Episode -72
ருத்ரன் போனை எடுத்து பார்த்தபடி தலையை கோதியவன் காதில் வைத்தான்.
ஹலோ என மென்மையான நிலவின் குரல்..
ம்ம் என்ன விசயம்?
அது வந்து!!.. என்ன பண்றீங்க? என மென்மையாக கேட்டாள் நிலா.
ம்ம் வீட்டுக்கு போயாச்சா?
ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தாள்.
அப்புறம்? என ருத்ரன் கேட்க..
நிலாவின் இதயம் வேக வேகமாக துடித்தது.
என்ன டி!! எதுவும் பேசு? நீ தானே கால் பண்ண? என ருத்ரனது குரல் மென்மையாக ஒலித்தது.
“அது வந்து சும்மா உங்க கிட்ட பேசணும்னு தோணுச்சு!!”
“உன்னோட பக்கத்தில் எங்க அம்மா இருக்காங்களா என்ன?”
ஏன் என்னாச்சு? என நிலா கேட்க..
என்கிட்ட பேச உனக்கு எப்டி தோணும்? உன்னோட எக்ஸ் நினைப்பு வந்துடுச்சா என்ன? என ருத்ரன் சாதாரணமாக கேட்டான்.
நிலாவின் பக்கம் மவுனம் மட்டுமே பதிலாக இருக்க..
ஹேய் கிஸ் சவுண்ட் கொடு! கூடவே ஹம்மிங் வேணும் என ருத்ரன் கூற..
கோவில் விசயமா வந்திருக்கோம். இப்படி பண்ண கூடாது. பிளீஸ்!! என வாய் மொழியாக கூறினாள். அவள் மனதில் ஏனடா போன் செய்தோம் என்பதை போல தோன்றியது.
நிலா நான் இல்லாம போனால் என்னடி பண்ணுவ? ஒரு வேளை இங்கே வார்ல எனக்கு எதுவும் ஆகிடுச்சுன்னா உன்னோட எக்ஸ் கூட மறுபடியும் சேர்ந்துக்குவ தான? என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்வாள்? நிலா? அவ்வப்பொழுது இவனுக்கு கேடு வேறு பிடித்து கொள்கிறது.
உன்னை தான் டி!! என ருத்ரன் அதட்டி கேட்டான்
உங்களுக்கு எதுவும் ஆகாது. நீங்க என்னோட புருசன்!! என்னைக்கும் உங்களை விட்டு போக மாட்டேன்.
அப்போ உன்னோட எக்ஸை மறந்திட்டியா? என்ன? எல்லாரும் ஏமாத்திட்டு தான் இருக்காளுங்க. அதே போல தான் நீயும் கூட.. ஒரு வேளை உன்னோட எக்ச நீ தான் ஏமாத்தி இருப்ப போல… அதான் எனக்கு போன் பண்ற? அப்போ இதுக்கு அர்த்தம்?
நிலா அமைதியாக இருந்தாள்.
ஹே பதில் சொல்லு!! அதுக்குள்ள எனக்கு கால் பண்ற? என ருத்ரன் மீண்டும் கேட்க..
“என்னோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும் அவரை என்னால மறக்க முடியாது.” என்று விட்டு போனை வைத்தாள் நிலா.
ருத்ரன் போனை விசிறி அடித்து விட்டு அங்கும் இங்கும் நடந்தான். கோபமும் ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. ஆனால் எதற்கு? என்று தான் தெரிய வில்லை. இப்படியே எத்தனை நாளைக்கு கிறுக்கு பிடித்தவன் போல திரிவான் என்று தான் புரியவில்லை படிக்கும் நமக்கு. அந்த அறையில் இருக்கும் லேண்ட் லைன் அலற.. ஹலோ என்றான் விறைப்பு குறையாமல்..
டச் DNA ரிசல்ட் வந்திடுச்சு கேப்டன் என மறுமுனையில் இருந்து கூற..ருத்ரன் ஒரு நொடியில் நிலாவை ஓரங்கட்டி விட்டு நேராக லேப் பக்கம் சென்றான்.
டாக்டர் அவனுக்காக காத்திருக்க.. என்ன தகவல் கிடைச்சது டாக்டர் ? என ருத்ரன் கேட்க..
இதுல மூணு DNA sample இருக்கு, ரெண்டு sample வேற ஒருத்தர்து அந்த மூணாவது டிஎன்ஏ உங்களோடது என்றார்.
அந்த sample அ நம்ம data base ல போட்டு match பண்ணி பார்த்தீங்களா?
Negative தான் என்றார்.
அந்த கொலுச கொடுங்க கூடவே டிஎன்ஏ ரிப்போர்ட் வேணும் என வாங்கி கொண்டான்.
உள்ளுக்குள் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. கண்டிப்பா அப்படியே விட மாட்டேன். உன்னை கண்டு புடிச்சே தீருவேன் டி! என அந்த கொழுசுக்கு முத்தமிட்டான் ருத்ரன். ஏனோ உடலும் மனமும் அலைந்தது.
உடல் ஹனியை தேடி அலைய.. மனமோ நிலவை தேடி அலைந்தது.
***
நிலாவின் கண்கள் அழுது அழுது சிவந்து போனது. எந்த ரகத்தில் இவனை வைக்க? என தோன்றியது.
