Episode-34
மஞ்சள் விளையும் மண்ணில் மஞ்சள் செடிகளை பிடுங்கி வேக வைத்து கொண்டிருந்தார்கள் விவசாயிகள். மஞ்சள் வாசனை நாசியை துளைத்து கொண்டிருக்க, இப்படி மங்கள வாசனையை நுகர்ந்தாள் கண்களில் நீருடன். அவளின் வயிற்றில் இருக்கும் குழந்தையை தடவி கொண்டாள். ஒற்றை பெண்ணாக இப்படி தன்னந்தனியாக தன்னை தவிக்க விட்டுவிட்டு போய் விட்டானே மனோகரன் என்ற எண்ணம் சவுந்தர்யாவின் மனதிலும் மூலையிலும் கோடி எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது.
தன் தந்தை அவசர அவசரமாக ஒரு குடிகாரனுக்கு மனம் முடித்து வைத்ததை நினைத்து வருந்துவதா? இல்லை அந்த குடிகாரன் தன்னை பாதியிலேயே விட்டு சென்று விட்டானே என நினைத்து வருந்துவதா? வயிற்றில் ஒரு மகவை கொடுத்து விட்டு போய் விட்டானே என ஆயிரம் எண்ணங்கள் ஓடி கொண்டிருக்க கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டாள்.
அவளின் நிலையை விட நூறு மடங்கு வேதனையில் இருந்தான் மகிழ் வேந்தன். அவளை அணு அணுவாக ரசித்து நேசித்து இந்த நாள் வரையில் தனது காதலை மனதிலேயே பூட்டி வைத்து கொண்டிருக்கிறானே? அதை நினைத்து அழுவதா? என இந்த அனைத்து விசயங்களையும் நினைத்து குடித்து குடித்து எப்பொழுதும் போதையில் திரிகிறான். அவளை ஏக்கத்துடன் அமர்ந்திருக்கிறான்.
“தெற்குபாளையம்” என ஓட்டுநரின் குரல் கேட்க,
மெல்ல எழுந்தாள் சவுந்தர்யா.
மகிழின் கண்கள் சட்டென இடுங்கியது. மனோகரன் வீடு தாமரைபாளையத்தில் தான் இருக்கிறது. எங்கே செல்கிறாள் என பார்க்க அவள் பின்னால் மகிழும் எழுந்தான்.
புடவை மடிப்பை சரி செய்தவள் கம்பியை சாதாரணமாக பிடிக்க முயற்சி செய்ய, அந்த நேரம் பார்த்து ஓட்டுநர் சட்டென பிரேக் போட, கம்பியில் மோதி இடிக்க இருந்த வயிற்றை கை கொடுத்து இடையுடன் பின்பக்கம் இழுத்திருந்தான் மகிழ்.
யோவ் மெதுவா போக மாட்டியா? என்றா நினைச்சிட்டு இருக்க ராஸ்கல்? இத்தனை வேகத்தில் வரணுமா இப்பிந்தி நாயே என ஓட்டுனர் எதிரில் வரும் வாகன ஓட்டியை பார்த்து திட்ட பயணிகளின் கவனம் அனைத்தும் வெளியில் நடக்கும் வாக்குவாத சண்டையின் மீது படிந்தது.
ஒன்னுமில்லையே? என கரகரத்த குரலில் மகிழ் அவளை பார்க்க,
முகத்தில் கோபம் மின்ன வேகமாக கையை தட்டி விட்டவள். வேகமாக அவனிடமிருந்து பிரிந்தாள்.
சவுந்தர்யா!! என மகிழ் போதையிலும் பதட்டத்துடன் அவளின் பின்னால் சென்றான்.
சவு… சவுந்தர்யா நான் உனக்கு ஹெல்ப்.. பண்ண தான் பொண்ணு வந்தேன் என அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க முற்படும் வேளையில் கோபத்துடன் அவன் பக்கம் திரும்பினாள்.
உங்ககிட்ட நான் உதவி கேட்டேனா? நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க என கண்களில் நீருடன் கையெடுத்து கும்பிட்டவள் வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்.
உள்ளுக்குள் உறுத்தி கொண்டிருக்க, அந்த உருத்தல் கண்களில் நீராக கொட்டியது அவனுக்கு. ஆனால் கண்ணீர் சிந்தவில்லை. உள் இழுத்து கொண்டான். சவுந்தர்யாவை இனி தனியாக விடக்கூடாது.. அவளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தான் மகிழ்.
என்ன ஆத்தாலும் மகனும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க பொழுதும்? சொன்னால் நாங்களும் கேட்போம்ல!! என பூங்கொடியின் குரல் அன்பு செல்வனை திடுக்கிட வைத்தது.
அது ஒண்ணுமில்ல அமுலி. அம்மா நாளைக்கு வரேன்னு சொன்னாங்க. அத பத்தி பேசினேன். வேற ஒண்ணுமில்ல. என சமாளித்தான் அம்பு.
அதான் பொண்டாட்டி நான் இருக்கேன்ல! நீ அம்மா புள்ளைன்னு சும்மா உன்ட்ர அம்மா கூட ஒட்டிட்டு பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டும் வேலை வச்சுக்காத! என் கூட தான் நீ இருக்கணும். அதுக்கு அர்த்தம் என் கூட மட்டும் தான் இருக்கணும் என அழுத்தமாக கூறினாள் பூங்கொடி.
சரிங்க கண்ணு நேரத்திலேயே புறப்படுங்க! என அன்னம் கூற..
இதோ கிளம்பிட்டேன் மா என்றவன் திரும்பி பார்க்க, அங்கே முறைத்து கொண்டே பூங்கொடி நின்றிருந்தாள்.
சாரி டி!! என கண்களால் மன்னிப்பு கேட்டான்.
ஜெயக்கொடி மேனகா இருவரின் பார்வையும் பூங்கொடியின் மீது பட்டதே தவிர அன்பு செல்வனின் மீது செல்லவில்லை. அவளுக்கு பிடிக்காமல் வாழ்கிறாள். அத்து விடுவது மிகவும் சுலபம் என தப்பு கணக்கு போட்டு விட்டார்கள்.
அமுலி மழை வர மாதிரி இருக்குது. நீ அப்பா கூட வந்திடு தங்கம் என சிவராமன் அழைக்க,
சரி பா என பூங்கொடி முன்னாள் வந்தாள் அன்பு செல்வன் ஏக்கத்துடன் பார்க்க, அடுத்த நொடி அவ்விடத்துக்கு வந்த தனக்கொடி ஏனுங்க மாமா செத்த கம்முன்னு இருங்க. அவங்க ரெண்டு பேரும் வண்டியில் போகட்டும்.. பிறகு நம்ம போவோம். எதுக்கு கூப்பிடுறீங்? என அமைதி படுத்தினாள்.
தேங்க்ஸ் அக்கா இன்னிக்கி தான் ஒரு நல்ல வேலை பண்ணியிருக்க நீ! என மனதுக்குள் நினைத்த அன்பு செல்வன் வேகமாக வண்டியை எடுக்க கோபத்துடன் பின்னால் அமர்ந்தாள் பூங்கொடி.
அனைவரும் வழியனுப்பி விட்டு செல்ல, தனக்கொடி மன நிம்மதியுடன் தன் மகளை பார்த்தார்..
கண்ணு ஜெயா எல்லா வட்டலு, சம்படம், அழுக்கு பாத்திரம் எல்லாத்தையும் எடுத்து போடு கண்ணு விளக்கி சுத்தம் பண்ணிடலாம் என்றார் அன்னம்
ஜெயக்கொடி வேகமாக அன்னத்தின் கையை பிடித்து கொண்டவள். எதுக்கு சித்தி எல்லா வேலையும் நீ பார்க்கனும்? அதுக்கு எந்த அவசியமும் இல்ல. இது உன்ட்ர பொண்ணு வீடு. நீ எப்போ வேணாலும் இருக்கலாம். ஆனால் வேலை செய்ய இல்ல வா சித்தி உள்ளே வா!! என கையை பிடித்து இழுத்து சென்றாள்.
என்ன நடக்குது கா? என சந்தனக்கொடி தன் அக்கா தனத்திடம் கேட்க,
அதான் எனக்கும் ஒன்னும் புரியல கண்ணு என்ற இருவரும் உள்ளே சென்று தன் தந்தை சக்கரவர்த்தியின் அருகில் அமர்ந்து கொண்டு கலகலப்பாக பேசினார்கள்..
அமுலி!!
பதில் இல்லை..
ஹே அமுலி!! உன்னை தாண்டி!! சரி மேடம் கிட்டையே இனி எல்லாத்தையும் கேட்டு செய்யறேன். அமுலி போட்ட கோட்டை இனி எப்பவும் தாண்ட அச்சோ இல்லைல்ல நினைக்க கூட மாட்டேன் போதுமா? என்றவன் கண்ணாடியின் வழி அவளை பார்த்தான்.
இன்னும் பூங்கொடி மலை இறங்கவில்லை.
அமுலி இப்போ உன்னோட கை மாமனுக்கு வேணும் கொடுக்க முடியுமா பிளீஸ் என அன்பு செல்வன் அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்ய உதட்டை சுழித்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
பூங்கொடி! என வீடு வரும் வரை அவளை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தான் அன்பு. ஆனால் பலன் என்பது பூஜ்ஜியம் தான்.
பூங்கொடி என்ன நினைக்கிறாள் என அவனுக்கே தெரியவில்லை. அவன் யாரிடமும் பேச கூடாது நினைக்க கூடாது. அன்பு தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாள்.
வீட்டுக்கு வந்ததும் குட்டி போட்ட பூனையை போல அவளின் பின்னால் சென்றான் அன்பு.
இப்போ எதுக்கு பின்னாடியே வந்து இம்சை பண்ற? என கோபமாக பார்த்தாள் பூங்கொடி.
ஒரு கிஸ் வேணும் என முகத்தை அப்பாவி போல வைத்து கொண்டு கேட்டான் அன்பு.
தர முடியாது போடா!! என கையை நீட்டி காட்டினாள் கதவை.
சட்டென அவளின் கையை இழுத்து இடையை வளைத்தவன். கொடி இடையாழுக்கு உடைமை, உரியவள் அதிகாரம் ஆதிக்கம் அப்படியா? என அன்பு செல்வன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு உதட்டை கவ்வி கொண்டான்.
சட்டை காலரை பற்றி இழுத்து சொக்கி நின்றாள் முத்தத்தில்..
மூச்சு வாங்கி கொண்டே இருவரும் பிரிந்தார்கள் உதட்டை துடைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவளின் கையை பற்றி கொண்டே அமர்ந்தான் அன்பு.
எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.
அமுலி!!
அமுலி!! என தோல் மேல் கைகளை போட்டான்.
என்ன?
அவங்க என்னோட அம்மா அவங்க இல்லன்னா நான் இல்ல என முகத்தை பற்றினான்.
அப்போ நீ அம்மா பையன் அப்படி தான!! நான் இருக்கேன். என்னை விட்டு உன்ட்ர அம்மா கூட நிக்கிற! அங்கே தான் கீ இருக்குதோ?
அன்பு செல்வனுக்கு அப்பட்டமாக தெரிந்தது. பொறாமை படுகிறாள் என்று. உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம் இது காதல் நேரம் போதை நேரம். காதலில் உருகி கொண்டிருந்தான். ஆனால் கூடிய விரைவில் இந்த சூழல் மாற போகிறது என்பதை அவன் அறியவில்லை. அவளது உடமை அப்படியே புற்றுபோல அவநம்பிக்கையாக மாற போகிறது.
டேய் என பூங்கொடி அதட்ட, சுய நினைவுக்கு வந்தவன். தொண்டையை சிறும்பி கொண்டு, இதை எதுக்கு அம்மா பையன்னு சொல்லணும்?அம்மா மேலே பாசம் மரியாதை. ஆனால் அம்மாவ விட பொண்டாட்டி மேலே அதீத பாசம், அதீத அன்பு நெருக்கம் இது எல்லாமே சேர்ந்து இருக்கிறதால நான் பொண்டாட்டிதாசன் என்றான் கண்ணக்குளி புன்னகையுடன்..
அன்பு செல்வனின் வார்த்தைகள் பூங்கொடிக்கு ஹார்மோன்களை வேதியியல் மாற்றங்களை செய்ய தேவையான அளவுக்கு கொடுக்க, கன்னங்கள் இரண்டும் சிலிர்க்க உடலில் இருக்கும் பூனை முடிகள் நட்டு கொண்டு நின்றது.
சட்டை காலரை இழுத்து பற்றியவள்.. ஆமா நீ பொண்டாட்டி தானாக தான் இருக்கணும். போதுமா? என உதட்டை பார்த்தாள். இருவரும் முத்தமிட்டு கட்டிலில் விழுந்தார்கள்.
கட்டில் குலுங்குவதை போல இருவரின் மனமும் காதலில் குலுங்கியது.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய மாமா இன்னிக்கும் லீவ் போடவா? என அவனது மார்பில் முகம் புதைத்து கொண்டே கேட்டாள்.
அடி வாங்க போற!! காலேஜ் போ அமுலி என சொல்லி கொண்டே அவளை கிளம்ப வைத்து கல்லூரியில் விட்டு அவனும் டிப்போ கிளம்பினான்.
இன்றில் இருந்து போக்குவரத்து கழக பயிற்சிகள் ஆரம்பிக்கிறது.
வாழ்க்கை ஒருவாறு சீராக சென்று கொண்டிருக்க, இடையில் வந்தாள் மேனகை ஆனால் அன்பு செல்வன் ஒன்றும் விசுவாமித்ரன் அல்லவே..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels