நிலவில் மூழ்கும் சூரியன் PART 6

by Pradhanya kuzhali
198 views

 Episode 224,

அதன் பின்னே அவள் சக்தியின் போனை எட்டிப் பார்க்க…

நல்லா பச்சையா தெரியுது

என்ன பச்சையா தெரியுது என்று அவள் கேள்வியாக அவனை பார்த்தாள். 

வேற என்ன உன்னால் டாடிய விட்டு இருக்க முடியல.. 

நெவர் அப்படி இல்லையே என்று முடியை காதுக்கு ஒதுக்கினாள். லைஸ்! லைஸ்! இந்த கேர்ள்ஸ் எப்போவும் எப்படி சுவீட்டா லை சொல்றீங்க? 

மகி அவள் முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே யார் சொன்னது. நான் பொய் சொல்லல டா!.. 

சக்தி அவள் அருகில் வந்து ” மாம் நீ பொய் சொல்லும் போது தேவதை மாதிரி இருக்க அந்த பொய் கூட உன்னை சைட் அடிக்கும் தெரியுமா!” என்று அவள் கூந்தலை விரித்து விட கைகளை கொண்டு சென்றான். 

உடனே அவள் முறைத்து கொண்டே என்ன டா சக்தி இது என்ன புது ஹெபிட் யாரு ஜடை போட்டு இருந்தாலும் அதை அவிழ்த்து விடுற? 

சக்தி அவன் தலையை கோதி விட்டபடி அது என்னானு தெரியல மாம் இந்த சில்க் கூந்தல் அதை பார்த்தாலே கைகள் பரபரக்குது. என்று சிரித்து கொண்டே கூறினான். 

அவள் சிரித்து கொண்டே அப்போ நாள் முழுக்க இந்த ஹரிணி ஜடையை பிரித்து தான் பின்னி விளையாடி கொண்டு இருப்ப போல.. 

மம் அவள் என் பிரென்ட் தட்ஸ் ஆல் என்று சொல்லி விட்டு அதன் பின் பேச்சை மாற்ற சரி டாட் மேல இவளோ அப்பெக்சன் வச்சு இருக்கியே எப்படி இந்த நாலு வருசம் பிரிந்து இருந்த.. 

அதான் அந்த அடங்காதவன் என் கூட இருக்கானே.. அவன் கூட மல்லு கட்டி கொண்டு அவனை சமாளிக்கவே எனக்கு நாள் பத்தாது அதையும் மீறி டைம் கிடைத்தால் இந்த ரித்து மாமி மாமி அப்டின்னு என் முந்தியை பிடித்து கொண்டே சுற்றுவாள். என்று கூறினாள். 

அப்போ உனக்கு என் நினைப்பு! ஹே சக்தி கண்ணா நீ எனக்கு அவனை விட  அண்ட் டாடியை விட ரொம்ப ஸ்பெசல் அண்ட் முக்கியம் நீ உன்னோட ரிசம்பெல் அப்படியே என் அண்ணா போல பொறுமை அதை விட டாட் பொறுமை உன் கிட்ட இருக்கும் அதை விட நீ தான் என்னோட முதல் குழந்தை யாருக்காகவும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன். 

என்னோட சூழ்நிலை அப்படி இருந்தது அதனால் தான் உன்னை விட்டு போனேன். சக்தி, என்ன அது என் கிட்ட சொல்லு? அது அதுக்கான வயசு உனக்கு வரல டா கண்ணா அது வேண்டாம். என்று மடியில் அமர வைத்து கட்டி கொண்டாள். 

மாம் இப்படி செய்யாத நான் ரொம்ப பெரிய பையன்.. டேய் எனக்கு எப்போதும் குழந்தை தான் டா.. என்று முத்தமிட்டாள். (இது கூடிய சீக்கிரத்தில் உடைய போகிறது)

அதன் பின் இருவரும் ஒன்றாக கீழே சென்றனர். கல்யாணத்துக்கு உண்டான வேலை எல்லாம் ஆரம்பிக்க பட்டது. அன்று மாலை பந்த கால் நட்டனர். கார்த்திக், மைவிழி சிவன்யா, பவன்யா, ரிதம் என ஐவரும் வந்து சேர்ந்தனர். ரிதம் துள்ளி கொண்டு நேராக மகி அருகில் ஓடினாள். 

மாமி! மாமி! மிஸ் யூ தெரியுமா!.. 

மகி அவளை அணைத்து முத்தமிட்டு அப்போ இனி என் கூடவே இருங்க ரித்து குட்டி.. 

அங்கே சக்தி உதயன் அறைக்கு சென்று மை விழி சித்தி பாப்பு குட்டின்க எல்லாம் வந்து இருங்காக மாமா சீக்கிரம் வாங்க என்று சொல்லி கீழே வந்தான். 

ரிதம் அவனை பார்த்து சக்தி அண்ணா என்று கண்ணகுழி சிரிக்க கூறினாள். மகி அவளை மடியில் இருந்து கீழே இறங்க விட வில்லை அவளும் இறங்கும் மனநிலையில் இல்லை. 

மகி, சக்தி கண்ணா ரித்து பெபயுடைய குட்டி ட்ராலியை எடுத்து என் ரூம்ல வை டா.. ம்ம் சரி மா என சொல்லி கொண்டே அவன் தள்ளி செல்ல ரிதம் அவன் பின்னால் சென்றாள். 

ஹலோ சக்தி அண்ணா ஒய் இவளோ சைலன்ட்டா இருக்கீங்க? 

சும்மா என்று சொல்லி கொண்டே சென்றான். 

இங்கே சீவி, பவா இருவரும் மகியிடம் கொஞ்சி பேசி விட்டு கலை வாணி வசந்தன் மேல் தாவினார்.

மகியின் கண்கள் வாசலை தான் பார்த்து கொண்டு இருந்தது. இவர்களிடம் சூர்யா வை பற்றி கேட்க பிடிக்க வில்லை. பேசவே இல்லை என்றால் கூட அருகில் இருந்து பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று அலைபாயிந்தது.

மை விழி, மகி நீ எதுக்கு வாசலை அப்படி பார்க்கிற.. 

ஒன்னும் இல்லை முதலில் மாமாவை கவனி நிற்க வைத்து கொண்டு இருக்க.. 

அதற்குள் இங்கே ரிதம் அவன் கைகளை பிடித்து கொண்டு அண்ணா என்னை தூக்கிக்க கால் வலிக்குது. 

சக்தி அவளை பின்னால் தூக்கி கொண்டான். இப்போ ஓகே வா பேபி!.. 

ம்ம் ஓகே அண்ணா.. என்று சொல்ல இருவரும் கீழே வந்தனர். கீழே வந்து அவன் இறக்கி வுட்டதும். 

சக்தி! என்று அழைத்தாள். 

அவன் கொஞ்சம் திடுக்கிட்டு என்ன மேடம் சக்தி சொல்றீங்க? 

அண்ணா வேண்டாம் சக்தி தான் பிடித்து இருக்கு என்று அவன் மென்மையான கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு நேராக மகியின் மடிக்கு சென்று விட்டாள். 

அதற்குள் சிவி, பவா இருவரும் சக்தி அண்ணா நானு என்னையும் தூக்கு! என்னையும் தூக்கு! நான் ஃபர்ஸ்ட்! இல்ல நான் தான் ஃபர்ஸ்ட் ! என்று இருவரும் சண்டையிட சரி ஒவ்வொருவராக சரியா என்று என்றும் இல்லாத புன்னகையுடன் இருவரையும் உப்பு மூட்டை போல் பின்னால் கட்டி கொண்டு திரிய அதை பார்த்த அனைவரும் சந்தோஷ மனநிலையில் பார்த்து ரசித்தனர். 

ரிதம் மகியை விட்டு இறங்கவே இல்லை. அவளை உரசி கொண்டே அங்கு இருக்கும் அனைவரயும் பார்த்து கொண்டு இருந்தாள். மகி அவளை நீவி கொண்டு தடவி கொடுத்து கொண்டு சாப்பாடு ஊட்டி விட்டாள். 

மகி, அவளிடம் ரித்து பேபி அவன் எங்கே? 

சக்தி அங்கே இருக்காங்க.. 

அவள் சிரித்து கொண்டே இதை மிதுன் கேட்டா உன் கிட்ட சண்டைக்கு வருவான். 

மாமி சாரி மாமி மிதுன் மாமா கூட போயிட்டான்.

அப்போ நிதின்?

நிதின் அண்ணாவும் சூர்யா மாமா கூட போயிட்டாங்க.. 

கார்த்திக் தொண்டையை கனத்து கொண்டே என்ன மகி ரொம்ப நினைப்பு வந்திடுச்சு போல்.. 

அவள் சாக் ஆகி பின் இயல்பாக யார் சொன்னது? 

அப்போ உனக்கு மிதுன் நினைப்பு இல்ல போல..

அது அது வந்து மாமா நீங்க சீட் பண்றீங்க.  என்று முறைத்தாள். 

கார்த்திக் சிரித்து கொண்டே உண்மை என்னன்னு எனக்கு தெரியும். 

அவள் வேறு வழி இல்லாமல் சரி எங்கே சொல்லுங்க? 

என்ன சொல்லணும்? 

மாமா டென்ஷன் பண்ணாதீங்க!.. 

கார்த்திக் சிரித்து கொண்டு மகி தெளிவா கேளு.. 

ரிதம், மாமா இப்போ மாமிக்கு சூர்யா மாமா எங்கேனு கேட்கிறார்கள் சரி தானே மாமி ! 

இதை கேட்டு கார்த்திக் சோ ஸ்வீட் பேபி உன் மகி மாமியை கேளு!.. 

ரித்து குட்டி சொன்னால் சரி தான் என தயங்கி கொண்டே கூறினாள். 

மை விழி ரிதுவுக்கு சத்து கஞ்சி ஒரு டம்ளரில் கொடுத்தவள். சூரியா மாமா உமா அத்தை வீட்டுக்கு அதாவது உன் வீட்டுக்கு போயிட்டாங்க கூடவே மிதுன் குட்டியும் போயிருக்கான். 

உடனே மகி அவளுக்கு ஊட்டி கொண்டே அப்போ நிதின்!.. 

இதை கேட்டதும் மை விழி கோபமாக “அவன்! அவனும் தான் முதலில் அவன் மேல் எதுக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்குற அண்ட் இனி அவன் கூட மிதுன் குட்டியை சேர விடாத அந்த நித்தினை எனக்கு சுத்தமா பிடிக்கல. அவனை பார்த்தால் மினி விஷ பாட்டில் போல் இருக்கு டி” 

இதையெல்லாம் கேட்டு கொண்டே சக்தி மகிகு சுக்கு கருப்பட்டி டீ எடுத்து வந்தான். 

உடனே மகி, அக்கா அவனும் சின்ன பையன் தானே!

மை விழி கோபமாக ஹே வாய மூடு டி எனக்கு நீ சொல்லி தரியா! உன்னை நான் மட்டும் மாமா இடத்தில இருந்தேன் உன் காலை ஒடித்து போட்டு இருப்பேன். வாயை அடக்கு டி மாமா கிட்ட ஒழுக்கமா இருக்க வழிய பாரு பெரிய அன்னை தெரசா மாதிரி சீன் போடுறா.. என்று திட்டி கொண்டே சமையலறை சென்று விட்டாள். 

அந்த சூழல் மிகவும் கடினமாக இருக்க கார்த்திக் போனை எடுத்து கொண்டு சூர்யா கிட்ட பேச சென்று விட்டான். 

மகி கண்களில் நீர் கொண்டு அமர்ந்து இருக்க ரிதம், மாமி டோண்ட் க்ரை நான் டிம்பிள் கிட்ட சொல்லி அவங்கல லாக் அப் பண்ணிடலாம். 

இங்கே சூரியாவின் போன் ரிங் ஆனது. சொல்லு டா!..

கார்த்திக், எப்போ டா வர? 

நான் வந்து என்ன நடக்க போகுது போடா.. 

கார்த்திக் கொஞ்சம் கடினமான குரலில் மகியை அவாய்ட் பண்ண தானே அங்கே போய் ஒளிந்து இருக்க..

கண்டு கொண்டான் என்று நினைத்த சூரியா அப்படி இல்லையே அவள் எல்லாம் ஒரு ஆளா! 

அப்போ கிளம்பி வாடா!.. 

முடியாது கார்த்திக் நீ தான் உன் கடலையை ஆரம்பித்து இருப்பியே இந்நேரம் குலுங்கி குலுங்கி ரெண்டு தடவையாவது சிரித்து இருப்பா.. என்று சூர்யா கூறினான். 

கார்த்திக் ஒரு பெரு மூச்சை விட்டு டேய்** அவளுக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு அதுவும் குழந்தை சுமது கொண்டு இருக்கா இப்படி ஏங்க வைக்காத சூர்யா.. 

சூர்யா ஒரு சில நிமிடம் யோசித்தான். அதன் பின் டேய் ( புடுங்கி) இப்போ நான் அவள் முன்னாடி வந்தால் இன்னும் சீன் போடுவா டா.. 

கார்த்திக் விடா பிடியாக இல்ல டா வா அவள் உன் மேல் ரொம்ப ஏக்கமாக இருக்கா.. 

சூரியா, நான் சொன்னால் கேட்க மாட்ட அப்படி தானே அவள்  மட்டும் என்னை மட்டமா நடத்தட்டும் உன்னை வந்து கைமா பண்றேன். என கூறியவன். வரேன் வை டா.. என்று கட் செய்தான். 

கார்த்திக் அவன் வரும் விஷயத்தை மகியிடம் கூறினான். 

மகி இப்போ சூர்யா வராரு! 

அவள் ரிதம் உதட்டை கஞ்சி ஒட்டிய உதட்டை துடைத்து கொண்டே  “அவர் வந்தால் எனக்கு என்ன?”

தொடரும்.. 

Episode 225

 கார்த்திக், இப்போ சூர்யா வராரு! 

அவள் ரிதம் உதட்டை கஞ்சி ஒட்டிய உதட்டை துடைத்து கொண்டே  “அவர் வந்தால் எனக்கு என்ன?”

எனக்கு என்னவா! இது என்னமா பதில்!.. 

மகி, ஆமா மாமா அவர் கிட்ட பேச கூட எனக்கு எதுவும் இல்ல அவர் உதயன் கல்யாணத்துக்கு வரார் சோ வேற எதுவும் இல்ல என்று கூறினாள். 

கார்த்திக், போச்சே அவன் வேற இப்போ வரான் இவங்க ரெண்டு பேருக்கு நடுவில் நான் மாட்டி கொண்டேன். என்று நினைத்தான். 

சூரியா வீட்டில் இருந்து கிளம்பும் நேரம் பெங்களூரில் இருந்து நவீன் குமார் கால் செய்தான். இவன் யாரென்று ஒரு சின்ன அறிமுகம். சுருக்கமாக சொல்ல போனால் குரு பிரகாஷ்க்கு எதிரி கூடவே ஆக்டர் சித்தார்த் கிருஷ்ணாவை வம்சத்தோடு சாய்க்கும் வெறியில் சுற்றி கொண்டு இருக்கிறான். 

யார் இந்த சித்தார்த் கிருஷ்ணா?  குரு பிரகாஷ், தாராவின் சிறு வயது தோழன் கூடவே அவளுடன் (a+b) படத்தின் கதாநாயகன். (இப்போ இவன் எதுக்கு இந்த கதையில்..! எல்லாம் என்னோட அடுத்த கதையின் முன்னோட்ட கதாபாத்திரம்..)

சூரியா கட் செய்து விட்டு உள்ளே செல்ல திடீர் என்று புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. ஹலோ!.. 

ஹலோ நீங்க சூர்ய தேவ் தான!.. 

ஆமா நீங்க யாரு? 

முதலில் வாழ்த்துக்கள். அண்ட் உங்க MNC project ல நவீன் கார்பரேசன ஐ மின் நம்ம ரெண்டு பேரும் டை அப் பண்ணிக்கலாம். அதை பற்றி பேச தான் வந்தேன். 

சூரியா, இல்ல மிஸ்டர் அந்த மாதிரி ஐடியா எனக்கு இல்ல.. 

நவீன், எனக்கு குரு பிரகாஷ தோற்கடிக்க வேணும் அதனால் தான் இந்த புராஜெக்ட் உனக்கு வர மாதிரி செய்தேன். நீயும் நானும் சேர்ந்தால் எப்படி இருக்கும்ன்னு யோசித்து பாரு!.. என ஆதிக்கமாக கூறினான். 

சூர்யா, நீ சொல்லி நான் எதுக்கு டா கேட்கணும்? அந்த குரு, spr ரெண்டு பேரும் எனக்கு எதிரி தான் ஆனால் அதுக்காக என்னால் சண்டை போட முடியாது. வேஸ்ட் ஆஃப் டைம் அண்ட் மணி ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஒருததர சொல்வதை கேட்டு செய்யும் பழக்கம் எனக்கு இல்ல.. நான் கட்டளையிடும் இடத்தில இருக்கேன்.  

நவீன், ஹே நான் நவீன் குமார்!.  

அதுக்கு நான் என்ன பண்ணட்டும் மூடிட்டு போனை வை.. எவ்ளோ பெரிய கம்பனி யா இருந்தாலும் புராஜெக்ட் கிடைக்க வில்லை என்றால் நீ நமித்து போன பட்டாசு அதனால் எல்லாவற்றையும் மூடி கொண்டு போனை வை என வெடுக்ககென கட் செய்தான். 

மறு முனையில் நவீன், சூர்ய தேவ்!.. என கத்தினான். 

நவீனுடைய உதவியாளன் மோகன், சார் பிளீஸ் பொறுமையா இருங்க நேரில் பேசி பார்க்கலாம் என சொல்லி அசுவாஷ படுத்தினான். 

சூரியா வீட்டுக்குள் வந்ததும் மிதுன் கிளம்பு அங்கே உன் அம்மா காத்து கொண்டு இருக்கா!. மிதுன் தனது அம்மா அப்பா கல்யாண ஆல்பத்தை உமா காட்ட பார்த்து கொண்டு இருந்தான். 

மிதுன், மகி ஆல்வேஸ் தேவதை தான் அம்முச்சி ஆனால் உங்க பையன் என் மம்மிக்கு கொஞ்சம் கூட மேட்ச் இல்ல.. 

உமா, என்ன கண்ணா இப்படி சொல்ல கூடாது. உனக்கு உன் அப்பனை பிடிக்க வில்லையா!..

நிதின் வேகமாக வா மிதுன் போலாம். பொம்மாயி நமக்கு வெயிட் பண்ணுவா!.. உமா, நட்ராஜ் இருவரும் நிதினை பார்த்தனர். யாரு இவன்? என்பது போல் அவர்கள் பார்வை இருந்தது. 

சூர்யா, மாம் இது ஜெய்டைய அண்ணன் பையன்!.. என்று சொல்லி விட்டு மிதுன பார்த்து, நான் இல்லாமல் நீ இல்ல டா இந்த வாய் இருக்கே! உன்னை சாட்டையில் வெளுக்க அடங்குவ ராஸ்கல்!. 

நான் உங்களை ஜெயிலில் போட்டு விடுவேன்.. போடா என்று சொல்லி இருவரும் சண்டையிட்டு கொண்டே சென்றனர். அவர்களின் பாண்டிங் அதை பார்த்து நிதினுக்கு பொறாமையாக இருந்தது. இது போல் spr ஒரு நாளும் இருந்தது இல்லை. 

இன்று மிகவும் முக்கியமான நாள் ஆன்டி ஹீரோ vs ஹீரோ இருவரும் சந்திக்கும் நாள்!.  

சூரியா, தன் உடையை சரி செய்து கொண்டே அழகாக இருக்கிறேனா! என்று பார்த்தான். அதன் பின் காரை எடுக்க அவன் மனதில் அந்த ராட்சஸி கிட்ட சண்டை போட்டு இருக்க டா சோ கெத்து ரொம்ப முக்கியம்.. என்று சொல்லி கொண்டே சென்றான். 

மான் விழியின் கண்கள் வாசலை தொட்டு மீண்டு கொண்டே இருந்தது. சத்ய தேவ் அமைதியாக கார்த்திக் அருகில் அமர்ந்து இருந்தான். 

சத்ய தேவுடைய போன் ஒலிக்க டாட் என புன்னகையுடன் அதை பதில் ஏற்க சூரியா, சத்ய தேவ் நான் வந்துட்டேன்.. 

டாடி இப்போவே வரேன் மகி டாட் வந்தாச்சு என சொல்லி கொண்டே சிரித்த முகத்துடன் எழுந்தான். 

மிதுன் நிதின் கைகளை பிடித்து கொண்டான். டாடி!.. 

சத்ய தேவ்!.. என சூர்யா அவனை அணைத்து கொண்டான். 

சூரியா, உன் அம்மா பக்கம் போயிட்ட அப்படி தானே டா!.  

டாடி வாட்ஸ் ராங் வித் யூ வாட் அ ரப்பிஸ் கொஸ்டின்!.. என அவன் முகத்தை பார்க்க 

சரி வா டா கண்ணா உள்ளே போலாம். என சூரியா, மிதுன் மற்றும் நிதின் இருவரையும் கண்டு கொள்ளாமல் செல்ல.. 

ஹலோ வாட் தி ஹெல் ஈஸ் கோயிங்க ஆன்!.. என மிதுன் கத்த இப்பொழுது தான் சத்ய தேவ் பார்வை பின்னால் சென்றது. 

இருவர் பார்வையும் மோதி கொண்டது. ஓ நீ என் மகியுடைய பையனா! உன்னை உன்னை எப்படி என் பொம்மாயி கிட்ட இருந்து பிரிக்கிரென் என்று மட்டும் பார் டா என நிதின் மனதில் கருவி கொண்டான். 

சத்ய தேவ், யார் அவன்?.. 

சூர்ய தேவ், இது அந்த மிதுன் ராஸ்கல் ப்ரெண்ட்!.  

சத்ய தேவ் மனதில் என்னோட இடத்தை பிடிக்க புதிதாக ஒருத்தன் பிறந்து தான் வரனும். என் தம்பியை கைக்குள் போட்டு கொண்டால் அவன் உன் தம்பி ஆகி விட மாட்டான். என இருவரும் பார்த்த நிமிடத்திலேயே வஞ்சத்தை வளர்த்து கொண்டனர். 

சூர்யா, சரி சரி உள்ளே போலாம்.. என சொல்ல சத்ய தேவ், அதன் பின் நிதின் பிரகாஷ், மிதுன் தேவ் என வரிசையாக வர.

உடனே மகில்லம்மாள், சக்தி கண்ணா உன் பின்னாடி யாரு அந்த கடுவன் குட்டி ரெண்டு பேரு அப்படியே உதயனை உரித்து வைத்து இருக்கான் இன்னொருத்தன் என் மகி குட்டியுடய சூரியா போல் இருக்கான். 

அனைவர் பார்வையும் மிதுன் தேவ், நிதின், சத்ய தேவ் என ஒரு சுத்து விட கார்த்திக் சூர்யாவை பார்க்க அவனும் கார்த்திக்கை பார்த்தான். 

சூரியா, என்ன டா இது? 

இரு சூர்யா பார்த்து கொள்ளலாம் பொறுமை என அவன் கண்களில் பதில் அளித்தான். 

மிதுன் மகியை பார்த்ததும் தாவி கொண்டு ஹே மகி என சொல்லி கொண்டே செல்ல நிதின் அதே இடத்தில் நின்றான். மிதுன் ஒரு நிமிடம் நின்று அண்ணா வா என அவன் கைகளை பிடித்து மஹியின் அருகில் அழைத்து செல்ல 

சத்ய தேவ் மற்றும் சூர்ய தேவ் என இருவர் முகத்திலும் கடுமை ஒட்டி கொண்டது. மை விழி மகிய பார்த்து முறைத்து கொண்டு இருந்தாள். 

நிதின், பொம்மை! உன் ஸ்டோமக்ல மிதுன் அண்ட்  எனக்காகவே குட்டி பேபி இருக்கா!.  

அவள் முகம் சிவக்க ஹா ஹான் நிதின் குட்டி என்று சமாளித்தாள். 

மிதுன், ஹே இடியட் என்ன டி என் மம் மேல் சிட் பண்ணி இருக்க உள்ளே பேபி இருக்கு.. 

ரிதம் பாவமாக முகத்தை வைத்து கொண்டு இறங்க ஒரே நேரத்தில் ரிதம் என்று இரண்டு சத்தம்.. 

சத்ய தேவ், சூரிய தேவ் தான்.. 

சூர்யா, கண்ணு குட்டி நீ வாடி செல்லம் நான் உன்னை தூக்கி வைத்து கொள்கிறேன்.

சத்ய தேவ், ரித்து பேபி நீங்க என் கிட்ட வாங்க!.. 

மகி, மிதுன் வாயை அடக்கு ராஸ்கல் அவள் என் ரித்து இனி ஒரு வார்த்தை பேசின தோசை திருப்பியில் அடி பின்னி விடுவேன். நீ வாடி என் தங்க புள்ளை.. 

ரிதம், இட்ஸ் ஓகே மாமி நான் சூர்யா மாமா கிட்ட போறேன்!.. என அவள் சத்ய தேவ் அருகில் போய் அவனுடன் கைகளை கோர்த்து கொண்டு  நின்றாள். 

மிதுன் மனம் ச்ச தேவையில்லாமல் கோபம் பட்டு என் ரித்து இப்போ அவன் கூட நிற்கிறாள். என்று அவன் பார்வை அவர்கள் கோர்த்து இருந்த கையின் மீது விழுந்தது. 

கலை வாணி, மை விழி என்ன பண்ற மாப்பிள்ளை வந்து இருக்காங்க கவனிக்க மாட்டியா!. என சூரியா வுக்கு தண்ணீர் மற்றும் சாப்பிட எடுத்து வந்தாள். 

உடனே மை விழி, சாரி மா கொடு நானே தருகிறேன் என பார்க்க கலை வாணி, மகி என்ன டி உனக்கு ரெட்ட குழந்தையா! இவனை பார்த்தால் உதயன் போல் இருக்கே இவனோட கண்ணு அப்படியே உன் கண்ணு டி மான் குட்டி வாங்க செல்லம் உங்க பேர் என்ன?

இவனை பார்த்தால் மாப்பிள்ளை போல் இருக்கே!.. 

சத்ய தேவ், அம்முச்சி அந்த பாய் தான் மிதுன் தேவ் இவன் நம்ம ஃபேமிலி இல்ல மிதுனுடைய ப்ரெண்ட்.. என்று சொன்னதும் கலை வாணி நிதின் கிட்ட, சாரி கண்ணா மிதுன் குட்டி வாங்க! என கைகளை நீட்டினாள். 

மகி, டேய் அது என் அம்மா! .. 

மிதுன், அப்போ அங்கே ரெண்டு பேர் இருந்தார்கள் அது யாரு? 

சத்ய தேவ் , அத  டாடியுடுட அம்மா அப்பா! என்று கூறினான். 

நிதின் மனம் உலை கலன் போல் வெந்து கொண்டு இருந்தது அவன் கோபத்தை மொத்தமாக கைகளை மடக்கி கட்டு படுத்தினான். 

கலை வாணி, மாப்பிள்ளை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!. மான் விழி கூட்டி போ!.. என்று அவர் வேலையாக சென்று விட மகி எழுந்து அவனை அழைக்க

அதற்குள் சூரியா ரிதம்மை தூக்கி கொண்டு அவன் வலக்கமாக தங்கும் அறைக்கு செல்ல கார்த்திக் பின்னால் சென்றான். 

நிதின் ஒரு இடதக்தில் அமர்ந்து கொண்டான். கூடவே மிதுன் சென்று அமர சத்ய தேவ் மகியின் பின்னால் சென்றான். 

மகி சத்ய தேவ் கிட்ட ஒரு வித உணர்ச்சி பொங்க பாசததை வெளிப்படுத்தும் காட்சி அதை இருவரும் நேராக பார்த்து கொண்டு இருந்தனர். 

நிதின் மிதுன் கிட்ட…? 

சூரியா – கார்த்திக் உரையாடல் . ? 

தொடரும்.. .

Episode 226

(முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கதையை தொடர்ந்து வாசித்தால் தான் அது சுவாரசியமாக இருக்கும். என்னோட சூழ்நிலையில் அதிகமா கதைக்கு சிந்தித்து எழுத நேரம் இல்ல, சண்டைக்காரா முடிந்து விட்டது அது தான் இன்றில் இருந்து தொடர்ந்து பதிவிட போகிறேன். )

ஒரு சிறு முன்னோட்டம்: சூர்யாவிடம் SPR தனக்கும் மான் விழிக்கும் பிறந்த மகன் தான் நிதின் பிரகாஷ் என கூறுகிறான். இதை கேட்டதும் சூர்யா ஒரு வித கலக்கததுடன் இருக்கிறான். அதை கார்த்திக் கிட்ட கூறுகிறான். ஏற்கனவே ஜெய் சூர்யாவிடம் தே ஜு மற்றும் மான்வுழி இருவரும் ஒரே மாதிரி இருக்கின்றனர். என கூறியதில் சந்தேகம் ஏற்பட DNA டெஸ்ட் எடுத்து பார்க்கும் முடிவுக்கு வருகின்றனர். அதே சமயத்தில் உதயன் தாராவை விரும்பி விட்டு ஶ்ரீ மதியை கட்டி கொள்ளும் நிற்பந்தத்தில் தவிக்கிறான். வருண் வெங்கட் ஶ்ரீ மதியை ஒரு தலையாக காதலித்து அவளை கடத்தி கட்டி கொள்ள திட்டம் தீட்டுகிறான். அடுத்து என்ன நடக்கும்… இதோ விட்ட இடத்தில் இருந்து கதை ஆரம்பம் ஆகிறது. 

மான் விழி சத்ய தேவ் கூட உள்ளே சென்றாள். இங்கே மிதுன் மற்றும் நிதின் இருவரும் இங்கு நடந்த அனைத்து விஷயத்தையும் பார்த்து கொண்டு இருந்தனர். இருவர் மனதிலும் சத்ய தேவ் மேல் தீ பொறாமை தீ பற்றி கொண்டு இருந்தது. 

சூர்யா கார்த்திக் இருவரும் தனியாக ஒரு அறைக்குள் சென்றனர். சூர்யா ரிதமை தூக்கி கொண்டு அருகில் உள்ள சேரில் அமர்ந்தான். ஒரு வேளை இருக்குமோ? 

சூர்யா அமைதியாக அமர்ந்து இருந்தான். 

கார்த்திக், என்ன சூர்யா எதுவும் பேசாமல் இருக்க அந்த பாட்டி சொல்வது பார்த்தால் ஒரு வேளை அந்த தேஜு மகி ரெண்டு பேரும் அக்கா தங்கையா? சான்ஸ் இருக்கா? 

சூர்யா , எனக்கும் அப்படி தான் தோணுது பட் நமக்கு ப்ரூப் வேணும் கார்த்திக் அதில் தான் எல்லாமே அடங்கி இருக்கு? 

கார்த்திக், நெகட்டிவ் அப்டின்னு வந்திடுச்சு என் பொண்டாட்டி தப்பிச்சு விடுவாள். நான் நிம்மதியா இருப்பேன் டா! 

சூர்யா இதை கேட்டதும் கார்த்திக்கை பார்த்து முறைத்தான். கார்த்திக் கண்களை ஒரு மாதிரி மடக்கி கொண்டு அச்சோ நெகட்டிவ் வந்தால் அந்த நிதின் மகிகும் – sprக்கும் பிறந்த பையன் அப்டின்னு வரும்ல! 

சூர்யா எரிக்கும் பார்வையுடன் தெரியுதுள்ள கொஞ்சம் மூடிட்டு இரு கொஞ்சம் யோசிக்க விடு டா!  

கார்த்திக், ஆமா நீ சொல்றது சரி தான் ஆனால் எப்படி வந்தாலும் பிரச்னை நமக்கு தான் டா சூரியா என இருவரும் பேசி கொண்டு இருந்தனர். 

சூர்யா, எப்போ ரிசல்ட் கிடைக்கும்? 

நாளைக்கு வந்திடும் நீ கவலை படாத பார்ப்போம்!  

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வசந்தன் கல்யாண வேலையாக இருந்தாலும் சூர்யாவை கவனிக்க தவறில்லை சூர்யா அவருக்கு மிகவும் பிடித்த மருமகன் உதயனை விட ஒரு படி மேல் என்று கூறலாம். 

வசந்தன் மான் விழியை பார்க்க சென்றார். ரிதம், மான் விழி இருவரும் உறங்கி கொண்டு இருந்தனர். இன்று மாலை திருமண வரவேற்பு நாளை காலை உதயன் மற்றும் ஶ்ரீ மதிக்கு திருமணம்… 

மகி!  

மகி!. 

ப்பா என சோம்பல் முறித்து கொண்டே எழுந்து அமர்ந்தாள். 

வசந்தன், ரிதம் மற்றும் அவளையும் மாறி மாறி பார்த்தார். இந்த பொண்ணு? 

மகி, இது இன்பா அண்ணா பொண்ணு பா அவரோட பிரன்ட் பொண்ணு என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டாள். என ரிதமுக்கு முத்தம் வைத்தாள். 

வசந்தன், லட்சணம் முகம் என புன்னகையுடன் கூறி விட்டு ஒரு நிமிடம் அமைதியானார்.

சொல்லுங்க பா என்ன விஷயம்? 

வசந்தன், உனக்கும் மாப்பிள்ளைக்கு என்ன எதுவும் பிரச்னையா? 

இல்ல பா என ஒரு வித திடுக்குடன் கூறினாள். 

வசந்தன் கொஞ்சம் நிம்மதியுடன் மாப்பிள்ளையை கவனி மா உன்னை தான் எல்லா இடத்திலும் எதிர் பார்க்கிறார். நீ மாசமா இருக்க அது புரியுது ஆனால் அவரை கவனிப்பது உன்னோட கடமை தெரியும் தான.. 

மகி, சரி பா அப்படி எதுவும் இல்ல அவர் புரிந்து கொள்வார் என சொல்லி விட்டு இப்போவே நான் போய் அவருக்கு டீ கொடுக்கிறேன். 

வசந்தன் சிரித்து கொண்டே இது டிஃபன் சாப்பிடும் நேரம் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகி இந்த குட்டி பொன்னையும் அழைத்து கொண்டு மாப்பிள்ளையை கூட்டிட்டு வா!

ம்ம் சரி பா என எழுந்தவள் வேகமாக குளித்து விட்டு ரிதமை தூக்கி கொண்டு மை விழி கிட்ட கொடுத்தாள். 

மகி, அக்கா இவளை குளிக்க வச்சு இந்த ட்ரெஸ் மட்டும் போட்டு விடு நான் வந்து சாப்பிட வைக்கிறேன். 

மை விழி, ரிதமை உற்று பார்க்க 

என் தங்க புள்ளை மேல் கண்ணு வைக்காத? 

இவளை இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! இந்த விவேகா!..என மை விழி சொல்ல.. 

மான் விழி, அக்கா சரி தான் இவள் இன்பா அண்ணாவுக்கும் அறிவு விவேகாவுக்கும் பொறந்த பொண்ணு!. 

மை விழி, அப்புறம் எதுக்கு டி இத்தனை நாள் மறைச்ச? 

எனக்கே தெரியாது. இப்போ தான் தெரியும் ஆமா மாறன் மாமா உன் கிட்ட சொள்ளலாயா? 

மை விழி, அவனுக்கு தெரியுமா?  

மான் விழி, கொஞ்சம் புருசனுக்கு மரியாதை கொடு கா என சொல்ல ஹே உன்னை அடி!. 

போ கா என சொல்லி கொண்டே எப்பொழுதும் சூரியா மகி தங்கும் அறை இன்று அதில் கார்த்திக் சூர்யா தங்கி இருந்தனர். அங்கு சென்றாள்.  

மான் விழி மனதில் அய்யோ முருகா முருகா எப்படியும் கார்த்திக் சார் உள்ளே இருக்கணும் பிளீஸ் அப்போ தான் கூப்பிட்டு விட்டு தப்பித்து வர சரியா இருக்கும் என நினைத்து கொண்டே சென்றாள். 

சூர்யா தான் லேப் டாப் ஆன் செய்து ரகு மற்றும் ஜெய் கிட்ட பேசி கொண்டு இருந்தான். இந்த MNC project மிகவும் முக்கியம் அதற்கான வேலையில் இருந்தான். 

கார்த்திக் கல்யாண வேலையாக வெளியே சென்று இருந்தான். மான் விழி கதவுன் மேல் சாய்ந்து உள்ளே கார்த்திக் இருக்கிறானா என செக் செய்தாள். 

உள்ளே இருந்து பேச்சு சத்தம் கேட்க அப்போ பிரச்னை இல்லை என்று நினைத்து கொண்டு கதவை திறந்தாள். 

“மாமா! உங்களை அப்பா சாப்பிட அழைத்தார். அண்ட் அவரையும் அழைத்தார்” 

ரகு மறு பக்கத்தில் இருந்து சூர்யா பசிக்குது டா! ப்ரேக் விடேன் பாரு நை ட் ஷிஃப்ட் ஒர்கர்ஸ் இன்னும் வீட்டுக்கு கிலம்பல உன்னோட டார்கெட் லைன் முன்னாடி முடிப்போம் டா இது சத்தியம். 

ஜெய், நீ யாரு கிட்ட பேசிட்டு இருக்க? 

 மிஸ்டர் ஜெய் நான் சூரியா கிட்ட பேசிட்டு இருக்கேன். 

அவன் போய் ஆறு மாசம் ஆகிது அங்கே பாரு!  

படுபாவி! என ரகு நினைத்து கொண்டான். 

ஆம் மான் விழி உள்ளே வந்த அடுத்த நிமிடமே சூர்யா மீட்டிங்ல இருந்து வெளியேறி விட்டான். 

இங்கே மான் விழி – சூர்யா உரையாடல். 

“மாமா வா! ச்சீ அப்படி யாரும் இங்கே இல்ல.. ஒன் அண்ட் ஒன்லி தேவ் குடும்ப உறுப்பினர்கள் தங்கும் அறையில் அவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.” இதோ உன் கண் முன் சூர்ய தேவ் இருக்கேன். கண்ணு தெரியுதா? 

மான் விழி, எல்லாம் என் நேரம்? 

“தெரியுது உங்களை சாப்பிட வர சொன்னாங்க”

சூர்யா தலையை கோதி சரி செய்து கொண்டே எழுந்து நின்றான். வர முடியாது என்ன பண்ணுவ? 

“பசிச்சால் வாங்க இல்லனா போங்க சொல்ல வேண்டியது என் கடமை”

“ஓ இப்போ தான் கடமை தெரியுது போல நேற்று எங்கே டி போன இங்கே எனக்கு துளி கூட மரியாதை இல்ல..இந்த வீட்டில் பொண் எடுத்தேன் பாரு என்னை சொல்லணும். பொண்ணை வளர்க்கல சரியான என சூர்யா சொல்லி கொண்டு இருக்க மகி கண்களில் கண்ணீர் கோர்த்து கொட்ட ஆரம்பித்தது. 

சூர்யா, ஹான் இதுக்கு ஒன்னும் குறைச்சசோ இல்ல என அவள் அருகில் சென்றான். 

மகி கதவுக்கு வெளியே செல்ல சூரியா அவளை பின்னால் இருந்து பிடித்து கொண்டான். 

என்னை விடுங்க? விடுன்னு சொன்னேன்! 

ஹே நான் உன் புருசன் டி! என்ன மரியாதை குறையுது!  

விடுங்க என கர்ஜித்தாள். 

சூரியா அவளை விடா பிடியாக தள்ளி கொண்டு படுக்கை பக்கம் வந்தான். 

ஹே கையை எடுக? 

ஹே மரியாதை கொடு டி! நம்ம ஒன்னும் காதல் கல்யாணம் பண்ணல இந்த இன்பா – விவேகா கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் இங்கே நடக்காது. மரியாதை வேணும். புரியுதா! 

மகி உதடு துடிக்க அதுவும் சரி தான் இந்த காதல் எல்லாம் இங்கே இல்ல நீங்க எனக்கு வீட்டில் பார்த்து கட்டிய மாப்பிள்ளை அவ்ளோ தான்.. நான் தெரியாமல் சொல்லிட்டேன். எதோ கோபத்தில் சொல்லிட்டேன். 

சூர்யா அவள் முகத்தை பார்த்தான். இன்னும் அந்த பண்டிகையில் பார்த்த புது தேர் போல் மின்னி கொண்டு இருக்கிறாள். 

அவள் அருகில் அமர்ந்தான். அவள் தள்ளி அமர்ந்தாள். மகி! என அழைத்தான். திரும்ப வில்லை ம்ம் கொட்டினாள். 

அவள் தலை குனிந்து இருந்தது.

” மான் விழி” என அழைத்தான். கொட்ட கொட்ட கண்களை சிமிட்டி கொண்டு அவனை பார்த்தாள். 

இந்த நொடி!  

யார் எது சொன்னாலும் அவளை யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டான். விட்டு விடவும் மாட்டான். இந்த மான் விழி சூர்யாவுக்கு மட்டுமே!.;

சூரியா மீண்டும் மான் விழி என அழைத்து கொண்டே நெருங்கினான். அவள் இதயம் வேகமாக படபடக்க தள்ளி சென்றாள். 

சூரியா கம்மிய குரலில் இதுக்கும் மேல் தள்ளி போன அடுத்து என் மடியில இருப்ப எப்படி வசதி என சொல்லி கொண்டே அவள் முக வாயை நிமர்த்தினான். 

“என்னங்க வே வேணாம்” 

“என்னங்க” such a magical words சொல்லிட்டா டா சூர்யா! 

சூரியா அவளை அருகில் இழுத்து வேக மூச்சுடன் முத்தமிட ஆரம்பித்தான்.

இங்கே கார்த்திக்கு ஹாஸ்பிடலில் இருந்து போன் மற்றும் ஒரு ரிப்போர்ட் மெயில் வந்தது. 

தொடரும்..  

 Episode 227, 

சூரியா கம்மிய குரலில் இதுக்கும் மேல் தள்ளி போன அடுத்து என் மடியில இருப்ப எப்படி வசதி என சொல்லி கொண்டே அவள் முக வாயை நிமர்த்தினான். 

“என்னங்க வே வேணாம்” 

“என்னங்க” such a magical words சொல்லிட்டா டா சூர்யா! 

சூரியா அவளை அருகில் இழுத்து வேக மூச்சுடன் முத்தமிட ஆரம்பித்தான். அவள் கண்களை மூடி கொண்டாள். அவளுக்கு அவன் அருகாமை வேண்டும். சூரியா வேண்டும்! அதை அவள் சொன்னாலும் ஒத்து கொள்ள மாட்டான். சண்டைக்கு தான் வருவான். மீண்டும் பழைய புராணம் பாட ஆரம்பித்து விடுவான். 

மகியும் முத்தமிட ஆரம்பித்தாள். இருவரும் ஒரு நிமிடம் பிரிந்து கொண்டனர். அவன் மயங்கிய கண்களுடன் அவளை பார்த்தான். மகி மூச்சு வாங்கி கொண்டே கண்களை மூடி கொண்டு இருந்தாள். 

சூர்யா அவளின் முகத்தை இழுத்து மென்மையுடன் முத்தமிட்டான். இதழும் அவன் இதழும் ஏக்கத்துடன் ஏறிட்டு பார்த்து கொண்டது. அங்கே ஒரு ஒற்றுதல் அதன் பின் அவனை வேகமாக கட்டி கொண்டாள். நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது. 

“எப்போ பார்த்தாலும் என் கிட்ட சண்டை தான் போடுவீர்களா?” 

சூர்யா, அதை நான் தான் கேட்கணும்? 

நீங்க தான்!. 

நீ தான் டி!..என பிடியில் கொஞ்சம் வலு கொடுத்து கழுத்தில் முகம் புதைத்தான். 

மகி கூச்சத்தில் நெளிந்தாள். சூரியா, நம்ம வீட்டில் மர கட்டை மாதிரி இருந்த? உங்க வீட்டுக்கு வந்ததும் உணர்வு வந்திடுச்சு போல!. 

மகி கண்களை மூடி கொண்டே ம்ம் “அங்கே அரக்கன் ராட்சசன் என்னை கொடுமை பண்ணிட்டு இருந்தான். இங்கே கொடுமை பண்ண யாரும் இல்ல அதான் உயிர் வந்திடுச்சு”

ஓ அப்போ நான் தான் அரக்கன், ராட்சசன் என சட்டென விலகினான்.

மகி அவனை பார்த்தாள். சூரியா மீண்டும் அவளை அணைத்து முத்தமிட்டு “ஆமா நான் அரக்கன் தான் ராட்சசன் தான் இப்போ என்ன பண்ண போற இப்படி தான் டி இருப்பேன் என அவன் கைகள் எல்லை மீறியது.” 

சூர்யா, எதுக்கு விட்டு போன? என்னை ஏன் விட்டு போன? அதுக்கு பதில் சொல்லும் வரை நான் அரக்கனா தான் இருப்பேன் போதுமா! 

“அப்போ டைவர்ஸ் கொடுங்க!”

“என் பொண்ணு எனக்கு வேணும். அதே போல் அவளுக்கு அம்மா வேணும்! அவள் வளரும் வரை நீ அவளுக்கு வேணும். சோ கொடுக்க முடியாது.”

“மகி, உங்களுக்கு நான் வேண்டாமா?”

“சூரியாவுக்கு மான் விழி வேண்டாம்! ஆனால் என் குழந்தையோட  அம்மா மகிழினி வேணும்!” 

மகி கண்களில் இதை கேட்டு கண்ணீர் வந்தது. சூரியா, அழாத சீன் போடாத? 

“என்னை கஷ்ட படுத்த சக்கரை போல் இனிக்குதோ! “

சூர்யா, நீ நாலு வருசம் என்னை கஷ்ட படுத்தின அது தெரியலையா அந்த *** spr ஹெல்ப்ல தான கனடா ஓடி போன அவன் மேல அவ்ளோ நம்பிக்கை ஆனால் என் மேல் உனக்கு…? நீ பொய் காரிடி,  நடிப்பு கள்ளி  என spr மேல் இருந்த கோபத்தை அவள் மேல் கொட்டினான். 

மேலும் சூர்யா அவளிடம்” என்ன சொன்ன? என் கிட்ட என்னன்ன சொன்ன? லவ் கண்றாவி வேற உனக்கு என் மேல் அது இல்லவே இல்லை டி”

மகி சற்றும் யோசிக்காமல் அவன் கையை பிடித்து நான் உங் உங்களை முழு மனதோடு தான் கட்டி கிட்டேன். இது உண்மை! எத்தனை தடவை சொல்றது! சுரபி என் கிட்ட உங்களை கேட்டாள். எனக்கு தெரியும் என் தேவ் பற்றி என அவள் கழுத்து டாட்டுவை தொட்டு பார்த்து கொண்டாள். 

“நாலு வருஷம் போனது தப்பு தான் ஆனால் spr சாரு கூட அவரிட கண்காணிப்பில் நான் இல்ல நான் மாயா மா கூட இருந்தேன். எத்தனை தடவை உங்களுக்கு நான் விளக்கம் கொடுப்பது? இதை பற்றி பேசி பேசி எனக்கு சலித்து போச்சு என்னை மன்னித்து விடுங்கள் என தேம்பி அழுதாள்.” 

சூர்யா, “இப்படி மயக்கும் பேச்சு பேசி தானே என்னை விட்டின்  என் பையனை விட்டு போன அவனை பற்றி யோசித்து பார்த்தாயா! அவள் எல்லாம் ஒரு ஆளு அவள் சொன்னாள் என உனக்கு ரோஷம் வந்திடுச்சு!” 

மகி இதற்கு மேல் அவனுக்கு எப்படி விளக்கம் கொடுப்பது என தெரியாமல் அழ ஆரம்பித்தாள்.

இங்கே கார்த்திக் வரவேற்பு வேலையாக மண்டபம், வீடு என பிஸியாக இருக்க அவனது போனுக்கு டிங் என்ற மெயில் செய்தி அதன் பின் கூடவே போன் காலும் வந்தது. 

கார்த்திக், ஹலோ டாக்டர்! 

டாக்டர், நீங்க கொடுத்த சாம்பிள் பாசிடிவ்  சார் மை விழி என்ற பர்சன் சாம்பிள் கூடவே இன்னொரு சாம்பிள் ஒத்து போகுது அவங்க ரெண்டு பேரும்  தங்கைகள் அண்ட் மிஸ்டர் கார்த்திக் அந்த ரிப்போர்ட்ட  உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன். 

அந்த பக்கம் இருந்து எந்த பதிலும் வர வில்லை. ஹலோ மிஸ்டர் கார்த்திக் ஆர் யூ ஹியர்? 

கார்த்திக், ம்ம் ஓகே டாக்டர் வந்திடுச்சு நான் பார்த்து கொள்கிறேன்.  என கூறி போனை வைத்தான். இப்பொழுது அவனுக்கு என்ன செய்வது என ஒன்றும் புரிய வில்லை. மை விழி கூட அந்த தேஜு சாம்பிள் மேட்ச் ஆகி போச்சு, ரெட்டை குழந்தையாக பிறந்த மை விழி, மான் விழி யார் கூட செக் செய்தாலும் ஒரே பதில் தான் வரும் அப்படியென்றால்! அப்படியென்றால்! 

இதன் அர்த்தம் தேஜு, மை விழி, மான் விழி மூவரும் அக்கா தங்கைகள்! என கார்த்திக் கணித்தான். உடனே இந்த விஷயத்தை சூரியாவுக்கு சொல்ல வேண்டும் என உடனே போன் செய்தான். 

இங்கே மகி அமர்ந்து அழுது கொண்டு இருக்க சூர்யா அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். 

இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற? சீக்கிரம் போ என் பாப்பாவுக்கு பசிக்கும். சாப்பிட்டயா? 

மகி கண்களை துடைத்து கொண்டு வேகமாக எழுந்தாள். சூர்யாவின் போன் அழைத்தது. மகி வெளியே செல்ல ஹே நில்லு டி! அந்த போனை எடுத்து காதில் வை!.

மகி முறைத்து கொண்டே அவன் சொன்னதை செய்தாள். “மை விழி சர்வன்ட்” என்று திரையில் மின்னியது. மகி யோசனையுடன் யார் அது என நினைத்து கொண்டே நிற்க.. 

சூரியா, சொல்லு டா கார்த்திக்! 

மகி இதை கேட்டு சிரித்தாள். 

கார்த்திக், சூரியா அந்த தேஜு பாசிட்டிவ் டா! சாரி சாம்பிள் மேட்ச் ஆகுது. நம்ம மாமனார் எங்கேயோ ஒரு புரோடெக்ட் ரிலீஸ் பண்ணி இருக்காரு டா!. 

“சரி நேரில் வா என் ரூமுக்கு வரதுக்கு முன்னாடி போன் பண்ணிட்டு வா.” என சூர்யா சொல்லி விட்டு  போனை கட் செய்து அருகில் தூக்கி போட்டான். 

மகி , சாப்பிட வாங்க என சொல்லி விட்டு திரும்ப சூர்யா அவளை தூக்கி கொண்டான். மகி! மகி! லவ் யூ டி! என அழுத்தமாக முத்தம் பதித்தான். 

அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் அவனை பார்த்து என்ன ஆச்சு என்னை இறக்கி விடுங்க! இறக்கி விடுங்க! 

சூர்யா மெதுவாக இறக்கி விட்டு கண்கள், கடை இதழ் சிரிக்க மூக்கு சிவக்க மூச்சு சுதந்திர காற்றை சுவாசிக்க உஃப் என ஊதியவன். வேகமாக கதவை தாழிட்டு அவள் அருகில் வந்தான். 

மகி அதற்குள் எழுந்து நின்றாள். நகருங்க! இப்போ எதுக்கு கதவை லாக் பண்ணீங்க? நான் கீழே போகனும்!.. 

சூரியா, மகி நான் லவ் யூ சொல்லி இருக்கேன்! ஐ லவ் யூ டி! 

மகி, “எனக்கு பயமா இருக்கு இதுக்கு பின்னாடி எதுவும் ஆப்பு வச்சு இருப்பீங்க மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து திட்ட செய்வீர்கள். உங்க லவ் யூ வேணாம்!” 

சூர்யா அவள் அருகில் வந்து மகி இல்ல டி தங்கம் நிஜமாவே ஐ லவ் யூ! நான் உன்னை காதலிக்கிறேன். இனி நீ கனடா போன விஷயத்தை பற்றி கேட்கவே மாட்டேன் இது அந்த மிதுன் தேவ் மேல.. 

மகி நிறுத்துங்க! எதுக்கு என் மிதுன் குட்டி மேல சத்யம் பண்றீங்க!. .

சூர்யா, சரி சத்யம் வேண்டாம். பொண்ணுங்க தான் பேச்சு மாறுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் உண்மையாகவே நான் மாற மாட்டேன் சண்டைக்கோழி பிளீஸ் நம்பு டி லவ் யூ!. 

மகி, நிஜமா வா!

நிஜம் தான் டி என விரலுக்கு முத்தம் வைத்தான். 

மகி, இனி பழசு பற்றி பேச மாட்டீங்க தானே!  

ம்ம் ஆமா தங்க குட்டி! 

மகி, நானும் சாரி உங்க கிட்ட எல்லாமே சேர் பண்ணி இருக்கனும். நான் அதிக பிரசங்கி தனமா கனடா போனது தப்பு தான்.. மன்னித்து விடுங்கள். 

சூரியா அவளை அணைத்து கொண்டு “சரி டி மகி குட்டி லவ் யூ என முத்த மிட்டான். அண்ட் சாரி என்னை மன்னித்து விடு உன் மேல எனக்கு என்னை விட நம்பிக்கை இருக்கு என்னோட டிரஸ்ட் நீ தான் டி உன்னை நான் நம்புறேன். உன்னை அந்த spr பார்ப்பது, அவனோட எண்ணம் இது தான் பிடிக்கல ஆனால் ஒரு நாளும் உன்னை நான் சந்தேக பட்டது. இல்ல டி என அவளின் கழுத்தில் அதிர்வுடன் பேசினான்.” 

மகி உண்மையாகவே சந்தோச மன நிலையில் அணைத்து கொண்டாள்.

சூர்யா, லவ் யூ எல்லாம் சொல்லி இருக்கேன் எனக்கு எதுவும் இல்லையா? 

மகி, என் கிட்ட என்ன இருக்கு? 

சூரியா, நீ நீயே எனக்கு ஒரு கிஃப்ட் சண்டைக்கோழி.. என சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 

மகி, எனக்கு ஒரு டவுட்டு! 

அதை அப்புறம் கேளு டி இப்போ மாமா வேற மோட்ல இருக்கேன்.  

மாமா வா! வியாக்!. 

சரி அது வேணாம் என்னங்க சொல்லு  என் உச்ச தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஜிவ்வுன்னு ஏறுது டி என அவள் வாசத்தை நாசியுள் நிறைத்து கொண்டான். 

சொல்லு டி!  . என் என்னங்க!. 

மகி எதுக்கு டி குளிச்ச!. 

என்னாச்சு? .

சூரியா, உன்னோட வாசம் எல்லாம் அந்த பியர்ஸ் சோப் வாசம் தான் வருது!. 

மகி இதை கேட்டு அவன் மார்பில் புதைந்து கொண்டாள். 

சூரியா, மான் விழி!  

ஹே மான் விழி!. அழகி! 

ம்ம் என அவள் அவன் நெஞ்சில் இன்னும் புதைய முகத்தை நிமர்த்தி முத்தமிட ஆரம்பித்தான். 

மகி, 1460 நாலு உன்னை பிரிஞ்சி எவ்ளோ கஷ்ட பட்டேன் தெரியுமா! என சொல்லி கொண்டே கழுத்துக்கு கீழ் இறங்கினான். 

அப் அபடியா! 

ம்ம் என ஒரு பெரிய மூச்சை விட்டவன். நீ!. 

நான் உங்களை மிஸ் பண்ணவே மாட்டேன். சக்தியை தான் மிஸ் பண்ணுவேன். .

ஏன்? என அவளை மெதுவாக படுக்கையில் கிடத்தினான். 

அதன் பின் உடைக்குள் எல்லை மீற வேணாம்ங்க! 

வேணும் இப்போ வேணும் முடியல டி! லவ் யூ மகி இப்போ நிறைய நீட் யூ ஒரே ஒரு முறை மட்டும்.. என அவளை மென்மையுடன் அவளை முத்தமிட்டு உடைகளை களைய ஆரம்பித்தான். 

சரியாக கதவு தட்டும் சத்தம் கேட்டது. முதலில் அதை கண்டு கொண்டது மகி தான்! .

என்னங்க கதவு!. 

சாத்தி இருக்கு பேபி! என முத்தமிட தொடர்ந்தான். 

மீண்டும் கதவு இரண்டு மூன்று முறை தட்ட பட்டது. 

மகி, என்னங்க மறுபடியும் கதவு!. 

சூரியா அவள் இதழில் அழுத்தி முத்தம் பதித்து எல்லாம் அந்த கார்த்திக் நாய் தான்! என சொல்லி கொண்டே எழுந்தவன்.மகி இதை முடித்து விட்டு தான் போறோம் சொல்லிட்டேன் டி என அவள் மேல் போர்வையை போட்டான். 

அவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டே மூடி கொண்டாள். சூர்யாசட்டை பட்டன போட்டு கொண்டே கதவை திறந்து கொண்டே டேய் போன் பண்ணிட்டு வாடா அப்டின்னு என பேச்சை நிறுத்தினான். 

அது கார்த்திக் இல்லை! வேறு யார் மிதுன் தான்! கூடவே நிதின்!  

அவன் பார்வை குனிந்து கீழே பார்த்தான். மிதுன், என் அம்மா எங்கே? 

சூர்யா, மகி இங்கே வரல வேற எங்கேயும் போய் தேடி பாரு டா!  என கதவை சாத்த 

பொய் சொல்லாதீங்க ரிதம் சொன்னாள். உங்களை பார்க்க மகி வந்து இருக்காள். நான் எல்லா விஷயமும் கலெக்ட் பண்ணிட்டேன். 

சூர்யா, ஹான் எனக்கு சாப்பாடு போட கிச்சன் போயிருக்கா போய் பாரு! 

இதை முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது தானே எங்க டைம் வேஸ்ட் என நிதின் கூறி கொண்டே கீழே இறங்க.. .

யூ ஆர் ரைட் ப்ரோ என மிதுன் கூறி கொண்டு சென்றான். 

சூர்யா அவனை பிடித்து என்ன சொன்ன? பொடியா என சொல்லி அவனை வலு கட்டாயமாக தூக்கி மிதுன் கன்னத்தை பல் தடம் பதியும் அளவுக்கு கடித்து வைத்தான். 

மகி! அய்யோ! என அவன் கண்ணில் கண்ணீர் வர என்னை கேர்ள்ஸ் ஒன்லி கிஸ் பைட் பண்ணனும் நீ எதுக்கு டா கடித்த? 

சூரியா, என்ன டா வா! உன்னை அடிப்பேன் டா!. 

மிதுன் அழுது கொண்டே இரு டா உன்னை மகி கிட்ட சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பாரு டா என அழுது கொண்டே மிதுன் இறங்கினான். 

டேய் நான் உன் அப்பன் டா வா டா போடா சொல்ற? 

போடா உன்னை மகி! அம்மா! எங்கே இருக்க ஹே ஹ என கன்னத்தை தேய்த்து கொண்டு சென்றான். 

சூர்யா அவனை புன்னகையுடன் பார்த்து விட்டு கதவை சாத்திட்டு திரும்ப மகி புடவையை கட்டி கொண்டு சரி செய்தாள். 

ஹே என்ன டி பண்ற? இன்னும் ஆரம்பிக்கவே இல்ல டி!. 

மகி, என்ன பண்ணீங்க? மிதுன் அழுது கொண்டே போறான். இப்போ நான் போகனும் ரிதம் இருக்காள் சாப்பாடு ஊட்ட வேணும் கல்யாணம் வேலை ஆயிரம் இருக்கு இது எல்லாம் அப்புறம் வைத்து கொள்ளலாம். 

சூர்யா, மகி லவ் யூ சொல்லி இருக்கேன் டி! எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா! எத்தனை பேர் இதுக்கு காத்து கொண்டு இருக்காங்க தெரியுமா! என அவள் அருகில் நெருங்கினான்.

மகி, இந்த லவ் எல்லாம் அப்புறம் பார்த்து  செய்து கொள்ளலாம் இப்போதைக்கு வேலை இருக்கு விடிங்க!. 

சூரியா சிணுங்கி கொண்டே மகி போகாத உன் மேல் கோபமா இருக்கேன். 

மகி , இப்போ தானே சொன்னீங்க என் மேல் கோபம் இல்லன்னு!. 

இது அந்த கோபம் இல்ல வேற கோபம் இரு டி போகாத!. என கையை பிடித்து இழுத்தான்.  

அவள் சிரித்து கொண்டே குழந்தை மாதிரி நடந்து கொள்ளதீங்க!. 

மகி என இடையை வருடியவாறு கட்டி கொண்டான். 

ஹே சூரியா விடு!. 

மாட்டேன்!. 

தேவ் தானே! என் வளர்ந்த தேவ்!.

மகி இரு டி! பிளீஸ் ஒரு முறை!. என அவன் கழுத்தில் முத்தம் பதித்தான். 

மகி அவனை பார்த்தவாறு திரும்பி உதட்டில் முத்தம் பதித்து பிளீஸ் புரிந்து கொள்ளுங்கள் இது தப்பு கீழ பசங்க இருக்காங்க. கல்யாண வீடு வாங்க சாப்பிட போலாம். என இழுத்து கொண்டு அவள் கீழே சென்றாள். 

மிதுன் தேம்பி தேம்பி அழுத முகத்துடன் மகி! மம்மி! வலிக்குது மம்மி! என அழுது கொண்டே தன் அம்மாவை தேடினான். 

சூரியா அவனை பார்த்ததும் சிரிப்பை அடக்கி கொண்டே முகத்தை வேறு புறம் திருப்பி கொள்ள மகி நேராக ரிதம் அருகில் சென்றாள். .

ரிதம் சாப்பிட்டாச்சா!. 

டன் மாமி! பவா மம்மி எனக்கு ஊட்டி விட்டாங்க! 

குட் பேபி! என சொல்லி கொண்டே மிதுன் பக்கம் திரும்பினாள். 

சூரியா, மகி பசிக்குது வா சாப்பிடலாம் என கையை பிடித்து அழைத்து செல்ல இருங்க மிதுன் அழுகிறான். .

மிதுன் கோபமாக சூரியாவை தள்ளி விட்டு மா நம்ம போலாம் வா இவரை வேணாம்!  இவன் என்னை இங்கே பாரு என் சீக்ஸ் எப்டி இருக்கு போலீஸ் கிட்ட போலாம்! என அழுதான். 

சூரியா சிரிப்பை அடக்கி கொண்டு டேய் நீ அழுகிறாயா! சத்ய தேவ் இங்கே பாரேன். இவன் கேர்ல் போல அழுகிறான். என அழைத்தான. 

டாடி என சக்தி சூர்யாவின் அருகில் வந்து என்ன ஆச்சு? 

மிதுன் கண்ணை துடைத்து கொண்டு விசும்பி கொண்டே மகி நான் அழல தானே எல்லார் கிட்டயும் சொல்லு!. 

மகி, என்னங்க அவனை எதுவும் சொல்லாதீங்க! எனக்கு மிதுன் தான் செல்லம்.. 

மிதுன் விசும்பி கொண்டே மகி தூக்கு ஐம் ஹங்கிரி!. 

மகி, மிதுன் இப்போ அம்மா உன்னை தூக்க முடியாது கண்ணா கைய பிடித்து கொள் நம்ம எல்லாரும் சாப்பிடலாம். நிதின் வாங்க!. 

இல்ல மா நீ தூக்கு!. 

நிதின், மிதுன் பொம்மாயி கிட்ட பேபி இருக்கு குட்டியா!  நீ வா நம்ம போலாம். 

ஓகே ப்ரோ என மிதுன், நிதின் இருவரும் முன்னே நடக்க சத்ய தேவ், சூர்யா இருவரும் பின்னால் நடந்தனர். 

மகி அனைவருக்கும் பரிமாற மிதுன்,  ஊட்டி விடு! நீ தான் ஊட்ட வேணும்!. 

மகி அனைவரையும் பார்த்தாள். இது வில்லங்கம் ஒருத்தருக்கு ஊட்டி விட்டால் இங்கு புயலே கிளம்ப வாய்ப்பு இருக்கிறது. அதனால் இல்ல மிதுன் செல்லம் எனக்கும் பசி நானும் சேர்ந்து சாப்பிடுகிறேன் என தனியாக அமர்ந்து கொண்டாள். 

நிதின் அவள் அருகில் அமர்ந்து கொள்ள மிதுன் இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டான். 

சூரியா, ஹான் சிட்டிங்கா! ஓகே போடா ராஸ்கல்! எப்போவும் சத்ய தேவ் க் கு தான் அவள் முதலில் அம்மா அதுக்கு அப்புறம் தான் நீ என சொல்லி நீ சாப்பிடு சத்ய தேவ்! உனக்காக தேவ் கார்ப்பரேசன் வெயிட் பண்ணுது தங்கம் என்னோட எல்லாமே உனக்கு தான்!. 

மிதுன் ஏக்க கண்களால் அவர்களை பார்த்தான். மிதுன் குட்டி! சாப்பிடு அம்மா ஊட்டுகிரேன் என ஊட்டி விட்டாள். 

அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க கார்த்திக் வந்தான். சூரியா அவனை பார்த்ததும் கண்களால் சைகை செய்ய மேலே உள்ள அறைக்கு கார்த்திக் தலை ஆட்டி விட்டு சென்றான். 

சூரியா பொறுமையுடன் சாப்பிட்டு விட்டு கைகளை கழுவி கொண்டே மகி! மகி!

 இதோ வரேன்!. என அவள் உள்ளே செல்ல அவள் இதழில் ஒற்றி எடுத்தவன். ஹே நைட்டு நம்ம வீட்டுக்கு போலாம். வர! என சொல்லி இடையை வருட அந்த நேரம் சரியாக மிதுன், நிதின் இருவரும் வாஸ் பேசன் பக்கம் வந்தனர். 

மகி! என மிதுன் அழைத்தான். 

தங்களை மெய் மறந்து இருந்த இருவரும் வேகமாக விலகினார்கள். 

வந்த்ட்டான் ராஸ்கல் என்னை தொந்தரவு பண்ண எங்கே இருந்தாலும் வந்து விடுகிறான். என சொல்லி கொண்டே அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி கொண்டு வெளியே சென்று விட்டான். 

மகி, ஹான் சொல்லு மிதுன்! 

நீ என்ன பண்ற? .

நானா நான் டாடிய மிரட்டி விட்டேன். விடு செல்லம் டாடிக்கு பனிஸ் பண்ணிட்டேன். 

நிதின் எரிச்சலுடன் பார்த்தான். ச்ச இரிட்டேடிங் பொம்மாயி நீ என் மம்மி உனக்கு தெரியுமா! இட்ஸ் டூ பேட் என நினைத்து கொண்டு இருக்கும் போது சத்ய தேவ் கை கழுவ வந்தான். 

மகி அவன் உதடுகளை துடைத்து விட்டு கொண்டு இருந்தாள். மா! 

இரு டா சக்தி! என கையையும் முந்தியில் துடைத்து விட்டாள். 

நிதின், விட மாட்டேன்! உன்னை விடவே மாட்டேன்! மகி என் பொம்மாயி டா உன்னை!  என முறைத்து பார்த்தான். 

அனைவரும் ரிசப்ஷனுக்கு தயாராகி மண்டம் செல்ல ஆரம்பித்தனர். 

ஹலோ ஹீரோ என சத்தம் கேட்டது. மிதுன் புன்னகையுடன் திரும்பி மாமு என சத்ததிடன் வெளியே வந்தான். 

வருண் வெங்கட் நின்று கொண்டு இருக்க அண்ணா! என மகியும் உள்ளே அழைத்தாள். 

உதயன், தினேஷ் கூட கீழே இறங்கி வந்தான். 

உதயன் – வருண் இருவரும் பார்த்து கொண்டனர். .

சூரியா – கார்த்திக் உரையாடல் ஆரம்பம்.. அடுத்த நகர்வு? 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. .

என் அன்பான வாசகர்களுக்கு

இன்பா மாதிரி சூர்யா லவ்  பண்ணணும், லவ் சீண்ஸ் இருக்கனும் அப்டின்னு நினைச்சு யாரும் இந்த கதையை படிக்க வேணாம். சூரியா வேற இன்பா வேற இது சூர்ய தேவ் மான் விழி இவங்க ரெண்டு பேர் காதல் கதை இதை இன்பா மாதிரி எழுதினால் அதில் சூர்யா வர மாட்டான். அப்புறம் இன்பா தான் தெரியும்! 

என்னோட எழுத்தை நேசித்து எழுதுகிறேன் எல்லாருடைய எழுத்தும் எல்லா கதையும் அழகு தான்  என்னோட போக்கில் கதை எழுத தான் பிடிக்குது. அதை சீக்கிரமா முடிங்க, போர் அடிக்குது அப்டின்னு comment வந்தால் சங்கடமா இருக்கு விருப்பம் இருந்தால் படிங்க இந்த நிலைக்கு வர நான் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கேன். சோ பிளீஸ் புரிந்து கொள்ளுங்கள் என்னோட போக்கில் தான் கதை எழுதுவேன். அப்போ தான் அது இயற்கையா இருக்கும் என்னோட எண்ணம் வெளிப்படும். யாரோட மனசையும் சங்கட படற மாதிரி என்னோட எழுத்துக்கள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி .

Episode 228,

ஹலோ ஹீரோ என சத்தம் கேட்டது. மிதுன் புன்னகையுடன் திரும்பி மாமு என சத்ததிடன் வெளியே வந்தான். 

வருண் வெங்கட் நின்று கொண்டு இருக்க அண்ணா! என மகியும் உள்ளே அழைத்தாள். 

உதயன், தினேஷ் கூட கீழே இறங்கி வந்தான். 

உதயன் – வருண் இருவரும் பார்த்து கொண்டனர். .

மகி, அண்ணா என புன்னகையுடன் வருண் பக்கம் சென்றாள். 

மிதுன், மாமு உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா! நம்ம இப்போவே கனடா போலாம் எனக்கு இங்கே இருக்க பிடிக்கல!  

வருண் அவனை தூக்கி கொண்டு மகி கையில் பழ கூடையை கொடுத்தான். 

என்ன அண்ணா இது? 

என் செல்லம் உன்னை பார்க்க வரும் போது நான் சும்மா வர முடியுமா சூர்யா மச்சான் எங்கே? .

உதயன், யாருக்கு யார் மச்சான். நீங்க எங்க கெஸ்ட் நேரா மண்டபத்துக்கு வர வேண்டியது தானே!  .

மகி உதயனை திடுக்கிட்டு பார்த்தாள். என்ன உதயா! 

உதயன், மகி நான் உனக்கு கூட பிறந்த அண்ணா  அதான் உன் நட்பு வட்டத்தை மதிக்கிறேன். 

வருண், நட்பு வட்டமாவது! நந்தியா வட்டமாவது! இன்னும் கூடிய சீக்கிரத்தில் அவள் எனக்கு உண்மையாகவே தங்கை ஆக போறா.. 

அனைவரும் வருணை பார்த்தனர். உடனே தன்னை சுதாரித்து கொண்ட வருண், என்ன மகி இன்னும் கூடிய சீக்கிரத்தில் மாமா அதான் நம்ம ஜெய் மாமா கீர்த்தனா வை கட்டிக்க போறாங்க அப்புறம் அந்த வகையில் பார்த்தால் நம்ம நிஜமாவே அண்ணன் தங்கச்சி தானே இன்னும் நம்ம பான்ட் ஸ்ட்றாங்கா இருக்கும்.. 

உதயன் அவனை உஷ்ன மூச்சுடன் முறைத்தான். 

அப்படி பார்த்தால் நான் நடுங்கி விடுவேனா! மகி மிஸ்டர் உதயன் கிட்ட சொல்லி வை நான் எல்லாம் முடியும் வரை இங்கே தான் இருப்பேன். 

மகி என்ன செய்வது என இருவரையும் மாறி மாறி பார்த்தாள். மை விழி, உதயா! என்ன பிரச்னை பண்ணிட்டு இருக்க மாப்பிள்ளை மாதிரி நடந்துக்க டா!  

வருண், மகி பசிக்குது, ஹீரோ ஆர் யூ பினிஷ்!. 

மிதுன், ம்ம் நீங்க வாங்க மா வா மாமுக்கு பசி சும்மா நிக்கிற கனடாவா இருந்தால் ஓடி ஓடி சமைப்ப இங்கே ஆட்டம் அதிகம் ஆகி போச்சு! 

வருண் அவன் கன்னத்தில் முத்தமிட்டு வா டா ஹீரோ!. 

ஹீரோ என் சீக் பெயின் ஆ இருக்கு எல்லாம் அவன் தான்!. 

உதயன் அவனை பார்த்து சும்மா ஒரு பேச்சுக்கு கல்யாணத்துக்கு கூப்பிட்டால் வெட்கமே இல்லாமல் வந்து விடுவதா!. 

வருண் ஆமா வந்து விடுவேன். என் மகி அவ்ளோ முக்கியம். என கையை பிடித்து அழைத்து சென்றான். 

அங்கு என்ன நடக்கிறது என தெரியாமல் ஶ்ரீமதி மாமா! மாமா! என சொல்லி கொண்டே இரு கைகளில் புடவையை எடுதுக்கு கொண்டு  வந்தாள். 

அவள் உதயனிடம் மாமா ரிசப்சன் க்கு எதை கட்டிக்க எனக்கு குழப்பமா இருக்கு  நீயே சொல்லேன். 

உதயன் கோபத்துடன் நின்று கொண்டு இருக்க மகி வருண் தட்டில் உணவு பரிமாறி கொண்டு இருந்தாள். மாயா மா எப்போ வருவாங்க? 

நாளைக்கு வருவாக மகி!  என வருண் இரு வாய் பிட்டு இட்லி சாப்பிட்டு கொண்டு இருக்க அங்கே உதயனின் கர்ஜனை கேட்டது. 

எதுக்கு டி இங்கே வந்த? ஆடிட்டு இருக்கா! என அவன் கத்தி கொண்டு இருக்க 

மை விழி, உதயா! என கத்தினாள். 

மகி உட்பட அங்கு இருக்கும் அனைவரும் திரும்பி பார்க்க.. 

விடு மை விழி நா நான் போறேன் என ஒரு அழு குரல் 

வருண் கைகள் வாய்க்கு உணவை எடுத்து சென்ற கை அப்படியே நின்றது. உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. 

மிதுன், மா உன் அண்ணா பாரு அழகான பொண்ணை எப்படி ஹார்ட் பண்றான் பாரு நானா இருந்தால்.. 

மகி, மிதுன்!.  என கத்தினாள். 

வருண் சாப்பிட முடியாமல் திணறி போனான் அவனுக்கு வரும் ஆத்திறத்துக்கு உதயனை அடித்து பல்லை உடைக்கும் அளவுக்கு கோபம் வந்தது. 

மகி, அண்ணா நீ சாப்பிடு அவங்க ரெண்டு பேரும் அப்படி தான்!  கல்யாணம் ஆனால் சரி ஆகி போயிடும். 

வருண், மனம் எப்படி சரி ஆகும் என் ஶ்ரீ மதியை அவன் டார்ச்சர் பண்ணுவான். விட மாட்டேன் விடவே மாட்டேன் என உள்ளுக்குள் மருகி கொண்டே திரும்பி பார்த்தான். முத்தமிட்டு சிவக்க வைக்கும் கன்னத்தை அழுது கஸ்ட பட வைத்து சிவக்க வைத்து விட்டான். இரு டா உன்னை என கோபத்தில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தான். 

மிதுன், மாமு போதும் போதும் இங்கே டிஃபன் அவ்ளோ நல்லா இல்ல நம்ம பெஸ்ட் குசைன் ட்ரை பண்ணலாமா!. 

மகி, டேய் வாய மூடு அப்பா கிட்ட சொல்லி இன்னொரு கன்னத்தையும் கடிக்க சொல்லட்டா!. 

மிதுன், போ மா கம்முன்னு போ!. 

மகி க் கு அந்த நேரம் போன் வந்தது. அக்கா!  

ஹே அறிவு!. 

அக்கா நான் டெல்லி வந்தாச்சு? இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வந்து விடுவேன். 

ம்ம் வா டி!. என போன் வைத்து விட்டு விவேகா வரும் விஷயத்தை சூர்யா கிட்ட சொல்ல போன் செய்தாள். 

இங்கே சூர்யா மற்றும் கார்த்திக் என்ன ஆனார்கள்? 

கார்த்திக் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருக்க சூர்யா அந்த ரிப்போர்ட் மெயில் லேப் டாப்ல ஓபன் செய்து நிம்மதியுடன் ஒவ்வொரு வரியாக படித்து கொண்டு இருந்தான். 

கார்த்திக், என்ன டா! எனக்கு எவ்ளோ டென்ஷனா இருக்கு நீ ஜாலியா படித்து கொண்டு இருக்க? 

என்ன பண்ண சொல்ற? 

கார்த்திக், என்ன பண்றது அதான் எனக்கு ஒன்னும் புரியல.. 

சூரியா, லுக் கார்த்திக் இதை இப்படியே இங்கேயே மறந்து விடுவோம். 

என்ன சொல்ற? 

ம்ம் ஆமா கார்த்திக் இதை பற்றி நம்ம விஷயத்தை கிளற கிளற தான் நமக்கு பிரச்னை தான் அதிகம் ஆகிட்டே போகும். .

எப்படி சொல்ற என கார்த்திக் கேட்க.. 

சூரியா, இப்போ இதை போய் நம்ம கேட்டு எல்லார்க்கும் தெரிந்தால் என்ன நடக்கும்? 

என்ன நடக்கும் சொல்லி தொலை டா சூர்யா!. 

சூரியா,  டேய் ** மூடிட்டு கேளு என் ஃப்லோ ல தான் சொல்ல முடியும். இமாஜின் பண்ணு அந்த தே ஜூ தான் மகிகும்,  மை விழிகும் கூட பொறந்த பொண்ணு அப்டின்னு தெரிந்தால் நினைச்சு பாரு அந்த*** spr, அந்த குரு ரெண்டு பேரும் இங்கே வந்து நம்ம முன்னாடியே உட்காருவானுக, அந்த spr மகி யை பார்ப்பான் டா.  

கார்த்திக்,  சரி சரி டா சரி டா சூர்யா அந்த குரு நாய் என் மை விழிய பார்ப்பான். 

சூர்யா, இப்போ போய் நம்ம என்ன பண்ணனும்? 

ஒன்னும் இல்ல சூர்யா நம்ம இங்கே வந்த வேலையை பார்ப்போம் டா, யாருக்கு யார் பிறந்தால் நமக்கு என்ன? என கார்த்திக் கூறிட.. 

சூர்யா பாயிந்து கார்த்திக்கின் கழுத்தை பிடித்து டேய் அந்த  spr and தேஜு வுக்கும் பொறந்த பையன் தான் நிதின் புரியுதா!  

கார்த்திக், சூர்யா விடு புரியுது டா உன் கூட மகி எப்படி இருக்கா பாவம் கழுத்து எலும்பு எல்லாம் நொறுங்கி போயிடும். 

சூர்யா பெரு மூச்சை விட்டு சரி வா அந்த spr லூசர் ஆனது நினைச்சு போய் கொண்டாடுவோம்!. 

கார்த்திக், சூர்யா பாட்டில் இருக்கா!  

சூரியா, பாயாசம் டா பாட்டில்ல குடிக்க போறியா மகி எனக்காக கிண்டிட்டு இருக்கா.. 

இதை கேட்டதும் கார்த்திக் முகம் சப்பென ஆனது. .

சூர்யா அவனை பார்த்து கவலை படாத சகளை இந்த கல்யாணம் முடியட்டும் பார்ட்டி பண்ணுவோம்!. என இருவரும் சிரித்து பேசி கொண்டே வெளியே வந்தனர். 

கார்த்திக் மற்றும்  சூர்யாவை இறங்கி வருவதை  பார்த்து விட்டு மகி, மாமா இவர் கூட எதுக்கு புதுசா சேர்ந்து கொண்டு சுற்றி கொண்டு இருக்கீங்க!. 

கார்த்திக், உனக்காக தான் மகி!

சூர்யா அவன் தோல் மேல் கை போட்டு என்ன சொன்ன? திருப்பி சொல்லு இப்போவே அந்த குரு பகவான்!. 

கார்த்திக், இல்ல மகி சூரியா ரொம்ப ரொம்ப நல்லவர் அதான் நானும் இம்ப்ரெஸ் ஆகிட்டேன்!  

வழியுது கார்த்திக் தொடைச்சுக்க.. 

மகி இருவரையும் பார்த்து சிரித்து விட்டு நீங்க ரெண்டு பேரும் எதுவும் கள்ள தனம் பண்ற மாதிரி எனக்கு தோணுதே! 

அந்த நேரம் சூரியாவின் போன் அலறியது. இன்ப ராகவன் அழைத்து இருந்தான். 

சொல்லு மச்சி!. 

இன்பா, மச்சி ரிதம் இங்கே மண்டபத்துக்கு அனுப்பி வை டா! 

அந்த நேரம் வருண் ஹாய் மச்சான் என சொல்லி கொண்டே சூர்யா அருகில் வந்தான். 

சூர்யா,  ஹான் வருண் வந்திருக்காரு டா!. 

சிறப்பு  அப்படியே அந்த குட்டி குட்டன்,சத்ய தேவ் ரெண்டு பேரையும்  ரிதம் கூட  அவர் கூடவே அனுப்பி வை டா!  என இன்பா கூறினான். 

சூர்யா, பாத்து மச்சி பதமா ஹேன்டில் பண்ணு என போனை வைத்தான். 

வருண், மச்சான்! எப்படி இருக்கீங்க? 

சூர்யா, நல்லா இருக்கேன் அப்புறம் ஒரு சின்ன வேலை போய் ரிதம கொண்டு போய் இங்கே தனலட்சுமி திருமண மண்டபத்தில் விட்டு வந்துடுங்க!. 

வருண், என்ன சூர்யா உங்க மச்சானுக்கு கல்யாணம் கவனிக்க மாட்டீங்களா!  

ம்ம் சிறப்பா கவனிப்போம்!  

மகி, அண்ணா! என்னங்க! என்ன பேசிட்டு இருக்கீங்க.  

கார்த்திக், மகி போய் ரெஸ்ட் எடு பெரியவங்க பேசிட்டு இருக்கோம்.. 

மகி,நான் மை விழி கிட்ட சொல்றேன் என கிளம்பினாள். வருண் சிரித்து கொண்டே மிதுன், சத்ய தேவ், ரிதம் அனைவரும் கிளம்பினர். 

அய்யோ! இந்த மகி போய் அந்த மை விழி கிட்ட சொல்ல போறா!  

போடா போ போய் சமாதானம் பண்ணு என சூரியா கிளம்ப.. 

டேய் உன்னை எதுவும் கேட்க மாட்டாளா? 

நான் நல்லவன் சகளை, அதை விட அவளுக்கு என்னை பற்றி தெரியும் இன்னும் சொல்ல போனால் சைட் டிஷ் ரெடி பண்ணி தருவா டா!  

அப்படியா! அப்படி எனக்கு கொடுத்து வைக்கல இங்கே எல்லா வேலையும் நான் தான் நாக்கு தள்ள செய்கிறேன். 

“அப்போ சொல்லி காட்டுற நான் உனக்கு எந்த வேலையும் செய்து தரல அப்டின்னு எங்க அப்பா வீட்டுக்கே வந்து சொல்லி காட்டுறியா!  என ஒரு குரல் கார்த்திக் கண்ணை இறுக்கி மூடி கொண்டு கார்த்திக் திரும்பி பார்த்தான். அது மை விழி தான்!  

சூரியா புன்னகையுடன் ஹான் அடை மழை தான்! போடா போய் நல்லா நனைந்துகோ! 

கார்த்திக் தன் மனைவியை கன் வின்ஸ் செய்து கொண்டே பின்னால் சென்றான். 

இல்ல டி அப்படி எல்லாம் இல்ல? 

மை விழி, பின்னாடி வராத கார்த்திக் போடா! உன் அம்மா வீட்டுக்கு போ கூடவே உன் குழந்தை ரெண்டையும் எடுத்துக்கிட்டு போ! 

என்ன டி இப்படி எல்லாம் பேசுற? 

மை விழி, ஆமா நீ தானே காரணம் வீட்டை விட்டு கிளம்பி போன என்னை தூக்கிட்டு போய் என அவள் சொல்லி கொண்டு இருக்க 

கார்த்திக், அதுக்கு அப்புறம் நான் சொல்லவா!  

ஹே ஹே ராஸ்கல் பேச்சை மாற்றாத இப்போ எதுக்கு கிட்ட வர? இது கல்யாண வீடு , எதுக்கு கதவை சாத்தி வச்சு இருக்க? 

கார்த்திக், நாளைக்கு உன் அண்ணன் ரூம் சாத்தி தான் இருக்கும்.. 

மை விழி, ஹே பேச்சை மாற்றாத.. 

கார்த்திக் அவள் அருகில் வந்து விழி நீ இப்போ கொஞ்சம் மாறிட்ட தெரியுமா!  

அவள் உரைந்து பார்த்து கொண்டு என்ன சொல்ற? 

ஆமா நீ  அழகு தான் இப்போ இன்னும் அழகா தெரியுர.. 

ஹே உன் பிளர்ட் எல்லாம் இங்கே வேணாம் டி!  

ஹே சத்தியமா டி.  நிஜமா இதோ இந்த கண்ணு? என இதழுக்கு முத்தம் பதித்தான். 

மை விழி உறைந்து ஹே கண்ணு அழகா இருக்குன்னு சொன்ன? 

கார்த்திக், அதை விட லிப்பு அள்ளுது டி அதான் என முத்தமிட ஆரம்பித்தான். 

மை விழி அவன் முத்தத்தில் மெய் மறந்து கட்டி கொண்டாள். 

கார்த்திக், விழி!.. 

ம்ம்.  

நைட்டு எங்க வீட்டுக்கு போலாமா!  

என்ன சொல்ற? 

கொஞ்சம் ஜாலியா போலாம்.. 

மை விழி, கார்த்திக் சாரி டா!  

எதுக்கு? 

இல்ல அது நிஜமாவே எனக்கு சமைக்க தெரியாது டா உனக்கு நிறைய தடவை செய்ய டிரை பண்ணி இருக்கேன். ஆனால் அது சொதப்பல் ஆகி போகுது.. 

கார்த்திக், விடு!  

மை விழி, நிஜமாவே உனக்கு நான் டிரை பண்றேன் ஆனால் நான் என்னால் முடியல கார்த்திக்.. 

கார்த்திக், சரி விடு டி செல்லம்.  

மை விழி, உன்னை நான் எப்படி பார்த்து கொள்வது நீயே சொல்லு மகி சூர்யா மாமாவை கூப்பிட்டு பார்த்து கொள்வது போல் செய்யட்டா! 

கார்த்திக், வேணாம் டி நீ யாரை போலவும் இருக்க வேணாம் உன்னை எனக்கு உன்னோட ஃபீலிங், பிஹெய்வியர்ல தான் புடிச்சு இருக்கு அதும் இல்லாமல் நம்ம கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் லவ் பண்ரோம்!. 

மை விழி, அது நான் இல்ல நீ தான்!. 

உன்னை நான் எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா!  

எவ்ளோ? 

மை விழி, உன்னை மாதிரியே ஒரு பையனை பெற்று வளர்க்கும் அளவுக்கு லவ் பண்றேன். 

கார்த்திக், இப்போ பையன் வேணாம்.. 

எனக்கு வேணும்! என மை விழி கேட்டாள். எனக்கு ஆசையா இருக்கு கார்த்திக் எதுவா இருந்தாலும் நான் மாசமா இருக்கும் போது நீ என்னை பார்த்து கொள்வது எனக்கு ரொம்ப புடிக்கும்.. ஐ லவ் யூ கார்த்திக்.. என முத்தமிட ஆரம்பித்தாள். 

கார்த்திக் அவள் கண்களை பார்த்தான்.காதல் ததும்பி கொண்டு இருந்தது. 

மை விழி!. 

என்ன? 

இது கல்யாண வீடு டி!. போடா என அவன் இதழில் முத்தம் பதிக்க கார்த்திக் கைகள் அவள் மேல் எல்லை மீற ஆரம்பித்தது. 

மை விழி அவனிடம் இருந்து விலகி கொண்டே நகர தப்பிக்காத டி உன்னை தப்பிக்க விட மாட்டேன். மை விழி! என கார்த்திக் சட்டையை கழட்டி கொண்டு வா சேர்ந்து ஃப்ரெஷ் ஆவோம்! என கையை பிடித்து இழுத்து கொண்டு பாத் ரூம் செல்ல கதவு தட்ட வில்லை ஆனால் சத்தம் கேட்டது. 

அப்பா, டாடி, மம்மி, அம்மா என இரு குரல்கள் கேட்க..  

இவ்வளவு நேரமும் குழந்து அவளை தூக்கி கொண்டு சென்றவன். தன் செல்வங்களின் குரல் கேட்கவும் வேகமாக கார்த்திக்  அவளை படுக்கையில் போட்டான். சட்டையை எடுத்து போட்டு கொண்டு அவளை கண்டு கொள்ளாமல் கதவை திறந்தான். 

கார்த்திக்! உன்னை!. 

கார்த்திக், ஹே என் தங்க பட்டு குட்டிகள் ரெடி ஆக்கனும் டி!  என சொல்லி கொண்டு இருக்க 

பவா, டாடி உங்களை நான் எல்லா இடமும் தேடி தேடி பார்த்தேன். 

சிவி, ப்பா உன்னை இங்கே மட்டும் தான் நான் தேடி பார்க்கல மா நீ என்ன பண்ற? 

கார்த்திக், நாங்க ஒளிந்து கொண்டு இருந்தோம் நீங்க கண்டு பிடித்து விட்டீங்க?  

அனைவரும் ஆளுக்கு ஒரு புறம் உதயன் – ஶ்ரீ மதி வரவேற்புக்கு கிளம்பி கொங்கோ இருந்தனர். 

மண்டபத்தில் காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். ஶ்ரீ மதிக்கு அவளது மாமன் பக்கத்தில் இருந்து சீர் செய்து ஆக்கி போடும் நிகழ்வு அதன் பின் உதயனுக்கு அக்கா, தங்கைகள் தண்ணீர் ஊற்றி சீர் செய்யும் நிகழ்வு எல்லாம் நடந்தது. இறுதியில் ஶ்ரீமதியின் தந்தை திருசெல்வம் மாலை அணிவித்து அனுப்பும் நிகழ்வு எல்லாம் நடக்க போகிறது. 

இன்று முழுவதும் கல்யாண கலாட்டா தான் மொத்த குடும்பமும் வந்து சேர்ந்தது. மை விழி தான் ஶ்ரீ மதியை தேற்றி விடு ஶ்ரீ மதி கல்யாணம் ஆனால் எல்லாமே சரியா போயிடும் என சமாதானம் செய்தாள். 

உதயன் வரவேற்பு  திரு செல்வம் மெள தாளத்துடன் அழைக்க பட்டான். 

ஶ்ரீ மதி சண்ட மேளத்தில் உள்ளே அழைத்து வர பட்டாள். அவளின் வரவேற்பை வருண் ஒரு தூணில் சாய்ந்து மெய் மறந்து பார்த்து கொண்டு இருந்தான். 

என்ன அழகு! இவளோ இன்னோசன்ட்டா இருக்காள் இவளை போய் சங்கட படுத்தி கஷ்ட படுத்த எப்படி தான் மனசு வருது.  

சிரி டி செல்லம்! என பார்த்து கொண்டு இருந்தான். 

மிதுன், மாமு வாட் ஆர் யூ டுயிங் மேன்!  

வருண், பொண்ணு வரா மிதுன் அதான் பார்த்திட்டு இருக்கேன். 

மிதுன், ஐ திங்க் ஶ்ரீ மதி அழகா இருக்கா! பட் ஒரு பிரச்னை! 

என்ன? 

அந்த சத்ய தேவ் இருக்கானே அவனோட மாமா மேட்ச் இல்ல ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் பண்ணனும் சாக்லேட் மாதிரி பேசணும். பாவம் அத்தையை அழ வைக்கிறாங்க!  

வருண், நான் சிரிக்க வைக்க டிரை பண்ணுவேன். 

மிதுன், மாமு சூப்பர் நீ அவளை கனடா கூட்டி போய் சாக்லெட் வாங்கி கொடு!  

என்ன மிதுன் சொல்ற? 

ஶ்ரீ மதி அத்தை ஹீரோயின் நான் குட்டி ஹீரோ ஆனால் நீ பெரிய ஹீரோ! சோ அவள் ஹீரோயின் தான்.. 

அப்டியா! .நிஜம் தான்! .

வருண், பிரச்னை வரும் டா.. 

மிதுன், வந்தால் அதை சூர்யா மேல் போட்டு விடு அவ்ளோ தான்.. 

வருண், எந்த சூர்யா! .

அதான் டாடி! 

யாருக்கு? 

சத்ய தேவ் டாடி! 

வருண் சிரித்து கொண்டு இப்படி பேச கூடாது டா!  .

இல்ல மாமு நான் ரிவேஜ் எடுக்க வேணும் என் சீக் பாரு இதுக்கு காரணம் அவன் தான் நீ தூக்கிட்டு போயிடு ஶ்ரீமதியும் ஹேப்பி நானும் ஹாப்பி! 

வருண், யாரு டா இது எல்லாம் சொல்லி கொடுக்குறா!  

மிதுன்,மாமு டப்பிங் படம் பாரு அதில் எல்லாமே இப்படி சம்மதமே  இல்லாம ஒரு கடத்தல் இருக்கும் இதை எல்லாம் நிதின் அண்ணா தான் தெலுங்கு கத்துக்க அப்டின்னு டார்ச்ச்ர் பண்ணி பாக்க வச்சாங்க! 

வருண் சிரித்து கொண்டே சரி ஶ்ரீ மதி கிட்ட போய் என் மாமுவை பிடித்து இருக்கா அப்டின்னு கேட்டு விட்டு சொல்லு தூக்கிடலாம். அப்புறம் அவள் கூடவே இரு உனக்காக நான் ஶ்ரீ மதிய கட்டிக்கிரென் டா மிதுன் குட்டி!. 

எல்லா இடத்திலும் உறவினர்கள் நிறைந்து இருந்தனர். உதயன் மாப்பிள்ளை அறைக்கு உடை மாற்ற சென்றான். தினேஷ் உடையை எடுத்து கொண்டு மாப்பிள்ளை இது போட்டுக்க சரியா இருக்கும் என சொல்லி கொண்டு இருந்தான். 

கலைவாணி கோபத்துடன் உதயன் அறையில் உள்ளே நுழைந்தாள். 

தினேஷ், அத்தை என எழுந்து நின்றான். 

எங்கே அவன்? .

உள்ளே இருக்கான்! .

உதயன் பாத் ரூமில் இருந்து வெளியே வந்தான். 

கலை வாணி கோபத்துடன் நின்று கொண்டு இருக்க

உதயன், என்ன மா! 

கலை வாணி பற்களை கடித்து கொண்டு வீட்டில் என்ன நடந்தது? 

என்ன மா! 

வீட்டில் என்ன நடந்தது? 

ஒன் ஒன்னும் நடக்கல மா! 

கலை வாணி கண்ணை மூடி கொண்டே ஶ்ரீ மதி உன் கிட்ட என்ன கேட்டாள்? 

தினேஷ் இருவரையும் மாறி மாறி பார்த்தான். 

உதயன், கிளம்பும் போது டென்ஷன் பண்ற மாதிரி பேசினால் அதுக்கு தான் கொஞ்சம் கோபமா!. .

கலை வாணி, மையிட்டு சிவந்த கங்களுக்குடன் திறந்து உனக்கு கல்யாணம் அபடின்ற ஒரே காரணத்துக்கு தான் விட்டு இருக்கேன். இல்லன்னு வச்சுக்க உன் கன்னம் பகுத்து இருக்கும். அதாவது உன்னை கொன்றுவிடுவேன் ராஸ்கல்.. அவள் என் வீட்டு பொண்ணு! உன்னை தோலுக்கு மேல் வளர்ந்து இருக்கான்னு பார்க்க மாட்டேன். இனி அவள் கிட்ட முகத்தை கோபமா காட்டி பேசின! அவ்ளோ தான் , . எனக்கு உன்னை விட ஶ்ரீ மதி தான் முக்கியம்! என அவர் வெளியே செல்ல போக.. 

உதயன், மா எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல.. 

அந்த நேரம் வட இந்திய பெண்ணை போல் ராஜஸ்தானி பெண்ணை போல் ஒப்பனை செய்து கொண்டு  தாரா மண்டபத்தின் உள்ளே நுழைந்தாள். 

அடுத்து என்ன நடக்கும்? 

தேஜு கூடிய சீக்கிரம் வர போகிறாள்.. 

தொடரும்.. 

 Episode 229, 

எனக்கு உன்னை விட ஶ்ரீ மதி தான் முக்கியம்! என அவர் வெளியே செல்ல போக.. 

உதயன், மா எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல..  

தினேஷ் ஒரு வித பதட்டத்துடன் இருவரையும் பார்த்தான். 

கலை வாணி  ஒரு நிமிடம் நின்று விட்டு திரும்பி உதயனை பார்த்தாள். 

உதயன், மா என… எனக்கு இந்த கல்யாணம் என சொல்ல வந்து பேச்சை நிறுத்தினான். 

அவன்  தன் அம்மாவை ஒரு வித பயத்துடன் பார்த்தான்.

கலைவாணி , கல்யாணம் நின்று விட்டால் இந்த வீட்டில் கருமாதி நடக்கும்.அதுவும் எனக்கு தான்!. 

உதயன் திடுக்கிட்டு அப்படியே உதட்டை மடித்து கொண்டு தன் அம்மாவை பார்த்தான். 

சொல்லு டா! என்ன சொன்ன? 

அவன் அமைதியாக நின்றான். கலை வாணி கண்களில் கண்ணீருடன் உனக்கு என்ன குறை வச்சேன். இந்த கல்யாணம் நேற்று முடிவு பண்ண மாதிரி பேசுற? என்ன பிரச்னை! சொல்லு! எதுக்கு ஶ்ரீ மதியை கஷ்ட படுத்துற ஓ புரிந்து போச்சு உனக்கு இஸ்டம் இல்லல்ல.. 

உதயன், இல்ல மா அப்படி இல்ல.. அது வந்து 

கலைவாணி எதிர் பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள். 

தினேஷ் அதிர்ந்து இருவரையும் பார்க்க. 

கலைவாணி கண்களில் கோபம் பொங்க கல்யாணம் நிறுத்தி விடு பிரச்னை இல்ல.. போ! போடா!. என அவனின் நெஞ்சை பிடித்து தள்ளி விட்டார். 

தினேஷ் நடுங்கி கொண்டு இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தான். அத்தையா! இல்ல பேயா! வசந்து மாமா எப்படி இருக்காங்க!. 

உதயன் கண்களில் கண்ணீர் கோர்க்க மா இல்ல மா எனக்கு கல்யாணத்தில் விருப்பம் தான்! நான் கட்டிப்பேன் உங்களுக்காக கட்டிக்கிறேன். 

அடுத்த நிமிடம் கலை வாணி முகத்தை ஒரே நொடியில் மாற்றி கொண்டு கட்டிக்கணும்! அவள் தான் என் வீட்டு மருமக  என சொல்லி கொண்டே நாலடி எடுத்து வைத்தார். 

உதயன் தலை குனிந்து கொண்டு நின்றான். கலை வாணி, என் கிட்ட எதுவும் மறைக்கிறயா? இல்ல எதாவது எவளவாது  மயக்கி காதல், கண்றாவி இந்த மாதிரி  வேலையெல்லாம் எனக்கு தெரியாமல்! என ஆழ பார்வையுடன் பார்த்தார். 

தினேஷ், அத்தை யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க! உதயன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஶ்ரீ மதி துறுதுருன்னு இருக்காள். இன்னும் ரெண்டு வருசம் கழிச்சு கட்டி கிட்டால் நல்லா இருக்கும் அப்டின்னு தான் சொல்லிட்டு இருந்தான். நீங்க தான் தப்பா அவனை அடித்து விட்டீர்கள் . 

கலை வாணி,இந்த அரை ஶ்ரீ மதி கிட்ட நடந்து கொண்ட விதத்துக்கு தான் எப்போ கட்டிக்கிட்டு வந்தாலும் அவள் தான் அவனுக்கு பொண்டாட்டி, கிறுக்கு தனமான எண்ணைத்தை மூட்டை கட்டி மூலையில் போட்டு வெளியே வரனும். என சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டார். 

தினேஷ் கதவை அடைத்து மூச்சை வெளி விட்டான். உதயன் நிற்கதியாக நின்றான். கண்களில் கண்ணீர்! தினேஷ் மாப்பிள்ளை என அழைத்து கொண்டே அணைத்து கொண்டான். உதயன் நெஞ்சு குமுற கண்ணீர் விட்டான். 

தினேஷ், அழாத டா உதயா! அத்தையா இது எதோ வில்லி மாதிரி இருக்கு டா எனக்கே பயமா இருக்கு எப்படி டா இத்தனை வருஷம் நீங்க எல்லாம் இருக்கீங்க. நடுங்கி கிட்டு தான் திரியனும் போலயே!. 

உதயன், பார்த்தீங்க தானே! இது தான் மாமா எங்க உண்மையான அம்மா அதிக படியான பாசம் எங்கே இருக்கோ அங்கே ஆப்பு கூட இருக்கும். இதுல தப்பிச்சது மகி மட்டும் தான்… அவள் அப்பா செல்லம் அதும் இல்லாமல் அப்பா அவளை கஷ்ட பட விட மாட்டாரு… அப்பா இல்லாத நேரம் அம்மா கிட்ட மாட்டிக்கிவா அப்போ எனக்கு பெருசா தெரியல, நான் தடுக்கவும் மாட்டேன். ஆனால் இப்போ பாருங்க மை விழி மேல் இன்னும் பாசமா நடந்துக்கும். என்ன தான் சத்ய தேவ், மிதுன் தேவ் இருந்தாலும் அதுக்கு மை விழி குழந்தைகள் ஒரு படி மேலே .. அது போல இப்போ நான் மாட்டி கொண்டேன். 

தினேஷ், சரி விடு! 

இப்போ நான் என்ன மாமா பண்றது. இவங்க மூணு பேருக்கு நடுவில் என்னால் போராட முடியல.. பேசாமல் செத்து விடவா!  

தினேஷ், எதுக்கு டா இப்படி பேசுற அதெல்லாம் நான் இருக்கேன் டா. அந்த நடிகை  தாரா தான் உனக்கு பொண்டாட்டி.. இதை யாராலும் மாற்ற முடியாது. நான் எதுவும் செய்வேன். 

உதயன், இனி என்ன செய்ய முடியும் கடவுளே வந்து நின்னாலும் எங்க அம்மா முடிவில் இருந்து மாறாது!  

தினேஷ், பேசாமல் ஶ்ரீ மதி கிட்ட பேசி பார்க்கலாம் டா! அவள் சொன்னால் அத்தை மாறுவாங்க.. 

உதயன் கண்ணை இறுக்கி மூடி ஒரு பெரு மூச்சை விட்டவன். நீங்க இதை அவள் கிட்ட சொன்னாலே எல்லாம் முடிந்து விடும். அந்த அளவுக்கு என் மேல் வுசுற வச்சு இருக்கா!  விடுங்க மாமா இது முடிந்து போன விஷயம். என சொல்லி படுக்கையில் படுத்து கொண்டான். 

வசந்தன், தினேஷ்!. 

மாமா!. 

உதயனை சாப்பிட. என்ன தூங்கிட்டு இருக்கான். 

தினேஷ், இல்ல மாமா தலை வலிக்குது அப்டின்னு சொன்னான். அதான தூங்கள.. 

உதயா! உதயா! .

அப்பா! என எழுந்து அமர்ந்தான். 

என்ன ஆச்சு கண்ணா!. 

ஒன்னும் இல்ல பா நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன். 

வசந்தன், அம்மா எதுவும் சொண்ணாளா? 

இல்ல பா ஒன்னும் இல்ல நான் வரேன். நீங்க போங்க!. 

சரி தினேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட அழைத்து வா.. என சென்று விட்டார். 

அங்கே வெளியில் ஶ்ரீ மதிக்கு சீர் செய்யும் நிகழ்வு நடந்து கொண்டு இருந்தது. அங்கே அவனுக்கு வேலை இல்லை. 

மாலை ஒரு சடங்கு நிச்சய தார்த்தம் செய்வார்கள். அடுத்த நாள் காலை திருமணம். 

உதயன் சம்பங்கி மாலையில் உள்ள பூக்களை நசுக்கி ஒவ்வொரு இதளாக பிய்த்து கொண்டு அமர்ந்து இருந்தான். 

தினேஷ் என்ன செய்வது என யோசித்து கொண்டு ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்தான். 

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தினேஷ் எழுந்து நிற்க.. 

மாமா நீங்க இருங்க நான் திறக்கிறேன். என சொல்லி கதவை திறந்தான். உங்களுக்கு சாயா!  என சொல்லி கொண்டே ஒரு தட்டில் டீயுடன் உள்ளே நுழைந்தாள். 

உதயன், அங்கே வச்சுட்டு போங்க என சொல்லி விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டான். 

அவள் ஃப்ளாஷ்க் திறந்து கப் அண்ட் சாசரில் ஊற்றி ஒரு ஸ்பூன் கொண்டு கலக்கி கொண்டு இருக்க அவள் கையில் உள்ள வளையல் குலுங்கி குலுங்கி சத்தம் எழுப்பியது. 

அவள் டீயை கலக்கி விட்டு அதை எடுத்து கொண்டு உதயன் முன் நீட்டினாள். 

வச்சுட்டு போங்க! என அவன் பார்வையை திருப்பாமல் கூறிட மெல்லிய கொலுசு சத்தத்துடன் மீண்டும் அதே இடத்தில் வளையல் குலுங்க வைத்தவள் திரும்பி சென்றாள். 

தாரா!.. என அழைத்தான். 

அவள் கால்கள் அப்படியே நின்றது. தன் பூ முகத்தை திருப்பி அவனை பார்த்தாள். 

எப்.. எப்படி கண்டு புடிச்சீங்க!. 

உதயன் வேகமாக கதவை தாழிட்டு விட்டு அவளை பாயிந்து கட்டி கொண்டான். 

எதுக்கு டி இப்படி டார்ச்சர் பண்ற? என்னை பேசாமல் கொன்று விடு டி!  என கண்களில் கண்ணீர் கோர்க்க பேசினான். 

தாரா தன்னை கட்டு படுத்தி கொண்டு “இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தானே நீங்க என்னோட உதயன் அதான் பார்க்க வந்தேன். நாளைக்கு நீங்க ஶ்ரீ மதிக்கு”  என அவள் சொல்ல வர.. உதயன் அவள் இதழை கவ்வி கொண்டான். 

உதயனின் சூடான முத்தத்துடன் அவனது கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்து இருந்தது. தாரா கண்ணில் நீர் வழிந்தது. அவன் கழுத்தை கட்டி கொண்டு கண்ணை இறுக்கி மூடி கொண்டாள். “பிளீஸ் இன்னொரு வார்த்தை சொல்லாத டி நான் செத்துறுவேன்!” என சொல்லி இறுக்கி அணைத்து கொண்டான். 

“க்கும் மாப்பிள்ளை நா நான் இங்கே தான் டா இருக்கேன்!”என தினேஷ் அவர்களுக்கு முதுகு காட்டி நின்று இருந்தான். 

சட்டென வேகமாக இருவரும் விலகினர். நான் வெளியே போறேன் உதயன்! என அவள் நகர கையை பிடித்து கொண்டான். 

உதயன், மாமா திரும்புங்கள்!. 

தினேஷ்,  கன்ஃபார்மா

ம்ம்!. 

தினேஷ் திரும்பி தாராவை பார்த்தான். ஹாய் மேம்! உங்க படம் நான் தேட்டர்ல பார்த்து இருக்கேன். 

தாரா,  நீங்க இவரோட அத்தை பையன். ஹான் நித்யாவுடைய அண்ணன் சரியா!. 

உதயன், மாமா! என அதட்டினான். 

சாரி டா மாப்பிள்ளை எனக்கு என்ன பேசுவது அப்டின்னு தெரியல டா…

உதயன், என்ன இது வேசம்? 

தாரா, என்னை யாரும் கண்டு பிடிக்க கூடாதுன்னு இந்த ட்ரெஸ்!. 

தினேஷ், மேடம் எனக்கே அடையாளம் தெரியல ஸ்கின் டோன் மாற்றி இருக்கீங்க. உங்களை பார்த்தால் அப்படியே சவுராஷ்டிரா பொண்ணுங்க போல இருக்கு!  

உதயன் அவளை மெத்தையில் அமர வைத்தான்.

தாரா, மேடம் எல்லாம் வேணாம் பேர் சொல்லி கூப்பிடுங்க பிரதர்!. 

தினேஷ், நிஜமாவா! எப்படி மேடம்! உங்களை போய்!. 

“நானும் சாதாரண மனுஷி தானே சிங்கம் புலி இல்லையே!”

தினேஷ், சட்டுன்னு எப்படி கூப்பிடுவதுங்க…

தாரா உதயனை பார்த்து கொண்டே எல்லாம் ஒரே இரத்தம் போல உதயன் மாதிரி தான் நீங்களும் இருக்கீங்க.. 

தினேஷ், நீங்க சாதாரண ஆளா செளிப்ரெட்டி!. இப்போ கன்னட சினிமாவில், தெலுங்கில் ,  நீங்க தான் டாப் அப்படி இருக்கும் போது எப்டி மேடம்! 

உதயன், ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க!. 

தாரா, சரி ஓகே உதயன் நான் போய் என் வேலையை பார்க்கிறேன். 

உதயன், என்ன பண்ண போற? 

தாரா, மிசஸ் உதயனுக்கு நான் தான் மேக் அப் ஆர்டிஸ்ட்!. 

உதயன் பற்களை கடித்து கொண்டு அவளை முறைத்தான். 

தினேஷ் அவர்கள் இருவரையும் விநோதமாக பார்த்தான். இது நிஜமாவே நடிகை தான், இந்த உதயன் ஊமை கோட்டன் போல இருந்து கொண்டு ஒரு நடிகையை உஷார் பண்ணி சுற்றி கொண்டு இருக்கானே! இது கனவா! நிஜமா!. என நினைத்தவன் தனிமை கொடுக்கும் எண்ணம் இப்பொழுது தான் தோன்றி இருந்தது. 

நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என உள்ளே சென்று விட்டான். 

உதயன், ஹே ஏன் டி!. 

தாரா, இதில் தப்பு என்ன இருக்கு நான் சந்தோசமா இருக்கேன் உதயன். நாளை வரை தான் அப்புறம் நான் உங்க வாழ்க்கையில் இல்ல.. 

உதயன், பிளீஸ் பேசாத டி குண்டூசி குத்துவது போல் இருக்கு. வலிக்குது டி!. 

தாரா, அச்சோ உங்களை நான் என்ன பண்னேன். டைம் ஆகுது விடுங்க…என எழுந்து நின்றாள். 

உதயன், தாரா! தாரா! உன் கிட்ட முக்கியமா ஒன்னு கேட்கணும்? 

என்ன? 

அன்னிக்கு ராத்திரி நமக்குள்….? 

தாரா, என்ன கேள்வி இது? நீங்க உத்தம புத்திரன் தான் நமக்குள் எதுவும் நடக்கல நான் வேற அறையில் இருந்தேன். 

உதயன் அவளை கட்டி அணைத்துக் கொண்டு உன்னை நான் என்னுடையவளாக ஆக்கி இருக்கணும்! என அவள் இதழில் முத்தம் பதித்தான். 

தாரா, இது தப்பு!  நீங்க ஶ்ரீ! 

உதயன், அப்படி நடந்து இருந்தால் உன்னை நான் இப்போ விட மாட்டென் யார் எதிர்த்தாலும் உன்னை கட்டி கொள்வேன். இத்தனை நாள் மறைச்ச விஷயத்தை நான் இன்னிக்கு சொல்ல போறேன். உன்னை எனக்கு பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் பைத்தியமா பிடிக்கும்!  

தாரா விழி விறிய அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். நான் உன்னை லவ் பண்றேன் டி! நீ வேணும்! என் வாழ்க்கை முழுக்க வேணும்! இது லேட் தான் ஆனால் கடைசியாக சொல்லணும் அப்டின்னு தோணுச்சு அதான்!  

என்ன கடைசி? 

உதயன், நான் உன்னோட காதலனாக மட்டும் தான் சாவேன்!. 

தாரா, என்ன பேசுறீங்க? 

உன்னை அலட்சிய படுத்தியது எல்லாம் இப்போ மொத்தமா அனுபவிக்கிறேன் டி. 

நீங்க சந்தோசமா வாழணும்!. அது தான் எனக்கு  வேணும் உதயன்!. 

உதயன் நீ இல்லாமல் சந்தோசமா அதுக்கு நான் சாகனும் டி  அதை தான் பண்ண போறேன்.  என அவன் எதுவும் பேசாமல் அவளை இறுக்கி அணைத்து நைட்டு ஒரு தடவை கடைசியாக ஒரு தடவை பார்க்க வருவியா? 

ம்ம் என வெம்பி கொண்டே கூறினாள். 

அதன் பின் உதயன் துடைத்து எடுத்த முகம் போல் அனைத்து கவலையும் நெஞ்சில் வைத்து கொண்டு சிரித்த முகமாகவே சுற்றி திறிந்தான். 

சூர்யா என்ன செய்கிறான்? அவன் என்ன செய்ய போறான்… அப்படியே அந்த இடத்தை வேடிக்கை பார்த்து கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து இனிப்பு வகைகள் சாப்பிட ஆரம்பித்தான். 

கார்த்திக் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அந்த மண்டபத்தை அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தனர். 

சூரியா, கார்த்திக் அந்த பச்சை எப்டி இருக்கு! 

ம்ம் நல்லா இருக்கு!. 

கார்த்திக், அந்த கேரளா சாரி!  

அதுவா ம்ம் நாட் பேட்! 

கார்த்திக் , டேய் அதை விட ஶ்ரீ மதி பக்கத்தில் ஒரு பொண்ணு இருக்கு பாரு! 

சூரியா, கார்த்திக் டக்குன்னு பார்க்காத ஸ்லோ மோஷன்ல உதயனை பாரேன்!  

என்ன டா இப்படி பார்க்கிறான்? 

சூர்யா, பக்கத்தில் ஶ்ரீ மதி இருக்கா அவளை ஒரு பார்வை பார்க்கல டா ஆனால் வச்ச கண்ணு வாங்காம அந்த சவுராஷ்டிரா  பொண்ணை எப்படி பார்க்கிறான் பாரு.. 

கார்த்திக், சூர்யா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். 

ம்ம்.. 

எனக்கு என்னமோ இந்த கல்யாணம் நடக்குற மாதிரி தோனவே மாட்டக்குது!. எதோ பிரச்னை வரும் அப்டின்னு சொல்லுது..  

சூர்யா, எது நடந்தால் நமக்கு என்ன கார்த்திக் வந்த வேலையை நம்ம பார்ப்போம் டா இதில் மூக்கை நுழைத்தால் மகி எங்க குடும்பத்தில் தலையிட நீங்க யாருன்னு கேட்பா! 

கார்த்திக், அப்படி இல்ல சூரியா!. 

சூரியா, மை விழி கேட்க மாட்டாளா!. 

அய்யோ சரி தான் டா நம்ம வேலையை பார்ப்போம் என பார்வை சென்றது. 

சூரியா, சரி சரி இந்த மார்க் விஷயத்தை கொஞ்சம் தள்ளி வை மகி வரா! 

ஓகே என இருவரும் அமைதி ஆகி கொண்டு போனை நோண்டி கொண்டு இருக்க 

மகி, என்னங்க!.. 

ம்ம் சொல்லு சாப்பிட்டியா!.. 

இல்ல!.. 

என்னாச்சு? 

மனசு சரி இல்ல…

சூரியா, நான் லவ் யூ சொல்லி இருக்கேன் உனக்கு மனசு சரி இல்லையா!. 

மகி, அதில்ல.. 

பின்ன என்ன? 

எனக்கு இந்த கல்யாணத்தில் எதோ தப்பா விபரீதமாக எதோ நடக்கும்ன்னு தோணுது!. 

சூர்யா அவள் முகத்தை பார்த்து விட்டு கார்த்திக்கை பார்த்தான். 

கார்த்திக், என்ன எதுக்கு பார்க்கிற? 

மகி, என்னங்க!. 

சூர்யா மனதில் எப்டி ஒரே மாதிரி ரெண்டும் சொல்லுது. மகி உன் போன் கொடு! டேய் உன் போனை கொடு என வாங்கி செக் செய்தான். 

கார்த்திக், என்ன டா பார்க்கிற? 

ஒன்னும் இல்ல என செக் செய்தான். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. 

மகி, உங்களுக்கு என்ன ஆச்சு? 

கார்த்திக், என்ன ரகசியம் எனக்கு சொல்ல மாட்டியா? 

மகி, மாமா எனக்கு மனசு சரி இல்ல எதோ தவறு நடப்பது போல் இருக்கு!. 

கார்த்திக், யூ டூ மகி நான் இதை தான்!. 

போதும் போதும் பொத்து.. என சொன்ன சூர்யா அவளிடம் அப்படி எல்லாம் நினைக்காத உங்க அண்ணனை பாரு எவ்ளோ சந்தோசமா இருக்கான். எல்லாமே நல்லதா நடக்கும்!. போய் சீக்கிரம் சாப்பிடு கண்டத யோசிக்காத என் குட்டிக்கு தான் கஷ்டம் என அனுப்பி வைத்தான். 

கார்த்திக், டேய் நீயும் கூட போய் ஊட்டி விடு!  

சூர்யா, நான் இருந்தால் ரொம்ப கம்மியா சாப்பிடுவா! அதான் தனியா அனுப்பி வச்சேன். 

நிதின் மகியின் பின்னால் சென்றான்.

என்ன நிதின்? 

பொம்மாயி நீ இன்னும் சாப்பிடல.. 

மகி அவனை பார்த்து கை கோர்த்து கொண்டு என்னை பற்றி அவ்ளோ அக்கரையா! 

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உனக்கு என்னை பிடிக்காதே!  

மகி, யார் சொன்னது? எனக்கு நிதின் குட்டியை பிடிக்குமே! பூவா சாப்பிட்டாசா!. 

இல்ல.. 

சரி வா நான் ஊட்டி விடுகிறேன் என சொல்லி ஊட்டி விட்டாள். இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். 

நிதின் அவளின் முந்தியில் உதட்டை துடைத்து கொண்டான். மகி அவளின் கை குட்டையில் வாயை துடைத்து விட்டாள். 

அவன் கண்களில் அவ்வளவு சந்தோஷம் கன்னத்தில் முத்தம் பதித்தான். மகி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். 

நிதின் மனதில் ஆத்ம திருப்தி என் மம்மி!. 

நிதின் அவளின் கையை பிடித்து கொண்டு பேசி கொண்டே செல்ல சத்ய தேவ் ஹரிணி கூட விளையாடி கொண்டு இருந்தான். அனைத்து குட்டி வாண்டுகளும் அங்கு தான் இருந்தது. 

மகி, நிதின் போய் விளையாடு எதுவா இருந்தாலும் உடனே வாங்க! 

ம்ம் என தலையாட்டி விட்டு  சென்றான். பவன்யா, சிவன்யா இருவரும் நிதின் அருகில் வந்தனர். 

பவா, அண்ணா! உன் டாடி மம்மி எங்கே காணோம்! 

நிதின், எங்க டாடி ஆபீஸ் போயிட்டாங்க? 

மம்மி! 

நிதின், இதோ மகி மம்மி அவங்க தான் எனக்கு மம்மி!. 

சிவி, சித்தியா!  

ம்ம்!  

சத்ய தேவ், ஹனி அவன் என்ன சொன்னான்? 

ஹரிணி, ஹே சக்தி அந்த பாய் மகி அத்தையை அவனோட மம்மி அப்டின்னு சிவி, பவா கிட்ட சொல்லிட்டு இருக்கான். 

மிதுன் அந்த இடத்துக்கு வந்தான். பவா, மித்து அண்ணா இவங்க மம்மி சித்தியா!.

நிதின், அவங்க என் பொம்மாயி சரி தானே மிதுன்!

மிதுன், ம்ம் ஆமா.. என இருவரும் சத்ய தேவை முறைத்து பார்த்தனர். 

ஹரிணி, சக்தி அந்த பாய் வனுமென சொல்றான்.. நீ விடு!. 

நிதின், என்ன முறைத்து பார்க்கிற? 

ஹரிணி சக்தியின் கையை பிடித்து கொண்டாள். வேணாம் சக்தி!. 

தம்பி இப்படி பேச கூடாது. மகி உனக்கு ஆன்டி மாதிரி! நம்ம ஃபேமிலி ப்ரெண்ட்!. 

நிதின், ஃபேமிலி ப்ரெண்ட்டா! மகி என் மம்மி  மகிக்கி இருக்கும் எல்லாமே எனக்கு இருக்கு அவளுக்கு புட் அலர்ஜி எனக்கும் அலர்ஜி, நீ கேட்டு பாரேன். அப்போ தெரியும் மகி என் மம்மி என் டாட் spr சூர்ய பிரகாஷ் சோ மகி என் மம்மி! என அவன் காதுக்கு அருகில் சொல்லி விட்டு வேகமாக மிதுன அழைத்து கொண்டு சென்று விட்டான். 

ஹரிணி, சக்தி அவன் வேணும் என செய்கிறான். நீ விடு!. வா போலாம். 

சக்தி, அவன் என் அம்மாவை தப்பா பேசிட்டு போறான் ஹனி உனக்கு தெரியுதா இல்லையா!  

ஹரிணி, சக்தி இப்போ போயி இதை அத்தை கிட்ட கேட்க போறியா! நம்ம சின்ன பசங்க டா உன்னை விட அவன் சின்னவன் அப்புறம் எல்லாரும் உன்னை தான் பேட் பாய்ன்னு சொல்லுவாங்க.. வா சக்தி! என அழைக்க

பவா, சக்தி அண்ணா!

சின்ன குட்டி நீங்க சிவி கூட போலயா?  

நீ மட்டும் தான் எனக்கு ரொம்ப அண்ணா! பிடிக்குது.  

சக்தி சிரித்து கொண்டே என் பட்டு தங்கம் வாங்க என அழைத்து சென்று விட்டான். 

அடுத்து அக்கா, தங்கைகள் சீர் செய்வது தண்ணீர் ஊற்றி மாமன் மாலை போடுவது என அனைத்திலும் சூரியா, கார்த்திக், என இருவரும் உதயனுக்கு போட்டு விட்டனர். 

சூரியா, இடியட்! நாளைக்கு வாயேன் மீட் பண்ணலாம்!. 

இன்பா, ம்ம் வரேன்!  

சூர்யா, உன்னை மட்டும் வர சொல்லல, விவேகா, ரிதம் ரெண்டு பேரையும் கூட்டி வா!  

ம்ம் என இன்பா வைத்தான். 

அடுத்தது இரவு சடங்கு நிச்சயம் என அனைத்தும் செய்தனர். ஶ்ரீ மதி உதயணிடம் சாரி மாமா! 

உதயன், இட்ஸ் ஓகே விடு நான் தான் சாரி கேட்கணும்.. 

அப்போ கோபம் இல்லையா! 

இல்ல என புன்னகை செய்தான். ஏன் என்றால் உதயன் வேறு ஒரு பிளானில் இருந்தான். 

வருண் நிச்ச்யத்தை பார்த்து விட்டு ஜெய் மற்றும் அபிக்கு கால் செய்தான். 

தினேஷ் ஶ்ரீ மதியை கடத்துவது பற்றி யோசித்து கொண்டு இருந்தான். 

தாராவுக்கு கவ்யா கால் செய்தாள். தாரா பேசி விட்டு உதயன் அழைத்தான் என அவனை பார்க்க சென்றாள். 

காலையில் கல்யாணம்? யாருக்கு?  யார் என விதி இருக்கு நாளைக்கு பார்ப்போம்! 

தொடரும்..  

Episode 230, 

தாராவுக்கு கவ்யா கால் செய்தாள்.

கவ்யா, என்ன நடக்குது? எல்லாம் சரியா போகுதா? 

தாரா, கல்யாண வேலை நல்லா நடக்குது ஒன்னும் பிரச்னை இல்ல.. 

கவ்யா, உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கு.. 

எனக்கு பயமா இருக்கு கவ்யா!. 

ஹே நீ தாரா! புரியுதா! அதனால் இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல.. அண்ட் எல்லாமே நல்லதா நடக்கும். கவலை படாத!  என சொல்லி விட்டு போனை வைத்தாள். 

தாரா பேசி விட்டு அப்படியே சிறிது நேரம் நின்றாள். அவள் டெரஸ்ல நின்று கொண்டு இருந்தாள். 

அவள் அடுத்து என்ன நடக்க போகுதோ! என நினைத்து கொண்டு எல்லாமே நல்லதாக நடக்கணும். “உதயன் எனக்கு கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை அவர் நல்லா இருக்கனும்.பேசாமல் இப்போ உடனே கவ்யா கிட்ட போன் செய்து சொல்லி விடலாம் என நினைத்து போன் செய்யும் நேரம் 

சரியாக அந்த நேரம் உதயன் போன் செய்தான். எங்கே இருக்க? என்னை  வரேன்னு சொன்ன? டின்னர் சாப்பிட்டியா!.. 

நான் சாப்பிட்டேன். நீங்க? 

ம்ம்!. சரி வரேன்னு சொன்ன? எப்போ வருவ!. 

தாரா, இப்போ வர முடியாது. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. 

என்ன வர முடியாதா!. என உதயன் உடனே எழுந்தான். 

தாரா, இப்போ ஶ்ரீ மதிக்கு ஃபேசியல் பண்ணனும். ஐஸ் வாட்டர் மசாஜ் பண்ணனும் அப்போ தான் மார்னிங் மேக் அப் பண்ண நல்லா இருக்கும் அதனால் வர முடியாது. 

உதயன், கடைசியாக ஒரு தடவை வர மாட்டியா!  

தாரா திடுக்கிட்டு என்ன பேச்சு! இப்படி பேச கூடாது. 

உதயன், அப்போ வாடி ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் பிளீஸ் டி!. 

தாரா, இல்ல உதயன் எல்லாரும் இருக்காங்க. அப்புறம் சந்தேகம் வந்திடும் பிளீஸ் புரிஞ்சுக்கோங்க. 

உதயன், தாரா!..

ம்ம் என்ன உதயன்!. 

நான் உனக்கு வேண்டாமா!  

தாரா, ஒரு உண்மையை சொல்லவா! 

சொல்லு? 

இப்போ நீங்க எனக்கு வேணாம் உதயன்!. 

ஏன்? 

தாரா, ஶ்ரீ மதி உண்மையாகவே உங்களை ரொம்ப லவ் பண்றா! என்னை மாதிரி தானே அவளும் உங்க மேல் ஆசை வச்சு இருக்கா. நமக்கு நடுவில் இருப்பது எதுவும் அவளுக்கு தெரிய வேணாம் பிளீஸ் அவள் சந்தோசமா இருக்கட்டும்!. என அவள் சொல்லி முடிக்க கூட இல்லை பின்னால் இருந்து அவள் தோல் பட்டை மேல் கை வைத்தான். 

ஆம் உதயன் வந்து விட்டான். தாரா ஒரு வித பதட்டத்துடன் திரும்பி பார்த்தாள். நான் உனக்கு வேண்டாமா! என் கூட நீ வாழ வேணாமா! என சொல்லி கொண்டே ஒவ்வொரு அடிகலாக அவளை நோக்கி வைத்தான். 

தாரா, உதயன் பிளீஸ் இப்போ என்ன பண்றீங்க முதலில் இந்த இடத்தை விட்டு கிளம்பி போங்க! யாரும் வர போறாங்க பெரிய பிரச்னை ஆகி விடும். 

உதயன், தாரா பிளீஸ் இங்கே பாரு என்னை பாரு டி! என சொல்லி  அவள் முகத்தை கையில் ஏந்தி கொண்டே கேட்டான். 

தாரா, உதயன் பிளீஸ் வேணாம் தள்ளி போங்க! எனக்கு குற்ற உணர்வா இருக்கு நீங்க முதலில் இருந்தே இது நடக்காது! அப்டின்னு தான் சொன்னீங்க! நான் தான் உங்களை வற்புறுத்தி இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டேன். அப்போவே உங்க பேச்சை  கேட்டு இருந்தால் யாருக்கும் கஷ்டம் இல்ல.. சோ உங்களுக்கு ஶ்ரீ மதி தான் சரி நான் பாதியில் வந்தவள். பாதியிலேயே போய் விடுகிறேன். என சொல்லி விட்டு அவனிடம் இருந்து விடுபட கைகளை விலக்க முயற்சி செய்தாள். 

உதயன் எதை பற்றியும் யோசிக்க வில்லை. அவள் செவ்வதரத்தை தனதாக்கி கொண்டான். தாரா! என அழுத்தி உச்சரித்து முத்தம் பதித்தான். 

தாரா, பிளீஸ் உதயன் வேணாம். இது தப்பு தள்ளி போங்க!  

உதயன், முடியாது என சொல்லி கொண்டே அவளை கட்டி அணைத்து கொண்டான். அவன் கண்களில் நீர் கொட்டியது. 

அவள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது. உதயன் நீங்க பண்றது சரி இல்லை.  

தாரா கிஸ் மி! ஐ பெக் யூ!. என அவன் கைகள் அவள் இடையில் பயணிக்க ஆரம்பித்தது. 

தாரா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க உத.. உதயன் இது இது சரி இல்லை பிளீஸ் தள்ளி போங்க!. 

உதயன், தாரா ஐ பெக் யூ!. உனக்கு புரியலயா!. என அவள் மேல் பிடியை இறுக்கினான். கைகள் அவள் உடையில் எங்கு எங்கோ சென்றது. 

தாரா, உதயன் உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே உங்க ஒழுக்கம் தான் ஆனால் இப்படி காலையில் கல்யாணத்தை வைத்து கொண்டு என் கிட்ட இப்படி நடந்து கொள்வது தவறு உதயன்… என அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள். 

உதயன் சட்டென  அவளிடம் இருந்து விலகி அப்போ என்னோட தொடுதல் உனக்கு பிடிக்கலல்ல.. என சொல்லி கொண்டு வேகமாக திரும்பி டெரஸ் கதவுகளை நோக்கி சென்றான். 

தாரா வேகமாக அவனை பின்னால் இருந்து கட்டி கொண்டாள். உங்க கையால் சாக கூட நான் தயாராக இருக்கிறேன். என் கிட்ட இப்படி ஒரு வார்த்தை! என சொல்லி அவன் முதுகில் முத்தம் பதித்தாள். 

உதயன் அவளை முன்னால் இழுத்து சுவரில் சாய்த்து அவள் பூ முகத்தை பார்த்தான். தாரா அவனின் சட்டையை அவன் பக்கம் இழுத்து முத்தமிட ஆரம்பித்தாள். உதயன் அவளின் ஒவ்வொரு முத்ததிலும் கரைய ஆரம்பித்தான். 

தாரா! என சொல்லி கொண்டே இறுகி கொண்டான். அவழுள் புதைந்து போனான். கைகள் அவளின் அங்கம் இடை மேல் கீழ் என அனைத்திலும் பயணிக்க ஆரம்பித்தது. 

உதயன், என் கண்ட்ரோல் நீ தான் தாரா முடியல டி! என சொல்லி கொண்டே கழுத்து வளைவில் முத்தம் பதித்தான். அவளை அப்படியே கீழே அமர வைத்தான்.

மடியில் தலை வைத்து படுத்து கொண்டான். இருவரும் உள்ளுக்குள் புழுங்கி கொண்டு இருந்தனர். தாரா அழுது கொண்டே சிரித்தாள். 

உதயன் அவளின் இடையை கட்டி கொண்டு அந்த நட்சத்திற கூட்டத்தை  வெறித்து வானத்தை பார்த்து கொண்டு  இருந்தனர். 

உதயன் அவள் கையை எடுத்து இதயத்தின் மேல் வைத்து கொண்டு நீயும் நானும் ஒரே அறையில் அதாவது என் வீட்டில் என் படுக்கையில் என்னை கட்டி கிட்டு  தூங்குவது போல அப்புறம் நீ நைட்டி போட்டு கூந்தலை விரித்து விட்டு எங்க வீட்டு  டெரஸ்ல  நான் ரெண்டு பேரும் உன் மடியில் நான் படுத்து கொண்டு கதை பேசணும் அப்டின்னு நான் நினைத்து பார்த்து இருக்கேன் . 

தாரா இமை வெட்டாமல் அவனையே பார்த்தாள். உனக்கு திருட்டு தனமா நிறைய முத்தம் பதிக்கணும். அதை விட காலையில் தூங்கி எழும் போது அந்த உன் பின்னல் ஜடையில் கசங்கிய மல்லிகை என் மேலே அப்புறம் நம்ம படுக்கையில் சிதறி கிடக்கணும். நான் ஆபீஸ் போகும் போது நீ புடவையில் அப்படி இல்லனா சுடியில என்னை வழி அனுப்பி வைக்க வேணும் இப்படி எல்லாம் நினைத்து பார்த்து இருக்கேன். ஆனால் அதுல ஒன்னு நடந்து விட்டது. 

தாரா என்ன என்பது போல் பார்த்தாள். இதோ உன் மடியில் படுத்து இருக்கேன். உன்னோட கண்ணாடி வளையல் போட்ட கை என் தலையை கோதி கொடுக்குது இன்னொரு கை என் இதயத்தை தொட்டு கொண்டு இருக்கு.. 

தாரா மௌன மொழிகளை சிந்தி பார்த்தாள். உதயன் , ஆனால் இப்போ இருவர் மனமும் துக்க நிலையில் இந்த இரவை கடக்க போகுது!. 

தாரா அவன் இதழில் ஒற்றி எடுத்தாள். உதயன் கவ்வி பிடித்தான். அவனிடம் இருந்து பிரிந்தவள். போதும் பிளீஸ் போங்க!. 

உதயன், உன் மடியில் தூங்கனும்! எதுவும் யோசிக்காத இப்போ நீ தான் என்னோட நிம்மதி என சொல்லி கண்களில் கண்ணீருடன் அவள் மடியில் தஞ்சம் புகுந்தான். 

இந்த இரவு இப்படியே நின்று விட வேண்டும். இல்லையென்றால் நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என இருவர் மன நிலையும் சொல்லியது. 

உதயன் தூங்க வில்லை. கண்களை மூடி கொண்டு அவள் மடியில் படுத்து இருந்தான். அவன் கடை கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. இப்படியே நேரம் சென்று கொண்டே இருக்க விடியற் காலை நான்கு மணியை தொட்டது. 

உதயன் தினேஷ அவனது அறையில் படுக்க வைத்து இருந்தான். தினேஷ் அதற்கு மேல் தூங்க வில்லை. ஒவ்வொரு நிமிடமும் கலை வாணி வந்து கேட்டால் கதவை திறக்க சொன்னால் என்ன செய்வது என பயத்தில் இருந்தான். 

அதே போல் விடியர் காலை நான்கு மணிக்கு உதயன் அறையின் கதவு தட்டப்பட்டது. தினேஷ் திடுக்கிட்டு அய்யோ என்ன பண்றான்!  அய்யோ உதயா உங்க அம்மா கிட்ட என்னை மாட்டி விட்டு சென்று விட்டாயே! சீக்கிரம் வாடா என நினைத்து கொண்டே கதவை திறந்தான். 

வெளியே தினேஷ் எதிர் பார்த்தது போலவே கலை வாணி நின்று கொண்டு இருந்தாள். 

தினேஷ் அத் அத்தை என்ன இங்கே? 

கலை வாணி, எங்கே அவன்? 

அவன் குளிக்கிறான் அத்தை!. 

கலை வாணி பட்டு  வேஷ்டி சட்டை என அனைத்தும் ஒரு தட்டில் எடுத்து கொண்டே உள்ளே வந்து வைத்து விட்டு அவனை பார்த்து இன்னும் அரை மணி நேரத்தில் அவனை தயார் செய்து கீழே கூட்டி வா!.. 

சரி அத்தை!. என சொல்ல கலை வாணி கொஞ்சம் அவனுக்கு புத்தி மதி சொல்லி  கூட்டி வா என சொல்லி வெளியே சென்று விட்டாள். 

தினேஷ் வேகமாக டெரஸ் பக்கம் சென்றான். தாரா மடியில் அவன் படுத்து கொண்டு இருக்க.. 

மாப்பிள்ளை!. தாரா மேடம்!. 

உதயன் கண்களை திறந்தான். சிவந்து போன கண்களில் விழித்தான்.  அவன் தான் விடிய விடிய தூங்கவே இல்லையே!. 

இருவரும் ஒரே ஒரு முறை பார்த்து கொண்டனர். உதயன் வேகமாக எழுந்து அவளை ஒரு அணைப்பு கொடுத்து பிரிந்தான். 

தாரா வலியுடன் அவனை பார்த்து கொண்டே ஶ்ரீ மதி அறைக்கு சென்றாள். மை விழி, சஞ்சனா, கீர்த்தனா, மகிளினி என அனைவரும் அங்கு இருந்தனர். 

மை விழி, ஹே பொண்ணே எங்கே போன? உன் கூட வந்த பொண்ணு வேலை செய்யுது ஆனால் நீ இவ்வளவு நேரம் எங்கே போன!. 

தாரா அமைதியாக நின்றாள்.

ஶ்ரீ மதி, விடுங்க அண்ணி! என சொல்லி விட 

தாரா  மேக் அப் செய்ய ஆரம்பித்தாள். அதன் பின் ஒரு சில நிமிடத்தில் ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள். 

அனைத்து ஒப்பனை கலைஞர்களுக்கு நடுவில் தாரா ஒயிலாக அமர்ந்து கொண்டு இருக்கும் அவளை அழகாக்க ஆறு பேர் மும்முரமாக ஒப்பனை செய்வர். ஆனால் இன்று தாரா ஶ்ரீ மதிக்கு ஒப்பனை செய்து கொண்டு இருக்கிறாள். 

மகி, மை விழி, அஞ்சனா, கீர்த்தனா, பவித்ரா  என அனைவரும் அவர்களையும் அழகாக புடவை கட்டி கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர். 

கார்த்திக், சூர்யா இருவரும் உதயனுக்கு டஃப் கொடுப்பது போல் வேஷ்டி சட்டையில் தயாராகி கொண்டு உதயன் அறைக்கு வந்தனர். 

உதயன் கண்ணாடியை பார்த்து அமர்ந்து இருந்தான்.  சூர்யா, “அப்புறம் மச்சான் இன்னிக்கு ராத்திரி முதல் ராத்திரி போல ரொம்ப மேடம் நினைப்பு வாட்டி கண்ணு சிவந்து போச்சு போல! ” 

உதயன் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். தினேஷ் பட்டு துண்டை சரி சமமாக மடித்து உதயனுக்கு போட்டு விட்டு கொண்டு இருந்தான். 

இல்ல மாமா என எழுந்தான். 

சூரியா,  என்ன மச்சான்  ஜாலி தான் போலயே  ஒரே லவ்வு மோட் போல கண்ணு சிவந்து கடக்குது… 

உதயன் அமைதியாக இருந்தான்.

சூரியா, அப்புறம் தினேஷ் அடுத்த மாப்பிள்ளை நீங்க தான்! 

தினேஷ், நீங்க வேற கடுப்பு கிலப்புறீங்க!. 

சூர்யா, தினேஷ் அப்படி சொல்லாதீங்க சுரபி இன்னிக்கி வரா!  உங்க கிட்ட விழுந்து விட்டாள். 

நிஜமாவா!  என மின்னும் கண்களுடன் கேட்டான். 

சூர்யா, ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்க மாமா, அத்தை, சசியன்  எல்லோரும் வராங்க நீங்க டிப் டாப்பா இருந்தால் தான் அடுத்தடுத்து நல்லா இருக்கும் நேராக வளைகாப்பு ஃபங்ஷன்ல ஜோடியா நீங்களும் சுரபியும் உட்கார்ந்து இருக்கும் காட்சி கண்ணு முன்னாடி ஓடுது!. 

தினேஷ் ஒரு நிமிடம் கனவில் சென்று கொண்டு இருந்தான். 

சூரியா, ஆனால் உங்க லுக்கு இப்போ! அவ்ளோ இம்பிரஸிவா இல்லையே!. 

தினேஷ், இதோ இப்போவே கிளம்புகிறேன் நீங்க உதயன் கூட இருங்க என சொல்லி விட்டு கிளம்பு விட்டான். 

உதயன் அமைதியாக அமர்ந்து இருக்க கார்த்திக், சூரியா இருவரும் அவன் முன்னால் அமர்ந்தனர். 

மாமா! என இருவரையும் மாறி மாறி பார்த்தான். 

ம்ம் சொல்லுங்க மச்சான்! 

ஒன் ஒன்னும் இல்ல என தலை குனிந்து அமர்ந்து கொண்டான். 

நேரம் ஒரு பக்கம் சென்று கொண்டே இருந்தது. அபி, ஜெய் மூவரும் வந்து சேர்ந்தனர். 

உதயன் அறைக்கு ஜெய், அபி இருவரும் வந்தனர். 

ஜெய், சூர்யா! 

உனக்கு என்ன வேலை! அதே போல் உங்களுக்கு என்ன வேலை யார் கூப்பிட்டா!  

வெளியில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. மகி கூப்பிட்டாள். 

வருண், மாமா மகி தான் கூப்பிட்டாள். என வந்து நின்றான். 

உதயன் பார்வை குரல் வந்த பக்கம் திரும்பியது. பட்டு வேஷ்டி சட்டையில் நின்று கொண்டு இருந்தான். 

கார்த்திக்,  என்ன மச்சான்!. இங்கே யாருக்கு கல்யாணம்?

வருண், மகியுடைய அண்ணனுக்கு தான் என காலரை சரி செய்தான். 

உதயன் எழுந்து நின்று மாமா அம்மா வர சொன்னார்கள். போலாமா!. 

வருண், அபி, மாமவய்யா வாங்க போலாம். என பார்க்க இவன் எந்த ஏழரைய இழுத்து விட போறானோ தெரியலயே! என நினைத்து கொண்டு பின்னால் சென்றனர். 

ஶ்ரீ மதி,  அஞ்சனா  இருவரும் பேசி கொண்டு இருக்க தாரா ஒப்பனை முடித்து விட்டு உடை மாற்ற அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று விட்டாள். 

போட்டோ கிராபர் மேடம் இப்போ கொஞ்சம் போஸ் எடுக்கணும் கொஞ்சம் அப்படியே வெளியே வாங்க இப்போ லைவில் டீவியில் போயிட்டு இருக்கு!. 

அஞ்சனா அருகில் நின்று கொண்டு இருக்க 

போட்டோகிராபர் மேம் உள்ளே  அப்படியே நடந்து போங்க!. 

ஶ்ரீ மதி நடந்து வந்தாள். மேம் ஜனல் பக்கம் நில்லுங்க!. 

போட்டோ கிராபர், மேம் என அஞ்சனாவை அழைத்தார். 

சொல்லுங்க!. 

மாலை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க.. 

இதோ போகிறேன் என அவள் வெளியே சென்றாள். 

இங்கே சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் உதயனை அழைத்து கொண்டு மணவரை வந்தனர். இதில் யார் மாப்பிள்ளை என அனைவருக்கும் குழப்பம்.. 

உதயன், சூரியா, கார்த்திக் என அனைவரும் ஒரே வேடத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க ஒரு போட்டோ எடுக்கும் குழு சக்கு சக்கு என எடுத்து தள்ளினார்கள். 

உதயன் அந்த இடத்தை அலசி விட்டு தன் தாய் இருக்கும் இடத்தை பார்த்தான். 

சூர்யா, மாப்பிள்ளை போங்கோ அய்யர் வெய்டிங்!. 

உதயன் நேராக சென்று அமர்ந்தான். சூர்யா கார்த்திக் இருவரும் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டனர். 

கலைவாணி மற்றும் வசந்தன் இருவரையும் அழைத்து சில சடங்குகள் செய்யபட்டது.  

கலைவாணி, சிரிக்க காசு கொடுக்கணுமா!. 

சூர்யா, மச்சான் கொஞ்சம்  சிரிங்க..

உதயன் கஷ்ட பட்டு சிரித்தான். அய்யர் மந்திரம் சொல்ல அதை திருப்பி கூறி கொண்டு இருந்தான். 

அவன் வாய் அசை போட்டது மற்ற படி எந்த சத்தமும் வர வில்லை. 

உதயன் கண்கள் தாராவை தான் தேடியது. 

அடுத்து திரு செல்வம் அவனுக்கு மாலை அணிவித்து சடங்கு செய்யும் நிகழ்வு நடந்தது. 

அந்த நேரம் சூர்யா, மாமா நெற்றி பட்டை கட்டி விட வேணும். என எழுந்தான். 

மகி ஆச்சரியமாக சூர்யாவை பார்த்தாள். சூர்யா, இதெல்லாம் நீ செய்யணும் டி பாரு நான் செய்து கொண்டு இருக்கேன். 

மகி, என் அண்ணா மேல் அவ்ளோ அக்கறையா! 

அப்படி எல்லாம் இல்ல அவனை விட அதிக போட்டோவில் அவனுக்கு இணையா நான் இருக்கணும் அதான்!  

மகி அவனை முறைத்தாள். 

சூர்யா, போடி போடி அப்படி பார்க்காத அப்புறம் இன்னிக்கி எனக்கும்  ஹனி மூன் ரூம் வேணும் போல தொனும்.. 

கார்த்திக் மை விழி கிட்ட இந்தா இதை போய் ஶ்ரீ மதிக்கு கட்டி விட்டு கூட்டி வாங்க!. .

மை விழி, ம்ம் பரவாயில்லை என சொல்லி வாங்கி கொண்டு சென்றாள். அவள் பின்னால் சிவன்யா, பவா, இருவரும் பட்டு பாவாடையில் ஜம்மென சென்றனர். 

சத்ய தேவ் உதயன் அருகில் நின்று கொண்டு இருந்தான். 

குருக்கள், பொண்ணை அழைத்து வாங்கோ!  

கலை வாணி, மை விழி அண்ணியை அழைத்து வா!  .

ம்ம் இதோ போறேன் மா என சென்றாள். 

ஒரு பக்கம் மங்கள இசை ஓடி கொண்டு இருக்க சூரியா அருகில் வருண் வந்து அமர்ந்தான். 

மை விழி மணப்பெண் அறைக்கு செல்ல கதவு சாத்த பட்டு இருந்தது. கிட்ட தட்ட அது மணவரைக்கு அருகில் தான் இருந்தது. அவள் கதவை தட்டி ஶ்ரீ மதி! ஶ்ரீ மதி கதவை திற.. 

அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லை. 

மை விழி அறையை வேகமாக தட்டினாள். .ஶ்ரீ மதி! ஶ்ரீ மதி! 

உதயன் கண்கள் கொஞ்சம் மயக்கத்தில் இருந்தது. அவன் சொக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். 

திரு செல்வம், சதீஸ், சாரதா மூவரும் அறை பக்கம் வர கலை வாணி தவிப்புடன் பார்த்தாள். 

குருக்கள் மீண்டும் பொண்ணை அழைத்து வாங்கோ!. 

இதோ சாமி ஒரு நிமிடம் என கலை வாணி வேகமாக அறை பக்கம் சென்றாள். 

மகி, அய்யோ நான் நினைச்ச மாதிரியே நடக்குமோ! என பதட்டத்தில் நின்று கொண்டு இருக்க.. 

சூரியா, ஹே என்ன ஆச்சு பசிக்கிதா! சாப்பிட போலாம்!  மகி வரயா!. கார்த்திக் நீ!  

கார்த்திக், சூரியா இங்கே புயல் அடிப்பது போல் இருக்கு என்ன டா இப்படி கேட்கிற!  

மகி, மாமா அவருக்கு அத்தனையும் கொழுப்பு பாருங்க உங்க வீட்டு கல்யாணமா இருந்தால் இப்படி பேசுவீங்களா! 

சூரியா, ஹே அறிவு கெட்டவளே என்ன பண்ண சொல்ற? கார்த்திக் வாடா பெர்ஃபாம் பண்ணலாம்.. 

வருண், மாமா நானு!.. 

சூர்யா, நீங்க இல்லாமலா வாங்க வாங்க என எழுந்து நின்றனர். 

மகி வேகமாக ஶ்ரீ மதி அறையை நோக்கி சென்றாள். உதயன் அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். 

கார்த்திக், இத்தனை நடக்குது உதயன்  கொஞ்சம் அசையுறானா பாருங்க.. 

விடு கார்த்திக் என சொல்லி கொண்டே அறை பக்கம் சென்றனர். கார்த்திக், வருண் இருவரும் வலு கொடுத்து கதவை உடைக்க செல்ல.. 

சூர்யா, இது படம் இல்ல நீங்க ஹீரோ இல்ல…என சொல்லி கொண்டே மண்டபத்தின் பொருப்பாகரை வர வளைத்து கதவை திறந்தான். 

சாரதா அழுது கொண்டே உள்ளே சென்று பார்க்க அங்கே ஶ்ரீ மதி இல்லை. கலை வாணி அதற்கு மேல் கலங்கி போய் இருந்தார். 

மை விழி, மா ஶ்ரீ மதி எங்கே? அத்தை! சதீஷ் எங்கே டா!. 

அனைவரும் அறை முழுவதும் தேடினர். சூர்யா, வெளியே சென்று குருக்கள் கிட்ட கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 

என்ன ஆச்சு? 

அனைவரும் மண்டபத்தில் ஆளுக்கு ஒன்றை பேச அங்கே சலசலப்பு மங்கள இசை நிறுத்தப்பட்டது. 

மகி அழ ஆரம்பித்தாள். 

சூர்யா, ஹே எதுக்கு அழற என் குட்டி இருக்கு பிச்சிடுவேன் உன் அண்ணா பாரு தெம்பா உட்கார்ந்து இருக்கான். 

மகி நேராக உதயன் அருகில் சென்றாள். அண்ணா! அண்ணா!  

உதயன் வெற்று பார்வை பார்க்க ஶ்ரீ மதி காணோம் டா! 

உதயன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். அவன் பார்வை தினேஷ் இருக்கிறானா என கண்கள் தேடியது. 

தினேஷ் இல்லை.. 

மாமா தான் கடத்தி இருக்கணும் என நினைத்து கொண்டு ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் அனைவரும் இருக்கும் பக்கம் செல்ல . .

அனைவரும் அவர்களுக்குள் பேசி கொண்டு எழுந்தனர். 

வருண், இந்த கல்யாணம் நடக்கும் யாரும் எங்கேயும் போக வேணாம்… 

அந்த நேரம் ஜெய் கால் செய்தான். வருண் அழைப்பு ஏற்று மறு முனை சொன்ன பதிலில் அதிர்ச்சி ஆகி நிற்க.  

தினேஷ் இன்னொரு பக்கம் என்ன ஆச்சு என சொல்லி கொண்டே ஓடி வந்தான். 

அதை பார்த்து உதயன்…? 

தாரா ஒரு இடத்தில் நின்று கொண்டு இருக்க 

கவ்யா, சாரி தாரா என்னால் சரியான நேரத்தில் எல்லாம் சொதப்பி விட்டது. 

என்ன சொல்றீங்க? 

கவ்யா, பொண்ணை கடத்த முடியல.. 

தாரா உறைந்து நின்றாள். 

அப்போ ஶ்ரீமதி எங்கே போனாள்…

தொடரும்..

You may also like

Leave a Comment