இனி நானா இனிசியேட் எடுத்து பேசவே மாட்டேன் என கண்களை துடைத்தாள். அவர்களின் திருமண புகைபடங்களை பார்த்து கொண்டிருந்தாள். அந்த ருத்ரன் வேண்டும். எனக்காக என்னை கட்டி கொள்ள என்னை விடாமல் துரத்தினாரே! என்னோட தீரா!! எனக்காக இல்லனா கூட மாமிக்காக என்னை கட்டின்டார் என அவனது படத்துக்கு முத்தம் வைத்தாள்.
எப்போவுமே தீராவுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காதா? என விம்மினாள் நிலா.
***
ஹே தள்ளி போடி!! என சத்ய தேவ் விலக முயற்சி செய்ய..
முத்தம் கொடுத்தால் ஒன்னும் சாமி குத்தம் ஆகாது. வாடா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என கண்களை சிமட்டிய படி அழைத்தாள் ரிதம்.
மா!! வாங்க என சத்ய தேவ் பின்னால் இருந்து அழைக்க..
ரிதம் சட்டென திரும்பி பார்த்தாள். சத்ய தேவ் வேகமாக வெளியே சென்று விட்டிருந்தான்.
ரிதம் பெரு மூச்சுடன் அப்படியே படுக்கையில் அமர… அரை மணி நேரம் கழித்து பச்சை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் நெற்றியில் திருநீற்று கீற்றுடன் வந்தான் சத்ய தேவ்.
ரிதம் அவனை முறைத்த படி பார்க்க..
பின்னாடி எதுவும் ஆப்பு வச்சிருக்கயா?
என்ன? என ரிதம் கேட்க…
ஆமா திடீர்னு வந்து ஒட்டுற? இதெல்லாம் உன்னோட அகராதியில் இல்லையே!! இப்படி ஒட்டி பழக்க வச்சுட்டு நான் அசந்த நேரத்தில் என்னை விட்டுட்டு போக எதுவும் திட்டம் வச்சிருக்கயா என்ன? என கேட்டான் சத்ய தேவ்.
ரிதம் கன்னகுளி தெரிய சிரித்து கொண்டே மெல்ல அமர்ந்தாள்.
சத்ய தேவ் அவளுக்கான உடையை எடுத்து வைத்தவன். இன்னிக்கி குளிச்சிட்டு சாரி கட்டிக்கோ! கோவிலுக்கு போலாம் என்றான்.
மாமிய வர சொல்லு என பாத் ரூம் சென்றாள்.
என்ன? என்னோட அம்மாவா? என்று ஆச்சரியத்தில் கேட்டான் சத்ய தேவ்.
என் மாமி!! நான் சண்டை போடுவேன். பேசாமல் இருப்பேன். என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என்றாள்.
ம்ம் ஒரு மார்க்கமாக தான் இருக்க என்று விட்டு வெளியே சென்றான். அடுத்த அஞ்சு நொடியில் மகி உள்ளே வந்தார்.
மாமி எனக்கு முதுகு வலிக்குது நீவி குளிக்க வைக்கிரீங்களா? என கேட்டாள்.
மகி சிரித்தபடி கண்டிப்பா தங்கம் இதோ வரேன் என புடவையை எடுத்து சொருகி கொண்டு வந்தார். அவளது உடலை அழுத்தி பிடித்த படி மிதமான சுடு நீரை ஊற்றி விட்டார்.
மாமி என் மேலே உங்களுக்கு கோபம் இல்லையே? என ரிதம் வேதனையான முகத்துடன் பார்க்க..
நீ எனக்கு மிதுன் மாதிரி தான் தங்க பொண்ணு! கோபம் இல்ல வருத்தம் தான். உன் மேலே சத்ய தேவ் அவ்ளோ நேசம் வச்சிருக்கான். என் பையன கஷ்ட படுத்துறது தான் வேதனையா இருக்கு. கோபம் இல்ல என்றார் தண்ணீரை ஊற்றி விட்ட படி..
ரிதம் அவரின் கையை பிடித்தவள். உங்களுக்கு என்ன பாப்பா வேணும்? என கேட்டாள்.
மகி சிரித்து கொண்டு எனக்கு ரிதம் வந்தாலும் ஓகே தான் சத்ய தேவ் வந்தாலும் ஓகே தான் என்றார்.
ரிதம் சிரித்து கொண்டே சக்தி தான் வருவான். உங்க கிட்ட தான் கொடுப்பேன். வளத்திடுங்க என்றாள்.
மகி உற்சாகத்துடன் அதுக்கு தான் தவம் கடக்குரோம். நான் வளர்ப்பேன் உங்க ரெண்டு பேருக்கும் பெத்து போடும் வேலை மட்டும் தான் என்றார்.
ரிதமுக்கு அவரே புடவையை கட்டி விட்டார். போலாமா கோவிலுக்கு என அனைவரும் புறப்பட்டார்கள்.
நிலாவும் எளிமையான புடவையில் வந்து சேர்ந்தாள்.
அனைவரும் கோவிலுக்கு புறப்பட்டார்கள்.
சத்ய தேவ் என்ன செய்ய போகிறான்?
ரிதம் என்ன தான் நினைத்து கொண்டிருக்கிறாள்?
அடுத்து ரிதமின் வளைகாப்பு! ருத்ரன் வருகை.. அனைத்தும் காத்திருக்கிறது.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels