Episode-92
ராகவ் நான் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு!! என விவேகா அழைக்க..
ம்ம் அது ருத்ரன் கொஞ்சம் வேலையா இருக்கான் குழந்தை கூட.. நிலாவை பார்த்துக்கிறான். நமக்கு இப்போதைக்கு சத்ய தேவ் தானே முக்கியம். அதான் சொல்றேன் நானும். முதல்ல சக்திக்கு சரி ஆகட்டும் அதுக்கு பிறகு என இன்பா பேச வர..
என் பையனுக்கு என்னாச்சு சொல்லு ராகவ்? என விவேகாவின் கண்களில் நீர் கொட்டியது.
ஹே ஒண்ணுமில்லை டி!! என இன்பா கூற..
நீ பொய் சொல்ற ராகவ் என தேம்பிய விவேகா. எதோ பிரச்னை இருக்கு. அது நல்லாவே தெரியுது. இதோ நிலா ருத்ரன விவாகரத்து வாங்க போராளா? என்னென்னமோ நியூஸ்ல வருது என கேட்டார் விவேகா அழுது கொண்டே.
பா அம்மா கிட்ட சொல்லிடுங்க! இதுக்கு மேலே எதுக்கு மறைச்சிட்டு இருக்கீங்க என குழந்தையை மார்பில் போட்டபடி ரிதம் கூற..
என்ன ரிதம் சொல்ற? என் பையன் எப்டி இருக்கான்? அவனுக்கு ஒன்னுமில்லையே? நான் இப்போவே அவனை பார்க்கணும். என் பையனுக்கு மட்டும் எதுவும் ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன் என விவேகா தேம்பி அழுதார்.
மிதுன் விவேகாவின் அருகில் வந்து ஆறுதல் சொல்ல..
நீயாவது சொல்லு மிதுன் என்னாச்சு? தீராவுக்கு என கேட்டார்.
மிதுன் அவரை அழைத்து கொண்டு நேராக ருத்ரன் இருக்கும் வார்டுக்கு அழைத்து சென்றான்.
விவேகா அதிர்ச்சியில் என் பையன் என சொல்லி கொண்டே மயங்கி சரிந்தார்.
இன்பா தன் மனைவியை ஏந்தி கொண்டார். விவேகா வேதனையுடன் அமர்ந்திருக்க..
நிலாவோட வயித்துல ருத்ரன் குழந்தை, நிலா கூட இருந்தது வேற ஒருத்தன் இல்ல. அது ருத்ரன் தான்.
என்ன சொல்றீங்க? என விவேகா அதிர்ச்சியுடன் கேட்க.. அரக்க பறக்க ரவிச்சந்திரன் மற்றும் வசுந்தரா இருவரும் ஓடி வந்தார்கள்.
என்னடா ஆச்சு? என்ன இன்பா? என ரவி கேட்க..
ராகவ் என வசுந்தரா வரவும், மா என வேகமாக அணைத்து கொண்டார் இன்பா.
இல்லடா இல்லடா ராகவ் என் பையன் என்னைக்கும் இப்படி வீக் ஆனவன் இல்ல. அவன் ஸ்ட்ராங் என வசுந்தரா கண்கள் கலங்கி போய்விட..
சத்ய தேவ் எப்டி இருக்கான்? என ரவி கேட்டார்.
வசுமா என ரிதம் வந்தாள்.
குழந்தையை வாங்கி அணைத்து கொண்டார் வசுந்தரா.
இன்பா அனைத்து விஷயத்தையும் வரிசையாக கூற..
ரவிச்சந்திரன் கோபத்துடன் நீ அப்படியே சும்மா விட்டியா? என் பேரனுக மேலே கை வைக்கிற அளவுக்கு வந்துட்டங்களா! இனி சும்மா விட கூடாது என கூறினார் முதிர்ந்த உடல் புடைக்க..
இப்போ என்ன தாத்தா பண்ண சொல்றீங்க? என மிதுன் கேட்க..
இப்போதைக்கு சத்ய தேவ், ருத்ரன் ரெண்டு பேரும் சரியாகி வரட்டும் அப்புறம் நம்ம அடுத்த கட்டத்துக்கு போவோம் என்றார் ரவிச்சந்திரன்.
Stress பந்தை கையில் நசுக்கிய படி தலை சாய்ந்திருந்தாள் ரிதம்.
ராவடி!! என்ன பண்ற? என கேட்டபடி எழுந்தான் சத்ய தேவ்.
நீ ஓகே வா!! என ரிதம் சுக்காக கிழிந்த ஸ்ட்ரெஸ் பந்தை தூக்கி போட்டவள் அவனை பார்த்தாள்.
ம்ம் இப்போ ஓகே!! தீராவ பார்க்கணும்.
ரிதம் அவனை முறைக்க..
என்னடி?
அட்லீஸ்ட் எழுந்ததும் குட்டி (டிண்கு) ய [வார்த்தையை திருப்பி போட்டு படியுங்கள் ] பார்க்க கேட்ப அப்டின்னு நினைச்சேன் டா!! ஆனால் நீ? என ரிதம் பொய் கோபம் காட்டினாள்.
சத்ய உதட்டில் குட்டி புன்னகையுடன் என்ன பண்றான்? என கேட்டான்.
அவனா? வசுமா வந்திருக்காங்க இப்போ தான் feed பண்ணி கொடுத்து விட்டேன். கொட்டை கொட்டை முழிச்சிட்டு இருக்கான். விடிய விடிய… காலையில் டிண்கு வ தூக்கிட்டு தூங்குகிறான் என்றாள்.
அவனை எடுத்திட்டு வா பார்க்கணும் போல இருக்கு என சத்ய தேவ் சொல்ல..
என்னை கவனிக்க மாட்டியா? உன் பையன் தான் முக்கியமா போயிட்டானா? என ரிதம் கேட்க..
பக்கத்தில் வா!! என கையை நீட்டி அழைத்தான்.
ரிதம் அருகில் சென்றாள்.
சாரி!! என்றான்.
எதுக்கு?
அன்னிக்கு மேட்டர்? என சத்ய தேவ் சொல்ல வர…
இன்னிக்கி நைட்டு என உதட்டில் முத்தமிட்டாள்.
ஹே இர்ரி!! என்ன பண்ற நீ? கொஞ்சம் கேப் கொடு என சத்ய தேவ் சொல்ல.. உதட்டை பசை போல ஒட்டி கொண்டவள். குண்டடி பட்ட கையில் படாதவாறு முத்தமிட்டாள். அவனும் பதில் முத்தம் கொடுக்க.. கதவை திறந்து கொண்டு மகி வந்தார்.
ரிதம் தீவிரமாக முத்தமிட்டு கொண்டிருக்க.. உள்ளே போடி என மைவிழி குரல் கேட்க..
சித்தி என அவளிடம் இருந்து பிரிந்தான் சத்ய தேவ்.
மகி நிம்மதி பெரு மூச்சுடன் ரிதமை பார்க்க… அவர்களின் முத்த சங்கதியை அறியாத மை விழி தன் தங்கை மகனிடம் நலம் விசாரித்து கொண்டிருந்தார்.
வசுமதி துகிலை தூக்கி கொண்டு வர.. வசுமா அவனை கொடுங்க அவனோட டாடி பார்க்கணுமாம் என்றாள் ரிதம்.
அம்மாச்சி எப்டி இருக்கீங்க? என சத்ய தேவ் கேட்க..
நீ எப்டி பா இருக்க? என நலம் விசாரித்தார் வசுமதி.
குழந்தையை பார்த்தவன். ரிதமிடம் இவனை பேசாமல் வீட்டுக்கு கூட்டிட்டு போடி! அவனோட முகம் குட்டியா இருக்கு. Comfortable இல்லாம கூட feel பண்ணுவான் என்றான் சத்ய தேவ்.
அவன் இனி உன்கூட தான் வீட்டுக்கு வரணும் என்றாள் ரிதம்.
என்ன? இன்னும் எத்தனை நாள் ஹாஸ்பிடலில் இருக்கிறது? நான் இப்பவே கியர் ஆகிட்டேன். ருத்ரன் – நிலா பிரச்னைய சரி பண்ணனும் என்றான் சத்ய தேவ்.
ரிதம் துகிலை வாங்கி கொள்ள… உடனே மழை சாரல் போல யூரின் சென்றான். அடுத்த நொடி சிணுங்கல் ஹாஸ்பிடல் மொத்தமும் சைரன் வைத்தது போல தூக்கியது.
மகி ரிதமின் பக்கம் வந்தவர். கொஞ்சம் பால் குடி அப்போ தான் அவனுக்கு பால் இறுக்கும் என கொடுத்தார்.
மாமி ஒரு நிமிசம் இருங்க! இவன் பறக்கிறான் என குழந்தைக்கு புகட்டியவள். மகியிடம் இருந்து பால் வாங்கி குடித்தாள்.
சத்ய தேவ் அவனது போனை நோண்டிய படி அமர்ந்திருந்தான்.
மகி வெளியே சென்று விட.. அவன் குடிக்கும் சத்தம் கேட்கவே நல்லாருக்கு டி!! என சத்ய தேவ் சொல்ல..
இதோ சிணுங்கல் சத்தம். குழந்தை அழுவதை கேட்கவும் குழந்தை பிறந்த வாசத்தை நுகரவும் பார்த்தாள் இன்னும் நன்றாக இருந்தது.
ம்ம் என தாய்மை பூரிப்பில் கூறியவள். ஹே என் பையன் மேலே கண்ணு வைக்காத!! என ரிதம் கூற..
பாருடா!! என்னை விட நேத்து பொறந்த இவன் உனக்கு முக்கியமா போயிட்டானா? என சத்ய தேவ் கேட்க..
ஆமா எனக்கு துகில் தான் முக்கியம். என்றாள் அவனை பார்த்து கொண்டே..
சரி போடி!! என சத்ய தேவ் கூற..
எனக்கு யாரு முக்கியம் அப்டின்னு துகில் குட்டிக்கு தெரியும். ஏன்டா பட்டு குட்டி!! குட்டி ஹீரோ!! உன்னோட டாடிக்கு பொறாமை என ரிதம் அவனது வயிற்றை வருடி கொண்டே பால் புகட்டினாள்.
இரவு உறங்கும் போது அவனது அருகில் படுத்து கொண்டாள்.
ஹே நீட் யூ சத்ய தேவ் என முத்தமிட்டாள்.
இந்த நேரத்தில் ஒட்டிக்கிற? அதுவும் எனக்கு உயிர் போற நேரத்தில் என சக்தி கேட்க வர..
ப்ச் வாய கழுவு டா சண்டாலா இனி அப்படி சொன்ன நடக்கிறதே வேற!! என ரிதம் கூற..
உனக்கு அந்த மூத்திர டிண்கு தான முக்கியம். போடி!!
ரிதம் அவன் மேல் காலை போட்டு கொண்டவள். உனக்கு தெரியும் எனக்கு யார் முக்கியம்னு!! அந்த மூத்திர டிண்குய என் மம்மி கிட்ட கொடுத்திட்டு வந்திருக்கேன். அது யாருக்காக.. என தாடியில் கன்னத்தை வைத்து உரசினாள்.
ம்ம் அப்படியா? என அவளின் பக்கம் திரும்பினான்.
ம்ம் என மூக்குடன் மூக்கும் சேர்த்து உரசினாள்.
ம்ம் என முத்தமிட்டான்.
ஹே ஹாஸ்பிடல் bed soft ஆ இருக்கு டா!!
நீ ஹாட்டா இருக்க!! என முத்தமிட்டான்.
சேர்ந்து எறிஞ்சா நல்லாருக்கும்.
ம்ம் எரிஞ்சிட்டா போச்சு என முத்தமிட்டான் சத்ய தேவ்.
இதோ நீண்ட நாள் ஏக்கத்தை மொத்தமாக முடித்து கொண்டாள் அவன் மேல்..
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. துகில் ருத்ரனது அறையில் மாமனின் அருகில் படுத்திருந்தான்.
இவன் யாரை மாதிரி இருக்கான் மா? என ருத்ரன் இயல்பாக பேசி கொண்டிருக்க..
விவேகா கொஞ்சம் புன்னகையுடன் இப்போ கொஞ்சம் உன்னை போல இருக்கான். பாரு அந்த மூக்கு உன்னை போலா இருக்கு. ஆனால் வளர்ந்துட்டா சக்தி மாதிரி தான் இருப்பான். நீ கூட சின்ன வயசுல கொஞ்சம் என் அண்ணனோட ரிசெம்பில் இருந்தது. ஆனால் நீ வளர்ந்ததும் அப்டியே ராகவ் மாதிரி இருக்க!! என்றார்.
அப்பா போல தான் நான் இருக்கேனா மா? என ருத்ரன் கேட்க..
துகில் என்ன பண்றான்? என கேட்டு கொண்டே வந்தாள் ரிதம்.
மா எனக்கு ஜுஸ் வாங்கிட்டு வாங்க என்று ருத்ரன் கூற..
இந்த ட்ரிப்ஸ் முடிய போகுது நர்ஸ் கிட்ட சொல்லிட்டு போகட்டுமா? என விவேகா கேட்க..
மா நான் சொல்லிக்கிறேன் நீ போ மா என்று அனுப்பி வைத்தான் ருத்ரன்.
ரிதம் தன் மகனை தூக்கி கொள்ள.. அக்கா சொல்லு எல்லா உண்மையும் சொல்லு!! உனக்கு என்னை பத்தி முன்னாடியே தெரிஞ்சிருக்கு எனக்கு தெரிஞ்சு போச்சு. ஐ திங்க் நீயா மாமாவ டைவர்ஸ் பண்ணல. உன்னை அந்த ப்ளாக் ஈகிள் தானே பண்ண சொன்னான். எனக்கு எல்லாமே தெரியும். இப்போ நீ சொல்றயா இல்ல நான் என ருத்ரன் பார்த்தான்.
என்ன உளறிட்டு இருக்க? யாரு பிளாக் ஈகில்? எனக்கு அப்படி யாரையுமே தெரியாது. அடி வாங்கினதில் உனக்கு மூளை குழம்பி போச்சு வாய மூடு கம்முன்னு கண்ணை மூடி தூங்கு என ரிதம் அவ்விடத்தை விட்டு நகர முயற்சி செய்ய..
நான் உன்னை பத்தி சக்தி மாமா கிட்ட சொல்ல போறேன். என ருத்ரன் கூறினான்.
ரிதம்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels