அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
191 views

EPI 147

ரிதம் முகத்தை மூடி கொண்டவள். நான் என்னையே வெறுக்கிறேன் சக்தி. நீ வெளிப்படுத்தின காதல் எல்லாத்தையும் நான் ஒரு இடத்துல கூட பீல் பண்ணல.. அவள் பீல் பண்ணிட்டு போயிட்டா! போதுமா? உனக்காக கொலையே பண்ணியிருக்கா சக்தி. உனக்காக அவள் என வேக மூச்சுடன் பார்த்தவள். அந்த சதி தேவி கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. உன்னோட பேரை பச்சை குத்த தான் போனேன். நான் பச்சை குத்தும் போது நீ இருக்கணும்னு நினைச்சேன். அதான் ரெண்டு வார்த்தைய விட்டு வச்சேன். எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லன்னு உனக்கு தெரியும். என்றவள் உருகி போய் அப்படியே அமர்ந்தவள். அவளுக்கு சைலஜாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. இப்போ புரியுதா? Bla bla சதி தேவி கதை?  என நிறுத்தியவள். 

போதும் டா!! எனக்கு இதையெல்லாம் காலத்துக்கும் மறக்கவே முடியாது. நான் உன்னை தான் விட்டு போனேன். ஆனால் அவள் உனக்கு காதல் சின்னத்தை விட்டு போயிருக்கா? என்னை விட்டுடு என சொல்லி விட்டு அமர்ந்தாள் ரிதம். 

அவளது மனதில், தான் யாரென அறியாத நேரத்தில் வேறு ஒரு பெண்ணாக இருக்கும் போது தன்னையே மறந்து போய் அவளுடன் இருந்திருக்கிறான் தனது கணவன். 

எனக்கு ரிதம் வேணும். என அவளின் முன்னால் அமர்ந்தான் சத்ய தேவ்..

ம்ம் ஹிம்.. பிளீஸ் 

ரெண்டும் நீ தாண்டி!! அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டின்ற? என சத்ய தேவ் கன்னத்தை பற்றினான். 

நான் எப்போவெல்லாம் உன்கிட்ட நெருங்கி இருக்கேனோ காதலை கெஞ்சி இருக்கனோ அப்போ நீ என்னை என்ன பண்ண? உதாசீனம் பண்ண சக்தி. கஜுராஹோ போறதுக்கு முன்னாடி நீ என்கிட்ட என்னை விரும்புறேன்னு ஒரு தடவை கூட சொல்லவே இல்ல டா நீ? உனக்கு உன்னோட ஈகோ பெருசு அப்டின்னா? அதை விட எனக்கு பெருசு. 

இப்போ என்கிட்ட ஈகோ இல்ல டி! என சத்ய தேவ் அவளின் மென் பாதங்களை பிடித்து கொண்டான். 

நீ எனக்கு வேணாம். அவ்ளோ தான் என ஒரே வார்த்தையில் முடித்து கொண்டவள். நான் சென்னையில் என்னோட டாடி வீட்ல இருக்க போறேன் பெங்களூர் வர மாட்டேன். 

சத்ய தேவ் இயலாமையுடன் பார்க்க, அதாவது ஒரு வயசு வரைக்கும் குழந்தைகளை சேர்ந்து பார்க்கலாம். துகில் ஆதி மட்டும் எனக்கு போதும். நீ சாகிய எடுத்திட்டு போயிடு. என சொல்லி முடித்திருந்தாள் ரிதம். 

இதை எதுக்கு நான் ஏத்துக்கணும்? என்னோட ஆதிக்கத்தை உன்கிட்ட காட்டுவேன். என சத்ய தேவ் கூற.. 

ஏன்னா என்னன்னா? நேக்கு பயமா இருக்கு. இப்படி எல்லாம் பேச நான் சைலஜா சத்ய தேவ் இல்ல. நான் ரிதம் இன்ப ராகவன். என்று விட்டு எழுந்தாள் ரிதம். 

அவளது எண்ணங்களில் மிகவும் தெளிவாகவே இருந்தாள். சத்ய தேவ் அவளின் கையை பற்ற, ஓங்கி விட்டாள் ஒரு அரை… பிடிக்கல தொடாதே.. என்று விட்டு வேகமாக சென்றாள். 

சத்ய தேவ் வேகமாக அங்கிருந்து புறப்பட்டான். சக்தி எங்கே போற என நிதின் வர, எதுவுமே பேசவில்லை.. வாழ்க்கையை வெறுத்து விட்டான். நேராக காரில் புறப்பட்டான் நிதின் பின் தொடர்ந்து செல்ல, ரிதம் எதையுமே கண்டு கொள்ளாமல் தனது மகனுக்கு முத்தமிட்டு அணைத்து கொண்டாள். அவளுக்கு யாரும் தேவையில்லை. 

சக்தி எங்கே? சக்தி எங்கே? என திரும்ப திரும்ப ஒரே கேள்வியை தான் அனைவரும் கேட்டு கொண்டிருந்தார்கள். 

தெரியல மாமி! வெளியே கிளம்பி போனான் அவ்ளோ தான் எனக்கு தெரியும்

சண்டை எதுவும் போட்டியா? ரிதம்? என இன்பா கேட்க.. 

டாடி!! அவன் கிட்ட சண்டை போட எனக்கு என்ன இருக்கு? நானே இவனுங்க மூணு பேரையும் பார்த்துக்க முடியாம ரொம்ப சோர்வா இருக்கேன் போங்க டாடி என கண்களை தேய்த்து கொண்டு கூறினாள் ரிதம். 

நான்கு நாட்கள் ஈரோட்டில் இருந்தார்கள். சத்ய தேவ் பற்றி எதுவுமே தெரியவில்லை. 

நிதின் குட்டி! தீரா! உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியுமா? நாலு நாளுக்கு மேலே ஆச்சு? சக்தியை பார்த்து என மகி அழுகையுடன் கேட்டார். 

பெங்களூர் போயிருப்பான் சித்தி. நீங்க கவலை படாதீங்க என நிதின் சமாதானம் செய்தான். இதோ ஊரில் இருக்கும் அனைவரும் புறப்பட்டார்கள்.  

ரிதம் எதையுமே கண்டுகொள்ளவில்லை.  மொத்த குடும்பமும் பெங்களூர் சென்றது. ருத்ரன் விடாமல் சத்ய தேவுக்கு அழைத்தான். ஆனால் பதில் இல்லை.. 

என்னாச்சுங்க? சக்தி அண்ணாவை கண்டு புடிச்சீங்களா? என வயிற்றை நீவி கொண்டே கேட்டாள் நிலா. 

இல்ல நிலா என கவலையுடன் கூறினான் ருத்ரன். இதயம் அழுத்துவதை போல இருந்தது. அவனுக்கு.. 

நிதின் பதட்டத்துடன் வீட்டுக்குள் வந்தான் சூர்யாவை பார்க்க.. 

ரிதம் ஹாலில் அமர்ந்து இரண்டு குழந்தைகளையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் துகிலனை மடியில் வைத்திருந்தாள். 

என்னடா சொல்ற? என சூர்யா நிதினின் சட்டையை பற்றி கேட்க, ருத்ரன் அவ்விடத்துக்கு வந்திருந்தான். மாமா என்னாச்சு என கேட்டு கொண்டிருக்க மிதுன், இதழ் என அனைவரும் சத்தத்தை கேட்டு வந்து சேர்ந்தார்கள். 

சூர்யா வேகமாக புறப்பட்டார் அங்கிருந்து, யாரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. வீட்டிலிருந்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தார்கள். 

அன்று ரிதமிடம் பேசி விட்டு கிளம்பிய சத்ய தேவ் தன்னையே மறக்கும் அளவுக்கு குடித்து விட்டு வண்டி ஓட்டி ஆக்சிடன்ட் ஆகி இப்பொழுது கோமாவில் கிடக்கிறான். 

இதோ ஹாஸ்பிடலில் சத்ய தேவ் மருத்துவ படுக்கையில் கிடந்தான். அனைவருக்கும் விவரம் தெரிந்து அரக்க பறக்க ஓடி வந்தார்கள். 

இன்னும் என்னோட பையன் எத்தனை கஷ்டத்தை தாங்குவான்? என்று தேம்பி அழுதார் சூர்யா, சத்ய தேவ் மருத்துவமனையில் இருக்கும் விஷயம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியவர, மகி மொத்தமாக உடைந்து போனார். தலை தலையாக அடித்து கொண்டு அழுதார். 

இன்ப ராகவன் நொந்து போய் அமர்ந்திருந்தார். என்னங்க ரிதம்? என விவேகா அழுதபடி கேட்க..

அய்யோ அய்யோ என நெஞ்சு நெஞ்சாக அழுதபடி அழுதார் மகி. 

தனிமை கொடிது. ஆனால் அனைவரும்  தன்னிடம் பேசினாலும், தனக்கு பிடித்தமான ஒருத்தி தன்னை பேசாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை. அந்த கொடுமையை தான் சத்ய தேவ் அனுபவித்து இப்படி இந்த நிலைக்கு வந்து விட்டான். 

ருத்ரன் கூட அழுகையுடன் நின்றிருந்தான். வேதனை அனைவரையும் வாட்டியது. 

இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்? ரிதம் கிட்ட சொல்லுங்க அங்கில் என இன்பாவின் முன்னால் வந்து நின்றான் நிதின். 

எப்படி சொல்ல? என இன்பா கூட கண்கலங்கி உடைந்து அழுதார். அந்த நேரம் பார்த்து மருத்துவர் வந்தார். 

டாக்டர் என்னோட பையன் எப்டி இருக்கான்? என சத்ய தேவ் கண்களில் நீர் கோர்க்க கேட்க, 

பின் தலையில பலமா அடி பட்டிருக்கு. டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வர நாளாகும். எந்த காயமும் இல்ல. உயிர் பயம் இல்ல பயப்பட வேணாம். ஆனால் என ஒரு க் வைத்தார். 

என்ன டாக்டர் சொல்லுங்க? என பதட்டத்துடன் இன்பா கேட்க.. 

அவர் இப்போ கோமாவுக்கு போயிட்டார். கொஞ்சம் என நிறுத்தினார். மருத்துவமனையே கண்ணீரில் மூழ்கியது. 

தொடரும்..

You may also like

Leave a Comment