ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை 23

by Pradhanya kuzhali
227 views

Epi -23 

விஷ்வாவின் இதழ்கள் தன் இதழ்களில் பதிந்த அந்த ஒரு மில்லி விநாடியில், தாமரையின் ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அப்படியே உறைந்து போனது. அவளது அசைக்க முடியாத தன்மானக் கோட்டையும், வறுமை தந்த பயங்களும் அவனது அசுரத்தனமான காதலின் முன்னால் தவிடுபொடியாகிச் சரிந்தன.

அந்தச் செகண்ட் ஏசி கோச்சின் மங்கலான அவசரக்காலச் சிவப்பு வெளிச்சத்தில், திரைச்சீலைகளின் தனிமைக்குள் இருவரின் மூச்சுக்காற்றும் சூடான புயலென மோதிக்கொண்டன. விஷ்வா தன் வலுவான கரங்களால் அவளது மெல்லிய இடையை வளைத்து, தன் அகன்ற மார்போடு இன்னும் இன்னும் வற்புறுத்தலாக இறுக்கிக் கொண்டான். அந்தத் தீண்டலில் தாமரையின் தேகமெங்கும் ஒரு மாபெரும் மின்சார அலை பாய்ந்தது.

அவளது கண்கள் தானாக மூடிக்கொள்ள, இமைகளின் ஓரத்தில் தேங்கியிருந்த கண்ணீர்த் துளிகள் விஷ்வாவின் தகிக்கும் கன்னங்களை நனைத்தன. அவளது இதழ்களின் மென்மையும், அதில் கலந்திருந்த அச்சமும் விஷ்வாவை இன்னும் பித்தனாக்கியது. அவளது கீழ் உதட்டைக் காதலுடன் கவ்வி, தன் மூன்று வருடத் தவிப்பையும், ஒரு வருடப் பிரிவின் வலியையும் அந்த ஒற்றை முத்தத்தில் மொத்தமாக அவளுக்குக் கடத்தினான்.

தாமரைக்கு உடலெல்லாம் சிலிர்த்தது; உள்ளங்கைகள் வியர்த்தன. அவளது இரு கரங்களும் தற்காப்பை மறந்து, அவனது நீல நிற ஃபார்மல் ஷர்ட்டின் காலரைப் பலமாகப் பற்றிக் கொண்டன. அவன் கொடுக்கக் கொடுக்கத் தீராத காதலின் அமுதத்தை அவளது இதழ்கில் இருந்து உறிஞ்சிக் குடிக்க, தாமரையும் அதற்கு மேல் தன்னைத் தடுத்து நிறுத்த முடியாமல், அவனது காதலின் ஆதிக்கத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள்.

அந்த முதல் முத்தத்தின் அசாத்திய திணறலுக்குப் பிறகு, இருவருக்குள்ளும் வார்த்தைகள் வற்றிப் போயின. பேசிக்கொள்ள எதுவுமே இல்லை என்பது போல, அந்தத் தனிமைத் திரைச்சீலைக்குள் ஒரு மாபெரும் மௌனம் வந்து குடியேறியது. ஆனால், அந்த மௌனத்தில் சலனமில்லை; மாறாக, விழி வழியே இருதயத்தை ஊடுருவும் தூய்மையான காதல் மட்டுமே ததும்பிக் கொண்டிருந்தது.

விஷ்வா தன் நீண்ட, காந்தக் கண்களால் அவளையே இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தாமரையின் உதடுகள் தந்தியடிப்பதைப் போல நடுங்கியது.

“என்னாச்சு?” என மெல்லிய குரலில் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான்.

“அது… குளிர்… குளிருது… ஏசி (AC) அதிகமா இருக்கு…” எனச் சிவந்த கன்னங்கள் மின்னப் பதில் கொடுத்தாள்.

“போர்த்திக்கலாம், பெட்ஷீட்ஸ் (Bedsheets) இருக்கு,” என அவளை நிற்க வைத்துவிட்டு, படுக்கை விரிப்பைப் போட்டவன், “நீ படுத்துக்கோ; நான் மேலே போய் தூங்குறேன்,” என்று எழுந்தான்.

தாமரை திடுக்கிட்டு அவனையே பார்த்தாள். அவளின் முகம் அந்த நொடி மாறியிருந்தது. விஷ்வாவை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விஷ்வா நல்ல உயரம், அழகான கண்ணு, அளவான மூக்கு, நெருக்கிய மீசை, அதுல தாடி, நல்ல கேசம், செதுக்கிய உடல்வாகு… சினிமா ஹீரோ போல இருப்பான். அந்தக்கண்ணு ஒரு ஈர்ப்புச் சுழல், அவ்வளவு வசீகரம்! அவனோட சிரிப்புல மயங்கி விழுந்துவிடலாம்… விஷ்வாவை பார்க்கப் பார்க்கச் சலிக்கவே செய்யாது. அந்த ஃபார்மல் (Formal) உடை அவனுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

தாமரை சட்டென்று தன்னைத்தானே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். ‘இவனுக்கு அருகில் நான் பொருத்தமாக இருக்கிறேனா? நான் அழகாக இருக்கிறேனா?’ என விபரீத எண்ணங்கள் மனதுக்குள் தோன்றியது. ‘விஷ்வாவின் உடைக்கும் என்னுடைய உடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவனது தாடியும் மீசையும், நீண்ட விரல்களும் எனப் பார்க்கவே போர்வீரன் போல இருந்தான்.’ ವಿஷ்வா அவனது படுக்கையை அண்ணார்ந்து சரி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், இமை வெட்டாமல்…

“என்ன அப்படிப் பார்க்குற? சைட் (Sight) அடிக்கிறியா?” என விஷ்வாவின் குரல் கேட்டது.

கண்கள் அகல விரிய, அதிர்ச்சியுடன் ‘இல்லை’ என்பதைப் போல உடுக்கை மண்டையை ஆட்டினாள்.

“இல்லையா? அப்புறம் எதுக்கு என்னை பார்த்திட்டு நின்ன?” என இரண்டு புருவங்களைத் தூக்கினான்.

தாமரைக்கு பதட்டம் தொற்றிக்கொள்ள, “அது… இருட்டா இருக்கு. இங்கே சரியா யாரையும் பார்க்கவே முடியாது. இதுல எப்படி உங்களைப் பார்த்துச் சைட் அடிக்க முடியும்? சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்லாதீங்க!” என வேகமாகத் திரைச்சீலையை இழுத்துவிட்டாள்.

“It’s ok, உன்னோட இந்த முகம் கூட அழகா இருக்கு,” என்றபடி சட்டைக்கையை மடித்துவிட்டான்.

“எ… என்ன பண்றீங்க?” எனத் தாமரை திடுக்கிட்டுக் கேட்க…

விஷ்வா அதே காந்தப் புன்னகையுடன், “மேலே தூங்கப் போறேன்,” என அவன் ஏறச் செல்ல…

“ஒரு நிமிஷம்!” என வேகமாகத் தடுத்தாள்.

“என்னாச்சு? எதுவும் வேணுமா?” என விஷ்வா கேட்டான்.

தாமரைக்கு வாய்க்குள்ளிருந்து வார்த்தைகள் வர மறுத்தது. “என்னாச்சு?” என விஷ்வா மீண்டும் கேட்க…

“அதுவந்து… நீங்க மேலே ஏற வேண்டாம்; இங்கே கீழேயே படுத்துக்கோங்க,” என்று ஒரு வழியாகக் கூறி முடித்தாள் தாமரை. அவளது நெஞ்சுக் கூடு வேகமாக ஏறி இறங்க… விஷ்வாவின் பார்வை இன்னும் கொஞ்சம் ரசனையுடன், ஆச்சரியமாக, ஆர்வமாக அவளைப் பார்த்தது.

“இல்ல… இல்லை, நீங்க போய் தூங்குங்க… குட் நைட் (Good night)!” என்று தடுமாறிக்கொண்டு போர்வையை விரித்தாள். தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து குடித்தாள்; ஒருவித நடுக்கத்துடன் காணப்பட்டாள்.

“அப்போ ஓகே, நான் தூங்கப் போறேன்,” என்று மேலே ஏறிக்கொண்டான் விஷ்வா.

