அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
242 views

EPISODE-129

கீழ் உதட்டை கடித்து கொண்டு அவனை பார்த்தாள் நிலா. இதற்கு மேல் இருந்தால் அசம்பாவிதம் நிச்சயமாக நிகழும் என ருத்ரனுக்கு நன்றாக தெரியும். என்ன தான் ஸ்ட்ராங்கா இருந்தாலும் அவளை பார்த்தா மொத்தமும் வீக் ஆகிடுது மொத்த சரீரமும். வேகமாக எழுந்தான் பெரு மூச்சுடன்.. 

கதவு வரை சென்றான். 

நீங்க ருத்ரனா இருந்திருக்கலாம் ஆர்மி மேனாக..  என்னை எப்பவும் திட்டிக்கிட்டே இருக்க ருத்ரனா என் மேலே கோபப்படும் ருத்ரன்னா!! அதிகாரத்தை காட்டும் ருத்ரனாக என்னை.. என நிறுத்தியவள் கண்களில் நீர் கோர்க்க, நான் கிளம்புறேன் இதுக்கு மேலே இங்கே இருக்க முடியாதுன்னு தோணுது. 

என்னாச்சு மேடம்க்கு? எங்கே வேணாலும் போங்க என் குழந்தைய பெத்து கொடுத்திட்டு போங்க.. என்றவன் படுக்கையில் இருக்கும் தனது மகனின் காலுக்கு முத்தம் வைத்தான். 

மாட்டேன்!! என அவனை பார்த்தாள் உறுதியாக.. 

அதுக்கு அர்த்தம் என்ன? என அவளை பார்த்தான். 

என் குழந்தைங்க ரெண்டு பேரையும் கொடுக்க மாட்டேன். அவ்ளோ தான் என்றாள் வயிற்றை பிடித்து கொண்டு.. 

அதென்ன உன் குழந்தை!! ஹான் என அவளின் அருகில் நெருங்கி இடையில் கை பதித்தான். மூச்சு வாங்க அவனை பார்த்தாள் நிலா.

இந்த தொடுதல் இந்த உரிமை இனி எனக்கு சொந்தமில்ல.. அதனால பிளீஸ் என கையை எடுத்து விட்டாள். 

இது எனக்கு சொந்தம் என மீண்டும் கையை வைத்து வருடி கொடுத்தவன் அவளின் உதட்டில் முத்தமிட்டான். அவளோ அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். 

சுவற்றில் சாய்த்து முத்தமிட்டான். துவண்டு விழ போனவளை தூக்கி கொண்டான். மெல்ல படுக்கையில் கிடத்தி விட்டு திரும்பியவனை சட்டை காலரை பிடித்து இழுத்தாள். 

பிளீஸ் வேணாம் விடு நிலா!! என கையை விலக்கி விட்டான். 

நீங்க இதுக்கு அலையல!! நான் அலை என சொல்லி முடிப்பதற்குள் அவள் உதட்டை கவ்வி கொண்டான். அவனது நெஞ்சில் முத்தமிட்டாள். அவனும் தான் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து தீவிரமாக பின்னி கொண்டார்கள். அனைத்தும் முடிந்தது தனக்கு அருகில் இருப்பவனை பார்த்தாள். 

மகனின் பக்கம் திரும்பி இருந்தான் ருத்ரன் அவனுக்கு முத்தமிட்டு எழுந்தவன். அவளிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டிருந்தான். 

சத்ய தேவ் ரிதமின் அறையை பார்த்தவன். நேராக எழுந்து அவள் அறைக்கு சென்றான். 

ரிதம் பாத்ரூம் சென்று விட்டு படுக்க வந்தாள். சத்ய தேவ் படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாள் போல படுத்திருப்பதை பார்த்தவள் முகம் சடுதியில் மாறி போனது. 

வேகமாக வெளியே செல்ல பார்த்தவளை அவளுக்கு முன் சென்று நிறுத்தி இருந்தான். 

மரியாதையா வெளியே போயிடு!! 

ஹே நான் உன் புருஷன் டி!! என சத்ய தேவ் எடுத்து கூற.. 

எனக்கு நீ வேணாம். வெளியே போ!! என்றாலே பார்க்கலாம். 

நான் என்ன பண்ணேன்? என சத்ய தேவ் அவளின் முன் அமர்ந்து கைகளை பிடித்து கொண்டான். 

உனக்கும் எனக்கும் ஒத்து வராது சத்ய தேவ் என ரிதம் முகத்தை திருப்பி கொண்டு கூறினாள். 

இது ரிதம் மாதிரி தெரியலியே? சைலஜா பெய் வந்து ஒட்டுகிச்சா என கிண்டலுடன் கேட்டான். 

எஸ் என கத்தினாள் ரிதம். 

ஹே என்னாச்சு என பதட்டத்துடன் சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்கி வந்தான். 

வராத!! Don’t touch me.. என வேகமாக பின்னால் நகர்ந்தாள். 

என்ன காரணம்? எதுக்கு என்னை அவாய்ட் பண்ற!! நான் என்ன பண்ணேன் என சத்ய தேவ் அருகில் நெருங்க.. 

நீ அவளை தொட்ட கையில என்னை தொடாத போ போயிடு!! என கத்தியவள் அப்படியே கீழே விழுந்தாள் மயக்கத்தில்.. சத்ய தேவ் வேகமாக அவளை தாங்கி பிடித்திருந்தான். 

ரிதம் you are a brave girl. நான் எதனால அப்படி நடந்துகிட்டேன்னு என சத்ய தேவ் ஆரம்பிக்க.. 

உன்னோட விளக்கம் எனக்கு வேணாம் சத்ய தேவ். ஏன்னா எனக்கு நீ வேணாம் இந்த பந்தம் நமக்குள்ள செட் ஆகாது என உறுதியாக கூறியவள். நான் நாளைக்கு என்னோட டாடி கூட எங்க டாடி வீட்டுக்கு போறேன். நீ உன்னோட லிமிட்ல இருந்துக்கோ என் பையன் பக்கத்தில வர வேலை வச்சுக்காத என்று விட்டு படுத்து கொண்டாள் ரிதம். 

சத்ய தேவ் பெரு மூச்சுடன் தன் மனைவியை பார்த்தான். எப்படி இவளோட மனசை மாத்துவேன் என தலையை பிடித்தபடி அதே இடத்தில் நின்றான். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. SPR குடும்பம் மொத்தமும் அங்கே வந்திருந்தார்கள். 

மகி மற்றும் விவேகா இருவரும் பெரிதாய் பேசவில்லை அவர்களிடம்.. 

சித்தி என நிதின் வீட்டுக்குள் வந்தான். ஹரிணி நேராக மகி மற்றும் விவேகாவின் பக்கம் சென்று ஆண்டி என ஹரிணி அவர்களுடன் பேசினாள். ஆனால் முன்பு போல யாரும் பேசவே இல்லை. முன்பு போல பிடிப்பு இல்லை. இதழ் ருத்ரனுடன் குழந்தைகளை பார்த்து பராமரித்து கொண்டிருந்தான். யாரையும் அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவர்கள் அனைவரையும் நிலா தான் வர சொல்லி இருந்தாள். இங்கிருந்து கிளம்புவதாக திட்டம். 

பெட்டி படுக்கையை பேக் செய்தவள் வந்து நிற்க அனைவரின் பார்வையும் அவளின் மீது படிந்தது. 

விவேகாவின் மனதில் அப்பாடா கிளம்பிட்டா இனி எந்த பிரச்னையும் இல்ல. என நிம்மதியுடன் பார்த்தார். 

எங்கே மா கிளம்பிட்ட? என சூர்யா கேட்க, 

நான் கிளம்புறேன் சித்தப்பா! யாரோட வாழ்க்கைக்கும் தடையா இருக்க விரும்பல நான். என் குழந்தைய மட்டும் வாங்கி கொடுத்திடுங்க. என்றாள் நிலா. 

என்ன பேசுற நீ? என spr, தேஜு என அனைவரும் பதற்றத்துடன் கேட்க,  நிலா அனைவரை பார்த்தும், நான் பண்ண காரியங்களும் சரி சத்ய தேவ் அண்ணவவோட துப்பாக்கி சூடு இப்படி எதுவா இருந்தாலும் சரி நடந்து முடிஞ்சு போச்சு. அது நடக்கும் போதே இங்கே பல பேரோட இதயங்கள் நொறுங்கி போச்சு. அது கூடவே உறவுகளும் தான் அதனால இனி எதையும் ஒட்ட வைக்க முடியாது. அப்பிடியே ஒட்டினால் கூட பிம்பங்கள் குட்டி குட்டியா தெரியும். பெட்டர் நிதர்சனத்தை ஏத்துக்க வேண்டியது தான் என தெளிவாக பேசினாள். 

இதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை யாராலும்..  என்னாச்சு? யாரு உங்களை அப்படி நடத்துவா? பாப்பா சொல்ற மாதிரி எதுவும் நடக்காது. என சொல்லி கொண்டே வந்தான் சத்ய தேவ். 

யாருமே எதுவும் பேசவில்லை. சத்ய தேவ் நேராக நிதின் அருகில் சென்று அணைத்து கொண்டவன். மா நிஜமாவே இவன் உன் மேலே ரொம்ப பாசம் வச்சிருக்கான் என்னை விட.. என்றான். 

டேய் வாய மூடு!! என நிதின் நகர்ந்து செல்ல.. 

அங்கிருக்கும் யாருக்கும் எதுவுமே புரியவில்லை. விடு டா என நிதின் விலகி செல்ல போக, வேகமாக அவனது சட்டையை கிழித்து எறிந்தான். 

என்ன நடக்குது? என அனைவரும் பார்க்க, மா என சத்ய தேவ் அழைத்து, இவன் தன்னை தானே சுட்டுகிட்டான். இங்கே பாருங்க.. அன்னிக்கு நடந்த துப்பாக்கி சூடுக்கும் இவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல மா!! உன் மேலே சத்யம் பண்ணி சுட்டுகிட்டான். நான் செக் அப் போயிட்டு ரெண்டு நாள் அங்கேயே இருந்தேன்ல அன்னிக்கு நடந்தது. உன் மேலே உயிரளவு பாசம் வச்சிருக்கான் மா என்றான். 

மகியின் கண்களில் நீர் வழிய நேராக நிதினின் பக்கம் சென்றார். தேஜூவின் முகம் சடுதியில் மாறி போய் சோகமாகி விட, SPR இதை எதிர்பார்க்கவில்லை. என்ன தான் நிதின் இப்படி செய்திருந்தாலும், விவேகாவுக்கு அவர்களின் குடும்பத்தை பார்த்து துளி கூட நல்லெண்ணம் வரவே இல்லை. 

ரிதம் அப்பொழுது தான் வெளியே சென்றிருந்தவள் வீட்டுக்கு வந்தாள். அவளது தோற்றம் மொத்தமாக மாறி இருந்தது. தோல் வரை முடி இருக்க, அழகாக ஹேர் கட் செய்து விட்டிருந்தாள். புருவங்கள் திருத்தபட்டு கையில் இருக்கும் நகங்கள், காலில் இருக்கும் நகங்கள் மற்றும் உதடு பற்கள் என அனைத்தையும் அழகு படுத்தி இருந்தாள். ரிதம் மற்றும் இன்பராகவன் இருவரும் வீட்டுக்குள் வந்தார்கள். 

எல்லாம் போதும் நான் கிளம்புறேன் என நிலா நகர.. 

தாராளமா போ!! என சொல்லி கொண்டே வந்தான் ருத்ரன். 

சத்ய தேவ் ருத்ரனின் பக்கம் பார்த்து பேச வர, 

மாமா அவள் தாராளமா போகட்டும். என்னோட குழந்தைய பெத்து கொடுத்திட்டு போகட்டும். அது வரைக்கும் அவளோட கால் வெளியே போகவே கூடாது. என விவாகரத்து காகிதத்தை முகத்தில் விட்டு எறிந்தான். குழந்தைய பெத்து கொடுத்திட்டு விவாகரத்து வாங்கிட்டு போ!! என்றான். 

நிலா..? 

தொடரும்..

You may also like

Leave a Comment