LOVE UNDER ARREST PART 2

by Pradhanya kuzhali
500 views

 Episode 66,

இன்பா அவள் தண்ணீர் குடிப்பதை பார்த்து காரை நிறுத்த இவள் வாயில் நீர் வைத்துக் கொண்டே என்ன என்பது போல் பார்க்க இன்பா சீட் பெல்ட் கழட்டி விட்டவன் அவள் அருகில் வந்து அதரங்களில் இருந்து இவன் நீரை எடுத்து கொண்டான்.

விவேகவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. யூ இடியட்…. என்ன டா வேனும் உனக்கு… சாரி டார்ஜ்லிங் ஐம் தேர்ஸ்டீ …. 

அய்யோ நீ வர வர ரொம்ப பண்ற என்று ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டு உள்ளுக்குள் சிரித்தாள்.

மேடம் கொஞ்சம் என்ன பார்த்து சிரிக்கலாம்… நானா… நான் ஒன்னும் சிரிக்கல … நான் கோவமா இருக்கேன்… ஹே நடிக்காத டி …

இப்போது இன்பா அவள் கைகளை எடுத்து பிடித்து கொண்டே கார் ஓட்டினான். கிருஷ்ணன் போன் செய்ய ஆன் தி வே… என்று கூறி வைத்தான்.

ஹே எங்க கூட்டி போற நீ … இன்பா அவளை முறைக்க … சரி சரி டென்ஷன் வேணாம் உன்னோட கோபம் எனக்கு பிடிக்கல…. உடனே அவன் கண்ணகுளி தெரிய சிரிக்க … இப்படியே சிரிச்சு மயக்கு டா என இவள் மனதில் நினைக்க… இப்படியே பேசி என்னை மயக்கு டி என்று வாய்மொழியாக சொல்ல… ஹே நீ தான் … நான் என்ன டி… நீ தான் சிரிச்சு மயக்குற.. அப்போ நீ மயங்கிட்டியா என இன்பா கேட்க ம்ம் ஆமா… இப்போது அவன் வார்த்தை தூண்டிலில் மாட்டிகொண்டவள்… இன்பாவா பார்த்து இல்ல ராகவ் நான் மயங்குல…. ம்ம் நம்பிட்டேன்…. அய்யோ என்று அவள் தலையில் கை வைத்து கொண்டாள்.

விவேகா எதாவது செய்து கொண்டும் பேசி கொண்டும் வந்தாள். இன்பா அவளை ரசித்து கொண்டே வந்தான். அவளை எதாவது சொல்லி சீண்டுவது கோபமூட்டுவது அப்புறம் சமாதானம் செய்வது என ஒரு அரை மணிநேரத்தில் கிருஷ்ணன் வீட்டின் முன் கார் நிற்க. 

முதலில் இறங்கிய இன்பா அவள் புறம் வந்து கார் கதவை திறக்க அவள் பயந்து கொண்டே இறங்கினாள். அவளின் முக மாறுதலை கண்டவன் ஹே லூசு நான் உன் கூட இருக்கேன் எதுக்கு உன்னோட முகம் இப்படி மாறுது என்று அவளை அணைத்து கொண்டான்.

ஹே பயமா இருக்கு இது யார் வீடு… இது எங்க மாம் வீடு ஹே வசு மேம் உள்ள இருக்காங்களா. ஹே நான் போறேன் டா … என்ன மேடமா…. என்ன வாடா போடா ஆனால் என்னோட மாம் உனக்கு மேடம், ம்ம் அவள் கைகளை பிடித்து அணைக்க… ஹே பிளீஸ் என்னை கொண்டு போய் ஆதி வீட்டில் விடுங்க ஸார்… இன்பா சிரித்தவன் என்னடி அதுக்குள் மரியாதை கொடுக்குற… சார் பிளீஸ் உங்க அம்மாவ பார்த்தால் எனக்கு நிறைய பயம் பிளீஸ் என்று இவள் கெஞ்ச…

ஹே பிளீஸ் கூல் எப்பவும் போல கூப்பிடு நீ… இல்ல சார் என்னை வீட்டில் கொண்டு என அவள் பேச வர அவளின் இந்த முகம் அவனுக்கு ஒரு இனம் புரியாத கஷ்டதை கொடுத்தது.

இங்கே என்னோட மாம் இல்ல… இது என்னோட மாம் ஐ மின் தாத்தா வீடு… வா போகலாம்… நான் வரல என்னை வீட்டில் விடுங்க என்று கண்களில் கண்ணீர் கோர்க்க இப்போது இம்பாவுக்கு கோபம் வந்தது. விவேகா என்று அழுத்தமாக அழைக்க 

சாரி சாரி கோபப்படாதிங்க சார்.. இவன் கோபமாக திரும்பி நிற்க… இப்போது விவேகா அவன் அருகில் வந்து சார்… இப்போ உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடனும் அவ்ளோ தான காரில் ஏறு….

ஒரு சிறிது நேரம் யோசித்தாள்.. ம்ம் சரி வாங்க போய் பார்க்கலாம்… அப்போதும் இன்பா கோபமாக இருக்க , விவேகா அவன் அருகில் சென்று ராகவ் சார் பிளீஸ் … இப்போது அவள் கைகளை தட்டி விட்டு கார் கதவினை திறக்க , டேய் ராகவ் ஓவரா பண்ணாத வா போகலாம்… இப்போது அவளை இழுத்து அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தவன். 

விவேகா இந்த மாதிரி இன்னொரு முறை இப்படி உன் முகம் எல்லாம் இப்படி பண்ணாத என்னால உன்னை இப்படி பார்க்க எனக்கு இங்கே வலிக்குது டி… என்று இதயத்தை காட்ட… ம்ம் நீ சொல்லுவ டா … உனக்கு என்ன எனக்கு தான் பிரச்சனை… என்ன பிரச்சனை என்று அவன் கேட்க , ம்ம் நீ எதோ பெருசா எனக்கு ஒரு ஆப்பு வைப்பது போல் எனக்கு தோணுது டா…

எப்பவும் உன்னோட பார்வை இப்படி தப்பா தான் இருக்குமா போடி லூசு… ஆமா எப்டி இப்போ மனசு மாறுன என்று இன்பா கேட்க முழுசா நெனைஞ்சதுக்கு  அப்புறம் முக்காடு எதுக்கு அது தான் … அப்போ நீ ஒத்துக்கற.. 

ம்ம் கனவு காணாத ராகவ் நான் உன்னை கழட்டி விட்டு விடுவேன்.இப்போது அவள் உதடுகளை பிடித்து திருகியவன் ஹே இதுக்கு நான் ரிடர்ன் போகும் போது கவனிக்கிறேன். வா உள்ளே போகலாம் என்று அவள் தோள் மேல் கை போட்டு கொண்டு அழைத்து செல்ல  கையை எடு முதலில் , ஹே இது என் தாத்தா வீடு..

அவங்க வசு மேம் கிட்ட சொள்ளிடுவாங்களா ராகவ் எனக்கு பயமா இருக்கு டா… இன்பா அவள் கைகளை பிடித்து நடந்து கொண்டே ம்ம் சொள்ளிடுவாங்க .

அவள் அதே இடத்தில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் இருக்க இப்போது இன்பா அவளை பூ போல் தூக்கி கொண்டான். ஹே விடு டா நான் இப்படியே போயிடறேன்… பிளீஸ் கீழ விடு ராகவ் இப்போ எதுக்கு டா தூக்கின… 

பேபி இப்போ நான் சொல்றத கேளு நான் எங்க மாம் கிட்ட மாம் விவேகா தான் என்னை லவ் டார்ச்சர் பண்ணா மாம் அப்டின்னு சொல்லிடுவேன்.

ஹே பிளாக் லைஸ் .. பிளாக் லைஸ் இது என்று அவள் சிணுங்கி கொண்டே இறங்க முயற்சிக்க என்னடி இது ….

கருப்பு பொய் … லூசு நான் உன்னை டிரன்ஸ்லேட் பண்ண சொல்லல….

இறக்கி விடு நீ என் பின்னால் சுற்றி டார்ச்சர் பன்னிட்டு என்னை சொல்றியா அது தான் பிளாக் லைஸ்…

அண்ட் ஒன் திங்க் எனக்கு லூசுனு  சொன்னா பிடிக்காது.

அப்போ இனி சொல்ல மாட்டேன் … சாரி பேபி…

உன்னோட சாரி எனக்கு வேணாம் பிளீஸ் என்னை இறக்கி விடு…

சரி அப்டியே சொல்லு நான் தான் உன் பின்னாடி சுத்துனேன்..

இப்போ அதுக்கு என்ன என்று அவள் இதழ்களில் குனிந்து இன்பா முத்தம் கொடுக்க வர,

க்கும்… என்று ஒரு சத்தம் கேட்க இன்பா யார் என்று திரும்பி பார்க்க அது கிருஷ்ணன் தான்  விவேகா இன்பாவிடம் ஹே இறக்கி விடு ….

இந்த ரணகளத்துலயும் உனக்கு முத்தம் தேவை தானா… ஹே இறக்கி விடு டா என இன்பாவின் காதுக்கு அருகில் சொல்ல

ஓல்டு மேன்….  விட விவேகா இன்பாவுக்கு பின்னால்  நின்று கொண்டாள்.

இன்பா அவள் கைகளை பிடித்து கொண்டான்.

குட் மார்னிங் சார் என்று விவேகா சொல்ல, இன்பா விவேகாவிடம் வாட் ஸ் திஸ்… தாத்தான்னு சொல்லு 

ஸாரி சார்… விவேகா சரியா உங்க பேரு…

ம்ம் சரி தான் சார்…

விவேகாவை இன்பா முறைத்து அவள் கைகளை விட …

ராகவ் பிளீஸ் டென்ஷன் ஆக வேணாம்…

அவ சின்ன பொன்னு…

கிருஷ்ணன் சிரித்து கொண்டே காலேஜ் ல தான் சார் இப்போ வீட்டில் நீங்க என்னை காலேஜ் ல பார்த்து இருக்கீங்களா….

இல்ல என்பது போல் தலை அசைத்தாள்.

அப்போ தாராளமாக தாத்தானு கூப்பிடலாமே 

விவேகா மா என்னை தாத்தான்னு கூப்பிட மாட்டீங்களா…

நானா.. நான் எப்டி… என்று இவள் யோசிக்க பின்னால் பூம்பாவை வந்தாள்.

க்கும்.. டார்ல்ஸ் என்று இன்பா அருகில் செல்ல நீ வர வேணாம்..

விவேகா தானே ம்ம் என்று தலை ஆட்டினாள்….

அப்போ வாங்க உள்ள போலாம் அழகா இருக்க டா மா நீ ….

தேக்ஸ் …. 

வசு மேம் அம்மா, அப்பாவா என்று கேட்க

கிருஷ்ணன் சிரித்து கொண்டே வசுமதி எங்க பொன்னு…

உடனே விவேகா அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.

ம்ம் எப்போதும் சந்தோஷமா இருக்கனும் மா…

விவேகா உடனே தலை குனிந்து கொண்டாள்.

உள்ளே வா மா….

விவேகா இன்பாவை பார்க்க அவன் கண் அசைத்தான்.

அட வா மா என்ன பயம் இங்கே யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க…

இது உன்னோட வீடு, இப்போது விவேகா இன்பாவை பார்க்க அவனை எதுக்கு பார்க்கிறாய்.அவன் ஒரு வேஸ்ட் பெல்லோ நீ வா மா… என அவளை அழைத்து கொண்டு    பூம்பாவைஉள்ளே கூட்டி சென்றனர்.

கிருஷ்ணன் இன்பாவை பார்த்து ககும்… டெல் மீ…. இப்போ வரும்போது என்ன பண்ண…. சோ வாட், அவளை தூக்கி கிட்டு வந்தேன் நீங்க கொஞ்சம் லேட்டா வந்து இருக்கலாம்… ஏன்…. ஒரு கிஸ் போயிடுச்சு ஓல்டு மேன்…. ஹே ராஸ்கல்… எப்படி அந்த கேர்ள் இப்படி மாற்றினாள்… இட்ஸ் மிராக்ள் என்று புன்னகைத்தார்…. இன்பா இதை கேட்டு கண்ணகுளி தெரிய சிரித்தான்.

இன்பா இவள் எல்லாரையும் சீக்கிரம் ஓட்டி விடுகிறாளே. என மனதில் நினைத்துக் கொண்டு இவனும் உள்ளே சென்றான்.

விவேகாவுடன் நன்றாக பாவை பேசி பழகி விட்டார். வீட்டின் உள்ளே சென்றதும் நேராக சாமி கும்பிடும் அறைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு தலையில் மல்லிகை பூ வைத்து விட்டு நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.

இன்பா தன் பாட்டியை பார்த்து கொண்டே இருந்தான். இவளை அமர வைத்து கைகளை பிடித்து கொண்டு பேச விவேகாவும் பாவையுடன் நெருக்கமானாள்.

நம்ம காலேஜ் ல தான் படிக்கிராயா. ம்ம் ஆமா அம்மச்சி  சாரி சாரி தெரியாமல் கூப்பிட்டு விட்டேன் என்று விவேகா சொல்ல 

அவள் நெற்றியில் முத்தமிட்டு  நல்லா இருக்கு நீ இப்படியே கூப்பிடு மா…. இங்கே சில பேரு என்னை மறந்து விட்டார்கள் நீயும் அப்படி பண்ண மாட்ட தானே

ம்ம் பண்ண மாட்டேன்… இன்பா பாவையிடம் பேச வர… யாரும் என் கிட்ட பேச வேணாம்… பார்க்க வேணாம்… இனி என் பேத்தி வருவா…

என்னை பார்க்க உன் அம்மா, நீ ,சுபா, அந்த அருண், சிபி, வருணி, இளவழகன் யாருக்குமே நான் நியாபகம் இல்ல தானே  நீ வந்தால் உன் தாத்தாவை மட்டும் பார்த்து விட்டு போகிறாய் என்று சோகமாக பேச 

நானும் உங்க தாத்தாவும் இங்கே தனியாக இருக்கோம் என்று வருத்தப்பட்டு பேச 

சாரி, சாரி டார்ல்ஸ் அதுக்கு தான் உனக்காக மட்டும் தான் நான் விவேகாவ கூட்டி வந்து இருக்கிறேன் .

 என் மேல் எதுக்கு இவ்லோ கோபம்…

இப்போ நீ பேசல அப்புறம் ….

இப்போது சிரித்து கொண்டே கிருஷ்ணன் மை பாய் நீ கூட்டி வரல, அப்படினா நான் அருண் கிட்ட சொல்லுவேன்….. உடனே விவேகா திடுக்கிட்டு பார்க்க, நீ அவனோட ஜூனியர்ன்ன எங்கிட்ட சொல்லி இருக்கான் என்று பேச்சு மாற்றினார்.உடனே இன்பா கோபம் கொள்ள 

அம்மச்சி பாவம் இன்பா ஸார் விட்டு விடுங்கள் . சிறிது நேரம் கழித்து உனக்காக தான்.

ம்ம் என்னை ஆசையா அம்மச்சி னனு கூப்பிடற உன்னை பார்த்தால் எனக்கும் உன்னை செல்லமா கூப்பிடனும் போல் இருக்கு…

இன்பா  பாவையின் கைகளை பிடித்து உங்களுக்கு எப்டி கூப்பிட தோணுதோ அப்படி கூப்பிடுங்க…

ராகவ் நீ ஒன்னும் சொல்ல வேணாம். நான் விவேகாவை குட்டி பொன்னு மம் வேணாம் இது நல்லா இருக்கு சின்ன குட்டி ஒகே வா 

இன்பா இதை கேட்டு சிரித்தான் சின்ன குட்டியா. . குட்டி சாத்தான் அப்டின்னு கூப்பிடுங்க இல்ல குட்டி கேடி….

விவேகா முறைக்க, ராகவ் என்ன என் முன்னாடியே அவளை கஷ்ட படுத்துறியா…

விடுங்கள் அம்மச்சி….. உடனே பாவை,விவேகா மா நான் அவனை விடுகிறேன். ம்ம் ரொம்ப தேங்க்ஸ் அம்மச்சி.. டார்ல்ஸ் இவ பேசறது எனக்கு ஒன்னும் புரியல …

குட்டி கூப்பிடற மாறி தான் கூப்பிடனும் நீங்க தான் இப்படி கூப்பிடரீங்க…

இதை எல்லாம் பார்த்து கொண்டே கிருஷ்ணன் செய்திதாளை வாசித்து கொண்டும் விவேகா மற்றும் பாவையை பார்த்து கொண்டு இருந்தார்.

ம்ம் போதும் போதும் அவ புராணம்… 

தொடரும்….

 Episode 67,

இதை எல்லாம் பார்த்து கொண்டே கிருஷ்ணன் செய்திதாளை வாசித்து கொண்டும் விவேகா மற்றும் பாவையை பார்த்து கொண்டு இருந்தார்.

ம்ம் போதும் போதும் அவ புராணம்… என்று இன்பா கூற பாவை இன்பாவை கண்டு கொள்ளாமல் விவெகாவுடன் பேசி கொண்டு இருந்தாள்.

கிருஷ்ணன், பாவை டைம் ஆச்சு பாரு பசிக்கும் சாப்பிட கூட்டி போ…

அச்சோ நல்ல வேளை நீங்க சொன்னீங்க இல்ல நான் எனக்கு நியாபக மறதி கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு…..

சரி சரி வா மா குட்டி….

இப்போதும் விவேகா இன்பாவை பார்க்க கிருஷ்ணன் சிரித்து கொண்டே ஹே மேன் என்னோட பேத்திக்கு இங்கே சாப்பிட  பெர்மிஷன் கொடுப்பியா…

ஓல்டு மேன் முதலில் உன் வைஃபை எனக்கு இங்கே சாப்பிட பெர்மிஷன் கொடுப்பாங்களா இருக்குமா…

அடி.. படவா … என்று பாவை அவனிடம் எப்பொதும் போல் பேச…

ம்ம் என்னோட டார்ல்ஸ் இப்போ சமாதானம் ஆகியாச்சு…

இதனை பார்த்து விவேகா சிரித்தாள்.

அங்கே உணவு சாப்பிடும் இடத்துக்கு வந்தவள். அங்கு இருந்த அசைவ உணவுகள் பார்த்து விட்டு தயங்கி நிற்க…

என்னாச்சி குட்டி.. 

இல்ல அம்மச்சி அசைவமா இருக்கு..

சைவமும் இருக்கு ஆனால்,

ராகவ் க்கு அசைவம் தான் பிடிக்கும் … உனக்கு பிடிக்காதா….

எனக்கு பிடிக்கும் ஆனால் எங்க ஊரில் குல தெய்வம் சாமிக்கு பண்டிகை சாமிக்கு பூ போட்டதுக்கு அப்புறம் அசைவம் சாப்பிட மாட்டோம்..

பாவை விவேகாவுக்கு நெட்டி முறித்தவள்.. ம்ம் மாசி மாசம் பண்டிகையா…

ம்ம் ஆமா அமச்சி…

ஊரோட ஒட்டி இல்லாமல் தூரமா இருக்கும் போது கூட இதை கடை பிடிக்கிரீங்க பரவால மா இது நல்ல பழக்கம்.

நானும் சைவம் தான் ராகவ், வசு, இவர் எல்லாம் ரொம்ப அசைவம்,அப்புறம் கடவுள் நம்பிக்கை இல்லை அவங்களுக்கு ஆனால் இப்போ இன்னிக்கு சைவம் சாப்பிடு அடுத்த முறை அசைவம் தான் சரியா…

ம்ம் சரி அம்மச்சி….

இதெல்லாம் கிருஷ்ணன், இன்பா இருவரும் இவர்கள் ஒற்றுமை பார்த்து விட்டு ஆச்சரியம் தான்…

விவேகாவுக்கு சைவ உணவுகள் அனைதும் ஆசையாக பரிமாறினாள்…

ராகவ்…

ம்ம் தாத்தா…

இனி பாவை எப்போதும் விவேகா புராணம் தான் பாடுவா…

இனி அவளை கயில பிடிக்க முடியாது….

அது அவனுக்கும் தெரிந்த விஷயம் தான்.

போதும் ,போதும் என்று சொல்ல விடாமல் சாப்பிட வைத்தாள் .

விவேகா சாபிட்டதும் பாவையை அமர வைத்து விவேகா பரிமாற …

கிருஷ்ணன், முடிஞ்சது …

வாட் தாத்தா . .  இப்போ ஃபிக்ஸ்  ஆகி இருப்பா..

என்ன…

அப்புறம் சொல்றேன்…

சாப்பிட்டு முடித்ததும்..  இங்கு சோபாவிற்கு இருவரும் சிரித்து பேசி கொண்டே வர இப்போது பாவை அவளை அமர வைத்து விட்டு உள்ளே இருந்து மூன்று நகை பெட்டி எடுத்து வந்தாள்.

அது மூன்றையும் திறந்து அவள் முன்னால் வைத்து விட்டு,

 மூன்றும் உனக்கு தான் குட்டி எடுத்துகோ…

விவேகா அதை ஒரு பார்வை கூட பார்க்காமல் எனக்கு இது வேணாம் அம்மச்சி…

நானே இப்போ தான் காலேஜ் படிக்கிறேன் சின்ன பொண்ணு எனக்கு வேணாம் நீங்க எப்போதும் என் கூட பேசுங்க அது போதும்….

இல்ல நீ இதுல இருந்து கண்டிப்பா ஒன்னு எடுத்து தான் ஆகனும்… இல்ல இனி நான் உன் கூட பேச மாட்டேன் நீயும் அவனை போல் ஏமாற்ற வந்து இருக்கிறாயா….

விவேகா அந்த மூன்றையும் பார்த்தவள் ஒன்று தங்கம் ஆரம், அட்டிகை செட், இன்னொண்ரு வைரம் ஆரம், அட்டுகை, வளையல்….

அந்த கடைசி பெட்டியும் இதே போல் இருக்க அதை திறந்து பார்த்தாள்…

அதில் வெள்ளை தூய்மையான முத்து , தங்க நூலில் கோர்க்க பட்ட முத்து மாலை, வெள்ளை முத்து காதணிகள், முத்து வளையல்கள் எல்லாம் தூய்மையான கடலில் இயற்கையாக விளைவிக்க பட்ட முத்துகள்.

பாவை அதை பார்த்து எதோ சொல்ல வர அம்மச்சி எனக்கு இது வேண்டும்… என்று விவேகா சொல்ல…

ம்ம் இப்போ டேட்ட ஃபிக்ஸ் பண்ணி இறுப்பா…

ஓல்டு மேன், என்ன எதோ சொல்றீங்க …

உன்னோட கேர்ள் இப்போ ஆபிசயலா பாவை ஃபிக்ஸ் பண்ணி இருப்பா.. 

என்னன்னு.. 

ம்ம் உன்னோட ஃபியூச்சர் வைஃப் …..

இன்பா இதை கேட்டு சிரித்தவன். இதுல என்ன இருக்கு தாத்தா….

பாவைக்கு அந்த முத்து மாலை தான் ரொம்ப பிடிக்கும் அந்த மாலை அதிக பகட்டா தெரியாது அதனால அதை அவளுக்காக வாங்கினாள்.

இப்போ அதை விவேகா வேனும் அப்டின்னு சொல்லிட்டாள். இதிலேய அவ பொன், பொருள் ஆசை இல்லாத பொன்னு அப்படினு தெரியுது அப்போ நல்ல பொன்னு தானே…

ம்ம் டெஸ்ட் வைக்கிரீங்க என்னோட பேபி க்கு…

இது பொண்ணுங்க இயல்பு ராகவ்…

இப்போது விவேகா , அம்மச்சி நான் இதுல இருக்க தோடு, வளையல் மட்டும் எடுத்து கொள்கிறேன்.

என்ன மா நீ… நான் உன் கூட பேச மாட்டேன் போ மா…

இது கொஞ்சம் விலை அதிகமா இருக்கு…. 

அதனால் என்ன இது மூன்றுமே உனக்கு தான்…. ஆனால் நீ தான் வேணாம் ன்னு சொல்ற…

டார்ல்ஸ் விடு அவள கம்பள் பண்ணாத….

ஹே போடா… என்று கூறி வலலுகட்டயமாக விவேகா கழுத்தில் போட்டு விட்டாள்.

இது என்னோட அன்பு நீ எப்பவுமே கழட்ட கூடாது..

உடனே இன்பா அவள் அருகில் வந்து அவ எப்பவும் கலடட மாட்டா… கழட்டினால் தண்டனை தான் என அவள் கை பிடிக்க போக உடனே விவேகா இன்பாவை முறைத்தாள்.

ஹே ரொம்ப ஓவரா பண்ற இங்கே வரவே மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு இப்போ ….

அப்டியா குட்டி…

இல்ல அம்மச்சி வசு மேம் எனக்கு பயம் ….

மேடம் ஆ …

நான் எதுவும் தவறா சொல்லிடெனா…

உடனே கிருஷ்ணன் , ம்ம் கும்… ஒரு நிமிடம் என்று உள்ளே சென்று அவர் ஒரு பேக் எடுத்து வந்து விவேகா கிட்ட கொடுக்க

அவள் வாங்க தயங்கினாள் ….

ம்ம் வாங்கிக்கோ தாத்தா கொடுக்கிறார்கள் தானே என பாவை சொல்ல உடனே அவள் இன்பா பக்கம் திரும்ப அங்கே பார்க்க கூடாது என பாவை அவள் முகத்தை திருப்பி அந்த பேக் வாங்க வைக்க….

உடனே தர்ம சங்கடமாக உணர்ந்தாள். அவள் அதை திறந்து பார்க்க அதில் லேப் டாப் இருக்க என்ன தாத்தா இது…

இது லேப் டாப் நீ படிக்கிற பொன்னு தானே அது தான் உனக்கு என்ன வாங்கறது அப்டின்னு தெரியல சோ நீ ரொம்ப பிரவ் அதனால் அதை கொஞ்சம் அதிக படுத்த லேப்டாப்…

ஆப்பிள் லட்டஸ்ட் மாடல்…

 அம்மச்சி, நீங்க வாங்கிக் கொடுத்ததுக்கு என்னால எதுவும் கொடுக்க முடியலியே எனக்கு இது ஒத்து வருமா என சொல்ல 

அடி அடி வாங்க போற நீ… என பாவை சொல்ல உடனே கிருஷ்ணன் , இது நீ ராகவ் கூட வராமல் இருந்தால் கூட உனக்கு நான் காலேஜ் ல கொடுத்து இருப்பேன்…

இவள் ஆச்சரியமாக பார்க்க அந்த வாட்டர் டெப் ல ஆல்ரெடி நான் இம்ப்ரெஸ் ஆகிட்டேன்…

ஓல்டு மேன் போதும் போதும் நீங்க இம்ப்ரெஸ் ஆனது… 

விவேகாவுக்கு  இப்போது மனம் பாரமாக இருந்தது. இவன் இப்படி என்னை மாட்டிவிட்டுடானே…

அவள் முகம் கவலை ரேகை கொள்ள பாவை என்னாச்சு மா உன் முகம் இவளோ சோகமா இருக்கு…

ஒன்னும் இல்ல அம்மச்சி…

இன்பா,ம்ம் சரி ஓகே  நாங்க கிளம்பட்டுமா…

இப்போவே வா சாயங்காலம் போலாம் தானே என பாவை சொல்ல

இல்ல டார்ல்ஸ் அவ வீட்டில் கொண்டு விடனும் இனி விவேகாவா எப்போ பார்க்கிறதா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க நான் கூட்டி வருகிறேன்..

கிருஷ்ணன் பாவையிடம் ம்ம் போயிட்டு வா அப்டின்னு சொல்லு அங்கே குழந்தை முகத்தைப் பாரு….

விவேகா அவர்கள் அருகில் வந்து அமச்சி இது நான் அடுத்த முறை வரும் போது வாங்கிக்கட்டுமா… தாத்தா என் கிட்ட லேப் டாப் இருக்கு வேணாம் தாத்தா….

உடனே பாவை அப்போ எங்களை உனக்கு பிடிக்க வில்லையா… அதனால் தான் திருப்பி கொடுக்கிற தானே சரி விடு…

இல்ல எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு…

அப்போ இத வேணாம் அப்டின்னு சொல்ல கூடாது..

இப்போது வேறு வழி இல்லாமல் சரி என்று மீண்டும் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்க போக இன்பாவும் இப்போது அவளுடன் சேர்ந்து கொண்டான்.

அதை பார்த்து இருவருக்கும் மிகவும் சந்தோஷம் கீழ விழும் போது விவேகாவின் இடையில் ஒரு கிள்ளி விட்டான்.

ம்ம் பரவால ராகவ் நல்ல பழக்கம் இதெல்லாம் விவேகா தான் சொல்லி கொடுத்து இருக்கிறாள்…. என பாவை சொல்ல

கிருஷ்ணன் சிரித்தார். இனி என்னை எங்கே பார்த்தாலும் எப்படி கூப்பிடனும்…

இன்பா அவள் கைகளோடு கோர்த்து கொண்டு சொல்லு டி…

ஹே ராகவ் என்ன குட்டிய அதட்டுற …

தாத்தா மம் சரி தாத்தா…

ம்ம் குட் கேர்ள்…

அப்போ நான் வரேன் அம்மச்சி, தாத்தா போயிட்டு வரேன்…

ம்ம் ஓகே பாவை சிரிச்சு அனுப்பி வை …

ம்ம் என்று இருவரும் திரும்ப அனுப்ப மனம் இல்லாமல் அனுப்பி வைத்தனர்.

இருவரும் காரில் ஏறிய பின் பாவையும், கிருஷ்ணனும் உள்ளே சென்றனர்.

கிருஷ்ணன் பாவையிடம், எனக்கு அந்த பொண்ணை பார்த்தால் உன்னை பார்ப்பது போல் இருக்கு பாவை…

நல்ல பொண்ணு ..  

ராகவ் நல்ல பொண்ண விரும்புறான் சந்தோஷம்… எனக்கு அந்த சின்ன குட்டிய ரொம்ப பிடிச்சு இருக்கு… அவ கண்ணுல எந்த ஆசையும் இல்லங்க..  ராகவ் மேல அதிக பிரியம் மட்டும் தான் இருக்கு…

ம்ம் ராகவ் அவளை எப்டி பார்த்து கொள்கிறான் தெரியுமா…

ம்ம் ராகவ் அப்பாவுக்கு தெரியுமாம் வசு கிட்ட சொல்ல கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகரான்….

என இருவரும் பேசி கொண்டே சென்றனர்.

இங்கே காரில் ஏறியதும் சிறிது தூரம் செல்ல விவேகா இன்பாவிடம் பேச வில்லை.

ஹே என்னாச்சு டி.. 

ஒன்னு ஒன்னும் இல்ல..

வரும் போது அவ்ளோ வாய் பேசுன இப்போ அமைதியாக இருக்க…

விவேகா…???

தொடரும்….

Episode 68,

கிருஷ்ணன் வீட்டில் இருந்து இன்பாவும், விவேகாவும் கிளம்பினர். காரில் வரும்போது இன்பா சாலையையும் விவேகாவையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டே வந்தான்.

அவர்கள் கிளம்பும் போது மதியம் 1.30 ஆக இருந்தது.

படபடக்கும் அந்த பாட்டாம் பூச்சி கண்கள், அந்த கூர் நாசிகள் எப்பொதும் வேக வேகமாக மூச்சு விடும் நாசி, துடித்து கொண்டே இருக்கும் அந்த இரு உதடுகள் முக்கியமாக அந்த இடது கண்ணுக்கு மேல் இருக்கும் மச்சம் என்ன அழகான முகம் அவளுடைய நிறம் பால் இல்லாமல் தேனின் நிறமும் இல்லாமல் அவளுடைய தேகம் தனித்துவமான நிறம்… இப்படியே இன்பா அவளை அணுவணுவாக ரசித்து கொண்டே வந்தான்.

இப்போது தன்னிலைக்கு வந்தவன் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். விவி …

விவேகா…

ம்ம்….

டார்ஜிலிங் ..  

ம்ம் சொல்லுங்க…

என்னாச்சு வரும் போது அவ்ளோ வாய் பேசின இப்போ என்னாச்சு ..

ஒன்னும் இல்ல ….

ஹே பொய் சொல்லாதே….

எல்லாம் உன்னால தான்…இப்போது இன்பா என்னால என்ன….

ம்ம் இந்த முத்து மாலை, இந்த லேப் டாப் இதுக்கெல்லாம் காரணம் நீ தான… என்று வருத்தபட்டு கூறினாள்.

இன்பாவுக்கு உடனே கோபம் வர காரை நிருத்தியவன்,அப்போ அப்டின்னா என்ன அர்த்தம்….

அது அப்படி இல்லை …

இப்போ எனக்கு பதில் சொல்லு  ம்ம் .. என்று தன் தலையை வேகமாக கோதினான். 

ம்ம் சொல்லு….

இல்ல எனக்கு இது தகுதி இல்லை….

அவங்க கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே….

இப்போது அவள் அமைதியாகி ஜன்னல் பக்கம் பார்க்க, கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.

இன்பா ஒரு 5நிமிடங்கள் அமைதியாக இருந்தவன். மிஸ் விவேகா….

இவள் கண்ணீர் முகத்துடன் திடுக்கிட்டு அவனை பார்க்க…

இனி நான் உங்க பக்கத்தில வர மாட்டேன். உங்களுக்கு இஷ்டம் இல்லாத அன்பு வேண்டாம்.

அந்த பேர்ல் செட், அண்ட் லேப் டாப் இங்கேயே வைத்து விட்டு போங்க…. இனி எல்லாம் முடிந்த.. அதற்கும் மேல் அவன் சொல்ல முடியாமல் 

இப்போ ஆர் யூ ஓகே…. என்று கூறியவன். அவள் முகத்தைப் பார்க்காமல் காரை ஸ்டார்ட் செய்ய போக,

அந்த நேரம் விவேகா அவனை தாவி அணைத்து  கொண்டாள்.

ஹே நகரு பிளீஸ் மூவ்….

என்னை விடுங்க மிஸ் விவேகா என்று அவன் சொல்ல அவன் கன்னத்தல் முத்தம் கொடுத்தாள்.

இப்போது அவன் அவளை இழுத்து தலை சாய்த்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவளும் அவனோடு இசைய ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து விட்டவன். அவள் முகம் பார்க்க அவள் இன்பாவின் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.

இப்படி இன்பா அவளை விட்டு போகிறேன் என்று சொன்னதும் அந்த வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை.

ஹே நகரு டி… 

அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருக்க அவள் தலையை வருடி விட்டான். இப்போது பேசினான்.

தகுதி இப்படி பேசுறது அர்த்தம் இல்லாத ஒன்னு. நீ தான் எனக்கு வேனும் உங்க அம்மா , அப்பா யாரு, என்ன பண்றாங்க அதெல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. அது எல்லாம் பார்த்து வருவது லவ் இல்லை.

விவேகா இனிமே இந்த மாதிரி என் கிட்ட பேசின அவ்ளோ தான் சொல்லிட்டேன். நீ தான் என்னை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுவ என்னை விட்டு உன்னால இருக்க முடியாது.

இப்போது விவேகா பேசினாள். ராகவ் நீ…

நான்…

நீ ரொம்ப மோசம்…

ஏன்…

நீ என் மேல ரொம்ப ஆதிக்கம் செலுத்துற…

அது இன்பாவுக்கே தெரியும்… அதை அவளிடம் காட்டி கொள்ளாமல்.

எப்படி …

ம்ம் ஆமா …

அப்போ நான் உன்னை வற்புறுத்துறேன் அப்டின்னு சொல்றியா ..

ம்ம் ஆமா…  ஆனால் இல்லை… என்று விவேகா சொல்ல

ஒன்னு சொல்லு டி…

தெரியல டா ஆனால் நீ எதோ பண்ற பாரு,உன் கூட சேர்ந்து எல்லா திருட்டு தனமும் நானும் பண்றேன் நீயே பாரு… நீ போலீஸ் இல்லை நீ தான் சரியான திருட்டு கள்ளன்..

பேபி நான் ஒன்னும் திருட்டு தனம் பண்ணுல அது நீ தான்…

எப்படி ,.

ம்ம் ஆமா நான் எங்க மாம் வீட்டில் போய் உன்னை இன்ட்றோ கொடுத்து இருக்கேன் இதை எப்படி நீ திருட்டு தனம் நு சொல்ற…

அட ஆமா அப்போ நான் தான் திருடியா…

ஒரு நிமிடம்.. அப்போ உங்க வீட்டில் சொல்லிட்ட வசு மேம் கிட்ட..

பிளீஸ் எங்க அம்மாவ மேம் அப்டின்னு சொல்லாத ஐ டோண்ட் ஹியர் தட் வோர்ட்..

அப்போ என்ன சொல்லட்டும்…

உனக்கு தெரியாதா…

எனக்கு தெரியாது…. என்று அவன் மார்பில் தலை சாய்த்து சிரித்து கொண்டே சொன்னாள்.

ம்ம் மாமி ன்னு சொல்லு…

மாமியா… ம்ம் ஆமா

அப்படி தான் எங்க சொந்தத்தில் கூப்பிடுவோம்..

ம்ம் நல்லா இருக்கே … என்று சொன்னவள் எதோ யோசனையுடன் .

நான் எதுக்கு அப்படி கூப்பிடனும். ராகவ் நான் தான் சொன்னேனே நீ பாரு இப்போவே எங்கே போயிட்ட தூரமா …

ஹே அது உன்னோட ஓவர் இமாஜிநேசன்…

இல்ல நீ.. 

இடியட் ….

சரி உங்க வீட்டில் இதை பத்தி சொண்ணா திட்ட மாட்டாங்களா…

நான் எங்க டாட் கிட்டயே சொல்லிட்டேன்…

என்ன சொல்லிட்டயா… என்று அவள் தன் தலையை தூக்கி பார்க்க இந்த கோணத்தில் மீண்டும் அவள் இதழில் விழுந்தான்.

அவளது முகம் வெளிப்படுத்தும் இந்த முக பாவனையை பார்த்து அவளிடம் விழுந்து விட்டான்.

எப்போ பார்த்தாலும் உனக்கு இதே வேலை தான்டா எனக்கு வேற பயமா இருக்கு… 

சரி அது கிடக்குது உங்க அப்பா கிட்ட என்னன்னு சொன்ன என்று இவள் பயந்து கொண்டே கேட்க…

பேபி கூல்.. கூல் சில் பேபி 

நீ சொல்லு டா…

இந்த மாதிரி அப்டின்னு அவன் ரவி கிட்ட பேசியது பற்றி சொன்னான்.

இப்போது விவெகாவின் இதயம் வேக வேகமாக துடிக்க ஹே விவேகா என்னாச்சி டி உன் இதயம் இப்படி துடிக்குது.

உன் உனக்கு எப்டி தெரியும்…

எனக்கு தெரியும் டி… உன்னோட இதயம் துடிக்கிற அந்த ரிதம் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஹே எத்தனை தடவை நீ கேட்டு இருக்க…

ம்ம் நான் ஒவ்வொரு முறை உன் பக்கத்தில வரும் போதும் இந்த இதயம் எனக்காக ரிதம் குறிப்பா ரிதமிக் ல துடிக்கும்.

இந்த ரிதம் தான் எனக்கு நீ என்னோடவள் அப்படினு காட்டி கொடுத்தது.

ரிதம் அந்த வார்த்தையை சொல்ல எவ்ளோ இனிமையா இருக்கு இல்ல…

ம்ம் ஆமா நல்லா இருக்கு…

என்ன உன்னோட ரிதம் எனக்கு கேட்குது ஆனால்…

ஆனால் என்ன.. எனக்கு நீ சொல்ற மாதிரி எதும் உன்னை ஃபீல் பண்ண வைக்கலயே…

நான் நம்ப மாட்டேன்…

போடா …

அப்போ நான் போறேன் டி.. 

ராகவ் உன் கிட்ட ஒன்னு கேட்கட்டா…

ஒரு வேளை நான் உன்னை கலட்டி விட்டால் நீ என்ன பண்ணுவ…

அது நடக்கவே நடக்காது…

அவ்ளோ கான்பிடன்டா உனக்கு….

ம்ம் நீ அதற்கு முன்ன எனக்கு சொந்தமாகி இருப்ப…

என்ன…

ம்ம் ஆமா… உன்னோட மனசுல இந்த மாதிரி எண்ணம் இருக்கா…

இல்ல இல்ல நான் சும்மா கேட்டேன்

இல்ல நீ நிஜமாவே கேளு 

ஹே நான் உன்னோட பிரபோசல் இன்னும் அக்சப்ட் பண்ணல…

அப்போ இந்த கிஸ் , ஹக் இது எல்லாம் எந்த கணக்கு….

ம்ம் போடா…

உங்க அப்பா எதுவும் உன்னை கேட்கலயா.. என்று கேட்க இன்பா நடந்த அனைத்தும் கூற அதை ஆரம்பிக்கும் போதே விவேகா அவன் நெஞ்சில் உறங்கி இருந்தாள்.

இன்பா பேசி கொண்டே இருக்க என்ன இவ இவளோ நேரம் அமைதியாக இருக்க மாட்டளே… என அவன் தன் போன் எடுத்து அவள் என்ன செய்கிறாள் என பார்க்க 

பூனை குட்டி போல் இன்பாவின் நெஞ்சில் உறங்கி கொண்டு இருந்தாள் இன்பாவின் (விவேகா வேண்டாம் )காதலி

 ம்ம்ம் இங்கு அவள் தூங்குவதை ரசித்தவன் சரியான கேடி … என்னோட தாத்தா, டார்ல்ஸ் ஈவன் என்னோட மாம் எல்லாரையும் உடனே எல்லாரிடமும் ஒட்டி கொள்கிறாள்.

இன்பா அப்படியே சில செல்ஃபி மற்றும் சில புகைப்படங்கள் எடுத்து தள்ளினான். அவள் தூக்கம் களையாத வாறு கன்னம், முகம், என எல்லா இடங்களிலும் முத்தம் பதித்தான்.

இன்பா அவள் மேல் அதிக்கம் செலுத்துகிறான் என்று அவனுக்கே தெரியும். என்னால முடியல டி… நீ எப்போதும் என் பக்கத்தில் இருக்கனும்…. அப்போ தான் நான் என்னோட வேலையில் முழுசா ஈடுபட முடியும்… என மனதில் நினைத்துக் கொண்டான்.

இது தான் முதல் படம் தன்னுடய முக்கிய பதிவுகளில் சேர்த்து பத்திர படுத்தி கொண்டான்.

3மணி ஆக கொஞ்சம் அசைந்தவள் மா டீ….

இன்பா சிரித்து கொண்டே எதுவும் சொல்லாமல் இருக்க, மா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ப்ரஷ் பண்ணாம பிளீஸ் மா… என்று சொன்னவள் இப்போது கண்களை தேய்த்து விட்டு பார்க்க இன்பாவின் சிரித்த முகம் தெரிய …

ஸார் நீங்க எப்டி இங்கே…

அய்யோ எல்லாம் தெரிந்து விட்டதா…. என்று இவள் சொல்ல…

ம்ம் எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது…

இவள் படபடக்கும் இதயத்துடன் சுற்றி பார்க்க அப்போது தான் காருக்குள் இருப்பது தெரிய இப்போது தான் இயல்பு நிலைக்கு வந்தாள்.

அவன் மேல் சாய்ந்து இருப்பது தெரிய வேக வேகமாக எழுந்தாள்.

இன்பா மீண்டும் அவளை நெஞ்சோடு அணைக்க என்ன விடு ராகவ்…

இவ்வளவு நேரம் என்னை பில்லோ, பெட்டா, யூஸ் பண்ணிட்டு இப்போ எதுக்கு டி வேகமாக எழுந்து போற…

இதுக்கு எல்லாம் நீ தான் காரணம்….

நான் என்ன உன்னை பண்ணேன்…

நீ நைட் எல்லாம் என் கிட்ட போன்ல பேசினதுனால எனக்கு இப்போ தூக்கம் வருது.

ஓ ஸாரி டி… இனி சீக்கிரமே வைத்து விடுகிறேன்…

இல்ல இனி நீ எனக்கு கால் பண்ண வேணாம்..

ஏன்…

நான் எங்க அம்மா கிட்ட மாட்டிகிட்டேன்.. இனி நீ எனக்கு கால் பண்ணாத சரியா… உடனே கோபமானவன்.

நான் பண்ணுவேன் நீ பேசுற அவ்ளோ தான்…

ஹே பாரு பாரு நீ ரொம்ப கோவப்படுற…

ஒரு நாளைக்கு ஒரு தடவை பேசலாம் ரொம்ப நேரம் வேணாம்.. இப்போ ஓகே வா…

சிரி ராகவ் பிளீஸ்….

ம்ம் ஹி ஹி … போதுமா… 

சரி சரி என்னை வெண்பா வீட்டுக்கு கொண்டு விடு…

ம்ம் விடுகிறேன்…

அவளுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்து பின் அவன் ஒரு பிளாக் காபி சப்பிட்டு விட்டு நேராக கார் காவலர் குடியிருப்பு அருகில் நிற்க விவேகா ஒரு நிமிடம் இன்பாவை பார்த்து ,

ராகவ் ரொம்ப நன்றி…

ரொம்ப ரொம்ப தேக்ஸ்…

எதுக்கு… இந்த லேப், பேர்ல் செட் க்கு சொன்ன உன்னை கொன்னுடுவென் டி…

ஹே அதுக்கு ஒன்னும் இல்லை…

அப்போ எதுக்கு…

இல்ல அது தெரிஞ்சா நீ எப்படி எடுதுக்குவ அப்டின்னு தெரியல…

ஆனால் ரொம்ப ரொம்ப தேங்க் யூ சோ மச்…

நீ பண்ணுன எல்லார்த்துகும் ரொம்ப நன்றி ராகவ்…

ஹே சொல்லிட்டு போடி….

நான் எதுக்கு தேங்ஸ் சொன்னேன் அப்படின்னு நீ கண்டு பிடி…

சரி அதுக்கு முன்ன ஒரே ஒரு க்ளூ மட்டும் கொடுத்து விட்டு போ…

அதை நீ தான் கண்டு பிடிக்கணும்…

அப்போ க்ளூ வேணாம் வேணாம் கிஸ் கொடுத்துட்டு போ என்று அவள் அனுமதி இல்லாமல் இழுத்து முத்தமிட்டு விட்டான்.

ம்ம் விடு எனக்கு டைம் ஆச்சு …

ஹே இதை எடுத்து கிட்டு போ என்று அந்த லேப் டாப் பேக் கொடுத்து அனுப்ப விவேகா அதை வாங்கி கொண்டு ஓடி விட்டாள்.

இன்பாவும் சிரித்து கொண்டே தன் வீடு நோக்கி சென்றான்.

ஆனால் நாளை ஒருவர் மனம் மாற போகிறது..

தொடரும்….

 Episode 69,இன்பா அவளை வழி அனுப்பி வைத்து விட்டு இப்போது சந்தோஷ மன நிலையில் தன் வீட்டுக்கு சென்றான்.

சுபா தன் அப்பாவுக்கு தலைக்கு மூலிகை எண்ணெய் ஊற்றி ஆயீல் மசாஜ் செய்து கொண்டு இருந்தாள். வசு ஏற்கனவே மசாஜ் செய்து கொண்டு அருகே உள்ள சோபாவுல அமர்ந்திருக்க,

இன்பா மொத்த குடும்பமும் இருப்பதை பார்த்து விட்டு எதுவும் நடக்கதது போல் உள்ளே வந்தவன் தன் அறைக்கு செல்ல போக,

இப்போது இன்பா உள்ளே வந்து விட்டு பார்க்காதது போல் மேல செல்ல போக 

வசு இப்போது அழைத்தாள், ராகவ் …

மாம்…. என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

தன் மகனை ஆராயிந்தவள் என்ன இது….

என்ன மாம்….

உன்னோட ஷர்ட் ல குங்குமம் திரு நீரு….

இன்பா பேசும் முன், ரவி, IPS சாருக்கு சாமி மேல நம்பிக்கை இல்லயே இப்போ எப்படி குங்குமம் எங்கேயோ இடிக்குது….

மாம்… என்று அவன் கத்த…

என்னங்க என்று வசு அதட்ட

ஒகே நான் எதுவும் சொல்லல….

மாம் நான் டார்ல்ஸ பார்க்க போயிருந்தேன். அங்கேயே சாப்பிட்டேன்.. சோ அப்போ வந்து இருக்கும்.

டார்ல்ஸ் ம்ம் ஓகே … தன் அம்மாவை பற்றி பேசியதும் வசு மூளை போலீசில் இருந்து இப்போது தாய் ,மகள் என்று மனம் குடி கொண்டது.

சரி இரு நான் உனக்கு பப்பயா ஜுஸ் எடுத்து வரேன்…

இங்கு சுபா டாடி முடிஞ்சது நான் கை கழுவி வருகின்றேன் என்று நகர…

டார்லிங்கா… என ரவி கேட்க,

இப்போது இன்பா ” ம்ம் , டார்லிங் இல்லை என்னோட டார்ஜ்லிங்”… கண்ணகுளி தெரிய சிரித்து வைத்தான்.

இப்போது சுபா அவள் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள உடனே இன்பா எழுந்தவன். சுபா என்று நடந்து கொண்டே அந்த TN***** num கார்ல டீசல் ட்ரெயின் ஆகி விட்டது. 

ரவி இப்போது எங்கே டா போன ராஸ்கல் …

கூல்.. சில், மாம் ஜுஸ் எடுத்து டாடி க்கு கொடுங்க…

ஹே இடியட்…

நான் சும்மா ஜாலியா ஒரு ரவுன்டு என்னோட டார்ல்ஸ் கூட என்று தன் ஒற்றை கண்ணை சிமிட்ட உடனே அங்கு இருந்த அழகுக்காக வைக்க பட்டு இருந்த பொம்மையை எடுத்து இன்பாவின் மேல் தூக்கி வீசினார்.

ம்ம் பத்தாது இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க என்று சிரித்து கொண்டே சென்று விட்டான்.

டாடி விடுங்க பிளீஸ் …

அவன் என்ன செய்து இருக்கான் பாரு ஏஞ்சல்..

சரி சரி விடுங்க பா…

ராகவ் .. ராகவ்.. என அழைத்து கொண்டே வசு வர .. 

உன் பையன் என்ன செய்து இருக்கிறான் தெரியுமா…

என்று இன்பா கார் டீசல் பற்றி சொல்ல உடனே அவள் சிரித்து கொண்டே நீங்களும் அவனும் எதுக்கு எப்போ பார்த்தாலும் சின்ன பையன் பென்சில் எடுத்த கம்பிளைன்ட் பண்றீங்க…

இப்போ உங்களுக்கு டீசல் ஃபில் ஆகனும் நான் ஃபில் பண்றேன் தயவு செய்து குட்டி பசங்க மாதிரி சண்டை போட வேண்டாம்.

இங்கே நேராக தன் வீட்டுக்கு சென்ற விவேகா இன்று நடந்த அனைத்தும் நினைத்துக் கொண்டு சிரித்தாள்.

இந்த ராகவ் இருக்கானே சரியான அங்ரிபெர்ட்…

அப்புறம் போசசிவ் அதிகம் இப்போவே.. 

இப்போது கண்ணாடி முன் நின்றவள் தன் இதயத்தின் அருகில் கை வைத்து,

எதோ சொன்னானே ரிதம் ம்ம் ரித்தமிக் சத்தம் கேட்குதா என்று அவள் தன் இதயத்தின் மீது ஒரு அடி வைத்தவள்

இன்பா… ம்ம் 

இன்பராகவன்.. வேண்டாம்

ராகவ்…  ம்ம் ம்ம் இரிடேடிங் இடியட்… என்று அவன் பெயரை சொல்ல இதயம் வேகமாக துடித்தது. ஹே பாரு பாரு அந்த இடியட் சொன்ன மாறி நீ அவன் நினைப்பில் சுத்துற… தன்னவன் அல்லவா …

அம்மச்சி யூ ஆர் ஆல்சோ ஸ்வீட்…

தாத்தா யூ ஆல்சோ …

 என்று நினைத்தவள் மனதில்  இப்போது தன் அப்பாவின் அம்மா , அப்பா நியாபகம் வர ஒரு தடவை கூட தன் மேல் தன் அண்ணன் மேல் ஒரு பாசம் வெறும் முகத்தளவில் மட்டும் தான் என்று

ராகவ் நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் டா உனக்கு ரொம்ப பாசமான அம்மச்சி, தாத்தா எல்லாரும் இருக்காங்க…

உன்னை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு…

நீ என்னை வேண்டாம் என்று சொன்னால் கூட நான் அம்மச்சி தாத்தாவை எப்போதும் போல் அவர்கள் கூட இருப்பேன்.

ஆதி, கங்காவை வீட்டில் விட வர உடனே விவேகா அவனை அழைத்து போய் அங்கே நடந்த அனைத்தும் கூற இப்போது ஆதிக்கு இன்பாவின் மேல் நம்பிக்கை, மரியாதை இரண்டும் அதிகமானது அந்த லேப் டாப் ஓபன் செய்து அனைத்தும் பார்த்தவன்.

ஹே எப்டி டி தனியா போன… எல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு தான் செய்வ..

ஹே ஆதி நேற்று நைட் தான் அவன் சொன்னான்… 

விவேகா அடி வாங்க போற நீ .. 

ஏன்…

மரியாதை கொடு அவர் உன்னை விட பெரிய பையன் தானே…

போடா….

ஹே பசங்களுக்கு மரியாதை கொடுக்கும் பொண்ணை இன்னும் பிடிக்கும்..

நிஜமாவா…

ம்ம் ஆமா என்று அந்த லேப் டாப் ல நோண்டி கொண்டு இருந்தான்.

அப்புறம் இன்னோரு விஷயம் …

என்ன …

அவர் பிராபோஸ் பண்ணிட்டாரு…

இப்போது ஆதி அவளை அதிர்ந்து பார்த்து, அதுக்கு நீ என்ன சொன்ன

பிராபோஸ் டா…

ம்ம் என்று சிரித்து கொண்டே கேட்க…

அவ்ளோ தான்…

ஹே விவி திருட்டு கள்ளி சொல்லு அப்புறம் நீ என்ன சொன்ன…

நான் கழட்டி விட்டு விடுவேன் உன்னோட புரோபோச அக்சப்ட் பண்ணல டா…

இப்போது ஆதி அவளை கோபமாக பார்க்க …

ஏன் டா…

விவி எனக்கு காது குத்திடான்க டி …

அதுக்கு என்ன என்று அருகில் இருந்த வேர் கடலை எடுத்து வாயில் போட்டு கொண்டே அவனை பார்க்க

இவ விடிய விடிய போன் பேசுவாளாம், அவங்க வீட்டுக்கு எல்லாம் போவாளாம்.. அப்புறம் எல்லா திருட்டு தனமும் பண்ணிட்டு இப்போ நான் அக்சப்ட் பண்ணல அப்டின்னு சொன்னா நான் காதில் பூ வைத்து இருக்கேன் அப்டின்னு நினைத்தாயோ…

அது ..அது அப்படி தான் நீ கேட்க கூடாது…

ஹே போடி…

நான் அன்னிக்கு உன் கிட்ட சொன்னேனே உனக்கு நியாபகம் இருக்கா…

என்ன…

நீயா விட்டு போனாலும் அவரு உன்னை விட மாட்டாரு பார்த்தியா இப்போ எவ்ளோ டேவலப்மெண்ட்… 

அவன் சாரி சாரி அவரு என்னை ரொம்ப ரூல் பன்றாறு… நான் எப்படி இப்படி மாறினேன் அப்டின்னு எனக்கு தெரியல ஆதி…

இதுக்கு பேரு என்று ஆதி நிறுத்த 

சொல்லு டா

லவ் டி என்று சொல்லும் நேரம் விவேகா….

என அழைத்து கொண்டே உள்ளே வந்தாள் வெண்பா அங்கு ஆதியும் இருப்பது அவளுக்கு தெரியவில்லை.

இப்போது ஆதி அவளை பார்த்து விட்டு சரி டி நான் வீட்டுக்கு கிளம்புறேன். 

ஹே இரு டா இன்னும் கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம்.

ஆதி, நாளைக்கு காலேஜ் ல மீட் பண்ணலாம் டி, நான் வீட்டுக்கு போறேன். 

ஆதி வெண்பா பக்கம் திரும்பவும் இல்லை பேசவும் இல்லை.

விவேகா இருவரையும் பார்த்து விட்டு ஹே என்ன உங்க ரெண்டு பேருக்கும் சண்டையா…

வெண்பா,” அத அவன் கிட்டயே கேளு இவன் பெரிய இவன் வந்து சீன் போடுறான்”

ஹே என்னாச்சு எப்போ பார்த்தாலும் என்னோட ஆதிய நீ எதுவும் சொல்லாத சரியா…

போதும், போதும் … நான் இதை கேட்க வரல..

பின்ன என்று அவள் திரும்பி போய் பெட்டில் அமர்ந்து கொள்ள,

ஹே சொல்லு சொல்லு …

என்ன சொல்ல என்று விவேகா கொஞ்சம் புன்னகைக்க…

ஹே ஹே சொல்லு டி  நேற்று நைட் ஃபுல்லா ஒரே சங்கீத சுவரங்கள்  ஏழே கணக்கா.. ம்ம் சொல்லு சொல்லு

ஹே உனக்கு எப்டி தெரியும்…

அதான் வீட்டில் ஒருத்தன் இருக்கானே  மித்ரன் அவன் சொன்னான்.

ஹே நான் எங்க அம்மா கிட்ட மாட்டிக்கிட்டேன் வெண்பா என அவள் சொல்ல…

ம்ம் இன்டரெஸ்டிங்.. 

அடி வாங்க போற நீ

சரி இன்னிக்கு என்னாச்சு …

இன்னிக்கு நாங்க என்று அவளும் இன்பாவும் கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றது பாவை என அனைத்து விஷயமும் கூறினாள்.

வென்பா, ஹே போதும் உன் லவ் ஸ்டோரி போர் அடுக்குது விவேகா

ஏன் டீச்சர் கொஞ்சம் கூட நான்வெஜ் இல்ல டி..

ஹே என்ன சொல்ற நீ…

ம்ம் ஆமா கொஞ்சம் கிஸ் அப்புறம் ஹக் இது தான் .. 

ஹே போதும் போதும் நிறுத்து..

ஏன் டி…

அவன் ஒன்னு சொன்னான் டி…

யாரு…

உங்க அண்ணா இடியட்…

என்னன்னு…

நீ குட்டி பொன்னு அப்டின்னு ஆனால் நீ இப்படி பேசுற…

அட போடி .. என்னோட அன்பு செல்வன் மட்டும் இப்போ இருந்தா செம்மையா இருக்கும். தெரியுமா.

எங்கே இருக்கானோ …

உங்க வீட்டில் ஓகே சொல்லுவாங்களா டீச்சர்..

ம்ம் சரவணன் அண்ணா கிட்ட சொல்லுவேன் நான் எது கேட்டாலும் எனக்காக செய்வார்.

உன்னோட அண்ணா, ம்ம் சுத்தம் அவன் மட்டும் ஆதி அக்காவ லவ் பண்ணி இப்போ வந்ததும் கல்யாணம் பண்ணிபான்.

நான் மட்டும் இந்த மாறி அப்டின்னு தெரிஞ்சா என்னை நான் பினிஷ் டி…

ம்ம் அப்டியா என இருவரும் பேசி சிரித்து கொண்டே இருக்க வெண்பா பின் கிளம்பி விட்டாள்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது வென்பாவும், விவெகாவும் காலேஜ் சென்றனர். விவேகாவுடன் வெண்பா விவேகா கிளாஸ்க்கு ஒரு புத்தகம் வாங்கும் விஷயமாக  வர 

அப்போது கிளாஸ் ல ஒரே சிரிப்பு சத்தம் கூட்டமாக இனியாள்,யாழினி,பூரணி என மாணவிகள் நின்று பேசி கொண்டு இருக்க

விவேகா நேராக அவள் இடத்துக்கு போய் அமர வெண்பா கூடவே போய் அமர்ந்து கொண்டாள்.

அப்போது மைதிலி வந்தவள் அங்கு என்ன நடக்கிறது என்று அருகில் உள்ள தோழி மீனாவிடம் கேட்க

அதை கேட்ட விவேகாவுக்கு மிகவும் கோபம் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வந்து விட்டது.

வெண்பாவுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரிய வில்லை.

அது என்னவாக இருக்கும்?

தொடரும்…

 Episode 70,

விவேகா நேராக அவள் வகுப்புக்கு செல்ல அங்கு இனியாள், யாழினி , பூரணி மற்றும் சில மாணவிகள் சிரித்து பேசி கொண்டு இருக்க, 

அப்போது வெண்பா ஒரு புத்தகம் வாங்குவது தொடர்பாக பேச வர மைதிலி கிளாஸ் உள்ளே வந்தாள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள மீனா என்னும் வகுப்பு தோழியிடம் சொல்ல

மீனா அங்கு என்ன நடக்கிறது என்று விசாரித்து வந்து மைதிலி கிட்ட சொல்வதை கேட்ட விவேகா  இப்போது வெண்பாவை கண்களில் கண்ணீர் கொண்டு பார்த்தாள்.

சரி விடு விவேகா பிளீஸ் டி ஃபீல் பண்ணாத…

எப்படி டி என்னை ஃபீல் பண்ண வேண்டாம் அப்டின்னு சொல்ற…

(அப்படி என்ன தான் நடந்தது ) அது ஒன்னும் இல்லங்க இனியாள்  குடும்பம் மற்றும்இன்பா குடும்பமும் டின்னர் போன போட்டோஸ் தான் அவள் எல்லோரிடமும் காட்டி கொண்டு இருந்தாள்.

அதுல இவளுக்கு என்ன பிரச்சனை – மைதிலி, விவேகா கிட்ட ஹே சனிக்கிழமை நம்ப இன்பா சார் குடும்பம் கூட அவ டின்னர் போயிருக்கா அடுத்து இன்னும் கொஞ்ச நாளில் அவங்க அண்ணாவுக்கும் சாரோட அக்காவுக்கும் நிச்சயம்

ம்ம் இப்போ நியாபகம் வந்திடுச்சு அதே சனிக்கிழமை தான் இன்பா விவேகாவை கண்ணுக்கு மை வைத்து வர சொன்னான் இவளும் கிட்ட தட்ட ஒரு 2.30 மணி நேரம் காத்து இருந்தது இப்போது நினைவு வந்தது.

விவேகா ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று சொல்லி போய் உள்ளே கொஞ்ச நேரம் அழுது அழுது ஒரு வாரு முகத்தை கழுவி கொண்டு வந்தாள்.

என்னை ஏமாற்றி விட்ட தானே…

நீ எனக்கு வேண்டாம்…

உனக்காக நான் அவ்ளோ நேரம் பைத்தியகாரி மாதிரி வைட் பண்ணிருக்கிரேன்.ஆனால் நீ அவ கூட டின்னர் சாப்பிட்டு விட்டு என் கிட்ட என்ன சொன்ன வேலை அப்டின்னு பொய் சொல்லி இருக்க உனக்கு எவ்ளோ தைரியம் டா..  என மனதில் நினைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் விவேகா.

வகுப்புக்கு வந்தவள் அவள் இடத்தில் அமர்ந்து கொண்டாள். ஆதி வர அனைத்து விஷயமும் கேள்வி பட்டு, ஹே அவரு வேணும்னு பண்ணியிருக்க மாட்டாரு டி தெரியாமல் நடந்து இருக்கும்….

என்ன தெரியாமல் நடந்து இருக்குமா… ம்ம் ஆமா அப்போ நான் பைத்தியகாரி மாதிரி வெயிட் பண்ணேன் அதை என்ன சொல்றது. என்று அவள் அழ… சரி சரி அவரு ரொம்ப மோசம் தான் என் செல்லம் அழாத… போடா என்று சொல்ல ஆதி அவள் அருகில் அமர்ந்து கொண்டான். விவி என் தேன் மிட்டாய் தானே நீ… என்று சொல்ல உடனே அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். ஆதி இப்படி நான் யாருக்காகவும் எதுக்காகவும் காத்திருந்தது இல்லை டா… இவளோ எதிர்பார்ப்பும் வைத்தது இல்லை டா இப்போ இந்த செய்தியை கேட்டதும் மனசு அப்படியே வலிக்குது தெரியுமா….

சரி விடு விடு நம்ப இதுக்கு ரிவஞ் எடுப்போம் என் செல்லம் தானே பிளீஸ் அழ வேணாம் டி…

நான் அழ மாட்டேன் ஆதி என சொல்லியவள்… அவன் என் கிட்ட பொய் சொல்லிட்டான் டா… ஆபீஸ் வேலை அப்டின்னு சொன்னானே என்னை ஏமாற்றி விட்டான் டா… பிளீஸ் டி பார்த்துக்கலாம் விடு… அப்போ இதே மாதிரி என்னை ஏமாற்றி விடுவானா ஆதி…. ஹே அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது அவரு எதாவது செய்யட்டும் நான் அவரை சும்மா விட மாட்டேன்….

வெண்பா சரியாக இப்போது வந்தாள். ஆதியின் மேல் சாய்ந்து கொண்டு இருக்க வெண்பா அதை பார்த்து விட்டு அய்யோ இதுங்க தொல்லை தாங்க முடியலையே… என மனதில் நினைத்துக் கொண்டு வந்தாள்.

இப்போது ஆதி அவளை பார்த்து விட்டு எழ வில்லை. ஹே ஓவரா சீன் போடாத இப்போ என்னாசுன்னு இப்போ இவன் உன்னை சமாதானம் பண்றான்.

ஹே நீ எப்பவும் அவனுக்கு மட்டும் தான் சப்போர்ட்  பண்ணுவ சாடிஸ்டு…

அப்போ நீ அன்னிக்கு அருண் கூட எக்ஸ்போ போன தானே அதுவும் அண்ணா போக கூடாது அப்டின்னு சொல்லியும் நீ கேட்காம போன அது மட்டும் சரியா

ஹே பிசாசு நீ சொல்ல மாட்டியா டா என வெண்பா  ஆதியிடம் பேச

நான் ராட்சசி கிட்ட எல்லாம் பேச்சு வச்சுகரது இல்லை…

ஹே நீ தான் டா….

இல்ல அது நீ தான் 

ராட்ச்சி… ஹே வாய மூடுங்க ரெண்டு பேரும்.

இருவரும் முறைத்து கொண்டு வேறு பக்கம் திரும்பி கொண்டனர்.

இப்போது விவேகா ஒரு முடிவுடன் அவனுக்கு போன் செய் நான் அவன் கிட்ட பேசணும்…

ஆதியும், வெண்பாவும் உடனே அவளை அதிர்ந்து பார்க்க ம்ம் பண்ணுங்க யாராவது…

ஆதி உடனே நான் கால் பண்ணல பா ….

யாரு அவரோட தொங்கச்சி யோ அவங்க பண்ணி கொடுக்கட்டும்…

யூ … ஹே போதும் போதும் பண்ணு…

என்னோட விவி வெயிட் பண்றா தானே…

உடனே வெண்பா இண்பாவுக்கு அழைக்க அவன் முதல் அழைப்பு மணியில் எடுத்தான்.

அண்ணா உனக்காக ஒரு பேய் வெயிட்டிங் ….

ஹே என போன் பிடுங்க அது ஸ்பீக்கர் மோட் போக ..

ம்ம் கொடு வெண்பா…

பேபி இப்போ தான் நான் உன்னை நெனைச்சேன் டி எப்படியோ இப்போ ரிதம் ஓகே…

இதை கேட்டு ஆதி உறைந்தான்.

வெண்பாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஹே போதும் …

என்னாச்சு டார்ஜ்லிங்… என்று அவன் சொல்ல வர விவேகா ஸ்பீக்கர் மோட் ஆஃப் செய்யப் போக

வெண்பா அவள் கைகளை பிடித்து கொண்டாள். இப்போது ஆதி சிரித்தான்.

 மிஸ்டர் இன்பா இன்னிக்கு ஈவ்னிங் மீட் பண்ணனும் வந்திடு குவாட்ரஸ் க்கு வெளிய 

என்னடி கோவமா இருக்க போல நான் உன்னை சமாதானம் என்று அவன்  எதோ சொல்ல வர..

ஹே ஸ்பீக்கர் ல இருக்கு டா போதும் … என சொல்ல …

அண்ணா எப்படி அவளை சமாதானம் பண்ணுவ…

இப்போது ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன். ஒரு லாலி பாப் வாங்கி தருவேன் வெண்பா…

அப்டியா…

ம்ம் நிஜமா தான், அவளே ஒரு அஞ்சலி பாப்பா அழு மூஞ்சி வேற ஒன்னும் இல்ல…

ஹே இடியட் …

வெண்பா எனக்கு நீ பேசறது கேட்கல டா நான் வைக்கிறேன்.

விவேகா சான்ஸ்லெஸ் டி இப்போது அவர்கள் இருவரையும் கோப கண்களால் பார்த்தவள்.

உங்க ரெண்டு பேரையும் நான் கொலை பண்ண போறேன்… என்று விவேகா அவர்கள் அருகில் செல்ல

ஹே டார்ஜிலிங் என்னாச்சு ஒரே சிவப்பா இருக்கீங்க என வெண்பா சொல்ல..

ஹே  கிண்டல் பண்ணாத அப்புறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன்…

பேபி பிளீஸ் மா என்னடா… என வெண்பா அவள் அருகில் வர..

ஹே கிட்ட வராத ஆதி அவளை போக சொல்லு டா..

இதை எல்லாம் பார்த்து வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தவன். 

ம்ம் சொல்றேன் டி ஹே உன் கிளாஸ்க்கு போ

ஹே போடா…

நான் தான் இந்த கிளாஸ்க்கு  ரெப்பு போ…

ம்ம் இந்த அளவுக்கா சரி ஓகே அஞ்சலி நான் வரேன் டி…

ஆதி ஹே சாரி அஞ்சலி .. 

அய்யோ சாரி விவேகா பிளீஸ் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு என சொல்ல

உன்னை இப்போ என்ன செய்யுறேன் பாரு..

என்று அங்கு இருந்த ஒரு புத்தகம் எடுத்து வீச உடனே அவன் கொஞ்சம் தள்ள அது வெண்பாவின் மேல் போய் பட்டது.

ஹே பிசாசு … என் மேல எதுக்கு போட்ட நீ.. ஹே நான் இல்லை அது அவ என மூவரும் அடித்து பிடித்து விளையாடி கொண்டு இருக்க அதை அங்கு வகுப்புக்கு வந்த யாழினி பார்த்து விட்டாள்.

இவள் cs இந்த விவேகா ஒத்து இவ போய் என்னோட டார்லிங் கூட பேசராலே இவளுங்களுக்கு எல்லாம் வேற ஆள் கிடைக்கலயா என்னோட ஆதி கூட சுத்துறாலுங்க. இருங்க டி சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று நினைத்து கொண்டு வெறுப்பு கண்களுடன் பார்த்து விட்டு அங்கு இருந்து சென்றாள்.

மாலை ஆனதும் விவேகா , வெண்பா இருவரும் வழக்கம் போல் வீட்டுக்கு செல்ல அருகில் வந்ததும் எப்பொதும் போல விவேகா அவளுடன் உள்ளே நடக்க

ஹே எங்க வர…

உன் வீட்டுக்கு தான் என விவேகா சொல்ல

அண்ணா வந்து வெயிட் பண்ணுவாங்க டி…

பன்னட்டு்ம்…

 ஹே லூசு விளையாடாத நீ குழந்தை இல்ல…

ஹே இப்போ நீ கொஞ்சம் அமைதியாக வா நான் எப்டி ஃபீல் பண்ணேன் அதே மாதிரி அவனும் பண்ணனும்.

ஹே பைத்தியமா உனக்கு…

இது எப்படி முடிந்தாலும் எனக்கு ஓகே தான்..

இப்போ என்ன சொல்ல வர நீ…

இன்பா என்னை வெறுத்து போனாலும் எனக்கு ஓகே தான்..

இப்போது வெண்பா அவளை பார்த்து சிரித்தாள். விவி அது உன்னோட கனவில் கூட நடக்காது.

ம்ம் அதையும் பார்க்கலாம்.

சரி என்னமோ பண்ணு…

இருவரும் வெண்பாவின் வீட்டுக்கு சென்று சரவணன் கொடுத்த வேலையை விவேகா செய்ய ஆரம்பித்தாள்.

இங்கு இன்பா அவள் வருவாள் என காத்திருக்க ஆரம்பித்தான். ஒரு மணி நேரம் , பின் ஒரு அரை மணி நேரம், இப்போது இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் அதே போல் அன்று விவேகா எவ்வளவு நேரம் காத்திருந்தாளோ அவ்வளவு நேரம் அதற்கு மேலும் இன்பா காத்திருந்தான்.

இப்போது வெண்பாவுக்கு போன் செய்ய அவள் எடுத்து

 அண்ணா விவேகா வீட்டுக்கு போயிட்டா… என்று சொன்னாள்.

வேறு எதுவும் பேச விட வில்லை வேறு யார் அது விவேகா தான் அருகிலே இருந்தாள்.அவளுக்கு எப்படியும் தெரியும் அவன் போன் செய்வான் என்று 

ம்ம் சரி மா என்று வருத்தத்துடன் வைத்து விட்டான்.

எதுக்கு டி இப்படி பண்ற… என வெண்பா கேட்க..

நீ சும்மா இரு டி…

தொடரும்…

இப்போது இன்பா என்ன செய்ய போகிறான் விவேகாவின் மேல் கோபம் கொள்வானா… 

அடுத்து என்ன நடக்கும் இதை பற்றி உங்க கருத்தை  கமென்ட் பண்ணுங்க…

 Episode 71

இன்பா வெண்பாவுக்கு போன் செய்யவும் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் என்று சொல்லவும்.

அவன் மனம் ஒரு கணம் வருத்தம் கொண்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் சரி என்று வைத்து விட்டான்.

விவேகா வீட்டுக்கு சென்றவள் ஆதிக்கு போன் செய்து ஹே உன் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடு …

ஏன் டி…

ஆதி நான் அவனை ரீவஞ்ச் பண்ணிட்டேன் டா…

என்ன பண்ணுன…

விவேகா அவள் செய்த வேலையை சொல்ல 

அவன் எதுவும் சொல்லவில்லை. விவி நீ ரொம்ப சின்ன புள்ள தனமா நடந்துக்குற..

நான் சொல்றத மட்டும் செய் டா … என்னமோ பண்ணு என அவள் சொன்னதை போல் செய்தான்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது. விவேகாவுக்கு தெரியும் இன்பா இந்த மாசம் ட்ரைனிங் கொடுக்க சென்று விடுவான் ஏற்கனவே அதை பற்றி அவளிடம் சொல்லி இருந்தான்.

இவள் எப்போதும் போல் காலேஜ் கிளம்பி சென்றாள். அவள் மனம் முழுவதும் அவன் தான் இருந்தான். ஆனால் இது இந்த வாழ்க்கை கை கூடாது என்று அவள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

அவள் உள்ளே அவர்கள் பிளாக் நடந்து செல்லும் நேரம் இவளுக்கு எதிர் புறம் காக்கி உடையில் கம்பீரமாக இவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான் இன்ப ராகவன்.

ஒரு நிமிடம் விவேகாவுக்கு முதுகு தண்டு குளிர ஆரம்பித்தது திடீர் என அவனை பார்த்ததும் ஒரு வித நடுக்கம் அவளுக்கு ஏற்பட்டது.

ஒரு சில மணி துளிகளில் தன்னை சரி செய்து கொண்டவள் அவனை கண்டு கொள்ளாமல் படிகளில் ஏற சென்றாள்.

இன்பா அவளுக்கு சலைத்தவன் இல்லையே அவனும் அவளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

ம்ம் அப்பாடா என்று வாய் மொழி கூறினாலும் மனம் அவனின் பார்வைக்கு ஏங்கியது.

வகுப்புக்கு உள்ளே வந்தாள். தன் முகத்தை இயல்பாக இருப்பது போல் வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தாள். மதியம் வந்தது இவள் மதிய உணவை சாப்பிட்டு விட்டு படிகளில் ஏற  முன்னால் அவன் தான் வந்து கொண்டு இருந்தான். இருவர் பார்வையும் மோத வில்லை.

மாலையும் ஆனது விவேகா வழக்கம் போல் வென்பாவுடன் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு அரட்டை அடித்து சில பாட்டு ஆட்டம் என ஆடி விட்டு சரவணன் கிட்ட போய் வேலைகளை கேட்டுக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றாள்.

இப்போது ஆதி போன் செய்தான். ஹே சொல்லு டா…

எந்த பதிலும் இல்லை 

ஹலோ..

ஹலோ…

ஹே என்ன டா பேச மாட்டிங்குற…

செல்லம் இன்னிக்கு சண்டை கூட நம்ப போடலயே…

ஆதி மாமா…

செல்லம் என்று விவேகா சொல்ல அடுத்த வார்த்தை பேசின உனக்கு டங்க் இருக்காது.

இப்போது விவேகா பயந்து போனாள். ஒரு நிமிடம் அமைதி காத்தவள். 

ஹே என்ன டா மிமிக்ரி பண்றியா விளையாடாத டா…

ஹே ஷட் அப்…

சார்!! நீங்.. நீங்க.. நீங்களா..

எங்க இருக்க .. 

வீ.. வீட்டில்…

டைம் என்ன…

விவேகா ஆடிப்போனாள், இப்போது பதில் பேச வில்லை.

சொல்லு டி…

மணி 6.00 ஆகுது…

இப்போ எதுக்கு கால் பண்ணீங்க…

இப்போ நீ என்ன பன்றன்னு எனக்கு தெரியாது இன்னும் 30 நிமிடத்தில் நீ இங்க போலீஸ் கிரவுண்ட்க்கு பக்கதில் வர 

இல்ல 31 நிமிடம் நான் உங்க மாமா வீட்டில் இருப்பேன்.

நான் கொஞ்சம் வெளிய இருக்கேன்.

அது எனக்கு தெரியாது… 

உன்னோட டைம் ஸ்டார்ட் ஆகி விட்டது.

உடனே வேகமாக அதிதி க்கு கால் செய்தவள் ஹே ஆதி கிட்ட கொடு…

போடி..

பிளீஸ் அதி…

சரி இரு என்று ஆதி கிட்ட அவள் போன் கொடுக்க ..

ஆதி என்னடா ஆச்சு உன் போன் எப்டி அவன் கிட்ட போச்சு…

ஆதி நடந்த அனைத்தும் கூற இப்போது  விவேகாவுக்கு என்ன செய்ய என்று புரிய வில்லை.

இப்பொ என்னடி செய்ய போற…

எனக்கு பாயமா இருக்கு டா என்று கொஞ்சம் அழுகை வருவது போல பேச

போ இதுக்கு நீ தானே காரணம் போய் எதுவும் செய் அப்படியே வரும் போது என்னோட போன் வாங்கிட்டு வந்திடு.

வெண்பாவுக்கு போன் செய்து உதவி கேட்க அவள்  நல்லா மாட்டின போ என்று அவள் பங்குக்கு சில அர்ச்சனை செய்து தூவ இவள் பயத்துடன் 

ஒரு சுடி போட்டு கொண்டு தன் அம்மாவிடம் சரவணன் வேலை தொடர்பாக செல்கிறேன் 8.30க்கு வந்து விடுவேன். என்று சொல்லி விட்டு அதை போய் வென்பாவிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.

ஒரு வேளை கங்கா போன் செய்து கேட்டால் என்ன செய்வது அதனால் முன் ஏற்பாடு கைகளில் லேப் டாப் எடுத்து கொண்டு குதிரை போல் ஓடும் மனதை அடக்கி கொண்டு போலீஸ் கிரவுண்ட் பக்கம் சென்றாள்.

அங்கே இன்பா தன் கார் மேல்  அதே காக்கி உடையில் ஒரு குச்சியை சுழற்றி கொண்டே அமர்ந்து இருந்தான்.

சார் நீங்க சொன்னதை போல் வந்து விட்டேன் என்று திக்கி திணறி சொல்ல …

அவன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

படபடக்கும் விழிகள், முகம் எல்லாம் வியர்வை துளிகள், அவளுடைய சுடி ஷால் கழுத்தில் மாலையாக போட்டு இருந்தாள்.

உள்ளே ஏறு …

என்னால ஏற முடியாது போடா என்று மனம் சொன்னது ஆனால் வாய் ம்ம் சரி… என்று உள்ளே சென்றாள்.

உள்ளே வந்து அமர்ந்தவன் தன் தலையை அழுந்த கோதி கொண்டு உதடுகளை கடித்து கொண்டான்.

 மிஸ்.விவேகா  எதுக்கு நேற்று என்னை வர சொன்னீங்க..

ம்ம் சொல்லுங்க…

நமக்குள் எதுவும் வேண்டாம் அப்டின்னு சொல்ல தான் வர சொன்னேன்.

இந்த வார்த்தைகளை கேட்டு அவனால் தன்னை கட்டுபடித்த முடியவில்லை.

அவள் அருகில் வந்து அவள் கண்களை பார்க்க அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க பார்த்து கொண்டு இருந்தாள்.

அதுக்குள் எப்டி உன் மனசு மன்கி போல தாவுச்சு சொல்லு கேட்போம்.

நீங்க எதுக்கு என் கிட்ட பொய் சொன்னீங்க..

நான் என்ன பொய் சொன்னேன்.

சனிக்கிழமை எங்கே போனீங்க.

நான் கொஞ்சம் வேலை விஷயமா வெளிய போனேன்.

ம்ம் பொய் ..

அப்போ நீயே சொல்லு…

அந்த கண்ணுக்கினியாள்  கூட டின்னர் சரி தானே..

ம்ம் ஆமா …

ஆனால் அவ கூட டின்னர் இல்லை நாங்க குடும்பமா போனோம்.

அப்புறம் என்னை எதுக்கு இங்கே வந்து வெயிட் பண்ண சொன்னிங்க..

இப்போது இன்பாவிடம் பதில் இல்லை.

அது நான் கொஞ்சம் வொர்க் டென்ஷன் ல மறந்து போயிட்டேன் டி..

போதும் என்று கைகளை காட்டியவள். நான் உங்களுக்கு டென்ஷன் தான் அதனால் அப்படியே மறந்து விடுங்கள்.

ஹே விவேகா என்ன டி பிளீஸ் இப்படி என் கிட்ட இப்படி பேசாத என்னால இதை டைஜஸ்ட் பண்ண முடியாது.

அதை விடுங்க 

ம்ம் சொல்லு…

அன்னிக்கு என் கிட்ட போன் ல அந்த மூனு வார்த்தை சொன்னிங்கலே…

ம்ம் ஐ லவ் யூ வா

அதே கருமம் தான் ..

ஹே நீ ஓவரா பேசுற…

அந்த வார்த்தையை என் கிட்ட இருந்து தப்பை மறைக்கணும் அப்படினு தானே சொன்னீங்க..

சத்தியமா இல்ல டி என் மனசு முழுக்க நீ தான் நீ மட்டும் தான்

ஓ !….

இப்போது இன்பா, நீ கூட தான் அந்த அருண் பெலோ கூட எக்ஸ்போ போன என் கிட்ட சொல்லாமல் தானே போன….

இத்தனைக்கும் நான் வேண்டாம் அப்படினு உன் கிட்ட சொல்லியும் நீ செய்து இருக்கிறாய்.

இப்போ அது எதுக்கு முடிஞ்சு போன விஷயத்த பேசி இப்போ என்ன…

ஹே நீ ரொம்ப சீட் பண்ற…

ம்ம் அதுக்கு தான் சொல்றேன் இதோட போதும் என்று அவள் உதடுகளில் வார்த்தை வரும் முன்னவே அவளை இழுத்து இதழ்களை அவன் வசமாக்கினான்.

இரு சில மணி துளிகள் அவள் சிந்தையில் எதை பற்றியும் யோசிக்க வைக்க கூடாது என்பதற்காக தான் இந்த முத்தம்…. முதலில் அவனை தடுத்தவள் பின் தடுமாறினாள் அவன் முத்ததில் இந்த நிமிடம் மட்டுமே அவள் சிந்தையில் இருந்தது.

இப்போது மூச்சு வாங்க அவளை விட்டவன். அவனை என்ன சொன்ன… என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் கொடுக்க அவள் அவனை தள்ளி விட முடியாமல் கைகளில் சக்தி எல்லாம் வடிந்தது போல் உணர்ந்தாள்.

ம்ம் சொல்லு டி… 

ய யாரு… என்று அவளுக்கே கேட்காத குரலில் கேட்க.

நான் போன் பண்ணும்போது என்று அவள் காதுக்கு அருகில் வந்து மெதுவாக அவன் உதடுகள் உரச கேட்க…

அவள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க, இன்பாவே தொடர்ந்தான் செல்லம் ம்ம் 

பதில் சொல்லு … என்று இன்பா அவன் கைகள் அவள் மேல் அங்கும் இங்கும் ஊற தொடங்கியது. இவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

அப்புறம் என்ன சொன்ன… இப்போது அவளின் மூச்சு காற்று இதயம் துடிக்கும் சத்தம் இது இரண்டு மட்டுமே கேட்டது. 

 என்று மீண்டும் இதழில் விழுந்தான். அவள் கண்கள் மயக்கதிற்க்கு சென்றது.

இப்போது அவளை விட்டு அவள் முகத்தை நிமர வைத்தவன் அவள் கண்களை பார்த்து இதோட இது முடியாது.

இதோட அவனை கொஞ்சி பேசுற வேலையை நிறுத்திக்கோ என்று  சொல்ல உடனே விவேகாவுக்கு ஆதியை பற்றி தான் இன்பா கூறுகிறான் என்று தெரிந்தும் விவேகா ஒரு நிமிடம் விலக இன்பாவுக்கு இப்போது கோபம், பொறாமை என இரண்டும் வர  அவள் இதழில் வன்மையாக முத்தமிட ஆரம்பித்தான். 

அவன் மனதில் என்னைக்குமே நான் தான் டி உனக்கு முதல் இடத்தில் இருக்கணும், எப்பவும் நீ என்னை மட்டும் தான் கொஞ்சனும் என்ற எண்ணம் தோன்ற அவள் நாவினை துழாவினான்.

சட்டென்று சுய நினைவு க்கு வந்தவன் அவளை விட்டு அவன் தன்னை கட்டு படுத்த அமைதியாக கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். தன் தலையை கோதியவன் உள்ளே இருந்து தண்ணி பாட்டில் எடுத்து வேகமாக அந்த தண்ணீரை குடித்தான்.

அவளை விட விவேகா ஜன்னல் புறம் பார்த்து அமர்ந்து கொண்டாள்.


அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்தவன். விவேகா நான் வேனும் னு  இன்டென்சனா பண்ணல புரிஞ்சுக்கோ டி…. அன்னிக்கு நிஜமாவே வொர்க் லோட் அதனால் தான் 


விவேகா அவனை பார்க்காமல் ஆதிய பற்றி இனி என் கிட்ட பேச வேண்டாம்…

அப்படி நீங்க பேசுவதாக இருந்தால் அப்புறம் நல்லா இருக்காது…

ஆதி என்னோட வாழ்கையில் முக்கியமான ஒருத்தன்.

நான் அவன் கிட்ட அப்படி தான் பேசுவேன். உங்க கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா நான் எதுவும் செய்ய முடியாது.

ம்ம் பேசிக்கோ….

இப்போது கோபமாக விவேகா அவனை பார்த்தாள்.

இப்போ நான் தப்பா எதுவும் சொல்லலையே. நீ என் முன்னாடி பேச வேண்டாம் நீ எனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கணும்.

இப்போது அவள் பார்வை கொஞ்சம் மாரியது. அவனை எப்படி கொஞ்சுற ஆனால் என் கிட்ட எப்போ பார்த்தாலும் சண்டை தான் போடுற…. என இன்பா சொல்லி கொண்டே அவள் அருகில் வர 

இப்போது இயல்பாக பேச ஆரம்பித்தாள் ராஸ்கல்… என்னை எவ்ளோ டென்ஷன் பண்ணிட்ட கொஞ்ச நேரத்தில் என்று அவனை மார்பில் அடித்தாள்.

இப்போது நினைவு வந்தவளாய் மிஸ்டர் இன்பா எனக்கு இன்னும் உங்க மேல கோபம் குறைய வில்லை.

அப்போ நான் குறைக்கிறேன் என்று மீண்டும் அவன் அருகில் வர 

ஹே கொண்ணுடுவேன் அங்கேயே இரு டா…

என்னை கன்வின்ஸ் பண்ணு அவ்ளோ தான் என்று சொல்லி அவள் லேப் டாப் எடுத்து கொண்டு வேகமாக அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சென்று விட்டாள்.

தொடரும்….

 Episode 72,

இன்பா அவள் சென்றவிட்டதும்  எப்போதும்  போல் முகத்தில் கடுமையையும் போலீஸ் அதிகாரி என்கிற கம்பீரம் என அனைத்தும் உடனே வந்து விட்டது.

இன்பா அவள் சென்றவுடன் நேராக தன் ஜீப் ல காவலர் கட்டுப்பாட்டு மையதிற்க்கு  சென்றான்.

இன்பாவுக்கு ஒரு பழக்கம் உண்டு.மாதத்தில் ஒரு முறை அவன் பயன்படுத்தும் தொலை பேசி எண் அவன் சென்ற  இடங்கலுக்கு தொடர்ந்து எதுவும் பின் தொடர்வது இருக்கிறதா என செக் செய்வது வழக்கம்.

இந்த மூன்று நாட்களும் அவனுக்கு எதோ வித்தியாசமாக தோன்றவும் செக் செய்ய இன்பா நினைத்தது போலவே இரு தொலை பேசி எண்கள் இவனை பின் தொடர்ந்து வந்து இருக்கிறது இப்பொழுது கூட வாசலுக்கு வெளியில் உள்ள எதிரில் ஒரு கடையில் இன்பாவுக்காக காத்து கொண்டு இருந்தனர்.

இதை அப்படியே மித்ரனுக்கு அழைத்து விஷயம் சொன்ன இன்பா அவர்களை அசந்து இருந்த நேரம் பார்த்து தூக்கினான்.

இப்போது காவல் நிலையத்தில், ஹே சொல்லுங்க டா என்ன பிளான் வச்சு இறுக்கீங்க…

என்று சாதனா அந்த இரு ஆடவர்களையும் அந்த லத்தி குச்சியில் வைத்து பின்னி எடுக்க அவர்கள் வாய் திறக்கவே இல்லை.

இப்போது இன்பா அருகில் இருந்த மேஜயில் இருந்து ஒரு சாதாரண பேனாவினை கைகளில் சுழற்றி கொண்டே வந்து  ஒருவன் அருகில் வந்து அவன் கை ஆள்காட்டி விரலில் அந்த எழுது கோலின் முனைப்பகுதியை அந்த குற்றவாலியின்  விரல் நக கண்ணில் வைத்து அழுத்தி பிடிக்க அவன் வலியில் கத்தி கதறினான்.

சார் பிளீஸ் நான் சொல்லி விடுகிறேன் என்று அழுது கொண்டே கேட்டான்.

ம்ம் என்ற அழுத்தமான சத்தம் இப்போது அந்த குற்றவாளி எல்லா வற்றையும் கூறி விட்டான்.

சார் உங்களை பற்றிய முழு விவரமும் சேகரிக்க சொல்லி மினிஸ்டர் சத்திய மூர்த்தி ஐயா பொன்னு கவ்யா தான் சொன்னாங்க சார் அதனால தான் நாங்க வந்தோம் சார்.

அப்புறம் என்ன கண்டு பிடிச்சு இருக்கீங்க இது வரை…

சார் நீங்க ஒரு பொன்னு கூட வெளியே போனது பேசியது என்று திணறி அவன் பதில் சொல்ல …

ம்ம் சொல்லிட்டீங்களா…

இல்ல சார் நா நாளைக்கு வர சொன்னாங்க நேரில் சொல்லலாம் அப்டின்னு …

ஒரு விஷயம் கூட யாருக்கும் தெரிய கூடாது மீறி எதுவும் நடந்தது நீங்க என்று அவன் அவர்கள் குரல் வளையை பிடிக்க

இல்ல ஸார் நாங்க சொல்ல மாட்டோம்…. என்று அவர்கள் கெஞ்சினார்கள்.

எப்படி நம்பரது… என யோசித்துக் கொண்டே அவர்களை பார்க்க…

சார் பிளீஸ் சார் என அவர்கள் கெஞ்சினர்…

ம்ம் சரி ஓகே  சாதனா ….

என அவன் கூப்பிட வெளியே இருந்து வந்தாள்.

இவனுக  போன் ல அந்த டிவைஸ் வச்சுடுங்க எதாவது தவறா நடந்தது… 

சார் சார் அப்படியெல்லாம் நாங்க தப்பு செய்ய மாட்டோம் நீங்க என்ன சொல்றீங்களோ அதை அப்படியே கேட்போம் என அவர்கள் கெஞ்ச

ம்ம் நீங்க வாரம் ஒரு தடவை இங்கே மேடம் கிட்ட வந்து இதுல சைன் பண்ணிட்டு போகனும்.

ம்ம் ஓகே சார் சாதனா அவங்களை விட்டுடுங்க…

யெஸ் சார்…

அவர்கள் சென்றதும் மித்ரன், ஆகாஷ், சாதனா, கீர்த்திகா, இவர்களை அழைத்து நம்ப அடுத்த “மெஷின் சத்திய மூர்த்தி” அதனால…

நான் என்ன சொல்ல வரேன்னு…

யெஸ் சார் வீ  கேன் டூ இட் சார்….

டிஸ்மிஸ்… 

மித்ரன் மட்டும் இன்பாவிடம் வந்தான். என்ன மச்சி ஒரே காதல் புறாக்கள் உன் பின்னால் ஹே கொண்ணுடுவென்.

பின்ன என்ன டா ஒருத்தி உன்னை சுத்த விடுறா.. இன்னொருத்தி உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கா… இன்னொருத்தி உன் குடும்பமா  நெருங்க போறா…

ம்ம் என்ஜாய் மச்சி…

ஹே போடா…

“மெஷின் மித்ரன்” உனக்கு ஓகே வா

ஹே போடா சாரி நான் கிண்டல் பண்ணேன். 

இப்போது கொஞ்சம் சீரியஸ் ஆக என்ன இன்பா ஆச்சு…

இல்ல மித்ரன் நான் உண்மையாகவே என்னோட பேபிக்காக தான் இந்த மெஷின்…

நீ யாரு அப்படின்னு எனக்கு தெரியும் சும்மா சொல்லு…

இல்ல மித்ரன் அதுவும் ஒரு ரீசன், ஆனால் அந்த மினிஸ்டர் பெருசா எதோ பண்ணிட்டு இருக்காரு …

என்னடா சொல்ற…

ம்ம் ஆமா… கிட்ட தட்ட மாஃபியா மாதிரி டா..

மித்ரன் ஒரு நிமிடம் உறைந்தான்.

அண்ட் ஒன் திங்க் இதுல என் விவேகா வ இன்டைரக்ட்டா அந்த கவ்யா  இழுத்து விட்டுட்டா சோ என்னோட ஃபஸ்ட் மெசின் இது தான் என்று பேசி விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றனர்.

இங்கு விவேகா வீட்டுக்கு வந்தவள் இன்பா அழைத்தது அவன் பேசிய வார்த்தைகள் என அனைத்தும் நினைத்துக் கொண்டாள்.

ஹே ராகவ் நீ சரியான போசசிவ் சாப்ட்வெர் டா… 

கொஞ்சம் உன்னை பார்க்காமல் இருந்ததுக்கே என் பின்னாடி நீ ஓடி வருவ அப்டின்னு பார்த்தால் இங்க சீனு அப்படியே வேற மாறி இருக்கே!

இடியட் என்னை உன் பின்னாடி ஓட வச்சுட்ட ம்ம்….

சரி விடு ஆனாலும் எனக்கு உன்னை பார்த்ததும் பயந்து தான் போயிட்டேன்.

அந்த காக்கி சட்டைல நீ மாஸ் தான் டா…

அழகு குட்டி ம்ம் சாருக்கு கொஞ்சனுமாமே ..

ம்ம் கொஞ்சிட்டா போச்சு…

என்னோட ம்ம் என்னை சொல்லி கொஞ்சரது தெரியலையே…

ம்ம் யோசிப்போம்…

சரி இப்போ சீரியஸ் மோட் க்கு வா விவேகா..

ம்ம் ஓகே எப்படி அவன் என்னை எப்டி கன்வின்ஸ் பண்ற அப்டின்னு பார்க்கலாம் இடியட்.. என்று இன்று நிம்மதி மன நிலையில் உறங்கி போனாள்

அடுத்தநாள் காலை விவேகா மிகவும் உற்சாகமாக இருந்தாள். இப்போது பழி வாங்கும் படலம் முடிந்து இப்போது சமாதானம் செய்யும் படலம் ஆரம்பித்தது.

நேராக உற்சாக மன நிலையில் கல்லூரி பேருந்தில் ஏறினால். வெண்பா அவள் முகத்தைப் பார்த்து ஹே என்னடி உன் முகம் இன்னிக்கி ஜோலிக்குது…

உன் அண்ணனை பழி வாங்கிட்டோம் ல…

ம்ம் அப்டியா அப்போ என்ன தான் நடந்தது…

நீ இருக்க மோட் பார்த்தால் ஒரே ரொமான்ஸ் போல…

ஹே டீச்சர் அடி வாங்க போற நீ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…

ஹே பொய் தான சொல்ற…

நான் எதுக்கு பொய் சொல்லணும் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை…

அவனுக்கு அதெல்லாம் தெரியாது வெண்பா அவன் தத்தி…

எனக்கு எப்டி தெரியும்… என்று இப்போது எப்டி கன்வின்ஸ் பண்ணுவாரு… பாப்போம் செம்ம என்டர்டைன்மெண்ட் ஆ இருக்கு டி

ம்ம் இருக்கும் இருக்கும்…

பார்க்கிறேன் உன் அன்பு வரும்போது நீ என்ன பன்றன்னு…

ம்ம் சரி… நானும் வெயிட் பண்றேன் எனக்கு என்ன வெட்கம்…

ம்ம் உனக்கும் வெட்கம் இல்லை உன்னை சார்ந்து இருக்கும் யாருக்குமே வெட்கம் இல்லை சரி தான்…

இப்படியே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டே காலேஜ் சென்றனர்.

இங்கு வகுப்புக்கு வந்ததும் முதல் பாடவேலை முடிந்த உடன் ஆதியை வர சொல்வதாக கூற 

விவேகா அவனிடம் என்ன விஷயம் என கேட்க…

தெரியல டி.. என்று சொல்லி சென்றான்.

அங்கே சென்றதும் உன்னை காரஸ்பான்டென்ட் வர சொன்னாங்க..

உடனே ஆதி அந்த அறைக்கு செல்ல அங்கு இன்பா காக்கி உடையில் இவனுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

குட் மார்னிங் சார்..

ம்ம் கம் இன்…

இப்போது இருவரும் அமைதியாக இருக்க இன்பா ஆதியிடம் இந்தா உன்னோட போன்… 

ம்ம் என்று வாங்கிக் கொண்டான்.

அதுல நான் கால் மட்டும் தான் பண்ணேன் மற்ற படி உன்னோட பெர்சனல் எதுவும் நான் பார்க்கவில்லை  காட் இட் மிஸ்டர் ஆதித்யா ..

ம்ம் ஓகே சார்…

அண்ட் ஒன் திங்க்

சொல்லுங்க சார்…

அவளை பத்திரமா பார்த்து கோ, எனி திங்க் இம்பர்ட் உடனே கால் பண்ணு…

ம்ம் கண்டிப்பா சார்..

ம்ம் இப்போ நீ போகலாம்…

தேங்க் யூ சார் …

ஒன் மினிட்…

ஆதி என்ன என்பதை போல் திரும்பி பார்கக 

அவளை இப்போ வர சொல்லு…

ம்ம் ஓகே சார் என்று விட்டால் போதும் என்று ஓடி விட்டான்.

இங்கு வகுப்புக்கு வந்தவன் அவன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

ஹே என்னாச்சு ஆதி..

ம்ம் ஒன்னும் இல்ல டி…

ஹே எதுவும் பொன்னு புரோப்போஸ் பண்ணிடுச்சா..

போடி நீ வேற உன்னோட அங்கிரி பிர்ட் ஆ இப்போ தான் பார்த்து பேசிவிட்டு வரேன்…

ம்ம் என்ன சொன்னான்..

விவேகா…

ம்ம் என்ன சொன்னாரு…

அதை நான் அப்புறம் சொல்றேன் இப்போ உன் டர்ன் 

என்ன …

உன்னை பார்க்கணுமா …

சரி இன்டர்வல் ல போறேன்…

ஹே இப்போவே பார்க்கணுமா.. 

இப்போ எனக்கு பிடிச்ச கிளாஸ் டா…

ஹே இங்கே சீன் வேண்டாம் போடி…

ஹே இல்ல …

ஹே போடி .. என ஆதி விவேகாவை அனுப்ப அவள் இப்போது எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சென்றாள்.

சார் , உள்ளே வரலாமா…

ம்ம் யெஸ் கம் இன்…

ம்ம் சொல்லுங்க… எதுக்கு வர சொன்னீங்க..

நான் ஒரு முக்கிய வேலையா போறேன் இனி வர மந்த் ஆகும் அதுதான் …

ம்ம் சரி போயிட்டு வாங்க மிஸ்டர் இன்பா…

அவள் கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன்.

பேபி இன்னும் கோபமா இருக்கியா.. 

ம்ம் ஆமா… கன்வின்ஸ் பண்ணு அப்போ தான் பேசுவேன்.

இன்பா அவள் அருகில் வர ஹே அங்கேயே நில்லு இங்க என் பக்கதில் வந்த உன்னை கொண்ணிடுவேன்…

ம்ம் சரி நான் வரல… ம்ம் அது…

சரி எப்படி கன்வின்ஸ் பன்றது எனக்கு தெரியல டி.. 

நீ … யூ… சுத்தம் வேஸ்ட்டு டா…

ஹே சத்தியமா எனக்கு உன்னை எப்டி கன்வின்ஸ் பண்ணனும் அப்டின்னு தெரியல டி.. 

அப்போ ஓகே லெட்ஸ் ப்ரேக் அப்…

ஹே கொன்றுவேன்… 

அப்போ நான் என்ன பண்ணட்டும்..

நீ யே சொல்லு நான் நீ சொல்றத செய்யுறேன்..ஒகே வா…

ம்ம் என்று எதையோ யோசித்தவள். போன தடவை நான் உன்னை எப்டி கன்வின்ஸ் பண்ணேன்…

நீ என்ன பண்ணுன…

சரி அப்போ நான் கிளம்புறேன்…

ம்ம் சரி கோபம் வேண்டாம் .. இரு டி என்று யோசித்தான்.

ம்ம் எனக்கு சாரி அப்டின்னு மெசேஜ் பண்ணுன…

ம்ம் குட் பாய்.. 

இப்போ உடனே இன்பா அவள் அருகில் வர…

ஹே கிட்ட வந்த ம்ம் கொன்றுவென்…

ம்ம் நான் வரல சொல்லு..

அப்போ எனக்கும் மெசேஜ் பண்ணு…

அவ்ளோ தானா சூப்பர் டி என அவன் போனில் அவன் அம்மா எண்ணுக்கு மெசேஜ் தட்ட போக 

ஹே என்ன சூப்பர் ஒரு தடவை இல்ல

அப்புறம்…

நான் உனக்கு எத்தனை அனுப்பினேன் அத்தனையும் அனுப்புற இது தான் உனக்கு பனிஸ்மெண்ட் 

வாட் தி ஹெல்.. 

மம் அவ்ளோ தான் சின்ன பனிஸ்மெண்ட் தான் இதை மட்டும் செய் இனி சண்டையே நான் போட மாட்டேன் ஓகே வா…

விவேகா… என்று அவளை அவன் புறம் இழுத்தான்…?

தொடரும்..‌

 Episode 73,

வாட் தி ஹெல்..  என இன்பா சொல்ல 

மம் அவ்ளோ தான் சின்ன பனிஸ்மெண்ட் தான் இதை மட்டும் செய் இனி சண்டையே நான் போட மாட்டேன் ஓகே வா…

விவேகா… என்று அவளை அவன் புறம் இழுத்தான்…

ஹே இப்போ மட்டும் நீ என்னை எதுவும் என்று அவள் வார்த்தைகள் வாயில் இருக்கும் போதே அவன் அவளை இறுக்கமாக அணைத்து பின் ஒரே ஒரு முத்தம் கொடுத்து விட ….

இன்பா…..! என்று அவள் அவனை முறைத்து கொண்டே கத்த,

சரி சரி நீ எதோ சொல்ல வந்தியே சொல்லு…கோபம் வேண்டாம் விடு பேபி,பிளீஸ் டி.. 

அது நீ மெசேஜ் பன்றது ல தான் இருக்கு நான் அப்போ தான் காம்ப்ரமைஸ் ஆவேன்…

வேற வழியே இல்லையா…

இல்லை…

சரி பண்றேன்.. போ…

ம்ம் ஓகே என்று சிரித்து கொண்டே அவள் செல்ல, ஒரு இரண்டு அடிகள் வைத்தவள் மீண்டும் திரும்பி 

ராகவ் …

இதை கேட்டு அவன் கண்ணகுளி தெரிய சிரிக்க..

ஹே வெண்பா எண்ணுக்கு மெசேஜ் பண்ணு, அப்புறம் நீ மெசேஜ் பண்றத ஸ்கிரீன் ரெகார்ட் பண்ணி அனுப்பு ஒகே….

ஏன்…

நீ சரியான ஃப்ராடு…

இப்போது அவன் கோபம் கொள்ள,

எதுக்கு இப்போ இவளோ கோபம் ….

மெசேஜ் பண்ணுவியா இல்ல என்று அவள் சொல்ல…

பண்றேன் பண்ணி தொலையுறேன்…

ம்ம் நல்ல புள்ள… பாய் ராகவ்… ஹவ் எ நைஸ் ஜேர்னி… என்று சொல்லி விட்டு சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.

உலகத்துல இல்ல இந்த ஊரில் இத்தனை பொண்ணுங்க இருக்கு எனக்கு ஏன் இவளை பிடிச்சது. இவள ஏன் லவ் பண்றேன்…. என தன்னை தானே கேட்டு கொண்டு சிரித்து கொண்டும் சென்று விட்டான்.

இங்கு அவள் இடத்துக்கு சிரித்து கொண்டே சந்தோச மன நிலையில் வந்தாள். அவளை பார்த்து” மேடம் இன்னிக்கி இந்த எக்ஸ்டரா க்லோ வுக்கு என்ன காரணம்”.

ஒன்னும் இல்லை நீ சொல்லு, என்று ஆதியிடம் கேட்டாள்.

என்ன சொல்றது டி…

அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு…

ஒன்னும் இல்லை டி…

இப்பொ சொல்ல போரியா இல்லையா…

சரி சொல்றேன்…

ம்ம் சொல்லு…

உன்னை பத்திரமா பார்துக்கணுமாம்…

இதை கேட்டு அவள் மனதில் இன்னொரு அணைப்பு கொடுக்க வேண்டும் போல் தோன்றியது.

ம்ம் அப்புறம்.. 

அப்புறம் எதுவும் பிரச்சனை அப்டின்னா உடனே போன் பண்ண சொன்னாரு… அவ்ளோ தான் டி…

இப்போது விவேகாவின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. எப்படி அவனை பிரிந்து இந்த ஒரு மாதமும் இருப்பது அவன் இருக்கும் வேளையில் நான் போய் சின்ன புள்ள தனமா மெசேஜ் பண்ண சொல்லிட்டேன். எவ்ளோ பெரிய வேலையில் இருக்கிறான்.

ஆனால் நம்மிடம் ஒரு பூனை குட்டி போல் நம்மை சுற்றி சுற்றி வருகிறானே. அப்படி இப்படி எதாவது சேட்டை வேற பண்றான். என்று கொஞ்சம் இன்பாவின் செய்கையில் முகம் சிவந்தாள்.

அப்படியே அடுத்த நாள் வந்தது. விவேகா சொன்னது போல் ஒரு நாள் மட்டும் மெசேஜ் செய்தான். அதன் பின் வேலை பளு அதிகமாக இருக்க அதை நினைத்துக் கொண்டே இவன் நடந்து செல்ல,

அங்கே வருண் அதிதி கூட போனில் கொஞ்சம் சிரித்து பேசி  கொண்டு இருப்பதை பார்த்தவன் இப்போது மனதில் நான் என் பேபிய சமாதானம் பண்ண மெசேஜ் பண்ண கஷ்ட படுறேன் இவன் ஜாலியா அவனோட லவர் கூட போன் ல பேசிட்டு இருக்கானா.

ஆனாலும் காலையில் சீக்கிரம் எனக்கும் முன்னாடி கிரவுண்ட் ல வந்து நிக்கிறான். என்று நினைத்தவன்.

இவன் மட்டும் சந்தோஷமா இருப்பதா நெவர் என்று அவன் ஒரு திட்டத்துடன் வருண் அருகில் சென்றான்.

க்கும்… என்று வருண் அருகில் போய் தன் தொண்டையை சரி செய்ய உடனே யார் என்று அவன் திரும்பி பார்க்க ஒரு நிமிடம் பயம் வந்து விட்டது.

யாரு போன் ல….

ச.. சார்… என்னோட மாமா பொன்னு .. ஸ்ஸாரி நான் கல்யாணம் பண்ணிக்க போற பொன்னு சார் இனி பேச மாட்டேன்..

ஓ அப்டியா ம்ம்… என்று சொல்லி அவன் தோள் மேல் கைகளை போட்டு கொள்ள

வருண் கொஞ்சம் பயந்து தான் போனான்..

உன் பேரு என்ன…

சார் என்னோட பேர் v. வருண் 

ம்ம் பாரு டா நம்ம பேபி நேம் போல இருக்கே.. என மனதில் நினைத்துக் கொண்டவன். (இன்னும் கொஞ்சம் அவன் போலீசாக யோசித்து இருந்தால் கூட விவேகா தான் வருண் தங்கை என கண்டு பிடித்து இருக்கலாம். ஆனால் அவன் தான் இப்போது அவள் நினைவில் சுற்றி கொண்டு இருக்கிறானே.)

ம்ம்  வருண் உனக்கு ஒரு வேலை இருக்கு…

ம்ம் சொல்லுங்க சார்…

ரொம்ப முக்கியமான மிஷன் ஓகே வா

ம்ம் எதுவா இருந்தாலும் நான் சரியா செய்வேன் சார்..

ம்ம் குட் அப்போ ஓகே,  இப்போ மணி என்ன?

 மாலை 7.00 மணி.

ஓ .. அப்போ 9.00 மணிக்கு என்னோட ரூம் க்கு வந்திடு…

ம்ம் ஓகே சார் என வருண் அவனிடம் இருந்து வேக வேகமாக ஓடி விட்டான்.

சரியாக மணி 9.00 ஆக வருண் இம்பாவின் அறைக்கு வந்தான்.

சார் உள்ளே வரலாமா…

ம்ம் என்று பதில் அளித்தவன். அவன் போனை கொடுக்க…

வருண் திருதிறுவென முழித்தான்.

சார்…

ம்ம் என்று அதட்ட சார் என்ன மிஷன் …

அவன் ஒரு க்கிரைம் புத்தகத்தை எடுத்து கொண்டே சோபாவில் அமர்ந்தவன்.

அது ஒன்னும் இல்ல நான் மெசேஜ் பண்ணி இருக்கேன் எப்டின்னு..

 இப்போ போன் ஸ்கிரீன் ரெகார்ட் ல இருக்கு இப்போ நீ என்ன பண்ற அப்டின்னா டக் டக் ன்னு மெசேஜ் அனுப்புர…

சார் நீங்க சொல்றது புரியல…

இன்பா அவனை பார்த்து முடியை கோதி கொண்டே இப்போது தெளிவாக கூறினான்.

இப்பொ நான் மெசேஜ் பண்ண எண்ணுக்கு நீ டெய்லி 9.00-10.00 வந்து மெசேஜ் பண்ணிட்டு போகணும் காட் இட்.. 

ம்ம் ஒகே சார் என்று வருண் அந்த மெசேஜ் பார்க்க அதில் ஐ ம் சாரி … பிளீஸ் என்னோட மன்னிப்பை அக்சப்ட் பண்ணுங்க மேடம், இனி இப்படி நடக்காது என்னை நம்புங்க மேடம் ஐம் எக்ஸ்டிரீம்லி சாரி..என்று இருக்க…

இதை யார் என்று கண்டறிய முடியாமல் (அவனுக்கு தெரிந்த இப்போது தெரியாத தன்னுடய தங்கைக்கு )மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தான்.

இல்லை இல்லை அனுப்ப வைத்தான் இன்பா.. 

வருண் இன்பா வை தயக்கத்துடன் பார்க்க என்னாச்சி சீக்கிரம் அனுப்புங்க வருண் அப்புறம் அவங்க மன்னிப்பை ஏற்று கொள்ள வில்லை என்றால் அதுக்கு நீங்க தான் காரணம்.. 

சாரி சார் இதோ…என்று அனுப்ப ஆரம்பித்தான்.

(இன்பா டார்ஜில்ங், விவி, விவேகா, பேபி என்ற வார்த்தைகள் எதுவும் பயன் படுத்த வில்லை. ஏன் என்றால் இது வெண்பா எண்.)

அதுவும் மெசேஜ் வருண் அனுப்புவதால் அவனுக்கும் யார் என்று தெரிய கூடாது என நினைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் இதே போல வருண் சரியாக வந்து மெசேஜ் அனுப்பி விட்டு சென்றான். இன்பா நன்றாக க்ரைம் ஸ்டோரி புத்தகம் படிப்பது, அப்புறம் நெட்பிளிக்ஸ் ல டார்க் வெப் சீரிஸ், சில கிரைம் போலீஸ் தொடர்கள் என பார்த்து கொண்டு இருப்பான்.

இங்கு விவேகா பூரிப்புடன் இருந்தாள். சரியாக ஒவ்வொரு நாளும் காலை பேருந்தில் வரும்போது வெண்பா போனை வாங்கி இன்பா அனுப்பிய மெசேஜ் எடுத்து ஆன் செய்து இன்பா எண்ணில் இருந்து ஏற்கனவே வந்த மன்னிப்பு மெசேஜ் அனைத்தும் பார்த்து சந்தோஷ மன நிலையில் கல்லூரி செல்வாள்.

ஹே எதுக்கு டி எங்க அண்ணாவ இப்படி டார்ச்சர் பண்ற…

ம்ம் எனக்கே இப்போ தான் தோணுது இந்த ராகவ் பைய ரொம்ப சின்சியரா தான் இருக்கான்.

அப்போ சொல்லு டி,

 எங்க அண்ணா கிட்ட சொல்லு டி, விரல் எல்லாம் வலிக்கும் தெரியுமா…

சரி நானே போன் ல சொல்றேன், விடு வெண்பா என இருவரும் அவர் அவர் வகுப்புக்கு சென்றனர்.

வார இறுதி ஆக அன்று சனக்கிழமை வர நேராக ஆதி வீட்டுக்கு செல்லலாம் என விவேகா ஆதி வீட்டுக்கு செல்ல அவள் அம்மாவும் ஆபீஸ் முடிந்து நேராக தன் அண்ணன் வீட்டுக்கு சென்றாள்.

அங்கு சென்றதும் ஆதி, அதிதி, விவேகா மூவரும் அரட்டை அடித்து விளையாடி கொண்டு இருக்க சரியாக வருண் கிட்ட இருந்து இரவு 8.30க்கு போன் வந்தது.

இப்போது விவேகா தன் அண்ணனிடம் ஆசையாக பேச ஆரம்பித்தாள். ஆதி, அதிதி இருவரும் அருகில் அமர்ந்து இருக்க..

ஆதி ஸ்பீக்கர் போட்டான்

ஹே அண்ணா இப்போ எல்லாம் என் கிட்ட பேசவே மாட்டின்குற …

இல்ல சின்ன குட்டி எனக்கு கொஞ்சம் வேலை மா அதனால் தான்…

அப்படி என்ன உனக்கு வேலை மணி 9.00 ஆக போகுதே நீ சப்பிட்டயா…

ம்ம் சாப்பிட்டேன் எனக்கு முக்கியமா இனி தான் வேலை இருக்கு மா…

நைட் 9.00 மணிக்கு மேல எவண்டா அண்ணா உனக்கு வேலை கொடுக்கிறது சொல்லு..

ஹே விவேகா இப்படி எல்லாம் பேச கூடாது யாரையும் மரியாதையா பேசணும் அப்படி தானே சொல்லி கொடுத்து இருக்கேன் உனக்கு என்ன இது…

 சரி சரி விடு அப்படி என்ன வேலை…

உடனே போன் வாங்கிய அதிதி அதை நான் சொல்றேன் டி..

இல்ல அண்ணா நீயே சொல்லு

அது ஒன்னும் இல்லை மா ஒரு இம்போட் மெசேஜ் ஒரு மேடம் க்கு அனுப்பனும் என்னோட ஹையர் ஆபீசர் சொல்லி இருக்காரு.

இப்போ அதிதி,

மாமாவோட ஆபீசர் ஒருத்தர்க்கு  மெசேஜ் பண்ண சொல்லி இருக்காங்க. இன்னும் 5நிமிடம் தான் இருக்கு அதுக்கு அப்புறம் மாமா வேலை விஷயமா போயிடுவாங்க. நீ போனை கொடு.. 

இப்போ மாமா கிட்ட நான் பேசணும் நீங்க போங்க என்று ஸ்பீக்கர் ஆப் செய்து அவள் ஆதியையும் ,விவெகாவையும் அனுப்ப 

விவேகா இந்த வார்த்தகளை கேட்டு அப்படியே சிலையானாள். ஆதி அவளை உழுக்க ஆதியை அவள் பாவமாக பார்த்தாள்.

இப்போது ஆதி ஹே விவி என்னாச்சு…

ஆதி… ஆதி…

ம்ம் சொல்லு என்னாச்சு உனக்கு உன் முகம் திடீர்னு எதோ கேட்க கூடாதது கேட்ட மாதிரி இப்படி ஷாக் ஆகி பார்க்கிற…

ஆதி.. ஆதி…

என்னடி ஆச்சு…

அந்த இடியட்… அந்த ராஸ்கல் அவன் போலீஸ் இல்ல அவன் ஒரு 420 டா…

 யாரை டி சொல்ற.. 

அய்யோ அவன் மட்டும் என் கைல  மாட்டினான் நான் அவனை என்று விவேகா கண்ட படி திட்டி கொண்டு இருக்க

இப்போ நீ சொல்றது இன்பா சார் பற்றியா?

ம்ம் அந்த ராஸ்கல் தான் என்று சோகமாக அவள் அமர்ந்தாள்.

இப்போ என்னாச்சு நல்லா தானே போச்சு இப்போ என்ன…

அவன்…   அவன்…

பிளீஸ் தெளிவா சொல்லு டி…

இப்போ வருண் மெசேஜ் பண்றானே, அது எனக்கு தான் டா.. 

ஐ மின் வெண்பா எண்ணுக்கு மெசேஜ் இன்பாவை சும்மா டீஸ் பண்ண அனுப்ப சொன்னேன் அந்த சாரி மெசேஜ்  ஆனால்

இப்போது ஆதி திகைத்து கொண்டே அப்போ வருண் மாமா உனக்கு தான் மெசேஜ் பன்றராறா!! என்று அதிர்சி கலந்த குரலில்

கேட்க ம்ம் ஆமா

அப்போ அந்த மேடம் நீ தானா!!

ம்ம் ஆமா .. 

இப்போது ஆதிக்கு சிரிப்பு வர… வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான்.

விவேகா சான்சே இல்ல டி.. வேற லெவல் 

மாமா பாவம்…

இன்பா சார் வேற லெவல்.. 

நீ அவர பழி வாங்குரேன் அப்டின்னு சொல்லி இப்போ கடைசில நீயும், வருண் மாமாவும்…

அய்யோ.. சத்தியமா முடியல டி…

ஹே சிரிக்காத டா என்று விவேகா கண்களில் கோபம் வர 

உடனே அவள் வெண்பாவின் எண்ணுக்கு அழைத்தாள்.

தொடரும்..  

உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் ratings கொடுங்க இந்த எபிசோட் எப்டி இருக்கு அப்டின்னு கமெனட் பண்ணுங்க.. Dears..

 Episode 74, 

தன் அண்ணனை வைத்து தான் இன்பா மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் என்று தெரிந்து கொண்ட விவேகாவுக்கு அவ்வளவு கோபம் வந்தது.

உடனே வெண்பாவின் எண்ணுக்கு அழைத்தாள். இங்கு  என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாமல் ஹே விவி ஏன் டி என்னை இப்படி டார்ச்சர் பண்ற…

நீ எதுக்கு என்னோட எண்ண மெசேஜ் பண்ண கொடுத்த எங்க அண்ணா ரொம்ப சின்சியர் தெரியுமா சரியாக 9.00 ஆனா போதும் 10.00மணி வரை மெசேஜ் வந்துகிட்டே இருக்கு டி…

இதை கேட்டு ஆதி சிரித்தான் விவேகா அவனை பார்த்து முறைத்து கொண்டே ஹே போதும் நிறுத்து…

என்ன டி எவ்ளோ கோபம் உனக்கு…

நீ இனி மெசேஜ் பண்ண வேணாம் அப்டின்னு நான் மன்னித்து விட்டேன் அப்டின்னு இப்போ உடனே போட்டு விடு…

இதை கேட்டு வெண்பா ம்ம் இப்போ தான் டி நீ எங்க அண்ணாவுக்கு என்று அவள் எதோ சொல்ல வர அதற்குள் விவேகா போன் வைத்து விட்டாள்.

விவி கோபமா…

பதில் இல்லை…

ஹே தேன் மிட்டாய்… ஹே சின்ன குட்டி என்று அவன் அவளை சமாதானம் செய்ய,

ஆதி என்னைய அந்த ராஸ்கல் இப்படி ஏமாற்றி விட்டானே டா…

சரி விடு நான் கூட இதை எதிர்பார்க்க வில்லை…

இங்கு வெண்பா விவேகா சொன்னது போல் மெசேஜ் அனுப்ப வருண் இப்போது மிகவும் சந்தோஷம் அடைந்தான்.

வருண் இன்பாவிடம் சார்…

ஸார்… அந்த மேம் ரிப்ளை பண்ணிட்டாங்க சார்..

இங்கே கொடு என்று இன்பா வாங்கி பார்த்தவன் ம்ம் குட்…

ஓகே வருண் நீங்க 20டேஸ் ல அவங்கள கன்வின்ஸ் பண்ணி இருக்கீங்க… சொல்ல வார்த்தைகளே இல்லை…

ஸார் நான் என்னோட கடமைய தான் செய்தேன்…

இல்ல வருண் நீங்க குட் எப்படியோ இதுக்கு மம்ம் டேக் இட் என்று ஒரு க்கிரைம் நாவல் புத்தகம் எடுத்து கொடுத்தவன் இத என்னோட ரிவார்டா வாங்கிக்கோங்க …

இட்ஸ் ஓகே சார்…

ம்ம் என்று இன்பா அதட்ட வருண் வாங்கிக்கொண்டான்.

இப்போ நீங்க போகலாம் என்று அவனை அனுப்பியதும் இப்போது இன்பா வென்பாவுக்கு கால் செய்தான்.

வெண்பா மா அவ வீட்டுக்கு போய்ட்டாளா…

ம்ம்ம் அண்ணா அவ ஆதி வீட்டில் தான் இருக்கா எனக்கு போன் பண்ணி சொன்னா…

ஓ அப்போ ஆதி எண் ல இருந்து கூப்பிட்டாளா…

ம்ம் ஆமா அண்ணா…

சரி ஓகே நீ பாரு மா என்று இன்பா வைத்து விட்டான்.

இப்போது ஆதிக்கு இன்பா அழைக்க,

மேடம் இப்போ சார் உங்க கிட்ட பேசணும் போல…. என்று கிண்டல் செய்து போன் நீட்ட….

ஹே நான் நிரம்ப டென்ஷனா இருக்கேன் போயிடு…

ஹே தேன் மிட்டாய் நிஜமாவே உன்னோட சார் தான் இந்தா பேசு…

விவேகா காதில் போன் வைக்க உடனே மறுமுனை

 ஐ ம் சாரி … பிளீஸ் என்னோட மன்னிப்பை அக்சப்ட் பண்ணுங்க மேடம், இனி இப்படி நடக்காது என்னை நம்புங்க மேடம் ஐம் எக்ஸ்டிரீம்லி சாரி..என்று இன்பா வாய் மொழியாக இப்போது அவளிடம் கூற 

அதை கேட்டு விவேகாவிற்க்கு  இன்னும் எள்ளும் கொல்லும் வெடித்தது.

ஹே போதும் உன்னோட பேர்ஃபார்மென்ச நிறுத்து…

இப்படி சொன்னதும் ஒரு நிமிடம் இன்பாவுக்கு திக் என்று ஆனது. அதனை வெளி காட்டி கொள்ளாமல்..

ஹே விவி பேபி என்னடி இப்படி சொல்லிட்ட உனக்கு மெசேஜ் பண்ணி என்னோட விரல்கள் எல்லாம் ரொம்ப வலிக்குது டி…

எனக்கு அந்த மெசேஜ் டைப் பண்ணது மணப்படமா இருக்கு டி அதனால் தான் உன் கிட்ட அப்படியே பழக்க தோசத்தில் சொல்லிட்டேன் டி…

என இன்பா பொய்களை அப்படியே பனிக்கட்டி மழையாக அள்ளி தெளித்தான். ஆனால் விவேகா எரிமலையாக வெடிக்க காத்துக் கொண்டு இருப்பது அவனுக்கு தெரியவில்லை 

ம்ம் அப்டியா…

ம்ம் ஆமா டார்ஜ்லிங்…

சரி இப்போ அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.

எனக்கு கொஞ்சம் இல்ல நெறைய n நம்பர் ஆஃப் கிஸ்சஸ்… அப்புறம் n நம்பர் ஆஃப் ஹக்ஸ்

அது என்ன n நம்பர் ஆஃப் கிஸ்சஸ்… 

ஹே நீ தத்தி விவேகா அதுக்கு முடிவே இல்ல டி மேத்மெட்டிகல் டேர்ம்… அப்போ அப்போ கொஞ்சம் பிசிக்ஸ், கொஞ்சம் கெமிஸ்ட்ரி….

ஓ !!!! எனக்கு இது தெரியாதே என்று பற்கள் நரணரத்து கொண்டே பேசினாள்.

ஹே நான் எதுக்கு இருக்கேன் உனக்கு எல்லாமே சொல்லி தரேன் டார்ஜ்லிங்…

ம்ம் சரி அதை விடுங்க எப்போ இங்கே வர போறீங்க…

இன்னும் 10டேஸ் ல வந்துடுவேன் பேபி…

ம்ம் ஓகே ஐம் வெயிட்டிங்…

எதுக்கு டி…

ம்ம் அது தான் n நம்பர் ஆஃப் சம்திங் தரனும் தானே..

இதை கேட்ட இன்பாவுக்கு ஒரு மின்சாரம் தாக்க தான் செய்தது.

இப்போ எதுவும் இன்ஃபினிட்டி கிஸ் தரயா…

இப்போ எதுக்கு நான் ஸ்ட்ரைட்டா நேரில் தரேன் அது முடிவிலி யா இருக்க போகுது…ஓகே இப்போ வைக்கிறேன்…

ஹே வைக்காத நான் தரட்டுமா என்று கேட்டுக் கொண்டே இச்க் இச்க் என்று சத்தம் வர…

யூ இரிட்டேடிங் இடியட்… என்று சொல்லி போன் கட் செய்தாள்.

இங்கே ஆதி விவேகா கோவமாக இருப்பதை பார்த்து கிண்டல் செய்ய இருவரும் துரத்தி துரத்த விளையாடி கொண்டு இருந்தனர்.

இப்போது செல்வம் தன் தங்கையிடம் கங்கா வருண் – அதிதி கல்யாணம் பற்றி கொஞ்சம் பேசலாமா..

ம்ம் அண்ணா நீ எப்போ சொல்றியோ அப்போவே செஞ்சுக்களாம் அண்ணா…ஆனால்…

ஆனால் என்ன கங்கா …

இப்போது அவள் கண்களில் கண்ணீர் கொண்டு அண்ணா இங்க வீடு கேஸ் ல இருக்கே நான் என் மருமகளை சொந்த வீட்டில் நுழைய அதாவது நான் என்ன ..

போதும் கங்கா இதுக்கு போய் எதுக்கு வருத்த படுற அது தான் வருண் க்கு குவாட்ரஸ் இருக்கு இந்த கேச நம்ப ஊர் பஞ்சாயத்துக்கு ஒரு தடவை சொல்லி கூட்டலாம் கங்கா அண்ணா எவ்ளோ அண்ணா பணம் செலவு பன்றது. அடுத்து விவேகா இருக்கா என்னால என்ன பண்ண முடியும்.

இப்போது தேவி எதுக்கு அக்கா நீங்க இதுக்கு வருத்த படுறீங்க.. அதுக்கு தான் என் பையன் ஆதி இருக்கானே…

இதை கேட்டு கண்களை துடைத்து கொண்டு என்ன தேவி சொல்ற..

ம்ம் ஆமா அக்கா எனக்கு விவேகா மேல விருப்பம் தான் என்னங்க சொல்லுங்க என்று தன் கணவர் கிட்ட பேச

செல்வம் தன் தங்கையிடம் உனக்கு இஷ்டம் இல்லனா வேணாம் மா… 

அண்ணா எனக்கு இதை கேட்டு ரொம்ப சந்தோஷம் ஆதி ய நான் எதுக்கு வேணாம் அப்டின்னு சொல்ல போறேன் அவன் அப்படியே உன்னோட மருஉருவம் என் கிட்ட இத நீ கேட்கணுமா தேவி…

அக்கா எனக்கு ரொம்ப சந்தோஷம் அவ தான் நம்ப வீட்டோட சந்தோஷம், எல்லாமே அவ தான் அவ இருக்க இடம் அது லட்சுமி கடாட்சமா இருக்கும்.

ஆனால் ஒன்னு என்று செல்வம் சொல்ல,இப்போது இருவரும் திரும்பி பார்க்க, இதுல ஆதிக்கும் சின்ன குட்டிக்கும்  விருப்பம் இருந்தா மட்டும் தான் செய்வேன். அதுவும் இப்போதிக்கு இப்ப இத பத்தி பேச வேணாம் ஆதி வருண் மாதிரி வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் இந்த பேச்சு எடுக்கணும் புரியுதா…

ம்ம் சரி என்று இருவரும் நிம்மதி முகத்துடன் அடுத்த வேலையை  பார்க்க சென்றனர்.

அடுத்த நாள் காலையில் விவேகா அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டாள். வெண்பா வீட்டில் சரவணன் அண்ணா…

ம்ம் சொல்லு மா…

அண்ணா இன்னிக்கு நீங்க கொடுத்த எல்லா வேலையும் முடித்து விட்டேன். இன்னிக்கு ஃபுல் டே எனக்கு நீங்க வொர்க் கொடுங்க நான் செய்யுறேன் என சொல்ல,

ம்ம் சரி வாடா உள்ளே என்று அமர்ந்து கொண்டு சரவணன் கொடுத்த அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்தாள்.

தேவகி அவளிடம் என்ன விவேகா அம்மா எங்கே?

அம்மா மாமா வீட்டுக்கு போயிட்டாங்க மா என அவள் அமர்ந்து வேலை செய்து கொண்டே நடுவில் சரவணன் கிட்ட பொதுவாக சில வார்த்தைகள் பேசி கொண்டே வேலை செய்தாள்.

இப்போது இன்பா வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது.

அடுத்த நாள் வெண்பா, விவேகா வழக்கம் போல் காலேஜ் சென்றனர். இரண்டு நாள் விவேகா முகத்தை தூக்கி வைத்து கொண்டே வர ஹே என்னடி ஆச்சு… என வெண்பா கேட்க

ஒன்னும் இல்ல…

ஹே சொல்லு…

ஒன்னும் இல்ல டென்ஷன் பண்ணாத டி…

வெண்பா இதை ஆதி கிட்ட கேட்கலாம் என விட்டு விட்டாள்.

விவேகா வகுப்பு சென்றதும் சிறிது நேரம் கழித்து வெண்பா வந்தாள்.

ஆதி என கூப்பிட்டு கொண்டு இவள் வர சொல்லுங்க ராட்சசி…

ஹே என்னாச்சி உங்க தேன் மிட்டாய் முகம் ஏன் இப்படி இருக்கு…

அதை கேட்ட ஆதி உடனே சிரிக்க ஹே சிரிக்காத டா என்று மீண்டும் முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.

அது ஒன்னும் இல்ல வெண்பா என்று நடந்த அத்தனையும் கூற

வெண்பா ஒரு நிமிடம் விவேகா என்று பின்னால் திரும்பி கொண்டு சிரித்தாள்.

ஹே விவி அவ பின்னாடி திரும்பி சிரிக்கிறா டி..

ஹே ஃப்ராடு உன் கூட இருக்க எல்லாரும் ஃப்ராடு தான் என்று கோபமாக பேச..

சாரி டி பிளீஸ் டி கொஞ்சம் நேரம் சிரித்து கொள்கிறேன் டி…

ஆதி இதுக்கு எல்லாம் நீ தான் காரணம் …

செம்ம காண்டு கண்ணமா வா இருக்க போல 

சரி இப்போ நீ நல்லா மாட்டிக்கிட்ட டி மறுபடியும் என வெண்பா சொல்ல…

எப்டி என்று விவேகா கேட்டாள்.

இப்போ நீ எப்டி இதை கண்டு பிடிச்ச அப்டின்னு அண்ணா கேட்டா என்ன சொல்லுவ..

விவேகா எதோ சொல்ல வர…

இப்போ வருண் உங்க அண்ணா அப்டின்னு தெரிஞ்சா வசமா மாட்டிக்குவ இப்போ இதுக்கு என்ன செய்ய போற… என வெண்பா கேட்க

விவேகா நீ ஒன்னும் பண்ண முடியாது… என்று ஆதி சொல்ல 

இப்போது விவேகா????

தொடரும்…

அடுத்து இன்பா விவேகா சந்திப்புக்காக காத்திருங்கள்…

Episode 75, 

வெண்பா கேட்ட கேள்விக்கு இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தாள்.

என்ன டி விவேகா எங்க அண்ணா உனக்கு எப்படி செக் வச்சு இருக்கான் பார்த்தாயா!

நீ எப்படி சுற்றினாலும் அவன் கிட்ட தான் வந்தாகனும்.

ஹே பேசாம போயிடு டி…

இப்போது வெண்பா சிரித்து கொண்டே, தன் வினை தன்னை சுடும் டி 

ஆதி…. என விவேகா கத்த..

அய்யோ பேயி என்று வெண்பா சொல்லி ஓடி விட்டாள்.

இப்போது ஆதி அவள் அருகில் வந்து சரி விடு என் செல்லம் ரொம்ப டென்ஷன் ஆக வேணாம். இந்தா தேன் மிட்டாய்…

ம்ம் வாங்கிக்கோ…

இல்ல எனக்கு வேண்டாம்…

ஹே சின்ன குட்டி ஆ காட்டு.. மம் நல்ல பொண்ணு…

ம்ம் விவேகா எதுக்கு டி வறுத்த பட்டு ஃபீல்  பண்ணனும்… எப்பவும் அவ இப்படி சோர்ந்து போக கூடாது.

ம்ம் சரி ஓகே ஆதி என அவள் பழைய சிரித்த முகத்துடன் மாறினாள்.

அடுத்த நாள் வருண் பேசினான் இன்னும் நான்கு நாட்களில் வீட்டுக்கு வந்து விடுவேன். என்று சொல்ல விவேகா மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.

ம்ம் ஜாலி வருண் சீக்கிரம் வா டா நானும், ஆதியும் காலேஜ் க்கு லீவ் போட்டு விடுவோம்.

ம்ம் வந்து பார்த்துகொள்ளலாம் விவேகா என சொல்லி வைக்க 

இப்போது உற்சாக மன நிலையில் கல்லூரி சென்றாள்.

ஹே என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க..

ம்ம் எங்க அண்ணா வரான்.. இப்போ போலீசா வரான் இன்னும் 1மாசம் ட்ரைனிங் அடுத்து போஸ்டிங் எப்படி எங்க அண்ணா கெத்து…

ம்ம் ஒரே ஜாலி தான்…

ம்ம் ஆமா ஆதி சொன்னான். இப்போ வர மே மாதத்தில் அதிதிக்கும் எங்க அண்ணாவுக்கும் கல்யாணம் ஒரே ஜாலி தான்டி…

ஓ அப்படியா என்று இப்போது வெண்பா மனதில் ஒரு ஆசை வந்தது. இதை இன்றே அம்மா கிட்ட பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

காலேஜ் வந்து இறங்கினர் இன்னிக்கு தான் இன்பா வருவதாக கூறி இருந்தான். ஆனால் விவேகா அதை மறந்து விட்டாள். ஏன் என்றால் தன் அண்ணன் வீட்டுக்கு வருவதால் அந்த உற்சாகத்தில் இருந்தாள்.

First period பெல் அடிக்க

வந்து விட்டான் நாயகன்….

அவன் உள்ளே வருவதை பார்த்த விவேகா மனதில் குளிர் காற்று வீசினாலும் அது ஒரு சில நேரத்தில் வெப்ப காற்றாக மாரியது.

இவனுக்கு எல்லாம் வேலையே இருக்காதா. இந்த காலேஜ் பக்கமே சுத்திக்கிட்டு இருக்கானே…

அதற்கு மைதிலி, இது அவரோட காலேஜ் அவரு சுத்துறாரு தங்களுக்கு என்ன மன்னா….

ஹே டென்ஷன் பண்ணாத…

ம்ம் சொல்லுவ இவளோ நேரம் அவரை சைட் அடிச்சுட்டு இப்போ சீன் போடுறா போடி என்று மைதிலி கிண்டல் செய்தாள்.

தக் டக் டக் டக் என ஷூ ன் ஓசை கேட்க வந்து விட்டான் இன்பராகவன் IPS

hello students, gud morning all of you..நான் straight  to the point  க்கு வரேன்

 இந்த காலேஜ் ல இருந்து இந்த இயர் இண்டஸ்டிரியல் விசிட் ஐ மின் I V அப்புறம் NSS கேம்ப் ல இருந்து அதோட ஹெட் ட்ரக்கிங் பிளான் பண்ணி இருக்காங்க. அதனால் இப்போ கமிங் வீக் பிளான் பண்ணி இருக்காங்க 

காலேஜ் management  ல இதை பத்தி உங்களுக்கு அப்புறம் circular வரும் 

final ஆ யார் யாருக்கு willing இருக்கு அப்டின்னு சொல்லுங்க

any doubt அப்டின்னாலும் கேட்கலாம் என்று கூற

கிளாஸ் இல் அனைவரும் எழுந்து நின்றனர் ஒருத்தியை தவிர  அது நம்ம விவேகா தான் ஒரு பார்வை கூட அவனை பார்க்கவே இல்லை.. இடியட் எவ்ளோ திமிர் உனக்கு எங்க அண்ணாவ மெசேஜ் பண்ண வைக்கிரியா..

இன்பா m.v என்னோட பேச்சு கேட்டு எல்லாம் ok சொல்லிற்காங்க இவ என்னடானா சாதாரணமா உட்கார்த்துகிட்டு இருக்கா… இன்னிக்கு இவளை நல்லா கவனிக்கனும் ராகவ் ….

வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தான் இன்பன் (இது அவர்கள் முதல் சந்திப்பில் நடந்தது அதே போல் மீண்டும் ) மிஸ் இனியாள்…

ம்ம் சொல்லுங்க சார்…

அந்த பொண்ணை hod யை வந்து பார்க்க சொல்லு 

ம்ம் ஓகே சார்…

இன்பா மனதில் விவேகாவை நெனைச்சேன் டி நீ எதுவும் செய்தால் தானே என்னோட டார்ஜ்லிங்…

அனைத்து மாணவர்களும் திரும்ப ஆதிடம் பேசிக்கொண்டு இருந்தாள் விவேகா…

இன்பா உள்ளே வந்ததை பார்த்து விட்டு ஹே போடா இடியட் உன்னை என்ன செய்கிறேன் என்று பார்… என்று நினைத்து கொண்டு இருக்க 

ஹே என்ன சார் மேடம பார்க்காமல் போறாரு என சிரித்து கொண்டே கேட்க

ஹே கோப படுத்தாத ஆதி…  

சரி விடு இப்போ  என்ன டி நீ ஐவி வரலயா..

ஹே எனக்கு கொஞ்சம் காசு பிரச்சனை ஆதி அதுவும் இல்லாமல் வருண் வரான் உனக்கே தெரியும் தானே நீ போயிட்டு வா நான், அதி, வருண் நாங்க ஜாலியா வீட்டில் என்ஜாய் போடுவோம்.

விவேகா உனக்கு இப்போ வர வர கொஞ்சம் மூளை கம்மி ஆகுது டி..

ஏன் இப்போ தான் மாமா வந்து இருக்காங்க அதி கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும் அப்டின்னு நினைப்பாங்க.

அதுக்கு நான் என்ன பண்ணட்டும் அவன் முதலில் எனக்கு அண்ணன் அதுக்கு அப்புறம் தான் உனக்கு மாமா காட் இட்..

இப்போது ஆதி சிரித்து கொண்டே ஹே உனக்கு முன்னாடியே எனக்கும் அதிக்கும் மாமா..

சரி இப்போ என்ன ஐவி போக கூடாது அவ்ளோ தான..

நீ வேணும் னா போயிட்டு வா நான் வரல அப்புறம் நான் ஒன்னும் வருனை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.

எனக்கு வொர்க் இருக்கு எக்ஸ்டிரா டைம் ல வொர்க் பண்ணா இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஃபீஸ் கட்டணும்… 

ம்ம் சாரி எனக்கு தான் அறிவு கம்மி டி இப்போவே உன்னோட தேவைக்கு நீயே வேலை செய்யுற..

ம்ம் போதும் போதும் என்ன புகழாத சரி எனக்கு ஒரு தேன் மிட்டாய் ..

உடனே ஆதி ஊட்டி விட இங்கு இன்பா அவன் அறையில் இதை பார்த்து கொண்டு இருந்தான்.

இனியாள்,விவேகா உன்னை department வர சொன்னாங்க

எதுக்கு…

எனக்கு தெரியாது உனக்கு தான் எப்பவும் பிரச்சனை பன்றது தானே வேலை போ 

ஆதி,நானும் வரேன்

என கூற விவேகா வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்ல போக

ஆதி-ஒரு தேன் மிட்டாய் எடுத்து விவிக்கு ஊட்டி விட்டான்

அவள் வருகிறளா என கதவை பார்த்தவன் அவள் வராதது தெரிந்து வெளியே செல்ல போக இப்போது இன்பா hod க்கி கால் செய்தான்.

அங்கு விவியோ தேன் மிட்டாய் எடுத்து வாயில் போட்டு சுவைத்தவாறு  HODஅறைக்குள் சென்றாள்.

Hod அறையில்

Hod என்னமா விவேகா நம்ப dept ல நீ தான சமத்து பொன்னு, எந்த பிரச்சனைக்கும் போக மாட்ட ஆனால் இப்போ எதுக்கு ஐவி வரல அப்டின்னு சொண்ணயாமே…

ம்ம் ஆமா சார் அமௌன்ட் பிராப்ளம், அதனால் தான் நான் வரல சார்…

சரி ஓகே உன்னோட விருப்பம் என்ன ரீசன் அப்டின்னு எழுதி கிளாஸ் இன்சார்ஜ் சைன் வாங்கி என் கிட்ட ஒரு சைன் வாங்கிட்டு போய் கரெஸ்பான்டென்ட் கிட்ட கொடு மா…

எப்படியும் நீ நான் சொன்னால் கேட்க மாட்ட நீ அவர போய் மீட் பண்ணு…

ம்ம் ஓகே சார் என வெளியில் வந்த விவேகா  தெரியும் டா இதுக்கு எல்லாம் நீ தானே காரணம் உன்னை என்று இவள் திட்டி கொண்டே மீண்டும் வகுப்புக்கு வந்தாள்.

இப்போ என்ன செய்வது என யோசித்தாள் ஆதியிடம் வந்து கூறினாள்.

ஹே விவி நான் ஒன்னு சொல்லவா

ம்ம் சொல்லு 

இப்போ போய் நீ அவர பார்த்து விட்டு வந்திடு அதனால் தான் இப்படி பன்றாரு டி..

நானா நான் மாட்டேன்…

அப்போ உன்னோட இஷ்டம் இன்னிக்கு இப்போ தான் முதல் வகுப்பு ஆரம்பித்து இருக்கு உன்னை அவரு ஈஸியா விட மாட்டாரு அப்புறம் உன் இஷ்டம்…

ஹே போடா என்று அவள் வகுப்பில் அமர்ந்து கொண்டு பாடத்தை கவனிக்க அடுத்து வரும் பாடவேலை லேப் இப்போது அனைவரும் செல்ல ஹே விவேகா சொல்றத கேளு டி…

போடா நான் எதுக்கு அவனை பார்க்கனும் முடியாது..

ஆதி சொன்னது போலவே இன்பா லேப் ல இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் உள்ளே வர அங்கு அவன் இருப்பதை பார்த்து விட்டு விவேகா இப்போது ஆதியை பார்த்தாள்.

இன்னிக்கு நான் தான் ஹாண்டல் பண்ண போறேன் உங்களுக்கு எல்லாம் ஓகே வா..

மாணவிகள் அனைவரும் சந்தோச மன நிலையில் அவரவர் சிஸ்டத்தில் அமர இப்போது இன்பா ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து இருந்தான்.

அனைவரும் பயந்து கொண்டு அவன் அருகில் இருக்கும் கணினி க்கு போய் அமர வில்ல.

 ஹே மைதிலி வாடி …

ஹே போ விவி உங்க சண்டைல என்ன சேர்க்காத நான் மீனா கூட இங்கே இந்த சிஸ்டம் ல இருக்கேன்.

ஹே அது நான் உட்கார சிஸ்டம்…

எனக்கு தெரியாது பா நமக்கு உயிர் முக்கியம் என அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

இப்போது இன்பாவின் அருகில் உள்ள சிஸ்டம் ல இனியாள் அமர்ந்து கொண்டாள்.

இப்போது அந்த லேப் பின் ட்ராப் சைலன்டில் இருக்க விவேகா ஆதியை பார்க்க

அவன் நான் சொல்லும்போதே கேட்டு இருக்கலாம் தானே… என்பது போல் பார்த்தான்.

விவேகா போய் அவன் அருகில் நின்றாள்.இப்போது பசங்க எல்லாம் அவளையே பார்த்தனர்.

விவேகா நல்லா மட்டிக்கிட்டா மச்சி என சிவா ஆதியுடம் கூற 

ஹே உன் வேலைய பாரு டா0…

சார்… 

சார்…

ஹலோ சார் என்று கோபத்தில் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச இன்பா முறைத்தான்.

ம்ம் வாட்…

இது என்னோட இடம்…

இனி ஸாரி இனியாள் இவங்க பேரு இதுல எழுதி இருக்கா…

இல்ல சார் என்று சொல்ல இப்போது அனைத்து மாணவர்களும் சிரித்தனர்.

யூ இடியட் என்று இவள் வாய்குள்ளே சொல்ல…

சார் இந்த கேர்ள் உங்களை…

சரி விடுங்க இனியாள் நான் அப்போவே யோசித்தேன் இந்த சிஸ்ட்டம் டூ வொர்ஸ்ட்..

நான் லேப் ல பார்த்து கொள்கிறேன் என அவன் வந்த வேலையை அவள் சிஸ்டத்தில் போட்டு வைத்து விட்டு இப்போது எதுவும் நடக்காதது போல் எழுந்து கொண்டான்.

ம்ம் லிசன் ஸ்டூடண்ட்ஸ் இப்போ மேடம் கொடுத்த அந்த டெஸ்ட் சீக்கிரம் அவுட் புட் போட்டு விட்டு நீங்க கிளம்பலாம்…

ம்ம் ஓகே சார் என்று சந்தோச மன நிலையில் அவர்கள் வேலையை ஆரம்பித்தனர்.

விவேகா கட கட வென போட அது சரியாக முடிக்கும் தருவாயில் ஆஃப் ஆகியது..

மீண்டும் இந்த முறை சேவ் செய்து விட்டு அவள் தொடங்க அதே போல் இடையில் எதுவும் நடந்து கொண்டே இருந்தது.

உள்ளே லாக் இன் அப்புறம் செட்டிங்ஸ் எல்லாம் எதோ செய்து மாற்றி இன்பா வைத்து விட்டான்.

இப்போது விவேகா கோபமாக அவனை திரும்பி பார்க்க அவன் அவளை பார்த்து கண் அடித்தான்.

நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவரும்  அவுட் புட் காட்டி விட்டு கிளம்பி கொண்டே இருக்க ஆதி இவழுக்காக அவுட் புட் காட்டாமல் காத்து கொண்டு இருந்தான்.

க்கும், இன்னும் முடிக்கலயா நீ என ஆதி அருகில் வந்து கேட்க

சார் ஐ ம் ஃபினிஸ்டு…

அப்போ எதுக்கு வெயிட் பண்ற ரிபோட் பண்ணிட்டு கிளம்பு…

ஓகே சார் என அவன் பாவமாக விவேகாவை பார்த்து விட்டு செல்ல இப்போது மதிய உணவு இடைவேளை பெல் அடிக்க..

விவேகா உடனே எழுந்தாள். ஹே எங்க போற என்று இன்பா தன் போன் நோண்டி கொண்டே கேட்க

சாப்பிட போறேன்…

அவுட் புட் காட்டிட்டு கிளம்பு…

இன்னிக்கு ஃபுல் டே லேப் தான் சோ எப்போ வேணும்னாலும்  முடிக்கலாம்.

என்று சொல்லி விட்டு வேக வேகமாக வெளிய செல்ல போக

ஹே எங்க பேபி போற… என்று அவளுக்கு முன்னால் போய் நின்று கொண்டான்.

நீ முதலில் வழிய விடு நான் போகனும்…

முடியாது என்று ஒவ்வொரு அடிகலாக இன்பா அவளை நோக்கி வைக்க அவள் பின்னோக்கி அடிகள் வைத்தாள்.

ஹே கிட்ட வராத… 

அப்படி தான் டி வருவேன்…. என கண்ணகுளி தெரிய இன்பா சிரித்து கொண்டே ஒவ்வொரு அடிகள் விவேகாகவை நோக்கி வைக்க…

பிளீஸ் வராத டா….

இப்போ வந்துட்டேன் பாரு டி…

அப்போ நான் கத்திடுவேன் டா…

இப்போ கத்து டி என்று இன்பா அவள் வாயில் கையை வைக்க….???

தொடரும்…

Episode 76,

விவேகா மதிய உணவு சாப்பிட கிளம்ப இன்பா அவளை பார்த்து  எங்கே போற என கேட்க அவள் சாப்பிட போகிறேன் வந்து என்னோட வொர்க் முடித்து விடுகிறேன் என்று சொல்லி வேக நடையிட்டு கதவுக்கு அருகில் செல்லும் நேரம் இப்போது இன்பா அவளுக்கு முன்னால் வந்து நின்று கொண்டான்.

ஹே கிட்ட வராத…சொன்னா கேளு  என்று இவள் ஒவ்வொரு அடிகளாக பின்னால் எடுத்து வைக்க

ஹே அப்படி தான் டி வருவேன்..  என்று இன்பா முன்னேற இப்போது சுவற்றில் முட்டி நின்றாள்.

ஹே என்ன  ரொம்ப ஓவரா பண்ற அதுக்கு உன்னை கவனிக்க வேண்டுமே…

ஹே போடா இல்ல நான் கத்திடுவேன்…

கத்து டி என்று இன்பா அவள் வாயின் மேல் கையை வைக்க இவள் கடித்து விட்டாள்.

ஸ்ஸ்ஸ் ஹே வலிக்குது டி என்று அவள் மேல் ஒட்டிகொண்டே இன்பா அவன் கைகளை பார்க்க இப்போது விவேகா தன் முகத்திற்கு முன்னால் விழுந்த முடியை உஃப் என்று ஊதி விட்டு கொண்டே ஹே இது வெறும் முன்னோட்டம் தான் என் கிட்ட வம்பு பண்ணாத நகரு டா…

ம்ம் முன்னோட்டமா என் கைய பைட் பண்ண உன்னை நான் சும்மா விட மாட்டேன் டி … என்று அவன் அவள் தாடையை பிடித்து அருகில் இழுத்து கொள்ள 

 பிளீஸ் டா எதுவும் செய்யாத என்னை விடு இல்லனா…

இல்லனா…

நான் பாவை அம்மச்சி கிட்ட சொல்லிடுவேன்…

இப்போது இன்பா கண்ணகுளி தெரிய சிரித்தவன். என்ன சொல்லுவ… இப்போ நான் உன்னை கொஞ்சமா கவனிக்கலாம் அப்டின்னு இருந்தேன் டி… ஆனால் நீ யூ டெம்டிங் மீ… என்று அருகில் உதடும் உதடும் உரச ஒரு இன்ச் இடைவெளி இருக்க  அவள் கண்கள் அகல விரிய  அவள் உதடுகளை அவன் உதடுகள் கொண்டு வருடி விட்டான்.

அவள் முகம் மொத்தமும் இவன் சவரம் செய்து கொஞ்சம் வளர்ந்த தாடியை அவள் கண்ணங்களில் இரு பக்கமும் கன்னம் உரச அவன் முறுக்கி விட்ட மீசை மீதி வேலை செய்ய ஆரம்பித்தது அவள் காதில் சிறிது நேரம் உரசி விட்டு அவனின் சூடான மூச்சு காற்றை அங்கே கொஞ்சம் விட இதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அந்த ரிதம் இவள் நெஞ்சு கூட்டில் வேக வேகமாக இதயம் துடிக்க விவேகா இருந்த பதட்டத்தில்அவனை அணைத்து கொண்டாள் இப்போது   இன்பா அவளை பார்த்து சிரித்தான்.

பேபி நான் உன்னை கிஸ் கூட பண்ண தேவை இல்ல என்னோட ப்ரீத் போதும் டி உன்னை என் கிட்ட விழ வைக்க என இன்பா சொல்ல இப்போது தான் தன்னிலைக்கு வந்த விவேகா

அவள் மனதில் ஹே என்னடி அவன் கிட்ட விழுந்துட்ட அவனை பழி வாங்கணும் விவேகா அவன் கிட்ட இருந்து தள்ளி போடி..

உடனே அவனிடம் இருந்து தள்ளி கதவுக்கு அருகில் சென்றாள். ஹே இப்போ எங்கே டி போற என்னை விட்டு.. 

போடா ஃப்ராடு … 420… என்று சொல்லி கொண்டே கதவுக்கு அருகில் செல்ல ஹே என்னடி இப்படி சொல்லிட்ட உனக்காக உன்னை பார்க்கனும் அப்டின்னு வீட்டுக்கு கூட போகாம என்னோட மாம் அவங்கள கூட நான் பார்க்காமல் வந்தேன் டி…

ஹே நம்பிட்டேன் போடா…

ஏன்…

உன் வாயில் இருந்து வரது எல்லாமே பொய் டா…

இப்போது தன்னை சுதாரித்து கொண்டவனாய் சாரி பேபி சின்னதா குட்டியா பொய் தான் சொன்னேன்.

ம்ம் என்ன சொல்லு அதையும் கேட்டு தொலயுறேன்.

ஹே என்ன டி இப்படி பேசுற

நீ பதிலை சொல்றா…

நான் சொன்னது எல்லாம் உண்மை பட்

ம்ம் மேல

பட் ஸ்டேசன் போய் என் அம்மாவை பார்துட்டு நேராக உன்னை தான் பார்க்க வந்தேன் இது மட்டும் தான்..

உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு டா என்று நீ என்னமோ செய் நான் போய் சாப்பிடரேன் என்று சொல்லி அவள் வெளியே செல்ல

ஹே என்னோட லஞ்ச் சாப்பிட வாடி பிளீஸ் பேபி…

சான்சே இல்ல எனக்கு ஆதி வெயிட் பண்ணிட்டு இருப்பான் நான் போறேன்…

ஆதி என்ற பெயரை கேட்டதும் இன்பாவுக்கு எங்கு இருந்து தான் இவ்வளவு கோபம் வந்தது என்று தெரிய வில்லை.

விவேகா நீ மட்டும் என் கூட வந்து சாப்பிடல நான் லஞ்ச் சாப்பிட மாட்டேன்…

ஹே போடா பசி வந்தால் நீயா சாப்பிட போற..

விவேகா சாப்பிட அமர்ந்தவள் நினைவில் இன்பா தான் இருந்தான். ஆதி ஒரு வாய் ஊட்டி விட அடுத்து மைதிலி ஒரு வாய் ஊட்டி விட சாப்பிட்டவள் மனதில் ஒரு வேளை நிஜமாவே சாப்பிடாம இருப்பானோ… என தோன்ற திறந்த டிஃபன் பாக்ஸ் அப்படியே மூடி விட்டாள்.

ஆதி அவளிடம் விவேகா நீ தான டி இன்னிக்கு கத்தரிக்காய் பிரட்டல் கூட தக்காளி பஜ்ஜி (தொக்கு) கேட்ட இப்போ மூடி வைச்சுட்ட  என் அம்மா ரெண்டையும் உன்னை சாப்பிட வைக்கணும் அப்டின்னு  ரெகமன்டேசன் வேற 

ஹே என்னாச்சு என மைதிலி கேட்க

 ஒன்னும் இல்ல டி..

தலைவன் தரிசனத்தின் வினை பயனா தலைவியே!!

நீங்கள் சொல்வது போல் தான் தோழியே என ஆதி சொல்ல..

ஹே சட் அப்… என்று போய் எழுந்து கை கழுவி விட்டு தண்ணீர் குடித்தவுடன் ஒரு தேன் மிட்டாய் எடுத்து போட்டு கொண்டவள் வாயில் போட்டு கொண்டே ஆதி அருகில் அமர ஹே என்னாச்சு எப்பவும் எனக்கு முன்னாடி அவுட் புட் கொடுத்து எனக்காக வெயிட் பண்ணுவ இன்னிக்கு என்னாச்சு டி…

 அவன் எதோ பண்ணி வச்சுட்டான் என்னோட சிஸ்டம் எதோ செட்டிங் எல்லாம் மாறிப்போச்சு.. அதனால் தான் 

அப்புறம் என்னாச்சி என சிரித்து கொண்டே மைதிலி கேட்க, ஹே மறுபடியும் பொய் சொல்றான் எல்லாமே நம்புறது மாறியே இருக்கு தெரியுமா அவனை ஒரு சீப்பு எடுத்து வெளு வெலு வெளுக்கணும்.

இதை கேட்டு மைதிலி சிரித்தாள் நீ அடிச்சாலும் அடிப்ப டி….

அங்கு வந்த சிவா ஹே அது தான் உங்க அத்தை பொன்னு சாப்பிட்டு விட்டாளே வாடா அப்படியே ஒரு சைட்டு க்கு போலாம்..

ஹே போடா என்று  ஆதி சொல்ல 

விவேகா இப்போது எந்த dept போறீங்க டா என ஆர்வமாக கேட்க 

இங்கே தான் விவேகா என சிவா சொல்ல

ஹே 1st years ஆ என விவேகா கேட்க 

அட போ விவேகா அதை விட சீனியர் சூப்பரா இருக்காலுங்க செம்ம சைட்  விவேகா நீயும் வா சீனியர் எல்லாம் அந்த டென்னிஸ் கோர்ட் கிட்ட தான் இருக்காங்க…

ஹே நீ தேவை இல்லாத வேலைக்கு போற அப்புறம் பின் விளைவு அதிகமா இருக்கும் என ஆதி சொல்ல

மைதிலி, ஹே அண்ணா வாடா நான் வரேன் , ஆதி வாடா இன்னிக்கு cs, ECE டென்னிஸ் மேட்ச் போகுது மொத்த dept அங்க தான் வாடா ஜாலியா இருக்கும்.

விவேகா ஆதியிடம் நீ போயிட்டு வா ஆதி ஈவ்னிங்  எத்தனை பொன்னு புரோபோசல் கொடுக்குது அப்டின்னு பார்க்கலாம்.

ஹே விவேகா அடி…

ஹே நீ வரல என மைதிலி கேட்க

என்னை தீப்ஸ் கூப்பிட்டது எதோ என்ரோல்மெண்ட் வொர்க் இருக்கு நீங்க போங்க…

ஹே பாய் டி என ஆதி, சிவா, மைதிலி மூவரும் கிளம்பினர்.

இங்கே விவேகா அவர்கள் சென்றதும் மனம் கேட்காமல் ஒரு தேன் மிட்டாய் எடுத்து வாயில் போட்டு கொண்டு ஆதி கொடுத்த லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு இன்பாவை ஒரு முறை பார்த்து விடலாம் என கிளம்பினாள்.

போகும் வழியிலேயே dept ஒரு முறை பார்த்து விட்டு செல்ல அங்கே யாரும் இல்லை எல்லாரும் டென்னிஸ் கோர்ட் போயிருக்க இது தான் சரியான தருணம் என விவேகா இன்பாவின் அறைக்கு செல்ல 

அவன் ஜன்னல் அருகே நின்று யாரிடமோ போன் பேசி கொண்டு இருந்தான். இவள் உள்ளே மெதுவாக ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து வர 

அவன் யாரோ பின்னால் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு கொஞ்சம் ஆயத்தமாக இருக்க சரியாக இவன் முதுகுக்கு பின்னால் விவேகா வரவும் உடனே அவளை யாரோ என இழுத்து அவள் கழுத்தை பிடிக்க 

ஐ வில் கால் பேக் லேட்டர்… என சொல்லி போன் வைத்து விட்டு அவள் மேல் இருந்து கைகளை எடுத்து விட்டு அந்த சேர் ல அமர்ந்தான்.

கேட்டு உள்ள வரனும் அபடின்ற மென்னர்ஸ் இல்லையா உனக்கு… என்று கோபமாக கேட்டவன்

ம்ம் உனக்கு எப்போ அந்த பழக்கம் இருந்து இருக்கு  அது தான் உன் கூடவே உனக்கு கேட்க இருக்கானே ஒருத்தன்…

அதை உன் கிட்ட எப்பவும் எதிர் பார்க்க கூடாது என்று இன்பா சொல்ல அவள் மனம் மிகவும் கஷ்ட பட

சாரி நான் தெரிஞ்சு தான்  வந்தேன் இனி தெரியாம கூட உன்னை ஸாரி உங்களை  தேடி வர மாட்டேன்…. என சொல்லி அவள் கண்களில் கண்ணீர் கொண்டு வெளியே செல்ல போக

இப்போது தன்னிலைக்கு வந்தவன் பேபி என அவள் கைகளை பிடித்து கொள்ள

 என் கையை விடுங்க நான் போறேன் பிளீஸ்…

இப்போது அவள் பின்னால் இருந்து கட்டி கொண்டவன். அவள் கழுத்தில் முகம் புதைத்து

அவள் கையில் டிஃபன் பாக்ஸ் இருப்பதை பார்த்தவன். உனக்கு நானா முக்கியம்…  என் மேல் உனக்கு கொஞ்சம் கூட ஒரு ஹுயுமனா கூட நெனைக்கில நான் சாப்பிடாம இருப்பேன் அப்டின்னு உனக்கு வருத்தம் கொஞ்சம் கூட இல்லை டி… அவன் அவன் தான் டி உனக்கு முக்கியம் வீட்டில, காலேஜ் ல எல்லா இடத்திலும் அவன் கூட தானே நீ சுத்துர எனக்கு அவன் மேல கோபம் அதை உன் கிட்ட காட்டி விட்டேன்.

பிளீஸ் போகாத டி… 

இப்போது விவேகா அவனுடய இந்த சிறுபிள்ளை தனமான கோவத்தை பார்த்து விட்டு சரி இப்போ நகருங்க..

இப்போ நீ ஒகே வா பேபி… என்று அவள் முகத்தைப் பார்க்க  உங்க மேல எனக்கு நிறைய கோவம் தான்…

ஹே பிளீஸ் டி..

சரி அதை அப்புறம் பார்த்து கொள்கிறேன் இப்போ வாங்க… இப்போது சிரித்தான்.

அவள் லஞ்ச் பாக்ஸ் ஓபன் செய்து ஸ்பூன் கொடுத்து விட்டு அவள் கொஞ்சம் எடுத்து கைகளில் சாப்பிட ஆரம்பித்தாள்.

உங்களுக்கு நான்வேஜ் தான் பிடிக்கும் உங்க வீட்டுக்கு போய் சாப்பிடுங்க இப்போ என் கிட்ட வெஜ் தான் இருக்கு…

இன்பா இதை கேட்டு சிரித்து கொண்டே இல்ல டார்ஜ்லிங் நீயே எனக்கு நான்வேஜ் தான் டி…

என்ன ….

நத்திங்… என்று சொல்லி ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்தான். 

ஹே பேபி சுபெர் என்ன மாமி செஞ்சாங்களா…

இல்ல அத்தை செஞ்சாங்க…

என்ன உங்க அம்மா எப்டி டி உனக்கு மாமி…

இல்ல என்னோட அத்தை ஐ மின் ஆதி அம்மா அவங்க என்னோட அத்தை தானே…

இதை கேட்டு இன்பா அப்படியே சாப்பிடாமல் இருக்க 

இப்போது விவேகா சிரித்து கொண்டே நீ ஒரு சரியான பொஸ்சசிவ் சாப்ட்வேர் என்று இப்போது அவள் ஸ்பூன் எடுத்து ஒரு வாய் ஊட்ட போக அவன் அவளை முறைத்தான்.

இப்போது அவள் கைகளில் உள்ள உணவை கையில் ஊட்ட போக  இப்போது சிரித்து கொண்டே ஒரு வாய் வாங்கியவன்.

எப்படி இவளோ பொறாமை உனக்கு… என்று சொல்ல அவள் சாப்பாடு அவன் வாயின் அருகில் கொண்டு போக இன்பா உணவோடு சேர்த்து அவள் விரல்களையும் ருசித்தான்.

ஹே விடு டா…நீ சரியான பொஸ்சசிவ் சாப்ட்வேர் என்று வாய்மொழி யில் சொல்ல 

ஆமா டி எனக்கு பொறாமை தான்… சீக்கிரம் ஊட்டி விடு என மொத்தமும் காலி செய்தான்.

ஊட்டி முடித்தவுடன் கை கழுவி வந்தவள் சரி ஒகே  அப்புறம் பார்க்கலாம் என கிளம்ப

ஹே எங்க போற…

கிளாஸ் க்கு தான்

இன்பா அவளிடம் கிளாஸ் இல்ல  இங்கே வா என அவள் கைகளை …. ???

தொடரும்…

அப்படியே கொஞ்சம் like அ தட்டி விட்டு கமென்ட் போடுங்க பிளீஸ் 

Episode 77,

உணவு ஊட்டி முடித்தவுடன் கை கழுவி வந்தவள் சரி ஒகே  அப்புறம் பார்க்கலாம் என கிளம்ப

ஹே எங்க போற…

கிளாஸ் க்கு தான்

இன்பா அவளிடம் கிளாஸ் இல்ல  இங்கே வா என அவள் கைகளை பிடித்து மடியில் அமர்த்தி கொள்ள…

இப்போது தன் அண்ணனை வைத்து இன்பா மெசேஜ் அனுப்பியது நினைவு வர உடனே அவள் வேகமாக அவன் மடியில் இருந்து எழுந்து கொண்டாள். இன்பா தீடீர் என அவள் செய்கையை பார்த்து ஹே என்னாச்சு …. என்று மீண்டும்  வலுக்கட்டாயமாக  அமர்த்தி கொண்டான். 

ஹே முதலில் என்னை விடு… என்று அவள் இன்பாவின் மேல் இருந்து எழ முயற்சி செய்ய 

இன்பா அவள் இரு கைகளையும் பிடித்து கொண்டவன். ஹே என்ன பிரச்சனை டி உனக்கு இன்னிக்கி நான் வந்ததில் இருந்தே நீ என் கிட்ட சண்டை தான் போடுற… அப்படி என்னடி நான் உன்னை பண்ணேன்.

காலையில் ஐவி வர மாட்டேன் அப்டின்னு சொன்ன லேப் ல என்கிட்ட ரூடா பிஹவ் பண்ண… இப்போ என்னன்னு சொல்ற இல்ல நான் உன்னை சும்மா விட மாட்டேன்.

அவன் பேசுவது முழுவதும் கேட்டவள் யாரு நான் ரூடா நடந்துக்கிறேனா… எதுக்கு டா நீ பச்சை பொய் சொல்ற, நீ தான் என் கிட்ட ரூடா நடந்துக்கற…

சரி ஓகே ஏன் ஐவி வர மாட்டேன் அப்டின்னு சொன்ன சொல்லு டி…

அது எனக்கு கொஞ்சம் அமோன்ட் பிராப்ளம் அதனால் தான் வரல அப்டின்னு சொன்னேன். இப்போ உனக்கு ரிசன் கிடைத்து விட்டது தானே என்னை விடு…

ஹே பேபி நீ ரொம்ப மோசம் டி… நான் உனக்காக கை விரல் எல்லாம் வலிக்க உனக்கு சாரி கேட்டேன் அதை கன்சிடர் பண்ணியா…

ஹே மவனே உன்னை என்று மனதில் நினைத்த விவேகா, நீ ரொம்ப ரொம்ப என்னை டென்ஷன் பண்ணாத அவ்ளோ தான் சொல்லிட்டேன்.

ஹே இப்போ என்ன கண்டு பிடிச்ச மாதிரி குதிக்கிற சொல்லு.. 

நீ என் கிட்ட என்று விவேகா ஆரம்பித்தவள்,

ம்ம் சொல்லு உன்கிட்ட,

இப்போது வெண்பா சொன்னது நியாபகம் வர ஒன்னும் இல்ல…

லிட்டில் கிருஷ் நீ என்னை ரொம்ப சோதிக்கிற டார்லிங் என்று இவள் நினைத்துக் கொண்டாள்.

அப்போ ஒன்னும் இல்ல தானே…

ஒன்னும் இல்ல என்று பற்கள் நரநரத்து கொண்டே சொன்னாள்.

அப்போ எனக்கு n நம்பர் ஆஃப் சம்திங் தரேன்னு சொன்னியே கொடு …

ம்ம் தரேன் உன் கைய கொடு

 இல்ல நீ லிப் ல கொடு

முதலில் கை அப்புறம் விரல் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் ஓகே வா

ம்ம் சூப்பர் டி இயம் சோ எக்ஸயிட்டிங் என்று அவன் கைகளை கொடுக்க 

இவள் கட்டை விரலில் கடித்து வைத்தாள்.

இது தான் டா இப்போ போதுமா என்று மீண்டும் அடுத்த விரல் கடித்து வைக்க ஸ்ஸ் சீரியஸ் ஆ வலிக்குது டி பிளீஸ் விடு டி

இப்போது அவன் சுட்டு விரல் வைத்து இருந்தவள் கொஞ்சம் கடிக்க ஹே விவேகா அப்புறம் பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும் டி…

டேய் போடா இடியட் என்று சொல்லி கடிக்க சட்டென்று இன்பா,

வாட் அ சர்ப்ரைஸ் மாம்!!

மாம் ஆ!!!

மாம் நான் இல்லை விவேகா தான்…

இந்த வார்த்தையை கேட்டு பயத்தில் ஹே… என்று கண்களில் இன்னும் சில நொடிகளில் தண்ணீர் அருவி போல் கொட்ட தயாராக இருக்க

மாம் இவ தான் என்னை லவ் டார்ச்சர் பண்ணா…  

ஹே திரும்பு டி எங்க அம்மா உன்னை இன்னிக்கு ஃபினிஷ் அவளோ தான்…

விவேகா மெதுவாக திரும்பும் நேரம் அவள் கழுத்தை திருப்பி இழுத்து அதரங்களில் முத்தமிட்டான்.

இப்போது தான் அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என தெரிய அவனை விலக்க முயன்று தோர்த்து போனாள். 

இப்போது கொஞ்சம் மூச்சு வாங்க அவளை விட்டவன் அவள் தலையை பிடித்துக் கொண்டு என் விரலை கடிக்கிற திமிர் டி உனக்கு இப்போ பாரு என்று மீண்டும் அவள் உதடுகளை உள் பக்கம் கடித்து வைத்து அவளை விட விவேகா தண்ணீர் எடுத்து குடித்தவள் உதடுகளை தொட்டு பார்க்க உள் பக்கம் எல்லாம் கொஞ்சம் எரிந்தது.

ஹே ராஸ்கல் உன்னையும் நான் சும்மா விட மாட்டேன் என்று அவன் அருகில் முத்தம் கொடுக்க வந்து விட்டாள் ஆனால் கொடுக்கவில்லை அதற்குள் தன்னிலைக்கு வந்தவள் மீண்டும் பின்னால் நகர்ந்து செல்ல 

இப்போது இன்பா ஹே இப்போ எதுக்கு இவளோ பக்கதில் வந்ததும் திரும்ப போற என்று அவளின் நோக்கம் தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டி கொள்ள ம்ம் ஒன்னும் இல்லை அப்புறம் அவளை என்ன சொல்லி கூப்பிட்ட…

யாரை பேபி ….

ஹே என்ன கொன்றுவேன் பதில் சொல்லு டா…

பிளீஸ் சத்தியமா எனக்கு தெரியல டி…

லேப் ல தான்…

யாரு என்று யோசித்தான் மம்ம் இனியாள்…

ஹே பொய் சொல்லாத இனி இனி அப்டின்னு நீ கூபிட்டத நான் தான் பக்கதில் இருந்து பார்த்தேனே…

நீ மட்டும் அவனை கொஞ்சற ….

ஹே நான் செஞ்சா நீ உடனே திரும்ப செய்வியா என விவேகா கேட்க…

இதை நான் தான் டி கேட்கணும் என்று அவளை மடியில் அமர்த்தி கொண்டான்.

விவேகா…

ம்ம்….

பேபி ….

ம்ம் …

நீ இன்னிக்கு காலையில் இருந்து ஒரு முறை கூட என்னோட நேம் சொல்லி நீ கூப்பிடவே இல்ல டி…

சரி ஓகே அதனால் என்ன…

எனக்கு கொஞ்சம்  இல்ல நெறய  ஐ ஃபீல் வெரி பேட்…

ஃபீல் பண்ற ….

ம்ம் ஆமா….

ம்ம் ஃபீல் பண்ணு எனக்கு என்ன…

ஹே பிளீஸ் ….

ம்ம் சரி கூப்பிடுறேன் … ஆனால்

ஆனால் என்ன…

நான் யூஸ் பண்ண சிஸ்டெத்தை என்ன பண்ண …

நீ முதலில் கூப்பிடு…

நீ முதலில் சொல்லு….

அது ஒன்னும் இல்ல பேபி ஹேக் பண்னேன்…

ஹே ராகவ் செம்ம டா எனக்கு சொல்லி தரயா பிளீஸ் பிளீஸ்…

இப்போது இன்பா கன்னகுளி தெரிய சிரித்தவன்.

பேபி அப்போ நீ ஐ வி வரேன்னு சொல்லு நான் இப்போவே சொல்லி தரேன்…

அப்போ வேண்டாம்…

ஹே இப்போ உனக்கு என்ன நான் ஸ்பான்சர் பன்றேன் நீ வா…

ஹலோ இந்த வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம் ..

உன் காசு எல்லாம் நான் வாங்கவே மாட்டேன்.

இந்த வார்த்தகளை கேட்டு உண்மையாகவே இன்பாவுக்கு கோபம் வந்துவிட்டது.

இங்கே ஆதியும், சிவாவும் அந்த டென்னிஸ் மேட்ச் நடக்கும் இடத்துக்கு சென்றனர். மைதிலி ஹே மொத்த dept இங்க தான் இருக்கு டா..

 சிவா,இதனால தான் இன்னிக்கு லேப் நமக்கு சீக்கிரமே முடிஞ்சு போச்சு..

வெண்பாவின் வகுப்பு தோழன் அதில் பங்கேற்க உடனே அங்கே ஒரு கூட்டம் சதீஷ்… சதீஷ்… என கோஷம் போட்டு கொண்டு இருந்தாள்.

ஆதி வருவதை பார்த்த யாழினி கூட விவேகா இல்லை என்பதை தெரிந்து கொண்டு இப்போது வேக வேகமாக அவன் அருகில் எங்கு நிற்கிறான் என்பதை பார்த்து அங்கே பின் தொடர்ந்து அருகில் வந்து விட்டாள்.

மைதிலி இதை கண்டு கொள்ள….

யாழினி அவளிடம் ஹே நகர்ந்து போ..

ம்ம் போறேன்….

ஆதி எதோ பேசிக் கொண்டே லிதி அங்கே பாரு அந்த சதீஷ் உன் பஸ் தானே… என்று அவன் சொல்ல எந்த பதிலும் இல்லை.

ஹே எனக்கு டென்னிஸ் ரொம்ப பிடிக்கும் அவன் எதுவும் ஸ்போர்ட்ஸ் கிளப் ல இருக்கானா… என்று சொல்லி கொண்டே என்ன இவள் லொட லொடன்னு பேசுவா எந்த சத்தமும் இல்லை இப்போ, என்று அவன் நினைக்கும் நேரம் யாழினி ஆதியின் கைகளை அவள் கைகளோடு சிரித்து கொண்டே கோர்த்து கொண்டாள்.

எதோ தவறாக இருக்கிறதே என நினைத்து ஆதி திரும்பி பார்க்கும் நேரம் கண்களில் காதல் பொங்க அருகில் யாழினி சிரித்து கொண்டே தன் கற்றை கூந்தலை காதுக்கு பின் தள்ள

ஹே வாட் ஸ் திஸ்…. என கோபம் கொண்டு அவன் அவள் கைகளை உதறி விட 

ஹே அவ மட்டும் உன் கைய பிடிக்கிறா, உன் மேல சாயிந்து கொள்கிறாள் இதுக்கு எல்லாம் அவளை விட எனக்கு தான் உரிமை அதிகம்.

அவன் எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு உடனே கிளம்நினான்.

தூரத்தில் இதை பார்த்து கொண்டு இருந்த வெண்பா என்ன விவேகா காணோம் வேற ஒரு பொன்னு இருக்காளே என வெண்பா ஆதியை நோக்கி வர

மைதிலி ஆதியுடன் வந்து இணைந்து கொண்டாள். ஹே எங்க போன நீ அவ எப்படி என் பக்கதில் வந்தா…

ஆதித்யா என் கிட்ட பேசு அவ கிட்ட எதுக்கு பேசுற என யாழினி அவனை நெருங்கி செல்ல இப்போது வெண்பா அருகில் வந்து விட்டாள்.

ஆதி எதோ பேச வர மைதிலி , ஹே விடு டா அவ பிளான் பண்ணி பண்றா,இங்கே பாரு எவ்ளோ பேரு இருக்காங்க… இதுல அவ உன்னை டென்ஷன் பண்ணி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க அப்டின்னு சீன் க்ரீஏட் பண்ண பார்க்கிறாள். என்று வலுக்கட்டாயமாக மைதிலி இழுத்து சென்று விட்டாள்.

உன்னை ஐவி ல சும்மா விட மாட்டேன் டா நீ என்னை லவ் பண்ணி தான் ஆகனும்… என்று இவள் சொல்வதை வெண்பா கேட்டு விட்டாள்.

இங்கே விவேகாவிடம் இன்பா இப்போ என்ன சொன்ன….

உன்னோட காசு எல்லாம் நான் வாங்க மாட்டேன்.. 

ஏன் என்று இன்பா கேட்க 

ஆமா உன்னோட காசு எனக்கு எதுக்கு….

இப்போது அவளின் முகத்தை அவனை பார்க்குமாறு திருப்பி அவள் தோள்களை கொஞ்சம் அழுத்தமாக பிடித்தவன்.

நீ இப்போ ஐவி வர மாட்ட…

அவனின் பார்வை மாற்றைத்தை அறியாத விவேகா ம்ம் நான் வர மாட்டேன். அப்படியே வந்தாலும் உன்னோட காசில் நான் வரவே மாட்டேன். என விவேகா சொல்லவும் 

இப்போது கோபம் அதிகரிக்க அவளின் தாடையை பிடித்து அருகில் இழுத்தவன் ஐவி வர நான் உனக்கு ஆல்ரெடி அமௌன்ட் கட்டிட்டேன்.

விவேகா, நான் வர மாட்டேன்…

நீ வரனும் ….

வர முடியாது….

இப்போது இன்பாவின் பிடி விவியின் மேல் இருந்து விலகியது. கண்கள் எல்லாம் ஒரு நிமிடம் சிவந்து போனது.

உடனே அவளும் எழுந்து கொண்டாள். அவனின் முகத்தை பார்க்க வில்லை. விவேகா எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டாள்.

இன்பாவும் எதுவும் பேச வில்லை தன் தலையை கோதிகொண்டே சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன். 

என்னோட காசு வேண்டாம் அப்டின்னு சொல்லிட்ட தானே டி அப்புறம் நான் எதுக்கு உனக்கு நீயா என்னை தேடி வருவ டி எப்படியும் திமிர் மட்டும் கூட்டிகிட்டே போகுது ம்ம்

காசு வேனாமாமே… ம்ம் பார்க்கிறேன் டி….இப்போது ஸ்டேசன் கிளம்பி விட்டான்.

இப்போ அடுத்து என்ன நடக்கும்.

விவேகா ஐ வி போவாளா….?

இன்பாவை எப்டி கன்வின்ஸ் பண்ணுவா…?

ஐ வி போனால் தான் இன்பா கன்வின்ஸ் ஆவான்….

ம்ம் பார்க்கலாம்…

தொடரும்….

 Episode 78,

விவேகா அவன் முகத்தைப் பார்க்காமல் அவளது பாக்ஸ் எடுத்து கொண்டே  வகுப்பறைக்கு வந்து விடும் விட்டாள்.

அங்கே வகுப்புக்கு வந்ததும் மைதிலியும் ஆதியும், சிவாவும் இருக்க தன்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தவள்

ஹே என்னாச்சு  அதுக்குள் மேட்ச் முடிஞ்சதா….

ஆதி முகம் சரியாக இல்லை என்பதை கவனித்த விவேகா…

ஆதி என்னாச்சு டா….

அதை நான் சொல்றேன் என மைதிலி எல்லாம் சொல்ல

என்ன கைய பிடிச்சாளா….

ம்ம் ஆமா டி என மைதிலி சொல்ல

சிவா , ஹே இப்போது எதுக்கு டா டென்ஷன் அது தான் வந்துட்டோம் ல அப்புறம் என்ன..

ஆதி மைதிலியை முறைத்து எல்லாம் இவளால் தான் என்று மைதிலி தலையில் ஒரு கொட்டு வைத்தான்.

ஹே வலிக்குது…

சரி விடு இப்போ அடுத்து என்ன பண்றது…

மைதிலி, அவ சும்மா இருக்க மாட்டா ஐ வி ல எதோ பண்ண போறாளாம்… 

விவேகா மைதிலியை பார்க்க, என்னை பார்த்தால் நான் என்ன பண்ணட்டும் அவ அப்படி தான் சொன்னா நீ நம்பல அப்டின்னா அந்த cs வெண்பா வ கேளு…

இப்போது ஆதி, விவேகாஇருவரும் மைதிலியை பார்க்க ஹே அவ சபதம் போடும் போது பக்கத்தில அவ ஆதியை பார்க்க வந்தாள் நான் பார்த்தேன் இவனை அங்கே இருந்து கூட்டி வர டென்ஷன் ல அவ கிட்ட பேசாம கூட வந்துட்டேன்.

 சிவா,சரி இப்போ என்ன டா பண்ண போற

 மைதிலி,பேசாமல் ஐவி நீ வர வேண்டாம் ஆதி…

விவி, ஹே என்ன அவளுக்கு என்னோட ஆதி பயப்படனுமா… ஆதி நீ போடா அவ என்ன தான் செய்யறா அப்டின்னு பார்த்திடலாம்.

ஆதி, அப்போ நீயும் வந்திடு…

ஓகே…. ஹஹ இப்போ என்ன சொன்ன நானா நான் வரல போடா…

 ஆதி,அப்போ நானும் போகல… 

 மைதிலி,நானும்…

ஹே லூசு உனக்கு என்னாச்சு

நீங்களே இல்லை அப்புறம் எனக்கு அங்கே என்ன வேலை…

இப்போது விவேகா, அவர்கள் மூவரிடமும் அதுல ஒரு சட்ட சிக்கல் ஆகி போச்சு…

என்ன என சிவா கேட்க

இப்போ தான் அங்ரி பேர்ட் கிட்ட சண்டை போட்டு வந்துட்டேன் ஐவி வரமாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

சுத்தம் என சிவா சொல்ல

இப்போ அதனால …

 மைதிலி,தாங்கள் கூற வருவது மன்னா….

நீங்க மட்டும் போயிட்டு வாங்க….

ஹே நீ இல்லாமல் நான் எங்கே போயிருக்கேன்… ஒழுங்கா வாடி இல்ல…

டேய் ரெண்டு பேரும் என்னை டார்ச்செர் பண்றீங்க டா…

நான் வரல….

ம்ம் சரி என்னமோ பண்ணு, உனக்கு யாழினி ய பிடிச்சு இருந்தா லவ் தான் பண்ணி தொலையேன்…

சரியாக இதை சொல்லும் நேரம் வெண்பா விவேகா சொன்னதை கேட்டும் கேட்காதது போல் உள்ளே வந்தாள்.

ம்ம் என்ன நீங்க மட்டும் இங்கே இறுக்கீங்க…

சிவா,இது எங்க கிளாஸ்… 

 கொஞ்சம் வாய மூடினால் நல்லா இருக்கும் என்று கைகளை உதறி கொண்டே சொல்ல என்று சிவாவை பார்த்து வெண்பா சொல்ல 

இந்த வாயடி கிட்ட யாரு பேசுவா இவளை கட்டிக்க போரவ செத்தான் டா சேகரு என்று சொல்லி விட்டு மச்சி எனக்கு சைட்டு வெயிட்டிங் பாய் டா என அவளை கிண்டல் செய்து கொண்டே ஓடி விட்டான்.

 வெண்பா,ஹே ஐவி க்கு ரெடியா விவி என கண்கள் ஒரு நிமிடம் ஆதியை தொட்டு மீண்டது …

நான் வரல இந்த ஐ வி ய எவண்டா கண்டு பிடிச்சான் ஐ வி க்கும் போற இடத்துக்கும் சம்மந்தமே இருக்காது ஆனால் இப்படி ஒரு பேருல சொல்லிட்டு திரியுறானுக…

ஹே போதும் நீ ஏன் வரல அதுக்கு மட்டும் பதிலை சொல்லு…

ஹே அமௌன்ட் பிராப்ளம் டி…

அப்படியா ஆனால் உன்னோட பேரு தான் ஐவிக்கு முதலில் அமௌன்ட் கொடுத்ததா ece ல பேசிகிட்டாங்க…

என்ன என்று மைதிலி, ஆதி ஒரே நேரத்தில் விவேகாவை முறைக்க

ஹே இப்போ எதுக்கு என்னை பார்க்கிரீங்க இது எல்லாம் அவன் செயல் (இன்பா)…

ஓ அப்போ நீ வர போற என்று ஆதி அவளுக்கு ஒரு தேன் மிட்டாய் ஊட்ட போக

நான் வர மாட்டேன் போடா…

மிட்டாய் கொண்டு வந்தவன் அருகில் இருந்த மைதிலிக்கு ஊட்டி விட்டான்.

ஹே யூ சீட்… இதை எல்லாம் வெண்பாவினால் பார்க்க முடிய வில்லை. வேறு புறம் திரும்பி கொண்டாள்.

விவேகா, வெண்பா வேனும் அப்டின்னா கேளு டி அதுக்கு ஏன் முகத்தை திருப்பி கிட்ட

எனக்கு என்ன வேனும் எனக்கு எல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் போறேன்… என நடக்க போக

ஹே ஆதி பாவம் நமக்கு தான் வயிறு வலிக்கும் ஒன்னு ஊட்டி விட்டு விடு என சொல்ல ஆதி ஒரு மிட்டாய் எடுத்தவன் அவள் வாயில் போட ஏனோ ஒரு சிறு தயக்கம் கைகளில் கொடுத்து விட்டான்.

வெண்பாவும் வாங்கிகொண்டாள். ஹே என்று மைதிலி அவளை இழுத்து அருகில் அமர வைத்து கொண்டாள். 

இப்போது விவேகா ஹே சொல்லு டா…

என்ன சொல்றது …

அது தான் யாழினி மேல் உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கா…

இப்போது மைதிலி, வெண்பா இருவரும் அவன் என்ன சொல்கிறான் என பார்க்க அவனோ ஐவி வா சொல்றேன்.

விவி,நான் வர மாட்டேன் உன்னோட பதில் எனக்கு தெரியும் … 

தெரியும் தானே அப்போ போடி என்று சொல்லி விட்டு நீ வந்தா தான் நானும் போவேன் இல்ல போக மாட்டேன்.

 விவேகா,அப்போ போகாத எனக்கு என்ன போடா…

ஆதி இப்போது சிரித்து கொண்டே பார்க்கிறேன் டி இது எத்தனை நாளைக்கு அப்டின்னு …

நீ ஓவரா பேசுற.. 

மைதிலி இப்போ நோட் பண்ணிக்கோ எனக்கும் முன்னாடி விவேகா தான் ஐவி போறேன் அப்டின்னு பஸ் ல இருப்பா…

எப்டி டா ஆதி…

அது சில சில பேரு கோபமா இருப்பாங்க, அவங்க அவங்களை சமாதானம் செய்ய தான் என்று ஆதி சொல்ல உடனே விவேகா அடிக்க தொடங்கினாள்.

நான் மாட்டேன்… நீயும் போக வேண்டாம், நானும் போகல நம்ப வருண் கூட வெளிய போகலாம்.

ஹே மாமா அதி கூட இருப்பாரு நீ உன்னோட வேலைய பார்க்கலாம் தானே, அப்புறம் ஆதி அவரு இப்படி சொல்லிட்டாரு, அப்படி சொல்லிட்டாரு எனக்கு கஷ்டமா இருக்கு, அப்டின்னு சொல்லிட்டு என் கிட்ட வாடி அப்போ இருக்கு, உனக்கு என்று ஆதி கூறினான்.

அப்போ உன் முடிவு என்ன  ஐவி பற்றி என்று வெண்பா விவேகாவை பார்த்து கேட்க..

என்ன பண்றது அப்டின்னு ஒன்னும் புரியல பார்ப்போம். ம்ம் சரி ஓகே….

இங்கே இன்பாவிடம் மாட்டிகொண்ட இருவரும் இப்போது சத்யமூர்த்தி வீட்டில் போர்ட்டிக்கோவில் நடுங்கி கொண்டு நின்று இருக்க,

ஒரு கதிரையில் கால் மேல் கால் போட்டு கொண்டு காதில் ஹெட் செட் போட்டு கொண்டு விரல்களை தாளம் போட்டவாரு அமர்ந்து இருந்தாள். கவ்யா..

ம்ம் சொல்லுங்க…

மேடம் இன்பா சார் அதிகமா போற இடம் ரெண்டு, அவங்க தாத்தா வீடு வசுமதி மேடம் அவங்க அப்பா வீடு, அண்ட் காலேஜ் அப்புறம் அவருக்கு பொண்ணுங்க மேல இன்டரஸ்ட் இல்ல மேடம். இப்போ அவரு CBI க்கு டிரான்ஸ்பர் ஆகி 4மாசம் ஆகுது.

அவரோட வருங்கால மனைவி ஒரு IPS ஆ இருக்கணும் அப்டின்றது தான் அவரொட ஆசை வினய் சார் தங்கை கண்ணுகினியாள் அவங்க தான் காலேஜ் ல பேசுவாரு வேற யார் கிட்டயும் பேசியது இல்ல இவளோ தான் மேடம் விஷயம்…

ம்ம் நீங்க போகலாம் என சொல்லிய கவ்யா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தாள்.

வரேன் இன்பா நம்ப நெஸ்ட் மீட் சும்மா ஆக்சன் ஆ இருக்க போகுது எல்லா இடங்களிலும் உன்னையும் என்னையும் பற்றி தான் பேச போறாங்க என தன் போனில் உள்ள இன்பாவின் படத்தை தொட்டு வருடினாள்.

இங்கே மாலை வீட்டுக்கு வந்த விவேகா எப்படி இன்பாவை சமாளிப்பது என்று யோசித்து கொண்டே தன் ஜடையை பிரித்து விட்டு எண்ணெய் வைத்து இறுக்கமாக தூக்கி கொண்டை போட்டு கொண்டு வழக்கம் போல் வீட்டில் போட்டு கொள்ளும் பாவாடை சட்டை (தீரன் அதிகாரம் ரகுல் மாதிரி or ரெமோ ல கீர்த்தி சுரேஷ் மாதிரி )அணிந்து கொண்டு லேப் டாப் எடுத்து வைத்தாள்.

இன்று செய்யும் வேலையில் நிறைய சந்தேகம் இருப்பதால் நேராக சரவணன் கிட்ட போய் கேட்டு தொடர வேண்டும் என்று வெண்பாவின் வீட்டுக்கு சென்றாள்.

அங்கே வெண்பா டிவி பார்த்து கொண்டு இருக்க இவள் அருகில் உள்ள சேர் ல அமர்ந்து கடமையே கண்ணாக செய்து கொண்டு இருந்தாள்.

அவள் கண்கள் லேப் டாப் ல இருக்க அவள் காதின் அருகே கூந்தல் கற்றை முடிகள் கொஞ்சம் சுருண்டு தொங்கி கொண்டு இருந்தது இருபுறமும் பார்பதற்கு சுருள் போல் அழகாக இருந்தது. அதை விட அந்த கொண்டையில் ஒரு குச்சி போல் சில முத்து மணிகள் கொண்டை அவிழ்ந்து விடாமல் இருக்க இடையில் சொருகி இருந்தாள்.அவள் தட்டச்சு செய்யும் சத்தம் மட்டுமே கேட்டு கொண்டு இருக்க தேவகி வெண்பாவுக்கு கொறிக்க தீனி மற்றும் , விவேகாவுக்கு டீ சால்ட் பிஸ்கட் கொடுத்து விட்டு மீண்டும் சமையல் அறை சென்று விட்டாள்.

ஹே வெண்பா அண்ணாவுக்கு போன் பண்ணு… எப்போ டி வருவாரு இது நிறைய ஏற்றோர் வருது …

இன்னும் கொஞ்ச நேரம் சரவணன் வர டை ம் தான் என்று வெண்பா போன் பார்த்து விட்டு விவேகா உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்…

ம்ம் சொல்லு என அவள் கணினி ல கவனம் செலுத்த அந்த யாழினி இருக்காளே …

ம்ம் ஆமா அவ அந்த என்று சொல்லும் நேரம் மித்ரன் கால் செய்தான்.

இவனை என்று மனதில் அர்ச்சித்து கொண்டே மம்ம் சொல்லு டா என்ன.. 

இப்போ எதுக்கு டி இப்படி கத்துற…

நீ சொல்றயா நான் போன் வைக்கட்டுமா…

சரி சொல்லி தொலயிறேன். இப்போ இன்பா வீட்டுக்கு வருவான் என்னோட கப்போர்ட் ல ஒரு கேஸ் பைல்.. நம்பர்*** அதை எடுத்து கொடுத்திடு அப்புறம் கீழ ஒரு கவர் ல பென்டிரைவ் ஒரு வாட்ச் ஒரு பாலிதீன் பேப்பர் ல போட்டு வச்சு இருப்பேன் கவனமா கேளு அதை அப்படியே எடுத்து கொடு அத ஒபன் பண்ணி பார்த்திராத புரியுதா…

ம்ம் சரி.. 

ஹே நல்லா நியாபகம் வச்சுக்கோ…

ம்ம் ஓகே…

இல்ல நீ இன்பா வந்ததும் எனக்கு கால் பண்ணு…

ஹே உன்னை மிதிப்பேன் டா டென்ஷன் பண்ணாம போன் வை… என்று சொல்லி வைத்த வெண்பா மீண்டும் விவேகாவிடம் தன் தைரியம் எல்லாம் ஒன்று திரட்டி விவி…

ம்ம் சொல்லு என்று டீ ஒரு சிப் குடித்து கொண்டே அவள் வேலையில் கண்ணாக இருக்க 

ஹே அந்த யாழினி உன்னோட மாமா பையன் ஆதியை லவ் பன்றாளா…

ம்ம் ஆமா.. .

ஓ சரி…

ம்ம் என விவேகா சொல்ல

நான் இன்னிகு மேட்ச் நடக்குற இடத்தில் பார்த்தேன்.

ம்ம் சரி…

அப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் மிஸ் அண்டர் ஸ்டண்டிங்கா….. இல்ல டபுள் சைடா… என கேட்டு விட்டாள்.

விவேகா ரொம்ப நேரம் அமைதியாக இருக்க ஹே சொல்லு டி… என வெண்பா கேட்க

ஹஹஹஹ என்ன சொல்லிட்டு இருந்த நீ என விவேகா கேட்க 

அய்யோ இவளை நான் என்ன பண்ணட்டும் என்று நினைத்தவள்.

விவேகா அந்த என்று வெண்பா ஆரம்பிக்கும் நேரம்… இப்போ யாரு என்ன சோதிக்காதிங்க டா…

வெளியே இன்பா கதவு தட்ட இவள் திறந்து உள்ளே வா அண்ணா… என சொல்லி விட்டு அம்மா பிளாக் காபி கொண்டு வா…  என சொல்லி விட்டு உள்ளே மித்ரன் சொன்ன கேஸ் கட்டுகள் அவன் சொன்ன அந்த திங்க்ஸ் எடுக்க சென்றாள்.

இன்பா உள்ளே வந்தவன் போன் நோண்டி கொண்டே விவேகாவிற்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தான்.

தேவகி டீ போட்டு கொடுத்து விட தேங்ஸ் ஆன்ட்டி என்று சொல்லி இவன் நிமிர்ந்து டீ வாங்கி நேராக பார்க்க அங்கு விவேகா அமர்ந்து இருந்த தோரனையை பார்த்து……????

தொடரும்….

கொஞ்சம் comment please touch likes please

 Episode 79,

இன்பா வெண்பாவை பார்த்து சிறு புன்னகை செய்தவன் பின் தன் போனில் எதோ செய்தி வர அதை பார்த்துக்கொண்டே உள்ளே சோபாவில் அமர்ந்தான்.

வெண்பா விவேகா கிட்ட எப்படி கேட்பது என யோசித்து கொண்டே உள்ளே கேஸ் கட்டுகள் எடுக்க சென்றாள்.

தேவகி காபி கொடுத்ததும் ஒரு புன்னகை சிந்தி அதை வாங்கி ஒரு சிப் பருகியவன் எதிரில் யாரோ அமர்ந்து இருப்பது போல் தெரிய சாதாரனமாக நிமிந்து பார்க்க இன்பாவின் கண்கள் ஒரு நிமிடம் இமைக்க மறுத்தது.

ஹே அவ தாண்டா…. 

காலையில் வேற மாதிரி காலேஜ் ல இருந்தாள் இப்போ டோட்டலா வேற மாதிரி செம்மையா இருக்காளே…. என்று இன்பாவின் மனம் ஓலமிட்டது.

மூளை அவ தான் உன்னோட பணத்தை வேண்டாம்ன்னி சொள்ளிட்டாள் தானே இப்போ எதுக்கு அவளை அப்படியே திங்கறது மாதிரி பார்க்கிற இடியட்…

ஹே அவளை கொஞ்சம் பாரு

கண்ணு மட்டும் தான் தெரியுது.. 

அவ ட்ரெஸ் பாரு செம்மையா இருக்கா எண்ணெய் வடிந்த முகமா இருந்ததா கூட அந்த கொண்டை முகத்தில் உரசி கொண்டு இருக்கும் அந்த கேர்லீ ஹேர்…

 ஹிம்…. என்று ஒரு பெரு மூச்சு விட்டவன் அந்த காபியை இன்னொரு சிப் குடித்து கொண்டே அவளை பார்வையால் தின்று கொண்டு இருக்க..

இவ்வளவு நேரமும் தன்னை இப்படி ஒருத்தர் பார்த்து கொண்டு இருக்கிறார் என தெரியாமல் விவேகா டென்ஷனாக அந்த எற்றர் பற்றி சரி செய்ய வழி தேடி கொண்டு இருக்க

இப்போது வெண்பா மித்ரன் சொன்ன கட்டுகள் எடுத்து வந்து இன்பாவின் முன்னே நீட்டினாள்.

இப்போது தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த இன்பா விவேகாவை கண்டு கொள்ளாதது போல் கஷ்டபட்டு கண்களை மீட்டு கொண்டு 

அண்ணா இந்தாங்க செக் பண்ணிகோங்க…

ம்ம் இது தான் மா என  சொல்லியவன்…

ம்ம் வெண்பா அந்த இவிடென்ஸ் எங்கே அதை லேப் க்கு அனுப்பனும் என்று இன்பா சொல்ல

 இப்போது விவேகா

என்ன இது ராகவ் பய குரல் மாதிரி இருக்கே என தன் கண்களை லேப் டாப் ல இருந்து நிமிர்ந்து பார்க்க ராகவ் தான்…

அண்ணா சாரி,சாரி ஒரு நிமிடம் எதோ ஒரு நியாபகத்தில் மறந்து விட்டேன் இப்போ அதை எடுத்து வருகிறேன்…. என வெண்பா உள்ளே செல்ல 

விவேகா அவனை இப்போது வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். இன்பா அவளை ஏர் எடுத்து கூட பார்க்க வில்லை என்பது பச்சை பொய்…

அவன் போனில் எதோ முக்கியமாக பார்ப்பது போல் இவளை சில படங்கள் எடுத்து பின் அவள் என்ன செய்கிறாள் என பார்க்க….

விவேகா மனதில், என்னடி அவன் உன்னை பார்க்கவே மாட்டின்குறான்….

இன்பா மனதில், என்னடா இன்னிக்கு இப்படி உன்னை பார்க்கிறாள். வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறாளே… திமிர் பிடிச்சவ 

ம்ம் நீ மட்டும் பார்க்காத டா ராகவ் இவளை சும்மா விட கூடாது. அய்யோ சோதிக்கராலே இப்போ சண்டை வேற போட்டு விட்டேன். இப்போ அவ பக்கத்தில் போனா நம்ப தன்மானம் போயிடும்..

இப்போ என்ன செய்யட்டும் என்று மனது கேட்க நீ இப்போ கிளம்பிவிடு ராகவ் அவளே உன்னை தேடி வருவா டா…

வருவாளா….

ம்ம் கண்டிப்பா ராகவ்

 வருவா….

எனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை  ஆனால் உன் கண்ணகுளி மேல நம்பிக்கை இருக்கு டா.

மூளை சரி சரி இடத்தை காலி செய் டா…

வெண்பா சீக்கிரம் எடுத்து வா மா… என்று இன்பா அவளை கூப்பிட

ம்ம் அண்ணா இதோ என வெண்பா வந்து கொடுக்க…

ம்ம் சரி கிளம்புறேன் என்று சொல்லி தன் தலையை கோதி கொண்டே வெளியே சென்று விட்டான்.

ஓ நான் இங்கே கண்ணு முன்னாடி இருக்கிறது அந்த ராஸ்கல்கு தெரியல என்னை பார்க்காமல் போறான். இன்னிக்கு காலேஜ் ல என்ன என்ன வேலை பார்த்தான் என்னோட உதட்டை கடித்து விட்டு இப்போ நான் யாருன்னு தெரியாத மாதிரி போறான் இடியட்…

விவேகா மனம் இப்போ எதுக்கு என் ராகவை நீ பார்க்கிற அது தான் அவனோட காசு வேண்டாம்ன்னி சொல்லிட்டு இப்போ எதுக்கு டி பார்க்கிற…

நானா இல்ல அவன் என்னை பார்க்கிறானா இல்லையா ஆப்டின்னு பார்த்தேன். வேற ஒன்னும் இல்ல..

சரி ஓகே எப்படியும் ராகவ் உன் பக்கதில் இனி வர மாட்டான் இனி இப்படியே பார்த்துக்கோ..

அந்த இனியாள் அவ வேற பின்னாடியே சுத்துரா அவ்ளோ தான் இனி போச்சு… என மனம் சொல்ல

ம்ம் எனக்கு என்ன… என்று  அவளுடைய அறிவு இன்பாவின் மேல் கோபம் அவன் பாராமுகம்  கோவத்தை வளர்த்து கொண்டாள்.

வெண்பா இப்போது அருகில் வந்து அமர்ந்தாள்.  இப்போது விவேகாவின் மனம் ராகவ் பின்னால் சென்றது. 

ஹே உன்கிட்ட ஒரு விஷயம் என்று மீண்டும் வெண்பா முதலில் ஆரம்பித்தாள்.

ம்ம் சொல்லு…

அவள் சொல்ல வந்ததை கடகடவென சொல்லி முடித்தாள். விவேகா சிரித்து கொண்டே இப்போ எதுக்கு இதை நீ கேட்கிற…

அது அது வந்து நான் அங்கே அந்த பொன்னு ஆதி கிட்ட பேசி கிட்டு இருந்ததை பார்த்தேன் அதனால் தான் கேட்டேன்…

ஓ ம்ம் சொன்னா …

யாரு சொன்னா….

மைதிலி…

நீ ஆதிய பார்க்க வந்ததை…

ஹே நான் ஒன்னும் அவனை பார்க்க வரல நான் உன்னை தேடி தான் வந்தேன்.

அப்படியா சரி என இவள் சொல்ல வெம்பாவுக்கு இன்பா கால் செய்ய உடனே அவள் யார் என்று பார்த்து போன் எடுத்து காதில் வைத்து சொல்லுங்க அண்ணா…

வெண்பா கொஞ்சம் தூரம் வா…

இப்போது வெண்பா விவேகாவை ஒரு பார்வை பார்க்க 

விவேகா யாரு போன் ல…

ஒன்னும் இல்ல இரு வரேன்.. என்று வெண்பா வெளியே சென்று மம் சொல்லு அண்ணா

ஆமா இந்த நேரத்தில் உங்க வீட்டில் அவ உங்க வீட்டில் என்ன பண்றா…

யாரு அண்ணா.. என வெண்பா என்ன சொல்வது என்று தெரியாமல் உளர

வெண்பா நான் யாரை கேட்கிறேன் அப்படின்னு உனக்கு தெரியாதா…விவேகா தான் 

ம்ம் அண்ணா அவ இன்னிக்கு இங்கே தான் எங்க வீட்டில் ஸ்டே பண்றா கொஞ்சம் வேலை சரவணன் கொடுத்து இருக்கான், அதனால் தான்

ஓ அப்படியா சரி நான் வைக்கிறேன் என போன் வைத்து விட்டான்.

ஒரு சிரிது நேரம் கழித்து மீண்டும் இன்பா போன் செய்ய 

ம்ம் சொல்லுங்க அண்ணா…

நான் உன்கிட்ட அவளை பற்றி கேட்டேன் அப்டின்னு அவ கிட்ட சொல்ல வேணாம் .

ம்ம் சொல்ல மாட்டேன்.. என்று மீண்டும் உள்ளே சென்றாள்.

அப்படியே இரண்டு நாட்கள் ஓடியது வருண் வந்து விட்டான். 

ஆதியின் மொத்த குடும்பமும் விவேகா வீட்டுக்கு வந்தது அதி முகத்தில் அவ்வளவு சந்தோஷம் புன்னகை அடுத்து கல்யாணம் தான் என பூரித்து இருந்தாள்.

மாலை காலேஜ் முடிந்து வந்த விவேகா வீட்டில் கம கம வாசனை எல்லாம் வர முகர்ந்து கொண்டே போய் அப்படியே தன் அண்ணாவை கட்டி கொண்டாள்.

வருண் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா… என கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

ஹே சின்ன குட்டி நானும் தான் ரொம்ப என்று சொல்லி அவள் தலையை வருடினான்.

ம்ம் சும்மா சொல்ல கூடாது அண்ணா செம்மையா இருக்க…

ஹே ஹே …. என்று அதி சண்டைக்கு வர

உனக்கு என்ன இது எங்க அண்ணா அதுக்கு அப்புறம் தான் உனக்கு மாமா காட் இட்

ம்ம் சரி உனக்கு அப்புறம் இருக்கு போடி என்று அதிதி கூறினாள்.

வருண் எல்லாம் முடிந்து விட்டதா…

இல்ல விவேகா இன்டர்வியூ இருக்கு அப்புறம் தான் தெரியும்.

நீ கவலை பட வேண்டாம் விடு என்று அவள் சொல்லி கொண்டு இருக்க இப்போது ஆதி,

மாமா விவேகா ஐவி வர மட்டாளாம் என் கிட்ட சொன்னா….

ஹே ஆதி என அவள் முறைக்க…

இப்போது கங்கா வருண்க்கு பிடித்த உணவு பதார்த்தம் கொண்டு வந்தவள். 

நீ போயிட்டு வா நான்,  வருண், அத்தை , மாமா, அதிதி எல்லாம் கொஞ்சம் ஊருக்கு போய் நல்ல நாள் ஜாதகமும் பார்க்க போறோம்.

விவேகா, இன்னும் இன்டர்வியு இருக்கு தானே…

ஹே அடி வாங்க போற விவேகா என கங்கா அதட்டினாள்.

வருண், நாளைக்கு தான் நேர்காணல் என்று சொல்ல 

இப்போது வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்லி விட்டாள்.

ஆமா வீட்டில் லேப் டாப் இருக்கு யாருது

அது அது என இவள் இழுக்க

கங்கா, மித்ரன் தம்பி அண்ணா சரவணன் கிட்ட விவேகா வேலை பார்க்கிறா டா

வருண் இதை கேட்டு கண் கலங்கினான்.

லூசு அண்ணா இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல..

இப்போ அதிதி, ஹே விவேகா உன் கழுத்தில் அந்த முத்து மாலை அழகா இருக்கே எனக்கு தெரியாம எப்போ டி வாங்கின கலட்டி கொடு நான்  பார்க்கிறேன் அழகா இருக்கு டி… என அவள் தொட்டு பார்க்க

இப்போது விவேகா ஆதியைப் பார்க்க ஹே அதி அவ போட்டு இருக்கரத எதுக்கு நீ கேட்கிற.

விவேகாவே எப்பவாச்சு தான் இந்த மாதிரி போட்டு இருக்கா உன் கிட்ட எவ்ளோ இருக்கு சின்ன புள்ள மாதிரி அவ கிட்ட கேட்கிற…

இதை பார்த்து அனைவரும் தேவி, கங்கா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

வருண், அதி உனக்கு நான் வாங்கி தரேன் நம்ப வெளிய போலாம்…

ஹே என்னடா உன் தங்கச்சிய கல்ட்டி விட்டுட்ட

அதி,அது தான் உன்னை கூட்டி போக ஆதி இருக்கானே அப்புறம் என்ன…

ஹே போடி நானும் விவேகாவும் ஐவி போக போறோம் ஆமா தான விவேகா… என ஆதி சிரித்து கொண்டே சொல்ல

போச்சு போச்சு இந்த ராகவ் வேற நம்ப மேல் செம்ம டென்ஷன் ல இருப்பான். நான் சொல்லும்போது வராமல் இப்போ வீட்டில் சொன்னதுக்காக வறது மட்டும் தெரிஞ்சது அவ்ளோ தான் ஏற்கனவே ஓவர் போஸசிவ் ல சுத்துறான். அதுவும் ஆதி சொல்லி தான் வந்தேன் அப்டின்னு தெரிஞ்சா சுத்தம்…

தொடரும்…..

கொஞ்சம் comment , likes please dr s

 Episode 80,

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அங்கே இன்பா அவனது அறையில் மித்ரன் வீட்டில் அந்த சந்தன கலர் டீ ஷர்ட், பச்சைவண்ண பாவாடையில் விவேகா அமர்ந்து இருந்த அந்த காட்சி மன கண்ணில் வந்து சென்றது.

அதை நினைத்துக் கொண்டே கண்ணகுளி தெரிய எழுந்தவன் தன் போனை எடுத்து அந்த புகைபடத்தை எடுத்து பார்க்க

 “ஹே தலைகணம் இப்போ எனக்கு நீ பக்கதில் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா டி” திமிர் பிடிச்சவளே…

இப்போ எனக்கு டார்ஜிலிங் போகனும் போல இருக்கு பேபி என ஒரு இதழ் பதித்தவன். 

இந்த ட்ரெஸ் செம்மையா இருக்கு டி உனக்கு ம்ம்ம் என்று காலை மயக்கத்தில் இருந்து விடு பட ஒரு பெருமூச்சு விட்டவன். நேராக அவன் காலை வேலைகளை செய்ய கிளம்பினான். 

விவேகா எழுந்து குளித்து விட்டு வெளியே வர வருண் விவேகா மா ஐவி க்கு எவ்ளோ பணம்..  அது தெரியல அண்ணா…ம்ம் 5000 ஆதி சொன்னான். 

ஓ அவ்ளோ தானா… ஹே விவேகா உன்னோட கை செலவுக்கு பணம் வேணும் தான …

ம்ம் ஆமா …

அப்போ 2000 ஓகே வா என வருண் தன் அம்மாவிடம் போய் கேட்க, 

அண்ணா வேணாம் நீ கேட்காத நான் இந்த மாசம் வேலை செய்ததுக்கு சரவணன் அண்ணா பணம் கொடுப்பாங்க நான் பார்த்து கொள்கிறேன்.

சரியான குட்டி வாண்டு இப்போ அதுக்கு பொறுப்பு வந்திடுச்சு என்று வருண் சொல்ல ஹே போடா என்று இருவரும் பேசி சிரிக்க

ம்ம் சரி கிளம்பு நான் உன்னை பஸ் ஸ்டாப் ல போய் விடுகிறேன்.

விவேகா இப்போது இன்பாவை பற்றி யோசித்தாள். வேணாம் வருண் மணி 8.15 தான் ஆகுது நான் நடந்தே போறேன் உனக்கு தான் இன்டர்வியூ இருக்கு தானே அதுக்கு கிளம்பு டா…

ம்ம் சரி …

ஹே என்னடா சரின்னு மட்டும் சொல்ற…

என்ன பண்ணனும் என வருண் கேட்க

உன்னை சரி சரி  என் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ… என அவள் காலை காட்டிட கங்கா, ஹே உனக்கு திமிர் அதிகமாகி போச்சு டி…

சும்மா சும்மா சொன்னேன் வருண் கண்டிப்பா நீ நல்லா பண்ணுவ அப்பாவ நெனைத்துகோ..

ம்ம் சரி பத்திரமா போயிட்டு வா…

ம்ம் சரி அண்ணா என காலேஜ் கிளம்பினாள்.

இங்கே வெண்பா தேவகியிடம், அம்மா …

ம்ம் சொல்லு என அவளுக்கு ஊட்டி விட்டு கொண்டு இருக்க

சரவணாவுக்கு எத்தனை வயசு மா..

ஏன் டி தீடீர்ன்னு கேட்கிற…

இல்ல விவேகா அவங்க அண்ணாவுக்கு கல்யாணம் பண்றாங்க..

அதனால தான் நம்ப சரவணனுகும் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும் தானே…

தேவகி ஒரு நிமிடம் கண் கலங்கினாள், ம்மா என்னாச்சி என திரும்ப அவள் அம்மாவின் அழும் முகம் பார்த்து விட்டு மா எதுக்கு இப்போ அழர…

நான் சொல்லமலா இருப்பேன் என்று அவள் சில வரன் பெண்கள் புகை படங்கள் காட்டிட 

அண்ணா என்ன சொன்னிச்சு…

அவனா அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டானாம்…

என்ன மா சொல்ற…

தேவகி கண்களை துடைத்துக் கொண்டே நீ மித்ரன், உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் செட்டில் ஆனதுக்கு அப்புறம் தான் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன் அப்டின்னு சொல்லிட்டான் டி….

அண்ணா என்ன லூசா… அதுக்கு கல்யாணம் ஸ்ட்ரைட்டா 60வது கல்யாணம் தான் 

அதை ஏன் டி நீ கேட்கிற அவன் கிட்ட கெஞ்சி கெஞ்சி எனக்கு அலுத்து போச்சு டி…

சரி விடு மா எதுவும் செய்யலாம் நீ அழ வேண்டாம்.

வெண்பா நீ கொஞ்சம் அவன் கிட்ட சொல்றியா…

ம்ம் நான் ஐவி போயிட்டு வரேன் அதுக்கு அப்புறம் அவனை சம்மதிக்க வைக்கலாம்..

ம்ம் சரி டி என தேவகி சொல்ல வெண்பா தன் அம்மாவை கட்டி அணைத்து முத்தம் வைத்து கிளம்பினாள்.

விவேகா, வெண்பா இருவரும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தனர். இருவர் எண்ணமும் எங்கோ இருந்தது.

டீச்சர்…

ம்ம் சொல்லு டி…

எனக்கு வேற பயமா இருக்கு டி…

ஏன் டி என்னாச்சு….

அது ஒன்னும் இல்ல இப்போ வருண் வேற வந்துட்டான் ஒரு வேளை வருணை பார்க்க உங்க அண்ணன் வீட்டுக்கு வந்தா நான் க்ளோஸ் டி…

வெண்பா இப்போது சிரித்து கொண்டே மர்கயா தான் டி நீ…

ஹே ஓவரா பண்ணாத எதுவும் யோசனை சொல்லு…

என் கிட்ட ஐடியா இல்லை நானே ஒரு குழப்பத்தில் இருக்கிறேன் விவேகா…

என்ன ஆச்சு வெண்பா…

அதுவா எங்க சரவணன் அண்ணா கல்யாணம் வேண்டாம் அப்டின்னு சொல்றான் டி…

என்ன டி சொல்ற..

ம்ம் ஆமா விவேகா என்று தேவகி சொன்ன அனைத்து விஷயமும் கூறினாள்.

இப்போது விவேகா, ஹே நான் ஒன்னு சொன்னால் தவறா நினைக்க கூடாது.

ம்ம் சொல்லு டி…

சரவணன் அண்ணா யாரையும் விரும்புகிறார் அப்டின்னு எனக்கு தோணுது வெண்பா…

ஹே வாய்ப்பே இல்ல என அவள் அடித்து பேச

எங்க அண்ணன் அதிதி ய விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்க போறான்.

அதுவும் இல்லாமல் எங்களுக்கு  அவன் லவ் பண்றான் அப்டின்னு தெரியாத  முன்னாடி அவன் முகம் இப்போ கூட எனக்கு நியாபகதில் இருக்கு அப்போ தான் அதிதிக்கு  வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவன் லவ் அவ கிட்ட போய் சொல்லவே இல்ல மாப்பிள்ளை வீடு பார்க்க வராங்க அப்டின்னு தெரிஞ்சதும் போய் லவ் சொல்லிட்டான்.

யாரு கிட்ட…

எங்க அத்தை மாமா கிட்ட…

உடனே வெண்பா சிரிக்க ஹே இட்ஸ் நாட் ஜோக்…

இதை எதுக்கு தெரியுமா நான் உன் கிட்ட இப்போ சொன்னேன். உன் அண்ணவோட முகத்தை பார்க்கும் போது எனக்கு வருண் அப்போ இருந்த முகம் தான் உங்க அண்ணா கண்ணில் ஒரு ஏக்கம் இருக்கு… ஒரு தனிமை இன்னும் நிறைய சொல்லலாம்.

அது லவ் பண்றவங்களுக்கு தான் வெண்பா புரியும் இட்ஸ் மிர்ராக்கில்…

என்ன டி அனுபவம் பேசுது போல 

மண்ணாங்கட்டி….

இந்த விஷயம் கண்டிப்பா பொய் இல்ல வெண்பா கண்டிப்பா உங்க அண்ணா லவ் தான்…

ம்ம் சரி நான் அவனை முதலில் கவனிக்கிறேன் என்று வெண்பா ஒரு முடிவு எடுத்தாள்.

ஹே என்ன எனக்கு ஒரு யோசனை சொல்லு…

ம்ம் யோசித்து சொல்கிறேன்.. உனக்கு நல்லா வேனும் டி நீ நல்லா மாட்ட போற எப்டி டி இப்படி தில்லாலங்கடி  வேலை எல்லாம் செஞ்சு வைக்கிற….

நான் மாட்ட மாட்டேன் அதுக்குள் வருண் ககு போஸ்டிங் போட்டு விட்டால் காலி செய்து விட்டு கிளம்பி விடுவோம் ல.

ம்ம் அவ்ளோ கான்பிடென்ட் ல இருக்கீங்க 

ம்ம் ஆமா…

அதையும் பார்க்கலாம் என இருவரும் காலேஜ் சென்றனர்.

அடுத்த நாள் காலை இன்று தான் ஐவி ece,cs , IT, இந்த மூன்று துறை சேர்ந்த மாணவர்களும் பெங்களூர், மைசூர், தான் இவர்கள் செல்லும் ஊர்.

அன்று மதியமே கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து தேவையான பொருட்கள் உடைகள் என எடுத்துக் கொண்டு வீட்டில் அவர்களது பெற்றோர் கிட்ட அனுமதி கடிதம் வாங்கி கொண்டு மாணவர்களை அவரவர் வீட்டில் இருந்து பெற்றோர் கொண்டு வந்து காலேஜ் விட்டு சென்றனர் விவேகாவையும், ஆதியையும், செல்வம் வந்து விட்டு கடிதம் கொடுத்து விட்டு சென்றார். வெண்பாவை சரவணன் வந்து விட்டு சென்றான். மைதிலி அவளது அப்பா என அனைவரும் வந்து விட்டனர். 

விவேகா கடவுளிடம் இந்த ராகவ் கண்ணுக்கு நான் தெரியவே கூடாது லிட்டில் கிருஷ் தயவு செய்து அவனுக்கு நெறைய வேலை கொடுத்து இப்போதைக்கு வண்டி கிளம்பற வரை அவனை இந்த பக்கம் விட வேண்டாம் என்று இவள் கிருஷ்ணாவிடம் வேண்டி கொண்டு இருக்க 

கிருஷ்ணன் ஏற்கனவே கிருஷ்ணராஜபுரத்துக்கு(கர்நாடத்தில் உள்ள ஒரு இடம்) இன்பாவை  அனுப்பி வைத்து விட்டார்.

வண்டி கிளம்ப முன்னாடி மாணவர்கள் பின்னால் மாணவிகள் என கத்தி கொண்டும் பாட்டுக்கு ஆடி கொண்டும் அந்த இளவட்ட மலரும் நினைவுக்குள் ஒவ்வொருவரும் தன்னை இணைத்து கொண்டனர்.

இப்படியே இவர்கள் காலேஜ் ல இருந்து பெங்களூர் செல்ல 8 மணி நேரம் ஆனது. நடு இரவில் மாணவ மாணவிகலுக்காக பூக் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல்க்கு சென்றனர். அங்கு அந்த ஹோட்டல் மொத்தமாக மூன்று நாட்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

காலை சாப்பிட வெளியே 8.30 க்கு அனைவரும் வர வேண்டும் என்றும் அங்கே ஒவ்வொரு துறைக்கும் மாணவிகளை பாதுகாக்க ஆசிரியர்கள் 18 பேர் ஆசிரியைகள் அதே பொல் மாணவர்களை கண்காணிக்க 20 பேர் ஆசிரியர்கள் 

தூக்க கலக்கத்தில் அறைக்கு போய் பைகளை வைத்து விட்டு அப்படியே மீனா, மைதிலி, விவேகா, வேறு துறையும் இருக்க வெண்பா, பாரதி என நான்கு மாணவிகள் ஒரு அறைக்கு இருந்தனர்.

தூங்கி எழுந்ததும் துறை கண்காணிப்பாளர் கூறியது போல் 8.30 க்கு வர இங்கே விவேகா வெண்பா கிட்ட ஹே எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டி…

எதுக்கு…

அவன் இங்கே வர மாட்டான் தானே…

யாரு….

அவன் தான் போலீஸ்காரன்…

எனக்கு தெரியாது ப்பா….

ஹே நீ மோசம் நான் ஆதியை கேட்கிறேன்…

போ அவன் பெரிய இவன் வந்துட்டா இரு டி இதுக்காகவே நான் வர சொல்றேன்.

ஹே அப்படி எல்லாம் சொல்லி வச்சுடாத அப்புறம் நான் அவ்ளோ தான்….

என இருவரும் பேசிக்கொண்டே உணவு சாப்பிட அப்போது இனியாள், ஹே இன்பா சார் இங்கே வருகிறாராம்… என பூரணி, தாரணி, யாழினி, இந்து இவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்க விவேகாவுக்கு இதை கேட்டு உதறல் எடுக்க

இன்னிக்கி மர்கயா தான் என வெண்பா விவேகா அருகில் அந்த பெங்களூர் ஸ்பீசியல் உணவை ரசிக்க ருசிக்க வேக வேகமாக சாப்பிட்ட விவேகா, 

தீபா அருகில் சென்று காதில் சில விஷயம் கூற தீபா விவேகாவை கொஞ்சம் திட்டி விட்டு சரி ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு என்று சொல்ல

விவேகா வெண்பாவை பார்த்து சிரித்து விட்டு பாய் என்று சொல்லி ஒரே ஓட்டமாக அவள் அறை சென்று விட்டாள்.

சரியாக இவள் சென்ற உடன் இன்பா அங்கே வந்தான். அனைவரும் இப்போது சத்தம் இல்லாமல் இருக்க அவன் என்ஜாய் பன்னுங்க என ஒரே ஒரு வார்த்தை சொல்ல அங்கே கும்மாளம் ஆரம்பித்தது.

இன்பா தன் பார்வையை அந்த முழு இடத்தையும் ஆராய அங்கு அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் நிஜமாவே வர வில்லையா என கொஞ்சம் இதயம் வருத்தம் கொள்ள

வெண்பா சிரித்த முகத்துடன் ஒரு மெசேஜ் தட்டி விட்டாள் அவன் எண்ணுக்கு

இப்போது இன்பா வெண்பாவை பார்த்து சிரித்தவன். ம்ம் கேரி ஆன் எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு

சீ யூ சூன் என அந்த இடத்தை விட்டு வெளியே வந்தவன்.

ம்ம் ரிவஞ்ச் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது டி அன்னிக்கி எவ்ளோ சீன் போட்ட பேபி 

இதோ வரேன் டி…..

தொடரும்….

 Episode 81,

ம்ம் ரிவஞ்ச் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது டி அன்னிக்கி எவ்ளோ சீன் போட்ட பேபி 

இதோ வரேன் டி.. என புன்னகைத்து கொண்டே அவன் அவள் இருக்கும் அறையை நோக்கி சென்றான்.

விவேகா அவள் அறைக்கு வந்தவள் கதவை லாக் செய்து கொண்டு அந்த படுக்கையில் தன்னை அசுவாசபடுத்தி கொள்ள அமர்ந்தாள்.

அருகில் உள்ள தண்ணீர் ஜக் ல இருந்து தண்ணீர் எடுத்து குடித்தவள். கிருஷ் டார்லிங் நான் உன் கிட்ட நேத்து என்ன சொன்னேன் அவனுக்கு நிறைய வேலை வச்சு வராத படி பண்ணனும் அப்டின்னு தானே …

இப்போ கங்கணம் கட்டிக்கொண்டு வந்து விட்டான் என இவள் கடவுளிடம் முறையிட அப்பொழுது கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்க இவள் பயந்து கொண்டே திறக்க அது இன்பா இல்லை…

ரூம் சர்வீஸ் உள்ளே வந்து ஒரு முறை செக் செய்து விட்டு கிளம்பினர்.

மனம் கிளம்பி இருப்பானோ.. 

அறிவு ம்மம் நிச்சயமா கிளம்பி இருப்பான். நீ தான் அவனை ரொம்ப அலட்சியம் செய்கிறாய்.

மனம் அப்போ பார்க்க வர மாட்டானா.. என்னை பார்க்கவே மாட்டானா…

அறிவு சான்சே இல்ல விவேகா…

அவன் பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன அதுவா நமக்கு முக்கியம் நாம் அவன் பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆதி கொடுத்த தேன் மிட்டாய் பேக் ல வைத்து இருந்தாள்.

அதை எடுத்து வாயில் போட்டு சுவைத்தவள் அப்படியே பொத் என்று படுக்கையில் விழுந்தாள்.

சண்டைக்காரா அன்னிக்கு என்னோட முகத்தை கூட பார்க்காமல் போய் விட்டாய்….

திமிர் பிடித்தவனே.. என்னோட ராகவ் இல்ல

 நீ தான்  என மனம் சொல்ல

நீயே வச்சுக்கோ உன்னோட ராகவ… இடியட் இன்பா…அன்னிக்கு ரிதம் கேட்குது அப்டின்னு படத்தில் நான் கேட்காத வசனம் எல்லாம் பேசினான் என சொல்லிக் கொண்டே இன்னொரு தேன் மிட்டாய் எடுத்து வாயில் போட்டு கொள்ள சரியாக அந்த நேரம் கதவு மணி அடிக்க 

விவேகா ஹோட்டல் பணியாள் தான் வந்து இருக்கிறார்கள் என்று சாதாரணமாக கதவு திறக்க அங்கே இன்பா நின்று கொண்டு இருந்தான்…

ஒரு நிமிடம் அவள் கண்களை இறுக்க மூடி திறந்து பார்க்க அவனே தான் கண்களில் நெருப்புடன் விவேகாவை பார்த்து முறைக்க

ஹலோ… ஹாய் என சொல்லி உடனே இன்பாவை வெளியே அப்படியே விட்டு கதவை லாக் செய்ய போக.. 

இன்பா அவனுடய ஷூ கால் எடுத்து அவள் கதவை லாக் செய்யாதவாரு உள்ளே வைத்தான்.

இதற்கு மேல் நீ மாட்டிக்கிட்ட டி அவன் முறைக்கிறான் போச்சு போச்சு என அப்படியே உள்ளே செல்ல போக

ஹே எதுக்கு டி வந்த… என இன்பா பேசினான்.ம்ம் பதில் சொல்லு… 

அவள் அமைதியாக தரையை பார்க்க இன்பா அப்படியே உள்ளே வந்தவன் அந்த அறையினை தாழிட்டு அவளை பார்க்க அவள் வாயில் வைத்து இருந்த தேன் மிட்டாய மெதுவாக அசை போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

ஹே சொல்லு டி என்னோட காசில் எதுக்கு வந்த…

அவள் பதில் சொல்லாமல் இருக்க…

எனக்கு தெரியும் விவேகா நீ எனக்காக வந்து இருக்க மாட்ட அது தான் உன் ஆதி அவனுக்காக தானே வந்து இருப்ப நான் உனக்கு வொர்த் இல்ல டி என சொல்லி அவன் கதவு நோக்கி ஒரு அடியை வைக்க 

விவேகா அவனை பின்னால் இருந்து கைகளை பிடித்து கொண்டாள்.

பிளீஸ் ராகவ் பிளீஸ் ஸாரி என கேட்க 

இன்பா கைகளை உதறி விட்டு அடுத்த அடி எடுத்து வைத்தான்.

ராகவ் பிளீஸ் என இப்போது அவனை பின் பக்கமாக அணைத்து கொண்டாள்.

இன்பாவுக்கு இப்போது தான் மனம் தெளிந்த நீர் ஓடை போல் இருந்தது. அவன் மனதில் அவளை எல்லாவற்றிற்கும் கொஞ்சம் வற்புறுத்தி செய்ய வைக்கிறோமோ என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் இப்போது அவளது அணைப்பு அப்படி இல்லை என்று நிரூபித்து விட்டது.

இன்னும் உனக்கு என் மேல் கோவம் போலயா! 

இப்போது வேண்டும் என்றே இன்பா இல்ல டி எனக்கு கோபம் போகல…

ம்ம் என்னை மன்னித்து விடு ராகவ் என்று இன்னும் இறுக்கி அணைத்து கொண்டாள்.

அப்போ முன்னால் வந்து கட்டிக்கோ… அப்போதான் எனக்கு கோவம் போகும்

அவள் சிரித்து கொண்டே ம்ம் அப்போ நீ திரும்பு…

இன்பா இப்போது கொஞ்சம் கடுமையாக முகத்தை வைத்து கொண்டு திரும்ப

விவேகா வெட்க முகத்துடன் அவனை அணைத்துக் கொண்டாள். அதாவது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

ஹே கட்டிக்கோ அப்டின்னு சொன்னேன்.

ஹே போடா…

என்னடி மரியாதை குறையுது என அவள் முகத்தை நிமர்த்தி பார்க்க

நீ மோசம் நான் உன் கூட பேச மாட்டேன்… போ என அவள் தள்ளி நின்றாள்.

ஏன் என்னாச்சு என அவன் அருகில் இருந்த சோபாவில் அமர 

அன்னிக்கு…. 

என்னக்கு…

ஹே அன்னிக்கு வெண்பா வீட்டுக்கு வந்த அப்போ…

ம்ம் அப்போ என்ன என இவன் மீண்டும் போனில் எதோ செய்து கொண்டு இருக்க

ஹே என்று போனை பிடுங்கியவள்.. பேபி விளையாடாத கொடு டி…

ம்ம் அன்னிக்கு என் முன்னாடி வந்து என்னை பார்க்காமல் கிளம்பிட்ட நீ ..

ஓ அப்போ நீ என்ன பண்ணிட்டு இருந்த

நானா நான் உன்னை பார்த்தேன் ஆனால் நீ என்னை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை…

விவேகா நீ ஏன் காசு வேணாம் அப்டின்னு சொன்ன…

அது எனக்கு அது உரிமை இல்ல ராகவ்…

அவன் உடனே இவளிடம் பேசி பயன் இல்லை என வெளியில் செல்ல போக…

ஹே எங்க போற என்று அவனை இழுத்து அமர வைத்து மடியில் அமர்ந்து கொண்டாள்.

நீ தானே சொன்ன உரிமை இல்ல அப்டின்னு அப்போ என் மேல் உட்கார உனக்கு உரிமை இல்ல எழு…

ஆமா சரி தான் இன்னிக்கி நான் ரொம்ப டூ மச்சா நடந்து கொள்கிறேன். என அவள் எழ

இன்பா அவளை அப்படியே அமர வைத்தவன் சரியான திமிர் டி உனக்கு திமிர் பிடிச்சவளே… என சொல்லி இனி இப்படி பேசாத விவேகா நான் ரொம்ப கோபப்பட்டால் நீ தாங்க மாட்ட நீ வேற ஒரு இன்பாவை பார்க்க போற காட் இட்…

நீ கோப பட்டால் எனக்கு என்ன… எனக்கு ராகவ் இருக்கான்… போ என அவள் அவனை கொஞ்சம் கேலி செய்ய 

ம்ம் பாரு டா என அவளை அணைத்து கொண்டு அவள் பிரத்யேக வாசனையை உள் இழுத்து கொண்டான்.

சரி ஓகே நீ சமாதானம் ஆகிட்ட தானே என விவேகா அவன் கழுத்தில் உள்ள அந்த தங்க செயினை தொட்டு விளையாடி கொண்டு இருக்க..

ம்ம் இன்னும் ஆகல…

அப்போ அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது நீ முதலில் கிளம்பு இடத்தை காலி பண்ணு என அவள் அவன் மேல் இருந்து எழ முயற்சி செய்ய

இன்பா அவளை அப்படியே சோபாவில் சாய்த்து அவளை நகர விடாமல் செய்தான்.

விவேகா இப்போது அவன் செயலில் வேக மூச்சு எடுக்க ராகவ் தள்ளி போ… 

ஹே என்னாச்சி டி இப்படி மூச்சு வாங்குற…

அவள் கண்களை மூடி கொண்டு எழு டா கதவு திறந்து இருக்கு இப்போ மேடம் வர போறாங்க அவ்ளோ தான் நானு…

யாரும் வர மாட்டாங்க இப்போ தான் எனக்கு மெசேஜ் வந்தது அவங்க மந்திராலயம் கிளம்பி விட்டார்கள்.

அப்போ நானு… 

நீ இன்னிக்கு என் கூட தான் டைம் ஸ்பெண்ட் பண்ண போற என சொல்லிக் கொண்டே அவன் அவள் இதழ் நோக்கி குனிய

ஹே கொன்றுவேன் எழுந்திரு டா என அவள் பேச 

ஹே என்ன டி ஓவரா பேசுற உன்னை என அவன் அருகில் வர விவேகா கண்களை மூடி கொண்டாள்.

இன்பா அவளின் முக மாறுதலை பார்த்து விட்டு சிரித்து கொண்டே அப்படியே இருந்தான் அவளை எதுவும் செய்யவில்லை.

இப்போது மெதுவாக கண்களை திறக்க இன்பாவின் சிரிக்கும் முகம் தெரிய ஹே முதலில் நகரு என முகம் எல்லாம் கொஞ்சம் வியர்வை பதட்டம் என இன்பாவை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொண்டாள்.

விவேகா இப்போ என்னை நீ ஒரு பொறுக்கி மாதிரி நினைத்து இருக்க சரியா…

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க 

ஹே என்னாச்சு சாரி டி ஐம் ஜஸ்ட் கிடிங் யூ டியர் என காதல் மொழிகளில் பேச

விவேகா நீ அப்படியே நடந்து இருந்தாலும் லாஸ் உனக்கு தான் டா நான் உன்னை விட்டு ஐ மின் கழட்டி விட்டு போய் விடுவேன்.

இப்போது இன்பா கோபமாக ஓ இப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உன் மனசில் இருக்கு என் தன்மானத்தை தட்டி எழுப்பி விட்டுட்ட டி உன்னை சும்மா விட மாட்டேன் டி என சொல்ல

உடனே விவேகா அவனிடம் இருந்து தப்பிக்க ஹே நான் சும்மா சொன்னேன் டா என சொல்ல

அவள் மேல் மீண்டும் விழுந்தவன் இந்த முறை அவளது இதழ்களில் வன்மையாக தொடங்கி மென்மையாக முத்தமிட்டான்.  கீழ் உடட்டினை அவன் உதடுகளால் கடித்து இழுத்தான்.

விவேகா அவன் பின் கழுத்தில் கைகளை போட்டு கொண்டாள். அடுத்து கழுத்தில் கொஞ்சம் முத்தமிட்டு கடிக்க விவேகா கொஞ்சம் தன்னிலை இழந்தாள். 

உடனே இன்பா அவளை வேகமாக விட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டான். விவேகா இப்போது தன்னிலைக்கு வந்தவள் அவன் எப்பொதும் எல்லை மீற மாட்டான் என தெரிந்து  தான் அவனுள் கரைந்து போனாள்.

இப்போது வெட்கம் வர சிரித்து கொண்டாள். ஒரு சில மணி நேரம் கழித்து வெளியே வந்தவன். 

அவள் முகத்தையே பார்க்க இப்போது இன்பாவுக்கு கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தான். அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான் அருகில் உள்ள தண்ணீர் எடுத்து முழுவதும் குடித்தான்.

விவேகா….

ம்ம் …

அடுத்த முறை உன் பக்கத்தில நான் வந்தால் என்னை தள்ளி விட்டு விடு டி…

விவேகா அவனை கேள்வியாக பார்க்க 

என்னாச்சு ராகவ்…

ஒன்னும் இல்ல… நான் சொல்றத மட்டும் செய்…

ஹே ராகவ் எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு டா…

ஆனால் எனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை டி…

இந்த சூழல் கொஞ்சம் இறுக்கமாக இருக்க விவேகா கஷ்ட பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்.

சரி அப்போ கிளம்பு நீ…

ஹே என்ன பேபி உடனே கிளம்ப சொல்ற…

ரஸ்கல் இப்போ தானே உத்தமன் மாதிரி பேசின

சரி சரி விடு கிஸ் மட்டும் கொடுத்து கொள்கிறேன் ஓகே வா

இதை எதுக்கு என் கிட்ட கேட்கிற அது உன் இஷ்டம் தானே…

ஓ அவ்ளோ பேசற நீ, இருக்கட்டும் டி இனி நான் உன்னை கிஸ் பண்ண மாட்டேன் டி..

ம்ம் பார்க்கலாம் டா…

சரி விவேகா வேற ட்ரெஸ் பண்ணு நம்ப வெளிய போகலாம்..

எங்கே நான் வர மாட்டேன்..

ஹே கொஞ்சம் ஓவரா சீன் போடாத…

அப்போ வெளியே வெயிட் பண்ணு…

சரி ஓகே என அவன் போன் எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

இப்போது விவேகா வேறு உடை போட்டு கொண்டு அப்படியே அமர்ந்தாள்.

இங்கே இன்பா….?

தொடரும்…

 Episode 82,

விவேகா உடை அணிந்து கொண்டு அப்படியே அமர்ந்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். அவளது இதழ்கள் கீழ் உதடு சிவந்து இருந்தது. இப்போது இன்று வெட்கம் அதிகம் வந்தது.

இன்பாவின் தொடுகை அவனது முத்தம், மற்றும் அவன் மூச்சு காற்று இதுவே போதுமானது அவள் அவனுள் கரைய தன்னை மறந்து அவன் கடித்த பல் தடம் பதிந்த இடத்தை தொட்டு பார்த்தாள். தொட்ட இடம் கூசியது.

அதில் இருந்து தன்னை மீட்டு கொண்டு மிதமாக ஒப்பனை செய்து கொண்டு வெளிய வர எண்ணியவள் இப்போது மீண்டும் கண்ணாடியை பார்க்க அவளுக்கு இன்று கண்ணுக்கு மை யிட்டு கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

இன்பா சொல்லி விட்டானே இனி அருகில் வர மாட்டேன் முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது விவேகாவுக்கு நினைவு வர சரி அதையும் சோதித்து விடலாம் என அன்று இன்பா வாங்கி கொடுத்த அந்த காஸ்மெட்டிக் வெண்பா கொண்டு வர சொன்னாள்.

இப்போது சிரித்து கொண்டே சந்தோச மன நிலையில் அதை எடுத்தவள். ஒரு நிமிடம் வெண்பா எப்படி வைத்து விட்டாள் என யோசித்து பார்த்து வைக்க வலது கண்ணில் சரியாக வைத்து விட்டாள். இடது கண்ணில் கொஞ்சம் கீழ படவும் அதை துணி கொண்டு துடைத்து விட்டு மீண்டும் அழகாக வைத்து கொண்டு அது காயிந்து போக காத்து கொண்டு இருந்தாள்.

இப்போது அடுத்ததாக கண்ணுக்கு மை கீழ பூசி கொண்டாள். ஒரு குட்டி பொட்டு அவ்வளவு தான் ஒப்பனை முடிந்தது.

இங்கே இன்பா இவள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என கடுப்பான இன்பா கதவின் அருகே வந்து ஹே விவேகா என்னடி பண்ற சீக்கிரம் வா …

ம்ம் இதோ என சத்தம் மட்டுமே வந்தது.

ஒரு முறை அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்த்தவள். இதயம் கொஞ்சம் படபடக்க ஒரு தேன் மிட்டாய்  எடுத்து வாயில் போட்டு கொண்டு இப்போது கதவு திறக்க போக

மீண்டும் இன்பா கதவை தட்ட வர அவன் கைகளை தூக்கவும் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

என்னடி இவளோ நேரம் பண்ண என்று அவன் எப்பொதும் போல் கேட்டு பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்போது அவளை பார்த்து உறைந்தான்.

விவேகா முகத்தை இயல்பாக வைத்து கொண்டு ம்ம் போலாம் ராகவ்… என அவள் சொல்லி கொண்டே வெளியே வர

இப்போது அவள் பின்னால் மம் போலாமே என்று சொல்லி கதவை சாத்தி விட்டு ஒரு நான்கு அடிகள் எடுத்து வைத்தான்.

விவேகா மனம் அவ்ளோ தானா  என புஷ் என்று ஆனது 

இப்போது நின்ற இன்பா அவள் கைகளை பிடித்து கொண்டு மீண்டும் அவள் அறைக்கு வந்தான்.

ஹே என்னாச்சு ராகவ் என்று இவள் ஒன்றும் புரியாமல் அவன் பின்னால் செல்ல

அவளது அறைக்கு வந்து கதவை சாத்திவிட்டு அவளை உற்று பார்த்தான். பிறகு பின்னால் திரும்பி நின்று கொண்டான். மீண்டும் பார்த்தான்..

விவேகா இன்பாவ விசித்திரமாக பார்த்தாள். ஹே ராகவ் என்னாச்சு டா ….என்று கேட்க இப்போது இன்பா அவளை பார்த்தான்

இப்போது அவள் இரு புருவம் தூக்கி என்ன என்பது போல கேட்க

அவள் அருகில் வந்த இன்பா அந்த மை பூசிய  கண்களில் தொலைந்து இதழில் எழுந்தான். அதாவது அவள் இதழில் விழுந்தான்.

விவேகா அந்த முத்ததிற்காக தான் கஷ்ட பட்டு இந்த மை வேலை பார்த்து இருக்கிறாள். இன்பாவை வசியம் செய்து விட்டாள்.

இப்போது மூச்சு வாங்க அவளை விட்டவன். அவளை பார்க்க அந்த கண்களில் காதல் வெட்கம் என அனைத்துமே தெரிந்தது.

இப்போது மூக்கோடு மூக்கு வைத்து உரசியவன் ஹே எதுக்கு டி இப்படி என்னை டார்ச்சர் பண்ற…

நானா நான் என்ன உன்னை பண்ணேன்…. என வெட்க முகத்தை மறைத்து அவள் பேச 

விவேகா நடிக்காத டி …

நீ சரியான கேடி ன்னு எனக்கு தெரியும் …

ஹே என்ன ஓவரா பேசுறீங்க… என சொல்லி புருவம் சுருக்கிட

இன்பா அவள் கண்களை பார்த்து என்னை மயக்கிட்ட  டி …

விவேகா, மயங்கிட்டியா ராகவ் என கண்கள் மினன் கேட்க 

ம்ம் நான் விழுந்துட்டேன் விவேகா உன் கிட்ட என அவன் அவள் இதழில் மீண்டும் ஒரு நீண்ட முத்தம் கொடுத்து விடுவித்தான்.

ராகவ் ரஸ்கல்…. என்று முகமெல்லாம் புன்னகையுடன் புருவம் நெருக்கி கூறினாள்.

பேபி யூ லுக் கார்ஜியஸ்.. உன்னோட  கண்ணு அது அவ்ளோ அழகு டி… இதை விட அழகா நான் ஒரு கண்ணை பார்த்ததே இல்லை…

ம்ம் இந்த வசனம் வாரணம் ஆயிரம் ல நான் சூர்யா டார்லிங் பேசும்போதே ரசித்து விட்டேன். நீ சுட்டு போடாத…

இன்பா, சரி சரி விடு என அவள் உதடுகளை துடைத்து விட்டு வெளியே அழைத்துச் சென்றான்.

அந்த ஹோட்டல் பணியாளர் பாதி பேர் இவர்களை பார்க்க…

விவேகா, ராகவ் எல்லாம் நம்பள பார்க்கிறார்கள் மேடம் கிட்ட என்னை சொல்லி விடுவார்களா என பயந்து கொண்டே அவள் கேட்க

இன்பா சிரித்தவன் இது நம்ப… என சொல்லி நிறுத்தி விட 

என்ன ராகவ் …

அதெல்லாம்  சொல்ல மாட்டாங்க நான் பார்த்து கொள்கிறேன் நீங்க வந்தால் மட்டும் போதும் பிரின்சஸ்…

ஓகே பிரின்ஸ் என சொல்ல தோன்றிய வார்த்தையை அவள் விழுங்கி விட்டு

ஓகே கிங்… என்றாள் 

அப்போ டபிள் ஓகே குயின் என இன்பா அவளை மடக்கினான்.

இந்த ஹோட்டல் அவனுடய அப்பாவுக்கு இங்கு ஒரு ஷார் இருக்கிறது. இப்போது மட்டும் இது விவேகாவுக்கு தெரிந்தால் அவ்ளோ தான் முடிந்தது தகுதி இல்லை அது இல்ல அப்டின்னு ஒரு சீரியல் ஓட்டி விடுவாள் என்று இன்பாவுக்கு தெரியும் அதனால் அதை பற்றி அவளிடம் சொல்ல வில்லை.

இப்போது நேராக அங்கு அருகில் இவள் உடை மாற்றும் நேரம் போன் செய்து வண்டிக்கு சொல்லி வைத்து இருந்தான்.

இப்போ படிக்கிற நீங்க எல்லாரும் என்ன நெனைபீங்க ஒரு புல்லட் ல அவளை பின்னால் உட்கார வைத்து கூட்டி போயிருப்பான்…

அப்படி இல்லனா என்னை கொஞ்சம் மாற்றி பாட்டில் வர மாதிரி கூட்டி போயிருப்பான்…

அப்படி அதுவும் இல்லனா ஒரு BMW ல கூட்டி போயிருப்பான்..

ஆனால் இது மூன்றுமே இல்லை சுசூகி ஆக்டிவா தான் சொல்லி வைத்து இருந்தான்.

இதே மன நிலையோடு விவேகா என்னடா இதுல போரமா…

ம்ம் ஆமா…

நிஜமாவா…

ஏன் உனக்கு இது வண்டி மாதிரி தெரியலையா…

ம்ம் தெரியுதே இது எனக்கே ஓட்ட தெரியும்…

ம்ம் ஓட்ட தெரியும் அப்டின்னு இல்ல நீ தான் ஓட்டுற காட் இட் மை வேர்ட்…

நானா..

ம்ம் நீ தான்…

ஆர் யூ சீரியஸ்…

யெஸ் பேபி…

ஏன் ராகவ்…

நீ என்னை லீட் பண்ணு பேபி… (வழிநடத்து)  (மிகவும் அழகான வார்தைகள்)

நான் உன் பின்னாடி அமர்ந்து உன்னை அப்படியே ஹிப் ல அணைச்சு கட்டிப்பேன். நீ ஓட்டனும்.

ஜஸ்ட் இமாஜின் பண்ணு எவ்ளோ ரொமான்டிக் ஆ இருக்கும்.

ம்ம் இப்படியே எதுவும் பேசி பேசியே ஊர் விட்டு ஊர் வந்து திருட்டு தனம் பண்ண வைக்கிற நீ

இதில் கடுப்பான இன்பா உன் கிட்ட நான் இதை எக்ஸ்பக்ட் பண்ணேன் பாரு அது என் தப்பு டி…

ஹே ஸாரி ஸாரி வா போகலாம் என முதலில் அவள் அமர வண்டியை ஸ்டார்ட் செய்ய ராகவ் பின்னால் அமர்ந்து கொண்டான்.

விவேகாவுக்கு உற்சாகமாக இருந்தது.

ராகவ்…

ம்ம் சொல்லு டி…

ஐம் சோ ஹேப்பி டா … என்று அந்த நான்கு எழுத்து மந்திர வார்த்தையை சொல்ல வந்தவள்.

ஐ லவ் ..

என்ன என அவன் கேட்க

இப்போது சுய நினைவுக்கு வந்தவளாய் ஐ லவ் திஸ் மோமெண்ட்…  என சொல்ல 

சேம் ஃபீல் பேபி.. என்று அவள் இடையை கட்டி கொண்டான். விவேகாவுக்கு கொஞ்சம் சிலிர்ப்பாக இருந்தது. அவன்  எங்கே செல்ல வேண்டும் என்று வழி சொல்ல ஆரம்பித்தான்.

விவேகா இப்போது கவனம் முழுவதும் வண்டி ஓட்டுவதில் செலுத்தினாள். அவன் வலது, இடது, நேராக என சொல்ல இவளும் சரியாக ஓட்டினாள்.

இப்போது ஒரு இடத்தில் வேக தடை வர விவேகா அதன் மேல் விட ராகவ் மிகவும் நேர்க்கத்தில் வந்து பின் இயல்பாக அமர்ந்து கொள்ள

இவள் டேய் ஃப்ராடு  இதுக்கு தான் வண்டியை என்னை ஒட்ட சொன்னாயா…

எதுக்கு….

அவள் விளக்கம் கொடுக்க..

இது என்னடி கொடுமையா இருக்கு இதுவே நான் ஓட்டி வேக தடை வந்தால் அப்போ நீ என் மேல் மோதி இருப்ப

சோ அப்பவும் என்னை கண்டிப்பா ப்லேம் பண்ணுவ… இப்போ நீ ஓட்டும்போது வேக தடை வந்தால் இதுக்கும் நான் தான் காரணமா என்று அவன் கேட்க

இப்போது விவேகாவுக்கு என்ன பதில் சொல்வது என தெரிய வில்லை. 

ஹே ஆனசர் மீ… 

விவேகா, ம்ம் நல்லா பேச கத்துகிட்ட டா என கூறி இறுதியில் அவர்கள் வந்து சேர்ந்தனர்.

விவேகா இறங்க ராகவ் பார்க்கிங் செய்து வர,

 விவேகா,நல்ல வேளை நீ வந்துட்ட..

ஏன் என்று அவள் கைகளை பிடித்து கொண்டு நடந்தான்.

எனக்கு வேற கொஞ்சம் பயம் டா…

எதுக்கு டி…

இல்ல  என்னை இங்கேயே நீ தொலைச்சு விட்டு போய்ட்டா…

இன்பா இதை கேட்டு சிரித்து கொண்டே அவள் இடையில் கைகளை போட்டு கொண்டவன். 

எப்படி டி இப்படி எல்லாம் உனக்கு தோணுது. நான் எதுக்கு உன்னை தொலைக்கணும் இன் ஃபாக்ட் நான் உன்னை கண்டு பிடிச்சு இருக்கேன்.அப்படியே இருந்தாலும் உன்னோட வாய் இருக்கே அது போதாது அதை வச்சு நீ ஒரு நாடு விட்டு நாடு கூட போயிட்டு வந்திடுவ. நான் உன்னை எப்பவும் என்னை விட்டு போக விட மாட்டேன்.எப்பவும் தொலைக்க மாட்டேன்…

 (ஆனால்  விதி !!!)

 Episode 83,

விவேகாவை கூட்டி கொண்டு அந்த மாலுக்கு உள்ளே சென்றான். அங்கு முதலில் ஆடை வடிவமைப்பு  கடைகள் இருக்க அங்கே கூட்டி சென்று அவளுக்கு ஒரு ஆடையை தேர்வு செய்தான்.

ராகவ் எனக்கு வேணாம் …

இன்பா அவளை முறைக்க, அச்சோ தயவு செய்து இப்படி பார்க்காதே இரு நான் போய் போட்டு வரேன்…

பேபி நான் ஹெல்ப் பண்ணட்டா… என சிரித்து கொண்டே கேட்க

எனக்கு வேணாம்  உனக்கு பின்னாடி ஹெல்ப் வேணுமா…

யாரு என அவன் பின்னால் திரும்பி பார்க்க அங்கு கடையில் உள்ள பொம்மைக்கு உடை போட்டு விட்டு இருந்தனர் அது ஒரு ஆண் பொம்மை விவேகா ட்ரையல் ரூமுக்கு வெளியே ராகவை பார்த்து சிரிக்க…

இரு டி உன்னை என்று சொல்லவும் அவள் உடனே உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டாள்.

இன்பா அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு தன் போனை நோண்டி கொண்டு இருக்க விவேகா ஒரு முறை தன்னை  பார்த்து மம்ம் ராகவ்க்கு குட் டெஸ்ட்…  என்று சொல்லி விட்டு விட்டு வெளியே வந்து அவனை பார்க்க அவன் போன் பார்ப்பதை பார்த்தவள்.

இப்போது அருகில் வந்து ராகவ்… என அழைக்க அவன் திரும்பி பார்த்தவன்

ம்ம் நாட் பேட்…. என சொல்ல இதை கேட்டு அவளுக்கு சப் என்று ஆனது அதை மீண்டும் கேட்டு விட்டாள்.

 என்ன இப்போ சொன்ன? இதுக்கு என்ன அர்த்தம் அழகா இருக்கேனா! இல்லையா!

நாட் பேட் அந்த ட்ரெஸ விட நீ ரொம்ப அழகா  இருக்க..

சோ உன்னை விட ட்ரெஸ் அழகா இருக்க கூடாது இது ஒகே …

இதை கேட்டு விவேகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை…

ஹே இப்போ என்ன சொல்ல வர…

இன்பா சிரித்து கொண்டே நான் பேசறது உனக்கு புரியாது…

நீ என்கூடவே இருந்தால் தான் உனக்கு என்னை புரியும்…

விவேகா புரியாமல் திருதிருவென முழிக்க டார்ஜ்லிங் இப்படி பிளின்க் பண்ணாத அப்புறம் நான் உன்னை…

இடியட் …. என சொல்லி விட்டு அவள் அமர்ந்து கொண்டாள்.

இன்பா தன் கார்டில் பில் பே பண்ணி விட்டு அடுத்து லிஃப்ட் ல அடுத்து காலணிகள் வாங்க அவளை அழைத்து சென்றான்.

ஹே அந்த ட்ரெஸ் ஒரு 500 இருக்குமா…

இதை கேட்டு ஒரு சிறு புன்னகை செய்தவன் மம்ம் சரியா கண்டு பிடிச்சுட்ட…

ராகவ் ஏன் அதில பிரைஸ் டேக் இல்ல…

அதுவா அது எனக்கு தெரியாது…. சரி இப்போ அதை எதுக்கு தின்க் பண்ற என்னை பற்றி திங்க் பண்ணு என அவளை அருகில் இழுத்து முத்தம் கொடுக்க வர…

ஹே கிட்ட வராத அங்கே மேல கேமரா இருக்கு டா தள்ளி போ…

விவேகா… இட்ஸ் நாட் பிக் திங்க் ரைட்  என்று அவளை இழுக்க

ஹே கொன்றுவேன் டா… .

ம்ம் சரி விடு  என்று அவளை விட்டவன்.

இப்போது எதோ யோசித்தவனாய் பேபி ஷாப்பிங் அப்புறம் போலாம் இப்போ மூவிக்கு போலாமா…

விவேகா ம்ம் சரி…

அப்போ ஓகே என்று அவள் கைகளை பிடித்து கொண்டான். அதை வருடி விட கதவுகள் திறக்க அவளை தோளோடு கைகள் போட்டு கொண்டு i Max சினிமா பார்க்க  டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அழைத்து சென்றான்.

படம் பார்க்க உள்ளே செல்லும் முன் அந்த கேரமல் பாப்கார்ன் வாங்கி அவளுக்கு கொடுத்தவன் உள்ளே அழைத்து செல்ல அவர்கள் இருக்கைக்கு போய் அமர்ந்தார்கள்.

சரியாக படம் ஆரம்பிக்க ஒரு பத்து நிமிடம் இருக்க அவர்கள் இருக்கும் வரிசைக்கு யாருமே அமர வில்லை. 

விவேகாவுக்கு முதலில் எதுவும் தெரியவில்ல பிறகு கொஞ்சம் யோசித்து இருக்கைகளை பார்க்க , ராகவ் போன் நோண்டி கொண்டு இருந்தான்.

ஹே என்ன டா இந்த வரிசையில் யாருமே வரல…

இன்பா ஒரு கள்ள புன்னகை சிந்தி, எனக்கு எப்டி தெரியும்… அந்த படம் ஒரு ஹாலிவுட் படம் தான் ஆனாலும் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது.

விவேகா படம் ஆரம்பிக்க அங்கு கவனம் செலுத்த இன்பா அவள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

இங்கே மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்து விடலாம். அங்கே மந்த்ராலயம் சென்று விட்டு அந்த இண்டஸ்ட்ரீஸ் இருக்கும் பக்கம் போகலாம் என சொல்ல இறுதி நாள் செல்லலாம் என முடிவு எடுத்தனர்.

இபோது orion மால் செல்லலாம் என மாணவர்கள் மாணவிகள் கேட்க சரி என்று வண்டி அங்கே சென்றது. ஆதியை விடாமல் யாழினி ஃபாலோ செய்தாள். இன்று விவேகா வராமல் போனது மிகவும் வசதியாக இருக்க, அவளும் அவன் செல்லும் இடம் எல்லாம் சென்றாள். 

ஆதி பெரிதாக அவளை கண்டு கொள்ளவில்லை. தாரணி, ஹே என்னடி அவன் உன்னை பார்க்கவே மாட்டிங்குறான் எப்படி நீ போய் அவனை சம்மதிக்க வைக்க போற…

யாழினி, இன்னிக்கு பார்க்கமாட்டான் இருக்கட்டும் நாளைக்கு அவன் என் கூட நாங்க ஜோடியா போக போறோம்..

இங்கே வெண்பா மைதிலி கூட சுற்றி திரிந்தாள்.

அதற்கு காரணம் ஆதி தான் வெண்பா க்ளாஸ் ல பவஶ்ரீ ஆதியை அவளுக்கு பிடித்து போனது அதனால் இதை வெண்பா கிட்ட சொல்லி இன்றோ கொடுக்க சொல்ல அவளுக்கு வந்தது கோபம் எனக்கு தெரியாது அவன் கிட்ட நீ போய் பேசாதே டி அவன் விவேகாவை லவ் பண்றான்.. என சொல்ல 

பவா, ஹே இல்ல டி நான் இன்னிக்கு எப்படியும் புராபோஸ் பண்ண போறேன் …

வெண்பா, என்னமோ பண்ணு எனக்கு என்ன… என்று வாய் தான் சொன்னது மனம் கொஞ்சம் கனமாக உணர்ந்தாள்.

ஆதி இருக்கும் இடத்துக்கு வந்த பவ ஶ்ரீ , ஹாய் மிஸ்டர் ஆதித்யா.. 

ஆதி யார் என திரும்ப பவ ஶ்ரீ புன்னகை முகத்துடன் கையுள் இரண்டு கோக் டின் வைத்து கொண்டு அவனை பார்த்து சிரித்து கொண்டே அருகில் வர

மைதிலி இதனை பார்த்து விட்டு ஹே அங்கே பாரு ஆதி கிட்ட ஒரு பொன்னு பேச வரா வா போய் பார்க்கலாம்….

ம்ம் பார்க்கலாமே… என வெண்பா அவள் பின்னே செல்ல 

ஆதி அருகில் வர அங்கே வெண்பா, மைதிலி இருவரும் வர

ஹாய் என்னோட பெயர் பவஶ்ரீ… நான் வெண்பா கிளாஸ்மேட்… 

ஆதி அங்கு இருந்து அவள் வரும் போதே இது என்ன புது பிரச்சனை என நினைக்க இப்போது அவள் வெண்பா வகுப்பு என சொல்லவும் ஆதி இப்போது வென்பாவை பார்க்க 

ம்ம் ஆமா என் கிளாஸ் தான் 

 வெண்பா,பவா ஆதிக்கு பொண்ணுங்க கிட்ட பேசறது எல்லாம் பிடிக்காது நீ போ …

ஆதி வெண்பா இன்று கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்வது அவனுக்கும் நன்றாக தெரிய அவளை கொஞ்சம் சீண்ட எண்ணி 

பவா அவன் முகத்தை ஏக்கமாக பார்த்து திரும்ப

ஹலோ பவா….  

அவள் சந்தோஷ மன நிலையில் திரும்பி பார்க்க இங்கே ஒருத்திக்கு அதிர்ச்சி இன்னொருத்திக்கு பற்றி எரிந்தது.

ஒருத்தி மைதிலி அவளுக்கு அதிர்ச்சி இன்னொருத்தி அது உங்களுக்கே தெரியும் வெண்பா தான்…

ஆதி வெண்பா முகத்தில் உள்ள கோவத்தை ரசித்து கொண்டே ,

ஹலோ பவா அந்த கோக் எனக்கு தானே…

ம்ம் என்று ஒரு கோக் நீட்ட 

அவன் வாங்கி கொண்டான்..

வெண்பா, ஹே மைதிலி இங்க என்ன நடக்குது 

மைதிலி, உனக்கு என்ன அந்த பொண்ணு கியூட் ஆ இருக்கா எங்க டீம் க்கு ஒகே தான்…

ஆதி, சரி இப்போ என் கிட்ட பேசணுமா…

பவா, ம்ம் ஆமா என கொஞ்சம் வெட்கம் வர

வெண்பா மனதில் இது ஒன்னு தான் கேடு… அந்த பிசாசு பல்லை காட்டுகிறானே…

ஆதி நீங்க போங்க நான் உங்க பின்னால் வரேன் …

ம்ம் ஒகே என அவள் மெதுவாக முன்னே நடக்க 

இப்போது ஆதி, மைதிலி எப்படி இருக்கா பவா..

மைதிலி, ஹே செம்ம பொன்னு டா ஆல் தி பெஸ்ட் மம் போ போ சீக்கிரம் போ.. என புன்னகைக்க

ஆதி, வென்பா நீ சொல்ல மாட்டியா…

இதை கேட்டு ஆதியை அப்படியே கொலை செய்ய தோன்றிய மனதை கட்டு படுத்தி கொண்டு பற்கள் கடித்து கொண்டே ம்ம் ஆல் தி பெஸ்ட்.. என வேறு வழி இல்லாமல் கூறினாள்.

ஆதி ரொம்ப தேங்க்ஸ் என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே தன் தலையை கோதி கொண்டே பவா சென்ற திசயில் சென்றான்.

இங்கே விவேகா படத்தை பார்த்து கொண்டே அந்த கேரமல் பாப்கார்ன் எடுத்து சுவைத்தவள் ம்ம் சூப்பர் ஆ இருக்கு டா…

நீ கொஞ்சம் டேஸ்ட் பண்ணு..

இன்பா அவளை இழுத்து இதழ் முத்தம் படித்து விட்டு ம்ம் நல்லா இருக்கே என சொல்ல..

ஹே என்ன ராகவ் பண்ற நீ.. இடியட்..

இங்கே நம்மல சுற்றி மனுசங்க இருக்காங்க டா…

யாரு இருக்கா…

விவேகா சுற்றி பார்க்க அவளுக்கு இன்னும் ஒரு நான்கு வரிசை தள்ளி தான் இருந்தனர்.

இப்போது எல்லாம் விவெகாவுக்கு புரிந்தது. அடேய் ஃப்ராடு இது உன் வேலை தானா…

நானா நான் என்ன பண்னேன் பேபி என அவள் இதழ்களை வருட

ஹே லிஃப்ட் ல கிஸ் வேண்டாம் அப்டின்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு நீ பிளான் பண்ணி இங்கே கூட்டி வந்து ரெண்டு ரோவ் டிக்கட் வாங்கி இருக்க 

உன்னை என அவள் அடிக்க…

உனக்கு கொஞ்சம் கூட ரொமான்டிக் திங்க் இல்ல டி நீ ஒரு தத்தி.. உன்னை எல்லாம் வச்சு நான் தான் எதுவும் ட்ரை பண்ணனும்..

இதுல என்ன ரொமான்டிக் இருக்கு ராஸ்கல் உன் உடம்பு முழுக்க திருட்டு தனம் மட்டும் தான் இருக்கு 

போடி இடியட்.. ஒருத்தன் ஒரு பொண்ணுக்காக இவளோ வொர்க் எல்லாம் செய்து இருக்கான் அப்டின்னு தெரிஞ்சா அந்த பொண்ணு….

தொடரும்….

 Episode 84, 

ஒருத்தன் ஒரு பொண்ணுக்காக இவளோ வொர்க் எல்லாம் செய்து இருக்கான் அப்டின்னு தெரிஞ்சா அந்த பொண்ணு..

எவ்லோ லக்கி தெரியுமா…

விவேகா, எனக்கு எப்படி தெரியும் 

இன்பா, பேபி நீ புதுசா ட்ரை பண்ணு

ஹே போடா…. நீயே ஒரு திருட்டு ராஸ்கல்… பாவம் உனக்கு கீழ வேலை செய்யரவங்க  எல்லாம் நினைச்சா ரொம்ப கஷ்டம்…

நீ சொல்றது சரி தான் நான் திஃப் தான்… 

ம்ம் உண்மைய ஒத்துகிட்டா சரி…

ஆனால் என்னோட திருட்டு இது எல்லாம் உன் கிட்ட மட்டும் தான்…

நீ சொல்றது எனக்கு புரியல…

அதாவது ஒரு பையன் ஒரு பொண்ணுக்காக மட்டும் தான் தன்னுடைய விசயத்தை மாற்றி கொள்வான்.

அப்படி எந்த ஒரு பொண்ணுக்காக மாற்றி கொள்கிறானோ அந்த பொண்ணுக்காக புதுசா எதுவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கூட கற்று கொள்வான்…  

நீ சொல்றது எனக்கு இப்போ சுத்தமா புரியல.. இதை எங்கே இருந்து சுட்ட…

 உனக்கு ஸ்டீவ் ஹார்வ் தெரியுமா?

யாரு அது…

அமெரிக்கன் டெலிவிஷன் ஹோஸ்ட்… அவரு ஹோஸ்ட் பண்ற புரோகிராம் எனக்கு சம்டைம் பார்ப்பேன் அப்போ ஒரு தடவை இந்த லவ், லைஃப் பார்ட்னர் பற்றி சொன்னாரு 

அப்போ நான் இதை பெருசா நம்பல… ஆனால் என்னைக்கு உன்னை பார்த்தேனோ இப்ப அவரு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை டி…

இந்த திருட்டு தனம் எவ்ளோ பண்றேன் இதுக்கு காரணம் நீ தான் உன்னால நான் நிறைய விஷயம் மாற்றி இருக்கேன்.. முக்கியமா மாறி இருக்கேன் …

அப்போ அந்த என்னோடவள் அது நீ தான…

விவேகா இதை கேட்டு மனம் நிறைய முகமும் கொஞ்சம் சிவந்தாள். இந்த அளவுக்கு நம்ம விரும்புறானா என்று மனது குதிரைய விட வேகமாக ஓடியது ..

ஹே டார்ஜ்லிங் ரிதம் எப்படி இருக்கு 

ராகவ் நீ ஒரு சரியான திருட்டு கள்ளன் என்று அவனை குறை கூறி தன் வெட்கததை மறைத்து கொண்டாள்.

இன்பா, ஒரு நாள் உன்னையே மொத்தமா திருட போறேன் டி… 

சான்சே இல்ல அது உன் கனவில் கூட நடக்காது…. என்று அவள் சொல்ல வர இதழ்களை மையலிட்டு கொண்டான்..

இப்போது அவனை அடித்து விட்டு என்னை எதுக்கு டா இங்கே கூட்டி வந்த… 

படம் பார்க்க பேபி…

அப்போ என்னை படம் பார்க்க விடு டா 

சரி நீ படம் பாரு நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என அவன் அவள் கழுத்தை  வருட ….

ஹே பிளீஸ் எனக்கு குருகுருன்னு இருக்கு என்று அவள் சினுங்க …

இன்பா சிரித்து கொண்டே ஸாரி டி நீ மூவி பாரு நான் டிஸ்டர்ப் பண்ணல ஓகே…

ம்ம் சரி என்று அவன் தோளின் மேல் சாய்ந்து கொண்டே இவள் படம் பார்க்க ஆரம்பித்தாள். ராகவ் அவனுடய போன் நோண்டினான்.

ஹே என்று படத்தை பார்த்து கொண்டே விவேகா அவனை கூப்பிட 

ம்ம் டெல் மீ பேபி…

நீ  படம் பார்க்காம போன் ல என்ன பண்ற…

நான் ஆல்ரெடி பார்த்துட்டேன்…

அப்போ எதுக்கு டா கூட்டி வந்த

எனக்கு தோணிச்சு தட்ஸ் ஆல்…

இங்கே பவ ஶ்ரீ அருகே வந்து ஆதியும் நின்று கொண்டான். அவன் மனம் ஒருத்தியின் கோபத்தினால் உற்சாகமாக இருந்தது.

அவன் அருகே வந்து நின்றதும் பவா வெட்கத்தில் புன்னகைத்தாள்.

 பவா,விவேகாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா… 

ஆதி அவள் முன் அவன் கைகளை நீட்டினான். 

ம்ம் உன் கைய கொடு… 

பவா ஒரு நிமிடம் தயங்கி பின் கைகளை நீட்டினாள்.

உடனே ஆதி அவளை பார்த்து புன்னகைத்தான் ஆனால் கைகளை பிடிக்க வில்லை..

பவா, ஆதி கைய பிடிச்சுக்கோ… 

ஆதி, அதுக்கு அவசியம் இல்ல பவா

ஏன் என்று வருத்தம் கொண்டு கேட்க

ஆதி, உனக்கு வயசு என்ன

ம்ம் எனக்கு 19…

ஏன் கேட்ட நீ?

 உன்னோட 19 வயசுல ஒரு பையனை லவ் பண்றது ஓகே தான் ஆனால் நீ இப்போ கூட டீன் ல தான் இருக்க … அது கூட இப்போ பிரச்சனை இல்ல

பின்ன என்ன என்று அவள் சோகமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க

ஹலோ பவா பிளீஸ் ஃபீல் பண்ண கூடாது ..

ம்ம் சரி சொல்லு…

நான் என் கையை நீட்டும்போது நீ ஏன் உடனே என் கைய பிடிக்கல…

அது அது வந்து தெரியல…

ஆதி சிரித்து கொண்டே உனக்கு என் மேல ஒரு இன்பேக்டுவேஷன் தட்ஸ் ஆல் மா…

இல்ல ஆதி அப்படி எல்லாம் இல்லை உன்னை எனக்கு பிடிக்கும்..

உன்னையும் எனக்கு பிடிச்சு இருக்கு  விவேகா அளவுக்கு…

என்ன சொல்ற ..

ம்ம் அவ என்னோட பெஸ்டி எல்லாமே அவ தான் அந்த இடத்தில் நான் உன்னை வைத்து இருக்கேன்.

என்ன ஆதி இப்படி சொல்லிட்ட.. 

இல்ல பவா உனக்காக ஒருத்தன் வருவான் நீ அப்போ உணரும் போது உன்னோட புரிதல் திறன் உனக்கு அதை உணர்த்தும் நீ யோசித்து பார்…

இப்போ நம்ப ஒரு ரியாக்சன் ஸ்டேட் ல இருக்கோம். பொண்ணுங்களுக்கு எப்படியோ அது எனக்கு தெரியாது ஆனால் எனக்கு புரிதல் திறன் கம்மியா இருக்கு….

அதுவும் இல்லாமல் எனக்கு என்னோட லைஃப் ல கோல் இருக்கு அதை ஜெயித்து விட்டு தான் இதுக்கு எல்லாம் இதை பற்றி யோசிப்பேன்.

இதுக்கும் மேல நீ தான் சொல்லனும்… பவ ஶ்ரீ சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்…

ஒரு வேளை ஆதி சொல்வது சரி தானோ என நினைத்தவள்.

இப்போது சிரித்து கொண்டே மம்ம் இப்போ ஒரு தோழியா இந்த கோக் குடிக்க மாட்டியா… என அவன் கைகளில் திணிக்க

 ஆதி,இப்போ பார்த்தியா முன்னே இருந்த அந்த தயக்கம் இப்போ உன் கிட்ட இல்ல… இது எப்படி வேணும்னாலும் சொல்லலாம் பவா…

ம்ம் போதும் போதும் நீ லவ் பண்ற பொன்னு ரொம்ப லக்கி டா…

ஆதி இதை கேட்டு புன்னகைத்து கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பல கதைகள் பேசினர். வெண்பா அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.

வெண்பா மனதில் அய்யோ இவளோ நேரம் என்ன பண்றான், ஒரு வேளை ரெண்டும் ஃப்யூச்சர் பற்றி இப்போவே டிஸ்கஸ் பண்ணுதுங்களா… 

ஆதியும், பவாவும் சிறிது தூரத்தில் பேசி சிரித்து கொண்டே வருவதை பார்த்து மைதிலி, ஹே வெண்பா ஆதி வந்துட்டான் அங்கே பாரு கூட பவா கையை கோர்த்து கொண்டு வருகிரானே…

இவள் திரும்பி பார்க்க மைதிலி கூறியது போலவே அவர்கள் இருவரும் வர வெண்பாவின் இதயம் குதிரையை போல் வேகமாக ஓடியது. மனதில் ஒரு வித வலி இது போல் அவள் ஒரு நாளும் உணர்ந்தது இல்லை. 

அதற்கும் மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அடுத்த அடியை எடுத்து வைக்க ஆதி எதோ பவ ஶ்ரீ யிடம் கூற உடனே அவள்

வெண்பா….

வெண்பா… எங்கே போற… என்று அருகில் வந்து அவள் கைகளை பிடித்து கொண்டாள்.

மைதிலி ஆவலுடன் ஹே அவ நம்ப டீம் தானே…

ஆதி ம்ம் கன்பார்மா … ஓகே தானே ஶ்ரீ…

ம்ம் ஆமா ஆதி…

மைதிலி, அது என்ன ஶ்ரீ

இது இன்னும் கொஞ்சம் கியூட்னஸ் ஓவர்லோட்….

அவள் சந்தோஷத்தில் புன்னகைக்க 

வெண்பாவின் கைகளை வேகமாக மடக்கி கொண்டாள். 

பவ ஶ்ரீ, ஆதி என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உன்னை இன்ட்றோ கேட்டாங்க நான் போய் கூட்டி கிட்டு வரேன். இங்கேயே இரு 

ம்ம் டபிள் ஒகே என சொல்ல பவ ஶ்ரீ கிளம்பினாள்.

மைதிலி,  ஹே என்ன பேசின சொல்லு சொல்லு பிளீஸ் டா…அய்யோ இப்போ விவேகா இருந்தால் செம்மையாக இருந்து இருக்குமே…

வெண்பா, மைதிலி எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது அதனாலே நான் போறேன்…

ஆதி, கொஞ்சம் இருங்க மேடம்… நான் ஶ்ரீ கிட்ட என்ன பேசினேன் அப்டின்னு தெரிஞ்சுக்கவேண்டாமா…

 வெண்பா,உங்க பெர்சனல் எனக்கு எதுக்கு மிஸ்டர் நான் விவேகாவுக்கு தான் ஃப்ரெண்ட்…

சரி போ… நீ வா மைதிலி நான் சொல்றேன் என சொல்ல அவள் அவனை முறைத்து பார்த்து கொண்டே அங்கேயே நிற்க…

அவன் கூறிய அனைத்தும் கேட்டு சிறிது சிறிதாக முகம் மாறியது. 

மைதிலி, என்ன டா இப்படி பண்ணிட்ட … ஒரு வேளை அவ கைய பிடிச்சு இருந்தால் 

ஆதி, அவ கைய பிடிச்சு இருந்தாலும் டீன் அப்டின்னு சொல்லி பிரைன் வாஷ் பண்ணி இது வேணாம் அப்டின்னு தான் சொல்லி இருப்பேன்… என்று சொல்லி அவன் வென்பாவை  பார்த்து இரண்டு புருவமும் என்ன என்பது போல் கண்கள் மின்ன  இரு புருவமும் உயர்த்தி பார்க்க

அவளும் கண்கள் மின்ன புருவம் நெருக்கிஅவனை முறைத்து விட்டு சென்றாள்.

ஆனால் வெண்பாவின் மனதில் ஒரு சரவெடியை கொளுத்தி போட்டது போல் ஒரு சந்தோஷம். 

இங்கே படம் பார்த்து விட்டு இன்பா விவேகாவை சாப்பிட அழைத்து சென்றான். மங்களூர் ஸ்பெஷல் அசைவ உணவுகள் ஆடர் செய்தான். 

விவேகா, நீ இப்போ ஆடர் பண்ணது அசைவமா…

ம்ம் ஆமா…

அப்போ எனக்கு வேணாம்…

ஹே மெனு கார்ட் பாரு இங்கே வேஜ் கூட நல்லா இருக்கும். ஒரு நிமிடம் என்று பிஸ்ஸிபெல்லாபாத் ஆடர் செய்தான்.

அவர்கள் ஆடர் செய்த உணவுகள் வர அதை ருசித்து விட்டு அந்த மீன் ஃபிரை கொஞ்சம் முள் எல்லாம் எடுத்து விவேகா அருகில் கொண்டு வந்து ஊட்டி விட வர

வேணாம்…

ஹே ஆ காட்டு டி… இது நிஜமாவே நல்லா இருக்கும்…

பிளீஸ் வேணாம்…

அவன் சாப்பிடாமல் வேறு புறம் திரும்பி கொள்ள,

சரி சரி ஃபீட் மீ … என்று அவள் கேட்க அவன் முறைத்தான்.

ராகவ் என்னோட டார்ஜ்லிங்… இப்போ ஊட்டமாட்டியா…

இன்பா சிரித்து கொண்டே சரியான கேடி டி நீ என்று சொல்லி அவளுக்கு ஊட்டி விட அவள் சாப்பிட்டாள்.

ம்ம் நல்லா இருக்கே… அப்போ நானே சாப்பிடறேன்…

வேண்டாம் நானே உனக்கு ஊட்டி விடறேன் என்று இன்பா அந்த மீன் முழுவதும் அவளுக்கு ஊட்டி விட அவள் மனதில் இந்த நாள் நீண்டு கொண்டே செல்லாதா என்று தோன்றியது.

அவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள் எல்லாம் அவன் பிளான் தான் இவளுக்கு ஊட்டி விட்ட பின் மீண்டும் சில உணவுகள் சிக்கன், மீன் வகை ஆடர் செய்து விட்டு இவன் போன் நோண்ட அவள் அருகில் வந்து

நீ சரியான ஃப்ராடு  ராகவ்…

ம்ம் எப்பவும் முதலில் நான் உனக்கு ஊட்டி விடுவெனாம் அப்புறம் நீ எனக்கு எல்லாம் ஊட்டி விடனும். அதுவும் உன்னோட கையில் தான் ஸ்பூன் நாட் அலோவ்டு…

ம்ம் அப்புறம் இன்னும் வேற என்ன இருக்கு சொல்லு…என்று அவனுக்கு பொறுமையாக ஊட்டி விட்டாள். அவன் அப்போ அப்போ அவள் விரல்களையும் ருசித்து ரசித்தான்.

பின் அவர்கள் இருவரும் காலணிகள் வாங்க சென்றனர். விவேகாவுக்கு பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்தான்.

அவள் அங்கு இருந்து கிளம்பும் போதே உடல் எல்லாம் ஏனோ சோர்வாக இருந்தது. 

விவேகா, ராகவ் நீ ஓட்டு டா…

இன்பா, என்னாச்சு டி…

இல்ல எனக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கு…

சரி அப்போ கார் ல போலாமா… 

இல்ல இல்ல வேணாம் எனக்காக நீ சிரமம் பட வேண்டாம்.

அப்போ கார்ல போலாம்… 

 விவேகா,ஹே பைக் ல போலாம் எனக்கு ராயல் ல போனும் அப்டின்னு ஆசை நீ தான் ஸ்கூட்டி எடுத்து வந்துட்ட… ஆனால் இதுவும் சூப்பரா  தான் இருந்தது.

ஹே அப்போ லாஸ்ட் டே கண்டிப்பா ராயல் ல போறோம்…

நாளைக்கு என்று அவள் கண்களில் தெரிந்த ஏக்கத்தினை பார்த்து சிரித்தவன்.

ஹே நாளைக்கு போலீசா கொஞ்சம் வேலை இருக்கு டி..  

ஓ அப்படியா சரி சரி எனக்கு ஒன்னும் உன் கூட போகனும் அப்டின்னு ஆசை இல்ல நான் சும்மா கேட்டேன். லாஸ்ட் டே கூட வர மாட்டேன்..

ம்ம் அப்பட்டமா தெரியுது…

என்ன….

ம்ம் அது வந்து இங்கே பக்கதில் வா என்று அவளை அருகில் இழுத்தான்.

தொடரும்….

நாளைக்கு தீபா, சார் அங்கே ஒரு பொன்னு கை கட் பண்ணிகிச்சு …

இன்பா,  இப்போ எங்க இருக்கீங்க தீபா…

சார் நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் இங்கே IT second யேர் பொன்னு விவேகா…?

அவளுக்கு என்ன என்னாச்சு?…

அதை நாளைக்கு பார்க்கலாம் drs…

Episode 85,

ஓ அப்படியா சரி சரி எனக்கு ஒன்னும் உன் கூட போகனும் அப்டின்னு ஆசை இல்ல நான் சும்மா கேட்டேன்.

லாஸ்ட் டே கூட  நீ கூப்பிட்டால் நான் வர மாட்டேன்..

ம்ம் அப்பட்டமா தெரியுது…

என்ன….

ம்ம் அது வந்து இங்கே பக்கதில் வா என்று அவளை அருகில் இழுத்தான்.

ஹே தள்ளி போடா…  என்று விவேகா இன்பாவை தள்ள அது முடியாமல் போனது.

அவள் கைகளை பிடித்து இதழ் பதித்து இன்பா, விவேகா உன்னால என்னை பிரிந்து இருக்க முடியல சரி தானே…

டோண்ட் திங்க் ஓவர் இமாஜ்நேசன்… வாய்ப்பே இல்ல… 

பொண்ணுங்க இல்ல அப்டின்னு சொன்னா இருக்கு அப்டின்னு தான் அர்த்தம்..

விவேகா, அப்போ இருக்கு அப்டின்னு சொன்னா ..

இன்பா சிரித்து கொண்டே “இருக்கு” அப்டின்ற வார்த்தை அவ்ளோ சீக்கிரம் வராதே…

இதை கேட்டு விவேகா என்ன சொல்வது என்று முழித்தாள்.

விவேகாவுக்கு கொஞ்சம் வயிறு வலிக்க மூன்று நாள் நினைவு வர அச்சோ… என்று நினைத்து உடனே அப்போ நாளைக்கு இல்ல இன்னிக்கி ராத்திரி என்று தெரிந்து கொண்டவள்.

ராகவ் சீக்கிரம் என்னை கொண்டு விடு என்று  கால்களை உதறி கொண்டே சொல்ல…

என்னாச்சு டி உன் முகம் ஏன் இப்படி இருக்கு…

ஒன்னும் இல்ல டா நைட் பஸ் ல வந்தது கொஞ்சம் சோர்வாக இருக்கு…

ம்ம் ஓகே அப்போ வா போகலாம்…என்று அவன் வண்டி எடுக்க விவேகா பின்னால் அமர்ந்து கொண்டாள்.

அவள் இன்பாவின் மேல் சாய்ந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதனால் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

அவள் முக மாறுதலை படித்தவன் ஹே மேலே சாயிந்து கொள்…

விவேகா மனம், இப்போ நான் சாயல அப்புறம் இவன் திருவி துறுவி கேள்வி கேட்பான் என்று நினைத்தவள்… இன்பாவின் மேல் சாய்ந்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். விவேகா இறங்கி கொண்டு அவனிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட 

ஹே என்னடி எதுவும் சொல்லாமல் போற…

அய்யோ ஸாரி ஸாரி ஓகே ராகவ் நீ போயிட்டு வா…

இப்படி தான் செனட் ஆஃப் பண்ணிவியா…

பின்ன என்ன பண்ணனும்?

 இன்பா அவளை இழுத்து இதழ் பதிக்க தீடீர் என்று அவனை தள்ளி விட்டாள் அவள் முகம் எதோ போல் இருக்க

பேபி என்னாச்சு…

ஒன்னும் இல்ல ராகவ் என்று சிரித்து கொண்டே அணைத்து விட்டு சரி பை.. பை..

ஹே பேபி நான் இங்கே தான் ஸ்டே பண்ணி இருக்கேன்..

விவேகா அதிர்ச்சியில் பார்க்க …

மேல ஒரு சில vip ரூம்ஸ் இருக்கு எப்பவும் இங்கே தான் வந்து தங்குவேன்… சோ அதனால நான் இங்கே தான் இருப்பேன்.. எப்போ உன்னை பார்க்கனும் அப்டின்னு சொன்னாலும் நீ வரனும்…

ம்ம் கண்டிப்பா வரேன் இப்போ எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கு நான் போகட்டா..

ஒன்னும் பிராப்ளம் இல்ல தானே ஆர் யூ ஆல் ரைட்…

ம்ம் நான் நல்லா இருக்கேன் என்று அவனை சமாளித்து  விட்டு நேராக அறைக்கு சென்றாள்.

இன்பா உடனே அவன் அறைக்கு சென்று வேகமாக குளித்து தயராகி மினிஸ்டர்சத்திய மூர்த்தி தொடர்பான ஒரு முக்கியமான ரிபோர்ட் வாங்க ரமேஷ் கண்ணா என்பவரை சந்திக்க சென்றான்.

ரமேஷ் கண்ணா, ஹலோ மிஸ்டர் இன்பா..

இன்பா சினேகமாக புன்னகைத்து விட்டு வந்த விஷயத்தை சொல்ல..

அவர் சிரித்து விட்டு ஏற்கனவே அம்மா சொன்னாங்க வசு எப்படி இருக்காங்க…

ம்ம் குட் அங்கில் அந்த டிடைல்ஸ்…

நான் ஃபுல் ஹிஸ்டரி உங்களுக்கு தருகிறேன்..

இங்கே ஆதி, சிவாவுடன் அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு இளவட்டம் செய்யும் குட்டி குட்டி குறும்பு சிவா செய்ய இவன் அதை பார்த்து சிரித்து கொண்டே நண்பர்களுடன் ஒரு சுற்று சுற்றினான்.

அனைவரும் புட் கோர்ட் சென்றனர். ஆதி, மைதிலி வா எதுவும் சாப்பிடலாம். இதோ வரேன் டா என்று போய் அமர்ந்து கொண்டு போய் உணவுகளை தேர்ந்தெடுத்து பில் கட்டி விட்டு உணவு வரும் வரை காத்து கொண்டு இருந்தனர்.

சிவா, எங்கே அந்த வாயாடிய காணோம்..

மைதிலி, யாரு..

சிவா, அது தான் cs வாயாடி…

அவ அவங்க கிளாஸ் பசங்க கூட போயிட்டா இன்னும் இங்க வரல டா…

இங்கே வெண்பாவிடம் சதீஷ், அபி, கோகுல், அஷ்வின் எல்லாரும் ஹே எங்க டி எங்க கண்ணழகிய காணோம்.. 

நான் காலேஜ் ல பஸ் ஏறும்போது பார்த்தேன் இப்போ காணோம்.

அவ அவளுக்கு கொஞ்சம் ஃபீவர் அதனால அங்கேயே இருந்துட்டா..

ச்ச, ஏன் வெண்பா இதை இப்போ சொல்ற முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அவ கூட டைம் ஸ்பெண்ட பண்ணி இருக்கலாம். கேர் பண்ற பசங்கள பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். 

அபி, அப்படியே அவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு அப்படியே நடந்து கிட்டே பேசிட்டு வந்து இருக்கலாம்.. செம்ம சூப்பர் ஆ இருக்கும்.என்று பேசிக்கொண்டே புட் கோர்ட் நுழைந்தனர்.

மைதிலி, சிவா வாயாடி ஆன் தி வே அவ கிளாஸ் பசங்க கூட வரா பாரு…

வெண்பா, ஹே ஓவரா ட்ரீம் ல சுத்தாதிங்க டா அவளோட ஆளு இங்கே தான் இருக்காங்க..

கோகுல், ஹே அந்த ஆதி அவனுக்கு அவ்ளோ பில்ட் அப் கொடுக்காத டி அன்னிக்கு ஃபீட் பக் ல அப்படியே சீன் போட்டு அவள சேவ் பண்ணா நாங்க விட்டு விடுவோமா…

அஸ்வின், ஆமா டா கோகுல் நான் எழ நினைத்தேன் எழுந்து மட்டும் இருந்தா இந்நேரம் லவ் ஜோடியா இங்கே அவ கூட சுற்றி இருக்கலாம்…

ம்ம் உங்க ரூட்டு சரி இல்ல இதை மட்டும் சில பெறு கேட்டாங்க உங்க தோலை உரித்து தொங்க விட்டு விடுவாக.. என்று இன்பாவ நினைத்து கூறினாள்.

மைதிலி சொன்னதும் ஆதி திரும்பி பார்க்க வில்லை. 

சிவா, ஹே சிக்கன் ரோல் வாங்கலாம் வாடா நான் நெட் ல சர்ச் பண்ணேன் இந்த புட் கோர்ட் ல எல்லா ஐடமும் கெடைக்கும்.

ஆதி, எனக்கு சிக்கன் வேணாம் டா

மைதிலி, அப்போ ஃபிரேங்கி ட்ரை பண்ணு எக் ல சூப்பர் ஆ இருக்கும் அதுல ஒரு சிரப் ஆட் பண்ணுவாங்க வேற லெவல் அந்த பெப்பர் அரோமா சூப்பரா இருக்கும்.

சிவா, ஹே வாடா நீ மைதிலி சொன்னது வாங்கிக்கோ நான் ஷ்வர்மா வாங்குகிறேன் என அவர்கள் அந்த கடைக்கு முன்னே போய் நிற்க 

வெண்பா எதேட்சயாக அவளும் பவ ஶ்ரீ, ஜான்வி மூவரும் வந்தனர்.

சிவா , ஹே ஆதி வாயாடி உனக்கு பின்னாடி நிக்கிறா.. 

நமக்கு என்ன நீ வாங்கு நம்ப போலாம் என்று அவன் சொல்லி விட்டு திரும்பி அவளை பார்க்காமல் 

ஶ்ரீ…

ஹே ஆதி.. 

என்ன உன்னோட பிரென்ட் எல்லாம் இன்றோ கொடுக்கிற அப்டின்னு சொன்ன…

இதை கேட்டதும் வெண்பாவுக்கு கோபம் வர நெற்றியில் கைகளை வைத்து கொண்டாள்.

பவ ஶ்ரீ, ஹே ஆதி இது ஜான்வி

ம்ம் நைஸ் நேம் என்று சிவா சொல்ல ஜான்வி அவனை பார்த்து சிரித்தாள்.

வெண்பா, அவள் கைகளை மடக்கி கொண்டு ஹே கொஞ்சம் வந்த வேலைய பார்த்தால் நல்லா இருக்கும்.

ஆதி, ஶ்ரீ…

ம்ம் சொல்லு டியர்…

 உன் ப்ரெண்ட் கண்ணு உருண்டு கீழ விழுந்து விட போகுது… 

சிவா, மம்ம் ஆமா அந்த பக்கம் ஐஸ் கிரீம் கார்னர் இருக்கு கொஞ்சம் போய் கூல் பன்னிக்க சொல்லுங்க மூக்கு ராட்சசி மாதிரி அப்படியே இருக்கு…

வெண்பா, ஹே என்ன நிரம்ப டென்ஷன் பண்ற எங்க அண்ணா இங்கே தான் இருக்கான் சொல்லிடுவேன்..

ஆதி, மம்ம் போய் சொல்லு 

வென்பா, சொல்லிடுவேன் டா

ஆதி, உங்க அண்ணாவோட சாவி என் கிட்ட இருக்கு என் ஸ்வீட் இப்போ அங்கே தான் இருக்கும்…

சிவா, சிரித்து கொண்டே இன்னும் கொஞ்சம் சீண்ட

ஜான்வி, யாரு டி உங்க அண்ணா ஆதி என்ன டி சொல்றான்…

ஆதி, இப்போ சொல்லு உன் தோழி கேட்கிறாள் தானே…

வெண்பா , ஒன்னும் இல்ல டி..

ஆதி, அப்போ என்னை ஃபேஸ் பண்ண உனக்கு தைரியம் இல்ல அப்படி தான என்று கண்கள் எதையோ எதிர் பார்க்க அவன் கேட்க 

வெண்பாவுக்கு அவன் கூறுவதற்கான அர்த்தம் புரிந்தும் புரியாமலும் சிக்கி தவித்தாள்.

வெண்பா, எனக்கு தைரியம் இருக்கு முதலில் நீ சொல்லு..

ஆதி, வாய்பே இல்ல நான் சொல்ல மாட்டேன்..

வெண்பா, அப்போ நானும் சொல்ல மாட்டேன்..

சிவா, ஜான்வி, பவா மூவரும் ஆமா இங்கே என்ன நடக்குது, நீங்க என்ன பேசுறீங்க ….

ஆதி சிரித்து கொண்டே மம்ம் பார்க்கலாமா..

ம்ம் அதையும் பார்க்கலாம்…

என்று ஆதி சிவாவை அழைத்து கொண்டு வந்தான். ஹே என்னடா அவ சொன்னா…

அவ விவேகாவை பற்றி சொன்னா மச்சி.. 

வெண்பாவுக்கு பாட்டம் பூச்சிகள் பறந்து அது ஆதியை தேடி சென்றது. 

ஜான்வி, ஹே சம்திங் ராங் என்னடி அவன் சொல்லிட்டு போறான்… 

வெண்பா, ஹே அவன் விவேகாவை பற்றி சொல்லிட்டு போறான்…

பவா, உங்க அண்ணா பற்றி என்ன

வெண்பா, இப்போது சரலமாக விவேகா அண்ணா வருண், ஆதி அக்கா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க சோ அதை பற்றி பேசினேன்

ஜான்வி,அது விவேகா அண்ணா தானே உனக்கு என்ன அதில் சம்மந்தம்..

வெண்பா, நானும் விவியும் ரொம்ப க்ளோஸ் அது எங்களுக்குள்ள இருக்க விஷயம் இப்போ எதுக்கு டி திருவி துறுவு கேட்கறீங்க…என்று அவர்களை சமாளித்து விட்டு அவள் வந்து சேர்ந்தாள்.

அனைவரும் மாலை ஒரு 7.30 க்கு வந்து சேர்ந்தனர். ஆதிக்கு இதை உடனே விவேகாவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்ற மைதிலி கிட்ட போனவுடன் போன் செய்ய சொன்னான்.

மைதிலி அறைக்கு சென்றதும் விவேகா படுக்கையில் படுத்து இருந்தாள். 

ஹே என்னாச்சு என்று சொல்லி கொண்டே வெண்பா, மைதிலி இருவரும் வர ஒன்னும் இல்ல மூன்று நாட்கள் என்று கை காட்டினாள்.

மைதிலி, ஹே ஆதி உன் கிட்ட பேசணுமா இந்தா என்று போன் கொடுக்க சிரித்து கொண்டே போன் வாங்கி கால் செய்தாள்.

வென்பாவுக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது. ஆனால் விவேகாவாள் தான் அவன்… இதுக்கு மேல உங்களுக்கே தெரியும்.

ஆதிஎன்ன டா ஜாலியா.. 

விவி அதை நான் கேட்கணும்…

ஆதி, அப்புறம் எங்க டி போன…

விவேகா கொஞ்சம் மெதுவாக யாருக்கும் கேட்காமல் இன்பாவுடன் சுற்றிய எல்லாம் கூறினாள்.

ஹிம்.. அப்போ  நீங்க ரெண்டு பேரும் அவுடிங் போக IV வேற லெவல் டி…

ஹே போடா எனக்கு இப்போ இஞ்சி நாட்டு சக்கரை டீ வேணும்…

அதுவா…

ம்ம் அதே தான் என்று இவள் பேச வெண்பா, ஹே என்ன இது எல்லாம் அவன் கிட்ட போய் சொல்லிட்டு இருக்க…

விவேகா, ஹே அவன் என்னோட மாமா பையன் இன்னும் சொல்ல போனால் அவன் என்னோட மாமா… காட் இட்

வெண்பா, இரு டி அவனை தூக்குறேன் அப்புறம் எனக்கு அவன் மாமா பையன் ஆகிடுவான் என்று நினைத்து சிரித்து கொண்டாள்.

ஆதி, உன் கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல 

விவேகா எதோ சொல்ல வருகிறான் என தெரிந்து கொண்டு,

விவேகா, மம்ம் நீ சொல்றத எதுவும் என் காது கேட்கல (கேட்கிறேன்)

ஆதி, எனக்கு ஒரு பொண்ணை பிடிக்கல(பிடிச்சு இருக்கு)

விவேகா, ஓ அப்போ இது எப்போ நடக்கல (நடந்தது)

ஆதி, இது இன்னிக்கு தான் நடக்கல(நடந்தது) அப்டின்னு நெனைக்கில( நினைத்தேன்) கொஞ்ச நாளைக்கு முன்னாடி இருந்து அப்டின்னு தெரியல(தெரியும்)

விவேகா சிரித்து கொண்டே,

சீக்கிரம் சொல்ல(சொல்லு) வேண்டாம் என் காது கேட்காது..( உடனே கேட்கணும்)

அது….

விவேகா, அது 

 ஆதி,ராட்சசி அப்டின்னு என் மனசு சொல்லல (மனசு சொல்லுது)

ஆதி ஆதி என்னடா நீ என் கிட்ட சொல்லல எனக்கு ரொம்ப வருத்தம்(ரொம்ப ரொம்ப சந்தோஷம்) (சொல்லிட்டே)

ஓ எனக்கு இந்த சந்தேகம் முன்னாடியே இல்ல (இருந்தது)

எனக்கு முன்னாடியே தெரியல (தெரியும்)

ஆதி, இப்போ உன் காது 

விவேகா ஒரு கண்ணால் வெண்பாவை பார்த்து கொண்டே சந்தோஷம் தாங்காமல் கத்தி கேட்காது (கேட்கும்) என்று சொல்ல 

வெண்பா முகம் என்ன இவளோ சந்தோசம் அப்படி என்ன சொல்லி இருப்பான் என்று அவள் முகம் கொஞ்சம் டென்ஷனா இருக்க 

விவேகா சிரித்து கொண்டே போன் எதுத்து கொண்டு எட்ட சென்றாள்.

ஆதி அவளுமா இல்ல நீ மட்டுமா அவ கிட்ட சொல்லிட்டியா…

இல்ல டி அவ என் கிட்ட சொல்ல மாட்டாளாம் நான் தான் சொல்லணுமா அதனால நான் போய் அவ கிடட சொல்ல மாட்டேன் டி…

ம்ம் சூப்பர் ஆதி… 

இல்ல விவேகா நான் அவ கிட்ட இதை பற்றி சொல்ல மாட்டேன் என்னோட கோல் தான் எனக்கு முக்கியம் டி..

ம்ம் இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா இந்நேரம் நீ அழகான ராட்சசியே க்கு ஒரு டான்ஸ் ஆடி இருப்ப…

நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல பா…

ஆதி இப்போது எதுவும் பேசாமல் இருக்க…

ஹலோ … செல்லம் 

 ஆதி,ஏன் இப்போ இப்படி பேசுற… 

எனக்கு நீ தான் ரொம்ப முக்கியம்…

சாரி தெரியாமல் சொல்லிட்டேன்…

ஆதி, ஹே நான் உன்னை பார்க்க வரட்டுமா…

விவேகா, எதுக்கு 

ஆதி, உனக்கு டீ வாங்கிட்டு வரேன் டி

ம்ம் ஓகே வா என்று வைத்து விட்டாள்.

விவேகா இதை தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வில்லை.

நாளை சந்திப்போம்

தொடரும்….

Vivekaa-inbaa கல்யாணம் எப்போ அப்டின்னு கேட்கறீங்க கமென்ட்ட பார்த்தேன் 

கல்யாணம்  பண்ணிட்டா கதையே சுபம் ஆகி விடும்..

Discription ல எழுதி இருக்கேன் ஒரு தடவை படித்து பாருங்க இன்னும் கதையே ஆரம்பிக்கல 

விவேகா இன்பாவோட ஆபீஸ் ல எப்போ  ஜாயின் பன்றாலோ அப்போ தான் ஸ்டோரி ஸ்டார்ட் ஆகுது கிட்ட தட்ட இது ஃபிளாஷ் பேக் மாதிரி …

Thanks for your comments dears 

 Episode 86,

விவேகா எதுவும் பேசாமல் அவளை ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு சிரித்து. கொண்டே அமர,

வெண்பா, ஹே என்ன கேட்காது, சொல்லல, தெரியாது, ரொம்ப வருத்தம் அப்டின்னு எதோ குடி போதையில் உலருற மாதிரி பேசிட்டு இருந்த…. அப்படி என்ன விஷயம்…

விவேகா, அது என்னோட பெர்சனல்…

வெண்பா, அவன் கிட்ட அப்படியே கொஞ்சி கொஞ்சி பேசுற என் அண்ணன் கிட்ட இப்படி ஒரு நாள் கூட நீ பேசி நான் பார்த்ததே இல்லையே…

ஹே போடி…

இப்போ வேற ஆதி என்ன பார்க்க வரேன் அப்டின்னு சொல்லி இருக்கான் அதனால் கொஞ்சம் மேக் அப் பண்ணிகணும்…

வெண்பா, எதுக்கு அவன் உன்னை பார்க்க வரான் என்று நகத்தை கடித்து துப்பி கொண்டே கேட்க

 மைதிலி,சும்மா அது அத்தை பொண்ணிக்கும் மாமா பையனுக்கும் பேச ஆயிரம் இருக்கும் இல்ல கொரஞ்சது 500 கூட இருக்கும் உனக்கு என்ன…

அய்யோ சாமி முடியல டா… போ போய் பேசு டி என்று இவள் போன் நோண்டி கொண்டு இருந்தாள்.

ஆதி வந்தான் விவேகா வெளியே சென்று அவனை பார்த்து சிரித்து பேசி விட்டு அந்த டீ வாங்கி கொண்டு உள்ளே வந்தாள்.

மைதிலி அதை ஒரு டம்ளர் ல ஊற்றி கொடுக்க கொஞ்சம் கொஞ்சமாக குடித்தாள்.

வெண்பா மனதில் நம்ம ஒரு முறை பார்க்கனும் அப்டின்னு அந்த பேயுக்கு தோணுச்சா… இரு டா உன்னை பார்த்து கொள்கிறேன் நீ தான் என்னை தேடி வரனும். 

வெண்பா, ஹே எப்படி இப்படி ரெண்டு பேரும் ஒட்டி பிறக்காத குறையா அவன் உன் மேல பாயாசத்தை ஸாரி பாசத்தை  பொழியிறான்.

 விவேகா, அது உனக்கு புரியாது டி மண்டு 

ம்ம் என்னால இதை கண்ணுல பார்க்க முடியல…

ஏன் பொறாமையா இருக்கா…

ஹே எனக்கா எனக்கு என்ன பொறாமை அவன் உன்னை தலை மேல கூட வச்சு இந்த இடத்தை கூட சுற்றி வாங்க….

அப்போ கொஞ்சம் வாய க்ளோஸ் பண்ணு… என்று கூறி அவள் தூங்க செல்லும் முன் மீண்டும் அவனிடம் ஒரு முறை பேசி விட்டு படுத்தாள்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்று டிரக்கிங் செல்ல முடிவு செய்து இருந்தனர். அனைவரும் கிளம்பி கொண்டு இருக்க விவேகாவுக்கு  கை கால் எல்லாம் மிகவும் வலித்தது இன்று முதல் நாள் மிகவும் சோர்வுடன் இருந்தாள்.

மைதிலி தீபாவிடம் போய் சொல்ல அவள் வந்து விவேகாவை பார்த்து விட்டு, என்னாச்சு விவேகா…. கொஞ்சம் ஸ்டமக் பெயின் மேம்… நான் நல்லா இருக்கேன்… அப்போ இன்னிக்கி வர முடியாது இந்த நிலையில் என்று அவளை பார்த்து விட்டு தீபா hod க்கு கால் செய்தாள்.

அப்போ நீங்க கிளம்புங்க நான் விவேகா கூட இருக்கேன். விவேகா, இல்ல மேம் நான் பார்த்துக்கிறன் நீங்க போயிட்டு வாங்க… நீ இப்படி இருக்கும் போது எப்படி டா நான் உன்னை விட்டு போறது நேற்று லூஸ் மோசன் அப்டின்னு சொன்ன இப்போ உன்னோட முகமே சொல்லுது ரொம்ப வலிக்குதுதா ஹாஸ்பிடல் போலாமா….

இல்ல மேம் வேண்டாம்… என்று விவேகா குறுக்கி படுத்து கொண்டாள். சரி ஓகே நீங்க கிளம்புங்க என சொல்ல மைதிலி , வெண்பா, மீனா, சிந்து என அனைவரும் கிளம்பினர்.

வெண்பா, ஹே மொபைல் தரட்டுமா எதுவும் பார்த்திட்டு இருக்கியா… இல்ல டீச்சர் வேணாம்… ஹே வச்சுக்கோ டி சும்மா நெட், யூ ட்யூப் பாரு என்று போனை கையில் திணித்து விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு சரி ஆகிடும் நாங்க நைட்டு தான் வருவோம் என்று சொல்லி கொடுத்து விட்டு கிளம்பினாள் 

மைதிலி ஆதியிடம் சொல்ல அவன் உடனே வெண்பா எண்ணுக்கு கால் செய்து பேசினான். ஹே எப்படி இருக்கு… கொஞ்சம் கால் வலிக்குது மற்ற படி ஓகே… ஹாஸ்பிட்டல் போலாமா… ஹே நான் நல்லா இருக்கேன் டா நீ போயிட்டு வா… நான் வரடுமா நீ பூவா காலையில் சப்பிட்டாயா….

ம்ம் சாப்பிட்டேன்… ஹே பொய் சொல்லாத… இல்ல நிஜமா சாப்பிட்டேன் ஆதி பிளீஸ் நான் கொஞ்சம் தூங்குறேன்… நான் கால் பண்ணுவேன் டி… சரி பண்ணு இப்போ பத்திரமா போயிட்டு வா… என சொல்லி இவள் போன் வைத்தாள்.

அங்கே மாணவர்கள் அனைவரும் ட்ரக்கிங் போவதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான குழுக்கள் பிரித்து விட்டு பொருள்கள் எதுத்து கொண்டு கிளம்பினர். 

தாரணி, ஹே யாழினி இன்னிக்கி கூட அந்த விவேகா வரல…

அப்போ என்ன ம** அவ வந்தாள்  எல்லாம் என்னோட ஆதிய கண்கானிக்க வந்திருப்பாள்…

தாரணி, ஹே இன்னிக்கி என்ன பண்ண போற…

யாழினி அவள் செய்ய போவதை சொல்ல அவளோ ஹே இனியாள்க்கு தெரியுமா… ஹே தேவை இல்லாமல் பிரச்சனை டி பிளீஸ் இப்படி செய்ய வேணாம் டி…

யாழினி, உன் வேலைய மட்டும் பாரு எனக்கு ஆதி வேணும் நேற்று அப்படி தான் cs ல ஒரு பொன்னு புரோபொஸ் பண்ணி இருக்கு அவனுக்கு யாரையும் பிடித்து போயிட்டா நான் என்ன பண்ணட்டும்… அதனால இன்னிக்கி நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லி அவளும் கிளம்பினாள்.

அனைவரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அது ஒரு மலைபகுதி இவர்கள் கீழ இருந்தனர். இப்போது ஒவ்வொரு குழுக்களாக மேலே எற தொடங்கினர். கேம்பிங்க்கு பயன் படும் பொருள்கள் அனைத்தும் எடுத்து சென்றனர்.

இங்கே இன்பாவுக்கு விவேகாவை பற்றிய நினைவு வர வேலை முடித்து விட்டு சென்று பார்ப்போம் என்று அவன் வேலை தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர சந்திக்க சென்றான்.

காலையில் நேரமே கிளம்பியதால் ஒரு இடத்தை தேர்வு செய்து டென்ட் போட ஆரம்பித்தனர். 

அங்கே ஆதி ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவி அழகாக தண்ணீர் குடிக்கும் காட்சியை இருவர் பார்த்து கொண்டு இருந்தனர். ஒருவர் வெண்பா அந்த இன்னொருவர் யாழினி.

ஆதி தன் தலையை கோதி கொண்டே அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டு இருக்க யாழினி அவன் பின்னே சென்றாள். வெண்பா யாழினி செல்வதை பார்த்து அவள் பின்னால் செல்ல அங்கே இயற்கை காட்சியை ரசித்து கொண்டு இருந்த ஆதியின் அருகில் போய் ஆதி. … அவன் யார் என்று திரும்பி பார்க்க யாழினியை பாத்ததும் இங்கே என்ன பண்ற…என்று சொல்லி அவன் நகரபோக அவள் அவன் கைகளை பிடித்து கொண்டாள். “ஆதி நான் உன்னை ரொம்ப … நான் உன்னை ரொம்ப விரும்பறேன் டா”

“அவளின் முகத்தை பார்த்தவன் அவள் கைகளை விலக்கி உன் மேல எனக்கு அந்த மாதிரி ஃபீல் இல்ல யாழினி பிளீஸ் புரிஞ்சுக்கோ”

நீ இப்படி சொல்லாத என்னால கேட்க முடியல என்று கண்களில் கண்ணீர் கொண்டு அவள் பேச 

“ஹே பிளீஸ் அழ வேணாம் எனக்கு லட்சியம் இருக்கு.. நம்ப ரெண்டு பேரும் டீன் ல இருக்கோம் நார்மலா இந்த மாதிரி தோணும் அதை கடந்து போகனும், அதை விட உனக்கும் எனக்கும் ரொம்ப தூரம் உங்க ஸ்டேடஸ் வேற என்னோட ஸ்டேடஸ் வேற” இது ஒத்து வராது மா என்று அவளை பார்த்து பொறுமையாக கூறினான்.

“என்ன ஸ்டேடஸ் காதலுக்கு ஸ்டேடஸ் எல்லாம் இல்ல ஆதி உனக்கு ஏன் புரிய மாட்டின்குது. நீ ஒரு வார்த்தை சரின்னு சொல்லு படிச்சு முடி உன்னோட கோல் க்கு நானும் எங்க வீட்டில் ஹெல்ப் ஆ இருப்பாங்க.. அப்புறம் நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம். நான் இப்போவே வீடு கூட நம்ப ரெண்டு பேர்,நம்ப ட்ரீம் ஹவுஸ், நீயும் நானும் மட்டும் இதை விட என்ன வேணும் என்று அவன் அருகில் சொல்லிக்கொண்டே யாழினி நெருங்கினாள்.”

இதை கேட்டதும் ஆதிக்கு மிகவும் கோபம் வந்தது” எங்க வீட்டில்”என்று அவள் குடும்பம் பற்றி பேசுவது அவளுடைய சுயநல எண்ணம்”நீயும் நானும் மட்டும் “இதை தெரிந்து கொண்ட அவன் கோபத்தில் தள்ளி போ கிட்ட வராதே உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல.. 

இதை கேட்டு அவள் யாளினியாக மாறினாள் எனக்கு நீ வேணும் இப்போ நீ என்னை லவ் பண்றேன் அப்டின்னு சொல்ற இல்லை என்று அவள் கைகளில் ஒரு கட்டர் எடுத்து கொண்டு சொல்லுடா… இப்போ சொல்லு என்னை லவ் பண்றேன்னு சொல்லு என அவள் சொல்ல இதை ஆதி எதிர் பார்க்க வில்லை.

ஹே யாழினி உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா எதுக்கு இப்படி பண்ற அதை கீழ போடு…

நீ முதலில் சொல்லு…

ம்ம் நான் உன்னை என்று ஆதி அருகில் அதை பிடுங்க வர அவள் கொஞ்சம் வெட்டி கொண்டாள். உடனே அவனுக்கு கோபம் ஏற  அவளை பார்த்து கண்ணத்தில் ஒரு அரை விட போக நடுவில் வெண்பா வந்து அந்த அரையை வாங்கி கொண்டாள்.

யாழினி கண்களை மூடி கொண்டாள் அவன் அடிக்க கைகளை ஓங்கியது தெரிந்து

ஆதி,  வெண்பாவிடம் ஹே நீ எதுக்கு இப்போ நடுவில் வந்த இவளை சும்மா விட கூடாது.

வெண்பா ஹே அவளுக்கு என்ன ஆச்சுன்னு பாரு… ஆதி அவள் கைகளை பிடித்து பார்க்க லேசாக மட்டும் இருந்தது உள்ளே அழுத்தமாக செல்ல வில்லை. 

ஆதி, யாழினி நான் உன்னை லவ் பண்றேன் டி… என்று அவள் கைகளை பிடித்து கொள்ள வெண்பா கண்களில் கண்ணீர் வந்தது  அவன் அடித்தது கூட வலிக்க வில்லை… ஆனால் இந்த வார்த்தைகள்… அவள் திரும்பி செல்ல போக…

யாழினி சிரித்து கொண்டே எனக்கு தெரியும் நீ என்னை லவ் இது போதும் என அவள் சொல்ல ஆதி எனக்கு இதோட போதும்… 

யாழினி வழிந்து வரும் உதிரம் கூட பொருட் படுத்தாமல் என்ன சொல்ற என அவன் அருகில் வந்து கைகளை பிடிக்க அவனும் பிடித்து கொண்டு” சரி வா நம்ப ஒன்னா இங்கே இருந்து குதித்து விடுவோம்”…

என்ன என்று கண்களை துடைத்து கொண்டு வெண்பா திரும்பி பார்க்க, 

யாழினி கைகள் நடுங்கியது. என்ன சொல்ற ஆதி எனக்கு உன் கூட வாழ வேண்டும். 

ஆதி, எனக்கு உன் கூட வாழ இஷ்டம் இல்ல வா நம்ப காதலர்கலாக ஒண்ணா சாகலாம் என்று ஆதி அவள் கைகளை பிடித்து கொண்டே கூட்டி செல்ல யாழினி அவன் கைகளை உதறினாள்.

வா போகலாம் ஐ லவ் யூ சோ மச் டியர்… என அவளை இழுக்க யாழினி பயத்தில் கொஞ்ச தூரம் வெண்பா அருகில் வந்து விட்டாள்.

அந்த மலை உயரத்தை பார்த்து யாளினிக்கு மயக்கம் வர வெண்பா அருகில் மயங்கி விழுந்தாள்.

இங்கே விவேகாவுக்கு மிகவும் வயிறு வலிக்க தீபா அருகில் இருந்த நீலா மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். விவேகா தன் வலியை கட்டு படுத்தி கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அப்போது ட்ரக்கிங் சென்ற இடத்தில் இருந்து போன் வர அதை கேட்டதும் தீபாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்க hod, தீபா நீ நம்ப இன்பா சாருக்கு இன்பர்ம் பன்னிடு மா அப்போ தான் இது ஷாட் அவுட் ஆகும்…

ம்ம் ஒகே சார் என்று சொல்லிய தீபா இண்பாவுக்கு கால் செய்தாள்.

தொடரும்…..

 Episode 87,

கேம்ப்பில் நடந்தது எதுவும் தெரியாமல் விவேகா மருத்துவ மனையில் அமர்ந்து இருக்க தீபாவுக்கு h.o.d போன் செய்து விவரன்களை கூற 

H.o.d, நீங்க போன் பண்ணி இன்பா சாருக்கு சொல்லுங்க மா…

சார் நான் எப்படி சொல்லட்டும் எனக்கு பயமா இருக்கு …

நீ தானே மா யாழினி கிளாஸ் இன்ச்சார்ஜ்… சார் நீங்க h.o.d என்னை சொல்ல சொல்றீங்க…

நானா …. நீயே சொல்லு மா அவர் லேடீஸ் கிட்ட அதிகமா பேச மாட்டாரு  நான் போன் பண்ணா என்னை கொஸ்டீன் கேட்பார்..

சரி சார் என்று வேறு வழி இல்லாமல் இன்பாவுக்கு கால் செய்தாள்.

ஹலோ சார் நான் IT dept ல இருந்து தீபா பேசறேன்…

ம்ம்…

சார் இங்கே கேம்ப் ல ஒரு பொண்ணுக்கு கொஞ்சம் ஹேன்ட் கட் ஆகி விட்டது.

வாட் நீங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க…

சார் சார் ஸாரி சார் இங்கே ஒரு பொண்ணுக்கு ஸ்டமாக் பெயின் அதனால நான் ஹாஸ்பிடல் கூட்டி வந்து விட்டேன். 

அங்கே யாழினி அந்த கேர்ல் தடுக்கி விழுந்ததால் அங்க இருந்த எதோ ஒரு கண்ணாடி  மேலாக கொஞ்சம் தோலை வெட்டி விட்டது போல சார்…

இப்போ எதுக்கு கால் பண்ணீங்க… சார் இப்போ யாலினிக்கு முதல் உதவி செய்யணும் அதுக்கு தான் கால் பண்ணேன்.

சரி நீங்க அந்த பொண்ணை கூட்டி கிட்டு ரெடியா இருங்க நான் உடனே அங்கே வரேன்.

சார் இன்னும் இங்கே விவேகாவை டாக்டர் பார்க்கவில்லை நான் இங்கே இருக்கேன் எப்படி வரது…

வாட் டிட் யூ சே…

தீபா பயந்து கொண்டே திரும்ப சொல்ல விவேகாவுக்கு என்னாச்சு… எந்த ஹாஸ்பிடல்..

சார் ஒன்னும் சீரியஸ் இல்ல ஸ்டாமச் பெயின்.. 

ஓகே என்று சொல்லி வைத்த இன்பாவுக்கு இவளை என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல திமிர் பிடிச்சவ… இரு டி உன்னை இப்போ வந்து பார்த்து கொள்கிறேன் என கேம்ப் நடக்கும் இடத்துக்கு சென்றவன் யாழினியைப் பார்த்து

என்னாச்சு ..

இனியாள் அவளை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

அது ஒன்னும் இல்லை சார் தடுக்கி விழுந்து விட்டேன். என வெண்பாவை பார்த்து சொல்ல

இன்பா வெண்பாவை பார்த்து என்னாச்சு வெண்பா யார் அந்த இடத்தில் இருந்தா

இனியாள், சார் எல்லாம் இந்த ஆதி தான் என் தங்கையை எதுவும் செய்து இருப்பான் என சொல்ல h.o.d பயத்தில என்ன மா சொல்ற

வெண்பா, சார் இனியாள் சொல்வது போல் எதுவும் நடக்க வில்லை நீங்க யாழினி கிட்ட கூட கேட்டு பாருங்க…

இன்பா, ஆதி எங்கே..

சார் என்று அவன் தூரத்தில் இருந்து நடந்து வந்தான். 

இன்பா h.o.d யைப் பார்க்க அவர் சென்று விட்டார்.

ம்ம் இப்போ உண்மை மட்டும் தான் சொல்லணும். பொய் சொல்றீங்க அப்டின்னு எனக்கு தெரிஞ்சது அப்புறம் என்று அவன் நிறுத்த…

இனியாள் , சார் ஆதி தான் காரணம்… அவனை ஜெயில்ல போடுங்க நான் கம்ப்ளன்ட் பண்றேன்

இன்பா, மம் பதில் சொல்லு

 ஆதி ,சார் அவ சொல்றது சரி தான் நான் தான் காரணம்…

வெண்பா, சார் இல்லை அவன் பொய் சொல்றான்..

“சட் அப்”

யாழினி நீ சொல்லு… சார் ஆதி இதுக்கு காரணம் இல்ல நான் தான் கீழ விழுந்து விட்டேன் அப்போ வெண்பா வந்தாள் எனக்கு ஹெல்ப் பண்ண கூப்பிட அப்போ ஆதி வந்து என் கை காயத்தை பார்த்து ஹெல்ப் பண்ணான் வேற ஒன்னும் இல்லை…

நான் நல்லா இருக்கேன் என்று கண்களில் கண்ணீர் கொண்டு குற்ற உணர்ச்சியில் யாழினி கூறினாள். 

இன்பா, சரி நீ ஹோட்டல் கிளம்பு கூட உன் சிஸ்டர் கூட்டிகோ நான் கொண்டு விடுகிறேன்.

யாழினி, இல்ல சார் நான் நல்லா இருக்கேன் இங்கேயே இருக்கேன் எனக்கு ஒன்னும் இல்லை..  

நான் சொல்றத கேளு மா… இல்ல சார் நான் இப்போ ஓகே என்று எனக்கு இங்கே இருக்க வேண்டும் பிளீஸ் என்று அவள் சொல்ல 

ம்ம் ஓகே முதலுதவி பண்ணியாச்சா…

ம்ம் ஆதி பண்ணான் என்று யாழினி ஆதியை பார்க்க அவன் யாலினியை பார்க்கவே இல்லை…

சரி ஓகே என்று வெளியே வந்தவன் வெண்பா, ஆதி என்று அழைக்க பின்னால் இருவரும் சென்றனர்.

இன்பா, இப்போ உண்மைய சொல்லு வெண்பா என கேட்க 

அவள் ஆதியை பார்க்க அங்கே என்ன பார்வை ம்ம் ம்ம் என்று அதட்ட அங்கு நடந்த அனைத்தும் வெண்பா கூறி முடித்தாள் ஆனால் அந்த அரையை மட்டும் சொல்ல வில்லை.

ஆதி கீழ குனிந்து கொண்டே இருக்க இன்பா, இப்போ எதுக்கு தலைய இப்போ குனிது நிக்கிற நீ…

“சார்”என்று ஆதி நிமிர்ந்து பார்க்க 

இன்பா, உன் தப்பு இதுல என்ன இருக்கு ஒரு போலிஸ் மாதிரி இப்போவே நீ திங்க் பண்ணனும் அதை விட்டு இப்படி எப்பவும் தலை குனிந்த நிலையில் நிற்க்க கூடாது.

ஆதி முகத்தில் சிறிது புன்னகை பரவ இன்பா அவன் தோளில் கையை போட்டு டோண்ட் ஃபீல் என்று சொல்லி இப்போ போன்க…

ஆதி ஒரு இரண்டு அடி எடுத்து வைக்க உடனே இன்பா, ஆதித்யா…

சார் என்று அவன் திரும்ப 

உன்னோட ஃப்ரீ அட்வைஸ மற்றவங்களுக்கு மட்டும் கொடு அதை அவளுக்கும்(விவேகா) அவ முன்னாடி யாருக்கும் கொடுத்து வைக்காத அவ ஒரு ( சிம்பில் பெண்டுலம்) கிட்ட தட்ட ஒரு ஊசல் போல  என்று விறைப்பாக கூற 

ஆதி சிரித்து கொண்டே ஆல் ரெடி ஷி இஸ் ஃபால் இன் வித் யூ சார் அவ தான் எனக்கு இந்த அட்வைஸ் கொடுப்பா இது அவளோட தாட்ஸ்… 

வெண்பா சிரித்து கொண்டே சரியான கேடி கிள்ளாடியா  இருக்கா அண்ணா…

இன்பா, முகத்தை கொஞ்சம் கடுமையாக வைத்து கொண்டு ஆதி அந்த ரெண்டு பொன்னு கிட்டயும் கொஞ்சம் கேர் ஃபுல்லா இரு என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

இன்பா சென்றதும் வெண்பாவும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் அது சில மணி துளிகள் தான் 

ஆதி, வலிக்குதா…

அவள் அவனை முறைக்க ஆதி, ஐ மின் அடிச்சது வலிக்குதா …

வெண்பா, ஒரு வேளை அவ சரின்னு சொல்லி இருந்தால் நீ என்ன பண்ணி இருப்ப…

ஆதி, என்ன….

அவ மேலே இருந்து குதிக்க சரின்னு சொல்லி இருந்தால் என்ன பண்ணி இருப்ப அப்டின்னு கேட்டேன்.

வேற என்ன நான் அவ கைய பிடிச்சுகிட்டு குதிச்சு இருப்பேன்.

என்ன குதிச்சு இருப்பியா…

ம்ம் அவ உண்மையாவே என்னை லவ் பண்றா வெண்பா….

சரி போ போ அவளையே என்று அவள் உதடு துடிக்க பேசி திரும்பி பார்க்க அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே நின்று இருந்தான்.

ஆதி, நான் சும்மா சொன்னேன் அவளை நான் லவ் பண்ணல…

வெண்பா கோபத்தில் அவனை முறைத்து விட்டு வேக வேகமாக அங்கு இருந்து செல்ல

ஹே ராட்சசி…

வெண்பா இதை கேட்டு அப்படியே நிற்க ரொம்ப தேங்க்ஸ் அவளை நான் அடிக்ககாமல் நீ எனக்காக நடுவில் வந்ததுக்கு நன்றி என்று சொல்லி விட்டு அவன் அங்கு இருந்து சென்று விட்டான்.

வென்பாவின் காதுகளில் “ராட்சஸி” என்ற வார்த்தைகள் காதில் தேன் வந்து பாய்வது போல கேட்டு கொண்டே இருந்தது.

அவள் சிரித்து கொண்டே  சென்றாள். 

இங்கே இன்பா வேகமாக காரில் நீலா மருத்துவமனை சென்றான். அங்கே விவேகா தலை கவிழ்ந்து சாய்ந்து இருந்தாள். 

தீபா அவனை பார்த்ததும் எழுந்து வணக்கம் வைக்க

இன்பா, இப்போ எப்படி இருக்கா…

சார் இப்போ கொஞ்சம் பரவாயில்ல வாமிட், எடுத்தா அதனால ரொம்ப வீக்கா இருக்கா..

இன்பாவுக்கு இப்போதே அவளை அள்ளி நெஞ்சில் சாய்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. தீபா இருக்கிறாள் என்று தன்னை கட்டு படுத்தி கொண்டான். 

விவேகா தீபா யாரிடம் பேசுகிறாள் என பார்க்க இன்பா அவளை பார்த்து முறைத்தான்.

அவள் இருக்கும் நிலையில் திரும்ப முறைக்க முடிய வில்லை. மனதில் போடா உன்னை நான் சரி ஆன பின் முறைத்து கொள்கிறேன் என மீண்டும் திரும்பி கொண்டாள்.

இன்பா அந்த ஹாஸ்பிட்டலை ஒரு நோட்டம் விட அங்கே ஒரு பெண்ணின் புகைபடம் பின் பக்கம் கூந்தல் நீளமாக தாவணி ஜிமிக்கியில் இருக்க அதை பார்த்து கொண்டே வந்தவன்.

இது என்ன ஹாஸ்பிடல் என தீபாவிடம் கேட்க சார் இது” நீலா ஹெல்த் கேர் சென்டர்” எதோ யோசித்தவனாய் முதலில் போலாமா மேம்…

ம்ம் கிளம்பலாம் சார்… 

இன்பா, மேம் நீங்க கேம்ப்க்கு போங்க நான் கொண்டு விடுகிறேன்.

சார் அந்த “கேர்ல் ” 

நான் இருக்கேன்…

சார் என்று தீபா ஒரு நிமிடம் தயங்கி நிற்க்க அவதான் ஃப்யூச்சர்ல மிசஸ் இன்பராகவன்… 

இதை கேட்டு தீபாவுக்கு மயக்கம் மட்டும் தான் வர வில்லை பேய் அறைந்தது போல் இன்பாவை பார்க்க…

இப்போ உங்க காதில் எதுவும் கேட்டிங்களா…

ஆமா சார்.. 

இன்பா முறைக்க சார் இல்ல எனக்கு எதுும் கேட்கல 

இப்போ விவேகா எங்கே இருக்கா…

தீபா, அவ அவங்க ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்கிறாள்… சாரி ரெஸ்ட் எடுக்கிறார்கள்.

இதை அவ கிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது. 

ச ச சரி சார்… என்று பயந்து கொண்டே அவள் சொல்ல

ம்ம் தட்ஸ் குட் என்று சொல்லிவிட்டு 

இப்போ போய் அவளை கூட்டி வாங்க என்று சொல்ல தீபா விட்டால் போதும் என்று வேகமாக விவேகா வை கூட்டி கொண்டு காருக்கு வந்தனர்.

விவேகா பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இன்பா வேகமாக தீபாவை கேம்பிங்க் நடக்கும் இடத்துக்கு கொண்டு விட்டவன்.

மிஸ் தீபா…

ச சார்….

அந்த யாழினிய கொஞ்சம் கண்கானின்க என்று சொல்ல மம் ஓகே சார் என அவள் சொல்லி விட்டு வேக வேகமாக மாணவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.

இன்பா பின்னால் திரும்பி பார்க்க அவள் தூங்கி கொண்டு இருந்தாள்.

உன்னை அங்கே கூட்டி போய் பார்த்துகிறேன் டி என்று அவன் காரை நேராக ஹோட்ட்லுக்கு விட்டான்.

தொடரும்….

 Episode 88,

இன்பா தீபாவிடம், மேடம் யாழினியை இங்கே பக்கத்தில் க்ளீனிக்  கூட்டி போய் ஒரு tt இன்ஜெஸ்ஷன் போட்டு விடுங்கள், அப்படியே அந்த காயத்துக்கு மருந்து கட்டு செய்து விடுங்கள்.

ம்ம் ஓகே சார் என்று தீபா சொல்லி விட்டு கிளம்பினாள். அவள் சென்றவுடன் 

இன்பா பின்னால் திரும்பி பார்க்க அவள் தூங்கி கொண்டு இருந்தாள்.

உன்னை அங்கே கூட்டி போய் பார்த்துகிறேன் டி என்று அவன் காரை நேராக ஹோட்டலுக்கு விட்டான்.

ஹோட்டல் வந்ததும் கதவு திறந்து கொண்டு பின்னால் வந்து கதவை திறந்தான். அப்பொழுது மெதுவாக கண்களை திறந்த விவேகா, அவனை பார்த்து விட்டு மேடம் எங்க, இப்போ நீ என்ன பண்ற…

அவன் எதுவும் பேசாமல் அவளை பார்த்து

 கீழ இறங்கு … இவள் கீழ இறங்கி முன்னே சென்றாள்.

அவளது அறை பாக்க திரும்பினாள். இன்பாவுக்கு ஏற்கனவே அவள் உடல் நிலை சரி இல்லை என்பதை சொல்லாமல் இருந்தது அவள் மேல் மிகவும் கோபத்தில் இருந்தான். இப்போது ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எதுவும் பேசாமல் அவள் செல்வது இன்னும் கோவத்தை ஏற்படுத்த ஹே நில்லு டி…

விவேகா என்ன என்பதை போல் திரும்பி பார்க்க, 

மேலே வா…

என்னால முடியாது என்று அவள் அறைக்கு அடுத்த அடி வைக்க…

இன்பா அவளை ஒரே பிடியில் தூக்கி கொண்டான்.

ஹே ராகவ் முதலில் கீழ இறக்கி விடு பிளீஸ்..

முடியாது முதலில் நீ வாய மூடு…

ஹே எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு என்ன விடு டா…

இல்ல…

ஹே பிளீஸ் என்னை நீயே கூட்டி போ முடிச்சதும் நான் உன் கூட வரேன்..

நிஜாமாவா.. 

ம்ம் பக்கா… என அவள் சொல்ல விவேகாவின் அறைக்கு கூட்டி சென்றான் உள்ளே சென்றதும் அவள் சில வேலை முடித்து வர

அவன் வெளியே நின்று போன் நோண்டி கொண்டு இருந்தான்.

சரி நீ போடா நான் அப்புறம் வரேன்… 

எது அப்புறம் வரயா  இவளோ நேரம் உன் கிட்ட கோபம் இல்லாமல் பேசினால் நீ அதையே ஓவரா எடுத்துகிவியா…ஒழுங்கா வாடி…

ராகவ் பிளீஸ் என்னை புரிஞ்சுக்க நான் இன்னிக்கு அழுக்கா இருக்கேன். நீ நல்ல புள்ளையா போ நம்ப மறுபடியும் college ல பார்க்கலாம் .

என்ன காலேஜ் ஆ…

ம்ம் போடா என்னை டென்ஷன் பண்ணாத…

இன்பா இவள் இப்படி சொன்னால் சரி பட்டு வர மாட்டாள் என நினைத்தவன் அவளை வந்து தூக்கி கொண்டான்.

டேய் நா நான் என மூன்று விரல் காட்டி  என்னை இறக்கி விடு… என்று கொஞ்சம் தலை குனிது கொண்டே அவள் சொல்ல  வர

எனக்கு தெரியும்….சரி அதனால் இப்போ என்ன வா நீ என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு என அவளை தூக்கி கொண்டு இன்பாவின் அறைக்கு சென்றான்.

அங்கு சென்றதும் அவளை சோபாவில் அமர வைத்து விட்டு அவன் சாதாரண உடைக்கு மாற

இந்த இன்பா அவளுக்கு புதிது டிவி யை தட்டி விட்டு ஒரு பேசன் ல மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்து வந்து அவள் அருகில் வைத்தான்.

சுபாவிற்கு இப்படி தான் செய்து இருக்கிறான்.

அவள் ஆச்சர்யமாக பார்க்க “மம்ம் காலை எடுத்து உள்ளே விடு”…

விவேகா தயங்கி கொண்டே உள்ளே விட இப்போது அவளுக்கு உண்மையாகவே நன்றாக இருந்தது.

வேணாம் உனக்கு எதுக்கு சிரமம் என்னை கொண்டு விடு பிளீஸ்…

ஹே ஐ வில் கில் யூ விவேகா ஒழுங்கா நீ என் கூட இருக்க இல்ல அப்புறம் இந்த ரெண்டு நாளும் இதே ரூம் ல நீ இருக்க மாதிரி நீ என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண வைக்கிற மாதிரி செய்து விடுவேன் ஓகே வா

இல்ல இல்ல கோபம் வேண்டாம்.. நான் அமைதியா இருக்கேன்.

 சுபா இந்த நேரத்தில் இஞ்சி நாட்டு சக்கரை டீ குடிச்சா சரி ஆகிடும்.. என்று அதை தான் குடிப்பாள் அந்த நினைவில் இன்பா அவளிடம்,

ம்ம் சமத்து பொண்ணா டிவி பாரு நான் வருகிறேன் என கீழ சென்று கிட்சென் ல சொல்ல நேற்று ஆதி வாங்கி போன விஷயம் தெரிய இவளை என்ன பண்றது என நினைத்து கொண்டு மீண்டும் சிறிது நேரம் கழித்து மேல அந்த டீ எடுத்து கொண்டு சென்றான்.

அதை ஒரு டம்ளர்ல ஊற்றி அவளிடம் கொடுத்தான். அவள் வாங்கி ஒரு சிப் குடிக்க இதை ஆதி கிட்ட சொல்லி இருக்க 

இதை கேட்டதும் விவேகாவுக்கு புரை ஏறியது இன்பா அவள் தலையில் வலிக்கும் படி தடவி விட அவள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க

ம்ம் சொல்லு டி…

அ அ அது  வந்து அப்படி இல்லை என்று மலுப்ப…

அட போடி நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. சரி வா உன்னை உன் இஷ்டத்துக்கு கீழ நான் கொண்டு போய் விடறேன்..

விவேகா இதை கேட்டு விட்டு இப்போது எப்படி சமாளிப்பது என தெரியாமல் ராகவ் நான் சொல்றத கேளு…

நீ வா உன்னை விட்டு விடுகிறேன், உனக்கு என் கிட்ட சொல்லணும் அப்டின்னு  தோணல இட்ஸ் ஓகே நான் உனக்கு ஸ்ட்ரேஞ்சர் தானே… 

ஹே நான் சொல்றத கேளு எனக்கு உன் கிட்ட சொல்ல கொஞ்சம் ஷையா இருந்தது என்று கண்கள் மூடி கொண்டு அவள் சொல்ல

இன்பா, அப்போ அவன் கிட்ட இல்ல மிஸ் விவேகா நீங்க 

விவேகா,  ராகவ் ஆதி கிட்ட எனக்கு அப்படி தோணல 

இன்பா, அப்போ அவன் தான உனக்கு முக்கியம்…

விவேகா, ராகவ் பிளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்க அவன் மேல எனக்கு ஒரு ஃபீலும் இல்லை 

நீ உன் கிட்ட .. ஏ எப்படி எனக்கு வெட்கம் அவ்ளோ தான் இதுக்கு மேல என்னால எக்ஸ்பிளைன் பண்ண முடியாது புரியலனா போடா… என்று வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறினாள்.

இதை கேட்டு இன்பா அந்த கண்ணகுளி தெரிய ஒரு சிரிப்பு வர நிறைவாக ஒரு புன்னகை சின்தினான். 

இன்பா வெளியே சென்று சில உணவுகள் ஆடர் செய்து விட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான். 

இருவரும் சிறிது நேரம் எதுவும் பேச வில்லை மௌனம்  மட்டுமே பேசியது. இன்பா அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.

இவள் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாள். மீண்டும் அருகே அமர்ந்து கொள்ள அவள் நகர போக  தள்ளி போகாத டி, பிளீஸ்.  நான் உன்னை கஷ்ட படுற மாதிரி பேசி இருந்தால்,  அதை பெருசா எடுத்துக்காத டி .

விவேகா வேறு புறம் திரும்பி கொண்டு மம்ம் சரி நான் பெருசா எடுதுக்கல…

இன்பா அவள் முகத்தை திருப்பி இப்போ சொல்லு, நான் பெருசா எடுத்துக்கல போதுமா.. என்று அவள் சொல்லவும் உடனே அவள் இதழ்களை அவன் வசமாக்கினான். அவளால் அவனை தடுக்க முடியவில்லை. 

அவன் அவளை விட இப்போ எதுக்கு டா கிஸ் பண்ண என் பக்கத்தில் வராதே நான் அழுக்கா இருக்கேன் தள்ளி போ முதலில் போய் ஜலம் சாரி போய் குளி போடா…

ஹே  அடி வாங்க போற நீ பெரிய டீச்சர் மாதிரி எனக்கு சொல்லாத எனக்கு எல்லாம் தெரியும்.என்று அவள் முகம் எல்லாம் முத்தமிட்டான். 

அய்யோ இவனை என்ன பண்றது எப்படி டா உன்னை வீட்டில் சமாளிக்கிராங்க…

உன்னையே உங்க வீட்டில் வச்சு இருக்காங்க நான் மட்டும் உன் அம்மா கிட்ட, மாமி நான் விவகாவை கல்யாணம் பண்ணிக்கட்டுமா அப்டின்னு கேட்டன்னு வை..

மாப்பிள்ளை நீங்க அவளை அப்படியே தூக்கிட்டு போயிடுங்க அப்டின்னு சொல்லுவாங்க… 

ம்ம் இப்படி கனவுலயே சுத்து டா…

வாய முதலில் அடக்கு டி மரியாதை கொடு…

ம்ம் கண்டிப்பா உனக்கு மரியாதை கொடுக்கணும்…

ஏன்?

ம்ம் ஆமா என்னை விட நீ ஆறு வருஷம் பெரிய பையன் மம் பையன் வேணாம் மம் ஒரு ஆளு இப்போ சரி …

என்ன ஆளா மம் “டேம்ன் இட் “இப்போ மட்டும் உன் கண்டிசன் சரியா இருந்தது இப்போவே உன்னை என்ன பண்ணி இருப்பேன் தெரியுமா நீ பேசின பேச்சுக்கு உன்னை என்று அவள் அதரங்களில் அதற்கு தண்டனை கொடுக்க 

ம்மம் ஹே போதும் போதும் தள்ளி போ திருட்டு பயலே நீ செய்வ டா உன்னை நம்ப முடியாது..

பேபி சும்மா இல்ல சீரியஸ் ஆ சொல்றேன் டி அவுட் புட் வந்ததுக்கு அப்புறம் தான் உன்னை விடுவேன்.

என அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ரூம் சர்வீஸ் பெல் அடிக்க அவன் கதவை திறந்தான்.

உணவுகள் எல்லாம் வாங்கி கொண்டு கதவை சாத்தி விட்டு அதனை அழகாக எடுத்து வைத்தான்.

விவேகா அவன் எடுத்து வைக்கும் தோரணையை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.

இன்பா, பேபி கம் ஃபாஸ்ட் 

விவேகா மிகவும் சந்தோஷமாக வந்து  அமர அங்கு இருந்த உணவுகளை பார்த்து, 

ஹே என்னடா எல்லாம் அசைவ உணவுகளா இருக்கு..

பின்ன இலை தழைய சாப்பிட சொல்றியா.. எதுவும் கேட்டா அஸ்ட்டமி, நவமி, அப்புறம் என்ன டி சொன்ன மம்  மாசி தேரு இப்படி இது எல்லாம் சாப்பிடாமல்  அவோய்டு பன்றதால் தான் உனக்கு இந்த மாதிரி நடக்குது.

ஒழுங்கா இந்த மீன் எல்லாம் சாப்பிடற இல்ல சாப்பிடணும் சாப்பிட்டு தான் ஆகனும் 

 புரியுதா.. என அந்த உணவுகளை அத்தணையும் கொடுக்க  அவள் கண்களில் ஒரு நிமிடம் கண்ணீர் வந்து விட்டது.

ஏன் ராகவ் இப்படி என் கிட்ட நடந்துக்கிற…

நான் எவ்ளோ உன் கிட்ட அட்டேச்டா இருக்கேனா அந்த அளவு எல்லாமே ஈக்வல்லா உன் மேல கோபம், வெறுப்பு, காதல் இது எல்லாம் அதை விட இருக்கும் நீ மட்டும் எதாவது என்னை டென்ஷன் பண்ற மாதிரி இல்ல என்னை விட்டு போன அப்புறம் நீ என்னோட கோபம், வெறுப்பு இதை எல்லாம் பார்ப்ப டி …என இன்பா 

விவேகாவுக்கு இதை கேட்டு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ஏன் ராகவ் இந்த டென்ஷன் ஃபார்முலா T=Mg+Ma  தானே 

தொடரும்….

 Episode 89,

விவேகாவுக்கு இன்பா சொன்னதை கேட்ட உடன் கொஞ்சம் பயந்து போனாள். கொஞ்சம் அந்த இடம் இறுக்கமாக இருக்க சார் எனக்கு ரொம்ப பசிக்குது என்று சொல்லி அவனை கண்டு கொள்ளாமல் எடுத்து சாப்பிட…

இன்பா, பேபி உன் முகம் ஏன் இப்படி இருக்கு

எப்படி இருக்கு நல்லா தானே இருக்கு நீங்க தான் சார் கொஞ்சம் ஓவரா பேசறீங்க…

என்ன வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கூடுது…

இல்ல சார் அப்படி இல்லை சும்மா தான்…

ஹே சொல்லு டி…

ஒரு சில மணி துளிகள் அமைதியாக இருந்தவள். ராகவ் நீ என்னை ரொம்ப பயப்டித்துற டா ராஸ்கல் நீ பேசறது எனக்கு அல்லு விட்டிடுச்சு…

ஹே பேபி நான் சீரியஸ் ஆ சொல்றேன் என்னை ஏமாற்றனும் அப்படின்னு நினைக்காத அப்புறம் பின் விளைவு மோசமா இருக்கும்.

அந்த மீனை மென்று கொண்டே என்ன பண்ணுவ…

உன்னை அப்படியே தர தரன்னு இழுத்து வந்து…

ம்ம் அப்புறம் என்று அவள் சாதாரணமாக கேட்க

என்ன டி இவளோ ஈஸி யா கேட்கிற…

ம்ம் நீ என்னை ஏமாற்றினால் நான் என்ன பண்ணுவேன் தெரியுமா…

இம்பாசிபில் டி…

ஹே நான் சொல்றத முதலில் கேளு டா..

ம்ம் சொல்லு…

நான் ஒன்னும் பண்ண மாட்டேன் விட்டால் போதும் அப்டின்னு உன்னை கலட்டி விட்டு விடுவேன்.

ம்ம் அப்படி நடக்காது டி என்று சொல்லி இருவரும் பேசி கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தனர்.

விவேகா எழுந்து படுக்கை அருகே போய் அமர்ந்து கொள்ள இன்பா அவள் முதுகுக்கு பின் பில்லோ கொடுத்து அமர வைத்தவன். 

அவள் பாதங்களை பிடித்து சொடுக்கு எடுத்து விட்டான். விவேகா காலை அவனிடம் இருந்து எடுத்து கொள்ள முயற்சிக்க ஹே இரு ஒன்னும் இல்ல உனக்கு ரொம்ப கால் வலிக்கும்…

விவேகா, டேய் நீ கௌதம் படம்  அதிகமா பார்ப்பியா…

ஏன் டி!

இல்ல அதிகமா அவரு தான் எல்லா படத்திலயும் கண்டிப்பா ஹீரோயின் கால் ஹீரோ பிடிக்கிற மாதிரி சீன் இருக்கும் 

Eg, வின்னை தாண்டி வருவாயா , வாரணம் ஆயிரம் இன்னும் நிறைய இருக்கு 

இன்பா, நான் பார்ப்பேன் ஆனா என்னை விட இந்த பிரீத்தி பார்ப்பா டி..

யாரு ராகவ் அது 

இன்பா சிரித்து கொண்டே இல்ல அவளுக்கு இப்போ எழுத போர் அடிக்குது அதனால சுட்டு போடுறா.. 

ம்ம் நீ சொல்றது சரி தான் என்னை போய் உன் கூட கோர்த்து விட்டு இருக்காளே… சரி சரி இப்போ நம்ப விஷயத்துக்கு வருவோம்.

  ஐ லைக் சம் மூவிஸ் Sherlock Holmes,Hang over 

நான் j.k . Rouling மூவி இன்பா இப்போது கடுப்பாகி அதுக்கு நீ ஹாரி பாட்டர்ன்னு சொல்லிட்டு போடி.. என்று அவள் பாதங்களை மென்மையாக பிடித்து விட்டான்.

ஹே எனக்கு iron manயும் பிடிக்கும் 

சரியாக அந்த நேரம் டீவியில் மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே என்ற பாடல் ஓட உடனே விவேகா சத்தம் அதிகமாக வைக்க 

ஹே ஓவர் சவுண்ட் கொஞ்சம் கம்மி பண்ணு 

ஹே ராகவ் ஐ லவ் ரஹ்மான் சாங்ஸ் டா பிளீஸ் கொஞ்சம் மட்டும் பிளீஸ் 

இது ஒன்னு தான் டி உனக்கும் எனக்கும் ஒத்து போகுது.

ம்ம் சூப்பர் டா என்று அந்த பாடலை ரசித்து கேட்டு கொண்டு இருந்தார்கள் இருவரும்  விவேகா,இதில எந்த லைன் உனக்கு பிடிக்கும்..

முதலில் நீ சொல்லு டி…

முதல் வரி மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே அதுவே மேஜிக்கல் லைன் ராகவ்

இன்பா, என்ன டி இவளோ ரொமான்டிகா பேசுற மம் அடுத்து சொல்லு

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே… என்று கண்கள் எல்லாம் வெட்கம் பூச சொல்ல 

ம்ம் பரவாயில்ல கொஞ்சம் டெவலப்மென்ட் டி என சொல்ல விவேகா ஒரு தலையணை எடுத்து அவன் மேல் போட்டு விட்டு 

ஹே இப்போ நீ சொல்லு டா…

எனக்கு அவ்ளோ ரசனை இல்ல ஆனால் இந்த பாட்டு ஃபுல்லா எல்லாம் லைன்சும் நல்லா இருக்கும் தட்ஸ் ஆல்… 

இந்த பாட்டில் வர மாதிரி உன் கிட்ட நிறைய காதல் நான் தேடி கண்டு பிடித்து இருக்கிறேன். என அவன் சொல்ல ராகவ் இங்கே கிட்ட வா என கூப்பிட

அவன் அருகே போய் அமர்ந்து கொண்டான். ம்ம் சொல்லு டி என அவன் போன் நோண்ட வர

எப்படி டா இப்படி பேசி மயக்குற என்று அவன் கண்ணகுழியில் எதிர் பாராத முத்தம் ஒன்றை கொடுத்து விட

“ஹே பேபி ம்ம் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு ” உடனே விவேகா,  ராகவ் கொஞ்சம் சிரி …

அவன் புருவத்தை  நெருக்கி பார்க்க ஹே அடி… நான் உன்னை சிரிக்க சொன்னேன்…

ஹி ஹி ஹி போதுமா…

ஹே அப்படியே இரு என்று அவள் ஆள் காட்டி விரல்கள் இரண்டையும் எடுத்து இரு கண்ணகுழியிலும் வைத்தாள். 

ராகவ் இது எவ்ளோ அழகா இருக்கு அந்த குழி ம்ம் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல டா… வேற லெவல்..

விவேகா ரொம்ப கொஞ்சாத  அப்புறம் உனக்கு தான் கஷ்டம் என்று அவள் இதழ்களில் முத்தம் வைக்க அவள் அவன் சட்டையை பிடித்து கொண்டாள். 

இப்போது அவளை விட்டவன் நான் சிரிக்கும் போது அதிகமா பார்த்தது யாருன்னா அதில் நீ ஒன்னு டி… ஏன் நீ வீட்டில் சிரிக்கவே மாட்டியா… சிரிக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்காது. எங்க மாம் ஸ்டேஷன், அக்கா ஆபீஸ், டாட் ஆஃபீஸ் வீட்டில் அதிகமா சேர்ந்து இருக்க மாட்டோம்.

அப்படியே இருந்தாலும் என்னோட டாட் இருந்தால் நான் இருக்க மாட்டென்..

ஏன் டா..

அவருக்கு நான் போலீஸ் ஆனது பிடிக்கல அவரோட ஆசை படி b. டெக் பண்ணேன் அது மட்டும் இல்லாமல் எனக்கும் பிடிச்சு படிச்சேன்.

அன்ட் என் மாம் போலீஸ் யூனிபார்ம் ல பார்க்கும் போது எனக்கு அதை போட்டு வேலை செய்யணும் அப்டின்னு ஆசை சோ நான் போலீசா வந்தேன்.

டாட்க்கு வீட்டில் ரெண்டு போலீஸ் இருக்கறது  சுத்தமா பிடிக்கல எனக்கு அவர் பேசறது இரிடேட்டிங்கா இருக்கும்..

விவேகா, இது எல்லாம் ஒரு காரணமா உனக்கு உன் அப்பாவோட அருமை தெரியல..

இல்லாதவங்களுக்கு தான் அந்த வலி தெரியும் ராகவ் என்று அவள் கண்கள் கலங்க ஹே எதுக்கு டி இப்போ கண் கலங்குற.. எனக்கு என்னோட அப்பா நியாபகம் வந்திடுச்சு.. 

எங்க அப்பா என்று அவள் உதடுகளை கடித்து கொள்ள…

ஹே சாரி பேபி பிளீஸ் சாரி டி என்று அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டான்…

உங்க அப்பா மாதிரி என்னால உன்னை பார்த்து கொள்ள முடியாது ஆனால் என்னோட பெஸ்ட்ட கொடுப்பேன் டி என அவள் தலையை வருடினான்.

அப்போதும் அவள் முகம் சோகமாக இருக்க பேபி அந்த இன்னொரு ஆள் யாருன்னு நீ கேட்கவே இல்ல…

என்ன என்று அவள் கேட்க 

என்னோட சிரிப்பு பார்த்த இன்னொரு ஆள் உனக்கு யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா…

யாரா இருந்தால் எனக்கு என்ன என்று அவள் கூறினாலும் உள்ளுக்குள் யாராக இருக்கும் என யோசித்தாள்.

ராகவ் அது வசு மேம் தான

அப்படி கூப்பிடாத டி பிளீஸ் … சரி ஓகே உங்க அம்மாவா!

உனக்கு இந்த வாய் இதுக்கு எல்லாம் மொத்தமா பார்த்து கொள்கிறேன் என சொல்லியவன்

இல்ல

அப்புறம் யாரு பாவை அம்மச்சியா !

இல்ல .. 

பின்ன யாரு மித்ரன் அண்ணாவா…

இல்லவே இல்லை

ஹே யாரு சொல்லு டா… இல்ல உன்னோட எக்ஸ் ஆ

அடி வாங்க போற…நீ தான் என்னோட முதல் காதல்…

இப்போ சொல்ல போறியா இல்லையா…

என்னோட ப்ரெண்ட் சூர்யா தான் டி…

விவேகா முறைத்து கொண்டே அது பொண்ணா பையனா என்று கேட்டாள்.

அய்யோ பேபி அவன் பையன் தான் நான் முழு பெயர் சொல்றேன் சூர்ய தேவ்

ம்ம் அப்போ ஓகே

கிட்ட தட்ட நீ  பேசறது அவன் பேசுவது போல் இருக்கும் எப்போ பார்த்தாலும் நானும் அவனும் எதாவது சண்டை கிளாஸ் கட் பண்ணிட்டு இருப்போம் நல்லா இருக்கும் டி…

ம்ம் என்று அவள் கண்கள் சொக்க உடனே இன்பா, பேபி நீ தூங்கு நான் முக்கிய வேலையா கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்…

ம்ம் ஓகே என்று அவள் கண்கள் சொக்க சீக்கிரம் உறங்கி விட்டாள்.

இன்பா நீலா மருத்துவமனை பற்றி விசாரிக்க சென்றான். அவன் வர மாலை ஆனது.விவேகா அவள் அறைக்கு சென்று குளித்து விட்டு மீண்டும் இன்பாவின் அறைக்கு வந்து அந்த ரூம் சுற்றி பாத்தாள்.

பின் இன்பா வர சிறிது நேரம் பேசி விட்டு ராகவ் நான் கீழ போறேன் இப்போ எல்லாரும் வந்து விடுவார்கள் என சொல்ல 

அவன் அவளை அனுப்ப மனம் இல்லாமல் அனுப்பி வைத்தான். பேபி என் கூடவே பேசாமல் இருந்து விடேன்…

ம்ம் ஆசை தான் போடா… 

இல்ல டி நீ பக்கத்தில இருந்தால் நல்லா இருக்கும் அப்படியே பேசிட்டே இருக்கலாமே.

ம்ம் பேசலாம் பேசலாம் போதும் கொஞ்சம் மிச்சம் வைப்போம்.

அடுத்த நாள் நன்றாகவே சென்றது விவேகாவிடம் வீட்டுக்கு போய் யாழினி பற்றி  சொல்லிக்கொள்ளலாம் என ஆதி விட்டு விட்டான்.

அனைவரும் IV முடிந்து கிளம்ப இன்பா அவளை வழி அனுப்பி சில முத்தங்கள் கொடுத்து விட்டு அவனுக்கு வேலை இருப்பதாக அங்கேயே இருந்து கொண்டான்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தனர். இங்கே கவ்யா, அப்பா இந்த கமிங் சன்டே என்னோட பிறந்த நாளுக்கு அந்த இன்பராகவன் வரனும் பா…

பார்க்கிறேன் மா…

இல்ல கட்டாயம் நீங்க வர வைக்கணும்….

என்ன பண்ண போற

ஹஸ்கா சுகர் கொஞ்சம் யூஸ் பண்ண போறேன்…

என்ன மா சொல்ற ! என அவர் அதிர்ச்சியாக கேட்க 

ம்ம் ஆமா ப்பா அப்படியே அந்த ஆக்டர் மெலினா ஜார்ஜ அவளையும் வர வைங்க…

இன்பா கண்டு பிடித்தால் என்ன செய்வது… என அவர் கேட்க 

அப்பா நான் சொன்னது மட்டும் செய்ங்க….

தொடரும்….

 Episode 90,

ஆதியும் விவேகாவும் நேராக ஆதியின் வீட்டுக்கு சென்றனர். விவேகா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். 

ஆதி, விவேகா iv ல ஒரு விஷயம் உன் கிட்ட நான் சொல்ல மறந்து விட்டேன் டி…

என்ன ஆதி அவ கூட எங்கேயும் சுற்றி பார்க்க போனாயா என்னை விட்டு…

இதை கேட்டு அவன் கோபம் கொண்டு திரும்ப ஹே சாரி சாரி என் செல்லம் சொல்லு இனி இப்படி பேச மாட்டேன்.

ம்ம் நான் வெண்பா பற்றி இப்போதைக்கு எதுவும் யோசிக்க மாட்டேன். அதை கடவுள் கைகளில் விட்டு விட்டேன்.

சரி  என்ன விஷயம் சொல்லு… என அவள் கேட்க ஆதி யாழினி பற்றிய அனைத்து விஷயமும் கூறினான். வெண்பா அரை வாங்கியதும் கூறினான்.

இதை மூச்சு விட மறந்து விவேகா கேட்டு கொண்டு இருந்தாள். ஹே என்ன டா சொல்ற இப்படி ஒரு விஷயம் நடந்ததா இந்த ராகவ் பய என் கிட்ட இதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை டா…

விவி அவரு அவங்க ரெண்டு பேரு கிட்ட இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொன்னாரு டி…

ம்ம் ஓகே இந்த வெண்பா இன்னும் உன்னை பற்றி என் கிட்ட ஒரு மூச்சு கூட விடல தெரியுமா சரியான அழுத்தகாரி…

மம்ம் ஆமா அழுத்த காறி தான் என ஆதி சிரித்து கொண்டே கூறினான்.

இங்கே இன்பா ரமேஷ் கண்ணாவிடம், சார் அந்த மினிஸ்டர் அடிக்கடி ஒரிசா மாநிலத்தில் கோபால் பூர் போயிட்டு வராரு அதை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா.. அவர் கிட்ட வேலை செய்யுற ஆளுங்க அதிகமா பீகார் மாநிலத்தில் இருந்து தான் வருகிறார்கள். இதை பற்றி எதுவும் விஷயம் இருக்கா…

ரமேஷ், அந்த மினிஸ்டர் க்கு சொந்தமா கப்பல் இருக்கு சார் , அப்புறம் அங்க கிடப்பில் வேலை செய்யாமல் இருக்க ஒரு சுகர் ஃபேக்டரி வாங்கி அதை ரன் பண்ணிட்டு இருக்காரு சார்.

இன்பா, அந்த சுகர் ஃபேக்டரி எங்கே இருக்கு 

ரமேஷ், ஹஸ்கா சார்…

இன்பா , ஹஸ்காவா 

ம்ம் ஆமா இந்தியாவில் அந்த காலத்தில் முதல் முறையாக வெள்ளை சர்க்கரை உற்பத்தி செய்த இடம் அது தான் சார்…

ம்ம் அது ஓகே எனக்கு தெரியும் அதுக்கும் இந்த மின்ஸ்டர்கிகும் என்ன தொடர்பு…

ரமேஷ், சார் என் கிட்ட ஒரு தகவல் இருக்கு 

ம்ம் சொல்லுங்க…

கோபால் பூர் ல இருந்து நிறைய சரக்கு வந்து அந்த சுகர் ஃபேக்டரி ல லோட் பண்றாங்க சார் ஆனால் அங்கே இருந்து எந்த பொருளும் உற்பத்தி ஆவது இல்லை ஆனால் அங்கே இருந்து தமிழ்நாட்டுக்கு லாரியில் அந்த மினிஸ்டரோடஒரு பினாமி பெயரில் குடோன் வச்சு இருக்காரு அங்கே போகுது சார்… இன்னும் முக்கியமா அதுக்கு புரோபெரா பேப்பர் மைண்டன் பண்றாங்க…

இன்பா அப்போ அந்த அஸ்கா ல எதோ விஷயம் இருக்கு 

ம்ம் ஆமா சார் நான் செய்தி சேகரிக்க போனேன் அந்த இடத்துக்கு ரொம்ப பாதுகாப்பு பண்ணி இருக்காரு அந்த மினிஸ்டர்…

ம்ம் ஓகே சார் என்று அவனிடம் சில பைல் வாங்கி கொண்டு இன்பா அவரிடம் 

சார் இன்னும் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ..

சொல்லுங்க இன்பா…

சார் இந்த “நீலா ஹெல்த் கேர் சென்டர் “இந்த வார்த்தையை கேட்டதும் ரமேஷ் முகம் மாறியது.

சார் நான் எதுவும் தவறா கேட்டு விட்டேனா…

இல்ல மிஸ்டர் இன்பா நானும் இதை பற்றி ஒரு பெரிய டாக்குமென்ட்ரி தான் ரெடி பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன் கட்டாயம் முடித்து விடுவேன்…

இன்பா ஒரு ஃபைல் எடுத்து அவரிடம் நீட்டினான். ம்ம் தேங்க்ஸ் இன்பா ஆனால் இந்த டீடெயில் ஏற்கனவே என் கிட்ட இருக்கு 

ம்ம் ஓகே சார் கொஞ்சம் எதுவும் செய்தி கிடைத்தால் என் கிட்ட சொல்லுங்க சார்…

ம்ம் கவலை பட வேண்டாம் சார் நான் கட்டாயம் சொல்றேன் என ரமேஷ் சொல்ல இன்பா அவன் வீடு நோக்கி புறப்பட்டான். 

இங்கே வருண், அதிதி திருமணம் இரண்டு மாதம் கழித்து மே 25 கல்யாணம் செய்ய முடிவு எடுத்தனர்.

ஆதி விவேகாவை வீட்டில் விட வந்து இருந்தான். வருண் கிட்ட பேசி கொண்டு இருக்க “கேஸ் ஹிஸ்டரி” என்ற கிரைம் நாவல் புத்தகம் வருண் எடுத்து புரட்டி கொண்டு இருந்தான்.

ஆதி, என்ன மாமா இப்போவே கிரைம் நாவல் படிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.. மம் ஆமா ஆதி என்னோட ஹெட் கொடுத்தார். ஒரு மிஷன் சக்சஸ் பண்ணதுக்கு இதை கேட்டு கொண்டே தண்ணீர் குடித்த விவேகாகவுக்கு புரை ஏறியது.

ஆதி உதடு கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு விவேகாவை பார்க்க, வருண் பார்த்து குடிக்க மாட்டியா உனக்கு அவ்ளோ அவசரம் என்ன… மாமா சொல்றது சரி தானே உனக்கு என்ன டி அவ்ளோ அவசரம் என்று அவன் அருகில் வந்து தலையை வருடி விட்டான். 

விவேகா கோபமாக வருனை பார்த்து நீ மெசேஜ் பண்ணும் போது உன் ஹெட் என்ன பண்ணிட்டு இருந்தான்.

வருண், ஹே விவேகா அடி வாங்க போற நீ அவரு எவ்ளோ பெரிய ஆபீசர் தெரியுமா…

ஆதி அந்த புத்தகத்தை வாங்கி புரட்டி கொண்டே அது தான் மாமா நல்லா சொல்லுங்க இவளுக்கு மரியாதையே கொடுக்க தெரியல…

அண்ணா நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு..

வருண், இதோ இந்த கேஸ் ஹிஸ்டரி நாவல் படிச்சுட்டு இருந்தாரு…

இதை கேட்டு ஆதி இன்னும் சிரித்தான். 

விவேகா, வருண் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா… அவர் உனக்கு என்ன வேலை சொன்னாலும் செய்வியா நாவல் படிக்கிற நேரத்தில் அவரே அனுப்பி இருக்கலாமே…

அவரு நமக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்காரு தெரியுமா இந்த வீடு அவருக்கு அலாட்மென்ட் ஆன கோட்ரஸ்…

அதுக்கு என்ன வேன்டுமானாலும் செய்வியா…

ஆதி சிரித்து கொண்டே மாமா சொல்றத பார்த்தால்  உன்னை சாரி எதுவும் கொடுப்பாரு போல….

இதை கேட்டு விவேகா ஆதிய அடித்தாள்.

வருண், என்ன ஆதி சொல்ற… ஒன்னும் இல்ல மாமா…

 பின்ன இன்னொரு விஷயம் நான் அவரோட dept ல தான் ஜாயின் பண்ணி இருக்கேன். அதனால் அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கணும் விவேகா ..

ஓ இது வேரையா… அப்போ அடிக்கடி மீட் பண்ணனும் போல என ஆதி சொல்ல 

ம்ம் ஆமா ஆதி அவரை பார்த்தாலே பயமா இருக்கு டா…

ஆதி,அவரே பயப்படுற ஆள் எனக்கு தெரியும் மாமா…

என்ன சொல்ற ஆதி…

அண்ணா அவன் லூசு மாதிரி எதோ சொல்றான். நீ போய் அதி கிட்ட பேசு கல்யாண பத்திரிக்கை செலக்ட் பண்றத பத்தி சொல்லிட்டு இருந்தாள். என்று கூறி கொண்டே ஆதியை அங்கு இருந்து அழைத்துச் சென்றாள். மாமா இந்த புக் நான் படித்து விட்டு தருகிறேன் என சொல்ல சொல்ல இழுத்து சென்றான். 

வருண் சரி என்று சிரித்து கொண்டே அவன் அதிதிக்கு போன் செய்தான்.

இங்கே இன்பா வீட்டிலும் பரபரப்பாக இருந்தது. சுபத்ரா – வினய் நிச்சயம் மே 24 என முடிவு செய்து இருந்தனர்.

அந்த வாரம் தான் இன்பாவை கவ்யாவின் பிறந்த நாள்  விழாவுக்கு மினிஸ்டர் சத்ய மூர்த்தி நேரில் ஸ்டேஷன் வந்து வசுமதியை அழைத்தார்.

சத்ய மூர்த்தி, மேடம் கட்டாயம் நீங்க வரனும்…

அந்த மினிஸ்டர் பார்வையில் தவறு இருப்பதை உணர்ந்து கொண்ட வசு, சார் இந்த மாதிரி பிரைவேட் பார்ட்டி க்கு எல்லாம் வர எனக்கு டைம் இல்ல இங்கே ஏகபட்ட வேலை இருக்கு 

மினிஸ்டர், எனக்கு தெரியும் மேடம் நீங்க கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இது உங்களுக்கும் ஜாஸ்தி உங்க பையனுக்கு அதை விட ஜாஸ்தி…

ம்ம் அப்புறம் என்ன சார் நீங்க போகலாம்…

இப்போது மினிஸ்டர் அவளிடம் ஒரு ஆடர் நீட்டிட அதை பார்த்து பிரித்து படித்து விட்டு வசு அவரை பார்க்க 

இப்போ நீங்க வந்து தான் ஆக வேண்டும் வசுமதி கிருஷ்ணன், என்னோட பொன்னு பிறந்த நாள் விழாவுக்காக அந்த ஃபேமஸ் மெலினா ஜார்ஜ் வராங்க அது மட்டும் இல்லாமல் இது பெரிய இடத்து விஷயம் இப்போ நீங்க வந்து தான் ஆகனும்… என்று கால் மேல் கால் போட்டு கொண்டு அவளை பார்கக

ஒரு சிறு அமைதிக்கு பின் ஓகே சார் நாங்க வருவோம் எங்க டியூட்டி அதை சரியா செய்வோம்…

மினிஸ்டர் இந்த காக்கியோட வர வேணாம் என் பொண்ணுக்கு பிடிக்காது. மப்டி ல வந்திடுங்க… என்று அவன் சொல்லி விட்டு எழ உடனே வசு ஒரு சல்யூட் செய்தாள்.

அதை அவன் கண்டு கொள்ள வில்லை சென்று விட்டான். 

வசு தன் கோபத்தை அடக்கி கொண்டு சிறிது நேரம் கழித்து இன்பாவுக்கு கால் செய்து விவரம் அனைத்தும் சொல்ல 

இன்பா, மாம் ச்சில்… சும்மா போயிட்டு வரலாம்..

உனக்கு ஒகே வா ராகவ்…

ம்ம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…

வசு, எனக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு அந்த 15 குழந்தைகள் ட்ரக் அப்பெக்ட் ஆனதுல எந்த க்லுவும் கிடைக்கல ராகவ் அந்த ப்லட் சாம்பில் எல்லாம் லேப் ல கொடுத்து இருக்கு அது விஷயமா எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு…

சரி மா , அப்போ நானும் மித்ரனும் போயிட்டு வரோம்…

ம்ம் சரி ஓகே.. வைகட்டுமா…

ம்ம் ஒரு முக்கியமான விஷயம் அந்த மினிஸ்டர் சொன்னாரு மப்டில போ…

ஏன் மா…

அவர் பொண்ணுக்கு காக்கி அலர்ஜியா என் கிட்ட தெனாவெட்டா சொல்லிட்டு போறான்…

எனக்கு அப்படியே அவனை அங்கேயே நெற்றி பொட்டுல புல்லட் இரக்கணும் போல் இருந்தது.

தன் அம்மா இது வரை  இவ்வளவு கோபமாக பேசி பார்த்தது இல்லை…

அம்மா நான் இருக்கேன்… கூல்

ம்ம் சரி ராகவ் நான் வீட்டில் வந்து உன்னை பார்க்கிறேன் என சொல்லி போன் வைத்தாள்.

அந்த நாளும் வந்தது. இந்த நாளுக்காக தான் கவ்யா காத்து கொண்டு இருந்தாள்.

ஐ ம் ஈகர்லி வெயிட்டிங் டா போலீஸ்காரா என கவ்யா தன் பிறந்த நாள் பார்ட்டிகாக தயார் ஆகி கொண்டு இருந்தாள்.

நாளை கவ்யா – இன்பா சந்திப்புக்காக காத்திருங்கள்…

தொடரும்…

 Episode 91,

 கவ்யா, ஐ ம் ஈகர்லி வெயிட்டிங் டா போலீஸ்காரா என கவ்யா தன் பிறந்த நாள் பார்ட்டிகாக தயார் ஆகி கொண்டு இருந்தாள்.

நீல வண்ண உடையில் தேவதையாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு தன் அறையில் இருந்த இன்பாவின் போட்டோவை  அவன் கன்னகுழி இருப்பதை பார்த்து 

நீ சிரிச்சு நான் ஒரு தடவை கூட பார்த்ததே இல்லை அந்த சிரிப்பு அது அந்த ட்ரக்கை விட கொஞ்சம் மம் அதை விட ஒரு டக்கிலா சாட்ஸ் அடிச்ச மாதிரி இருக்கும்…

ம்ம் சீக்கிரம் வந்திடு இன்பா டெவில்” எனக்கு நீ ஸ்லேவா இருக்கணும் உன்னோட லவ்க்கு நான் ஸ்லேவா இருக்கணும்” என்று அவன் படத்திற்க்கு முத்தம் பதிக்கும் போதே அவன் உதடுகளில் அதுவும் இன்பா கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கனவில் வாழ்ந்தாள்.

 இங்கே மித்ரனுடன் இன்பா அந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு கிளம்பினான். 

மித்ரன், இன்பா உன் காட்டில் ஒரே மான் கூட்டமா இருக்கு போல 

இன்பா அவனை முறைத்தான். 

முறைத்தால் எல்லாம் பொய் ஆகிடுமா..  இன்பா,என்னோட சிங்கம்  வீட்டில் இருப்பா இப்போ நம்ப நரிய பார்க்க போறோம்..

இப்போ நம்ப நரியை பார்க்க போறோம் ..

அப்போ நீ சும்மா தான் இருக்க போற.. 

இன்பா, இதுல என்ன வெட்கம் என்னோட டார்ஜ்லிங்கை நான் லீட் பண்ண விட்டு விடுவேன் அது ஆபீசா இருந்தாலும் சரி வீடா இருந்தாலும் சரி…

மிதரன், இன்பா நிஜமாவா இது நீ தானா அப்படி என்ன பண்ணுனா விவேகா இந்த அளவுக்கு பேசுற இப்போ நீ சொல்றத பார்த்தால் அவளுக்கு நீ அடிமை மாதிரி பேசுற…

ஆமா இதுல என்ன இருக்கு என் பேபி தான் எனக்கு எல்லாமே… சோ அவ லவ் க் கு நான் ஸ்லேவ் தான்

ம்ம் போதும் போதும் இதை என் காது கேட்க ரொம்ப கஷ்டப்படுது டா… இப்போ அந்த நரியை எப்படி சமாளிக்க போற 

வாடா பார்த்து கொள்ளலாம்… என இருவரும் டிப் டாப்பாக கிளம்பினர்.

இன்பா காக்கி பேண்ட் அந்த போலீஸ் முத்திரை பதித்த பெல்ட், வெள்ளை சட்டை முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவன் கருப்பு கண்ணாடியை போட்டு கொண்டு ஸ்டைலாக இறங்கினான்.

மித்ரன் இன்பா போல் தான் வந்து இருந்தான் ஆனால் சட்டை மட்டும் கிரே கலரில் போட்டு இருந்தான்.

உள்ளே அந்த நுழைவு வாயில் கதவுக்கு அருகில் சென்றதும் சத்ய மூர்த்தி அவனை வர வேற்றார். 

இது அபிசியலா இல்ல அன் அபிஸியலா என சத்ய மூர்த்தியை பார்த்து இன்பா கேட்டான்.

உங்களுக்கு எது பிடிக்குதோ அதை எடுத்து கொள்ளலாம் மிஸ்டர் இன்பராகவன்..

இதை கேட்டு இன்பா நான் அன் அஃபிசியல் எனக்கு ஓகே…

இதை கேட்டதும் மித்ரன், சத்ய மூர்த்தி இருவரும் திகைத்தனர். 

சத்ய மூர்த்தி சந்தோசத்துடன் மம் சரிங்க தம்பி நீங்க இப்படி சொல்லுன்வீங்க அப்படின்னு முன்னாடியே எனக்கு தெரியாமல் போச்சே வாங்க.. வாங்க என்று அழைத்தார்.

ம்ம் நானும் ரொம்ப விறப்பா சுற்றி விட்டேன் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை படுது சார்…

ம்ம் சரி தான் தம்பி என்று சத்ய மூர்த்தி புன்னகைத்து கொண்டே காவ்யா இங்கே வா மா யாரு வந்து இருக்கிறார்கள் என்று வந்து பாரு என்று அவர் சொல்ல 

கவ்யா நாநா என்னாச்சு எத்தனை முறை உங்க கிட்ட சொல்றது என் பேரு கவ்யா என்று முறைத்து கொண்டே 

அப்படி யாரு வந்து இருக்கா என்று மேலே  இருந்து கீழ அவள் இறங்கி வர

அங்கே இன்பாவை பார்த்ததும் மம் IPS சார்ஆ…

இல்ல மா இன்பராகவன் என்று சொல்ல கவ்யா இரு புருவமும் தூக்கி பார்த்தாள்.

இன்பா அவன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தான். அவளை பார்த்து மித்ரன் என்ற ஒரு குரல் ஒரு பூங்கொத்து எடுத்து வந்தான்.

அதை அவள் கைகளில் கொடுத்து மெனி போர் ஹாப்பி பர்த்டே மிஸ் கவ்யா என அவள் கைகளில் கொடுக்க முதல் முறை தன் பெயரை பிழை இல்லாமல் கூப்பிட்ட இன்பாவை அவளுக்கு மிகவும் பிடித்து போனது.

அவள் அதே திமிர் பார்வையுடன் எழன புன்னகை கொண்டே அதை வாங்கி கொண்டாள்.

இப்போது மெலினா ஜார்ஜ் அங்கே வர அந்த இடமே கலை கட்டியது. சில மீடியாக்களும் அங்கே வந்து இருந்தது. 

சத்ய மூர்த்திய ஒரு பார்வை அவள் பார்க்க உடனே இன்பா தம்பி 

ம்ம் சொல்லுங்க…

அப்படியே என் பொண்ணு கூட இந்த வீட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாமே…

ம்ம் போலாமே என எழுந்து மித்ரனுக்கு ஒரு சிறு கண் அசைவு கொடுத்து எழுந்தான்.

இன்பா, இன்டென்ஷனா அவோய்ட் பண்ணல மிஸ் கவ்யா…

ம்ம் பரவாயில்ல இருக்கட்டும் நியாபகம் இருக்கா…

நீங்க மறக்க வேண்டிய இடத்தில் இல்ல இந்த வொர்க் டென்ஷன் ல மறந்து போயிட்டேன்.

கவ்யா அவன் கண்களை உற்று பார்த்தால் அவன் உண்மையை பேசுகிறானா இவன் வாயில் இப்படியும் வார்த்தைகள் வருமா என்பது போல் இருந்தது.

ஆனால் அவளுக்கு எதோ சரியாக படவில்லை..

அவள் அறைக்கு அழைத்து சென்றாள் அங்கு அவனுடய போட்டோவை பார்த்ததும் இன்பா மனதில் இது மட்டும் பேபிக்கு தெரிஞ்சது இதை ஒரு பெரிய காரணமா வைத்து என்னை பிரேக் அப் டார்ச்ச்ர் பண்ணுவளே…

இன்பா அவன் படத்தை பார்த்து விட்டு அதை கண்டும் காணாமல் கடந்து செல்ல மம் சரியான கேடி டா நீ என்று கவ்யா மனதில் நினைத்து கொண்டாள்.

உங்க வீடு நாட் பேட் என்று சொல்லி விட்டு படிகளில் இறங்கி வந்து மித்ரன் அருகில் அமர்ந்து கொண்டான்.

என்னாச்சு மச்சி.. 

அவ பெரிய பிளான் ல இருக்கா டா.. இன்னிக்கு எதோ நடக்க போகுது… விடு மச்சி இந்த மித்ரன் இருக்க பயம் ஏன் என்று அவன் சொல்ல 

சரியாக மெலினா உள்ளே வந்து கவ்யாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல பின்னால் வினய் வந்தான்.

ஹாய் இன்பா எப்படி இருக்கீங்க …

இன்பா, ஐ திங்க் நான் உங்களை நேற்று பார்த்தேன் சரியா 

ம்ம் சரி தான்…

இன்பா, அப்போ எதுக்கு இந்த ஃபார்மலிட்டி 

இதை கேட்டு வினய் வாயை மூடி கொள்ள மித்ரன் கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கினான்.

மச்சி வேற லெவல் டா நீ 

ம்ம் கொஞ்சம் சைலன்ட்டா இரு என இன்பா கூறினான்.

இப்போது அனைவரும் கேக் வெட்ட அழைக்க கவ்யா நடுவில் ஒரு பக்கம் சத்ய மூர்த்தி, இன்னொரு பக்கம் யாரும் நிற்காமல் இருக்க இந்த முறை கவ்யா சொல்வதர்கு முன் சத்ய மூர்த்தி இன்பாவை கூப்பிட 

ம்ம் இது நான் எக்ஸ்பக்ட் பண்ணேன் என்று நினைத்து கொண்டே அவளுக்கு கொஞ்சம் இடம் விட்டு நின்று கொண்டான்.

இன்பா சுற்றி ஒரு முறை நோட்டம் விட அங்கே மீடியா இவர்கள் இருவரையும் ஜூம் செய்து புகை படங்கள் எடுத்து தள்ளின…

மெலினா இன்பா அருகில் வந்து ஹாய் மிஸ்டர் ஐ ம் மெலினா…

அவன் ஒகே என்று அவளை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை …

இப்போது கேக் வெட்டி அவள் அப்பாவுக்கு ஊட்டி விட்டு இன்பாவை பார்க்க ஐ டோண்ட் லைக் ஸ்வீட் பட் உங்களுக்கு கொடுக்கலாம்  (பேபி பிளீஸ் இது அபிசியல் என்னை மன்னித்து விடு விவேகா என மனதில் நினைத்துக் கொண்டு)என்று வெட்டி இருந்த கேக் எடுத்து அவள் வாயில் ஊட்டி விட்டான்.

சரியாக அப்போது அவனுக்கு ரமேஷ் கண்ணாவிடம் இருந்து போன் வந்தது.

கவ்யா பிளீஸ் ஒன் மிணிட் என சொல்லி அவன் கொஞ்சம் தள்ளி சென்றான்.

ம்ம் சொல்லுக ரமேஷ்

இன்பா அந்த அஸ்கா விஷயம் நான் கண்டு பிடித்து விட்டேன். 

வாட் ரியலி!

ம்ம் அந்த சத்ய மூர்த்தி ஒரு டேன்ஜெரஸ் பெல்லோ.. 

அப்படி என்ன அது சொல்லுங்க …

அது கொக்கைன் சார்..  

இதை கேட்டதும் இன்பா ஒரு நிமிடம் திகைத்தான்.

ம்ம் சரி ரமேஷ் நான் அப்புறம் கால் பன்றேன்…

ம்ம் ஓகே என வைத்து விட்டு உள்ளே செல்ல கவ்யா மயக்கும் புன்னகையுடன் இன்பா அருகில் வந்து அந்த ஜுஸ் கிளாஸ் நீட்டினாள்.

இன்பா அதை பார்க்க கவ்யா இதில் சுகர் கூட ஆட் பண்ணல உங்களுக்காக நானே செய்தேன்.

அதை வாங்கிய இன்பா மித்ரன் கைகளில் கொடுக்க கவ்யா ப்ச்சு… இது இன்பராகவனுக்கு என்று கூறினாள்.

ம்ம் ஓகே மேம் என மித்ரன் அதை இன்பாவிடம் கொடுக்க அதை வாங்கிய இன்பா ஒரு சிப் குடிக்கும் முன் அவனை சுற்றி பார்வையை சுழல விட்டான்.

சத்ய மூர்த்தி முகம் எல்லாம் அந்த ac அறையில் கூட வியர்த்து கொட்டியது. கவ்யா ஆவலுடன் இன்பாவை பார்க்க இன்பா ஒரு சிப் குடித்து விட்டு 

ம்ம் குட் என்று கடகடவென்று அதை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கவ்யாவை பார்த்து ஒன்ஸ் மோர்… என சொல்ல 

கவ்யா மம் அவ்ளோ தான்டா இனி நீ நான் ஆட்டி வைக்கும் பொம்மை என்று கூறி இப்போவே எடுத்து வருகிறேன் என சொல்லி உள்ளே செல்ல 

இன்பா ரெஸ்ட் ரூம் எங்கே….

அருகில் இருந்த பணியாள் சொல்ல நிதானமாக  ரெஸ்ட் ரூம் சென்று கதவை சாத்திய உடன் குடித்த அந்த ஜூசை அப்படியே வாமிட் செய்தான்.

மித்ரனுக்கு உள்ளே இருந்து கொண்டு சில வேலை  போனில் சொல்ல அவன் உடனே பவர் கட் செய்தான்.

இன்பா வேக வேகமாக அந்த கேப்பில் வெளியே கொஞ்சம் தூரமாக  வந்து அவன் காரில் ஏறி கொண்டான். மித்ரன் போலீஸ் ஜீப் ல வந்து இருந்தான்.

இன்பா நேராக வேக வேகமாக வீட்டுக்கு அருகில் கோட்ரஸ் வெளியே காரை நிறுத்தி அப்படியே மயக்கத்திர்க்கு சென்றான்.

மித்ரனு க்கு இன்பாவின் லைவ் லொகேஷன் காட்ட இன்னும் என்ன பிரச்சனை பவர் எப்படி கட் ஆச்சு சீக்கிரம் பண்ணுங்க பா என சொல்லி விட்டு 

சார் இதுக்கு மேல் எனக்கு இங்கே வேலை இல்ல நான் கிளம்புறேன்  என சொல்லி மித்ரன் வெளியே வர 

கவ்யா,  ஹே எங்கே போற கொஞ்சம் இங்கே  செக்யூரிட்டி க்கு ஆல் குறையுது இங்கே தானே உன்னோட சார் இருக்கிறார்.

ம்ம் ஆமா…

அப்போ கொஞ்ச நேரம் கழித்து கிளம்பு…

மித்ரன் மனதில் எல்லாம் என் நேரம் டி உனக்கு ஒரு நாள் ஜயில் தான் என வசுவுக்கு போன் செய்ய அவர் டியூட்டி ல இருப்பாங்க சுபாவுக்கு கால் செய்தான். அவள் போன் எடுக்க வில்லை அவனும் நிறைய முறை செய்து அது தோல்வியில் முடிய இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் வெண்பாவுக்கு அழைத்தான்.

ஹலோ சொல்லு டா …

ஹே நான் லொகேஷன் ஷேர் பண்றேன் நான் வர வரைக்கும் அங்கேயே இரு டி…

ஹே முழுசா சொல்லிட்டு வை டா… என சொல்வதற்குள் போன் கட் ஆனது.

மித்ரன் இன்பா லொகேஷன் ட்ராக் அனுப்ப அதை பார்த்ததும் வெண்பா விவேகாவை தன் வீட்டுக்கு வர சொன்னாள்.

இங்கே கவ்யா இன்பா வை வீடு முழுக்க தேடி களைத்து கீழ கோபத்துடன் அமர்ந்தாள்.

தொடரும்….

 Episode 92,

இன்பா ரெஸ்ட் ரூம் உள்ளே சென்றதும் சரியாக மினிஸ்டர் வீடு இருக்கும் பகுதியை கரெண்ட் கட் செய்ய சொன்னான். 

ஆம் மினிஸ்டர் வீட்டுக்கு வரும் முன்பே என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பிளான் செய்து வைத்து இருந்தான். இன்பா பதுங்குவது பாய்வதற்காக தான் ஆனால் அதற்கு சரியான தருணம் வர வேண்டும் என்று பொருமியாக இருந்தான்.

ஆனால் இன்பா நினைத்ததை விட கவ்யா மிகவும் வேறு மாதிரியாக இருந்தாள். அவள் கையை குலுக்கி வாழ்த்து சொல்ல கூடாது என்பதற்காகவே அந்த பூங்கொத்து கொடுத்தான்.

கவ்யா வெளிய வர அந்த வீடே இருளில் காட்சி அளித்தது. அப்பா என வீடே அதிரும் படி கத்தினாள்.

மினிஸ்டர், இரு மா கோபம் வேண்டாம் நான் என்ன என்று பார்க்கிறேன் என போன் செய்தான்.

இவள் இன்பா எங்கே என்று தேட அவன் ரெஸ்ட் ரூம் சென்று இருப்பதாக தெரிய இந்த இருளும் சரி தான் என அவன் சென்ற ரூமுக்கு அருகில் சிறிது நேரம் காத்திருந்தாள்.

இந்நேரம் வேலை செய்ய ஆரம்பித்து இருக்குமே அவன் மயக்கதிற்க்கு சென்று இருப்பான் என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.

இன்னும் வெளியே வர வில்லை என்று தெரிந்து கதவை திறக்க போக அப்போது தான் கதவு வெளியே பூட்ட பட்டு இருப்பது தெரிய அப்பா!… என்று வீடே அதிரும் படி ஒரு பைத்தியகாரி போல் கத்தினாள்.

சத்ய மூர்த்தி, மித்ரன், வினய் வேக வேகமாக மேலே சென்றனர். Ups, ஜென்ட்ரேட்டர் என்னாச்சு சீக்கிரம் எதுவும் போடுங்க… சத்ய மூர்த்தி சொல்ல ஜென்ட்ரேட்டர் போட்டவுடன் கரென்ட் வந்து ஒரு சில நொடிகள் மீண்டும் ஆஃப் ஆனது….

இப்போ என்னாச்சு…

அனைவரும் தலை கவில்க்க கவ்யா, அப்பா ips ஆ காணோம் எங்கே போனான்…

இதை கேட்டு மித்ரநுக்கி கோபம் வந்தது. சார் நான் ட்ரை பண்றேன் என மித்ரன் கால் செய்தான். 

மித்ரன், சார் இந்த கரண்ட் கட்ட கிளியர் பண்ண போயிருக்காரு வித் இன் டூ மினிட்ஸ் ல கரண்ட் வந்திடும் 

அவன் சொன்னது போலவே இரண்டு நொடிகளில் கரண்ட் வர 

சார் செஞ்சுட்டாரு மேடம்…

கவ்யா அவனை முறைக்க..

இல்ல பிராப்ளம் சரி செஞ்சிட்டாரு அதை சொன்னேன் மேடம்…

சிறிது நேரம் கழித்து மித்ரன், சார் நான் கிளம்புறேன் என சொல்லி அவன் செல்ல…

 கவ்யா, ஹே எங்கே டா போற இங்கே நிறைய வேலை இருக்கு 

மித்ரன் அவள் மரியாதை இல்லாமல் கூப்பிட்டதும் கோபம் வர உடனே மனதில் உனக்கு இருக்கு டி முதலில் உங்க அப்பன் கம்பி எண்ணுவான் அடுத்து நீ என மனதில் நினைத்துக் கொண்டு அங்கேயே இருந்தான்.

இங்கே வெண்பா மித்ரன் அனுப்பிய ட்ராக் பார்க்க அது இன்பாவின் போன் லொகேஷன் என்று தெரிந்து கொண்டாள்.

உடனே விவேகாவுக்கு அழைத்தாள். ஹே சீக்கிரம் வீட்டுக்கு வா…

விவேகா, என்னாச்சு டி என்று கேட்க

வெண்பா, நீ உடனே வா சொல்ல விவேகா அவள் சொன்னது போல் வந்தாள். 

வெண்பா முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்து என்னாச்சு டி உன் முகமே சரி இல்ல…

நீ வா அதை அப்புறம் சொல்றேன்.அவள் அம்மாவிடம் சொல்லி விட்டு இருவரும் அந்த லொகேஷன் காட்டிய திசையில் செல்ல அது போலீஸ் கிரவுண்ட அதற்கு அருகில் கார் நின்று கொண்டு இருக்க 

விவேகா, ஹே என்னாச்சு இது ராகவ் கார் மாதிரி இருக்கு என்று சில நொடிகளில் அவள் முகத்தில் கவலை அப்பி கொண்டது. இதயம் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவள் கண்களில் கண்ணீர் வர வெண்பா, லூசு இப்போ எதுக்கு அழற அண்ணா நல்லா தான் இருக்கான்…

அப்போ எதுக்கு இங்கே கூட்டி வந்த என்று வேக வேகமாக காருக்கு அருகில் ஓடினாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்க சிறிது நேரம் கார் கதவுகள் திறக்கவே இல்லை…

விவேகா அழுது கொண்டே ராகவ் ராகவ் பிளீஸ் கதவை திற என்று சொல்ல 

வெண்பா ஒரு பக்கம் கதவை தட்டினாள். கதவு திறக்கவே இல்லை. 

விவேகா என்னாச்சு டி சொல்லு டி என அழுது கொண்டே கேட்க 

எனக்கே தெரியாது இந்த லொகேஷன் மித்ரன் ஷேர் பண்ணான் அவன் வரவரைக்கும் இங்கேயே இருக்க சொன்னான் வேற எதுவும் சொல்லல…

விவேகா அழுது கொண்டே மீண்டும் கதவுகளை தட்டி கொண்டே இருக்க இப்போது ஓட்டுநர் இருக்கை கதவு திறந்தது.

வேக வேகமாக அவள் அந்த பக்கம் சென்று பார்க்க இன்பா தலை ஸ்டேரிங் மீது சாய்ந்து ஹாரன் சத்தம் கேட்டு கொண்டே இருக்க வெண்பா ஓடி வந்து இருவரும் அவனை அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தனர்.

அவன் சுய நினைவில் இல்லை என்று தெரிந்தது. விவேகா காரின் கதவுகளை திறந்து விட்டாள். ஹே கொஞ்சம் தண்ணி வேணும் டி என கண்களில் ஒரு பக்கம் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. 

வெண்பா, மம் சரி நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன் நீ இப்போ அழாத டி அண்ணா நல்லா இருக்காங்க…

வெண்பா சென்றதும் விவேகா இன்பாவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதாள். ராகவ். .

ராகவ்…

சார்…

இன்பா … என்று சொல்லி கொண்டே அவன் கன்னத்தை தட்டினாள்.

இன்பா இப்போது முனக ஆரம்பித்தான். ஹே ராகவ்… இங்கே பாரு…

ராகவ் என்னை பாரு டா…

நான் விவேகா டா பிளீஸ் கண்ணை திற என்னாச்சு உனக்கு என அவள் அழுது கொண்டே கேட்க…

அவன் இறுக்கி மூடி இருந்த கண்களை திறந்தான். விவேகா முகம் கொஞ்சம் மங்கலாக தெரிய.

ஹே பேபி…ஐ லவ் யூ .. என்று கண்கள் எல்லாம் சுழன்று போனலும் கூட விவேகாவின் பிரத்யேக வாசனையை உணர்ந்து கொண்டான்.

அவன் கண் விழித்த அந்த நொடி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு உடல்கள் நடுங்க அவள் அழுதாள்.

மிசஸ் ராகவ் எதுக்கு டி அழற… என் டார்ஜ்.. என்னோட டார்ஜலிங். 

லவ் யூ…

லவ் யூ டூ மை டார்ஜ்.. லிங்…

இதை கேட்டு அவளுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என ஒன்றும் புரியவில்லை..

ராகவ் என்னாச்சு உனக்கு ஆர் யூ ட்ரன்க்..

என்ன டி என்னை எவ்ளோ சீப்பா நினைத்து விட்டாய்…

அப்புறம் என்னாச்சு உனக்கு 

ஒரு ஜுஸ் அவ்ளோ தான் இப்போ நான் உன் கிட்ட இருக்கேன்.

ஐ வான்ட் கிஸ் யூ, ஐ நீட் யூ பேபி என்று அவளை இழுத்து இதழில் முத்தமிட்டான்.

ஹே ராகவ் விடு…அவளை விட்டவன் உடனே மம் சரி அப்போ நீ கொடு இப்போவே..டைம் ஸ்டார்ட் நவ்.. 

இப்போ கொடு இல்ல நான் தருவேன் என்று அவன் அவளை கேட்டுக் கொண்டே இருந்தான்.

ம்ம் இப்போ தரல உன்னை என்று அவன் அவளை இழுக்க இரு இரு நான் கிஸ் பண்றேன் என்று அவனை சமாளிக்க முடியாமல் கண்ணத்தில் முத்தம் கொடுக்க

அங்கே வேணாம் இங்க கொடு என்று அவள் இதழ் சிறை பிடித்து சிறிது நேரம் கழித்து விட்டான்.

சாரி பேபி… என் கிட்ட பேசு பேசிகிட்டே இரு டி லவ் யூ சொல்லு  என்று அவள் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டான்.

விவேகாவுக்கு ஏனோ இன்று இன்பாவின் தொடுதல் அவளுக்கு உள்ளுக்குள் மிகவும் அவஸ்த்தையாக இருந்தது. அவனை விட்டு செல்லவும் முடியாமல் தவித்தாள்.

பேபி பிளீஸ்  சாரி தெரியாமல் உனக்கு தெரியாமல் நான் ஊட்டி விட்டு விட்டேன்.

நீ லவ் யூ சொல்லு…

யாருக்கு ஊட்டின…

அது யாருக்கு தெரியல…

ஹே உண்மைய சொல்லு டா… 

நீ என்னை விட்டு போக மாட்ட தானே…

ம்ம் போயிடுவேன்…

அப்போ சொல்ல மாட்டேன்…

நான் லவ் யூ சொல்லனுமா வேணாமா…

ம்ம் சொல்லு சொல்லு…

அது தான் என்னோட ஒரு முக்கியமான கோல் சொல்லு டி…

அப்போ நீ யாருக்கு ஊட்டி விட்ட…

அந்த ஜங்கிள் fox க்கு நரி க்கு…

 அது யாரு…

நீ லவ் யூ சொல்லு…

ஹே பெயர் சொல்லு யாரு அது…

நீ லவ் சொல்லு … 

லவ் யூ சொல்லடுமா இல்ல கிஸ் கொடுக்கட்டுமா…

இன்பா, கண்களை மூடி கொண்டே நீ லவ் யூ சொல்லு…

இதை கேட்டதும் விவேகா அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.

இல்ல ராகவ் நீ சுய நினைவில் இல்லை சோ கிஸ் வாங்கிக்கோ என்று அவளின் முதல் இதழ் முத்தத்தை கொடுத்தாள். அவன் அதை விட வில்லை அவளாகவே முன் வந்து கொடுத்து இருக்கிறாள். கண்களை மூடிக் கொண்டு அவனுள் கரைந்து போனாள். கஷ்ட பட்டு அவனுள் இருந்து மீள முடியாமல் பிரிந்து இன்பாவை அணைத்து கொண்டாள்.

அவள் கழுத்தில் சயிந்து கொண்டவன் பேபி எப்போ மிசஸ் ராகவ்  ஆக போற  என்னால் என்னை கன்ட்ரோல் கஷ்டமா இருக்கு டி ஐ நீட் யூ… விவேகா அவனை திசை திருப்ப 

அது என்ன மிசஸ் ராகவ்?…

அது என்னோட காதல் பொண்டாட்டி..

அப்போ மிசஸ் இன்பா?

அது கோபமான இன்பாவொட பொண்டாட்டி 

விவேகா சிரித்து கொண்டே அப்போ  மிசஸ் இன்பராகவன்..

ம்ம் அது இந்த உலகத்துக்கு என்னோட பொண்டாட்டி?…

ம்ம் எவ்ளோ வாய் ராகவ்  நீ 

சாரி பேபி யூ ஃபர் கிவ் மீ… 

அப்படி அவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டிய நீ…  

இல்ல அந்த fox தான் எல்லார்த்துகும் காரணம் என்று இன்பா உளறி கொண்டு இருக்கும் போதே வெண்பா ஓடி வந்தாள்.

வெண்பா, க்கும்…. உன் கொஞ்சல் கொஞ்சம் ஒத்தி வை மா…

விவேகா, ஹே அது எல்லாம் ஒன்னும் இல்ல…

இப்பொழுது இன்பாவின் போன் அழைக்க இருவரும் என்ன செய்ய என்று பார்த்தனர்.

பின் நின்று போனது, மீண்டும் அடிக்க அது ஆஃபீஸ் நம்பர் வெண்பா…

ஹே கொடு நான் அட்டென் பண்றேன்… என்று அதை அட்டென்ட் செய்ய விவேகா ஹே ஸ்பீக்கர் ல போடு…

 கவ்யா,ஹலோ ips எங்கே டா போனா… நீ என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது…

நீ எனக்கு தான்… 

உன்னை சும்மா விட மாட்டேன்… நீயா என்னை தேடி வருவ…

இதை கேட்டதும் வெண்பா விவேகாவை பார்க்க அவள் ?

தொடரும்….

 Episode 93,

வெண்பா தண்ணிர் எடுத்து வந்தவுடன் காரின் உள்ளே விவேகா இன்பாவுக்கு கொடுக்க செல்லும் நேரம் சரியாக போன் அடித்தது.

ஹே ஆபீஸ் மொபைல் ல இருந்து போன் வருது டி. ம்ம் இப்போ என்ன பண்றது. வெண்பா அட்டென் செய்ய போகும் நேரம் போன் கட் ஆனது.

மீண்டும் போன் அதே எண்ணில் இருந்து அழைக்க பட இந்த முறை விவேகா, ஹே அட்டென்ட் பண்ணு என்று சொல்லி ஸ்பீக்கர் தட்டி விட அந்த பக்கம் கவ்யா, “ஹே என்னை விட்டு போனால் உன்னை விட்டு விடுவேனா! நீ எனக்கு வேண்டும். உன்னை நான் சும்மா விட மாட்டேன். வெயிட் அண்ட் வாச்.” என்று சொன்னவுடன் போன் கட் ஆனது.

வெண்பா விவேகா முகத்தை பார்க்க அவள் முகத்தில் கோபம், வெறுப்பு, பொறாமை என உணர்வுகளின் குவியல் மொத்தமும் இருக்க, உடனே இன்பாவின் அருகில் இருந்து வேக வேகமாக எழுந்து கொண்டாள்.

இன்பாவை பார்க்க, பார்க்க கோபம் கோபமாக வந்தது. காரில் இருந்து வெளியே இறங்கிய விவேகா வேக வேகமாக மூச்சு இழுத்து விட்டாள். எவ்ளோ திமிர் அவளுக்கு இவன் என்ன செய்து விட்டு வந்து இருக்கிறான். நான் ஒரு பைத்தியகாரி போல் துடித்து கொண்டு இருக்கிறேன். ஆனால் இவன் என்று இன்பாவுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் இவள் இன்பாவை பற்றி தவறாக  நினைத்து கொண்டே வேக வேகமாக வீட்டை நோக்கி நடக்க போக 

வெண்பா,” ஹே என்ன டி என்னை மட்டும் தனியா விட்டு போற யாரோ ஒருத்தி போன் பன்னதுக்கு அண்ணா என்ன பண்ணுவான் நீ வாடி பிளீஸ்.” 

அவன் என்னை நல்லா ஏமாற்றுகிறான். நான் தான் அவனை நினைத்து கொண்டு இருக்கிறேன். எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணி என்னோட கொள்கையில் இருந்து மாறமல் நானும் ஒழுக்கமா தான் இருந்தேன். ஆனால் என்னைக்கு இவன பார்த்தேனோ. அன்னிக்கே என்னோட எல்லா பிஹவியரும் மாறி போச்சு. என்று வேக மூச்சு எடுக்க கண்களில் ஒரு பக்கம் கண்ணீர் ஓடி கொண்டே இருக்க மூச்சு விடாமல் பேசினாள்.

இனி அவனுக்கும் ஸாரி அவருக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை என்று அவள் சொல்லி கிளம்பும் நேரம் மித்ரன் வேக வேகமாக மூச்சு வாங்க வந்தான்.

விவேகா அவனையும் முறைத்து விட்டு சென்று விட்டாள். மித்ரன், ஹே எதுக்கு அவ என்னை முறைத்து பார்த்து கொண்டே போறா..

வெண்பா நடந்த அனைத்தும் கூற அவன், இன்பா நாளைக்கு நீ எப்படி இவளை சமாளிக்க போற நீ ரொம்ப பாவம் மச்சி என்று சொல்லி விட்டு இன்பாவின் காரை நிறுத்தி விட்டு அவனை வீட்டில் போய் சுபா விடம் சொல்லி வசு மேடம் க்கு தெரியாமல் பார்த்து கொள்ளுமாறு சொல்லி சென்று விட்டான்.

பேபி சாரி டி… பேபி ஃபர் கிவ் மீ.. என இன்பா உளறி கொண்டே இருக்க சுபா மனதில் ஒரே குழப்பம் யாரை சொல்றான். என யோசித்து கொண்டே அவனை படுக்க வைத்து விட்டு  ac அவனுக்கு உரிய டெம்பர் வைத்து விட்டு அவள் சென்று விட்டாள்.

வீட்டுக்கு வந்த விவேகா நேராக போய் குளியலறை புகுது கொண்டாள் அங்கேயே சிறிது நேரம் அழுது ஒயிந்து அவனை தூக்கி எறிய முயற்சி செய்து கொண்டு இருக்க அவன் பேசிய காதல் மொழிகள் இவளுக்காக செய்த பணிவிடை இது மட்டுமே நினைவில் திரும்ப திரும்ப வந்து கொண்டு இருந்தது.

நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்னை விட்டு போ.. “நீ எனக்கு “என்று நிறுத்தியவள் நான் உனக்கு வேண்டாம். என்று சொல்லி வேண்டும் என்றே இரவு நேரத்தில் தலைக்கு குளித்து விட்டு அப்படியே சிறிது நேரம் இருந்தவள் அம்மா கேட்க கூடாது என்பதற்காக கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல் காலேஜ் சென்றாள். ஆனால் ஈவ்னிங்குள்ள ஃபீவர் வர மாதிரி சிம்டம் இருக்க அவள் லீவு போட்டு ரெஸ்ட் எடுக்காமல் காலேஜ் சென்றாள். 

ஆம் இந்த வருடம் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடங்க போகிறது பிராக்டிகல் எல்லாம் நடை பெற்று கொண்டு இருக்க அவள் காலேஜ் சென்றாள்.

ஆதி அவள் வந்ததும் விவேகா முக மாறுதலை கவனித்து விட்டு ஹே தேன் மிட்டாய் என்னாச்சு முகம் எல்லாம் வாடி போய் இருக்கு..

அதுவா நான் என்று அழுது கொண்டே அவன் மேல் சாய்ந்து கொண்டாள். ஹே என்னாச்சு செல்லம் என்று ஆதி கொஞ்சி சமாதானம் செய்யும்பொழுது வெண்பா உள்ளே வந்தாள்.

ஆதி தோளில்  அவள் சாய்ந்து இருப்பதை பார்த்து வெண்பா மனம் நான் எப்போ அவன் தோளில் சாய்ந்து கொள்வது என்று மட்டும் தோன்றியது வேறு எதுவும் நினைக்க வில்லை என்பது பொய் கொஞ்சம் பொறாமை வேறு ஒன்றும் இல்லை.

ஹே முதலில் உங்க நாடகத்தை கொஞ்சம் நிறுத்துங்க என்னால இதை எல்லாம் கண்ணில் பார்க்க முடிய வில்லை. ஆதி அவளை ஒரு நிமிடம் பார்த்து அவளை மனதுக்குள் நிரப்பி கொண்டான்.

பின் எப்பொதும் போல் இயல்பாக என்னாச்சு என் தேன் மிட்டாய் கஷ்ட படுற மாதிரி உன் அண்ணா என்ன செய்தாரு…

வெண்பா எல்லாம் சொல்லி முடிக்க இதை கேட்டு ஆதிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வெண்பா, மம்ம் பதில் சொல்லுங்க ஆதி ஏன் இப்போ உங்க முகம் இப்படி போகுது உங்களுக்கு கூட இதே பிரச்சனை தானே என்று இரு புருவமும் தூக்கி கேட்க, 

விவேகா ஆதியின் முகத்தை பார்த்து அவ என்ன சொல்றா உனக்கு என்ன பிரச்சனை..

ஆதி, ஒன்னும் இல்ல செல்லம் அவ ஒரு மென்டல் இப்போ டிரன்சிசன் ஸ்டேஜ் ல சுத்திட்டு இருக்கா.. நீ இன்னிக்கி நம்ப வீட்டுக்கு வந்திடு உனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் …

வெண்பா, ஹே என்ன டா பண்ற.

நான் என்ன பண்ணேன்.

அவளை சமாதானம் பண்ணி எங்க அண்ணாவுக்கு ஃபேவரா பேசிவ அப்டின்னு பார்த்தால் நீ எங்க அண்ணாவுக்கு அப்போஸிட்டா பூஸ்ட் கொடுக்குற..

விவேகா, ஆதி அவளை போக சொல்லு எனக்கு அழுகை அழுகையாக வருது…

ஹே போ.. என் செல்லம் அழுது…

வெண்பா, மம் போய் பிளே ஸ்கூல் ல சேர்த்து விட்டு” உருளை கிழங்கு செல்ல குட்டி எங்க போச்சு, கத்தரிக்காய்…”அப்டின்னு பாட்டு பாடி அவளை தூங்க வை போ, நீங்க ரெண்டு பேரும் அதுக்கு தான் லாயக்கு…

வெண்பா என்று இருவரும் கத்த அவள் அய்யோ நான் போறேன் பா என்று போகும் போது ஆதியை முறைத்து கொண்டே சென்று விட்டாள் இதுவும் ஒரு வகை காதல் தான் 

இங்கே இன்பா எழ அவன் முன் மித்ரன் டிப் டாப்பாக காக்கி உடையில் ஸ்டேஷன் செல்ல தயாராக இருந்தான்.

குட் மா்னிங் இன்பா…

அவன் ஒரு பில்லவ எடுத்து அவன் மேல் எறிந்தான்.

மித்ரன், மம் இதை விட ஒரு அட்டம் பாம் பிஸ்ஸன் ஆகி நேத்தே வெடித்து விட்டது. இன்னொன்று ஹைடிரஜன் பாம் ஃபயூசன் ஆகி அதுவும் நேத்து வெடித்து விட்டது.

என்ன டா காலையில பிசிக்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்ட போய் ஸ்கூல் ஜாயின் பண்ணிக்கோ..

ம்ம் சொல்லுவ டா அங்கே உன்னோட சிங்கம் இனி உன் பக்கமே வர மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு காலேஜ் போயிட்டா..

வாட் ?என்னடா சொல்ற நேற்று என்னாச்சி?

மித்ரன் கவ்யா அவனுக்கு போன் செய்ததை பற்றி கூற

இன்பா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான். ஹே என்னாச்சு இன்பா இப்போ ஏன் எதுவும் பேச மாட்டிங்குற எதாவது சொல்லு.

அவன் தலையை கோதி கொண்டே அவளை எப்படி சமாதானம் படுத்துவது அப்டின்னு யோசிச்சுட்டு இருக்கேன் டா.

இன்பா, மித்ரன் அந்த நரி என்னை பற்றி என்ன சொன்னா. அப்படியே சொல்லிட்டாளா!

ம்ம் நீ அவளுக்கு வேணுமா.  அந்த கவ்யா உன்னை சும்மா விட மட்டாளாம்.

இவளோ தான் டா வெண்பா என் கிட்ட சொன்னா.. என்று சொல்லி கொண்டே இன்பாவை பார்க்க 

அப்போது அங்கே கதவு தட்டும் சத்தம் கேட்க மித்ரன் கதவை திறந்தான். 

சுபா இன்பாவிடம், யாரு டா பேபி? எந்த பேபி, ஹான் அமுல் பேபி அடி வாங்க போற. அந்த மினிஸ்டர் பொன்னு தான் உன்னோட பேபியா?

என்ன சொல்ற சுபா. ஹே நியூஸ் பேப்பர், யூ ட்யூப் ல எல்லாம் நீ அந்த பொண்ணுக்கு ஊட்டி விட்ட சீன் தான் ஓடிட்டு இருக்கு…

மித்ரன் என்ன இன்பா இவ எக்ஸ்ட்ரீம் ல போயிட்டு இருக்கா…

இன்பா வேக வேகமாக அவன் போன் எடுத்து பார்க்க சில நண்பர்கள் கிட்ட இருந்து செய்திகள், தவற விட்ட அழைப்புகள் இருக்க அப்படியே செய்தி வலைதளபக்கம் செல்ல.

அதில் சில எடிட்டிங் வேலை பார்த்து போட்டு இன்பா கவ்யாவுக்கு ஊட்டி விடுவது பூங்கொத்து கொடுப்பது எல்லாம் போட்டு இருந்தனர். 

இன்பா, சுபா டோண்ட் திங்க் ராங் இவ ஒரு நரி சுபா ஐ ஹேட் ஹர். பிளீஸ் ட்ரை டூ அண்டர் ஸ்டண்ட்..

சுபா, சரி நான் உன்னை நம்புகிறேன். தேங்க்ஸ் அக்கா. ஒரு நிமிடம். என்ன சுபா அந்த பேபி யாரு? அது வந்து ஒரு குட்டி பொன்னு..

மித்ரன் இதை கேட்டு அதிர்ச்சியில் பார்க்க இன்பா, சொல்லு மித்ரன் அவ குட்டி பொன்னு தானே.. மம் மம் ஹான் ஆமா சுபா அவ குட்டி பொன்னு தான் ஆனால் ஒரு அடோம் பாம்க்கு சமம்.

சுபா யோசிப்பதற்குள் இன்பா, சரி சரி நீ போ நான் கிளம்ப டைம் ஆகி விட்டது. ஹே இரு டா உன் கிட்ட அக்கா எனக்கு டைம் ஆச்சு நீ போ…என்று அவளை அனுப்பி கதவை சாத்திவிட்டு வந்தான். 

மித்ரன் அந்த போனில் உள்ள செய்தியை பார்த்து கொண்டு இருக்க இன்பா நிதானமாக குளித்து முடித்து காக்கி உடையில் வெளியே வந்தான்.

மித்ரன், சரி கிலம்பலாம் டா..

ம்ம்…

சரி இப்போ எங்கே போறோம். காலேஜ் தானே.

இன்பா, இல்ல ஸ்டேஷன் போகனும்

அப்போ விவேகா…

கண்டிப்பா இப்போ அவ என் மேல் செம்ம டென்ஷனா இருப்பா இப்போ போனால் நான் ஃபினிஸ் சோ அவளை ஈவ்னிங் எப்படியும் சமாதானம் பண்ணிடுவேன்

உனன்னோட ராஜ தந்திரம் எப்படி வேலை செய்கிறது.  என்று பார்க்கலாம்

தொடரும்..

 Episode 94,

இங்கே காலேஜ் ல விவேகா மட்டும் இன்பவின் மேல் கோபமாக இல்லை அந்த இனியாளும் தான் அவள் மனதில் இந்த கவ்யாவை பற்றி புலம்பி தள்ளினாள்.

மாணவர்கள் அனைவரும் வர சிவா செய்தி தாளில் இன்பா, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட புகை படத்தை ஆதியிடம் காட்டிட

ஆதி, ஏன் டா சிவா ஏற்கனவே விவி கோபமா இருக்கா. நீ இன்னும் டெம்ப்ட் பண்ணி விடற.

சிவா, ஆதி சத்தியமா எனக்கு தெரியாது மச்சி அவ கிட்ட சார் சொல்லிட்டு போகலயா…

விவேகா, ஹே சிவா என் கிட்ட கல் அடி வாங்காத பேசாம போயிடு.

சிவா, சரி ஸாரி விடு மா நம்ப ரீவெச் எடுப்போம் நீ கவலை படாத..

சதீஷ் cs விவேகாவை பார்க்க வந்தான் என்ன டார்லிங் உன் முகமே சரி இல்லை. 

அது ஒன்னும் இல்ல சதீஷ் லைட்டா தலை வலி 

ஆதி அவனை பார்த்து முறைக்க இருவரும் பார்வையில் முறைத்து கொண்டனர். 

சதீஷ், நம்ப இன்டர்வல புட் கோர்ட் போலாம் நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்.

ம்ம் ஓகே இப்போ கிளாஸ் போ..

ம்ம் ஓகே டார்லிங்..

ஆதி இப்போது விவெகாவிடம், ஹே அவன் எதுக்கு உன் கிட்ட வந்து பேசறான் இனி அவன் இங்கே கிளாஸ் பக்கம் வர கூடாது. 

விவேகா, ஏன் என்னாச்சு அவன் ராட்ச்சி கிட்ட பேசினால் தான் நீ கோப படனும் சதீஷ பார்த்து நீ ஏன் கோப படுர.

ஆதி, அவன் என்னோட இடத்தை பறிக்க வந்து இருப்பது பொல் எனக்கு தோணுது..

விவேகா, ஆதி நீ என்ன லூசா டா உன்னோட இடத்தை யாரு பரிப்பா சொல்லு நீ என்னோட மாமன் மகன் யாராவது இதை மாற்ற முடியுமா.

அது எப்படி இருந்தாலும் நீ இப்போ இன்னிக்கு அவன் கூட புட் கோர்ட் போக கூடாது. புரியுதா

ம்ம் அப்போ நீ கூட்டிடு போ 

ம்ம் சரி நீ, நானு ,லிதி மூன்று பேரும் போலாம் 

ஹே நானு எங்கே போறீங்க என்று சொல்லி கொண்டே சிவா வர 

ஹே உன்னை ஆதி அவனை எதுவும் செய் என்று சொல்ல 

சாரி விவேகா நான் தெரிஞ்சு ஸாரி ஸாரி தெரியாமல் சொல்லி விட்டேன் என்று சொல்ல அவள் முறைத்து கொண்டே கீழ குனிந்து இன்பாவை நினைத்து அழுதாள்.

மதியம் ஆக ஆக ஃபீவர் அதிகமாக அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். காலேஜ் முடிந்தது ஆதியுடன் நடந்து அவள் பஸ் செல்ல

வெண்பா, இப்போ முடிவா சொல்லு வர முடியுமா! முடியாதா!

என்னால முடியாது நீ தயவு செய்து போ உன் கூட இருக்க எல்லாம் ஒரு சூனியம் அப்புறம் என்னை வசியம் செய்து விடுவீர்கள் போதும் இதுக்கு மேல் என்னால் முடியாது.

வெண்பா ஆதியை பார்த்து கொண்டே அதை நான் தான் டி சொல்லணும் அப்படியே ஒண்ணுமே தெரியாத மாதிரி முகத்தை வச்சுகிட்டு மயக்குர ஆள் தானே நீங்க எல்லாம் ஓவரா ஆட வேண்டாம்.

ஆதி உள்ளுக்குள் சிரித்து கொண்டே ஹே என்ன… என முறைக்க

நான் உன்னை சொன்னேனா… உங்க வேலைய பாருங்க மிஸ்டர் ஆதித்யா 

விவேகா, யாரு நானா… நான் தான் அவன் பின்னாடி சுத்தினெனா.. ஒழுங்கா ஓடி விடு .. 

ஆதி, விவேகா இருவரும் பஸ் அருகில் வர அவள் பஸ் ல ஏறி வழக்கமாக அமரும் இடத்தில அமர்ந்து கொண்டாள்.

ஆதி, வெண்பா நீ போ அவ கொஞ்சம் அப்செட்டா இருக்கா நான் பேசி பார்க்கிறேன். 

வெண்பா, சரி நான் போகட்டுமா.. ஆதி உதட்டுக்குள் சிரித்து கொண்டே ம்ம் போ மா… 

வெண்பா அவனை தேவையான அளவு சைட் அடித்து விட்டு சென்றாள்.

ஆதி உள்ளுக்குள் சிரித்து கொண்டே மேலே ஏறினான்.

விவேகா,ஹே இங்கே ஒரே லவ் பேர்ட்ஸ் ஆ இருக்கு மோரட்டு சிங்கிள் பஸ் அப்டின்னு எதாச்சும்  விட்டால் நல்லா இருக்கும்.

ஆதி முறைத்து கொண்டே நிச்சயமா அதுல நீ போக மாட்ட..  விவேகா அவனை பார்த்து உதட்டை சுளிக்க

ஹே போடி…

ஹே போடா..நான் மாமச்சி கிட்ட உன்னை சொல்லட்டுமா..

ஆதி, என்ன சொல்லுவ..

விவேகா , அழுவது போல் முகம் வைத்து கொண்டு மமாச்சி ஆதிக்கு என்னை பிடிக்கல அவன் வேற ஒரு பொண்ணை… என்று நிறுத்தி பார்க்க 

ஆதி, மம் சொல்லு டி இதை நான் அப்படியே போய் உங்க அவர் கிட்ட சொன்னேன் வை இப்போ லைவா உன்னை என்று அவன் எதோ சொல்ல வர உடனே அவள் காதை பொத்தி கொண்டாள்.

ஹே மண்டு  உன்னை லைவா தூக்கி இருப்பாரு..

விவேகா, பிளீஸ் ஆதி ஐ ஹெட் ஹிம் அவனை பற்றி பேசாதே என்று சொல்லி அவள் சீட்டில் சயுந்து கொண்டாள்.

ஆதி பஸ் ஒரு இடத்தில் வளைந்து செல்லும் வெண்பா பஸ் நேராக செல்லும்

இன்று ஆதியின் பஸ்க்கு  பின்னால் வெண்பா பஸ் இருப்பதால் அந்த வளைவில் இரு பஸ்களும் கடக்க வெண்பா அவனை எதிர் பார்த்து ஜன்னல் ஓரம் பார்க்க

விவேகா, ஹே உன் சைட்டு உனக்கு வெயிட்டிங் கொஞ்சம் பார்த்து வை 

விவேகா! என்று அவன் அதட்டினாலும் கூட 

 ஆதியின் கைகள் அசைக்க வில்லை, அதற்கு பதிலாக அவன் தலையை கோதி கொண்டே ஒரு பார்வை ஆனால் வெண்பாவை பார்த்து கண்கள் அசைந்தது. உதடுகளில் ஒரு புன்னகை இல்லை அதற்கு பதிலாக  மென்னகை மட்டும் சிந்த இவள் ஏக்கத்தோடு ரசித்து கொண்டே அந்த வளைவு முடியும் வரை இவள் வளைந்தாள்.

ஆனால் ஆதி பார்த்தது ஒரு நிமிடம் தான் வெண்பா தான் மீண்டும் பார்ப்பானோ என்று நினைத்து திரும்பி அவனை விட அவன் பஸ் எண்ணை B 75 யைப் பார்த்து மகிழ்ந்தாள்.

B75 … B75…. மேஜிக் நம்பர்ஸ் என்று ரசித்து கொண்டாள்.

அப்படியே ஆதிமயமாக நினைத்து கொண்டே வெண்பா எப்படி பஸ்ல இருந்து இறங்கினாள் என்று தெரிய வில்லை. புன்னகை பூக்க அவள் யாரையும் கண்டு கொள்ளாமல் நடந்து வர

வெண்பா..  என்று ஒரு அழைப்பு இப்போது நிஜ உலகுக்கு வந்தாள். 

அது வேறு யாரும் இல்லை மித்ரன் தான் என்னடி முகத்தில் எக்க சக்கமா பல்ப் எரியுது அது தான் நீ வந்துட்டியே இனி எல்லாம் அணைந்து போச்சு என்று சொல்லி கொண்டே இருக்க இன்பா மித்ரன் அருகில் வந்தான். 

வெண்பாமா எங்கே அவளை காணோம்.. உன் கூட தானே வருவா..

மித்ரன், எங்கே சிங்கத்தை காணோம்

 சிங்கத்துக்கு காய்ச்சல் அதனால் அந்த ஆதி அமேசான் அவளை அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டான்.

நான் சொன்னேன் எனக்கு இன்பா அப்டின்னு ஒரு வெட்னரி டாக்டர் தெரியும் வாடி போலாம் அப்டின்னு கூப்பிட்டேன். 

எனக்கு அமேசான் போனால் நான் சரி ஆகிடுவேன் அப்டின்னு சொல்லிட்டா அண்ணா என வெண்பா சொல்ல மித்ரன் உதடு மடித்து சிரித்தான்.

இன்பா இப்போது எந்த உணர்ச்சியும் காட்டாமல் நிற்க்க வெண்பா, அண்ணா நீங்க கேக் ஊட்டியத எல்லாம் அவ நியூஸ் பேப்பர், யூ ட்யூப் ல பார்த்து விட்டாள்.

சரி மித்ரன் நீ இப்போ சிரிச்சதுக்கு நைட் ரெயில்வே டுட்டி போயிடு என்று சொல்லி அவன் கிளம்ப

வெண்பா போச்சு போடா போய் ட்ரெயின் ல அண்டா பிரியாணி, தண்டா பாணி, சேல்ஸ் பண்ணு பை பை.. என்று அவள் சிரித்து கொண்டே வீடு நோக்கினாள்.

மித்ரன் பாவமாக டேய் இப்போ நீ எங்கே டா போற..

நான் என் பேபிக்கு உடம்பு சரி இல்லை. அதனால் ஆதி வீட்டுக்கு பார்க்க போகிறேன்.

என்னடா என்னை விட்டு இப்படி நீ ஜாலியா போற..

இன்பா முறைத்து கொண்டே என்னை பார்த்தால் ஜாலியா போற மாதிரியா உனக்கு தெரியுது. ஏன் டா நீ வேற டென்ஷன் பண்ற…

இன்னிக்கி என்ன என்ன புதுசா யோசித்து வைத்து இருப்பாளோ தெரியல டா அவளை சமாளிக்கவே நான் ரொம்ப வேலை பார்க்க வேண்டியதா இருக்கு. நீ போ நான் வந்து உன் கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.

மித்ரன் இதை கேட்டு புன்னகைத்து கொண்டே மம் சரி போயிட்டு வா …

இன்பா நேராக அவளை ஒரு முறை ஆதி வீட்டில் வந்து இறக்கி விட்ட இடத்துகு சென்றான்.

அங்கு வந்தவன் உடனே ஆதி எண்ணுகு அழைத்தான். 

ஆதி அவள் படுக்கைக்கு பக்கதில் அமர்ந்து அவளுடைய லேப் டாப் நோண்டி கொண்டு இருந்தான். அவன் போன் திரையை பார்த்து விட்டு 

ஹே விவி  உன் உன்னோட…

என்ன சீக்கிரம் சொல்லு எனக்கு சூடா அத்தை கிட்ட சொல்லி டீ எடுத்துட்டு வா..

ஹே அவரு கால் பன்றாரு இந்தா பேசு டி…

நா நானா நான் பேச மாட்டேன் போடா.. என்று திரும்பி படித்து கொண்டாள்.

கால் கட் ஆனது மீண்டும் அழைப்பு வர இந்த முறை ஆதி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

 சொல்லுங்க சார். என்ன பண்ற ஆதித்யா ஏன் போன் எடுக்க இவளோ நேரம்…

சாரி சார் போன் சார்ஜ ல இருந்தது. 

ம்ம் இப்போ அவ எப்படி இருக்கா. அவ நல்லா இருக்கா சார். அவளுக்கு ஃபீவர் அப்டின்னு வெண்பா சொன்னா இப்போ ஒகே வா..

ம்ம் ஓகே சார் என்று விவெகாவை பார்க்க அவள் ஆதியை முறைத்தாள்.

ஒரு சில நிமிடம் மௌனம் மட்டுமே இருக்க சார். .

ஆதி எனக்கு அவளை பார்க்கனும் போல் இருக்கு.. அதனால் 

ம்ம் சொல்லுங்க சார்..

அவளை உங்க வீட்டுக்கு வெளியே கூட்டி வரையா…

சார் நீங்க என் வீட்டுக்கு வெளியே இருக்கீங்களா..

இதை கேட்டதும் விவேகா எழுந்து அமர்ந்தாள். ஆதியை பார்த்து நான் தூங்கி விட்டேன் அப்டின்னு சைகையில் சொல்ல..

ஆதி அவளை முறைத்து கொண்டே சார் விவேகா ஃபீவர்ல தூங்கிட்டா…

இதை கேட்டு இன்பாவுக்கு இனம் புரியாத கோபம் வந்தது. ஒரு சில நிமிடம் அப்படியே அமைதி நிலவ

இன்பா மம் அப்போ அவ முழிக்கிற வரை நான் உங்க வீட்டுக்கு வெளியே வெயிட் பன்றேன் அப்டின்னு அவ கிட்ட சொல்லிடு…

என கூறி இன்பா போன் வைக்க ஆதி இப்போது விவேகாவை பார்க்க 

அதை விவேகா கேட்டு விட்டாள் என்ன நான் முழிக்கும் வரை இவன் வெயிட் பண்ணுவானா!

இவனை….விவேகா….?

தொடரும்….

 Episode 95, 

விவேகா தூங்குகிறாள் என்று ஆதி சொன்னதும் ஒரு நிமிடம் இன்பாவுக்கு மனம் எல்லாம் ரணமாக இருந்தது.

அவனுக்கு தெரியும் அது பொய் என்று அதனால் எப்படியாவது இன்றே அவளை பார்த்து பேச வேண்டும் என்று முடிவு எடுத்தவன்.

 சிறிது அமைதிக்கு பிறகு நான் அவ முழிக்கும் வரை வெயிட் பன்றேன். அவ எழுந்ததும் போன் பண்ணு.

ம்ம் சரி சார் என்று ஆதி விவேகாவை முறைத்து கொண்டே கட் செய்தான்.

விவேகா அவனை பார்த்து இப்போ அவன் வெளியே இருக்கானா. நிஜமாவா ஆதி என அவள் சொல்ல…

ஆதி அங்கும் இங்கும் நடந்தான் அவளுக்கு தெரிந்து விட்டது அவன் கோபத்தில் இருக்கிறான் என்று அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.

சிறிது நேரம் கழித்து ஆதி அவளை முறைத்து கொண்டே அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.

இப்போ எதுக்கு கோபபடுற…

விவேகா நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல டி. அப்படி நான் என்ன பண்ணேன். அது என்ன நீ அவரை உன் விருப்பத்துக்கு அவன் இவன் அப்டின்னு கூப்பிடற. ஏன் அதில் உனக்கு என்ன பிரச்சனை. பிரச்னை தான் இனி எல்லாரும் இருக்கும் போது நீ வாங்க போங்க அப்டின்னு தான் கூப்பிடனும். அவர் ஒரு IPS ஆபீசர், உன்னை விட பெரிய பையன், நம்ப காலேஜ் சேர் பெர்சன் இந்த சிட்டியே அவரை பார்த்து நடுங்குது அதை விட வருண் மாமா எவ்ளோ பய படுகிறார். ஆனால் உன் கிட்ட பூவை விட மென்மையாக நடந்து கொள்கிறார்.

ஆனால் நீ அதை ஓவர் அட்வான்டேஜா எடுத்துக்கற இது சரி இல்ல விவேகா

நான் தான் இனி அவன்… என்று அவள் சொல்ல உடனே ஆதி விவேகாவை முறைக்க ஸாரி ஸாரி நான் தான் இனி அவர் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேனே. 

ஆதி, சரி நீ என்னமோ பண்ணு ஆனால் அதற்கு முன்னர் நான் சொல்ல வருவது முதலில் உன் காதை கொடுத்து கேளு. விவேகா முகத்தை பாவமாக வைத்து கொண்டு நீ ரொம்ப ஓவரா மோசம். ஹே உன்னோட சீனை இப்போ நிறுத்து நான் என்ன சொல்ல வரேனோ அதை உள்வாங்கு.

ம்ம் சொல்லு..

இன்பா சார் பண்ணது சரி அப்டின்னு நான் சொல்ல வரல முதலில் அவரை நீ புரிந்து கொள்ள முயற்சி செய். அவர் என்ன சொல்ல வருகிறார் அப்டின்னு கொஞ்சம் கேளு. அவர் எவ்ளோ உன்னை லவ் பன்றாரு தெரியுமா. அவர் உன் மேல் உண்மையான அன்பு வைத்து இருக்கிறார். நீ அதை இப்படி சின்ன பிள்ளை தனமா அலட்சியம் செய்யாத. நாளைக்கு நீ வேற சாரி அவர் வீட்டுக்கு வாழ போற பொன்னு.

ஹேய்…

அடி வாங்க போற டி சீப்பு எடுக்கட்டுமா…

சரி சரி சொல்லு…

ம்ம் உனக்கு பிடிக்குதோ இல்ல பிடிக்கலையோ. முதலில் அவர் கிட்ட அதை தெளிவா பேசிட்டு வா வேண்டாம் அப்டின்னா இதோட விட்டு விடு. பிடிச்சு இருந்தால  ஒழுங்கா அவர் கிட்ட பேசு உன்னோட” இருக்கு ஆனால் இல்லை” இது எல்லாம் என் கிட்ட சொல்ல வேண்டாம் இனி நான் உனக்கு சப்பொர்ட் பண்ண மாட்டேன்.

விவேகா சிறிது நேரம் அவன் சொன்னதை யோசித்து விட்டு இப்போ நான் என்ன பண்ணட்டும். ஆதி, உனக்கு என்ன தோணுதோ அதை செய் என் கிட்ட கேட்காதே. ஆதி சாரி பிளீஸ் இப்போ ஒழுங்கா பேசு என கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர, 

ஆதி கொஞ்சம் புன்னகைத்து கொண்டே அடி மண்டு போய் அவர் கிட்ட ரெண்டில் ஒன்னு பேசிட்டு வந்திடு.

எப்படி போறது வீட்டில் அத்தை, அதி இருக்காங்க..

ஆதி, நான் உன்னை கூட்டி செல்கிறேன் என்று சொல்லி இன்பாவுக்கு அழைத்தான்.

ம்ம் அட்வைஸ் முடிஞ்சதா…

ச சார் என்ன சொல்றீங்க…

இல்ல இவ்ளோ சீக்கிரம் எப்படி…அவ ஒத்துக்க மாட்டாளே.

ஆதி போன் எடுத்து கொண்டு கொஞ்சம் எட்ட வந்தவன் சார் நானே ரொம்ப கஷ்டப் பட்டு அவளை சமாதானம் செய்து இருக்கிறேன். இனி உங்கள் பாடு. பத்ரகாளி மாதிரி முறைச்சுகிட்டு முகத்தை வைத்து இருக்கிறாள்.

ம்ம் கூட்டி வா என்று சொல்லி கட் செய்தான்.

ஆதி, மா…மா… , ம்ம் சொல்லு ஆதி. விவேகாவுக்கு கொஞ்சம் ஃபீவர் அதிகமா இருக்கு நான் அவளை ஹாஸ்பிடல் கூட்டி போறேன்.

தேவி,இதை தான் நான் மின்ன இருந்தே சொன்னேன் நீ கேட்டியா சீக்கிரம் கூட்டி போ என்று சொல்லும் போதே செல்வம் உள்ளே வந்தார்.

என்னாச்சு ஆதி சின்ன குட்டி இங்கே தான் இருக்காளா. ம்ம் ஆமா பா அவளுக்கு கொஞ்சம் ஃபீவர். சரி நான் அவளை ஹாஸ்பிடல் கூட்டி போறேன் என்று மீண்டும் அவர் வெளியே செல்ல. அப்பா நான் அவளை கூட்டி போறேன் நீங்க இப்போ தானே வந்தீங்க. இல்ல உனக்கு ஒன்னும் தெரியாது  டாக்டர் கிட்ட சரியா சொல்லணும். 

தேவி சமையல் அறையில் இருந்து கொண்டே என்னங்க ஆதி போகட்டும் நீங்க கொஞ்சம் அமைதியா எப்பவும் போல் இதோ விவாத மேடை ஆரம்பித்து விட்டது போய் டீவி பாருங்க.

அதுக்கு இல்ல தேவி…

என்னங்க என்று அதட்ட. ம்ம் சரி இந்தா வண்டி சாவி அவளை மெதுவா கூட்டி போ உன் வண்டி வித்தை எல்லாம் இங்கே வேண்டாம். ஆதி மனதில் இந்த எக்செல்க்கு எவ்ளோ பில்ட்அப்பு இதில் 50 க்கு மேல போயிட்டா அது உலக சாதனை தான்.

செல்வம் மீண்டும் ஆதி 40 ல போடா சின்ன குட்டி பயப்பட போறா. ஆதி,அப்பா அதுக்கு நான் அவளை நடந்தே கூட்டி போய் விடுவேன். சரி சரி பரவாயில்ல நீ  கொஞ்சம் வேகம் கொஞ்சம் தான் சரியா நீ வந்ததும் நான் செக் பண்ணுவேன். 

ஆதி, அப்பா விவேகாவே 100 ல போவா ஆனால் என்னை மட்டும் மனசாட்சியே இல்லாமல் 40 ஏன் பா…

சரி சரி அப்பா சொல்றத கேளு மெதுவா கூட்டி போ என்று சொல்லி அவர் உள்ளே செல்ல விவேகா உள்ளே கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து கொண்டாள்  என்ன தான் ஃபீவர் இருந்தாலும் கூட ஒரு முறை தன்னை ஒப்பனை செய்ய சொன்னது அவள் மனம் . அதிதி, ஹே நீ ஹாஸ்பிடல் போறியா இல்ல மாப்பிளை பார்க்க போறியா. உங்க வேலைய நீங்க பாருங்க. விவேகா இரு டி நான் மாமா கிட்ட சொல்றேன். போடி போ போய் சொல்லு இவ மட்டும் சும்மா வருண் கூட கடைக்கு போக ஒரு கூடை மேக் அப் பண்ணுவா நான் சும்மா கண்ணாடி பார்ப்பது ஒரு குத்தமா.

விவேகா ரொம்ப ஓவரா பண்ற என்று சொல்லும் நேரம் செல்வம் வர விவேகா கொஞ்சம் இருமல் வருவது போல் நடிக்க உடனே சின்ன குட்டி சீக்கிரம் போ மா ஆதி வண்டியை முன்னவே ஸ்டார்ட் பண்ணிட்டான் பெட்ரோல் வேஸ்ட் ஆகும்.

ம்ம் சரி மாமச்சி என்று சொல்லி அவள் அதி யைப் பளிப்பு காட்டி விட்டு ஓடினாள்.இதயம் கொஞ்சம் படபடக்க ஆரம்பித்தது இன்பாவை பார்க்க செல்கிறாள். அந்த ஸ்ட்ரீட் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு மரத்துக்கு கீழ அவன் காரை நிறுத்தி இருந்தான்.

ஆதி சிறிது தூரத்தில் இறக்கி விட்டு ஹே நான் இங்கே பக்கதில் ஜான் வீடுகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ அவர் கிட்ட பேசி முடித்து விட்டு போன் பன்றயா. நான் எப்படி போன் பன்னட்டும் நீ ஒன்னும் ஜான் வீட்டுக்கு போக வேண்டாம் என் பக்கதில் இரு நான் ரெண்டு வார்த்தை பேசி விடுகிறேன்.

விவேகா இவளோ நேரம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி உனக்கு கிளாஸ் எடுத்தேன் டி ஆனால் அது எல்லாம் வேஸ்ட்.

சரி ஓவரா பேசாதே நீ ஜான் வீட்டுக்கு போ நான் பேசி முடித்து நேரா வரேன். இப்பவும் அடங்க மாட்ட… 

ஹே போடா என்று சொல்லி அவள் மெதுவாக நடக்க ஆதி இன்பா அருகில் சென்று அவள் வருவதாக கூறி கிளம்பி விட்டான்.

ஆதி கிளம்பியதும் இன்பா அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான். விவேகாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவனை தூரத்தில் பார்க்கும் போதே அது வேலையை ஆரம்பித்து விட்டது.

அய்யோ இதுகளும் சதி பண்ணுதே என அவள் இதயத்தை வசை பாடி கொண்டே ஒரே ஒரு முறை மட்டும் அவனை பார்த்தாள். காருக்கு அருகில் வந்த வுடன் ஒரு பக்க கதவை திறந்து விட்டான். 

அவள் கோபமாக பின் இருக்கையை திறந்து அமர்ந்து கொண்டாள். இன்பா உள்ளுக்குள் சிரித்து கொண்டே ஓட்டுனர் இருக்கையை சாத்தி விட்டு பின்னால் போய் கதவை திறந்து அவள் அருகில் ஒட்டாமல் அமர்ந்து கொண்டான்.

அவளை பார்த்தான் அவள் வெளியே பார்த்து கொண்டு இருந்தாள். அவள் கைகளை பிடிக்க ப்ச்ச்..  என்று உச்சி கொட்டி கைகளை தட்டி விட்டாள். அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க ஃபீவர் கொதித்தது. அதையும் தட்டி விட்டாள்.

ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தவன் இப்போது பேச ஆரம்பித்தான். பிளீஸ் என் முகத்தை பாரு…

விவேகா திரும்பாமல் இருக்க இப்போ என் மேல் உனக்கு என்ன கோபம். ஏன் என்கிட்ட பேச மாட்டிங்குற என்று தெரிந்து கொண்டே அவளிடம் கேட்டான். அவளாகவே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

விவேகாவுக்கு இதை கேட்டு இன்னும் கோபம் வந்தது. அவள் கைகளை நீட்டினாள்.

இன்பா சிரித்து கொண்டே கைகளை நீட்ட உடனே அவள் தட்டி விட்டு போன் உங்க போன் கொடுங்க. என்று முகத்தை பார்க்காமல் சொல்ல. இன்பா இரு புருவமும் உயர்த்தி கொண்டே  அவனது பெர்சனல் போன் எடுத்து அவள் கைகளில் வைத்தான்.

அதை வாங்கிய அவள் பாஸ்வேர்ட்?

இன்பா அவளுடைய வலது கை ஆள் காட்டி விரல் எடுத்து அந்த ஃபிங்கர் பிரிண்ட்  இடத்தில வைக்க மனதில் ஒரு நிமிடம் காய்ச்சலை மீறி கொஞ்சம் தென்றல் காற்று வீச தான் செய்தது. என் ஃபிங்கர் பிரிண்ட் எப்போ அட் பண்ணி இருப்பான் என மனதில் அவள் யோசித்தது அவனுக்கு கேட்டது போலும். 

பாவை டார்ல்ச பார்த்து விட்டு வரும்போது நீ தூங்கின அப்போ அட் பண்ணேன். 

விவேகா கண்களில் கொஞ்சம் மின்னியது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் யூ ட்யூப் பக்கம் சென்றாள்.

கவ்யாவுக்கு இன்பா கேக் ஊட்டும் காட்சியை எடுத்து அவன் முன் நீட்டினாள். 

இதுக்கு என்ன அர்த்தம் பதில் சொல்லுங்க?

இன்பா…?

தொடரும்….

You may also like

Leave a Comment