Episode -13
அன்புவும் பூங்கொடியும்
படத்தில் வருவது போல பூக்கள் தூவி முதலிரவு இல்லை; பூங்கொடியின் அறைக்குள் இருந்தான் அன்பு செல்வன். மிகவும் சங்கடமாக இருந்தது. அவனுக்கும் இதில் துளிகூட விருப்பம் இல்லை. அன்புசெல்வனுக்கு வீட்டு நியாபகம் வர, நேராக அன்னலட்சுமிக்கு அழைத்தான்.
“என்ன அன்பு இந்த நேரத்தில் அழைச்சிருக்க?”
“மா, நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்கத்தான் கால் பண்ணினேன்.”
“தங்கம், நீ தூங்குடா! பூங்கொடி வரப்போறா! அப்புறம் எதுவும் சொல்லுவா!”
“மா, உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம்” என அவன் ஆரம்பிக்க,
“தம்பி, நீ பேசுறது கேட்கல” என வேகமாக போனை கட் செய்தார் அன்னம்.
“எனக்கு அவன்மேல விருப்பமே இல்ல! இப்போ என்ன மா என்னை அங்கே அவன் கூட தூங்க அனுப்புற?” என குதித்துக்கொண்டிருந்தாள் பூங்கொடி.
“ஹே, அடி வாங்க போற! இனி அவன் தான் உன்னோட புருஷன்! நடக்குதோ நடக்கலையோ, எல்லாம் சீக்கிரமே நடக்கணும். நீ இந்த ரெண்டு வருஷத்தில் சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக்க!”
“மா, என்ன பேசுற நீ? ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவியா?”
“நீ குழந்தை பெத்துக்கிட்டாதான் நான் அங்கே உரிமையா வர முடியும். இல்லன்னா நீயே பார்த்துக்க… அப்பா என்னைய அங்கே அனுப்ப மாட்டார், அவ்வளவுதான்” என்றார் தனம்.
“தங்கம், இங்கே யாருமே ரொம்ப விருப்பப்பட்டு கட்டிக்கிறது இல்ல. எல்லார் வாழ்க்கையும், ‘இனி நமக்கு இவன் தான்’னு யோசிச்சதுக்குப் பிறகுதான் வாழ்க்கையை ஆரம்பிக்க ஸ்டார்ட் பண்றாங்க. எவனா இருந்தாலும் இதுதான். அதுவும் அன்பு நல்ல பையன்” என்றார் சந்தனம்.
“அப்போ எல்லாரும் அவனை ஏத்துக்கிட்டீங்களா?”
“ஹே, அடி வாங்கப் போற! ஒழுங்கா மாமான்னு கூப்பிடு” என பாலை நீட்டினார் தனம்.
எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றாள் பூங்கொடி. தனம் பெருமூச்சுடன் பார்க்க, “விடு தனம், அன்பு அவளை மாத்திடுவான்.”
“அன்பு மாத்தக்கூடாது. என் பொண்ணு அவனை மாத்தணும். அவன் ‘அமுலி’ கட்டுப்பாட்டுக்கு வரணும். அந்த வீடு பூங்கொடி பேரில் மாறணும்” என்றாள் தனம்.
இங்கே தடாலடியாக உள்ளே நுழைந்தாள் பூங்கொடி.
அவள் வந்ததும் எழுந்தவன், “பாப்பா” என ஆரம்பிக்க,
கதவை வேகமாக தாள் போட்டவள், “சரி, சொல்லு… எப்படி உனக்கு அனுசுயாவ தெரியும்?” என்றாள்.
“அனுசுயா? அது யாரு?” என அன்பு புரியாமல் கேட்க,
“அப்போ திவ்ய பாரதி பத்தி சொல்லு!” என அவன் முன்னால் பால் சொம்பை வைத்தாள்.
“ஹே, யாரு அது? ஹான்… பாரதியைத் தெரியும்… செல்வ கணபதி பஸ் டிரைவர்” என அன்பு யோசிக்க,
கைகளைக் கட்டிக்கொண்டு எதிரில் இருப்பவனை பார்த்தாள் பூங்கொடி.
“அழகான புருவம், மிகவும் அடர்த்தியான புருவம். முகம் அத்தனை லட்சணம். எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அழகாக இருக்கிறான். அதுதான் பெரிய பிரச்னை. உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க, மீசை மிகவும் அடர்த்தியாக இருந்தது. அந்தத் திருத்தப்பட்ட மீசை அவனது மேல் உதட்டை மூடியிருக்க… உடல் சீராக இருந்தது. குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. விரல்கள் இன்னும் அழகு. வேஷ்டி கட்டியிருந்தான். அவனது பேச்சே மயக்கும், அவ்வளவு கனிவு. செல்வனாகத்தான் இருக்கிறான். பிரம்மன் படைத்த ஒரு ஆறடி தமிழ்நாட்டுச் சிற்பம்… நோ… கிரேக்கச் சிற்பம்.”
“பூங்கொடி, சத்தியமா எனக்கு யாருன்னே தெரியல!” என்றான் அன்பு.
அதில் தன்னிலைக்கு வந்தவள், நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, “அப்படி உட்காரு” என சேரைக் காட்டினாள்.
“குடிப்பாயா?”
“இல்ல!”
“சிகரெட் பிடிப்பியா?”
“ஹே, இல்ல!”
“அப்போ பொடி?”
“என்ன பொடி?” எனக் கேட்டான்.
“சரி, சொல்லு… திவ்ய பாரதி, அண்ட் அனுசுயா… ரெண்டு பேரை பத்தி.”
“எனக்கு யாரையும் தெரியாது. ‘டேய், வடக்கு புதுப்பாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் ஒரு பியூட்டி பார்லர் இருக்கே! அதை நடத்திட்டு இருக்கிறவ தான் திவ்ய பாரதி. உன்னோட சீனியராம்! எத்தனை பேர் கூட ‘அப்ஃபர்’ல இருக்க?'”
அன்பு செல்வனின் முகம் மாறிப் போனது. அவன் எதுவும் பேசாமல் இருக்க,
“என்ன, லிப்ஸ் பிங்காக இருக்கு? எப்படி? லிப் கேர் யூஸ் பண்றியா என்ன?” என பூங்கொடி கேட்டாள்.
“அன்னத்துக்கு இப்படித்தான் உதடுகள் இருக்கும்” என்றான் அன்பு.
“ச்சீ!” என முகத்தைச் சுளித்தவள், “உன்கிட்ட முக்கியமா பேசணும்.”
“சொல்லு!”
“எனக்கு இந்த கல்யாணத்தில் துளிகூட விருப்பம் இல்ல…”
“சரி!”
“இப்போ அலங்காரம் பண்ணி இங்கே அனுப்பி வச்சிருக்காங்க! எனக்கு உன்கூட அப்படி நான் கனவில் கூட ‘ச்சீ'” என முகம் சுழித்தாள் பூங்கொடி.
அன்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
பூங்கொடி அவனைப் பார்த்து, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நாலு வருஷம் போகட்டும். அப்புறம் குழந்தையைப் பத்தி யோசிக்கலாம்… அண்ட் நீயும் என் பக்கத்தில் அப்போதான் வரணும், புரியுதா?”
“நான் எதுக்கும் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். விருப்பமில்லாமல் கிட்ட வர மாட்டேன்… அண்ட் எனக்கு அப்படி ஒரு எண்ணமும் உன்மேல இல்ல. நானே இதை உன்கிட்ட சொல்ல நினைச்சேன், நீயே சொல்லிட்ட! அண்ட் உன்னோட ஒரே ஒரு ரிக்வஸ்ட்…”
“என்ன?” என்பதைப்போல பூங்கொடி பார்க்க,
“என் அம்மா என்னையவிட உன்மேல ரொம்ப பிரியமா இருக்காங்க.”
“ஹே, உங்க அம்மாவ பத்தி பேசாத” என பூங்கொடி ஆரம்பிக்க,
“நீ பேசும்போது நான் குறுக்க பேசினேனா?” எனப் புருவம் தூக்கினான். அதில் கடுமை கொஞ்சம் ஒட்டியிருக்க, சட்டென வாய் மூடிக்கொண்டாள் பூங்கொடி.
“யார் என்ன சொன்னாலும் அவங்க என்னோட அம்மா. உன்னோட மனசுல என்னோட அம்மாவை ரொம்ப கேவலமா நினைச்சிருப்ப. அது எனக்குத் தெரியும். அதை பத்தி எனக்கு கவலை இல்ல. நான் சொல்லி இங்கே எதுவும் மாறிடப் போறதில்லை. எங்க அம்மாவுக்கு மரியாதை கொடு. எடுத்து எரிஞ்சு பேசாத. முக்கியமா என் அம்மா முன்னாடி என்னை ‘மாமா’ன்னு கூப்பிட வேண்டாம், அட்லீஸ்ட் ‘வாங்க, போங்க’ன்னு கூப்பிடு. இந்த ரூமுக்குள் நீ எப்படி வேணாலும் இருந்துக்க. ஆனால் வெளியே போகும்போது இப்படித்தான் இருக்கணும். உனக்கு ஒரு வேலை எங்க அம்மா வைக்க மாட்டாங்க. நீ அவங்ககிட்ட கொஞ்சம் மரியாதையா நடந்துக்க, அதுதான் வேணும். உங்க வீட்டில் இருக்கிறதைவிட அங்கே நீ உன்னோட இஷ்டத்துக்கு இருக்கலாம், என்னோட அப்பாவை! அதான் உன்னோட தாத்தாவை உனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் இதையும் மீறி எதையும் நீ பண்ணா…” என அன்பு நிறுத்த,
“என்னடா பண்ணுவ?”
அன்பு சிரித்துக்கொண்டே, “நான் எதுவும் பண்ண மாட்டேன்” என்றான். “அய்யனுக்கு எங்க அம்மாவை யாரும் எதுவும் சொன்னா தாங்க முடியாது” என்ற அப்பாவை எதிர்த்து நான் இதுவரை பேசினது இல்ல. அப்புறம் நீ உன்னோட தாத்தாகிட்ட திட்டு வாங்குவ! அங்கே மட்டும் இல்ல, அதை உன்னோட அப்பாகிட்ட நிச்சயம் சொல்லுவார். தாத்தாவை எதிர்த்து உன் அப்பாவும் எதுவும் பேச மாட்டாரு. அப்போ நீயே முடிவு பண்ணிக்கோ” என்றவன் படுக்கையின் இன்னொரு பக்கம் வந்து படுத்துக்கொண்டான்.
கைகளைப் பிசைந்தபடி நின்ற பூங்கொடி என்ன செய்வதென முழித்தாள்.
அடுத்த நாள் அழகாக விடிய, அவனது கழுத்தை கட்டிக்கொண்டிருந்தாள் பூங்கொடி. விடிய விடிய அவளை விலக்கிவிட பெரும்பாடு பட்டான் அன்பு. அவளுக்கோ பயங்கர தூக்கம். என்ன நடக்கிறது என ஒன்றுமே தெரியவில்லை. இதோ மீண்டும் நெருக்கி வந்து படுத்துக்கொண்டாள். புரண்டு கொண்டே இருந்தாள்.
“அமுலி, நகரு!” என அன்பு சொல்ல, அவளின் கைகள் அவனது நெஞ்சு முடியைப் பிடித்திருந்தது.
“ஐயோ, டார்ச்சர் பண்றாளே?” எனத் திரும்பியவன் ஒரு நொடி திகைத்து பார்த்தான். அக்கா மகளை…
“எவ்வளவு அழகான முகம். ஆனால் எப்பொழுதும் கோபம்தான்! எல்லாருக்கும் என்னைப் பிடிக்குது. ஆனால் இவளுக்கு மட்டும் ஏன் என்னைப் பிடிக்க மாட்டிக்கிது? நான் என்ன பண்ணினேன்? பொண்ணுங்ககிட்ட பேசாமல் இருக்கும்போதே இத்தனை கோபப்படுறா? நீங்காத மோகங்கள் ஏராளம் உண்டு, உன் மேலும் உண்டு. அது ஏகாந்தத்திலும் சரி, நிதர்சனத்திலும் சரி. திருத்தப்படாத புருவங்கள்… விடைக்கும் மூக்கு. இதுல மூக்குத்தி போட்டால் எத்தனை அழகா இருக்கும்?” என்றவன் அந்தச் சிறிய மூக்கைத் தொட்டு பார்த்தான்.
கனவில் கூட நினைக்கவில்லை இப்படி ஒரு தருணம் வரும் என்று. அப்படியே அவன் விரல்கள் உதட்டை தொட்டது. “எனக்கு சொந்தமானதுதானே… ம்ம்… எனக்குத்தான்” என நினைக்கும்போது உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. “ஹார்மோனில் வெள்ளப்பெருக்கு ஆகாமல் இருந்தால் சரிதான். ஹி ஹி ஹி… டார்க் காமெடி.”
“ஐயையோ, இம்சை பண்றாளே? இப்போ தட்டி எழுப்பினால், எழுந்ததும் நான் தான் இவளை கட்டிக்கிட்டு படுத்தபோல ரகளையே பண்ணுவா!” என்றவன் அக்கா மகளை ரசித்துவிட்டு அவள் அணைப்பிலிருந்து விடுபட முயற்சி செய்தான்.
இதோ, கஷ்டப்பட்டு கண்ணை விழித்தவள் உடனே ஆரம்பித்தாள்.
“டேய், எதுக்குடா கிட்ட வந்தே?”
அன்பு…?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels