அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
280 views

Epi -122

நிலா மாசமா இருக்கா? இது எவ்ளோ பெரிய சந்தோஷமான விசயம். நீங்க எதுக்கு இப்போ பெரியவர போட்டு அடிக்கிறீங்க? என இதழ் கூற.. 

பெரியவரா? என மிதுன் திகைப்புடன் பார்த்தான். 

ம்ம் ஆமாம்ணா அவன் பெரியவன் தான!! ரெண்டு குழந்தைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருக்காப்டி! அவரை கம்பேர் பண்ணும் போது நீயும் நானும் குட்டி குழந்தை ண்ணா என்றாள் இதழ். 

இதை கேட்டதும் இன்னும் விவேகாவுக்கு கோவம் ஏறிட மீண்டும் ருத்ரனை அடிக்க ஆரம்பித்தார். 

ருத்ரன் இதழை பாவமாக பார்க்க, அத்தை போதும் அத்தை அவனை அடிக்காதீங்க!! சின்ன பையன் உங்க தீரா அத்தை! பச்சை மண்ணு என்றாள். 

விவேகா மேலும் அடிக்க, ம்ம்மா என கையை பிடித்தவன். எனக்கே தெரியாது மா!! 

என்ன தெரியாது? டேய் என்னடா தெரியாது? என இன்பா கோபத்துடன் வந்தார். 

மா நான் வேணாம்னு தான் சொன்னேன். அன்னிக்கு டாடி தான் நீ நிலாவை கூட்டிட்டு வா அப்டின்னு சொல்லி சபதம் எடுத்து அனுப்பி வச்சார். என வண்டியை திருப்பி விட்டு காலரை சரி செய்தான். 

விவேகா அவன் பொய் சொல்றான் டி! அவனை போகவே வேணாம்னு சொன்னேன். அவன் தான் டி போனான். 

மா இல்ல மா என் கிட்ட கவ்யா பத்தியும் சொல்லி அனுப்பினார். என்றான் ருத்ரன். 

விவேகா வேகமாக வீட்டுக்குள் செல்ல, இன்பா அவரை பின் தொடர்ந்து சென்றார். ஹே அவன் பண்ண வேலைய பாத்தியா? அந்த பொண்ணுக்கு குழந்தை பொறந்து ஏழு மாசம் தாண்டி ஆகுது. அஞ்சு மாசத்துலயே ரெண்டு மாசமாகிக்கிட்டு வந்திருக்கான். அது உனக்கு தெரியலையா? என இன்பா ரிதமின் பக்கத்தில் சென்று அமர்ந்தார். தனது மகளின் கையை உள்ளங்கையில் வைத்து கொண்டு. 

விவேகா பெரு மூச்சுடன் அமர்ந்தார். அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. மனம் முழுவதும் வேதனை பரவியிருந்தது. 

நிலா கெஸ்ட் ரூமில் விட்டேத்தியாக அமர்ந்திருந்தாள். 

என்ன பெரியவரவே? மாமா உங்களை ஒண்ணா வர சொன்னாரு ஆனா நீ அவளை ரெண்டாகிட்டு வந்திருக்க? என்றாள் இதழ் சிரித்து கொண்டே.. 

ஹே கம்முன்னு இரு டி என்றவன் வேகமாக உள்ளே சென்றான். அவனை தொடர்ந்து இதழும் உள்ளே சென்றாள். 

மா பிளீஸ் மா என தன் அன்னையின் முன்னால் அமர்ந்து கொண்டான். 

என்னாச்சு அத்தை? என இதழ் அருகில் வந்து அமர்ந்தாள். 

விவேகா சேலையை பொத்தி கொண்டு அழுதார். 

அத்தை இப்போ எதுக்கு அழறீங்க? என அவள் கேட்க.. 

இன்னும் என்ன நடக்க வேண்டி இருக்கு? இனி நான் நினைச்சது எதுவுமே நடக்காதே!! என்றார் விசும்பி கொண்டே.. 

