அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
373 views

Episode-86

ருத்ரன் கெத்தாக அவளின் அருகில் அமர்ந்திருக்க, spr கண்களில் அத்தனை சந்தோஷம். ஜோடி பொருத்தம் மிகவும் அழகாக இருந்தது மனம் நிறைந்து போனது. தானே தேடி இருந்தாலும் ருத்ரன் போல ஒருவன் கிடைப்பது அரிது. 

நிலா இன்று நிஜமாகவே வெண்ணிலவை போல இருந்தாள் பவர்ணமி போல வயிற்றில் கருவை சுமந்து கொண்டு.. 

கண்மணி கூட அங்கு தான் இருந்தாள். ருத்ரன் மற்றும் கண்மணி இருவரின் பார்வையும் ஒரு நொடி நேர்கோட்டில் சந்தித்து கொண்டது. ருத்ரன் நிலாவின் கைகளை பிடித்தபடி அவளை உரசி கொண்டு அமர்ந்தான். 

என்னங்க!! என்ன பண்றீங்க? எல்லாரும் இருக்காங்க! என நிலாவின் கன்னக்குழி அவ்வளவு அழகாக இருக்க.. 

ருத்ரன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அந்த டைனிங் டேபிள்ள தான அன்னிக்கு நம்ம என கூறினான். 

அவள் முட்டை கண்களை அகல விரித்து கொண்டே அவனை பார்க்க, 

நீ கேரிங்கா இருக்க பொண்ணுங்களை விட அதிகமா இன்னிக்கு டாலடிக்கிற!! என ஒற்றை கண் சிமட்டினான் அவளுக்கு மட்டும் தெரியுபடி.. 

நிலாவின் முகத்தில் புன்னகையுடன் கூடவே வெட்கம் தூள் பறந்தது. அதை வெளியில் காட்டி கொள்ளாமல் உள்ளே போன குரலில் நான் எப்போவும் போல தான் இருக்கேன். பேசியல் கூட பண்ணதில்லை என்றாள்.

S*x glow உனக்கு அதிகமா இருக்கு டி!! 

நிலாவின் உடலில் உள்ள ரோமங்களின் பூனை முடிகள் எல்லாம் நட்டு கொண்டு நிற்க.. வேறு புறம் திரும்பி கொண்டாள். 

ருத்ரன் அத்தோடு நிறுத்தி விடவில்லை. அவனது கால் பெரு விரல் கொண்டு அவளின் பாதத்தை வருடி கொண்டிருந்தான். 

நிலா மூச்சு வாங்கி கொண்டே அவனை பாவமாக பார்க்க.. 

அருகில் இருந்த மிதுன் ருத்ரன் தலையில் ஒன்று வைத்தான். 

என்ன பண்ற மிதுன்? என அனைவரும் கோபத்துடன் பார்த்தார்கள். 

ஒரு பெரிய கொசு நிலாவோட கால்ல கடிச்சுட்டே இருக்கு அதான் அதை புடிச்சேன். அது இவன் தலையில் விழுந்திடுச்சு. என்றான். 

அங்கிருக்கும் அனைவரும் நமட்டு சிரிப்புடன் சீமந்தம் சடங்கை ஆரம்பித்தார்கள். 

ருத்ரன் திரும்பி ஏளனமாக பார்க்க.. 

என்ன டா? உன் கண்ணை நோண்டி எடுப்பேன். என்றான் மிதுன். 

ருத்ரன் சிரித்து கொண்டே மாமா அட்லீஸ்ட் ஊசியில் நூல் போட்டு கோர்த்து பாருங்க.

மிதுன் அவனை கோபத்துடன் பார்க்க.. 

இந்த வயசுல இன்னும் கல்யாணம் நடக்காம இருந்தால் பத்தாவது ஊசியில் நூல் கோர்க்கும் போது உங்களுக்கு டும்டும் ஆகிடும் அதை விட்டுட்டு இங்கே வந்து டென்ஷன் பண்ணிகிட்டு என்றான். 

மிதுன் நேராக ரிதம் பக்கம் சென்று துகில் குட்டியை வாங்கி கொண்டான். 

ரிதம் அவனை பார்த்து கல்யாணம் எப்போ பண்ண போற? 

நாம் STR fan!! 

அதனால!! 

அதனால என்னன்னு தெரியாதா? 

டேய் மிதுனு STR play boy.. 

நானும் அப்படி தான் என மிதுன் மீசை முடி குத்த துகில் கன்னத்தில் முத்தமிட்டான். 

டேய் நீ சாக்லெட் பாய்! 

தெரிஞ்சா சரி என்றான் மிதுன். 

ரிதம் சிரித்து கொண்டே கிறுக்கா play boy means play பண்ணி அதுல நிறைய குட்டிகள் எங்கேயாவது யாருக்காவது வந்திருக்கும்.  சாக்லெட் பாய் அப்டின்னா முத்தம் கொடுக்க கூட லாயக்கு இல்ல டா மித்து பையா! 

ஹே யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற? STR டி! 

அமீர்கான் நாலாவது கேர்ள் பிரெண்ட் கூட date ல இருக்காராம். அமீர் கானுக்கு சூர்யா மாமா வயசு இருக்கும் அவரே நாலு. நீ இன்னும்? என இழுத்தாள். 

ஹே ரிதம் நீயா இப்படி?  நீயுமா இப்படி?.. என பார்த்தவன். ஒரு பெரு மூச்சுடன் நான் லடாக் ட்ரிப் போறேன். என்று சொல்லி விட்டு நகர்ந்து கொண்டான். 

அனைவரும் நிலாவுக்கு நலங்கு வைத்து வளையல் போட்டு விட்டார்கள். 

நிலாவின் கண்களில் சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தம் இருந்தது. இது தீரா குழந்தையா இருந்தால்? எவ்ளோ நல்லாருக்கும் என நினைத்தாள். கண்களில் நீர் கோர்க்க அதே நிலையில் தான் spr குடும்பம் இருந்தது.

சீமந்ததுக்கு செய்யப்பட்ட உணவை கலைவாணி மற்றும் தேஜூ இருவரும் ஊட்டி விட்டார்கள். 

ருத்ரன் அவளையே ஓர கண்களால் பார்த்து கொண்டிருந்தான். 

கொழு பொம்மை போல இருப்பவளை கொஞ்சி கொண்டாட தோன்றியது. 

அதன் பின் விருந்துகள் ஆரம்பித்தது. அனைவரும் சாப்பிட சென்றார்கள். 

மா எனக்கு நகை கொஞ்சம் வெயிட்டா இருக்கு. இந்த புடவை உப்புசமா இருக்கு வேற ட்ரெஸ் போட்டுக்கவா? என மூச்சு வாங்கி கொண்டே கேட்டாள் நிலா. 

வீட்டுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணு அப்புறம் மாத்திக்குவ என்று தேஜூ விடாப்பிடியாக மறுத்து விட.. 

நிலாவின் முகத்தில் சோர்வு களைப்பு தோன்றியது. 

நிதின் தன் தங்கையின் அருகில் வந்தவன் என்னாச்சு? உன்னோட முகம் சரி இல்லையே? அவன் உன்னை கொடுமை பண்றானா? என்ன? என கேட்டான். 

என் மச்சான் அப்படி பட்டவன் இல்ல என சொல்லி கொண்டே வந்தான் சத்ய தேவ். 

ருத்ரன் முகத்தில் புன்னகை.. இது என் மாமா!! என நினைத்தான். 

நிதின் எதுவும் பேசாமல் முறைத்து விட்டு நகர்ந்தான். 

சத்யதேவ் நிலாவின் அருகில் வந்து என்ன நிலாமா அவன் உன்ன நல்லா பாத்துக்கரானா?  என்று கேட்க.. 

மாமா என சத்தமாக கோபத்துடன் அழைத்தான் ருத்ரன். 

டேய் இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?  நான் கூட கேட்க கூடாதா? 

நீங்க கேக்குறீங்கன்றது தான் எனக்கு வருத்தமே! அவளை நான் என்ன கடிச்சு முழுங்கிட போறேனா? ஹே சொல்லுடி என்று அதட்டினான் ருத்ரன். 

நிலா கண்ணக்குழி தெரிய சிரித்தவள் அவர் அது என்ன நல்லா பார்த்துகிறார் அண்ணா என்று வெட்கத்துடனும் சிரித்தபடியும் கூறினாள். 

ம்ம் யாரோ கல்யாணம் பண்ணவே மாட்டேன்னு ஒத்த காலில் நின்னாங்க. என் மச்சான வேணாம்னு வேற சொன்னாங்க? ஆனால் இன்னிக்கி பிடிக்கிதோ? என்ன மாயம் மந்திரம் செஞ்சானோ? என கிண்டலுடன் கூறி விட்டு சென்றான் சத்ய தேவ். 

ருத்ரனின் முகம் மாறி போக.. 

ஐயோ இந்த அண்ணா வேற பழசை எல்லாம் ஞாபகப்படுத்தி விட்டுட்டாரு. ஏற்கனவே வரப்பா! கோபத்துல தான் சுத்திக்கிட்டு இருக்காரு என் புருஷன்  இப்போ இதை வேற சொல்லியாச்சா? இப்போ சமாதானமா இருக்காரா கோப பறவையா இருக்காரான்னு தெரியலையே? என அருகில் நெருங்கியவள் தீரா என்று அழைத்தாள். 

ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தான். 

அது பழைய விசயம்!! இப்போ நான் அப்படி இல்லை!! 

இட்ஸ் ஓகே என நகர்ந்து விட்டான். 

தீரா பிளீஸ் என பூனை குட்டி போல அவன் பின்னால் சுற்றினாள் வீட்டுக்கு கிளம்பும் வரை.. 

கங்கா மற்றும் வசுமதி இருவரும் தீரா நீயும் அவள் கூட போகணும். வீட்ல விட்டுட்டு நாளைக்கு வா!! என அனுப்பினார்கள். 

ஆரத்தி எடுத்து அழைத்தாள் ஹரிணி. 

வந்ததும் பத்து நிமிடத்தில் புறப்பட்டான் ருத்ரன். 

வந்ததும் போறீங்க? இருந்துட்டு போங்க!! என நிலா கூற.. 

இல்ல எனக்கி போகணும்! Friends Wait பண்றாங்க. அவங்க கூட அப்படியே கிளம்பலாம்ன்னு இருக்கேன் என்றான் ருத்ரன்.

என்னாச்சு உங்க முகம் சரி இல்லையே என நிலா கேட்க.. 

எனக்கு ஒண்ணுமில்லை. பாப்பாவை பத்திரமா பார்த்துக்க டெலிவரி அப்போ வரேன் என எழுந்தான். 

அவன் முன்னால் போய் நின்றவள். கோபமா? என கேட்டாள். 

ஒன்னும் இல்லடி! கிளம்பனும் என ருத்ரன் விடாப்பிடியாக கூற.. 

அவளின் கண்களில் நீர் முட்டி கொண்டது. 

வெளியே வரை சென்றவன். ரிவர்ஸ் எடுத்து அவளின் உதட்டை கவ்வி முத்தமிட்டான் கால் மணி நேரம். 

மூச்சுக்கு தவித்தாள். 

மெல்ல விலகியவன். போயிட்டு வரேன். என புறப்பட்டான். 

இது தான் அவர்களின் அமைதியான கடைசி சந்திப்பு என அவர்களுக்கு தெரியவில்லை. 

நிலா அழுதபடி அவனை வழி அனுப்பி வைக்க வந்தவள். என்னங்க நான் அங்கேயே இருக்கவா? எனக்கு இங்கே தனியா இருக்க போல தோணுது என கூறினாள். 

ருத்ரன் ஒரு குட்டி புன்னகையை உதிர்த்து, போடி!! என்றான். 

தீரா!! 

நிலா அடி வாங்க போற நீ! என அவளிடமிருந்து விடை பெற்றான். 

ஹரிணி அவர்களின் சம்பாசனையை பார்த்து விட்டு சிரித்து கொண்டே தீராவை கட்டிக்க மாட்டேன்னு சொன்ன? ஆனால் இன்னிக்கு தீராவ விட்டு இருக்க முடியலையா? என்ன? என கேட்டாள். 

போங்க மன்னி என அழுது கொண்டே சென்று விட்டாள் நிலா. 

Spr அவனை அனுப்பி கொண்டே மாப்பிள்ளை அந்த வேலை? என கேட்க.. 

அதுக்கான வேலையை பார்க்க தான் மாமா போறேன். என்றான் ருத்ரன். 

ரொம்ப சந்தோசம் என spr அணைத்து அனுப்பி வைத்தார். 

நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் spr நிம்மதியாக உணர்ந்தார். 

வீட்ல ரெண்டு பேர் பிள்ளை வயிறா இருக்காங்க. அதனால ஹாஸ்பிடலில் இருந்து ஒரு செவிலி பெண் வீட்டுல இருக்க மாறி இருந்தால் பரவாயில்லை என கூறினார் தேஜு

அவ்ளோ தான நான் இப்போவே ஏற்பாடு பண்றேன் என spr அந்த வேலையை செய்தார். 

வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள் தீபனா. 

***

ஹே கால் கொலுசு ஏன் போடாமல் இருக்க? நிலா!! அங்கே பாரு கால் பொக்குன்னு இருக்கு என தேஜு கூற.. 

கொலுசு சத்தம் தீராவுக்கு பிடிக்காதுன்னு அம்மா கிட்ட நான் எப்டி சொல்லுவேன். சரி இப்போதைக்கு போட்டுக்கலாம் என அணிந்து கொண்டாள். 

டேய் ஆர்மிய விட்டு போறேன்னு சொன்னது தீராவா? என சுற்றிலும் முற்றிலும் பார்த்தார்கள் அவனது நட்புகள். 

ப்ச் இப்போ என்ன? நான் ஸ்டேட் கவர்மென்ட்ல ஜாயின் பண்ண போறேன். 

சேத்தன், சவுரவ், அனந்து, ராகேஷ் என அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்க்க. 

வசீம் புன்னகையுடன் ஒரு பொண்ணு நினைச்சா எதையும் பண்ண முடியும். இதோ நம்ம டாக்டர் மேடம்க்காக சார் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு போக துணிஞ்சிட்டார் என்றான். 

என்னோட கல்யாணம் arrange marriage! நீங்க சொல்ற எந்த மண்ணாங்கட்டி மயிரும் இல்லை என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது யாரும் மாற்றவும் முடியாது எனக்கு தோணுது போறேன் அவ்வளவுதான் தேவையில்லாம எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க நான் இருக்க போறேன் இந்த ரெண்டு மாசத்துல தேவையில்லாத பேசி என்கிட்ட திட்டு வாங்கி சாகாதிங்கடா என்று விட்டு நகர்ந்தான். 

இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று சேத்தன் ஹிந்தியில் கூட.. 

இது ஒரு வகையான உருட்டு என சிரித்துக் கொண்டே கூறினான் ராகேஷ். 

இதோ இரண்டு மாதங்கள் ஓடியது வேகமாக.. 

ருத்ரன் இன்னொரு பக்கம் அந்த கொலுசுக்கு சொந்தக்காரி ஆன பெண்ணை தேட முயற்சி செய்து கொண்டிருந்தான். 

கொலுசுக்கு சொந்தக்காரி கிடைத்துவிட்டாள்.  ஆனால் வேறு விதமாக.. 

விவேகா ருத்ரனுக்கு அழைத்தார். 

“அம்மா சொல்லுங்க”

நீ இன்னும் கிளம்பலையா அவளுக்கு டேட் நெருங்கிடுச்சுடா நிலாவுக்கு டெலிவரி ஆக போகுது நீ அவ கூட இருக்கணும் தானே அந்த குழந்தை உன்னோடதா இல்லனா கூட நீ அவளை நல்லா பார்த்துக் கொள்ளாதீரா அவ ரொம்ப நல்ல பொண்ணு பாவம் எவனோ ஒருத்தன் ஏமாத்திட்டு போயிட்டான் அந்த சண்டாட படுபாவிக்கி  கண்டிப்பா சாவு வரும் என்றார். 

இதோ கிளம்பிட்டேன் மா வந்துடுவேன் நீங்க கவலைப்படாதீங்க நான் அவளை பத்திரமா பாத்துக்குவேன். நான் வேற ஒருத்தனுடைய குழந்தை அப்படின்னு பிரிச்சு பாக்க மாட்டேன்மா. என்றான். 

இதோ ருத்ரன் வரவும் நிலாவுக்கு லேபர் பெயின் எடுக்கவும் சரியாக இருந்தது. 

அடுத்து அதிரடி தான்!! 

அடி உதை வாங்க வந்து விட்டான். 

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment