மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
767 views

Episode -15 

“என்னாச்சு தங்கம்? கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போக தானே வேணும்? நம்ம தெக்கு புதுப்பாளையம். நீ வடக்கு புதுப்பாளையத்தில் இருக்க போற!  வேற வீட்லயா இருக்க போற? உன் தாத்தா வீட்டில் தானே இருக்குற?” என சிவராமன் கேட்டார்.

“அங்கே வசதி இல்ல டாடி! என்னால போக முடியாது. உங்க மாப்ளைய இங்கே வர சொல்லுங்க,” என முகத்தை தூக்கி வைத்து கொண்டு கூறினாள் பூங்கொடி.

“அவ்ளோ தான? இப்போவே நான் ஏற்பாடு பண்றேன்,” என உடனே அனைத்தையும் ஏற்பாடு செய்து கொண்டு போய் இறங்கினார் சிவராமன்.

“ஹே! வா போலாம். அதான் அப்பா எல்லாத்தையும் செய்றேன்னு சொல்லிட்டாரே? அப்புறம் என்ன?” என கேட்டபடி தனம் தனது மகளை அழைத்து சென்றார்.

“மாமா!! அத்தை!” என சிவராமன் அழைக்க, “வாங்க மாப்ளை,” என அன்னம் அழைத்தவர் ஒரு நொடியில் முகம் மாறி போனது.

டியூட்டி முடித்து இப்பொழுது தான் வீட்டுக்கு வந்தான் அன்பு. அங்கே பொருட்களுடன் சிவராமனை பார்த்ததும் கோபம் தான் வந்தது.

சிவராமன் புன்னகையுடன், “மாப்ளை! அது என்னுடைய ஆசைக்காக தான் வாங்கிட்டு வந்தேன். வேணாம்னு சொல்லாதீங்க!!” என கூற…

“அது யாரு?” என கேட்டான் அன்பு.

“அது டைல்ஸ் ஒட்ட! அப்புறம் சவர், பாத்டப், அப்புறம் வெஸ்டர்ன் டாய்லெட் செய்ய ஆளுங்க…” என்றார் சிவராமன்.

தலையை துவட்டியபடி சாதாரணமாக பார்த்த அன்புசெல்வன், “அக்கா, மாமா உள்ளே வாங்க! நான் உங்களுக்கு டீ போடுறேன். அன்னம்!” என தன் அம்மாவை அழைத்தவன், “இவங்களை தெற்கு வீட்டுக்கு அழைச்சிட்டு போய் காட்டு மா! முக்கியமா உன்னோட பேத்திய கூட்டிட்டு போ,” என சொல்லி கொண்டே உள்ளே சென்றான்.

சிவராமன் ஒன்றும் புரியாமல், “மாமா, பொருள இறக்கி வச்சுட்டு காப்பி தண்ணி குடிக்கிறேன்,” என்றார்.

சக்கரவர்த்தி அடக்கப்பட்ட சிரிப்புடன், “மாப்ளை, முதல்ல தெற்கு வீட்டை பார்த்திட்டு வாங்க,” என கயிற்று கட்டிலில் அமர்ந்தார்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “அமுலி, போ கண்ணு!! போய் பார்த்திட்டு வா!” என சக்கரவர்த்தி கூற…

“அப்படி என்ன இருக்குன்னு பார்க்கலாம்,” என தனம் முன்னாள் நடந்தார்.

அன்னம் கதவை நீக்கி விட்டு, “மாப்ளை வாங்க,” என வெளியே நின்று கொண்டார்.

பூங்கொடி முறைத்து விட்டு உள்ளே சென்றவள் வாய் பிளந்து கொண்டது. குட்டி பிரிட்ஜ், கீழே கறுப்பு நிற டைல்ஸ் மற்றும் வீட்டில் இருக்கும் சுவரின் வண்ணம் ஈர்க்கும் விதத்தில் இருக்க, ஒரு சிஸ்டம் இருந்தது. மற்றும் உள்ளே சென்றால் படுக்கை அறை இன்னும் நன்றாக இருந்தது. டிக் உட் கப்போர்ட், ac, மற்றும் புத்தக அலமாரி, HD டிவி என அனைத்தும் இருந்தது. அப்படியே பாத்ரூமில் பாத்டப் இல்லை மற்றபடிக்கு அனைத்தும் இருந்தது. அருகில் front லோட் வாஷிங் மெஷின், தண்ணீர் சூடு செய்து குடிக்க கெட்டில் என சகல வசதியுடன் இருந்தது.

“இங்கே அடுப்படி மட்டும் இல்ல. ஏன்னா என்னோட வீட்ல சமையல் எப்போவும் ஒன்னாக தான் இருக்கணும். எனக்கு எங்க அம்மா அப்பா கூட தான் சாப்பிடணும். அப்படியே சமையல் அறை வச்சாலும் உங்க பொண்ணு சமைச்சு தனியா சாப்பிட தான் வைப்பேன். நான் எப்போவும் என்ற அய்யன், அம்மா கூட தான் சாப்பிடுவேன்,” என்றான் அன்பு.

பூங்கொடி அவனை புருவம் சுருக்கி பார்த்தாள். அன்புவின் பார்வை தன் மனைவியின் மீது திரும்பவே இல்லை, சிவராமன் மீது மட்டும் தான் இருந்தது.

தனம் ஒரு நொடி ஸ்தம்பித்து, “இதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே பூங்கொடி? உங்க தாத்தா உன்ற புருஷனுக்கு சொத்து தனியா எழுதி வச்சாரா என்ன?” என கேட்டார்.

“ஹே! கம்முன்னு இரு,” என சிவராமன் அதட்ட…

அன்புசெல்வன் சிரித்து கொண்டே, “என்ற அம்மாவும் அப்பாவும் தான் எனக்கு பெரிய சொத்து. தேங்காய் தொட்டி டெண்டர் எடுக்கிறேன்,” என்றான்.

“ஹான்?” என புரியாமல் சிவராமன் பார்க்க, “தேங்காய் தொட்டிய (activated charcoal) சார்க்கோல் பண்ணி ஃபாரின்க்கு இம்போர்ட் பண்றேன்,” என தலையை துவட்டியபடி டீயை நீட்டினான் அன்புசெல்வன்.

பூங்கொடி அவனை ஒரு நொடி பிரமித்து பார்க்க, சிவராமன் ஆர்வத்துடன், “சார்க்கோல் அப்படின்னா என்ன?” என பேச ஆரம்பித்து விட்டார்.

தனக்கொடிக்கு உண்மையில் பெருமையாக இருக்க, பூங்கொடி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“இதை பியூட்டி புரோடக்ட் கம்பெனிக்கு அனுப்பறேன். நான் படிச்சது அக்ரிகல்ச்சர்,” என்றான் அன்பு.

பூங்கொடிக்கு மிகவும் அவமானமாகி போனது. அவனை ஒரு முட்டாள் என இத்தனை நாளும் நினைத்திருந்தாள். ஆனால் அவன்? அவனுக்கு தான் அவள் பொருத்தமில்லை.

“அதுல தான் இத்தனை வருமானம் வருதா?” என சிவராமன் கேட்க…

அன்பு சிரித்து கொண்டே, “இப்போதைக்கு இதை ஒன்னு மட்டும் தான் பண்ணிட்டு இருக்கேன். இதுல நிறைய ப்ராஃபிட் இருக்கு. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கனும். அதுல தென்னைமரம் வச்சு என்னோட பிஸ்னஸ்ச பெருசு பண்ணனும். அப்பாவோட ஆசை நான் பஸ் வாங்கனும், டிராவல்ஸ் வைக்கணும்னு ஆசைபடுறார். அதை செய்ய நிறைய பணம் தேவை. எனக்கு பெருசா ஆசை இல்ல. லோக்கல்ல வேலை பார்த்துகிட்டு வீட்டோட இருக்கணும்,” என்றான்.

“ரொம்ப சந்தோஷம் மாப்ள!!” என்ற சிவராமன், “அமுலி பேர்ல 10 ஏக்கர் இருக்கு. அதை நீங்க யூஸ் பண்ணுங்க மாப்ளை,” என கூறினார்.

“அது உங்களுக்கு சேர வேண்டியது. எனக்கு வேணாம்,” என மறுத்து விட்டான்.

“மாப்ளை அது அமுலுக்கு!!”

“மாமா இல்ல! எனக்கு வேணாம்,” என அன்பு சொல்லி கொண்டிருக்க…

“ப்பா விடுங்க,” என தடுத்தாள் பூங்கொடி.

“சாப்பாடு ரெடி, வாங்க சாப்பிடலாம்,” என அன்னம் அழைக்க…

“அந்த வீட்ல என்ன?” என தனக்கொடி கேட்டார்.

“அதுல காளான் வளர்க்கிறேன். இங்கே ஈரோட்டில் எல்லா இடத்திலும் ‘அன்னம் காளான்’ தான்,” என்றான் அன்பு.

“அது உங்களுடையதா?” என சிவராமன் கேட்க…

“நான் தான் பண்றேன் மாமா!!” என்றான் அன்பு.

“அது துத்தி இலை தானே!!” என தனக்கொடி கேட்க…

“ஆமா அன்னம், துத்தி பொடி, அன்னம் ஆவாரம் பூ பொடி, பைல்ஸ் சரி செய்ய, சுகர் குறைக்க பண்றேன். ‘அன்னம் அக்ரோ products’ ஆன்லைனில் விக்கிறேன்,” என்றான் அன்பு.

இதற்கு மேல் பேச்சே பேச முடியவில்லை மூவராலும். வாயடைத்து நின்றது என்னவோ பூங்கொடி தான். ஆனாலும் மனதுக்குள் ஒரு அசரீரி கேட்டு கொண்டிருந்தது.

மூவரும் சாப்பிட்டார்கள். சக்கரவர்த்தி கட்டிலில் அமர்ந்தபடி மகளை பார்த்தவர், “என் பொண்ணுங்களுக்கு படிப்பையும் சொத்தையும் கொடுத்தேன். என் பையனுக்கு படிப்பு கொடுத்தேன். இப்போ என்னை பார்த்துக்கிறான் ராஜா போல… கடைசி காலத்தில் வேற என்ன வேணும்? பேருக்கு ஏத்த குணம் தான். பொள்ளாச்சி பிரசிடென்ட் மகள் என் பையனை கட்டிக்க ஒத்த காலில் நின்னது,” என்றார் சக்கரவர்த்தி.

சிவராமன் வாய் திறக்கவில்லை… தனக்கொடி கோபத்துடன், “சாகிற வயசில கூட வாய அடக்க முடியாதா? பையன் புராணம் இன்னும் பாடணுமோ? இதுவே அவன் விஜயலட்சுமி பையனா இருந்திருந்தால் இப்படி கொண்டாடி இருப்பிங்களா?” என கேட்டு விட்டார்.

அன்னம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சக்கரவர்த்தி சிரித்து கொண்டே, “உன் கூட பிறந்தவனா இருந்திருந்தா பேசுற வாய்க்கு சல்லி பைசா கொடுத்திருக்க மாட்டான்,” என்றார்.

அவ்வளவு தான் வாய் மூடி கொண்டது. தனக்கொடி அதற்கு மேல் சாப்பிடாமல் எழுந்து கொண்டார். பூங்கொடி தெற்கு அறையில் இருந்தாள். மனமெல்லாம் ரணமாக இருந்தது.

“அமுலி,” என அழைத்து கொண்டே வந்தார் தனக்கொடி.

“ம்ம் சொல்லு மா!!”

தனக்கொடி தன் மகளின் கையை பிடித்து, “அன்பை விட பொருத்தமான ஒருத்தன் யாரும் இல்ல உனக்கு. அவன் கூட வாழ தொடங்கு, அடுத்த வருஷம் இந்நேரம் நீங்க மூணு பேர் ஆகி இருக்கணும்,” என்றார்.

“மா என்ன பேசுற?”

“இவ்வளவு தான் உங்க அம்மாவால சொல்ல முடியும்.”

“‘அன்னம் காளானா’ இருக்கிற எல்லா பேரும் மாறி ‘பூங்கொடி’ பேர் வரணும். அவ்வளவு தான் சொல்லிட்டேன். பார்த்து இரு,” என்று விட்டு புறப்பட்டார்.

பூங்கொடி…?

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment