அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
339 views

Episode -73

இன்னிக்கி அழகா இருக்க என சொல்லி கொண்டே வந்தாள் ரிதம். 

ஏன்டி!! என அவளை திரும்பி பார்த்தான் சத்ய தேவ். 

உண்மைய தான் டா சொல்றேன். இன்னிக்கி ரொம்ப அழகா இருக்க! நான் சொன்னதும் நீ வெட்கப்பட்டு அதை வெளிக்காட்டுக்காம மெயின்டெய்ன் பண்றது அதை விட அழகு. நான் எப்டி உன்கிட்ட விழுந்தேன்ன்னு இது வரைக்கும் யோசிச்சிட்டு இருக்கேன் என்றாள் ரிதம். 

சத்ய தேவ் தலையை கோதி விட்டபடி சட்டையை மடித்து விட்டவன். அவளுடன் ஒட்டி ஜோடி போட்டு கொண்டு நடந்தான். அடுத்த வருடமும் இதே பண்டிகையில் நடப்பான். ரிதமும் நடப்பாள் ஆனால் இருவரும் அருகில் இருப்பார்களா? எதிரெதிர் திசையில் இருப்பார்களா? 

மகி மற்றும் சூர்யா இருவருக்கும் அத்தனை சந்தோஷம் ஊரில் உள்ள அனைவரும் நலம் விசாரித்தார்கள். எங்க வீட்டு பொண்ணு. வாரிசை சுமந்துட்டு இருக்கா என பெருமையுடன் சென்றார்கள். ஆல்ரெடி அங்கிருக்கும் அனைவருக்கும் ரிதம் சைலஜாவாக இருந்த போது தெரியும். அனைவரும் நலம் விசாரித்து விட்டு அங்கலாய்த்து கொண்டார்கள். 

என்னாச்சு அனிதா? என சூர்யா தன் தங்கை முறையில் ஒருவரை பார்த்து கேட்க..

பெரிய பையனுக்கு தான் அசல்ல கல்யாணம் பண்ணிட்டீங்க. பாப்பாளுக்கு நீங்க நம்ம ஊரில் தான் பொண்ணு கட்டணும். நான் தான் அண்ணா உன்னோட கல்யாணத்தில் இணை கட்டினேன் என்றாள். 

ம்ம் கண்டிப்பா அனிதா! என சூர்யா புன்னகையுடன் முன்னால் சென்றார். 

என்ன டி முகத்தை தூக்கி வச்சிருக்க? 

ஒண்ணுமில்ல என ரிதம் நகர்ந்து செல்ல.. 

நான் தான் உன்னை ட்ரிக் பண்ணி உன் பின்னாடி சுத்தி உன்னை கட்டிக்கிட்டேன். போதுமா என்றான் சத்ய தேவ். 

போடா என ரிதம் திரும்பி கொண்டாள்.

வெகு விமர்சையாக இருந்தது. இன்பா ஒரு பக்கம் சத்ய தேவ் ஒரு பக்கம் நடுவில் ரிதம். நேராக சாமியை பார்க்க உள்ளே சென்றார்கள். 

அர்ச்சனை செய்து தீர்த்தம் தெளித்தார்கள். ரிதம் கடவுளை பார்த்தாள். பெரிய தப்பு பண்ணிட்டேன். அதை விட பெரிய தப்பு பண்ண போறேன். எனக்கு வேற வழி தெரியல. உன்கிட்ட என்ன கேட்க புரியல என கம்பீரத்தில் மஞ்சள் முக மாரியம்மன் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் வெளியே வந்து சேர்ந்தாள். 

நிலா ஒரு பக்கம் விவேகாவுடன் அங்கிருக்கும் விளையாட்டு பொருட்கள். பொம்மைகள் என ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவருக்கும் வர போகும் குழந்தைக்கு வாங்கி குவித்தாள். 

கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து சாப்பிட்டார்கள். இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி. இன்பா விவேகாவை தொந்தரவு செய்து சென்றார். எல்லோரும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பார்க்க சென்று விட.. நானும் போகவா? என நின்றது ரிதம் தான். 

அங்கே உனக்கு என்னடி வேலை? நீ போக கூடாது. 

நான் போவேன் போடா! என புறப்பட்டு விட்டாள். 

அப்போ வா நானும் வரேன் என சத்ய தேவ் அவளை அழைத்து சென்றான். இங்கே வீட்டில் தனித்து விடப்பட்டது இரு கிளிகள். ஒன்று சிவன்யா மற்றொன்று நிலா. 

ஆங்காங்கே அவரவர் ஜோடிகளுடன் காதில் கிசுகிசுத்தபடி புன்னகையுடன் வெட்க சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தார்கள். ரிதம் எகிற பார்க்க.. 

ஹே என்னை விட்டு நகர கூடாது. என சத்ய தேவ் அணை கட்டினான். லாங் டாப் போட்டிருந்தவள். கர்ப்பகால செழுமையை மறைக்க விவேகாவின் வற்புறுத்தலின் பெயரில் துப்பட்டா அணிந்திருந்தாள். யம்மாடி ஆத்தாடி, தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான், இப்படி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கென இருக்கும் அனைத்து பாடலும் ஓட.. ரிதம் உற்சாகத்துடன் ஆடி கொண்டே பார்த்தாள். 

என்ன நினைச்ச? நீ என்ன நினைச்ச? என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு கேப்டன் பாடல் ஓடி கொண்டிருக்க.. 

எதுக்கு என்னையவே இப்படி பார்த்திட்டு இருக்க? என ரிதம் முடியை ஒதுக்கியபடி கேட்க.. 

சத்ய தேவ் அவளின் இடையில் கை வைத்தான். 

என்னாச்சு என திரும்பி பார்த்தாள். 

நாளைக்கு முக்கியமா வேலை இருக்கு அது மட்டும் இல்லன்னா இப்போவே என உதட்டை கடித்து கொண்டான். 

ரிதம் கொஞ்சம் கண்ணம் சிலிர்க்க வேறு புறம் திரும்பி கொள்ள.. அனைவரூம் உற்சாகமாக பார்த்து முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். 

நடுஇரவில் அவள் கால்களை மடியில் வைத்து அழுத்தி முத்தமிட்டான் பாதத்துக்கு.. 

ரிதம் எதுவும் பேசவில்லை.. சத்ய தேவ் அவளின் அருகில் வந்து வயிற்றை வருடி கொண்டே இருவரும் மோகம் இல்லாமல் காதல் மட்டும் கொண்டு உறங்கி விட்டார்கள். 

…..

கேப்டன் ருத்ரனை உடனே வர சொல்லுங்க நியூ சர்குலர் வந்திருக்கு என அழைத்தார்கள். சல்யூட் வைத்து விட்டு உள்ளே நுழைந்தான். தலைமை அலுவலகத்தின் உள்ளே.. 

மிஸ்டர் ருத்ரன் இனி உங்களுக்கு  ஒர்க் எல்லாமே மினிஸ்ட்ரி ஃபோர்ஷ் ல.. 

சார்! என ருத்ரன் புரியாமல் கேட்க.. 

ஹோம் மினிஸ்டர் நிதின் பிரகாஷ் அண்ட் அவரோட செக்யூரிட்டி க்ரு ல நீங்க ஜாயின் பண்ண போறீங்க அதுக்கான கால் லெட்டர் என நீட்டினார். 

ருத்ரனின் மனதில் ஒரு எரிமலையே வெடித்து சிதறியது. நான் இவளின் குடும்பத்தில் கேட்டேனா வேலை? என்னை அடிமையாக்க திட்டமிட்டு அழுது நாடகமாடி கல்யாணம் செய்திருக்கிறாள். ( அவள் எங்கே டா பிளான் பண்ணி கல்யாணம் பண்ணா? நீ தான் டா அவளை கல்யாணம் பண்ணியே தீருவேன் அப்டின்னு கட்டிக்கிட்ட) 

தலைமை அதிகாரி அவனை பார்த்து, உங்களோட டிரான்ஸ்வர் வேலையை ஆரம்பிக்க சொல்றேன் என்றார். 

நெக்ஸ்ட் இயர்ல இருந்து ஃப்ரெஷ்சாக ஸ்டார்ட் பண்ணலாமே சார் என்றான். 

தலைமை அதிகாரி அவனையே பார்க்க, நான் பேசிட்டு சொல்றேன் சார்  என ருத்ரன் கூறினான். 

உங்க விஷ் என்றதும் ருத்ரன் கடுப்புடன் வெளியே வந்தான். உள்ளுக்குள் மொத்த வன்மமும் நிலவின் மேல் திரும்பியது. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வீடே அசைவ வாசனையில் கமகமத்தது. நல்ல வாசனையா இருக்கே என எழுந்து அமர்ந்தாள் ரிதம். 

ஆட்டு கால் சூப், உப்பு கறி, நாட்டு கோழி சூப், என அனைத்தும் அவளின் முன் வரிசையாக அடுக்க பட்டிருந்தது. 

சக்தி என அழைத்து கொண்டே எழுந்தாள். 

குளித்து முடித்து வெளியே வந்தான். 

எங்கே கிளம்பிட்ட? 

சேத்து வேசம் போட.. 

என்ன வேசம்? என ரிதம் சூப்பை குடித்தபடி கேட்டாள்.

ஹே சூர வாயில் சூப் குடிக்கிறயா? 

அதை விடு! என்ன சேரு வேசம்? என கேட்டாள் ரிதம். 

எங்க ஊர்ல அது ஒரு விசேஷம். எல்லாரும் சாமிக்கு வேண்டிகிட்டு அது நிறைவேறினதும் ஆத்துக்கு நடந்து போய் சேரு பூசிட்டு வந்து கோயில சுத்திட்டு குளிப்பாங்க. ஊரே அங்கே தான் இருப்பாங்க அதான் கிளம்ப போறேன். 

ஹே நானும் வரேன். என எழுந்தாள். 

செப்பல் போடாம நடக்கணும் டி! அதுவும் ரொம்ப தூரம்  ரிஸ்க் வேணாம் டி! நீ இங்கேயே சாப்பிடு சித்தி அம்மா எல்லாரும் இருக்காங்க நான் போறேன் என அவன் நகர.. 

ஹே நானும் வருவேன் அவ்ளோ தான் என எழுந்தவள் நேராக பாத்ரூம் சென்றாள் குளிக்க.. 

சொல்றத கேளு ரிதம். 

நான் வருவேன் அவ்ளோ தான்டா என்னை கூட்டிட்டு போ என்று விடாப்பிடியாக இறங்கி வந்தாள். 

சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன் கீழே வந்தான். 

ரிதம் எங்கே கிளம்பிட்ட? என விவேகா கேட்க.. 

நான் கோவிலுக்கு போறேன் என்றாள் புன்னகையுடன்..

செல்லம் அங்கே ரொம்ப கூட்டமா இருக்கும் டா! என மகி மற்றும் உமா அனைவரும் சொல்ல.. 

எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நான் போவேன் என விடாப்பிடியாக நின்றவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியவில்லை. 

சத்ய தேவ் தன் மாமனை பார்க்க.. 

கூட்டிட்டு போடா என்றார் இன்பா. 

நானும் வரேன் என மிதுன் அவர்களுடன் புறப்பட்டான். அப்படியே மொத்த படையும் கிளம்பி சென்றது.  பவன்யா, இதழ், வெற்றி என அனைவரும் சென்றார்கள். 

கொஞ்ச தூரம் தான் நடந்தாள். அதற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை. அவளின் நடை குறைய.. சத்ய தேவ் அவளை பார்த்தான். 

என்ன பார்க்கிற? 

நடக்க முடியல சரி தானே! 

முடியுது என அவள் அடுத்த அடி வைக்க.. 

உன்னை? என முறைத்தான். 

போடா என முகத்தை திருப்பி கொண்டவள் முகம் அடுத்த நொடி புன்னகையாக மலர்ந்தது. ஹே என்ன பண்ற? 

அதான் கால் வலிக்குதுன்னு சொன்னியே? அதான் என நடக்க ஆரம்பித்தான். 

ஆம் அவளை தூக்கி கொண்டான். கைகளில் ஏந்தி கொண்டான். 

இந்த அளவுக்கு இவளை லவ் பண்ணாத அண்ணா! இந்த ரிதம் ஒரு பாய்சன் என பவனியா கூற.. 

ரிதம் பவனியாவை முறைத்து விட்டு அவனது கழுத்தை கட்டி கொண்டாள். ஊர் மொத்தமும் அவர்களை தான் பார்த்தது. 

கடவுளை வேண்டி கொண்டு ஆற்று சேர் மண்ணை எடுத்து அனைவரும் பூசி கொண்டு கோவிலை நோக்கி நடந்தார்கள். 

நீ எதுவும் வேண்டுதல் வச்சியா இந்த முறை என ரிதம் கேட்க.. 

ம்ம் வச்சிருக்கேன். 

என்ன? 

அடுத்த முறை நம்ம மூணு பேரா வந்து வேசம் போடனும்னு என்றான் புன்னகையுடன்.. 

ரிதம்…? 

வளைகாப்பில் சந்திப்போம் 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment