Episode-109
என்னாச்சு கன்னத்தில் என திடுக்கிட்டு பார்த்தான் சத்ய தேவ்.
என்னை அடிச்சுட்டாங்க தேவ்!! என்றாள் சந்தனா. கண்களில் நீருடன்..
யாரு? என்னோட அம்மா அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்களே!! என சத்ய தேவ் கேட்க..
என்னை உங்க மனைவி அடிச்சுட்டாங்க தேவ்! இப்போ எல்லாம் ரொம்ப மூர்க்க தனமாக நடந்துக்கிறாங்க! நான் பரவாயில்லை.. துகில நினைச்சா தான் பாவமா இருக்கு என உதட்டில் வழியும் ரத்தத்தை துடைத்து கொண்டே கூறினாள் சந்தனா.
அவளை என கை முஷ்டியை மடக்கிய சத்ய தேவ் வேகமாக அவளரைக்கு சென்றான்.
சந்தனா ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள் சிரித்து கொண்டே.. பொத்தென்று படுக்கையில் விழுந்தாள் ரிதம்.
கையை உதறியபடி சத்ய தேவ் கோபத்துடன் நின்றவன். கொழுப்பா உனக்கு? அடிக்க கை ஓங்குற? பைத்தியமா உனக்கு? என கேட்டான்.
யார் நீ? நீ யாரு? என் சைலஜா கண்களில் நீர் கோர்க்க நடுங்கி பின்னால் சென்றாள்.
வேணாம் தேவ்! எதுவும் செய்யாதீங்க! பாவம்! அவங்களுக்கு எல்லாமே மறந்து போச்சு!! அவங்க என்ன பண்ணுவாங்க! என வெளியில் இருந்து சந்தனா உருக்கமாக கூற.. .
இனி சந்தனா மேலே கைய வச்ச? உன்னை கட்டி போடுறேன் என கூறியவன் வேகமாக சென்று சங்கிலியை வாங்கி வந்து சைலஜாவின் காலில் போட்டு லாக் செய்து வைத்தான் சத்ய தேவ்.
அய்யோ என்ன பண்றீங்க? என விதிர்விதீர்த்தி பார்த்தாள் சந்தனா.
உங்களையே அடிக்க கை ஓங்கிட்டா! இப்படியே விட்டால் சரி வராது. இவளை psychiatrist கிட்ட தான் கூட்டிட்டு போகணும். என்றவன் நெற்றியை தேய்த்தபடி அமர்ந்தான் சத்ய தேவ்.
அந்த நேரம் குழந்தையின் அழு குரல் கேட்க..
சந்தனா வேகமாக குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி கொண்டாள்.
குழந்தையின் அழுகுரல் அப்படியே குறைந்து போக..
சந்தனா என்னாச்சு? என கேட்டு கொண்டே பால் புட்டியுடன் உள்ளே வந்தவன் ஒரு நொடி திடுக்கிட்டான் சத்ய தேவ்.
ஓ தேவ் உள்ளே வந்துட்டீங்களா? என சந்தனா வேகமாக மாராப்பை சரி செய்தாள்.
என்ன பண்றீங்க? என சத்ய தேவ் வேறு புறம் திரும்பி கொண்டு கேட்டான்.
பசியில் ரொம்ப கதறினான் குழந்தை!! புட்டி பால் தூக்கத்தில் பிடிச்சுகிறான். ஆனால் முளிச்சிருக்கும் போது குழந்தைக்கு அம்மா நியாபகம் வந்துடுது. எனக்கு பால் வராது. இருந்தாலும் துகில் அழறதை என்னால தாங்கிக்க முடியல!! என்று வேதனையுடன் முடித்தாள் சந்தனா.
சத்ய தேவ் தனது மகனை வாங்கி கொண்டவன். தேங்க்ஸ் என்னோட பையனுக்கு அம்மாவா இருந்திருக்கீங்க. என்று சொல்லி விட்டு அவன் செல்ல போக..
காலம் முழுக்க அவனுக்கு அம்மாவா இருக்க ஆசைப்படுறேன். என்றாள் சந்தனா.
சத்ய தேவ் ஒரு நொடி நின்று அவளை பார்க்க, சந்தனா காதல் பார்வையுடன், எனக்கு இவன் மட்டும் போதும் தேவ். நீங்க உங்க பொண்டாட்டி மேலே வச்சிருக்கிற காதல் அது! என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. மனசுல இருக்கிற விஷயத்தை மறைச்சு பழக எனக்கு தெரியாது. எனக்கு உங்க கூட வாழனும். துகிலுக்கு அம்மாவாக கூட எனக்கு இடம் கொடுத்தால் போதும். மனசில இருக்க விசயத்தை சொல்லிட்டேன் நான். என்றவள் எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.
ரோல் நம்பர் 1 இல் இருந்து அனைவரும் ருத்ரனை பாவமாக பார்த்தார்கள்.
ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிந்தது. நிவாஸ் மாற்று கண்மணி இருவரும் அவர்களின் குழந்தையுடன் வீடு வந்து சேர்ந்தார்கள்.
ருத்ரன் காலையில் எழுந்து வழக்கம் போல நடந்து சென்று பிள்ளையாருக்கு தண்ணீரை ஊற்றினான் மூன்று குடத்தில்.. அதை முடித்து விட்டு வந்தவன். Spr – ஐ பிக் அப் செய்ய காத்திருந்தான்.
ருத்ரன் லாபியில் நின்றிருக்க.. ஹரிணி அவன் முன்னால் வந்து என்னாச்சு தீரா இதே இடத்தில நின்னுட்டு இருக்க?
அவர் கிளம்பிட்டாரா? ஆபிஸ்ல ட்ராப் பண்ணனும். என்றான் ருத்ரன்.
மாமா இன்னிக்கி ஆபிஸ் போகல!! அவரு வீட்ல தான் இருக்கார். குழந்தை பிறந்திருக்கே அதனால என்றாள் ஹரிணி.
அவ்விடத்துக்கு வந்த நிலா. அங்கிருந்து ருத்ரன் செல்வதை பார்த்தாள். Roll no 21 என அழைத்தாள்.
மேம் என முன்னால் சென்றான் ருத்ரன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
என்னோட ரூம ஹவுஸ் கீப்பிங் பண்ணனும் வாங்க என குழந்தையை தட்டி கொண்டே சென்றாள் நிலா.
அறை மிகவும் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அவளிடம் ஒரு வார்த்தை கூட ருத்ரன் கேட்கவில்லை.
பாத்ரூம் கொஞ்சம் க்ளீன் பண்ணுங்க!!
எஸ் மேம் என சுத்தமாக பாத்ரூம் கழுவி விட்டு வந்தான்.
அவன் மோஷன் போயிட்டான் க்ளீன் பண்ணி கொடு!! என உத்தரவிட்டாள் நிலா.
தூக்க செல்லும் நேரம் ஒண்ணுக்கு மழை அவன் முகத்தை அடித்தது.
நிலாவுக்கு சிரிப்பு வர, அடக்க முடியாமல் வாயை பொத்தி கொண்டாள்.
குட்டி ரௌத்திரன் உடலை முறுக்கி கொண்டு சினுங்க, முகத்தில் தெறித்த யூரினை துடைத்து கொண்டு கழுவி தூக்கி வந்தான் ருத்ரன்.
ம்ம் படுக்க போடு!
குழந்தையை படுக்க வைத்தான் ருத்ரன்.
இங்கிருந்து குழந்தைய பார்த்துக்கோ நான் குளிச்சிட்டு வரேன் என உள்ளே சென்றாள்.
ம்ம் மேம் என்று தலையை குனிந்தபடி பதில் கூறினான்.
இப்படியே மூன்று மாதங்கள் கடந்தது. ருத்ரன் அவனது வேலையில் சரியாக இருந்தான். இன்னும் அறுபது நாட்கள் மட்டுமே இருக்க.. காலண்டரில் அடுத்த அறுபது நாட்களை கணக்கிட ஆரம்பித்தான் ருத்ரன்.
ஹரிணி அவ்வப்பொழுது ருத்ரனிடம் பேசுவாள் அவனும் பேச்சு கொடுப்பான்.
என்னாச்சு? உங்க ஹஸ்பன்ட் ஆளையே காணோம் என ருத்ரன் தோட்ட வேலை செய்து கொண்டே கேட்டான்.
அவனுக்கும் எனக்கும் சண்டை!!
என்னாச்சு? என ருத்ரன் கேட்க..
சத்ய தேவை சுட சொல்லியிருக்கான். எப்டி என்னால அதை ஏத்துக்க முடியும்? என ஹரிணி பொங்கினாள்.
அந்த அளவுக்கு ex மேலே லவ்வோ? என்று ருத்ரன் சிரித்து கொண்டே வியர்வையை துடைத்தபடி பார்த்தான்.
நிவினுக்கு சாதம் ஊட்டி விட்டு கொண்டிருந்த ஹரிணி, ஆமா முக்கியம் தான் சத்ய தேவ் எனக்கு அவ்ளோ important. ஏன் நீ கூட என்னவாம்? மீனாட்சிக்கு வலி வந்ததும் சட்டுன்னு தூக்கிட்டு போனியே? என்றாள் ஹரிணி.
இதையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னா?
வேற யாரு உன் பொண்டாட்டி தான் சொன்னா! என்றாள் ஹரிணி.
என்ன இங்கே மாநாடு? என கேட்டு கொண்டே வந்தாள் மீனாட்சி.
சும்மா!! என ஹரிணி கூற..
நிவின் அங்கே பாரு பாப்பா!! என உற்சாகமாக ஹரிணி கூற..
ருத்ரன் நின்றபடி ஒரு நொடி வரலட்சுமியை பார்த்தான்.
தீரா பாரேன் அப்டியே குழந்தை மீனாட்சி போல இருக்கு. என்று ஹரிணி சொல்ல..
அக்கா உங்களுக்கு சரியா கண்ணு தெரியலைன்னு நினைக்கிறேன். குழந்தை அப்டியே அவங்க அப்பாவை உரிச்சு வச்சிருக்கு என்றான் ருத்ரன்.
அப்டியா? என ஹரிணி புரியாமல் பார்க்க..
ம்ம் பாருங்க அவங்க அப்பாவோட கண்ணு, கன்னக்குழி எல்லாமே இருக்கு.
அப்போ அந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வை உங்க எக்ஸ் குழந்தை மேலே என ஹரிணி மெதுவாக கூற..
ருத்ரன் வர லட்சுமியின் முகத்தை பார்த்து, மாமா அழுக்கா இருக்கேன். உங்களை பிரஷ் ஆகிட்டு தூக்கிறேன் இன்னொரு நாள் என கூறினான்.
ம்ம் ஓகே சொல்லு லட்சுமி! மாமாவுக்கு பாய் கொட்டு என கண்மணி கூறினாள்.
திரும்ப திரும்ப நிதினிடம் இருந்து அழைப்பு வந்தது.
Roll no 01 போனை கொண்டு வந்து ஹரிணியிடம் நீட்டினார்.
லைன்ல யாரு? என ஹரிணி கேட்க..
மேடம் பிளீஸ் அட்டன் பண்ணுங்க! நிவின் டாடி தான் லைன்ல இருக்கார் என ரோல் நம்பர் 1 கூற..
அக்கா வாங்கி பேசுங்க!! என ருத்ரன் கூற..
ஹெலோ உன்கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்ல என்று போனை வைக்க போக..
ரயில்வே மினிஸ்டர் ஆகிட்டேன். அதை இன்பாரம் பண்ண தான் போன் பண்ணேன் என கட் செய்தான் நிதின்.
இவனை எல்லாம் யார் மினிஸ்டர் ஆக்குறது? என வாயில் முனகி கொண்டிருந்தாள் ஹரிணி.
நிவின் தன் அன்னையின் முகத்தை திருப்ப.. .
ம்ம் ஆ போடு என ஊட்டி விட்டாள் ஹரிணி.
என்னாச்சு கா!! என ருத்ரன் கேட்கும் நேரம்..
ரோல் நம்பர் 03 வந்தான் அவ்விடத்துக்கு..
ஹரிணி கோபத்துடன் நான் யார் கிட்டயும் பேச விரும்பல என கூற..
மேடம்? நம்ம பொம்மாயி மேடம் ரோல் நம்பர் 21 அ வர சொன்னாங்க என்றார் ரோல் நம்பர் 03.
ஹரிணி சட்டென வலப்பக்கம் பார்த்தாள். குழந்தையுடன் பால்கனியில் நின்றிருந்தாள் நிலா.
இதோ வரேன் சார்! என்றவன் கைகளை கழுவி கொண்டு புறப்பட்டான்.
ருத்ரன்!!
அக்கா!!
உன் பொண்டாட்டி இது வரைக்கும் மேலிருந்து வேடிக்கை பார்த்திட்டு இருந்திருக்கா?
அப்டியா? சமாளிப்போம். என ருத்ரன் சென்றான்.
நிலா அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
இவ்வளவு நேரமும் ஹரிணி மீனாட்சி என இருவரும் ருத்ரனிடம் பேசியதை கேட்டு கொண்டிருந்தாள்.
குழந்தை யாரை போல இருக்கிறது என்ற அனைத்தையும் மண்டையில் ஓடி கொண்டிருந்தது.
கதவை தட்டினான் ருத்ரன்.
கதவை திறந்தவள் குழந்தையை படுக்கையில் கிடத்தினாள்.
மேம்? எதுவும் ஒர்க் இருக்கா? என கேட்டான் ருத்ரன்.
Door லோக் பண்ணு.
ஹாங் மேம்?
உள்ளே வந்துட்டு டோர் லாக் பண்ணு!! என பற்களை கடித்து கொண்டே கூறினாள் நிலா.
ருத்ரன்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels