ராட்சச ராவணனின் சீதை அவள்

by Pradhanya kuzhali
913 views

Episode 1

அந்த நட்சத்திர ஹோட்டல் அறை, ஏசி குளிரில் உறைந்து போயிருந்தது. ஜன்னல் திரைச்சீலைகளின் இடுக்கில் புகுந்த அதிகாலை வெளிச்சம், கலைந்து கிடந்த போர்வையின் மேல் பட்டது. ஆம் போர்வைக்குள் இரண்டு உடல்கள் பின்னி கொண்டு கிடந்தது. சூரிய வெளிச்சத்தில் அந்த மிகப்பெரிய பாரம் தனது பட்டு போன்ற தேகத்தில் இருந்து விடுபட்டதை போல ஒரு உணர்வு ஏற்பட மெல்ல விழித்தாள் சீதா. சீரான மூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவளுக்கு உடலெல்லாம் நடுக்கம் எடுத்தது. ஆம் அவளுக்கு அருகில் வீரா என்கிற வீரேந்திரன். மத்திய மந்திரியாகிய அவன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் சீதாவின் அருகில்.. 

அய்யோ நான் எங்கு இருக்கிறேன்? எனக்கு என்னாச்சு? என யோசித்தவள் வேகமாக கட்டிலை விட்டு இறங்கினாள். அவளின் கசங்கி போன உடை மூளையில் கிடக்க வேகமாக எடுத்து போட்டு கொண்டிருந்தாள். 

அதே நேரம் மத்திய அமைச்சர் வீரேந்திரன்  மெல்லக் கண் விழித்தான். இரும்பைப் போன்ற அவனது மனதிடமே நிலைகுலைந்து போயிருந்தது. தலையில் ஒருவித கனத்த வலி. நேற்று இரவு நடந்த அந்த ‘சினிமா விருது விழா’ பார்ட்டியில், யாரோ கொடுத்த பானத்தில் ஏதோ கலந்திருக்கிறது என்பது அவனது அரசியல் மூளைக்கு இப்போதுதான் உறைத்தது.

வீரேந்திரன் இளம் வயதிலேயே இந்தியாவின் மிக முக்கியமான இலாகாவைக் கவனிக்கும் மத்திய அமைச்சர். பிரதமரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத “The Clean Machine” என்று ஊடகங்களால் அழைக்கப்படுபவன். எதற்கும் அஞ்சாத கம்பீரம், கறாரான பேச்சு, எதிரிகளைத் துவம்சம் செய்யும் ராஜதந்திரம் என இவன் ஒரு மிரட்டலான ஆளுமை. ஆறடி உயரம், ஜிம்முக்குப் போய் செதுக்கியது போன்ற உடல்வாகு. எப்போதும் ஒரு இறுக்கமான முகபாவனை. ஆனால், இன்று அந்த முகம் முதன்முறையாகக் குழப்பத்தில் இருந்தது.

தனக்கு எதிரே ஒரு நிழல் ஆடுவதை பார்த்து சட்டென்று திரும்பியவன் புருவம் இடுங்க வேகமாக அவளை பற்றினான் வீரா. சீதா சுடிதார் அணிந்து சரி செய்தபடி திரும்பியவள் வீரேந்திரனின் கை சிறைக்குள் மாட்டி கொண்டாள். மெல்லத் திரும்பியவன் அதிர்ந்து போனான்.

யாரு டி நீ? என கழுத்தை பற்றினான். சீதாவுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுக்க வேகமாக அருகில் இருந்த ஃபிளவர் வாஷ் எடுத்து வீரேந்திரனின் மண்டையில் அடித்தவள் அவனை படுக்கையில் தள்ளி விட்டு வெளியே ஓடியிருந்தாள். 

ஹே உன்னை என நாக்கை கடித்து கூறிய வீராவின் குரல் அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் பட்டு எதிரொலித்தது. 

வெளியே சென்று கொண்டிருந்த சீதாவின் காதுகளில் வீராவின் உறுமல் நன்றாகவே கேட்டது. யார் இந்த சீதா? 21 வயது இளம் பெண். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சீதாவுக்கு அன்னையும் தம்பியும் மட்டுமே சொந்தம். பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பு முடித்து கொண்டாள். குடும்பத்தில் அவளது தந்தை தீராத காசநோயில் இறந்து விட, வயதான அம்மா மற்றும் 9 வகுப்பு படிக்கும் தம்பி கபிலன் என குடும்ப பொறுப்பு அவள் மேல் வந்து விட ஒரு சாதாரண பியூட்டி பார்லரில் ‘கீப்பராக’ (Keeper) வேலை பார்த்து, அவளது நண்பியின் உதவியுடன் டச் அப் கேர்ளாக வந்தவள் இப்பொழுது பிரபல

சீரியல் நடிகை ஜானவியின் மேக்கப் ஆர்டிஸ்டாகப் பணிபுரிகிறாள். .  

இந்த அதிகார வர்க்கத்தின் அழுக்குகள் அவளுக்குத் தெரியாது. அப்பாவி இளம்பெண். வெள்ளை நிறம், அடர்த்தியான கூந்தல், மிகவும் எளிமையான தோற்றம்.  என்ன நடந்தது? அவள் எப்படி இந்த அறைக்குள் வந்தாள் என இதுவரை தெரியவில்லை. 

சீதா!! சீதா என உறக்க கத்தி கொண்டிருந்தாள் சங்கவி. 

மூச்சு வாங்கியபடி பணியாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தாள் சீதா. சங்கவியின் பார்வை சீதாவின் மீது உற்று படிந்தது. 

என்னாச்சு உனக்கு? எங்கே போன? என்ன கோலம் இது? என சங்கவி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க, போன் பேசி கொண்டே உள்ளே நுழைந்த சினிமா நடிகை ஜானவி இருவரையும் பார்த்து நேரமாச்சு பேக் அப் பண்ணுங்க உங்களுக்கு பத்து நிமிசம் டைம் என்று கூறி விட்டு நகர்ந்தாள். 

சங்கவியின் கவனம் தனது மேல் படுவதற்குள் வேகமாக பாத்ரூம் சென்ற சீதா அழ கூட முடியாமல் தனது நிலையை எண்ணி மருகி கொண்டு புறப்பட்டாள். 

சரவணா என உறக்க அழைத்தான் வீரேந்திரன். அண்ணா என வேகமாக உள்ளே ஓடி வந்தான் வீராவின் பாத்திரமானவன். வீராவுக்கு வலது கை இடது கை என எல்லாமே அவன் தான். 

வீரா நெற்றியை தேய்த்தபடி எழுந்தவன்.  24 மணி நேரத்துல இந்த ஹோட்டல்ல புல் cctv footage வேணும். என்னோட ரூமுக்கு ஒரு பொண்ணு வந்துட்டு போயிருக்கா. அவள் யாரு என்னன்னு எல்லாத்தையும் கண்டு பிடி என்று உத்தரவிட்டான். 

சரவணன் அதிர்ந்து வீராவை பார்க்க, என்ன? என உறுமலிடன் திரும்பினான். 

இப் இப்போவே அண்ணா என சரவணன் புறப்பட்டான் பெயர் தெரியாத சீதாவை தேடி.. 

சீதா..?

சீதாவின் விதி இனி வீராவின் கையிலா? சிறை செய்வானா சீதையை? பார்ப்போம். 

You may also like

Leave a Comment