Episode-14
எதுக்குடா கிட்ட வந்த?”
“ம்ம் நான் தான் வந்தேன். வந்து கழுத்தை பிடிச்சு நகத்தை பதிச்சு ஜொள்ளு ஊத்திட்டு தூங்குகிறேன்” என்றான் அன்பு.
பூங்கொடி தன்னையே ஒரு நிமிடம் பார்த்தவள் சட்டென அவனையும் பார்த்தாள்.
“கொஞ்சம் விடுங்க மேடம்! நான் பாத்ரூம் போகணும்” என அன்பு கேட்க, வேகமாக அவனிடமிருந்து நகர்ந்து கொண்டவள் மீண்டும் அவளது தூக்கத்தை கண்டின்யூ செய்ய ஆரம்பித்தாள்.
அன்புசெல்வனுக்கு நிறைய வேலைகள் இருக்க, போனில் பேசி முடித்தான். அவளுக்கு முன்னால் குளித்து முடித்து வந்தவன், கண்ணாடியில் நின்று தலையை கோதி கொண்டிருக்க, பூங்கொடி மெதுவாக கண்களை திறக்கவும், அவனது துண்டு அவிழ்ந்து விழவும் சரியாக இருந்தது.
“அய்யய்யோ!” என பூங்கொடி வேகமாக வேறு புறம் திரும்பி கொண்டாள்.
பாவம், அன்புசெல்வன் அவளை கவனிக்கவில்லை. புதிய உடையை மாற்றிக்கொண்டவன், உள்ளேயே வெகுநேரம் அமர்ந்திருந்தான்.
“பூங்கொடி!” என அழைத்தான் மெல்லிய குரலில்.
“என்னடா? தூக்கம் வருது. என்னை டிஸ்டர்ப் பண்ணாத!”
“நான் எப்டி வெளியே போறது?”
“கதவை திறந்து தான்!” என பூங்கொடி கூறியபடி போர்வையை இழுத்துப் போட்டு உறங்கினாள்.
அன்புசெல்வன் ஒரு பெருமூச்சுடன், ‘இவள் இந்த ஜென்மத்தில் எழுந்துக்க மாட்டாள்’ என நினைத்தபடி தயக்கத்துடன் கதவை திறந்தான்.
வீடு பரபரப்பாக இருந்தது. இன்று கிடாய்கறி விருந்து.
“மாப்ளை வாங்க வாங்க! ஹே, தனம் மாப்பிளைக்கு காபி தண்ணி கொண்டுவா!”
“இல்லைங்க மாமா! எனக்கு பழக்கம் இல்ல” என்றவன், “அது மாமா!.. நான் வீட்டுக்கு போயிட்டு வரவா?” என கேட்டான் அன்பு.
“என்ன அவசரம் மாப்ளை? அங்கே போய் என்ன பண்ண போறீங்க? இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமாவும் அத்தையும் இங்கேயே வருவாங்க” என்றார் சிவராமன்.
அன்புசெல்வனால் அதற்கு மேல் மறுத்து பேச முடியவில்லை.
“ஹே, இன்னும் தூங்கிட்டு இருக்க?” என அறைக்குள் நுழைந்தார் தனம்.
“எனக்கு தூக்கம் வருது” என பூங்கொடி சொல்லிக்கொண்டே பிரண்டு படுத்தாள். தனம் பால் செம்பை பார்த்தவர், “என்ன, பால் அப்படியே இருக்கு? அய்யோ, இவள் இன்னும் பொறுப்பு இல்லாம இருக்காளே! நல்ல வேளை இங்கே கல்யாணம் பண்ணேன். அந்த ரஞ்சிதம் வீட்ல கட்டியிருந்தா குறையா சொல்லி தீர்த்திருப்பா கிரகம் புடிச்சவ!” என நினைத்து கொண்டே வெளியே சென்றார் தனம்.
அதன் பின் சந்தனக்கொடி அறைக்குள் நுழைந்து அவளை வேகமாக புறப்பட வைத்தார் என்றே சொல்லலாம்.
“சித்தி, இந்த ஜிமிக்கி ரொம்ப பெருசா இருக்கு! காது வலிக்குது!” என பூங்கொடி கூற, “இன்னிக்கி ஒரு நாள் தங்கம், நாளைக்கு சின்ன கம்மல் போட்டுக்க! கல்யாணம் ஆகிடுச்சு, வீட்டுக்கு ஒரம்பரை வந்து போவாங்க. அவங்க முன்னாடி நீ அழகா இருக்கணும் அழகி” என கொஞ்சிக் கொண்டே தயார் செய்தார்.
அன்புசெல்வன் ஒரு சேரில் அமர்ந்தபடி போனை நோண்டிக் கொண்டிருந்தான். வேறு என்ன செய்ய முடியும்? வீட்டுக்கும் செல்ல முடியாது, இங்கே யாரும் அவனிடம் பேசவும் மாட்டார்கள்.
அந்த நேரம் மகிழ் வந்தான் போதையுடன். “மகிழ்” என அன்புசெல்வன் அழைக்க, அவனோ ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் சென்றுவிட்டான். ‘இந்த வீட்ல இருக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்’ என நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
“அதான் கிளம்பிட்டேனே, இப்போ தூங்கவா?” என பூங்கொடி தன் சித்தியிடம் கேட்க, “போய் அன்பு பக்கத்தில் உட்காரு தங்கம்”
“என்னால அவன் பக்கத்தில உட்கார முடியாது சித்தி.”
“அய்யோ உஸ்ஸ்ஸ, சத்தம்! இப்படியெல்லாம் பேசக்கூடாது கண்ணு. இப்போ அவன் உன்னோட புருஷன்” என்ற சந்தனக்கொடி சுற்றிலும் பார்த்துக் கொண்டே, “அன்பு நல்ல பையன், குணமான கேரக்டர். எனக்கு சின்ன வயசுல இருந்தே அவனை பிடிக்கும். அன்னம் சித்தியும் அப்படிதான், நல்ல குணம். குடும்பத்துல ஆயிரம் இருக்கலாம், அதை பெருசா எடுத்துக்காத பொண்ணு. எங்க வீட்டு பையன் அவன். எங்க கூட பிறந்திருந்தால் இப்போ நாங்க அனுபவிக்கும் சொத்து எல்லாம் அவனுக்கு போயிருக்கும். நீ யோசிச்சு பாரு. அன்னம் பையன் அப்படின்றதால தான உங்க தாத்தா எல்லாத்தையும் பிரிச்சு எங்க மூணு பேருக்கும் எழுதி வச்சாப்டி! அவரு மேலே எந்த தப்பும் இல்ல” என்றார்.
பூங்கொடி எதையும் பேசாமல் அமைதியாக இருக்க, “போ சாமி! நீ சந்தோஷமா அவன் கூட இருக்கணும். பிரியா மட்டும் உன்னோட வயசுல இருந்திருந்தா நானே அன்புக்கு கட்டி கொடுத்திருப்பேன். இப்போ தான் பிரியா எட்டாவது படிக்கிறா!” என்றார்.
“போதும் போதும்” என சொல்லிக்கொண்டே எழுந்தாள்.
“வா கண்ணு” என அன்புவின் அருகில் சென்று அமர வைத்தார் சந்தனம்.
அன்பு அருகில் அமர்ந்தவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, திரும்பி கொண்டான்.
நேற்றை விட இன்று மிகவும் அழகாக இருந்தாள் பூங்கொடி.
சிறிது நேரத்தில் உறவினர்கள் வர தொடங்கினார்கள்.
“க்கும்” என தொண்டையை கணைத்தாள் பூங்கொடி. அவனது வேலையில் கவனமாக இருந்தான்.
“க்கும்.. ஏண்டா டேய், உன்னை தான்!”
அன்பு கோபத்துடன் பார்த்தவன், “வெளியே இருக்கும் போது மாமான்னு கூப்பிட சொன்னதாக நியாபகம்” என்றான்.
பூங்கொடி அமைதியாகிவிட்டாள். ஒரு சில நொடிகள் கழித்து, “எனக்கு இங்கிருந்து தான் காலேஜ் போகணும். எனக்கு உங்க வீடு கம்பார்ட்டா இருக்கும்னு தோணல. அண்ட் அங்கே வெஸ்டன் இல்ல, டைல்ஸ் இல்ல. பெரிய வீடு பிடிக்கல” என்றாள்.
“முதல்ல வந்து பார்த்திட்டு முடிவு பண்ணு” என்று கூறியவன் பார்வை போனில் இருந்தது.
“என்ன, மாடமாளிகை கட்டிட்டியா? சாரி, கட்டிட்டீங்களா?” என்றாள்.
அன்புசெல்வன் முகத்தில் புன்னகை பரவியது. அவன் பதில் சொல்ல வர, “எனக்கு சமைக்க தெரியாது. அண்ட் உங்க சமையல் எனக்கு வேணாம்” என்றாள் பூங்கொடி.
“அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது” என்றான் அன்பு.
“சார், ஒன்னும் பண்ண வேணாம். நான் இங்கிருந்து காலேஜ் போறேன். நீங்க உங்களோட வேலைய பாருங்க” என்றாள்.
அன்புசெல்வன் எதுவும் பேசவில்லை. விருந்து சிறப்பாக முடிந்தது. இதோ வீட்டுக்கு கிளம்பியாகிவிட்டது.
“அன்பு, அன்பு” என பூங்கொடியிடம் பேச எதற்கு எடுத்தாலும் அன்னம் தன் மகனை அழைத்து அவனிடம் விசயத்தை கூறி அனுப்பினார்.
பூங்கொடி சக்கரவர்த்தியின் அருகில் இருந்தவள், “தாத்தா, என்னோட திங்க்ஸ வீட்ல விட்டுட்டேன். வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” என எழுந்து நடந்தாள்.
“பூங்கொடி! நில்லு!” என சக்கரவர்த்தி அழைக்க, “சொல்லுங்க.”
“இரு தங்கம்” என்றவர், “அன்பு!! அன்பு!!”
“பா, இதோ வந்துட்டேன். சொல்லுங்க என்ன விசயம்?” என கேட்டான் அன்பு.
“அமுலி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வா!” என்றார் சக்கரவர்த்தி.
“இதோ போறேன்” என்றவன் அவளின் அருகில் சென்று வண்டியை நிறுத்த, ஏறிக்கொண்டாள் இடைவெளி விட்டு. வீட்டில் இறக்கிவிட்டதும், பூங்கொடி அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் உள்ளே சென்று விட்டிருந்தாள். அன்பு ஒரு பெருமூச்சை விட்டபடி உள்ளே சென்றவன், சிவராமனிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
“எதுக்குடி இங்கே வந்த?” என தனம் கத்திக்கொண்டிருந்தார்.
“மா, எனக்கு அங்கே போக பிடிக்கல! அவனை இங்கே வேணும்னா வர சொல்லுங்க. நான் அங்கே இருக்க மாட்டேன். எனக்கு வனாந்தர காட்டுல தொலைஞ்ச போல தோணுது” என்றவள் வேகமாக படுக்கையறைக்குள் சென்றாள்.
“என்னங்க பண்றது?” என தனக்கொடி கேட்க, “விட்டு பிடிப்போம். ரெண்டு நாள் அமுலி இங்கேய இருக்கட்டும். அப்புறம் கொண்டு போய் விடலாம். நீ புள்ளைய திட்டிட்டு இருக்காத” என்றார் சிவராமன்.
“எங்கேடா பூங்கொடி?” என அன்னம் கேட்க, “நான் தான் மா கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்” என்றான் அன்பு.
“என்ன காரியம்டா பண்ணியிருக்க? கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் தான் ஆகுது. எதுக்குடா கொண்டு போய் விட்ட?” என அன்னம் சண்டைக்கு வந்தார்.
“மா, அது அவளுக்கு பரீட்சை நடக்குதாம். இந்த பத்து நாளைக்கு மட்டும்..” என அன்பு கூற வர, “என்ன? பத்து நாளா?” என அதிர்ச்சியுடன் கேட்டார் அன்னம்.
“மா, இந்த பத்து நாளைக்கு மட்டும் பூங்கொடி அங்கே இருந்து காலேஜ் போகட்டுமே, அப்புறம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என்றான் அன்பு.
“மச்சான்! உங்க பையன் என்ன சொல்றான்னு கேட்டீங்களா?” என அதிர்ச்சி தொனியில் பேசினார் அன்னம்.
அன்பு தனது அப்பாவின் அருகில் சென்று, “பிளீஸ் பா!” என்றான்.
“சரி விடு அன்னம்” என தனது மனைவியை சமாதானம் செய்தார்.
‘இப்படியே சண்டை போட்டால் எப்போ ரொமான்ஸ்? அதுக்கு தானே வெயிட்டிங்.’
இனி ரொமான்டிக் தான். இதோ ஒரு வாரம் ஓடிப்போக, டெம்போவில் பொருட்களுடன் வந்து இறங்கினார் சிவராமன். இன்னொரு பக்கம் டைல்ஸ் ஒட்ட ஆட்கள் வந்திருந்தார்கள்.
“என்னை அவமானப்படுத்த எடுத்திட்டு வந்திருக்கீங்களா மாப்ள?” என கேட்டுக்கொண்டே எழுந்தார் சக்கரவர்த்தி.
“மாமா, உங்க பொண்ணோட வர முடியுமா?” என அன்பு கேட்க, “மாப்ளை நான் சொல்றத கேளுங்க!” என சிவராமன் பேச வர, ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் பூங்கொடி. அன்னம் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ‘என்ன பேச முடியும்?’
அன்புசெல்வன் சிவராமனிடம், “எல்லா பொருளையும் எடுத்திட்டு போயிடுங்க. இந்த குடும்பத்துக்கு கொடுத்து தான் பழக்கம், வாங்கி பழக்கம் இல்ல” என்றவன், “உங்க பொண்ணு வாழ போற வீட்டை நீங்க சரியா பார்க்கலன்னு நினைக்கிறேன்” என்ற அன்பு தனது அம்மாவை பார்த்து, “மா, கூட்டிட்டு போய் உன் மருமகளுக்கு காட்டு” என்றான் ஆளுமையாக.
பூங்கொடி வாயை பிளந்தபடி பார்த்தாள்.
அப்படி என்ன நடந்திருக்கும்?
தொடரும்..