தாமரை முகத்தைச் சுழித்துக்கொண்டு, தலையில் அடித்தபடி படுக்கையில் அமர்ந்தாள். அவனிடம் வெளிப்படையாகப் பேசவும் முடியவில்லை; அவனுடன் கைகோர்த்து வர வேண்டும் என்று ஆசை தோன்றியது. இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? ஒரு பெருமூச்சுடன் அப்படியே அமர்ந்தாள். தூக்கமே வரவில்லை; இருவரும் கொடுத்துக்கொண்ட முத்தங்கள் தான் நினைவுக்கு வந்தது. உதட்டைத் தொட்டுப் பார்த்தாள்; வெட்கமும் சேர்ந்து வந்தது. இந்த ‘காதல்’ என்ற விஷயம் உள்ளுக்குள் ஒருவித சக்தியைக் கொடுத்தது. ‘எதையும் கடந்து விடுவோம், எதையும் ஜெயித்து விடுவோம்… எல்லாம் முடியும்! எத்தனை தடைகள் வந்தாலும் தனியாக என்னால் சமாளிக்க முடியும்’ என்கிற ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்தப் பூரிப்புடன் ஜன்னலில் சாய்ந்து கொண்டவள் வேடிக்கை பார்த்தபடி இருக்க…

“தூக்கம் வரலையா?” என்று குரல் கேட்டது. வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள் தாமரை.

அவனேதான்! “இன்னும் தூங்கலையா?” எனத் தாமரை கேட்க…

“தூக்கம் வரலை…” என்றான் தலையைக் கோதிக்கொண்டு.

“வாங்க, உட்காருங்க,” என நகர்ந்து அமர்ந்தாள். இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். தொடர்வண்டியின் ‘தடக் தடக்’ சத்தம் போல, தாமரையின் இதயத்தில் ‘லப் டப் லப் டப், விஷ்வா மேலே லவ் லவ்’ என்று சொல்வதைப் போல…தாமரை அவளது முடியைக் காதுக்கு ஒதுக்கிக்கொண்டு வேறுபுறம் திரும்பியவள், கைகளைப் பிசைந்தாள். அவளின் இரண்டு கைகளும் குளிருக்கு நடுங்குவதைப் போல இருக்க… “போர்த்திக்கோ, என்னாச்சு?” எனப் போர்வையை விரித்து அவளுக்குப் போர்த்திவிட்டான்.

தாமரை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். விஷ்வா காந்தப் புன்னகையுடன் அப்படியே இன்னொரு பக்கம் அமர்ந்துகொண்டான்.

“உங்களுக்குக் குளிருமே?” எனத் தாமரை அவளது போர்வையை அவனுக்கு நீட்டிட…

“நீ வச்சுக்கோ, எனக்கு மேலே இருக்கு…” என விஷ்வா எழுந்தான்.

“ஒரு நிமிஷம்!” எனத் தடுத்தாள்.

“என்ன?” என்று விஷ்வா திரும்பிப் பார்க்க…

“இங்கே போர்வை இருக்கு, இதைப் போர்த்திக்கோங்க,” என்று அவனுக்கு நீட்டினாள்; அவளின் தலை தாழ்ந்திருந்தது.

விஷ்வா அவளின் அருகில் வந்தவன், “இந்தத் போர்வை என்னோட குளிரை அடக்கப் பத்தாதுன்னு தோணுது…” என்று முணுமுணுத்தவன், அவளின் எதிரில் அமர்ந்துகொண்டான்.

தாமரைக்கு படபடப்பாக இருக்க, மெல்ல மெல்ல வேறுபுறம் திரும்பிக்கொண்டு நகர்ந்தவள், இப்பொழுது அவனுக்கு அருகில் வந்திருந்தாள்.

‘ப்ச்’ என்று விஷ்வா, ஒரே பிடியில் அவனது மடியில் அமர்த்தி, கால்களை நீளவாக்கில் நீட்டிக்கொண்டான். இருவரின் கால்களும் ஜோடியாக இருக்க, இருவரின் கைகளும் கோர்த்திருந்தது. அவனது சூடான மூச்சுக்காற்று அவளின் காதுமடலில் தீண்டச் சிலிர்த்தபடி, தாமரை வெட்கத்தின் உச்சத்தில் தன் முகத்தைச் சட்டென்று அவனது அகன்ற மார்புக்குள் புதைத்துக் கொண்டாள்.

