Episode-91
இரண்டு பாதங்களிலும் லத்தியை கொண்டு ஓங்கி அடித்தான் நிவாஸ் பிரகாஷ். வலியில் முகம் சின்னங்கினாலும் அனைத்தையும் பொருத்து கொண்டான் அவளுக்காக தன் குழந்தைக்காக..
மிதுன் கோபமாக அவ்விடத்துக்கு வந்தவன். நிவாஸ் மரியாதையா அவன் மேலிருந்து கைய எடு! அடிக்கிற வேலை வச்சுக்காத!! டேய்** என கெட்ட வார்த்தையும் சேர்த்து கத்தினான்.
நிவாஸ் அடிப்பதை நிறுத்தவில்லை. அங்கிருக்கும் காவலர்கள் அனைவரும் மித்துனை பிடித்து கொள்ள.. ரிதம் வேகமாக நிலா இருக்கும் அறைக்குள் தடாலடியாக உள்ளே நுழைந்தாள். ஹே என்னடி பண்ணிட்டு இருக்க? என் தம்பியை உன் குடும்பம் கொலை பண்ண பாக்குறாங்க? என கத்தினாள்.
என்ன அண்ணி சொல்றீங்க? என நிலாவின் கண்களில் நீர் கொட்ட..
தேஜு கைகளை பிசைந்தபடி நின்றார்.
நீ யார் கிட்டயும் கெட்டு போகல. என் தம்பி கூட தான் இருந்த? இந்த குழந்தை இன்ப ராகவன் குடும்பத்தோடது போதுமா? என ரிதம் கத்தினாள்.
நிலா படபடக்கும் இதயத்துடன் தன் மகனை பார்த்தாள். தீராவின் மச்சம் வலது கண் இமைக்கு மேல் இருக்க… உன் அண்ணன்கள் இப்படி இருக்காங்க அப்டின்னா நீயும் இப்படி தான் இருப்ப!! உன் மினிஸ்டர் அண்ணன் சத்ய தேவை சுட்டுட்டான். அதுக்கு காரணம் என் தம்பி உன்னை கெடுத்துட்டானாம். நல்லாருக்கு டி! என் தம்பிக்கு மட்டும் எதுவும் ஆச்சு பிரகாஷ் குடும்பம் மொத்தத்தையும் தீர்த்து கட்டிடுவேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. உன் குடும்பம் இருக்கணுமா வேணாமா அப்டின்னு நீ முடிவு பண்ணிக்கோ என வேகமாக சென்றாள் ரிதம்.
தன் குழந்தையை அணைத்து முத்தமிட்டாள். தீராவின் மேல் ஆத்திரம் கோபம் வெறுப்பு என அனைத்தும் ஒரு நொடியில் பரவியது நிலாவுக்கு. வேகமாக படுக்கையை விட்டு எழுந்தாள்.
ஹே எங்கே போற நிலா? என தேஜு கேட்க..
இவனுக்கு அப்பா வேணும். என அவள் நடக்க..
வெளியே போகாத நிலா!! என தேஜூ தடுக்க, நிலா குழந்தையை அணைத்து கொண்டு நேராக சத்ய தேவ் அட்மிட் செய்திருக்கும் இடத்துக்கு சென்றாள்.
மகி ஓரிடத்தில் அழுகையுடன் நின்று கொண்டிருக்க, சித்தி என அழைத்தாள்.
மகி அவளை பார்த்து, போதும் மா!! இனி உங்க உறவு எனக்கு வேணாம். நீ நிதின் பிரகாஷ் தங்கச்சி!! தயவு செஞ்சு போயிடு! என அழுதார்.
மை விழி அரக்க பறக்க வந்தவள் கண்களில் நீர் கொட்டியது. என் பையன என்னடி பண்ண? என் பையனுக்கு என்னாச்சு என கத்தி கதறினார்.
மை விழி என மகி தன் அக்காவை அணைத்து கொண்டார். மாமா சக்திக்கு ஒண்ணு ஆகாதில்லை. என் பையன்!! என கதறினார்.
அதே நிலையில் தான் சூர்யாவும் இருந்தார். நிலாவின் கண்களில் நீர் கொட்ட, எங்க அண்ணனுக்கு எதுவும் ஆகாது. கடவுளே என் அண்ணா நல்லாருக்கணும் என அழுதபடி பார்க்க..
உன்னை போன்னு சொன்னேன்!! என மகி கத்தினார்.
இன்ப ராகவன் வேகமாக அவ்விடத்துக்கு வந்தவர் சக்தியின் நிலையை விசாரித்து விட்டு உடனே புறப்பட்டார்.
நிலாவின் கைகளில் குழந்தை. அவரின் பார்வை கூட அவள் பக்கம் திரும்பவில்லை.
தேஜு spr கூட அவ்விடத்துக்கு வந்தவர். நிலாவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டார்.
ஹே நீ நல்லாவே இருக்க மாட்ட டி! உன் குடும்பம் நல்லாவே இருக்காது. என் பையனுக்கு எதுவும் ஆச்சு என மை விழி கத்த..
தேஜுவின் கண்களில் நீர் கொட்டியது. நிலா அவர்களின் இருவர் கைகளை உதறி விட்டவள் வேகமாக குழந்தையை தூக்கி கொண்டு முன்னாள் நடந்தாள்.
எங்கே போற? என spr கேட்க..
தீரா எங்கே இருக்கார்? நான் இப்போவே பார்க்கணும். என நிலா அவர்களை பார்க்க.
தெரியல என்றார் spr.
உங்க பசங்க ரெண்டு பேரையும் இப்போ இங்கே வர சொல்லுங்க! என கத்தினாள்.
அடுத்த பத்து நிமிடங்களில் நிதின் பிரகாஷ் மற்றும் நிவாஸ் இருவரும் அவளை பார்க்க.. நிதின் அவளின் அருகில் சென்று அந்த குழந்தைய கொடு! அது எவனுக்கு பிறந்ததுன்னு தெரியாது. நான் ஆசிரமத்தில் சேத்துடுறேன் என கூறினான்.
கிட்ட வராத! என் குழந்தை மேலே கைய வச்ச நான் செத்துடுவேன்.
என்ன பேசிட்டு இருக்க நீ? என நிவாஸ் கேட்க..
குழந்தையோட அப்பா ருத்ரன் தான் எனக்கு தெரியும். ஆமா தீரா கூட தான் நான் இருந்தேன். விருப்ப பட்டு தான் இருந்தேன் என நிலா கூற..
நிவாஸ் ஓங்கி அவளின் கன்னத்தில் அறைந்தான்.
Spr அதிர்ந்து நிவாசை பார்க்க, என்ன காரியம் பண்ணிருக்க நீ? என நிவாஸ் குதித்தான்.
டேய் என் பொன்னை அடிக்க எவ்ளோ தைரியம் டா நாயே!! என வேகமாக எட்டி உதைத்தார் spr.
போதும் நீங்க யாரும் எனக்கு ஒட்டும் இல்ல உறவும் இல்ல என நிலா கூற..
வாயை அடக்கு!! என நிதின் அவளை பார்த்து மிரட்டினான்.
நிவாஸ் தடுமாற்றத்துடன் எழுந்து நின்றவன். அண்ணா சொல்றத தான் நீங்க எல்லாரும் கேட்கணும். நீ அவனை டைவர்சு பண்ற! இனி அவன் கூட போய் சேர்ந்து வாழணும் அப்டின்னு கனவில் கூட நினைச்சிடாத!! என சொல்லி முடிக்க.. இதுல சைன் பண்ணு இல்லன்னா உன் குழந்தைய.. என நிதின் கூற.. நிலா அப்பட்ட அதிர்ச்சியில் பார்த்தாள்.
நிவாஸ் நெஞ்சை நீவியபடி நிலாவின் கைகளில் பேப்பரை திணிக்க..
Spr கூட அமைதியாக இருந்தார். அவரும் இதை தான் எதிர்பார்த்தார்.
குழந்தைய கொடு நீ கையெழுத்து போட தொந்தரவா இருக்கும். என நிதின் பிடுங்கி கொண்டான்.
நிலா வேறு வழி இல்லாமல் கையெழுத்து போட்டு கொடுத்தாள்.
தீராஆஆஆ!! என மிதுன் அவனை தாங்கி கொள்ள உடல்கள் வீங்கி கால் நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழுந்தவன். மாமா எப்டி இருக்கார்? மாமாவுக்கு ஒண்ணும் இல்லையே என கேட்டான்.
இன்பா புரோசிஜர் முடித்து தன் மகனை சீக்கிரமாக மீட்க தான் ஆட்சியையே கவிழ்த்தார். ஆனால் எப்படியோ அரை நாள் தாண்டி இருக்க ருத்ரன் மீது இருக்கும் வஞ்சனையை மொத்தமாக தீர்த்து கொண்டது பிரகாஷ் குடும்பம்.
அவன் நல்லாருக்கான் புல்லட் ரிமூவ் பண்ணியாச்சு. ICU ல இருக்கான். என சொன்ன மிதுன் வா உன்னை நான் தூக்குறேன். மாமாவும் மாமியும் பார்த்தால் நொடிஞ்சு போயிடுவாங்க டா!! என கண் கலங்கினான் மிதுன்.
இல்ல மாமா எனக்கு வலிக்கல என்று சிரித்து கொண்டே கூறினான் ருத்ரன்.
தீரா என இன்பா அந்த அறைக்குள் நுழைந்தவர் மகனின் நிலையை பார்த்து சுக்கு நூறாக உடைந்து போனார்.
டாடி! நான் நல்லாருக்கேன். மாமாவ பார்க்கணும் என ருத்ரன் கூற..
சிவன்யா பதட்டத்துடன் வந்தவள். மாமா நிலா டைவர்ஸ் அப்ளை பண்ணிருக்கா!! இதோ எனக்கு சென்ட் பண்ணியிருக்காங்க என காட்டியவள் கண்களில் ருத்ரன் பட கலங்கி போனாள்.
இன்பா நிலை குலைந்து நின்றவர் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது.
தனா இன்ப ராகவன் கண்ணுல தண்ணி!! இதோ எப்டி துடிக்கிறான் பாரு? உன்னோட சித்தப்பா!! என்றான் ப்ளாக் ஈகிள்.
சரிகா மதுவை அருந்தி கொண்டே அடுத்து என்ன பண்ணனும்? என கேட்க..
இரு ஒரு நிமிசம் என தனாவுக்கு இன்பா அழும் காட்சியை அனுப்பி விட்டு சொல்லு என்றான்.
இப்போ அடுத்து என்ன பண்ணனும்?
நம்ம ஒன்லி ஆடியன்ஸ் தான். இவனுங்க இனி அடிச்சுக்கிறது மட்டும் தான் நடக்கும். சத்ய தேவ் நிதின் பிரகாஷ் ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டாச்சு. ரிதம் கிறுக்கி இன்னும் மூணு நாள் கழிச்சு சக்திய விட்டு வந்திடுவா என பிளாக் ஈகிள் சொல்ல..
நீ மூணு நாள் கூட அவளுக்கு டைம் கொடுத்திருக்க கூடாது என சரிகா கூற..
பிளாக் ஈகில் சிரித்து கொண்டு இந்த மூணு நாள் தான் அவள் அதிக ரணத்தையும் கொடுமையும் அனுபவிப்பா தங்கச்சி;! என்றான்.
எப்டி? என சரிகா கேட்க..
மூணு நாளும் அவளுக்கு நரகமா இருக்கும் ஏன்னா உயிர் காதலன் ஆருயிர் கணவன் கூடவே புதுசா பொறந்த குழந்தை. அதுவும் பால் மனம் மாறாத பிள்ளையை எந்த பொன்னாலையும் விட்டு போக முடியாது. இப்போ பாரு குழந்தை கூட அவளால இருக்க முடியல புருஷனும் படுத்தப்படுக்கை. எப்டி? என கேட்டான் ப்ளாக் ஈகிள்.
வேற லெவல் என புன்னகைத்தாள் சரிகா.
மிதுன் அவனை கை தாங்களாக பிடித்து கொண்டு வர.. இன்பா அழுதே விட்டார்.
டாடி! பிலிஸ் நான் செத்துடவா! உங்களை இப்படி பார்க்க முடியல!! என்றான் ருத்ரன்.
உன் அம்மா பார்த்தால் அவள்! என துடித்தார் இன்பா.
டாடி சத்தியமா சொல்றேன் நான் வேணும்னு நிலா கிட்ட அப்படி நடந்துக்கல ஈவன் எனக்கு முன்னாடி அவள் முகம் மறைச்சு இருந்தது.
இது திட்டமிட்ட சதி என மிதுன் கூற..
பிளாக் ஈகில்னு ஒருத்தன் தான் என்னை அப்படி நடந்துக்க சொன்னான். அங்கே நிலா இருப்பாள் அப்டின்னு சத்தியமா தெரியாது டாடி!! என்னை நம்புங்க. என கூறினான்.
பிளாக் ஈகிள் என இன்பா கேட்க..
ம்ம் மாமா சொன்னாரு. ரிதம கூட அவன் தான் கடத்தி சைலஜாவா மாத்தி இருக்கான். இதுல அதிகமா பாதிக்கப்பட்டது நானும் ரிதமும் தான் என கூறிய ருத்ரன். மிதினிடம் ரெஸ்ட் ரூம் என கூற..
மிதுன் அதிர்ச்சியுடன் என்னடா யூரின்ல ரத்தம் வருது என கேட்டான்.
ஒண்ணுமில்லை மாமா!! பிலிஸ் அப்பா கிட்ட சொல்லாதீங்க என்று விட்டு வலியை அடக்கி கொண்டு வந்தான்.
மிதுன் நேராக இன்பாவிடம் சென்று மாமா அவனை அட்மிட் பண்ணனும். தீரா சரி இல்ல. என கூற..
அமர முடியாமல் தவித்த ருத்ரன் சுருண்டு விழுந்தான்.
இதோ ருத்ரன் அவசர சிகிச்சை பிரிவில்..
நிலா ஹைத்ராபாத்தில் அவர்களின் வீட்டில் காவலுக்கு நடுவில் குழந்தையுடன் சேர்த்து அறையில் அடைக்க பட்டாள்.
நிதின் பிரகாஷ் மினிஸ்டர் பதவியில் இருந்து தூக்க பட்டான் ஆட்சி கலைந்தது. அனைவர் வாழ்க்கையும் ஒரே நாளில் மாறி போனது.
சத்ய தேவ் கண் விழித்து விட்டான். விவேகா துகிலுடன் ஹாஸ்பிடல் வர மகனை அள்ளி கொண்ட ரிதம் முத்தமழை பொழிந்து கட்டி அணைத்து பால் புகட்டினாள்.
இன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கிறது.
என்னங்க தீரா எங்கே? எப்டி சக்திக்கு அடி பட்டுச்சு? நிலாவுக்கு குழந்தை பிறந்திடுச்சு தானே பார்க்க போகலாமா? யாருமே குழந்தை பிறந்ததுக்கு பிறகு நம்ம கிட்ட பேசவே இல்லையே!! நான் பிரிச்சு பார்க்க மாட்டேன்க நிலாவோட குழந்தையையும் ஏத்துக்கிட்டு தானே கல்யாணம் பண்ணோம் என்றார் விவேகா.
இன்பா…?
அடுத்து என்ன நடக்கும்?
தொடரும்..
ருத்ரன் சரியானதும் இருக்கு டா உங்களுக்கு…
வருவான்.