ஏன் நடக்காது? கண்டிப்பா நடக்கும். நான் தீராவை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள் இதழ். 

தன்னையும் மீறி அவர்கள் பேசியது நிலாவின் காதில் விழ கண்களில் நீர் கோர்த்து கொண்டது. 

பாப்பா இவனை கல்யாணம் பண்ணிக்க போறியா? வேணாம் என்ற மிதுன் வேகமாக சூர்யாவின் பக்கம் திரும்பி, இப்படி பொத்தி பொத்தி வளத்து இவனுக்கா கட்டி கொடுக்க போறீங்க? எதுவும் பேசுங்க!! அவன் இதழுக்கு வேணாம். அந்த தெக்கு புது பாளையம் பிரசிடண்ட் பையன் இதழ கேட்டான். பேசாமல் அவனுக்கு கட்டி வைக்கலாம் பா!! இல்லன்னா ஒரே வீட்ல பொண்ணும் மாப்ளையும் பாருங்க என் தங்கச்சிக்காக எனக்கும் எனக்காக என் தங்கச்சிக்கும் ஒரு பையன் ஒரு பொண்ணு நம்ம ஊர் பக்கம் கொண்டான் கொடுத்தானா கட்டிக்கலாம் என்றான் மிதுன். 

அப்பாடி என பெரு மூச்சுடன் ருத்ரன் பார்க்க, 

விவேகாவால் மறுத்து பேச முடியவில்லை. அவர் தலை குனிந்தபடி இருக்க மிதுன் சொல்வதும் மகிக்கு சரியாக பட, மிதுன் தனது தந்தையிடம் ஆல்ரெடி ஒரு தடவை அவளோட கல்யாணம் நின்னுடுச்சு அதுக்காக இவனுக்கு எதுக்கு கட்டி வைக்கணும். நான் சொல்றத கேளுங்க என்றான் மிதுன் 

ம்ம் எனக்கு ஓகே என சூரிய தேவ் சொல்ல.. 

எனக்கு தீரா தான் வேணும் என இதழ் அவனது கையை பிடித்து கொண்டாள். 

என்ன? என திடுக்கிட்டு அனைவரும் பார்க்க, ருத்ரனது உள்ளங்கை வியர்க்க, அவளை பார்த்தான் பதட்டத்துடன்..

விவேகா கண்களை துடைத்து கொண்டு என்ன சொல்ற இதழ்? என கேட்டார். 

எனக்கு வேற வீட்டுக்கு மருமகளா போக விருப்பம் இல்ல. என் அப்பா முன்னாடி இருக்கணும். துகில் இருக்கான் அவனை பார்த்துக்கணும். ருத்ரன் குழந்தையில் ஒன்னு மட்டும் நிலா இங்கேயே கொடுத்திட்டு போகட்டும் ரெண்டையும் கொடுத்தாலும் எனக்கு பிரச்னை இல்ல. தீரா குழந்தை தானே!! நான் வளர்க்க மாட்டேனா? இது எல்லாம் பாரின்ல சாதாரணம். வேற இடத்துக்கு போய் சின்னப்பட்டு சீரழிய என்னால முடியாது. தீராவாக இருந்தால் மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லன்னா எனக்கு கல்யாணம் வேணாம். என்றவள் வேகமாக அவளரைக்கு எழுந்து சென்று விட்டாள். 

விவேகா சந்தோஷத்துடன் ராகவ் பிளீஸ் சொல்லு. மூணு குழந்தையையும் நம்மளே பார்த்துக்கலாம். ருத்ரனும் இதழும் சந்தோசமா இருக்கட்டும். நம்ம கம்பனியா தீரா இனி take over பண்ணிக்கட்டும். இந்த போலீஸ் ஆர்மி இது எதுவும் நம்ம குடும்பத்துக்கு வேணாம். கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வரலாம். என் பொண்ணு ரிதம் சீக்கிரம் சரி ஆகிடுவா! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்றவர் எனக்கா சொல்றீங்க என மகியின் பக்கம் திரும்பினார். 

சூர்யா என்ன சொல்வது என தெரியாமல் நிற்க, அப்பா வேணாம் பா! நான் சொல்றத கேளுங்க. நிலா நீங்க வளர்த்த பொண்ணு. அவளோட வாழ்க்கையில் இப்போ ரெண்டு குழந்த. இதழ் போல தானே அவளும் இது தப்பு பா நான் சொல்றத கேளுங்க. இவன் வேணாம். என மிதுன் எவ்வளவோ எடுத்து கூற.. 

இந்த ஆறு மாசம் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம் இப்போதைக்கு இந்த கல்யாண பேச்சு வேணாம். என இன்பா கூறினார். 

விவேகா முறைத்து பார்க்க, என்ன உன்னோட இஷ்டத்துக்கு பண்ண முடியாது. நிலாவை நீ தானே செலக்ட் பண்ண? இப்போவே உனக்கு எல்லாமே நடக்கணுமா? கோர்ட் சொல்றத ஃபாலோ பண்ணனும். டேய் நீ போடா என சொல்லி விட்டு இன்பா நகர்ந்தார். 

விவேகா தன் மகனை கையுடன் அழைத்து சென்றவர். அவள் ரூமுக்கு போன! காலை வெட்டி அடுப்பில் போட்டுடுவேன். என மிரட்டி அனுப்பினார். 

***

ருத்ரன் நேராக இதழை பார்க்க சென்றான். 

வாங்க!! 

ஹே என்ன வாங்க சொல்ற? என ருத்ரன் அதிர்ச்சியுடன் பார்க்க.. 

நம்ம ரெண்டு பேரும் தானே கட்டிக்க போறோம் அதான் வாங்க போங்க இனி.. 

ஹே நான் உன்னை விட சின்னவன் டி!! என ருத்ரன் மிரண்டு கொண்டு பேச.. 

இட்ஸ் ஓகே நம்ம Genz ஒன்னும் பிரச்னை இல்ல. நஸ்ரியா பகத் பாசில் ரெண்டு பேருக்கும் எவ்ளோ வயசு வித்தியாசம் தெரியுமா? நம்ம ஆர்யா அவங்க மனைவி ரெண்டு பேருக்கும் அதை விட அதிகம். 

இதழ் நான் குடிப்பேன் சிகரெட் பிடிப்பேன். 

நானும் குடிக்கிறேன். உங்க சிகரெட்டை இனி நான் பிடிச்சு விடறேன் என்றாள் இதழ். 

ஹே உன் மேலே அப்படி ஒரு ஃபீல் எனக்கு இல்ல டி!! நீ எனக்கு அக்கா டி!! 

நான் உன் ex பொண்டாட்டியோட அக்கா! என கண் சிமட்டினாள் இதழ். அது மட்டுமில்லாமல் மெல்ல அவன் அருகில் நெருங்கினாள். 

ஹே வேணாம் இதழ் என்னோட மனசுல உன்னை நான் இப்படி எல்லாம் நினைச்சதே இல்ல! 

இனி நினைச்சுகோ!! 

எனக்கு ரெண்டு குழந்தை இருக்கு. இந்த முடிவு கொஞ்சம் சிக்கலானது வேணாம் பிளீஸ் என்னை வேணாம்னு சொல்லிடு என்றான் ருத்ரன். 

காரணம் என்னன்னு சொல்லு!! 

என் மனசுல நிலா தான் இருக்கா! போதுமா? 

இதழ்..? 

***

என்னடா சொல்ற? என சத்ய தேவ் புருவம் சுருக்கி கேட்க, 

இதழும் ருத்ரனும் கல்யாணம் பண்ணிக்க போறதாக கேள்வி பட்டேன். அப்படி மட்டும் நடந்தது கொன்னுடுவேன் டா? என் தங்கச்சிய மாசமாக்கிட்டி போய்ட்டான். என நிதின் கோபத்துடன் பற்களை கடித்தான். 

அப்போ சீமந்தம் பண்ணிடலாம் என்றான் சத்ய தேவ். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment