ஆண்மையின் இலக்கணம் நீயடி

by Pradhanya kuzhali
247 views

Epi -7 

என்ன பண்றான்? நீ கூட தானே இருக்க? நேத்து மீட்டிங் அட்டன்ட் பண்ணலனு மெசேஜ் வந்ததே? என சர்வேஷ் போன் செய்து கேட்க, அபி என்ன சொல்வது என திகைத்து விழித்தான். 

டேய் போனை கொடு என வேகமாக பிடுங்கிய கந்தர்வன். 

அங்கில் நான் கந்தர்வன் பேசுறேன். சமர் என் கூட தான் இருக்கான். எனக்கு பண்ணு பார்த்திருக்காங்க.. சாரி பொண்ணு பார்த்திருக்காங்க அதான் ட்ரீட் கேட்டான் சமரு. என்னோட வீட்ல தான் இருக்கோம் என்றான். 

அப்படியா? ஒன்னும் பிரச்னை இல்லையே!! அவன் மேலே நினைப்பாகவே இருக்கு என்றார் சர்வேஷ். 

என்ன அங்கில் ஜெர்மன்ல நான் தானே அவனோட ரூம் மெட்.. சின்ன வயசுல இருந்து நானும் அவனும் தான ஃப்ரெண்ட். இப்போ கூட அவனோட அலர்ஜி ஆராய்ச்சிய நான் தானே பண்ணிட்டு இருக்கேன் என்றான்.

சரி அவன் கிட்ட கொடுக்க முடியுமா? 

அய்யயோ என்ன பண்ணுவேன் என கந்தர்வன் யோசித்தவன். அங்கில் உங்களுக்கு தான் அவனை பத்தி தெரியுமே? அதுவும் ஆன்டி கூட நீங்க.. நீங்க என் தயங்கினான். 

சரி என சொல்லி போனை வைத்தார் சர்வேஷ். சமர் என்ன பண்றான்? எல்லாமே ஓகே தானே? என சகுந்தலா தேவி கேட்க, சர்வேஷ் புருவம் சுருக்கியபடி, அந்த சரத்க்கு போன் பண்ணி சமர் எங்கே இருக்கான்னு கேட்டு சொல்லு. ஏதோ சரியில்லைன்னு தோணுது. 

அவனும் உங்க பையன் தானே? இல்ல ஹாஸ்பிடல்ல மாத்தி எடுத்திட்டு வந்துட்டீங்களா? என சகுந்தலா தேவி கேட்க.. 

சகுந்தலா தேவி என அழுத்தி அழைத்தார் சர்வேஷ். ஒரு நொடி பயந்து தான் போனாள் சகுந்தலா. 

அவனுக்கு போன் பண்ணி கேளு உடனே கந்தர்வன் வீட்டுக்கு போய் பார்த்திட்டு போன் பண்ண சொல்லு இப்போவே.. என சொல்லி விட்டு திரும்பி கொண்டார். 

சகுந்தலாவின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, வேகமாக சரத்துக்கு அழைத்தாள். 

சகுமா என சரத் அழைக்க.. 

எங்கே இருக்க தங்கம்? என கேட்டாள் சகுந்தலா. 

நான் தியா வீட்டுக்கு வந்திருக்கேன். கவுசி ஆன்டி கூப்பிட்டாங்க… அதான் என்றான். 

அப்படியா? சமர பார்த்தியா நீ? என சகுந்தலா கேட்க.. 

எப்போ பாரு உனக்கு சமர் நினைப்பு தான் எனக்கு தெரியும் மம்மி என சரத் சலித்து கொள்ள, சகுந்தலா தன்னை சரி செய்து கொண்டு, செல்ல குட்டி நீ அண்ணன பார்த்தியா இல்லையா? 

இல்ல மா அன்னிக்கு மேரேஜ் ஹாலில் இருந்து அண்ணா கிளம்பும் போது பார்த்தேன். அதுக்கு பிறகு பார்க்கல.. என்றான் சரத். 

அப்படியா? என சகுந்தலாவின் பக்கம் அமைதியானது. 

மா நீ உன்னோட குரல்ல ஹேப்பி இல்லையே? என்னாச்சு? நீ இப்போவே வீடியோ கால் வா! எனக்கு உன்னை பார்க்கணும் என சரத் கூறி விட கண்ணீரை துடைத்து கொண்ட சகுந்தலா தன்னை சமப்படுத்தி கொண்டு அப்பா பக்கத்தில இருக்கார். கால் பண்ணு நீ! என்றாள். 

அய்யோ No No No.. என்றவன். இப்போ என்ன வேணும். அண்ணனை நான் போய் பார்க்கணுமா? என சரத் கேட்க.. 

சமரோட பிரெண்ட் கந்தர்வன் வீட்டுக்கு போ! அங்கே சமர பார்த்ததும் எனக்கு கால் பண்ணு செல்ல குட்டி என்று விட்டு போனை வைத்தாள். 

***

கந்தர்வன் பெரு மூச்சை விட்டபடி சேரில் சாய்ந்தான். டாக்டர் டாக்டர்.. என அபி உள்ளே நுழைந்தான் அரக்க பறக்க.. இப்போ என்னடா ஆச்சு? என கந்தர்வன் கண்ணாடியை போட்டு கொண்டு எழுந்தான். 

பெரிய பாஸ் கிராஷ் செக் பண்ணுவாரு. இப்போ என்ன பண்றது? என கேட்க.. 

நாசமாபோச்சு என முகத்தை அழுத்தி துடைத்தவன். உன்ற பாஸ் போன் எங்கே கொடு? என கேட்டான்.

என்ன பண்ண போறீங்க டாக்டர்? என அபி கேட்க.. 

டேய் போனை முதல்ல கொடு டா.. என வாங்கிய கந்தர்வன். உடனே சமரனின் தந்தை சர்வேசுக்கு அழைத்தான். 

டாக்டர் என்ன பண்றீங்க? என அபி பதட்டத்துடன் பார்த்தான். எனக்கு தெரியும் நீ கொஞ்சம் கம்முன்னு இரு டா என்று விட்டு போனை ஒரு ரிங் விட்டு கட் செய்தான். 

சமரனின் துண்டிக்கப்பட்ட அழைப்பை பார்த்ததும் உடனே சர்வேஷ் தனது மகனுக்கு அழைக்க போக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்தது. 

டெய்லி நைட் உங்க கிட்ட பேசுற ஞாபகத்தில் கால் பண்ணிட்டேன். Sorry for that.. நான் ஒன்னும் disturb பண்ணலயே? என சர்வேசுக்கு தட்டி விட்டான் கந்தர்வன். 

அபி வாயை பொத்தி கொண்டு பார்க்க, என்னடா? எதுக்கு அப்படி பார்க்கிற? 

நீங்க அப்படியே சமர் பாஸ் போல அச்சு பிசுங்காம டைப் பண்றீங்க. வேற லெவல் டாக்டர் நீங்க என்றான் அபி. 

கந்தர்வன் பெருமையுடன் காலரை தூக்கி விட்டபடி, 20 வருஷ பழக்கம் சும்மாவா? என்றான் கெத்தாக.. 

இங்கே சகுந்தலா தேவி படுக்கையை சரி செய்து கொண்டிருந்தார். 

சகு என அழைத்து கொண்டே சரி செய்த படுக்கை விரிப்பின் மேல் அமர்ந்தார் சர்வேஷ். 

சொல்லுங்க.. 

அவனை எங்கும் போக வேண்டாம்னு சொல்லு. 

புரியல என ஒற்றை பதில் கொடுத்தாள் சகுந்தலா தேவி. 

சர்வேஷ் தனது மனைவியின் முகத்தை பார்த்தபடி, கந்தர்வன் வீட்டுக்கு சரத் போக வேணாம். அங்கே சரத் போனதை சமர் பார்த்தால் நான் தான் என்ற பையன் கிட்ட திட்டு வாங்குவேன். என்றார். 

ம்ம் சரி என ஒற்றை பதிலில் அவர் முடித்து கொண்டு சரத்துக்கு அழைத்து வேண்டாம் என்றார். கிட்ட தட்ட அரை மணி நேரமானது. இன்னும் சகுந்தலா உள்ளே வரவே இல்லை. இன்னும் என்ன பண்றா? எப்போ போனாள் என நினைத்து கொண்டு வெளியே வந்த சர்வேஷ் பெரு மூச்சுடன் தனது மனைவியை பார்த்தார். அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன் கோபமாக பேசி விட்டேனே அதான் இப்படி முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருக்கிறாள் என்று. 

சகுந்தலா தேவி! என ஆசையுடன் அழைத்தார் சர்வேஷ். பதில் இல்லை. 

இப்போ எதுக்கு டி இங்கே ஷோபாவில் படுத்திருக்க? என்ன அவசியம் வந்தது? என ஒரே பிடியில் தூக்கி கொண்டார். 

என்னை விடுங்கன்னு சொன்னேன். மரியாதையா விட்டுடுங்க அவ்ளோ தான்.. 

முடியாது என்ன பண்ணுவ? என நெற்றியில் முத்தமிட்டார். 

“எனக்கு இப்போவே ஊருக்கு போகணும்.” 

“முடியாது” என அவர் சொல்லி விட கண்களில் நீர் கோர்த்து கொண்டது சகுந்தலாவுக்கு.. 

ஓவரா தான் பண்ணிட்டு இருக்க நீ!! இப்போ என்ன நடந்து போச்சு? என சர்வேஷ் கேட்க.. 

ஒன்னுமே நடக்கல இறக்கி விடுங்க என முகத்தை திருப்பி கொண்டார் சகுந்தலா. 

இப்போ சாரி கேட்கணுமா நான்? அது தான் மகாராணிக்கு வேணுமா? என்றவர் ஒரு சில நொடிகள் கழித்து சாரி போதுமா? என்றார். 

சகுந்தலா அமைதியாக இருக்க, சர்வேஷ் அவளை அமர வைத்து, நீ எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு சமரன் எனக்கு முக்கியம் டி! அவனோட நிலைமை என்னன்னு உனக்கு தெரியும் தானே!! அப்படி இருந்தும் நீ எப்படி? இப்படி இருக்கன்னு எனக்கு தெரியல.. 

சகுந்தலாவின் கண்களில் நீர் கோர்க்க, நானா அவன் கிட்ட இருந்து விலகினேன்? நீங்களே சொல்லுங்க!! உங்களுக்கே தெரியும் அவன் என்னை ஒதுக்கி வச்சிட்டான் என தேம்பி அழுதாள் சகுந்தலா. அவன் எனக்கு எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு தெரியாதாங்க? சொல்லுங்க.. என் பையன் என்னை வெறுக்கிறான். அவனுக்கும் எனக்கும் இப்படியா ஒரு சாபம் வரணும்? சரத் உங்களை போல.. சமருக்கு என்னோட இந்த சாபம் ஒட்டிக்கிச்சு என முகத்தை மூடி அழுதாள். 

எனக்கு புரியுதுடி என தனது மனைவியை அணைத்து கொண்டார் சர்வேஷ். 

அடுத்தநாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. சங்கீதா ஒருவழியாக டெய்லி டிரெண்டிங் நியூஸ் ஆபிசுக்குள் நுழைந்தாள்.

இந்த வாரத்தோட Mister tycoonக்கு கண்டென்ட் ரெடி பண்ணியாச்சா? என கேட்டபடி உள்ளே நுழைந்தான் editor தீபன். 

உங்க ஆள் கிட்ட போய் கேளுங்க.. என ஜூலி கூற.. 

ஜூலி என அதட்டினான் தீபன். 

சாரி சார்!! என முகத்தை திருப்பி கொண்டாள் ஜூலி. அவள் மனதில் இப்போ நான் என்னத்தை தப்பா சொல்லிட்டேன். ஆபிசுக்கு வந்தால் மட்டும் ஓவரா பண்றான். என டக் டக் என கீ போர்டை தட்டினாள். 

சங்கீதா மெயின் கண்டென்ட் ரெடியா? மூணு மாசம் அந்த சீக்ரெட் ப்ராஜெக்ட் ல இன்னும் ஒர்க் பென்டிங் இருக்கா? இல்ல நீங்க பிசியா? என கேட்டபடி அவளின் மேஜையின் மேல் கைகளை ஊன்றினான் தீபன். 

ம்ம் எல்லாமே இன்னையோட முடிஞ்சது என அவள் கூற.. 

அப்போ லேப் எடுத்திட்டு உள்ளே வாங்க.. வந்து எனக்கு Top to Bottom explanation பண்ணனும் என்று விட்டு அவனது அறைக்குள் நுழைந்தான். 

சங்கீதா லேப் டாப்பை எடுத்து கொண்டு உள்ளே சென்றவள். அவன் முன்னால் வைத்து ஆரம்பிக்க.. ID கார்ட் ரோப் பற்றி இழுத்தவன் இப்போ பக்கத்தில வரலாமா டி!! என உதட்டை நெருங்கினான். 

சங்கீதா..? 

டாக்டர் பாஸ் கண்ணு முழிச்சிட்டார் என அபி ஓடி வந்தான். 

தொடரும்.. 

You may also like

Leave a Comment