Episode -37
இப்படியே இருந்திட தோணுது. என வாய் மொழியாக கூறினான் முத்தமிட்டு கொண்டே..
அந்த வார்த்தைகளே பூங்கொடியை இன்னும் அவனிடம் அடிமையாக்கியது.
மேலே விட கீழே நல்லாருக்கு என்றாள் பூங்கொடி அடக்கப்பட்ட சிரிப்புடன் எழுந்தவன் அப்போ இன்னொரு தடவை என முத்தமிட்டான்.
அச்சோ மாமா!! நான் அதை சொல்லல.. மேலே கட்டிலில் இருக்க தூக்கத்தை விட இங்கே உன் கூட தூங்க பிடிச்சிருக்கு. என அவள் சொல்லி முடிப்பதற்குள், ம்ம் இங்கே அந்த பக்கம் கப்போர்ட் இருக்கு. இந்த பக்கம் கட்டில் இருக்கு. நான் மட்டும் தனியா படுத்தா அவஸ்தையா இருக்கும். கூடவே என் மகாராணி படுத்துகிட்டா சட்டுன்னு தூக்கம் வந்திடும். என்ற மகாராணி பக்கத்துல வந்தாலே பூ வாசம் அப்படியே மாமன மயக்குதே என்றவன் அவளை தூக்கி கொண்டான்.
அவளும் சொக்கி கொண்டே அவன் கைக்குள் கிடந்தவள் சட்டென சுய நினைவுக்கு வந்து, எங்கே தூக்கிட்டு போற நீ? என கழுத்தை கடித்தாள்.
எனக்கும் மேடம் கூட இருக்க ஆசை தானுங்க. ஆனால் முக்கியமான வேலை போயே ஆகணும். அப்படியே காலேஜில் ட்ராப் பண்ணிட்டு போகணும். என்றவன் சவரை திறந்து விட்டான்.
இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா ஈவினிங் ஷோ சக்தி சினிமாஸ்ல.. பிளீஸ் மாமா!! கூட்டிட்டு போடா!! என கொஞ்சுதலாக கேட்டாள்.
அவ்ளோ தான போயிட்டா போச்சு!! என்றவன் சூடான முத்தங்களை கழுத்தில் கொடுத்தான். மாமா காலேஜுக்கு டைம் ஆகுது. என அவள் விலகி நகர.. கையை பிடித்து இழுத்தவன் நான் கொண்டு விடுறேன்டி என அவளை கொண்டாடி தீர்த்து விட்டான். இருவரும் சிணுங்கல் மொழிகளை பரிமாறி கொண்டு வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு உடை எடுத்து கொடுத்தான். மாறி மாறி ஊட்டி கொண்டார்கள். சிரித்து கொண்டு ஒற்றுமையாக வெளியே வந்தவர்களை பார்த்த அன்னத்துக்கு.
டைம் ஆச்சு வா போலாம் பாப்பா என அன்பு சொல்லி கொண்டே வண்டியை எடுத்தவன் தன் அன்னையை பார்த்து கையசைத்தான்.
ம்ம் போலாம் மாமா என பூங்கொடி ஏறி கொண்டு கூறினாள்.
அப்பா வர்ரேனுங்க என அன்பு சொல்லவும், தாத்தா போயிட்டு வரேன் என கையசைத்தாள் பூங்கொடி.
அட யாரது வண்டியில் ஜோரா மைனர் கணக்கா போறது? சக்கரவர்த்தி மகனா? இது யாரு தனத்தோட புள்ளையா? ஜோடி பொருத்தம் அமுசமப்பா என சொல்லி கொண்டே மூக்கையன் சக்கரவர்த்தியை பார்க்க வந்தார்.
அன்னம் தண்ணி கொண்டு வா கண்ணு! அட வா மூக்கையா என அழைத்தவர் கயிற்று கட்டிலில் அமர வைத்தார்.
அன்னம் தண்ணீரை கொடுத்தவர் ஓரிடத்தில் போய் நின்று கொள்ள, ஊர் காரர்கள் அனைவரும் வந்தார்கள்.
என்னப்பா ஊர்க்காரங்க மொத்தமா வந்திருக்கீங்க? நோம்பி சாட்டு விசயமா பேசணுமா என சக்கரவர்த்தி அனைவரை பார்த்தும் கேட்டார்.
நோம்பி பத்தி பேச தான் எல்லாரும் வந்திருக்கோம் என்றார் ஊர் தலைவர் சுப்ரமணி.
அதை என்ற மருமகன் வீட்ல தான பேசணும் நீங்க? அவரு தானே ஊர் காரியங்களை எடுத்து நடத்துறாப்டி. இங்கே வந்து என்கிட்ட நீங்க பேசினது தெரிஞ்சா அது நாளைக்கு பொல்லாப்பு ஆகிடாதா? என கேட்டார் சக்கரவர்த்தி.
அதான் இப்போ ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களே சக்கர. இத்தனை நாள் ஒதுங்கி இருந்தது போதும்யா. இந்த வருஷம் வடக்கு புதுப்பாளையம் எல்லா தலைமையும் நீ எடுத்து செய்பா. உன்ற பையன் அன்பு செல்வன் எதுக்கு இருக்கான். நம்ம வளைவுல உனக்கு வந்திருக்கும் முறைய இந்த முறை உன்ற பேத்தியும் உன்ற பையனும் மரியாதை வாங்கிட்டா நல்லாருக்கும் சக்கர. இத்தனை வருஷமா அன்னம் ஒதுங்கி இருந்தது போதுமே. இந்த முறை கோவில்ல குடும்பத்தோட பொங்கல் வைக்கலாம்பா என்றனர்.
சக்கரவர்த்தி தீவிரமாக யோசிக்க,
இதுல என்ன யோசிக்க இருக்கு? சட்டுன்னு சொல்லு சக்கர நாங்க உன்ற மாப்ளை கிட்ட பேசுறோம் என்றார்கள்.
உங்க எல்லாருக்கும் முதல்ல நான் கடமைப்பட்டிருக்கறேன். என்ற பையன் வரட்டும் அவனோட கலந்து பேசிட்டு ஒரு நல்ல முடிவாக சொல்றேன் இப்போ எல்லாரும் சாப்பிட்டு போங்க என்றார் சக்கரவர்த்தி.
அப்போ முடிவ சொல்ற அன்னிக்கே சாப்பிட்டுக்கிறோம். அன்னம் கோழி செஞ்சிடனும் என மூக்கையன் கூற..
அதுக்கென்ன செஞ்சிடலாம் அண்ணே என சொல்லி விட்டு அவர்களை வழியனுப்பி வைத்த அன்னம் வேகமாக வந்து மூக்கையன் கால் மிதி மண்ணை எடுத்தவர். எடுபட்ட பைய என்ற பையன் போகும் போது கண்ணு வைக்கிறான். இதுல கோழி குழம்பு ஆக்கி கொட்டணுமா? இன்னிக்கு பூங்கொடியும் அன்பும் வரட்டும் பூசினிகா முச்சந்தியில் உடைக்கணும் கண்ணு வச்சுட்டு போறான் போக்கத்தவன் என திட்டி கொண்டே வந்தார் அன்னம்.
சக்கரவர்த்தி சிரித்துகொண்டே அடேங்கப்பா இத்தனை கோபமா? என கிண்டல் பேசினார்.
மச்சான் அவிங்க சொல்லிட்டு போனத பத்தி என்ன நினைக்கிறீங்க? என ஆசையுடன் மோர் சொம்பு நீட்டினார் அன்னம்.
என்ன சொல்லட்டும்? என் அன்னம் என்ன நினைக்கிறீங்க? என சக்கரவர்த்தி கேட்க..
மாப்ளை கிட்ட இதை பத்தி பேசுங்க மச்சான். நம்ம வீட்டு முறைக்கு பாப்பாளும் அன்பும் எடுத்துகட்டி செஞ்சா நல்லாருக்கும். அதுவும் இது சாமி காரியம். முதல் பூசை கூட அன்பு செல்வன் பூங்கொடி ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம வீட்டுக்கு முறையா கொடுப்பாங்க. எனக்கு இஷ்டம் தான் மச்சான். திருவிழா சாமி சாட்டுக்கு எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிடலாம் நல்லாருக்கும் மச்சான். நல்லா யோசிங்க நம்ம மாப்ளை இந்த பொறுப்பு எல்லாத்தையும் மகிழுக்கு கொடுப்பாங்க. இந்த பக்கம் அன்பு இருப்பான். அவனும் கல்யாணம் முடிச்சிட்டா எவ்ளோ ஜோரா இருக்கும்? யோசிங்க மச்சா என்றார் அன்னம்.
சரி அன்னம் அப்படியே பண்ணிடலாம். என சக்கரவர்த்தி தனது மனைவியின் சந்தோஷத்தில் உற்சாகமாகி கூறினார்.
எல்லாமே நல்லதா நடக்கணும் பெரியகாண்டி மாரியம்மா என வேண்டி கொண்டார் அன்னம். இந்த உற்சாகத்திலேயே பின் பக்கம் சென்றவர் நிலை தடுமாறி தலையில் முட்டி கொண்டு அது புடைத்து போனது.
அன்னம் என்ன பண்ற? பேச்சு மூச்சே காணோம்? என கேட்டு கொண்டே வேட்டியை இழுத்து கட்டியபடி உள்ளே சென்றவர் திடுக்கிட்டு என்ன ஆச்சு? நெத்தி புடைச்சு போச்சு? என்ன பண்ணுன நீ? என பதட்டத்துடன் நெற்றியை தொட்டு பார்த்தார்.
ஒண்ணுமில்ல மச்சான் இடிச்சிகிட்டேன் நெப்பு தெரியல என சொன்ன அன்னத்தின் முகம் வாடி போயிருக்க அது சக்கரவர்த்திக்கு நன்றாகவே தெரிந்தது.
அன்னம் சொல்லு கண்ணு என்ன பண்ணுது? என சக்கரவர்த்தி கையை பிடித்து வெளியே அழைத்து வந்தார்.
இல்லைங்க மச்சான் ஒண்ணுமில்ல கொஞ்சம் கிறுகிறுப்பு வந்திடுச்சு வேற ஒன்னும் இல்ல. என அன்னம் திருப்பி திருப்பி கூற, சரி நீ கொஞ்ச நேரம் உட்காரு என கூறிய சக்கரவர்த்தி செல்போனில் அன்பு செல்வனுக்கு அழைக்க போக..
மச்சா அன்புக்கு கூப்பிட போறீங்களா? வேணாம்ங்க அவனுக்கு சர்க்கார் வேலையில் இன்னிக்கு பெரிய மனுசங்கள பார்க்கனும்னு சொல்லிட்டு போனான். இதை சொன்னா பதறி அடிச்சிட்டு வருவான். அது சரி வராது. எனக்கு ஒண்ணுமில்ல நான் காபி தண்ணி போட்டு எடுத்திட்டு வந்து குடிச்சா சரி ஆகிடும் என கொசுவத்தை எடுத்து சொருகி கொண்டே சென்றார்.
சக்கரவர்த்திக்கு கொஞ்சம் கூட ஒப்பவில்லை. துடித்து போனவர் சாயங்காலம் அடக்கமாட்டாமல் போன் செய்து விட்டார். விடயத்தை கேட்டு அரக்க பறக்க ஓடி வந்தான் அன்பு கண்களில் நீரே கோர்த்து கொண்டது. அன்னம் என பின் கழுத்தை கட்டி கொண்டான். நடுக்கத்துடன்..
என்னடா என்னாச்சு கண்ணு? எதுக்கு அழுகிற? நான் நல்லாருக்கேன் அன்பு. என்னடா எதுக்கு இப்படி அழுதிட்டு நிக்கிற? அட பையா அம்மாவுக்கு ஒண்ணுமில்ல டா என எவ்வளவு நேரம் சொன்ன பின்பு தான் புரிந்து கொண்டான்.
சரி மா புறப்படு இப்போவே போலாம் என விடாப்பிடியாக ஹாஸ்பிடல் அழைத்து சென்று விட்டான். அந்த அவசரத்தில் ஒருவரை மறந்து போனான். வேறு யார் கட்டியவள் தான். மணிமேகலைக்கு அழைத்து அவளை சமாதானம் செய்து கூட்டி வர சொன்னான் நல்ல வேளையாக..
ஹாஸ்பிடலில் மருத்துவர் அன்னத்தை பரிசோதித்து விட்டு பெருசா ஒண்ணுமில்ல பயப்பட தேவையில்ல. ரத்தம் கட்டி இருக்கு. ஐஸ் கட்டி வச்சு தேச்சு விடுங்க சரியா போயிடும். என்றார்.
சரிங்க டாக்டர் வேற ஒன்னும் பிரச்னை இல்லையே? என அன்பு அன்னத்தின் கையை உள்ளங்கையில் வைத்து கொண்டு கேட்க..
அடிக்கடி தலை வலிக்கிதுன்னு சொல்றாங்க. அதனால எதுக்கும் eye hospital கூட்டிட்டு போய் ஒரு general checkup பண்ணிட்டு வந்துடுங்க. என சொல்லி அனுப்பி வைத்தார்.
உடனே eye hospital அழைத்து சென்றான். அன்னத்துக்கு இத்தனை நாள் பார்வை பிரச்னை இருந்திருக்கிறது. ஒரு கண்ணுக்கு தூர பார்வை இன்னொரு கண்ணுக்கு கிட்ட பார்வை. அதற்கு ஏற்ற போல கண்ணாடி செய்ய சொல்லி விட்டு புறப்பட்டார்கள்.
அம்மா எப்டி இருக்குது? என அன்பு கேட்டு கொண்டே வந்தான்.
தம்பி இப்போ தான் கண்ணு எனக்கு நல்லாருக்கு அதுவும் அந்த நர்ஸ் புள்ளைக கண்ணாடி மாதிரி போட்டு விட்டுச்சுங்களே அப்போ தான் பளிச்சுன்னு இருந்தது. என குழந்தை போல அன்னம் பேசுவதை ரசித்து கொண்டே நேராக மாமன் பிரியாணிக்கு அழைத்து வந்து அன்னத்துக்கு பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தான். அன்னம் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் மகனுடன் சந்தோஷமாக இருந்தார்.
அட கண்ணு உன்ற அப்பாவும் பூங்கொடியும் இங்கே அழைச்சிட்டு வந்திருக்கலாம் என அன்னம் கூறி கொண்டிருக்க.. அன்பு செல்வனின் முகம் ஒரு வித பதட்டத்தில் மாறியது. நேத்து தானே சமாதானம் பண்ணேன். இன்னிக்கு என நினைக்கையில் வயிறு கலக்கியது.
பூங்கொடி..?
தொடரும்..