Epi -6
“என் வாழ்க்கையில இனி நீ மட்டும்தான். இந்த உலகத்துல நான் யாரையாவது உண்மையா நேசிக்கிறேன்னா, அது உன்னை மட்டும்தான்!” என ஆழமாகக் கூறி, அவளது முகத்தை நெருங்கினான் சமர்.
தியா ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்க, சமர் மெதுவாக அவளது இதழ்களைத் தீண்டினான்.
அடுத்த நொடி… குளிர்ந்த காற்றையும் மீறி, சமரின் உடல் அனலாகக் கொதித்தது! அவனது இதழ்கள் தியாவின் இதழ்களைத் தொட்ட மறுகணம், ஒரு பயங்கரமான எரிச்சல் அவனது நரம்புகளில் ஊடுருவியது.
“ஆ…ஹ்…” என முனகியபடி பின்வாங்கினான் சமர். அவனது முகத்தில் கண்கள் சிவந்து ரத்தம் போல மாறின. கழுத்து, கைகள் மற்றும் மார்புப் பகுதிகளில் பெரிய பெரிய சிவப்புத் தடிப்புகள் மின்னல் வேகத்தில் படர்ந்தன. அவனது தோல் சட்டென வீங்கி, பார்க்கவே விகாரமாக மாறியது.
“சமர்! என்னாச்சு? ஐயோ… முகம் ஏன் இப்படி ஆகுது?” என தியா அலறினாள். சமரால் பேச முடியவில்லை. அவனது மூச்சு குழல் அலர்ஜியால் சுருங்கத் தொடங்கியது. மூச்சு விட முடியாமல் திணறி, தனது சட்டையின் காலரை இழுத்துப் பறித்தான். அவனது இதழ்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின.
“தி… தியா… இன்ஹேலர்… கா… கார்ல…” எனத் தடுமாறியபடி சொல்ல முயன்றான். ஆனால், அதற்குள் அவனது உடல் கட்டுப்பாட்டை இழந்து அந்தப் புல்வெளியில் சரிந்தது.
“சமர்! நில்லு! யாராவது உதவி பண்ணுங்க! ப்ளீஸ்… ஹெல்ப்!” என தியா கதறினாள். அதே நேரத்தில் வேகமாக அபிராம் ஓடி வந்தான். “என்னாச்சு மேம்?” எனக் கேட்டவன், பதற்றத்துடன் பார்த்துவிட்டு வேகமாக காருக்கு ஓடினான்.
சமர் இப்போது ‘Anaphylactic shock’ நிலைக்குச் சென்று கொண்டிருந்தான். அவனது உடல்நிலை நொடிக்கு நொடி மோசமாகிக் கொண்டிருந்தது. சமர் எப்போதும் வைத்திருக்கும் அவசர கால மருத்துவப் பெட்டியை Emergency Medical Kit எடுத்து வந்தான் அபிராம்.
“சமர், கண்ணைத் திற! ப்ளீஸ்… என்னை விட்டுட்டுப் போயிடாத!” என அழுதபடியே அவள் நிற்க, அபிராம் அவனது தொடையில் Epinephrine ஊசியைச் செலுத்தினான். அந்த ஊசி அவனது சுருங்கிய சுவாசப் பாதையைச் சற்றே விரிவுபடுத்தியது. ஆனாலும் அவனது இதயம் மிக மெதுவாகவே துடித்தது.
அபிராம் ஒற்றை ஆளாகச் சமரை காரின் பின் இருக்கையில் கிடத்திவிட்டு, தியாவே டிரைவிங் சீட்டில் அமர்ந்தாள். அவனுடன் தியா அழுது கொண்டே ஏறினாள். கோவையின் போக்குவரத்து நெரிசலை மீறி, மருதமலை சாலையிலிருந்து அவிநாசி சாலையில் உள்ள டாக்டர் கந்தர்வனின் மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் காரைச் செலுத்தினான் அபிராம்.
மருத்துவமனையில்…
சமர் ICU வில் அனுமதிக்கப்பட்டான். தியா வெளியே கைகளைப் பிசைந்தபடி அழுது கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் டாக்டர் கந்தர்வன் வெளியே வந்தான். அவனது முகம் மிகவும் தீவிரமாக இருந்தது.
“கந்தர்வன்… என்னோட சமர் எப்படி இருக்கான்?” என தியா ஓடிச் சென்று கேட்டாள்.
கந்தர்வன் ஒரு பெருமூச்சு விட்டு, “இப்போதைக்கு நார்மலாக ஆண்டிபயாடிக் IV போயிட்டு இருக்கு,” என நிறுத்தி, கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு, “நீ அவனை டச் பண்ணியா?” எனக் கேட்டான். பிறகு குரலைச் செருமிக் கொண்டு, “உனக்குத்தான் தெரியுமே? அவனுக்கு அலர்ஜி இருக்குன்னு… சின்ன வயசுல இருந்து… அப்புறம் எதுக்கு தியா எல்லாமே தெரிஞ்சும்…?” என நிறுத்தினான்.
தியாவின் கண்களில் நீர் வழிய, “உங்களுக்குத் தெரியாதா? எனக்கு சமர் மேலே விருப்பம்னு… நான்…” என அவள் ஆரம்பிக்க…
கந்தர்வன் ஆவேசமாக, “இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் அவன் செத்துப் போயிருப்பான் தியா! நீ டாக்டர் தானே?” எனக் கடுப்புடன் கேட்டான்.
தியாவுக்கு அழுகை அதிகமானது. கந்தர்வன் ஒரு முடிவுடன், “இனி இன்னொரு தடவை அவன் பக்கத்தில போயிடாத… நெக்ஸ்ட் பீவர் ஸ்டார்ட் ஆகிடும். அவன் மொத்தமா பிரேக் ஆகிடுவான். உனக்கு புரியுதா?” என கொஞ்சம் கோபத்துடனேயே கேட்டான்.
“ம்ம்…” என வேதனையின் உச்சத்தில் பதில் கொடுத்தாள் தியா.
“சாரி தியா…”
“இட்ஸ் ஓகே,” எனச் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
கந்தர்வன் உடனே அபிராமை அழைத்தான்.
“சொல்லுங்க டாக்டர்.”
“தியாவை வீட்ல விட்டுட்டு வந்திடு.”
“டாக்டர்!” என அபிராம் தயங்க…
“போடா, சொல்றதைச் செய்! உன்ற பாஸ் சரியாக நாலு நாள் ஆகும்,” என கந்தர்வன் கூறினான்.
தியாவிடம் கெஞ்சி கூத்தாடி அபி அவளைக் கொண்டு போய் விட்டு வந்தான். போகும்போது உற்சாகமாகச் சென்ற தியா, வரும்போது மிகவும் வேதனையுடன் வந்து சேர்ந்தாள்.
அபிராம் திரும்பி வந்து, “டாக்டர், பிளட் ரிப்போர்ட் என்னாச்சு?” எனக் கேட்க…
“அந்த இன்னொரு பிளட் சாம்பிள் யாருது?” எனக் கந்தர்வன் கேட்டான்.
“அது…?” என அபி தயங்க…
கந்தர்வன் ரிப்போர்ட்டைப் பார்த்தபடி, “சமரோட பிளட் ரிப்போர்ட்ல ஒரு ஸ்ட்ரேஞ்ச் விஷயம் இருக்கு. அவனோட உடம்புல இருக்குற அந்த ‘Hapten-induced allergy’, ஒரு குறிப்பிட்ட DNA Sequence கூட மட்டும் ரியாக்ட் ஆக மாட்டேங்குது,” என்றான்.
அபி புரியாமல் பார்த்தான். “அப்படின்னா டாக்டர்?”
கந்தர்வன் மேசையிலிருந்த ஒரு கோப்பைக் காட்டி, “நேத்து சமரோட பிளட் சாம்பிள் கூட, அவனுக்குத் தெரியாம ஒரு பெண்ணோட டிஎன்ஏ-வை (DNA) மிக்ஸ் பண்ணி டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். ஆச்சரியம் என்னன்னா, அந்தப் பெண்ணைத் தொடும்போதோ அல்லது அவங்க கூட நெருக்கமா இருக்கும்போதோ சமருக்கு அலர்ஜியே வரல! அவனோட இம்யூன் சிஸ்டம் அந்த ஒரு குறிப்பிட்ட டிஎன்ஏ-வை மட்டும் ஏத்துக்குது,” என்றான்.
அபியின் முகம் சட்டென ஆச்சரியத்தில் விரிய, “அப்போ இதை சர்வேஷ் சாருக்கு சொல்லிடலாமா?” எனக் கேட்டான்.
“எதுக்கு? இங்கே படுத்திருக்கிறவன் எழுந்து வந்து என்னையும் உன்னையும் கொலை பண்ணவா பிளான் பண்ற?” எனக் கடுப்புடன் கேட்டான் கந்தர்வன்.
“இதை நான் யோசிக்கவே இல்லையே?” என அபி வாய்மொழியாகக் கூற…
“அவன் எழுந்துக்கிற வரைக்கும் கொஞ்சம் கம்முன்னு இரு,” என்ற கந்தர்வன் முகம் தீவிரமாக மாறியது. ‘அப்போ அந்தப் பொண்ணை மட்டும் சமரனால தொட முடியும். அப்போ இதுக்கு அர்த்தம்…?’
“டாக்டர், எனக்கு ஒரு டவுட்டு?”
“ம்ம்…”
“அப்போ பாஸ்க்கு அந்தப் பிராப்ளம் சரியாகிருச்சா?”
“சமரோட சொல்யூஷன் அந்தப் பொண்ணுதான்… ஐ மீன் , அந்த பிளட் சாம்பிள் இருக்கிற பொண்ணு. அவளோட உடம்புல இருக்குற ஏதோ ஒரு புரோட்டீன் , சமரோட இந்த அலர்ஜியை மொத்தமா நியூட்ரலைஸ் பண்ணுது. சிம்பிளா சொல்லப்போனா, சமர் ஒரு பொண்ணு கூட சேர்ந்து வாழணும்னா, அவனுக்கு அந்தப் பொண்ணுதான் தேவை!” என்றான் கந்தர்வன்.
சமரன் கண்ணு முழிச்சா என்ன நடக்கும்?
சங்கீதா என்ன பண்றா?
தொடரும்…