Episode-112
ஜடம் மாதிரி நின்னுட்டு இருக்கான்? இவ்வளவு தான் உனக்கு மரியாதையா பங்காரம்!! என கேட்டான் சிவதாசன்.
என்ன பண்ணிட்டு இருக்க? ரோல் நம்பர் 21? போ போய் வண்டிய எடு!! என அதட்டினாள் நிலா. அவனது முகத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உற்சாகமாக இருந்தது. சிவாவை பார்த்து அவன் கோபப்பட வேண்டும். அவனது ஒரு லைஃப் ஜாக்கெட்டும் போய் விட்டால் எல்லார் முன்பும் நன்றாக அவமான படுத்தி துரத்த வேண்டும் என நினைத்தாள்.
ருத்ரன் ஓட்டுனர் இருக்கைக்கு சென்றவன் மீண்டும் பின்னால் வந்தான்.
என்ன பண்ற? என நாயை விட கேவலமாக அதட்டினாள் நிலா.
இல்ல மேடம் சாருக்கு கதவை திறந்து விடலாம்ன்னு என ருத்ரன் சிவாவுக்கு கதவை திறந்து விட..
பரவாலையே பங்காரம் ரா கூச்சண்டி என்றான்.
நிலா ஒரு நொடி பெயரய்ந்ததை போல பார்க்க…
மேடம் ஏறுங்க என வேகமாக இன்னொரு பக்கம் கதவை திறந்து விட்டான் ருத்ரன்.
நிலாவுக்கு சப்பென ஆகி விட்டது. ருத்ரன் காரை ஸ்டார்ட் செய்து சீராக சென்றான்.
என்னாச்சு உனக்கு? டல்லா இருக்க? நீ எப்பவும் ஹேப்பியா இருக்கணும் டி என அவளின் தோல் மேல் கையை போட்டான். நிலாவின் பார்வை முழுவதும் ருத்ரன் மீது தான் இருந்தது. அவ்ளோ தானா? ஆனால் நான் விட மாட்டேன். கண்டிப்பாக விடவே மாட்டேன். என் முன்னாடி ருத்ரன் தோத்து நிக்கணும் என கூறி கொண்டாள்.
சிவதாசன் நேராக உள்ளே சென்றதும் spr, நிவாஸ், தேஜு என அனைவரிடமும் பேசினான்.
நிலா அனைவரின் முன்னும் ருத்ரனை பார்த்து, ஹே சிவாவோட பெட்டிய மேலே என்னோட ரூமுக்கு எதிரில் வச்சிடு!! என்றாள்.
நிலா நீ ரொம்ப திமிரில் ஆடாத என தேஜூ கோபத்துடன் வந்தார்.
என்னாச்சு அத்தை? எதுக்கு டென்ஷன் ஆகிறீங்க? என சிவா கேட்க..
ருத்ரன் தேஜுவை புன்னகையுடன் பார்த்து, விடுங்க மேடம். நான் பார்த்துக்கிறேன் என சொல்லி விட்டு சென்றான்.
என்ன பண்ணிட்டு இருக்க நீ? என spr கேட்க..
நிலா கொஞ்சம் சத்தமாகவே, நீங்க தானே சொன்னிங்க குழந்தைய பார்த்துக்குறேன்னு அதனால நான் சிவாவை பெல்லி பண்ணிக்க போறேன். என்றாள்
ஹே அறிவு கெட்டவளே!! என தேஜூ அடிக்க பாய..
நிலாவின் பார்வை படியில் ஏறும் ருத்திரன் மீது தான் படிந்திருந்தது.
ருத்ரன் எதையும் கண்டுகொள்ளாமல் பெட்டியை வைத்து விட்டு வந்தான் தோரனையாக…
ஹரிணி ருத்ரனை பார்த்து, டேய் அவள் என்ன சொல்றான்னு கேட்ட தானே!! நீ பாட்டுக்கு கேசுவலா போற?
அவன் எதுக்கு இதுல கருத்து சொல்லணும்? என்ன அக்கா பேசிட்டு இருக்கீங்க? என சிவா கேட்க..
ருத்ரன் சிரித்து கொண்டே, இப்போ நான் இந்த வீட்டு வேலைக்காரன் தான். இன்னும் மூணு மாசம் இருக்குல்ல. என்றவன் சார் என SPR பக்கம் சென்று இன்னிக்கி ஆபிஸ் போகணுமா சார்? என கேட்டான்.
அது வந்து என SPR பேச வர, அதற்குள் நிலா அவன் பக்கம் திரும்பி, போய் வெளியே வெயிட் பண்ணு! எங்க அப்பா வரும்போது தான் வருவாங்க. நீ கார் நிறுத்திருக்க அப்படின்ற காரணத்துக்காக ஆபீஸ் கிளம்புணுமா என்ன? என்று ஏளனமாக கேட்டாள்.
நான் வெளியே போகணும். உன்னோட சர்வன்ட் வருவாரா? என்று நிதின் கேட்க..
வீட்டில் இருக்கும் அனைவர் பார்வையும் நிதின் மேல் திரும்பியது. ஹரிணி அவனை எரிப்பது போல பார்த்து விட்டு சென்றிருந்தாள்.
கண்டிப்பா!! அதுக்கு தான இந்த வீட்ல வேலைக்காக இருக்கேன் என்றவன் நேராக நடந்தான்.
யாரு பங்காரம் அவன்? என சிவா கேட்க..
அவர் தான் இந்த வீட்டு மாப்ளை. என்றாள் மீனாட்சி.
எனக்கு புரியல!!
அவர் தான் நிலாவோட புருஷன். தீரா!! என மீனாட்சி கூறினாள்.
சிவா தனக்கு அருகில் இருப்பவளை பார்த்து விட்டு வேகமாக அவனது அறைக்கு சென்று விட்டான்.
நிவாஸ் பிரகாஷ் என நிலா அழைக்க..
Spr புருவம் தூக்கி தன் மகளை பார்த்தார்.
என்ன பேர் சொல்லி கூபிடுறயா?
பின்ன அது தானே உன்னோட பேர்! நீ என்னோட சிப்ளிங் அவ்ளோ தான் உனக்கும் எனக்கும். அதே போல உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வை! என்னோட விஷயத்தில தலையிட வேணாம்னு என கூறி விட்டு தேஜீவின் கையில் இருக்கும் குழந்தையை வாங்க முற்பட்டாள்.
ஹே தரமாட்டேன் போடி!!
மா குழந்தைய கொடு!!
அவனே உனக்கு வேணாம்னு சொல்லிட்டல்ல அவனோட குழந்தை உனக்கு எதுக்கு? ஓவரா ஆடிட்டு இருக்க நிலா. இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல. அவனோட அப்பா இன்பராகவன் எப்படியாபட்ட ஆள் தெரியுமா? எவ்ளோ டிசிபிளின் எவ்ளோ பங்சுவள் குடும்பம் மொத்தமும் ஆர்மி போலீஸ்ன்னு மரியாதையா இருக்கும் குடும்பத்தில் பிறந்தவன் டி உன்னோட புருஷன்!! நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு அவனை அவமான படுத்துற! அவனோட அம்மாவுக்கு இந்த விசயம் தெரிஞ்சது. உன்னை கொன்னே போட்டுடுவாங்க என்றார் தேஜூ.
யாருக்கு தெரிஞ்சாலும் எனக்கு கவலை இல்ல. அவன் ஒன்னும் ஒழுக்க சீலன் இல்லை. நான் எப்படி இருந்தாலும் பின்வாங்க மாட்டேன். என்னோட குழந்தைய கொடு என பிடுங்கி சென்று விட்டாள் நிலா.
இப்போ என்ன நடந்ததுன்னு இப்போ என்னை முறைச்சு பார்க்கிறீங்க? என மீனாட்சி நிவாசிடம் கேட்டாள்.
நீ இன்னும் அவனை மறக்கல போல!!
“நான் மறந்துட்டேன்னு உங்ககிட்ட சொல்லும்போது நீங்க என்ன நம்பல என்னையும் தீராவையும் வச்சு பேசினீங்க இப்போ நான் பேசும்போது இன்னும் மறக்கலையான்னு கேக்குறீங்க என்னைய என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணாலும் பேசுவீங்க அதைக் கேட்டுட்டு இருப்பேன்னு நினைக்கிறீங்களா? உங்களோட தங்கச்சி எனக்கு அவளை பார்க்கும் போதே தெரியும் அவ உமக்குசும்பின்னு தீராவ அப்படி ட்ரீட் பண்றா அவ கொஞ்சம் கூட தீராவுக்கு பொருத்தமானவளே இல்ல..”
நிவாஸ் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான். மீனாட்சி தன் கணவனை பார்த்து “ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க. தீரா கூட நான் போகணும்னு நினைக்கல..அதுதான் உண்மை. அப்படியே நான் போயிருந்தாலும், நீ நிவாஸ் கூட இருந்ததானன்னு ஒரு வார்த்தை கூட அவர் கேட்க மாட்டார். அவரை பற்றி எனக்கு தெரியும். உங்களுக்கு எதுக்கு இத்தனை கெட்ட எண்ணம்? எனக்கு நல்லாவே தெரிஞ்சது அவர அந்த அளவுக்கு அடிச்சீங்களாமே இது கேவலமான ஒரு விஷயம்” என்றவள் குழந்தையுடன் பக்கத்து அறைக்கு சென்றாள்.
காரை அமைதியாக ஓட்டி கொண்டிருந்தான் ருத்ரன்.
அன்னிக்கு நான் உன்னை வேணும்னு அடிக்கல!! என்றான் நிதின்.
உங்க இடத்தில் யாரு இருந்தாலும் அப்படி தான் நடந்துப்பாங்க. அதே போல நானும் வேணும்னு பண்ணல. எனக்கு நிலான்னு தெரியாது. என்றான் ருத்ரன் காரை ஓட்டி கொண்டே..
நிதின் அவனை பார்த்து, நிலா பண்றது ரொம்ப மிச்டீரியசா இருக்கு. அண்ட் அவளோட வேலைய பார்த்தால் ஒண்ணு தெரியுது.
ம்ம்!! என்றான் ருத்ரன்.
அவள் உன்கூட வரமாட்டான்னு நினைக்கிறேன். பிளீஸ் இப்படி இங்கே இருந்து கஷ்டபடாத! கிளம்பிடு என்றான் நிதின்.
வெற்றியோ தோல்வியோ நேருக்கு நேர் பார்த்துக்கிறேன். என்றான் ருத்ரன்.
நிதின் குட்டி புன்னகையுடன் உங்க அக்கா போல இருக்க!! ரொம்ப பிடிவாதமா!! என்றான்.
ருத்ரன் புருவம் கொஞ்சம் இளகி உதடுகள் புன்னகையை தத்தெடுத்து கொண்டது..
இந்த ஆறு மாசத்தை முடிச்சிட்டு என்ன பண்றதா உத்தேசம்? என கேட்டான் நிதின்.
இன்னும் முடிவு பண்ணல!! என ருத்ரன் கூற..
அந்த ஸ்பெஷல் போர்ஸ் காட் ஆஃபர் என்னாச்சு? என கேட்டான் நிதின்.
அதை பத்தி யோசிக்கல!! என்றான் ருத்ரன்.
யோசி!! நீ எப்போ வேணும்னாலும் ஜாயின் பண்ணிக்கலாம். எங்க வீட்டு மாப்ளை ஆர்மி போக கூடாது என்றான் நிதின்.
காரை சட்டன் பிரேக் போட்டு நிறுத்தியவன் சட்டென திரும்பி பார்க்க..
நிதின் வேறு புறம் பார்த்தான்.
ருத்ரன் சிரித்து கொண்டே அதான் உங்க தங்கச்சி ரெண்டாவது கல்யாணம் பண்றாலே அப்புறம் எப்படி? நான்? என்னை நீங்க மாப்ளையா ஏத்துக்க முடியுது.
எத்தனை மாப்ளை வந்தாலும் இப்போ வீட்ல இருக்க என் மாப்ளைக்கு நீ தான அப்பா? அப்போ நீ தான் எங்க வீட்டு மாப்ளை என சொல்லி விட்டு கட்சி ஆபிசுக்குள் நுழைந்தான் நிதின்.
ஹைபோதெட்டிகள் நிஜமா நடந்தா இப்படி தான் இருக்குமா? என ருத்ரன் சிரித்தபடி தலையை கோதினான்.
நாளை நிதின் பிரகாஷ் மினிஸ்டர் ஆனதற்கு பார்ட்டி நடந்தது வீட்டில்..
தீரா இன்னும் கொஞ்சம் என பார்த்து பார்த்து உணவுகளை வைத்தார்கள் ஹரிணி மற்றும் மீனாட்சி.
அவனுக்கு தந்தூரி பிடிக்கும் என மீனாட்சி. அனைத்து அசைவ உணவுகளையும் ஒரு சேர தட்டில் எடுத்து கொண்டு வந்தாள் அவனுக்காக..
நிலா..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels