
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
- 20 Aug 2025
- 543 reads
- ☆ No ratings yet
- 5 min read
Episode-101
Pardon. இப்போ என்ன சொன்ன? என்னடா சொன்ன? என இன்பா மீண்டும் கேட்க..
அவனது அழுக்கு உடையில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன் வேகமாக இழுத்தான்.
தீரா!! வெளுப்பேன் ராஸ்கல்.
டாடி! பிளீஸ் டென்ஷன் ஆ இருக்கு stressed ஆக இருக்கு பிளீஸ் என்றான்.
இது கெடுதல் டா!!
இன்னிக்கு மட்டும் டாடி! என்றான் ருத்ரன்.
நிஜமாவே servent ஆக போக போறியா? என இன்பா கேட்க..
மொத்தமாக இழுத்து ஊதி தள்ளியவன். தலையை கோதி விட்டபடி அவள் பிடிவாதமாக இருக்கா!! அவளை கூட்டிட்டு வர வேற வழி தெரியல என்றான் ருத்ரன்.
அந்த bipolar bearன்னு என இன்பா ஆரம்பிக்க..
என்னை பார்த்தால் கரடி போல இருக்கா? ப்பா அது bipolar disorder என்றான் ருத்ரன்.
அதான் அது உனக்கு இருக்கா?
ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
டேய் உன்னை தான் சொல்லி தொலை என இன்பா கேட்க..
ஆமா!! இருக்கு!! போதுமா?
இன்பா அதிர்ந்து பார்த்தார். டேய் உயிருக்கு எதுவும் ஆபத்து வந்திட போகுது. அய்யோ உன் அம்மா இதை கேட்டா?
ப்பா!! நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது அவ்ளோ தான். அதுக்கெல்லாம் நான் செத்து போக மாட்டேன் போதுமா?
ஏதாவது பிரசர் மாத்திரை?
டாடி!!
உனக்கு என்னடா மயிர் கோபம்? எந்த விஷயத்தில கோபம். என்ன stress வேண்டி கடக்கு? என இன்பா கேட்க..
பா இதை அனுபவிக்க விடுங்க லாஸ்ட் பஃப் என்று ஊதினான்.
ஹாஸ்பிடல் போய் சரி பண்ணிக்கலாம் டா!!
அது தானாக சரி ஆகணும். அப்படி போக முடியாது என்றவன் பெரு மூச்சை விட்டபடி அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க. அண்ட் தயவு செஞ்சு என்னை பார்க்க வந்துடாதீங்க. என்றான் ருத்ரன்.
இன்பா அமைதியாக இருக்க..
ருத்ரன் தன் தந்தையின் முன்னால் வந்து அமர்ந்து, என்னால முடியும் டாடி! அவளை கட்டாய படுத்தி தூக்கிட்டு வர ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவளே வரணும்னு ஆசை படுறேன். கண்டிப்பா வர வைப்பேன். அதுவும் அவள் தனியா இருந்தால் சீனெ வேற.. குழந்தை வேற இருக்கு. அதான் யோசிக்கிறேன் என்றான்.
எனக்கு இதுல துளி கூட விருப்பம் இல்ல. அந்த பொண்ணு இந்த அளவுக்கு cruel mind ல think பண்றா அப்டியே அவங்க குடும்ப குணம் அப்படியே இருக்கு. என்றார் இன்பா.
ருத்ரன் சிரித்து கொண்டே என்கிட்ட இருந்து இதையெல்லாம் கத்திருக்கா! நம்ம குடும்பத்தை சேர்ந்தவள். Not N ஃபேமிலி அவள் என் பேமிலி என்றான்.
சரி என்னமோ பண்ணி தொலை. ஆனால் உன் அம்மாவை வந்து பார்த்திட்டு போ!! இல்லன்னா பைத்தியமா கூட ஆகிடுவா!
இருங்க நான் அம்மா கிட்ட பேசறேன் என ருத்ரன் விவேகாவிடம் பேசி விட்டு வைத்தான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.
தீரா லிஸன் அந்த பொண்ணு விருப்பப்பட்டு தான் உன்கூட இருந்திருக்கு. அவளோட மெடிக்கல் ரிப்போர்ட் சக்தி எனக்கு அனுப்பியிருக்கான். அதை நம்ம கோர்ட்ல காட்டுவோம்.
ஆமா காட்டுங்க அப்புறம் எங்க பெர்சனல் டைரி எல்லாருக்கும் library ஆகிடும். என்றான் ருத்ரன்.
இன்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, என் குழந்தைய உங்களுக்கு பிடிக்கலையா? நிலா சொன்னா!! அது நிஜமா?
அடேங்கப்பா என கையை தட்டியவர். பொண்டாட்டி தாசன் ஆகிட்ட..
நீங்க மட்டும் எப்டி இருக்கீங்க? என ருத்ரன் தன் தந்தையை பார்த்தான்.
எனக்கு பிடிக்கலன்னா அவன் என்னோட பேரன் இல்லன்னு ஆகிடுமா? நம்ம வீட்டு வாரிசு அவன் தான். என்னை பத்தி உனக்கு என்ன டா? அதான் உங்க அம்மா கொண்டாடிட்டு இருக்காளே அப்புறம் என்ன? என்றார்.
உங்களுக்கு பிடிக்கல ரைட்!!
நீ எப்போவும் ராங் தான். என்னோட பேரன் எனக்கு பிடிக்கும்.
உங்களுக்கு எப்போவும் ரிதம தான பிடிக்கும். இப்போ அவளோட குழந்தைய தான் நீங்க கொண்டாடுவீங்க?
டேய் கிறுக்கா நீ பையன் மாதிரி நடந்துக்க!! Oh god!! யார் சொன்னது? நீ உங்க அம்மாவை விட டூ மச் கிறுக்கு தனமா திங் பண்ற என்றார் இன்பா.
ருத்ரன் அமைதியாக இருக்க, இன்பா தன் மகனின் அருகில் வந்தவர். நீ பையனோட அப்பாவாக பேசுற! நான் பொன்னை பெத்த அப்பனா பேசறேன். எனக்கு எல்லாரையும் விட என் பொண்ணு தான் உசத்தி. அது வேற என் பேரன் என்ற விஷயம் வேற.. அவளை ஆசையா வளர்த்து வேற ஒருத்தனுக்கு கட்டி கொடுத்துட்டேன். இதே போல உனக்கும் ஒரு பொண்ணு பிறந்து அது கல்யாணம் பண்ணிக்கும் போது தெரியும் டா… இல்லல்ல அதுக்கு பாய்பிரண்ட் வரும் போது நீ என்ன பண்றேன்னு நான் பார்க்கிறேன் என்றார் இன்பா.
ருத்ரன் ஒரு பெரு மூச்சை விட்டபடி, நான் என்ன கேட்டேனோ அதுக்கு பதில் சொல்லாம aged man எவ்ளோ boomer ஆக பேச முடியுமோ அதை விட boomer cringe ஆக பேசிட்டுவீங்க. போதும். விடுங்க என்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் புறப்பட்டிருந்தான்.
டேய் போய் தான் ஆகணுமா? என இன்பா மீண்டும் கேட்க..
என்னை ஜெயிச்சிட்டு வான்னு சொல்லி அனுப்பி வைங்க டாடி என்றான் ருத்ரன்.
இன்பா அவனை அணைத்து விடுவித்தவர். போயிட்டு வீடியோ கால் பண்ணு.
அம்மாவுக்கா?
எனக்கு டா!..
என்னை பார்க்க அவ்ளோ ஆசையா?
ச்சீ உன்னை யார் பாப்பா எருமை மாடு மாதிரி இருக்க நான் என்ன உன்னோட லவ்வரா?
அப்போ வேற எதுக்கு? என ருத்ரன் கேட்டான்.
அவனை காட்டு!
எவனை?
அதான் உன் பையன்!
என் பையனா?
என்னோட பேரன் போதுமா? எனக்கு வயசு ஆகிடுச்சு அதை என் வாயால சொல்லணும் அது தான!!
ருத்ரன் சிரித்து கொண்டே கண்டிப்பா பண்றேன் என்றான்.
உன் தாத்தா கிட்டயும் வசுமா கிட்டயும் பேசிட்டு போ!..
ம்ம் என நடந்தான் ருத்ரன்..
தீரா!! என இன்பா அழைக்க..
என்ன டாடி? என திரும்பி பார்த்தான்.
Challenge ல நீ ஜெயிக்க முக்கியமான விஷயம் கோபப்படாம இருக்கணும். அது தெரியும் தான!!
தெரியும் டாடி!!
அந்த பொண்ணு உன்னை கோபப்பட வைக்க என்ன வேணாலும் பண்ணுவா!
பண்ணட்டும். என நடந்தான் ருத்ரன்.
நீ மட்டும் தோத்துட்டு வந்து என் முன்னாடி நின்னுடாத அதை விட எனக்கு பெரிய அவமானம் வேற எதுவுமே இல்ல என்றார் இன்பா.
உங்க பேரை நான் நிச்சயமா damage பண்ண மாட்டேன். என உறுதியுடன் சென்றான் ருத்ரன்.
இதோ நிலாவின் முன்னால் வந்து நின்றான் ருத்ரன்.
Spr, தேஜு, நிதின் பிரகாஷ், ஹரிணி, கண்மணி, நிவாஸ், மற்றும் நிலா என மொத்த குடும்பத்தின் முன்னால் இருந்தான் ருத்ரன்.
நீ சொன்னதுக்கு நான் ஒத்துக்கிறேன். என்றான் ருத்ரன்.
நிலா புருவம் சுருக்கி பார்க்க, ருத்ரன் அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு நிலாவின் மேல் பார்வையை திருப்பியவன். எனக்கு ஓகே உன்னோட challenge க்கு நான் ஒத்துக்கிறேன். ஆறு மாசம் வேலைக்காரனா இருக்க சம்மந்தம். என்றான்.
நிலா…?
மற்றும் N ஃபேமிலி..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment