மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
513 views

Episode -38 

எதுக்கு கண்ணு இத்தனை வேகம்? மெதுவா போ அன்பு என சொல்லி கொண்டே வந்தார் அன்னம். 

அது வந்து இருட்டு கட்டிடுச்சு மா!! அதான் சொல்றேன். கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போகணும் என சொல்லி கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் அன்பு. அவனது எண்ணம் முழுவதும் எப்படி பூங்கொடியை சமாளிக்க போகிறோம் என பயம் அப்பி கிடந்தது. 

பூங்கொடியின் காலனி இருக்கிறதா என பார்த்தான். இல்லை என்பதே பக்கென்று இருக்க, அந்த கேள்வியை அன்னமே கேட்டார். மச்சான் பாப்பாளுக்கு பிரியாணி வாங்கிட்டு வந்தேன். எப்போ வந்துச்சுங்க பாப்பா? என உணவுகளை எடுத்து வைத்து கொண்டே கேட்டார். 

தனக்கொடி என்னை பார்க்க வந்துச்சு. அப்போ பூங்கொடி அங்கே அவங்க அம்மா கூட கிளம்பி போயிடுச்சு. ரெண்டு நாள் இருந்திட்டு வருதாம் என்றார் சக்கரவர்த்தி. 

சோளி முடிஞ்சது என பின்னந்தலையை கோதி கொண்டே அமர்ந்தான் பெரு மூச்சுடன்.. 

அப்படியா? சரி அவளுக்கும் அய்யன் அம்மை நினைப்பு வரும் தான!! போய் இருந்திட்டு வரட்டும். என்றவர் பிரியாணியை எடுத்து கொண்டு அன்புசெல்வம் அருகில் வந்தார். 

தம்பி அக்கா வீட்டுக்கு போயிட்டு வா கண்ணு. என டிபன் பாக்ஸை நீட்டினார். 

இது என்னமா? 

பாப்பாளுக்கு வாங்கினது. இதை கொடுத்திட்டு வா!! என்றவர் ம்ம் என யோசித்து கொண்டே இன்னிக்கு அங்கேயே இருந்துக்க கண்ணு. அக்கா வீட்ல..

மா நான் எப்டி அங்கே போய் இருக்கறது? என அன்பு சிணுங்கினான். 

கண்ணு அது உன்ற அக்கா வீடு டா!! போ போய் இருந்திட்டு காலையில வா கண்ணு என கூறினார். 

வேறு வழி இல்லாமல் புறப்பட்டான் அன்பு. அவளை பார்க்க வேண்டும் என உள்ளுக்குள் ஆயிரம் தோன்றியது. ஆனால் எப்படி அவளை சமாளிப்போம் என நினைத்தாலே கதி கலங்குகிறது. 

அடடே வாங்க மாப்ளை!! தனக்கொடி யாரு வந்திருக்கா பாரு? என சிவராமன் உள்ளிருந்து அழைக்க, தண்ணீர் செம்புடன் வெளியே வந்த தனம் அவனுக்கு நீட்டினார். 

அன்புவின் கண்கள் பின்னால் அலைபாயிந்தது. மெல்ல தண்ணீரை பருகினான். 

உன்ற அம்மாவுக்கு எப்டி இருக்குது? என தனக்கொடி கேட்க.. 

பரவாயில்லை கா! கண்ணுல பிரச்னை கண்ணாடி போட சொல்லிருக்காங்க என்றான் அன்பு. 

அப்டியா அப்போ நாளைக்கு ஒரெட்டு அத்தைய போய் பார்த்திட்டு வந்திடலாம் தனம் என சிவராமன் சொல்லி கொண்டிருக்க குடி போதையில் வீட்டுக்குள் வந்தான் மகிழ். 

மாப்ளை!! என திடுக்கிட்டு பார்த்தான் அன்பு. அதற்கு காரணம் மது வாடை அப்படி முகத்தை சுளிக்கும் அளவுக்கு அடித்தது. 

மாமன்….  பிரி….யாணி வாசனை அடி…க்குது என அவன் கையில் இருக்கும் டிபன் பாக்ஸை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தான் மகிழ். 

சிவராமன் பற்களை கடித்தபடி தனத்தை முறைத்தார் மகிழை வெட்டி வீசும் அளவுக்கு முகம் மாறியது. 

அன்பு உள்ளே போ பூங்கொடி அவளோட ரூமில் இருக்கா. சாப்பாடு ரெடி ஆகுது இங்கேயே இருந்துக்க.. இப்போ உள்ளே போ என தனக்கொடி கூற தனது அக்காளை அதிசயித்து பார்த்தான். 

இது தனம் அக்காவா? நிஜமா? இப்படியெல்லாம் அவங்க பேசுவாங்களா? என அன்பு உள்ளே சென்றான். அவனுக்கு ஆச்சரியம் இன்னும் குறையவில்லை. அப்பொழுது தான் இன்னொன்றும் நினைவுக்கு வந்தது.  அன்னத்தை பற்றி விசாரித்தாரே? அப்போ அக்கா மாறிட்டாங்களா? என தோன்றியது. எதுக்கு நப்பாசை? எப்படி வேணாலும் திசை திரும்பும் இந்த தனக்கொடி அக்கா என நினைத்து கொண்டே சென்றான். 

பூங்கொடி அவளரையில் அமர்ந்திருந்தாள். கதவை திறக்கும் சத்தம் கேட்க.. 

ப்ச் எனக்கு பசிக்கல இம்சை பண்ணாத மா தயவு செஞ்சு என்னை விடு! இரு உன்னை வெளியே தள்ளி கதவை சாத்துறேன் என அவள் சொல்லி கொண்டே திரும்ப, அங்கே அன்பு செல்வன் நின்றிருந்தான். 

அவனை பார்த்ததும் சட்டென கோபம் சுற்றென ஏறியது. அன்று என்னை மறந்து விட்டு சென்றான் இன்று என்னை ஏமாற்றி விட்டான். என தோன்றியது. கைகளை இறுக்கி மடக்கி கொண்டவள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது ஏமாற்றத்தில்..  மொத்த கோபமும் அன்னத்தின் மீது திரும்பியது. அந்த கிளவி என பற்களை கடித்தவள் வேறு புறம் திரும்பி கொண்டு. தயவு செஞ்சு வெளியே போயிடு!! பிளீஸ் ஏதாவது எடாகூடம் நடந்திட போகுது. என தீர்க்கமாக கூறினாள். 

அவளின் பின் கழுத்தில் முத்தமிட்டான். 

பிளீஸ் அன்பு வெளில போயிடு!! என கண்களை மூடி கொண்டு அழுது விட்டாள். உடலெல்லாம் நடுங்கியது. 

ஹே பூங்கொடி!! அமுலி என்னாச்சு? என அன்பு செல்வனின் முகத்தில் பதட்டம் பரவியது. 

நான் ஏதாவது பேசிவிடுவேன் போயிடு!! என கத்தினாள். ஹே சாரி டி பிளீஸ் டி!! என அன்பு செல்வன் கெஞ்சினான். 

கைய விடு என வேகமாக உதறி விட்டிருந்தாள் பூங்கொடி. 

உனக்கு புரியுதா இல்லையா? எனக்கு ஏன் தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டோம் அப்டின்னு இருக்கு. என முகத்தை மூடி அழுதாள். அவளும் என்ன செய்வாள். ஒரு புதிதாக திருமணம் ஆன பெண் சாதாரணமாக எதிர்பார்க்கும் விடயங்களை தான் பூங்கொடி அவனிடம் எதிர்பார்த்தாள். அவனுடன் முதன் முதலாக வெளியூருக்கு ஒன்றாக தங்க வேண்டும் என அழைத்தாள். வர மாட்டேன் என்றவன் இறுதியில் வந்தான். இருவரும் தனியாக செல்ல ஆசை பட்டாள். அவனுக்கு வேலை வந்து விட்டது. இன்று ஆசையாக சினிமாவுக்கு அழைத்து செல்லடா என வாய் விட்டு கேட்டாள் அவளே!! அதுவும் நடக்கவில்லை. அவளுக்காக பிடித்ததை பார்த்து பார்த்து அன்பு செல்வன் என்ன செய்து இருக்கிறான்? இந்த கல்யாணமே அவசரத்தில் நடந்தது தானே? அவனிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அது அசிங்கம் என முடிவுக்கு வந்திருந்தாள். 

பிளீஸ் பூங்கொடி இன்னிக்கி அம்மாவுக்கு என்னாச்சு தெரியுமா? 

அய்யோ உன்கிட்ட நான் விளக்கம் கேட்கல அன்பு. நீ போயிடு என் கண்ணு முன்னாடி நிக்காத!! உன்னை பார்த்தால் நான் எதுவும் வேதனை படுகிற போல வார்த்தைய விட்டுடுவேன் அதான் சொல்றேன் வெளியே போயிடு என வெறித்து பேசினாள். 

அன்பு செல்வன் பெரு மூச்சுடன் வெளியே சென்று விட்டான். சிறிது நேரம் கழித்து சிவராமன் அறைக்குள் வந்தார். அமுலி என அழைத்து கொண்டே.. 

அப்பா சொல்லுங்க!! என்னாச்சு? என இயல்பாக முகத்தை வைத்து கொண்டாள். 

அது மாப்ளை உன்னை கூப்பிடுறாப்டி!! வீட்டுக்கு.. 

அப்பா என்னால முடியாது என கோபத்தில் பொங்கினாள். 

அட தங்கம்.. நானும் அப்படி தான் சொன்னேன். ஆனால் விடபடியா நிக்கிறார். நாளைக்கு அனுபூராராம். அவரும் வரேன்னு சொல்றார். ரொம்ப கேட்கிறார். வா அமுலி என சிவராமன் அழைக்க.. 

கைகளை பிசைந்தபடி வெளியே வந்தவள். நான் தூங்க நைட்டுக்கு வரேன் எனக்கு அம்மா கூட தூங்கனும் நைட்டு கொண்டு வந்து விடுங்க பத்து மணி வரைக்கும் தான் அங்கே இருப்பேன். என உறுதியாக அனைவரின் முன்னும் கூறியவள் தன் தந்தையை பார்க்க.. 

மாப்ளை!! என சிவராமன் பேச வர.. 

சரிங்க மாமா! பாப்பா சொன்ன போல செஞ்சிடுறேன் என்றவன் வண்டியை முறுக்கி கொண்டு நின்றான். 

பூங்கொடி கோபத்துடன் வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவர்கள் கிளம்பும் வரை புன்னகையில் இருந்த சிவராமன் முகம் அவர்கள் சென்றது தெரிந்ததும் சட்டென முகம் மாறி வேட்டியை மடித்து கட்டியவர் சாட்டையை எடுத்து கொண்டு டே ராஸ்கல் நாயே வெளியே வாடா தண்டசோரு என திட்டி கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவர் மகிழ அடிக்க கை ஓங்கிட.. அவரை வேகமாக கீழே தள்ளி விட்டான் மகிழ். 

ஹே எங்கே கூட்டி போற? நிறுத்து டா வண்டிய!! என கோபமாக கத்தினாள் பூங்கொடி. 

ப்ச் சொல்ல முடியாது என வேகமாக ஓட்டினான். 

டேய் உன்னை கொல்லுவேன். என பூங்கொடி கத்தினாள். 

எனக்கு பசிக்குது சாப்பிட போறோம். 

ஏன் உன்ற அன்னம் காத்திட்டு இருக்குமே? போவே அங்கே? என்னை தயவு செஞ்சு என்ற வீட்ல விட்டுபோட்டு நீ எங்கே வேணாலும் போ! என சொல்லி கொண்டே அவள் திரும்ப, வேகமாக ஓட்டினான். அவளின் காவியங்கள் இரண்டும் முன்னால் முட்டியது. 

டேய் அன்பு உன்னை கொல்ல போறேன் எங்கே டா கூட்டி போற? என கோபத்துடன் அவள் கேட்க.. 

ஈரோடு போறோம் கம்முன்னு வாடி என்றவன். மாட்டுசாலை வந்ததும் தான் வண்டியை ஸ்லோ செய்தான். 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, நேராக கொங்கு புரோட்டா கூட்டி சென்றான். 

இரவு இருட்டில் கடைகள் வேறு ஒரு vibe ல இருந்தது. உள்ளே அழைத்து சென்றான் கையை பிடித்து.. 

ப்ச் கைய விடு!! என பூங்கொடி உதற.. 

கையை பிடித்து முத்தமிட்டான் அன்பு செல்வன். 

பூங்கொடி..? 

தொடரும்.. 

You may also like

Leave a Comment