மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
400 views

Episode-49 

தெரியும் இப்போ அதுக்கு என்ன? என அதிகார தொனியில் அவளின் கையை பற்றி இழுத்தான் மகிழ். 

சவுந்தர்யா கண்களை அகல விரித்து பார்க்க, மகிழ் ஒரு பெருமூச்சுடன், இதுக்கு மேலே விட்டால் அது தப்பா போயிடும். என்றவன் அவளின் முகத்தை பார்த்து, உன்னை எனக்கு பிடிக்கும். நீ நர்சிங் படிச்சிட்டு இருக்கும் போது எங்க பஸ்ல வருவ. எப்பவும் உன்னை பார்ப்பேன். பார்க்கணும்னு தோணும். புடிக்கும். அப்போ இருந்தே உன் மேலே எனக்கு என நிறுத்தியவன். உனக்கு கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியில் இருந்தே உன்னை நான் பார்த்திட்டு இருக்கேன். அவ்ளோ பிடிக்கும் உன்னை.. சவுந்தர்யாவின் மேல் அவனுக்கு உண்டான உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தான். 

வேகமாக கையை உருவி கொண்டவள். நீங்க இப்படி ஒரு எண்ணம் வச்சிருக்கிறது எனக்கு தெரியாது. நான் உங்களை பார்த்ததும் இல்ல. அதே போல இப்போ நான் கல்யாணம் ஆனவள். என்னோட புருஷன் இல்ல. அதுக்காக நீங்க என்கிட்ட ஓவரா உரிமை எடுத்துகிட்டு என்கிட்ட பண்றது எதுவும் பிடிக்கல. அப்புறம் உங்க மேலே எனக்கு எந்த விருப்பமும் அபிப்ராயமும் இல்ல. நான் எனக்கு குழந்தை இருக்கு. நீங்க நல்ல பொன்னாக பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க என்று விட்டு நடந்தாள் சவுந்தர்யா. 

மகிழ் கைகளை இறுக்கி மடக்கியவன் போகும் அவளை பார்த்தான். இனி யாருக்காக காத்திருக்க வேண்டும். காத்திருப்பு போதும். இனி காதல் செய்வது மட்டுமே வேலை என நினைத்தவன் வேகமாக அவளின் அருகில் வந்து, என் வாழ்க்கையில் ஒரே ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் இடம். அந்த பொண்ணு நீ மட்டும் தான். அதுக்கு அர்த்தம் நீ தான் என்னோட பொண்டாட்டி. உன்னை எப்படியும் கட்டிப்பேன். என்று விட்டு சென்றிருந்தான். 

சவுந்தர்யா அதே இடத்தில் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தாள். அவன் பேசுவது உள்ளுக்குள் பயத்தையும் இயலாமையும் கொடுத்தது. கண்களில் நீர் கோர்க்க நின்றவள் ஏதாவது செய்து இங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற முடிவுடன் வந்தாள். 

***

மாமா என பூங்கொடி அழைக்க, சொல்லுங்க!! என கையை வேகமாக தட்டி விடவில்லை, மெதுவாக பிரித்து விட்டான் அன்பு. 

சொல்லுங்க என்ன வேணும்? என கேட்டான் வெகு இயல்பாக.. 

மாமா நான்!! என பூங்கொடி ஆரம்பிக்க.. 

நீ பேசுற எதையும் நான் கேட்க விரும்பல பூங்கொடி. நீங்க உங்க இஷ்டப்படி இருங்க. என்கிட்ட பேசி நேரத்தை வீணடிக்காதீங்க என்று விட்டு படுக்கையில் இருந்து பெட் சீட் போர்வை என அனைத்தையும் தரையில் போட்டான். 

மாமா ஒரே நிமிசம் நான் சொல்றதை கேளுங்க பிளீஸ் என்று கெஞ்சினாள். 

அய்யோ பூங்கொடி என அவளின் முன்னால் கையெடுத்து கும்பிட்டவன். போதும் எல்லாமே போதும். இப்போ கூட எல்லார் முன்னாடியும் நம்ம ரெண்டு பேர் விசயத்தையும் சொல்லியிருப்பேன். ஆனால் எல்லாரும் ஆல்ரெடி சுனாமி தாக்கின போல இருக்காங்க. இதையும் சொல்லி அவங்களை கஷ்ட படுத்த வேணாம்னு தோணுச்சு. என்றவன் பெரு மூச்சுடன் படுத்தான். 

மாமா!! என கட்டிலில் அமர்ந்தாள் பூங்கொடி. 

பிளீஸ் மேடம்!! எனக்கு தூக்கம் வருது என அவன் படுத்து கொண்டான். 

ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள். வேகமாக அவனுக்கு அருகில் வந்து ஒட்டி படுத்து கொண்டாள். 

ப்ச்!! என உச்சி கொட்டியவன் வேகமாக எழுந்து அமர்ந்தான். 

மாமா!! 

பிளீஸ் என்னை அப்படி கூப்பிடாத என கத்தியிருந்தான் அன்பு. 

