Episode -28
மனோகரன் பொண்டாட்டி யாரு? என கேட்டபடி வந்தார் தனம் தனியார் பேருந்தின் மேனஜர் மூர்த்தி.
புஷ்பராஜ் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான். சவுந்தர்யா இப்பொழுது பெரிய வீட்டில் இருக்கிறாள். அங்கு அழைத்து வர பட்டாள்.
மகிழ் வேட்டியை மடித்து கட்டி கொண்டு மூர்த்தியுடன் அவ்விடத்துக்குள் நுழைந்தான்.
தனம் பஸ் ஏஜென்சில இருந்து வந்திருக்கீங்களா என கேட்டு கொண்டே புஷ்பராஜ் சேரை எடுத்து போட்டான்.
மூர்த்தி நான்கு லட்சத்துக்கு உண்டான செக்கை எடுத்தவர். மனோகரன் பொண்டாட்டிய வர சொல்லுங்க அவங்க கிட்ட தான் கொடுக்கணும். கூடவே இந்த ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கனும் அப்படியே மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் போகணும் என்றார்.
மகிழ் வேந்தன் வாசல் கதவையே பார்த்து கொண்டு நிற்க,
அரசி!! சவுந்தர்யாவை கூட்டிட்டு வா என புஷ்பராஜ் சொல்லி கொண்டே செக்கை பார்த்தான்.
சந்தன கீற்று குட்டி பொட்டு இல்லாமல் அவள் முகத்தை பார்த்ததே இல்லை மகிழ். மலர் தோட்டத்தில் நட்டு வைத்த ரோஜா செடியில் இருக்கும் மலர் போல இருப்பவள் இன்று வெள்ளை புடவையில்.. என நினைக்கவே உள்ளம் குமுறியது மகிழுக்கு. கைகளை இறுக்கி மடக்கியபடி அமர்ந்திருந்தான்.
சிவந்த விழிகளுடன் மொட்டை கழுத்து காதில் கம்மல் இல்லை. ஒரு பொட்டு நகை இல்லை அந்த வெண்ணிற புடவையில்.. நினைக்கவே உள்ளம் கனக்க வெள்ளை நிலவை கூட வெறுத்தான்.
புஷ்பராஜ் சந்தோசத்துடன் செக்கை பார்க்க, இதுல சைன் பண்ணு கண்ணு!! தப்பு எங்க பேர்ல இல்ல. உன்ட்ர புருஷன் முழு போதையில் விட்டு ஏத்திட்டு போயிட்டான். இது எங்களோட கடமை கண்ணு இந்த பணத்தை இழப்பீடா கொடுக்கிறோம் என நீட்டினார்.
சரியாக அந்த பணத்தை அவள் வாங்கி கொள்ள, இந்தா சவுந்தர்யா? என்ற கிட்ட கொடு கண்ணு என அரசி கேட்க, அடுத்த நொடி செக் அவரது கைக்கு சென்று விட்டது.
இதில் கையெழுத்து போடு கண்ணு என மூர்த்தி நீட்ட..
சவுந்தர்யா கண்ணீரை துடைத்து கொண்டு காகிதத்தை வாங்கினாள்.
அதே நேரம் ISC பைனான்ஸ் பண்டு நிறுவனத்தில் இருந்து நான்கு வண்டிகள் வந்து இறங்கியது.
மகிழ் வேந்தன் கார் சத்தம் கேட்டதும் திரும்பி பார்க்க, அதே நேரம் மூர்த்தி, புஷ்பராஜ், அரசி என அனைவரும் திரும்பினார்கள்.
இங்கே புஷ்பராஜ் யாருங்க? என கேட்டு கொண்டே வந்தார் மேனேஜர் கார்த்திகேயன்.
நான் தானுங்க என புஷ்பராஜ் முன்னால் வர,
உங்க தம்பி தானுங்களே மனோகரன்? என கார்த்தி கேட்க..
ஆமாங்க!! என்ற கொழுந்தன் தானுங்க என அரசி கூறினாள்.
சரிங்க இந்த வீடு யாரு பேரில் இருக்கு? நில புலன் எவ்ளோ இருக்கு என கார்த்திகேயன் கேட்க..
என்ன விசயம்னு தெரிஞ்சுக்கலாங்களா? எதுக்கு இதையெல்லாம் கேட்கிறீங்க? என பதட்டத்துடன் கேட்டார் புஷ்பராஜ்.
அது உங்க தம்பி மனோகரன் 80 லட்சம் கடன் வாங்கியிருக்காப்டி அதுல இது நாள் வரைக்கும் நாலு டீயு தான் முடிஞ்சிருக்குது. அவரோட சொத்துக்களை பறிமுதல் பண்ண வந்திருக்கோம். இந்த வீட்ல அவருக்கும் பங்கு இருக்கு தானே? என கேட்டார் கார்த்திக்.
இதை கேட்டதும் புஷ்பராஜ் முகத்தில் குப்பென வியர்த்து போக,
இந்த பொண்ணு தானே மனோகரன் மனைவி! இவங்களுக்கு கார்டியன் நீங்க தானுங்களே! ரொம்ப நல்லதா போச்சு. கொஞ்சம் பணத்தை எப்போ இருந்து கட்ட ஆரம்பிக்கிறீங்க? உங்க கையில என்ன? என வாங்கி பார்த்தவர். நல்லது இதுல நாலு லட்சம் இருக்குது. ஒரு மாசத்துக்கு ஒரு லட்சம். அப்படி பார்த்தால் இன்னும் 96 லட்சம் கொடுக்கணும். எப்போ என சுற்றி பார்த்தான் கார்த்திக்.
என்ன சொல்றீங்க? 96 லட்சமா? என அரசியின் முகம் சடுதியில் மாறி விட, அதை விட நடுக்கம் ஏற்பட்டது புஷ்பராஜுக்கு.
மூர்த்தி அதிர்ச்சியுடன் பார்த்தார். ச்ச என்ன ஜென்மம்? போகும் போகுது கூட இத்தன கடன் பண்ணி வச்சிட்டு போய்ட்டானே!! இப்போ இந்த பொண்ணு தலையில் தானே எல்லாமே விடியும் என பார்த்தார்.
ராஜேஷ் இந்த செக்கை பேங்க்ல கொடுத்து பணத்தை டிரான்ஸ்பார் பண்ணிடுங்க என்ற கார்த்திக் அப்படியே புஷ்பராஜ் பக்கம் திரும்பி கொஞ்சம் பைனான்ஸ் கம்பனி வரைக்கும் வர முடியுமா? நாலு பாத்திரத்தில் நீங்களும் மனோகரன் பொண்டாட்டியும் கையெழுத்து போட வேண்டி இருக்குது. அது கூடவே இறப்பு சான்றிதழ், வீட்டு கரண்ட் பில் அட்டை, சொத்து வரி விவரம் வேண்டும் என்றார்.
நீங்க போங்க சார்!! பின்னாடியே வந்து கொடுப்பாரு என கைகளை இறுக்கி மடக்கியபடி கூறினார் அரசி.
அப்படியா ரொம்ப நல்லது என சொல்லி விட்டு வீட்டை சுற்றி பார்த்து போட்டோ எடுத்து கொண்டு சென்றார்கள்.
இன்னும் நீங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க என அரசி மூர்த்தியை பார்த்து கேட்க,
புறப்படுவோம் என மூர்த்தி வேகமாக மகிழ அழைத்து கொண்டு சென்றார்.
அவர்கள் வெளியே சென்ற அடுத்த நொடி சவுபத்யர்யாவின் பொருட்கள் அனைத்தும் வீதிக்கு பறந்தது. சவுந்தர்யா அவமானத்துடன் வேதனையில் கூனி குறுகி நிற்க, புஷ்பராஜ் அவரது அறைக்குள் இருந்தார். வேண்டவே வேண்டாம் அவள் என தோன்றியது. இவள தொட்டால் கடனும் ஒட்டிக்கும் என மண்டைக்குள் ஓடிட.. வேகமாக அந்த எண்ணத்தை தூக்கி போட்டான்.
போதும் கண்ணு உன்னோட பொழப்ப பாரு எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க. அவங்கள கரை சேர்த்தனும். உன்ட்ர புருஷன் எப்பவோ சொத்தை பிரிச்சிட்டு போயிட்டான். இதெல்லாம் என்ற புருஷன் உழைச்சு சம்பாதிச்சது. இந்த வீட்டு பக்கம் வராத. கீழ வளைவு வீட்டை வாடகைக்கு விட போறோம். வருமானத்துக்கே ரொம்ப கஷ்டமா இருக்குது என துரத்தி விட்டார்கள்.
வெளியே மூர்த்தி காத்திருந்தார். அவளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று பேருந்தின் மேல் இருக்கும் புகாரை நீக்க..
பெட்டி படுக்கையை எடுத்து கொண்டு கண்களில் நீருடன் வந்தாள் சவுந்தர்யா.
கண்ணு போலீஸ் ஸ்டேசன் போகணும் என மூர்த்தி கூற..
நாளைக்கு காலையில் பத்து மணிக்கு வரேன். இப்போ எனக்கு என கமரிய படி அவள் பேச..
சரி மா என மூர்த்தி புறப்பட்டார். வேதனையுடன் பின்னால் திரும்பி பார்த்தான் மகிழ். அந்த கோபம் மொத்தமும் ஒன்றாக சேர்ந்து சிவராமன் மீது திரும்பியது. மகிழ் அங்கிருந்து நேராக சென்றது தனது தந்தையை பார்க்க தான்.
எங்கு செல்வது என தெரியாமல் முச்சந்தியில் நின்று கொண்டிருந்தாள் சவுந்தர்யா.
சவுந்தர்யா! என பின்னால் இருந்து குரல் கேட்க சட்டென திரும்பினாள்.
****
இன்று தான் சங்கீதாவுக்கு வீடு சேர்க்கும் நிகழ்வு. மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சையாக ஏற்பாடு செய்ய பட்டிருக்க, காலேஜ் முடித்து விட்டு நேரமே வீட்டுக்கு வந்த பூங்கொடி புறப்பட ஆரம்பித்தாள்.
சக்கரவர்த்தி மற்றும் அன்னம் இருவரும் தினமும் சென்று வருகிறார்கள். இன்றும் நேரத்திலேயே சென்று விட்டிருந்தார்கள்.
அன்பு செல்வன் நகை எடுக்க கடைக்கு சென்றிருந்தான்.
பூங்கொடியின் போன் சினுங்க, சொல்லு மேனகா!! என்றாள் சலித்து கொண்டே.
ஹே நான் அம்மா டி!! என தனம் கூற..
“அட ஏன் மா கேட்கிற? சும்மா சும்மா காலையில் இருந்து நிறைய முறை மேனகா போன் பண்ணி வர சொல்லிகிட்டே இருக்கா!”
அப்படியா? இங்கேயும் உன்னை தான் கேட்டுட்டு இருந்தா. அன்பு மாமா எப்போ வருவாரு அக்கா எப்போ வரும்னு சதா உன்னோட பேச்சு தான் என்றார்.
உன் தம்பி இன்னும் வரல!! நான் கிளம்பிட்டு இருக்கேன். அவன் வந்ததும் கிளம்பிடுவோம் என்றாள்.
தனாவுக்கு ஆச்சரியமாக இருக்க, உதட்டில் புன்னகையுடன் சரி என போனை வைத்தார்.
என்னாச்சு தனம்? சிரிக்கிற? என்று சந்தனகொடி கேட்க..
அதை ஏன் சந்தனம் கேட்கிற? இத்தனை நாள் அன்பு அப்டின்னு சொன்னாலே சண்டைக்கு வருவா. இன்னிக்கு என்ன சொன்னா தெரியுமா? அவன் என்னோட தம்பியாம் என்றார் புன்னகையுடன்.
கேட்கவே சந்தோஷமா இருக்கு தனம். அப்போ ரெண்டு பேரும் இணக்கமா இருக்காங்க போல இது போதாதா? நல்ல வேளை கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் என கை கூப்பி வேண்டினார்.
அதுவும் சரி தான். எனக்கு இப்போ தான் மனசு லேசான மாதிரி இருக்கிது. கண்ணு முன்னாடியே என் பொண்ணு சந்தோஷமா இருக்கா. என்னோட பொறந்த வீட்ல.. இதை விட என்ன வேணும்? என்றார்.
அதுவும் சரி தான் என இருவரும் சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்றார்கள்.
மெரூன் கலர் புடவையில் அழகாக தயாராகி கொண்டிருந்தாள் பூங்கொடி.
பூங்கொடி புறப்படலாமா? என கேட்டு கொண்டே வந்தான் அன்பு.
இதோ அஞ்சு நிமிசத்தில் நான் ரெடி என அவள் சொல்லி கொண்டே இது என்ன? என கேட்டாள்.
தாய் மாமன் சீரூ செய்யனும்னு அம்மா சொன்னாங்க. இது வாங்கினேன். என ஒரு நகை பாக்ஸை நீட்டினான். ஒரு கொலுசு, கம்மல், நெக்லஸ், பட்டு புடவை அது கூட சீர் தட்டுகள் இருந்தது.
ம்ம் எல்லாமே நல்லாருக்கு என பூங்கொடி பார்த்து கொண்டே கூறினாள்.
இது உனக்கு! என பிரேஸ்லெட் நீட்டினான். லேட்டஸ்ட் மாடல் கற்கள் இல்லாமல் பூ இலை வடிவில் அழகாக இருந்தது.
எனக்கு எதுக்கு இது? என எதிர்பார்ப்பை மறைத்து கொண்டு கேட்டாள்.
ம்ம் வாங்கி கொடுக்க கூடாதா? என அன்பு கேட்க..
ம்ம் கொடுக்கலாம் கொடுக்கலாம் என அவள் சட்டென விலக முயற்சி செய்ய,
ஹே இரு என கையை பிடித்தவன். இன்னொரு பாக்ஸில் நீட்டினான்.
இது என்ன? என திறந்து பார்த்தவள் ஆச்சரியத்துடன் அன்புவை பார்க்க..
இது மெட்டி!! இப்போ டிரெண்ட்ல இருக்க டிசைன். இதை பார்த்ததும் உன்னோட விரல்களுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. அதான் வாங்கிட்டு வந்தேன். அந்த வெள்ளை கல் பதிச்சது உன்னோட ரெண்டு விரல்களுக்கும் elite look கொடுக்கும் என்றான் அன்பு.
ம்ம் என்றவள் மெட்டியை வாங்கி டேபிளில் வைத்து விட்டு பிரேஸ்லெட் எடுத்து கைகளில் போட்டு கொண்டாள்.
மெட்டி இருக்கும் பெட்டியை பார்த்தான் அன்பு. அவள் அதை போட்டு கொள்ளவில்லை.
ஒரு பெரு மூச்சை விட்டவன். அனைத்து பொருள்களையும் எடுத்து வைத்து கொண்டு கிளம்பினான். இருவரும் வண்டியிலே நொய்யல் சென்றார்கள்.
இங்கே சிவராமன் முன் மகிழ் இருந்தான்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
1 comment
Itha menga Torture panra….avale ipo tha mama varala vanthu iruka….iva Vera karadi