அந்தச் சிறிய சைட் லோயர் (Side lower) இருக்கையில், இடநெருக்கடியையும் தாண்டி இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, அணுஅணுவாகக் காதல் கொஞ்சலில் ஒட்டிக் கிடந்தார்கள் என்று சொல்லலாம். விஷ்வா தன் ஒரு கரத்தால் அவளது மெல்லிய இடையை வளைத்துத் தன் உடம்போடு கச்சிதமாக அணைத்திருக்க, அவளது மாநிறத் தேகம் அவனது கம்பீரமான மார்பில் ஒரு பூவைப் போல ஒடுங்கியிருந்தது. அவளது தலைமுடி சிதறி அவனது முகத்தில் படர, அந்த மல்லிகைப் பூ வாசனை அவனது ஆண்மையைத் திக்குமுக்காடச் செய்தது.

இரவு இரண்டு மணி இருக்கும்… திடீரென்று அந்தத் தொடர்வண்டி, ஒரு சிறிய சிக்னல் கோளாறால் நடுவழியில் ஒரு வெட்டவெளியில் நின்றது.

“என்னாச்சு? இந்த இடத்துல ரொம்ப நேரம் நிக்குது?” என்று தாமரை அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்துப் கேட்டாள்.

“இந்த நொடி இப்படியே நீள வேண்டும்னு, ஒருவேளை நம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சம் நினைக்குதோ என்னவோ?” என்றான் விஷ்வா.

தாமரைக்கு அவனது ஒவ்வொரு சொற்களும் உள்ளுக்குள் கிளர்ச்சியைக் கொடுக்க… தன் மார்பில் முகம் புதைத்துத் தூங்க முயலும் தன் பிங்கியை, இன்னும் ஆழமாகத் தழுவிக்கொண்டான் விஷ்வா.

அவன் தன் நீண்ட விரல்களால் அவளது சுருள் கூந்தலை மென்மையாகக் கோதிவிட்டான். அவளது வெற்றுத் தோள்களிலும், முதுகிலும் அவனது கைகள் காதலுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்க… தாமரைக்கு அந்த ஏசி குளிரில், இருவரும் ஒரு போர்வைக்குள் இருந்தார்கள். அவள் அவனது நெஞ்சுக்கூட்டின் மேல் தன் கையை வைத்து, அவனது சீரான இதயத்துடிப்பை ஒரு ராகமாக ரசித்துக் கொண்டே, அவனது மார்பில் தன் முகத்தை இன்னும் ஆழமாகப் புதைத்துக் கொண்டாள். அந்த இருட்டுப் பயணத்தில், எந்தப் பேச்சும் இல்லாமல், வெறும் தீண்டல்களாலும் மூச்சுக்காற்றுகளாலும் மட்டுமே தங்களின் மூன்று வருடத் தவிப்பை இருவரும் தீர்த்துக் கொண்டனர்.

அதிகாலை விடிந்து, சூரியனின் இளங்கதிர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, இரயில் மெல்ல நகர்ந்து சென்னை சென்ட்ரல் (Chennai Central) இரயில் நிலையத்தின் பிரம்மாண்டமான பிளாட்பாரத்திற்குள் வந்து நின்றது.

தாமரை சட்டென்று தன் உடைகளைச் சரிசெய்துகொண்டு வெட்கத்துடன் எழுந்திருக்க… விஷ்வா அவளது சிவந்த முகத்தைப் பார்த்துத் தன் வசீகரக் காந்தப் புன்னகையைச் சிதறவிட்டான். இருவரும் இரயிலை விட்டு ஒன்றாக இறங்கினர்.

இனி ஒளிப்பதற்கோ, பயப்படுவதற்கோ எதுவுமில்லை என்பது போல, விஷ்வா தன் கறுப்பு நிற ட்ராவல் பேகை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறுகையில் தாமரையின் மென்மையான கரங்களைத் துணிச்சலாகத் தன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டான். பிளாட்பாரத்தின் அத்தனை கூட்டத்திற்கும் நடுவே, அவளது கைகளைப் பற்றியபடி கம்பீரமாக நடந்து சென்று தன் காரில் ஏறினான்.

 * (தொடரும்…)

You may also like

Leave a Comment