மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
773 views

Episode -47 

மேனகா நான் சொல்றத கேளு! என சதீஷ் அவளின் அருகில் வந்தவன். தனியாக அழைத்து சென்றான். 

என்ன சொல்லு? என்னைய ஏமாத்தி இப்படி ஒரு வேலைய பண்ணிட்டல்ல ச்சீ!! உன்னை நினைச்சாவே அசிங்கமா இருக்கு. என பொங்கினாள் மேனகா. 

சதீஸ் வீங்கிய முகத்துடன், “நீ எங்கிட்ட வந்து அன்பு செல்வனயும் பூங்கொடியையும் பிரிக்கணும்னு சொல்றதோட விட்டிருக்கலாம். ஆனால் நீ அன்பு செல்வனை கட்டிக்கணும். விரும்புகிறேன் புடிக்கும் அப்படி இப்படின்னு சொன்ன? எனக்கு அது பிடிக்கல. பூங்கொடி கிட்ட அவனை விட்டு வந்துடுன்னு சொன்னதுக்கு அவனை தான் கட்டிப்பேன் அப்டின்னு சொல்றா! என்னை விட அவன் கிட்ட நல்ல உரிமையாவே ஒட்டிக்கிட்டு போறா வரா! அவளோட பார்வையில அவனை அவ்ளோ ரசிக்கிறா! இதையெல்லாம் பார்த்து ஆல்ரெடி ரொம்ப வெறுப்பில் இருந்தேன் நான்.”

“அந்த நேரத்தில் தான் நீ வந்த. அதுவும் நீ சொன்ன விஷயம் எல்லாம் எனக்கு அன்பு மேலே இன்னும் வன்மத்தை வளத்துச்சு. எந்த ஒரு ஆம்பிள்ளைக்கும் வர உணர்வு தான் எனக்கும். அதே போல உன்னையும் நான் சிவராமன் மாமா வீட்டுக்கு வரப்போகும் போது, அவங்க வீட்டுக்கு வந்து போகும் போது பார்த்திருக்கேன். அந்த நேரத்துல சடார்ன்னு பண்ணனும்னு தோணுச்சு. அது பெரிய தப்பு தான். நான் ஒத்துக்கிறேன். உனக்கே தெரியாம உன்கிட்ட அத்து மீறிட்டேன் பாவம் தான். என்னை மன்னிச்சிடு. அந்த பஞ்சாயத்தில நீ உறுதியா அவங்க கிட்ட அன்பு செவ்வனோட குழந்தைன்னு சொல்லும் போது எனக்கு அப்போ தான் சம்பட்டியில அடிச்ச போல இருந்தது. நான் பண்ணது தப்பு தான். உன்னை பிடிக்க வைக்க முயற்சி பண்றேன். கண்டிப்பா என்னை உனக்கு பிடிக்கும். உனக்காக நான் என்னை மாத்திக்கிறேன். எனக்கு இப்போ தோணுது பூங்கொடி பக்கத்தில இருந்த உன்னை ஏன் இத்தனை நாளாக பார்க்காமல் விட்டேன்னு.” 

மேனகா அவனை பார்த்து, இப்போ எனக்கு உன் மேலே எந்த விருப்பமும் இல்ல. என்னை விட்டுடு என கூறி விட்டு விலக, அய்யோ மேனகா நீ படிக்கிற வரை நான் உனக்கு டைம் கொடுக்கிறேன். இந்த குழந்தையோட பொறுப்பையும் நானே எடுத்துக்கிறேன். ரெண்டு வருஷம் முடிஞ்சும் என் மேல் உனக்கு விருப்பம் இல்லன்னா வரலனா உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் என கூறினான் சதீஷ் உறுதியாக.. 

மேனகாவுக்கு வேறு வழி தெரியவில்லை. தந்தை இத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார். மீண்டும் அவளது வீட்டுக்கு செல்ல முடியாது. இங்கே அன்பு செல்வனது வீட்டில் இருந்தால் அது!! என கைகளை பிசைந்தாள். 

என்னை நம்பி நீ வரலாம் என சதீஸ் அவளிடம் கெஞ்சினான். 

ஒரு பெரு மூச்சை விட்டவள். அவனுடன் செல்ல சம்மதித்தாள். மேனகாவை பற்றி நினைக்கும் போது வேதனையாக இருந்தாலும் நல்ல வாழ்க்கை அவளுக்கு அமைந்ததில் மகிழ்ச்சி, அப்பொழுதே மனோரஞ்சிதம் மேனகாவை அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

ஆனால் ஜெயக்கொடி – முருகேசன் இருவரின் விசயத்தை பற்றி அவர் பேசவோ பஞ்சாயத்து பண்ணவோ விரும்பவில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் காப்பாற்றி கொள்ள வேண்டும். அதை விட அன்பு செல்வன் விஷயத்தில் ஜெயக்கொடி கொஞ்சம் அதிகப்படியாக செய்து விட்டார். நியாயம் என்றால் நியாயம் தான். யாராக இருந்தாலும் சரி. 

அன்பு செல்வன் தனது அப்பாவின் அருகில் வந்து, அப்பா சங்கீதாவை நம்ம இங்கே கூட்டிட்டு வந்திடலாமா? பாப்பாவை இங்கே நம்ம ஸ்கூல் சேர்த்து பார்த்துக்கலாம் என்றான். 

என்னாச்சு கண்ணு? என சக்கரவர்த்தி கேட்க, அன்பு செல்வன் பெரிய மூச்சை விட்டபடி, பள்ளி கூடத்தில் பாப்பாவை ஒரு வாத்தி! அதாவது தப்பான கண்ணாட்டத்தில் நெருங்கி இருக்கான் என்றான் அன்பு. 

இதை கேட்டு ஜெயா அதிர்ச்சியுடன் பார்க்க, அன்பு தனது அக்காவை பார்த்து கொண்டே, எனக்கு ட்ரெயினிங் கரூர் மார்க்கம் தான் போட்டாங்க. பாப்பாவை பார்க்கணும்னு நினைச்சிட்டு போனேன். அப்போ தான் விசயம் தெரிய வந்துச்சு. மாமா பண்ணது தப்பு. தப்பு இல்ல துரோகம். இவங்களால சங்கீதா வாழ்க்கை கெட்டு போக கூடாது மா! என்ன சொல்றீங்க? என கேட்டான். 

சக்கரவர்த்தி வேகமாக சென்று ஜெயக்கொடியின் கன்னத்தில் ஓங்கி அரை விட்டார். பாவி ரெண்டு புள்ளைங்க வாழ்க்கைய இப்படி சீரழிக்க பார்த்தியே டி! உன்ற வாழ்க்கையும் இப்படி வந்து நிக்கிது. சொத்தை பிரிச்சிட்டு போய் மொத்தத்தையும் தாரவார்த்து கொடுத்திட்டு நிக்கிற? இப்போ என்ன பண்ண போற? என சரமாரியாக கேள்வி கேட்டார். 

நான் சுருக்கு போடுகிறேன் என ஜெயக்கொடி எழுந்து கொள்ள, பைத்தியக்காரி மாதிரி பண்ணி தொலைஞ்சு பிள்ளைக ரெண்டு பேரையும் அனாதை ஆக்கிடூ கழுதை என திட்டினார். 

நான் என்ன பண்ணட்டும்? இப்போ நான் என்ன பண்ண? என தலை தலையாக அடித்து கொண்ட ஜெயா கையெடுத்து கும்பிட்டு நான் எங்கே போவேன் பா! நான் பண்ணது தப்பு தான். அந்த ஆளு எல்லாத்தையும் கடன் பண்ணி வச்சிட்டான்.  ரெண்டு பொன்னையும் கரை சேர்த்த தான் அன்பு செல்வனை என் பொண்ணுக்கு கட்டிக்க நினைச்சேன். எனக்கு யார் இருக்கா? என தலை தலையாக அடித்து கொண்டார். 

உனக்காக தான் கா நான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றேன்? நான் மேனகாவை என்னோட பொண்ணா பார்க்கிறேன். எனக்கு தங்கச்சி போல அவள். எப்பவுமே நான் எல்லாரையும் ஒரே போல தான் பார்ப்பேன். இது உன்ற வீடு கா நீ இங்கே இருக்கிறது உன்னோட உரிமை. நீயும் சங்கீதாவும் இங்கேயே வந்துடுங்க என்றான் அன்பு. 

அன்பு என்னை மன்னிச்சிடு தம்பி. நீ என்னை அடிக்க உரிமை இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். பூங்கொடி மேலயும் சித்தி மேலயும் எந்த தப்பும் இல்ல. என்றாள் ஜெயா. 

பரவாயில்லை. நீ உள்ளே போ! நடந்தது நடந்து போச்சு!! என அன்பு செல்வன் சமாதான படுத்தி விட்டு சங்கீதாவை பள்ளியில் இருந்து அழைக்க புறப்பட்டான். 

அன்பு செல்வன் நேராக சங்கீதாவை அழைத்து கொண்டு வீடு வந்து சேர மதியம் ஆனது. அன்னம் சங்கீதாவை அழைத்து முத்தமிட்டு, இனி தங்க பொண்ணு இங்கிருந்து ஸ்கூல் போங்க. என்றவர் அன்பு செல்வனை பார்த்து, கண்ணு பாப்பாவை தாமரபாளையம் பள்ளி கூடத்துல சேர்த்து விடு. பஸ் வீட்டுக்கு முன்னாடியே வரும். என்றார். 

சங்கீதா உற்சாகத்துடன் அம்மாச்சி ஜாலி அம்மாச்சி! நான் இனி ஜாலியா ஸ்கூல் போவேன். மாமாச்சி தேங்க்ஸ் மாமாச்சி. எனக்கு அந்த ஸ்கூல் பயமா இருந்தது. அன்பு மாமா கிட்ட சொன்னேன். மாமாச்சி என்னை இப்போவே மாத்திட்டாங்க எனக்கு ரொம்ப சந்தோசம் என அன்பு செல்வனிடம் உற்சாகமாக கூறினாள். பள்ளி செல்லும் குழந்தைக்கு எப்பொழுதும் பெற்றோர் கவனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பள்ளியில் நடக்கும் விசயங்களை அவர்கள் சுதந்திரமாக சொல்ல வேண்டும். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்க வேண்டும். அறிவுரை வழங்க வேண்டும். எதிர்த்து சண்டை போட, தைரியமாக கருத்தை வெளிபடுத்த, என நட்புறவுடன் பழக வேண்டும்.  குழந்தைகளின் மீது கவனம் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் பள்ளியில் ஏதாவது பிரச்னை என்றால் av

அவளுக்கு முருகேசன் மற்றும் ஜெயக்கொடி விசயங்கள் எதுவும் தெரியாது. 

சங்கீதா நிம்மதியுடன் உள்ளே சென்றாள். அன்பு செல்வன் மட்டும் செல்லாமல் இருந்தால் குழந்தை எத்தனை பெரிய துன்பத்துக்கு ஆளாகி இருக்கும்? எப்படியோ நல்லது நடந்ததே. 

சிவராமன் நேராக அன்பு செல்வனிடம்.. 

அதெல்லாம் சரி தான். அந்த சமையல்காரன் பொண்ணு மனோகரன் பொண்டாட்டி எதுக்கு இங்கே இருக்கா? அவளை வீட்டை விட்டு துரத்துங்க மாப்ளை! அப்போ தான் பூங்கொடி வருவா! என கேட்டார். 

அனைவரின் பார்வையும் சிவராமன் மீது பட, மார்புக்கு குறுக்காக கையை கட்டி கொண்ட அன்பு உறுதியான குரலில், சவுந்தர்யா இங்கே தான் இருக்கும். எங்கேயும் அனுப்ப முடியாது மாமா. நீங்க ஆனத பார்த்துக்கோங்க என உறுதியாக கூறி விட்டு சென்றான். 

தனக்கொடி பேச வர, சிவராமன் அவமானத்துடன் அவ்விடத்தை விட்டு புறப்பட்டார். 

தனக்கொடி நேராக அன்பு செல்வனின் அருகில் வந்தவர். தம்பி என அழைக்க, 

அக்கா எனக்கு எல்லா விஷயமும் தெரியும். பாவம் கா சவுந்தர்யா! மாமா தான் மனோகரன் கிட்ட பணத்தை கொடுத்து அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருக்கார். இப்போ பாருங்க அவன் அல்ப ஆயிசில போய் சேர்ந்துட்டான். மகிழ் மச்சான் இப்படி குடிச்சு தன்னை தானே அழிச்சுக்கிறது பார்த்தால் எப்படி கா தெரியுது? நல்லாவா இருக்கு. மகிழ் மச்சான் வாழ்க்கையில் நல்லது நடக்கணுன்னு உனக்கு ஆசை இல்லையா? என அன்பு செல்வன் கேள்வியுடன் முடித்தான். 

மாமாவை எதிர்த்து என்னால என்ன பண்ண முடியும்.. என தனக்கொடி அழுது கொண்டே பார்த்தவர். அவன் என்கிட்ட தான் முதல்ல சொன்னான் ஒரு பொன்னை விரும்புறேன்னு. உன்ற மாமனுக்கு தகுதி சமூகம் எல்லாம் முக்கியம். என் பையன் வாழ்க்கை இப்படி ஆக காரணமே அவர் தான் என தேம்பி அழுதார். 

உனக்கு தெரியாது கா அந்த சவுந்தர்யாவை நான் என்ன நிலையில் பார்த்தேன் தெரியுமா? என அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

(Flashback) 

மனோகரன் இறந்து அவனுக்கான பணத்தை செட்டில்மென்ட் செய்ய மகிழ் மற்றும் மேனேஜர் இருவரும் மனோகரன் வீட்டுக்கு செல்வதற்கு முன்னால் அன்பு சவுந்தர்யாவை பார்க்க சென்றான். 

புஷ்பராஜ் அவளின் கையை பிடித்து இழுக்க, சவுந்தர்யா என அழைத்து கொண்டே வந்தான் அன்பு செல்வன். 

அண்… அண்ணா என பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தாள் சவுந்தர்யா. 

அன்பு செல்வன் புருவம் சுருக்கியபடி பார்க்க அவளுக்கு பின்னால் புஷ்பராஜ் வந்தவன். அட அன்பு செல்வன்? நீ எங்கே இந்த பக்கம்? ஓ துக்கம் விசாரிக்க வந்தியா? நானும் பெரிய வீட்டுக்கு என்ற தம்பி பொண்டாட்டிய கூப்பிட தான் வந்தேன். என்றான் புஷ்பராஜ். 

அன்பு செல்வனின் பார்வை கூறாக படிய புஷ்பராஜின் நெற்றியில் இருந்து வியர்வை வழிந்தது. 

சவுந்தர்யா வெள்ளை புடவையில் நின்றிருந்தாள் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தவளை ஒரு பெரு மூச்சுடன் பார்த்தவன். புஷ்பராஜை பார்க்க, அவனோ துக்கம் விசாரிக்க கை கொடுக்க, அன்பு செல்வன் அவனது கையை பிடித்து பகிர்ந்து கொண்டான். 

சவுந்தர்யா அதே இடத்தில் நின்று கொண்டிருக்க அன்பு செல்வனின் பின்னால் திவ்ய பாரதி வந்தாள். 

சவுந்தர்யா என அழைத்து கொண்டே ஓடி சென்று அணைத்து கொண்டாள் திவ்யா. 

அன்பு அங்க வாங்க என சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டான் புஷ்பராஜ். 

கண்ணு என்னடா ஆச்சு? என அன்பு செல்வன் கேட்க.. அவளோ திவ்ய பாரதியை தயக்கத்துடன் பார்த்தாள்.  

கொஞ்சம் தண்ணி கொடு கண்ணு என அன்பு கேட்க.. 

இருங்க அன்பு நான் எடுத்திட்டு வரேன் என உள்ளே சென்றாள் திவ்யா. 

என்னமா ஆச்சு? என அன்பு கேட்க, 

அண்ணா நீங் மட்டும் இப்போ வராமல் இருந்திருந்தால் என்னை அந்த ஆளு!! என தேம்பி அழுதாள். 

கண்ணு அழாத பொண்ணு!! என அன்பு செல்வனின் முகம் சடுதியில் மாறி போனது. 

அண்ணா நான் உயிரோடு இருக்கிறதுக்கு செத்து போகலாம் என சவுந்தர்யா தேம்பி அழுதாள். 

கண்ணு என்ன பேசுற!! நான் உன்னை அப்படியே விட்டுடுவேனா? இப்போவே நீ புறப்படு! 

என்ன சொல்றீங்க? என்னை கூட்டிட்டு போய் உங்களுக்கு கெட்ட பேர் வந்துட்டா? அதை என்னால தாங்கிக்க முடியாது என தேம்பினாள். அன்பு செல்வன் சொல்லி முடித்து தனது அக்காவை பார்த்தான். 

தனக்கொடி பதட்டத்துடன் பார்க்க, அக்கா அவளோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் சிவராமன் மாமா தான். அவள் இப்போ தனியா கஷ்ட பட காரணம் கூட அவர் தான். அவளோட வயசு வித்தியாசத்தில் அந்த மனோகரன் கல்யாணம் பண்ணி வயித்துல புள்ளைய கொடுத்து, அந்த மனோகரன் உங்க பஸ்லயே குடிச்சு விழுந்து செத்து போயிட்டான். அந்த புள்ளை சிந்துர ஒவ்வொரு கண்ணீரும் உங்க குடும்பத்துக்கு தான் கா வந்து சேரும். இனி நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். உங்க இஷ்டம் என சொல்லி விட்டு நகர்ந்தான். 

தனக்கொடி என்ன செய்ய போகிறார்? 

மகிழ் – சவுந்தர்யா காதல் காட்சிகள் இனி வரும். 

இந்த பூங்கொடி என்ன ஆனாள்? 

தொடரும்.. 

You may also like

Leave a Comment