அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
421 views

Episode -114

என்ன நடக்குது இங்கே? என கேட்டு கொண்டே வந்தாள் நிலா.

ருத்ரன் அவனது வேலையை தொடர்ந்தான். மீனாட்சி பயத்துடன் மறைந்து பார்த்தாள். ஹரிணி சிரித்து கொண்டே அது நிலா! என்னன்னா இப்போ நைட்டு சாப்பாடு கொடுக்க வந்தேன். எல்லாமே மீதியாகிடுச்சு என்றாள் அப்பாவி போல..

என்னோட சர்வன்ட்க்கு நீங்க எதுக்கு சாப்பாடு போடணும்? என ஹரிணியை முறைத்தாள் நிலா.

அது வந்து என்ன நிலா? அன்னிய போய் இப்படி பேசுற? நான் உன்னோட அண்ணி டி!! என மழுப்பி கொண்டே நின்றாள்.

ருத்ரன் பாவமாக ஹரிணியை பார்த்து விட்டு பணியாளர் தங்குமிடத்துக்கு செல்ல..

“ஹே ரோல் நம்பர் 21 நில்லு”

மேடம்!!

அன்னி தட்டை அவன் கிட்ட கொடுங்க என்றாள் நிலா.

ஹரிணி எதுவும் பேசாமல் தட்டை கொடுக்க, ஹே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மேலே வா!! என்று விட்டு முன்னால் சென்றாள் நிலா.

கா சாரி!! என்னால உங்களுக்கு பிரச்னை. உங்களோட பாசத்துக்கு நான் என்னைக்கும் பிளஸ்டா பீல் பண்றேன் என்றவன் அவளின் பின்னால் சென்றான்.

ஹரிணி பெரு மூச்சுடன் நிற்க, அக்கா சாரி கா!! என மீனாட்சி அவ்விடத்துக்கு வந்தாள்.

விடு கண்மணி இந்த குடும்பத்தில் இருக்க எல்லாரும் ஒவ்வொரு டைப். ஆனாலும் இந்த நிலா ரொம்ப ஆடிட்டு இருக்கா!! நானும் பொறுமையா போயிட்டு இருக்கேன். ஆனால் இவளை இப்படியே விட மாட்டேன். புள்ளை பூச்சி மாதிரி முகத்தை வச்சிட்டு என்ன வேலை பண்றா பாத்தியா? ருத்ரனை தலைகீழா புரட்டி போடுறா! என்ற ஹரிணி நொந்து கொண்டே நான் அந்த மினிஸ்டர் நாய லவ் பண்ணி கட்டிக்கிட்டேன். அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல. என்னை ஆட்டி வைக்கிறான். ஆனால் அந்த நிலாவை பாரு arrange marriage தான் பண்ணோம். என்ன சொக்கு பொடி போட்டான்னு தெரியல தீராவை இப்படி ஆட்டி வைக்கிறா என சலித்து கொண்டே சென்று விட்டாள்.

ஓகே மேம் நீங்க சொன்ன போலவே எல்லாத்தையும் அடுக்கி வச்சுட்டேன் என ருத்ரன் திரும்ப..

கதவை சாத்தி கொண்டு அவன் முன்னால் நின்றாள் நிலா.

போச்சு!! இன்னிக்கு என்ன பண்ண போறாளோ தெரியலையே!! என நினைத்தவன். எதுவும் தெரியாததை போல முகத்தை வைத்து கொண்டு நின்றான்.

சிக்கன் வேணுமா? கறி வாசனையே இல்ல தீராவுக்கு!! என்ற நிலா அவனுக்கு அருகில் வர பின்னால் நகர்ந்தான்.

அப்படி தான தீரா! கறி சாப்பிடாமல் வீக் ஆகிட்டீங்களா?

இல்ல மேம்!! என நிமிர்ந்து நின்றான் ருத்ரன்.

சரி சொல்லு! உனக்கு சிக்கன் வேணுமா இல்ல என்றவள் அவனை பார்த்து நான் வேணுமா என கேட்டாள்.

எனக்கு ரெண்டுமே வேணாம் வழிய விடுங்க மேடம். என அவன் நகர முயற்சி செய்ய..

ஹே சொல்லு!! இங்கே என்னை பாரு? என் தலை மேலே என்ன இருக்கு? இங்கே பாரு!! என்றவள் அவனது முகத்தை நிமிர்த்தினாள்.

எனக்கு போகணும் மேடம் பிளீஸ்.. என அவன் நகர..

அப்போ மொத்தமா போயிடு!! இங்கே எதுக்கு டிராமா பிளே பண்ற? உன்னோட நடிப்பு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு!! என்றாள் நிலா.

நெற்றியை அழுத்தி துடைத்து கொண்டவன். அவளை பார்த்து சாதாரண தொனியில் வேணாம்னு சொல்றதுக்கு காரணம் பிடிக்காம இல்ல. நிரந்தரமா தட்டி தூக்க.. இப்படி சின்ன சின்னதா சைட் டிஷ் வந்து பசிய குறைக்காது. இன்னும் அதிக படுத்தும். ஒன்ஸ் ஜெயிச்சிட்டா அப்புறம் கச்சேரி தான். அய்யோ அம்மா என்னை காப்பாத்துங்க முடியல அப்டின்னு கத்தினாலும் கதறினாலும் கூட யாரும் வர மாட்டாங்க.. மொத்தமா என்றவன் சிவந்த விழிகளில் அவளை பார்த்தான் ருத்ரன்.

எச்சில் கூட்டி விழுங்கிய நிலா! சட்டென சுயநினைவுக்கு வந்தவள். முகத்தில் கடுமையுடன்..

தீரா!! சொல்லு சிக்கன் வேணுமா? நான் வேணுமா? என மீண்டும் கேட்டாள்.

இதுக்கான விளக்கத்தை இப்போ தான் கொடுத்தேன். அப்புறம் என்ன? நான் போகணும் விடு நிலா..

மறுபடியும் சொல்லு!!

என்ன சொல்லணும்?

சிக்கன் வேணுமா? நான் வேணுமா? சொல்லு? என அவனது பாதத்தின் மேல் ஏறி நின்றவள் உதட்டில் நச்சென முத்தமிட்டாள்.

என்ன try பண்ற நீ? எதுக்கு இப்படி நடந்துக்குற? என்னை வேணாம்னு நினைக்கிறவ இப்படி ஒட்டிக்குவாளா? என ருத்ரன் கூறினான் அவளை பார்த்து.

நிலா வேகமாக அவனிடமிருந்து நகர்ந்து கொண்டவள். எதுவும் பேசாமல் படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஓ f* இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்க முடியல!! என வாய்க்குள் கூறி கொண்டவன். அறையை சுற்றிலும் தேடினான். அவனது மகனை..

நிலா உன்கிட்ட ஒண்ணு கேட்கணும். என்று முன்னால் வந்து நின்றான்.

அவளிடத்தில் அமைதி மட்டுமே..

உனக்கு சிரமமா இருந்தால் சொல்லு! நான் என் பையன வளர்த்துகிறேன் என்றான் ருத்ரன்.

அவன் என்னோட பையன் you damit!! அவன் மேலே உனக்கு எந்த ரைட்சும் இல்ல. எனக்கு எல்லாமே என்னோட குழந்தை தான் என்றாள் நிலா கோபத்துடன்..

ஹே கூல் கூல் எதுக்கு இப்படி கோபமா பேசுற? என் மேலே தான் தப்பு சாரி!!.. என்றான் ருத்ரன்.

என்னோட பையன் அம்மாகிட்ட இருக்கான். என நிலா பெரு மூச்சுடன் கூறி முடித்தவள். விருப்பப்பட்டால் வெளியே போலாம். என்றாள் நிலா.

அவளுக்கு அருகில் வந்தவன் கையை பிடித்து கொண்டே அமர்ந்தான்.

பிளீஸ் எனக்கே என்னை பார்க்க அசிங்கமா இருக்கு!! வெளியே போயிடு! உன்கிட்ட வந்து நிக்கிற அளவுக்கு வர வச்சுட்ட! எவ எது கொடுத்தாலும் வாங்கிப்பியா?

ஹே ஹரிணி அக்காவ பத்தி என்ன சொல்ல வர? என ருத்திரன் முகத்தில் சட்டென கோபம் பரவ..

நான் ஒன்னும் ஹரிணி அண்ணிய சொல்லல.. இன்னொருத்தி இருக்காளே! இப்போ கூட மயக்க திரியுறா!! என்றாள் முறைத்து கொண்டே..

மீனாட்சி அங்கே வரவே இல்லடி!!

அவள் வந்தா நான் பார்த்தேன். மீன், நண்டு எல்லாத்தையும் சூடு பண்ணி கொண்டு வரா!! என்றாள் நிலா.

ருத்ரன் நெற்றியை நீவியபடி பெரு மூச்சை விட்டவன். மெல்ல அவளின் அருகில் நெருங்கி எனக்கு சிக்கன் வேணாம் நீ வேணும். எப்பவும் என்றான்.

ஹான் பார்த்தேனே!! என்ற நிலா அவனை விட்டு விலக..

டெம்ப்ட் பண்ணிட்டு ஓட பார்க்கற!! என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைக்க.. நிலா அவன் தலையை கோதி கொடுத்து முத்தமிட்டாள்.

உன்கிட்ட எல்லாத்தையும் நிரூபிச்சிட்டேன். உன்கிட்ட அடிமையா கடக்கறேன்! வேற என்ன வேணும் உனக்கு? என ருத்ரன் மெதுவாக கேட்டான்.

இதை கேட்டு வாங்க தேவையில்ல!! நானே எடுத்துப்பேன். எனக்கு தேவையானத!! என்றாள் நிலா.

அவளின் மோவாய் நிமர்த்தினான். அவள் அவனது உதட்டை கவ்வி கொண்டாள். தீரா!! நீ இதே ரூம்ல உன்னை கட்டி வச்சு கொடுமை பண்ணனும். என ஏகாந்த மோகத்தில் தீயில் சுடர் விட்டு எறிந்தாள் நிலா.

அப்டியா என உதடுகள் இரண்டும் சிவந்து ஆவேசத்தை, நிலா அவனிடம் வெட்கத்தை மறைக்க போராடினாள்.

ருத்ரன் அவளை கொண்டாட.. என்னை அடிமையாக்கிட்டீங்க!! நீங்க எங்கு அடிமை இல்ல.. நான் தான் என்றாள் துடித்து கொண்டே..

சிக்கன் சாப்பிட்ட satisfaction கிடைச்சிடுச்சு என்றான்.

நிலாவுக்கு தன்னை எங்கு கொண்டு சென்று மறைப்பது என்று தெரியவில்லை. இறுதியாக அவனது நெஞ்சிலேயே முகம் புதைத்தாள்.

இப்போ போகவா?

இன்னும் கொஞ்ச நேரம் என நெஞ்சில் முகம் புதைத்து உறங்கினாள்.


உடலை நெளித்து கொண்டு எழுந்தவன் கட்டிலில் பெண்..

ஹே யார் நீ? என்னோட பெட்ல என்ன பண்ற? என தலையை பிடித்து கொண்டு கேட்டான் சிவதாசன்.

நான் நான்!! என தேம்பி அழுதாள் அவள்.

ஹே என்னடி பண்ற? எதுக்கு அழற என தன்னை தானே பார்த்து கொண்டவன். அய்யோ பப்பி ஷேம். ஹே ஹே யாருட்டி நீ?

ஹவுஸ்கீபிங் பண்ணிட்டு வெளியே போக வந்தேன்.. என்னை நீங்க!! என்னை நீங்க? என அழுதாள் பாரு.

சிவதாசன் வேகமாக எழுந்து கொண்டு பாத்ரூம் ஓடினான்.

பார்வதி உடையை போட்டு கொண்டு வேகமாக தங்குமிடத்துக்கு ஓடினாள்.

நிதின் ஹரிணியை பெரு மூச்சுடன் பார்த்தான்.

கிட்ட வந்த!! கொன்னு புதைப்பேன் என அவள் சொல்லி விட..

எல்லாம் நேரம் என புலம்பி கொண்டே சென்று விட்டாள்.

சிவதாசன் இரண்டே நாளில் பெட்டி படுக்கையை கட்டி கொண்டு புறப்பட்டான்.

டேய் என்னடா ஆச்சு?

எனக்கு முக்கியமான வேலை நாமக்கலில் அம்மாச்சிக்கு உடம்பு சரியில்ல அதனால விசாகப்பட்டினம் போனும். நான் கிளம்புறேன் டி!! என புறப்பட்டான்.

நிலா அவனை வழியனுப்பி வைத்து விட்டு யோசித்தவள். என்ன சொல்றான்? இவன்? நாமக்கல்லயா விசாகப்பட்டினம் இருக்கு? என யோசித்து கொண்டே சென்றாள்.

இதோ அடுத்த இரண்டு மாதங்கள் ஓடி விட பார்வதி கர்ப்பமாகினாள்.

ருத்ரனின் வேலைக்காரன் வேடம் இன்றுடன் முடிவடைய.. முடிவுகளுக்காக அனைவரின் முன்னும் நிலாவை பார்க்க வந்தான். அதே நேரம் விவேகா தன் மகனை பார்க்க வந்தார்.

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment