Episode -126
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும் என்ற பாடலுக்கு ஏற்ப சந்தனா அழகு தேவதையாக ஜொலித்து கொண்டிருந்தாள்.
சத்ய தேவ் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
என்ன தேவ் அப்படி பார்க்கிறீங்க? என சந்தனா வெட்கத்தை மறைத்து கொண்டு கேட்க..
உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு!! என சத்ய தேவ் பெரு மூச்சுடன் கூற..
நீங்க ஓவரா பண்றீங்க? என சந்தனா வெட்கத்தில் சிவந்தாள்.
ஹே சீரியஸ்லி ஐம் டெல்லிங். இன்னிக்கே எனக்கு சாவுன்னா கூட உன்னை ரசிச்சுக்கிட்டே செத்துடுவேன் கண்ணமா என்றான் சத்ய தேவ்.
சத்ய தேவ்!! என்ன பேசுறீங்க? நல்ல நாள் அதுவுமா? என அவள் கோபத்துடன் பார்த்தாள்.
ஹே சும்மா சொன்னேன் டி! என அவனை அணைக்க அருகில் வந்தான்.
அந்த நேரம் பார்த்து க்கும் என தொண்டையை கணைக்கும் சத்தம் கேட்க.. வேகமாக விலகினான் சக்தி.
சந்தனா திரும்பி பார்க்க அங்கே துட்சாதனன் நின்று கொண்டிருந்தான்.
ஹாய் என சத்ய தேவ் மழுப்பி கொண்டே வெளியே ஓடி விட, பார்த்தல்ல!! அவன் என் மேலே எவ்ளோ லவ்ல இருக்கான்னு. என் மேலே பைத்தியமா இருக்கான். எனக்கு அவன் போதும் நீங்க யாரும் வேணாம். என சொல்லி கொண்டே வெளியே வந்தாள்.
இருவரையும் அமர வைத்து மொத்த குடும்பமும் சந்தனம் பூசி வளையல் போட்டு விட்டார்கள்.
ஹே தண்ணி மச்சானுக்கு தண்ணி கொண்டு வா!! உங்க பேர் மறந்து போயிடுது! உங்க பேர் என்ன என சத்ய தேவ் துட்சாதனனை பார்த்து கேட்டான்.
துருவன்!! என்றான் துட்சாதனன்.
சரி சாப்பிடுங்க!! என அனைவருக்கும் உணவை வைத்தான்.
சந்தனா ஆ போட்டுக்கோ அண்ணன் ஊட்டு விடறேன் என பிளாக் அருகில் அழைக்க,
அவளுக்கு நான் தான் ஊட்டி விடுவேன் என தனக்கு முன்னால் அமர வைத்த சத்ய தேவ், இன்னிக்கி உன்னோட காஸ்ட்யூம் கொஞ்சம் வெயிட்டா இருக்கு. அதனால மோர் சாதம் சாப்பிடு சனா என ஸ்பூன் கொண்டு ஊட்டி விட்டான்.
விதார்த் சந்தோசத்துடன் பார்த்தார். அந்த இன்ப ராகவனை பெரிதாக பழி வாங்கி விட்டோம் என்று உற்சாகத்தில் இருந்தார்கள் மொத்த குடும்பமும்..
சனா ஸ்வீட் வச்சியா? என சத்ய தேவ் கேட்க..
உள்ளே பாயசம் இருக்கு நான் போய் எடுத்திட்டு வரேன் என அவள் புன்னகையுடன் எழுந்து உள்ளே சென்றாள்.
இங்கே வெளியே துப்பாக்கி சத்தம் கேட்க வேகமாக பாயாசத்தை கீழே போட்டு விட்டு வேகமாக வெளியே ஓடி வந்தாள் சந்தனா.
சனா!! என கண்களில் நீர் கோர்க்க சத்ய தேவ் ப்ளாக் ஈகிள் மற்றும் துச்சாதனனை பார்த்து கொண்டே கீழே விழுந்தான். மூச்சு விட சிரமமாக இருந்தது அவனுக்கு.
ஹே சரிதா அவன் உன்னை ஏமாத்துறான். அவன் தான் என துச்சாதனன் பேச வர,
டேய் என சனாதனன் சத்ய தேவ் பக்கம் துப்பாக்கியை திருப்பி, எனக்கு அப்பவே தெரியும் டா!! நீ எங்களை ட்ராப் பண்ண தான் எல்லாத்தையும் பண்ண! போலீஸ் நாயே!! என கோவமாக அவன் சுட போக
அதற்குள் வேகமாக துப்பாக்கியை எடுத்து ட்ரிக்கர் செய்தவள்.
சரிதா நீ அவசரப்படுற என விதார்த் சொல்ல வர..
என் தேவ்வ இப்படி பண்ணிட்டீங்களே! என விதார்த், துட்சாதனன், சனாதனன், பிளாக் ஈகிள் என நால்வரையும் சுட்டாள்.
என்னை பண்ற சந்தனா? இவங்க எல்லாரும் என்ன சொல்றாங்க!! என மூச்சு வாங்க மயங்கி சரிந்தான்.
No NO NO சத்ய தேவ் எனக்கு நீ வேணும் என வேகமாக ஹாஸ்பிடலுக்கு சேர்த்தாள்.
ஹாஸ்பிடல் வெளியே பைத்தியக்காரி போல அவள் அமர்ந்திருக்க..
இங்கே உள்ளே சத்ய தேவ் படுக்கையில் கிடந்தான்.
நிதின் பிரகாஷ் ICU வந்து சேர்ந்தான் நேராக..
டேய் நீ எதுக்கு உள்ளே வர!! என சந்தனா அவனை வெளியேவே தடுக்க,
ஹே நாலு கொலை பண்ணிட்டு ஜாலியா இருக்கியா!! Arrest her என்ற நிதின் உடனே அவளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தான்.
நிதின் சொல்றத கேளு! எனக்கு சத்ய தேவ் அவனுக்கு எதுவும் ஆக கூடாது. அவனோட குழந்தை இங்கே என்னோட வயித்துல என அழுது கரைந்தாள்.
நிதின் பெரிய மூச்சுடன் பார்த்தவன். அவன் முழிச்சு உன்னை பார்க்க வருவான். இப்போ நீ ஜெயிலுக்கு தான் போகணும் என அவளை பார்த்து கூறினான்.
ஹே பிளீஸ் நான் எதையும் பண்ண மாட்டேன். பிளீஸ் எனக்கு இங்கேயே காவல் கூட வை. எனக்கு சத்ய தேவை பார்க்கணும். பிளீஸ் என கெஞ்சினாள்.
இவளுக்கு காவல் போடுங்க என கூறி விட்டு நிதின் அங்கேயே இருந்தான். அடுத்த நாள் காலை கண் விழித்தான் சத்ய தேவ்.
சந்தனா ஆசையுடன் ஓடி வந்தவள். தேவ் உனக்கு உனக்கு ஒன்னும் இல்லையே என அவனது உதட்டில் நச்சென்று முத்தமிட்டாள். நீண்ட நெடிய முத்தம் அது.
நிதின் வாயை பொத்தி கொண்டு காட்சிகளை பார்த்து கொண்டிருக்க, அழுது கொண்டே அவனிடமிருந்து விலகினாள் சந்தனா.
சத்ய தேவ் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவள் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
நான் சரியாகி வர வரைக்கும் வெயிட் பண்ணு. பாப்பா பத்ரம் எனக்கு பாப்பா வேணும். என அவளின் கையை நெஞ்சில் வைத்து கொண்டு கூறினான்..
ம்ம் என சந்தனா கண்களை துடைத்து கொண்டு கூற..
உங்க கள்ள காதல கொஞ்சம் நிறுத்துறீங்களா? என நிதினின் குரல் கேட்க..
உன்னை கொண்ணுடுவேன் என அவளின் கையை அழுத்தி பிடித்தவன். எதுக்கு அப்படி ஒரு வேலை பண்ண? என சத்ய தேவ் கேட்க..
இல்ல அது தான் சரி! எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல. இதெல்லாம் எனக்கு தேவை தான் என மருகி கொண்டே கூறினாள்.
நீ கவல படாத!! நான் இருக்கேன் என்றவன் நிதின் பக்கம் திரும்பி, நான் உன்னை உள்ளேயே விட மாட்டேன். சீக்கிரம் வருவேன் என அவளின் கையில் முத்தமிட்டான்.
சந்தனா வயிற்றை வருடி கொண்டே அவனை பார்த்தவள் திரும்பினாள். சந்தனா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாள்.
சத்ய தேவ் கண்களை மூடி கொண்டு படுக்கையில் கிடக்க,
கிஸ்சாவா இருக்க போல!! என நிதின் குரல் கேட்க..
வாய கிழிப்பேன் என கஷ்டபட்டு எழுந்து அமர்ந்தான் சத்ய தேவ்.
டேய் எனக்கு என்னமோ நீ நடிச்ச மாதிரி தெரியலையே!! அப்படியே வாழ்ந்திருக்க சனா புருஷனா! சனா சனா என கிண்டலாக பேசினான் நிதின்.
இருக்கும் இருக்கும் மூடிட்டு போயிடு என சத்ய தேவ் திட்ட..
அவளே விலகினாலும் இழுத்து முத்தம் கொடுக்கிற இது எல்லாத்தையும் ரிதம் பார்த்தால் எப்டி இருக்கும்? என நிதின் சிரித்து கொண்டே பார்க்க..
ம்ம் தரலாமா கூப்பிடு அப்படியே நானும் சொல்றேன்.
என்னன்னு?
அவள் வயித்துல வளர குழந்தைய சாரு நேரடியா அவரோட ஜென்டிரசன உருவாக்கினார். அப்டின்னு சொல்றேன் இது போதாதா? என சத்ய தேவ் கேட்க..
எதேய் என நிதின் பதட்டத்துடன் பார்க்க,
சத்ய தேவ்..?
தொடரும்…