நிலவில் முழ்கும் சூரியன் PART 12

by Pradhanya kuzhali
198 views

Episode 331, 

சூர்யா ஒரு வழியாக வசந்தனுக்கு பேசி புரிய வைக்க அதன் பின் இந்த வளைகாப்பு விஷயத்துக்கு வசந்தன் ஒத்துக்கொண்டார். ஆனால் இங்கே மகிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வருண் செய்ய போகிறான்.   இதையெல்லாம் கலை வாணிக்கி சுத்தமாக பிடிக்க வில்லை. ஏன் என்றால் மாயா மற்றும் வருண் இவர்களின் வீட்டில் ஶ்ரீ மதி தன் வீட்டுக்கு வர இருந்த மருமகள் இப்பொழுது அங்கே இருக்கிறாள். என  வருத்தம் தான். 

வசந்தன் கிட்ட தட்ட இந்த ஒரு வாரமும் பிரச்னை செய்ய கூடாது என சொல்லி சொல்லி தான்  அவரை அழைத்து வந்தார். 

கலை வாணி எதையும் பேசாமல் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார். மொத்த குடும்பமும் உறவினர்கள் என அனைவரும் வந்து சேர்ந்தார்கள். வருண் பட்டு வேஷ்டி சட்டையில் ஜமென கிளம்பி வேலை யாட்களை ஆளுமையுடன் வழி நடத்தி கொண்டு இருக்க…

ஶ்ரீ மதி அவனுக்கு பின்னால் குறிப்பிட்ட இடை வெளியில் சுற்றி கொண்டு இருந்தாள். மாயாக்கு மிகவும் சந்தோசம் தனக்கு பெண் தன்னுடைய மகள் என்று நினைத்தவள் இன்று மூன்றாவது குழந்தையை பெற்று எடுக்க போகிறாள். அதற்கு நடைபெறும் சீமந்தத்தை தான் நடத்தி வைக்கிறேன் என மிகவும் பெருமையில் இருந்தாள். 

மகி்யின் புடவைக்கு ஏற்ப அந்த இடத்திற்கு தீம் தேர்வு செய்து இருந்தனர். ஏழாவது மாதம் இப்பொழுது தான் தொடங்கி இருக்கிறது . மகி நன்றாக இருந்தாள். வெங்கட் உணவுகள் சமைக்கும் இடத்தில் இருந்தார். அனைத்தும் கிட்ட தட்ட தயார் செய்ய பட்டு பரிமாறும் அளவில் முடித்து இருந்தது. 

கலை வாணிக்கு இரண்டு இருக்கை தள்ளி அவளுடைய அண்ணன் திருசெல்வம் மற்றும் சாரதா இருவரும் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் பேசும் மன நிலையில் தான் இருக்கிறார்கள் ஆனால் கலை வாணிக்கு அந்த பேச்சு உறுத்தலை கொடுக்க விட்டு விட்டாள். 

உமாவுக்கு இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு மற்றும் அதை செய்து கொண்டு இருக்கும் மாயா, வருண், ஶ்ரீ மதி என அவர்களை மிகவும் பிடித்து போனது. இப்படி ஒரு மனிதர்கள் இருக்க முடியுமா என் மருமகளை அனைவரும் கொண்டாடுகிறார்கள் என நினைத்து பூரித்து கொண்டார். 

இங்கே ஒப்பனை அறையில் மகி தயாராகி அமர்ந்து இருந்தாள். அந்த நேரம் ஒரு கரும் பச்சை வண்ண பட்டுச்சட்டையில் கூடவே வெள்ளை நிற மற்றும் தங்க ஜரிகை வைக்கப்பட்ட ஒரு கிட்டத்தட்ட ஒட்டிக்கோ கட்டிக்கோ உடை பாணியில் ஆராடி ஆண்மகனாக அழகனாக உள்ளே நுழைந்தான். வேறு யார் சூர்ய தேவ் தான்!  

சூர்யா சூர்யா உள்ளே வந்தா அடுத்த நொடி மகிழினி அவளது முகத்தை மாற்றிக் கொண்டாள்.

அவன் எதுவும் சொல்லாமல் நேராக அவனுக்கு எதிரில் போடப்பட்ட கண்ணாடிக்கு அருகில் இன்னொரு சூழல் நாற்காலியில் அமர்ந்து தன் உடையையும் தனது சிகையையும் சரி செய்து கொண்டான்.

மகி ஓர கண்ணால் அவனையே பார்த்தாள். சூர்யாவும் பார்த்தான். ஆனால் இருவரும் காட்டிக் கொள்ளவில்லை.இருவரும் தான் சண்டையில் இருக்கிறார்களே!  முதலில் பேசியது மகிழினி தான். 

என்னங்க! என்று அழைத்தாள்.

சூர்யா கண்டுகொள்ளவில்லை.. 

மகி மீண்டும் என்னங்க என்று அழைத்தாள்‌ . 

சொல்லு என்று கடுமையான குரலில் இருந்து பதில் வந்தது .

இப்போ  இங்கே நம்ம வீட்டு ஆளுங்களும்,  அப்புறம் நம்மளோட நட்பு வட்டங்களும் எல்லாரும்  இருக்காங்க,  அதனால நம்ம ரெண்டு பேரும் பேசாமல் இருந்தால்  அவங்களுக்கு சந்தேகம் வரும்!  நம்மளை கேள்வி கேட்பாங்க!. 

சூர்யா கடுமையான குரலில் இப்போ அதனால என்ன சொல்ல வர? 

மகி, அதனால நம்ம ரெண்டு பேரும் இந்த வளைகாப்பு முடிகிற வரைக்கும் கொஞ்சம் எப்பவும் போல பேசிக் கொள்ளலாமா? ஜஸ்ட் இது முடிய வரைக்கும் மட்டும் தான் சொல்றேன்!  நீங்க என்ன சொல்றீங்க?  என்று கேட்டாள்‌. 

சூர்யா அவளை முறைத்து பார்த்தான்.  அப்போ கடைசி வரைக்கும் நீ திருந்த மாட்டேன்னு சொல்ல வர!  உன் ஈகோவ விட்டுக் கொடுக்க மாட்ட!  அப்படித்தானே திமிரு புடிச்சவளே!  என்று மனதில் நினைத்துக் கொண்டான் .

மகிழினி அவனையே பார்த்தவள்.  சொல்லுங்க!  நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே? 

சூர்யா ஒரு பெருமூச்சுவிட்டு “அது தான் முடிவு பண்ணிட்டியே அப்புறம்  சொல்ல என்ன இருக்கு!” என்று கடுகடுவென பேசினான். 

மகிழினி கொஞ்சம் சிரித்தவள்‌ ரொம்ப நல்லதுங்க! என்று கூறினாள்‌.

அதற்கு மேல் சூர்யாவிற்கு அங்கே  இருக்க பிடிக்காமல் எழுந்து நின்றான். அவன் கதவருகில் செல்ல போக…

மகி  தனது உடையை சரி செய்து கொண்டே எழுந்து நின்றவள்.

என்னங்க ஒரு நிமிஷம்!.

இப்போ மறுபடியும் என்ன வேணும்? 

 இந்த புடவையில் நான் எப்படி இருக்கேன் என்று உண்மையாகவே அவள் ஆசையாக தான் அவனிடம் கேட்டாள். 

சூர்யா மனதில் இங்கிருந்தே ஆரம்பிச்சுட்டாளா அப்புறம் நடிப்பு தான் அவளோட எனி டைம் வேலை! சரியான நடிப்புக்காரி!  இப்படி வசியம் பண்ணி தான என்னை ஏமாற்றினா! மொத்தமா  இன்னும் வரைக்கும் நான் ஏமாந்து கிடக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு கதவை திறந்து விட்டு வெளியே சென்றான். 

என்ன எதுவுமே சொல்லாம போயிட்டாரு என்று மகிழ்வினி நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்‌.

அதன் பின் சிறிது நேரம் கழித்து சிவய்யர் வந்தார்.  இந்த சீமந்தத்தை நடத்திக் கொடுக்க பிரம்ம முகூர்த்தத்தில் நடக்க வேண்டியது .ஆனால்  இந்த முறை குளிகையில் நடத்த மாயா திட்டமிட்டு இருந்தார்.  அடுத்தடுத்து சுப காரியங்கள் வீட்டில் நடக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இந்த நேரத்தில்  சீமந்தத்தை சேர்ப்பதை போலவே அனைத்தும் ஆரம்பமானது .

மைவிழி கார்த்திக் மற்றும் பாக்யாவின் குடும்பம் ஹரீஷ் குடும்பம் மற்றும் ரகு அதன் பின் மாயாவின்  அண்ணன் ஆகாஷ் குடும்பம் என அனைவரும் வந்திருந்தார்கள். Spr குடும்பத்தை தவிர அனைவரையும் மாயா அழைத்திருந்தார்.

அதேபோல் உமா குடும்பத்திலும் கேட்கணுமா !. தங்கள் குடும்பத்தில் இருந்து தன்னுடைய தம்பி சிவா மற்றும்  ஜனனி இவர்களை மட்டும் அழைத்து இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு 100 பேர் கொண்ட ஒரு சின்ன நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டது.

ஏனென்றால் இது மூன்றாவது குழந்தை கண் படாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள் .

மாயா மகியின் மேல் நிறைய பாசம் வைத்திருக்கிறார். அதனால் இது நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டி  செய்கிறார். ஆனால் இதன் முடிவில் மாயாவிற்கு ஒரு நற்செய்தி கிடைக்கப் போகிறது. என்பதை அவர் அறியவில்லை. ஆனால் இது கலைவாணிக்கு மிகவும் மனதை நொறுக்கும் செய்தி!  அது என்ன என்று பார்க்கலாம்!. 

அந்த சிவயர் , மாயாவை பார்த்து அம்மா குழந்தையை  அலைச்சிண்டு வாங்க என்று கூறினார்.

உடனே மாயா,  மைவிழி மற்றும் ஸ்ரீமதி இருவரையும் பார்த்து மகிய கூட்டி வாங்க!  

 ராம் மற்றும் கார்த்திக் இருவருக்கும் நடுவில் சூரியா நின்று கொண்டிருந்தான். 

அவனை கிண்டல் செய்யும் பொருட்டு ராம் “சூர்யா நீயே மகிய கூட்டிட்டு வரலாம்ல!  வருன் சும்மா பணத்தை கொட்டி அடிச்சிருக்கா ! உன்னோட குழந்தைக்கு செம இன்ட்ரோ!  ட்ரோன் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கேமரா சுத்திட்டு இருக்குது, இங்க இருக்கிறது 100 பேர் அதுக்கே அவன் ரெண்டு எல்இடி டிவி செட் பண்ணி இருக்கான்.  இப்படி  ஒரு கொடுப்பனை எனக்கு இல்லாம போச்சே!. 

சூர்யா  இப்ப கூட ட்ரை பண்ணு இன்னொன்னு ப்ராடக்ட் ரிலீஸ் பண்ண!.  நான் என் கீத்துவுக்கு வளைகாப்பு  செய்கிறேன். ஆனால்  ரெண்டு பொண்ணையும் எனக்கே குடுக்குறியா என்று கேட்டான்.

உடனே ராம் திடுக்கிட்டு   அட சாமி வேண்டவே வேண்டாம் ! ஒருத்தன்  என் பொண்ணை சுற்றிக் கொண்டிருக்கிறான்.

சூர்யா ஏதும் பேசவில்லை கார்த்திக் என்னடா ஆச்சு? அவகிட்ட சண்டை போட்டுட்டியா!.  என்று கேட்டான். 

சூர்யா எங்களுக்குள் நடப்பது  எவனுக்கு எங்க மூக்கு வேர்க்குதுன்னு தெரியல எங்களுக்குள்ள எது நடந்தாலும் கண்டுபிடித்து வந்து விடுகிறான்.  ராஸ்கல் என்று நினைத்துக் கொண்டு டேய் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று முகத்த இயல்பாக வைக்க முயற்சி செய்தான். 

அந்த நேரம் மைவிழி மற்றும் ஸ்ரீமதி இருவரும் மகிழினியை வெளியே அழைத்து வந்தார்கள்.

அங்கு இருக்கும் அனைவர் பார்வையும் மகியின் மீது தான் இருந்தது.

அவள் தங்க சிலை போல மின்னிக் கொண்டிருந்தாள். இத்தனை அழகாக!.  என்று அனைவரும் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உடனே சூர்யா கார்த்திக்கை பார்த்து டேய் அவன் என் பொண்டாட்டி வரா!  நீ அங்க பார்க்காத..

கார்த்திக், “அங்கே என் பொண்டாட்டி மை விழி வரா சோ நீ  ஓவரா பண்ணாத என்று கூறினான்.  அவன் அத்தோடு விடாமல்  இன்னைக்கு மகி  அழகா இருக்கா!”

இதை கேட்டதும்  சூர்யாவிற்கு இன்னும் கோபம் வந்தது. ஆனால்  எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று இருந்தான். 

ராம் , இப்போ எதுக்குடா சம்பந்தமே இல்லாம நீ கோபப்பட்டு கொண்டு இருக்க என்ன நடக்குது ? ஓவரா சீன் போடுற!. என்று அவனை பேசிக் கொண்டிருக்க …

கார்த்திக்,  வேறு என்ன சார் மூணாவது ப்ராடக்ட் ரிலீஸ் பண்ண இவன கொண்டாடாமல்,  அதை சுமந்து கொண்டிருக்கும் மகிய கொண்டாடி கொண்டு இருக்காங்க சோ சூர்யாவுக்கு கொஞ்சம் கடுப்பு தான் ஏண்டா சூர்யா!  நான் சொல்றது சரிதான!

உடனே சூர்யா,  சொன்னாலும் சரி  சொல்லலனாலும் சரி இந்த மிகப்பெரிய சாதனைய நான் தான் பண்ணி இருக்கேன்!  எனக்கு தான் எல்லா கிரடிட்டும்  வந்து சேரணும்!  என்று கூறினான்.

அதன் பின் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க தொடங்கியது . மாயா மற்றும் உமா , கலை என அனைவரும் சூரியாவை அங்கு அழைத்தார்கள். 

இப்ப மட்டும் நான் வேணும் ! என்று கடுப்புடன் அவளின் அருகில் போய் அமர்ந்தான்.

மகி  மறுபடியும் அவனிடம் கொஞ்சம் மெதுவான குரலில் என்னங்க நான் இந்த புடவையில் எப்படி இருக்கேன்னு கேட்டேன்!  நீங்க எதுவுமே சொல்லலையே! என்று ஆசையுடன் கேட்டாள். 

சூர்யா, உனக்கு எப்படி இருக்குன்னு தெரியலையா! ஏன் கண்ணாடி முன்னாடி உன் முகத்தை நீ பார்க்கல! என்கிட்ட எதுக்கு கேக்குற?என்று கேட்டு வைத்தான். 

இதை கேட்டதும் மகி முகம் வாடிப் போனது. சூர்யா தன்னை சமன்படுத்திக்கொண்டு மெதுவான குரலில் ஜாடையாக அழகா இருக்கன்னு உனக்கே தெரியுது! ஆனால்  வேணும்னே சீன் போட்டு  என்கிட்ட எப்படி இருக்கேன்னு கேக்குறியா?  இது உனக்கே  தெரியலையா! என்று கூறினான். 

மகிழினி உதட்டை சுழித்துக் கொண்டு உங்க கிட்ட கேட்டேன் பாருங்க என்ன சொல்லணும் என்று உதட்டை கடித்துக் கொண்டாள். 

சூர்யா கைகளை  பரப்பரவென அசைத்துக் கொண்டு இப்ப என்னடி வேணும் ? நீ ரொம்ப அழகா இருக்க?  இப்போ என்னால என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியல தெரியுமா!  போதுமா!  இதை தான  ஆசைப்பட்டேன் உண்மையை சொல்லிட்டேன்!  என்று சூடான மூச்சை வெளி  விட்டு அவளை உதட்டை  மடித்துக்கொண்டு  ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

மகிழினிக்கு  இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

இவர்கள் இருவரும் இவ்வாறு சண்டையிட்டு காதல் செய்து கொண்டிருக்க..

அங்கே வாசலில்  சண்டைக்கார ஜோடிகள் இறங்கியது.

அதன் பின் சிறிது நேரம் கழித்து மிகப்பெரிய  பிரளயத்தில் கல்யாணம் செய்து கொண்ட ஜோடியின் மணிப்புறா வந்து நின்றது . அவள் தான் தாரா

கலைவாணி அங்கிருக்கும் அனைவரையும் வினோதமாகவும் ஒரு வித கோபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனென்றால் அங்கிருக்கும் யாரையும் கலைவாணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எரிச்சலாக இருந்தது.

இப்பொழுது தாரா உள்ளே வந்து கொண்டிருந்தாள். 

அடுத்து என்ன நடக்கும்? 

பார்க்கலாம்!. 

தொடரும்…

Episode 332, 

 மகிழினி சூர்யா சொன்னதை நினைத்து பூரிப்புடன் அமர்ந்திருந்தாள்.  ஆனால் முகத்தில் எதுவும் காட்டவில்லை.

சூர்யா அவளுக்கு கேட்க வேண்டு மென “ அழகா இருப்பாங்கன்னு அவங்களுக்கே தெரியும்! ஆனா சீன் போட்டுட்டு, அதை நம்ம வாயிலிருந்து கேட்க வைக்கிறதுல அப்படி என்ன தான் ஹாப்பி ஃபீல்னு தெரியல! அத கேட்க வச்சு நம்மள டார்ச்சர் பண்றாளுங்க! எல்லாம் என்னோட நேரம்!” என்று கூறினான் .

இதை கேட்டதும் அவள் பற்கள் தெரிய கொஞ்சம் சிரித்தாள்.

மாயா அவர்கள் இருவரையும் பார்த்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. வெங்கட் அருகில் வந்து இப்போது சந்தோஷமா என   புன்னகையுடன் கேட்டார்.

பின்ன சந்தோஷம் இல்லாம இருக்குமா?  என் பொண்ணு!  அவ பாத்திங்களா!  நான் நினைச்சதை நடத்தி காமிச்சிட்டேன்!  இப்ப பாருங்க என் கண்ணு முன்னாடி மாப்பிள்ளையுடன் இருக்கா!   இதை விட  என்ன எனக்கு வேணும்?  இந்த காட்சியை விட!  என்று கூறினார்.

வருண் மாயாவிடம் “என்ன மா ரெண்டு குறையுது!” என்று கூறினான் .

என்ன டா! 

வருண், மிதுன்தேவ் , சத்ய தேவ்

மாயா, ம்ம் இப்போ உடனே அவங்கள கூப்பிட்டு நிக்க வெச்ச நம்ம எல்லாரும் ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்துக்கலாமா!  என்று மாயா புன்னகையுடன் கூறிக் கொண்டிருந்தாள்.

உடனே வெங்கட் ,“ஓவரா பண்ணாத  மகி அம்மாவோட முகத்தை பாரேன்.  எவ்வளவு கோபம்!எவ்வளவு ஆத்திரம்? நம்ம இதெல்லாம் பண்றது அவங்களுக்கு சுத்தமா பிடிக்கல !”

வருண் ,  பிடிச்சா என்ன?  பிடிக்கலைன்னா என்ன?  அவ நம்ம தங்கச்சி!  அதுக்காக நம்ம சும்மா விட்டுட முடியுமா! என்று வருண் கூறினான்.

மாயா, ஆமா  முக்கியம் விட்டுக் கொடுக்க மாட்டேன் .

வெங்கட், நீங்க ரெண்டு பேரும் என்னமோ பண்ணுங்க என்று  நின்று கொண்டிருந்தார்.

உமா ஒரு பக்கம் அந்த இடத்தை ஆசையாக பார்த்தார். தான் செய்திருந்தால் கூட இந்த அளவுக்கு மிகவும் சரியாக செய்திருக்க முடியாது. அவ்வளவு அருமையாக இருந்தது. அந்த சீமந்தத்திற்கான ஏற்பாடுகள் அவ்வளவு வினர்சை!. 

உமா புன்னகையுடன் “பரவால்ல பரவால்லைங்க நான் இதை எதிர்பார்க்கவே இல்லை இந்த அளவுக்கு நீங்க சிறப்பா செஞ்சிட்டிங்க!” என்று மாயாவிடம் கூறினார்.

உடனே மாயா,  அதனால என்ன சம்மந்தி என் பொண்ணு என்று கர்வத்துடன் பேசினார் m

இதெல்லாம் பார்த்துக் கொண்டே கலைவாணி எழுந்து நிற்க

உடனே வசந்தன்,  சொல்லிட்டு போறாங்க கலைவாணி! 

அவள் பற்களை கடித்து கொண்டே யாருக்கு யாரு பொண்ணு?  அவளை நான் தான் பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்து ஆளாக்கி இருக்கேன்!  இன்னிக்கி  என் புள்ளையை நான் யாருக்கும் இளவல் கொடுக்கல,  அவ என் புள்ள! என்று கலைவாணி கூறினார் .

வசந்தன், ஒன்னும் நெனச்சுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரிடம் சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

கலை! 

கலை என உமா அழைத்தார். 

கலைவாணி உமாவின் அருகில் வந்து சொல்லுங்க அக்கா?.. என்று கேட்டார்

உமா இப்போ ஒரு சாங்கியத்த ஆரம்பிச்சிடனும்!  சோ என்ன விட உனக்கு தான் அனுபவம் ஜாஸ்தி இப்போ யாரு போடணும்? என்று கேட்டார்

உடனே கலைவாணி முகத்தில் எந்த காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக அக்கா ஃபர்ஸ்ட்  பொண்ணோட அதாவது நீங்க தான் ஃபர்ஸ்ட் அவளுக்கு வளையல் போட்டு விடனும்!  நாங்க வளையல் வாங்கிட்டு வந்திருக்கோம்!  என்னங்க என்று வசந்தனை அழைத்தார் .

அதற்குள் மாயா உமாவை பார்த்து சம்பந்தி நான் மகிக்கி வளையல் வாங்கிட்டு வந்து இருக்கேன்.  இதுல ரெண்டு தங்க வளையல் செட் இதுல ஐம்பொன் வளையல் இருக்கு இத போட்டு விடுங்க என்று கூறினார். 

அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது.

கலைவாணி, அக்கா வளையல நாங்க வாங்கிட்டு வந்து இருக்கோம்!: முதன் முதலில் இரும்பு வளையல் போட்டு விடனும், அதுக்கப்புறம் வெள்ளி வளையல் போட்டு விடணும், அதுக்கப்புறம் தங்க வளையல் போட்டு விடலாம் , எல்லாத்தையும் ஒரு வரிசையாக தான் செய்யணும்.  அதனால இந்தாங்க என்று வேப்பிலை சுற்றி இருந்த ஒரு வளையல், அதோடு கூடவே மண் வளையல் என வகை வகையாக அனைத்தையும் எடுத்து வைத்தார்.

ஆனால் அந்த வளையல் தட்டில் தங்க வளையல் இல்லை..

உடனே உமா இந்த வரிசையில் தான் போடணும்ல்ல எனக்கு இப்பதான் நினைப்பு வந்தது!..

  வசந்தன் ,  கலை இதுல தங்க வழியில் இல்ல டி என்று கூறினார்

மாயா அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு அவருடைய புது தங்க வளையல் செட்டில் இருந்து எடுத்து இதை எடுத்துக்கோங்க என்று நீட்டினாள்.

உடனே கலைவாணி பரவாயில்லை காலைல செக் பண்றதுக்கு எடுத்து போட்டேன்!  நான் தான் எடுத்து போட்டேன் மறந்துட்டேன்!  இதுதான் மகி நாங்க வாங்கி இருப்பேன் தங்க வளையல் என்று அவள் கையில் இருந்த தங்கவளையல் எடுத்து அந்த நகையை சேர்த்தார். 

மகிழினி தன் அம்மா செய்யும் செய்கையை பார்த்தாள். அது கலைவாணியின் வளையல்.

மகி தன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருக்கும் மானு ரெடியா! 

 மாயாவிற்கு அந்த காட்சியெல்லாம் பார்க்க மனதுக்குள் கொஞ்சம் பொக்கென இருந்தது.கலைவாணி முறைத்துக் கொண்டு நிற்பது சுத்தமாக மாயாவிற்கு பிடிக்கவில்லை. அந்த இடத்தில் சலசலப்பு நடக்க ஆரம்பித்தது.

உடனே சூர்யா அத்தை என்று அழைத்தான் .அந்த நேரம் மாயாவும் கலைவாணி இருவரும் சூர்யாவை பார்த்தனர்.

சூர்யாவிற்கு என்னடா இது பெரிய பிரச்சனையா போச்சு என்று நினைத்தவன் இரண்டு அத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் என் பொண்டாட்டிக்கு நானே தங்கவளை போட்டுகிறேன். அதனால் உங்கள் பொருளை  நீங்களே வச்சுக்கோங்க என்று கூறிவிட்டான்.

உடனே இருவரும் என்ன மாப்ள!.  என்று கூறிவிட்டு..

ஒருவரும் அது முகத்தை இன்னொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஸ்ரீமதி அருகில் நின்று கொண்டிருந்தாள்

கலைவாணி ஸ்ரீமதியிடம் கூட பேசவில்லை அவள் தான் ஒருமுறை கூட தன்னிடம் பேசவில்லையே தானாக யாரிடமும் கெஞ்சிக் கொண்டு மன்றாடிக்கொண்டோ நிற்கும் பழக்கம் கலைவாணிக்கு கிடையாது.

உமா என்ன செய்வது என பார்த்துக் கொண்டிருக்க

சூர்யா, அம்மா சொல்லுங்கம்மா மகி சொல்லு! உங்க அம்மாகிட்ட என்று கூறினான்.

உடனே மகிழினி யாரிடம் சொல்வது என  அவளும் திடுக்கிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடனே அங்கு வந்த நட்ராஜ் வளையலா ஓ ரெண்டு பேரும் வாங்கி வச்சிருக்கீங்களா! சரி சரி என்னோட பேத்தி ரொம்ப கொடுத்து வெச்சவன்னு நினைக்கிறேன் மொத்தத்தையும் கொடுங்க நான் வாங்கிக்கிறேன் என்று கைகளை நீட்ட அங்கே அனைவரும் கலகலவென சிரித்தனர்.

உமா,  இப்போ யாரோட வளையல் போடணும் வாங்கி நீயே சொல்லு! எனக்கு பிரச்சனை வேண்டாம்! 

சூர்யா, “அம்மா யாரோடதும்  போட வேண்டாம் அந்த தாம்பலத்துல தங்க நகை செட் வச்சிருக்கேன் அதில் இருந்து போட்டு விடுங்க!” 

சூர்யா சொன்னதை போலவே உமா எடுத்து போட்டு விட்டார்.

மகியின் முகத்தில் சந்தனம் பூசி விட்டு மஞ்சள் அரிசி தூவி அவளை ஆசீர்வாதம் பன்னீர் தெளித்து அவளை ஆசீர்வாதம் செய்தார்.

அதேபோல் சூர்யாவின் இரண்டு கன்னத்திலும் சந்தனம் பூசி நெற்றியில் குங்குமம் வைத்தார்.

அந்த இடத்தில் அனைவரும் கவனம் செலுத்தினர் சத்ய தேவ், மிதுன் தேவ் இருவரும் தாய் தந்தைக்கு அருகில் வந்து நின்றார்கள்.

மிதுன், அம்மா உனக்கு கல்யாணமா என்று கேட்டான்

அங்கிருக்கும் அனைவரும் சிரிக்க ஆரம்பி த்தனர்.

மிதுன் இப்போ எதுக்கு எல்லாரும் சிரிக்கிறீங்க ? நான் என்ன கேட்டேன்? என்று கேட்டான்

மாயா என்னடா மிது குட்டி அம்மாவுக்கு பாப்பா இருக்குல்ல அதுக்காக எல்லாரும் பிளஸ் பண்றாங்க என்று கூறினார் .

அப்படியா அமச்சி ஓகே என்று கூறினார்.

கலைவாணி அவர்கள் பேசுவதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

உமா அடுத்து மாயாவை பார்த்து நீங்க வந்து செய்யுங்க என்று கூறினார்

உடனே மாயா கலைவாணியை பார்த்தாள் கலைவாணி எதுவும் பேசாமல் தள்ளி நின்று கொண்டார்.

அந்த நேரம் வெளியே சில சலசலப்பு கேட்டது.

ஏய் மெதுவா நட டீ என்னோட லிட்டில் பிரின்சஸ் உள்ள இருக்கா!  அவளுக்கு கஷ்டமா இருக்கும் என்று ரிதமை தூக்கிக் கொண்டு நடந்தான்.

விவேகா உருவத்தை சுருக்கி நெற்றியை தேய்த்துக் கொண்டே நடந்தவ “ கொஞ்சம் சீன் போடுவதை நிறுத்துடா மூணு மாசம் ஆகுது! அதுவும் தவற இப்போது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, ஓவரா போய்ட்டு கூடாத, எல்லாம் எனக்கு தெரியும்!

உடனே ராகவ், என்ன உனக்கு தெரியும்? 

விவேகா  சிரித்து  கொண்டே நீ தூக்கிட்டு நிக்கிறியே அவளை நான் தான் பெத்து இருக்கேன்! 

இன்பா, அதுதான் என்னால நம்ப முடியல! ஏதோ எங்கயோ தப்பு பண்ணி இருக்கேன் நினைக்கிறேன்!  அங்க போயி தூக்கிட்டு வந்துட்ட

விவேகா,  அப்படியா!  அப்படி நடந்திருந்தால் ரொம்ப சந்தோஷம் உன்னை கழட்டி விட்டுட்டு நான் வேற பையன கல்யாணம் பண்ணிக்குவேன் என்று கூறினாள்.

இன்பா, கொன்றுவேன் என்று சொன்னவன். 

இன்பா,  டிம்பிள் என்று தன் மகளை அழைத்தான் .

சொல்லுங்க டாடி டிம்பிள்

இப்போ காது பொத்திக்கோங்க

உடனே ரிதம் இரு காதுகளையும் அடைத்துக் கொண்டாள்.

உடனே இன்பா ஏய் அடுத்து ரெடியா இருந்துக்கோ!  இந்த மாதிரி எல்லாம் நடக்கும் நினைச்சுட்டு இருக்கியா இன்னைக்கு நைட் வீட்டுக்கு வா! உன்னை!. 

போடா என்று இருவரும் சன் சிரித்து பேசி கொண்டே அந்த இடத்திற்கு நுழைந்தார்கள். 

சூர்யா அமைதியாக அமர்ந்திருந்தாள் விவேகா , பாரு உன் கூட தானே இருக்காங்க அந்த அண்ணா எவ்வளவு அமைதியா இருக்காங்க!  நீயும் தான் இருக்கியே மரத்தில் தாவுவது  போல. 

 இன்பா,   அவன பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னை விட அவங்க ரொம்ப மோசமானவன் என்று கூறினான்.

விவேகா, உலகத்திலேயே மோசமானவன் நீ மட்டும் தான் டா என்று சிரித்துக் கொண்டே கூறியவள்m

நேராக மகி அருகில் சென்றார் ரத்தம் இறங்கி ஓடி அங்கே மடிக்கு வந்து மாமி என்று கத்தி கட்டிக்கொண்டாள்.

மகி வருண் மற்றும் ஸ்ரீ மதியை பார்த்து அண்ணா என  பேசினாள். அனைவரையும் நலம் விசாரித்தார்.

இன்பா சூர்யாவின் அருகில் வந்து மச்சி வாழ்த்துக்கள் டா!. 

உனக்கும் வாழ்த்துக்கள் டூ  டா!.

இன்பா அதிர்ச்சியாக தெரியுமா? 

அவசரப்பட்டுட்ட  இனிமே அனுபவி என்று சூர்யா கூறினான் .

அதன் பின் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது மாயா சந்தனம் பூசி ஆசிர்வாதம் செய்ததும் அடுத்ததாக கலைவாணி வசந்தன் வெங்கட் , பாக்யா என மைவிழி ஜெய் ஆகாஷின் அம்மா என அனைவரும் ஒவ்வொருவராக மகிழினிக்கு ஆசிர்வாதம் செய்தார்கள்.

அவள் கைகளில்  ஆசிர்வாதம் செய்து அவள் கைகளில் வலையல் போட்டு விட்டார்கள்.

“எல்லாரும் போட்டாச்சு இப்போ வேற யார் பாக்கி இருக்காங்க விவேகா நீ போட்டு விடு!” என்று மாயா கூறினார்.

அந்த அந்த நேரம் வெளியில் சலசலப்பு சத்தம் கேட்டது என்ன என மாயா சுற்றிலும் பார்க்க உமா நடராஜ் திரும்பிப் பார்த்தனர்

வருண், இருங்க நான் போயிட்டு வரேன் என்று வெளியே சென்றான்.

உமா, கலைவாணி மற்றும் வசந்தனிடம் வசந்து!.

அக்கா பெரிய பையன் பற்றி கேட்டார்m.

வசந்தன் என்ன சொல்வது என்று முடித்துக் கொண்டிருக்க கலைவாணி அமைதியாக நின்றார்.

சூர்யா மச்சானுக்கு ஏதோ இன்னைக்கு முக்கியமான வேல  அதனால சாயந்திரம் வரேன்னு சொல்லி இருக்காங்க என்று சமாளித்தான்.

அந்த நேரம் உள்ளே தூங்கும் மற்றும் இனிப்பு பலகாரங்கள் பழங்கள் மற்றும் வளையல் செட் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு சாதாரண பட்டு புடவையில் அவளது போன்ற  கூந்தலை பின்னி அழகாக பூ வைத்து பொட்டு வைத்து வகட்டுக்கி குங்குமம் வைத்த புதிதாக திருமணமான பெண் போல தாரா ஒயிலாக நடந்து வந்தாள். 

தொடரும்.. 

Episode 333,

அவள் சாதாரண பட்டு புடவையில் அவளது போன்ற  கூந்தலை பின்னி அழகாக பூ வைத்து பொட்டு வைத்து வகட்டுக்கி குங்குமம் வைத்த புதிதாக திருமணமான பெண் போல தாரா ஒயிலாக நடந்து வந்தாள். அவளின் பின்னால் காவலர்கள் கூட வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று கொண்டனர். 

அங்கு இருக்கும் அனைவரும் யார் வந்திருக்கிறார்கள் என பார்க்க.. உமா தலையை சாய்த்து எட்டிப் பார்த்து விட்டு புன்னகையுடன்“ ம்ம் வசந்து பரவால்ல நான் கூட வர மாட்டாங்கன்னு நினைச்சேன்!  ஆனா உன்னோட மருமகள் மதிச்சு  வந்து இருக்கா! ரொம்ப சந்தோஷம்!”

இதை கேட்டது வசந்தம் ஆச்சரியமாக  திரும்பி பார்க்க அங்கே தாரா சிரித்த முகத்துடன் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். 

அவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் தங்களுக்குள் பேசி கொள்ள சலசலப்பு சத்தம் கேட்டது. 

இது எல்லாம் பார்க்க பார்க்க கலைவாணிக்கு மிகவும் அவமானமாக இருந்தது.இப்பொழுது என்ன செய்வது?  என்று தெரியாமல் கையில் சொடுக்கு எடுத்துக் கொண்டே அப்படியே நின்றார். 

தாரா நேராக வசந்தன் அருகில் சென்றவள்.  ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா என்று அவருடைய காலில் விழுந்தாள்.என்னம்மா இது என்றவர் தயங்கினார். அதன் பின் அவளை எழுந்து நிற்க சொன்னார். 

அதன் பின் தாரா கலைவாணி அருகே சென்றவள். “அத்தை நல்லா இருக்கீங்களா!”

கலைவாணி வேறு வழியில்லாமல் நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு மகி அருகில் போய் நின்று கொண்டார்.

மாயா,  ஸ்ரீமதியிடம் கண்ணா இப்போ  இப்ப நீ  வளையல் போட்டு விடு என்று கூறினார்.

சரி அத்தை என்று சொல்லிவிட்டு ஶ்ரீ மகி வளையல் போட்டு விட்டுக் கொண்டிருக்க! 

 உடனே தாரா மகிய பார்த்து  பார்த்து சிரித்து எப்படி இருக்கீங்க மான் விழி!  அண்ணா எப்படி இருக்கீங்க ?  என்று கேட்டாள்.

சூர்யா, நாங்க நலம்! மச்சான் எப்டி இருக்காரு! 

அவரு நல்லா இருக்காரு! 

உமா, வசந்து உன் மருமகளை வளையல் போட சொல்லு பா! 

அக்கா இதோ!  என சொல்ல வர

தாரா, ஏன் நீங்க என் கிட்ட பேச மாட்டீங்களா! மா!  

உமா, அவளை ஆச்சரியத்துடன் பார்க்க சூர்யா, மா சொல்லுங்க!  

உமா சிரித்து கொண்டே ம்ம் போட்டு விடு மா!..

தாரா அவள் எடுத்து வந்த பொருளில் இருந்து வளையல் எடுக்க போக

உடனே வசந்தன், அம்மா அது வேணாம் இப்போ கண்ணாடி வளையல் போட்டு விடுங்க! எதுக்கு உங்களுக்கு வீண் செலவு!

தாரா, இது என்னோட வீட்டு காரர் அவரோட சம்பாத்தியத்தில் வாங்கியது மாமா! என்னை நீங்க தவறா நினைக்க வேணாம்! இது என் வீட்டு காரர் பணம் அவரோட மாமனார் பணம் இல்ல!. 

வசந்தனுக்கு இந்த வார்த்தைகள் தான் நிம்மதியாக இருந்தது. கலை க்கு மாயா முன்னால் இப்பொழுது நிமிர்விடன் நின்றாள். 

தாரா மகி கைகளை பிடித்து அழகான போட்டு விட்டு சந்தன் தடவினாள். அரிசி தூவி ஆசிர்வாதம் செய்தாள். 

விவேகா தாராவை பார்த்து கொண்டு நின்றாள். இன்பா, எதுக்கு அந்த பொண்ணை அப்படி பார்க்கிற? 

விவேகா, டேய் சினிமா ஹீரோயின் ட்ரா!. 

இன்பா, அப்டியா! யாரு அந்த பொண்ணா! 

ம்ம் ஆமா! 

இன்பா, இந்த பொண்ணு நடிச்ச ஒரு படத்தை கூட நான் பார்த்தது இல்லை!  பொய் சொல்லாத! 

விவேகா, டேய் பொய் சொல்லாத! 

இன்பா, சத்யமா இல்ல டி!  

விவேகா, அப்போ உன் போனை கொடு!. 

இன்பா, எதுக்கு! 

விவேகா, அப்போ இந்த நாலு வருசமா நீ xxx தான பார்த்து கொண்டு இருந்த! எனக்கு தெரியும்! எதோ சின்ன வீடு கூட செட் பண்ணி வச்சு இருப்ப?  

இன்பா சாக் ஆகி “என்ன டி பேசுற! நானே பார்டர் டூட்டில குளிர்ல விறைச்சு சுட்டு வாங்கிட்டு திரிந்து இருக்கேன் என்னை போய் எதுக்கு டி உனக்கு இந்த சந்தேக புத்தி!”

விவேகா, பொய் சொல்லாத எப்டி உனக்கு ஹீரோயின் இவங்களை பார்க்காதது போல் ஆக்ட் பண்ற? 

இன்பா, விவேகா அந்த பொண்ணு தாராவை விட நீ தான் எனக்கு ஹீரோயின் போல தெரியுற!. தெரியுமா! நீ எவ்ளோ கெத்து தெரியுமா! தாராவை உன் கூட நான் எப்டி கம்பேர் பண்ண முடியும் அவள் படத்தில் மட்டும் தான் ஸ்டண்டு , தைரியமா எல்லாம் செய்வா! ஆனால் நிஜத்தில் தாரா ஒரு பயந்த சுபாவம் எல்லார் முன்னாடியும் உதயனை கல்யாணம் செய்து கொண்டாள். உன்னை மாதிரி தைரியமா ஓடி போகல!. 

விவேகா, அப்போ என்னை ஓடி போனவள் அப்டின்னு சொல்ற தானே! 

இன்பா, என்ன தான் டி சொல்ல சொல்ற? 

விவேகா, உன் கிட்ட ரொம்ப தப்பு இருக்கு! நீ ஒரு பிராடு! நீ மோசம்! என சொல்லி கொண்டே முகத்தை தூக்கி கொண்டாள். 

இன்பா, அய்யோ!.  என நொந்து போனான். 

மிதுன் அங்கு இருக்க அங்கே போய் ஐக்கியம் ஆகி விட்டாள். 

அந்த நேரம் போட்டோ எடுப்பவர்.“ சரி வருண் சார் உங்க குடும்பத்தோட நில்லுங்க! ஃபேமிலி போட்டோ பிடிக்கணும்!”

அவ்ளோ தான் கலை வாணிக்கு உச்ச கோபம் உஷ்ன மூச்சில் வந்து கொண்டு இருந்தது. 

மாயா புன்னகையுடன் சூர்யா கிட்ட மாப்பிள்ளை சக்தி, மிதுன் ரெண்டு பேரையும் வர சொல்லுங்க! 

வருண், மா நான் கூட்டி வரேன் என சொல்ல ஶ்ரீ மதி நானும் என இருவரும் சென்று கூட்டி வந்தனர்.

போட்டோ கிராபர், “மாயாவை பார்த்து அம்மா நீங்க உங்க பொண்ணு பக்கத்தில் உட்காருங்க, சார் நீங்க மாப்பிள்ளை பக்கத்தில் உட்காருங்க!”

கலைக்கு அதற்கு மேல் அதையெல்லாம் பார்க்க முடியாமல் கண்களில் நீர் கோர்க்க வெளியே சென்று விட்டார். வசந்தன் உமா கிட்ட பேசி கொண்டு இருந்தார். 

தாரா அங்கு நின்று நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள். அவளிடம் யாரும் பேச வில்லை. கார்த்திக் இப்பொழுது தான் பந்தி தயார் செய்து விட்டு வந்தான். 

பாப்பா!..

அண்ணா! என புன்னகையுடன் திரும்பினாள். 

கார்த்திக், எப்படி இருக்க மச்சான் எப்டி இருக்காரு! 

ம்ம் எல்லாரும் நலம் எப்போவும் அழகின்க பேச்சு தான் எங்கே அழகிங்கல காணோம்! 

கார்த்திக், அதோ என் அம்மா அப்பா வைத்து கொண்டு இருக்காங்க! 

இன்றோ கொடுக்க மாட்டீங்களா! 

கார்த்திக், அவ்ளோ தான கொடுத்து விட்டால் போச்சு வா! என அழைத்து அறிமுகம் செய்து வைத்தான். 

பாக்யா புன்னகையுடன் பேசினார். தாராக்கு சந்தோசம். மை விழி அப்பொழுது தான் போன் பேசி விட்டு வந்தாள். 

தாரா வை பார்த்ததும் கடுமையான கோபம் அதை விட அவளை பார்த்தாலே எரிச்சல் தான்! தன்னுடன் வளர்ந்த அந்த அண்ணங்கார உதயன் நாய் தன்னிடம் மறைத்து இவளை காதல் கண்றாவி எல்லாம் செய்து கட்டி இருக்கிறான். அந்த கடுப்பு தான்! 

தாரா அவளாகவே முன் வந்து பேசினாள். நல்லா இருக்கீங்களா? 

ம்ம் என்று கூறினாள். 

தாரா மனதில் அம்மாவும் பொன்னும் ஒரே போல பயங்கர டெரர் தான்! என நினைத்து கொண்டாள். 

கலை வெளியில் கண்ணீருடன் நின்று மருகி கொண்டு இருந்தாள். 

வசந்தன் அவளை அழைக்க தேடி கொண்டு இருந்தார். 

தாரா, மாமா என்னாச்சு? 

இல்ல மா! உங்க அத்தைய காணோம்!  

தாரா, நானும் பார்க்கிறேன் என கலை வாணி எங்கு இருக்கிறார். என தேட ஆரம்பித்தாள். 

கலை வெளியில் நின்று கொண்டு இருக்க அருகில் சென்றவள் அத்தை! உங்களை மாமா கூப்பொடுறாங்க!  

அவர் புருவம் நெருக்கி கொண்டே யார் என திரும்பி பார்க்க அங்கே தாரா இருந்தாள். 

கலை முகத்தில் ஒரு கசந்த புன்னகை நல்லா இருக்கியா! 

தாரா மனதில் நிஜமாவே நம்மளை தான் கேட்கிறார்களா! என ஆச்சரியம் அவள் கொஞ்சம் சிரித்து கொண்டே நல்லா இருக்கேன் அத்தை; உங்.. என அவள் ஆரம்பிக்க உடனே கலை கையை நீட்டி போதும் உன் பேச்சு அதை கேட்டால் எனக்கு நாடி அடங்குவது போல இருக்கு! 

தாரா கொஞ்சம் வருத்தத்துடன் பார்க்க கலை சிரித்து கொண்டே நீ நல்லா தானே இருப்ப! என் சந்தோசம் மொத்தத்தையும் அழித்து விட்ட! உன்னால் எல்லாம் உன்னால டி! என்னோட அண்ணன் பொண்ணு எவளோ ஒருத்திக்கு மருமகள் ஆகி விட்டாள். என் கண்ணு முன்னாடி என் மானு குட்டிக்கு அந்த மாயா சீமந்தம் பண்றா! உங்களுக்கு எல்லாம் நான் என்ன டி பாவம் பண்ணேன்! என் பையனை நீ கூட்டி போயிட்ட.. என் அண்ணன் பொண்ணு உன்னால் அந்த குடும்பத்தில் வாக்க பட்டு போயிட்டா! அந்த மாயா   பொண்ணை அவள் பாட்டுக்கு  உரிமை கொண்டாடுறா! யாரு டி நீங்க எல்லாரும்? என அழுது கொண்டே கூறியவர். ஆனால் இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்ப டி! என சொல்லி கொண்டு இருக்கும் போதே வசந்தன் வந்தார். 

கலை!. கலை!  

உடனே கலை வாணி கண்ணை துடைத்து கொண்டு“ என்னங்க எனக்கு இங்கே இருக்க விருப்பம் இல்ல வாங்க வீட்டுக்கு போலாம்!”

வசந்தன், என்ன ஆச்சு? 

கலை அழுது கொண்டே இன்னும் என்ன ஆகனும்! மானு என் பொண்ணு! ஆனால் அந்த பொம்பள உறவு கொண்டாடுரா! யாரும் எதுவும் கேட்க மாட்டிக்கிரார்க! எனக்கு நெஞ்சு வெடிப்பது போக இருக்கு!. 

வசந்தன் அவளின் கையை பிடித்து “இப்போ எதுக்கி இந்த கவலை உலகமே வந்து உரிமை கொண்டாடினாலும் மான் விழி உன் பொண்ணு தான் இதை யாராலும் மாற்ற முடியாது போதுமா!”

கலை முகத்தை மூடி கொண்டு குலுங்கி அழுதாள். 

தாரா மனதில் மிகவும் குற்ற உணர்வாக இருந்தது. பேசாமல் நம்ம விட்டு போய் விடனும்! நாம் தானே எல்லார்த்துக்கும் காரணம்! என அழ ஆரம்பித்தாள். 

உடனே உதயனுக்கு போன் செய்தாள். 

ஹலோ! தாரா பங்ஷன் எப்படி போயிட்டு இருக்கு!. 

தாரா அழுது கொண்டே என்னங்க நம்ம டைவர்ஸ் பண்ணிக்களாமா!  என கேட்டாள். 

உதயன்  ஒரு நிமிடம் சாக் ஆகி என்ன டி பேசுற! 

இல்லங்க நான் உண்மையா தான் பேசுறன்!. 

உதயன் ஒரு பெரு மூச்சை விட்டு வந்தேன்னு வை அடி பின்னி போடுவேன்! தேவையில்லாமல் பேசாத! எங்க அம்மா கிட்ட பேசாத! அவங்க அப்படி தான்! நீ கொஞ்சம் அமைதியா முடிச்சிட்டு வா! 

தாரா, இல்லங்க நம்ம டைவர்ஸ் என சொல்ல போன் கட் ஆகி போனது. 

உதயன் மனம் கேட்காமல் பாதி மீட்டிங்ல இருந்து கிளம்பி விட்டான். 

இங்கே மிதுன், ஹே ரித்து நான் படிக்க ஜெர்மன் போரன் நீ வரயா! 

ரிதம்…? 

உதயன்…? 

இன்பா, அப்புறம் மச்சி ஜாலி தான் போல!. 

சூர்யா, நீ வேற இப்போ கூட எனக்கும் அவளுக்கும் சண்டை டா! அந்த deer விஷயம் அவளுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு!  

இன்பா..? 

இங்கே விவேகா, அக்கா தூரிகை கிட்ட மறுபடியும் பேசி பார்த்தியா!  

மகி…? 

தொடரும்…

 Episode 334,

இன்பா, அப்புறம் மச்சி ஜாலி தான் போல!. என சூர்யாவை அழைத்து கொண்டு சாப்பிட வந்தான். 

சூர்யா, என்ன ஜாலி! நான் காலி ஸா!..

இன்பா, உன்னை பார்த்தா ஒன்னு நியாபகம் வருது மச்சி! 

என்ன? 

வேணாம் டா! 

“சொல்லு கேவலமா நினைத்து இருக்க கேட்கிறேன் சொல்லு!”

இன்பா, இந்த சந்தனத்தை பார்க்கும் போது! 

சூர்யா, பார்க்கும் போது! 

இன்பா கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே“ திரட்டி மாதிரி இருக்கு டா! ”

சூர்யா அவனை வைத்த கண் வாங்காமல் முறைத்து கொண்டு இருக்க இன்பா உதட்டை கடித்து கொண்டு சிரித்தவன்.

“உனக்கு மாலை அப்புறம் குடிசை மட்டும் தான் மிஸ்ஸிங் பக்காவா இருக்க டா!”

சூர்யா தலையை கோதி கொண்டே வேகமாக உள்ளே செல்ல அவன் பின்னால் இன்பா சென்றான். “இப்போ இப்போ எதுக்கு மச்சி கோபம்!”

சூர்யா, டிஸ்யூ கொண்டு முகத்தை துடைத்து கொண்டு “சொல்லுவ டா இதுக்கு மேல கூட சொல்லுவ! ஆனால் பாரு நானும் சொல்லுவேன்! கல்யாணத்துக்கு முன்னாடியே ரெண்டு வரம் கொடுத்து இருக்க!”

இன்பா, இதை யாரு உனக்கு சொன்னது? 

சூர்யா, பேட் ரவி!. 

இன்பா கடுப்பாகி அப்பாவா! அவரா! 

சூர்யா , “உனக்கு தான் டாடி எனக்கு ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட் டா!”

இன்பா, சரி இதை வெளியே சொல்லாத நானும் கிண்டல் பண்ண மாட்டேன்! 

சூர்யா ,“வரலாறு மச்சி! நீ வரலாற்று சாதனை பண்ணி இருக்க நான் இதை போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன். மைக் போட்டு கத்துவென் டா!”

டேய் சூர்யா! கம்முன்னு இரு!  

“அதெப்படி முடியும்!. என்ன சொன்ன? உனக்கு பையன் பிறக்கட்டும் இது தான் என்னோட கல்யாணம் ஆன ரெண்டு பையனுக்கு அப்பா அண்ட் மூணாவது பெண் குழந்தைக்கு தகப்பனார் முறையில் நான் விடும் சாபத்தில் பத்தாயிரம் சுளிகளுடன் ஒருவன் பிறக்க வேண்டும் அவனை அனைவரும் கோபக்காரன் என அன்புடன் அழைக்க வேண்டும்!” என சூர்யா சொல்லி முடித்தான். 

இன்பா, “என்ன சுழி அப்படி எல்லாம் இல்ல எனக்கு சமத்தா லிட்டில் பிரின்ஸஸ் பொறக்க போகுது!”

சூர்யா, “பார்ப்போமே அதையும்!”

இன்பா,“ உனக்கு எப்டி மகி வயிற்றில் இருப்பது பொண்ணு அப்டின்னு தெரியும்!”

சூர்யா, “எனக்கு தெரியும் என் பொன்னு பேரு ‘இதழினி சூர்ய தேவ்!’ என்னோட இன்ஸ்டிங்ஸ் சொல்லுது! ஒவ்வொரு தடவை அவள் வயிற்ற வருடி பார்ப்பேன் கொஞ்ச நேரம் கதை பேசி டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன்!”

இன்பா, என்ன டா “இதழினி”

சூர்யா, “உலகத்தில் அந்த சண்டக்கோழி பேரு தான் அதிசயம் அப்டின்னு சீன் போடுரா மச்சி! என் பொண்ணு அவளுக்கு டஃப் கொடுப்பா! இந்த மொத்த சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் , கதாநாயகிகளுக்கே டஃப் கொடுப்பா அவ்ளோ அழகி என் பொண்ணு! ஒரு நாட்டோட பிரின்ஸ்க்கு என் பொண்ணை கட்டி கொடுப்பேன்” என்று கூறினான். 

இன்பா, அதென்ன சினிமா? 

சூர்யா, அது படிப்பவர்களுக்கு  clue மச்சி!.  

இன்பா, அப்போ டையிலி மஜா தான்!. ,

சூர்யா, நீ வேற இப்போ கூட எனக்கும் அவளுக்கும் சண்டை டா! அந்த deer விஷயம் அவளுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு!  

இன்பா, என்ன டா சொல்ற அப்போ மகிக்கு எல்லா விஷயமும் தெரிந்து போச்சா? 

சூர்யா, ஏன் எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்கும் ஐடியா வச்சிருக்கியா? 

இன்பா, டேய் நீ தான டா சொன்ன? 

“எல்லாம் ஜெய் அப்டின்னு ஒரு கிருக்கன் என் கூட சுற்றி கொண்டு இருக்கான் அவனால் வந்தது! டெலிவரி வரைக்கும் டைம் கொடுத்து இருக்கா! அதுக்குள் நான் அது யாருன்னு சொல்லி வுடனும்!. அதான் என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல!” என சூர்யா வருத்தப்பட்டான். 

இன்பா மனதில் ரெண்டு ஒருவர் தான் அப்டின்னு தெரிந்தால் நீ என்ன பண்ணுவ? அவள் என்ன பண்ணுவா? அய்யோ நினைச்சாலே பயமா இருக்கு! என நினைத்து கொண்டான். 

சூர்யா, டேய் என்ன டா! ரொம்ப அமைதியா இருக்க!. 

ஒன்னும் இல்ல வா சாப்பிடலாம்!..என இன்பா அழைத்து சென்றான். 

இங்கே விவேகா, அக்கா!  

ம்ம் சொல்லு? 

விவேகா, அந்த தூரிகை கிட்ட இருந்து எதுவும் போன் வந்ததா? 

எதுக்கு கேட்கிற? 

விவேகா, சும்மா கா!. 

மகி, யாரும் எனக்கு போன் பண்ணல,  எனக்கு இருக்குற வேலையே செய்ய நேரம் இல்ல!. 

விவேகா, “சரி கா ரொம்ப நல்லது அதை அப்படியே மறந்து விடு!”

மகி ஒன்றும் புரியாமல்“ என்ன எப்போவும் குதித்து கொண்டு இருப்ப இன்னிக்கி புதுசா விட்டு விடு அப்டின்னு பேசுற? எனக்கு தெரியாம எதுவும் எக்ஸ்டிரா வேலை பண்ணயா!”

இல்ல கா என்னை நம்ப மாட்டியா! 

மகி, நீ கொஞ்சம் அதிக பிரசங்கி விவேகா! இப்போ கூட கேள்வி பட்டென்.இன்பா அண்ணாக்கு நீ ஓவரா இடம் கொடுத்து இப்போ என ஒற்றை கண் அடித்தாள். 

விவேகா, அக்கா அது அது வந்து அப்படி ஒன்னும் இல்ல!. யார் சொன்னா! 

மகி தெரியும் விடு என சிரித்தாள். 

விவேகாவின் முகம் சின்னதாக மாறி போக.. மகி, “ஹே ஃபீல் பண்ணாத! எனக்கு மருமகன் வேணும்!” 

விவேகா, எனக்கும் அது தான் ஆசை!. ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும்? 

மகி, அவர் போன் பேசிட்டு இருந்தார்! 

அந்த இன்பா சொன்னானா? 

மகி ஹே என்ன பேர் சொல்லி கூப்பிடுற!  அவர் ஒன்னும் சொல்லல உன்னோட மாமனார் கிட்ட அவர் பேசிட்டு இருந்தாரு! 

விவேகா, அது தானே பார்த்தேன்! இந்த இன்பா வெட்கம் கெட்டவன்!. அவன் சொல்ல வாய்ப்பு இல்ல! சரி விடுங்க!.

ஹே மறுபடியும் பேர் சொல்லி கூப்பிடுற!. 

விவேகா, அக்கா போ கா! வா சீக்கிரம் அங்கே கட்டு சொறு சாப்பிட போலாம்! எனக்கு புளிப்பா கொஞ்சம் சாப்பிட தோணுது! 

மகி, வாமிட் வருதா!. 

இல்ல வரது இல்ல!. 

மகி சிரித்து கொண்டே சரி வா சாப்பிட போலாம்! என இருவரும் சென்றனர். 

அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க இன்பா மற்றும் சூர்யா, ராம், கீதா, என அவர்கள் ஒரு புறம் வந்து அமர்ந்தனர்!

சூர்யா, சாப்பிடு மச்சி! 

இன்பா, இதை யார் சாப்பிடுவா! கொஞ்சம் கல்ப் இருந்தால் நல்லா இருக்கும்! இங்கே கலர் ரைஸ் இருக்கு!. 

சூர்யா, ஆமாம்ல!. எனக்கும் கொஞ்சம் கள்ப் வேணும் போலாமா! 

இன்பா, ஓகே போயிட்டா போச்சு! என இன்பா எழுந்து செல்ல .

ராம், டேய் எங்கே போறீங்க! 

இன்பா,  நீயும் வா லைட்டா போய் கட்டிங் போட்டு வருவோம்!..

ராம், டேய் என்ன டா சொல்றீங்க? கீதா இருக்கா!..

இன்பா, கீதாவுக்கு ஒயின் பிடிக்குமே கேட்டு சொல்லு!  

சூர்யா இதை கேட்டு சிரித்து கொண்டே கீத்து! உனக்கு ஒயின் ஓகேவா!  

இன்பா, சொல்லு சைட் டிஷ் என்ன வேணும்! 

கீதா, நானும் வரேன்! இங்கே வேணாம்! ஒரு லாங் ட்ரைவ் போலாம் இன்பா சுபாவை வர சொல்லு! ஜாலியா இருக்கும்! 

இன்பா, தட்ஸ் மை கேர்ள்!. 

ராம், டேய் என்ன என்ன டா உன்னோட கேர்ள்..  ஹான்  அவள் என் பொண்டாட்டி! 

சூர்யா, ராம் நீ ஹனிய பார்த்துக்க! நாங்க கிளம்புகிரோம்!. 

கீதா வா நான் சுபாவுக்கு போன் பண்றேன்!  போலாம்! பாண்டிக்கு வண்டிய விடு!

ராம், மகி! மகி! சூர்யா பாண்டிச்சேரி போறான் அப்படியே விவேகா  இவன் குடிக்க கம்பனிக்கு கீதாவை கூப்பிடுறான்!  

விவேகா சிரித்து கொண்டே போகட்டுமே! போயிட்டு அப்படியே உங்க வீட்டுக்கு போங்க! 

இன்பா, அப்போ நீ! 

நான் எங்க வீட்டுக்கு போறேன்! 

இன்பா, போயிட்டு அப்படியே உன்னை வருனை கொண்டு விட சொல்லு! 

விவேகா, “நான் வளைகாப்பு வரை இங்கே வர மாட்டேன்! என் மம்மி கூட இருக்க போறேன்! போ அப்படியே போயிடு!”

இன்பா வாய்க்குள் ரொம்ப நிம்மதி “போடி! உன்னோட உப்மா வென் பொங்கல் சாப்பிடுவதில் இருந்து நான் தப்பிப்பேன்!”

ராம், என்னமா நீ இப்படி பண்ணிட்ட மகி!. நீ என்ன சொல்ற? 

மகி, நீங்க என் கிட்ட சொல்றதுக்கு பதிலா நேரா அத்தை கிட்ட சொல்லி இருக்கலாம்! இங்கே பூஜையை போட்டு இருக்கலாம்! வாங்க அண்ணா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லுவோம்! என அழைத்தாள். 

கீதா, என்ன டி ஆள் ஆளுக்கு மிரட்டிறீங்க! 

மகி, அக்கா நீங்க ராம் அண்ணா கூட நிற்க்கணும்! 

சூரியா, “ஒண்ணு கூட்டி படைய திரட்டுறா இன்பா உனக்கு நான் என் பட்டு இதழ் பிறந்ததும் சிறப்பா ட்ரீட் கொடுக்கிறேன் டா! இப்போதைக்கு இதை சாப்பிடு!”

இன்பா, “விடு மச்சி எனக்கும் என்னோட பொண்ணு பிறந்ததும் நான் உனக்கு ட்ரீட் வைக்கிறேன் டா! கீத்து இதை விடு மா! நம்ம இன்னொரு நாள் பார்ட்டி பண்ணுவோம்!” 

ராம் ஒரு பெரு மூச்சை விட்டு நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தான். 

இன்பா விவேகாவை முறைத்து பார்த்தான். 

போடா! என முகத்தை திருப்பி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். 

ரிதம் மற்றும் மிதுன், சத்ய தேவ்,நிதின்  நால்வரும் வந்தனர். 

விவேகா, மிதுன் டார்லிங் வா நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம்! 

வரேன் டார்லிங்! என மிதுன் சென்றான். 

கீதா, சத்ய தேவ்! வா செல்லம் அத்தை உனக்கு ஊட்டி விடுறென்!. 

சத்ய தேவ் சென்று விட்டான். 

இன்பா, dimple வா செல்லம் என அவனும் அழைத்தான். 

நிதின் அங்கே நின்று கொண்டு இருக்க மகி, நிதின்!. வா என் கிட்ட வா! என அழைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். 

ரிதம், டாடி ஐ வான்ட் சம்திங் டு டெல் யூ!. 

இன்பா, சொல்லு செல்லம்!. 

ரிதம், ஆனால் நீங்க இதை பேபி கிட்ட சொல்ல கூடாது! 

ம்ம்! சரி!. 

ரிதம், அப்போ வீட்டுக்கு போய் சொல்றேன் என கூறினாள். 

எல்லாமே சரியாக போய் கொண்டு இருந்தது. 

தாரா மிகவும் கவலையுடன் ஒரு பக்கம் நின்று கொண்டு இருந்தாள். 

இங்கே மாயா மற்றும் ஶ்ரீ மதி….? 

தொடரும்.. 

 Episode 335,

சூர்யா மற்றும் இன்பா அவர்களின் பட்டாளத்துடன் சாப்பிட்டு முடித்தனர். 

விவேகா மகியின் அருகில் வந்து “அக்கா கூடிய சீக்கிரத்தில் பெங்களூர் ஷிப்ட் ஆக போறேன்! அதுக்குள் உங்களுக்கு தங்க குட்டி பிறந்து விடும்! சோ நான் பக்கத்தில் இருந்து பார்க்கலாம்!”

மகி அவளின் வயிற்றை நீவி கொண்டே ஹே கொஞ்சம் கவனமா இரு! 

என்ன கா? என புரியாமல் விவேகா கேட்டாள். 

மகி சிரித்து கொண்டே “இந்த மாதிரி நேரத்தில் ஒரு ஆறு மாசம் வரைக்கும் கொஞ்சம் தள்ளி இருக்கணும்! அதையும் மீறி  ஒட்டி கொண்டாலும் வயிறு குலுங்க கூடாது. அதான்!” 

விவேகா, அக்கா! நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் உள்ள!. 

மகி, எதுக்கு டி இப்படி பொய் சொல்ற? இதை யாரும் நம்புவார்களா! என சிரித்தாள். கல்யாண் மேடையில் மயக்கம் போட்டு விழுந்தியாமா! அப்டியா!.

விவேகா என்ன சொல்வது என தெரியாமல் நெற்றியை தேய்த்து கொண்டே அசடு வழிந்து சிரித்தாள். 

மகி, “சும்மா சொன்னேன் டி! சாரி! நீ எப்போவும்  ஹேப்பியா இருக்கணும்! என்னை விட நிறைய கஷ்ட பட்டு இருக்க! கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை உங்க அம்மா சிங்கிள் மதரா கஷ்ட பட்டு வளத்து இருக்காங்க! எல்லாமே எனக்கு தெரியும்! ஆனால் இப்போ குழந்தை வரம் சாதாரண ஒன்னு இல்ல கடவுள் அனுகிரகம் வேணும்! அதை பத்திரமா கொண்டு வரனும் அதுக்கு சொன்னேன் தப்பா எடுத்து கொள்ளாத!”

“இல்ல கா நான் அப்படி எல்லாம் நினைக்கல! உங்களை நான் எப்போவும் அப்படி நினைக்க மாட்டேன்!” என விவேகா கூறினாள். 

மகி, “போலீஸ்கார்  பார்க்க கொஞ்சம்  பயங்கரமா இருக்காரு! நீ ஒல்லியா கொடி போல இருக்க அதுக்கு தான்! என் மருமகன் வயிற்றில் இருக்கான்! அதான்!”

விவேகா சிரித்து கொண்டே  நிஜமா பையனா கா! எனக்கு பையன் மேல ரொம்ப ஆசை! எங்க அப்பா நினைப்பா இருக்கும்! இந்த ரிதம் அப்படியே இன்பா வீட்டை உரித்து வைத்து பிறந்து இருக்கா! 

மகி, உனக்கு பையன் தான்! ஆனால் எனக்கு பொண்ணு தான் பிடிக்கும் ரிதம், சிவி, பவா போல வேணும்! 

விவேகா, அப்போ என்ன பேர் வைக்க போறீங்க!  

மகி கண்கள்மின்ன தூரிகா அப்டின்னு ( இதழினி தூரிகை) வைக்க போறேன். 

விவேகா, அக்கா! நீ வேற லெவல்!  என இருவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். 

அதன் பின் இன்பா, விவேகா, ரிதம், ராம், கீதா என அனைவரையும் மகி மற்றும் சூரியா வழி அனுப்பி வைத்தனர். 

இன்பா சென்றதும் ஜெய் சூர்யாவுடன் வந்து ஒட்டி கொண்டான். 

சூர்யா, நான் உன் மேல கோபமா இருக்கேன்! 

ஜெய், அதை நான் சொல்லணும்! 

என்ன? 

ஜெய், உனக்கு என்ன கோபம்!. 

சூர்யா, காலையில் இருந்து என் பக்கம் வரவே இல்லை! என்னை பார்க்கவே இல்லை அந்த கீர்த்தி கூட ஒட்டி கிட்டு சுற்றி கொண்டு இருந்த!  

ஜெய், ஹே! நான் கீர்த்தி கூட இருந்தேன் ஆனால் நீ! மகிக்கு பதிலா அந்த போலீஸ் கூட லவ்வர் மாதிரி திரியுற!  

என்ன டா இப்படி பேசுற? அவன் என் பிரென்ட்? 

ஜெய், எனக்கு அவனை அவளோவா பிடிக்கல! உன் கூட இருக்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கல!  

சூர்யா எதுவும் சொல்லாமல் ஜெய்யை பார்த்து சிரித்தான்.

ஜெய் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு “இப்போ எதுக்கு சிரிக்கிற?”

சூர்யா ,“டேய் நீ பொறாமை படுற! அது உனக்கு தெரியுதா!”

ஜெய், இப்போதைக்கு சரி எப்பவும், நான் தான் உன்னோட ப்ரெண்ட் புரியுதா!  அவன் அப்போ அப்போ தான வந்துட்டு போறான்!  ஆனா நான் தான் உனக்கு நிரந்தரமாக பிரண்டு!  அதை ஞாபகத்துல வச்சுக்க!”

சூர்யா  அவனை பேச விட்டு எதுவும் பேசாமல் பார்த்தான். 

ஜெய், “அவன் கூட பாண்டி போறேன்னு சொல்ற!.. உனக்கு குடிக்கணும்னா சொல்லு!  நீயும் நானும் சேர்ந்து கோவா போலாம்! அப்படி இல்லன்னா டையு போலாமா? இல்ல டாமன் போலாமா? தாய்லாந்து போலாமா இல்ல ஸ்பீச் போலாம் ஸ்விட்ச் போலாமா? நீ சுவிட்சர்லாந்த் வரயா?” என்று கேட்டான். 

சூர்யா ஒரு அடி நகர்ந்து கொண்டே“ சரி நீ  என்ன லவ் பண்றேன்னு சொல்லிடாதடா!” என்று கூறினான் .

ஜெய் நான் உன்ன லவ் பண்ணல!. கீர்த்தியை தான் லவ் பண்றேன்!. நீ அவன் கூட சேர்வது எனக்கு பிடிக்கல!. அவ்வளவுதான் கூறினான் .

சூர்யா சரி சரி டென்ஷன் ஆகாத விடு நான் அவன்கிட்ட பேசல போதுமா! 

ஜெய்,  “நீ அவன் கூட பேசாம இருப்பியா? இது பொய் ! ஆனா என் முன் முன்னாடி பேசாத! இன்பா இருக்கும் போது நான் வர மாட்டேன்!”

சரி ஓகே! விடு வா என அழைத்து சென்றான். 

கலை வாணி ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார். பாக்யா, மதிவாணன் இருவரும் ஸிவி பவா இருவரையும் வைத்து கொண்டு இருக்க.. மை விழி தன் தாயின் அருகில் வந்தாள். 

தாரா ஒரு வித குற்ற உணர்வுடன் இருந்தாள். 

மை விழி, என்ன மா ஒரு மாதிரி இருக்கீங்க? 

கலை, எனக்கு இங்கே இருக்க பிடிக்கல! அந்த மாயா! அந்த மினுக்கி பொம்பள அவளை பார்த்தால் எரிச்ச ம**றா வருது டி என கூறினார். 

மை விழி, விடு மா! அவங்க தானே அவளை நாலு வருசம் பார்த்து கொண்டார்கள்! அதனால் இதை செய்து விட்டு போகட்டும் விடு!. வேற எதுவும் இல்லையே! 

கலை,“ ஶ்ரீ மதிய பார்த்தியா! என்னை ரோட்டில் போற ஆள் மாதிரி பார்த்திட்டு போறா! அவ்ளோ தான்ல சின்ன வயசுல இருந்து கைக்குள் போட்டு வளத்த ரெண்டு பேரையும் அந்த பொம்பள இப்போ அவள் கிட்ட வைத்து இருக்கா! மானு பாரு! மான்  விழிய என் பக்கமே விட மாட்டிக்கிறா!”

மை விழி, மா! மா இப்போ அவள் நம்ம வீட்டுக்கு தானே வர போறா! 

மகி மாயாவிடம் இருந்து மா இதோ வரேன்! என சொல்லி கொண்டே தாரா அருகில் சென்றாள். 

அண்ணி!. 

தாரா தன்னிலைக்கு வந்து கொஞ்சம் சிரித்து கொண்டே மான் விழி! என அழைத்தாள். 

மகி, நான் கொஞ்சம் பிஸி இல்லனா உங்க கிட்ட பக்கத்தில் வந்து இருப்பேன்! 

இட்ஸ் ஓகே பரவாயில்லை மான் விழி!. 

மகி அவளின் முகத்தை பார்த்து கொண்டே அன்று குறி சொல்லும் பெண் சொன்னது நினைவு வர! உடனே அவள் தாராவின் அருகில் நெருங்கி அமர்ந்தாள். 

என்ன அண்ணி உங்க முகம் டல்லா இருக்கு!. 

ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன். அப்புறம் பேபி எப்டி இருக்கு!  

மகி சிரித்து கொண்டே என் பாபாக்கு ஏழு மாசம் அதனால் ஒரே சேட்டை எட்டி உதைக்கும்!.

தாரா சிரித்து கொண்டே அப்டியா? அது எப்படி இருக்கும்!  

மகி, “கொஞ்ச நேரம் இருங்க! இப்போ தான் அமைதியா இருக்காங்க சின்ன மேடம்! ஹே உன்னோட அத்தை வந்திருக்காங்க!”என சொல்லி சிரித்தாள். 

தாரா கொஞ்சம் சிரித்தாள். உடனே மகி இது தான் சந்தர்ப்பம் என அண்ணி உங்க கிட்ட ஒரு விசயம்!  

ம்ம் சொல்லுங்க!. 

மகி அவளின் கையை பிடித்து கொண்டு எதுவும் குட் நியூஸ் இருக்கா! 

தாரா, ஒன்றும் புரியாமல் பார்த்தாள். 

மகி, அண்ணி அது வந்து நீங்க தானே சொன்னீங்க நடிப்பதை தள்ளி போட்டு விட்டு … என தயங்கி கொண்டே கூறினாள். 

தாரா, பேபி பற்றி கேட்கிறீங்களா? 

மகி,  உங்களுக்கு கல்யானம் ஆகி நாலு மாசம் தான் ஆகுதுன்னு தெரியும்! சும்மா ஒரு ஆர்வம்! எங்க வீட்டு அதாவது எங்க அப்பா வீட்டு வாரிசு எங்க அண்ணா குழந்தை தானே அதனால் கேட்டேன்.  தப்பா நினைக்க வேணாம்!  

தாரா சிரித்து கொண்டே அதனால் என்ன? அப்படி இருந்தால் உங்க கிட்ட தான் முதலில் சொல்லுவேன்!  ஆனால் இப்போ… இப்போ!.

மகி மனதில் கொஞ்சம் ஏமாற்றம் ஆனால் அதை வெளி காட்டி கொள்ள வில்லை. உடனே அவள் அந்த அளவுக்கு லவ் போல எங்க அண்ணா உங்களுக்கு கேப் கொடுக்கிறானா? என பேச்சை மாற்றினாள் . இதை கேட்டதும் தாரா முகத்தில் சிரிப்பு தோன்றியது. வெட்கம் இன்னும் கொட்டி கிடந்தது. 

மகி, எனக்கு ஒரு டவுட்டு!. 

ம்ம் கேளுங்க!  

மகி, “நீங்க விளம்பர படத்தில் நடிக்கும் போது உங்க சிரிப்பை வேற மாதிரி இருக்கும் ஆனால் இப்போ உங்க சிரிப்பை வேற மாதிரி இருக்கு!”

தாரா, அது நடிப்பு நாங்க பொய்யா சிரிப்போம்! அது செயற்கை சிரிப்பு! ஆனால் நிஜ வாழ்க்கையில் எல்லாமே நிஜம் தான் அப்போ தான் இந்த ஃபீல் வரும்!  சிரிப்பு சந்தோசம் இது எல்லாம்!..

மகி, அப்போ காதல் காட்சியை எப்டி பிடிப்பீங்க!. 

தாரா சிரித்து கொண்டே அந்த இடத்தில் எங்களை சுற்றி ஒரு ஐம்பது பேர் இருப்பாங்க! ரொமாண்டிக் ஃபீல் எல்லாம் இருக்காது! கேமரா சில நேரத்தில் பக்கத்தில கூட இருப்பாங்க! ஆனால் நீங்க படத்தில  பார்க்கும் போது உங்களுக்கு ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேர் மட்டும் இருக்கிற மாதிரி தெரியும்! ஆனால் அதுக்கு பின்னாடி நிறைய பேர் இருப்பாங்க! 

மகி, நீங்க நடிப்புல பிரில்லியன்ட்!  

தாரா,அதை வைத்து என்ன பண்றது! என் பையனுக்கும் பொண்ணுக்கும் உங்க அறிவு அப்புறம் அவரோட அறிவு  வேணும்!  என சிரித்தாள். 

மணி இப்பொழுது 2 இருக்கும்!. 

அந்த நேரம் உதயன் அவசர அவசரமாக வந்தான். மகி! மகி! என கூவி கொண்டே வந்தான்.

மகி எழுந்து நின்றாள்!. 

உதயா!. 

உதயன், உமா மற்றும் நட்ராஜ் இருவரிடமும் நலம் விசாரித்து விட்டு வேகமாக தாரா இருக்கும் இடத்துக்கு வந்தான். 

வசந்தன், உதயா!  

அப்பா! என தன்னை அசுவாச படுத்தி கொண்டே  கூறினான்.!

அந்த நேரம் ஶ்ரீ மதி சோர்வுடன் அமர மாயா, என்ன ஶ்ரீ கண்ணா ரெண்டு மூணு நாளா ரொம்ப டயர்டா இருக்க!  

ஒன் ஒன்னும் இல்ல அத்தை! 

மாயா, உன்னோட கைய கொடு!  என கேட்டார். 

ஶ்ரீ மதி, “அத்தை நான் எனக்கு தெரியல ஒரு வேளை கன்சீவ்  அப்டின்னு தோணுது!”

 இதை கேட்டதும் மாயா…? 

தொடரும்.. 

Episode 336

மாயா, உன்னோட கைய கொடு!  என நாடி பிடித்து பார்க்க  கேட்டார். 

ஶ்ரீ மதி, “அத்தை நான் எனக்கு தெரியல ஒரு வேளை கன்சீவ்  அப்டின்னு தோணுது!”

மாயா அவளின் முகத்தை கைகளில் ஏந்தி பார்த்தாள். 

அத்! அத்தை!. 

மாயா கண்களில் நீர் கோர்க்க “இன்னிக்கு எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா! உன்னையும் வருணயும் நினைச்சு நான் தினம் தினம் கவலை பட்டு இருக்கேன்.  உங்க கல்யாணம் திடீர்னு அவன் அவசர பட்டு உன் சம்மதம் இல்லாமல் கட்டி விட்டான். என எனக்கு ரொம்ப தோணுச்சு! நான் சரியா தூங்க கூட இல்ல ஆனால் இன்னிக்கு! இன்னிக்கி! ”என அழுது கொண்டே சிரித்தார். 

ஶ்ரீ மதி தலை குனிந்து கொண்டே “எனக்கு அவரை பிடிக்கும்! என்னை எனக்கே எனக்காக மட்டும் நேசித்தார். நான் யாருன்னு கூட தெரியாமல் பார்த்ததும் அவர்க்கு என்னை பிடிச்சு இருந்தது. அதை விட சின்ன வயசில் இருந்து நேசித்த ஒருத்தர் மேல வராத நேசம் எப்டி இவருக்கு நம்ம மேல அப்டின்னு அவரை நினைத்து நான் அதிசய பட்டு இருக்கேன். அவர் எனக்கு கிடைக்க கொடுத்து வைத்து இருக்கணும்! அதை விட நீங்க!  நீங்க பெற்ற பொண்ணு கூட இல்ல மகி அவளையே நீங்க எவ்ளோ நேசிக்கிரீங்க! அப்போ நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்!”

மாயா அவள் நெற்றியில் முத்தம் பதித்தார். வருண் அவர்களின் நெருக்கத்தை பார்த்து வருண், என்ன மா! ரொம்ப ஒற்றுமையா இருக்கீங்க என சொல்லி கொண்டே அருகில் வந்தான். 

உதயன் நேராக தாராவை தேடி சென்றான். தாராவின் கைகளை பிடித்து கொண்டு தனியாக சென்றான். 

மாயா சந்தோசத்துடன் ராஸ்கல் என அவனை கட்டி கொண்டார். 

என்ன மா! என்ன ஆச்சு? 

மாயா, ஶ்ரீ மதி கன்சீவா இருக்கா!  

வருண், என்ன? அதுக்குள் எப்படி! 

டேய் என காதை திருகினார். 

வருண் சிரித்து கொண்டே நிஜமாவா! என் கடமை முடிந்தது. மிதுன் க்கு பொண்ணு ரெடி! அப்புறம் நீங்க நினைத்தது போல மகி நம்ம வீட்டில் இருப்பா! எப்டி மகி, மதி ரெண்டையும் தட்டி தூக்கிட்டென்! 

ஶ்ரீ மதி வெட்கத்துடன் சிரித்து கொண்டே தலையை கவிழ்த்து கொண்டாள். 

வருண், இதை கொண்டாடனும் மகியால தான் எல்லாமே! என் தங்கை!  மா அவளுக்கு ஸ்வீட் ஊட்டி சொல்லுங்க மா! 

மாயா, இதோ என சொல்லி கொண்டே புன்னகையுடன் ஸ்வீட் எடுக்க சென்றார். 

ஶ்ரீ மதி நின்று கொண்டு இருக்க.. வருண், என் கிட்ட மறைத்து விட்டீங்க டாக்டர் மேடம்! 

அப் அப்படி இல்ல என கீழே குனிந்து கொண்டே பதில் அளித்தாள். 

வருண், ஶ்ரீ ஹேப்பி டி! நீ தான் என்னோட லைஃப்ல ட்ராஸ்டிக் சேஜ்!  ரொம்ப தேங்க்ஸ்!.. 

ஸ்ரீமதி “அத நான் தான் உங்ககிட்ட சொல்லணும்! ஆக்சுவலா அன்னைக்கு கல்யாண மேடைல உண்மையாவே நான் என்னையே மறந்து ஒரு நிலைக்கு  போயிருந்தேன்.உடனே அடுத்த கல்யாணத்துக்கும் என்னால அடுத்து எதுக்குமே நான் தயாரா இல்லை. இன்பாக்ட் நான் ரொம்ப மோசமான நிலைமையில் இருந்தேன்! ஆனா நீங்க என்னோட வாழ்க்கையில உண்மையாகவே ஒரு வரம் தெரியுமா! நீங்க வந்ததுக்கப்புறம் தான் என்னை நீங்க பாத்துக்குற ஒவ்வொரு விஷயமும் எனக்கு ஆச்சரியமாக அதிசயமாகவும் இருந்துச்சு! நம்மள ஒருத்தவங்களுக்கு பிடிக்குமா அப்படின்னு நான் நினைச்சேன்! நான் பீல் பண்ண அந்த நொடி அது சொல்ல வார்த்தையே இல்ல! நீங்க எனக்கு கிடைச்சது தான் வரம் நீங்க என் வாழ்க்கையில வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!” என்று கூறினாள் .

வருண்,அப்போ போதும்! போதும் உன்னோட தேங்க்ஸ் !

 ஸ்ரீ,மதி, ம்ம்  என பதிலளித்தாள்.

வருண், இப்படியே மெது மெதுவா பேசு டி ஆனா என்னை நிமிர்ந்து மட்டும் பார்த்து பேசிறாத !.

அது என கொஞ்சம் சிரித்தாள். 

வருண், நாலு மாசமா இப்படியே குனிஞ்சு எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்ட  என்று சிரித்துக் கொண்டே கூறினான். 

ஸ்ரீமதி, அது!..என்னன்னு தெரியல உங்கள நிமிர்ந்தி பார்க்க எனக்கு ரொம்ப சையா இருக்கு!.

 வருண் , அது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ! என்று கூறினான்.

சரி என்று இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க… அந்த இடத்திற்கு சாரதா வந்தார்.

ஸ்ரீமதி!..மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டே வந்தார்.

வருண் சந்தோஷமான முகத்துடன் அத்த உங்களுக்கு  ஒரு பயங்கர நியூஸ் சொல்ல போறேன்!

 சாரதா புரியாமல் “என்ன மாப்பிள்ளை? என்று கேட்டார்.

“நான் இல்ல ஸ்ரீமதி சொல்ல போறா!. ஸ்ரீ சொல்லு!. அத்தை கிட்ட சொல்லு” என்று கூறினான் .

சாரதா ஒன்றும் புரியாமல் ஒரு வித பதட்டத்தில் தான் இருந்தார். ஏனென்றால் சாரதாவுக்குமே மிகவும் பயமாகவும் கவலையாகவும் இருந்தது.  ஸ்ரீமதி மற்றும் இருவருடைய கல்யாணம் எந்த விதத்தில் நடந்தது? ஸ்ரீமதியின் மனநிலை என அனைத்தையும் நினைத்து சாரதாவிற்கு மிகவும் மன வேதனையாகவும் இருந்தது. மாயா எந்த அளவுக்கு கவலைப்பட்டாரோ அதைவிட சாரதா அதிக கவலைப்பட்டார். ஒரு பெண்ணின் திருமணம் மணமேடையில் நின்றால் அது எவ்வளவு அவமானம் எவ்வளவு மன கஷ்டத்தை கொடுக்கும்! என்று தாய்க்கு தான் புரியும்! அதே போல் சாரதாவிற்கு உதயன் மீதும் மிகவும் கோபமாகவும் இருந்தது கலைவாணி மீதும் அவருக்கு கோபம் தான் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் சாரதா அவருடைய குடும்ப வளர்ப்பு அப்படி அதனால் அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.ஆனால் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

சாரதா ஒரு வித பதட்டத்துடன் “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? என்று கேட்டார்.

வருண் சிரித்துக் கொண்டே “இனிமே நாங்க உங்க வீட்டுக்கு வந்தா மூணு பேரும் வரப்போறோம்!” என்று கூறினான.

 சாரதா ஒன்றும் புரியாமல் என்ன மாப்ள சொல்றீங்க? 

வருண் சிரித்துக் கொண்டே மகிக்கு இப்போ எப்படி ஏழு மாசத்துல வளைகாப்பு பண்ணினார்களோ அதே மாதிரி ஸ்ரீ மதிக்கு இன்னும் நாலு அஞ்சு மாசம் கழிச்சு வளைகாப்பு பண்ணனும்னு நினைக்கிறேன்!  பண்ணப் போறோம்!

 சாரதாவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது. சந்தோஷத்தையும் தந்தது.  என்ன சொல்றீங்க? என்று கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

உடனே வரும் ஆமா அத்த ஸ்ரீமதி இப்போ மாசமா இருக்கா!

 இதை கேட்டதும் சாரதா தன் மகளைக் கட்டிக் கொண்டார். நெஞ்சு குமுறி  அழுதாள் . இதை எப்படி?இந்த சந்தோஷத்தை எப்படி எதிர்கொள்வது? என்று தெரியவில்லை .

அந்த அளவுக்கு இது இரட்டிப்பான சந்தோஷம் அவர் உண்மையாகவே மகிழ்ந்து நின்றார்.

சாரதா அழுவதை பார்த்துவிட்டு செல்வம் வேகமாக ஓடி வந்தார் .என்ன ஆச்சு சாரதா! ஸ்ரீமதி என்னடா? ஆச்சு ஏன் அழற? என்று கேட்டார் .

வருண் , மாமா நீங்க தாத்தா ஆகிட்டீங்க! என்று கூறினான்.

வசந்தன், என்ன சொல்றீங்க!என்று பதட்டத்துடன் கேட்டார்.

வருண், ஆமா ஸ்ரீமதி மம்மி ஆகிட்டா!  

செல்வம் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். பக்கத்தில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டார்! என்ன நினைத்தாரோ! உடனே எழுந்து வருண் கைகளை பிடித்து கொண்டு “மாப்பிள்ளை நீங்க!.. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களா! எனக்கு பேர குழந்தை வர போகுதா!” என கண்களில் கண்ணீரே வந்தது. 

மை விழி, “அம்மா மாமா அங்கே அழுத்திட்டு இருக்காரு!”

கலை தன் அண்ணனை பார்த்தாள்.

மை விழி, அம்மா போ போய் ஒரு வார்த்தை கேளு மா!. 

அவர்  சரி என சொல்லி விட்டு மை விழி மற்றும் களை இருவரும் நேராக செல்வம் அருகில் சென்றனர். 

மாயா அதற்குள் இனிப்பு எடுத்து வந்தார். வருண் அருகில் வரவும் கலை செல்வத்தின் அருகில் வரவும் சரியாக இருந்தது. 

அண்ணா! என்ன ஆச்சு? எதுக்கு அழுகிற!. என கேட்டு கொண்டே வந்து நின்றார். 

செல்வம் திரும்பி பார்த்து விட்டு கண்ணை துடைத்தவர். “கலை ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன்! நீ! உனக்கு என் கிட்ட பேச இத்தனை நாள் ஆச்சு போல என்னை பார்க்கனும் அப்டின்னு கூட தோணல! நம்ம வீடே எப்போவும் இருப்ப ஆனால் ஒரு நாள் கூட என்னை பார்க்க தோணல!”

கலை, “எந்த முகத்தை வைத்து கொண்டு வரட்டும்! எனக்கு வேதனையா இருக்கு! சீக்கு வந்து சாக கூட தோணுது! என்னை மன்னிச்சடு அண்ணா! ஆனால் நான்! இதுக்கும் எனக்கும்! சாரதா! உன் முகத்தை பார்க்க என்னால்!. ”என அழ ஆரம்பித்தார். 

ஶ்ரீ மதி, அத்! அத்தை!. 

கலை அவளை கண்டு கொள்ளாமல் “சரி அண்ணா வீட்டுக்கு வாங்க!” என சொல்லி கிளம்பினாள்.

ஶ்ரீ மதி, அத்தை! அத்தை!  

சாரதா, அண்ணி உங்களை தான் கூப்பிடுரா!. 

கலை அழுது கொண்டே “நான் அவளுக்கு அத்தை இல்லை. நான் ரோட்டில் போற ஒரு பொம்பள அவ்ளோ கஷ்ட பட்டு கூப்பிட வேணாம்!”

ஶ்ரீ மதி வேகமாக கலை அருகில் சென்று கட்டி கொண்டாள். “நான் உங்களை எப்போவும் வேற ஆள் மாதிரி நினைச்சது இல்லை. ஆனால் நீங்க தான்! என்னை!. என் முகத்தை கூட பார்க்க மாட்டிக்கிற! ஒரு வேளை நான் நம்ம வீட்டுக்கு மாமாவை கட்டி கொள்ளவில்லை என்பதால் என் கிட்ட பேசலயா!”

கலை, நீ என் சாமி! தெரியுமா! என் வயிற்றில் பிறந்த நாய் பொருத்தம் இல்ல! என கையை மூடி கொண்டு அழுதாள். 

ஶ்ரீ மதி, அத்தை வேணாம் அழ வேணாம் என கட்டி கொண்டாள். 

கலை அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தம் வைத்தார். நிஜமாவே நான் இதை எதிர் பார்க்கல ஶ்ரீ குட்டி! அத்தைய ண்ணிச்சிடு!. 

ஶ்ரீ மதி அவர் கன்னத்தில் முத்தமிட்டு எனக்கு உங்களை பார்க்க வர தோணும் ஆனால் என்னை பார்த்தால் உங்களுக்கு இந்த நியாபகம் வந்திச்ன்னா அதுக்கு தான்! அதுக்கு தான்! 

மகி நேராக வயிற்றை பிடித்து கொண்டு வந்தாள். சூர்யா நேராக வருண் அருகில் போய் நின்றான். மாயா அமைதியாக இருக்க..

கலை தன்னை அசுவாச படுத்தி “சரி டி செல்லம் அத்தை வீட்டுக்கு வா !” 

ம்ம் என ஶ்ரீ மதி கூறினாள். 

மாயா, மகி! இங்கே வாடா வந்து உட்காரு!. என அழைத்தார். 

மகி நேராக மாயா அருகில் சென்றாள். கலை அங்கு நடப்பதை பார்த்தார். 

மாயா, மகி இந்தா ஸ்வீட் இதை ஶ்ரீ மதிக்கு ஊட்டி விடு!. 

மகி, என்ன மா! என்ன விசயம்? 

சாரதா, ஶ்ரீ மதி மாசம் ஆகி இருக்கா!. 

இதை கேட்டதும் மகிக்கு சந்தோசம் அதோடு கூடவே  கொஞ்சம் வருத்தம் ஒட்டி கொண்டது. இன்னும் தாரா கரு ஆக வில்லையே! என நினைத்து கொண்டே ஆனால் அதை வெளி காட்டாமல் ஶ்ரீ! என அழைத்தாள். 

கலை, மை விழி அனைவரும் சந்தோசத்துடன் இருந்தார்கள். 

சூர்யா, மச்சான் சாதிச்சிட்ட! 

வருண், எனக்கு மிதுன் மாப்பிள்ளை வேணும்! சோ அதுக்கு தான்! மிதுன் என்னோட மாப்பிள்ளை விட மாட்டேன் மாமா! 

சூர்யா, இப்போ கூட கூட்டி போ! எனக்கு நிம்மதி!. 

கலை, மானு!  இங்கே கொடு! நான் ஊட்டி விடுகிறேன்! என சொல்லி நெட்டி முறித்து நல்ல படியா பெற்று கொடு! அப்புறம் வெளியே போக கூடாது. இந்தா செல்லம் மகி உன்னோட இந்த வேப்பிலை வளையல் கொடு! என அவள் கையில் இருந்து வாங்கி போட்டுவிட்டார். 

செல்வம், என் கலை ராசியானவள்! என சந்தோசத்துடன் பார்த்தார். 

சாரதா, “ரொம்ப சந்தோசம்! கல்யாணம் ஆன நாலு மாசத்தில் நல்ல சேதி சொல்லி இருக்க ரொம்ப சந்தோசம் ஶ்ரீ மதி!” என கூறினார். 

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே உதயன் தாராவை சமாதானம் செய்து அழைத்து வந்தான். 

அவர்கள் இருவரை பார்த்ததும் மகி மனதில் கவலை எட்டி பார்த்தது. 

உடனே அவள் எழுந்து கொண்டு மாயாவிடம் நீங்க இருங்க மா நான் பாத் ரூம் போயிட்டு வரென்! என சொல்லி விட்டு நேராக உதயன் பக்கம் சென்றாள். 

மகி, அண்ணி! அண்ணா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடவே இல்லை வாங்க போலாம்!  என அழைத்து சென்றாள். 

உதயன், இரு மகி நான் மாமா கிட்ட பேசிட்டு வரேன்! 

மகி, அண்ணா அப்புறம் பேசி கொள்ளலாம் நீ வா! 

உதயன், நீ தாராவை கூட்டி போ நான் வரேன்! என சொல்லி கொண்டே அவன் சென்றான். 

மகியின் முகத்தில் கவலை அப்பி கொண்டது. செல்வத்தின் அருகில் உதயன் சென்றான். 

மாமா!. 

செல்வம் அவன் குரலை கேட்டதும் எதுவும் பேச வில்லை அமைதியாக இருந்தார். 

மகி, அண்ணி நீங்க வாங்க! நம்ம போலாம்! 

இல்ல மான் விழி அவர் வரட்டும்!. 

கங்கிராட்ஸ் ஶ்ரீ மதி அண்ட் வருண் நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா ஆகி விட்டீர்கள்! என சொல்லி கொண்டே ஒரு பூங்கொத்து எடுத்து கொண்டே புலி போல் பதுங்கி கொண்டே பூனை நடையுடன் வந்தாள். 

தேஜு….? 

இதை கேட்டதும் உதயன் அப்படியே நிற்க தாரா முகம் சுனங்கி போனது. 

மகி தாராவின் கையை பிடித்து கொண்டாள். 

சூர்யா…? 

தொடரும்.  

Episode 337

கங்கிராட்ஸ் ஶ்ரீ மதி அண்ட் வருண் நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா ஆகி விட்டீர்கள்! என சொல்லி கொண்டே ஒரு பூங்கொத்து எடுத்து கொண்டே புலி போல் பதுங்கி கொண்டே பூனை நடையுடன் வந்தாள். 

அனைவர் பார்வையும் அந்த குரல் வரும் சத்தம் பக்கம் திரும்பினார்கள். 

தேஜு அவளுடைய கூந்தலை முன்னால் போட்டு கொண்டு அந்த மஞ்சள் நிற பட்டு புடவையில் சிவப்பு வண்ண பிளோவுஸ் என மிகவும் அழகாக குடை ஜிமிக்கி தஞ்சாவுர் பொம்மை போல ஆடியது.  கையில் ஒரு பெர்ஸ், கூடவே ஒரு பூங்கொத்து கொண்டு வந்தாள். 

வருண் மற்றும் ஶ்ரீ மதி என அவர்கள் பார்வை தேஜு மீது இருக்க அவள் நேராக உதயனை தாண்டி ஶ்ரீ மதி அருகில் சென்றாள். 

வாழ்த்துக்கள்! என சொல்லியவள். அதே போல் சூர்யா அருகில் சென்று அந்த பூக்களை நீட்டினாள். வாழ்த்துக்கள்! உங்களுடைய குழந்தைக்காக!.. என தேஜூ கூறினாள். 

சூர்யா அவளை கழுகு பார்வையுடன் வாங்கி கொண்டா. அங்கு இருக்கும் அனைவரும் அவர்களுக்குள் பேசி கொண்டார்கள். 

“அந்த ஹீரோயின் கூட இன்னும் மாசம் ஆகல ஆனால் ஶ்ரீ மதி!! மாயா மருமகள் மாசம் ஆகி விட்டாள்!”என ஒரு பெண் பேசி கொண்டு இருக்க அதை தொடர்ந்து இன்னொரு பெண் “ஆனால் இன்னும் கலை மருமகள் ஆகல! இது தான் அந்த உதயன் ஏமாற்றி அந்த ஶ்ரீ மதிய மண மேடையில் விட்டு போனானே அந்த பாவம் தான்! இப்போ வந்து சேர்ந்து இருக்கு!” என பேசினார்கள். 

சூர்யா, “அத்தை உங்க பொண்ணை பார்த்து கொள்ளுங்கள் இப்போ தானே வந்திருக்காங்க கவனிங்க!”

தேஜு அவனை புருவம் நெருக்கி பார்த்து கொண்டே கலையை பார்த்தாள். 

சூர்யா, அத்தை உங்களை தான்!. 

தேஜு படபடக்கும் இதயத்துடன் சூர்யாவை பார்த்து என்ன சூர்யா!. என்ன சொல்ற!. 

சூர்யா, “மாயா அத்தை உங்களை தான்! Spr உங்களுக்கு மருமகன் அப்டின்னா இவள் உங்களுக்கு பொண்ணு மாதிரி தானே கிட்ட தட்ட மகி போல!”

மாயா, அ ஆமா! மாப்பிள்ளை. சரி தான்! 

சூர்யா,“ நீங்க தானே இந்த சீமந்த பொறுப்பை எடுத்து பண்ணிட்டு இருந்தீங்க அப்போ இவளையும் நீங்க தான் கவனிக்க வேணும்!”

தாரா அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மன வருத்தத்துடன் ஓடி போக மகி அண்ணி! அண்ணி! என அவளின் கைகளை பிடித்து கொண்டாள். 

தேஜு, என்ன வார்த்தைக்கு வார்த்தை அவள் இவள் அப்டின்னு பேசுற! கொஞ்சம் மரியாதை கொடுக்க சொல்லி தரலயா!. 

சூரியா, “அதை உனக்கு சொல்லி கொடுத்து இருக்காங்களா? இப்படி ஒரு பொண்ணை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. எல்லா பெரியவர்களும் பேசிட்டு இருக்கும் போது நீ பாட்டுக்கு உள்ளே வர!அத்தை கொஞ்சம் கவனிங்க!”என சொல்லி விட்டு அவன் உதயன் பக்கத்தில் சென்றான். 

தேஜு உதயனை தெனாவட்டு பார்வையில் பார்த்து கொண்டு நின்றாள். 

சூர்யா, செல்வம் சார்!  

செல்வம், நான் உங்களுக்கு சாரா! மாமா! உங்க மருமகன் என்னை சாருண்ணு சொல்றாரு!

சூர்யா அவேர் அருகில் வந்து என் மச்சான் பண்ணது தப்பு தான் ஆனால் விருப்பம் இல்லாத கல்யாணம் ரெண்டு பேர் வாழ்க்கையையும் பாதிக்கும் உங்களுக்கு தெரியாதா! 

செல்வம், “எப்படி சூரியா என்னை ஏற்று கொள்ள சொல்ற! என் மொத்த உசுறயும் இவன் மேல வைத்து இருந்தேன்.என் பையனை கொஞ்சையதை விட  உதயன தான் கொஞ்சி தூக்கி வளர்த்து இருக்கேன்!”

சூர்யா, சித்தப்பா அவரை நீங்க உங்க தங்கச்சி பையனா மட்டும் பாருங்க! ஶ்ரீ மதிய வருண் மாப்பிள்ளை கண்ணுக்கு கண்ணா பார்த்து கொள்வார். இனி என் மச்சான நீங்க அடிக்கடி சந்திக்க போறது இல்ல எதாவது விசேசத்தில் தான் பார்த்து கொள்வோம்! ஒரு சின்ன தலை அசைப்பு கொஞ்சம் சிரிப்பை தவிர வேற என்ன தேவை பிளீஸ் அவரை மன்னித்து விடுங்கள். 

உதயன் தன் மாமனை பார்க்க செல்வம் கஷ்ட பட்டு பார்த்தார். 

உதயன், “மாமா பிளீஸ் மாமா! ஶ்ரீ மதிய நித்யாவை ரெண்டு பேரையும் எனக்கு மனைவியா நான் நினைச்சு பார்க்கல! ஶ்ரீ மதி அப்படியே மகி மாதிரி இருக்கா எப்டி மாமா அவளை நான் கட்டி கொண்டு குடும்பம் நடத்த முடியும்!”

செல்வம், இதை மணமேடையில் வந்து தான் சொல்ல தோணுச்சு போல! என்னோட மாப்பிள்ளைக்கு என உதயனை குத்தி காட்டி பேசினார். 

உதயன், “எனக்கு உங்களை சங்கட படுத்த தோணல! மனச கல் ஆக்கி கொண்டு தான் வந்து உட்கார்ந்தேன். அதுக்கு மேல என்னால் முடியல! என்னை மன்னித்து விடுங்கள்!”

செல்வம், மன்னிக்க என்ன இருக்கு! நீ விட்டு போனது கூட நல்லது தான்! எனக்கு தங்கமான மாப்பிள்ளை கிடைத்து இருக்கார்! என வருணை பார்த்து கொஞ்சம் பெருமையாக கூறினார். 

உதயன், மாமா சரி மாமா! என கட்டி கொண்டான். 

செல்வத்துக்கு அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க மனது இல்லை பெற்றவர்கள் எண்ணத்தை பிள்ளைகளுக்கு திணிக்க கூடாது. அவரும் கட்டி கொண்டார். 

உதயன் அவரின் கையை பிடித்து கொண்டான். 

செல்வம், சரி அதை விடு நாலு மாசம் ஆக போகுது முதன் முதலில் ஆக்கி போட்டு விருந்து நான் தான் கொடுத்து இருக்கணும் நீ வரல சோ இந்த வாரம் ஞாயிறு வீட்டுக்கு உன் மனைவியை கூட்டி வா! அம்மாச்சி( கண்ணம்மா) வேற உன்னை கேட்டு கிட்டே இருக்கு! 

கலைக்கு இதை கேட்டதும் அண்ணா! நீ உன்னை மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க நான்! அண்ணா உன் கூட பிறக்க நான் கொடுத்து வச்சு இருக்கணும் என அழுது கொண்டே கையை பிடித்து கண்ணில் வைத்து கொண்டார். 

செல்வம், “கலை என்ன இது! உதயன் என்னோட முதல் மகன்! என் பையனை விட அவனை தான் என் உயிர்! நானும் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்!”

சூர்யா தேஜூ அருகில் வந்து இப்போ எரி மலை வெடிக்குற மாதிரி இருக்கு போல மேடம் நினைத்தது நடக்கள போல! 

தேஜு அவனை முறைத்து பார்த்தாள். 

சூர்யா, உன்னால் இங்கே ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அப்படியே உன் partner mister spr போல!  

தேஜு, டேய் * 

சூர்யா, நானும் சொல்லிடுவேன் ஆனால் என்னை எங்க அம்மா ரொம்ப நல்ல பையனா வளர்த்து இருக்காங்க கெட்ட வார்த்தை தெரியாது. அதுவும் ஒரு பொண்ணை பார்த்து! ம்ம்- ஹி-ம் என கூறி விட்டு சென்றான். 

தேஜூ பற்களை கடித்து கொண்டு நின்றாள். உதயன் நேராக வருண் அருகில் சென்று வாழ்த்துக்கள் கூறினான். வருண் எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் கை குலுக்கினார்கள். 

அதன் பின் அவன் சாரதா, சதீஸ் இருவரிடமும் பேச வர அவர்கள் அவனை தவிர்த்து விட்டு சென்றார்கள். 

சூர்யா, “எல்லாமே ஒரே நாளில் மாறாது மச்சான்! நீங்க விடுங்க!”

உதயன் சரி மாமா என நெற்றியை துடைத்தான். 

அப்பொழுது தான் தேஜூ அங்கே இருப்பது நினைவு வந்தது. அதற்குள் யாரோ பின்னால் இருந்து அவனை அழைப்பது போல இருந்தது. 

உதயன் திரும்பி பார்க்க அங்கே சக்தி கைகளை கட்டி கொண்டு இருந்தான். 

உதயன், சக்தி செல்லம்! எங்கே ஹனி! வரலயா! 

சக்தி, மாமா!. 

ஐம் ஜஸ்ட் கிட்டிங்!. வா போலாம்! எங்கே அந்த குட்டி குட்டன்? அப்புறம் நிதின்!  

சக்தி, அப்போ என்னை பார்க்க பிடிக்கல அவங்க தான் பிடிக்கும் அவங்க தான் வேணுமா!. 

உதயன், சக்தி!. என்ன டா! 

சக்தி, சும்மா மாமு! ஐம் கிட்டிங் மாமு!. 

உதயன் சிரித்து கொண்டே சரி வா போலாம்! அம்மா எங்கே? 

அம்மா அத்தை கூட இருக்காங்க! 

உதயன், எந்த அத்தை! 

மாமா! தாரா அத்தை! யாருன்னு கேட்கிறீங்க! 

உதயன், சரி வா போலாம்! என மகி மற்றும் தாரா இருவரையும் பார்க்க சென்றார்கள். 

சூர்யா ஒன்றும் புரியாமல் ஒரு இடத்தில் அமர்ந்தான். எப்டி அவளுக்கு தெரிந்தது? எப்டி வந்தா! என யோசித்து கொண்டு இருந்தான். 

ஜெய் அவன் அருகில் வந்து அமர்ந்தான்.  என்ன டா யோசிக்கிற? 

சூர்யா, எப்டி இவள் வந்தா! 

ஜெய், எவள்?

உன்னோட ex!. 

ஜெய், நான் தான் போன்.. என சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்தி விட்டு தெரில டா சரி நான் போறேன்! என எழுந்து செல்ல முயற்சி செய்தான் ஆனால் அவனால் எழ முடிய வில்லை. 

சூர்யா அவனுடைய சட்டை காலரை பிடித்து இருந்தான். என்ன? சொல்ல வந்ததை முழுசா சொல்லு!..

ஜெய், ஒன்னும் இல்ல டா! 

சூர்யா, இப்போ நீ சொல்லல அப்புறம் உன் முகத்தில நலங்கு வச்சிடுவென்!. இல்ல நான் வைக்க மாட்டேன்! கீர்த்தி கிட்ட!. 

ஜெய், டேய் டேய்! எதுவும் பண்ணாத நான் சொல்றேன்!

சூர்யா, சொல்லு!  

அது அது வந்து தேஜு எனக்கு கால் பண்ணா! 

அப்புறம்!. 

ஜெய், “அப்போ தான் ஶ்ரீ மதி கர்ப் ஆன விசயம் எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க எப்போவும் விசாரிப்பது போல தான் சொன்னேன் ஆனால் அதை அவள் கேட்டு விட்டு இங்கே வருவா அப்டின்னு நான் எதிர் பார்க்கல டா!”

சூர்யா, உன் மச்சான் இங்கே சிரிக்கிறான்! ஆனால் என் மச்சான் கவலையில் இருக்கான்! உனக்கு மூளையே இல்லையா டா! 

ஜெய், டேய் எனக்கு என்ன டா தெரியும்!

சூர்யா,  உனக்கு தேஜூ பற்றி ஒன்னும் தெரியாது! 

ஜெய், இல்ல டா சூர்யா அவள் ரொம்ப நல்லவ!  

சூர்யா, உனக்கு அவளை பற்றி தெரியல! ஆனால் தெரிய வரும் போது உனக்கு புரியும் என சொல்லு விட்டு எழுந்து சென்றான். 

தாரா சாப்பிடும் இடத்தில் ஒரு கார்னர் சீட்டில் அமர்ந்து இருக்க அவளுக்கு அருகில் மகி அமர்ந்து இருந்தாள். 

மகி, அண்ணி அழ வேணாம்! இப்போ என்ன ஆச்சு. சொல்லுங்க! உங்களுக்கு கல்யாணம் ஆகி வெறும் நாலு மாசம் தான் ஆகுது! இதுக்கு போய் வருத்த படலாமா! 

இல்ல மான் விழி! நான் எனக்கு மட்டும் எதுக்கு இப்படி ஆகனும்! நான் எவ்ளோ ஆசையா இருக்கேன் தெரியுமா!  உங்க அம்மா சொல்றது சரி தான் நான் உங்க அண்ணாவுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்ல! என்னால் குழந்தை கூட பெற்று கொடுக்க முடியல! நான்!  என அவள் அடுத்து பேச வர

அதற்குள் அடுத்த வார்த்தை பேசின பல்லை உடைப்பேன் டி! என சொல்லி கொண்டே உதயன் வந்தான். 

தொடரும்..  

Episode 338

அடுத்த வார்த்தை பேசின பல்லை உடைப்பேன் டி! என சொல்லி கொண்டே உதயன் வந்தான். 

தாரா கண்களை துடைத்து கொண்டே அமர்ந்தாள். ஆனால் நிற்காமல் அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. மகி கண்ணை துடைத்து விட்டு கொண்டே  அண்ணா அவங்கள திட்டாத !

உதயன் “அவ என்ன பேசிட்டு இருக்கான்னு பாரு இப்போ தான் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி படிச்சு படிச்சு சொல்லி கூட்டிட்டு வந்தேன். ஏaஅதுக்குள் குறக்க திரும்புறா!”

மகி, அண்ணா விடு நான் பார்த்து கொள்கிறேன்!  என அவளின் முகத்தை துடைத்து விட்டாள். அண்ணி எதுக்கு இப்போ அழுதுகிட்டே இருக்கீங்க!..

உதயன், தாரா வீட்டுக்கு வா போலாம்! 

தாரா கொஞ்சம் பயந்து கொண்டு நான் வரல! நீங்க உங்க வீட்டுக்கு போங்க! 

உதயன் அவளின் அருகில் பாயிந்து கொண்டு வர சத்ய தேவ் அவன் கைகளை பிடித்து கொண்டான். 

மகி, அண்ணா நீ போ! அண்ணி நீங்க வீட்டுக்கு வாங்க! 

தாரா இன்னும் அழுதாள். 

உதயன்,“ மகி உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் சக்தி உங்க அத்தை கூட இரு நகராத!”

ம்ம் சரி மாமா என சொல்லி அவன் அமர்ந்து கொண்டான். 

மகி வா என அவளின் கைகளை பிடித்து அழைத்து சென்றான். 

என்ன அண்ணா! 

உதயன், அன்னிக்கு குழந்தையை பற்றி என் கிட்ட கேட்டியே! என்ன விசயம்! 

மகி, அண்ணா ஒன்னும் இல்ல ஒரு தடவை நீயும் அண்ணியும் ஒரு full body checkup பண்ணிக்கோங்க! 

உதயன், மகி நீ என்ன லூசா டி! 

மகி, அண்ணா எதுக்கும் செக் பன்றதில என்ன தப்பு! 

அவன் அவளின் முகத்தை பார்த்து “கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது! அன்னிக்கி திடீர்னு எதுக்கு கேட்ட? எதுவும் என் கிட்ட மறைக்கறயா எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லிடு பிளீஸ் டி நாளைக்கு பெருசு ஆனதுனா அதை தாங்க நான் இருக்க மாட்டேன்!”

மகி அவனை பிடித்து கொண்டு அண்ணா இதை எப்டி சொல்றதுன்னு தெரியல அது என அந்த குறி சொன்ன பெண் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விட்டாள். 

உதயன், இதை வேற யார் கிட்டயாவது சொன்னயா? 

இல்ல உதயா இப்போ தான் உன் கிட்ட சொல்றேன்! 

மாமாவுக்கு குறிப்பா மை விழி!..

மகி, நான் அவள் கிட்ட சொல்லவா? 

உதயன், ஹே ஹே மகி அந்த தப்பை மட்டும் பண்ணாத! அவள் தான் வில்லி!. 

மகி, அப்போ நம்ம கூட இன்னொரு பொண்ணு இருக்கா! உனக்கு தெரியுமா டா! எங்கே இருக்காங்க நான் பார்த்ததே இல்ல!  என இருவரும் பேசி கொண்டு இருக்க..

தேஜுவை வெங்கட் சாப்பிட அழைத்து வந்தார். 

“இதோ நம்ம கண்ணு முன்னாடி தான் இருக்கா!” என உதயன் சட்டென கூறி விட்டான். 

மகி ஆச்சரியமாக உதயா! என்னடா சொல்ற எங்கே? எங்கே? என சுற்றிலும் பார்வையை சுழற்றி விட்டாள். 

உதயன் உடனே தன்னிலைக்கு வந்து ஹே மகி எனக்கு தெரியாது. ஆனால் என் கூட ஒரு பொண்ணு பிறந்தது அப்டின்னு தெரியும்! 

மகி, “அப்போ அந்த சாமி சொன்னது நிஜம் தான் போல! நான் தான் சந்தேக பட்டு விட்டேன். என வருத்த பட்டவள். உதயா அப்போ எனக்கு அக்கா இருக்கா! அந்த அக்காவாவது நல்ல அக்காவா! இத்தனை வருஷம் அவளுக்கு என்ன ஆச்சு? இப்போ எங்கே இருக்கா? பாவம் அவள்! எப்படி இருப்பா?  மை விழி மாதிரி என்னை முறைத்து ரூல் பண்ணுவாளா! எனக்கு ஆசையா இருக்கு டா!”

உதயன் அவளுடைய தோள்களை பிடித்து கொண்டு மகி இத தயவு செய்து அந்த கிறுக்கிக்கு தெரியாமல் பார்த்துக்க.. 

யாரு டா? 

உதயன், மை விழி தான்! 

மகி, என்ன அவளை இப்படி திட்டுற!  

உதயன், ஹான் ஒட்டி பிறந்தவள விட்டு கொடுக்க மாட்டியே! நல்ல கேட்டுக்க நம்ம ரெண்டு பேரும் பேசிக்கிட்ட விசயம் வேற யாருக்கும் தெரிய கூடாது, மாமா, மை விழி, கார்த்திக் மாமா, அப்பா, அம்மா யாருக்கும் தெரிய கூடாது. 

மகி, சரி அதை விடு இப்போ நீங்க ரெண்டு பேரும் எப்டி டா ? நீ அண்ணிய சமாதானம் பண்ணனும். கூடவே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அம்மாவை சமாதானம் பண்ணனும்! எப்டி டா பண்ண போற? கிட்ட தட்ட இந்த இரண்டு வாரம் நான் சரியா தூங்கவே இல்லை ஒரே அழுகை அழுகையாக வருது! நீ எப்போ உதயா happyயாக வாழ்வது எனக்கு ஆசையா இருக்கு தெரியுமா!நம்ம குடும்பம் உன்னோட பிள்ளைங்க அண்ணி,   கூடவே எங்க பசங்க, மை விழி , மாமா,  பவா குட்டிங்க எல்லாரும் சேர்ந்து ஒரு ஃபேமிலி போட்டோ எடுக்க ஆசையா இருக்கு டா! 

உதயன் தன் தங்கை பாசத்தை கண்டவன் அவளை கட்டி கொண்டு தலையில் முத்தம் பதித்தான். 

மகி கூட கட்டி கொண்டாள். உதயா!. 

ம்ம் எல்லாம் சரி ஆகிடும்! நான் இருக்கேன் டி!  

மகி, நீ எது நடந்தாலும் அண்ணிய திட்ட கூடாது. ரொம்ப பாசமா நடதுக்கணும்.

அட பாசத்தை!  என உதயன் கூறினான். 

மகி, நிஜம் தான்!  

சரி! எதுவும் சொல்ல மாட்டேன் போதுமா!. அப்புறம் உன் கிட்ட ஒரு விசயம்? 

என்ன? 

உதயன் ஒரு பெரு மூச்சை விட்டு அந்த சாமி என்ன சொன்னாங்க! 

மகி, நீ நம்மோட குல தெய்வ கோவிலுக்கு போகனும்! நீயும் அண்ணியும் சேர்ந்து போகனும்! ஆனால்!. 

ஆனால் என்ன? 

அவள் தயங்கி கொண்டே இந்த ரெண்டு வருசம் நீங்க ரொம்ப கஷ்ட படுவீங்க அப்டின்னு சொன்னாங்க டா! 

உதயன், நான் பார்த்து கொள்கிறேன் நீ விடு டி! 

மகி, உனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு தானே!. 

இல்ல நீ daily போன் பண்ணு! என் கிட்ட பேசு அது போதும் நான் எல்லாத்தையும் தெம்பா செயல் படுத்தி வந்திடுசென். 

“சரி!” என இருவரும் சிரித்து கொண்டு இருக்க.. 

ஹே என்ன அவளை கொஞ்சிட்டு இருக்க? இப்போ உன் ஹீரோயின் பொண்டாட்டிக்கு என்ன வந்தது? ஒப்பாரி வச்சிட்டு இருக்கா? என சத்தம் கேட்டது. 

உதயன், வந்துட்டா பாரு!. வாயாடி! பிசாசு!  

மை விழி, எருமை என்ன அவளை கொஞ்சிட்டி இருக்க!  .

உதயன், என் மருமகள் உள்ளே இருக்கா அதான் கொஞ்ஜிட்டு இருக்கேன். 

மை விழி  முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு “இப்போ உன் பொண்டாட்டி எதுக்கு அழுதுட்டு இருக்கா!” என்று கேட்டாள். 

உதயன், நீயே போய் கேளு! எதுக்கு என்கிட்ட கேக்குற ?முடிஞ்சா சண்டை கூட போடு !

மைவிழி, “நானா!.. என்கிட்ட பேசுற அளவுக்கு எல்லாம் அவளுக்கு தகுதி இன்னும் வரவே இல்லை! புரியுதா! அதேபோல கல்யாணம் ஆகி இப்பதான் நாலு மாசமாகுது! சோ ஓவரா சீன் போட வேணாம்னு சொல்லு! இந்த அழுகை எல்லாம் கிளிசரின் இல்லாமல் வருது போல ! எல்லாம் ஒரு பத்து பதினஞ்சு வருஷம் நடிச்ச ட்ரெய்னிங்கா இருக்கும்னு நினைக்கிறேன். இங்கேயும் வந்து மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கா  உன் பொண்டாட்டி! ” என்று கூறினாள்.

உதயன், மரியாதை கொடு!. 

மை விழி, முதலில் நீ மகி கிட்ட இருந்து தள்ளி வா ஓவரா கொஞ்சுற நான் தான் உனக்கு முதல் தங்கச்சி!.

அதான் சொன்னேன்ல மகி வயிரில் என்னோட மருமக இருக்கா!  இதே போல நீ இருந்தால் உன்னை கொஞ்சுவென். 

மை விழி, நீ எப்படி கொஞ்சினாலும் உன் வீட்டில் நான் பொண்ணும் கொடுக்க மாட்டேன் எடுக்கவும் மாட்டேன். 

இதை கேட்டதும் உதயன் அதே இடத்தில் நின்றான். மகி, எதுக்கு மை விழி இப்படி சொன்ன? 

மை விழி,  எப்படி சொன்னாலும் இது தான் உண்மை! 

உதயன் வேகமாக அவளின் அருகில் வந்து எதிர்பாரா நேரத்தில் அவளுடைய காதை திருகினான். 

சரி!” என இருவரும் சிரித்து கொண்டு இருக்க.. 

ஹே என்ன அவளை கொஞ்சிட்டு இருக்க? இப்போ உன் ஹீரோயின் பொண்டாட்டிக்கு என்ன வந்தது? ஒப்பாரி வச்சிட்டு இருக்கா? என சத்தம் கேட்டது. 

உதயன், வந்துட்டா பாரு!. வாயாடி! பிசாசு!  

மை விழி, எருமை என்ன அவளை கொஞ்சிட்டி இருக்க!  .

உதயன், என் மருமகள் உள்ளே இருக்கா அதான் கொஞ்ஜிட்டு இருக்கேன். 

மை விழி  முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு “இப்போ உன் பொண்டாட்டி எதுக்கு அழுதுட்டு இருக்கா!” என்று கேட்டாள். 

உதயன், நீயே போய் கேளு! எதுக்கு என்கிட்ட கேக்குற ?முடிஞ்சா சண்டை கூட போடு !

மைவிழி, “நானா!.. என்கிட்ட பேசுற அளவுக்கு எல்லாம் அவளுக்கு தகுதி இன்னும் வரவே இல்லை! புரியுதா! அதேபோல கல்யாணம் ஆகி இப்பதான் நாலு மாசமாகுது! சோ ஓவரா சீன் போட வேணாம்னு சொல்லு! இந்த அழுகை எல்லாம் கிளிசரின் இல்லாமல் வருது போல ! எல்லாம் ஒரு பத்து பதினஞ்சு வருஷம் நடிச்ச ட்ரெய்னிங்கா இருக்கும்னு நினைக்கிறேன். இங்கேயும் வந்து மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கா  உன் பொண்டாட்டி! ” என்று கூறினாள்.

உதயன், மரியாதை கொடு!. 

மை விழி, முதலில் நீ மகி கிட்ட இருந்து தள்ளி வா ஓவரா கொஞ்சுற நான் தான் உனக்கு முதல் தங்கச்சி!.

அதான் சொன்னேன்ல மகி வயிரில் என்னோட மருமக இருக்கா!  இதே போல நீ இருந்தால் உன்னை கொஞ்சுவென். 

மை விழி, நீ எப்படி கொஞ்சினாலும் உன் வீட்டில் நான் பொண்ணும் கொடுக்க மாட்டேன் எடுக்கவும் மாட்டேன். 

இதை கேட்டதும் உதயன் அதே இடத்தில் நின்றான். மகி, எதுக்கு மை விழி இப்படி சொன்ன? 

மை விழி,  எப்படி சொன்னாலும் இது தான் உண்மை! 

உதயன் வேகமாக அவளின் அருகில் வந்து எதிர்பாரா நேரத்தில் அவளுடைய காதை திருகினான். 

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த தேஜு…? 

தொடரும்.. 

Episode 339, 

மை விழி,  எப்படி சொன்னாலும் இது தான் உண்மை! 

உதயன் வேகமாக அவளின் அருகில் வந்து எதிர்பாரா நேரத்தில் அவளுடைய காதை திருகினான். 

என்ன டி உன்னை எல்லாம் கேட்க ஆள் இல்லை. நீ என்ன பொண்ணு கொடுக்கிறது நான் தூக்கிட்டு போவேன். 

மை விழி, மாடு!   எருமை மாடு!. வலிக்குது விடு டா மாடு!  ஹே விடு!. என அவனை அடிக்க தொடங்கினாள். 

உதயன், மகி இவளை அடக்க யாராவது இருக்காங்களா! எப்டி மாமா இவளை வச்சு சமாளிக்கிறார்! 

உதயா நீ வேற இவள் மாமாவை servant மாதிரி ட்ரீட் பண்றா! என மகி சொல்லி கொண்டே சிரித்தாள். 

மை விழி, என்ன மகி வாய் நீலுது நான் உனக்கு முன்னாடி பிறந்தவள். மரியாதை கொடுக்க தெரியாதா! என மிரட்டினாள். 

உதயன், என்ன பண்ணுவ ? போடி வந்துட்டா! 

போடா நாயே!. 

போடி நாயே! என உதயன் கூறினான். மூன்று பேரும் அடித்து சிரித்து கொண்டு விளையாடுவதை ஒரு ஜோடி கண்கள் கொஞ்சம் நிம்மதியுடன் பார்த்தது ஆனால் இன்னொருவர் பொறாமை பொங்கிட கண்களில் வஞ்சத்தில் பார்த்து கொண்டு இருந்தாள். 

அவள் யார்? முதலில் அந்த நிம்மதி கண்ணுக்கு சொந்தகாரி தாரா தான் அவளுக்கு உதயனை பார்க்க ஏக்கமாக கூட இருந்தது. இந்த மாதிரி நமக்கு அண்ணா, தங்கை இல்லையே என்று நினைத்தாள். எப்டி இருந்தாலும் அவங்க மூணு பேருக்குள் ஒரு sink இருக்கு உதயன் அவங்க கூட இருக்கும் போது ஒரு different person இந்த நிமிடம் கூட அவன் மேல இப்போ கூட அவளுக்கு லவ் வருது. அவள் தன்னை மறந்து அவன் சந்தோச முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள். இந்த முகம் பெங்களூர் வந்தது ரொம்ப அமைதியா மாறி போயிடும். 

அந்த வஞ்சனை கண்களுக்கு சொந்தக்காரி! தேஜு!. கண்களில் கோபம் பொறாமை, கூடவே வஞ்சனை அவளுக்கு உதயன் மேல் மட்டும் தான் இருந்தது. ஆனால் இந்த காட்சிகளை பார்க்க பார்க்க மகி, மை விழி, உதயன் என மூணு பேர் மேலயும் கோபம் பழி உணர்வு அதிகமானது. 

தேஜு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தாள். தூக்குறேன்! மூணு பேரையும் தூக்குறென்! கதரணும் டா நீ! என் கண்ணு முன்னாடி உன் அம்மா, உன் அப்பன், சாரி சாரி என் தகப்பன், என்னை பெத்தவள், என் கூட ஒட்டி பிறந்தவன், அவனோட ரெண்டு செல்ல தங்கச்சி எல்லாரையும் தூக்குவேன்! என சொன்னவள் கண்களில் சூர்யா பட்டான். உன்னையும் தான் டா!  கூடவே உங்க மொத்த குடும்பத்தையும் தூக்குரென்! என சொல்லி கொண்டே இலையை மூடி வைத்தாள். 

வெங்கட், என்ன மா என்ன ஆச்சு? 

போதும்! என சொல்லி கொண்டே கையை கழுவ சென்றாள். 

சூர்யா நேராக தாராவின் அருகில் சென்றான். 

சத்ய தேவ், டாடி நீங்க அத்தய பார்த்துக்கோங்க நான் போறேன்!  

ம்ம்!. 

தாரா அப்பொழுதும் அப்படியே அமர்ந்து இருந்தாள் . 

சூர்யா, என்ன மா இங்கே இருந்தே என் மச்சான அப்படி ரசிக்கிற! சாப்ட்டியா!  

தாரா, அண் அண்ணா!  என தண்ணிலைக்கு வந்தாள். 

சூர்யா, ம்ம் இப்போ தான் நான் வந்தது தெரியுதா! 

அப்படி இல்ல என தயங்கி கொண்டே அமர்ந்தாள். 

சூர்யா, சாப்பிடு மா!  

இல்லன்னா! 

சூர்யா, என்ன பிரச்னை!. 

தாரா ஒன் ஒன்னும் இல்ல!. 

சூர்யா, உனக்கு ஒரு விசயம் சொல்லவா! 

என்ன அண்ணா? 

நான் அவளை கட்டிக்கும் போது மேடம் 21 தான் எனக்கு  26..

தாரா, அவ்ளோ சீக்கிரம் கல்யாணமா! 

சூர்யா சிரித்து கொண்டே பார்த்தேன் பிடிச்சது. அவங்க அப்பாவே என் பொண்ணை கட்டிக்கிரீங்களா! அப்டின்னு கேட்டாங்க கட்டி தூக்கிட்டு வந்திட்டேன். 

தாரா, அப்புறம்! 

சூர்யா, பெருசா அவளுக்கும் எனக்கும் சாதாரண பேச்சு கூட இல்ல ஒரு தடவை கூட என் கிட்ட பேசியது இல்ல! என்னை நிமிர்ந்து கூட பார்க்கல! 

தாரா, அப்போ சத்ய தேவ்!.எப்படி! 

எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாசம் கழிச்சு தான் first night நடந்தது. 

தாரா, என்ன சொல்றீங்க! 

சூர்யா, நிஜம் தான் அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு தான் pregnant ஆனாள். 

தாரா இப்பொழுது கொஞ்சம் தெளிவான முகத்துடன் சூர்யாவை பார்த்தாள். 

சூர்யா, இதுல நான் அவளை ஃபோர்ஸ் பண்ணல அதை விட மகி சின்ன பொண்ணு! நாங்க எதையும் பிளான் பண்ணல தானா நடந்தது. யாரும் கேட்கல! இப்போ உனக்கும் அதே தான் சொல்றேன். எதை நினைத்தும் கவலை பட வேணாம். நடக்க வேண்டிய நேரத்தில் சரியா நடக்கும் சரியாக கிடைக்கும். 

தாரா, நீங்க சொல்றது சரி தான் அண்ணா!  

சூர்யா, infact இப்போ தான் உங்களுக்கு அதாவ்து நீங்க ரெண்டு பேரும் time spent பண்ண நேரம் கிடைச்சு இருக்கு அதுல என்ஜாய் பண்ணிகோங்க! ஆனால் குட்டி வந்தது நீயும் மச்சானும் அந்த குட்டின்க பின்னாடி சுத்தி கொண்டே இருக்குற மாதிரி இருக்கும் உங்களுக்கு ஒரு பிரைவசி இருக்காது. 

தாரா, என்ன அண்ணா இப்படி சொல்லி பயன்படுத்துறீங்க !. 

சூர்யா, பாரு என்னை பாரு சத்ய தேவ், அப்புறம் அந்த குட்டி குட்டன், இப்போ என்னோட இதழ் பாப்பா உள்ளே இருக்கு! என்னையும் அவளையும் தனியா விடுவார்களா? சத்ய தேவ், என்னோட இதழ் பாப்பா கூட விடுவாங்க அந்த குட்டி குட்டன் எப்போ பாரு அவள் பின்னாடி சுற்றி கொண்டே இருப்பான்! 

தாரா வாய் விட்டு சிரித்தவள். நீங்க  அப்படியே இருந்தாலும் சண்டை தான் போடுவீங்க!  அப்புறம் அதென்ன இதழ்? 

என் பொண்ணு பேரு இதழினி! 

தாரா, எப்படி அவ்ளோ confidence ஆ இருக்கீங்க!  

சூர்யா தலையை கோதி கொண்டே வரம் கொடுத்த எனக்கு தெரியும் மா! 

இதை கேட்டதும் தாரா களுக் என சிரித்து விட்டாள். அண்ணா! நீங்க!  என சிரிக்க ஆரம்பித்தாள். 

சூர்யா அவள் முகத்தை பார்த்து தாரா!  

அண்ணா!  

சூர்யா, உதயன் உனக்காக எல்லாரையும் எதிர்த்து இருக்கான். அவனோட இயல்பை மீறி எல்லாத்தையும் செய்யுறான். 

தாரா முகம் மாற அவனை பார்த்தாள். 

சூர்யா, நீ எப்போவும் அவனை விட்டு போறேன் அப்டின்னு சொல்லவே கூடாது. எதுவா இருந்தாலும் அவனுக்கு துணையா இருக்கணும். நீ அழுதா அவனால் அதை டேக்கில் பண்ண முடியாது. 

தாரா, சரி அண்ணா!  

சூர்யா, இன்னொரு தடவை விட்டு போறது இந்த மாதிரி எல்லாம் பேசாத!  அதை தான் சொல்ல வந்தேன். 

தாரா, சரி அண்ணா இனி அப்படி எதுவும் நடக்காது. என சொல்லி விட்டு தெளிவாக அமர்ந்து இருந்தாள். 

அதன் பின் மூவரும் தாரா இருக்கும் இடத்துக்கு வந்தனர். 

மை விழி அவளை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டாள். 

உதயன் சிரித்து கொண்டு வந்தவன் தாராவை பார்த்து இப்போ என்ன சொல்ல போற!   சொல்லு சளுப்பா இருக்கு ஆனாலும் வேற வழி இல்லை கேட்கிறேன். 

தாரா, நான் ரெண்டு நாள் நம்ம வீட்டில் மான் விழி கூட இருந்திட்டு வரேன். 

உதயன், என்ன? 

ஆமா நான் அவங்க கூட இருந்திட்டு வரேன் நீங்க பெங்களூர் போங்க! 

உதயன், உங்க அப்பா என் பொண்ணு? எங்கே என்னோட பிரின்சஸ்? எங்கே என்னுடைய இளவரசி? அப்படின்னு துருவி துருவி கேட்டா நான் என்ன சொல்லட்டும்? சொல்லுங்க இளவரசியே!. 

தாரா, அப்படி கேட்டால் அதை நான் சொல்லி கொள்கிறேன். நீங்க போயிட்டு வாங்க ரெண்டு நாள் கழிச்சு என்னை கூட்டிட்டு வர வந்துடுங்க!. 

உதயன் மனதில் ரெண்டு நாள் என்னை விட்டு இருக்கேன்னு சொல்றாலே! என அவளின் மேல் கோபம் வந்தது. 

சூர்யா, ஹே நீ எப்போ வீட்டுக்கு வர? 

மகி அவனை முறைத்து கொண்டே சக்தி!  என அழைத்தாள். 

உடனே சூரியா தன்னை சுதாரித்து கொண்டு ஹான் மகிலினி, மான் விழி, பேய்விழி!  

என்ன? 

உடனே தாரா சிரித்தாள். 

சூர்யா, தேன் மொழி அப்டின்னு சொல்ல வந்தேன்! 

என்ன? சொல்லுங்க! 

வீட்டுக்கு எப்போ வர? 

மகி, இப்போ வளைகாப்பு முடிந்து இருக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன். அப்புறம் என் பையன் பிறந்ததும் தான் வருவேன். 

சூர்யா, என்னை கட்டிக்கிட்ட வீடு தான் உன் வீடு! என் தங்கச்சி பாரு சரியா சொல்றா! அவள் மாதிரி இருக்கணும்! என்னைத்த சொல்றது வளர்ப்பு சரி இல்லை.. 

தாரா, அண்ணா அவங்கள கிண்டல் பண்ணாதீங்க! 

சூர்யா, எப்போ வீட்டுக்கு வர என சீரியசாக கேட்டான். 

மகி, அட்லீஸ்ட் ஒரு வாரம் இருந்திட்டு வரேன்! 

ஒரு வாரமா! 

மகி, ஆமா எங்க வீட்டில் ஒரு வாரம் அப்புறம் நம்ம வீட்டில் ஒரு வாரம்! அப்புறம் தினேஷ் மாமா கல்யானம் இருக்கு! அதையும் முடிச்சிட்டு வரேன்! 

சூர்யா, அப்போ என எதையோ யோசித்தான். உடனே சிரித்து கொண்டே சரி இருந்திட்டு வா! நான் சத்ய தேவ் கூட இப்போ கிளம்புகிறேன். 

மகி, என்னோட புராஜக்ட் சரியாக நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். சோ ஓவரா சந்தோச பட வேணாம் ஜெயிக்க போரது நான் தான்! 

சூர்யா அவனது மீசையை முறுக்கி விட்ட படி ஜெயிக்க போறது நான் தான் டி! 

மகி, அதையும் பார்ப்போம்! என சொன்னவள் வெடுக்கென திரும்பி கொண்டாள். 

உதயன், ஹான் எப்போவும் ரெண்டு பேரும் மாற மாட்டீங்க! 

சூரியா, என் தங்கச்சி எப்டி இருக்கா! உன் தங்கச்சிய நீ வளர்த்த விதம் சரி இல்லை. 

மகி, எழுந்து செல்ல போக! 

ஹே உட்கார் ரீ! 

மகி ஒரு நிமிடம் அவனுக்கு பயந்து அமர்ந்து கொண்டாள். 

சூர்யா, என் பொண்ணை பத்திரமா பார்த்துக்க! 

இது பொண்ணு இல்ல பையன்! 

சூர்யா, இது பொண்ணு தான்! என் பொண்ணு! என அவளின் முகத்தை பார்த்து கூறினான். 

ஓவரா confidence வேணாம்!  

சூர்யா, பொண்ணு தான்! உன்னை விட அழகா! தேவதையா! எனக்கே எனக்காக என் கூட கைய பிடிச்சு உலகத்தை சுற்றி வர என் பொன்னு ரெடியா இருக்கா! என கூறினான். 

மாலைநேரம் நெருங்க குட்டி வயிற்றில் நீந்தி கொண்டே எட்டி உதைக்க ஆரம்பித்தது. 

ம்ம் பார்ப்போம்!  

இங்கே தேஜூ – spr…? 

தொடரும்.. 

Episode 340,

மகிழினியின் வளைகாப்பு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிந்தது. சில பிரச்சனை வந்தாலும் அது சூர்யா நடக்க விடல..

அதுக்கப்புறம் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போனாங்க..

மகி நேரா மாயா குடும்பத்தோட குடும்பத்திலிருந்து விடை பெற்று வசந்தன் மற்றும் கலைவாணி இருக்கும் வீட்டுக்கு கிளம்பினாள்.

சூர்யா மற்றும் சத்யதேவ் ரெண்டு பேரும் பெங்களூர் கிளம்பியாச்சு! 

மிதுன் அடுத்த மாசம் ஜெர்மனி கிளம்பறான். இது இப்படியே ஒரு வாரம் போய்க்கொண்டிருக்க…

மகி கூடவே  தாராவும் வீட்டுக்கு வந்துட்டா.

கலைவாணி அவ எதுக்கு இங்க இருக்கா? என்று கேட்டுக்க கொண்டே  சத்துமாவு கஞ்சியை கொடுத்தார்.

மகி, மா ஏன் அம்மா அண்ணி இருக்கட்டும்! அவங்களுக்கு அங்க ரொம்ப கஷ்டமா இருக்காம்…

இவளுக்கு என்ன கஷ்டம் இவளால தான் எனக்கு கஷ்டம் இன்று வாய்க்குள் முனகினார்.

இங்கே உதயன்  தன் மாமனாரின் வீட்டிற்கு வந்தான் .

கோவிந்த் என்ன மாப்பிள்ளை நீங்க மட்டும் வந்து இருக்கீங்க! என்னோட பொண்ணு எங்கே? என்று கேட்டார்.

உடனே உதயன்  எனக்கு தெரியாது சார்  என்று கூறிக் கொண்டே மேலே ஏறினான் .

கோவிந்த் கொஞ்சம் கர்ச்சனையான குரலில் நீங்க உங்களோட தங்கச்சி சீமந்தத்துக்கு போனது எனக்கு தெரியும்! அதனால நடிக்க வேண்டாம்! என் பொண்ணு எங்கே?என்று கேட்டார்.

உதயன் உங்களோட பொண்ணு மகி கூட இருக்கணும்னு ஆசைப்பட்டா அதனால நான் அவ வீட்ல விட்டுட்டு வந்து இருக்கேன்.

அப்போ பெங்களூர்ல தான் இருக்காளா?

இல்ல எங்க வீட்டுல! 

கோவிந்த், எங்க வீடுன்னா இதுதான் மாப்ள உங்க வீடு! 

 உதயன் ஒரு கசந்த புன்னகையை சென்று விட்டு அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனது அறைக்கு சென்றான்.

கோவிந்த்,  இந்த பாப்பு பொண்ணுக்கு என்ன ஆச்சு? எந்த வசதியும் இல்லாம ஒரு குருவிக்கூடு மாதிரி இருக்கிற வீட்ல போயி தங்கரன்னு போயிருக்காளே! என்ற மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

உதயன் ஃபிரஷ் ஆக அறைக்கு சென்றான். அந்த அறையின் ஒவ்வொரு இடத்திலும் தாரா தான் தெரிந்தாள். அவளுடைய மனம் வருத்தப்பட்டு ஏங்குவதை அவனும் பார்க்காமல் இல்லை.. அவனுக்கும் ஒரு குழந்தை வேணும்னு ஆசைதான். “ஆனா ஏன் இது தள்ளி போகுது? நாலு மாசம் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை.. இருந்தாலும்! ஒவ்வொரு மாசம் கடக்கும்போது எல்லாரும் கேட்க தான செய்வாங்க! யாரு கேட்டா என்ன? எனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்றால் கூட, நான் தாராவை ரொம்ப பத்திரமா பாத்துகொள்வேன்” என  உதயன் நினைத்துக் கொண்டான்.

அப்பொழுது மகிழினி சொன்னது அனைத்தும் நினைவுக்கு வர மகிழினிக்கு போன் செய்தான்.

அந்த நேரம் இங்கே கீழே கோவிந்துக்கு அழைப்பு வந்தது கோவிந்தடைய பார்ட்னர் பெரிய டர்ன் ஓவர் பெரிய பிசினஸ் டீலிங் எல்லாம் இந்த நபர் கூட தான் கோவிந்த் பார்ட்னர்ஷிப் வச்சிருப்பாரு…அந்த அளவுக்கு இருக்கிற ஒருத்தர் தான் கால் பண்ணாரு..

இங்கே உதயன் மகிக்கு கால் செய்த அந்த உரையாடலை பார்ப்போம்..

ஹலோ

சொல்லு உதயா! 

தாரா என்ன பண்றா?

மகிழினி சிரித்துக் கொண்டே உதயா நீ கவலைப்படாதே நான் இருக்கேன். அண்ணிய பத்திரமா பாத்துக்கறேன்!  நான் இங்க இருந்து கிளம்பும்போது அன்னிய அங்கே உன் கிட்ட அனுப்புறேன். பாவம் அவங்க கொஞ்சம் டிஸ்டர்பா இருக்காங்க!

 உதயன், எனக்கு தெரியும் மகி அவளை கொஞ்சம் பத்திரமா பாத்துக்க! அம்மா இருக்கும்போது மட்டும் அவளை தனியா விடாத, மகி! அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு ஆனால் அம்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க.. என்று வருத்தத்துடன் கூறினான்.

உடனே மகி அண்ணா நீ கவலைப்படாதே நான் இருக்கேன்! மிதுன் இருக்கான்! மிதுன் எனி டைம் தாரா கூட தான் இருக்கான்! அண்ணி கூட தான் இருக்கிறான்! அவன்  இருக்கும் போது அம்மா அப்படி எல்லாம் பேச மாட்டாங்க!

இது போதும் என சந்தோஷமாகி அப்புறம் என  அவன் “ உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்!

 என்ன விஷயம் உதயா சொல்லு! 

“ஒன்னும் இல்ல மகி அந்த சாமி விஷயம் சொன்னியே! அது பாதியிலேயே நின்னு போச்சு அதுக்குள்ள  மைவிழி வந்துட்டா.. அடுத்து என்ன பண்ணனும்? சொல்லு மகி?” என்று கேட்டான்.

மகிழினி, ஒன்னும் பிரச்சனை இல்லனா நீ மாச மாசம்  உனக்கு கம்பர்டா இருந்தா நீ அதை  கோவிலுக்கு போக ஐ மின்  நீ மாசம் ஒரு தடவை  எப்படியாவது நம்மளோட குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்துடு உதயா !என்று கூறினாள்.

உதயன், அப்படியா என்று  யோசனையாக கேட்டான்.

மகிழினி ,  பாரு கிட்டத்தட்ட நம்ம குலதெய்வம் கோயிலுக்கு எப்ப போயிருக்கொம் யோசிச்சு பாரு? மைவிழியோட கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கிறப்போ போயிருப்போம்! அதுக்கப்புறம் எப்ப போனோம்?என்னோட சக்திக்கு  மொட்டை அடித்தது எல்லாமே அதாவது எங்க வீட்டுக்காரரோட குலதெய்வம் கோயிலுக்கு தான் போனோம்! அதேபோல தான் மை விழி கார்த்திக் மாமா குல தெய்வம் கோவிலுக்கு போனார்கள் . ஆனால் நம்ம குடும்பத்தில் இருந்து அதாவது நீ அப்பா ரெண்டு பேரும் யாருமே நம்ம கோவில் பக்கமே போகல!.  அது ரொம்ப முக்கிய உதயா எங்க வீட்டுக்கு சார்பாக எப்பவுமே அத்தை கோயிலுக்கு போயிடுவாங்க ஆனா நம்ம வீட்ல யார் போறது?

உதயன், நம்மளோட லொகேஷன் அப்படி இருக்கு… என்று கூறினான் .

அதுக்கு!  

உதயனுக்கு அவள் சொல்வதும் சரியாகதான் பட்டது. சரி நான் கட்டாயம் போறேன். என்று கூறினான்.

மகிழினி தயங்கிக்கொண்டே அது

உதயன், என்ன விஷயம் சொல்லு? எதையும் மறைக்காத டி எத்தனை தடவை உனக்கு சொல்றது! என்று கடிந்து கொண்டான்.

உடனே மகி,  “அது ஒன்னும் இல்ல போகும் போது எப்படியாவது ஒரு தடவையாவது அண்ணி கூட போயிட்டு வா! அங்க அங்காளம்மன் சாமிக்கு பின்னாடி சொக்கநாச்சி அம்மனுக்கு தனியா ஒரு ஒரு சன்னதி இருக்கு அதுக்கு பக்கத்துல ஒரு மரம் இருக்கும் அந்த மரத்தை சுத்தி சாமி கும்பிட்டு ஒரு ஊஞ்சல் கட்டிட்டு வாங்க வளையல் கட்டி போடுங்க!”என்று கூறினாள்

உடனே அதை கேட்டதும் உதயனுக்கும் சரியான பட்டது சரி நாங்க இந்த மாசமே போக ட்ரை பண்றோம்.. மாமா வேற கூப்பிட்டு இருக்காங்க ஆக்கி போடுவதற்கு என்று கூறினான்.

மகிழினி, அதுக்கு நிஜமாகவே நீ போக போறியா உதயா!

உதயன், ஏன் அப்படி கேக்குற ?

இல்ல மாமா அங்க போய் அத்தை ஏதாவது அண்ணிய ஏதாவது சொல்லிட்டா..

உதயன் சிரித்துக் கொண்டே மாமாவை பத்தி எனக்கு தெரியும்! மாமாவுக்கு என் மேல ரொம்ப பாசம் அவர் நம்மளை எதுவும் சொல்ல மாட்டாரு! நம்ம மாமாவை பத்தி உனக்கு தெரியாதா?

எனக்கு என்ன தெரியும்? 

உதயன், உனக்கு எப்படி தெரியும்! சாரி மகி… மாமா அப்படினா கேரக்டர் கிடையாது. நான் பார்த்துக்கிறேன் என்று கூறினான் .

சரி உதயா மறக்காம கோவிலுக்கு போங்க… அப்புறம் முக்கியமா எப்ப எல்லாம் நீ வீட்டுக்கு வரியோ அப்பல்லாம் அம்மாகிட்ட பேச டிரை பன்னு அம்மா கிட்ட எப்படியாவது சமாதானம்.. கூடவே அம்மா தாராவை ஆசீர்வாதம் பண்ணுனாதான் எனக்கு என்னமோ எல்லாமே நல்லதா நடக்கும்னு தோணுது! .

 உதயன்,  எதுக்கு டி அப்படி சொல்ற என்று வருத்தத்துடன் கேட்டான்.

மகிழினி,  உனக்கு புரியாத உதயா இது பெண்களுக்கே உண்டான உண்மை. அம்மா உன்ன ரொம்ப ஆசையா வளர்த்திருக்காங்க அவங்களோட மனசு கஷ்டப்படுத்திட்டு நீ பெரிய விஷயத்தை பண்ணிட்டு போயிருக்க பெத்தவங்களோட பாவம் பிள்ளைகளை தான் பாதிக்கும்னு சொல்லுவாங்க அதுவும் நீ ஆண் பிள்ளை வேற நாங்க, நாங்க வேற வீட்ல போய் வாக்கப்பட்டு விட்டோம்.  ஆனால் நீ! 

உதயன் அவள் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான். 

மகி, “அதனால தயவு செய்து அம்மாவோட மனசை நீங்க ரெண்டு பேரும் மாத்த பாருங்க அம்மா ஒரு தடவை கொஞ்சம் இறக்கப்பட்டு உங்கள் ஆசீர்வாதம் பண்ணிட்டா போதும் எல்லாமே நல்லா தான் நடக்கும் நம்ம குடும்பமும் நல்லா இருக்கும்!”

உதயன் சரி நான் அதை பண்றதுக்கு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தான்.

இங்கே கோவிந்த் ஹலோ சொல்லுங்க பார்ட்னர் என்று அவரிடம் பேச ஆரம்பித்தார் 

அவருடைய பார்ட்னர் ஜீவி , பார்ட்னர் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்? என்று கூறினர்

என்ன சொல்லுங்க ஜீவி என்று கேட்டார். 

“உங்களோட டாடரோட ஃபங்க்ஷன்ஸ் யாரு ஆர்கனைஸ் பண்ணுனா? அந்த பங்க்ஷன் ஈவண்டோட பேரு எனக்கு வேணுமே!” என்று கேட்டார்

கோவிந்த் என்ன சொல்றீங்க என்று கேட்டார் 

உடனே “ஆமா எனக்கு ஒரு பெரிய பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணனும் ஆக்சுவலா உங்களுக்கு கங்கிரஸ் பண்ண தான் போன் பண்ணேன்.நான் என்னால அந்த உங்களோட டாடரோட ரிசப்ஷனுக்கு வர முடியாம போயிடுச்சு! ஆனா அந்த ரிசப்ஷன் முடிஞ்சதோ இல்லையோ எல்லா இடத்திலும் அந்த ரிசப்ஷன்ட பேச்சு தான் பயங்கரமா இருந்துச்சு …அதனால எனக்கு ரொம்ப  ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்தேன் அதை செக் பண்ணி பார்க்கும்போது ரொம்ப நல்லா பண்ணி இருந்தாங்க! யாரு அந்த இவன்ட் ஆர்கனைசர் ?எந்த கம்பெனி?” என்று கேட்டார்

கோவிந்த் அது என்று கொஞ்சம் தயங்கினார்.

ஜிவி, என்ன பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் அது யாருன்னு எனக்கு தெரியும்! நீங்களே சொல்லுங்க! என்று கேட்டார்.

உடனே கோவிந்த் அது வந்து மருமகள் என்னோட son in law அவரோட சிஸ்டர்ஸ்தான் பண்ணுனாங்க..

ஜிவி, ஏன் இப்படி மொட்டையா பேசுறீங்க அவங்க ஒன்னும் சாதாரண ஆள் இல்லையே! தேவ் கார்ப்பரேஷன் ஓட மிஸஸ் தான் அவங்க, அதைப்போல  இன்னொரு பொண்ணு மாறன் கண்ஸ்ட்ரக்சனோட எம்டி தான…

உடனே கோவிந்த் பற்களை கடித்துக்கொண்டு வேற என்ன சொல்வது என்று தெரியாமல் ஆமா நீங்க சொல்றது சரிதான் என்று கூறினார் .

பரவாயில்ல உங்க பொண்ண டீசன்டான இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கீங்க.. ஹீ இஸ் லக்கி என்று ஜீவி கூறினார்.

கோவிந்த அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை ..

உடனே ஜீவி “எனக்கு என்ன பண்ணுவிங்களோ தெரியாது! நம்மளோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் பெரிய ப்ராஜெக்ட் ஆனா அதுக்கு முன்னாடி இந்த இவன்ட் இந்த இந்த பார்ட்டி ரொம்ப முக்கியம்! அதை உங்களோட அதாவது ஐ மீன் உங்க son in law ட சிஸ்டர்ஸ் பண்ணி கொடுத்தா நல்லா இருக்கும் சோ அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க! அதுக்கு தான் நான் உங்களுக்கு கால் பண்ணேன்!”என்று சொல்லிக்கொண்டு ஃபோனை வைத்தார்.

போனை வைத்ததும் கோவிந்துக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை அவங்க கிட்ட நான் கேட்கணுமா? தெரியாம அவங்கள பண்ண சொல்லிட்டேனே? இப்போ இந்த ஜீவி வேற இப்படி வந்து கேட்டு நிக்கிறானே. என்று மனதிற்குள் நினைத்தார். 

அவர்களுடன் ஜீவியுடன் பாட்னர்ஷிப் ஷேரிங் கிட்டத்தட்ட 500 கோடி அளவு ஆனால் அந்த 500 கோடிக்காரன் சாதாரண இந்த பார்ட்டில இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் குடுக்குறானே என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.

உதயன் அவனுடைய அறையில் இருந்தான்.

உடனே கோவிந் உதயனுக்கு அழைத்தார். 

மாப்பிள்ளை கொஞ்சம் கீழே வர முடியுமா உங்க கிட்ட பேசணும்..

சரி என்று சொல்லிவிட்டு கீழே வந்தான்.

ஹலோ சொல்லுங்க சார் என்று கூறினார்.

 ஒன்னும் இல்ல ஒரு வேலை ஆகணும் அதை நீங்கதான் பண்ணனும் என்று கூறினார்..

என்ன வேலை?அவன் எதுவும் பேசாமல் அவருடைய பதிலுக்காக காத்திருந்தான்.

கோவிந்த் நம்ம இப்போ டஜீவி கார்ப்பரேஷன்ட ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறோம். கிட்டத்தட்ட அது கோடிகளில் இருக்க போகுது ஆனா அந்த ப்ராஜெக்ட்டுக்கு முன்னாடி ஒரு பெரிய பார்ட்டி ஜிவி குரூப்ல இருந்து நடத்த போறாங்க.. அங்க தான் நமக்கு வேலை!

உதயன், என்ன வேலை சார் என்று கேட்டான்…

ஒன்னும் இல்ல அந்த வேலைக்கு முன்னாடி அந்த பார்ட்டிய ஆர்கனைஸ் பண்ணனும்!..

உதயன் புரியாமல் என்ன சொல்றீங்க?

கோவிந்த், “ஆமா அந்த பார்ட்டிய என்  பொண்ணோட அதாவது நம்மளோட ரிசப்ஷனை யாரு இவன் பண்ணினார்களோ அவங்க தான் அவங்க தான் இதையும் பண்ணனும்!” என்று கூறினார்.

உதயன் புருவத்தை தூக்கி கொண்டு அதுக்கு என்கிட்ட சொன்னா நான் என்ன பண்ண முடியும்! அவங்க  கிட்ட பேசுங்க என்று சொல்லிக் கொண்டே திரும்பினான்.

கோவிந்  கால் மேல் கால் போட்டு கொண்டு அதை பண்ணுனது உங்க  அருமை தங்கச்சிங்க தான் என எனக்கு தெரியும் என்று அதிகாரத் தொணியில் பேசினார் .

உடனே உதயன் ஓகே அப்போ போய் கேளுங்க என்கிட்ட எதுக்கு  சொல்றீங்க?

கோவிந்த்,  நான் உங்ககிட்ட தான் அந்த வேலையை கொடுத்து இருக்கேன் சோ அந்த பார்ட்டியோட பொறுப்பு ! நீங்க தான் அந்த பார்ட்டிய ஆர்கனைஸ் பண்ண போறது! உங்க சிஸ்டர்சோட  கம்பெனி தான் ஈவண்டா இருக்கணும்!  இப்பவே நான் சொல்லிட்டேன் இதை எப்படியாவது நீங்க பண்ணி முடிக்கணும்! என்று சொல்லிவிட்டு எழுந்து கிளம்பி விட்டார்.

 கோவிந்து ஒரு நிமிடம் நின்று கொண்டு இது இதுல தான் நீங்க உங்களோட குடும்பம் எப்படின்னு நான் தெரிஞ்சுக்க போறேன்! என்று புகைச்சலை கிளப்பி விட்டு சென்றுவிட்டார் .

உதயன் வேறு வழி இல்லாமல் மீண்டும் அவனது அறைக்கு சென்றான்.

இங்கே தேஜு spr வீட்டில் உள்ள அவளுக்காக காத்திருந்தான்.

அவனை கண்டுகொள்ளாமல் நேராக அவளுடைய அறைக்கு செல்ல spr அவளை பின்னாடி இருந்து அனைத்து கொண்டான் .

அவள் எதுவும் பேசவில்லை.

என்னடி ஆச்சு என்று காதல் பொங்குவது போல பாசாங்குத்தனமாக ஒரு நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒன்னும் இல்ல

Spr, எங்க நம்மளோட நித்தின காணோம் வரலையா?

அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை நேராக நிவாசை தூக்கிக் கொள்ள சென்றாள்.

உடனே spr என்கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணு என்ற கையை பிடித்துக் கொண்டு அருகில் அமர வைத்தான்.

எனக்கு தலை வலிக்குது ,கால் வலிக்குது என்ன டிஸ்டர்ப் பண்ணாத நீ கெளம்பு என்று கூறினாள்.

Spr  மனதிற்குள் பொம்மாயி என்று மறுக்கிக் கொண்டே அவனது அவளது காலை பிடிக்க ஆரம்பித்தான். அவன் மெதுவாக அல்லது காலை பிடிக்க ஆரம்பித்தான். 

தேஜூ அவனை….? 

தொடரும்…

You may also like

Leave a Comment