Episode-33
நான் எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன்? ஏன் மா என்னோட பேச்சை நீ கேட்கவே இல்ல? அய்யோ என்ன ஆனதோ தெரியலையே? எல்லாம் உன்னால மா!! உன்னால மட்டும் தான். நான் அன்பு மாமாவ கட்டிட்டு இப்போ ஜம்பமா இருந்திருப்பேன். அன்பு மாமா எவ்ளோ பெரிய வேலை செய்யார்னு பார்த்த தானே!! என ஆற்றாமையில் கத்தினாள் மேனகா.
ஹே நான் சொல்றத கேளு மேனகா நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது. அம்மா சொல்றத கேளு!! என ஜெயக்கொடி எடுத்து கூற..
மா நா நா நானும் தானே மாமாவுக்கு முறை பொண்ணு? அப்பாவுக்கு ஏன் மா நான் கண்ணுக்கு தெரியல! அதை விடு அவங்களை பிரிச்சா மட்டும் தான் நானு பூங்கொடிய வீட்டை விட்டு துரத்த முடியும். அந்த இடத்துக்கு நான் போக முடியும். எதுக்கு மா ரெண்டு பேரையும் அனுப்பி வச்ச? உனக்கு உன்ற புள்ளை வாழ்க்கை முக்கியமா? இல்ல உன் அக்கா புள்ளை வாழ்க்கை முக்கியமா? என பொறிந்து தள்ளினாள்.
ஜெயக்கொடி தன் மகளின் கையை பிடித்து, அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா பிரிவாங்க. நீ கவலை படாத. இந்த வாரம் ஆக்கி போட அழைச்சு இருக்காங்க. நம்ம அங்கேயே தங்கி இருக்கலாம். எங்கே அடிச்சா அங்கே பிரச்னை வரும்னு எனக்கு தெரியும். என கூறினார்.
நீ தயவு செஞ்சு ஒன்னும் பண்ண வேணாம். அங்கே போவோம் நம்ம!! என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். நீ என்கிட்ட விட்டுடு என பெரு மூச்சை விட்டாள் மேனகா.
***
இங்கஅன்பு செல்வனின் முகத்தை பார்த்தாள் பூங்கொடி.
என்னோட வேலை உனக்கு கவுரவ குறைச்சலா இருக்கலாம். நீ எங்கேயும் என்னை உன்னோட புருஷனாக அறிமுக படுத்திக்க வேணாம். நீ விருப்பப்பட்டா சிவராமன் பொன்னாகவே இரு என்றான்.
அவனை கோபமாக பார்த்தவள் வேகமாக அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.
அன்பு செல்வனால் வேறு என்ன தான் செய்ய முடியும்? அவளுக்கு தன் வேலையே பிடிக்க வில்லையே? அது அவனுக்கு மிகவும் வேதனையை கொடுத்தது.
ஒரு பெருமூச்சுடன் நின்றான். இப்பொழுது கூட அவன் ஏங்குவது அவளுக்காகத்தான். நேராக அறைக்கு சென்றான் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
பூங்கொடி!! என அவளின் முன்னால் வந்தான்.
பிடிக்கல அன்பு நீ பேசினது எனக்கு சுத்தமா பிடிக்கல!! என்னை ஹர்ட் பண்ணிட்ட நீ!! என்றாள் சிவந்த விழிகளுடன்.. ஆனால் அழவில்லை. அவ்வளவு சீக்கிரம் அவள் அழும் ஆள் கிடையாது.
நான் என்ன பண்ணேன்? என அன்பு கேட்க, எழுந்து அவனருகில் வந்தவள் சட்டையை பற்றி, எதுக்கு அப்படி சொன்ன நீ? எவ்ளோ பெரிய இடத்துல இருக்கன்னு எனக்கு தெரியும். நீ எவ்ளோ சம்பாதிக்கிறன்னு கூட தெரியும். ஆனா எனக்கு அது தேவையில்ல. ஆனால் என்ன சொன்ன? உன்னை நான் கேவலமா நினைச்சேனா? எனக்கு உன்னை பிடிக்காம இருக்க காரணமே கண்டக்டர் தான்.
என்னாச்சு? அதுவும் நல்ல வேலை தானே? என அதிர்ந்து பார்த்தான்.
அவனை முறைத்து பார்த்தவள். அங்கேயே அமர்ந்து கொண்டாள்.
ஹே என்னடி சொல்ற? அந்த வேலையில் என்ன பிரச்னை? என அன்பு கேட்க, நான் உன்னை டிப்போல பார்க்க வந்த போது ஒருத்தி கடலை போட்டுட்டு இருந்தாலே நியாபகம் இருக்கா? என கேட்டாள் பூங்கொடி.
அப்டின்னா? என எதுவுமே தெரியாததை போல கேட்டான் அன்பு.
டேய் பொய் சொல்லாத! உன்னை பத்தி எனக்கு எல்லாம் தெரியும் என பூங்கொடி கூற..
என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாது. சத்யம் பண்றேன் பூங்கொடி. நான் எந்த பொன்னையும் தப்பா பார்த்தது இல்ல. இங்கே எல்லா தனியார் பஸ் கண்டக்டர் மேலயும் தப்பான அபிப்ராயம் இருக்கு. அதுக்காக எல்லாரும் தப்பானவங்க இல்ல. அதே போல எல்லாரும் நல்லவங்க அப்டின்னும் நான் சொல்ல மாட்டேன். என்றான் அன்பு.
இப்போ என்ன சொல்ல வர? என எரிச்சலுடன் கேட்டான்.
இங்கே எப்பவும் என்னோட கொடி இடையாள் தான் என்றான் அவளின் முகத்தை பார்த்து.
அவள் முகத்தை திருப்பி கொள்ள, ஹே நம்பு டி!! சாரி தெரியாம கோபத்தில் பேசிட்டேன். உன்னை விட்டு நான் எங்கே டி போவேன்? என்னை யாரு பார்ப்பா? சொல்லு பாப்பா?
அந்த அனுசுயா, திவ்ய பாரதி, சவுந்தர்யா, அந்த ஸ்பின்னிங் மில் போறாளே ஒருத்தி அவள், அகிலா, மாலதி, ரேகா, அப்புறம் A 26 பஸ்ல வர காலேஜ் பிள்ளைங்க எல்லாருமே உன்னை பார்த்து ஜொள்ளு விடுறது உனக்கு தெரியவே தெரியாது எவளும் உன்னை பாக்க மாட்டாள் அப்படி தான? என கேட்டாள் பூங்கொடி.
ஹாங் என்பதை போல பார்த்தவன். ஹே சத்தியமா தெரியாது டி இவங்க எல்லாரும் யாரு? என்றான் அன்பு.
நடிக்காத டா!! என அவள் முகத்தை திருப்பி கொள்ள,
யார் யாரோ பார்க்கிறாங்க! பிடிக்குதுன்னு சொல்றாங்க! ஆனால் பிடிக்க வேண்டியவழுக்கு என்னை பிடிக்கலையே!! என அன்பு தலையே கோதி கொண்டே பார்க்க, சட்டென பூங்கொடியின் முகத்தில் வெட்கம் பரவ, பிடிக்காது டா!! ஆமா எனக்கு பிடிக்காது. டாடி சொன்னதுக்காக தான் கட்டிகிட்டேன் எவளையாவது பார்த்த? உன் கண்ணை நோண்டி போட்டுடுவேன் என மிரட்டினாள்.
ஓகே மேம் என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினான்.
அவள் பெரு மூச்சுடன் அமர்ந்திருக்க, தண்ணீர் டம்ளரை நீட்டினான். தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு அவன் கையை பிடித்தவள். மாமா என அழைத்தாள்.
ம்ம்!!
எனக்கு நீ வேலைக்கு போறது பிரச்னை இல்ல. என்ன வேலைக்கு போற? அது என்ன தகுதி? அதெல்லாம் நான் பார்க்கமாட்டேன் ஆனா என அவனை பார்த்தாள்.
என்ன?
எனக்கு என நிறுத்தியவள். உன் மேலே… என்னை நீ மறந்து யாரு கிட்டயும் கடலை போட்ட கொன்னுடுவேன் என பத்ரகாளி போல பார்த்தாள்.
பூங்கொடிஇஇ! என உதட்டை கொண்டு உதடு வருடினான்.
டேய் விருந்துக்கு போகணும் மாமா! விட்ரா!!
மாமாவுக்கு விருந்து இல்லையா? அம்மணி? என அன்பு காதை கடிக்க..
ம்ம் ஹிம் என அவள் சிணுங்கி தள்ளாட, அவளை முத்தமிட்டு கொண்டே அவன் வசப்படுத்தினான்.
இருவரும் ஒன்றாக குளித்து முடித்து வெளியே வர மதியம் மூன்று மணி ஆனது.
அய்யோ லேட் ஆகிடுச்சு!! என அன்பு அரக்க பறக்க கிளம்ப..
ஆனா ஆகட்டும்! இப்போ என்ன? என பூங்கொடி பொறுமையாக கிளம்பினாள்.
ஹே அவங்க கேட்டால் என்ன சொல்லுவ?
காலேஜ்ல இருந்து லேட்டா கிளம்பினேன் அப்டின்னு சொல்லலாம். இப்போ என்ன டா? நம்ம தலைய ஒண்ணும் சீவ மாட்டாங்க வா!! என புறப்பட்டாள்.
ஹே மாமான்னு கூப்பிடு டி!!
மாமா வந்து அப்போ மட்டும் தான் கூப்பிடுவேன் என பூங்கொடி காதில் கூற..
ஹே விவரம் தாண்டி!! என அவளின் கையை பிடித்து கொஞ்சி கொண்டே வந்து சேர்ந்தான்.
என்ன இவ்வளவு நேரம் ஆகி போச்சு? இப்படி தான் மாம லேட்டா வருவாங்களா? என முருகேசன் கேட்க..
அது ஒண்ணுமில்ல மாமா!! கொஞ்சம் லேட் ஆகி போச்சு என அன்பு கூற…
டாடி என வேகமாக சிவராமின் பக்கம் சென்றாள் பூங்கொடி.
அமுலி என அவரும் பாச மழை பொழிய அந்த இடமே கலகலப்பாக மாறியது.
அவர் எப்பொழுதும் அப்படித்தான் பூங்கொடி என்றால் அத்தனை பாசம். ஆசைக்கு பாசத்துக்கு பரிவு என எல்லா வற்றிலும் பூங்கொடி இருப்பாள். அந்தஸ்து, சொத்து வாரிசு என பெருமைக்காக மட்டுமே மகிழ் வேந்தன். அதே போல அவன் மேல் அவருக்கு பெரிதாக நாட்டம் இல்லை. அதற்கு காரணம் எப்போதும் சொல் பேச்சை கேட்கவே மாட்டான் மகிழ். இடக்க மடக்காக பேசி நடந்து கொள்வான்.
காலேஜ் போயிட்டு வந்தீங்களா அமுலி? யாரு கூட்டிட்டு வந்தா அவுட் பஸ்ல வந்தியா? இல்ல மாப்ளை வந்தாரா? என சிவராமன் விசாரித்தார்.
அவர் தான் டாடி கூட்டிட்டு வந்தாரு என போகும் வரை தந்தையுடன் ஒட்டி இருந்தவள். வாய்க்கு வரும் பொய்யை அடித்து விட்டாள்.
வாங்க மாப்ளை சாப்பிடலாம் என முருகேசன் அழைக்க,
மேனகா அவனுக்கு பரிமாற தயாராக இருந்தாள்.
தனம் அவளின் பக்கம் சென்று மேனகா இலை எடுத்திட்டு வா!! என அனுப்பி விட்டு, அமுலி வா!! என அழைத்தார்.
என்ன மா?
உன் புருசனுக்கு, தாத்தாவுக்கு, அம்மாச்சிக்கு எல்லாருக்கும் போடு என மூன்று இலையை போட்டார்.
அம்மாச்சியா? யாரை சொல்ற நீ? என பூங்கொடி கோபத்துக்கு வர,
அம்மா சொல்றத கேட்பியா மாட்டியா என தனம் முறைத்து பார்க்க, வேறு வழி இல்லாமல் கோபத்துடன் அனைத்தையும் செய்தாள் பூங்கொடி.
பூங்கொடி நீயும் வாயேன் நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம். என் அன்பு கூற..
நான் அப்புறம் சாப்பிட்டுக்குவேன் என முகத்தை திருப்பி கொண்டாள்.
சிவராமன் புன்னகையுடன், அமுலி நீ மாப்ளை கூட சாப்பிடு என கூற..
பூங்கொடி அவனை பார்த்தவள் அருகில் இருக்கும் அன்னத்தை பார்த்தாள்.
***
இடையுடன் வளைத்து பிடித்து அணைத்தான் மகிழ்.
ச்சீ!! என அவனிடமிருந்து வேகமாக நகர்ந்தாள் சவுந்தர்யா.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels