அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
600 views

Epi -120 

சொன்னது புரியுதா? என துகிலை தூக்கி இக்கத்தில் வைத்து கொண்டே பார்த்தார் விவேகா.

ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தான் ருத்ரன்..

என்னடா ருத்ரா? அம்மா பேச்சை கேட்பியா மாட்டியா? நீ? ரிதம் என்ன நிலையில் இருக்கான்னு பார்த்த தானே? இதழும் உன்னை கட்டிக்க ஒத்துகிட்டா ஒழுங்கு மரியாதையா இப்போவே விவாகரத்து கொடுங்க அப்டின்னு கவுன்சிலிங்ல சொல்ற புரியுதா? என விவேகா ஏற்றி விட்டார். 

தன் அன்னையை இயலாமல் பார்த்தான் ருத்ரன். 

இன்பா துகிலை வாங்கி கொண்டார்.  விவேகா பெரு மூச்சுடன் ராகவ் நீ வீட்ல இரு நான் அவன் கூட போயிட்டு வரேன். நானே கார் ஓட்டிட்டு போறேன். என விவேகா ஏற.. 

ஹே கம்முன்னு இரு! டேய் உங்க அம்மா சொல்றத கேளு!! நாங்க போயிட்டு வரோம் நீ இங்கேயே இரு என இன்பா ஏறினார். 

இல்ல நானும் வருவேன் என சந்தேகத்துடன் காரில் ஏறி கொண்டார். 

அப்போ ரிதம்? என இன்பா கேட்க.. 

மகி அக்கா பார்த்துப்பாங்க! எனக்கு இன்னிக்கே விவகாரத்து வேணும் என விவேகா கூற.. 

அப்போ நான் இறங்கிக்கிறேன் என ருத்ரன் காரை நிறுத்த, துகில் குட்டி சிரிப்புடன் தன் தாத்தாவின் மேல் வழிசல் எச்சிலை ஆக்கி கொண்டிருந்தான். 

ஹே என்னடி சொல்ற? என இன்பா கேட்க.. 

அய்யோ இல்ல ராகவ். நான் வந்து அவனுக்கு உன் பையனுக்கு விவாகரத்து வாங்குறது பத்தி சொல்லிட்டு இருக்கேன். என விவேகா கூறி முடித்தார். 

எனக்கென்னமோ உன் பையன் நீ சொல்றத கேட்க மாட்டானோ அப்டின்னு தோணுது என இன்பா கூற.. 

டேய்!! என விவேகா மிரட்டுதலூடன் அழைக்க.. 

ப்பா நான் உங்க கிட்ட சொன்னேனா? கொஞ்சம் கம்முன்னு வாங்க என அனைவரும் ஒரு வழியாக கோர்ட் சென்று சேர்ந்தார்கள். 

நிலாவை SPR அழைத்து வந்திருந்தார். அவருக்கு மகள் செய்வது துளி கூட விருப்பம் இல்லை. தன் பேச்சை கேட்காத பெண்ணிடம் என்ன பேச முடியும்? அமைதியாக நின்றிருந்தார். 

அவர்களுக்கான நேரம் வந்தது. விவேகா சாவி கொடுத்து அனுப்பினார். ஏனோ நிலாவை பார்க்க பார்க்க எரிச்சலாக இருந்தது. என் மகனை ஒரு வேலைக்காரனை விட கேவலமாக நடத்தும் ஒருவளை எப்படி பிடிக்கும். துகில் அம்மாச்சி கிட்ட வாங்க? உங்களுக்கு வீட்டுக்கு போய் பருப்பு சாதம் ஊட்டி விடறேன். என்றார். உடனே அவனது முகம் பிடிக்காத ரியாக்சன் காட்டிட.. 

துகில் உனக்கு தாத்தா நாட்டுக்கோழி சூப் செஞ்சு தரேன் கூடவே தந்தூரி மம் மம் உன் அம்மாவுக்கு புடிக்கும் டா என இன்பா கூறியதும். முகத்தை பிடிப்பது போல மாற்றி காட்டினான் ஆசையாக.. 

எவ்ளோ அழகா இருக்கான் இவன்? தீரன விட அழகா இருக்கான் தான? என விவேகா முத்தமிட.. 

உன் பையன விட்டு கொடுக்க மாட்டியே இப்போ எப்படி? என இன்பா கேட்க.. துகில் கொஞ்சம் தீரா மாதிரி இருக்கான். என் பேரன் சிங்க குட்டி துகில். இவனை பார்த்தால் என் கஷ்டம் எல்லாம் பறந்து போயிடுது. என் பேரன் என கட்டி முத்தமிட்டாள். 

இன்பா சிரித்து கொண்டே பார்க்க, இப்போ எதுக்கு சிரிக்கிற ராகவ்? என்றார் விவேகா. 

ஒரு பொண்ணோட வாழ்க்கையில் முதலில் அவளோட அப்பா, அடுத்து காதலன், அடுத்து அவளோட கணவன், அடுத்து அவளோட குழந்தை, அப்புறம் அவளோட பேரன்  இப்படி பாசம் படிப்படியா மாறிகிட்டே இருக்கும். இப்போ உன்னோட உலகமே இவன் தான். இவன் மட்டும் தான் உனக்கு எல்லாமே போல தோணும். இவனை பிரிஞ்சு உன்னால இருக்கவே முடியாது. முக்கியமா உன் பொண்ணோட பையன் அதுவும் ஒரு காரணம் என்றார். 

விவேகா தன் கணவனை ஆச்சரியமாக பார்த்தவர். கரெக்ட் தான் எப்டி இருந்தாலும் முழுசா நிம்மதி இல்ல ராகவ் என் mind duversion எல்லாமே துகில் தான். ஏன்னா என் பையனோட வாழ்க்கை இப்படி இருக்கு. என் பொண்ணு!! என்று கண் கலங்கினார். 

எல்லாமே சரியா போயிடும் விடு டி! பார்த்திப்போம் நான் இருக்கேன் என தோலோடு தோல் அணைத்தார். (இதுவும் காதல் தான் என்றும் மாறாத காதல்) 

ஹே வந்துட்டான் டி உன் பையன் என இன்பா கூற.. 

விவேகா புன்னகையுடன் என்னாச்சு எல்லாமே ஓகே தானே என கேட்டார் சிரித்து கொண்டே.. 

தெரியல மா!! என ருத்ரன் கூற.. 

என்னடா நடந்தது? என்னாச்சு? என விவேகா ஆற்றாமையுடன் கேட்க, பின்னால் வந்த வக்கில் கீதாஞ்சலி பெரு மூச்சுடன் பார்த்தாள். 

என்னமா ஆச்சு? என விவேகா கீதாவிடம் கேட்க.. 

ருத்ரன் தும்மினான் நிலா கர்சீப் கொடுத்தா. அவள் இரும்பினா இவன் தண்ணி கொடுத்துட்டான் ஆன்டி அதனால… 

அதனால என விவேகா பற்களை கடித்து கொண்டு பார்க்க, 

ருத்ரன் வேறு புறம் திரும்பி கொண்டு பின் தலையை கோதிய படி நின்றான். 

“ரெண்டு பேரையும் ஆறு மாசம் சேர்ந்து வாழ சொல்லிட்டாங்க” என்றாள் கீதா. 

என்ன காரியம் ருத்ரா பண்ணியிருக்க நீ? நாயே? என கன்னத்தில் அறைந்தவர். காதை திருகினார் விவேகா. 

ஆன்டி என்ன பண்றீங்க? எல்லாரும் இங்கேயே பார்க்கிறாங்க? என கீதா சொல்ல.. 

மா நான் என்ன மா பண்ணேன்? என ருத்ரன் கேட்க

எருமை மாடு எருமை மாடு! உன்னை எல்லாம் மிதிச்சு வளர்த்திருக்கணும் ராஸ்கல் எதுக்கு டா தும்மின? உன்னை யாரு தும்ம சொன்னது? என விவேகா அவனது முடியை பிடித்து ஆட்ட.. 

ஒரு மனுஷனுக்கு விக்கலு தும்மல்லு என ருத்ரன் ஆரம்பிக்க, 

டேய் மலை மாடூ தெண்ட கருமாந்தரம்! உனக்கு உரைக்கவே இல்லையாடா? அவளுக்கு எதுக்கு தண்ணி கொடுத்த? என விவேகா குதித்தார்..

மா நான் தமிழன் மா! அடிக்காத மா என ருத்ரன் கூற.. 

டேய் அவளோட கர்ச்சீப்ப எதுக்கு டா வாங்கின? கர்ச்சீப் கொடுத்தா relationship கட் ஆகும்ன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனால் அத்துகிட்டு போக இருந்த விசயத்தை கர்ச்சீப் வாங்கி முடிச்சு போட்டு விட்டுட்ட நாயே! 

இது யாரு சொன்னது? இன்னும் 90s kid ன்னு நினைச்சிட்டு சுத்திட்டு இருக்காத டி! இது 2045 என்றார் இன்பா. 

டேய் நீ வாய மூடு என சொல்லிய விவேகா ருத்ரன் பக்கம் திரும்பி அவளுக்கு எதுக்கு டா கர்ச்சீப் கொடுத்த? 

மா எனக்கு தான் அவள் கர்சீப் கொடுத்தா பிளீஸ் மா விடு!! என்றான் ருத்ரன். 

உனக்கு வெட்கமாவே இல்லையாடா? உன்னை எவ்ளோ கேவலமா ட்ரீட் பண்ணா அவள். அவளுக்கு என்ன *யிருக்கு டா நீ என விவேகா கொதித்து எழுந்தார். 

ருத்ரன் சலிப்புடன் தன் தந்தையை பார்க்க, சரி வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா! உன் பையன் உன் கைய விட்டு போய்ட்டான் என்றார் இன்பா. 

விவேகா ருத்ரனை பார்க்க, 

மா இல்லவே இல்ல மா எல்லாத்துக்கும் காரணம் அவர் தான். உன் பின்னாடி அவர் தானே சுத்தினார். அப்போ அவர் பிளட் நான் எப்டி இருப்பேன்? என்றவன் வேகமாக காரில் ஏறி கொண்டான். 

நீ வீட்டுக்கு வா நாயே உன்னை கட்டி வச்சு தோலை உரிக்கிறேன். சாட்டையில் வெளுக்கிறேன் என புலம்பி கொண்டே சென்றார் விவேகா. 

என்னாச்சு? என மகி கேட்க, 

இதழ் துகிலை வாங்கி கொண்டாள். 

நான் நினைச்சது எதுவும் நடக்கல கா என விவேகாவின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. 

என்னாச்சு தீரா? என இதழ் கேட்க.. ருத்ரன் நடந்த அனைத்தையும் கூறினான். 

இப்போ என்ன பண்ண போற? என இதழ் கேட்க.. 

ருத்ரன்..? 

தொடரும்..

You may also like

Leave a Comment