
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
- 19 Jul 2025
- 413 reads
- ☆ No ratings yet
- 8 min read
Episode-85
ஹே எட்டி உதைக்கிறானா? என வயிற்றில் கை வைத்தான் ருத்ரன்.
ம்ம்!! கொஞ்சம் சேட்டை தான்!! என நிலா கன்னக்குழி தெரிய சிரித்தவள் முகம் சட்டென இருண்டு போக..
பைத்தியக்காரி!! இப்போ என்ன நினைச்ச? சொல்லு என ருத்ரன் கோபமாக கேட்க..
ஒண்ணுமில்லை என கூறினாள் நிலா.
ருத்ரன் கோபத்துடன் எழுந்து சவருக்கு அடியில் நின்றான்.
கைய பிடிங்கோ!! பிளீஸ்!! நீங்க தப்பா நினைப்பீங்களோ அப்டின்னு நினைச்சேன். இனி அப்படி நினைக்க மாட்டேன். கெஞ்சி கேட்கிறேன் என நிலா கூற..
ருத்ரன் முறைத்து பார்த்தான். நீ எல்லாம் திருந்தவே மாட்ட!! நானே உன்னை நல்லா பார்த்தாலும் நீ தான் என்னை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கிற போல!
தீரா வலிக்குது இங்கே என நிலா முகத்தை சுனக்க, வேகமாக அருகில் வந்தவன். ஹே நிலா பேபி என வேகமாக அவளை தூக்கி விட்டான். இப்போ ஓகே வா!! என ருத்ரன் கேட்க..
அவனை அணைத்து கொண்டவள். சாரி பொய் சொன்னேன். பிளீஸ் தள்ளி போகாதேல் என்றாள்.
சரி தள்ளி போ!!
இல்ல நீங்க கோபமா இருக்கீங்க!!
இல்ல டி தள்ளு!! என ருத்ரன் அவளை விலக்க முற்பட.. நிலா அவனது நெஞ்சில் முத்தமிட்டு நிமிர்ந்து அவன் காலில் நின்று தலையை இழுத்து முத்தமிட்டாள்.
அவளின் தலையை வாகாக பிடித்தவன். அதன் பின் அசைவனாக மாறி அவளை மொத்தமாக விழுங்கி விட்டு அழைத்து வந்தான்.
ஹே எதுக்கு குனிஞ்சிருக்க?
ஒண்ணுமில்லை!! என நிலா செல்ல..
ஹே நில்லு டி! என கழுத்தை பற்றினான்.
எனக்கு பசிக்குது பிளீஸ்!!
பண்ற வேலையெல்லாம் பார்த்தால் மேடம் டாக்டர் மாதிரி தெரியல! எனக்கே டீச்சர் கிளாஸ் எடுக்கிற அளவுக்கு வந்துட்ட! ம்ம் என ருத்ரன் புருவம் சுருக்கி சிரிப்புடன் அவளை கிண்டல் செய்ய வேகமாக வெளியே சென்று விட்டாள்.
இன்பா டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க.. டேய் எப்போ சாப்பிட்டு முடிப்ப? நாலு தோசை சுட்டுட்டேன். என விவேகா உள்ளே இருந்தபடி கத்த..
எப்டி டி இதை சாப்பிட முடியும்? உன்னை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளனும் ஏன் டி என்னை டார்ச்சர் பண்ற?
என்னடா ராகவ் நீ சொன்ன ரெண்டு சட்னி பண்ணிட்டேன்.
இன்பா அவளை முறைத்து பார்த்தவர். வேர்க்கடலை சட்டினி, பொட்டு கடலை சட்னி செஞ்சிருக்க? உன்னை வெரைட்டி சட்னி தான செய்ய சொன்னேன்.
விவேகா கோபத்துடன் பழைய கறி குழம்பு உனக்கு தொண்டைய கவ்வும் பிடிக்காது சீன போடுவ, இட்லி பொடி பிடிக்காது, எல்லா நேரமும் வெங்காயம் தக்காளி வணக்கி சட்னி செஞ்சு கொடுத்தால் தான் உனக்கும் இறங்கும். எனக்கு வயசாகிட்டு போகுது. நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணி சமைக்க கீப் வச்சுக்க!! என்றாள்.
இன்பா கோபத்துடன் பார்த்தவர் அட்லீஸ்ட் ஆனியன் கட் பண்ணி ஆம்லெட் போட்டு எடுத்திட்டு வா என அதட்டினார்.
போறேன் என சொல்லி கொண்டே சென்றார். இன்பா வெளியில் இருந்து, ஹே கண்ணாடி பவுல்ல பீட் பண்ணு, பெப்பர் போடு,
ராகவ் உங்க அம்மா வீட்டுக்கு போயிடு பேசாம!!
“விவேகா உன் மம்மிய வர சொல்லு.”
“உன் பொன்னை யாரு பார்த்துக்குவா?”
இன்பா அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட்டார்.
அத்தை என நிலா வர..
வா மா! இதோ ஆட்டுக்கால் நசுக்கி போட்டு பாயா ரெடி!! என்றவர் தோசை மற்றும் பாயா இரண்டையும் போட்டு கொடுத்தார்.
மா எனக்கு ஆம்லெட், ஆரஞ்சு, சிக்கன் வேணும் என ருத்ரன் வர..
இதோ ரெடி என ஹவனை திறந்து போட்டு கொடுத்தார்.
இருவரும் வாங்கி கொண்டு டைனிங் டேபிள் சென்றார்கள்.
ருத்ரன் நிலாவை பார்க்க அவளோ கைகள் வியர்க்க டைனிங் டேபிள் மற்றும் ருத்ரன் என பார்த்தாள்.
இன்பா ருத்ரனது பிளேட்டில் கை வைக்க..
மா இவர பாருங்க!! என கத்தினான்.
நிலா போய் ஜூஸ் எடுத்திட்டு வா மா உன்னோட புருசனுக்கு!! என இன்பா கூற..
இ.. இதோ மாமா என அவள் எழுந்து கிச்சன் செல்ல..
தூக்கத்தில் நடக்குற வியாதி இருக்கா உனக்கு?
என்ன உளறிட்டு இருக்கீங்க? எதுக்கு அவளுக்கு வேலை சொல்றீங்க? என உரிமினான்.
இன்பா அவனது காதை வலிக்கும் படி திருகி கொண்டே தூக்கத்தில் ட்ரெஸ் கழட்டிட்டு நடக்குற வியாதி இருக்கா? இல்ல.. என பார்த்தார்.
ருத்ரன் திக்கென தந்தையை பார்க்க,
இன்பா கன்னக்குழி தெரிய சிரித்தபடி அந்த விங்கு ரெண்டையும் என் பிளேட்ல வை!!… அட வை டா!!
ருத்ரன் வேகமாக எடுத்து தந்தையின் ப்ளேட்டில் வைத்தான்.
இன்பா சாப்பிட்ட படி, இனி உன்னோட ரொமான்டிக் சாங்க இங்கே ஓட்டின? அப்புறம் என அழுத்தமாக பார்த்தார்.
ருத்ரன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை முகமெல்லாம் வியர்த்து போனது.
வெட்கம் கெட்டவனே!! என திட்டி விட்டு சாப்பிட்டார்.
என்னங்க ஜுஸ் என நிலா ருத்ரன் பக்கம் நீட்ட..
நிலா இப்போ அவனுக்கு தண்ணி வேணும். தாகமா இருக்கு போல கொடு மா! என்று விட்டு சாப்பிட்டார்.
என்னாச்சு ராகவ் உன் பிளேட்ல எப்படி சிக்கன் வந்தது? என விவேகா கேட்க..
மா அது நான் தான் அவருக்கு வச்சேன். என சமாளித்தான் ருத்ரன்.
போடி என இன்பா சாப்பிட்டார்.
அந்த நேரம் இன்பா எண்ணுக்கு spr அழைக்க..
ஹலோ சொல்லுங்க!! எல்லாரும் நலம் நீங்க? என கேட்டார் இன்பா.
வளைகாப்பு வேணாம்னு பாப்பா சொல்லிட்டா!! அதான் பண்ணல என spr கூறினார்.
வளைகாப்பு செய்யலயா? என இன்பா ஸ்டார்ட் செய்ய…
ஒரு நிமிடம் போனை கொடுங்க என பிடுங்கி கொண்டு சென்று விட்டான் ருத்ரன்.
இன்பா, டேய் பறவிதி நாயே என அவனை முறைத்து பார்த்து திட்ட..
மாமா அவரு ஏதோ தெரியாம பண்ணிட்டார்!! என நிலா பரிந்து பேச..
என்ன மா நீ? அவனை எதிர்த்து கேள்வி கேட்பான்னு பார்த்தால் அவனுக்கு சப்போட் பண்ற? இது சரி இல்ல மா!! அப்புறம் அவனை கேட்க ஆள் இருக்க மாட்டாங்க!! என்றார் இன்பா..
நிலா தயக்கத்துடன் சிரித்து கொண்டே பார்க்க..
இன்பா ஒரு பெரு மூச்சுடன் உன் டாடி கிட்ட பேசிட்டு இருக்கேன். பெரியவங்க பேசுறாங்க அப்டின்னு மரியாதை கொடுத்தானா பாரு? வேகமாக போனை பிடுங்கிட்டு போய்ட்டான். உங்க டாடி என்னை என்ன நினைப்பாரூ? என்றார்.
அவருக்காக நான் சாரி கேட்டுக்கிறேன் மாமா என்றாள் நிலா.
ம்ம் என கன்னக்குழி தெரிய சிரித்த இன்பா தன் மருமகளை பார்த்து, புருசனுக்கு ஏத்த பொண்டாட்டியா தான் இருக்க மா நீ என்று கூறி விட்டு சாப்பிட்டார்.
என்ன சொல்றீங்க மாப்பிள்ளை? என spr கேட்க..
அவளுக்கு சீமந்தம் பண்ண சம்மதம் மாமா! நான் வேணும்னா உங்க பொண்ணு கிட்ட கொடுக்கவா? அவளே சொன்னா தான் நீங்க நம்புவீங்க என்றான் ருத்ரன்.
அதே போல போனை நிலாவிடம் கொடுக்க… நான்னா னாக்கு எதுவண்டி சம்சாயா லேது. பூரண சம்மதம். என்றாள் நிலா.
சாலா சந்தோசங்கா உந்தி பொம்மாயி என்றவர். அதன் பின் இன்பாவிடம் பேசினார்.
அதன் பின் விவேகா அமர்ந்து சாப்பிட்டு கொண்டே சீமந்ததுக்கு ஆக வேண்டிய வேலையை பார்க்கணும். என சொல்லி கொண்டே பொதுவாக பேசினார்கள்.
என்னாச்சு பேச மாட்டிக்கிறீங்க?
நீ யாரை கட்டியிருக்க? என அதிரடியாக அவளை இழுத்தான்.
உங்களை!!
அப்புறம் என்ன டி தெலுங்கில் பேசுற?
அது!! என அவனை பார்த்தாள்.
இனி உன்னோட ஊர் எது?
எது? என அவள் யோசிக்க..
ப்ச் சொல்லு டி!! என கைகள் மேய்ந்தது.
போலீஸ் கோட்ரஸ் என்றாள் நிலா.
என்ன போலீஸ் கோட்ரசா? யார் சொன்னாங்க?
நிலா அவனை பார்த்து, நீங்க எனக்கு தெரிஞ்சு கோட்ரஸ்ல தான இருக்கீங்க? ஆமா உங்க சொந்த ஊர் எது? என கேட்டாள்.
அப்டியே அப்பா கிட்ட பேசினதும் புரியாத மொழியில் பேசுற!! என ருத்ரன் அவளை பார்த்து முறைக்க, சாரி சாரி தீரா!! என கட்டி கொண்டாள்.
சரி மேலே போலாமா!!
ஏன் என்னாச்சு?
இங்கே தொந்தரவா இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மம்மி அவர் கிட்ட சண்டை போடும். அவர் சமாதானம் பண்ணுவார். அடுத்து அவர் சண்டை போடுவார் என் மம்மி சமாதானம் பண்ணும். இப்படி அவங்க ஏதாவது பண்ணிட்டே இருப்பாங்க.
அதுக்கும் மேலே போறதும் என்ன சம்மந்தம் என நிலா கேட்க..
ஹே என் மம்மி ஞாயம் பேச என்னை கூப்பிடுவாங்க டி!!
அப்டின்னா? என நிலா கேட்க..
டென்ஷன் பண்ணாம வா போலாம் என மேலே இழுத்து சென்றான். முத்தங்களும் கொஞ்சல்களும் எல்லை கடந்து சென்று கொண்டிருந்தது.
சீமந்தம் முடிஞ்சு நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன்.
No என ருத்ரன் கூற..
பின்ன இங்கே எப்டி இருப்பாங்க?
ரிதம் எங்க மாமா கூட தானே இருந்தாள். நீயும் இங்கேயே இரு!! என்றான் ருத்ரன்.
சரி அப்போ பார்ப்போம் என நிலா கூற..
விட்டு போயிடுவியா? என கொத்தாக பிடித்தான்.
மாட்டேன் என உள்ளார்ந்த குரலில் கூறினாள். அது என உதட்டை கவ்வி கொண்டான்.
***
முக்கிய உறவுகளையும் நட்புக்களையும் அழைத்து சீமந்தம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
சேத்தன், சவுரவ், வசீம், ராகேஷ், அனந்து என அனைவரும் வந்திருந்தார்கள்.
ருத்ரன் பாட்டிலை ஓபன் செய்து லிக்கரை ஊற்றி கொடுத்தான்.
எப்டி திமிங்கலம்? எப்டி பேய்? என சந்தானம் கேட்பதை போல.. தீரா!! சாலா!! போலோ பை? கேசே? கேசே? என கேட்டார்கள்.
என்னடா? என லெமன் ஜூசை குடித்து கொண்டே கேட்டான் ருத்ரன்.
கல்யாணம் ஆகி 4 மாசம் தான் ஆகுது. அதுக்குள் எப்டி? எப்படி? எப்டி நிலா மேம் இப்போ 7 மந்த்? என மண்டையை பிய்த்து கொண்டு கேட்டான் ராகேஷ்.
நம்ம பெற்பார்மென்ஸ் அப்படி!! என்றான் ருத்ரன்.
டேய் உண்மைய சொல்லு டா!! என ராகேஷ் மீண்டும் கேட்க..
நீங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டு வந்து கேளுங்க டா சொல்றேன். என்றான் ருத்ரன்.
மச்சி பிளீஸ் சொல்லு டா!! என சவுரவ் கேட்க..
அனந்து சிரித்து கொண்டே ஹனிமூன்க்கு தீரன் மேலே பிரேமம் முத்தி அன்னிக்கு இறுக்கி அணைச்சு உம்ம தந்தாலே அதான் இப்போ பாப்பா என்றான்.
கப்? என சேத்தன் கேட்க.
ஷாதி கே கல் ராத் யாதேக்யா? நிலா மேம் ருத்ரன் கிஸ் கிஸ் ஹக் ஹக் என்றான்.
ருத்ரன் புன்னகையுடன் அவர்களிடம் பேசி விட்டு அவனரைக்கு சென்றான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. பட்டு வேஷ்டி சட்டையில் ருத்ரன், அவனுக்கு அருகில் நீல நிற புடவையில் நிலா. அந்த அளவான ஒப்பனையில் தேவதையாக ஜொலித்தாள்.
சீமந்தம் ஆரம்பித்தது.
தொடரும்..
ருத்ரன் transformation for சைக்கோ love கூடிய சீக்கிரத்தில்.. அடி தடி வெட்டு குத்து இன்னும் ரெண்டு episode ல வர போகுது.
வான் வருவான்.










💬 Be the first to comment