மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
497 views

Episode -39 

பூங்கொடி அதிர்ச்சியுடன் தன் கணவனை பார்த்தாள். அவளின் தோள் மேல் கையை போட்டு கொண்டான் அன்பு. ஒரு இடத்தை தேர்வு செய்து அவளை அமர வைத்து ஒட்டி அமர்ந்து கொண்டான். 

என்ன அப்படி பார்க்கிற? என தொடையின் மீது வருடினான். 

டேய் ஓவரா போற நீ!! என அவளின் முகம் சிலிர்த்து போய் கைய எடு அன்பு. என மெல்லிய குரலில் திக்கி திணறி கூறி முடித்திருந்தாள். 

என்ன வேணும்னு சொல்லு என காலை உரசினான் அன்பு. அவனது அத்து மீறலும் தைரியமும் மிக மிக அதிகமாக இருக்க அரண்டு விட்டாள் பெண்ணவள். 

மெனு கார்டை மூடி வைத்தவன். பிச்சு போட்ட கோழி இங்கே ரொம்ப நல்லாருக்கும். உனக்கு சொல்லவா? என அன்பு ஆசையுடன் கேட்க.., அவளோ வேறு புறம் திரும்பி கொண்டாள். 

ஹே!! 

அவள் திரும்பவில்லை.. 

ஹே உன்னைதாண்டி! கொஞ்சம் திரும்பு என இடையை பிடித்தான் அன்பு. 

சட்டென திரும்பியவள் கைய எடுடா!! என்னடா பண்ற? என சிணுங்கினாள். 

கேட்டதுக்கு பதில் சொல்லு! என அன்பு அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான். 

ஏதோ சொல்லு என நெற்றியை நீவி கொண்டு அமர்ந்தாள். 

ஒரு பெரிய ப்ளைன் தோசை மொறுமொறுவென வந்தது. அதன் பின் பிச்சு போட்ட சிக்கன். ஒரு பரோட்டா என நிறுத்தி கொண்டாள் பூங்கொடி. அன்பு மூன்று இட்லி வாங்கி சாப்பிட்டான். ஒரு வழியாக இரவு உணவு முடிந்திருக்க, கையை துடைத்து கொண்டு வெளியே வண்டிக்கு அருகில் நின்றவள். என்னை வீட்ல கொண்டு போய் விடு!! என முகத்தை திருப்பி கொண்டே கூறினாள். 

கண்டிப்பா விடறேன் என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய ஏறி கொண்டாள். 

நேராக அன்பு செல்வன் தியேட்டர் சென்றான். பூங்கொடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

ஹலோ மேடம்!! இங்கே பாருங்க அம்மணி!! அட பார்ரா!!.. என அவன் பேச்சு கொடுக்க, கல் போல அமர்ந்திருந்தாள். 

பார்க்கிங்கில் வண்டியை விட்டவன் அவளின் கையை பிடித்து அழைத்து சென்றான். இரவு பத்துமணி காட்சிக்கு அழைத்து வந்திருந்தான். 

பூங்கொடியின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள கர்சீப்பை கொண்டு துடைத்து கொண்டே வந்தாள். 

ஓரிடத்தில் அவளின் கையை பிடித்து அமர வைத்தவன் கையை வருடி கொடுத்து கொண்டே, என் மேலே தான் தப்பு அமுலி. பிளீஸ் டி மாமாவை மன்னிச்சிடு என்றான் உண்மையான வருத்தத்துடன்.. 

இல்ல மன்னிப்பு கேட்கிற அளவுக்கு இங்கே ஒன்னும் நடந்து போயிடல. நான் தான் சில விஷயத்தில மாறிக்கணும். இது எப்படி இருக்கு தெரியுமா? என்னை இப்போ நீ படத்துக்கு கூட்டிட்டு வந்தது ரொம்ப அல்ப்பமா இருக்கு. என்றாள். 

ஹே ஹே ஐயோ எதுக்கு டி இப்படியெல்லாம் பேசுற? என்ன அல்பம்? நீ ஓவரா திங்க் பண்ற அமுலி. உன்னோட அப்பா அம்மா மாதிரி என்னோட அம்மா அப்பா கொஞ்சம் நடுத்தர வயசு இல்ல. அதை ஃபர்ஸ்ட் புரிஞ்சுக்க. எனக்கு தெரியும் என் அம்மாவுக்கு எப்போ முக்கியத்துவம் கொடுக்கணும்? என்னோட பொண்டாட்டிக்கு எப்போ முக்கியத்துவம் கொடுக்கணும் அப்டின்னு. அதனால நீ தேவையே இல்லாம ரெண்டையும் போட்டு குழப்பம் ஆக வேணாம். 

நல்லா யோசிச்சு பாரு? கொஞ்சம் திங்க் பண்ணு. இப்போ போய் அம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர முடியுமா? ஹாங்? சொல்லு என மோவாய் பற்றி நிமிர்த்தினான். அன்பு. 

நான் உனக்கு ரொம்ப தொல்லை கட்டுறேன் அப்படி தான? என்னோட மனசுல நீ என்னை கேவலமா நினைச்சு வச்சிருக்க சரி தான? என விசும்பினாள் பூங்கொடி. 

இப்பொழுது அவளை பார்க்கையில் வாடிய பூ போல இருந்தாள் கண்கள் இரண்டும் சோர்வை அப்பட்டமாக காட்டிட, அவளின் உதடுகள் இன்னும் பிங்க்காக இருந்தது. எப்படி இருந்தாலும் அவள் அழகு தேவதை தான். 

ஹே பாப்பா!! இல்ல டி!! ஆக்சுவலி எனக்கு இதுக்கு முன்னாடி இருந்த பூங்கொடி பிடிக்கும். அப்டியே கெத்தா என்னடா அன்பு? என்னடா பண்ணுவ? அப்படி இப்படின்னு மிரட்டுவியே? அந்த பூங்கொடி எங்கே? அந்த பொண்ணு வேணும். என்றவன் வேகமாக போனை எடுத்து இப்போவே என்ற மாமனாருக்கு கூப்பிட்டு எனக்கு சுட சுட காரமா ஒரு பூங்கொடி வேணும் மாமா! அப்படி ஒரு பெண்ணை பெத்து போடுங்கன்னு கேட்க போறேன் என விளையாட்டாக அவன் கூறினான். 

எல்லாத்துக்கும் நீ தான் காரணம் இத்தனை நாள் நான் நல்லா தான்டா இருந்தேன். என்னைக்கு உன்னை பார்த்தேனோ இப்போ உன் மேலே கிறுக்கு பிடிச்சு போய் சதா உன்னோட நினைப்புலையே சுத்துறேன். என மனதுக்குள் நினைத்தவள் சிந்தையில் அன்பு செல்வன் சொன்ன வார்த்தைகள் காதில் விழ, வேகமாக அவன் கையை தட்டி விட்டவள் சட்டையை பற்றி, என்னோட தங்கச்சி வேணுமா உனக்கு? அப்போ நான் வேணாம்? ஹான்? என கண்களை உருட்டினாள். இந்த பூங்கொடி தான் எனக்கு வேணும்!! ம்ம் என்ற அக்கா பொண்ணு!! எங்கே இருந்தாலும் தட்டி தூக்கிட்டு போயிடுவேன் என அன்பு செல்வன் உண்மையாக கூறினான் அவள் கண்களை பார்த்து. 

உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினாள் பூங்கொடி. 

கொஞ்சம் எங்களுக்கும் நீங்க சிரிக்கிறத காட்டினா தான் என்னவாம்? என அன்பு அவளின் முகத்தை பார்த்தான். 

வெட்கத்துடன் வேறு புறம் திரும்பி கொண்டாள். சினிமா போடும் நேரம் நெருங்கிட இருவரும் தியேட்டர் உள்ளே சென்றார்கள். கொட்ட கொட்ட விழித்து இருவரும் படத்தை பார்க்கவில்லை. காதல் கிறுக்கை கண்டின்யூ செய்தார்கள். என்பதே உண்மை. 

பூங்கொடி படத்தை பார்த்து கொண்டிருக்க, அன்பு செல்வனோ அவளை பார்த்தான். 

என் முகத்துலயா படம் ஓடுது? அங்கே பாரு மாமா!! என முகத்தை திருப்பி விட்டாள் பூங்கொடி அடக்கப்பட்ட சிரிப்புடன். 

அமுலி!.. 

அமுலி.. 

அமுலி.. 

அட என்ன மாமா!! என சிணுங்கி கொண்டே திரும்பி அவனை பார்த்தாள். 

எனக்கு தூக்கம் வர போல இருக்கு. 

ஓகே தூங்குங்க என பூங்கொடி படத்தில் கவனம் செலுத்தினாள். 

இல்ல எனக்கு படம் பார்க்கணும் என்று தோள் மேல் கை போட்டான். 

அப்போ பாரு மாமா!! 

இல்ல தூக்கம் போக நீ தான் வழி பண்ணனும். 

என்ன வலி? ஹான் தெரிஞ்சு போச்சு என அவனது தொடையில் கிள்ள வந்தாள்..

ஹே கிள்ள வேணாம். மாமனுக்கு முத்தம் கொடு. என மோவாய் பற்றி திருப்பினான். 

மாட்டேன் இங்கே கேமரா இருக்கும். என அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற.. 

நான் கொடுக்கிறேன் என எக்கி அவளின் உதட்டை கவ்வி இருந்தான். ப்ச் மாமா!! என பூங்கொடி சினுங்க.. இதோ சிறிது நேரத்தில் அவனது மடிக்கு வந்திருந்தாள் இடையில் கைகள் சென்று வருடி கொடுக்க வெட்கி போய் அமர்ந்திருந்தாள். விடுங்க மாமா என சிணுங்கி கொண்டே கூறினாள். 

நல்ல வேளை இன்னிக்கு படத்துக்கு உன்னை கூட்டிட்டு வந்துட்டேன். இது புது விதமா ஜாலியா இருக்கு ஈவினிங் ஷோ விட நைட் ஷோ சூப்பர் என கழுத்தில் முத்தமிட்டான். 

போதும் விடுக..  என அவள் விலக போராட.. 

இல்ல இப்படியே உட்காரு தொந்தரவு பண்ண மாட்டேன் என அவளின் முதுகில் சாய்ந்து கொண்டான். படம் முடிய நடு இரவுக்கு மேல் ஆனது. வெளியே வந்ததும் வண்டியை எடுத்தான். 

அமுலி உனக்கு பிடிச்ச பாட்டு சொல்லேன். என கையை பிடித்தான் வண்டி ஓட்டி கொண்டே.. 

பெருசா இல்ல மாமா!! உனக்கு என்ன பாட்டு புடிக்கும்? என பூங்கொடி கேட்க.. 

அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வலையுதடி என் வீட்டில் மின்னல் ஒலியுதடி என் மேலே நிலா பொழியுதடி என்றான் காதலுடன்.. 

அவளின் முகத்தில் வெட்கம் அது இரவில் கூட தெரிந்தது அன்பானவனுக்கு. அதற்கு காரணம் அவளது மவுனம். இது சாதாரண மவுனம் அல்ல வெட்கத்தினூடு வந்த மவுனம் ஆகும். இருவரும் வீடு வந்து சேர நடுசாமம் ஆனது. 

அசையாமல் வண்டியை நிறுத்தியவன். அவளது கையை கோர்த்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். 

பூங்கொடி உள்ளே செல்ல, பாப்பா ஒரு நிமிசம் இரு தாத்தா கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன் என நேராக பெரிய வீட்டுக்கு சென்றான். பூங்கொடி உற்சாகத்துடன் உள்ளே சென்றவள் உடையை மாற்றினாள். என் மாமா!! என்னோட அன்பு மாமா என உள்ளுக்குள் பூரிப்பு தான் 

அன்பு செல்வன் நேராக தன் அன்னையை பார்க்க சென்றவன். தண்ணீரை குடித்து விட்டு மா நான் வீட்டுக்கு வந்துட்டேன். 

கண்ணு என திடுக்கிட்டு அன்னம் அமர, 

மா பதட்டம் வேணாம். பூங்கொடி நம்ம வீட்டுக்கு போலாம் அங்கே தூக்கம் வரலனு சொன்னா. அதான் வந்துட்டேன். நீங்க மாத்திரை போட்டீங்களா? அந்த வீங்கின இடம் எப்டி இருக்குது? ஒன்னும் பிரச்னை இல்லையே என அவனது மனம் தவிப்புடன் கேட்டது. 

அன்னலட்சுமி சிரித்தபடி நான் நல்லாருக்கேன் தம்பி. ஒன்னும் பிரச்னை இல்ல. நீ போ போய் தூங்கு காலையில பாப்பா காலேஜுக்கு போகணும்ல என கூறி அனுப்பி வைத்தார். 

சரி மா நான் காலையில் வரேன் என தன் தந்தையை ஒரு நிமிடம் பார்க்க, போய் தூங்கு அன்பு என சக்கரவர்த்தி திரும்பி படுத்தார். 

மச்சா பார்த்தீங்களா? பாப்பாளுக்கு அங்கே தூக்கம் வரலையாம். என்றார் அன்னம் சிரித்து கொண்டே.. 

போதும் கண்ணை மூடி தூங்கு அன்னம் என சொல்லி விட்டு அவர் திரும்பி கொண்டார்.

***

ட்ரெஸ் மாத்திட்டியா? என அன்பு அவளை பார்க்க, 

என்னாச்சு என கட்டிலில் அமர்ந்தாள். 

இல்ல நான் வந்திருபனே? என சட்டை பட்டனை கழட்டி கொண்டே கண்ணக்குழி தெரிய பார்த்தான். 

ஹான் போதும் போதும் என அவள் கீழே படுத்து கொள்ள, அவளுக்கு அருகில் வந்து படுத்து கொண்டவன் ஒரு நொடியில் அவளை ஆட் கொண்டான். 

மாமா தூக்கம் வருது டா!! என கொட்டாவி விட்டு கொண்டே பூங்கொடி கூற.. 

இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அமுலி என முத்தமிட்டு மென் காதல் கூடல் முடித்து கட்டியணைத்து உறங்கினான். 

இது தொடருமா? 

வந்துட்டா டா மேனகா.

தொடரும்.. 

You may also like

Leave a Comment