Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -20

தேஜு அப்பட்ட அதிர்ச்சியுடன் தன் மகனை பார்க்க.. பாப்பாவை டெராரிஸ்ட் கடத்த்திட்டு போயிடாங்க. என நிலாவின் பக்கம் வந்து நின்றான் நிதின். 

என்ன சொல்ற நீ? அவள் என்ன சொல்லிட்டு இருக்கா? என தேஜு அழுதபடி கேட்க..  

“நீங்க ஏன் நிதின் அண்ணா கிட்ட கேட்கிறீங்க நானே சொல்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என்னை கடத்திட்டு போயி சீரலிச்சுட்டாக போதுமா! அதுக்கு தான் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன். அங்கிருந்து என்னை மீட்டு கூட்டி வந்தது சத்ய தேவ் அண்ணா தான். எனக்கு இங்கே இருந்தால் உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு எதோ பயமா இருக்கு.” 

“என்னை அம்மச்சி வீட்ல விடுங்க இல்ல நான் மகி சித்தி வீட்டுக்கு போறேன். இல்லைனா என் சத்ய தேவ் அண்ணா வீட்டில் விடுங்க உங்களை கெஞ்சி கேட்கிறேன். இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ற மெண்டாலிட்டி இல்ல. ஏன்னா நான் கெட்டு போனவள்” என கலங்கிய விழிகளில் கூறினாள் நிலா. 

ஹரிணி அழுதபடி நிலாவை கட்டிக்கொள்ள அண்ணி! என அழுது கொண்டே சாய்ந்தாள். 

தேஜு கோபத்துடன் நிதினின் கன்னத்தில் அறைந்தவர். “இத்தனை நாள் ஏன் டா மறைச்ச? ஏன் மறைச்ச? எவ்ளோ தடவை எத்தனை தடவை செக்யூரிட்டி டைட் பண்ண சொன்னேன் நான்? என் பொண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்க நீ ராஸ்கல். உன்னால தான் டா! நீ” 

“என்ன நடக்குது? நிவாஸ் ராஸ்கல் தொங்கனா கொடுக்கு. என் பொண்ணை கை நீட்டி அடிக்க நீ யாரடா!” என உருமிய படி வந்து சேர்ந்தார் spr. 

தேஜு அழுதபடி நிலாவின் அருகில் செல்ல, தன் அன்னையை கிட்டத்தில் வரவிடாமல் தட்டிவிட்டாள் நிலா. 

நிவாஸ் இன்னும் நொடிந்து போனான். எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கோம். ஏற்கனவே அவள் நொந்து போயிருக்கா! அவளை இன்னும்… அய்யோ இது அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? என பயத்துடனும் பதட்டத்துடன் நின்றார்கள். கண்மணிக்கு இன்னும் வேதனையாக இருந்தது. 

என்னாச்சு பொம்மாயி? என்ன டா தங்கம்? அப்பாவுக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல டா! எல்லாத்துக்கும் காரணம் இவங்க மூணு பேரும் தான் டா! என் பொண்ணுக்கு என்ன வயசாகி போச்சு? என சொல்லிக்கொண்டிருக்க.. டாடி என தந்தையை அணைத்துக் கொண்டாள் நிலா. 

நிதின் தன் தாயின் அருகில் சென்றவன். “பிளீஸ் தேஜூ டாடி கிட்ட சொல்லாத! டாடிக்கி இதையெல்லாம் பியர் பண்ற அளவுக்கு ஸ்ட்ரெந்த் இல்ல. இது பிளான் பண்ண கிட்னாப். பாப்பாவுக்கு ஃபுல் protection கொடுத்தேன் தேஜூ இப்படி நடக்கும்னு சத்தியமா” என மருகினான். 

தேஜூ மவுனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தவர். அப்படியே நிற்க.. அப்பா என நிவாஸ் முந்திக்கொண்டு அனைத்து விசயங்களையும் கூறிவிட்டான். கண் கலங்கிய முகத்துடன்.. 

என்ன சொல்ற? என சட்டையை பிடித்து உலுக்கியவர். நிதின் பக்கம் பார்வை திரும்பியது. ஆவேசமாக நிவாஸ்சை கீழே தள்ளிவிட்டு தன் மனைவி மற்றும் மகளின் பக்கம் சென்றார். என்ன நிதின்? என்ன சொல்றான் அவன்? என்ன டா பதில் சொல்லு! ஹே என்ன டி! என தேஜூவின் தலை முடியை கொத்தாக பிடித்தார். 

நிதினின் கழுத்தை இன்னொரு பக்கம் இறுக்கி பிடிக்க தடுக்க இயலாமல் ஹரிணி நின்றிருந்தாள். இவ்வளவு பெரிய பிரச்னை நடக்குமென யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்பா அண்ணனுக்கும் அம்மாவுக்கும் இதில் என்ன சம்மந்தம் இருக்கு? கரை பட்டது நான் தானே! கலங்கி போனது நான் தான். பேசாமல் நான் செத்து போகட்டுமா என நிலா கூற.. 

அய்யோ பொம்மாயி என கலங்காத மனிதன் இன்று கலங்கி போய் தன் மகளை அணைத்துக் கொண்டார். அழுகை ஊற்றெடுத்தது. தேஜு ஒருபக்கம் உடைந்து நிற்க.. நிதின் சிவந்த விழிகளுடன் டாடி!  என அருகில் சென்றான். 

“என் பொண்ணை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டுடீங்கல்ல. என்னை கழுத்தருத்துடிங்களே!” என SPR தேம்பி தேம்பி அழுதார். 

“டாடி நோ டாடி! நீங்க அழகூடாது. நான் எனக்கென்ன எனக்கு என் டாடி இருக்கும் போது. நீங்க என்னை புரிஞ்சுகிட்டா போதும் டாடி! நான் எந்த தப்பும் செய்யல டாடி!” என அணைத்துக்கொண்டாள். 

SP என தேஜூ அருகில் வர.. “உனக்கு எல்லாமே முன்னாடியே தெரியுமா? நீயும் இதுக்கு..”

இல்ல sp! அவள் என் பொண்ணு! நான் ஏன் மறைக்கணும். என அவரும் அழுதார். 

“ப்பா எங்க யாருக்குமே தெரியாது. அன்னிக்கு நிவாஸ் க்கு கல்யாண பேச்சு பேசிட்டு இருக்கும் போது சத்ய தேவ் தான் சொன்னான்”

“அப்போ சத்ய தேவ் தான் கண்டு புடிச்சிருக்கான். அது வரை நீ என்ன புடுங்கிட்டு இருந்தியா? நீ எதுக்கு டா இந்த வேலையில் இருக்க? நீ எதுக்குமே தகுதி இல்லாத நாய் டா! உனக்கு அண்ணன்னா இருக்க தகுதி இல்ல. முதல்ல நான் எதுக்கும் லாயக்கு இல்ல. அந்த சூர்ய தேவ் பசங்களை பொறுப்பா வளர்த்திருக்கான். சத்ய தேவ்க்கு நிலா சொந்த தங்கச்சி கூட இல்ல. ஆனால் அவன் என் பொம்மாயி மேலே வச்சிருக்க பாசம் துளி கூட உங்களுக்கு இல்லல்ல.

என் பொண்ணு!.. ” என அழுதார் spr. 

நிலா தன் தந்தையின் கண்களை துடைத்து விட்டபடி, ப்பா நான் எனக்கு என்ன? நான் நல்லாருக்கென்! அம்மா கிட்டயும் அண்ணா கிட்டயும் சொல்லு பா. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே பிளீஸ்! என கெஞ்சினாள். 

அந்த நேரம் ஹரினிக்கு சத்ய தேவ் அழைத்தான். திரும்ப திரும்ப அழைப்பு வர.. 

யாரு மா? எடுத்து பேசு! என உருமலுடன் spr கூற..  அது சத்ய தேவ் தான் கால் பண்றான். என ஹரிணி கூறினாள். 

“எடுத்து பேசு!” என்றார் spr. 

“ஹலோ சொல்லு. இங்கே வீட்ல எல்லாருக்கும் நிலா விசயம் தெரிஞ்சிடுச்சு!” என ஹரிணி கூற.. நிதின் கிட்ட போனை கொடு என கூறினான் சத்ய தேவ். 

நிதின் கலங்கிய முகத்துடன் அமர்ந்திருக்க.. உனக்கு தான் போன் என நீட்டினாள். 

என்னாச்சு? என்ன சொன்னான்? என spr கேட்க..  

“அது நிலாவுக்கு கவுன்சிலிங் இருக்கு. அதை அட்டன் பண்ண சொன்னான். டாக்டரை பார்க்க போகனும். சைக்காட்ரிஸ்ட் கிட்ட அப்பாயின்மெண்ட் இருக்கு” என்றான் நிதின். 

“டாக்டரை இங்கே கூப்பிட்டுக்கலாம் டாடி” என நிவாஸ் அருகில் வந்தான். 

நிலா அவர்கள் அனைவரையும் பார்த்தபடி எழுந்தாள். 

பாப்பா நீ புறப்படு நான் கொண்டு போய் விடுறேன். என நிதின் கூற..  அப்பா வேண்டாம் நிலா இங்கேயே இருக்கட்டும் என நிவாஸ் கூற…  நிதின் நிவாசை அடிக்க பாய்ந்தான். 

“என்னை எதுக்கு அடிக்கிரீங்க? அவளை இந்த நிலைக்கு ஆக்கினதே நீங்க தான். நான் எவ்ளோ தூரம் சொன்னேன். டெல்லிக்கு அனுப்ப வேணாம்னு.” என நிவாஸ் எதிர்த்து பேசினான். 

நிவாஸ் தேவையில்லாம பேசாத! என ஹரிணி வயிற்றை பிடித்துக்கொண்டு வந்தாள்.  “நிவா பிரச்சனைய பெரிசு பண்ண வேணாம் விடுங்க” என கண்மணி தடுத்தாள். 

நிதின் உடைந்த மனதுடன் நின்றிருந்தான். தேஜு அதிர்ச்சியுடன் அண்ணன் தம்பி இருவரையும் பார்த்தார். 

ஆமா எல்லாத்துக்கும் நான் தான் காரணம். இப்போ என்ன பண்ணனும்? வீட்டை விட்டு போறேன். ஹரிணி வா போலாம் என நிதின் திரும்ப..  

“அண்ணா உனக்கு புரியலயா? நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற! பாப்பாவை எதுக்கு நம்ம அங்கே அனுப்பணும். இங்கே நீலா பாட்டி இருக்காங்க நம்ம எல்லாரும் இருக்கோம். இங்கே இருக்கும் போது பாதுகாப்பா இருப்பாள்.” என நிவாஸ் கூற.. நிவாஸ் என்ன பேசிட்டு இருக்க? அண்ணனை எதிர்த்து பேசுற? என தேஜி இருவருக்கும் நடுவில் வந்தார். 

இல்ல தேஜு! எனக்கு எதுக்கும் தகுதி இல்ல. நான் நாளைக்கே என்னோட மினிஸ்டர் பதவியை எழுதி கொடுக்க போறேன். இவன் சம்பாதிச்ச எந்த சொத்தும் எனக்கு வேணாம். அவனுக்குன்னு இனி குடும்பம் வந்திடுச்சு. நான் என் வழியில் போய்க்கிறேன். என நிதின் திரும்பி நடந்தான். 

“என்ன நிவா இதெல்லாம். அவரு உங்களை விட பெரியவர். நீங்க ஏன் இப்படி பேசுறீங்க? மாமா போறார் போய் மன்னிப்பு கேளுங்க” என கண்மணி அவனை அனுப்பினாள். 

நிதின் நான் உயிரோட தான் இருக்கேன் செத்து போகளையே! நான் செத்தத்துக்கு அப்புறம் சண்டை போட்டுக்கொங்க என spr கூற.. டாடி என நிதின் ஓடி வந்து தன் தந்தையை அணைத்துக் கொண்டான். 

“நான் எதுவும் செய்யல டாடி! இவன் என்னை பிளம் பண்றான். என நிதின் கரைந்தான். நான்னா அங்கே சத்ய தேவ் அண்ணாவும் அண்ணியும் இருந்தால் பரவாயில்லை. அங்கே அந்த இன்பராகவன் பையன் தீராவும் இருக்கான். அந்த ருத்ரனோட குடும்பம்  அடிக்கடி அங்க  வந்து போகுது.  எனக்கு அங்கே பாப்பாவை அனுப்ப பிடிக்கல. அது தான் அண்ணா கிட்ட சொன்னேன். பாப்பா என் பேச்சை கேட்க மாட்டிக்கறா. கடல் மாதிரி இங்கே வீடு இருக்கும் போது நம்ம எதுக்கு பாப்பாவை அணுப்பணும்?”  என்றான் நிவாஸ். 

சொல்ல வேண்டியத எல்லாம் நீங்க சொல்லிட்டீங்கல! இனி நான் நிலா கிட்ட கேட்டுக்கிறேன். பொம்மாயி நீ அங்கே போறயா இல்ல இங்கேயே இருக்கியா? இங்கேயே டாக்டரை வர சொல்லவா? எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம் என spr தன் மகளை பார்த்தார். 

நான் எங்கேயும் போகல என அழுதபடி அவளது அறைக்கு சென்றுவிட்டாள். ஆம் இப்பொழுது நான் சத்ய தேவ் வீட்டுக்கு செல்கிறேன் என சொன்னால் தேவையில்லாம அங்கே அந்த ருத்ரன் இருக்கும் போது நிலாவுக்கு என்ன வேலை என நினைப்பார்கள். அது மட்டுமா அடிக்கடி spr வந்துவிடுவார். தன்னால் தன் அண்ணனுக்கு பிரச்னை வரக்கூடாது என நினைத்தாள் நிலா. 

நிதின் நேராக அவனது அறைக்கு செல்ல. நிவாஸ் தன் அண்ணனின் பின்னால் சென்றான். நிலாவின் விசயத்தை அகிலேஷ் வீட்டில் சொல்வது பற்றி பேச வேண்டும் அதனால்.. 

ரெண்டு பேரும் நில்லுங்க. என spr கூற.. இருவரும் திரும்பி பார்த்தார்கள். 

“இப்போதைக்கு பாப்பாவுக்கு கல்யாணம் வேணாம்.” 

அப்பா அது வந்து அகிலேஷ் கிட்ட.. என நிவாஸ் ஆரம்பிக்க.. நான் சொல்றது தான் முடிவு. விருப்பம் இல்லன்னா வீட்டை விட்டு கிளம்பு. நீயே உன்னோட இஷ்டத்துக்கு தானே கல்யாணம் பண்ற? உனக்கென்ன அக்கறை! என் பொண்ணுக்கு எப்போ எது செய்யணும்னு எனக்கு தெரியும் என்ற spr அவ்விடத்தை விட்டு நேராக நிலாவின் அறைக்கு சென்றார். தேஜூ தன் கணவனின் பின்னால் சென்றாள். 

நிதின் – நிவாஸ்….? 

“ஹலோ சத்ய தேவ் அண்ணா!”  என அழைப்பு. 

மீனாட்சி என சத்ய தேவ் புருவத்தை சுறுக்கினான். 

மறுபுறம் அழுகை..? 

மீனாட்சி.. என சத்ய தேவ் அழைக்க.. மறுபுறம் கண்மணி என அழைத்துக் கொண்டு அறையில் நுழைந்தான் நிவாஸ். 

மீனாட்சி..? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.