மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
298 views

Episode -60 

புடவையில் இருக்கும் ஹூக்கை கழட்டி கொண்டிருந்தவளை இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு. 

அவுச் என சிணுங்கி கொண்டே அவள் சிரமபட்டு கொண்டிருக்க, அருகில் நெருங்கியவன் அவளின் ஹூக்கை மெதுவாக எடுத்து விட்டான். 

டேய் உன்னை யாரு உள்ளே வர சொன்னது? அதுவும் கிட்ட வந்திருக்க? உன்னோட மனசுல என்ன டா நினைச்சிட்டு இருக்க? என வேகமாக விலக போராடினாள் பூங்கொடி. 

இப்போ எதுக்கு டி கத்துர? எல்லாரையும் கூப்பிடவா? என அன்பு செல்வன் பார்க்க, 

என்ன டீயா? நான் உனக்கு டீயா? 

ஆமாண்டி பொண்டாட்டி!! என்றான் அன்பு தீவிர முக பாவனையுடன்.. 

டேய் திருட்டு ராஸ்கல்!! என பூங்கொடி அடுத்து பேச வர, என்னடி? அப்படி தாண்டி கூப்பிடுறேன். இனியும் கூப்பிடுவேன். உன்ற அம்மா முன்னாடியும் கூப்பிடுவேன். என்ற அம்மா முன்னாடியும் கூப்பிடுவேன். என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது. பார்க்கரயா? என்றவன் சட்டை கையை மடித்து விட்டு கொண்டே, மாமனை எப்டி கைக்குள்ள வச்சுக்கறதுன்னு பார்க்கணும் யோசிக்கணும் அதை விட்டு எப்டி விட்டு ஓடலாம்ன்னு நினைக்க கூடாது. என்றான். 

இவனிடம் பேசி பயனில்லை என நினைத்தவள் அசதியுடன் படுக்கையின் மேல் அமர்ந்தாள். 

அன்பும் அவனது பங்குக்கு வந்து அமர்ந்தான். 

இப்போ எதுக்கு நீ பக்கத்துல வந்து உட்காருற? 

வேற எதுக்கு? தூங்கனும்ல.. என அவளின் பக்கம் நெருங்கினான். 

ப்ச் கீழே தானே படுப்ப? இப்போ என்ன மேலே? என பூங்கொடி நகர்ந்து கொண்டே செல்ல, இனி சேர்ந்து படுக்கிறதாக திட்டம் அதுவும் ஒட்டி படுக்கிறதாக திட்டம். இறுக்கமா கட்டி படுக்கிறதாக எண்ணம் என அவளை பார்த்தான் அன்பு. 

பூங்கொடி எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அவளை இழுத்து மடியில் அமர வைத்தவன். கழுத்தில் முத்தமிட்டு சாரி என்றான். 

ஒன்னும் தேவையில்ல.. 

எனக்கு தேவை என அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் இதை பாரு. என கடிதத்தை காட்டினான். 

எதுவும் பார்க்க முடியாது என முகத்தை திருப்பினாள். 

நானே பிரிச்சு காட்டுறேன். என அன்பு செல்வன் பிரித்து நீட்டினான் அவள் முன்.. பூங்கொடி வேறு புறம் திரும்பி இருந்தாள். 

பூங்கொடியின் கணவர் அன்பு செல்வனாகிய நான் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து விரும்பியே தற்காலிக பணிநீக்க கோரிக்கையை வைத்துள்ளேன் என சத்தமாக படித்தான். 

பூங்கொடியின் புருவம் ஒரு நொடி சுருங்கி அதன் பின் இயல்பானது. அதை முடித்து எதிரில் இருந்த அலமாரியில் வைத்தவன். என் பொண்டாட்டிக்கு நான் கண்டெக்டர்ராக இருக்குறது பிடிக்கல. அதனால அன்னம் ஆக்ரா, சார்க்கோல் ஒர்க் இதை மட்டும் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஈரோட்டில் ஒரு ஆபீஸ் வைக்க போறேன். என்றவன் அவளின் முகத்தை திருப்பி சாரி என்றான். 

பிளீஸ் விடுங் என பூங்கொடி சொல்ல வருவதற்குள் உதட்டை கவ்வியிருந்தான் அன்பு. முத்தங்கள் எல்லை கடந்து செல்ல அவளின் கண்களில் இருந்தும் நீர் கோர்த்து கொண்டது. 

என்னடி ஆச்சு? என அன்பு செல்வன் விலகியபடி கேட்க, 

என்னால முடியல!! பிளீஸ் என அழுதபடி கூறியவளிடம் ஆம்பிளை தன்மையை காட்ட முடியுமா என்ன? வேகமாக விலகினான். 

வழக்கம் போல கீழே படுத்து கொண்டான். பூங்கொடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவள் பழைய விசயங்களை எண்ணி கொண்டே எப்பொழுது உறங்கினாள் என தெரியவில்லை. 

அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அன்பு செல்வன் புதிய ஆபீஸ் வேலை விசயமாக ஈரோடு சென்று விட்டான். பூங்கொடி கல்லூரி கிளம்பினாள். அவள் கல்லூரி பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் திவ்ய பாரதி அவ்விடத்துக்கு வந்தாள். 

பூங்கொடி உங்க கிட்ட பேசணும். என அழைத்தாள். 

இப்போ காலேஜ் பஸ் வந்திடும். எதுவும் முக்கியமான விஷயமா? என இயல்பாக பூங்கொடி கேட்டாள். திவ்யாவை பார்க்கவே எரிச்சலாக வந்தது. 

இல்ல ஒரு அஞ்சு நிமிஷம் தான் என்றவள். 

அன்பு அண்ணா கிட்ட அப்படி நான் நடந்திருக்க கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. என கையெடுத்தவளை.. 

இதை அன்பு வந்து உங்க கிட்ட சொன்னானா? என கோபத்துடன் பார்த்தாள் பூங்கொடி. 

அன்பு அண்ணா சொல்லல. பஸ்ல சில பேர் பேசிக்கிட்ட விசயத்தை கேட்டேன். எனக்கும் அன்பு அண்ணாவை இணைச்சு வச்சு பேசுற போல கேட்டதும் எனக்கு சங்கடமாகி போச்சு. என அழுது கொண்டே கூறினாள். 

மேடம் என்னோட கல்யாணத்தைக்கு அன்னிக்கு மேக் அப் பண்ணும் போது அன்புவை பிடிக்கும் அப்டின்னு சொன்னீங்க தானே? அப்போ பஸ்ல அப்படி நடந்துக்குறதுல என்ன தப்பு? அதே போல நீங்க என்னை express பண்றீங்களோ அதுக்குண்டான விளைவுகள் வரத்தான் செய்யும் திவ்ய பாரதி என கடுமையாகவே கூறினாள் பூங்கொடி. 

திவ்ய பார்தி மவுனமாக நின்றிருந்தாள். என்ன பேச முடியும்? அனைத்தும் உண்மை தானே!!.. 

நீங்க ஹீரோயின் தான் ஹீரோயின் மெட்டீரியல் தான். மிஸ்டர் அன்பு செல்வன் சிங்கிள்லாக இருக்கும்போது நீங்க எல்லாத்தையும் try பண்ணிருக்கலாம் 

இல்ல பூங்கொடி நான்!! என திவ்யா பேச வர.. 

பூங்கொடி தீர்க்கமான பார்வையில், நீங்க intention ல தான் அவன் கூட அப்படி நடந்துகிட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அன்பு செல்வன் கிட்ட நெருங்கனும்னு தான் நீங்க சவுந்தர்யா கிட்ட உயிர் தோழியா இருக்கிறது கூட எனக்கு தெரியும். என்றாள் நெற்றி பொட்டில் அடித்தது போல.. 

திவ்ய பாரதி அரண்டு விட்டாள். பூங்கொடி சொல்லும் அத்தனையும் உண்மை தான். எப்படி இவ்வளவு நுணுக்கமாக கண்டு கொண்டாள் என திருதிருவென விழித்தாள். 

பூங்கொடி துப்பட்டாவை நீவி கொண்டே, அந்த ஆசை நிறைவேறாம போனதால மேடம் பஸ்ல அப்படி சீன் கிரியேட் பண்ணி உங்களோட நிராசைய இப்படி எல்லார் முன்னாடியும் லவ் பண்ற போல made for each other போல உருட்டு எல்லாத்தையும் try பண்ணி என் புருசனுக்கு சொல்லாம சொல்லியிருக்கீங்க. 

சாரி பூங்கொடி!! என திவ்ய பாரதி உண்மையாகவே கேட்டாள். 

உன்னோட சாரி எனக்கு வேணாம். அதே சமயம் என்ற புருஷன் இதுக்கெல்லாம் மயங்கமாட்டாப்டி. அண்ட் உன்னோட விஷயத்துக்காக அவர் கூட நான் சண்டை போட்டதாக நீ நினைச்சா so sorry. எங்களுக்கு நடுவில் நீ இல்லவே இல்ல அதை தெரிஞ்சுக்க. உன்னை நான் எதுக்கு மன்னிக்கணும்? நீ யாரு எனக்கு? நீ ஒரு stranger thats it. அண்ட் good bye என தனது கல்லூரி பேருந்தில் ஏறினாள் பூங்கொடி. 

திவ்ய பாரதி ஒரு பெரு மூச்சுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 

***

தம்பி எல்லாத்தையும் மட்ட வாங்கி வச்சுடு கண்ணு இதை எண்ணெய் ஆட்டமும் என தேங்காய் குவியலை காட்டி விட்டு சென்றார் தனக்கொடி. 

சவுந்தர்யா ஜன்னலில் வழியாக தன் கணவனை பார்த்தவள். ஏனுங்க சீக்கிரம் சாப்பிட வாங்க என இட்லி ஊற்றி வைத்து, நல்லி அனைத்தையும் அரித்து கரியை வறுவல் செய்து கொண்டிருந்தாள். 

மகிழ் ஒரு பக்கமாக அமர்ந்து அனைத்து தேங்காயையும் மட்டை வாங்கி உடைத்து கொண்டே வந்தவன் ஒரு தேங்காயில் பூ இருக்க அதை சவுந்தர்யாவுக்காக எடுத்து வைத்தான். அனைத்தையும் காய போட்டு விட்டு வியர்க்க விறுவிறுக்க மேலே வந்தவன். நேராக சமையலறை சென்றான். 

ப்பா வாசனை தூக்குதே? 

ம்ம் என சவுந்தர்யா கண்களை சிமட்டி கொண்டே கூறியவள். குளிங்க என பாத்ரூமை காட்டிட.. 

தேங்கா பூ நம்ம பாப்பாவுக்கு நல்லது நீட்டினான். 

கண்களில் நீர் கோர்க்க அவனை பார்த்தாள் சவுந்தர்யா. 

நீ என்னோட பாப்பா! அண்ட் உள்ளே இருக்கும் பாப்பா கூட எனக்கு தான் சொந்தம். என புன்னகையுடன் கூறியவனின் காலில் விழுந்தாள் சவுந்தர்யா. 

அடியே மண்டு!! என மகிழ் தூக்கி நிறுத்தினான். 

நீங்க குளிச்சிட்டு வாங்க என திரும்பி கொண்டாள் சவுந்தர்யா. மனோகரன் அவளின் வாழ்க்கையில் ஆரம்ப அத்தியாயமே முடிந்த அத்தியாயம் தான். தினமும் குடித்து விட்டு வந்து அவளை தகாத வார்த்தையில் புண்படுத்தி படுக்கையில் அவளை வேசி போல நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ரவதை செய்து கொடுமை படுத்தினான். மனோகரன எந்த ஒரு இடத்திலும் அவள் கணவனாக பார்த்ததே அரிது. அப்படி இருக்கையில் அவளின் வாழ்க்கையில் வசந்த காலமாக மகிழ் வருவான் என கனவிலும் நினைக்க வில்லை அவள். 

இலை போட்டு சுட சுட இட்லி நல்லி வறுவல் என அனைத்தையும் வைத்து விட்டு அவன் சாப்பிட தண்ணீர் எடுத்து வைத்தவளின் கையை பிடித்து அருகில் அமர வைத்தான். 

சூடான உணவு கொஞ்சம் வியர்வை முத்துக்களை அவனது நெற்றியில் சரித்து விட மெல்ல துடைத்தாள் பெண்ணவள். 

மகிழ்..? 

தொடரும்.. 

You may also like

Leave a Comment