Episode -17
“பாப்பா, நான் அப்புறம் வரேன்,” என வேகமாக வெளியே சென்று விட்டான் அன்பு.
இதயம் வேகமாக துடிக்க, “ஹ்க்ம்… சிக்ம்… ஹிக்ம்!!” என சிணுங்கினாள் பூங்கொடி. “என்னை பார்த்துட்டான்!! அய்யோ என்னை பார்த்துட்டான்,” என கைகள் நடுங்கியது. காட்டிலில் அப்படியே அமர்ந்தாள்.
“என்ன கண்ணு, திரும்ப வந்துட்ட?” என அன்னம் கேட்க,
“அய்யோ அம்மா கிட்ட என்ன சொல்லுவேன்?” என தயங்கியவன், “மா, அவளுக்கு ஆம்லெட் வேணுமாம், போட்டுக்கொடேன்,” என பெரிய வீட்டுக்குள் சென்றான் அன்பு.
நேரத்தைப் பார்த்தாள். தாமதமானது நன்றாகவே தெரிந்தது. இனி என்ன செய்ய முடியும்? அவன் அயன் செய்து வைத்த உடையைப் போட்டுக் கொண்டவள். நெஞ்சு குழியில் குத்திக் கொண்டிருக்கும் தாலியை எடுத்துப் பார்த்தாள் பூங்கொடி.
முடியைத் தொங்கவிட்டவள் ஒரே ஒரு கேட்ச் கிளிப் போட்டு புத்தகப் பையை எடுத்துக்கொண்டாள். “சாப்பிடு,” என மேஜையின் மீது வைத்தான் அன்பு.
“எனக்கு வேணாம்,” எனப் பூங்கொடி பையை எடுத்துக்கொண்டு செல்ல,
“என்னாச்சு? நான் ஏதோ தெரியாம வந்துட்டேன். தப்பு என் பேரில் தான். என்னை மன்னிச்சிடு. இப்போ வந்து சாப்பிடு,” என அவளைப் பார்த்தான் அன்பு.
“எனக்கு காலேஜ்க்கு லேட் ஆகுது. நான் இன்னிக்கு அவுட் பஸ்ல தான் போகணும், நேரமில்லை!!” எனப் பூங்கொடி வெளியே செல்ல எத்தனிக்க.. அவளின் கையைப் பிடித்தவன், “நான் கொண்டு வந்து விடறேன். வந்து சாப்பிடு!!” என விடாப்பிடியாக நின்றான் அன்பு.
“ப்ச்!!” என கையை உதறிக்கொண்டவள். வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடச் சாப்பிடப் புரை ஏறியது பூங்கொடிக்கு.
“ம்ம், மெதுவா மெதுவா!!” என உச்சியில் ஊதி விட்டான்.
“ஹே, don’t touch me!! என்ன? இப்போ உனக்கு அவுத்து போட்டு காட்டணுமா? சும்மா சும்மா பக்கத்தில் வந்து தொட்டுப் பேசுற!!” என கத்திவிட்டாள் பூங்கொடி.
அன்புசெல்வன் ஸ்தம்பித்து நின்றான். அவளிடம் இப்படி ஒரு பேச்சை அவன் எதிர்பார்க்கவில்லை. வேகமாக நகர்ந்து கொண்டவன் குளியலறையில் புகுந்தான்.
பூங்கொடி எதையும் கண்டுகொள்ளாமல் உணவைச் சாப்பிட்டு முடித்தவள் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். அன்புசெல்வன் அவளைப் பார்த்த பார்வைதான் சிந்தையில் தோன்றி கொண்டே இருந்தது.
“ஹலோ அப்பா,” எனத் தனது தந்தைக்கு அழைத்தவள் கல்லூரிக்கு காரில் சென்று இறங்கினாள்.
“ஹே, அன்பு நம்பர் கொடு!!”
“அவன் போன் யூஸ் பண்றதில்லை! அவன் நம்பர் உனக்கு எதுக்கு?” எனப் பூங்கொடி கேட்க..
“சரி, வேணாம். நீ அன்புவோட போட்டோ அனுப்பு!! ஐ மீன், அன்பு சிங்கிளா இருக்க போல, எனக்கு வேணும்,” என்றாள் அனுசுயா.
“அவனோட போட்டோ உனக்கு எதுக்கு?”
“ஹே, இப்போ எதுக்கு கொந்தளிக்கிற? எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறாங்க! என்னோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் எல்லாமே அன்பு போல இருக்கணும். ஹே, அன்புக்கு தம்பி யாரும் இருக்காங்களா?” என ஆர்வத்துடன் கேட்டாள் அனுசுயா.
“அன்பு அண்ணனுக்கு மூணு அக்கா மட்டும் தான். இதோ பூங்கொடி, அவங்க அம்மா தான் முதல் பொண்ணு! நீ எதுக்கு அனு, அவளை டார்ச்சர் பண்ற? கொஞ்சம் ஃப்ரீயா விடு டி!!” என்றாள் மணிமேகலை.
அனுசியாவின் கைகளை இழுத்துச் சென்ற பூங்கொடி, “ஹே, அவன் பக்கம் திரும்பினா கொன்னு புதைச்சிடுவேன்.”
“ஹே, பூங்கொடி, என்ன இப்படி பேசுற?” என அனுசுயா அதிர்ச்சியுடன் பார்க்க..
“ப்ச்!! அவன் என் புருஷன். ‘அன்பு’ அப்டின்னு சொல்லுகிற வேலையை இன்னையோட விட்டுடு. இனி அவனை அண்ணான்னு கூப்பிடனும்.”
“ஹே, நீ ஓவரா போற?” என அனு கையை மீட்டுக்கொள்ளப் போராடினாள்.
“இனி நீ அவனைப் பற்றிப் பேசவே கூடாது. எனக்குத் தெரியாமல் அவனைப் பார்க்கவும் கூடாது, பேசவும் கூடாது,” என்று மிரட்டி அனுப்பினாள்.
“ஹே, என்னடி ஆச்சு?” என மணிமேகலை அனுவிடம் கேட்க..
“ஒண்ணுமில்லை,” என சமாளித்தாள் அனுசுயா. இந்த அளவுக்குப் பூங்கொடி இருப்பாள் என அவள் நினைக்கவில்லை. இதற்கு முன்னால் சதீஷைத் திருமணம் செய்துகொள்ளப் போகிற நேரத்தில் அவனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். ஒன்றாக அவனுடன் தோழிகள் அனைவரும் வெளியே கூடச் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது பூங்கொடி இப்படி இல்லை. ஆனால் இப்பொழுது? இப்பொழுது பூங்கொடி வேறு ஒருவராகத் தெரிகிறாள். அதாவது, இப்பொழுது அவள் அன்பின் பொண்டாட்டி.
அன்புசெல்வன் அவளிடம் பேசுவதில்லை. மூன்று வேளையும் உணவு மேஜையில் கொண்டு வந்து வைத்துவிட்டு அவனது வேலையைப் பார்க்கச் சென்று விடுவான். அவள் தூங்கிய பிறகே அறைக்குள் வருவான். கீழே அடுக்கிப் போட்டுப் படுத்துக்கொள்வான். காலையில் நேரமே எழுந்து சென்று விடுவான். இதுவே இரண்டு வாரத்துக்கு நீடித்தது.
நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள் பூங்கொடி. ஆஜானுபாகுவாக உள்ளே வந்தவன், அவள் நேரத்தில் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு உடனே வெளியேற..
“ஹே, நில்லு!!”
நின்றான்.
“எனக்குச் சுக்கு காபி வேணும். இப்போவே!!” என்றாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் போட்டு எடுத்து வந்தான்.
“முக்கியமான விஷயம், அப்படி உட்காரு,” என்றாள் பூங்கொடி.
“ம்ம், சொல்லு!!”
“அந்த அனுசுயா இருக்காளே!!”
“எனக்கு யாரையும் தெரியாது. எந்தப் பெண்ணுகிட்டையும் நான் பேசினதில்லை,” என அன்புசெல்வன் சலித்துக்கொண்டே கூற..
“டேய், சொல்றதக் கேளு டா ப்ளடி பிஸ்கட்!!” அன்பு அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
பூங்கொடி ஒரு பெரிய மூச்சை விட்டபடி, “எனக்கு செமஸ்டர் ஸ்டார்ட் ஆகுது, பத்து நாள் நடக்கும். அது முடிஞ்சதும் அந்த அனுசுயாவுக்கு ஊட்டியில் எங்கேஜ்மென்ட் நடக்குது.”
“போயிட்டு வா!!”
பூங்கொடி அவனை முறைத்துப் பார்க்க, அவனோ புருவத்தைச் சுருக்கிக்கொண்டு பார்த்தான்.
“த்ரீ டேஸ் அங்கே தங்கணும். நீ தானே என்னோட புருஷன். அப்போ நீ தான் கூட்டிட்டுப் போகணும்.”
“சரி, கொண்டுபோய் விட்டுட்டு இங்கே வந்துடுறேன். அப்புறம் மூணு நாள் கழிச்சு உன்னை வந்து அழைச்சிட்டு வரேன்,” என்றான் அன்பு.
அவளோ, “வெட்டவா? குத்தவா?” என்னும் ரீதியில் பார்த்தாள்.
“என்னாச்சு?” என அன்பு கேட்க..
“இங்கே என்ன பிடுங்கும் வேலை பண்ற? நான் அங்கே எல்லார் முன்னாடியும் அவமானப்படணுமா? அதுக்குத்தானே திட்டம் போடுற?” என பூங்கொடி கேட்க..
அன்புசெல்வன் அவளை வெற்றுப் பார்வையுடன் பார்த்தான். பூங்கொடி தொண்டையைச் சரி செய்துகொண்டவள், “என்னோட ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி நம்ம சண்டையக் காட்டிக்க கூடாது. நம்ம ரெண்டு பேரும் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ அப்டின்னு சொல்லிட்டு திரியுறாலுங்க, அதனால என் கூட ஸ்டே பண்ணு,” என்றாள் பூங்கொடி.
அன்பு அமைதியாக இருக்க..
“டேய், நீ வர!!”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. கஷ்டம். நீ உங்க அண்ணா கூட போயிட்டு வாயேன்,” என்றான் அன்பு.
“வெளியே போயிடு!! என் முன்னாடி நிக்காத,” என எரிந்து விழுந்தவள் ரா பகலாகப் படித்தாள் பூங்கொடி.
“என்ன மா இது?” என அன்புசெல்வன் கேட்க..
“இது அமுலுக்கு டீ!! படிக்கும் போது போட்டு குடிச்சுக்கும் தானே, அதுக்குத்தான்,” என கொடுத்து விட்டார் அன்னம்.
அன்பு தன் அன்னையை வைத்த கண் வாங்காமல் பார்க்க, “என்னடா அப்படிப் பார்க்கிற?”
“நான் தான் உன்னோட பையன்? உனக்கு இப்பவெல்லாம் நான் கண்ணுக்குத் தெரியறது இல்லை,” என்றான் பொய்க் கோபத்துடன்.
“எப்போதும் எனக்குப் பூங்கொடி தான் முக்கியம், போடா!” எனச் சிரித்துக்கொண்டே அனுப்பி வைத்தார்.
அவளின் முன்னால் ஃப்ளாஸ்க்கை வைத்தான் அன்பு.
“என்னது?” எனப் பூங்கொடி கேட்க..
“தூக்கம் வந்தால் குடிக்க!! சுக்கு காபி,” என்றவன் கீழே அடுக்கிப் போட்டுப் படுத்துவிட்டான். அவளிடம் அதிகமாகப் பேசுவதில்லை. இருவரும் கணவன் மனைவியாகவும் இல்லை, நட்புடன் கூடப் பழகுவதில்லை.
மூன்று மணிக்கு எழுந்து பார்த்தான். உறங்கிக் கொண்டிருந்தாள் பூங்கொடி. அலாரம் அடித்துக் கொண்டிருக்க..
“அமுலி, அமுலி!!” எனத் தட்டி எழுப்பினான்.
அவள் கண்களைத் தேய்த்துக்கொண்டு எழுந்தவள், “என்னடா பண்ற?” எனத் திடுக்கிட்டாள்.
“அதுவா, இது ஃப்ளாஸ்க்!! ஆம்,” அன்பு ஃப்ளாஸ்க் கொண்டு அவளைப் பிராண்டினான்.
“அது தெரியும், அதை எதுக்கு டா என் மேலே போட வர! அடிக்க வரியா அன்பு? என்னை அடிச்சிட்டு எவள் கூட ஓடப் போற?” என அதிர்ந்து கேட்டாள் பூங்கொடி.
“நான் டச் பண்ணா! அதுக்கு கதை சொல்லுவ! ரொம்ப வல்கரா பேசுவ! அதான் உன்னைத் தொடாமல் எழுப்ப ட்ரை பண்ணேன்,” என்றான் அன்பு.
வேகமாகப் படிக்க ஆரம்பித்தாள் பூங்கொடி.
“டெய்லி நடத்துற பாடத்தை தினமும் படிச்சிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காதுல்ல.”
“உன்கிட்ட கேட்டேனா? என்னை உன்னை மாதிரின்னு நினைச்சியா? நான் உன்னை போல பட்டிக்காட்டான் இல்லை. நான் இன்ஜினியர்,” என்றவள் படிப்பதில் கவனம் செலுத்தினாள்.
அன்பு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தவன் ஆங்கிலத்தில் புலமையுடன் பேசினான். சில கொட்டேஷன், எக்ஸ்போர்ட்ஸ் பற்றிய விவரங்கள் என அனைத்தையும் செய்தான். இரண்டு மூன்று போன் கால் பேசினான்.
“டேய்!!”
“ம்ம்!!”
“என்னை காலேஜில் ட்ராப் பண்ண முடியுமா?”
“என்ன?”
“பஸ்ல பாட்டு ஓடும். காலேஜ் போனால் ம்ம், அங்கே போனால் படிக்க விடமாட்டாலுங்க, பேசிட்டே இருப்பாழுங்க! நீ வண்டியில் கொண்டு போய் விடு, நான் பொறுமையா போறேன்,” என்றாள் பூங்கொடி.
“ம்ம், விடறேன்,” என அன்பு சொல்லிவிட..
“ஓகே,” என்றவள் வேகமாகப் படிக்க ஆரம்பித்தாள். குளித்து முடித்து 9.00 மணிக்குக் கிளம்பினாள்.
“போலாமா?” என அன்புசெல்வன் வண்டியை எடுத்து வைத்தான்.
“ம்ம்,” என்றவள் புன்னகையுடன், “தாத்தா, போயிட்டு வரேன்,” என வண்டியில் கால் போட்டு அமர்ந்தாள்.
“ஹால் டிக்கெட் எடுத்துக்கிட்டியா? பேனா, பென்சில் எடுத்துக்கிட்டியா?” என அன்பு கேட்க..
“எல்லாமே எடுத்துட்டுக் டேன், வண்டி எடு டா!!” என்றாள்.
“என்ன?” என அன்னம் புருவத்தைச் சுருக்கிக் கேட்க…
“ஹான், எடுத்துட்டேன் மாமா! வண்டியை எடுங்க மாமா!!” என்றாள் வேறு புறம் பார்த்துக்கொண்டே.
அன்பு அடக்கப்பட்ட சிரிப்புடன் கிளம்பியிருந்தான்.
“டேய் அன்பு! டேய் நாயே! உங்க அம்மாவ ஒழுங்கா இருக்கச் சொல்லு!!” எனச் சொல்லிக்கொண்டே சென்றாள். பாதி வழியில் அவனது முதுகில் சாய்ந்து உறங்கியே விட்டாள்.
“டேய், வண்டிய நிறுத்து!!” என சதீஸ் கூற, “என்னாச்சு டா?” எனப் பழனி கேட்டான்.
“என் கூட ஒரு நாள் வண்டியில் வந்திருப்பாளா? இவன் கூட ஓட்டிட்டுப் போறா! இருடி, உனக்கு இருக்குது,” பற்களைக் கடித்துக்கொண்டு பார்த்தான் சதீஸ்.
“அமுலி, காலேஜ் வந்திடுச்சு!” என அன்பு கூற..
மதியம் 2 மணிக்கு வந்திடு என்று விட்டு உள்ளே சென்றாள்.
“அமுலி!!” என அன்பு அழைக்க..
“என்ன?” என முகத்தைச் சுளித்துக்கொண்டே திரும்பிப் பார்த்தாள்.
“ஆல் தி பெஸ்ட். இந்தா ஆரஞ்சு மிட்டாய்.”
“எதுக்கு?”
“எக்ஸாம் ஹால் ரொம்ப அமைதியா இருக்கும். ராத்திரி முழுக்கப் படிச்சிருக்க, அதனால தூக்கம் வரும்போது இதைச் சாப்பிட்டுக்கிட்டே எழுது,” என நீட்டினான்.
“தேங்க்ஸ்,” என வாங்கிக்கொண்டாள்.
“ம்ம், நான் ரெண்டு மணிக்கு வரேன்,” என்று புறப்பட்டிருந்தான். மிட்டாயைத் திறந்து திறந்து பார்த்தாள். உள்ளுக்குள் ஏதோ செய்தது. “அமுலி, அமுலி,” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் குதித்துக்கொண்டே ஓடினாள்.
அன்புசெல்வன் அழைத்த ‘அமுலி’ என்ற வார்த்தை உள்ளுக்குள் ஆக்சிடோசின் சுரந்தது, தேவைக்கு அதிகமாகவே.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels