அத்தியாயம் – 2
என்னோட பையன் சதீஷ் என் பொண்ணு ரெண்டு பேரயுமே உன் வீட்டில் கட்டி கொடுக்க தான் எனக்கு ஆசை.. அதனால சதீஸ் கல்யாணத்தோட சேர்த்து சத்யாவுக்கும் மகிழ் வேந்தனுக்கும் கல்யாணம் பண்றது தான் நல்லதுன்னு தோணுது. அதுக்கு காரணமும் இருக்கு தம்பி!! சதீசை விட மகிழ் மூத்தவன். அதான் சொல்றேன் என மனோ ரஞ்சிதம் தன் தம்பி சிவ ராமனிடம் கூறினார்.
“அக்கா நீ சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான். ஆனால் பாரு ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்து பேனர் அடிச்சு எல்லாம் பன்னதும். இப்போ மகிழுக்கு பேசி முடிக்க சொல்ற! பேசாமல் ஒன்னு பண்ணுவோம். நம்ம சதீஸ் பூங்கொடி கல்யாணத்தில் முறையா நிச்சயம் செஞ்சுப்போம் அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிடலாம்.”
“இல்ல மாமா! அது சரிபட்டு வராது”
என்ன சதீஷ் சரி பட்டு வராது? எல்லாமே சரியா வரும். என சிவராமன் கூற..
“உங்க வீட்டு பொண்ணை நீங்க எப்படி சீக்கிரம் கட்டி கொடுக்க நினைக்கிறீர்களோ அதே போல தான் என் தங்கச்சியும்! மகிழ்க்கு தான் சத்யான்னு முடிவு பண்ணிட்டீங்க தானே இப்போ கட்டி வைக்க உங்களுக்கு என்ன கஷ்டம்?” என கேட்டபடி ஒற்றை காலில் நின்றான் சதீஸ்.
அவ்ளோ தான இப்போவே கூப்பிடுறேன் மகிழ் வரட்டும் பேசி முடிச்சிடலாம் என சிவராமன் தன் மகனுக்கு அழைத்தார்.
மகிழ் போனை எடுக்கவே இல்லை. அனைத்து விசயமும் தனகொடிக்கு சென்றது. விசயத்தை கேட்டதும் தூக்கி வாரி போட்டது.
சதீஸ் தன் மாமனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அஞ்சு நிமிசம் மாப்பிள்ளை என போனை எடுத்து கொண்டு வெளியே சென்றார் சிவராமன்.
மகிழ் நான் அப்பா பேசுறன் என சிவராமன் ஆரம்பிக்க..
ம்ம் சொல்லுங்க என வேண்டா வெறுப்பாய் ஒரு குரல்..
“மகிழ் உனக்கும் சத்யாவுக்கும் கல்யாணம் பன்றதாக இருக்கோம்”
உங்க அக்கா பொண்ணுக்கு என்னால வாழ்க்கை கொடுக்க முடியாது. வேற யாரையும் பார்த்துக்கோங்க! என்று வெடுக்கென பேசியபடி போனை வைத்து விட்டான்.
மகிழ் மகிழ் என சிவராமன் அழைக்க..
அடுத்த நொடியே சிவராமணின் நெருங்கிய வட்டம் அழைத்தது.
“ஹலோ சொல்லுங்க பங்காளி!”
விசயம் தெரியுமா பங்காளி ரஞ்சிதம் பொண்ணு சத்யா காலேஜ் படிக்கிற இடத்தில பெரிய வேலை பண்ணிட்டு வந்திடுச்சு. அந்த பையன் என்ன இடமோ எந்த ஊரோ பேரோ எதுவும் தெரியல! என கூறினார் சென்னிகிரி.
சிவராமனுக்கு இப்பொழுது எல்லாம் புரிய என்ன செய்வது என தெரியாமல் ஸ்தம்பித்து நின்றார்.
“என்ன பங்காளி நான் பேசிட்டு இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீக?”
“இல்ல கல்யாண வேலையா வெளியே வந்தேன். நான் பிறகு கூப்பிடுறேன்” என போனை வைத்தார்.
அதற்குள் அவசர அவசரமாக காரில் வந்து இறங்கினாள் தனகொடி.
என்னங்க மாமா? என்னாச்சு? எதுக்கு திடுதிப்புன்னு மகிழ்க்கு கல்யாணம் பண்ணனும்? என கேட்டார் தனக்கொடி.
என்ன மாமா முடிவு பண்ணிருக்கீக? என சதீஸ் வெளியே வர! அவரின் பின்னால் மனோ ரஞ்சிதம் வந்தார்.
சொல்லு தம்பி! என ரஞ்சிதம் கேட்க..
ஒரு பெரு மூச்சை விட்ட சிவராமன் கையெடுத்து கும்பிட்டபடி இந்த கல்யாணம் நடக்காது. வேணாம் கா! நீங்க பாருங்க என கூறி விட்டு திரும்பினார்.
“மாமா நில்லுங்க! பூங்கொடி க்கு என்னை விட எவன் பொருத்தமா போயிடுவான்? நீங்க அவசரப்பட வேணாம். கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க! நான் இல்லாம பூங்கொடி சந்தோசமா யாரு கூடவும் வாழ மாட்டாள்.” என சதீஸ் அவரின் காதில் விழும் அளவுக்கு கத்தி கூறினான்.
தம்பி! அவ்ளோ தானாடா! உனக்கு அக்கா மேலே பாசம்! நம்ம உறவு அவ்ளோ தானா தம்பி என அழுதார்.
என்னங்க மாமா பண்ணிட்டு இருக்கீங்க? ஊரை கூட்டி பத்திரிக்கை வச்சு பேனர் அடிச்சு மண்டபம் பேசி எல்லாமே பண்ணி இப்போ திடுதிப்புன்னு வேணாம்னு சொல்றீங்க? என தனக்கொடி பதட்டத்துடன் தன் கணவரின் பின் நடந்தாள்.
மாமா நீங்க எப்படியும் என்னை தேடி வந்து தான் ஆகணும். நீங்க வருவீங்க!! என சதீசின் பேச்சுக்கள் சிவ ராமனின் காதில் விழுந்தது.
மாமா! உங்களை தான் கேட்டுட்டு இருக்கேன்? என்ன பண்ணி வச்சிருக்கீங்க? என கோபத்தில் தனக்கொடி கத்த.. நீ கம்முன்னு வா! என அடக்கி வீட்டுக்கு அழைத்து சென்றார் சிவ ராமன்.
அங்கே சென்றதும் விசயத்தை கேள்வி பட்ட தனத்துக்கு தலையே சுற்றியது. இப்போ என்ன மாமா பண்றது? எல்லாரும் கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டு இருக்காங்க! கணக்கா இன்னும் ஒரு வாரம் தான் இருக்குது. என்ன பண்றது? என அழுகையே வந்தது.
சிவராமன் கனத்த மனதுடன் நின்றிருக்க.. பூங்கொடி புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
ப்பா எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சாச்சு! கல்யாணத்துக்கு என்னோட பிரன்ட்ஸ் எல்லாரும் வருவாங்க! நம்ம தெக்கு வீட்டை சுத்தம் பண்ணனும். நம்ம பஸ்லயே போயி பிக் அப் பண்ணிட்டு வந்திடலாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல. எல்லாமே ரெடி! என உற்சாகத்துடன் பேசினாள் பூங்கொடி.
இப்படி சந்தோசத்தில் இருக்கும் மகளிடம் கல்யாணத்தை நிறுத்தி விட்டேன் என எப்படி சொல்வது? நான் படிச்சு முடிக்கணும் கல்யாணம் வேணாம் பா என்று சொன்ன மகளை பேசி வற்புறுத்தி சமாதானம் செய்து இப்பொழுது அவள் கல்யாண கனவில் இருக்கும் நேரத்தில் எப்படி சொல்வது? என நொந்து போனார் சிவராமன்.
திருமண விசயத்தை கேள்வி பட்டு ஜெயக்கொடி – முருகேசன் , சந்தனகொடி – முத்து சாமி என தனகொடியின் தங்கைகள் தன் கணவன் மார்களுடன் வந்து சேர்ந்தார்கள்.
மாமா!! அக்கா என அழைத்து கொண்டு அவர்கள் உள்ளே வர!!
சித்தி என பூங்கொடியின் முகத்தில் உற்சாகம் ஒட்டி கொண்டது.
சகளை எல்லாத்தையும் கேள்வி பட்டோம்! இப்போ என்ன பண்ண போறீங்க? என விசாரித்தார்கள் முருகேசன் முத்து சாமி இருவரும்.
தனத்தின் கண்ணில் கண்ணீர் கோர்த்து கொள்ள அக்கா தங்கைகள் மூவரின் கண்ணிலும் கண்ணீர்.
மா என்னாச்சு? சித்தி எதுக்கு அழுதிட்டு இருக்கீங்க? நான் சதீஸ தானே கல்யாணம் பண்ணிக்க போறேன்! நீங்க கவலை பட வேணாம் என சொல்லி கொண்டிருக்கும் போதே!!
மகிழ் குடித்து விட்டு தள்ளாட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தான். கெட்ட எண்ணம் வச்சிருந்தால் கெட்டது தான் நடக்கும். இது ஆரம்பம் தான் இனி நிறைய இருக்கு எல்லாருக்கும் என கூறி கொண்டே உள்ளே சென்று படுத்து விட்டான்.
தனக்கொடி, ஜெய கொடி, சந்தன கொடி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
***
மாமா! மாமா! என மூச்சிரைக்க முட்டி வலியை பொருட் படுத்தாமல் ஓடி வந்தார் அன்னலட்சுமி.
என்னாச்சு அன்னம்? விழுந்துட போற? உன் பையன் வந்தால் அப்புறம் என்னை திட்டுவான் பொண்ணு! என வாஞ்சையுடன் அழைத்தார் சக்கரவர்த்தி.
மாமா நம்ம பாப்பா கல்யாணம் நின்னுடுச்சின்னு எல்லாரும் பேசிக்கிராங்க! என கண்களில் நீர் கோர்க்க பதட்டத்துடன் நின்றார் அன்னலட்சுமி.
“சின்ன பாப்பா கல்யாணமா? பூங்கொடி பத்தியா சொல்லிட்டு இருக்க?”
“ஆமா மாமா! எனக்கு வேற மனசு கேட்கல! என்னமோ எதோ தனம் எப்படி எல்லாத்தையும் தாங்கும்! நான் ஒரெட்டு தனகொடிய பார்த்திட்டு வரவா?”
“விசயம் பெரிசு தான் அன்னம்! ஆனால் நீ அங்கே போக வேணாம் பொண்ணு!” என்றார் சக்கரவர்த்தி.
என்ன மாமா பேசிட்டு இருக்கீங்க? என் பெரிய பொண்ணு கஷ்ட படுறதை பார்த்திட்டு இருக்க சொல்லுறீங்களா? என் கைக்குள் வளந்தவ மாமா! நான் வளத்தி ஆள் ஆக்கினேன் மாமா என் பொண்ணு மாமா! எனக்கு வேதனையா இருக்கு! இதையெல்லாம் பார்க்க தான் நான் உசுரோட இருக்கேனா என அழுதார்.
நீ போனால் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும். அந்த தனக்கொடி உன்னை வச்சு வேண்டி பார்க்க மாட்டா! இஷ்டத்துக்கு பேசுவா அன்னம். நீ அவளுக்கு விஜயலட்சுமியோட தங்கச்சியா தெரிய மாட்ட! விஜயலட்சுமியோட புருசன் அதாவது என்னோட ரெண்டாவது பொண்டாட்டியா தான் அவள் கண்ணுக்கு தெறிவ! உன்னை சித்தியா பார்க்க மாட்டாள் தனக்கொடி என் பொண்டாட்டி எங்கேயும் அவமான படகூடாது. என்றார் சக்ரவர்த்தி.
ஆம் சக்கர வர்த்தியின் முதல் மனைவி தான் விஜயலட்சுமி. அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட.. விஜயலட்சுமி படுக்கையில் இருக்கும் போதே அன்ன லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சக்கரவர்த்தி.
அதற்கு காரணம் சக்கரவர்த்தியின் குடும்பத்தில் அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். தனக்கொடி, ஜெயக்கொடி, சந்தனகொடி. வீட்டில் தனக்கு அடுத்து தன் குடும்பம் வம்சாவளி, தன் பெண் பிள்ளைகளை பார்த்து கொள்ள ஒரு மகன் வேண்டும் என அன்னலட்சுமி – சக்கரவர்த்தி திருமணம் நடந்தது. அதாவது சிவராமன் – தனக்கொடிக்கு திருமணம் ஆன பிறகு தான் அன்னலட்சுமியை சக்கரவர்த்தி கட்டி கொண்டார்.
அன்னலட்சுமி கருவாக இருக்கும் போது தான் தனக்கொடி அதற்கு முன்னால் கருவாகி விட்டாள்.
தனக்கொடிக்கு மகிழ் பிறந்து மூன்றாம் நாளில் அன்னலட்சுமிக்கு அன்பு செல்வன் பிறந்தான்.
ஊரில் எங்கு பார்த்தாலும் அவர்களின் குடும்பத்தை பற்றி கேவலமாக பேச ஆரம்பித்தார்கள். தன் தாயின் தங்கையாக இருந்த அன்னலட்சுமி இப்பொழுது தன் தாயின் இடத்தை பிடித்ததையும், அன்பு செல்வன் பிறந்தது, ஊரில் இருக்கும் அனைவரும் சக்கரவர்த்தி பற்றி பேசியது, தனகொடியின் நட்பு வட்டங்கள் ஊரார்கள் உங்க அப்பாவுக்கும் பையன் பொறந்துட்டான் உனக்கும் பையன் பொறந்திட்டான் என அனைவரின் கிண்டல் பேச்சுக்கள் பெரிதாக பிரளயத்தை உண்டாக்கியது சக்கரவர்த்தியின் மூன்று மகள்களிடம். முக்கியமாக தனக்கொடி அதில் அடங்குவாள்.
“சகலை இதுக்கு ஒருவழி தான் இருக்கு! பேசாமல் நீங்க நம்ம மாமனார் கிட்ட போய் பேசுங்க” என்றார் முத்துசாமி சிவராமணிடம்.
அந்த ஆள் கிட்ட பேசி என்ன ஆக போகுது? என முருகேசன் கேட்க..
ஒரு வழி இருக்கு!
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels