மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
714 views

Episode -27 

உடைகள் கலைந்து உணர்வுகள் மேலோங்கி இருவரும் இரண்டற கலக்கும் நொடி சில நொடிகளில்.. முத்தங்கள் எப்படி அடுத்த கட்டத்துக்கு சென்றது? அவள் தான் கொடி இடையாளின் அதரங்கள் தான் காரணம். மாமா என்று அழைத்தாளே!! 

எனக்கு தோணும்போது கூப்பிடுறேன். எனக்கு எப்போ மரியாதை கொடுக்க தோணுதோ அப்போ கூப்பிடுவேன். என்னை கம்பல் பண்ணாத என அவள் தான் கூறினாள். அப்போ இதுக்காக தான் காத்திருந்தாளா? ஆடவனிடத்தில் பொத்தி வைத்த பெண்மையை பறைசாற்றும் போது தான் மரியாதை கொடுக்க வேண்டுமோ என்னவோ? 

அன்பு செல்வனின் போன் சிணுங்கிய அதே நேரத்தில் பூங்கொடியின் போன் சினுங்க.. இருவரும் சட்டென பிரிந்தார்கள் சாக் அடித்தது போல.. உடைகளை சரி செய்து கொண்டவள் வெட்கத்தை மறைத்து வெளி காட்டி கொள்ளாமல் போனை எடுத்தாள் ஒரு பக்கம். 

இன்னொரு பக்கம் அன்பு அவனது போனை எடுத்து பார்த்தான். மேனகா அழைத்திருந்தாள். 

ஹலோ சொல்லு மேனகா? 

மாமா நம்ம சங்கீதா பெரிய பொண்ணு ஆகிட்டா!! அப்பா உங்க கிட்ட பேசணும்னு சொன்னார் என வேகமாக போனை கொடுத்தாள் மேனகா. அவளது சிந்தையில் பூங்கொடி அன்பு ரெண்டு பேரும் இணக்கம் ஆக கூடாது என்பது தான் ஓடி கொண்டிருந்தது எப்பொழுதும். 

போனை பேசி விட்டு பூங்கொடியின் பக்கம் திரும்பினான். 

பூங்கொடிக்கு தனம் அழைத்திருந்தார். சங்கீதா பெரிய மனுசி ஆன விசயத்தை கூறுவதற்காக.. 

அவள் பேசி விட்டு போனை வைக்க, அன்பு செல்வன் அனைத்து தயக்கங்களையும் தூர வைத்து விட்டு அருகில் நெருங்கியவன். பூங்கொடி என் கூட வாயேன். நம்ம ரெண்டு பேரும் போலாம். என கைகளை பிடித்தான். 

நீயா கூப்பிடுறயா? இல்ல அவள் பெரிய மனுசி ஆனதுக்கு கூப்பிடுறயா? என அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். 

அன்பு செல்வனின் கன்னக்குழி கொஞ்சம் சினுங்க, இதுக்கு முன்னாடி கூட கூப்பிட்டேன். உன்னை விட்டு போக எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல. ஆனால் நீ தான் வர மாட்டேன்னு சொல்லிட்ட! அட்லீஸ்ட் இந்த சாக்கு சொக்கியாச்சும் உன்னை என் கூட கூட்டிட்டு போகணும்னு ஒரு நப்பாசை தான். நீ இல்லாம எனக்கு தனியா இருக்க போல பீலிங் என்றான். 

ம்ம் போதும் போதும்!! என சொல்லி கொண்டே திரும்பினாள். 

என்ன? வரியா இல்லையா பூங்கொடி? என தவிப்புடன் கேட்டான். 

ம்ம் வரேன் வரேன் என உதட்டுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டு புறப்பட்டாள். 

வெகு நேரமாக தவித்து கொண்டே திரிந்தான் அன்பு. 

என்னாச்சு இப்போ உனக்கு? என பூங்கொடி அவனை பார்க்க, 

க.. கைய பிடிச்சுக்கவா? என அன்பு ஏக்கத்துடன் பார்க்க.. 

ம்ம் விருப்பப்பட்டால் பிடிச்சிக்கலாம் என்றாள். 

அப்போ எல்லாத்துக்கும் சம்மந்தம் தான் என மறைமுகமாக சொல்கிறாள். ஆம் அவள் தானே வந்து முத்தமிட்டாள் அதுவும் தானாக வந்து. என உள்ளுக்குள் தோன்ற அன்பு செல்வன் இனி ஹேப்பி அண்ணாச்சி!! 

பூங்கொடி கூட அதே நிலையில் தான் இருந்தாள். இருவரும் இந்நேரம் அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பார்கள். நடுவில் அந்த போன் கால் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

அன்பு செல்வன் அவளை தோலுடன் அணைத்து கொள்ள கூச்சத்தில் நெளிந்தாள். அவளின் மோவாய் பற்றினான். இமை குடைகள் தாழ்ந்திருக்க வெட்கம் நாணம் என அனைத்தையும் அடக்கி கொண்டு பார்த்தாள். உதட்டில் முத்தமிட்டான் தயக்கத்துடன்.. அவளிடம் எதிர்ப்பு இல்லை என தெரிந்ததும் சுவற்றில் சாய்த்து முத்தமிட்டான். அவளும் அவன் பிடரி முடியில் கைகளை கோர்த்து கொண்டாள். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை. அன்பு செல்வனுக்கு அனைத்தும் கனவு போல இருந்தது. அவனது கை வளைவுக்குள் பூங்கொடி. 

அவள் தன்னை பார்க்க மாட்டாளா? தன்னை பிடிக்காதா? தன்னிடம் பேச மாட்டாளா? என நினைத்த காலம் போய் இன்று அவள் அவனது கை வளைவில். சொல்லவா வேண்டும். அதுவே தனி போதை.. அதுவும் இல் வாழ்க்கையில் அவனது துணை பூங்கொடி.. இனி என்ன வேண்டும் அவனுக்கு. இருவரும் ஒன்றாக புறப்பட்டு வெளியே வந்தார்கள். 

ஜெகன், அனுசுயா இருவரின் முன்னும் வந்து விவரம் சொன்னார்கள். 

கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்!! மூணு நாள் இல்ல. ஒரு வாரம் நடக்கும் கல்யாணம் என ஜெகன் மற்றும் அனுசுயா இருவரும் கூற..

கண்டிப்பா என்றான் அன்பு. 

அப்புறம் ஹைடன் சிக் எப்டி இருந்தது. 

அது!! என அன்பு ஓர கண்களால் பூங்கொடியை பார்த்தான். 

அவளோ உணர்வுகளை மறைத்து கொண்டு மணி மேகலையிடம் பேச சென்றாள். 

அனுசுயா சிரித்து கொண்டே பூங்கொடியுடன் ரகசியம் பேசினாள்.

ச்சீ என்னடி பேசுற? அணு ஓவரா போற!! என பூங்கொடி பொய் கோபம் கொண்டு பேச.. 

எங்க முன்னாடி தான் இப்படி!! ஆனா உன் மாமன தனியா கூட்டிட்டு போய் புல் ரொமான்ஸ் தான். பூங்கொடி யாருன்னு எனக்கு அப்போ தெரிஞ்சது. அப்படியே பசை போல ஒட்டிக்கிறே? என அனுசுயா சொல்லி கொண்டிருக்க, பூங்கொடி தயக்கத்துடன் நின்றிருந்தாள். 

இந்த ஹைடன் சிக்க நான் எப்போவும் மறக்க மாட்டேன் ஜீ!! விளையாட வரவே மாட்டேன்னு சொல்லிட்டு நல்லா விளையாடினீங்க!! பார்த்தோம் என ஜெகன் கூற.. 

ஜி கொஞ்சம் கம்முன்னு இருங்க ஜி!! நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல என அன்பு செல்வன் எவ்வளவோ எடுத்து கூறினான் ஆனால் ஜெகன் கிண்டல் செய்து கொண்டே இருந்தான். 

அன்பு போலாம் நேரமாகுது என வேகமாக பூங்கொடி கிளம்புவதில் வேகம் காட்டிட.. 

நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். போலாம் என அன்பு கூறி விட்டு நகர, கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கணும். இல்லன்னா நாங்க கிளம்பி அங்கே வந்திடுவோம் என ஜெகன் கூற.. சிரித்து கொண்டே இருவரும் சென்றார்கள். 

அவளின் கையை வருடி கொண்டே வந்தான். விரல்களுக்கு முத்தமிட்டான். 

என்னடா பண்ற? என அவனை பார்த்தாள். 

சாரி தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என அவன் திரும்பி கொள்ள, 

பூங்கொடி அடக்கப்பட்ட சிரிப்புடன், டேய் எனக்கு ரொம்ப குளிருது பக்கத்துல வாயேன். கொஞ்சம் இப்படி வா என நெருங்கி அமர்ந்தாள். அவளை தோலுடன் அணைத்து கொண்டான். நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். உச்சந்தலையில் முத்தமிட்டான். 

அவள் நெளிந்து கொண்டே அவனது நெஞ்சில் கோலம் போட்டாள். அன்பு செல்வனுக்கு தெரிந்து விட்டது அவளுக்கும் தன் மேல் இஷ்டம் என்று. ஆசையுடன் அணைத்து கொண்டான். இதை காதல் என்று சொல்லி விட முடியாது. இது ஒரு வாழ்நாள் அவா! அவள் வேண்டும் வாழ்நாள் முழுக்க அந்த உணர்வு பார்த்து பழகி தோன்றுவதில்லை. பார்த்த மாத்திரத்தில் தோன்றியது. 

***

22 வயசு எல்லாம் ஒரு கல்யாண வயசா? காசுக்கு ஆசைப்பட்டு கிளி மாதிரி வளர்த்து பெத்த புள்ளைய போயும் போயும் அந்த அயோக்கியனுக்கு கட்டி வச்சு அவனும் இப்போ அல்ப ஆயிசுல போய் வயித்துல குழந்தையோட நிக்க வச்சிட்டுயே டா பாவி! படு பாவி என அனைவரும் கத்தி கொண்டிருந்தார்கள். 

கண்களில் நீருடன் தர்ம ஆஸ்பத்திரியின் முன் ஒரு மூளையில் நின்று கொண்டிருந்தாள் சவுந்தர்யா. 

இந்த அயோக்கியன் சாவுக்கு எல்லாம் மழை வராது தான் இன்னும் வேதனையா இருக்கு. என ஊர் காரர்கள் கரித்து கொட்டி கொண்டிருக்க.. 

அவர்களுக்கு தெரியவில்லை மழை மகள் வந்தது. சவுந்தர்யாவை நினைத்து அழத்தான். திருமணமாகி முழுதாக ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி ஒரு துயரம் அவளது வாழ்க்கையில்.. 

சவுந்தர்யாவின் தந்தை ஜெயபால் பணத்துக்கு ஆசைப்பட்டு அயோக்கியன் மனோகரன் என்பவனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு கடமையே முடிந்தது என குடித்து மொத்தமாக அழிந்து போய் இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இதோ கட்டியவனும் கண்ணை மூடி விட்டான். சாதாரணமாக சாகவில்லை. வண்டியில் வேகமாக சென்று பேருந்தில் மோதி ஸ்பாட் அவுட். பெரிய தகராறு ஆகி போய் போலீஸ் கேஸ் என அனைத்தும் வந்து இப்பொழுது இங்கு நிற்கிறாள். 

பிரேதபரிசோதனை செய்யப்பட்டு மனோகரனின் குடும்பத்தார் வீட்டுக்கு கொடுக்க பட்டது. அவள் செல்லும் நேரம் ஆக்சிடன்டில் ஒரு பெரிய தொகையை பேசி இருக்கிறார்கள். அது மொத்தமும் மனோகரனது குடும்பம் சுருட்டி கொண்டது. சவுந்தர்யாவின் மேல் மனோகரன் குடும்பத்துக்கு சுத்தமாக பிடித்தம் இல்லை. 

மனோகரனின் அண்ணன் புஷ்பராஜ் சரியான கேடு கெட்டவன். இட்டு கட்டு பேசும் குணம் கொண்டவள். பணத்தை மொத்தமாக சுருட்டி கொள்ள தான் இத்தனை திட்டமும். அதனுடன் சவுந்தர்யாவின் மேல் அவனுக்கு ஒரு கண் என்று சொல்லலாம். இப்பொழுது மிகவும் வசதியாக போனது. 

அவர்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சவுந்தர்யா. காரியம் முடித்து குழிக்கு சென்று விட்டான் கணவன் மனோகரன். சவுந்தர்யா கண்களில் நீருடன் ஒரு மூளையில் அமர்ந்திருந்தாள். 

அவ்விடத்துக்கு வந்தான் புஷ்பராஜ். சவுந்தர்யா!! என அழைத்து கொண்டே நுழைந்தான். 

உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொள்ள திரும்பி பார்த்தாள். 

நீ அவன் போனத நினைச்சு கவலை படாத! மாமன் இருக்கேன். உனக்கு எல்லாமே நானா இருப்பேன். நீ இனி இங்கே இருக்க வேணாம். நம்ம வீட்டுக்கு வந்திடு என அருகில் நெருங்கினான்..

சவுந்தர்யா..? 

இங்கே எதுக்கு வந்திருக்கோம் என போதையில் கேட்டான் மகிழ் வேந்தன். 

தம்பி நம்ம தனம் பஸ்ல விழுந்து செத்து போயிட்டான். இப்போ வேற அப்பா பஸ்சு வேலையா கரூர் போயிருக்காப்டி!! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதான் உங்களை அழைச்சிட்டு பிரச்னையா முடிக்க வந்தேன் என்றார் மேனஜர் மூர்த்தி. 

யாரு? அவன்? என மகிழ் கண்களை மூடியபடி கேட்க.. 

மனோகரன் என்றார் மூர்த்தி. 

மனோகரன் பெயரை கேட்டதும் சவுந்தர்யா என உதடுகள் தன்னிச்சையாக முணுமுணுத்தது

என்னை விட்டுடுங்க பிளீஸ் என சவுந்தர்யா புஷ்பராஜிடம் இருந்து தப்பிக்க முயன்றாள். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment