EPISODE 51
சட்டையை பிடித்து இதழோடு இதழ் பொருத்தி கொண்டு உடலில் பல ரசாயன மாற்றத்தை கொடுத்தவள். இது நன்றி முத்தம் என சர்வ சாதாரணமாக கூறுகிறாள். அவள் கொடுத்த முத்தம் எத்தகைய பிரளயத்தை ஏற்படுத்தியது? என்று சத்திய தேவுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்! என்ன இப்படி பண்ணிட்டா? இவனுக்கு என்ன ஆச்சு? எதுக்கு நமக்கு முத்தம் கொடுத்தா? என்று அந்த நாள் முழுவதும் அந்த முத்தத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.
எந்த வேலையும் ஓட வில்லை. கண்ணை மூடினால் அவள் தான் வந்து நின்று பெலேட் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறாள். ரிதம் அழகாக பெலேட் டான்ஸ் ஆடுவாள். அதை சிறுவயதில் பார்த்திருக்கிறான். குட்டை பாவடை போட்டுக்கொண்டு அவளுடைய கூந்தலை மடித்து உச்சியில் கொண்டை, கூடவே கால் நுனி விரல்களில் நின்று கொண்டு சுழற்றி சுழற்றி சுற்றிக்கொண்டே அழகாக ஆடுவாள்.
பெலட் டான்சின் முக்கியத்துவம் ஒரு கதையை அதனுடைய இசைக்கு ஏற்ப உடலை வளைத்து கூடவே உணர்வுகளையும் வெளி படுத்தி ஆடும் ஒரு கலை தான் பெலட் டான்ஸ்! இந்த ஆட்டத்தை ஆடும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உடலமைப்பு நேர்கோட்டில் இருக்கும். முதுகு தண்டு நேராக அவர்களின் இடை தப்பையாக அதை விட கால்களில் உள்ள விரல்களிலேயே அவர்களின் மொத்த வித்தையும் அடங்கி இருக்கும். இது மேற்கத்திய நடனம் இதன் தாயகம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆனால் ஆர்ஜின் ரஷ்யா என சொல்ல படுகிறது. தூரிகா, நிலா, ருத்ரன், மகி, விவேகா என அனைவரும் பரத நாட்டியத்தில் வல்லமை படைத்தவர்களாக இருந்தாலும் ரிதம் பெல்லட் டான்ஸ்ல சிறந்தவள். இந்த ஆட்டத்தை முழுக்க முழுக்க விவேகாவுக்காக தான் கற்று கொண்டாள்.
(சரி கதைக்கு வருவோம்!)
நான் அவகிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது? அவளுக்கு நான் முத்தம் கொடுத்து இருந்திருக்க கூடாது! அதனால தான் அவ எனக்கு கொடுத்திருக்கா! என்ன பழி வாங்க கொடுத்தாலும், எதுக்கு கொடுத்தான்னு தெரியல! ஆனா இப்போ நிஜமாவே அந்த முத்தம் என்னை ஒவ்வொரு நாளும் வதைக்குது! இந்த எண்ணத்தை மொத்தமா வெளியேத்தணும்! அதுக்கு ஒரே ஒரு வழி ஹரிணி இங்க வரணும்? என்னோட வேலையில் நான் பிஸியா இருக்கணும்! என்று சக்தி தனக்கு தானே உறைத்து கொண்டான்.
ஆனாலும் அவனுடைய மனதில் ரிதமுடைய எண்ணங்கள் வரிசை கட்டி ஓடிக்கொண்டிருந்தது. அவள நான் எதுக்கு காப்பாத்தணும்? அவள் தப்பு பண்ணா நான் அடிச்சேன்! அவள் மேல எதுக்கு எனக்கு அந்த மாதிரி தப்பான பார்வை? அது ஹரிணி மேகா மட்டும் தான் வரனும்! என கண்ணை மூடி வலுக்கட்டாயமாக ஹரிணி பற்றி நினைக்க ஆரம்பித்தான். இனி அவ எப்படி போனால் என்ன? அவ மேல நமக்கு என்ன அக்கறை? அவ கஷ்டப்பட்டா நமக்கு என்ன? அவ அழுதா நமக்கு என்ன? அவன் மேலே நான் கோபத்தை கூட ஏன் காட்டணும்? அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! நம்ம வீட்டில் நடக்கும் எல்லா… எல்லாத்துக்கும் காரணம் யாருன்னு நமக்கே தெரியும்! நித்தின் பிரகாஷ் மித்துன் தேவ் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்! அவளுக்கே தெரிஞ்சாலும் அதை வெளிக்காட்ட மாட்டா! அவங்களுக்கு மட்டும்தான் சப்போட் பண்ணுவா! நமக்கு இனி அவள் விசயம் தேவை இல்லை! அவள் பக்கமே போக கூடாது! என்ன ஆனாலும் சரி! இனி ரிதம் பக்கம் சத்ய தேவ் போகமாட்டான் என உறுதிமொழி எடுத்துக் கொண்டான்.
(மன்மதன் தவத்தில் இருந்தாலும் ரதி விடமாட்டாள். பார்ப்போம்! இவன் மன்மதனா? இல்லை சிவனா? ரிதம் யார்? ரதியா? சக்தியா? இல்லை வேறு ஒரு பெண்ணா? பார்ப்போம்! ஆமா இப்போ எல்லாம் சத்ய தேவ் கனவில் சதி வரதே இல்லையே? எங்கே டி சதி போன? நீ யாரு டி? என்னை சுத்தி வேற நிறைய சதி வேலை நடக்குது! )
*
Gold fish! Gold fish! எங்கே? எங்கே? என கண்ணை அந்த இடத்திலிருந்து சுற்றிப் பார்த்து தேடிக்கொண்டே தன்னுடைய காந்த கண்ணழகியை அந்த முழு ஜங்ஷன் விடாமல் தேடினான்.
இந்த அவளுக்கு போன் செய்யவும் முடியாது அவளுடைய தோப்பனார், அத்திம்பெர், அண்ணா, அம்மா, மன்னி, மாமி என மொத்த குடும்பமும் அவளை ட்ரெயின் வைக்க வந்திருக்கும்.. கூடவே துணைக்கு வேறு ஆள் அனுப்புகிறேன் என்று அவளுடைய தோப்பனார் பார்த்தசாரதி மீனாட்சியிடம் வாது கட்டிக் கொண்டிருக்க..
அட போங்கோ பா! இப்படியே நான் எல்லா இடத்துக்கும் துணையோடு போனேன்னா! நாளைக்கு எல்லாரும் என்னை தயிர்சாதம்ன்னு சொல்லி கிண்டல் செய்வர்!. ஏன்பா என்னை நினைச்சு சங்கட பதாதீங்கோ! பிளீஸ் பா! புரியலையா நோக்கு! இல்லனா நான் பெங்களூர் போகளை! இங்கேயே நோக்கு பக்கத்திலேயே இருந்திடுறேன்!
இல்ல டி குழந்தை எனக்கு உன் மேல அக்கரையான பயம் தான டி! என்று கூடவே அவளுடைய தாய்மாமனும் சேர்ந்து கொள்ள..
மாமா உங்களுக்கு என்ன பயம் நான் நல்லா தான் இருக்கேன்! தைரியமா இருக்கேன்! இங்கே இருக்கு பெங்களூர்! நன்னார்க்கும் என்ற மீனாட்சி சொல்ல..
பார்த்தசாரதி தன் மகளின் தலையை வருடிவிட்ட சரி பத்திரமா போயிட்டு வா! அங்க போனதும் எனக்கு போன் பண்ணு! பக்கத்துல யார் எது கொடுத்தாலும் எதுவும் வாங்க கூடாதம்மா! காலையில் எழுந்ததும் ஸ்நானம் பண்ணிடுடனும், துளசி மாடம் சுற்றி பிராத்தனை பண்ணிண்டு தான் படிக்க போகனும்! பொம்மனாட்டி அடக்க ஒழுக்கமா இருக்கணும்! என்று அவர்கள் என் பாசையில் அவளுக்கு அறிவுரை கூற..
நொடிக்கு 100 முறை ஒரு ஜோடி கண்கள் தீண்டி அவளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. அந்த கண்களுக்கு சொந்தக்காரன். வேறு யார்? ருத்ரனே தான்!
மீனாட்சி முகத்தை சுருக்கி கொண்டே சரிங்கப்பா நீங்க போயிட்டு வாங்க! எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல! அப்படியே இருந்தாலும் அங்க ரமா மாமி ஆத்துக்கு போயிடுறேன்! பக்கத்தில் தானே இருக்கு! லீவு கிடைச்சதும் உடனே கண்ண மூடி திறக்கறதுக்குள்ள நான் வீட்டுல இருப்பேன்! பெரிய மீனாட்சிய பாத்துக்கோங்க! என்னை பார்த்தால் அவளை பார்க்க தேவையில்லை! உங்களுக்கே தெரியும் தானே! என்று மீனாட்சி சொல்ல..
எப்படி இருந்தாலும் உன்னோட ஞாபகம் எங்களுக்கு வரும் டி! என்று பார்த்த சாரதி தன் பெண்ணை பிரியும் கவலையுடன் கூற..
சரி நான் உங்க கூடவே வரட்டுமா?
சரி ஓகே சும்மா சொன்னேன்! பத்திரம் மீனாட்சி என்று அவர்கள் சொல்லவும்.. டிரெயின் விசில் சத்தம் கேட்டது.
அவள் பத்திரமாக உள்ளே செகன்ட் ac யில் ட புக் செய்து இருக்க உள்ளே அவளை அமர வைத்து விட்ட திருப்தியுடன் மனதில் ஒரு சில பய பதட்டத்துடன் பார்த்த சாரதி கீழே இறங்கினார்.
அவளுடைய மொத்த குடும்பமும் அவளை வழி அனுப்பி வைக்க கைகளை ஆட்டிக் கண்டே விடை பெற்றாள். மீனாட்சி!..
அந்த ட்ரெயின் சிறிது தூரம் கூட சென்றிருக்காது. அதற்குள் அவளுக்கு போன் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்தது .
வேற யார் அந்த படவா ராஸ்கல் ருத்ரன் தான்! அவ போன் பண்ண ஆரம்பிச்சுட்டாரா? என சிரித்துக் கொண்டே போன எடுத்து பார்த்தாள். நிறைய தவறவிடப்பட்ட அழைப்புகள். கூடவே குறுஞ்செய்திகள் நிறைய இருந்தது. ஆனால் மீனாட்சி எதையும் கண்டு கொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டு அவளுடைய இடத்தில் அமர்ந்து கொண்டிருக்க..
TTR சரி பார்த்து கொண்டே மீனாட்சி பார்த்த சாரதி வந்தாச்சா என்று கேட்க
அவங்க வர்ல சார் என்ற குரல் கேட்டது.
மீனாட்சி எழுந்து நின்று டிடிஆர் கிட்ட டிக்கெட் காட்டும் நேரம்..
உடனே அந்த பொண்ணு வரல சார் என்று பின்னால் குரல் கேட்டது.
அப்படியா நீங்க யாரு என்று கேட்க
நான் தான் இந்த பொண்ணோட ஹஸ்பண்ட் கட்டிக்க போறவன் என்று ருத்ரன் கூறினான்.
சரி என்று TTR அந்த இடத்தை விட்டு கடந்து விட..
ருத்ரன் மீனாட்சியை முறைத்து பார்த்தான்.
அவள் அவனை யாரோ? எவரோ? என்பது போல் பார்க்க
அவளுடைய பெட்டி கைப்பை அனைத்தையும் தூக்கிக்கொண்டு நேராக ஃபர்ஸ்ட் ஏசி பக்கம் நடந்து செல்ல ஆரம்பித்தான்.
ஹலோ சார் உங்களை தான் எங்கே என்னோட பெட்டிய தூக்கிண்டு போறீர்! நில்லுங்கோ நில்லுங்கோ என்று அவள் கத்திக் கொண்டே ஒரு ருத்ரனின் பின்னால் செல்ல..
அவன் அவளை துளியும் கண்டு கொள்ளவில்லை.
நேராக அவர்கடைய கம்பார்ட்மெண்ட் வந்ததும் தான் நின்றான்.
கதவை திறந்து கொண்டு அவளுடைய பொருளை வைமம்..
அந்த ஏ ஒன் கம்பார்ட்மெண்டுக்கு உண்டான டி டி ஆர் வந்தார்.
ஆர் மீனாட்சி யாரு? ருத்ரன் யாரு? என்று கேட்க..
இவங்க தான் ஆர் மீனாட்சி! நான் தான் ருத்ரன் என்று விளக்கம் கூறினான்.
ஓகே இரண்டு பேரும் இருக்கீங்க? என்று செக் செய்து விட்டு டீடி சென்று விட்டார்.
ஆர் மீனாட்சி என்ற மீனாட்சி ஷாக்காக ருத்ரனை பார்க்க..
ஆமாண்டி நீதான் பியூச்சர்ல ஆர் மீனாட்சி ஆகப் போறவ என்று அவளின் கையைப் பிடித்து அவன் பக்கம் இழுத்தான். என்ன பண்றீங்க? தள்ளி போங்கோ என்று அவள் சிணுங்கி கொண்டே விலக
என்ன டி தள்ளி போற? உன்ன பாக்குறதுக்காக காவிரி ஆத்த கடந்த வந்து, சேர்ந்து இருக்கேன் டி! டி கடங்காரி! அவ்வளவுதானா என்று அவன் உதட்டை பிதுக்க..
நோக்கு என்னதான் வேணும்? என்று மீனாட்சி கேட்டாள்.
நீதான் வேணும் என்று அவளை கட்டிக் கொண்டான். ருத்ரன் கட்டி கொண்டான்.
மூச்சு முட்றது! என் பிராணன் போகுது நா! என மீனாட்சி சொல்ல..
ஹே அண்ணா சொன்ன மவளே பிச்சு! ஒழுங்கா ருத்ரன் சொல்லு! இந்த மடிசார், மாவடு எல்லாம் உன் ஆத்தோட நிருத்திக்க! என சொல்லி கொண்டே அவளின் வாசத்தை உள் இழுத்தான்.
தீரா விடுங்கோ! விடுங்கோ! மிம்மம் என மீனாட்சி சிணுங்கினாள்.
*
இங்கே நிதின் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு ICUவில் இருக்க கனிரா அங்கும் இங்கும் பதட்டத்துடன் அண்ணனுக்கு என்ன ஆகுமோ! என பயத்தில் நடந்து கொண்டிருக்க..
ஹரிணி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.
தொடரும்..
நாளை பார்ப்போம்!
EPISODE 52
இங்கே நிதின் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு ICUவில் இருக்க கனிரா அங்கும் இங்கும் பதட்டத்துடன் அண்ணனுக்கு என்ன ஆகுமோ! என பயத்தில் நடந்து கொண்டிருக்க..
ஹரிணி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.
இப்போ உனக்கு நிம்மதியா டி! என் அண்ணாவை பிளான் பண்ணி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து தள்ள தானே போன இப்போ உனக்கு சந்தோசமா இருக்குமே என கனி வாயிற்கு வந்த படி ஹரிணியை திட்டி கொண்டிருக்க ..
என்ன பேசுறீங்க மேடம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல! அவருக்கு என ஹரிணி ஆரம்பிக்க..
எனக்கு தெரியும் டி என் அண்ணா நல்லா இருக்க கூடாது! அது தானே உனக்கு ஆசை! என கோபத்தில் ஆக்ரோசமாக கத்தி கொண்டிருந்தாள் கனிரா!
ஹரிணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தார்.
டாக்டர் என் அண்ணா! அவனுக்கு இப்போ எப்படி இருக்கு? என அதீத அக்கறை பாசத்தில் கணி கேட்க..
இப்போ அவருக்கு எந்த பிரச்னையும் இல்ல மேடம்! அவரோட உடம்புல பாம்பு விஷம் நல்ல வேலை அதிகமா உள்ளே போல! ஃபர்ஸ்ட் எயிட் நடந்திருக்கு போல அது தான் அவரை காப்பாற்றி இருக்கு! அவரு safe மேடம்! இருந்தாலும் அவரை பார்த்துக்க உள்ளே டியூட்டி டாக்டர், நர்ஸ் அப்டின்னு ஒரு டீமே இருக்கு! நீங்க கவலை படாதீங்க என டாக்டர் கூறி விட்டு சென்றார்.
ஹரிணி அவளை கண்டு கொள்ளாமல் நேராக நிதின் இருக்கும் அறையின் கண்ணாடி வட்டத்தில் இருந்து எட்டி பார்த்தாள். ஆரடியில் கம்பீர தோற்றத்துடன் படுத்து இருந்தான்.
ஹரிணி ஒரு பெரிய மூச்சை விட்டு அவளுடைய உயர் அதிகாரிகளிடம் அவனை பத்திரமாக மீட்ட விவரத்தை கூறி விட்டு நேராக அவள் தங்கி இருக்கும் இடத்துக்கு சென்றாள்.
அவள் சென்றதும் கணி தன் அண்ணனுக்கு மயக்கம் தெளியும் வரை காத்திருந்தாள்.
அன்று முழுவதும் நிதின் மயக்கத்தில் தான் இருந்தான்.
அவளுடைய இடத்துக்கு வந்த ஹரினிக்கு மனம் முழுவதும் நிதின் பேசிய பேச்சிலும் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தான் ஓடி கொண்டிருந்தது. என்ன முடிவெடுப்பாள்? முடிவில் எந்த மாற்றமும் இல்லை! இப்பொழுதும் அவள் மனதில் சத்ய தேவ் தான் இருக்கிறான்.
கல்லை கூட கரைய வைக்கலாம்! ஆனால் ஒரிஜினல் அக்மார்க் ஹனியை கரைய வைக்க முடியாதாம்! ஆம் ஒரிஜினல் தேன் கரையாதாம்! இங்கிருந்து வேலையை விட்டு சென்று விட வேண்டும் என முடிவை எடுத்து விட்டு அதற்காக டிசைன் லெட்டர் தயார் செய்து கொண்டிருந்தாள்.
*
தூறிகா அவ்வளவு கெஞ்சி பார்த்ததும் அப்பாயின்மெண்ட் மாற்றி கொடுக்க மாட்டேன். ஏற்கனவே ஒரு வாய்ப்பை தவற விட்ட உனக்கு நிச்சயம் அப்பாயின்மெண்ட் கிடையாது. என அந்த ஆள் அவளை திட்டி அனுப்பி விட்டான்.
அவள் நொந்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள். சைத்ரேஷ்! எப்டி உன்னை பார்ப்பேன்! அடுத்த அப்பாயின்மெண்ட் வாங்க இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ணனுமோ? அப்போ நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என நினைத்து கொண்டே சென்றாள்.
அவள் ஸ்கூட்டியில் எலக்ட்ரானிக் சிட்டியில் மாட்டி கொள்ள வியர்வை விறுவிறுக்க ஒழுக நின்று கொண்டிருந்தாள். அருகில் கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்து நின்றது.
காரில் ac அவனை குளிர்வித்து கொண்டிருக்க அதை விட வெளியில் வெயிலில் வாடி தன் முகத்தை குளிர்விக்க கைகளை முகத்தில் ஆட்டி கொண்டே நின்றவளின் மேல் பார்வை படிய மச்சக்காரி என அவனுடைய இதழ் முணுமுனுக்க உடனே கார் கதவை மெதுவாக இறக்கினான்.
மேடம் கவனிக்க வில்லை. ஹே சூர்ய பகவானே! அச்சோ டாடி உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா! எங்க மேல இருக்க லவ் இப்படி உங்க மொத்த லைட்டையும் காட்டி எங்களை சிவக்க வச்சா நியாயமா? என கேட்டு கொண்டு இருந்தாள். முருகா எப்போ இந்த டிராபிக் க்ளீன் ஆகும் படுத்தி எடுக்குது! என இதழ் சொல்லி கொண்டிருக்க..
ஆர் you ஆடியபில் என போனில் பேசி கொண்டே மாஸ்கை கழட்டினான்.
ஒரு ஆண் குரல் அருகில் கேட்கவும் சட்டென திரும்பி பார்த்தவள். அங்கே இருக்கும் நபரை பார்த்ததும் கண்களில் நெருப்பு ஒரு நிமிடம் பறந்தது. வேறு யார் அவளின் நினைவில் சர்வேஷ் ஆனால் அங்கு காருக்குள் இருந்ததோ சைத்ரேஷ்!
ஹலோ சார் நீங்க சர்வேஷ் தானே! என கண்கள் விரிய அவன் பக்கம் திரும்பி கேட்க..
அவன் புருவம் சுருக்கி கொண்டே அவளை பார்த்தான்.
சார் எனக்கு ரொம்ப பெரிய ஆசை கனவு ஒன்னு இருக்கு சார்! என தூறிகா ஆரம்பிக்க..
நீங்க என்னோட fan ஆ? என வழக்கம் போல் இவளும் எல்லா பெண்களை போல தான் என தன் அண்ணனோட ஆடோகிராப் புக் எடுத்து கிழித்து ஒன்றை அவள் பக்கம் நீட்டினான்.
ஆனால் பெண்ணவள் அடுத்து சொன்ன வார்த்தையில் பூலோகம் தாண்டி மேல் லோகம் சென்று விட்டு வந்தான்.
அப்படி என்ன தான் சொன்னாள்?
சார் if you don’t mind நான் உங்க தம்பி மிஸ்டர் சைத்ரேஷ்! அவரை மீட் பண்ண ஆசை! அவரு கிட்ட எனக்கு பிஸ்னஸ் பத்தி அவரோட கம்பனியில் லீகல் அட்வைசரா ஜாயின் பண்ண எனக்கு ஆசை! என்று தூறிகா கன்னடத்தில் சொல்லி கொண்டிருக்க..
அதுக்கு? என்றான் தமிழில் தன் உணர்வை தன் தாயின் மொழியிலும் அவளின் தாய் மொழியிலும் இன்னும் நெருங்கி விட்டேன் உன்னை என்று சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தான். சைத்ரேஷ்வரன்!
தூரிகா கண்ணில் ஆச்சரியம் மின்ன தமிழ்! தமிழா! இன்னும் வந்துட்டோம் சார்! அப்போ பிளீஸ் எனக்கு! என்னை யாருமே உள்ளே விட மாட்டராங்க! ஓவரா பாலிடிக்ஸ் பண்றாங்க அந்த ஆபிஸ் உள்ளே ஒரு விசிட்டர் டோக்கன் கூட கிடைக்க மாட்டிக்கிது! என வியர்த்து வடியும் முகத்தில் அவன் கண்களுக்கு மட்டும் கார்கால சங்கீதமாக இருந்தாள்.
சைத்துவுக்கு அத்தனை பூரிப்பு மகிழ்ச்சி! இப்போ உங்களுக்கு என்ன வேணும்? என்றான்.
தூறிகா புன்னகையுடன் உங்க ரெக்கமன்டைசன் வேணாம்! அதுக்கு பதில் வேற வேணும்!
என்ன? என அவன் ஆர்வமாக முகத்தை பார்த்தாலும் அந்த எள் மச்சத்தை நொடிக்கு ஒரு முறையாவது பார்வை வருடாமல் இருந்தது இல்லை. உன் அனுமதி இல்லாமல் உன்னை ரசிக்கும் இந்த பாவத்துக்கு விமோட்ச்சனம்! அடுத்த ஜென்மத்தில் மெய் பிறவி கூட வேணாம் உன் உதட்டில் ஒட்டி இருக்கும் மச்சமாக பிறந்தால் எல்லா பிறவி பயனும் அடைவேனடி என கவிதை வேறு கால நேரா பார்க்காமல் வந்து குவிந்து கொண்டிருக்க
சார்! என மீண்டும் அதட்டினாள்.
அவன் பார்வையை கூறாக்கி என்னோட தம்பிக்கு recomendation பிடிக்காது! இப்போ உனக்கு என்ன வேணும்?;
உங்க recomendation எனக்கு வேணாம்! என தூரிகா துள்ளி கொண்டு பதில் கொடுத்தாள்.
உடனே அவன் புருவம் நெருக்கி கொண்டே அப்டியா அப்போ எதுக்கு என் கிட்ட பேசுறீங்க? என கேட்டான்.
அது என அவள் முறைத்து கொண்டே ஒன்னும் வேணாம்! உங்க I மின் உங்க தம்பியொட office ல நடக்குற politics பத்தி சொல்ல வந்தேன்! இட்ஸ் ஒகே! அடுத்த வருஷம் appointment கிடைச்சா கூட நான் பார்த்துக்கிறேன்! உங்க ஹெல்ப் எனக்கு வேணாம்! என கண்ணை உருட்டி கொண்டு சொன்னவள் திரும்ப..
சரியாக பச்சை சிக்னல் விழுந்து அனைவரும் சிட்டாக பறக்கும் நேரம்..
அவனோட free time protocol எனக்கு தெரியும்! மேடம் reccomedation இல்லாம பார்க்க விருப்பமா இருந்தால் என்னை ஃபாலோ பண்ண வேணாம்! என சொல்லி கொண்டே நேராக அமர்ந்தான்.
என்ன சொல்லிட்டு போறான்?
ஓ ச்ச! ஹான் இவனை ஃபாலோ பண்ணனும் போலயே! என சலித்து கொண்டே அவனுடைய வண்டியை ஃபாலோ செய்தாள்.
அப்படியே முன்னாடி இருக்கும் மிரரில் பார்க்க மச்சக்காரி வேகமாக காரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போ மேடம் க்கு என்னை பார்க்கணுமாமே! அதை என் கிட்டயே விசாரிச்சு இருக்காள்! நல்ல வேளை இந்த இடத்தில் சர்வேஸ் இல்ல! என்னை பார்க்க என் கிட்டயே help இல்லாம மேடம்க்கு சிபாரிசு! ம்ம் interesting மச்சக்காரி! ஆமாம் என்று அவளின் நாட்டிய உடையில் பார்த்தானோ அன்றில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறான். அவளின் நடையே நாட்டியம் போல இருக்கே! இன்னும் நாட்டியம் எப்டி இருக்கும்! என மனம் ஆயிரம் ஆசை கொண்டது.
சார் நம்ம இப்போ? என ஓட்டுநர் பேச வர..
எல்லா மீட்டிங் scadule எல்லாம் கேன்சல் பண்ணுங்க! இப்போதைக்கு நான் எந்த காலும் அட்டென் பண்ண மாட்டேன்! நேரா cafe coffee day போங்க என கூறினான்.
சார் பெரிய தம்பி கிட்ட பேசணும் அப்டின்னு சொன்னீங்களே! என ஓட்டுநர் சொல்ல வர..
சைத்ரேஸ் முகம் ஒரு நிமிடம் சுருங்கி விரிந்து அது இப்போ அண்ணா இருக்கும் ஹோட்டல் க்கு வண்டிய விடுங்க! என கூறினான்.
அண்ணனை பார்ப்பதற்கு முன் அவளிடம் பேசி நாளை நேராக ஆபிஸ் வந்து பார்த்து விட வேண்டும் என நினைத்தான்.
அதே போல ஹோட்டல் பக்கம் கார் சென்றது. இதழ் ஒரு பெரு மூச்சை விட்டு இறங்கினாள்.
நேராக சைத்ரேஷை ஃபாலோ செய்து கொண்டு உள்ளே சென்றாள். அவள் சுற்றிலும் தேடிக் கொண்டிருக்க.. ஹலோ மேடம் நான் எங்க இருக்கேன். என்று குரல்
உதட்டை கடித்துக் கொண்டே சாரி சார் என்று கண்களை மூடி செல்லமாக திறந்தவள். நேராக அவன் பக்கம் நடந்து செல்ல.
இப்போ உங்களுக்கு என்ன டீடைல் வேணும் என்றுசர்வேஸ் வேடத்தில் இருக்கும் சைத்ரேஸ் என்னும் கேட்க
அதுதான் சார் நான் தான் தெளிவா சொன்னேன் எனக்கு சைத் ரேஸ் சார பாக்கணும்? நீங்கள் அட்வைஸ்ரா அட்லீஸ்ட் ஒரு ஸ்டூடண்டா அவருடைய ஆபீஸ்ல ஜாயின் பண்ணனும் அதுதான் என்னோட ட்ரீம் என்று கண்களை விரித்து கூறிக் கொண்டிருந்தாள்.
அப்படியா உங்க பேர் என்ன நீங்க என்ன படிச்சு இருக்கீங்க ஐ மீன் உங்கள பத்தி தெரிஞ்சா தானே நான் என் தம்பி கிட்ட அனுப்ப முடியும் என்று சாப்ட் ஆக கூறிக் கொண்டிருந்தான்m
என்னோட பேரு தூரிகா என்று சொல்ல வந்தவள். என் பேரு துவாரகா! நான் அட்வைகேட்டா practise எடுத்திட்டு இருக்கேன். இது தான் என்னோட ஐடி என்று எடுத்து நீட்டினாள்.
தொடரும்..
EPISODE 53
அண்ணா வரதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் என சர்வேஸ்சின் அசிஸ்டன்ட் பிரபு கிட்ட கேட்டான். சைத்ரேஷ்!
இப்போ தான் ஒரு ஃபைட் சீன் பினிஷ் ஆச்சு இனிமே தான் கிளம்பி வருவோம் சார்! இப்போ நீங்க ஸ்பாட்டுக்கு வந்தாச்சா? என பிரபு கேட்டான்.
அது ஒன்னும் பிரச்னை இல்லை நீங்க பொருமையாகவே வாங்க! பெருசா இங்கே ஒன்னும் பிரச்னை இல்லை! என கூறினான்.
அந்த நேரம் தான் அந்த ஓட்டலை சுற்றி பார்த்து கொண்டே நேராக சைத்ரேஸ் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். தூரிகா .
கண்களை பட்டாம்பூச்சி போல படபடத்து கொண்டே அந்த அழகான கூர் நாசி! கோவைக்காய் போல மூக்கு, இரண்டு அதரத்தை படைக்க பிரம்மன் பெரும் பாடு பட்டிருப்பான் போல! இப்படி ஒரு அழகான ஹோம்லி வித் சோசியல் பியூட்டிய பார்த்ததே இல்லை.
இவள் பிரம்மனால் படைக்கபட்டவள் இல்ல! சூர்ய தேவ் மற்றும் மகிளினியின் மேல அளவில்லா காதலில் பித்து பிடித்து பிறந்து இருக்கிறாள். பாவை அவள்?
இங்கே நிதின் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு ICUவில் இருக்க கனிரா அங்கும் இங்கும் பதட்டத்துடன் அண்ணனுக்கு என்ன ஆகுமோ! என பயத்தில் நடந்து கொண்டிருக்க..
ஹரிணி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.
இப்போ உனக்கு நிம்மதியா டி! என் அண்ணாவை பிளான் பண்ணி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து தள்ள தானே போன இப்போ உனக்கு சந்தோசமா இருக்குமே என கனி வாயிற்கு வந்த படி ஹரிணியை திட்டி கொண்டிருக்க ..
என்ன பேசுறீங்க மேடம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல! அவருக்கு என ஹரிணி ஆரம்பிக்க..
எனக்கு தெரியும் டி என் அண்ணா நல்லா இருக்க கூடாது! அது தானே உனக்கு ஆசை! என கோபத்தில் ஆக்ரோசமாக கத்தி கொண்டிருந்தாள் கனிரா!
ஹரிணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தார்.
டாக்டர் என் அண்ணா! அவனுக்கு இப்போ எப்படி இருக்கு? என அதீத அக்கறை பாசத்தில் கணி கேட்க..
இப்போ அவருக்கு எந்த பிரச்னையும் இல்ல மேடம்! அவரோட உடம்புல பாம்பு விஷம் நல்ல வேலை அதிகமா உள்ளே போல! ஃபர்ஸ்ட் எயிட் நடந்திருக்கு போல அது தான் அவரை காப்பாற்றி இருக்கு! அவரு safe மேடம்! இருந்தாலும் அவரை பார்த்துக்க உள்ளே டியூட்டி டாக்டர், நர்ஸ் அப்டின்னு ஒரு டீமே இருக்கு! நீங்க கவலை படாதீங்க என டாக்டர் கூறி விட்டு சென்றார்.
ஹரிணி அவளை கண்டு கொள்ளாமல் நேராக நிதின் இருக்கும் அறையின் கண்ணாடி வட்டத்தில் இருந்து எட்டி பார்த்தாள். ஆரடியில் கம்பீர தோற்றத்துடன் படுத்து இருந்தான்.
ஹரிணி ஒரு பெரிய மூச்சை விட்டு அவளுடைய உயர் அதிகாரிகளிடம் அவனை பத்திரமாக மீட்ட விவரத்தை கூறி விட்டு நேராக அவள் தங்கி இருக்கும் இடத்துக்கு சென்றாள்.
அவள் சென்றதும் கணி தன் அண்ணனுக்கு மயக்கம் தெளியும் வரை காத்திருந்தாள்.
அன்று முழுவதும் நிதின் மயக்கத்தில் தான் இருந்தான்.
அவளுடைய இடத்துக்கு வந்த ஹரினிக்கு மனம் முழுவதும் நிதின் பேசிய பேச்சிலும் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தான் ஓடி கொண்டிருந்தது. என்ன முடிவெடுப்பாள்? முடிவில் எந்த மாற்றமும் இல்லை! இப்பொழுதும் அவள் மனதில் சத்ய தேவ் தான் இருக்கிறான்.
கல்லை கூட கரைய வைக்கலாம்! ஆனால் ஒரிஜினல் அக்மார்க் ஹனியை கரைய வைக்க முடியாதாம்! ஆம் ஒரிஜினல் தேன் கரையாதாம்! இங்கிருந்து வேலையை விட்டு சென்று விட வேண்டும் என முடிவை எடுத்து விட்டு அதற்காக டிசைன் லெட்டர் தயார் செய்து கொண்டிருந்தாள்.
*
தூறிகா அவ்வளவு கெஞ்சி பார்த்ததும் அப்பாயின்மெண்ட் மாற்றி கொடுக்க மாட்டேன். ஏற்கனவே ஒரு வாய்ப்பை தவற விட்ட உனக்கு நிச்சயம் அப்பாயின்மெண்ட் கிடையாது. என அந்த ஆள் அவளை திட்டி அனுப்பி விட்டான்.
அவள் நொந்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள். சைத்ரேஷ்! எப்டி உன்னை பார்ப்பேன்! அடுத்த அப்பாயின்மெண்ட் வாங்க இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ணனுமோ? அப்போ நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என நினைத்து கொண்டே சென்றாள்.
அவள் ஸ்கூட்டியில் எலக்ட்ரானிக் சிட்டியில் மாட்டி கொள்ள வியர்வை விறுவிறுக்க ஒழுக நின்று கொண்டிருந்தாள். அருகில் கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்து நின்றது.
காரில் ac அவனை குளிர்வித்து கொண்டிருக்க அதை விட வெளியில் வெயிலில் வாடி தன் முகத்தை குளிர்விக்க கைகளை முகத்தில் ஆட்டி கொண்டே நின்றவளின் மேல் பார்வை படிய மச்சக்காரி என அவனுடைய இதழ் முணுமுனுக்க உடனே கார் கதவை மெதுவாக இறக்கினான்.
மேடம் கவனிக்க வில்லை. ஹே சூர்ய பகவானே! அச்சோ டாடி உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா! எங்க மேல இருக்க லவ் இப்படி உங்க மொத்த லைட்டையும் காட்டி எங்களை சிவக்க வச்சா நியாயமா? என கேட்டு கொண்டு இருந்தாள். முருகா எப்போ இந்த டிராபிக் க்ளீன் ஆகும் படுத்தி எடுக்குது! என இதழ் சொல்லி கொண்டிருக்க..
ஆர் you ஆடியபில் என போனில் பேசி கொண்டே மாஸ்கை கழட்டினான்.
ஒரு ஆண் குரல் அருகில் கேட்கவும் சட்டென திரும்பி பார்த்தவள். அங்கே இருக்கும் நபரை பார்த்ததும் கண்களில் நெருப்பு ஒரு நிமிடம் பறந்தது. வேறு யார் அவளின் நினைவில் சர்வேஷ் ஆனால் அங்கு காருக்குள் இருந்ததோ சைத்ரேஷ்!
ஹலோ சார் நீங்க சர்வேஷ் தானே! என கண்கள் விரிய அவன் பக்கம் திரும்பி கேட்க..
அவன் புருவம் சுருக்கி கொண்டே அவளை பார்த்தான்.
சார் எனக்கு ரொம்ப பெரிய ஆசை கனவு ஒன்னு இருக்கு சார்! என தூறிகா ஆரம்பிக்க..
நீங்க என்னோட fan ஆ? என வழக்கம் போல் இவளும் எல்லா பெண்களை போல தான் என தன் அண்ணனோட ஆடோகிராப் புக் எடுத்து கிழித்து ஒன்றை அவள் பக்கம் நீட்டினான்.
ஆனால் பெண்ணவள் அடுத்து சொன்ன வார்த்தையில் பூலோகம் தாண்டி மேல் லோகம் சென்று விட்டு வந்தான்.
அப்படி என்ன தான் சொன்னாள்?
சார் if you don’t mind நான் உங்க தம்பி மிஸ்டர் சைத்ரேஷ்! அவரை மீட் பண்ண ஆசை! அவரு கிட்ட எனக்கு பிஸ்னஸ் பத்தி அவரோட கம்பனியில் லீகல் அட்வைசரா ஜாயின் பண்ண எனக்கு ஆசை! என்று தூறிகா கன்னடத்தில் சொல்லி கொண்டிருக்க..
அதுக்கு? என்றான் தமிழில் தன் உணர்வை தன் தாயின் மொழியிலும் அவளின் தாய் மொழியிலும் இன்னும் நெருங்கி விட்டேன் உன்னை என்று சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தான். சைத்ரேஷ்வரன்!
தூரிகா கண்ணில் ஆச்சரியம் மின்ன தமிழ்! தமிழா! இன்னும் வந்துட்டோம் சார்! அப்போ பிளீஸ் எனக்கு! என்னை யாருமே உள்ளே விட மாட்டராங்க! ஓவரா பாலிடிக்ஸ் பண்றாங்க அந்த ஆபிஸ் உள்ளே ஒரு விசிட்டர் டோக்கன் கூட கிடைக்க மாட்டிக்கிது! என வியர்த்து வடியும் முகத்தில் அவன் கண்களுக்கு மட்டும் கார்கால சங்கீதமாக இருந்தாள்.
சைத்துவுக்கு அத்தனை பூரிப்பு மகிழ்ச்சி! இப்போ உங்களுக்கு என்ன வேணும்? என்றான்.
தூறிகா புன்னகையுடன் உங்க ரெக்கமன்டைசன் வேணாம்! அதுக்கு பதில் வேற வேணும்!
என்ன? என அவன் ஆர்வமாக முகத்தை பார்த்தாலும் அந்த எள் மச்சத்தை நொடிக்கு ஒரு முறையாவது பார்வை வருடாமல் இருந்தது இல்லை. உன் அனுமதி இல்லாமல் உன்னை ரசிக்கும் இந்த பாவத்துக்கு விமோட்ச்சனம்! அடுத்த ஜென்மத்தில் மெய் பிறவி கூட வேணாம் உன் உதட்டில் ஒட்டி இருக்கும் மச்சமாக பிறந்தால் எல்லா பிறவி பயனும் அடைவேனடி என கவிதை வேறு கால நேரா பார்க்காமல் வந்து குவிந்து கொண்டிருக்க
சார்! என மீண்டும் அதட்டினாள்.
அவன் பார்வையை கூறாக்கி என்னோட தம்பிக்கு recomendation பிடிக்காது! இப்போ உனக்கு என்ன வேணும்?;
உங்க recomendation எனக்கு வேணாம்! என தூரிகா துள்ளி கொண்டு பதில் கொடுத்தாள்.
உடனே அவன் புருவம் நெருக்கி கொண்டே அப்டியா அப்போ எதுக்கு என் கிட்ட பேசுறீங்க? என கேட்டான்.
அது என அவள் முறைத்து கொண்டே ஒன்னும் வேணாம்! உங்க I மின் உங்க தம்பியொட office ல நடக்குற politics பத்தி சொல்ல வந்தேன்! இட்ஸ் ஒகே! அடுத்த வருஷம் appointment கிடைச்சா கூட நான் பார்த்துக்கிறேன்! உங்க ஹெல்ப் எனக்கு வேணாம்! என கண்ணை உருட்டி கொண்டு சொன்னவள் திரும்ப..
சரியாக பச்சை சிக்னல் விழுந்து அனைவரும் சிட்டாக பறக்கும் நேரம்..
அவனோட free time protocol எனக்கு தெரியும்! மேடம் reccomedation இல்லாம பார்க்க விருப்பமா இருந்தால் என்னை ஃபாலோ பண்ண வேணாம்! என சொல்லி கொண்டே நேராக அமர்ந்தான்.
என்ன சொல்லிட்டு போறான்?
ஓ ச்ச! ஹான் இவனை ஃபாலோ பண்ணனும் போலயே! என சலித்து கொண்டே அவனுடைய வண்டியை ஃபாலோ செய்தாள்.
அப்படியே முன்னாடி இருக்கும் மிரரில் பார்க்க மச்சக்காரி வேகமாக காரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போ மேடம் க்கு என்னை பார்க்கணுமாமே! அதை என் கிட்டயே விசாரிச்சு இருக்காள்! நல்ல வேளை இந்த இடத்தில் சர்வேஸ் இல்ல! என்னை பார்க்க என் கிட்டயே help இல்லாம மேடம்க்கு சிபாரிசு! ம்ம் interesting மச்சக்காரி! ஆமாம் என்று அவளின் நாட்டிய உடையில் பார்த்தானோ அன்றில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறான். அவளின் நடையே நாட்டியம் போல இருக்கே! இன்னும் நாட்டியம் எப்டி இருக்கும்! என மனம் ஆயிரம் ஆசை கொண்டது.
சார் நம்ம இப்போ? என ஓட்டுநர் பேச வர..
எல்லா மீட்டிங் scadule எல்லாம் கேன்சல் பண்ணுங்க! இப்போதைக்கு நான் எந்த காலும் அட்டென் பண்ண மாட்டேன்! நேரா cafe coffee day போங்க என கூறினான்.
சார் பெரிய தம்பி கிட்ட பேசணும் அப்டின்னு சொன்னீங்களே! என ஓட்டுநர் சொல்ல வர..
சைத்ரேஸ் முகம் ஒரு நிமிடம் சுருங்கி விரிந்து அது இப்போ அண்ணா இருக்கும் ஹோட்டல் க்கு வண்டிய விடுங்க! என கூறினான்.
அண்ணனை பார்ப்பதற்கு முன் அவளிடம் பேசி நாளை நேராக ஆபிஸ் வந்து பார்த்து விட வேண்டும் என நினைத்தான்.
அதே போல ஹோட்டல் பக்கம் கார் சென்றது. இதழ் ஒரு பெரு மூச்சை விட்டு இறங்கினாள்.
நேராக சைத்ரேஷை ஃபாலோ செய்து கொண்டு உள்ளே சென்றாள். அவள் சுற்றிலும் தேடிக் கொண்டிருக்க.. ஹலோ மேடம் நான் எங்க இருக்கேன். என்று குரல்
உதட்டை கடித்துக் கொண்டே சாரி சார் என்று கண்களை மூடி செல்லமாக திறந்தவள். நேராக அவன் பக்கம் நடந்து செல்ல.
இப்போ உங்களுக்கு என்ன டீடைல் வேணும் என்றுசர்வேஸ் வேடத்தில் இருக்கும் சைத்ரேஸ் என்னும் கேட்க
அதுதான் சார் நான் தான் தெளிவா சொன்னேன் எனக்கு சைத் ரேஸ் சார பாக்கணும்? நீங்கள் அட்வைஸ்ரா அட்லீஸ்ட் ஒரு ஸ்டூடண்டா அவருடைய ஆபீஸ்ல ஜாயின் பண்ணனும் அதுதான் என்னோட ட்ரீம் என்று கண்களை விரித்து கூறிக் கொண்டிருந்தாள்.
அப்படியா உங்க பேர் என்ன நீங்க என்ன படிச்சு இருக்கீங்க ஐ மீன் உங்கள பத்தி தெரிஞ்சா தானே நான் என் தம்பி கிட்ட அனுப்ப முடியும் என்று சாப்ட் ஆக கூறிக் கொண்டிருந்தான்m
என்னோட பேரு தூரிகா என்று சொல்ல வந்தவள். என் பேரு துவாரகா! நான் அட்வைகேட்டா practise எடுத்திட்டு இருக்கேன். இது தான் என்னோட ஐடி என்று எடுத்து நீட்டினாள்.
தொடரும்..
EPISODE 54
சைத்ரேஷ் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்து கொண்டிருக்க..
ஹலோ சார்! என தூரிகா கையை ஆட்டினாள்.
சட்டென தந்நிலைக்கு வந்தவன். ஆமா எங்க கம்பனியில் பாலிடிக்ஸ் நடக்கிறதா மேடம் சொன்னீங்களே! அப்படி என்ன பாலிடிக்ஸ் சொன்னால் நானும் தெரிஞ்சுப்பேன்.
அதை நான் சைத்ரேஷ் சார் கிட்ட சொல்லிக்கிறேன். நீங்க பெரிய மனசு பண்ணி அவரோட புரோட்டோகால் சொல்லுங்க! நான் அவரை மீட் பண்ணி வேலை விசயமா பேசுகிறேன். என தூரிகா கூறினாள்.
அப்டியா என இரு புருவத்தையும் சைத்ரேஷ் தூக்கினான்.
“ம்ம் ஆமா!” என அந்த ஹோட்டலை சுற்றி பார்வையை சுழற்றினாள்.
உங்க நேம் என்ன?
“துவாரகா!” என அவனை பார்த்து கூறியவள். என்ன உங்களுக்கு பாதுகாப்பு கம்மியா இருக்கு! ஆக்டர் பின்னாடி நாலஞ்சு பீம் பாய்ஸ் இருப்பாங்க! சொல்லுங்க சர்வேஷ் சார்! என கேட்டாள்.
அது அது வந்து ஹான் இது எங்க ஹோட்டல் அதனால் கொஞ்சம் பாதுகாப்பு கம்மி! அப்புறம் நீ என்னோட படம் பார்த்து இருக்கியா? என சர்வேஷ் நடித்த படங்களை பற்றி சைத்ரெஸ் கேட்டான்.
அவள் திறு திருவென முழிக்க..
“பதில் சொல்லு மா!”
எனக்கு கன்னட படம் நான் பார்த்தது இல்ல. ஒன்லி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இங்கிலீஷ் தான் பார்ப்பேன்.
ஏன்? நடிப்பு பிடிக்கலயா?
நடிக்கிறவங்கள பிடிக்கல என தூரிகா சட்டென கூறினாள்.
என்ன? என சைத்ரேஷ் அவளை ஊடுருவும் பார்வை சிந்த..
இல்ல அது வந்து எனக்கு… என பெரு மூச்சை விட்டவள். ஒபானா சொல்ல போனால் எனக்கு மூவீஸ் பிடிக்காது! டைம் வேஸ்ட் ஒருத்தனை ஹீரோவா காட்ட மொத்த யூநிட்டும் மென கெட்டு படம் எடுத்து அவனுக்கு போதாதைக்கு ஹீரோயின் வேற! நான் குட்டி வயசா இருக்கும் போது கேட்ட பாடல்களோட அர்த்தம், என் அம்மா அப்பா கூட கேட்டது, எல்லாம் இப்போ டோட்டளி வேற! ஆனால் ஒரு ஹீரோவால தான் அந்த மொத்த unit குடும்பமும் நம்பி இருக்கு! இதை தப்புன்னும் சொல்ல முடியாது ரைட்டுண்ணும் சொல்ல முடியாது. எனக்கு விருப்பம் இல்ல அவ்ளோ தான்! என அழகாக கூறி முடித்தாள். தூரிகா
“ம்ம் இம்பிரசிவ் ஆன்சர்” என வாய் மொழியாக மெட்சி கூறினான். சைத்ரேஷ்
தூரிகா அவனுடைய கண்களை பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே மெய் மறந்தாள். என்ன கண்கள்? என்ன மூக்கு! ரசிக்கும் படியான முகம் தான் அதனால் தான் குறுகிய காலங்களில் நிறைய பெண்களின் மனதை கவர்ந்து தினமும் ஒரு சூப்பர் மாடல் மற்றும் வளர்ந்து வரும் நடிகையுடன் படுக்கை பகிர்வு! நினைக்கவே கேவலமாக இருக்கிறது. என சர்வேஸ் பற்றிய மனம் முழுவதும் வெறுப்பும் வன்மமும் தப்பான அபிப்ராயம் மட்டும் தான் இருக்கிறது.
அவளை அணுவாக பதித்து கொண்டவன். எவரி வீக் சிவன் கோவில் சைத்ரேஷ் போவான். நீங்க அங்கே போனால் பார்க்கலாம்! என கூறினான்.
இதை கேட்டதும் சர்வேஷ் மேல் இருந்த எண்ணம் அப்படியே சைத்ரேஷ் மீது தாவி கொண்டு முடியை காதுக்கு ஒதுக்கியவள். அப்டியா ரொம்ப தேங்க்ஸ் சார்! என்ன டைம் அது மட்டும் சொல்லுங்க பிளீஸ் என கண்களால் கெஞ்சி கொண்டே கேட்டாள்.
அதுக்கு முன்னாடி ஒரு கண்டிசன் இருக்கு?
என்ன? சார் என விழி விரித்து அவனை பார்த்தாள்.
சைத்ரேஷ் முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு அவன் யார் கிட்டயும் அவ்ளோ சீக்கிரமா பேசிட மாட்டான். முக்கியமா அவனோட முகத்தை யார் கிட்டயும் காட்ட மாட்டான். நீங்க அவன் கிட்ட மெஸேஜ்ல தான் பேச முடியும்! ஐ மின் மெஸேஜ்ல தான் பதில் சொல்லுவான்.
ஏன் சார்? உங்க தம்பி ஊமையா?
அதில் கடுப்பாகி அவளை முறைத்தான்.
அச்சோ சாரி சாரி சார்! தெரிஞ்சு தான் கேட்டேன்! என்ன ஆச்சு? என தூரிகா கேட்க
“தெரிஞ்சு தான் கேட்டேன்!” என அவள் சொல்லிய வார்த்தைகள் அவனுக்கு கொஞ்சம் கோபத்தை தாண்டி பிடிக்க தான் செய்தது. கொஞ்சம் சிரிக்க..
தூரிகா மனதில் இந்த சிரிப்பை! இந்த சிரிப்பை உன் கிட்ட இருந்து பறிக்க தான் டா போறேன்! என கடவுளிடம் சத்யம் செய்து கொண்டாள்.
ஆனால் அவனுடைய சிரிப்பு பறி போகாது கூடவே சேர்ந்து தூரிகாவின் சிரிப்பு மற்றும் வாழ்க்கையே தலை கீழாக மாற போகிறது. அய்யோ நினைக்கவே பயமா இருக்கு சரி பார்ப்போம்!
சைத்ரேஷ் ஒரு சில நிமிடங்கள் கழித்து தந்நிலைக்கு வந்தவன். இந்த கேள்வி எல்லாம் நீங்க சைத்ரேஷ் கிட்ட கேட்டுகொங்க! என சொல்லும் போதே பணியாள் அவர்களுக்கான காபியை கொண்டு வைத்தார்.
சரிங்க சார் எத்தனை மணிக்கு அவர் வருவாரு? எந்த நாள்? என தூரிகா துருவி துருவி கேள்வி கேட்க..
சிவனுக்கு உகந்த நாள் எப்போவ்வொ அப்போ வருவாரு! என்ன டைம் ஹான் குளிகை! அண்ட் அது எப்போ அப்டின்னு சைத்ரேஷ் மேல ஆர்வமா இருக்க நீங்களே தெரிஞ்சுகோங்க என ஒரு மிடுக்கு குடித்து கொண்டே இதுக்கு மேல சொன்னால் recommend பண்ற மாதிரி ஆகிடும் மேடம்க்கு அதெல்லாம் பிடிக்காதே சர்வேஷ் ரூபத்தில் இருக்கும் சைத்ரேஸ் கூறினான்.
அப்டியா? என இரு புருவம் தூக்கியவள். ஆமா எனக்கு இது போதும் நான் சைத்துவ மீட் பண்ணிப்பேன். ரொம்ப தேங்க்ஸ் சார்! இனி முடிஞ்சா பார்ப்போம்! நீங்க கொஞ்சம் நாட் பேட் என சொல்லி கொண்டே எழுந்து நின்றாள். அவளுடைய கை பையில் இருந்து இரண்டு ஐநூறு தாள்கள் மற்றும் டிப் இது இரண்டையும் வைத்து விட்டு செல்ல..
என்ன மேடம்? இது என சைத்ரேஷ் கேட்டான்.
இதுவா! உங்க டீ அண்ட் என்னோட டீ ரண்டுக்கும் பணம் அப்புறம் டிப் இதெல்லாம் சர்வர்க்கு..
இது என்னோட ஹோட்டல்! என சைத்ரேஷ் சொல்ல..
தன் எதிரில் சர்வேஷ் உருவத்தில் இருக்கும் அவனை பார்த்து அதனால் தான் வச்சேன்! எனக்கு தன்மானம் முக்கியம்! யாரோட காசும் ஓசியும் எனக்கு வேணாம் என கூறி கொண்டே கிளம்பி சென்றாள்.
மச்சக்காரி! பிடிச்சிருக்கு டி! சத்தியமா! ஆனால் இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு! அதை நீ என்னை மீட் பண்ணும் போது பார்த்துக்கிறேன். என உதட்டை கடித்து தன் மனதில் பாதியாக இல்லை முழுமையாக கொடுத்து விட்டான் இதயத்தை நம் சைத்ரேஷ்வரன்.
எதிரில் இருக்கும் அவள் மிச்சம் வைத்த டீ கப்பை பார்த்தான் ஆசையுடன் அதை எடுத்து முகர்ந்து பார்க்க பூக்களில் இருக்கும் மகர்ந்த தூள்களை ஒன்றாக சேர்த்து தான் அந்த இதழை செய்து இருக்கிறான் போல அந்த பிரம்மன். அதற்கு திருஷ்டி என்று எள் மச்சம் வைத்து இன்னும் அழகு கூட்டி கொடுத்து இருக்கிறான். அவளின் வாசம் தனித்துவமாக இருந்தது.
வெயிட்டர் என அதிகாரத்துடன் அழைத்தான்.
சார் என அவர் வந்து நிற்க அவள் அருந்தி விட்டு வைத்த கப்பின் இன்னொரு முனையில் ஒரு மிடுக்கு குடித்து விட்டு சிரித்து கொண்டே அருகில் அவனுடைய கப்பில் ஊற்றியவன் ம்ம் இந்த கப்-அ வாஷ் பண்ணாம எனக்கு பார்சல் பண்ணி கொண்டு வாங்க! எதுவும் மாற கூடாது உடனே வேணும்! என கூறினான்.
ஓகே சார் என அவர் எடுத்து செல்ல..
துள்ளலுடன் அவன் அமர்ந்து கொண்டிருந்தான்.
அந்த நேரம் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சர்வேஷ் வந்து விட்டான். போல.. உடனே சைத்ரேஷ் முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டான். சர்வேஷ் மாஸ்க்கை கழட்டி கொண்டு இறங்கினான். அவனுக்கு மாஸ்க் போடும் பழக்கம் கிடையாது.
சைத்ரேஷ் எழுந்து நின்று நேராக அவர்கள் வழக்கமாக சந்திக்கும் அவர்களின் அறைக்கு சென்றான்.
சைத்ரேஸ்வரன் உள்ளே சென்று காத்திருக்க வந்துவிட்டான். சர்வாதிகாரி சர்வேஷ்வரன்.
உள்ளே அறைக்கு கதவை திறந்து வரும் போதே எதுக்கு கூப்பிட்ட? என தன் நகல் கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தது.
“அண்ணா!” என சைத்ரேஷ் மாஸ்கை கழட்டி கொண்டே அழைக்க
கேட்டதுக்கு பதில் மட்டும் சொல்லு! என சர்வேஷ் கூறினான்.
நாளும் கழிச்சு பங்குனி உத்திரம் அன்னிக்கு வீட்டில் வருசா வருசம் அந்த நட்சத்திரத்தில் நமக்காக வீட்டில் ஒரு சின்ன பூஜை நடக்கும் இந்த முறையும் அதே போல தான் அப்பா உன்னை வர சொன்னாரு! அதுக்கு கூப்பிட தான் வர சொன்னேன்.
பூஜை ஏற்பாடு யாரு! என சர்வேஷ் கேட்டான்.
அப்பா அண்ணா! என சைத்து சொல்ல..
பங்குனி உத்திரம் எல்லாம் கன்னடத்தில் செளிப்ர்ரேட் பண்ண மாட்டாங்கலே! இது யாரு ஏற்பாடு? என சர்வேஷ் கேட்க..
அது அம்மா அப்புறம் அப்பா சேர்ந்து தான் எல்லா ஏற்பாடும்! வா அண்ணா! நீ என சைத்து ஆரம்பிக்க.
அங்கே இருக்கும் யாரையும் எனக்கு பிடிக்காது. அது உனக்கே தெரியும்! சுத்தமா அந்த ஆளு! அவரோட மனைவி அதான் உன்னை பெத்தவ உன்னோட தங்கச்சி இமையா! என சர்வேஷ் முகமெல்லாம் சுருக்கி கோபத்தில் சொல்லி கொண்டிருக்க..
அண்ணா! அவங்க உன்னோட குடும்பம்! உனக்கு தான் முதலில் அம்மா! அதே போல அவள் நம்ம தங்கச்சி! இப்படி நடிக்காதே! என சைத்து சொல்ல…
எனக்கு தங்கை ஸ்ருதி மட்டும் தான்! என்னோட வீடு இது இல்ல! எனக்கு பாட்டி தான் எல்லாமே! அங்கே இருக்கும் யாரையும் எனக்கு சுத்தமா பிடிக்காது! நான் வர மாட்டேன்னு தெரியும் சோ டைம் வேஸ்ட் பண்ணாத! என அவன் வெளியே வர..
அண்ணா பிளீஸ்! எனக்காக! எனக்காக வர மாட்டியா! என சைத்து தன் அண்ணனின் பின்னால் சென்றான்.
“என்னை டென்ஷன் பண்ணாத டா!” என கோபமாக சொல்லி விட்டு அவன் நடந்து செல்ல..
சைத்து அதே இடத்தில் நின்றான்.
போ! நான் வர மாட்டேன்! என சர்வேஷ் நடக்க..
அம்மா விரதம் இருக்காங்க நம்ம பூஜை முடிஞ்சு தான் சாப்பிடுவாங்க! நீ வர மாட்ட தானே! சரி உன்னை பார்க்க அம்மா நீ இருக்கும் இடத்துக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க! கூடவே டாடியும் வருவாரு! நானும் வருவேன்! என மாஸ்கை போட்டான்.
அந்த ஆளுக்கும் உன்னை பெத்தவளுக்கும் வேலை இல்லையா? என பற்களை கடித்து கொண்டு அவனுடைய கழுத்தை பிடிக்க..
கன்னட ஆக்டர் இதை மட்டும் ஏன் தமிழில் பேசணும் கன்னத்தில் பேச வேண்டியது தானே! என்ன தமிழ் படம் நடிக்கும் ஐடியா இருக்கா! அண்ணா என சிரித்து கொண்டே நீ வராதே நாங்க வருகிறோம்! என சைத்து கூறினான்.
அவனுடைய கழுத்தை கோபத்துடன் விட்டு தலை கோதி அசுவாச படுத்தியவன். வந்து வச்சிக்கிறேன். என கோபமாக சொல்லி விட்டு அவன் நகர..
சைத்து சிரித்து விட்டு நேராக தன் தந்தைக்கு போன் செய்து அண்ணா ஒத்திக்கிட்டான். என சொல்லி கொண்டிருக்க.
அந்த நேரம் வெயிட்டர் கையில் தூரிகா குடித்த காபி கப்பை பேக் செய்து கண்ணாடி மெழுகில் உறைய வைத்தது போல எடுத்து வந்து அழகாக சார் நீங்க கேட்ட இந்த காபி கூட அப்படியே உறைய வச்சு மெமரி கிஃப்ட்டா கொண்டு வந்திருக்கேன் என புன்னகையுடன் நீட்டினான்.
வாட் ஈஸ் திஸ்? நான் கேட்டெனா? என சர்வேஷ் கேட்க..
ஆமா சார்! என நீட்ட..
அந்த கப் அதை உற்று பார்த்தான்.
வாங்கிகொங்க சார்! என மீண்டும் வெயிட்டர் நீட்ட..
அதை சர்வேஷ் வாங்கி எதிரில் இருக்கும் டஸ்ட் பின்னில் வீச!
சார் என வெயிட்டர் அதை ரெடி செய்த துயரத்தில் கேட்க..
சர்வேஷ்வரன் கிட்ட குரல் உயருதே? என அரக்கன் போல பார்த்தான்.
அண்ணா! என தவிப்புடன் சைத்து ஓடி வர..
ஸாரி சாரி சார்! என வெயிட்டர் நடுங்கி கொண்டிருக்க..
இனி இந்த ஹோட்டல் தாண்டி எங்கே நீ போனாலும் வேலை கிடைக்காது! ஏன்னா இதே சம்பளத்தில் இதே வேலையில் இனி எப்போவும் இருக்க போற! எனக்கு இனி நீ வேலை செய்ய போற! என சர்வேஷ் சொல்லி கொண்டிருக்க..
சார் சார் என அந்த வெயிட்டர் கெஞ்சி கொண்டிருந்தான்.
என்ன ஆச்சு? என சைத்து கேட்க..
உங்க கெஸ்ட் குடிச்ச காபி கப் தெரியாமல் இவர் கிட்ட நீட்டிட்டென்! என அந்த வெயிட்டர் சொல்ல..
சர்வேஷ் பார்வை தன் நகலை துளைத்தது.
தொடரும்..
EPISODE 55
சார் சார் என அந்த வெயிட்டர் கெஞ்சி கொண்டிருந்தான்.
என்ன ஆச்சு? என சைத்து கேட்க..
உங்க கெஸ்ட் குடிச்ச காபி கப் தெரியாமல் இவர் கிட்ட நீட்டிட்டென்! என அந்த வெயிட்டர் சொல்ல..
சர்வேஷ் பார்வை தன் நகலை துளைத்தது.
உடனே சைத்ரேஷ் தன் அண்ணனின் அருகில் வந்தவன். அண்ணா நான்னு நினைச்சு உன் கிட்ட பேசிட்டாரு! நீ போ நான் பார்த்துக்கிறேன். எனக் கூறினான்.
சர்வேஷ் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் முன்னால் நடந்தான். அவனுடைய பாதுகாவலர்கள் அனைவரும் பின்னால் தொடர.. அவனுக்கு உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.
எப்படி? என்னை அவனோடு ஒப்பிட்டு அவன் என நினைத்து என் கிட்ட கொடுக்க முடியும்? எனக்கு உலகத்திலேயே பிடிக்காத ஒரே ஒரு எதிரி என் கிட்ட இருந்து எல்லாத்தையும் பரிச்சு சொகுசா வாழும் ஒருத்தன் என்னை போலவே முகத்தை வைத்து இருக்கும் இவன் தான்! சைத்ரேஸ்வரா! உன்னை அடி ஆழத்தில் இருந்து வெறுக்கிறேன் டா! உன்னை எப்டி என் கூட ஒப்பிட முடியும்! அந்த வெயிட்டர்! இரு டா B* உன்னை கை கால் உடைச்சு போடுறேன்! என கருவி கொண்டு சென்றான்.
சர்வேஷ் அனைத்தையும் மீறி அவ்னை பொறுத்து கொள்ள ஒரே ஒரு காரணம் அவனுடைய தந்தை வழி பாட்டி மட்டும் தான்! அவர் சொன்னதன் பெயரில் தான் நடிக்கவே ஆரம்பித்தான். இந்த முகம் இந்த வெளி உலகத்துக்கு இந்த முகத்தை வைத்து கொண்டு இருவர் இருக்கிறார்கள் என தெரிய கூடாது. ஒருவன் மட்டும் தான் அது சர்வேஷ்வரன் மட்டும் தான் இருக்க வேண்டும் தன் பேரன் தான் அனைத்து இடத்திலும் முதன்மையில் இருக்க வேண்டும் என்பது அவனுடைய பாட்டியின் எண்ணம். அதே போல வளர்ந்து வந்து அனைவரையும் ஆட்டி படைக்கிறான்.
என்னோட ஷூட் முடியட்டும் அப்புறம் உன்னை வந்து வச்சிக்கிறேன் என நினைத்து கொண்டே சர்வேஷ் சென்று விட்டான்.
அவன் சென்றதும் சைத்ரேஷ் நேராக அந்த வெயிட்டர் கிட்ட வந்தவன். நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க! அண்ணா அப்படி தான்! என சொல்ல…
இட்ஸ் ஓகே சார் தப்பு என் மேல கூட இருக்கு! நான் தான் தெரியாமல் பண்ணிட்டேன் என அந்த வெயிட்டர் வருத்தப்பட்டு சொல்லி கொண்டிருக்க..
சைத்து அவனை பெரு மூச்சுடன் பார்த்து விட்டு நீங்க போங்க! என சொல்லி விட்டு அந்த டஸ்ட் பின் பக்கம் திரும்பி அந்த காபி கப்பை எடுக்க போக!
சார் என்ன பண்றீங்க? என பதட்டத்துடன் வெயிட்டர் வந்தார்.
சைத்து அவரிடம் கை காட்டி விடுங்க விடுங்க! ஏன் நான் எடுத்தால் எந்த தப்பும் இல்ல! என்னோட பெர்சனல் வேலையை உங்க கிட்ட கொடுத்து இருக்க கூடாது. என்னை மன்னிச்சிடுங்க! எல்லாரையும் மனித தன்மையோட தான் நடத்தனும்! உங்களுக்கு கஷ்டம் கொடுத்த மாதிரி என அவன் பேசி கொண்டே செல்ல..
அந்த வெயிட்டர் நிம்மதி புன்னகையுடன் சத்தியமா சார்! உங்களை மாதிரி ஒரு பொறுமை பண்பு இருக்கும் யாரையும் பார்த்தது இல்ல! ரொம்ப தேங்க்ஸ் சார்! எனக்கு இங்கே வேலை செய்ய பெருமையா இருக்கு என சொல்லி கொண்டே சென்றான்.
சைத்து அந்த காபி கப்பை பார்க்க கொஞ்சம் மட்டும் விரிசல் விட்டு இருக்க அதை சிரித்து கொண்டே எடுத்தவன். நேராக அதை எடுத்து கொண்டு வீடு கிளம்பினான். இது அவன் கண்களுக்கு அக்ஷய பாத்திரம் போல..
*
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ஹரிணி தன்னை தயார் படுத்தி கொண்டு டிசைனிங் லெட்டர் எடுத்து கொண்டு நேராக அவளுடைய உயர் அதிகாரியை பார்க்க சென்றாள்.
என்ன ஒரு ஆச்சரியம் நேற்று ICU வில் இருந்த நிதின் பிரகாஷ் இன்று மிடுக்குடன் ஆனால் கொஞ்சம் சோர்வாக அவனுடைய பதவிக்கு தொடர்பான வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
இன்று ஆயுத கிடங்கு, மற்றும் துப்பாக்கி, பாதுகாப்பு பொருட்கள், லைஃப் ஜாக்கெட்ஸ் என அனைத்து நவீன ரக ஆயுதங்கள் அதற்கு பயன்படுத்த படும் விமானங்கள், ஜெட், போர் கருவிகள் என அனைத்தையும் பரிசோதித்து அதில் என்ன முன்னேற்றம் செய்யலாம். அடுத்த முறை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் அதன் தரம் எப்படி இருக்கும் என பார்த்து பேசி கொண்டிருந்தான்.
இப்பொழுது நிதின் பிரகாஷ் இராணுவ தளபதி மற்றும் ஜெனரல், சீப், மற்றும் பெரிய அதிகாரிகளை சந்தித்து அவர்களின் இடத்தில் ஆயுத மதிப்பீட்டு பரிசோதனை செய்ய வேண்டும். கூடவே அவனுடைய உடல் நலம் எப்படி இருக்கிறது என பார்க்க தான் இந்த ஏற்பாடு. அவன் வெளியில் வரும் நிகழ்வு அனைத்தும் செய்திகளில் ஒளிபரப்ப படும்.
அவன் பேசி முடித்து விட்டு வெளியே வர அங்கே ஹரிணி இருந்தாள்.
நிதின் பிரகாஸ் மீது அவளுடைய கடை கண் பார்வை கூட பட வில்லை.
அவளின் கையில் இருக்கும் கவரை பார்த்து விட்டான் எதையும் பேசாமல் முன்னால் செல்ல.. ஹரிணி உள்ளே நுழைந்தாள். சார் என அவளுடைய உயர் அதிகாரிக்கு சல்யூட் செய்தாள்..
என்ன மா என அவர் கேள்வியை ஆரம்பிக்க.. ஹரிணி அவரிடம் ரிசைனிங் லெட்டரை நீட்டினாள்.
சரியாக அந்த நேரம் நிதின் அழைத்தான். ஹரிணியின் உயர் அதிகாரியோ போனை எடுத்து பதில் கூற..
நிதின் அவரிடம் என்ன கூறினானோ தெரிய வில்லை. அவர் உடனே வருகிறேன் என சொல்லி விட்டு அறையை விட்டு நகர போக..
அவர் செல்வதை பார்த்ததும் ஹரிணி உடனே சார் என அழைக்க..
வெயிட் பண்ணுங்க மேம் வந்துடுறேன். இட்ஸ் வெறி இம்பார்ட்டன்ட் என சொல்லி கொண்டே விரைந்தார்.
அவர் வெளியே சென்ற ஒரு சில நொடிகளில் நிதின் உள்ளே நுழைந்தான்.
அவனை பார்த்ததும் மரியாதை நிமித்தமாக சல்யூட் அடித்தாள்.
நிதின் அதை கண்டு கொள்ளாமல் நேராக சுழல் நாற்காலியில் அமர்ந்தவன் சிரித்து கொண்டே அப்புறம் மேடம் பயந்து ரிசைன் பண்ண வந்திருக்கீங்க போல! என அங்கு இருக்கும் லெட்டரை எடுத்தான்.
என்ன சொல்றீங்க? என திடுக்கிட்டு ஹரிணி எந்த உணர்ச்சியும் வெளி காட்டாமல் அவனை பார்க்க…
நிதின் அவனுடைய கூர் கண்களை அவளின் மேல் மேய விட்டு எழன புன்னகையை படற விட்டவன். எனக்கு தெரியும் இங்கே இருந்தால் உன்னோட மனசு மாற சான்ஸ் இருக்கு! சோ நீ வீக்கா இருக்க! அதனால் போ இப்போவே கட்டிக்க அவனை அது தான் நல்லது! ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி என கூறினான்.
என்ன சொல்ற? என்ன உன் வாய்க்கு வந்த படி உலரிட்டு இருக்க? என ஹரிணி கேட்க..
அப்போ இந்த லெட்டர் ரிசைன் லெட்டர் இல்லையா? என எடுக்க வர அதற்குள் ஹரிணி எடுத்து கொண்டாள்.
ஹே பாரு டா! என நிதின் அவளை பார்க்க..
ஹே இப்போ என்ன சொன்ன? மனசு மாறுதா? என்ன? மனசு மாறுது? ஹான்! எப்போவும் என் மனது மாறாது! இந்த மனசுல சத்ய தேவ் தான் இருக்கான்! அவனோட மனசுல எப்போவும் இந்த ஹரிணி தான் இருப்பாள்! இந்த லெட்டர் கல்யாணத்துக்காக அப்ளை பண்ண வந்தேன். ஐ மின் லீவ் அப்ளை பண்ண வந்தேன்! என ஹரிணி சொல்லி முடித்தாள்.
ம்ம் பொய் ஆனாலும் புடிச்சிருக்கு என நினைத்த நிதின் அவளை பார்த்து சரி என் கூட date எப்போ வர போற?
என்ன date? என முகத்தை கடுமையாக வைத்து கொண்டே கேட்டாள்.
அந்த நேரம் ஹரிணியின் உயர் அதிகாரி வர.. நிதின் இருப்பதை பார்த்து அவர் பின்னால் திரும்ப..
ரெடியா ஆபீசர் என நிதின் கேட்டான்.
எல்லாமே ரெடி சார்! அங்கே பயிற்சி செய்யுற இடத்தில் எல்லாரும் நமக்கு தான் வெயிட் பண்ணி காத்துட்டு இருக்காங்க! என கூறினார்.
சரி கிளம்பலாம்! என நிதின் நடக்க..
ஹரிணியின் உயர் அதிகாரி மொத்த பொறுப்பையும் அவளின் மேல் கொடுத்து விட்டு அவரும் கிளம்பினார்.
ஹரிணி ஒன்றுமே புரியாமல் முழிக்க…
இன்னிக்கி நைட் ரெடியா இரு இன்னியுள் இருந்து ஏழு நாள் அதாவது ஒரு வாரம் மட்டும் எனக்கு கொடு என கூறினான்.
என்ன? நீ என்ன கேட்கிற? 0
நிதின் அவளை பார்த்து நமட்டு புன்னகை உதிர்த்து விட்டு அப்போ date வரலைன்னா உன்னோட லவ் அந்த அளவுக்கு வீக் அப்டின்னு நினைச்சுப்பென்! லவ் அதை விட உன்னோட மனசு வீக்கு! அதான் என் கிட்ட இருந்து தப்பிக்க பார்க்கிற! என கூறினான்.
ஹரினிக்கு அவனை கண்ணம் கண்ணமாக அரைய வேண்டும் என்ற ஆத்திரம் வேறு ஒரு பக்கம் சூழ்ந்து கொண்டது.
அவள் அதே இடத்தில் நிற்க..
என்ன மேடம் அப்படியே அமைதியா இருக்கீங்க! எதுவும் பேசுங்க என நிதின் சொல்ல
ஹரிணி அவளுடைய தொப்பியை சரியாக போட்டு கொண்டே இது டியூட்டி டைம் சோ பெர்சனல்க்கு இடம் இல்ல என சொல்லி கொண்டே அவனை தவிர்த்து விட்டு சென்றாள்.
நிதின் ஒரு பெரு மூச்சை விட்டான். எப்படியோ அவளின் ரிசைன் செய்ய என்னும் மூளையை கொஞ்ச நாளைக்கு ஆஃப் செய்து வைத்தாகி விட்டது.
நிதின் வெளியே சென்றான். அனைவரும் நேராக இராணுவ பயிற்சி நடக்கும் இடத்துக்கு சென்றார்கள். வீரர்கள் அனைவரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்க…
நிதின் அவர்களிடம் சிரித்து பேசுவதை அரசு சேனல் படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் எடுத்து கொண்டது.
அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கியை வாங்கிய நிதின் ஒன்றை அவனுக்கும் இன்னொன்றை ஹரினிக்கும் கையில் தூக்கி போட்டான். அவள் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க..
வா ஒரு போட்டி வச்சுக்கலாம் என அழைத்து சென்றான். அங்கு இருக்கும் உயர் அதிகாரிகள். இராணுவ வீரர்கள் என அனைவர் பார்வையும் ஹரிணி மற்றும் நிதின் இருவரின் மீது தான் இருந்தது.
அவள் அப்பொழுது கூட தன்னுடைய கம்பீரம் குறையாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடக்க..
நிதின் அவளின் முன் அழகையும் பின் இடை அழகையும் ரசித்து கொண்டே நின்றான்.
அவள் கடுப்புடன் அவனுக்கு அருகில் வந்தவள். இப்போ உனக்கு என்ன வேணும் என அதிகார தொனியில் கேட்டாள்.
நிதின் புருவம் சுருக்கி நான்? எனக்கு என்ன வேணும்னு உன்னை விட யாருக்குமே தெரியாது. என கரையும் சொற்களாக அள்ளி வீச.. .
ஹரிணி மேல் ஒரு சொற்கள் கூட சலனத்தை கொடுத்தது இல்லை. அவள் மரம் போல இருக்க .
நிதின் துப்பாக்கியை லோட் செய்து டிரிக்கர் செக் செய்து இழுத்து விட்டவன். ஒரு நிமிடம் இலக்கை பார்த்து அனைத்து புல்லட்டையும் அங்கே வரைய பட்ட இலக்கு குறியின் மீது சரமாரியாக சுட்டான்.
டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் என குண்டுகள் சத்தத்துடன் சரியான மைய புள்ளியை தொட்டு துளைத்து கொண்டு கிட்ட தட்ட அனைத்து குண்டுகளும் முதல் குறியில் தொட்டு செல்ல.. அவனுடைய துப்பாக்கி சுடும் திறனை பார்த்து அங்கிருக்கும் பயிற்சி இராணுவ வீரர்கள் ஒரு நிமிடம் திகைத்து அவர்களுக்குள் பாராட்டினார்கள்.
ஹரிணி கவனத்தை அவன் மேல் செலுத்தவே இல்ல அருகில் உள்ள இன்னொரு குறி பலகையில் கவனம் வைத்து பட்டென சரியாக குறியில் குண்டுகள் இறக்க..
நிதின் அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். என் கூட dating வா! உன்னோட லவ் மேல அண்ட் கூடவே உன்னோட soul mate சத்ய தேவ் மட்டும் தான் உன்னோட மனசுல இருக்குற மாதிரி இருந்தால் ஜஸ்ட் எனக்கு இந்த செவன் டேஸ் ல புரோவ் பண்ணி காட்டு! இனி உங்களை.. ஐ மின் உன்னை அவனை எந்த இடத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனால் நீ dating வரலைன்னா உன்னோட மனசுல.. என அவன் வார்த்தையை அழுத்தி நிறுத்த
ஹர்னியின் துப்பாக்கி குண்டுகள் அந்த போர்டில் வரைய பட்டி வட்டத்துக்கு உள்ளே இல்லாமல் அவனது பேச்சில் வார்த்தைகள் அவளை கவனம் சிதற செய்ய நீதான் இருந்த இந்து குண்டுகளையும் தவற விட்டாள்.
அதை பார்த்த நிதின் உதட்டில் புன்னகை அறுன்ப..
ஹரிணி கோபம் பொங்க நிதினை பார்த்தாள்.
Say yes are no? Come or not? சொல்லிடு..
ஹரிணி..?
*
இங்கே ரிதம் காலையில் பத்து மணிக்கு எழுந்து சோம்பல் முறித்து கொண்டே வெளியே வர..
அந்த குட்டி பப்பி சத்ய தேவ் காலை கடன், வாக்கிங், யூறியன் என அனைத்தையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டு தன்னுடைய எஜமானி வர காத்து கொண்டிருந்தது.
ரிதம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தது தான் தாமதம் தன் முதாலியினன் வாசத்தை பிடித்து கொண்டு சத்ய தேவ் என்னும் குட்டி பப்பி கத்த ஆரம்பித்தது.
என்ன டா காலையிலேயே barking பண்ற? இப்போ என்ன வெளியே போயிட்டு வரனும் அவ்ளோ தானே! நீ போயிட்டு வா குட்டி பப்பி சத்ய தேவ் என சொல்லி கொண்டே அனுப்பி வைத்தாள்.
அது தட்டு தடுமாறி கொண்டே வீட்டில் இருந்து வெளியே வர அதற்கும் மேல் அடக்க முடியாமல் மொத்தத்தையும் ரிதம் வாசற்படியில் இருந்து வைக்காகக் சத்ய தேவ் வாசல் படியின் மேல் இன்னிக்கி என்னன்ன எல்லாம் நடக்க போகுதோ!
தொடரும் ..
EPISODE 56
சத்ய தேவ் அன்று காலை எழுந்தவுடனே கமிஷ்னர் ஆபிஸில் இருந்து ஒரு எடிடோரியல் தொடர்பாக அவனுக்கு அழைக்கப்பட்டது. அவன் எப்பொழுதும் போல கிளம்பி வீட்டு வேலை அனைத்தையும் முடித்து விட்டு நேராக ரிதம் பப்பி கிட்ட சென்றான்.
ரிதம் என்னும் பெயர் வைத்த நாய் குட்டி பப்பி பொமெரியன் வகையை சேர்ந்தது செம்மி கலரில் இருக்கும். ராஜ போக உபசரிப்பு தான் சத்ய தேவ் அந்த நாய் குட்டியை மனுஷி போல பாவித்தான். அதற்கு வேலா வேலைக்கு உணவு, கூடவே சுத்தமாக இருக்க குளிப்பது. தங்கும் இடம் என அனைத்தும் இருக்க நாய் குட்டி வந்ததை விட ஒரு சுற்று உப்பி இருந்தது. எப்பொழுது நோய் வராமல் இருக்க தடுப்பூசி போட வேண்டும் என பொறுப்புடன் கவனித்து கொள்ள ரிதம் பப்பிக்கு சத்ய தேவ் என்றால் அவ்வளவு பிரியம்! எப்பொழுது வீட்டுக்கு வருவான்? என காத்து கிடக்கும் தன் எஜமான் வந்ததும் காலை சுற்றி தொத்து கால் போட்டு அவன் மேல் தாவி ஆசையுடன் கொஞ்சும்..
ஓகே மா நான் போயிட்டு வரென் சமத்தா இருங்க என சொல்லி கதவை சாத்தி விட்டு சத்ய தேவ் வெளியே வர அங்கே வாசலில்..
அங்கே வாசலில்.. சொல்லவே…. ச்ச நினைக்கவே மோசம் சத்ய தேவின் வீட்டு வாசல் படியில் ரிதமுடய நாய் குட்டி சத்ய தேவ் காலை கடனையும் அவசர உச்சாவையும் கழித்து இருந்தது.
நல்ல மனநிலையில் வெளியே வந்த சத்ய தேவ்க்கு கோபம் தலை தூக்கி கொண்டு வந்தது.
சத்ய தேவ் கோபத்துடன் நேராக ரிதம் வீட்டின் கதவை தட்டி காலிங் பெல் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தான்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் உதட்டில் ஒட்ட தின்று கொண்டே அக்கா சீக்கிரம் வந்து சமைங்க எனக்கு பசிக்குது என சொல்லி கொண்டே கதவை திறக்க
அங்கே கை முட்டியுடன் சட்டையை கையை மடித்து விட்டு கொண்டே சத்ய தேவ் முறைத்து கொண்டு நின்றான்.
ரிதம் குளிக்க வில்லை அதே கலைந்த கூந்தல் உச்சியில் சிதறி கிடந்த முடியை கொஞ்சம் அடக்கி கட்டி ஒரு பன் கொண்டை, ஆண்களை சோதிக்க இல்ல இல்ல இவனை சோதிக்க இரக்கமே இல்லாத குறைவான இறக்கத்தில் ஒரு டீ சர்ட் அவளுடைய வள்ளி பெல்லி ஹிப் சுழி தொப்புல் ஃப்ரீ ஷோ காட்டி கொண்டிருக்க.. அதற்கு கீழ் பட்டாம் பூச்சி கொட்டி கிடக்கும் ஒரு பாட்டம் என அழுக்கான அழகு பதுமையாக வந்து நின்றவள். என்ன? என கேட்டாள்.
அதை நான் தான் கேட்கணும்? என்ன இது என சத்ய தேவ் வாசற்படியை காட்டினான்.
என்ன அது? என ஒன்றுமே தெரியாதது போல முகத்தை வைத்து கொண்டு சத்ய தேவை பார்த்தாள்.
சத்ய தேவ் உஷ்ண மூச்சுடன் ஹே தெரியாத மாதிரி நடிக்காத! உன் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க? என உறுமி கொண்டே நின்றான்.
என்ன டா? நான் என்ன பண்ணேன்! நீ தானே காலிங் பெல் அடிச்ச? உனக்கு என்னாச்சு? உன்னோட வாசல் படியில் இப்படி அசிங்கம் பண்ணி வச்சிருக்க? கொஞ்சம் கூட மெனர்ஸ் இல்ல டா உனக்கு? என ரிதம் கூறினாள்.
ஹே இதை உன்னோட அசிங்கம் புடிச்ச நாய் தான் பண்ணி இருக்கு? நீ எதுக்கு டி நாய் வளத்துற? என சத்ய தேவ் கோபத்துடன் கேட்க..
ஹே என் சத்ய தேவ்வை நீ எப்டி நாய் சொல்லலாம்? நீ எப்டி சொல்லலாம்? நீ தான் டா நாயி பேயி பிசாசு! ராஸ்கல்! ஸ்கவுன்ரல்! என ரிதம் திட்டி விட்டு வேணும்னு வம்பு பண்ற? இப்போ என்ன காரியம் சாதிக்க வந்திருக்க.. என ரிதம் குதர்க்கமாக பேசி கொண்டே சிப்ஸ் அள்ளி வாயில் போட்டாள்.
அவன் கோபத்துடன் நானும் போனால் போகுது அப்டின்னு பார்த்தால் நீ ரொம்ப ரொம்ப ஓவரா போற! நல்லதுக்கு இல்ல என சத்ய தேவ் குரலை உயர்த்தி பேச உள்ளே இருந்து வவ் வவ் என நாய் குட்டியின் குரல்..
வேற யாரு? ரிதமின் காவலன் சத்ய தேவ் நாய் குட்டி தான்..
என்ன டா சக்தி! என ரிதம் திரும்பி தன் பப்பியை பார்க்க..
ஹே என்ன? இங்கே என் கிட்ட பேசு! என சத்ய தேவ் மீண்டும் அதட்டினான்.
உடனே ரிதம் சத்ய தேவை முறைத்து விட்டு உள்ளே சென்றவள். பப்பியை அவில்த்து விட.. சத்ய தேவ் நேரத்தை பார்த்து விட்டு நேராக கதவை திறந்து உள்ளே சென்றவன். வேகமாக வெளியே வந்து கைகளில் க்லவுஸ் மற்றும் முகத்துக்கு மாஸ்க் போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க..
தன் எஜமான் மீண்டும் வீட்டுக்கு வந்த மகிழ்ச்சியில் ரிதம் பப்பி சத்ய தேவ் பின்னால் சென்றது.
ரிதம் மூக்கை ஒரு மாதிரி வைத்து கொண்டு சத்ய தேவ் செய்து கொண்டிருக்கும் வேலையை பார்க்க .
சத்ய தேவ் கோபத்துடன் இனி இன்னொரு தடவை இப்படி நடந்தது. இங்கே நடக்கிறதே வேற! என அதட்டினான்.
ரிதம் சிரித்து கொண்டே போடா! போக்கத்தவனே! என கூற…
இரு டி இப்போ என்ன பண்றேன் பாரு உன் நாய் செஞ்ச வேலையை உன் வாசல் படியில் கொட்ட போறேன். என சத்ய தேவ் வர..
ரிதம் திடுக்கிட்டு டேய் உன்னை? ராஸ்கள் எதுவும் பண்ண உன்னை ஹே சத்ய தேவ் அந்த நாயை கடி என மனிதனையும் நாயையும் மாறி மாறி அழைத்தாள்.
எஜமானி என்ன சொல்கிறாள்? என தெரியாத பப்பி அவள் முகத்தில் இருக்கும் கலவரத்தை பார்த்து முன்னால் நிற்கும் சத்ய தேவ்வை முறைத்து குரைக்க ஆரம்பித்தது.
அந்த இடத்தில் இன்னும் சத்தம் கொடுக்க சத்ய தேவ் வீட்டில் இருக்கும் ரிதம் பப்பியும் வந்து சேர்ந்தது. இரண்டும் மாற்றி மாற்றி குரைத்து கொண்டு இருக்க..
அவர்களின் அருகில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஆட்கள் கதவை திறக்க..
டேய் என்ன டா நினைச்சுட்டு இருக்க? உன்னோட நாய் விட்டு கடிக்க பாக்குறியா? இல்ல என்ன அடிக்க பாக்குறியா? என்று ரிதம் கத்தி கொண்டிருக்க..
எல்லாத்துக்கும் காரணம் நீ தான் டி! உன்னால நாய்குட்டியயே ஒழுங்கா வளர்க்க முடியலையே! அப்புறம் எதுக்குடி பெட்டு புடிக்கும்ன்னு வீடு முழுக்க ஒரே நாய், பூனை, புறா, குருவி, நரி அப்படின்னு எல்லாத்தையும் வாங்கி எதுக்கு வழக்குற? உன்னோட குணத்துக்கு ஒரு குரங்கு வாங்கி வளர்த்து வச்சுக்கோ! கரெக்டா இருக்கும்! என்று சத்திய தேவ் கோபத்தில் கத்தி கொண்டு இருக்க..
டேய் நீ தாண்டா? என்னை பத்தி பேசுற வேலை வச்சுக்காத! எதுக்கு என்னோட பப்பியை நாய் சொல்ற? நீதாண்டா அது! உன் கூட இருக்கே அதுவும் நாய் தான்! என் பப்பிய திட்டற வேலை வச்சுக்காத! உன்ன கொன்றுவேன் என்று ரிதம் அந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் மொத்தத்தையும் முடித்து கட்டி எண்ணெய் ஒட்டிய உதட்டை துடைத்துக்கொண்டே அவனிடம் கத்திக் கொண்டிருக்க..
வீட்டு அருகில் இருப்பவர்களும் கதவை திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்தார்கள்.
சத்திய தேவ்க்கு இப்பொழுது தான் நிலைமை தீவிரம் புரிய ரிதமை முறைத்துக் கொண்டு என்னோட பப்பிய திட்டாத! என்னோட ரிதம் பப்பி ரொம்ப நல்லவ! இந்த மாதிரி இல்ல! நீ மனுஷியா பொறந்தது வேஸ்ட் டி! நான் இப்போ இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு போறேன்! ஆனால் அடுத்த தடவை இந்த மாதிரி வேலை மறுபடியும் நடந்தது? உன்னை அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்! என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றான்.
அந்த பப்பியின் குப்பையை பாத்ரூமில் ஃபிளஸ் செய்து.. மாப் போட்டு போர்டிகோவை துடைக்க.. ரிதம் அவன் வரும் வரை காத்திருந்தவள்.. கை கட்டிக் கொண்டு கோபமாக சாய்ந்து நின்று கொண்டாள்.
சத்யதேவ் தன்னுடைய நாயை உள்ளே விட்டு கதவை சாத்த..
ரிதம் நீ என்ன பண்றியோ பண்ணிக்கோ டா! என் இஷ்டத்துக்கு தான் நான் இருப்பேன்! இது என்னோட வீடு! நீ அப்பார்ட்மெண்ட் அசோசியேசன்ல போய் சொல்ல போறியா? எங்க வேணாலும் சொல்லிக்கோ? என்னை யாராலும் எதுவும் பண்ண முடியாது! “போடா நாயே! ” என உள்ளே செல்ல போக..
“போடி நாயே! ”என்று சத்திய தேவ் கூறிவிட்டு அவனுடைய வேலையை பார்க்க சென்று விட்டான்.
உள்ளே கதவை அடைத்து கொண்ட ரிதம் உதடுகள் தானாக வளைந்து கண்ணகுளி தெரிய சிரிக்க ஆரம்பித்தாள். “என்னோட ரிதம் பப்பி ரொம்ப நல்லவள்!” என அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் காதில் தேன் வந்து பாய வில்லை ஒயின் வந்து பாய்ந்தது.
இப்போ குடிக்கணும்! அவன் வாயில் இருந்து ரிதம்! என்னோட ரிதம்! அப்டின்னு சொல்லி இருக்கான்! என ஒவ்வொரு நிமிடமும் உச்சி குளிர்ந்து உச்சம் சென்று வந்தாள்.
அந்த நேரம் வேலை செய்யும் பெண் மணி வர.. தன் சத்ய தேவ் பப்பி யை மட்டும் தூக்கி கொண்டு மேலே இருக்கும் அப்பார்ட்மென்ட் சென்று விட்டாள். அந்த பெண் வீட்டை நன்கு சுத்தமாக கூட்டி பெருக்கி மாப் போட்டு மேல் வீட்டுக்கு சென்று அங்கே சமைத்து வைத்து விட்டு கிளம்பினார்.
ரிதம் மாலை போல சத்ய தேவ்வை குளிக்க வைக்க எதுக்கு டி என்னை குளிக்க வைக்கிற? என அந்த பப்பி பார்த்தது.
குளிச்சிக்கோ சக்தி! அந்த நாய் உன்னை சொல்ற அளவுக்கு நீ இருக்க போறியா? நீ ஆண்சம் மேன் டா தங்கம்! என சொல்லி குட்டி பப்பியை டிப் டாப்பாக ரெடி செய்தாள். அதன் பின் அவளும் சென்று குளித்து முடித்து வெளியே வந்தாள். சத்ய தேவ் என்னும் பெயர் வைத்த பப்பி german shepherd வகையை சேர்ந்தது. சத்ய தேவ் பப்பி ஃப்ரெஷ்சாக வந்து அவளின் காலை சுற்றி வர.. ரிதம் ஆசையுடன் கையில் தூக்கி முத்தம் பதித்து அழகா சத்ய தேவ் தங்கம்! என கட்டி அணைத்து கொண்டாள்.
இந்த வாரத்தில் WW tv க்கு கீழ் வெளியிடப்படும் வார இதழுக்கு ஒரு எடிட்டோரியல் வேலைக்காக தான் சென்றான். இந்த வாரம் முக்கியமான விசயத்தை பற்றி போட போகிறான். அதற்கு கார்ட்டூன் காமிக் சித்தரிப்புகள் என அதை வரைந்து கொடுப்பவர் கிட்ட பேசி விட்டு
சத்ய தேவ் அவனுடைய வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வர மாலை ஆகி போனது. நாய் குட்டி காலையில் இருந்து மாலை வரை வீட்டிலேயே அடங்கி இருக்க சத்ய தேவ் வீட்டுக்குள் நுழைந்ததும் வோவ் வவ்வ் என கத்தி கொஞ்சி கொண்டே அவனை பார்த்தது. அந்த குட்டி பப்பி..
அவன் ஃப்ரெஷ் ஆகி விட்டு நாய் குட்டியின் அருகில் செல்ல.. அவனுடைய காலை பாசத்துடன் நக்கி கொண்டே சுற்றியது. சரி வாங்க மேடம் நம்ம போலாம்! உங்களை இன்னிக்கி வெளியே வாக் கூட்டிட்டு போறேன். என சொல்லி கொண்டே சத்ய தேவ் அழைத்து சென்றான்.
கீழே இருக்கும் அப்பார்ட்மெண்ட் பார்க் பக்கம் அழைத்து சென்றான். அங்கே நிறைய பேர் அவரவர்களின் செல்ல பிராணிகளை அழைத்து வந்தார்கள். அதில் பெரும் அளவு இளைஞர்கள் அதிகமாக இருக்க..
என்ன இன்னிக்கி ரொம்ப ரஸ்சா இருக்கே! என பப்பியின் பெல்ட்டை லூசாக விட்டு கொண்டே நடந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி வேறு யாராக இருக்க முடியும்? “ரிதம் இன்பராகவன்” அங்கிருக்கும் அனைவர் கண்களுக்கும் விருந்தாக அமர்ந்து இருந்தாள். அவளிடம் கடலை போட்டு ஜொள்ளு ஊற்ற மீசைகளும், மெண்டாலன்சும் சுற்றி கொண்டிருக்க.. அதை பார்த்ததும் சத்ய தேவ்க்கு கோபம் தான் வந்தது.
ஆள் காட்டி விரல் அளவுக்கு எலுமிச்சை பழ இடையில் நிலவின் நகலாய்… அறைக்குள் மழையாய்… எலுமிச்சை மணமாய் இருக்கணுமே… என ஒவ்வொரு ஆண்களும் அவளை இம்ப்ரெஸ் செய்ய டிரை செய்து கொண்டிருக்க..
ரிதம் எதையும் கண்டு கொள்ளாமல் கண்ணகுளி தெரிய புன்னகை செய்ய அந்த ஜொள்ளு இளவட்டத்தை அவளை நெருங்க விடாமல் கடமையே கண்ணாக அந்த குட்டி சத்ய தேவ் பப்பி தடுத்து கொண்டும் குரைத்து கொண்டும் இருந்தது.
அதில் கடுப்பான சத்ய தேவ் இவள் எப்டி போனால் நமக்கென்ன! கொழுப்பு எடுத்த கழுதை அவளும் அவள் ட்ரெஸ்சும் என நகர செல்ல.. அந்த நேரம் ருத்ரன் அழைத்தான்.
மாமே!.
சொல்லு ருத்ரா! ஆயிசு நூறு! இன்பா மாமா என்ன பன்றாரு! அநேகமாக இங்கே வர வேண்டி இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன் என சத்ய தேவ் கூறினான்.
என்ன சொல்றீங்க? என ருத்ரன் கேட்க..
என்னால சொல்ல முடியல எனக்கு எதுக்கு வம்பு! என சத்ய தேவ் சொல்ல..
ருத்ரணுக்கி தெரிந்து விட்டது. அப்போ ரிதம் தான் எதோ செய்து இருக்கிறாள். மாமா! என்ன பண்ணா? அந்த ரிதம்! ராவடி!..
இந்த மொத்த அப்பார்ட்மெண்ட் பசங்க எல்லாம் அவள் பின்னாடி தான் உன் அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜொள்ளுள நீச்சல் அடிக்க போறா!
என்ன சொல்றீங்க? இப்போ எங்கே இருக்கீங்க? எதுவும் போட்டோ எடுத்து அனுப்ப முடியுமா? நான் அவங்க அப்பா கிட்ட காட்டுறேன். என ருத்ரன் பற்களை கடித்து கொண்டு சொல்ல..
வேணாம் ருத்ரா அது தப்பு!..
மாமா அட்லீஸ்ட் வீடியோ கால் பண்ணுங்க? பிளீஸ் என ருத்ரன் கெஞ்ச..
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு இதோ பாரு என கால் செய்து அவனுடைய பாக்கெட்டில் போட்டவன். நேராக அவள் அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
நிலவின் மகளாய்..இன்னொரு நிழலாய்…இரவல் உயிராய்… இருபது விரலாய் இருக்கணுமே… என ஒருவன் தலை கோதி கொண்டே சொல்ல..
என்ன பாஸ் கவிதையா? என ரிதம் திரும்பி கேட்க..
யா பேபி! நானே எழுதினேன்! அதுவும் உன்னை பார்த்தால் உடனே வருது flow ல என ஒருவன் சொல்ல..
அங்கே எதிரில் வரும் சத்ய தேவை பார்த்தவள் கண்டு கொள்ளாமல் அப்புறம் வேற இம்ப்ரெஸ் எதுவும் இருக்கா அதுல நான் நனய ரெடியா இருக்கேன். என ரிதம் கூறினாள்.
ஹச் என்றால் கர்சீப் நீட்ட…இச் என்றால் இடக்கன்னம் காட்ட…நச் என்றால் தலை மீது கொட்டத்தான்… என அவன் கண்டின்யூ செய்ய..
ரிதம் கண்ணகுளி தெரிய எழுந்து நின்றாள். அந்த ஆடவன் அடுத்த வரி யோசித்து கொண்டிருக்க…
சத்ய தேவ் குரல் கேட்டது. பார்த்தால் பல்ப் எறிய…பார்பி டால் போல…போனி டேலோடு… அது தானே பாஸ் என அவனை பார்த்தான்.
உடனே ரிதம் பார்வை கேள்வியாக அந்த ஆடவனையும் சத்ய தேவையும் பார்க்க..
இப்பொழுது தான் பப்பி சத்ய தேவ் க்கு ஓய்வு கிடைத்தது போலும் பெரு மூச்சுடன் நின்றது.
அது பாஸ் உங்க ஆளா? முன்னாடியே சொல்லி இருக்கலாமே! நான் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் கஷ்ட பட்டு மனப்பாடம் பண்ணி இருந்திருக்க மாட்டேன். என அந்த ஆடவன் நொந்து கொண்டே திரும்ப..
யூ என ரிதம் கோபத்தில் அந்த ஆடவனை பார்த்து கேட்க..
உடனே சத்ய தேவ் திடுக்கிட்டு சாரி நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க! என்னோட எக்ஸ்பக்டேசன் சிலபஸ்ல ஒரு full stop க்கு கூட வேள்யூ இருக்கு! இது ஒற்த் கண்டன்ட் இல்ல என ரிதமை பார்த்து கூறினான்.
ரிதம் கோபத்துடன் சத்ய தேவை பார்க்க..
அங்கிருக்கும் ஆடவன் சிரித்து கொண்டே அப்போ நான் டிரை பண்ணவா? பாஸ்!..
அதுக்கு மினிஸ்டர் ஒத்துக்கணும்! கூடவே TN க்ரைம் பிரான்சு கமிஷ்னர் ஒத்துக்கணும் என ரிதம் சொல்ல..
ஏன் நீங்க தமிழ் பேசுறதால சென்ட்ரல் கவர்மென்ட் கிட்டயும் ஸ்டேட் கவர்மெண்ட் கிட்டயும் பர்மிஷன் வாங்கனுமா டோலி என இன்னொரு ஆடவன் வந்து நிற்க…
சத்ய தேவ் பைட் பண்ணு டா என பப்பியை பார்த்து சொல்ல..
அது அங்கும் இங்கும் துள்ளி கொண்டு அவர்களை விரட்ட முற்பட..
ஹே dimple சொல்லிட்டு போ பியூட்டி என ஆடவர்கள் சூழ்ந்து கொள்ள..
ஸ்டேட் கவர்மென்ட் என்னோட father and Central government என்னோட soul mate I mean partner mister நிதின் பிரகாஷ் என்னோட லவ்வபில் பாய் ப்ரெண்ட் என கூறினாள்.
வாட் என அவர்கள் சத்ய தேவை பார்த்து நீங்க தான் நிதின் பிரகாஷ்-ஆ என திரும்பி பார்க்க..
அவன் என்னோட பாடி கார்ட் என ரிதம் கூறினாள்.
பொய் சொன்னாலும் ஏக்கர் கணக்குல சொல்ல கூடாது மா! என இன்னொருவன் சொல்ல..
ரிதம் அவளுடைய போனை எடுத்து நிதின் பிரகாசுக்கு அழைத்தாள். ஒரே ரிங்கில் அழைப்பு ஏற்க பட்டது.
சத்ய தேவ் அங்கு இருப்பவர்களை பார்த்து கொண்டிருக்க..உடனே ருத்ரன் கால் செய்தான்.
என்ன மிஸ்டர் ருத்ரன் பார்த்தாச்சா? என சத்ய தேவ் கேட்க..
நான் வரேன் மாமா! என அவன் போனை கட் செய்தான்.
ஹலோ என ரிதம் போனில் கடுமையான குரல்..
அந்த இளைஞர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள..
நிதின் எனக்கு வீடியோ கால் பண்றயா பேபி என ரிதம் சொல்ல..
ம்ம் இப்போ உடனே என போன் செய்தான்.
ரிதம் அவர்களின் முன் போனை நீட்டி இதோ என் பிரின்ஸ்! எனக்காக என்ன வேணாலும் செய்வான்! அவனோட அண்ணாவை எனக்காக பாடி கார்டா போட்டு இருக்கான் என நீட்ட
அதை பார்த்த இளைஞர் பட்டாளம் விடு ஜூட் என சிட்டாக பறந்து போனது.
நிதின் அழைப்பை ஏற்று பதில் பேசி விட்டு போனை வைத்தாள்.
அதற்குள் சத்ய தேவ் இரண்டு ரவுண்ட் வாக்கிங் அழைத்து சென்று வந்தான்.
ரிதம் நேராக சத்ய தேவ் இருக்கும் பக்கம் சென்றாள்.
ஹே நில்லு டா! என குட்டி பப்பியின் பெல்ட் கீழே விட்டு அவள் செல்ல..
அய்யோ விட்டு போறாலே! ஹே ரிதம் நில்லு டி நானும் வரென்! என அந்த குட்டி பப்பி அவன் பின்னால் ஓடியது.
ம்ம் நாளைக்கு பார்ப்போம்
நாளைக்கு ருத்ரன், சக்தி – ரிதம், நிதின் – ஹரிணி காட்சிகள் வரும்..
தொடரும்..
கதை பொறுமையா தான் போகும்! எனக்கு சீக்கிரம் முடிக்கும் எண்ணம் இல்ல! விருப்பம் இருப்பவங்க படிங்க!
Comment pannunga ratings konjam like share pannunga
EPISODE 57
அதற்குள் சத்ய தேவ் இரண்டு ரவுண்ட் வாக்கிங் அழைத்து சென்று வந்தான்.
ரிதம் நேராக சத்ய தேவ் இருக்கும் பக்கம் சென்றாள்.
ஹே நில்லு டா! என குட்டி பப்பியின் பெல்ட் கீழே விட்டு அவள் செல்ல..
அய்யோ விட்டு போறாலே! ஹே ரிதம் நில்லு டி நானும் வரென்! என அந்த குட்டி பப்பி அவன் பின்னால் ஓடியது.
ஹே நில்லு டா! இப்போ நிக்கிற? இல்லன்னா நான் கலாட்டா பண்ணுவேன்! என சொல்லி கொண்டே அருகில் வந்தாள்.
சத்ய தேவ் அவளை கண்டு கொள்ளாமல் நேராக அவனுடைய வீட்டை நோக்கி செல்ல..
அப்படியே உன்னை விட்டுடுவேணா பின்னாடியே வரேன் டா! என ஓடி ஏன் இப்போ நிக்கல என்று அருகில் சென்று கேட்டாள்.
சத்யதேவ் சட்டென அவளை திரும்பி பார்த்தான்..
ரிதம் காதை குடைந்து கொண்டே “அப்போ சார கல்யாணம் பண்றதுக்கு என்ன குவாலிபிகேஷன் வேணும்? என்னென்னமோ சொன்ன சிலபஸ்! ஃபுல் ஸ்டாப்! எக்ஸட்ரா… எக்ஸட்ரா.. என்ற அவனை பார்த்தாள்.
அதெல்லாம் எனக்கு தெரியாது! என சத்திய தேவ்வை பார்த்து பெண்ணாக உனக்கு என்ன தான் தெரியும்? என்று ரிதம் அவன் பின்னாலையே பின் தொடர்ந்தவள்.அப்படியே அவனுடைய வீட்டுக்கு அருகில் வந்து சேர்ந்தார்கள்.
ஹே சொல்லிட்டு உள்ள போ! சார கட்டிக்குறதுக்கு என்ன குவாலிபிகேஷன்? என மீண்டும் கேட்டாள்.
சத்ய தேவ் அவள் பக்கம் திரும்பி என்னதான், என்னமாய் இருந்தாலும், அந்த குவாலிபிகேஷன் ஒன்று கூட நீ இல்ல! என்று கூறினான் .
அவள் சிரித்துக் கொண்டே புருவம் சுருக்கியவள். ஐ ஆம் ஆல்ரெடி என்னோட பார்ட்னர் எனக்காக காத்துட்டு இருப்பார். நீ இப்படியெல்லாம் நினைச்சுட்டு இருக்கியா? என்று ரிதம் சத்யதேவ பார்க்க..
அவள் பேசுவதை கேட்டவன் வேறு எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல திரும்ப..
அந்த நேரம் ரிதம் என்று ஒரு குரல்..
வேறு யார் ருத்ரன் தான் வந்து விட்டான்.
சத்திய தேவ் உள்ளே செல்ல போக
நீ எதுக்கு இங்க வந்த? என்று கேட்டுக்கொண்டே ருத்ரன் இருக்கும் திசைய திரும்பி பார்த்தாள்.
என்ன பண்ணி வச்சிருக்க உனக்கு இங்க ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருக்கேன்னு எனக்கு நியூஸ் வந்துச்சு! என்று ருத்ரன் கோபத்துடன் கேட்க
நான் அப்படியெல்லாம் நான் எதுவும் பண்ணலையே! அப்படியே பண்ணாலும் உன் கிட்ட சொல்ற அவசியம் எனக்கு இல்ல.. என உள்ளே செல்ல எத்தனித்தாள்.
என்னடி டிரஸ் இது? உனக்கு பசங்க கிட்ட பேசணும்? ஊர் சுத்தணும்? அவங்க கிட்ட கடலை போடணும்! சொல்லு ஊத்தணும் அப்படின்னா உன்னோட பியான்சி வருங்கால புருஷன் இருக்காரே! அவர் கிட்ட பேச வேண்டியது தனே! எதுக்கு வெளில போயி மானத்த வாங்கிட்டு இருக்க உன்னால எங்க அம்மாவுக்கு தான் கெட்ட பேரு அடங்கவே மாட்டியா என்று ருத்ரன் கோபத்துடன் கொஞ்சம் கண்டிப்போடும் சேர்ந்து அவளை கேட்டுக் கொண்டிருக்க..
எனஅடுத்த கேள்வியை கேட்க இதில் இருக்கும் சத்யதேவதை விரதம் முறைக்க ஆரம்பித்தாாாாாாாள் இதெல்லாம் உன் வேலை தானா என்று ரத்தம் சத்தியதேவை பார்த்து கேட்க
சத்தியதேவ்…?
*
காலையிலேயே வேலையை முடித்ததும் வேகமாக தன்னுடைய அறைக்கு வந்து உள்ளே பூட்டிக் கொண்டவள். அதன் பின் வெளியே வரவே இல்லை..
எங்கு பார்த்தாலும் அவன் கேட்ட கேள்விகள் தான் காதில் விழித்துக் கொண்டிருந்தது. இப்போ என்ன பண்றது? இப்போ இதிலிருந்து இப்படி வெளிவருவது? சத்திய தேவ் கிட்ட சொல்லலாமா? என்று ஹரிணி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது அவள் நகத்தை கடித்துக் கொண்டே கதவை திறக்க
அங்கே நித்தின் பிரகாஷ் நின்று கொண்டிருந்தான்.
என்ன மேடம் முடிவு பண்ணியாச்சா என்று கேட்க..
ஹரிணி அவனைப் பார்த்து நொந்து கொண்டே இப்போ எதுக்கு என்னை தேடி வந்தீங்க? யாராவது பார்த்துட்டா? என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா? எதுக்கு சார் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க ? என்று கேள்விகள் வந்து கொண்டே கேட்க
நித்தின் பிரகாஷ் அவளைத் தாண்டி ஹரிணியின் அறைக்குள் காலை வைத்தான்.
ஹரிணி அவனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே அவன் உள்ளே வருவதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்க..
நித்தின் பிரகாஷ் சிரித்துக்கொண்டே இப்போ எதுக்கு அப்படி பார்க்கிறேன் ஏன் நான் வரக்கூடாதா என்று கேட்டான்.
ஹரிணி கைகளை பிசைந்து கொண்டே ஆமாம் வரக்கூடாது என்று வெடுக்கென கூறவும் நிதின் பிரகாஷ்க்கு மிகவும் வருத்தமாகி போனது.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் . அமைதியாக இருக்க..
இப்போ எதுக்கு என்னை இப்படி பார்த்துட்டு இருக்கீங்க என்று ஹரிணி கேட்டாள்.
முதல்ல இங்க… வாங்க! போங்க! சார் அப்படின்னு கூப்பிடுறத நிறுத்துறியா? நான் உன்னை விட சின்ன பையன் என்று நிதின் கூற..
ஹரிணி கைகளை கட்டிக்கொண்டே “நீங்க என்ன விட வயசுல சின்னவர் என்று தெரியும்! ஆனால் நீங்க இந்த நாட்டோட மினிஸ்டர்! அப்போ அதுக்குண்டான மரியாதையை நான் கொடுத்து தானே ஆகணும்! என்று அவள் சலித்து கொண்டே கூறியது நன்றாக புரிந்தது.
நித்தின் பிரகாஷ் ஒரு ஏளனமான புன்னகை செய்துவிட்டு இதுக்கெல்லாம் மரியாதை கொடுக்க தெரியுது! ஆனா என்னோட உணர்வுகளுக்கு தான் சில பேருக்கு மரியாதை கொடுக்க தெரியல! என்று கூற.
இதை கேட்டதும் ஹரிணி ஒரு நிமிடம் திடுக்கிட்டு “உங்களோட உணர்வுகள் !… அது பார்க்க போனா ரிதமுக்கு தான் சொந்தமானது! இதுல நான் என்ன அவமதிப்பா பண்ணிட்டு இருக்கேன்னு? நீங்க நினைக்கிறீங்க என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்.
நித்தின் ஒரு பெரு மூச்சை விட்டு நீ என்ன வேணாலும் பேசிட்டு போ! ஆனா இன்னிக்கு காலைல நடந்ததை நான் எப்பவுமே நடக்க மாட்டேன்! என்று தெளிவாக கூறினான்.
அப்படி என்ன நடந்தது? ஹரிணி கைகளை பிசைந்து கொண்டே அவனை பார்த்து கேட்க..
அவன் ஒரு திருப்தியுடன் புன்னகை செய்தவன் நீ ஒரு நிமிஷம் தடுமாறுனது எனக்கு கிடைச்ச ஒரு சின்ன வெற்றி தான் டி! அந்த நாடு நல்லாவே தெரிஞ்சது! அப்போ நீ உன்னோட காதல் ஸ்டேபிளா இல்ல! ப்ளீஸ் எனக்காக ஒரு சான்ஸ் கொடு என்று நித்தின் மீண்டும் கேட்க
ஐயோ நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? என்வள் மீண்டும் பேச வர்..உ
உங்க கிட்ட என்று ன்னிடம் தொடக்கத்தில் இருந்து மரியாதையுடன் அழைக்க..
அதில் கடுப்பான நிதின் பிரகாஷ் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வர..
கதவு பக்கம் வந்தவன் எனக்கு நீ என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ? தெரியாது! என்கூட நீ டேட்டிங் வந்தே ஆகணும்! இத என்னோட கட்டளை அப்டின்னு கூட எடுத்துக்கோடி! நீ என் கூட இந்த ஒரு வாரம் ஸ்பென்ட் பண்ணியே ஆகணும்! அப்படி இல்ல ஒன்னும் பிரச்னை இல்ல நீ மிஸ்டர் சத்ய தேவ் மேலே சொல்ல விரும்பல… இது எல்லாமே உன் கையில் தான் இருக்கு! அப்போ உன்னோட காதல் மேல என பாதியில் நிறுத்திவிட்டு என்று சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் கதவு பக்கம் சென்றான்.
அவன் சென்றதும் ஹரிணிக்கு என்ன செய்வது என்றுமே புரியவில்லை அவரது காதுகளில் நித்தின் பேசிய வார்த்தைகள் தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது
உனக்கு உன்னோட காதல் மேல… அவ்ளோ தான்… விட்டான் ஹரிணிக்கு இது புது வித அவஸ்தை இருந்தது. எதுக்கு இவ இப்படி டார்ச்சர் பண்றான். இவன் கிட்ட தான் நம்மளோட முடிவை தெளிவா சொல்லிட்டோமே இவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? மிருகம் மாதிரி பிகேவ் பண்றான் என்று ஹரிணி நினைத்தாள்.
இப்பொழுது அவளுக்கு வேறு வழி இல்லை வேலையை விட்டும் செல்ல முடியாது. நித்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். என்று பெருமூச்சை விட்டவள். நமக்கு என்ன பயம் நம்மளோட மனசுல யாரு இருக்காங்கன்னு நமக்கு நல்லாவே தெரியும்! அவன் என்ன பண்ணலாம்னு பார்க்கலாமே எதையும் நினைக்க கூடாது.
இதை ஃப்ரீயா கடந்து போகணும் என்று நினைத்துக் கொண்டே ஹரிணி அவனுக்கு டேட்டிங் போக ஓகே சொல்லி தட்டி விட்டாள்..
*
அதற்கு அடுத்து வந்த நாட்களில் சரியாக சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை அன்று குளிகை எந்த நேரத்தில் இருக்கும் என்று பார்த்துவிட்டு நேராக அந்த சிவன் கோவிலுக்கு இதழின தூரிகா கிளம்பினாள்.
இன்று எப்படியாவது சைத்ரேசை பார்த்து பேசி விட வேண்டும். என்று உள்ளுக்குள் ஒரு உத்வேகத்துடன் கிளம்பினாள்.
என்ன பேசுறது? எப்படி பேசுறது? அவன் எப்படி இருப்பான்? என்று ஆயிரம் யோசனைகள் மனதில் உருண்டு கொண்டே இருந்தது.
இது என்ன ஆச்சரியம் கதாநாயகி கதாநாயகன் கோவிலில் பார்க்கிறான். அவளுடைய சின்ன சின்ன சேட்டைகளையும் , அவளுடைய குறும்புத்தனங்களையும் பக்தியையும், ரசித்துக்கொண்டே பின்னால் செல்லும் ஒரு பாடல் காட்சியை எடுத்து கொடுக்க பட குழு திட்டமிட்டு இருந்தது . அதாவ்து சர்வேஸ் மற்றும் அனிகா இருவரும் நடிக்கும் படத்தில் அந்த பாடல் காட்சி சிவன் கோவிலில் எடுக்க தயாராக இருக்க மொத்த யூனிட்டும் அங்கு வந்து சேர்ந்தது.
பாடலின் வரியை கவனித்து அதற்கு ஏற்ப டான்ஸ் மாஸ்டர் முக பாவனைகள் மற்றும் அடுத்தடுத்து என்ன காட்சிகள் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அனிகா கூர்மையாக டான்ஸ் மாஸ்டர் செல்வதை கேட்டுக்கொண்டே அதற்கு ஏற்ப அவள் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்க..
இந்த பக்கம் தூரிகா அந்த கோவிலுக்குள் நுழைந்தாள்.
இன்னொரு பக்கம் சர்வேஸ்வரன் அவனுடைய காஸ்டியூம் இடையை சரி செய்து கொண்டே கேரவனில் இருந்து வெளியே வந்தான்.
அவன் திரும்பும் நேரம் டான்ஸ் மாஸ்டர் அவனுக்கு அருகில் வந்து “சார் மேம் இந்த பக்கமா ஹாஃப் சாரியில் நடந்து போவாங்க! அவங்களை நீங்க பின்னால் இருந்து பார்த்து ரசித்து கொண்டு, நீங்க அவங்கள ஃபாலோ பண்ணிட்டு பின்னாடி இருந்து, அவங்களோட முகத்தை பார்க்க ட்ரை பண்ணனும்! இதுதான் சார் சீன்! ரிகர்சல் எடுத்துக்கலாமா ?” என்று டான்ஸ் மாஸ்டர் கேட்டார்.
சர்வேஸ்வரன் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சீன் எந்த இடத்துல ஸ்டார்ட் ஆகுது? அந்த லொகேஷன் சொல்லுங்க? நான் ஜஸ்ட் ஒரு தடவை போய் பார்க்கிறேன்!; அதே இடத்துல தான் நடிக்கணுமா? இல்ல வேற இடத்துல எடுக்கலாமா? என்று கேட்டான்.
டான்ஸ் மாஸ்டர் அந்த இடத்தை சுற்றி பார்த்து ஹான் சார் லொகேஷன் என காட்டிவிட்டு இந்த இடம் கரெக்டா இருக்கும் சார் என்று சொல்லிக்கொண்டே பின்னால் திரும்ப..
அங்கே சர்வேஸ்வரன் இல்லை அட சர்வேஸ் சார் எங்க போயிட்டாரு? என்றும் சுற்றிலும் தேடிப் பார்க்க..
மானை வேட்டையாட.. கண்களால் களவாட.. சிங்கம் இல்ல புலி கிளம்பி விட்டது.
தொடரும்..
EPISODE 58
சார் இந்த லொகேஷன் தான் நீங்க இப்படியே நடந்து வரனும் அனிகா மேம் கையில் பூஜை கூடையோட போவாங்க நீங்க பின்னாடி போகனும் என சொல்லி கொண்டே டான்ஸ் மாஸ்டர் விவரிக்க..
அந்த நேரம் குங்கும கலர் தாவணி, குங்கும கலர் ப்ளவுஸ், கரும் பச்சை வண்ண பட்டு பாவாடை, முடியை இருபக்கமும் முடி எடுத்து நடுவில் பின்னி மல்லி சரத்தை வைத்தவள். பூஜை கூடையுடன் அன்ன நடையிட்டு இதழின தூரிகா சைத்ரேஷை தேடி சென்றாள்.
மல்லிகை மணம் நாசியை துளைக்க எதேட்சையாக திரும்பி பார்த்தவனின் கண்களில் கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு உருவம் அனிகா அவ்ளோ perfect ஆ ரிகர்சல் பார்க்கிறா போல என நினைத்து கொண்டே சர்வேஷின் கால்கள் கீ கொடுத்த பொம்மை போல சென்றான். மானின் பின்னால்…!
இதழ் யோசித்து கொண்டே ச்ச இரிடேட்ட பண்றான்! நான் எங்கேன்னு சைத்துவை கண்டு பிடிப்பேன். போட்டோ, போன்நம்பர் எதுவமே இல்லையே! அந்த மூளை இல்லாதவன் லூசு பைய பெரிய சர்வேஷ்வரன்! சர்வீஸ்வரன்! மான்ஸ்டர் சர்வீஸ் சைத்து நம்பர் கொடுத்து இருக்கலாம்! என சொல்லி கொண்டே சென்றாள்.
பின்னால் அவளை தேடி வந்து கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது. திரும்ப திரும்ப புரை ஏற ச்ச f* என சொல்லி விட்டு நடந்தான்
யாரு டா அது? கோவிலில் அபசகுணமா தும்புவது? என நினைத்து கொண்டே திரும்பி பார்க்க அங்கே சர்வேஷ்வரன் நின்று கொண்டிருந்தான். இல்ல வந்து கொண்டிருந்தான்.
இதழ் கண்கள் பெரிதாக விரிய நடந்து கொண்டிருந்த ஆண் மகன் அவளின் முகத்தை பார்த்ததும் ஸ்தம்பித்து நின்று விட்டான். பெண்களின் கண்களை மட்டுமே பார்த்து பேசும் பழக்கபட்டவன், தன் நடிப்பில் கூட வேலையின் போது மட்டுமே அவனுடைய பார்வை நாயகியின் மேல் இருக்கும் சாட் ஒகே ஆன அடுத்த நொடி உடனே பார்வையை மாற்றி கொண்டு சென்று விடுவான். அவனை தேடி வரும் மாதுக்களை மட்டுமே இஷ்டம் போல ஆள்பவன். தானாக முன் வந்து எந்த பெண்ணிடமும் மோகமும் காட்டியது இல்லை, காமமும் கரை புரண்டு ஓடியது இல்லை. மாதுக்கள் ஆசை பட்டு வந்தால் உடல் தேவைக்காக முகர்ந்து மட்டும் பார்ப்பான். மற்றது உடல் தேவைக்காக மட்டுமே! அந்த கண்கள் என்ன பிரதிபலிக்கிறது என அருகில் இருக்கும் யாருக்கும் இது வரை தெரியாது. உதட்டில் இது வரை எந்த பெண்ணையும் மென்று கடித்து தின்றது இல்லை. படத்தில் கூட கிராபிக்கள் VFX வைத்து எடுத்து விடுவான்.
இன்று!.. ஆனால் இன்று! It happened.. உச்சி முதல் பாதம் வரை எல்டியா தேங்காய் எண்ணெய் என்று சொல்வதை போல மின்னும் பொன் தேகத்துக்கு சொந்தக்காரி! மச்சக்காரி! கண்களை சுருக்கி கொண்டே அவனை நோக்கி வருகிறாள். இத்தனை அழகு இருக்கும் ஒருத்தியை அவன் பார்த்ததே இல்லை. அத்தனை அழகு! கண்ணு போதையா தான் இருக்கணும்! அதுவும் அங்கே தான் இருக்கணும்! என்ன இமை அவ்ளோ நெருக்கமா பட்டாம் பூச்சியுடைய ரெக்கை போல.. அந்த மூக்கு! என்ன நாசி! அதோடு அந்த உதடு இந்த உதட்டை விட வேற போதை பொருள் சத்தியமா இல்ல… அந்த மச்சம்! பார்க்கும் போதே சர்வேஷ்வரணுடய சர்வமும் உச்சம் பெற்று சிலிர்த்து எழுந்து கொண்டது.
சங்கு கழுத்தில் மெல்லிய செயின்.. D எழுத்து பொறிக்கப்பட்டு இருக்க.. காதில் ஒரு சின்ன தோடு, அவளின் முடியானது காற்றை படாத பாடு படுத்தி கொண்டிருக்க.. கைகளில் மெல்லிய வளையல். நெற்றியில் பொட்டு! இப்படி பித்தா! இந்த பெண் மேல்! ஆண்மையை அசைத்து பார்க்க ஒருத்தி பிறந்து தான் வர வேண்டும் என நினைத்து கொண்டிருந்தவனுக்கு ஆளை கட்டி சாய்த்து அலைகளிக்க வந்திருக்கிறாள். இதழின தூரிகா! கண்ணுக்கு மை அழகு என இன்று தான் தெரிந்து கொள்கிறான். அவளின் கண்களை பார்த்து. அவள் வைத்தாதால் தான் மையிக்கு இந்த கண்கள் அழகாக தெரிகிறது.
அவனது உடல்கள் முறுக்கு ஏறிட பெண்ணவளை இப்பொழுதே பிச்சு தின்று விடும் பசி கொண்டான். புலி!..
ஒரு நாள் கிடைச்சா நல்லா இருக்குமே! இப்போவே இந்த நிமிசம் கிடைச்சா! இன்னும் நல்லா இருக்கும்! போதை மருந்து இவள் தான்! என நினைத்து கொண்டே அவளை பார்த்து சிரித்தான்.
ச்ச! இந்த ராட்சசன் இங்கே என்ன பண்றான்? இவனை பார்க்க நான் எதுக்கு வரனும்? அப்போ என்னை அலைய வைக்க பொய் சொல்லிட்டானா? இங்கே சைத்ரேஷ் வரவே இல்லையா? ச்ச! எல்லாமே போச்சு என நொந்து கொண்டே வந்தவள். ஒரு பெரு மூச்சுடன் வந்ததும் வந்தோம் இதுவும் நல்லதுக்கு தான் வந்ததும் வந்துட்டோம்! இவன் கிட்ட சைத்ரேஷ் நம்பர் வாங்கிக்குவோம்! போன் பண்ணி டைரக்டா அவன் கிட்டயே பேசிடனும்! என நினைத்து கொண்டே அவனை நோக்கி ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தவள் மனதில் சைத்து எங்கே டா இருக்க? எப்டி இருப்ப? நீயா என் கண்ணில் பட மாட்டியா? உன்னை தேடி அலைந்தது திரியனுமா? என வந்தாள்.
சர்வேஷ் அவளை அணு அணுவாக பார்வையில் விழுங்கி கொண்டிருந்தான். என்ன நடை! இந்த இடை, உடை தடையா இருக்கே! இத்தனை வசீகரம் இருக்குமா! பெருசா மேக் அப் கூட இல்ல! அப்போ நெட்ச்சுரல் பியூட்டி என நினைத்து கொண்டே நின்றான்.
என்ன சர்வேஷ்? என்னை ஏமாத்திட்டீங்க! நான் உங்க மேல கோபமா இருக்கேன்! என கண்களை சுருக்கி கொண்டே தமிழில் பேசினாள். இதழின தூரிகா..
நீவு எவ்வறு? என கன்னடத்தில் கதைப்பாள் என நினைத்தவனுக்கு தமிழ் மொழி கேட்டதும் உச்ச தலை முதல் உள்ளங்கால் வரை சிலாகித்து போனது. மொழியால் அல்ல அவள் குரல் ஒலியால்! அப்போ இவள் தமிழ்காரி! தமிழ்! என்று சொல்லும் போதே வெறுப்பு! தன் அன்னையின் நினைவு தான் வந்து ஒட்டி கொண்டது. சரி எப்படி போனால் என்ன? ஜஸ்ட் ஒரு நாள்! படுக்கை! அவளுடைய மொத்தத்தையும் பிச்சு தின்று பசி ஆர வேண்டும். இத்தனை மோகம் எப்படி? அவனுக்கே ஆச்சரியம் தான்!
அவள் தமிழில் பேசினாள். என தெரியும்! ஆனால் என்ன பேசினாள்? என கேட்க வில்லை. அவளின் பேச்சு இசை போல ஒலித்து கொண்டிருந்தது.
உன் பேர் என்ன? என அவனுடைய கண்கள் அவளை தலை முதல் கால் வரை இஞ்ச் இன்சாக படம் எடுத்து தனக்குள் நிரப்ப..
புருவம் சுருக்கியவள்“ துவாரகா!” என கூறினாள்.
ஹான் உன்னை கோர்ட்டில் பார்த்த நியாபகம் என நெற்றியை வருடி கொண்டே ஹான் நீ தானே கோர்ட்டில்! என இழுக்க..
என்ன? என்ன சொல்றீங்க? என அவள் ஒரு வித பயத்துடன் பார்த்தாள்.
அவள் கண்ணில் தெரிந்த மிரட்சியை பார்த்தவன். புருவம் சுருக்கி ஷூட்டிங் நடக்கும் போது நீ நடுவில் வந்த! உனக்கு அங்கே என்ன வேலை? என கேட்டான்.
இதழ் ஒரு பெரு மூச்சை விட அவளின் சுவாசம் அவனுக்கு வாசமாகி போக.. அதை உள் இழுத்து கொண்டான். உள்ளுக்குள் இரத்தம் வேகமாக பாய்ந்தது. இவள் கிட்ட என்ன இருக்கு? என சர்வமும் மறந்து சர்வேஷ் அவளை பார்க்க..
முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே அது வந்து நான் அட்வகெட்க்கு படிக்கிறேன். துவாரகா B.A.BL என கூறினாள்.
ஓ என அவளை பார்த்து கொண்டே தலை கோதி கொண்டான்.
நான் கேட்ட விசயம் என்ன ஆச்சு? என துவாரகா என்னும் இதலின தூரிகா கேட்க..
சார் உங்களை எங்கே எல்லாம் தேடுறது? சாட் ரெடியா இருக்கு! என சர்வேஷின் மேனேஜர் வந்து நின்றான்.
போங்க வரேன்! என அமைதியாக அதே சமயம் கடுமையாக கூறியவன் வேகமாக அவளின் அருகில் நெருங்கினான்.
உடனே இதழ் ஒரு அடி பின் வாங்க..
அவனுடைய போனை நீட்டியவன். உன்னோட பர்சனல் நம்பர் கொடு! என போனை அவளிடம் நீட்டினான்.
இல்ல சார் என்னோட நம்பர் உங்களுக்கு எதுக்கு? நீங்க உங்களோட சாரி எனக்கு அவரோட நம்பர் கொடுங்க! உங்களுக்கு எதுக்கு சிரமம் இனி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! என இதழ் சொல்ல..
அவளை ஆச்சரியமாக பார்த்தவன். என்னோட நம்பர் வேணாம்னு சொல்றா? இவள் கண்ணுக்கு நான் எப்டி தெரிகிரென்? என உள்ளுக்குள் கேள்வி வர.. அவள் பேசுவதும் சர்வேஷ்க்கு ஒன்றும் புரிய வில்லை.
சார் எனக்கு உங்க தம்பி என சொல்ல வர..
உன் நம்பர் சொல்லு! என ஆதிக்கத்துடன் கேட்டான்.
அங்கே பின்னால் சலசலப்பு சத்தம் கேட்க..
சீக்கிரம் குயிக் என சர்வேஷ் வேகப்படுத்த ஒன்பது எண்களை சரியாக போட்டவள் கடைசி எண்ணை தவறாக போட்டு விட்டாள்.
அவனிடம் போனை நீட்ட..
ஒகே பேபி! You so sexy!.. என கூறி விட்டு சென்று விட்டான்.
என்ன சொன்னான்? இப்போ என்ன சொன்னான்? சோ செக்சி! ச்சீ உடல் எல்லாம் பற்றி கொண்டு வர.. அடுத்த நொடி அவள் அங்கு நிற்க வில்லை. வேறு வழி இல்லாமல் வேகமாக கோவிலை விட்டு வெளியே சென்றாள்.
உள்ளுக்குள் ரணம், ரவித்திரம், இரத்தம் கொதிக்க எவ்ளோ தைரியம் இருந்தால் இந்த வார்த்தையை சொல்லி இருப்பான்! கெட்டவன்… கெட்டவன்! என சொல்லி கொண்டே வந்தாள்.
அவளுக்காக கார் நின்று கொண்டிருக்க நேராக காரில் ஏறி தலையை பிடித்து கொண்டே சென்றாள். அவள் ஜன்னலில் சாய்ந்து கொண்டே உதடு துடிக்க அவன் சொன்ன விசயத்தை நினைத்து கொண்டிருந்தவழுக்கு
துவாராகா! ஹலோ! என ஒரு குரல்..ஹே துவாரகா! பொண்ணே! ஹலோ மேடம்! என விடாமல் அழைக்க
கார் ஓட்டுநர் தன் முதலாலிய பார்த்து விட்டு உடனே காரில் இருப்பவனை பார்த்தார்.
துவாரகா! என சத்தத்துடன் அழைக்க வெடுக்கென திரும்பி பார்த்தாள். தூறிகா!
ஹாய் மேடம் சைத்ரேஷ மீட் பண்ணீட்டீங்களா? என கேள்வியுடன் சைத்ரேஷ் அவளிடம் கேட்க..
You ராஸ்கல்! என திரும்பி கொண்டாள். டிராபிக் வேறு இப்போதைக்கு கிளியர் ஆவெனா என்றது. அதற்கு மேல் பொறுமை இழந்த துவாரகா வேகமாக காரில் இருந்து இறங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
என்ன ஆச்சு இவளுக்கு? எதுக்கு இப்படி பேசிட்டு போறா? நான் என்ன பண்ணேன்! என சைத்ரேஷ் பதட்டத்துடன் அந்த பக்கத்தில் இருந்து வேகமாக நடந்து தூறிகாவின் பின்னால் சென்றான்.
ஹலோ! நில்லு மா!. என சைத்து அவளின் பின்னால் செல்ல..
அவள் முறைத்து கொண்டே வேக நடையிட்டாள். மாஸ்க், கருப்பு கண்ணாடி, கேப் என அனைத்தையும் போட்டு கொண்டு அவளின் பின்னால் சென்றான். அவன் பின்னால் ஒரு பாதுகாவல் படையே சென்றது.
அவளின் அருகில் சென்றவன். இப்போ என்ன ஆச்சு? எதுக்கு என்னை ராஸ்கல் சொன்னீங்க? என சைத்து அவளிடம் கேட்க..
எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க? உங்க எண்ணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு! ச்சீ! என சொல்லி கொண்டு செல்ல..
ஹே துவாரகா நீ தப்பா எதோ மிஸ் அண்டர்ஸ்டான்ட் பண்ணி கிட்ட என்ன நடந்ததுன்னு சொல்லு! என சைத்து மீண்டும் கேட்க..
நீயே இப்படி இருந்தால் உன் தம்பி இதை விட கேடு கெட்டவனா தான் இருப்பான்! அய்யோ முருகா! என்னை எப்படியோ காப்பத்திட்ட என சொல்லி கொண்டே நடை போட்டாள்.
அப்போ இவள் சர்வேஷ்வரனை பார்த்து இருக்கா போலயே! என்ன இவளோ கோபத்தில் இருக்கா! என்ன நடந்ததோ தெரியலயே அய்யோ! என நொந்து கொண்டே நேராக அவளின் அருகில் சென்றவன்.
ஹே துவாரகா பிளீஸ் நில்லு மா! என்னை கோவிலில் பார்த்தியா? என கேட்டான்.
ஹே நடிக்காத! என்ன ஆக்ட் விடுறயா? என இதழ் நடக்க..
பிளீஸ் சொல்லு மா! என மீண்டும் கேட்டான்.
இதழ் பொறுமையாக அவனை பார்த்து அது எப்படி எப்படி நேற்று தான் பார்த்தோம்! உடனே இன்னிக்கி கோவில் வர சொல்ற மாதிரி நல்லவனா என் கிட்ட பேசின! நானும் அங்கே வந்தேன்! உடனே என்னை பார்த்து எந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்ச? எவ்ளோ தைரியம் இருந்தால் நீ என்னை அந்த வார்த்தை சொல்லி இருப்ப?
என்ன சொன்னேன் என சைத்து பதட்டத்துடன் கேட்க…
இதழ் உதட்டை மடித்து கடித்து கொண்டே இந்த வார்த்தையை உன் அக்கா அம்மா தங்கை கிட்ட சொல்லி இருப்பியா டா! என ஆவேசத்துடன் பேசினாள்.
என்ன சொன்னேன்! பிளீஸ் சொல்லு துவாரகா! பிளீஸ்!
என்ன டா உன்னோட நடிப்பை என் கிட்ட காட்டுறயோ? என இதழ் அவனை முறைத்து பார்க்க..
சைத்து உடனே கண்ணாடி மற்றும் மாஸ்க் என கலட்டியவன். நான் உன் கிட்ட என்ன சொன்னேன்? அப்டின்னு எனக்கு தெரியல! ஆனால் இந்த கண்ணில எந்த களங்கமும் இல்ல! என்னை பாரு என்னோட கண்ணை பாரு! நான் தப்பா எதுவும் சொல்லி இருந்தால் என்னை மன்னிச்சிடு! என கூறினான்.
இதழ் அவனை விநோதமாக பார்த்தவள். என்ன சொல்ற? சொல்றீங்க? என அவனுடைய முக பாவத்தை பார்த்து கேட்டாள். அவன் கண்களில் எந்த ஒரு பொயும் இல்லை.
இதழ் ஒரு பெரு மூச்சுடன் எனக்கு ஒன்னும் புரியல நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல! பிளீஸ் உங்களோட தேவைக்கு வேற மாதிரி பொண்ணை பார்த்துக்கோங்க! என நகர்ந்தாள்.
துவாரகா! நான் உன்னை பார்த்த போது என்ன சொல்லி இருந்தாலும் சாரி! பிளீஸ் என சைத்து கெஞ்ச..
மனச ஒழுங்கு படுத்தி ஒரு ஆழ்கடல் அமைதி தேடி தான் நாம்ப கோவிலுக்கு வரோம்! ஆனால் அங்கே போய் இப்படி ஒரு சபல வார்த்தை ச்சீ! எப்டி அப்படி தோணுது! கடவுள் சந்நிதானத்தில் அந்த வார்த்தையை என அவள் முகம் வேறு மாதிரியாக போக..
சைத்து இதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக நின்றவன். அவனுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு பெர்சனல் விசிட்டிங் கார்டு அதில் அவனுடய பெர்சனல் நம்பர் என அனைத்தும் இருக்க அவளின் கையில் தினித்தவன். உனக்கு என் மேல தப்பு இல்லன்னு தோணும் போது,
தூரிகா அவனை முறைத்து பார்க்க..
சைத்து தீர்க்கமான பார்வையில் எத்தனை வருடம் ஆனாலும் சரி நீ என்னை தேடி வராமல் இருந்தாலும் சரி! ஒரு வேளை என் மேல தப்பு இல்ல நான் அப்படி பட்ட ஆள் இல்லன்னு தோணும் போது நீ என்னோட ஆபிஸ் க்கு பார்க்க வரலாம்! செவ்வாய் கிழமை நான் வாரம் தவறாமல் இந்த கோவிலுக்கு வருவேன். மோஸ்ட்லி சாயங்களாம்! நீ எங்கே வந்தாலும் சரி என் மேல நம்பிக்கை இல்லன்னா நீ! என அவன் வலி மிகுந்த பார்வையுடன் திரும்பி சென்று விட்டான்.
என்ன சொல்றான்? இவனை எதுக்கு நான் பார்க்கணும் என அந்த கார்டை கசக்கி போட நினைத்தவள். ஒரு பெரு மூச்சுடன் எதுக்கும் உபயோகம் ஆகும் என அதில் உள்ள பெயரை பார்க்காமலேயே அவளுடைய பையில் போட்டு கொண்டாள். [ஒரு வேளை அந்த பெயரை பார்த்து இருந்தால் கதை வேறு மாதிரியாக போயிருக்கும்! இந்து இரண்டு ஆண்களுக்கும் நடுவில் அவள் வந்து மாட்டி இருக்க மாட்டாள். அவள் பெயரை பார்க்கும் போது வேறு சில விபரீதத்தை சந்திக்க போகிறாள்.]
பார்ப்போம்!
அன்று இரவு! ருத்ரன் சத்ய தேவ் கூட தங்கி கொண்டான். இருவரும் உணவை சாப்பிட்டு விட்டு அப்படியே காலார கீழே பார்க்கிங், மற்றும் பார்க் என ஒரு ரவுண்ட் நடந்து கொண்டிருக்க..
சத்ய தேவ் அவனுடைய நடவடிக்கையை பாத்து எப்போ பாரு உனக்கு போன் தானா டா! என கேட்டான்.
லவ் மாமா! எப்போ டா அவள் பக்கத்தில் வருவா அப்டின்னு தோணுது! மீனாட்சி மாமா! அய்யோ நினைக்கவே அப்படியே சாக் அடிக்குது! உனக்கும் இப்படி தானே இருக்கும் ஹரிணி அக்கா கூட நீ பக்கத்தில் இருந்தே ரொமான்ஸ் பண்ணி இருப்ப.. அப்புறம் என்ன? என ருத்ரன் கூறினான்.
சத்ய தேவ் சிரித்து விட்டு அந்த அளவுக்கு எல்லாம் இல்ல! எனக்கு அவளோட இருப்பு போதும்! எப்போவும் ஒட்டி கொஞ்சி சுத்த அவளுக்கும் பிடிக்காது. நான் அப்படி பண்ணா என்னை சின்ன பையன்னு சொல்லுவா! அப்புறம் cringe பண்றேன்னு சொல்லுவா!
அப்போ கிஸ் இல்லையா? என ருத்ரன் கேட்க..
அடி வாங்க போற டா நீ டூ மச்சா போற! கல்யாணத்துக்கு முன்னாடி எந்த விபரீத வேலையும் பண்ணிடாத டா! என சத்ய தேவ் எடுத்து சொல்லி கொண்டிருக்க..
*
டேய் b* என்ன டா பண்ணுவ? யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுமா டா! எவ்ளோ திமிர் son of bi* என இஸ்டத்துக்கு கெட்ட வார்த்தையில் கடல் தாண்டி கிழியோ கிழி என கிழித்து கொண்டிருந்தாள். ரிதம்!
ஆமா எங்கே இருந்து எவ்ளோ தமிழ் வார்த்தையும் pure English வார்த்தையும் வந்திட்டு இருக்கு? என சுற்றிலும் ருத்ரன் பார்வையை திருப்ப..
சத்ய தேவ் தன் காதுகளை கூர்மையாக்கி இன்னுமா யாருன்னு தெரியல எல்லாம் உன்னோட இரத்தம் சதை உன் அக்கா ரிதம் இன்ப ராகவன் என கூறினான்.
எப்டி மாமா சரியா கண்டு புடிச்ச? போலீஸ் புத்தி மாமா! நீ அவளை அந்த அளவுக்கு அப்சர்வ் பண்ணி வச்சிருக்க என ருத்ரன் ரிதம் நாய் குட்டியை கொஞ்சி கொண்டே கூற..
ப்ச் இப்போ அதுவா டா முக்கியம் அவளுக்கு என்ன ஆச்சு? யார் கிட்ட இப்படி பேசிட்டு இருக்கா அப்டின்னு தெரியலையே! என சத்ய தேவ் ஆராய்ச்சி பார்வையை அவள் அப்பார்ட்மெண்டின் பால்கனி பக்கம் திருப்ப…
மாமா ஒரு வேளை நிதின் பிரகாஷா இருக்குமா! என ருத்ரன் சொல்ல..
சரி போய் அவளுக்கு என்ன பிரச்னை அப்டின்னு கேளு! எவ்ளோ நேரம் பேசுறது மாதிரி இருக்கு என சத்ய தேவ் சொல்ல..
அவள் எப்படி போனால் நமக்கு என்ன மாமா? என ருத்ரன் சொல்ல சத்ய தேவ் அவனை தரதரவென இழுத்து கொண்டு சென்றான்.
மாமா! என அவன் கை உதற…
எனக்கு எப்டி குக்குவோ அதே போல தான் உனக்கு ரிதம்! ஆயிரம் சண்டை உனக்கும் அவளுக்கும் இருந்தாலும் உன் அப்பாவுக்கு அடுத்து அவளுக்கு ஒன்னுன்னா நீ சொல்லாமலேயே ஓடி போகனும்! புரியுதா என அழைத்து சென்றான்.
அப்படி என்ன தான் நடந்தது?
ரிதம் ஆண்டிராய்ட் டீவியில் full சத்தத்தில் யாக்கை திரி காதல் சுடர் பாடலை கேட்டு கொண்டிருந்தாள்.
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்.. தொடுவோம் தொடர்வோம் படர்வோம்.. மரவோம் இறவோம்! என சோபாவின் மேல் ஏறி குதித்து கொண்டே ஆடினாள்.
ஜென்மம் விதை காதல் பழம், லோகம் த்வைதம் காதல் அத்வைதம்…. ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்.. மானுடம் மாயம் காதல் அமரம்!!உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும் வைர முத்து வரிகளில், என் தலைவன் A.R ரகுமான் இசையில் அந்த பிளாக், டவர் மொத்தமும் அதிற ஒரு பெர்ஃபார்ம் மென்ஸ் கொடுத்து கொண்டிருந்தாள்.
அந்த நேரம் மணி ஒரு பத்து இருக்கும். அவளுக்கு அழைப்பு வந்தது.
உடனே அமேசான் அலெக்ஸா அவளை அழைத்து போன் வருகிறது என சொல்ல.. புதிய எண்ணை பார்த்து விட்டு விட்டு மீண்டும் ஜீவன் நதி என யாக்கை திரி பாட்டுக்குள் லயக்க ஆரம்பிக்க..
ரிதமுக்கு மீண்டும் அழைப்பு வந்தது.
எவன் டா அது? இந்த நேரத்தில் என அழைப்பை ஏற்று ஹலோ என்றாள்.
துவாரகா! I’m சர்வேஷ்வரன்!. Do you remember me? என சர்வேஷ் கேட்க..
யார் நீ? என எடுத்ததும் கேட்டாள்.
ஹே கமான் பேபி! இருந்தாலும் உன்னோட அழகுக்கு நீ திமிர் காட்டலாம்! தப்பில்ல! பட் இந்த சர்வேஷ் கிட்ட காட்டுற? நான் உன்னை திரும்பி பார்க்கிற அளவுக்கு நீ ஒர்த் பேபி என சர்வேஷ் அந்த ஒயினை மெதுவாக வாயில் சரித்தான். அவன் சிந்தை முழுவதும் இதளின தூரிகாவின் இதழில் இருக்க.. ஷூட்டிங் முடித்து வந்ததும் அழைத்து விட்டான் அவளை.
ஆனால் பிரச்னை அங்கு தான் ஆரம்பம்?
சர்வேஷ் கிட்ட இதழ் தவறான எண்ண கொடுத்து விட அவனுடைய அழைப்பு ரிதமுக்கு சென்றது.
அடுத்து என்ன நடக்குமோ?
தொடரும்..
EPISODE 59
சர்வேஷ் இன்று நிறைய கட் ஷாட்டுகள் வாங்கி இருந்தான். அவன் அவனாகவே இல்லை. இதழ் வேண்டும்! அவ்வளவே! அவளோட இதழ் வேண்டும் முதன் முதலாக ஒரு பெண்ணின் மீது இந்த அளவுக்கு? ஏன் எப்படி? அவனுக்கே தெரிய வில்லை.
என்ன சர்வேஷ் இன்னிக்கி நீங்க எதோ ஒரு விசயத்தில் டிஸ்டர்ப் ஆ இருக்கீங்க போல! பிளீஸ் ரிலாக்ஸ்டா நடிங்க! இது அனிகா intro சீன் உங்க கண்ணுல காதல், தவிப்பு, ஆச்சரியம் இப்படி எல்லா feelings ம் கலந்து தெரியணும்! ஆனால் நீங்க? என அவனை டைரக்டர் கேட்டு கொண்டிருக்க..
இந்த முகத்தை பார்த்து காதல் வரணுமா? என அனிகா முகத்தை பற்றி கூறிய சர்வேஷ் புருவம் சுருக்கி Fight seens கூட நான் டூப் இல்லாம நடிக்கிறேன். எனக்கு இஞ்சுரி ஆனால் கூட ஒகே பட் எனக்கு இந்த லவ், ரொமான்ஸ் எல்லாம் எனக்கு வராதுன்னு ஏற்கனவே சொல்லி இருக்கேனே? வராதுன்னு பொய் சொல்லல அதுக்குன்னு ஒரு elegant face வேணும்! என சர்வேஷ் ஆளுமையுடன் கூறினான்.
டைரக்டர் ஒரு பெரு மூச்சுடன் என்ன சர்வேஷ் இப்படி சொல்றீங்க? லவ் சீன் எப்டி டூப் போட்டு எடுக்க முடியும்? அடுத்து இன்றவல் க்கு முன்னாடி ஒரு முத்த காட்சி இருக்கு! அது தான் இந்த படத்துல முக்கியமான ஒன்னு!
சர்வேஷ் கண்ணை மூடி திறந்தவனுக்கு இதழ் தான் வந்தது. அதாவது இதழின தூரிகாவின் உதடு! அதை தாங்க நான் இதழ்ன்னு சொல்லிட்டேன்.
டைரக்டர் என்ன செய்வது என்று அலுத்துக் கொண்டு சார் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க! என சொல்ல..
எனக்கு இன்னிக்கி ப்ரேக் வேணும்! இதுக்கும் மேல அந்த முகத்து கூட என்னால் ரொமான்டிக்கா நடிக்க முடியாது என கடுமையான குரலில் சொல்லி விட்டு சென்று விட்டான்.
டைரக்டர் மனதில் தாத்தா, அப்பா, இப்போ இவன் குடும்ப மொத்தமும் பெரிய பின் புலத்தில் இருக்குறதால இவனை எல்லாம் கஷ்ட பட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதா இருக்கு! ச்ச! இவனோட அப்பா ஏற்கனவே சொன்னாரு நான் தான் அதிக பிரசங்கி தனமா கமிட் பண்ணிட்டேன் என நொந்து கொண்டார்.
மொத்தமாக இன்று எடுக்கப்பட்ட மொத்த சாட்டுகளும் வேலை மெனக்கெட்டு ஒன்று கூட நன்றாக முடிந்த பாடில்லை.
சர்வா அவனுடைய ஹோட்டல் ரூமுக்கு வந்து சேர்ந்தான்.
இங்கே பத்தொடு பதினொன்றாக அவளை புசிக்க நினைக்க வில்லை. நேராக வீட்டுக்கு கிளம்பி விட்டான். ஆம் அவனும் சைத்ரேஷ் இருவரும் ஒன்றாக தங்க மிகப்பெரிய வில்லா பெங்களூரின் முக்கிய பிரமுகர்கள் இருக்கும் பகுதியில் இருக்கிறது. இது அவர்களின் குடும்பத்தில் எழுத படாத விதி! அந்த வீட்டில் தான் இருவரும் திருமணம் ஆகி அவர்களுடைய இணைகர்களுடன் தங்கும் வீடு! இது சர்வேஷின் பாட்டி, தாத்தா, முக்கியமாக அம்மச்சி, அப்பா அனைவரின் கட்டளை…
சர்வேஷ் நேராக வில்லாவுக்கு சென்றான். அவன் மனசாட்சி“ நீ அந்த பொண்ணை இங்கே கூட்டி வந்து அதை உன்னோட தம்பி சைத்ரேஷ் உன் அப்பா கிட்ட சொல்லிட்டா என்ன பண்ணுவ ஈஸ்வர் பொண்ணுங்கள எல்லாம் இங்கே கூட்டி வர கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” என கேட்டது.
ஹோம்லி பியூட்டி அதான் வீட்ல டிரை பண்றேன்! அவள் கிட்ட என்ன இருக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்! வேணும்! மொத்தமா! என சர்வேஷ் மூளை ஆராய்ச்சியின் முதல் படியை வெளி படுத்த..
அவளை பார்த்தால் அந்த மாதிரி பொண்ணு இல்ல! இதுக்கு அவள் ஒத்துக்க மாட்டாள். என அவனுடைய மனம் மீண்டும் பேச வர.
இந்த காலத்தில் அதுவும் என்னை மாதிரி ஒருத்தன் தன்னை பார்க்க மாட்டானா என என்னோட ஒரு சின்ன கண் அசைவுக்கு ஏங்கிட்டு இருக்காளுங்க! என்னை வேண்டாம்னு சொல்லுவாளா? வாய்ப்பே இல்ல! என்னை வேண்டாம்னு சொல்ல எவ இருக்கா! என ஆணவத்தில் வந்து சேர்ந்தான்.
இந்த வில்லாவுக்கு எப்பொழுதாவது ஒரு தடவை தான் வருவான். வீட்டுக்குள் நுழைய.. அங்கே சைத்ரேஷ் ஆபிஸ் வேலையை முடிக்க.. ஜெகன் கைகளை பிசைந்து கொண்டே சார் எல்லாம் முடிஞ்சது. நாளைக்கு மீட்டிங் க்கு எல்லாமே தயார்.. என சைத்ரேஷின் P.A நெளிந்து கொண்டிருந்தான்.
ஓகே நீங்க கிளம்புங்க என கூற..
ஹப்பா நிம்மதி என ஜெகன் வேகமாக அவன் வீட்டுக்கு கிளம்பினான். சைத்ரேஷ் பெரு மூச்சை விட்டு தலை கோத அந்த நேரம் சர்வேஷ் உள்ளே நுழைந்தான்.
சைத்ரேஷ் இன்று தூரிகா பேசிய பேச்சுக்கள் காதில் கேட்க. ஒரு நொடி மனம் நொந்து கண்களை மூடி கொண்டு சோபாவில அமர்ந்திருந்தான்.
சர்வேஷ் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே கிச்சன் சென்றான். ஒரு ஆர்கானிக் சிகரெட்டை பற்ற வைத்து கொண்டே புகை விட்டவன். நேராக ஃப்ரிட்ஜ் பக்கம் சென்றான்.
மின்ட் பிலேவர் ஆர்கானிக் புகையிலை இல்லாத சிகரெட்ஸ் படத்துக்காகவும் அவனுடைய கவனம் சிதறும் போதும் அதிகமாக கோபம், கவலையில் இருக்கும் போது ஆர்கானிக் சிகரெட்டை புகைப்பான்.
இப்பொழுது சர்வேஷ்வரன் சார் இப்போ கவனம் இதழின தூரிகாவின் இதழின் மேல் இருக்க ஒயினை எடுத்து கொண்டு மின்னும் கோப்பையில் ஊற்றி கொண்டான்.
சைத்ரேஷ் சமையல் அறையில் சத்தம் வர திரும்பி பார்த்தான் அங்கே தன்னுடைய நகல் ஒட்டி பிறந்தவன். வாயில் சிகரெட் கையில் ஒயின் என எடுத்து கொண்டு வெளியே வந்தான்.
அங்கு பணியாட்கள் யாரும் இல்லாமல் போக.. ஹே யார் இருக்கீங்க? என கடுமையாக குரல்..
உடனே நான்கு ஐந்து பேர் வந்து நிற்க…
எனக்கு ஆயில் ஃப்ரீ ஸ்பைசி சிக்கன் வேணும்! சீக்கிரம் என வேகமாக அவனுடைய அறைக்கு சென்று விட்டான்.
உள்ளே சென்று அந்த சிகரெட்டின் சாம்பலை தட்டி விட்டு ஆஸ் டிரேவில் தட்டி விட்டு ஒயினை சரித்தவன் உடனே போனை எடுத்து அவளின் எண்ணை உடனே டயல் செய்தான்.
ஹலோ! பேப்! ஐம் சர்வேஷ் துவாரகா! I’m சர்வேஷ்வரன்!. Do you remember me? என கூறினான்.
யார் நீ? என எடுத்ததும் கேட்டாள். அவள்
ஹே கமான் பேபி! இருந்தாலும் உன்னோட அழகுக்கு நீ திமிர் காட்டலாம்! தப்பில்ல! பட் இந்த சர்வேஷ் கிட்ட காட்டுற? நான் உன்னை திரும்பி பார்க்கிற அளவுக்கு நீ ஒர்த் பேபி! என சர்வேஷ் மென கெட்டு பிளர்ட்டிங் டிரை செய்து அவளை ஃப்ளார்ட் ஆக்க முயற்சி செய்தான்.
ஆனால் அந்த மறுமுனையில் யார் இருக்கிறார்கள் என பாவம் சர்வேஷ்க்கு தெரிய வில்லை.
ஹே யார்ரா நீ? என அதட்டளுடன் சண்டி ராணியாக ரிதம் பேச ஆரம்பித்தாள்.
ஆமா ரிதம் நம்பர் எப்படி சர்வேஷ் கிட்ட வந்தது?
அதாவது தேவ் மற்றும் டெவில் கேங் என மொத்த படைகளும் ஒரே வரிசையில் தான் போன் எண்கள்.. பத்து இலக்க எண்களில் கடைசி எண் மட்டும் தான் அனைவருக்கும் வேறு படும் அப்படி இருக்கையில் தூறிகா அனைத்து எண்ணையும் சரியாக போட்டவள் சர்வேஷ் அவசரபடுத்தவும் கடைசி எண்ணை மாற்றி ரிதம் போன் எண்ணை மாற்றி போட்டு விட்டாள். இது அவளுக்கே தெரியாமல் நடந்தது.
டேய் யாரு டா நீ!.. என ரிதம் புருவம் நெருக்கி மூக்கு விடைக்க பற்களை நரநரத்து கொண்டே கேட்டாள்..
ஹலோ துவாரகா! ஐம் சர்வேஷ்வரன்! டென்ஷன் ஆகாத! இன்னிக்கு நீ ஹாட்டா இருந்த உன்னோட உதடு அதுல.. அந்த என அவன் ஆரம்பிக்க..
டேய் Bas*** நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க! நீ மட்டும் என் முன்னாடி இருந்த உன்னோட கொ* கசக்கி போட்டு விடுவேன். ராஸ்கல்! Son of bi* என இஸ்டத்துக்கு அவள் தோண்டி எடுத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச ஆரம்பித்தாள்.
சர்வேஷ் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி ஹே கொஞ்சம் ஓவரா போற! நான் யார்ன்னு தெரியாமல் பேசிட்டு இருக்க டி! உன் வாய கிழிச்சு விடுவேன். என அவனும் பேச..
அப்டியா? பேசு மகனே! நான் துவாரகாவா இல்லாம இருக்கலாம்! ஒரு பின்னி கிட்ட என்ன இன்டன்சன்ல பேசிட்டு இருக்க ராஸ்கல்! நான் அசிஸ்டன்ட் கமிஷ்னர் பொண்ணு! என்னோட பியான்சி மெம்பர் ஆப் பார்லிமென்ட்! என அவள் சொல்லி கொண்டே போக!
ஒரு நிமிடம் சர்வேஷ் ஜெர்க் அடித்தான். அதன் பின் தன்னை சுதாரித்து கொண்டு ஹே ஹே! கொஞ்சம் பொறுமையா பேசு! உன்னை பார்த்தால் நல்ல குடும்பத்து பொண்ணு மாதிரி தெரியல! நீ யாரா இருந்தால் எனக்கு என்ன டி! நான் ஒன்னும் சாதாரண ஆள் இல்லை! உன்னை நேரில் பார்த்தேன்னு வை என்ன பண்ணுவேன் தெரியுமா!
அதற்குள் சத்ய தேவ் அவளிடம் இருந்து போனை பிடுங்கினான்.
ஹலோ என ஆண் குரல் திடீரென கேட்க..
ரிதம் அவனை மிரட்சியுடன் எப்படி டா வந்தீங்க என பார்க்க..
ஹலோ! என அதே கடுமையுடன் அழைத்தான்.
சத்ய தேவ் மறுமுனையில் பேசிய வார்த்தையை உள் வாங்கி whose this? என கேட்க..
உடனே ரிதம் வேகமாக போனை வாங்கி டேய் எங்கே இருக்க? எங்கே டா இருக்க சொல்லு இப்போவே வரேன்! உன்னை போக்சோ சட்டத்தில் உள்ளே போடுறேன்!
நீ கிழவி மாதிரி பேசுற! உன்னை போய் ஹாட்டா இருக்கேன்னு சொல்லிட்டேன் என சொல்ல..
உடனே சத்ய தேவ் அவளின் கையில் இருந்து போனை பிடுங்க!
டேய் விடுங்க டா! நான் பார்த்துக்கிறேன் என ரிதம் பிடுங்க!
மாமா இவளுக்கு எதுக்கு மாமா நீங்க ஹெல்ப் பண்றீங்க? இவள் கிட்ட மாட்டினவன் நாக்கு தள்ளிட்டு ஓட போறான் என பேச அதற்குள் போன் கட் ஆனது.
டேய் எல்லாம் உங்களால டா! அவனை நான் சும்மா விட்டு இருக்க மாட்டேன்! நடுவில் நீங்க வந்து இப்படி! உங்களை யாரு டா உள்ளே விட்டது? எப்டி வந்தீங்க? என கேட்க…
நாங்க சலுப்பா இருக்குன்னு பைப் பிடித்து மேலே ஏறி வந்தோம்! என ருத்ரன் கூறினான்.
சத்ய தேவ் அவளின் கையில் இருந்து போனை பிடுங்கி எண்ணை நோட் செய்து கொண்டான். யார் அவன்? என கேட்க..
டேய் ஒழுங்கா போங்க டா! அவன் யார்ன்னு எனக்கு எப்டி தெரியும்!
பேர் சொல்லவே இல்லையா என சத்ய தேவ் கேட்க..
அவன் யாருன்னு எனக்கு தெரியாது. எதோ துவாரகா அப்டின்னு சொன்னான்! அவனோட பேரு சர்வேஷ்..
ருத்ரன் வேகமாக சர்வேஷ்வரன்! என கூற..
சத்ய தேவ் முகம் இறுகி என்ன நேம் சொன்னான்? என ரிதம் கிட்ட கேட்க…
அதான் சர்வேஷ்வரன் தான்! ஆனால் அவனோட மோடிவ் என பற்களை கடித்தாள்.
பொண்ணு நேம் என்ன சொன்னான்? என சத்ய தேவ் கேட்க..
துவாரகா! யாருன்னு தெரியல! என ரிதம் கூற..
சத்ய தேவ் அவளை பார்த்து சரி தேவையில்லாம போன் வந்தால் கட் பண்ணிட்டு போயிடு! பிரச்னை வேணாம்! உன்னோட வேலையில் மட்டும் நீ சரியா இரு! என கூற..
நான் பொட்டையா இருந்தாலும் போலீஸ் ஆக போறவ! என்னால அப்படி சும்மா இருக்க முடியாது என ரிதம் சத்ய தேவை பார்த்து சொல்ல.. .
இதை கேட்டதும் ருத்ரன் கோபத்துடன் என்ன பேசுற! நீ தேவையில்லாம ஓவரா பேசுற! என அவளிடம் மல்லுக்கு நின்றான்.
சத்ய தேவ் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சரி நீ சொல்றத நான் அக்சப்ட் பண்ணிக்ககிரேன். என சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான்.
ருத்ரன் அவளை முறைத்து இரு உன்னை என்ன செய்கிறேன் பார்! நான் உன்னோட அப்பா கிட்ட சொல்றேன்! என சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டான்.
அவன் சென்ற அடுத்த நொடி ரிதம் வேகமாக நிதினுக்கு போன் செய்து கூறினாள்.
என்ன சொல்ற? என நிதின் வேகமாக நீ இப்போ safe ஆ தானே இருக்க? எதுக்கு டி போன் எடுத்த? எனக்கு share பண்ணி இருக்க வேண்டியது தானே! என நிதின் கோபத்துடன் கூறினான்.
இப்போ எதுக்கு என்னை திட்டுற? நீயும் திட்ற! அந்த சத்ய தேவும் என்னை திட்ரான்! நானும் அவனை திட்டிட்டேன்!
ப்ச்.. சரி அந்த போன் நம்பர் 9XXXXXXXXX3 ஆ என நிதின் கேட்டான்.
“ஆமா அதே நம்பர் தான்!”
நிதின் புருவம் சுருக்கி அந்த துவாரகா யாரு? அந்த பேரை தான் சொன்னானா? என கேட்க..
அது தான் எனக்கும் புரியல! என ரிதம் சொல்ல..
அவன் உன் கிட்ட எப்படி பேசினான்? ட்ரிங்க்ஸ் பண்ணி இருந்தானா? என நிதின் துருவி கேட்க..
அது தெரியல.. என ரிதம் கூறினாள்.
இனி அவசர படாதே! எது நடந்தாலும் பொறுமையா ஹாண்டிள் பண்ணு! பொண்ணு மாதிரி இரு டி! போக்கிரி தனம் பண்ணாத! என கூறினான்.
அவன் பேசி முடிப்பதற்குள் ரிதம் போனை கட் செய்தாள்.
நிதின் கடுப்புடன் போனை பார்த்தவன். இவளை எப்டி அடக்க! ராவடி ரவுடி!..
என்ன மாமா அவள் அவ்ளோ பேசுறா! நீங்க அமைதியா இருக்கீங்க! நானா இருந்தால் அவளை கண்ணம் பழுக்க வச்சிருப்பேன். என ருத்ரன் கோபத்துடன் பேச
சத்ய தேவ் எந்த உணர்ச்சியும் காட்டாமல் விடு! அவளுக்காக அவள் சொன்னதுக்காக நான் என்னை proof பண்ண சொல்றயா? என்னோட ஹரிணி க்கு என்னோட வீரம் பற்றியும் என்னோட ஆண்மை பற்றியும் தெரிஞ்சா போதும்!
இங்கே சர்வேஷ் என்ன செய்கிறான்?
நாளைக்கு பார்ப்போம்!
தொடரும்..
EPISODE 60
சர்வேஷ் வேகமாக அந்த ஒயின் மொத்தத்தையும் வாயில் சரித்தான். ரிதம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கோபத்தையும் பூகம்பத்தையும் ஏற்படுத்தியது. எத்தனை திமிர் தப்பான நம்பரை கொடுத்திட்டு போயிட்டா! ச்ச! Damn!. F* என கண்ட படி அவன் அந்த அறையில் இருக்கும் அனைத்து பொருளையும் உடைத்து தள்ளினான்.
சத்தம் கேட்டு வேகமாக ஓடிவந்த சைத்ரேஷ் அந்த அறையின் சூழலை பார்த்து அண்ணா! அண்ணா! என்னாச்சு எதுக்கு இப்படி பண்ற? என கேட்டு கொண்டே பிடிக்க வர..
சும்மா கத்தாதே! உன் அப்பன் காசு கரையாது! இதுல என் தாத்தாவுடையது! உனக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கோ அதே போல எனக்கும் எல்லா உரிமையும் இருக்கு! என கூறியவன் அவனை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளினான். சர்வேஷ்…
ஏற்கனவே இதழ் தன்னை தவறாக பேசியதில் நொந்து போன சைத்ரேஷ் இபொழுது இன்னும் உடைந்து விட்டான். இத்தனை வருடத்தில் பெரிதாக இந்த அளவுக்கு அவனை பாதித்தது எதுவும் இல்லை. ஸ்கூல், காலேஜ், ஃப்ரெண்ட்ஸ், பிடித்தது, பிடிக்காதது, என அவனுடைய மொத்த அடையாளத்தையும் தன் அண்ணனுக்காக மாற்றி கொண்டு அவனுக்காகவே வாழ்ந்து இருக்கிறான். சைத்ரேஷ் … அது மட்டுமா சர்வேஷ் சொன்ன வார்த்தைக்காக பெரிய விசயத்தை மறைத்து அவனுக்கு பதிலாக மொத்த பொறுப்பையும் அவன் மேல் போட்டு கொண்டிருக்கிறான். சைத்ரேஷ்..
சர்வேஷ் பரிட்சை எழுதாமல் நீ போய் எழுது எனக்காக இது கூட செய்ய மாட்டியா? என கூறி விட்டால் சென்று விடுவான். சர்வேஷ் ஒதுக்கிய விசயத்தை எடுத்து படித்து தான் முன்னேறி வளர்ந்தான். சைத்ரேஷ்.. சர்வேஷ் நிழலில் சைத்ரேஷ் வாழ்கிறான் என்ற சூழல் தான் இருக்க வேண்டும் தனக்கு அடி பணிந்து சைத்ரேஷ் இருக்க வேண்டும் தனக்காக அடிமையாக தனக்கு வேலை செய்யும் ஒரு நாய் போல உபயோக படுத்தியது என்பது சர்வேஷ் மிக பெரிய குற்றத்தில் மாட்டி மொத்த தவறையும் சைத்ரேஷை ஏற்க சொல்லி சென்று விட்டான்.
அந்த நாள் தான் இருவரின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றமே வந்தது. இது சர்வேஷின் தாய் தந்தைக்கு தெரிந்து கடும் கோபமான தந்தை அவனை இழுத்து பெல்டில் அடிக்க அந்த அடியில் சிவந்து வந்த இரத்தம் வாங்கியது கூட சைத்ரேஷ் தான்! இப்படி இருக்கும் மகன் தன்னுடன் இருக்க வேணாம் என முடிவெடுத்த சைத்ரேஷின் அப்பா கெட்ட எண்ணம் கொண்ட சர்வேஷ்வரனை வீட்டை விட்டு அனுப்ப.. அவனை பாட்டி கூட்டி போய் நடிக்க வைத்து இப்பொழுது வளர்ந்து வரும் நாயகன் ஒரு ad நடித்தால் கூட கோடியில் சம்பளம் தான்.. அதோடு ஏற்கனவே இருக்கும் கெட்ட சவகாசத்தில் புகை, மது, மாது, சூதாட்டம் என அனைத்திலும் கிங் சர்வேஷ்வரன் தான் பெற்ற வயிறு பற்றி எரிகிறது அவளின் அம்மாவுக்கு..
இதுல சைத்ரேஷ்க்கு என்ன பிரச்னை என்று பார்த்தால் அவனை தவறுகளில் இருந்து காப்பாற்றி கூட்டி வந்தவனை அலட்சியனாக பார்த்தான் சர்வேஷ்… இப்போ பெரிய பிரச்னை வீட்டில் கெட்ட பெயரும் சினிமா உலகில் நல்ல பெயரையும் வாங்கி கொண்டு சர்வேஷ் சென்று விட இப்பொழுது சைத்ரேஷுக்கு எந்த இடத்திலும் அடையாளம் இல்லாமல் போனது. பிஸ்னஸ் உலகில் கால் பதித்து சைத்ரேஷ் தனக்கென பெயரை உருவாக்க அங்கேயும் சர்வேஷின் பாட்டி வந்து விட்டார். ஜாதகம் பரிகாரம் ஒருவன் மட்டுமே இந்த உலகத்துக்கு முகம் காட்ட வேண்டும். நீயும் காட்டினால் அவனது உயிருக்கு ஆபத்து இந்த வீட்டு மூத்த வாரிசு உயிர் போக நீ காரணமா? உன்னோட அம்மா போல நீயும் இப்படி… என எதிர் திசையில் அது தன் அம்மாவின் மேல் வர.. அது பூதாகரமாக வெடித்தது.
அவர்களின் அப்பா எவ்வளவு எடுத்து சொல்லியும் இறுதியில் சைத்ரேஷ் ஒத்து கொண்டான். அங்கேயும் கொடி நாய்யியது சர்வேஷ் தான்! ஆனால் அவனுடைய தந்தை விடாப்பிடியாக இரண்டு சேர்சாக அனைத்தையும் பிரித்து அந்த இடத்தில் சைத்ரேசை அபிசியலி அனவன்ஸ் செய்ய பட்டது.
இத்தனை தாண்டியும் தன்னுடைய பெயரை மட்டுமே தேடி வந்த துவாரகா என்னும் பொய் பெயருடைய தூரிகா கிட்ட நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நான் தான் சைத்ரேஷ்வரன் என சொல்ல முடிய வில்லையே! இப்பொழுது சொன்னாலும் இரு வேடம் செய்கிறான் என தன்னை அந்த மச்ச இதழ் வெறுக்கும். தனக்கு முதன் முதலாக பிடித்தவள்! தன் முதல் நேசம் ஆசையிடம் தன்னை பற்றி சொல்ல முடியாத நிலை.. கொடுமையாக இருந்தது சைத்ரேஷ்வரனுக்கு இருந்தது.
சைத்ரேஷ் அதே மன நிலையில் அப்படியே அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் ஒரு பெண் ஆள் பாதி ஆடை பாதியுடன் வந்தாள். அந்த நேரம் பணியாள் வேகமாக வந்து சின்ன தம்பி! சின்ன தம்பி என அழைத்து கொண்டே வந்தார்.
சொல்லுங்க என்னாச்சு? என தன் முகத்தை கனிவுடன் மாற்றி கொண்டே சைத்ரேஷ் வந்தான்.
ஒரு பொண்ணு நம்ம பெரிய தம்பி வர சொன்னதாக உள்ளே விட சொல்லுது! அதான் உங்க கிட்ட கேட்டுட்டு.. என அவர் தலையை சொரிந்து கொண்டே நின்றார்.
சைத்ரேஷ் ஒரு பெரு மூச்சை விட்டு மாஸ்க் மற்றும் கேப் இது இரண்டையும் போட்டு கொண்டு வெளியே வந்தான்.
தீத்யா கண்களில் அந்த வில்லா இன்ச் இன்சாக அளவெடுக்க பட்டது. அய்யோ இது கனவா நிஜமா? சர்வேஷ் என்னை இங்கே அதுவும் எனக்கு போன் பண்ணி கூப்பிட்டு இருக்கான்! இந்த ஈஸ்வர் அப்போ கண்டிப்பா ஒரு வேளை அடுத்த கட்டமா இருக்குமா! என குதுகலத்துடன் நின்றாள்.
யார் நீங்க? என கேட்டு கொண்டே சைத்ரேஷ் வெளியே வந்தான்.
தீத்யா அவனை மேலிருந்து கீழாக பார்த்தவள். என்னை ஈஸ்வர் வர சொன்னாரு!
அப்படி எல்லாம் தெரியாம உள்ளே விட முடியாது. என சைத்து கூறினான்.
டிஷ்கஸ்டிங் நான் தான் XYZ பிராண்டுக்கு பிராண்ட் அம்பாசிடர். இப்போ பாலிவுட்ல மூவி பண்ணிட்டு இருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? என்னை சர்வேஷ் கூப்பிட்டு இருக்காரு! அவருக்கு நான் எவ்ளோ கிலோஸ் அப்டின்னு உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல! முதலில் கதவை திற.. என அதட்டினாள்.
சைத்ரேஷ் அடுத்து பேச வர..
ஹே சர்வென்ட் கிட்ட எல்லாம் என்னால் விளக்கம் கொடுக்க முடியாது. ஒழுங்கா கதவை திற… நீ இரு ரொம்ப ஓவரா போற நான் இப்போவே ஈஸ்வர்க்கு கால் பண்றேன் என சொல்லி கொண்டே போனை எடுத்து அழைத்தாள்.
சைத்து விடாமல் அதே இடத்தில் நின்றான் என்ன செய்வது என தெரிய வில்லை. போனை அந்த புல்சிட் கிட்ட போனை கொடு! என மதுவில் கிறங்கிய குரல்..
தீத்யா எலன புன்னகையுடன் இதோ பேபி நான் தரேன் என போனை நீட்டினாள்.
சைத்து கை கட்டி கொண்டே நிற்க.. பின்னால் இருந்து பணியாள்.
சின்ன தம்பி! இப்போ என்ன பண்றது? நான் ஐயாவுக்கு போன் பண்ணவா? என கேட்க..
ஹே பிடி! பிடின்னு சொன்னேன்! என தீத்யா நீட்ட..
சைத்ரேஷ் வேறு வழியில்லாமல் வாங்கினான்.
அவளை உள்ளே விட முடியுமா? முடியாதா? என சர்வேஷ் கேட்க..
ஒரு சில நிமிடங்கள் அமைதியே பிரதிபலித்தது.
டேய் எட்சை! நீ தானே எட்சை! சரி தானே! என சர்வேஷ் ஆரம்பிக்க ..
உள்ளே போங்க என சைத்ரேஷ் விட்டு விட்டான்.
தீத்யா உள்ளே நுழைந்ததும் உற்சாகத்துடன் அந்த இடத்தை பார்த்து கொண்டே நுழைந்தாள்.
சைத்ரேஷ் கண்கள் சிவக்க நொந்து போன முகத்துடன் உள்ளே சென்றான்.
ஒரு சில நிமிடத்தில் பெரிய வீட்டில் இருந்து போன் வந்தது. வீட்டில் இருக்கும் அனைத்து லேண்ட்லைனும் ஒலித்து கொண்டிருந்தது.
பணியாட்கள் அனைவரும் போனையே பார்த்து கொண்டிருக்க..
அடுத்த நொடி சைத்ரேஷ் போனை எடுத்தான்.
இங்கே சர்வேஷ் அறையில் இருக்கும் லேண்ட்லைன் அலறி கொண்டிருக்க..
பேபி லேண்ட் லைன் ஏன் விடாமல் அடிக்குது! என அவள் கேட்க..
ப்ச்.. என சர்வேஷ் அவளை படுக்கையில் தள்ளி விட்டு போனின் வயரை பிய்த்து எறிந்தான்.
தீத்யா பிறந்த மேனியாக படுக்கையில் கிடக்க.. அவன் தள்ளாடி கொண்டே மேல் வந்து விழுந்தான். அவளுடைய உடல் வாசம் எதோ பச்சை இறைச்சியில் அடிக்கும் வாசத்தை போல் தோன்றியது.
இங்கே சைத்ரேஸ் போனை எடுத்து காதில் வைக்க இப்போ உடனே நான் வரேன்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லிடுங்க மிஸ்டர் சைத்ரேஷ்வரன் என ஆளுமையாக குரல்..
டாடி!. என சைத்து கலக்கத்துடன் அழைக்க..
இன்னும் டென் மினிட்ஸ் தான் டைம்! எனக்கு இந்த நிமிசத்தில் இருந்து ஒரு பையன் தான் இருக்க போறான்! என சொல்ல..
அப்பா என்ன பா! எதுக்கு இப்படி பேசுறீங்க! என சைத்து வருத்தத்துடன் சொல்ல..
நான் உன் அம்மா கிட்ட இன்னும் சொல்லல.. எப்டி சொல்லவா! உன் அண்ணன் பத்தி என ஆரம்பிக்க..
இல்ல பா வேணாம்! நான் இப்போவே எதுவும் பண்றேன்! என சொல்லிவிட்டு போனை வைத்தான்.
ஏனோ இன்று அவனுடைய வாழ்க்கையே வெறுப்பாக இருப்பது போல ஒரு உணர்வு!
வேகமாக பெரு மூச்சை விட்டு கொண்டே எந்த தம்பியும் செய்யாத வேலையை அதாவது அண்ணன் இருக்கும் பள்ளி அறை பக்கம் கதவை தட்ட சென்றான். ஏனோ உடல் எல்லாம் கூசுவது போல இருந்தது.
அவன் கதவை தட்டுவதற்குள் கதவு சத்தத்துடன் திறந்தது.
தீத்யா தான் உப்பிய முகத்துடன் வெளியே வந்தாள்.
அவளின் பின்னால் சர்வேஷ் ஸ்டடியாக மாதுவின் பின்னால் நடந்தான்.
சைத்து தள்ளி நின்று கொள்ள.. இருவரும் வேகமாக சென்றார்கள்.
என்ன பேபி ஆச்சு? இன்னிக்கி நீ ரொம்ப ஹாட்ட்டா இருக்க? என தீத்யா சொல்லி கொண்டே இங்கேயே பண்ணலாம் பேபி! என மீண்டும் கையை பிடித்து இழுக்க..
அவளின் கையை தட்டி விட்டு நீ வரனும்ன்னு நான் கேட்கல.. என் முன்னாடி நிக்காத போயிடு! என சொல்லி விட்டு கேத்ரின் பாப் சிங்கர் அவளுக்கு அழைத்து கொண்டே சென்றான்.
உள்ளே என்ன நடந்தது? என தெரிய வில்லை.
சர்வேஷ் ஹோட்டல் அறையில் கேத்ரின் உதட்டு சாயத்துடன், ஸ்ட்ராங் பெர்ஃப்யூம் கர்லிங் ஹேர் ஸ்டைல் என ஒரு பப் நடனத்தில் பாடலை முடித்து outing போக செல்ல அதற்குள் சர்வேஷ் அழைக்கிறான் என தெரிந்ததும் இதோ அவன் முன் இருக்கிறாள்.
அடுத்த மது பாட்டிலை ஒரு கோப்பை நிறைய ஊற்றி ஒவ்வொரு மிடுக்காக குடித்து கொண்டே அவளை பார்த்தான்.
கேத்ரின் அவனது கண்களுக்கு தெரிய வில்லை அதற்கு பதிலாக இதழின தூறிகா தான் புருவம் சுருக்கி இதழ் கடித்து நின்று கொண்டிருப்பது போல இருக்க.. ஆண்மை சிலிர்க்க சிரித்து கொண்டே நெருங்கினான்.
சர்வேஷ்வரணை நோக்கி தன் தெத்து பற்களை காட்டி சிரித்த கேத்ரின் அவனை வளைத்து முத்தமிட..
அடுத்த நொடி அவள் படுக்கையில் துள்ளி விழுந்தாள்.
சர்வேஷ் என அவள் விழுந்த வலியில் துடிக்க..
அவனுடைய அறையின் டிராவை திறந்து பிளாங்க் செக் எவ்ளோ வேணாலும் fill பண்ணிக்க! கிளம்பு என வீசி எறிந்தான்.
அவனுடைய செக் லீப் எடுத்து கொண்டு அருகில் வந்தவள். பேபி நான் உன் கிட்ட எவ்ளோ எக்ஸ்பக்ட் பண்ணேன்! இந்த பணம் முக்கியம் இல்ல பேபி! நீ தான் வேணும் என அதை கிழித்து போட்டாள்.
எனக்கு அவள் வேணும்! எனக்கு அந்த lips adhu தான் வேணும்! என தமிழில் கூற..
என்ன பேபி சொல்ற என கேத்ரின் அவனை பார்த்தாள்.
மீண்டும் சர்வேஷ் இன்னொரு செக் நீட்ட.. வேறு வழி இல்லாமல் எடுத்து சென்று விட்டாள்.
சர்வேஷ் கண்களை மூடி ஒரே மூச்சில் மொத்த பாட்டிலையும் சரித்து கண்களை மூடியவன் மூச்சில் அவளுடைய மூச்சு காற்றின் வாசம் வீச! உடல் எல்லாம் புது ரத்தம் பாய்ந்தது. இது தான போதை!
வேணும் டி! நீ வேணும்! உன்னை அடையாம ஓய மாட்டேன். என கனவில் இதழின தூரிகாவை புணரும் நேரம் விடிந்து விட்டது. சூரியன் வந்து விட்டான்.
இங்கே சத்ய தேவ்…?
சைத்ரேஷ்…?
தூரிகா…?
இதழ் ..?
நிதின்.. ? ஹரிணி…?
ரிதம்…?
தொடரும் ..
EPISODE 61
அடுத்த நாள் காலை பரபரப்புடன் விடிந்தது. ஒரு வித மன குழப்பத்துடன் தான் அந்த நாள் அனைவருக்கும் இருந்தது.
நிதின் காலையில் ரிதமுக்கு போன் செய்தான். ஹே இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க? உனக்கு வேற வேலை இல்லையா? என வழிசல் உதடுகளுடன் கண்ணை தேய்த்து கொண்டே அமர்ந்தாள்.
இன்னும் என்ன தூக்கம் சீக்கிரம் எழுந்து உட்காரு? உன் கிட்ட முக்கியமான விசயம் பேசணும்? என நிதின் கூறினான்.
என்ன டா? என ரிதம் கஷ்ட பட்டு தலையை சொரிந்து கொண்டே கேட்டாள்.
இப்போ சத்ய தேவ் என்ன பண்றான்னு பாரு? என நிதின் சொல்ல..
நான் எதுக்கு அவனை பார்க்கணும்? எனக்கு வேற வேலை இல்லையா என குட்டி சத்ய தேவ் நாய் குட்டியை அவிழ்த்து விட்டாள். வழக்கம் போல அந்த சின்ன நாய் ஓடி சென்று தன்னுடைய அவசரத்தை அடக்க முடியாமல் அசிங்கம் செய்து விட..
நிதின் ஒரு சில நிமிடம் அமைதி காத்தான்.
என்ன அமைதி ஆகிட்ட உங்க ரெண்டு பேருக்கு நடுவில் என்ன நடக்குது? அவன் என்னடான்னா உன்னை பத்தி என் கிட்ட விசாரிக்கிறான்! நீ என்னடான்னா என் கிட்ட அவன் எப்படி இருக்கான் அப்டின்னு பார்த்திட்டு வர சொல்ற? சொல்லு என்ன நடக்குது? என ரிதம் கேட்க.
ஒன்னும் இல்ல என சொல்லி கட் செய்து விட்டான்.
வெளியில் கூச்சல் சத்தம் கேட்க ரிதம் வீட்டின் கதவு தட்டும் ஓசை ரிதம் காதை தேய்த்து கொண்டே வெளியே வந்தாள்.
மாமா இவளை சும்மா விட கூடாது! இப்போவே உண்டு இல்லன்னு பண்ண போறேன்! என கத்தி கொண்டிருக்க..
ரிதம் கண்கள் சத்ய தேவை தேடி கொண்டிருக்க.. வவ் வவ் என குட்டி சத்ய தேவ் காலை சுற்றி கொண்டிருந்தான்.
ரிதம் கடுப்புடன் நாய் குட்டியை பார்த்து விட்டு உன் அண்ணன் எங்கே? எனக்கு இப்போவே பார்க்கணும்! டா என கண்களால் கதை பேசி கொண்டே தன் உடன் பிறப்பின் மேல் பார்வையை படித்தவள். இப்போ எதுக்கு டா கத்துர? என்ன?
என்ன டி? இது? உன்னோட நாய் என்ன வேலை பண்ணி வச்சிருக்கான்! என ருத்ரன் கேட்க..
ஏன் என் கிட்ட பேச மிஸ்டர் சத்ய தேவ்க்கு தைரியம் இல்ல போல! உன்னை அனுப்பி இருக்கான்! என்ன பண்றான்? என பார்வையை வீட்டின் வாயிலில் சுழல விட்டாள். ஆனால் தேவனின் தரிசனம் தேவிக்கு கிட்ட வில்லை.
விடு தீரா! என குரல் மட்டும் கேட்டது.
ரிதமின் கண்கள் நுழைவு வாயிலின் நடுவில் இருக்கும் சங்கிலியில் அங்கும் இங்கும் ஆறடி உருவத்தில் அலை பாயும் ஒருவனை கண்டாள்.
என்ன வெளியே வரவே மாட்றான்? என ரிதம் நினைக்க..
இங்கே காட்டு கத்தலாக ருத்ரன் கத்தி கொண்டிருந்தான். அவன் பேசுவது எதுவும் ரிதமுக்கு கேட்க வில்லை. இப்போதைக்கு சத்ய தேவை பார்க்க வேண்டும் அவ்வளவே.. கட்டி பிடித்து முத்தம் கொடுத்து அவன் ஸ்பரிசத்தை சுகித்து எவ்ளோ நாள் ஆச்சு? அடிப்பாவி கிராதகி! ஏன் இப்படி உன் மனசு போகுது? (இது நான் தான்!);
ஒரு சில நிமிடங்கள் கழித்து “போதும் ருத்ரன் நீ உள்ளே வா! உனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு!” என சத்ய தேவ் குரல் கேட்க..
உன்னை ஒன்னும் பண்ண முடியாது அடங்காதவளே! ராவடி! என சொல்லி விட்டு அவன் உள்ளே சென்று விட்டான்.
பார்க்க வேண்டிய ஆளை பார்க்காமல் போனதில் பாவம் ஏக்கம் வந்து ஒட்டி கொண்டது அவளின் இதயத்தில்..
சரி விட்ட இடத்தில் இருந்து கண்டினியு பண்ணலாம் என ரிதம் உள்ளே சென்று தூங்க ஆரம்பித்தாள்.
*
உதட்டுடன் அந்த எள் மச்சத்தை கவ்வி இழுத்து கடித்து காலை கூடலை முடித்து அவளின் நெஞ்சில் மோகமும் தாபமும் பசியாற காலிங் பெல் அடித்தது.
ஹே மச்சாக்காரி என்னை விட்டு ஒரு இன்ச் கூட பிரிய கூடாது! என அங்கங்கள் வலிக்கும் அளவுக்கு பிடித்தான். ஆனால் அவளிடம் இருந்து எந்த ஒரு எதிர் வினையும் வர வில்லை.
ஆள் இருந்தால் தானே எதிர் வினை வரும்! இங்கு ஆளும் இல்லை அம்பும் இல்லை! மீண்டும் மீண்டும் கிளிங் கிளிங் என சத்தம் வர கண்களை இறுக்கி அவளின் வாசத்தை தேடியவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவனுடைய வாய்க்குள் பூட்டி கிடந்த மச்ச உதடு எங்கே? ஓ இது கனவா? ஷிட் என கோபத்துடன் எழுந்தான். அருகில் யாரும் இல்லை.
இரவு என்ன நடந்தது? தீத்யாவை நினைத்தாலே எதோ அசிங்கத்தின் மீது மோகம் கொண்ட நினைப்பு, கேத்ரின் பற்றி சொல்லவே தேவையில்லை ஒரு பெயிண்ட் குடோன், போல இருப்பாள். அவன் நாசியை அதிக படியான வாசனை திரவியம் தான் நிரப்பும் ஆனால் இவள் அந்த துவாரகை அவளுடைய வாசம் தனித்துவம் கண்களை மூடி இருந்தவனுக்கு அவளின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை துளி தாடையில் போய் சங்கமிக்க அதன் உப்பு சுவையை சுவைக்கும் கள் வெறி தோன்றியது. அவனுக்கு அது போதை தான்!
அந்த இரண்டு பெண்களை தொடும் எண்ணமே வர வில்லை. இப்போதைக்கு துவாரகா வேண்டும் எந்த ஒரு பெண்ணையும் உதட்டுடன் உதடு பதித்து முத்தமிடாதவன். பொதுவாக பெண்களுக்கு ஒரு ஆணுடன் உடலளவில் இணைந்து விட்டால் மனதலிவில் அந்த ஆணை சொந்தம் கொண்டாடும் எண்ணம் தோன்றி விடும். ஆனால் ஆண்களுக்கு அது போன்ற எண்ணம் பெண்களின் மேல் இருந்தது இல்லை. புணர்தலை வெறும் உடல் சுகமாக மட்டும் தான் ஆண்களால் எடுத்து கொள்ள முடியுமே தவிர அதை மனதளவில் எடுத்து கொள்ள முடியாது. சர்வேஷ்வரனின் முக்கியமான கொள்கை தன் வாழ் முழுக்க சேவை செய்ய போகிற ஒருத்திக்கு தான் அந்த உதட்டுடன் உதடு சேர்த்து ஆத்மார்த்தமாக பொருத்தி கொள்ள வேண்டும் என்கிற ஆசை! அவள் அவனுக்கு சர்வமாக இருக்க வேண்டும். இப்பொழுது என்னவென தெரிய வில்லை. எப்படி இருந்தாலும் அவள் வேண்டும்! ஸ்ட்ராயிடு போட்டு நூறு நாட்களில் பருவம் பெற்று பளபளக்கும் பிராயிளர் கோழிகளுக்கு மத்தியில் இவள் நாட்டுக்கோழி! நாட்டு கட்டை! என அவனுடைய நினைப்பு.. என்ன ஒரு கேவலமான உதாரணம்!
மீண்டும் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க.. f*.. * bull shit என கெட்ட வார்த்தையுடன் வேகமாக எழுந்து வந்து கதவை திறந்தான்.
அங்கே தன்னுடைய நகல் நின்று கொண்டிருந்தது. சைத்து தான் இருந்தான்.
சர்வேஷ் தலையை கோதி கொண்டே நைட்டு என்ன நடந்ததுன்னு தெரில!. உன்னோட மனசை இன்டன்சனா ஹார்ட் பண்ணனும் அப்டின்னு எனக்கு எண்ணம் இல்ல! பண்ணனும் அப்டின்னு நினைச்சா டைரக்டா பண்ணிடுவேன். என கூறினான்.
சைத்து எதையும் வெளி படுத்தாமல் இன்னிக்கு செவ்வாய் கிழமை வீட்டில் பூஜை இருக்கு! அம்மா உன்னை வர சொன்னாங்க!
அவளோட முகத்தை என்னால் பார்க்க முடியாது! அவள் எனக்கு அம்மா இல்ல! உனக்கு உனக்கு மட்டும் தான் அம்மா! என சர்வேஷ் ஊசி இறக்குவது போல பேசி விட்டு சென்றான்.
ஒரு நிமிசம் நில்லுங்க! என அவனுக்கு முன்னால் சென்ற சைத்ரேஷ் அவனுடைய கையில் போனை கொடுத்து இதுல டாடி இருக்காங்க! கொஞ்சம் பேசு!
முடியாது என சர்வேஷ் திரும்பி கொள்ள..
சரி என அந்த அறையில் இருக்கும் ஆண்டிராய்ட் டிவியை ஆன் செய்தான். டீவியில் தந்தை பட்டு வேஸ்டி சட்டையில் ஜம்பமாக அமர்ந்து இருந்தார். அவரை பார்த்தால் 50+ என சொல்லி விட முடியாது. 40 முதல் 43 44 எனலாம் அந்த அளவுக்கு உடலை கட்டு கோப்பாக வைத்திருந்தார்.
வர போறீங்களா இல்லையா? நானே நேரில் வரணுமா! என டீவியில் இருந்து குரல் கேட்க..
சைத்து ப்ளூ டூத் சத்தத்தை அதிக படுத்தினான்.
சர்வேஷ் தன் நகலை முறைத்து பார்க்க..
ஹே அங்கே என்ன பார்வை! இப்போ வர முடியுமா முடியாதா!
முடியாது! என தெனா வெட்டாக சர்வேஷ் பதில் கூறினான்.
எனக்கும் நீ வரனும் அப்டின்னு ஆசையே இல்லை தான்! ஆனால் என்ன பண்றது! சைத்ரேஷ் அம்மாவுக்கு அது புரிய மாட்டிக்கிது! சர்வா சர்வா அப்டின்னு உயிரை விடுறா!
போய் சேரட்டுமே! என நாக்கில் நரம்பு இல்லாமல் சர்வேஷ் சொல்ல..
அந்த பக்கம் அமைதி நிலவ சைத்து கண்களை மூடி கொண்டே ஒரு வித பதட்டத்தில் தன் அண்ணனை பார்க்க..
மிகவும் கடுமையான தோரணையில் LED திரையில் இருந்து குரல் கேட்டது. முதலில் உனக்கு திதி கொடுத்திட்டு தான் எதுவா இருந்தாலும் அவளுக்கு நடக்கும்னு சொல்லிட்டேன்! என கூறினார்.
சைத்ரேஷ் அமைதியாக நிற்க..
சர்வேஷ் தங் தந்தையை முறைத்து பார்த்தான்.
“சைத்ரேஷ்வரன்!”
டாடி என அவன் முன்னால் வர..
அவன் வந்தால் இப்போ உடனே கூட்டிட்டு வா! இல்லன்னா!
என்ன பண்ணுவீங்க? என சர்வேஷ் அதிகாரமாக கேட்க..
LED திரையில் கொஞ்சம் சிரிக்கும் சத்தம். சிறிது நேரம் கழித்து பெருசா ஒண்ணும் இல்ல என் பொண்டாட்டிக்கு மூத்த கொடுக்கை பக்கத்தில் இருந்து பார்த்துக்கணும் அப்டின்னு ஒரே பிடிவாதம்! அதான் கையையும் கால்சியம் கூலி படையை ஏவி விட்டு!..
சர்வேஷ் திடுக்கிட்டு பார்க்க.
அந்த அளவுக்கு வேணாம்! இதோ என் மகன் சைத்ரேஷ்வரன்! அவனையே உன்னை பிரிச்சு மேய சொல்றேன்! என் பையன் நான் சொல்றத கேட்பான்! என்னோட பையன்! என வார்த்தைக்கு வார்த்ததை சொள்ளியஸ்வர் இறுதியில் எதை சொல்லிட்டு எங்கே போயிட்டேன் பாரு ஹான் இப்போ டாப் 5 ல இருக்க ஒருத்தனை மளமளன்னு கீழே சரிச்சு இருக்கிற இடம் அதாப்து உரு தெரியாமல் பண்ணலாம் அப்டின்னு காலையில் ஒரு கனவு வந்தது. அது தான் அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் சர்வேஷ்வரன் என டிஸ்பிளைவில் தொண்டை குளி ஏறி இறங்க சொல்ல..
வர்றேன்! என உருமுளுடன் சொன்னவன். டிவியை கோபத்துடன் ஆஃப் செய்தான். சர்வேஷ்!
சைத்ரேஷ்க்கு உடனே போன் தந்தையின் அறிவுரைகள் அதை ஏற்று கொண்டிருக்க..
சர்வேஷ்வரன் வந்து சேர்ந்தான்.
சைத்ரேஷ் அவனை அழைத்து கொண்டு சென்று விட்டான். காரில் வரும் போது நினைவுகள் மொத்தமும் துவாரகையின் மேல் தான் எல்லா பெண்களும் பூக்களை போல தான்! இங்கே செயற்கையாக ஆயிரம் பூக்கள் இருந்தாலும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி பூ போல அல்லவா என்னவள்! என அவனுடைய சிந்தை தன்னவழுடன் கனவில் மிதந்தது.
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்
சங்கணி வீதியிலே
மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொன்டாடினளே
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ என திரு குற்றால குறவஞ்சியில்… திரி கூட ராசப்ப கவிராயர் எழுதிய இந்த பாடலின் அருமை எப்படி காதலன் படத்தில் ரகுமான் இசையில் இனிமை சேர்க்குதோ! அதே போல இங்கு மன்னவன் வஞ்சியை நினைத்து வாடி கொண்டிருக்கிறான். ஒருவன் சைவனாக இன்னொருவன் அசைவனாக..
*
அன்று மாலை அப்பார்ட்மென்ட் மொத்தமும் பரபரப்புடன் இருக்க
ரிதம் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தாள். இன்பா கூட வந்து விட்டார்.
டாடி என்னோட சத்ய தேவை காணோம்!
தொடரும்…
EPISODE 62
டேய் சின்ன பையா? சத்ய தேவ்? என்ன பண்றீங்க ? என அழைத்து கொண்டே பால் கணி பக்கம் சென்றாள். ரிதம் சுற்றிலும் பார்வையை சுழற்றி கண்களை தேய்த்து கொண்டே பார்த்தாள். ஆம் மதிய உணவை சாப்பிட்டு அப்படியே படுக்கையில் விழுந்தவழுக்கு மாலை நான்கு மணிக்கு தான் முழிப்பு தட்டியது.
எழுந்ததும் அவள் பார்க்க அணைக்க கொஞ்ச விரும்பும் ஒரே ஜீவன் சத்ய தேவ் நாய் குட்டி! தான்! ரிதம் கலைந்த கூந்தலை ஒதுக்கி கொண்டே ஹிம் பேசாமல் நான் நாயா பிறந்து இருந்தால் கூட உனக்கு ஜோடியா இருந்திருப்பேன் டா சத்ய தேவ்! உனக்காக ஜெர்மன் வந்திருப்பேன்! நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? உன் அண்ணக்காரன் என்னை வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டா பேசாமல் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க வேணும்! என சொல்லி கொண்டே திரும்பினாள்.
என்ன என் சத்ய தேவ் ஆள காணோம்! உன்னை கட்டி போடாமல் விட்டதால சேட்டை பண்ணிட்டு இருக்கியா? டேய் எங்கே டா போன? என வீடு முழுக்க தேடினாள்.
பய புள்ளை ஆளை காணோம்! எங்கே என ஒரு நிமிடம் அவளின் நெஞ்சுக்குள் பயம் பரவியது.
சத்ய தேவ்! சத்ய தேவ்! சக்தி குட்டி! டேய் எங்கே டா போன என பதட்டத்துடன் தேடினாள். காணோம்!
அரை மணி நேரம் காட்டு கத்தலாக கத்தினாள். வவ் சத்தம் எங்கும் கேட்க வில்லை. ரிதம் உடலுக்குள் பூகம்பம் கிளம்பியது. வெளியே வந்து அப்பார்ட்மென்ட் அசோசியேசனில் சொல்லி விட்டு வருத்தத்துடன் நொந்து கொண்டே வந்தாள்.
இதயம் கனத்து போனது. சத்ய தேவ்! எங்கே இருக்க? என மேல் வீட்டில் கூட தேடி பார்த்தாள். ஆனால் சத்ய தேவ் எங்கும் இல்லை.
எல்லா நேரமும் துறுதுறு சுறுசுறுப்பாக இருப்பவள் இன்று அப்படியே கவலையாக வெப்ப மூச்சுடன் இருந்தாள். உடனே தன் அப்பாவுக்கு அழைத்தாள்.
டாடி?
டிம்பிள் என்ன டா தங்கம் வாய்ஸ் சரி இல்ல!.. இன்பா சொல்ல..
டாடி என்னோட சத்ய தேவ் காணோம்! என இரைஞ்சும் குரல் கேட்டது.
சத்ய தேவ் என் முன்னாடி தானே இருக்கான்! என்னை பார்க்க வந்திருக்கான்! என இன்பா சொல்ல….
உடனே மனித சத்ய தேவ் வெடுக்கென இன்பா மீது பார்வையை பதித்தான்.
டாடி! நான் அந்த நாயை பத்தி பேசுல! என்னோட சத்ய தேவ் குட்டி பையன காணோம்! எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை! எனக்கு இப்போ உடனே சத்ய தேவ் வேணும்! அவனுக்கு என்னாச்சு? யாரு கடத்திட்டு போயிட்டான்னு தெரியல! என ரிதம் சொல்லி கொண்டிருக்க..
இதை கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என இன்பாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. வரேன் உடனே வரேன் என போனை வைக்க அடுத்த நொடி சரியாக அந்த நேரம் காதல் மனைவி அழைப்பு வேறு..
ஹலோ சொல்லு பேபி!.
ஹே பேபி சொல்ற வேலை வச்சுக்காக! என விவேகா அதட்டினார்.
அப்போ பாபி சொல்லவா? பாட்டி! பியூட்டி ஓகேவா!
செருப்பு பிஞ்சுடும் ராஸ்கல் என விவேகா சொல்ல..
ஒன்னும் பிரச்னை இல்லை போலீஸ் கேன்டீன் கார்ட் இருக்கு! மிலிட்டரி கார்ட் கூட இருக்கு போய் கேன்டீன் ல எவ்ளோ வெனா செப்பல் வாங்கிக்க பிச்சு பிச்சு விளையாடு! என இன்பா கூறினார்.
கேஸ் விசயமாக எதிரில் அமர்ந்து இருந்த சத்ய தேவ் உதட்டில் சிறு புன்னகை..
இன்பா சொன்னதை கேட்ட விவேகா கடுப்பாக அமைதியாக இருக்க..
எதுக்கு போன் பண்ண? வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆகி போச்சு டி! வந்து குறைக்கிறேன் இரு!
போடா புண்ணாக்கு! முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணேன்!
என்ன?
உன்னோட மாப்ளை உன்னோட ராவடி பொண்ணு காதலன் நிதின் பிரகாஷ் வீட்டில் இருந்து கால் பண்ணாங்க! கல்யாணம், invitation, அப்புறம் நிறைய பேசனுமாம்! போய் சேரு! என வைக்க போக..
ஹே இரு டி!
என்ன?
நீ கிளம்பி இரு நான் dimple அ பார்த்திட்டு வந்துடுறேன். ரெண்டு பேரும் போலாம்!
உடனே விவேகா கேள்வியுடன் உலகத்தோட அடுத்த மூலையில் இருக்க மாதிரி போன்ல பாச மழை பொழிய இப்போ நேரில் போகணுமா? என கேட்க.
என் பொண்ணு மேல பொறாமை படாதே! என சொல்லி விட்டு போனை வைத்தார்.
சத்ய தேவ் அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து இன்பா கிட்ட நீட்டிட.
இன்பா திருப்தி புன்னகையுடன் அது சத்ய தேவ்! என் சோல்ஜர் எப்டின்னு எனக்கு தெரியாதா? வயசு ஆக ஆக கொஞ்சம் தடுமாற்றம் வருது! ஆனால் நீ எனக்கு இருக்க டா! என கூறினார்.
எனக்கு ஒன்னும் அப்படி தெரியல..
எப்டி சொல்ற என இன்பா எழுந்து நிற்க..
இப்போ கூட ஒரு பையன் பொறாமை படுர அளவுக்கு நீங்க விவி பேபி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க! உங்களுக்கு தடுமாற்றம் வருதா? வயசு ஆகுதா? இதை நாங்க நம்பனுமா என சத்ய தேவ் சிரித்து கொண்டே கூறினான்.
கன்ன குழி தெரிய சிரித்த இன்பா புன்னகை முகத்துடன் காதலுக்கு வடிவம் இருக்கு! ஒரு ஆணோட காதல் பெண்! ஒரு பொண்ணோட காதல் ஆண்! இருவரும் காதலை உணரும் போது இந்த வயசு எங்கே போகும்ன்னு தெரியாது. அவங்க கூட இருக்கும் போது மட்டும் நம்ம மனசு, இந்த கூடு, ஏன் இந்த நரைச்ச மீசை கூட அப்படியே பல வருசம் பின்னாடி போய் மீசை முளைக்காத பருவத்துக்கு வந்து நிக்கும்! ஹான் என்னோட காதல் விவேகா! தான்! அவள் கிட்ட வயசு தெரியாத மாதிரி இன்னும் அப்படியே என் பேபிய காதலிச்சிட்டு இருக்கேன் டா இது என்னைக்கும் மாறாது! என இன்பா கூறினார்.
ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தான். சத்ய தேவ்!..
சரி நான் கிளம்புறேன். என இன்பா முன்னால் செல்ல..
என்ன மாமா அந்த டார்க் மூவி கேஸ் பத்தி..
இன்பா நடந்து கொண்டே கலெக்ட் பண்ண டிடெயில் எல்லாமே அனுப்பி விடு! நான் இப்போ என் பொண்ணுக்ககான நேரம் டா என சென்றார்.
ம்ம் என ஒற்றை பதிலுடன் அவனும் கிளம்பினான்.
அங்கே ரிதம் கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருக்க..
என்ன dimple? நான் எல்லா இடத்திலும் விசாரிச்சுட்டேன்! இன்னும் சீக்கிரத்தில் சத்ய தேவ் உன் பக்கத்தில் இருப்பான். என இன்பா சொல்ல..
அந்த நேரம் சத்ய தேவ் வந்து சேர்ந்தான்.
சத்ய தேவ்! என இன்பா அழைக்க..
எங்கே டாடி? என ரிதம் ஆவலுடன் கேட்க ..
அங்கே சத்ய தேவ் மானிட பிறவி நடந்து வந்தான்.
இந்த நாய்? டாடி இவன் கிட்ட கேளுங்க! இவன் தான் என் சத்ய தேவை எதுவும் பண்ணி இருக்கான்! ராஸ்கல் என் சத்ய தேவ் வேணும்! எங்கே டா சொல்லு என ரிதம் சண்டைக்கு செல்ல..
சத்ய தேவ் இடையை சரி செய்து கொண்டே சார் எனக்கு ஒன்னும் தெரியாது! கொஞ்சம் உங்க பொண்ணை ஒழுங்கா இருக்க சொல்லுங்க! இல்லன்னா இவழுக்காகவே ஒரு editorial ரெடி பண்ணி கிழிச்சு தொங்க விட்டுடுவென். என கூறினான்.
தீராம்மா பார்த்துக்க இப்படி தான் இவளோட ஆட்டம் தாங்க முடியல.. என பின்னால் ருத்ரன் மற்றும் விவேகா குரல் கேட்டது.
இன்பா திரும்பி பார்க்க ருத்ரன் தன் அன்னையின் கைகளை கோர்த்து கொண்டு வந்தான்.
விவி பேபி நீங்க எங்கே இங்கே? என சத்ய தேவ் கேட்க…
சத்ய தேவ் எப்டி டா கண்ணா இருக்க? என விவேகா அவனுக்கு அருகில் சென்றாள்.
டாடி! பப்பி என உதட்டை பிதுக்க..
இன்பாவின் பார்வை தன்னுடைய இரத்தம் ருத்ரனை துகைத்தது.
டாடி! பப்பி! அவன் பாவம் டாடி என பாட..
எங்கே டா? சொல்லு? நீ தானே காரணம்? சொல்லு! என இன்பா கேட்க…
நானா? நான் நான் என்ன இது சின்ன புள்ளை தணமா இருக்கு! என ருத்ரன் சமாளிக்க..
அப்டியா? சரி வா வந்து கார் எடு! நானும் உன் அம்மாவும் நிதின் பிரகாஸ் வீட்டுக்கு கல்யாண வேலையா பேச போறோம்!
போயிட்டு வாங்க அதுக்கு என்னை எதுக்கு கார் ஓட்ட கூப்பிடிரீங்க? என ருத்ரன் தன் அம்மாவை பார்க்க…
டாடி! பப்பி!..
இப்போ வரலைன்னா? பப்பி எங்கே சொல்லு.! என இன்பா கேட்க..
ரிதம் அதிர்ச்சி கலந்து பார்க்க.. சத்ய தேவ் கூட ருத்ரன் மீது தான் பார்வை இருந்தது.
சத்ய தேவ் கதவை திறக்க திரும்ப…
உடனே ருத்ரன் இன்பன பார்த்து உங்க பொண்ணு என் சத்ய தேவ் மாமாவை பார்த்து ஆண்பிள்ளை யா? பொட்டையா அப்டின்னு கேற்கிரா? என சொல்லி முடிக்க .
விவேகா தீ பார்வையுடன் ரிதமை முறைக்க.. இன்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
அது தானே பார்த்தேன்! மிஸ்டர் இன்ப ராகவன் ஊருக்கு உபதேசம் சொல்லி தப்பு தவரு கண்டு பிடிக்க தான் லாயக்கு! இதுவே பாச பொண்ணு பண்ணா! கண்ணு தெரியாத குருடன் மாதிரி இருப்பாரோ!
விவேகா நேராக சென்று ரிதம் காதை பிடித்து திருக..
ஹே கைய எடு! என இன்பா தட்டி விட்டார்.
இன்பா கொஞ்சம் மலுப்பி கொண்டு ரிதம் குழந்தை மாதிரி சோல்ஜர்! எதோ தெரியாம சொல்லி இருப்பா! என அவர் சொல்ல வர..
ருத்ரன் கோபத்துடன் உங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்கல! நீங்க ஓவரா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிட்டிங்.. அவள் வாயால திறந்து மன்னிப்பு கேட்கணும் அப்படி இல்ல நாய் கிடைக்காது.
பிரச்னை பண்ணாத ருத்ரன்! என ரிதம் சொல்ல…
ஹே அதை உன் அப்பா கிட்ட சொல்லு போடி! என ருத்ரன் அதே இடத்தில் நிற்க .
விவேகா தன் மகளை கவனத்துக்கு கொண்டு வீட்டுக்குள் நுழைய .
ஹே வேணுமா? வெனாவா?
சத்ய தேவ் ..? ரிதம்…?
இன்பா…? .
தொடரும்…
நாளைக்கு என்ன நடக்கும்? பார்ப்போம்!
EPISODE 63
விவேகா வேகமாக ரிதம் கைகளை இழுத்து கொண்டு வீட்டுக்குள் நுழைய..
என்னோட கைய விடு! லீவ் மி! என ரிதம் கத்திட..
விவேகா கோபத்துடன் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? தோலுக்கு மேல வளர்ந்த பையன எவ்ளோ கொழுப்பு இருந்தால் பெரிய பெரிய வார்த்தை சொல்லுவ? ஒழுங்கா அவன் கிட்ட மன்னிப்பு கேளு!
ரிதம் தன் அம்மாவை பார்த்து நீ என் கிட்ட பேசிட்ட பேபி! நீ என் கிட்ட பேசிட்ட? என கூறினாள்.
இதை கேட்டதும் விவேகாவின் முகம் மாற நீ பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல! உன்னை பார்க்கவே பிடிக்கல! என் ரிதம் நீ இல்ல! என் பொண்ணு நீ இல்லவே இல்ல! என் பேச்சை கேட்காதவள் கிட்ட எனக்கு என்ன பேச்சு? இப்போ கூட நீ சத்ய தேவ் பத்தி சொன்னதை தான் எனக்கு ஏத்துக்க முடியல.. மற்ற படி உன் கிட்ட பேச எனக்கு என்ன டி! பொண்ணு மாதிரியா இருக்க என ஆரம்பிக்க..
போதும் நிறுத்து உன்னோட அட்வைஸ் எனக்கு போர் அடிக்குது டி என சொல்லி கொண்டே தன் அம்மாவை கட்டி கொண்டு முத்தம் பதித்தாள். ரிதம் ராவடி..
ஹே தள்ளி போ! என விவேகா தட்டி விட வர..
போ பேபி! உனக்கு எப்போவும் கோபம் தான்! என விவேகாவை தூக்கி கொண்டாள். .
தீரா! தீரா! ஹே என்னை விடு டி! என விவேகா துள்ள..
மா! என ருத்ரன் வேகமாக வந்தான்.
இவள் என்னை தூக்கிட்டா டா! என விவேகா துள்ள..
ருத்ரன் வந்து தன் அம்மாவை பூ போல இறக்கி விட்டான்.
டேய் என் பப்பி எங்கே ஒழுங்கா சொல்லு! என ரிதம் அவனிடம் பாய வர..
டிம்பிள் நீ கவலை படாத பேபி நான் நிதின் வீட்டுக்கு போயிட்டு வரதுக்குள் பப்பி வீட்டில் இருக்கும் நீ ஒரி பண்ணிக்காத தங்கம்! என இன்பா சொல்ல…
நான் வரல எனக்கு வேலை இருக்கு நீங்க போங்க! என ருத்ரன் செல்ல.. இன்பா அவனுடைய சட்டையை பிடித்து கொண்டே நீ வர! வந்து தான் ஆகணும்! உன் அக்காவுக்கு என்கேஜ் ஆகிடுச்சு! அவள் அங்கே போக கூடாது. நீ சும்மா வந்திட்டு போ! என கூற..
ருத்ரன் மறுப்பு சொல்லும் நேரம்.. உடனே விவேகா அவனை சமாதானம் செய்யும் பொருட்டு தீரா நமக்கு அங்கே எந்த வேலையும் இல்ல! சும்மா எனக்கு கம்பனி கொடுக்க வாடா தங்கம் என விவேகா சொல்ல..
ருத்ரன் தன் தந்தையின் பிடியில் இருந்து வெளி வந்து கொண்டே நேராக விவேகா அருகில் சென்று நின்றான்.
இன்பா மற்றும் ரிதம் இருவரும் அவர்களை முறைக்க..
வா தீரா போலாம் என இருவரும் நடக்க..
ரிதம் உதட்டை பிதுக்கி டாடி அவள் என் கிட்ட பேச மாட்றா? என நீர் கோர்க்க சொல்ல..
சும்மா நடிக்கிறா டிம்பிள்! எப்போவும் உன் நினைப்பு தான்! அவளுக்கு நீ நிதினை லவ் பண்றது பிடிக்கல.. அதான் இப்படி பண்ணிட்டு இருக்கா!
ரிதம் அமைதியுடன் இருக்க.. இன்பா பெரு மூச்சை விட்டு சரி நீங்க விடுங்க பார்த்துக்கலாம்! பப்பிய பத்தி ஒரி பண்ணிக்க வேணாம்! நான் வந்து உன் கிட்ட பப்பிய சேர்த்திட்டு தான் வீட்டுக்கு போவேன். என சொல்லி விட்டு இன்பா கிளம்பினார்.
ரிதம் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருக்க மெதுவாக கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வவ் வவ் என பப்பியின் குரல் உடனே உயிர் வந்தது போல அவள் திரும்பி பார்க்க..
அங்கே சத்ய தேவ் பப்பியை இறக்கி விட்டான். வேகமாக அது ரிதம் அருகில் செல்ல.. குட்டி பப்பியை தூக்கி முத்தமிட்டு கொஞ்சி அணைத்து கொண்டாள்.
சத்ய தேவ் அவர்களின் ஒற்றுமையை பார்த்து விட்டு வெளியே செல்ல போக..
ஹே நில்லு டா! என ரிதம் அழைக்க..
ஹே நான் காலையில் போயிட்டு இப்போ தான் வந்தேன்! எனக்கும் உன்னோட பப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்ல! பப்பிய உன் தம்பி தான் ஒளிச்சு வச்சிருக்கான்! எங்க வீட்டில் தான் இருந்தது. சோ பிரச்னை பண்ணாத! என கூறினான்.
ரிதம் குட்டி பப்பியை இறக்கி விட ஏற்கனவே கொட்டி வைத்த பெடிகிரிய சாப்பிட பறந்து சென்றது.
நிஜமாவா? என கேட்டு கொண்டே ரிதம் அவனை நோக்கி வந்தாள்.
நீ நம்பினா நம்பு இல்லன்னா போ! என அவன் நகர செல்ல..
என் மேல கோபமா இருக்கியா? என்ன? நான் உன்னை திட்டினதுக்கு கோபத்தில் இருக்கியா? என அருகில் நெருங்கினாள்.
உன் மேல எனக்கு என்ன கோபம்? நீ சொல்றத நான் சீரியஸா எடுத்துக்க முதலில் எனக்கு நீ யாரு? என நகர..
அந்த சர்வேஷ் என் கிட்ட அப்படி பேசினதுக்கு உன் கிட்ட இவ்வளவு தான் ரியாக்சனா? என ரிதம் கேட்டாள்.
சத்ய தேவ் கண்கள் அந்த பெயரை கேட்டதும் சிவக்க.. அவன் உடனே வெளியே செல்ல திரும்பினான்.
எதை மறைக்கிற சத்ய தேவ்! இங்கே என்னை பாரு? நீ உன்னோட வேசத்தை எப்போ களைக்க போற! என ரிதம் இன்னும் நெருங்க .
அப்படி எல்லாம் இல்ல விடு டி! என சத்ய தேவ் தன் கோபத்தை கட்டு படுத்த முடியாமல் நகர செல்ல..
ரிதம் அவன் உயரத்துக்கு எக்கி உதட்டில் முத்தமிட்டாள். முகம் முழுக்க முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். அவன் சுவற்றை பிடித்து கொண்டு ஹே தள்ளி போடி என நகர முயற்சி செய்ய..
சத்ய தேவ் உடல்கள் இறுக அப்படியே இருந்தான். அவளை விலக்கி விட கைகளை தட்டி விட செல்ல… ரிதம் மெதுவான குரலில் அவனிடம் உன்னோட வீரமும் ஆண்மையும் எனக்கு தெரியும் டா! என முத்தத்தில் தீவிரம் காட்டினாள்.
சத்ய தேவ் உதடுகள் அவளின் உதட்டை ஒற்றியதும் உள்ளுக்குள் என்னவோ செய்தது. அவளின் இடையை பிடித்து கொண்டே என்ன டி வேணும்! எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற? என முத்தத்தில் தீவிரம் காட்டினான். உதடுகள் இரண்டும் சளைக்காமல் மோதி கொண்டது வென்றது ஆண் இல்லை இங்கு பெண் தான்!
ம்ம்.. என்ன வேணுமா? உனக்கு தெரியாதா? உனக்கு என்னை பத்தி தெரியாதா? என அவளின் கண்கள் ஏக்கத்துடன் பார்க்க..
வவ் வவ்வ்! என குட்டி சத்ய தேவ் குரைத்தான்.
சட்டென வேகமாக சத்ய தேவ் விலக.. ரிதம் கண்களை மூடி கொண்டே டேய் சத்ய தேவ் என்ன டா இப்படி சொதப்பிட்ட என நினைத்து கொண்டே மானிடனை பார்க்க..
சத்ய தேவ் முகத்தை அழுத்தி துடைத்து கொண்டு வேகமாக வெளியே செல்ல போக.. அந்த துவாரகா யாருன்னு கண்டு பிடிச்சியா? நேத்து பக்கத்தில் ருத்ரன் இருந்தான். அதனால் தான் உன் கிட்ட அப்படி பேசிட்டேன்! உனக்கு என்னை பத்தி தெரியும்! என ரிதம் கூறினாள்.
சத்ய தேவ் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றான்.
அவன் சென்றதும் அவளின் இடையை தொட்டு பார்த்து உடையை விலக்கி கொண்டே பார்க்க அவன் பிடித்த இடம் அழுத்தமாக இருக்க கொஞ்சம் வலித்தது. இந்த இடத்தை பிடிச்சதுககே இப்படி இருக்கே! என உடல் எல்லாம் அவன் தொடுதல் எப்டி இருக்கும்! என உச்சி சிலர்த்து கிடந்தாள்.
ஒரு சில நிமிடங்களில் கதவு தட்டும் சத்தம் கேட்க.. வேகமாக தன்னை சரி செய்து கொண்டே கதவை திறந்தாள். ரிதம்!..
*
இங்கே கதவு தட்டும் சத்தம் கேட்க வேகமாக வந்த ஹரிணி கதவை திறக்க அங்கே நிதின் நின்று கொண்டிருந்தான்.
ஹரிணி அவன் முகத்தை பார்க்காமல் தலையை பிடித்து கொண்டே எதுக்கு இங்கே வந்த? நான் ரெண்டு நாள் லீவ் போட்டு இருக்கேன்! இது வேலை நேரம் இல்ல! என்னை டிஸ்டர்ப் பண்ணாத! பிளீஸ் இங்கே இருந்து போயிடு! என கூறினாள்.
நான் உன்னை வேலை விசயமா பார்க்க வரல.. பார்க்க தோணுச்சு! அதான்! என அவள் கதவை சாத்தும் முன் காலை உள்ளே பதித்தான்.
இப்போ எதுக்கு உள்ளே வர? என ஹரிணி கேட்க..
Dating பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க? சொல்லு! என கேட்டு கொண்டே அமர்ந்தான்.
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி கொண்டு அவனை பார்த்த ஹரிணி! என்னை பார்த்தால் உனக்கு எப்டி இருக்கு? நான் ஆல்ரெடி.. என ஹரிணி ஆரம்பிக்க..
நிதின் சிரித்து கொண்டே உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லன்னு சொல்லிடு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! போய் கிட்ட் இருப்பேன்! என அவன் எழுந்து கொண்டான்.
ஹரிணி உஷ்ண மூச்சுடன் எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு! இத்தனை நாள் உன்னை அவாய்ட் பண்ண மாதிரி இனி பண்ண மாட்டேன்! இப்போ என்ன உன் கூட வரனும் அவ்ளோ தானே! எங்கே சொல்லு! ஒரு வாரம் தானே! என எகத்தாலமாக கேட்டாள்.
ஆமா போலாமா இப்போவே! என நிதின் காந்த சிரிப்புடன் கேட்க..
ம்ம் என அவள் நகர..
என் கூட ஒரே ரூம்ல ஸ்டே பண்ற மாதிரி கூட வரும் அதுக்கே எல்லாமே prepared ஆ வந்திடு! என நிதின் சொல்ல..
ஹரிணி அதே இடத்தில் நின்றாள். இவனை? இவனை பேசாமல் கொலை பண்ணிட்டு போயிடவா? சைக்கோ! என உள்ளுக்குள் திட்டி கொண்டாள்.
அதன் பின் ஒரு சில நிமிடங்களில் இருவரும் கிளம்பினார்கள்.
நிதின் அவளின் அருகில் நெருங்கி எதுவும் முன் அறிவிப்பு இல்லாமல் அவளின் கையை கோர்த்து கொண்டான்.
ஹரிணி கையை விடுவித்து கொள்ள எவ்வளவோ போராட.. ஆனால் அவனுடைய வலிமையான கையில் அவளின் விரல்கள் மாட்டி கொண்டது.
கைய தானே பிடிச்சேன்! உன்னை கட்டி பிடிக்கலேயே? என மிகவும் சாதாரணமாக நிதின் சொல்ல
ஹரிணிக்கு அவள் மேலேயே வெறுப்பாக இருந்தது.
நிதின் மனதில் இது ஆரம்பம் தான்! உன்னை அடையும் வரைக்கும் விட மாட்டேன். என திக்கி கொண்டான்.
தொடரும்…
EPISODE 64
ஹரிணி கையை விடுவித்து கொள்ள எவ்வளவோ போராட.. ஆனால் அவனுடைய வலிமையான கையில் அவளின் விரல்கள் மாட்டி கொண்டது.
கைய தானே பிடிச்சேன்! உன்னை கட்டி பிடிக்கலேயே? என மிகவும் சாதாரணமாக நிதின் சொல்ல
ஹரிணிக்கு அவள் மேலேயே வெறுப்பாக இருந்தது.
நிதின் மனதில் இது ஆரம்பம் தான்! உன்னை அடையும் வரைக்கும் விட மாட்டேன். என சொல்லி கொண்டான்.
ச்ச என சிணுங்கி கொண்டே அவள் வர.. சரி சொல்லு 1 to 1to1 date ஓகே வா? இல்ல 2nd week ஓகே வா இல்ல 3 3 3 வச்சுக்களாமமா? Dating ல first step outing time spent தான் என நிதின் கேட்க..
நீ எப்படி பண்ணாலும் இது நடக்காது! நீ இப்போ பண்ணிட்டு இருக்கிறது எவ்ளோ கேவலமாக விசயம் தெரியுமா? என்னோட மனசுல சத்ய தேவ் மட்டும் தான் இருக்கான்! அந்த இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது.
நிதின் அவள் பேசுவதை காதல் போட்டுக் கொள்ளாமல் “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலைன்னு நினைக்கிறேன் நீ வேற ஏதோ உளறிட்டு இருக்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எந்த டைம்ல டெலிட் பண்ணலாம் எப்போ நீ என் கூட வரதுக்கு ப்ரீ? அப்படி இல்லன்னா! உனக்கு எப்போ ஃப்ரீ? அதுக்கு தகுந்த மாதிரி என்னோட ஸ்கேடியுல நான் மாத்திக்கிறேன்!” என்று கூறினான்.
ஹரிணி ஒரு பெரும் மூச்சை விட்டு அவனை பார்க்க நித்தின் கொஞ்சமாக புன்னகை செய்து கொண்டு இதுல என்ன தப்பை கண்டுபிடிச்சிட்ட? நம்ம ஒன்னும் ஒண்ணா! ஒரே படுக்கையில டைம் ஸ்பென்ட் பண்ணலையே? என்று கூறினான்.
இதை கேட்டதும் ஹரிணி அவனை கோபமாக கன்னத்தில் அரைய..
உதட்டை கடித்துக் கொண்டே சிரித்தவன். புடிச்சிருக்கு! இந்த அரை கூட உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
ஹரிணி பற்களை கடித்துக் கொண்டு பார்த்தவள். உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஏன் இப்படி எல்லாம் பண்ற! ப்ளீஸ் என்ன விட்டுடு! என்னால இதுக்கு மேல போராட முடியாது! என்று கூற
நித்தின் அவளின் முகத்தை கனிவுடன் பார்த்து “ஹரிணி நான் உன்ன ஒண்ணுமே பண்ணல டி! என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் மட்டும் தான் சொல்றேன்! இன்னும் எவ்ளோ நாள்? ஒரு ஆறு மாசம் கழிச்சு நீ அவனுக்கு பொண்டாட்டி ஆகிட்டேனா! அப்புறம் என்னோட காதல்! என்ன ஆகிறது? அட்லீஸ்ட் என்னோட காதல் எந்த அளவுக்கு அப்படின்னு உனக்கு புரிய வைக்கணும்! அதுக்காக தான் சத்தியமா சொல்றேன் டி! உன்ன நான் எதுவும் பண்ண மாட்டேன்!” என கூறினான்.
ஹரிணி அவனைப் பார்த்து “நீ பேசுறது கொஞ்சமாவது நியாயமா இருக்குதா நித்தின்? எனக்கு தான் என்கேஜ்மென்ட் ஆயிடுச்சுன்னு சொல்றேன் தானே!”
நித்தின் அவளை முகத்தை உற்றுப் பார்த்து ஒருவேளை உனக்கும் அவனுக்கும் என்கேஜ்மென்ட் ஆகலனா? நீ என்ன கல்யாணம் பண்ணிப்பியா? என்று கேட்டான்.
“திரும்பத் திரும்ப முட்டாள்தனமா பேசிட்டு இருக்காத! உனக்கு கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல! நீ என்னை விட சின்ன பையன்! அது தெரியுமா? எப்படி நீ ஒரு அக்கா மேல ஆசை படலாம்?” என்று ஹரிணி நித்தினை பார்த்து கேட்க…
இதை கேட்டதும் நித்தின் சிரிக்க ஆரம்பித்தான். அவள் அவனை ஆராய்ச்சியுடன் பார்க்க..
நித்தின் சிரிப்பை அடக்கிக் கொண்டே “ சாரி என்று கூறினான்.
ஹரிணி அவனுடைய கேலி புன்னகையை பார்த்து “இப்போ எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்க? எனக்கு காரணம் சொல்லு! இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? எதுக்கு சிரிச்சிட்டு இருக்க?” இன்று அதட்டலுடன் கேட்க…
சின்ன பையனா? என்ன பாத்தா மட்டும் தான் உனக்கு சின்ன பையனா தோணுதா? அவன பாத்தா உங்களுக்கு எப்படி தோணுது? அந்த சத்யதேவ் உன்னை விட சின்ன பையன் தானே! சின்ன பையன்! சரி அப்படி இருந்தும் நீங்க அவன் பின்னாடி … என்று சொல்லிவிட்டு நிறுத்தினான்.
ஹரிணிக்கு மிகவும் அவமானமாகி போகிட
நித்தின் அவளின் முகச்சுணக்கத்தை பார்த்துவிட்டு “சாரி சாரி நான் வேணும்னு சொல்லல! அவன்கிட்ட இருக்கிற எல்லாமே என்கிட்ட இருக்கு! எனக்கும் அவனுக்கும் ஒரு வருஷம் தான் வித்தியாசம்! அவனை விட அதிகமாகவே என்கிட்ட ஒரு விஷயம் இருக்கு! அது உனக்கு எப்படி புரிய வைக்கிறது? அது தான் தெரியலடி!” என்று கூறினான்.
அவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பிக்க
நித்தின் அவளின் அருகில் நடந்து கொண்டே ரிலேஷன்ஷிப்ல இருந்தா கூட டேட்டிங் போலாம்! அது ஒரு பெரிய கொலை குத்தம் கிடையாது! இன்பாக்ட் அதுல நல்லது தான் நடக்கும்! ஏன் தெரியுமா? என்று பேசிக்கொண்டே அவளை முகத்தை பார்க்க..
இப்போதைக்கு அவள் அவன் பக்கம் திரும்பும் எண்ணமே ஹரிணிக்கு இல்லை.
நித்தின் மேலும் அவளிடம் அதையும் தாண்டி ஒருவேளை ரிலேஷன்ஷிப்ல கிடைக்காத ஒரு விஷயம்! டேட்டிங்க்ல கெடச்சிட்டா? அந்த டேட்டிங்காக ரிலேஷன்ஷிப்பையே தூக்கி போடுற அளவுக்கு வந்துருவாங்களாம்! என்று சொல்லிக்கொண்டே அவளை ஓர கண்களால் பார்க்க..
ஹரிணி ஒரு நிமிடம் நின்றாள்.அவனை பார்த்து ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கமாக “அது மட்டும் எப்பவும் நடக்காது! நீ என்ன வேணாலும் ட்ரிக் யூஸ் பண்ணிக்க! எனக்கு எந்த கவலையும் இல்லை!” என்று முன்னேறிச் சென்றாள்.
*
SP கார்ப்பரேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் பலகையை தாங்கிக்கொண்டு அந்தக் கட்டிடம் வானத்தைத் தொடும் அளவிற்கு கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
அவனுடைய தந்தையை போலவே தன்னுடைய அந்த அறையும் கூட சூரிய பிரகாஷ் மற்றும் அவனுடைய படிப்பு விபரங்கள் தாங்கி சிம்மாசனத்தில் வெற்றிடமாக காட்சி அளிக்க.. இப்பொழுது சிங்கம் இல்லாமல் வெறும் இருக்கை மட்டும் இருக்க..
அதற்கு எதிரில் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு அனைத்து கோப்புகளையும் சரி பர்த்துக் கொண்டே இன்று நடக்கும் கான்ஃபரண்ட்ஸ்காக பரபரப்புடன் அனைத்தையும் தயார் செய்து SPR கம்பெனியிலிருந்து கலந்து கொள்ளும் அனைத்து கோப்புகளையும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு தன்னுடைய கோப்பை தன்னுடைய கோட்டை மீறி கொண்டே கம்பீரமாக எழுந்து நின்றான். நிவாஸ் பிரகாஷ்!
ஆம் பெயரிலேயே ஒரு கம்பீரம்! ஆனால் நிவா என்று அழைக்கும் போது என்ன ஒரு இனிமை! பெயர் கேட்டது போலவே குணம் இருக்கும்! என்றால் அதுதான் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்! நம்ம நிவாஸ் பிரகாஷ் கொஞ்சம் வித்தியாசமான ஆளு! ரொம்ப ரொம்ப அம்மா செல்லம்! கூடவே அப்பாவுக்கு ரொம்ப பயம்! அது மரியாதை நிமித்தமாக மட்டும் தான்! வீட்ல எல்லா பொறுப்பும் அவன் மேல! ஏன்னா அண்ணா நாட்டை ஆள திட்டம் போட்டுட்டு இருக்கான்! நிவாஸ் பிரகாஷ் இந்த பிசினஸ் உலகையே ஆள சூரிய பிரகாசால ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு ப்ராடக்ட் !
அந்த கண்ணு அதே கம்பீரத்தோடு இருக்கும்! கிட்டத்தட்ட அவனோட முகத்தைப் பார்த்தால் அப்படியே சூரிய பிரகாஷ் போல இருக்கும்! அவனோட இடம்.. அவனுடைய உயரம் தோற்றம் எடை ரொம்ப கம்பீரமா இருக்கும். சிங்கம் போல அந்த சிங்கத்துக்கு அழகு பிடரி மூடி அப்டின்னா இங்க நம்ம நிவாஸ் பிரகாஷ்க்கு அழகு அவனுடைய நேர் கொண்ட பார்வை! பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி, சொல்லப்போனால் அவனோட தாடியும் அந்த கன்னத்துல விழுற குழியும் தான்! ஆமா நிவாஸ் பிரகாஷுக்கும், நிலாவுக்கும் கன்னத்துல குழி விழுகும்! அது சூரிய பிரகாஷ் கிட்ட இருந்து வந்தது.
இருந்தாலும் இந்த கதையில் கண்ண குழி அப்படின்னா ரிதம், இன்ப ராகவன், ரவிச்சந்திரன் மட்டும் தான் வருவாங்க. சண்டைக்காரால ஆனால் இது அடங்காத அதிகாரா இந்த கதையில எல்லாருமே ஹீரோ ஹீரோயின் அப்படிங்கறனால நிவாஸ் பிரகாஷோட கண்ண குளி அதேபோல நிலாவுடய கன்ன குளியும் தான்! இதுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்!
சரி வாங்க கதைக்குள்ள போகலாம்!
நிவாஸ் பிரகாஷ் கிளம்பி கொண்டே நேராக கான்பிரன்ஸ் நடக்கும் இடத்திற்கு சென்றான்.
அங்கு ஒரு சலசலப்பு கூட்டம் அனைவரும் பெண்கள் மட்டும்தான்! ஹே டை பிடிக்காத! தாடி இழுக்காத டார்லிங்! என்ன டி பண்றீங்க என்னை பிச்சு தின்னு விடுவீங்க போல என்று ஒரு குரல் கேட்டது.
இந்த சேட்டையெல்லாம் வேற யார் பண்ண போறா? நம்ப மிதுன் தேவ் தான்! அப்படியே சூர்யாவும் உரிச்சு வச்ச ஒரு உருவம்!
அந்த கதையில SPRக்கும் சூர்யாவுக்கும் ஒத்துப்போகாது!
ஆனால் இந்த கதையில மிதுன் தேவ்க்கும் நிவாஸ் பிரகாஷ் ரொம்ப கெமிஸ்ட்ரி அட்டாச்சடா இருக்கும்!
நிவாஸ் பிரகாஷோட கேரக்டர் எப்படி இருக்கும்? அப்படியே சூரிய பிரகாஷ் போல தான் அப்பன மாதிரியே புள்ள! ஒருத்திய தேடி பிடிச்சு தன்னோட அம்மாவோட சம்மதோட.. கல்யாணம் பண்ணிக்கணும்! ஆயுசு குறைய குறைய காதல அதிகமா வளர்த்துக்கிட்டே போகணும்! அந்த அளவுக்கு ஒரு கேரக்டர் ஆன ஆளுதான் நம்ம நிவா!
நம்ம மிதுன் தேவ் அப்படி இல்ல கோகுல கண்ணனுக்கு சப்ஸ்டிடியூட் யாராவது வேண்டுமா? அப்படின்னு கேட்டா?
மிதுன் தேவை suggest பணகண்ணனு சொல்லுவாங்க அந்த அளவுக்கு எல்லா சேட்டையும் மிதுன் தேவ்கிட்ட இருக்கு!
அண்ணா என்ன பண்ணிட்டு இருக்க? என்று சத்தம் வர..
போச்சு என்று மித்துன் ஒருவித பதட்டத்துடன் எழுந்து அருகில் இருக்கும் பெண்களை விலக்கி கொண்டே பார்க்க..
பெண்கள் அனைவரும் அச்சோ! பாஷா! பாஷா! என்று சட்டத்துடன் திரும்பிப் பார்க்க..
அங்கே நிவாஸ் வந்து கொண்டிருந்தான்.
ஆனாலும் பெண்கள் அனைவருக்கும் மிதுன் தேவை தான் பிடிக்கும். அவன் பெண்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்!
அதனால் மிதுன் தேவ்க்கு பெண்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு.
நிவாஸ் பிரகாஷின் பார்வை அந்த பெண்களின் மீது கூறாக பட அந்த டோலிகள் அனைவரும் மிதுன் தேவைபாட்டு என்ன உங்க தம்பி அப்படி முறைக்கிறாரு? என்ன பாஸ் இதெல்லாம்! நாங்க உங்கள பாக்கவே எங்களுக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது! தெரியுமா? சூர்யா சார் விடவே மாட்டேங்குறாரு! என்று ஒரு பெண் சொல்ல..
ஓகே பேபி இப்போதைக்கு வேண்டாம் நிவாஸ் வந்துட்டான். டாடிக்கு விஷயம் தெரிஞ்சுரும் போங்க பிளவர்ஸ்! ப்ளீஸ் நம்ம நாளைக்கு பப்ல மீட் பண்ணலாம்!; என்று மித்துன் சொல்ல
சரி யார உங்களுக்கு ஜோடியா கூட்டிட்டு போவீங்க என்று இன்னொருவள் கேட்க
என்னை கூட்டிட்டு போவாரு என்று நீ வா அருகில் வந்து விட்டான்.
அனைத்து பெண்களும் அவனை முறைத்து பார்க்க
மிதுன் அனைவரையும் பார்த்து போங்க போங்க அப்புறம் பேசிக்கலாம் என்று அனைவரையும் அனுப்பி விட்டான்.
என்ன அண்ணா பண்ணிட்டு இருக்க? சித்தப்பா வந்தா என்ன நடக்கும் தெரியுமா என்று நிவாஸ் ஆரம்பிக்க
இங்க எதுக்குடா வந்திருக்கோம்! என்று மிதுன் அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே கேட்டான்.
அண்ணா இப்போ கான்ஃபரன்ஸ் நடக்க போகுது! என்று நிவா சொல்ல..
நீ கான்பரன்ஸ் கவனி நான் இங்க இருக்குற எல்லாத்துக்கும் ஒரு பாண்ட கிரியேட் பண்றேன் டா! இத எல்லாம் நீ எப்போ கத்துக்க போற என்று மித்துன் பேச வர
என்ன பாண்டு என்று சத்தம் வந்தது.
ஹஹ ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்லிக் கொண்டே மிதுன் திரும்ப
அங்கே சூரிய தேவ் வந்து கொண்டிருந்தார்.
தொடரும்..
EPISODE 65
அண்ணா இப்போ கான்ஃபரன்ஸ் நடக்க போகுது! என்று நிவா சொல்ல..
நீ கான்பரன்ஸ் கவனி நான் இங்க இருக்குற எல்லாத்துக்கும் ஒரு பாண்ட கிரியேட் பண்றேன் டா! இத எல்லாம் நீ எப்போ கத்துக்க போற என்று மித்துன் பேச வர
என்ன பாண்டு என்று சத்தம் வந்தது.
ஹஹ ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்லிக் கொண்டே மிதுன் திரும்ப
அங்கே சூரிய தேவ் வந்து கொண்டிருந்தார்.
சூரியதேவ் வந்து கொண்டிருப்பதை பார்த்து, நிவாஸ் கன்னக்குழி தெரிய சிரிப்பை அடக்க மித்துன் தேவ் நிவாசை முறைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
என்ன பாண்டு கிரியேட் பண்ண போற? கொஞ்சம் சொல்லு! நானும் கேட்கிறேன்! பிஸ்னஸ் டெவலப் பண்ண உருப்படியா இந்த நாலு வருஷத்துல ஏதாவது ஒரு ஐடியா கொடுத்து இருக்கியா? என்று சூர்யா கேட்டுக்கொண்டே அவன் முகத்தை பார்க்க
அது வந்து இதுக்கு நிறைய கம்பெனிஸ் வருதுல்ல இதுல பார்ட்டிசிபேட் பண்ண போகுதுல்ல! அது பத்தி நானும் நிவாஸும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்!
சூர்யா நிவாஸையும் மிதுனயும் மாறி மாறி பார்த்துவிட்டு நீ அதே இடத்தில் அப்படியே தான் இருக்க! ஆனால் நிவாஸ் பிரகாஷ் எஸ் பி ஆர் கார்ப்பரேஷன் ஓட எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டு எவ்ளோ டெவலப்பாக கொண்டு போயிட்டு இருக்கான்! ஆனா நீ? ச்ச! உன்னை விட சின்ன பையன் என்னவெல்லாம் பண்றான்! என்று மிதுன் தேவை இகழ்ந்து பேசிக் கொண்டிருக்க
சித்தப்பா என்று நிவாஸ் அழைத்து கொண்டே நீங்க அண்ணாவை பத்தி அப்படி எல்லாம் பேசாதீங்க! என்ன விட அண்ணாவுக்கு ரொம்ப திறமை இருக்கு! ஏதோ அந்த ஒரு பேப்பர்ல மட்டும் இதுவரைக்கும் ஒரு சின்ன சிக்கல் ! கண்டிப்பா இந்த முறை அண்ணா பாஸ் பண்ணிடுவாங்க! என்னோட MBA பேப்பரை அண்ணா சாதாரணமா கிளியர் பண்றாங்க! கஷ்டமான சம்ஸ்செயலாம் சால்வ் பண்ணும் போது! இதையும் பண்ண முடியும்! நீங்க அண்ணாவை குறைத்து தாழ்த்தி பேசாதீங்க! அதுவும் என்ன வச்சு பேசாதீங்க! அண்ணா எங்க அப்பா லெவலுக்கு ரொம்ப நாலேட்ஜ்பில் பர்சன்! என்று நிவாஸ் பிரகாஷ் தன்னுடைய தமயனுக்காக பரிந்து பேசிக் கொண்டு வர..
சூரிய தேவ் பெருமூச்சுடன் இருவரையும் பார்த்துவிட்டு சரி நீ இதை கவனிக்க போறியா? இல்ல! உனக்கு வேற வேலை என்ன இருக்கா? என்று கேட்டார்.
மிதுன் மனதில் எல்லாம் இந்த மகிக்காக பொறுத்துக்கொள்ள வேண்டியதா இருக்கு! அப்பவே நான் அவகிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்! இவரை டைவர்ஸ் பண்ணிட்டு ஃபாரின் போய் இருந்தா, இந்நேரம் என்னோட ரேஞ்சே வேற மாதிரி இருந்திருக்கும்! அதுக்கு பதிலா தேவ் தேவ் தேவ்ன்னு பின்னாடியே போய் லவ் வேற பண்றா! அதுவும் என் முன்னாடியே, வீட்ல இவரு என் மகி பின்னாடி! எங்கம்மாவ லவ் பண்றாரு! என்று உதடு துடிக்க நின்று கொண்டிருந்தான்.
டேய் உன்ன தான் நான் பேசுறது காது கேக்குதா என்று சூர்யா அதட்ட..
இல்ல நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் வந்து இருக்கேன்! ஆல்ரெடி இங்க இருக்குற எல்லாமே அது வந்து ஒரு தடவை இந்த இடத்தை முழுக்க அப்சர்வ் பண்ணிட்டேன்! நிறைய புது புது விஷயம் தெரிஞ்சு இருக்கேன்! என்று பெண்களிடம் பேசியதை வைத்து மிதுன் கூறிக் கொண்டிருக்க..
நிவாஸ் தன் அண்ணனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி சரி என்னமோ பண்ணு! இந்த கான்ஃபரன்ஸ்ல நம்மளோட கம்பெனியில் இருந்து சரியா எல்லாமே நடக்கணும்! நம்ம சின்சியரிட்டி என்னென்ன நம்மளோட ஷேர் ஹோல்டர்க்கும் மத்த கம்பெனிஸோட எம்டிக்கு தெரியும் அப்பதான் புது புது ப்ராஜெக்டோட நம்மகிட்ட கமிட் ஆவாங்க ப்ராபிட் நிறைய கிடைக்கும்! என சூர்யா சொல்லி விட்டு நடந்தார்.
அவர் திரும்பிச் செல்வதை பார்த்த மித்துன் தேவ் ஒரு பெருமூச்சுவிட்டு ஹப்பா! எப்படியோ இந்த இடத்தை விட்டு கிளம்புறார்! ரொம்ப நிம்மதி! என்று நினைத்துக் கொண்டிருக்க சட்டென சூரியா நின்றார்.
இப்போ என்ன ஆச்சு? என்று மிதுன் கேட்க..
உன்னோட அரியர் எக்ஸாம் கிளியர் பண்றது விஷயமா காலேஜ்ல இருந்து!.. என சூர்யா சொல்லிக் கொண்டிருக்க மிதுன் முகம் உடனே மாறியது நான் சொல்றத கவனிக்கிறியா என்று இன்னொரு முறை அதட்டினார்.
சொல்லுங்க நான் கவனிச்சுட்டு தான் இருக்கேன் என்னோட சின்சியர் உங்களுக்கு தெரியலையா என்று மித்தம் தீவிரமான முகத்துடன் சூரியதேவன் பார்த்துக் கொண்டிருக்க அதை பார்த்து நிவாஸ் பிரகாஷ் உதடு கடித்து சிரிப்பை அடக்கினான்..
ஹான் அது! நாளைக்கு காலையில நீ மீட் பண்ண போகனும்! சோ அத இப்பவே ஞாபகப்படுத்துறேன்! நாளைக்கு காலைல அவங்கள போய் பாரு! சரியா?
ஹான் ஓகே! என மிதுன் கூறினான்.
இந்த வேலைய நீ பாத்துக்கோ! எனக்கு ராம் அங்கிளோட வெளியே வேலை இருக்கு! நான் கிளம்புறேன்! என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.
அவர் சென்று விட்டாரா என்று படபடப்புடன் பார்த்த மிதுன். ஒரு பெருமூச்சை விட்டு அந்த இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்தான்.
இன்னும் எத்தனை நாளைக்கு அண்ணா இந்த அரியர் வச்சிட்டு இருக்க போற? எப்பதான் கிளியர் பண்ணுவ? அப்படி இல்ல அங்கே ஏதாவது ஒரு பொண்ணு பாத்துட்டு உட்கார்ந்துட்டியா? கிட்டத்தட்ட இப்ப மூணு வருஷத்துக்கு மேலாக போகுது! என்று நிவாஸ் மிதுனிடம் கேட்க..
மிதுன் தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! எனக்கு நிறைய பக்கம் பக்கமா எழுதறது பிடிக்கல டா நிவா! உனக்கு தெரியுமா? எவ்வளவு தூக்கம் வருது தெரியுமா? என்னால கண்ட்ரோல் பண்ண முடியல டா! என்று சோகமாக கூறிக் கொண்டிருக்க
என்ன அண்ணா! உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பதில்? எதாவது பொண்ணு இருந்தா பேசிக்கிட்டே எக்ஸாம் எழுதி முடிக்க வேண்டி தானே என்று நிவாஸ் கேட்க..
மிதுன் நொந்து கொண்டே நீ சொல்றது கூட கரெக்ட் தான் boost is the secret of energy மாதிரி எனக்கு பக்கத்தில் கேர்ல்ஸ் இருந்தாலே கண்ணுக்கு குளிர்ச்சி! என்னோட ஹார்ட்க்கு எனர்ஜி! ஆனா பாரு ஒரு பொண்ணு கூட அந்த சப்ஜெக்ட்ல அரியர் வச்ச வரவே மாட்டேங்குதேn எல்லாம் பசங்களா தான் வரானுங்க! அப்படியே இருந்தாலும் என்னோட ஹாலுக்கு யாரும் வராது இல்ல..
நிவாஸ் இதை கேட்டு தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
மிதுன் கடுப்புடன் தலையை பிடித்து கொண்டே என்னன்னு தெரியல நிவா! இந்த பசங்கள பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது! என்று மிதுன் கூறினான்.
உடனே நிவாஸ் சிரித்துக் கொண்டே சரி சரி விடுங்க கான்ஃபரன்ஸ் முடியட்டும்! சீக்கிரம் அந்த ஒர்க் பாருங்க!
நாளைக்கு தனியா போகனும்! அதைவிட எத்தனையோ முறை நானே ஏதாவது ட்ரிக் பன்னி இந்த பேப்பரை கிளியர் பண்ணலாம்னு ட்ரை பண்ணா இவரு கோல்மால் பண்ண விட்டதே மாட்டேங்குறாரு என்று பற்களை கடித்துக் கொண்டே மிதுன் கூறினான்.
சரி விடுங்க அண்ணா! நாளைக்கு நானும் உங்க கூட வரேன் நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்! அப்படியே நிலாவை ஹாஸ்டல்ல போய் என்ன பண்றான்னு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்!
ஆமா எனக்கும் தூரிகாவ பாக்கணும் போல இருக்கு! அவளையும் அப்படியே பாத்துட்டு வந்துடலாம் என்று இருவரும் பேசிக்கொண்டே அந்த கான்பரன்ஸை நல்லபடியாக முடித்தார்கள்.
அவர்கள் கான்பரன்ஸ் விட்டு வெளியே வந்த அடுத்த நொடி மிதுன் தேவ் எண்ணுக்கு சரமாரியான தாக்குதல் நடந்தது. குறுஞ்செய்தி தாக்குதல் என்று கூட சொல்லலாம்.
அந்த கான்பரென்சில் வந்திருந்த அனைத்து இளம் பருவ டோழிகள் வரிசை கட்டிக்கொண்டு மிதுன் தேவ்வுக்கு மெசேஜ் செய்து குவித்தார்கள்.
என்னடா இது அன்பு தொல்லையா போச்சே! இதுக்கு தான் நான் யார்கிட்டயும் பேசறது இல்ல! என்று நெற்றியை தேய்த்துக் கொண்டே மெசேஜ் எடுத்து மிதுன் பார்த்துக் கொண்டிருக்க..
நிவாஸ் அப்பட்டமாக சிரித்தான்.
இப்போ எதுக்குடா நிவா சிரிக்கிற?
அண்ணா நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும் சும்மா ஆக்டிங் விடாதே என்று இருவரும் கிளம்பினார்கள்.
அடுத்த நாள் காலை சூரிய தேவர் சொன்னது போலவே இந்த மிதுன் கிளம்பி இருந்தான்.
அவனை பிக்கப் செய்துகொண்டு நேராக மிதுன் தேவ் படித்த பொறியியல் கல்லூரிக்கு சென்றார்கள்..
நிவாஸ் காரை ஓட்டிக்கொண்டே தன் அண்ணனை பார்க்க..
என்னடா அப்படி பார்க்கிற என்று மித்துன் ஒரு கையில் தலையை கோதி விட்டபடி, உடையை சரி செய்தபடி, தன்னுடைய சட்டை கையை நேர்த்தியாக மடித்து விட்டுக் கொண்டே தலையில் ஒரு மாதிரி கலைத்துவிட்டு திரும்ப சரி செய்தான்.
நிவாஸ் காரை ஓட்டிக் கொண்டிருக்க..
நிவா! இப்போ எதுக்கு என்ன அப்படி பார்த்த? பதில் சொல்லு என்று மீண்டும் கேட்க..
அண்ணா நிஜமாகவே நீ அழகா தான் இருக்க! அங்க போனா அங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடி தான் வந்து சுற்றுவார்கள்! இதை ஏன் ஒவ்வொரு விஷயத்திலும் நீ அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணிட்டு இருக்க! என்று நிவாஸ் கேட்க
மிதுன் உதட்டை கடித்து உஃப் என்று ஊதிக்கொண்டே சிரித்தவன்..
“அது அப்படி இல்ல இந்த உலகத்துல ஆண்கள் இருக்கிறதே பெண்கள் ரசிப்பதற்கு தான்! அதேபோலத்தான் பெண்கள் ஆண்களை ரசிகர்களுக்கு தான் இந்த உலகமே படைக்கப்பட்டிருக்கு! அப்படி இருக்கும்போது ஒரு பையன் அப்படி கெத்தா போகும்போது எல்லா பொண்ணுகளும் திரும்பி பார்க்கணும்! நம்மள பார்த்தாலே பொண்ணுங்க எல்லாம் அப்படியே மயங்கி விழுனும்டா நிவாசு எப்படா இதெல்லாம் நீ தெரிஞ்சு ஒர்க்கவுட் பண்ண போறே!” என்று கேட்டான்.
உடனே நிவாஸ் மிதுன் தேவை ஒருமுறை பார்த்துவிட்டு சரி அப்படி பார்க்கிற பொண்ண எல்லாத்தையும் மிதுன் தேவ் கல்யாணம் பண்ணிப்பாரா? அதுக்கு சூரிய தேவ்! ஒத்துக்குவாரா? மகி சித்தி என்று அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டே போக..
ஹலோ ஹலோ அங்கதான் நீ மிதுன் தேவோட அறிவை பாக்கணும்! என்று கூறினான்.
சொல்லுங்க அண்ணா நானும் தெரிஞ்சுக்கிறேன் என்று நிவாஸ் சொல்ல..
ஆயிரம் பொண்ணுங்கள சைட் அடிச்சாலும், கண்ணனா இந்த உலகத்தை சுத்தி வந்தாலும், ஒருவனுக்கு ஒருத்தியா இருக்கணும், நம்ம பக்கத்துல சீக்ரெட் ஆஃப் எனர்ஜி நேத்து சொன்னேனே அது மாதிரி சீக்ரெட் ஆப் எனர்ஜியா ஒரு பொண்ண நச்சுன்னு பிடிப்பேன். அந்த தேடுதல் வேட்டைல யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு தான் எல்லா பெண்களையும் நான் ரசிக்கிறேன்! இதுல என்ன தப்பு இருக்கு? என்று நிவாசை ஒரு முறை பார்த்தான்.
அப்டியா?
அவ்வளவுதான் அதோட என் தேடுதல் வேட்டை முடிகிறது என்று தீவிரமாக தாடியை நீவியவன் திடீரென முகம் மாற..
இப்போ என்ன ஆச்சு? என நிவாஸ் கேட்க..
மிதுன் சிரித்து கொண்டே இன்னொரு புது தேடுதல் வேட்டை அன்னைக்கு ஆரம்பிக்கும்!
என்னன்னா என்று நிவாஸ் கேட்க
“ஆமா உலகத்திலேயே அழகான பையனா நான் இருக்கும் போது என் பக்கத்துல க்யூட் பொண்டாட்டியா மிசஸ் மிதுன் தேவ் இருப்பாள் சோ எங்க ரெண்டு பேரோட தேடுதல் வேட்டையில இதை விட பெட்டரா பேரழகியா பேரழகனா ஒருத்தனையோ? அல்லது ஒருத்தியயோ பெத்து போட்டா தானே அந்த லைஃப் ஃபுல்பில் ஆகுது! ”என்று மிதுன் கூறினான்.
சரி என நிவாஸ் கார் நிறுத்தி விட்டு வெளியே இறங்கி வர..
சொல்லு சொல்லு நீ சொல்லு! என மிதுன் தேவ் கேட்க..
நானா? நான் என்ன சொல்றதுக்கு இருக்கு? என நிவாஸ் கடக்க..
டேய் சொல்லிட்டு தான் போற? என மிதுன் அவன் அருகில் சென்று கேட்க..
எதை பத்தி அண்ணா? என ஒன்றுமே தெரியாதது போல கேட்டான்.
மிதுன் தீவிரமாக அவனுடைய முகத்தை பார்த்து டேய் அப்போ feminine gender மேல உனக்கு எந்த ஒரு அற்றாக்சனும் வரலையா? எதுவும் பிரச்சனையா? நான் இப்போவே இதை பத்தி ப்ரோ கிட்டயும், ரிதம் கிட்டயும் பேசுறன் என கூற..
அண்ணா! அப் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க! என நிவாஸ் கைகளை பிடிக்க..
அப்போ சொல்லு!..
அது எனக்கு தெரிஞ்ச வரையில் என தீவிரமாக யோசித்த நிவாஸ் அப்படியே நின்று கொண்டிருக்க..
டேய் சொல்லு டா! என மிதுன் முன்னால் வந்து நிற்க..
அண்ணா! என்ன இப்படி கேட்கிறீங்க? எப் எப்டி என ஒரு முறை தலை கோதி பெரு மூச்சை விட்ட நிவாஸ் கண்கள் மிளிர பார்த்து பழகிய காதல் நிதின் அண்ணா ரிதம் அண்ணி, சத்ய தேவ் அண்ணா, ஹரிணி அண்ணி இருக்காங்க. அப்புறம் நீங்க ப்ளர்ட் பண்ணி லவ் பண்ற ரகம்..
மேல சொல்லு!.
நிவாஸ் கொஞ்சும் புன்னகையுடன் புருவம் சுருக்கி ஒரு தடவை பார்த்ததும் காதல், ஏக்கம், பாசம், அன்பு இது மொத்தமா கொழைச்சு இருக்க அந்த மாதிரி உணர்வுகளை ஒரே பார்வையில் சொல்ற பொண்ணை அந்த மாதிரி பொண்ணோட கண்களை தான் தேடிட்டு இருக்கேன். என உதட்டை பிதுக்கி கொண்டே இது வரைக்கும் அப்படி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்ல..
இதை கேட்டு மிதுன் சிரித்து கொண்டே நீ சொல்லும் போது நல்லா தான் இருக்கு ஆனால் மோதல் தானே காதலில் முடியும் அப்டின்னு ஒரு வாக்கியம் இருக்கு! பார்த்ததும் லவ் பண்ணா அது உன்னோட தோற்றத்தை வச்சு தானே வரும்! என இரு புருவம் தூக்கி கேட்க..
நிவாஸ் எந்த சலனமும் இல்லாமல் அந்த கண்ணில் எனக்கான கோவம், ஆத்திரம், வெறுப்பு இருந்தாலும் அந்த பார்வையை சந்திக்கும் போது இவள் தான் என்னோடவள் அப்டின்னு தெரிஞ்சுப்பேன். அதே போல அந்த கண்ணில் கவலை, அழுகை, சோகம் இருந்தாலும் தடுமாற்றம் இல்லாம ஏற்று கொள்வேன் அண்ணா! என கூறினான்.
இதை கேட்டதும் மிதுன் புருவங்கள் ஆச்சரியமாக விரிந்து எனக்கும் ஆசை என்னோட சிஸ்டர் இன் லாவை பார்க்க..
அண்ணா! முதலில் உனக்கு தான் கல்யாணம் நடக்கும் அதுக்கப்புறம் லாஸ்ட்டா தான் எனக்கு நடக்கும் இப்போ நீ எதுக்கு இப்படி பேசுற என்று நிவாஸ் மிதுந்துவிடும் கேட்க அவன் சிரித்துக் கொண்டு என்ன அடுத்த கல்யாணம் எனக்கா சான்சே இல்ல நம்ம வீட்ல இருக்கிற எல்லா வண்டுகளுக்கும் கல்யாணம் பண்ணிட்டு தான் அதாவது சிவன்யா, பவன்யா, தூரிகா, நிலா, இனியா, எல்லாருக்கும் முடியனும். அப்போ தான்! என மிதுன் சொல்ல..
நிவாஸ் தன் அண்ணனை பார்த்து என்ன சொல்றீங்க அப்போ மிஸ்சஸ் மிதுன் தேவ்- ஓட எப்ப தான் நீங்க காட்சி கொடுப்பீங்க? என்று கேட்க
மிதுன் சிரித்துக் கொண்டே இப்போதைக்கு எனக்கு வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்! ஜாலியா எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு கூண்டுக்குள்ள போய் சிக்கும்போது தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்!
புரியலையே என்று நிவாஸ் கேட்க..
ஆமா கல்யாணம் அப்படினாலே கூண்டுக்குள்ள சிக்கறது தானே! ஆனா எல்லாரும் இங்க பொண்ணு தான் அரண்மனை கிளி மாதிரி கூண்டுக்குள்ள சிக்குது என்கிறார்கள்! பார்த்தால் உண்மை அது கிடையாது, இந்த ஆம்பளைய தான் பொண்ணுங்க கைக்குள் அடக்கி வச்சி இருக்காங்க! எனக்கானவ எந்த இடத்தில இருக்கிறா? என்ன பண்ணிட்டு இருக்கா? யாருக்கு தெரியும்? பொறக்காம கூட இருந்திருக்கலாம்? இனிமே கூட பொறந்து வரலாம்! சரி இப்போதைக்கு நான் ஃப்ரீ பேர்ட் ஜாலியா என்னோட இளமையை ஊஞ்சல் ஆடுற வரைக்கும் என்ஜாய் பண்ணிட்டு இருப்பேன்! என்று மிதுன் சொல்ல..
என்ன ஊஞ்சலாடுது என்று ஒரு குரல் அந்த குரலை கேட்டதும் நிவாஸ் மற்றும் மிதுன் இருவரும் கோபத்துடன் திரும்பிப் பார்க்க..
இந்த கோபம் எதனால? யாரால? அந்த குரலுக்கு சொந்தக்காரனால!
அப்படி யாருடா? அதுன்னு பார்த்தா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பையன் ருத்ரன்! எனும் ரௌத்திரன் சாட்சாத் ருத்ரன் தான்!
கத்தி போன்ற சட்டையில் கம்பீரமான தோற்றத்தில் மிதமான பார்வையில் நெற்றியில் கொஞ்சமே சந்தனம் வைத்து அதை கழுத்துக்கு வைத்திருப்பான் போல, கழுத்தில் தங்க செயின் மெல்லியதாக வருடி கொண்டிருக்க.. கூர் பார்வையுடன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு அவர்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தான்.
மிதுன் தேவ் கைகளை முறுக்கிக் கொண்டே நீ எங்கடா இங்கே என்று ருத்ரனை பார்த்து கேட்க..
அட மக்கு மாமா பையா! அத நான்தான் உன் கிட்ட கேக்கணும்! படிச்சு எத்தனை வருஷம் ஆகுது! சாரி தெரியாமல் கேட்டுட்டேன்! எதும் அலுமினியா ரியூனியனா? இங்கே என்ன பண்றீங்க? என அழகான துணியில் கம்பீரமாக கேட்க
நிவாஸ் அவனை முறைத்து விட்டு அண்ணா வாங்க போலாம்! நம்மளோட வேலையை பார்க்கலாம் என்று மிதுன் தேவ் கையைப் பற்றி இழுத்துச் செல்ல..
மிஸ்டர் மிதுன் தேவ் அப்படின்னு சொல்லலாமா இல்ல அரியர் எக்ஸாம் எழுத வந்த… சாரி சாரி அரியர் எக்ஸாமுக்கு அப்ளிகேஷன் போட வந்த மிஸ்டர் மிதுன் தேவ்! ஹான் அப்படி இல்லன்னா தேவ் கார்ப்பரேஷன் ஓட எம்டி இன்னும் பொறியியலை படித்துக் கொண்டிருக்கும் மிதுன் தேவ்! நான் சொல்றது சரியா? என்று எலன புன்னகையுடன் பார்த்தான்.
யார் கிட்ட என்ன பேசுற? வயசுக்கு மரியாதை கொடுக்க தெரியாதா? யூ இடியட் என நிவாஸ் திட்டினான்.
மரியாதை! இப்போ என்ன மரியாதை குறைச்சல் நடந்து போச்சு! நான் மரியாதையா பேசுறன். அன்னிக்கு என் சக்தி மாமா செய்யற வேலையை கிண்டல் பண்ணி பேசின உங்க வாய் மாதிரி நான் பேசலயே! என ருத்ரன் கூறினான்.
நிவாஸ் கோபத்துடன் அடுத்து பேச வர.. மிதுன் தேவ் அவனுடைய கையை பிடித்து விடு நிவா! போலாம் என அழைத்து சென்றான்.
ருத்ரன் சிரித்து கொண்டே தலையை சரி செய்து விட்டு அப்படியே திரும்பி பார்க்க.. தங்க மீனாட்சி தரிசனம். அவன் அவளை பார்த்து ஒற்றை கண் அடிக்க..
அபினயங்களில் காந்த கண்ணழகி அவனை பார்த்து ஒற்றை கண்ணுடன் கடித்து முளுங்குவது போல ஒரு செய்கையை செய்து விட்டு ஓடி விட்டாள்.
மாமி என சொல்லி கொண்டே உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவனுடைய இடத்துக்கு சென்றான்.
இப்போ ஒரு சம்பவம் பாக்கி இருக்கே!
மிதுன் மற்றும் நிவாஸ் இருவரும் போன திசைக்கு எதிர் பக்கமாக சாட் ரூட்டில் வந்து சேர்ந்தான். ருத்ரன்.
கல்லூரி மாணவன் போல புத்தகத்தை ஒரு முறை சுழற்றி விட்டு வெட்ட பட்ட புல் தரையில் கொஞ்சம் எட்டி பார்க்கும் புல் போல அவனுடைய தாடியை மார்க்கமாக தேய்த்து கொண்டே அவர்களுடன் உள்ளே சென்றான்.
இவன் எங்கே இங்கே வருகிறான்? என நினைத்து கொண்டே மிதுன் தேவ் நிவாஸ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே நுழைந்தார்கள்.
கண்ணகுழி இல்லாத ருத்ரன் கண்ணகுலி இருக்கும் நிவாஸை ஜாடையில் பார்த்து விட்டு மீண்டும் மீண்டுமா? என்ன இப்போ என்னோட பிளேஸ்க்கு வந்திருக்கீங்க? என்ன விசயம்!
நிவாஸ் தன் அண்ணனை பாவமாக பார்க்க..
ஓ அரியர் எக்சாம்! சூர்யா மாமா! என நெற்றியை தேய்த்து கொண்டே அது நீங்க தானா? என ருத்ரன் கேட்க..
மிதுன் தேவ் கைகள் முறுக்க அவனை பார்க்க..
மன்னிச்சிடுங்க மாமா! இந்தாங்க அப்ளி! இதை சூர்யா மாமா கிட்ட கொடுத்துடுங்க! உங்களுக்காக லைப்ரரியில் இருந்து நிறைய புக் எடுத்து வச்சிருக்கேன்! பொறுமையா படிங்க! இந்த முறை உங்க ஹாலுக்கு எக்சாமினரா நான் வந்தால் உங்களுக்கு நிச்சயமா ஹெல்ப் பண்றேன்! என ருத்ரன் சொல்ல..
மிதுன் கோபத்துடன் ருத்ரனை அடிக்க கை ஓங்கிட.
சூர்யா மாமா! என ருத்ரன் உடனே கூறினான்.
மிதுன் முகத்தில் கலவரம் தெரிய..
மாமா! இல்ல மே மே! சும்மா! என ருத்ரன் சொல்ல..
வீட்டு பக்கம் வாடா உன்னை சத்ய தேவ் நாயை விட்டு கடிக்க விடுறென்!.
I’m waiting மாமா! பை பை! என எக்க சக்கமாக கலாய்த்து தள்ளி விட்டான்.
மிதுன் தேவ் முகம் சொடுங்கி போக அவன் சென்ற இடம் தன் உயிர் ரிதம் தேடி!
மித்து என பிரகாசமாக ரிதம் அழைக்க..
அண்ணி உங்க தம்பி என நிவாஸ் அனைத்து விடயமும் சொல்ல…
ரிதம்…?
தொடரும்..
EPISODE 66
அந்த அப்பார்ட்மெண்டில் மதிய நேரத்தில் ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் வராதது போல அத்தனை நிசப்தமாக இருக்க..
ஏழாவது தளத்தில் மெதுவான இசை கொஞ்சம் கொஞ்சமாக மதியவேளையை ஆக்கிரமிக்க தொடங்கியது. பெரும்பாலானோர் அனைவரும் வேலையில் பிஸியாக இருப்பார்கள். அதேபோல் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு சென்றுவிட..
வீட்டில் முடங்கி கிடக்கு அந்த இசை காதுகளில் கேட்கத்தான் செய்தது. அதில் அனைவரும் ஒரு நிமிடம் நின்று என்ன பாட்டு என முணுமுணுக்கும் வகையில் பாடல் இருந்தது.
அவள் The fairy spring பாடலை தட்டி விட்டு ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னுடைய காலின் கட்டைவிரலில் நின்று கொண்டு சுழன்று சுழன்று, தன்னுடைய மெல்லிய இடையை வளைத்து வளைத்து நிலைத்து, உடலை முறுக்கி பெண்ணே பிணைந்து ஒரு நெகிழி போல அல்லாமல் தண்ணீரைப் போல வளைந்து நெளிந்து, அழகாக… சொல்ல போனால் பாடலுக்கு ஏற்ப வசந்த கால தேவதையை போல சந்தோஷமாக தன்னையே மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். ரிதம்.
எதற்கு இந்த ஆட்டம் வேறு எதற்கு தன்னுடைய கனவு கண்ணாளனின் உதட்டை கவ்வி கவி பாடியதற்கு தான்! உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள். உள்ளுக்குள் அனைத்தும் விட்டு விட்டு மின்னல் வெட்டு வெட்டிக் கொண்டிருக்க..
அதன் விளைவாக ஆட்டம் இந்த அப்பார்ட்மெண்டையே மயக்கும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தாள். அந்த குட்டி சத்யதேவ் பப்பி தன்னுடைய எஜமானி என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று நாக்கை தொங்க போட்டு கண்டு வெயிலுக்கு மூச்சு வாங்கிக் கொண்டே படுத்துக்கொணடு தன்னுடைய எஜமானியை பார்த்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொன்றாய் திருடுகிராய் திருடுகுறாய் என fairy மறைந்து இப்பொழுது கார்கால சங்கீத காண மழை காதல் மழையாக அவளை நனைக்க.. மெய் மறந்து ஆடி கொண்டிருந்தாள்.
இங்கே வெளியே மிதுன் தேவ் மெதுவாக நடையிட அவனுக்கு முன்னால் சென்று நிவாஸ் ரிதமின் அறை கதவை தட்டினான்.
திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்க.. ஆடி கொண்டே பெரு மூச்சுடன் வியர்த்து வழிய கதவை திறந்தாள்.
நிவாசின் பின்னால் மிதுன் தேவ் முகத்தை தொங்க போட்டு கொண்டே நிற்க..
அண்ணி உங்க தம்பி என நிவாஸ் அனைத்து விடயமும் சொல்ல…
ரிதம் காதுகளில் திரும்ப திரும்ப நிவாஸ் அழைத்த அண்ணி என்ற வார்த்தை தான் ரீங்காரம் போல திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்க..
இவன் இப்போ என்ன சொன்னான்? அண்ணியா? அண்ணியா? ஐயோ இவனுக்கு நான் அண்ணி ஆகிட்டேனா? எதுக்கு இவன் அண்ணின்னு சொல்றான்? இன்னும் கல்யாணமே ஆகலையே? என்று ரிதமுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்க..
அவர்கள் அங்கு நிற்பதை தாண்டி மிதுன் தேவ் நேராக வீட்டுக்குள் நுழைந்தான்.
அவன் சோபாவில் போய் அமர நிவாஸ் அங்கு நடந்ததை மீண்டும் ஒருமுறை விளக்கினான்.
ரிதம் மூச்சு வாங்கிக் கொண்டே தனது கூந்தலை மீண்டும் முறுக்கி பன்கொண்டையிட்டுக் கொண்டே “ஓகே நான் என்னன்னு பாக்குறேன் ஆனா இனி என்ன அண்ணி அப்படிங்கற வார்த்தை எல்லாம் வச்சு கூப்பிடாத! எப்பவும் போல ரிதம்னு கூப்பிடு என்று கூற..
நிவாஸ் அவளை கேள்வியாக பார்க்க..
ஹரே என்ன நிவா? நமக்குள்ள என்ன? நீயும் நானும் சின்ன வயசுல இருந்து ஒட்டுக்கா வளர்ந்து இருக்கோம்! உன்னை எத்தனை நாள் நான் தூக்கி கொஞ்சுருக்கேன்! தெரியுமா? என்று ரிதம் அப்படியே பேச்சை மாற்றிட..
சரி என்று ஒற்றை பதில் அளித்தான்.
ம்ம் உள்ளவா என்று ரிதம் அழைக்க..
ஆனாலும் உங்களை அண்ணி வதினா அப்படின்னு கூப்பிட எங்க அம்மா சொன்னாங்க
சரி உள்ளே வா நிவாஸ் என்று அழைத்தாள்..
அதன் பின்பு ரிதம் நேராக்க மிதுன் மடியில் சென்று அமர்ந்து அவன் தலையை கோதி கொடுத்துக் கொண்டே என்ன ஆச்சு மித்து? என்று கேட்க..
மிதுன் கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது. அவனுடைய கையை எடுத்து ரிதம் கைகளை வைத்துக்கொண்டு“ நீ ஒன்றும் கவலைப்படாத அந்த நாய் கண்டிப்பா அனுபவிப்பான். நீ எதுக்கு கவலைப்படுற? அவன நான் எப்படி பழி வாங்குறேன்னு மட்டும் பாரு! என கூறினாள்.
அந்த நேரம் நிவாஸ் தண்ணீர் கிளாசை எடுத்து நீட்டி “இதுக்கு எல்லாம் ஒரே ஒரு சொல்யூஷன் தான் இருக்கு அண்ணா இந்த அரியர் கிளியர் பண்றது மட்டும்தான்! இதுக்கு தீர்வு என்று கூற..
ரிதம் அதை அவமதிக்கும் விதமாக “ஆமாம்டா மித்து! உனக்கு என்னடா பிரச்சனை? சரி இந்த முறை நீ கண்டிப்பா பாஸ் ஆகிடுவ! எனக்கு நம்பிக்கை இருக்கு! நானும் உன் கூட எக்ஸாமுக்கு வரலாம்னு முடிவு பண்ணிட்டேன்!” என்று ரிதம் தீர்க்கமாக சொல்ல..
நானும் வரேன் என்று நநிவாசும் கூறினான்..
இந்த செய்தியை காற்றை விட வேகமாக பரவி நிதின் காதுகளுக்கு சென்றது.
மிதுன் கவலைப்பட்டான் என்று தெரிந்தால் அடுத்த நொடி நித்தின் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிவாஸ் நிலா இருவரும் தன்னுடைய உடன்பிறப்பாக இருந்தாலும், அதைவிட மிகவும் ஒரு படி மேல் என்று தான் சொல்ல முடியும்.
அந்த அளவுக்கு நித்தின் பிரகாசுக்கு மிதுன் மீது அவ்வளவு பாசம் கோபம் கொழுந்துவிட்டு எரிய ருத்ரனை ஏதாவது செய்து தீர வேண்டும் என்று நித்தினுக்கு தோன்ற..
முதலில் அவனை கொஞ்சம் தட்டி வைக்க வேண்டும் என்று உடனே அழைத்தான்.
ஆனால் அழைத்தது ருத்ரனுக்கு அல்ல சத்யதேவுக்கு…
ஹலோ!..
நீ மட்டும் தான் இருக்கியா? இல்ல உன் பக்கத்துல உன்னோட ஜால்ரா அந்த ருத்ரன் இருக்கானா? என்று கடுமையான குரலில் பேசினான். நித்தின் பிரகாஷ்.
இப்போ உனக்கு என்ன வேணும்? என்று மென்மையான குரலில் சத்திய தேவ் கேட்க..
நித்தின் பிரகாஷ் எழன புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு உன்னோட இந்த பவியமான நடிப்பை என்கிட்ட வச்சுக்காத! நீ யாரு என்னனு எனக்கு தெரியும்! என்று கூறினான்.
இதை கேட்டதும் சத்யதேவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
நிதின் பிரகாஷ் திருப்தி புன்னகை வெளிப்படுத்தி அந்த ருத்ரனை ஒழுங்கா இருக்க சொல்லு! இனிமே தேவையில்லாம மிதுன கஷ்டப்படுத்துற வேலையை வச்சுக்கிட்டான்? அவனை நான் சும்மா விடமாட்டேன்! என்று ஒவ்வொரு வார்த்தையும் கண்ணீர் குரலில் கூறினான்.
என்ன சொல்ற என்று சக்தி சுரத்தை இல்லாத குரலில் கேட்க
அதான பார்த்தேன்? உன்னோட தம்பி மேல உனக்கு எப்படி பாசம் இருக்கும்? சொல்லப்போனா! அவன் உன்னோட தம்பியே கிடையாது! மிதுன் தேவ் என்னோட தம்பி! என நிதின் கூற..
இதை கேட்டதும் சத்திய தேவ் மெலிதாக சிரிக்க..
உடனே நித்தின் பிரகாஷ் அதை கண்டு கொண்டவனாய் நீ இப்போ சிரிக்கிற! சரிதானா! எவ்வளவு வேணாலும் சிரிச்சுக்கோ! ஆனா அந்த ருத்ரனை இனி ஒழுங்கா இருக்க சொல்லு! என்று சொல்லிவிட்டு போனை வைக்கப் போக..
இரு வைக்காத என்று சத்திய தேவ் கூறினான்.
என்ன என்ற நித்தின் பிரகாஷ் கேட்க..
எப்படி இருக்க? உன்னோட உடம்பு பரவாயில்லையா? என்று கேட்டான்.
அந்த வார்த்தைகளில் நித்தின் பிரகாஷ் ஒரு நிமிடம் நிசப்தமாகி போக இரு பக்கமும் அமைதியை நிலவியது.
அந்த அமைதியை முதலில் கலைத்தது நித்தின் பிரகாஷ் தான் கேள்வி கேட்டது தன் அண்ணனாக இருந்தாலும் அதற்கு சரியான பதில் சொல்வது தம்பியின் கடமை அல்லவா அதே போல் தான் உன்னோட கோபம் எப்படி இருக்கு என்று நித்தின் பிரகாஷ் அமைதியான குரலில் கேட்டான்.
அது!.. என சத்ய தேவ் அமைதியாக இருக்க..
நிதின் பிரகாஷ் ஒரு பெருமூச்சை விட்டு சரி அதைவிட அந்த ஆக்சிடென்டல் கேஸ் நியூஸ் பாத்தியா என்று கேட்டான் உடனே சத்யதே ஒரு நிமிடம் திட்டிக்கிட்டு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எந்த ஆக்சிடென்டல் கேஸ் என்று இயல்பாக நித்தியிடம் கேட்க
நடிக்காத சத்திய தேவ் என்று நித்தின் பிரகாஷ் உருமினான்.
சத்யதேவ் மெதுவான குரலில் நிஜமாகவே நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல! நித்தின்! என்று கூறினான்.
நித்தின் பிரகாஷ் ஒரு பெரும் மூச்சை விட்டு ப்ளீஸ் எதுவும் பண்ணாத! நான் இல்லாம எதுவும் பண்ணாத! நான் வரேன்! என்று கூறினான்.
லுக்! நீயும் எதுவும் பண்ண கூடாது! நானும் எதுவும் பண்ண மாட்டேன்! என சத்ய தேவ் சொல்ல..
நமக்கு நடுவுல இருக்கிற ஒப்பந்தம் மறந்து போச்சா என்று நித்தின் பிரகாஷ் கேட்க..
இரு பக்கமும் உஷ்ண மூச்சை வெளிவிட்டு கைகளை இறுக்கி மடக்க கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என ஒரு போரே நடந்தது.
கோபத்தை கட்டு படுத்து! என சத்ய தேவ் சொல்ல..
ஜர்னலிஸ்டா இருக்கிற நீ அந்த ஆக்சிடென்ட் கேஸ பாக்கலன்னு சொல்றது, எனக்கு ரொம்ப வினோதமா இருக்கு! எனக்கு தெரியாம மட்டும் நீ ஏதாவது பண்ணுன்னு தெரிஞ்சது? நான் வந்து உன்னை உதைப்பேன்டா! நீ என்ன பண்றியோ அதுக்கு ஈகுவலா நானும் பண்ணுவேன்! உனக்கு என்னை பத்தி தெரியும் தானே! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த காரியத்தை ஒட்டுக்கா பண்ணி முடிக்கணும்! புரியுதா! என்று நித்தின் பிரகாஷ் கர்ஜித்தான்.
அத வந்து பேசிக்கலாம் இப்போ உன்னோட வேலைய பாரு என்று சத்தியத்தை வைக்க போக திரும்பவும் சொல்றேன் என்ன விட்டு எதுவும் பண்ண அப்புறம் நல்லா இருக்காது சத்யதே என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் சத்தியத்தை ஒரு பெரும் உஷ்ணம் மூச்சை வழிபட்டு கைகளை இறுக்கி மடக்க இங்கு அதே போல் தான் நெட்டிங் பிரகாசம் செய்தான். இந்த இரு அதிகாரம் உள்ள கோபம் யார் பக்கம் கொழுந்து வட்டு எரிந்து கொண்டிருக்கிறது வேற யாரு சர்வேஸ்வரன் தான் அந்த அடங்காதவனுக்கும் இந்த அதிகாரிகளுக்கும் தானே நடுவுல ஒரே நடக்குது இதுல பழைய கைதியா இதழினி மாட்டிக்கொள்ள என்ன நடக்குமோ தெரியலையே?
பார்ப்போம்!
*
அந்த நாளின் மாலையில் ருத்ரன் அவளுக்காக காத்திருக்க..
தங்க மீனாட்சி தரிசனம் கொடுக்க வந்துவிட்டாள்.
ஏன்னா என்று அவள் அழைக்க…
ருத்ரன் அவளை முறைத்துப் பார்த்தான்.
எதுக்கு முறைக்கிறீங்க என்று அவள் மாமி பாஷையில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க..
உனக்கு எத்தனை தடவை சொல்றது? இந்த ஏன்னா! வான்னா! போங்கோனாலாம்! சொல்ல கூடாதுன்னு, அழகா என்னை மாமா சொல்லி கூப்பிடுடி என்னவா என்று ருத்ரன் கடிந்து கொள்ள…
சாரி சாரி தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுக்கோங்க என்று மறுபடியும் பிராமண பாஷைக்கு வந்து நின்றாள்.
உன்னை திருத்த முடியாதடி! உன்னை திருத்தவே முடியாது! என்று ருத்ரன் சொல்ல..
தங்க மீனாட்சி அழகாக கண்களை விரித்துக் கொண்டே சிரித்தாள்.
உன்னோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு டி! அப்படியே அந்த சிரிப்பை ஒரு ரெண்டு லோடு அள்ளிட்டு போலாம் போல இருக்கு! என்று ருத்ரன் சொல்ல..
அதற்கும் களுக் களுக் என்று சிரித்தாள்.
ருத்ரன் ஆழ்ந்த மூச்சு எடுத்து அவனுடைய சிகையை கோதிக் கொண்டே உதடுகளை கடித்து கொண்டே அவளுடைய உதடுகளை பார்க்க..
உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்! என்று மீனாட்சி கூற…
என்ன விஷயம் என்று அவளுடைய நயனமான கைகளைப் பிடித்துக் கொண்டான். எனக்கு நாட்டியமாடனும் போல இருக்கு!என்று மீனாட்சி சொல்ல..
ஆடலாமா நீ நானும் சேர்ந்து மோகினி ஆட்டம் என ருத்ரன் அழைக்க..
கம்முனு இருங்கோ இது பப்ளிக் பிளேஸ்! என்று மீனாட்சி சொல்ல..
ஹே நான் இங்கே சொல்லல டி! என்னோட வீட்ல என்று அழைத்தான்.
மீனாட்சி திடுக்கிட்டு நானா? நான் எல்லாம் வரமாட்டேன் பா! அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி… அது அதெல்லாம் தப்பு என்று கூற..
என்ன தப்பு? எது தப்பு? என்று ருத்ரன் கேட்க..
அவள் ஒரு பெருமூச்சு விட்ட முதல்ல என்ன பேச விடுங்கோ! நீங்களே தான் பேசின்ருக்கேள்! என்று மீனாட்சி சொல்ல..
விட மாட்டேங்கிறாளே என்ற ருத்ரன் சலித்துக் கொண்டே சரி சொல்லு என்ன விஷயம்? என்று கேட்க..
இங்க ஒரு நாட்டியாலயா இருக்கு! அதுவும் என்னோட ஹாஸ்டலுக்கு பக்கத்துல.. அதனால அங்க போய் நான் ஜாயின் பண்ணிக்கவா? என்று கொஞ்சலாக கேட்டாள்.
உனக்கு தான் எல்லாமே தெரியுமே அப்புறம் எதுக்கு டி! என ருத்ரன் கேட்க..
தெரியும் தான்! இருந்தாலும் எனக்கு ஆடனும்! எனக் கூறினாள்.
உடனே ருத்ரன் அதனுடைய விவரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து விட்டு சரி ஜாயின் பண்ணிக்கோ! ஃபர்ஸ்ட் டே நான் கொண்டு வந்து விடுறன்..
இன்னிக்கு தான் ஃபர்ஸ்ட் டே! என்ன நீங்க கொண்டு வந்து விடுங்க! என்று கொஞ்சலுடன் அழைத்தாள்.
அவ்ளோதானா என் கோல்டு ஃபிஷ்-அ நான் கொண்டு வந்து விடுகிறன். என்று இருவரும் கிளம்பி நேராக மீனாட்சி சொன்ன இடத்துக்கு காரில் சென்றார்கள்.
காரில் செல்லும்போது ருத்ரனுடைய ஒரு கையில் மீனாட்சியின் நயன விரல்களை அதை அழுத்திக்கொண்டே சென்றான்.
எதுக்கு இப்படி கைய புடிச்சிட்டு வரிங்க என் என்று அவள் கேட்க..
இந்த கையை டெய்லி தூங்கும் போது பிடிச்சுட்டு முத்தம் கொடுத்துட்டு என்னுடன் நெஞ்சுக்கு பக்கத்துல வச்சுட்டு தூங்குனா! எப்படி இருக்கும்னு ஆசையா இருக்குடி! ஒரு தடவை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாமா? என்று ருத்ரன் கேட்க..
ஆசை தான் அன்னைக்கு தான் டிரெயின்ல வரும்போது சில்மிஷ சேட்டை எல்லாம் பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கினோமே! மறந்து போச்சா? என்று மீனாட்சி கேட்க..
அது ட்ரெயின்ல! இது இனிமே.. என்னோட வீட்ல நீ தூங்கணும் என்று ருத்ரன் கூற..
மீனாட்சி ஆயாசமாக படிப்பு முடியட்டும்! அதுக்கப்புறம் அப்பா கிட்ட பேசி பார்க்கலாம்! என்று கூற..
உங்க அப்பா ஒத்துக்கலனா என்ற ருத்ரன் கடுமையான விழிகளில் அவளை பார்க்க..
அப்படி பார்க்காதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று கூறினாள்.
ஹே கேட்டதுக்கு பதில் சொல்லு டி! என மீண்டும் ருத்ரன் கேட்க..
எனக்கு மூச்சு! என்னோட ருத்ரா தான்! அவனோட ரவுத்ரன் கோபம், நயன காதல் எல்லாமே எனக்கு தான்! என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்தாள்.
ருத்ரனுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புது ரத்தம் பாய்ந்தது.
அவளின் மென் விரல்களுக்கு முத்தமிட்டான்.
அவள் சிரித்து கொண்டே சரி சரி போதும் வாங்கோ என்று முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே கீழே இறங்கினாள்.
இருவரும் நடந்து கொண்டே வர எதிரில் நயனங்களோடு இன்னொருவள். யாருக்காக காத்திருக்கிறாளோ? அவளுக்குத்தான் வெளிச்சம்! அமாவாசையா? பௌர்ணமியா? ரெண்டும் வைத்திருக்கும் இவள் நிலா!
தொடரும்..
EPISODE 67
எனக்கு மூச்சு! என்னோட ருத்ரா தான்! அவனோட ரவுத்ரன் கோபம், நயன காதல் எல்லாமே எனக்கு தான்! என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்தாள்.
ருத்ரனுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புது ரத்தம் பாய்ந்தது.
அவளின் மென் விரல்களுக்கு முத்தமிட்டான்.
அவள் சிரித்து கொண்டே சரி சரி போதும் வாங்கோ என்று முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே கீழே இறங்கினாள்.
இன்னொரு பக்கமாக ருத்ரன் இறங்கி இருவரும் கைகோர்த்துக்கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் அங்கே நிறைய பெண்மணிகள், இளம் வயதினர்கள், சிறுமிகள் சிறுவர்கள் என அனைவரும் நாட்டிய உடையில் உள்ளே வெளியே வந்து கொண்டும் இருந்தார்கள்.
எதிரில் நயனங்களோடு இன்னொருவள். யாருக்காக காத்திருக்கிறாளோ? அவளுக்குத்தான் வெளிச்சம்! அமாவாசையா? பௌர்ணமியா? ரெண்டும் வைத்திருக்கும் இவள் நிலா!
மை பூசிய கண்களோடு கைகளில் வைத்திருந்தாள். இன்ஸ்டன்ட் மருதாணி, அது கால்களின் இன்னும் கூடவே சிவப்பேரி இருந்தது. ஜல் ஜல் சலங்கையுடன் சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் நாட்டிய உடையில் அழகாக நின்று கொண்டிருந்தாள்.
இன்று ஒரு ஒத்திகைக்கான அரங்கேற்றம்!
(ஹான் நிறைய பேருக்கு இந்த டவுட் திரும்பத் திரும்ப வருது நிலா என்ன படிக்கிறா அப்படின்னு தானே நிலா MBBS செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கா!)
அவள் அங்கு நின்று கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்த ருத்ரன் புருவத்தை சுருக்கி கொண்டு, இந்த நாட்டியாலயாவில் தான் ஆடிட்டு இருக்காளா? இவளுக்கு MBBS படிக்கிறத விட இங்க வந்து ஆட்டம் போடுறது தான் முக்கியமா போச்சா! நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்! என்று ருத்ரன் சொல்லிக் கொண்டிருக்க .
ஏன்னா என்னாச்சு என்று மீனாட்சி கேட்டாள்.
அது ஒன்னும் இல்லடி! அதோ அங்க நின்னுட்டு இருக்காளே அந்த பொண்ணு என்று நிலாவை கை காட்டினான்.
யாரது என்று மீனாட்சி பார்க்க
அங்கே நிலா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் மீனாட்சி இந்த அக்காவா? என்ன ஆச்சு அவங்க உங்களுக்கு தெரியுமா? என மீனாட்சி கேட்க..
ருத்ரன் தலையை கோதிக் கொண்டே மீனாட்சி என மீண்டும் அழைத்துச் சென்றவன். ஆமா அவளை எனக்கு தெரியும்! அந்த கேர்ள் என் அம்மாவுடைய பொண்ணு இருக்காளே ரிதம்! அவள் கட்டிக்க போறவனோட தங்கச்சி என்று கூறினான்.
அவன் சொன்ன தோரனையை கேட்டு புருவம் நெருக்கிய மீனாட்சி அவனை பார்த்து சரி அதனால என்ன? அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்க..
இல்ல டி மாமி! நீ இங்கே ஜாயின் பண்ணிக்கிறது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! ஆனா, உன்ன பார்க்க வரும்போது, என்னை அவ பாத்துட்டா என்ன பண்றது?! என்று ருத்ரன் கூற..
மீனாட்சி புருவம் சுருக்கி கொண்டு அவங்க பாத்தா நமக்கென்ன
அது அப்படி இல்லடி மாமி! அந்த பொண்ணோட ரெண்டு அண்ணாவும் ரொம்ப மோசமானவங்க! எங்க அக்கா அதைவிட ராவடிக்காரி! அதனால நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறத பார்த்து போய் சொல்லிட்டா என்ன பண்றது? என்று கேட்டான்.
சொன்னா இப்போ என்ன? அப்போ என்னை ஏமாற்ற தான் பின்னாடி சுத்தினெலா? நீங்க தானே இப்போ என்கிட்ட என்ன சொன்னீங்க! தோப்பனார் கேட்டா, என்ன சொல்லுவேன்னு கேட்டீங்க தானே? அதே போல உங்க தோப்பனார்கிட்ட சொல்ல பொறதில்லைதயா? என்று மீனாட்சி கண்களை விரித்து பேச…
அடியே அழகி எனக்கும் ஆசைதான்! எனக்கு எல்லாம் யாரை பார்த்து பயமில்லை. இருந்தாலும், என் மீனாட்சிய நான் பத்திரமா பாத்துக்கணும் இல்லையா ? என்ன மொத மொதல்ல சத்ய தேவ் மாமாவுக்கு தான் உன்னை இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன். நாம ரெண்டு பேரும் பேசறது, நம்ம உறவை இவள் மூலமா மத்தவங்களுக்கு தெரிஞ்சுட்டா, அது நல்லா இருக்காதில்லடி! அதனால தான் என மீண்டும் கொஞ்சிக் கொண்டு அவளை பார்த்தான்.
மீனாட்சி சிரித்துக் கொண்டே அவ்வளவுதான? நான் வெளிய காட்டிக்க மாட்டேன்! என்று மீனாட்சி சொல்ல..
அவளின் புரிதலை நினைத்தும் தன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்தும் மெட்சி கொண்டவன். எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூட பார்க்காமல், அவளுடைய இதழில் முத்தமிட்டு கொண்டிருந்தான்.
இந்த மாதிரியும் நான் எப்ப கிஸ் பண்ண போறேன்? என்று மிதுன் தேவ் ருத்ரனின் பின்பக்கத்தை பார்த்து நிவாஸிடம் சொல்லிக் கொண்டிருக்க..
ஐயோ கன்றாவி எதுக்கு அண்ணா அதையெல்லாம் பாக்குறீங்க! எவனோ ஒருத்தன் இன்டீசன்ட்டா நடந்திட்டு இருக்கான். இப்போ நாம இங்கே எதுக்கு வந்திருக்கோமோ! அதை பார்ப்போம். நம்ம பாப்பாவ பாக்க தானே வந்தோம்! அதோ வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்கா! நாம போய் பாத்துட்டு வந்துடலாம்! என்று நிவாஸ் சொல்ல..
நிவாஸ் மற்றும் மிதுன் இருவரும் நடந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் நினைப்பாக இருக்கிறது என சத்ய தேவ் நிலாவை பார்த்து விட்டு சென்றான். இப்பொழுது நிவாஸ் மற்றும் மிதுன் தேவ் இருவரும் வர அவர்களுக்காக நின்று கொண்டிருந்தாள்.
ஏனென்றால் நிவாஸ் மிகவும் கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு பேசுவான். மிதுன் தேவ் நன்றாக பேசினாலும் டெவில் கேங்கில் இருப்பவர்களுடன் தான் அதிக ஒட்டுதல். ஆனால் சத்ய தேவை எல்லார்க்கும் பிடிக்கும்.
அச்சோ விடுங்கோளேன்! ருத்ரா! நீங்க வர வர ரொம்ப முரட்டுத்தனமா இருக்கீங்க என்று மீனாட்சி அவனிடமிருந்து விலகிக் கொண்டு சொல்ல..
ருத்ரன் அவளுடைய உதட்டை துடைத்துவிட்டு மீண்டும் உதட்டை பிரிய மனமில்லாமல் இன்னொரு முறை கவ்வி பிடித்தான்.
மீனாட்சி ஒவ்வொரு முறை அவன் கவ்வும் போதும் சொக்கிக் கொண்டுதான் நின்றாள். அதன் பின் ஒரு சில நிமிடங்கள் கழித்து பெரும் மூச்சை விட்டவன். சரி போயிட்டு வா! நான் என்று அவன் சொல்ல வர..
நான் பத்திரமா போயிட்டுவேன். ஒன்னும் பிரச்சனை இல்ல என்று மீனாட்சி கூறினாள்.
ஹலோ மேடம் நீங்க பத்திரமா போவீங்கன்னு எனக்கு தெரியும்! ஆனா திரும்ப ரிட்டன் லயும் நான்தான் உன்னை பிக்கப் பண்ணி கூட்டிட்டு போவேன்! அதனால ஆடி முடிச்சு ரெடியா இரு வந்து உன்னை அள்ளிக்கிட்டு போறேன்! என்று கன்னத்தில் முத்தம் படித்து அவளை விடுவித்தான்.
மீனாட்சி வெட்க சிரிப்பில் மெதுவாக நடந்து கொண்டே நாட்டியாலயாவின் உள்ளே நுழைந்தாள்.
அண்ணா என்று நிலா புன்னகை முகத்துடன் அழைக்க.. மிதுன் தேவ் , நிவாஸ் பிரகாஷ் இருவரிடமும் பேசிக்கொண்டிருக்க..
ருத்ரன் காரில் ஏறி மீனாட்சி சென்றதும் திரும்பி பார்க்க.m அங்கே நிலா மிதுன் நிவாஸ் என அனைவரையும் பேசி கொண்டிருப்பதை பார்த்து முறைத்து விட்டு பிளடி கிரிமினல் ஃபெலோஸ் என்று சொல்லிக்கொண்டே காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.
எதுக்கு இப்படி நாட்டியம் ஆடியே ஆகணுமா? டாக்டர் படிப்பு ரொம்ப கஷ்டம்னு சொல்லுவாங்களே! நீ அந்த இடத்துல படிச்சுக்கிட்டு, இங்க வந்து நாட்டியம் ஆடணுமா பாப்பா! எல்லாத்தையும் முடிச்சிட்டு ஆடலாம் தானே! என்று மித்துன் சொல்ல..
நிலா கன்னகுளி வலிக்காமல் அது என்னமோ தெரியல! நாட்டியம் ஆடும் போது மனசு ரொம்ப அமைதியா இருக்க மாதிரி தோணுது! கொஞ்சம் தைரியம் கிடைக்குது! அதனாலதான் நினைசசதும் வந்துட்டேன்! என்று நிலா கூறினாள்.
சரி எவ்வளவு சொன்னாலும் நீ கேக்க மாட்ட என்று மிதுன் பெருமூச்சு விட..
நிலா கண்ணக்குழி தெரியும் சிரித்துக்கொண்டே சரிங்கண்ணா நான் உள்ளே போகவா ? என்று மித்தனை பார்த்து கேட்க..
சரி சாப்பிட்டியா என்று கடுமையான குரல்..
நிலா ஒரு நிமிடம் பதட்டத்துடன் நிவாசை பார்க்க..
மிதுன் தலையை கோதிக் கொண்டே எதுக்குடா பாப்பா கிட்ட அப்படி பேசுற ? நீ போடி தங்கம் நல்லா சாப்பிடுங்க! என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
நீ நிலா உற்சாகத்துடன் அதே அமைதியும் நடையுமாக உள்ளே சென்றாள்.
*
நிதின் பிரகாஷ் ஹரிணியின் ஆபிஸில் பார்க்க அங்கே அவள் இல்லை!
ஹரிணி மேடம் கஹாங்கே?
சாப் ஹாஜ் மேடம் சுட்டி! என அங்கிருக்கும் அதிகாரி ஒரு வித நடுக்கத்துடன் சொல்ல..
என்ன ஆச்சு இவளுக்கு? என சொல்லி கொண்டே அவளின் எண்ணுக்கு முயற்சி செய்ய சிறிது நேரம் கழித்து தான் போனை எடுத்தாள்.ஆனால் அவள் அழைப்பை எடுப்பதற்குள் நிதின் பிரகாஷ் அவள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
அவளின் அறையை விடாமல் தட்டி கொண்டிருந்தான். நிதுன் பிரகாஷ்! அவள் படுக்கையில் இருந்து மெதுவாக உதட்டை கடித்து கொண்டே பெரு மூச்சுடன் கதவை திறக்க..
அங்கே நிதின் பிரகாஷ் இருந்தான்.
என்னால் உன் கூட வர முடியாது! என ஹரிணி சொல்ல வர அவளை தாண்டி அறைக்குள் நுழைந்தான். நிதின்..
ஹே நான் தான் சொல்லிட்டு இருக்கேனே! உன்னை யாரு உள்ளே வர சொன்னது? You என கெட்ட வார்த்தையை ஆங்கிலம் கலந்து ஆரம்பிக்க வந்தவள். ஒரு நிமிடம் திடுக்கிட்டு அப்படியே நின்றாள்.
நிதின் பிரகாஷ் வாங்கி வந்த பொருளை மேஜை மீது வைத்தான்.
ஹரிணி உடனே தன்னிலைக்கு வந்து என் என்னது வாங்கிட்டு வந்து வச்சிருக்க? என அவள் அதாட்டலுடன் கேட்க..
இன்னிக்கு உனக்கு அந்த நாள் தானே! என கனிவுடன் அவளை பார்த்தான்.
இது? எப் எப்படி? எப்படி உனக்கு தெரியும்! என ரோஸ் கஷ்ட பட்டு வந்து சோபாவின் அடுத்த பக்கம் அமர்ந்து கொள்ள..
ஹே ரொம்ப வலிக்குதா டி! என சுருண்டு விழுந்து கிடப்பவளை பார்த்து கொண்டே பதறி வந்தான்.
நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே! எப் எப்டி உனக்கு தெரியும்?
எனக்கு தெரியும்! இதுல எது யூஸ் பண்ற? ஆனால் இந்த நாப்கின் புளிச்ச கீரையோட தண்டுல பண்ண ஆர்கானிக் பேட் இது நல்லா அப்சர்வ பண்ணும் இதுல எந்த கெமிக்கல்ஸ்ம் இல்ல டிரை பண்ணு என நீட்டினான்.
ஹரிணி ஒரு மாதிரியாக உணர்வுக் சிக்கி தவித்து கொண்டிருந்தாள்.
நிதின் அவளுக்காக ஏற்கவே போட்டு தயார் செய்த இஞ்சி, நாட்டு சக்கர, தண்ணி பிளாஸ்கில் இருந்து அவள் முன் நீட்டினான்.
ஹரிணி ….?
*
அய்யோ வயிறு வலி தாங்கல டா சத்ய தேவ் இப்போ என்ன பண்றது? என ரிதம் கத்தி கொண்டிருந்தாள். .
என்ன அவளுக்கு வயிறு வலியா? ஒரே கூத்து உங்களுக்கு காத்திட்டு இருக்கு நாளைக்கு பார்ப்போம்.
தொடரும்..
EPISODE 68
அய்யோ வயிறு வலி தாங்கல டா சத்ய தேவ் இப்போ என்ன பண்றது? என ரிதம் கத்தி கொண்டிருந்தாள்.
டேய் சத்யதேவ் என்னடா என்ன அப்படியே பாத்துட்டு இருக்க இதுவும் பண்ணு என்னால வயிறு வலியை தாங்கவே முடியல என்று அழுது கொண்டிருந்தாள். ரிதம்!
பாவம் சத்யதேவ் மட்டும் தான் என்ன செய்வான் அவன் அப்படியே வைத்த கண் வாங்காமல் நாக்கை தொங்க போட்டுக் கொண்டே.. ரிதமை பார்த்துக் கொண்டிருந்தான்.
மனிதர்கள் செய்வதை, அழுவதை எப்படி ஐந்தறிவு படைத்த செல்லப்பிராணிகளால் புரிந்து கொள்ள முடியும்! அப்படி புரிந்து கொள்ள அது இன்னும் வளர்ந்து முதிர்ந்து இருக்க வேண்டும். ஆனாலும் அவளுடைய உணர்வுகளை நிறைய தான் புரிந்து வைத்திருக்கின்றான். அந்த குட்டி சத்திய தேவ் பப்பி!..
சத்யதேவ்! சத்யதேவ்! என்று அவள் கத்திக் கொண்டிருக்கும் சத்தம் சத்தியதேவை தவிர அந்த டவர் அப்பார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் கேட்டிருக்கும் போல! அந்த அளவுக்கு அதிர்ந்து கொண்டே கத்திக் கொண்டிருந்தாள்.
அனைவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் இந்த ஏழாவது தளத்தில் இதுபோல்தான் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது ரிதம் உடைய குரல் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்டு, கேட்டு, அவர்களுக்கு சலித்து விட்டது. பாதிப்பேர் வேலைக்கு ஓடிவிடுகிறார்கள். அதனால் அவரவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்க..
இங்கே மற்றவர்களின் மற்றவர்களின் கண்ணுக்கு ஆதரவற்ற குழந்தைகள் ஆனால் அவனுடைய கண்களுக்கு எல்லாம் அவனுடன் பிறந்த தங்கை தம்பிகள் என நினைத்துக் கொண்டு சத்தியதேவ் அவன் இருக்கும் வட்டாரத்தில் உள்ள சாரிட்டபிள் ஹோம்ஸ் என அனைத்து இடங்களுக்கும் அவன் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னதானம் செய்வதுதான் வழக்கம். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அந்த குழந்தைகளையும் படிக்கும் சிறுவர்கள் சிறுமிகளையும் பார்த்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவான்.
தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள். வள்ளலாரின் போதனைகள் வினைகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருப்பவன். தான் சத்யதேவ்! காப்பகங்கள் மற்றும் விடுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு அவர்களுக்கு உதவிகளை செய்து கொடுத்துவிட்டு, சோர்ந்து களைத்து வீடு வந்து சேர்ந்து லிப்டில் அவனுடைய தலத்தை வந்து இறங்க..
அப்பொழுதுதான் சத்திய தேவ் சத்யதேவ் என்று அவனை யாரோ கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
அந்த குரலை கேட்டாலே சத்திய தேவால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன? அது ரிதம் தான். அப்பொழுதே அவன் கண்டுபிடித்து விட்டான்.
என்னாச்சு இவளுக்கு? என்னோட பேரை சொல்லி கத்திட்டு இருக்காலே! என்று ஒரு பக்கம் கொஞ்சம் கோபத்துடன் சொன்னாலும், இன்னொரு பக்கம் என்ன இவளுக்கு எதுவும் பிரச்சனையா? என்று மனம் பதைக்கத்தான் செய்தது.
நேராக அவளுடைய அப்பார்ட்மெண்ட்டை நோக்கி சென்றான்.
சத்யதேவ் தயக்கத்துடன் கதவைத் தட்ட ஒரு சில நிமிடங்கள் கழித்து இடுப்பை பிடித்துக் கொண்டு ரிதம் உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டு கதவை திறந்தாள்.
என்ன ஆச்சு எதுக்கு இப்ப கத்திட்டு இருக்க? எதுவும் பிரச்சனையா? என்று அவளின் தோற்றத்தை பார்த்து கேட்டான்.
ஆமா, ஆனா நான் உன்னை கூப்பிடலையே! என்று ரிதம் கூற..
என்ன என்னை கூப்பிடவில்லையா? ஹே நீ தானே சத்திய தேவ்ன்னு என் பேர சொல்லி தான கூப்ட என்று அவளை பார்த்தான்.
ரிதம் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்களை இறுக்கி மூடி திறந்தவள்.
இந்த உலகத்திலேயே உனக்கு மட்டும் தான் சத்யதேவ்ன்னு பெயர வச்சிருக்காங்களா? என்ன என்னோட பப்பி பேறும் சத்யதேவன் தான். நான் அவனை கூப்பிட்டு இருந்தேன்! என்று முகச் சுனக்கத்தோடு பதில் அளித்தாள்.
சத்திய தேவ் வீட்டின் உள்ளே எட்டிப் பார்க்க..
அங்கே குட்டி சத்ய தேவ் நாக்கை தொங்க போட்டு கொணடு அமர்திருந்தது.
சத்ய தேவ் அவளையும் பப்பியையும் மாறி மாறி பார்த்தவன். என்னாச்சு? அந்த பப்பி உன்ன கடிசுசிருச்சா? அதுக்கு தான் முகத்தை இப்படி வச்சு அழுதுட்டு இருக்கியா? என்று கேட்டான்
ரிதம் கையை இறுக்கி மடக்கி.. அந்த கதவை பிடித்தவள். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! என்னோட சத்யதேவ் என்னை கடிப்பானா? என்று அவனைப் பார்த்துக் கொண்டே கூறியவள். நீ போ! என வலி நிறைந்த முகத்துடன் கூறினாள்.
சத்திய தேவ் உடனே பார்வையை திருப்பிக்கொண்டு பரவாயில்லை இப்போ சொல்லு! என்று கேட்டான்.
அது உனக்கு தேவையில்லாத விஷயம்! நீ கெளம்பு! போ என்று மீண்டும் அவளுடைய முகம் சுருங்கி போக..
ஹே சொல்லு என்று அதட்டினான்.
முடியாது என அவள் கதவை சாத்த செல்ல..
ப்ச்! என்ன பிரச்னை சொல்லு! ஹாஸ்பிடல் போகணுமா? ஸ்டோமக் பெயினா? இந்த மாதிரி ஹரிணி க்கு கூட சில டைம் வரும்! மூணு நாள் பிரச்சனையா? என கனிவுடன் அவளிடம் கேட்டான்.
இதையெல்லாம் கேட்டதும் ரிதமுக்கு உச்சி முதல் பாதம் வரை தூய எல்டியா? இல்லை நெருப்பு தகித்துக் கொண்டிருக்க.. அவள் முறைத்து கொண்டே அவனை பார்த்தாள்.
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்து விட்டு கொஞ்சம் சங்கடத்துடன் பொண்ணுங்களுக்கு இந்த விசயத்தை சேர் பண்றதுக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருக்கும்! நான் உன் கிட்ட இதை கேட்டிருக்க கூடாது. சாரி! நான் இன்பா மாமா! என சொல்ல வந்தவன். அவளை பார்த்ததும் சார் என மாற்றி கொண்டான்.
ரிதம் அதை நினைத்து கொண்டே உள்ளுக்குள் சிரித்தவள். உடனே முகத்தை மாற்றிக் கொண்டு ஹே எங்க டாடி கிட்ட எல்லாம் போன் பண்ணி இதை பத்தி சொல்லிட்டு இருக்காத! தயவு செய்து என் மானத்தை வாங்காதே! எனக்கு அந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்ல! என்று கூறினாள்.
அவளை புருவம் முடிச்சுடன் பார்த்தவன். மணி பார்த்து கொண்டே அப்புறம் வேற என்ன தான் பிரச்சனை? அதிகமா நான்வெஜ் சாப்பிட்டு வயிறு அப்செட் ஆயிடுச்சா? டிசெண்ட்ரியா? கான்ஸ்டிபேஷனா? என்ன பிரச்சனை? என்று துருவி துருவி கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
டேய் என்னை தின்னி பண்டாரம்ன்னு நினைத்துக்கொண்டு இருக்கியா? நான் எல்லாம் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. நான் அழகா அளவா சாப்பிடுறவ! என்ற ரிதம் கூறினாள்.
சத்திய தேவ் ஒரு பெருமூச்சு விட்டு அப்புறம் என்னதான் பிரச்சனை? என்ன பிரச்சனையா இருந்தாலும் எதுக்கு என் பேர சொல்லி கூப்பிட்டு இருக்க? என்று சொல்ல..
ரிதம் அந்த இடத்தை சுற்றிலும் பார்வையை சுழல விட்டு நீ மட்டும் தான் இருக்கியா? இல்ல! உன் கூட அந்த நாயும் இருக்கா? என்று கேட்டாள்
எந்த நாய் என்று சத்திய தேவ் கேட்க..
அதுதான் அந்த ராஸ்கல் ருத்ரன்! அந்த நாய் பற்றி தான் பேசிட்டு இருக்கேன்! என்று கூறினாள்.
அவன் இங்க இல்ல! இன்னும் வரல! போய் வரலாம் வராமலும் போகலாம் ஏன் உனக்கு என்ன பிரச்சனை? அவனை வேணா வர சொல்லட்டுமா! என்று தவிப்புடன் சத்திய தேவ் கேட்க ..
ரிதம் ஒரு பெருமூச்சு விட்டு கொஞ்சம் உள்ள வரியா? என்று அழைத்தாள்.
சரி என சத்திய தேவ் உள்ளே செல்ல..
அங்கு தான் அவள் போட்ட வலையில் சத்யதேவ் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து விட்டான்.
சரி சொல்லு? என்ன பிரச்சனை? என்று கேட்டான்.
அவள் மெதுவாக இடையை பிடித்துக் கொண்டே சோபாவிற்கு செல்ல..
இங்கே என்ன? ஹே என்ன ஆச்சு? நீ பாட்டுக்கு இப்படி நடந்து போற என்று சத்ய தேவ் கேட்க
இங்க வா அந்த சேர்ல உட்காரு என்று சொல்லிக் கொண்டே ரிதம் சோபாவில் படுத்துக்கொண்டாள்.
அவன் ஒன்றும் புரியாமல் அதை இடத்தில் நிற்க..
ஹே சொல்லிட்டு இருக்கேன்லல வந்து உட்காரு! என்று அதட்டினாள்.
அவனும் அவள் சொல்வதைப் போலவே சென்று அமர்ந்தான். ஆனால்! ஆனால்! அப்பொழுதுதான் அதைப் பார்த்தான்.
ரிதம் இப்போ என்ன வேலை செஞ்சிருக்கா?
பெல்லி பட்டன்.. தொப்புலில் தோடு சாரி வியர் பியர்சிங் அதாவது தொப்புளில் உள்ள நாபியில் உயிர் சுழியில் தோடு குத்தி இருந்தாள்.
ஒரு வைரக்கல் பதித்த ஒரு தோட்டை தொப்புளில் குத்திக்கொண்டு அந்த இடத்தை விட்டு வந்ததும்.
அந்த இடம் கடுகடுவென்று வீங்கி சிவந்து இருக்க படுத்திருந்தாள்
சத்தியத்தை ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியுடன் அப்படியே நிற்க..
என்ன அப்படி பார்க்கிற? இதுதான் வலிக்குது என்று அவளுடைய தட்டையான இடையை அவனிடம் காட்டினாள்.
அடிப்பாவி க்ராதகி இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? சத்திய தேவால் அவன் உறைந்து நின்று கொண்டிருக்க..
ஐயோ வலி தாங்கலையே சத்தியதேவ் வந்து ஊதேன்டா! எனக்கு ரொம்ப வலிக்குது! என்று சிணுங்கி கொண்டு குட்டி பப்பியிடம் சொல்லிக் கொண்டிருக்க
இவள எத்தனை அடிக்கலாம்! ஐயோ இப்படி ஒருத்திய இன்பா மாமாவால எப்படி பெத்து போட முடியுது தான். ஆனாலும் என்று நொந்து கொண்டே அப்படியே நிற்க
டேய் வளர்ந்தா மண்டி நான் உன்ன தான் கூப்பிட்டு இருக்கேன்! பக்கத்துல வா எனக்கு ரொம்ப வலிக்குது! என்னால தாங்க முடியல என்று அவள் சிணுங்கி கொண்டிருக்க..
அறிவு கெட்டவளே? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எதுக்கு அந்த இடத்துல இந்த மாதிரியான வேலை எல்லாம் செஞ்சு வச்சு இருக்க என்று கேட்டான்.
ரிதம் வலியில் முகத்தை சுருக்கி கொண்டு எதுக்குன்னு கேக்குற? அது என்னோட இஷ்டம் இது என்னோட உடம்பு நான் எங்க வேணாலும் எதை வேணாலும் பண்ணுவேன் உனக்கு என்னடா என்று கூறினாள்..
சத்திய தேவ் வேகம் மூச்சுடன் எப்படி நீ இப்படி இருக்க? அறிவில்லாதவளே! உன்னை யாரு அங்கெல்லாம் இந்த மாதிரி பண்ண சொன்னது என்று கேட்க..
இத பாக்கறவங்களுக்கு பிடிக்கும் நீ ஒன்னும் பார்க்க வேண்டாம் என்று சம்பந்தமே இல்லாமல் பேசினாள்.
நானா நான் எதுக்கு கஷ்டப்படறாங்க பார்க்கணும் என்று நினைத்தவன். இப்பொழுதும் எல்லை மீறி அவளது இடையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிய..
அடுத்த நொடி வேகமாக இன்னொரு பக்கம் திரும்பிக் கொண்டான்.
அவன் திரும்பி நிற்பதை பார்த்த ரிதம் திரும்பி நிக்கிறியா? ஹான் என்ன பாக்காம திரும்பி நிக்கிறியாடா ? இப்போ என்ன பாக்க போற இதை சொல்லிக் கண்டே ஐயோ பசி தாங்க முடியலையே யாராவது வந்து ஊதுனா நல்லா இருக்குமே! கொஞ்சம் ஐயோ படி தாங்க முடியலையே! யாராவது ஊதி விட்டா, நல்லா இருக்குமே அந்த இடத்துல ஒத்தடம் வச்சா, இன்னும் நல்லா இருக்குமே! ஐயோ அப்பா அம்மா சத்யதே என்று கத்தினாள்.
அவனது பெயரை அழைத்ததும் கடுப்பான சத்திய தேவ் இப்போ எதுக்குடி என் பேர சொல்லி கத்துற? தயவுசெய்து என் பெயரை சொல்லி கத்தாதே என்று சத்தியத்தை கோபத்துடன் ககூறினான்.
நான் உன் பேர ஒன்னும் சொல்லிக் கத்தல! நீ கெளம்ப! நான் எப்படியோ சாகுறேன் எனக்கு என்னமோ ஆகுது. அத பத்தி உனக்கு என்ன கவலை? நீ போ என்று அவள் உடைந்த குரலில் பேசிக் கொண்டே..
தன்னுடைய உதட்டில் உள்ள சிவப்பு நிற சாயத்தை எடுத்து அவளுடைய தொப்புளில் கொஞ்சம் தடவி விட்டால் சத்தியத்தையும் கதவு பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தவன்.
காதுகளில் அச்சோ என்ன சிவப்பா இருக்கே என்ன ஆசசு என்று சொல்ல அடுத்த எட்டு வைக்க முடியாதவன். வேகமாக அவளுக்கு அருகில் வந்து என்னாச்சு ? என்று அந்த சேரில் அமர்சேரில் வந்த அமர்ந்தான்.
இதோ இங்க பாரு இந்த இடம் சிவந்து போச்சு என்று ரிதம் முகத்தை ஒரு மாதிரியாக சுகமாக வைத்துக் கொண்டே கூற அருகில் உள்ள சோபாவை ஓங்கி ஒரு குத்து விட்டான்.
அந்த சோபா அவனது கை அளவுக்கு உள்ளே சென்று அப்படியே பதிந்து கொண்டது ரிதம் வாயை பிளந்து சோபாவையும் அவன் கையையும் பார்க்க..
சத்திய தேவ் பற்களை கடித்துக் கொண்டே அந்த இடத்துல இந்த வைரக்கல் வச்ச தோடு தேவையா காதுலதான் தோடு போட்டு இருக்கியே அந்த இடத்துல எதுக்குடி இந்த மாதிரியான வேலை எல்லாம் பண்ணி இருக்க? யாருக்கு காட்ட இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? என்று சத்திய தேவ் கேட்க..
ரிதம் வேண்டுமென்றே வேற யாருக்காகவும் இல்ல இந்த navel piercing நாவல் பியர்சிங் என்னோட அடையாளம்!!என்னோட ஃபேஷன்! என்ன நான் ஆதிக்கம்!!ஆகும்! என்னையே நான் உணர்வுபூர்வமா உணர்றதுக்காக இதை செஞ்சுப்புட்டேன்!! இது எனக்கு ஒரு பிரைட் கொடுக்குது! எனக்கு இது பிடிச்சிருக்கு? எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் செய்யறேன். இதனால உனக்கு என்ன பிரச்சனை என்று ரிதம் கேட்டாள்.
சத்திய தேவ் ஒரு பெருமூச்சு விட்டு ஆழ்ந்த தலையை கொத்தக் கொண்டவன்..
எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்று பற்களை கடித்துக் கொண்டே அந்த இடத்தை பார்த்தான்.
ஐயோ சோதிக்கிறாளே இவகிட்ட இருந்து ஒவ்வொரு முறையும் நான் விலகணும்னு நினை ஏதாவது பண்ணி என நினைத்தவழுக்கு
ம்ம் நாம் இந்த இடத்தில் இருக்கவே கூடாது! கூடிய சீக்கிரம் இந்த இடத்தை விட்டு காலி பண்ணிடனும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
ஒரு சில நிமிடங்களில் அவள் அவன் முகத்தை ஆராய்ந்தபடியே ஐயோ வலிக்குது என்று சினங்கா இப்போ என்ன பண்ணனும் என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்டான்.
மெதுவா அந்த இடத்தை வருடி விட்டு ஊதி விட்டாள்..நல்லா இருக்கும் என்று கண்களை சுற்றிக் கண்டே கூறினாள்.
சதய தேவ் அப்படியே எழுந்து நின்றான். நீ ஒன்னும் பண்ண வேண்டாம் என்னோட பப்பி பண்ணனும் பக்கத்துல வா என்று பப்பியை அழைக்க..
பைத்தியமா டி உனக்கு ஏண்டி இப்படி பண்ணிட்டு இருக்க டாடாட தலைவல எவ்ளோ பாக்டீரியா வைரஸ் இருக்குன்னு தெரியுமா? அதைவிட இப்ப நீ பண்ணி இருகஅதைவி நாவல் பியர் சினால உலகத்துல 2000 பேர் இறந்து போயிருக்காங்க அது தெரியுமா ? அதுக்கு காரணம் அதுல இருக்குற ஹோல்ல இன்ஃபெக்சன் ஆகும் உன்னோட தொப்புள் கொடியிலிரந்து உள்ளட கணக்டிவிட்டி பாயிண்ட்..
அது தான் சோ அந்த இடத்தில் கொஞ்சம் கேப் இருக்கும் என்று சத்திய தேவ் விலக்கிக் கொண்டிருக்க..
உன்னோட சயின்ஸ் ஹிஸ்டரி ஜாக்கிரபி பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பயாலஜி எல்லாம் என்கிட்ட வச்சுக்காத! உன் வேலையை பாரு! போடா! நானே வழி எடுத்து துடிச்சிட்டு இருக்கேன். என ரிதம் சொல்ல..
ஹெல்ப் பண்ணா பண்ணு பொண்டாட்டி போ என்று அவள் கண்களை மூடிக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொள்ள
ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது அந்த இடம் அதன் பின் சிறிது நேரம் கழித்து கரடு முரடான விரல்கள் அவளது தட்டையான பெல்லி பட்டனை தடவி சாரி வருடி கொடுத்துக் கொண்டிருக்க என்ன சுகம்? ஆஹா!!! என்ன சுகம்? என்று ரிதம் க்கு இருந்தது.
அவளது உதடுகளில் மீன்களை சுமப்பது என்று நீருக்கு பாரமில்லை காதலை சுமக்கையிலே காதல் எனும் பாரமில்லை என்ற வரிகள் தான் காதலை இந்த இடத்தில அவனுடைய சுமக்க முடியல ஆனாலும் அந்த சும்மா அவளுக்கு இன்பமான சும
தொடரும்..
EPISODE 69
ஒரு சிலn நிமிடங்கள் அந்த இடம் அமைதியாக இருந்தது. ரிதம் கண் மணிகளை உருட்டி கொண்டே அப்படியே படுத்து இருந்தாள். அவளது இரண்டு உதடுகளும் வலியில் துடிப்பது போல இருக்கி மடக்கி இருந்தாள்.
அப்போ பண்ண மாட்டானா? என உதடுகள் பிதுக்கி கொண்டவள். சரி பண்ண வேணாம் போகட்டுமே! என நினைத்து கொண்டிருக்க.. அந்த நேரம் இரும்பு பிடிக்கு சொந்தக்கார கைகள் மெதுவாக அவளின் பெல்லி பட்டன் அதாவது தொப்புளின் மீது விரல்களை படற விட்டது. தடவி! ம்ம் சாரி.. வருடி கொடுத்துக் கொண்டிருக்க..
ரிதம் கண்கள் ஆச்சரியத்தில் விரிய மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். அவன் பார்வை முழுக்க அவளின் பெல்லி பட்டன் மீது இருக்க.. மெதுவாக இன்னும் மெதுவாக இரு செல்ல பிராணியை வருடி கொடுப்பது போல செய்து கொண்டிருந்தான்.
என்ன சுகம்? ஆஹா!!! என்ன சுகம்? என்று ரிதம்க்கு இருந்தது.
ஆனால் சத்ய தேவின் பாடு தான் திண்டாட்டம் ஆகி போனது. அந்த தட்டையான வயிற்றில் இருந்து அவனுடைய பார்வை தாறுமாறாக சென்றது அவளிடம்…
ரிதம் சொக்கி கொண்டே படுத்து இருந்தாள். எனக்காக எவ்ளோ மென்மையா பிடிக்கிறான். ஆனால் அந்த பிடி கூட அவனோட முறட்டு குணத்தை தான் காட்டுது! என்ன பண்றான்? என கண்களை திறந்து பார்த்தாள்.
சத்ய தேவின் வருடல் வேறு மாதிரியாக இருந்தது. அவனுடைய கைகள் சூடாகி போக.. இருவருக்கும் உஷ்ன மூச்சு முட்டியது.
இதுக்கும் மேல் இருந்தால் சரி பட்டு வராது என நினைத்த சத்ய தேவ் வேகமாக எழுந்து செல்ல போக..
ஹே போறான் டி! என உள்ளுக்குள் ரிதமிக் சத்தம் தாறுமாறாக ஒலிக்க.. அய்யோ வலிக்குது! முடியல என உதட்டை மார்க்கமாக கடித்து கொண்டே அவனை பார்த்தாள்.
என்ன வலிக்குது! என தன்னிலைக்கி வந்த சத்ய தேவ் கேட்க..
நீ தொடுவதை விட்டால் எனக்கு வலிக்குது! தொட்டுக்கிட்டே இரு!
உனக்கு என்ன உன் மனசுல என்னடி நெனச்சிட்டு இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? சொல்லப்போனால் இது தப்பு! இப்படி உன்னோட வயித்துல என்னை தொட சொல்ற என்று சத்திய தேவ் தீவிரமாக கூற..
ரிதம் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அப்போ நீ எங்கேயோ டிஸ்டர்ப் ஆகுற சரியா அப்படித்தானே என்று சீண்டி விட்டாள்.
என்ன? என அவளை பார்த்தான்.
ம்ம் ஆமா நீ என்னை பார்த்தாலே டிஸ்டர்ப் ஆகுற! அதனாலதான் இப்படி எழுந்திருச்சு போறேன்னு நின்னு குதிச்சிட்டு இருக்க! உன்னோட மனசுல எந்த தப்பும் இல்லைன்னா, நீ ஏன் பயப்படனும்? தைரியமா என் பக்கத்துல உக்காந்து இத ஒரு சேவையா நினைத்து செஞ்சு விடு என்று ரிதம் கூற..
என்ன சேவையா செய்யணுமா? நான் எதுக்குடி உனக்கு பண்ணனும்! என்று சத்திய தேவ் கேட்டான்.
அப்படின்னா போடா! என்று உதடு துடிக்க கூறியவள் திரும்பிக் கொண்டு வலியில் முனகுவது போல அனத்தினாள்.
அவன் ஒரு பெருமூச்சை விட்டு இப்போ உனக்கு என்னதான் வேணும்? என்று கேட்டான்.
எனக்கு ஒன்னும் வேண்டாம்! அவ்ளோ கஷ்டப்பட்டு நீ ஒன்னும் பண்ண வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்! எனக்கு நானே ஹெல்ப் பண்ணுகிறேன்! நீ போ! நீ இங்க இருந்து போ! என்னமோ பெரிய ஞானி, துறவி மாதிரி சீன் போட்ட! நீ துறவியும் கிடையாது! ஞானியும் கிடையாது! உன் மனசு முழுக்க கெட்ட எண்ணம் மட்டும்தான் இருக்கு! என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் கூறியவள். வலியில் காலை குறுக்கிக் கொண்டு இருக்க..
சத்யதேவ் மீண்டும் அருகில் வந்த அமர்ந்து அப்படி எல்லாம் என் மனசுல எந்த சஞ்சலமான எண்ணமும் இல்லை! இப்போ உனக்கு என்ன? இங்க உட்கார்ந்து வருடி விட்டுகிட்டே இருக்கணும்! அவ்வளவு தானே! இதெல்லாம் என்னோட நேரம் கொடுமை! என்று அமர்ந்து செய்ய ஆரம்பித்தான்.
ஒரு சிறு சில மணி நேரங்கள் கழித்து எப்படி இருக்கு என்று கேட்டாள்.
சத்யதேவ் அவளின் முகத்தை பார்க்க..
எப்படி இருக்கு என்று மீண்டும் கேட்டாள்.
என்ன எப்படி இருக்கு? நீ சொல்றது புரியல கொஞ்சம் தெளிவா பேசு என்று சத்திய தேவ் கேட்க..
*
உனக்கு எப்டி இருக்கு? ரொம்ப வலிக்குதா? என வருடி விட்டு கொண்டே நிதின் அவளிடம் கேட்டான்.
ஹரிணி சோர்வில் அவனை பார்த்து நீ பண்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா? உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க உன் கிட்ட நான் இதெல்லாம் எதுக்கு எனக்கு இந்த பணிவிடை எல்லாம் செஞ்சுட்டு இருக்க என்று கேட்டாள்.
நான் செய்யாம, வேற யார் செய்வான்னு நீ எதிர்பார்க்கிற? என்று நித்தின் சொல்ல..
ஹரிணி அவனை உற்றுப் பார்த்தாள்.
நித்தின் அவளுடைய இடையில் உயிர் சுளியில் முத்தம் வைத்து, நாம ரெண்டு பேரும் இப்போ டேட்டிங்கில் இருக்கோம்! அதனால உனக்கு நான் இதை செஞ்சுட்டு இருக்கேன்! உனக்கு என்னோட பீலிங்ஸ் புரியவில்லையா என்று ஏக்கப்பார்வையுடன் அவளை பார்த்தான்.
அவனுடைய முத்தத்தை ஹரிணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. அதைவிட இந்த அவஸ்தையான உணர்வை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எப்படி இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்! என்னோட மனசுல சத்திய தேவ் இருக்கான். ஆனா இவன்? இவன் இப்படி பண்றத, நான் என்ன பண்ணட்டும்? என்று மனம் முழுவதும் ரணமாகவும், சஞ்சலமாகவும் இருந்தது.
ஹரிணி அவனுடைய செய்கையையும், அவனையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்காக இந்த நாப்கின்கள் மற்றும் அது கூடவே என்னமோ கொண்டு வந்தானே? அது என்ன? ஹான் நாட்டுச்சர்க்கரையும், இஞ்சியும் கலந்த பானம்! இதெல்லாம் தன் வயிற்று வலியை குணமாக்குமாம்! அதை ஊற்றி, குடி! குடி! என்று டார்ச்சர்..
ஹரிணி வேறு வழி இல்லாமல் அவனிடமிருந்து வாங்கி குடித்தாள்.
அவள் படுக்கையில் சுருண்டு வலியில் கிடக்க அருகில் வந்த அமர்ந்தவன்.
அவனது சட்டை கையை மடித்துவிட்டு கொண்டு நல்லா நேர படு! நிமிர்ந்து படு! இப்படி சுருண்டு படுக்காத!! நல்ல சாப்டியா? இல்லையா? உன்னோட முகம் எல்லாம் வாடி போய் கிடக்கு! என்னடி சாப்பிடுற? என்று உரிமையாக ஆயிரம் வார்த்தைகளை பேசி இருப்பான்.
ஆனால் இதுவரை அனைவரிடமும் முன்னால் இருக்கும்போது நித்தின் பேசியதை ஹரிணி கேட்டதே இல்லை. எப்படி இத்தனை வாய் பேசுறான்? என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
திடீரென அவள் எதிர்பாராத நேரத்தில் அவளுடைய இடையை மெதுவாக வருடிவிட ஆரம்பித்தான்.
ஹே என்னடா பண்ற என்று பற்களை கடித்துக் கொண்டே ஹரிணி அடிக்க கை ஓங்கிட..
நிதின் கன்னத்தை காட்டிக் கொண்டே “என்னை அடிக்க வேணா செஞ்சுக்கோ! ஆனா உன்னோட ஸ்டோமக்க வருடுவதை மட்டும் நான் நிறுத்த மாட்டேன்!” என்று வருடிக் கொண்டிருந்தான்.
ஹரிணி கண்களை இறுக்கி மூடிக்கொண்டு டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? அதெல்லாம் எனக்கு வலிக்கல கையெடு! நீ பண்றது ரொம்ப ரொம்ப டூ மச்சா இருக்கு! தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க! என்று அவள் கத்தினாள்.
நித்தின் அவளை மேலும் கீழும் பார்த்தவன். உன் மனசுல என் மேல எதுவும் பீலிங்ஸ் இருக்கா? என்ன? என்று கேள்வியாக கேட்டான்.
சட்டென ஹரிணி என்று அவன் முகத்தை பார்க்க..
நித்தின் ஒரு குட்டி புன்னகையை சிந்தி கொண்டே அப்போ உனக்கு என் மேல எந்த பீலிங்க்ஸும் இல்லல்ல! அப்புறம் நான் எங்க தொட்டா உனக்கு என்ன? இல்ல! ஏதாவது இன்டிமேட்டா பீல் ஆகுதா? பொண்ணுனா இன்டிமேட்டா பீல் ஆகுமே! அப்படியா? போலீஸா இருக்கிறவங்களுக்கு மறத்து போய் இருக்குன்னு சொல்லுவாங்க! என்று இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்க..
ஹரிணி பெட்டை இறுக்கி பிடித்தவள். எனக்கு உன் மேல எந்த ஃபீலிங்க்ஸும் இல்ல! சொல்லப்போனால் எதுவும் வரவும் வராது! போதுமா? இப்படியெல்லாம் செஞ்சு என்னை மயக்க பார்க்கிற என் மனச மாத்த பாக்குற! அது மட்டும் நடக்கவே நடக்காது! என்று சொல்லிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அப்படியா? சரி இருக்கட்டும்! இப்பதான் நம்மளோட டேட்டிங்ல நாலாவது நாள் வந்திருக்கோம்! இந்த ஒரு மாசம் முழுக்க எனக்கு டைம் இருக்கு என்று கூறினான்.
ஹரிணி அவனை முறைத்துப் பார்த்தவள். நம்ம ரெண்டு பேரும் டேட் பண்ணல! நீ என்னை டேட் பண்ணிட்டு இருக்க! அவ்வளவுதான்! நான் இதுல எந்த இடத்திலயும் இன்டர்பியர் ஆகமாட்டேன்! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை! புரியுதா? என்று பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள்.
நித்தின் அவளை சாதாரணமாக பார்த்துக் கொண்டே “ சரி சரி கொஞ்சம் ரெஸ்ட் எடு இப்படி தொடர்ந்து பேசினா வாயெல்லாம் வலிக்கும்! எனர்ஜி அப்படியே ட்ரெயின் அவுட் ஆகும்னு சொல்லுவாங்க! பாரு உன்னோட உதடு எல்லாம் ரொம்ப ட்ரையா இருக்கு!” என அருகில் நெருங்கியவன். அவளின் வறண்ட உதட்டை ஈர படுத்த ஆரம்பித்தான்.
முத்தம் நீண்டு கொண்டே இருந்தது. மேல் உதடு கீழ் உதடு! மென்மையாக மிகவும் மென்மையாக கடித்து கவ்வி இழுத்து சுகித்து சுவைத்து கொண்டிருந்தான்.
அவனுடைய முத்தம் அதோடு நின்று விடவில்லை. அவளுடைய கன்னம் கழுதது கைகள் அவளுடைய உடையின் மேல் என நீண்டு கொண்டே வந்து கடைசியில் அவளின் வயிற்றில் இடையில் உள்ள சுழியில் முத்தமிட்டு கொண்டிருந்தான். மிகவும் மெதுவாக ஆனால் அவசரம் இல்லாமல் அமைதியாக அது சென்று கொண்டிருந்தது.
இவ்வளவு நேரமும் வயிற்று வலியில் சுருண்டு கிடந்தவள். அந்த முத்தத்தின் மந்திரத்தால் இப்பொழுது வயிற்று வலி இல்லை! புரியாத உணர்வின் சிக்கித் தவித்தாள். அந்த உணர்வுகளில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள படுக்கை விரிப்பை இருக்க பிடித்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக முத்தத்தின் வீரியம் குறைந்து மெதுவாக முத்தமிட்டுக்கொண்டே வருடி.. என்ன ஆச்சு? எப்டி இது நடந்தது? நான் இப்பொழுது வயிற்று வலி துளி கூட இல்லை! இப்போ வயிறு வலிக்கவே இல்லையே? எப்படி? இத்தனை நாளும் வயிறு வலியை என்னால தாங்கிக்கவே முடியாது! ஆனால் இன்னிக்கி இப்போ இந்த வயித்து வலி எங்க போச்சு ? என்று யோசித்துக் கொண்டே மெதுவாக கண்ணை மூடியவள் அப்படியே உறக்கத்தை தழுவினாள்.
அவளுடைய சுவாசத்தில் சீரான மூச்சு வரவும் அவள் நன்றாக உறங்கி விட்டாள்.என்று தெரிந்து கொண்டான்.
நித்தின் பிரகாஷ்க்கு திருப்தியான புன்னகை! அவளுடைய உதட்டில் மீண்டும் முத்தமிட்டவன். அவள் தூங்கி எழுவதற்குள் இரவு உணவுக்காக அவளுக்கு ஏற்ற உணவு சமைக்க சொல்லி இருந்தான்.
அவளுக்கு பிடித்த உணவுகள் அத்தனையும் செய்யச் சொல்லி இருந்தான். அவனுடைய மனதில் இது! இந்த விஷயம் எல்லாம்! கண்டிப்பா அங்க அந்த சத்திய தேவ் பக்கத்துல இருந்தால் நடந்திருக்கவே! நடந்திருக்காது! ஹரிணிய அங்கிருந்து வர வச்சதுனாள தான், நான் இவ்வளவு தூரம் அவகிட்ட நெருங்கி இருக்கேன்! கண்டிப்பா எனக்கு தான் ஹரிணி! ஹரிணி எனக்கு மட்டும் தான்! அவளை நான் சீக்கிரம் சொந்தமாகிடுவேன்! அவளோட மனசுல நிரந்தர இடத்தை பிடிப்பேன்! என்று சொல்லிக் கொண்டான்.
*
நான் கேட்டதுக்கு பதில் வரலையே! நான் சொல்றது உனக்கு புரியுதா? எனக்கு இது எப்டி இருக்கு? நீ என்ன நினைக்கிற என அவனுடைய கையை பிடித்திருந்தாள். ரிதம்!
என்ன பதில்? என மெதுவான குரலில் அவன் கேட்க..
இந்த belly piercing எனக்கு நல்லாருக்கா? என அவனுடைய முகத்தை பார்த்தாள்.
சத்யதேவியின் பார்வை அவளை துளைக்க இந்த கேள்வியை நீ நித்தின் கிட்ட தானே கேட்கணும்? என்கிட்ட கேக்குற ? என்று புருவத்தை சுருக்கி கொண்டு கேட்டான்.
ரிதம் அதற்கெல்லாம் அசரும் ஆளா? என்ன?! நீ சொல்றது சரிதான்! இருந்தாலும் உன் தம்பியோட டேஸ்ட் உன்னை மாதிரி தான இருக்கும்! அதனாலதான் ஒரு கிளரிஃபிகேஷன்காக கேட்டேன்! இது நித்தினுக்கு பிடிக்குமா? அவனுடைய பிடிப்பு! அது நீ பிடிப்பது போல தானே இருக்கும்! அப்படியே இரும்பு பிடி போல! முத்தம் கூட அதே மாதிரி தானே! அன்னிக்கி நீ கொடுத்தது. அந்த மழையில இறுக்கி பிடிச்ச! என்று அவள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்க..
போதும் நிறுத்துரியா என்று எழுந்து நின்றான்.
இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற? ஏன் எதுவும் உன் மனசுல ஏதாவது ஃபீலிங் இருக்கா? என்ன? நீ தான் ஜடமாச்சே என்று ரிதம் கூறினாள்.
சத்யதேவ் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பதில் சொல்லிட்டு போடா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் சொல்லிட்டு போ என்று அதட்டினாள்.
அவன் சென்றாலும் சென்றதை தெரிந்து கொண்டவள் திருப்தியாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு ஒரு குதி குதித்தவள் அப்பா இன்னிக்கு தேவையான அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணியாச்சு! இதுவே போதும் அவன என்னை பத்தி பீலிங்க்ஸ விட்டு கொஞ்சம் கூட நகரவே விடாது! இந்த பெல்லி பட்டன் என்று இடையைப் பிடித்து அந்த தொப்புளில் போட்டிருக்கும் தோட்ட பார்த்தாள்.
அழகா இருக்குடி! சத்ய தேவ் உன்னை மயங்கி மயங்கி கிறங்கி பார்க்கும்போது ச்ச! ச்ச! ச்ச! முரட்டு காளை மாதிரி பாயுவான் அப்டின்னு எதிர் பார்த்தேன்! இது புலி பதுங்கி போயிடுச்சு சேடிஸ்ட்! என்று ரிதம் உதட்டை அழகாகவே இருந்தது.
*
வாயில் அந்த ஆர்கானிக் சிகரட்டை வைத்து ஒரே மூச்சில் உள் இழுத்தவன் எதிரில் உள்ள டிஸ்ப்ளேவில் அந்த உதட்டை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். சர்வேஷ்!
இன்னொரு கையில் மது கோப்பை இருக்க.. மிஸ் பண்ணிட்டேன் டி! அன்னிக்கே உன்னை தூக்கி இருந்தால் என்னோட மொத்த தேடலும் முடிச்சிருப்பேன்! என ஆள் காட்டி விரலில் நெற்றியை தேய்த்தான்.
துவாரகா! என புகையை விட்டவன் அந்த மதுவை கொஞ்சமாக பருகி விட்டு போனில் ஸ்ருதிக்கு அழைத்தான்.
சொல்லனா என்று ஸ்ருதி பதிலளிக்க நல்ல ஸ்கெட்ச் டிசைனர் ஆட் வரையுறவங்க யாராவது உனக்கு தெரியுமா பேபி என்று கேட்டான்.
அந்த அளவுக்கு எனக்கு யாரையுமே தெரியாதே! அண்ணா! நீங்க சைத்ரேஷ் அண்ணா கிட்ட கேளுங்க அவருக்கு தெரிய வாய்ப்பிருக்கு!!
ஸ்ருதி பார்வையை சுருக்கிக் கொண்டே நாம் வேணும்னா விசாரித்து பார்க்கிறேன் அண்ணா என்ன சொல்லி விட்டு அவள் போனை வைக்க
சர்வேஷ் மதுவை குடித்துவிட்டு உடனே அவனுடைய பர்சனல் அசிஸ்டன்ட் பிரபுவுக்கு அழைத்தான் பாஸ் என பிரபு அழைக்க எனக்கு இங்க பெங்களூர்ல இருக்குற பெஸ்ட் ஆர்ட் வரவங்கள உடனடியா பாக்கணும் நான் சொல்ற முகத்தை அவங்க வரைஞ்சு கொடுக்கணும் நான் என்ன நினைக்கிறேனோ நான் எப்படி சொல்றேனோ அதேபோல வரணும் அந்த மாதிரி இருக்க ஆளுங்கள சீக்கிரம் தேடி வரவை என சொல்லி வைத்து விட்டான்.
இங்கே சைத்ரேஸ் என்ன பண்ணிட்டு இருக்காரு?
நாளைக்கு…?
தொடரும்..
இன்னிக்கு மிதுன் எப்டி இருப்பான்? Channel அ waiting
Comment pannunga ratings konjam like share pannunga
EPISODE 70
சர்வேஷ் மதுவை குடித்துவிட்டு உடனே அவனுடைய பர்சனல் அசிஸ்டன்ட் பிரபுவுக்கு அழைத்தான் பாஸ் என பிரபு அழைக்க எனக்கு இங்க பெங்களூர்ல இருக்குற பெஸ்ட் ஆர்ட் வரையரவங்கள உடனடியா பாக்கணும்! நான் சொல்ற முகத்தை அவங்க வரைஞ்சு கொடுக்கணும்! நான் என்ன நினைக்கிறேனோ நான் எப்படி சொல்றேனோ அதேபோல வரணும் அந்த மாதிரி இருக்க ஆளுங்கள சீக்கிரம் தேடி வரவை என சொல்லி வைத்து விட்டான்.
பிரபு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே விழி பிதங்கி நின்று கொண்டிருக்க.. இங்கே சர்வேசின் பாடு திண்டாட்டம் ஆகி போனது.
அவள் கோவிலில் இருந்து சென்றதிலிருந்து துவாரகா! துவாரகா! என்று சதா அவனது நினைவில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவளை முதன்முறையாக அந்த கோர்ட் வாசலில் பார்த்த ஞாபகத்தில், உடனே அங்கு இருக்கும் பெரிய ஆட்களிடம் சொல்லி கூட துவாரகா எனும் பெண் வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். என்று அவளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூட தேடி பார்த்து விட்டான். ஆனால் துவாரகா கிடைக்கவே இல்லை. இப்பொழுது என்ன செய்வது? என்று தெரியவில்லை அவரது முகத்தை பார்த்துக் கண்டே இருக்க வேண்டும் என்று தோன்ற அதற்கு தான் இப்பொழுது வரைபட கலைஞர்களை வரச் சொல்லி..
துவாரகா என்று பெயர் மறைக்கப்பட்ட இதழினி தூரிகாவை இப்பொழுது ஆட்களை வைத்து வரையப் போகிறான் அவளை எந்த அளவிற்கு உள்வாங்கி கொண்டானோ? அந்த அளவுக்கு வெளிப்படுத்துவானா தெரியவில்லை!
சர்வேஷ் கண்களை மூடினாலே கிஸ் மி பேபி அதுவும் லிப் ல இதழினி அந்த எள் மச்சத்துடன் அழகாக பல்வரிசை தெரிய சிரிக்கும் காட்சிகள். தான் அவனது சிந்தையில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு வேலை கூட செய்ய முடியவில்லை. இத்தனை நாள் என்ன? இந்த நான்கு ஐந்து வருடங்களாக, எப்பொழுது மீசை முளைத்து பருவம் வந்ததோ, அதிலிருந்து எத்தனை பெண்களை சுகித்திருக்கிறான். ஆனால் அவள் இதழினியை போல ஒரு பெண்ணை பார்த்ததே இல்லை. ஏனோ இப்பொழுது மற்ற பெண்களைப் பார்த்தால் அந்த வாசனை திரவியங்களின், அழகு சாதனப் பொருட்களின் நாற்றமும், உதடு உடலில் இருந்து வெட்டப்பட்ட இறைச்சியின் நாற்றமும்தான் அடிக்கிறது! என்னவென்று தெரியவில்லை! ஆனால் அவ கிட்ட என்ன இருக்கு? அவ எனக்கு வேணும்! எப்படியாவது அவளை நான் சொந்தமாக்கணும்! அவளை ஆராய்ச்சி செஞ்சு அவகிட்ட என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்! என்று சர்வேஷ் அங்கும் இங்கும் நடந்து புலம்பி கொண்டிருந்தான்.
இன்னொருவன் என்ன செய்கிறான்? சைத்ரேஷ் வாங்க போய் பார்த்துட்டு வந்துடலாம்!
வாரத்தில் எப்பொழுதும் ஒரு நாட்கள் மட்டும் கோவிலுக்கு செல்பவன் இப்பொழுதெல்லாம் எல்லா நாட்களும் செல்கிறான். அவள் எப்பொழுது தூறிகா தன்னை கேவலமாக பார்த்து விட்டு சென்றாலோ! அந்த பார்வையின் வீரியம் சைத்ரேஷை விட்டு அகலவே இல்லை! நிம்மதி தேடி கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தான்! கூடவே அவளும் வருவாளா? தன்னைத் தடி நாட்டியக்காரி நளின இடை அழகி நயனம் பேசும் மொழி அழகி பார்வையில் தன்னை மெழுகாக உருக வைக்கும் வசியக்காரி இதழ் அழகி மச்சக்காரி என்னோட மச்சக்காரி! என அவளை நினைத்து தான் தினமும் அவனுடைய விடியல்.
தன்னை புரிந்து கொள்வாளா? தனக்காக ஒருத்தி! தன்னை தேடி, ஒருத்தி! என சைக்லேஷ் மனம் முழுவதுமாக இதழினி மீது தான் ஈடுபாட்டுடன் இருந்தது.
வேலையில் இருந்தால் லேப் டாப் எடுத்து டைப் அடித்தாலும், ஒரு நோட்டை ஒரு பேப்பரை எடுத்தாலே தன்னிச்சையாக கைகள் துவாரகா! துவாரகா! என்று தான் டைப் அடித்தது. பேனாவில் இருந்து எழுத்துக்கள் வந்தால் முதலில் கைகள் எழுதியது துவாரகா சைத்ரேஸ்வரன்! தான்! அவனுடைய உள்ளங்கையில் துவாரகா சைத்ரேஸ்வரன் என்று எழுதி அதை பார்ப்பான் அதை பார்க்க பார்க்க பசி கூட எடுக்காது சைத்தீஸ்வரனுக்கு அந்த அளவுக்கு துவாரகாவின் மீது எண்ணம் நிலை கொண்டு இருந்தது. கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அவ என் பக்கத்துல இருந்தா எல்லாமே எனக்கு வசந்தகாலமா தான் இருக்கும்! எனக்கு துவாரகா வேண்டும்! ஆனால் அவ என்ன புரிஞ்சுக்கணும்! அவள் என்னை தேடி வருவாளா? கடவுளே எனக்கு இதுலயாவது நான் நெனச்சு ஒரு பொண்ணு என்னை நினைச்சு வரா! அவள் எனக்கு கிடைப்பாளா? அவ எனக்கு நிரந்தரமா? நீ தான் சொல்லணும் என்று அனுதினமும் துவாரகாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தான் சைத்ரேஷ்வரன்.
அவ கிடைப்பாலா? கிடைக்க மாட்டாளா? it’s a hypothetical question❓ இந்த கொஸ்டின் தப்பா இருக்கு அவர் யாருக்கு கிடைப்ப அத பொறுத்திருந்துதான் பாக்கணும்!
அடுத்த நாள் காலை வழக்கம் போல் சைத்தீஸ்வரன் ஆபீசுக்கு கிளம்பினான். அவன் வேலையில் மூழ்கி போயிருக்க.. அப்பொழுது வெளியே கொஞ்சம் சத்தம் கேட்க.. சைத்தீஸ்வரன் அவனுடைய அறையில் இருந்து வெளியே சாதாரணமாக நடந்து வந்தான் அந்த நேரம் போனில் ஒரு பணியாள் யாரோ ஒரு வெளியில் செக்யூரிட்டியிடம் கத்திக் கொண்டிருந்தார்.
என்ன பிரச்சனை என்று சைத்ரேஸ்வரன் பார்வை அந்த பணியாளின் மீது இருக்க..
சார் அது இப்போ லீகல் அட்வைஸருக்கு நிறைய பேர் internshipக்கு, காலேஜ்ல படிச்சிட்டு இருக்க நிறைய பேரு அப்ளை பண்ணி இருக்காங்க இப்போ அதுல படிச்சு முடிச்சிட்டு இருக்கிறவங்க கூட ரொம்ப டார்ச்சர் பண்றாங்க சார்! என்ன பண்றதுன்னு தெரியல! அவங்களை முகமது சார் கிட்ட அனுப்பி விடுறதா? இல்ல! இங்க ஆபீஸ்ல எடுத்துக்கறதுன்னு, ஒரே குழப்பமா இருக்கு! ஏற்கனவே நிறைய ப்ரொபோசல் வந்திருக்கு! நிறைய பேர் அப்ளை பண்ணி இருக்காங்க! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல! என்று பொறுமையாக விளக்கம் கூறினார்.
சைத்ரேஷன் புருவங்கள் இடிங்கி என்ன சொன்னீங்க? லீகல் அட்வைசரா? அதாவது அவங்க அட்வகேட்டா? என்று கேட்டான்.
அந்தப் பணியாளர் ஆமாம் என்பது போல் தலையசைக்க..
சைத்ரேஸ் என்ன நினைத்தானோ தெரிய வில்லை. சட்டென பணியாள் கிட்ட சரி அவங்க யாருன்னு உடனே உள்ளே அனுப்புங்க! நல்லா திறமையானவங்களா, இருந்தா! நம்மளோட கம்பெனி என்னைக்கும் அவங்கள மிஸ் பண்ண கூடாது! என்று கூறினான் .
எந்த நினைப்பில் கூறினான்? வேறு யாருடன் நினைப்புல கூறியிருப்பான்? யாரா இருக்க முடியும்? துவாரகா தான் காரணம்! அவளோட ஃபர்ஸ்ட் ப்ரொபோசலும் கூட இப்படித்தான் வந்தது. ஜட்ஜ் பண்றேன்னு சீன் போட்டு தெரியாம வேணாம்னு, சொல்லி விட்டான். அது இந்த அளவுக்கு முளைச்சு நிக்குது. அதுக்காக வர interns எல்லாரையும் துவாரகா மாதிரி அவன் நினைக்க மாட்டான். அவங்க என்ன படிச்சிருக்காங்களோ! அவங்களோட திறமைக்கு ஏத்த வேலைய, தன்னோட கம்பெனி நம்பி வேலை கிடைக்கம்னு வந்திருக்கிறவங்களோட! அறிவுத்திறனையும், புத்தி கூர்மையையும் மதிப்பிட்ட வேலை கொடுப்பது தான் சைத்ரேஸ்வரனோட தொழில் தர்மம்! அதேபோல அவன் வர சொனனான்.
வந்தது யார்?வேற யாரு துவாரகா? இல்லைனா தாருணிகா என்று பெயரை மாற்றி கொண்ட சிவன்யா தான் வந்திருந்தாள்.
அவளின் முகத்தில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக அந்த மிகப்பெரிய டவர் அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் உள்ளே மனதின் அடியில் அரித்து கொண்டிருக்கும் வஞ்சனை அனைத்தையும் தன் கையில் மடக்கிக் கண்டு உள்ளே நுழைந்தாள் சிவன்யா!
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக வர.. அருகில் இருக்கும் பணியாள் அவளை பார்த்து “ஏதோ உன்னோட நல்ல நேரம் மா! எங்க பாசு நல்ல மூடுல இருந்ததுனால, நீ இப்போ உள்ள வந்திருக்க! ஆனாலும் உனக்கு லக்கு தான்! இந்த கம்பெனியில நீ இப்போ ஜாயின் பண்ண போறே! என்று அவர் கூறினார்.
அதற்கு தான் தாரணிகா என்று பெயரை மாற்றி வைத்திருந்த சிவன்யா எந்த பதிலும் சொல்லாமல் வந்தாள்.
அவள் மனதில் உள்ளுக்குள்ளே எதையோ சாதித்த வெறி தோன்றியது.
இனிமே கொஞ்சம் கொஞ்சமா நீ யாரு? என்னன்னு உன்ன அக்கு வேரா ஆணிவேரா பிரிச்சு, உன்ன பத்தி தெரிஞ்சு உன்ன கோர்ட்ல நிறுத்துவேன் டா சர்வேஸ்வரா! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அவள் பார்க்கப் போவது சர்வேஸ்வரனையா? இல்ல சைத்ரேஸ்வரனயா? அதையும் பார்ப்போம்.
*
இங்கே அடுத்த நாளும் வழக்கம் போல மீனாட்சியை ருத்ரன் கொண்டு வந்து நாட்டியாலயாவில் விட்டுவிட்டு, அவன் சென்று விட்டான்.
அனைவரும் நடனத்தில் கவனமாக இருக்க.. தெரியாமல் மீனாட்சி ஆடி கொண்டே மோதி முட்டியது நிலாவின் மேல் தான்.
ஹலோ மன்னிச்சுக்கோங்கோ என்று சொன்னவள். தயங்கிக் கொண்டே சாரி என்று சொல்ல..
நிலா கண்ணக்குளி தெரிய சிரித்தவள். தமிழா என்று கேட்க..
ஆமா என்று மீனாட்சி உடனே பதிலளித்தாள்.
உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் என்று நிலா அழகாக நயனங்களுடன் நடனமாடிக் கொண்டே பதிலளிக்க..
மீனாட்சி ஜதியின் ஓசையை கேட்டுக் கொண்டே அவளும் நடனமாடி கொண்டே பதில் அளித்தாள்.
அடுத்து வந்த ஆட்டத்தை முடித்து அடுத்த பேட்ச் தயாராக இருக்க வீட்டிற்கு செல்ல அனைவரும் ஆயத்தமானார்கள்.
அந்த நேரம் இருவரும் புன்னகையுடன் விடைபெறும் நேரம் மீனாட்சி அவளைப் பார்த்து கொஞ்சம் பார்வையை சுருக்கி உங்கள நான் எங்கேயோ பார்த்திருக்கேனே? என்று கேட்க..
நிலா ஒன்றும் புரியாமல் என்ன சொல்றீங்க? என்று மெதுவான அவளது மருண்ட விழியில் மீனாட்சியை பார்த்தாள்.
நீங்க திருவையாறு பக்கத்துல ம்மிம் நீங்க அரங்கேற்றம் பண்ணி இருக்கீங்களா? எனக்கு சரியா எந்த நாளில் நெனப்புல வரல! ஆனா உங்களை நான் பார்த்திருக்கேன்! என்று மீனாட்சி கூற..
நிலா யோசனையுடன் புருவம் முடிச்சுகளாக நான் நிறைய அரங்கேற்றம் பண்ணி இருக்கேன்! நீங்க சொல்ற மாதிரி திருவையாறு பக்கம் பண்ணிருக்கேனே! என்று அவளது கண்கள் ஒரு நிமிடம் மின்னியது. ஆனால் அடுத்த நிமிடம் எதோ ஒரு இடத்தில் நிசப்தம்!
என்ன பாட்டுக்கு என்று மீனாட்சி யோசித்துக் கொண்டிருக்கும் போதே..
“மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு!” என்று நிலா பதிலளித்தாள்.
அதேதான் அதேதான் உங்கள நான் பார்த்து இருக்கேன் அந்த போட்டியில் என்று யோசித்த மீனாட்சிக்கு அடுத்த வருஷமே நடந்ததே அதுலயும் நீங்க ஆடுனீங்களா?
ஆமா நான் வர்ஷா வருஷம் அங்கு அரங்கேற்றம் பண்ணுவேன்! என்று நிலா கூற..
எல்லா வருஷமும் பண்ண எனக்கு ரொம்ப பிடித்தம் தான்! ஆனால் நான் ஒரு வருஷம் மிஸ் பண்ணிட்டேன்! ஆனா அந்த ஒரு வருஷம்தான் என்னோட வாழ்க்கையிலேயே புரட்டி போட்ட வருஷம்! என்று ருத்ரனை நினைத்து மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்க..
நிலா ஒன்றும் புரியாமல் பார்த்தால் அவளுடைய வாழ்க்கையை புரட்டி போட்டதும் அந்த ஒரு நாள் தான்! இந்த? அந்த? எந்த? ஒரு நாள் அப்படி போட்டியில் என்ன நடந்தது? அரங்கேற்றத்தில் என்ன நடந்தது? அதை அடுத்தடுத்து வர எபிசோட்ல… இல்ல… ஆனால் ருத்ரன் மீனாட்சி ஓட காதல் கதைல பார்க்கலாம்.
தொடரும்..
EPISODE 71
நான்கு நாட்கள் எப்படி கழிந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது ஹரிணிக்கு அந்த நாட்கள் முடிந்திருந்தது. இன்னும் நித்தின் ஹரிணி வீட்டில் தான் இருந்தான். அன்று காலை அவள் போலீஸ் டிரஸ்ஸில் மிடுடுக்குடன் கிளம்பி வெளியே வந்தவள். அவனை பார்க்க… அவனும் tiptop-ஆக அவனுடைய வேலைக்காக கிளம்பி இருந்தான்.
ஹரிணி அவனை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருக்க..
நித்தின் என்ன என்பது போல் புருவத்தை தூக்கினான்.
நீ எதுக்கு என்னோட வீட்ல இருக்க? எப்போ கிளம்ப போற? என்று கேட்டாள்.
கிளம்ப தான் நினைச்சேன்! ஆனால் இனி டேட்டிங் முடியுற வரைக்கும், உன்கூட… அது உன் கூட தான் இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்! தங்க மட்டும் தான்! உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்று நித்தின் சாதாரணமாக கூறினான்.
வாட் தி ஹெல் ஸ் கோயிங் ஆன்? உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க! என் கூடயா? என்று புருவத்தை நெருக்கியவள் . ஒழுங்கா வீட்டை விட்டு கிளம்பி போயிடு! இல்ல? நடக்கிறதே வேற! என்று ஹரிணி அதட்டினாள்.
என்ன பண்ணுவ? என்று நித்தின் சாதாரணமாக கேட்க
நீ இப்போ வீட்டை விட்டு போகல! நான் உடனே வேலை டிசைன் பண்ணிட்டு கிளம்பிட்டே இருப்பேன்! என்று ஹரிணி கூறினாள்.
வேலை ரிசைன் பண்ணுவியா? அப்போ நீ என்னை லவ் பண்றன்னு தான் அர்த்தம்! சரிதானா? என்னை பேஸ் பண்ண முடியாம தான வேலை விட்டு riசைன் பண்றேன்னு சொல்லிட்டு போற! என கூலாக நித்தின் கூறினான்.
ஹரிணி கோபத்துடன் அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தவள். உன் மனசுல என்ன டா நினைச்சுட்டு இருக்க? உனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாதா? நான் தான் சொல்றேன்ல்ல! இத வெச்சு என்னை பிளாக் மெயில் பண்ண பாக்குறியா? உனக்கு ரிதம் கூட நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு! போய் அவ காதல் பண்ற வேலைய பாரு, கல்யாணம் பண்ணிக்கோ! என்னமோ பண்ணு! என்னை விட்டுடு உன்ன பார்த்தாலே, எனக்கு அறுவருப்பா இருக்கு சுத்தமா பிடிக்கல என்று மொத்தமாக எரிந்து விழுந்தாள்.
நித்தின் வெற்று பார்வையுடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க..
என்ன டா? இப்படி பாவமா மூஞ்ச வெச்சிட்டு எதை சாதிக்க, என் பக்கத்துல பொழுதிக்கும் சுத்தி சுத்தி வர? நீ எனக்காக ஆயிரம் பண்ணாலும், என் முடி கூட உன் பக்கம் திரும்பாது! ச்சீ உன்னை எலலாம் நினைச்சாலே எனக்கு.. ச்ச! உன்னை நினைக்க நினைக்க எனக்கு நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு! உன்னோட புத்தி, அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கு! இப்படித்தானே சூரியதேவையும் எங்க அத்தையையும் பிரிச்ச! உன்னால அவங்க பிரிச்சாங்க! அதுக்கு காரணம் உன் அப்பா! அதுக்கு அப்புறம் உன்னால மகி அத்தையும், சத்திய தேவும் பிரிஞ்சு இருக்காங்க! இதுக்கு காரணம் நீ மட்டும் தான் டா! உனக்கு சின்ன வயசுல இருந்தே கெட்ட எண்ணம், கெட்ட புத்தி தான்! அதுல தான் நீ வளர்ந்திருக்க.. இப்ப கூட அதை கண்டினியூ பண்ணிட்டு இருக்க, ச்சீ எவ்ளோ தைரியம் இருந்தா இன்னொரு பையனுக்கு நிச்சயமான பொண்ணு மேல ஆசைப்படுவே? என்று ஹரிணி மனதில் இருந்த அத்தனையும் கொட்டி இருந்தாள்.
ஆனால் நிதினோ ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவும் இல்லை அதற்கு மேல் கேட்கவே இல்லை. அவள் பேசும் வரை அமைதியாக காத்திருந்தான்.
ஹரிணி கோபத்துடன் அங்கு மிகும் நடந்தவள். உனக்கு புரியுதா? இல்லையா? உன்னை எனக்கு பிடிக்கல! அதை உன் மண்டையில நல்லா வாங்கிக்கோ! இது எப்பவுமே நடக்காது! அதேபோல நான் சத்திதேவுக்கு சொந்தமானவ! சத்யதேவ் என்ன லவ் பண்றான்! நான் அவனை லவ் பண்ணுகிறேன்! இதுல நடுவுல நீ யாருடா? அடுத்த முறை என் கண்ணுல பட்ட நடக்கிறதே! அப்படி நடந்த அவ்ளோ தான்! வேற என்று அவள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டாள்.
நித்தின் வருத்தத்துடன் அதே இடத்தில் நின்றவன் ஒரு பெரு மூச்சை விட்டு அவனுடைய வேலைக்காக சென்று விட்டான். தான் ஆயுதப்படையில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் எல்லையில் பாதுகாப்பு ஒரு என அனைவருக்கும் ராணுவ பாதுகாப்பு கருவிகள் ராணுவ கருவிகள் போர் கருவிகள் என துப்பாக்கி லைஃப் ஜாக்கெட் போன்ற பொருட்களை தயாரிக்க உபகரணங்களை தயாரிப்பதற்கான ஒரு மிகப்பெரிய மேனுஃபாகசரிங் கம்பெனி , அதே போல நிறைய கம்பெனிகள், ஜெர்மனியில் இருந்து வந்திருக்கிறது. தரமான பொருட்களை தயாரிப்பதற்கான மிகப்பெரிய மீட்டிங் அது, கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் இந்த ப்ராஜெக்ட் வந்திருக்கிறது. இது எந்த நாட்டுக்கு போகும் இல்லை. உள்நாட்டில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலைகள் அரசு தொழிற்சாலைகள் இதை தேர்வு செய்து அடுத்த கட்டமாக உபகரணங்களை தயாரிக்குமா? என்று விவாதிக்கும் மிகப்பெரிய முக்கியமான ஒரு பெரிய மேட்டிக்கு தான் நித்தின் பிரகாஷ் சென்றிருந்தான்.
காலையில் மூச்சு விடாமல் பத்து நிமிடங்களாக அவனை திட்டியதற்காக.. மூச்சுவிட கூடன்றம் இல்லாமல் கால் வலிக்க மீட்டிங் முடியும் வரை நித்தின் பிரகாஷின் அருகில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி.
நித்தின் பார்வை கூட அவள் மீது திரும்பவில்லை. இது அவளுக்கான தண்டனை என்று கூறலாம். தன்னை வெறுத்து ஒதுக்குகிறாள், அதனால் அவள் தன் முன்னால் இருக்க வேண்டும்! தன்னை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! என்று அவனுக்கு ஒரு எண்ணம். அதேபோல் அவள் பேசிய அனைத்து வார்த்தைகளுக்கும் அவன் பதில் கொடுக்கத் தான் போகிறான். அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கப்போகிறது. என்னை விட்டு போ! என்னை விட்டுப் போ! என்று கூறினாளே! இனிமேல் அவள் என்னை விட்டு நகர மாட்டாள். நித்தின் பிரகாஷின் தனிப்பட்ட பாதுகாவலர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹரிணி ராம் தான். .
அவள் வேகமாக சென்றதும் உடனே நிதின் இந்த வேலையை பார்த்து வைத்திருக்கிறான். ஹரிணி முனகிக்கொண்டே அந்த இடத்தில் அவனை முறைத்துக் கொண்டும் நின்று கொண்டிருந்தாள்.
இது இப்படி போய்க்கொண்டிருக்கிறது இப்படியே ஒரு பக்கமாக போய்க்கொண்டிருந்தது .
*
இங்கே சிவன்யா என்ன செய்கிறா? பார்த்து விடலாம் !
ஆபீஸ் வந்து நான்கு நாட்களில் அங்கு இருக்கும் அனைவருக்கும் பரிட்சேயமாக ஆகிவிட்டாள். சிவன்யா எனும் தருணிகா அங்கு வரும் கம்பெனி ஆபீஸ் தொடர்பான வழக்குகள் மற்றும் சில இடையிடோரியல் விஷயங்கள் என அனைத்திற்கும் லீகல் அட்வைசராக அவள் மூர் செய்தது அடுத்த கட்டமாக அவளை நேரடியாக சைத்ரேசை சந்திக்க வழி வகுத்தது.
அதை நினைத்து அவள் மிகவும் சந்தோஷமாக அவளுடைய அறையின் அறைக்கு வந்து சேர…
இதழினி அங்கு கொண்டையை போட்டுக்கொண்டு கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தாள்.
கிட்டத்தட்ட இரண்டு ஒரு வாரத்திற்கு மேல் தூரி இதழ் இனிய முகம் வாடிக்கிடந்தது. என்ன என்று கேட்டாக்ஷக சொல்லவே இல்லை சிவன்யா நேராக தன் தங்கையின் அருகில் வந்தவள் உன்னோட முகமே தெரியலையே ? என்ன விஷயம் இதுக்கு இப்படி வச்சுட்டு இருக்க? என்று கேட்க
ஒன்னும் இல்லக்கா என்று அனுப்பிக்கொண்டே இருந்து செல்ல போக..
பாப்பா இப்ப சொல்ல போறியா? இல்ல நான் டாடிக்கு போன் பண்ணவா ? இல்ல சத்திய தேவ் நிதின் அண்ணாக்கு போன் பண்ணட்டுமா? என்று வரிசையாக அவள் பெயர்களை உச்சரிக்க..
அது வந்து என பெயர்களை என்ன விஷயம்னு சொல்லு நான் கூட ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம் வச்சிருக்கேன். என்று சிவன்யா கண்கள் கூற.
என்ன க்கா எனக்கு சொல்றீங்க என்று இதுல நீ கேட்டா!
முதல்ல நீ சொல்லு பாப்பா என்று சிவன்யா அருகில் வந்த அவளின் தோள்பட்டையை பிடிக்க..
அது வந்து என்று அவளுடைய முகம் மிகவும் பலவீனமாக மாறியது.
என்னாச்சு? என்ன ஆச்சுனவது என்னாச்சுன்னு சொல்லு இன்ரெஸ்ட் பண்ணியா?! பக்கத்துல இருந்து.
தண்ணீரை எடுத்து நீட்ட!;
ஒன்னும் இல்லக்கா ப்ளீஸ் என்று நகர போக..
இப்ப நீ சொல்ற இல்ல இப்ப உடன்ட் சக்தி அண்ணாக்கு போன் பண்ணுவேன் என்று அவள் போனை எடுக்க..
சொல்லிடுவேன் என்று அன்று இதழினி மெதுவாக குரலில் சர்வேஸ் பேசிய அனைத்து விஷயங்களையும் கூறினாள்.
அதைக் கேட்டதும் சிவன்யாவிற்கு கோபம், தலைக்கேறியது வன்மம், வஞ்சனை, என அனைத்தும் ஒரு சேர பாஸ்டர்ட் எவ்வளவு தைரியம் இருந்தா? என்ன வார்த்தை சொல்லி இருப்பான் ? அவனை சும்மா விடவே கூடாது துண்டுத்துண்டா வெட்டி போடணும்! என்று பத்திரத்தில் கர்சித்தாள்.
சிவன்யாவின் அக்னி முகத்தை பார்த்தவள்.
அக்கா அது வந்து நான் தான் அவாய்ட் பண்ணிட்டேனே! நம்ம இதுல தலையிட வேண்டாம்னு நீ சொன்னது சரி தான் க்கா! என இதழ் கூறிக் கொண்டிருக்க..
சிவன்யா பெருமூச்சு வட்டு கைகளை இறுக்கி மடக்கியவள்.
அது அப்படி இல்ல அவன பத்தி தான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வந்தேன் என்று சிவன்யா கூறினாள்.
என்ன என்று இதழ் கேட்க
நான் ஆபீஸலா அந்த முகம் தெரியாத சைத்ரேஸ்வரனோட கம்பெனியில உள்ள நுழைஞ்சுட்டேன்.
தாருணிகான்ற பெயர்ல இப்போ எனக்கு ஒரு வாய்ப்பு! ஒரு மீட்டிங்காக நான் சைத்ரேஸ் கூட லீகல் அட்வைஸ்ரா போக போறேன். அவனோட முகத்தை பார்க்கறதுக்கு, எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு! எப்படியும் அவன் கிட்ட சர்வேஷ பற்றிய எல்லா விஷயமும் கொஞ்சம், கொஞ்சமா எடுத்து சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்னு இருக்கேன் என்று சிவன்யா கூறினாள்
இதழ் ஆச்சரியத்துடன் நீ எப்படிக்கா அது முடியுமா அந்த சைத்ரேஸ் நல்லவனா ? எனக்கு என்னமோ அண்ணனே இப்படி இருக்கானா? தம்பி எப்படி இருப்பானோ? அப்படின்னு தான் தோணுது என்று சொல்ல..
முதல்ல முயற்சிப்போம் என்று சிவன்யா பெருமூச்சு விட்டாள்.
அக்கா நான் எதுவும் என்று இதழ் சொல்ல வர..
தயவுசெய்து இது நீ இதுல தலையிடாதே! அவன் எவ்வளவு தைரியம் இருந்தா உன்கிட்ட இப்படி கேட்டு இருப்பான்! என்று சிவன்யா பேசிக் கொண்டிருக்கும் போதே..
அந்த நேரம் அவளின் எண்ணுக்கு அழைப்பு வந்தது.
ஹலோ என்று பதிலளித்தாள்.
சிவன்யாவின் கூட படித்த மாணவ மாணவிகள் அசிஸ்டன்ஸ் ஜூனியர் அசிஸ்டன்ஸ் மற்றும் சீனியர்கள் என ஒரு பட்டாலகலுக்கு என நட்பும் வாட்சப் குரூப் இருந்தது.
சிவன்யா சொல்லுங்க என்று கேட்க
அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் சிவன்யாவின் கண்கள் கூறாக தன் தங்கையை பார்த்தது.
இதழ் முட்டைக் கண்களை போட்டு முழித்துக் கொண்டே தன் அக்காவை பார்க்க..
சிவன்யா போனை வைத்ததும், இதழ் வேகமாக தன் அக்காவின் அருகில் வந்து என்ன கா? எதுவும் பிரச்சனையா? என்று கேட்க
அந்த சர்வேஷ் உன்ன பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டான் என்று கூறினாள். சிவன்யா
என்ன? என்று இதழ் ஷாக் ஆகி பார்க்க..
அடுத்து?
நாளை பார்ப்போம்!
நாளைக்கு சத்ய தேவ், ரிதம், நிலா! வருவாங்க!
தொடரும்…
EPISODE 72
“அந்த சர்வேஷ் உன்ன பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டான்”
To be continued…
சிவன்யா தீவிரமாக சைத்ரேசின் ஆபீஸில் நடந்த விஷயம் அனைத்தையும் இதழினிடம் கூறிக் கொண்டிருக்க, அந்த நேரம் அவளுடைய law காலேஜ் தோழிகள் மற்றும் அவளுடைய நட்பு வட்டங்கள் என நிறைய போன் கால்கள் வந்திருந்தது. அதில் அவளுக்கு நெருக்கமான ஒருத்தியின் என்னை பதில் ஏற்றாள்.
ஹலோ சொல்லு டியர்! என்று சிவன்யா சொல்ல..
அந்த மருமுனையில் என்ன கூறப்பட்டதோ? உடனே சிவன்யாவின் முகம் மாறத் தொடங்கியது.
இதழினி தன் அக்காவின் முகம் மாறுதலை கவனித்து, அருகில் சென்றவள். என்னாச்சு? என்பது போல் கேட்க .
ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு என்று சிவன்யா போனை பேசி முடித்தாள்.
உடனே ஃபோனை வைத்ததும் வேகமாக whatsapp சென்று பார்த்தாள். அதில் துவாரகா என்ற பெயர் அங்க அடையாளம் உதட்டு மச்சம் என வந்திருந்தது.
அக்கா என்ன ஆச்சு என்று இதழ் கேட்க..
சிவனியா ஒரு பெருமூச்சு விட்டு அந்த சர்வேஷ் உன்ன பத்தி தேட ஆரம்பிச்சிட்டான்!
என்ன என்று என்ன என்று இதழ் ஷாக்காக.. எப்டி? வாய்ப்பே இல்ல! என்ன பத்தி அவனுக்கு தெரியாதே! என்று கூறினாள்.
சிவன்யா நிதானத்துடன் குக்கு அப்படி இல்ல ஃபர்ஸ்ட் நான் சொல்றத கவனி! அதாவது துவாரகா அப்படிங்கிற பேர்ல நம்மளோட லா காலேஜ் மொத்தமும் தேடுதல் வேட்டை ஆரம்பிச்சிருக்கான்.
என்ன? என்ன? சொல்றீங்க என்று இதழ் அதிர்ச்சியுடன் கேட்க..
ஆமா துவாரகான்ற பெயரில் அவன் உன்ன பத்தி சல்லடைய law காலேஜ் மொத்தமும் தேடி இருக்கான். நல்ல வேலை அந்த வக்கீல் சொன்ன மாதிரி, உன்னோட பேரை துவாரகான்னு மாற்றினது நல்லதா போச்சு அதுக்குண்டான எவிடன்ஸ் மொத்தமும் நம்ம safe ஆ ரெடி பண்ணி இருக்கோம்! கடவுள் நம்ம பக்கம் இருக்காரு! என்று கூற..
இப்போ என்ன அக்கா பண்றது? என்று இதழ் பதட்டத்துடன் கேட்க..
ஒன்னும் பிரச்சனை இல்ல, துவாரகா அப்டின்னு அவன் துவாரகைக்கே போய் தேடுனாலும் உன்னை கண்டுபிடிக்க முடியாது. இனிமேல் நீதான் அவன் கண்ணுல படாத மாதிரி பத்திரமா இருக்கணும். என்று சிவன்யா கூறி..
இதழ் சட்டென தன் அக்காவிடம் “அது எப்படி கா உன்ன மட்டும் தனியா அங்க விட முடியும்? எனக்கு பயமா இருக்கு! அவன் ரொம்ப ரொம்ப மோசமானவன்! அவன் என்கிட்டயே!…” என்று ஒரு நிமிடம் இடைவெளி விட்டு, தன் அக்காவை பார்க்க..
சிவண்யா கோபத்துடன் அதைத் தான் சொல்றேன். உன் கிட்ட தப்பா நடந்துக்க அதுக்குண்டான தூண்டில் போட்டு இருக்கான் நல்ல வேலை நீ அங்க இருந்து வந்துட்ட, சோ இனிமே அவன பாக்காம இருக்கறது தான் நல்லது, முதல்ல நான் இந்த சைத்ரேஷ் கிட்ட நெருங்க பாக்குறேன், நம்மளோட விஷயத்தை சுமூகமா சொல்ல பாக்குறேன். என்று கூற..
இதழினி அட்வகேட் மூளை கூட வேகமாக “அக்கா ஒருவேளை அவன் தன்னோட அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணா? என்ன பண்ணுவீங்க? அவனோட கேரக்டர் எப்படின்னு நமக்கு என்ன தெரியும்? என்று கேட்க..
சரியா சொன்ன பாப்பா அங்க தான் நான் டிவிஸ்டே வச்சிருக்கேன். என்று சிவி கூற..
என்ன சொல்றீங்க என்று இதழ் கேட்க
சிவனியா சிரித்துக் கொண்டே அந்த சர்வேஸ்ககு எதிரா புரூப் ரெடி பண்ண போறது சைத்ரேஸ் தான்!
என்னக்கா சொல்றீங்க என்று கேட்க பொருத்திருந்து.
பாரு பாப்பா! அவனுக்கு எதிரியா சைத்ரேஷ மாற்ற போறேன். எப்படியும் அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சதும் அதிலிருந்து தெரியும் அதுக்கு உண்டான பிளான் போட்டு வச்சிருக்கேன். சோ நீ இதுல தலையிடாம உன்னோட படிப்புல கவனம் செலுத்து! என்று சிவன்யா கூறினாள்.
சரிக்கா ஆனாலும் என்று பேச வர..
ஆனால் என்ன இப்பொழுது எனக்கு ஆனான்னு சொல்லிட்டு இருக்க? முதல்ல உன்னோட விஷயத்துல நீ போகஸ் பண்ணு! என்று கூற..
உடனே இதழ் ஒரு பெருமூச்சை விட்டு ஆமா நீங்க சொல்றதும் சரிதான் , நான் என்னோட படிப்புல கவனம் செலுத்துகிறேன். அதுக்கு முன்னாடி மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிற, மாதிரி இருக்கு. அதனால நான் திருச்செந்தூர் போயிட்டு வரலாம்னு இருக்கேன். திருச்செந்தூர் ரொம்ப நல்லது, நம்ம ஊர்ல, பேசாம நீ தாத்தா வீட்டுக்கு போயிடு, அங்க அம்மாச்சியும் தாத்தாவும் இருப்பாங்க, உன்ன பத்திரமா பாத்துக்க! அங்கே இருந்து எக்ஸாம்க்கு மட்டும் வந்துட்டு போயேன். என்ற சிவன்யா சொல்ல..
பார்க்கலாம் அக்கா என்று இதழ் திருச்செந்தூர் எப்பொழுது செல்லலாம் என்று யோசித்து கொண்டே மகி மற்றும் சூர்ய தேவ் மற்றும் இருவரிடமும் கூறினாள்.
*
இங்கே இன்னொரு பக்கம் காலையிலிருந்து மாலை வரை ஹரிணி நின்று கொண்டே இருக்க..
நிதின் கண்டுகொள்ளவே இல்லை. அவன் ஹாயாக நன்றாக சாய்ந்து கொண்டு அரசு முடிவுகளை மேற்பார்வையட்டும், ஆராய்ச்சி செய்து கொண்டும், இரண்டு மூன்று கோப்புகளை புரட்டிக் கொண்டும் இருந்தான்.
ஓகே சார் இப்போ ஈவினிங் ஸ்நேக் டைம் அதுக்கு முன்னாடி இதுல என்ன முடிவெடுத்து இருக்கீங்க ? எதை செலக்ட் பண்ணலாம்? மோஸ்ட்லி அங்க இருந்து வர மெட்டீரியல்ஸ் எல்லாமே நமக்கு ரொம்ப குவாலிட்டியா கிடைக்கும். இதுவரைக்கும் செக் பண்ண, data baseலும் சார்ட்லயும் பார்த்தா, அதிகமா வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் தான் நமக்கு ரொம்ப பாதுகாப்பா இருக்கு! என்று ஒரு தரப்பு நியாயம் எடுத்து வைக்க..
நித்தின் புருவத்தை ஒரு நிமிடம் தேய்த்து விட்டவன். தலையை கோதிக் கொண்டே அப்படி திடுதிப்புன்னு முடிவு பண்ண முடியாது. இது நான் டையப் வச்சுக்கணுமே தவிர, முழு ஒப்பந்தத்தையும் அவங்களுக்கு தரமாட்டேன். என்று கூறினான்.
அனைத்து தரப்புகளும் அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க..
இது கான்பிடென்ஷியல்! இதை எல்லாத்தையும் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. நம்ம நாட்டு வீரர்களோட உயிர் மேல நமக்கு முழு கடமை இருக்கு! அதே போல ஒவ்வொரு மிஷின் கன் கூடவே எல்லா வகையான மெட்டீரியல்ஸ் இயந்திரங்களோட மொத்த ப்ளூ பிரிண்ட் , அது எப்படி இப்படி வேலை செய்யும்? அதோட கெப்பாசிட்டி என்னென்ன எதிரி நாடுகளுக்கும், அங்க இருக்குற தீவிரவாதிகள் யாருக்கும், நம்ம சொல்லிக் கொடுத்திடக் கூடாது. நம்ம கிட்ட எத்தனை இருப்பு இருக்குன்னு அவங்களுக்கு தெரிய கூடாது. இது எப்படி டீல் பண்ணனும்னு எனக்கு தெரியும்! நான் எந்த கம்பெனியோட வச்சிக்கிறேன்னு இந்த வீக் குள்ள உங்களுக்கு சொல்லி முடிக்கிறேன். அதுவரை அவங்களோட ஒர்க்கு பாருங்க முதல்ல எல்லா இடத்திலும் பார்டர்லயும் பாதுகாப்பு பலப்படுத்துங்க இப்போ பார்டர்ல கண்டிஷன் எப்படி இருக்கு என்று அப்படியே பேச்சை மாற்றினான்.
இதில் லாபம் பார்க்கலாம் தன் சொந்த மண்ணின் விஷயங்களை விட்டு தேச துரோகங்களை செய்து அதில் வாழலாம் என்று கொடுத்து கொழுத்த முதலைகளுக்கு நிதின் பிரகாஷின் பதில் பெரிய அடியையும் இடியையும் கொடுத்தது.
ஹரிணி அவனே கண்டுகொள்ள அப்படியே மாலை சென்று விட வீட்டுக்கு செல்லும் நேரமும் வந்தது .
நித்தின் பிரகாஷ் நேராக அவனுடைய கோட்ரசுக்கு அதாவது அரசு வழங்கிய வில்லாவுக்கு சென்றான்.
ஹரிணி அவனை பாலோ செய்து கொண்டே வந்தாள். சரியாக நுழைவு வாயில் வரவும் இதோட என் டூட்டி முடிஞ்சது சார்! என்னை இங்கேயே இறக்கி விட்டுடுக..
அந்த ஒரு நிமிடம் கார் நின்றது. உடனே கார் ஓட்டுபவரை முறைத்து பார்த்தான்.நித்தின் பிரகாஷ்.
அவனுடைய முறைப்பில் பயந்து போன ஓட்டுநர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு நுழைவாயிலின் உள்ளே நுழைக்க..
ஹரிணி அவனைப் பார்த்து, சார் உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்! என இங்கேயே இறக்கி விடுங்க! என்று மீண்டும் சொல்ல..
24 மணி நேரமும் நீதான் எனக்கு பாதுகாப்பு! நான் தூங்கும் போது கூட நீ என் பக்கத்துல நின்னுக்கிட்டே இருக்கணும்.
தட்ஸ் ஆல், இதுக்கு மேல எதுவும் கேட்கணும்னா உன்னோட ஹயர் ஆபீஸியல்ஸ் கிட்டயும் சீஃப் கிட்டயும் கேளு! புரியுதா? என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றுவிட்டான்
ஹரிணியா நித்தின் பிரகாஷ் எலன புன்னகை செய்து கொண்டே உள்ளே சென்றான்.
பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது காலையிலிருந்து இயற்கை உபாதைகளுக்கு கூட அவன் அவளை விட வில்லை…
ஹரிணி அதே இடத்தில் வெகு நேரமாக நின்று கொண்டிருக்க..
மேடம் உங்கள பாஸ் வருஷம் மினிஸ்டர் உங்கள வர சொன்னாரு என்று அவனுடைய தனிப்பட்ட பர்சனல் அசிஸ்டன்ட் வந்து சொல்ல
வரேண்டா நாயே என்று மனதுக்குள் முனையில் கொண்டே நேராக நித்தின் நடக்கும் இடத்திற்கு சென்றால் நித்தின் அப்பொழுதுதான் குளித்து முடித்து வீட்டுக்கு அணியும் உடையை அணிந்து வெளியே வந்தவன். தூண்டில் தலையில் துவக்கி துவட்டிக் கொண்டே லேப்டாப்பை ஆன் செய்து, எனக்கு ஸ்ட்ராங்கா பிரிஸ்க்கா ஒரு ஸ்ட்ரோங் காபி வேணும் வாங்கிட்டு வா! போ என்று அனுப்பி விட் டாடான்.
ஹரிணி அவனை முறைத்து பார்த்து நின்று கொண்டிருக்க..
என்ன அப்படி பாக்குற? சீக்கிரம் போ என்று அகற்றினான்.
ஹரிணி ஒரு எட்டு வைக்க அதற்குள்..
ஹே ஹே நில்லு! அந்த லேப்டாப் ஆன் பண்ணி வீடியோ கால் கனெக்ட் பண்ணு ஹரிணி! அவனே பார்க்க மிதுனுக்கு வீடியோ கால் கனெக்ட் பண்ணு என் தம்பிய பார்த்து ரொம்ப நாளாச்சு என்று கூறினான்.
நான் இதுக்கு கணக்கு பண்ண நீயே பண்ணிக்கோ ஏன் என்று சொல்ல ஹலோ நான் இப்போ மினிஸ்டரா உனக்கு ஆர்டர் போடுறேன் பண்ணுடி சாரி பண்ணுங்க மேடம் என்று ஒரு மார்க்கமாக அழைத்தான்..
ஹரிணி உஷ்ணம் மூச்சுடன் அவளைப் பார்த்துக் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க..
சீக்கிரம் பண்ணு அவள் முறைத்தாள்.
அட்லீஸ்ட் லேப்டாப்பையாவது எடுத்து வை காலையில இரந்து எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, என்ன பண்றது? என்று பெருமூச்சு விட்டவன் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான்
ஹரிணி அவனை முறைத்துக் கொண்டு நின்றிருக்க சீக்கிரம் போ என்று மீண்டும் கூறினார் ஹரிணி வேறு வழியில்லாமல் லேப்டாப்பை எடுத்து வைத்து திறந்து விட்டு திரும்ப
லெப் டாப்பில் உக்க ரிஷபன் ஹெச என் ஐ ஹரிணி என்று பாஸ்வேர்டை தட்டினான்.
அவள் நிற்க மாட்டாள் என்று தெரியும் தேகவேகமாக நடந்தால் l, நின்னாலும் உன்னோட மனசு இந்த பெயரை கேட்டதும் படபடன்னு அடிச்சுக்கோ; நீ வேகமாக நடந்து போன கூட உன்னுடைய இதயத்துடிப்பு என் காதுல கேக்குதடி, நடிக்காதடி என்று மனதில் நினைத்துக் கொண்டவன்.
மித்தின் தேவுக்கு வீடியோ காலை அழைத்தான்.
ஹரிணி நேராகச் சென்று அவனுக்கு உண்டான மினி ஸ்னேக்ஸ் ஈவினிங் வாங்கிக்கொண்டு வந்து வைத்தாள்.
அங்க வச்சுடு என்று கூறினான்.
ஹரிணி காலை பிசைந்து கொண்டே நின்று கொண்டிருக்க..
என்ன உட்காரணுமாm?
இல்ல என்றாள்..
அப்போ காலையில இருந்து உனக்கு உனக்கு ஒன்னும், ரெண்டும் வரவே வராதா? என்ன என்று நித்தின் கேட்க..
கெட்ட வார்த்தை
கெட்ட வார்த்தை
கெட்ட வார்த்தை என்று கூறினாள்.
என்ன கெட்ட வார்த்தை என்று நித்தின் பிரகாஷ் கேட்க
நீதாண்டா அது என்று சொல்லிக் கொண்டே வேகமாக ரெஸ்ட் ரூம் சென்றாள்.
ஏன் நான் உனக்கு பர்மிஷன் கொடுக்கவே இல்ல ..
எதுக்குடி என்னை கேட்காமல் போற போடா என்று முறைத்துக் கொண்டே வேகமாக சென்று வட்டாள்
*
வழக்கம்போல் இன்றும் நயனங்கள் அவளுடைய கைகளில் வழக்கம் போல் இன்றும் முத்திரைகளுடன் கூடவே நயனங்களுடன் கண்கள் காம கதை பேச அவளுடைய முகம் காவியம் பாட ஓவியம் போல ஆடிக் கொண்டிருந்தாள் நிலா .
அருகில் மீனாட்சிக்கும் அவளுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல ஆடி முடிக்க..
இருவரும் நட்புடன் ஓர் இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டார்கள்.
மீனாட்சி அக்கா நீங்க கூட பிராமண பாஷை பேசுறீங்க எப்படி என்று இதழ் கேட்க..
எங்க அம்மா பிராமண பொண்ணு என்று நிலா கூறினால் அப்படியா எங்க அம்மா, ஆண்டாள்! போல என்று நிலா கூற..
அதை கேட்டது மீனாட்சிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது சரிங்க அக்கா நான் ஆத்துக்கு கிளம்புறேன் என்று கிளம்ப
அந்த நேரம் நிலாவை அவருடைய குரு அழைக்க சரி நீங்க போ நீ போ மீனாட்சி நாளைக்கு பாக்கலாம் என்று இருவரும் விடை பெற்றார்கள் நிலா நேராக குருவை பார்த்துவிட்டு அவரிடம் அவர்களிடம் பேசிவிட்டு வெளியே வர ஒரு இறுக்கமான அனைத்துடன் கையில் அவளை ஏந்தி கொண்டு ருத்ரன் காரில் அமர வைத்து சீட்டில் போட்டு விட்டான்.
இன்னொரு பக்கம் வந்து காரில் ஏறிக்கொண்டான்.
இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த நிலா பார்த்து விட்டது! வானில் தெரியும் நிலவும், பூலோகத்தில் உள்ள இந்த நிலவும் தான்
தொடரும்..
EPISODE 73
மீனாட்சி வெளியே வந்து ஒரு சில எட்டுக்கள்தான் வைத்திருப்பாள்!
கோல்டு ஃபிஷ்! காந்த கண்ணழகி! மாமி! என்று அழைத்துக் கொண்டே முன்னால் வந்து நின்றான்.
அவனுடைய பார்வை, யாரும் தங்களை பார்க்கிறார்களா? என்று சுற்றிலும் இருக்க நீங்க வந்துட்டீங்களாண்ணா? என்று அவள் புன்னகையுடன் அருகில் வர..
ஹே கடங்காரி உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! என்ன அண்ணா சொல்லாதன்னு, மாமா சொல்லுடி! இல்லன்னா ருத்ரன்னு சொல்லு! அடுத்த தடவ என்ன அண்ணன்னு கூப்பிட்ட? கூப்பிடறதுக்கு பல்லு இருந்தாலும், ஒட்டறதுக்கு லிப்ஸ் இருக்காது! ரெண்டு லிப்பையும் கடிச்சு முழுங்கிடுவேன்! என்று ருத்ரன் கூறிக் கொண்டே தலையை கோதினான்.
சாரி! சாரி! இனிமே வாங்கோன்னா, போனா, சொல்ல மாட்டேன்!
ஹான் சரி சரி அதுக்கு பதிலா மாமி என்ன சொல்லுவீங்க? என்று ருத்ரன் குறும்புடன் கேட்க..
அது என மீனாட்சி கைகளை பிசைந்து கொண்டே நிற்க…
அதான் மாமா சொல்ல சொன்னேன் இல்ல!
சரி இனிமே மாமா சொல்லி கூப்பிடுறேன் என்று அவள் கூற.
சரி வா போலாம் என ருத்ரன் அழைத்து சென்றான்.
என்ன மாமி முகம் வத்தல், உப்பு மாங்கா மாதிரி சுறுங்கிடுத்து! என ருத்ரன் கிண்டல் செய்ய…
அவள் உதட்டை சுழித்து முறைத்தாள்.
சரி சரி முகம் எல்லாம் ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி இருக்கு வரியா? உன்னோட மாமி கையால, உனக்கு ஸ்ட்ராங்கா இஞ்சி தட்டி போட்டு டீ கொடுக்க சொல்றேன்! என்று ருத்ரன் சொல்ல..
எந்த மாமி? நீங்க? உடுப்பி ஹோட்டல்! அது உங்களுக்கு சொந்தமா என்ன? என்று கேட்க..
அடியே! மாவடு மாமி! எங்க அம்மா உனக்கு மாமி தான் அர்த்தம்; அத சொல்றேண்டி என்று சொல்ல..
ஓ நீங்க மாமி தானே! நான் மறந்து போயிட்டேன் அன்னா என்று சொல்ல வர வந்தவள். அப்படியே மாற்றிக்கொண்டு ருத்ரா என்று அழைத்தாள்.
சொல்லுடி மாமி என்று அவளின் தோல் மேல் கை போட..
அய்யோ வலிக்குது என்று நகர்ந்து நின்றாள்.
என்னடி வலிக்குது? நான் உன்னை எதுவுமே பண்ணலையே! என்று கண்களில் குறும்புடன் அவளை பார்த்தான்.
நீங்க என்னிடம் அடி வாங்க போறீங்க! எ டான்ஸ் ஆடியும் கை கால் எல்லாம் என்னமோ வின்னு வின்னுன்னு இழுக்கரர்து! நீக்கு என்ன பண்றதுன்னு புரியல அண்ணா! அது மாமா! இப்போ நான் என்ன மாமா பண்றது? என குழந்தை போல் மீனாட்சி கேட்க சிரித்து விட்டான் ருத்ரன்.க்
சிரிக்காதீங்கோ! எப்ப பாத்தாலும் சிரிச்சு சிரிச்சு என்னை கேலி பண்றது தான் நோக்கு வேலையாக்கும்! என்று கூறினாள்.
சரி வரையா உன்னோட கால பத்தமா புடிச்சு விடுறேன் என்று அழைத்தான்..
நான் வரமாட்டேன்பா நீங்க என்கிட்ட சேட்ட கட்டுவீங்க! என்று மீனாட்சி அடுத்த அடி எடுத்து வைக்க..
ஆமாண்டி நான் சேட்டை பண்றதுக்கு தான்! நீ இருக்க! உன் கிட்ட பண்ணாம வேற யார்கிடட பண்ண? ம்ம் சொல்லு என்று சொல்லிக்கொண்டே அழகாக அவளை தூக்கி இருக்கைகளிலும் ஏந்தி கொண்டு கார் கதவை, ஸ்டைலாக காலில் உதைத்து திறந்து திறந்தான்.
அவளை பூ போல காரில் அமர வைத்து விட்டு அவனும் ஏறிக்கொண்டு காலை பிடித்து விட ஏறிக்கொண்டான்.
இந்த காட்சிகள் காணக் கிடைக்காத காட்சிகள் அல்லவா? நமக்கு!
ஆனால் இன்னொருவருக்கு?
பார்க்க பார்க்க உள்ளுக்குள் இடி இறங்கியது போல் இருந்தது. ஏனோ மனமெல்லாம் கணத்து போனது. மழை பெய்தால் நிலவு தெரியாது என்பார்களே? நட்சத்திரமும் வராது என்பார்கள். ஆனால் இங்கே நிலவும் வரும் நட்சத்திரமும் வரும்! வான் மழை இல்லை! காதல் கண்ணீர் மழை! அவளின் பட்டு கன்னத்தில் முத்து முத்தாக சிதறி கொண்டிருந்தது.
வேற என்ன ஒரு தலை காதல் தான் அப்படி கூட எடுத்துக் கொள்ளலாம் நிலா அப்படியே நின்று போகும் காரில் கேட்கும் சிரிப்பு சத்தத்தையும், அவன் பதமாக கால் பிடித்து விடுவதை பற்றி மீனாட்சி சொல்லிக் கொண்டிருப்பதை கேட்க… கேட்க உள்ளுக்குள் உதரலும் ஆட்டமும் கண்டது.
அவளுடைய நாட்டிய உடம்பு மெதுவா மெதுவாக நிலை குலைந்தது.
மாமா! தீரா மெதுவா கிச்சு கிச்சு பண்ணாதீங்க! சிரிக்க வைக்காதீங்க! என்று காருக்குல் என்று மீனாட்சி சிரிக்கும் சத்தம் வெளியே கேட்க..
ஒருவள் சாவின் விழும்பில் தான் இருக்கிறாள். கண்கள் எல்லாம் இருட்டிக் கொண்டு வருவது போல உடலெல்லாம், அடித்து புயலில் தப்பித்தவள் போல, உள்ளுக்குள் புயலில் சிக்கிக் கொண்டவள் போல, உள்ளுக்குள் அத்தனை துக்கமும் துயரத்தையும் அடைந்து கொண்டு இருந்தாள் அந்த நிலவானவள்.
தலையெல்லாம் தன்னை சமன் செய்து கொண்டு உதட்டை கடித்து துக்கத்தை அடைத்துக் கொண்ட நிலா நேராக ஹாஸ்டல் கிளம்பினால் அந்த நேரம் வழங்க போல் சத்தியத்தை அழைப்பு வந்தது சத்யத்தையும் தினமும் தேவ் gang மற்றும் devil gang என அனைவரிடமும் போனில் பேசுவான்.
அது குறைந்தது ஒரு ஐந்து நிமிடங்களாக இருக்கும். அவங்க என்னென்ன செஞ்சுட்டு இருக்காங்க ? சேஃபா இருக்காங்களா? எந்த பிரச்சனையும் இல்லையா? என்று வீட்டிற்கு தலைமகன் போல அனைவரிடமும் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வான்.
அதில் பேசாமல் இருப்பது வெற்றி மாறன், மிதுன் தேவ், நித்தின் பிரகாஷ், ரிதம் நால்வரும் தான் அவனிடம் சரியாக முகம் கொடுத்து பேச மாட்டார்கள். மற்ற அனைவரும் சத்திய தேவ் போன் செய்யாமல் இருந்தால் கூட , அவர்களே போன் செய்து சத்திய தேவ் கிட்ட பேசுவார்கள்.
அந்த அளவுக்கு சத்திய தேவ் மேல் அனைவருக்கும் பாசமும் பிணைப்பும் அதிகம்.
நிலா படபடத்து கொண்டே போனை எடுத்து பார்த்தவளுக்கு அதில் சக்தி அண்ணா! என்று இருக்க ..
அண்ணா இப்போ இந்த நேரத்தில் கால் பண்றாங்க என்று உதடுகள் துடிக்க தன்னை சமன் செய்தவள், வேகமாக கைப்பையில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து, முகத்தை கழுவிக்கொண்டு போனை எடுத்து அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
ஹலோ அண்ணா என மென்மையான குரல்..
பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? டான்ஸ் கிளாஸ் முடிச்சுட்டு, கிளம்பியாச்சா? என்று கேட்டான்.
அண்ணா நீங்க இங்கேயா இருக்கீங்க? என்று ஏக்கத்துடன் சுற்றிலும் தேடிப் பார்த்தாள்.
இல்ல பாப்பா எனக்கு உங்க நினைப்பு வந்தது அதனால தான் கால் பண்ணேன். இந்நேரம் நீ உன்னோட மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலுக்கு கிளம்பி இருப்ப! அது தான் எந்த இடத்துல இருக்க ? என்ன பண்ணிட்டு இருக்க? அப்டின்னு கேட்கலாம்னு போன் பண்ணன்.நிவாஸ் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்குவானா? நித்தின் பிரகாஷ் உன்கிட்ட பேசினானா? என்று அக்கரையாக விசாரித்தான்.
நிலாவுக்கு சத்திய தேவ் மேல் மிகப் பெரிய பிரியம். ஏனென்றால் நிலா பிறக்கும்போது சத்திய தேவ்க்கு 12 வயது, குட்டி தங்கை.. குட்டி தங்கை! என அவன் அவளை தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுவான். மிதுன், நிதின் என இருவரும் இதழினி கூட விளையாடினால், சத்யதேவ் எந்த குழந்தை தங்கயா? தம்பியா என்று பார்க்க மாட்டான். யார் தன்னுடைய தங்கை என்று நினைக்க மாட்டார். அனைவரையும் சரிசமமாக வைத்து நினைப்பவன். நிலாவை தன் நெஞ்சிலேயே போட்டு தட்டி தூங்க வைப்பான். தேஜுவிற்கு சத்திய தேவை மிகவும் பிடிக்கும். அவனுடைய பொறுமை, அவனுடைய குணம், தன்னுடைய மகனுக்கு இல்லையே என்று எவ்வளவு முறை தேஜோ வருத்தம் கொண்டிருக்கிறாள்.
சூரிய பிரகாஷ் அவ்வளவாக இதில் தலையிட மாட்டார். சத்யதேவியின் மேல் அவளவாக உடன்பாடு இல்லை.
ஆனால் சத்தியதேவ் நிலாவை பார்த்துக் கொள்ளும் விதத்தில் சூரிய பிரகாஷுக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவனுடைய குணாதிசயங்கள் அனைத்தும் மகிழினியை ஒத்திருப்பதாக நினைத்துக் கொண்டு ஆசையாக பார்ப்பான்.
இப்பொழுது நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
பாப்பா உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்! என்ன ஆச்சு? என்னாச்சும்மா சொல்லுங்க? அண்ணா கிட்ட எதுவும் பிரச்சனையா? காலேஜ்ல எதுவும் பிரச்சனையா? நான் வேணா வந்து கேட்கலாமா? என்று சத்திய தேவ் விசாரிக்க..
இல்லன்னா அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று அவள் ஒற்றை பதில் அளித்து விட்டு சரி பாப்பா சாப்பிட்டீங்களா ?
அது என தயங்கியவள். ஹாஸ்டல் போய் தான சாப்பிடணும்! என்று கூறினாள்.
சரி ஓகே என்று சத்திய தேவ் வைக்க போக.
நிலா விசுமலுடன் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. அவளின் குரலில் தெரிய வந்தது.
பாப்பா இன்று சத்திய தேவ் பாசத்துடன் அழைக்க..
அண்ணா என்று விம்மலுடன் பேசினாள்.
எதுவும் பிரச்சனையா? என்ன ஆச்சு? சரி நான் உடனே வந்து உன்னை கூட்டிட்டு போகவா? என்று கேட்க..
அவள் இருக்கும் மன கஷ்டத்தில் சரி என்று ஒத்துக்கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் சக்தி நிலாவை பிக்கப் செய்து அவர்களுடைய அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தான்.
என்னடா ஆச்சு முகம் எல்லாம் ரொம்ப பொக்க்குனு போயிருக்கு! என்று கேட்க..
அது வந்து நான் நான் வந்து ஒருத்தர என்று நிலா ஆரம்பிக்க..
அந்த நேரம் சத்தியதேவியின் போன் அலறியது.
எடுத்துப் பார்க்க அதில் இதழ் என்று இருந்தது.
Sathya dev உடனே அவளிடம், குக்கு போன் பண்றா! என்று சொல்லிக் கண்டே கதவை திறந்தவன். நீ உட்காரு பாப்பா! நான் உனக்கு சமைச்சு எடுத்துட்டு வரேன்று குக்கு கிட்ட பேசிட்டு வந்துடறேன்! என்ற நேராக பால்கனி பக்கம் சென்றான்.
நிலா கண்ணை துடித்துக் கொண்டு இருந்தவள் ஒரு பெருமூச்சுடன் இருக்க.. எவ்வளவு முயன்றும் அவளது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.
உடனே நிலா கைகளை இறுக்கி மூடி பெரு மூச்சை விட்டவள். முகத்தை கழுவலாம்? என்று பாத்ரூம் சென்றாள்.அவள் முகத்தை கழுவிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் தண்ணீர் குடிக்க .
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
சத்யதேவ் பால்கனியில் போன் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு காது கேட்க வில்லை.
யாரது என்று யோசித்துக்கொண்டே கதவை திறக்க.
அங்கே வாட்ட சாட்டமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்கும் அழகனாக ருத்ரன் நின்று கொண்டிருந்தான்.
உள்ளே நிலாவை பார்த்ததும் ருத்ரனுக்கு முகம் அஷ்ட கோணலாக வளைந்தது. சிறு வயதிலிருந்து நிலாவை ருத்ரனுக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. அவளுடைய குணாதிசயங்கள் அனைத்தையும் ருத்ரன் தவறாகவே நினைத்துக் கொள்வான். அவளது உண்மையான பயத்தை கூட நடிக்கிறாள், அனைவரின் கரிசனத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். என்று நினைக்கிறாள்.அவள் சிரித்தால் கூட சீன் போடுறா! வேணும்னே கண்ணகுழி தெரிய சிரிக்கிறா! எல்லாரும் தன்னை பாக்கணும்னு நினைக்கிறா? என்று ருத்ரன் நிலாவின் மேல் கற்பனை கதைகளாக கட்டிக் கொள்வான்.
அதேபோல் இதுவரை ஒரு தடவை கூட ருத்ர நிலாவிடம் பேசியதே இல்லை சிறுவயதில் ஏதாவது விளையாட்டு விளையாடினால் கூட நீ பவா பவன்யா இதழினி இருந்தால் மட்டுமே விளையாடச் செல்வான் நிலா இருந்தால் அந்த பக்கமே எட்டிப் பார்க்க மாட்டான் சிறுவயதிலிருந்தே அவளது பெயரும் அவளது முகமும் உத்திரனுக்கு சுத்தமாக பிடிக்காது
எதிரில் இருக்கும் நிலா பதட்டத்துடன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று சோபாவில் அமர, ருத்ரன் வீட்டின் உள்ளே தலையை மட்டும் எட்டிப் பார்க்க.. சத்யதேவ் போனில் பேசிக் கொண்டிருந்தான், எதிரில் நிலா அமர்ந்து கொண்டிருக்க, அவளைப் பார்த்ததும் இவருக்கு முதல் நாம வரணும் என்று நினைத்து அடுத்த அடி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
நிலாவின் ஓரக்கண்பார்வை அவனைத் திண்ட ருத்ரன் மனதில் இவ இருந்தால் நாம போகணுமா என்ன நாம சத்யதேவ் மாமாவை பார்க்க வந்திருக்கோம். இவளையா பாக்க வந்திருக்கோம்? என்று தன்னை சரி செய்து கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான்.
சத்தியத்தை போன் பேசி முடித்து விட்டு வர பல தீரா நீயும் வந்துட்டியா இருங்க இரண்டு பேருக்கும்p ரெண்டு பேருக்கும் காபி போடறேன் என்று சத்தியத்தை சமையலறை பக்கம் செல்ல..
நிலா வேகமாக தன் அண்ணன் இருக்கும் திசை பக்கம் சென்றாள்.
ருத்ரன் அவளுக்கு முன்னால் சென்றவன். மாமா நான் போடுறேன் என்று சென்று அவனுடன் பேசிக்கொண்டே டீ போட ஆரம்பித்தான்.
நிலாவுக்கு ஒரு மாதிரியாகி போனது தன் மேல் சுய பச்சாதாபமும் ஏற்பட்டது.
நிலா பால்கணி பக்கம் சென்றவள். ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து விட்டாள். இது இப்படியே போகட்டும் இது மண்ணுல புதைந்து இருக்கட்டும் நானும் பேசாம புதைந்துட்டா? பரவால்ல என்று கண்டதையும் நேசித்தால், அந்த நேரம் தான் இனி இவர் இருக்கிற இடத்தில நாம இருக்கக்கூடாது இவர் அவருடைய காதலி கூட இருக்கிற காட்சியை, நம்ம கண்ணுல பாக்கவே உடனே மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தான்.
சட்டு என நித்தின் பிரகாஷ் நினைவு வர உடனே போன் செய்தால் எப்பொழுதுமே நித்தின் பிரகாசுக்கு நிலா போன் செய்ததே கிடையாது எப்பவாவது ஒரு தடவை சூரிய பிரகாஷ் தேஜு அண்ணனிடம் பேசு என்று சொன்னால் மட்டுமே போன் செய்வாள்.
நித்தின் பிரகாஷ், நிவாஸ் என்றால் நிலாவுக்கு மிகவும் பயம். அவள் மிகவும் சாதாரண உணரும் ஒரே ஒரு நபர் சத்தியத்தை மட்டுமே பகவான் பவன்யா இதழினி என அனைவரையும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவளுடைய முக்கியத்துவம் தன் மாமன் மகள் இனியா தான் அவள் போனை எடுக்கும் நேரம்.. இனியா அழைத்தாள்.
ஹலோ மச்சி என்ன பண்ற என்று இனியா கேட்க நான் அப்புறம் பேசவா? என்று வெடிக்கென நிலா கட் செய்தாள்.
இனியாவிற்கு ஷாக்காகி போனது. என்ன இந்த நிலா புள்ள கட் பண்றாளே! என்று அவள் மனதில் நினைத்து விட்டு கடந்துவிட்டாள்.
நிலா இப்பொழுது நித்தின் பிரகாசிக்கு மீண்டும் அழைத்தாள்.இரண்டாவது அழைப்பில் அழைப்பை ஏற்றவன்m என்ன சும்மா சும்மா கால் பண்ணிட்டு இருக்க? எதுவும் பிரச்சனையா? நிவாஸ் உன் பக்கத்துல இருக்கானா? இன்னைக்கு காலையில வந்து பார்த்துட்டு போனாலும்! லஞ்ச் பிரேக்ஃபாஸ்ட் டின்னர் எல்லாமே வீட்ல இருந்து, தானே சாப்பாடு வருது வெளியில எதையும் வாங்கி தின்னு தொலைச்சிறாத! என்று நித்தின் பிரகாஷ் வழக்கம் போல வசைப்பாட ஆரம்பித்தான்.
இன்னும் மனம் கனத்துப் போனது தன்னை ஒரு பொம்மை போல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் பெண் பிள்ளை இல்லையே! என்று ஒரே காரணத்தால் தன்னை வைத்திருக்கிறார்கள் போல! சூரிய பிரகாஷ் அதீத அன்பு என்ற பெயரில் அதிக கட்டளையையும், தடுப்புச் சுவயும் ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
சூரிய பிரகாஷ் கொஞ்சமாவது எழுப்பிய தடுப்பு சுவர் மேல் முள்வேலி கம்பிகளையும் பீங்கான் கண்ணாடி துண்டுகளையும் பதித்தது. நித்தின் பிரகாஷ்! மற்றும் நிவாஸ் தான்
அவர்கள் அனைவரும் நிலாவை தாங்கு தாங்கு என்று தாங்குவது மட்டுமே வேலை..
இப்பொழுது நிலா பயத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டே அண்ணா உங்ககிட்ட ஒரு விஷயம் என்று கூறினார்.
தொடரும்..
EPISODE 74
இப்போ என்ன வேணும் நான் வேணும்னா நிவாஸ உன்னை கவனிக்க அனுப்ப சொல்லட்டுமா எனக்கு நிறைய வேலை இருக்கு நான் எந்த பொசிஷன்ல இருக்கேன்னு மேடம்க்கு தெரியும் தானே என்று நித்தின் கடுமையாக அவளிடம் பேச..
இப்பொழுது நிலா பயத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டே அண்ணா உங்ககிட்ட ஒரு விஷயம் என்று கூறினார்.
சீக்கிரம் சொல்லு என்ன விஷயம் என்று கேட்டான் அது வந்து நானு டெல்லியில் இருக்கிறேன். மெடிக்கல் காலேஜ்ல ஜாயின் பண்ணிக்கவா? உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? என்று பதட்டத்துடன் கேட்டு முடித்தாள். நிலா.
நிதின் ஒரு சில நிமிடங்கள் அமைதியை தக்கவைத்துக் கொண்டு என்ன? டெல்லியில் இருக்கும் மெடிக்கல் காலேஜா? நீ சொல்றது ஆர்மி மெடிக்கல் காலேஜா? என்று புருவத்தை சுருக்கி கொண்டு கேட்டான்.
அது ஆமா நான் கரெக்ட் தான் என்று நிலா பயத்துடன் பதில் அளிக்க..
அதுக்கு அவசியம் என்ன வந்துச்சு? என்று கொஞ்சம் கர்ச்சனையுடன் கேட்டான் நிலா பக்கம் மிகவும் அமைதியாக இருக்க..
கேட்டதுக்கு பதில் சொல்லு? என்ன பிரச்சனைன்னு கேட்டேன்? எதுக்கு திடீர்னு காலேஜ சேஞ்ச் பண்ணனும்னு சொல்ற? நீதானே மெரிட்ல ஜாயின் பண்ண! அதுவும் நீ இப்போ ரெண்டு வருஷம் கம்ப்ளீட் பண்ண போறேன்! என்று நித்தின் அவளை தன் தங்கையிடம் கூற..
எனக்கு என்று ஒரு பெருமூச்சு விட்டவள். நீதான சொன்ன ஸ்டேட்டஸ்க்கு தகுந்த இடத்துல படிக்கணும்னு, எனக்கு பெங்களூர்ல படிக்கிறது இப்போ பிடிக்கல! உன்னோட தங்கச்சியா! அதுவும் டிபன்ஸ் மினிஸ்டர் ஓட தங்கச்சியா ஆர்மி மெடிக்கல் காலேஜ்ல நான் படிக்கணும்னு ஆசைப்படுகிறேன். எனக்கு உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா? இல்ல நான் டாடி கிட்ட கேட்டுக்கவா? என்று கூறினாள்.
நித்தின் பக்கம் அமைதியாக இருக்க..
நிலா இன்னும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , “இதுவரைக்கும் உன்கிட்ட நான் எதுவுமே கேட்டதில்லை! எனக்கு டெல்லியில் படிக்கணும்னு ஆசையா இருக்கு! அதுவும் இந்த நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறங்களோட உயிரை காப்பாத்தணும்னு, ஆசைப்படுறேன்! அதனால எனக்கு ஆர்மி மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கி குடுப்பியா? உன் தங்கச்சியா கேட்கிறேன்! என்று மெதுவான குரலில் கேட்டாள்.
அடுத்த நொடி நிதின் பக்கம் கொஞ்சம் கோபத்துடன் “இந்த சிம்பதி கிரியேட் பண்ற வேலை எல்லாம் டிரை பண்ணாத! அதெல்லாம் தேஜு அண்ட் டாடி ரெண்டு பேர்த்துடன் நிறுத்திக்கோ! உனக்கு என்ன? சீட்டு வேணும்? அவ்வளவு தானா! நான் ரெடி பண்றேன்? எப்போ இன்னக்கே வரியா? என்று உடனே கேட்டான்.
இல்ல நான் டாடி கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரேன். ஊருக்கு போகணும், அம்மாச்சியும் தாத்தாவையும் பார்க்க போறேன். என்று கூறினாள்.
எங்க வேணாலும் போ! தயவுசெய்து தனியா மட்டும் போய் தொலைக்காத! எனக்கு உன்னோட பாதுகாப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்! உனக்கு ஏதாவது நான் டாடி தேஜு ரெண்டு பேரும் ஓவரா ஆடுவாங்க! தயவு செய்து ரொம்ப கேர்ஃபுல்லா இரு! எங்கேயும் வெளியே சுத்திட்டு இருக்காத! வீட்டுக்கு போனமா டைம் ஸ்பென்ட் பண்ணனுமா! வந்து சேர்ந்தமா! அதோட இருக்கணும்! என்று கூறினான்.
இதற்கு அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.
பாப்பா உனக்காக ஸ்பெஷல் டீ அண்ட் பிஸ்கட் என்று பின்னால் குரல் கேட்க..
நித்தின் ஒரு நிமிடம் அந்த குரலை உள்வாங்கி இப்போ “நீ சத்ய தேவ் கூடவா இருக்க?” என்று கேட்டான்.
அது வந்து என்ற நிலா தயங்கிக் கொண்டிருக்க..
யார் போன்ல என்று சத்திய தேவ் கேட்டுக்கொண்டே அருகில் வந்தான்.
நித்தின் அண்ணா என்று நிலா பயத்துடன் சொல்ல..
சரி பேசிட்டு வா என்று உள்ளே சென்றான்.
ம்ம் கேட்டதுக்கு பதில் சொல்லு! அங்க எப்படி போன? என்று நித்தின் கர்ஜனையுடன் கேட்க..
எனக்கு அண்ணாவை பார்க்கணும் போல தோணுச்சு! அதனால அண்ணா வந்து கூட்டிட்டு போனாங்க! என்று மெதுவான குரலில் கூறினாள்.
நித்தின் மனதில் அப்போ நம்மள பாக்கணும் போல தோணல, நம்ம கிட்ட பேசணும் போல இவளுக்கு தோணவே இல்ல! சத்ய தேவன் இவளுக்கு அண்ணன்! இப்போ இவளுக்கு தேவைக்கு மட்டும் இந்த இரத்த பந்தம் வேணும்! காரியத்திற்காக நம்ம கிட்ட பேசுரா? அப்டியா அவளோட அம்மா போல என தேஜூவை நினைத்து கொண்டான். அப்போ இவளுக்கு அண்ணனா அந்த சத்திய தேவ் தான் இருக்கான். அப்போ நாணு? என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டான்.
அண்ணா என்று நிலா மீண்டும் அழைக்க..
போதும் நான் ஏற்பாடு பண்றேன்! வந்து சேரு என்று சொல்லி போனை கட் செய்தான்.
நித்தின் போனை வைத்ததும் நிலாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. உள்ளுக்குள் மிகவும் பாரமாக இருந்தது. நிலா இங்கிருந்து செல்ல காரணமே அவன் தான்! இனி படிப்பு முடிவதற்குள் ருத்ரனை பார்க்கவே கூடாது. அவனை எப்படியாவது மறக்க முயற்சி செய்ய வேண்டும்! மறக்க முடியுமா என்ன? சிறு வயிலிருந்தே துளிர் விட்ட காதல்! அதை எப்படியும் பட்டு போக செய்ய வேண்டும் அதற்காகவே செல்கிறாள். தன்னுடைய சொல்லப்படாத காதலை சொல்லாமலேயே சென்று விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். எந்த பொருளின் மீதும் ஆசைப்படாதவள். அவள் எங்கு எதை பார்த்தாலும் அது வீட்டில் இருக்கும். ஆனால் அதை அவள் விரும்பியே இருக்க மாட்டாள். அந்த அளவுக்கு இரண்டு அண்ணன்கள், கூடவே அப்பா என்று போட்டி போட்டுக் கொண்டு அனைத்தையும் செய்வார்கள். கூடவே சூரிய தேவ் மகிழினி கூட அதேபோலத்தான் நிலாவை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள். உதயன் தாரா அதற்கு மேல் ஏனென்றால் அந்த குடும்பத்தின் இனியன் இதையா இருவரும் பிறப்பதற்கு முன் கடைசி வாரிசு நிலாவாக இருந்ததால் அவர்கள் அனைவரும் அவளை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
இனியா இதயன் இருவரும் பிறந்த பிறகு அவர்கள் இருவரும் அனைவருக்கும் செல்ல பிள்ளையாகி விட்டார்கள். மைவிழி கூட நிலாவை கொஞ்சவாள். வசந்தனுக்கு நிலாவை மிகவும் பிடிக்கும். அவளுடைய முகவட்டம் அப்படியே தேஜு போலவே இருக்கும். தன் தந்தை சூரிய பிரகாஷ் போல கண்ணகுழி மொத்தத்தில் அவளை பார்ப்பதற்கு, கொலு பொம்மை போல அத்தனை லட்சணமாக இருப்பாள்.
வசந்தன் அருகில் உட்காருந்து பல பேசுவாள் அதேபோல் ரங்கநாதன் தேஜுவின் வளர்ப்பாவிடம் சென்று அப்படி ஒட்டிக் கொள்வாள். கிட்டத்தட்ட நிலாவை பாதி வளர்த்தது ரங்கநாதன் தான்! தன்னுடைய கலாச்சாரம் அதாவது அவர்களுடைய பிராமணம் தன்னுடைய முடிந்து செல்லக்கூடாது. தன் பேத்தியும் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சமஸ்கிருதம், பரதநாட்டியம், கூடவே ரங்கநாதன் படித்த மருத்துவ படிப்பு என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, நிலாவை செதுக்கி வைத்திருந்தார் ரங்கநாதன்.
அந்த அளவுக்கு ரங்கநாதனுக்கு நிலாவை பிடிக்கும். வீட்டின் செல்லப்பிள்ளை ஆனால் அவள் ஆசைப்பட்டது. என்னவோ எட்டா கனியாக தான் இருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து ஒரு பெரும் மூச்சை விட்டவள் உள்ளே சென்றாள்.
என்ன அண்ணா கூட பேசியாச்சா என்று சத்திய தேவ் வழக்கமான தொனியில் புன்னகையுடன் அவளிடம் கேட்க..
பேசிட்டேன் அண்ணா!
என்ன விஷயம் என்று அவளின் கவலையான முகத்தை பார்த்து சத்ய தேவ் கேட்க
நான் வந்து ஆர்மி மெடிக்கல் காலேஜ் போலாம்னு இருக்கேன்! என்று நிலா கூறினாள்.
இதைக் கேட்டதும் யாருக்கு சந்தோஷமும் இல்லையோ ருத்ரன் மனம் ரெக்கை கட்டி பறக்காத குறையா விரிந்து கொண்டு நின்றது. அப்பாடா இவ இங்கிருந்து கிளம்புறா! இனிமேல் என்னோட மீனாட்சிய நான் பயந்து பயந்து பார்க்க வேண்டியதில்லை. இனிமே ஃப்ரீயா ஜாலியா அவள போய் நான் பிக்கப் பண்ணுவேன்! என்று புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
சத்தியதேவியின் பார்வை நிலாவின் மீது இருக்க.. உடனே அவன் திடுக்கிட்டு என்ன திடீர்னு டெல்லி போறேன்னு சொல்ற? என்னாச்சு பாப்பா? என்று கேட்டான் .
நிலா எதையும் கண்டு கொள்ளாமல் இல்லை அவள் ஊருக்கு செல்கிறேன் என சொன்னது. ருத்ரன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை அவள் பார்க்க மறுக்கவில்லை! எவ்வளவு அழகாக இருக்கிறான்? என்று ஒவ்வொரு முறையும் அவன் மேல் ஈர்ப்பு மட்டும் தான் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவன் எதை நினைத்து சந்தோஷப்படுகிறான்? என்று நிலாவிற்கு அப்பட்டமாகவே தெரியும்.
அவள் அமைதியாக இருக்க பாப்பா என்று மென்மையான குரலில் சத்திய தேவ் அழைத்தான்.
அண்ணா என்று நிலா பதிலளிக்க..
என்ன திடீர்னு? இங்கிருந்து ஏன் போற? எதுவும் பிரச்சனையா? என்று சத்திய தேவ் கேட்க..
அப்படியெல்லாம் இல்லைன்னா எனக்கு அங்க போய் படிக்கணும்னு தோணுது! இங்கே இருக்கிறதை விட இன்னும் நிறைய நிறைய கத்துக்கணும்! எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டு, வந்து ஃபாரின் போலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். என்று நிலா கூற..
அப்போ அதுக்கு தான் மேடம் ரொம்ப சோகமா இருக்கீங்களா என்ற சத்திய தேவ் சொல்ல அது என்று கஷ்டப்பட்டு புன்னகையை உதிர்த்தாள்.
ரிதம் நாய்க்குட்டியை வெளியே தூக்கிக் கொண்டு வந்தவள். என்ன கிட்டத்தட்ட காலைல இருந்து இந்த நாய் வெளியில் வரலையே? என்று யோசித்துக் கொண்டே அங்குமிங்கும் நடந்தாள்.
அங்கே வாசலில் சத்யதேவ் வேகமாக ஒரு பெண்ணின் செப்பலை கவ்விக்கொண்டு நிற்க..
டேய் ராஸ்கல் உனக்கு எப்போ பாரு இதே வேலை தான் டா! என்னோட செப்பல எத்தனை பிச்சு போட்டு இருக்க! ஏண்டா உனக்கு வேலா வேலைக்கு கரி சோர் போடறேன, அப்புறம் என்னடா உனக்கு? வேற என்ன வேணும்? என்று ரிதம் அதட்டி கொண்டே குட்டி பப்பி சத்யதேவை தூக்க..
அப்பொழுது தன் அந்த பெண்ணின் செப்பளை பார்த்தாள். பொண்ணோட செப்பலா? இது பொண்ணோட செப்பல் தான்! எப்படி இங்க வந்துச்சு! என்று ரிதம் முகம் உடனே சிகப்பு சிவக்க தொடங்கியது.
அப்போ யார் இருக்கா யாரோ இருக்காங்க எவ அவ அவளை சும்மா விடமாட்டேன் என்று வேகமாக உள்ளே சென்றுவள்.
இப்போ அவன கதவைத் தட்டி கூப்பிட்டா நம்ம கூப்பிட்ட மாதிரி ஆயிடுமே! என்ன பண்றது? அப்போ ஓவரா பண்ணுவானே? ஒவ்வொரு தடவையும் இப்போ அதிகமா அவன் என்னை தேடி வர்றது இல்ல! நான்தான் அவனை தேடி போயிட்டு இருக்கேன்! இதுக்கு ஏதாவது பண்ணனுமே? பண்ணனுமே? என்று யோசித்துக் கொண்டிருந்தவள். மனதில் முதலாவதாக தோன்றிய நபர் சூரியதேவ் தான்! உடனே அழைத்தாள்.
சொல்லடி கண்ணு குட்டி என்று சூரிய தேவ் பிரகாசமாக குரலில் கேட்க..
மாமா நீங்க மோசம் போயிட்டீங்க! அதைவிட ஹரிணி மோசம் போயிட்டா! என்று ரிதம் கூறினாள்.
என்ன சொல்ற என்று கேட்க
மாமா தயவு செய்து நீங்களும் மாமியும் உடனே இங்க நான் இருக்குற அப்பார்ட்மெண்டுக்கு வாங்க என்று ரிதம் கூற
சூரியா முகத்தில் கோபம் பரவி அந்த மிதுன் நாய் ராஸ்கல் யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானா? அய்யய்யோ வேற ஏதாவது பிரச்சனை பண்ணிட்டானா? எந்த ஊரு பொண்ணு? இங்க யாரையாவது புடிச்சானா? இல்ல ஃபாரின்ல இருந்து புடிச்சிட்டு வந்துட்டானா? அப்போவே எனக்கு தெரியும் அவன் அரியர் வச்சிட்டு எனி டைம் போன்ல கேம் விளையாடிட்டு இருக்கும்போதே நான் நினைச்சேன்! இப்படி எதையாவது பண்ணுவான்னு, என் மானத்தை வாங்குறதுக்குன்னே இருக்கான். என்று சூரிய தேவ் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க..
மாமா என்று ரிதம் அதட்டலுடன் அழைத்தாள்.
என்ன என்ன ரிதம் என்று சூரிய தேவ் கேட்க.
அது தப்பு பண்ணுது உங்க சின்ன பையன் கிடையாது! உங்களோட சக்தி என்கிற சத்திய தேவ் என்று ரிதம் கூற..
என்ன என்று சூரியதேவ் அதிர்ச்சியுடன் கேட்க..
தயவு செய்து அந்த உங்க பையனுக்கு போன் பண்ணாம , இங்க வாங்க! உங்களுக்கு நான் ஆதாரத்தோட நிருபிக்கிறேன். என்று ரிதம் சொல்ல..
என்ன பண்ண சொல்ற என்று சூர்யா தயங்கிக்கொண்டே ரிதமிடம் கேட்டார் .
மாமா வருவீங்களா? மாட்டீங்களா? நான் உங்களோட கண்ணு குட்டி கூப்பிடுறேன்! என் மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா? நான் ஒன்னும் பொய் சொல்லல! போட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்பட்டுமா ? நான் போலீஸ் ஓட பொண்ணு!;அவனோட வீட்டுக்கு முன்னாடி ஒரு பொண்ணோட செப்பல் இருக்கு , கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா அவன் கதவை திறக்கவே இல்ல! என்ன பண்றானோ? என்று ரிதம் அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே போக..
இதுக்கு மேல இவள விட்டா இன்னும் நிறைய கம்பி கட்டுவா அவங்க அப்பாவ போல என்று நினைத்த சூரியதேவ் உடனே மகிய அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
மகிழினிக்கு சத்யதேவை பார்க்க வேண்டும் போல தோன்றியது. இருவரும் கிளம்பினார்கள்.
இரு டா! வீட்டுக்குக் பொண்ணு கூடயா இருக்க? எவள்னும் நானும் பார்க்கிறேன்! உன்னை சும்மாவே விடமாட்டேன் டா! ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா, என்ன எதிர் வீட்ல வச்சுக்கிட்டு ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வருவ? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
இங்கே ஹரிணி நித்தின் பிரகாஷ் இருவரும் என்ன செய்கிறார்கள் பார்த்து விடலாம்
ஹரிணி அவளுடைய இயற்கை அழைப்பு என அனைத்தையும் முடித்துவிட்டு, பிரஷ் ஆகி வெளியே வந்தாள்.
இப்பொழுது தன் நிம்மதியாக இருந்தது. நித்தின் பிரகாஷ் லேப்டாப்பை எடுத்து தட்டிக் கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
ஹரிணி அங்கு வரதும் அவனைப் பார்த்ததும் மெதுவாக அப்படியே பின்னால் செல்ல..
மிஸ் ஹரிணி மேடம் என்று அழைத்தான்.
ஐயோ பொறுக்கி நாயே என்ன பாத்துட்டானே! என்று மனதிற்குள் நினைத்தாள்.
ஃசொல்லுங்க சார் என்று அழைத்தாள்.
மேடம் எனக்கு இப்போ ஸ்ட்ராங்கா ஒரு டீ வேணும் போங்க டக்குனு போட்டு எடுத்துட்டு வாங்க என்று சொல்ல..
நானா நான் டீ போடணுமா என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்டாள்.
ஏன் போட்டோ இப்ப என்ன? நீ எனக்கு போய் எல்லாமுமா இருக்க! எல்லாம் அப்டின்னா அர்த்தம் என்னன்னு தெரியுமா? என்று நித்தின் கேட்க
ஹரிணி பற்களை கடித்துக் கொண்டே நான் உங்களுக்கு பாடிகாடா இருக்கேன்! அதுக்கு அர்த்தம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா? ஜஸ்ட் பாடிகாட் அவ்வளவுதான்! என்னுடைய இடம் வாசப்படி என்று கூற..
நான் உன்கிட்ட டி கேட்டேன்! அதன் அந்த வேலையை மட்டும் பாரு என்று நித்தின் அதட்டினான்.
இவனை என்று கைகளை முறுக்கிக் கொண்டே நேராக டீயை எடுத்து வந்தாள்.
சரி அதை குடிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு என்று நித்தின் கூறினான்.
என்ன குடிச்சு பாக்கவா? என்ற ஹரிணி முகத்தை அஷ்ட கோணலாக வைத்து சொல்ல.
ஆமா குடிச்சு பார்த்துட்டு சொல்லு! அதுல ஏதாவது கலந்திருந்தா என்னோட உயிருக்கே ஆபத்தா போயிடும். அப்புறம் யாரு பொறுப்பேத்துப்பா? என்ன நம்பி ரிதம் காத்துட்டு இருக்கா என்று கூறினான்.
ஹரிணி வேறு வழியில்லாமல் குடிக்க ஒரு சிப் செய்து கொண்டேன் இதுல கரெக்டா இருக்கு எனக்கு எந்த மயக்கமும் வரல, உங்களுக்கு நான் இன்னொரு டீ கொண்டு வரேன், என்று ஹரிணி நகர போக
சட்டென எழுந்து அவள் கையில் இருக்கும் கப்பன் சாசரை வாங்கினான் என்று சொல்வதை விட பிடுங்கிக் கொண்டான்.
நிதின் பிரகாஷ் என்ன பண்றீங்க என்று அவள் கேட்க நான் டிபன்ஸ் மினிஸ்டர் கொஞ்சம் மரியாதை கொடுப்பண்னு நினைத்தேன்.
சார் மினிஸ்டர் சார் என்ன பண்றீங்க என்று ஹரிணி கேட்க
அதான் உன்ன வச்சு செக் பண்ணி ஆச்சு இல்ல அப்போ உனக்கு எதுவும் ஆகலைன்னா எனக்கும் எதுவும் ஆகாது என் அவள் உதடு பட்ட இடத்தில் இருந்து அதை நாவினால் ஒரு முறை தடவி பார்த்து, இந்த இடம் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு! ஒருவேளை சாக்லேட்ல செஞ்ச கப்பன் டீ கொண்டு வந்தியா என்ன என்று புருவத்தை தூக்கிக் கொண்டே அவளை பார்த்து கேட்டான் அதற்கு ஹரிணி…?
இங்கே நிலா சத்யதேவ் ருத்ரன் மூவரும் வீட்டில் இருக்க..
ரிதம் வந்து சூரியதேவ் மற்றும் மகிழினி இருவருக்காக காத்திருந்தாள்? இதற்கு சைன்ஸ் அடிப்பதற்காக சத்தியதேவை அவமானப்படுத்துவதற்காக மிதுன் தேவ் சட்டை கையை மடக்கிக் கொண்டு இன்னிக்கு இருக்குடா ?
!உனக்கு கச்சேரி பொண்ண வச்சு ஜாலியா ஃபன் பண்ணிட்டு இருக்கியா? டா இருடா தம் இன்னிக்கு அவன் வெச்சு செய்யப் போறேண்டி உன்னால தான் இந்த மாதிரி நான் ஆப்பர்சுனிட்டி கிடைக்குது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே மித்திருந்து கிளம்பினால் அங்கு என்ன நடக்குமோ பார்ப்போம்
தொடரும்..
EPISODE 75
மிதுன் தேவ் முகத்தில் ஒரு பக்கம் புன்னகை தாண்டவம் ஆடிட.. அவனே காரை எடுத்தான்.
எதுக்கு மிதுன் இத்தனை வேகமா போற? காரை மெதுவா ஓட்டு டா அம்மாவுக்கு பயமா இருக்கு! என மகி சொல்ல..
சூர்யா அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார்.
மிதுன் கண்ணாடி வழியாக தன் தாயை பார்த்து மகி உனக்கு ஒன்னும் தெரியாது. ஒரு வேளை லேட் ஆகி அந்த பொண்ணு கிளம்பி போயிட்டா என்ன பண்றது? அப்புறம் உன்னோட உத்தம பையன் தப்பிச்சிடுவான்.
பாரு நாய்க்கு எவ்ளோ கொழுப்பு! எகத்தால ம*று-ன்னு என்னைக்காவது ஒரு நாள் ஆபிஸ் நேரத்தில் கிளம்பி இருப்பானா? இல்ல அரியர் வச்ச பேப்பரை காலையில் எழுந்து ஆறு மணிக்கு படிச்சு இருப்பானா? அதுக்கு எல்லாம் வக்கில்லாத நாயி! கோல் மூட்டி ஒருத்தரை கஷ்ட படுத்த முதல் ஆளாக கிளம்பி வண்டிய வேகமா ஓட்டிட்டு போறான்! இவனை எங்கே இருந்து டி புடிச்சிட்டு வந்த? என சூர்யா மிதுன் பற்றி திட்ட ஆரம்பித்தார்.
இவருக்கு வேற வேலை இல்லை! என சூர்யா திட்டுவதை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு கொண்டு வந்து சேர்ந்தான். மிதுன் தேவ்!
மகி எதுவும் பேச வில்லை அமைதியாக வந்து சேர்ந்தார்கள்.
சூர்யா பார்வை மிதுனை துளைத்து எடுக்க…
இப்போ எதுக்கு என்னை முறைக்கிரீங்க? ரிதம் கிட்ட நான் லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்ததா சொல்லி என்னை திட்டி இருக்கீங்க? என தைரியத்தை வர வளைத்து கொண்டு கேட்டான்.
இதை கேட்டதும் சூர்யா சிரித்து கொண்டே நான் உன்னை தப்பா ஜட்ஜ் பண்ணிட்டேன்.
மிதுன் கொஞ்சம் அமைதியாக நடக்க.. உடனே சூர்யா சிரித்து கொண்டே தூங்கின பெட்சீட்டை கூட மடிச்சு போடாத நீ ஒரு பொண்ணை மடிக்க முடியுமா? நான் தான் உன்னை தப்பா நினைச்சிட்டென். என முன்னாள் நடக்க..
மகி சீரியஸ் நஸ் தெரியாமல் இதுக்கு தான் மிதுன் உன்னை தூங்கி எந்திருச்சு பெட் சீட் மடிச்சு போடுண்ணு சொன்னேன்!
இதை கேட்டதும் சூர்யா வாய் விட்டு சிரிக்க..
ஹே மகி! நீ லூசு டி! அவரு என்னை கையிலாகதவன் அப்டின்னு சொல்றாரு! உனக்கு பெட்ஷீட் பத்தி கவலையா? என கத்த..
உன் புத்தி செயல் எல்லாமே அவளை மாதிரி தானே இருக்கு! வாங்க!. என முன்னாள் நடந்தார்.
தேவையில்லாம நம்மலே வம்படியா வந்து மாட்டிகிட்டோம் போலயே! இங்கே வந்ததில் இருந்து இந்த கிழட்டு மீசை என்னை ரொம்ப டென்ஷன் பன்றாரு! என மிதுன் நினைத்து கொண்டே வர..
ரிதம் அவர்களுக்காக காத்திருந்தாள்.
மாமி! மாமா! மித்து பையா உன் அண்ணன் உள்ளே இருக்கான். கூடவே ஒரு பொண்ணு இருக்கா!
எனக்கு தெரியும் டி! ஆனால் என்னை யாரும் நம்பரது இல்ல! என மிதுன் சொல்ல..
கண்ணுக்குட்டி சொல்லிட்ட தானே விடு! என சூர்யா காலிங் பெல் அடித்தார்.
கதவை திறந்து கொண்டே சத்ய தேவ் புருவம் முடுச்சுடன் டாடி! என அழைக்க..
உடனே மிதுன் பாயிந்து கொண்டு டேய் பிராடு! எதோ ஒரு பொண்ணு உள்ளே இருக்கா போல? என்ன டா பண்ற? என சொல்ல..
சத்ய தேவ் முறைத்து கோபத்துடன் மிதுன் கன்னத்தில் ஒரு அரை விட்டான்.
மகி அடிக்கிறான் டி! கேளு!..
மகியின் பார்வை சத்ய தேவ் மீது இருக்க .
அந்த நேரம் கதவின் வழியே ருத்ரன் எட்டி பார்த்தான். மாமா! அத்தை! என அழைக்க
மிதுன் கீழே கடக்கும் செருப்பை பார்த்து விட்டு சத்ய தேவ் மற்றும் ருத்ரன் இருவரையும் ஒரு மாதிரி பார்த்து ஹே ரிதம்! உன் தம்பி லேடிஸ் செப்பல் போடுறானா? அப்போ நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா? என மிதுன் தேவ் சொல்ல.
சத்ய தேவ் அவனுடைய காதை திருகி வாயை மூடு அது ருத்ரனிடையது இல்ல..
அப்போ வேற யாரு? டேய் உள்ளே பொண்ணை வச்சிட்டு என்ன பண்றீங்க? என கேட்டு கொண்டே ரிதம் முன்னால் வந்தவள். இரு இப்போவே உன்னை பத்தி விவேகா கிட்ட சொல்றேன்! உன்னோட சேர்க்கை சரி இல்ல..
ரிதம் என் கிட்ட அடி வாங்காத ஒழுங்கா ஓடி போயிடு! என சொல்லும் நேரம்..
சித்தி, சித்தப்பா! என குரல் கொடுத்து கொண்டே இருவருக்கும் நடுவில் கொஞ்சம் தெரிந்த இடைவெளியில் எட்டி பார்த்தாள் நிலா!
நிலாவா? என மிதுன் ரிதம் இருவருக்கும் ஒரு வித அதிர்ச்சியுடன் எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அங்கு நின்று கொண்டிருக்கும் அனைவரையும் பார்க்க…
அனைவர் பார்வையும் மிதுன், ரிதம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். சட்டென ரிதம் இரும்பிக் கொண்டே… “ சரி எனக்கு இப்போ என்னோட பப்பிய வாக்கிங் கூட்டிட்டு போகணும்! நான் போறேன் பாய் மித்து என்று சொல்லிக்கொண்டே அவள் நழுவ..
சூர்யா கரகரத்து குரலில் கன்னுக்குட்டி என்று அழைத்தார்.
மாமா அப்படியே வாங்களே! என்னோட வீட்ல நிறைய பெட்ஸ் இருக்கு! சுத்தி காட்டுறேன் உங்களுக்கு மட்டும் தான்! எனக்காக என்னுடைய பியான்சி நிதின் பிரகாஷ் வாங்கி கொடுத்தாரு என்று பேச்சை மாற்றினாள்.
உடனே மித்துன் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்க..
மகிக்கு சிரிப்பாக வந்தது.
டாடி இங்க என்ன நடக்குது! ம்ம் ஆமா என்ன திடீர்னு என்கிட்ட சொல்லாமலேயே வந்து இருக்கீங்க? அதுவும் மொத்த குடும்பமும் சேர்ந்து வந்து இருக்கீங்க என்று சத்திய தேவ் கேட்டான்.
சூரியதேவ் சிரிப்பை அடக்கிக் கொண்டு அது ஒன்னும் இல்ல என்று சொல்ல வர..
உடனே வேகமாக “மகி எனக்கு வேலை இருக்கு! நான் கிளம்புறேன் என்று மிதுன் திரும்பினான்.
வெட்டி ஆபிசருக்கு என்ன வேலை? சூரிய தேவ் சொல்ல..
எனக்கு ஆபீஸ்ல முக்கியமான…அது நாளைக்கு ஒரு பைல்… ஒரு சைன் போடணும்! ரெண்டு மூணு செக் புக் இருக்கு! என்று உளறிக் கொண்டே நின்றான்.
நீ செக் புக்க கிழிச்சதெல்லாம் போதும்! நில்லுன்னு சொன்னேன்! என்று சூர்ய தேவ் சொல்ல
ரிதம் கொஞ்சம் தடுமாறி கொண்டே “இப்போ இப்போ என்ன நடந்துச்சு? மாமா எதுக்கு திட்டிட்டு இருக்கீங்க ? சரி ஏதோ வந்துட்டீங்க! வாங்க காபி சாப்பிடலாம்! ”என்று ரிதம் அழைக்க..
நான் சொல்லட்டுமா என்று ருத்ரன் கேட்டான்.
என்ன? என்னடா சொல்ல போற? உன் வேலைய பாத்துட்டு போடா! வந்துட்டான் என்று ரிதம் கூற…
ருத்ரன் சிரித்துக்கொண்டே “என்னோட கெஸ்ஸிங் படி பார்த்தால் இந்த பியூச்சர் போலீஸ்காரி போன் பண்ணி சத்ய தேவ் மாமாவீட்ல பொண்ணு இருக்கு அப்படின்னு சொல்லி இருப்பா! அதனால கம்ப்ளைன்ட் பண்ணி உன்ன குற்றவாளி கூண்டில் நிற்கவைக்காக நிற்க வைக்க மிதுன் எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்காரு!” என போலீஸ் மகன் புட்டு புட்டு வைத்தான்.
அய்யோ கண்டு புடிச்சிட்டானே! என மிதுன் மற்றும் ரிதம் இருவரும் அவனை முறைக்க
ருத்ரன் எகத்தாளமாக “பேசாம அரியர் எக்ஸாம் கிலியர் பண்றத விட்டுட்டு, அவரு ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சா நல்லா இருக்கும்! அதுவும் எங்க அக்காவோட பொருத்தமும் மிதுனோட சாரி மிதுன் சார் பொருத்தமும் , சேர்ந்து பத்து பொருத்தமும் பக்காவா இருக்கும்! பத்து மாடு கூட வாங்கி மேய்க்கலாம்! என்று கூறினான்.
ரிதம் கோபத்துடன் தேவையில்லாம பேசிட்டு இருக்காத என்று சொல்ல
சூர்யா மகிழினி இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
மாமா நீங்க என்ன சிரிக்கிறீங்களா? நான் என்ன வேணும்ன்னா சொன்னேன்! நான் அது சொல்லல என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..
சத்யதேவின் பார்வை விடாமல் அவளை துலைத்தது.
பாருங்க என்னை முறைச்சு பார்க்கிறான். நீங்க போனதும் என்னை ஏதாவது பண்ணிடுவான்! என்று மகியின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
இவ என் பக்கத்துல வராமல் என சொல்ல வந்தவன் வந்தவன் அப்படியே நிறுத்தி விட்டு பார்த்தான்.
சித்தப்பா உள்ளே வாங்க! என நிலா அழைக்க..
டாடி! உள்ளே வாங்க! என அழைக்க..
சூர்யா சரி என்பது போல ருத்ரன் மேல் கை போட்டு கொண்டே உள்ளே சென்றார்.
இருவரும் சோபாவில் போய் அமர்ந்த சூர்யா வாசற் கதவை பார்க்க..
ருத்ரன் உடனே அத்த வரலையா ? என்று வாய்மொழியாக கூறினான் .
சத்திய தேவ் ஓரக்கண்ணால் தன் அன்னை இருக்கும் திசையை பார்த்தானே தவிர வெளியேவே வரவில்லை.
தன் அம்மா சத்ய தேவ் இருக்கும் வீட்டின் உள்ளே செல்லாததை நினைத்து குதுகலத்துடன் கோடான கோடி நன்றி ஐயா! இயேசப்பா! உமக்கு கோடான கோடி நன்றிகள்! என் பிதாவே என்று மனதுக்குள் ஜெபித்து கொண்டே அம்மா வா நம்ம கிளம்பலாம் என்று கையை பிடித்தான்.
ரிதம் மகி பக்கம் திரும்பி மாமி நீங்க என் கூட வாங்க! ப்ளீஸ் மாமி! என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஹே எங்க அம்மாவுக்கு முத்தம் கொடுக்காத போடி என்று ரிதமை மிதுன் தள்ளிவிட “டேய் போடா! என்று மகியை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டே மேலே இருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு இழுத்துச் சென்று விட்டார்கள்.
சத்திய தேவ் தன் மகனை பார்த்து ஒரு பெருமூச்சை விட்டு தன் தந்தையை பார்த்தான்.
சூரிய தேவ் அமைதியாக அவனை பார்த்தார்.
என்ன டாடி என்ன அப்படி பாக்குறீங்க? என்று கேட்டான்.
நீ ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தா அவ உள்ளே வந்திருப்பா!
நான் எதுக்கு கூப்பிடனும் நான் கூப்பிட்டு தான் நீங்க வந்தீங்களா? என்று கேட்டான்.
ருத்ரன் கொஞ்சம் திடுக்கிட்டு என்ன மாமா? அத்தை இவ்வளவு தூரம் வந்திருக்காங்கல்ல! ஏன் மாமா இப்படி பிடிவாதத்தோட இருக்கீங்க? என்று கேட்டான்.
ஒன்னும் பிரச்னை இல்ல! அதுதான் அவங்களோட பையன் மிதுன் தேவ் கூட இருக்கான். ஹான் முக்கியமா உங்க அக்கா இருக்கா! அவங்களுக்கு என்னை விட பாசம் காட்ட நிறைய பேர் இருக்காங்க! என சத்ய தேவ் சென்று விட்டான்.
இங்கே மேலே அழைத்து அமர வைத்து கொஞ்ச நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மகி ரிதமை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க..
என்ன மாமி அப்படி பாக்குறீங்க? என்று அவள் கண்சிமிட்டி கொண்டே கேட்டாள்.
மகி சிரித்துக்கொண்டே அது ஒன்னும் இல்ல உன்னோட முகத்தில் கல்யாண கலை வந்த மாதிரி இருக்கு! சரி நித்தின் போன் பண்றானா? என்று கேட்டார்.
டெய்லி போன் பண்ணுவான் என்று சிரித்துக் கொண்டே வாயில வந்ததை பாரபட்சம் பார்க்காமல் அடித்து விட்டாள்.
உன்னோட முகம் ரொம்ப பிளஸ்ஸா இருக்கு என்னிடம் போன் பேசிட்டே இருப்பியா? நைட் எல்லாம் பேசிட்டு இருப்பியா? என்று மகி சிரித்துக்கொண்டு கேட்க..
மாமி போங்க மாமி என்று அவள் வெட்கத்தில் நெளிந்தாள்.
மாமி! மாமி! எனக்கு டீ வேணும்! போட்டு தரீங்களா என்று ரிதம் கெஞ்சலுடன் கேட்க..
எங்க அம்மா கிட்ட எதுக்கு போடுற போட சொல்ற நீ என்று மிதுன் அதட்ட..
மகி சிரித்துக்கொண்டே ரிதம் கேட்கிறாள் போட்டு கொடுக்கணும் என்று கிச்சன் சென்றாள்.
அதன்பின் மகி பேச்சு கொடுத்துக் கொண்டே சரி எங்க அக்கா கிட்ட பேசுனியா? எங்க மாமா கிட்ட எல்லாம் பேசுறியா? உங்க மாமனார் மாமியார் ஓகேவா என்று கேட்க
ரிதம் தண்ணீரை எடுத்துக் குடித்துக் கொண்டே அவங்க கிட்ட நான் எதுக்கு பேசணும் மாமி? என்று கூறினாள்.
என்ன அவங்க கிட்ட பேசாம பின்ன என்கிட்டயா பேசுவ? நீ அவங்க பையன தான கல்யாணம் பண்ணிக்க போற! சோ அவங்க கிட்ட பேசி பழகுனா தானே, நாளைக்கு அங்க போய் இருக்குறதுக்கு சரியா இருக்கும். என்று மகி கூற.
நான் எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்! எனக்கு உங்களோட இருக்கனும் மாமி! உங்க பையன தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்! என அவள் மனதில் நினைத்தாள்.
ரிதம் ரிதம் என்று மீண்டும் மீண்டும் மகி அழைக்க..
மாமி அவங்க தான் எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியுமே! அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல! அதேபோல நான் எல்லாம் அங்க போக மாட்டேன்! நித்தின் தான் என்ன தேடி வரணும்! என்று ரிதம் கூறினாள்.
எங்க அண்ணா எதுக்கு உன்ன தேடி வரணும் என்று மிதுன் சொல்ல
போடா என்று மூவரும் அரட்டை அடித்துக் கொண்டே சிரித்து பேசி சந்தோஷமாக அந்த நேரத்தை கழித்தார்கள்.
இங்கே நிலா மிகவும் அமைதியாக அமர்ந்திருக்க..
ருத்ரன் தொன தொனவென்று சூர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
சூர்யா மற்றும் ருத்ரன் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருக்க
சத்தியதேவ் நிலாவின் அருகில் அமர்ந்தான். அப்பொழுதுதான் சூர்யாவின் பார்வையில் நிலாவின் மேல் பட்டது. என்னாச்சு பாப்பா முகம் ஒன்னும் சரியில்லையே? என்னமா உங்க அப்பா ஏதாவது திட்டினானா? இல்ல தேஜு ஏதாவது சொன்னாளா? சொல்லு? நான் இப்பவே கேட்கிறேன்! என்று கேட்க
சத்யதேவ் தன் தந்தையை பார்த்து பாப்பா படிக்க டெல்லி போகுதாம்மா! அதனால அந்த வருத்தத்துல இருக்கா! என்று கூறினான்.
என்ன டெல்லியா? எங்களை எல்லாம் விட்டுட்டு டெல்லி போக போறியா? அப்புறம் எப்படி எனக்கு, உன்னோட சித்திக்கு மந்த்லி வந்து பாடி செக் அப் பண்றன்னு சொல்லுவிய? இனிமே வரமாட்டியா? என்று சூர்யா கேட்டார்.
நிலா கண்ணக்குழி தெரிய கொஞ்சமாக சிரித்தவள் கண்டிப்பா சித்தப்பா நான் உங்களுக்காக வருவேன் என்று கூறினாள்.
அப்படியா சரி சரி இன்னைக்கு வீட்டுக்கு வா உனக்கு பிடிச்ச எல்லாமே நான் உங்க சித்திய செய்ய சொல்றேன். சாப்பிட்டு இரண்டு நாள் எங்க கூட இருந்துட்டு போ! என்று கூற
அப்பா அவளுக்கு தாத்தா கூடையும் அம்மாச்சி கூடையும் இருக்கணுமா அதனால நிலா ஊருக்கு போறா!
அப்படியா சரி அதுவும் சரிதான் என்று சூர்யா கூறினார்.
அப்புறம் நான் நானும் ஊருக்கு போறேன் என்று சத்திய தேவ் கூறினான்.
எந்த ஊருக்கு என்று டீ பருகிக் கொண்டே தன் மகனைப் பார்க்க
அது குக்குவுக்கு கோவிலுக்கு போகணுமாம் அதனால நான் ,குக்கூ ரெண்டு பேரும் திருச்செந்தூர் போகலாம்னு, ஒரு பிளான் பண்ணி இருக்கோம்! கொஞ்சம் அமைதி கிடைக்கும் என்று கூறினான்.
அப்படியா என்று சூர்யா யோசனையுடன் சரி நல்லது அப்போ நிலாவையும் நீயே பத்திரமாக கொண்டு போய் விட்டுடா! உங்க தாத்தா வீட்ல என்று சூர்யா கூறினார்.
ருத்ரனுக்கு இந்த பேச்செல்லாம் எரிச்சலாக வந்தது முகத்தை பாவ்யமா வச்சுக்கிட்டு இவளுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி அப்பாவியா நடிக்க வந்துட்டா! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
அது அவளுக்கு கேட்டதோ என்னவோ உடனே புரை ஏறியது.
சத்யதேவ் அவளை தலையை தட்டி பாப்பா நீ என் கூட வரியா ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்க
சரி அண்ணா நம்ம போகலாம் என்று கூறினால் மூவரும் சரி அங்கு இருக்கும் அனைவரும் சிரித்து பேசிக்கொண்டே வர
அந்த நேரம் மகி மிதுன் ரிதம் மூவரும் கீழே வந்தார்கள்.
சரி நான் கிளம்புறேன் அப்போ இந்த சனி ஞாயிறு வீட்டுக்கு வர மாட்டியா ? என்று சூர்யா கேட்க
மகியின் பார்வை சத்யதேவ் மீது இருந்தது. அதுதான் நான் சொன்னேனே! நானும் குக்குவும் திருச்செந்தூர் போறோம் என்று கூறினான்.
அப்போ நானும் வரவா மாமா என்று ருத்ரனும் கேட்டான்.
தாராளமா என்று என்று சொல்ல மகி ஒரு பார்வையுடன் தன் மகனை ஆசை தீர பார்த்துக் கொண்டவர். சூர்யாவுடன் கிளம்பினார்.
மிதுன் தேவ் சிரித்து விட்டு ராவடி பாய் டி என கிளம்ப..
நிலா அந்த நேரம் நிவாஸ் வந்து சேர்ந்தான் தன் அண்ணனை பார்த்ததும் நிலா சத்யதேவிடம் டாட்டா சொல்லிக்கிட்டு நிவாஸ் பின்னால் சென்றாள்.
ருத்ரனும் சரி மாமா அப்போ நம்ம திருச்செந்தூர் போலாம் என்று சொல்லிக்கொண்டே அவனும் கிளம்பினான். அவனது மனதில் கூடவே கோல்ட் ஃபிஷ் அ பாக்கெட்டில் போட்டுட்டு போயிடனும் என கிளம்பினான்.
அனைவரும் சென்று விட்டார்கள்.
ரிதம் அனைவரையும் வழி அனுப்பி வைத்து விட்டு உள்ளே செல்ல போக..
ஹே நில்லுடி என்று சத்தியத்தில் அழைத்தான்.
தொடரும்..
EPISODE 76
ரிதம் அனைவரையும் வழி அனுப்பி வைத்து விட்டு உள்ளே செல்ல போக..
“ஹே நில்லுடி” என்று சத்திய தேவ் அழைத்தான்.
அய்யோ போச்சு கூப்பிடுறான்? இப்போ என்ன பண்றது? சரி சமாளி ரிதம்! உன்னை பொறுத்த வரை அவன் சத்ய தேவ் பப்பி தான்! பெருசா என்ன பண்ணிட போறான்! என மனதுக்குள் சொல்லி கொண்டே தைரியத்தை வர வளைத்து கொண்டு திரும்பினாள்.
என்ன சொல்லு? என முகம் கடுமையாக இருந்தது.
“அது நீ தானே!”
எது? என அவள் கேட்க..
சத்ய தேவ் பற்களை கடித்து கொண்டு என் டாடிக்கு போன் பண்ணி என்ன சொன்ன? சொல்லு! என ஒரெட்டு அவள் பக்கம் வைத்தான்.
அய்யோ வரானே! ம்ம் ரிதம் தைரியம் டி! நீ! என தனக்கு தானே மீண்டும் சொல்லி கொண்டவள்.
ஆமா நான் தான் சொன்னேன்! உன்னோட வீட்டு முன்னாடி பொண்ணோட செப்பல் இருந்தது. அதான் உன்னை மாட்டி விடணும் அப்டின்னு பிளான் பண்ணி சொன்னேன்! ஆனால் உள்ளே நிலா இருக்கிறது எனக்கு தெரியாது. என முகத்தை வேறெங்கோ பார்த்தாள்.
சத்ய தேவ் அவளை கோபமாக பார்த்து முறைத்து கொண்டிருக்க..
ரிதம் அவனை ஓர கண்ணால் பார்த்தவள். உன்னை பழி வாங்க தான் அவங்களை வர சொன்னேன்! நீ தப்பிச்சிட்ட? சரி விடு நான் போறேன் என அவள் வீட்டை நோக்கி நடக்க..
உன்னை போகவே சொல்லல! நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல! நில்லு டி! என அவளின் பின்னால் சத்ய தேவ் சென்றான்.
ரிதம் வேகமாக சென்று கதவை அடைக்க செல்ல.. அதற்குள் சத்ய தேவ் வீட்டில் ஒரு காலை வைத்திருந்தான்.
சக்தி! வேணாம் டா! எனக்கு தெரியாது! உள்ளே நிலா இருப்பாள் ன்னு, அதை விட நீ ஹரினிக்கு துரோகம் பண்றேன்னு தான் நான் மாமாவையும், அத்தயையும் வர சொன்னேன்! என ரிதம் விளக்கம் கொடுக்க..
சத்ய தேவ் கோபமாக அவளின் கழுத்தை பிடித்தான். என்னை பத்தி அவங்க என்ன நினைச்சிருப்பாங்க! சொல்லு! அந்த இடத்தில் நிலா இல்லாம வேற யாரா இருந்தாலும் எந்த பொண்ணா இருந்தாலும் முதலில் என் அப்பா என்னை எதுக்கு தப்பா நினைக்க போறாரு! நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்ல! என்னோட பெர்சனல்ல இன்டர்ஃபியர் ஆகாத! உன்னை தேடி நான் வரெனா? நீ தான் என் கிட்ட LKG kid மாதிரி behave பண்ற! நீ பண்ற எதுவும் எனக்கு சுத்தமா பிடிக்கல! உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது! உன்னை எனக்கு பிடிக்கல! உங்க குடும்பத்துக்காக மட்டும் தான் நீ பண்ற எல்லா வேலையையும் நான் சகிச்சிட்டு இருக்கேன்! என அவன் வாய்க்கு வந்த படி பொரிந்து தள்ளினான்.
சத்ய தேவ் மனதில் மகி தன்னை பற்றி தவறாக நினைத்து இருந்தால் என்ன ஆவது என உள்ளுக்குள் இதற்கு காரணமான ரிதம் மேல் கோபமாக வந்தது.
ரிதம் கைகளை அவன் கழுத்துக்கு சுற்று போட்டு வந்தவள் அவனுடன் இன்னும் ஒட்டினாள். “நிறுத்து! ”என ரிதம் கண்ணில் நீர் கோர்க்க… என கூறினாள்.
சத்ய தேவ் அவளின் கண்ணீரை பார்த்ததும் உள்ளுக்குள் எதோ போல இருக்க சட்டென விலக முயற்சி செய்தான்.
ரிதம் அவனுடைய இரண்டு பாதத்திலும் ஏறி நின்றவள். நான் தான் உன்னை தேடி வந்தனா? நீ என்னை தேடி வரவே இல்லையா? அன்னிக்கு மாடியில் கீழே விழுந்த போது நான் தான் வழிய உன் கிட்ட வந்து பேசினேனா? எனக்கு சமைச்சு தர சொல்லி நான் உன் கிட்ட கேட்டேனா? அதுவும் வீகனா இருக்க நீ எதுக்கு எனக்கு அசைவம் செஞ்சி கொடுத்த? எனக்கு காய்ச்சலுக்கு மாத்திரை, உணவு எல்லாம் உன் கிட்ட நான் கேட்டேனா? நான் சர்வேஷ் கிட்ட பேசும் போது எதுக்கு அத்து மீறி வீட்டுக்குள் வந்த? நான் வயிறு வலியில் துடிக்கும் போது எதுக்கு வந்து என்னை தாங்கின? சொல்லு! என நீர் நிறைந்த கண்களுடன் கோபத்தில் மூக்கு கண்ணம் சிவக்க அவனிடம் கேட்டாள்.
சத்ய தேவ் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு இருக்க..
என்னை பாரு? இங்கே பாரு? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! அன்னிக்கு பார்க்ல என்னை எத்தனை பசங்க சுத்தி இருந்தால் உனக்கென்ன? அப்படியே போக வேண்டியது தானே!
சத்ய தேவ் உடனே பதில் சொல்ல வர..
ருத்ரன் தான உனக்கு போன் பண்ணான்! அப்போ அவன் கிட்ட என்ன பேசனமுமோ அதை மட்டும் பேச வேண்டியது தானே! என்னை பத்தி எதுக்கு சொன்ன? உன்னோட அக்கறைய நான் கேட்டேனா? சொல்லு எனக்கு பதில் சொல்லு!
இதே மாதிரி எனக்கும் பேச தெரியும்! ஆனால் உன் கிட்ட பேசினால் டைம் வேஸ்ட் என சத்ய தேவ் அவளின் இடையை பிடித்து தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்த..
ரிதம் இறங்கி கால்களையும் வளைத்து அவன் தள்ளி நிறுத்தும் முன் அவனுடைய இடையில் ஏறி கொண்டாள்.
ஹே என்ன டி பண்ற? என சத்ய தேவ் அவளை கீழே இறக்கி விட முயற்சி செய்ய..
இங்கே பாரு என்னோட கழுத்தை பாரு டா நீ என்னோட கழுத்தை பிடிச்சது! காயம் மாதிரி உள்ளே தகிக்கிது!
ரிதம் கீழே இறங்கு டி! நீ பண்றது சரி இல்ல! என சத்ய தேவ் அவளின் இடையை பிடித்து இறக்கி விட முயற்சி செய்ய..
அவளுடைய முன் இரண்டும் அவனை முட்டியது. ஆண் அவனோ தவித்து கிளர்ந்து போனான்.
ரிதம் அவனுடைய கண்களையும் சுவாசம் விடும் நாசியையும் பார்த்தாள். சூடான மூச்சு காற்று இன்னும் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது. கீழே!. கொஞ்சம்..
ரிதம் எதையும் யோசிக்காமல் அவனுடைய உதட்டில் முத்தமிட்டாள். முத்தம் இன்னும் இன்னும் அந்த வன்மை உதட்டில் மென் இதழ் புதைந்து கொள்ள.. அவளை ஆதரிக்காமல் இருந்த கைகள் இடையுடன் அணைத்து கொண்டது. அவளுக்கு இந்த உணர்வுகள் உள்ளுக்குள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்க அவனுக்கோ அவள் மிகவும் அவஸ்தையாகி போனாள். சத்ய தேவின் உள்ளுக்குள் இருக்கும் அரக்கன் அதிகாரன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தான்.
முத்தத்தில் வேகம் கூடி கொண்டே சென்றது. அது இரத்தத்தில் போய் முடிந்தது. அவளின் உதட்டில் உள்ள மெல்லிய தோல் அனைத்தையும் கலண்டு ரத்ததுடன் சேர்ந்து அவன் பற்களுக்குள் இருந்தது. பெண்களுக்கு அனைத்து இடங்களும் உணர்வை கொடுத்தாலும் உதடு, கழுத்து, கழுத்துக்கு கீழ், அங்கிருந்து இடை பகுதி, இடைக்கு கீழ் என இத்தனை இடங்கள் இருந்தாலும் இரு வரி கவிதைகளான அதரங்கள் தான் அனைத்தைக்கும் தொடக்கம்.
தடித்த இரண்டு ஜோடி உதடுகள் ஆனால் மூச்சுக்காற்றுக்காக விலகியது என்னவோ அவன் தான்! அவனுக்காக மூச்சை கூட பிடித்து வைத்திருந்தாள். இதை காதல் என்று சொல்ல மாட்டாள். காமம் என்றும் சொல்லி அத்தோடு நிறுத்தி விட முடியாது! அவன் வேண்டும், முழுவதுமாக! அதாவது வாழ்க்கை முழுவதும்! எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், தன்னுடன் கை கோர்க்க, அவன் கைக்குள் அவள் இருக்க வேண்டும். அது தான் இவளின் எதிர் பார்ப்பு!
ரிதம் மீண்டும் முத்தமிட வர..
ரிதம்! Don’t do that! நீ தாங்க மாட்ட! செத்திடுவ! விடு டி! என சத்ய தேவ் பற்களுக்கு இடையில் பேசினான்.
இருவருக்குள்ளும் என்ன இருக்கிறது? எனக்கும் தெரியல!
எதுக்கு என்னை பிடிக்கல என்னு சொல்ற? என்னை பார்த்தால் உனக்கு வெறுப்பா இருக்கா! சொல்லு சக்தி! என அவனுடைய கழுத்தில் முகம் புதைத்தாள்.
சத்ய தேவ் அமைதியாக இருந்தான். எதுவும் பேச வில்லை.
இன்னும் ஒரு தடவை என் முகத்தை பார்த்து சொல்லு! இனி உன் கண்ணு முன்னாடியே முழிக்க மாட்டேன்! சொல்லு! என அவனுடைய உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
சத்ய தேவ் இடுங்கிய விழிகளுடன் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? இப்போ வந்து என் மேலே விழ என்ன காரணம்? என மோவாயை பிடித்தான்.
“உன்னை வாழ்க்கை முழுக்க பழி வாங்கணும்! அதுக்கு நீ என் கூட இருக்கணும்!” என கண்களை மூடி கிறங்கிய விழிகளுடன் கூறினாள். ரிதம்.
சத்ய தேவ் அவளை வேகமாக இறக்கி விட்டான். ரிதம் கண்களில் நீர் கோர்த்து கொள்ள கோபத்துடன் சிவந்தது.
இந்த மாதிரி கண்டதை நினைச்சிட்டு இருக்காத அது எப்போவும் நடக்கவே நடக்காது! என சத்ய தேவ் கதவு பக்கம் செல்ல..
அப்போ என் கிட்ட இப்போ மயங்கி ஆவேசமா இந்த முத்தத்துக்காக காத்திருந்த மாதிரி ஒட்டி உரசினயே அதுக்கு அர்த்தம் என்ன? அதை எந்த கணக்குல சேர்த்துவ? என ரிதம் சூடான கண்ணீர் வழிய கேட்டாள்.
சத்ய தேவ் இவ்வளவு நாளும் கட்டு படுத்தி வைத்திருந்த பொறுமை காற்றில் பறக்க அவள் பக்கம் திரும்பியவன். அவள் பக்கம் நெருங்கி இப்போ உனக்கு என்ன வேனும்? என் கூட என அவனுடைய சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டி கொண்டே அருகில் நெருங்கினான்.
ரிதம் அவனை அசராமல் பார்த்து நின்று கொண்டிருக்க..
சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்கி நீ எந்த தேவைக்காக என் பக்கத்தில் வந்தியோ? அது தான் எனக்கும் தேவை பட்டுச்சு! So உன்னை லஸ்ட்டுக்காக மட்டும் தான் நெருங்கினேன். உனக்கு அட்சயபனை இல்லன்னா நம்ம ரெண்டு பேரும் என அவளின் பக்கம் வந்தான்.
ரிதம் கண்களில் கோபம் பொங்கிட.. உதடுகள் துடிக்க அப்படியே நின்றாள்.
சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்கி அணைக்க ரிதம் இதற்காகவே காத்திருந்தவள் போல அவன் மேல் வேகமாக பாயிந்தாள்.
இருவரின் இதயமும் வேகமாக துடித்தது. ரிதமே முதலில் ம்ம் இந்த சீக்ரெட் நமக்குள்ள இருக்கட்டும் அப்புறம் நீ ஹரிணிய கல்யாணம் பன்னதுக்கு அப்புறம் அதே போல நான் நிதின கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் மறுபடியும் பிளாக் மெயில் பண்ண கூடாது ஓகே வா! ரெண்டு பேரும் மியுச்சவல் அண்டர் ஸ்டான்டிங்ல தான் செக்ஸ் வச்சுக்க போறோம்! நம்ம ஒன்னும் கப்பில் இல்லையே லவ் மேக் பண்ண! அதுவும் ஒரே ஒரு தடவை தான் என சொல்லி கொண்டே அவனுடைய வியர்வையை உள் இழுத்தாள். ரிதம்!
சத்ய தேவ் ஒரு நிமிடம் ஆடி போய்விட்டான். ரிதம் வேகமாக அவனுடைய சட்டை பட்டனை கழட்ட..
என்ன டி பண்ற விடு! என வேகமாக தட்டி விட்டான்.
என்ன சக்தி! நீ தானே கேட்ட நீயும் நானும் அந்த படுக்கையில் கவிதைகளா சிதறி கிடக்காமல் வெறும் கலவிக்காக மட்டும் பண்ணலாம்! அப்டின்னு இப்போ தானே சொன்ன? வா போலாம் வாடா! என அவன் மார்பில் முத்தமிட்டாள். ரிதம்!
சத்ய தேவ் வேகமாக அவளை இழுத்து தனியாக நிற்க வைத்தவன். I will kill you! ராஸ்கல்! என சொல்லி விட்டு சென்றான்.
ரிதம் துடிக்கும் உதடுகளுடன் ஒன்னும் பிரச்னை இல்ல உன்னோட மனசு மாறினால் கதவை தட்டு நான் ரெடியா தான் இருக்கேன்! என கூறினாள்.
சத்ய தேவ் அதற்குள் அவனுடய வீட்டுக்கு சென்று இருந்தான்.
அவன் சென்றதும் ரிதம் வேகமாக மேலே இருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்று அழ ஆரம்பித்தாள்.
நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும் டா! இனி நீயா என்னை தேடி வராமல் உன் பக்கம் நான் வரவே மாட்டேன்! என்னை! என்னை எவ்ளோ சீப்பா நினைச்சிட்ட ராஸ்கல்! அவ்ளோ சீக்கிரம் என்னை உனக்கு தருவேன்னு நினைச்சிட்டு இருக்கியா? கனவில் கூட அது நடக்காது! உன்னை அலைய விடல என் பேரு ரிதம் இல்ல டா! நாயே உன்னோட உணர்வுகள் மொத்தமும் என்னை பார்த்ததும் எல்லை மீறுது நான் தான் கஷ்ட பட்டு உன்னை தாங்கிட்டு இருக்கேன்! ஆனால் இந்த அளவுக்கு பேசின உன்னை வாழ்க்கை முழுக்க பழி வாங்காமல் விட மாட்டேன். என அழுது கரைந்தவள். அந்த சத்ய தேவ் பப்பியை மட்டும் தூக்கி கொண்டு தன் அப்பா அம்மா இருக்கும் வீட்டுக்கு கிளம்பினாள்.
*
வளர்ந்து உயர்ந்த அந்த அடுக்கு மாடி அலுவலகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு அமர்ந்திருந்தான். சைத்ரேஷ்வரன்..
அவனுக்கு எதிரில் அனைவரும் வந்திருக்க.. நியூவா ஜாயின் பண்ண லீகல் அட்வைஸர் நிறைய ஐடியா எக்ஸ்ப்லைன் பண்ண போறதா சொன்னாங்க எங்கே அவங்க? என தாருனிகா கொடுத்த டாக்குமெண்டை புரட்டினான். சைத்ரேஷ்வரன்.
தாருனிகா அவனுக்கு டாக்குமெண்டை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொள்ள அனைவர் பார்வையும் கொஞ்சம் பதட்டத்துடன் சைத்ரேஷ்வரனை நோட்டம் போட்டது. ஆனால் தாருணிகா எதை பற்றியும் கவலை படாமல் அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
இத எக்ஸ்பிளைன் பண்ணுங்க என கொடுத்தான். தாரு ஒரு சாதாரண தொனியில் என்னோட அனலைசிங் படி இந்த வகையான பிஸ்னஸ் மெட்டீரியல்ஸ பிரமோட் பண்றதுக்கு அட்வர்டைசிங் பண்றத விட டாப் மேகசீன்ஸ் உங்களோட இன்டர்வியூ அது கூடவே உங்க வாய்ஸ் I மீன் ஆன்லைன் ல அந்த மேகசீன்நுடய official website or application ல உங்களோட வாய்ஸ் audio book ஆ மேகசீன் கூட இருந்தால் நமக்கு நிறைய ஷேர் ஹோல்டர்ஸ் வருவாங்க! அவங்கள டீல் பண்றதுக்கும் ரொம்ப நல்லாருக்கும் மார்கெட் ல நம்ம prodect-க்கு நிறைய வரவேற்பு இருக்கும் என கூறி முடித்தாள்.
சைத்து அவள் சொன்ன விசயத்தையும் அவளின் ஆளுமையான பேச்சிலும் ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் பார்த்தான். ஆனால் அதை முகத்தில் காட்டி கொள்ள வில்லை.
வெல் டன்! தென் நெக்ஸ்ட் வேற யார்? உங்க ஐடியா என்ன? என கேட்டான். அவரவர்கள் முழு திறமையும் உருக்கி போட்டு விசயங்களை விளக்க..
சைத்துவின் கண்களே பிடிக்க வில்லை என்பது போல சொன்னது.
தாருணிகா மூன்று முறை தான் சைத்துவைப் பார்த்தாள்.
அவளின் மண்டைக்குள் ஆயிரம் யோசனை! இந்த கண்கள் மிகவும் பரிச்சயமான குரல்! எப்படி அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரி இருக்கும்? என அவள் யோசித்து கொண்டிருக்க அவனுடைய மாஸ்க்கில் வந்து மனம் நின்றது.
இந்த மாஸ்க்? எதுக்கு மாஸ்க் போட்டுட்டு உட்கார்ந்து இருக்கான்? என ஆயிரம் கேள்விகள் ஓடி கொண்டிருக்க..
ஓகே மீட்டிங் டிஸ்மிஸ் என சொல்லி கொண்டே அவனுடைய பார்மல் சட்டையை நீவி கொண்டே எழுந்தான்.
தாருனிகா எழுந்து அனைவருடனும் ஐக்கியமாகி கலந்து கொண்டாள்.
அவளுடைய இடத்தில் வந்து அமர்ந்ததும் எப்பொழுது அமர்ந்து கொண்டாள்.
ஒரு நிமிடம் கண்களை மூடி பத்து எண்களை பின்னால் இருந்து எண்ண ஆரம்பித்தாள். எண்ணின் முடிவில் சைத்ரேஷ் அவளை அழைக்க வேண்டும். அந்த அளவுக்கு ஒரு நாடகத்தை தான் அரங்கேற்றி இருக்கிறாள். இது முழுக்க முழுக்க அறிவு மட்டுமே பயன்படுத்தி அவனிடம் இருந்து அனைத்து விடயங்களையும் கறந்து தி கிரேட் சினி ஆர்டிஸ்ட் சர்வேஷ்வரன் பெண்களின் கனவு நாயகனை கைது செய்ய வேண்டும். அவ்வளவே!
மேடம்!. என ஒரு குரல்..
தாரு புன்னகையுடன் திரும்பி பார்க்க..
பாஸ் உங்களை வர சொன்னாரு! என ஒரு பணியாள் வந்து கூறினான்.
No tension free யா போ அவன் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்ல நம்ம சூர்யா டாடி, கார்த்திக் ப்பா, சூர்ய பிரகாஷ் டாடிய விட இவன் எல்லாம் ஒரு ஆள் இல்ல! அவனை உன்னால ஈசியா கையாள முடியும் என தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டு கதவை தட்டினாள்.
யெஸ் கம் இன்! என சைத்து கூறினான்.
தாரு உள்ளே வந்து அவன் நின்று கூப்பிட்டீங்களா சார் என தமிழில் பேசி விட்டு நாக்கை கடித்தவள் சா சாரி! நீங்க என கன்னடத்தில் பேச..
சைத்துவின் கண்கள் சிரித்தது.
உங்களை நான் தான் கூப்பிட்டேன். நீங்க சொன்ன ஐடியா நல்லா இருந்தது. அதை பத்தி டிஸ்கஸ் பண்ண தான் கூப்பிட்டேன்! நீங்க உங்களோட கம்பார்டபில் லாங்குவேஜ்ல பேசலாம்! என்று கூறி முடித்தான்.
ஓகே சார் தாராளமா என்று தாருணிகா தமிழில் பேச ஆரம்பித்தாள்.
சைத்ரேஸ் அவளின் கண்களை மட்டுமே பார்த்தவாறு பேசினான். மற்றபடிக்கு அவள் மேல் எந்த எண்ணமும் இல்லை. அவன் சர்வேஸ்வரன் போல் இல்லை. அவனுடைய மனதில் வீற்றிருக்கும் ஒரே நாயகியே அந்த இதழ் மச்சத்துக்கு சொந்தக்காரி மச்சக்காரி என்று கூறலாம்.
உங்களோட ஐடியா ரொம்ப புதுசா இருக்கு! அது கவனிக்கத்தக்கதாகவும் இருக்கு? இதை பத்தி நம்ம ஃபர்தரா டிஸ்கஸ் பண்ணலாம்! எனக்கு ஒரு டவுட் இருக்கு! என்று சைத்ரேஷ் கண்களை மட்டுமே பார்த்து கூறினான்.
சொல்லுங்க சார் என்று முகத்தில் எந்தவித வெளிப்பாடும் இல்லாமல் தாருணிக்கா பேசினாள்.
எப்படி இந்த சின்ன வயசுலயே எவ்ளோ பிரில்லியன்ட்டா யோசிக்கிறீங்க? இதுக்கு முன்னாடி எங்கேயாவது மேகசின்ல ஒர்க் பண்ணீங்களா? என்று மதிப்புமிக்க ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.
அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆனால் சைத்ரேஷுக்கு இது முக்கியமாக இருந்தது. ஏனென்றால் இந்த மாதிரியான யோசனையை சொல்வதற்கு எடிட்டோரியல் , எழுத்தாளர்கள் கூடவே அந்த துறையில் இருப்பவர்களால் மட்டுமே கூற முடியும். இவளுக்கு எப்படி இந்த யோசனை தோன்றியது? இவளை சுற்றி யாராவது அந்த வேலையில் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களுடைய வார இதழில் கூட இன்டர்வியூவை போடலாமே! இவள் மிகவும் புத்திசாலியா? இல்லை புத்திசாலி போல் நடிக்கிறாளா? என்ற அவளை மதிப்பீடு செய்வதற்காகவே இந்த கேள்வியை கேட்டான்.
இதை கேட்டதும் தருணிகா ஒரு புன்னகையை சிந்தினாள் .
இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க என்று சைத்ரேஸ் கேட்க
அவள் அவனைப் பார்த்துக் கொண்டு இதுக்காக எழுத்தாளராகவும், அப்படி இல்லன்னா ஒரு ரிப்போர்டரோட பிரண்டாவும் இருக்கணும்னு அவசியம் இல்ல. நிறைய படிச்சவங்களா இருந்தால் போதும் அவ்வளவுதான்! என்று இரண்டு வரிகளில் பதில் கூறினாள்.
இம்ப்ரஸிவ் அது ஆர்வம் உடையதாக.. அவளுடைய பதில் சைத்ரேஷுக்கு ஆர்வம் உடையதாக இருந்தது. அவன் ஒரு புன்னகையுடன் ஓகே நீங்க போகலாம்!
ஒகே சார் என அவள் செல்ல..
மேடம் அப்படியே எந்த மாதிரியான மேகசீன்ஸ்ல நம்ம இந்த இன்டர்வியூ கொடுக்கலாம்? யார்க்கு அப்பாயின்மென்ட் கொடுக்கலாம்னு எனக்கு ஒரு அவுட்லைன் கொடுக்க முடியுமா? எந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்லணும்னு! என்ற சைத்ரேஸ் அவளை எடை போட முயற்சிக்க…
இவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னட் என்கிட்ட இத கேக்குறீங்களா? உங்களோட பர்சனல் அசிஸ்டன்ட் இருப்பாங்களே! நான் வெறும் லீகல் அட்வைசர் தானே! என்று தாருணிக்கா பதிலளித்தாள்.
அப்படியா இன்னும் உங்களை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு நிறைய இருக்கு என்று கூறி சைத்ரேஸ் கூறினாள் .
தாருனிகா அவனை ஊர்ந்து பார்க்க…
தப்பா நினைச்சுக்காதீங்க நான் எதார்த்தமா தான் சொன்னேன்! ஓகே நீங்க போகலாம் என்று சொல்ல தாருணிகா போகும்போது, அவனுடைய மாஸ்கை பார்த்தாள்.
அவன் அரை மணி நேரத்தில் அவனுக்கு அடுத்தடுத்த வேலைகள் வர சைத்ரேஸ் அந்த நேரம் தாரணிகா அவளுடைய சிஸ்டத்திற்கு முன்னால் உட்கார்ந்திருந்தவள். எப்படி எப்படி கண்டுபிடிப்பது? என்று யோசித்துக் கொண்டே வேலையில் நாட்டம் இல்லாமல் அப்படியே தட்டிக் கொண்டிருந்தாள்.
ஒரு சில நிமிடங்களில் சைத்ரேஸ்வரன் வெளியே வருவது தெரிந்தது.
உடனே என்ன செய்யலாம் இவனோட மாஸ்க் எப்படி என்னோட முகத்தை பார்க்கிறது? முகம் தெரியவில்லையே? என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, எதுக்கும் இவனை நம்ம ஒரு போட்டோ புடிப்போம் என்று தாருணிகா யாருக்கும் தெரியாமல் சைத்ரேஸ்வரன் முகத்தை நன்றாக பார்க்கும் அளவுக்கு ஒரு புகைப்படத்தை எடுத்து வைத்தாள்.
மாஸ்க் அணிந்த முகம்! அந்த படம் தான் சில ரகசியங்களை வெளிக்கொண்டு வரப் போகிறது.
இப்போ நம்ம சைத் ரேஸ் எங்க கிளம்புறாரு? மன நிம்மதியை தேடி!
அந்த மன நிம்மதி எங்கு கிடைக்கும்?
அவனோட அம்மா சொன்னது நினைவில் வந்தது.
சைத்து நீ இவ்ளோ குழப்பமா இருக்க? உன்னோட மனசு சரியில்லையா? என்று அவனுடைய அம்மா கேட்க
ஆமா மா எனக்கு மைண்ட் சரியில்லை! நான் கொஞ்சம் அம்மாச்சி பாக்கறதுக்கு ஊருக்கு போயிட்டு வரட்டுமா! டாடி கிட்ட சொல்லிட்டு என்று சைத்து கொஞ்சலுடன் தன் தாயிடம் கேட்க…
போலாம் ஆனா அதுக்கு முன்னாடி என்னோட தங்க புள்ள சென்னி மலை, பழனி, திருச்செந்தூர் இப்படி எதாவ்து ஒரு இடத்துக்கு போயிட்டு வாங்க! என்று சைத்துவின் அம்மா கூற..
என்ன சொல்றீங்க என்று சைக்ரேஷ் கேட்டான்
என்னடா கண்ணா? மறந்து போச்சா! எப்பவும் அதிகமான கவலையும் அதிகமான விரக்தியும் இருந்தா, நம்மளோட மனசுல கெட்டது வந்து குடிபோகும்! என்னோட பாசிடிவ் எனர்ஜி கடவுளும், உன்னோட அப்பாவும்! உன்னோட பாசிடிவ் எனர்ஜி நானா இருந்தா கூட, கடவுளும் இருக்கணும்! சோ நமக்கு மேல ஒருத்தன் இருக்கான்! அத நான் என்னோட கண்ணுக்கு முருகனா பாக்குறேன்! நீ எந்த கடவுளை நினைக்கிறாயோ? அந்த கடவுளோட சன்னதிக்கு போயிட்டு வா! உன்னோட மனக்கவலை எல்லாமே மறைஞ்சு போகும்! என்று கூறினாள்.
இதைக் கேட்டதும் சைத்ரேஸ்வரனுக்கு தன் தாயின் குரலில் இருந்து ஏதோ ஒரு நிம்மதி கிடைப்பது போல் தோன்ற..
சரிமா நான் என யோசித்து ம்ம் திருச்செந்தூர் போயிட்டு வரேன் என்று சைத்ரேஸ் கூறினான்.
அப்போ திருச்செந்தூரில் மீட் பண்ணலாம்
தொடரும்…
EPISODE 77
இதளினி, சத்யதேவ், ருத்ரன் என மூவரும் முருகன் கோவிலுக்கு கிளம்பினார்கள்.
சத்ய தேவ் அவனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு திரும்ப..
எதிர் வீடு கண்ணில் தென்பட்டது. வெளியில் எந்த சத்தமும் இல்லை! எப்பொழுதும் அவள் இருந்தால் மொத்த ப்ளாக்கும் சத்தத்துடன் இருக்கும் ஆம் ஒன்று பாடலை அதிகமாக வைத்து கொண்டிருப்பாள். அப்படி இல்லைையென்றால், வீட்டில் போனில் சத்தமாக பேசுவாள். அவளுடைய பப்பியை தூக்கிக் கொண்டு வந்து, யாரிடமாவது சண்டையிடுவாள். இப்படி எப்பொழுதும் மிகவும் துடுக்குத்தனமாகவும், ஆக்டிவாகவும் இருக்கும் ஒரே ஜீவன் ரிதம் மட்டுமே!
ம்ம்! பார்க்காதே! பார்க்காதே! என்று தான் உதடுகள் சொல்லிக்கொண்டது. ஆனால் கண்களோ ஒருமுறை அவளது வீட்டின் கதவை பார்த்துக் கொண்டது.
சத்யதேவ் நேராக ஜங்ஷன் கிளம்ப தயாரானான் ருத்ரன் சென்று இதழ் இனிய அழைத்து வருவதாக கூறினான்.
சிவன்யா அவளுடைய வேலையில் மிகவும் பிசியாக இருக்க,
அக்கா என்ன நடக்குதுன்னு கொஞ்சம் முழுசா சொல்லு அவனை நீ பார்த்தியா என்று இதழ் கேட்க..
சிவன்யா தன் தங்கையை ஒரு பார்வை பார்த்தவள். முதல்ல இப்போ கோவிலுக்கு போறல்ல! மனசுல இருக்குற குழப்பத்தை எல்லாத்தையும் கடவுள் கிட்ட சொல்லி, உன்னோட மனச ஒருநிலை படுத்திட்டு வா! பயத்தை குறைத்துவிட்டு வா! மத்தபடிக்கு இந்த விஷயத்துல எதுலையும் நீ தலையிட வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்! சரியா என்று கூறினார்.
அக்கா சொல்லு! என்று இதழ் மீண்டும் கேட்க…
நான் சொல்றதை கேளு என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே..
ருத்ரன் வந்திருப்பதாக வந்து கூறினார்கள்.
அவன் வந்துட்டான் நீ கெளம்பு! பத்திரமா போயிட்டு வா! என்று சிவன்யா கூறினாள்.
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று அவளும் கிளம்பிவிட்டாள் ருத்ரன் மிடுக்குடன் டிப் டாப்பாக இருந்தான். ஆனால் அவனுடைய முகத்தில் மட்டும் ஏக்கர் கணக்கில் சோகம் கொட்டி கிடந்தது.
இதழ் அருகில் வந்து உதட்டை கடித்துக் கொண்டே டேய் தீரா என்ன ஆச்சு? உன்னோட முகம் ஏக்கர் கணக்குல சோகத்துல இருக்கே! என்னாச்சு? சொல்லு டா! உன்னை தான்!
ஒன்னும் இல்ல வாடி போகலாம் ! என்று காரில் அங்கிருந்து நேராக ஜங்ஷன் கிளம்பினார்கள்.
சத்யதேவ் முகம் கொஞ்சம் இருக்கத்துடன் இருக்க..
இதழினி ருத்ரனின் கைகளை கோர்த்துக்கொண்டு ஞாயமாக பேசிக்கொண்டு வந்திருந்தாள்.
அப்புறம் உங்க அக்கா பெரிய பிரச்சனை பண்ணிட்டாளம்மா? எங்க அண்ணன வம்பு இழுக்கறதை மட்டும்தான் வேலையா வச்சிருக்கா! இப்போ எங்க இருக்கா? எதுக்கு அவளுக்கு தேவையில்லாத வேலை? எப்போ பாரு எங்க சத்திய தேவ் அண்ணா கிட்ட போயி மோதரத மட்டும் தான் வேலையா வச்சிருக்கா! அவ அடங்கவே மாட்டாளா? மாமி என்ன பண்றாங்க? என்று இதழ் கேட்க..
லிப்ஸ் இப்படி தொண தொணன்னு பேசிட்டு வரே! கொஞ்ச நேரம் அமைதியா வாடி! என்று ருத்ரன் சிடுசிடுக்க..
டேய் என்ன? நானா உன்ன கூப்பிட்டேன்? நீ எதுக்குடா எங்க கூட கோயிலுக்கு வர! என்று இதழ் அதட்ட..
நான் வருவேன்! உனக்கு என்ன? நான் சத்யதேவ் மாமா கூட வரேன்! என்று ருத்ரன் கூறினான்.
இதழ் நீ ஒரு பெருமூச்சியை விட்டு உனக்கும் உங்க அக்காளுக்கும் வேற வேலையே இல்ல..
சத்யதேவ் அருகில் அவளது பையை வாங்க வந்தவன் காதுகளில் இது கேட்க திடுக்கிட்டு தன் தங்கையை பார்த்தான்.
என்ன சொன்ன என்று சத்ய தேவ் கேட்க..
அண்ணா என இதழ் சிரித்து கொண்டே அருகில் சென்றாள்.
குக்கூ இப்போ என்ன சொன்ன இந்த சத்திய தேவ் மீண்டும் கேட்க..
அதை ஏன்னா கேக்குறீங்க? ரிதம் ஓவரா ஆடுறாலுமே! இவனுக்கு உன் கூட ஓட்டிட்டே இருக்கிறது தான் வேலை! அதுவும் 24 மணி நேரமும் உன் கூட தான் இருக்கான். இப்ப ரிதம் உன்கூட 24 மணி நேரமும் சண்டை போட்டுட்டு தான் இருக்கா! மொத்தத்துல இவங்க ரெண்டு பேரும் உங்க கூட ட்ராவல் பண்ணுறாங்க! என்று அவள் அழகாக பேசிக் கொண்டிருக்க..
சத்திய தேவ் வைத்த கண் வாங்காமல் தன் தங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்.
ருத்ரன் கடுப்புடன் அவர்களின் பாச உறுகலை பார்த்துக் கொண்டிருந்தான்.
டேய் என்னடா அப்படி பாக்குற என இதழ் கேட்க
“மாமா உன்ன பாசமா பார்க்கிறதும் நீ மாமா கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசறதும், இதெல்லாம் என் கண்ணால பார்க்க முடியல டி!”
சத்யதேவ் ஒரு சின்ன புன்னகையுடன் அவளை அழைத்துக்கொண்டு நேராக செகண்ட் கிளாஸுக்கு சென்றார்கள்.
இப்போ நாம நேர கோவிலுக்கு போக போறோமா? என்று இதழ் கேட்க..
ஃபர்ஸ்ட் சென்னை அங்கிருந்து இன்னொரு ட்ரெயின் என்று சத்திய தேவ் கூறினான்.
என்ன உன்னோட முகமே சரியல? என்னன்னா ஆச்சு? அவ பண்ணதையே இன்னும் நினைச்சுட்டு இருக்கியா? என்று இதழ் கேட்க..
சத்திய தேவ் கொஞ்சம் தடுமாறி கொண்டே என்ன நினைச்சிட்டு இருக்கேன்? என்ன சொல்ற என்று பதட்டத்துடன் தன் தங்கையை பார்த்தான்.
இதழ் சிரித்துக்கொண்டே அதுதான் நேத்து ரிதம் பண்ணாலே! அதை பத்தி சொல்லிட்டு இருக்கேன்! பிரச்சனை பண்ணலாமே! அதையே நினைச்சுட்டு இருக்கியா? அவ எல்லாம் ஒரு ஆளா! நீ கவலைப்படாதே! என்று தன் அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள்.
அவனுடைய அவஸ்தையை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளும் அப்படி ஒரு அவஸ்தையை சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. கொஞ்ச தூரத்தில் தான் இருக்கிறது.
மூவரும் அவர்களுடைய சீட்டுக்கு வந்தார்கள். ருத்ரன் அப்பொழுதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்க..
இப்போ எதுக்குடா இஞ்சி தின்ன குரங்கு போல மூஞ்ச வச்சிருக்க? அதுல சிரிச்சா என்னவாம்! உன்ன விட பெரிய பொண்ணு நானே சிரிக்கிறேன்! உனக்கு என்னடா சிரிக்க? என்று இதழினி கேட்க..
நான் எங்க அக்கா சொல்லியே கேட்க மாட்டேன்! நீ சொன்னா நான் எதுக்கு எதுக்கு டி கேப்பன். உனக்கும் எனக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை! ஜஸ்ட்டு ஒரு நாலு மாசம் தான்! அதுக்கே ஓவரா சீன் போடாத! என்று ருத்ரன் சொல்லிக் கொண்டிருக்கவே …
நித்தின் பிரகாஷிடம் இருந்து போன் வந்தது. அவள் சத்திய தேவ் மற்றும் ருத்ரன் இருவரையும் பார்த்தாள்.
எடுத்துப் பேசு யாரு உன்னோட அண்ணாவா? என்ற வேண்டுமென்றே ருத்ரன் கேட்க..
இப்போ என்ன என் மேல அக்கறை இருக்கிறவங்க போன் பண்றாங்க? உங்க அக்கா உனக்கு போன் பண்ணாலா? போடா! ம்ம் சத்ய தேவ் அண்ணா நான் பேசலாம் தானே என்று என இதழ் கேட்க..
சத்ய தேவ் சிரித்துக்கொண்டே நீ பேசு குக்கு என்று கூறினான்.
அதற்குள் சக்தி ஃபோனை எடுத்து சூரியதேவ்வுக்கு பத்திரமாக ட்ரெயின் ஏறிவிட்டோம்! என்று சொல்ல..
அதே போல் ருத்ரன் தன் அம்மாவுக்கு அழைத்து ட்ரெயின் ஏறிவிட்ட விஷயத்தை கூறினான்.
விவேகாவிற்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால், ருத்ரன் மட்டும் தான் கோவிலுக்கு செல்வது, சாமி கும்பிடுவது, பூஜை செய்வது விரதம் இருப்பது, என்று விவேகா கூட அனைத்தையும் செய்வான்.
ரிதம் அப்படியே உல்டாவாக இன்ப ராகவன் போல, அவர்கள் ஏகாதசி என்று விரதம் பிடித்து சாமிக்கு படைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அப்பா மகள் இருவரும் கறி எடுத்து சமைத்து சாப்பிடுவது, அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் கேஎஃப்சி சிக்கன் பாப்கான், என ஆர்டர் செய்து இருவரும் சாப்பிடுவார்கள். அத்தனை வினைபுடிச்சவங்க ரெண்டு பேரும்!..
தூறி! அண்ணா கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, உன்ன ரெண்டு மணி நேரத்துல கோவில்லையே இறக்கி விட்டிருப்பேன்! சிறப்பு தரிசனத்துல போய் பாத்துட்டு வந்திருக்கலாம்ல! எதுக்கு இப்படி போகணும்? என்று நித்தின் கேட்க.
இதழ் சிரித்துக்கொண்டே பரவால்ல அண்ணா என்று கூறினாள்.
சரி யார் யார் போறீங்க? என்று நித்தின் கடுமையான குரலில் கேட்க..
நான் ,சக்தி அண்ணா, ருத்ரன் என்று இதழ் கூறினாள்.
அவனா என்று நித்தின் பற்களை கடித்துக் கொண்டே கேட்க..
ஆமா என்ன ஆச்சு அண்ணா?
ஏன் உங்க அண்ணனுக்கு எப்பவும் அந்த ருத்ரன் துணையிருக்கனுமா என்ன? அது என்ன பழக்கம்? உங்க அண்ணனுக்கு அறிவே இருக்காதா? எதுக்கு ஒரு வயசு பையன்! உன்கூட சேர்ந்து போக… ச்ச நீங்க எல்லாம் ஓட்டுக்கா போறீங்க? இது நல்லாவா இருக்கு? என்று நித்தின் நிலாவை எப்படி பாதுகாப்பானோ! அதே போல் பேசிக் கொண்டிருக்க..
அண்ணா நானும் அவனும் சின்ன வயசுல இருந்து ஒட்டுக்கா வளர்ந்தவங்க! என்ன இப்படி சொல்றீங்க என இதழ் சொல்ல..
என்னவா இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு! என்று நித்தின் கூறினான்.
இதழ் சிரித்து கொண்டே அவன் உங்களோட மச்சான்! அது மறந்து போச்சா? ரிதம் அண்ணிய தான நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க! என்று கூற
ஆமா என்று நித்தின் அவனுடைய இயலாமயை உள்ளே மறைத்துக் கொண்டு, சரி! பத்திரமா போயிட்டு, எனக்கு எதுவா இருந்தாலும் இன்பார்ம் பண்ணுங்க! நான் பேசாம உனக்கு பாடிகார்ட் அனுப்பட்டுமா? என்று நிதின் கேட்க..
அதெல்லாம் எனக்கு பாடிகார்ட்டா சத்திய தேவ் வண்ணா இருக்கும்போது எனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று இதழ் கூறி போனை வைத்தாள்.
ஆனால் பிரச்சனை வரும் போது சத்திய தேவ் இருக்க மாட்டான். இதோ இப்போதே கிளம்ப போகிறான். அனுமன் போல் ருத்திரனும் இருக்க மாட்டான் வருவான். ஈஸ்வரன்! சைத்ரேஸ்வரன்.
பயணம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. அங்கிருந்து அவர்கள் சென்னை டு தூத்துக்குடி டிரெயின் மாற்றம் வந்தது. தான் சத்திய தேவ்விற்கு மனம் இன்னும் சஞ்சலத்துடன் இருந்தது.
அவளை மனசுல வச்சுக்கிட்டு இப்போ நான் கோவிலுக்கு போறது நல்லது இல்ல! ஹரிணி, ரிதம்! ரெண்டு பேரில்… ச்ச.. இந்த சபல எண்ணங்களோட கடவுள் சன்னிதானத்தில் மிதிக்கக்கூடாது. ஒரு பொண்ண மனசுல வச்சுக்கிட்டு மிதிக்க கூடாது. என்று நினைத்தவன். சென்னையில் இருந்து அவர்கள் டிரெயின் மாறும்போது ஜர்க் அடித்தான்.
அண்ணா இன்று இதழ் அழைக்க..
பாப்பா நீயும் ருத்ரனும் போயிட்டு வாங்க! என்று கூறினான்
என்னாச்சு என்று ருத்ரன் கேட்க..
எனக்கு இப்போ எங்க ஆத்தாவையும் பாக்கணும் போல இருக்கு நான் ஈரோடு கிளம்புறேன் என்று சத்திய தேவ் கூறினான்.
ஈரோடா இப்போவா உமா -மாவ பார்க்க போறியா? என்று இதழ் கேட்க
ஆமா எனக்கு ஞாபகமா இருக்கு நீ போயிட்டு வா வரும்போது நான் பிக்கப் பண்ணிக்கிறேன்..
ருத்ரன் என்று சத்யதேவ் அதட்ட கர்ஜனையுடன் அழைக்க..
மாமா நீங்க கவலைப்படாதீங்க அவளை நான் பார்த்துக்கிறேன் என்று கூறினான்.
ரசத்யதேவ் ருத்ரனை பார்த்து உன்ன நம்பி தான் அவளை விடறேன்! பத்திரமாக கூட்டிட்டு போயிட்டு வந்துட்டு வருவ தான இல்ல நான் வரட்டுமா? என்று மீண்டும் கேட்க.
மாமா என்னை நம்ப மாட்டீங்களா என்று ருத்ரன் கேட்டான்.
சரி என்று அவர்கள் இருவரையும் செயின் ஏற்றி விட இதில் ருத்ரனுடன் பேசி சிரித்துக் கண்டே அவர்கள் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து திருச்செந்தூர் பதில் ஏறினார்கள். கிட்ட தட்ட நடுசாமத்தில் இருந்து பயணம்.
இங்கே சத்யதேவ் நேராக ஈரோடு சென்று சூர்யாவின் அம்மா உமாவை பார்த்து சென்று விட்டான். அவனுக்கு ஏதோ சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று தோன்றியது.
அதனால் அங்கு சென்று விட்டான் முருகனை மனதில் நினைத்தாலே போதும் என்று அவனுடைய நினைப்பு.
*
இங்கே ருத்ரன் அப்பொழுதும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டிருக்க..
டேய் இப்போ என்னடா பிரச்சனை? எதுக்கு இப்படி வந்துட்டு இருக்க? மாமா உன்ன எதுவும் திட்டினாங்களா? என்று இன்பராகவனைப் பற்றி இதழ் கேட்டாள்.
அதெல்லாம் ஒன்னும் இல்லடி என்று ருத்ரன் சொல்ல சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் போன் வந்தது.
போனில் எண் பார்க்க மிகவும் கடுப்பாக இருந்தது. எடுக்கவே இல்லை மூன்று கால்கள் போனது வேறு வழி இல்லாமல் அட்டென்ட் செய்து காதல் வைத்தான்.
மாமா என்று ஒரு குரல் .
ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
இப்ப பேசுவேளா? மாட்டேளா? இப்போ நான் எங்க இருக்கேன் தெரியுமா? ஒரு பொம்மனாட்டிய இப்படி காக்க வைக்காதீங்கோ அந்த பாவம் உங்களை தான் வந்து சேரும்! முருகா!;முருகா! என்று கூறினாள் மீனாட்சி.
அது என்ன முருகா? எப்பவும் பெருமாளே! பெருமாளே! சொல்லின்ருப்ப என்று அவளுடைய பாசை..
மாமா நீங்க இப்போ பிராமண பாஷை பேசினீங்கோ! என்று அவள் சொல்ல..
தெரியாம பேசிட்டேன்டி என்று ருத்ரன் கூறினான்.
இதழ் அவனுடைய வாயை பார்க்க..
ருத்ரன் இதழின் காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டே சொல்லு சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்? என்று கேட்க
இப்போ என் கதிர் வேல் அழகண பாக்குறதுக்காக நான் இப்போ திருச்செந்தூர் வந்திருக்கேன் என்று கூறினாள்.
என்ன என அவன் கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்க..
ஆமா எனக்கு அந்த முருகனுடைய தரிசனமும் எவ்ளோ வேணுமோ! அதைவிட அது கூடவே என்னோட கை பிடிக்கப் போற கண்ணாலனின்! தரிசனமும் வேணும்னா! என்று மீனாட்சி சொல்ல..
அதைக் கேட்டதும் ருத்ரன் கண்கள் சிரிக்க திருடி! கள்ளி! இப்போ எங்கடி இருக்க? என்று ஆவலுடன் கேட்டான்.
நான் சொல்றேன் நீங்க முதல்ல வாங்கோ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.
அய்யோ! மீனாட்சி! என ருத்ரன் வாய்மொழியாக கூற..
யார் அந்த மீனாட்சி? என்று இதழ் அவனுடைய கழுத்தைப் பிடித்தாள்.
ருத்ரன் அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் நான் மதுரை மீனாட்சிய சொன்னேன்!
ஹே மதுரை மீனாட்சிக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என்று இதழ் கேட்டுக் கொண்டே இப்போது யார்கிட்ட போன் பேசின? இப்போ உடனே சொல்றே? என்று மிரட்ட ஆரம்பித்தாள்.
ஹே சொல்றத கேளுடி போகும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணும்! அங்க நான் தெரிஞ்ச ஒருத்தர பாாாாத்திருக்கே அவங்கள பாக்குறதுக்காக, அவங்க தான் எனக்கு போன் பண்ணாங்க! என்று மாற்றி மாற்றி உளற ஆரம்பித்தான்.
என்னடா தீரா சொல்ற? என்று இதழ் கேட்க
வாடி போலாம் சாமி கும்பிடனும்! சீக்கிரம் வா எனக்காக தரிசனம் காத்துட்டு இருக்கு! வாடி போலாம் அவளை இழுத்துக் கொண்டு நேராக முதலில் திருச்செந்தூர் கடற்கரை பக்கம் சென்றார்கள்.
*
கிட்டத்தட்ட இந்த நான்கு நாட்களாக சர்வேஸ்வரன் எந்த ஒரு ஷூட்டிங்கும் செல்லவில்லை. புகைபது, குடிப்பது, அசைவம் சாப்பிடுவது. கண்களை மூடி புலம்புவது. என்று இப்படியே அவனுடைய படுக்கையறையில் கடந்தான்.
சைத்ரேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவன் ஏன் இப்படி இருக்கான்? என்று ஒரு பக்கம் கேள்வி! அதைவிட ஆச்சரியம்! என்னன்னா? ஒரு பொண்ண கூட போன் பண்ணி கூப்பிடவும் இல்லை, எந்த பொண்ண தேடியும் அண்ணா போகவே இல்லை! என்பதுதான் சைக்லேஸ்வரனுக்கு பெரும் ஆச்சரியம்.
அப்போ இதெல்லாம் எப்படி நடக்குது? நாம முருகன பாக்க போறோம்னு நினைச்சதுக்கே! நம்ம வீட்ல நல்லது நடக்குதே! அண்ணா பொண்ணுங்கள பாக்காம இருக்கான்! அவனோட கெட்ட பழக்கத்தை, கொஞ்சம் கொஞ்சமா மாத்துறானோ! நல்லது நடக்குது! அப்ப கண்டிப்பா நம்ம திருச்செந்தூர் போயாகனும் என்று நினைத்துக் கொண்டவன்.
அங்கிருந்து நேராக அவனுடைய தனிப்பட்ட சேட்டர்ட ஃபிளைட்டில் தூத்துக்குடி பக்கம் வந்து இறங்க திட்டமிட்டு இருந்தான்.
கூடவே அவனுக்கு பாதுகாவலர்கள் இறக்க சென்றார்கள். இங்கே தமிழ்நாட்டில் அவனுடைய நடிகர் என்பதை யாரும் கர்நாடகாவின் வளர்ந்து வரும் நடிகர் என்று சவுத் அதிகமாக அவனுடைய முகம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நிம்மதியாக சாமி கும்பிடலாம் என்று நினைத்து வந்திருந்தான்.
சர்வேஷ்வரன்…?
சைத்ரேஷ் – இதழ் மீட்?
ருத்ரன் lovely gold fish மீதி நாளைக்கு
தொடரும்..
EPISODE 78
ருத்ரன் மற்றும் இதழினி இருவரும் கோவில் திருச்செந்தூரில் இறங்கி அங்கிருந்து கோவில் செல்லும் கோவில் பக்கம் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள் அந்த கடல்கள் ஆர்ப்பரித்து ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது.
அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே இதழினியிடம் சரி இங்கே குளிச்சிட்டு , சாமி தரிசனம் பாக்க போகும்போது, என்ன டிரஸ் போடுவ? என்ன எடுத்துட்டு வந்திருக்க? என்று ருத்ரன் கேட்டான்.
ஏன் அது எதுக்கு நான் உனக்கு சொல்லணும்? என்று இதழ் கேட்க..
ஹே சொல்லுடி அப்படியே சீன் போடுவா என்று அதட்டினான்.
அது வந்து அம்மா எனக்கு புடவை கொடுத்து விட்டாங்க! அது மட்டும் இல்லாம நான் ஒரு தாவணி பாவாடை எடுத்துட்டு வந்தேன் டா ருத்ரா! என்று இதழ் கூற..
அப்படியா வேற டிரஸ் எதுவும் இல்லையா? ட்ராவல் பண்ணும்போது, எதை வியற் பண்ணுவ என்ற ருத்ரன் கேட்க..
மொத்தம் நாலு செட் எடுத்துட்டு வந்து இருக்கேன்! என்று கண்களை விரித்து அழகாக கூறினாள்.
அவளுடைய உதட்டு மச்சம் இன்னும் மின்னி கொண்டிருந்தது.
ருத்ரன் அவளுடைய மச்சத்தை பார்த்து தொட்டுப் பார்க்க வர..
டேய் ராஸ்கல் என்ன பண்ற? ஆமா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல யார் கிட்ட பேசின? என்று மீண்டும் ஆரம்பிக்க.
அடங்காதவளே சும்மா தொட்டு பாக்க வந்தேன்! சின்ன வயசுல எத்தனை தடவை எனக்கு முத்தம் கொடுத்து இருக்க? என்று ருத்ரன் சொல்ல..
டேய் இப்ப நம்ம கோவில்ல இருக்கோம்! அதுவும் அது சின்ன வயசுல நீ என்னோட தம்பின்னு நான் முத்தம் கொடுத்தேன்! என்று இதழ் கூறினாள்.
நான் உனக்கு தம்பியா? இப்படியெல்லாம் வெளிய போய் சொல்லிடாத! நான் என ருத்ரன் பேச்சை வளர்த்த வர..
போதும் நிறுத்து இப்போ நான் என்ன டிரஸ் போடணும்! அதை நீ தான் சொல்ல போற? சொல்லி தொலை ! என்று அவள் சலித்து கொள்ள..
அது என்னோட லிப்ஸு என்று ருத்ரன் சிரித்தான்.
உன்னோட லிப்ஸ் உன்கிட்ட இருக்கு! என்னோட லிப்ஸ் என கூறினாள்.
சரி அப்புறம் எதுக்குடி இதுல நீ பேர் வச்ருக்க? நான் அப்படி தான் கூப்பிடுவேன்!
அது டாடி கிட்ட தான் கேக்கணும்! நீ ஏன் இதழ் அப்டின்னு கூப்பிடுற? என்னை தூரிக்கான்னு கூப்பிடு! என்று இதழ் கூற..
எனக்கு லிப்ஸ் தான் புடிச்சிருக்கு! நான் லிப்ஸ் என்று தான் கூப்பிடுவேன்! என்று ருத்ரன் அப்படியே இன்பராகவனை உரித்து வைத்து, கொஞ்சம் பிளர்ட்டை தூவிக் கொண்டிருக்க…
போதும் போதும் உன்னோட பிளர்ட் வழிந்து கடலுக்குள்ள கரைஞ்சர போகுது? என்று இதழ் கூறினாள்.
சரி வா பஸ்ட் கடலில் குளிச்சிட்டு அதுக்கப்புறம் அடுத்து நாழி கிணறு போவோம்! அங்க இருந்து உள்ளுக்குள்ள இந்த இடத்துல சின்ன சின்ன கோவில் எல்லாத்தையும் பாத்துட்டு, நேரா உள்ளுக்குள்ள போலாம்! இப்பவே மணி காலைல ஏழு எட்டு ஆயிடுச்சு! கரெக்டான நேரத்துக்கு போனாதான் சாமிய பார்க்க முடியும்!
சரி என இருவரும் நடந்தார்கள்.
ஆமாம் உனக்கு பசிக்கலையா? என்று ருத்ரன் கேட்க
இல்லை இல்லை சாமிய பாத்துட்டு, எல்லாரும் சாப்பிடற மண்டபத்துல இடும்பன் அன்னதானம் பண்ற இடத்தில் தான்! அங்க தான் போய் சாப்பிடணும் என்று அவள் உறுதியாக கூற..
இல்லன்னா விட மாட்டியே! சரி நீ சாப்பிடலைன்னா என்ன? நான் கொஞ்சம் சாப்பிடுகிறேன்! எனக்கு பசிக்குது! என்று ருத்ரன் அங்கு சுற்றி பார்த்து கொண்டே ஸ்னாக்ஸ் ஏதாவது கிடைக்கிறதா? என்று சுற்றி பார்க்க..
ராஸ்கல் உன்னை பிச்சிடுவன் ராஸ்கல்! உன்னை பிடிச்சுடுவேன்! இப்பவே விவேகா அத்தைக்கு போன் பண்ணட்டுமா? என்று இதழ் கைகளை நீட்டி மிரட்ட..
சரி டி வா போலாம் என்று இருவரும் சேர்ந்து கடலுக்குச் சென்றார்கள். அங்கு சென்று இருவரும் விளையாடிக்கொண்டே குளித்தார்கள். அதில் இரண்டு மூன்று செல்பிக்கள், ருத்ரனை வைத்து இரண்டு மூன்று போட்டோக்கள், அதை முடித்துவிட்டு நேராக நாழிக்கிணறு சென்றார்கள். அங்கு மீண்டும் குளித்துவிட்டு குளித்து முடித்து வெளியே வர..
அவர்கள் உடையின் மேல் தான் குளித்தார்கள். கொண்டிருக்க இதழ் உடை மிகவும் நனைந்து இருந்தது. இருவரும் தொப்பலாக நனைந்திருக்க..
சரி இப்போ டிரஸ் மாத்தணுமே என்று இதழ் கைகளை உதறிக் கொண்டே நின்று இருக்க..
ருத்ரன் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். அங்கு அழகான ஒரு பெண் மீனைப் போன்ற கண்களை உடையவள் நின்று கொண்டிருக்க..
அதோ அங்க பாரு அந்த பொண்ணுக்கு உன்னோட ஏஜ் தான் நினைக்கிறேன்! ம்ம் இல்ல உன்ன விட ரொம்ப சின்ன பொண்ணு நினைக்கிறேன்! அந்த பொண்ணு கிட்ட எங்க டிரஸ் மாத்துறதுன்னு கேளு! போ! என்று சொல்ல..
டேய் யாருன்னு தெரியாத பொண்ணு கிட்ட எப்படி டா போய் பேச முடியும்? என்று இதழ் கேட்க..
ஏண்டி நீயெல்லாம் இப்படி இருக்க? பொண்ணு கிட்ட பேசுறதுக்கு இப்படி பயப்படுறியே? நாளைக்கு உன் புருஷன் கிட்ட பேசுறதுக்கு என்ன பண்ணுவ? என்று ருத்ரன் அதட்டிக் கொண்டே முன்னாள் நடந்தான்.
இதழ் முறைத்துக்கொண்டே ஓவரா பேசுற! உன்ன ராகவ் மாமா கிட்ட சொல்றேன்! என்று சொல்ல
நீ யார் கிட்ட வேணாலும போய் சொல்லிகோ இருவரும் நேராக அந்தப் பெண் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
ஜம் என பாவடை தாவணியில் , தலையில் பூவுடன் தலையாட்டி பொம்மை தஞ்சாவூர் பொம்மை போல் நின்று கொண்டிருந்தாள். அவள்.
ஹலோ என்று கொஞ்சம் கடுமையான ருத்ரன் குரல்..
உடனே அந்த மையிட்ட கண்களுடன் வெடிக்கென திரும்பி பார்த்தாள். அவள்.
சொல்லுங்கோ என்று பதில் அளிக்க..
ஒன்றும் இல்லை இவங்க டிரஸ் சேஞ்ச் பண்ணனுமா! கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா? நான் மட்டும் தான் வந்து இருக்கேன்! என் கூட லேடிஸ் யாரும் வரல! அதுதான் என்று ருத்ரன் சொல்ல..
ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பார்த்துக்கிறேன் அக்காவை கூட்டின்டு போறேன்! என்று அவள் அழைத்துக் கொண்டே செல்ல..
ஹே அழகா! ரெடி ஆயிட்டு வா என்று ருத்ரன் கூற அந்த பெண்ணும் திரும்பி பார்த்தாள்.
அவன் கொஞ்சம் அப்படித்தான் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க! என்று இதழ் சொல்ல.
பரவால்ல நீங்க வாங்கோ என்று இதழ் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
அப்பொழுது பின்னால் இருந்து விசில் சத்தம் கேட்க ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தாள். அவள்
அவள்? இந்த அவள்?
சாட்ச்சாத் மீனாட்சி தான்! ருத்ரனுக்கு எல்லை இல்லா சிரிப்பு! ஜம்முனு வந்துட்டாலே! சொன்ன மாதிரியே மாமி! வந்துட்டா! ம்ம் மடிசார் கட்டின்டு வந்திருக்கலாம்! இன்னும் சூப்பரா இருக்கும்! என்று சொன்னவன். தலையில் அடித்துக் கொண்டான் . அவளைப் போலவே அவளுடைய பாசையை பேசியதால் , இன்னொரு மறை தலையில் அடித்துக் கொண்டான். அப்படியே அவன் சென்று உடைமாற்றிக்கொண்டு குங்குமநிற குங்கும வண்ண சில்க் கலந்த ஒரு சட்டையில் அதற்கு ஏற்றது போல் பட்டு வேஷ்டியில் ஜம்மென கொஞ்சமே வளர்ந்த தாடியை தேய்த்துக்கொண்டு நெற்றியில் கொஞ்சம் சந்தனம் முடியை கலைத்துவிட்டு கைகளை உதறிக் கொண்டு வந்தான்.
அவனுடைய கழுத்தில் ஒரு மீன் துள்ளிக் கொண்டிருந்தது. அது சாட்சாத் மீனாட்சியை நினைத்து அவன் போட்டிருக்கும் ஒரு மீன் டாலர்! அழகாக இருந்தான்! பார்ப்பதற்கும் சரி உச்சி கொட்டுவதற்கும் சரி! அந்த அளவுக்கு அழகு! எப்படி இருந்தான்? கண்ணன் மாதிரி கிடையாது! ருத்ரன் ருத்ரன் தான்!
இன்னொரு பக்கம் மீனாட்சி அழைத்துச் சென்று இதழினி உடை அணிந்து கொண்டு வந்த பின் அவளை திருப்பி உட்காரு வைத்தாள். நீங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்! நானே பண்ணிக்கிறேன் என்று இதழ் சொல்ல..
பரவால்ல கா நான் பண்ணி விடுறேன் என்று மீனாட்சி அவளை அமர வைத்து அழகாக பின்னலிட்டு “உங்களுக்கு முடி ரொம்ப ரொம்ப அடர்த்தியா இருக்கு ஒவ்வொரு முடியும் நீங்க என்னக் கா யூஸ் பண்றீங்கோ? நானு வதனத்துக்கு குளியல் பொடி, தலைக்கு சீயக்காய் வெந்தயம், செம்பருத்தி, பாலு என்று மீனாட்சி லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்க..
அவள் சிரித்துக்கொண்டே இதெல்லாம் எங்க அம்மா தான் கேட்கணும்! அவங்க தன் ரெடி பண்ணுவாங்க! எனக்கு இத பத்தி தெரியாதுங்க என்று இதழ் கூற..
சரி ஓகே வாங்கோ நீங்க இப்ப ரெடியாயிட்டீங்க பொட்டு வச்சுக்கோங்க என்று வைத்துவிட்டு ஒரு பக்கம் அவளை தலை முதல் கால் வரை பார்த்தாள்.
அழகா இருக்கீங்க! முருகா நானே கண்ணு வச்சுட்டென்.
இட்ஸ் ஓகே தேங்க்ஸ்ங்க என்று இதழ் நடக்க..
இருங்க உங்களை கொண்டு போய் நான் அவர் பக்கத்திலேயே விட்டுட்டு வந்துடறேன்! என்று மீனாட்சி அழைத்துச் சென்ற பக்கம் நடந்தார்கள்.
இதழ், நீங்க நினைக்கிற மாதிரி நானும் அவரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் எல்லாம் கிடையாது!
அச்சச்சோ முருகா முருகா! உங்கள நான் அப்படி நினைக்கவே இல்லையே! நீங்க அவரை விட ரொம்ப பெரிய பொண்ணா தெரியுறீங்கோ! என்று மீனாட்சி சொல்ல..
என்ன பெரிய பெண்ணா? என்று புருவத்தை தூக்கிக்கொண்டு இதழ் பார்த்தாள்.
சாரிக்கா இது தப்பா சொல்லிட்டேனா! என்று மீனாட்சி சொல்ல
இதழ் சிரித்துக்கொண்டே அப்படி இல்லைங்க! எனக்கும் அவனுக்கும் ஒரு நாலு மாசம் தான் வித்தியாசம்! நீங்க சொல்ற மாதிரி அவன விட நான் பெரிய பொண்ணு தான்! என்று இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வந்தார்கள்.
சரிங்கக்கா நீங்க பாருங்க நான் வரேன் என்று அவள் அந்த இடத்தை விட்டு செல்ல..
ருத்ரனுக்கு எப்பொழுதடா தன் இணையை சந்தித்து கைகள் கோர்த்து சாமி கும்பிட்டு சீக்கிரம் கல்யாணம் முடிந்து தன் இணையுடன் இங்கு வருவோம்? என்று ஒரு வேண்டுதலை வைக்கலாம் என்று துள்ளித் திரிந்து கொண்டிருந்தான்.
இன்னொரு பக்கம் இதழ் அவனுடைய செயலியை பார்த்து என்னடா சுத்தியும் அப்படி தேடிட்டு இருக்க? ஆமா இவ்ளோ நேரம் அப்படி வசனம் பேசுன? இப்போ நான் உன் கண்ணு முன்னாடி நான் ரெடி ஆயிட்டேன்! எப்படி இருக்கேன்? என்று கேட்க
ஏதோ இருக்க என்று ருத்ரன் வேறு எங்கோ தேடிக் கொண்டே கூறினான்.
ஏதோ இருக்கேனா? போடா பிராடு என்று இருவரும் சாமியை தரிசனம் செய்ய சென்றார்கள் அந்த இடத்தில் வெயில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க இதழினிக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.
என்ன இவ்வளவு வெயில் அடிக்குது தீரா? என்னால முடியலடா என்று இதழ் சொல்ல..
அப்படின்னா உன் முதுவுக்கு பின்னாடி ஒரு பேன் கட்டி விட்டுட்டுமா? போடி பேசாமல் என்று சொல்ல ..
அட அந்த பொண்ணு இப்ப பேசிட்டு போனாலே அவ கிட்ட சொல்லி இருந்தா நம்ம நேரா தரிசனமே பார்த்திருக்கலாம் என்று இதழ் சொல்ல
என்ன சொல்ற என்று ருத்ரன் கேட்டான் .
ஆமா அந்த பொண்ணு பிராமணர்னு நினைக்கிறேன். இங்கதான் ( கோவில்)! எங்க பாத்தாலும் அவங்களுக்கு தானே கொடுக்கிறாங்க! அப்படியே அந்த பொண்ணு பின்னாடியே போனோம்னா நம்மள உள்ள விட்டுடுவாங்கல்ல என்று இதழ் கிண்டலாக சொல்ல..
அப்படி எல்லாம் இல்ல இந்த சமூகத்துல எல்லாரும் ஒன்னு தான்! சாமி என சிறப்பு கட்டணத்துல போய் பாக்க போறது இல்ல!மக்கள் ஒருசேர போய் பாக்குறாங்க பாத்தியா இலவச கட்டணத்தில் தான் சாமியை போய் பார்க்கிறான்.
வா என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்
இதழ் உதட்டை பிதுக்கி கொண்டு என்னடா தீரா சொல்ற? அதுக்கு ரொம்ப நேரம் ஆகும்! க்யூவ பாரு! இதுல நான் வந்தேன்! மறுபடி இன்னொரு தடவை வியர்வைல குளிச்ச மாதிரி ஆயிருவேண்டா! என்று சொல்ல
அப்படி எல்லாம் இல்ல கடவுள் கடவுள நம்ம நேர்வழியில் தான் போய் பாக்கணும்! என ருத்ரன் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றான்.
ஆனால் மீனாட்சியும் சிறப்பு கட்டணத்தில் கட்டிக்கொண்டு காத்திருக்க..
அந்த பக்கம் ருத்ரன் நின்று கொண்டிருந்தான்.
அப்போ இவரு சிறப்பு கட்டணத்துல வரலையா என்று தோன்ற என்ன பண்றது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
ருத்ரன் மீனாட்சியை பார்த்து முறைக்க..
இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல அப்பப்போ என் ஆத்துக்காரருக்கு மூஞ்சி மட்டும் ஒரு பக்கமா இழுத்துன்றது! மூக்கு அப்படியே கோவப்பழம் போல சிவந்து போடுது! என்று நினைத்துக் கொண்டே அவள் இலவச கட்டணத்துக்குள் புகுந்தாள்.
அவள் மட்டுமா வந்திருந்தாள்.அவளது உறவினர்கள் அனைவரும் தான் வந்திருந்தார்கள். அவர்களெல்லாம் முன்னே சென்று விட்டார்கள்.
மீனாட்சி தான் அதையும் இதையும் சாக்கு சொல்லி பின்னால் வந்து கொண்டிருந்தாள்.
ஓகே இப்போஒரு ஹீரோ தான் இருக்கிறான் இரண்டு ஹீரோயின் இருக்காங்க! இன்னொரு ஹீரோ எங்க?
அதோ சைத்ரேஷ் வந்துட்டான். அவன் சிறப்பு கட்டணமா? இல்ல இலவச கட்டணமா?
சைத்ரேஸ் சிறப்பு கட்டணத்தில் தான் வந்தான் அவன் இங்கு தான் ஒரு செலிபிரிட்டி என்றும் பெரிய வீட்டுப் பையன் என்றும் சிறப்பு கட்டணத்தில் பணத்தை செலுத்தி விட்டு உள்ளே நுழைந்தான்.
சிறப்பு கட்டண வழியும் இலவச கட்டண வழியும் இணையும் இடம் ஒரு இடம் இருக்கிறது.
அந்த இடத்தில்தான் இதழினி சைத்ரேஸ்வரன் மீட்டிங் அதனால பாக்கலாம் எனக்கு ரொம்ப ரொம்ப தூக்கம் வருது இதுக்கு மேல எழுதுனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகமாயிடும் அதனால நான் நாளைக்கு முடிஞ்சா நேரமே போடறேன் வெயிட் பண்ணி எல்லாரும் படிங்க டாட்டா
தொடரும்…
EPISODE 79
இதழ் முறைத்து கொண்டே வியர்வை வழியும் முகத்துடன் ருத்ரனை பார்க்க.. இன்னொரு பக்கம் மீனாட்சி கூட வியர்வை வழியும் முகத்துடன் பார்த்தாள்.
என்ன ரெண்டு பேரும் நம்மள முறைக்கிராலுங்க! என்ன ஆச்சு? என கைத்தான் ஃபேன் ( விசிறியை) விசிறி கொண்டே இருவரையும் லுக்கு விட்டான்.
என்னா லுக்கு குக்கு!. என ருத்ரன் இதழினியை பார்க்க..
அடேய் என இதழ் அவனை எங்கு அடிக்க முடியுமோ அங்கெல்லாம் கிள்ளி அடித்தாள்.
என்னோட கணக்கிலும் நாலு சாத்துங்கோ! மீனாட்சி வாய்க்குள் முனக..
ருத்ரன் இரும்பி கொண்டே ஹே ஆள் ஆளுக்கு திட்டி அடிக்காதீங்க டி! வேணும்னா மாங்கா வாங்கி தரேன்!
தீரா! என இதழ் காதை திருக..
மீனாட்சி நான்கு பேருக்கு பின்னால் நின்றவள் மூக்கு சிவக்க அவனை முறைத்தாள்.
க்கும்! ஹான் மாவடு வாங்கி தரேன்! இல்லனா மாங்கா பத்தை ஓகேவா என கண் அடித்தான்.
இதழ் அவனிடம் விசிறி கொடுத்து ஒழுங்கா எனக்கு வீசு! முடியல தீரா! என அவள் கைகளை எடுத்து கண்களின் மேல் வைத்து கொண்டாள்.
சரி விடு! என வீசினான். ருத்ரன்.
இன்னிக்கின்னு பார்த்து வெயில் ஓவரா இருக்கே! என அவள் நிற்க..
அட்லீஸ்ட் தண்ணி பழம் வாங்கி தரவா?
வேணாம்! என இதழ் திரும்ப..
கொய்யா என மீனாட்சியின் உதட்டை பார்த்தான்.
அவள் உதடு சுழித்து முறைத்து தள்ள..
அட போங்கடி என திரும்பி கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக வரிசை முன்னேற ஆரம்பித்தது.
நான்கு பேருக்கு பின்னால் இருந்த மீனாட்சி இப்பொழுது இதழ் பக்கத்தில் வர..
இருவரும் ஸ்னேகமாக சிரித்து கொண்டார்கள்.
கோவிலின் உள்ளே செல்லும் முன் மீனாட்சி ருத்ரன பார்க்க.
ஹே லிப்ஸ் அந்த பொண்ணு என்னை குறு கிறுண்ணு பார்க்குது! I feel shy என ருத்ரன் குறும்புடன் சொல்லி விட்டு வேறு புறம் திரும்பி கொள்ள..
அக்கா! உள்ளே போக போறோம்! அதனால் மேல் சட்டை கழட்டி இடையில் கட்டிக்கணும்! அங்கே பாருங்கோ! அதை தான் உங்க அண்ணா கிட்ட சொல்ல வந்தேன்! என மீனாட்சி முடிக்க..
அவள் அண்ணன் என்று சொல்லியதும் புன்னகையுடன் இதழ் மீனாட்சியை பார்த்து இப்போ என்ன சொன்ன? அவன் எனக்கு அண்ணன் மாதிரி தெரியறானா? எனக்கு அவன் அந்த மாதிரி தெரியுறான் தானே! என இரண்டு மூன்று முற கேட்க மீனாட்சி சிரித்துக்கொண்டே ஆமா என்று கூறினாள்.
உடனே திடுக்கிட்ட ருத்ரன் “ஹே என்ன பேசுறீங்க? இது கல்லாட்டம்! நான் எல்லாம் ஒத்துக்க மாட்டேன்! எனக்கு முன்னாடி இவ தான் பிறந்தாள்! இவ என்னோட அக்கா! ”என்று கடுமையுடன் கூறினான்.
டேய் போடா! இந்த பொண்ணே சொல்லிடுச்சு! நீ எனக்கு அண்ணா! இனிமே உன்ன அண்ணா சொல்லப் போறேன்! என்று இதழ் சொல்ல..
ஏற்கனவே உன் அண்ணன் தம்பி லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு இதுல நானுமா காந்தா! என்னால முடியல டி என்று ருத்ரன் சொல்ல..
மீனாட்சி பற்களே தெரியாமல் அழகாக சிரித்தாள்.
ருத்ரன் பார்வை அவளின் மீது ஒரு முறை பட்டு திரும்பியது. மாம்பழ வண்ண தாவணி பாவாடையில் மெருன் கலர் பார்டரில், அவளுடைய ப்ளவுஸ் மெரூன் கலர், அதாவது ருத்ரன் அணிந்திருந்த சட்டை கலரில் அவளுடைய பார்டர் இருந்தது. சொல்ல போனால் சும்மா நச்சுனு இருந்தது. ரெண்டு பேரும் போகும் போது பார்த்தால் அவ்வளவு அழகா ஒரு ஓவியம் நடந்து வர மாதிரி இருக்கும்! ருத்ரனுடைய ஆளுமையும் , மீனாட்சியோட பெண்மையும் அவ்வளவு பார்ப்பதற்கே இனிமையாக இருக்கும்!
இதழ் அதை கவனிக்காமல் சிரித்துக்கொண்டே அந்த பொண்ணு சொல்றது தான் உண்மை ருத்ரா! இனி நீ எனக்கு அண்ணா! தீரா அண்ணா என்று அவள் கூறு கிண்டல் செய்தாள்.
சரி போதும் போதும் முதல்ல சட்டையை கழட்டுடா! என்று சொல்ல..
எனக்கு சையா இருக்கு டி என்று ருத்ரன் கூறினான்.
அதெல்லாம் சரியா போயிடும் கழட்டு என்று இதழ் சொல்ல..
அப்போ நீங்க எல்லாம்? என ருத்ரன் அவர்கள் இருவரையும் பார்த்து கேட்க..
அங்கிருக்கும் அனைவரும் ருத்ரன் மீது பார்வையை திருப்பினார்கள்.
கொஞ்சம் ஓவரா பேசிட்டோம் போலயே என சமாளித்து கொண்டே நின்றான்.
ருத்ரன் திரும்பிக் கொள்ள நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க! அவன் கொஞ்சம் விளையாட்டு பையன்! அப்படித்தான் என்று இதழ் ருத்ரனுக்காக சப்போர்ட் செய்ய..
மீனாட்சி சிரித்துக்கொண்டே தெரியும் என்று கூறினாள்.
இதழ் ஒன்றும் புரியாமல் புருவத்தை சுருக்கி கொண்டு மீனாட்சியை பார்க்க..
அது தான் காலையில் இருந்து பார்க்கிறேனே! உங்கள அவங்க படுத்தி எடுக்குறாங்க! என்று மீனாட்சி சமாளித்தாள்.
மீனாட்சி இதழ் இருவரும் பேசிக்கொண்டே வர அதேபோல் ருத்ரன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு வந்தான்.
ருத்ரன் மனதில் எப்படியோ இதழ் கிட்ட அவ குளோஸ் ஆயிட்டா! அப்படியே சத்யதேவ் மாமா கிட்டயும் இண்ட்ரோ கொடுத்து விடனும், இதழ் கிட்ட சரியா பொருந்திப் போறா! சோ மத்த எல்லாரையும் ஈஸியா மாத்திடலாம்! சத்தியதேவ் மாமா கிட்ட இன்றோ கொடுத்ததுக்கு அப்பறம், அவள என்னோட விவி பேபி கிட்ட இன்றோ கொடுக்கணும்! என்று நினைத்துக் கொண்டான்.
அந்த இடம் மிகவும் கூட்டமாக இருந்தது. இலவசமாக போறவங்களும் சிறப்பு வழி கட்டணத்தில் சாமி தரிசனம் செய்ய வந்தவங்களும் ஒன்றாக சேரும் இடம் வந்தது.
ஹே லிப்ஸ்!
ம்ம் தீரா என மூச்சை பிடித்து கொண்டு கூறினாள்.
இந்த இடத்துல சப்போஸ் நாம ரெண்டு பேரும் மிஸ் ஆயிட்டோம்னா! சாமிய கும்பிட்டு வெளியே வந்ததும் மீட் பண்ணிக்கலாம் ! மறக்காம ஞாபகத்துல வச்சுகோ! கரெக்டா நினைச்சுக்கோ ஒரு ரெண்டு பேரும் காமன் ஸ்பாட்டில் மீட் பண்ணலாம்! என்று ருத்ரன் சொல்ல..
அதற்குள் அந்த இடமே முட்டி மோதி இடிக்க ஆரம்பித்தார்கள்.
மூச்சே விட முடியலடா தீரா என்று இதழ் சொல்ல…
சரி கைய பிடி!.. என அவன் நீட்ட..
வேணாம் நான் பார்த்து கொள்கிறேன். என இதழ் சொல்லி கொண்டிருக்க
அங்கே பக்தர்கள் சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா! தண்டாயுதபாணிக்கு அரோகரா! ஓம் சரவண பவனுக்கு அரோகரா என கத்தி கொண்டே சென்றார்கள்.
அதற்குள் இன்னொரு பக்கம் இருந்து ஆட்கள் வர அவர்கள் கலந்து போனார்கள் பெண்கள் பாதி பக்கமும் ஆண்கள் என கலந்து கலந்து வரவும் நான் போன் பண்றேன் என இருவரும் பிரிந்தார்கள்.
பிரிந்தார்கள் என்று சொல்வதை விட பிரித்தான். ருத்ரன். ஆம் ருத்ரன் நேராக மீனாட்சியின் கையை இறுக்கமாக பிடித்து அவளை தன்னுடன் இழுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் சென்று விட்டான்.
இதழ் முட்டி மோதி மூச்சுவிட்டு கொண்டே உள்ளே மெதுவாக நுழைந்தாள்.
அவளின் இரண்டு பக்கமும் குருக்கள் பூஜை செய்யணுமா? சாமிக்கு சிறப்பு மாலை? சாமி மாலை சாத்தனுமா? பரிகாரம்! வேணுமா இப்படி ஒவ்வொருத்தராக கேட்டுக் கொண்டே வர..
இதழ் வேணாம் என தலையாட்டிக்கொண்டே வந்தாள். கூட்ட நெரிசலில் ஒரு இடத்தில் அனைவரும் நின்றார்கள். அந்த நேரம் வேகமாக நடக்க திடீரென்று அவள் அடுத்து உள்ளே செல்லும் வழியில் ஒரு பக்கம் அந்த உண்டியலில் அவளுடைய பின்னால் இருக்கும் அங்கு கட்டப்பட்டிருந்த கம்பி உண்டியலில் சுற்றப்பட்டு இருந்த கம்பி அவளின் உடையில் பட்டு பின்னால் இருக்கும் பிளவுஸ் கொஞ்சம் கிழிந்து போக..
அச்சோ! முருகா! என அந்த சத்தத்தை உன்னிப்பாக கவனித்தாள்.
அதற்கு மேல் இதழ் நகரவே இல்லை. அதே இடத்தில் அப்படியே நிற்க..
என்னம்மா அப்படியே நிக்கிறீங்க? போங்க! உள்ள போங்க! என்று அங்கு இதழுக்கு பின்னால் இருக்கும் பக்தர்கள் அனைவரும் சொல்ல..
இதழ் தயக்கத்துடன் முன்னாள் நடந்தாள். அவளது முந்தியை விரித்து மறைக்க முயற்சி செய்து கொண்டே என்ன பண்றது? என்று இதழ் கண்களை மூடிக்கொண்டு முருகா! இப்படியா நடக்கணும்? நான் எந்த வித சஞ்சலமான எண்ணத்தோடையும் கோவிலுக்கு வரலையே! இந்த இடத்துல என்னோட டிரஸ் கிழிஞ்சு போச்சு! என்று அவள் கண்களில் நீர் வர..
அவளின் முன் நீண்ட கைகள் வர சரியாக இருந்தது.
இந்தாங்க இதை வாங்கிக்கோங்க என்று ஒரு ஆண் குரல்..
அதுவும் பழக்கப்பட்ட குரல்! சட்டென இதழ் திரும்பி பார்க்க..
ப்ச் பஸ்ட் வாங்கி இத போட்டுக்கோங்க என்று கொடுக்க..
வேகமாக அந்த சட்டையை வாங்கியவள். அவளுடைய உடைக்குமேல் போட்டுக் கொண்டாள்.
ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லிக் கொண்டே அவள் திரும்பி பார்க்க..
இருவரது பார்வையும் ஒரே நேர்கோட்டில் மோதிக்கொண்டது. அது சைத்ரேஷ்வரன்! அவளை பார்த்ததும் அவன் கண்கள் ஒரு நிமிடம் மின்னி விரிந்தது.
இதழினியின் கண்கள் அப்பட்டமாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. உடனே சைத்து கொஞ்சம் கவலை ஒரு நிமிடம் பரவியது.
அதுக்குள் என்னாச்சு சீக்கிரம் நகருங்க! நிக்காதீங்க! உங்களை மாதிரி தான் பின்னாடி நிறைய பக்தர்கள் நிக்கிராங்க என காவலர்கள், குருக்கள் சொல்ல .
இதழ் தன்னிலைக்கு வந்து நேராக நடக்க ஆரம்பித்தாள்.
சைத்ரேஷ் எதுவும் பேச வில்லை. ஆனால் முருகனுக்கும் தன் அன்னைக்கும் நன்றியை தெரிவித்து கொண்டான். யாரை நினைத்து மன சஞ்சலத்துடன் சுற்றி கொண்டிருந்தானோ! அவளையே கடவுள் சந்நிதானத்தில் வைத்து பார்த்து விட்டத்தில் மட்டற்ற மகிழ்ச்சி! அவளை தேடி சைத்து செல்ல வில்லை. இதழ் கூட அவனை தேடி செல்ல வில்லை. இது எதெட்சையாக நடந்த ஒரு சந்திப்பு!
சஷ்டியை நோக்க சரவண பவனா என துதி பாடி கொண்டே மெல்லமாக முணுமுணுத்து கொண்டே சென்றான்.
கடவுள் இன்னிக்கி என்ன கோலத்தில் இருப்பாரு. எனக்கு ராஜ அலங்காரத்தில் பார்த்தால் ரொம்ப சிறப்பு! கல்யாண கோலத்தில் பார்த்தால் இன்னும் சிறப்பு என சொல்லி கொண்டே பக்தர்கள் வந்தார்கள்.
இதழ் பார்வை அவ்வப்பொழுது அரணாக வருபவன் மீது பார்வை ஓர கண்ணில் தொட்டு மீண்டது.
சைத்து கூட அவளின் இதழ் மச்சத்தையும், அவளின் இந்த தாவணி பாவாடை தரிசனத்தில் மெய் சிலிர்த்து போனான். சபலம் இல்லாத பார்வை! அவளை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதி பரவியதே! அதை வார்த்தைகளில் விவரிக்க முடிய வில்லை.
உள்ளுக்குள் மிகவும் வெக்கையாக இருக்க அவளின் விரித்து விட்ட கூந்தல் இன்னும் தொல்லை செய்தது. அவள் வியர்த்து வடிந்த முகத்துடன் கையை கூப்பி கொண்டே நடந்தாள். அவளின் நெற்றியில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் பொட்டு வியர்வையில் எங்கோ கீழே விழுந்தது.
க்கும்.. முருகா!. என்றான் சைத்து..
அந்த கரு விழியை உருட்டி அவனை பார்த்தாள். இதழ் ஹான் இல்ல துவாரகா!
முடி அதிகமா இருக்குன்னு தெரியுது! அதுக்குன்னு இப்படி மொத்தமா விரிச்சு போட்டு வியர்வையில் புழுங்கி வாடி வதங்க யார் சொன்னது? அழகா பின்னலிட்டு பூவை ( தூரிகா) பூ வச்சா நல்லாருக்கும் முருகா! இந்த பாவை (தூறிகா) என மறைமுகமாக கூறினான். சைத்து!
சைத்து தன்னை தான் சொல்கிறான்? என தெரிந்து கொண்டவள் ஒரு முறை முறைத்து விட்டு முருகா! முருகா! எனக்கு தெரியும் முருகா! அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும் முருகா! என சொல்லி கொண்டே நடந்தாள்.
அவள் கோபமாக இருந்தாலும் கேட்டதற்கு பதில் வந்ததே மிகவும் சந்தோசமாக இருக்க.. உள்ளே நுழைந்தார்கள்.
சைத்ரேஷ் அவளின் முன்னால் நடக்க அவளின் பாதங்கள் தானாக அவன் பின் சென்றது. வரிசையாக கருவறையில் இருக்கும் முருகன் திருமண கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி கொடுத்தார். அதை காண இரண்டு கண்கள் போதாது. ஒரு சில நொடிகள் தான் ஆனால் இதழுக்கு தான் தெரிய வில்லை. எக்கி எக்கி பார்க்க..
அங்கிருக்கும் குருக்கள் ம்ம் சீக்கிரம் போங்கோ போங்கோ என தள்ள..
அவள் வருத்தத்துடன் செல்ல..
இத்தனை அவசரம் காட்ட வேணாம்! இப்படி சிடுசிடுப்பா முகத்தை காட்டாதேஷ்க எவ்ளோ தூரத்தில் இருந்து பார்க்க வரோம்! பெண்களை முன்னால் விடுங்க! என ஆளுமையாக சைத்து சொல்ல..
அவனுடைய கம்பீர பேச்சில் பெரிய இடத்து பையன் என நினைத்து அவர்கள் அமைதி ஆகிட இதழ் சிரிப்புடன் எக்கி வேகமாக முருகனை மனதில் நிறைத்து கொண்டு திரு நீரு, குங்குமம் வாங்கி கொண்டு நகர்ந்தாள். அடுத்தடுத்து ஒவ்வொரு இடத்திலும் கடவுளை மனதில் நிறைத்து கொண்டு நடந்து கொண்டே வந்தவள் கண்கள் எதேட்சையாக பின்னால் பார்த்தது.
அந்த பார்வை! சைத்ரேஷ் சாந்த முகத்தில் வாயில் எதோ முணுமுணுத்து கொண்டே வந்தான். நம்ம தப்பா புரிஞ்சுகிட்டோமா? என அவள் நினைக்க..
டிங் டிங் என கடவுளுக்கு மணி ஓசை தொடர்ந்து இசைக்க பட்டது. தீபாராதனை காட்ட பட்டது.
அப்போ இவன் அவன் இல்லையோ! என நினைத்து குழப்பம் அடைந்து கொண்டே நடந்தாள் இதழ்.
சைத்ரேஷ் சன்னதியில் வரும் போது கந்த சஸ்டி கவசம் மொத்தத்தையும் ஸ்லோகமாக பாடி முடித்திருந்தான்..
கடவுளை பார்க்க வந்தால் கலகம் தீர்ந்து வழி பிறக்கும் என சொல்வார்கள். ஆனால் அவளுக்கு இப்போது தான் குழப்பமே ஆரம்பித்தது.
இதழ் தன் தலையை அடித்து கொண்டு அவன் வழியில் இருந்து பிரிந்தவள். ஒவ்வொரு இடமாக சாமியை கும்பிட்டு கொண்டே வந்தாள்.
சைத்ரேஷ் அவள் பக்கம் திரும்பவே இல்லை. அவன் எந்த குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக சாமி கும்பிட்டான்.
ஆனால் இதழ் மனதில் சைத்ரேஷ் அன்று சொன்ன வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஒலித்தது.
“நான் நல்லவன்னு உனக்கு எப்போ தோணுதோ! அப்போ என்னை தேடி வா! நான் யாருன்னு உனக்கு தெரியும்!” என்ற வார்த்தை காதில் கேட்டு கொண்டே இருந்தது.
நகத்தை கடித்து கொண்டே அவள் நின்றாள்.
கோவிலில் நகம் கடிப்பது தப்பு முருகா! என அவளின் அருகில் சொல்லி விட்டு சென்றான் சைத்ரேஷ்.
இதழ் அதன் பின் தன்னை சரி செய்து கொண்டு அங்கிருக்கும் அனைத்து திரு உருவங்களையும் மனதால் உருகி கும்பிட ஆரம்பித்தாள்.
அவளின் முதல் கோரிக்கை. சாமி எல்லாரும் நல்லாருக்கணும். சக்தி அண்ணா அம்மா கூட பேசணும்! வீட்டுக்கு வரனும், ஒட்டுக்க்கா இருக்கணும்! எனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு காட்டு சாமி என சொல்லி கொண்டே வேண்டி சென்றாள்.
ஒரு வழியாக திருப்தியுடன் அந்த மொத்த இடத்திலும் நிம்மதி மன நிலையுடன் கடவுளை கும்பிட்டவள். வெளியே செல்லும் வழி வர.. சென்றாள்.
இன்னிக்கி பிரசாதம் சக்கரை பொங்கல் ஒரு குட்டி கிண்ணத்தில் கொடுக்க பட்டது.
இதழ் சிரித்து கொண்டே வாங்கி கொண்டு வெளியே சென்றாள். தனக்கு பின்னால் சைத்து வருகிறானா? என்று பார்த்தாள்.
எங்கே போனான்? என பொங்கலை அந்த பிஞ்சு விரலில் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ருசித்து கொண்டே தேடினாள். காணோம்! எங்கே?
அந்த கடலின் அலைகளை ரசித்து கொண்டே கொஞ்சம் தூரத்தில் ஒரு உருவம் அவளுக்கு முன்பே வந்து நின்றது. அந்த பூவைக்கு தெரிய வில்லை.
எங்கே? என அவள் வாயில் கதவை பார்த்து கொண்டிருக்க..
க்கும் யாரை தேடுரீங்க? என அதே மென்மையான குரல்!
வெடுக்கென இடது பக்கம் திரும்பி பார்க்க அங்கே அளவான உடல் கட்டுடன் பனியன் மட்டும் அணிந்து கொண்டு சட்டை இல்லாமல் அவள் அருகில் வந்து நின்றான் சைத்து!
ந! நானா? நான் யாரை தேட போறேன்! உங்களுக்கு என்ன வேணும்? என முறைத்து கொண்டே கேட்டாள்.
சைத்ரேஷ் அந்த மென்மை குரல் மாறாமல், உங்க ட்ரெஸ் change பண்ணிட்டு என்னோட சேர்ட்டை கொடுத்தால் நல்லாருக்கும்! அது தான்! என நின்றான்.
சைத்ரேஷ் எப்படி இருந்தான்? சொல்ல மறந்து போயிட்டேன்.
புது மாப்பிள்ளை போல பட்டு வேஷ்டி சட்டையில் கழுத்தில் ஒரு தங்க செயின் அதில் மூன்று SI என எழுத்துக்கள் இதய வடிவில் இருந்தது. பெரிய பாடி பில்டர் போல இல்லை ஆனால் அழகாக இருந்தான். அளவான மீசை, திருத்தப்பட்ட தலை முடி, தாடி, ஒரு கையில் வாட்ச், இன்னொரு கையில் பிளாட்டினம் காப்பு! அழகன் தான்! அன்பான வில்லன்!; அழகான கள்ளன்!
மேடம்! என அவன் மீண்டும் அழைக்க..
என்ன? என தன்னிலைக்கு வந்தாள். .
மேடம் என்னோட சட்டை!..
பெரிய சட்டை! இப்போ இப்போவே கொடுத்து விடுகிறேன். என அவள் கழட்ட செல்ல..
மேடம்! உங்க ட்ரெஸ் கொஞ்சம்.. சரி வேணாம் நீங்களே சட்டைய வச்சுக்கோங்க! என சைத்ரேஷ் நடக்க..
நில்லுங்க ஹலோ மிஸ்டர் என அவனுக்கு அருகில் சென்றவள். ஒரே வாயில் அந்த சக்கரை பொங்கலை வாயில் போட்டு கொண்டு தொண்ணையை அருகில் இருந்த குப்பை கூடையில் போட்டவள் வேகமாக இரு கன்னத்திலும் அடக்கி கொண்டே கொஞ்சம் என் கூட வர முடியுமா? நான் ஸ்பேர் ட்ரெஸ் எடுத்துட்டு வந்திருக்கேன். உங்க சட்டையை உடனே கொடுக்கிறேன். என அவள் முன்னால் நடக்க..
சரி ஓகே என தோலை குலுக்கி கொண்டு அவளின் பின்னால் நடந்தான்.
இதழ் நேராக அவள் உடமைகள் இருக்கும் இடத்துக்கு சென்று டோக்கன் கொடுத்து வாங்கி கொண்டு காலையில் மீனாட்சி உதவி செய்த இடத்துக்கு அவனை அழைத்து சென்றாள்.
கொஞ்ச நேரம் இருங்க என உள்ளே சென்றவள். வேகமாக உள்ளே சென்று ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள். அவள் நடந்து வரும் போது நர்த்தனம் ஆடுவது போல இருந்தது சைத்ரேஷ்வரன் கண்களுக்கு! அடடா என்ன அழகு! அழகி! நர்த்தகி! என முனுமுணுத்தான்.
🩷 வண்ண நிறத்தில் ஒரு புடவையை கட்டி கொண்டு கூந்தலை ஒரு பக்கமாக போட்டு கொண்டே வேகமாக அவணுடைய சட்டையை ஒரு கையில் தொங்க விட்ட படி நடந்து வந்தாள். அவனுக்கு துவாரகா நமக்கு தூறிகா!
ம்ம் பெரிய சட்டையாம்! சட்டை! என வாயில் முனுமுனுத்து கொண்டே அவனிடம் நீட்டினாள்.
ப்பா! என கண்களில் குறும்பு மின்ன அவளிடம் இருந்து சட்டையை வாங்கி கொண்டான். அவன் கண்களில் காதல், ரசனை மட்டுமே இருந்தது. மற்ற படி சபல எண்ணம் இல்லை! மனம் முழுவதும் சந்தோச ரேகைகள் இழையோடியது.
அவள் திரும்ப..
“என் சட்டையை போட்டதுக்கு நீங்க வேனா தேங்க்ஸ் சொல்லாம இருக்கலாம் ஆனால் சட்டையை திருப்பி கொடுத்து என்னோட மானத்தை காப்பாதினதுக்கு தேங்க்ஸ் மேடம்!” என சைத்து கூறினான்.
அந்த மச்ச உதட்டை கடித்து கண்களை ஒரு மார்க்கமாக மூடியவள். அச்சோ தேங்க்ஸ் சொல்லவே இல்லையே! நம்ம மானத்தை காப்பாத்தி இருக்கான்! என ஒரு பக்கம் தோன்றினாலும், இப்போ அதை குத்தி காமிச்சு பேசிட்டு போறான். இவனுக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது. என நினைத்து கொண்டு கைகளை கட்டி கொண்டே அவன் பக்கம் திரும்பினாள்.
மேடம்!.. என சைத்து அழைக்க
வேற எதுவும் சொல்லனுமா? என இதழ் புருவம் தூக்கி அவனை பார்த்தாள்.
கீழ் உதட்டை பிதிக்கி ஒன்னும் இல்ல மேடம் என சைத்து நடக்க
இதழ் உதட்டில் மெல்லிய புன்னகை! அவன் யார் என்பதை மறந்து உள்ளிருந்து வந்த புன்னகை அது!
சைத்ரேஸ் தலையை கோதி விட்ட படி கோவில் இருக்கும் திசை பக்கம் நடந்தான்.
அந்த நேரம் இதழுக்கு போன் வந்தது.
ஹே எங்கே டி இருக்க?
நான் ட்ரெஸ் change பண்ண வந்தேன் சொல்லு டா! இப்போ எங்கே இருக்க? பசிக்குது தீரா! என இதழ் சொல்ல…
நான் ஆல்ரெடி அன்னதானத்தில் என்னோட பங்களிப்பை கொடுக்க ஆரம்பிச்சுட்டேன். நீ!
அடேய் இரு டா வரேன்! என இதழ் வேகமாக உள்ளே சென்றவள். அங்கு தொங்கஇய கண்ணாடியை ஒரு நிமிடம் பார்க்க..
முடிய பின்னலிட்டு பூ வச்சா நல்லாருக்கும் என சைத்து சொன்னது காதில் ஒலிக்க..
அவளின் கூந்தலில் சிடுக்கு எடுக்க ஆரம்பித்தாள். கூடவே மனதில் உள்ள சிடுக்கும் சேர்த்து எடுத்தாள்.
அவள் மனதில் ஒரு பெண்ணின் மானத்தை காக்கும் இவன் கண்டிப்பாக தவறானவன் இல்லை என்று ஆணி தனமாக நம்பினாள். .
அப்போ நம்மிடம் பேசியது என மூளை கேட்க..
அது வேறு எவனோ? இப்போ கண்ணு முன்னாடி நடப்பதை மட்டும் நம்புவோம் என நினைத்து கொண்டு தன்னை அலங்கரித்து கொண்டாள்.
சைத்ரேஷ் அவளை பார்த்து விட்டு நடந்து வரும் போது வேகமாக பாதுகாவலருக்கு போன் செய்தவன். 🩷 வண்ண சில்க் சேர்ட் இப்போ உடனே வேணும்! உடனே என அதிகாரத்துடன் சொல்லி விட்டு நடந்து சென்றான் மெதுவாக..
எப்படி? எப்படி இப்போ உடனே கிடைக்கும் சார்! என அவர்கள் கெஞ்ச..
வேணும்! என சொல்லி முடித்து விட்டான்.
இரண்டாம் சந்திப்புக்காக காத்திருங்கள் நாளை..
தொடரும்..
EPISODE 80
அந்த கண்ணாடியில் இதழ் வைத்த கண் வாங்காமல் ஒரு சில நிமிடம் பார்க்க முடிய பின்னலிட்டு பூ வச்சா நல்லாருக்கும் என சைத்து சொன்னது காதில் ஒலித்தது.
அப்டியா? வைக்கணுமா! சிடுக்கு எடுக்கணுமா? என ஆழ்ந்து பார்த்ததவள். ம்ம் பண்ணி பார்ப்போம்! என நினைத்து உடனே அவளின் கூந்தலில் சிடுக்கு எடுக்க ஆரம்பித்தாள். கூடவே மனதில் உள்ள சிடுக்கும் சேர்த்து எடுத்தாள்.
அவள் மனதில் ஒரு பெண்ணின் மானத்தை காக்கும் இவன் கண்டிப்பாக தவறானவன் இல்லை என்று ஆணி தனமாக நம்பினாள்.
அப்போ நம்மிடம் பேசியது யார்? என அவளின் மூளை கேட்க..
அது வேறு எவனோ? இப்போ கண்ணு முன்னாடி நடப்பதை மட்டும் நம்புவோம்! என கடவுள் சந்நிதானத்தில் நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தவள். அழகாக தண்ணி ஜடை போல போட்டு கொஞ்சம் முடியை லூசாக விட்டு அழகாக பின்னி அவளின் உடைக்கு ஏற்ப லைட் பிங்க் நிறத்தில் அழகாக சூடி கொண்டாள்.
நெற்றியில் பொட்டு! கூடவே சாமி விபூதி சந்தனம், குங்குமம் என அழகாக இட்டு கொண்டே அந்த புடவைக்கு ஏற்ப கைகளில் வளையல் போட்டு அந்த வளையலை வருடி பார்த்தாள். அப்படியே கண்ணாடியில் அவளின் இந்த அவதாரத்தை பார்த்தவள். நினைவில் சைத்து சட்டை இல்லாமல் தன் முன் புன்னகையுடன் நின்ற காட்சி தான் தோன்றியது. அவனுடய தோற்றம் அந்த உள் பனியனில் செதுக்கி வைத்த சின்ன மலை போல இருந்தான். அதென்ன சின்ன மலை?
பெரிய மலை சர்வேஷ்! (சோ நான் யாரையும் விட்டு கொடுக்க மாட்டேன் பா)
ஏனோ இப்பொழுது அவளை பார்க்கவே அவளுக்கு வெட்கமாக இருந்தது. அந்த கண்களில் தான் எத்தனை சாந்தம்? மூச்சு விடாமல் கந்த சஷ்டி பாடுகிறான். என நினைத்தவள். மச்சம் மின்னும் உதட்டை கடித்து கொண்டே தன்னை சமன் செய்தவள். அவளுடைய போனை எடுத்து கொண்டு அன்னதானம் நடக்கும் இடத்துக்கு கிளம்பினாள்.
கிட்ட தட்ட அவள் அங்கிருந்து கிளம்ப அரை மணி நேரம் எடுத்து கொண்டாள்.
சைத்ரேஷ் அவளை பார்த்து விட்டு நடந்து வரும் போது வேகமாக பாதுகாவலருக்கு போன் செய்தவன். 🩷 வண்ண சில்க் சேர்ட் இப்போ உடனே வேணும்! உடனே என அதிகாரத்துடன் சொல்லி விட்டு நடந்து சென்றான் மெதுவாக..
எப்படி? எப்படி இப்போ உடனே கிடைக்கும் சார்! என அவர்கள் கெஞ்ச..
வேணும்! என சொல்லி முடித்து விட்டான்.
அரை மணி நேரம் கழித்து அறக்க பறக்க மூச்சு வாங்கி கொண்டே காவலாளிகள் ஓடி வந்தார்கள்.
சைத்ரேஸ் ஓரிடத்தில் நின்று கொண்டே அந்த கோவிலை சுற்றி இருக்கும் கடைகள், அங்கு செல்லும் பக்தர்கள், மனிதர்கள், மற்றும் இன்னும் அங்கிருக்கும் காட்சிகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்று நடந்த சில நிகழ்வுகள் மனதுடன் இன்பமான அதிர்வுகளாக உள்ளுக்குள் தோற்றுவித்தது. அவளுடைய படபடக்கும் விழிகள்! முறைத்து பார்க்கும் இதழ்கள்!ஹான் இங்க உதடு கூடவா முறைச்சு பார்க்கும்? ஆனா அவளோட உதடு முறைக்குதே! அந்த மச்சம் என்ன பார்த்து கண்ணை சிமிட்டி முறைக்குது! பாத்தியாடா? நான் இருக்கிற இடத்தை பார்த்துக்கோ! அப்படின்னு மச்சம் சொல்லுது! என்னைக்கு அதை தொட்டு பாக்குறது? என்று புதுவிதமான ஆசை எல்லாம் தோன்றியது.
ஆனால் தப்பான பார்வை நமக்கு இந்த மாதிரி தப்பான பார்வையே வராதா? அவளை முத்தம் கொடுக்கணும்னு தோணவே இல்லையே! என்று யோசித்தான். பார்க்க தங்க சிலை மாதிரி இருக்கா? முதல்ல எப்படிடா தோணும்? அவளோட குரலை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு! கிளி குரலோட கம்பேர் பண்ண மாட்டேன்! சூடு போட்டு தானே கிளிக்கு குரல் கொடுத்து கஷ்டப்படுறாங்க! ஆனா என் துவாரகாவோட குரல் அது மாதிரி இல்ல கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு! என்று சைத்ரேஷன் நினைத்துக் கொண்டான்.
அவன் ஒரு பெருமூச்சம் விட்டு இதெல்லாம் நடக்குறதுக்கு முதல்ல மேடம் என்ன ஸ்டேட்ல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும்? அவங்களோட மனசுல யாரு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும்! ஒரு வேலை என்ன சர்வேசா நெனச்சிட்டு இருப்பாலோ? பாக்கலாம் இந்த முருகன் கோவில் மீட்டு அன் எக்ஸ்பெக்டடா நடந்து போச்சு! ஆனா நான் பெங்களூர்ல இருக்க ஈஸ்வரன் கோவில்ல தானே மீட் பண்றேன்னு சொன்னன். அதுவும் செவ்வாய்க்கிழமை! அப்போ மேடம் என்னோட விசிட்டிங் கார்டு பாக்கவே இல்லையே? அப்போ அவ்வளவு கோபத்தில் இருக்கிறாளோ? அப்படி அண்ணா என்னத்த பேசி தொலைஞ்சாலும் தெரியல! கண்டிப்பா தப்பா தான் பேசி இருப்பான்! அது எல்லாம் மொத்தமா என் மேல ப்ரொஜெக்ட் ஆயிடுச்சு; என்று வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தான் பார்க்கலாம்.
இனி வார வாரம் செவ்வாய்க்கிழமை என்ன வேலையா இருந்தாலும் கோவிலுக்கு போய்ரணும். கண்டிப்பா என்னோட உணர்வுகள் உண்மை! அப்படினா அவன் வந்தே தீரனும்! என்று சொல்லிக் கொண்டான் .
அவன் புன்னகையுடன் நின்று கொண்டிருக்க.. மூச்சு வாங்கிக் கொண்டு பாஸ் என்று இருவர் ஓடி வந்தார்கள்.
என்ன ஆச்சு நான் சொன்னது கிடைக்கலையா? என்று முகத்தில் ஏக்கத்துடன் சைத்ரேஷன் நின்று கொண்டிருக்க..
பாஸ் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். என்று அந்த பாதுகாவலன் சொல்ல
அப்போ கிடைக்கலையா என்று அவர்களின் மேல் கோபம் வரவில்லை. யாரிடமும் அனாவசியமாக கோபப்பட மாட்டான். அவசியம் எனில் மட்டும் தான் கோபம்! தேவையில்லாமல் கோபப்பட்டால், அந்த கோபத்துக்கு அர்த்தம் இல்லையாம்! அவனுடைய அப்பா சொன்னது! அதனால் தேவையான இடங்களில் மட்டுமே கோபம் கொள்வான். மற்றபடி அவனுடைய பார்வையே பல கதை பேசும். அந்த ஒற்றைப் பார்வை, மற்றவர்களுக்கு பதிலாக அமையும கோபம்!
அந்த பாதுகாவலாளி மூச்சு மூச்சு வாங்கிக் கொண்டே பாஸ் நீங்க கவலைப்பட வேண்டாம்! டிரஸ் ரெடியா இருக்கு என்று நீட்டினான் என்ன என்று சைத்ரேஷ் புன்னகையுடன் அந்த பையை வாங்க..
ஆமாம் பாஸ் பட் இதோட குவாலிட்டி எப்படின்னு தெரியல! இங்க இருக்கிற கடையில அடிச்சு புடிச்சு நாங்க கஷ்டப்பட்டு தேடி வாங்கினோம். நீங்க சொன்ன பிங்க்கு கிடைச்ச தான் தெரியல பட் இதுவும் ஒரு வகையான பிங்க் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் திறந்து பார்த்தான்.
அது சில்க் ஷர்ட் இல்லை ஆனால் காட்டனில் இருந்தது ராம்ராஜில் காம்போ செட்டில் இருந்தது. அதுவும் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதில் சில்க் இல்லை. நார்மலான சட்டை தான். மொத்தத்தில் அவளுடைய புடவைக்கு ஏற்ப பிங்க் கலர் அதில் வந்து விட்டது . மிகவும் லைட்டான பிங்க் பார்ப்பதற்கு லுக்காக தான் இருந்தது. உடை எப்பொழுதும் அழகாக தான் இருக்கும். அது ஒவ்வொருவர் போடும் போதும் ஒவ்வொரு அழகை பிரதிபலிக்கும். அதே போலத்தான் சைத்ரேஸ் வாங்கி திருப்தியாக அந்த சட்டையை போட்டுக் கொண்டான்.
பாஸ் இந்த சட்ட என்று கேட்க
சைத்ரேஷ் அந்த சட்டையை ஆசை தீர பார்த்தவன்.
இத பத்திரமா பத்திரமா என்று அந்த பார்வையில் கடமை தெரிய பாஸ் என்று அவர்கள் கூர்மையுடன் பார்த்தார்கள்.
இதை பத்திரமாக கொண்டு போய் நம்மளோட கார்ல வச்சிருங்க! நான் ஈவினிங் வரும்போது இந்த ஷர்ட் போட்டுக்கிறேன்! இது எனக்கு ரொம்ப ரொம்ப மனசுக்கு நெருக்கமான ஷர்ட் என்று கூறினான்.
ஓகே ப்பாஸ் என்று அவர்கள் வாங்க வர..
ஒரு நிமிஷம் இருங்க என்று அந்த சட்டையை வாங்கி அதை முகர்ந்து பார்த்தான். மகரந்தத்தின் வாசனை போல அதில் மொத்தமும் துவாரகாவின் வாசனை! (அதுதான் தூரிகா) அதை கொடுத்துவிட்டு சரி நீங்க போங்க நான் போய் விரதத்தை அந்த அன்னதானம் பண்ற இடத்துல முடிச்சுட்டு வரேன். என்று அவன் நேராக இடும்பன் அன்னதானத்தை நோக்கி நடந்தான்.
ஒரு பக்கம் தூரிகை துவாரகை இன்னொரு பக்கம் ஈஸ்வரன்! சைத்ரேஸ்வரன் கம்பீரமாக நடந்து வந்தான்.
முதலில் சென்றது சைத்ரேஸ்வரன் தான் பார்க்க அங்கு ஒரு க்யூ வரிசை கட்டி நின்றது
உள்ளே ருத்ரன் மற்றும் மீனாட்சி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதழ் அப்பொழுதுதான் மெதுவாக ஆடி அசைந்து அங்கிருக்கும் இயற்கை காட்சிகள் அங்கு வரப் போகும் மனிதர்கள் என அனைவரையும் ரசித்துக்கொண்டே வந்தாள்.
ஆமா இந்த இவங்களோட சந்திப்பில நம்ம ருத்ரனையும் மீனாட்சி விட்டுட்டோமே! ஒரு ஓட்டம் போகலாமா? சரி
கோவிலில் முருகனை தரிசிக்கும் நேரம் போகும் அந்த கூட்ட நெரிசலில் இருந்து மீனாட்சியின் கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்தான்.
அச்சோ முருகா யாராவது வாங்கோலேன் என்று அவள் கத்தவர..
கத்தாதடி என்று ருத்ரன் திரும்பி அவளைப் பார்த்தான்.
இங்க எல்லாம் என்னோட சொந்தக்காரங்க இருக்காங்க பாத்துட்டு இருக்காங்க என்று மீனாட்சி சொல்ல
அப்போ என்ன விட்டுட்டு போயிடுவியா என்று கடுமையான குரலில் கேட்டான்.
எப்ப பாரு உங்களுக்கு விட்டுட்டு போறத பத்தி தான் பேசுவீங்களா என்று மீனாட்சி கொஞ்சம் கோபித்துக் கொண்டே சொல்ல..
நீதானடி அங்க பாத்துட்டு வாங்க! இங்க பாத்துட்டு வாங்க! அவா இருக்கா? அது நடக்கிறது! இது நடக்கறது! என்று சும்மா தான் பேசி பயந்துட்டு இருக்க.. அதனால் தான் சொன்னேன்! இப்ப என்ன தப்பு? யார் பார்த்தா என்ன? என்று ருத்ரன் தைரியமாக பேச..
நீங்க இப்படியே பேசிட்டு இருங்கோ ஒருநாள் உங்களை விட்டுட்டு தான் போ போறேன் என்று மீனாட்சி சொல்ல …
போயிடுவியா என்ன என்ன விட்டு உன்னால போக முடியுமா? என்று ருத்ரன் கேட்க
மீனாட்சி சிரித்துக் கொண்டே சும்மா சொன்னேன். நான் உங்களோட முகத்தில் என்ன மாதிரியான வெளிப்பாடு வருதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காக கேட்டேன். என்று மீனாட்சி கூறினாள்.
ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை என்று சொன்ன ருத்ரன்..
சரி வா நம்ம சாமி கும்பிடலாம் என்று கோர்த்து இருந்த கையில் ஒரு நிமிடம் கூட பிரிக்கவில்லை. திருமண கோலத்தில் அங்கு வள்ளி தெய்வானை முருகனுடன் இருக்க. அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.மீனாட்சி
கோல்டு ஃபிஷ் என்று ருத்ரன் அழைக்க..
சொல்லுங்க என்று கூறினாள்
ஒருவேளை நானும் இந்த மாதிரி ஒரு வள்ளிய செட் பண்ணிக்கிட்டா? என்ன பண்ணுவ? என்று ருத்ரன் கேட்க ..
அதுக்கு முன்னாடி நான் செத்துப் போயிடுவேன் என்று கூறினாள். மீனாட்சி சொல்ல
ருத்ரன் அவளின் வாய் மேல் கை வைக்க..
கையை எடுத்து விட்டவள் l! இந்த லோகத்துல அவதார புருஷன் எத்தன கல்யாணம் வேணாலும் பண்ணி, எத்தனை அவதாரத்தை வேணாலும் எடுக்கலாம், ஆனா, என்னோட ருத்ரன் என்னைக்குமே ஒரே அவதாரத்தோட தான் இருக்கணும்! அவருக்கு பெண்ணாட்டி அப்படினா? அது நானா மட்டும் தான் இருக்கணும்! என்று மீனாட்சி கூறினாள்.
அவளுடைய வார்த்தையை கேட்க கேட்க…
ருத்ரன்…?
தொடரும்..
சைத்து இதழ் மீட் நாளைக்கு
EPISODE 81
ஒவ்வொரு அணுவும் சிலிர்த்தெழ… ருத்ரன் அவளின் கையை மென்மையாக பிடித்து கோல்ட் பிஷ்! என்னிக்கும் நீ மட்டும் தான்! எனக்கு மட்டும் தான் நீ! இதோ பாரு என் கழுத்துல இருக்குற கோல்ட் பிஷ் I mean நான் உன்னை கவனிக்கலனா கூட, என் கழுத்துல இருக்குற கோல்ட் பிஷ் ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பார்க்க சொல்லி நினைக்க சொல்லி சதா சொல்லிட்டு இருக்கும்.
மீனாட்சி அவன் கழுத்தை பார்த்தாள்.
ருத்ரன் அவளிடம் எப்டி தெரியுமா டி! ஹே ரவுத்திரன்! உனக்காக தங்க மீனாட்சி காத்திருக்கா! தங்க மீனாட்சி காத்திருக்கா! என்ன பண்ற? அப்படி சொல்லும் டி!
மீனாட்சி கொஞ்சம் மெலிதாக சிரித்தவள். ப்ளீஸ் வெறும் மீனாட்சி மட்டும் சொல்லுங்கோ! அந்த தங்கம் வேண்டாமே! என்று கொஞ்சம் பொடியாக பேச..
ஏண்டி உன்னோட முழு பேரு தங்க மீனாட்சி தானே? என்று ருத்ரன் சொல்ல..
ப்ளீஸ் எனக்காக அந்த தங்கம் வேண்டாமே! என்று மீண்டும் கூறினாள்.
(அப்போ அந்த தங்கத்தில் என்ன இருக்கு? ரீடர்ஸ் உங்களுக்காக தான்! இந்த தங்கமே! Twist இத நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க! அந்த தங்கத்துக்குள்ள ஒரு முத்து இருக்கு! ஒரு ரகசியமும் இருக்கு! சரி அதை படிக்க படிக்க உங்களுக்கே தெரியும்! )
இருவரும் சாமியை மனதார வேண்டிக் கொண்டவர்கள். சாமிக்கு சாத்தப்பட்ட மாலைகள் இருக்க ருத்ரன் நேராக ஒவ்வொரு குருக்களிடமும் கும்பிட்டுக் கொண்டே பூஜை பொருட்கள் என அனைத்தையும் வைத்துக் கொடுத்தான்.
அவர் பூஜை செய்து இரு மாலையைக் கொடுத்துவிட்டு அந்த குருக்கள் ருத்ரனையும் மீனாட்சியும் பார்த்து நீங்க ரெண்டு பேரும் ஜோடியோ சேமமா இருங்க! என்று சொல்ல..
இதோ இப்பவே நாங்க மாலையை மாத்திக்கலாமா என்று ருத்ரன் கேட்க..
தாராளமா என்று அந்த குருக்கள் சொல்ல..
மீனாட்சி எனக்கு ஃபர்ஸ்ட் போடு பார்க்கலாம்! என்று ருத்ரன் சொல்ல..
அந்த துளசி மாலையை மீனாட்சி சந்தோஷமான முகத்துடன் கண்களில் நீர் கோர்க்க அவனுக்கு போட்டு விட்டாள்.
ருத்ரன் சிரித்துக்கொண்டே இன்னொரு மாலை போட்டு விட..
அப்போ இன்னும் கல்யாணம் ஆகலையா என்று குருக்கள் கேட்க?
நிச்சயம் ஆயிடுத்து என்று மீனாட்சி பொய் கூறினாள்.
அந்த ஆயுடுத்து என்ற வார்த்தையில் குருக்கள் மெய்சிலிர்க்க சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க! என்று கூறிவிட்டு அவர்களை ஆசீர்வதித்தார். (தட் மீன்ஸ் பிராமின்)
ருத்ரன் மற்றும் மீனாட்சி இருவரும் சந்தோஷமான நிலையில் வெளியில் வர.. அந்த இடத்தில் சர்க்கரைப் பொங்கல் காத்திருந்தது.
ஆளுக்கு ஒரு தொண்ணையில் வாங்கிக் கொண்டு இருவரும் மாற்றி மாற்றி ஊட்டி கொண்டார்கள்.
ஏன்னா எனக்கு பசிக்கறது என்று மீனாட்சி சொல்ல..
சரி டி பட்டு! போலாம் அவர்கள் இருவரும் அன்னதானத்திற்கு சென்றுவிட்டார்கள்.
கியூவில் நின்று கொண்டே காதல் கதைகள் அதாவது காமம் இல்லாமல் இருவரும் பின்னிப்பிணைந்த அன்பு பாசத்துடன் பல கதைகள். கிட்டத்தட்ட ஒரு வருட காதலா? இரண்டு வருட காதலா? முழுதாக ஆறு ஏழு வருட காதல்! அவன் எப்போ முத முதலா மீனாட்சி பார்த்தான்?
(அந்த ஃபுல் ஹிஸ்டரியும் பின்னாடி உங்களுக்கு தெரியும் தெரிய வரும்! ஓகே இருவரும் சென்று சாப்பிட ஆரம்பிக்க)
ஏய் மீனாட்சி எனக்கு ஊட்டி விடு என்ற ருத்ரன் சொல்ல.
ஏன்னா எத்தனை தடவை உங்களுக்கு ஊட்டி விட்டு இருக்கேன்! இப்போ புதுசா ஊட்டி விடுன்னு கேட்கிறீர்கோ என்று மீனாட்சி சொல்ல..
கோவில்ல நம்ம மாலை மாத்திக்கிட்டோம்! அதுவும் முருகன் முன்னாடி… எவ்ளோ ஸ்பெசல்! இங்க விருந்து நடக்குது! அன்னதானம் இங்கே இருக்கிற எல்லாரும் மனசுல ஏதாவது ஒரு வேண்டுதலோட பாசிட்டிவ் எனர்ஜியோட இருக்கிறவங்க! அவங்க முன்னிலையில் எனக்கு ஊட்ட மாட்டியா? இதுவே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான் என்ற ருத்ரன் சொல்ல..
இருங்க ஊட்டி விடுறேன் ஆனா பஸ்ட் நீங்க தான் எனக்கு ஊட்டி விடணும்! என்று மீனாட்சி சொல்ல..
உடனே ருத்ரன் அவளின் மூவாயை பிடித்து ஒட்டி விட்டான்.
சரி சரி நான் ஸ்வீட்ல இருந்து ஆரம்பிக்கிறேன் என்று மீனாட்சி ஊட்டி விட ருத்ரன் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.
ஒரு வழியாக இருவரும் பல கதைகள் பேசி சாப்பிட்டு முடித்துவிட்டு சாப்பிட்டு முடிக்கும் நேரம் தான் ருத்ரன் இதழினிக்கு போன் செய்தான்.
அவள் கிளம்பி வந்து கொண்டிருந்தாள்.
ஏன்னா அந்த அக்கா என்று சொல்ல..
அவ வருவா அதுக்குள்ள நீ கெளம்பிரு டி தங்கம் என்று சொல்ல..
இப்ப தானே சொன்னேன் தங்கம் சொல்லாதீங்கோன்னு என்று மீனாட்சி சொல்ல
அது என்ன அந்த டான்ஸ் காம்படிஷனுக்கு அப்புறம் நீ எப்பவும் தங்கம் சொன்னால் திட்டுற? ஏன் தங்கம் சொல்லக்கூடாதா? என ருத்ரன் அவளை தீவிரமாக பார்த்து கேட்க..
சரி விடுங்க உங்களுக்கு எப்படி கூப்பிட தோணுதோ! அப்படி கூப்பிடுங்க என்று மீனாட்சி செல்ல ..
இருவரும் வெளியே வந்தார்கள்.
*
சட்டையை நீவி கொண்டே கம்பீரமாக ஆணவன் நின்று கொண்டிருக்க..
அவளுக்கு பின்னால் அவன் நின்று கொண்டிருந்தான்.
பார்ரா நம்ம கலர்லயே ஒருத்தன் டிரஸ் போட்டிருக்கானே? என்று பின்னால் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டே கூறியவள் சட்டென அவன் திரும்புவான் என தூரிகா எதிர்பார்க்கவில்லை.அவள் மீதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் காற்றில் கரைய.. என்ன செய்வது? என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
சைத்ரேஷன் பார்வை கூர்மையான விழிகளில் அவளை துளைத்து, அதன் பின் திரும்பிக் கொண்டான்.
அப்பாடா நல்லவேளை என்று இதழினை நினைக்க உடனே வேகமாக அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
இதழ் சட்டென திரும்பிப் பார்க்க சைத்ரேஸ் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன இப்படி பார்க்கிறான்? என்று அவள் முறைத்துக் கொண்டே அவனை கூர்ந்து பார்க்க..
சைத்ரேஸ் மென்மையாக புன்னகை செய்தவன் திருப்தியுடன் திரும்பிக் கொண்டான். அவனது கைகள் பின்னால் கட்டிக் கொண்டு நின்றது.
எதுக்கு இப்போ என்னை பார்த்து சிரிச்சான்? அதுக்கு காரணம் தான் என்னவாம்? என்று இதழ் யோசித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாள்.
அந்த நேரம் ருத்ரனிடமிருந்து அழைப்பு வந்தது.
ஹலோ எங்கடி இருக்க? நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்! நீ எந்த இடத்துல இருக்க? என்று ருத்ரம் கேட்க..
தீரா நான் இப்பதான் ரெடி ஆகி வந்தேன். இனிமேதான் சாப்பிட போறேன்! நீ எங்க இருக்க என்று கேட்டாள்.
நான் வெளியில தான் இருக்கேன் சரி சரி நீ அங்கேயே வெயிட் பண்ணு! இப்பதான் கியூல நின்னுட்டு இருக்கேன். சாப்பிட்டு முடித்துவிட்டு நம்ம கிளம்பலாமா! என்று இதழ் சொல்ல..
சரி வா நான் அதுவரைக்கும் வெயிட் பண்ணுகிறேன்.ஆனால் நீ சாப்பிட்டு முடிக்கும் போது தயவு செய்து எனக்கு போன் பண்ணு என கூறினான்.
என்ன? என்ன விஷயம்? ஏன் நான் வரக்கூடாதா? என்று இதழ் கேட்டாள்.
இந்த மண்டபத்துக்கு பின்னாடி அன்னதானத்துக்கு அன்பளிப்பு அதாவது டொனேஷன் கொடுக்கிற சிஸ்டம் இருக்கு! அதனால நீயும் நானும் சேர்ந்து போய் கொடுத்துட்டு வரலாம்! அதாண்டி சொன்னேன்!
உடனே இதழ் சிரித்துக்கொண்டே அப்படியா சாரி சரி நம்ப போலாம்! என்று சொல்லிவிட்டு போனை வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முன்னால் நகர்ந்து கொண்டே செல்ல..
சாப்பிடும் இடம் வந்தது.
சைத்ரேஷ் அமர்ந்து கொள்ள..
இதழ் அவனுக்கு அருகில் அமர சென்றவள். தலையில் அடித்துக் கொண்டு, ச்ச என்ன இவனோட பக்கத்துல உட்கார போறோம்? அச்சோ என்று நினைத்துக் கொண்டே ரிவர்ஸ் அடித்தாள். அவள் வேறு பக்கம் அமரச் செல்ல..
உடனே அங்கு கண்காணிப்பாளர் “என்னமா அந்த இடத்தை விட்டுட்டு வேற இடத்துக்கு போறீங்க? நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க! அந்த ஒரு இடத்தை அதுவும் நடுவில் யாரு வந்து fill பண்ணுவா? சீக்கிரம் உட்காருங்க! என்று அவளை அங்கே லாக் செய்ய..
சைத்ரேஸ் அவர்களை கண்டு கொள்ளவில்லை. இதழ் உதட்டைப் பிதுக்கி வளைத்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் அதே இடத்தில் அமர்ந்தாள்.
முதலில் இலை போட பட்டது. அதன் பின் தண்ணீர் ஒரு பொரியல் கூட்டு சாதம், சாம்பார் ரசம் ஒரு இனிப்பு என மொத்தம் எட்டு வகையான உணவு வரிசையாக அடுக்கப்பட்டது இது புதுவிதமான அனுபவம் நிறைய முறை கோவிலுக்கு சென்று இருக்கிறாள்.
ஆனால் தனியாக முதன் முதலில் இப்பொழுதுதான் சாப்பிடுகிறாள். அதுவே அவளுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
சைத்ரேஸ் நேர்த்தியாக கொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான். அழகாக சாப்பிட்டான். இதழ் ஓர கண்களால் அவனுடைய வதனத்தையும் சாப்பிடும் அழகையும் ரசித்தாள் என்று சொல்லலாம்.
சைத்ரேஸ் அதற்கு மேல் அவளுடைய கொஞ்சம் வெயிலில் வறண்ட இதழ்கள் அந்த உணவை பார்த்ததும், அந்த உதட்டு மச்சமும் சேர்ந்து கொண்டு உணவு உண்பது போல இருந்தது. அந்த உதட்டில் இன்னும் கொஞ்சம் ஈரம், காரம், இனிப்பு, கார்ப்பு, என அனைத்தும் சேர்ந்து கொண்டது அழகாக சாப்பிடுகிறாள்.
இந்த தருணம் இப்படியே நீலாதா என்று சைத்ரேஸ் மனதில் தோன்றியது. அவனை சுற்றி எந்த பாதுகாப்பும் இல்லை. நிம்மதியான உணர்வு! யாரை நினைத்தும் பயப்பட தேவையில்லை! தான் யார் என்று யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள். எந்த இறுக்கமும் இல்லாமல், இயல்பாக அதுவும் தனக்கு பிடித்தவள் அருகில் இருக்க, உணவு உண்கிறான்.
என்ன ஒரு காட்சி!
அதை நினைக்க நினைக்க திகட்டவில்லை. அவனுக்கு… அவளை பார்த்தான். ஒரு நிமிடம் உடலெங்கும் பட்டாம்பூச்சி அவனைத் தூக்கிக் கொண்டு செல்வது போல ஒரு உணர்வு.
இந்த நாளை அவன் எப்பவும் மறக்கவே மாட்டான். இது அவனுக்கான ஒரு நாள். இதழினி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு இலையை மூட போக..
இன்னும் கொஞ்சம் உணவு இருக்கும்போது இலையை மூட போக என்ன பண்றீங்க என்று சைத்ரேஸ் கேட்டான்.
என்னால அதுக்கு மேல சாப்பிட முடியல என்று வயிற்றை நீவிக் கொண்டே கூறினாள்.இதழினி சாரி துவாரகா..
சாப்பிட முடியலையா? அப்புறம் எதுக்கு வாங்குனீங்க? இந்த சாதம் கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க! ப்ளீஸ் ஒரு மெதுவா இருந்தாலும் சாப்பிட்டு எழுந்திரிங்க! சாமி பிரசாதம் இப்படி வேஸ்ட் பண்ணலாமா? என சைத்ரேஸ் பக்குவமாக எடுத்துச் சொல்ல.
அவள் உதட்டைப் பெருக்கிக் கொண்டே அந்த உணவை பார்க்க என்ன அப்படி பாக்கறீங்க எடுத்து சாப்பிட ஆரம்பிங்க முதல்ல சாப்பிடும்போது நிறைய தண்ணி குடிக்க கூடாது இவ்வளவு தண்ணி குடிச்சா சாப்பாடு எப்படி உள்ளே இறங்கும் என்ற சைத்ரேஸ் கேட்டான்.
அது தாகமா இருக்கு என்று தூரிகா குழந்தை போல் சொல்ல..
சரி சாப்பிடுங்க! கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க! என்று குழந்தைக்கு சொல்வது போல சைத்ரேஸ் கூறினான்.
அவள் அதற்கு மேல் குழந்தையாகவே மாறிவிட்டாள். போல! கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்தாள்.
என்ன பண்ற? என்று மொட்டையாக கேட்டான்.
நானா? அது சாப்பாட்டை எத்தனை வாய் அப்படின்னு பிரிச்சு வச்சுட்டு இருக்கேன்! என்று அவள் சொல்ல..
சைத்ரேஷுக்கு சிரிப்பாக வந்தது. உதட்டை கடித்தவன் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள..
சட்டென அவனைப் பார்த்தாள்.இப்போ என்ன பண்றீங்க சிரிக்கிறீங்களா? என்று இதழ் கேட்க..
பின்ன உன்னை பார்த்தால் சிரிப்பு தான் வருது! குழந்தைய விட ரொம்ப மோசமா இருக்க? என்று கூறினான்.
அய்யடா என்று முறைத்துக் கொண்டு சாதத்தை மெதுவாக பிசைந்து ஒற்றை விரலை தூக்கிக்கொண்டு சாப்பிட..
ப்ச்! இது என்ன பழக்கம்? இப்படி விரலை தூக்கிட்ட…. இப்படி சாப்பிடக்கூடாதுன்னு தெரியாதா? எல்லா விரலையும் சேர்த்து வச்சு சாப்பிடுங்க! என்று சைத்ரேஸ் தன் தங்கைக்கு சொல்வது போல கூறினான்.
இதழ் கடுப்புடன் நீங்க ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குறீங்க என்று உணவை சாப்பிட்டாள்.
சைத்ரேஷ் அதன்பின் எதுவும் பேசாமல் எழ என்ன எழுந்து போறீங்க எனக்கு கம்பெனி கொடுக்கிறேன்னு சொன்னிங்க தானே! உட்காருங்க! என்று அந்த முட்டை கண்களால் முறைத்தாள்.
இப்போ யாரு அட்வான்டேஜ் எடுக்குற மாதிரி இருக்கு? என்று சைத்ரேஸ் கேட்க..
நீங்க போங்க என்று அவள் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.
சைத்ரேஸ் அருகில் அமர்ந்து கொண்டான்.
இதழ் மெதுவாக கஷ்டப்பட்டு அனைத்து உணவையும் சாப்பிட்டு ஒரு குட்டி ஏப்பம் விட்டு வயிற்றை தடவிக்கொண்டே எழுந்தாள்.
சைத்ரேஷ் அவளுடன் எழுந்து கொண்டு கை கழுவினான்.
உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று சைத்து சொல்ல..
இதழ் அவனை பார்த்தாள்.
*
இங்கே சத்யதேவ் ஹரிணிக்கு போன் செய்தான்
சொல்லுடா சத்யா! என்று அவள் கேட்க
நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த மாசத்துல! ஹான் வேணாம்! இந்த வாரத்துல? அப்படி இல்லன்னா, நாளைக்கு? ஹான் இன்னிக்கு வரியா இன்னைக்கு பண்ணிக்கலாம்! என்று கேட்டான்
அதற்கு ஹரிணி…?
தொடரும்..
என்னடா இது எதிர்பார்க்காத twistஸ்ட்டா இருக்கு? அப்போ நிதின்னோட லவ் என்ன ஆச்சு? சத்திய தேவ் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? இது ரிதம்பக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? இந்த சைத்து பையன் இதழ் கிட்ட என்ன பேச போறான்? மீனாட்சி கிட்ட எதுவும் ரகசியம் இருக்கா?
ஒன்னுமே புரியலையே? ரொம்ப குழப்பமா இருக்கே?
அடுத்தடுத்து நிறைய twistஸ்ட்டா இருக்கா? வெயிட் பண்ணுங்க..
சரி கல்யாணத்துக்கு ரெடியா இருங்க வேற யார் கல்யாணம் நம்ம ஹீரோ கல்யாணந்தாம்.
யார் கூட ? அதுதானே இங்க கேள்வியே?
வருவான் அதிகாரன்!..
தொடர்ந்த படிங்க. கூடவே கமெண்ட்
EPISODE 82
அந்த அறையின் முழுவதும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் பாக்கெட்டுக்குள் அடைத்த உணவு பண்டங்கள் என இருந்தது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் , லேஸ் குர்குரே , டைரி மில்க், கேலக்ஸி, முறுக்கு, பிங்கோ, பின்கோ மேட் ஆங்கில்ஸ், ஸ்ப்ரைட், மாஸா, பெப்சி, கொக்கோகோலா , கொஞ்சம் இன்னொரு மூலையில் கேஎஃப்சி, டாமினோட்ஸ், மெக்டொனால்ட்ஸ், பிசா ஹட், அதில் கொஞ்சம் சாப்பிட்ட வர்கள் சிக்கன் துண்டுகள் சிக்கன் பாப்கான் , மிச்சம் வைத்திருந்தது. காலி கூல்ட்ரிங் டின்கள் என ஒரு பக்கம் கிடைக்க கொண்டையிட்டுக் கொண்டே அந்த பற்களையும் லேஸ் இரண்டு வாயில் கொரித்து அரைத்து கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஒருத்தி!
அந்த ஒருத்தி! ரிதம்!.
ஒருத்தி ரிதம் அது அத்தனையும் விடுத்து அடுத்ததாக டைரிமில்க் இரண்டு பீஸ் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
அதன் பின் லேஸ் பச்சை வண்ண கவர் பிளேவர் எடுத்து இரண்டு கே எல் சி யிலிருந்து சிக்கன் பாப்கான் 2பீஸ், அதன் பின் பீட்சா சீஸ் கான் இரண்டு கடி, அதன் பின் பாஸ்தா மேக்ரோனி, மோமோ, மஞ்சூரியன், என அவளுக்கு என்னென்ன சாப்பிட தோன்றியதோ! அத்தனையையும் ஆர்டர் செய்து இஷ்டத்துக்கு சாப்பிட்டு தூக்கி வீசிக் கொண்டிருந்தாள்.
எதற்கு இந்த ஆத்திரம் இதுக்கு பேசாம நீ ஒரு ஒயினையயோ, விஸ்கியோ வாங்கி கவுத்திருக்கலாம் டி இது ரைட்டர்ரோட அலறல்.
இதெல்லாம் எதுக்கு பண்ற அவன நேரடியா பழி வாங்க முடியல! அவன்கிட்ட தன்னுடைய காதலை சொல்ல முடியல! அதுக்காக தன்னைத்தானே பலி வாங்கி கொள்கிறாள். இதையெல்லாம் சாப்பிட்டா ஃபுட் பாய்சன் ஆகும். அப்படி இல்லன்னா மூச்சு முட்டி செத்துப் போகலாமா? ஏதாவது நடக்குமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.ரிதம்..
என்ன பண்ண ? என்ன பண்ண? நானே என்னை பழி வாங்கிக்கணும்! அவனுக்கு அது ரொம்ப ரொம்ப வலியும், வேதனையும் கொடுக்கணும்! அவன் துடிக்கணும்! அவன் துடிக்கிறத என் கண்ணா பார்க்கணும் என்று ரிதம் நினைத்துக் கொண்டிருக்க..
அதற்கு ஒரே வழி நித்தின் பிரகாஷை திருமணம் செய்வதுதான்! ஹான்! தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதை மட்டும் அவள் செய்ய மாட்டாள். ஆனால் எதுக்கு இப்படி ஆசிலேஷனிலேயே இருக்கணும்? அதையும் ட்ரை பண்ணி பார்த்துடலாம்! அப்பவாச்சும் கடைசி நிமிடத்துல.. இல்ல டி ரிதம் எனக்கு நீதாண்டி வேணும்! நான் ஏதோ பழைய ஞாபகத்துல, சின்ன வயசு பகையில உங்கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணாம போயிட்டன்! அப்படின்னு கரடு முரடான தடித்த இரண்டு உதட்டை வைத்துவிட்டு அதுக்கு நடுவுல இருக்குற 32 பல்லுல ஏதாவது சொல்லுவானா? கண்டிப்பா சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு! சொல்லுவான். என்னை ஏமாத்த மாட்டான்! என்று அவளுடைய டேட்டுவை வரடி கொண்டே தோற்றத்தை கண்ணாடியில் பார்த்தாள்.
பொதுவா இந்த மாதிரியான நொறுக்கு தீனி பாஸ்ட் ஃபுட் எல்லாம் சாப்பிட்டால் கொஞ்சம் பருமன் வந்து பெருத்து தொப்பை வரும் அசிங்கமா போயிடுவாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கோம்! ஆனா ரிதம் கண்ணாடில அவளோட முகத்தை பார்க்க இன்னும் நெளிஞ்சு ஒல்லி ஆகிட்டா! முகம் எல்லாம் ஒரு மாதிரி ஆகிப்போச்சு! வயசான மாதிரி 25 வயதிலேயே எனக்கு வயசான தோற்றம் வந்துருச்சா? அதுக்கு காரணம் அந்த சத்திய தேவ் நாய் மட்டும் தான்! என்று சொல்லிக்கொண்டே பார்த்தாள்.
தேவதாசுக்கு துணையா ஒரு நாய் இருக்கும். தேவ தாசுக்கு ஜோடி பார்வதி.. ஆனால் கை கூட காதல்! ஆனால் இங்கே இந்த பார்வதியா இருக்குற ரிதமுக்கு பக்கத்துல இருக்குற நாய் தேவதாஸ் கூட இருக்கும் நாயை போல பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு சிரிப்பாக வந்தது. இருந்தாலும் தன் எஜமானியை பார்த்து மிகவும் பாவமாக இருந்தது.
இறுதியாக ஒரு பெரும் மூச்சை விட்டு எழுந்தவள். போனை எடுத்து திருமணத்தைப் பற்றி நிதின் கிட்ட பேசலாம்! என நினைக்க..
அதற்குள் ரவிச்சந்திரனிடம் இருந்து போன் வந்தது தாத்து! ஏன் இப்ப கால் பண்ணுது என்று சொல்லி என்று கேள்வியுடன் காலை அட்டென்ட் செய்தாள்.
தாத்து சொல்லுங்க என்று எப்பொழுதும் போல் துடிப்புடன் அவள் பேச..
ஆமா எங்கே இருக்க பாப்பா ரொம்ப நாளா தாத்தா கிட்ட பேச மறந்து போயிட்டா! என் பேத்தி! அவள் ரொம்ப பிஸி போல! என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க
நானா தாத்து! நான் நம்ம வீட்ல தான் இருக்கேன். டாடி, விவி பேபி கூட! நீங்க வேற தாத்து! அதை ஏன் நீங்க கேக்குறீங்க..
ஏன் என்னாச்சு?
நான் வந்து ஒன் ஒன்னும் இல்ல தாத்தா ரொம்ப நல்லா இருக்கானே நல்லா இருக்கேனே என்று பொய் சொல்ல..
அப்படியா குரலில் ஏதோ வருத்தம் தெரியுதே என்று ரவிச்சந்திரன் கேட்க
ஆமா தாத்தா எனக்கு ரொம்ப வருத்தமா தான் இருக்கென்! சீக்கிரமே நித்தின கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அத பத்தி டாடி கிட்ட சொல்லணும்! என்று ரிதம் உணர்ச்சி துடைத்த குரலில் பேச..
அப்படியா என்று ரவிச்சந்திரன் தீவிரமாக கேட்டார்.
என்ன தாது அவ்ளோ ஆச்சரியமா கேக்குறீங்க?
ஆமாமா நீ பண்றது எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன்! என்று ரவிச்சந்திரன் கூறினார்.
தாத்து என்று அவள் குரலில் ஒரு சாக் ஏற்பட..
Dimple சும்மா சொன்னேன்! சரி டிம்பிள் நான் உன்னோட டாடி கிட்ட இத பத்தி பேசுறேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
ரிதம் ஒரு பெருமூச்சு விட்டு அப்போ இனி பிரச்சனை இல்ல தாத்து பாரு என்று நேராக ஒரு உடையை அணிந்து கொண்டு எலைட் ஒயின் ஷாப் அதாவது கிராசரி ஐட்டத்தை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது போல தேர்ந்தெடுத்து வாங்குவது போல, சில மதுக்களுக்கு மதுபானங்களுக்கு என்று சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. அந்த இடத்திற்கு ரிதம் சென்றாள்.
அங்கு அவளுக்கு பிடித்த வகையான மது அனைத்தையும் தேர்வு செய்து வாங்கிக் கொண்டவள். நேராக அவளுடைய வீட்டிற்க்கே வந்தாள்.
என்ன அவ்வளவு தைரியமா இதெல்லாம்? அப்படின்னு நீங்க கேப்பிங்க? அதுவும் விவேகா இருக்கும்போது, இதெல்லாம் கஷ்டமா இருக்குமே! ஆனா ரிதம் யாரு? கேடிக்கே கில்லாடி ஆச்சே! பின் வாசல் வழியாக வந்து அங்கு இருந்து ஒரு செவரெறி குதிச்சு எப்படியோ அந்த மொத்த மதுவையும் அவளோட சோல்டர் பேக்ல இருந்து பத்திரமா அரைக்கு எடுத்துட்டு வந்துட்டா. அவ்வளவுதான் எடுத்து வந்ததும் அனைத்தையும் ஓபன் செய்து ஆன்லைனில் சில அசைவ உணவுகளை ஆர்டர் செய்து..
கைகள் பரபரக்க போனை எடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டாள்.
உனக்காக காத்திருக்கேன்! இதுக்கு மேல காத்திருக்க முடியாது! ஒரு வருஷம் கழிச்சு பண்ற கல்யாணத்தை உன்ன பார்த்ததும் எனக்கு ஒரு மாசத்துல பண்ணிக்க தோணுது! உன்னோட பேச்சு அதைக் கேட்க… அந்த ஒரு மாசம் கூட ரொம்ப தொலைவில் இருக்கிற மாதிரி என்னை டார்ச்சர் பண்ண! அப்போவே என்னோட left brain ஏன் ஒரு வாரத்தில் கல்யாணம் பண்ணிக்க கூடாது? அப்படின்னு என் கிட்ட கேட்க… ஒரு வாரமா அது மொத்தம் ஏழு நாள் இருக்கே? வேண்டாமே! 24 மணி நேரத்துல எதுவும் ஆப் ஆப்ஷன் இருக்கா அப்டின்னு இந்த right brain சொல்லுச்சு! அதை விட இந்த மனசு! மனசு என கொஞ்சம் இடைவெளி விட்டு தட்டச்சு செய்தவள். ஏன் உன்னை இப்போவே இந்த நிமிஷமே கட்டிக்கோ போ அப்டின்னு தள்ளுது டெரிப்ளி மிஸ் யூ!உனக்காக காத்திருக்கேன்! என்று ஒரு ஸ்டேட்டஸை தட்டி விட்டு மதுவை ராகத்துடன் ஓபன் செய்தாள். ரிதம்!
அந்த ஸ்டேட்டஸ் dev gang மற்றும் devil gang இரண்டிலும் தீயாக பரவியது.
*
இதழினி கை கழுவிக் கொண்டே இருக்க சைத்ரேஸ் அவளின் அருகில் வந்து நின்றவன்.
உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று கூறினான்.
சொல்லுங்க என்று அதே இடத்தில் கூறினாள்..
அது இந்த இடத்துல வேணாம். இங்க ரொம்ப ரஷ்ஷா இருக்கு அந்த பக்கம் போலாம்! நான் உங்களுக்காக அங்க வெயிட் பண்றேன்! நீங்க வாங்க என்று சைத்ரேஸ் முன்னாள் நடந்தான்.
அவள் நீ ஒன்றும் புரியாமல் எதுக்கு நம்மள கூப்பிடறான்? என்ன சொல்ல போறான்? ஒருவேளை மன்னிப்பு கேட்பானோ? என்று நினைத்துக் கொண்டே அவள் செல்ல போக..
அதற்குள் அந்த இடத்திற்கு ருத்ரன் வந்து சேர்ந்தான். எங்கெல்லாம் தேடுவது? எவ்வளவு நேரம் ஆகிடுச்சு? போன் எதுக்கு டி வச்சிருக்க? டைம் ஆகுது நம்ம கரெக்டான நேரத்துக்கு ட்ரெயினுக்கு போக வேண்டாமா? என்று சொல்ல..
அதுவா இரு இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம் என்று இதழ் சொல்ல
No way நம்ம போயிட்டு நம்ம லக்கேஜ் எல்லாம் கொஞ்சம் திங்ஸ் எடுத்துக்கிட்டு திரும்ப சீக்கிரம் ட்ரெயின் பிடிக்கணும்! ட்ரெயின் நமக்கு திருநெல்வேலில இங்க இருந்து தூத்துக்குடி பஸ்ஸிலேயே போகனும்! சீக்கிரம் வா என்று அவன் அழைக்க..
நான் ஒரே ஒரு நிமிஷம் தீரா இந்த முக்கியமா ஒரு பொருளை விட்டுட்டேனே. என்று சொல்ல..
எண்ணத்தை டி தொலைச்ச?? சத்திய தேவ் மாமா வேற உன்ன பத்திரமா கொண்டு வந்து விடனும்னு சொல்லி இருக்காங்க! இப்படி நீ கேர்லசா சின்ன குழந்தையா இருக்கலாமா வார்த்தைக்கு வார்த்தை நான் பெரிய பொண்ணு பெரிய பொண்ணுன்னு, சொல்லுவ ? என்று அவன் வசைப்பட ஆரம்பிக்க.
டேய் போதும்டா இப்போ என்ன உன் கூட வரணும் அவ்வளவுதானே வரேன் வா என்று சொன்னவள். இருவரும் போயிட்டு வரேன் என்று நகர அங்கேயிருந்து நகர்ந்தார்கள்.
ஹே தீரா ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் இரு! என எதுவும் சாக்கு சொல்லி விட்டு அவனை பார்க்க நினைத்தாள் தூரிகா!
வேண்டாம் நம்ம இதை செக்கவுட் பண்ணும் போது போய்க்கலாம் ! நீ சீக்கிரம் வா என்று அவளைக் கையுடன் இழுத்து அழைத்துச் சென்று விட்டான்.
சைத்ரேஸ் வெகு நேரமாக காத்திருந்தான்.
துவாரகா வருவா? என்னா புரிந்துப்பா என்று நினைத்துக் கொண்டே காத்திருக்க..
சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை சுற்றிலும் தேடினான். அவள் அங்கு இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை நிறைய கூட்டமாக இருந்தது. முதலில் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே தோன்றியது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு உணர்வு! கண்டிப்பா அவ நம்மள ஈஸ்வரன் கோவிலுக்கு பாக்குறதுக்கு வருவா! என மனதை தேற்றி கொண்டான்.
அவ வந்தாலும் சரி, வரலனாலும் சரி! விதியினு ஒன்னு இருந்தா அடுத்த முறை என்னை பத்தி நான் அவ கிட்ட சொல்லிடுவேன் என்று சொல்லிக் கொண்டே சைத்ரேஷ் கோவிலிலிருந்து ஒருவித திருப்தியயான மன நிலையில் கிளம்பினான்.
ஏனென்றால் அவளிடம் இன்று ஏற்பட்ட மாற்றங்கள் மிகவும் அதிகமாக தோன்றியது அதுவே அவனுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது.
*
இங்கே சத்யதேவ் ஹரிணிக்கு போன் செய்தான்
சொல்லுடா சத்யா! என்று அவள் கேட்க
நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த மாசத்துல! ஹான் வேணாம்! இந்த வாரத்துல? அப்படி இல்லன்னா, நாளைக்கு? ஹான் இன்னிக்கு வரியா இன்னைக்கு பண்ணிக்கலாம்! என்று கேட்டான்.
தொடரும்..
கல்யாண கலாட்டா ஆரம்பம்..
பார்ப்போம் யாருக்கு யார் ஜோடி? யாரோ யாரோடி உன்னோட புருசன்? தெரிந்து விடும்!
ஒரு ஜோடி reveal ஆக போகுது!
EPISODE 83
இங்கே சத்யதேவ் ஹரிணிக்கு போன் செய்தான்
சொல்லுடா சத்யா! என்று அவள் கேட்க
நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த மாசத்துல! ஹான் வேணாம்! இந்த வாரத்துல? அப்படி இல்லன்னா, நாளைக்கு? ஹான் இன்னிக்கு வரியா இன்னைக்கு பண்ணிக்கலாம்! என்று கேட்டான்.
ஹரிணி அவன் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் ஷாக் ஆகி சிரித்துக்கொண்டே என்ன சக்தி? திடீர்னு? என்று கேட்க..
கால் மீ சத்யதேவ் என்று கொஞ்சம் கடுமையுடன் கூறினான்.
ஹரிணி தன்னை சமன்படுத்திக் கொண்டு சாரி தெரியாம சொல்லிட்டேன்! சொல்லு சத்யா? என்ன திடீர்னு கவிதை எல்லாம் பொழியற? நீ பேசுறது எனக்கு கவிதை மாதிரி இருக்கு! என்று சொல்ல..
பி சீரியஸ் ஹரிணி நான் சீரியஸா உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன். என்று சத்திய தேவ் சொல்ல..
அவனது குரலில் உள்ள தீவிரத்தை பார்த்தவள். ஒரு நிமிடம் அமைதியாகினாள்.
நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே! என சத்ய தேவ் சொல்ல..
சரி ஓகே உனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! ஆனால் இந்த லீவ் ப்ராசஸிங்? என அவள் தயங்கிக் கொண்டு கூறினாள்.
சத்திய தேவ் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு சாரி நான் உன்கிட்ட கொஞ்சம் ரூடா பேசி இருந்தால் அதை மனசுல வச்சுக்காத! நான் ஏன் அப்படி பேசணும்னு காரணம் இருக்கு! என்னால உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலடி! என்று கண்களை மூடிக்கொண்டு அவளிடம் கூறினான்.
ஹரிணி எந்த நிலையில் இருக்கிறாள்? என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அமைதியாக இருக்க..
சத்யதேவ் மேலும் தொடர்ந்தான்.
உனக்கு டெல்லியில் வேலையா! ஒரு பிரச்சனையும் இல்ல! நீ அங்கேயே உன்னோட ஜாப பாரு! நான் இங்கிருந்து டெல்லிக்கு வந்துடுறேன். என்னோட இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசத்தை அங்கிருந்து பாத்துக்குறேன். எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். என்று கூறினான்.
அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க..
ஹரிணி என்று மீண்டும் அழைத்தான்.
சொல்லு சத்யா?
ம்ம் நான் சொல்றது உனக்கு புரியுதா? ஓகே தானே! என்று கேட்க
அவள் தன்னிலைக்கு வந்து கொஞ்சம் புன்னகையுடன் எனக்கு ஓகே எந்த பிரச்சினையும் இல்ல! லீவ் ப்ராசஸ் ஓகே நா நாம எப்போ வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்! என்று கூறினாள்.
அத பத்தி நீ கவலைப்படாத நான் இன்பாம் மாமா கிட்ட சொல்லி மூவ் பண்ணிக்கலாம் என்று கூறினான்.
சரி என்று சொல்லிவிட்டு அவள் போனை வைத்தவள் அப்படியே அவளது இருக்கையில் அமர்ந்தாள்.
இது இப்படித்தான் போகும்னு இருக்கு! அப்படியே போகட்டும்! எந்த இடத்துலயும் நம்ம லேக கூடாது என்று சொல்லிக் கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
*
அவன் போனை வைத்த அடுத்த நொடி ருத்ரனிடமிருந்து சில வாட்சப் செய்திகள் வந்து சேர்ந்தது.
கண்களை மூடி பெருமூச்சு விட்டவன் அதை எடுத்து ஓபன் செய்தான்.
என்ன இது என்று அவனுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது .
உடனே எதையும் யோசிக்காமல் ருத்ரனுக்கு அழைக்க மாமா என்று புன்னகையுடன் ருத்ரன் பதில் அளித்தான்.
ஆமா நீ போ எனக்கு என்ன அனுப்பி இருக்க? என்று உருவம் சுருக்கி நெற்றியில் தேய்த்துக் கொண்டே அவனிடம் கேட்டான். சத்தியதேவ்.
ருத்ரன் சிரித்துக் கொண்டே “மிஸ்டர் மினிஸ்டர் நிதின் பிரகாஷ நினைச்சு ஒரு கவிதையை எழுதி ஸ்டேட்டஸ் வச்சு இருக்கா? அந்த அந்த கொடுமைய தான் உங்கள பாக்க சொன்னேன்!” என்று சிரித்தான்.
ரிதம் பற்றிய விஷயத்தை கேட்டது சத்திய தேவுக்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்தது என்று தெரியவில்லை. அவளை பற்றி நினைக்க வேண்டாம், என்று தான் ஈரோடு வந்து சேர்ந்தான். எப்படியாவது அவளை தவிர்த்து விட வேண்டும், உடனே அனைத்தையும் மாற்றிவிட வேண்டும், அதற்கு ஒரே வழி ஹரினிய திருமணம் செய்து கொள்வது, மட்டும் தான். ஹான்! என்னோட மனசுல ஹரிணி மட்டும் தான் இருக்கா; அவளுக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் , எல்லா இடமும், அவளுக்கு மட்டும் தான். என்று குருட்டுத்தனமாக சொல்லிக் கொண்டான்.
ஆனால் உண்மை என்ன என்பது ஆழ்மனத்துக்கும் தெரியும் உயிரானவளுக்கும் தெரியும். எதுக்கு இந்த வேஷம்? சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்!
ருத்ரன் அவ்வாறு சொல்ல.. சத்யதேவ் கொஞ்சம் கடுமையுடன் இனிமே உங்க அக்கா பத்தின விஷயம், எதையும் எனக்கு ஷேர் பண்ணாத ருத்ரன். என்று கூற..
என்ன ஆச்சு மாமா இன்று ருத்ரன் குரலில் கொஞ்சம் தீவிரம் தெரிய..
அதெல்லாம் ஒன்னும் இல்ல! இது தேவையில்லன்னு தோணுது! தேவையில்லாத வேலை! எப்ப பாரு பிரச்சனையிலேயே போய் முடியுது. அவளை பத்தி நான் தெரிஞ்சுக்க வேணாம்! அண்ட் நித்தின் பிரகாஷ் உனக்கு மாமா! சோ இனி அவரை மரியாதையாக கூப்பிட பழகிக்க! பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. ஒன்ஸ் உங்க அக்காவுக்கு நிதின் கூட கல்யாணம் ஆகிடிச்சின்னா, நீ ப்ராப்பரா அவங்க குடும்பத்தோட ரொம்ப அட்டாச்மென்ட்ல வந்துடுவே! அதனால அதுக்கு தகுந்த மாதிரி பிகேவ் பண்ண ஆரம்பிச்சுடு! என்று கூறினான். சத்ய தேவ்.
ருத்ரனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. என்ன? மாமா என்ன? என்னவோ பேசுறீங்க? எனக்கு ஒன்னும் புரியல என்ற சொல்லவர..
சரி அத அப்புறம் பாத்துக்கலாம்! இப்போ குக்கு என்ன பண்றா? என்று கேட்டான்.
அவ ஜன்னல் பக்கமே உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு வந்துட்டு வரா!
தரிசனம் எல்லாம் எப்படி போச்சு? என்று சத்திய தேவ் கேட்க..
ருத்ரன் இரண்டு தரிசனங்களையும் நினைவு கூர்ந்தவன். ம்ம் திருப்தியா போச்சு மாமா! இந்த மாதிரி இந்த வாய்ப்பு எனக்கு உங்களால தான் கிடைச்சது. அந்த முருகன் என்னை சன்னதிக்கு அவரோட முகத்தை பார்க்க உங்க மூலமா குக்கு மூலமா அப்பாயின்ட்மெண்ட் கொடுத்தாரு அதே போல நானும் லிப்ஸும் சேர்ந்து கோவிலுக்கு வந்து திருப்தியா சாமியை கும்பிட்டுட்டு வந்துட்டு இருக்கோம். எந்த பிரச்சனையும் இல்ல மாமா! என்று கூறினான்.
சரி ரொம்ப சந்தோஷம்! பத்திரமா வாங்க நான் உங்கள சென்ட்ரல்ல மீட் பண்றேன்! அங்கிருந்து பெங்களூர் கிளம்பிடலாம். என்று கூறிவிட்டு சத்திய தேவ் ஃபோனை வைத்தான்.
அவன் ஃபோனை வைத்ததும் வேகமாக அந்த ருத்ரன் அனுப்பிய செய்திகளை டெலிட் செய்ய போக..
ஏனோ உள்ளுக்குள் அதை படிடா நீ! சக்தி அதை படி! ஹே படி டா! அப்படி என்ன தான் எழுதி இருக்கா! படி டா! என்று மனது சொல்ல..
அதை நான் எதுக்கு படிக்கணும் என்று மூளை கூறியது.
தெரிஞ்சுக்குவோமே அதுவும் அந்த நித்தின் பிரகாஷ் பத்தி எழுதி இருக்கா! உனக்கு.. ஹான் நீ நெனச்சதும் அதுதான? அவ உன்னை நினைக்க கூடாது, அவனை நினைக்கனும். அவனை கல்யாணம் பண்ணிக்கணும். சோ அப்படி என்ன எழுதி இருக்கான்னு தெரிஞ்சுப்போமே! என்று சொல்ல..
சத்ய தேவ் ஒரு வேகத்தில் அதை தொட்டான். அந்த படம் ஒருமுறை வட்டம் அடித்து லோடு ஆகி டிங் என்று காட்டியது.
ஒரு வருஷம் கழிச்சு பண்ற கல்யாணத்தை உன்ன பார்த்ததும் எனக்கு ஒரு மாசத்துல பண்ணிக்க தோணுது! உன்னோட பேச்சு அதைக் கேட்க… அந்த ஒரு மாசம் கூட ரொம்ப தொலைவில் இருக்கிற மாதிரி என்னை டார்ச்சர் பண்ண! அப்போவே என்னோட left brain ஏன் ஒரு வாரத்தில் கல்யாணம் பண்ணிக்க கூடாது? அப்படின்னு என் கிட்ட கேட்க… ஒரு வாரமா அது மொத்தம் ஏழு நாள் இருக்கே? வேண்டாமே! 24 மணி நேரத்துல எதுவும் ஆப் ஆப்ஷன் இருக்கா அப்டின்னு இந்த right brain சொல்லுச்சு! அதை விட இந்த மனசு!
அந்த ஒரு நிமிடம்..
அந்த ஒரு நிமிடம்..
அந்த ஒரே நிமிடம் சப்தமாடியும் ஒடுங்கிப் போனது. அவனுக்கு.. இது இது இப்போதான.. நான் நான் வந்து ஹரிணி கிட்ட சொன்னது? அப்படியே எப்படி மெசேஜ்ல? வந்திருக்கும் என்று மண்டை சூடாக தொடங்கியது.
எப்டி?
எப்டி?
எப்டி? இது பாசிபில் ஆகும்? எதோ trick பண்றா? எதோ பண்றா? என்னமோ பண்றா? இராவடிக்காரி இல்ல சரியான வசியக்காறி! அவளை சும்மா விட கூடாது. நம்மள சுத்தி எதுவும் spy கேம் வச்சிருக்காளா? என அப்படியே கட்டிலில் அமர்ந்தான். சத்ய தேவ்..
இராவடிகாரியில் இருந்து வசியாகாரி என புரோமோட் ஆன ரிதம் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? பார்ப்போமா!
இதோ இப்போவே! போலாம்
*
தினம் காலையில் எந்தன் நாள்காட்டியில் உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்! சத்யா!..
சொல்லு டி!
என்ன அப்படி பார்க்கிற? அவள்
எனக்கு ஒரு மாதிரி இருக்கு! அவன்
கிட்ட வராதே வேணாம்!.. அவள்
ஹான் நீ எனக்கு வேணும்! அவன் என கண்கள் சொருகி என்னோட தலைவன் சிம்பு நடித்த சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்! உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய். என்ற பாடலை பாடிக்கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும், அந்த அறையில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள். ரிதம்.
அந்த நேரம் சத்யாவிடமிருந்து ஃபோன் வந்தது. சத்யதேவ் தான்!
யாரு இந்த நேரத்துல? போன் பண்றது? என்று தலை உலுக்கி கொண்டே போன எடுத்தவளுக்கு அதில் சத்ய தேவ்!
ஹான் சத்யா என்று கண்ணுக்குழி ததும்பும் அளவுக்கு புன்னகை செய்தவள். மண்டையில் சுர்ரென ஒரு விஷயம்! அவன் அவளை வேண்டாம் என்று உதாசினம் செய்தது நினைவுக்கு வர…
டேடேய்ய் ராஸ்கல்! என்ன? எனக்கு போன் பண்ணி இருக்க ? தெரியாம மாத்தி பண்ணிட்டியா? நான் கட் பண்றேன்? என்று அவள் வைக்கப் போக..
ஹே குடிச்சிருக்கியாடி என்று சத்திய தேவ் கேட்டான்.
நான் குடிப்பேன்………….. கூடவே என அவள் அடுத்த வார்த்தை பேச வர..
ஹே சட் அப்!. என சத்ய தேவ் கோபத்தில் கர்ஜனை செய்தான்.
ச்சீ போடா! நீ என்ன ம*த்துக்கு எனக்கு கால் பண்ண? அதை முதலில் சொல்லு நாயே!..
என்ன டி? இப்படி எல்லாம் பேசுற? என சத்ய தேவ் கொஞ்சம் திடுக்கிட்டு கூற..
What“ டி”? ஹே மேன்? இனி டி சொல்ற வேலைய வச்சுக்காத! I will kill you! எந்த உரிமையில் டி சொல்ற? நான் உன் தம்பிக்கு பொண்டாட்டி ஆக போறவ! மைன்ட் இட்! இதுவே என் நிதின் உன்னோட ஹரிணிய டி சொன்னால் நீ சும்மா இறுப்பியா டா? என ரிதம் சொல்ல..
*
என்னை விட்டு போறயா டி! என அவளை இறுக்கி அணைத்து உடும்பு பிடியுடன் நின்றான் நிதின்..!
நாளை பார்போம்!
தொடரும்…
EPISODE 84
What“ டி”? ஹே மேன்? இனி டி சொல்ற வேலைய வச்சுக்காத! I will kill you! எந்த உரிமையில் டி சொல்ற? நான் உன் தம்பிக்கு பொண்டாட்டி ஆக போறவ! மைன்ட் இட்! இதுவே என் நிதின் உன்னோட ஹரிணிய டி சொன்னால் நீ சும்மா இருப்பியா டா? என ரிதம் சொல்ல..
“ரிதம்!” என கோபமாக அழைத்தான். சத்ய தேவ்!
நானே தான்? என்ன விசயம்? என அதட்டல் இல்லாமல் பதில் கேட்டாள்.
என்ன? ஸ்டேட்டஸ் அது? வருஷம், மாசம், வாரம், நாள், நிமிடம் அப்டின்னு நினைச்சு உருகி எழுதி இருக்க? என சத்ய தேவ் கேட்டான்.
எனக்கு தோணுச்சு எழுதினேன். போனை வைக்கிறயா? உனக்கு எதுக்கு நான் சொல்லணும்? என மீண்டும் ரிதம் சொல்ல..
எதுக்கு அப்படி ஒரு ஸ்டோரி வச்ச? என மீண்டும் சத்ய தேவ் கேட்க..
உனக்கு என்ன டா மயிறு வேணும்? நான் ஸ்டோரி வச்சா உனக்கு வலிக்குதா? என வார்த்தைக்கு வார்த்தை இரண்டு கொத்து முடியை… மல்லி, சாம்பார் பொடி போல சேர்த்து கொண்டாள்.
ஏதோ தெரியாமல் கேட்டுட்டேன்! இனிமேல் எதைப்பற்றியும் கேட்க மாட்டேன்! என்று போனை வைக்க
சத்யதேவ் என அழைத்தாள். ரிதம்..
அந்த பக்கம் பதில் இல்லை..
கண்டிப்பா என்னோட கல்யாணத்துக்கு நீ வரணும் என்று தீர்க்கமாக கூறினாள்.
ஹான் கண்டிப்பா வருவேன் அது சொல்லப்போனால் என் தம்பி கல்யாணம் என்று கூறிவிட்டு வேகமாக போனை வைத்தான்.
அவள் ஆட்டம், பாட்டம், குதித்தல், என எல்லா அட்டகாசத்தையும் விவேகா பொறுத்து கொண்டே எதிரில் அமர்ந்திருக்கும் இன்ப ராகவனை முறைத்து கொண்டிருந்தாள்.
*
இன்ப ராகவன் பக்கத்துல இருந்து ஹரிணிக்கு விடுப்பு எடுப்பது தொடர்பான ரக்கமண்டேஷன் மற்றும் பிரஷர்.. வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வர… அந்த கிசுகிசு செய்தி நேராக நிதின் காதுகளுக்கு வந்தது.
என்ன விஷயம் என்று அவன் கேட்க
சார் அது உங்க பாதர்- இன்- லா மிஸ்டர் இன்ப ராகவன் இருக்காரே!
ஆமா இப்போ அவருக்கு என்ன? என நித்தின் கடுமையாக கேட்டான்.
அது ஒன்னும் இல்ல சார் ஹரிணி மேடம் லீவுக்கு பிரஷர் பண்ணி ஸ்டேட் கவர்மென்ட்ல்ல முக்கிய பொசிஷன்ல இருக்கிறவங்க! கொஞ்சம் அதுல இம்ப்ளூயன்ஸ் ஆகற மாதிரி இருக்கு! அதை பத்தி பேசறதுக்கு தான் உங்களை நேராக பாக்குறதுக்கு வந்தேன். என்று கூறினார்.
அவர் பேசுவதை கேட்க ஆமா சார் என்று அவர் சொல்ல சரி நான் பார்த்துக்கிறேன் என்று அவரை அனுப்பி வைத்தான்.
அன்று மாலை நேராக எப்பொழுது போல் வீட்டுக்கு வந்து சேர்ந்தால் எந்த வித சலனமம் இல்லாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தது.
நிதின் தடாலடியாக வீட்டுக்குள் நுழைந்தான். ஹரிணி எப்பொழுதும் போல் டிவி பார்த்துக் கொண்டே கொஞ்சம் நொறுக்கு தீனிகள் கொரித்துக் கொண்டு போனை நோண்டிக்கொண்டு இருக்க.. நேராக அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.
ஹரிணி போனில் பிஸியாக இருக்க..
லீவ் அப்ளை பண்ணி இருக்கியா? என்று நிதின் பேச்சை ஆரம்பிக்க
இவ்வளவு நேரமும் வேகமாக போனில் விளையாடிக் கொண்டிருந்த கைகள் அவன் சொன்ன வார்த்தையை கேட்டதும், அப்படியே நின்றது.
உன்னை தான் கேட்கிறேன். ஹரிணி! லீவ் அப்ளை பண்ணி இருக்கியா? என்று மீண்டும் கேட்டான்.
ஹரிணி கண்ணை மூடி ஒரு பெருமூச்சு விட்டவள்.
ஆமா என்பது போல் அவனை பார்க்க..
எதற்கு என்று இதயம படபடக்க அவளை பார்த்தான்.
ஏனோ அவன் முகத்தைப் பார்த்து பேச தோன்றாமல் அவள் போனில் பார்வையை பதித்துக் கொண்டு “எனக்கு… அதாவது நானும், சக்தியும் கல்யாணம் பண்ணிக்க போரோம். அதுக்காக தான் லீவு அப்ளை பண்ணி இருக்கேன்!” என்று அசால்டாக கூறினாள்.
அவள் சொன்ன வார்த்தை அவனுடைய உடலுக்குள் பலவித மாற்றத்தை ஏற்படுத்தியது.
எப்படி? என்னாச்சு திடீர்னு என்று உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டே அவளிடம் கேட்டான்.
திடீர்னு இல்ல நாங்க ரெண்டு பேரும் இதைப்பற்றி தான் அதிகமா பேசிப்போம்! எதுக்கு அதிகமா காலம் தாழ்த்தணும்? அதனால இப்பவே கல்யாணத்தை பண்ணிட்டா போச்சுன்னு தோணுச்சு! அதனாலதான் என்று கூறினாள்.
அப்போ நானும் என்று அவளைப் பார்த்தான். ஹரிணிக்கு நித்தினை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.
அவள் ஒரு பெரும் மூச்சை விட்டு போனை அருகில் வைத்தவள். அவனை பார்த்து என்ன பேசிட்டு இருக்கேன்னு உனக்கு புரியுதா? இல்லையா? எனக்கு என்கேஜ்மென்ட் ஆயிடுச்சு! உன் நினைப்பு எனக்கு இல்ல! சத்தியமா என்னை நம்பு.. என்று அவள் சொல்ல..
பொய் சொல்லாத உன் மனசுல ஒரு இடத்துல கூட நான் இல்லவே இல்லையா? என்று ஏக்கத்துடன் அவளை பார்த்து கேட்டான்.
ஹரிணி அவனைப் பார்த்து நிஜமா நீ இல்ல! உன்ன பார்த்தா, எனக்கு அந்த மாதிரி பீலிங்கே வரல, ஏன்னா நீ என்னை விட சின்ன பையன்! புரியுதா? என்று அவள் சொல்லிவிட்டு எழுந்து நின்றாள்.
அவனும் வேகமாக எழுந்து என்ன பீலிங் வரல? சொல்லு! நான் என்ன பண்ணனும்? என்று அவளின் முன்னாள் சென்று நின்றான்.
ஹரிணி அவனை முறைத்து பார்த்து, உனக்கு என்ன பைத்தியமாடா? இதெல்லாம் சொல்லி வரதில்ல! தானா வரணும்! எனக்கு தோணனும்! உன் மேல அந்த மாதிரியான எண்ணம் எனக்கு இல்லை! ப்ளீஸ் என்னை விட்டுடு! உன் கூட என்னால வாழ முடியாது! நம்ம ரெண்டு பேருக்கும், இது செட்டாகாது! நீ வேற, நான் வேற, எல்லாத்லயும் உனக்கும் எனக்கும் ரொம்ப தூரம், உன்னோட பேமிலி வேற, என்னோட பேமிலி வேற, நான் உன்னை விட பெரியவ, நீ எவ்ளோ பெரிய இடத்துல இருக்க, நான் ஏதோ ஒரு தூரத்துல கடைக்கோடியில் இருக்கேன், நம்ம ரெண்டு பேருக்கு சுட்டு போட்டாலும், செட் ஆகாது! சோ இதை இப்படியே மறந்திடு! நாளை பின்னால் எங்கேயாவது பார்த்தால் ஒரு சின்ன சிரிப்பு! அதோட கடந்து போயிடலாம்! இந்த தேவையில்லாத காதல், கத்திரிக்காய், எல்லாம் எதுக்கு நித்தின் நமக்கு? சொன்னா புரிஞ்சுக்கோ! உன்ன விட பெரியவர் சொன்னா புரிஞ்சுக்கோ! என்று அவள் பொறுமையாக எடுத்துக் கூற..
அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் என்னடி சும்மா செட் ஆகாதுன்னு சொன்னதையே திரும்ப திரும்ப மயிறு மாதிரி சொல்லிட்டு இருக்க? என்ன டி மயிறு! மட்ட அப்படின்னு பேசிட்டு இருக்க? என்ன செட்டாகாது என்ன செட்டாகாது ஹான் சொல்லு!. என்று அருகில் நெருங்கினான்.
ஹரிணி அவனிடமிருந்து அப்படியே பின்னால் நகர்ந்து கொண்டே செல்ல..
ஹேய்! இப்படி பண்ணாத ஹரிணி, என்னால் இதை ஹோல்ட் பண்ண முடியலடி! ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ! நான் இவ்ளோ பொறுமையா யார்கிட்டயும் பேசினதே இல்லை! தெரியுமா? உன்னை எவ்வளவு லவ் பண்றேன்! அது உனக்கு ஏண்டி புரிய மாட்டேங்குது! என்று தலையை கோதியவன் சட்டென அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
ஹரிணி திமிரிக்கொண்டு ப்ச் நித்தின் இது தப்பு! நீ தள்ளிப்போ தள்ளிப் போடா என்று சொல்ல..
அவளிடம் இருந்து ஒரு இம்மி அளவு கூட அவன் நகரவில்லை. அதற்கு பதிலாக இன்னும் இறுகி இறுக்கிக் கொண்டிருந்தான்.
மெதுமெதுவாக அவளை அணைத்துக் கொண்டு உனக்கு பீலிங்ஸ் வர வைக்க நான் என்ன பண்ணனும்? என்று அவளின் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
உனக்குத்தான் ஹார்ஸ் ரொம்ப பிடிக்குமே! என்று சொல்லிக் கொண்டு அவனது கைகள் அவளின் உடைக்கும் மீறி ஊறிக் கொண்டிருக்க..
வேண்டாம் ப்ளீஸ்! சொல்றது கேளு! இது வேண்டாம் டா என்று அவள் அவனிடமிருந்து விலக பார்க்க.. நிதின் அவளை அப்படியே தோல் மேல் தூக்கி போட்டு கொண்டு படுக்கைக்கு சென்றான்.
ஹரிணி ஒரு வித பயத்துடன் அவனிடமிருந்து விலக தோள்பட்டையில் வலிக்கும் அளவுக்கு கடித்தாள்.
நித்தின் பிரகாஷ் அசுரனாக மாறி ஒரு சிரிப்பை உதிர்த்தவன். சத்தியமா வலிக்ககளடி! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் கிடத்தி அவள் மேல் விழுந்தான்.
டேய் உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு பிடிக்காத பொண்ண எதுக்கு இப்படி கட்டாயப்படுத்தற உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா என்று அவள் நடுக்கம் குரலுடன் பேசிக்
நித்தின் அவளைப் பார்த்து அதிகாரமாக சிரித்தவன். நான் சொன்னது உனக்கு புரியலையா? நீ எனக்கு தான் ஒரு தடவை ஒரே ஒரு தடவை ப்ளீஸ் என்று கண்களா கெஞ்சி கொண்டே அருகில் நெருங்கினான்.
ஹரிணி வேகமாக அந்த அறையை விட்டு ஓட பார்க்க..
கதவை லாக் செய்து அவள் பக்கம் நெருங்கினான்.
ஹரிணி பதட்டத்துடன் வேண்டாம்! Don’t do that நித்தின்! இது பெரிய தப்பு! ப்ளீஸ் டா சொல்றத கேளு! ஐயோ என்று அவள் கண்களில் நீர் கோர்க்க நிர்க்கதியாக நின்றாள்.
நிதின் பிரகாஷ் ஒரு பெருமூச்சை விட்டு படுக்கையில் அமர்ந்தவன். மெதுவான குரலில் ஓ நான் உன்ன அராஸ் பண்ணி ரேப் பண்ணிடுவேன்னு நினைச்சுட்டு இருக்கியா? நான் அவ்ளோ சீப்புன்னு நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? நான் சூரிய பிரகாஷ் ரத்தம் டி! என்று அதிகாரமாக கூறினான்.
ஹரிணி அவன் என்ன சொல்கிறான் என பார்க்க..
நித்தின் பிரகாஷ் ஒரு பெருமூச்சு விட்டு தலையை கோதியவன். எனக்கு நீ வேணும் ஆனா உன்னோட பக்கத்துல நான் தூங்கணும்! உனக்கு நான் சொன்னா இங்கே புரிய போகுது. நீ லவ் பண்றேன்னு ஆடிட்டு இருக்கியே? அந்த சத்திய தேவ் இந்த இடத்தில் இருந்தா கூட என்னைக்கோ உன்னை முடித்திருப்பான்! ஆனால் நான் அப்படி இல்ல! உன் கூட நான் எப்பவும் இருக்கணும்! அதுதான் எனக்கு முக்கியம்! அதுக்காக நான் உன்ன படுக்கையில் ரொம்ப திருப்தியா வச்சுப்பென் டி! அவன் மட்டும் ஆண்பிள்ளை இல்ல நானும் ஆண்பிள்ளை தான்!
என்ன சொல்ற? என தாவி குதிக்கும் இதயத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டாள்.
ஆஃப்டர் லவ் மேக்கிங் அப்புறம் கப்பிள்ஸ்குள்ள வர ஒரு நிசப்தமான அமைதி.. அந்த ஆழ்கடல் அமைதியை ரெண்டு பேரும் கைய புடிச்சிட்டு, கண்ணை மூடி தூங்கி அனுபவிப்பாங்க பாரு அது வேணும்!
என்ன?
ஆனா அந்த லவ் மேக்கிங் வேணா! உனக்கு தான் பிடிக்கலையே! அட்லீஸ்ட் உன்னோட பக்கத்துல உன்னோட கையை கோர்த்துக்கிட்டு தூங்குற பாக்கியத்தையாவது எனக்கு கொடு! என்று அவன் சொல்ல மொத்தமாக உடைந்து போனாள். ஹரிணி.
என்ன வார்த்தை சொல்லி இருக்கிறான் என்று அவளுக்கு இதயம் வேகமாக துடிக்க எங்கே ஒரு கட்டத்தில் அவனுடன் ஒன்றி விடுவோமோ! என்று கூட தோன்றியது.
அவள் அதே இடத்தில் அசையாமல் நிற்க என நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் இந்த நைட் என்கூட தூங்கு! அது போதும் அதை நினைச்சுட்டு நான் இருந்துக்குவேன்! என்று நிதின் கூறினான்.
ரிதம் பாவம் இல்லையா? அவளுக்கு என்ன பதில் சொல்ல போற?
அப்போ நான் பாவம் இல்லையா அது என்னடி நியாயம்? என்று நித்தின் கேட்டான்.
நித்தில் சட்டையை கழட்டி கொண்டு அவளைப் பார்த்து ப்ளீஸ் எனக்கு ரொம்ப தூக்கம் வருது. ஜஸ்ட் எனக்கு நல்லா தூங்கணும், உன்ன கட்டி புடிச்சிட்டு தூங்கணும், ஆனா பாரு நான் உன்ன எதுவுமே பண்ண மாட்டேன். இது என் மகி மேல சத்தியம் என் பொம்மாயி சத்தியம் என்று கூறினான்.
ஹரிணிக்கு அவள் மேல்தான் பயமாக இருந்தது அவள் கண்களை மூடி பெரும் மூச்சை விட சீக்கிரம் வா என்று கொட்டாவி விட்டுக்கொண்டு அவளை பார்த்தான்.
ஹரிணி ஒவ்வொரு அடிகளாக பதட்டத்துடன் எடுத்து வைக்க..
வாடி என்று அவளுடைய கையைப் பிடித்து இழுக்க..
அவள் படுக்கையில் இருக்க.. அருகில் அவன்?
தொடரும்..
EPISODE 85
ஹரிணிக்கு அவள் மேல்தான் பயமாக இருந்தது அவள் கண்களை மூடி பெரும் மூச்சை விட சீக்கிரம் வா என்று கொட்டாவி விட்டுக்கொண்டு அவளை பார்த்தான்.
ஹரிணி ஒவ்வொரு அடிகளாக பதட்டத்துடன் எடுத்து வைக்க..
வாடி என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான். அவள் பொத்தென படுக்கையில் விழுந்து விட..
நிதின் அவளை தன் கை வலைவுக்குள் கொண்டு வந்தவன். டின்னர் finish பண்ணிட்டயா?
ம்ம் என ஒற்றை பதில் அளித்த அடுத்த நொடி அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டவள். அவளையே நொந்து கொண்டாள். அய்யோ என இதயம் ஜம்பிங் ஜப்பாங் ஜம்பக்கு போட்டு கொண்டிருந்தது. இது நீயா ஹரிணி? உனக்கு அசிங்கமா இல்லையா டி! இவன் கூட ஒரே படுக்கையில் படுத்து இருக்க? எவ்ளோ பெரிய விசயத்தை பண்ணிட்டு இருக்க? இது எங்கே போயி முடிய போகுது! என நினைத்தவள். அடுத்த நொடி ஸ்ஸ்… என நெளிந்தாள்.
ஆம் அவளின் பின்னால் இருந்து நிதின் கட்டி கொண்டான்.
உயிரே அவளின் உடற் கூட்டை விட்டு வெளியே வருவது போல ஒரு உணர்வு..
அவளின் மனதை புரிந்து கொண்டவனோ கங்களை மூடி கொண்டே அவ்ளோ பயம் வேணாம் ஒன்னும் பண்ண மாட்டேன். என்னோட மனசுல மேட்டர் இல்ல.. இப்போதைக்கு.
ஹேய்! என அதட்டி கொண்டே திரும்பினாள். ஹரிணி..
சும் சும்மா! அஸ்கா புஸ்கா பேச்சுக்கு சொன்னேன்.
கொன்றுவேன்! என சொல்லி விட்டு அவள் கண்களை மூடி கொண்டாள்.
ஆனால் தூக்கம்? அந்த தூக்கம்! ஹிஹிஹி அவளோட மொத்த தூக்கத்தையும் நிதின் தூங்கி கொண்டிருக்கிறான். ஹரிணி விடிய விடிய அவன் கை வளைவுக்குள் இருந்தாள். தூங்க வில்லை. அவளுக்கு அவள் மேலேயே கோபம் ஆத்திரம்! எப்டி நான் இவளோ பெரிய காரியத்தை பண்ணிட்டு இருக்கேன்! இது இது மட்டும் சத்யாவுக்கு தெரிஞ்சா? என எட்சில் கூட்டி விழுங்கியவழுக்கு உள்ளுக்குள் நடுக்கம் தெரிந்தது. இப்படி வேற ஒருத்தனுக்கு உறுதி பண்ண பொண்ணை வலு கட்டாய படுத்தி பக்கத்தில் படுக்க வச்சிருக்கான். என நினைத்தவள் கண்கள் வால்யன்றியாக பார்க்க..
இட்ஸ் ஓகே பார்த்துபோம் என நினைத்தவள் அதிகாலை தூங்கினாள்.
இனி தான் ஆட்டமே சூடு பிடிக்க போகிறது.
*
One love album song போட்டு அந்த மெட்டுக்கு ஆடி களைத்தவள். கடைசியாக உச்ச போதை தேவைப்பட கிளம்பி விட்டாள்
என்ன? அந்த ரூமுக்கு உள்ளே இருந்து எதோ ஒரு ஸ்மெல் வருதே! என விவேகா கூறி கொண்டிருக்க.
தெரியலையே மா! அந்த ரூம் முழுக்க அந்த பக்கம் போனாள் கெட்ட வாடை வருது என சொல்லி கொண்டே விவேகா எழுந்து செல்ல..
ஹே இரு! என இன்பா தடுத்தார்.
ஏன்? நான் போக கூடாதா? என விவேகா முறைக்க..
அவள் ரொம்ப சந்தோசமா இருக்கா! எதுக்கு நீ டிஸ்டர்ப் பண்ற ? கல்யான வேலை எல்லாம் இருக்கு என் பொண்ணு என்ஜாய் பண்ணிட்டு போகட்டுமே! ஸ்பாயில் பண்ணாத டி என இடையை வளைத்து பிடித்தார் இன்பா…
ஹே கைய எடு என பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் வெளியில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது என்ன வெளியே சரத்குமார் இருக்கு சாப்பாடு வச்சியா? என்று இன்பா கேட்க..
விவி மா! நான் வந்துட்டேன் என்று புன்னகையைன் வீட்டுக்குள் நுழைந்தான். ருத்ரன்.
இன்பாவின் முகம் அஷ்டப்படலாக மாற அதுதானே பார்த்தேன் நான் மட்டும் நிம்மதியா இருந்தா இந்த நாய்க்கு பொறுக்கவே பொறுக்காது. இப்போ என்ன அவசரம் ஆடுட்டு வந்துட்டான். என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
நேராக ருத்ரன் தன் அன்னையிடம் சென்று அவரின நெற்றியில் சாமி பிரசாதத்தை பூசி விட்டு பஞ்சாமிர்தம் கொடுத்தான்.
ம்ம் வாங்குகிறேன். என விவேகா திரு நீற்றை எடுத்து கொண்டு இன்பா அருகில் செல்ல .
ப்ச் எனக்கு தான் என வழக்கம் போல இட போக..
ஹே வேணாம் டி! என இன்பா வாயை திறக்க..
ஹே வாயை மூடு டா! என இட்டு விட்டாள். விவேகா..
ருத்ரன் அதை பார்த்து உதட்டுக்குள் சிரிக்க.. இன்பா முறைத்து பார்க்க.. அங்கே மூன்றாம் உலக பனிப்போர் ஆரம்பம் ஆனது.
ஹே அவனை சிரிக்க வேணாம்னு சொல்லு! பல்லை தட்டி கையில கொடுத்திடுவென். என இன்பா சொல்ல..
விவேகா பெரு மூச்சுடன் தன் கணவனை முறைத்து விட்டு ரிதம் அறையை நோக்கி சென்றார்.
உடனே திடுக்கிட்டு இன்பா திரும்பிப் பார்த்து, ஹே எங்கடி போற? நான் தான் சொன்னேன்! அவ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா! என்று இன்பா சமாளிக்க..
அவ எவ்ளோ வேணும்னாலும் ரெஸ்ட் எடுக்கட்டும். எவ்வளவு நேரம் வேணாலும் தூங்கட்டும். இப்போ என்ன எந்திரிச்சு அவ வெட்டி முடிச்ச கலெக்டர் வேலைக்கு போக போற? அது ஒன்னும் கிடையாது நாளைக்கு மதியம் 11:00 மணி வரைக்கும் தூங்க தானே! தூங்கிட்டு போறா! பரவால்ல என் பையன் கோவிலுக்கு போயிட்டு வந்துருக்கான். அந்த பிரசாதத்தை அவளுக்கு போட்டுவிட்டு, போக போற இடத்துல நல்லபடியா குடும்பம் நடத்தணும்னு தான் இட்டு விட போறேன் என்ற நகர
ஹே விவேகா சொல்றத கேளு போகாத என்று சொல்லிக் கொண்டு இன்பா பின்னாலையே சென்றார்
அப்படியே அவளின் கையைப் பிடிக்க..
ஹே ராகவ் கைய விடு என்று விவேகா கொஞ்சம் கையை உதற..
ஏன் என்ன ராகம் சொல்ற? என்ற இன்ப பேச்சை மாற்ற..
நான் விவேகாது புரியாமல் இப்போ என்ன சொல்ல சொல்ற? என்று கேட்க
அதுதான் வீட்டில அந்த நாய் இருக்கானே! அவன் இருக்கும் போது மரியாதையாக கூப்பிடுகிறதா தானே நமக்குள்ள டீல் வச்சிருக்க! இப்போ அவன் முன்னாடி ராகவ்! வாடா , போடா, அவனே ,இவனே, அப்படின்னு கூப்பிட்டா? அவன் என்ன நினைப்பான் ?!என்று ருத்ரனை பற்றி இன்பா கூறிக் கொண்டிருக்க..
சரிங்க போதுமாக கொஞ்சம் நகருங் நான் அவளுக்கு திருநீர் வைக்கிறன் என கதவை தட்ட..
உடனே இன்பா வேகமாக விவேகா எனக்கு நீ பிரசாதமே தரல வா! எனக்கு பிரசாதம் தான் நான் அப்புறமேல் போயி ரிதம்க்கு நெத்தில பூசு என்று சொல்ல..
என்ன ஓவரா உன் பொண்ண காப்பாற்றுவதிலேயே குறியா இருக்க? என்று விவேகா இன்பாவை ஆராயும் பார்வை பார்க்க..
இன்பா தன்னை சமப்படுத்தி சமன்படுத்திக் கொண்டு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! இப்போ என்ன? நீ தொரந்து பார் போய் பார்ப்போம் என்று தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.
சரி என்று அவர் விவேகா திரும்ப அம்மா இப்பவே வை அவளுக்கு அப்பதான் முருகனோட பவரு வொர்க் அவுட் ஆகும். உடனே அவர் ஒழுக்கமா ரொம்ப அடக்க ஒழுக்கமா முதல்ல பொண்ணா மாறுவா என்று ருத்ரன் சொல்ல..
இன்பா ருத்ரன முறைத்தவர் உன்னை இருடா உனக்குன்னு ஒரு நேரம் வரும்போது உன்னை சதக்கு பொதுக்குனு போட்டு மிதிக்கிறன் என்று நினைத்துக் கொள்ள..
விவேகா கதவை திறக்க போச்சு நல்லா மாட்டிக்கிட்டா என் பொண்ணு என்ற நினைக்க..
கதவை திறந்ததும் பாட்டில்கள் நிறைய குப்பைகள் அந்த ஃபாஸ்ட் போட்டுக்கல் அதன் கூடவே சரக்கு பாட்டில்கள் என மொத்தத்தில் குடிகாரியாக இருந்தாள்.
ரிதம் விவேகா அப்படியே உறைந்து நின்று கொண்டிருக்க ..
விவேகா வாயை பிளந்து என்ன வித்தியாசமா ஒரு ஸ்மெல் அடிக்குது? என கேட்க..
என்னம்மா இதெல்லாம் என ருத்ரன் மிகவும் அப்பாவியாக கேட்க..
இன்பா அப்பட்டமாக ருத்ரனை முரைத்தார்.
இதெல்லாம் என்னன்னு தெரியாது அப்படித்தானே என்று இன்பா கேடக
நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல நான் டி டோட்டலர் என ருத்ரா கூற
பார்க்கிறேனேடா உன்னோட டீ டோட்டல என இன்பா நினைத்துக் கொண்டு…
உடனே தன் மனைவி பக்கம் திரும்பிப் ஹே பேபி இதெல்லாம் கூல்டிரிங்ஸ் டி..
அப்படியா என்று விவேகா பார்வை இன்பா மேல் திரும்பியது.
ரிதம் கண்களை தேய்த்துக் கொண்டே டாடி பேபி குட்டி தம்பி எங்க பா? குட்டி தம்பி? ஆமா இவ யாரு என்று ரிதம் எழுந்து உளறி கொண்டே வர..
இப்போ எதுக்கு அவ குடித்திருக்கா? என்னடா பண்ணி வச்சிருக்க? ருத்ரா இது எல்லாத்தையும் போட்டோ புடி! உங்க வசும்மாவுக்கு அனுப்பு! என்று சொல்ல.
ஹே பேபி! பிளீஸ் விவேகா அப்படியெல்லாம் எதுவும் பண்ணாத என்று இன்பா கூற..
பின்ன இதெல்லா பார்க்கவா நான் என்று விவேகாவிற்கு இதயம் கலங்கி போனது.
பேபி பிளீஸ் நீ வெளிய வா நான் சொல்றேன் என்று இன்பா விவேகாவை வெளியே அழைத்து வர..
ரிதம் வழக்கம் போல விரும்பி கொண்டே இந்த ரூம் ரொம்ப குப்பையா இருக்கு. நான் கிளீன் பண்ற என்று எழுந்து தள்ளாடி கொண்டு போக..
அவளை கீழே விழாமல் இன்பா பிடித்துக் கொண்டார்.
டிம்பிள் டிம்பிள் என்று அழைக்க..
டாடி நீங்க மிஸ் பண்ணிட்டீங்க! இன்னிக்கு எல்லாமே சூப்பரா இருந்தது. கொஞ்சம் முந்திரி வறுத்து எடுத்துட்டு வந்து இருந்தா, இன்னும் நல்லா இருக்கும்.
ஏன்டா டேய் என்று அவள் இன்பாவை பேச ஆரம்பிக்க..
விவேகா இதயம் படபடக்க மூக்கு சிவக்க இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
ருத்ரனுக்கு சிரிப்பாகவும் இருக்க அதே சமயம் ஒரு பக்கம் விவேகம் ரிதம் குடித்தது உள்ளுக்குள் ஏதோ போல் இருக்க என்னவா இருக்கும் என்று மனம் கொஞ்சம் தன் அக்காவுக்காக யோசித்தது.
ப்ளீஸ் தயவுசெய்து முறைக்காத எனக்கு உண்மையாவே உன்னை பார்த்தால் பயமா இருக்கு டி! உனக்கு நான் எக்ஸ்பிளைன் தானே பண்ணனும்!; உடனே பண்றேன் ஆனால் ஒரு நிமிசம் என சொல்லி ரிதமை அருகில் இருக்கும் இன்னொரு அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்தவர். ஏசி வைத்துவிட்டு வெளியே வந்தார்.
விவேகா ரெடியாக நின்று கொண்டிருக்க
இன்பா ஒரு பெரும் மூச்சை விட்டு அவளுக்கு இப்பவே நிதின கல்யாணம் பண்ணிக்கணுமாம். அதை எப்படி சொல்றதுன்னு தயங்கி இருக்கா! டாடி தான் எனக்கு போன் பண்ணி சொன்னாரு! அதனால கல்யாண வேலையை பத்தி பேசுறதுக்காக , நாளைக்கு நான் மிஸ்டர் சூரிய பிரகாஷ் பாக்க போறேன் என்று இன்பா கூறினார்.
விவேகா எதுவும் பேசாமல் ஒரு விரக்தி பாவனையை வைத்துக்கொண்டு உள்ளே செல்ல
தன் அன்னையின் பின்னாலேயே ருத்ரன் சென்று விட்டான்.
இன்பா ஒரு பெரும் மூச்சை விட்டார்.
ரிதம் நன்றாகவே தூங்கினான். இங்கு நடப்பதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தூங்க தொடங்கி அடுத்த நாள் வழக்கம்போல் 11 மணிக்கு எழுந்தாள்.
அதை போல் இங்கு நித்தின் , ஹரிணி இருவரும் அடுத்த நாள் எழுந்தனர்.
நித்தின் வழக்கத்திற்கு மாறாக புன்னகையுடன் எழுந்த அமர..
ஹரிணி ஒரு குழப்பத்துடன் எழுந்தாள்.
அந்த நேரம் நித்தனுக்கு போன் வந்தது.
சொல்லுங்க டாடி என்று அவன் பதிலளிக்க
எஸ் பி ஆர் விஷயத்தை சுருக்கமாக கூறி முடித்தார்.
அதை கேட்டதும் நித்தின் முகத்தில் புன்னகையுடன் எழுந்து செல்ல..
என்ன அவ்வளவு சந்தோஷமா சிரிக்கிற? அப்படி என்ன விஷயம் என்று ஹரிணி இயல்பாக கேட்டாள்.
நித்தின் சிரித்துக் கொண்டே தலையை கோதியவன் ஒன்னும் இல்ல! எனக்கும் ரிதமுக்கும் உடனே கல்யாணம் பண்ண போறாங்களாம்! மிஸ்டர் இன்ப ராகவன் வந்து வீட்ல பேசி இருக்காரு!; அதனால என்ன ஊருக்கு வர சொல்லி இருக்காங்க! நான் கிளம்புறேன்!குட் பாய் என்று கூறினான்.
அதை கேட்டதும் ஹரிணி…?
இங்கே சத்திய தேவ் தூங்கினானா?
நாளை பார்க்கலாம்
தொடரும்…
EPISODE 86
என்ன அவ்வளவு சந்தோஷமா சிரிக்கிற? அப்படி என்ன விஷயம் என்று ஹரிணி இயல்பாக கேட்டாள்.
நித்தின் சிரித்துக் கொண்டே தலையை கோதியவன் ஒன்னும் இல்ல! எனக்கும் ரிதமுக்கும் உடனே கல்யாணம் பண்ண போறாங்களாம்! மிஸ்டர் இன்ப ராகவன் வந்து வீட்ல பேசி இருக்காரு!; அதனால என்ன ஊருக்கு வர சொல்லி இருக்காங்க! நான் கிளம்புறேன்!குட் பாய் என்று கூறி கொண்டே எழுந்தான்.
ஹரிணி அவனையே திகைப்பில் பார்த்து கொண்டிருக்க..
என்ன அப்படி பாக்குற? என்று நித்தின் எந்த ஒரு வெளிப்பாட்டையும் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் கேட்க..
நீ இப்போ என்ன சொன்ன என்று ஹரிணி மீண்டும் கேட்டாள்.
அவன் எழுந்து உடையை சரி செய்து கொண்டே “அதுதான் மிஸ்டர் இன்பராகவன் அதாவது என்னோட வருங்கால மாமனார். ம்ம் வீட்ல வந்து கல்யாணத்தை இப்பவே வச்சுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டாரு! அதனால இப்பவே என்னோட டாடி கிளம்பி வர சொன்னாங்க! இப்போதைக்கு பெருசா ஒர்க் எதுவும் இல்லை! ஆல்ரெடி அந்த ஆர்மி எக்யூப்மெண்ட்ஸ், இதெல்லாம் டிஸ்கஸ்ன்ல தான் போயிட்டு இருக்கு, மறுபடியும் எல்லாம் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி தான் ஒரு டிசிஷன் எடுக்க போறோம்! அதனால டைம் இருக்கு! என்று அவனுடைய வாட்சை எடுத்துக் கட்டியவன். சீக்கிரமா மேரேஜ் பண்றதா ஐடியாவில் இருக்கிறதா டாடியோட பேச்சு பார்க்கும்போது தெரியுது.
ஹரிணி இதயம் படபடக்க அவனை பார்த்து கொண்டிருக்க…
“May be இந்த மன்திலேயே கல்யாணம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். அதனால பெருசா ஒன்னும் பிரச்சனை இல்ல! கூடவே எனக்கு பொம்மை ஞாபகம் ரொம்ப அதிகமா இருக்கு மிதுன பார்த்து ரொம்ப நாளாச்சு என்று உருவத்தை உயர்த்தியவன் அதனால உடனே கிளம்புறேன் கொஞ்சம் ரெஸ்லசா ஃபீல் பண்ற மாதிரி இருக்கு அங்க போய் தூரிகா சிவன்யா மிதுன் மொத்தத்துல என்னோட தம்பி தங்கச்சிங்கள பாக்கணும் அப்பதான் எனக்கு ரிலீஃபா இருக்கும்!” என்று நிதின் கூறி கொண்டை அவளின் முகத்தை பார்த்தான்.
அவள் அசையாமல் அப்படியே அமர்ந்து இருக்க.
என்ன ஆச்சு ஹரிணி? சாரி சாரி ஹரிணி அண்ணி சரிதான! உங்களுக்கும் சத்யதேவ் அண்ணாவுக்கும் எப்ப கல்யாணம்? என்று கண்களை சிமிட்டிக்கொண்டே சாதாரண தொனியில் அவளிடம் கேட்க…
ஹரிணி தண்ணிலைக்கு வந்தவள். எனக்கு வீட்டுக்கு போனா தான் தெரியும். அதுதான் இன்பா அங்கிள் லீவு அப்ளை பண்ணிட்டாங்களே! நான் இப்பவே ஊருக்கு கிளம்புறேன்!..
சரி நீங்க போங்க நாங்களும் நானும் கிளம்பனும் என் தங்கச்சி கனி வேற வெயிட் பண்ணிட்டு இருப்பா! ஆல்ரெடி டாடி அவகிட்ட சொல்லி இருப்பாங்க! நீங்க உங்க வழியை பார்த்து கிளம்புங்க! என்று தலையாட்டிக்கொண்டே உதடுகளில் பாடலை முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினான்.
அவனுடைய இந்த தோற்றம் முற்றிலும் வேறாக இருந்தது.
ஹே ஹரிணி! ஹரிணி விட்டுப் போகாதடி! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்! என்று பின்னாலே சுற்றிக் கொண்டிருந்த நித்தின் பிரகாஷா இது? என்று அவளுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது. கிட்டத்தட்ட இந்த இரண்டு மாத காலத்திற்குள் அவளை 20 வருடம் காதலித்தவன் போல் படாத பாடு படுத்தி விட்டான்.
அவன் வெளியே செல்வது தெரிய ஹரிணி வேகமாக வெளியே நடந்து வந்தாள்.
ஏதோ ஒரு உந்துதல் அவனிடம் பேசி விட வேண்டும்! என்று தோன்ற..
நித்தின் ஒரு நிமிஷம் என்று அழைத்தாள்.
சொல்லுங்க நீ என்று அதே துள்ளலுடன் திரும்பிப் பார்த்தான்.
எனக்கு ஒரு சந்தேகம்! ஹான் இது சந்தேகம் கூட இல்லை! ஒரு கிளாரிஃபகேஷன்! எனக்கு தெரிஞ்சே ஆகணும்! என்று ஹரிணி ஆராயும் பார்வையுடன் பார்க்க..
சொல்லுங்க என்ன தெரிஞ்சுக்கணும்? ம்ம் டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா? இல்ல உங்கள டிரா பண்ணனுமா? பாருங்க சத்திய தேவ்ற்கு என் கூட நீங்க வந்தா பிடிக்காது! அவனுக்கு சலுகை எல்லாம் பிடிக்காது. அவனோட ஹாபிட் அதிகமாகவே ட்ரெயின்ல தான் டிராவல் பண்ணுவான் எனக்கு சுத்தமா ட்ரெயினு பஸ் எதுவுமே ஒத்துக்காது. ஏசி கார் , ஜெட் இந்த மாதிரி டிராவல் பண்ண தான் பண்ணா தான் எனக்கு ஒத்துக்கும்! என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க..
போதும் நிறுத்து என்று கூறினாள். ஹரிணி.
சரி சொல்லுங்க என்ன விஷயம் என்று கேட்க..
இத்தனை நாளா என் பின்னாடி லவ் பண்ண! லவ் பண்ணு! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்! அப்படின்னு சுத்திட்டு இருந்த, இன்னிக்கு வேற ஒரு பொண்ண.. ஐ மீன் இதெல்லாம் முன்னாடியே உனக்கு தெரியும் தானே! அப்புறம் எதுக்கு தேவையில்லாம , என் பின்னாடி சுத்திட்டு இருந்த? என்று தன் மனதில் இருக்கும் அத்தனை குழப்பத்தையும், இன்று கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆற்றாமையுடன் கேட்டுவிட்டாள். ஹரிணி.
நித்தின் அவளை கூர் பார்வையுடன் யார் சொன்னது? என்று கேட்டான்.
ஹரிணி ஷாக்காகி என்ன விளையாடுறியா? என்று அதட்டலுடன் கேட்க..
நித்தின் சிரித்துக் கொண்டே அய்யோ! யாரு சொன்னது? நான் உங்களை லவ் பண்ணலன்னு? என் மனசு முழுக்க நீ இங்க தான் இருக்கீங்க! என்று தெளிவாக தீர்க்கமாக நேர் கொண்ட பார்வையுடன் கூறினான்.
ஹரிணி பேச்சற்று அவனைப் பார்த்துக் கொண்டிருக்க..
நித்தின் புன்னகையுடன் எப்படியும் நான் உங்கள லவ் பண்றேன், என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம், இந்த வயசு எல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது, உங்களோட மனசுல சத்திய தேவ் இல்ல! நீங்க குழப்பத்துல இருக்கீங்க, உங்களுக்கு ஏத்தவன் நான் தான். இப்படி எந்த டயலாக்கும் ஈவன் சில உண்மையான விஷயம் எது சொன்னாலும் , உங்களுக்கு அது ஏற போறதும் இல்ல. புரிய போறதும் இல்லை, முக்கியமா நீங்க மாற போறது இல்ல! என்று தெளிவாக கூறினான்.
ஹரிணி இமை வெட்டாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க..
நிதின் அவனுடைய கை சட்டையை மடக்கி விட்டுக் கொண்டே டக்கின் செய்தவன். எனக்கு தெரியும்! நீங்க… உங்க மனசுல.. என்று ஒரு நிமிடம் அவனுடைய பேச்சு உள் சென்று அதன் பின் தன்னை சமாளித்துக் கண்டு உங்க மனசுல சத்திய தேவ் தான் இருக்கான். ஆனால் அதையும் மீறி ஒரு நப்பாச! உங்க கூட கொஞ்ச நாள் டைம் ஸ்பென்ட் பண்ணனும்! அது பிசிகலா எனக்கு தேவை இல்லை! உங்களுடன் நினைவுகள் precious, ம்ம் peculier-ஆ இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதை எப்டி define பண்றது? அதை define பண்றதுன்னு தெரியல! தமிழ்ல நிறைய வார்த்தை இருக்கு!..
ஹரிணி அவன் பேசும் தோரணையை பார்த்து கொண்டிருந்தாள்.
ம்ம் இனிப்புக்கு example ஆ ஆயிரம் இருக்கும். ஆனா ஒவ்வொரு இனிப்பும் ஒவ்வொரு சுவையை கொண்டிருக்கும். ஒரு இனிப்போட இன்னொரு இனிப்பை ஒப்பிட முடியாது. ஆனா இயற்கையான இனிப்பு ஒன்று இருக்கு. அது பூக்கலில் இருந்து தேனி எடுத்து அதை சாப்பிட்டு கொடுக்கிற அந்த தேன்!.. அந்த தேன எது கூடவும் கம்பேர் பண்ண முடியாது. அது மாதிரி உங்க கூட இருந்த எல்லா நாளும் எனக்கு ரொம்ப தித்திப்பா இருந்தது. அது எப்பவுமே இருக்கும். அந்த டேஸ்ட் எப்பவும் மாறாது. என சொல்லி விட்டு அவளின் முகத்தை பார்த்தான்.
ஹரிணி அப்படியே கல் போல இருந்தாள்.
ஆமா! நான் ரிதம் கல்யாணம் பண்ணிக்க போறேன்! ரிதம் என்னோட child hood friend. அவளை நான் தங்கச்சியா பாக்கல! ஆனால் என் கூட கல்யாணம்… அது அந்த மாதிரியெல்லாம் நான் திங்க் பண்ணல! நல்ல பொண்ணு கிட்டத்தட்ட சொல்லப்போனால், எனக்கும் அவளுக்கும் ஒரே குணம் அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருப்போம். எனக்கு அவளோட ஃபேமிலிய தான் பிடிக்காது.. அவங்க வீட்ல இருக்குற யாரையுமே பிடிக்காது. இன்ப ராகவன், விவேகா, ருத்ரன், ஈவன் அவளை கூட பிடிக்காது ஆனா அவளை பிடிக்க ஒரே காரணம். அத எப்படி சொல்றது எனக்கும் அவளுக்கும் சில விஷயத்தில் ஒத்துப் போகும். அப்படியே இல்லனா கூட, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ்ந்துடுவேன். அவள் அவ்வளவு நல்ல பொண்ணு… இதுக்கும் மேல என்ன சொல்ல.. ஹான் இப்படித்தான் லைக் போகும்னு இருந்தா, யாரால மாற்ற முடியும்? என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தான்.
அவளால் என்ன பேச முடியும்? பேச்சு இல்லாமல் அவள் அப்படியே நின்று கொண்டிருக்க..
நித்தின் சாதாரணமாக இது பெருசா எடுத்துக்காதீங்க! வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலி எனக்கு மட்டும் தான். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க! இது எல்லாத்தையும் போட்டு penaterate பண்ணிட்டு இருக்காதீங்க! உங்களோட லைஃபை, நல்லா என்ஜாய் பண்ணுங்க! சத்தியதேவ கல்யாணம் பண்ணிக்கோங்க! அவன பத்தி சொல்லவா வேணும்? என்ன விட எல்லாருக்கும் ஃபேவரட் அவன்தான். சொல்ல போனால் அவ என்ன விட யார்கிட்டயும் பேச மாட்டான். அப்படி இருந்தும் அவனை தான் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. எனக்கு பொறாமை தான்! ஓப்பனா நான் ஒத்துக்குறேன்! இருந்தாலும், ஓகே… இது இப்படித்தான் போகும்னு இருந்தா, யாரால மாத்த முடியும்? இருந்தாலும் ஹனி… என்னோட தேன் கூட தேவையான அளவுக்கு நான் மெமரி கிரியேட் பண்ணிக்கிட்டேன். இது போதும். என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
ஒருவருக்கு உதயம் இன்னொருவருக்கு அஸ்தமனம் யார் யாருக்கு என்ன நடந்தது பாக்கலாம்.
*
விடிய விடிய அந்த பூஜையறையில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. திருவருட்பா, திருவாசகம் , என அனைத்து சிவபுராணங்கள் மற்றும் வள்ளலார் புத்தகங்கள் என எடுத்து படித்தவன். எப்படி கண்ணுறங்குவான்? என்று அவனுக்கே தெரியவில்லை.
வேறு யாரு சக்தி எனும் சத்தியதேவ் தான்..
அவனுக்கு மனம் முழுவதும் சஞ்சலமும் குழப்பமும் தான் நிறைந்து இருந்தது. இல்ல அது அப்படி இல்ல மனம் முழுவதும் ஏன் உடல் முழுவதும் எந்தெந்த இடங்களில் எல்லாம் துடிப்புகள் இருக்கிறது அந்த இடங்களில் எல்லாம் ரிதம் துடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போதைக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் அவளோட போட்டி போட்டு என்னத்த சாதிக்க போறேன்னு? ஒரு மனம் சொன்னாலும், ஆனா என்னோட ஹரிணி நான் …. என்னால எப்பவும் விட்டுக் கொடுக்க முடியாது. அவ எனக்காக… எனக்கு முன்னாடி பிறந்தவ என்று சொல்லிக் கொண்டான்.
ஆனால் உள்ளுக்குள் ரிதமிக் துடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
பார்ப்போம் என்ன நடக்கிறது? என்று இதோ நித்தின் பிரகாஷ் வந்து விட்டான்.
அதேபோல் ஹரிணி பிலைட்டில் வந்து இறங்கினாள்.
வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் சூர்யாவின் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
ஏனென்றால் சத்யதேவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. ராம் மற்றும் கீதா இருவருக்கும் உறவினர்கள் அதிகமாக யாரும் இல்லை. அதனால் திருமணத்தை பெங்களூரிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவில் இருக்க..
நிதின் பிரகாஷ் மற்றும் ரிதம் இருவரின் திருமணமும் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று கோரிக்கை. ஏனென்றால் மொத்த சொந்த பந்தங்களும் அங்கு தான் இருக்கிறது. தொழில் வட்டங்கள், நட்பு வட்டங்கள், என மொத்தமும் அங்கிருக்க.. இது எதற்குமே எனக்கு சம்பந்தமில்லை என்பது போல் விவேகா நின்று கொண்டிருக்க.. அருகில் ருத்ரன் நின்று கொண்டிருந்தான்.
வசந்தனுக்கு மிகவும் சந்தோஷம் தன்னுடைய இரண்டு பேரன்களுக்கு திருமணமாகப் போகிறது. அடுத்தடுத்து அனைவருக்கும் திருமணமாகும் இந்த கால் இல்லாதவனுக்கு இதுவே போதும். எப்படியாவது இந்த உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பது என்னுடைய பேர பசங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகி அவங்கள வாழ்த்திட்டு போறதுக்கு தான். என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
அதேபோல் முதன்முதலாக இந்த வீட்டில் ஆண் வாரிசுக்கு திருமணம் நடக்க.. அங்கு தான் அனைவரும் கூடியிருக்கும் பொழுது..
நித்தின் பிரகாஷ் நேராக மகி அருகில் வந்தவன். தன் தாத்தாவை பார்த்து ஃபர்ஸ்ட் நான் கல்யாணம் பண்ணிக்கவா? என்று கேட்டான்.
ஹரிணி அவனை ஒரு நிமிடம் திடுக்கிட்டு பார்த்தால் இவன் நித்தின் பிரகாஷ் தானா? என் பின்னாடி லோ லோன்னு.. நாய்க்குட்டி மாதிரி இன்னும் அதைவிட கேவலமா சுத்துனவன், தான் இப்படி பேசிட்டு இருக்கானா? ஒருவேளை பிளான் பண்ணி என்ன பழி வாங்கினானா? எது உண்மை எது? பொய் எது? என்று நொந்து கொண்டே நின்று இருந்தாள்.
ரிதம் மேடம் மட்டும் அங்க இல்ல! அவங்க எங்க இருக்காங்க? வழக்கம் போல தான் ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை.. என்பதை போல் உலகம் மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஒருத்தி அவ்வளவு குடி! இன்னும் அந்த தூக்கம் கலையவே இல்லை.
அது எப்படி முடியும்? சத்ய தேவ் இருக்கும் போது உனக்கு எப்படி? என்று முதலில் வேண்டாம் என்று சொன்னது. மைவிழி தான்..
ஏன் சித்தி என்று நித்தின் கேட்க..
இந்த வீட்டோட மூத்த வாரிசு சூரி சத்தியதேவ் தான்! அவனுக்கு தான் முதல்ல கல்யாணம் நடக்கணும்! நீ எப்படி கல்யாணம் பண்ணிக்குவ? என்று அவள் கண்களில் கடுமை இருக்கத்தான் செய்தது.
தூரிகா, சிவன்யா, பவன்யா, வெற்றி, நிவாஸ் ருத்ரன், ஆதவ் ,ஹரிணி, சத்யதேவ் என அனைவரும் இருக்க.. நிலா இங்க மிஸ்ஸிங்.. மேடம் தான் டெல்லியில் ஆர்மி மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறாங்களே! அதனால அவங்க வரல.. மத்தபடி அதுக்கப்புறம் இனியா, இதயன் ரெண்டு பேரும் வரல..
கலைவாணி தான் பிள்ளைகளை மட்டும் அனுப்பு என்று உதயனிடம் சொல்ல..
இதயன் இனியா இருவரும் பிசினஸ் விஷயமாக தாராவுடன் ஜெர்மனி ட்ரிப் சென்று இருந்தார்கள். அதனால் அவர்கள் வரவில்லை.
சரி கதைக்கு வரலாம்..
நித்தின் பிரகாஷ் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.. மகிழினி மற்றும் சூர்யா இருவரையும் பார்த்து நான் டிபன்ஸ் மினிஸ்டரா இருக்கேன்! அதனால ஃபர்ஸ்ட் என்னோட கல்யாணம் நடந்து , அதுக்கப்புறம் சத்தியதேவ் அண்ணாவோட கல்யாணம் நடந்தா, என்னோட கல்யாணம் யாருக்குமே தெரியாம போகும். ஏன்னா எனக்கு இங்க பாதுகாப்புல கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. இப்போதைக்கு நான் எந்த பாதுகாப்பு அதாவது செக்யூரிட்டி ஏஜென்சி எதிலுமே போர்ஸ் வேணும் அப்படின்னு கேட்டதும் இல்ல. அந்த அளவுக்கு வச்சுக்கிட்டதும் இல்ல. சோ பஸ்ட் சிம்பிளா என்னோட கல்யாணம் , ரிஜிஸ்டர் மேரேஜ்ல முடிஞ்சிடுச்ச அதுக்கப்புறம் சத்தியதேவ அண்ணாவுக்கும், ஹரிணி அண்ணிக்கும் கல்யாணம் நடந்தா அவங்க கூட சேர்ந்து நாங்க ரிசப்ஷன் வச்சிகிரோமே! அது எங்க நடந்தாலும் சரி இன்பா மாமா உங்களுக்கு ஓகேவா? அத்தை உங்களுக்கு ஓகேவா? இன்று விவேகாவை பார்த்து, நித்தின் கேட்க..
இன்பராகவன் சூர்யாவையும் சூரிய பிரகாஷையும் பார்த்தார்.
உடனே மைவிழி அடுத்து பேச வர..
சரி உனக்கு அவ்வளவு தானா ஆசை யாருக்கு எப்ப கல்யாணம் நடந்தா என்ன? நீங்க உங்களோட சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம். நீ சொன்னபடியே முதல்ல உங்களுக்கு கல்யாணம் நடக்கட்டும். அதுக்கப்புறம் சூரியதேவோட பையனுக்கும், ஹரிணிக்கும் கல்யாணம் நடக்கட்டும். என்று மகி ஏகத்தாளமாக கூறினார். .
நிதின் சிரிப்புடன் அவரை கட்டி கொள்ள..
ஹரிணி வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
சத்ய தேவ் நீ சொல்லு! உனக்கு இதில் பிரச்னை இல்லையே என மை விலி கேட்க..
சத்ய தேவ்..?
தொடரும்…
EPISODE 87
வசந்தன் ஒரு பெருமூச்சு விட்டு சத்யதேவ் என்று அழைக்க..
தாத்தா எனக்கு பிரச்சனை பண்ணனும்னு ஆசை இல்ல! யாருக்கு எப்போ கல்யாணம் நடந்தா என்ன?. ஒன்னும் பிரச்சனை இல்ல! எனக்கு ஓகே தான் என்று கூறினான்.
நிதின் பிரகாஷ் சிரித்துக்கொண்டே தேங்க்ஸ் அண்ணா என்று அனைவரும் முன்னிலையிலும் சொல்ல..
கலைவாணி மற்றும் வசந்தனுக்கு மிகவும் சந்தோஷமாகி போனது. தேஜு தன் மகனை புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க..
ஓகே அப்போ போச்சு ஸ்டார்ட் பண்ணலாம் மாமா உங்களுடைய எங்க ரிதம் காணோம்! அவ வரலையா? என்று கேட்க
சூர்யா இன்பாவை பார்த்து எங்கடா கண்ணு கட்டி என்று கேட்டார்.
அவ வருவா கொஞ்சம் பிஸியா இருக்கா? வீட்ல சமைக்க கத்துகிறா! நிறைய வேலை கத்துகிறா, அதனால என இன்பா சொல்ல..
மகி சிரித்துக்கொண்டே எங்க வீட்டு மருமக சமைக்கணும்னு, அவசியம் இல்ல வேலைக்காரங்க இருக்காங்க. அப்படி இல்லன்னா நாங்க இருக்கோம். என்னக்கா?. நீ ரிதமுக்கு சமைச்சு போட மாட்டியா? என்ன? அவள் வருங்கால ஐஏஎஸ் ஆபிஸர் என்று மகிழினி சொல்ல..
நித்தின் சிரித்துக்கொண்டே கண்டிப்பா என்று ஹரிணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
சரி அப்போ முகூர்த்த புடவை எடுக்கலாமா?
அப்படின்னா முகூர்த்த புடவை எடுத்துடுங்க என்று கலைவாணி சொல்ல..
மைவிழி அங்கு நடப்பதை பார்த்து விட்டு கோபமாக கார்த்திக் வா வீட்டுக்கு போலாம் என்று சொல்ல..
சத்ய தேவ் தன் சித்தியின் கையை பிடித்தவன் என்ன சித்தி கிளம்புறீங்க? என்று சொல்ல
ஆமா உங்க அம்மாவுக்கு எவ்வளவு கொழுப்பு? எப்படி பேசுறா பாரு! என்று சொல்ல..
விடுங்க சித்தி நம்ம போலாம் என்று சத்தியத்தை முன்னால் நடக்க ஹரிணியும் பின்னால் நடந்தாள்.
உடனே நித்தின் பிரகாஷ் முகூர்த்த புடவை டிரஸ்சும் எல்லாம் சேர்ந்தே பண்ணலாமே! சத்திய தேவ், அண்ணாவுக்கும் ஹரிணிக்கும் எப்ப கல்யாணம் என்று நித்தின் கேட்டான்.
ஹரிணியின் பார்வையில் அந்த இடத்தில் மிகவும் வெட்டில் புழு போல இருந்தது. இதற்கு என்ன பதில் சொல்வது? அதுவும் இந்த கேள்வியை யார் கேள்வி கேட்கிறார்கள்? என்று அவளுக்கு மிகவும் குழப்பமாக இருக்க..
நேற்று நித்தின் பிரகாஷ் பேசிய அனைத்து விஷயங்களும் ஹரிணியின் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது. இனிப்புக்கு ஒரு விளக்கம் கொடுத்தானே! அவனா இந்த வார்த்தை கேட்கிறான்? அப்போ இதுக்கு நான் என்ன பண்ண போறேன்? என்ன நடக்குமோ? என்று பதட்டத்துடன் கைகளில் சொடக்கு எடுத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள் ஹரிணி.
சத்யதேவ் ஹரிணியின் அருகில் வந்த நின்றவன். இப்போ அவசியம் சொல்லியே ஆகணுமா? தேஜுமா உங்க பையனுக்கு தானே முதல்ல கல்யாணம் நடக்குது! அதை நிறையோட பண்ணி முடிங்க! எங்கள பத்தி எதுக்கு கவலைப்படணும்? என்று கேட்டான்.
உடனே மகிமா என்ற நித்தின் பிரகாஷ் திரும்பி எனக்கு அண்ணாவுக்கு வேணா, என் மேல அக்கறை இல்லாம இருக்கலாம்! ஆனா எனக்கு அண்ணா மேலயும் இருக்கு, அண்ணி மேல கூடவே இருக்கு!! நான் எவ்வளவு தூரம் தான் போராடுவது? நான் எல்லாரும் வேணும் அப்படின்னு நினைக்கிறேன்! ஆனால் அண்ணாதான் என்ன தள்ளி வைக்கிறான். தாத்தா நான் என்ன பண்ணட்டும்? என்று மிகவும் வருத்தமான குரலில் பேசினான்.
வசந்தன் சத்திய தேவை பார்த்து இவ்வளவு தூரம் நித்தின் சொல்றானே! சத்திய தேவ் கண்ணா! ரெண்டு பேரும் உங்களோட வருங்கால மனைவியை அழைச்சிட்டு போயி புடவை எடுத்துட்டு வாங்கல! அது கொஞ்சம் நல்லா இருக்கும்! என்று கூறினார்.
சத்யதேவ் ஹரிணியின் முகத்தை பார்க்க..
அவள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் உனக்கு எதுவோ எனக்கு அது ஓகே என்று அவள் கூறினாள்.
சரி நாங்களும் வருகிறோம் என்று ஒற்றைப்பதிலுடன் முடித்துக் கொண்டு அவன் கிளம்ப..
அந்த இடத்தில் இருந்து இரண்டு குழுக்களாக பிரிந்தார்கள். தூரிகா நேராக சத்ய தேவ் அருகில் சென்றாள். ருத்ரன், பவன்யா, இருவரும் தூரிகாவுடன் செல்ல..
அந்த நேரம் நித்தின் பிரகாஷ் தூரிகாவின் அருகில் வந்தவன். பாப்பா வா என்று அழைத்தான். அவள் ஒரு பெரு மூச்சை விட்டு சென்றாள்.
சரி அதை விடுங்க எல்லாரும் இங்க இருக்கோம்! ஆனா முக்கியமான ஆள் மட்டும் காணோமே! என்று தூரிகா அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்க..
பெரியவர்கள் அனைவரும் மதிய சமையல், கல்யாண வேலை என அதில் பிசியாகி விட்டார்கள். விவேகா கொஞ்சம் கலக்கத்துடன இருக்க, மகி அவரை சமாதானம் படுத்த சென்று விட்டார்.
யார் தேடுற என்று சிவன்யா கேட்க
வெற்றி சிரித்துக்கொண்டே வேற யாரா இருக்கும்? நம்ப ரிதம் அண்ணி தான்! என்று கூறினான்.
ஆமால சரி வாங்க அவளை போய் பார்க்கலாம் என்று அனைவரும் கிளம்பினார்கள்.
ருத்ரன் பவன்யா மற்றும் சத்யதேவ், ஹரிணி என நால்வரும் ஒரு பக்கம் இருந்தார்கள்.
என்னடா தீரா இப்பல்லாம் என்ன கண்டுக்கவே மாட்டிக்கின்றாய் முன்னெல்லாம் வந்து வந்து என கண்டிப்பா இப்போ என்ன ஆச்சு? என்று கேட்க
ஒன்னும் இல்லடி நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். அவ்வளவுதான் என் பவா குட்டிய, நான் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவேனா? என்று இருவரும் விளையாடிக் கொண்டே உண்மையான நேசத்துடன் பொய்யாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி பவானியாவிற்கு ருத்ரன் மேல் எந்த தப்பான எண்ணமும் கிடையாது.
சரி சரி வா போலாம் என்று பவன்யா ருத்ரனின் தோளில் சாய்ந்து கொண்டே கைகளை கோர்த்துக்கொண்டு நடக்க..
வெற்றி மற்றும் நிவாஸ் இருவரும் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உங்க அக்காவுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா டா? அவன விட சின்ன பையன் கூட போய் இப்படி போயிட்டு வந்துட்டு இருக்காளே! என்று நிவா சொல்ல..
நான் என்ன பண்ணட்டும்! அவ எப்பவும் அப்படித்தான்! எங்க அப்பா மாதிரி.. நாங்க சொல்ற பேச்சையே கேட்க மாட்டா! என்று வெற்றி கூறினான்.
ஒரு வழியாக அனைவரும் இன்பாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.
சத்திய தேவ் தயக்கத்துடன் வெளியே நின்று கொண்டிருக்க..
மாமா என்ன அங்கே நின்னுட்டு இருக்கீங்க உள்ள வாங்க என்ற ருத்ரன் அழைக்க..
அது வந்து இன்று தயங்கிக் கொண்டே நின்றான் சத்திய நின்றான் சத்யதேவ் அட வாங்க மாமா இது என்னோட வீடும் கூட என அழைத்து சென்றான்.
ஹரினி கூட அதே நிலையில் தான் கூட வந்தாள். முன்பெல்லாம் இப்படி ஒரு உணர்வு இருந்ததில்லை. ஆனால் இன்று ஏனோ ரிதம் வீட்டுக்குள் நுழைய சங்கடமாக இருந்தது.
அவள் சத்ய தேவ் கைகளை பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
ரிதம் இப்பொழுது தான் நடு சாம கனவில் இருக்க..
அவளை சுற்றி அனைத்து பட்டாலமும் அமர்ந்திருந்தது. நிவாஸ், சிவன்யா, தூறிகா, வெற்றி, நிதின், மிதுன் என அனைவரும் இருந்தார்கள்.
இதயன் இருந்தால் நல்லாருந்திருக்கும். அவன் தான் ஜெர்மனியில் இருக்கானே! என வெற்றி வருத்தத்துடன் கூற..
இதயனை பார்க்காமல் ஃபீலிங்கா இல்ல? இனிமையான ஃபீலிங்கா? என மிதுன் வெற்றியின் காதில் கூறினான்.
அப்படி தான் அண்ணா! பயமா தான் இருக்கு! இருந்தாலும் இம்சையா இருக்கு! ஆனால் அவள் அந்த பிரச்னைக்கு அப்புறம் பார்க்கவும் மாட்டிக்கிரா! பேசவும் மாட்டிக்கிறா? எப்போ பாரு சத்ய தேவ் அண்ணா கூட தான் இருக்கா! என வருத்தத்துடன் கூறினான்.
ஹே என்ன டா வெற்றி லவ்வு பண்றேன்னு மட்டும் சொல்லிடாத!. என மிதுன் வருத்தத்துடன் சொல்ல..
ஏன் நீங்க அவளை லவ் பண்றீங்களா? என்ன அண்ணா? நீங்க இருக்க பர்சனாலிட்டிக்கு நூறு பொண்ணுங்க லவ் யூ சொல்ல கியு ல நிக்கிது! இனியா எல்லாம் எந்த மூளை என வெற்றி சொல்ல..
டேய் எனக்கு வெட்கமா இருக்கு டா நிவாசு ஆலாக்கு சைசில் இருக்கும் இவன் எல்லாம் லவ் பண்றான்! எனக்கு ஒரு ஆளு கிடைக்க மாட்டிக்கிது! கண்டிப்பா இது அந்த சூர்ய தேவ் சாபம் தான்! என மிதுன் நொந்து கொண்டே கூற..
என்ன அண்ணா! என்ன டாடி பத்தி சொல்லிட்டு இருக்க? என தூறிகா வந்தாள்.
அந்த நேரம் இப்படியே பேசிட்டு தான் இருக்க போறீங்களா? எப்ப தான் மண்ணிய, அண்ணிய, நம்ம நித்தின் அண்ணாவோட கனவு கன்னிய எழுப்ப போறீங்க? என்று சிவன்யா கேட்க..
அனைவரும் சிரித்துக்கொண்டே ரிதம் முன் வட்டமிட்ட படி அமர்ந்தார்கள். அண்ணி அண்ணி என்று அனைவரும் அழைக்க
நித்தின் பிரகாஷ் ஒரு பக்கம் கடுப்புடன் நின்று கொண்டிருந்தான். எப்படி தூங்குகிறா? மனசாட்சியே இல்லாமல் தூங்குகிறாளே! மணி 12.00 ஆகுது. இந்த லட்சணத்துல ias, ips படிக்கிறேன்னு வேற சொல்லிட்டு திரியிறாலே! இவளை எல்லாம் எப்படி வச்சு மேய்க்கிறது? என்று சலித்துக் கொண்டே நின்றான்.
அந்த நேரம் அவள் மெதுவாக கண்களைத் திறந்தவள் . ஹே கனவில் கூட என்னை நிம்மதியா ரொமான்ஸ் பண்ண விட மாட்டீங்களா? இங்கேயும் இப்படித்தான் ஃபாலோ பண்ணிட்டு வருவீங்களா? என்ன எல்லாரும் இப்படி வந்து இருக்கீங்க? டேய் மிதுன நீ கூட இங்க வந்துட்டியா? உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? உனக்கு கனவுல கூட ஒரு பொண்ணு கிடைக்காத டா! என்று ரிதம் உளறிக் கொண்டிருக்க..
அடியே நான் உண்மையாவே உன் பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன் டி. என்று மிதுன் ஒருவித ஃபிகரே கிடைக்கவில்லை, என்பது போல் , வற்றிக்கிடக்கும் பாலைவனத்தில் இருப்பவன் போல், இங்கு பெண்களே இல்லாமல் வற்றி கிடக்கும் கேலக்ஸியில் இருப்பது போல கூறிக் கொண்டிருந்தான்.
என்ன என்று ரிதம் தலையை சொரிந்து கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
அங்கிருககும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க..
நீங்க எல்லாம் இங்கே எப்படி என்று கேட்க..
உடனே சிவன்யா சிரித்துக்கொண்டு நீங்க கனவுல ரொமான்ஸ் பண்ணனும்னு, எந்த அவசியமும் இல்லை! நித்தின் அண்ணா எங்க பக்கத்துல தான் இருக்காங்க! நீங்க நேரிலேயே ரொமான்ஸ் பண்ணலாம்! என்று கிண்டல் அடித்தாள்.
அய்யே அந்த கன்றாவியெல்லாம் பண்ணனுமா? என்று அவளுக்கு முகம் அஷ்ட கோணலாக வளைந்தது.
ஏய் என்னடி சொன்ன என்று நித்தின் பதட்டி கொண்டே அவளைப் பார்த்தான்.
ஹே என்ன பாத்தா ரொமான்டிக் மூடா நான் பிரஷ் கூட பண்ணவே இல்ல! அசிங்கமா இருக்கேன்! என்று கூறினாள்.
ஆமா ஃபிராடு நீ மட்டும் நிறைய சரக்கு குடிச்சியாமே! என்ன கூப்பிடுங்க உனக்கு தோணுச்சா ஃபிராடு! என்று அருகில் இருந்து பாட்டிலை எடுத்தான்.
என்ன இத்தனையா அண்ணி என்று தூரிகா அதிர்ச்சியுடன் கேட்க..
என்னடி நான் அப்படிதான்! நித்தினுக்கு என்ன நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும்! என்ன நிதின்? நான் சொல்றது சரிதான! என்று கேட்க..
ஆமா அப்புறம் வேற என்ன பண்றது? எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா? என்று கூறினான். நித்தின் பிரகாஷ்.
உடனே மிதுன் அவளைப் பார்த்து அது எப்படி? ரெண்டு வருஷம் காத்திருக்க முடியாது! ஆறு மாசம்… ஹான் ஆறு மாசத்துல இருந்து வேற என்ன என்று மிதுன் தேவ் கிண்டலுடன் யோசிக்க..
அப்படி இல்ல அண்ணா என்று சிவன்யா சிரித்துக் கொண்டே ஒரு மாசம் கூட வெயிட் பண்ண முடியாதுன்னு, இடது மூளை சொல்லுது! ஆனா வலது மூலையும் இந்த ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு கேட்டுச்சாம்? என ரிதம பார்த்தார்கள்.
அதுக்கு மேல நான் சொல்றேன் என்று தூரிகா சிரித்துக்கொண்டே 24 மணி நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட ரொம்ப நல்லா இருக்கும்னு மனசு வேற சொல்லுதாமே? என்று அனைவரும் கிண்டல் அடிக்க..
நான் யார நினைச்சு சொன்னேன்? இதுங்க யாரும் நினைச்சு பேசிட்டு இருக்குங்க? எல்லாம் என் நேர கொடுமை என்று அவள் பார்க்க..
இப்போ என்ன சொன்ன என்று சிவன்யா கேட்க..
அதுவா ஒன்னும் சொல்லல என்னோட கவித எப்படி இருக்கு? நித்தின் உனக்கு புடிச்சிருக்கா என்று எதிர்பார்ப்பே இல்லாத எதிர்பார்ப்போடு கேட்டாள்.
அவனும் ம்ம் பதிலளித்தான்.
அப்புறம் என்ன மெல்ட் ஆக வேண்டியவங்க மெல்ட் ஆகியாச்சு இனிமே என்ன அடுத்த அப்பாகிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு ரெடி பண்ண வேண்டியது தான் பாக்கி என்ற ரிதம் கூறிக் கொண்டிருக்க
அவளை பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.
இப்போ எதுக்கு நீங்க எல்லாரும் சிரிக்கிறீங்க? என்று கேட்க
ஆல்ரெடி பேசியாச்சு இந்த மந்த்ல உனக்கும் நித்தின் அண்ணாவுக்கும் கல்யாணம்..
அப்படியா என்று ரிதம் எழுந்து நின்றாள்.
இதே மந்த்ல தான் சத்யதேவிற்கும் ஹரிணி அண்ணிக்கும் கல்யாணம் என்று நிவாஸ் கூறினான்.
பரவாயில்லையே என்று சொல்லிக் கொண்டே பாத்ரூம் சென்று பிரஸ் செய்து முகம் கழுவி விட்டு வெளியே வந்தாள்.
அவள் வெளியே வந்ததும் அவளுடன் அனைவரும் சேர்ந்து கொண்டார்கள். என்று கதை அடிக்க ஆரம்பிக்க..
அந்த நேரம் ருத்ரனுடன் சத்திய தேவ் பவன்யா ஹரிணி அனைவரும் கீழே இறங்கி வந்தார்கள்.
வெற்றி சொல்லி கொண்டிருக்க செய்ய யார் வந்தா என்ன நம்ம நம்மளோட வேலையை பார்க்கலாம் என்று ரிதம் அருகில் இருக்கும் தூறிகா மீது பார்வை படிந்தது.
ஹே இப்ப மட்டும் நீ எந்திரிச்சு சக்தி அண்ணா சத்திய தேவ் அண்ணா அப்டின்னு ஸ்ருதியோடு போனே! உன்னோட முடி இருக்காது டி தூங்கும்போது ஒரே வெட்டா கட் பண்ணிடுவேன். என்று ரிதம் மிரட்ட..
என்ன இப்படி எல்லாம் மிரட்டுற என்று தூரிகா உதட்டை பிதிக்கிக் கொண்டு கூற..
அப்டியா சரி இல்லன்னா உன் உதட்டில் இருக்கிற மச்சத்தை கட் பண்ணி எடுத்துடுவேன். பரவாயில்லையா என்று ரிதம் கண்ணடித்தாள்.
போடி அண்ண! நீ அண்ணியே இல்ல ஒரு பன்னி என்று கூறினாள்.
நானும் பார்க்கிறேன் டி உன்ன என்ன பண்றேன் பாரு ஒழு இது இங்கிருந்து எந்திரிக்கரை வேலையெல்லாம் வச்சுக்க கூடாது. நீ என்கூட தான் இருக்கணும் புரியுதா? மிதுன் உன் அண்ணன் தானே! அதனால நீ இங்கே தான் இருக்கணும். என்று ரிதம் கட்டளையிட்டாள்.
லிப்ஸ் லிப்ஸ் போதும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் டெவில் கூட இருந்திருக்க.. கொஞ்சம் டிவில மாறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால dev gang கூட வந்துடி என்று ருத்ரன் வாய்மொழியாக கூற..
இதழ் ரிதமை பார்த்தாள்.
அங்கே என்னடி பார்வை இன்று ருத்ரன் சொல்ல..
நித்தின் பிரகாஷ் வேண்டும் என்று ரிதம் உனக்கு தம்பி இருக்கானா? என்ன? என்று கேட்க
ஆமா ஆமா ஒருத்தன் இருக்கான்? என்ன நிதின் டார்லிங் சொல்லுங்க? என்ன விஷயம்? என்று கேட்க..
கொஞ்சம் வர சொல்லி இந்த மாமனுக்கு உபகாரம் செய்யணும் இல்ல அதனாலதான் உன் தம்பியை வர சொல்லு பாக்கலாம் என்று நித்தின் அழைத்தான்.
ஆனால் அவளுடைய சிறு பார்வை கூட சத்யதேவியின் மீது படவே இல்லை..
அதேபோலத்தான் நித்தினும் இருந்தான்.
அடுத்ததாக முகூர்த்த புடவை எடுக்கும் நாளும் வந்து சேர்ந்தது கிளம்பி விட்டார்கள்.
இரண்டு ஜோடிகளும் என்ன பன்றாங்கன்னு பாப்போம்.
அதே நேரம் இங்கே சைத்ரேஷோட ஆபிஸ்ல சிவன்யா என்ன பண்றான்னு பார்க்கலாம்.
சர்வேஷ் என்ன பண்றான்? அதையும் பார்ப்போம்.
இதையெல்லாம் நாளைக்கு பாக்கலாம்
தொடரும்…
கமெண்ட் போட்டு போங்க.. இன்னிக்கு எப்டி இருந்தது எபி? .
தொடரும்…
EPISODE 88
எங்கோ விரித்தபடி அந்த அறையில் அமர்ந்திருந்தான். சர்வேஸ்வரன். அந்த இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மின்னிக்கொண்டிருக்கும் மச்சம் தான் நினைவில் வந்தது.
எங்கடி இருக்க? எங்கே இருக்க? உன்ன எப்படி கண்டுபிடிக்கிறது? என்னை எவ்வளவு தவிக்க வைக்கிற? நீ மட்டும் கிடைச்ச!..உன்னை நான் ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன். என சொல்லிக்கொண்டு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டான்.
இந்த சர்வேஸ் எவ்வளவு தேடியும் தூரிகாவை கண்டுபிடிக்கவே முடியவில்லை. கண்ணெதிரே தான் இருக்கிறாள்.
ஆனால் அவனுடைய கண்களுக்கு தெரியவில்லை. சைத்ரேஷ் கண்களுக்கு சாதாரணமாக தெரிகிறாள். ஆனால் சர்வேஷ்? ஒரு வேலை பார்க்கும் பார்வையில் இருக்கிறதோ! என்னமோ காதலுக்கும் காமத்துக்கும் தான் எத்தனை வித்தியாசம்.
வாயில் அந்த ஆர்கானிக் சிகரெட்டை வைத்துக் கொண்டு.. அந்த பெயின்டிங் போர்டில் மெதுவாக அந்த தூரிகையில் சிவப்பு வண்ணத்தை குழைத்து எடுத்து, அந்த இதழ்களை வரைந்தான். அதில் மச்சத்தையும் சரியாக பொருத்தினால் எவ்வளவு அழகு? இப்படி ஒரு இதழ்களை பார்த்ததே இல்லையே!
என்னால தூங்க முடியல! சாப்பிட முடியல, கான்சன்ட்ரேட் பண்ணி நடிக்க முடியல! இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான்! என்று அந்த இதழ்களை பார்த்து கூறிக் கொண்டிருந்தான் .
இதுவரை எந்த பெண்களைப் பார்த்தாலும் முத்தவனும் முத்தமிட வேண்டும் என்று அவனுக்கு தோன்றியதே இல்லை! அப்படியே தோன்றினாலும், அவனது கண்கள் அந்தப் பெண்ணின் கண்களை மட்டுமே பார்க்கும்.
அவனிடம் தானாக வந்து விழும் பெண்களை இஷ்டத்துடன் சுகிப்பான். அவ்வளவே! ஆனால் இன்று..
இன்று அவனுடைய வாழ்க்கை மொத்தத்தையும் புரட்டிப் போட்டு விட்டாள். ஒருத்தி! அது அந்த சூரியதேவன் மகள் என்றால்! நமக்கு ஆச்சரியம் இதுவே சூரிய தேவர்க்கு அதிர்ச்சி! இப்படி ஒருவனுக்கு தன் பெண்ணை கொடுப்பானா? இல்லை! இவன் காத்து பார்த்துக் கொண்டிருப்பானா? இல்லை தூக்கிச் செல்வானா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வேஸ்வரன் அறைக்குள் அடங்கி இருப்பதை பார்த்து அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தன் பாட்டி சொன்னதன் பேரில் தன் அண்ணனின் பிரச்சனை என்ன என்று கண்டறியும் தெரிந்து கொள்ள சுருதி வந்திருந்தாள்.
அதிகாரமான துணியில் டக் டக் என்று நடந்து கொண்டே வீட்டுக்குள் வந்தாள்.
அவள் வந்த அடுத்த நொடி வேலையாட்கள் பாப்பா என்று அருகில் வர..
அண்ணா எங்கே இருக்கான்? என்று கேட்டாள்.
பாப்பா பெரிய தம்பி அவரோட ரூம்ல தான் இருக்காரு ஒரு நிமிஷம் நீங்க போறதுக்கு முன்னாடி போன் பண்ணிட்டு போங்க என்று சொல்ல…
ஹே எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்! நீ ஒன்னும் எனக்கு சொல்ல வேண்டாம்! என்று அதிகாரமான தொணியில் கூறியவள். வேகமாக சர்வேஸ்வரனின் அறையை நோக்கி சென்றாள்.
அண்ணா அண்ணா என்று அறையின் வெளியில் இருந்து கதவை தட்டினாள்.
சுருதி என்று புருவத்தை சுருக்கியவன்.
யோசனை முகமாக சென்று கதவை திறந்தான்.
நீ எங்க இங்க? என்று சர்வேஷ் கேட்க..
அதை தான் அண்ணா நான் கேட்கிறேன். நீ எதுக்கு இப்படி ரூம்லயே அடைஞ்சு கிடக்குற? எதுவும் பிரச்சனையா? பெரியப்பா திட்டிட்டாங்களா? பெரியம்மா சண்டை போட்டுட்டாங்களா? சைத்ரேஸ் அண்ணா இமையா எதுவும் என்று அவள் கேட்டுக் கொண்டே வர.. இல்லை என்று உச்சி கொட்டியவன்.
யாரும் எந்த பிரச்சனையும் பண்ணல. நான் அவங்ககிட்ட பிரச்சனை பண்ணாம இருந்தா தான் ஆச்சரியம்! என்று புன்னகையுடன் கூற..
அப்புறம் எதுக்கு அண்ணா இப்படியே இருக்க? இதுவும் பிரச்சனையா சொல்லு? என்னை பாட்டி படுத்தி எடுக்குராங்க! பாட்டிக்கு உன் மேல ரொம்ப கவலையா உன்னையே தான் நினைச்சுட்டு இருக்காங்க! படத்துக்கு சரியா நடிக்க போறது இல்லையாமே! என்னன்னா இது? என்று அவள் சலித்துக் கொண்டே கேட்க..
சர்வேஸ்வரன் தன் தங்கையை உள்ளே அழைத்தான்.
சொல் அண்ணா என்று அவள் சர்வேஷின் பின்னால் செல்ல..
அங்கு பெயிண்டிங் போர்டில் இருக்கும் உதட்டை பார்த்தாள்.
என்ன இது என்று புருவத்தை சுருக்கி கொண்டு கேட்க
நான் ஒருத்தியை பார்த்தன் ஸ்ருதி! இந்த உதட்டுக்கு சொந்தக்காரிய தான் தேடிட்டு இருக்கேன். என் கண்ணில் சிக்கவே மாற்றா? அவளை அவள நினைக்காம என்னால இருக்கவே முடியல! எனக்கு எதுலயும் நாட்டம் வரல! என்ன பண்றதுன்னு தெரியல ஸ்ருதி! அவள் நினைப்பா இருக்கு! என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டா! என்று சர்வேஷ் கூறிக் கொண்டிருக்க
ஸ்ருதி சிரித்துக்கொண்டே அப்பா லவ் பண்றியா என்று கேட்க..
லவ்வா அந்த பீல் எப்படி இருக்கும்? என்று சர்வேஸ் கேட்டான்.
அச்சோ அண்ணா லவ்வ பத்தி தெரியாதா? படத்தில் எல்லாம் நடிக்கிற? நேர்ல எத்தனை பேரை பார்த்திருப்ப? என்று கேட்க..
லவ் அது அந்த feel இதுவரைக்கும் அந்த மாதிரி பீல் வந்ததே இல்லை என்று சர்வேஷ் கூறினான்.
வேணும்னா நீ சைத்தண்ணா கிட்ட கேளு! அண்ணாவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் அப்படி இல்லன்னா கூட பெரியம்மா அண்ணாவுக்கு அவங்க லவ் பத்தி சொல்லி இருப்பாங்க. அவங்களோட காதல் கதையை என்று கூறினாள்.
அதில் கடுப்பான சர்வேஷ், ப்ளீஸ் அவங்கள பத்தி பேசுறத கொஞ்சம் நிறுத்துறியா! என்று கூறினான்.
சரி இப்போ என்ன பிரச்சனை? இந்த லிப்ஸ்ல அதென்ன புள்ளியா இருக்கு என்று கேட்க
அது மச்சம் என்று சொல்லும் போது அவன் உதடுகள் அவ்வளவு தாபத்துடன் ஒலித்தது.
ஸ்ருதி அவனுடைய முகமாற்றத்தை கண்டு என்னனா? இது எந்த மாதிரியான உணர்வு என்று கேட்க..
அதுதான் எனக்கு ஒண்ணுமே புரியல ஆனா எனக்கு வேணும்! இந்த உதட்டுக்கு சொந்தக்காரி எனக்கு வேணும் என்று சர்வேஷ் கூறினான்.
ஸ்ருதி தீவிரமாக புருவத்தை சுருக்கி யோசித்தவள்.
சரி விடு நான் கொஞ்சம் தேடி பார்க்கிறேன். இதுக்காக தான் அடஞ்சுக்கிடந்தியா? உன்ன இந்த அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணது யாரு? அவளை நீ எங்க பார்த்த? என்று கேட்க..
சர்வேஸ்வரன் ஆவலுடன் அனைத்து விஷயங்களையும் கூறினான்.
ஸ்ருதி ஒரு பெருமூச்சு விட்டு அவ்வளவு தானே கண்டிப்பா அவ பெங்களூர்ல தான் இருப்பா! அவ தமிழ்நாடுன்னு நீ சொல்லி இருக்க! சோ அங்கேயும் நம்ம பாட்டியோட ரிலேஷன்ல யாராவது இருக்காங்களான்னு தேடிப் பார்க்கலாம். உங்க டாடியே பெரியப்பாவே செக்யூரிட்டி கார்ட்ஸ் வைத்திருக்கும் போது உனக்கு என்ன கவலை? ஈஸியா இந்த பொண்ணு கண்டுபிடிச்சிடலாம்! நீ விடு நான் பாத்துக்கிறேன். என்று ஸ்ருதி உடனே போனை எடுத்தவள். ஒரு சில நபர்களுக்கு போன் செய்து இந்த உதட்டில் மச்சம் இருக்கும் புகைப்படத்தை அனுப்பினாள்.
சர்வேஸ்வரன் கேள்வியாக இந்த ஒரு போட்டோவை அனுப்புனா! போதுமா..
வெறும் இந்த உதட்டை வச்சு கண்டுபிடிச்சிடுவாங்களா என்று சர்வேஸ் கேட்க..
ஸ்ருதி சிரித்துக்கொண்டே அப்படி இல்ல இது ஒரு அடையாளமாக வைத்து தேடலாம்! என்று கூறினாள்.
சரி ஓகே சீக்கிரம் கிடைச்சிடுவாளா என்று அவனுடைய குரலில் அத்தனை தவிப்பு
அண்ணா! உனக்காக நான் எதையும் செய்வேன்! இந்த உதட்டு மாச்சத்துக்கு சொந்தக்காரி ய உன் கிட்ட கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என் பொறுப்பு நீ என்னோட செல்ல அண்ணா! உனக்காக இந்த ஸ்ருதி எதையும் செய்வா! என்று கூறினாள்.
உண்மையும் அதுதான் கூட சர்வேஸ்வரனுடைய வாழ்க்கையை புரட்டி போடுவது ஸ்ருதி தான்! பார்ப்போமே!
என்ன நடக்கிறது என்று..
*
இங்கே கம்பனியில் அடுத்த நாள் சிவன்யா என்றும் இல்லாத குதுகளத்துடன் வந்தாள். அதனால் ஒரு சில வேலைகளை முடித்து அவசரத்தில் மொத்தத்தையும் அவளின் அறையில் வைத்து விட்டு வந்து விட்டாள். அவள் நேராக வீட்டில் இருந்து வந்ததால் இந்த மாற்றம்.
வழக்கம் போல மாஸ்க் அணிந்த நபரால் உள்ளே அழைக்க பட்டாள்.
சொல்லுங்க சார்! என தெளிவாக முகத்துடன் வந்து நின்றாள்.
அந்த e – megazine என்னாச்சு? Publish பண்றதுக்கு முன்னாடி என் கிட்ட காட்டிட்டு தானே போடுறேன்ன்னு சொன்னீங்க! ஆனால் இது மெகசீன் ஆபிஸ் ல இருந்து எனக்கு பப்ளிஷ் பண்ணிட பிரசர் பண்றாங்க என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டான்.
அச்சோ சாரி சார்! அந்த எடிட்டர் என் கிட்ட பேசினார். நான் கரெக்சன் பண்ண மொத்த file ம் என்னோட ரூமில் வச்ச்சுட்டென். இன்னிக்கு வீட்ல இருந்து வந்ததால் எடுக்க முடியல.. என தாருனிகா என்னும் சிவன்யா சொல்லி கொண்டிருக்க..
அப்போ வெறும் வாய் சவடால் மட்டும் தானா? நெக்ஸ்ட் மீட்டிங் இருக்கு! என்ன அச்சீவ் பண்ணிட்டீங்க பெருசா! உங்களோட அடவைசிங் ஒன் அண்ட் ஒன்லி தியரிட்டிக்கள் மட்டும் தானா? ப்ராக்டிக்களி பாசிப்லா என்று கேட்டான்.
சிவன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள். ஒரு மன்னிப்பு கூட சொல்லாமல் வெளியே வந்தாள்.
இடியட் என எரிந்து விழுந்தான் சைத்ரேஸ்..
அடுத்தடுத்த வேலை என பிஸியாக இருக்க..
அடுத்த அரை மணி நேரத்தில் மீட்டிங் ரெடியாவதற்குள் மீண்டும் உள்ளே நுழைந்தாள் சிவன்யா.
என்ன? சீக்கிரம் சொல்லுங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு! பேட்டரி சார்ஜ் ஓரியன்டடா ஒரு பிராப்ளம் போயிட்டு இருக்கு! நான் அந்த விசயத்தில் ரொம்ப பிரசரா ஃபீல் பண்றேன்.
சார் நீங்க கேட்ட அந்த மெகசீன் விவரம் மொத்தமும் இந்த மெயில், பாஸ் வேர்ட் உள்ளே இருக்கு! இந்த இன்டர்வியூ காண்பிடன்சியல் என கூறி அவன் மேஜையின் முன் வைத்து விட்டு திரும்பினாள்.
சைத்ரேஷ் கொஞ்சம் அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்க..
*
இங்கே ஹரிணி, சத்ய தேவ், நிதின் பிரகாஷ், ரிதம் என அனைவரும் கிளம்பி சுப முகூர்த்த புடவை எடுக்க செல்ல..
ரிதம் நிதின் கிட்ட ஓயாமல் பேசி கொண்டே வந்தாள். ஹே நிதின் எனக்கு போகும் போது அந்த கடையில் பிரவுனி வாங்கி தரியா? அது வேணும் இது வேணும் என சின்ன குழந்தை மிட்டாய் கடையை பார்த்து கொண்டு வருவது போல கேட்டாள்.
ஹே பொரு டி உனக்கு என்ன வேணுமோ! எல்லாமே வாங்கி தரேன். ஆனால் இப்போதைக்கு புடவை எடுக்க வந்திருக்கோம் அந்த வேலையை பார்க்கலாமா? என நிதின் இறங்கி கொண்டு அவளுக்கு கதவை திறந்து விட்டான்.
சத்ய தேவ் ஹரிணியின் கைகளை கோர்த்து கொள்ள சென்றவன் அப்படியே அவன் கைகள்….?
தொடரும்..
EPISODE 89
சத்யதேவ் ஹரிணி ரிதம் நிதின் பிரகாஷ் நால்வரும் திருமணத்திற்கு தேவையான உடைகளை அதாவது முகூர்த்தத்திற்கு ஏற்ப புடவைகளை எடுக்க அந்த மிகப்பெரிய ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார்கள்.
சத்யதேவ் , ஹரிணி, இருவரும் அமைதியாக இருக்க ரிதம் தான் லாடலோடவன ஏதாவது நிதின் பிரகாஷிடம் பேசிக்கொண்டே வந்தான்.
அந்த புடவை கடையில் முகூர்த்த புடவை எடுக்க அந்த இடத்தை நோக்கி சென்றவர்கள் மனதை திசை திருப்பும் விதமாக ரிதமின் பேச்சுக்கள் இருந்தது .
அதை சத்திய தேவ் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு அவளுடைய பேச்சைக் கேட்டு அடுத்த நொடி மிகவும் கோபமாகவும் ஆற்றாமையில் என்ன செய்கிறோம்? என்று மூர்க்கனாகவும் இருந்தான்.
அப்படி என்னத்த தான் பேசினாள். இதோ உங்களுக்காக! நிதின் மற்றும் ரிதம் இருவரும் முன்னாள் சென்று கொண்டிருக்க..
சத்யதேவ் மற்றும் ஹாரணி இருவரும் அவர்களின் பின்னால் வந்தார்கள்.
ஹரிணி உடனே அங்கிருக்கும் உடைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே எது தனக்கு பொருத்தமாக இருக்கும்? என நினைத்துக் கொண்டு வர..
சத்யதேவ் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் அந்த இடத்தை பார்த்துக் கொண்டு வந்தான்.
அந்த நேரம் பார்த்து ரிதம் தான் இப்பொழுது. நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்டா?
நீ முதல்ல சொல்லு! அது எனக்கு ப்ரைஸ்சா இல்ல சர்ப்ரைஸா அப்படின்னு நான் சொல்றேன்! என்று நிதின் சொல்லிக் கொண்டே அந்த செக்ஸனுக்கு வர
உடனே அவள் தயங்கி பாத்தியா எப்படி பேசுறேன்னு உனக்கு உனக்காக ஆச ஆசையா ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன் தெரியுமா என்று ரிதம் கூறினாள்.
ஹரிணி மற்றும் சத்யதேவியின் கவனம் ரிதம் இன் பேச்சில் பதிய சிரித்துக்கொண்டே சரி அப்படி என்னதான் சர்ப்ரைஸ் கொஞ்சம் சொல்லேன்! என்று கேட்டான்.
ரிதம்… களுக் என மெதுவாக சிரித்தவள். அத சொல்றத விட காட்டுனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். கண்டிப்பா உனக்கு பிடிக்கும் என்று கூறினாள்.
அவளின் வார்த்தையை கேட்டதும் இருவரும் திக்கென முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிப்படுத்த..
அதற்குள் அவர்கள் பார்க்க வந்திருந்த செக்ஷன் வந்தது அங்கு நிறைய ஆட்கள் மற்றும் பாதுகாப்புக்காக ஒரு சில பேர் என கொஞ்சம் படையே இருக்க..
நிதின் பிரகாஷ் பெருமூச்சுவிட்டு அவர்களைப் பார்த்தான் சார் வாங்க என்று தயக்கத்துடன் அந்த கடையின் முதலாளி அழைக்க
என்ன வரதுக்கு இருக்கு நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க என்று கேட்க
உடனே அந்த கடையின் முதலாளி நீங்க எவ்ளோ பெரிய ஆள் உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையும், பாதுகாப்பையும் நாங்க கொடுத்ததா! ஆகணும் நீங்க இங்க சுதந்திரமா பர்ச்சேசிங் பண்ணலாம்! என்று சொல்லிவிட்டு அவர் ஒரு பக்கம் நின்றார்.
என்ன விஷயம்? அது என்ன விஷயமா இருக்கும்? அப்படி என்ன சர்ப்ரைஸ்? என்ன சர்ப்ரைஸா இருக்கும்? என்று இருவருடைய மூளை அந்த சர்ப்ரைஸை நினைத்து கிண்டி கொண்டு இருக்க..
ஆனால் சம்பந்தப்பட்டவள் எந்த ஒரு முகபாவனையும் காட்டாமல், தீவிரமாக திருமணத்திற்கு புடவையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
சத்திய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் ஒரு பக்கம் நின்று சில உடைகளை பார்த்துக் கொண்டிருக்க..
நிதின் மற்றும் ரிதம் இன்னும் உற்சாகமாக அவர்களுக்கு தேவையானதை அதாவது ரிதமுக்கு தேவையானதை மிதின் பிரகாஷ் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான்.
அதை பார்த்த ஹரிணிக்கு ஒரு பக்கம் ஏக்கமாகவும் தான் இருந்தது.
மஞ்சள் வண்ண புடவை அதில் ரோஜா ஒன்று பார்டர், அந்த மஞ்சள் வண்ண பட்டுப்புடவையில் ரோஜா வண்ண பார்டர் பார்க்கவே மிகவும் அத்தனை அழகாக இருந்தது.
அது ரிதம் ஹரிணி என இருவருக்குமே பொருந்தும். அவ்வளவு அழகாக இருக்க..
ரிதம் அந்த புடவையை எடுத்து இது எனக்கு எப்படி இருக்கு? என்று மேலே போட்டு பார்த்து நித்தின் பிரகாஷிடம் கேட்டாள்.
நல்லா இருக்கு என்று ஒற்றைப்பதிலுடன் முடித்தவன் அடுத்த புடவையை எடுத்து நீதி பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த புடவையை அதே மஞ்சள் வண்ண பட்டுப்புடவையில் பச்சை வண்ண பார்டர் அதில் இன்னொரு வகையாக மிகவும் ஆர்ப்பரிக்கும் அழகை கொண்டிருந்தது.
இந்த வகை மாதிரியான திருமணங்களுக்கும் முகூர்த்தங்களுக்கும் மஞ்சள் பண்ண புடவை தெலுங்கு அவரவர் குடும்ப வழக்கப்படி மிகவும் நன்மையை சேர்க்கும் வண்ணங்கள் ஆகும் நித்தின் பிரகாஷ் அதை நீவி கொண்டிருக்க.m
ரிதம் அவனை நிதின்! நிதின் கொஞ்சம் வாயேன் என்று அவனை கூப்பிடவும்…
நித்தின் அந்த இடத்தை விட்டு ரதம் கூப்பிடும் திசை பக்கம் சென்றான்.
அந்த நேரம் ஹரிணி சத்யதேவடன் நடந்து வந்தவள். அங்கு நிதின் பிரகாஷ் நீவி விட்டு சென்ற புடவையை பார்த்து வேகமாக அங்கு சென்றவள். அந்த புடவையை தொட்டு பார்த்து எடுத்து தன் மேலே போட்டுக்கொண்டு ஹே சத்யா! சத்யதேவ்! இது எனக்கு எப்படி இருக்கு? டெமோவா? சாரி கட்டி பாக்கட்டுமா! என்று கேட்டான்.
அவன் ஒரு சின்ன புன்னகையை படர விட்டுஉனக்கு எது போட்டாலும் ரொம்ப அழகா இருக்கும் டி என்று கூற..
போட்டு பார்த்துட்டு வா நான் வெயிட் பண்றேன் சீக்கிரம் என்று கூற, ஹரிணி புன்னகையுடன் சரி என்று அந்த இடத்தில் இருந்து ட்ரையல் ரூம் பக்கம் செல்ல..
அங்கு பட்டுப்புடவையை கட்டிக் காண்பிக்கும் பணிப்பெண் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் புடவையை கொடுக்க அழகாக மடிப்பு எடுத்து எந்த பகுதி ஜாக்கெட்டிற்கு வரும்? என வைத்து நேர்த்தியாக அந்த புடவையை அவளுக்கு மேலோட்டமாக கட்டி காண்பித்தாள். பணிப்பெண்.
அந்த நேரம் தான் அருகில் இருக்கும் செயல் ரூம் பக்கம் சில சத்தங்கள் கேட்டது அது அந்த பக்கம் வந்த சத்தங்கள் காதலும் விழுந்தது .
அந்த பணி பெண்ணோ கொஞ்சம் கொஞ்சமாக சிரித்துக் கொண்டே ஹரிணிக்கு புடவை கட்டிக்கொண்டு, விட்டிருக்க..
ஹரிணிக்கு காதில் புகை வராத குறைதான். சத்தியதேவ் நிலைமை இன்னும் அதை விட மோசம். ஆனால் உள்ளுக்குள் வெளியே வீராப்பு தான்! என்ன அப்படி என்னதான்பா சர்ப்ரைஸ் இவ்வளவு கடுப்படிக்கிறாளே இந்த ரைட்டர் என்று நீங்கள் எல்லாரும் நினைப்பீங்க!
இங்கே ரிதம் நித்தியனிடம், ஹே உனக்கு ஒரு விஷயத்தை காட்டப் போறேன்!
என்னடி பண்ற? எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம்தான்! புரியுதா! இந்த கசமுசா எல்லாம்! இப்போ அதுவும் கடையில வந்து இந்த மாதிரி பண்ணிட்டு இருக்க? நீ என்ன குழந்தையா டி! என்று நித்தின் சொல்லிக் கொண்டிருக்க..
ஓவரா கனவு காணாத பிராடு அதில்ல இங்க பாரு என்று அவள் கூறினாள்.
உடனே நித்தின் கண்களை மூடிக்கொண்டான்.
ஏன் டா அச்சோ கண்ண திறடா! இது உனக்காக தான் என்று ரிதம் கூறினாள்.
எனக்காக!
அந்த எனக்காக அந்த எனக்காக என்ற ஒற்றை வார்த்தையை ஒரு சிலருக்கு உள்ளுக்குள் பூப்பம்பத்தையும் கூடவே சேர்ந்து புலியையும் சேர்த்து கரைத்தது.
வெளியில் அவர்கள் பேசும் உள்ளே அவர்கள் பேசும் சத்தம் வெளியில் அப்பட்டமாக கேட்டுக் கொண்டிருக்க..
அதை கேட்ட சத்திய தேவ் மற்றும் ஆரணிக்கு தான் முகம் அஷ்ட கோணலாக வளைந்தது.
இங்கே உள்ளே ரிதம் கொஞ்சம் மெதுவான குரலில் இது பாத்தியா? ம்ம் இங்கே பாரு! இது பார்க்க வேண்டிய இடம் தான்! உனக்காக! ஒன்லி உனக்காக தான்! எப்படி இருக்கு? அழகா இருக்கா? என்று ரிதம் கேட்க..
இந்த வார்த்தைகளை கேட்டதும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சத்தியதேவ் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர..
ஹரிணிக்கு கோபம் இன்னும் அதிகமாக அந்த ட்ரையல் ரூமின் கதவுகளை தட்டினாள்.
யாரது என்று உச்சி கொட்டி கொண்டே கதவை திறக்க அங்கே எதிரில் ஹரிணி நின்று கொண்டிருந்தாள்.
என்ன வேணும் என்று ரிதம் கேட்க…
நீங்க செலக்ட் பண்ணிட்டீங்களா? எங்களுக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு! அதனால தான் கொஞ்சம் சீக்கிரம் எடித்துட்டா நாங்க அங்கே போகனும் என்று ஹரிணி சமாளித்துக் கொண்டே நித்தின் பிரகாஷை தவிப்புடன் பார்க்க..
அவனோ எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் இரத்தமையும் வெளிப்பாடும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் அவர்கள் என்ன பேசினார்கள்? என்று புரியாமல் குழப்பத்தில் ஹரிணி மற்றும் சத்யதேவ் இருவரும் இருக்க..
ரிதம் வெளியே வந்தவள். உன்னை தொட்டுப் பார்க்க தானே சொன்னேன்! நீயா மோசன் டா வைக்கவே மாட்டேன்! அவ்வளவு உத்தமானாடா நீ! என்று இயல்பாக காதலர்கள் அதாப்து விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் , பேசும் தொணியில் ரிதம் நித்தின் கிட்டட பேசிக் கொண்டிருக்க
அதை பார்த்ததும் சத்தியதேவ் க்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
யாருடா? இவளை எங்கிருந்துதான் புடிச்சாங்க? பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களா? இவளை எந்த லிஸ்டில் வைக்கிறதுன்னு தெரியலையே? ஆமா அவள பெத்தா என்ன? செஞ்சா என்ன? அவன்கிட்ட எப்படி பேசினால் நமக்கென்ன? என்று நினைத்து சத்திய தேவ் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு ஹரிணிக்கு உடையை தேர்வு செய்கிறேன். என்ற பெயரில் அங்கும் இங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் நித்தின் சிரித்துக் கொண்டே அது எதுவா இருந்தாலும் அதுக்குன்னு ஒரு நேரம் காலம் இருக்குல்லடி ரித்தம் என்று புன்னகையுடன் கூறிக் கொண்டிருக்க..
ஹரிணியின் பார்வை அவனை துளைத்து இன்னும் கொஞ்சம் தொலைத்துக் கொண்டிருந்தது. இவ நிஜமாகவே நித்தின் பிரகாஷ் தானா? என்கிட்ட பேசின நித்தின் பிரகாஷ்ஆ! அன்னிக்கி மழையில அந்த இடத்துல என் கூட இருந்தவனா? இப்படி பேசிட்டு இருக்கான்? என்று நினைத்துக் கொண்டிருக்க..
அவர்கள் இன்னொரு பக்கம் பார்த்து கொண்டே இன்னும் இரண்டு புடவை எடுத்துக்கலாமா? தூரிகாவுக்கு, சிவன்யாவுக்கு, பவன்யாவுக்கு, இன்று நித்தின் பிரகாஷ் கேட்டுக் கொண்டிருக்க..
அவங்களை கூட்டிட்டு வந்து எடுக்கணும் டா என்று ரிதம் கூறினாள்.
அதன் பின் படிக்கட்டில் செல்வது அவர்களுக்கு அசோகரியமாக இருக்க நால்வரும் லிப்டில் ஏறிக்கொண்டார்கள் .
ஹரிணி சத்யதேவ் இருவரும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருக்க ரி தம் மற்றும் நித்தின் இருவரும் பின்னால் இருந்தார்கள்.
அந்த நேரம் ரிதம் இது தான்டா சரியான சான்ஸ் என்று நினைத்தவள். வேண்டும் என்றே நித்தின் அது எப்படி இருந்தது? என்று கேட்க
சத்யதேவ் கைகள் அந்த நொடி முறுக்கிக்கொண்டது.
ஹரிணி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்க..
நிதின் பிரகாஷ் எது என்று கேட்டான்.
என்ன தெரியாத மாதிரி கேக்குற? உனக்காக தானே நான் அதை போட்டுக்கிட்டேன்? இவ்ளோ வலிச்சது தெரியுமா? என்று ரிதம் கேட்க..
என்னத்தடி என்கிட்ட காட்டுன? இதுவரைக்கும் அதை பண்ணேன்! அதை செஞ்சேன்! அப்படின்னு சொல்லிட்டு இருக்கே! தவிர எதையும் என் கண்ணுல காட்டலடி! நீ! என்று நித்தின் சொல்ல..
ரிதம் கண்ணகுலி தெரிய சிரித்தாள். இதோ இப்பவே காட்டுறேன் இங்க பாரு உனக்காக நான் பியர்சிங் பண்ணிக்கிட்டேன். அதுவும் தொப்புலில் என்று சொல்ல
அப்போ இதுதான் அந்த விஷயமா? என்று இப்பொழுது சத்திய தேவ் மற்றும் ஹரிணி இவருக்கு உரைக்க..
இது தான் சர்ப்ரைஸைஆ! என்ன தொப்புள்ள தோடு போட்டுக்கிட்டாளா? என்று ஹரிணிக்கு முகம் ஒரு மாதிரி வளைய முன்னால் இருக்கும் கண்ணாடியில் நிதின் பிரகாஷ் அவளைப் பார்த்து கொண்டே இதுதான் உன்னோட சர்ப்ரைஸா என்று ஓர கண்ணால் சுற்றி இருக்கும் கண்ணாடியை பார்த்தான்.
ஆமா என்னோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு? என்று கேட்டுக் கொண்டே சத்ய தேவின் இறுகிய முகத்தை இன்னொரு பக்கம் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்தாள்.ரிதம்.
அதுவா உண்மையாவே சர்ப்ரைஸ் தாண்டி என்ற நித்தின் கூறினான்.
நீ தான் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டியே! உனக்காக அதை என்று ரிதம் சொல்ல.. சொல்ல
சத்தியதேவியின் முகம் பா இத்தனை பொறாமையா யாருக்கு? தெரியும் அது பொறாமையா? இல்ல அவன் அந்த நாளைக்கே போயிட்டு வந்தானா? அவன் ஒரு நிமிடம் கண்களை இறுக்கி மூடி பற்களை கடித்தான். அப்போ அந்த நாளுக்கே சென்று விட்டு வந்து விட்டான். போலும்! நுனிமூக்கு சிவந்திருந்தது.
அன்று : அன்று அய்யோ வலிக்குதே! தாங்க முடியலையே! என்று அடிச்சாட்டியம் செய்து அவன் அவளின் இடையே மிருதுவாக, பதமாக, தடவிக் கொண்டிருப்பது கண் முன் தோன்ற இங்கே கைகள் தன்னிச்சையாக மாவு பிசைந்தது அவன் விரல்கள். அடடா என்ன ஒரு காட்சி?
ரிதம் உதட்டை கடித்துக் கொண்டு உனக்காகத்தான் டா! எனக்கு இதுதான் வேணும் நல்லா இருக்குல்ல! இதுக்காக எதை வேணாலும் செய்யலாம்! என்று ரிதம் வாய் மொழியாக கூறினாள்.
சரி என்று நித்தின் நேராக நின்று கொண்டே அவனுடைய தலையையும் , தாடியையும் கோதி கொண்டே நிற்க..
அடுத்த குண்டு..
சரி எப்போ பார்க்க போற? இப்போ என ரிதம் கேட்க…
நிதின் ஒரு பெரு மூச்சை விட்டான்.
இப்போ பார்க்கலாமா? என நிதின் பார்வை ஹரிணி மேல் இருந்தது.
ம்ம் எப்ப வேணாலும் பார்க்கலாம்! இப்பதான் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோமே! இன்னைக்கு நைட் இல்ல இப்போ நம்ம வீட்டுக்கு போனதும்! என்று ரிதம் கேட்க..
அந்த நேரம் கதவுகள் திறந்தது. இல்லை திறக்க வைத்தது சத்ய தேவ் விரல்கள்.
ஹரிணி
சத்யதேவ்
நித்தின் பிரகாஷ்
ரிதம்
தொடரும்..
EPISODE 90
அடுத்த குண்டு..
சரி எப்போ பார்க்க போற? இப்போ என ரிதம் கேட்க…
நிதின் ஒரு பெரு மூச்சை விட்டு இப்போ பார்க்கலாமா? என நிதின் பார்வை ஹரிணி மேல் இருந்தது.
ம்ம் எப்ப வேணாலும் பார்க்கலாம்! இப்பதான் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோமே! இன்னைக்கு நைட் ஹான் எதுக்கு நைட்டு வரைக்கும் வெயிட் பண்ணனும் நான் கொஞ்சம் கைய தூக்கினா கூட என்னோட நாவள் பியர்சிங் தெரியும் அதனால இப்போவே ஓகே வா! என மெதுவான குரலில் ரிதம் கண்ணகுளி ததும்ப ஹஸ்கி வாயிசில் சொல்ல..
ஹே வேணாம் டி! இங்கே என்னோட அண்ணா அப்புறம் அண்ணி இருக்காங்க என வேண்டும் என்றே நிதின் கூற
நிதின்! நீ இருக்கியே! யாரு இருந்தால் நமக்கென்ன! இங்கே பாரு! என அவள் கையை தூக்க..
அதற்குள் கதவுகள் திறந்தது. சத்ய தேவ் தான் உடனே அழுத்தி இருந்தான். வெளியில் செல்லும் பட்டனை!.. பொத்தான் அழுத்த வந்த ஹரிணியின் விரல்கள் அப்படியே பின் வாங்க..
என்ன ஹனி! எதுவும் என சத்ய தேவ் சொல்ல வர..
நம்ம கிரவுண்ட் பிளோர் போகனும்! இங்கே எதுக்கு ஸ்டாப் பண்ணீங்க என நிதின் கேட்க..
இது பெர்சனல் அது தான் நீங்க போங்க நாங்க வாங்கிட்டு வரோம்! என அவர்கள் இருவரும் இன்னர் உள்ளாடை தளத்தில் இறங்க..
ரிதம் கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் நிதின் வா நம்மலும் போய் எடுப்போம் என அழைத்தாள்.
ஹரிணி அவளை பற்களை கடித்து கொண்டு பார்க்க
உனக்காக வரேன் டி! என நிதின் ரிதமின் பின்னால் சென்றான்.
யாருக்கு எடுக்க போற? என சத்ய தேவ் ஹரிணி கிட்ட கேட்க..
நீ எதுக்கு அழுத்த வந்த? என ஹரிணி அவன் பக்கம் கேள்வியை திருப்பி விட்டாள்.
நான் அது உனக்கு தான்.. என சத்ய தேவ் தயக்கத்துடன் சொல்ல..
இங்கே ரிதம் நிதின் கிட்ட இப்போ எதுக்கு அத்தனை கூச்சத்தோடு பேசிட்டு இருக்க? பசங்களுக்கு எப்படி இந்த விடயமோ அதே போல தான் பொண்ணுங்களும் ஆனால் நாங்க மட்டும் ஒரு விசயத்தை பண்ணா இந்த உலகம் எதுக்கு டா எங்களை மட்டும் திரும்பி பார்க்குது! இதுக்கு கூச்ச பட கூடாது. நெஞ்சை நிமிர்த்தி கிட்டு வரனும். என ரிதம் அட்வைஸ் கொடுக்க
நிதின் புருவ முடிச்சுடன் இருந்தாலும் என தயங்கி கொண்டு நிற்க..
அட போடா! பொண்ணுங்களுக்கு இருக்கிறதுலயே பெஸ்ட் கிஃப்ட் இது தான்! இந்த மாதிரி விசயத்தை மட்டும் ஒரு பொண்ணுக்கு வாங்கி கொடுத்தால் அந்த நிமிடமே பிளாட்
( பின் குறிப்பு ; அந்த பொண்ணோட மனசுல நீங்க இருந்தால் மட்டுமே இது பொருந்தும் இல்லை என்றால் அபாய சங்கு தானுங்க)
Is it? என நிதின் கேட்க.
என்ன நிதின் எனக்கு வாங்கின்கொடுக்க போறியா?
ஆல்ரெடி நீ என் கிட்ட பிளார்ட் சோ உனக்கு எப்படி வாங்கி கொடுப்பேன். போடி!
அட போடா! என அவள் இரண்டு பீஸ் வாங்கினாள்.
நிதின் அவளிடம் வந்து எப்டி ரிதம் இதெல்லாம் எங்கே இருந்து யோசிக்கிற?
இது மிதுன் சொல்லி கொடுத்தான்.
அட நாசமா போனவனே அப்பா சொல்லும் போது கூட எனக்கு கோபம் வரல டா! இந்த ராவடி காரிய இந்த அளவுக்கு குட்டி செவுறு பண்ணி வச்சிருக்கியே நீ கடைசி வரைக்கும் சிங்கிள் தான் டா என சத்ய தேவ் நினைத்தான்.
அவளின் விளக்கம் அனைத்தையும் கேட்கும் போது ஏனோ சரியாக தெரிந்தது. அதை தன் தம்பி சொல்லி இருக்கிறான் என சொன்னதும் உள்ளுக்குள் ரணம் , ரவித்திரம், இரத்தம்..
நிதின் புன்னகையுடன் எப்போவுமே மிதுன் பெக்கூலியர் பெர்சன். சார்ம் என பெருமை பட்டு வாய் மொழியுடன் கூறினான்.
சத்யா நான் எடித்திட்டென் வா போலாம்.என ஹரிணி அழைக்க..
இரு நான் பே பண்றேன்.என பில் பார்த்தான்.
ஆடி போய் விட்டன்.
என்ன டா சத்யா? என ஹரிணி கேட்க..
என்ன டி இது? எவ்ளோ காஸ்ட் காட்டுது? என சத்ய தேவ் அப்பட்டமான அதிர்ச்சியுடன் கேட்க..
ஹரிணி முறைத்து கொண்டே நீ தள்ளி போ நானே பே பண்றேன்! என அவனை நகர்த்தி விட..
ஹே ஹனி சும்மா! சும்மா டி! இன்னும் ரெண்டு வாங்கி தரவா?
நீ வீட்டுக்கு வா! உன்னை என கோபத்துடன் வார்த்தையை கடித்து குதறி விட்டு சென்றாள்.
*
நிதின் மனதில் அடி படு பாவி வாங்கி தரேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு என் கார்டுக்கு ரேகை தேயும் அளவுக்கு ஏழு நாள் வேணும்னு வானவில் கலர்ல தனித்தனியா வாங்கிட்டு ஆடிட்டி போறாளே! அப்போ அந்த போலீஸ்காரர் இவழுக்காகவே ரெண்டு ஷிப்ட் வேலை பார்ப்பார் போலயே! இவளை எங்கே இருந்து பெற்று இருப்பாங்க? என நிதின் உள்ளுக்குள் பதரினான்.
என்ன நிதின் இப்படி பொக்குண்ணு இருக்க முன்னாடியே தெரிஞ்சு இருந்தால் உனக்கு இரு ஜட்டி..
ஹே ஒழுங்கா ஓடிடு கொன்றுவென் என நிதின் கூறினான்.
அவள் ஓடி விட்டாள்.
காரில் ரிதம் மற்றும் ஹரிணி இருவரும் பின்னால் ஏறி கொள்ள.. நிதின் கார் ஓட்டிட சத்ய தேவ் முன் சீட்டில் அமர்ந்து கொண்டான்.
ஹரிணி கொஞ்சம் கோபமாக இருப்பதை தெரிந்து கொண்ட சத்ய தேவ் அப்படியே கடை தெரு பக்கம் வந்ததும் கொஞ்சம் வண்டிய நிறுத்து என கூற..
சாரி! உனக்கு என்ன வேணும்னு சொல்லு! செக்யூரிட்டி கார்ட்ஸ் வாங்கி தருவாங்க என கூறினான். நிதின்.
No need என்னை பாதுகாக்க எனக்கு தெரியும். நிரித்துண்ணு சொன்னேன். என சத்ய தேவ் சொல்ல .
ரொம்ப தான்; என ரிதம் கூட முறைத்தாள். ஆனால் அவன் இருக்கும் பக்கம் திரும்ப வில்லை.
என்ன சத்யா! இதுக்கு தான் நம்ம தனியா போயிருக்கலாம் என ஹரிணி சொல்ல .
நிதின் அவளை கண்டு கொள்ள வில்லை.
ஹரிணிக்கு திரும்பவும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
சத்ய தேவ் ஒரு சில நொடியில் திரும்பி வந்தவன். ஹரிணி பக்கம் வந்து மேகனம் ஐஸ் ஸ்டிக் நீட்டினான்.
ஹரிணி அவனை விழி விரித்து பார்க்க..
ம்ம் வாங்கிக்க என் ஹனி எப்போவும் ஜில்லுன்னு இருக்கணும்! என நீட்டினான்.
“ச்சீ!” இது இரண்டு நபரின் மன சாட்சி!
ரிதம் மற்றும் நிதின் தான்! என்ன ஒரு கன்றாவியான பிளேர்ட் அதுக்கும் இவள் வாயை பிளந்து பார்க்கிறா? மிதுன் அண்ணன் இவன்னு சொல்ல மிதுனுக்கு வெட்கம் அவமானம். கருமம் கண்றாவி! இரத்த கொதிப்பு! என சொல்லி கொண்டனர்.
சத்ய தேவ் இன்னொரு பக்கம் வந்து காரில் ஏறி கொண்டான்.
கார் நகராமல் இருக்க..
போலாம் என மீண்டும் சத்ய தேவ் கூறினான். .
இருங்க அண்ணா! என் dimple ஏங்கி போயிடுவா! இப்படி எல்லாம் ஓவரா தாங்கி மைன்ட் blow flirting பண்ணா நாங்க எங்கே போறது? ஒரு நிமிசம் இருங்க.. என கூறிய நிதின் ரிதம் கிட்ட ஹே இந்தா உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிக்க ஐஸ் வேணாம்! கல்யாணம் வேற நெருங்குது. சோ சாக்லேட் வாங்கிக்க என நீட்ட..
மின்னல் வேகத்தில் ஓடி போய் வாங்கி கொண்டு வந்து அமர்ந்தாள். ரிதம்.
கார் நகர வெப்பமும் உஷ்னமும் அதிகமாக தொடங்கியது.
எதனால் இந்த வெப்பம்!
ஹரிணி ice 🍡 உருக உருக சாப்பிட இன்னொன்று சாரி இன்னொருவள்..
Example – சாறு நிறைந்த தேர்ந்தெடுக்க பட்ட மாம்பழங்களின் அணிவகுப்பு மாஸா என ஸ்லைஸ் என்று கத்ரீனா கைஃப் மாம்பழத்தை கடித்து சாறுடன் சாப்பிடும் அந்த சீனில் இப்பொழுது ரிதம் டைரி மில்க் சாக்லேட்டை உருக உருக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
காரில் உள்ள பிரண்ட் மிரர் வழியாக இந்த காட்சிகளை கஷ்ட பட்டு எட்சிள் விழுங்கி பார்த்து கொண்டிருந்தார்கள். தமயனும் தம்பியும்..
எவ்ளோ பெரிய டைரி மில்க்.. kiss me close your eyes miss me.. I can lead your lips on a finger… என சத்ய தேவ் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது இந்த பாடல்..
நான் எதுக்கு இவளை பார்க்கணும் நான் ஹரிணிய பார்க்கிறேன். என அவன் பார்வை அவள் மேல் சென்றது. எந்த ஒரு சபல பார்வையும் வர வில்லை. அப்படியே அருகில் இருக்கும் ரிதம் மீது பார்வை சென்றது. அணுவை Stable ஆகக துடித்து கொண்டிருக்கும் electron போல உள்ளுக்குள் elliptical, circle என வேகமாக பெரு வெடிப்பு கொள்கை நடந்து கொண்டிருந்தது.
சத்ய தேவ் பெரு மூச்சை விட்டு திரும்பி பார்க்க நிதினும் அப்பொழுது தான் தன்னிலை பெற்று திரும்ப அண்ணனும் தம்பியும் ஒரு முறை பார்த்து கொண்டனர். அதன் பின் நேராக ரோட்டை பார்த்து நிதின் ஓட்ட தொடங்கினான்.
எப்படியோ மலை உச்சிக்கு சென்று அதன் பின் சுருங்கி வழி வந்த உணர்வு இருவரும் பெரு மூச்சை விட்டு கொண்டனர்.
வீட்டுக்கு வந்ததும் அனைவரிடமும் புடவையை எடுத்து காட்டினார்கள். இரண்டு புடவையும் அழகாக இருக்க ஃபேஷன் டிசைனர் மற்றும் moon star மேரேஜ் இவென்ஸ் M.D பவன்யா அதை ஸ்டிட்ச் செய்யும் வேலையில் இறங்கினாள்.
அடுத்ததாக மஞ்சள் நீராட்டு விழா திருமணத்துக்கு முன் ஹல்டி என்று அழைக்கபடும் நலங்கு விழா..
அனைவரும் நளன் குடும்ப வீட்டு அதாவ்து இன்பா வின் பரம்பரை வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
கல்யாண கொண்டாட்டம் கலை கட்டியது. ஆனால் விவேகா தான் முகத்தை அப்படியே வைத்து கொண்டு சுற்றினாள். அனைவரும் விழாவில் இருந்தார்கள். ரிதமுக்கு ருது விழா எதுவும் பிரம்மாண்டமாக செய்ய வில்லை அது எல்லாம் இன்பா மற்றும் விவேகா இருவருக்கும் பிடிக்க வில்லை. அதனால் இன்று திரட்டி நடக்க இருக்கிறது.
ரிதம் மஞ்சள் வண்ண உடையில் அதற்கு ஏற்ப அணிகலன் ஆடை என மஞ்சள் காட்டு மைனா போல இருந்தாள்.
இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் நடந்து விடும்!
சோ முதலில் யார் யாருக்கு கல்யாணம்?
உங்க கெஸ் என்ன? சொல்லிட்டு போங்க…
அடங்காதவள் வருவாள்….
EPISODE 91
ரிதம் மஞ்சள் வண்ண உடையில் அதற்கு ஏற்ப அணிகலன்களுடன் மஞ்சள் காட்டு மைனா போல இருந்தாள்.
அவர்களின் வீட்டில் விவேகா மற்றும் இன்ப ராகவன் குடும்பத்தின் ஒட்டு மொத்த சொந்தங்களும் ஒரே இடத்தில் கூடி இருந்தார்கள்.
இந்த நலங்கு விழாவுக்கு மாமன் தான் முழு பொறுப்பு அதனால் வருண் – அதிதி கூடவே அவர்களின் மகன் விஸ்வா , கங்கா என அத்தோடு நில்லாமல் செல்வம் , தேவி, ஆதி, வெண்பா, யவனிகா, யுவதிகா, அதிரூபன் அப்படியே முக்கிய உறவை விட்டு விட்டேனே சரவணன் – சுபத்ரா அவர்களின் ஒரே செல்ல மகன் பரணி மித்ரன் – பூஜாவின் மகன் மற்றும் மகள்.. அப்படியே வெண்மதி – சக்ரவர்த்தி , வருணி – சிபி.. அவர்களின் மகன்கள் கிள்ளி வளவன், மற்றும் தியாமாறியது அவர்களின் பெண்.. அப்படியே அருண் – யாழினியாள் அவர்களின் மகன் மகள், அப்படியே மதிவாணன் – மஞ்சரி அப்படியே லோகேஷ் – கண்ணுகினியாள் அவர்களின் பிள்ளைகள் என மொத்த சண்டைக்காரா குழுவும் கூடி இருந்தது.
ரவி சந்திரன் பொழுதுகாம் போனும் கையுமாக இருக்க..
இப்போ என்ன எனி டைம் போனில் இருக்க? என்ன? என வசுமதி கேட்க.
நந்தினி , பிரியா வரவே இல்ல. என் மருமகன் வரனும் தானே! என பிரியாவின் தம்பியை பற்றி சொல்லி கொண்டிருந்தார். ரவி..
வசுமதி கடுப்புடன் என்ன மருமகன்? ஹான்! என்னமோ பொண்ணு பெத்து வச்சிருக்க மாதிரி பில்ட் அப் கொடுக்குற? என் கேட்டார்.
இதைக் கேட்டதும் ரவிச்சந்திரன் என்னடி? வர வர மரியாதை ரொம்ப குறைந்து போகுது. உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? இப்பவும் நான் அதே இளமை ஊஞ்சலாடும் ரவிச்சந்திரன் தான். இப்ப நினைச்சா கூட என்னால நச்சென்று நாலு ப்ராடக்ட் கொடுக்க முடியும்! புரியுதா? எனக்கு என்னைக்குமே வயசாகாது! என்று அந்த நரைத்த தோல் சுருங்கிய தோற்றத்துடன் கொஞ்சம் கைகள் நடுங்க கூறினார்.
வசுமதி சிரித்துக் கொண்டே போதும் போதும் பார்த்தாலே தெரியுது நீ இன்னும் 40 வருடத்துக்கு கூட கொடுக்க போறேன் என்று கூறினார்.
நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுமே ஆன்ட்டி ஆயிட்ட! சோ எப்படி பார்த்தாலும், நான் தான் இப்பவும் எங்க இருக்கேன். இப்போ ரிதம் கூட போனா என்னை தாத்தான்னு சொல்ல மாட்டாங்க! நீங்க ரிதம் ஓட டாடி என்று கேப்பாங்க! அந்த அளவுக்கு நான் இளமையா இருக்கேன்!! என்று சொல்லிக் கொண்டிருக்க..
வசுமதி முறைத்துக் கொண்டே பார்த்தார்.
தாத்து என்று சத்தத்துடன் அழைக்க.. .
இதோ வாரண்டி தங்க கட்டி என்று ரவிச்சந்திரன் மெதுவாக நடந்து கொண்டே தன் பேத்தியின் அருகில் சென்றார்.
ரிதம் நடுவில் மஞ்சள் உடையில் அமர்ந்திருக்க விவேகா ஒரு பக்கம் அரச பரக்க வேலை வேலை செய்து கொண்டிருந்தார்.
ருத்ரனும் எவனை மற்றும் யுபதி இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.
அப்புறம் சத்திய தேவ் சாருக்கு மேரேஜ் ஆகி அது நிஜமாவா அண்ணா இன்று யுவதிகா ருத்ரனிடம் கேட்க
ஏன் திடீர்னு நெஜமாவா அப்படின்னு கேக்குற? என்ன விஷயம் பாப்பா சொல்லு என்று கேட்டான்
அது ஒன்னும் இல்ல என்று யோசிக்க..
எங்க நான் சொல்றேன் அண்ணா உங்களுக்கு ஒரு எவனைப்பா பேச ஆரம்பித்தாள்.
என்ன விஷயம் என்று கேட்க..
நம்ம யுவதிக்கு சத்யராஜ் சார்னா அவ்வளவு பிடிக்கும் எப்ப பாரு அவரை பத்தி பேசிட்டு இருப்பா அவரோட போட்டோவே பாத்துட்டு இருக்காரு. அந்த அளவுக்கு பிடிக்கும் என்று கூறினார்.
அப்படியா பரவ இருக்கா காளையை இன்று ருத்ரன் அப்புறம் உன்னோட லவ்வ போய் சொன்னியா என்று கேட்க
யுவதிக்கா உதட்டைப் பிதுக்கி நான் சொல்லல என்று கூறினாள்.
ஏன் என்னாச்சு என்று கேட்க ஏன்னா எனக்கு சத்யதே சாரனா ரொம்ப ரொம்ப பயம் அவர பார்த்தால. கை கால் எல்லாம் உதடு வார்த்தையே வாயில வராது என்று கூறினாள்.
அப்படியா இன்ட்ரஸ்டிங் நியூஸ் நான் கண்டிப்பா மாமா கிட்ட இத பத்தி சொல்றேன் என்று ருத்ரன் கூறினான்.
இதையெல்லாம் பாம்பு காதுகளில் கேட்டுக் கொண்டிருந்த ரிதம்வுக்கு பற்றி கொண்டு வந்தது.
எவ்வளவு திமிரு? கொழுப்பு இருந்தா அவனை அவன் மேல இவளுக்கு கன்ணு இதுக்குத்தான் வயசு பசங்கம் பிள்ளைகளோட இந்த மாதிரி எல்லாம் வேலை செஞ்சா இதுதான் நடக்கும்.
உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது அடிப்பாவி இன்னும் ரெண்டு நாள்ல வேற ஒருத்தனுக்கு கல்யாணம் வேற ஒருத்தனா கல்யாணம் பண்ணிக்க போற..
இப்ப போய் அவனு நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கியே இது என்னோட பீலிங்கா
வீட்டில் வாழை மர தோரணங்கள் லைட்டுகள் பட்டாசுகள் என ஜகஜோதியாக மின்னிக் கொண்டிருக்க வீடு முழுக்க உறவினர்கள் தான் கலகலவென்று ஒரு பக்கம் உணவின் வாசம் ஒரு பக்கம் சிரித்து குலுங்கும் சத்தங்கள் இன்னொரு பக்கம் இளவட்டங்கள் என மொத்தத்தில் வீடே நிறைந்திருந்தது.
ரவிச்சந்திரன் மற்றும் வசுமதி இருவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எப்படியோ தன் பேத்தி என் திருமணத்தை பார்க்க போகிறோம் என்று பூரிப்புடன் இருந்தார்கள்.
விவேகா மட்டும் கலக்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்க தயவு செய்து முகத்தை இப்படி வச்சு இருக்காதடி! ரொம்ப கேவலமா இருக்கு என்று கூறினான்
விவேகா தன் கணவன் ஆசை கணவன் காதல் கணவன் இன்பாவை பார்த்து அவளுக்கு கல்யாணம் ஆன அடுத்த நாள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண போவாள் தான!
ஆமா என்று இன்பா தன் மனைவியை பார்க்க..
அந்த ரெஜிஸ் டர் பண்ண போற டைம்ல நான் உன்ன டைவர்ஸ் பண்ணுவேன்.
இன்று விவேகா கூறிக்கொண்டே சென்றாள். அப்போ அத நீ நிஜமாகவே நினைச்சுட்டு சுத்திட்டு இருக்கியா ? என்று இன்பா கேட்டேன்
என்னோட கோபம் உனக்கு ரொம்ப காமெடியா தெரிதா என்று விவேகா கேட்டார்
இன்பா சிரித்துக் கொண்டே ஏன் அவ்வளவு சீரியஸா எடுத்துக்காத அவளுக்கு பிடித்தவரை கல்யாணம் பண்ணிக்க போற இது எதுக்கு நீ ஓவரா பெருசா நினைக்கிறேன் என்று இன்பா சொல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்ல என்னோட கோபம் உனக்கு உப்பு சப்பு இல்லாத மாதிரி தோணுதா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்ல என்று இன்பா சொல்ல விவேகா கைகளை இறுக்கி மடக்கியவள் ஒருநாள் நான் கோபப்படும் போது நீ அப்போ என்னை யாருன்னு தெரிஞ்சுக்கவே என்னோட கோபத்தோட வீடியோ உனக்கு புரியாது அவன் இதை சொல்லி தானே என்னை பயமுறுத்தி வச்சிருக்க எனக்கும் கோபம் வரும் அப்போ உன்னால் அதை தாங்கிக்க முடியாது உனக்கு புரியாது என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.
இங்கே நித்தின் பிரகாஷ் அவனுடைய வீட்டில் புடவை கடையில் நடந்த நிகழ்வுகள், அதன் பின் காரில் நடந்த ஒரு நிகழ்வு இருக்கிறதே! ஐயோ ஐயோ அதை பார்க்க இரண்டு கண்ணு போதாது என்று நித்தின் படுக்கையில் விழுந்து உருன்டு விழுந்தான்.
இது அவனுக்கு புதிய உணர்வு எவ்வளவு நேர்த்தியாக எவ்வளவு அழகாக சாப்பிடுகிறாள். அந்த கைகள் அந்த உதடுகள், அந்த ஐஸ்கிரீம், ஹப்பா சொர்கம் டா! இப்படி ஒரு பொண்ணு அதுவும் என்னோட பக்கத்துல ஹரிணி ஹனி இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று சொல்லிக் கொண்டான் நித்தின் பிரகாஷ்.
இன்னொரு பக்கம் சூரிய பிரகாஷ் மற்றும் தேஜு இருவரும் தன்னுடைய ஆசை பெண். அதுவும் ஒரே ஒரு செல்ல மகளுக்கு போனில் பேசி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
எப்போ வரப்போற இன்னும் எத்தனை தடவை தான் உன்ன கூப்பிடுறது? என்று தேஜு சொல்ல..
நான் தான் வரலைன்னு சொல்லிட்டேன்ல! எனக்கு எக்ஸாம் எல்லாம் இருக்கு மா! ப்ளீஸ் என்ன தொந்தரவு பண்ணாதமா! என்று நிலா கூறினாள்.
சூரிய பிரகாஷ் தேஜிவை பார்த்து என்னாச்சு? பாப்பா எப்ப வருது என்று கேட்க
அவ வரமாட்டாளாம் எக்ஸாம் இருக்காம்!!நீங்களே பேசுங்க என்று போனை சூரிய பிரகாஷிடம் கொடுத்துவிட்டு தேஜு சென்று விட்டார்.
பொம்மாயி என்று சூரிய பிரகாஷ் அழைக்க..
மகடிக்கு நடனமாடும் பாம்பு படம் எடுத்தாலும் பாம்பு போல டாடி என்று ராகத்துடன் அழைத்தால் சொரி பிரகாஷுக்கு ஒரு வேலையாக வேண்டும் அவளிடம் மிகுந்த அக்கறையையும் உரிமையையும் காட்ட வேண்டும். நிலா தான் சொல்வதெல்லாம் கேட்க வேண்டும். என்று அன்பு கட்டளை இடும் போது மட்டுமே அவளை பொம்மாயி என்று அழைப்பார்.
அதேபோல பொம்மாயி என்று மீண்டும் அழைக்க
டாடி எனக்கு எக்ஸாம் இருக்கு டாடி நான் வரல என்று மீண்டும் நிலா கூற..
என்னடா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நம்ம அண்ணாவோட கல்யாணம்,உனக்கு அது புரியுதா இல்லையா ? என்று கேட்க
நிலா மெதுவான குரலில் அப்படியா ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட வான்னு கூப்பிடவே இல்லையே? என்று பெரிய மனுஷன் போல கேட்டாள்.
ஆனால் சூரிய பிரகாஷ் கண்களுக்கு அவள் இன்னும் சிறு கைக் குழந்தையாக தான் தெரிந்தாள்.
பொம்மாயி என்று மீண்டும் அழைக்க
டாடி அண்ணாவுக்கு நான் முக்கியம் இல்ல! கனி அக்கா இருக்காங்க, அதை விட தூரிகா அக்கா, அதைவிட சிவன்யா அக்கா, அவங்கள தான் அண்ணாவுக்கு பிடிக்கும். நான் எல்லாம் அண்ணாவுக்கு முக்கியமே இல்ல! நான் வந்தாலும் கல்யாணம் நிக்க போறது இல்லையே! கண்டிப்பா நடக்கும். நீங்க கவலைப்படாதீங்க டாடி! நான் வரல என்று நிலா சொல்லிவிட்டு வேகமாக போனை வைக்க போக..
பொம்மாயி அப்பாவுக்காக வரமாட்டியா என்று கேட்க
டாடி ப்ளீஸ் டாடி எனக்கு எக்ஸாம் இருக்கு! ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ டாடி! நீ என்னோட சூரிய டாடி தானே! என்று அவள் கேட்க..
சூரிய பிரகாஷ் பெருமூச்சுடன் இது உன் அண்ணனோட கல்யாணம்! நீ வரலனா நம்மள என்ன நினைப்பாங்க? என்று கேட்க
யார் என்ன நினைப்பா? என்று நிலா கேட்டாள்.
வேற யாரு அந்த இன்ப ராகவன் குடும்பம் பத்தி தான் சொல்றேன். என்ன? நிலா வரலையே? அப்படின்னு கேட்பாங்க. நீ வந்தா தான் மொத்த குடும்பத்துக்குமே வெளிச்சம்! என்று கூறினார்.
அதை அவர் எப்படி கூறினாரோ? அது தெரியாது பின்னால் அது நிஜமாக போகிறது
தொடரும்..
EPISODE 92
என்ன பொம்மாயி உன் டாடிக்காக மாட்டியா? உன்னை பார்க்கணும் போல இருக்கு! இட்ஸ் ஓகே! நான் தர்வாத்தா போன் பண்றேன். என வைத்தார். சூர்ய பிரகாஷ்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து பெரு மூச்சை விட்ட நிலா கல்யாணம் அன்று காலையில் செல்லலாம் என முடிவெடுத்தாள்.
ரிதம் போன் எடுத்து கொண்டு சென்றவள். மித்து மகி மாமி கிட்ட போன் கொடு!
சொல்லு தங்க புள்ளை!
மாமி இப்போவே நீங்க இங்கே வரனும். உடனே சீக்கிரம் என ரிதம் தங்க தாராகையாக மாலையும் கழுத்துமாக போன் பேசி கொண்டிருக்க..
இப்போவா! நாங்க மாப்ளை வீடு பொண்ணு!
மாமி உங்களுக்கு உங்க பையன் தான் முக்கியம் நான் இல்ல அப்படி தானே! என ரிதம் சொல்ல..
சூர்யா போனை வாங்கி இப்போ என்ன? அங்கே வரனும்! அவ்ளோ தானே உடனே வரோம்! என மிதுன், தூரிகா, மகி, சூர்ய தேவ் அனைவரும் கிளம்ப ..
மகி வெளியே வந்தவர். என்னங்க உங்க பெரிய பையன்? என கேட்க..
என்னோட பையனா? உனக்கு?
மகி முகத்தை தொங்க போட்டு கொண்டு உங்க பையன் தானே! நான் என்னை அவன் அம்மாவா?
அய்யோ மா! போதும் சென்டிமெண்ட் பண்ணாத! டாடி அண்ணாவை வர சொல்லுங்க! என இதழ் சொல்ல..
மிதுன் கிளம்பி உடையை சரி செய்தவன். போலாமா என கேட்க..
சூர்யா போனை எடுத்து அழைக்க.. சத்ய தேவ் அவரிடம் நானும் ஹரிணியும் ஆல்ரெடி கிளம்பிட்டோம் என கூறினான்.
இங்கிருந்து அனைவரும் கிளம்பினார்கள். ஹரிணி மற்றும் சத்ய தேவ் இருவரும் டிரயினில் வர ஹரிணி ஒரு மாதிரியாக இருந்தாள்.
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்து என்ன ஆச்சு ஹனி உன்னோட முகமே சரி இல்லையே? என கேட்க..
இல்ல ந! நானும் நாவள் பியர்ஸிங் பண்ணிக்கவா? உனக்காக நான் என்ன பண்ணி இருக்கேன்? ஒண்ணுமே பண்ணல! என எங்கோ வெறித்து கொண்டு கூறினாள். ஹரிணி
சத்ய தேவ் அவளை ஆச்சரியமாக பார்த்தவன். உன்னை பார்த்தால் கின்டர் கார்டன் பேபி போல இருக்கு! எப்போவும் மெட்சியூரிட்டி பத்தி பேசுவ? ஆனால் இன்னிக்கி என்னாச்சு? இதையெல்லாம் பண்ணி தான் காதலை proof பண்ணனுமா? நீ ரொம்ப different ஆ நடந்துக்குற! என்ன? என அவளின் அருகில் வந்து கைகளை கோர்த்து அமர்ந்தான்.
ஹரிணி அவன் தோளில் சாய்ந்து கொண்டவள். ஒரு சில நிமிடம் கழித்து சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள். யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவனிடம் I want kiss! எனக்கு முத்தம் கொடு! அதுவும் டீப் கிஸ்! இப்போவே வேணும்! என கேட்டு கொண்டு அவனுக்கு வாகாக அமர்ந்து முகத்தை பார்த்தாள்.
சத்ய தேவ் – ஹரிணி என்னடா இந்த மொழி ஒண்ணுமே புரியலையே! அப்டின்னு தோனுமே! .
To be continued.. ..
அங்கே டிரயினில் என்ன நடந்தது? வரேன் அதுக்கு தான் வரேன். அப்புறம் பார்ப்போம்.
சூர்யா குடும்பம் ஃப்லைட்டில் வந்து சேர்ந்தார்கள். ரிதம் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தாள்.
இன்பா திருமணத்தை வீட்டிலேயே வைத்து கொள்ளலாம் என முடிவு எடுத்து இருந்தான். நிதின் பாதுகாப்புக்கும் அதுவே சரி என பட்டது.
சூர்ய பிரகாஷ் குடும்பமும் வந்து சேர்ந்தது. குரு பிரகாஷ் திருமணம் அன்று காலையில் வருவதாக கூறிவிட்டார். அதனால் தன் மகள் மகன் இருவரை மட்டும் அனுப்பி இருந்தார். கனி, திவான். குரு மற்றும் கனியின் மகன். அதே போல ஜெய் ஆகாஷ் – கீர்த்தனா குடும்பம், வருன் ஶ்ரீ மதி, மாயா , வெங்கட், அவர்களின் பேரன் பேத்திகள் அவர்களுடன் கலை, வசந்தன் என அனைவரும் இருக்க.. இங்கே வராத நபர் உதயன் குடும்பம் மட்டும் தான்.
சூர்ய பிரகாஷ் அழைக்க.. வரேன் மாமா! இன்னிக்கு நைட்டு முடிஞ்ச அளவுக்கு வர பார்க்கிறேன் என சொல்லி வைத்தான். உதயன்.
சடங்கு படி பார்த்தால் ஒரே நாளில் ஹல்டி, மெஹந்தி என எல்லா விழாவையும் ஒரே நாளில் தெலுங்கு முறைப்படி அவர்கள் செய்ய, தமிழ் முறை படி திருமணம் மட்டும் தான் நாம் செய்ய வேண்டும் அதற்காக தான் நிதின் பிரகாஷ் குடும்பத்தை இன்பா அழைத்து இருந்தார்.
சண்ட மேளம் முழங்க மாப்பிள்ளை வரவேற்பு அந்த இடமே அலங்காரத்தில் ஜொலிக்க நிதின் பிரகாஷ் காரில் இருந்து இறங்கினான். அந்த நேரம் தான் சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் வந்து இறங்கினார்கள்.
மிதுன் வேகமாக உள்ளே சென்றவன். ஹே அண்ணா வந்தாச்சு! வாடி போய் பார்க்கலாம்! என அழைக்க..
நான் வரல! என ரிதம் அமர்ந்து விட்டாள்.
ருத்ரன் மேள சத்தத்தில் காதை அசைத்து கொண்டு மாமா! மாமா என எட்டி வாசலை பார்க்க..
ஹே மிதுன் பையா! இரு இரு நானும் வரேன் என மஞ்சள் முகத்துடன் கைகளில் டசன் தங்க வளையல், கழுத்தில் காசு மாலை, நெக்லஸ் ஆரம், ஒட்டியாணம் நெற்றியில் அழகான குங்குமம், தலையில் நிறைய பூ என இருந்தவள். புடவையை தூக்கி பிடித்து கொண்டு வெளியே ஓடினாள்.
ஹே வர மாட்டேன்னு சொன்ன? இப்போ ஆடிட்டு வர.. என மிதுன் சொல்ல..
ஆட தான் வரேன். என சொல்லி விட்டு வெளியே வந்தவள் அதற்கும் முன் அங்கு பாட்டு ஆட்டத்துக்காக ஆதவ் மற்றும் அதிரூபன் இருவரிடமும் முராரி படம் ( மகேஷ் பாபு மற்றும் சோனாலி பிந்திரே இருவரும் நடித்த படத்தில் இருந்து பாடலை போட்டு விட சொல்லி விட்டு சென்றாள்.
அங்கு மாப்பிள்ளை வரவேர்ப பார்க்க வந்த அனைவரும் அய்யோ பொண்ணு பொன்னும் வந்திடுச்சு! என சொல்லி கொண்டிருக்க..
விவேகா தன் மகளை ஏகத்துக்கும் முறைத்து தடுக்க போக..
வசுமதி அவளின் கையை பிடித்து நீ எந்த காலத்தில் டி பிறந்த? என் பேத்தி போய் ஆடட்டும்!கொஞ்சம் கம்முன்னு நில்லு என சொல்ல..
அந்த மலையாள மஞ்சும்மொள் பாய்ஸ் மேளம் கொட்ட நிதின் புருவம் உயர்த்தி அவளை பார்த்தான். ரிதம் அவன் அருகில் சென்று நிதின் கூலிங் கிளாஸ்சை உரிமையாக போட்டு கொண்டு அந்த இள வட்டத்துடன் ஆட தொடங்கினாள். ஒரு பக்கம் சண்ட மேளம் இசைக்க இன்னொரு பக்கம் அந்த மஞ்சும்மொள் பாய்ஸ் ரிதம் கூட குது காலத்துடன் ஆட கூடவே மிதுன் சேர்ந்து கொண்டான்.
ரிதம் வியர்வை வழிய தக தகன்னு வெயில் அடிக்குது சத்யா விளம்பரத்தில் வரும் ஶ்ரீலீலாவை போல அந்த நலங்கு காஸ்ட்யும்ல வியர்வை முத்துக்கள் மின்ன மஞ்சள் குளித்த தேகம் மின்ன உதட்டை சுழித்து கண்கள் கதை பேச, கை கால்கள் அழகாக படமெடுக்க ஆடும் அவளை தான் வைத்த கண் வாங்காமல் சத்ய தேவ் பார்த்து கொண்டிருந்தான்.
போட்டோ மற்றும் ட்ரோன் கேமராக்கள் வட்டமிட்டு ரிதம் மற்றும் மிதுன் ஆடுவதை விடாமல் ஷூட் செய்து கொண்டிருந்தது. கிட்ட தட்ட திருமணத்தை ஷூட் செய்ய சினிமா கேமரா மேனை புக் செய்து இருந்தான். நிதின் பிரகாஷ்
ரிதம் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
என் மானம் போகுது! எதுக்கு டி இவன் இப்படி குதிக்கிரான். என சூர்யா சொல்லி கொண்டிருக்க..
மகி அவர்களின் சந்தோசத்தை ரசித்து பார்த்தாள். அதற்குள் ஆட்டம் முடிய.. மேளகாரர்கள் அனைவரும் ரிதமை மிகவும் பிடித்து போய் அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டார்கள்.
ஒரு வழியாக வரவேற்பு முடிய இப்பொழுது ஆரத்தி எடுக்கும் நேரம் வந்தது.
யார் ஆரத்தி எடுப்பது? ரிதம் கூட பிறந்த அக்கா, தங்கை முறை வேணும், கூடவே மாலை போட ரித்தமின் அண்ணன், தம்பி வேணும் என சொல்ல..
யவனிகா மற்றும் யுவதிகா இருவரும் பயந்து கொண்டே வர..
ருத்ரன் சென்று சத்ய தேவ் ஹரிணி இருவரையும் அழைத்து கொண்டு உள்ளே வரும் நேரம்.
இப்படி நடுங்கினால் எப்டி? என்ன மா? நான் உங்க அக்காவை கட்டிக்க போறவன்! அவ்ளோ தான் ஆனால் நீங்க..
அதற்குள் கங்கா இருவரையும் பார்த்து இன்னும் ஒரு ஆள் வேணும்! மூணு பேர் சேர்ந்து தான் சுத்த வேணும்! என சொல்ல
உடனே ரிதம் சிரித்து கொண்டே நானே எடுக்கவா! என முன்னால் வர விவேகா அதற்குள் அருகில் சென்று ரிதம் கையை வலிக்கும் படி தட்டி விட்டாள்.
ஸ்ஸஸ் மா! என ரிதம் கத்த ..
மகி கொஞ்சம் கோபத்துடன் என்ன அறிவு அவள் எங்க வீட்டு மருமகள்! எதோ ஆசையில் கேட்டுட்டா இப்போ என்ன? அதுக்கு கைய தட்டி விடுற?
அது அப்படி இல்ல கா நான் மெதுவா தான் தட்டி விட்டேன். எல்லாத்துக்கும் துடுக்கு அதிகம் இவளுக்கு. அது தான்! எல்லாத்துக்கும் சாங்கியம் அப்டின்னு ஒன்னு இருக்கே! என விவேகா பற்களை கடித்து கொண்டு கூற..
அதெல்லாம் நம்ம உருவாக்கியது தான்! என மகி கூற..
போதும் இப்போ என்ன? ரிதம்க்கு அக்கா தங்கை முறை வேணும்! அவ்ளோ தான இதோ என்னோட ஹரிணி அண்ணி! இருக்காங்க என நிதின் கூறினான்.
அனைவர் பார்வையும் யார் ஹரிணி என தேட.. அவள் இதயம் படபடக்க பார்த்தாள்.
மகி சிரித்து கொண்டே ஆமா எங்க வீட்டு மூத்த மறுமக என சொல்ல…
பிரச்னை முடிஞ்சது வா மா! நீ வந்து மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி தண்ணி கொடு என சொல்ல..
நிதின் பார்வை ரிதம் மேல் இருக்க, ஹரிணி கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கி கொண்டே வந்தாள்.
இதயம் கனத்து போனது! நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என உள்ளம் வேதனையில் துடிக்க அவனுக்கு சுற்றினாள்.
மூத்த மருமகளா? அப்போ இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? என கங்கா கேட்க..
மகி புன்னகையுடன் அடுத்த வாரம் கல்யாணம் அப்புறம் ரெண்டு ஜோடிக்கும் சேர்த்து வரவேற்பு இருக்கு மா! என கூறினாள்.
நிதின் கம்பீரத்துடன் நிற்க, கைகள் நடுங்க கண்கள் கலங்க அவனுக்கு சுற்றினாள்.
சுற்று முடிந்ததும் உடனே நிதின் அவனுடைய கையில் இருக்கும் மோதிரத்தை போட்டான்.
ஹே மாப்ளை எவ்ளோ பெரிய மனசுக்காரர். என அங்கிருக்கும் கூட்டம் சொல்ல..
எடுத்துக்கோங்க அண்ணி! என நிதின் கூற..
அது ரிதமுக்கு சேர வேண்டியது. இதை விட என் சத்ய தேவ் மாமா இன்னும் பெரிய மனசுக்காரர் என ருத்ரன் கூறினான்.
அங்கிருக்கும் அனைவரும் சத்தமிட.. நிதின் சிரித்து கொண்டே அதுவும் கரெக்ட் தான் உங்க சத்ய தேவ் மாமா மாதிரி எனக்கு மனசு இல்ல! என்னோட அன்னிக்கு விருப்பம் இருந்தால் கொழுந்தன் கொடுத்ததை வாங்குவது அவங்க விருப்பம் என சொல்ல..
எடுத்துக்கோ ஹரிணி என சத்ய தேவ் அதற்கும் மேல் அந்த பிரச்சனையை வளர்க்க பிடிக்காமல் கூறினான்.
ஹரிணி நடுங்கும் கைகளில் அதை எடுத்துக்கொள்ள..
நிதின் சிரித்து கொண்டே ரிதம் என கைகளை நீட்டிட.. சரியாக அந்த நேரம் முராரி படத்தில் இருந்து பங்கார கண்ணு என்ற பாடல் போட்டு விட..
ஹரிணி கண்களுக்கு முன் இருவரும் சிரித்து கொண்டே பங்கார கள்ளு பாட்டுக்கு அழகு ஓவியம் போல ஆடினார்கள்.
கங்கா வேகமாக உள்ளே சென்று இருவரையும் சுற்றி போட..
பரவாயில்லை இப்போவே ரிதம் தெலுங்கு மொழிக்கு மாரிட்டா போல… ம்ம் மினிஸ்டர் மனைவியாக சும்மாவா? என பேசி கொண்டார்கள்.
உள்ளே வந்ததும் பொண்ணு மாப்பிள்ளை இருவரும் பிரித்து வைக்க பட்டார்கள்.
ஹரிணி நேராக அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு வந்தாள். அங்கே பவன்யா பிஸ்னஸ் விசயமாக போனில் பேசி கொண்டிருக்க..
பொத்தென படுக்கையில் விழுந்தாள். அண்ணி! என பவன்யா அழைக்க..
பவா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்! என முகத்தை தலையணையில் புதைத்தாள்.
சரி ஓகே நீங்க ரெஸ்ட் எடுங்க நான் வரேன் என வெளியே சென்று விட்டாள்.
இங்கே ரிதம் போனை எடுத்து பேசி கொண்டே ஹே வீணா! ஆக்னஸ் எங்கே டி இருக்கீங்க? ஹே வீனா போன வீனா? ஹே ஆக்னஸ்! உங்களுக்கு முக்கியமான மிசன் கொடுத்திருக்கேன். எப்போ டி வருவீங்க? என ஆங்கிலத்தில் பேசி கொண்டிருந்தாள்.
டார்லிங் don’t feel baby? Be positive! All is well baby! என அவர்கள் சொல்ல..
எதுவும் மிஸ் ஆச்சு! இங்கேயே பீச் ஹவுஸ்ல புதைச்சிடுவேன்! சீக்கிரம் வாங்க டி என பேசி கொண்டே போனை வைத்தாள்.
அந்த இடம் திருமணம் முடிந்ததும் அதன் பின் வரும் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. நடுவில் ஊஞ்சல் இருக்க அது வண்ண விளக்குகளில் அலங்கரிக்கபட்டு இருக்க அந்த பால் நிலவு வைத்த கண் வாங்காமல் ரிதமை பார்த்து கொண்டிருந்தது.
ஹே என்ன அப்படி பார்க்கிற? அப்படி பார்க்காத போ! போ! உனக்கு இங்கே வேலை இல்லை என கண்ணகுளி தெரிய சிரித்தவள். பால் வண்ண நிலவை ரசித்து கொண்டே இயற்கை காற்றை நாசி முழுக்க நிறைத்து கொண்டே திரும்ப அவளின் முந்தி அப்படியே பறக்க.. சோனாலி பிந்ரே போல இருந்தாள்.
எல்லாமே நல்லதா நடக்கும் நம்பிக்கை இருக்கு! நான் பண்ணது தப்பு தான் , பண்ண போறதும் தப்பு தான் ஆனாலும் எல்லாமே ஒருத்தனுக்கு தான் ஒருத்தனுக்காக தான் என சொல்லி கொண்டே திரும்ப..
சந்திரனுக்கே டப் கொடுக்கும் அவளை மேலே இருக்கும் பால் கணியில் இருந்து பார்த்து கொண்டிருந்தான் சத்ய தேவ்! அவள் திரும்பும் போது அவளின் தொப்புலில் உள்ள தோடு மின்னி கொண்டிருக்க.. மேலே இருக்கும் தேவ் அதான் சத்ய தேவ் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது. எதெட்ச்சியாக ரிதம் அவனுடைய அறையை பார்க்க…. இருவர் கண்களும் மோதி கொண்டது.
அவளை பார்த்ததும் சத்ய தேவ் அப்படியே நின்றால் பிரச்னை இல்லை. அவன் திருட்டு பூனை போல வேகமாக உள்ளே சென்று விட..
ரிதம் முறைத்து பார்த்து விட்டு வேகமாக அவனுடைய அறையை நோக்கி வந்து விட்டாள்.
(ஹே என்ன அவள் போறா? அவளை கேட்க யாரும் இல்லையா? )
அனைவரும் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருக்க பெரியவர்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என பேசி கொண்டிருந்தார்கள்.
கதவு தட்ட..
சத்ய தேவ் கதவை திறந்தான். அவளை பார்த்ததும் வேகமாக இங்கே எதுக்கு வந்த?
நீ எதுக்கு என்னை பார்த்த? ஒரு வேளை முடிவை மாத்திக்கிட்டியா? என இரு புருவம் தூக்கினாள்.
என்ன முடிவு? ஒழுங்கா இங்கே இருந்து போ! நான் எங்கே உன்னை பார்த்தேன்? டென்ஷன் பண்ணாம ஒழுங்கா போயிடு! என சத்ய தேவ் கதவை சாத்த…
ஹே என் விரல்! என் விரல் என கதவு இடுக்கில் நசுக்கி கொண்டவள் போல உதட்டை பிதுக்கி கொண்டு அழுதாள்.
ஹே என்ன டி? என கைகளை பிடித்து பார்க்க.. இதோ இங்கே! என்னை பிளான் பண்ணி நசுக்கி விட்ட? என அவள் அழ..
ஹே ஹே எங்கே காட்டு! என கைகளை பார்த்தான்.
ஸ்ஸ் என அவள் வலியில் துடிக்க… ஹே கத்தாத டி என வாயில் கை வைத்து அறைக்குள் அழைத்து சென்றான். எங்கே விரல காட்டு!
எந்த விரல்? என ரிதம் உடனே முகத்தை இயல்பாக வைத்து கொண்டு கேட்க..
சத்ய தேவ் கோபத்துடன் அவளை முறைத்தான்.
ஹே என்னை எதுக்கு அப்படி பார்த்த? சொல்லு!
நீயும் நிதின்ம் பார்க்க made for each other போல இருந்தீங்க! அது தான் பார்த்தேன்.
ரிதம் சிரித்து கொண்டே கரக்ட் தான்! நாங்க ரெண்டு பேரும் made for தான் each other தான்..
சத்ய தேவ் கண்களை விரித்து ஹே உன்னை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா ? எதுக்கு டி என்னை டார்ச்சர் பண்ற? ஒழுங்கா போயிடு!
போக தானே போறேன்! ஆனால் போறதுக்கு முன்னாடி எதுக்கு என்னை பார்த்தன்னு சொல்லிடு நான் போறேன்! சொல்லு டா சொல்லு என அவன் பக்கம் நெருங்கினாள்.
நான் அது! அது தான்! சொன்னேனே! நீயும் நிதின்!..
ச்சீ ச்சீ ச்சீ! சொன்னதை திருப்பி சொல்லாத நான் டான்ஸ் ஆடும் போது நீ பார்த்ததை சொல்லல! இப்போ நான் கீழே ஊஞ்சல் கிட்ட நின்னுட்டு இருக்கும் போது நீ என்னை பார்த்த விசயத்தை பத்தி கேட்கிறேன். சொல்லு ஏன் பார்த்த? சொல்லு! என ரிதம் இன்னும் முன்னேறி வர .
சத்ய தேவ் முகத்தில் ஒரு நிமிடம் அதிர்ச்சி தோன்றினாலும், அதை வெளி காட்டி கொள்ளாமல் நான் நானா? நான் ஒன்னும் நீ டான்ஸ் ஆடும் போது பார்க்கல என முகத்தை திருப்பி கொண்டான்.
அப்டியா? என அவளுடைய போனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
என்ன இது? என சத்ய தேவ் முகத்தை திருப்ப..
நீ வாட்டர் ஃபால்ஸ் ஊத்தி கிட்டு என்னை பார்த்திட்டு இருந்த சீனரி இதோ! என நீட்ட..
சத்ய தேவ் கண்களை மூடி அச்சோ என நினைத்தவன். ஹே அது நான் உன்னை பார்க்கல இதோ மிதுன் ஆடுறான். அவனை பார்த்தேன். பாரு என் தம்பி..
அய்யே அப்போ அவனா நீ! என ரிதம் கண்ணக்குளி ததும்ப சிரிக்க..
ஹே என்ன?
ஒன்னும் இல்ல போ! அதான் பார்க்கலன்னு சொல்லிட்டல்ல! என்னை திங்கிற மாதிரி பார்த்ததை நான் பார்த்தேன். நீ பொய் டா! சோ பேசுறது வீண்! பொய் சொன்னா உனக்கு பத்து பொம்பள புள்ளை பிறக்கும்!
ஃபேமிலி பிளானிங் பண்ணிக்கிட்டா பிறக்காது போடி! என கூறினான்.
ரிதம் அவனை கோபம் கக்கும் விழிகளில் பார்த்தவள். வேகமாக வெளியே சென்றாள். அவள் சென்ற அடுத்த நொடி கதவை சாத்தியவன் உதட்டில் புன்னகை படற ம்ம் பார்த்தேன்! என தலை கோத.. மீண்டும் கதவு தட்ட பட்டது.
ப்ச்! என்ன டி?
ஒரே ஒரு ரிதம் பழமொழி சொல்லவா?
ம்ம் சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பு என கதவின் மேல் சாயிந்தான்.
ரசிப்பது போதை எனில் ரசிக்கபடுவது ராஜ போதை! தெரியுமா? என ரிதம் அவனை பார்க்க
இந்த ரிதம் பழமொழி ரொம்ப ரொம்ப வியாக்! போ! போடி! என சத்ய தேவ் உடனே கூறினான்.
இதுக்கு நீ அனுபவிப்ப டா! இப்படி பொய் சொல்ற உனக்கு போஜனம் கிடைக்காது. நான் சோரை சொல்லல.. உனக்கு கிடைக்க வேண்டிய போஜனம் கிடைக்காது டா! நீ கன்னி கழியாத காளை மாடு போடா என சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சத்ய தேவ் சிரித்து கொண்டே உள்ளே சென்றான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அனைவரும் சங்கீத், மெஹந்தி என அனைத்துக்கும் தயாராகினர். மிதுன் தேவை சுற்றி பெண்கள் பட்டாளம் இருக்க..
மிதுன் சட்டை கையை மடக்கி விட்டு கொண்டே கலர் அஸ்ட்றாலஜி, அதன் கூடவே மந்த் அஸ்ட்ராலஜி என சொல்லி அனைத்து பெண்களையும் ஃப்லார்ட் செய்து கொண்டிருந்தான்.
யவனிகா தான் அதில் முதலில் சிக்கிய பெண் மீன்!.
சொல்லு பேபி என மருதாணி கோன கையில் வாங்கி கொண்டே உன்னோட ஃபேவரட் கலர் என்ன? என்று மிதுன் கேட்க..
அது எனக்கு எல்லோ பிடிக்கும்! என கண்கள் மின்ன கூறினாள்.
ஓ சூப்பர் நீங்க ரொம்ப ஹேப்பி பெர்சனா இருப்பீங்க! உங்க ஹாப்பிய எல்லாருக்கும் சேர் பண்ணனும் அப்டின்னு நினைபீங்க கூடவே பாசிடிவ் மைன்டட்டா இருப்பீங்க! என மிதுன் சொல்ல
இமை வெட்டாமல் பார்த்தாள். யவனிகா..
என்ன நான் சொன்னது எதுவும் தப்பா? என மிதுன் கேட்க..
எல் எல்லாமே கரெக்ட் சூப்பர் நீங்க வேற லெவல் சார் என யவனிகா கூறினாள்.
யுவதிகா கண்கள் விரிய எனக்கு பிடிச்ச கலர் பெர்ப்பில் என சொல்ல..
நீங்க ரொம்ப யுனிக் அப்புறம் நூறு பேர் இருந்தாலும் அந்த இடத்தில் தனியா தெரிவீங்க! எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற கேரக்டர், அதே போல எமோசனல் கனெக்ட் டிபென்ட் பண்ணி இருப்பீங்க! Finally நீங்க ரொம்ப charm என சொல்லி முடித்தான்.
இதோ முடிஞ்சது. என மிதுன் அவளின் கையில் உள்ள டிசைன் பார்க்க..
சார் நீங்க சூப்பர் என அவள் வெட்கத்தில் நெளிய..
ருத்ரன் முகத்தை சுருக்கி கொண்டே என்ன நடக்குது? என கேட்க..
அண்ணா! மிதுன் சார் வேற லெவல் தெரியுமா! என சொல்ல..
ஓ அவன் உனக்கு அண்ணாவா? அப்போ நான் உனக்கு மாமா!
மாமா சொல்லு! என மிதுன் சொல்லி கொண்டிருக்க..
ரிதம் மருதாணி வைக்க புதிய உடையில் இறங்கி வந்தாள். புதுமண தம்பதிகள் அமர அலகரிக்கபட்ட இருக்கை காத்திருக்க..
அதே நேரம் சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் வந்தார்கள்..
தொடரும்..
EPISODE 93
சார் நீங்க சூப்பர் என அவள் வெட்கத்தில் நெளிய..
ருத்ரன் முகத்தை சுருக்கி கொண்டே என்ன நடக்குது? என கேட்க..
அண்ணா! மிதுன் சார் வேற லெவல் தெரியுமா! என சொல்ல..
ஓ அவன் உனக்கு அண்ணாவா? அப்போ நான் உனக்கு மாமா! சோ மாமா சொல்லு! என மிதுன் சொல்லி கொண்டிருக்க..
அது யுவதி, யவனி உங்களுக்கு இங்கே என்ன வேலை போங்க! உங்களை சித்தி கூப்பிட்டாங்க! என ருத்ரன் சொல்ல..
என்ன டியர்ஸ் அவ்ளோ தானா! என மிதுன் உதட்டை பிதுக்க… நிவாஸ் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
ருத்ரன் பார்வை நிவாசின் மீது படிந்தது. அவன் முறைத்து பார்க்க..
ரித்முக்கு தம்பியா இருக்கவன். நிதின் அண்ணாவை மாமா சொல்லணும்! அப்போ நிதின் அண்ணாவுக்கு இவன் என்ன முறை?
யுவதி யோசித்து ஹான் மச்சான்! என சொல்ல..
ஓ மச்சான்! அப்போ நீங்க எங்களுக்கு மச்சிநிச்சி! சோ ஹாய் மச்சி என மிதுன் கண்களை சிமிட்டி கொண்டே சொல்ல..
ப்ரோ எங்கேயோ யாருக்கோ கண்ணு காது மூக்கில் எல்லாம் புகை வருது! என நிவாஸ் சொல்ல…
ரிதம் மருதாணி வைக்க புதிய உடையில் இறங்கி வந்தாள். புதுமண தம்பதிகளுக்கு என்றே அலகரிக்கபட்ட இருக்கை காத்திருக்க..
அதே நேரம் சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் வந்தார்கள்..
உடனே ருத்ரன் கொஞ்சம் புன்னகை முகத்துடன் ஹே யுவதி அங்கே பாரு உன்னோட ஹீரோ வாராரு என சொல்ல.. யுவதி சட்டென திரும்பி பார்த்தாள். அங்கே ஹரிணியின் உடைக்கு ஏற்ப சத்ய தேவ் உடை இருக்க கம்பீர அழகில், கண்களில் ஒளியுடன், பச்சை வண்ண சில்க் சர்ட் தங்க ஜரிகை வேஷ்டி என சிந்தாமணியின் நாயகன் சீவகன் போல, பொன்னியின் செல்வன் போல, மணிமேகலையின் உதய குமாரன் போல, ம்ம்மம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்ல போனால் ஜடாமுடி சிவன் வேஷ்டி சட்டையில் வந்தது போல இருந்தான். சத்ய தேவ்.
யுவதி வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க..
ருத்ரன் அவனை பார்த்து சிரித்து கொண்டே நீங்க மந்த் அஸ்டிராலஜி, கலர் அஸ்டிராலஜி, அப்டின்னு கலர் கலரா கண்டன்ட் எடுத்து பிளார்ட் பண்ணாலும்! என் மாமா ஒரு பார்வை பார்த்தால் போதும் சர்வமும் அவருக்கு அடிமை ஆகிடும்! அந்த அளவுக்கு என் மாமன் என வார்த்தைக்கு வார்த்தை ஆத்மார்த்தமாக கூறினான்.
ஆம் ருத்ரனுக்கு சத்ய தேவ் என்றால் உயிர்! ஏன் என தெரியாது. சத்ய தேவை பிடிக்கும். காரணம் இல்லை முருகனுக்கு வேல் போல.. ஆனால் இங்கே சக்திக்கு ருத்ரன். துணை..
அண்ணா இன்னிக்கி பாஸ் செம்மயா இருக்காரு! என பறக்கும் முத்தத்தை கொடுத்தாள். யுவதி!
மிதுன் உதடுகள் பிதுங்கி போனது. கஷ்ட பட்டு கண்டெண்ட் கண்டு பிடிச்சு ஒரு ரெடி பண்ணேன். அய்யோ என நொந்து கொண்டான்.
என்ன ப்ரோ இன்னும் பயிற்சி வேணுமா! என நிவாஸ் கேட்க..
அட போடா! இன்னிக்கு twin பேபில ஒருத்திய நிஜமாவே உஷார் பண்ண பார்த்தேன். நான் எவனி நீ யுவதி அப்டின்னு நினைச்சேன் அதுக்குள்ள இந்த சைத்தான் காரியத்தை கெடுத்திட்டு போயிட்டான். இவனை எல்லாம் இந்த கடவுள் எதுக்கு படைச்சாரு?
நிவாஸ் சிரித்து கொண்டே அதை நீங்க இன்பா மாமா கிட்ட தான் கேட்கணும்!
அய்யோ வேணாம் பா சாமி! அவரு இவனுக்கு மேலே இருப்பாரு! அந்த வீட்ல எல்லாமே கருப்பா இருந்தாலும் வைரம் மாதிரி ரிதம் அண்ட் விவி பேபி இருக்காங்க.. என சொல்ல..
அந்த நேரம் ரிதம் அழைத்தாள்.
ஹான் சொல்லு டி!.. என மிதுன் வர..
உடனே மகி கோபத்துடன் இனி டி இல்ல! அண்ணி சொல்லு மரியாதை கொடுக்கணும்! என கூறினார்.
மா அவள் என்னை விட சின்னவ! என நொந்து கொண்டே கூற..
அவள் உனக்கு அண்ணி அவ்ளோ தான்! மரியாதை கொடு! என விடாப்பிடியாக சொல்லி விட்டாள்.
மிதுன் கடுப்புடன் சொல்லுங்க அண்ணி! என அழைக்க.. .
ரிதம் அவனிடம் சிரித்து கொண்டே என்னோட லண்டன் பிரெண்ட்ஸ் வீனா, ஆக்னஸ் ரெண்டு பேரும் ஏர்போர்ட்ல இருக்காங்க! நீ போய் அவங்களை பிக்கப் பண்ணிட்டு வா மித்து..
அண்ணி உங்களை விட சின்ன பொண்ணா பெரியவங்களா? என அடுத்த பிளர்ட்டுக்கு தயாரானான். மிதுன்..
டேய் என சூர்யா அதட்ட..
இப்போ என்னத்த தப்பா கேட்டுட்டன்? எதுக்கு என் மேல கோபப்படுறீங்க? தெரிஞ்சுக்க தான் கேட்டேன்! பெரியவங்களா இருந்தா அக்கான்னு கூப்பிடுவேன்! சின்னவங்களா இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி மரியாதையா தங்கச்சின்னு கூப்பிடுவேன்! என்று மிதுன் மிகவும் பவ்யமாக நடித்தான்.
தெரியுதுடா உன்ன பத்தி எனக்கு தெரியாதா? எதுக்கும் லாயக்கில்லை! தண்டம் என்று சூர்யா மீண்டும் திட்டினார்.
எனங்க போதும் அவன் போயிட்டு வரட்டும் என் புள்ளையை கரிச்சு கொட்டவே உங்களுக்கு வேலையே போச்சு! நீ போயிட்டு வாடா கண்ணா என்று மகி சொல்ல..
ஆமாண்டி இன்னும் அவனை நல்லா உசுப்பேத்தி அனுப்பிவிடு! என்ன பண்ணிட்டு வரப்போறானு தெரியல! ஒவ்வொரு நிமிஷமும் இவனை நினைச்சா எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு என்று சூர்யா சொல்ல..
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மிதுன் புன்னகை ஆக்டிங் மூடுக்கு ஆன் ஆகி கிளம்பி விட்டான்.
அக்னஸ் மற்றும் வீணா இருவரும் ரிதம் இன் திருமணத்திற்கு வந்து இறங்கினார்கள். ஜ லண்டன் ஃபாரின் பெண்கள் கிட்டத்தட்ட ரிதம் கேரக்டரை போல உரித்து வைத்திருந்தார்கள். ஆனால் ஆங்கில பெண்மணிகள், இளவட்டம் தான். இங்கு எப்படி உடை அணிவார்களோ! அதே போல் ரிதம் சொல்லிக் கொடுத்திருக்க..
அதுபோல உடை, தோற்றம் என கொஞ்சம் இந்தியாவிற்கு ஏற்றது போல மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
ரிதமை பார்த்ததும் ஓடி சென்று அவளை அணைத்துக் கொண்டு தூக்கியே விட்டார்கள்.
சரி சரி வாங்க இதுதான் என்னோட பெட்டர் ஆப் என்று ரிதம் இருவருக்கும் அறிமுகம் செய்துவிட்டாள்.
அப்படியா சரி எல்லாரையும் இண்டர்வியூ கொடுத்துட்டியா என்று ஆட்னஸ் மற்றும் வீணா இருவரும் ஆவலாக தேட..
ரிதம் தீவிர முகத்துடன் எல்லாரையும் கண்டிப்பா கொடுக்கப் போறேன் என்று இரு அர்த்தத்தில் கூறினாள்.
சீக்கிரம் டி! என தோழிகள் அவசரப்படுத்த ரிதம் தன் தாத்தாவை காட்டி இதுதான் என்னோட தாத்தா என்னோட பெஸ்ட் லக்கி சாம் இவங்கதான்! என்று அறிமுகம் செய்து வைக்க, பெண்கள் இருவரும் தாத்தாவுடன் பாச மழை பொழிந்து தள்ளினார்கள்.
அதன் பின் மருதாணி வைக்கும் நிகழ்வு நடக்க அனைவரும் கை ஒரு சிலர் கையில் மருதாணி கோன்ல சில டிசைனை போட்டுக்கொள்ள..
இன்னும் சிலர் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டார்கள் வட்ட வட்டமாக பரத நாட்டியத்திற்கு வைப்பது போல கைகளில் வைத்துக்கொள்ள,
அதை முதலில் அறிமுகம் அதை முதலில் ஆரம்பித்தது மகி தான்.
மகி அதுபோல ஒரு கைக்கு வைத்துக்கொள்ள உடனே தூரிகா சிவன்யா, பவன்யா, என அனைவரும் வைத்துக்கொள்ள
ரிதம் வேகமாக மாமி எனக்கும் இதுபோல வச்சு விடுங்க என்று கேட்க..
ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
ஹே ரிதம் இது உன்னோட மதர் இன் லா வா? ரொம்ப அழகா இருக்காங்க என்று கூற
மகி ஆங்கிலத்தில் மிகவும் நேர்த்தியாக நான் இவளோட மதர் இன் லா இல்ல! என்னோட அக்கா தான் அதோ அவங்க என்று தேஜுவை காட்ட
நீங்கள் இரண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கீங்க ஆனா உங்களுக்கு வயசு 30 பிளஸ்ன்னு சொல்லலாம் என்று வீணா ஐசாக வைக்க
இவர் நம்மள மாதிரியே இருக்காளே என்று மிதுன் ஆக்டிவேஷன் மோடுக்கு தள்ளப்பட்டான். உடனே அவன் அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்க ..
ரிதமோ டேய் ஓவரா ட்ரை பண்ணாத அவளுக்கு நாலு பாய் ஃப்ரெண்ட்ஸ் லண்டன்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்! கொஞ்சம் ஒத்தி வைடா! நீ எப்போடா மெச்சூரிட்டியாக போற? உன் கூட இருக்கிற எல்லாருக்கும் கல்யாணம் ஆகிட்டு இருக்கு! நீ மட்டும் தான் இப்படியே இருக்க! என்று அவள் சொல்ல
என்னடி என்ன புத்தி காட்டுறியா? இதுக்காகவே சூப்பர் பிகரா கல்யாணம் பண்ணல! என் பெயரையே நான் மாத்திக்கிறேன்! என்று மிதுன் கூறினான்.
ரிதம் சிரித்துக்கொண்டே இங்க வரும்போது என்ன சொன்ன? டுவின்சில ஒருத்திய பிக்கப் பண்றேன்னு சொன்ன? அதுக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒவ்வொருத்தரா சொன்ன? உன்னுடைய லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு! ஆனால் பெற்பார்ம் தான் ஒன்னும் இல்ல என உதட்டை பிதுக்கினாள்.
மித்துன்! அவளிடம் கோபத்துடன் பேச வர..
அதற்குள் அங்கே சூர்யா இருப்பதை பார்த்ததும் பாம்பி கொண்டு சென்று விட்டான்.
சத்ய தேவ் பின்னால் ஹரிணி சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவளை ஒரு குழந்தை போல சத்திய தேவ் பார்த்துக் கொண்டிருந்தான்
யார் அவங்க? அவங்க ரெண்டு பேரும் யூனிக்கா இருக்காங்களே? என்ற ஆக்னஸ் கேட்க
அதுவா? அது எங்க அண்ணா! சத்திய தேவ்..
அப்போ பக்கத்துல இருக்குற பொண்ணு? என்று ஆக்னஸ் கேட்க
அது எங்க அண்ணி ஹரிணி போலீசா இருக்காங்க! எங்க அண்ணா ரிப்போர்ட்டர் என்று தூரிகா பெருமையாக கூற..
அப்படியா உங்க அண்ணா! செம்ம இருக்கான் சூப்பரா இருக்கானே! என்று ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் சத்ய தேவை ஆவென பார்த்துக் கொண்டிருக்க..
அப்படியே இரவு உணவு ஆட்டம் பாட்டம் என அனைவரும் தூங்க செல்ல மணி 12-ஐ தட்டி இருந்தது.
அடுத்த நாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ரிதம் மற்றும் நிதின் பிரகாஷ் இருவருக்கும் திருமணம் என்று இருக்க..
ரிதம் தன்னுடைய அறையில் ஆக்னஸ் மற்றும் வீணா இருவருடனும் படுத்துக் கொண்டாள்.
விவேகா அவளை அவ்வப்போது என்று செக் செய்துவிட்டுப் போக..
யாருடி அந்த பியூட்டி? உன்ன மாதிரியே இருக்காங்க! நீ மட்டுமா? இல்ல உனக்கு அக்கா யாராவது இருக்காங்களா? என்று ஆக்னஸ் கேட்க..
ஏன் அது எங்க அம்மாடி! ராட்சசி! அவ பேரு விவேகா என்று ரிதம் கூற..
சான்ஸ்லஸ் ரித்தம்! உங்க அம்மா செம பியூட்டியா இருக்காங்கடி! என்று சொல்ல
இப்ப அதுவா முக்கியம்?! என்னை எப்படி கண்காணித்து போகுது பாரு என்னோட மம்மி! என ரிதம் கூறினாள்.
அது கரெக்ட் தான் கண்காணிக்க தான் செய்வாங்க இன்று வீணா கூற…
அடியே வீணா போனவளே என்று ஆங்கிலத்தில் தீட்டினாள். ரிதம்.
சரி சரி சும்மா சொன்னேன் டி என்று ஆக்னஸ் வீணா இருவரும் சிரிக்க..
ரிதமின் முகம் வாடிப்போனது.
இப்போ என்ன ஆச்சு எதுக்கு முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க..
எனக்கு கொஞ்சம் படபடப்பா இருக்கு நாளைக்கு எதுவும் தப்பா நடக்காதே! என்று ரிதம் கேட்க..
ஆக்னஸ் மற்றும் வீணா உறுதியான முகபாவத்துடன், நீ கவலையே படாத! எல்லா பிளானையும் பக்காவா போட்டு வச்சிருக்கோம்! நாளைக்கு நீ நினக்கிறது தான் நடக்கும்! உன்னோட ப்ரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்? அவனாவே வந்து உன்ன கல்யாணம் பண்ணிப்பான்! நீ வேணா பாரேன்? எல்லாம் ஏற்படும் நாங்க பண்ணிட்டோம்! என்று ஆக்னஸ் கூறினாள்.
அப்படியா நிஜம் தானே உன்னை நம்பி தான் வீணா இருக்கேன்.
நீ வீணா போக மாட்ட ரிதம் என்று வீணா கூறினாள்.
சரி தூங்கலாமா என்று அவர்கள் அனைவரும் படத்துக் கொள்ள.
வீனா ஆக்னேஸ் கிட்ட ஹே ஆமா எந்த பிளான பத்தி சொல்லிட்டு இருக்க? நாம தான் எதுவுமே போடலையே! அவளுக்கு எதுக்கு இப்படி பொய்யா நம்பிக்கை கொடுத்த என்று கேட்க..
ஆக்னஸ் தீவிர முகத்துடன் நான் ஒரு பிளான் போட்டு வச்சிருக்கேன். அதை ரிதமே வாயை திறந்து சொல்ல போறா! சொல்லும்போது என்ன பிரச்சனையும் முடிஞ்சிடும் அவ லவ்வ எக்ஸ்ப்ரஸ் பண்ணிட்டு வா! லவ் சக்ஸஸ் ஆயிடும்! என்று கூறினாள்.
அப்போ அந்த மினிஸ்டர்? அவளை நினைச்சா பயமா இருக்கு! டெரர் பீசா இருக்கான். யாரை பார்த்தாலும் முறைக்கிறான்! என்று வீணா பயந்து கொண்டே சொல்ல..
அதெல்லாம் பெரிய மேட்டர் இல்லடி நம்ம பாத்துக்கலாம் என்று ஆக்னஸ் தைரியம் அளித்தாள்.அனைவரும் தூங்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சரியாக மூன்று மணிக்கு ரிதம் எழுப்பப்பட்டு அவளுக்கு புடவை கொடுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மணமேடை தயார் செய்யப்பட்டு , அங்கு இரண்டு குருக்கள் அமர்ந்து திருமண சாங்கியம் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்கள்.
ரிதம் கண்ணையே முளிக்க முடியவில்லை. இது இப்பதான் பத்து ஆகுது. என்னை எதுக்கு எடுப்பீங்க? என்று சொல்ல..
விவேகா அவளை முறைத்து விட்டு புடவை கொடுத்து சென்றுவிட்டார்.
சிவன்யா, இதழ் , பவன்யா என அனைவரும் வர..
ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் கட்டிப்பிடித்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ரிதம் பாவமாக அவர்களைப் பார்க்க வீனா குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.
இதுங்கள நம்பி நான் கல்யாணத்தை நிறுத்துற பிளான சொல்லி வச்சிருக்கேனே! ஆனா இதுக குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கே!!என்று ரிதம் உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.
அந்த நேரம்தான் நிலா வந்து இறங்கினாள். நிலவைப் போலவே அழகாக அமைதியாக பவ்யமாக வந்து சேர்ந்தாள்.
அனைத்து உறவினர்களும் ஆவலுடன் திருமணத்திற்கு தயாராகி அமர்ந்திருந்தார்கள்.
நித்தின் பிரகாஷ் அவர்களுடைய சடங்கு சம்பிரதாயத்தின் படி தலைப்பாகை அணிந்து நெற்றியில் தங்கப்பட்ட கட்டிக்கொண்டு முகத்தில் ஒரு இடத்தில் திருஷ்டி பொட்டுடன், நெற்றியில் சந்தனம் கழுத்தில் தங்க செயின் ஒரு திருமணத்திற்கு வேஷ்டி சட்டை அதற்கு சம்பங்கி பூ மாலை என கம்பீரமாக இருந்தான்.
அவ்வளவு அழகாக இருந்தான்.
உதயன் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தான். கூடவே இனியா மற்றும் இதயன் தாரா மொத்த குடும்பமும் வந்திருக்க.. கலைவாணி ஒரு எட்டு பார்க்க..
இனியா ஓடி சென்று தன் அம்மாமாவை கட்டிக்கொண்டாள். அதன் பின் இருவரும் அவர்கள் குடும்பத்துடன் ஐக்கியமாகி விட்டார்கள்.
தாரா நேராக எஸ்பிஆர் மற்றும் குரு பிரகாஷ் இருவருடனும் சேர்ந்து கொண்டார்.நிகழ்வுகள் அடுத்தடுத்து என்ன தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க..
நிலா ஒரு சிம்பிளான காட்டன் புடவையில் ரிதம பார்க்கச் சென்றாள்.
அண்ணி என்று அழைக்க அய்யோ பத்தாதுக்கு இவ வேற என்ன அண்ணி என்று கூப்பிட.. ஒவ்வொரு நிமிஷமும் திக்கு திக்கு என எச்சிலை கஷ்டப்பட்டு விழுங்கினாள்.ரிதம்..
அவள் கண்களில் நீர் கோர்த்துக் கண்டது. எதுக்கும் ஒரு தடவ அவன் கிட்ட பேசிட்டு வந்துடலாமா? என்று உள்ளுக்குள் மனம் சொல்ல..
ரிதம் இன்ப ராகவன் நீ? நீயா? நீயா போய் அவன்கிட்ட கெஞ்ச போறியா? நாய் மாதிரி! என்னை கல்யாணம் பண்ணிக்கோ! என்ற நிக்க போறியா? அந்த அளவுக்கு ரிதம் இன்ப ராகவன் கேவலமா போயிட்டாளா? என்றும் முன்னாடி வந்து அவளுடைய கர்வம் நின்று கொண்டிருக்க..
அவள் உதடுகள் துடிக்க சரி என்னோட விதி எப்படி இருக்கும் அப்படியே நடக்கட்டும். யாரும் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்! நடக்கிறது நடக்கட்டும்! பாத்துக்கலாம்! நானா? அந்த விதியா? என்று நினைத்தாள்.
ஆனால் சத்தி என்று ஒன்று இருக்கிறதே சரியா இந்த சதியை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே! ஆமா ரொம்ப நாளா இந்த சதி வரவே இல்லையே எப்போ வரும்? சரி சதி அப்படி என்றால் என்ன? கூடிய சீக்கிரம் கண்டிப்பா உங்களுக்கு தெரிய வரும். இனிமே எல்லாம் முடிச்சுகளும் கொஞ்சம் கொஞ்சமா அவில போகுது.
சரி ரிதமா? விதியா? சதியா? மூணுல இப்போதைக்கு ரிதமையும் விதியையும் பார்க்கலாம் அதுக்கப்புறம் சரியா பார்போம்!
மஞ்சள் அரிசி கலந்து அர்ச்சதியுடன் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
ஹரிணி மற்றும் சத்தியத்தை இருவரும் மணமேடைக்கு முன்னால் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மகி , தேஜு, சிவன்யா பவன்யா, தூரிகா கவ்யா விவேகா என அனைவரும் மணமேடையில் ரிதம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
நிலா நேராகச் சென்று ஹரிணியின் அருகில் அமர்ந்து கொண்டாள் ருத்ரன் சத்யதேவ் பக்கம் அமர்ந்திருந்தான்.
ரிதம் சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்தாள் அவசர அவசரமாக ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் ஓடி வந்தார்கள்.
அங்கு அமர்ந்திருக்கும் ரிதமை தவிப்புடன் பார்க்க..
அதற்குள் தாரா அர்ச்சதை மற்றும் மாங்கல்யதட்டை அனைவரிடமும் ஆசீர்வாதம் செய்து வந்து குருக்களிடம் நீட்ட..
சரி கடவுள் சாட்சியா அவங்க அவங்க குல தெய்வத்தை வேண்டிக்கோங்க! பொண்ணோட அம்மா அப்பா, பையனோட அம்மா அப்பா பக்கத்துல வாங்கோ! என்று சொல்ல..
அதே போல் அனைவரும் வந்தார்கள் ரிதம் தவிப்புடன் சத்ய தேவை பார்க்க..
அவன் கல் போல அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை
நித்தின் பிரகாஷ் கைகளில் தாலி கொடுக்கப்பட்டது .
இந்த பொண்ண உங்களுடைய சரிபாதியா ஏத்துக்க சம்மதமா என்று குருக்கள் கேட்க..
சம்மதம் என்று நித்தின் கூற..
மாப்பிள்ளையை காலம் முழுக்க பத்திரமா உன் கையில உன்னோட துணையில பாத்துக்க கஷ்ட சுக துக்கங்களில் பங்கெடுத்து இருவரும் கவிழாத ஓடம் போல செல்ல சம்மதம் தானே என்று கேட்க
ரிதம் கண்களில் நீர் கோர்க்க சம்மதம் என்று கூறினாள். சரி கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று குருக்கள் சொல்ல.. அனைவரும் அர்ச்சகையை எடுத்துக் கொண்டார்கள்.
நித்தின் ரிதம் கழுத்தில் இரண்டு முடிச்சுகளைப் போட, மூன்றாவது முடிச்சாக அதை கனி போட்டு விட்டாள். அனைவரும் நித்தின் பிரகாஷ் மற்றும் ரிதமின் திருமணத்தை கண்குளிர பார்க்க
ரிதம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்களில் நீருடன் சத்யதேவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவ்வளவுதான் இப்போ இந்த பொண்ணு சரி பாதி ஆகிட்டா! இனி நீங்க கணவன் மனைவி இது ஜன்ம பந்தம். குங்குமம் வச்சுக்கோங்க! என்று குங்குமம் வச்சு விடு என்று சொல்ல
நித்தின் பிரகாஷ் அவளின் கழுத்தைச் சுற்றி குங்குமம் வைத்தான்.
சரி மாலை மாத்திக்கோங்க என்று சொல்ல
ரிதம் அவளின் கழுத்தில் இருக்கும் மாலையை கழட்டி கையில் வைத்துக்கொள்ள..
நித்தின் பிரகாஷ் அதேபோல் கழட்டி ரிதமை பார்த்தான்.
அவளும் பார்த்தாள்.
முதல்ல மாப்ள பொண்ணு கழுத்துல மாலை போடுங்கோ! என்று சொல்ல மாலையை ரிதம் கழுத்துக்கு போட அருகில் வந்தான்.
ரிதம் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
என்னாச்சு எதுக்கு அழர என்று கத்தினான்.நித்தின் பிரகாஷ் என்னாச்சு இப்போ அலற? என்று கத்தினாள்.
வேணாம் நீ போடாத பக்கத்துல வராத என்று ரிதம் கண்ணீருடன் பக்கத்துல வராதே! வராதே! என சொல்ல
சிவன்யா பெருமூச்சுடன் என்ன ரிதம் விளையாடிட்டு இருக்கியா? இன்னும் நீ அலங்காரமே பண்ணிக்கலடி! எந்த நகையை போட வந்தாலும் தள்ளிவிடுற! நான் ஒன்னும் தாலி கட்ட வரல! நகைய தான் போட வந்தேன். தாலிய என் அண்ணன் தான் கட்டுவான். நீ இன்னும் தூக்கத்தில் தான் சுத்திட்டு இருக்கியா? இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கல்யாணம்!!கொஞ்சம் கண்ணை முழிச்சு பாருடி என்று சிவன்யா இரு தோளையும் குலுக்கி அவளின் முகத்தை தட்டினாள்.
ரிதம் கண்ணீர் வழிய தன் கழுத்தை பார்த்தாள்.
தாலியா? உன்னை இன்னும் உனக்கு கல்யாணமே ஆகல இப்பதான் மேக்கப் போட ஸ்டார்ட் பண்ணிருக்கோம். இனிமேதான் கல்யாணமே! என்று சிவன்யா சொல்ல
என்ன? இன்னும் கல்யாணம் ஆகலையா ? என்று ரிதம் அதிர்ச்சியுடன் சிவன்யாவை பார்த்தாள்.
தூரிகா ஆச்சரியமாக அண்ணி அப்போ கனவிலேயே எங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிட்டியா? என்று கேட்க
ரிதம் பெருமூச்சுடன் அங்கும் இங்கும் நடந்தாள்.
தன் கழுத்தைப் பார்த்தாள். மணியை பார்த்தாள். அப்போ மணி இப்பதான் மூணு ஆகுதா? நாலரைக்கு தான் முகூர்த்தமே ஆரம்பிக்க போகுதா! சரியா போச்சு போ! இதெல்லாம் கனவா? கனவே இவ்ளோ கொடூரமா இருக்கே! ஆண்டவா!!!.. என்று ரிதம் நின்று கொண்டிருக்க…
ஆண்டவர் தான்!
ஹப்பா நாளைக்கு நிஜமா கல்யாணம் தான்!
தொடரும்..
EPISODE 94
ரிதம் பெரும் யோசனையுடன் அமர்ந்திருக்க அவளை சுற்றி இரண்டு ஒப்பனையாளர்கள் அழகு படுத்தி கொண்டிருக்க, சிவன்யா, இதழ், பவன்யா, யவனிகா, யுவதிகா, இன்னும் ஏய் சண்டைக்காரா ஜோடிகளின் பெண் வாரிசுகள் அங்கே கூடி இருக்க..
ரொம்ப மேக் அப் வேணாம்! லைட் சேட் கொடுங்க என் அண்ணி அழகு தான் என தூரிக்கா சொல்ல..
அங்கே தூங்கி கொண்டிருக்கும் இரண்டு கும்பகர்ணிகளையும் விக்கித்து பார்த்தாள் ரிதம்.
அக்கா என அழைத்து கொண்டே இனியா வந்தாள்.
ரிதம் அவளின் மரியாதையில் திகைத்து பார்க்க..
என்ன தான் இருந்தாலும் நீங்க என் மாவய்யாவொட பெல்லி கூத்துறு அதனால் மரியாதை! என இனியா கண் சிமிட்டி பார்த்தாள்.
அதே நேரம் ஆர்பாட்டம் இல்லாத அழகியாக உள்ளே நுழைந்தாள். நிலா!
அண்ணி என அழைத்தாள்.
ரித்தமுக்கு திக் திக் நிமிடங்களாக சென்றது. அய்யோ கடவுள் ஆண்டவரே இப்போ கனவில் இதே மாதிரி தானே இந்த நிலா அண்ணின்னு கூப்பிட்டா? என எட்சிழை கஷ்ட பட்டு விழுங்கி கொண்டே பார்த்தாள்.
தூரிகா தன் குட்டி தங்கையை அருகில் அமர்த்தி கொள்ள..
ஹெய் இப்போ எதுக்கு டி! எதோ மியூசியத்தில் இருக்கும் எக்மிசன் எக்ஸ்போ மாதிரி என்னை பாத்திட்டு இருக்கீங்க? என ரிதம் கேட்க..
இங்கே நம்ம கேங்கில் முதன் முதலில் மிசஸ் ஆக போறது நீ தான்! அதான் அந்த அனுபவத்தை பத்தி நேரடியாக பார்க்க தான் என தோலை குலுக்கினாள். சிவன்யா..
சங்கு தான்! என வியர்க்க விறுவிறுக்க இருந்தாள். ரிதம்.
தமயனுக்கு மனைவி ஆக போகும் ரிதமை பார்த்து பார்த்து தன் அண்ணனுக்கு பொருத்தமாக ஒப்பனை செய்ய கட்டளை இட்டு கொண்டிருந்தார்கள்.
ஆமா இவ்வளவு நேரம் எங்கே இருந்த மச்சி? என இனியா நிலாவை பார்த்து கேட்க..
நான் ஹரிணி அண்ணி கூட இருந்தேன். என நிலா கூறினாள்.
உடனே பவன்யா மெதுவான குரலில் இதழ் காதுகளில் எதோ சொல்ல..
அதற்கு இதழ் சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்க்க..
குக்கு என்ன விசயம் என சிவன்யா கேட்க.. ஒன்னும் இல்ல கா!..
இல்ல சொல்லு! என்ன சொன்னா? அவள் என சிவன்யா மீண்டும் கேட்க..
அது என இதழ் சிரித்து கொண்டே சக்தி அண்ணா ஒரு நிமிசம் கூட அன்னிய விட்டு பிரியுறதே இல்ல! அதை விட ஹரிணி அண்ணி அண்ணா கைய பிடிச்சிட்டு தான் எல்லா இடத்துக்கும் போறாங்க! இப்போவே இப்படி இருக்காங்களே! கல்யாணம் ஆகிடுச்சுன்னா எப்டி இருக்கும்? என தங்கைகள் களுக் களுக் என சிரிக்க..
ரிதமின் இதயங்கள் ரிதமிக் இல்லாமல் துடித்தது. ஒரு வழியாக அனைத்தும் முடிய ஹான் ரிதம் உனக்குள் இப்படி ஒருத்தியா? என் கண்ணையே என்னால் நம்ப முடியல டி! என சிவன்யா ஆவென பார்த்து கொண்டிருக்க..
நேரம் ஆகிடுச்சு பிள்ளைகளா? இன்னும் என்ன பண்றீங்க? என கேட்டு கொண்டே மகி மற்றும் தாரா இருவரும் வந்தார்கள்.
ரிதம் எழுந்து நிற்க.. சிவன்யா சிரித்து கொண்டே மகி சித்தி எங்க அண்ணி ரெடி என சொல்ல அந்த குமரி பெண்களுக்கு நடுவில் தங்க பதுமையாக தனித்து தெரிந்தாள். ரிதம்.
அவளை மணகோலத்தில் கண்டதும் மகியின் கண்கள் கலங்க! தங்க புள்ளை என் ரிதம் குட்டி என அழைக்க.. அதே நேரம் சுபா மற்றும் வசுமதி, கங்கா ரிதமை பார்க்க வந்தார்கள்.
ரிதம் நேராக சென்று மகியின் கால்களில் விழ மகி கண்கள் கலங்க என்ன பொண்ணு எழுந்திரு! என தோல் தொட்டு தூக்க.. ரிதம் மனதில் ஆத்மார்த்தமாக மாமி இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு ஆசிர்வாதம் பண்ணுங்க என நினைத்து கொண்டே ஆசிர்வாதம் பண்ணுங்க மாமி என மஹியின் முகம் பார்க்க ..
உடனே சிவன்யா ஹே ரித்து நீ 24 மணி நேரமும் எங்க வீட்டில் தான் இருப்ப அதே போல தான் இப்போது இருக்க போற! இதுக்கு ஒரு ஜாயினிங் லெட்டர் மாதிரி இந்த கல்யாணம் அவ்ளோ தான் உன்னை பார்த்தால் ரிதம் மாதிரி தெரியல! வேற ஒரு பொண்ணு மாதிரி தெரியுது! என கூறினாள்.
ஹே கிண்டல் பண்ணாதீங்க! என மகி அனைவரையும் கடிந்து கொண்டு, சரி சரி வாங்க போலாம் என திரும்ப அங்கே சுபா, கங்கா, வசுமதி இருக்க ரிதம் ஓடி சென்று தன் தாய் தந்தை வழி பாட்டியை கட்டி கொண்டாள்.
என் தங்கம் எல்லாமே நல்லதா நடக்கும் சின்ன குட்டி என கங்கா சொல்ல… வசுமதி அவளின் கன்னத்தில் முத்தமிட்டார்.
ஹே கேர்ள்ஸ் என் பேத்தியை கூட்டிட்டு வாங்க என சொல்ல.. அந்த நேரம் டிரான் கேமராக்கள் வட்டமிட வருண் மற்றும் அதிதி, விஷ்வா என ரிதம் இருக்கும் பக்கம் வந்தார்கள். அவளின் இரு பக்கமும் லைட்டிங் பிடித்து வர பட்டது. கீழே மங்கள வாத்தியம் இசைக்க ஆரம்பித்தது.
வருண் தன் தங்கை மகளை பார்த்து கொண்டே கங்காவை பார்க்க அவரோ கண் கலங்கிய கண்களுடன் விவேகா மாதிரி இருக்கு! என கூற
ரிதம் பெண்களுக்கே உரிய நாணத்துடன் தலை குனிந்து வந்தாள். வருண் அவளின் கழுத்தில் மாலையை போட்டு கண் கலங்க..
மாமாச்சி! பிளீஸ் எதுக்கு அழரீங்க! என ரிதம் சொல்ல..
என் சின்ன குட்டி கல்யாண பண்ற அளவுக்கு பெரிய பொண்ணு ஆகிட்டா!.
சின்ன குட்டி!. சின்ன குட்டி! ஆமா இது ஒன்னு தான் குறைச்சல்! அட போங்க மாமாச்சீ என நினைத்தவள். மாமச்சி ஆசிர்வாதம் பண்ணுங்க! என கீழே விழ செல்ல..
வேணாம்! வேணாம்! தங்கம் என வருண் தடுக்க .
அதிதி அவளிடம் நீ பசி தாங்க மாட்டியே டி! இந்தா கொஞ்சம் பூஸ்ட் குடிச்சிட்டு போலாம் என அதிதி ஊட்ட..
உடனே வசுமதி கங்காவிடம் என்னைக்கும் நீ கொடுத்த வச்சவ கங்கா! உனக்கு தங்க மருமக! என சொல்ல…
அந்த நேரம் விவேகா வர.. சுபா சிரித்து கொண்டே மா! போதும்! விவேகா வரா! என சொல்ல.. .
சரி வா சுபா நம்ம போலாம் என வசுமதி கிளம்ப.. வசு மா போகாதீங்க! இங்கேயே என் கூடவே இருங்க! என கையை பிடித்து கொண்டாள். ரிதம்.
நீ தைரியமா இரு பேபி என்ன பண்ணிட போறா? அவளோட பருப்பு இங்கே என் கிட்ட வேகாது. உன் அப்பா ஒரு வேஸ்ட் பெல்லோ! எதுவா இருந்தாலும் என் கிட்ட ஒரு சிக்னல் கொடு! அவளை வெளுத்து போடுறேன். என கூற..
க்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல என விவேகா நினைத்து கொண்டாள். ரிதம் ஒரு வித பயத்துடன் தன் அம்மாவை பார்த்தாள். ஒரு வேளை நான் பேபி பேச்சை கேட்டு இருக்கணுமோ என உள்ளுக்குள் அசரீர் ஆனால் என்ன பண்ண முடியும். ஒன்னும் பண்ண முடியாது. வா போலாம் என்ன நடக்குமோ கர்த்தரே! மாஷா அல்லா! சிவ சிவா! பெருமாளே! புத்தா! ஹான் வள்ளலார்! முருகா முருகா என மொத்த கடவுளையும் வேண்டி கொண்டே நடந்தாள். ரிதம்.
ஒரு பக்கம் இன்பா எல்லாமே சரியாக இருக்கிறதா? என பார்த்து கொண்டிருக்க..அருகில் சூர்யா இருந்தார். இன்னொரு பக்கம் எதிர் திசையில் சூர்ய பிரகாஷ், குரு பிரகாஷ் இருவரும் அவர்களின் உறவினர்கள் என பார்த்து பேசி வரவேற்றார்கள்.
மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோ என குருக்கள் சொல்ல..
மிதுன் தேவ், நிவாஸ், வெற்றி, திவான் ( குரு பையன்) , இதயன் என அனைவரும் வேஷ்டி சட்டையில் கம்பீர அழகுடன் வசீகரிக்க அதற்கு நடுவில் தலை பாகையுடன் வந்தான்.
ச்ச மினிஸ்டர் உண்மையாவே அழகா இருக்காரே! என அங்கிருக்கும் அனைத்து கண்களும் அவன் மீது தான் இருந்தது.
எந்த ஒரு சலனமும் இல்லாமல் மணமேடை பக்கம் வந்தான். நிதின் பிரகாஷ்..
மாப்ளையின் தாய் மாமன் மாலை போடுங்க! என சொல்ல..
உதயன் மற்றும் தாரா இருவரும் மாலை போட்டு அனுப்பி வைத்தனர்
நிதின் பிரகாஷ் கம்பீரம் குறையாமல் வந்து அமர்ந்தான்.
குருக்கள் சொன்ன மந்திரத்தை அமைதியாக செவ்வென சொல்லி கொண்டு இருந்தான். அவனை சுற்றி தம்பிகள் அணிவகுப்புடன் நிற்க.. அந்த காட்சி எழில் ஓவியம் போல இருந்தது.
பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ என குருக்கள் சொல்ல..
சாமரம் தான் வீச வில்லை தேவ லோக ரம்பை, மேனகை, பூலோக தேவ சேனை, கீர்த்தி சுரேஷ், ஶ்ரீ லீலாவுக்கே டப் கொடுத்து கொண்டே வந்தாள். ரிதம்.
அவளை சுற்றி மொத்த அழகும் படையெடுக்க அந்த கார் முகில் வண்ணன் கல்கி அவதாரம் எடுத்து இருந்தால் கண்டிப்பாக மங்கை அவளை மணந்து இருப்பான். அந்த அளவுக்கு கொள்ளை கொள்ள வந்தாள்.
ஹே இன்பா அங்கே பாரு! என சூர்யா கண் காட்ட.. தன் காதலில் பிறந்தவளை பார்த்தவர் கண்கள் தன்னிச்சையாக தன் இணையை தேடியது. விவேகா கண்கள் கோர்க்க அன்னைக்கே உரிய தவிப்புடன் நின்றாள்.
ரிதம் நேராக தன் தாத்தா அருகில் சென்று ஆசிர்வாதம் வாங்கினாள். இது நிஜமா ரிதமா? அவள் தானா? இத்தனை அழகா? இத்தனை நாணமா? கல்யாண மேடைக்கே இத்தனை வெட்கம்! சோ பொண்ணு மாதிரி மாற ஆரம்பித்து விட்டாள். என்ற சலசலப்பு காற்றில் கலந்தது.
ரிதம் அப்படியே நேராக தன் தந்தையை பார்க்க இன்பா எந்த வெளிப்பாட்டையும் முகத்தில் காட்டாமல் அவளை மண மேடைக்கு அனுப்பி வைத்தார்.
நிலா கண்ணகுளி ததும்ப அண்ணி அழகா இருக்காங்க என சொல்ல..
சத்ய தேவ் எதையும் கண்டு கொள்ளாமல் போன் நோண்டி கொண்டிருந்தான்.
ரிதம் பார்வை அங்கிருக்கும் அனைவரையும் மீறி சத்ய தேவை பார்க்க..
அவன் தேவ் இல்ல அரக்கன், ராட்சசன், அழுத்த காரன், உயிரை கொள்வதை வுட மனதை கொல்பவன் எமகாதகன். என அர்ச்சித்து கொண்டே அமர்ந்தாள்.
Straight to the point.. அட்சதை தட்டில் மாங்கல்யம் வைத்து அனுப்ப பட பெண் மாப்பிள்ளை க்கு நடுவில் சாங்கியத்திக்காக ஒரு துணி கட்டப்பட்டு இருந்தது.
ரிதம் நிதின் கிட்ட பேசலாம் என ஓர கண்ணில் பார்க்க நடுவில் திரை சீலை..
என்னமோ எதோ ஒரு சில சாங்கியம் அதை முடித்து விட்டு இப்பொழுது தாலி கட்டும் நேரம் வந்தது.
சத்ய தேவ் எப்பொழுது நிதின் தாலி கட்டுவான் என அட்சதை தூவ கைகளை தூக்க
கெட்டி மேளம் கெட்டி மேளம் என குருக்கள் சொல்லி விட்டு மாப்பிள்ளை கையில் தாலி எடுத்து கொடுக்க இருவருக்கும் இதயம் படபடத்தது.
ரிதம் வேக மூச்சுடன் நிதின் பக்கம் திரும்பி வாய் திறக்க வர அதற்குள் மஞ்சள் கயிற்றை அவன் ரிதம் கழுத்துக்கு கட்ட தூக்கி இருந்தான்.
தாலி தொங்கியது.
Serious mode நிதின் கைகளில் தாலி அந்தரத்தில் தொங்கியது.
நிதின் அவள் கழுத்தில் கட்டாமல் அப்படியே நின்றான். என்ன ஆச்சு? கட்டுங்கோ என குருக்கள் சொல்ல..
ஒக்க நிமிசம் என கை காட்டியவன். மேள சத்தத்தை நிறுத்தும் பொருட்டு கை காட்டினான்.
மினிஸ்டர் கையை தூக்கவும் மொத்த கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட..
அவ்வளவு நேரமும் கண்ணை இறுக்கி மூடி கொண்டிருந்த ரிதம் என்னாச்சு? என திறக்க.. நிதின் தாலி கட்ட வில்லை.
என்ன ஆச்சு? நிதின்? ஏன்ட்ரா இதி? என மொத்த ஹைதராபாத் கூட்டமும் வழக்கமான பாணியில் நிதின் பக்கம் நெருங்க..
நான் ரிதம் கிட்ட பேசணும்! என நிதின் கூறினான்.
சூர்யா, சூர்ய பிரகாஷ், குரு, என அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க
இன்பா மேடை பக்கம் வந்து என்ன ஆச்சு? என்ன பேசணும்! நிதின் விளையாடாதீங்க.. என மாப்பிள்ளை என்னும் மரியாதை கூடவே பதவிக்கு மரியாதை கொடுத்து பேச..
மாமா ஜஸ்ட் முக்கியமா பேசணும்! ரிதம் என நிதின் மீண்டும் சொல்ல..
மிதுன் பதட்டத்துடன் ப்ரோ என்ன இது? அதுவும் இந்த நேரத்தில் எல்லாரும் இங்கே தான் பார்க்கிறார்கள். ரிதம் வயிட் பண்றா! நீங்க எதுவா இருந்தாலும் தாலி கட்டிட்டு பேசுங்க என ரிதமுக்கு நண்பனாக பேசினான்.
ருத்ரன் வேட்டியை வரிந்து கட்டி கொண்டு என்ன பண்றீங்க? என்ன நடக்குது? என அவன் பங்குக்கு வந்தான்.
நிதின் பிரகாஷ் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அவனுடைய கார்ட்சை பார்க்க மொத்த இடமும் சுற்றி வளைக்க பட்டது.
என்ன நிதின் இது? என அனைவரும் கேட்டு கொண்டு முன்னால் வர..
நிதின் கொஞ்சம் கடுமையான குரலில் நான் ரிதம் கிட்ட இப்போ இங்கேயே பேசணும்! சோ அவங்கவங்க அமைதியா வேடிக்கை பாருங்க! இது என் ஆட்சி என் அதிகாரம் என சொல்லி விட்டு ரிதம் பக்கம் திரும்பினான்.
என்ன நிதின்? என்ன பேசணும் என அவள் ஒன்றும் புரியாமல் கேட்க.
இவளோ நாள் எனக்கு தெரியல ரிதம்! நம்ம ரெண்டு பேரும் கல்யானம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன்! ஆனால் என்னால் சந்தோசமான environment அ உனக்கு கிரியேட் பண்ணி கொடுக்க முடியும். உனக்காக எதையும் செய்வேன். ஆனால் என்னால் உனக்கு to be frank intimate-ஆ உன்னை அந்த இடத்தில் வச்சு பார்க்க தோணல.. என சொல்லி முடிக்க..
அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்கியது போல பார்த்து கொண்டிருக்க..
நிதின் மேலும் எனக்கு அது இந்த நிமிசம் தான் புரிஞ்சுது. உன் கிட்ட எனக்கு அந்த ஃபீல் இல்ல! என கூற..
ரிதம் வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.
தேஜு ஆவேசத்துடன் நிதின் அருகில் செல்ல அதற்குள் வசுமதி அவனை பளார் என கன்னத்தில் விட்டார். ஒரு அரை மொத்த கூட்டமும் ஆவென பார்க்க..
நிதின் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நின்றான். மகி நிதின் அருகில் சென்று என்ன டா கண்ணா! என்ன இது? எதுக்கு இப்படி பேசுற? கல்யாணம் ஆனா சரியா போயிடும்! பாரு எவ்ளோ பெரிய விசயத்தை நடு சபையில் வச்சு சொல்லி இருக்க? என துடித்து கொண்டே மகி கேட்க.
மிதுன் ஆவேசத்துடன் என்ன ப்ரோ இது? அப்புறம் எதுக்கு எல்லாத்துக்கும் ஓகே சொன்னீங்க? உங்க விளையாட்டை இத்தோட நிருத்திகொங்க! நீங்க பொய் சொல்றீங்க! என அவன் கைகளை பிடித்து அமர வைக்க வர .
சொல்றத புரிஞ்சுக்க.. என நிதின் பேச..
வசுமதி கோபத்துடன் டேய் என்ன டா? என்ன நினைச்சிட்டு இருக்க? என அடிக்க போக ரவி அவரை தடுத்தார்.
இந்த கல்யாணத்துக்கு எத்தனை கோடி செலவு பண்ணீங்களோ அது மொத்தமும் என உடனே ஆன்லைன் பரிவர்த்தனை செய்து விட்டு நகர்ந்தான்.
நிதின் அனைத்தையும் பொறுத்து கொண்டான். இன்பா ஒரு பக்கம் நிற்க.. விவேகா அதை விட மோசமான மன நிலையில் நின்றார்.
சூர்ய பிரகாஷ் அருகில் வந்து என்ன டா நிதின்? என்ன இது? என தன் மகனை கேள்வி கேட்க .
வசந்தன் தவிப்புடன் நடக்க முடியாமல் அந்த வீல் சேரை தள்ள முடியாமல் நிதின் கண்ணா! என சத்தமாக அழைக்க.
நிதின் அனைவரையும் தள்ளி விட்டு தன் தாத்தாவின் அருகில் சென்று பார்க்க .
ஆதித்யா, வருண், ருத்ரன், விஷ்வா, பரணி, மித்ரன், சரவணன் என அனைவரும் வரிந்து கட்டி கொண்டு நிதின் பக்கம் செல்ல .
தாத்தா உங்க பேரனுக்கு குறை! இதுக்கு மேல நான் என அவன் பேச வர பளார் என அரை..
இந்த அரை!.
இந்த அரை! யாரும் எதிர் பார்க்க வில்லை.
அவள் தான்! அவளே தான்! ஹரிணி!
ஹரிணி! என ராம் மற்றும் கீதா இருவரும் கத்த..
அங்கிருக்கும் காவலர்கள் அனைவரும் இருவரையும் யாரும் நெருங்கா வண்ணம் சுற்றி வளைத்தனர்.
அனைவருக்கும் அதிர்ச்சி அனைவர் பார்வையும் அவர்களின் மேல் இருக்க.. என்ன பண்ணிட்டு இருக்க? என கேட்க ..
யாரும் எதிர் பார்க்கா வண்ணம் அவளின் கழுத்தில் தாலியை கட்டி இருந்தான்.
அங்கிருக்கும் மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் அவர்களை பார்க்க.
ஹரிணி திமிர திமிர கட்டியவன் அவளின் உதட்டில் நச்சென முத்தம் பதித்தான். மகி கண்களில் நீருடன் அப்படியே சத்ய தேவை பார்த்து சரிந்து அமர்ந்தாள்.
ராம், கீதா இருவர்க்கும் பேரதிர்ச்சி! வேகமாக அவர்கள் தடுக்கும் பொருட்டு தவிப்புடன் ஓடி வர..
சிவன்யா, பவன்யா, இதழ், இனியா, இதயன், வெற்றி, நிலா, நிவாஸ், முக்கியமாக மிதுன் தேவ் ஆணி அடிக்கப்பட்டது போல அவர்கள் பார்வை இருக்க..
ருத்ரன் கண்கள் சிவக்க வேகமாக அந்த பாதுகாவலர்களை தள்ளி விட்டு நிதின் மேல் பாய சென்றான்.
வசந்தன் கண்களுக்கு நிதின் இப்பொழுது சூர்ய பிரகாஷ் போல தெரிந்தான். அதே மூர்க்க தனம்! அதிகாரம் அகங்காரம்! இருக்க
ருத்ரனை ஒரே கையில் தடுத்தான். நிதின்.
நல்லாருக்கு ரொம்ப நல்லாருக்கு என் பேத்தி வாழ்க்கையை இப்படி பண்ணீட்டீங்களே என கங்கா சத்தமிட்டு அழ..
ராம் மற்றும் கீதா இருவரும் ஹரிணியின் கழுத்தில் இருக்கும் தாலியை பிடுங்கி எறிய கை வைக்க ..
மாமி! அவள் மினிஸ்டர் பொண்டாட்டி கார்ட்ஸ்! என சத்தமிட குட்டா குட்டானாக அனைவரையும் மொத்த படையும் சுற்றி வளைக்க அதில் சூர்ய பிரகாஷ் கூட அடக்கம்…
கனி என நிதின் அழைக்க அவள் ஓடி வந்து தன் அண்ணாவுக்கு குங்குமம் நீட்ட ஹரிணியின் நெற்றியில் வகட்டில் வைத்து விட்டான். அவள் கண்கள் நீர் வற்றாமல் ஓட…
நிதின் பிரகாஷ்! என சூர்ய பிரகாஷ் கத்த..
டாடி! ஹரிணி என்னை லவ் பண்றா! என உண்மையை சரியாக உடைத்தான் நிதின்..
சத்ய தேவ் மெதுவாக அவர்கள் பக்கம் வந்தான். கார்ட்ஸ் அவனை தடுக்க வர.. ஒரே ஒரு பார்வை அதில் ஆளுமையா? ஆதிக்கமா தெரிய வில்லை காட்ஸ் நடுங்கி கொண்டே நகர்ந்து விட..
நிதின் முன்னால் சத்ய தேவ்.. பெண்கள் அனைவரும் கண்களில் நீருடன் பார்க்க…
எதுக்கு அவனை அடிக்க வந்த? ஏன் அவனை அடிச்ச? இரண்டே கேள்விகள் தான்! சத்ய தேவ் வாயில் இருந்து வந்தது.
ஹரிணி தலை குனிந்து நிற்க..
மாமா இவன் மிரட்டி இருப்பான்! ஹரிணி அக்கா மனசுல நீங்க தான் இருக்கீங்க! இவன் உண்மையாகவே மோசக்காரன் என ருத்ரன் பேச..
பொறு என்பதை போல சைகை செய்தவன். சொல்லு! இவன் சொன்னது பொய்யா இருக்கும் பட்சத்தில் அந்த தாலியை கழட்டி வீசிட்டு வா! என சத்ய தேவ் சொல்ல..
ஹரிணி அழுது கொண்டே நின்றாள்.
ஹே கழட்டி வீசு டி! என கீதா கத்த.. ஹரிணி அதை பிடித்து கொண்டு நின்றாள்.
ஹரிணி மா! என சூர்ய தேவ் சத்தமிட.. ம்ம் ஹி ம்ம் என்பதை போல அவள் நின்றாள்.
அவன் கர்வ புன்னகையுடன் அவள் மனசை இந்த நிதின் பிரகாஷ் தான் ஜெயிச்சு இருக்கான்.
நிதின்ன்ன்!!!! என சூர்ய பிரகாஷ் கத்த..
சும்மா கத்தாதீங்க டாடி! உங்க காதலை நீங்க லாஸ் பண்ண மாதிரி என்னால விட்டு கொடுக்க முடியாது. என நிதின் பேச..
மகியின் உயிரே போவது போல இருக்க..
சாரி பொம்மாயி அண்ட் சாரி தேஜு! I konw but குட்டி வயசில இருந்து மகி தான் எல்லாமேன்னு நினைச்சு வளர்ந்துட்டென். சோ மகியோட மருமக ஹரிணி! என்னோட பொண்டாட்டியாக.. என எந்த சலனமும் இல்லாமல் கூறினான்.
மகி வேகமாக எழுந்து நிதின் பக்கம் வந்தவள். எதுவும் பேசாமல் பார்க்க ஹரிணி அழுது கொண்டே தலை குனிந்து நின்றாள்.
மகி பிளஸ் பண்ணு என காலில் விழ செல்ல..
சக்தி என்னை மன்னிச்சிடு டா கண்ணா! என மகி மகனின் காலில் விழ செல்ல..
சத்ய தேவ் நகர்ந்து கொண்டான். பேச வில்லை.
மொத்த கூட்டமும் அங்கிருந்து நகர போக..
மகி கண்ணை துடைத்து கொண்டு மிதுன்! என கத்தி அழைக்க..
தன் அன்னையின் குரலுக்கு ஓடி வந்தான்.
சொல்லுங்க மா!
நீ ரிதம கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என கேட்க..
வேணாம் என சூர்யா கூறினார்.
அனைவர் பார்வையும் சூர்யா மீது செல்ல.. அவர் நேராக ரிதம் அருகில் சென்று உனக்கு விருப்பமா? என கேட்க..
ரிதம்..?
தொடரும்..
EPISODE 95
மகி கண்ணை துடைத்து கொண்டு மிதுன்! என கத்தி அழைக்க..
தன் அன்னையின் குரலுக்கு ஓடி வந்தான். மிதுன் தேவ்..
சொல்லுங்க மா!
நீ ரிதம கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என கேட்க..
வேணாம் என சூர்யா கூறினார்.
அனைவர் பார்வையும் சூர்யா மீது செல்ல.. அவர் நேராக ரிதம் அருகில் சென்று உனக்கு விருப்பமா? என கேட்க..
ரிதம் நேராக தன் அம்மாவின் அருகில் சென்று பேபி நான் பண்ணது தப்பு தான்! உன்னோட பேச்சை கேட்டு இருக்கணும்! இனி நீ சொல்றத மட்டும் தான் கேட்பேன். ஐம் சாரி பேபி பிளீஸ்! ஆனால் என்னால இப்போ உடனே அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆக மனசு ஒத்துக்கல! எதோ ரொம்ப கவலையா இருக்கு! நீ சொல்லு பேபி நான் என்ன பண்ணட்டும்? என கேட்டாள்.
சூர்யா இருவரையும் பார்த்து தேவ் கார்ப்பரேசன் மொத்தமும் அவனுக்கு தான்! அவன் படிக்கலன்னு நினைச்சுக்காதீங்க! என அவர் சொல்ல..
ரவி தன் பேத்தியின் பக்கம் வந்தவர். இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே! என் பேத்திக்கு வயசு இருக்கு! அதனால் இப்போதைக்கு எதுவும் வேணாம். என சொல்ல..
சூர்ய பிரகாஷ் மற்றும் குரு பிரகாஷ் இருவரும் ரவி பக்கம் வந்து கையெடுத்து கும்பிட போக..
வேணாம்! வேணாம்! நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க பையன் எல்லா விடயத்தையும் சொல்லிட்டான். அதனால் நீங்க போலாம்!. என ரவி கூற..
வசுமதி அவர்களை எரிப்பது போல பார்க்க.. அனைவரும் கிளம்பினார்கள். மகியின் அருகில் சூர்யா சென்று சரி வா கிளம்பலாம்! என அழைக்க..
இன்பா அவர்களின் அருகில் வந்து இருந்திட்டு போ! என்னால இவங்கள சமாளிக்க முடியாது. என கூற..
சூர்யா உதட்டை கடித்து கொண்டு என் பையன்? இப்போ ரொம்ப கஷ்டத்தில் இருப்பான் டா! நான் போகனும்! என சொல்ல..
சரி! என இன்பா விட்டான்.
அடுத்த ஒரு சில நொடிகளில் அந்த இடமே வெறிச்சோடி போக.. கங்கா தன் பேத்தியின் நிலையை எண்ணி அழ ஆரம்பித்தார். அழுது கொண்டே இருக்க..
விவேகா பின்னால் இன்பா சுற்றி கொண்டிருந்தார்.
இப்போ என் பின்னாடி எதுக்கு சுத்துற? போ போய் கறி எடுத்திட்டு வா! உன் பொண்ணு எதுவும் பண்ணிக்க போறா! எனக்கு பயமா இருக்கு! அவளுக்கு மனசை சாந்தி படுத்த சமைச்சு போடணும்! என கூறினார். விவேகா..
அப்போ என்னை டைவர்ஸ் பண்ண மாட்டே தானே! கல்யாணம் நின்னு போச்சு! இப்போ உனக்கு ஓகே தானே! என எந்த வித சலனமும் இல்லாமல் இன்பா சொல்ல..
விவேகா அதிர்ச்சியுடன் ஹே நீ என்ன சொல்ற? ஹே நீ என்ன சொல்ற? என விவேகா நம்ம விவேக் பாணியில் கேட்க..
இன்பா அதே மிடுக்குடன் அந்த நிதின் நிருத்தலண்ணா கூட இந்த கல்யாணம் நின்னு தான் போயிருக்கும் என கூற..
விவேகா சித்தம் கலங்கி தன் காதல் கண்ணாலனை பார்த்தார். என்ன பேபி அவ்ளோ தானா? நீ என்னை இவளோ தான் புரிஞ்சு வச்சிருக்கிறயா? சொல்ல போனால் எனக்கே அந்த நிதின பிடிக்காது.
அப்புறம் எதுக்கு டா வெண்ணெய் மகனே இதெல்லாம் பண்ண? என விவேகா கேட்க..
இன்பா தீவிரமாக என் பொண்ணு என்னை அவ்ளோ நம்புறா சோ அவளோட வழியிலேயே போய் கல்யாணத்தை வேற மாதிரி நிறுத்த பிளான் போட்டு ஆள் எல்லாம் ரெடியா இருந்தாங்க! பட் ட்ராஜிடி என்னன்னா? ஹரிணிய அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டது தான்! சக்தி எவ்ளோ ஃபீல் பண்ணுவான். பாவம் அவனுக்கு போய் இப்படி நடந்திடுச்சு!
டேய் ஆக்சுவலா நீ லூசா?
இன்பா விவேகாவின் அருகில் நெருங்கி உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடி நல்லா தான் இருந்தேன். உன்னை பார்த்ததும் லூசாகிட்டென். இப்போ பாரு ரிதம் லவ் ஃபேளியர்ல இருப்பா! ஆனால் அது ஒன்னும் பிரச்னை இல்ல! நான் நினைச்சு எனக்கு பிடிச்ச பையனா பார்த்து தான் அவளுக்கு கட்டி வைப்பென். அவள் என் பொண்ணு டி! அந்த குரு, சூர்ய பிரகாஷ் மாதிரி நாளைக்கு ரிதம வீட்ல வச்சிட்டு வெளியே வேற பொண்ணை லவ் கீதும் பண்ணிட்டா என்ன பண்றது? இப்போ கல்யாணத்தை நான் பிளான் பண்ணி நிருத்துறதுக்கு பதில் அவனே நிருத்திட்டான். சோ இப்போ நான் ஃப்ரீ!. என பெரு மூச்சை விட்டார்.
உன்னை எந்த ரகத்தில் சேர்க்க IR எட்டில் சேர்த்துக்க நீ சாப்பிடும் போது உன்னோட வாய்க்குள்ள அரிசியா போவேன். என இன்பா சொல்ல..
விவேகா ஒரு பெரு மூச்சுடன் எனக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாமே! நான் என பேச வர..
நீ உனக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது. எங்கேயாவது சொதப்பி வச்சுட்டா என்ன பண்றது? இப்போ பாரு! எல்லாமே ஸ்மூத்தாக இருக்கு! ரிதம் இப்போ நீ சொல்றத கேட்பா! அதுக்கு தான் இவ்வளவு பெரிய பெர்பார்ம் பண்ணேன்! என இன்பா கூறினார்.
விவேகா மனதில் கொஞ்சம் நிம்மதி பரவ அவரின் முகம் மாறி ஆனால் சத்ய தேவ் பாவம்! அதை விட மகி அக்கா, ஆனால் இந்த ஹரிணி பொண்ணு இப்படி பண்ணும் அப்டின்னு நான் நினைச்சு பார்க்கல..
அது நமக்கு தேவையில்லாத விசயம்! சரி நான் போய் ஒரெட்டு சத்ய தேவை பார்த்திட்டு வந்துடுறேன். என இன்பா சொல்லி விட்டு திரும்ப..ருத்ரன் வந்தான்.
மா! தீரா மா! நீங்க ஃபீல் பண்ணாதீங்க! நல்ல இடத்தில் நம்ம அக்காவுக்கு மாப்ளை கிடைக்கும். என வருத்தத்துடன் சொல்ல..
விவேகா கொஞ்சம் புன்னகையுடன் பரவால்ல தீரா! இப்படித்தான் நடக்கணும்னு, இருந்தா! யாரால மாத்த முடியும் !இதுவும் கடந்து போகும்! என்று இன்பாவை சினேகமாகவும் காதலுடனும் பார்த்து பேசிக் கொண்டிருக்க..
ருத்ரன் தீவிரமான முகத்துடன் என்னம்மா உங்களுக்கு கோபமே இல்லையா என்று இன்பாவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கேட்டான்
எதுக்கு கோபம்? யார் மேல கோபப்படனும்? என்னடா? என்ன? உங்க அம்மாவுக்கு என்ன சொல்லிக் கொடுத்துட்டு இருக்க? என்று கேட்டார் இன்பா.
ருத்ரன் ஒரு நிமிடம் தயங்கி கொண்டு அது அப்படி இல்ல! நான்… சரி எதோ! மா! நான் சக்தி மாமாவை பார்க்க போறேன். அதை சொல்ல தான் வந்தேன். என கிளம்பினான்.
உடனே இன்பா அவன் காதுகளில் விழுவது போல பேபி நம்ம பீச் ஹவுஸ் போலாமா! என சொல்ல..
ருத்ரன் திரும்பி பார்த்தான். விவேகா கொஞ்சம் சிரிப்புடன் ராகவ்! என அழைக்க..
என்ன டா? என்ன பார்வை? என இன்பா கேட்க.
ஒன்னும் இல்ல என பற்களை கடித்து கொண்டு கிளம்பி விட்டான்.
ராகவ் நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல! எதுக்கு என் பையனை இப்படி நடத்துற? பாவம்!
எதோ உனக்காக அவனை விட்டு வச்சிருக்கேன். சரி சரி நான் போய் என் டிம்பிள் கிட்ட ஒரு பர்பார்ம் பண்ணிட்டு வந்துடுறேன். என இன்பா கிளம்ப.. விவேகா உடனே மகிக்கு அழைத்தார்.
பாவம் மகி உடைந்து போய் விட்டாள்.
*
நிதின் கைகள் அவளின் கைகளுக்குள் பின்னி கிடக்க.. ஹரிணி கைகளில் நீர் மட்டும் நிற்க வில்லை.
இப்போ எதுக்கு அழற? பாரு முகம் எல்லாம் சிவந்து போச்சு! அப்புறம் எனர்ஜி நிறைய வேஸ்ட் ஆகுது! நீ டிஹைட்ரேட்டா ஃபீல் பண்ணுவ! போதும் அழாத! என துடைத்து விட்டான்.
ஹரிணி வேகமாக அவனுடைய கைகளை தட்டி விட்டாள். அவளின் நினைவுகள் நிதின் – ரிதமுக்கு தாலி கட்டும் தருணத்துக்கு சென்றது. ஹரிணி இதயம் படபடப்புடன் எழுந்து அவ்விடத்தை விட்டு செல்ல போக அனைவர் கவனமும் திருமணத்தில் இருக்க.. .
எங்கே போற? இந்த கல்யாணம் நடக்காது! நீ நினைச்சது அது தானே! இப்போ உனக்கு சந்தோஷம் தானே! என கனிரா ஹரிணியின் மீது உக்கிர வார்த்தைகளை மெதுவாக ஊடுருவ ஆரம்பித்தாள்.
ஏன்? ஏன் கல்யாணம் நடக்காது! என ஹரிணி தவிப்புடன் கேட்க.. .
என் அண்ணனை பத்தி நீ என்ன நினைச்ச? உன்னை மனசுல வச்சிட்டு அவன் இன்னொரு பொண்ணுக்கு தாலி காட்டுவானா? உலக பேரழகியே அவன் முன்னாடி வந்து நின்னாலும் அவன் யாரையும் திரும்பி பார்க்க மாட்டான். என கனி சொல்ல..
ஹரிணி அவள் பேசுவதை கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
போ! நீ போறது கூட நல்லதுக்கு தான்! உனக்கு தான் மனசே இல்லையே டி! இப்போ என் அண்ணா சொல்ல போற விசயத்தை எல்லாம் நீ கேட்டு என் அண்ணா மேல காதல் வர தேவையில்லை என கனி நகர..
என் என்ன சொல்ல போறான்? என ஹரிணி பதட்டத்துடன் அவள் பக்கம் திரும்ப..
கனி ஒரு விரக்தி புன்னகையை சிந்தி உன்னோட காதலுக்காக அது கிடைக்கலன்னு, என் அண்ணா அவன் வாயிலேயே, என் அண்ணனுக்கு ஆண்மையே இல்லன்னு அவன் வாயிலேயே சொல்ல போறான்! அவன் கண் அசைச்சா ஆயிரம் பொண்ணுங்க வந்து விலிவாலுங்க ஆனால் என் அண்ணன்!.. அவனை பொறுத்த வரைக்கும் ஒரு பொண்ணுக்கு தான் மனதளவிலும், உடலளவிலும் இடம்! போ நீ நிம்மதியா மிஸ்டர் சத்ய தேவை கட்டிக்க போடி என சொல்லி சென்று விட்டாள்.
அதன் பின் ஹரிணி பித்து பிடித்தவள் போல இருக்க அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படி நடந்தது? என்றே தெரிய வில்லை. ஆனால் எதோ ஒரு உந்துதல் அவளின் சிந்தையில் அனைத்து தடைகளையும் தாண்டி அவன் முன் சென்றாள். நிதின் வாயை திறந்து “குறை” என சொல்ல வர.. புயலென அவன் முன் நின்றவள் பளார் என கன்னத்தில் அறைந்தாள்.
ஆனால் ஹரிணி எதிர் பாராத விசயம் அவளின் கழுத்தில் நிதின் தாலி கட்டியது தான். இதையெல்லாம் நினைத்தவளுக்கு தலை சுற்றியது. இன்னும் தேம்பி தெம்பி அழ..
அட! என நிதின் சிரித்து கொண்டே இன்னும் நெருங்கி அமர்ந்தான்.
ஹரிணி தள்ளி போக!.
ஹே சீன் போடாத! அதான் உன்னோட சத்யா வந்து கூப்பிட்டான் தானே! தாலிய கழட்டி வீஸிட்டு போன்னு சொன்னானே போயிருக்க வேண்டியது தானே என மொத்த உடலையும் அவளின் மேல் போட்டு சாய்ந்து கொண்டே அவளின் வாசத்தை உள்ளுக்குள் நிறைத்தான்.
ஹரிணி தலையில் அடித்து கொண்டு மீண்டும் அழ..
ப்ச்! என்ன டி! இது என நிதின் அவளின் கையை பிடித்து முகத்தை திருப்பி முத்தமிட..
ஹரிணி வேகமாக தட்டி விட்டவள். அழுது கொண்டே அந்த கனிய பிளான் பண்ணி அனுப்பிட்டு என் விருப்பமே இல்லாம என் கழுத்தில் தாலி கட்டிட்ட! நீ எல்லாம் ஆண்பிள்ளையா?
நிதின் நேராக அமர்ந்து என்ன ஆண் பிள்ளையா? உன் பார்வையில் எது ஆண்பிள்ளை தனம்? அன்னிக்கு உன் கூட தூங்கும் போது தூக்கத்தை மட்டும் உன் கூட சேர் பண்ண அந்த விசயம் உனக்கு ஆண் பிள்ளை தனமா தெரியல! அப்போ உன்னோட மனசுல எது ஆண்பிள்ளை தனம்? எவன் ஆண்பிள்ளை? அப்போவே உன்னை மொத்தமா சொந்தமாக்கி இருந்தேன்னு வை அப்போ எந்த விசயத்தை ஆண்பிள்ளை தனம் அப்டின்னு சொல்லுவ? என சரமாரியாக கேள்விகளை கேட்டவன். அவளை பார்க்க .
ஹரிணி இன்னும் அழுகையை நிறுத்த வில்லை.
தான் விரும்பும் பொண்ணு கிட்ட எந்த எல்லையும் மீறாமல் ஒரு ஆண் இருந்தால் அது தான் என்னை பொறுத்த வரைக்கும் ஆண்பிள்ளை தனம்! அப்படி பார்த்தால் அந்த சூர்ய தேவை விட என் டாடி சூர்ய பிரகாஷ் தான் ஆண்பிள்ளை டி! இதை எங்கே வேணாலும் போய் சொல்லுவேன். என் டாடி தான் இந்த உலகத்திலேயே பெஸ்ட் என கூறினான்.
ஹரிணி அப்பொழுதும் அழுது கொண்டிருக்க.. நிதின் ஒரு பெரு மூச்சுடன் சொல்லு உன்னை சத்ய தேவ் கிட்ட வுடனுமா! இப்போவே விடுறேன் என ஓட்டுனரின் பக்கம் திரும்பினான்.
ஹரிணி அவன் பக்கம் திரும்பியவள். அழுது கொண்டே பிளீஸ் என்னால சத்யாவை பார்க்க முடியாது. என இன்னும் அழுதாள். நிதின் அவளின் அருகில் வந்து உனக்கு ஏன் டி புரிய மாட்டிக்கிது? அவனால் உன் கூட இருக்க முடியுமா? நான் இல்லாம?
அதற்கு ஹரிணி…?
*
சிவன்யா, பவன்யா, இதழ், யவனிகா, யுவதிகா, இனியா, மிதுன் தேவ், வெற்றி, இதயன் என அனைவரும் ரிதம் அறையில் இருக்க.. ஆனால் இன்னும் அந்த ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் தூங்கி கொண்டு தான் இருந்தார்கள்.
ரிதம் வேகமாக அறைக்குள் சென்றவள் மலாரென உடையை மாற்றி நகைகளை கழட்டி போட்டு விட்டு பத்து நிமிடத்தில் சாதாரண உடைக்கு மாறி இருந்தாள். ஆனால் அவளின் முகத்தில் மட்டும் கவலை மண்டி கிடந்தது.
மிதுன் தேவ் அவளின் அருகில் சென்று ஹே ரித்து! இது இப்படியே முடிஞ்சு போனது நல்லதுக்கு தான். இதுக்கு எல்லாம் காரணம் நான் தான் என்னை மன்னிச்சிடு டி! என அவன் ஆழ்ந்த கலக்கத்துடன் கூற..
ரிதம் உதட்டை மடித்து கடித்து கொண்டு இட்ஸ் ஒகே இதுக்கு நீ என்ன பண்ணுவ? விடு மிதுன்! என அவள் அப்படியே நிற்க..
இதழ் ரிதமின் அருகில் வந்து கட்டி கொண்டாள். சத்தியமா இது இப்படி ஆகும்ன்னு நினைக்கல ரித்து என அவளின் முகம் பார்க்க..
இல்ல டி! நான் அது நான் ஓகே நீங்க போய் ரெஸ்ட் எடுங்களேன். மகி மாமி வேற பாவம்! இப்போதைக்கு என்னால் வர முடியாது. மிதுன் போடா போய் மாமிய பாரு! எனக்கு அங்கே போயிட்டு போன் பண்ணு என ரிதம் சொல்ல..
அந்த நேரம் சோம்பல் முறித்து கொண்டே எழுந்தார்கள். ஆக்னஸ் மற்றும் வீணா! ஹாய் பேபி! குட் மாரனிங்! என்ன பேபி மேரேஜ்க்கி இன்னும் ரெடி ஆகளையா?
உடனே வெற்றி மெல்லிய குரலில் இது மார்னிங் இல்ல..
அப்போ ஈவ்னிங்கா? ஹோ ஹனிமூன் பிளான் ஃபர்ஸ்ட் நைட் என அவர்கள் பேசி கொண்டிருக்க..
ரிதம் முகத்தை அவ்வளவு சோகத்துடன் பெரு மூச்சுடன் அவர்களை பார்த்தாள்.
மிதுன் பேச வர.. இட்ஸ் ஓகே மிதுன் நீ போ என ரிதம் சொல்ல..
சிவன்யா அவளை அருகில் வந்து கட்டி அணைத்து கிளம்பி விட்டாள். அவர்கள் வெளியே சென்றதும் கதவை தாளிட்டு கொண்டவள். முகத்தில் உள்ள கவலையுடன் போனை எடுத்தாள்.
ஹே சாரி பேபி! எங்களுக்கு எப்படி நாங்க தூங்கினோம் அப்டின்னு தெரியல டி! உனக்கு கல்யாணம் முடிஞ்சுபோச்சு அய்யோ! சரி விடு டைவர்ஸ் வாங்கிடலாம் என தீவிரமாக பேசி கொண்டிருக்க..
ரிதம் கண்ணுக்கு மையிட்டு கொண்டே கப்போர்ட்டில் இருந்து கருப்பு வண்ண உடை எடுத்தவள். மாற்றி கொண்டு இரண்டு பக்கமாக முடியை பிரித்து இரட்டை ஜடை போட்டாள்.
ஹே என்ன டி பண்ற? இப்படி ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போனால் அந்த மினிஸ்டர் பயந்து ஓடி போயிடுவான். என ஆக்னஸ் சொல்ல..
உடனே வீணா தீவிர முக பாவனையுடன் ஹே ஆக்னஸ் அந்த மினிஸ்டர இந்த காஸ்ட்யூம் போட்டு ஓட விட்டுட்டு அந்த தேவ் I mean சத்ய தேவ மிரட்டி மீட்டர் பண்ண போறா கரெக்டா ரிதம்! உன்னோட யோசனை சூப்பர் டி என சொல்ல..
ரிதம் ஆக்ரோசமாக சிரித்தவள். Wednesdayவாக மாறி இருந்தாள். அவளின் போனில் பாடலை போட்டு விட்டு
I’ll dance, dance, dance With my hands, hands, hands Above my head, head, head
Like Jesus said
I’m gonna dance, dance, dance With my hands, hands, hands above my head
Hands together, forgive him before he’s dead… என ஆட அதை வீணா மற்றும் ஆக்னஸ் கதி கலங்கிப் பார்த்து கொண்டிருக்க..
ரிதம் வாய் விட்டு சந்தோசமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
என்ன டி இவளுக்கு என்ன ஆச்சு? ரிதம்! ஹே ரிதம்! என்ன டி இப்படி சிரிக்கிற? என அவர்கள் பதட்டத்துடன் கேட்க..
ரிதம் அடுத்ததாக all day jolly day கவலைக்கெல்லாம் hollyday.. all day வாழ்க்கையில் என்றும் ஜாலி day என பாட்டை போனில் தட்டி விட்டு பிரபு தேவாவுக்கு டஃப் கொடுத்து ஆடி கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தை பார்த்து தலையை சொரிந்து கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள..
அன்று வாங்கிய மீதமுள்ள சரக்கு பாட்டிலை ஊரில் இருந்து எடுத்து வந்தவள். பதுக்கி வைத்த இடத்தில் இருந்து எடுத்து கொண்டாட ஆரம்பித்தாள்.
ஹே என்ன டி பண்ற? ரிதம் அந்த சத்ய தேவ் அவனை நினைச்சு பைத்தியம் ஆகிட்டையா? என கேட்க..
ஹே வீணா போனவளே கல்யாணம் நின்னி போச்சு! ரிதம் இப்போ சிங்கிள்! என கத்தினாள்.
வாட்? என அவர்கள் சந்தோசத்தில் பார்க்க..
யா பேப்ஸ் மேரேஜ் நினனு போச்சு! அதை விட நிதின் அவனுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்! ஹரிணி அவள் ரொம்ப நல்லவ! நிதின் அண்ட் ஹரிணி ரெண்டு பேரும் லவ் பண்றாங்க! அதை எல்லார் முன்னாடியும் சொல்லி எப்படியோ ஒரு பெரிய பிரச்னையில் இருந்து நான் எஸ்கேப் ஆகிட்டேன். என ரிதம் ஒரு ரெட் ஒயினை வாயில் சரித்து ஒரே மூச்சில் ஒரு பாட்டிலை இறக்கி இருந்தாள்.
ஊஊஊ ஹூஹூ!! என அவள் இரண்டு காலையும் விரித்து கண்களை மூடி சத்ய தேவ் அவளின் தலையில் கட்டப்பட்டிருக்கும் ஹேர்பேன்டை உருவி விடுவது போல செய்தவள் உதடு கடித்து சிரிக்க ஆரம்பித்தாள்.
பல்லை கூட விளக்காமல் அந்த பியர் பாட்டிலை ரசித்து குடித்து கொண்டிருந்த வீணா! ஹே ரிதம்! நீ எப்படி கூலா இருக்க? உன்னோட யங் மாஸ்டர் உனக்கு இன்னும் சொந்தமாகலயே டி! இப்போ கூட உன்னோட லவ் uncertainityல தான் பெண்டுலம் மாதிரி இருக்கு என சொல்ல..
ஆக்னஸ் வாயில் ப்ரஸ் வைத்து கொண்டே ஆமா ரிதம்! வீனா சொல்றது சரி தானே! இன்னிக்கே உனக்கும் தேவ்க்கும் மேரேஜ் நடந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே! ச்ச இதெல்லாம் இப்படி நடக்கும் அப்டின்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தால் தேவ் உன்னை மேரேஜ் பண்ணிக்கிர மாதிரி எதுவும் பிளான் போட்டிருக்கலாம்! என கூறினாள்.
ரிதம் போதை ஏறிய கண்களுடன் சிரித்து கொண்டே அவன் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்? என கூறினாள்.
என்ன டி சொல்ற?
நா.. நான்.. ச.. சரியா.. தான்.. சொல்றேன்! அவ் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்? என்ன ம*த்துக்கு கல்யாணம் பண்ணனும்? என ஒரு கையை அருகில் இருக்கும் டீ பாயின் மீது வைத்து கொண்டே சந்திர முகி கங்கா சக்கரத்தில் காலை தட்டி கொண்டே அமர்ந்திருப்பது போல தோரணையில் இருந்தாள்.
இல்ல புரியல? நீ என்ன சொல்ல வர? என வீணா கேட்க..
ரிதம் கண்களில் நீருடன் நிதின் லக்கி பெல்லோ! ஹரினிக்காக கல்யானைத்தையே நிறுத்தி இருக்கான். அவளும் அதே போல தான் அவனுக்காக அவள் எல்லாரையும் தூக்கி போட்டு தைரியமா அவன் பக்கத்தில் நின்னு இருக்கா! யார் என்ன சொன்னாலும் சரி அப்போ நிதின் ஒரு கிஸ் அடிச்சான் பாரு! வேற லெவல் லவ் அப்டின்னா அது நிதின் லவ் தான்! ஹரிணி அவ்ளோ லக்கி! அவள் இப்போ கூட இல்ல எப்போவுமே லக்கி! முன்ன சத்ய தேவ் லவ் பண்ணன். இப்போ அதை விட ஆதிக்கனா அதிகாரனா நிதின் பண்றான். என பெரு மூச்சை விட்டவள். எனக்கு இரக்கப்பட்டு என் அப்பாவுக்காக, என் அம்மாவுக்காக, என் தம்பிக்காக அப்டின்னு சத்ய தேவ் என்னை எத்துக்க கூடாது. எனக்காக எனக்காக மட்டும்.. அவனுக்காக அவனுக்கு நான் வேணும்னு என்னை கல்யாணம் பண்ணிக்க வேணும் என கூறினாள்.
அது எப்படி நடக்கும்? அவனுக்கு தான் உன்னை பிடிக்காதே! ஆக்னஸ் கேட்க.
அது வரைக்கும் காத்திருப்பேன்! லவ் டார்ச்சர் பண்ணுவேன் என ரிதம் கூறினாள்.
ஒரு வேளை நீ சொல்ற மாதிரியே நடந்தாலும், உன்னை தான் தேவ்க்கு பிடிக்காதே! அவன் வீட்ல சொல்றதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்டின்னு தேவ் உன் கிட்ட சொன்னால் என்ன பண்ணுவ?
ரிதம்…?
தொடரும்..
EPISODE 96
சத்ய தேவ் நேராக வீட்டுக்கு சென்று அவனறைக்குள் புகுந்து கொண்டான். சூர்யா, மகி, மை விழி, கார்த்திக் என அனைவரும் அதன் பின் கிளம்பி வந்தார்கள். நிலா மட்டும் மகியுடன் வந்து விட்டாள். உதயன் மற்றும் தாரா இருவரும் வசந்தன், கலைவாணியை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்கள்.
வீட்டுக்கு வந்து இறங்கியதும் பதட்டத்துடன் மை விழி உள்ளே செல்ல.. கார்த்திக் அவரின் கையை பிடித்து தடுக்க.. என்ன கார்த்திக் இப்போ எதுக்கு கைய புடிச்ச?
அது சொல்றத கேளு மை விழி! இது மகி சூர்யா ரெண்டு பேரும் பார்த்திப்பாங்க! இப்போதைக்கு சத்ய தேவ் தனியா இருக்கணும்னு நினைப்பான். சோ நீ போக வேணாம்! அவங்க ரெண்டு பேரும் போகட்டும். என சொல்ல..
மை விழி கையை உதறி விட்டு உன் பேச்சைக் கேட்ருந்தது தான், நான் பண்ண பெரிய தப்பு! ஆயிரம் முறை அவளுக்கு படிச்சு படிச்சு சொல்லி இருப்பேன். சத்திய தேவ் பத்தி நீ தப்பா நினைக்காத! அவனை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது! நீ கற்பனை உலகத்துல இருக்கேன்னு… ஆனா! ஆனா! அவ என் பேச்சை கேட்டாளா? என் பையன் இப்படி நிலை குலைஞ்சு இருக்கிறதுக்கு காரணமே! அவதான்! அவ கனடாவில் இருந்து வந்து மட்டும் என்னத்த சாதிச்சா? என் பையன் பிறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கான்! என்று சொல்லிக் கொண்டிருக்க..
சூர்யாவும் மகியும் உள்ளே நுழைந்தார்கள். மை விழி பேசிய அனைத்தும் கேட்ட மகிக்கு மனம் நொந்து போனது . ஏற்கனவே உடைந்திருந்தவள் இன்னும் உடைந்து போனாள். நிலா ஆதரவாக மகியின் கைகளை கட்டி பிடித்து கொள்ள..
கதவு பக்கம் சத்தம் கேட்க சட்டென மை விழி திரும்பி பார்த்தாள். மஹியே நிலா பிடித்து கொண்டு வர..
இப்போ உனக்கு சந்தோஷமா? மொத்தமா ஒருத்தன விலக்கிவிட்டு, தவிக்க விட்டு ஒருத்தனை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுனியே! இப்ப மொத்தமா கழுத்தை அறுத்திட்டு போயிட்டான்! எல்லாம் உன்னால டி! நீ தாண்டி எல்லாத்துக்கும் காரணம்! என்று மைவிழி கத்திக் கொண்டிருக்க..
மகி மவுனமாக அழுதார். நிலா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சித்தி நிதின் அண்ணா கல்யாணம் பண்ணதுக்கு மகி சித்தி என்ன பண்ணுவாங்க? என கேட்க
மைவிழி அவளைப் பார்த்து இளனமாக சிரித்துக்கொண்டே ஆமா! உன் அண்ணன் பண்ணதுக்கு, இவ என்ன பண்ணுவா? பாவம் ரொம்ப அப்பாவியாச்சே மகிழினி! என்று கோபத்துடன் கர்ஜித்தாள்.
கார்த்திக் சூர்யாவை பார்க்க…
அதுதான் முடிஞ்சு போச்சே இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? என்று சூர்யா பேச வர..
இப்படி இருக்காதீங்க மாமா! உங்களுக்கு புரியுதா? இல்லையா? நம்ம பையனோட வாழ்க்கையே உங்க பொண்டாட்டி அழிச்சி இருக்கா! அறிவு கெட்டவ! அவளால தான்.. என்று மைவிழி வார்த்தைகளை கடித்து துப்ப..
மகி அதே இடத்தில் சரிந்து அழ ஆரம்பித்தார். சித்தி அழாதீங்க! சித்தி எப்படியா இருந்தாலும் நாளைக்கு கல்யாணம் பண்ணி விபரீதமாக ஏதாவது பிரச்சனை வந்து இருந்தா? என்ன பண்றது? என்று நிலா சொல்லிக் கொண்டிருக்க..
வாடி நல்லவளே! நீ யாரு? நீயும் அந்த குடும்பத்துல ஒருத்தி தானே! உங்க அம்மா அவ எவ்வளவு பெரிய கேடி! எங்களை என்ன எல்லாம் சித்திரவதைப்படுத்தினா! உங்கப்பன், உங்க சித்தப்பன், மொத்த குடும்பமும் விசம்! அப்பா சொல்லவே முடியல! அது மட்டுமா? எங்கப்பா இருக்கானே! அவன் ஒரு ஒன்னாம் நம்பர் வேஸ்ட் ஃபெல்லோ! என சொன்ன மை விழி தன் தங்கையை பார்த்து என்னடி சொன்னான்? உன் அப்பன்! என்ன சொன்னா உன்கிட்ட ? என்று மைவிழி கேட்க..
மகி தேம்பித் தேம்பி அழ, மைவிழி கோபத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டே எனக்கு எல்லாமே தெரியும்! நீ அந்த நித்தின காரணமா தானே கொஞ்சுட்டு இருக்க? எங்கே நிதின்கு எதிராக பிரச்சனை நடந்தால், அவன் பண்ண தப்பு சின்ன சின்ன விசயம் எல்லாமே சத்ய தேவ் மேலே சொல்லி இருக்கான். ஆனால் உண்மை எல்லாமே தெரிஞ்சும் கூட தேஜு நம்ம வீட்டுக்கு வராமல் போயிடுவாளோ? அவ நம்ம குடும்பத்தோட ஒட்ட மாட்டாலோ? அப்படின்னு அந்த கால் இல்லாதவன் சொல்லி இருப்பான்! உன் அப்பன் கிட்ட அப்பா நீங்க சொல்றதையே நான் கேட்கிறேன்னு சீன கிரியேட் பண்ணி இருப்ப! அதுு தனே நடந்தது! என்று மை விழி சொல்லி கொண்டிருக்க..
மகி இன்னும் தேம்பி அழுதாள்.சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் புரியாமல் பார்க்க..
மைவிழி தன் மாமனையும் தன் கணவனையும் பார்த்தவர். எனக்கு எல்லாமே தெரியும் இவ ஒரு கோழை மாமா! எங்க அப்பா சொன்னத கேட்டுட்டு தான் இவ அந்த நிதுன இன்னும் கொஞ்சி தலையில் தூக்கி வைத்து ஆடி இருப்பா! அடுத்தவளோட பையனை பார்த்தவ, பெத்த பையன பாக்காம விட்டுட்டா! பாத்தீங்களா? அது அவனோட வாழ்க்கையே முுடிஞ்சடுச்சு ஒரு காதல் தோல்வி எப்படி இருக்கும் தெரியுமா?
உங்களுக்கு தெரியாததா மாமா! என சொல்லி முடித்த மைவிழி நிலாவின் பக்கம் திரும்பி போதும் இன்னும் வேற என்ன விட்டு வச்சிருக்க உங்க அப்பன், உங்க அம்மாாக்காரி,v உங்க அண்ணகாரன் எல்லாரும் சேர்ந்து இவள் ரத்தத்தை குடிக்கிறீங்கடி! இவள ஒன்னும் இல்லாம ஆக்கினது, உங்க குடும்பம் தான்! என்று மைவிழி பேசிக் கொண்டிருக்க..
போதும் நிறுத்து மைதிலி அவங்க பண்ணதுக்கு எதுக்கு நிலாவ திட்டுற? அவ நம்ம வீட்டு பொண்ணு! சத்யதேவ் மாதிரி தான் அவளும் நித்தின் பிரகாஷ் பன்னதுக்கு நிலாவுக்கும் என்ன சம்மந்தம்? தேஜு அப்படி பட்டவ இல்ல.. அதெல்லாம் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல என்று சூர்யா சொல்ல..
நிலா அழுது கொண்டே எழுந்தவள். அந்த இடத்தை விட்டு கிளம்ப போக..
உடனே கார்த்திக் நிலா மா நீங்க எங்க போறீங்க? உங்க சித்தி ஒரு லூசு! அவள பத்தி உங்களுக்கு தெரியாதா? நீங்க வாங்க அழ வேண்டாம் யாரு என்ன சொன்னா? என்ன? இது இப்படித்தான் நடக்கும்னு கடவுள் போட்ட முடிச்சு! அது யாராலும் மாற்ற முடியாது! ஏதோ ஹரிணி நிஜமாகவே நெஜமாவே நிதின தான் லவ் பண்றா போல! அதனாலதான் அந்த இடத்துல வாயை மூடிட்டு அமைதியா இருந்திருக்கா! ஆனா இதுல ரொம்ப பெரிய இழப்பு சத்திய தேவ்க்கு தான்..
சூர்யா அதை ஆமொதிக்கும் விதமாக “ நிலா உள்ள வாங்க!” என அழைக்க..
நிலா தன்னை கட்டு படுத்தி கொண்டு இல்ல சித்தா! நான் கிளம்புறேன். என்று வருத்தத்துடன் சொல்ல..
மகி கண்களைைத் துடைத்துக்கொண்டே நிலா உள்ளே வா! என்ன சாப்பிடற? என்று தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள.
மை விழி தன் தங்கையை முறைத்து என்னமோ பண்ணுடி! ரொம்ப நல்லா இருக்கு! உமா அத்தையும் நட்ராஸ் மாமாவும் சத்திய தேவ் கல்யாணத்தை பத்தி கேட்டா? என்ன சொல்றன்னு நானும் பாக்கறேன் டி! என்று சொல்லிவிட்டு நேராக சோபாவில் போய் அமர்ந்து கொண்டார்.
மகிழினி சமையலறை பக்கம் செல்ல… சூர்யா அவளின் பின்னால் சென்றார்.
மகி என்று சூரிய அழைக்க.. தன் கணவனை தாவியணைத்து அழ ஆரம்பித்தார்.
அழாதடி! அழாத! நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட அதை விட என் பையன்!
“அவன் என்னோட உயிருங்க! என் சக்தி!”
நான் தான் சொன்னேனே! எத்தனை தடவ உன் கிட்ட சொல்லி இருப்பேன். நீ கேட்டியா? என சூர்யா சொல்ல..
மகி கன்னத்தில் நீர் வழிய சத்தியமா நிதின் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சு கூட பார்க்கல! பார்க்கல.. அவன் எல்லாத்தையும் நினைப்பு வச்சிருக்கான்.
சூர்யா வழியும் நீரை துடைத்து விட்டு கொண்டிருக்க..
மை விழி சொன்னதெல்லாம் உண்மைதான்! அங்கே கடைசியாக பிரச்சனை நடந்தபோது, அதோட தப்பு நிதின் மேலே இருக்குன்னு தெரியும் அவருக்கு. ஆனாலும் என்கிட்ட கை புடிச்சு கேட்டுக்கிட்டார். நான் நிதின் மேல பாசமா இருந்தாதான் தேஜுவை நம்ம கூட வருவா! இல்லன்னா அந்த சூரிய பிரகாஷ் விட மாட்டார்ன்னு, அதனாலதான் நான் நிதின பாசமா நடத்தினேன். அதெல்லாம் நடிப்புன்னு சொல்ல முடியாது. எங்க அக்காவோட பையன்.
சரி விடு என சூர்யா சொல்ல..
எங்க அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு! பிறந்த குழந்தைய தொலைஞ்சு அது குமரி ஆகி இப்போ கிடைச்சிருக்கா அவ இனி இருக்கிற காலத்துல எங்க அப்பா கூட இருக்கணும்னு எங்க அப்பா நினைச்சாரு. என்று மகி சொல்லி கொண்டிருக்க..
சூர்யா பெருமூச்சை விட்டு உங்க அப்பா பிறந்து தொலைத்த பொண்ண கண்டு பிடிச்சுட்டாரு! ஆனா நீ கையில இருக்க பயண தொலைச்சிட்டியே! என்று கூறினார்.
மகி தேம்பி அழுது கொண்டே என் சத்திய தேவ் என்ன புரிஞ்சுக்குவான்! என்னோட சக்தி enhsib புரிஞ்சுக்கோ டா! என உள்ளுக்குள் சொல்லி கொண்டவள். அவனா என்ன தேடி வருவான் எனக்கு நம்பிக்கை இருக்கு! என்று அவள் மேலும் அழுதாள்.
சூர்யா அவளின் கண்ணை துடைத்துவிட்டு சரி நடக்கிறது நடக்கட்டும் என்று திரும்ப
ராம் ஆதவ் கீதா மூவரும் வந்தார்கள். சூர்யா அவளை சென்று கட்டிக் கொண்டான்.
அழாத கீதா என்று சொல்ல
அவ்வளவுதான் போச்சு என் பொண்ணோட வாழ்க்கை போச்சு! அவ இப்படி ஒரு காரியத்தை பண்ணுவானு நான் நினைச்சு பாக்கல! என் பொண்ணு என என்று கீதா இன்னும் உடைந்து அழ..
ராம் இன்னும் நொந்து இருந்தார். சூர்யா ராமின் கைகளை பிடித்துக் கொள்ள..
சூர்யா எப்படியாவது அவன் கிட்ட இருந்து என் பொண்ண பிரித்து கூட்டிட்டு வரனும் டா! சத்தியதேவா வர சொல்லு! நாங்க எங்கேயாவது போய்டுறோம்! நான் விக்ரம் கிட்ட பேசிட்டேன் அவளை நான் கனடா கூட்டிட்டு போறேன் அவளோட மனச நான் எப்படியாவது மாத்திடுவேன்! என்று ராம் சொல்லிக் கொண்டிருக்க..
நிலாவுக்கு அங்கிருக்கும் நிலையை பார்த்து தலையே சுற்றியது. அந்த நேரம் அவளுடைய போன் ஒலித்துக் கொண்டே இருந்தது. மனம் நொந்து போக போனை எடுத்தாள். எதுவும் பேச வில்லை.
பொம்மாயி! என spr அழைக்க..
பிளீஸ் போதும் பேசாதீங்க!;
ஹலோ பொம்மாயி எங்க இருக்க? என தவிப்புடன் அவர் கேட்க..
ப்ளீஸ் இனிமே அந்த வார்த்தையை சொல்லி நீங்க கூப்பிடாதீங்க என்று நிலா கூறினாள்.
அந்த நேரம் அவசர அவசரமாக ருத்ரன் வந்து சேர்ந்தான்
என்னடா நான் என்ன பண்ண? என்று சூர்ய பிரகாஷ் கேட்க
எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்! இனிமே நான் அந்த வீட்டுக்கே வரமாட்டேன்! நான் இங்க இருந்து ஸ்ட்ரைட்டா டெல்லி போறேன்! இனிமே உங்க யார் கூடயும் நான் பேசவும் மாட்டேன்! நீங்க யாரும் எனக்கு வேணாம்! உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! என்று சொல்லி போனை வேகமாக கட் செய்து அழுதாள்.
“ச்ச!” என ஒரு சத்தம்.. நிலா கண்ணை துடைத்து கொண்டே திரும்பி பார்க்க அங்கே ருத்ரன் வீட்டை நோக்கி வந்தான்.
நிலா அவனை பார்த்ததும் கண்ணை துடைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
என்னமா நடிக்கிறா? ப்பா குடும்பமே 420! இதுல மினிஸ்டர், கவர்னர் அப்டின்னு பெரிய பெரிய பதவி எல்லாம் இவங்களுக்கு தான் கூப்பிட்டு குடுக்கிராங்க! கெட்டதிலும் ஒரு நல்லது இல்லன்னா ஒவ்வொரு தடவையும் ரிதம பார்க்க இவள் இருக்க வீட்டுக்கு போகனும்! நல்ல வேளை! இனி அந்த பெரிய போர் இங்கே இல்ல என ருத்ரன் நினைத்தான்.
அவன் உள்ளே வந்ததும் சூர்யா கேட்ட முதல் கேள்வி! ரிதம் எப்படி இருக்கா? என்பது தான்.
ருத்ரன் சூர்யாவின் பெருந்தன்மையான குணத்தை பார்த்து அவ இப்போ கொஞ்சம் பரவால்ல! ஆனா அப்படியே தான் மாமா இருக்கா! என்று கூறினான்.
மகி உள்ளே இருந்து பாதாம் பாலை காய்ச்சி கொண்டு வந்தவர் தீரா என்று அழைக்க..
அத்தை இன்று ருத்ரன் திரும்பினான்.
இது அந்த வீகன் மில்க் காய்ச்சி கொண்டு வந்து இருக்கேன். அவன் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல! கொஞ்சம் இது கொண்டு போய் கூட என்று கொடுக்க..
ருத்ரன் சரி என்பது போல் அதை வாங்கிக் கொண்டான். அவன் நேராக மேலே செல்ல சத்யதேவியின் அறைக்கதவு சாத்தி இருந்தது.
மகி நேராக கிச்சன் சென்றவள். ச்ச தலையில் அடித்துக் கொண்டு ஐயோ சக்கரை போட மறந்துட்டேனே! என்றவள் நிலா என்று அழைக்க..
சித்தி என்று அவள் உள்ளே வந்தாள்.
பால்ல சக்கரை போட மறந்துட்டேன். போ பொண்ணு என நீட்ட நிலா வாங்கிக் கொண்டு மேலே சென்றாள்.
ருத்ரன் தயக்கத்துடன் கதவுகளை தட்டினான் மாமா மாமா என்று அவன் தவிப்புடன் அழைக்க..
பின்னால் காலடி சத்தம் கேட்டது. சட்டென திரும்பி பார்த்தான். அங்கே நிலா வந்து கொண்டிருந்தாள். இவை எதுக்கு இங்க வரா? அதுவும் நான் தான் மாமா பார்க்க வரேன்னு தெரியும்ல்ல! திமிர் புடிச்சவ! அப்படியே பாவமா இருக்கிற மாதிரி முகத்தை வைத்து கொண்டு சுத்துவா! குடும்பமே ஏமாற்று குடும்பம்! ச்ச இப்படித்தான் அந்த நித்தின் ஹரிணி அக்காவ எப்படியோ மயக்கி கல்யாணம் பண்ணிட்டான். ஹரிணி அக்காவை என்ன பிளாக்மெயில் பண்ணான்னு தெரியல! என நினைத்தவன். கோபத்தில் கொதித்து கொண்டிருக்க..
நிலா அவன் அருகில் வந்து அது வந்து என்று சொல்ல வர..
ப்ச் எதுக்கு இங்க வந்த? நான்தான் மேல இருக்கேனு உனக்கு தெரியாதா? நான் போனதுக்கு அப்புறம் வந்து உன்னோட ஆக்டிங்கே இங்க பண்ண வேண்டியது தானே! யாருக்காக இப்படி நடிச்சிட்டு திரிகிற என்று கூறினான்.
நிலாவுக்கு கண்களில் கண்ணீர் கொட்டியது. ஹே ஏன் ஆவுனா அழுது சீன் கிரியேட் பண்ணாத. என்ன ஓவரா பில்டப் கொடுக்குற! என்று மிரட்டினான்.
அது வந்து இதுல சக்கரை இல்ல! சித்தி கொடுத்து விட்டாங்க என்று கண்ணீரை உள்ளே அடக்கிக் கொண்டே கூற..
உன் கிட்ட எதுக்கு மாமி கொடுத்து அனுப்பிச்சாங்க? என்னை கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே! என்று சொன்னவன். இந்தா கலக்கி கொடு என்று அதட்டிக் கொண்டே நீட்டினான்.
நிலா ஒருவித படபடப்பில் அதை பிடிக்க அவளின் விரல் ருத்ரனின் மேல் பட வேகமாக கையை எடுத்தான்.
சட்டென ருத்ரன் கிளாசின் மேலிருந்து பிடியை விளக்குவான் என தெரியாத நிலா சரியாகப் பிடிக்காமல் போக.. பொத்தென அந்த கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது.
நிலா கண்களை மூடி அதிர்ச்சியுடன் நிற்க.. அறிவு கெட்டவளே! என்று ருத்ரன் கோபத்துடன் மிரட்ட..
நிலா கண்களில் நீர் வழிந்தது. இது கூட உனக்கு ஒழுங்கா பிடிக்க தெரியாதா! போச்சு உன்னால பால் மொத்தமும் கொட்டிடுச்சு! என்று ருத்ரன் கத்த..
என்ன சத்தம் விடு ருத்ரன்! இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கலாம்! என சூர்யா சொல்ல..
ருத்ரன் பார்வை நிலாவை துளைக்க.. அவள் அவனுடைய இந்த அவதாரத்தில் சற்று பயந்து இன்னும் அழ..
ஹேய் கொட்டிட்டியே! போ என்று நாயை துரத்துவது போல துரத்தியவன். சத்ய தேவ் இருக்கும் அறை கதவை மீண்டும் தட்டினான்.
ருத்ரனின் காலுக்கு அடியில் ஒரு கண்ணாடி சிலு இருக்க.. அதை அவன் காலில் குத்தி விட கூடாது என எடுக்க அமர்ந்தாள்.
ருத்ரன் கதவை இரண்டு முறை தட்டி விட்டு திரும்ப அங்கே நிலா அந்த சில்லுகளை எடுத்து கொண்டிருக்க..
ஹே போதும் போதும் உன்னோட பொது சேவை! போன்னு சொன்னேன்! அப்போ தான் கண்ணு முன்னாடி வந்து நிப்பா!
அது கண்.. கண்ணாடி சில்லு கா.. காலில் குத்திடும்! என நிலா..
உன் நடிப்பை பார்த்தால் தான் என் கண்ணு காதில், மூக்கில் எல்லாம் இரத்தம் வருது. தயவு செஞ்சு போ!
என்ன வார்த்தை சொல்லி விட்டான்! எந்த பெண்ணாக இருந்தாலும், இந்த வார்த்தைகளைக் கேட்டதும், உடனே அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று இருப்பாள்.
ஆனால் நிலா அவன் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதே இடத்தில் கண்ணாடி சில்லுகளை எடுத்து கொண்டிருந்தாள். அவளின் நிலை கூட இந்த கண்ணாடி சில்லுகள் போல என்றோ உடைந்து சில்லு சில்லாக போய் விட்டது.
அதை பார்த்து இன்னும் ருத்ரனுக்கு அவளின் மேல் இன்னும் கோபம் ,வெறுப்பு இன்னும் தூண்ட பட்டது. ம்ம் இவள் குடும்பத்துக்கே அது தான வேலை! அந்த நிவாஸ் ஒரு திமிர் பிடிச்சவன், நிதின் அகங்காரக்காரன், இவள் அதுக்கும் மேல அப்படியே பாவமா முகத்தை வச்சு ஆக்டிங் பண்ணுவா! மொத்த குடும்பமும் அடுத்தவங்க குடும்பத்தின் குடிய கெடுப்பது தான் பொழப்பு! என எரிந்து விழுந்தான். அதற்கு மேல் அவளை கண்டு கொள்ளாமல் சத்ய தேவ் அறையை தட்டினான்.
நிலா பெரு மூச்சுடன் அவனை பார்த்து கொண்டே எடுக்க அவளின் விரலில் கண்ணாடி சில்லு கீறி இரத்தம் வந்தது. மாமா! என ருத்ரன் தட்ட .
அவள் வலியை மறந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். இன்று காலையில் எத்தனை அழகாக இருந்தான். அவனை பார்க்க கூடாது என சிரம பட்டு உணர்வுகளை அடக்கினாள். சட்டென அவளின் சிந்தையில் எந்த உரிமையில் பார்க்கிற? வேறு ஒருத்திக்கு சொந்தமாகி விட்டார். மீனாட்சி – ருத்ரன் என அவளின் உதடுகள் முணுமுணுத்து கொண்டது. கண்களில் நீர் சிறு வயதில் இருந்தே எல்லா புத்தகத்திலும் நிலா – தீரன், நிலா – ருத்ரன் , ரவுத்திரனின் நிலா என ஆயிரம் முறை எழுதி ஆசையாக வருடி இருக்கிறாள். ஆனால் ஆயிரம் முறை எழுதி பார்த்தவள். ஒரு முறை கூட அவனிடம் வெளி படுத்த வில்லை. அப்படியே வெளி படுத்தினாலும் அவளுக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே! அவளுக்கு தெரியும் தன்னை சுத்தமாக அவருக்கு பிடிக்காது. துக்கம் தொண்டையை அடைக்க அந்த இடத்தை விட்டு சென்றாள்.
மாமா! என அவன் கதவை தட்ட..
சத்ய தேவ் கதவை திறந்து விட்டு உள்ளே சென்று விட்டான். மாமா என உள்ளே சென்ற குரலில் அறைக்குள் நுழைந்தான்.
சத்ய தேவ் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தான். எதுவும் பேச வில்லை.
மாமா எனக்கு புரியுது நீங்க இப்போ மனசலவில் எப்படி இருப்பீங்கன்னு… என தயங்கி கொண்டே பேசினான்.
அந்த நேரம் நிதின் அழைத்தான். ஹரிணி கண்களில் நீருடன் இருக்க..
ஹலோ என மறுமுனை சத்ய தேவ் தான்..
ருத்ரன் அவனுக்கு தனிமை கொடுக்க எண்ணி நிலா கொட்டிய பாலை தவிர்த்து வேறு வாங்க கீழே சென்றான்.
அவள் உன் கிட்ட பேசனுமாம்! என நிதின் ஹரிணி கிட்ட நீட்ட..
அவள் அழுது கொண்டே போனை வாங்கினாள்.
சத்யா! என உருக்கமாக ஹரிணி அழ…
இதுக்கு தான் முத்தம் கொடுண்ணு கேட்டியா? என சத்ய தேவ் துடிக்கும் உதடுகளில் கேட்க..
என்னை மன்னிச்சிடு சத்யா! என்னோட மனசுல ஒரே குழப்பமா இருந்தது. நம்ம ரெண்டு பேருமே தடுமாறி நின்னோம்! நீ கொடுக்க கிட்ட வந்த முத்தம் தான் எனக்கு உண்மைய உணர்த்துச்சு என அழுது கொண்டே அவள் கூற.. ( அவர்கள் இருவரும் முத்தம் கூட கொடுத்து கொள்ள வில்லை என்பது முக்கிய கூற்று)
சத்ய தேவ் ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போ வயசு வித்தியாசம் தெரியலயா? என கேட்டான். அதற்கு அவளிடம் பதில் இல்லை.
இரு பக்கமும் அமைதி நிலவியது. எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்!
ஹரிணி அமைதி காக்க..
என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே டி! அப்போ நான் உன்னோட மனதுக்கு நெருக்கம் இல்ல மினிஸ்டர் சார் தான் உன்னோட எல்லாமே! அதனால.. என சத்ய தேவ் சொல்ல…
ஹரிணி சோர்ந்து அழ ஆரம்பித்தாள்.
போனை அவன் கிட்ட கொடு! என சத்ய தேவ் சொல்ல..
நிதின் காருக்கு வெளியில் நின்றான். அவளுக்கு தனிமை அவசியம் என தோன்றியது.
அவனை அழைக்க வில்லை ஜன்னலை தட்டினாள்.
உன் கிட்ட கொடுக்க சொன்னான். என நீட்ட போனை வாங்கி கொண்டு கொஞ்சம் தொலைவுக்கு சென்றான். நிதின்.
ஹலோ! என சத்ய தேவ் அழைக்க..
நான் போட்டிக்காக அவளை லவ் பண்ணல! உண்மையாவே பிடிச்சு இருந்தது. அவள் எனக்காக பிறந்தவள்! சோ இது என்னோட லைஃப்! அது ஹரிணி தான் என்றான் .நிதின்.
அவளை நல்லா பார்த்துக்க! என்று சொல்லி போனை வைத்து விட்டான். சத்ய தேவ்!
தொடரும்…
EPISODE 97
ஒரு வேளை நீ சொல்ற மாதிரியே நடந்தாலும், உன்னை தான் தேவ்க்கு பிடிக்காதே! அவன் வீட்ல சொல்றதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்டின்னு தேவ் உன் கிட்ட சொன்னால் என்ன பண்ணுவ? என வீணா கேட்க..
ரிதம் தன் நண்பியை பார்த்தாள்.
வீனா போதையை கட்டு படுத்தி கொண்டு தலையை உலுக்கியவள். அது அப்படி இல்ல ரிதம்! அவனுக்கு உன்னை பிடிக்காதுன்னு… சொன்னதுனாள தான்! என தடுமாறினாள்.
என்ன? இப்போ என்ன சொல்ல வர? என்னை லவ் பண்ணாம, ஒரு வேளை கல்யாணம் நடந்தால், அதுவும் வீட்ல வற்புறுத்தி சக்தி என்னை கல்யாணம் பண்ணா! நான் என்ன பண்ணுவேன்? அது தானே உன் கேள்வி என ரிதம் கேட்டாள்.
ஆக்னஸ் முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவள். அவர்களின் தீவிர உரையாடலை பார்த்து என்னாச்சு? என பார்த்தாள்.
ரிதம் பற்களை கடித்து கொண்டு ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். அவளின் இந்த அமைதியான தோற்றத்தை பார்த்து இருவரும் அருகில் வந்து ஹே ரிதம் பேபி! வாட் ஹேப்பன்? என கேட்க.
ரிதம் மண்டியிட்டு வீனா அருகில் வந்தவள் போதையில் தள்ளாட கூடாது என தன்னை கண்ணம் கன்னமாக தட்டி கொண்டு இருக்க..
வீனா எட்சில் கூட்டி விழுங்கி கொண்டே ஹே என்ன டி பண்ற? என கேட்க..
ரிதம் வேக மூச்சு எடுத்து விட்டு கொண்டே வீட்ல வற்புறுத்தி எதுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க? அப்படியே கல்யாணம் பண்ணி வச்சா! நான் அவனை டிவோர்ஸ் பண்ணிடுவேன்.
என்ன டி இப்படி சொல்ற?
ரிதம் கண்கள் கலங்க நீ தானே சொன்ன வீணா! அவன் என்னை லவ் பண்ண மாட்டான்னு, அவன் என்னை பண்ணாலன்னா எனக்கு அவன் வேணாம்! வேணாம்! வேணாவே வேணாம்! எனக்கு அவனை விட அவனோட காதல் வேணும்! நான் தான் அவன் மேல பைத்தியக்கார தனமா இருக்கேன் ல! அவன் எல்லாரையும் ஒரே போல தான் நடத்துறான். ஆனால் எனக்கு தான் அது காதல் மாதிரி தெரியுது! அன்னிக்கு… அன்னிக்கு பால்கணியில் வச்ச கண் வாங்காமல், என்னை பார்த்திட்டு இருந்தான். ஆனால் இன்னிக்கு காலையில் ஹரிணியோட தாலிய கழட்டி கொடுத்திட்டு வான்னு கூப்புடுறான். என தேம்பி தேம்பி அழுதவள் அப்போ அவனோட காதலுக்கு நான் தகுதி இல்லல்ல! என அழுது கொண்டே சுருண்டு விழுந்தாள். ரிதம்.
லண்டன்ல படிக்கும் போதும் சரி வெளியே சுற்றும் போதும் சரி ரிதமின் வார்த்தையில் இருந்து வரும் ஒரே பெயர் சத்ய தேவ் தான் இதய துடிப்பின் எண்ணிக்கைய விட அதிகமாக அவள் அவனுடைய பெயரை உச்சரித்து இருக்கிறாள். தனக்கு எதிரில் சுருண்டு கிடக்கும் ஆருயிர் தோழியை பார்த்தார்கள். இருவரும்.
வீனா கண்களில் ஒளியுடன் ஆக்னஸ் நம்ம இங்கே இருந்து ஊருக்கு போகின்றோம் அப்டின்னா ரிதம் – சத்ய தேவ் கூட சேர்ந்து வாழறதை பார்த்திட்டு தான் டி போகனும் என தீர்க்கமாக கூறினாள்.
ஆக்னஸ் உற்சாகமாக சிரித்து கண்டிப்பா நானும் அதை தான் நினைச்சேன். என வீணா அவர்களின் விசாவை இப்பொழுதே ஆறு மாதத்துக்கு நீட்ட அப்ளை செய்து இருந்தார்கள்.
அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீனா கதவை திறக்க..
இன்பா இருந்தார். அங்கில் என அவர்கள் அழைக்க..
பிளீஸ் கால் மி டாட்! என புன்னகையுடன் கூற..
இருவரும் சிரித்து கொண்டு டாடி என அழைத்தார்கள்.
டிம்பிள் என்ன பண்றா? என இன்பா கேட்டார்.
வீனா கொஞ்சம் தயங்கி கொண்டே நிற்க..
சொல்லுங்க மா! என மீண்டும் கேட்டார். ஆக்னஸ் கொஞ்சம் சிரித்த படி அவள் டயர்டா ஃபீல் பண்ணா! இப்போ தூங்கிட்டு இருக்கா! என கூறினாள்.
இன்பா தீவிர யோசனைக்கு பிறகு அவ்வளவு சீக்கிரம் ரிதம் தூங்க மாட்டாளே! என்ன ஆச்சு சொல்லுங்கம்மா! அவ ரொம்ப வெக்சா இருந்தா கொஞ்சம் ட்ரிங்க் பண்ணா ரிலீப்ஆ ஃபீல் பண்ணுவா! என்று சொல்ல..
அதை கேட்டதும் பெண்கள் இருவரும் ஆச்சரியத்துடன் அப்போ குடிக்கிறது தப்பு இல்லையா டாடி இங்க அதிகமா யாரும் குடிக்க மாட்டாங்களே அதுக்கு நிறைய ரெஸ்ட்ரிக்ஷன் இருக்குன்னு கேள்விப்பட்டோம் என்று அவர்கள் கூற…
இன்பா அவர்கள் இருவரையும் பார்த்து, என்னோட பொண்ணு என் பையன விட அதிக சுதந்திரமா இருக்கணும்! எதுக்கும் தயங்க கூடாது. என் பையன் ஃபாரின் படிக்க போகாம அம்மா பின்னாடியே தான் இருக்கான். ஆனால் ரிதம்! அவளை நான் அப்படி வளர்க்கல.. என கூறினார்.
இதை கேட்டதும் ஆக்னஸ், மற்றும் வீனா இருவர் மனதிலும் இன்பா உயர்ந்து நின்றார்.
சரி மா அவள் எப்படி இருக்கா? என இன்பா கேட்க..
டாடி! அவள் ஆல்ரெடி ஃபுல் ட்ரிங்க்! ஒன்னும் பிரச்னை இல்ல! முன்னை விட இப்போ ஓகே என சொல்ல..
என் பொண்ணு கடந்து வந்திடுவாளா? என தவிப்புடன் இன்பா கேட்க..
நோ பிராப்ளம் டாடி! அவள் நாளைக்கே ரெடி தான்!
என்ன?
இல்ல டாடி அது அவள் ஓகே! நாங்க சிக்ஸ் மந்த் அவள் கூட தான் இருக்க போறோம் நீங்க கவலை படாதீங்க டாடி! என இருவரும் கூறினார்கள்.
ஓகே ஏஞ்சல்ஸ் நான் ஒரே ஒரு தடவை என் டிம்பிள் அ பார்த்துக்கிறேன்! என கேட்க..
தாராளமா டாடி! என அவர்கள் நகர்ந்து கொள்ள..
இன்பா உள்ளே சென்று தன் மகனை பார்த்தார். உள்ளம் ஒரு நிமிடம் கலங்கி தான் போனது. ஆசை மகள் எதற்கும் கலங்க விடாமல், பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் இன்பாவின் முதல் கனவு! ஆனால் இன்று அவள் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தவித்து நின்றார்.
ரிதம் அந்த போதை கலக்கத்தில் என்ன வேணான்னு சொல்லிடுவியா டா? சொல்லு உனக்கு நான் வேணாமா? அப்போ உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன் டா! நீ எனக்கு வேணாம்! யூ! உன்னை என் பப்பி விட்டு கடிக்க விடுவேன் டா! என உளறி கொண்டே கிடந்தாள்.
பப்பி, டிவோர்ஸ்.. என ரிதம் உலறுவதைக் கேட்டு இன்பா அப்படியே நின்று கொண்டிருக்க..
ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் அச்சச்சோ அவர் வேற சத்தியத்தை பத்தி எல்லாம் உளறிகிற மாதிரி இருக்கே சீக்கிரம் போடி என பதட்டத்துடன் அவர்கள் இருவரும் இன்பா அருகில் வந்தார்கள்.
டாடி அது ஒன்னும் பிரச்சனை இல்ல! ரிதம் எதையோ நினைச்சு உளறிட்டு இருக்கா! நீங்க போங்க! நான்க அவளை பத்திரமா பாத்துக்கறோம். நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்! என்று வீணா கூற..
ஆக்னஸும் அதே போல “ டாடி என்னதான் இருந்தாலும், எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு! அதனால அவ கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கா! ஆனா சரியாயிடுவா டாடி! ரிதம் ரொம்ப என்தூசியாஸ்டிக்! எப்பவும் துரு துருனு இருப்பா! அதுதான் எங்களை அவ கூட ஒட்ட வச்சது! நீங்க கவலைப்படாதீங்க டாடி? அவ சீக்கிரம் சரியாயிடுவா! அதுக்கு நாங்க கியேரண்டி என்று இருவரும் சொல்ல..
இன்பா உதட்டை கடித்து தன் துக்கத்தை அடக்கிக் கொண்டவர். சரி மா பத்திரம் என்று வெளியே வந்தார்.
அங்கே வந்ததும் மித்ரன் இன்பாவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
என்னடா என்று இன்பா மீசையை தடவிக் கொண்டே அருகில் வர..மித்திரன் இன்பாவை முறைத்தார்.
இப்போ எதுக்குடா என்னை முறைக்கிற? என்று இன்பா கேட்க
மித்ரன் ஒரு பெருமூச்சுடன் அந்த நித்தின் அப்புறம் ஹரிணி பற்றி உனக்கு நேத்து நைட்டே தெரியும் தானே! என்று கேட்க
இன்பா அமைதியாக இருந்தார்.
டேய் கேட்டதுக்கு பதில் சொல்லு என்று மித்ரன் இன்பாவை கோபமாக பார்க்க..
தெரியும்! இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்ற? என்று கேட்க
மித்ரன் இன்பாவை புரியாத பார்வையில் அப்புறம் எதுக்குடா கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண? நேத்தே சொல்லி இருந்தா கல்யாணமும் நடந்திருக்காது. இந்த அளவுக்கு ரிதம் ஃபீல் பண்ணி இருக்க மாட்டாளே! என்று மித்ரன் சொல்லிக் கொண்டிருக்க
இன்பா ஒரு பெரும் மூச்சை விட்டு என்னோட கணக்கு உனக்கு புரியாது. இது இப்படி தன் போகணும்!
என்னடா பொல்லாத கணக்கு! உன்னோட கணக்கு! பாவம் உன்னால குழந்தை எவ்ளோ கஷ்டப்படுற தெரியுமா? நீ சொன்ன ஆளுங்க இந்த ரெண்டு மாசமா பாலோ பண்ணி அவனோட ஃபுல் ஹிஸ்டரியும் கண்டுபிடிச்சாங்க! அவன் ஹரிணியை லவ் பண்ணான்னு தெரிஞ்சும், ஏன்டா அமைதியா இருந்த? என்று மித்ரன் கேட்க
இன்பா அவனைப் பார்த்து ஒருவேளை நான் அப்பவே எல்லாமே சொல்லி இருந்தனா, அந்த நித்தின் கிரிமினல் மூளை வச்சு ஏதாவது ட்ரிக் பண்ணி தப்பிச்சிருப்பான். ஒரு வேலை நான் எல்லாத்தையும் சொல்லி, ரிதம் என்ன தப்பா நினைச்சுட்டா? சரி அத விடு அந்த நித்தின் பெயருக்காக ஊருக்காக என் பொண்ண கல்யாணம் பண்ணி இருந்தா? என்ன பண்றது? சொல்லு ..
மித்ரன் கொஞ்சம் யோசித்துக் கொண்டே அது எப்படிடா அப்படி பண்ணுவான்? என்று மித்ரன் கேட்க
பசங்க நாய் மாதிரி தண்ணில விட்டால் நீச்சல் தெரியலன்னா கூட நீந்த தான் செய்வாங்க! நீ எந்த தண்ணின்னு பாக்க மாட்டாங்க! கண்ட இடத்தில் விழுந்து கூட எழுவாங்க! ஆனால் என் பொண்ணு! அவள் தேங்காய் குள்ள இருக்க தண்ணி மாதிரி! கங்கைய விட புனிதமான தண்ணி எது தெரியுமா? இளநீர் தேங்காய் குள்ள இருக்குற அந்த தண்ணி தான்! அதனால நானே என் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க விரும்பல! அவளுக்கு வாழ்க்கையில் இவ்ளோ பெரிய தோல்வி வந்தால்தான், அதை பியர் பண்ற அளவுக்கு அவளுக்கு ஸ்ட்ரெந்த் கிடைக்கும்.
அதன்பின் மித்ரன் எதுவும் பேசவில்லை அவன் கையில் இருக்கும் நித்தின் பிரகாஷ் மற்றும் ஹரிணி இருவருடைய புகைப்படங்களையும் பார்த்தான்.
என்ன சொல்வது? இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்காலோ! இவளால ஒரு பையன் காதல் தோல்வியில தவிச்சிட்டு இருக்கான்! என்று சத்திய தேவ் பற்றி மித்ரன் நினைத்தார்.
சரி போதுமே கொஞ்சம் சத்யதேவ பாத்துட்டு வருவோம் இங்கே சத்யதேவ் ஹரிணியிடம் பேசிவிட்டு அப்படியே அமர்ந்திருக்க
அடுத்த அரை மணி நேரத்தில் தடாலடியாக அதிரடியாக தேஜு உள்ளே வந்தார்.
ராம் மற்றும் கீதா இருவரும் அவளை பார்த்ததும் கோபம் வர நம்ம பொண்ணு என்று கீதா கலங்கி நிற்க
தேஜி நேராக சூர்யாவை பார்த்து, எனக்கும் இப்ப நடந்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எதுவும் தெரியாது சத்திய தேவ் எப்படி இருக்கான்? அவனை பார்த்துட்டு போறதுக்கு தான் நான் வந்தேன்! என்று வேகமாக மேலே செல்ல..
எங்க பொண்ணு தயவு செய்து எங்க பொண்ணு எங்க கூட அனுப்பிடுங்க ப்ளீஸ் அவளோட வாழ்க்கையை நாங்க கெடுக்க விரும்பல என்று ராம் மற்றும் கீதா இருவரும் சொல்ல..
அந்த நேரம் சூரிய பிரகாஷ் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் ராம் அமைதியாக விட கீதா எங்க பொண்ண பிளீஸ் என்கூட அனுப்பிவிடுங்க. என்று கையெடுத்து கும்பிட.
சூர்யா நேராக கீதாவின் அருகில் சென்றவர். கொஞ்சம் அமைதியா இரு மா! பொறுமையா பண்ணிக்கலாம்! இதை பத்தி பேசலாம் விடு என்று சமாதானம் செய்தார்.
அனைவரும் சதி தேவ்க்கு ஆறுதலாக சொல்லிக் கொண்டிருக்க..
அவன் அனைவரையும் பார்த்து “ நான் எப்பவும் போல தான் இருக்கேன் என்ன நெனச்சு யாரும் கவலைப்பட்டு, குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்! நான் சந்தோஷமா இருக்கேன். எனக்காக அந்த ஆண்டவன் எழுதி வச்ச பொண்ணு ஹரிணி இல்லை! எனக்கு இங்கே இருக்கிற எல்லாரையும் விட கடவுள் மேல நம்பிக்கை அதிகம்! அதனால என்ன நினைச்சு யாரும் வருத்தப்பட்டுட்டு இருக்காதீங்க!! சித்தி! நான் கவலைப்படல! நான் உங்களோட வளர்ப்பு சித்தி, நான் எப்பவுமே ஸ்ட்ராங். உங்கள போல. என மை விழியின் பக்கம் சென்று கூறினான்.
மைவிழி தன் மகனை கர்வமாக பார்த்தவர். எனக்குத் தெரியும் சத்ய தேவ்! என் பையனுக்கு உனக்கு இவ ஜோடி இல்ல! இவளை விட படிப்பிலும் அழகுலையும் அறிவிலும் அந்தஸ்துளையும் ஒசத்தியா இருக்கிறவ தான் உனக்கு பொண்டாட்டியா வரப்போறா! என் பையன ஏமாத்திட்டு போயிட்டால்ல என்று திட்டிக் கொண்டிருக்க..
சத்ய தேவ் மை விழியின் கையைப் பிடித்து திட்டாதீங்க சித்தி!! அது அவளோட வாழ்க்கை! ஹரிணி அவளோட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிட்டா. இந்த காதல்..அது unconditional ன்னு நான் இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன். என அனைவரையும் பார்த்து கூறி விட்டு சென்றான்.
ருத்ரன் தன் மாமனின் பின்னால் சென்று விட்டான்.
தேஜு அவன் பின்னால் செல்ல..
ஹே எங்கே போற? என் பையன் சொன்னது காதில் விழலயா? என மை விழி அதட்ட
தேஜு அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்க வில்லை. சத்ய தேவ் கிட்ட பேசி விட்டு தான் சென்றார்.
கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் இயல்பு நிலைக்கு வர கிட்ட தட்ட ஒரு மாதமே எடுத்து கொண்டது.
பெங்களூரில்…
மிதுன் அங்கும் இங்கும் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தான்.
என்ன அண்ணா அங்கேயும் இங்கேயும் இப்படி நடக்குற? என்ன ஆச்சு? என இதழ் கேட்க.. இனியா, பவன்யா, சிவன்யா அனைவரும் அவனை தான் பார்த்தார்கள்.
ஒன்னும் இல்ல என மிதுன் முகத்தை திருப்பி கொள்ள..
அந்த நேரம் பப்பிய அழைத்து கொண்டு செல்ல ருத்ரன் மற்றும் சத்ய தேவ் இருவரும் வந்தார்கள். சக்திய பார்க்க வேண்டும் போல இருக்க சூர்யா வர சொன்னார்.
அட சும்மா சொல்லு அண்ணா! என அனைவரும் அதட்ட..
மாமா என்ன விசயன் சொன்னால் நாங்களும் யோசிப்போம்! என இனியா சொல்ல..
மிதுன் முகம் கொஞ்சம் கோபம் மற்றும் காற்றாமையுடன் அது எப்படி அந்த மாதிரி ஒரு வார்த்தைய அதுவும் என்ன பார்த்து சொல்லலாம் என்று மித்துன் இன்னும் கோபத்துடன் உதடு துடிக்க நடந்து கொண்டிருந்தான்.
என்ன சொன்னாதானே தெரியும் இப்படி தலையும் புரியாமல் வாழும் புரியாமல் பேசினா என்ன அர்த்தம் என்று இதழ் கேட்க
உன்னோட அப்பா அன்னைக்கு ரிதம் ஓட கல்யாணத்துல ரிதம கல்யாணம் பண்ணி சொன்னா நேரத்துல நான் படிக்கலைன்னு சொல்லிட்டாரு! என்ன பாத்தா எப்படி தெரியுது? என்று மிதுன் சொல்ல
இதை கேட்டதும் அங்கிருக்கும் அனைவருக்கும் சிரிப்பதா இல்லை அழுவதா என்று இரண்டும் கெட்டவனாக இருக்க எதுவும் பதில் சொல்லல. என்ன அவ்வளவு கேவலமா நினைச்சுட்டாரு! என்று மிதுன் சொல்ல..
இத்தனை நாட்களும் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிரு வந்திருந்த சத்திய தேவ்க்கு மிதுன் சொன்னதும் சிரிப்பு வர.. உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான்.
ருத்ரன் வாய்விட்டாய் சிரித்து விட்டான் சிரிப்பு சத்தம் வந்த பக்கம் திரும்ப
அங்கே ருத்ரன் மற்றும் சத்யதேவ் இருவரும் இருக்க
ச்ச இவனுங்க முன்னாடியே நாம இப்படி நம்ம வாயாலயே அவமானப்படனும் என்று நினைக்க.
மாமா கரெக்டா தான் சொல்லி இருக்காங்க! பரவால்ல! அப்போ மிஸ்டர் மிதுன் தேவ் எங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்க மாட்டார் போல! எங்க அக்கா தான் மிதுன் தேவ கல்யாணம் பண்ணிக்வா! அப்போ தாலி கூட எங்க அக்கா தான் மிதுன் சார் கழுத்துல கட்டுவான்னு நினைக்கிறேன்! என்று ருத்ரன் சொல்ல
மிதுன் கோபமாக டேய் நீ ரொம்ப ரொம்ப என் வழியில கிராஸ் பண்ற? வாயை அடக்கிக்க என்று சொல்ல
ஹலோ ஸ்டுடென்டுடு!!! அரியர் எக்ஸாம் வருது காலேஜ் வரணும். உங்க ஆளுக்கு நான் கூட எக்ஸாம் நேரம் வரதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு என்று ருத்ரன் கண்ணை சிமிட்டிக்கொண்டே சொல்ல
மித்துனுக்கு இன்னும் அவமானமாக போக சத்ய தேவ் சிரித்துவிட்டு சரி நம்ம கிளம்பலாம் என்று அந்த குட்டி பப்பியை தூக்கிக் கொண்டே கிளம்பினார்கள். .
மாமா இங்க பாருங்களேன் உன்னை விட இப்ப பப்பி வளர்ந்துடுச்சு என்று ருத்ரன் சொல்ல
தூரிகா சத்திய தேவை பார்த்து “அண்ணா ஒரு நாள் இருந்துட்டு போயேன்! ”என்று சொல்ல
அவன் பெருமூச்சுடன் வீக்எண்டு வரேன். பட் இப்போ நான் போறேன் குக்கு என்று கிளம்பினான்.
இங்கே ரிதம் அவளுடைய அப்பார்ட்மெண்டுக்கு வந்து சேர்ந்தாள்.அவளாக வரவில்லை அக்னஸ் மற்றும் வீணா இருவரும் அவளை கட்டாயப்படுத்தி கூட்டி வந்தார்கள். இருவரும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க..
ரிதம் அவர்களை கண்டு கொள்ளாமல் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
ஸ்லீப்பிங் பிரின்சஸ் மாதிரி தூங்குகிறாளே!! என்று ஆக்னஷ் சொல்ல
அப்போ கிஸ் பண்றதுக்கு பிரிண்ஸ் எப்ப வருவான்? என்று வீணா கேட்டாள்.
ஆக்னஸ் பெரு மூச்சுடன் நம்ம நம்ம ரெண்டு பேர் தான் வர வைக்கணும் என்று கூற
கண்டிப்பா வர வைக்கலாம் கூடிய சீக்கிரத்துல சத்திய தேவ் ரிதம் பின்னாடி சுத்துற மாதிரி பண்ணனும் என்று இன்னொரு முறை சபதம் எடுத்துக் கொண்டார்கள்.
அக்னஸ் மற்றும் வீணா சபதம் எடுத்தது போல் நடக்குமா?
அடுத்து என்ன நடக்கப்போகிறது? சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரும் சந்திக்கும் காட்சிகள் நித்தின் பிரகாஷ் தன்னுடைய அக்கா தான் தம்பி தங்கைகளுடன் சேரும் நாள் எங்கே?
ஹரிணி மற்றும் சத்ய தேவ் இருவருடைய அடுத்த சந்திப்பு எப்படி இருக்கும்?
இதை அடுத்தடுத்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்
அடங்காத அதிகாரா!!
தொடரும்.. வருவான்…
EPISODE 98
அந்த சத்ய தேவ் வீடு எங்கே இருக்கு? அதை முதலில் கண்டு பிடிக்கணும் வீணா! என ஆக்னஸ் கூற..
ஆமா நீ சொல்றதும் கரெக்ட் தான்! அவனோட வீட்டு பக்கத்தில் மட்டும் ரிதம் போயிட்டா ஈசியா நிறைய பிளான் என் கிட்ட கை வசம் இருக்கு! என வீணா புன்னகையுடன் கூறினாள்.
அப்படியா? என்ன பிளான்? என ஆக்னஸ் கேட்க..
முதல்ல நம்ம அவனோட வீட்டுக்கு எதிரில் இருக்கும் அப்பார்ட்மெண்ட்க்கு குடி போகனும்!
ஹே வேற லெவல் அதே போல என் கிட்ட கூட ஒரு யோசனை இருக்கு!
சொல்லு சொல்லு!.
ரெண்டு மெதெட் ல ரிதம வச்சு அந்த தேவ்வ அட்டெக் பண்ண போறோம்! ஒன்னு மெத்டாலஜி, இன்னொன்னு சைக்காலஜி, ஒரு பையன் எப்போவுமே ஒரு பொண்ணை பத்தி திங்க் பண்ண அந்த பொண்ணு எப்போவும் அவனோட கண்ணில் பட்டு கிட்டே இருக்கணும்! அப்புறம் அந்த பையன் மனசுல அந்த பொண்ணை பத்திய ஓவர் ஆல் ஜட்ஜ்மெண்ட் என்னன்னு தெரிஞ்சு கொஞ்சம் பட்டி டிங்கரின் பார்த்தால் அந்த தேவ் பிரின்ஸ் – ரிதம் பிரின்ஸஸ் கிட்ட விழுந்துடுவான். என வீணா கூறி முடித்தாள்.
ஓஹ அப்போ இதை வச்சு தான் மாசம் மாசம் ஒரு பையன் கூட date போறியா? என ஆக்னஸ் கேட்டாள்.
ஆமா என வீணா தோலை குலுக்கி கொண்டே சத்ய தேவ் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்க..
குட்டி பப்பி விடாமல் கத்தி கொண்டிருந்தது. ஹே டாகி ஓவரா கத்தின உன்னை சூப் வச்சு குடுச்சிடுவென் என இரு பெண்களும் நாய் குட்டி சத்ய தேவ் கிட்ட சொல்ல..
போங்கடி கொங்காங்கோ! என வடிவேல் பாணியில் நினைத்து கொண்டு தலையை தொங்க போட்டு கொண்டது.
அந்த நேரம் வெளியே நாய் குட்டி கத்தும் சத்தம் கேட்க..
ஹே நாயி பூனை நரி எல்லாம் தட்டில் இருக்கும் போது தான் நல்லாருக்கும். இப்படி வள வளன்னு ஓயாம கத்திட்டு இருக்கு! என வீணா சொல்ல..
அந்த சத்தம் வெளியே இருந்து வருது! என ஆக்னஸ் சொல்ல..
எவன் டா அது? என கடுப்புடன் கதவை திறந்தாள். வீனா..
அங்கே ருத்ரன் மற்றும் சத்ய தேவ் இருவரும் நாய் குட்டியுடன் எதிர் வீட்டு கதவை திறக்க செல்ல..
ஹே ஆஸ் ஆஸ்! தேவ் தேவ் டி! என வீணா அரக்க பறக்க கத்தி கொண்டே உள்ளே வந்தாள்.
என்ன? என ஆர்வத்துடன் ஆக்னஸ் எட்டி பார்த்தாள். அவர்களிடம் ஒரு குட்டி நாய் துள்ளி கொண்டு சத்ய தேவ் கால்களை சுற்றி கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தது.
வீனா உற்சாகத்துடன் பார்த்தியா நான் இப்போ சொன்னேனே அதே போல அந்த தேவ் பிளான் போட்டு ரிதம லவ் பண்ண வந்திருக்கான். என வேகமாக ரிதம் கிட்ட சொல்ல சென்றார்கள்.
ஹே பேபி! ஹே ரிதம்! உனக்கு ஹெப்பியான விசயத்தை சொல்ல போறேன் சீக்கிரம் எழுந்திரு டி; என அவர்கள் அவளை உழுக்க.
என்ன வீணா போனவளே! என தமிழில் கூறினாள். ரிதம்.
வெளியே எதிர்த்த வீட்டில் சத்ய தேவ் இருக்கான். உன்னை பார்க்க தான் பிளான் பண்ணி எதிர்த்த வீட்டுக்கு குடி வந்திருக்கான். கூடவே உன்னை உசார் பண்ண குட்டி பப்பி கூட வச்சிருக்கான். எப்படியோ வந்த விசயம் நல்ல படியா முடிய போகுது என வீணா சொல்ல..
அது அவனோட வீடு! அதனால் வந்திருக்கான். இதுல என்ன ஆச்சரியம் இருக்கு?
அப்போ அந்த பப்பி!. என ஆக்னஸ் கேட்க..
என் தம்பி அவனுக்கு வாங்கி கொடுத்தது. என ரிதம் கண்களை தேய்த்து கொண்டே கூறினாள்.
என்ன ரிதம் சொல்ற நாங்க பெரிய பிளான் பண்ணோம் ஆனால் நீ?
உங்க பிளான் என்ன? கொஞ்சம் சொல்லுங்க கேட்போம்!.
அது என அவர்கள் யோசித்து வைத்திருந்த அனைத்து விடயத்தையும் கூறி கொண்டே அவளை பார்க்க.. ரிதமின் முகம் அஷ்ட கோணலாக வளைந்தது.
என்ன டி?
ரிதம் தலையை கோதி கொண்டே இதெல்லாம் நான் டிரை பண்டேன்.
வாட்? அப்போ கிளாமர் டிரை பண்ணயா?
ம்ம் என உதட்டை பிதுக்கினாள். ரிதம்..
என்ன நடந்தது? அவன் பிளாட் ஆகலயா? என ஆக்னஸ் கேட்க..
ம்ம் ஹி ம்ம்! என ரிதம் கூறினாள்.
என்ன பண்ண? என வீணா கேட்க..
ரிதம் பெரு மூச்சுடன் தொப்புளில் தோடு, குட்டி டாப் பாட்டம் டிரேஸ் என அனைத்தையும் கூற..
வீனாவின் உற்சாக முகம் வடிந்து என்ன டி சொல்ற? இவன் இப்படி இருக்கானே!
விடுங்க நீங்க ஆல் இந்தியா டூர் போறேன்னு சொன்னீங்க தானே! போயிட்டு வாங்க! இவன் எனக்கு வேணாம் என ரிதம் தலையணையில் தலையை புதைக்க..
அதெப்படி விட முடியும்! உனக்கு கிளாமர் பத்தி ஒண்ணுமே தெரியாது. நீ ட்ரெஸ் எடுத்து காட்டு! நான் இது வரைக்கும் 69 பாய்ஸ date பண்ணி இருக்கேன். இவளோ விசயம் நடந்திருக்கா? முன்னாடியே சொல்லி இருக்கலாமே! 24 மணி நேரமும் அவனையே நினைச்சிட்டு இருந்திருக்க.. சரி இப்போ என் அனுபவத்தில் சொல்றேன். முதல்ல உன்னை கொஞ்சம் மாத்தணும்! என வீணா உடையை களைந்தாள்.
ஆக்னஸ் நிறைய காஸ்மெட்டிக்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்தாள்.
ரிதம் அவர்களை சலிப்புடன் பார்த்து விட்டு தூங்க ஆரம்பிக்க..
வீனா இறுதியில் ஒரு உடையை எடுத்தாள். பெரு மூச்சுடன் பார்க்க .
ஆக்னஸ் அனைத்து காஸ்மெட்டிக் புரோடெக்ட்ம் உள்ளே கொண்டு வந்தாள்.
என்ன ட்ரெஸ் எதுவும் கிடைச்சதா? என கேட்க..
ம்ம் தேடினேன். இந்த ட்ரெஸ் என ஒரு ப்ளவுஸ் மட்டும் காட்டினாள்.
இதுக்கு பாட்டம்? என ஆக்னஸ் கேட்க..
அதை அப்புறம் பார்த்துக்கலாம் என ரிதமை தள்ளி தள்ளி என தள்ளி விட்டு உடை மாற்ற அனுப்ப..
ரிதம் பெரு மூச்சுடன் இவழுங்கள முதலில் ஊருக்கு அனுப்பணும் என அந்த பிளவ்ஸ் அணிந்து கொண்டு அந்த பிளவுஸ் புடவையை எடுத்தாள். You tube ல பார்த்து கட்டி கொண்டே வெளியே வர…
ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் அந்த பிளவ்ஸ்க்கு எந்த மாதிரியான பாட்டம்? ஹான் ஜீன்ஸ் பேன்ட் நல்லாருக்கும் என திரும்பி ஹே இந்த பாட்டம் போடு என கையில் இருக்கும் ஜீன் பேன்டை தூக்கி காட்டியவர்கள். ஒரு நிமிடம் ரிதம வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.
என்ன டி? என ரிதம் அவர்களின் முன் வந்து நிற்க..
Wow ரிதம் யூ லுக் pretty.. நான் இதை விண்டோ ஸ்கிரீன் அப்டின்னு நினைச்சிட்டென் என வீணா சொல்ல..
ஆக்னஸ் ரிதமின் அருகில் வந்து ஹே ரிதம்.. லவ் யூ டி! என ஒரு மாதிரி பார்க்க..
ச்சீ எட்டி உதப்பென் ஓடி போயிடு என ரிதம் கூறினாள்.
உடனே வீணா அவளை இழுத்து வந்து கண்ணாடி முன் நிற்க வைத்து ஹே பேபி இதை விட கிளாமர் ஆன ட்ரெஸ் எதுவுமே இல்ல பாரு உன்னோட front சும்மா நச்சுன்னு இருக்கு, அப்படியே பேக் வேற லெவல்.. அந்த ஹிப் இன்னும் செக்சீ! அந்த நாவல் பியற்சிங் சோ ஹாட் உலகத்துலேயே கிளாமர் ட்ரெஸ் இது தான்.. இந்த ட்ரெஸ் நேம் என்ன?
ம்ம் புடவை.. saree.. என கூறினாள். ரிதம்..
ம்ம் பெஸ்ட் கிளாமர் ட்ரெஸ் சாரி தான்! எந்த இடத்தை மாஸ்கலின் ஜெண்டர் காட்டினால் கெமிக்கல் ரியாக்சன் நடக்குமோ! அதை எல்லாம் இந்த காஸ்ட்யூம் காட்டுது என வீணா சொல்ல..
ரிதம் நொந்து கொண்டே போங்க டி! என சொன்னவள். நகர போக..
ஹே நிஜமாவே தேவ் பிரின்ஸ் பிளாட் ஆகி உன்னை இன்னிக்கே தூக்கிட்டு போயிடுவான். சொல்றத கேளு டி! என வீணா சொல்ல…
எதையோ யோசித்த ரிதம் மீண்டும் கண்ணாடியின் பக்கம் வந்தாள். தன்னை தானே ஒரு முறை பார்த்து கொண்டவள் நினைவில் அன்று ஊஞ்சல் பக்கம் நின்று கொண்டிருந்த போது மேலே இருந்து சத்ய தேவ் வைத்த கண் வாங்காமல் பால் கணியில் தன்னை பார்த்தது நினைவுக்கு வர..
ஏனோ உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு.. வீனா அருகில் வந்து ஹே செம்மையா ஹாட்டா இருக்க? தெரியுமா! இன்னொரு சீக்ரெட் சொல்லவா?
என்ன என ரிதம் அவளுடைய கழுத்து செயின் டாலரை வாயில் வைத்து கடித்து கொண்டு கேட்க…
ஒரு தடவை அவன் கிட்ட பயாலஜியொட பிசிக்ஸ் பண்ணிடு.. அப்புறம் அவன் ஹிஸ்டரி அப்படியே தலை கீழா மாறிடும்! என்ன சொல்ற? என வீணா கேட்க..
ரிதம் மூக்கு விடைக்க முறைத்தவள். இந்த நினைப்பை வச்சிட்டு அவன் பக்கத்தில் நான் போனேன்னு தெரிஞ்சது! எனக்கு ஹிஸ்டரி இருக்காது! அவன் பொல்லாதவன் வீணா! இதுக்கு எல்லாம் சத்ய தேவ் மயங்க மாட்டான்.
ஆக்னஸ் அவளின் அருகில் வந்து “அது மாத்த பொண்ணுங்க கிட்ட தான் மயங்க மாட்டான்! உனக்கு அவன் மேலே maths ( அனைத்து கணிதமும் அடக்கம் infinite, real, imaginary, rational, irrational, accending, decending, PNR, போல இந்த உலகத்தை கணக்கு தான் ஆட்சி செய்து எண் இல்லாதது எதுவும் இல்ல அதே போல ரிதம் வாழ்க்கையில் சத்ய தேவ் இவான்) வித அதிக காதல் இருக்கு. கூடவே ஜுவாலாஜிக் எக்க சக்கமா இருக்கு! இப்படி கோல்டன் ஸ்ட்டேட்ச்சு மாதிரி அவன் முன்னாடி போய் நின்னா பொண்ணா இருக்க நானே உன்னை ஆவென பார்க்க சத்ய தேவ் உன்னை பார்வையிலேயே பிசிக்ஸ் பண்ணிடுவான். என கூறினாள்.
ஆஸ் நீயுமா! என ரிதம் முட்டை கண்களை விரிக்க..
அப்பொழுது தான் இதழ் அழைத்தாள்.
சொல்லு!
அங்கே தேஜு வந்த விசயம் , அவள் சத்ய தேவை பார்த்தது, அதன் பின் அங்கு அவன் பேசியது என அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.
ரிதம் பற்களை கடித்து கொண்டு சரி ஓகே டி! என்றாள். ..
இதழினி கொஞ்சம் தயக்கத்துடன் ரிதம் என்ன டி? என்ன ஓகே சொல்ற? அப்போ இன்னும் நீ சத்தி அண்ணாவை விரோயா தான் பாத்துட்டு இருக்கியா? எங்க அண்ணா உன்னை மாதிரி தான் கஷ்ட படுறான். உன்ன நான் எதுவும் சொல்லல! அட்லீஸ்ட் நார்மலா பேசலாமே! சின்ன வயசுல இருந்தே சண்டை போட்டுட்டு இருக்கீங்க! ரெண்டு பேரும் இப்போ பெரிய லவ் ஃபெய்லியர கடந்து வந்திருக்கீங்க! மேடம் இப்போ எல்லாம் உங்க முகத்தை கூட எங்ககிட்ட காமிச்சிக்க மாட்டேங்கிறீங்க!
நான் ரொம்ப பிசியா இருக்கேன்! போனை வை டி என்று ரிதம் கூறினாள்.
என்ன அப்போ உனக்கு பேச பிடிக்கலயா? நான் நல்லா இதழ் பேசுறன்! இதழின தூரிகா! என் அம்மா கிட்ட மட்டும் டெய்லி பேசுற! ஆனால் நாங்க எல்லாம் உனக்கு வேண்டாத ஆள் ஆகிட்டோம்! ம்ம்..
ஹே நிஜமாவே நான் கொஞ்சம் பிசி டி!
அப்போ இனிமே நீ என் கூட சேர மாட்டியா? இந்த வீக் வெளிய ட்ரக்கிங் போலாம்னு ஒரு பிளான்ல இருக்கோம்! வாயேன் ஜாலியா போயிட்டு வரலாம்!
ரிதம் அமைதியாகி சிறிது நேரத்துக்கு பிறகு அத நான் அப்புறம் சொல்றேன்!
நீ வர நீ வரவேண்டும் என்று இதழ் மீண்டும் கேட்க .
சரி நான் அப்புறம் பேசுறேன் என்று வேகமாக போனை கட் செய்தாள் ரிதம்..
Whose this?
லிப்ஸு என்று கண்ணாடியை பார்த்து ரிதம் தன்னுடைய உடலை சரி செய்து கொண்டு கூறினாள்.
வீனா மற்றும் ஆக்னஸ் அவளை பார்த்து ஆர்வமாக பேசி கொண்டிருக்க..
திடீரென ரிதம் மீண்டும் கண்ணாடி பக்கம் வந்தவள். சரியாக இடையை சரி செய்து கொண்டு பின்னால் மற்றும் முன்னால், அங்கங்கள் என உடையில் எந்தவித பாகங்களும் தெரியாத அளவுக்கு நேர்த்தியாக சரி செய்ய..
ஹே பேபி என்ன பண்ற? முன்ன தான் சாரி ரொமான்டிக்கா.. கூடவே பிசிக்ஸ்கு ஆப்ட்டா இருந்தது. இப்போ நீ என்னமோ ஸ்பிரிச்சுவலா மாறிட்டு இருக்க? என்று கூறினாள் வீணா .
ஸ்ப்ரிச்சுவல் தான்! கோயிலுக்கு போலாம்னு இருக்கேன்!
சாமி கும்பிட போறியா என்று ஆஷ் கேட்க..
ஆமா போயி அந்த சாமியை பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்.
சரி நாங்களும் வருகிறோம் என்று அவர்கள் கூடவே கிளம்ப
டிரஸ் சேஞ்ச் பண்ணுங்க டீ என்று சொல்லி அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.
ஆல்ரெடி சக்தி தரிசனம் கொடுக்க கோவில்ல தான் இருக்கான். சாரி சிவன் தரிசனத்தை பார்த்து விட்டு கோவிலில் தான் இருக்கான். இனிமேல் இந்த தரிசனம் எப்படி இருக்க போகுது வாங்க பார்க்கலாம்.
அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு பக்கத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
சத்திதேவ் ஒரு பக்கம் விட்டோதியாக அமர்ந்திருக்க..
ருத்ரன் அருகில் வந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
உடனே சத்யதேவ் என்னை பாக்குறதுக்கு பதிலா போய் மீனாட்சிய பாரு தரிசனத்தோட பிரசாதமும் சேர்ந்து கிடைக்கும் என்று கூற
மாமா என்று அதட்டினான். ருத்ரன்.
பின்ன எதுக்கு என்ன அப்படி பாத்துட்டு இருக்கேன் என்று சத்திய தேவ் கேட்க
நீங்க எதுக்கு இப்படி முகத்தை வச்சுட்டு இருக்கீங்க? இப்போ என்ன ஆச்சு
அதற்கு சத்ய தேவ் எதுவும் பேச எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
ருத்ரன் அருகில் அமர்ந்து ப்ளீஸ் மாமா இப்படி இருக்காதீங்க! ஏதோ நடந்தது நடந்து போச்சு! ஹரிணி அக்கா போயிட்டாங்க! அதை மறந்துடுங்களா! என்று கூற
சத்யதவ் ருத்ரனை பார்த்து நாளைக்கு மீனாட்சி உன்ன விட்டு போயிட்டா நீ என்ன பண்ணுவ?
மாமா என்று நெஞ்சு பதற எழுந்து நின்றான். ருத்ரன்.
ம்ம் இப்போ ஒரு ஃபீல அனுபவிக்கிறியே! அதை நான் இப்போ ரியலா அனுபவிச்சிட்டு இருக்கேன். எங்களுக்குள்ள… நாங்க ரெண்டு பேரும் லவ்வ விட அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப அதிகமா இருந்தது. அவளை நான் ஒரு நாள் கூட பிரிஞ்சுதுல்ல.. எனக்கு முன்னாடியே பொறந்திருக்கா! எல்லா நேரத்திலும் என் கூட இருந்தாள். என்னை பத்தி நிறைய சொல்லுவா தெரியுமா? எவ்வளவு கதை. ஆனா நான் சரியில்லைன்னு தோணுது! அந்த அண்டர்ஸ்டாண்டிங்!!! நான் சரியில்ல என்று சத்திய தேவ் கூறினான்.
மாமா அப்படியெல்லாம் இல்ல மாமா என்று இழுவையுடன் ருத்ரன் பேச..
சரி நடந்தத பத்தி என்ன இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டு போலாம் என்று சத்தியதேவ் அமைதியாக தியானம் செய்வதுபோல் அமர்ந்து கொண்டான் .
ருத்ரன் சத்யதேவியின் அருகில் வந்து அமர்ந்து மீனாட்சி பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் இதயமே வெளியே குதிச்சு சூசைட் பண்ணிக்கும் போல! சக்தி மாமா சொன்னது அப்படி இருக்குது! என்னால ஒரு நிமிஷம் கூட என்னோட கோல்ட் பிஷ் பிரிய முடியாது. என்று கழுத்தில் இருக்கும் அந்த தங்க மீனை பிடித்து வருடி பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் உன்னை என்ன பண்ண? ஹான்? நீ எனக்கு எதுவுமே பண்றது இல்ல! அதனால நான் உன்ன பாக்குறது இல்ல! எனக்கு நிதர்சனம் தான் ரொம்ப முக்கியம்! அதனாலதான் உன்னை வந்து நான் பாக்காம இருந்துட்டேன்! உன்ன பாக்கணும்னு தானே நீ பிளான் பண்ணி என்னை இப்படி கஷ்டப்படுத்துறியா? என்று கருவறையில் இருக்கும் சிவனை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள். ரிதம்.
சிவனும் என் பக்கத்துல உமையாள் இல்லையே என்று வருத்தத்துடன் நின்று கொண்டிருக்க…
உன்னை பற்றி எனக்கு நல்லாவே தெரியும் எங்க தாத்தா நெறைய சொல்லி இருக்காங்க! நீ சக்தி பின்னாடி சுத்தி இருக்கியாமே! கூடவே சத்தின்னு ஒரு பொண்ணு உன்னை தீவிரமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அவ உனக்கு கிடைக்காமல் நிறைய துண்டா இந்த உலகத்தில் விழுந்துட்டாலாமே! என்று ரிதம் சொல்ல
சிவன் முறைத்துக் கொண்டே இந்த மாதிரி பேசிறதை விட்டுட்டு உன் சக்தி பின்னாடி சுத்தினால், அவன் உன்னை திரும்பி பார்க்க வாய்ப்பு இருக்கு என சிவன் கூறுவது போல இருந்தது.
ரிதம் தனக்கு தானே சிரித்துக் கொண்டாள்.
சரி சரி நீ உன் சக்தி கிட்ட போ நான் என் சக்தி கிட்ட போக டிரை பன்றேன். நீ உன் சக்தியை பிடிச்சுக்கோ! அதுக்காக என் சக்தியை என்கிட்ட சேர்த்து விடாமல் பண்ணாத! ப்ளீஸ் do anything சக்தியை வந்து லவ் யூ என்று சொல்ல சொல்லிடு! என ரிதம் கூற..
என்னோட சக்தியே என்கிட்ட லவ் யூ சொல்ல மாட்டேங்கிறா! அலைய விடுறா இதுல நான் எப்படி உனக்கு ஹெல்ப் பண்ணுவேன். என்று சிவன் கேட்க
அதெல்லாம் எனக்கு தெரியாது எப்படியாவது நீ தான் பண்ணி வைக்கணும். சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடான்னு பாட்டெல்லாம் இருக்கு! நீ அதே மாதிரி ரிதமும் சக்தியும் சேர்ந்தா மாஸூ தான் அப்டின்னு நீ தான் ஆக்கணும் என்று ரிதமும் கூறினாள்.
எனக்கு தெரியாது உன்னோட சக்தி உன்னோட கைல உன் சக்தியை யூஸ் பண்ணி சக்தி கிடைக்க ஏதாவது பண்ணிக்க என்று சிவன் ரைமிங்கில் டயலாக் அடித்து விட்டு மற்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க..
ரிதம் சிரித்துக்கொண்டே சிவனை உருகி வழிபட்டாள் முதன்முதலாக…
ம்ம் இப்ப கூட தான் உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. நான் என் சக்திய பயன் படுத்தி சக்தியை எப்படி அடையலாம்ன்னு திங்க் பண்ண போறேன்! ஓகேவா? சும்மா உன்னை பார்க்க வந்தேன். என்று ரிதம் டாட்டா காட்டிவிட்டு நடக்க..
அந்த இடத்தை சுற்றி பிரம்மிப்புடன் பார்த்த ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
ரிதம் மெதுவாக கொண்டையை ஒரு முறை தொட்டுக்கொண்டு படிக்கட்டுகளில் நடந்து வர..
இது இந்த பொண்ணு நான் எங்கேயோ பார்த்திருக்கேனே? எங்க பார்த்தன்? எங்க பார்த்தன் என்று ஒருவன் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஹான் ஞாபகம் வந்திருச்சு! விவேகா என் மம்மி சின்ன வயசுல இதுபோல சாரி கட்டிட்டு ஜுவல்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஜம்முனு ஒரு போட்டோல கழுத்தில் மாலையோட கன்னத்துல சந்தனமெல்லாம் பூசிட்டு நிப்பாங்களே! ஆமா!!! அய்யோ அம்மா மாதிரி இன்னொரு பொண்ணா? என்று ருத்ரன் வாயை பிளந்து பார்த்தவன். உடனே இந்த அம்மாவுக்கு காட்டணும் எனக்குன்னு ஒரு தங்கச்சி பிறந்து இருந்தா! இது மாதிரி தான் இருந்திருக்கும்! என்று ருத்ரன் யோசித்துக் கொண்டிருந்தானே, தவிர, அது தன் அக்கா என்று அந்த மரமடைக்கு ஏறவில்லை.
உடனே ருத்ரன் வேகமாக அருகில் இருக்கும் சத்ய தேவை உசுப்ப ஆரம்பித்தான். மாமா! மாமா!! சீக்கிரம்..
ப்ச்! என்னடா ருத்ரா நான் தியானத்தில் இருக்கேன்!
மாமா அதை விடுங்க அங்க பாருங்க! சீக்கிரம் கண்ணை முளிங்க! அய்யோ சீக்கிரம் மாமா! என் தங்கச்சி வரா! எனக்கு மட்டும் தங்கச்சி இருந்தால் இப்படி தான் இருந்திருப்பா! அப்படியே எங்க அம்மா மாதிரியே இருக்கா! என்று ருத்ரன் சொல்ல..
தங்கச்சியா என்று சத்யதேவ் மெதுவாக கண்ணை திறந்தான்.
அங்கே தங்கச்சியும் இல்லை விவேகாவும் இல்லை.. ரிதம் இன்பாவோட ப்ராடக்ட் நடந்து வந்து கொண்டிருந்தது. சாரி first person singular சோ நடந்து வந்தாள். ரிதம்.
மாமா இப்படி தான் என் தங்கச்சி இருக்கும்! என ருத்ரன் பார்த்து கொண்டிருக்க..
டேய் அது உன் அக்கா டா!.
மாமா! அதுக்கு வாய்ப்பே இல்ல! இது வரைக்கும் ஒரு தடவை கூட ரிதம் கோவிலுக்கு வந்ததே இல்ல! இது வேற பொண்ணு மாமா! அதுவும் அவளுக்கு இப்படி எல்லாம் ட்ரெஸ் பண்ண தெரியாது. சோம்பெர்ரி இந்நேரம் தூங்கிட்டு இருக்கும். என ருத்ரன் சொல்ல..
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன் அது ரிதம் எனக்கு தெரியும் டா! அவள் தான்! என எழுந்து நின்றான்.
அந்த நேரம் ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் ரிதம் அருகில் ஓடி வர..
மாமா! இது நிஜமாவே ரிதம் தான்! எங்க அக்கா கோமாவுக்கு போயிட்டு வந்தாளா? என வாய் மொழியில் சொல்ல..
அவர்கள் களுக் என சிரிக்கும் சத்தம் கேட்டது. அப்படியே அவர்கள் நடந்து வர.. சத்ய தேவ் அதே இடத்தில் நின்று ரிதம பார்த்து கொண்டிருந்தான்.
ஆனால் ரிதம்…?
தொடரும்..
EPISODE 99
ரிதம் மெதுவான நடையுடன் கோவில் பிரகாரத்தில் நடந்தாள். அந்த நேரம் கோவிலை சுற்றி முடித்து விட்டு வீணா மற்றும் ஆக்னஸ் இருவரும் அவளின் அருகில் வந்து சேர்ந்து கொண்டனர்.
இங்கே ருத்ரன் நம்ப முடியாத அதிர்ச்சியில் இது நிஜமாவே ரிதம் தானா? என் அக்காவா? என ஙெவென பார்த்து கொண்டிருக்க..
என்ன டா அப்படி பார்க்கிற? என சத்ய தேவ் வேறு புறம் திரும்பி கொண்டு தலையை கோதினான்.
எனக்கு என்னோட கண்ணையே நம்ப முடியல மாமா! இது நிஜமாவே என் அக்கா ரிதம் தான்! இப்போ தான் பொண்ணா! லட்சணமா தெய்வ கடாட்சமா இருக்கா! நான் கூட சம் டைம் இல்ல அது எப்போவும் எனக்கு ஒரு விசயம் தோனிகிட்டே இருக்கும். என் அக்கா அப்படியே அவர் ( இன்பா) மாதிரின்னு தான் நினைச்சேன். ஆனால் இன்னிக்கி தான் தெரியுது. அவள் அப்படியே என் விவி மா மாதிரியே இருக்கா! என மூச்சு விடாமல் பேசினான். ருத்ரன்.
அவன் தாடியை தேய்த்து கொண்டே ம்ம் அப்படி கூட சொல்லலாம். ஆனால் அவள் அப்படியே வசு பாட்டி ஜாடையில் இருக்கா! அந்த கண்ணகுளி வந்து ரவி தாத்தா கிட்ட இருந்து வந்திருக்கு! முக வெட்டு மட்டும் விவேகா மாதிரி இருக்கு! என புள்ளி விவரத்தை புட்டு புட்டு வைத்தான். சத்ய தேவ் என்னும் புலி!
சத்ய தேவ் சொல்ல சொல்ல ருத்ரன் இன்னும் தன் அக்காவை உற்று பார்த்தான். ஆமா மாமா நீங்க சொன்னது கரெக்ட் தான்! ஆனால் எனக்கு என் அம்மா மாதிரி தோணுது!
ஆனால் அத்தையோட ஸ்கின் கொஞ்சம் மில்க் மிக்ஸ்ட் டஸ்கி ஆனால் ரிதம் ரசகுல்லா களரில் இருப்பா! என கூறினான்.
மாமா! பார்க்காத அவளை பத்தியே இவ்வளவு சொல்றீங்க! அப்போ என்னை பத்தி சொல்லுங்க! நான் யாரை மாதிரி இருக்கேன்.
அந்த நேரம் மூன்று பெண்களும் கோவிலில் இருந்து வெளியே வர அந்த இடத்தை உடனடியாக காலி செய்து விட வேண்டும் என சத்ய தேவ் நினைத்தான். இல்லையெனில் ரிதம கண்ணும் கண்ணும் பார்த்து சந்திக்க வேண்டும். எதுக்கு இந்த தேவையில்லாத வேலை! என நினைத்தவன். வா ருத்ரா நம்ம அப்படியே போலாம். என சென்றான்.
ருத்ரன் தன் மாமனை ஃபாலோ செய்து கொண்டே சொல்லுங்க மாமா! நான் யாரை மாதிரி இருக்கேன்? என கேட்க..
சத்ய தேவ் அமைதியாக இருந்தான்.
மாமா! சொல்ல போறீங்களா இல்லையா?
சரி நான் சொல்றேன் ஆனால் நீ கோவிச்சுக்க கூடாது.
சொல்லுங்க என கண்கள் மின்ன ருத்ரன் கேட்க… அந்த தெய்வீக கண்களில் ஒரே ஒரு முறை கூர்ந்து பார்த்த சத்ய தேவ் ஒரு குட்டி புன்னகையுடன் நீ அப்படியே என்னோட ரோல் மாடல் போல இருக்க..
நான் எப்டி சூர்யா மாமா மாதிரி இருக்க முடியும்?
சத்ய தேவ் சிரித்து விட்டு என்னோட டாடி எனக்கு ஹீரோ! என்னோட ரோல் மாடல் மிஸ்டர் இன்ப ராகவன் என சொல்லி கொண்டே நடந்தான்.
ருத்ரன் அதே இடத்தில் நின்று தன்னை பார்த்து கொண்டான். வியாக் அவரை போல நான் இருக்கேனா? என யோசிக்க..
சத்ய தேவ் சிரித்து விட்டு நீ இன்பா மாமா மாதிரி தான் இருக்க! ஆக்சுவலா இது உன்னோட ஒரிஜினல் பிகேவியர் இல்ல.. அத்தைக்காக, மீனாட்சிக்காக நீ வேற ஒரு ருத்ரனா இருக்க… நீ உன்னை நினைச்சு உன்னோட தாட்ஸ் மட்டும் கொஞ்சம் டீப்பா போனால் உன் டாடி கிட்ட இருக்க ரிசெம்பல் வெளியே வரும்..
சான்சே இல்ல! நெவர் மாமா நான் என் அம்மா மாதிரி தான் இருக்கேன். என ஒப்புக்காக சொல்லி கொண்டான்.
இங்கே பெண்கள் மூவரும் நடக்க வில்லை காரில் சிட்டாக பறந்தார்கள். அப்பார்ட்மென்டில் காரை பார்க் செய்து விட்டு மூவரும் நடக்க..
ரிதம் வேகமாக நடந்து கொண்டே எனக்கு தெய்வீக வாசம் அதிகமாகி போச்சு! சோ கொஞ்சம் பீட்ஸா, சிக்கன் பாப் கார்ன், எல்லாம் சாப்பிட்டு வெளியே வரனும் வாங்க டி முதலில் இந்த ட்ரெஸ் மாத்தணும்! இதுல மனுஷன் இருப்பானா? என நடந்தாள்.
வீனா அவளிடம் என்ன டி? இந்த காஸ்ட்யூம் ல தேவ் உன்னை பார்க்கணுன்னு தானே போட்ட..
நியூடா கூட காட்டுவேன். பட் நான் எப்படி இருந்தாலும் அந்த நாய் என்னை பார்க்க தயாரா இல்ல. சோ எனக்கு சீஸ் கார்ன் பீட்ஸா வேணும் இப்போவே வயிறு சத்தம் போடுது என லிஃப்ட் நோக்கி சென்றாள். ரிதம்.
அப்பொழுது தான் சிரித்து பேசி கொண்டே சத்யதேவ் மற்றும் ருத்ரன் இருவரும் சொசைட்டியின் உள் நுழைந்தார்கள். அதை பார்த்த ஆக்னஸ் ஹே சீ தியர்!
வீனா சட்டென திரும்பி பார்க்க அங்கே சத்திய தேவ் சிரித்துகொண்டே உள்ளே வந்தான்.
எதுவும் ஐடியா? இப்போ என்ன பண்ண முடியும்? என்று யோசிக்க..
இன்னொரு பக்கம் ரிதம் கத்தினாள். ஹே சீக்கிரம் வரிங்களா? இல்ல உங்கள விட்டுட்டு நானே சாப்பிடுவேன் என்று போனில் ஆர்டர் செய்து கொண்டே கத்தினாள்.
வரோம் என்று ஆக்னஸ் நடக்க.. உடனே வீணா வேகமாக ஹே என் கிட்ட சூப்பர் ஐடியா இருக்கு
ன்ன ஐடியா என்று ஆக்னஸ் கேட்க..
நீ எப்படியாவது ருத்ரன் கிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டே அவனை தனியா கூட்டிட்டு போய்டு! அப்போ தனியா தேவ் வருவான். லிப்ட்ல ஏறுவான். நான் ஸ்ட்ரைட்டா கரண்ட் மெயின் இருக்க இடத்துக்கு போய் என்னோட வேலையை ஆரம்பிக்கிறேன்.
என்ன வேலை!;
அங்க போயிட்டு இந்த லெஃப்ட் c4 பிளாக் ஓட லெஃப்ட் கரெக்டா ஆஃப் பண்ணி விட்டுடுறேன். ஆஃப் பண்ணினால் லிப்ட் நிற்கும். சோ நின்னதும் உள்ள சத்யதேவ் ரிதம் சோ ரெண்டு பேரும் கண்டிப்பா பேசிக்குவாங்க! அப்போ சத்திய தேவ் ரிதம பார்ப்பான். ஐ மீன் இந்த டிரஸ்ல பாத்திருவான். எப்படி ஐடியா? என்று சொல்ல
ஆக்னஸ் வீணாவை வாயை பிளந்து பார்த்தவள். செம்ம ஐடியா கொடுக்குற போ! நான் இப்போ உடனே போறேன் என ஆக்னஸ் அவளுடைய அவளின் கழுத்தில் இருக்கும் பிளாட்டினம் செயினை எடுத்து கழட்டி ஒளித்துக் கொண்டவள். நேராக இருவரும் நடந்து வந்து கொண்டிருக்க..
ஹாய் ஹலோ என்று ருத்ரனை அழைத்தாள்.
ஹலோ ப்ரோ பிரதர் பிரதர் என்று அழைத்தாள்.
என்ன கேவலமான ஒரு இங்கிலீஷ் குரல்! யாருது என்று ருத்ரன் திரும்பிப் பார்க்க..
அங்கே அக்னஸ் நின்று கொண்டிருந்தாள்.
என்ன விஷயம் என்று ருத்ரன் ஆங்கிலத்தில் கேட்க..
ஒரு நிமிஷம் உன்கிட்ட தனியா பேசினேன் தம்பி என்று ஆக்னஸ் சொல்ல..
சத்தி கூட வந்தான் அவர் வேணாம்.. நீ மட்டும் தான். நான் உன் கிட்ட மட்டும் பேசணும் ஒரு இடத்துக்கு என் கூட வர முடியுமா? என்ற ஆக்னஸ் அழைக்க..
சத்தியதேவ் என்ன எதுவும் பிரச்சனையா என்று கேட்டான்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க போங்க நான் ருத்ரன் தம்பிகிட்ட பேசுகிறேன். என்ற அவள் அவனை தனியாக அழைத்துச் சென்று தன்னுடைய பிளாட்டினம் செயின் காணாமல் போன விஷயத்தை சொல்லி, அதை பார்க்கில் தான் தொலைத்தேன். என்று அவனை கையுடன் அழைத்து வந்தாள்.
வீணா c4 பில்டிங்கின் செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே மெயின்டனன்ஸ் அரை அதாவது எலக்ட்ரிசிட்டி அறைக்குள் நுழைந்தவள். c4 லிப்ட் எது என்று தேடிக்கொண்டே ஒரு சில மணி நேரம் நின்றாள்.
அய்யோ எதுன்னு தெரியலையே? இவ்வளவு தூரம் வந்து இந்த இடத்தில் இப்படி ஆகிப்போச்சே என்று யோசித்துக் கொண்டிருக்க..
அந்த நேரம் ஆக்னசிடமிருந்து வீனாவுக்கும் மெசேஜ் வந்தது. பிளான் சக்ஸஸ் என இருக்க…
வீனா மனதில் அய்யோ இப்போ சத்திய தேவ் நேரா லிப்ட் பக்கம் தான் போவான் என்று யோசித்துக் கொண்டே தேடிப்பார்க்க அப்பொழுது கண்டுபிடித்து விட்டாள்.ரிதம் என்ன பண்றா? லிப்ட்ல ஏறி இருக்கலாம்? தெரியலையே!
உடனே ரிதம்க்கு போன் செய்து ஹலோ எங்கடி இருக்க? என கேட்க..
ஹே வீணா போனவளே நீ எங்கே இருக்க என்று அவள் கடுப்புடன் கேட்க
நான் ஆர்டர் பண்ணிட்டேன் லிஃப்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எப்ப நீ வர போற என்று கேட்டாள்.
அது நீ வந்து லிப்ட்ல ஏறிக்க, நானும் அட்னஸும் அடுத்த லிஸ்ட்ல வரும் என்று கூறினாள்.
அப்படியா சரி என்று பட்டன் அழுத்தம் சத்தம் கேட்டது.
அப்போ இப்பதான் பட்டனையும் அழுத்தரா ஒரு சில நிமிஷம் வெயிட் பண்ணலாம் என்று வீணா ஐந்து நிமிடங்கள் காத்திருந்தாள்.
சத்திய தேவ் எப்பொழுதும் படிக்கட்டில் தான் செல்வம். ஆனால் இன்று அங்கே ரிதம் நின்று கொண்டிருக்க… ஏதோ ஒரு உந்துதல் அவளை அருகில் இருந்து பார்க்க வேண்டும். என்று உள் மனம் நச்சரித்துக் கொண்டிருக்க.. அருகில் சென்றான்.
கைகள் பரபரத்தது. எப்பொழுதும் சிறுவயதிலிருந்து அவளைப் பார்த்தால், அவளுடைய கட்டி இருக்கும் கூந்தலை அவிழ்த்து விட தோன்றும். அது ஹார்மோன் ரியாக்ஷனா? பிசிக்ஸ் ரியாக்ஷனா?.இல்ல கெமிக்கல் ரியாக்ஷன்? தெரியல! ஆனால் அதை பார்த்தால் மட்டும் சத்யதேவ்கு ஏதோ ஆகிடுமாம்
ஆனால் ரிதம் எதை பற்றியும் கவலை படாமல் போனில் நோண்டிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தவள். போனில் ஆங்கிரி பேர்ட் விளையாடிகொண்டு என்னை பார்க்க இப்பொழுதுதான் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வந்திருந்தது. அடுத்த கிரவுண்ட் ப்ளோர் என்று போனை ஆப் செய்துவிட்டு லிஃப்டுக்காக காத்திருந்தாள்.
கதவுகள் திறந்தது. ரிதம் உள்ளே ஏறிக்கொள்ள, உடனே சத்யதேவ் உள்ளே நுழைந்தான்.
ரிதம் எதிர்பார்க்கவே இல்லை எவனோ ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். என்று மீண்டும் ஆங்கிரி பேர்ட் கண்டினியூ செய்தாள். வாடா ரெட்டு பன்னி பயலுவளா? என்று ஆங்கிரி பேரில் பேசுவது போலவே சிங்க், ரேட், சக் என விளையாடிக் கொண்டு உற்சாகமாக நின்று கொண்டிருந்தாள்.
சத்திய தேவ் கடைக்கண் பார்வை அவள் மீது பட்டு கொண்டே இருந்தது. எப்படியோ லிஸ்ட்ல ஏறி இருப்பாள். என்று நினைக்கிறேன் இது கொஞ்சம் செக் பண்ணிக்கலாம். என்று வீணா ஒரு முறை அவளுக்கு அழைக்க..
அழைப்பு செல்லவில்லை. அப்போ கண்டிப்பா லிப்ட்ல தான் இருப்பா.. என்று அடுத்த நொடி மேனே ஆப் செய்தாள்.
எவன்டா அது இந்த நேரத்துல கரண்ட் கட் பண்ணது? லிப்ட் வேற நின்னு போச்சு என்று சுற்றிலும் பார்க்க அப்பொழுதுதான்.. லெஃப்ட்ல இன்னொரு ஆள் நின்று கொண்டிருக்கிறான். என்று தெரிந்தது.
நீங்க எந்த ப்ளோர் என்று ரிதம் கேட்க
7th ப்ளோர் என்று பழக்கப்பட்ட குரல் … உடனே ரிதம் டார்ச்சை அடித்து பார்க்க..
தேவ் சத்யதேவ் தான் நின்று கொண்டிருந்தாள். உடனே அவள் உதட்டை கடித்து வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
சத்யதேவ் இதை எதிர்பார்க்கவில்லை மிகவும் அமைதியாக வர… அவளால் அந்த விளையாட்டை கூட கண்டினியூ செய்ய முடியவில்லை. போனை ஆப் செய்தவள். டார்ச் லைட்டை மட்டும் போட்டுவிட்டு அப்படியே சிறிது நேரம் நின்றாள்.
இப்போது மூன்று நிமிஷம்;
சத்யதேவும் அவனுடைய ஃபோனில் டார்ச்சை உயிர்ப்பித்தான். இருவரும் எதுவும் பேசவில்லை அந்த டார்ச் வெளிச்சத்தில் அவளுடைய முகம் பளபளத்தது. அவளுடைய கொண்டை ஒரு மார்க்கமாக இருக்க.. அவன் கைகள் டேய் போய் அவிழ்த்து விட டா! என்று இதயம் வேகமாக துடித்தது.
நான் எதுக்காக அவிழ்த்து விடனும்? அவ யாரோ? நான் யாரோ என்று மனமும் மூளையும் சேர்ந்து கொண்டு செல்ல..
மூக்கு பெரிய மூச்சு விட்டது. ரிதம் எதுவும் பேசவில்லை. மிகவும் அமைதியாக இருந்தாள்.
அய்யோ அஞ்சி நிமிஷம் ஆச்சு..அப்போ கண்டிப்பா மீட்டிங் நடந்திருக்கும். சரி ஆன் பண்ணுவோம் என்று வீணா ஆன் செய்ய உண்மையாகவே டமார் என்று டிரான்ஸ்ப சத்தம்..
அய்யய்யோ போச்சு டிரான்ஸ்பார்ம் வெடிச்சிருச்சு! இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! நான் வெறும் லிப்ட்டு ஓட கரண்ட மட்டும் தான் கட் பண்ணி! ஆன் பண்ணேன்! ஏதோ பிரச்சனை என்று அவள் வெளியே செல்ல உண்மையாகவே வீணாவுக்கும் டிரான்ஸ்பாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு ஏதோ பக்கத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட் சைட் ஒர்க் போய்க்கொண்டிருக்க அதில் எதோ கோளாறு..
வீணா உடனே ஆக்னசுக்கு மெசேஜ் செய்து, ரிதமும், சத்ய தேவ் உள்ள இருக்காங்க. உடனே லிப்ட் கிட்ட வா என்று தட்டிவிட்டாள்.
அய்யய்யோ இந்த நேரம் பார்த்து இப்படி ஆகணுமா என்று ஆக்னஸ் வேகமாக நடக்க..
சிஸ்டர் உங்களோட செயின் தேடிட்டு இருந்தீங்களே எங்க என்று கேட்க
அதுவா அதை நான் டிரஸ் சேஞ்ச் பண்ணும் போது ட்ரெஸ்ஸிங் டேபிள் மேலே வச்சிட்டு வந்துட்டேன். இப்பதான் ஞாபகம் வந்திருச்சு வா தம்பி! நம்ம போலாம் என்று அழைக்க..
லூசு என ருத்ரன் நேராக லிப்ட் பக்கம் சென்றான்.
இன்னும் கரண்ட் வரவே இல்லையே என்று அவள் கைகளில் சாமரம் வீசுவது போல் வீசிக் கொண்டிருக்க..
அவளின் முகத்தில் முத்து முத்தாக வியக்க தொடங்கியது. சத்திய தேவ் ஒரு விதமான பதட்டத்துடன் தான் நின்று கொண்டிருந்தான். ரிதம் டார்ச்சை வெளிச்சம் அதிகப்படுத்தி என்ன பண்றது? என்று யோசித்துக் கொண்டிருக்க..
சத்திய தேவ் அவளைப் பார்த்தான்.
உடனே போனை எடுத்தவள் யாருக்கோ போன் பேசுவது போல் காதில் வைத்து, இந்த பார்க்கிற வேலை.. அதுவும் குறுகுறுன்னு பாக்குற வேலை.. இல்லன்னா சாதாரணமா பார்க்கிற வேலை குறுகுறுனு பாக்குற வேல இங்க வேணாம்! அவங்கவங்க வேலையை அவங்க அவங்க பார்த்தா போதும்! .
சத்திய தேவ் உதட்டில் மென்புன்னகை ஒன்று பரவியது.
இப்போ யார்கிட்ட பேசுன? அவனே தான்.. அவள் அமைதியாக போனை நோண்டிக் கொண்டிருக்க,
இப்போ யார்கிட்ட பேசணுன்னு கேட்டேன்..
அப்பொழுதும் ரிதமிடம் பதில் இல்லை..
சத்ரியன் மீண்டும் ஏய் உன்னத்தான் இப்ப யார்கிட்ட பேசின என்று சத்திய தேவ் மீண்டும் கேட்டான்.
உன்கிட்ட பேசல போதுமா உன் வேலையை நீ பாரு நீ எதுக்கு லிப்ட் ல வந்த எப்பவும் ஸ்டெப்ஸ்ல தான் போவ என்று கேட்க
சக்தி சட்டை கையை மடித்து விட்டுக் கொண்டே அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு மெயின்டனன்ஸ் சார்ஜ் நானும் கொடுத்துட்டு தான் இருக்கேன். சோ நான் லிப்ட்ல வந்தா உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான் .
நீ எதுலயோ போ தலைகீழாக கூட நடத்துவா எனக்கென்ன பிரச்சனை என்று திரும்பிக்கொண்டாள். ரிதம்.
அப்புறம் கோவிலுக்கு எல்லாம் போற போல என்று சக்தி கேட்க
ஆமா நீ ஏன் புதுசா என்கிட்ட பேசுற?எப்பவும் பேச மாட்டியே! இன்னிக்கு என்ன பேசுற? என்று கேட்க
சும்மா கேட்கணும்னு தோணுச்சு ஏன் நான் பேச கூடாதா என்று சத்திய தேவ் கேட்டான்.
ஆமாண்டா பேசு! இப்போ பேசு…. உன் பின்னாடி லோ லோ லோன்னு அலைஞ்ச நேரம் பேசாத! இப்ப நீ பேசறது எனக்கு பிடிக்கல என்று ரிதம் மனம் கூறியது.
என்ன புதுசா சாரி எல்லாம் கட்டி இருக்க இன்னிக்கி ரொம்ப டிஃபரண்டா இருக்க? என்று கேட்டான்..சத்ய தேவ்..
ரிதம்…?
தொடரும்..
EPISODE 100
என்ன புதுசா சாரி எல்லாம் கட்டி இருக்க இன்னிக்கி ரொம்ப டிஃபரண்டா இருக்க? என்று கேட்டான்..சத்ய தேவ்.. அந்த இருட்டில் கூட அவளின் கொண்டை மேல் பார்வை நிலைத்து நின்றது அவனுக்கு…
ப்ச்!!நான் எப்படி இருந்தா உனக்கு என்ன? நீ எதுக்கு என்னை பாக்குற? என்னோட விசயத்தில் இன்டெர்பியர் ஓவரா இருக்கே! என கூறி கொண்டே போனில் கவனம் செலுத்தினாள்.
100 % நீ சொல்றத கரெக்ட் தான் பட் என் கண்ணு முன்னாடி கூடவே இப்போ லிஃப்ட்ல நம்ம மீட் பண்றோம், அதனால கேட்டேன்.
அவன் பேசுவதை கண்டு கொள்ள வில்லை. சத்தியதேவ் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.
ச்ச எப்போ தான் லிஃப்ட் ஒர்க் ஆகும்? என கையை விசிறி போல வீசி கொண்டாள்.
உன் கிட்ட ஒரு விசயம் பேசணும்.
ரிதம் அவனை அலட்சியமாக பார்க்க, நீ நித்தினை பத்தி தப்பா நினைக்காத! என்று கூறினான்.
ரிதம் நம்ப முடியாமல் சத்திய தேவை பார்க்க,
அவனோட காதல, அவன் எடுத்துட்டு போயிட்டான். தேவையே இல்லாம உன்ன கமிட் பண்ணது தான், அவன் பண்ண தப்பு. இது அன்எக்ஸ்பெக்டடா நடந்திடுச்சு., சோ தயவு செய்து அவன் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்காத! ஏன்னா அவ நல்லா இருந்தாதான் ஹரிணி ரொம்ப ஹேப்பியா இருப்பா! என் சத்ய தேவ் கூறினான்.
அய்யடா! என ரிதம் மூக்கு புடைக்க அந்த லைட்டை மேலே தூக்கிவள். உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? பெரிய தியாகின்னு நினைப்போ டா! போடா! வந்துட்டான்! ராஸ்கல்..
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு, உனக்கு இவ்ளோ கோபம்? என சத்ய தேவ் கேட்க..
ரிதம் நெற்றியில் வழியும் வியர்வையை சுண்டி விட்டவள். டேய் யார்ரா நீ? நீ நீ என்னடா பெரிய மகான்னு நினைப்பா! நீ யாருன்னு எனக்கு தெரியும்! நீ எல்லாம் காரணமே இல்லாம ஹரிணிய மிஸ் பண்றதுக்கு, இதை என்னை நம்ப சொல்றியா? ஹோ இப்போ முட்டாள் வேஷம் போட்டு திரியிரியா என கேட்டாள்.
அப்படி எதுவும் இல்ல! ஏதோ நான் என் மனசுல பட்டதை சொன்னேன். அது மனசுல பட்ட எல்லாத்தையுமே பேசிடுவேன். அதனால் தான் உன் கிட்ட எப்படி கான்வர்சேசன ஆரம்பிக்கிறது ன்னு தெரியல அதுக்கு தான் ட்ரெஸ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணேன்! என சத்ய தேவ் கூற..
அவன் சொன்ன பொருள் வேறாக இருந்தாலும் ரிதமுக்கு உள்ளுக்குள் எதோ குறுகுறுப்பாக இருக்க வேகமாக தலையை உழுக்கினாள்.
சத்ய தேவ் பார்வையை அவள் மீது படற விட..
இப்போ சாரு மனசுல என்ன இருக்கு? இப்போ எல்லா விடயத்தையும் கொட்டிட்டா! எம்டியா இருக்கா? இல்ல? எம்ப்டியா இருந்தா தான் அரை கேனை அரக்கன், பூதம் , அடங்காதவன் எல்லாம் குடி வருவான். இப்போ உன் மனசு எம்டியா இருக்குல்ல என்று ரிதம் கேட்க..
என்னோட மனசு ஒண்ணும் எம்டியா இல்ல.. எல்லாம் ஃபுல்லா தான் இருக்கு
என்ன? ஃபுல்லா இருக்கா? அப்படி நினைக்க என்ன வச்சிருக்க என்று கேட்டாள். ரிதம்..
என்னமோ இருக்கு! உனக்கு என்ன? என்று சத்ய தேவ் கூறினான்.
ரிதம் பற்களை கடித்துக் கொண்டே நீயும் ரொம்ப பீல் பண்ணிட்ட போல! அதுவும் லவ் பெய்லியர்ல என்று கேட்டாள்.
உண்மையா லவ் பண்ணவங்க பீல் பண்ணுவாங்க! உன்ன மாதிரி சந்தோஷமா குடிச்சிட்டு ஆட்டம் போட்டுட்டு இருக்க மாட்டாங்க! நீ கல்யாணம் நின்னதுக்கு சந்தோச படுர தானே! என்றான் சத்ய தேவ்.
ரிதம் கழுத்தை தேய்த்து கொண்டே உண்மைய சொல்ல போனால் நான் மிஸ் பண்ணிட்டேன்.
என்ன? என சத்ய தேவ் புருவம் நெருக்கி கேட்க..
ஆமா! நிதின் லவ் அது லைக் அ டாக்சிக் மாதிரி! ஆனால் ரொம்ப ரொம்ப ஆதிக்கமா இருந்தது. ஒருத்திக்காக மொத்த பேரையும் எதிர்த்திட்டு நின்ன அந்த தைரியம் பிடிச்சது. அப்போ நினைச்சேன். எனக்கு பக்கத்தில் இருந்த வைரம் கண்ணுக்கு தெரியல.. கண்ணுக்கு தெரியரது எல்லாம் பச்சன்னு நினைச்சேன். ஆனால் என் பக்கம் டைமண்ட் இருந்தது.
இதை எல்லாம் கேட்க கேட்க சத்ய தேவ்வின் முகம் இறுகி போனது.
ரிதம் ஒரு பெரு மூச்சுடன் ஹரிணி லக்கி பெல்லோ! அவளுக்காக உலகத்தையே புரட்டி போடுவான் நிதின்! ப்பா லவ்! என புகழ்ந்து தள்ளினாள். தலைவனின் தம்பியை.. அது தலைவனுக்கு புகைச்சலை ஏற்படுத்தியது.
அவளுடைய பேச்சு முழுவதும் நிதின் புகழ் தான்! அது அவளின் உண்மையான உணர்வுகள் என்று முகத்தை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம்.
உஷ்ன மூச்சுடன் கைகளை இறுக்கி மூடி திறந்து கொண்டே இப்போ என்ன சொல்ல வர? என கடுப்புடன் கேட்டான். சத்ய தேவ்.
ஆசை யார் மேலே வேணாலும் இருக்கலாம்! ஆனால் ஏக்கம் ஒருத்தன் மேலே தான் வரும்! சோ நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு தெரியும் என ரிதம் அசால்ட்டாக கூறினாள்.
என்ன சொல்ல வரா? என்று சத்ய தேவ் க்கு புரிய வில்லை புரிந்தும் புரியாமல் குழப்ப மனநிலை.
அவள் காதலில் முதிர்வுடயவள். ஆனால் அவன் கத்துக்குட்டி. இதுக்கும் மேலே சொல்ல முடியாது.
இருவரும் அதன் பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ரிதம் ஒரு சில மணிநேரம் ஒரு சில நிமிடங்கள் கழித்து நான் ஒன்னும் நித்தின் ஹரிணி கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக குடிக்கல! எனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு தோணுச்சு அதனால குடிச்சேன்! நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு! என தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
( இதை முன்னாடியே கொடுத்து இருந்தால் தலைவன் கொஞ்சம் இளகி இருப்பான். இப்பொழுது இரும்பு கம்பியை முழுங்கியது போல இருந்தான்)
அரை மணி நேரம் லிப்ட்டுக்குள் இருந்தார்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. என்னதான் ஆச்சு? எப்போ லிஃப்ட் மூவ் ஆகும்? என்று அவள் வியர்வையில் முகத்தை துடைத்துக் கொண்டிருக்க..
ரொம்ப கஷ்டமா இருக்கா என்று சத்திய தேவ் அவள் பக்கம் திரும்பினான். தாமரை இலையில் தண்ணீர் போல் வெள்ளை தாமரையாக அவன் முன் மலர்ந்து இருந்தாள். ரிதம்.
சத்ய தேவ் எட்சில கூட்டி விழுங்கி கொண்டே பார்த்தான்.
என்னை பத்தி நீ கவலைப்படாதடா! உன் வேலையை பாரு என ரிதம் கூறினாள்.
அந்த நொடி திடீரென்று கரண்ட் வந்தது. லிப்ட் செகண்ட் ப்ளோர் ஏறியது.
அதன் பின் லிப்ட் என்று கரண்ட் கட் ஆனது.
என்ன இப்படி நடக்குது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க..
திடீரென்று அதிர்வுடன் கரண்ட் வந்தது ரிதம் ஒரு வித பயத்துடன் லிப்டில் அப்படியே பசை போல் ஒட்டிக்கொள்ள, சத்யதேவாவின் அருகில் வந்து பயப்படாதடி நான் கூட இருக்கேன் என்று கையைப் பிடித்தான்.
நீ கூட இருக்கிறது தான் எனக்கு பயமே! பிளீஸ் சத்ய தேவ் தள்ளி போ! என கண்களை மூடி கொண்டே கூறினாள்.
ஏனோ ஏமாற்றமாக போனது. அவனுக்கு சிவ சிவா! என சொல்லி அவளின் கையை விட்டான்.
மீண்டும் நான்கு தளம் நன்றாக தான் சென்றது திடீரென்று ஒரு அதிர்வுடன் நிற்க..
கதவுகள் திறந்தது ஏற்கனவே யாரோ பட்டன் அழுத்தி இருக்கிறார்கள். அதனால் திறந்தது. ஆனால் வெளியில் யாரும் இல்லை. ரிதமுக்கு முகம் எல்லாம் குப்பனவே வியர்க்க,
வெளியே வந்திடு என அவன் செல்ல போக, அவர்கள் வெளியே செல்லும் பொழுது, ரிதம் மிகவும் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருக்க, சத்திய தேவ் மிகவும் அருகில் வரிகள் வந்துவிட்டான்.
பயப்படாத டி நான் கூட இருக்கேன். அவ்ளோதான் சிக்ஸ்த் ஃப்ளோர், நெக்ஸ்ட் நம்ம 7th ப்ளோர் என்று கைகளை பிடித்து கொண்டான்.
7 குளோரின் லிப்ட் ஓப்பனாக சத்யதேவ் அவளிடம் 7th floor ஓப்பன் ஆயிடுச்சு. வெளிய போலாம் என்று சொல்ல..
அப்பாடா தப்புச்சேன் என்று அவனது கைகளை உதறிவிட்டு வெளியே செல்ல போக..
சத்ய தேவ்க்கு உள்ளுக்குள் சொல்ல முடியா அழுத்தம். அதற்குள் லிப்ட் கதவுகள் மூடிக்கொண்டு 8th ப்ளோர் காட்டியது.அவன் பட்டனை அழுத்த போக..
டேய் பட்டன அழுத்துடா என்று ரிதம் சொல்ல.. அதற்குள் அது மேலே சென்று விட்டது.
ஹே நான் என்ன பண்ணன்? எதுக்கு இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழுகுற ? என்று சத்ய தேவ் அவள் பக்கம் திரும்ப..
ரிதம் அவளுடைய முகத்தை திருப்பி கொண்டாள்.
நேராக லிஃப்ட் பட்டன் பக்கம் சென்று தட்டி விட்டான். அது சீராக 7 ம் தளத்துக்கு சென்று நின்றது.
முதலில் சத்ய தேவ் அதன் பின் ரிதம் வந்து பெரு மூச்சுடன் சோம்பலை முறிக்க.. சேலையின் முந்தி லிஃப்ட்டின் உள்ளே ரிதம் வெளியே.. ஹப்பா என பெரு மூச்சு விடும் நேரம் அவளை லிஃப்ட் பக்கமாக இழுத்தது.
டாடி! என பதட்டத்தில் ரிதம் திரும்பி கொண்டே கத்த.. சத்ய தேவ் வேகமாக திரும்பியவன் உள்ளம் பதைக்க அவளின் அருகில் வந்தவன். வேகமாக துகில் உரித்தான். அவளின் சேலையை..
ரிதம் கண்களை மூடி கொண்டே பயத்தில் நிற்க.. சத்ய தேவ் பெரு மூச்சுடன் அவளை முறைத்தவன். என்ன நினைத்தானோ அவளை அணைத்து கொண்டான். ஏன் டி உயிரை எடுக்கிற? உனக்கு பழக்கம் இல்லாத இந்த புடவையை யாரு கட்ட சொன்னா? இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆகி இருக்கும் தெரியுமா!
ரிதம் அவனிடம் இருந்து விலகியவள். பதட்டத்துடன் நிற்க..
என்ன ஆச்சு? என சத்ய தேவ் கேட்டான்.
பின் பக்கம் பிளவ்ஸ் கிழிஞ்சு போச்சு! நீ போ நான் பார்த்துக்கிறேன். என ரிதம் முகம் முத்து முத்தாக வியர்க்க.. அவளின் கைகள் வலது மார்பை இறுக்கி மறைத்து இருந்தது.
சத்ய தேவ் வேகமாக அவனுடைய சட்டையை கழட்ட..
பிளீஸ் உன்னோட ஹீரோயிசம் என் கிட்ட வேணாம்! இங்கே இருந்து போ! போ! என தள்ளினாள்.
சத்ய தேவ் லிஃப்ட் பக்கம் பார்வையை செலுத்தினான். அது கிரவுண்ட் பிலோரில் இருந்து மேலே வர யாரோ அழுத்தி இருக்கிறார்கள். ஹே யாரோ வரான்க வா!
மாட்டேன்! போ!
சரி சாவி கொடு! என சத்ய தேவ் சொல்ல..
அந்த மேட்டுக்கு அடியில் இருக்கு! என கூறினாள்.
வேகமாக சத்ய தேவ் கால் மிதியை விளக்கி பார்க்க.. அங்கே சாவி இல்லை.
ஹே கீ இல்ல டி!.
ரிதம் பதட்டத்தில் இருக்க… சத்ய தேவ் வேகமாக அருகில் வந்தவன். வா என கையை பிடித்து அவனுடைய வீட்டை திறந்து உள்ளே தள்ளினான்.
ரிதம் கோபத்துடன் டேய் நான் போகனும்! என வாசல் பக்கம் செல்ல..
பைத்தியமாடி உனக்கு? இப்போ உன் தம்பி வர போறான். உன் ப்ரெண்ட்ஸ் வர போறாங்க.. ஒரு நிமிடம் இரு என வேகமாக ஒரு டவல் எடுத்து வந்து கொடுத்தான்.
அவள் போர்த்தி கொண்டு சரி நான் போறேன். என மீண்டும் கதவு பக்கம் செல்ல..
காலிங் பெல் அடித்தது.
போறியா? உன் தம்பி வந்துட்டான்.
இது எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான்! ச்ச என ரிதம் எரிந்து விழுந்தாள்.
சத்ய தேவ் பற்களை கடித்து கொண்டு இட்ஸ் ஒகே அந்த பெட் ரூம் போய் கொஞ்ச நேரம் இரு நான் வந்துடுறேன். இந்தா உன்னோட போன் என கையில் திணித்து விட்டு கதவை திறக்க சென்றான்.
ரிதம் தலையில் அடித்து கொண்டு அவனை விட்டு விலகி போகணும்னு ஒரு முறை ஒரே ஒரு முறை நினைச்சேன் அதுக்கே இந்த நிலைமைக்கு வந்துட்டேன். என சென்றாள்.
எவ்வளவோ சொல்லியும் ருத்ரன் வீட்டுக்குள் வந்து அமர்ந்து விட்டான். மன்னா!
ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் வீட்டை திறந்து சென்றார்கள். அவர்களுக்கு ஒரு அனுமானம் நிச்சயமாக சத்ய தேவ் கூட தான் ரிதம் இருப்பாள். அதனால் சந்தோசம் தாண்டவம் ஆடியது.
ருத்ரன் தீவிரமாக போனை நோண்டி கொண்டிருக்க இரு டா ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன். என சத்ய தேவ் அவளை பார்க்க சென்றான்.
போன அடுத்த நொடி ரிதம் கத்த ஆரம்பிக்க, அவளின் வாயை பொத்தினான். சத்ய தேவ்.
இரு டி! எதுக்கு கத்துற? நீயே உன் அப்பன் குதிருக்குள்ள இருக்கிறதை காட்டி கொடுத்திடுவ போல.. என சத்திய தேவ் சொல்ல
எங்க அப்பா குதிருக்குள்ள எல்லாம் இல்ல! எங்க அப்பா இப்போ ஸ்டேஷன்ல இருக்காங்க! இப்போ எதுக்கு நீ இப்படி புரியாமல் பேசிட்டு இருக்க? எப்போ அவன் போவான்? எதுக்குடா அவன் கூட எப்ப பாரு சுத்திட்டு இருக்க அவனும் உன் பின்னாடி கம்மு மாதிரி ஒட்டிக்கிறான்.
சத்ய தேவ் ஒரு பெருமூச்சுடன் கொஞ்ச நேரம் இரு அவனுக்கு காபி கொடுத்து அனுப்பி விடுறன் என்று கூறினான்
எனக்கும் வேணும் காபி!..
சரி அதுவரைக்கும் இப்படி இப்படியே நிக்க போறியா என்று சத்தியத்தை பின் பார்வை அவளின் கண்களில் மட்டும் இருக்க..
எப்படி இருக்கேன் ? நான் நல்லா தான இருக்கேன்? என ரிதம் சொல்ல..
உடனே சத்திய தேவ் நான் அத சொல்லல டி இப்படியே வெஜ் ரோல் மாதிரி டவல சுத்திட்டு நிக்க போறியா?
அதென்ன வெஜ் ரோல் நான் எப்பவுமே நான்வெஜ் தான் சோ நான் இப்போ நான் வெஜ் ரோல் என்று ரிதம் கூறினார்.
சீ என்று சத்தியத்தை சொல்ல எந்த ரோலா இருந்தா உனக்கு என்ன? ஏன் எதுவுமே உன் முன்னாடி நிக்க சொல்றியா?
என்ன இப்படி பேசுற?
அப்போ நீ கேக்குறது அப்படித்தான் டா இருக்கு! போடா போ அவன் கூட போய் பேசு! இரிடேடிங்கா இருக்குது. இந்நேரம் எனக்கு பீட்சா ஆர்டர் வந்துருக்கும் என்று பெருமூச்சு விட்டவள். வீணா போனவளும், அந்த ஆக்னசும் சாப்பிட போறாங்க! நான் இங்க இருக்கேன். டேய் ஒழுங்கா மூடிகிட்டு அவன வெளியே அனுப்பிவிடு! எனக்கு இப்போவே வீட்டுக்கு போகனும்.
இதோ போறேன்.
எதுக்காக உன்ன பாக்கறதுக்கு வரான்? சிங்குச்சா மாதிரி வந்திடுறான்.
ஹே அவன் உன் தம்பி டி!
பெரிய தாோம்பி! நான் பையனா பொறந்து இரக்க வேண்டியது! அந்த நாய் பொண்ணா பொறந்திருக்க வேண்டியது, அப்போ உன் கூட சுத்தினா ஒரு நியாயம் இருக்கு! ஆனால் இப்போ அந்த நாய் எதுக்கு உன் பின்னாடி சுத்தணும்? என்று ரிதம் முனகி கொண்டிருக்க..
போதும்டி கண்டத சொல்லி என்னையும் அவனையும் டேமேஜ் பண்ணிட்டு இருக்காத! அவனுக்கும் எனக்கும் நடுவுல ஒரு பிரண்ட்ஷிப் இருக்கு! அது உனக்கெல்லாம் புரியாது. என்று சத்திய தேவ் ஒரு எட்டு வைத்தான்.
ஆமா பெரிய ஃப்ரெண்ட்ஷிப் கன்றாவி என்னத்த பேசி தொலையுவீங்க என ரிதம் முனக..
ம்ம்ம் இப்ப எதுவும் சொன்னியா? என்று சத்திய தேவ் பார்த்தான்.
ஒன்னும் இல்ல நீ போ! போடா அவனை வெளியே துரத்து!
ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் பொய் சொல்ற என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தவன். ரிதம் எதிர் பாரா நேரத்தில் சட்டென அவளுடைய கொண்டையை அவிழ்த்து விட்டான்.
டேய் மாடு எருமையே! என்று ரிதம் கத்த..
இதழ் வளைத்து சிரித்தவன். போடிஇஇஇ! என சென்று விட்டான்.
*
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு வந்திருந்த சிவன்யா மற்றும் இதழினி இருவரும் மீண்டும் ஹாஸ்டல் சென்றுவிட்டனர்.
மிகவும் சோர்வுடன் சிவன்யா அமர்ந்தாள்.
என்னக்கா? ரொம்ப டல்லா இருக்க மாதிரி இருக்கு! என்று இதழ் கேட்க
சிவன்யா தலையைப் பிடித்துக் கொண்டு அந்த சைத்ரேஸ் பயங்கர டெரரா இருக்கான். என்னால ஒன்னும் முடியல! வேலையில சக்க போட்டு பிழியுறான்! எவ்ளோ டாக்குமெண்ட்ஸ் தெரியுமா? ஃபைல்ஸ் அது இது லொசுக்குன்னு மொத்தமும் என் டேபிளுக்கே வந்து தள்றான். கேட்டா? என்னோட ஒர்க்கு தான் ரொம்ப சேட்டிஸ்பைடா இருக்குன்னு சொல்றான்.
அப்படியா?.ரொம்ப நல்ல விஷயமாச்சே! கொஞ்சம் கொஞ்சமா பிரெண்டு புடிக்க எப்படியும் பேசிடு! நம்ம விசயத்தை சீக்கிரமா மூவ் பண்ணிக்கலாம். என்று இதழ் கூற..
சிவன்யா பெருமூச்சு விட்டு அதுக்கு தான் இதையெல்லாம் பல்ல கடிச்சிட்டு பொறுத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் ஒரு மாசம் போகட்டும். என கூறினாள்.
இதழ் உடனே நினைவு வந்தவளாய் அக்கா இன்னொரு விஷயம்? ஆமா அவன் எப்படி இருக்கான் ? அவனோட முகத்தை நீ பார்த்தியா? என்று கேட்க
அவனா அவ மாஸ்க் போட்டுட்டு வரான் பாப்பா! இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை! என்று சிவன்யா கூறினாள்.
அப்படியா சரி என்று இதழ் அமர..
சித்தி எப்படி இருக்காங்க ஓகேவா என்று சிவன்யா கேட்டாள்.
ஒரு மாசம் அம்மாவை நார்மலாக்க கொண்டு வர ரொம்ப கஷ்டமா போயிடுச்சு! இப்ப கூட விட விடிய விடிய தூங்குவதே இல்லை! டிப்ரஷன் அதிகமாகி சைக்காட்ரிஸ் கிட்ட போற அளவுக்கு போயாச்சு!
அப்போ இதுக்கு என்னதான் சொல்யூஷன் என்று சிவன்யா வருத்தத்துடன் கேட்க
இதழ் பெருமூச்சு விட்டபடி ஒரே ஒரு சொல்யூஷன் தான்! சத்தி அண்ணா வீட்டுக்கு வரணும்! அண்ணா ஹேப்பியா இருக்குறத பாத்தா அம்மா ஹாப்பியா ஆகிடுவாங்க! டாக்டர் ஏற்கனவே இதை சொல்லிட்டாங்க! டாடி அண்ணாவை கூப்பிடுகிறேன் என்று தான் சொல்றாங்க! ஆனா அம்மா தான் வேணாம்னு சொல்லிட்ருக்காங்க என்று கூற
அப்போ நீ எதுக்கு இங்க வந்த? எப்பவும் போல இந்த ஒரு மாசமோ சித்தி கூடவே இரு பெருசா எந்த வேலையும் இல்லை நான் தனியா இருந்துப்பேன் பாப்பா! என சிவன்யா சொல்ல
இல்லக்கா நான் அம்மா கூட இருக்கிறத விட டாடி இருந்தா இன்னும் அம்மா சீக்கிரம் சரியாயிடுவாங்க! அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற அண்டர்ஸ்டாண்டட் அது ரொம்ப பெக்யூலரான ஒண்ணு!!
சரி என்று சிவன்யா பெருமூச்சு விட்டு அவளுடைய வேலையை தொடர ஆரம்பித்தாள்.
இதழ் எதுவோ நினைவு வந்தவளாய் அச்சச்சோ இந்த விஷயத்தை மறந்து போனேன்? என்று தேதியை பார்த்தால் இன்று திங்கட்கிழமை.. அப்போ நாளை செவ்வாய்க்கிழமை! அதாவது சர்வேஸ்வரனாக அவள் கண்களுக்கு தெரியும் சைத்ரேஷ் கூறிய விஷயம் நினைவுக்கு வந்தது.
இத்தனை நாள் மறந்து போயிட்டேனே! அப்போ நாளைக்கு போய் பார்த்துடலாம்! அவன் வந்திருக்கானான்னு, நம்மளும் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணுவோம்! பாவம் அக்காவ அந்த சைத்து எவ்ளோ பாடுபடுத்துறான்? என நினைத்து கொண்டே உறங்கினாள்.
அடுத்த நாள் பரபரப்புடன் விடிந்தது இன்று ஒரு முடிச்சு அவிழப்போகிறது இதழ் கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தாள். அங்கே லேப்டாப்பின் முன்னால் தலையை வைத்து அசதியுடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.சிவன்யா.
அப்போ விடிய விடிய அக்கா இப்படி வேலை செஞ்சிட்டு இருந்தாலே! அவ்ளோ வேலை குடுக்குறானா? அந்த சைத்ரேஸ் என்று நினைத்துக் கொண்டாள்.
வேகமாக குளித்து முடித்து வெளியே வந்தவள். மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு! சீக்கிரம் அண்ணா அம்மாகிட்ட வந்துட்டா போதும்! ம்ம் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்! என்று திரும்ப..
சிவன்யா அப்பொழுதுதான் பிரஷை வைத்து கொண்டு கொண்டே பாத்ரூம் பக்கம் சென்றாள்.
அங்கு சிவன்யாவின் லேப்டாப்பின் ஒரு மாஸ்க் அணிந்த உருவம் போட்டோவில் இருந்தது.
இதழ் அதை எதேட்சையாக ஒரு பார்வை பார்த்தவள். சட்டென கடந்து விட்டாள்.
நேராக கோவிலுக்கு சென்றாள். அனைத்து பிரகாரத்தையும் சுற்றி வட்டு கருவறையில் இருக்கும் சாமியை தரிசனம் செய்துவிட்டு பின்னால் இருக்கும் தெப்பக்குளத்துக்கு பக்கத்தில் அமரலாம் என்று வந்தாள்.
அந்த நேரம் நான்கு வெள்ளை உடை அணிந்த காவலர்கள் சுற்றி நிற்க நடுவில் அவன் இன்று முகமூடி அணிந்து கொண்டு அங்கிருக்கும் மீன்களுக்கும் புறாக்களுக்கும் தீனி போட்டு கொண்டிருக்க..
பழக்கப்பட்ட தோற்றத்தை பார்த்தவள். நினைவு திருச்செந்தூரில் அவனிடம் பேசாமல் வந்தது நினைவுக்கு வர.. அவனிடம் கிடைத்த அந்த புது வகையான பாதுகாப்பு உணர்வை நினைத்து உள்ளுக்குள் உந்துதல் வேகமாக அவன் இருக்கும் பக்கம் சென்றாள். தூறிகா எனும் துவாரகா..
இங்கே சிவன்யா குளித்து முடித்து வெளியே வந்தவள் லேப்டாப்பில் ஸ்கிரீனில் இருக்கும் அந்த முகமூடி அணிந்திருந்த மனிதனை பார்த்தாள்.
எப்போ உன்னோட முகத்தை பார்க்க போறேன்? உன்னை பழி வாங்கணும்டா! அணு அணுவா உன் அண்ணனை பழிவாங்கணும்! எங்களோட குடும்பம் இப்படி திசை மாறி போனதுக்கு காரணமே நீ தான்டா! என்று நினைத்துக் கொண்டே தலையை துவட்டியவள் லேப்டாப்பை மூடினாள்.
இங்கே தூரிகா சைத்ரேஷன் அருகில் வந்தாள்.
ஹலோ முருகா முருகா என்று அழைக்க சட்டென திரும்பினான் சைத்ரேஸ்வரன்.
சைத்ரேஸ்வரன் அவளை திரும்பி பார்க்க இதழ் கண்கள் பெரிய அவனைப் பார்த்தாள். முகத்தில் முகமூடி பொறி தட்டியது.
அப்போ சைத்ரேஸ்வரனும் சர்வேஸ்வரனும் ஐடென்டிகல் டுவின்சா? இதழ்…?
தொடரும்..