன வச்சு தான் உன் மாமனுக்கு பாடம் சொல்லி கொடுக்க போறேன். எப்படி முறையா காதலிச்ச பொண்ணை கை பிடிக்கிறதுன்னு ருத்ரன் காட்டுவான். அப்போ நான் பெருமையா என் பையன் பக்கத்தில் என் வளர்ப்பு ஜெய்யிச்ச பூரிப்பில் நிற்பேன் என பெருமிதத்தில் பேசினார்.
ஓகே ஓகே மாம்! நான் அங்கே வரேன் இங்கே நேரமாச்சு? டிரெயின் கிளம்ப போகுது என ருத்ரன் சொல்ல, மாமி நான் உங்களுக்கு கால் பண்றேன் பேசலாம். உங்களுக்கு நாழி இருக்குமா! என மீனாட்சி தயக்கத்துடன் கேட்க..
ம்ம் பேசலாம்! மீனு குட்டி என விவேகா கூற.. மீனாட்சியின் உலகம் இன்னும் வண்ண மயமானது. இந்த வண்ணத்துக்கு காரணம் ருத்ரன் தான். சத்ய தேவ் இருவருக்கும் வாழ்த்து கூற! தேங்க்ஸ் அண்ணா! என மீனாட்சி கூறினாள்.
சரி சரி பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க. என விவேகா கூற அவள் டாட்டா காட்டினாள்.
சத்ய தேவ் அருகில் நிற்கும் விவேகாவை பார்க்க, என்ன சத்யதேவ் அப்படி பாக்குற? என்று விவேகா கேட்டார் .
எப்படி மாமி இவ்ளோ ஈசியா எடுத்துக்கிறீங்க? இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? மாமா கூட பேசாம கலந்துக்காம நேரடியா ருத்ரனுக்கு இத்தனை சுதந்திரம் கொடுக்கிறது கரெக்டா? எல்லாத்துக்கும் மாமா கிட்ட ஒரு வார்த்தை? என்று அவன் தயங்க, விவேகா சிரித்தபடியே என் பையன் எது செஞ்சாலும் கரெக்டா இருக்கும். அதே போல இன்பாவ பத்தி எனக்கு தெரியும். வெளியில உங்க மாமா கோபமா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள ருத்ரன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் தான். இப்பவே ருத்ரனை பத்தி நான் இன்பாகிட்ட எடுத்துட்டு போனா ருத்ரனுக்கு கொஞ்சம் பயம் வந்துடும். அந்த பொண்ணு புதுசா இருக்கா. அவளுக்கு comfort zone வேணும்.
சத்ய தேவ் விவேகாவை பார்க்க, மேலும் அவர் ருத்ரனுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதால தான். அவன் போன் பண்ணி என்கிட்ட தைரியமா பேசி இருக்கான். அந்த அளவுக்கு என் பையன் கூட நான் ரொம்ப கனெக்டிவிட்டியா ஜோவியலா இருக்கேன். அதுக்கு காரணம் என் பையன் என்கிட்ட எல்லாத்தையும் ஓபனப்பா ஷேர் பண்ணுவான். பண்ணிட்டு இருக்கான். ஆனா இந்த விஷயத்ததுள நீ உன் மாமனை எடுத்துக்கிட்டேனா? அவங்க ரெண்டு பேர் பான்ட் ஜீரோ தான். ரெண்டு பேரும் இப்படி இருக்க மாட்டாங்க. வெளில தான் உருகி என் பொண்ணு என் டாடின்னு இருப்பாங்க. ஆனா ரிதம் எதையுமே அவ்ளோ ஈஸியா இன்பாகிட்ட சொல்ல மாட்டா. அதேபோல இன்பா அவளை கண்காணிக்க கூட செய்வான். அவங்க வேற மாறி என்றார் விவேகா.
இருந்தாலும் ஒரு வார்த்தை என்று சத்திய தேவ் மீண்டும் தயங்க, விவேகா அவனை ஏற இறங்க பார்த்தவர். அந்த அளவுக்கு இன்பராகவன் மேல மரியாதை ஜாஸ்தியா இருக்கே! மாப்பிள்ளைக்கு? என்று சிரித்தபடியே கூறினார்.
ஆமா அவருக்கும் எனக்கும் இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் வேற மாதிரி மாமி என்று கூறினான் சத்திய தேவ்.
இருந்தாலும் என் பையன் அளவுக்கெல்லாம் அவன் ஒன்னும் யோக்கியம் கிடையாது. அவங்க அம்மா கிட்ட எப்போ என்னை இன்ட்ரோ கொடுத்தான்னு உனக்கு தெரியுமா? ரிதம் நாலு வயசா இருக்கும் போது. அதுவும் அவனா ஒன்னும் இன்ட்ரோ கொடுக்கல. அவள பாத்ததும் அந்த கண்ண குழிய வச்சு எல்லாரும் கண்டுபிடிச்சுட்டாங்க. எனக்கும் அவனுக்கும் பிறந்த குழந்தைதான்னு. அப்பவும் அவனோட அம்மா என்னதான் அடிச்சாங்க அவன் ரொம்ப நல்ல பையன் மாதிரி அவனுக்கு பாராட்டு பத்திரம் வர வாசிச்சாங்க உனக்கு ஞாபகம் இருக்கும் தானே உதயன் அண்ணா கல்யாணத்தப்ப! என விவேகா கூறிய படி, அவன் தைரியமானவன் எல்லாம் கிடையாது. அவன் ஒரு பயம்தான் கோழி பருப்ப நக்கி என்று விவேகா கூட சத்ய தேவ் சிரித்து விட்டான்.
*
ருத்ரன் கைகளுடன் மீனாட்சியின் கைகள் கோர்த்திருந்தது. அவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம். இப்போ நிம்மதியா? என்னோட தங்க மீனாட்சிக்கு? அடுத்ததா ருத்ரன் வெட்ஸ் தங்க மீனாட்சி அப்படியே நேரா பட்டு வேஷ்டி சட்டையோட கெத்தா எனக்கு மீனாட்சி கொடுத்திடுங்க என் தங்க மீனாட்சி எனக்கு வேணும்னு மிஸ்டர் பார்தா கிட்ட கேட்பேன். கொடுக்கவில்லை என்றால் தூக்கிட்டு வந்துடுவேன் என்று ருத்ரன் அவளை சிரிக்க வைக்கும் பொருட்டு கூறிக் கொண்டிருக்க..
உள்ளுக்குள் மீனாட்சிக்கு பயப்பந்து உருண்டது. என்னடி ஒரு மாதிரி இருக்க? என்று அவன் கேட்க..
அந்த தங்கத்தை விடுங்கோளேன்!! எப்போ பாரு தங்கம் தங்கம்ன்னு நேக்கு அது பிடிக்கலன்னா! என்று கூறினாள் மீனாட்சி.
ஆனால் என் தங்கம் எனக்கு புடிச்சிருக்கு என்று ருத்ரன் கூற, சரி சரி கிளம்புங்கோ என்று அவள் அவனை கிளம்ப சொன்னாள்.
இன்னும் டைம் இருக்கு என்று அவளின் மோதிரமிட்ட விரலுக்கு முத்தமிட்டான் ருத்ரன். புதுவகையான ஒரு சிலிர்ப்பு. உள்ளுக்குள் பரவியது. இன்னிக்கு அழகா இருக்கடி! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? அந்த சந்தோஷத்துக்கு காரணம் யார் சொல்லு?
யார் என்று மீனாட்சி கேட்க..
Ofcourse நீ தான்! என்னையும் என் அம்மாவுக்கு அந்த அளவுக்கு என்ன புடிக்கும். என்ன புரிஞ்சுக்கு வாங்க என்று கூறினான் ருத்ரன்.
எனக்கும் உங்க அம்மாவை ரொம்ப பிடிக்குது. சக்தி அண்ணாவும் ரொம்ப ஸ்மார்ட் என்று அவள் கூற…
ஆமா என்னோட பெஸ்ட் இவங்க ரெண்டு பேரு தான் அதுக்கப்புறம் அதுக்கப்புறம் எங்க வீட்ல ஆதி சித்தப்பா தாத்தா கங்கா மாச்சி நிறைய பேர் இருக்காங்க ஜாலியா இருக்கலாம் தெரியுமா என்ற ருத்ரன் கூறிக் கொண்டிருக்க எனக்கு ஆசையா இருக்கு என்றால் மீனாட்சி மின்னும் கண்களுடன்.
நேரத்தை பார்த்தால் ருத்ரன் சரி டைம் ஆகிடுச்சு நான் கிளம்பட்டுமா என்று கேட்க மீனாட்சி முகம் வாடிப்போனது.
இப்படி முகத்தை வச்சுட்டு இருந்தா! நான் எப்படி நிம்மதியா இருப்பேன்? சொல்லுடி? என்று ருத்ரன் கேட்டான்.
சரி போயிட்டு வாங்க என்று ஒரு பெருமூச்சியை விட்டாள்.
ம்ம் அப்படியே போக மாட்டேன். நிச்சயம் பண்ணி இருக்கேன். அதுக்கு ஆதாரமா கொடுத்துட்டு போகணும்ல! என்ற ருத்ரன் கண்ணடிக்க.. அவனது மோட்டிவ் என்ன என்று தெரிந்து கொண்டவள். இத சொல்ல இவ்வளவு நேரமா? என்று சலித்திக் கொண்டாள்.
அடிப்பாவி என்று ருத்ரன் அப்பட்டமான அதிர்ச்சியுடன் அவளை பார்க்க..
எனக்கும் ஆசை தான்! எனக்கு ஒரு முத்தம் இல்ல இல்ல நிறைய முத்தம் வேணும் . ஊருக்கு போற வரைக்கும் தாக்குப் பிடிக்கிற மாதிரி அப்படியே திரும்பி வர அளவுக்கு கொடுங்கோ என்று கன்னத்தை காட்ட கண்ணம்..
ருத்ரன் அவளின் முகம் பற்றி கண்கள், நெற்றி அவளின் கூந்தலில் ஒதுக்கும் காதோரம், அந்த ஒதுக்கும் துண்டு மூடி காது, கண்ண கதுப்பு மூக்கு கூர்நாசி , மோவாய் உதடு என அனைத்தையும் சிறப்பாக கவனித்தவன். உதட்டில் ஆழ்ந்த முத்தமிட்டான். மேல் மூச்சு மேல் மூச்சு வாங்க, மேல் உதடு கீழ் உதடு என்று இருவரும் லயத்து போயிருந்தார்கள். அந்த முத்தத்தில்..
சரி ஏன்னா!!
ஏன்ண்ணா சொல்லாத டி அப்புறம் உனக்கு நான் அண்ணனாகிட போறேன் என்று ருத்ரன் கோபமாக கூற..
சாரி சாரிங்க மாமா நான் ஊருக்கு போயிட்டு வரேன் என்று மீனாட்சி பெருமூச்சுடன் விலக…
மீண்டும் உதட்டை கடித்து புண்படுத்தி விட்டு சென்றான்.
வலிக்குது என்று அவள் முனக.. இந்த காயத்தை எப்பவும் புது ரினிவல் பண்ணிக்கிட்டே இருக்கணும். என்று விஷமாக கூறினான் ருத்ரன்.
எனக்கும் உங்க நினைப்பு வாட்டுன் போது அதே இடத்தை கடிச்சுப்பென் உங்களை நினைச்சு என்று மீனாட்சி சொல்ல ..
ஹே மீனாட்சி கண்ட்ரோல் பண்ண முடியல டி என்று அவன் எல்லைமீற போக..
அந்த நேரம் சரியாக ட்ரெயினில் சத்தம் கேட்டது. ஓகே மாமா நான் போயிட்டு வரேன் ட என்று அவனது கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டாள் மீனாட்சி.
சரிடி போயிட்டு போன் பண்ணு என்று இறங்கி அவளுக்கு tata காட்டிட இதயத்தில் இதயம் ஒழுக்க சந்தோஷம்.. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் சின்ன நெருடல். சரி இந்த ஒரு தடவ தானே. அதுக்கப்புறம் கண்டிப்பா அவளை கல்யாணம் பண்ணிடனும் மிஸ்டர் பார்த்தா மீனாட்சியை கொடுத்திடுங்கோ என்று நீங்க கொடுத்தா என்ன கொடுக்கலைன்னா எனக்கு என்ன மீனாட்சி கூப்பிடுவேன் என்று உற்சாகமாக கிளம்பினான் ருத்ரன்.
*
போன் அலறிக்கொண்டே இருந்தது டேய் போன் அடிக்குது என்ன பண்ணிட்டு இருக்க சீக்கிரம் எடுத்து பேசு நீ வா என்று மிதுன் அவனை அதட்ட அச்சோ என்று வேகமாக போனை பார்த்தவனுக்கு அதில் தேஜு லவ் ம லவ் மாம் என்று இருந்தது ஹலோ அம்மா என்று கண்ணகுலை தெரிய அழைத்தான் எங்க இருக்க நிவாஸ் அங்கே போயிட்டியா என்று கேட்க நான் வந்துட்டேன் அம்மா. நைட்டே வந்துட்டேன்.இங்கே எல்லாரும் ஹேப்பி என்று நிவாஸ் கூறிக் கொண்டிருக்க..
உனக்கு ஒரு முக்கியமான வேலை கண்ணா என்று கூறினார் தேஜு.
என்ன விஷயம் மாம் எதுவும் வேலையா என்று கேட்க..
தாத்தா காஞ்சிபுரத்தில் ஏதோ வேலைன்னு சொன்னாரு. ஆளுங்களை அனுப்பவான்னு கேட்டதுக்கு, நானே பார்த்துப்பேன்னு சொல்லிட்டு, இப்போ அங்க போயிட்டு தடுமாறிகிட்டி இருக்காரு டா. நீ அவரை பிக்கப் பண்ணிட்டு தாத்தாவை அவருடைய வேலையை முடிச்சிட்டு இங்க ஹைதராபாத் கூட்டிட்டு வந்துடு கண்ணா என்று தேஜு கூற..
இப்போ உடனே போகணுமா மாம் என்று நிவாஸ் கேட்டான்.
அவங்க பரசு மாமா வீடு அது தான் டா அமஞ்சிகரையில் சிவகாமி பாட்டி ஆத்துல இருக்கா! நீ போய் அங்க பிக்கப் பண்ணிட்டு தயவு செய்து கூட்டிட்டு போயிட்டு வந்துடுடா என்று தேஜு மீண்டும் சொல்ல..
சரி நான் இப்பவே கிளம்புறேன் என்று நிவாஸ் புறப்பட்டான்.
*
அங்கே அந்த நேரம் பார்த்து அனைத்து கூட்டமும் அதாவது பவன்யா இனியா இதயம வெற்றி இதோ நிலா சத்யதேவுடன் பேசிக்கொண்டு இருந்தால் மொத்த கூட்டமும் இருக்க டிவியை தட்டி விட்டான் இதயன் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கலகலவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
டாடி! அந்த சக்தியும் பேபியும் வீடியோ கால் பேசிட்டு வராங்க I think அது அந்த ருத்ரன் நாய் தான்? என்னன்னு கேளுங்க என நைசாக போட்டு கொடுத்துவிட்டு எஸ் ஆனாள் ரிதம்.
இன்பா…?
தொடரும்..
EPISODE 156
டாடி! அந்த சக்தியும் பேபியும் வீடியோ கால் பேசிட்டு வராங்க I think அது அந்த ருத்ரன் நாய் தான்? என்னன்னு கேளுங்க என நைசாக போட்டு கொடுத்துவிட்டு கம்பி நீட்டினாள் ரிதம்.
சத்யதேவ் மற்றும் விவேகா இருவரும் சிரித்து பேசியபடி புன்னகையுடன் உள்ளே நுழைய, இன்பா அவர்கள் இருவரையும் பார்த்தபடியே, விவேகாவின் பக்கம் பார்வையை பதித்தார். தங்களை பார்த்ததும் ரிதம் ஏதோ சொல்லிவிட்டு வேகமாக சென்றதை சத்யதேவ் கண்டு கொண்டான்.
அவள் நேராக மிதுன் பக்கம் சென்று அவர்களுடன் ஐக்கியமாக அந்த இடத்திற்கு வந்தவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். நிலா சக்தியின் முன்னால் தலையை ஆட்டி, கையை ஆட்டி காட்டிட, அவன் பார்வை மொத்தமும் அவள் மேலே இருந்தது. அண்ணா என்ன ஆச்சு பவா அக்கா இங்க பாரேன் அண்ணா அண்ணியவே பாத்துட்டு இருக்காங்க என்று சொல்ல..
சத்யதேவின் பார்வை நிலாவின் மீது டாக்டர் மேடம் எப்ப வந்தீங்க? என்று கேட்க, இப்பதான் ஆனாலும் நான் உன் மேல கோவமா இருக்கேன். என்று முகத்தை திருப்பினாள்.
என்ன ஆச்சு? என் செல்ல தங்கச்சிக்கு? அதுவும் என் கடைக்குட்டி தங்கச்சிக்கு? என்று சொல்ல அப்ப நானு என்று இனியா கேட்டாள்.
நீ என் தங்கச்சி இல்லடி மாமன் பொண்ணு மாமா பொண்ணு! தங்கச்சி ஆகுமா? என்ன? என்று சத்திய தேவ் கூற.. ஆமால்ல மாமா என்று இனியா சிரித்தபடியே பேச..
டே டே டேய் டேய் அவள அப்படி பாக்காத? அந்த சத்திய தேவ் கண்டுபிடிச்சான்னு வை. உன்னை கோழிக்கறி குருமா பண்ணிடுவாண்டா என்று மிதுன் வெற்றியை தன்னிலைக்கு கொண்டு வரும் பொருட்டு காதில் ஓத..
டேய் அய்யோ எல்லாம் என் நேரம் எனக்கு பின்னாடி பிறந்த சில் வண்டெல்லாம் லவ் பண்ணி கரச்சல் கொடுக்கிதுங்க! முடியல யப்பா சாமி! எதுக்கும் இன்னொரு முறை காலேஜ் பக்கம் போய் பார்ப்போம். அப்போ தான் எதாவது தேரும் என நினைத்தான் மிதுன்.
அப்பொழுதும் வெற்றியின் பார்வை இனியாவின் மீது இருந்தது. இனியா சிரித்து குலுங்கி சத்ய தேவ் கிட்ட விளையாடி பேசிக் கொண்டிருக்க, வெற்றிக்கு பற்றி கொண்டு வந்தது. ஏன் அண்ணா! என்னை அவளுக்கு பிடிக்காதா என்று விரக்தியுடன் கேட்டான் வெற்றி.
மிதுன் வெற்றியை பார்த்தபடி எல்லாரும் இருக்கும்போது எதையாவது பண்ணி தொலைக்காத யாருமே இல்லாத டைம்ல அவகிட்ட கொஞ்சம் பேசு உன்னோட காதல புரியவை கொஞ்சம் ஏதாவது ரொமான்டிக்கா ட்ரை பண்ணு டா என்று மிதுன் சலித்துக் கொண்டான்.
யாருமே இல்லாத டைமா எப்போ அப்படி ஒரு சிச்சுவேஷன் அமையறது ஏன் அண்ணா? நீங்க வேற? அவ இப்போவே என்னை திரும்பிய பாக்க மாட்டேங்குறா? யாருமே இல்லாத டைம் எங்க அமையறது என்று விரக்தியுடன் பேசினான் வெற்றி.
அவ காலேஜ் போகும்போது என்று மிதுன் கேட்க
“தாரா த்தை மொத்த காவலையும் அவளுக்கு பின்னாடி அனுப்பும்!”
“வீட்ல போய் ட்ரை பண்ணு”
“இதயன் கூடவே இருப்பான்” என்று வெற்றி பதில் சொல்ல..
அப்போ அம்மாச்சி வீட்ல??
“எங்க அம்மா இருக்குமே! தாத்தா இருப்பாரு! அம்மாச்சி இருப்பாங்க! என்று வெற்றி பதில் சொல்ல”
“டேய் மடையா எல்லாரும் கூட தான் இருப்பாங்க. நீதான் அவ கூட தனியா இருக்கிற மாதிரி கிரியேட் பண்ணனும் மாங்கா” என்று திட்டினான் மிதுன்.
வெற்றி பெருமூச்சுடன் அதையும் மீறி நான் ட்ரை பண்ணேன் ப்ரோ என்று கூறினான்.
எப்போ என்று அதிர்ச்சியுடன் மித்துன் பார்க்க,
“ஒரு தடவை நித்தின் அண்ணா கல்யாணம் டைம்ல ரிதம் வீட்ல ட்ரை பண்ணேன். அங்கிருந்து பிரச்னை ஆகி நம்ம அம்மாச்சி வீட்டுக்கு வந்தோம் தானே அப்போ”
என்ன ஆச்சு? என்ற ஆவலாக மிதுன் கேட்க..
“நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கல ப்ரோ! நான் வீட்டுக்குள்ள வந்த அடுத்த செகண்ட் அம்மாச்சி வீட்ல உதயன் மாமா I mean அவங்க ஸ்டே பண்ற ரூம்ல போய் கதவை பூட்டிக்கிட்டா! திரும்ப வெளிய வரவே இல்ல தெரியுமா? உதயன் மாமாவும் அந்த தாரா அத்தையும் வந்ததுக்கு அப்புறம் தான் கதவை திறந்தா! என்ன பாத்தாலே எங்கேயோ போய் ஒளிஞ்சுக்கிறா முகத்தை காட்டவே மாட்டுக்கிறா? அதுக்கு மேல நான் என்ன பண்ணட்டும்? ” என்று கேட்டான் வெற்றி.
சரி லவ் பண்ற விஷயத்தை சொல்லிட்டியா சொன்னேனே வேற ஏதாவது சிம்பாலிக்கா ட்ரை பண்ணு! இதோ டிவில பாட்டு போட்டு விடுறேன்! ரொமான்டிக் பாட்டு ஒன்னு போட்டு அவளை பாவமா பாரு. அப்பவாச்சும் அவ உன்ன பாக்கலாம் நானும் பாக்கலான்னு? என மித்துன் ஐடியா கொடுக்க,
டிவியை ஆன் செய்தான் வெற்றி. நிஜமா பாப்பாலா ப்ரோ.. வெற்றி கவலைப்படாதடா! நிவாஸ் இருந்தானா இன்னும் சூப்பரா ஐடியா கொடுப்பான். வேலை வந்துருச்சு இப்பதான் தேஜுமா போன் பண்ணாங்க கிளம்பி போயிட்டான்.
சரி வாங்க சாப்பிடலாம் யார் யாரு சாப்பிட்டு முடிச்சீங்க என்று கேட்டுக் கண்டே மகி அழைக்க
மாமி பயங்கர பசியா இருக்கு? எனக்கு நான்வெஜ் வேணும் என்று சொல்ல, அகம் புடிச்ச கழுதை என விவேகா திட்ட வர…
விவேகா சும்மா திட்டிட்டு இருக்காத மா! அவ கேட்கிறதுல என்ன தப்பு? சரியா இரண்டாவது நாளைக்கு தலைக்கு என்ன வைத்து கிடா வெட்டனும்ல்ல கரெக்டு தான். ரிதம் பொண்ணு கரெக்ட்டா தான் கேட்டிருக்கா என்று சூர்யா சொல்ல..
அப்படியா அத ஃபங்ஷன் பண்ணுமா? என்று இன்பா கேட்டார்.
பண்ணனும் தான்! ஆனால் நாங்க?? அது நீ எப்ப பண்ற? என்று கேட்க..
அத பத்தி அப்பா கிட்ட பேசணும் என்று இன்பா கூறினார்.
நான் அம்மா கிட்ட பேசிட்டேன். ஊருக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க. அதனால ரிதம் சத்திய தேவ் ரெண்டு பேரையும், நான் ஈரோட்டுக்கு கூட்டிட்டு போக போறேன். அங்க குலதெய்வம் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு கெடா வெட்டிட்டு, பங்க்ஷன் பண்ணிட்டு, அதுக்கு அப்புறம் தான் இங்க வரணும் என்று கூறினார்.
எனக்கு டியூட்டி இருக்கு மாமா என்று ரிதம் சினுங்க..
ஒன்னும் பிரச்சனை இல்ல ரெண்டே நாள் தான் போயிட்டு வந்துரலாம்! சரியா செல்லம்?! கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு பிளைட்ல வந்துடலாம். ரிட்டன் ஃப்ளைட்ல போயிடலாம். உனக்கு பிடிக்கும் என்று சூர்யா சொல்ல..
விவேகா கோபமாக இன்னும் என்ன வேலை? நீ எல்லாம் வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல,
அதை நீ சொல்லாத என்று இன்பா கூறினார். அந்த நேரம் பார்த்து வெற்றி பாடலை தட்டி விட்டான் டேய் பழைய பாட்டு போடாத புது பாட்டு போடு ஆசை கூட எண்ணமே என் உன்னால அந்த மாதிரி போடுடா பார்த்ததும் அவ உரஞ்சி நிக்கணும் என்று மிதுன் சொல்லிக் கொண்டிருக்க இதோ மாத்திரம்தான் என்று எது எதோ டைப் செய்ய அது எஜமான் பாடலுக்கு போய் சென்றது. என்ன இந்த ரிமோட்்் b என்ன இந்த ரிமோட்டுக்கு ஆச்சே சே, நான் ஸ்ட்ரெயிட்டா போன்ல இருந்து கணக்கு பண்ணி இருப்பேன் என்று ஆளாளுக்கு ஒன்று செய்து விட அதற்குள் பாடல் பாட ஆரம்பித்ததது.
“எம்மனசு மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு..” டேய் மாத்து டா இந்த பாட்டு நல்லால்ல.. என மிதுன் சொல்ல, ப்ரோ கம்முன்னு இரு! ரொமான்டிக் லைன் பாரு! இதை
விட வேற என்ன வேணும். பாட்டை பார்க்கிறா ப்ரோ அய்யோ அய்யயோ! அந்த கண்ணை பாரு ப்ரோ என வெற்றி காதலில் கூத்தாடினான்.
“கொத்து மஞ்சள் தான் அரைச்சி
நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்த
நெத்தியில சூடச் சொல்லு…” மிதுன் ஒரு பெரு மூச்சை விட்ட படி அனைவரையும் பார்த்து விட்டு மாத்தி விட செல்ல..
கொட்டு கை காரா கம்முன்னு இருக்க மாட்டியா? இவனை எங்கிருந்து டி புடிச்ச? ஏன் இந்த பாட்டுக்கு என்ன குறை ரிமோட் வை என சூர்யா அதட்ட..
“சொன்னத நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்க போய் கூறிடு…” டேய் மாறா இந்த பாட்டுல என்ன டா இருக்கு? என மிதுன் சூர்யாவை முறைத்துக் கொண்டே அங்கிருக்கும் அனைவரையும் பார்க்க…
“அஞ்சல மாலை போடுறேன்
அன்னத்தின் காதுல ஓதிடு..” ல்தகா சைஆ இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் அந்த அருமை தெரியும் உனக்கு எங்கே ப்ரோ தெரிய போகுது. என வெற்றியின் பார்வை பாடலிலும் இனியாவின் மீதும் இருக்க,
“ மாமன் நெனப்புத்தான்
மாசக்கணக்கிலே
பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச பெண்ணையே” என மிதுன் அனைவரையும் பார்க்க இதழினி, பவன்யா, இனியா, இதயன் ,நிலா சொல்லவே வேண்டாம். சத்தியதேவ் அதற்கு மேல்… விவேகா நகரவில்லை.. மகி பசை போல் ஒட்டிக்கொண்டு நின்றார். சூர்யா ஒரு பார்வை மகியையும் இன்னொரு பார்வை டிவியையும், இன்பா போனை நோண்டிக்கொண்டிருந்தார். ஆனால் கவனம் முழுக்க பாட்டின் மீதுதான்.
மொத்தத்துல எல்லாம் இதே கேசுங்க தானா?. மனுஷன் இருப்பானா இந்த கூட்டத்துக்குள்ள! என்று நினைத்துக் கொண்டே அருகில் இருக்கும் ரிதமை பார்த்தான்.
என்னடி நீ அதை பார்க்கல?
இதெல்லாம் யார் பார்ப்பா? கத்தாழை கண்ணால போடு அதுதான் நம்ம வைப்!!
நான் போடல நீ போடு இல்லன்னா எங்க அப்பா திட்டுவாரு என்று போனை தள்ளினான்.
அவ்வளவுதானா இப்ப போடுறன் பாரு என்று பாட்டை மாற்றினாள். வட்டமாய் காயும் வெண்ணிலா கொள்ளுதே கொல்லுதே என கடைசியாக அந்த வரிகள் முடியும் நேரம் பார்த்து
இனியா மெதுவாக வெற்றியின் பக்கம் திரும்ப வர,
ப்ரோ அவ என்ன பாக்குறான்னு நினைக்கிறேன். பார்ரி! பார்ரி! அய்யோ பாரு டி! அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டே பார்க்க..
அதற்குள் பாடல் மாறியதில் இனியாவின் பார்வை வேறு எங்கோ சென்று விட்டது.
டேய் நீ தான என்று சூர்யா திட்ட வர.. அனைவரும் ஏககருப்பில் இருந்தார்கள்.
ஐயோ நான் இல்லப்பா உங்களோட மருமக கண்ணு குட்டி தான். அதான் புல்லு திங்கிற கன்னுக்குட்டி என்று மிதுன் கிண்டல் அடிக்க..
நான் தான் மாமா ரொம்ப போர் அடிக்குது அந்த பாட்டு இத பாருங்க மாமா வைபா இருக்கும். என்று கூறினாள்.
இதுதான் அண்ணா பாப்பா!! அது தான் அவங்க அப்பா புத்தி!! குடிக்கிறது, கூத்தடிக்கிறது என்று சொல்லவர..
ஹே வாய மூடுடி.. அப்புறம் கண் சிமட்ட விவேகா வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
சரி சரி வாங்க சாப்பிடலாம் சத்யதேவ் ரிதம் நீங்க ரெண்டு பேர்தான் பெண்டிங் எல்லாரும் சாப்பிட்டாச்சு என்று அழைக்க..
இதோ வரேன் என்று பாடலைப் போட்டுவிட்டு பறந்து விட்டாள் பட்சி.
இருவரும் அமைதியாக சாப்பிட சத்யதேவ் அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை. என்னை மிரட்டுற மாதிரி பக்கத்துல வந்தானே! இப்போ அமைதியா இருக்கான். ஓகே நல்ல வேலை. இவனோட தொல்ல இனி இல்ல என்று அவள் நினைத்துக் கொண்டே உணவை முடித்தார்கள்..
சரி ரெண்டு பேரும் கோயிலுக்கு வந்துடுங்க! போயிட்டு தனி வீட்ல வைக்கணும் என்று கூறினார் மகி..அனைவரும் புரியாமல் பார்க்க.. ஆமா ரெண்டு பேரும் தனியா தான இருக்கணும். அதுதான் சரி என்ன விவேகா? நான் சொல்றது?.என்று மகியின் பார்வை விவேகாவின் பக்கம் செல்ல..
மாமி நீங்களும் வர போறீங்களா? என ரிதம் கேட்க, மகி சிரித்த படி, நீயும் சக்தியும் மட்டும் தான் தங்கம். முன்ன எதிர் எதிர் வீட்ல இருந்தீங்க! இப்போ ஒரே வீட்டில் இருக்க போறீங்க? அவ்ளோ தான் தங்கம்.
சத்ய தேவ் கண்களில் ஒளி மின்னியது. ரிதம் கஷ்ட பட்டு எட்சிளை விழுங்கிய படி அவனை பார்த்தாள். அதற்குள் மகி எந்த வீட்டுக்கு போக போறீங்க? மை விழி வீட்ல இருக்க போறியா? இல்ல நம்ம வீடா? என்று கேட்டார்.
இப்போ தான் மகி எனக்கு உங்க கூட இருக்கணும் மா! என்றான் சத்ய தேவ். ஆமா மாமி! உங்க கையாள சாப்பிடணும். என ரிதம் சொல்ல.. மகி சிரித்த அதுக்கென்ன வந்துட்டா போச்சு. நீ சொல்லு? எங்கே இருக்க போறீங்க? நம்ம வீடா? இல்ல மை விழி வீடா? என மகி மீண்டும் கேட்க..
நம்ம வீடு எனக்கு வேணும் என்று வேகமாக மித்துன் சொல்லிவிட்டான்.
அனைவர் பார்வையும் அவன் மீது பட, என்ன?
என சூர்யாவின் பார்வை… அதில் கடுப்பான
மிதுன், இப்போ எதுக்கு அப்படி பாக்குறீங்க? நம்ம வீடு எனக்கு தான் வேணும்! எனக்கும் அங்க நிறைய மெமரிஸ் இருக்கு. என்று மிதுன் கூறினான்.
உனக்கு என்ன மெமரிஸ் இருக்கு? கொஞ்சம் சொல்லு நானும் தெரிஞ்சிக்கிறேன் என்று சத்திய தேவ் கூறினான்.
அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது என்று மிதுன் சண்டையிட்டான். மகி இருவரையும் பார்த்து பேசாம நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டில் இருங்க. நானும் அப்பாவும் அந்த வீட்டுக்கு போயிடுறோம். என கோபத்தில் கூறினார் மகி.
அம்மா நானும் வரேன் என்று இதழ் சொல்ல, ஹே மகி! என்று மிதுன் பற்களை கடித்த படி அழைத்தான்.
அவனுக்கு தான் முதல்ல கல்யாணம் ஆகி இருக்கு. அவன் நம்ம வீட்டுக்கு போகணும். என சூர்யா கூற.. அந்த சின்ன அப்பார்ட்மெண்ட்ல தாங்கனும்னு அவசியம் இல்ல. பெரிய வீடு இருக்கு என்று சொன்னார். சத்ய தேவ் அவரை பார்க்க, இன்பா பொறுமையாக இந்த பக்கம் எலக்ட்ரானிக் சிட்டில ஒரு தனி வீடு தனி வில்லா இருக்கு. அங்க போறீங்களா? என்று கேட்க..
அதற்கு வாய்ப்பே இல்லை என்று சூர்யா கூறினார்.. ஏன்டா? நான் சொல்லக்கூடாதா? அவ என் பொண்ணு டிம்பிள்! சக்தி என்னோட மருமகன் என்று இன்பா ஆளுமையான அதே போல கோபமாக கூறினார்.
எப்படி இருந்தாலும் எங்க வீட்ல தான் அவங்க இருக்கணும். உங்க வீட்ல நான் விடமாட்டேன். விவேகா நீ சொல்லு! நான் என்ன பண்ணட்டும் என்று சூர்யா கேட்க..
அது நீங்க சொல்றது தான் சரி அண்ணா என்று விவேகா கூறினார். இன்பா விவேகாவை முறைக்க.. சத்திய தேவ் புன்னகையுடன் அம்மா உங்களை எப்படி நான் விட்டுட்டு இருக்கிறது? என்று கேட்க.. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தனியா இருக்கணும்! அதுதான் எல்லாத்துக்கும் நல்லது ரிதம் உன்னை பாத்துக்கவா என்று மகி சொன்னதும், அங்கிருக்கும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
விவேகா நன்றாக சிரித்து விட்டார். ஏன் எல்லாரும் பார்த்து சிரிக்கிறீங்க டாடி! டாடி! என ரிதமின் உதடுகள் பிதுக்கிக் கொண்டது.
இன்பா அனைவரையும் பார்த்து எதுக்கு எல்லாரும் சிரிக்கிறீங்க? என் பொண்ண தான் சத்திய தேவ் பார்த்துக்கணும். டேய் என்னடா பார்த்துப்ப தானே என்று கேட்க, ம்ம்ம்ம் பாத்துக்குறேன் மாமா! நல்லா பாத்துக்கிறேன்ன் என்று சத்திய தேவ் கூறினான்.
அப்புறம் என்ன எல்லாமே ஓகே என்று இன்பா கூற..
சரி இப்போ நான் நம்ம வீட்டுக்கு போக போறேன். என்று சத்திய தேவ் கூறி விட்டு, அம்மா நீங்களும் என்று சொல்ல..
என்னடா கண்ணா நாங்க வராம இருப்போமா? கண்டிப்பா வருவோம். நான் நானும் அப்பாவும் நடுவுல வந்து பார்க்கிறோம். அத்தை மாமா கூட வருவாங்க. நீ இப்போ அங்க போய் இருக்குறது தான் நல்லது என்று மகி கூறினார்.
ரிதம் அவனது முகத்தை பார்த்தாள். இவனை பார்த்தால் வறுத்த படுற மாதிரி தெரியலையே! பேசாம நம்ம இங்கேயே இருந்திடுவோமா? என ஆயிரம் யோசனைகள் மண்டையில் ஓடிக் கொண்டிருக்க, சத்ய தேவ் கைகள் அவளின் இடையின இடையில் அவனது வன் விரல் வல்லினமாக வருடியது.
ஹக் என துள்ளியவள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சில நேரம் பிடித்தது.
சரி டேய் வேலை இல்லாதவனே என்று சூர்யா அழைக்க, வெடுக்கென திரும்பி பார்த்தான் மிதுன். அப்போ உனக்கே தெரியுது நீ தான் வேலை இல்லாதவன்னு என்று சூர்யா மீண்டும் வாற..
அனைவரும் சிரித்தார்கள். என்ன?
என்ன வா? என சூர்யா அதட்ட..
சாரி சொல்லுங்க என்று மித்துன் அப்படியே பின் வாங்கினான்.
வீட்டை போய் சுத்தம் பண்ணிடு என சூர்யா கூற..ஹெல்ப்புக்கு நான் ஆளுங்களை வர சொல்லவா? என்று சத்திய தேவ் கேட்டான்.
மிதுன் அவனை முறைத்தபடி நீ ஒன்னும் ஹெல்ப் பண்றதுக்கு வர வைக்க வேணாம்.
நான் பாத்துக்குறேன். இந்த வேலைய என்னால செய்ய முடியும் என்று இதயன் வெற்றி அவனுடன் சேர்ந்து கொள்ள.. அங்கு மிதுன் பெரிய வேலையை செய்து விட்டான். அப்படி என்ன வேலை செய்தான்? கடைசியாக தெரிய போகிறது.
ரிதம் அவனை பார்ப்பதும் முறைப்பதுமாக இருக்க, சத்ய தேவ் நேராக நிலாவின் அருகில் அமர்ந்து கொண்டான். நிலா மெல்லிய குரலுடன் பேச சத்ய தேவ் அவளுக்கு தங்குதது போல பேசினான்.
இதழ் இன்னொரு பக்கம் சூர்யாவின் அருகில் அமர்ந்து கொண்டு கதை பேசினாள். ஆக்னஸ், வீனா, பவன்யா அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
ரிதம் அவனை முறைத்த படி இருக்க, அப்புறம் அடுத்து இன்னும் ஒரு வருடம் இருக்கா? என கேட்க, யெஸ் அண்ணா அடுத்து பிராக்டிஸ் தான் என கண்ணக்குளி தெரிய ததும்பியது நிலாவின் கண்ணம்.
சத்ய தேவ் அவளின் கண்ணகுளியில் விரல் வைத்தான். மச்சி! பாரேன் அண்ணிக்கும் குழி இருக்கு. என இனியா கூறினாள். அது நம்ம இரத்தம் இல்லையே நல்லால்ல இது பாரு டால் அடிக்குது. என் பாப்பாவுக்கு என்றான் சத்ய தேவ்.
நாயே! நாயே! மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ரிதம் அவனை முறைத்தாள். அதற்குள் மாமா என அழைத்த படி, உள்ளே வந்தான் ருத்ரன்.
தீரா என அழைத்தப்படி விவேகா அவனை சாப்பிட அழைத்துச் சென்றார். மாமா உங்க கிட்ட என ருத்ரன் பேச வர, அதற்குள் அருகில் இருக்கும் நிலாவை பார்த்ததும் எள்ளும் கொல்லும் வெடித்தது. இவள் எதுக்கு இங்கே வரா! இவளுக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம்? வெட்கமே இல்லாம வந்திடுறது. என ருத்ரனுக்கு பத்திக் கொண்டு வந்தது.
ருத்ரனை பார்த்ததும் சட்டென நிலா எழுந்து கொள்ள, நிலா தங்கம் இங்கே வாங்க! நீயும் இன்னும் சாப்பிடவே இல்லையே வா சாப்பிடலாம். உனக்கு பிடிச்ச மாதிரி தான் செஞ்சிருக்கென். சக்தி காலையிலேயே சொல்லிட்டான். என அழைத்தார் மகி.
நிலா..?
ருத்ரன்..?
இங்கே மிதுன் வீட்டை முழுவதும் சுத்தம் செய்து விட்டு படுக்கை அறையை பார்த்து தந்திர புன்னகை சிந்தினான்.
அண்ணா என்ன பண்ணிருக்கு? என வெற்றி கேட்க, சும்மா ஃபர்ஸ்ட் நைட் டெக்கரேசன் தான் என் அண்ணனுக்கு எதுவும் பண்ணனும் தானே! என மிதுன் தந்திரமாக சிரித்தான்.
ரிதம்..?
சத்ய தேவ்..?
தொடரும்..
EPISODE 157
மா எல்லாமே ரெடி வீட்டை க்லீன் பண்ணிட்டேன். என விரைப்புடன் கூறினான் மிதுன். என்ன மிதுன் என் தங்க குட்டி குரலே சரி இல்ல? என மகி கேட்க.. என் கிட்ட பேசாத டி! போடி! என்றான் வெடுக்கென.
என்ன மித்து அழகு பையா? என மகி அவனை மீண்டும் கொஞ்ச, அவரு என்னை ரொம்ப கஷ்ட படுத்துறாரு! இந்த ரெண்டு நாளுக்குள் நீ ரொம்பவே மாறிட்ட.. நான் வீட்டை விட்டு வெளியே போலாம்னு இருக்கேன்.
மகியின் முகம் மாறிட அருகில் இருக்கும் இனியா மற்றும் நிலா இருவரும் என்ன என்பதை போல பார்த்தனர். ஹே பதில் பேசு டி!!
அப்படியா சரி போ!
என்ன? போகவா?
நாளைக்கு நான் மட்டன், சிக்கன், பிரான், ஆக்டோபஸ், கணவாய், உனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச மீன் முட்டை பொரியல் எல்லாமே செய்ய போறேன். நீ போயிட்டு வா டாடி அப்புறம் ரித்து ரெண்டு பேரும் சாப்பிடுவாங்க. இனி குட்டி உனக்கு வேணுமா? ஆ வேணும் த நான் நாளைக்கு டிபன் ல பேக் பண்ணிட்டு போயிடுறேன் என எதிரில் இருந்து சத்தம் கேட்டது.
நிலா வாயை பொத்திக் கொண்டு சிரிக்க, இனியாவும் அதே போல சிரித்தாள். மகி சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் பதிலுக்கு காத்திருக்க, நான் போக தான் போறேன்? என்றான் விடா பிடியாக.
நண்டு கூட செய்யுறேன் என மகி மீண்டும் சொல்ல, சரி நாளைக்கு இருந்திட்டு அடுத்த நாள் கிளம்புறேன். வீட்டை விட்டு நான் போறது உறுதி தான் என மிதுன் கூற.. அட போடா வெட்கம் கெட்டவனே என மகி சிரிக்க ஆரம்பித்தார்.
மிதுன் உடனே தன் மனதை மாற்றிக் கொண்டு நாளைக்கு ஒழுங்கா கமிட் பண்ண எல்லாத்தையும் செய்யுற என் கண்ணு காதை எல்லாம் ஆக்டோபஸ் பிடிக்குது. சாப்பிடணும் என்றான்.
செஞ்சு தரேன் வீட்டுக்கு வா என மகி அழைக்க, சரி என போனை வைத்தவன் எதிரில் இருக்கும் அறையை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். இன்னிக்கி நைட்டு இருக்கு டா உனக்கு? என சத்ய தேவ் பற்றி நினைத்த படி வீட்டுக்கு கிளம்பினார்கள். அடுத்த ரெண்டு மணி நேரத்தில் மொத்த படையும் திரண்டு சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரையும் சூர்யா மற்றும் மகி இருவரும் முதன் முதலில் வாங்கி குடி ஏறிய சாந்தி நகர் அப்பார்ட்மெண்ட் சென்று அவர்களை தனியாக வைத்தார்கள்.
அனைவரும் வருவதால் அந்த அறையை பூட்டி இருந்தான் மிதுன் தேவ். ருத்ரன் வழக்கம் போல சத்ய தேவ் கிட்ட தொண தொண வென பேசிக்கொண்டே வந்தான். மிதுன் ரிதம் இருவரும் ஒன்றாக பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள். நிலா, இனியா, இதழ் மூவரும் ஒன்றாக இருக்க, ஆக்னஸ் வீணா பவனியா மூவரும் ஜோடி சேர்ந்து கொண்டார்கள். வெற்றி, இதயன் என மொத்தமாக வந்து இறங்கினார்கள்.
மஹியின் மனதில் சந்தோஷம் வீட்டுக்குள் வந்தவள் இருவரிடமும், இங்கே இருக்கிற எல்லாமே புதுசு, ரிதமுக்கு ட்ரெஸ் எல்லாம் புதுசா வாங்கி கப்போட் முழுக்க இருக்க, சக்தி கண்ணாவுக்கு அதே போல தான், கிச்சன் அண்ட் ஃப்ரிட்ஜ் எல்லாமே சமைக்க தேவையான அத்தனையும் இருக்கு. பெரிய வீட்டை விட குட்டி வீட்டில் இருந்தால் தான் இணக்கம் தட் மீன்ஸ் சண்டையில்லாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆக முடியும் நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கிறது தான் சரி. நைட்டு சாப்பாடு எல்லாமே சூடு பண்ணி ஹாட் பாக்ஸில் போட்டு வச்சிருக்கேன். சாப்பிடுங்க ரெண்டு பேரும் என சொல்லி இருவரையும் கட்டி அணைத்து மகி விடை பெற சூர்யா சிரிப்புடன் கிளம்பினார்.
இன்பா சக்தியின் அருகில் வந்து பார்த்துக்கோ டா அவள் என ஆரம்பிக்க, சக்தி சல்யூட் அடித்தான். தன் மகளை வாஞ்சையுடன் பார்த்த இன்பா பேபி நான் ஹேப்பி டிம்பிள் சத்ய தேவ் உன்னை நல்லா பார்த்துப்பான். நான் இன்னிக்கி நிம்மதியா தூங்க போறேன் என இன்பா சொல்ல விவேகா ரிதமுக்கு பொதுவான அறிவுரைகள் கூற.. பிளீஸ் டென்ஷன் பண்ணாத மா! என ரிதம் சலித்துக் கொண்டாள்.
ருத்ரன் தனது காதலை பற்றி வீட்டில் எப்பொழுது சொல்லலாம் என சக்தி கிட்ட பேச வர, மகி அனைத்து படைகளையும் வெளியே அழைத்தார். அனைவரும் வெளியே வர மிதுன் ரிதம் அருகில் சோபாவில அமர்ந்து கொண்டான். டேய் எருமை மாடு உங்க அம்மா கூப்பிடுறா வெளியே வா! என அதட்ட.. மிதுன் சூர்யாவை முறைத்த படி வெளியே வந்தான்.
சத்ய தேவ்க்கு போன் வர அவன் போனை எடுத்துக் கொண்டு பால் கணி பக்கம் சென்று விட்டான். ரிதம் வெளியே செல்ல போக கதவு சாத்தபட்டது மகி தான். ருத்ரன் மற்றும் மிதுன் இருவரிடமும் இனி அடிக்கடி இங்கே வர கூடாது என பத்தும் படியாக சொல்லி வீட்டுக்கு அழைத்து சென்றார்கள் பெரியவர்கள்.
கண்டார்மா? புரோபர் எவிடன்ஸ் இருக்கா? அப்போ டாக்குமென்றி ரெடி பண்ணிடலாமா? என சத்ய தேவ் பேசிக்கொண்டே அப்படியே பின்னால் திரும்பினான். அவள் தான் சத்ய தேவ் பேசுவதை ஒட்டுக் கேட்டபடி பின்னால் நின்று கொண்டிருக்க, இப்பொழுது கையும் களவுமாக அவனிடம் மாட்டிக் கொண்டதால் கண்களை மூடி கள்ளதனமாக நாக்கை கடித்தவள். மெதுவாக பின் வாங்கினாள். ஒவ்வொரு அடிகளாக சத்தியதேவ் அவளை நோக்கி வைக்க, ரிதம் வேகமாக இரண்டு எட்டுகள் அவனை பார்த்தபடியே பின்னால் வைத்தவள். திரும்பி அவ்விடத்தை விட்டு ஓட முயற்சி செய்ய வளைத்து பிடித்தான்.
ஹே க்ன்கும்.. என ரிதம் அவனது கையில் இருந்து விடுபட போராட ஓகே நான் இப்போவே மெயில் செக் பண்றேன். நாளைக்கே அங்கே போய் பர்தர் டிடையில்ஸ் கலெக்ட் பண்ணிடுங்க. என்றவன். போனை பாக்கெட்டில் போட்ட படி, என்ன டி? என்னை பார்த்ததும் அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி பேக் அடிக்கிற? என்ன விசயம்? எதுக்கு கிட்ட வந்த? என கேட்டான் சத்ய தேவ்.
அதை இப்படி தான் கேட்பியா கைய எடு! என அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்தாள். சத்ய தேவ் கைகளை எடுத்தபடி அவளுக்கு முன்னால் உள்ளே நுழைந்தான். அவள் படுக்கை அறை பக்கம் சென்றவள். இந்த ரூம் கீ எங்கே இருக்கு? ஓபன் பண்ணவே முடியல?
அந்த பெட் ரூமில் படுத்துப்போமா? நான் எப்போவும் இந்த சைட் பெட் ரூமில் தான் தூங்குவேன். ரிதம் அவனை பார்த்து சிரித்தவள். ம்ம் அங்கேயே தூங்கிக்க உன்னை யாரு வேணாம்னு சொன்னது? என அவளின் கண்களை அலைய விட்டாள்.
சத்ய தேவ் அவளிடம் நீயும் நானும் ஒண்ணா தானே தூங்கணும்?
அப்டின்னு யாரு சொன்னது? இதுக்கு முன்னாடி யார் கூட தூங்கின? இப்போ என் கூட வந்து தூங்கனும்ன்னு சொல்ற? என ரிதம் டிவியின் முன்னால் இருக்கும் சாவியை எடுத்தபடி கதவை திறந்தாள்.
ஒரு கணவன் மனைவியா நீயும் நானும் என சத்ய தேவ் ஆரம்பிக்க, டேய் நிறுத்துஊஊ என ரிதம் பத்ர காளியாக மாறினாள்.
என்ன டி சவுண்ட் கொடுக்கிற? அப்புறம் பின்னாடி அடி பின்னிடுவென்.
அடிடா அடிச்சு பாரேன். உனக்கும் எனக்கும் இஷ்டபட்டு கல்யாணம் நடக்கல! நீயா வந்து என்னை கேட்டு கல்யாணம் பண்ணல! உங்க அம்மா சொன்ன வார்த்தைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!
அது என சத்ய தேவ் பேச வர, நிறுத்து நான் இன்னும் பேசி முடிக்கல, என் அப்பாவுக்காக தான் நானும் உன்னை கல்யானம் பண்ணேன். உன்னை இஷ்டபட்டு பண்ணல புரியுதா? அப்படியே எல்லாமே இஷ்டபட்டு நடந்திருந்தாலும் உடனே உன் கூட ஒட்டி உறவாட என்னால முடியாது. It will take some time என கூச்சலுடன் கூறினாள் ரிதம்.
சத்ய தேவ் எதுவும் பேசாமல் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே உன்னோட வீட்டில் எதுவும் பிரச்னை ஆக கூடாதுன்னு தான் நீ என்னை தொட்டுக்கும் போது கம்முன்னு இருந்தேன். உன் கூட மேட்டர் பண்ண கூட எனக்கு விருப்பம் இல்ல. நீ தான் எப்படியும் டைவர்ஸ் தர மாட்டேன்னு சொல்லிட்ட. ஓகே no problem எனக்கும் அது தான் வேணும் உன்னையும் பழி வாங்கின மாதிரி இருக்கும். என்னை வேணாம்னு சொன்ன தானே! அதுக்கு நீ அனுபவிக்கனும் டா! ஆயிரம் காரணம் ஆயிரம் explain சொன்னாலும் நான் தான் அவமானத்தை தாண்டி உன்னை தேடி வந்தேன். ஜஸ்ட் எல்லார் முன்னாடியும் உன்னோட மனசுல இருக்கிறத எக்ஸ்பிரஸ் பண்ண என்ன கேடு!
சத்ய தேவ் மீண்டும் பேச வர, ஹே உடனே நீ இப்போ என்ன சொல்ல போறேன்னு தெரியும். நீ என்னை லவ் பண்ணல அது தானே! சரி டா நீ லவ் பண்ண வேணாம். அதுக்குன்னு என்னோட கொள்கைய விட்டு உன் கூட வாழ மாட்டேன். ஐ மின் இந்த மேட்டர் பண்ற எண்ணத்தோட கிட்ட வந்த? அப்புறம் புலி வாலை கட் பண்ணிடுவேன் நீ தூங்கும் போது.
அவன் அதிர்ச்சியாக பார்க்க, பண்ண மாட்டேன்னு நினைக்கிறாயா கண்டிப்பா பண்ணுவேன். நம்ம ரெண்டு பேரும் ரூம் மெட்ஸ் என ரிதம் சொல்ல வர, அப்போ நான் வெளியே போய் கேர்ள் ஃப்ரெண்ட் காஜ சாரி கஜ கஜா உனக்கு ஓகேவா? என சத்ய தேவ் கேக்க, ரிதம் ஆவேசமாக அருகில் வந்து அவன் கன்னத்தில் அரைய பாய்ந்தாள்.
சத்ய தேவ் அவளை வளைத்து பிடித்து மிசஸ் சத்ய தேவ் நான் 29 இயர்ரா என்னோட இளமைக்கு உணவு போடாம கட்டு படுத்தி விரதம் இருந்திருக்கேன் என் கையில் மாமா பொண்ணு அதுவும் நான் தொட்டு தாலி கட்டின பொண்ணு இருக்கும் போது எப்படி அப்படியே சும்மா இருக்க சொல்ற? முடியாதே! அந்த கடைசி அனுபவம் நீ கொடுக்கலன்னா கூட அப்பப்போ முத்தம் வேணும் இறுக்கி கட்டிக்க தோணும். என்னை இது வரைக்கும் ஒருத்தி கூட கட்டிக்கிட்டது இல்ல. முத்தம் ம்ம் ஹான் என்னோட லவ்வர் க்கே ஒரு தடவை தான் முத்தம் கொடுத்திருக்கேன். என கூறினான்.
யாருக்கு? விற்றா பண்ணி!
என்னோட லவ்வர் யாருன்னு உனக்கு தெரியும் என்ன பண்றது அவளுக்கு கல்யாணம் ஆகி போச்சு அன்னிக்கு ஹைடன் சிக்ல ம்ம் ம்ம் அது முத்தம்! அந்த வாசனை இருக்கே! என அவன் கண்கள் மயக்கத்தில் மின்ன ரிதமுக்கு உள்ளுக்குள் தடக்கு தடக்கு ரயில் ஓட தொடங்கியது.
என்னிடம் எல்லை மீரியதை பற்றி என்னிடமே பொறாமை வரும் அளவுக்கு சொல்கிறானே! என ரிதமின் மனம் கூச்சல் போட்டது. அவள் வேகமாக அவனிடம் இருந்து விடுபட்டு அவளின் அறைக்கு செல்ல போக, இதெல்லாம் அம்மா குழந்தையை பத்தி கேட்கிற வரைக்கும் தான் உன்னை தனியா விடுவேன். இருந்துக்க.. அம்மா, விவி மாமி, இன்பா மாமா, என்னோட டாடி எல்லாரும் எஸ்பெக்ட் பண்ணிட்டா, வருவேன் நீ வேணாம்னு என் கிட்ட நடிச்சாலும் உன்னை விட மாட்டேன் திணற திணற அன்னிக்கு இருக்கு. இப்போ போ என விட்டு விட்டான்.
ரிதம் ஒரு பெரு மூச்சுடன் அறையை திறக்க மல்லிகையின் மனம் நாசியை துளைத்தது. சத்ய தேவ் அறையை பார்ப்பதற்குள் வேகமாக உள்ளுக்குள் சென்று கதவை சாத்தி விட்டாள். என்னா திது? அய்யோ இதை மட்டும் அந்த படுபாவி சத்ய தேவ் பார்த்திருந்தால் எக்கு தப்பா என் மேலே பாயிஞ்சு இருப்பானே! என சலித்து கொண்டவள் சரி இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நம்ம மட்டும் செளிப்ரெட் பண்ணுவோம் நாளைக்கு அந்த குட்டி ஃப்ரிட்ஜ் ல சரக்கு வாங்கி அடுக்கிடனும் ரிஜாயின் பண்ற வரைக்கும் கொண்டாட்டம் தான் என கட்டிலில் அமர்ந்தாள்.
டர டர டமார் என சத்தம் வர கட்டிலில் இருக்கும் இரண்டு பக்க கால்களும் ஸ்க்ரு கலண்டு ஓடி விட பொத்தென கீழே விழுந்தாள் ரிதம் அய்.. அய்யயோ முடியலயே! இடுப்பு போச்சே என கத்த ஆரம்பித்தாள்.
சத்ய தேவ் எதையும் கண்டு கொள்ளாமல் அவனது லேப் டாப்ல ஆபிஸ் வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, டேய் டேய் சத்ய தேவ்! அடேய் சக்தி! டேய் சண்டாலா செவுடா! டேய் படுபாவி வாடா என வலியில் கண்களில் நீர் கோர்க்க, உடனே போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
உள்ளே வந்தவன் அவளின் நிலையை பார்த்து…?
*
மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் இருந்தாள் சிவன்யா. இன்று காலையில் இருந்து நடந்த அனைத்து விடயங்களையும் வாய் ஓயாமல் பேசினாள் இதழ். அதையெல்லாம் கேட்க கேட்க சிவன்யாவுக்கு ஆசையாக இருந்தது. இங்கு வந்து இவனுடைய அபிமானத்தை பெற மாட்டிக் கொண்டோம் என உள்ளுக்குள் வன்மமாக இன்னும் கொஞ்சம் ஏறிக் கொண்டது.
சைத்ரேவரன் கம்பனியில் லீகல் அடவைசராக இருந்தவள். இப்பொழுது அபிமானமுள்ள personal assistant ஆகி விட்டாள். இது வரை அவனது பூ முகத்தை அவளிடம் காட்டியது இல்லை. சிவன்யாவுக்கு அவனது முகமும் தேவையும் இல்லை.
இப்பொழுது இரவு சாப்பிடும் நேரம் வந்தது. அதே மாஸ்க் தனி தனியான கேபின் போன்ற இடத்தில் அவள் டின்னரை முடிக்க விரும்ப வில்லை. அறையிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என அவள் முடிவெடுக்க ஒரு முக்கிய விசயம் பேச வேண்டும் என அழைத்தான்.
அதே கடுப்புடன் கிளம்பினாள். அவளுக்கான உணவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அமர்ந்து சாப்பிட அவன் உணவை முடித்துக் கொண்டு வந்தான்.
ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கீங்க? தாருணிகா? என கேட்டான் சைத்ரேவரன். நான் எப்போவுமே நான் இப்படி தான் பாஸ்! இது தான் என்னோட manufacturing.. என்றாள்.
உங்க அண்ணா கல்யாணத்தில் இருந்து உங்களை வேலைக்காக வர சொன்னது பிடிக்கல! அது தானே!
அப்படியெல்லாம் இல்ல பாஸ்! என்னோட ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் I mean என்னோட childhood friend அ தான் அண்ணா கல்யாணம் பண்ணான். அதனால் பெருசா மிஸ் பண்ண ஒன்னும் இல்ல! என்றவள். எப்டி மாஸ்க் போட்டுட்டே சாப்பிட்டுட்டுவீங்களா? என கேட்டாள்.
அதில் அவன் கண்கள் சிரித்தது. சும்மா kidding பண்ணேன். அது kidding இல்லன்னு நினைக்கிறேன் ஏன்னா சாப்பிடும் போது எனக்கு பேச பிடிக்காது கான்சன்டிரேட் மிஸ் ஆகும் என்றாள்.
சைத்து அதற்கும் மேல் பேச வில்லை. ஆனால் அவனது கைகளின் விரல்கள் போனில் விளையாடிக் கொண்டிருந்தது. கண்களில் சிலிர்ப்பு எக்க சக்கமாக வழிந்தது. காதலியிடம். அது பற்றி அவளுக்கு தேவையில்லாத விசயம். அவளின் ஒரே குறிக்கோள் ஆதாரம் மட்டுமே! போர்க்கை எடுத்து பீங்கான் தட்டில் அழுத்தினாள்.
அதற்கும் மேல் அங்கு அமராமல் வேகமாக கை கழுவ சென்று விட்டாள். பாய் துவாரகா லவ் யூ டி! என காதலை சிதற விட்டு இரண்டு முத்த ஸ்மைலி எமோஜியை போட்டு விட்டு அவளின் பதிலுக்கு காத்திருந்தான் வெட்க சிவப்புடன் அவளின் பதில் வர போதுமான அளவுக்கு உள்ளுக்குள் அவளை நிறைத்துக் கொண்டவன். அப்படியே திரும்பி பார்க்க, அங்கே தாருனிகா இல்லை.
சைத்து எழுந்து கொண்டவன் அங்கிருந்து வெளியே வந்தான். தாருணிகா வெளியில் இருக்கும் கிட் பார்க்கில் நடக்க ஆரம்பித்தாள். ஹெட் செட் போட்டுக் கொண்டு யாரிடமோ தீவிரமாக போன் பேசிக் கொண்டிருந்தாள் ஆனால் அது சைத்துவுக்கு தெரிய வில்லை.
அந்த பக்கம் நிதின் பிரகாஷ் தான் இருந்தான். அவளிடம் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தான். அண்ணா நீ சொல்ற மாதிரி என்னால பாதியில் விட்டு வர முடியாது. அவனோட நம்பிக்கை கூடிய சீக்கிரத்தில் கிடைக்க போகுது. இப்போவே ஓரளவுக்கு சக்தி அண்ணாவுக்கு தேவையான டாக்குமென்ஸ் எங்கே இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் தான் நான் சொல்றத கேளு! என பேசிக் கொண்டிருந்தாள்.
சிவன்யா அடுத்த முறை நான் உனக்கு சொல்ல மாட்டேன். சீக்கிரம் அங்கிருந்து வர பாரு? அவங்க குடும்பத்தை பத்தி உனக்கு தெரியாது மா! அவங்க அப்பா சாதாரண ஆள் இல்லை. அவன் சொல்றத கேளு நம்ம சட்ட ரீதியாக பார்த்துக்கலாம். சத்ய தேவ் அதை பண்ணுவான் நான் சொல்றத கேளு என கூறினான்.
என்னால அப்டி வர முடியாது. நீ அன்னிய பாரு! நான் வைக்கிறேன் என கூறினாள். அவன் பெரு மூச்சை விட்ட படி போனை வைத்தான். சிவன்யா மெதுவாக திரும்பிய படி நடந்து வர இன்னொரு பக்கம் சைத்ரேவரன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
இவன் வேற நம்மள கண்காணிக்கவே இருக்கான் மயிரு என நினைத்த படி கஷ்ட பட்டு சிரிப்பை வர வளைத்துக் கொண்டு அவனை நோக்கி நடந்தாள். அதற்குள் சைத்துவின் பின்னால் யாரோ ஒருவன் எதேட்சையாக கடந்து செல்வதை போல வர, சிவன்யாவின் கண்களில் அது பட்டு விட்டது. வேகமாக அவன் பக்கம் நடந்தவள் கண்ணில் சைகை கொடுத்த படி வேகத்துடன் வந்தவள் பாஸ் என கத்த அதற்குள் அவனது கத்தி சைத்துவின் முதுகை பதம் பார்க்க நூலிலையில் நகர்ந்து அவனை வளைத்து பிடித்தான் சைத்து. சிவன்யா வேகமாக அவனது கார்டுக்கு விவரத்தை கூறிய படி வேகமாக அவனை காப்பாற்ற அருகில் வந்தவள் இன்னொருவன் ஷார்ப் கத்தியை சைத்திவின் மேல் வீச லாவகமாக அதை தடுக்க முற்பட்டாள்.
சைத்து அவளை பார்த்து பதட்டத்துடன் அருகில் இருக்கும் அந்த மாஸ்க் மனிதனை தள்ளி விட பாஸ் என அவன் பின்னால் பாய வந்த கத்தியை கையில் பிடிக்க சிவன்யாவின் இடது கையில் இரத்தம் அதை பொருட் படுத்தாமல் வேகமாக அவனை எட்டி உதைத்தாள்.
அதற்குள் அங்கு கார்ட்ஸ் வந்து வளைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி விட்டு அவர்கள் தப்பித்து சென்று விட, சைத்து கண்களை தேய்த்தபடி ஒரு சில நொடிகளில் அவன் தடுமாறிக் கொண்டிருக்க அதற்குள் கார்ட்ஸ் அவனை சுற்றி வளைத்தார்கள்
சிவன்யா பதட்டத்துடன் பாஸ் உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று ரத்தம் சுத்தம் கைகளுடன் அவன் அருகில் வந்தாள்.
சைத்து அவளின் கைகளை பார்த்துவிட்டு தாரு நான் ஓகே நீங்க எப்படி இருக்கீங்க அச்சோ இத்தன ரத்தம் என்று அவன் பதட்டத்துடன் அவளின் கைகளை பிடித்தபடி இப்போ உடனே ஹாஸ்பிடல் போலாம் ரைட் நவ் என்று அங்கிருந்து கிளம்பினான்.
பாஸ் வேண்டாம் சின்ன காயம் தான் சரியா போயிடும் என்று அவள் தட்டிக் கழித்து விட்டு அவனது கைகளில் இருந்து விடுபட்டுக்கொள்ள, சரி போல ஆனா ஹாஸ்பிடலுக்கு போகணும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.
*
நிலா டெல்லிக்கு கிளம்பி விட்டால் அவளை நினைவுகள் அப்படியே பின்னே சென்றது. அங்கிருந்து வலுக்கட்டாயமாக தான் கிளம்பினாள்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கூட அவனது முறைப்பை சம்பாதிக்க நேரிடும். பார்வையாலேயே குத்தி கிழித்து தன்னைக் கொன்று விடுவான். அதற்காகவே நிலா அங்கிருந்து புறப்பட்டாள். எஸ் பி ஆர் அவளை ஃபிளைட்டில் அனுப்பி வைத்தார். யாரிடமும் பேச பிடிக்கவில்லை.
தான் அந்த குடும்பத்தில் பிறந்தது தான் காரணமோ? என்று கூட சில சமயங்களில் நினைப்பாள்.
நிலா சாப்பிடும் நேரத்தில் அவன் சாப்பாடு தட்டுடன் சோபாவின் பக்கம் சென்று விட்டான் ஏனென்றால் அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் சாப்பிட மாட்டானாம். சேற்றை வாரி அடித்தது போல நிலாவுக்கு மிகவும் வேதனையிலும் வேதனையிலும் வேதனையாக இருந்தது.
காலம் மாறும் பார்ப்போம்.
இங்கே ரிதம் உடைந்த கட்டிலில் கிடக்க சத்தியதேவ் அவள் முன் நின்று கொண்டிருந்தான் .
அடுத்து என்ன நடக்கும்
தொடரும்..
EPISODE 158
டேய் டேய் சத்ய தேவ்! அடேய் சக்தி! டேய் சண்டாலா செவுடா! டேய் படுபாவி வாடா என வலியில் கண்களில் நீர் கோர்க்க கத்தினாள். பாவம் கதவு சாத்தப்பட்டிருந்ததால், உள்ளுக்குள் அறையில் ரிதம் கத்திய எந்த சத்தமும் வெளியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் சத்யதேவுக்கு கேட்கவில்லை போலும்.
ஐயோ வலிக்குதே! ஹஹஹ!!.. ம்ம்ஹ!! வலிக்குதே! என் இடுப்பு போச்சு! ஹஹஹ!! என்ன பண்றான்? நான் பேசறது கேக்கலையா? நான் கத்துறது அந்த நாய்க்கு கேக்கலையா? என கண்களில் நீருடன் உதட்ட மடித்து வலியை பொறுத்துக் கொண்டவள் வேகம் மூச்சுடன் பெருமூச்சு வாங்கிக்கொண்டு போனை கைகளில் துலாவினால் நேராக விழுந்திருந்தால் இடுப்பு ஒரு பக்கம் இழுத்து பிடித்துக் கொள்ள முதுகுத்தண்டின் அடியில் ஏதோ வலி! நல்லவேளை கட்டிலின் மேல் மெத்தை இருந்ததால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
உடனே போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள். திரும்பத் திரும்ப போன் அழைக்க.. போன் திரையைப் பார்த்தவன் புருவ முடிச்சுகளுடன் என்னாச்சு? இத்தனை தடவை போன் பண்றா? அதுவும் ரூமுக்குள்ள இருந்துகிட்டு? ஒரு வேலை மனசு மாறிட்டாலோ? என கடை இதழ் கடித்து சிரித்தவன். அடிமனத்தில் எண்ணம் தோன்ற.. வேகமாக போனை அட்டென்ட் செய்தான். என்ன விஷயம்? என்று கேட்டான்.
டேய் சக்தி வாடா!! சீக்கிரம் வாடா! ரூமுக்குள்ள என்று கண்களில் நீருடன் கூறினாள்.
என்னடி ஆச்சு? என்று வேகமாக போனை வைத்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில், அலங்கரிக்கப்பட்ட கட்டிலில், பட்டு ரோஜா வண்ண புடவை கொஞ்சம் கசங்கி கலைந்திருக்க, கண்களில் நீருடன் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பெண்ணை பார்த்தான் சத்தியதேவ்.
சத்யதேவுக்கு வெடித்து சிரிக்க வேண்டும் போல தோன்ற , அதை கட்டுப்படுத்திக்கொண்டு என்னாச்சு ரிதம்? என்று கேட்டான் வெகு இயல்பாக.
டேய் நான் கீழ விழுந்துட்டேன்! எனக்கு இடுப்பு பிடிச்சுகிச்சு இதுக்கெல்லாம் காரணம் நீ தனே! பிளான் பண்ணி இப்படி பண்ணிட்டியா? நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட! நாசமா போயிவ டா! சண்டாளா! என ரிதம் கண்டபடி திட்டிக் கொண்டிருக்க, சத்யதேவ் அவளை பார்த்தவன். நீ என்ன சாபம் வெனாலும் கொடு எனக்கு அதெல்லாம் பலிக்காது. என்ற கண்ணை சிமிட்டியவன். சரி நீ அப்படியே ஜாலியா படுத்துகிட்டு இரு! நான் என் வேலையை கண்டின்யூ பண்றேன் என திரும்பினான்.
டேய் படுபாவி என் டிம்பிள் டாடி உன்கிட்ட என்னடா சொல்லிட்டு போனாங்க? என்ன பத்திரமா பாத்துக்க சொன்னாங்க டா? நீ என்னடா காரியம் பண்ணி வச்சிருக்க? அய்யோ டாடி! இவன் என்னை கொல்ல பார்க்கிறான் என கத்தினாள் ரிதம்.
ஹலோ ஹலோ இதெல்லாம் நான் பண்ணல! நான் உன் கூட தானடி வந்தேன்! என்று கூறினான் சத்ய தேவ். யார் பண்ணா பண்ணலையோ இப்ப அது தேவையில்லை! முதல்ல என்னை தூக்கி தொலை டா! என்னால வலி தாங்க முடியல என்று அழ ஆரம்பித்தாள் ரிதம்.
சத்யதேவ் அவளை உற்றுப் பார்த்தவன். தூக்கணுமா என்று கேட்டான். பின்ன என்று அவள் வேதனையுடன் அவன் முகத்தை பார்க்க..சத்திய தேவ் தீவிரமாக யோசித்தபடி, நீதானே சொன்ன? நான் உன்னை தொடக்கூடாதுன்னு! என்று நேரம் பார்த்து போட்டு வாங்கினான்.
டேய் இப்போ அதுவா டா முக்கியம் வாடா வந்து தூக்குடா என்று அவள் கெஞ்சுவது போல் பேச, சரி சரி நீயா கெஞ்சி கேட்கிற அதான் வந்து தூக்குறேன். என்று பக்கத்தில் வந்தவன். ஆனால் தூக்கவில்லை.
என்னடாஆஆஆ! பட்டிமன்றம் நடத்திட்டு இருக்கியா? தூக்கலாமா வேணாமான்னு? என ரிதம் சோர்ந்து அவனை பார்க்க, அதில்ல நீ தான சொன்ன!!
என்னன்னு?
நான் மகி சொன்னதால தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்போ நீ சொல்லி நான் எப்படி தூக்க முடியும்? நான் வேணும்னா மகி கிட்ட கேட்கட்டுமா? என்ற சத்திய தேவ் அவளை பார்த்தான். செருப்பு பிஞ்சிடும் ஒழுங்கா என்ன தூக்கு என்று அவள் சிணுங்கினாள். சத்திய தேவ் உதட்டை கடித்து சிரிப்பு அடக்கினான். அவளை அடக்கமாக தூக்கி கொண்டான்.
ரிதம் வலியில் முகம் சுணங்கிய படி இதை யார் பண்ணினார்களோ அவங்க விலங்காமல் போய்டணும்! என்று சாபம் விட்டாள்.
கண்டிப்பா இதையெல்லாம் பண்ணது உன்னோட தானா சேர்ந்த கூட்டமா தான் இருக்கும். என்று கூறினான் சத்திய தேவ்.
அது யாரு என்று அவள் உதட்டை பிதுக்கி கொண்டே கேட்க..
வேற யாரு அந்த குட்டி குட்டன் மிஸ்டர் மிதுன் தேவ் நாய்தான் என்று கூறினான் சத்திய தேவ். அது எப்படி உனக்கு தெரியும்? என வலியில் கண்ணை இறுக்கி மூடுய படி கேட்டாள் ரிதம்.
அவன் என்னை பழிவாங்க போட்டு இருப்பான் பிளானுஉ! அதுல கடைசியில் மாட்டிக்கிட்டது நீனு! என்று கூறினான் சத்திய தேவ். அவனது சிரிப்பு அவனுக்கு எல்லையை கடந்து கொண்டிருந்தது.
மெதுவாக அவளை வெளியே தூக்கி வந்தவன். அவளை பார்த்த வாரு இப்போ என்ன பண்றது?. என்று அவளை பார்த்து கேட்டான்.
என்னை படுக்க வை டா! சரி என்று சோபாவுக்கு கொண்டு போக.. நான் எதுக்கு சோஃபால படுக்கணும்? பெட்ரூம் தூக்கிட்டு போ என்று கூறினாள் ரிதம்.
பெட்ரூமா? அதான் கட்டில் உடைந்து இருக்கே அதிலேயே மறுபடியும் படுத்துக்கறயா?.என்று சத்திய தேவ் கேட்க..
டேய் மடையா அந்த பெட்ரூம் தூக்கிட்டு போ! என்று ரிதம் கண்களில் சைகை காட்ட..
அது என்னோட பெட்ரூம் ஆச்சே! நீதான் என்னோட பெட்ரூம் குள்ள வரமாட்டேன்னு என்று சொன்னதா ஞாபகம்? என்று சத்யதேவ் அவளின் முகத்தை பார்க்க..
டேய் கடுப்ப கெலப்பாத சத்திய தேவ் ஒழுங்கா தூக்கிட்டு போடா! என காலை உதறிக் கொண்டே துள்ளினாள். சரி என புன்னகைத்தபடியே அப்போ இனிமே எங்க தூங்குவ? என்று சத்திய தேவ் கேட்க.., என்னோட ரூமில் தான்! என ரிதம் உறுதியுடன் பதில் கூற,
சேரி தூங்கிக்கோ பிசாசு கூட வர வாய்ப்பு இருக்கு. நான் சில டைம் நைட்ல எனக்கு வேலை இருக்கும். சோ போயிடுவேன் நீயும் இப்போ போலீசாக போற! உனக்கு எங்க வேணாலும் டியூட்டி அப்புறம் தனியா தூங்கு என்று சத்தியத்தை சொல்ல..
சரிஈஈஈஈ!! உன் கூடவே தூங்கி தொலையிறேன். என்னை படுக்க வையடா வலிக்குது!! என அவள் வலியில் முனகினாள். சத்திய தேவ் மெதுவாக படுக்கையில் கிடத்தியவன். சரி அவ்ளோதான என்னோட வேலைய பாக்க போகவா? என்று சத்திய தேவ் நகர..
எனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கணும். எனக்கு இடுப்பு ரொம்ப வலிக்குது. பேசாம மாமியை கூப்பிடுறியா? இல்லனா எங்க அம்மா அப்பா வர சொல்லு. எனக்கு வலி தாங்க முடியல என்று ரிதம் உதட்டை மடித்துக் கொண்டு கேட்டாள்.
அவள் நிலைய பாவமாக பார்த்தான் சத்திய தேவ். இப்ப எதுக்குடா பார்க்கிற என்று ரிதம் கேட்க, அவங்கள வர சொன்னா பிரச்சனை வேற மாதிரி போயிடும்! உனக்கு பரவாயில்லையா என்று கேட்டான்.
நீ சொல்றது எனக்கு புரியலையே டா! வலிக்குது டா டாப் பாட்டம் மாதிரி டிரஸ் எடுத்து கொடு. என கூறினாள்.
நிஜமா தான் சொல்றயா நான் கூப்புடவா? அதாவது இந்த கட்டில் உடைந்தது. அது கூடவே உன்னோட இடுப்பு சுளுக்கு இதையெல்லாம் பார்த்து அவங்க வேற மாதிரி நினைச்சுக்கிட்டா என்ன பண்றது? என்று சத்திய தேவ் விஷமமாக அவளை பார்த்தான்.
என்ன டா நினைப்பாங்க? என ரிதம் உதட்டை கடித்து வலியில் அவனை பார்க்க, அது அது வந்து உன் மேலே நான் எனக்கு கீழே நீ! நீயும் நானும் அப்படியே வேகமாஆஆஆ!! உன்னோட ஹிப்பு என்னோட.. ஹோ I can’t என கண்கள் சிவந்து அவளை பார்த்தான் சத்ய தேவ்.
அய்யோ வலி உயிர் போகுதடா கடங்காரா! வலிக்கு ஏதாவது பண்ணுடான்னா நீ என்ன பேசிட்டு இருக்க?
அடியே என்னோட ஃபோர்ஸ உன்னால தாங்க முடியாம கட்டில் உடைஞ்சு இடுப்பு சுள்ளுக்கி கிச்சுண்ணு நினைச்சுப்பாங்க டி அம்மாவும், அத்தையும் உனக்கு ஒகேன்னா சொல்லு இப்போவே அவங்களை வர சொல்றேன். என்றான் சத்ய தேவ்..
வேணாம்! வேணாம்! வேணாம்! வேணாம்! அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யயோ! என ரிதம் அப்பட்ட அதிர்ச்சியில் புலம்ப ஆரம்பித்தாள்.
சொல்லு இப்போ நான் என்ன பண்ணட்டும்.
அய்யோ படுத்துறானே! என பெரு மூச்சை விட்டவள். இதை சரி பண்ணு சத்ய தேவ். சத்தியமா வலிக்குது டா! என்றாள் ரிதம்.
சரி இரு எதுவும் பெயிண்ட் கில்லர் இருக்கான்னு பார்க்கிறேன். என்று தேடியவன் மூவ் எடுத்துக்கொண்டு வந்தான்.
என்ன டா இது?
மூவ்வ் டி!.
இது என்னது? எதுக்கு போட? என்று புடவையில் விலகி இருந்த இடுப்பை அழுத்திக் கொண்டே சத்யதேவை பார்த்தாள் ரிதம்.
நீ அட்வர்டைஸ்மென்ட் பார்த்தது இல்லையா? டிவில வர மாதிரியே உனக்கு ஹிப்பு பிடிச்சுகிச்சு. சோ அதேபோல என அருகில் வந்தவன் ஹான் ஒரு சின்ன வித்தியாசம் அதுல வர ஹீரோயின் லாவண்டர் கலர்ல புடவை கட்டிருப்பாங்க! நீ என அவளை மொத்தமாக மேயிந்தவன். நீ பிங்க் இல்ல இது பிங்க் இல்ல அப்படியே வசீகர ரோஜா ஆனால் வாய் மட்டும் சரோஜா! மூட ஸ்பாயில் பண்ணிடுவா என கூறினான் சத்ய தேவ்.
இப்படியே பேசிக்கிட்டே தான் இருக்க போறியா டாஆஆஆ! என் பிராணம் போகுது டாஆ! என வலியில் திணறினாள். அருகில் வந்தவன் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு எங்கே இருந்து ஆரம்பிக்கனும்? என்றான்.
அய்யோஓஓஓ! வலிக்குது டா எதுவும் பண்ணே! என கத்தினாள் ரிதம். சரி சரி என புடவையை விலக்கி விட்டவன். எந்த இடத்தில் சுளுக்குஊஊஊ! என ரஜினி சார் போல கேட்டான்.
தடவி பாரு டா பண்ணி! அப்போ தான் சொல்ல முடியும். என தலையணையை நசுக்கி பிடித்தாள். சத்ய தேவ் மெதுவாக அவளின் இடையை தடவிக்கொண்டே கேட்க, அங்கே அங்கே தான் டா அய்யோ டேய் சக்தி வலிக்குது டா! என அவள் கத்த இரு சூடு பரவ இதை தேய்ச்சு வுடுறேன் என கொஞ்சம் moov எடுத்து அவளின் வலவளத்த இடையில் சுளுக்கு பிடித்த இடத்தில் தேய்த்து விட ஆரம்பித்தான்.
டாடி! முடியல டாடி! ஈஈஈ .. உஉஉஉ.. ஹஹஹஹ வலிக்குது டாடி! என ரிதம் அழ..
அப்போ நான் மாமாவுக்கு கால் பண்ணவா? என சத்ய தேவ் கேட்க, ஏண்டா கத்தக் கூட எனக்கு உரிமை இல்லையா என்று ரிதம் வலியை அடக்கி கொண்டு கேட்க..
கத்த உரிமை இருக்குது தான்! அப்போ என் பேரு சொல்லி கத்தடி அதுதான் எனக்கு புடிக்கும் என்று கூறினான்.
அய்யோ! என அலறியவள். மெல்ல மெல்ல வாய் மூடினாள் ரிதம். அவனது பிடிப்பு வலியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது. என்ன டி? எப்படி இருக்கு? என சத்ய தேவ் சூடு பறக்க தேய்த்து விட்ட படியே கேட்க, ம்ம் இப்போ கொ கொஞ்சம் பரவால்ல.. என்றாள்.
சத்ய தேவின் விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மணி I mean தோடு போட்ட இடத்துக்கு விரல்கள் வந்து விட மெதுவாக ரசனையுடன் வருட ஆரம்பித்தான். ஒரு கையில் வைத்தியமும் இன்னொரு கையில் வித்தையும் என இரண்டு கைகளும் மிகவும் வேலையில் இருந்தது. கண்களுக்கு அதற்கு மேல் வேலை ரசனையுடன் அவளை உள் வாங்கிக் கொண்டிருக்க, மூக்கின் நுனி சிவந்து போனது தான் மிச்சம்.
வலி குறைந்த நிம்மதியில் ரிதம் மெதுவாக கண்களை மூடி கிடக்க, அவளின் சுழி தொப்புலில் மீசை முடிகள் உரச முத்தமிட்டான். வெடுக்கென நிமிர்ந்து தன் வயிற்றில் தலை வைத்து கிடப்பவன பார்த்தாள் ரிதம். உடலின் எல்லா இடத்திலும் இரத்தம் ஒரு நிமிடம் போதையுடன் பாய்ந்தது போல ஒரு உணர்வு. அய்யோ என்ன பண்றான்? அய்யோ தப்பு பண்ணிட்டேனே! என புலம்பியவள். டேய் என அழைத்தாள்.
ஆனால் அவளின் வாயில் வெறும் காற்று மட்டும் தான் வந்தது. அவனது முத்த் சத்தம் உள்ளுக்குள் மத்தளம் அடிக்க, பரவசம் அதிகமாக ஆரம்பித்தது. ரிதம் வேகமாக அவனது தலையை பிடிக்க வர, அனுமதி இல்லாமல் உரிமையின் அச்சரமாக எட்சிள் அவளின் இடையின வட்டத்தை குளிர்வித்தது. கைகள் அதற்கும் மேல் அந்தரத்தில் பறந்தது. உள்ளுக்குள் எதோ அடி வயிற்றில் எது எதோ! அய்யோ முடியல.. கூசுது என நெளிந்தவள். ஹே அப்போ இப்போவே அவனுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுக்க போறியா? போ கொடு டி! என ரிதம் தடக்கு தடக்கு சத்தத்துடன் பேசியது. I mean மனம்.
*
இப்போ எப்டி இருக்கு? ரொம்ப வலிக்குதா? என முத்த சத்தம் உடலோடு அவனை பின்னிக் கொள்ள தோன்றியது பெண்ணவளுக்கு. சொல்லு டி ரொம்ப வலிக்குதா? உனக்காக மீட்டிங் விட்டு வந்தேன். வயிறு வலி ரொம்ப கொடுமையா இருக்குமாமே கனி சொல்லிருக்கா! இப்போ தான் அவள் கிட்ட கேட்டேன் என்றான் நிதின்.
ஆமா ஆனால் வயிறு வலிய விட உன்னோட முத்தம் தான் எனக்கு அவஸ்தையா இருக்கு டா! என வெட்கத்துடன் இன்னொரு பக்கம் திரும்பிக் கொண்டாள் ஹரிணி.
நிதின் முத்தமிடுவதை நிறுத்தி விட்டு அப்படியே பார்த்தவன் சட்டென எழுந்து கொண்டான். அவனது ஸ்பரிசம் தீண்டாமல் இருக்க, சட்டென விழித்தவள். அவனை பார்க்க முகம் எல்லாம் கோபமாக இருந்தது அவனுக்கு.
ஹரிணி அவனை பார்த்து என்னாச்சு சாருக்கு? என முகத்தை ஆராய்ந்தாள். என்னோட டச்சிங் உனக்கு அவஸ்தையா இருக்கே! அந்த அவஸ்தையை உனக்கு நான் கொடுக்க விரும்பல. Irritating தானே I know.. என அவனது முகம் இன்னும் இறுகி போக.. அய்யோ முடியலயே என நொந்தவள். டேய் உன்னைத்தான் என அதட்டினாள்.
சொல்லு என போனில் கவனம் செலுத்தினான். அந்த அறையில் இஞ்சி நாட்டு சக்கரை டீ, அதன் கூடவே ஆர்கானிக் நாப்கின்ஸ், புதிதாக புளிச்ச கீரையின் தண்டில் இருந்து இயற்கையாக செய்ய பட்ட ரசாயனம் இல்லாத இயற்கை நாப்கின்ஸ் ஆராய்ச்சி செய்து தேர்ந்து எடுத்தவன். அவளுக்காக அந்த கம்பனியே வாங்க திட்ட மிட்டு விட்டான். குளிர்ச்சியாக பண கற்கண்டு, உழுந்தகஞ்சி, திணை மாவு என சத்தாக சாப்பிடும் அனைத்தையும் அவளுக்காக கொண்டு வந்து அடுக்கினான் நிதின் பிரகாஷ்.
அவனது அதிக படியான அன்பில் மூச்சு முட்டி போனாள் தான் பெரியவள். ஆம் பெரியவள் தானே! டேய் புருஷா! ஏமன்டி! ஏமன்டிஇஇஇ! என அழைத்தாள்.
சட்டென இடிங்கிய புருவத்துடன் அவளை திரும்பிப் பார்த்தான் புதிதாக ஏமண்டி என்று அழைக்கிறாள். அதாவது தமிழில் என்னங்க என்ற வார்த்தை தெலுங்கில் ஏமண்டி..
ஹரிணியின் முகத்தில் சோர்வு ஒரு பக்கம் இருந்தாலும் கண்களில் பளபளப்புடன் உதடுகள் மென்மையாக ஏமன்டி என்று மீண்டும் அழைத்தாள்.
நித்தின் பிரகாஷ் அவளை கோபமாக பார்த்தவன். ஒரு சில நொடிகளில் உதட்டை கடித்து சிரித்தான்.
ஹே என்ன டா சிரிக்கிற? நான் கஷ்டப்பட்டு கூகுள் போய் கண்டுபிடித்து இந்த வார்த்தையை பிடிச்சேன். உன்னை இம்ப்ரெஸ் பண்ண மட்டும் தான். எங்க ஊர்ல என்னங்கன்னு தான் சொல்லுவாங்க. தெலுங்குல ஏமண்டி மஞ்சமண்டி இதெல்லாம் கேட்க ஒரு மாதிரியா இருக்கு!! ஏதோ உனக்காக கஷ்டப்பட்டு சொல்றேன்! கேட்டுக்கோ என்று புன்னகையுடன் கூறினாள்.
அதில் கொஞ்ச நேரம் சிரித்தவன் மீண்டும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான். நித்தம் பிரகாஷ்.
ஹரிணி கொஞ்சம் சிரித்தபடி அவனை பார்க்க.. நித்தின் பிரகாஷின் முகம் மறுபடியும் கோபமாக இருந்தது.
இப்போ நீ எதுக்கு இப்படி முகத்தை வச்சுட்டு இருக்க? தயவு செய்து சொல்லிடு! எனக்கு இருக்கிற வயிற்று வலியில், இதுக்கெல்லாம் என்னால யோசிக்க முடியல டா! என்று திரும்பினாள்.
நித்தின் பிரகாஷ் முகத்தை திருப்பிக் கொண்டு நீதான் நான் தொட்டா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னல்ல என்று முகத்தை திருப்பினான்.
நீ சரியான மாங்கா ஆமா அந்த சக்தியோட தம்பி வேற எப்படி இருப்பான்? அவனே ஒன்னா நம்பர் மாங்கா மாவடு! உனக்கு கொஞ்சமாவது அசைவமா திங்க் பண்ண தெரியுமா தெரியாதா? ஐயோ நீ அவன விட மோசம். நீ ரொம்ப ரொம்ப நீ இப்படி தத்தியா இருக்கியே!
உங்க அப்பா மட்டும் தான் ராட்சச காதலன் போல! நீ எல்லாம் அந்த அளவுக்கு வொர்த் இல்ல கேள்வி பட்டிருக்கேன். மகி அத்தஉய வெரட்டி வெரட்டி லவ் பண்ணாராமாம்? என்று கூறினாள் ஹரிணி.
ஆனால் அதைவிட என் மம்மி தேஜு என அப்பாவ கைக்குள்ள வச்சிருக்காங்க என்று முதன்முறையாக தன் பெற்றவளுக்கு துணை போனான் நித்தின் பிரகாஷ்.
அதில் அவளின் கண்கள் இரண்டும் பெரிய பார்த்தவர் பரவாயில்லையே! உங்க அம்மாவை பிடிக்குமா என்று கேட்டாள் ஹரிணி.
பிடிக்கும் ஆனால் எக்ஸ்பிரஸ் பண்ண தோணாது. பிடிக்கும் அது எவ்வளவு அப்டின்னு சொல்லத் தெரியாது. தேஜுவை எனக்கு பிடிக்கும் என்று கூறினான்.
ம்ம் interesting சரி இப்ப கோபத்துக்கு என்ன காரணம் அதை சொல்லு என ஹரிணி கேட்க..
அவன் அமைதியாகி விட்டான்.
ஹரிணி நொந்து கொண்டே நீ தொடும் போது இந்த பீரியட்ஸ் இல்லாம இருந்தா நல்லா இருக்கும் தோணிச்சு! அதுதான் சொன்னேன்! இப்பவாது அந்த மரமன்டைக்கு புரியுதா? ம்ம் நீ என்ன விட சின்ன பையன் தான் டா! என்று அவள் சொல்லி முடிக்க.. நாலு காலு பாய்ச்சலில் வேகமாக அருகில் வந்தவன். பீரியட்ஸ் கொலை குத்தம் இல்ல அது தெய்வீகம்! சோ கண்டிப்பா ஆராதிக்கணும். இந்த வாய்க்கு கொஞ்சம் முத்த அர்ச்சனை கொடுக்கலாம்! கட்டி பிடிச்சுபடி சொர்க்கம் போலாம்! என்று உதட்டுடன் உதடை பொருத்திக் கொண்டான். நிதின் பிரகாஷ்.
EPISODE 159
ரிதம் வேகமாக அவனது தலையை பிடிக்க வர, அனுமதி இல்லாமல் உரிமையின் அச்சாரமாக எட்சிள் அவளின் இடையின வட்டத்தை குளிர்வித்தது. கைகள் அதற்கும் மேல் அந்தரத்தில் பறந்தது. உள்ளுக்குள் எதோ அடி வயிற்றில் எது எதோ! அய்யோ முடியல.. goose bumbs என நெளிந்தவள். ஹே அப்போ இப்போவே அவனுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுக்க போறியா? போ கொடு டி! என ரிதம் தடக்கு தடக்கு சத்தத்துடன் பேசியது. I mean மனம்.
சத்ய தேவ் கண்கள் சிவந்து அவளின் இடையை கொஞ்சம் அழுத்தமாக பிடித்தான். அது சாதாரண மென்மை பிடியே இல்லை. மோக பிடிப்பு. அவனது பிடியில் அந்த இடத்தில் அச்சு வார்த்தது. வன்மை கூட உள்ளுக்குள் எதோ செய்ய ரிதம் வெடுக்கென உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டவள். அவனது தலையில் முடியை பிடித்து உணர்ச்சியை அறுத்து விடும் முனைப்பில் இழுத்தாள். ம்ம் ஹி ம்ம் நகர்வேனா என்பவன். இன்னும் முத்தத்தை அதிக படுத்தினான்.
அய்யோ சிவா! God சிவா இவனை கிட்ட விடாதீங்க! என்னை கடிச்சு தின்றுவான். அவனை சுய நினைவுக்கு கொண்டு வாங்களேன். என புலம்பியவள். அய்யோ என்ன பண்ணுவேன் ? என டேய் சத்ய தேவ்! டேய் உன்னைத்தான் moov போடுறேன்னு அப்படியே மூவ் ஆகி முத்தம் கொடுத்திட்டு இருக்க? யார்ரா உன் கிட்ட முத்தம் கேட்டது. டேய் தடி மாடே எழுந்துடு இல்ல உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. என மீண்டும் முடியை பிடித்து கத்தினாள்.
அதில் மெல்ல தன்னிலைக்கு வந்தவன். மெதுவாக எழுந்து தலையை கோதிய படி அவளை பார்த்தான். என்ன டா இது தான் நீ மூவ் போடுற லட்சணமா? என பற்களை கடித்த படி கேட்டாள் ரிதம். அவளின் முகத்தை உற்று பார்த்தான் சத்ய தேவ். அவளின் கண்ணம் இரண்டும் பஞ்சு மிட்டாய் ரோஸ் போல சிவந்திருக்க, உடல் சிலிர்த்துக் கொண்டிருந்தது. ஆக வலுக்கட்டாயமாக என்னை விலக்கி வைக்கிறா! உள்ளுக்குள் இதே ரியாக்சன் அண்ட் மெக்கானிசம் அங்கேயும் நடக்குது. வீம்புக்கு இப்படி இருக்கா ராவடி என உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
டேய் எனக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடேன் என அவள் கேட்க, அவளின் வைரமணி குத்தபட்ட வயிற்றை பார்த்தான். பார்க்கிறான் பார்க்கிறான்! அப்போ இருந்து இப்போ வரைக்கும் இதை தான் பண்றான். கேட்டா அப்படியே சீன் போடுவான்! நாயி! தடி தாண்டவராயன் என சொல்லிக் கொண்டாள்.
சத்ய தேவ் மீண்டும் அவளின் வயிற்றை வருட.. அவளின் வார்த்தை காற்றில் கரைந்து போனது. அவளை பார்த்த படி இச்! இச்..இச்! என வைக்க கைகளை இறுக்கி மடக்கி உணர்வை அடக்கியவள் ஹே ஹே என்ன என்னா பண்ற? என கேட்க, இது எனக்காக டி! என்னோட non veg meal நீ தான்! உன் கிட்ட இந்த வீகன் இல்ல.. இந்த இடம் அந்த இடம் மேலே கீழே எல்லாமே எனக்கு தான் எப்போ வேணாலும் வருவேன் கொஞ்சுவேன் தொட்டு பார்ப்பேன். என்னோட இஸ்டம் என சொன்னவன் எழுந்து கப்போர்ட் கதவை திறந்தான்.
ரிதம் அப்பட்ட அதிர்ச்சியுடன் இது இவன் தானா? சிடு மூஞ்சி சத்ய தேவ்? யாரிடமும் பேச மாட்டான். பேச காசு கேட்பான். அப்படியே பேசினாலும் ஒழுக்கம், சாதா ஒழுக்கம் இல்லை ஜீவ காருண்ய ஒழுக்கம் என இருப்பவன். இன்று இன்று இறங்கி இறங்கி I mean இரு பொருள் பல பொருள் என பயங்கரமாக பேசுகிறானே! என பார்த்தாள்.
உடையை எடுத்து மேலே வைத்தவன். ம்ம் வா!
நீ எங்கே வர?
உனக்கு ஹெல்ப? என சச்சின் விஜயை போல கூறினான்.
ஒரு மண்ணும் வேணாம். ரூம விட்டு வெளியே போடா! என அதட்டினாள்.
சரி போறேன் போடிஇஇ! என சொன்னவன் அறையில் இருந்து வெளியே சென்றான். முதலில் டாப் மாற்றிக் கொண்டாள். புடவை சுற்றி இருக்க, ஹே சக்தி டேய் சக்தி..
என்ன டி!
எனக்கு பாட்டம் இந்த புடவையை சரி செய்ய கழட்டி விட அவனை அழைத்தால் என்னடி என்று போனை நோண்டிக்கொண்டே உள்ளே வந்தான். இத கழட்டி வுடு! எனக்கு எப்படி ரிமூவ் பண்றதுன்னு தெரியல வரேன் என்று புடவையை கழட்டி விட்டான். இப்பொழுது பாவாடையுடன் இருந்தாள்.
சத்யதேவ் அவளைக் கண்டு கொல்லாமல் மாத்திட்டு வா நம்ம சாப்பிடலாம் என்று வெளியே சென்று விட்டான். ரிதம் அவனை சோர்வாக பார்த்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காம பிசாசு மாதிரி பார்த்தான். இப்போ என்னை பாக்காமலே போறான்? இவனை புரிந்துகொள்ளவே முடியலையே?! என்ற தலையை சேர்த்துக் கொண்டவள். பாட்டத்தையும் மாற்றிக்கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்தாள்.
சுளுக்கென வலி ஏ சக்தி என்ற மீண்டும் கத்தினாள். என்னடி ஆச்சு என்று வந்தான்.
என்னால கீழ கால வெட்கவே முடியல டா! வின் வின்ன்னு என வலிக்குதடா! இப்போ என்ன பண்றது? என குழந்தையை போல பார்த்தாள். எனக்கு என்ன தெரியும்? என்று அவன் தோலை குலுக்கிக் கொள்ள, அப்போ எனக்கு டின்னர் பெட்ரூம் எடுத்துட்டு வா! என்று கூறினாள் ரிதம்.
அந்த பழக்கம் மட்டும் இங்க என்கிட்ட நடக்காது. நீ ஹாலுக்கு வந்து தான் சாப்பிடணும். பெட் ரூமுக்கு சோறு எடுத்துட்டு வரது போறதெல்லாம் எனக்கு பிடிக்காது. என்று கூறியவன். வா உன்ன தூக்கிட்டு போறேன் என்று கை நீட்டினான்.
அவனது பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. அவளை பூப்போல தூக்கி கொண்டவன். நேராக சென்று சோபாவில் அமர வைத்தான். உணவுகள் அனைத்தையும் சூடு செய்து எடுத்து வந்து போட்டுக் கொடுக்க, டேய் சக்தி என்று மீண்டும் அழைத்தாள்.
என்ன?
எனக்கு பாத்ரூம் வருதுடா என்று கூற..
வா என்று தூக்கிக் கொண்டு சென்றான். பாத்ரூமில் அமர்ந்தவளுக்கு தீவிர யோசனை. இது கூட நல்லா இருக்கே இவன எல்லாம் இப்படியே வேலை வாங்கணும். தூக்குடா உட்கார வை டா அப்படினு கொஞ்சம் அதட்டின போதும் எல்லாத்தையும் செஞ்சுடுவான் என கன்னக்குழி தெரிய சிரித்தவள். அப்படியே நீ திரும்பி பார்க்க..
அங்கே கரப்பான் பூச்சி இருந்தது. பயமில்லை நசுக்கி தள்ளினாள். ஆனால் மேலே ஒரு பல்லி ச்ச சோ ச்சோ என்று சத்தம் போட.. பயத்தில் வெடுக்கென எழுந்தவள். ஐயோ என்று கத்தினாள்.
என்னடி ஆச்சு என்று சத்யதேவ் கதவை தட்ட.. ரிதம் எழுந்து நின்று விட்டாள். சுளுக்கு எங்கேயோ காணாமல் போயிருந்தது. அப்பாடா எப்படியோ சுளுக்கு போயிடுச்சு. என்று கதவை திறக்கப் போக.. அய்யய்யோ வேணாம் வேணாம் இந்த நடிப்பை கண்டின்யூ பண்ணுவோம் அப்பதான் இந்த சத்ய தேவ் பைய எல்லா வேலையும் நமக்கு செஞ்சு தருவான். இல்லன்னா மட்டும் நான் எதுக்கு வேலையை செய்ய போறேன். எனக்கு தான் சுட்டு போட்டாலும் எதுவும் வராது. என நினைத்தவள் வலியை கட்டு படுத்திக் கொண்டவள் போல முக பாவனையை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே செட் செய்தவள். கதவை பிடித்தாள்.
இங்கே வெளியே சத்ய தேவ் என்ன டி ஆச்சு என மீண்டும் மீண்டும் தட்டினான். ஹான் இரு என கதவை திறந்தாள். உடலை வளைத்துக் கொண்டே. என்ன டி என்னாச்சு ஓகே தானே!.
இல்ல காலை வைக்க முடியல தூக்கு என கையை நீட்டினாள். சரி வா என அவளை தூக்கிக் கொண்டான். ஹாலில் அமர வைத்து ம்ம் சாப்பிடு ஹே ஒரு நிமிசம் ஹேன்ட் வாஷ் பண்ணியா?
இல்லையே!
சூரச்சி என ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொண்டு வந்தான் சத்ய தேவ். கையை கழுவி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். தண்ணி வேணும்! விக்குதடா! என அவள் கதற ம்ம் மெதுவா மெதுவா என குழந்தையை போல பார்த்துக் கொண்டான். இருவரும் சாப்பிட்டு முடித்து அவளை படுக்கையில் கிடத்தினான்.
சரி தூங்கு எனக்கு வேலை இருக்கு. என அவன் எழுந்து செல்ல போக.. நான் டாடி கிட்ட சொல்லி உனக்கு லீவ் தரேன். வா வந்து எனக்கு கால் அமுக்கி விடு! அங்கே கூட கொஞ்சம் வலி தான் என பொய் கூறினாள்.
சத்ய தேவ் அவளை முறைத்து பார்க்க, வாடா என பாதத்தை எடுத்து அவனது மார்பில் வைத்தாள். அவளின் பாதத்தை பூ போல பிடித்து விட்டவன். அப்படியே படுக்கையில் விழுந்தான். மெதுவா பிடி! என ரிதம் அவனை பார்க்க, சத்ய தேவ் அவளையே பார்த்தான். ஏனோ இது காட்சி பிழையா! துளி கூட நம்ப முடிய வில்லை. அவள் என்னுடன். அவன் என்னுடன்!
ஹே சக்தி!!
ம்ம்..
இப்போ லவ் யூ சொல்லு! லவ் சொன்னா என அவள் கழுத்தை தேய்த்தபடி உதட்டை கடித்தாள். உணர்வுகளை அடக்க முடிய வில்லை. அவன் அருகில். அவளது சேர்ட் பட்டனை முதல் ஒன்றை கழட்ட..
ஒரு சில நொடிகளில் தன்னிலைக்கு வந்தவன். லாஸ்ட் என அவளின் அருகில் நெருங்கி வாசம் முகர்ந்தவன். லாஸ்ட்டா சொல்றேனே லவ் யூ I mean process finishe ஆகும் போது! என இன்னும் நெருங்கினான்.
அவனை கோபத்துடன் தள்ளி விட்டாள். ஹே என்ன அதான் லவ் யூ சொல்றேன்னு சொன்னேனே! வா சொல்றேன். என இடையை பிடித்தான்.
போடா! என தள்ளி விட்டாள். சத்ய தேவ் சிரித்த முகத்துடன் மகியும் என்னோட டாடியும் லவ்வே பண்ணல தெரியுமா? அவங்க arrange marriage உன்னையும் என்னையும் போல! அவங்க எப்டி இருக்காங்க பார்த்த தானே!
ரிதம் அவனை பார்த்து எலனத்துடன் சிரித்தவள். சரி தான் அவங்க காதலில் பிறந்தது நீ இல்ல மிதுன் அண்ட் இதழ்.. என்றாள்.
சத்ய தேவ் புருவ முடிச்ச்சிடன் பார்க்க, ரிதம் அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள். இது தான் உண்மை நீ காதலுக்கு பிறந்தவன் இல்லை. என சொல்லிய படி வராத உறக்கத்தை கட்டாய படுத்தி கொண்டு வர வளைத்தாள் ரிதம்.
சத்ய தேவ் அதற்கும் மேல் எதுவும் பேசாமல் அவளின் அருகில் படுத்துக் கொண்டான். இருவரும் வெகு நேரம் தூங்க வில்லை. ஒரே நேரத்தில் உறங்கி போனார்கள். இரண்டு நாட்களும் இப்படியே சென்றது.
மாதத்தின் முதல் நாள் தான் ரிதம் டூட்டியில் சேர போகிறாள். அதற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. சத்ய தேவ் எண்ணுக்கு விவேகா நிறைய முறை அழைத்திருக்க.. அவன் புருவ முடிச்சிடன் உடனே ருத்ரனுக்கு அழைத்தான்.
Your trying to reach out of network other switched off என திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. என்னாச்சு இவனுக்கு என சத்ய தேவ் மீண்டும் மீண்டும் ருத்ரனுக்கு அழைக்க ஒவ்வொரு முறையும் ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. என்று தான் திரும்பத் திரும்ப வந்து கொண்டு இருந்தது.
சத்திய தேவ் தீவிரமாக யோசித்தவன் உடனே விவேகாவுக்கும் இன்பாவுக்கும் அழைத்தான். இன்பாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் போகவே, உடனே விவேகாவை தொடர்பு கொண்டான்.
ரிங் போய்க்கொண்டிருந்தும் எடுக்காமல் இருக்க வீட்டுக்கு கிளம்பலாம் என முடிவெடுத்தவன் ருத்ரன் பார்ப்பதற்காக வீட்டுக்கு கிளம்பினான்.
ஹே எங்கே போற என்று ரிதம் கேட்க.. அது உன் தம்பியை பார்க்க போறேன் என்று சத்தியத்தை கூற.. ரிதம் அவனை அஷ்ட கோணலாக பார்த்தவள். நான் பக்கத்துல இருந்தாலும் இவனுக்கு என்னமோ அவனை அந்த நாயை தான் புடிக்குது ஒருவேளை அவனா இருப்பானா? இல்ல இல்ல இடுப்பை வளைச்சு முத்தம் கொடுக்கிறான். நல்ல வேளை ருத்ரன் பொண்ணா பிறக்கல. பொறந்து இருந்தா இந்த நாயி அவன தான் கல்யாணம் பண்ணி இருக்கும்னு நினைக்கிறேன். என்ன பண்றது? ஒருவேளை அவன்கிட்ட காதலை சொல்லி கூட கல்யாணம் பண்ணி இருப்பான். நான் மட்டும் இங்க தனியா இருக்கணுமா?! நானும் கிளம்புறேன் என்று யோசித்தவள். உடனே எழ முயற்சி செய்தாள்.
அய்யயோ இப்ப எந்திருச்சா அவன்கிட்ட வசமா மாட்டிப்பேனே! சுளுக்கு டிராமான்னு தெரிஞ்சு போயிடுமே இப்போ என்ன பண்றது என்று யோசித்தாள். அதற்குள் சத்திய தேவ் கிளம்பியபடி வரையா? உன்னை தூக்கவா போலாமா என்று கேட்க..
இல்லை நீ மட்டும் போ நான் ரெஸ்ட் எடுக்கிறேன். ரொம்ப சுளுக்கு என்னால முடியல என்று பாவமாக நடித்தாள் ரிதம்.
அப்படியா சரி சீக்கிரம் போயிட்டு முடிஞ்சா வரப் பார்க்கிறேன் சீக்கிரமே வரேன் என்று கிளம்பினான்.
ரிதம் தன் தந்தைக்கு அழைத்தவள் அந்த வீணா போனவனுக்கு என்னாச்சுப்பா? இந்த சத்ய தேவ் அவனை பார்க்க கிளம்பிட்டாங்க.
தெரியலையே பேபி! ரெண்டு நாளா அந்த பையன் என் கண்ணுல படுல! அவனை விடு சத்ய தேவ் உன்னை எப்படி பாத்துக்குறான்? நல்லா பாத்துக்கிறானா ஒன்னும் பிரச்சனை இல்லையே? என்று இன்பா கேட்க..
அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லாத டாடி என்னை சுத்தி சுத்தி வரான் பூனை குட்டி மாதிரி எல்லா வேலையும் செய்றான் மாடு மாதிரி என் காலை பிடிச்சு விடுறான் என் கால அமுக்கி விடுறான் என்று கூறினாள்.
இன்பா ஒரு நிமிடம் நொந்து போனார். இந்த விஷயத்துல மட்டும் அவங்க அம்மா மாதிரியே இருக்காளே! என்று தோன்றியது.
சரி டாடி உன்னை பார்க்க வரட்டுமா?
இல்ல டாடி நீங்க உங்க ஒர்க்க பாருங்க என்று போனை வைத்தவள். மிதுனுக்கு அழைத்தாள்.
வீட்டுக்கு வாடா நம்ம கேம் விளையாடுவோம் என்று சொல்ல..
உன் புருஷன் எங்க என்று மிதுன் தேவ் த கேட்டான்.
அவன் இப்போதைக்கு வரமாட்டான் வாடா என்ற ரிதம் கூப்பிட சரி சரி வருகிறேன் என போனை வைத்தவன் கிளம்பி விட்டான்.
சத்யதே வீட்டுக்கு வந்து சேர்ந்து வேகமாக மாமி என்று அழைக்க..
விவேகா சோர்ந்த முகத்துடன் சக்தி என்று அளித்துக் கொண்டே நின்றார்.
என்னாச்சு என்று அருகில் வந்து அவரின் கையைப் புடித்தான்.
என்னன்னே தெரியல டா ரெண்டு நாளா கதவை சாத்திக்கிட்டு திறக்க மாட்டிக்கிறான். சாப்பிடவும் இல்லை. என்னாச்சுன்னு தெரியல. நான் பேசினாலும். ஒன்னும் இல்லன்னு கதவை சாதிக்கிறான். முகமே சரி இல்ல டா எனக்கு வேற பயமா இருக்கு என்று விவேகா சொல்ல..
அப்படியா சரி நான் பார்க்கிறேன் என்று சத்திய தேவ் கதவை தட்ட..
ருத்ரன் திறக்கவே இல்லை தட்டி தட்டி பார்த்தவன் கடைசி நிமிடத்தில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல..
கண்கள் சிவந்து கைகள் கால்களில் அங்கங்க ரத்தக்கீரல்கலாக இருந்தான் ருத்ரன்.
டேய் என்னடா ஆச்சு? என்று சத்யதேவ் ஆவேசமாக கேட்க..
மீனாட்சி அவ போய்ட்டா! மாமா என்று அவ என்னை… விட்டு இந்த உலகத்தை விட்டு .. என ருத்ரன்.
தொடரும்..
EPISODE 160
டேய் என்னடா ஆச்சு? என்று சத்யதேவ் பதட்டத்துடன் அருகில் வந்தான் ருத்ரனின் கோலம் அப்படி இருந்தது ருத்ரா உன்ன தான் கேட்கிறேன் என்ன ஆச்சு தீரா என்று கன்னத்தில் அடித்தான் கன்னம் எல்லாம் சுணங்கி போயிருந்தது கண்களில் அழுது அழுது நீர் பற்று இருந்தது முகம் எல்லாம் ஏதோ போல் இருக்க ருத்ரன் திக் பிரம்மை பிடித்தவன் போல இருந்தான் .
தீரா என்று கத்தினான் சத்திய தேவ்.
மீனாட்சி!! அவ போய்ட்டா! மாமா என்று அவ என்னை… விட்டு இந்த உலகத்தை விட்டு .. என ருத்ரன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.
சத்தியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை என்னடா சொல்ற நீ சொல்றது புரியல என்று கேட்க..
மாமா அவ என்ன விட்டு போயிட்டா இந்த உலகத்தை விட்டு போயிட்டா என்று தழுதழுத்த குறளில் கூறினான் ருத்ரன்.
அவ அவளை நீ தானே ஊருக்கு அனுப்பி வச்சு ரெண்டு நாள் தானடா ஆகுது? அவ திரும்பி வந்துடுவா போனவ அங்கேயேவா இருந்துக்க போறா? நீ ஏன் இப்படி தப்பா கற்பனை பண்ணிட்டு இருக்க? என்று சத்தியதேவ் அவன் அருகில் அமர்ந்து கேட்க
ருத்ரன் விட்டத்தை வெரித்து பார்த்தபடி உதட்டை அழுத்தி கடித்தவன். மாமா அவ ஊருக்கு போகல! மொத்தமா என்ன விட்டு போயிட்டா என்று கூறினான். அப்படின்னா அதுக்கு அர்த்தம் என்ன என்று சக்தி கேட்க, பெருமூச்சை இழுத்து விட்டபடி மீனாட்சி இப்போ உயிரோட இல்ல மாமா என்று கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
டேய்! டேய்! என்னடா சொல்ற? என்ன ஆச்சு? குடும்பத்துல ஏதாவது பிரச்சனையா காலேஜ் வரமாட்டேன்னு சொல்லி இருப்பா? அது எப்படி திடீர்னு ஏதாவது ஆகிடுச்சா? என்னடா ருத்ரா சொல்ற தெளிவா சொல்லு ? என சத்யதேவ் அவனது முகத்தை பார்த்து கேட்டான்.
இன்னிக்கு!… இன்னிக்கு!.. என்று திக்கி திணறியவன் நான் காலேஜ் போனன் அங்க அவளோட டிபார்ட்மெண்ட்.. ஐ மீன் நான் தானே அவ படிக்கிற காலேஜ்ல net முடிச்சுட்டு வொர்க் பண்றேன். உங்களுக்கே தெரியும் தானே! அங்க அவளோட டிபார்ட்மெண்ட்க்கு ஒரு வேலையா போயிருந்தேன் அங்கதான் இந்த விஷயத்தையே கேள்விப்பட்டேன் என்று ருத்ரன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.
என்ன? என்ன சொன்னாங்க? என சக்தி விசாரிக்கும் பொருட்டு கேட்க, அவ இனி செ… செத்.. செத்துட்டதா என வார்த்தையை அவனால் கூற முடிய வில்லை தொண்டை அடைத்தது. அப்படி தான் மாமா பேசுனாங்க.. என்றவன் நானும் என் மீனாட்சி இருக்குற இடத்துக்கே போறேன் மாமா! நான் செத்துப் போறேன் என்று அருகில் இருந்து கத்தியை எடுத்துக் கொண்டான் ருத்ரன்.
டேய் பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்காத! என்று கத்தியை வீசியவன்.. தீரா உன்ன நான் கொன்னுடுவேன் டா! சீ என்னடா இது? என்று சத்தியதேவ் அதட்டி மிரட்டினான். மாமா நான் அவளை எப்போ இருந்து லவ் பண்றேன்னு உங்களுக்கே தெரியும் தானே! என்று அழுது கரைந்தான் ருத்ரன்.
சத்திய தேவ் ருத்ரனை பார்த்து நானும் தான் ஹரிணியா சின்ன வயசுல இருந்து நெனச்சுக்கிட்டு இருந்தேன். உனக்கே தெரியும் தானே. இப்போ அவ நித்தினுக்கு சொந்தமாகி ஒன்றரை வருஷத்துக்கு மேலாக போகுது.. நான் என்ன சூசைட் அட்டம்ட் பண்ணெனா? நமக்கு என்ன கிடைக்கும்னு நம்ம தலையில எழுதி இருக்கோ! அதுதான் நடக்கும் என்று கூறினான்.
இல்ல மாமா அவள் உயிரோட இருந்தால் வேற விசயம் ஆனால் அவள் அவளை விட்டு என்னால இருக்க முடியாது. மீனாட்சி இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாது என்று கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த தங்க மீன் சங்கிலியை பிடித்து நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதவன். நான் செத்துப்போறேன். மாமா நான் செத்துப் போறேன். நான் செத்துப் போறேன். செத்துப்போறேன் என்று கத்தினான் ருத்ரன்.
அதில் கோபம் வந்த சத்தியதேவ் பளார் என்று ருத்ரனின் கன்னத்தில் அறைந்தான். மாமா என்று நீர் கொட்ட கறைந்தான் ருத்ரன்.
சத்யதேவ் அவனிடமிருந்து விலகிக் கொண்டே சரி போ மாமி கிட்ட சொல்லிட்டு செத்துப் போ! என்ன வேணாலும் பண்ணு! இனி நான் உன் பக்கமே வரமாட்டேன். உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒண்ணுமே இல்ல. என்று அவன் எழுந்து செல்ல.. மாமா நீங்களும் என்னை விட்டுட்டு போகாதீங்க! எனக்கு பைத்தியம் பிடிக்குது மாமா எனக்கு மீனாட்சி பாக்கணும் மாமா என்று காலை கட்டிக் கொண்டு அழுதான் ருத்ரன்.
சத்யதே ஒரு பெருமூச்சு விட்டபடி என் மனசு சொல்லுது அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு! வா ஒரட்டு போயி அனுப்பூருக்கு போயிட்டு வந்துடலாம். இப்பவே கிளம்பலாம் என்று சொல்ல..
நிஜமாவா மாமா என்று ருத்ரன் கேட்டான். நிஜமாதான் வா போலாம் என்று சத்தியதேவ் உறுதியளிக்க.. ருத்ரன் அப்போ சரி வாங்க போகலாம் என்று அவனை அழைத்தான்.
சத்யதேவ் அவனை மேலும் கீழம் பார்த்தபடி இப்படியே வரப் போறியா? உன்னை பாத்தா மாமி எவ்ளோ வருத்தப்படுவாங்கன்னு யோசிச்சியா? நீ போ போய் பிரஷ்ஷாகுது என்று கூற… இல்ல மாமா நான் இப்பவே மீனாட்சிய பாக்கணும் என்று அவன் கூறிக் கொண்டே இருக்க… நான் சொல்றத கேளு போ! என அவன் மீண்டும் அதட்ட… அவன் சுரத்தே இல்லாமல் நடந்து செல்ல…
அதற்குள் அவனை பார்த்து டேய் தீரா நீ போக வேணாம்! வெயிட் பண்ணு என்று அங்கிருக்கும் கத்தி மற்றும் உயிரை விட பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எடுத்தவன். உன்னை வந்து வச்சிக்கிறேன் இரு என்று கீழே சென்றான்.
சக்தி நேராக விவேகாவிடம் மாமி ருத்ரனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! சின்ன டென்ஷன் அவ்வளவுதான். நீங்க ரிதமை பாக்க போங்க. ஏன்னா நானும் ருத்ரனும் ஊருக்கு போகலாம்னு இருக்கோம். தமிழ்நாடு போக போறோம் என்று கூறினான்.
என்ன திடீரென? அவன் சாப்பிடவே இல்லையேடா? மூணு நாலு வெளியே வரவே இல்ல என்று விவேகா அழ ஆரம்பிக்க..
சரியா போயிடுமா மாமி! விடுங்க..
என்ன பிரச்சனைனாவது என்கிட்ட சொல்லுடா! என்னால தாங்க முடியல. என் பையன ஒரட்டு போய் பாத்துட்டு வந்துடுறேன் என்று விவேகா மேலே ஏறச் செல்ல போக, வேண்டாம் மாமி! என தடுத்தான் சக்தி..
என்னடா ஆச்சு சொல்லேன் என்று விவேகா அழ ஆரம்பித்தார்.
அது மீனாட்சிக்கு!..
என்ன அவங்க வீட்ல ஒத்துக்களையா? ஒத்துக்கலைன்னா என்ன? தூக்கிட்டு வந்து என் பையனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று விவேகா போக..
அது கொஞ்சம் பிரச்சனையாகி போச்சு மாமி. புரிஞ்சுக்கோங்க. நான் தீரன் கூட போயிட்டு வரேன். எல்லாம் சரியா போயிடும். ப்ளீஸ் இப்ப நீங்க அவனை பார்த்தீங்கன்னா உடைஞ்சு போயிடுவீங்க. நான் சொல்றதை கேளுங்க போயிட்டு வாங்க. என்று அனுப்பினான் விவேகா திரும்பி திரும்பி பார்த்துச் செல்ல.. நீங்க கவலைப்படாதீங்க. நாங்க கிளம்பும்போது அவன் உனக்கு போன் பண்ணுவான் என்று உறுதியளித்தான் சத்யதேவ்.
சரி என்று விவேகா ரிதம் இருக்கும் வீட்டுக்கு கிளம்பினார். இங்கே ருத்ரன் அதே இடத்தில் நிலை குத்தி நின்று கொண்டிருக்க.. சத்யதேவ் ஒரு பெருமூச்சுடன் மேலே வந்தவன். ருத்ரனை பார்த்ததும் சோர்வாகிப் போனான்.
தீரா என்னடா? பண்ற?
என்ன மாமா மீனாட்சி என்கிட்ட வந்துடுவா தானே! அவளுக்கு ஒன்னும் ஆகாது தானே என்று மீண்டும் அழ ஆரம்பித்தான்.
டேய் முதல்ல போய் அங்க என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வோம். அது எப்படி திடீர்னு புள்ளைக்கு ஏதாவது ஆகும்?. அவ என்ன சொல்லிட்டா இங்க இருந்து போனா? என்று சத்திய தேவ் கேட்க..
அவங்க அக்காவுக்கு கல்யாணம்ன்னு சொன்னா..
எங்க கல்யாணமாம்?
அது ராமேஸ்வரத்தில் பக்கத்தில் தேவிபட்டினத்தில் இருந்து சொன்னா என்று அழுதான் ருத்ரன்.
சத்யதேவ் தீவிரமாக யோசித்தவன் ஒருவேளை உங்களோட காதல் விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சு அவளுக்கு அவங்க மாமன கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களோ?
இருக்கவே இருக்காது! என்னோட மீனாட்சி என்றைக்கும் அப்படி ஒரு காரியத்தை பண்ண மாட்டா! என்று அங்கிருக்கும் இடத்தில் இருக்கும் பொருளை தேடினான். எந்த பொருளும் கிடைக்காமல் போக வேகமாக சுவற்றில் தன்னைத்தானே குத்திக் கொள்ள ஆரம்பித்தான்.
சத்யதேவ் வேகமாக அவனது அருகில் சென்று என்னடா தீரா இது? நான் ஒரு பைத்தியக்காரன் தெரியாமல் இந்த விஷயத்தை சொல்லிட்டேன். அங்க போய் பார்க்கலாம். என்ன நடந்தாலும் சரி நான் அவளை உன் கூட கண்டிப்பா சேர்த்து வைத்துவிடுவேன். யாரை கல்யாணம் பண்ணி இருக்கான்னு பாத்துக்கலாம். என்று சொல்ல..
அப்போ அவர் உயிரோடு இருப்பா தான என்று மீண்டும் அதுதான் ருத்ரன் சத்ய தேவ் ஒரு பெருமூச்சு விட்டபடி, இப்போ நமக்குன்னு எதுவுமே தெரியாது. அங்க போனாதான் எல்லாமே தெரியும். நீ பிரஷ் ஆகி வா என்று அவன் கூடவே சென்று குளிக்க வைத்து அழைத்து வந்தான். தன் தம்பியை போல, அதற்கு மேலாக ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல ருத்ரனை பார்த்துக்கொண்டான் சத்யதேவ்.
அவர்கள் இருவரும் அடுத்த அரை மணி நேரத்தில் அனுப்பூர் கிளம்பினார்கள். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பெங்களூரில் இருந்து அனுப்பூருக்கு போய் சேர்ந்தார்கள்.. எங்க அவங்களோட வீடு இருக்கு?. உனக்கு தெரியுமா? நீ எத்தனை தடவை இந்த இடத்துக்கு வந்திருக்க?. என்று சத்யதேவ் கேட்க
ருத்ரனின் கண்கள் அலைபாய்ந்து கொண்டு வீடு எங்க இருக்குன்னு தெரியாது. நான் அவளை கோவில்ல தான் பார்ப்பேன்.. தெப்பக்குளத்துகிட்ட வருவா.
அப்புறம் இதுதான் அவங்களோட சொந்த ஊரா? என்று சத்ய தேவ் கேட்க.. அவங்க பூர்வீகம் இதுதான் ஆனா அவங்க செட்டில் ஆனது கும்பகோணம் என்று கூறினான் ருத்ரன்.
அப்படியா சரி இரு நீங்க யார்கிட்டயாவது விசாரிப்போம் என்று பக்கத்தில் இருக்கும் ஒரு நபரிடம் இங்கு மீனாட்சி வீடு எங்கங்க இருக்கு என்று கேட்க..
மீனாட்சியா எந்த மீனாட்சி? என்று அவர் திரும்பி கேட்டார்.
பொண்ணு அய்யர்வால் பொண்ணு என சத்ய தேவ் சொல்ல தங்கமீனாச்சி என ருத்ரன் முந்திக்கொண்டு சொன்னான்.
அந்த புதியவர் இருவரையும் பார்த்துவிட்டு அக்ரஹாரம் பக்கம் கேளுங்க பா!! அது இந்த பக்கம் இருக்கு. அங்கே போய் கேளுங்கோ கேளுங்க. ருத்ரன் சத்திய தேவ் இருவசும் மீனாட்சி வீட்டை நோக்கி சென்றார்கள்.
ருத்ரன் கூட வருவது சத்ய தேவ்க்கு சரியாக பட வில்லை. டேய் வா என்று மீண்டும் கார் பக்கம் சென்றவன் போனை எடுத்தான்.
என்னாச்சு மாமா என்று ருத்ரன் அவனை பின்னால் கேட்க..
நீ கொஞ்சம் பொறுமையா அமைதியா இரு. நான் ரெண்டு மூணு போன் கால் பண்ணிட்டு வரேன். என்று திரும்பி கொஞ்சம் எட்ட சென்றான். ஆனால் கழுகு பார்வையை ருத்ரனின் மீது பதித்தான் சத்யதேவ். போன் செய்த பத்து நிமிடங்களில் அனைத்து செய்திகளும் வந்து சேர்ந்தது.
நிஜமாவே உண்மைதானா? என்ன ஆச்சு என்று அனைத்தும் கேட்டான் சத்திய தேவ். மறுமுனை சொன்ன அனைத்து விவரங்களையும் கேட்டவனுக்கு முகம் எல்லாம் அதிர்ச்சியில் மாறிப்போனது.
ருத்ரன் விட்டோதியாக தன்னை போல நடக்க ஆரம்பித்தான். தெப்பக்குளத்து கோயிலை நோக்கி சத்யதேவ் அவனை பாலோ செய்து கொண்டே போன் பேசிக் கொண்டே பின் தொடர்ந்தான்.
சரி இன்னொரு தடவை விசாரிக்க முடியுமா? என்று சத்திய தேவ் போனில் கேட்க..
நம்பிக்கையான இடத்தில் இருந்து தான் சார் நமக்கு தகவல் வந்திருக்கு என்று அந்த பக்கம் பதில் கிடைத்தது.
சரி சரி ஓகே நான் பாத்துக்கிறேன் என்று போனை வைத்தவன் ருத்ரனின் அருகில் சென்றான் சத்தியதேவ்.
டேய் எங்கடா போற?
மாமா இங்க தான் மாமா நானும் என் மீனாட்சியும் பாத்துக்குவோம். மொத மொதல்ல நான் பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சதே அவளுக்காக தான். முத முதல்ல அவளை நான் பார்த்ததே இங்க இருந்தா மினி பஸ்ல தான். அவ பஸ் ஸ்டாண்ட்ல இருந்து அனுபூர் டிக்கெட் எடுப்பா! அப்போ தான் நான் அவளை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். கண்ணுக்கு மை வச்சுக்கிட்டு நல்லா அலங்காரம் பண்ணிக்கிட்டு என்னை உதட்டை சுளிச்சு சுழிச்சு என்றவன் முகம் சிரிப்பில் இருந்து அப்படியே வறுத்தத்துக்கு மாறியது.
டேய் போதும் வேண்டாம் வா போலாம் என்று இழுத்தான் சத்ய தேவ்..
என்னாச்சு மாமா அவ எப்படி இருக்கா? என்று ருத்ரன் மீண்டும் புரியாமல் என்ன என்னவோ பிதற்றினான்.
வா அவங்க வீட்டுக்கு போய் பாத்துட்டு வந்துடலாம் என்று செல்ல..
அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது. சத்யதேவ் மற்றும் ருத்ரன் இருவரும் அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். மாமா நீங்க விசாரிச்ச இடத்துல என்ன மாமா சொன்னாங்க என்று ருத்ரன் துக்கம் தொண்டையை அடைக்க கேட்க..
ருத்ரா நீ பையன்டா!.. என்றவன். அவனிடம் கொஞ்சம் கம்பீரமா இரு எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண கத்துக்க! இப்படி அழக்கூடாது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது. என்று புத்திமதி கூறினான் சத்திய தேவ்.
மாமா நான் மீனாட்சி பத்தி கேட்டுட்டு இருக்கேன். நீங்க பேசுறது ஒன்னும் சரி இல்லையே என உடையும் நிலையில் இருந்தான் ருத்ரன்.
சத்ய தேவ் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நேராக ருத்ரனை அழைத்துக் கொண்டு மீனாட்சி என் வீட்டு பக்கம் சென்றார்கள். அவர்களின் வீட்டின் முன் ஒரே கூட்டமாக இருந்தது. முச்சந்தியில் பத்து செய்ததற்கு சாட்சியாக குடங்கள் உடைக்கப்பட்டு, அந்த வீடு ஈம சடங்கு செய்தது போல காட்சி அளித்தது. அப்போதே ருத்ரனுக்கு அங்கு இருக்கும் சூழ்நிலையை பார்த்ததும் உடல் நடுங்க.. சத்ய தேவ் அவன் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டான்.
என்னங்க மீனாட்சி என்று சத்ய தேவ் அங்கிருக்கும் ஒருவரிடம் கேட்க..
அங்கிருந்த நபர் நீங்க ரெண்டு பேரும் யாரு என விசாரித்துக் கொண்டிருக்க,
அய்யோ போய்ட்டியா தங்கம்! என் தங்க மீனாட்சி போய் சேர்ந்துட்டா! என் முத்துவும் போயிட்டா என்று உள்ளுக்குள் ஓலம் கேட்டது. அவ்வளவுதான் ருத்ரன் அதே இடத்தில் டம்மென அமரந்தான் .
சத்யதேவ் அவனது நிலையை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். அங்கு சென்றதும் தான் முதல் முக்கியமான அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஒரு படத்தில் இரட்டை பெண்கள் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார்கள் முத்துமீனாட்சி, தங்க மீனாட்சி என்று எழுதியிருக்க.. அங்கு தான் தெரிந்தது அனைத்து விஷயங்களும்..
என்னங்க இது? என்று சத்ய தேவ் படத்தை சுட்டிக் காட்டி கேட்க.
ரெண்டு லட்சுமியையும் கடலோட சுருட்டிண்டு போய்ட்டான் காலன். நான் தான் பாவி ஆகிட்டேன். பாவி நான் தான் கல்யாணம் பண்ண போய் என் கையாள பத்து பண்ணிட்டேனே என்று தலைதலையாக அடித்துக் கொண்டார் சுப்ரமணியன்.
என்ன சுப்பிரமணியனா? ஆக்சுவலா இந்த இடத்தில் பார்த்தசாரதி தான அடிச்சுக்கணும்?
பார்த்தா எங்கே?
( இது இன்னொரு ட்விஸ்ட் இது இப்போதைக்கு ரிவில் ஆகாது. இது ரிவீலாக இன்னும் நிறைய எபிசோட்ஸ் இருக்கு. வெயிட் பண்ணுங்க.)
என்னங்க சொல்றீங்க என்று படத்தையும் பார்த்தவனுக்கு பார்த்த சத்திய தீவுக்கு உள்ளம் கணத்து போனது.
மீனாட்சி எங்களை விட்டு போயிட்டா என்று அவர்கள் அழுது கொண்டிருக்க அழாதே டா சுப்பு என செல்ல மீனாட்சி அந்த வீட்டின் முதிய கிழவி மகனை தேற்றினார்.
உடனே வெளியே சலசலப்பு சத்தம் கேட்டது. என்ன அந்த தம்பி இவ்வளவு வேகமா ஓடுறாப்புல? என்று அங்கிருக்கும் அனைவரும் பேசுவது கேட்க..
சத்தியதேவ் வேகமாக வெளியே சென்றவன். ருத்ரனை பார்க்க. ருத்ரன் பைத்தியக்காரத்தனமாக ஓடிக்கொண்டிருந்தான்.
ஆம் ருத்ரன் ஓடிக்கொண்டிருந்தான். நான் இனி உயிரோட இருக்க மாட்டேன். என் மீனாட்சி இல்லாத உலகத்துல இனி நானும் இருக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஓடியவன். எதிரில் ஒரு ராட்சச கிணறு தெரிய போத்தன அதில் விழுந்துவிட்டான்.
தீராஆஆஆ! ர என கத்திக்கொண்டே அந்த கிணற்றில் விழுந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ருத்ரனை மீட்டெடுத்து மேலே கொண்டு வந்தான் சக்தி அங்கு இருக்கும் ஊர்காரர்களின் உதவியுடன்.
வெளியே வந்ததும் சத்யதேவ் அவனை கன்னம் கன்னமாக அறிய ஆரம்பித்தான். என்ன காரியம் பண்ணிருக்க நீ? என்று அடித்தான்.
மாமாஆஆ! மீனாட்சி! மீனாட்சி இல்லாத வாழ்க்கை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது என்று ருத்ரன் மீண்டும் கதற ஆரம்பித்தான்.
இப்போ அதுக்கு என்ன பண்ண போற? அவ போய் சேரனும்ன்னு இருக்கு. சேர்ந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது. அவ்வளவுதான் இதுதான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ்ந்தாகணும். நீ போ செத்துப் போ. இப்ப என்ன நீ சாகணும்? அவ்வளவுதானே போய் செத்துப் போ! உனக்கு உன்னோட மனசு உன்னோட மீனாட்சிதானே முக்கியம். உனக்கு உன்னோட பெத்தவ விவேகா முக்கியம் இல்ல. நான் முக்கியம் இல்ல. உன்ன சுத்தி இருக்குற யாருமே முக்கியம் இல்ல அப்படித்தானே! உன்னோட கங்கா அம்மாச்சி முக்கியம் இல்ல, உன்னோட தாத்தா ஆத்தா யாருமே உனக்கு முக்கியம் இல்ல. உனக்கு மீனாட்சி தான் முக்கியம் போ! போய் செத்துப் போடா! போ இனி உன்னை நான் தடுக்க மாட்டேன் என்று சத்யதேவ் வேக மூச்சுடன் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
ருத்ரன் தாவி கொண்டு வந்து சத்யதேவை அணைத்துக் கொண்டான். மாமா மீனாட்சி போயிட்டா மாமா என்று கதறினான்.
சத்யதேவ் அவனை அனைத்தவாறு இது இதுக்கு நாம என்ன பண்ண முடியும்? சொல்லு வா நாம போகலாம் நீ என்ன முடிவு எடுத்திருக்க? என்று கேட்க..
நான் நான் என்ன பண்ணட்டும் என்று ருத்ரன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.
ஏதோ ஒரு காரணம் இது இப்படித்தான் நடக்கும் என்று எழுதியிருக்கு. அதை ஏத்துக்கிட்டு தான் ருத்ரன் ஆகணும் வா போகலாம் என்று அவனை அழைத்துச் சென்றான்.
அதன் பிறகு அவனது வாழ்க்கையை சூனியமாகி போனது கிட்டத்தட்ட வாரம் மாதம் ஆனது. வீட்டிலேயே அடங்கி கிடந்தான் விவேகாவிற்கு உயிரே இல்லை.
இன்பா அங்கு நடக்கும் விஷயத்தை பார்த்ததும் ஒன்றும் புரியாமல் என்னாச்சு என்று கேட்க..
சத்தியதேவ் ஒன்று விடாமல் அனைத்தையும் இன்பாவிடம் கூறிவிட்டான். ரணமாக இருந்தது தனது காதல் தோல்வி கொடுமைய விட என் மகனுக்குமா? இப்படி ஒரு நிலைமை வரவேண்டும்? என்று இன்பாவிற்கு மிகவும் வேதனையாக இருக்க..
இதை ஏண்டா என்கிட்ட முன்னாடியே சொல்லல என்று இன்பா வருத்தத்துடன் கேட்டார்.
அது இவ்வளவு சீரியஸா ஆகும்னு நினைக்கல மாமா. இது எப்படின்னு தெரியல அங்க எதுவோ சரியில்லாத ஃபீல் இருக்கு மாமா என்றான் சத்ய தேவ்.
என்ன சொல்ற என்று இன்பா கேட்க..
ஆமா செத்தது ரெண்டு பொண்ணு! இது ருத்ரனுக்கு தெரியும்னு தெரியுனு தான் நினைக்கிறேன். அக்கா கல்யாணன்னு சொன்னா! ஆனா இதுவரைக்கும் மீனாட்சி ரெட்ட குழந்தை அப்டின்னு என்கிட்ட ருத்ரன் சொன்னதே கிடையாது என்று சத்திய தேவ் கூறினான். .
இன்பா அவனைப் பார்த்து அதை அவகிட்ட கேட்காதே இன்னும் உடைந்து போவான். என கூறியவர். வேற எதுவும் விசாரிக்க முடிஞ்சதா!
நான் அக்கம் பக்கத்தில் விவரம் சேகரிக்க ஆள் வச்சிட்டு வந்திருக்கேன். என் மச்சான அப்படியே விட மாட்டேன். என்றான் சத்ய தேவ்.
விவேகாவிற்கு மீனாட்சியை இழந்த விஷயம் தெரிந்ததும் அவரும் துடித்து போனார். தன் மகனின் அருகிலேயே அமர்ந்த அவன் இருக்கும் நிலையின் துயரத்தை பார்த்து நொந்து போனார்.. நீராகாரம் எதுவும் இறங்கவில்லை நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.
இந்த அனைத்து விஷயங்களும் அப்படியே இரண்டு மாதம் ஓடிச் செல்ல ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் இன்பாவின் வீட்டில் தான் இருந்தார்கள். மற்றபடிக்கு இந்த விஷயம் யாருக்குமே தெரியாது வெளியில்..
இப்போ அடுத்த என்ன பண்றது என்று அவர்கள் தீவிரமாக யோசித்து கொண்டு இருக்க அந்த நேரம் இன்பாவுக்கு போன் வந்தது.
ஹலோ என்றவர் ஓரமாக சென்று பேசிக் கொண்டிருக்க வீட்டிற்கு லெட்டர் ஒன்று வந்தது சத்யதேவ் லெட்டர் வாங்கிக் கண்டு உள்ளே வர
Indian armed force ( indian army ) selection லெட்டர் வந்திருக்கு அதுவும் ருத்ரணுக்கு? யாரு அப்ளை பண்ணது? என சத்ய தேவ் இன்பாவை பார்க்க.. விவேகா வின் பார்வை கோபத்துடன் திரும்பியது.
நான் தான் அப்ளை பண்ணேன் என உணர்ச்சி துடைத்த முகத்துடன் இறங்கி வந்தான் ருத்ரன் sorry ரௌத்திரன்..
இன்பா.. ? விவேகா..? ரிதம்..? சத்ய தேவ்..?
வருவான் …