Episode -113
சிவா கேஷுவலாக டீ குடித்து கொண்டிருக்க.. நிலா பரபரப்புடன் அங்கும் இங்கும் நடந்தாள்.
என்னாச்சு?
“நான் நினைச்சது எதுவுமே நடக்கலையே?”
“நீ ஒரு டம்மி பீசுன்னு உன் புருஷனுக்கு தெரியும் போல!!” என்றான் சிவா.
நிலா அவனை முறைத்து பார்க்க, சிவா முகத்தை திருப்பி கொண்டு பசங்க ஒரு விஷயத்துல முடிவு பண்ணிட்டா கண்டிப்பா அதை அவ்ளோ சீக்கிரம் உடைக்கவும் மாட்டாங்க விட்டு கொடுக்கவும் மாட்டாங்க என்றான்.
அப்போ நான் தோத்து போயிடுவனா? அப்படி தான சொல்ற நீ? என வேகமாக அவன் பக்கம் நெருங்கினாள் நிலா.
நீ தோத்து போவியான்னு எனக்கு தெரியாது. என்னை தூக்குல தொங்க விடுற வரைக்கும் நீ ஓய மாட்டேன்னு தெரிஞ்சு போச்சு. என்றான் சிவா.
சிவா? என அதிர்ச்சியுடன் நிலா அழைக்க..
“நீ அப்படி தானடி வேலை பண்ணி வச்சிருக்க? உங்கிட்ட சின்ன வயசுல இருந்து பின்னாடி ஃபாலோ பண்றேன். லவ் சொன்னேன். ஆனால் அப்போவே நீ அவனை லவ் பண்ற விசயத்தை என்கிட்ட சொல்லிட்ட.. சரின்னு விட்டேன். அவனையே கல்யாணம் பண்ணி குட்டி போட்டு இப்போ வந்து விவாகரத்து அப்டின்னு நிக்கிற! போறவ அப்டியே போக வேண்டியது தானே! எதுக்கு டி என்னை கோர்த்து விட்ட!” என்றான் சிவா.
அப்போ கிளம்பு நீ!!
நிலா நான் சொல்றத கேளு!! அவனை பார்த்தால் ஒரே அடியில் என்னை புதைச்சிடுவான் போல.. அப்படி பாகுபலி கணக்கா இருக்கான். நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ராசியாகிட்டா என்னை போட்டு அவன் புரட்டினா யாரு காப்பாத்துவா சொல்லு? இன்னும் நான் கல்யாணம் கூட பண்ணல! அதை விடு எனக்கு பொண்ணு கூட செட் ஆக மாட்டிங்குது. எனக்கும் அப்புறம் பிறந்த அந்த கவின் நாயி கல்யாணம் பண்ணிட்டான் டி! நான் இன்னும் அப்படியே சுத்திட்டு இருக்கேன் என்றான் சிவா சலித்து கொண்டே..
அவன் கூட நான் சேர மாட்டேன்.
அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க போறியா?
மாட்டேன்!!
நீயே பண்ணிக்கிறதாக இருந்தாலும் நான் தயாரா இல்ல. என்றான் சிவா.
நிலா நடப்பதை நிறுத்தவில்லை. சிவா போனை நோண்டியபடி படுக்கையில் விழுந்தான்.
எதுவும் ஐடியா சொல்லு!! என நிலா கேட்க..
எனக்கு ஐடியா சொல்ற அளவுக்கு மூளை இருந்திருந்தா இந்நேரம் கல்யாணம் பண்ணி ஹனிமூன் போயிருப்பேன். இப்போவே முடி கொட்டுது அதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லு என கேட்டான் சிவா.
போடா லூசு!!
நீ தாண்டி லூசு செத்து விளையாட கூட்டிட்டு வந்திருக்க. நீயும் உன் புருஷனும் லவ் பண்ணி விளையாடிட்டு இருக்கீங்க அது உனக்கு புரியுதா இல்லையாடி!!
நீ எதுக்கும் லாயக்கு இல்ல என முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.
என்னமோ பண்ணு? என கண்களை மூடி உறங்கினான் சிவா.
வீட்டில் தடபுடலாக விருந்து வேலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரன் பொறுப்புடன் அனைத்து வேலைகளையும் செய்தான்.
நீ எதுக்கு தீரா இதையெல்லாம் பண்ற? அவள் ஒரு அடங்காதவ!! நீ வா என தேஜூ அழைக்க..
ருத்ரன் புன்னகையுடன் இல்ல மாமி! இது நிதின் மாமாவோட ஒரு function நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா? என கூறியவன் அனைத்து வேலைகளையும் செய்தான்.
என்னடா அவனுக்கு சபோட் பண்ணி பேசுற? என்று ஹரிணி கேட்க..
உன் ஹஸ்பன்ட் நல்லவர் தான் கா நீ அவர் கிட்ட சண்டை போடாத!! என்று விட்டு உணவு தட்டுக்களை அடுக்கினான் ருத்ரன்.
உன்கிட்ட அவன் பேசினானா? என ஹரிணி கேட்க..
இல்ல கா அன்னிக்கி அவர் பண்ணதுல எந்த தப்பும் இல்ல. என ருத்ரன் கூற..
அவன் சக்திய சுட்டுட்டான். என்னால அதை தாங்கிக்க முடியல என ஹரிணி கூற…
அக்கா ஆல்ரெடி அவர் கில்ட்டியில் இருக்காரு பிளீஸ் பேசு சமாதானம் ஆகிக்கோ. மாமாவுக்கு எதுவும் இல்ல. நல்லாருக்கார். பிரச்னை நடந்து 5 மாசம் ஆகுது. இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காத. உனக்கு சந்தேகமா இருந்தால் சக்தி மாமாவுக்கு போன் பண்ணி கேளு என்று விட்டு சென்றான் ருத்ரன்.
ஹரிணி யோசனையுடன் நகர்ந்தாள். மீனாட்சி புறப்பட்டவள். வெளியே வந்தாள். நிவாஸ் அதே விரைப்புடன் வந்தான்.
உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். என மீனாட்சி அவனிடம் கூற..
என்ன? என்பதை போல கேட்டான் நிவாஸ்.
பிளீஸ் இதே போல இருக்காதீங்க! கண்டிப்பா ஒரு நாள் நான் வெறுத்திடுவேன். எனக்கு சலிச்சு போயிடும். பிளீஸ் என்கிட்ட ராசியாகி பேசுங்க! அவ்ளோ தான் சொல்லிட்டேன். நான் உங்களை ஏமாத்திட்டேன். அதுவும் உங்களுக்காக தான். உங்க கூட வாழனுன்னு தான். ருத்ரனால நான் இல்லாம வாழ முடியும். ஆனால் நீங்க அப்படி இல்ல. அதை விட என்னால உங்களை விட்டு இருக்க முடியாது. இதுக்கும் மேலே உங்க இஷ்டம். அண்ட் நான் ருத்ரன் கூட பேசுவேன். என்னோட மனசில எந்த கலங்கமான எண்ணமும் இல்ல. உங்களை விட எனக்கு ருத்ரனை தெரியும். அவருக்கு நான் friend தான் அதுக்கு பிறகு தான் காதல். இப்போ எங்க மனசுல எந்த கெட்ட எண்ணமும் இல்ல என்று விட்டு முன்னால் நடந்தாள்.
நிவாஸ் வெளியே செல்லவே இல்லையே அறைக்குள்ளேயே இருந்து கொண்டான். இந்த அளவுக்கு பிடிவாத குணம் கொண்டவள் அவனது அறைக்கு மேலே இருக்கிறாள் இன்னொருத்தி. அவள் தான் நிலா.
பார்ட்டி நன்றாகவே முடிந்தது. பணியாளர்கள் அனைவரும் இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள். ஹரிணி மீனாட்சியிடம் வரியா தீராவுக்கு சிக்கன் சூடு பண்ணி வச்சிருக்கேன். அவனுக்கு டிக்கா, தந்தூர் புடிக்கும். அதை கொடுத்திட்டு வரலாம் என அழைத்தார்.
மீனாட்சி சிரித்து கொண்டே கண்டிப்பா வரேன் கா! அண்ட் நானும் எடுத்து வச்சேன் அவருக்கு sea foods புடிக்கும் நாலு மாசமா நான்வேஜ் சாப்பிடவே இல்லையே!
ஆமாண்டி கொஞ்சம் இளைச்சு போயிட்டான் என்ற ஹரிணி உணவை எடுத்து கொண்டே திரும்ப ருத்ரன் சேரை அடுக்கி கொண்டிருந்தான்.
அக்கா நீங்க போய் கொடுங்க! நான் போய் கொடுத்தா என் புருஷன் என மீனாட்சி தயங்க..
ஹரிணி பெருமூச்சுடன் வாங்கி கொண்டு சென்றாள்.
என்னக்கா?
ஹே சிக்கன் சூடு பண்ணியிருக்கேன். இன்னிக்கி நான்வேஜ் சாப்பிடு!! என ஹரிணி நீட்டினாள்.
இல்லக்கா வேணாம். என ருத்ரன் கூறி கொண்டிருக்க..
என்ன நடக்குது? என கேட்டு கொண்டே வந்தாள் நிலா.
ருத்ரன்..?
தொடரும்..