Episode -48
சந்தனக்கொடி தன் தம்பிக்கு சுற்றி போட்டவர். கண்களில் கண்ணீருடன் அன்பு செல்வனின் தலையை வருடி விட்டார்.
என்ன கா பண்றீங்க? என அன்பு சிரித்து கொண்டே கேட்க,
எவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணியிருக்க தெரியுமா? அப்பாவோட மானத்தை காப்பாத்தி இருக்க டா தம்பி. எனக்கு உண்மையாகவே ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஜெயக்கொடி பாவம். ஆனால் நீ வெட்டி விடாமல் அவளை எக்கேடு கெட்டு போ அப்டின்னு விடாமல் ஆறுதலா அவளுக்கு இருக்க. எங்க கூட ஒரு தம்பியோ அண்ணனோ பிறந்திருந்தா கூட அவனுக்கு இப்படி ஒரு குணம் இருக்குமா அப்படிங்கிறது சந்தேகம் தான் என்றார்.
அப்போ இப்போ நான் உங்க தம்பி இல்லையா? என அன்பு கேட்க..
நீ என் தம்பி தான் நீ மட்டும் தான் என் தம்பி வேற யாரு எனக்கு தம்பி இருக்கா? என சந்தனம் பாசத்துடன் கூறினார்.
ஹான் அது. என அன்பு செல்வன் சிரித்து கொண்டே பேசினான்.
இங்கே மணிமேகலை கோபத்துடன் பூங்கொடியை பார்த்து, இப்போ தெரிஞ்சுகிட்டியா? எல்லாத்துக்கும் காரணம் உங்க சித்தி ஜெயக்கொடியும் அவங்க பொண்ணு மேனகாவும் தான். இதுல அந்த சதீஸ் பையனும் கூட்டு தெரியுமா? அந்த சதீஸ் தண்டம் மேனகாவை திட்டம் போட்டு முடிச்சி இருக்கான். பேசாமல் நீ கட்டினத்துக்கு பதில் அன்பு அண்ணாவ மேனகாவே கட்டியிருக்கலாம். என சொன்னவள் கண்களில் ஓங்கி அரை விட்டாள் பூங்கொடி.
ஹே!! என கன்னத்தை பிடித்து கொண்டு மணிமேகலை பார்க்க, அவன் என்ற புருஷன். என்ற மாமன். என் பிள்ளைக்கு அப்பன். அவன் எனக்கு மட்டும் தான். எனக்கு மட்டும் தான். என அதிகார குரலில் கூறியவள் அழுகையுடன் வேகமாக மணி மேகலையை அணைத்து கொண்டாள். உடல் குலுங்கி அழுதாள்.
அய்யோ என மணிமேகலை தலையில் அடித்து கொண்டாள்.
எனக்கு எவ்ளோ வலி தெரியுமா? நரகமா இருந்தேன். என்னால அவன் இல்லாம இருக்க முடியல..
அப்போ சொல்லி தொலைக்க வேண்டியது தானே!! என மணிமேகலை கன்னத்தை தேய்த்து கொண்டே பார்த்தாள்.
என்னை அடிச்சிட்டான். என்னால தாங்கிக்க முடியல. பூங்கொடிய அடிச்சிட்டான். என இன்னும் அழுதாள்.
சரி இப்போவாச்சும் போடி!! பாவம் அண்ணன். என மணிமேகலை கூற, இதோ போறேன் என வேகமாக செருப்பு இல்லாமலேயே ஓடினாள் வீட்டுக்கு.
ஹே இரு டி! மாசமா இருக்க அதை நினைப்பில் வச்சுக்க டி பூங்கொடி என சொல்லி கொண்டே ஓடினாள் மணிமேகலை.
எப்படி அன்பு எல்லா விடயத்தையும் கண்டு பிடிச்ச? என சந்தனக்கொடி ஆச்சரியத்துடன் கேட்டார்.
நானும் கேட்க நினைச்சேன் கண்ணு? என்னடா தம்பி ஆச்சு? என சக்கரவர்த்தி அவரது பங்குக்கு கேட்டார்.
அன்பு செல்வன் தீவிரமான முகத்துடன், அது பஸ் ட்ரெயினிங் முடிச்சிட்டு கால் லெட்டர்க்கு காத்திருந்தேன் பா. மேலிடத்தில் எனக்கு எதிரா கம்ப்லைன்ட் கொடுத்திருக்கிறதாக வேலாயுதம் சார். அதான் நம்ம கீழ் வளைவுள இருக்காரே. அவர் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். யாருன்னு விசாரிச்சு பார்த்ததுல சிவராமன் மாமாவோட அக்கா பையன் சதீஸ் இதுல சம்மந்தபட்டு இருக்கான்னு தெரிய வந்தது. அதை வச்சு கொஞ்சம் கிண்டி கிளறி பார்த்தேன். மேனகா அவனை அடிக்கடி சந்திச்சது பத்தி தெரிய வந்தது. அப்போவே கன்பார்ம் பண்ணிட்டேன். இதுக்கு எல்லாம் காரணம் அவனா தான் இருக்க முடியும்னு. என்றான்
அச்சோ இத்தனை விஷயம் நடந்திருக்கா? உன்னோட வேலை என்னாச்சு? என சந்தனக்கொடி கேட்க..
அன்பு செல்வன் பெருமூச்சுடன், என்னோட வேலைய வேணாம்னு சொல்லிட்டேன். இதுக்கும் மேலே போகணுமான்னு தோணுது. என விரக்தியில் பேசினான்.
சக்கரவர்த்தி தனது மகனின் கையை பிடித்து கொண்டவர். தங்கம் நான் உன்னை கட்டாயப்படுத்தில கண்ணு. உனக்குன்னு சில ஆசைகள் இருக்கும். எனக்காக போக வேணாம். உனக்கு பிடிச்சத பண்ணு. என கூறினார்.
தன் தந்தையின் கையில் அழுத்தம் கொடுத்த அன்பு, இல்லப்பா நான் எனக்கு டிராவல்ஸ் வைக்கணும்னு ஆசை இருக்கு. கண்டிப்பா அம்மா பேரில் பெருசா ஒண்ணு பண்ணுவேன்.
அப்போ முருகேசன் மாமா விசயம்? எப்படி? என சந்தனக்கொடி கேட்க..
“ட்ரெயினிங் போன இடத்துல சங்கீதாவை பார்த்தேன். அவளோட பிரச்னைய சரி செஞ்சிட்டு அதை பத்தி பேச முருகேசன் கிட்ட பேச நினைச்சேன். திங்களூர் பக்கமா அவருக்கு அடிக்கடி போக்கு வரத்து இருக்கிறத எதிட்சையா கவனிச்சு தான் விசாரிச்ச இடத்துல விவரத்தை சொன்னாங்க. அந்த பையன் கூட சங்கீதா படிக்கிற ஸ்கூலில் தான் படிக்கிறான். மாமா சங்கீதாவை ஸ்கூல் பஸ்ல அனுப்பி வச்சிட்டு தன்னோட பையன டெய்லி கொண்டு போய் விட்டு கூட்டிட்டு எல்லாம் வந்திருக்கார். என்றவன் மேலும், மேனகா விசயத்துல சங்கீதா தான் எனக்கு உதவி பண்ணது. மேனகா, ஜெயக்கொடி அக்கா ரெண்டு பேரும் இப்படி பிரச்னை பண்றதை பத்தி எல்லா விவரத்தையும் பாப்பா தான் என்கிட்ட சொன்னா!” என முடித்தான்.
நல்ல வேளை அன்பு கெட்டதுலயும் ஒரு நல்ல விசயம் என்னன்னா. அந்த சங்கீதா பொன்னை நீ சரியான நேரத்தில போய் பப்பா பிரச்னைய சரி பண்ணி கூட்டிட்டு வந்திருக்க என்றார் சந்தனக்கொடி.
அதுவும் சரி தான் ஆனால் இந்த ஜெயக்கொடி பண்ண வேலைய நினைச்சா இன்னும் சாத்த தோணுது. வினை விதைச்சவன் வினைய அறுத்தே தீர்வான். அது பெத்த பொண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி என சக்கரவர்த்தி கூறி முடிக்க அரக்க பறக்க வந்து சேர்ந்தாள் பூங்கொடி.
அடடே பூங்கொடி! வாடா அமுலி தங்கம் என சக்கரவர்த்தி அழைக்க.. திரும்பி பாராமல் அமர்ந்திருந்தான் அன்பு. சந்தனக்கொடி ஆசையுடன், மாசமா இருக்குற பொண்ணு காலில் செருப்பு கூட போடாமல் வந்திருக்க? என கேட்டபடி உள்ளே அழைத்து வந்தார்.
பூங்கொடி வந்திருக்கிறாள் என தெரிந்ததும் ஆசையுடன் ஓடி வந்தார் அன்னம். கண்ணு தண்ணி குடி. ஜூஸ் போட்டு எடுத்து வரவா? என அன்னம் கேட்க.. பூங்கொடியின் மொத்த பார்வையும் அன்பு செல்வன் மீது தான் இருந்தது.
பூங்கொடி நேராக சக்கரவர்த்தியின் பக்கம் சென்று, தாத்தா நான் வேணும்னு பண்ணல. என பேசி புரிய வைக்க முயன்றாள்.
இல்ல அமுலி ஒண்ணுமில்ல பழசை பத்தி பேச வேணாம் இங்கேயே இரு என கூறினார்.
அன்னம் அவளை உள்ளே அழைத்து தாங்கு தாங்குவென தாங்கி, நெற்றியில் திருநீற்றை வைத்து ஊதி விட்டவர். அவளுக்கு வகை வகையாக சமைத்து போட்டார்.
இரவு நேரமானது எப்பொழுதும் போல அறைக்குள் வந்தாள் பூங்கொடி. அவனோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. மாமா என கையை பிடித்தாள் பூங்கொடி.
அன்பு செல்வன்…?
****
என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என வேகமாக கையை உதறி கொண்டாள் சவுந்தர்யா. மகிழ் தான் அவளின் கையை பற்றி இழுத்திருந்தான்.
இதுக்கு மேலே என்னால என்னோட வாழ்க்கைய வேஸ்ட் பண்ண முடியாது. எனக்கு உன்னை பிடிக்கும் சவுந்தர்யா. உன்னை நான் எட்டு வருஷமா லவ் பண்றேன். எனக்கு நீ வேணும். என உறுதியாக கூறி முடித்தான் மகிழ் வேந்தன்.
சவுந்தர்யா அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, கண்களில் நீர் வழிய அவளின் முன்னால் நின்றவன். எனக்கு நீ வேணும். உன்னோட என் வாழ்நாள் இறுதி மூச்சு இருக்கிற வரை வாழனும் என கையை பிடித்தான் மீண்டும்.
உங்களுக்கென்ன பைத்தியமா? என சவுந்தர்யா கோபத்துடன் கையை தட்டி விட்டாள்.
ஆமா பைத்தியம் தான். எனக்கு உன் மேலே பைத்தியம். உன்னை எந்த அளவுக்கு புடிக்கும் தெரியுமா? உன்னி கல்யாணம் பண்ணிக்க போறேன் என்றான் மகிழ்.
அய்யோ நிறுத்துங்க போதும் என கத்தியவள். நான் எனக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கு. நான் மாசமா இருக்கேன். என்னால உங்களை கட்டிக்க முடியாது என உறுதியாக கூறி முடித்தாள் சவுந்தர்யா.
மகிழ்..?
தொடரும்..