பூங்கொடி அப்படியே உறைந்து அமர்ந்திருக்க, அவளது கண்களில் நீர் முட்டி கொண்டு வந்தது. 

அன்பு செல்வனின் முகத்தில் அத்தனை விரக்தி. அவளின் பக்கம் திரும்பியவன், இப்போ மட்டும் எதுக்கு வந்த பூங்கொடி? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே. உனக்கு எதுலயும் நான் பொருத்தம் இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் ரெண்டாவது தாரத்து மகன். அப்படி இருக்க ஒருத்தனுக்கு நீ பொண்டாட்டியா இருந்தால் அது எவ்ளோ பெரிய அவமானம். ஊருல நான் அஞ்சு பொண்டாட்டி கட்டி ஆறு பேருக்கு புள்ளைய கொடுத்து வாழ்ந்துட்டு இருக்க அற்ப ஜென்மம். இப்படி இருக்க ஒருத்தன் கூட நீ எப்படி வாழ முடியும் என கேட்டவன். அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் முதுகு காட்டி படுத்து கொண்டான். 

பூங்கொடி அழுது கொண்டே அமர்ந்திருந்தாள். என்ன செய்வதென தெரியவில்லை. தன் பின்னால் பூனை குட்டி போல சுற்றி கொண்டிருப்பவன் இப்பொழுது தன்னை கேள்வி கேட்கிறான். அவன் கேட்கும் அத்தனையும் சரி தான் அவளுக்கும் தெரியும். அப்படியே அமர்ந்திருந்தவள் எப்படி உறங்கினாள் என்று தெரியவில்லை. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, மாமா என மறுபடியும் அவன் முன்னால் சென்றாள். 

பிளீஸ் மாமான்னு கூப்பிடாத எனக்கு பிடிக்கல. உன்னை போல முகத்தில் அடிக்கிற மாதிரி என்னால பேச முடியாது என்றானே பார்க்கலாம். 

பூங்கொடி விரக்தியுடன் நின்றாள். அவன் புறப்பட்டு நிற்க, எனக்கு ஹாஸ்பிடல் போகணும் செக் அப் பண்ண.. இன்னும் proper செக் அப் பண்ணல. 

உங்க அம்மா அப்பாவை கூட்டிட்டு போக சொல்லு பூங்கொடி. எனக்கு வேலை இருக்கு என்றான் அன்பு. 

பூங்கொடிக்கு கோபமும் வேதனையும் தலைக்கேற கைகளை மடக்கி கொண்டு நின்றாள். 

நகரு!! என்றான். 

இது நம்ம குழந்தை. நீங்க தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். 

விரக்தியாக சிரித்தவன். அன்னிக்கு ஆசையா வந்தேனே! ஒரு வார்த்தை நீ மாசமா இருக்கேன்னு சொன்னியா? என்றவன் கண்கள் கொஞ்சம் கலங்கி, எனக்கு நீ முதல்ல சொல்லல. உன்ற அம்மா கிட்ட சொன்ன! அப்போ நான் யாரு? என்ற அம்மா யாரு? என்ற அப்பா யாரு? எங்க மூணு பேரையும் விலக்கி வச்சிட்டு நின்ன உனக்கு இப்போ எதுக்கு பூங்கொடி இந்த உறவு? அதனால நான் சொல்றத கேளு. இனி என்ன முறை வேண்டி இருக்கு. நான் என அன்பு பேச வர.. 

தப்பு தான். நான் பண்ணது தப்பு தான். அதுக்காக உன்னோட காலில் விழவா என கண்களில் நீர் வழிய அவனை பார்த்தவள் எதிர்பாரா நேரத்தில் அவனது காலில் விழுந்து விட்டாள். 

ஹே எழுந்திரு பூங்கொடி என பற்களை கடித்து கொண்டு தூக்கி நிறுத்தினான். 

மாமா!! நான் பண்ணது தப்பு தான். பிளீஸ் என்னை உதாசீனம் செய்யுற போல பேசாத!! என்னால உன்னை விட்டு இருக்க முடியாது. என அவள் கெஞ்சினாள். 

அம்பு செல்வன் அவளை உருக்கமாக பார்த்து, நீ வந்ததுல இருந்து என் குடும்பத்தை உதாசீனம் மட்டும் தான் செய்யிற பூங்கொடி. இப்போ தான் என்கூட இருக்கணும் வாழணும் அப்டின்னு தோணுச்சா? உங்க அம்மா எனக்கு சப்போட்  பண்றாங்க ஆனால் உனக்கு என்னை பத்தி தெரியல அப்படி தான. உன் கண்ணு முன்னாடி என்னை கேவலமா சித்தரிச்சு வச்சிருக்க!! எப்படி நிம்மதியா நம்ம வாழ முடியும்? என் மேல் பழி போட்டாலே மேனகா. அப்போ எனக்காக நீ பேசினயா? என்றவன். சிரித்து கொண்டே, 

என்ன நினைச்ச என்னை பத்தி? மறுபடியும் என்கிட்ட வந்து நின்னா? நான் எதுவுமே சொல்லாம உன்னை ஏத்துப்பேன்னு நினைச்சியா? என் மேலே நம்பிக்கையே இல்லாம ஒரு கல்யாணம், அதுல குழந்தை வேற வந்திடுச்சு. வாழ்க்கையே நரகமா இருக்கு. ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்டின்னு தோணுது. பிளீஸ் என்னை விட்டுடு. நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். உன்னோட வழியில் நீ போ! உன்னை ஏன் எதுக்கு அப்டின்னு எதுவும் நான் கேட்க மாட்டேன். எல்லார் முன்னாடியும் உன்கிட்ட பேசுவேன். என்னன்னா என்ன அவ்ளோ தான் நம்ம ரெண்டு பேருக்கு நடுவில். என்னோட லிமிட் தாண்டி உன்கிட்ட நான் வரவே மாட்டேன். என்ன பண்றது? பிடிக்காத இடத்தில நீ சகிச்சுகிட்டு தான் இருக்கணும். என வேண்டுமென்றே கூறி விட்டு அவனது வேலையில் மூழ்கி போனான். 

பூங்கொடிக்கு அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாள். முகமெல்லாம் வீங்கி போக, பத்தாத குறைக்கு அனுசுயா ஜெகனுடன் வந்திருந்தாள் திருமண பத்திரிகை வைக்க.. 

மாமா அனுசுயா வந்திருக்கா!! என சொல்லி கொண்டே அழைத்தாள் பூங்கொடி. அவர்களின் முன்னால் சண்டையை காட்டி கொள்ள முடியுமா என்ன? 

வாங்க வாங்க!! என்றவன். அம்மா காபி தண்ணி போடு என கூறி விட்டு பத்திரிகையை வாங்கி பார்த்தான். 

இத்தனை சீக்கிரம் கல்யாணமா ஜீ!! என அன்பு கேட்க.. 

ஊட்டி குளிர் அப்படி ஜீ!! என்றான் ஜெகன் சம்மந்தமே இல்லாமல்.. 

அய்யோ என நாக்கை கடித்த அனு அவனை முறைத்து பார்த்தாள். 

அன்பு செல்வன் புன்னகையுடன் தலையசைத்தான். பூங்கொடி காபியை நீட்ட, 

ஹே உனக்கு வேண்டாம் என இரண்டையும் ஜெகனே வாங்கி குடித்தான். 

என்னாச்சு? என பூங்கொடி கேட்க.. 

ஒண்ணுமில்ல என இருவரும் சமாளித்தார்கள். பூங்கொடி தனது தோழியை அழைத்து கொண்டு தனியே சென்றவள். என்ன விடயம்? ஒரு மார்க்கமா இருக்கியே? சொல்லு? என துருவி கேட்டாள். 

அனுசுயா வேகமாக பாத்ரூம் ஓடியவள். உதட்டை துடைத்தபடி பார்த்தாள். 

ஹே கன்சிவா இருக்கியா? என பூங்கொடி அதிர்ச்சியுடன் கேட்க.. 

ஆமா என தலையை குனிந்தாள் அணு. 

என்னடி சொல்ற? என பூங்கொடி திடுக்கிட்டு பார்த்தாள். 

இளவட்ட கல்லை தூக்கி காட்டுறேன்னு என்னை டார்ச்சர் பண்ணி கூட்டிட்டு போனான் டி! கிஸ் பண்றேன்னு ஸ்டார்ட் பண்ணான்.

உனக்கு எங்கடி போச்சு அறிவு? என பூங்கொடி அதிர்ச்சியுடன் கேட்க.. 

ஒரு கட்டத்துக்கு மேலே என்னால ஜெகன விட்டு பிரிய முடியல. கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள மொத்தமா முடிஞ்சு போச்சு என முகத்தை மூடி கொண்டவள். காலேஜ் வந்திட்டு கல்யாணம் பண்ணவே கூடாது ரொம்ப அவஸ்தையா இருக்கு. அதனால தான் கடைசியில இப்படி ஆகி போச்சு. என சொல்லி முடித்தாள். 

பூங்கொடிக்கு கூட அதுவே சரியாக பட்டது. ஜெகன் மற்றும் அனுசுயா இருவரும் புறப்பட்டிருக்க, இரவு முழுவதும் தீவிரமாக யோசித்தவள் எப்படி அன்பு செல்வனை சமாதானம் செய்யலாம் என விடிய விடிய யோசித்து நல்ல முடிவுடன் கண்களை மூடினாள். 

ஆனால் அவளது முடிவு அன்பு செல்வனுக்கு அது நல்ல முடிவா? என்பதை பார்ப்போம். 

***

நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் மாமா! என தனக்கொடி சிவராமன் முன்னால் நின்றிருந்தாள். 

என்ன? 

மகிழுக்கு கல்யாணம் பண்ண போறேன். என்றார். 

தொடரும்.. 

You may also like

Leave a Comment