🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
19. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 19 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 13 Jul 2025
  • 934 reads
  • ☆ No ratings yet
  • 5 min read

Episode -19

சத்ய தேவ் நேராக மேடையை நோக்கி சென்றவனுக்கு ரிதம் விடாமல் போன் செய்து கொண்டிருந்தாள். அவன் மனதில் பேசாம ‘ஒரு ஆறு மாசத்துக்கு லீவ் வாங்கிடனும். ஒரு பக்கம் ராவடி ராட்சசி இன்னொரு பக்கம் அவளோட தம்பி அடங்காதவன் அப்படியே பெரு மூச்சை விட்டு உட்கார்ந்தா அழு மூஞ்சி தேன் நிலா இன்னொரு பக்கம் எதுக்கும் அசராதவன்-னாக அந்த நிவாஸ் இருக்கான்.  எனக்கு பிரச்னை மேலே பிரச்னை கொடுக்க..  இப்போ மீனாட்சி வேற..  இவங்க எல்லார் கிட்டயும் நான் அன்பானவனா இருக்கணுமா.’ என வந்து சேர்ந்தான் மேடைக்கு.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

நிவாசுடன் காதல் பார்வையிலும் கைகளை கோர்த்து பிடித்து மேடையில் நட்சத்திர ஜோடிகள் போல அனைவரின் பார்வையையும் ஈர்க்கும் விதமாக நின்றிருந்தார்கள் இருவரும்.. 

வாழ்த்துக்கள் என தன் தமயனுக்கு கை குலுக்கினான் சத்ய தேவ். 

அண்ணாஆஆ! என உணர்வு பூர்வமாக அழைத்த நிவாஸ். “என்னை மன்னிச்சிடுங்க உங்களை எதிர்த்து பேசிட்டேன். நான் பாப்பா மேலே இருக்க அக்கரையில் தான் அப்படி பேசிட்டேன். அண்ட்  கண்மணி இது என்னோட அண்ணன். எங்க வீட்லயே இவர் தான் முதலில். எங்க மகி சித்தி பையன் எங்க அண்ணியாள வர முடியல அவங்க கன்சிவா இருக்காங்க”

கண்மணி புன்னகையுடன் வாழ்த்துக்கள் மாமா! என்றாள். 

சத்ய தேவ் கூர்மையான பார்வையில் அவளை  உள்வாங்கி கொண்டிருந்தவன். “தேங்க்ஸ் மீனாட்சி!” 

“அண்ணா! இவ பேர் கண்மணி யாரை மீனாட்சி சொல்றீங்க?” என நிவாஸ் கேட்க.. 

அச்சோ மீனாட்சின்னு சொன்னேனா? அது என நெற்றியை தேய்த்த சத்ய தேவ். அது எனக்கு தங்க மீனாட்சி முத்து மீனாட்சி ன்னு ரெண்டு பொண்ணுங்கள தெரியும். அந்த பொண்ணுங்க கிட்ட ஜஸ்ட் இப்போ தான் பேசிட்டு வந்தேனா! அதே நியாபகத்தில் கண்மணி கிட்ட தெரியாம உளறிட்டேன் சாரி மா! அவங்க ரெண்டு பேரும் டிவின்ஸ் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் அதனால எதோ ஒரு நினைப்பில் சொல்லிட்டேன். வேற ஒன்னும் இல்ல என்றான். 

கண்மணி எதுவும் பேசாமல் புன்னகை முகமாக இட்ஸ் ஓகே மாமா! வாங்க போட்டோ எடுப்போம் என அவர்கள் இருவருடன் எடுத்துக் கொண்டான் சத்ய தேவ். 

இன்னொரு பக்கம் நிலா மற்றும் அகிலேஷ் இருவரும் நின்று கொண்டிருக்க.. நிலா துக்கத்தை அடக்கிக்கொண்டு நின்றாள். எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்ற ஒரே குறிக்கோள் தான் அவளுக்கு. எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும். என இருக்க..

சத்ய தேவ் தன் தங்கையின் அருகில் வந்து சேர்ந்தான். அகிலேஷ் உற்சாகத்துடன் கைநீட்டி மச்சான் உங்களை நான் நிறையவே கேள்வி பட்டிருக்கென். அந்த அதிரடிக்காரன் கேஸில் கூட நீங்க தான.. 

நானே தான் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. என சத்ய தேவ் சிரித்தான். இந்த சிரிப்பு மட்டும் தான் கேடா என்பதை போல நிலா பார்த்தாள். 

ஒன்னும் கவலை படாதே நிலா எல்லாமே சரி ஆகிடும். என நம்பிக்கை கொடுத்தவன் அவ்விடத்தை விட்டு இறங்கினான். அண்ணா என நிலா அழைக்க.. நிலா மா நான் இருக்க வரைக்கும் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். என உறுதி கூறி இறங்கினான் சத்ய தேவ். 

அந்த நிச்சயதார்த்த விழா இனிதாக முடிவடைந்தது. நிலா அழுதபடி வேகமாக உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டாள். 

எங்கே போற இப்போ? என நிவாஸ் மற்றும் தேஜூ இருவரும் கேட்க.. 

நான் மகி சித்தி வீட்டுக்கு போரன். எனக்கு இங்கே இருக்க பிடிக்கல எனக்கு இந்த வீட்ல நிம்மதி இல்ல என உரக்க கத்தினாள். 

ஹே பல்லை உடைச்சுடுவேன் என்ன உனக்கு கொழுப்பா என தேஜூ குரலை உயர்த்த.. பாப்பா அம்மாவை டென்ஷன் பண்ணாத! இப்போ உனக்கு நிச்சயம் ஆகிடுச்சு எங்கேயும் போக கூடாது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் என்றான் நிவாஸ் சாதாரணமாக.. 

என்னை கேட்காமல் உங்களை யார் இதெல்லாம் பண்ண சொன்னது? உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என நிலா கத்த.. அடுத்த நொடி பளார் என கன்னத்தில் அறைந்தான் நிவாஸ். 

தேஜூ அதிர்ச்சியுடன் பார்க்க, கண்மணி இமைக்க மறந்து பார்த்தாள். என்ன விட்டால் ஓவரா பண்ற! கல்யாணம் இருக்குன்னு சொல்றோம்ல அம்மாவை எதிர்த்து பேசுற! நீ இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டு தான் ஆகணும் என்றான் நிவாஸ் 

நிலா அவனை தள்ளிவிட்டு அனைவரையும் பார்த்தவள். கோபத்துடன் நடுங்கும் குரலில்  நான் கெட்டு போனாலும் பண்ணிக்கணுமா? என் கற்பு போய் மூணு மாசன் ஆகுது. அப்போது கூட அதை தூர போட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கணுமா என கூறியவள் அருகில் இருக்கும் தண்ணீர் ஜக்கை எடுத்து குடித்து ஸோபாவில் அமர்ந்தவள். 

அழுது கொண்டே நிலைத்த விழிகளுடன் இருந்தாள். நிவாஸ் மற்றும் தேஜு இருவரும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்ல.. நிதின் அவ்விடத்துக்கு வந்தவன். பாப்பா வாங்க நிலா நான் சத்ய தேவ் வீட்டில் வுடுறேன் தங்கம் என பாசமாக அழைத்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

ஹே என்ன டி சொல்லிட்டு இருக்க? யார் கிட்ட போய் கெட்டிட்டு வந்த? என்ன இதெல்லாம் இந்த தப்பை மறைக்க தான் பொழுதிக்கும் சித்தி வீட்டுக்கு போறேன் சித்தி வீட்ல இருக்கேன்னு! என தலை தலையாக அடித்துக்கொண்டார் தேஜு. 

நிவாஸ் கோபத்துடன் நிலாவின் பக்கம் பாய..  என்ன பண்ற நீ! எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? என அனைவரையும் பார்த்து கேட்டான் நிதின். 

அவள் யார் கிட்டயோ ஏமாந்து வந்திருக்கா அண்ணா! இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு நினைக்கவே பயமா இருக்கு. ஹே சொல்லு நிலா! என பற்களை கடித்துக் கொண்டு பாய்ந்தான் நிவாஸ். 

உங்களுக்கு இது எப்படி தெரியும்? யார் சொன்னா? என நிதின் குழப்பமாக கேட்க..  அப்போ உனக்கு இந்த விடயம் முன்னாடியே தெரியுமா? என ஹரிணி கோபத்துடன் வந்தாள். 

அனைவரின் பார்வையும் நிதின் மீது திரும்பியது. 

இப்போ என்ன தான் பண்றது? என இன்பா கேட்க.. 

ருத்ரனுக்கு மேரேஜ் பண்ண ஏற்ப்பாடு பண்ணுங்க மாமா என்றான் சத்ய தேவ். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!