அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
280 views

Epi -123 


கம்பீரமான ஆடவன் மடியில் பெண்ணின் கால்கள்.. மெல்ல மெல்ல அதை பிடித்து அழுத்தி வருடி கொண்டிருக்கும் அந்த ரம்யமான நேரம் அந்த சூழ்நிலை அது பெண்மைக்கு கள் போதை..

ஆனால் என்ன கள் போதை கொடுத்து கொண்டிருக்கும் ஆடவனின் அந்த கம்பீர ஆடவனின் உணர்வுகளும் உள்ளமும் கல் என்பதை அறியா சூனிய தேவதை எதிரில் அவனது தொடையில் கால் வைத்து கொண்டிருப்பவள் அறிய வாய்ப்பில்லை.

பிளீஸ் விடுங்க தேவ் என சிணுங்கல் காதல் மொழிகளாய் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி கொண்டிருந்தாள் சந்தனா என்னும் போர்வையில் இருக்கும் சரிதா.

ஹே ப்ரெக்னன்சி டைம்ல இப்படி பிடிச்சு விடனும். அதான் என அசிங்கமான பாதத்தில் வெறுப்புடன் முத்தம் வைத்தான் சத்ய தேவ்.

என்னை கொஞ்சம் கிள்ளுங்களேன்!! என அவனது முகத்தை கையில் ஏந்தி கொண்டாள் சந்தனா.

எதுக்கு? என சத்ய தேவ் அப்பாவி போல பார்க்க,

எனக்கு இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நீங்க என்கிட்ட இருக்கீங்க தேவ். உங்களை நான் எவ்ளோ விரும்புறேன் தெரியுமா? என முத்தமிட்டாள் அவன் நெற்றியில்..

மீ டூ!! என சத்ய தேவ் மென் சிரிப்புடன் கூறினான்.

உங்களுக்கு நான் கூட இருக்கிறது எப்படி இருக்கு? என சந்தனா கேட்க..

என்னோட ஜென்மம் மொத்தமும் சந்தோசம் நிறைந்திருக்க அளவு இருக்கு என்றான் சத்ய தேவ் புன்னகையுடன்.

அப்படியா? என அவள் ஆசையுடன் பார்க்க..

எனக்கு இந்த குழந்தை ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா என அவனது கைகள் அவளின் வயிற்று பகுதியை பிடித்தது.

அவளுக்கு காதல் கரை கடந்து கொண்டிருக்க, அவனுக்கோ குழந்தை பத்திரமாக மீண்டு வர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே..

அவனது முகத்தை நிமிர்த்தி முத்தமிட வந்தாள்.

சனா பேபி நான் பிரஷ் பண்ணிட்டு வந்திடவா?

என்னாச்சு?

மாசமா இருக்கும்போது சென்ஸ் ரொம்ப அதிகம்னு சொல்லுவாங்க என சத்ய தேவ் சொல்ல..

சரியாக அந்த நேரம் பார்த்து அவளது போன் சினுங்க..

சரி போயிட்டு வாங்க தேவ் என்று அனுப்பி வைத்தாள் சந்தனா.

அந்த பக்கம் அவன் சென்ற அடுத்த நொடி வேகமாக போனை எடுத்தவள். நான் அப்புறம் பேசுறேன். என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா? என்று பற்களை கடித்து கொண்டு பேசினாள்.

ஹே கைனோ டாக்டர் அந்த சூர்ய தேவ் வீட்டுக்கு போயிட்டு வர்றாங்க எனக்கு என்னமோ சரியா படல!! அவன் ஏதாவது பண்ண போறான். என்று துட்சாதனன் கூறினான்.

அதுக்கு வாய்ப்பே இல்ல!! அந்த ரிதம் பக்கத்தில் போனாலே நீச்ச வாடை குமட்டிக் கிட்டு வரும். அப்படி இருக்கையில் எப்படி குழக்தை? அந்த துகில பார்க்க கூட வந்திருக்கலாம் நீங்க என்னை தொந்தரவு பண்ணாதீங்க என சொல்லி கொண்டே போனை வைத்தாள். சந்தனா.

ஆனால் துச்சாதனன் சொன்ன விசயங்கள் மண்டைக்குள் ஓடி கொண்டிருக்க ப்ளாக் ஈகிளுக்கு அழைத்து விசயத்தை கூறினாள்.

ப்ளாக் ஈகில் பத்து நிமிடங்கள் கழித்து போன் செய்தான்.

என்னாச்சு? என சந்தனா கேட்க..

ப்ளாக் ஈகில் சிரித்து கொண்டே, அந்த ருத்ரன் பொண்டாட்டி நிலா மறுபடியும் மாசமா இருக்கா! அதை விட கூத்து என்ன தெரியுமா?

என்ன? என சந்தனா கேட்க..

சத்ய தேவ் தங்கச்சிய தான் ருத்ரன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறான். காரி துப்புர மாதிரி இருக்க அவங்க குடும்ப நிலைமை என வாய் விட்டு சிரித்தான்.

அது தானே பார்த்தேன். ரிதம்! அந்த பைத்தியக்காரி இன்னும் பைத்தியமா தான் நடிக்கிறாளா? இந்நேரம் அவளுக்கு கிறுக்கு பிடிக்கலையா என்ன?

என்ன?

ஆமா இத்தனை அழகான புருஷன் அவளோட புருஷன் இப்போ என்னோட புருஷன் என் குழந்தைக்கு அப்பன். அதை நினைச்சு எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? என கூறி உற்சாகமாக சிரித்தாள்.

ப்ளாக் ஈகில் உறுதியுடன் எனக்கு இப்போ நம்பிக்கை வந்திடுச்சு. அப்போ நிஜமாவே சத்ய தேவ் மனதில நீ தான் இருக்க!! அவனும் நம்ம குடும்பத்தில் ஒன்றுன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!! என்ன? நேரடியா அவன கட்டி அணைச்சு மாமா மச்சானா பழக முடியாது.

அதற்கு காரணம் என்னைய அவனுக்கு சுத்தமா பிடிக்காது. மறைமுகமா எனக்கு உன்னோட வாழ்க்கை நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் தங்கச்சி சந்தோஷமா வாழரா இதுதான் எங்களுக்கு வேணும் என்றான்.

சரிதா புருவத்தை சுருக்கிக்கொண்டே “நீ தான் சந்தோஷப்படுற!! ஆனா இதுல துச்சாதனனுக்கும் சனாதனனுக்கும் துளி கூட விருப்பமில்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சத்திய தேவ்க்கு மட்டும் ஏதாவது ஆச்சு? நான் சும்மா விடமாட்டேன். என்று உருக்கமாக பேசினால்.

பிளாக் சிரித்துக்கொண்டே அப்படி ஒரு நிலைமை வரதுக்கு நான் விடுவனா? என் தங்கச்சி சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அவனுங்க எதுவும் பண்ண மாட்டாங்க. அதுக்கு நான் கேரண்டி. நீ அவன்கூட சந்தோஷமா இரு. எனக்கு அது போதும். என்றான்.

அந்த நேரம் பார்த்து சனா சனா என்று பின்னால் இருந்து சத்தி குரல்

தேவ் வரான் நான் வச்சிடறேன் என்று வேகமாக போனை கட் செய்தாள்

இங்கு ப்ளாக் சிரித்துக் கொண்டே அது என்ன சனா சனா அப்படின்னா என்ன என்று யோசித்தான் வாய்மொழியாக சொல்லிக் கொண்டே…

துச்சாதனன், அவதான் சந்தனான்னு பேர மாத்தி வச்சுக்கிட்டு இருக்காளே என்று கூற..

ஆமால நான் கேட்டேன் டா!! சத்தியதேவ் சரிதாவ சனான்னு கூப்பிட்டான் தெரியுமா? அவன் அவ பின்னாடி பைத்தியக்காரன் மாதிரி சுத்துறான். நீ வேணா இந்த வீடியோவை பாரு என்று காட்டினான்.

துச்சாதனன் அதை பார்த்துக் கொண்டிருக்க…

பிளாக் சனாதனனை பார்த்து நீயும் வந்து பாரு என்று அழைக்க..

எனக்கெல்லாம் பார்க்க வேண்டாம் என்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.

என்னடா ஏன் இப்படி நடந்துக்கிற தனா என்று பிளாக் அவன் முன்னால் சென்றான்

எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது. இப்ப கூட எனக்கு துளி கூட அவன் மேல நம்பிக்கை இல்லை. அவனைப் பார்த்தால் நல்லவன் மாதிரியே தோணல. நாளைக்கு அவளை ஏதாவது பண்ணிட்டா? என்ன பண்றது? என்றான்

பிளாக்கிகளுக்கு சந்தனா சொன்ன விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வர…
சனாதனன் கைகளை பற்றி கொண்டவன்.‌

நமக்கு அவளோட சந்தோசம் தான் முக்கியம் நீதான சொன்ன சீமந்தம் அப்போ பார்க்கலாம்னு. நீ போய் நேரடியா அவன பாரு. என்ன நடக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கலாம். நாம இத்தனை காசு சம்பாதிச்சு நம்ம நல்லா இருக்குமா எத்தனை ஸ்மக்குளின் , கடத்தல் வேலை போதப்பொருள் தங்கம் ,வைரம், பொண்ணுங்க, இப்படி எல்லாமே பண்ணி நம்மகிட்ட அத்தனை சொத்து இருக்கு. ஆனா என்ன பயன்? நமக்கு ஒரு வாரிஸ் இருக்கா? இல்ல… நம்மளால நிம்மதியா வாழத்தான் முடியுதா? நம்ம வாழாத வாழ்க்கையை சரிதா வாழ்றா. அதுதான் எனக்கு வேணும் என்றான் உறுதியாக.

சனாதனன் சுத்சாதனன் என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.


வீட்டில் ஒரே ரகளையாக இருக்க இதழ் துள்ளி குதித்து துகிலுக்கு முத்தம் பொழிந்தாள். அதுவும் அந்த குட்டி உதட்டில் ஆயிரம் முத்தம் கொடுத்திருப்பாள்.

விவேகா ஆசையாக இருவரையும் பார்க்க அதே தொனியில் தான் சூர்யா மற்றும் இன்பா பார்த்தார்கள்.

தனிமையே என நிலா அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தாள்.

இதழின் சிரிப்பு சத்தம் எல்லையை கடந்திருக்க என்னாச்சு கத்திட்டு இருக்கீங்க? என கேட்டு கொண்டே வந்தான் ருத்ரன்.

என்ற மருமகன் உதட்டை பாருங்க என்றாள் இதழ்.

துகில் பொக்கை வாயை போட்டு கொண்டு அழகாக சிரிக்க அவனது கீழ் உதட்டில் இதழின தூரிகாக்கு இருக்கும் அதே மச்சம் அப்படியே இருந்தது அவனுக்கு.

ருத்ரன் ஆச்சரியத்துடன் பார்க்க, விவேகா சொன்ன விஷயம் இன்னும் புளியை கரைத்தது அவனுக்கு.

துகில் அப்படியே தீரா போல இருக்கான். இப்போ இதழ் போல துகிலுக்கு மச்சம் வேற வந்திடுச்சு. அத்தை அத்தை நெய் ஊத்து கேட்டு பார்த்திருக்கேன் ஆனா எங்க வீட்டு ராஜா அத்தை கிட்டருந்து மச்சம் வாங்கிட்டு வந்துட்டார். அழகா இருக்கே!! நானே என் பேரன் மேலே கண்ணு வைக்கிறேன். இப்போ வெளியே தெருவுல இதழ் ருத்ரன் துகில எடுத்திட்டு போனால் ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அப்டின்னு கன்பார்ம் பண்ணிடுவாங்க என்றார்

ருத்ரன்..?

இதை கேட்ட நிலா..?

You may also like

Leave a Comment