LOVE UNDER ARREST PART 3

by Pradhanya kuzhali
435 views

Episode 96,

கவ்யாவுக்கு இன்பா கேக் ஊட்டும் காட்சியை எடுத்து அவன் முன் நீட்டினாள். 

இதுக்கு என்ன அர்த்தம் பதில் சொல்லுங்க?

இன்பா அவளின் கைகள பிடிக்க வர பிளீஸ் டோண்ட் டச் மீ, 

இன்பா சொல்ல ஆரம்பித்தான். என் மேல உனக்கு பிலீவ் இல்ல இட்ஸ் ஒகே. அந்த கேர்ள் மினிஸ்டர் பொன்னு கவ்யா. என்று சொல்லி மினிஸ்டர் வசுவிடம் கூறிய அனைத்தும் சொல்லியவன். நான் அவளை டச் கூட பண்ணல பூங்கொத்து கொடுத்தேன் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கணும் பட் இது ஒரு அபீசியல் சோ பூங்கொத்து கொடுத்தேன்.

விவேகா மனதில் எவ்ளோ மோசமான  பொன்னு என கவ்யாவை நினைத்தாள்.

அண்ட் நான் கேக் ஊட்டி விடாமல் இருந்தால் அவ எனக்கு ஊட்டி விட்டு இருப்பா.

என் பேபி மட்டும் தான் எனக்கு ஊட்டணும். என்று அவளை பார்க்க.

அப்போ சார் எல்லாருக்கும் ஊட்டி விட கிளம்பி விடுவீர்கள் அப்படி தானே…

இல்ல விவேகா ட்ரை டூ அண்டர்ஸ்டண்ட் மீ.

ம்ம் சொல்லுங்க கேட்கிறேன்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் அன்று இனியாள் கூட அந்த get to கெதர் கவ்யா வந்தது பற்றி அவள் என்ன என்ன செய்தாள் என்று அனைத்தும் கூறினான்.

அவ ஒரு நரி விவேகா எனக்கு ஜுஸ் ல எதோ மிக்ஸ் பண்ணி கொடுத்து விட்டாள். நான் என்னோட லைஃப்ல இப்படி ஒரு மோசமான பொண்ணை பார்த்ததே இல்ல. அந்த வீடியோ எல்லாம் எடிட் பண்ணி இருக்காங்க.

அட் தி மொமென்ட் மை மைன்ட் அலார்ம்டு சீக்கிரம் உன் கிட்ட வந்து விட வேண்டும் அப்டின்னு நான் வேக வேகமாக அந்த மயக்கததில் கார் ட்ரைவ் பண்ணி வந்தேன் டி என்னை இப்போ கூட நம்ப மாட்டியா. 

இன்பா இதை சொல்லும் போது அவளுக்கே உடல் ஒரு நிமிடம் நடுங்கியது.நம்மை தேடி நமக்காக வந்து இருக்கிறானே வரும் வழியில் எதுவும் அய்யோ நினைக்கவே பயமாக இருந்தது. ஆனால் அவள் மூளை சொல் படி இப்போது உதடுகள் பேசின.

விவேகா இப்போது, என்ன! ஜுஸ் கொடுத்தாளா! ம்ம் ஆமா என்று அவள் கைகளை பிடித்து கொண்டான். உடனே அவனிடம் இருந்து கையை உதறி கொண்டு நீ ஃப்ராடு ராக என்று வாய் வரை வந்த அவன் பெயரை முழுங்கி கொண்டு 

நீங்க ஃப்ராடு  அந்த மினிஸ்டர் பொன்னு நீங்க ரெண்டு பேரும்  உங்க ஜோடிய இப்போவே டிரெண்டிங்ல போயிட்டு இருக்கு.

அவன் அவளை முறைத்து கொண்டே

அதனால…

நீங்க அவ கூட… என்று எதோ சொல்ல வர இன்பா காரின் கண்ணாடி கதவுகளில் ஒரு குத்து விட்டான். கண்களில் கோபம் தெறித்தது. மீதி கோபம் அந்த கண்ணாடி விரிசலில் ஒரு முறை திறந்து மூடினால் உடைந்து விடும்.இன்பா அப்படி ஒரு கோபத்தில் இருந்தான்.

அந்த சத்தத்தில் விவேகா பயந்து விட்டாள். 

விவேகா வின் தாடையை பிடித்து முகத்துக்கு அருகில் கொண்டு வந்தவன்.விட்டு கொடுக்கிராயா இல்ல விட்டு போடா அப்டின்னு சொல்றியா ம்ம்ம்ம்

பதில் சொல்லு டி.. 

விவேகாவுக்கு உள்ளுக்குள் இப்போது பயம் தொற்றிக் கொண்டது. எவளோ ஒருத்தி வந்தா உடனே நீ விட்டு போயிடுவ கொன்றுவேன். மைன்ட் இட் 

ஹே இங்கே பாரு ஏய் என் கண்ணை பாரு டி… 

விவேகா கண்களில் கண்ணீர் கோர்க்க அவனை பயந்து கொண்டே பார்க்க. இன்பா அவள் கண்ணீரை பார்த்ததும் சட்டென்று விட்டு விலகி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுவதும் குடித்தவன்.

என் முடிவில் எப்பவும் மாற்றம் வரவே வராது என் டிசிசன் சரியா இருக்கும் நீ தான் எனக்கு எல்லாமே புரியுதா.. என் கிட்ட சண்டை போடு கோபப்படு, பேசாமல் கூட இரு உனக்காக எவ்ளோ நாள் வேணாலும் நான் உன்னை கன்வின்ஸ் பண்ண ரெடி தான்.

அதை விட்டு என்னை பிரிந்து போறேன். அப்டின்னு சொன்ன உன்னை என்று அவளின் இதழில் வன்மையாக முத்தமிட்டான் விவேகா அவனை ஆதரிக்கவில்லை கைகளை இறுக்கி மடக்கி கொண்டாள். 

அவளின் கைகளை வலுகட்டாயமாக எடுத்து அவன் மேல் போட்டு கொண்டான்.மேடம்க்கு இரிட்டேடிங்கா இருக்கோ.என்று சொல்லி கீழ் உதட்டை கடித்து அசுரனாக மாறி முத்தமிட்டான் இதழில் கொஞ்சம் ரத்தமே கசிந்து வந்தது. விவேகா அவனை எதுவும் செய்ய வில்லை.அந்த இரத்தத்தின் சுவை அவனுக்கு தெரிந்த உடன் தான் அவளை விட்டான்.

சிறிது நேரம் வெளியே பார்த்து கொண்டு இருந்தவன். உனக்கு எல்லாம் உண்மையா லவ் பண்ணா இப்படி தான் டி தோணும். என்னை பார்த்தால் முட்டாளா தெரியுதா. எவளோ ஒருத்தி வந்தால் அவளை எதிர்த்து சண்டை போடணும் அப்டின்னு உனக்கு தோணல அவ தட்டி பறிச்சா நீ விட்டு ஓடி விடுவாயா.. அவளை எப்படி ரிவஞ்ஜ் பண்றதுன்னு யோசி என்று சொல்லி அவளை திரும்பி பார்க்க அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

 அவள் கண்களில் கண்ணீர் ஓடி கொண்டு இருந்தது. இப்போது மனம் கேட்காமல் அவளை தூக்கி மடியில் அமர வைத்து கொண்டான். அவள் அவன் புறம் திரும்பவே இல்லை. விவேகா பிளீஸ்  டி இங்கே திரும்பு அவள் இப்போது விசும்பி கொண்டே அழுதாள். அவள் முகத்தை தன் பலம் கொண்டு அவனை பார்க்க வைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்து இன்பா அவன் நெற்றியோடு உரசினான். அவள் கண்கள் இரண்டும் கீழ பார்க்க அவன் கண்கள் அவளை பார்த்தது.

இப்போது சட்டென்று அவளை அருகில் அமர வைத்து விட்டு இன்பா மனதில் இப்படியே விட்டால் சரி வராது என்று அவளை தூண்டி விட ஆரம்பித்தான்.

உனக்கு முன்ன அந்த கவ்யாவை நான் பார்த்து இருந்தேன்னு வை.

இதை கேட்டதும் அவன் கன்னத்தில் ஒரு அரை விட்டாள்.

விவேகா இதை கேட்டு கோபத்தில் அவனை பார்த்து மம் சொல்லு டா…

என்ன பண்ணி இருப்ப… 

இன்பா எதுவும் சொல்லாமல் அவளையே பார்க்க அவளை… 

என்ன அவளையே நீ லவ் பண்ணி இருப்ப அப்படி தானே என்று மீண்டும் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள். 

ஆனால் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை இன்பா இதை பார்த்து சிரித்தான். இப்போது இன்பா அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டான்.

இப்போ தான் டி நீ என்னோட பேபி இந்த உரிமையான கோபம், உன்னோட தன்மையில் இருந்து எப்பவும் மாற கூடாது.

ஹே என்னை விடு நான் போகனும் நீ விடு ஐ ஹெட் யூ லீவ் மீ… என்று அவள் அவனோடு மல்லுக்கு நின்றாள்.

அவன் இப்போ எங்கே இருந்து டி இவளோ ரோசம் வந்தது. எதுக்கு டி என்னை அடிச்ச இதோட இது ரெண்டாவது தடவை என்னை நீ அடித்து விட்டாய்.என்று சொல்லி அடித்த கைகளுக்கு முத்தமிட்டான். 

உன் கிட்ட இருந்து எதையும் வைத்து கொள்ள கூடாது. நீ அடித்து விடு..

இன்பா, அப்படி நடக்க கூடாது அப்டின்னு வேண்டிக்கோ 

ஏன் விடு என்னை விடு டா..

அது உன்னை விட எனக்கு அதிக வலிய  கொடுக்கும். 

ஹே விடு. …..விடுன்னு சொன்னேன். இப்படி மயக்கி மயக்கி தான் எல்லாம் உன் பின்னாடி சுத்துறாளுக. எனக்கு உன்னை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. என்னை விட்டு தள்ளி போ..

எனக்கு உன்னை பார்த்தாலே டார்ஜ்லிங் போகனும் போல இருக்கு. நான் கூப்பிட்டால் நீ என்ன வந்து விடுவாயா.. நான் எதுக்கு டா உன் கூட வருவேன் முதலில் என்னை விடு என்று அவள் எழ அவள் தலை காரில் முட்டியது.

ஸ்ஸ்ஸ் ச்ச… வலிக்குது… என்று   சொல்ல அவள் தலையை தேய்த்து விட்டான். நீ ஒன்னும் எனக்கு செய்ய வேண்டாம். என்று சொல்லி அவன் தோள், நெஞ்சு என அடித்தாள். கிள்ளினாள்.

ஒரே பிடியில் அவள்  தலை சாய்த்து அவள் மேல் சாய்ந்தான்.ஹே தள்ளி போ.. போடா என்று மூச்சு முட்டி கோபத்தில் அவள் பேச இன்பா அவள் கன்னத்தை பிடித்து 

நீ தாண்டி போசசீவ் சாப்ட்வேர் உனக்கு  எவ்ளோ பொறாமை… போ  போடா என் கிட்ட வராதே அவளுக்கு ஊட்டி விடு என்று சொல்ல

ச்சீ… என்னோட மோட் ஸ்பாயில் பண்ணாத ஐ ஹெட் ஹர் அவ ஒரு ஜங்கிள் fox…

 விவேகா,நீயும் அவளை பொல் தான் என்று சொல்ல

 இப்போ ஓவரா பேசி என்னை டென்ஷன் பண்ணாத என்று அவள் இதழில் விழுந்தான். முதலில் அவனை தள்ளி விட பின் அவன் முத்ததில் அவளும் இதழ  இணைத்து கொண்டாள். 

திடிரென போன் அழைப்பு வர இன்பா எழுந்து பார்க்க ஆஃபீஸ் போனில் அழைப்பு வந்தது. எடுத்து பார்க்க அதில் லோகேஷ் இன்பாவின் குழுவில் ஒருவன் அழைத்து இருந்தான்.

எடுத்து பேசி விட்டு அவளை பார்க்க அவள் அவனுடய இன்னொரு போன் எடுத்து கேலரி உள்ளே செல்ல போக அதை பார்த்து விட்டு போனை பிடுங்கி கொண்டான். 

ஏன் அதில் தான் விவேகா வகுப்பறையில் இருக்கும் படங்கள் அவளுக்கு தெரியாமல் அவளை கண்காணிக்க எடுக்கும் படங்கள் எல்லாம் இருந்தது.

விவேகா முறைத்து கொண்டே காரில் இருந்து இறங்கி செல்ல எத்தனிக்க அவன் போன் வைத்து விட்டு ஹே எங்கே போற..

உன் கிட்ட பேச என் கிட்ட ஒன்னும் இல்லை.

ம்ம் எனக்கும் ஒன்னும் இல்ல ஆனால்..

ரஸ்கல் நான் கிளம்புறேன்.. என்று வெட்க முகம் கொண்டு செல்ல 

ஹே உன்னை சமாதானம் செய்ய வேணும் அதை சொன்னேன் நீ எதோ நினைத்துக் கொண்டு இருக்க..

ம்ம் ஆமா நீ ரொம்ப நல்லவன் இதை நான் நம்பனும்.

சும்மா நடிக்காத என்னை நினைத்து நினைத்து உனக்கு ஃபீவர் வந்து விட்டது.

யாரு சொன்னா நானும் ஆதியும் ஐஸ் கிரீம் சாப்பிட போனோம் சோ…

ம்ம் நம்பிட்டேன்.

சரி ஓகே இப்போ என் பேபி கன்வின்ஸ் ஆகிட்ட தானே..

இல்ல நீ இன்னும் எனக்கு செம் exam முடியும் வரை நான் உன் கிட்ட பேச மாட்டேன் உன்னை பார்க்க மாட்டேன்.

ஹே என்ன டி இப்படி சொல்லிட்ட 

ம்ம் ஆமா என்று அவன் கடித்த உதடுகளை தொட்டு பார்த்தது விட 

கொஞ்சம் கோபத்தில் டெஸ்ட் பண்ணிட்டேன் நீ கூட ரிவஞ்ச் எடுத்துக்கோ.

ஹே என்ன சொல்றது கேளு

இன்பா, அதுக்கு அப்புறம் 

இன்னும் இருக்கு அதுக்கு அப்புறம் நான் லீவுக்கு ஊருக்கு போயிடுவேன்.

அப்போ நானு .உனக்கு ஊரில் என்ன வேலை.

ஆதி அவங்க அக்காவுக்கு கல்யாணம் என்று உண்மையும் ஊருக்கு போறேன் என்று பொய்யும் கூறினாள்.

எப்போ நான் உன்னை மீட் பண்ரது..

லாஸ்ட் exam அன்னிக்கு உனக்கு டைம் இருந்தால் காலேஜ் வா. வரவில்லை என்றாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.

நான் நிச்சயம் வருவேன். அது தான் உன் என்று ஆதி சொன்னது நினைவுவர

அது உங்க இஷ்டம் சரி நான் கிளம்புகிறேன்.

என்ன என்னமோ சொல்ல வந்த…

ஒன்னும் இல்லங்க…

இப்போ என்ன சொன்ன…

சரி நான் கிளம்புறேன் சார்.

ஹே….?

தொடரும்….

 Episode 97, 

சரி உங்க விருப்பம் நான் கிளம்புறேன் என்று சொல்லி விவேகா செல்ல 

இன்பா, ஹே எதோ டிஃபெரா பேசுற. நீங்க சொல்றது புரியல.இதோ இப்போ கூட வாங்க போங்க அப்டின்னு பேசுற என்னாச்சு ஜிரம் என்ன மரியாதை எல்லாம் சொல்லி கொடுக்குமா!

விவேகா சோர்ந்து கார் ஜன்னலில் சாயிந்தவள் அது ஜூரத்தொட வேலை இல்ல.அப்புறம் என்று இன்பா ஆச்சர்யமாக கேட்க.

அந்த ஆதி அவனால் தான். என்ன பண்ணான். உன்னை ஸாரி உங்களை மரியாதையா கூப்பிடனுமா. நீங்க சேர் பெர்சன், IPS, மம் அப்புறம் உங்களை பார்த்து சிட்டி நடுங்குது. இதை கேட்க இன்பாவுக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு மம் அப்புறம் என்னை பூவை விட என்று சொல்லி பாதியில் நிறுத்தி விட்டு நீங்க என்னை விட பெரிய பையன் அப்டின்னு சொன்னான்.

ஹே நிறுத்து டி… என்ன யா இப்போ உனக்கு பிரச்சினை உன் முகம் இப்படி போகுது. எதோ பூவை விட அப்டின்னு சொன்ன கம்ப்ளீட் பண்ணு.

ஒன்னும் இல்ல. சொல்லு டி.. ஒன்னும் இல்லன்னு சொன்னா விடேன் சாரி விடுங்க.

இன்பா கொஞ்சம் கோபமாக அவன் சொன்னால் பேச்சு தட்டாமல் கேட்கிற மம் 

பின்ன நீ என்னை விட்டு போனால் என் கூட கடைசி வரை இருப்பது என் ஆதி தான் என்று விவேகா சொல்ல 

இதை கேட்டதும் மீண்டும் அவன் மலையேறி விட்டான். ம்ம் விட்டு போறேன் .. இறங்கு … போ…

விவேகா, ராகவ்…

ஓய் ஹலோ ஹல்லோ 

 ராகவ் டார்ஜீலிங் போலாமா… என்று அவன் அருகில் வந்து அமர இன்பா தள்ளி அமர்ந்தான். 

சரி இப்போ உனக்கு கிஸ் கொடுக்கலாம் அப்டின்னு நினைத்தேன். என்று அவள் சொல்லி அவன் கைகளை பிடிக்க இன்பா உதறினான். அதுவும் லிப் கிஸ் மிஸ் ஆகிடுச்சு.ஓகே நான் கிளம்புறேன். என்று கதவை திறந்தாள். வெளியே சென்றாள். 

இன்பா அப்போதும் அவள் சொன்னதை நினைத்து கோபமாக அவன் போன் நோண்டி கொண்டு இருக்க மனது கேட்காமல் மீண்டும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டாள். அவனை நெருங்கி அமர்ந்து அவன் முகத்தை அவளை பார்குமாரு திருப்ப அவன் முரண்டு பிடித்தான். ஹே விடு பிளீஸ் லீவ் மீ ….

விவேகா, ஹே அதை நான் மட்டும் தான் சொல்லுவேன் நீ எல்லாம் சொல்ல கூடாது. என்னை விட்டு போ, என் கிட்ட பேசாதே இது எல்லாம் என்னோட டைலாக் நீ என்னை சமாதானம் பண்ணனும் இது மட்டும் தான் உன் வேலை என்ன புரியுதா என்று அதட்டி கொண்டே அவன் மடியில் அமர்ந்து கொண்டாள். இப்போது  அன்னிக்கு  நீ என் கிட்ட ஒரு விஷயம் சொன்ன..

இன்பா அப்போதும் எதுவும் பேசாமல் இருக்க விவேகா,அந்த மூனு மேஜிக் வேர்ட் இப்போ சொல்லலாம் அப்டின்னு நினைத்தேன் இவளோ சீன் போடுற இவன் இந்த ஆள் உனக்கு வேண்டாம் விவேகா இனி புதுசா IPS எழுத போற ஆதி உனக்கு ஓகே வா போலாம் என்று அவள் சொல்லி நகர போக இன்பா அவளை இடையில் இழுத்து கிள்ளினான். 

இடையில் கிள்ளவும் விவேகாவுக்கு கூச்சமும் சிரிப்பும் சேர்ந்து வர பிளீஸ் ராகவ் விடு… விடு டா என்று அவள் சிரிக்க 

ராகவ் எனக்கு சிரிக்க கூட தெம்பு இல்ல டா பிளீஸ் விடு என்னால முடியல..


இன்னொரு முறை அவனை பற்றி பேசாதே அப்புறம் உன்னை டேஸ்ட் பண்ணிடுவேன் 

ம்ம் கிஸ் மீ 

மாட்டேன். அப்போ ஐ லவ் யூ சொல்லு..

நான் ஐ ஹெட் யூ தான் சொல்ல வந்தேன் அது  மேஜிக் வேர்ட் தான்… என்று சிரித்து கொண்டே அவள் நெளிய

சரியான கேடி டி நீ என்னையவே ஏமாத்துற…

அய்யோ நீ வேற இன்னும் உனக்கு பெருசா ஒரு அதிர்ச்சி காத்து இருக்கு டா.

விவேகா,ஆமா நான் இப்போ உன் மேல கோபமா தான இருக்கனும் அவளுக்கு நீ ஊட்டி விட்டு இருக்க எனக்கு ஊட்டி விட்டியா.. அப்புறம் அவளுக்கு பூ வாங்கி கொடுத்த எனக்கு வாங்கி கொடித்தியா..

இன்பா சிரித்து கொண்டே நான் உனக்கு பூ வாங்கி கொடுத்தால் என்னோட மோட் சேஞ்ச் ஆகி விடும் உனக்கு ஓகே வா…

இதை கேட்டு அவள் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க இன்பா அவளை தொட்டு பார்த்து ஹே ஃபீவர் அதிகமாக ஆகி விட்டது.

ம்ம் சரி நான் ஹாஸ்பிடல் போறேன் நீ வீட்டுக்கு போ பை பை என அவள் இறங்க

இன்பா, ஹே பேபி நான் உன்னை ஹாஸ்பிடல் கூட்டி போறேன் வா என்று சொல்ல 

நான் அவ்ளோ தான் எங்க மமச்சி க்கு தெரிஞ்சது அவ்ளோ தான் நான் மாட்டேன்.

ஹே நான் உன்னை ஹாஸ்பிடல் தானே கூட்டி போறேன்னு சொன்னேன். நீ பண்றத பார்த்தால் நான் உன்னை பிரகன்நெண்ட் ஆக்கி விட்டு போன மாதிரி பேசுற..(இது விதியின் கைகளில் ஆனால் அவனை விட்டு தூரமாக செல்வது விவேகா தான் )

நீ செய்வ டா உன்னை எல்லாம் சாதாரணமா நினைக்க முடியாது. பேபி வெறும் 20 மினிட்ஸ் தான் போறோம் செக் பண்றோம் இன்ஜெக்ட் போடுற அப்படியே உன்னை கொண்டு வந்து விட்டு நான் கிளம்புறேன்.

பிளீஸ் வேணாம் நீங்க போங்க நான் போறேன்.  நீ எப்பவும் பொல் என்னை கூப்பிடு வேற யாரும் இருந்தால் மட்டும் உனக்கு தோணிச்சு அப்டின்னா மட்டும் மரியாதை கொடு. பயம் வேண்டாம் என்னை நம்பு டி என்று சொல்ல 

ம்ம் சரி ஓகே என்று சொல்லி அவனுடன் ஹாஸ்பிடல் சென்று இஞ்சக்சன் போட்டு கொண்டு இன்பா சொன்னது போலவே அதே இடத்தில் அவளை இறக்கி விட்டு அவள் உதடுகளை பிரிய மனம் இல்லாமல் மென்மையாக சில முத்தம் வைத்து விட்டு கிளம்பினான்.

ஆதி கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டு இருக்க அவனிடம் வந்து மம் வா போலாம். 

ம்ம் நடத்து டி.ஹே உன்னை விடவா உன்னை சைட் அடிக்கனும் அப்டின்றதுகாகவே அவ என்னை கூப்பிட வரா நீயும் அப்படியே என்னை ஒரு காரணமா வச்சு அவ கிட்ட கடலை போடுற.

ஆதி, ஹே நான் அவ கிட்ட எங்கே பேசினேன் இப்படி பொய் சொல்லாத விவேகா. இல்ல நீ கொஞ்சம் என்னை விட்டு தள்ளி இரு இல்லை அவ கொஞ்சம் வருத்த படுவா டா. உங்க வேலைய நீங்க பாருங்க எனக்கு தெரியும் என்று ஆதி கோபமாக பேச சரி சரி டென்ஷன் ஆக வேண்டாம் நீ நான் சொன்னா கேட்க மாட்ட அவளே சொல்லுவா..

ஹே போடி.. 

போடா என்று இருவரும் சண்டை போட்டு கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

இங்கே மினிஸ்டர் சத்ய மூர்த்தி வீட்டில் கவ்யா  அந்த பிறந்த நாள் விழாவில்  இன்பா சென்றதில் இருந்து அவள் அறைக்கு உள்ளே சென்றவள் இன்னும் வெளியே வர வில்லை.

சத்யமூர்த்தி, காவியா கதவு திற மா.. கலாவதி அவளை சமாதானம் பண்ணியா.. காவியா மா என்ன டா இப்படி உன்னையே வருத்திக்கிற இப்போ உனக்கு என்ன வேணும்.

அங்கே அவள் அறைக்கு உள்ளே இன்பா அவளுக்கு கொடுத்த பூக்களை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து அதை படுக்கையில் போட்டு அதன் மேல் படுத்து கொண்டாள். 

அங்கே ஆளுயர இன்பா வின் படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். என்னை உனக்கு பிடிக்கலையா என்னையவே ஏமாற்றி சென்று விட்டாயா

 ஏன் டா என்னை சீண்டி பார்க்கிறாய். என் மனதில் என்ன இருக்கு அப்டின்னு உனக்கு தெரிந்தும் நீ என்னை அலட்சியம் செய்கிறாயா. உன்னை உன்னை நான் சும்மா விட மாட்டேன். என்னிடம் இருந்து தப்பித்து முடியாது என்று வாழ்கையில் முதன் முதலில் நிராகரிக்கபட்ட வலியை உணர்ந்து கண்களில் கண்ணீர் கோர்க்க இப்போது கவ்யா அடுத்த கட்ட முயற்சி என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.

சத்ய மூர்த்தி கதவை ஓயாமல் தட்ட இப்போது கதவு திறந்தது. அப்பா !  என்று அவள் எந்த ஒரு கவலையும் வெளி காட்டாமல் வந்தாள். 

சத்ய மூர்த்தி, போதும் மா இதுக்கு மேல் நம்ப அந்த IPS கிட்ட வைத்து கொள்ள வேண்டாம்.

அப்பா எனக்கு அவன் வேணும்..

இப்போ கூட அவன் இந்த விசயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டான்.

அப்பா எனக்கு அவன் வேணும்…

அவனோட தாத்தா அந்த கிருஷ்ணன் ரொம்ப மோசமானவர் க்ரைம் பிரான்ச் ல இருந்து இருக்காரு இப்போ அவர் சொல்ல இவனும் அதுக்கு வந்து விட்டான் அவனோட டார்கெட்ல நான் இல்ல…

அப்பா எனக்கு அவன் வேணும்… தட்ஸ் ஆல்

சத்ய மூர்த்தி, இவளோ தூரம் நான் சொல்றேன் நீ ஏன் மா புரிந்து கொள்ள மாட்டிங்குற..

அப்பா என்று அழுது கொண்டே அவள் சத்ய மூர்த்தி மடியில் தலையை வைத்து கொண்டாள். 

என்னை அலட்சியம் செய்து ஏமாற்றி சென்று விட்டான். என்று சொல்லி  அவள் அழ 

ஒரு சிறிது நேரம் அமைதி நீடிக்க கலாவதி, கவ்யா அப்பாவை எதுக்கு இப்படி தொல்லை செய்யுற.. 

ஏய் என்று அவர் கத்த உடனே கலா உள்ளே சென்று விட்டார்.

சத்யமூர்த்தி, சரி அழாத காவ்யா இந்த முறை விடு இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இரு நான் எதுவும் செய்கிறேன்.

அப்பா நிஜமாவா..  

ம்ம் என் பொண்ணு உன்னை  விட்டு உன்னை வேண்டாம் என்று சொல்லி அவன் சென்று விடுவானா. 

பார்க்கலாம் நீ கவலை படாதே என்று சொல்லி அவர் ஆறுதல் படுத்தினார்.

இங்கே நாட்கள் ஒரு பக்கம் செல்ல விவேகா தன் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

ஒரு பக்கம் சுபா – வினய் நிச்சயம் வேலை தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது.

ஒரு புறம் வருண் – அதிதி கல்யாண வேலைகள் நடந்து கொண்டு இருக்க.

இன்பா நீலா மருத்துவமனை தொடர்பாக அனைத்தும் சேகரித்து கிட்ட தட்ட இறுதி கட்டத்திருக்கி வந்து விட்டான்.

சத்ய மூர்த்தியும் சரியான ஒரு திட்டத்தை தீட்டி இருந்தார். இதில் இன்பா சிக்கி கொள்வானா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

தொடரும்…

Episode 98, 

பெங்களூர் 

ஒரு இருட்டு அறையில் கை கால்கள் கட்ட பட்டு இருக்க மெதுவாக அந்த கண்களை திறந்து பார்த்தான். 

நாம் எங்கே இருக்கிறோம் என்று உணரவே அவனுக்கு சில நேரம் பிடித்தது. இப்போது அந்த அறைக்கு விளக்கு வெளிச்சம் வர தன் கண்களை கஷ்ட பட்டு திறக்க கண்கள் எல்லாம் கூசியது.

ஒரு கையாள், பாஸ் அவன் கண் விழித்து விட்டான்.

அந்த முனை எந்த பதிலும் இல்லாமல் துண்டிக்க பட்டது. வேகமாக காலடிகலுடன்  உள்ளே வந்தான் குரு பிரகாஷ்.

எதிரில் கை கால் கட்ட பட்டு இருந்த நபர் வேறு யாரும் அல்ல அது ரமேஷ் கண்ணா தான்.

குரு, நான் எதுக்கு உன்னை பார்க்க வந்து இருக்கேன் அப்டின்னு உனக்கு நல்லாவே தெரியும்..

நீ நினைப்பது மட்டும் நடக்காது நீங்க எல்லாம் நல்லா மாட்ட போறீங்க..

ம்ம் சரி தான் இனி உன் கிட்ட பேசி பயன் இல்லை. ஜித்து…

பாஸ் என்று ஒருவன் கைகளில் ஆப்பிள் ஐ பேட்  எடுத்து ரமேஷ் முன்னே நீட்ட 

எதுவும் செய்ய வேண்டாம் பிளீஸ் விட்டு விடுங்கள் என்னை எதுவும் கொன்று வுடுங்கால் என்று ரமேஷ் கெஞ்ச

குரு, ஒரு அசுர புன்னகை சிந்தியவன் நான் உன்னயும் எதுவும் செய்ய மாட்டேன் ஆனால் அது உன் கைகளில் தானிருக்கு.

ரமேஷ் கணதத குரலில் நான் என்ன செய்யனும்…

குரு மம் என்ன ஒரு பவ்யமான பேச்சு… நீ என்ன பண்ற அந்த இன்பாவுக்கு எல்லா ஆதாரமும் கொடுத்து விடு..

ரமேஷ் கொஞ்சம் அதிர்ச்சியாக பார்க்க, மம் நான் கொடுக்கும் ஆதாரத்தை கொடுத்து விடு என்ன புரியுதா…

ம்ம் சரி சார்…

நீ கலெக்ட் பண்ண ஆதாரம் எல்லாம் எங்கே

ஜித்து, பாஸ் எல்லாம் இந்த லேப் டாப் ல இருக்கு…

ம்ம் அந்த லேப் டாப் அப்படியே உடைத்து போடு..

ரமேஷ் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்க, குரு, மீதி எல்லாம் எங்கே இருக்கு…

குரு, ஜித்து வர்மாவுக்கு போன் போடு. 

குரு, வர்மா இவன் இருந்த இடம் மொத்தமும் பவுடர் மட்டும் தான் மிஞ்சனும்.

ஜித்து இவனை கண்காணி அவன் இன்பா கிட்ட ஆதாரம் கொடுத்த உடன் நான் சொல்ற வரை கண்கானிங்க.

ம்ம் ஒகே பாஸ் என்று சொல்ல குரு அங்கு இருந்து சென்றான்.

இங்கே விவேகா எல்லா  முடித்து  கடைசி நாள் தேர்வுக்கு காலேஜ் வந்தாள். யாழினி தூரத்தில் இருந்து மட்டும் ஆதியை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.  அவள் மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி. 

தேர்வு எழுதி விட்டு அனைவரும் கிளம்ப சதீஷ் விவேகாவை பார்க்க வந்தான். டார்லிங் எக்ஸம் எப்படி பண்ண. ம்ம் ஓகே தான் நீ எப்படி பண்ண என்று சொல்லி கொண்டே ஆதியை பார்க்க அவன் இவள் கைகளை பிடித்து கொண்டு அழைத்து செல்ல 

விவேகாவின் ஒரு கையை சதீஷ் பிடித்து கொண்டான். டார்லிங் வா நம்ப இன்னிக்கு புட் கோர்ட் போலாம் அடுத்து இன்னும் உன்னை மீட் பண்ண ரெண்டு மாசம் ஆகும்.

விவேகா, உனக்கு exam முடிந்ததா. இல்ல எனக்கு இன்னும் ஒரு பேப்பர் இருக்கு மம் ஓகே நல்லா பண்ணு.

 ஆதி, விவேகா வா டைம் ஆச்சு வீட்டுக்கு போலாம்.  ஒரு புறம் சதீஷ்

டார்லிங்…

என கத்த இன்னொரு புறம்ஆதி

விவேகா…

என கத்தினான் 

என இருவரும் மாறி மாறி சத்தம் போட்டு கொண்டே சொல்ல அங்கே இன்று தான் அவள் காலேஜ் கடைசி நாள் என்று தெரிந்து கொண்டு இன்பா வந்தான். வந்தவன் கண்களில் இந்த காட்சிகள் பட சாருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

உடனே தன் போன் எடுத்து தீபாவுக்கு அழைக்க அடுத்த 5வது நிமிடம் தீபா ஆதி சதீஷ் முன் வந்தாள்.

இங்கே என்ன நடக்குது என்று சொல்லி கொண்டே மிரட்டும் தோரணையில் அங்கே தீபா வர இருவரும் கைகளை விடாமல் பிடித்து இருக்க விவேகா வலு கட்டாயமாக கைகளை உதறி கொண்டாள்.

விவேகா, மேடம் ஒன்னும் இல்ல சும்மா பேசிட்டு இருந்தோம். 

தீபா சதீஸ பார்த்து நீ என்ன DEPT உனக்கு இங்கே என்ன வேலை. மேம் நான் அவன் கிட்ட கேல்சி வாங்கி இருந்தேன் அதை வாங்க வந்து இருக்கான் என்று விவேகா அவனை விட்டு கொடுக்காமல் பேச

இங்கே இருவருக்கு வயிறு பற்றி எரிந்தது. தீபா, வாங்கியாச்சு தானே இப்போ கிளம்பு என்று தீபா மிரட்டும் தொனியில் சொல்ல சதீஷ் அங்கேயே நின்றான்.

விவேகா, சதீஷ் நெக்ஸ்ட் மந்த் லாஸ்ட் அண்ணாவுக்கு கல்யாணம் நான் இன்வைட் பண்றேன் நீ கட்டாயம் வா நம்ப மீட் பண்ணலாம் என்று சதீஸ்ககு கேட்கும் குரலில் சொல்ல அது ஆதிக்கும் கேட்டது.சதீஷ் சிரித்து கொண்டே மிஸ் யூ விவேகா என்று ஆதியை முறைத்து விட்டு கிளம்ப. 

தீபா சீக்கிரம் கிளம்புங்க என்று சொல்லி அங்கு இருந்து நகர. ஆதி அவளை விட்டு வேக வேகமாக நடந்தான் ஹே நில்லு பிளீஸ் ஓவரா பண்ணாத..

ஆதி சிறிது தூரம் சென்று அவன் கிட்ட பேசாதே அப்டின்னு

அன்னிக்கு சொன்னேன் தானே

 திமிர் டி  உனக்கு அவனை பார்த்தாலே எனக்கு டென்ஷன் ஆகுது..

விவேகா, என் செல்லம் நான் சும்மா சொன்னேன் நான் அவனை எல்லாம் கூப்பிட மாட்டேன். 

ஆதி, நிஜமாவா..

விவேகா , நிஜமா தான் என்று பேச்சை  மாற்ற மம் நீயும் நானும் ஒரே கலர் ல ட்ரெஸ் பண்ணிக்கலாம் ஓகே வா.இதை கேட்டு ஆதி சிரித்து கொண்டே மம் .

விவேகா, அப்போ இன்னிக்கு நான் உங்க வீட்டுக்கு வரேன். இல்ல நாளைக்கு நானே கூட்டி வரேன் இன்னிக்கி அப்பாவுக்கும் எனக்கும் கொஞ்சம் வெளியே வேலை இருக்கு என்று ஆதி சொல்லி கொண்டு படி கட்டுகள் அருகில் வர இன்பா படிகளில் ஏறி விவேகாவை பார்க்க வர…

ஆதி, ஹே விவி நான் மறந்திட போறேன் இதை bag ல வைத்து கொள்  போய் கொடுத்து விடு என்று அந்த க்ரைம் ஹிஸ்டரி புக் எடுத்து நீட்டும் நேரம் இன்பா வரும் நேரம் சரியாக இருந்தது. 

இன்பா அந்த புத்தகத்தை பார்த்து விட்டு விவேகாவை பார்க்க ஆதியும் விவேகாவும் அதிர்ச்சியாகி நிற்க அதன் பின் அட்டை மட்டும் தான் தெரிந்தது.

இன்பா இருவரையும் மாறி மாறி பார்த்து இரு புருவமும் தூக்க ஆதி குட் மா மார்னிங் ச சார்…

இன்பா ஆதியிடம் எதோ பேச வர உடனே விவேகா” ஹே அதை நீயே கொண்டு போய் லைப்ரரி ல வைத்து விடு” என்று ஆதியை அனுப்ப 

ஆதி அவள் பார்வையை புரிந்து கொண்டு வேக வேகமாக இரண்டு அடி எடுத்து வைக்க 

விவேகாவின் பார்வை சரி இல்லை, ஆதியின்  முக மாற்றம் இரண்டும் எதோ தவறு என்று உணர்ந்து 

இன்பா,ஆதி நில்லு…

ஆதி, விவேகா இருவருக்கும் இதயம் வேக வேகமாக துடிக்க ஆதி சார்… என்று சொல்லி கொண்டே திரும்ப 

இன்பா ஆதி அருகில் வர 

இருவருக்கும் வியர்த்து கொட்டியது. ஆதி மனதில் ஆதி இன்னிக்கி நீ க்ளோஸ், விவேகா மனதில் ஹே எதுவும் செய் … நீ அவனிடம்  மாட்ட கூடாது கிருஷ் கிருஷ் என்று சொல்லி யோசனை வந்தவாளாய்.

சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க நான் சதீஷ் கூட போய்” ரெண்டு டீ ரெண்டு சால்ட் பிஸ்கட்” சாப்பிட்டு வந்து விடுகிறேன். என்று அவள் சொல்ல,

ஆதி, விவேகா சரியான கேடி டி நீ எப்படியோ நான் தப்பித்தேன் பா என மனதில் நினைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.

உடனே இன்பா  அப்படியே திரும்பி அவளை பார்க்க. லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு  இப்போ தான் கை வலிக்க வலிக்க எக்சாம் எழுதினேன். நீங்க போங்க நான் போறேன் பை பை…

இன்பா அவளை நோக்கி நடக்க ஆதி கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு சார் என்று அழைக்க இன்பா அவனை பார்க்காமல் மம் நீ கிளம்பு ஆதித்யா… என்று சொன்னது தான் தாமதம் வேக வேகமாக ஆதி மாணவர்கள் செல்லும் படிகட்டுகளுக்கு வந்து விட்டான்.

விவேகா மனதில் லிட்டில் கிருஷ்னாவுக்கு சில துதிகளை பாடி கொண்டே இரண்டு படிகள் இறங்க…

ஹே நில்லு டி… 

ம்ம் யாரு நீங்க என்ன வேணும் என்று விவேகா ஒன்றும் தெரியாதது போல் நடக்க 

அவன் அவள் கைகளை பிடித்து கொண்டான். ராகவ் யாரும் வர போறாங்க விடு என்று அவள் அவனிடம் கெஞ்ச 

இன்பா அப்போ ஒழுங்கா என்னோட பிளேஸ்க்கு போ…

விவேகா, நீ முன்னாடி போ நான் பின்னாடி வரேன். ஹே நீ முதலில் போடி நான் பின்னாடி வரேன் என்று சொல்ல அவள் வேறு வழி இல்லாமல் விவேகா முன்னே செல்ல இன்பா அவள் பின்னால் சென்றான்.

காலேஜ்ல கொஞ்சம் மாணவர்கள்,  மாணவிகள் ஆங்காங்கே சுற்றி கொண்டு இருந்தனர்.

அவன் ப்லேசுக்கு வந்ததும் இன்பா, யாரு டி அவன் உன் கையை பிடித்து கொண்டு இருக்கிறான்.

ஆதி தான் , ஹே ஆதி இல்ல அந்த இன்னொரு பெல்லோ. அதுவா அது சதீஷ்..விவேகாவை இழுத்து அவள் கைகளில் வலிக்க வலிக்க சொடுக்கு எடுத்து விட்டான். ஸ்ஸ்ஸ்… ச்ச .. ஹே வலிக்குது விடு டா என்று கையை உதறி விட ம்ம் நல்லா வலிக்கட்டும் யாரு அவன்… சொல்லு டி.. அவன் வெண்பா கிளாஸ் அந்த ஆடிடோர்யம். எந்த ஆடிடோரியம்? ஃபீட் பேக். எந்த பிட் பேக்?  என்று விரல்களை நசுக்கி விட ஹே நிஜமா வலிக்குது என்று வலியில் அவள் முகம் மாற உடனே இன்பா அவள் கைகளை மெதுவாக பிடித்து கொண்டே கேட்டான்.

ம்ம் சொல்லு யாரு…  ஹே cs dept அவ்ளோ தான் இப்போ உனக்கு என்ன பிரச்னை. என்ன டி ஓவரா சவுண்ட் கொடுக்குற.. என்று அவள் விரல்களுக்கு முத்தம் வைத்தான். 

விவேகாவுக்கு இப்போது பேச்சே வரவில்லை. இன்பா, அன்னிக்கு நான் உன் கிட்ட என்ன சொன்னேன். எ என்ன சொன்னீங்.. என்று அவள் பார்வை தரையை பார்க்க யார் கிட்டயும் ஓவர் அட்வான்டெஜ் எடுக்க கூடாது அப்டின்னு சொன்னேன் தானே. ம்ம் என்று தலை குணிது கொண்டே அவள் பதில் அளிக்க. இனி யார் கிட்டயும் தேவை இல்லாமல் பேசாத..

ஏன் என்று அவள் அவனை நிமிர்ந்து பார்க்க..

தொடரும்…

Episode 99,

இனி யார் கிட்டயும் தேவை இல்லாமல் பேசாத..

ஏன் என்று அவள் அவனை நிமிர்ந்து பார்க்க.. நான் சொல்றத மட்டும் கேளு டி. என்னால நிம்மதியா ஆபீஸ்ல வேலை செய்ய முடியல. ஏன்? யூ ஆர் தி ரெஸ்பான்சிபில், நீ தான் காரணம். விவேகா சிரித்து கொண்டே 

நானா நான் ஒன்னும் பண்ணலயே. நீ பேசுற அழகுல தான் உன் பின்னாடியே சுத்துறானுக. உன்னை அப்படியே யாருக்கும் தெரியாமல் கடத்தி போகனும் இல்லை, எனக்குள் புதைத்து வைத்து மறைத்து கொள்ள வேண்டும்.

இதை கேட்டு விவேகா சிரித்து கொண்டே மம் அப்போ இன்பா சாருக்கு கொஞ்சம் பொறாமை போல… மம் ஆமா நீ யாரு கூட பேசினாலும் எனக்கு பிடிக்கல. விவேகா அவன் கைகளை பிடித்து சொடுக்கு எடுத்து விட முயற்சி செய்ய அது முடியாமல் போக அவனை பார்து கொண்டே அது எப்படி யார் கூடவும் பேசாமல் இருக்க முடியும் நீங்க என்ன சின்ன குழந்தையா. உங்களுக்கு ஏன் என்னை பிடித்து இருக்கு அதுக்கு காரணம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா. 

இன்பா, பிடித்து இருக்க காரணம் தேவை இல்லை. 

அப்பப்பா ஒரே கவிதை மழையா பொழியுது.

விவேகா சரி ஓகே எனக்கு டை மம் ஆகுது நான் கிளம்புறேன். ஹே பேபி என் கூட இப்படியே வந்திடு என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியாது. விவேகா சிரித்து கொண்டே நான் வீக்லி ஒன்ஸ் கால் பண்றேன் பேசலாம்.

என்ன வீக்லி ஒன்ஸ்ஆ ஒரே ஒரு நாள் மட்டுமா எதுக்கு டி ஊருக்கு போற எந்த ஊருக்கு போற. விவேகா, அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் நீ அவளுக்கு பூ கொடுத்து இருக்க கேக் ஊட்டி இருக்க அதுக்கு பணிஸ்மெண்ட் கொடுக்கணும்.

இன்பா, பணிஸ் மெண்ட் பக்கதில் இருந்து கொடுத்தால் தான் டி நல்லா இருக்கும் என்று அவளை இழுக்க ராகவ் அடி வாங்க போற சீப்பு எடுக்கட்டுமா. இதை கேட்டு அவன் வசீகரமாக சிரிக்க.

என்ன நான் சொல்றது காமெடி யா இருக்கா உனக்கு ஒரு நாள் என் கிட்ட வாங்க தான் போற..

இன்பா, பசிக்குது அப்டின்னு சொன்ன வா சாப்பிடலாம் நானே உன்னை ட்ராப் பண்றேன். இல்ல எனக்கு டீ சாப்பிடணும் பொல் இருக்கு அதோட சால்ட் பிஸ்கட் ரிஷி சொன்ன கமினேசன் நல்லா தான் இருக்கு..

யாரு டி இப்போ புதுசா. நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க சரி இல்ல. நீ முதலில் ரிஷி யாரு அப்டின்னு சொல்லு. ரிஷி என்னோட ஸ்கூல் மேட். உன்னை யாரு டி கோஎட்ல படிக்க சொன்னா நீ girl’s ஸ்கூல் ல தான் படித்து இருக்கணும் . 

ராகவ் டேய் நான் ஸ்கூல் முடித்து இப்போ மூன்று வருஷம் ஆக பொகிது இப்படி என்னை பற்றி யோசிப்பது கொஞ்சம் நிறுத்து டா. நீ முதலில் அந்த ரிஷி யாரு நீயும் அவனும் ஒரே கிளாசா. என்னோட ஸ்கூல்ல பெஸ்ட் பிரண்ட் ரிஷி பிசிக்ஸ் ல pg பண்றான்.

போதும் போதும் அவன் புராணத்தை நிறுத்து எனக்கு டீ பிடிக்காது. உன்னோட ஃபிளாஷ் பேக் வேண்டாம் எனக்கு இரிடேதிங்கா இருக்கு.

இல்ல நீ கேட்டு தான் ஆகனும் . நான் எப்போ கோபமா இருக்கேனா அப்ப அந்த டீ சால்ட் பிஸ்கட் வாங்கி தருவான். அவன் கூப்பிட மாட்டானா அப்டின்னு எங்க கிளாஸ் ல எல்லாரும் சுத்துவாங்க.

இன்பா கோபத்தில் அப்போ உனக்கு மட்டும் தான் அவன் வாங்கி கொடுத்து இருக்கானா. விவேகா சிரித்து கொண்டே இல்லையே. அவன் லவ் பண்ற பொண்ணுக்கும் வாங்கி கொடுத்து இருக்கான். இதை கேட்டதும் யாரு அது என்று கோபம் வர ராகவ் அது நான் இல்ல டா நான் படிச்ச ஸ்கூல் ல நிதன்யா அப்டின்னு எங்க ஜூனியர் பொன்னு செம்ம அழகா இருப்பா ஒரே சைட்டிங் தான்.

இன்பா மிகவும் கோபமாக அப்படி என்ன தான் இருக்கு இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுக்குற. எனக்கு வேண்டாம் அந்த டீ..

விவேகா சிரித்து கொண்டே அப்போ நான் உனக்கு போட்டு தந்தால் கூட வேண்டாம் அப்டின்னு சொல்லிடுவியா. 

இன்பா இதை கேட்டு ஒரு நிமிடம் அவள் வசீகரமான கண்களில் இதழ் பதித்து மம் அப்போ ஓகே பட் அதில் கலோரி அதிகம் டி டீ பவுடர் caffine, மில்க் அது fat content, சுகர் அது இன்ஸ்டன்ட் எனர்ஜி.

விவேகா கோபம் கொண்டு போடா உனக்கு போய் நான் செய்கிறேன் அப்டின்னு சொன்னேன் பாரு அது என் தப்பு தான் ஆனால்

 இப்போ சொல்றேன் கேளு என்று கூற ஆரம்பித்தாள். ஒரு கிளாஸ் வாட்டர் அதில் ரெண்டு ஸ்பூன் தாஜ்,இல்ல டாடா டீ தூள் போட்டு ஏலக்காய், இஞ்சி ரெண்டு பின்ச் அளவு தட்டி போட்டு அடுப்பு பற்ற வைத்து அதில் ரெண்டு ஸ்பூன் சக்கரை போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். இப்போ டிக்காசன் ரெடி. இன்பா ம்ம் அப்புறம்..

அப்புறம் ஒரு டம்ளர் மில்க் அதை ஊற்றி கொதிக்க வைத்து இந்த ஆல்ரெடி ரெடி பண்ண டிக்காசன் எடுத்து ஊற்றி நல்லா கொதிக்க விடனும் அப்படியே அது கொஞ்சம் பாதியா குறைந்ததும் அதோட அரோமா வேற லேவலா இருக்கும் தெரியுமா. 

அப்படியே அதை ஃபில்டர் பண்ணி அப்படியே ரிஷி சொன்னது போல அந்த ரெண்டு சால்ட் பிஸ்கட் டிப் பண்ணி எடுத்து அப்படியே பூ போல வைக்கும் போது அய்யோ சொல்ல வார்த்தைகளே இல்ல அதுவும் மழை வரும்போது இது எப்படி இருக்கும் தெரியுமா. என விவேகா சொல்ல இன்பாவுக்கு அவள் அதை உணர்ந்து ரசித்து சொன்ன விதத்தில் இப்போதே ருசிக்க தோன்றியது. 

 ரிஷி ஐ மிஸ் யூ டா.. என்று சொல்லி கண்களை திறந்து அவனை பார்க்க அவன் ருத்ர மூர்த்தியாக அமர்ந்து இருந்தான். எவனோ ஒருத்தன் ஐ மிஸ் யூ சொல்றா என் கிட்ட ஒரு தடவை கூட சொன்னதே இல்ல. 

அவன் கோபத்தை புரிந்து கொண்டவளாய் ராகவ் செல்லம் இப்போ டீ சாப்பிடலாமா. ஐ ஹெட் தீஸ் திங்க்ஸ்…

ராகவ் ஒரு டீ ரெண்டு சால்ட் பிஸ்கட் நீயும் நானும் மட்டும் இப்போ கூட வேணாமா சரி விடு நான் ஆதி கூட போய் வீட்டில் நானே என் கையால போட்டு நானும் அவனும் என்று அவள் சொல்ல வர

 இன்பா,கொன்றுவேன்… என்று அவள் வாயை மூடி காலேஜ் போன் எடுத்து புட் கோர்ட் ல இருந்து அவன் பிளேஸ்க்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ விவேகா சொன்னது போல் ரெண்டு சால்ட் பிஸ்கட் எடுத்து வர சொல்லி விட்டு

ஆதி வீட்டுக்கு எதுக்கு நீ போற இனி நீ போக கூடாது. அவன் கூட சேர்ந்து சுத்தாத. விவேகா ராகவ் அவன் கூட நீ போட்டி போடாத டா. இப்போ நான் போறது ஆதி அக்கா கல்யாணத்துக்கு தான்.

இன்பா இதை கேட்டு ஒ அங்கே வேற ஓல்ட் லேடிஸ் எல்லாம் இருப்பாங்க அடுத்து உனக்கு கல்யாணம் பற்றி பேசற மாதிரி சுத்திட்டு திரியாத உன்னை என்ன பண்றது. சரியான மினி ரௌடி ராக்கம்மாவா சுற்றி கிட்டு இருக்காத. என்று இவன் பேசி கொண்டு இருக்கும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்க,

விவேகா பயந்து கொண்டே அவனை பார்க்க ஹே டீ கொண்டு வந்து இருக்காங்க நீ இங்கே என் சேர் ல பேக் ல திரும்பி உட்காரு என்று அவன் சொல்ல விவேகா அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பின்னால் திரும்பி கொண்டாள். 

அவன் எழுந்து கதவு அருகில் சென்று டீ, பிஸ்கட் வாங்கி கொண்டு மேஜையில் வைத்து விட்டு ஹே திரும்பு டி. விவேகா திரும்பினாள். 

உங்க காலேஜ் புட் கோர்ட் டீ என்னோட டீ மாதிரி இருக்காது பட் இப்போ என்ன பண்றது வேற ஆப்ஷன் இல்ல.. இன்பா இது ரொம்ப டூ மச் டி… ஓவரா பேசுற விவேகா சரி சரி விடு ராகவ் என் கை பட்டாலே டீ இன்னும் ஸ்பெஷல் தான் வந்து ஒப்போசிட் ல உட்காரு அவன் அமர்ந்தான். விவேகா அழகாக அதில் ஒரு பிஸ்கட் எடுத்து டிப் செய்து அவன் உதடுக்கு அருகில் கொண்டு போக 

இன்பா பேபி முதலில் நீ.. 

ம்ம் ஒகே என்று அவள் பாதி டிப் செய்ததை அழகாக சாப்பிட இன்பா அதில் சொக்கி தான் போனான். இப்போது மீதி பிஸ்கட் டிப் செய்து அவள் சாப்பிட உதட்டுக்கு அருகில் கொண்டு செல்ல உடனே ஹே என்று அவள் கையை இன்பா பிடித்து அவன் அதை சாப்பிட போக 

விவேகா, ஹே ராகவ் இது மிச்சம் நான் சாப்பிட்டது. இன்பா, சோ வாட் என்று அவன் அவள் கைகளில் அவள் சாப்பிட்ட மிச்சம் சாப்பிட விவேகாவுக்கு கொஞ்சம் வெட்கம் வந்தது. 

இன்பா, பேபி பிஸ்கட் கூட உன் லிப்ஸ் பட்டால் இன்னும் டேஸ்ட் அதிகமா இருக்கு. என்று அவன் கொஞ்சம் கொஞ்சமாக அசை போட்டு விழுங்கினான். 

விவேகா கண்கள் அவனை பார்க்காமல் அங்கும் இங்குமாக கண்மணிகள் சென்றது.இப்போது தன்னிலைக்கு வந்தவள்

ம்ம்ம் போதும் நீ ஓவரா டீ ஆத்துற…

சரி இப்போ நீ அந்த டீ ய ஒரு டைம் சிப் பண்ணு என்று அந்த டீயை விவேகா முன் நீட்ட விவேகா இதிலும் இவன் எதுவும் என்னை பிளர்ட் பண்ண எதுவும் பேசுவான் என மனதில் நினைத்தவள்.

ராகவ் எனக்கு வேண்டாம் இந்த பிஸ்கட் எனக்கு ஃபுல். ஹே ஒழுங்கா இப்போ சிப் பண்ணு டி நீ தானே ஏதேதோ கதை எல்லாம் சொல்லி என்னை டெம்ப்ட் பண்ணி விட்டு இப்போ அப்படியே பாதியில் விட்டு போனால் நான் விட்டு விடுவேனா நல்ல பொண்ணா இப்போ சிப் பண்ணு என்று சொல்ல அவள் வேறு வழி இல்லாமல் சிரித்து கொண்டே ஒரு சிப் செய்ய அதை வாங்கி இன்பா ஒரு சிப் செய்து விவேகா நினைத்தது போலவே காதல் வார்த்தைகளை அள்ளி வீசினான். 

அய்யோ இவனை ஒன்னும் பண்ண முடியாது எல்லாம் என்னை சொல்லணும்  என்று நினைத்து கொண்டு அவள் ஒரு சிப் இன்பா ஒரு சிப் மாறி மாறி குடித்து வைத்து விட்டு தான் அவளை அனுப்பினான்.

இன்பாவுக்கு அந்த டீ பிஸ்கட் இது இரண்டும் மிகவும் பிடித்து போனது அந்த கோப்பையை கழுவாமல் பத்திர படுத்தி வைத்து கொண்டான். 

ஆனால் நாளை யாருக்கு என்ன காத்து கொண்டு இருக்கிறது என்று ஒருவர் அறிந்து இருந்தார் ஆனால் ஒருவர் அறிய வில்லை.

அந்த அறியாத ஒருவர் இன்பராகவன். அந்த அறிந்த ஒருவர் கவ்யா.

தொடரும்…

 Episode 100

அனைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர். விவேகாவுக்கு செம் லீவ் விட்டு  ஒரு வாரம் ஆகி இருந்தது. ராஜ் விவேகாவின் அத்தை மகன் வீட்டுக்கு வந்து இருந்தான். 

விவேகா ஆதி வீட்டில் இருந்தாள். கங்கா வீடு தேடி வந்தவனை போ என்று சொல்ல மனம் வர வில்லை வருண், ராஜ் இருவரும் ஒத்த வயது தான்.

ராஜ், அத்தை எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை ஆனால் எல்லா பிரச்சனைக்கும் அம்மா தான் காரணம். கங்கா, இப்போ தெரிந்து மட்டும் உன்னால என்ன செய்ய முடியும். இல்ல அத்தை நீங்க கவலை பட வேண்டாம் நான் அம்மச்சி, தாத்தா கிட்ட சொல்லி இருக்கிறேன் கூடிய சீக்கிரத்தில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் நீங்க கவலை பட வேண்டாம் இதை சொல்ல தான் வந்தேன்.

இதை கேட்ட கங்காவுக்கு மனம் கொஞ்சம் இலகியது. ராஜ் வீட்டை நோட்டம் விட்டு விவேகாவை தேட அவர் ராஜ் கைகளில் கல்யாண பத்திரிக்கை கொடுத்தார்.

கங்கா, என்னோட வீட்டுகாரர் உன் மேல அவ்ளோ பிரியம் வைத்து இருந்தார் ஆனால் இப்போ அந்த பிரியத்துக்கு உனக்கு தகுதி தான் ராஜ் நீ கட்டாயம் கல்யாணத்துக்கு வரனும். 

ராஜ் சந்தோசமாக ம்மம் கட்டாயம் வருகிறேன் அத்தை என்று புன்னகையுடன் கூறினான். அத்தை விவே குட்டி எங்கே… கங்கா அவன் முகத்தில் உள்ள பிரகாசத்தை பார்த்து அவ ஆதி கூட வெளியே போயிருக்கா ரெண்டு பேரும் ட்ரெஸ் எடுக்க போயிருக்காங்க. ம்ம் எப்போ பார்த்தாலும் ஆதி தான்… 

ராஜ் மனதில் இது மிகுந்த வேதனையை கொடுத்தது. கங்கா, யார் மனதில் என்ன இருக்கு அப்டின்னு தெரியல ராஜு இது கடவுள் கணக்கு என்று சூசகமாக அவள் கூற வருவதை கூறினாள். சரி கட்டாயம் கல்யாணத்துக்கு வரனும் ராஜு நீ தான் வருனுக்கி உங்க மாமா சைடில் இருந்து எல்லாம் செய்யணும் இதை உரிமையா உன் கிட்ட கேட்கலாம் தானே 

அவன் கட்டாயம் நான் எல்லாம் செய்வேன் அத்தை நான் தானே செய்ய வேண்டும் என்று மனதில் எப்படியும்  வீட்டை மீட்டு கொடுத்து விவேகாவை கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து கொண்டு கிளம்பினான்.

அடுத்த நாள்  கவ்யா அடுத்த கட்ட திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள். அன்று அதிகாலையில் எல்லா செய்தி சேனல்களிலும் மின்ஸ்டர் சத்ய மூர்த்தியின் பீச் ஹவுஸ் சில மாபியா கொள்ளை கும்பல் கையக படுத்தி உள்ளதாக பரபரப்பாக ஓடி கொண்டு இருக்க அனைவரும் டீவியில் தான் கவனத்தை செலுத்தி இருந்தனர். 

அதில் முக்கியமான செய்தி என்னவென்றால் அந்த கும்பல் மினிஸ்டர் பொண்ணை பணைய கைதியாக வைத்து இருப்பதாக வந்த செய்தி தான் ஹாட் நியூசாக ஓடி கொண்டு இருந்தது.

இங்கே கமிஷ்னர் ஆஃபீஸ் அலுவலகத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த காவல் துறையும் அங்கே தான் இருந்தது. மாவட்ட ஆட்சியர் கூடவே மினிஸ்டர் சத்யமூர்த்தி முழு ஸ்கிரிப்டுடன் வந்து இருந்தார்.

சத்ய மூர்த்தி, என்ன யா பண்றீங்க இப்போ ஒரு மணி நேரம் ஆக போகுது என் பொன்னு மேல் ஒரு கீறல் விழுந்தது. நீங்க அவ்ளோ தான். அங்கே இன்பா, வசுமதி, மித்ரன் , வருண், லோகேஷ், சாதனா, கீர்த்திகா, லோகேஷ், விகாஸ் என இன்னும் நிறைய காவலர்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.

சத்ய மூர்த்தி ஆதரவாளர் என்று சொல்வதை விட கையாட்கள் என்று சொல்லலாம் முத்து, கணபதி, வேல் முருகன் என்பவர் தான் வசுமதி க்கி மேல் உயர் பதவி வகிப்பவர்.

இன்பா எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் நின்று பார்த்து கொண்டு இருந்தான். என்ன யா உங்க போலீஸ் வெறும் டம்மி தானா என் பொன்னு காவியா என்று அவர் கண் கலங்க 

வேல்முருகன், வசுமதி மேம் எதுவும் ஸ்டெப் எடுங்க அந்த ஏரியா உங்க டிவிஷன்ல தானே வருது இது வரை நீங்க என்ன பண்ணி இருக்கீங்க. 

வசு, சார் அவங்க டாட்டர் கடத்தி வச்சு இருக்க செய்தி தெரிஞ்சு இப்போ ஒரு மணி நேரம் தான் ஆகுது ஆல்ரெடி என்னோட டீம் அங்கே நிலைமை எப்பிடி இருக்கு அப்டின்னு ஸ்பாட் ல இருக்காங்க சார் என்னால் செய்ய முடிந்த அத்தனையும் நான் செய்து விட்டேன் அதுக்குள்ள மீட்டிங் அப்டின்னு நீங்க கூப்பிட்டு விட்டீர்கள்.

சத்ய மூர்த்தி ஒரு எழன பார்வை வசுவை பார்க்க அதை இன்பா பார்த்து விட்டான். நீங்க என்ன செய்வீர்கல் என எனக்கு தெரியாது சீக்கிரம் இதை சால்வ் பண்ணுங்க. உங்களால் முடியுமா. இவங்களுக்கு இவளோ கஷ்டமான கேஸ் என் பொண்ணுக்கு எதுவும் என்று பாதியில் நிறுத்த வேல்முருகன், சார் நீங்க கவலை பட வேண்டாம் நான் வேற ஒரு டீம் ஏற்பாடு பண்றேன்.

சுந்தரபாண்டியன் மாவட்ட ஆட்சியர்,மிஸ்டர் இன்பராகவன் நீங்க இதுக்கு சார்ஜ் எடுத்துக்கோங்க. அண்ட் உங்க டீம் என்று வழக்கம் போல அவன் குழுவை சொல்ல இன்பா கண்களில் கோபத்துடன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தான். யெஸ் சார். என்று இன்பா சொல்ல. டிஸ்பஸ் . இன்பா எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தன் அம்மாவை காண சென்றான்.

வசு மனம் ரணத்தில் கொதித்தது. ஆனால் பற்களை கடித்து கொண்டு அதை அடக்கி கொண்டார். மாம்.. எதுவும் பேச வேண்டாம் ராகவ் முதலில் இதை முடி. ம்ம் ஓகே மாம் என்று சொல்லி நேராக அவர்கள் குழு இருக்கும் இடத்துக்கு சென்றான். 

லோகேஷ், மித்ரன், சாதனா மட்டும் இருக்க சொல்லி கீர்த்திகா, வருண், விகாஸ் மூவரையும் ஸ்பாட்டுக்கு  இன்பா செல்ல சொன்னான். 

மித்ரன், என்ன டா இப்படி ஆகி போச்சு அந்த பொண்ணு பாவம் டா… இது ஒரு fake மித்ரன்… இதைக்கேட்டு சாதனா, லோகேஷ், மித்ரன் மூவரும் அதிர்ந்தனர். வாட் என்ன சொல்ற இன்பா.. என்று மித்ரன் லோகேஷ் இருவரும் கேட்க சாதனா, சார் எப்  எப்படி சொல்றீங்க…

அந்த மினிஸ்டர் அவனே ஒரு மாபியா தான் உங்களுக்கு தெரியாதா.. ம்மம் ஆமாம் இது எல்லாம் அவனுங்க சும்மா செய்யல எதோ ஒரு திட்டம் இதுல இருக்கு மினிஸ்டர் முகத்தை பார்திங்களா. அதில் கவலை இல்ல நடிப்பு மட்டும் தான் இருக்கு நமக்கு வொர்க் கொடுத்ததில் இருந்து அந்த கணபதி, முத்து , வேல்முருகன் சார் எல்லாமே அவர் கையாலுங்க தான்..

மித்ரன் முகம் இந்த விஷயம் கேட்டு குப் பென்று வியர்த்து போனது. நம்ப கிட்டயே வேலை காமிச்சா நான் சும்மா இருப்பேனா. இதுக்கு டைம் இருக்கு கண்டிப்பா என்னோட ரிவன்ச் ரொம்ப மோசமா இருக்கும் வெயிட் அண்ட் வாச் என்று சொல்லி அவர்கள் அந்த பீச் ஹவுஸ் இருக்கும் இடத்துக்கு சென்றனர்.

இங்கே ஆதி, விவேகா, அதிதி, கங்கா,தேவி என அனைவரும் டீவி முன் அமர்ந்து இருந்தனர்.

ஆதிக்கு விவேகா எப்போது குறுக்கே திரும்புவாள் என்று தான் மனதில் தோன்றியது. விவேகா வேறு வழயில்லாமல் டி வி பார்த்து கொண்டு இருந்தாள். அதிதி சந்தோஷ த்தில் பார்த்து கொண்டு இருந்தாள். வருனும் குழுவில் இருக்கிறான். 

ஹே விவேகா அங்கே பாரு மாமா போலீஸ் ட்ரெஸ்ல செம்மையாக இருக்காரு தானே. அத்தை  வருண் மாமா, அம்மா மாமா என்று அவள் டம்மாரம் அடித்து கொண்டு இருந்தாள். கங்கா கண்களில் கண்ணீர் விவேகா அப்பா மட்டும் இப்போ இருந்தால் எவ்ளோ சந்தோச பட்டு இருப்பார் என்று அவரும் சொல்ல 

விவேகா ம் மம் மட்டும் கொட்டி விட்டு அங்கே இருக்க பிடிக்காமல் உள்ளே சென்றாள். ஆதி அவள் பின்னால் சென்றான். 

இங்கே கவ்யா இன்பா கொடுத்து கொண்டு இருக்கும் பிரஸ் மீட் டீவியில் ஓடி கொண்டு இருக்க அதை பார்த்து கொண்டே டாமினோட்ஸ் சிக்கென் பீட்ஸா அது கூட கோக் ரசித்து  ருசித்து கொண்டே சாப்பிட்டாள். 

அவளை சுற்றி அடியாட்கள் அவளது அப்பாவின் கூலிபடைகள் தான் “வாடா இன்பா இன்னிக்கி லைவா நீயும் நானும் தான் டிரெண்டிங் டார்லிங்”. என்று மனதில் நினைத்து கொண்டே சாப்பிட்டாள். 

இன்பா தன்னை பரபரப்பாக இருப்பது போல் மட்டும் காட்டி கொண்டான் எந்த வித முயர்சியும் அவளை கப்பாற்ற எடுக்க வில்லை. இன்பாவுக்கு போன் வந்து கொண்டே இருந்தது.

நீங்க சொன்னவுடன் ரிஸ்க் எடுக்க முடியாது கொஞ்சம் பொறுமையா இருங்க இல்லை வேற டீம் அரேன்ச் பண்ணுங்க. 

என்ன மிஸ்டர் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க.

பின்ன என்ன பண்ண சொல்றீங்க என்னை சஸ்பெண்ட் பண்றீங்களா மம் ஓகே அஷ் யூ ர் வீஸ் எனக்கும் கொஞ்சம் போர் அடிக்குது அப்படியே ஜாலியா பைக்ல ஒரு ரைடு போலாம்ன்னு இருக்கேன்.

மிஸ்டர் ஆர் யூ ஜோகிங் வித் மீ… நான் மெமோ கொடுத்து விடுவேன்.

ஓகே நீங்க எது செய்தாலும் நான் ரெடி தான் என்று இன்பா சொன்னதை அப்படியே மினிஸ்டர் கேட்டு கொண்டு இருந்தார். இவன் இவனுக்கு எவ்வளவு திமிர் என்று அவன் ஆட்களிடம் அவனுக்கு கொஞ்சம் அடி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். 

கவ்யா செட் செய்து இருந்த ஆட்கள் மீம்ஸ், சில எடிட்டிங் வேலை எல்லாம் செய்து கொஞ்சம் பரப்ப அதுவும் கொஞ்சம் ஹாட் டாபிக் ஆனது.

மதியம் மூன்று மணி போல் உள்ளே போகலாம் என்று முடிவு எடுத்தனர். இன்பா கடமைக்கு உள்ளே சென்றான் மித்ரன், லோகேஷ், இன்பா மூவர் மட்டும் சென்றனர். அவர்கள் உள்ளே வருவது அறிந்து அந்த கூலிப்படை குறிப்பிட்ட தொகையை பணயமாக கேட்க இன்பா ரெடி செய்து அனுப்பினான். அதை எடுத்து கொண்டு ஒரு சில குழு அருகில் இருந்த மினி வேனில் லோட் செய்து வைக்க அவர்களில் சிலர் கிளம்ப மூவரும் உள்ளே சென்று தேட அதில் ஒருவன் நடுவில் இருந்து வந்து கட்டயில் இன்பாவை அடிக்க தடுக்க சென்ற மித்ரணுக்கும் காயம் ஏற்பட்டது. 

அங்கே ஒரு மூலையில் அப்பாவி போல் அழுது நடித்து கொண்டே கை கால்கள் கட்ட பட்டு நிலையில் கவ்யா இருந்தாள். அங்கே இப்போது அடித்தவனை லோகேஷ், மித்ரன் பிடித்து கொள்ள இன்பா சுற்றியும் நோட்டம் விட்டு கொண்டே அவள் அருகில் செல்ல அப்போது தான் அங்கு ஆடர் செய்து சாப்பிட்ட உணவு பொருளின் கவர்களை பார்த்தான்.

பின்னால் ஒரு அறையில் அந்த பீச் ஹவுஸ் ல பணி புரியும் எல்லா வேலை ஆட்களையும் கட்டி வைத்து இருந்தார்கள். அவர்களை எல்லாம் கட்டு அவிழ்த்து விட வருண், சாதனா, கீர்த்திகா, விகாஸ் இன்னும் சில காவலாளிகள் என உள்ளே வந்தனர்.

இன்பாவின் தோள் பட்டையில் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அவள் இன்பாவை பார்த்ததும் தாவி அணைத்து கொள்ள வர. மேடம் என்று ஒரு கர்ஜனை அவள் பயந்து கொண்டே நடுக அவன் கை கால்களை அவிழ்த்து விட்டவன். 

இன்பா, வாங்க போகலாம்..

கவ்யா, என்னால நடக்க முடியல என்று சொல்ல அங்கே பத்திரிக்கை நிருபர்கள் அனைவரும் எதுவும் செய்தி கிடைக்குமா என உள்ளே வர அதை பார்த்த கவ்யா வலியில் இருப்பது பொல் துடித்தாள்.

இன்பாவுக்கு இப்போது வேறு வழி இல்லை அவளை தூக்கினான். கவ்யா இன்பாவின் மார்பில் சாய்ந்து கொண்டாள். 

கவ்யா மனதில் நான் அணைக்க வந்த போது அப்படியே கத்தின இப்போ உன் கையாலயே என்னை தூக்கி வர வைத்து விட்டேன் பார்த்தாயா டா கூடிய சீக்கிரத்தில் நீ என்னோடவன் ஆகி விடுவாய். 

இன்பா மனதில் மினிஸ்டர் தன் அம்மாவை அவமான படுத்தியது இப்போது இவளை தூக்கி கொண்டு வருவது இரண்டும் அவனுக்கு உள்ளுக்குள் ஒரு தீயை உருவாக்கியது. நிச்சயம் அது காட்டு தீயாக மாற போகுமா….!

தொடரும்…

No words to express my happiness thankyou so much 

Today 100 th episode thankyou so much for your support friends keep reading and support 

Episode 101,

இன்பா அந்த கவ்யாவை தூக்கி கொண்டு வரும் காட்சியை விவேகா வீட்டில் டீ வியில் நேரலையில் பார்த்து கொண்டு இருந்தாள். 

யாருக்கு தான் கோவம் வராது (இதை எழுதி கொண்டு இருக்கும் எனக்கே கோவம் வருகிறது. ஆனால் என்ன செய்ய கவ்யா தான் நான் எழுதி கொண்டு இருக்கும் இரண்டு கதைகும் முக்கிய கதாபாத்திரம் சண்டைக்காரா , நீந்துகின்ற வெண்ணிலா) 

ஆதி மனதில் முடிந்தது அவ்ளோ தான் மீண்டும் ஒரு உயரமான முறுங்கை மரத்தில் ஏறி கொள்வாள்.

அப்ப ப்பா இவளை மேய்ப்பது ரொம்ப கஷ்டம் டா சாமி இது இன்பா சார் உங்களால மட்டும் தான் முடியும்.

கங்கா,  விவேகா வா வீட்டுக்கு போகலாம். நான் வரல நீ போ மா.ஹே வருண் உன்னை கேப்பான் வா போகலாம். நான் வரல நீ போ மா நான் இங்கே அத்தை கூட இருக்கேன்.

 இனி நான் இங்கே இருந்து தான் காலேஜ் போவேன். என்னடி சொல்ற.

எனக்கு அந்த போலீஸ் கோட்ரஸ் பிடிக்கல. நான் வரல என்று கண்களில் கண்ணீர் வர அழுதாள்.

தேவி, அக்கா அவளுக்கு இப்போ லீவ் தானே இங்கே இருக்கட்டும் நான் பார்த்து கொள்கிறேன். 

ஆதி, அத்தை நீங்க வாங்க அவ வருவா சும்மா சொல்றா. விவேகா நேராக படுக்கையில் போய் படுத்தவள் அழுது கொண்டே இருந்தாள்.

வெண்பா ஆதி எண்ணுக்கு அழைக்க அவன் மொபைல் அருகில் இருந்து சினுகியது. விவேகா வேறு வழி இல்லாமல் அதை எடுத்து காதில் வைத்து மம் சொல்லு.. என்ன பண்ற. நான் தூங்க போறேன் . வெண்பா, என்ன தூக்கில் தொங்க போறியா? நான் எதுக்கு தொங்கனும் நீ வா உன்னை கட்டி தொங்க விடுகிறேன். 

சரி சரி விடு விவி என் செல்ல குட்டி. கொஞ்சம் வாயை மூடிட்டு போன வை. என்று சொல்லி கட் செய்தாள். 

வெண்பா மீண்டும் போன் செய்தாள். கொஞ்சம் கவலையான குரலில் ஹே இன்பா அண்ணாவுக்கு தோல் பட்டையில் அடி இரத்தம்  கொஞ்சம் போய் விட்டது இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காரு.

இதை கேட்டதும் மனம் ஒரு நிமிடம் அவனுக்கு என்ன ஆனதோ என்று துடிக்க தான் செய்தது. 

என்ன சொல்ற இப்போ எப்படி இருக்காங்க எந்த ஹாஸ்பிடல்.

நீ அடி பட்டதை டீ வில பார்க்கவில்லையா. நான் பார்க்க வில்லை. வெண்பா இப்போது அழுது கொண்டே மித்ரனுக்கும் கொஞ்சம் காயம் என்று விசும்ப சரி சரி அழ வேண்டாம் நம்ப போய் பார்க்கலாம் என விவேகா வெண்பாவுக்கு சமாதானம் செய்தாள். 

வெண்பா அழுது கொண்டே இன்னிக்கு பார்க்க முடியாது நம்ப நாளைக்கு போகலாம். நான் சொல்ற இடத்துக்கு நீ வந்து விடு என்று மீண்டும் அழுது கொண்டே இருக்க விவேகா அவளை சமாதானம் செய்ய ரொம்ப கஷ்டப் பட்டாள்.

ஆம் வெண்பா என்ன தான் சரவணன் மேல் மிகவும்  பாசம் அதிகம் என்று சொன்னாலும் அதற்கு இணையாக மித்ரன் மேல் அளவு கடந்த பாசம் அதை இருவரும் சண்டையாக வெளிபடுத்தி கொள்கிறார்கள். அதே போல் மித்ரணுக்கு வெண்பா என்றால் உயிர் ஒரே ஒரு தங்கை.

அடுத்த நாள் விவேகா நேராக கோவில் சென்றாள் காலையில் இருந்து எதுவும் சாப்பிட வில்லை விரதம் இருக்கிறாள்.

அவனுக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் என்று அடி பிரதட்சனம் செய்து நவகிரகம், சனி பகவான், தட்சிணா மூர்த்தி, கால பைரவர் என்று அனைத்து கடவுளுக்கும் உகந்த வழி பாடு செய்து முடித்து அந்த கோவில் கருவரை கடவுளுக்கும் பூ கட்டி கொண்டு வந்து இருந்தாள்.

சரியாக அந்த நேரம் இவள் இன்பராகவன் என்று பெயர் சொல்லி அர்ச்சித்து பூ கூடவே அந்த மகிழம் பூ அதையும் சிவ பெருமானுக்கு கோர்த்து கொண்டு வந்து இருந்தாள். அதை எல்லாம் கொடுத்து கண்களை மூடி மனம் உருகி வேண்டி கொண்டு இருக்கும் நேரம் சுபத்ரா கோவிலுக்கு வந்தாள். 

எல்லாம் தன் தம்பிக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் என்று அந்த பூஜை செய்யும் குருக்களிடம் இன்பராகவன் என்று சொல்லி அர்ச்சனை செய்ய விவேகா கண்களை மூடி வேண்டி கொண்டு இருந்தாள். சுபா சொன்னது அவளுக்கு கேட்க வில்லை விவேகா முன்னால் இருந்தாள். சுபா கடைசியில் இருந்தாள்.

 குருக்கள், அர்ச்சனை செய்து சுபாவின் அர்ச்சனை கூடையை விவேகாவிடமும் விவேகாவின் அர்ச்சனை கூடையை சுபாவிடமும் கொடுத்து விட விவேகா அதை வாங்கி கொண்டு இன்பா நினைவில் செல்ல சுபா, சாமி இது என்னோட அர்ச்சனை கூடை இல்லை. 

இப்போது அந்த குருக்கள், கொஞ்சம் சத்தமாக இன்பராகவன் அப்டின்ற பேருக்கு அர்ச்சனை செய்தது யாரு மா? என்று கேட்க விவேகா சட்டென்று திரும்பி பார்க்க அங்கு சுபா நின்று கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்ததும் விவேகா கண்டு கொண்டாள்.  என் தம்பிக்காக அர்ச்சனை செய்ய வந்தேன் இப்போ என் அர்ச்னையே மாறி போச்சே.

விவேகா அந்த குருக்கள் அருகில் சென்று சாமி  என்னோட அர்ச்சனையை அந்த மேம் கிட்ட கொடுத்து விட்டீர்களா.

சுபா விவேகாவை கொஞ்சம் உற்று பார்த்தாள். அந்த குருக்கள், இது கடவுள் கொடுத்த அர்ச்சனை யாருக்கு என்ன கிடைக்கணுமோ அது தான் அவன் சித்தம்.

உன்னோட பிராத்தனை நானே அசந்து போய் விட்டேன் அம்மா.மகிழம் பூ வைத்து அவரை பூஜித்து இருக்கிறாய்.

நீ யாரை நினைத்து செய்தாயோ உன் மனம் போல் அவரும் நன்றாக இருப்பார்.என்று சொல்லி அவர் நகர 

(அந்த கடவுள் விவேகாவின் பூஜையை ஏற்று கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டார். )

விவேகா,மேம் நீங்க எடுத்து போங்க இப்போ மாற்றினால் அது நன்றாக இருக்காது. சுபாவுக்கு விவேகாவை பார்த்ததும் பிடித்து போனது. சுபா ஒரு ஆவலில் நீ இன்பராகவன் அந்த பெயருக்கு தான் அர்ச்சனை செய்தாயா என்று கேட்க.

விவேகா இப்போது என்ன சொல்வது என்று திரு திருவென முழித்தாள். அது..இல்ல

சுபாவின் கண்கள் மின்ன சொல்லு மா.

இல்ல மேம் நான் சாமி பேருக்கு அர்ச்சனை செய்தேன். என்று சொல்ல அவளுக்கு புஷ் என்று ஆகி விட்டது. 

சரி ஓகே மா. அதென்ன என்னை பார்த்து மேம் அப்டின்னு கூப்பிடர இதுக்கு முன் நம்ப ரெண்டு பேரும் எங்கேயாவது பார்த்து இருக்கிறோமா.  இல்ல அது எதோ ஒரு நியாபகத்தில் சொல்லி விட்டேன். 

அந்த நேரம் வெண்பாவும், சரவணனும் கோவில் உள்ளே வந்தனர். வெண்பா ஹே விவி வா போகலாம்.

சுபா யார் என்று திரும்பி பார்க்க சரவணனும் அவளை அங்கே எதிர் பார்க்க வில்லை. 

வெண்பா அருகில் வர ஹாய் சுபா அக்கா என்று சொல்லி அருகில் சரவணன் இருப்பது தெரிய சுபா மேம் எப்படி இருக்கீங்க. சுபா, ம்மம் நல்லா இருக்கேன் வெண்பா இந்த பொண்ணை உனக்கு தெரியுமா.

விவேகா, சரவணன் அண்ணா என்று அழைக்க. சுபா கேள்வியாக யார் என்று பார்க்க வெண்பா, இவ என்னோட காலேஜ் மேட் மித்ரன் ஹாஸ்பிடல்ல இருக்கானா சோ பார்க்க வந்து இருக்கிறாள்.

சரவணனும் அவளும் ரொம்ப க்ளோஸ். சுபா உள்ளுக்குள் கவலை இருந்தாலும சிரித்து கொண்டே ம்மம் தெரியுதே அப்படியே உங்க அண்ணா மாதிரியே பேசறா அப்போவே நினைத்தேன் இந்த ஓதம் எங்க இருந்து வருது அப்டின்னு இப்போ தானே தெரியுது. 

விவேகா இல்ல மேம் அப்படி எல்லாம் இல்ல. சுபா நீ யாவது என்னை இப்படி தள்ளி வைக்காமல் பேசுவியா மா.

வெண்பா அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் உன்னோட நாத்தனாரை இப்போவே கைக்குள் போட்டுக்கோ டி.விவேகா சிரித்து கொண்டே வெண்பாவின் பாதத்தை மிதித்தாள்.

ஸ்ஸ்ஸ் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வலிக்குது டி காலை எடு பிளீஸ் விவேகா.

 சரி ஓகே அக்கா இனி உங்களை அக்கான்னு கூப்பிடறேன். இப்போ ஒகே வா அக்கா.

சுபா அழகாக சிரிக்க சரவணன்  அவளை அப்பட்டமாக ரசித்து கொண்டு இருந்தான் ஒரு நிமிடம் தான்.

வெண்பா, இது உங்க தம்பிக்கு தெரியுமா.  சுபா, எந்த தம்பி.என்று குழப்பத்தில் வினவ

நீங்க அக்கா அப்டின்னா, சில சில பேருக்கு அண்ணா முறை வருது, அது ஒரு சில பேருக்கு வருத்தம் தரும். சோ நீ மேம் சொல்லி கூப்பிடு அது தான் சரி. விவேகா, கொஞ்சம் வாய மூடுகிராயா இல்ல உன்னை கூட்டி போய் சண்டுகேஷ சந்நிதானத்தில் உன் முதுகுல அடிக்க விட்டு விடுவேன் டி.

சுபா, என்ன சொல்ற.விவேகா உன் பேரு அது தானே சரியா. ம் மம் சரி அக்கா. ஹே மேம் சொல்லு டி. வெண்பா டென்ஷன் பண்ணாத. ரைட்டு விடு பின்னாடி பிரச்னை ஆகிடும். சுபா, நானும் ஹாஸ்பிடல் தான் போறேன் என் கூட வரயா விவேகா. இப்போது சரவணன், விவேகா இருவரும் ஒரு சேர உங்களுக்கு எதுக்கு சிரம.. என்று சொல்லி சரவணன் விவேகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.

சுபாவுக்கு விவேகாவை பார்க்க சரவணன் பேசுவது போல் இருந்தது. விவேகா, அண்ணா எனக்கு மிட்டாய் வாங்கி கொடுங்க நீங்களும் நானும் ஒரே போல பேசுகிறோம். 

சுபா என்ன நினைத்தாளோ  விவேகாவை கட்டி அணைத்து கண்ணத்தில் முத்தம் வைத்து விட்டு. நீ உங்க அண்ணா கூடவே போ. மா என்று சொல்லி அவனை ஏக்க பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

சரவணனுக்கு இங்கு வந்ததில் இருந்தே கண்கள் சுபாவின் மேல் இருந்த கவனத்தை எடுக்க முடியவில்லை. சுபா அவனுக்கு கொடுக்க முடியாத முத்தமும் அணைப்பும் தான் அது. விவேகா திரு திரு வென முழித்து கொண்டு நின்றாள்.

வெண்பா என்ன டி உன்னை பார்த்தாலே எல்லாரும் முத்தம் கொடுத்து அணைத்து விட்டு போறாங்க ஒரு வேளை இன்பா அண்ணா கொடுக்க சொல்லி இருப்பான் போல. கொஞ்சம் வாய மூடுகிறாயா. இல்ல இந்த காலையும் மிதிக்கவா.

சரி சரி வா போகலாம் என்று மூவரும் நேராக மித்ரன் அட்மிட் ஆன இடத்துக்கு செல்ல அங்கு மித்ரணிடம் பேசி விட்டு அவள் அங்கேயே காத்து கொண்டு இருக்க மித்ரனிடம் வெண்பா அவளை சைகை காட்டிட சரவணன் இருப்பதால் இருவரும் கொஞ்சம் அமைதியாக இருந்தனர். 

வெண்பா கைபேசிக்கு ஆதி அழைக்க ஹே விவேகா வீட்டில் இருந்து போன். விவேகா அதை வாங்கி கொண்டு வெளியே செல்ல  அங்கே கண்ணுகினியாள், யாலினியாள், குடும்பம் மொத்தமும் வந்து இருக்க அவர்கள் நேராக மேல் தளம் சென்றனர். இனியாள், சார் நாங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் வருவோம் என்று சொல்லி சென்றாள்.

அங்கு தான் இன்பா இருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள். 

இன்னும் சிறிது நேரம் அவள் பேசி முடித்து உள்ளே வர அந்த இடம் கொஞ்சம் பரபரப்பானது. வேறு யார் கவ்யா தான் சில அலப்பறை செய்து கொண்டு வந்தாள். இது ஒரு காரணமாக இன்பாவை பார்க்க வந்து இருந்தாள். விவேகா வுக்கு இப்போதே இங்கு இருந்து சென்று விடலாம் என்று தோன்றியது. அவள் துக்கம் தொண்டையை அடைக்க அமர்ந்து இருந்தாள்.

இன்பாவுக்கு கவ்யாவை பார்க்க பார்க்க எரிச்சலாக இருந்தது.

அங்கே இருந்த ஒரு நர்ஸ் கிட்ட கொஞ்சம் கை கழுவ ஹேன்ட் வாஷ் கேட்டான். அங்கே சோபாவில் கவ்யா அமர்ந்து இருக்க அந்த நர்ஸ் பயந்து கொண்டே அவன் அருகில் வர நேற்றில் இருந்து கை எல்லாம் ரொம்ப அழுக்கா இருக்கு.

ஒரு பெஸ்ட் ஹேன்ட் வாஷ் கொஞ்சம் டாக்டர் கிட்ட சொல்லி வாங்கி வாங்க ஐ ஃபீல் இரிட்டேடிங். இதை கேட்டதும் வேக வேகமாக கவ்யா இரு டா உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பினாள். ஹே ச்சீ. டிஸ்கஸ்டிங் என்று வாய் மொழியாக சொன்னான்.

இன்பா அறைக்கு வெளியில் இருந்த காவலர் கிட்ட இனி யார் வந்தாலும் உள்ளே விட கூடாது முக்கியமாக பொண்ணுங்க யாரும் வந்தால் விடவே கூடாது என்று சொல்லி இருந்தான்.

அந்த நேரம் தான் நம்ப விவி டார்ஜ்லிங் வர  வெளியில் இருந்த பணியாளர் இன்பா சொல்ல சொன்னதை கேட்டு கண்களில் கண்ணீர் கொண்டு கீழே ஓடினாள்.

தொடரும்…

 Episode 102,

சரவணனுக்கு ஆஃபீஸ்ல இருந்து கால் வர அவன் போன் பேசி கொண்டே வெளியே செல்ல வெண்பா, விவேகாவை அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் இன்பாவை பார்க்க  அழைத்து சென்றாள்.

அங்கே சென்றதும் அங்கே உள்ள பணியாள் இருவரையும் பார்த்து விட்டு, ஹலோ ரெண்டு பேரும் எங்கே போறீங்க. 

ஒன்னும் இல்ல உள்ளே இருப்பது என்னோட அண்ணா அது தான் எப்படி இருக்காரு அப்டின்னு பார்க்க வந்தேன். 

இல்ல சார் ரெஸ்ட் எடுத்து கொண்டு இருக்கிறார் அதனால் நீங்க போயிட்டு அப்புறம் வாங்க.

விவேகா, ஹே வாடி போலாம் எனக்கு இங்கே இருக்க சுத்தமா பிடிக்கல. 

வெண்பா, பிளீஸ் விடுங்க ஓவரா பண்ணாதீங்க நாங்க ரொம்ப இம்பார்டென்ட்

அந்த காவலர், இப்போ தயவு செய்து போங்க மா சாரு முக்கியமா பொண்ணுங்க ரெண்டு பேர் வருவாங்க உள்ளே விட்டால் அவ்ளோ தான் அப்டின்னு சொல்லிட்டு போயிருக்காரு இப்போ போறீங்களா.

இதை கேட்டதும் அதற்கு மேல் விவேகா அங்கு நிற்க பிடிக்காமல் கண்களில் கண்ணீர் கோர்க்க வேக வேகமாக மித்ரன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டாள்.

வெண்பா அந்த காவலரை முறைத்து விட்டு வேறு வழி இல்லாமல் இன்பா அண்ணா நீ க்ளோஸ் என்று நினைத்து கொண்டு கீழ வந்தாள்.

உள்ளே வந்த வெண்பாவிடம் மித்ரன் என்னாச்சு என்று கேட்க அங்கு நடந்த அனைத்தும் வெண்பா சொல்ல சரியாக சரவணன் அந்த நேரம் உள்ளே வந்தான்.

விவேகா , சரவணன் அண்ணா நான் கிளம்புறேன் என எழ, சுபா உள்ளே வந்தாள்.

சுபா நேராக கடைக்கு சென்று இன்பா வுக்கு விருப்பமான ஃப்ரெஷ் ஜுஸ், சில அசைவ உணவுகள் எல்லாம் வாங்கி கொண்டு இப்போது தான் ஹாஸ்பிடல் உள்ளே நுழைந்தாள். அப்படியே மித்ரனுக்கு பிடித்த அந்த ஜுஸ் கொடுத்து விட்டு ஒரு பழ கூடை கொடுது விட்டு போகலாம் என வந்தாள். 

சரவணன்,  இதுக்கு எவ்ளோ அமோன்ட். சுபா, பிளீஸ் மித்ரன் உங்க அண்ணாவை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லு இல்ல இங்கே இன்னொரு பெட்ல அவங்க இருப்பாங்க.

மித்ரன், கொஞ்சம் அமைதியா இரு சரவணா. என்று சொல்ல அவன் அமைதியானான். விவேகா, மித்ரன் அண்ணா டேக் கேர் என்று சொல்லி கிளம்ப போக. 

மித்ரன், சரவணன், வெண்பா, அப்படியே நீங்க சுபா கூட போய் இன்பாவை பார்த்து விட்டு போங்க இவளோ தூரம் வந்துட்டு பார்க்காமல் போனால் அது நல்லா இருக்காது என்று தன் அண்ணனை பார்க்க அவன் ஒரு இரண்டு நிமிடம் யோசித்து விட்டு சரி வா வெண்பா போய் பார்த்து விட்டு செல்லலாம்.

இப்போது வெண்பா, விவேகா நீயும் வா என்று அவள் கைகளை இறுக்கி பிடித்து கூட்டி சென்றாள். எங்கே விட்டால் ஓடி விடும் நிலையில் மிகவும் கோபத்தில் விவேகா இருந்தாள். 

மேலே சென்றதும் மீண்டும் சரவணனுக்கு போன் வர வெண்பா நீங்க உள்ளே போங்க நான் இதோ வருகிறேன் என சொல்ல சுபா, விவேகா, வெண்பா மூவரும் சென்றனர். 

அந்த காவலாளி, மேடம் உள்ளே போக முடியாது. சாரு ரெஸ்ட் என்று எதோ சொல்ல வர…

சுபா ஒரு பார்வை தான் பார்த்தாள் அவள் பார்வையில் பயந்து போன காவலாளி உள்.. உள்ளே போங்க மேடம். என்று அனுமதிக்க சுபா உள்ளே செல்ல பின்னால் வெண்பா அந்த காவலாளியை முறைத்து கொண்டே விவேகாவை தரதரவென்று இழுத்து சென்றாள். 

உள்ளே இன்பா ஜாலியாக கால் மேல் கால் போட்டு கொண்டே போன் நோண்டி கொண்டு இருக்க 

டேய் என்னடா பண்ற. நீ எதோ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்க அப்டின்னு சொன்னாங்க. ஆனால் இங்கே வந்து பார்த்தால் நீ ஜாலியா போன் நோண்டி கிட்டு இருக்க.

அது ஒன்னும் இல்ல சுபா என்று நிமிர்ந்து பார்க்க இன்பா  அதிர்ந்தான். விவேகா அவனை யாரோ புதிதாக ஒருவரை பார்ப்பது போல பார்த்தாள்.

சுபா, இன்பா என்னடா அப்படியே ஷாக் ஆகி பார்க்கிற என்னாச்சு.

வெண்பா மனதில் இங்கே டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்க காத்திருக்கு  சோ இந்த ஷாக் கொஞ்சம் கம்மி தான்.

சுபா, இன்பா ஆர் யூ ஹியர்..

இன்பாவின் வாயில் வார்த்தைகள் வர தடுமாறியது. ஹான் சுபா என்று மூவரையும் பார்க்க.

இன்பா  வெண்பா, விவேகா இருவரையும் மாறி மாறி பார்க்க

சுபா,ஹே அந்த பொண்ணு பேரு விவேகா வெண்பா ப்ரெண்டு.

சுபா, விவேகா இது தான் என்னோட தம்பி. ஓ அப்டியா அக்கா என்று இன்பா பக்கம் திரும்பவே இல்லை.

இன்பா வெண்பாவிடம் கண்களால் இரு புருவமும் உயர்த்தி என்ன என்று கேட்க

வெண்பா கழுத்தில் கை வைத்து நீ க்ளோஸ் என்று காட்டினாள்.

இன்பா எட்சிளை கஷ்ட பட்டு விழுங்கி பார்க்க,

சுபா, என்னடா பேசவே மாட்டிங்குற இந்த பொன்னு இருக்கு அப்டின்னு பார்க்கிறாயா.

இன்பா சுபாவை பாவமாக பார்த்தான் இவ வேற நேரம் காலம் பார்க்காமல் பேசுகிறாள் என நினைத்து கொண்டு இருக்க.

சுபா, டேய் இந்த பொன்னு நம்ப காலேஜ் தான். வெண்பா சொல்லு. ம்ம் ஆமா அண்ணா இவ நம்ப சாரி உங்க காலேஜ் தான்.

ஓ அப்படியா… 

சுபா ஒரு கிளாஸ்ல ஜுஸ் ஊற்றி கொண்டே விவேகா நீ என்ன dept என்று கேட்க.

நான் IT அக்கா. Oh அப்டியா நீ இன்பாவை காலேஜ்ல பார்த்து இருக்கியா. உனக்கு இனியாள் தெரியுமா. சுபா இப்போது எதோ நியாபகம் வந்தவளாய் இன்பா IT ல கூட உன்னை ஒரு பொன்னு? இன்பா, விவேகா, வெண்பா என மூவரும் அதிர்ச்சியாகி பார்க்க,

என்ன சுபா கொஞ்சம் முழுசா சொல்லு பதருது.

அது ஒன்னும் இல்ல என்று அவனிடம் ஜுஸ் கொடுக்க அதை அவன் வாங்கி கொண்டு விவேகாவிடம் இருந்து பாவமாக காட்டி கொள்ள ஒரு சிப்  குடித்து கொண்டே ம்ம் ஒரே பெயினா இருக்கு இப்போ தான் கொஞ்சம் ஒகே..

இன்பா உனக்கு நியாபகம் இல்லையா ஒரு பொன்னு கூட உன்னை எதிர்த்து கிளாஸ்க்கு வெளிய போனாளே! இதை கேட்டதும் இன்பாவுக்கு புரை ஏறியது. 

சுபா, உனக்கு யாருன்னு தெரியுமா விவேகா அந்த பொண்ணு என் தம்பியை எதிர்த்து பேசி  இருக்கிறாள். இவன் வேற அந்த பொன்னு மேல கோபமா இருந்தான்.

விவேகா, ம்ம் தெரியும் அக்கா அந்த பொன்னு இனி சார் இருக்க பக்கமே வர மாட்டேன்னு போயிட்டா. இனி வர மாட்டா. 

சுபா, என்ன மா சொல்ற.. இன்பா காலேஜ் ல ரொம்ப கோவமா, பயமா இருப்பானோ!

வெண்பா, இன்பா அண்ணாவை பார்த்தால்  பயமா இல்ல பாவமா இருக்கு 

என்ன சொல்ற வெண்பா. ம்ம் அண்ணா பிளட் லாஸ் ஆகி இருக்கே இனி கொஞ்சம் தேறுவது ரொம்ப என்று விவேகாவை பார்த்து கொண்டே கஷ்டம் கஷ்டம் 

இன்பா , சுபா கொஞ்சம் அமைதியா இரு பிளீஸ். 

சுபா, சரி டா நான் அந்த பொண்ணை பற்றி பேசல நீ கோவப்படாத நான் உன் மோடை ஸ்பாயில்  பண்ண விரும்பல 

 விவேகா இப்போது முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.

சுபா பிளீஸ் நீ பண்ணது போதும் ஏற்கனவே என் உயிர் ஊசல் ஆடிட்டு இருக்கு பிளீஸ்.

சரி விடு நான் விவேகா கிட்ட பேசறேன். விவேகா நீ சொல்லு மா 

ஓ தெரியுமே இப்போ தமிழ் நாட்டில் எல்லாருக்கும் இவரை தெரியாம இருக்குமா. இன்ஃபேக்ட் இப்போ நிறைய பேர்  சாருக்கும்  காவ்யா ஸாரி சாரீ கவ்யா மேம்க்கும் பேன்ஸ் ஃபாலோவர்ஸ் அதிகம் அதுல நானும் ஒன்னு.

சுபா, ஆமா இன்பா அந்த பொண்ணை அப்படியே தூக்கிட்டு வந்த பாரு அந்த சீனு தான் இப்போ ஓட்டிட்டு இருக்கு.

இன்பா மனம் அய்யோ இந்த சுபா வேற இன்னும் டெவலப் பன்றாளே. விவேகா சும்மாவே ஆடுவா இப்போ கன்டென்ட் கொட்டி கிடக்குது.

அப்புறம்  இவரு சேர் பர்சன். 

அப்போ தெரியாது இப்போ ரொம்ப நல்லா தெரியுது என்று இரு பொருள் பட பேசி விட்டு வெண்பா கிளம்பலாம் இப்போ தான் கவ்யா மேம் வந்து விட்டு சென்றார்கள். அதுக்கு முன்னாடி இனியாள் ஃபேமிலி வந்து விட்டு போனாங்க அவர் ரெஸ்ட் எடுக்கட்டுமே. 

இது ஒவ்வொன்றும் சொல்ல சொல்ல இன்பா முகம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இறுகி போனது.

சுபா, ஓ வினய் வந்துட்டு போனாரா என்று கேட்டு கொண்டு இருக்கும் நேரம்

சரியாக அந்த நேரம் சரவணன் போன் பேசி விட்டு உள்ளே வந்தான். அவன் காதுகளில் இது விழ அவனுக்கு மிகவும் வெறுப்பு பொறாமையாக இருந்தது. 

சரவணன், இன்பா சாருக்கு இப்போ எப்படி இருக்கு.

இப்போ ரொம்ப மோசமா இருக்கு. என்ன என்று வெண்பா, சுபா, சரவணன் மூவரும் என்னாச்சு எதுவும் வலிக்குதா பெயினா இருக்கா. என்று கேட்க விவேகா வேறு எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள். 

இன்பா, கொஞ்சம் இதயம் வலிக்கிற மாதிரி இருக்கு. என வேண்டும் என்றே விவேகாவுக்கு கேட்க வேண்டும் என்று கூற

விவேகா,மனம் உன்னோட பருப்பு குக்கர் ல போட்டு ஒரு 10விசில் விட்டால் கூட என் கிட்ட வேகாது டா என அவள் திரும்பவே இல்லை. 

வெண்பா, வாய் மொழியாக சத்திய சோதனை அண்ணா இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும். 

சுபா, சரவணன் இருவரும் வெண்பாவை பார்க்க, இல்ல டாக்டர் கிட்ட செக் பண்ண சொல்ல வந்தேன்.

இப்போது சரவணன், சரி ஒகே சார் இப்போ தான் சாக்லட் ஃபேக்டரி ஓனர், அண்ட் மினிஸ்டர் பொன்னு எல்லாம் வந்து பார்த்து விட்டு போனாங்க சோ உங்களுக்கு ரெஸ்ட் தேவை நாங்க கிளம்புறோம். 

இதை கேட்டதும்விவேகா, வெண்பா, இன்பா என அனைவரும் அதிர்ச்சியாகி பார்க்க 

சுபாவின் முகம் சுணங்கி போனது. போன முறை விவேகா சொல்ல இன்பா வருத்த பட இப்போது சுபா வருத்த பட்டாள்.

 சரவணன்,என்ன எல்லாரும் அப்படி பார்கிறீர்கள். இப்போ நான் எதும் தவறா சொல்லி விட்டேனா. 

வெண்பா, இல்ல கொஞ்ச நேரம் முன்ன விவேகா இதை தான் சொன்னா அதை அப்படியே வார்த்தை மாறாமல் இப்போ நீ சொல்ற. 

ஒரு சிறு அமைதிக்கு பின் விவேகா, சரவணன் இருவரும் ஒரே நேரத்தில்  டேக் கேர் சார் என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் கிளம்பினர். 

வெண்பா, இதுங்க ரெண்டும் ஒரு வித்தியாசமான சைக்கோ கில்லர்ஸ் நீங்க எதுவும் நினைக்க வேண்டாம் உடம்பை பார்த்துக்கோ அண்ணா பை பை அண்ணா , பை பை அக்கா என சொல்லி கிளம்பினாள். 

சுபா, இன்பா அந்த பொண்ணு அப்டியே சரவணன் ஆட்டிடியூட் என்று சொல்ல மம் ஆமா அக்கா என்று சொல்லி இருவர் மனதிலும் இன்பா, சரியான திமிர் பிடிச்சவள். என விவேகாவை நினைத்தான். சுபா, சரியான திமிர் பிடிச்சவன் என சரவணனை நினைத்தாள்.

அது சில நிமிடம் தான் இப்போ மித்ரன் போன் செய்தான். 

ம்ம் சொல்லு மச்சி, விவேகா வந்தாளா

ம்மம் ஆமா டா என இன்பா சொல்ல 

அதன் பின் மித்ரன் சொன்ன விஷயத்தை கேட்டு இன்பா ….?

தொடரும்… 

 Episode 103,
இன்பா,வெண்பாவை நீ எங்கே பார்த்த.. நான் கோவிலில் பார்த்தேன் ஹான் மறந்தே போயிட்டேன் என்று அர்ச்சனை கூடை எடுத்து விபூதி இட வர ஹே எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல உனக்கு தெரியும் தானே அப்புறம். என்ன எடுத்து போ.

ஹே ஓவரா பண்ணாத என்று வைக்க ஹே இதில் என்ன இந்த மகிழம் பூ இருக்கு என்று இன்பா கேள்வியாக பார்க்க,

சுபா, ஹே இந்த பூ எல்லாம் உனக்கு தெரியுமா! இல்ல மாம் சொல்லி இருக்காங்க என்று அதை பார்க்க

 இது அந்த விவேகா பொண்ணோட அர்ச்சனை கூடை என்னோடது அவ கிட்டயும் அவளோடது என் கிட்டயும் வந்து விட்டது என்று கோவிலில் நடந்த அனைத்து விஷயமும் கூற 

இன்பா, அவளை பற்றி எதுக்கு என் கிட்ட சொல்ற என்று கூறி மீண்டும் போனை நோண்டி கொண்டு இருந்தான்.

சுபா, நான் கூட நெனைச்சேன் டா அந்த பொண்ணு உன் பெயருக்கு அர்ச்சனை பண்ணி இருப்பா அப்டின்னு கேட்டேன் ஆனால் அவ நான் சாமிக்கு தான் பண்ணேன் அப்டின்னு சொல்லிட்டா. 

இன்பா, அவ பார்கிறதை பாரு சரியான திமிர் பிடிச்சவ. சரியான அகங்கார காரி என்று விவேகா அவனை பார்க்காமல் சென்ற விரக்தியில் பேச

ஹே என்ன டா அவ உன்னை என்ன பண்ணுனா நீ பேசறது பார்த்தால் ஏற்கனவே உங்க ரெண்டு பேருகுள்ள எதுவும் பிரச்னை இருக்கா..

இன்பா, ஹே லூசு மாதிரி யோசிக்காத

என்று சொல்லியவன் “அட ஆமா சுபா அந்த முதல்நாள் ஃபைட்டிங் அது அவ கூட தான் போட்டேன்” என்று “என்னை எதிர்த்து கிளாஸ் விட்டு போனது அவ தான்.. நீ அவ முன்னாடியே அவள பற்றி பேசி இருக்க.”

ஏற்கனவே என் மேல் காண்டுல எங்கே பார்த்தாலும் முறைத்து இன்சல்ட் பண்ணிட்டு சுத்துவா இப்போ நீ வேற இன்னும் கொஞ்சம் தூண்டி விட்டுட்ட…

சுபா சிரித்து கொண்டே ஓ அதனால் தான் உன்னை முறைத்து பார்த்திட்டு போராளா! என்று சிரிப்பை அடக்க முடியாமல் அவள் சிரித்து கொண்டே இன்பா வாய்ப்பே இல்ல டா அவ உனக்கு அர்ச்சனை பண்ணி இருப்பா அப்டின்னு என் அடி மனசுல  கொஞ்சம் தோணிச்சு  இப்போ என்று சிரிக்க…

இன்பா, சரி சரி நீ எனக்காக கஷ்ட பட்டு கோவிலுக்கு போயிருக்க உன் மனசு கஸ்டபடும் அந்த விபூதி பூசி விடு என சொல்ல 

சுபா, டேய் இது நீ தானா என்னை ஒரு கிள்ளு கிள்ளி விடு டா. 

சுபா ஓவரா பண்ணாத சீக்கிரம் வைத்து விடு என்று சொல்லி அந்த தட்டில் இருந்து அந்த மகிழம் பூ எடுத்து அதன் வாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டான். அது விவேகாவின் வாசமாக தான் அவனுக்கு தோன்றியது.

இன்பா வுக்கு தெரியும் அவள் தான் அவனுக்காக கோவில் சென்று பூஜை செய்து இருப்பாள். இப்போ சீன் போட்டு விட்டு போறா சண்டிராணி என நினைத்து கொண்டான்.

சுபா, இன்பா ஒன்னு கேட்கட்டுமா. மம் என்ன என்று அவள் ஊட்டி விட அந்த மாதுளை முத்துக்கள் சாப்பிட்டு கொண்டே போன் நோண்டி கொண்டு இருந்தான். அந்த இனியாளை, யாழினி இவங்க எல்லாம் உன்னை பார்த்து பயப்படுகிறார்கள். அப்புறம் அவன்கள பிடிக்காது பேச மட்டேன் அப்டின்னு சொல்ற 

மம் சோ வாட்.. அப்போ இந்த விவேகாவை பார்த்து சார் ஏன் இவளோ பயப்படுரீங்க! என்ன விஷயம்….

ஹே லூசு மாதிரி பேசாத நான் அவளை பார்த்து எனக்கு என்ன பயம் திடீர்ன்னு முன்னாடி வந்து நின்னா பின்ன என்ன பண்றது. சரியான கேடி சுபா அவ. மாம் கிட்ட கேளு…

இன்பா மனதில் ம்ம் பயமா தான் இருக்கு மேடம் இப்போ ரொம்ப கோபத்தில் போயிருக்கா அந்த ஜங்கிள் ஃபாக்ஸ் க்கு formaality க்கு பூ கொடுத்ததுக்கு என்னை விட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தாள். இப்போ தூக்கிட்டு போயிருக்கேன் என்ன பண்ண காத்து இருக்காளோ.

என்ன டா சொல்ற. ம்ம் நம்ம அம்மாவோட பெட்டு. நம்ம வீட்டுக்கு கூட்டி வந்து அவளுக்கு விருந்து சமைத்து எல்லாம் போட்டாங்க.

என்ன இவளோ நடந்து இருக்கா எனக்கு தெரியாமல் போச்சே. நீ உன்னோட அப்பாவை சமாதானம் பண்ண போனியே அப்போ நடந்தது. என்னை பற்றி மாம் கிட்ட நான் ஒரு ஹேங்கிரி ஃபேர்டு அப்டின்னு சொல்லி வச்சு இருக்கா. இதை கேட்டு இன்னும் சுபா சிரித்தாள்.

அதையும் மாம் மோட்டிவெட் பண்ணி பேசராங்க. அவளை இப்படியே விட கூடாது நல்லா கவனிக்கனும். என்று அவனுக்கு மட்டும் தெரிந்து இரு பொருள் நினைத்து கொண்டான்.

சுபா,  ஹே என்னடா பண்ண போற பாவம் அந்த பொண்ணு.அவ பாவமா அப்படியே அந்த சரவணன் மாதிரி சரியான திமிர் பிடிச்சவ. ஹே நல்ல பொண்ணு டா, சுபா உன்னையும் மாம் மாதிரி மயக்கிட்டா.

டேய் ஒன்னு கவனித்தாயா. வாட். அவ உன்னை ஒரு பார்வை கூட பார்க்கவே இல்ல. என் தம்பி எவ்ளோ அழகு ஆனால் உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவே இல்ல இன்பா.

அவ பெரிய உலக அழகி அப்டின்னு நினைத்து கொண்டு சுத்துறா. சரியான ஃபிஷ் மார்கெட்.

பேசாமல் நீ அவளை லவ் பண்ணிடு இன்பா.

இதை கேட்டு அதிர்ச்சியாகி இன்பா அவளை பார்க்க ஹே சுபா இப்போ என்ன சொன்ன லவ்வா! ம்ம் …. நானா… பின்ன நானா….. நான் போய் அவ பின்னாடி சுத்துவதா இதெல்லாம் நடக்கிற காரியம் இல்ல. சுபா, அவ எவ்ளோ அழகா இருக்கா முடி நீளமா இருக்கு .திமிர் உன்னை விட அதிகமா இருக்கு …

இன்பா, முடி நீளம், அதை விட வாய் நீளமா இருக்கு இதுக்கு எல்லாம் அவளை லவ் பண்ண முடியாது.

இன்பா மனதில் ஒரு சந்தோஷம் பார்த்த உடனே தன் அக்காவுக்கு அவளை பிடித்து எவ்ளோ தூரம் பேச வைத்து விட்டாள்.

அதனால… சோ அந்த திமிரை நீ இல்லாமல் பண்ணிடு. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு. அவ கிட்ட எதோ சம்திங்க் இருக்கு டா.

.இன்பா,அதுவும் அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்… ஹே ஓவரா பண்ணாத நீ தான் ips பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் அப்டின்னு ஒரு யூஸ்லெஸ் காரணத்தை வச்சு சுற்றி கிட்டு இருக்க.

நான் எல்லாம் ஒரு பார்வை பார்த்தால் போதும் எத்தனை பொண்ணுங்க என் பின்னால் சுற்று வாங்க தெரியுமா. எல்லாரும் சுற்றுவாங்க ஆனால் அவ சுற்ற மாட்டா. அதுக்கு நான் என்ன பண்ணட்டும். அது தான் இன்பா அவளை நீ மடகிட்டா எப்படி இருக்கும். நீ எல்லாம் வேஸ்ட் இந்த மாதிரி பொன்னுங்களை பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.அவளுக்கு டிமெண்ட் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் ன்னு எனக்கு தோணுது.

இன்பா மனதில் அய்யோ கரெக்ட்டா சொல்ற சுபா அவ பின்னால் சுற்றி கிட்டு தான் இருக்காங்க. நான் என்னத்தை பண்ணி எப்படி சமாதானம் பன்றது. அத நினைத்தாலே பயமா இருக்கு என அவன் புலம்பி கொண்டு இருக்க.

சுபா,இந்த மாதிரி பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் மடியாது டா. நீ ஒரு அக்கா மாதிரி பேசு சுபா…

இது வாழ்கை பிரச்னை இன்பா உன்னோட திறமையைப் காட்டு இல்ல. அப்புறம் சுவாரஸ்யம் இல்லை.அந்த பொண்ணு எவ்ளோ பொறுப்பு தெரியுமா கோவில்ல அப்படி சாமி கும்பிட்டது அப்டின்னு அந்த குருக்கள் சொன்னாங்க நீ ஒரு வேஸ்ட் எந்த பையனுக்கு கொடுத்து வச்சு இருக்கோ.

ஓ இப்படி தான் நீ பேசி அந்த ராம், கீதா, ரகு, இன்னொருத்தி உன் பெஸ்டீ … யாரு சஞ்சனா வா மம் ஆமா இதுங்க கூட சேர்ந்து சுற்றி இந்த வேலை பார்த்து இருக்க..

சுபா, ஹே நீ மட்டும் ஒழுங்கா… சூர்யா சஞ்சுவ  எப்படி விழ வைத்தான் பார்த்தியா. அவனை பற்றி என் கிட்ட பேசாதே…

ம்ம் அதையும் பார்க்கிறேன் இது எத்தனை நாளைக்கு அப்டின்னு போடா. சுபா சாதாரனமாக தான் சொன்னாள் ஆனால் உண்மையாகவே விவேகாவை மிகவும் பிடித்து போனது. எதிர் காலத்தில் இது நிஜமாகும் என்பது அவள் அறியாத ஒன்று.

அது சில நிமிடம் தான் இப்போ மித்ரன் போன் செய்தான். 

ம்ம் சொல்லு மச்சி, விவேகா வந்தாளா

ம்மம் ஆமா டா என இன்பா சொல்ல . நீ வெளியே இருக்க காவலர் கிட்ட என்ன சொன்ன…

ஏன் டா… என்னாச்சு..?  நீ சொன்னதுக்கு கொஞ்ச நேரம் கழித்து விவேகா உன்னை பார்க்க வந்து இருக்கா 

அந்த காவலர் உள்ளே விடல ஏற்கனவே நீ அந்த மினிஸ்டர் பொண்ணை தூக்கி வந்ததில் அவ ரொம்ப கோவமா இருந்தா நீ இதை சொல்லி வச்சதில் இன்னும் அனேகமா இந்நேரம் ப்ரேக் அப் தான்னு எனக்கு தோணுது. 

கொஞ்ச இப்படி எல்லாம் பேசின ரெண்டு கால் உடைச்சி போட்டு விடுவேன். ம்ம் போடுவ இப்போ நான் சொன்னதில் தான் உன்னை பார்க்க வந்தாள். ஆனால் அங்கே என்ன நடந்தது அப்டின்னு தெரியல இப்போ அதை விட கோபத்தில் ஊருக்கு கிளம்பி போயிட்டா. 

என்ன ஊரில் இருந்து தான் வந்தாலா ம் மம் உன்னை பார்க்க தான் ஆதி கூட வந்து இருக்கிறாள். அவன் தான் இப்போ கூட்டி போறான். இனி அவளை நீ மறந்திடு மச்சி.. டேய்**** என்று சில புனித வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டு போன் வைத்தான்.

இந்த கடத்தல் நிகழ்வை காரணமாக வைத்து ஒரு வாரம் விடுமுறை எடுத்து கொண்டான்.இன்பா விவேகா விடம் பேச எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் போனது. வருண் திருமணத்துக்கு பத்திரிக்கை வைக்க இன்பா வீட்டுக்கு வந்தான்.

வருண், கங்கா, செல்வம் மூவரும் வந்தனர்.வேலை செய்யும் இடத்துக்கு கொடுக்க ஆங்கிலத்தில் பத்திரிக்கை அடித்து இருந்தான். 

கங்கா, அவர்கள் வீட்டுக்கு முன்னே வர வசு யார் என பார்க்க மேம் நான் வருண்.. இப்போ தான் ஜாயின் பண்ணி இருக்கேன். 

ஓ வா வருண்.. உள்ளே வாங்க மா நீங்களும் வாங்க என்று கங்கா, செல்வம், வருண் மூவரையும் அழைக்க உள்ளே வந்தனர். 

செல்வம் பத்திரிக்கை நீட்டிட வரும் வெள்ளி இல்லாமல் அடுதத  வெள்ளி கல்யாணம்  கட்டாயம் வரணம் மேம்.

அதை வாங்கி கொண்டு நிச்சயம் வருகிறோம் என சொல்லி விட்டு வசு, ஒரு நிமிடம் என சுபா, வினய் நிச்சய பத்திரிக்கை உங்க கல்யாணம் முடிந்து சன்டே கட்டாயம் உன் மனைவி கூட வரனும் வருண் நீங்க வருண் அம்மா, நீங்களும் சார் என சொல்ல சிரித்த முகத்துடன்  அவர்கள் கிளம்ப அப்போது தான் இன்பா வந்தான். 

இன்பா அவர்களை பார்த்து ஒரு சிறு புன்னகை அவனுக்கு விவேகா பைத்தியம் பிடித்து விட்டது இன்றோடு 14நாட்கள் ஆகி விட்டது. ஒரு வார்த்தகூட இன்னும் பேச வில்லை அதனால் முகத்தை சிடு சிடு வென வைத்து கொண்டு சுற்றினான். 

வருண் சரியாக கிளம்பும் நேரம்

இன்பா, வருண்…

 சார் என பயந்து கொண்டே வர அவன் கங்கா வை பார்த்து ஆன்ட்டி நீங்க போங்க வருண் வருவான் என சொல்ல கங்கா சிரித்து கொண்டே கல்யாணத்துக்கு கட்டாயம் வரனும் தம்பி.. மம் சரி ஆன்ட்டி.

வருண் பயந்து கொண்டே அவன் பின்னால் செல்ல இன்பா, உனக்கு மூனு நாள் தான் லீவு உடனே வேலையில் ஜாயின் பண்ணனும் புரியுதா …

ம்ம் ஒ ஒகே சார் என நடுங்கி கொண்டே பதில் சொன்னான். ம்ம் அப்புறம் உனக்கு கோட்ரெஸ் வேற இடத்தில் அலாட் பண்ணி இருக்கு சோ சீக்கிரம் காலி பண்ணிடு. ம்ம் ஓகே சார். 

ஆமா எங்கே கல்யாணம்…

சார் நம்ப காவலர் குடியிருப்பு உள்ளே இருக்க அந்த பார்ட்டி ஹால்ல தான் ஸார். ம்ம் அதுக்குள்ள எல்லாம் தெரிஞ்சு யூஸ் பண்ண ஆரம்பித்து விட்ட ம்ம்ம்ம்..

ச.. சார்….  சரி இப்போ நீ போகலாம் என அவன் மிரட்டும் தொனியில் சொல்ல அவன் இரண்டு அடி எடுத்து வைத்தான். 

நில்லு… சார்…

லவ் மேரேஜ் ஆ!  அரேன்ஜ் மேரேஜ் ஆ!

வருண், ரெண்டுமே சார் என சொல்ல இன்பாவுக்கு இன்னும் விரக்தி அதிகமாக அப்போ உனக்கு ரெண்டு நாள் தான் லீவு மூனு நாள் இல்லை ஒழுங்கா வேலைக்கு வந்து சேர் என்று மிரட்டும் தொனியில் சொல்ல அவன் பயந்து கொண்டே சரி சார் என்று வியர்க்க விறுவிறுக்க ஓடி விட்டான். 

இன்பா கவலையான முகத்துடன் வீட்டுக்கு உள்ளே செல்ல என்னாச்சு ராகவ்…

நத்திங் மாம் என படிகளில் ஏற 

இப்போ எதுக்கு ராகவ் அந்த வருண இப்படி மிரட்டி அனுப்புர…

சும்மா மாம். இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ரவிசந்திரன், எல்லாம் ஜலஸ் தான்  வேற ஒன்னும் இல்ல மதி…

இன்பா, மாம் உங்க ஹஸ்பெண்ட கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க என்று அவன் கத்திட உடனே வசு, ராகவ் மைன்ட் யூர் வேர்டஸ் என கத்திட 

ச்ச்ச…. என்று சுவற்றில் ஒரு குத்து விட்டு அவன் அறைக்கு சென்றான்.

ரவி சந்திரன் இதை எல்லாம் பார்த்து கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே உள்ளே வந்தார். 

அடுத்து வருண் – அதிதி கல்யாணம் , கல்யாணம் மட்டுமா அங்கே தான் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடக்க போகிறது. விவேகா யார் என இன்பா…?

தொடரும்….

 Episode 104,

ரவி சந்திரன் இதை எல்லாம் பார்த்து கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே உள்ளே வந்தார். 

இன்பா கோபமாக மேலே அவன் அறைக்கு சென்று விட்டான்.

வசு, ஏன் இப்படி என் பையனை டென்சன் பண்றீங்க நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரி இல்ல ரவி. உங்களால் தான் ராகவை திட்டி விட்டேன். அவன் கை எப்படி வலிக்குமோ. 

ரவி, மம்ம் நீ சொல்லுவ டி உன் பையன் இதே வேலையா தான் சுத்துறான் கொஞ்ச நாளைக்கு முன்னே என்னோட கார் பேக் சீட் விண்டோ கண்ணாடியை இப்படி கோபத்தை அடக்க முடியாமல் உடைச்சு வச்சு இருக்கான் டி. இதுக்கு மட்டும் என்னோட கார் எடுத்து போறான் ஸ்கவுண்டரல்… இப்போ வாய் பேசு டி.. 

வசு சிரித்து கொண்டே மம் இந்த கோபம் எல்லாம் யார் கிட்ட இருந்து வந்ததோ அவங்களை கவனித்தால் சரியா போயிடும். 


ரவி, யாரு…யாருகிட்ட இருந்து வந்தது! அதுக்கு பதில் உங்களுக்கே தெரியுமே உங்களுக்கு தப்பாமல் பொறந்து இருக்கான். அவனை டெம்ப்ட் பன்றதே நீங்க தான்.

மதி சுபா எங்கே? அவ பத்திரிக்கை கொடுக்க போயிருக்கா. இதை கேட்டதும் வசு கைகளை பிடித்து கொண்டு இப்போ நீ என்னை டெம்ப்ட் பண்ணிட்ட அதுக்கு ரெஸ்பான்சிபில்  நீ தான் என ரவி அவளை தூக்கி கொண்டு அவர்கள் அறைக்கு செல்ல, என்னங்க விடுங்க… மதி வர வர நீ கொஞ்சம் வெயிட் கம்மி ஆகிட்ட டி நீயும் அவனும் நாண்வெஜ் வெளுத்து வாங்குவீர்கள். எப்படி டி வெயிட் கம்மியா இருக்க…

ராகவ் இப்போ சரியா சாப்பிடவே மாட்டின்றான். மதி உனக்கு அவன் தான் முக்கியம் என்னை பற்றி நினைக்கவே மாட்டியா டி.

நீங்க சுபா வை தலையில் தூக்கி வைக்காதது மட்டும் தான் குறை ஆனால் என் பையன பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது இதுவே சுபா வீட்டில் இருந்தால் என் பக்கத்தில் வந்து இருப்பீங்களா.

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ரவி மதி மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா… என்று கூறி இதழ் பதிக்க அருகில் வர

ரவி ராகவ் இருக்கான் நீங்க பண்றது சரி இல்ல நம்ப ஒன்னும் டீன்ஸ் இல்ல. அது நீ தான் . நான் எப்பவும் டீன் இன்னும் சொல்ல போனால் உன்னை எப்போது எல்லாம் பார்க்கிறேனோ  எனக்கு என்றும் பதினாறு டி என்று வசுவின் நெற்றியில் ஒரு முத்தம் பதிக்க  அவள் வெட்கத்தில் சிரித்தாள்.

வயசு ஒரு ஒயின் மாதிரி ஓல்ட் ஆக ஆக டேஸ்ட் நல்லா இருக்கும் சோ அது போல தான் டி நானும் நீயும்….

வசு அவர் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டே என்ன ட்ரிங்க் பண்ணி இருக்கீங்களா இன்னிக்கு அப்படியே ஒரே கவித மழையா பொழியுது.

உனக்கும் எனக்கும் எப்போவாபது தான் இந்த ப்ரீசியஸ் டைம் கிடைக்குது அதுல இன்னிக்கி உன் பையன் வந்துட்டான் எப்படியும் நான் பேசினதுக்கு நீ திட்டியதுக்கு இன்னிக்கு ஃபுல் ரூம்ல தான் இருப்பான் வெளியே வர மாட்டான் சோ நல்லது தானே… 

நீங்க ரொம்ப மோசம் என் பையனை உங்களுக்கு குறை சொல்றது தான் வேலை அந்த மினிஸ்டர் கேஸ்ல இருந்து ராகவ் முகம் சரி இல்லை எதையோ பரி கொடுத்த மாதிரி சுத்துறான்.

ரவி மனதில் ஒரு வேளை அவன் காதலி கூட சண்டை போட்டு இருப்பானோ இருக்கும் இருக்கும் இல்லனா முகத்தை இப்படி வச்சு இருக்க மாட்டான் சரி அவன் காதலிய அவன் ஹேண்டில் பண்ணிப்பான்.

ரவி, சரியான சண்டிராணி தாண்டி நீ.நான் முதல் முறை உன்னை எப்படி பார்த்தேனோ. அப்படியே இருக்க.இதை சொன்னதும் வசுவிற்கு முதல் முறை அவள் கணவனை பார்ப்பது போல் வெட்கம் வர கண்களை மூடி கொண்டாள். அவர்கள் 28 வருட காதலை நினைத்து கொண்டே  காதலில் கூடினர். 

இங்கே இன்பா அவன் அறைக்கு கோபத்தோடு வந்தவன் குளிக்க சென்றான்.

வெளியே வந்ததும் கண்ணாடி பார்க்க ராகவ்..  ராகவ் என்று விவேகா கூப்பிடுவது போலவே அவனுக்கு தோன்றியது. 

விவேகா ஏன் டி இப்படி என்னை டார்ச்சர் பண்ற இப்போவே உன்னை பாக்கணும் போல இருக்கு.

எங்கே இருக்க நீ மட்டும் இந்த முறை மாட்டின அவ்ளோ தான் என்று எப்படி அவளை பார்ப்பது 

என்ன செய்வது? என்ன செய்வது? என்று இப்படியே படுத்து கொண்டு யோசித்து கொண்டே இருந்தான். 

உடனே வெண்பா வுக்கு அழைத்தான். அண்ணா எப்படி இருக்க.. மம்ம் குட்… என்ன சுதி கொஞ்சம் குறையுது.. அவ கிட்ட பேசினாயா… இதை கேட்டதும் வெண்பாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவ என் கிட்ட பேசுவது இல்ல ஆனால் … ஆனால் என்ன சொல்லு மா… சரவணன் கிட்ட கால் பண்ணி வேலை விஷயமா பேசுரா.. 

உன் கிட்ட ஏன் பேச மாட்றா..  உங்க கிட்ட நான் சொல்லி விடுவேனா உங்க கிட்ட பேச வைத்து விடுவேனா அதனால என் கிட்ட பேசுவது இல்ல.. இதை கேட்டு மனம் இன்னும் கனத்து போனது. அவ எந்த ஊர் போயிருக்கா சொல்லு வெண்பா … அண்ணா அந்த அளவுக்கு போக வேண்டாம் அவ கட்டாயம் உங்க கிட்ட தான் வருவா மேடம் க்கு இப்போ கொஞ்சம் துளிர் விட்டு போச்சு… 

சரி காலேஜ் எப்போ ஓபன்… அது ஜூன் 10 அண்ணா… மை காட்… என்னாச்சு… இல்ல இப்போ தான் மே 20 இன்னும் கிட்ட தட்ட ஒன் மந்த் இருக்கே..  அண்ணா  ஃபீல் பண்ணாத… அவன் அமைதியாக இருக்க..

மம் அப்புறம் ஒரு விசயம்… ம்ம் சொல்லு மா… அந்த கவ்யா அவளை கொஞ்சம் கவனி மறுபடியும் அவ கிராஸ் பண்ணா விவேகா இருக்க மோட் ல உன்னை விட்டு கொஞ்சம் என்று அவள் நிறுத்திட ம்ம் நானும் அவளை சும்மா விட மாட்டேன். ஆனால் கொஞ்சம் டைம் ஆகும். என்று பேசி போன் வைத்தான்.

 காலேஜ் ஓபன் ஆக இன்னும் இரண்டு வாரம் இருக்கு இன்னிக்கி ஃபிரை டே இன்னும் நிறைய டேஸ் இருக்கே எப்படி ஓட்டுவது சமாதானமாக இருந்தால் கூட இன்பாவுக்கு அவள் நினைவு தோன்றும் ஆனால்  எதுவும் தவறாக  தோன்றாது இப்போது சண்டை இதை எப்படி சரி செய்வது என்று யோசித்து கொண்டே எதுவும் சாப்பிடாமல் உறங்கி விட்டான். 

அடுத்த நாள் இன்பா ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டு இருக்க ரவி புன்னகை முகத்துடன் உள்ளே வந்தார். இன்பா தந்தையை பார்த்ததும் உடனே கோவம் வர அந்த இடத்தை விட்டு செல்ல போக…

ரவி, ஒரு நிமிடம் அவன் அதை காதில் போட்டு கொள்ளாமல் அடுத்த அடி வைக்க என்ன உன்னோட கேர்ல் பிரென்ட் கூட சண்டையா? இன்பா இப்போது நின்றான்.

திரும்பி தன் அப்பாவை பார்த்து உங்களுக்கு எப்படி தெரியும்.

ரவி சிரித்து கொண்டே நான் பார்க்காத லவ்வா இதை கேட்டு இன்பா மீண்டும் கோபம் வர பின்னால் திரும்பி நடக்க

உனக்கு விருப்பம் இருந்தால் என்னோட ஃப்ரீ அட்வைஸ் வாங்கிக்கோ இல்லை உன் இஷ்டம் கேட்டா கேளு கேட்காட்டி போ என்று சொல்லி அவர் வேலையை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு 5 நிமிடம் அவன் அறைக்கு போய் யோசித்தான் சரி கேட்டு பார்க்கலாம் என்று மீண்டும் ரவி இருக்கும் அறைக்கு ஒரு சிறு தயக்கத்துடன் வந்தான். 

ம்ம் சொல்லுங்க..  என்று குரல் கேட்க பின்னால் இன்பா நின்று கொண்டு இருப்பதை பார்த்து உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அதை வெளிகாட்டமல்

சரி தவறு யார் மேல? என் மேல தான். அப்படி என்ன பண்ணீங்க ACP சார். அந்த மினிஸ்டர் பொன்னு தூக்கி வந்த விசயம் சொல்ல. ம்ம் அப்போ அவளுக்கு பொசசிவ். ம்ம் ஆமா இப்போ என்ன பன்றது. எந்த ஸ்டேட் ல இருக்கு உன்னோட லவ்..  புரியல… அதாவது ரெண்டு பேரும் புரோபோஸ் பண்ணி அப்புறம் இதுக்கு மேல் நீ தான் சொல்லணும்…. எல்லாம் லவ் ஸ்டேட்டஸ் தான்…

ஒரு சிறிது நேரம் யோசித்து விட்டு ரவி, ம்ம் கேர்ல்ஸ் க்கு எப்பவும் நெகடிவ் எமோஷன் ரொம்ப அதிகமா இருக்கும்…

இதை கேட்டதும் இன்பா தன் தந்தையை பிரமிப்பாக பார்த்தான்.

இன்பா,  நீங்க சொல்றது 100% கரெக்ட்.

அவ உன்கிட்ட உன்னோட எல்லா தவறும் லிஸ்ட் போட்டு கேட்பா ஆனால் நீ அவ பன்றத பெருசா எடுத்துக்க மாட்ட ….

இன்பா மம் 200% கரெக்ட் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றா… 

ரவி கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே நீ அவ கிட்ட ரொம்ப கம்பார்ட்டா இருப்பதை அவ கிட்ட மட்டும் தான் கம்பாட் அதை சரியா புரியவை அவ்ளோ தான் சிம்பில்… 

இன்பா, அப்புறம்.. ரவி இவளோ தான் சொல்ல முடியும் இனி நீ தான் உன்னோட கேர்ல கன்வின்ஸ் பண்ணனும்… இன்பா திரும்பி செல்ல இது நான் உன்னை நேற்று டென்ஷன் பண்ணதுக்கு தான் இந்த ஃப்ரீ அட்வைஸ் காட் இட் இனி நீ  என் கிட்ட வந்து கேட்காத….

இன்பா, ஓவரா பண்ணாதிங்க உங்க காதல் நோட்ஸ் எல்லாம் மாம் கிட்ட சொல்லி விடுவேன் அப்புறம் உங்க டூயட் எல்லாம் இங்கே நடக்காது. 

ரஸ்கல் உன்னோட காரியம்  முடிந்ததும் உன்னோட வேலைய காட்டி விட்டாய் எப்படியும் நீ என் கிட்ட வந்து தான் ஆகனும் அதுக்கு அப்புறம் நான் ரிவன்ஜ் பண்ணிக்கிறென் என்று பொய் கோபம் கொண்டு சிரித்து கொண்டே ரவி அவர் பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார். 

இன்பா தன் அப்பா சொன்னதை எப்படி செயல்படுத்துவது என யோசித்து கொண்டு சென்றான். 

அடுத்து ஒரு வாரம் சீக்கிரம் கடந்தது. நாளை வருண்- அதிதி திருமணம் விவேகா படபடத்து கொண்டே வெண்பா எண்ணுக்கு கால் செய்தாள்.

தொடரும்…. 

 Episode 105,

இரு வீட்டிலும் கல்யாண வேலைகள் பரபரப்பாகவும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சந்தோஷ மன நிலையில் சுற்றி கொண்டு இருக்க,

விவேகா படபடத்து கொண்டே வெண்பா எண்ணுக்கு கால் செய்தாள். ஹலோ…வெண்பா ஹே மம் ஆரம்பித்து விட்டாயா.. அடிப்பேன்.. சொல்லி தொலை.. அவன் வருவானா… வர மாட்டாரு.. மம் அப்போ ஓகே என்று போன் வைத்தாள். அப்படியே கைகளில் மருதாணி வைத்து கொண்டு ஆதி எங்கே இருக்கிறான் என தேடி சென்றாள். 

ஆதி விவேகா வருவதை பார்த்து தன் சித்தி மகள் பனி மலரிடம்.. மலர்..  மம் சொல்லுங்க அண்ணா ..  மலர் இப்போ விவேகா வருவா அவ என்னை கேட்டால் இல்லன்னு சொல்லு பிளீஸ் பாப்பு.. மம் சரி அண்ணா என்று அவள் சொல்ல ஆதி ஒளிந்து கொண்டான். 

பனி ஆதி எங்கே.. அக்கா அண்ணா இங்கே இல்லை… சரி ஓகே என்று திரும்பி செல்ல ஒரு சிறிது நேரம் கழித்து ஆதி அவள் சென்றதை உறுதி செய்து அமர்ந்து கொண்டு இருக்க விவேகா மெதுவாக பின்னால் வந்தாள். 

மாமா ஆதி இங்கே தான் இருக்கிறான் என சொல்ல தன் அப்பா கூப்பிடுகிறார் என நினைத்து திரும்ப அங்கே விவேகா முறைத்து கொண்டே நின்றிருந்தாள். ஹாய் தேன் மிட்டாய்… ம்ம் சொல்லுவ டா என் கிட்ட பொய் சொல்ல சொல்லி குட்டி பொண்ணுக்கு பொய் சொல்லி தர.. ஹே ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற.. நானா! நானா! ம்ம் நீ தான்.. ஓ அந்த அளவுக்கு பேசற சரி விடு நான் போறேன்.. பிளீஸ் பிளீஸ் போகாத சாரி நான் சும்மா விளையாடினேன். என் அத்தை பொண்ணுகிட்ட இது பொய் கூட சொல்ல கூடாதா.. 

இதை கேட்டு பனி மலர் சிரித்து கொண்டே அண்ணா நல்லா ஓட்டுற ரயில் நான் போறேன் என்று அவள் ஓடி விட்டாள். விவேகா முகத்தை தூக்கி கொண்டு செல்ல ஹே சாரி டி பிளீஸ் இங்கே உட்காரு என்று அவளை அருகில் அமர வைத்து கொண்டான். அவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள சிறிது நேரத்தில் அவன் சட்டை ஈரமானது. 

இப்போ எதுக்கு அழற.. ஒன்னும் இல்லை என்று தூக்கம் தொண்டையை அடைக்க சொல்ல… உன்னை என்ன பண்றது ஒன்னும் சொல்றதுக்கு இல்ல டி… அவள் தேம்பி தேம்பி அழ… ம்ம் நீ கேட்க வந்ததை கேளு என ஆதி சொல்லி அவள் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து விட்டான்.

விவேகா, அவன் வருவானா! இல்ல வர மாட்டாரு போதுமா… வர மாட்டானா! இப்போ உனக்கு என்ன பிரச்னை வருண் மாமா கல்யாணத்துக்கு இன்பா சார் வரணுமா இல்ல வர கூடாதா… விவேகா, வர கூடாது… சரி அவரு வர மாட்டாரு போதுமா.. உனக்கு எப்படி தெரியும்.. விவேகா இப்படியே நீ பேசிட்டு இருந்த நான் இப்போவே போன் பண்ணி உன்னோட எல்லா விஷயமும் வருண் மாமா தான் உன்னோட அண்ணா இதெல்லாம் சொல்லி விடுவேன்.

சரி சரி சாரி வேண்டாம் அப்படி எல்லாம் செய்யாதே.. இப்படியே பேசி பேசி உன்னை நீயே கஸ்ட படுத்துக்கோ..  கொஞ்சம் சிரி டி நாளைக்கு எவ்ளோ சந்தோஷமான நாள் அதிதி, வருண் மாமா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆக போகிறது அதை நினைத்து சந்தோஷபடு அதை விட்டு அஞ்சலி பாப்பா மாதிரி அழுது கொண்டு இருக்க..  

சரி இனி அழ மாட்டேன் என்று சொல்லி அவள் சென்றாள். இங்கே அதிதி மிகவும் சந்தோசமாக இருந்தாள். வருண் காலேஜ், போலீஸ் டிரெய்னிங் ப்ரெண்ட்ஸ் பட்டாளம் அனைவரும் வந்து இருந்தனர். அதிகாலை 4to 6 பிரம்ம முகூர்த்தத்தில் அருகில் உள்ள முருகன் கோவிலில் முருகன் வள்ளி தெய்வானையுடன்  காட்சி அளிக்கும் கோவில்.

அதிதி வானநீலநிற முகிர்த்த புடவையில் முகம் எல்லாம் புன்னகையுடன் திருஷ்டி பொட்டு, அதற்கு ஏறறாற்போல் அணிகலங்கள்,கைகளில் கங்கணம், சிகப்பு ரோஜா இதழ் மாலை அணிந்து வருண் அருகில் அமர்ந்து இருந்தாள்.

வருண் பட்டு வேஷ்டியில் தன் காதல் தேவதையை கரம் பிடிக்க காத்து கொண்டு இருந்தான்.

மங்கள இசை முழங்க வருண் அதிதி கழுத்தில் இரண்டு முடிச்சு போட மூன்றாம் முடிச்சு விவேகா போட ஒரு இரு துளி கண்ணீர் மட்டும் அதிதி கண்களில் இருந்து வந்தது. செல்வம் தேவி இருவருக்கும் மிகவும் சந்தோஷம் பெண்ணை கட்டி கொடுத்து விட்டோம் என்று மனதில் மிகவும் கவலை அழுதே விட்டார்.

கங்கா, அண்ணா அவ என் பொன்னு எதுக்கு இப்படி பண்ணி அண்ணியமா நினைக்க வைக்கிற… இல்ல மா இது இப்படி இல்ல என்று இருவரும் மாறி மாறி பாச மழை பொழிந்து கொண்டு இருந்தனர்.

அது ஆனந்த கண்ணீர் மட்டுமே கங்கா, விவேகா இருவரும் அழுதனர். விவேகா தன் தந்தையை நினைத்து அழுதாள். கங்கா தன் கணவர் இல்லையே என்று நினைத்து அழுதாள். ராஜ் மாமாமுறை கல்யாண சடங்கு எல்லாம் செய்தான். விவேகா அவனிடம் சரியாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

வருணுக்கு மனதில் சந்தோஷமாக இருந்தாலும் இப்போது அதிக அளவில் பொருப்பு வந்தது போல் இருந்தது. அதிதியை நல்ல படியாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவள் கைகளை இறுக்கி பிடித்து கொண்டான். 

ஆதி, விவேகாவிடம் ஹே இப்போ எதுக்கு இப்போ அழற அதி தானே கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு வந்து இருக்கா ஆனால் உனக்கு கல்யாணம் ஆகி போன மாதிரி  அழற … ராஜ் விவேகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 

ஆதி அவனை கவனித்தான் விவி என் கூடவே இரு என்னை விட்டு தனியா எங்கேயும் சுற்றி கொண்டு இருக்காத புரியுதா..  ஏன் என்று கண்களை துடைத்து கொண்டே அவள் கேட்க நான் சொல்றத மட்டும் கேளு டி..   என்று அவள் கைகளோடு கோர்த்து கொண்டான்.

அனைவரும் கல்யாண ஹாலுக்கு கிளம்பினர். ஆதி அவளை ஒரு நிமிடம் கூட தனியாக விட வில்லை. அந்த நேரம் சரவணன், தேவகி, வெண்பா, மூவரும் வர விவேகா மனதில் மித்ரன் ஒரு வேளை அவனுடன் வந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே வெண்பாவை இழுத்து சென்றாள். 

ஹே ஹே இப்போ என்ன டி ஆச்சு..விவேகா, ஹே மித்ரன் அண்ணா எங்கே? அவன் கொஞ்ச நேரம் கழித்து வருவான். அப்போ அவனும் வருவானா! ஹே பிளீஸ் விவேகா இரு உனக்கு நான் நிருப்பிக்கிரென் என்று மித்ரனுக்கு கால் செய்தாள். பின் ஸ்பீக்கர் போட்டு விட அதை விவேகா அருகில் இருந்து கேட்க நின்று கொண்டு இருந்தாள்.

டேய் எங்கே இருக்க?நான் டுட்டில இருக்கேன் டி.. ஓ அப்போ இன்பா அண்ணா…மித்ரன், அவன் கொஞ்சம் வெளியே போயிருக்கான். சரி எப்போ இங்கே வருண் அண்ணா பங்ஷன்க்கு வர போற… நான் வரது கொஞ்சம் கஷ்டம் அது தான் எனக்கு பதிலா நீங்க போய்யிருக்கீங்க அப்புறம் என்ன! சரி இன்பா அண்ணா… அவன் வர மாட்டான் டி… ஏன் என்று வெண்பா விவேகாவை பார்த்து கொண்டே கேட்க, அவன் கொஞ்சம் மன கஷ்டத்தில் இருக்கான் அது தான் உனக்கே தெரியுமே… சரி சரி போதும் நான் போன் வைக்கிறேன் என வைத்தாள். 

வெண்பா, இப்போ உனக்கு நிம்மதி தானே இனி இன்பா அண்ணா வர மாட்டாரு போ தயவு செய்து என் கண் முன்னாடி நிற்காதே என அவள் சொல்ல விவேகா அழுது கொண்டே அங்கு இருந்து சென்றாள். 

அவள் அழுது கொண்டு வருவதை பார்த்து ராஜ் இது தான் சரியான தருணம் என்று அவளிடம் பேச சென்றான். இங்கே ஆதி விவேகாவை தேட விவேகா அங்கு இல்லை உடனே அவன் ராஜ் எங்கு இருக்கிறான் என்று தேடினான். 

இங்கே இன்பா மனது இன்று ஏனோ கொஞ்சம் குதுகலமாக இருந்தது. நேராக மித்ரனை பார்க்க சென்றான். டேய் என்னடா இந்த பக்கம்… மச்சி வா எங்கேயாவது வெளிய போயிட்டு வரலாம். சரியாக அந்த நேரம் கீர்த்தனா, சாதனா, விகாஸ் மூவரும் வருண் கல்யாணத்திறுக்கு செல்ல கலர் ட்ரெஸ்ல வந்து இருந்தனர். 

இன்பா, எல்லாரும் எங்கே கிளம்பி விட்டீர்கள்? விகாஸ், சார் வருண் மேரேஜ் பங்ஷன்க்கு போறோம் அப்படியே நல்லா கல்யாண சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறோம் ஒரு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் வேணும் சார். 

அப்போ ஸ்டேசன்ல யாரு இருப்பது? சாதனா, லோகேஷ் சார் இருப்பார் சார் போலாம் சார் பிளீஸ்… 

 இன்பா,டேய் நீ வரயா… மித்ரன், மம் உனக்கு ஒகே அப்டின்னா எனக்கும் ஒகே.. சரி வா அந்த காதல் ஜோடிகளை பார்த்து விட்டு வருவோம் என்று கிளம்பினர்.

இங்கே தேவராஜ் வெண்பா பின்னால் சென்றான். விவே குட்டி.. விவேகா திடுகிட்டு திரும்பி பார்க்க அங்கே ராஜ் நின்று கொண்டு இருந்தான். என்ன விவே அத்தான் கிட்ட வந்ததில் இருந்து பேசவே மட்டின்ற நான் என்ன பண்ணேன் என்று அருகில் வந்தான்.

அதே நேரம் ஆதி வெண்பா விடம் விவேகா எங்கே என கேட்க, இன்னிக்கி என்ன அவளும் நீயும் ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு இருக்கீங்க. ஆதி, நாங்க தான் இங்கே அடுத்த ஜோடி அதனால் தான் ஏன் உனக்கு இதில் எதுவும் பிரச்னையா என கூறி கொண்டே அந்த தங்க ஜரிகை வைத்த வேஷ்டியை ஸ்டைலாக ஒரு கையில் பிடித்து மடித்து கட்டு கொண்டு அழகாக கொஞ்சம் வளர்ந்த மீசையை முறுக்கி விட வெண்பா அவன் அழகில் ஒரு நிமிடம் சொக்கி தான் போனாள்.

ஆதி, ஹே எந்த உலகத்தில இருக்க… வெண்பா இப்பொழுது சுய நினைவுக்கு வந்தவளாய். ஒன்னும் இல்ல என்று தொடர்பு இல்லாமல் பேச.. ஆதி சிரித்து கொண்டே சரி விடு என் அத்தை பொண்ணை பார்த்தியா… வெண்பா கோபம் கொண்டு அது யாரு? என் தேன் மிட்டாய் தான் 45 கேஜி தேன் அடை… 

வெண்பா இதை கேட்டு கடுப்பாகி டேய் நீ ரொம்ப ஓவரா போற அப்புறம் நீ வேற ஒரு வெண்பாவை பார்ப்ப.. ஆதி, உனக்கு இப்போ என்னமா பிரச்னை… என் அத்தை பொன்னு உனக்கு தெரிஞ்சா சொல்லு இல்லை விடு நானே என் தேன் மிட்டாயை தேடி கொள்கிறேன்.

அவளை நான் கொஞ்சம் திட்டி விட்டேன் அழுது கொண்டே அங்கே ஓடி விட்டாள். இதை கேட்டதும் ஆதி அவளை முறைத்து விட்டு வேக வேகமாக விவேகாவை தேடி சென்றான்.

ராஜ் அத்தான் அப்படி எல்லாம் இல்லை நீங்க தான் அத்தை, அம்மாய், தாத்தா எல்லார்ததையும் எதிர்த்து வந்து எல்லாம் செய்து இருக்கிறீர்கள் எனக்கு சந்தோஷம் தான் என்று அவள் பேசி கொண்டே நடக்க ராஜ் அவள் கைகளை பிடிக்க வந்தான்.

அவள் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டாள். விவே குட்டி இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க. தேங்க்ஸ் அத்தான் என்று அவள் படி கட்டுகள் இறங்க போக.. விவே உனக்கு மாமா சொன்னது நியாபகம் இருக்கு தானே… இதை கேட்டதும் அவள் என்ன என்பது போல் திரும்பி பார்க்க சரியாக ஆதி வந்தான். 

ஆதி, எனக்கு மாமா சொன்ன விஷயமும் நியாபகம் இருக்கு அத்தை சொன்ன விஷயமும் நியாபகம் இருக்கு. என்று சொல்லி கொண்டே விவேகா கைகளை பிடித்து கொண்டான். 

இப்போது ராஜ் அவனை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு எதோ சொல்ல வர, ஆதி உன் வேலைய மட்டும் பார்த்து விட்டு போ… உன்னோட மரியாதைய நீயாவே கெடுத்து கொள்ளாதே… இன்னொரு முறை இவ பக்கதில் வந்து கண்டத பேசி அவளை குழப்பும் வேலை வைத்து கொள்ளாத… 

டேய் ஓவரா பேசுற. நீ  தான் ஓவரா பேசுற மாமா சொன்னாரு அத்தை சொன்னாங்க என்னடா புதுசு புதுசா பேசுற.. ராஜ், டேய் அவ என் மாமா பொன்னு நான் கட்டிக்க போற பொன்னு..  ஆதி சிரித்து கொண்டே அவ என் அத்தை பொன்னு சொல்ல போனால் நான் தாய்மாமா பையன் எனக்கு அவ சரியான முறை பொன்னு இதை எல்லாம் சொல்லி காட்டனும் அப்படின்ற அவசியம் இல்ல அவ பிடிச்சா சொல்லுவா…

விவேகா, ஆதி சண்டை வேண்டாம் நம்ப போலாம். ஆதி அவளை முறைத்து கொண்டே உன் கிட்ட என்ன டி சொன்னேன் என்னை விட்டு எங்கேயும் போக கூடாது அப்டின்னு சொன்னேன் தானே… இதை எல்லாம் ராஜுவால் பார்த்து கொண்டு இருக்க முடிய வில்லை. 

ஆதி அவள் கைகளை பிடித்து கொண்டு வேக வேகமாக அந்த இடத்தை விட்டு கூட்டி கொண்டு கீழ வந்தான்.

இன்பா மித்ரனுடன் சேர்ந்து உள்ளே நுழையும் நேரம் இவர்கள் இருவரும் படி கட்டில் இருந்து இறங்கினர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள வில்லை. 

நாளை இன்பா – விவேகா சந்திப்பு வைக்கலாமா..  கமென்ட் பண்ணுங்க ஸ்டோரி எப்படி இருக்கு ஒரு குட்டி கமென்ட் பண்ணுங்க பிளீஸ்..

தொடரும்….

 Episode 106,

ஆதி அவள் கைகளை பிடித்து கொண்டு வேக வேகமாக அந்த இடத்தை விட்டு கூட்டி கொண்டு கீழ வந்தான்.

இன்பா மித்ரனுடன் சேர்ந்து உள்ளே நுழையும் நேரம் இவர்கள் இருவரும் படி கட்டில் இருந்து இறங்கினர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள வில்லை. 

ஆதி, இப்போது அவள் கைகளை விட விவேகா, ஹே சாரி டா பிளீஸ் இங்கே திரும்பு என் கிட்ட பேசு என்று சொள்…  அவள் அவனின் அருகில் வந்து கைகளை பிடிக்க உடனே தட்டி விட்டான். 

நான் உன் கிட்ட என்ன சொன்னேன் தனியா போகாத அப்டின்னு சொல்லிட்டு தானே இருந்தேன் எதுக்கு டி இப்படி பண்ற.. அவள் தலையை கீழ் குனிது கொண்டு நிற்க.. அவன் உன் கிட்ட என்ன சொன்னான். அவள்  ராஜ் சொன்ன அனைத்து விஷயமும் சொல்ல,

ஆதி, நீயே ஒரு மரமண்டை இப்போ மர கழண்டு தான் சுற்றி கொண்டு இருக்க இதை சொன்னதும் விவேகாவுக்கு கோபம் வர இப்போ என்ன சொன்ன நான் நாணு மர மண்டையா என்று கொஞ்சம் அழுகை கோபம் இரண்டும் கலந்து அவள் பேச… 

அவன் சிரித்து கொண்டே ம்ம் இப்போ நான் சொன்னதில் என்ன தவறு உன்னோட புத்தி மழுங்கி போச்சு டி அது தான் நீ லூசு மாதிரி சுற்றி கொண்டு இருக்க இதில் அவன் அந்த ராஜ் எதுவும் சொல்லி வைத்தால் அப்புறம் முழுசா லூசு ஆகிடுவ… 

இங்கே இன்பா, மித்ரன் என அவர்கள் பட்டாளம் உள்ளே வர வருண் இன்பா வை பார்த்த அடுத்த நொடி பயந்து கொண்டே எழுந்து நின்றான்.

மித்ரன், டேய் ஏன் டா அவனை இப்படி ஆக்கி வச்சு இருக்க இன்னிக்கி தான் அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்கு பக்கத்தில அந்த பொண்ணு முகத்தை கூட பார்த்து இருக்க மாட்டான் உன்னை பார்த்ததும் எப்படி நடுங்குகிரான் பாரு…

இன்பா, மெலிதாக சிரித்தவன் என் முன்னாடியே லவ் வித் அரேஞ்ச் மேரேஜ் அப்டின்னு பத்திரிக்கை நீட்டுறான் டா நான் என் பேபி கிட்ட சண்டை போட்டு சமாதானம் பண்ண முடியல அந்த வருத்தத்தில் இருந்தேன். அவனுக்கு என்ன சந்தோஷம். நான் அவனை எதுவும் சொல்லல அவன் தான் என்னை பார்த்தாலே நடுங்குகிறான். 

வருண் அங்கே இருந்து எழுந்து வர உடனே செல்வம், மாப்பிள்ளை என்னாச்சு என்று கேட்க மாமா சார் வந்து இருக்கிறார் என இன்பாவை காட்டினான் நீங்க மேலேயே இருங்க நான் போய் பேசி அவர்களை கவனிக்கிறேன். 

செல்வம் இறங்கி இன்பா அருகில் வந்து பேசி கொண்டு இருக்க கங்கா வந்தார், கூடவே தேவி வர அனைவரும் இல்லை மித்ரன் பேசினான். இன்பா அவர்களை பார்த்து ஒரு சிறு புன்னகை செய்தான். நம்ம இன்பா சார் தான் தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாதோ அது போல் யாரிடமும் பேச மாட்டாரே.. 

இங்கே வருண் முகம் வியர்த்து கொட்டியது. அதிதி, மாமா என்னாச்சு ஏன் இப்படி முகம் எல்லாம் வியர்த்து கொட்டுது என்று சொல்லி கொண்டே அவள் துடைத்து விட போட்டோ கிரபர் சக் சக் என்று போட்டோ எடுத்து குவித்தார். 

ஒன்னும் இல்ல அதி கொஞ்சம் டென்ஷனா இருக்கு என்று ஸ்டேஜ் கீழ பார்க்க அனைவரும் இவர்கள் காதல் காட்சிகளை அருகில் வைக்க பட்டு இருந்த LED டீவியில் பார்த்து சிரித்து கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். 

வருண் இன்பா பார்க்கிறானா என்று பார்க்க அவனும் இந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்தான். அதி கொஞ்சம் தள்ளி உட்காரு.. என்னாச்சு மாமா… அதி மா என்னோட ஹயர் ஆபீசர் எல்லாம் வந்து இருக்கிறார்கள் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டி பிளீஸ் செல்லம்.. 

இதை கேட்டதும் அதி முகம் வாடி போனது அதற்குள் சில சடங்கு செய்ய வேண்டும் என்று சொல்ல உடனே செல்வம் இன்பா , மித்ரனை சாப்பிட அழைத்து செல்ல போக அங்கே தேவி அழைத்தார். அங்கே பனி மலர் வர மலர் அண்ணாவை பார்த்தாயா.. இல்ல பெரியப்பா என்று சொல்ல , மலர் போய் அண்ணாவை தேடி கூட்டி வா..

கங்கா மித்ரன், இன்பா இருவரிடமும் பேசி கொண்டு இருந்தார். 

இன்பா, ஆட்ன்டி அவங்க மறுபடியும் பிரச்சனை பண்ண வந்தார்களா.. இல்லை தம்பி இந்த கல்யாணத்துக்கு கூட வரல ஆனால் வருண் அத்தை வந்து கட்டாயம் பிரச்னை பண்ணுவாங்க அது தான் கொஞ்சம் பயமா இருக்கு.

நீங்க பயப்பட வேண்டியதில்லை நாங்க இருக்கிறோம் ஆட்ன்டி என்று தைரியம் கூறினான்.

தேவி உடனே என்னங்க அவனுக்கு போன் பண்ணுங்க..  அய்யோ ஆமா மறந்தே போய் விட்டேன். என்று ஆதிக்கு அழைத்தார். 

எங்கே டா இருக்க.. அப்பா நான் விவேகா கூட இங்கே தான் பந்தி பக்கதில் இருக்கேன். சீக்கிரம் இங்கே வா சில முக்கியமான வேண்டியவர்கள் வந்து இருக்கிறார்கள் வந்து அவர்களை கவனிக்கனும். 

இதோ அப்பா நான் வருகிறேன் என்று சொல்லி அவன் செல்ல விவேகா அவன் கண்டு கொள்ளாமல் செல்வதை பார்த்து அவன் பின்னால் டேய் நீ தானே சொன்ன உன்னை விட்டு எங்கேயும் போக கூடாது அப்டின்னு எதுக்கு டா இப்போ கையை விட்டு நடக்கிற என்னோட கைய பிடித்து கொள்..


ஆதி அவளை பார்க்காமல் போடி என்று  வேக வேகமாக நடந்து தன் தந்தைக்கு அருகில் வர அவர், தன் அத்தை யாரிடமோ மிகவும் மரியாதையாக கீழ முன்னால் அமர்ந்து  இருப்பவர்களிடம் பேசி கொண்டு இருக்க அப்பா நான் வந்து விட்டேன் என்று ஆதி அவர் அருகில் வர பின்னால் விவேகா ஹெய் ஓவரா பண்ற நான் இப்போவே மாமச்சி கிட்ட சொல்லுவேன் டா… என்று சத்தம் வர

ஆதி தன் அப்பா யாரிடம் பேசி கொண்டு இருக்கிறார் என பார்த்ததும் அதே இடத்தில் நின்றான்.

இன்பா யார் என்று பார்வையை திருப்ப சரியாக அந்த நேரம் LED TVயில் வருண் அதிதி கழுத்தில் தாலி கட்டும் காட்சி ஓட மித்ரன் கவனம் டீவியில் இருக்க விடியோ அப்படியே மூன்றாம் முடிச்சு போடும் பெண்ணுக்கு ஜூம் வைக்க அது அந்த பெண் விவேகா வந்து மூன்றாம் முடிச்சு போட அதை பார்த்து மித்ரன் அதிர்ச்சியாகி இன்.. இன்பா கொஞ்சம் டிவியை பாரு டா…

ஆதி அப்படியே இன்பா வை பார்த்து நிற்க உடனே விவேகா ஹே என்னாச்சு அப்படியே நிக்கிற யாரு கிட்ட அம்மா, மாமா பேசிட்டு இருக்கிங்க என  சொல்லி கொண்டே முன்னால் வர விவேகா இன்பாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். இன்பாவுக்கு அதற்கும் மேல் அதிர்ச்சி உடனே தன் பார்வையை சரி செய்து கொண்டு கைகளை ஒரு நிமிடம் இறுக்கி மடக்கி கொண்டான்.

மித்ரன் தன்னிலைக்கு வந்து விவேகா வை பற்றி கேட்கும் நேரம் செல்வம், தம்பி இது என்னோட பையன் ஆதித்யா.. ஹலோ சார் என்று வணக்கம் வைத்தான்.

மித்ரன் விவேகாவை சுட்டி காட்டி இது இந்த பொன்னு யாரு.. கங்கா உடனே என்ன தம்பி இது வருண் தங்கை என்னோட பொன்னு உங்க வீட்டில் தானே சரவணா கிட்ட வேலை பார்க்கிறா தெரியாத மாதிரி கேட்கறீங்க!

மித்ரன் மனதில் அய்யோ இவ நான் நெனைச்சத விட பயங்கர பயங்கரமா இருக்காளே. இன்பாவுக்கே டஃப் கொடுக்கிறா இவன் வேற எப்போ வேணாலும் வெடிக்கும் எரிமலை பொல் இருக்கிறான். 

சாரி அம்மா எதோ கொஞ்சம் நியாபகம் மறதியில் கேட்டு விட்டேன். என்று மழுப்பி விட ஆதி இவர்களை பக்கத்தில இருந்து கவனித்து கொள் ரொம்ப முக்கியம் என்று கூறி செல்வம் , கங்கா இருவரும் இன்பாவிடம் சொல்லி அந்த இடத்தில் இருந்து கிளம்ப  இப்போது விவேகா ஆதி கைகளை உதறி விட்டு தன் அம்மா பின்னால் அப்படியே செல்ல போக ஆதி அவள் கைகளை இறுக்கி பிடித்து கொண்டான். ஹே என்னை விட்டு நீ மட்டும் தப்பிக்க பார்க்கிறாயா ஒழுங்கா நில்லு டி.. 

அவர்கள் சென்றதும் இன்பா வேக வேகமாக வெளியே எழுந்து சென்றான். மித்ரன் இன்பா பின்னால் வேக வேகமாக சென்றான். டேய் இன்பா நில்லு டா நானும் வரேன் என்று அவன் கொஞ்சம் மெதுவாக இன்பா பின்னே சென்றான்.

இன்பா கொஞ்சம் கோபமாக செல்வதை பார்த்து கொண்டு இருந்த வருண் உடனே ஆதியை அழைத்தான். என்னாச்சு ஆதி சார் ஏன் சாப்பிடாமல் கிளம்பி விட்டார்! இல்ல மாமா சும்மா போயிருக்கார் போல நான் சாப்பிட கூட்டி வரேன் என திரும்பி பின் மாமா.. விவேகாவை என் கூட வர சொல்லுங்க.. 

வருண் விவேகாவை கூப்பிட அவள் என்ன என்று மேலே வந்தாள். நீ ஆதி கூட போய்ட்டு வா என சொல்ல ஆதி விவேகாவின் கையை  பிடித்து கொண்டு வெளியே சென்றான். 

ஹே விடு டா இப்போ எதுக்கு இப்படி என்னை இழுத்து கொண்டு போற.. ஆதி, அப்படியே நடிக்காத டி எதுவுமே நடக்காத மாதிரி எப்படி டி உன் முகத்தை வைத்து கொண்டு இருக்க…

இங்கே இன்பா அருகில் உள்ள தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான். மித்ரன் அவன் அருகே வந்து மூச்சை பிடித்து கொண்டு நின்று தன்னை அசுவாச படுத்தி கொண்டு இருக்க 

இன்பா மித்ரனை பார்த்ததும் கோபம் தலைக்கு ஏறியது. அவன் அருகே வந்து தன் சட்டையில் இருந்து பிஸ்டலை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தான். டேய் நான் என்ன டா உன்னை பண்ணேன் இப்போ என்னை எதுக்கு சுட பார்க்கிறாய்.. 

எல்லாம் உன்னால தான் டா, யூ நீ தான் காரணம்..  எப்ப.. எப்படி என்று அவன் திக்கி திணற… அன்னிக்கு முதன் முதலில் வருண் அம்மாவை பார்க்கும் போது நான் உன் கிட்ட என்ன சொன்னேன்.

டேய் இப்போ அவங்க விவேகாவுக்கும் அம்மா டா என்று சொல்லி அவன் நகர,

மித்ரன் டோண்ட் டூ எனி ட்ரிக்ஸ் வித் மீ…

சரி சொல்லு  லோட் பண்ணாத பிஸ்டலை வச்சு என்னை பயமுறுத்தாதே… உனக்கே ஒருத்தி தண்ணி காட்டுறா போய் முதலில் அவளை அடக்கு டா.. 

ஓ இவளோ வாய் பேசுறியா என்று தன் பிஸ்டலை எடுத்து பத்திர படுத்தி கொண்டு மித்ரனை பின்னால் இருந்து அணைத்து கழுத்தை இறுக்கி நெறித்தான். இன்பா வேண்டாம் டா என்று அவனும் திமிர..

டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நீ என்ன கேட்ட.. டேய் *** .. சரி சரி காது வலிக்குது இங்கிலீஷ் கெட்ட வார்த்தை வேண்டாம் இரு சொல்றேன். ஹான் நியாபகம் வந்திடுச்சு. ம்ம்ம்ம் … அவங்க கண்ணுக்கு மேல மச்சம் அது தானே டா.. இன்பா இப்போது இறுக்கி பிடிக்க நான் அன்னைக்கே சந்தேக பட்டேன் ஆனால் நீ அப்படி எல்லாம் இல்லன்னு சொல்லி இப்போ கடைசியில அவ என் கண்ணு முன்னாடி இருந்து கிட்டு அதுவும் என் வீட்டில் இருந்து கிட்டு என்னை ஏமாற்றி கண்ணா மூச்சி ஆடி  இருக்கா இதுக்கு எல்லாம் நீ தான் டா காரணம்…

மச்சி என்று தோய்ந்த குரலில் விடு டா ரொம்ப வலிக்குது இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடிச்சா நான் அவ்ளோ தான் நீயாவது எதுவும் லவ் அப்டின்னு சொல்லி காதல் லீலை அத்தனையும் நடத்துற அளவுக்கு போயிட்ட…. என்னை இப்போ தான் ஒரு பொன்னு திரும்பி பார்த்து இருக்கு….

இப்போது இன்பா அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டு கோபத்தில் தலையை பிடித்து கொண்டு நிற்க.. மித்ரன் தன்னை அசுவாச படுத்தி கொண்டு

டேய் எனக்கு இப்போ தான் டா புரியுது எப்படி விவேகா எப்போ பார்த்தாலும் என்னோட வீட்டில் சுற்றி கொண்டு இருக்காளே எப்படி வந்துட்டு போறா அப்டின்னு நான் யோசித்தேன் டா அப்புறம் நான் அதை பெருசா எடுத்துக்கல..

இன்பா அவனை முறைக்க அவன் அமைதியானான். நீ மட்டுமா நானும் தான் ஏமார்ந்து விட்டேன். இன்பா முறைத்து கொண்டே அவனை பார்க்க டேய் வெண்பா, ஆதி, விவேகா எல்லாரும் மறைத்து விட்டார்கள் என்று சொல்லும் நேரம் சரியாக வெண்பா குலாப் ஜாமூன் எடுத்து கொண்டு மைதிலி கூட சேர்ந்து கொண்டு அப்படியே நடக்க அங்கே இவர்கள் நிற்பதை பார்த்து உடனே  வெண்பா அவர்கள் அருகில் வந்தாள். 

டேய் வர மாட்டேன் அப்டின்னு சொன்ன இப்போ வந்து நிக்கிற

 மித்ரன் மைதிலி வருவதை பார்த்து வேக வேகமாக தன் உடை சரி செய்து தலையை அழகாக கோதி விட்டு  

மைதிலியை பார்த்து கொண்டு இருக்க அவள் அவனை பயந்து கொண்டே பார்த்தாள்.

ஆதி, விவேகா கைகளை பிடித்து தர தர வென்று இழுத்து  கொண்டு வர வெண்பா அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் ஹே விவேகா எப்படி இங்கே வந்த வாட் அ சர்ப்ரய்ஸ்! இன்பா வெண்பாவை முறைக்க, 

மித்ரன், ஹலோ வெண்பா ரீலு ஏற்கனவே அந்து போச்சு டி நீ புதுசா படம் ஓட்டாத.. என சொல்ல மைதிலி அவன் சொன்ன விதத்தை பார்த்து சிரித்து விட மித்ரன்,

ஹலோ உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு என்று சொல்ல. … 

இன்பா தன் முகத்தை அழுத்தமாக துடைத்து கொண்டே “மித்ரன்” என்று ஒரு கர்ஜனை செய்ய 

வெண்பா, இப்போ உன் ரீலு அந்து இல்ல சாரி இத்து போச்சு டா.. என்று சிரித்தாள். இன்பா அங்கு இருக்கும் அனைவரையும் முறைத்து பார்த்து விட்டு அவன் பார்வை ஆதி – விவேகா இருவரின் மீது வந்து நின்றது.

தொடரும்… 

 Episode 107,

நான் உங்களை என்று சொல்லி அவள் திணற இன்பா அவள் முகத்தை தன் கண்களை பார்க்குமாறு நிமித்தி வைத்து ஹே சொல்லு இங்கே என்னை என்னோட கண்ணை பார்த்து சொல்லு… 

அவள் இதயம் வேக வேகமாக துடிக்க நான் உங்களை விரும்பு என்று அவள் நிறுத்திட இன்பா அவளை விட்டு  வேகமாக நகர அவள் உடனே அவனை பின்னால் இருந்து அணைத்து ராகவ் நான் ஐ லவ் யூ என்று சொல்லி விட்டாள். 

இதை கேட்டதும் இன்பாவுக்கு சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் பின்னால் கட்டி கொண்டு இருந்த அவளை அப்படியே அவள் கைகளை பிடித்து இழுத்து முன்னால் கொண்டு வந்தவன். இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லு என்னை பார்த்து என் கண்ணை பார்த்து சொல்லு டி..  

ஒரு ஆழ்ந்த பெரு மூச்சு விட்டவள். ராகவ் ஐ ம் ஃபால் இன் லவ் வித் யூ..  நான் உன்னை லவ் பண்றேன்..  போதுமா..   என்று அவள் குதி காலில் நின்று எட்டி அவன் இதழில் மென்மையாக முத்தமிட்டாள். இன்பா அவளை அப்படியே தூக்கி அந்த முத்ததை தொடர்ந்தான். 

இருவரும் மூச்சு முட்டி விலகிட இன்பா சிரித்தான். ஹேய் எதுக்கு சிரிக்கிற.. நத்திங்.. ஹே ஓவர் இமஜின் பண்ணிக்க வேண்டாம் நீ என்னை டார்ச்சர் பண்ணதுனால தான் நான் லவ் யூ சொன்னேன் இன்னும் என் மனசுல இருந்து உன்னை விரும்ப வில்லை காட் இட்… 

இன்பா, உன் மனசு எங்கே இருக்கு… 

விவேகா தன் இதயத்தை தொட்டு காட்டி இங்கே இருக்கு.. சரி நான் நம்ப மாட்டேன் உன் மனசை எனக்கு காட்டு அப்புறம் நான் நம்புறேன்..  டேய் என்ன உன் வேலை என் கிட்ட வேண்டாம் என்று அவள் சொல்ல இன்பா அவளிடம் இருந்து விலகி அருகில் உள்ள சேரில் அமர்ந்து போய் எனக்கு தண்ணி எடுத்து வா ஐ ஃபீல் தர்ஸ்டி… 

விவேகா உடனே நேராக செல்ல ஹேய் எங்கே டி போற கிச்சென் இந்த சைடு இருக்கு.. என்ன டா ஓவரா பேசுற.. ஹலோ இது உன் மாமி வீடு.. என் வீடு … ராகவ் இது கவர்மென்ட் கோட்ரெஸ் உன் வீடு இல்லை… இதை கேட்ட இன்பா, விவேகா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் மனச காட்ட சொன்னேன் நியாபகம் இருக்கா..  அதுக்கு இப்போ என்ன..  நீ இப்படியே பேசின அப்புறம் நானே உன் மனச  பார்க்க வேண்டி வரும் உனக்கு ஓகே வா… 

ஹேய் கொன்றுவேன்.. மம் டூ இட்..  என்று சொல்லி சிரித்து கொண்டே அவன் போன் பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் தண்ணீர் எடுத்து வந்ததும் அதை குடித்தவன். சரியான கேடி டி நீ உன்னை நான் மேட்லியா நம்புறேன் அது ஏன்னு தான் தெரியல.. நீ நிஜமாவே மேட் தான் என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்காத ராகவ்.. 

இன்பா நன்றாக சாய்ந்து கொண்டு அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான். ஹே என்ன குறுகுறுன்னு பார்க்கிற.. உனக்கு என்ன பிரச்னை.. எனக்கு பிரச்சனை தான்.. இப்போது எழுந்தவன் அவள் அருகில் வர ராகவ் போதும் டைம் ஆச்சு நம்ப கிளம்பலாம். 

ஷ்ஷ்ஷ் என்று அவள் உதட்டின் மேல் விரல் வைத்தவன். அதை வருடி விவேகா என்னை மொத்தமா 7 மாசம் 20 நாள் நீ சீட் பண்ணி இருக்க டி..  

என்ன…

ஹேய் அவள் உதட்டில் வலிக்கும் படி ஒரு அடி வைத்தான். வலிக்குது . ம்ம் வலிக்கட்டும் என்று அவளை படுக்கை அறைக்கு கூட்டி வந்து விட்டான். அவளை சுவற்றில் ஒட்டி நிற்க வைத்து அவனும் ஒட்டி நின்று கொண்டான் அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து கொண்டே அவளின் இடையை மீட்டினான். அவள் கண்களை மூடி கொண்டாள். 

விவேகா.. மம்

பேபி கொஞ்சம் மட்டும் உன்னை தொட்டுக்கவா.. இப்போது கண்களை சட்டென  திறந்தாள். ஹே தள்ளி போ நம்ப போலாம்.. 

எப்படியும் நீ எனக்கு தானே அப்போ அப்போ கொஞ்சம் தொட்டு கொள்ள என்ன இருக்கு..

அவள் அவனை வேகமாக தள்ளி விட்டு வெளியே செல்ல போக அவள் கைகளை பிடித்து தன் புறம் இழுத்து விரல்களில் இதழ் பதித்தான்.

பிளீஸ் டி ஒன்னும் பண்ண மாட்டேன் இன்னிக்கு நீ செம்மையா  இருக்க.. அப்போ என்ன பண்ண போற .. ஒரே ஒரு கிஸ் மட்டும்… 

விவேகா அவன் அருகில் வந்து மம் கொடு என்று அவள் இதழை குவித்து காட்டிட இன்பா சிரித்து கொண்டே முத்தம் வைத்தவன். ஹே லிப் ல இல்ல டி.. பின்ன எங்கே.. உன்னோட ஹிப் ல.. 

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள். நீ சொன்னது எனக்கு புரியல..

ஹே உன்னோட ஹிப் ல இடையில பிளீஸ் ஒரே ஒரு கிஸ் மட்டும் டி.. என்று அவள் சரி என்று சொல்லும் முன்பே அவளை அமர வைத்து அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான். அவள் இடை தெரிய அதை தொட்டு பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது. இடையில் உள்ள சுழியில் விரல் கொண்டு வருடினான். ராகவ் போதும் எழு போகலாம் டைம் ஆச்சு… என்று சினிங்கி கொண்டே கூறினாள். 

விவேகா அழகா இருக்கு டி உன் ஹிப் செம்மையாக இருக்கு..

எனக்கு தெரியும் டா நான் உன் கிட்ட லவ் சொன்னா நீ என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு ஓவரா பண்ணுவ.

அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவள் இடையில் முத்தம் பதித்தான். அவன் மீசை முடி உரசிட  அவளுக்கு வெட்கம் கூச்சம், உடல் எல்லாம் சிலிர்த்தது. அவன் மீசை முடிகள் படும் இடம் எல்லாம் அவள் வெட்கத்தில் சிரிப்பு எனமொத்தமாக வர அவன் தலையை கோதி கொடுத்து  கொண்டு இருந்தாள். ஒரு சிரிது நேரம் அந்த இடையில் ஒதுங்கினான். 

சிறிது நேரம் அவன் அமைதியாக இருக்க என்னாச்சு இவனுக்கு என்று இன்பா என்ன செய்கிறான் என்று பார்க்க அவன் அவள் இடையை கட்டி கொண்டு தூங்கி இருந்தான். அவள் மடியில் வெறும் 5 நிமிடம் சரியாக 5 நிமிடம் தான் தலை வைத்து இருந்தான். இப்போது அவன் உறங்கி இருப்பது தெரிய வேறு வழி இல்லாமல் அவள் எழுப்பினாள். 

ராகவ்.. ராகவ் …என்னாச்சு உனக்கு இப்போ தூங்குர.. அவன் கண்கள் முழித்து பார்த்து உடனே எழுந்து அமர்ந்தான். இப்போது இன்பாவின் கண்கள் மிகவும் சிவப்பாக இருந்தது.

விவேகா பதட்டம் கொண்டு உன் கண்ணு என்ன இவளோ ரெட்டிசா இருக்கு.. நேற்று நைட்டு தூங்கினியியா இல்லையா.. 

இந்த நிமிடம் இன்பாவுக்கு தன் அப்பா சொன்னது நினைவு வர தன் புத்தியை உபயோகிக்க ஆரம்பித்தான். அது வேற ஒன்னும் இல்ல “நெகடிவ் இமோஷன்”, அப்புறம் அவ கிட்ட மட்டும் தான் கம்பார்ட் கிடைக்குது அப்டின்னு ப்ருவ் பண்ண ஆரம்பித்தான்.

(இன்சோம்னியா எல்லாம் இல்லை அது ரீலு அவன் அவளை நினைத்து தான் தூங்க வில்லை அவள் கவனம் அதிகம் கிடைக்க வேண்டும் என்று பாதி பொய் பாதி உண்மை கலந்து கலக்கி கொண்டு இருக்கிறான்)

இன்பா, எனக்கு கொஞ்சம் இன்சோம்னியா இருக்கு மனசு ஐ மின் என்னோட எண்ணம் ஒருநிலையா இல்லாம போச்சுன்னா எனக்கு தூக்கம் வராது.. என்று சொல்லி உள்ளுக்குள் ஒரு கள்ள புன்னகை சிந்தினான்.

(ஆனால் எதிர் காலத்தில் அவள் இல்லாமல் உண்மையாக இன்சோம்னியா வந்து இப்போ சொன்ன பொயிக்கு அவதி பட போகிறான்)

அப்போ நீ கடைசியாக எப்போ நல்லா தூங்கின. இன்பா, நீ என்னை வந்து பார்த்து விட்டு போனதுக்கு முன்னாடி நாள் தான் ஆழ்ந்து தூங்கினேன்.(விவேகாவுக்கு இப்போ நெகடிவ் எல்லாம் பாசிடிவ் ஆகி விட்டது )

இதை கேட்டதும் விவேகா கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ராகவ் ஸாரி ராகவ் நான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேன் என்னை மண்ணித்து விடு பிளீஸ் ராகவ் என்று அவள் அழ

இன்பா, ஹே விவேகா விடு டி இது எனக்கு அடிக்கடி வரும் போகும் சில கேஸ் ஹேண்டில் பண்ணும்போது கூட வந்து இருக்கு 

விவேகா அவன் மார்பில் சாய்ந்து அழுது கொண்டே இந்த முறை என்னால் தானே உனக்கு வந்து இருக்கு இனி நான் இப்படி செய்ய மாட்டேன். என்று தேம்பி தேம்பி அழுதாள். (அவளை கட்டி கொண்டு தூங்கியதால் அவளிடம் மட்டும் தான் இந்த ஒரு இயல்பு நிலை கிடைக்கிறது என்று நிருப்பிக்கிரானாம்)

அப்போ எனக்கு ஒரு ஃபேவர் பண்ணு.. என்ன அது? எனக்கு இப்போ நீ போட்டு இருக்கிற ட்ரெஸ் பிடிக்கல வேற ட்ரெஸ் வியர் பண்ணு.

விவேகா, இந்த ட்ரெஸ் உனக்கு பிடிக்கலையா. நாட் பேட் பட் என் ட்ரெஸ்க்கு மேட்சா ட்ரெஸ் பண்ணு. 

விவேகா கண்களை துடைத்து கொண்டே மம் கொஞ்சம் பொறாமையா இருக்கா உனக்கு..  இன்பா,” ம்ம் ஆமா இப்போ அதுக்கு என்ன போ போடி ட்ரெஸ் மாற்றி வா, அடுத்து உன் தலையில் இருக்க பூ வாடி போச்சு ஃப்ரெசா புதுசா வை, நெக்ஸ்ட் ஃப்ரீ ஹேர் வேண்டாம் அது எனக்காக மட்டும் தான் நீ ஃப்ரீ ஹேர்ல இருக்கணும் சோ இப்போ போயி அழகா பின்னல் பின்னி ரெடி ஆகி வா அண்ட் லாஸ்ட் ஒன் திங்க் கண்ணுக்கு மை என்று அவன் சொல்ல வர விவேகா மறுபடியும் வைக்காட்டுமா.. 

இன்பா, ஹே கண்ணுக்கு மை வைக்க கூடாது நான் உன் கூட இருக்கும் போது மட்டும் தான் நீ வைக்கணும்.. காட் இட் இப்போ கடகடன்னு ரெடி ஆகி வா.. 

விவேகா, அவனை அழைத்து ட்ரெஸ் அலமாரி திறந்து காட்டி நீங்களே செலக்ட் பண்ணுங்க நான் எந்த ட்ரெஸ் போடணும். அவன் அங்கு இருந்த கேரளா ஸாரி மாடல் தாவணி பாவாடை சுட்டி காட்டி இது வியர் பண்ணு என்று சொல்ல அவள் அதை எடுத்து கொண்டாள். ஹே ஒன் மினித் இதுக்கு இந்த கலர் ஷர்ட் அதாவது ஜாக்கெட் என்று ஒரு கரும் பச்சை தங்க ஜரிகை பாடர் மிகவும் அழகாக இருந்தது. 

அவனது இந்த திறமையை நினைத்து உள்ளுக்குள் சூப்பர் இடியட் ராகவ் டார்ஜ்லிங்க் என்று சொல்லி கொண்டே அதை எடுத்து திரும்ப அங்கே இன்பா பெட்டில் அட்டன கால் போட்டு படுத்து கொண்டு போன் நோண்டி கொண்டு இருந்தான். 

விவேகா, ஓகே ராகவ் நீ வெளியே போ நான் ரெடி ஆகனும்.. நான் பார்க்க மாட்டேன் நீ ட்ரெஸ் பண்ணு… டேய் ஒழுங்கா நல்ல புள்ளையா வெளியே போ என்று சொல்ல அவன் நிமிராமல் போனை நோண்டி கொண்டே வெளியே சென்றான்.

அவன் சொன்னது போலவே தலை வாரி பூ வைத்து, அவன் சொன்ன உடை அணிந்து கொண்டு மிதமான ஒப்பனை செய்து ஜதி மல்லி பூ வைத்து கதவை திறந்து கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள். 

ராகவ் இதை கட்டி விடு என்று அவள் முதுகில் உள்ள கயிறை பிடித்து கொண்டு நின்றாள். இன்பா தன் தலையை போனில் இருந்து நிமிர்ந்து அவளை பார்த்தவன். அப்படியே ஒரு நிமிடம் …..?

தொடரும்…..

 Episode 108, 

நான் உங்களை என்று சொல்லி அவள் திணற இன்பா அவள் முகத்தை தன் கண்களை பார்க்குமாறு நிமித்தி வைத்து ஹே சொல்லு இங்கே என்னை என்னோட கண்ணை பார்த்து சொல்லு… 

அவள் இதயம் வேக வேகமாக துடிக்க நான் உங்களை விரும்பு என்று அவள் நிறுத்திட இன்பா அவளை விட்டு  வேகமாக நகர அவள் உடனே அவனை பின்னால் இருந்து அணைத்து ராகவ் நான் ஐ லவ் யூ என்று சொல்லி விட்டாள். 

இதை கேட்டதும் இன்பாவுக்கு சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் பின்னால் கட்டி கொண்டு இருந்த அவளை அப்படியே அவள் கைகளை பிடித்து இழுத்து முன்னால் கொண்டு வந்தவன். இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லு என்னை பார்த்து என் கண்ணை பார்த்து சொல்லு டி..  

ஒரு ஆழ்ந்த பெரு மூச்சு விட்டவள். ராகவ் ஐ ம் ஃபால் இன் லவ் வித் யூ..  நான் உன்னை லவ் பண்றேன்..  போதுமா..   என்று அவள் குதி காலில் நின்று எட்டி அவன் இதழில் மென்மையாக முத்தமிட்டாள். இன்பா அவளை அப்படியே தூக்கி அந்த முத்ததை தொடர்ந்தான். 

இருவரும் மூச்சு முட்டி விலகிட இன்பா சிரித்தான். ஹேய் எதுக்கு சிரிக்கிற.. நத்திங்.. ஹே ஓவர் இமஜின் பண்ணிக்க வேண்டாம் நீ என்னை டார்ச்சர் பண்ணதுனால தான் நான் லவ் யூ சொன்னேன் இன்னும் என் மனசுல இருந்து உன்னை விரும்ப வில்லை காட் இட்… 

இன்பா, உன் மனசு எங்கே இருக்கு… 

விவேகா தன் இதயத்தை தொட்டு காட்டி இங்கே இருக்கு.. சரி நான் நம்ப மாட்டேன் உன் மனசை எனக்கு காட்டு அப்புறம் நான் நம்புறேன்..  டேய் என்ன உன் வேலை என் கிட்ட வேண்டாம் என்று அவள் சொல்ல இன்பா அவளிடம் இருந்து விலகி அருகில் உள்ள சேரில் அமர்ந்து போய் எனக்கு தண்ணி எடுத்து வா ஐ ஃபீல் தர்ஸ்டி… 

விவேகா உடனே நேராக செல்ல ஹேய் எங்கே டி போற கிச்சென் இந்த சைடு இருக்கு.. என்ன டா ஓவரா பேசுற.. ஹலோ இது உன் மாமி வீடு.. என் வீடு … ராகவ் இது கவர்மென்ட் கோட்ரெஸ் உன் வீடு இல்லை… இதை கேட்ட இன்பா, விவேகா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் மனச காட்ட சொன்னேன் நியாபகம் இருக்கா..  அதுக்கு இப்போ என்ன..  நீ இப்படியே பேசின அப்புறம் நானே உன் மனச  பார்க்க வேண்டி வரும் உனக்கு ஓகே வா… 

ஹேய் கொன்றுவேன்.. மம் டூ இட்..  என்று சொல்லி சிரித்து கொண்டே அவன் போன் பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் தண்ணீர் எடுத்து வந்ததும் அதை குடித்தவன். சரியான கேடி டி நீ உன்னை நான் மேட்லியா நம்புறேன் அது ஏன்னு தான் தெரியல.. நீ நிஜமாவே மேட் தான் என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்காத ராகவ்.. 

இன்பா நன்றாக சாய்ந்து கொண்டு அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான். ஹே என்ன குறுகுறுன்னு பார்க்கிற.. உனக்கு என்ன பிரச்னை.. எனக்கு பிரச்சனை தான்.. இப்போது எழுந்தவன் அவள் அருகில் வர ராகவ் போதும் டைம் ஆச்சு நம்ப கிளம்பலாம். 

ஷ்ஷ்ஷ் என்று அவள் உதட்டின் மேல் விரல் வைத்தவன். அதை வருடி விவேகா என்னை மொத்தமா 7 மாசம் 20 நாள் நீ சீட் பண்ணி இருக்க டி..  

என்ன…

ஹேய் அவள் உதட்டில் வலிக்கும் படி ஒரு அடி வைத்தான். வலிக்குது . ம்ம் வலிக்கட்டும் என்று அவளை படுக்கை அறைக்கு கூட்டி வந்து விட்டான். அவளை சுவற்றில் ஒட்டி நிற்க வைத்து அவனும் ஒட்டி நின்று கொண்டான் அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து கொண்டே அவளின் இடையை மீட்டினான். அவள் கண்களை மூடி கொண்டாள். 

விவேகா.. மம்

பேபி கொஞ்சம் மட்டும் உன்னை தொட்டுக்கவா.. இப்போது கண்களை சட்டென  திறந்தாள். ஹே தள்ளி போ நம்ப போலாம்.. 

எப்படியும் நீ எனக்கு தானே அப்போ அப்போ கொஞ்சம் தொட்டு கொள்ள என்ன இருக்கு..

அவள் அவனை வேகமாக தள்ளி விட்டு வெளியே செல்ல போக அவள் கைகளை பிடித்து தன் புறம் இழுத்து விரல்களில் இதழ் பதித்தான்.

பிளீஸ் டி ஒன்னும் பண்ண மாட்டேன் இன்னிக்கு நீ செம்மையா  இருக்க.. அப்போ என்ன பண்ண போற .. ஒரே ஒரு கிஸ் மட்டும்… 

விவேகா அவன் அருகில் வந்து மம் கொடு என்று அவள் இதழை குவித்து காட்டிட இன்பா சிரித்து கொண்டே முத்தம் வைத்தவன். ஹே லிப் ல இல்ல டி.. பின்ன எங்கே.. உன்னோட ஹிப் ல.. 

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள். நீ சொன்னது எனக்கு புரியல..

ஹே உன்னோட ஹிப் ல இடையில பிளீஸ் ஒரே ஒரு கிஸ் மட்டும் டி.. என்று அவள் சரி என்று சொல்லும் முன்பே அவளை அமர வைத்து அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான். அவள் இடை தெரிய அதை தொட்டு பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது. இடையில் உள்ள சுழியில் விரல் கொண்டு வருடினான். ராகவ் போதும் எழு போகலாம் டைம் ஆச்சு… என்று சினிங்கி கொண்டே கூறினாள். 

விவேகா அழகா இருக்கு டி உன் ஹிப் செம்மையாக இருக்கு..

எனக்கு தெரியும் டா நான் உன் கிட்ட லவ் சொன்னா நீ என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு ஓவரா பண்ணுவ.

அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவள் இடையில் முத்தம் பதித்தான். அவன் மீசை முடி உரசிட  அவளுக்கு வெட்கம் கூச்சம், உடல் எல்லாம் சிலிர்த்தது. அவன் மீசை முடிகள் படும் இடம் எல்லாம் அவள் வெட்கத்தில் சிரிப்பு எனமொத்தமாக வர அவன் தலையை கோதி கொடுத்து  கொண்டு இருந்தாள். ஒரு சிரிது நேரம் அந்த இடையில் ஒதுங்கினான். 

சிறிது நேரம் அவன் அமைதியாக இருக்க என்னாச்சு இவனுக்கு என்று இன்பா என்ன செய்கிறான் என்று பார்க்க அவன் அவள் இடையை கட்டி கொண்டு தூங்கி இருந்தான். அவள் மடியில் வெறும் 5 நிமிடம் சரியாக 5 நிமிடம் தான் தலை வைத்து இருந்தான். இப்போது அவன் உறங்கி இருப்பது தெரிய வேறு வழி இல்லாமல் அவள் எழுப்பினாள். 

ராகவ்.. ராகவ் …என்னாச்சு உனக்கு இப்போ தூங்குர.. அவன் கண்கள் முழித்து பார்த்து உடனே எழுந்து அமர்ந்தான். இப்போது இன்பாவின் கண்கள் மிகவும் சிவப்பாக இருந்தது.

விவேகா பதட்டம் கொண்டு உன் கண்ணு என்ன இவளோ ரெட்டிசா இருக்கு.. நேற்று நைட்டு தூங்கினியியா இல்லையா.. 

இந்த நிமிடம் இன்பாவுக்கு தன் அப்பா சொன்னது நினைவு வர தன் புத்தியை உபயோகிக்க ஆரம்பித்தான். அது வேற ஒன்னும் இல்ல “நெகடிவ் இமோஷன்”, அப்புறம் அவ கிட்ட மட்டும் தான் கம்பார்ட் கிடைக்குது அப்டின்னு ப்ருவ் பண்ண ஆரம்பித்தான்.

(இன்சோம்னியா எல்லாம் இல்லை அது ரீலு அவன் அவளை நினைத்து தான் தூங்க வில்லை அவள் கவனம் அதிகம் கிடைக்க வேண்டும் என்று பாதி பொய் பாதி உண்மை கலந்து கலக்கி கொண்டு இருக்கிறான்)

இன்பா, எனக்கு கொஞ்சம் இன்சோம்னியா இருக்கு மனசு ஐ மின் என்னோட எண்ணம் ஒருநிலையா இல்லாம போச்சுன்னா எனக்கு தூக்கம் வராது.. என்று சொல்லி உள்ளுக்குள் ஒரு கள்ள புன்னகை சிந்தினான்.

(ஆனால் எதிர் காலத்தில் அவள் இல்லாமல் உண்மையாக இன்சோம்னியா வந்து இப்போ சொன்ன பொயிக்கு அவதி பட போகிறான்)

அப்போ நீ கடைசியாக எப்போ நல்லா தூங்கின. இன்பா, நீ என்னை வந்து பார்த்து விட்டு போனதுக்கு முன்னாடி நாள் தான் ஆழ்ந்து தூங்கினேன்.(விவேகாவுக்கு இப்போ நெகடிவ் எல்லாம் பாசிடிவ் ஆகி விட்டது )

இதை கேட்டதும் விவேகா கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ராகவ் ஸாரி ராகவ் நான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேன் என்னை மண்ணித்து விடு பிளீஸ் ராகவ் என்று அவள் அழ

இன்பா, ஹே விவேகா விடு டி இது எனக்கு அடிக்கடி வரும் போகும் சில கேஸ் ஹேண்டில் பண்ணும்போது கூட வந்து இருக்கு 

விவேகா அவன் மார்பில் சாய்ந்து அழுது கொண்டே இந்த முறை என்னால் தானே உனக்கு வந்து இருக்கு இனி நான் இப்படி செய்ய மாட்டேன். என்று தேம்பி தேம்பி அழுதாள். (அவளை கட்டி கொண்டு தூங்கியதால் அவளிடம் மட்டும் தான் இந்த ஒரு இயல்பு நிலை கிடைக்கிறது என்று நிருப்பிக்கிரானாம்)

அப்போ எனக்கு ஒரு ஃபேவர் பண்ணு.. என்ன அது? எனக்கு இப்போ நீ போட்டு இருக்கிற ட்ரெஸ் பிடிக்கல வேற ட்ரெஸ் வியர் பண்ணு.

விவேகா, இந்த ட்ரெஸ் உனக்கு பிடிக்கலையா. நாட் பேட் பட் என் ட்ரெஸ்க்கு மேட்சா ட்ரெஸ் பண்ணு. 

விவேகா கண்களை துடைத்து கொண்டே மம் கொஞ்சம் பொறாமையா இருக்கா உனக்கு..  இன்பா,” ம்ம் ஆமா இப்போ அதுக்கு என்ன போ போடி ட்ரெஸ் மாற்றி வா, அடுத்து உன் தலையில் இருக்க பூ வாடி போச்சு ஃப்ரெசா புதுசா வை, நெக்ஸ்ட் ஃப்ரீ ஹேர் வேண்டாம் அது எனக்காக மட்டும் தான் நீ ஃப்ரீ ஹேர்ல இருக்கணும் சோ இப்போ போயி அழகா பின்னல் பின்னி ரெடி ஆகி வா அண்ட் லாஸ்ட் ஒன் திங்க் கண்ணுக்கு மை என்று அவன் சொல்ல வர விவேகா மறுபடியும் வைக்காட்டுமா.. 

இன்பா, ஹே கண்ணுக்கு மை வைக்க கூடாது நான் உன் கூட இருக்கும் போது மட்டும் தான் நீ வைக்கணும்.. காட் இட் இப்போ கடகடன்னு ரெடி ஆகி வா.. 

விவேகா, அவனை அழைத்து ட்ரெஸ் அலமாரி திறந்து காட்டி நீங்களே செலக்ட் பண்ணுங்க நான் எந்த ட்ரெஸ் போடணும். அவன் அங்கு இருந்த கேரளா ஸாரி மாடல் தாவணி பாவாடை சுட்டி காட்டி இது வியர் பண்ணு என்று சொல்ல அவள் அதை எடுத்து கொண்டாள். ஹே ஒன் மினித் இதுக்கு இந்த கலர் ஷர்ட் அதாவது ஜாக்கெட் என்று ஒரு கரும் பச்சை தங்க ஜரிகை பாடர் மிகவும் அழகாக இருந்தது. 

அவனது இந்த திறமையை நினைத்து உள்ளுக்குள் சூப்பர் இடியட் ராகவ் டார்ஜ்லிங்க் என்று சொல்லி கொண்டே அதை எடுத்து திரும்ப அங்கே இன்பா பெட்டில் அட்டன கால் போட்டு படுத்து கொண்டு போன் நோண்டி கொண்டு இருந்தான். 

விவேகா, ஓகே ராகவ் நீ வெளியே போ நான் ரெடி ஆகனும்.. நான் பார்க்க மாட்டேன் நீ ட்ரெஸ் பண்ணு… டேய் ஒழுங்கா நல்ல புள்ளையா வெளியே போ என்று சொல்ல அவன் நிமிராமல் போனை நோண்டி கொண்டே வெளியே சென்றான்.

அவன் சொன்னது போலவே தலை வாரி பூ வைத்து, அவன் சொன்ன உடை அணிந்து கொண்டு மிதமான ஒப்பனை செய்து ஜதி மல்லி பூ வைத்து கதவை திறந்து கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள். 

ராகவ் இதை கட்டி விடு என்று அவள் முதுகில் உள்ள கயிறை பிடித்து கொண்டு நின்றாள். இன்பா தன் தலையை போனில் இருந்து நிமிர்ந்து அவளை பார்த்தவன். அப்படியே ஒரு நிமிடம் …..?

தொடரும்…..

 Episode 109,

இன்பா சொன்னது போலவே உடை அணிந்து கொண்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து திருப்தி பட்டு கொண்டு திரும்ப அவள் முதுகில் ஒரு கட்டும் கயிறு இரு புரமும் தொங்கி கொண்டு இருந்தது. 

விவேகா அதை கட்ட முயற்சி செய்து அது முடியாமல் போக உடனே அவள் வெளியே இன்பா அருகே வந்தவள். ராகவ் இதை கட்டி விடு என்னால கட்டவே முடியல… 

இன்பா என்ன என்பது போல் நிமிர்ந்து பார்க்க அங்கு செதுக்கி வைத்த மெழுகு சிலை போல் அந்த வெள்ளை முத்து மாலை பேர்ல் செட் மட்டும் கழுத்துக்கும் காதுக்கு கைகளில் முத்து வளையல்   என விவேகா  அந்த தாவணியில் நின்று கொண்டிருந்தாள். 

அவளை பார்த்தவுடன்  கோபம்  அவளை முறைத்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதை பார்த்து அவள் திரும்பி ஆர் யூ ஹியர்… எப்போ பார்த்தாலும் போன் நோண்டி கிட்டு இருப்பது தான் உன் வேலை சரியான இடியட் டா நீ என்று சொல்லி திரும்ப இப்போது தான் அவன் முறைத்து கொண்டு இருப்பது தெரிந்தது.

அவள் அவன் முகத்தை பார்த்து ராகவ் என்னாச்சு? இந்த ட்ரெஸ் உனக்கு பிடிக்கலையா?நான் இந்த ட்ரெஸ் ல நல்லா இல்லையா? 

இன்பா அவளிடம் என்ன இது…

எது…

அது தான் உன் முதுகுக்கு பின்னால் ஒரு கயிறு தொங்குதே அது எதிக்கு!

விவேகா, அது எதுக்கு கொஞ்சம் பின்னால் ஃபிட் டா சரியா இருக்க… இப்போ நீ கட்டி விட போறியா இல்லையா..

இன்பா, பின்னால் திரும்பு டி …

விவேகா அவன் கட்டி விட தான் திரும்ப சொல்கிறான் என்று திரும்பிட அவள் உடையில் பின்னால் முதுகு எவ்வளவு தெரிகிறது என்றும் அந்த கயிறு எங்கே இருக்கிறது என்றும் பார்த்தான்.


இப்போது கடுப்பான விவேகா, என்ன பண்ற நீ இந்த நாட் போட உனக்கு எவ்ளோ நேரம்!

இன்பா அவள் வெற்று முதுகு எவ்வளவு என்று பார்த்து அவளை திருப்பி என்னடி இது கொஞ்சம் முதுகு ஃபுல்லா தெரியுது? அதில் இந்த கயிறு வேற டிஸ்காஸ்டிங் …டிசிபிலின் இல்ல இந்த ட்ரெஸ் ல அதுவும் அந்த கயிறு என்று அவன் நிறுத்திட..

இது ஒன்னும் காலேஜ் இல்ல கழுத்து  அவ்ளோ இறக்கம் இல்ல சரியா தான் இருக்கு.. நான் நல்லா தான் ட்ரெஸ் பண்ணுவேன்… இது யாரு கண்ணுக்கும் அவ்ளோ மோசம் இல்லை என்று கொஞ்சம் கோபம் சோகம் இரண்டும் கலந்து பேசிட 

 இன்பா அவள் முக மாறுதலை பார்த்து அவளை அருகில் இழுக்க விவேகா, நீ வர வேண்டாம் தள்ளி போ என்று கோபமாக பேசினாள்.

உடனே பேபி நான் எதுக்கு சொல்றேன்னு முதலில் புரிந்து கொள். இந்த மாதிரி நாட் வச்சா அந்த முதுக பார்க்கனும் போல தோணும் யாராவது உன் முதுகை பார்த்து விட்டால் அதுக்கு தான் நான் சொன்னேன். 

அப்புறம் யாரு சொன்னது யாரு கண்ணுக்கும் மோசம் இல்லை அப்டின்னு  இங்கே எல்லார் கண்ணும் ரொம்ப மோசம்…

என்னோட பார்வை உன் மேல( fickleness) சபலம் இருக்கும்  இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணா என்னால எப்படி கம்பார்ட்டா இருக்க முடியும் உன்னை எதுவும் செய்ய என்று அவன் நிறுத்தி அவள் முகத்தை பார்த்தான்.

அவன் தன்னை பாதுகாப்பது பற்றி உள்ளுக்குள் சந்தோசபட்டவள். அப்படின்னா என்ன நீ சொல்றது எனக்கு புரியல…

இன்பா சலித்து கொண்டு உனக்கு என்னோட பில்லிங்ஸ் எப்போ தான் புரிந்து இருக்கு சரியான தத்தி டி நீ என்று சொல்லி அவளை பின்னால் திரும்ப சொன்னான்.

அவள் சிரித்து கொண்டே திரும்பி நிற்க்க இன்பா அந்த கயிற்றை கட்டி விட்டு அந்த கழுத்து முதுகை தொட்டு பார்க்க அவளுக்கு உடல் எல்லாம் சிலிர்த்தது. தன்னை ஒரு நிமிடம் சரி செய்து கொண்டு கிளம்பலாம். என்று அவள் சொல்லிட 

விவேகா என்று அவன் அழைக்க ஒரு பக்கம்  கழுத்தை மட்டும் அவள் திருப்பி மம் சொல்லு ராகவ் என்று கேட்க அந்த ஜதி மல்லியோடு அவள் பார்வையும் அவனுக்கு போதை தர 

அந்த மெழுகு சிலையை அவன் வெப்பமான முத்தம் கொண்டு கொஞ்சம் உருக வைத்தான். அவள் அவன் பின் தலையை பிடித்து கொண்டாள். முகம் எல்லாம் வெட்கம் உயர் தர மேக் அப் காஸ்மெட்டிக் இல்லாமல் கன்னம் இரண்டும் சிவப்பு ஆனது. விவேகா.. 

ம்ம் …

என்னோட அவஸ்தை உனக்கு புரியாது டி சோ இந்த மாதிரி எப்பவும் ட்ரெஸ் பண்ணாத ஐ மின் வெளியே இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு போகாத…

ம்ம் சரி இப்போ போகலாம்.. 

இன்பா அவளை விட்டு பிரிந்து வேக வேகமாக தலையை கோதி விட்டபடி தண்ணி என்று சொல்ல அவள் தலையை  குனிது கொண்டே எடுத்து வந்து தந்தாள்.ஒரு பெரு மூச்சு விட்டு தண்ணி மொத்தமும் வேகமாக குடித்தான்.

பின் அவள் கைகளை கோர்த்து கொண்டு பேபி நான் சொன்னது எல்லாம் மனசுல வச்சுக்கோ நான் இருக்கும் போது என்னை இம்ப்ரெஸ் பண்ண மட்டும் தான் இந்த மாதிரி ட்ரெஸ், காஜல், ஃப்ரீ ஹேர், அண்ட் இந்த நாட் வச்ச ட்ரெஸ் இது எல்லாம் போடணும் சரியா..

விவேகா வுக்கு இதை கேட்டு உள்ளுக்குள் வெட்கம், சிரிப்பு இரண்டும் வந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சரி சரி எனக்கு டைம் ஆச்சு அம்மா தேடுவார்கள் வா போலாம் என்று சொல்லி வெளியே வந்தார்கள்.

வருண் போன் செய்தான். ம்ம் நான் வருகிறேன் என்று சொல்லி இன்பா வைக்க விவேகா அவனை முறைத்தாள். ஹே என்னாச்சு டி இப்போ எதுக்கு முறைக்கிற!

என் அண்ணாவை எப்படி எல்லாம் நீ கொடுமை படுத்தி இருக்க.. 

நான் என்ன டி பண்ணேன்.. 

டேய் நடிக்காத டா அந்த மெசேஜ் அது வருண் தானே அனுப்பினான். ம்ம் ஆமா நான் நிறைய வேலையா இருந்தேன் சோ…

ம்ம் டார்க் வெப் சீரிஸ் அப்புறம் ஷெர்லாக் ஹோம்ஸ் படம் பார்ப்பது இது எல்லாம் உன்னோட வேலை என்று அவனை கிள்ள விவேகா இது உனக்கு எப்படி தெரியும்..

வருண் சொன்னான் என் அண்ணாவை வைத்து நீ மெஸேஜ் அனுப்புர அப்டின்னா நீ எவ்ளோ பெரிய கேடி இடியட் 

இன்பா இதை கேட்டு கண்ணகுளி தெரிய சிரித்தான். விவேகா இப்போது கைகளை கட்டி கொண்டு அவன பார்த்து நான் அதை கூட பொறுத்து போவேன் டா ஆனால் நீ ரிவார்ட் கொடுத்த பாரு அதை தான் என்னால் டைஜஸ்ட் பண்ண முடியல என்று அவன் சுண்டு விரலை இழுத்து கடித்து விட உடனே விவேகா வலிக்குது டி ஸ்ஸ்ஸ் விடு டி…

இன்பா, நீ மட்டும் சரியா எதுக்கு இவளோ நாள் என் கிட்ட பொய் சொன்ன நீ சொன்னது இல்லாமல் ஆதி, வெண்பா இவங்களும் பொய் சொல்லி இருக்காங்க நீ 7மாசம் 20நாள் என்னை ஏமாற்றி இருக்க அதனால் எனக்கு அதுக்கு நியாயம் கிடைத்து ஆக வேண்டும்.

விவேகா, நியாயமா!என்ன நியாயம்!

அவன் நீ இனி நான் எப்போ கூப்பிட்டாலும் ஒளிய விட வேகமா என் கிட்ட வந்து விடனும்.. விவேகா அவனிடம் வந்து?

வந்ததும் உனக்கு அடுத்து என்னன்னு தெரியாதா!

தெரியாது….

இப்படி சொல்லியே பசங்கள ஏமாற்றி சுற்ற விடுங்க டி.. 

ஹே அப்புறம் என்ன முதலில் அதை சொல்லு…

என் கிட்ட வந்ததும் எனக்கு ரொம்ப பிடிச்ச சில கிஸ், given டேக் முடித்து விட்டு போ… 

எனக்கு ஒன்னும் வேணாம்…

அப்போ நான் கொடுக்கிறேன் நீ வாங்கிகோ.. என்று விவேகாவை பேசி கொஞ்சம் மயக்கிகொண்டு இருந்தான்.

இப்போது இருவரும் சண்டை இல்லாமல் சமாதானம் ஆகி வந்தனர். விவேகா முகத்தில் இருந்த பிரகாசத்தை வைத்தே ஆதி கண்டு கொண்டான். இனி இவள் இன்பா சாரை பற்றி கேட்டு நம்மை தொல்லை செய்ய மாட்டாள் நிம்மதி டா என்று நினைத்து கொண்டு இருந்தான்.

மித்ரன் இன்பாவை பார்க்க அவன் எதுவுமே நடக்காதது போல முகத்தை வைத்து கொண்டு கீழ இறங்கி அவளிடம் பேபி நீ முதலில் போ நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்ல அவள் புன்னகை முகத்துடன் சரி என்று சொல்லி ஆதி அருகில்  சென்றாள்.

ஆதி, மைதிலி, வெண்பா, விவேகா நால்வரும் உள்ளே செல்ல அங்கே ஆதியை தேடி கொண்டே வந்த சிவா அவர்களுடன் சேர்ந்து கொண்டான். 

உள்ளே சென்ற விவேகாவை ஆதி என்ன மேடம் ட்ரெஸ் ஜொலிக்குது… இல்ல ஆதி தண்ணி கேட்டான் அவன் மேல சாரி சாரி அவர் மேல் இருந்த கோபத்தில் தண்ணி ஊற்றினேன் அவன் என் மேல் ஊற்றி விட என் ட்ரெஸ் நினந்து விட்டது.என்று வராத பொய் கஷ்ட பட்டு வர வைத்து கூறினாள். 

வெண்பா, இந்த ட்ரெஸ் தான டி உனக்கு சூப்பரா இருக்கு இதுக்கு முன்னாடி போட்ட ட்ரெஸ் ரொம்ப மோசம்…

இதை கேட்டு ஆதி உள்ளுக்குள் சூறாவளி தென்றலாக வீசியது. வெண்பாவுக்கு விவேகா மேல் பொறாமை வந்து விட்டது. இப்படியே பேசி கொண்டே போக அங்கு இருந்த சில பேர் விவேகாவை பாக்க அவளுக்கு இன்பா சொன்னது சரி என்று இப்போது தோன்றியது. 

அவள் மனதில் ராகவ் நீ சொன்னது சரி தான் உன் பேச்சை தான் இருக்கணும் . உன்னை ரொம்ப கஷ்ட படுத்தி ஏமாற்றி விட்டேன் அதுக்கு சாரி கேட்கணும்.. என்று விவேகா நினைத்து கொண்டு இருக்க 

இங்கே இன்பா விடம் அவன் ஆடர் செய்த ரிங் வர அதை வாங்கி கொண்டே மித்ரன் அருகில் வந்தான். 

மித்ரன், டேய் இப்படி மாறிட்ட அவ உன்கிட்ட மன்னிப்பு கேட்டாளா!

ம்ம் கேட்டா பாவம் மச்சி அவ ரொம்ப எமார்ந்து போயிட்டா டா. … என்று கொஞ்சம் உண்மையை உளறி விட்டான். 

மித்ரன் கோபாக அருகில் வந்து என்னடா சொல்ற அப்போ நீ டைம் பாஸ் என்று சொல்ல வரும் நேரம்…

இன்பா” டேய் அவ my girl டா” “அவ என்னோட எல்லாம்” இப்படி சொல்லிட்ட என்று அவன் கோபம் கொண்டான்.

மித்ரன் அவன் அருகில் வந்து அப்போ ஒழுங்கா சொல்லு இல்ல கொன்றுவேன் என் தங்கையை என்று சொல்லி மித்ரன் அவனுடைய பிஸ்டல் எடுத்து இன்பாவின் நெற்றி பொட்டில் வைத்தான்.

இன்பா எதுவும் செய்யவில்லை அவனை பார்த்து சிரித்து விட்டு லோட் பண்ணாத பிஸ்டல் வச்சு என்னை மிரட்ட வேண்டாம்.

“அப்போ சொல்லு முன்ன என்ன சொன்ன எக்ஸ்பிளைன் பண்ணு”

ம்ம் சொல்றேன் நீ முதலில் இந்த பிஸ்டலை எடு…

மித்ரன் அதை எடுத்ததும் இன்பா கூற ஆரம்பித்தான்.

“விவேகா வருண் தங்கச்சி அப்டின்னு எனக்கு முன்னாடியே தெரியும் டா”

இதை கேட்டு மித்ரன் அதிர்ச்சியாகி பார்த்தான்.

தொடரும்… 

 Episode 110,

“விவேகா  தான் வருண் தங்கச்சி அப்டின்னு எனக்கு முன்னாடியே தெரியும் டா”என்று இன்பா சொன்னதும் மித்ரன் அப்படியே உறைந்தான்.

இன்பா இப்போ என்ன சொன்ன!

“ஆல்ரெடி ஐ னோ திஸ் ” என்று சொல்ல மித்ரன் எழுந்து அங்கும் இங்கும் நடந்தவன் அவனை பார்க்க இன்பா இங்கு எதுவுமே நடக்க வில்லை என்பதை போல் போன் நோண்டி கொண்டு இருந்தான்.

இப்போது மித்ரன் பொறுமை காற்றில் பறக்க டேய் தயவு செய்து சொல்லு டா எப்போ எப்படி தெரியும் எனக்கு மண்டைய பிச்சுக்கணும் போல் இருக்கு நீ என் கூட தானே இருந்த இது எப்படி டா நடந்தது.

இன்பா சிரித்து கொண்டே கூற ஆரம்பித்தான். மச்சி விவேகா என்னை ஏமாற்றனும் அப்டின்னு என் கிட்ட சொல்லாம மறைச்சு இருந்தா டா, சரி நானும் அவ இவளோ தூரம் என் கிட்ட இருந்து மறைக்க எஃபாட் போட்டது ஏன் நான் கெடுக்கணும் அப்டின்னு தான் நானும் தெரியாத மாறியே நடிச்சேன். அவ மனசுல இந்த நிமிடம் சொல்லாம இரிந்ததுக்கு ஃபீல் பண்ணிக்கிட்டூ இருப்பா..

விவேகாவோட கையில் இந்த கேம் கொடுத்து விட்டேன். இதோ ஸ்டில் இப்போ கூட அவ என் கிட்ட இருந்து மறைத்த மாதிரியே காட்டிக்கிட்டேன் டா.. அப்புறம் அவ என்னை சமாதானம் பண்ணி அப்படி அப்படியே டெவலப் பண்ணி இப்போ தான் வொர்க் அவுட் ஆகிட்டு இருக்கா டா..

மித்ரன் இதை கேட்டு சரி எப்போ உனக்கு தெரியும் அதை சொல்லு டா.. 

அது epi 52 ல தான் தெரிய வந்தது. அவ ID card பார்த்தேன்.. காலேஜ் ல ஏற்கனவே அவளை கண்காணிக்க பஸ் ல கேமரா வச்சு இருந்தேன் டா. அதை விட ஒரு பியூட்டி என்னனா சரியா அவ என் கிட்ட இருந்து எதோ மறைக்க வெளியே பார்த்து கொண்டே பேசினாள். நான் அப்படியே யாரு அப்டின்னு பார்த்தேன் அங்கே என்னோட மாமி ரெண்டு பேரும் நடந்து போயிட்டு இருந்தாங்க மச்சி.

அது யாரு ரெண்டு மாமி? உனக்கு அவ தங்கை அப்டின்னா தேவகி மா எனக்கு மாமி அப்புறம் விவேகா அம்மா சாரி சாரி என்னோட ஆஃபீசியல் மாமி அவங்கள நான் பார்க்கல அப்டின்னு அவ நினைத்தாள் டா அன்னிக்கே நான் போய் வருண் பற்றி செக் பண்ணேன் அப்போ தான் தெரிஞ்சது விவேகா தான் வருண் தங்கை.. 

மித்ரன், அப்புறம் ஏன் டா வருண் கிட்ட ரொம்ப கடுமையாக நடந்துகிட்ட…

இன்பா சிரித்து கொண்டே எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே சீண்டனும் போல இருக்கு.. அண்ட் என் கிட்ட இருந்து மரைக்கணும் அப்டின்னு எல்லா தில்லாலகடி வேலையும் செஞ்சா மச்சி… நான் சும்மா விடுவேனா..

நீ என்ன பண்ண…

எனக்கு பனிஸ்மென்ட் தருகிறாள் டா.. நான் சும்மா விடுவேனா வருண வைத்து அவளுக்கு ஒரு 20 நாள் மெஸேஜ் அனுப்பினேன் டா…

மித்ரன் இதை கேட்டு அதிர்ச்சி ஆகி பார்த்தான்.

அதை சொல்லி அவ என் கிட்ட சண்டை போட முடியாமல் அப்படியே திணறி போயிட்டா மச்சி அவ கோபத்துல அவ்ளோ அழகு 

அப்புறம் என்னை கிரவுண்ட்ல வெயிட் பண்ண வச்சா டா…

மித்ரன், நீ என்ன பண்ண…

நான் சும்மா இருப்பேனா உடனே வரல நான் ஆதி வீட்டுக்கு வந்து விடுவேன் அப்டின்னு சொன்னேன்.அப்படியே பயந்துகிட்டு வந்தா மச்சி… 

ஆக மொத்தத்தில் அவ உன்னை ஏமாற்ற வில்லை நீ தான் அவளை ஏமாற்றி விட்ட…

இல்ல மச்சி அவ 20%என்னை சீட் பண்ணிட்டா மீதி நான் அவ்ளோ தான் டா.. 

மித்ரன்,நீயும் அவளும் என்னை ஏமாற்றி விட்டீர்கள். அப்படி தானே…

இன்பா, நானும் வெண்பா என் கிட்ட வந்து சொல்லுவா அப்டின்னு பார்த்தேன் டா ஆனால் இந்த விவேகா வெண்பாவை மிரட்டி வச்சு இருக்கா எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்.

ஒரு IPS ஆபீசர் சாதாரண இந்த விசயத்தில் போய் ஏமார்ந்து நின்றால் வருங்காலம் என்னை தப்பா பேசும் மச்சி…

மித்ரன்,மம் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை டா உனக்கே அவ டஃப் கொடுக்கிறாள் டா..

இல்ல மித்ரன் இதுக்கு நான் காரணம் இல்ல டா எல்லாம் விவேகா தான் மச்சி..

அப்புறம் இன்னொரு விஷயம் மச்சி..

ம்ம் சொல்லு கேட்கிறேன்.

இன்பா, பொண்ணுங்க கிட்ட நம்ப ஆண்பிள்ளையாகவும் இருக்கணும் அடிமையாவும் இருக்கணும் மச்சி அப்போ அப்போ நான் சொல்றத நோட்ஸ் எடுத்துக்கோ அப்போ தான் உனக்கு நாளைக்கு யூஸ் ஆகும்.

மித்ரன், எல்லாம் என்னோட நேரம் 

சரி வா உள்ளே போகலாம் என அவன் அழைக்க இன்பா, மித்ரன், இருவரும் உள்ளே சென்றனர்.

வருண் இன்பாவை பார்த்த அடுத்த நிமிடம் எழுந்து நிற்க… இன்பா அருகில் சென்று நான் உன்னை கடிச்சு முழுங்கி விடுற மாதிரி எதுக்கு இப்படி பார்க்கிற வருண்..

அவன் கை குட்டையில் முகத்தை துடைத்து கொண்டே இல்ல சார் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் போதே விவேகா மேலே அதிதிக்கு குடிக்க ஜுஸ் கொண்டு வந்தாள்.

இன்பா அவளை கண்டு கொள்ளாமல் என் பெயர் இன்பராகவன் நான் தான் வருண் கூட வேலை செய்கிறேன் மா… ம்ம் தெரியும் சார் என்று அதி சொல்ல 

மித்ரன், என்னமா சார் ன்னு சொல்ற அண்ணா சொல்லு…

அதி வருண் முகத்தை பார்க்க இன்பா, என்ன வருண் என்னோட தங்கையை ரொம்ப மிரட்டி வச்சு இருக்க போல 

இல்ல சார் என்று வருண் சொல்ல அதி உடனே அவன் கைகள் கோர்த்து கொண்டு இல்ல அண்ணா என்று அதி இன்பாவை அழைத்தாள்.

இன்பா, வருணிடம் அதிதி உனக்கு ரிலேஷனா!

ம்ம் ஆமா சார் என் மாமா பொன்னு… 

உடனே இன்பா ஒரு நிமிடம் விவேகாவை பார்த்து விட்டு 

இவளோ அழகான பொண்ணை எல்லாம் ரில்லேஷன் ல நீங்களே வளைச்சு வளைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்களுக்கு அழகான பொன்னு எப்படி கிடைக்கும் .

மித்ரன், டேய் கொஞ்சம் தூபம் அதிகமா இருக்கு என்று காதில் சொல்ல 

வருண் அவர்கள் பேசுவது புரியாமல் பார்க்க

இன்பா, இனி உங்க வீட்டு பொண்ணை கொஞ்சம் வெளிய கட்டி கொடுங்க… 

வருணுக்கு அதிர்சி மேல் அதிற்சி இன்பா நீண்ட தொடராக நீளமான வரிகளை பேசுவது இப்போது தான் முதல் முறை கேட்கிறான்.

 இன்பா,அதிதி…

ம்ம் சொல்லுங்க அண்ணா…

வருண் என் கிட்ட ஒரே நாள் தான் லீவு போதும் அடுத்த நாளே டியூட்டி ல ஜாயின் பண்றேன்னு சொல்றான். உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண அவனுக்கு பிடிக்கல போல

இதை கேட்டதும் விவேகா இன்பாவை முறைக்க வருண் பாவமாக பார்த்தான்.

வருண், சார் நான் நீங்க தானே ஜாயின் பண்ண சொன்னிங்க..

இன்பா, நான் உன்னை டெஸ்ட் பண்ணேன் ஆனா நீ அதிதிக்காக கொஞ்சம் கூட என் கிட்ட ஆர்குயூ  பண்ணவே இல்ல என்று சொல்ல அதி வருண முறைத்து அவன் கைகளில் இருந்து உருவி கொண்டாள். வருண் பாவமாக பார்த்தான். 

இன்பா இதை பார்த்து சிரித்து விட்டு அதி நீ கோபப்பட வேண்டாம் மா நான் பார்த்து கொள்கிறேன்.உன்னை கொஞ்சம் சீண்டி பார்க்க தான் அப்படி சொன்னேன். 

என்று சொல்லி உங்க மேரேஜ் கிஃப்ட் இங்கே நான் இருக்கும் கோட்ரேஸ் ல தான் உனக்கு அலாட் பண்ணி இருக்கு நீங்க ரெண்டு பேரும் அங்கே ஷிஃப்ட் ஆகிக்கொங்க… அண்ட் ஆண்ட்டியும் உன்னோட தங்கை ஹஹ ஹான் அவ பேரு என்ன?

மித்ரன் டேய் இப்படி ஒரு நடிப்பு நான் பார்த்ததே இல்லை டா என வியந்து இன்பாவை பார்த்தான்.

விவேகா இன்பாவை முறைத்து பார்த்தாள்.

வருண், சார் என் தங்கை பெயர் விவேகா, சரியா உங்களுக்கு நீங்க கேட்ட ஃபைல் எடுத்து கொடுத்தாலே இதோ இவ தான் என்று காட்டினான். 

உன் தங்கை பேச மாட்டாளா ரொம்ப அமைதி போல..

அதிதி, இல்ல அண்ணா நீங்க புதுசா இருக்கிங்க அப்டின்னு இந்த பவியம் சரியான வாயாடி.. 

இன்பா, இல்ல இந்த பொண்ணை நான் ஒரு தடவை கூட இந்த கோட்ரஸ்ல பார்த்ததே இல்லை… 

விவேகா, இன்பாவை கண்களில் மிரட்டி அமைதியாக இருக்க சொன்னாள்.

ம்ம் சரி அதை விடு வருண் டேக் இட் என்று இருவரிடமும் மோதிர பெட்டி நீட்டினான்.

வருண், சார் இதெல்லாம் எதுக்கு வேண்டாம் சார்…

இன்பா, அதி வாங்கி வருண் கையிள் போட்டு விடு நான் கொடுத்தா வாங்கிப்பியா! மாட்டியா!

அதிதி திறுதிருவென முழித்தாள். இன்பா, வெறும் வாய் மொழியாக தான் அண்ணான்னு சொன்னியா மா இதை கேட்டதும் அதிதி உடனே இன்பா கொடுத்த பெட்டியை வாங்கி திறந்தாள்.

அந்த மோதிரத்தை பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்து போனது அதில் அவள் பெயரின் முதல் எழுத்து இந்த கால மாடலில் இருக்க ரசித்து பார்த்தாள்.

இன்பா, வருண் மம் வாங்கு சீக்கிரம் அதிதி விரலில் போட்டு விடு…

வருண் பயந்து கொண்டே வாங்கி அதிதி விரலில் போட்டு விட்டான். விவேகா சந்தோசமாக இதை பார்த்து கொண்டே இன்பாவை ஒரு பார்வை பார்க்க இன்பா அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டிட விவேகா பொய் கோபம் கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.

அதிதி சந்தோஷமாக அண்ணா ரொம்ப தேங்க்ஸ் நீங்க என் மாமா மேலே எவ்ளோ மரியாதை மதிப்பு வச்சு இருக்கிங்க அப்டின்னு எனக்கு தெரியுது.

அதிதி, ஹே விவேகா இவங்கள சாப்பிட கூட்டி போ என்று அதட்ட…

விவேகா, என்ன மரியாதை குறையுது என் வீட்டுக்கு தான் வர போற டி நீ…

இன்பா, அது கவர்ன்மென்ட் கோட்ரேஸ் வருண்…

இதை கேட்டு அதிதி சிரித்தாள். அண்ணா சூப்பர் அண்ணா எங்க வீட்டில் இருக்கும் எல்லாரும் இவ பேசறது இவளோ ஏன் ஒரு முறை திம்மினால் கூட எவ்ளோ அழகு அப்டின்னு கொஞ்சிட்டு இருப்பாங்க ஆனால் இப்போ தான் இவளை எப்படி சமாளிக்க போறோம் அப்டின்னு நெனைச்சேன். இப்போ இவளுக்கு உங்க பேச்சில் சரியான பதில் கொடுத்துடீங்க..

வருண் மனதில் இவரோட இன்னொரு முகம் தெரியாமல் எவ்ளோ ஜாலியாக பேசுரா அதி அவர் ஒரு டெர்ரா ஃபீஸ் டி என நினைத்து இதற்கும் மேல் பேச்சை வளர்க்காமல் 

வருண், சரி சரி நீங்க சாப்பிட போங்க சார், விவேகா கூட்டி போ…

தொடரும்….

 Episode 111,

வருண் விவேகாவிடம் இன்பா, மித்ரன் இருவரையும் சாப்பிட அழைத்து செல்லுமாறு சொல்ல அவள் அழைத்து சென்றாள்.

இன்பா, விவி பேபி.. 

விவேகா அவனை பார்த்து முறைக்க மித்ரன், மச்சி அவ செம்ம டென்ஷன் ல இருக்கா போலயே..

இன்பா, டார்ஜ்லிங் கொஞ்சம் மெதுவா நடை டி.. ராகவ் கொஞ்சம் வாய வச்சு கிட்டு அமைதியா வா எதுவும் திட்டி விடுவேன். 

இல்ல டி கொஞ்சம் தும்மி காட்டேன்… மித்ரன், விவேகா இருவரும் கேள்வியாக இன்பாவை பார்க்க..

 மித்ரன்,ஏன் டா..

இல்ல டா விவேகா தும்மினால் இன்னும் அழகா இருப்பா அப்டின்னு இப்போ தானே அதிதி சொன்னாங்க சோ அந்த அழகை நானும் ரசிக்கணும் தானே.. 

விவேகா இதை கேட்டு வெட்க முகம் கொண்டு ராகவ்… என்று அதட்டிட மித்ரன் அதே இடத்தில் நின்றான். டேய் என்னடா இப்படி பேசற இப்படி எல்லாம் உனக்கு பேச தெரியுமா இல்லை இதை வுட அதிக ரீல் ஓட்டி இருக்கியா..

இன்பா விவேகா வை பார்வையால் கொஞ்சம் சிவக்க வைத்து கொண்டே மச்சி இதை எல்லாம் கண்டுக்காத அங்க பாரு டா என் டார்ஜ்லிங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பொண்ணா மாறிகிட்டு வரா இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு மச்சி.. என்று அவன் காதுக்கு அருகில் இருவரும் பேசி கொண்டே போக ராஜ் அங்கு இருந்து கிளம்ப ரெடி ஆனவன் ஒரு நிமிடம் விவேகா விடம் பேசி விட்டு செல்லலாம் என்று அவள் இன்பா மித்ரன் இருவரையும் அழைத்து செல்வதை பார்த்து பின்னால் சென்றான்.

ராஜ் க்கு இண்பாவின் பின் பக்கம் மட்டுமே தெரிந்தது. மேலே சென்றதும் ராஜ், “விவேகுட்டி” என்று அழைக்க விவேகா திரும்பி பார்த்தாள். உடனே மித்ரன் இன்பா இருவரும் நின்றனர். அவர்கள் இருவரையும் கவனிக்காமல் ஆதி இருக்கிறானா என்று மட்டும் ஒரு நோட்டம் விட்டவன் அவன் அருகில் இல்லை என்று தெரிந்ததும். ராஜ், விவே அத்தான் கிளம்புறேன் செல்லம். நம்ப இன்னொரு நாள் பேசலாம் நான் உன்னை வீட்டுக்கு கூட்டி செல்கிறேன். சீக்கிரம் அம்மாவை சமாதானம் செய்து வீட்டை வருண் பேரில் மாற்றி விடுவேன். அதன் பிறகு நீ அத்தான் கூட வீட்டுக்கு வரனும் உன் கிட்ட மனசு விட்டு பேசணும்.. இப்படி அவன் சொன்னதும் இங்கே இன்பாவுக்கு அந்த இளகிய முகம் இருண்டு கடுமையாக மாரியது.

இன்பா இந்த குரலை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே என்று திரும்பி தேவராஜை பார்க்க விவேகா இன்பா வின் முக மாறுதலை கவனித்து விட்டு வேக வேகமாக மம் சரி அத்தான் . எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க.. என்று சொல்லி இன்பாவையும் மித்ரணையும் வாங்க சார் சாப்பிடலாம் என்று அழைக்க

உடனே இன்பா, டேய் அன்னிக்கு என்ன சொன்ன.. ராஜ், உனக்கு என்ன டா இங்கே வேலை… யாரு டா நீ எதுக்கு டா என் விவேகா பின்னாடி சுத்துர.. மித்ரன், டேய் என்ன ஓவரா பேசுற நீ யாரு டா.. 

ராஜ், நான் விவேகாவை என்று நிறுத்தி விவேகா என் மாமா பொன்னு.. நீங்க யாரு டா ஸ்லம் டாக் மாதிரி எங்கே வேனும்நாளும் வந்து விடுவீர்களா.. இன்பா தன் கைகளை மடக்கி கொண்டு அன்னிக்கி நான் இருந்த டென்ஷன் ல உன்னை என்னால கவனிக்க முடியல யாரு டா ஸ்லம் டாக்.. என்று ஒரு எட்டு முன்னால் போக விவேகா, சார் பிளீஸ் சண்டை வேண்டாம் இப்போ எதுக்கு கோபபடுறீங்க..அவர் பேசியது தப்பு தான் நான் அவருக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று விவேகா இன்பா விடம் இயல்பாக பேசிட ராஜ் அவள் பேசுவதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.

விவேகா கண்டவர்கள் கிட்ட எல்லாம் இப்படி உரிமை எடுத்து பேச கூடாது ஸ்ட்ரேசர் கிட்ட எல்லாம் இப்படி பேச கூடாது.  என்று ராஜ் சொல்ல இதை கேட்ட இன்பாவுக்கு மிகவும் கோபம் தலைக்கு ஏறியது. இன்பா, யாரு டா ஸ்டிரேஞ்சர் என்று விவேகாவை இடையோடு இழுத்து அருகில் நிற்க வைத்து கொண்டான்.உடனே விவேகா பிலீஸ் சார் விடுங்க… 

சரியாக அந்த நேரம் ஆதி இவர்கள் அருகில் வர விவேகா,  பிளீஸ் கையை எடு யாரும் பார்க்க போகிறார்கள் பிரச்சனை ஆகி விடும். என்று சொல்லி கொண்டே

ராஜ் கிட்ட விவேகா, அத்தான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீங்க எதுவும் தவறா நினைத்து கொள்ள வேண்டாம். இன்பா, ஹே என்னடி இவன் முன்னே இவனை பார்த்து எதுக்கு இப்போ பயப்படுர.. 

மித்ரன், மச்சி நீ ஒரு வார்த்தை சொல்லு அந்த spr கேஸ் ல இவனை பிடித்து விடுவோம் டா. .. ராஜ், டேய் அவ மேல் இருந்து கையை எடு டா! இல்ல உன்னை இப்போ என்ன செய்வேன் அப்டின்னு என்று சொல்லி கொண்டே  விவேகா யாரு இவன்? என்று இன்பாவின் சட்டையை பிடிக்க வர

ஆதி, டேய் நீ இன்னும் இங்கே இருந்து போகளையா.. ராஜ், டேய் என்னடா என்னை கேள்வி கேட்கிற விவேகா நான் இப்போவே அத்தை கிட்ட சொல்றேன். நான் யாரு தெரியுமா டா விவேகா என்னொடவ ஒழுங்கு மரியாதையா அவ மேல இருந்து கையை எடு டா என்று இன்பா வை அடிக்க முயற்சி செய்தான்.

ஆதியயும், இன்பாவையும்  சில வார்த்தகளை பேசி கொண்டே ராஜ் விவேகா வின் கைகளை பிடிக்க இன்பா, அவளை இடையொட அணைத்து பிடித்து இவ உன் மாமா பொன்னு தான் ஆனால் இவ எனக்கு சொந்தம் என்று அவர்கள் மூவரும் முன்னே விவேகாவின் நெற்றியில் முத்தம் பதித்தான். ராஜ்க்கு கோபம் தலைக்கேறியது டேய் எவ்ளோ தைரியம் டா என்று விவேகாவை அவனிடம் இருந்து பிரிக்க இன்பாவின் சட்டையை பிடித்து கொண்டான்.

விவேகா இதை கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை விவேகா சுற்றியும் பார்த்து கொண்டே என்ன பண்ற நீ  தள்ளி போ என்னை விடு..

இன்பா, டேய் அடி டா வா டா வந்து கை வச்சு பாரு..

ராஜ் டேய் ராஸ்கல் என்று இன்பாவை அடிக்க வர உடனே ஆதி, அது தான் அவரு சொல்லிட்டாரு தானே உனக்கு இங்கே எந்த வேலையும் இல்லை கொஞ்சம் கிளம்பு.. டேய் இதுக்கு நீயும் காரணமா அவளை கொடுமை பண்றீங்க விவேகா நீ அத்தான் கிட்ட வாடா.. நம்ப இவன் மேல கம்பிளைன்ட்   பண்ணுவோம்.. என்று விவேகா வின் கைகளை பிடித்து விட்டான். 

என் முன்னாடி அவளுக்கு முத்தம் கொடுக்க அவளை தொட நீ யாரு டா..

ஆதி அவன் பிடித்த கைகளை உடனே  தட்டி விட்டான். இன்பா விவேகாவின் கைகளை இறுக்கி பிடித்து கொண்டான்.டேய் அவ உன் கிட்ட சொன்னாளா அவளை யாரும் இங்கே வற்புறுத்தல நீ கல் அடி பட்டு தான் இந்த இடத்தை விட்டு போக போற..

மித்ரன், யாரு மேல மிஸ்டர் கம்பிளைன்ட் கொடுப்ப எங்க பெயர் தெரியணும் தானே சொல்றோம் கேட்டுக்கோ R. இன்ப ராகவன் IPS அப்டின்னு போய் எழுதி கொடு.. இந்த பெயரை கேட்டதும் ராஜ் அதிரிச்சி ஆகினான். 

என்ன டா சத்தத்தயே காணோம்.இத்தனை நாள் கோமாவில் இருந்தியா இல்லை இப்போ கோமாவுக்கு அனுப்பட்டுமா. போய் நீ யார் கிட்ட வேணுமோ கொடு என்று மித்ரன் சொல்ல ராஜ் அதற்கும் மேல் எதுவும் பேசாமல் இயலாமையோடு  அப்படியே நின்றான். விவேகா இன்பாவிடம் இருந்து விலக முயற்சி செய்து சோர்ந்து போனாள். 

இன்பா அவனை ஒரு ஆழ பார்வை பார்த்து விட்டு “she is mine”என்று சொல்லி அவளை பிடித்து கொண்டே நடந்தான். இன்பா அவன் முகத்தை பார்க்காமல்” இன்னோரு தடவை இவ கிட்ட நீ வந்து எதாவது தவறான எண்ணத்தில் பேசுவதை பார்த்தேன் நீ”என்று நிறுத்தி  அதுக்கு மேல சொல்ல மாட்டேன் செய்து காட்டுவேன் டா .. என்று சென்றவன் இப்போது ஆள் நடமாட்டம் கருதி அவளை விட உடனே அவள் இன்பாவை முறைத்து கொண்டே உள்ளே சென்று விட்டாள்.

ராஜ் மனதில் இன்ப ராகவன் உன்னை சும்மா விட மாட்டேன் டா.. ஆதி நீயும் தான்… போலீஸ்காரா உன்னை  அவ கூட சேர விட மாட்டேன் டா நீ யாரா இருந்தால் எனக்கு என்ன முத்தம் கொடுக்கிறாயா உன்னை நான் செய்து காட்டுகிறேன் டா முதலில் அவளை எனக்கு சொந்தமாக்கி அதன் பின் உங்களை பார்த்து கொல்கிரென். அது எந்த வழியா இருந்தாலும் சரி… 

இன்பா அவள் சென்றதும் அதே இடத்தில் சில நிமிடம் அப்படியே நின்றான். ஆதி இன்பா அருகில் வந்தான். ஆதி, சார் அவனுக்கு விவேகா மேல் ஒரு எண்ணம். இன்பா, அவனை நான் spr காலேஜ் பார்த்து இருக்கேன் க்ளோஸ் ரெலேஷனா.. ஆதி, சார் அவன் விவேகா அப்பாவோட அக்கா பையன். நல்ல பையன் தான் ஆனால் விவேகா மேல ரொம்ப என்று அவன் அதோடு நிறுத்தி கொள்ள இன்பா, “அதுக்கு தான் நான் இருக்கேன்”சரி வாங்க சார் உள்ளே போகலாம்.. நீ போ நான் வருகிறேன். மித்ரன், என்னடா விவேகாவுக்கு  ரொம்ப கம்பிடிசன் போல அவன் வேற ரொம்ப தீவிரமா இருக்கான் அவளை எதுவும் வம்பு செய்ய போயிட்டா..

இன்பா , இனி கொஞ்சம் அவளை பத்திரமா பார்த்துக்கணும் மச்சி.. மித்ரன், டேய் நீயும் சாதாரண ஆள் இல்லடா  இது தான் ஒரு சாக்கு அப்டின்னு உடனே  கிஸ் பண்ணிட்ட.. இன்பா, சிரித்து கொண்டே ஆதி மட்டும் இல்ல நான் லிப் லாக் பண்ணி இருப்பேன் மச்சி எனக்கு என்ன பயம்.. மித்ரன், டேய் நாங்க இருக்கும்போதே இவளோ செய்யுற அப்போ அவள் தனியா இருந்தா… இன்பா, மச்சி அவ உன் தங்கச்சி டா இத பத்தி எல்லாம் நீ கண்டுக்க கூடாது. மித்ரன், மம் நீ நடத்து நடத்து வா உள்ளே போகலாம்… 

இன்பா, மித்ரன் என்னை மட்டும் விட்டு அவ வேகமா உள்ளே போயிட்டா டா.. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற.. நீ போய் அவ கிட்ட நான் கொஞ்சம் கோபமா இருக்கேன்னு சொல்லு அவள வந்து கன்வின்ஸ் பண்ண அனுப்பி வை.. மித்ரன் , மம் எல்லாம் என் நேரம் என்று நினைத்து கொண்டே நின்று கொண்டு இருக்க.. டேய் போடா பசிக்குது அவ தான் ஊட்டி விட போறா… இதை கேட்டதும் மித்ரன்…!

தொடரும்….

 Episode 112,

விவேகா உள்ளே சென்றவள் ஒரு இடத்தில் நின்று கொண்டு நடுங்கும் கைகளை நெட்டி எடுத்து கொண்டே பதட்டத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தாள்.

ஆதி, விவேகா என்னாச்சு என்று கேட்டு கொண்டே அவன் வர.. விவேகா, என்னாச்சுன்னு கேட்கிற எனக்கு பயமா இருக்கு டா, ராஜ் அத்தான் போய் அம்மா கிட்ட சொல்லிட்டா என்ன பன்றது நான் அவ்ளோ தான் எல்லாருக்கும் தெரிந்து விடும் வசு மேம், அம்மா, வருண், தேவி அத்தை, மாமா எல்லார் கிட்டயும் அய்யோ நினைத்தாலே பயமா இருக்கு.. என்று அவள் கண்களில் கண்ணீர் வராத குறையாக சொல்லி கொண்டு இருக்க.. ஆதி, நீ கவலை பட வேண்டாம் இன்பா சார் பார்த்து கொள்வார் அவர் பேச்சை மட்டும் நீ கேளு டி..

அவன் அவனால் தான் இவளோ பிரச்னை நான் உண்டு என் வேலை உண்டு அப்டின்னு இருந்த என்னை இப்படி மாற்றி விட்டான்.என்று அவள் நினைத்து கொண்டு இருக்க.

ஆதி அமைதியாக எதோ சிந்தனையில் இருந்தான். 

டேய் என்ன யோசித்து கொண்டு இருக்க.. அது அது ஒன்னும் இல்ல டி.. இப்போ சொல்ல போறியா இல்லையா… ஹே சொல்லு டா என்று விவேகா உழுக்க உடனே ஆதி சிரித்து கொண்டே அது ஒன்னும் இல்லை விவேகா இன்பா சாரு.. அவனுக்கு என்ன.. ஆதி அவளை முறைக்க.. மம் எல்லாம் அவனால் தான் அய்யோ எனக்கு ஃபீவர் வர மாதிரி இருக்கு தொட்டு பாரு என்று அவள் கேட்க ஆதி கொஞ்சம் எட்ட நின்று விவேகா அவர் முத்தம் கொடுத்தால் உனக்கு ஃபீவர் வந்துடுச்சா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே பின்னால் வந்த வெண்பா, என்ன முத்தமா! விவேகா அதிர்ச்சியாகி ஆதியை அடிக்க போக உடனே வெண்பா ஹே என்ன மறைக்கிற என்ன முத்தம் என் கிட்ட சொல்லு.. விவேகா ஆதியை முறைக்க அவன் சிரித்தான். டேய் உன்னை சும்மா விட மாட்டேன். இவளுக்கு தெரிஞ்சா நான் கிழவி ஆகினதுக்கு அப்புறம் கூட சொல்லி கிண்டல் பண்ணுவா ஏன் டா இப்படி என்னை டார்ச்சர் பண்ற. எனக்கு லூஸ் மோஷன் வர மாதிரி இருக்கு.. 

வெண்பா, ஹே என்ன அங்கே ரகசியம் பேசறீங்க இப்போ சொல்ல போரிங்களா இல்ல நான் இன்பா அண்ணா கிட்ட போய் சொல்லட்டுமா. டேய் சொல்லு என்று அவள் கேட்க உடனே ஆதி, ஹே என்ன உன் இஷ்டத்துக்கு டேய் சொல்ற ஒழுங்கா என் பேர் சொல்லி கூப்பிடு.

அதெல்லாம் முடியாது போடா.. ஆதி, நீ டா சொன்னா நான் டி சொல்லட்டுமா.. விவேகா, டேய் கொஞ்சம் உங்க சண்டைய நிறுத்துங்க நான் போறேன். வெண்பா, அவ மட்டும் உன்னை டா சொல்றா.. ஆதி, அவ என் அத்தை பொன்னு, நீயும் அவளும் ஒன்னு இல்லை உனக்கு புரியுதா.. இதை கேட்டதும் வெண்பா முகம் கோபத்தில் சிவக்க.. விவேகா, சரி சரி சண்டை போடாதீங்க நீ பேசாமல் ஆதியை அண்ணா அப்டின்னு கூப்பிடு..நீ அவளை தங்கச்சி அப்டின்னு கூப்பிடு என்று சொல்லி ஆதியை பார்த்து ஒற்றை கண் அடிக்க வெண்பா, நீ அண்ணான்னு கூப்பிடு நான் ஏன் அண்ணான்னி சொல்லணும். விவேகா, நான் அவனை மாமா சொல்லணும் முறை தவறிடும் வெண்பா.. 

ஆதிக்கு மரியாதையா கூப்பிடற பொண்ணை தான் பிடிக்கும் அதுல நான் மட்டும் விலக்கு புரியுதா..வெண்பா அதற்கும் மேல் எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருக்க ஆதிக்கு அவளை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது. விவேகா, சரி சரி நான் உனக்கு பெர்மிஸ்சன் தரேன் நீ மட்டும் கூப்பிட்டுகோ..வெண்பா அவர்கள் இருவரையும் பார்த்து ஒன்னும் தேவை இல்லை இதுக்கு பின் விளைவு உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு இது உன்னோட டைம் நீ ஆடு டி என்னோட டைம் வரும் அப்போ வச்சுக்கறேன். விவேகா, யாரை வச்சுக்க போற.. ஹே என்று ஆதி சொல்ல வெண்பா இருவரையும் முறைத்து விட்டு அங்கு இருந்து சென்றாள். 

ஆதி, ஹே எதுக்கு டி அவளை ஓவரா கிண்டல் பண்ற.விவேகா, ஆதி யூ.. நீ இப்போ (வி) vi ல இருந்து (வெ) ve க்கு போயிட்டியா மம் போ போ.. என்று அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்க உடனே அங்கு மித்ரன் வந்தான். ஆதிக்கு மித்ரணை பார்த்து கொஞ்சம் பயம் அது போலிஷ் என்பதால் இல்ல இப்போது வெண்பாவின் அண்ணனாயிட்ரே.. ஒரு சிறு புன்னகை உதிர்த்து விட்டு அங்கு இருந்து நகர விவேகா அவன் கைகளை பிடித்து கொண்டாள். மித்ரன், க்கும்.. விவேகா, சொல்லுங்க சார்… உடனே அவன் இதெல்லாம் ரொம்ப ஓவர் விவேகா.. அவள் என்னாச்சு சார், உனக்கு அவன் மட்டும் ராகவ், நான்  உனக்கு சார் இதெல்லாம் ரொம்ப டூ மச் விவேகா அசடு புன்னகை சிந்தி ஆதியை பார்த்து கொண்டே இல்ல சார் நம்ப எல்லாம் இனிமே ஒன்னுக்குள் ஒன்னு இனி முறைப்படி பார்த்தால் நீங்க எனக்கு அண்ணா தான், இதை கேட்டதும் ஆதி அவளை கோபமாக முறைக்க, என்ன ஆதி இனி எனக்கு மித்ரன் சார் இனிமே அண்ணா அவரு வெண்பாவுக்கு அண்ணா இனி எனக்கும் அண்ணா சரி தானே.. 

மித்ரன் கொஞ்சம் குழப்பமாக பார்க்க விவேகா அதை சமாளிக்க அண்ணா வாங்க சாப்பிடலாம். உடனே அவன் இன்பா வரல மா.. விவேகா இப்போது கோபமாக என்னாச்சு.. மித்ரன், அவன் உன் மேல கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறான். விவேகா, அண்ணா அவர் செய்ததுக்கு நான்  தான் கோபமா இருக்கணும். மித்ரன் இதை கேட்டு சிரிக்க. அண்ணா! என்று கோபமாக பேசிட சரி சரி டென்ஷன் வேணாம். அவன் என் கிட்ட அப்படி சொல்ல சொன்னான் நீ வந்து கூப்பிட்டால் தான் வருவேன் அப்டின்னு விரப்பா நின்று கொண்டு இருக்கிறான். நீ போய் கூட்டி வா. விவேகா, அவனை ஸாரி அவரை எப்படி சமாளிக்க அப்டின்னு ஒன்னும் புரியல மூக்கு, தலை எல்லார்துக்கும் மேல கோவம் வருது. மித்ரன், நான் வசு ஆண்ட்டிக்கு போன் பண்றேன் நீ கேட்டு தெரிஞ்சுகோ.. இதை கேட்டதும் விவேகா பயத்தில் முகம் மாற மித்ரன் சரி சரி நான் சும்மா சொன்னேன். உன் கிட்ட அவன் கோபமா இருக்க மாதிரி நடிக்கிறான் மா சோ நீ கவலை பட வேண்டாம். நீ அந்த ப்பர்சன் பார்த்து பயப்பட வேண்டாம் இன்பா, நான்  எல்லாரும் இருக்கோம் சரியா.. சரி போய் அவனை கூட்டி வா… ஓவரா சீன் போடுவான் நீ சீக்கிரம் கூட்டி வா.. மம் சரி அண்ணா என்று அவள் ஆதி கைகளை விடாமல் இழுத்து செல்ல.. ஆதி கொஞ்சம் பதட்டம்  கொண்டு வர டேய் அப்படியே மித்ரன் அண்ணாவை பார்த்து பயப்படிற.. ஆதி, நான் ஒன்னும் இன்பா சார் இல்லையே அவர் உன்னை வருண் மாமா முன்னாடியே கிஸ் பண்ணுவாரு டி எனக்கு அவ்ளோ தைரியம் இல்ல பா.. ஆதி..!, சரி சரி நான் எதுவும் சொல்லல போ போய் உன் ஆளை கன்வின்ஸ் பண்ணு போ போ.. விவேகா, இவளோ அவசரமா என்னை போக சொல்ற நீ இப்போ உன் ஆளை கன்வின்ஸ் பண்ண போறியா.. ஆதி அவளை ஆச்சர்யமாக பார்க்க.. நாங்க எல்லாம் அப்போவே அப்படி.. ஆதி, ஹே எப்படி டி அவளை சமாதானம் பண்றது. விவேகா சிரித்து கொண்டே மம் அப்படி வா அது ரொம்ப சிம்பில் ஆதி இப்போ அவ ஓவர் போசசிவ் ல இருக்கா அதனால… ஆதி, அதனால..  விவேகா அவன் காதில் ஒரு விஷயம் சொல்ல உடனே அதை கேட்டு ஆதி சத்தியமா சான்ஸ் இல்ல டி, டேய் நான் சொல்றத செய் அவுட் புட் டக்கண்ணு வரும் போடா.. 

ஆதி விவேகா இருவரும் வெற்றி குறி கைகளில் காட்டி கொண்டு அவரவர் திசையில் சென்றனர். அவள் வர இன்பா மிகவும்  கோபமாக  இருப்பது போல் முகத்தை வைத்து கொண்டான். ராகவ்.. வா சாப்பிடலாம்.. அவன் எதுவும் பேசாமல் வேறு புறம் திரும்பி கொண்டு நிற்க.. ஹே ஓவர் சீன போடாத அப்புறம் நான் போயிடுவேன்.. அவன் முறைக்க ராகவ் இப்போ நீ வரல நான் ராஜ் அத்தான் என்று அவள் எதோ சொல்ல வர இதை கேட்டதும் இன்பா அவள் உதடுகளை கிள்ளி மம் இப்போ சொல்லு டி என்ன சொன்ன.. ராக ராகவ் ..என்று கஷ்ட பட்டு பேச.. அவள் கண்கள் கொஞ்சம் கண்ணீர் கோர்க்க அதை பார்த்து உடனே அவன்  விட ,ராஸ்கல் எனக்கு வலிக்குது உன்னை என்று அவள் அவன் மீசையை பிடித்து இழுக்க அவன் அப்படியே நின்றான். ஹே உனக்கு கோபம் வரல ..

விவேகாவை அவன் புறம் இழுத்து கொண்டு இதுக்கு முன்னாடி நீ பேசியது தான் ரொம்ப கோபம் வருது.. அவனை பார்த்தாலே எனக்கு அப்படியே சுட்டு தள்ளனும் போல இருக்கு.. நீ அவன் கிட்ட இனி பேசுவதை பார்த்தேன். இன்னிக்கு நெற்றியில் கொடுத்ததை அப்புறம் உதட்டில் கொடுத்து விடுவேன். விவேகா இதை கேட்டதும் வெட்கம் கோபம் இரண்டும் சேர்ந்து வர உனக்கு எதுக்கு இவளோ கோபம் எனக்கு பயமா இருக்கு ராகவ் அவர் போய் அண்ணா , அம்மா கிட்ட சொல்லி விடுவாரோ..

இன்பா, மம் சொல்லட்டும் இப்போவே நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம் அப்புறம் இன்னிக்கி இப்போவே டார்ஜ்லிங்க்கு பிளைட் புக் பண்றேன். விவேகா அவனை பார்த்து இது ரொம்ப முக்கியமா உனக்கு எப்போ பார்த்தாலும் இதே வேலை தான் இது தான் தோனுமா எனக்கு பயமா இருக்கு எங்க அம்மா, வருண் என்னை பிச்சு எடுத்து விடுவான். 

இன்பா, அவள் கைகளை வருடி கொண்டே அவன் போய் சொல்ல மாட்டான். விவேகா, எப்படி சொல்ற.. அவன் போய் சொன்னா அடுத்து உன்னை நான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்டின்னு அவ யோசித்து இருப்பான். அண்ட் அவன் உன் கிட்ட இனி பேச வருவான்  எப்படியும் நெருங்க பார்ப்பான் அவன் கிட்ட போய் பேசிட்டு இருக்காத இங்கே கொட்ராஸ் விட்டு வெளியே போக கூடாது. வீடு விட்டாள் காலேஜ் அப்படி இல்லன்னா காலேஜ் விட்டால் வீடு காட் இட்..உன்னை மட்டும் வெளியே எங்கேயாவது சுத்துறதை பார்த்தேன். அப்புறம் நீ வேற ஒரு இன்பாவை பார்க்க போற..

ஹே சரி சரி நான் இனி ராஜ் அத்தான் கிட்ட பேச மாட்டேன். ஹே நிறுத்து டி.. இப்போ என்னாச்சு..  அதென்ன அந்த ராஸ்கல் அவனை எப்படி கூப்பிடர இனி இந்த மாதிரி எல்லாம் என் முன்னாடி கூப்பிட்ட இனி அவன் உனக்கு ஸ்ட்ரேஞ்சர்  காட் இட் 

விவேகா, என்ன செய்வ?

இன்பா, உன்னை…

தொடரும்….

 Episode 113,

விவேகா தேவராஜை அத்தான் என்று அழைத்ததும் உடனே கோபம் கொண்ட இன்பா நீ இனி அவனை இப்படி சொல்ல கூடாது அவன் உனக்கு ஸ்ட்ரேஞ்சர் மைன்ட் இட்..  என்று சொல்ல உடனே விவேகா, நான் உனக்கு லவ் யூ சொன்னதை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம் நான் வேற வழி இல்லாமல் சொல்லி விட்டேன் சோ ஓவரா ரூல் பண்ணாத.. 

இன்பா சுற்றி தன் பார்வையை சுழல விட்டவன்.  அருகில் உள்ள அந்த அழகுக்காக வைக்கப்பட்ட ஒரு உயர சிலையின் பின்னால் அவளின் கைகளை இழுத்து வந்தான். அவளை சுவற்றுள் சாய்த்து அவள் கழுத்தை பிடித்து இப்போ என்ன டி சொன்ன.. விவேகா முறைத்து கொண்டே அட் அட்வான்டெஜ் என்று தலையை குனிந்து கொண்டே  சொல்ல..

இன்பா அவளை பார்த்து சிரித்து கொண்டே நீ  லவ் பண்ணிட்டு இல்லன்னு சொல்லும்போதே   உன்னை நான் சும்மா விடல இப்போ நீயா வந்து சொல்லி இருக்க இல்ல இல்ல   நான் சொல்ல வச்சேன் டி… இப்போ நீ சொல்லிட்டு இல்ல அப்டின்னு சொன்னா நான் உன்னை விட்டு விடுவேனா அது மட்டும் நடக்காது.

இனி என்ன மறைக்க இருக்கு நம்ப ரொம்ப நெருங்கி விட்டோம். வருண் கிட்ட நான் ஒரு வார்த்தை சொன்னா போதும். அதை விட மாமி அவங்களுக்கு என்னை பிடிக்கும் இப்போவே ஒரு வார்த்தை சொன்னா என்ன நடக்கும் தெரியும் தெரியுமா.. நானும் கொஞ்சம் குட்டி பொண்ணா இருக்கா படிசசு முடிச்சதுக்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம் அப்டின்னு நினைத்தால் நீ ரொம்ப ஓவரா போற.. சரி இல்லை டி…என்று இன்பா சொல்லி வேறு புறம் திரும்பி கொள்ள

விவேகா, பார்த்தியா பார்த்தியா நீ என்னை ரொம்ப ரூல் பண்ற, நீ ரொம்ப மோசம்.. என்னை கன்டிரால் பண்ற ஆனால் நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு சுத்துர…அந்த கவ்யாவும் நீயும் சேர்ந்து அவளை தூக்கி வந்த அதுக்கு நீ என் கிட்ட எக்ஸ்பிளைன் பண்ணயா.. எதோ ட்ரக் அப்டின்னு சொல்ற என்னால எப்படி உன்னை நம்ப முடியும் இதுல அந்த இனியாள் ஒரு பக்கம் இவளோ எற்றர் நீ வைத்து கொண்டு என்னை சொல்ற.. உங்க ஸ்டேடஸ் வேற நான் வேற இது செட் ஆகாது நாளைக்கு என்னால் என் அப்பா பேரு கெட்டு போக கூடாது.

இன்பா, இதுக்கு என்ன அர்த்தம் … விவேகா, எதுக்கு.. உங்க டாட் நேம் நான் டேமேஜ் பண்ணிடுவேன்.எப்படி டி இப்படி மர மண்டையா இருக்க எதை எதோடு இணைத்து பேசுற உனக்கு நிஜமா மூளை இருக்கா இல்ல களிமண் இருக்கா.. 

விவேகா, என்னை எப்படி பேச சொல்ற.. இன்பா, அந்த கவ்யா ஒரு சைக்கோ, இனியாள் அந்த பொண்ணு கொஞ்சம் ஓவர் எக்சைதிங் அவ்ளோ தான் ஒரு பையனால் ஒரு பொன்னு கிட்ட மட்டும் தான் உண்மையா உரிமையா இருக்க முடியும். அது எனக்கு நீ மட்டும் தான் டி .நீ நிமிடத்துக்கு நிமிடம் யோசித்து கொண்டு இருக்காதே. நான் காலையில் தான் அவ்ளோ உன் மேல் நான் எவ்ளோ உண்மையான அன்பு வைத்து இருக்கிறேன் அப்டின்னு சொன்னேன். ஆனால் நீ பேசி ஒரு ஒரு மணி நேரம் கூட ஆகல அதுக்குள் உடனே உன் மழுங்கி போன மூளை யில் கண்டத யோசித்து கடைசியில் பாரு போலிஷ்காரன் என்னை குற்றவாளி கூண்டில் என் மேல் நிறைய குற்றம் சுமத்தி  நிற்க வைத்து விட்ட இப்படியே உனக்கு விளக்கம் கொடுத்து கொடுத்து எனக்கு வயசு ஆகி விடும் டி…

விவேகா இதை கேட்டு கொண்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.

இன்பா, நீ இப்படியே எதுவும் பேசி கொண்டே இருந்த நான் பார்க்கும் வரைக்கும் பார்த்து விட்டு….  என்று நிறுத்தி அவளை பார்க்க..

விவேகா இப்போது கண்களில் கொஞ்சம் நீர் கோர்க்க என்னை விட்டு போய் விடுவாயா…இதை கேட்ட இன்பா அவளின் இடையை அவனை நோக்கி இழுத்து ஒட்டி கொண்டு ஒரு கை அவளின் இடையிலும் இன்னொரு கை அவள் முகத்திலும் இருக்க, அது மட்டும் நடக்காது. உன்னை மொத்தமா எடுத்து கொள்வேன் அதுக்கு அப்புறம் நீ என்னை விட்டு போறேன் அது இது அப்டின்னு இப்படி லூசு தானமா பேசிட்டு இருக்க மாட்ட என்று சொல்லி அவளை பார்க்க அவள் முகத்தில் வெட்கம் வந்து விட முகத்தை வேறு புறம் திருப்பி அவள் உதடுகளை மடித்து கடித்து கொண்டாள். அவன்  இரு புருவமும் தூக்கி என்ன டி உன்னை எடுத்துக்கவா…

இங்கே ஆதி வெண்பாவை தேடி கொண்டே வந்தான். அங்கே சதீஷ் வந்து இருந்தான். விவேகா ஆதிக்கு தெரியாமல் அவனை வர சொல்லி இருந்தாள். வெண்பா அவனிடம் பேசி கொண்டு இருக்க.. ஆதி, வெண்பா விவேகாவை பார்த்தியா என வேண்டும் என்றே கேட்க உடனே அவள் எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டு சதீஷ் உள்ளே போ நான் வருகிறேன் என்று சொல்ல அவன் ஆதியை பார்த்து  கொண்டு உள்ளே சென்றான். 

அவன் சென்றதும் வெண்பா அவனை முறைத்து விட்டு உள்ளே செல்ல ஆதி, ஹே ராட்சசி இப்போ எதுக்கு முறைக்கிர..  என்று கேட்க இதை கேட்டதும் வெண்பாவுக்கு உள்ளுக்குள் குதுகலம் ஆனாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் என்ன மிஸ்டர்  ஒழுங்கா என் பேர் சொல்லி கூப்பிடு.. சரி உன் பேர் சொல்லி கூப்பிட எனக்கு ஓகே தான் என் நீ இப்படி நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் நான் வேற ஆளுக்கு கொடுத்து விடுகிறேன்…

இதை கேட்டதும் வெண்பா திரும்பி அவனை பார்த்து ஹே என்ன வச்சு இருக்க.. அது எதுக்கு உங்களுக்கு உங்க வேலைய போய் பாருங்க நான் விவேகா கிட்ட சஜஸ்ட் பண்ணிட்டு கொடுத்து கொள்கிறேன். ஹே சொல்லு ஓவரா பண்ணாத.. ஆதி தன் தலையை கோதி கொண்டே அப்போ ராட்சசி ஓகே தானே.. அவள் இரு புருவமும் நெருக்கி  நீ முதலில் அது என்ன அப்டின்னு காட்டு அப்புறம் நான் சொல்கிறேன்… ஆதி விவேகா சொல்லி அவன் கைகளில் கொடுத்ததை நீட்டினான்.

வெண்பா அதை பார்த்து என்ன இது? இது சாக்லேட்.. அது தான் என்ன சாக்லேட்? ஆதி, உனக்கு இது என்ன சாக்லேட் அப்டின்னு தெரியாதா… எனக்கு தெரியும் எப்பவும் தேன் மிட்டாய்  அப்டின்னு லோடு லோடா வாங்கிட்டு அந்த விவேகாவுக்கும் வாங்கி கொடுத்து சுத்துவா இப்போ என்ன இது வாங்கி வந்து இருக்க… 

ஆதி, அவளை பார்த்து முதலில் இது என்னனு இதோட பேர் சொல்லு.. வெண்பா, இது ஆரஞ்சு மிட்டாய்.. மம் சரி தான் விவேகாவுக்கு இதை கொடுக்க முடியாது. அவ எப்பவும் என்னோட தேன் மிட்டாய்… வெண்பா, முகத்தை கடுப்பாக வைத்து கொண்டு சரி இப்போ என்ன சொல்ல வர ஆதி, இது சம்திங் ஸ்பெஷல்.. அவள் கொஞ்சம் கண்கள் மின்ன மம் அதுக்கு… ஆதி, அப்போ உனக்கு வேண்டாமா .. வெண்பா, உள்ளுக்குள் 1000 வாலா சரம் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தாலும் எனக்கு வேண்டாம்.. ஆதி, சரி அப்போ ஓகே நான் இதை இங்கே என் முறை பொண்ணுங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்று அவளை பார்க்க அவள் முறைத்து கொண்டு நின்றிந்தாள். ஆதி, வேண்டாம் வேண்டாம் ஹான் யாழினி இருக்காளே அவள் சரியா வருவா என்று எதோ சொல்ல வர வெண்பா அவன் அருகில் வந்து அந்த ஆரஞ்சு மிட்டாயை அவன் கைகளில் இருந்து பிடிங்கி கொண்டு கொன்றுவென் போடா என்று சொல்லி சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.அவள் சென்றதும் ஆதி விவேகா நீ நிஜமா தேன் மிட்டாய் தான் டி ராட்சஸி கன்வின்ஸ் ஆகிட்டா என்று நினைத்து கொண்டு தன் தலையை கோதி கொண்டே சிரித்து கொண்டு சென்று விட்டான்.

இன்பா, உனக்கு ஓகே வா என்று கேட்க உடனே விவேகா, உன்னை மித்ரன் அண்ணா வர சொன்னாங்க… இன்பா, ஹே விவேகா.. மம் சொல்லு என்று தலையை குனிது கொண்டே சொல்ல அவன் முகத்தை நிமர்த்தி கடைசியாக கேட்கிறேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கா இல்லையா..  இதை மட்டும் சொல்லிட்டு போடி… விவேகா எந்த தயக்கமும் இல்லாமல் ம்ம் இருக்கு நான் எதோ ஒரு மோட் ஸ்விங்ஸ்ல பேசிட்டேன்… அவன் நம்பலாமா..விவேகா சிரிது நேரம் யோசிக்க.. அது தானே பார்த்தேன் இங்கே என்று அவள் நெஞ்சில் கை வைத்து ராகவ் ராகவ் அப்டின்னு மட்டும் நினை.. விவேகா, மம் டன் ராகவ் வா போகலாம்.. பேபி நான் கொஞ்சம் டையாட் ஆகிட்டேன்.. அதுக்கு தான் இப்போ சாப்பிட போறோம் வா போகலாம்.. ஹே அதை விட ஒரு கிஸ் கொடு எனக்கு போஸ்ட்டை விட எனர்ஜியா இருக்கும். அது மட்டும் நடக்காது அடி வாங்க போற நீ வா போகலாம் என்று அவனை அழைத்து கொண்டு வந்தாள். 

விவேகா, அண்ணா நீங்க ரெண்டு பேரும் வாங்க  நான் முன்னே செல்கிறேன் என்று சொல்லி அவள் உள்ளே செல்ல அங்கு வருண் கூட போலீஸ் பயிற்சி மற்றும் இப்போது வேலை செய்யும் நண்பர் பட்டாளம் அனைவரும் இருக்க விவேகாவை பார்த்ததும் என்ன மா எப்போ வருண் சாப்பிட வர போறான் அவனுக்கு தான் நாங்க எல்லாம் வெயிட்டிங்.. அதில் ஒருவன் நீ ஒரு பையன் மாதிரி அப்டின்னு வருண் சொல்லி இருக்கான் ஆனால் உனக்கு பொன்னு கெட் ஆப் சூப்பர்..  உடனே அவளும் அவர்களோடு இணைந்து கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். சரியாக அந்த நேரம் இன்பா , மித்ரன் இருவரும் உள்ளே வர இன்பாவை பார்த்ததும் அந்த பட்டாளம் மொத்தமும் சத்தம் இன்றி உடனே எழுந்து நிற்க..

விவேகா என்னாச்சு உங்க எல்லாருக்கும் ஏன் இப்போ அமைதி ஆகி அட்டெண்சன்ல நிக்கிரீங்க…

தொடரும்….

 Episode 114,

விவேகா, இன்பா, இருவரும் மித்ரன் அருகே வந்ததும் நீங்கள் வாருங்கள் என்று சொல்லி அவள் முன்னே சென்றாள். 

மித்ரன், என்ன மச்சி ரொம்ப சமாதானம் பண்ணிட்டா போல, டேய் நீ வேற மறுபடியும் சண்டை நிமிசத்துக்கு நிமிடம் மாறுறா நான் தான் அவளை சமாதானம் பண்ணி கூட்டி வரேன்.. ரொம்ப கஷ்டம் மச்சி அவ எப்போ மிசஸ் இன்ப ராகவன் ஆகிராளோ அப்போ தான் நான் நிம்மதியா இருக்க முடியும்  என்று பேசி கொண்டே அவர்கள் சாப்பிடும் இடத்துக்கு வந்தனர். 

அங்கே வருண் தோழர்கள், காலேஜ் நண்பர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து விவேகா, ஆதி அவர்களுடன் பேசி கொண்டு இருக்க வெண்பா, மைதிலி, சிவா மூவரும் நின்று பார்த்து கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டனர். இன்பா, மித்ரன் இருவரும் உள்ளே வர அவர்கள் இருவரையும் பார்த்த அடுத்த நொடி வருண் கூட ஒன்றாக பயிற்சி இபோது வேறு ஸ்டேஷனில் வேலை செய்து கொண்டு இருக்கும் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நிற்க

 விவேகா, அனைவரும் சட்டென்று அமைதியாகி விட்டதை பார்த்து என்னாச்சு எல்லாம் ஏன் ஒரே நேரத்தில்  இப்படி அமைதியா இருக்கிங்க, எனக்கு இவளோ மரியாதை வேண்டாம் அது உங்க மனசுல இருந்தா போதும்…  என்று அவள் பக்கம் பக்கமாக வசனம் பேசிட, 

வெண்பா, ஹே அது உனக்கு இல்ல அங்கே பாரு என்று சொல்ல உடனே விவேகா திரும்பி பார்க்க அங்கு இன்பா மிடுக்காக ஆதிக்கமாக நடந்து வந்து கொண்டு இருந்தான். அதில் ஒருவன் திலிப், விஜயிடம் டேய் என்னடா இவரு வர மாட்டாரு அப்டின்னு நம்பி தானே இந்த வருண் பேச்சை கேட்டு வந்தோம்.. விஜய், கொஞ்சம் கம்முன்னு இரு டா சைலன்ட்டா மைன் டன் பண்ணிட்டு போயிடுவோம் மச்சி என்று அவர்களுக்குள் பேசி கொண்டனர்.

இன்பா இப்போது அருகில் வர உடனே அங்கு இருந்த காவலர் அனைவரும் அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சல்யூட் செய்தனர். இன்பா தன் கருப்பு நிற அந்த கூலேர்சை கலட்டி விட்டு மிகவும் அழுத்தமான குரலில் திஸ் ஸ் நாட் ஆபிசியல் மீட் ரைட்..  குழுவாக அனைவரும் யெஸ் சார்… என்று சொல்ல இன்பா அவர்களை பார்த்து முறைத்தான். சாரி சார் என்று மீண்டும் குழுவாக அவர்கள் சொல்லி விட மித்ரன், இன்பா விடு டா பாவம்… சந்தோஷ், திலீப் கிட்ட சீனியர் நம்ப நிலைமையே இப்படி இருக்கே வருண் எப்படி இருக்கானோ தெரியலையே இன்பா சார் அவன் மேல தான் எல்லா கண்ணும் வச்சு இருப்பாரு எப்போ பாரு  சும்மா சீண்டி கிட்டு இருப்பாரு … பவன்ராஜ், மச்சி இப்போ வருண் நம்ப சாரு dept சொல்லவே தேவை இல்லை என்று பேசி கொண்டு இருக்க விவேகா அமைதியாக ஒரு இடத்தில் நின்று கொண்டு அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.

இன்பா, என்னடா இவனுக வேற மொத்தமா இருக்கானுக என் பேபி கூட நான் எப்படி டைம் ஸ்பென்ட் பன்றது… மித்ரன், டேய் இது உனக்கே டூ மச் சா தெரியலையா டா நீ அவ கூட ஒட்டாத குறை மட்டும் தான் ரெண்டு பேரும் சேர்ந்து சீக்ரெட் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க நான் எவ்ளோ பாவம் அதுவும் என் கண் முன்னாடியே அதுவும் 90ஸ் கிட்ஸ் ஆ இருப்பது எவ்ளோ கொடுமை தெரியுமா டா.. இன்பா, மச்சி நானும் 90ஸ் தான்டா.. மித்ரன், உன்னை பார்த்தால் எனக்கு அப்படி தோணல மச்சி..  இன்பா தன் மீசையை முறுக்கி கொண்டே அதுக்கு கொஞ்சம் இல்ல நிறைய வொர்க் அவுட் பண்ணனும் மச்சி சரி இப்போ இதுக்கு ஒரு ஐடியா சொல்லு நீ எண்ணி இந்த ரெண்டு வருஷத்துக்குள்ள நீ அந்த விவேகா தோழி என் பேபி அவளை எப்படி ஹான் லிது வா… மித்ரன், டேய் அது லிதி டா ம்ம் அதே தான் அந்த கேர்ல் கூட நீ கமிட் ஆகி இன்னும் எண்ணி ஸாரி சாரி என்னாமல் ஒரு நாலு வருஷம் கழிச்சு எங்க தலைமையில் உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும் டா..  டேய் நாலு வருஷமா நான் 30+ ஆகி விடுவேன் டா… இன்பா , மச்சி அப்போ தான் வாழ்க்கை என் தேன் மிட்டாய் மாதிரி இனிக்கும் டா.. மித்ரன், அப்போ உனக்கு எப்போ கல்யாணம்.. இன்பா ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் மச்சி இப்போ கூட எனக்கு ஓகே தான்..  நீ மட்டும் இப்போ எனக்கு மட்டும் நாலு வருஷம் கழிச்சு ம்மம் நான் எல்லாம் என்னத்தை பண்ணி எப்படி என்ன செய்ய இன்பா, டேய் நல்லா யோசி நீ எப்படி உடனே கல்யாணம் பண்ண முடியும் வெண்பா இருக்கா, முதலில் உன் அண்ணா ஒருத்தன் இருக்கான் பாரு விவேகா ஜெராக்ஸ் சரவணன் அவனுக்கு முதலில் கல்யாணம் செய்து வைங்க டா.. ஆமா மச்சி நீ சொல்றது சரி தான் நான் எதுக்கு சண்ணியாசிய வாழணும் என்று இவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்க 

ஆதி,விவேகா போய் அவரை உட்கார சொல்லு டி.. நீ சொல்லு டா இது உன் அக்கா கல்யாணம்.. ஹே இது உன் அண்ணா கல்யாணம் , டேய் நான் மாப்பிள்ளை சைடு டா, ஹேய் மாப்பிள்ளையே இப்போ என் அக்கா சைடு போடி போய் அவரை கூப்பிடு..  ஆதி நீயும் வா நம்ப ரெண்டு பேரும் சேர்ந்தே கூப்பிடலாம் என்று அவர்கள் இருவரும் இன்பா அருகில் செல்ல மித்ரன், டேய் தங்கச்சி வருது டா.. இன்பா, ம்மம் வரட்டும் மச்சி…  வருண் தோழர்கள் அனைவரும் அப்படியே பார்த்து கொண்டு நின்றனர். இன்பா அவர்களை ஒரு பார்வை பார்த்து வொய் ஆல் ஆஃப் யூ ஸ்டேண்டிங்… இதை கேட்டதும் அனைவரும் எதுவும் சொல்லாமல் அமர்ந்து கொண்டனர்.

விவேகா அருகில் வந்து சார் சாப்பிட வாங்க இதோ இங்கே வந்து உட்காருங்கள்.. இன்பா விவேகா வை யாரோ எவரோ என்பது போல் அந்த கூலேர்ஸ் போட்டு கொண்டே பார்க்க மித்ரன், டேய் வாடா அழைப்பு வந்து விட்டது. ம்ம் போலாம் மித்ரன் என்று சொல்லி ஒரு அடி எடுத்து வைக்க விவேகா இன்பாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் டேய் முதலில் அந்த கண்ணாடிய கழட்டு டா..  இன்பா மித்ரனை பார்த்து மச்சி இந்த கண்ணாடி எனக்கு நல்லா இல்லையா டா, ரொம்ப கொஞ்சம் சீன் அதிகமா இருக்கு மச்சி… சரி சரி கலட்டி விடுகிறேன். மித்ரன் இதுவே நான் சொல்லி இருந்தால் நீ செய்து இருப்பியா..  கண்டிப்பா மாட்டேன் டா… மித்ரன்,  நீ அவ பின்னாடி ஒரு குட்டி பப்பி மாதிரி ஆகிட்ட மச்சி… டேய் இதெல்லாம் இப்பவே பழகிக்க டா பின்னாடி யூஸ் ஆகும்.. இதை கேட்டதும் மித்ரன் மைதிலியை ஒரு பார்வை பார்த்திட இன்பா, மச்சி சாப்பிடு டா இன்னும் பல எபிசோட் ல எனக்கு மட்டும் தான் ரொமான்ஸ் சீனு… அப்போ எனக்கு அது அவ கிட்ட தான் கேட்கணும்… மித்ரன், அவள நான் நம்புறேன் மச்சி… இன்பா, ஏன் டா மித்ரன், கட்டாயம் பிரீத்தி எனக்கு ஒரு நல்ல தரமான சீனு வச்சு இருக்கா draft ல 

இன்பா இப்போது அந்த இடத்தை ஒரு முறை பார்க்க அனைவரும் சாப்பிடாமல் இருந்தனர்.மித்ரன், ஏன் என்னாச்சு  இன்பா உங்களுக்கு எந்த பனிஸ்மெண்டும் கொடுக்கலயே இன்னும் சாப்பிடாமல் இருக்கிங்க… இன்பா, வாட் ஹப்பென்… விஜய், சார் வருண் வந்ததுக்கு அப்புறம் அவன் கூட சேர்ந்து சாப்பிட வெயிட் பண்றோம் சார்… இன்பா, அப்போ போய் வெளியே வெயிட் பண்ணுங்க இங்கே என்ன வெட்டி பேச்சு..  இதை சொன்னது தான் தாமதம் வேக வேகமாக அனைவரும் ஒரு சில நொடிகளில் காலி செய்து விட்டனர்.

இப்போது அங்கு இன்பா, மித்ரன் இருவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க மைதிலி, சிவா , வெண்பா, ஆதி மட்டும் இருந்தனர். மித்ரன், நீங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சசா.. வெண்பா, நான் மூணாவது ரவுண்டுக்கு ரெடி டா நீ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு.. நான் ஒன்னும் உன்னை கேட்கள டி உன் வேலைய பாரு..  ஹே போடா வந்துட்டான்.  என்று சொல்லி அருகில் உள்ள சாரை இழுத்து போட்டு அமர்ந்தாள்.

சிவா, மைதிலி இந்த இடம் நமக்கு செட்டு ஆகாது நான் போறேன் உடனே அவள் டேய் அண்ணா என்னை விட்டு போகாதே நானும் வருகிறேன் என்று சொல்லி அவள் மித்ரனை ஒரு பார்வை பார்க்க சரியாக அவனும் பார்த்து இரு புருவமும் தூக்க அவள் பயந்து கொண்டே அவனுடன் சென்று விட்டாள்.

விவேகா, சார் உங்களுக்கு  பிடிக்குமே இந்த மெது வடை, சட்னி சாப்பிடு என்று என்று சொல்லி அவள் பரிமாறிட அவனோ சுற்றம் மறந்து பேபி நீ ஒரு வாய் சாப்பிடு டி.. என்று ஊட்டி விட செல்ல மித்ரன், டேய் அநியாயம் பண்ணாத டா.. நீ ஒரு வாய் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் இல்ல இப்போவே எழுந்து போறேன்..  விவேகா சுற்றியும் பார்க்க ஆதி அவளை பார்த்து சிரித்து கொண்டே ஹே இதுக்கு தான் மெது வடை மெனுவில் வேனும்ன்னு சண்டை போட்டியா.. விவேகா, அப்படி இல்லையே எனக்கும் பிடிக்கும். ஆதி, நடிச்சது போதும் அவர் வேற பார்க்கிறார் நீ போ மா… இன்பா, விவேகா வா வந்து போட்டுக்கோ

 விவேகா, என்னை டென்ஷன் பண்ணாத ஒழுங்கா ஃபுல்லா சாப்பிட்டு எழுந்து போ… இப்போ நீ சாப்பிட மாட்ட.. மித்ரன் , விவேகா வாங்கிக்கோ இனி மறைக்க என்ன இருக்கு இவன் ஓவரா பண்றான்… அண்ணா அது வந்து என்று அவள் மழுப்பிட வெண்பா, ஹேய் சீன் போடாத ஆ காட்டு என்று சொல்ல மித்ரன், வெண்பா அவன் பன்றானோ இல்லையோ ஆனால் நீ நல்லா பண்ற டி… வெண்பா, மித்ரன் உனக்கு வேணுமா சொல்லு ஊட்டி விட சொல்றேன்… 

யாரு அது? அவளோ ஓவரா கனவு காணாத அம்மாவை ஊட்டி விட சொல்லட்டுமா… 

அந்த நேரம் சதீஸ் விவேகாவை பார்க்க வந்தான்.விவேகா அப்போது சிரித்து கொண்டே அவர்களுக்கு அந்த பைன் ஆப்பிள் கேசரியை எடுத்து வைக்க,

சதீஸ்,டார்லிங் உன்னை காலையில் இருந்து ஒரு தடவை கூட பார்க்கவே முடியலையே.. இதை கேட்டதும் இன்பா விவேகாவை பார்க்க அவள்….?

தொடரும்….

Episode 115,

சதீஸ் மைதிலியிடம் விவேகாவை பார்த்தியா நான் இங்கே வந்ததில் இருந்து அவளை பார்க்கவே இல்லை மா… 

அவளோ, அவ சாப்பிடும் இடத்தில இருக்கா  ப்ரோ… அவ கொஞ்சம் வேலையா வெளிய போயிருந்தா இப்போ தான் வந்தா… 

சதீஸ், நீ கூட வரயா மா.. என்னாச்சு ப்ரோ.. இல்ல இங்கே எல்லாரும் உங்க dept பசங்க மட்டும் தான் இருக்காங்க விவேகா இன்வைட் பண்ண என்னோட dept ப்ரெண்ட்ஸ் இங்கே இன்னும் வரல எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. 

மைதிலி, இதுக்கு போய் ஃபீல் பண்ணாதீங்க ப்ரோ நான் வருகிறேன் என்று சொல்லி அவள் அவனை அழைத்து சென்றாள். 

இங்கே வெண்பா சொன்னதற்கு விவேகா, ஆதி இருவரும் சிரிக்க மித்ரன், நீ வீட்டுக்கு வாடி உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மைதிலி சதீஷ கூட்டி கொண்டு உள்ளே வந்தாள். 

அங்கே யார் இருக்கிறார்கள் என்று அவனுக்கு தெரிய வில்லை. என்ன டார்லிங் இன்னிக்கி காலையில் இருந்து ஒரு தடவை கூட உன்னை பார்க்க முடியல.. உன்னோட தரிசனம் இப்போ தான் கிடைத்து இருக்கிறது. இதை கேட்டதும் ஆதி, இன்பா இருவருக்குமே கோபம் வர இருவரும் விவேகாவை முறைத்தனர். விவேகா உடனே அவன் இன்பா அருகில் வராமல் இருக்க இவள் முன்னே சென்றாள். 

அவளோ சதீஷ் நான் இங்கே தான் இருக்கேன். எங்க அண்ணா வொட ஹயற் ஆபீசர் வந்து இருக்கிறார்கள். கொஞ்சம் வேலை அவங்கள கவனித்து கொண்டு இருக்கிறேன்… ம்ம் இட்ஸ் ஓகே டூ டே யூ லுக் கார்ஜீயஷ் இன்னிக்கி செம்மையா இருக்க அவ்வளவு தான் இந்த வார்த்தை கேட்டதும் இங்கே எரிமலை வெடிக்கும் நிலைக்கு தயார் ஆகி கொண்டு இருந்தது. 

விவேகா, போச்சு இவன் வேற நேரம் காலம் தெரியாமல் பேசி கொண்டு இருக்கானே.. என்று நினைத்து கொண்டு ஹே சதீஷ் நீ கீழ வெயிட் பண்றயா நான் வருகிறேன் எங்கே அபி, தீபக் எல்லாம் காணோம்… அவங்க யாரும் வரலயா… சதீஸ், டார்லிங் வந்த என்னை கவனிக்க மாட்டியா… இங்கே இன்பா இலையை மூடி வைக்க செல்ல ஆதி, சார் சார் சாப்பிடுங்க ,எல்லாம் அப்படியே இருக்கு என்னாச்சு.. 

இன்பா, போதும் என்ற ஒற்றை வார்த்தை சொல்லி எழுந்து கை கழுவும் இடம் சென்றான். அவன் செல்லும் போது காதில் சதீஷ் சொன்ன வார்த்தைகள் கேட்க ஒரு நிமிடம் நின்று பின் நடந்தான். 

சதீஸ் அப்படி என்ன தான் சொன்னான். டார்லிங் ரெண்டு மிஸ் ஆகுது கண்ணுக்கு கொஞ்சம் மை போட்டு இருக்கலாம். மைதிலி அப்போ இன்னொண்ரு அது திருஷ்டி பொட்டு மா என்று சொல்ல அவள் மனதில் செத்த டி விவேகா என்று தலையில் கை வைத்து பின் சதீஷ் போதும் போதும் நீ கீழ போ பிளீஸ் நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன்.. என்று கெஞ்சுவது போல் சொல்ல அவன் சிரித்து கொண்டே சென்று விட்டான். 

விவேகா வேக வேகமாக அவள் இன்பா அமர்ந்து இருந்த இடத்தை பார்க்க அங்கு மித்ரன் மட்டும் நன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். விவேகா அருகில் வந்து ஆதி எங்கே டா அவர்.. எரிக்கும் பார்வை  பார்த்து  முகத்தை திருப்பி கொள்ள.. அவள் மித்ரனடம் அண்ணா எங்கே அவர்? மித்ரன், உன்னோட அவர் ரொம்ப கோவமா சாப்பிடும் பொழுது பாதியிலேயே எழுந்து போய் விட்டான். ஐ திங்க் ஹேன்ட் வாஷ் பண்ண ரெஸ்ட் ரூம் போயிருக்கான். 

இதை கேட்டதும் விவேகா உடனே அருகில் உள்ள ரெஸ்ட் ரூம் பக்கம் போய் பார்க்க  அவன் ஹேன்ட் வாஷ் செய்து கொண்டு இருக்க ராகவ், என்னாச்சு பாதியிலேயே எழுந்து வந்துட்ட… அவன் எந்த பதிலும் சொல்லாமல் கைகளை தன் கை குட்டையில் துடைத்து கொண்டு உள்ளே செல்ல போக சுற்றியும் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை பால் பழம் மரு வீடு சடங்கு செய்ய மொத்த உறவுகளும் வருண் அதிதி இருக்கும் இடத்தில் இருந்தது. அவள் அருகில் சென்று இன்பாவின் கைகளை பிடிக்க அவன் வேகமாக தட்டி விட்டான். ஹே பிளீஸ் கோபப்பாடாத.. என்று சொல்ல அவன் அவளை தாண்டி உள்ளே செல்ல போக அவள் அவன் முன்னால் போய் நின்றாள். பிளீஸ் தள்ளி போங்க… ஹே சாரி என்று அவள் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அவன் பின்னால் ஒரு அடியை எடுத்து வைத்தான். பாரு டா இவளோ தூரம் ஆகி போச்சா இப்போ என்ன நடந்தது அப்டின்னு ips சாருக்கு இவளோ கோபம் ஓவரா பண்ண வேண்டாம். அவன் எதுவும் பேசாமல் வெளியே செல்ல பின்னால் திரும்பினான். 

விவேகா அவன் முன்னால் சென்று ராகவ் சாரி பிளீஸ் என்று அவனை அணைத்துக் கொள்ள அவளை தள்ளி நிறுத்தினான். ஹே என்ன ஓவரா பண்ற என்று சொல்லி அவன் முகத்தை பார்க்க அவன் வேறு புறம் திருப்பி கொண்டான்.விவேகா சட்டென்று அவன் உயர்த்துறுக்கு எட்டி அவன் இதழில் இதழ் பதித்தாள். சாரி ராகவ்.. லவ் யூ என்று சொல்லி அவள் ஒற்றி எடுத்து கொண்டே சொல்ல அவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் அதை வெளி காட்டி கொள்ளாமல் அவளை விலக்கி விட ஹே திஸ் ஸ் டூ மச் என்று சொல்லி இன்னும் அவனை நெருக்கி அவன் கைகளை எடுத்து அவள் மேல் போட்டு கொண்டு அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். 

பிளீஸ் லீவ் மீ.. இப்படி சொல்லாத எனக்கு கஷ்டமா இருக்கு.. உங்க வொர்க் பாருங்க விவேகா… உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும். என்று சொல்லி கொண்டே அவளை தள்ளி நிறுத்திட… அவள் கவலையான முகத்தில் என்னை மன்னிக்க மாட்டியா நான் என்ன பண்ணேன். அவன் ஒரு புன்னகையை உதிர்த்து நீங்க எதுவும் பண்ணல நான் போகனும் என்னை விடுங்க.. 

விவேகா, இப்போ எதுக்கு நீ என்னை ஸ்டிரேசர் மாதிரி ட்ரீட் பண்ற.. அவனோ நான் தான் உங்களுக்கு ஸ்டிரேசர் சோ என்னை விடுங்க நான் போகனும்..  இதை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க சிரிது நேரம் அமைதியாக இருந்தவன் இப்போது  அவளை பார்த்து என்னை விட உனக்கு எல்லாரும் முக்கியமா போயிட்டாங்க அப்படி தானே.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை… அப்போ எதுக்கு சர்வ் பண்ணும்போது பாதியிலேயே விட்டு போன… உனக்கு டேபிள் மேனர்ஸ் தெரியாதா…  என்னை விட அவங்க தான உனக்கு இம்போட்… என் கூட இருக்கும் போது எனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கணும்… எனக்கு பாதியில் விட்டு போரவங்கள எப்பவும் பிடிக்காது…. அந்த ரிலேசன்ஷிப் தேவை இல்லை டி.. எப்பாவது நான் உன் கூட இருக்கும் போது மற்ற விஷயத்துக்கு இம்போட் கொடுத்து இருக்கிறேனா… விவேகா இல்லை என்று இட வலமாக தலை அசைத்தாள்…. அப்போ யாரு தீவிரமா இருக்காங்க யாரு அலட்சியமா இருக்காங்க அப்டின்னு உனக்கே இப்போ தெரிஞ்சு இருக்கும்… எப்பாவது நான் உன் மேல சந்தேக பட்டு இருக்கேனா? இல்லை என்று அவள் சொல்ல அப்போ நீ தானே எல்லா தவறும் செய்யுற உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனால்  என் மேல் உனக்கு இல்ல…. 

விவேகா இதை கேட்டு அழுது விட்டாள். பொய் சொல்றது… ஏமாற்றுவது.. ரௌடி தனம் பண்றது…  அப்புறம் சந்தேகம் படுவது…இது தான் டி உனக்கு வேலை… இதை கேட்டதும் விவேகா அவனை விட்டு விலக முயற்சி செய்ய அவன் இப்போது அவளை விட வில்லை… அவளை அணைத்து இடையை வருடி கொண்டே அவள் கழுத்தில் முத்தம் பதித்து இனி சந்தேபடுவியா… விவேகா, மாட்டேன்… இன்னும் ரெண்டு நாள் கழிச்சு அக்காவுக்கு என்கேஜ்மென்ட் அப்போ அந்த ரெண்டு கேர்ல்சும் வருவாங்க.. அப்போ என்ன செய்வ… விவேகா அவன் நெஞ்சில் முட்டி கொண்டே வந்தால் வரட்டும்.. என்னோட ராகவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. இதை கேட்டதும் அவன் கன்னகுளி தெரிய சிரிக்க இப்போது விவேகா அவன நிமிர்ந்து பார்த்து இப்போ கோவம் போயிடுச்சா… இன்பா கொஞ்சம் முகத்தை கடுமையாக வைத்து கொண்டே” இல்ல”.. அவள் கண்கள் கொஞ்சம் ஏக்கமாக வைத்து கொண்டு அப்போ உன் கோபத்தை குறைக்க என்ன செய்யட்டும்.. இன்பா தீவிரமாக யோசித்து விட்டு அவளை பார்த்து ஒவ்வொரு முறையும் நான் தானே உன்னை கன்வின்ஸ் பண்றேன்… அதனால என்று அவள் கேட்க

 இந்த முறை நீ என்னை கன்வின்ஸ் பண்ணு… நீ  இன்னும் கன்வின்ஸ் ஆகளையா.. டெஃபனட்லி நாட்… விவேகா இல்லையா… ம்ம் அதை தானே சொன்னேன்.. சரி ஓகே உன்னை கன்வின்ஸ் பண்றேன். ஹே இந்த மெஸேஜ் அனுப்புவது இந்த வேலை எல்லாம் செஞ்சு வைக்காத..  விவேகா, அப்போ உனக்கு சமைத்து எடுத்து வரவா.. எதுக்கு என்னை தூங்க வைக்கவா… அப்போ என்ன தான் செய்யட்டும்… இன்பா, என் பேபி ரொம்ப கஷ்டப் பட்டால் என்னால தாங்க முடியாது அதனால… விவேகா சிரித்து கொண்டே அப்போ வேனாவா.. இல்ல வேணும்.. என்ன வேணும்.. ம்ம் காலையில எழுந்து காலேஜ் போரதுக்கு முன் ஒரு கிஸ்.. அப்புறம் ஈவ்னிங் ஒரு கிஸ் அப்புறம் தூங்க போரதுக்கு முன்னாடி ஒரு கிஸ் ஹக் இது எல்லாம் சரியா பண்ணு நான் யோசிக்கிறேன்.

இன்பா ஒவ்வொன்றும் சொல்ல சொல்ல விவேகாவின் முகம் மாறியது. அவள் முகத்தைப் பார்க்க “என்ன முடியாது அப்டின்னு சொல்ல போற அப்டி தானே ” வேண்டாம் விடு… அவள் கீழ குனிந்து கொண்டே இல்ல பரவாயில்லை நான் செய்யறேன்..  இதை கேட்ட இன்பா அவளை பார்க்க அவள் முகத்தில் கள்ளம் கபடம் இல்லாமல் பார்த்தாள். என்ன டி சொல்ற இதுக்கு எல்லாம் நீ ஒத்துக்க மாட்டியே.. ஆனால் ஒன்னும் மட்டும் வேண்டாம். என்ன அது…. நைட் எல்லாம் முடியாது. ஏன் அது மட்டும் வேண்டாம் பிளீஸ். இன்பா, இந்த சேன்ஜஸ் எப்படி வந்தது அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துவது போல எனக்குத் தோணுது உனக்கு நான் எதுவும் செய்ததே இல்ல உனக்காக நான் எதுவும் செய்வேன். 

இதை கேட்டதும் இன்பாவுக்கு எதையோ சாதித்தது போல தோன்றியது. சரி வா போகலாம். இன்பா, சரி இப்போவே ஸ்டார்ட் பண்ணு.. 

தொடரும்….

Episode 116,

இன்பா அவளிடம் இப்போவே ஸ்டார்ட் பண்ணு என்று சொல்ல விவேகா என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு வென முழித்தாள்.

அவளை பார்த்து அவன் சிரித்து கொண்டே அவ்ளோ கஷ்டம் வேண்டாம் எனக்கு தோணும் போது முத்தம் கொடு ஓகே வா.. அவளோ, அப்போ வேனாவா.. அப்போ என் டார்ஜ்லிங்க்கு முத்தம் வேணும் போல.. என்று அவன் சொன்னதும்  விவேகா அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். 

நாளைக்கு எனக்கு சமைத்து எடுத்து வா.. உனக்கு தூக்கம் வருமே.. அதை நான் பார்த்து கொள்கிறேன். அப்போ சரி வேற டிஷ் செஞ்சு கொண்டு வரட்டுமா. ம்ம் சரி என்று அவள் வெளியே செல்ல பேபி இப்போ ஐ வாண்ட் கிஸ் யூ டி.. விவேகா அவன் அருகில் வந்து நிற்க  இந்த விவேகா அவனுக்கு புதிது இன்பா சற்றும் தாமதிக்காமல் அவளின் இதழ்களை சிறை செய்தான். அவன் விழித்து பார்த்து முத்தம் கொடுக்க விவேகா கண்களை மூடி அவனுள் சொக்கி போனாள். இருவரும் மூச்சு முட்டி விலகிட அவளை இறுக்கி அணைத்து விட்டு பின் இருவரும் வெளியே வந்தனர். 

இன்பா, நேராக மித்ரன் அருகில் சென்று வாடா கிளம்பலாம்.. ரொம்ப சமாதானம் பண்ணிட்டா போல.. மம் ஆமா மச்சி இப்போ தான் அவ என் வழியில் வந்து இருக்கா டா.. விவேகா வெண்பா அருகில் போய் நின்று கொண்டாள். அனைவரும் சந்தோஷ மன நிலையில் கீழ வந்தனர். இன்பா, மித்ரன் இருவரும் நேராக செல்வம், கங்கா இருவரும் இருக்கும் இடத்துக்கு சென்றனர். 

கங்கா, இன்பாவை பார்த்து தம்பி அம்மா வரலயா.. இல்ல ஆண்ட்டி கொஞ்சம் வேலை.. சரி பரவாயில்லை உங்களுக்கு இங்கே எங்க கவனிப்பு பிடிச்சு இருக்கா திருப்தி தானே.. மித்ரன் இன்பா காதுகளில்  உங்க பொன்னையும் பிடிச்சு இருக்கு அப்டின்னு சொல்லு டா…. டேய் வாய ஷட் பண்ணு என்று சொல்லி இந்த வாரம் சன்டே நீங்க, வருண், அதிதி, வருண் தங்கை எல்லாரும் கட்டாயம் வீட்டுக்கு வரனும் அம்மா சொல்ல சொன்னாங்க..  

கங்கா, செல்வம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள இதுல என்ன ஆண்ட்டி உங்களுக்கு தயக்கம், என்னை அதிதி அண்ணாவா நினைத்து கொள்ளுங்கள். எங்க வீட்டுக்கு வர மாட்டின்களா…

இதை கேட்டதும் செல்வம் அப்படி இல்ல தம்பி உங்களுக்கு எதுக்கு சிரமம் நீங்க எவ்ளோ உதவி பண்ணி இருக்கீங்க.. இன்பா, என்னை நீங்க வெற ஆளாக பார்த்தால் தான் உங்களுக்கு அப்படி தோணும்.. மித்ரன், கங்காவிடம் அம்மா என்னை மாதிரி நினைத்து கொள்ளுங்கள்.. அவள் எதும் யோசிக்காமல் சிரித்த முகத்துடன் கட்டாயம் வருகிறோம் ஆனால் அடுத்த வாரம் வருகிறோம் சரியா தம்பி என்று இன்பாவிடம் சொல்ல அவன் சிரித்து கொண்டே என்னை பேர் சொல்லி கூப்பிடுங்கள்.. என்று சொல்லி அவர்கள் இருவரிடமும் கட்டாயம் சுபா நிச்ச்யத்துக்கு வர வேண்டும் என்று சொல்லி அங்கு இருந்து கிளம்பினர். 

விவேகா, ஆதி இருவரும் அவர்களை வாசல் வரை வந்து வழி அனுப்பி வைக்க வர ஹேய் அந்த பையன் யாரு? எந்த பையன்.. அது தான் டார்லிங்ன்னு சொல்ட்ரானே… அவனா அவன் வெண்பா கிளாஸ்.. உனக்கு எப்படி அவனை தெரியும்..

விவேகா, கொஞ்சம் கோபமாக எல்லாம் உன்னால் தான் டா.. நான் என்ன பண்ணேன்… ஒரு நாள் நீ கண்ணுக்கு மையிட்டுன்டு வர சொன்னியே அப்போ இருந்து ஒரு கேங்கா சேர்ந்து கிட்டு என் பின்னாடி சுத்துற அளவுக்கு என் கிட்ட என்ன இருக்கு அப்டின்னு தெரியல ஆனால் அவனுக எல்லாம் குட் சவுல் ராகவ் நல்ல பசங்க ஹெல்ப் அப்டின்னா உடனே ஓடி வர கூட்டம்..

இந்த காலத்தில் காலேஜ் ல சொல்லி கொடுக்குற வாத்தியார், டீச்சரை விட கூட படிக்கும் பசங்க தான் ஸ்கூல் காலேஜ் ல படிக்கும் பசங்க தான் பிள்ளைங்களுக்கு பாதுகாப்பு..

இன்பா, அப்போ என்னை கெட்டவன் அப்டின்னு சிம்பாலிக்கா சொல்ற…

விவேகா, ராகவ் நீ ஒன்னும் ஸ்டாஃப் இல்ல நீ போலீஸ் அதுவும் IPS… நீ பொதுவாக எல்லோரையும் சேர்த்து சொல்ல கூடாது. நல்ல டீச்சர், லேக்ச்சர்ஸ் எல்லாம் இருக்காங்க.அவன் அவளிடம் அன்னிக்கு அந்த இனியாள் என்ன சொன்னா.. விவேகா அதிர்சி ஆகி பார்க்க..நான் வரதுகுள்ள நீ ஏன் ரிமூவ் பண்ணிட்ட…

அவள் வேறு புறம் திரும்பி கொண்டு ஒன்னும் இல்ல ராகவ்… உடனே அவன் நின்றான். இப்போ சொல்ல போறியா இல்லையா…

விவேகா தன் உதடுகளை மடித்து கடித்து கொண்டு எனக்கு  எதற்கும் தகுதி இல்ல அப்படின்னு சொன்னா.. தெளிவா சொல்லு.. ஃபீஸ் கூட கட்ட முடியாத நான் உங்க காலேஜ்ல இருக்க பணக்கார பசங்கள என்று அவள் நிறுத்தி விட்டு ஒரு சில நொடிகள் கழித்து அவனை பார்க்க இன்பாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தான். 

இன்பா, அவ சொன்னது சரி தான்… விவேகா அவனை பார்த்து இப்போ என்ன சொல்ல வர அப்படி தான் நான் உன்னை மயக்கி.. என்று அவள் சொல்ல வருவதற்குள் அவன் அது அப்படி இல்ல டி என்னோட காலேஜ் ல எனக்கு பிடிச்ச பொண்ணை பார்த்து அவளை கட்டம் கட்டி வொர்க் அவுட் பண்ணி நான் மயக்கிட்டேன். விவேகா இதை கேட்டு அதிர்ச்சி ஆகி என்ன சொல்ற..

மம் அது தான் உண்மை நீ என்னை தேடி வரலயே நான் தான் உன்னை தேடி வந்தேன். நீ என்ன பண்ற எங்கே போற எல்லாம் எனக்கு தெரியும்.. அவள் எப்ட்.. நான் கிளாஸ் ல எப்பவும் உன்னை பார்க்க கேம் செட் பண்ணி இருக்கேன். பஸ் ல அதே போல் உன் dept ல ஒரு ஸ்டாப் கிட்ட சொல்லி வச்சு இருக்கேன்.

இதை கேட்டு விவேகா அதிர்சி அடந்து என்ன சொல்ற ராகவ் அவன் தன் தலையை கோதி விட்டபடி பின்ன நீ என்னோடவள் நான் பத்திரமா பார்த்துக்கணும் தானே யாராவது வந்து உன்னை தூக்கிட்டு போயிட்டா நான் என்ன பன்றது.

விவேகா ஆச்சர்யம் ஆகி இதெல்லாம் எப்போ பண்ண அப்போ கிளாஸ் ல கேம் இருக்கா நீ பொய் சொல்ற நான் நம்ப மாட்டேன் நீ டைம் பாசுக்கு தானே என் கூட சுத்துற என்னடி பொசுக்குண்ணு இப்படி சொல்லிட்ட என்று சொல்லி அவன் போனில் உள்ள பதிவுகளை அவளிடம் காட்டினான். விவேகாவால் இதை நம்ப முடியவில்லை. இது.. இது எப்போ எப்படி பண்ண.. அவள் மனதில் இன்பா வின் மேல் உள்ள காதல் இன்னும் அதிகம் ஆனது. இப்படி ஒருவனால் நேசிக்க முடியுமா என்று தோன்றியது. 

இன்பா, அவளை பார்த்து உன்னை காலேஜ் ல மீட் பண்ணி அதுக்கு அப்புறம் ஒன் மந்த் கழிச்சு உன்னை பார்த்த மூணாவது நாள் உனக்கு நியாபகம் இருக்க..

விவேகா, எனக்கா எனக்கெல்லாம் நியாபகம் இல்லை பா.. பொய் உடம்பு ஃபுல்லா பொய் அதை ஒரு நாள் கவனிச்சா சரி ஆகிடும் அப்புறம் இவளோ வாய் பேச மாட்ட.. விவேகா, ஹே நீ சொல்லு பேச்சை மாற்றாதே.. 

ம்ம் அன்னைக்கு அடுத்த நாளே வைத்து விட்டேன் அப்போ இருந்து எனக்கு எப்போ எல்லாம் டைம் கிடைக்குமோ அப்போ நீ என்ன பண்ற அப்டின்னு எடுத்து பார்ப்பேன். அதிகமா கிளாஸ் ல இருப்பது பார்க்க மாட்டேன். விவேகா, ஏன்…

அந்த ஆதி பெல்லோ கூட வாய் ஓயாமல் பேசி கிட்டு இருப்ப இதை கேட்டு விவேகா அசடு வழிய.. அவன் தொடர்ந்தான். பஸ் ல இருப்பது தான் பார்ப்பேன். நான் அதிகமா தூங்கிட்டு தான் வருவேன். இன்பா, அது நல்லா இருக்கும் டி நீயும் நானும் நீ அப்படியே என் நெஞ்சில் சாய்ந்து தூங்குவது போல நினைத்து  அதை பார்த்து கிட்டு உன்னை பற்றி தெரிந்து கொள்வேன்.

விவேகா, ராகவ் நீ சரியான கள்ள பூனை டா என் கிட்ட என்னை பார்க்க மாட்டேன் பேச மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு என்னோட ஒவ்வொரு அசைவையும் நோட் பண்ணி இருக்க இடியட்.. 

பின்ன சும்மாவா உனக்கு எவ்ளோ கடமை இருக்கு என்னோட future உன்கிட்ட தான் இருக்கு.. 

அண்ட் நீ என் கிட்ட இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. எல்லா இடத்துலயும் கேமரா வச்சு இருக்கேன். விவேகா இதை கேட்டு ஓகே பிக் பாஸ் என்று சொல்லி அது என்ன future? என்னோட நெக்ஸ்ட் ஜெனரேசன் உன் கிட்ட தானே இருக்கு.. விவேகா புரியாமல் என்ன சொல்ற ராகவ்.. இன்பா அவள் இடையை உரசி நாபியை யாருக்கும் தெரியாமல் ஒரே ஒரு முறை தொட..  விவேகா, ஹே என்னடா பண்ற நம்ம பக்கதில் ஆதி, மித்ரன் அண்ணா, வெண்பா எல்லாரும் இருக்காங்க.. 

இன்பா, பேபி இங்கே தான் என்னோட நெக்ஸ்ட் ஜெனரேசன் உருவாக போகுது டி என்று அவன் அவளின் வயிற்றை சுட்டி காட்டி சொல்ல விவேகா இதை கேட்டு வெட்கத்தில் சிவந்து பின் அதை மறைத்து கொண்டு ஒவரா பண்ணாத ராகவ் தள்ளி போ.. யாரு இருக்கா அவங்க எப்பவோ முன்னாடி போயிட்டாங்க டி… விவேகா ஒரு முறை அவளை சுற்றி பார்த்து கொண்டாள். அப்போது தான் தெரிந்தது அவர்கள் அவன் வண்டிக்கு அருகில் சென்று இருந்தனர். 

இன்பா ஒரு சிறு புன்னகை சிந்தி அவளை பார்த்து  அந்த இனியாள் அவளுக்கு உன் மேல ஜலஸ் டி அதனால தான் அப்படி சொல்லி இருக்கா…உனக்கும் எனக்கும் உள்ளதில் மற்றவர்கள் சொல்வதை உள்ளே எடுத்து கொள்ள கூடாது. இதனால தான் என்னை ஆவைட் பண்ணியா டி.. விவேகா, அப்படி இல்ல இது நடக்காது அப்டின்னு என் மனசு சொல்லுச்சு ஒரு வேளை நடக்காமல் போயிட்டா என்னால் தாங்க முடியாது. உங்க வீட்டில் உங்க அம்மா ஒரு வேளை வேணாம் அப்டின்னு சொல்லிட்டா. என்னை உங்க மாம்க்கு பிடிக்காமல் போயிட்டா நான் எது மேலயும் ஆசை வைத்தது கிடையாது. நான் உன் மேல என்று நிறுத்தி இப்போ நீ என்னோட பலவீனம் ஆகிட்ட ராகவ்..

தொடரும்… 

 Episode 117,

உங்க மாம் ஒத்துக்க மாட்டாங்க என்றும் நீ தான் என்னோட வீக்நஸ் என்று  விவேகா சொன்னதும் அதை கேட்ட இன்பா மெலிதாக சிரித்து கொண்டே அவன், பேபி நீ என்னை என்ன நினைக்கிறாய்.. நான் அம்மா பையன் தான் அதுக்காக எல்லா விஷயமும் என் அம்மா முடிவு எடுப்பதை தான் நான் கேட்பேன் அப்டின்னு நீ ஓவர் திங்க் பண்ணாத… 

விவேகா, அப்போ வசு மேம் அவங்கள எதிர்த்து நீ பேசுவியா..உன்னை என் மாமை பிளீஸ் மேம் சொல்லாத… 

நான் என் அம்மாவை எதிர்த்து பேச அவசியம் இல்லை டி.. ஏன்.. என் மாம் க்கு உன்னை ரொம்ப பிடிக்கும். முதலில் தைரியம் இல்லாதவன் லவ் பண்ண கூடாது டி எனக்கு தைரியம் இருக்கு உன்னை விட நான் உன் மேல மேட் லியா இருக்கேன் அதை விட என் மாம்க்கு ஈக்வலா நீ எனக்கு முக்கியம். என்னோட அம்மா தான் எனக்கு முதலில்… என்று அவன் சொல்லிட விவேகா, நான் உன்னை பிலீவ் பண்றேன் ராகவ் லவ் யூ என்று மனதில் இருந்து கூறினாள். 

பேபி நீ லவ் யூ சொல்லும்போது அப்படியே எனக்கு ஜிவ்வென்று இருக்கு டி என்று இன்பா சொல்லி கொண்டே அவளை ஒட்டி நடக்க.. டேய் தள்ளி போ இனி சொல்லவே மாட்டேன்.. இன்பா, அப்படி சொல்ல கூடாது பேபி நீ லவ் யூ சொல்லிட்டே இருக்கணும் ..  உன் குரலில் இருந்து அந்த வார்த்தை வரும்போது எனக்கு புது வெள்ளை மழை தான்… போதும் போதும் உன்னோட காதல் மழையிள் நான் ஆல்ரெடி நனைந்து விட்டேன் டா.. என்று இருவரும் பேசி ஒரு வழியாக வண்டியின் அருகில் வந்தனர். 

இன்பா அவள் காதுக்கு அருகில் பேபி செனட் ஆஃப் கிஸ் வேணும்.. விவேகா, உன்னை கொன்றுவென்.. அதை தான் எப்பொதும் கொண்ணு கிட்டு இருக்க நான் ஒவ்வொரு நிமிடமும் டேய் இடியட் போதும் டா உன் காதல் வசனம் என்று சொல்லி  சிரித்து விட்டு அவன் வண்டியுள் ஏறி அமர்ந்ததும். இருவரும் ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்க.. 

மித்ரன்,டேய் நம்ப உள்ளே போய் சாப்பிட்டு விட்டு எல்லார் கிட்டயும் பேசி விட்டு  வந்த டைம் அது ஒரு மணி நேரம் தான் ஆனால் இப்போ நீங்க ரெண்டு நடந்து  வந்தது எவ்ளோ நேரம் தெரியுமோ… அரை மணி நேரம் அந்த ஹாலில் இருந்து இந்த வண்டிக்கு ஒரு 5 நிமிடம் கூட இல்லை ஆனால் நீங்க அரை மணி நேரம் ஸ்பென்ட் பண்ணி இருக்கீங்க… 

வெண்பா, நீ வேஸ்ட் மித்ரன் இது எல்லாம் ஒரு லேசன் மாதிரி டா இதுவே நானா இருந்தால் என்னோட ஆள் கூட மதியம் வரை நடந்து வருவேன் டா.. என்று ஆதியை ஓர கண்ணால் பார்க்க அவன் வேறு புரம் திரும்பி கொண்டான்.

மித்ரன், கஷ்டம் டி உன்னை கல்யாணம் பண்ண போறவன் சுசைட் பண்றதுக்கு சமம் நான் முன்னவே அலாட் பண்ணிடுவேன். 

வெண்பா, என்ன அவனை மிரட்டி வைப்பியா என்னை நல்லா பாத்துக்க சொல்லி 

மித்ரன், நான் அவனை பத்திரமா இருக்க சொல்லுவேன் யார் அந்த துரதிஷ்டசாலின்னு தெரியல அவன் ஒரு மடையனா தான் இருப்பான். உன் வாய் ஒரு காவாய் டி.. 

இதை கேட்டதும் ஆதி சிரித்து விட வெண்பா, உன்னை ஒரு ஆன்டி கூட திரும்பி பார்க்காது டா.. நீ கடைசி வரைக்கும் இப்படியே தான் சுத்துவ…

மித்ரன், உன் சாபம் சத்தியமா பலிக்காது.. அதானல் எனக்கு கவலை இல்ல போடி…என்று சொல்லி டேய் கொஞ்சம் இங்கே இன்னொரு உலகம் இருக்கு அங்க கொஞ்சம் மனுசங்க இருக்காங்க சோ கொஞ்சம் உங்க உலகத்தில் இருந்து வெளியே வா டா..  

இப்போது இருவரும் இயல்பு நிலைக்கு வந்த உடன் அண்ணா போயிட்டு வாங்க என்று விவேகா மித்ரணிடம் சொல்ல 

மித்ரன், இப்போ தான் இந்த அண்ணா உனக்கு கண்ணுக்கு தெரிந்தனா… உடனே

இன்பா, டேய் என்ன இங்கே வெட்டி பேச்சு டைம் ஆகுது வா போகலாம்.. இவளோ நேரம் சாரு என்ன பண்ணிங்க…  என் பேபி முன்னாடி அவமான படுத்தாத அப்போ தான் உனக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்.. இதை கேட்டதும் மித்ரன் சரி மா நான் கிளம்புறேன் என்று சொல்லிட இன்பா விவேகாவை பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றான்.

அவன் சென்றதும் சுய நினைவுக்கு வந்த விவேகா இப்போது ஆதியை பார்க்க அவன் அவளை முறைத்து கொண்டே செல்ல வெண்பா சிரித்தாள். வெண்பா,  விவேகா என்னாச்சு உன் தேன் மிட்டாய் முறைத்து கொண்டு போறான். 

விவேகா, ஆதி செல்லம் என்னாச்சு என் மாமாவுக்கு.. இதை சொன்னதும் வெண்பா, ஹே என்னடி சொன்ன..  விவேகா, மாமா இதுல என்ன இருக்கு அது தானே முறை..  ஆதி, நான் உன் கிட்ட பேச மாட்டேன் டி போடி.. விவேகா, இப்போ பேசிட்ட டா… விவி டென்ஷன் பண்ணாம போயிடு… 

அவளோ இப்போ மட்டும் நீ என் கிட்ட பேசல அப்புறம் உன்னோட (ஆரஞ்சு மிட்டாய்) 6+5=11 விஷயத்தை இப்போவே அவ கிட்ட சொல்லிடுவேன் அப்புறம் அவ உன் கிட்ட பேசவே மாட்டா.. இதை கேட்டு ஆதி விவேகா உன்னை நீ அவர் கூட சேர்ந்து பிளாக் மெயில் பண்ண ஆரம்பித்து விட்ட டி… 

ஹே ராகவ எதும் சொல்லாத.. ஓ அந்த அளவுக்கு ஆகி போச்சா என்று ஆதிக்கு இப்போது இன்பாவின் மேல் அவள் உரிமையாக பேசுவது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிய விவேகா என் ஆதிக்கு என்னாச்சு உன் மேல எப்பவும் ஒரே கண்ணா இருக்கு டா நான் அம்மா கிட்ட சொல்லி சுற்றி போட சொல்லணும்.

என் ஆதி என்ற வார்த்தை அவனுக்கு கேட்க தேன் வந்து அவன் காதுகளில் பாயிந்தது. இதை கேட்டு கொண்டே அருகில் வந்த வெண்பா, உன் காதில் தேன் வந்து இப்போ பாயுந்து இருக்குமே… ஆதி அவளை ஆச்சரியமாக பார்க்க..எனக்கு தெரியும் டா உன்னை பற்றி மொத்தமும் ஐ நோ டா..

விவேகா, ஆதி கோபம் போயிடுச்சு தானே.. ஆதி எதும் பேசாம இருக்க … வெண்பா, ஹே அவனுக்கு நீ என்ன செய்தாலும் கோபமே வராது வந்து தொலைங்க ரெண்டு பேரும் எல்லாம் என் நேரம் எனக்கு பசிக்குது வாங்க சாப்பிடலாம்..  

விவேகா ஆதியிடம் டேய் இவ தான்டா உனக்கு சரியான பொருத்தம் நம்மை எவ்ளோ புரிந்து வைத்து இருக்கிறாள். பாரேன்.. ஆதி வெண்பாவை இப்போது காதலாக பாத்து ஆமா டி விவேகா  சரியான நல்ல ராட்சசி… விவேகா இப்போது வானத்தை பார்க்க.. 

ஆதி, என்ன டி மேல பார்க்குற.. அது ஒன்னும் இல்ல இந்த பக்கம் அதிகமா காதல் மழை ரெண்டு பேருக்கு மட்டும்  தலையில்  பொழியுது..இதை கேட்டதும் ஆதி அவள் காதை பிடித்து திருகிட டேய் வலிக்குது டா விடு டா என்று சொல்லி கொண்டே இருவரும் சண்டை போட்டு கொண்டே உள்ளே வந்தனர். 

வெண்பா, சரி வாங்க சாப்பிட போலாம்.. இதை கேட்டு விவேகா ஹே இது எத்தனாவது ரவுண்டு..  அவளோ அது உனக்கு எதுக்கு வா உங்க ரெண்டு பெரித்த்து கூட நான் சேர்ந்து சாப்பிட என்னோட வயிட்றில் கொஞ்சம் இடம் இருக்கு.. விவேகா, உன் கூட அவளுக்கு சாப்பிட ரொம்ப ஆசை படுறா.. அவனோ நீ என் கூட சாப்பிடணும் அதை விட்டு அந்த சதீஸ், அபி இந்த ராட்சஸி கிளாஸ் ல யாரு கூடயாவது நீ போன உன்னை… என்று அவன் நிறுத்தி விட

விவேகா, உன்னால் எதுவும் செய்ய முடியாது போடா… விவி என்னால் முடியாது ஆனால் நீ சுத்துவதை நான் இன்பா சாருக்கு ஒரே ஒரு விடியோ மட்டும் எடுத்து அனுப்பி விடுவேன் டி… இப்போ வசதி எப்படி என்று அவன் கேட்க இதை கேட்டதும் விவேகா நான் மாட்டேன் ப்பா அவன அப்புறம் என்னால சமாளிக்க முடியாது. என்று அவள் சொல்லி வெண்பா கூட மேலே செல்ல அங்கே வருண் கூட வேலை செய்யும் மொத்த கூட்டமும் இருக்க மிகவும் சந்தோஷமாக அவர்களுடன் இணைந்து கொண்டாள். 

இங்கே மித்ரன், டேய் நீயும் அவளும் அப்படி என்ன தான்டா பேசுவீங்க அவ்ளோ மெதுவா ரெண்டு பேரும் நடந்து வரீங்க… இன்பா தன் பார்வையை கூறாக்கி அது சீக்ரெட் மச்சி அது லவ் பன்றவங்களுக்கு மட்டும் தான் புரியும் அவ கூட பேசிட்டே இருக்கணும் போல இருக்கும் டா ஆனால்… 

மித்ரன்,  ஆனால் என்ன மச்சி… ஆனால் பேச ஒன்னும் இருக்காது டா ..  அப்புறம் என்ன பேசுவீங்க..  நிறைய பேசுவோம்.. உனக்கு இதெல்லாம் புரியாது மச்சி நீ லவ் பண்ணு… அப்புறம் தான் உனக்கு புரியும்… என்று இங்கே இருவரும் பேசி கொண்டே அவர்கள் வேலைக்கு வந்தனர். 

அடுத்த நான்கு நாட்கள் இன்பாவை அவன் அப்பா கட்டாய படுத்தி லீவு போட வைத்தார் என்று சொல்ல முடியாது அவனிடம் தன் பொண்ணின் நிச்ச்யத்திருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று ஒரு கம்பிளைன்ட் கொடுத்து அருகில் வைத்து கொண்டார். அவனுக்கு இந்த நிச்சயத்தில் பெரிய உடன்பாடு இல்லை சும்மா பெயருக்கு அங்கே போன் நோண்டி கொண்டும் சுற்றி கொண்டும் இருந்தான்.

சுபா கஷ்ட பட்டு சந்தோசமாக இருப்பது பொல் நன்றாகவே நடித்தாள். இதோ வசுமதியின் தங்கை குடும்பம் வந்து விட்டது அவனும் வந்து விட்டான். யார் அது? நம்ம அருண் தான்க.. அருண், சிபி (அருனின் அண்ணன்), வென்மதி, சக்ரவர்த்தி, வசுமதியின் அண்ணன் மதிவானன், சுரமஞ்சரி, அவர்களின் பெண் வருணி, இளவழகன், கிருஷ்ணன், பூம்பாவை,  என மொத்த குடும்பமும் வந்து சேர்ந்தது. 

ரவி, சுபாவிடம் ஏஞ்சல்… சொல்லுங்க டாடி.. இனி உன் தம்பி ராஜ்யம் தான்… ஏன் டாடி… அது தான் உன் அம்மாவோட மொத்த கோஸ்ட்டியும் வந்து விட்டதே.. ஏற்கனவே அவ தலைகணத்தில் தான் சுத்துவான் இப்போ சொல்லவே தேவை இல்ல… 

சுபா, டாடி மாம் உங்களை தான் பார்க்கிறார்கள்… 

ரவி, சரி நான் கொஞ்சம் பெர்பீர்ம் பண்னிட்டு வரேன்…

தொடரும்… 

இன்னிக்கு நீந்துகின்ற வெண்ணிலா ud பண்ணி இருக்கேன் drs அந்த story யாரு ஃபாலோ பண்றீங்கலோ போய் ரீட் பண்ணிட்டு கொஞ்சம் கமென்ட் பண்ணிடுங்க… drs.. 

 Episode 118

கிருஷ்ணன், பூம்பாவை என அனைவரும் வந்து இருக்க உடனே ரவி அவர்களிடம் பேச சென்றார். 

ரவி கைகளை குவித்து வணக்கம் மாமா, அத்தை என்று சொல்ல இருவரும் வணக்கம் மாப்பிள்ளை என்று சொல்லி இருவரும் நலம் விசாரித்தனர். 

கிருஷ்ணன், எங்கே நலன், தமயந்தியை காணோம்.. இனி தான் மாமா அம்மாவும் அப்பாவும்  வருவாங்க.. என்று சொல்ல சுபா சிரித்து கொண்டே அருகில் வந்தாள். 

வெண்மதி, மாமா எப்படி இருக்கிங்க… ம்ம் நாங்க எல்லாம் குட் வெண்மதி.. சிபி, அருண் என அனைவரும் பேசி கொண்டு இருக்க

மதிவானன், மாமா சுபாவை என் பையன் இழா வுக்கு நீங்க கொடுத்து இருக்கலாம்… யாருன்னு தெரியாத ஒருத்தருக்கு எதுக்கு கட்டி வைக்கனும்.

ரவி, எத்தனை நாள் தான் சொந்தத்தில் கல்யாணம் பன்றது மச்சான் கொஞ்சம் அசலில் கொடுக்கலாம் தானே… இதை கேட்டதும் இன்பா தன் அப்பாவை ஒரு பார்வை பார்த்தான். 

கிருஷ்ணன், சுபா குட்டிக்கு இதில் இஸ்டமா..இதை கேட்டதும் என் டாடிக்கு எது இஸ்டமோ எனக்கும் அது இஷ்டம்… என்று அவள் சொல்லிட  ரவி பெருமையாக தன் மகளை பார்த்து அவள் தலையில் முத்தமிட்டார்…. பின் என் பொன்னு நான் சொல்ற பேச்சை எப்பொதும் தட்ட மாட்டா..

கிருஷ்ணன், அது சரி தான் மாப்பிளை என் பொன்னு என் பேச்சை கேட்காமல் தான் அவள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது.. 

இதை கேட்டு இன்பா கன்னகுழி  தெரிய சிரித்திட உடனே ரவி முறைத்து விட்டு அதை என் அப்பா சொல்லணும் மாமா வீட்டோட மாப்பிள்ளையா போலீஸ் கோட்ரெஸ்க்கு ஜெயில் கைதியாக நானும் என் ஏஞ்சலும் இருக்கிறோம்.. 

இதை கேட்டதும் சட்டென்று கிருஷ்ணன் சிரித்து விட வசு முறைத்தாள். வெண்மதி, மாமா வசு உங்களை முறைக்கிறா..  நீங்க இவளோ பேசுவிங்களா..

ரவி, உன் புருசன் பேசறது இல்ல அவனுக்கும்  சேர்த்து நான் பேசிட்டு இருக்கேன். உன் புருசன் தான் லக்கி பெல்லோ..

வென்மதி சிரித்து கொண்டே எப்படி மாமா… இல்ல அவன் வரான் ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து வச்சு ஒரமா போய் செட்டில் ஆகி விடுகிறான்.அடுத்து சாப்பிடும் போது தான் திரும்ப அந்த பேப்பர் கீழ வைக்கிறான். உங்க அக்காவை ஒரு தடவை பார்த்த குத்தத்துக்கு லவ் பண்றேன் அப்டின்னு சொல்லி இல்ல என்னை சொல்ல வச்சு என் அம்மாவ அவள்  மயக்கி என்னை வீட்டோட மாப்பிளையாக கூட்டி வந்துட்டா..

வெண்மதி, இன்னும் எத்தனை காலத்துக்கு இதை சொல்லி ஏமாற்றுவீர்கள். நீங்க வசு பின்னாடி சுத்துனது எல்லாம் எங்களுக்கு தெரியும்… எங்க அப்பா, அம்மா கிட்ட பேசி மயக்கி என் அக்காவை கல்யாணம் பண்ணி இப்போ என்ன வாய் பேசுறீங்க.. 

ரவி, நீ மட்டும் ஒழுங்கா இவன் கிட்ட என்ன இருக்கு அப்டின்னு இவனை விரட்டி கல்யாணம் பண்ணி இருக்க

வெண்மதி, மாமா சரி சரி ரெண்டு பேருக்கும் சரியா போச்சு என்று அவர்கள் பேசி கொண்டு இருக்க இதை எல்லாம் இன்பா கேட்டு கொண்டு இருந்தான்.

மதிவாணன்,  நீ வசு சொன்னா வருனியை கல்யாணம் பண்ணிப்பியா ராகவ்.. இதை கேட்டதும் இன்பா, கிருஷ்ணன், பூம்பாவை, ரவி திகைத்து பார்த்தனர். 

வருணி, நான் இவனை கல்யாணம் பன்றதும் சுசைட் பன்றதும் ஒன்னு என்று தன் போனை நோண்டி கொண்டே சொல்லிட…

ரவி, இப்போ தான் வருணி எனக்கு தெரிஞ்சு சரியா பேசி இருக்க..

இன்பா, உடனே அந்த இடத்தை விட்டு கோபமாக செல்ல ராகவ் செல்லம் என்று பாவை, வசு, வெண்மதி மூவரும் சொல்லிட..

வசு, என் ராகவ்க்கு என்ன குறைச்சல் அவன் பார்க்க மாட்டானா அப்படின்னு எத்தனை பொண்ணுங்க லைன் ல நிக்குறாங்க தெரியுமா..

இன்பா, ஹே நீ எனக்கு வேண்டாம் போடி என்னோட கேர்ல்க்கு நீ செட் ஆக மாட்ட..  என்று அவன் சொல்லிட வசு அவன் தலையை கோதி கொண்டே

அண்ணா உன் பொண்ணுக்கு எல்லாம் என் பையனை கட்டி வைக்க மாட்டேன்.. 

ரவி, நீ கட்டி வைக்க தேவை இல்ல அவனே ஒரு பொண்ணோட வந்து நிற்க போறான்.. 

கிருஷ்ணன், ஆமா மாப்பிள்ளை பின்ன உங்க பையன் உங்களை மாதிரி தானே இருப்பான். இதை கேட்டதும் அதற்கு மேல் ரவி என்ன பேசுவது என்று தெரியாமல் வசுமதியை பார்க்க அவளும் ரவியை பார்த்தாள். 

சுபா, என் டாடியை யாரும் எதுவும் சொல்ல கூடாது. டாடி தமயந்தி வந்தாச்சு..

வசு, சுபா நீ சின்ன குழந்தை இல்ல எதுக்கு பாட்டியை பேர் சொல்லி கூப்பிடற..

ரவி, ஹே என் பேபியை எதும் சொல்லாதே …. என்று சொல்ல.. 

வசு, ராகவ் போய் தாத்தா, பாட்டி காலில் இப்போ போய் ஆசிர்வாதம் வாங்கு.. 

இன்பா, மாம் என்று சலித்து கொள்ள.. அடி வாங்க போற.. என்று அதட்டி அனுப்பி வைத்தாள். சுபா ஓடி சென்று அவள் தாத்தா பாட்டியை அணைத்து கொண்டாள். பின்னால் சந்திரநந்தினி ரவியின் செல்ல தங்கை வந்து தன் அண்ணனை கட்டி கொண்டாள். 

எப்பொழுதும் நந்தினி வசு இருவருக்கும் ஆகாது.. மரியாதை நிமித்தமாக வாங்க என்று அழைத்தாள்… நந்தினிக்கு பிரியா, பரத் என்ற மகள், மகள் இருக்கிறார்கள்…

இன்பா அம்மா சொன்னதற்காக ஒரு ஆசிர் வாதம் மட்டும் வாங்கி கொண்டு தனியாக போய் அமர்ந்து கொண்டான். விவேகாவின் புகை படங்கள் எடுத்து பார்த்து கொண்டு இருக்க அருகில் உள்ள சேரில் வருனி, சிபி இருவரும் வந்து அமர்ந்தனர். உடனே தன் போனில் இருந்து கவனத்தை எடுத்து விட்டு

இன்பா, சிபியிடம் எப்போ பாரின் ல இருந்து வந்த.. நான் வந்தது இருக்கட்டும் நீ என்று சிபி எதோ சொல்ல வர

வருனி, ஹே நீ அதிகமா காலேஜ் பக்கம் சுத்துரயாம் என்ன விஷயம் 

சிபி, மம் அதே கொஸ்டீன் தான் எனக்கும் என்ன விஷயம்.. 

இன்பா, அப்படி எல்லாம் இல்லையே.. 

வருணி, ஹே பொய் சொல்லாத உண்மைய சொல்லு.. 

இல்லன்னு சொன்ன நம்புங்க சிபி நீ கூட என்னை பிலீவ் பண்ண மாட்டியா.. இப்போ அம்மா தான் சேர்பர்சன் அதனால் தான்.. 

வருணி, எங்களை விட்டு நீ போய் தாத்தா, பாட்டியை எதுக்கு டா பார்த்த.. இப்போ என் கூட என் பாட்டி என் கிட்ட சரியா பேச மாட்டின்றாங்க.. 

இன்பா, அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.. இது எல்லாம் யாரு சொன்னா…என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அருண், நான் தான் சொன்னேன் ப்ரோ என்று அருகில் வந்து அமர்ந்தான். 

அருண், வருணி இவரால் என்னை தாத்தா எப்போ பார்த்தாலும் மிரட்டி கிட்டு இருக்காரு அப்பா கிட்ட என்னை பற்றி சொல்லி விடுவேன் அப்டின்னு மிரட்டுறார்… 

சிபி, சரி இனி அடிக்கடி மீட் பண்ண போறோம்.. அருண், மம் சரி தான் 

இன்பா, எப்படி என்று கேட்க சிபி, அருண் இருவரும் ஒரே நேரத்தில் நானும் காலேஜ் வர போறேன்.. 

வாட் என்று இன்பா அதிர.. 

சிபி – அருண் இருவரும் ஒரே நேரத்தில் நீ எதுக்கு வர போற.. 

டேய் நீ சொல்லு டா என்று இருவரும் சண்டை போட செல்ல.. 

இன்பா, ஸ்டாப் இட்

 எதுக்கு வர போற சிபி.. என்று இன்பா கேட்க

சிபி, நான் IT DEPT ல ஸ்டாப் ஆ ஜாயின் பண்ண போறேன்.. மாஸ்டர்ஸ் பண்ணதே ஜாயின் பண்ண தான்..  

இதை கேட்டதும் இன்பா முகத்தில் எந்த உண்ச்சியும் கண்டு பிடிக்க முடியவில்லை…

இன்பா,டேய் நீ எதுக்கு வர

அருண், நான் நம்ப காலேஜ் ல ஆல்ரெடி MBA ஜாயின் பண்ணிட்டேன் ப்ரோ… 

இன்பா, சிபி இருவரும் சேர்ந்து உனக்கு யாரு டா சீட் கொடுத்தது..  டேம் இட் என்று சொல்லி இருவரும் மாறி மாறி முகத்தை  பார்த்து கொள்ள 

அருண், என் மம்மி க்கும் அதில் ரைட்ஸ் இருக்கு.. 

சிபி, நான் அப்பா கிட்ட சொல்லி உன்னை மாஸ்டர்ஸ் பண்ண நியூஸிலாந்து அனுப்புறேன்.. 

இன்பா, சிபி யூ கிரேட் முதலில் அதை செய்.. 

வருனி, டேய் அது என் அண்ணாவோட காலேஜ் ஆள் ஆளுக்கு பங்கு போடுறீங்க..  என்று அவள் பேசி கொண்டு இருக்க உடனே இன்பா எழுந்து தன் தாத்தாவை பார்க்க சென்றான்.

வேறு எதற்கு அருண் காலேஜ் சேர்ந்தது பற்றி பேச தான்.. 

கிருஷ்ணன் நலன் கிட்ட பேசி கொண்டு இருக்க.. இன்பா வந்ததை பார்த்ததும் அவர் பேசிட வர உடனே இன்பா, நான் என் கிருஷ்ணன் தாத்தாவை பார்க்க வந்தேன்.. என்று சொல்லிட நலன் முகம் ஒரு நிமிடம் மாறி போனது. 

கிருஷ்ணன், ராகவ் ராஸ்கல் என்ன ஹேபிட் இது.. நலன், விடு கிருஷ்ணா இவனுக்கும் இவன் அப்பன் புத்தி குணம் தானே இருக்கும் என் சுபா குட்டி அப்படியே தமயந்தி மாதிரி என்று சொல்லி

 நலன், உன் தாத்தா கிட்ட பேசு நான் போறேன் என்று சொல்லி அவர் அந்த இடத்தை விட்டு கிளம்பினர். 

கிருஷ்ணன், ராகவ் நீ பண்றது சரி இல்லை உன்னை விட வயதில பெரியவர் கிட்ட இப்படி தான் பேசுவியா.. நீங்க அதை விடுங்க அவங்க அண்ட் நந்தினி அத்தை , டாட் இவங்க எல்லாம் எனக்கு அவங்க பன்றது எனக்கு டென்ஷன் ஆகுது..

டாட்க்கு நந்தினி அத்தை பண்றது எப்பவும் தப்பாவே தெரியாது ..

உங்களுக்கு மறந்து போச்சா.. சரவணனை எப்பிடி அவமான படுத்தினார்கள் அதை நான் கேட்டதற்கு  நந்தினி அத்தை என்னையும் மாம்மையும் பேசி அப்பாவுக்கும் மாம்க்கும் எவ்ளோ சண்டை வந்தது.

ஆனால் இவர் நந்தினி அத்தைக்கு தானே ஃபேவரா பேசினார். ஐ ஹேட் ஆல்.. என்று அவன் கோபத்தில் முகம் இன்னும் கடுமையாக ஆகிட 

கிருஷ்ணன், சரி சரி விடு என்ன வேணும் என்று கேட்க பின்னால் பாவை, ராகவ் சின்ன குட்டியை (விவேகா) இங்கே கூட்டி வரயா.. விவேகாவைப் பற்றி பேசியதும் உடனே இன்பாவின் முகத்தில் ஒரு சாந்தம் பரவுடை அதை பார்த்த கிருஷ்ணன், பதில் சொல்லு டா.. 

இன்பா, அவளை  வீட்டுக்கே போய் பார்க்கலாம்.. பாவை, வசு கிட்ட சொல்லிட்டியா.. இன்பா, இல்ல டார்ல்ஸ் அதை அப்புறம் சொல்லி கொள்ளலாம் இப்போ நீங்க சொன்னால் அவளை வீட்டில் போய் பார்க்க ஓகே வா..  

கிருஷ்ணன், என்ன ராகவ் இவளோ உறுதியா பேசுற அவ எங்கே இருக்கா.. 

இன்பா, நம்ப வீட்டில் தான்.. 

இருவரும் திகைத்து பார்க்க

 இன்பா, உங்களுக்கு சர்பிரைஸ் இருக்கு…

இங்கே கவ்யா இன்பாவை பற்றி மேலும் விசாரித்ததில் அவன் அதிகமாக காலேஜ் க்கு போய் வருவது தெரிய அடுத்து அவனை நெருங்கும் திட்டத்தை தயாராக்கி விட்டு  சந்தோஷ மன நிலையிள் சுபா –  வினய் நிச்சயத்துக்கு ரெடி ஆகி கொண்டு இருந்தாள்.

தொடரும்.. 

 Episode 119,

பாவை, நான் வசு கிட்ட சின்ன குட்டி பற்றி சொல்லட்டுமா ராகவ்… இன்பா, அதெல்லாம் வேண்டாம் டார்ல்ஸ் நான் பார்த்து கொள்கிறேன் அதற்கு முன் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருக்கு…

கிருஷ்ணன், வாட்… 

இன்பா, ஐ டோண்ட் டெல் யூ ஓல்ட் மேன்.. வாட் ஹப்பென் ராகவ்.. நீங்க எதுக்கு இப்படி செய்தீர்கள் என்னால் நம்ப முடியல… நான் என்ன ராகவ் செய்தேன்.. என்னாச்சு சொன்னால் தானே தெரியும். இன்பா, அந்த அருண் பெல்லோ நம்ப காலேஜ் ல MBA ஜாயின் பண்ணி இருக்கான். இதுக்கு என்ன அர்த்தம்.. 

கிருஷ்ணன், ஏன் உனக்கு தெரியாதா… என்று தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே கூறிட 

இன்பா, கோப பட்டு கொண்டே அங்கு இருந்து செல்ல போக அவர் சிரித்து கொண்டே டேய் ஸ்டாப் இட்.. ஐம் ஜஸ்ட் கிட்டிங்..விவேகா உன்னை தான் விரும்புகிறாள் இதை கேட்டதும்

அவன், அது எனக்கே தெரியும்..

அவர்,அவ கண்ணில் நான் பார்த்தேன் சோ உன்னை விட்டு அவ எங்கேயும் போக மாட்டா… 

பாவை, ஏன் ராகவ் நீ எப்போ பார்த்தாலும் அருண எதாவது சொல்லி கிட்டு இருக்க நம்ம வீட்டு கடை குட்டி அவன் தான்… 

இன்பா, அப்போ அவனை கொஞ்சு டார்ல் ஸ் இனி நான் உன்னை தேடி பார்க்க வர மாட்டேன் விவேகாவையும் கூட்டி வர மாட்டேன்.. 

கிருஷ்ணன், திஸ் டூ மச் யூ கிராஸ் யூர் லிமிட்.. டேய் அவ முகத்தை பாரு என் பொண்டாட்டிய எதுக்கு டா கஷ்ட படுத்துர.. 

இன்பா இப்போது இயல்பு நிலைக்கு வந்தவன்.. பாவையை அணைத்து அந்த அருண் உன்னோட செல்ல பேரன் விவேகா பின்னாடி சுத்துறான்.. இதுக்கு நான் என்ன பண்றது நீங்களே சொல்லுங்க…

எனக்கு கோவம் வருது இப்போது கூட உங்க ரெண்டு பேருக்கும் அவன் தானே முக்கியம்.. 

கிருஷ்ணன், ராகவ் சைல்டிஷா பிஹேவ் பண்ணாத.. நீ அவ மேல ரொம்ப தீவிரமா இருக்க இது கொஞ்சம் சரி இல்லை..

பாவை, நீ அருண் கிட்ட எடுத்து சொல்லு அப்படி இல்லனா நம்ப வசு  கிட்ட சொல்லலாம் ராகவ்.. டால் இது நீ நினைப்பது போல் சாதாரண விஷயம் இல்லை, அவ படிச்சிட்டு இருக்கா இப்போ போயி இதை சொன்னால் அந்த அருண் ஒரு வேஸ்ட் பெல்லோ..  விவேகாவுக்கு அம்மா மட்டும் தான்   என்னால் என் பேபிக்கு கஷ்டம் வர கூடாது. என்று அவன் சொல்லிட இருவரும் அவனை புரிந்து கொண்டனர்.

கிருஷ்ணன், தட்ஸ் குட் அவனால் ஒன்னும் பண்ண முடியாது விவேகா உன் பக்கம் இருக்கா..

இன்பா, ஓல்ட் மேன் பேசாமல் நான் அவளை சீக்ரெட் மேரேஜ் பண்ணிடவா.. இதை கேட்டதும் இருவரும் அவனை பார்த்து சிரிக்க.. 

அவன் ஒய் ஆர் யூ டூ லாஃபிங்… நீ உன் அப்பா மாதிரியே பேசுற ராகவ்.. இதை கேட்டதும் அவன் முகம் மாறியது… அவரை பற்றி என் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.. 

கிருஷ்ணன், சரி அந்த சர்பிரைஸ் என்ன அதை சொல்லு… இன்பா, அதுக்கு முன்னாடி நான் கேட்கும் கேள்விக்கு நீங்க அன்சர் பண்ணனும்..

ம்ம் ஃபர்ஸ்ட் கேளு… மாம் க்கு எப்படி கல்யாணம் அவர் கூட ஆச்சு..

கிருஷ்ணன், எவர் கூட.. டோண்ட் பிளே வித் மீ இப்போ சொல்ல போறீங்களா இல்லையா… 


கிருஷ்ணன், பாவை இப்போ தான் யாரோ ரவி பற்றி பேச வேண்டாம் அப்டின்னு என்னை மிரட்டினாங்க..

இன்பா, இப்போ சொல்ல போறீங்களா இல்லை நான் போகட்டுமா… 

சரி கொஞ்சம் கோபத்தை குறைச்சுக்கோ டா.. அதை அப்புறம் பார்ப்போம் மம் சொல்லுங்க…

கிருஷ்ணன், முதலில் அரேஞ்ச் அப்புறம் லவ் மேரேஜ் தட்ஸ் ஆல்.. என்ன அவ்ளோ தானா… ம்ம்.. இல்ல எனக்கு டிடைலா வேணும் சொல்லுங்க..

ரொம்ப டிடைலா சொன்னா ரெண்டு எபிசோட் தேவை படுது… இன்பா, வாய்ப்பே இல்ல நான் தான் எல்லா எபிசோட் ல யும் இருக்கணும் டக்குன்னு சொல்லுங்க 

உன் தாத்தாவும் நானும் ஒன்னா தான் ஆர்மில வேலை செய்தோம் ஆனால் வேற வேற dept அதுக்கு அப்புறம் இங்கே வந்ததும் பழக்கம் அப்படியே நின்னு போச்சு..

அப்போ தான் எதேட்ச்சியா நலனை பார்த்தேன். உன் அப்பாவுக்கு பொன்னு தேடி கிட்டு இருப்பதா சொன்னாங்க…

வசு போலீஸ் வேலையில் ஜாயின் பண்ணி ஒரு ஆறு மாசம் கழிச்சு தான் இந்த சம்மந்தம் முடிவாச்சு…

ரவி உன் அம்மா வேலையை கேட்ட அடுத்த செக்  வசு போட்டோவை கூட பார்க்கல உடனே  வேணாம் அப்டின்னு சொல்லிட்டாரு…

இன்பா,  அப்புறம் என்னாச்சு..

உங்க அம்மாவுக்கு ரவி போட்டோ நான் காட்டி இருந்தேன். எதோ ஒரு ஆஃபீஸ் கேஸ் விஷயமா ரவி ஸ்டேஷன்க்கு கம்ப்ளைன்ட் கொடுக்க  வந்து இருக்கிறார். அந்த கேஸ் ல ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் மீட் சண்டை 

இன்பா, அப்புறம் மாம் அப்பாவை ஜெயிலில் போட்டு விட்டார்களா… 

கிருஷ்ணன், ராகவ் நீ இருக்கியே அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல… ஆனால் வசு உன் அப்பா கிட்ட தெரிந்தது போல் காட்டி கொள்ள வில்லை …. 

அப்புறம் என்னாச்சு,… சரவணன் அப்பா சேகரும், வசு ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட் அது உனக்கே தெரியும் தானே ஒவ்வொரு தடவையும் சண்டையில் தான் ரெண்டு பேரும் முடிப்பாங்க..

கடைசியில ரெண்டு குடும்பம் மீட் பண்ற அளவுக்கு போய் லாஸ்ட்டா அப்போ தான் உன் அப்பாவுக்கு வசு தான்  முதலில் பார்த்த பொன்னு அப்டின்னு தெரிய அந்த சண்டை பஞ்சாயத்து சேகர் தான் தீர்த்து வைத்தான். 

அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சண்டை போடல.. 

இன்பா, வாட் ஹாப்பென்.. 

உங்க அம்மாவோட இந்த அமைதியான அப்புறம் பாராமுகம் இது எல்லாம்   உன் அப்பா பார்த்ததும் அங்கே கொஞ்சம் அப்போ தான் உன் அப்பா வசுவை  பற்றி யோசிக்க ஆரம்பித்து காதல் முதல் முறையா பொறாமையா வெளி வந்தது.

ரவி நேரா போய் வசுவைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம் அப்டின்னு கேட்க வசு கிட்ட தட்ட உன் அப்பாவை ஒரு மாசம் நல்லா சுற்ற விட்டாள். 

கடைசியில் ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாமல் லவ் பண்ண ஆரம்பித்தார்கள்.. 

இன்பா, இதுக்கு அவங்க ரெண்டு பேரும் நேரா கல்யாணம் பண்ணி இருக்கலாம்… அது தான் இங்கே காமெடி அப்போ இருந்து உங்க அத்தை நந்தினி அண்ட் வசுமதி ரெண்டு பேருக்கும் சுத்தமா ஆகாது… 

இன்பா, அப்புறம்…

அப்புறம் எனக்கு மறந்து போச்சு.. 

பாவை,  நான் சொல்றேன்..அப்புறம் வீட்டுக்கு வந்து எங்க கிட்ட சம்மதம் வாங்கினார்.. அதுக்கு அப்புறம் தான் பெறிய சிக்கல் வெடித்தது.

இன்பா, என்னாக்சு..  உன் அம்மா போலீஸ் வேலைய விட சொல்லி உன் அப்பா கேட்டு மறுபடியும் சண்டை..கடைசியில சேகர் வீட்டில் வந்து  என் கிட்ட வேற மாப்பிள்ளை பாருங்க ரவி தானா வசுவை தேடி வருவார் அப்டின்னு சொல்ல 

அப்புறம் உன் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு கடைசியில் அதுக்கும் ஒத்து கொண்டார். ..   

இன்பா, நெக்ஸ்ட்… அடுத்து ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சது.. ஒகே.. அதுக்கு அப்புறம்…. சண்டை இன்னும் தீவிரமானது சுபா வயிற்றில் இருந்தாள். உங்க அம்மா பிடிவாதமா கோட்ரேஸ்ல தான்  இருப்பேன் அப்டின்னு சொல்லி மறுபடியும் சண்டை …. ஆனால் தமயந்தி உன் அம்மாவை ரொம்ப பாசமா பார்த்து கொண்டார்…

அப்புறம் உங்க அப்பா உன் அம்மாவுக்காக சமாதானம் ஆகி போனாங்க இன்பா, அப்புறம்..  பாவை,  சிரித்து கொண்டே அந்த சமாதானத்தில் தான் நீ பிறந்த… இன்பா, சண்டை ஒரு வழியா முடிஞ்சதா..  கிருஷ்ணன், இன்னும் அதிகமாச்சு, உன் அம்மா வீட்டில் உன்னையும்  அப்படி இல்லன்னா டூட்டி இது ரெண்டுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறாள் அப்டின்னு அதுக்கு ஒரு சண்டை சோ உன் அதில் இருந்து தான் உன் மேல் உன் அப்பாவுக்கு கொஞ்சம் பொறாமை அது இன்னமும் தொடருது… 

இன்பா, இவ்ளோ தானா… அது அவங்க அவங்களோட  மலரும் நினைவுகள் உனக்கு அது சாதாரணமா தான் இருக்கும் ரவி உங்க அம்மாவை விடவே இல்லை தெரியுமா…. ஆனால் தப்பு எல்லாம் உன் அம்மா மேல் தான் இருக்கும் அப்போ கூட உன் அப்பா சொன்ன வார்த்தை அதில் தான் ரவி மேல் எனக்கு மிக பெரிய மரியாதை வந்தது. 

இன்பா, அப்படி என்ன பெருசா சொல்லி இருக்க போறாரு… கிருஷ்ணன், மதி யோட கோபம் அது குறையும் போது என்னை பற்றி அவள் புரிந்து கொள்வாள். யாராவது விட்டு கொடுக்கணும் தானே அது நானவே இருந்து விட்டு போகிறேன்.

சண்டையே இல்லாமல் இருவர் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அது நிச்சயம் பொய்யான வாழ்க்கை தான் இருவரும் எதையோ மறைத்து சகித்து வாழ்கிறார்கள் என்று அர்த்தம். சண்டை வந்தால் தான் சமாதானம் வரும் எதோ வகையில் மீண்டும் காதல் அதிகமாகி கொண்டே இருக்கும்.

பொண்ணுங்க எப்பவும்  விட்டு கொடுப்பது பொல் தான் இருக்கும் ஆனால் அது ஆண் தான் கடைசியில் அவங்களுக்கு விட்டு கொடுப்போம்.. ஹி இஸ் சோ மெட்சூர்டு ராகவ்… 

மேலும் அவரே தொடர்ந்தார்….இப்போ வசு கொஞ்சம் மாறி இருக்கிறாள். உன்னோட கோபம் இது நீ நிதானமா இருக்கும் போது எடுக்கும் அத்தனை முடிவும் ரவி கிட்ட இருந்து வந்தது. இந்த கோபம் எல்லாம் அதிகமா வசு கிட்ட இருந்து வந்தது.  என்று இவர்கள் பேசி கொண்டு இருக்க

வசு, ராகவ்… ராகவ் அது தானே பார்த்தேன் எனக்கு தெரியும் வந்து இவர்களிடம் ஒட்டி கொண்டாயா… 

கிருஷ்ணன், அது ஒன்னும் இல்ல வசு உன்னை பற்றி தான் என்று அவர் சொல்ல வர உடனே ஓல்ட் மேன்.. என்று அவன் சொல்ல அதோடு அவர் வேறு பேசிட ராகவ் என்னடா அப்பா என்ன சொல்ல வந்திங்க… 

பாவை, இப்போ எதுக்கு கோப படுற ஒன்னும் இல்ல சும்மா இவர் வேணும்ன்னு கிண்டல் பண்றார்… 

இன்பா, மாம் சரி நான் ரெஸ்ட் எடுக்க போறேன்.. வசு, டேய் அப்பா ஏற்கனவே உன் மேல செம்ம கோபத்தில் இருக்கிறார் இங்கே இருந்து நீ எங்கேயும் நகர கூடாது.. நாளைக்கு நிச்சயம் வைத்து கொண்டு உனக்கு என்ன டா ரெஸ்ட்… 

கிருஷ்ணன், அது ராகவ் நிச்சயம் இல்லையே இப்போ அவனுக்கு நிறைய வேலை இருக்கும் உனக்கு அதை பற்றி எதுவும் தெரியுமா… 

இன்பா, அதுவும் சரி தான் அப்போ என் நிச்சயம் முடியும் வரை டார்லை என் வீட்டில் வைத்து கொள்வேன்…

இதை கேட்டதும் கிருஷ்ணன் என்னை விட்டு பாவை இருக்க மாட்டா போடா ராஸ்கல்… என்று அவர்கள் நால்வரும் பேசி கொண்டு இருக்க வசு வேலையாக கிளம்பி விட்டாள்.

கிருஷ்ணன், ராகவ் நாளைக்கு நிச்சயம் முடிஞ்சு சேகர் வீட்டுக்கு கூட்டி போரயா… இன்பா, மம் அதுக்கென்ன  போலாம்… பாவை, அப்போ சின்ன குட்டிய பார்க்க… அதுவும் நாளைக்கு கூட்டி போறேன்… நாளைக்கு தான் உங்களுக்கு சர்பிரைஸ் என்று சொல்லிட சீக்கிரம்  அடுத்த நாள் அழகாக விடிந்தது.

ஒரு பெரிய 5ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி ஹால் புக் செய்து இருந்தனர். வசுமதி, ரவி இருவரின் அலுவலக நட்பு வட்டங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் மட்டும் அழைக்க பட்டு இருந்தனர். 

அதே போல் வினய் குடும்பமும் முக்கிய புள்ளிகள் நெருகிய உறவுகள் என அனைவரும் அழைக்க பட்டு இருந்தனர். சுபா கண்களில் உயிர்ப்பு இல்லாத உயிர் அற்ற தேவதையாக தன்னை அலங்காரம் செய்து கொண்டாள். 

ரகு, ராம், கீதா, ராஜி (நீந்துகின்ற வெண்ணிலா) என சுபாவின் நண்பர்கள் அனைவரும் வந்து இருந்தனர்.

சுபா, சூர்யா வரலயா கீதா..  

ராம், உன் தம்பி இருக்கானே அப்புறம் அவன் எப்பிடி வருவான்..  

இன்பா, இங்கே என்ன என்னை பற்றி பேசி கிட்டு இருக்கிங்க… 

ரகு, இன்பா ….

அவன் பதில் பேசாமல் அவனை முகம் கூட பார்க்காமல் அந்த இடத்தை விட்டு உடனே செல்ல…

ரகு, நான் என்ன டா பண்ணேன் அவ விக்ரமை கல்யாணம் பண்ணுட்டு போயிட்டா அதுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை டா…

இன்பா அவன் தலையை கோதி கொண்டே அவன் பேசிட்டானா… 

ரகு, யாரு?

இன்பா அவனை கோபமாக ஒரு பார்வை பார்க்க ரகு, சூர்யாவா… சூர்யா இன்னும் என் கிட்ட பேசல..  ஆனால் நானும் அவனும் ஒன்னா தான் ஷேர் பண்ணி ராம் கூட பார்ட்னரா இருக்கோம்..

இன்பா, அவன் முதலில் பேசட்டும்… 

ரகு, அப்போ என் கிட்ட பேசுவியா.. இன்பா, நான் திங்க் பண்ணுவேன்… என்று சொல்லி அதற்கு மேல்  அங்கு நிற்காமல் சென்று விட்டாள்.

ரகு சரவணனுக்கு போன் செய்தான். டேய் சரவணா எப்போ வர போற..  சரவணன், மச்சி எனக்கு ஆபீஸ் ல முக்கியமா புராஜக்ட் போயிட்டு இருக்கு நான் வரல டா… 

ரகு, டேய் நான் இப்போ உன்னோட பாஸ் வாயேன் டா உன்னை பார்த்து பேசி எவ்ளோ நாள் ஆச்சு இன்னிக்கு நைட்டு குட்டி பார்டி பண்ணலாம்.. இதை கேட்ட அவன் நான் பார்ட்டிக்கு வரேன் மச்சி ஆனால் பங்ஷனுக்கு வரல என்னை கம்பல் பண்ணாத என்று சொல்லி  ரகு அடுத்து பதில் சொல்வதற்கு முன் போன் வைத்து விட்டான். 

சரவணன் ஆபீஸ் ல அவனுடைய இருக்கையில் அமர்ந்து சுபாவின் புகை படத்தை பார்த்து வருடி கொண்டு இருந்தான்.

தொடரும்… 

 Episode 120, 

இங்கே சரவணன் அவனது அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு சுபாவின் படத்தை வருடி கொண்டு இருந்தான். 

மனம் எல்லாம் ரணமாக இருந்தது. அவன் மனம் முழுவதும் அவளே நிறைந்து இருந்தாள். இது நடக்க கூடாது அந்த வினய் நல்லவன் இல்ல டி நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீ ஒரு வார்த்தை கூட என் பேச்சை கேட்காமல் இப்போது அவனுக்கு பாதி சொந்தமாக போகிறாய்…  

நீ எனக்கு இல்லை என்றாலும் பரவாயில்ல ஆனால் அந்த வினய் உன்னை சேர விட மாட்டேன் இதற்கு ஒரு முடிவு கட்டுவென் டி.. நான் உனக்கு வேண்டாம் சுபா இதை ஏன் நீ புரிந்து கொள்ள மாட்டின்ற உன் அப்பா, உன் அத்தை எல்லாம் என் தகுதி எது என்று காட்டி விட்டனர். நான் சொல்வது உனக்கு ஒரு நாள் புரியும் சுபா என்று கூறி அவன் தன்னை எதுவுமே பாதிக்க வில்லை என்பது போல் முகத்தை வைத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினான். 

நேராக வீட்டுக்கு வந்த அடுத்த நொடி தன் அம்மாவை அழைத்தான். அம்மா… அம்மா..  என்று கத்திட தேவகி, என்னாச்சு சரவணா எதுக்கு இப்படி கத்துர.. என்று சொல்லி கொண்டே சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்.

அவன் கத்திய சத்தம் கேட்டு மித்ரன், வெண்பா இருவரும் வர சரவணன் இருவரையும் பார்த்து விட்டு அவன் பார்வை மித்ரணிடம் வந்து நின்றது. 

சரவணன், எங்கே கிளம்பி விட்டாய்…  அவனின் இந்த கடுமையான முகத்த பார்த்து மித்ரன், இன் இன்பா வர சொன்னான்… இன்னிக்கு நீ வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாது… என்று சொல்லி அவன் பார்வை அம்மா, தங்கை இருவரையும் பார்க்க.. வெண்பா, அண்ணா நான் போகல அம்மா தான் மித்ரன் கூட போக கிளம்பி கிட்டு இருந்தாங்க..  மித்ரன் வெண்பாவை முறைக்க..

சரவணன், அம்மா நீங்க வீட்டை விட்டு வெளியே போனால் நான் இனி வீட்டுக்கு வர மாட்டேன்.. இதை கேட்டதும் தேவகி இல்ல நான் எங்கேயும் போகல..  அவன் பார்வை மித்ரனை பார்த்து உனக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். நீ வெளியே போனால் உன்னோட கோட்ரஸ் சோ இனி நான் வர மாட்டேன்.. 

மித்ரன் இதை கேட்டதும் வேக வேகமாக அவன் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டான். இன்பா மித்ரனுக்கு அழைத்தான். அவனுடைய போன் ஹாலில் இருந்தது. போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டு வெளியே வந்தவன் அங்கே சரவணன் இருப்பதை பார்த்து போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தான்.

வெண்பா அந்த போனை அட்டென்ட் செய்தாள். அண்ணா… அம்மா, நானு, மித்ரன் மூனு பேரும் முக்கியமா வெளியே போய் இருக்கோம் அப்புறம் கூப்பிடுகிரோம் என்று சொல்லி போன் வைத்து விட்டாள்.

சரவணன் அவள் பேசியதை கேட்டதும் உடனே அவன் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டான். அவ்வளவு தான் மூவரும் ஒருவர் முகத்தை கூட பார்க்க வில்லை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர். வெண்பா அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் விவேகா வை பார்க்க கிளம்பி விட்டாள். 

வருண்க்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்கு பொருட்களை  மாற்றி கொண்டு இருந்தனர். விவேகா தன் துப்பட்டாவை இடையில் கட்டி கொண்டு வேலை செய்து கொண்டு இருக்க ஆதியும் அங்கு உள்ள திங்க்ஸ் எல்லாம் ஏற இறக்க செய்து கொண்டு இருந்தான். 

வெண்பா வருவதை பார்த்த விவேகா அவள் மிக மாற்றத்தை பார்த்து என்னாச்சு டீச்சர் உன் முகமே சரி இல்லை… வெண்பா அது ஒன்னும் இல்ல சும்மா தான் உன்னை பார்க்க வந்தேன்… 

விவேகா, ஹே சொல்லு என்னாச்சு அது தான் உன் முகத்திலேயே தெரியுதே.. வெண்பா, எல்லாம் என்னால் தான் டி.. என்று கண் கலங்கி சொல்ல ஹே இப்போ எதுக்கு அழற என்று அருகில் உள்ள சேர் இழுத்து போட்டு அவள் கைகளில் உள்ள அந்த லாலி பாப் நீட்டிட வெண்பா வேண்டாம் என்று தலை அசைத்தாள்.

விவேகா பிரித்து அதை அவள் வாயில் வைத்து விட்டாள். ம்ம் இப்போ சொல்லு என்று அவள் கேட்க வெண்பா சொல்ல ஆரம்பித்தாள். எனக்கு எங்க அப்பா இறக்கும் போது அந்த தருணம் அவ்வளவா நினைவு இல்ல அதுக்கு அப்புறம் நாங்க இங்கே இருந்து கிளம்பும் போது இன்பா அண்ணாவின் அத்தை அவங்க பேரு நந்தினி அவங்க பையன் பரத், அருண், நானு நாங்க மூனு பேரும் தான் எப்பவும் ஒன்னா விளையாடுவோம்.. 

விவேகா, அப்புறம் என்னாச்சு.. அப்போ நாங்க கிளம்பும் போது அந்த பரத் என்னை பற்றியும் நாங்க இனி இங்கே வர மாட்டோம் அப்புறம் என் அப்பாவை பற்றியும் பேசினான் அது எல்லாம் கேட்டு அருண் அவனோட சேர்ந்து கொண்டு கிண்டல் பண்ண நான் அழுது கிட்போய் சரவணன் அண்ணா கிட்ட போய் சொல்லி விட்டேன்.

சரவணன் அண்ணா வந்து பரத்தை மிரட்டி விட அவன் போய் அவங்க அம்மா கிட்டயும் இன்பா அண்ணா அப்பா கிட்டயும் ஒண்ணுக்கு ரெண்டா சொல்ல இந்த அருண் அங்கே என்ன நடந்தது அப்டின்னு தெரியாமல் உம் கொட்டிட்டான். 


இன்பா அண்ணா அப்பாவுக்கு நந்தினி ரொம்ப உயிர் அந்த நந்தினிக்கு எங்க அப்பாவையும் வசு ஆண்டியையும் சுத்தமா பிடிக்காது. எதையுமே விசாரிக்காமல் அவங்க தங்கை சொல்வது கேட்டு கிட்டு இருக்க சரவணை கூப்பிட்டு நந்தினி திட்டும் போது அவர் எதுவும் கேட்காமல் இருந்து விட்டார்.

சோ இதை காரணமா வச்சு பெருசா சண்டை வந்தது

 விவேகா, அதுக்கு அப்புறம் என்று  கேட்க அவள் அழுது கொண்டே உங்க தகுதி என்ன எங்க தகுதி என்ன அப்டின்னு இஷ்டத்துக்கு அவங்க பேசி விட்டாங்க.

அதில் கோபமான வசு ஆண்டிக்கும் இன்பா அண்ணா அப்பாவுக்கும் பயங்கர சண்டை இனி நந்தினி இங்கே வர கூடாது அப்டின்னு சொல்லிட்டாங்க.. அப்போ இருந்த சரவணா வேற எப்படி இருப்பான் தெரியுமா… 

விவேகா, சரி இப்போ என்னாச்சு.. இன்னிக்கு சுபா அக்காவுக்கு நிச்சயம் அதுக்கு வசு ஆண்டி, இன்பா அண்ணா,சுபா அக்கா எல்லாரும் வந்து கூப்பிட்டு எனக்கும் அம்மாவுக்கும் ட்ரெஸ் மித்ரனுக்கு ட்ரெஸ் எல்லாம்  சுபா அக்கா எடுத்து கொடுத்து கட்டாயம் வரனும் அப்டின்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. 

விவேகா, அண்ணா வேனான்னு சொல்லிட்டாரா வெண்பா, மம் ஆமா டி என்று தேம்பி அழ.. அவள் அப்போ ராகவ் அப்பா ரொம்ப டெர்ரர் பீசா.. 

இல்ல டி அவர் ரொம்ப நல்லவர் இப்போ எங்க அம்மா மேல் அவருக்கு தனி மரியாதை கணவர் இல்லாமல் மூனு பசங்களையும் பொறுப்பா வளர்த்து பெருசு ஆக்கி இருக்காங்க அப்டின்னு சொல்லுவாரு ஆனால்.. ஆனால் என்ன அவருக்கு உண்மை தெரிய வந்ததுக்கு அப்புறம் தான் எங்களை நம்பினார். அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. சரவணனை அவருக்கு பிடிக்கும் ஆனால் அந்த பிரச்னைக்கு அப்புறம் பார்த்தால் சரவணன் கிட்ட பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் ஆபீஸ் பங்ஷன்ல ரெண்டு பேரும் பேசிக்குவாங்க அதுவும் ரொம்ப பார்மல்லா இருக்கும் ஆனால் நிறைய நேரம் பேசிக்குவாங்க.. ஒரு தடவை அவர் வீட்டுக்கு கூப்பிட்டாரு சரவணன், தகுதி இல்ல டைல்லாக் சொல்லிட்டு வந்து விட்டான். 

விவேகா, நீ சொல்றதை பார்த்தால் எனக்கு பயமா இருக்கு டி.. வெண்பா, நீ வேற அங்கே இன்பா அண்ணா இருந்தால் சீனே வேற அவர் அதிகமா அங்கே போக மாட்டாரு அவங்க யாரும் வரவும் மாட்டாங்க அங்க தமயந்தி பாட்டி அவங்க மட்டும் தான் இன்பா அண்ணாவுக்கு பிடிக்கும்.. ஆனால் இந்த பிரச்னைக்கு அப்புறம் அவங்க கிட்டயும் பேசறது நிறுத்தி விட்டார்.

மித்ரனும் இன்பா அண்ணாவும் பிரிந்ததே இல்ல B.E படிக்கும் போது மட்டும் அந்த நாலு வருசம் தான் அவங்க பிரிந்தது. இப்போ கூட பாரு எங்க அண்ணாவை அவர் dept ல தான் வேலைக்கு வைத்து இருக்கிறார்.

இன்பா அண்ணா அவர்  அப்பாவுக்கு எது பிடிக்காதோ அதை தான் செய்வார். IT அவர் படிக்க சொல்லி தான் படித்து கடைசியில் அதை முடித்து வெளியே வந்த உடனே UPSC எழுதி வந்து விட்டார். அண்ட் அடிக்கடி வசு ஆன்ட்டிக்கும் அன்கில்க்கும் சண்டை அதிகமா வந்து கிட்டு இருக்கும் அதனால் நான் கல்யாணம் பண்ணா என் வேலையில் இருக்கும் பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் அப்போ தான் எங்களுக்கு சண்டை வராது அப்டின்னு தான் IPS ஆபீசரா இருக்கும் பொண்ணை கல்யாணம் பண்ணுவேன் அப்டின்னு சொல்லிட்டு இருந்தார். இது தான் அந்த ரீசன் க்கு பின்னாடி உள்ள காரணம். 

விவேகா, வெண்பா இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீ சொன்னது சரி தான் சோ இதுக்கு நீ காரணம் இல்லை அது பெரியவர்கள் பிரச்னை அவங்க பார்த்து கொல்வாங்க. நீ சரவணன் அண்ணா சொல்றது மட்டும் கேளு சரியா.. மம் சரி 

இங்கே கவ்யா, சத்ய மூர்த்தியுடன் வந்து இருந்தாள். இனியாள் கண்கள் இன்பாவை பார்த்து கொண்டே இருந்தது. தன் கனவு நிறை வேற போகிறது என்று இருவரும் கனவு கொண்டு இருக்க இனியாள் தெரியாம போய் ஒருவர் மேல் மோதி விட நிமிர்ந்து பார்க்க அங்கே சிபி நின்று கொண்டு இருந்தான். 

அவள், சாரி சார்.. சிபி அவளை பார்த்ததும் கண்கள் ஒரு நிமிடம் மின்னியது. கண்ணை எங்கே வைத்து கொண்டு வரீங்க மிஸ்… என்று நிறுத்திட..  

அவள் திமிர் இப்போது எட்டி பார்க்க ஆரம்பித்தது. நான் எப்படி வேணாலும் வருவேன் இது என்னோட அண்ணா நிச்சயம். சிபி அவன் தலையை கோதி கொண்டே சோ வாட் சுபா என்னோட சிஸ் இன்பா என்னோட தம்பி காட் இட்.. அதுக்காக இப்படி கண் இல்லாமல் போய் யாரு மேல் வேணாலும் இடிக்களாமா மிஸ்.. 

என்னோட பேர் மிஸ் இல்ல என்னோட பேர் கண்ணுக்கினியாள்.. பேரில் மட்டும் ஐஸ் இருக்கு ஆனால் நேரில் அதை யூஸ் பன்றது இல்லையா.. அவள் மனதில் இன்பாவின் அண்ணா என்று சொன்னதும் சாரி சாரி தெரியாம மோதி விட்டேன்..

சிபி, இட்ஸ் ஓகே என்று சொல்லி அவன் நகர்ந்து சென்றான். போவதற்கு முன் அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு நீ தெரிந்தே மோதலாம் என்று ஒரு குட்டி சிரிப்பு சிரித்தான் மனதில் கொஞ்சம் நோட் பண்ணு சிபி கொஞ்சம் வொர்க் அவுட் பண்ணா விழுந்து விடுவாள்… 

இங்கே ஜோடிகள் மேடையில் நின்று கொண்டு இருக்க அனைவரும் வாழ்த்து சொல்ல வினய் சுபத்ராவின் விரல்களில் மோதிரம் போட்டு விட வினய் அவள் கைகளை பிடித்து விரலில் மோதிரம் அணிவித்து அவள் கைகளை கோர்த்து கொண்டான். 

சுபா வின் கண்களில் கண்ணீர் கோர்த்து நின்று கொண்டு இருக்க இன்பா அவள் அருகில் வந்து சுபா ஆர் யூ ஆல் ரைட்.. என்று கேட்க சுபா தன் தந்தையை ஒரு பார்வை பார்க்க அவர் மிகவும் சந்தோஷமாக அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தார். 

இன்பா, ஹே நான் சொல்றது கேட்குதா அக்கா ஏன் ஒரு மாதிரி இருக்க உனக்கு பிடிக்கல அப்டின்னா சொல்லு நான் இருக்கேன்..

சுபா, நீ அப்பாவை எல்லா விஷயத்திலும் அவமானம் படுத்தனும் அப்டின்னு சுத்திட்டு இருக்காத..

இன்பா, இந்த கல்யாணம் இது உன்னோட வாழ்க்கை ஒரு தடவை உள்ளே போயிட்டா நாங்க யாரும் உன் கூட வர மாட்டோம் சுபா நீ அப்பாவுக்காக எதாவது லூசு தனமா ஒத்துகிட்டு இருக்காத,எனக்கு அந்த வினய் குடும்பம் சுத்தமா பிடிக்கல.. 

இது என் வாழ்க்கை நான் பார்த்து கொள்கிறேன். என்று அவள் சொல்லிட அதற்கும் மேல் இன்பா எதுவும் பேசாமல் இன்பா கீழ இறங்கி விட்டான். வினய் அவன் நண்பர்களுடன் பேசி விட்டு திரும்பி பார்க்க அங்கே சுபா தனியாக நின்று கொண்டு இருக்க அவன் மேலே சென்று க்கும்… 

சுபா அவனை திரும்பி பார்க்க வினய் சிரித்த முகமாக அவள் அருகில் வந்தான். வினய், சுபா யூ லுக் கார்ஜியஸ் என்று அவன் சொல்ல அவளுக்கு அவன் பார்வை அசௌகரியம்மாக இருந்தது. அவள் வேறு வழி இல்லாமல் ரொம்ப தேங்க்ஸ் வினய் நீங்களும் இன்னிக்கி அழகா இருக்கீங்க..  என்று அவள் சொல்ல உடனே அவன் அவள் கைகளை கோர்த்து கொண்டான். 

அவளை கீழே அழைத்து சென்றான் கொஞ்சம் வெளியே சன்னல் ஓரம் அழைத்து சென்றான். அவள் கைகளை உருவ முயற்சி செய்ய ஹே என்னாச்சு..  ஒன்னும் இல்ல வினய் என் கையை கொஞ்சம் விடுங்க.. வினய் அவளை அருகில் இழுத்து சுபா இப்போ நமக்கு என்கேஜ் ஆகி விட்டது நீ எனக்கு பாதி சொந்தம் ஆகி விட்டாய் இன்னும் என்ன உனக்கு தயக்கம்.. 

சுபா, அவன் தொட்டது உடல் எல்லாம் எறிவது போல் உணர்ந்தாள். அவள் முகம் கொஞ்சம் கடுமையாக வைத்து இன்னும் நமக்கு கல்யாணம் ஆகள சோ எனக்கு இது எல்லாம் பிடிக்காது. கல்யாணம் ஆகட்டுமே அதுக்கு அப்புறம் தான் நீங்கள் என்னிடம் நெருங்க வேண்டும்..  என்று சொல்லி அவள் அந்த இடத்தில் இருந்து வேக வேகமாக சென்றாள்.

இன்பாவை சத்ய மூர்த்தி அழைத்து தன் பெண்ணை பத்திரமாக காப்பாற்றியது அதற்கு நன்றி கூறிட கவ்யா வைத்த கண் வாங்காமல் இன்பாவையே பார்த்து கொண்டு இருந்தாள். 

அவன் சரி என்று சொல்லி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்ல கவ்யா அவனை பின்னால் ஃபாலோ செய்தாள். அங்கு இருந்த அனைவரும் இன்பாவின் பின்னால் அவள் செல்வதை பார்த்து அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். 

இன்பா ஒரு நிமிடம் திரும்பி பார்த்து அப்படியே நின்றான். 

கவ்யா இரு புருவமும் தூக்க அவனை பார்க்க.. இன்பா, வாட் டு யூ வாண்ட்.. எதுக்கு என்னை ஃபாலோ பண்றீங்க.. கவ்யா, அது எனக்கே தெரியல ஆனால் உங்களைபார்த்தால் மட்டும் என் பேச்சை கேட்காமல் என்னோட மொத்தமும்  ஐ மின் என்னோட கால்கள், என்னோட கண்ணுஉங்க பின்னாடி வர துடிக்குது.. உங்க கிட்ட பேச என் உதடு துடிக்குது   இன்ப ராகவன்.. என்று மயக்கும் புன்னகையுடன் அவன் அருகில் வந்தாள்.

 மம் பேசலாம் எனக்கு ஓகே தான்.. கவ்யா இதை கேட்டதும் உள்ளுக்குள் புது ரத்தம் பாயிந்தது. இட்ஸ் ரியலி.. யெஸ் மிஸ் கவ்யா..

கவ்யா, இது நிஜமாவே நீங்க நீ தானா எனக்கு என்ன சொல்ல என்ன சொல்றதுன்னு தெரியல.. 

அவள் அவன் அருகில் வர இன்பா, இங்கே வேண்டாம் நம்ப தனியா மீட் பண்ணலாம் உங்க கிட்ட நிறைய பேசணும் …அவன் நான் யார் கிட்டயும் இப்படி கேட்டது இல்ல.. 

கவ்யா,சொல்லுங்க.. நாளைக்கு நீங்க ஃப்ரீயா வெளிய மீட் பண்ணலாமா.. மம் ஓகே எங்கே எப்போ.. இது உனக்கும் எனக்கும் உள்ள மீட்  நீயும் நானும் மட்டும் உனக்கு ஓகே வா… அவளும் இதை தானே எதிர்பார்த்தாள். அவள் கண்கள் மின்ன எனக்கும் ஓகே இன்பா… 

இன்பா முதன் முதலாக அவளிடம்” கொயிட் ஸ்வீட் ” சொல்லிட கவ்யா எங்கே மீட் பண்ணலாம்.. அதை நான் உனக்கு டெக்ஸ்ட் பண்றேன்.. 

கவ்யா, என் நம்பர் உன் கிட்ட நீ சேவ் பண்ணி வச்சு இருக்கியா.. 

இன்பா, யெஸ் யூ ஆர் ஸ்பெஷல் பர்சன் டூ மீ…

தொடரும்… 

Episode 121, 

இன்பா அவளிடம் பேசி கொண்டு இருக்க அப்போது அவனுக்கு ஒரு கால் வரவும் ஓகே எனக்கு கொஞ்சம் இம்போட் கால் நீ எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்… என்று சொல்லி அவன் நகர உடனே கவ்யாவுக்கு இப்போதும் நம்ப முடியவில்லை. 

அவள் மீண்டும் அவனை அழைத்தாள். இன்பா, மம் சொல்லு என்று அவன் திரும்பிட இப்போது அவளுக்கு இது உண்மை கனவு இல்லை என்று தெரிந்து கொண்டாள். 

கவ்யா, இன்னிக்கி நான் எப்படி இருக்கேன்.. இன்பா அவள் கண்களை நேராக பார்த்து என் அக்காவுக்கு அடித்து இங்கே இருக்க எல்லார் கண்ணும் உன் மேல தான் அந்த அளவுக்கு நீ பேரழகு… இந்த வார்த்தையை கேட்டதும் அவளுக்கு இப்போதும் அவளுக்கு சந்தேகமாக தான் இருந்தது… 

இன்பா, பிளீஸ் கவ்யா எனக்கு இந்த கால் இம்போர்ட்  என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வேக வேகமாக நடந்து சென்று விட்டான். 

“கவ்யா”என்று அவன் திருத்தமாக அழகாக அழைத்தது. அவன் வாயில் இருந்து வந்த பேரழகி என்னும் வார்த்தை இதெல்லாம் நிஜமா இல்லை கனவா எப்படி நம் மேல் திடீர் என்று இப்படி ஒரு ஈர்ப்பு வந்து இருக்கும். ம்ம் அவன் தான் சொன்னானே அந்த சுபா வுக்கி அடுத்து நான் தான் பேரழகு அப்டின்னு நாளைக்கு மீட் பண்றேன்னு சொல்லி இருக்கான். இந்த இன்பாவுக்கு கணிவா பேசுற பொண்ணு தான் பிடிக்கும் போல

 அவன் பின்னாடி மயக்கி பேசுற பொண்ணை தான் பிடிக்கும் போலயே அவனை மயக்கி அப்புறம் அவன் என் பின்னாடி சுத்த வைக்கணும். நீ என் பின்னால் பூனை ம்ம் பூனை வேண்டாம் புலி ஹான் புலி சரியா இருக்கும் புலி ஆனால் எனக்கு பெட் மாதிரி என் பின்னால் சுத்துவ நினைக்கவே செம்மையாக இருக்கு ஓகே கவ்யா நாளைக்கு டைகர் முன்னாடி ஒரே பார்வையில் அவன் நம்மிடம் மயங்கி விழனும் சோ நீ உன்னை அழகா தயார் படுத்தணும். என்று அவள் நினைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றாள். 

நிச்சயதார்த்தம் இனிதாக முடிந்தது. மாலை விருப்பம் இருந்தால் பார்ட்டியில் கலந்து கொள்ளலாம் என்று வினய், ரவிசந்திரன் இருவரும் சொல்ல இள வட்டங்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

சுபா அவளுடைய நண்பர்கள் அனைவருக்கும் தனியாக பார்ட்டி கொடுப்பதாக கூட்டி சென்று விட்டாள். 

ராம், கீத்து பிளீஸ் டி இன்னிக்கு ஒரே ஒரு நாள் மட்டும்.. 

கீதா, ராம் உன்னை இதுக்கு தான் சுபா பங்ஷன்க்கு கட்டாயம் போயே ஆகனும் அப்டின்னு பிடிவாதம் பிடிச்சியா.. ஹே ஓவரா பண்ணாத டி நீ உன் தங்கை வீடு இங்கே இருக்கு நீயே பிடிவாதம் பிடிச்சு வந்துட்டு இப்போ என்ன சொல்ற…

ராம், பிளீஸ் டி.. கீதா, சரி போய் தொலை என்று சொல்லிட உடனே ராம் கிளம்பினான் அவர்கள் இருத

சுபா, ஹே என்னாச்சு.. அது ஒன்னும் இல்ல எல்லாம் இந்த ரகு தான் காரணம் அங்கே இருக்கும் போது சூரியா இருப்பதால் அடிக்கடி வர மாட்டான் ஆனால் இது மாதிரி பார்ட்டி இருந்தால் போதும் உடனே வந்து கூட்டி போயிடுறான்..

சுபா, நான் கூப்பிட்டதுக்கு என் கிட்ட வர மாட்டேன் முக்கியமா வேலை இருக்கு அப்டின்னு சொன்னானுக..

கீதா, ரகு ப்ரெண்ட் சரவணன் இருக்கானே அவன் வரானாம் சோ அதனால் ரெண்டு பேரும் போரானுக… என்று அவள் கொஞ்சம் ஓய்வு எடுத்தாள். கீதா, ஹே சுபா இங்கே வாடி உன் கிட்ட பேசி எவ்ளோ நாள் ஆச்சு.. 

சுபா இங்கு இல்லை அவள் எண்ணம் முழுவதும் சரவணன் பேரை கேட்டதும் அவள் மனம் தன்னிலை இழந்தாள். ஹே சுபா ஹே என்று அவள் கூப்பிட இப்போது தான் சுய நினைவுக்கு வந்தாள். ஹான் சாரி கீத்து எனக்கு முக்கியமா கொஞ்ஜம் வேலை இருக்கு நான் உன்னை கொஞ்ச நேரம் கலித்து வந்து பார்க்கிறேன். என்று சொல்லி அவள் வேக வேகமாக வெளியே சென்றாள். அவள் மனம் சரவணனை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 

அதற்கு அவள் சென்று கொண்டு இருக்கும் போது அவளது ஆபீஸ் மற்றும் வேலை தொடர்பான நண்பர் வட்டம் அவளை வளைத்து கொண்டது. 

இங்கே சரவணன் ரகு, ராம் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். அந்த இடத்தில் இருந்து சுபா இருக்கும் இடம் ஒரு பத்து நிமிடம் தான் தூரம். இங்கே சரவணன் உள்ளே வந்ததும் ரகு போய் அவனை கட்டி கொண்டான். மச்சி உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு என்று அவன் பிரிய சரவணனும் ஒரு நிமிடம் அவனை கட்டி கொண்டான். 

ராம் ஸ்நேகனாக ஒரு புன்னகை சிந்திணான். ரகு, எனக்கு பழைய சரவணா தான் மச்சி வேணும் இப்போ எதுக்கு டா இப்படி இருக்க ஏன் இப்படி மாரிட்ட.. 

சரவணன், மச்சி அதை பற்றி பேசாத டா நான் இப்போவே கிளம்பி விடுவேன்.. ரகு, சரி சரி வா என்று அவனை அழைத்து கொண்டு வர மூவரும் வந்து அமர்ந்தனர். 

சரவணன் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு சிப்பாக குடித்து கொண்டு இருந்தான். ராம், மற்றும் ரகு இருவரும் பேசி கொண்டு இருக்க இப்போது பேசு பொருள் சுபா நிச்சயத்தில் வந்து நின்றது. மிதமான போதயிலே மெயின்டெய்ன் செய்து கொண்டு இருந்தான்.

ரகு, ராம் இருவருக்கும் கொஞ்சம் போதை ஏற ரகு, டேய் இந்த போட்டோ பாரேன் நான் கூட நினைக்கல டா சுபா இன்னிக்கு தேவதையா இருந்தாள் டா மச்சி.. எனக்கே ஆச்சரியமாக இருந்தது நம்ப டீம் ல இருந்த ஒரே சிங்கல் பொண்ணுக்கும் இப்போ கல்யாணம் ஆக போகுது என்று சொல்லி கொண்டு இருக்க 

ரகு, டேய் இங்கே பாரு நாங்க எல்லாம் சேர்ந்து செல்ஃபி எடுத்தோம் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் மச்சி என்று சொல்லி கொண்டே அந்த போட்டோவை சரவனிடம் காட்டிட அந்த போட்டோவை பார்த்த அடுத்த நொடி ஒவ்வொரு மிடுக்கு குடித்து கொண்டு இருந்தவன். அருகில் இருந்த ஒரு விஸ்கி பாட்டிலை ராவாக எடுத்து ஒரே மூச்சில் உள்ளே சரித்தான்.

ரகு போதை மயக்கத்தில் டேய் என் என்ன என்னடா பண்ற மச்சி நீ இப்படி ராவா அதுவும் விஸ்கி ரொம்ப ஜிவ்வுன்னி இருக்கும் டா என்று திக்கி திணறி சொல்ல…

சரவணன், மச்சி நான் காலையில் வந்து உன்னை பார்க்கிறேன் இப்போ என்று சொல்லி நிறுத்திட.. 

டேய் இப்போ எப்படி வீட்டுக்கு போவ அம்மா , தங்கை எல்லாம் இருப்பாங்க நீ குடித்து இருப்பது தெரிந்தால் வருத்த படுவாஙக டா.. 

ராம், ஜி இங்கேயே இருங்க காலையில் போலாம்.. 

சரவணன் தள்ளாடி கொண்டே எழுந்து நின்றவன் இல்ல ஜி நான் கிளம்பனும் காலையில் வருகிறேன். என்று சொல்லி வேக வேகமாக செல்ல முடியாமல் தள்ளாடி கொண்டே எழுந்து வெளியே சென்றான்.

இங்கே சுபா ரகுவுக்கு கால் செய்தாள். அவன் அட்டென்ட் செய்து உளறி கொண்டு இருக்க உடனே போன் கட் செய்து ராமுக்கு அழைத்தாள். 

சுபா, ரூம் நம்பர் சொல்லு டா ..  ஏன் டி.. டேய் நீ இப்போ  சொல்லல நான் கீத்து வோட அங்கே வந்துடுவேன்.. 

ராம், ஒரு நிமிடம்  சுபா என்று 000 என்று சொல்ல உடனே சுபா லிஃப்ட் ல அந்த தளத்தினை அதற்கு உண்டான எண் அழுத்தி உள்ளே சென்றாள். அந்த தளம் வந்ததும் அவள் அந்த தளத்தில் லிஃப்ட் ல இருந்து இறங்கும் நேரம் சரவணன் போதையில் கண்களை மூடி கொண்டே லிஃப்ட்க்கு காத்து கொண்டு இருந்தான். 

சுபா அவனை பார்க்க அவன் அருகே அவள் நிற்பது கூட தெரியாமல் லிஃப்ட்க்கு உள்ளே ஏறி கொண்டான். இப்போது கண்களை அந்த பட்டன் நோக்கி கிரவுன்ட் பிளோர் எண்ணை தட்டி விட்டு நிமிர அங்கே சுபா இவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். 

சரவணன் கனவு என்று நினைத்து கண்களை இருக்கி மூடி திறந்து பார்க்க அப்போதும் தெரிந்தாள். கண்களை தேய்த்து விட்டு பார்த்தான். சுபா எதுவும் செய்யாமல் அவனை பார்த்து கொண்டு மட்டும் இருந்தாள். 

சரவணன், இப்போது பேசினான் ஹே எதுக்கு டி என் கண்ணுக்கு தெரியுற..உன்னை நெருங்க கூடாது அப்டின்னு நானும் ஒதுங்கி ஒதுங்கி போனால் என் கனவிலும் நிஜத்திலும் என்னை ஏன் டி இப்படி கொல்ற என்று நா குழன்று பேசி கொண்டே போடி…. என்று சொல்லிட அவள் கண்களில் கண்ணீர் வர உடனே அந்த லிஃப்ட் பட்டனை அழுத்த போக… 

சரவணன், என்னை விட்டு போயிடுவியா சுபா.. என்னோடு இந்த கனவில் கூட இருக்க மாட்டியா என்று சொல்ல அவள் திரும்பி அவனை பார்க்க சரவணன் ஒரே பிடியில் அவள் அவன் வளைவில் வந்து விட்டாள். 

சரவணன் அவள் முகத்தை கண்கள் சொருகிட அந்த போதயில் தொட்டு பார்த்து கொண்டே அவள் கைகளை பார்த்தான் . அவள் கைகளில் நிச்சய மோதிரம் இருக்கிறதா என்று பார்க்க அது இல்லை சுபா வினய் போட்ட சிரிது நேரத்தில் கழட்டி விட்டாள். 

சரவணன் அவள் விரல்களுக்கு முத்தம் வைத்து நீ என் சுபா தான் என்று சொல்லிட சுபாவுக்கு இதை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உடனே அவள் சரவணா என்னை விடு நான் போகனும்.. 

மாட்டேன் உன்னை விட மாட்டேன் என் கனவில் கூட என்னோட இருக்க மாட்டியா என்று சொல்லி அவளின் அந்த ஆரஞ்சு சுளை போல இருக்கும் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான். சுபா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

ஒரு சில நிமிடம் திடுகிட்டவள் பின் அவனோடு ஒன்றி போனாள் இந்த அணைப்பு இந்த முத்தம் அவனுடய பேச்சு இதற்காக எத்த்ணை வருடங்கள் அவள் காத்து கொண்டு இருந்தாள்.உதட்டை விடுத்து  முகம் எல்லாம் முத்தமிட்டான். என்னோட சுபா….நீ என்னோடவள்..என்று சொல்லி அவன் இதயத்தை காட்டி இந்த இடம் இதில் எப்பவும் நீ மட்டும் தான் டி என்று சொல்ல இந்த வார்த்தைகள் கேட்டு சுபா இப்போது அவனை முத்தமிட்டாள்.

சுபா அவனை முத்தமிட்டு விலக போக அவன் அவளை விட வில்லை இப்படியே எவ்வளவு நேரம் ஒட்டி கொண்டார்கள் என்று தெரியவில்லை. கிரவுண்ட் புளோர் வந்ததும் உடனே தன்னிலைக்கு வந்த சுபா, வா வீட்டுக்கு போலாம்… நா நான் வரல… இப்போ எங்கே போக போற…  நான் ஆபீஸ் போறேன்… என்று அவன் சொல்ல காருக்கு சென்று அவனை உள்ளே தள்ளி விட்டு அவனுடய போனை எடுத்து கேப் புக் செய்தாள்.

அந்த கேப் வரும் வரை வெயிட் செய்து பின் அவன் போனில் கேப்ல சென்றது போல் பணம் பே செய்து அந்த கேபை அனுப்பி விட்டு இவள் காரில் அவன் ஆபீஸ் நோக்கி வண்டியை விட்டாள். சரவணன் எப்படியும் காலையில் யோசித்து பார்ப்பான் அவனுக்கு எல்லாம் கனவில் நடந்தது போல் இருக்க வேண்டும் என்று சுபா இந்த ஏற்பாட்டை செய்தாள்.

அவன் ஆபீஸ் வந்ததும் சுபா, உன் ஆபீஸ் வந்திடுச்சு இறங்கு என்று சொல்லிட சரவணன் கண்களை மூடி கொண்டே இருந்தான்.சரவணா கண்ணை திற.. அவனோ மாட்டேன் டி… ஏன் எனக்கு டைம் ஆகுது நான் போகனும் டா..  அவன் நான் கண்ணை திறந்தால் கனவில் இருந்து எழுந்து விடுவேன் சோ இப்படியே உன் கூட இருக்கணும் அது தூக்கமா இருந்தாலும் ஓகே என்னோட சாவா இருந்தாலும் ஓகே…

சுபா, அவன் அருகில் வந்து ஹே கண்ணை திற இல்லை நான் போயிடுவேன். பிளீஸ் போகாத டி நான் இப்போவே கண்ணை திறக்கிரேன் என்று சொல்லி அவன் கண்களை திறக்க சுபா சற்றும் தாமதிக்காமல் அவனுக்கு முத்தமிட ஆரம்பித்தாள். இருவரும் மூச்சு முட்டி விலகி அவள் அவன் கண்களை பார்த்து நீ கனவில் என்னோடு வாழ நினைக்கிறாய். நான் உன்னை நிஜததில் உன் கூட சேர்ந்து வாழ நினைக்கிறேன். அவள் அவன் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு உன் மனசில் என்ன இருக்கு அப்டின்னு நான் தெரிந்து கொண்டேன். இனி முடிவு நீ தான் எடுக்கனும்… 

சரவணன், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.. சுபா, நான் உனக்கு வேணுமா வேண்டாமா… “வேணும்” என்று தாமதிக்காமல் சொல்லிட சுபா, என் கல்யாணத்துக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு சோ அதற்குல் நீ வந்து என் கிட்ட உன்னோட லவ்வை சொல்ற.. அப்படி இல்ல அப்பா கிட்ட போய் பேசுற இல்லை… 

அப்புறம் என்ன பண்ணுவ… சுபா கோபமாக உன்னையும் கொன்று விட்டு…  சரவணா, நீயும் செத்து விடுவாயா… சுபா, நான் எதுக்கு சாகணும் நான் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிப்பென்… 

சரவணா, அப்போ என்னை விட்டு போடி… சுபா, சரவணா இனிமே தான் டா உனக்கு இருக்கு உன்னை எப்படி கதற விடரென்னு மட்டும் பாரு என்னை எவ்ளோ கஷ்ட படித்துன இனி அதுக்கு நான் உன்னை ரிவென்ஜ் எடுக்க போறேன் என்று சொல்லி ஆழமாக ஒரு முத்தமிட்டு அவனை வாசலில் இறக்கி விட்டு அவன் உள்ளே செல்லும் வரை பார்த்து கொண்டு இருந்தாள். 

அவன் உள்ளே சென்றதும் சந்தோச மன நிலையில் அவள் வீடு நோக்கி வண்டியை செலுத்தினாள். சுபா மனதில் இப்போது தான் நிம்மதி குடி கொண்டது. சுபா வீட்டுக்கு வந்ததும் அவள் முகத்தில் உள்ள தெளிவையும் சிரிப்பையும் பார்த்து இன்பாவுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 

ஆனாலும் அவன் அவள் பேசியதை மறக்க வில்லை அவளை கடந்து கிருஷ்ணன், பாவை தங்கி இருக்கும் அறைக்கு சென்றான். சுபா, இன்பா… அவன் பதில் சொல்ல வில்லை… இன்பா..  தம்பி இப்போ நிக்க போறியா இல்லையா… இன்பா, மம் சொல்லுங்க  என்ன வேணும்… 

சுபா, சாரி டா பிளீஸ் எப்பவும் போல பேசு என்று அவள் சொல்ல இன்பா அவள் முகத்தை இப்போது கொஞ்சம் அருகில் பார்க்க உதடுகள் கொஞ்சம் வீங்கி சிவந்து  இருக்க அவன் போலீஸ் மூளை வேலை செய்ய தொடங்கியது.

இன்பா, இப்போ எங்கே இருந்து வர யாரை பார்க்க போன… 

சுபா, நான் ராம், கீதா வை பார்க்க போனேன்.. 

இன்பா, வினயும் நீயும் சேர்ந்து போனீங்கலா…

சுபா, இல்ல அவர் அவங்க ப்ரெண்ட் எலார்ருக்கும் வேற ஹோட்டல்ல பார்ட்டி சோ அவர் அங்கே இருக்கிறார். இப்போ எதுக்கு என்னை இத்தனை கொஸ்டீன் பண்ற 

இன்பா, ஒன்னும் இல்ல சும்மா தான் சரி நீ போ என்று சொல்லி விட அவள் அறைக்கு சென்றாள். 

அவள் சென்றதும் உடனே அவன் அறைக்கு சென்று விட்டான். அடுத்த நாள் அழகாக விடிந்தது.

இன்பா எழுந்ததும் கவ்யாவிடம் இருந்து காலை வணக்கம் என்று செய்தி வர அதை பார்த்த இன்பாவின் முகத்தில் ஒரு புன்னகை… 

அவன் தயாராகி கீழே வர கிருஷ்ணன், பாவை இருவரும் உணவு மேஜெயில் அமர்ந்து இருந்தனர். 

பாவை, ராகவ் நாங்க ரெடி இப்போ சின்ன குட்டிய பார்க்க போலாமா..

பின்னால் இருந்து ஒரு குரல் “யாரு அந்த சின்ன குட்டி” என்று கேட்க 

பாவை திடுக்கிட்டு திரும்பி பார்க்க இன்பா நிதானமாக பார்த்தான்.

தொடரும்…

சுபா – சரவணன் ரெண்டு பேரும் சேருவார்களா என்பது நீங்க கதையை முழுசா படித்தால் தான் தெரியும் சகோ அண்ட் சகி… தொடர்ந்து read பண்ணுங்க இல்லனா சுவாரஸ்யம் போயிடும்..m

Episode 122,

பாவை, ராகவ் நாங்க ரெடி இப்போ சின்ன குட்டிய பார்க்க போலாமா..

பின்னால் இருந்து ஒரு குரல் “யாரு அந்த சின்ன குட்டி” என்று கேட்க 

பாவை திடுக்கிட்டு திரும்பி பார்க்க இன்பா நிதானமாக பார்த்தான்.

ரவி, யார் அத்தை அது சின்ன குட்டி உங்க ராகவ்க்கு குழந்தை இருக்கா எங்களுக்கு தெரியாமல் எதுவும்.. என்று நிறுத்தி விட

இன்பா தன் அப்பாவை முறைத்து பார்க்க கிருஷ்ணன், மாப்பிள்ளை ராகவ் உங்க பையன் அவன்  அப்படி  எல்லாம் செய்வானா… இதை கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் ரவி அமைதி ஆகிட அவன் ஓல்ட் மேன் ஆல்வேஸ் க்லவர்… என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு இப்போது இன்பா, பட் நான் அவரோட பையன் இல்லை நான் என்னோட மாம் அவங்களோட பையன்… 

ரவி மனதில் வரம் கொடுத்தது நான் தானே டா நீ இன்னும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ என்று மனதில் நினைத்து கொண்டு தன் அத்தையை பார்த்து சொல்லுங்க மாமி அந்த சின்ன குட்டி யாரு?…

பாவை, அது அது வந்து மாப்பிள்ளை என்று இன்பாவை பார்த்திட அவனோ டார்ல் இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் சில் கூல் என்று சொல்லி தன் தந்தையை பார்த்து அது தான் உங்களுக்கு தெரியுமே அப்புறம் என்ன… 

ரவி, எனக்கா எனக்கு என்ன தெரியும்.. டோண்ட் ஆக்ட் வித் மீ இது எல்லாம் மாம் கிட்ட சுபா கிட்ட வைத்து கொள்ளுங்கள்.. இதை பார்த்து கிருஷ்ணன், பாவை இருவரும் புன்னகையை செய்திட 

யூ ஸ்கவுண்ட்ரல் நான் இப்போவே உன் அம்மா கிட்ட சொல்ல போறேன்.. ம்ம் போய் சொல்லுங்க நான் காலேஜ் போறதே என் டார்ஜலிங்கை பார்க்க தான்…

ஓ அப்போ உங்க தாத்தா காலேஜ் ல தான் அந்த பொண்ணு.. அது என் காலேஜ் மைண்ட் இட்..  என்று தன் தாத்தாவை பார்த்திட மம் ஓகே ராகவ் உன் பேரில் எழுதி விடுகிறேன்… 

ரவி, அது உனக்கு சொந்தம் இல்லை இளவழகனோடது உனக்கு சொந்தமான கம்பனி அது எங்கே இருக்கு அப்டின்னாவது தெரியுமா..

என்னோட ஸ்டேஷன் மட்டும் தான் எனக்கு தெரியும்.. என்று இன்பா சொல்லிட உடனே ரவி  அவனை சீண்ட எண்ணி மதி… மதி.. என்று வீடே அதிரும் படி கத்தினார்.

பாவை, என்னங்க மாப்பிள்ளை ரொம்ப கோபமா இருக்காரு.. அவர் சிரித்து கொண்டே நீ நடப்பதை மட்டும் வேடிக்கை பாரு.. 

வசு மேலே இருந்து வேக வேகமாக கீழே இறங்கி வர என்னாச்சுங்க.. இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க என்று தலையை துவட்டி கொண்டே வந்தார். 

ரவி, உன் ராகவ் இப்போ என்று ஆரம்பித்து இன்பாவை பார்த்து சொல்லட்டுமா… என்று கேட்க வசு இருவரையும் பார்த்து என்னாச்சு ராகவ் அப்பா என்ன உன்கிட்ட கேட்கிறார். 

ரவி காலேஜ் ல போய் உன் பையன்… மாம் நானே சொல்றேன் என்று அவன் அம்மாவின் அருகில் போக மூவரும் திடுக்கிட்டு பார்த்தனர். இன்பா, மம் சொல்ல வேண்டாம் உங்களுக்கு காட்டுகிறேன் என்று சொல்லி அவனுடய போனில் ஒரு புகை படத்தை காட்டி இன்பா, மாம் இந்த பொண்ணோட நிக் நேம் “சின்ன குட்டி” என்று சொல்லிட உடனே ரவி வசு அருகில் செல்ல போக ஸ்டாப் நீங்க அங்கேயே நில்லுங்க.. 

வசுமதி அந்த போட்டோவை வாங்கி பார்க்க மாம் இந்த பொண்ணோட முகத்தை பாருகளேன்.. வசு, யாரு ராகவ் இந்த பொன்னு? என் கிட்ட எதுக்கு காட்டுற கொஞ்சம் சின்ன பொன்னு மாதிரி இருக்கு ஐ திங்க் 12த் படிக்கும்… 

இதை கேட்டதும் ரவி காலேஜ் ல எப்படி ஸ்கூல் பொன்னு படிக்கும் என்று யோசிக்க இன்பா ஒரு குண்டை தூக்கி போட்டான்…

மாம் அதை நீங்க உங்க ஹஸ்பன்ட் கிட்ட தான் கேட்கணும்… வாட்! என்று வசு ரவி இருவரும் ஷாக் ஆகி பார்க்க… ரவி வேக வேகமாக வசுமதி அருகில் வந்து அந்த போனை பிடுகி பார்த்தார். 

என்ன ராகவ் சொல்ற… மாம் அந்த பொண்ணுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. வசுமதி கேள்வியாக என்ன அது?

இன்பா சிரித்து கொண்டே மாம் இது தான் என்று அவன் கண்ணகுளியை காட்டி விட்டு சோ நம்ம வீட்டில் எனக்கும் இவருக்கும் தான் இந்த கண்ணகுளி இருக்கு அப்போ இந்த பொன்னு யாரு மாம் என்று கேட்டிட வசு தன் கணவனை முறைத்து கொண்டே யார் இந்த பொன்னு.. 

ரவி, மதி அவன் சொல்றதை நம்பாத… வசு, இந்த பொன்னு யாரு அதுக்கு பதில் சொல்லுங்க..  இன்பா, மாம் நான் சொல்றேன்.. இந்த பொண்ணு தான் அவரோட காலேஜ் மேட் பிளவர் மலர்கொடி அவங்களோட டாட்டர்… 

ரவி வசுமதி அருகில் நெருங்கி வர ஒரு நிமிடம் வசு கோபத்துடன் மதி நான் சொல்றதை முதலில் கேளு அவன் பொய் சொல்றான் சரியான ஃப்ராடு டி… வசு உடனே தன் தந்தையை நோக்கி சென்று அப்பா என்று தோலில் சாய்ந்து கொள்ள..

ரவி இன்பாவின் சட்டையை பிடித்து கொள்ள 

இன்பா, சரி நீங்க சொல்றதை நான் ஓத்து கொள்கிறேன் நான் ஃப்ராடு தான்… நான் சொல்றது பொய் தான்… ஒரே ஒரு கொஸ்டீன் மட்டும் கேட்கட்டுமா… என்ன என்பது போல் கோபத்தில் ரவி கேட்க இன்பா சிரித்து கொண்டே மாம் அந்த கேர்ல் நேம் என்ன தெரியுமா… 

டேய் உன்னை ஐ வில் கில் யூ டா என்று கழத்தை நெறிக்க அவன் திணறி கொண்டே அந்த பொண்ணு நேம் சுபாஷிணி.. ஐ மின் சுபா.. என்று சொல்லிட உடனே வசு, உண்மையா!… ரவி ராகவ் சொல்றது உண்மையா… ரவி அவன் சட்டையை விட்டு இப்போது அவள் பக்கம் சென்று இல்ல மதி நான் சொல்றத புரிந்து கொள் அவன் பொய் சொல்றான். 

மாம் ஒரு போலீசா யோசிங்க மாம் இவர் எப்போது பார்த்தாலும் மும்பை பறந்து பறந்து போறது இந்த பொண்ணை பார்க்க தான்… என்று சொல்லி விட்டு ஓல்ட் மேன் அண்ட் டார்ள்ஸ் இனி இங்கே ஒரு சம்பவம் நடக்க போகுது நம்ப ஜாலியா சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம் என்று சொல்ல… 

அவர்கள் மூவரும் வெளியே செல்ல இன்பா தன் அப்பாவை பார்த்து புன்னகை சிந்தி விட்டு கிளம்பினான். அவள் ரவி எனக்கு டிவோர்ஸ் வேணும்… என்று சொல்ல ஹே மதி என்னடி அவன் சொல்றத நம்புற நான் சொல்றத நம்ப மாட்டியா..

அவள் கண்கள் கலங்கி விட ஊரில் கன்னகுளி யாருக்கு இருந்தாலும் அதுக்கு நான் தான் காரணமா அவங்க எல்லாம் என்னோட பசங்க ஆகிடுவாங்களா டி…

வசுமதி, உங்களுக்கு அந்த ஆசை வேற இருக்கா அப்புறம் எதுக்கு என் பின்னாடி துரத்தி வந்து கல்யாணம் பண்ணிக்க டார்ச்சர் பண்ணீங்க… 

ரவி, அவள் கைகளை பிடிக்க வர அவள் கைகளை தட்டி விட்டாள். என் பையன் சொல்றது உண்மையா தான் இருக்கும் இனி உங்க இஷ்ட பட்ட பொன்னு கூட வாழுங்க… 

ஹே இப்படி எல்லாம் பேசாதே டி. நீ பேசுவதை பார்த்தால் நான்  உன்னை ஏமாற்றியது போல் இருக்கு 

வசு,  அப்போ அந்த பொண்ணுக்கு எப்படி வந்தது. என்று விசும்பி கொண்டே கேட்க ரவி அழாத டி பிளீஸ் என்னை நம்பு உன் பையன் வேணும்ன்னு இப்படி பண்ணி இருக்கான்

என்று மலர் கொடி அவள் குடும்பம் இருக்கும் புகை படத்தை அவளிடம் காட்டி இங்கே பாரு அந்த மலர்க்கு கண்ணத்தில குழி இருக்கு அதனால் அவளோட பொண்ணுக்கும் இருக்கு…என்று ரவி சொன்னதும் உடனே அவர்கள் குடும்ப போட்டோவை பார்க்க அதுள் ரவி சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டாள். 

இப்போது அவள் அப்போ இந்த பொண்ணுக்கு ஏன் நம்ப பொன்னு பேரு வச்சு இருக்காங்க! இதை கேட்டு ரவி யோசிக்க… வசு, என்ன யோசிக்கரீங்க அப்போ ராகவ் சொன்னது சரி தான்… என்று அவரிடம் இருந்து தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ரவி, அவள் அருகில் வந்து மதி பிளீஸ் டி சத்தியமா இது ஒரு கோ இன்சிட்டென்ட்ஸ்… என்று சொல்ல உடனே வசு, அப்போ எதுக்கு சண்டை போட்டால் சும்மா சும்மா மும்பை போறீங்க… என்று அடுத்த கேள்வி கணைகளை தொடுக்க ரவி ஒரு பெரு மூச்சு விட்டு அப்படி இல்ல டி..

வசு, பின்ன எப்படி.. நீங்க என்னைய ஏமாற்றி விட்டீர்கள் என்று சொல்ல சரியாக அந்த நேரம் சுபா மேலே இருந்து கீழே இறங்கி வர இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டு இருப்பது தெரிய உடனே அவள் 

டாடி என்னாச்சு… ரவி தன் மகளை பார்த்ததும் ஏஞ்சல் இங்கே வா என்று கூப்பிட உடனே அவள் ஓடி சென்று தன் தந்தையின் அருகில் வந்தாள்.

மதி… மதி.. இங்கே பாரு என்னை பாரு டி… அவள் திரும்பி பார்க்க ரவி சுபா வின் தலையில் கை வைத்து என்னோட ஏஞ்சல் மேல பிராமிசா யாரு கூடவும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை டி,

எனக்கு சுபா அப்டின்னு ஒரு பொண்ணு ஒரே ஒரு பொன்னு தான் இந்த பேரு கூட நீ தான் சூஸ் பண்ணி வச்ச நியாபகம் இருக்கா… 

உன்னை விட்டால் இந்த முகத்தை யாரு கல்யாணம் பண்ணிப்பா… நீ கூட இப்போ சுபா வுக்கு தங்கை மாதிரி இருக்க எனக்கு பாரு இப்போவே சால்ட் அண்ட் பெப்பர் முடி எல்லாம் வெள்ளை ஆக ஆரம்பித்து விட்டது. என்று சில பல பனி கட்டிகளை வசுமதி தலையில் வைத்தான். 

வசு இப்போது கண்களை துடைத்து கொண்டு நீங்க சொல்றது எல்லாம் உண்மையா பொய் சொல்லல தானே… 

சுபா, வாட் ஹெப்பன் டாடி… ரவி, எல்லாம் அந்த ராஸ்கல் பண்ண வேலை… நான் சொல்றது எல்லாம் உண்மை மதி என்று சொல்ல… சரி என்று சொல்லி அவள் சமயல் அறை உள்ளே சென்றாள்.

சுபா, என்னாச்சு டாடி.. உடனே ரவி இன்பா வின் காதல் விசயம் தவிர்த்து மற்ற அனைத்தும் கூறிட சுபா வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து விட்டு டாடி நான் எனக்கு வெளியே வேலை இருக்கு என்று சொல்லி அவள் கிளம்ப

 ரவி, சுபா… உடனே அவள் திரும்பி பார்க்க…

அவள் முகத்தில் இப்போது தெரிந்த ஒரு பொலிவு அவள் சிரிப்பு இது எல்லாம் அவருக்கு புதிது தன் மகளை கண் கொட்டாமல் அவளின் இந்த சிரிப்பை ரசித்து கொண்டு இருந்தார். 

டாட்….  டாடி… என்று அழைக்கவும் தன்னிலை க்கு வந்தார். சுபா, எதுவும் சொல்லனுமா… 

ரவி, ஒன்னும் இல்லை நீ போ செல்லம் என்று அவர் சொல்ல உடனே சுபா கிளம்பினாள்.

ரவி இப்போது வசுவை தேடி சமையல் அறை சென்றார். மதி… மதி.. மம் என்று அவள் வேலை செய்து கொண்டு இருக்க அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டார். 

இங்கே இன்பா, கிருஷ்ணன், பாவை மூவரும் மித்ரன் வீட்டுக்கு சென்றனர். சரவணன் இன்னும் வர வில்லை. சுபாவும் அங்கே தான் கிளம்பினாள். 

அவர்கள் வந்ததும் தேவகி அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டு இருக்க சுபா அங்கே வந்தாள். பாவை, என்ன சுபா இங்கே வந்து இருக்க? நேற்று இவங்க யாருமே நிச்ச்யத்துகு வரல அது தான் என்னாச்சு அப்டின்னு பார்க்க வந்தேன்.

ஏன் நான் வர கூடாதா..என்று தேவகி யை பார்த்து கேட்க,

என்ன சுபா நீ எப்போ வேணாலும் வரலாம் என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போதே அங்கு சரவணன் வந்தான். 

இன்பா, வெண்பாவிடம் விவேகாவை இங்கே வர  சொல்லு மா… ம்ம் சரி அண்ணா என்று அவள் விவேகாவின் அம்மா எண்ணுக்கு கால் செய்தாள். 

தொடரும்… 

 Episode 123,

சுபா தேவகியிடம் ஏன் ஆன்ட்டி நான் இங்கே வர கூடாதா என்று கேட்கும் நேரம்

தேவகி, இது உன் வீடு நீ எப்போ வேணும்னாலும் இங்கே வரலாம் மா… என்று சொல்ல சரவணன் தன் தலையை பிடித்து கொண்டே அம்மா என்று குரல் கொடுத்து கொண்டே உள்ளே வர அங்கே சுபா, இன்பா, கிருஷ்ணன், பாவை என அனைவரும் இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அமைதியான்.

கிருஷ்ணன், என்ன சரவணா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. மித்ரன், தேவகி, வெண்பா, மூவரும் அவன் எதுவும் மனம் வருத்தப்படும் படி பேசி விடுவானோ என்று பயந்து கொண்டே பார்க்க 

சரவணன், தாத்தா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை… என்று அவன் சொல்லி இருவரையும் பார்த்து நலம் விசாரித்தான். சிறு வயதிலேயே அவர்களை அவனுக்கு பிடிக்கும் நல்ல மனம் படைத்தவர்கள். ஒரு நிமிடம் நான் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அவன் உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டான். 

இன்பா, வெண்பா அவளுக்கு போன் பண்ணி வர சொல்லு… சரி அண்ணா என்று சொல்லி அவள் விவேகாவிக்கு போன் செய்ய சென்றாள். 

சரவணன் ஒரு பத்து நிமிடத்தில் குளித்து முடித்து ரெடி ஆகி  வெளியே வந்ததும் அங்கே உள்ள சேரில் அமர்ந்து கொண்டான். கிருஷ்ணன், எப்படி ப்பா வேலை எல்லாம் போகுது.. மம் எல்லாம் ஓகே தாத்தா…

பாவை, உன் அம்மா நான் பார்க்கும் காலத்தில் இருந்து இன்னும் வேலை செய்து  இன்னும் கஷ்ட பட்டு கொண்டே இருக்கா… என்று சொல்லி அவர் தேவகியை பார்க்க 

சரவணன், நான் சொன்னாலும் அம்மா கேட்க மாடின்றாங்க பாட்டி நீங்க சொல்லிட்டு போங்க… 

கிருஷ்ணன், நீ உன் அம்மா சொல்றதை கேளு இதை கேட்டு அவன் புரியாமல்  பார்க்க   பாவை,உங்க அம்மாவுக்கு உதவி ஒத்தாசைக்கு ஒரு ஆள் வேணும் பா… அவன் அதுக்கு தான் வெண்பா, நான், மித்ரன் எல்லாம் இருக்கோம் அப்புறம் என்ன அம்மா தான் மெனகெட்டு எல்லாம் செய்கிறார்கள்..

உடனே அது அப்படி இல்ல நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.. இதை சொன்னதும் சரவணன் சுபாவை ஒரு நிமிடம் பார்வை தானாக ஒரு நொடி பார்க்க அதை எதட்சையாக  இன்பா பார்த்து விட்டான். சுபாவும் இங்கு வந்ததில் இருந்து வைத்த கண் வாங்காமல் சரவணன் பார்க்காத நேரம் அவனை பார்த்து கொண்டு இருந்தாள். 

தேவகி, நான் சொன்னா ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டின்றான். நீங்களாவது சொல்லி விட்டு போங்க மா…

கிருஷ்ணன், அடுத்த முறை வரும்போது நீ உன் இனையோடு தான் இருக்கணும் இது விளையாட்டு இல்ல சரவணா உனக்கு அடுத்து ரெண்டு பேர் இருக்காங்க உன் அம்மாவுக்கு எவ்ளோ கவலை இருக்கும் அதையெல்லாம் யோசித்து முடிவு எடு இப்போவே உனக்கு வயசு 30ஆகி விட்டது.. 

இங்கே வெண்பா விவேகாவின் அம்மா எண்ணுக்கு கால் செய்ய உடனே அவள் அம்மா எடுத்து விட அம்மா நான் வெண்பா பேசறேன்.. மம் சொல்லு மா… விவேகா என்ன பண்றா.. கங்கா, நான் வருண் வீட்டில் இருக்கேன் மா நேற்று வேலை செய்து களப்பா இருக்கு அப்டின்னு வீட்டில் இருக்கா… தூங்கி எழுந்தாளா அப்டின்னு கூட தெரியல.. வெண்பா, நீங்க எப்போ வீட்டுக்கு வருவீங்க.. எனக்கு இங்கே கொஞ்சம் வேலை பாத்திரம் எல்லாம் அடுக்கி வைத்து கொண்டு இருக்கேன் அப்புறம் வீட்டில் வேலை இருக்கு  மா அவளை தான் நான் இங்கே வர சொல்லி இருக்கேன்… என்று சொல்ல வெண்பா சரி  என்று சொல்லி போன் வைத்தாள். 

வெண்பா வெளியில் இருந்து உள்ளே வந்து இன்பாவிடம் போய் எல்லாம் சொல்லிட  மம் ஓகே நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிருஷ்ணனிடம் சைகை காட்டிட கிருஷ்ணன் மம் சரி பார்க்கலாம் கொஞ்சம் முக்கிய வேலை இருக்கு இன்னொரு நாள் வருகிறோம் என்று சொல்லி அவர்களுக்கு வாங்கி வந்த தீனி அனைத்தும் கொடுத்து விட்டு கிளம்பி வெளியே வந்தனர். 

பாவை, சுபா நீ என்று கேட்க இன்பா, அவ நம்ம கூட வரலயே அவளுக்கு நிறைய வேலை இருக்கும் நம்ப போலாம்… சுபா நேற்று எடுக்கப்பட்ட புகைபடங்கள் நிச்சய மோதிரம் அணிவிப்பது என அனைத்தும் அமர்ந்து மித்ரன், வெண்பா, தேவகி மூவரிடமும் சிரித்து முகமாகவும் சந்தோஷமாகவும் காட்டி கொண்டு இருந்தாள். 

அதை பார்த்த சரவனுக்கு இருப்பு கொள்ள வில்லை. ஒரு நிமிடம் குழம்பி போனான். அவள் செய்வது அவனுக்கு வெறுப்பாக இருக்க உடனே சரவணன், அம்மா… அம்மா… என்று கத்திட… தேவகி போட்டோவை பார்த்து கொண்டே சொல்லு டா.. எனக்கு டீ வேணும்… கொஞ்ச நேரம் இரு வரேன்… அம்மா எனக்கு இப்போவே வேணும் ரொம்ப தலை வலிக்குது… தேவகி, அப்போ இப்போவே கல்யாணம் பண்ணிக்கோ உன் பொண்டாட்டி வந்து போட்டு கொடுப்பா… இதை கேட்டதும் சுபா சிரித்தாள். தேவகி மேலும் தொடர்ந்தாள்.  உன் இஷ்டத்துக்கு இனி என்னை அதட்டி பேச வேண்டாம். நான் போட்டு தர மாட்டேன் என்று சொல்லி சுபாவிடம் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தனர்.

சரவணன் கோபமாக உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டான். அவன் எண்ணம் முழுவதும் இரவு நடந்ததை பற்றி நினைத்து பார்க்க ஆரம்பித்தான். 

இங்கே இன்பா, பாவை, கிருஷ்ணன் மூவரும் விவேகா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். பாவை, எங்கே கூட்டி போற.. கிருஷ்ணன் , டேய் உன் வீடு ஐ மின் உன் அம்மாவோட கோட்ரெஸ் இருக்க  வழி தானே இது… ம்ம் ஆமா… அப்போ அங்கே தான் பாப்பா இருக்காளா… 

இதை கேட்டதும் பாவை ஆச்சர்யமாக இன்பாவை பார்க்க இன்பா, மம் ஆமா..  டேய் நீ சரியான கில்லாடி டா ரவி சரியா தான் சொல்லி இருக்கிறார்…  பேசாமல் வாங்க… என்று சொல்லி வீட்டு கதவினை தட்டி விட கதவு திறக்க வில்லை. அருகில் உள்ள வீட்டின் அழைப்பு மணி ஒரு நிமிடம் அழுத்த இபோது கதவு திறந்தது. கண்களை தேய்த்து கொண்டே அவள் கதவை திறக்க அங்கே நின்று கொண்டு இருந்த மூவரையும் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆனாள். 

அம்மச்சி, தாத்தா, என்று சொல்லி கொண்டே இன்பாவை பார்த்தாள். கிருஷ்ணன், உள்ளே வரலாம… வாங்க வாங்க தாத்தா என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து விட்டு தண்ணீர் எடுத்து வந்து தந்தாள். கிருஷ்ணன், மம் உன் சர்பிரைஸ் நல்லா தான் இருக்கு.. பாவை அங்கே சுற்றி பார்க்க.. விவேகா,சாப்பிடுங்கள் தாத்தா, அம்மாச்சி… பாவை, இல்ல குட்டி நாங்க காலையில் தான் சாப்பிட்டோம்… 

விவேகா, முதல் முறையா வீட்டுக்கு வந்து இருக்கிங்க எதுவும் கட்டாயம் சாப்பிடணும் என்று சொல்ல பாவை, கிருஷ்ணன் இருவரும் மாறி மாறி பார்த்து கொள்ள விவேகா, அப்போ எதுவும் சாப்பிட மாட்டீர்களா… 

இருவரும் டீ மட்டும் போதும்.. என்று சொல்ல விவேகா அவர்கள் வீட்டில் உள்ள புகைபட ஆல்பம்  பாவையிடன் எடுத்து கொடுத்து விட்டு இங்கிலீஷ், தமிழ் செய்தி தாள் எடுத்து கிருஷ்ணனிடம் கொடுத்தாள். இன்பா ஒரு ஓரமாக போனை நோண்டி கொண்டு இருந்தான். 

பத்து நிமிடம் நான் போட்டு எடுத்து வருகிறேன் என்று சொல்லி அவள் சமையல் அறை உள்ளே செல்ல இன்பா அவள் பின்னால் சமையல் அறையின் உள்ளே சென்றான். 

வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை. இன்பா, ஹே விவேகா..  அவள் தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு ஃப்ரிட்ஜில் இருந்து பால் எடுத்து கொண்டே மம் சொல்லு ராகவ்.. அவனோ குளிச்சியா டி… இதை கேட்டதும் உடனே இல்லையே மணி இப்போ தானே 10.00 இந்த நாள் முடிய இன்னும் டைம் இருக்கு அதுவும் எனக்கு காலேஜ் லீவு நான் எங்கே போக போறேன். எத்தனை மணிக்கு எழுந்த… விவேகா இதை கேட்டு என்ன சொல்ல என்று யோசிக்க.. ஹே சொல்லு டி… அது ஹான் நான் சீக்கிரமா எழுந்து விட்டேன்.. டைம் சொல்லு … இல்ல ராகவ் அவசரத்தில் டைம் பார்க்கல… பொய்..  விவேகா, இப்போ சீக்கிரம் எழுந்து நான் என்ன பண்ண போறேன் அதே போல் இப்போ குளிச்சு என்ன பண்ண போறேன்.என்று டீ தூள் எடுத்து போட்டு டிகாஷன் ரெடி செய்தாள். 

இன்பா, ப்ரேக் பாஸ்ட் முடிந்ததா..  என்று கேட்க அவள் பதில் சொல்லாமல் இருக்க சாரி டி நான் தவறா கொஸ்டீன் கேட்டு விட்டேன் என்று சொல்லி அவன் முதலில் ப்ரஷ் பண்ணியா… 

விவேகா, ஓவரா பேசுற அதெல்லாம் நான் ப்ரஷ் பண்ணிட்டேன் என்று அவள் சொல்ல உடனே அவளை அவன் பக்கம் இழுத்து முத்தமிட்டான். விவேகா உடனே அவனை தள்ளி விட்டு டேய் இருந்து தான் தூபம் போட்டியா ராஸ்கல்… இன்பா, பேபி ஐ திங்க் நான் பெல் அடிக்கும் போது தான் நீ ப்ரஷ் பண்ணி முடிச்சு இருக்க சரியா… 

விவேகா மனதில், அய்யோ கண்டு பிடித்து விட்டானே என்று அப்படி எல்லாம் இல்லையே நான் காலையில் நேரமே ப்ரஷ் பண்ணிட்டேன்.

இன்பா அவளை பின்னால் இருந்து அணைத்து இல்ல டி எங்க தாத்தா, டார்ள் ரெண்டு பேரும் கொஞ்சம் ஹைஜின் சோ என்று சொல்ல உடனே விவேகா, அப்போ டீ வேண்டாம் ராகவ் நான் போய் குளித்து வந்து போட்டு தரட்டுமா… 

உடனே இன்பா இல்ல வேண்டாம் வேண்டாம் பரவாயில்லை இட்ஸ் ஓகே தான் என்று சொல்ல அவள் வேக வேகமாக மூன்று டீ சால்ட் பிஸ்கட் இதை எல்லாம் எடுத்து கொண்டு அவர்களுக்கு போய் கொடுத்தாள். கிருஷ்ணன் , மம் பரவாயில்லயே டீ வாசம் சூப்பரா இருக்கு… என்று ஒரு மிடுக்கு குடிக்க அது ஏலக்காய், இஞ்சி வாசனை அளவான  சக்கரை என நன்றாக இருந்தது.

பாவை ஒரு வாய் குடித்து விட்டு விவேகா குட்டி நிஜமா நல்லா இருக்கு எப்படி போட்ட நல்லா சமப்ப பொல…

விவேகா, சாரி தாத்தா, அம்மாச்சி நான் இன்னும் குளிக்காமல் உங்களுக்கு டீ போட்டு கொடுத்து விட்டேன்… இன்னிக்கி லேட்டா எழுந்து விட்டேன்… 

கிருஷ்ணன், அதனால் என்ன நீ சின்ன பொண்ணு தானே வசுமதி இன்னும் லேட்டா தான் தூங்கி எழுந்து குளிக்காமல் சமைப்பா நீ தூங்கு டா 

இன்பா,நீங்க அவ்ளோ எக்ஸ்பெக்ட் பண்ண வேண்டாம் அவளுக்கு இது மட்டும் தான் செய்ய தெரியும்..


பாவை, சமைக்க தெரியாதா… கொஞ்சம் தெரியும் அம்மாச்சி எனக்கு உப்மா செய்ய தெரியும்.. 

இதை கேட்டு கிருஷ்ணன் இன்பா வைப் பார்த்து சிரித்திட பாவை, உங்களுக்கு என்ன சிரிப்பு டாக்டர் உங்களை உப்மா தான் சாப்பிட சொல்லி இருக்கார் இனி உங்களுக்கு உப்மா தான் .. சரி சரி டென்ஷன் ஆகாத என்று சொல்லி ராகவ் க் கு உப்மா பிடிக்காதே… 

இப்போ ரொம்ப பிடிக்கும் ஓல்ட் மேன் அவ நல்லா தான் செய்யுரா.. இரு டா நான் வசு கிட்ட சொல்றேன்… நீங்க அப்படி செய்ய மாட்டிங்க என்று சொல்லிட 

விவேகா மீண்டும் அவிழ்ந்த கொண்டையை மீண்டும் போட பாவை, சின்ன குட்டி ஜடை போடலயா… அம்மச்சி சிடுக்கு எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா வரும்போது நான் இப்படி இருந்தால் அடி தான்… 

இன்பா, நல்லா அடி வாங்கு டி..  என்று சொல்ல விவேகா அவனை முறைத்தாள். 

இன்பா, பேசாமல் முடியை கொஞ்சம் கட் பண்ணிக்க டி.. இதை கேட்டு பாவை, விவேகா இருவரும் அவனை முறைத்தனர்.. அது மட்டும் செய்ய மாட்டேன்.. மம் நீ தான் என் செல்ல குட்டி வா நான் உனக்கு தலை வாறி விடட்டுமா.. 

விவேகா இன்பாவை பார்க்க மம் போடி இப்போ எதுக்கு என்னை பார்க்கிற..  நீ வா மா அவன் அப்படி தான் என்று சொல்லி அவர் தலை மெதுவாக எண்ணெய் தேய்த்து சிடுக்கு எடுக்க… அம்மாச்சி சூப்பரா இருக்கு பேசாமல் தினமும் தலை வார வீட்டுக்கு வரட்டுமா..  பாவை சிரித்து கொண்டே நீ அங்கேயே வந்து தங்கினால் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..  என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போது 

அங்கே மேஜையின் மீது இருந்த இன்பாவின் போன் அடித்தது. 


கிருஷ்ணன் , ராகவ் உன் போன் ரொம்ப நேரம் ரிங் ஆகுது ஐ திங்க் அது கவ்யா தானே என்று அவர் சொல்லிட இதை கேட்டதும் விவேகா அவனை பார்க்க…?

தொடரும்… 

 Episode 124,

அங்கே மேஜையின் மீது இருந்த இன்பாவின் போன் அடித்தது. 

கிருஷ்ணன் , ராகவ் உன் போன் ரொம்ப நேரம் ரிங் ஆகுது ஐ திங்க் அது கவ்யா தானே என்று அவர் சொல்லிட இதை கேட்டதும் விவேகா அவனை பார்க்க இன்பா கிருஷ்ணனை முறைத்தான். 

அவர் சிரித்து கொண்டே அந்த கேர்ல் போட்டோஸ் எல்லாம் அனுப்பி இருக்கா.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வெளியே மீட் பண்ண போறீங்களாமே அதுக்கு ட்ரெஸ் கோட் எங்கே எப்போ வரனும் அப்டின்னு மெசேஜ் பண்ணி இருக்கா… பாவை அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் யாரு ராகவ் அந்த பொண்ணு உன் கூட வேலை செய்கிறாளா…

விவேகாவின் முகம் ஒரு நொடியில் கிருஷ்ணன் சொன்னதை கேட்டு அப்படியே முகத்தில் நெருப்பு தகித்து கொண்டு இருக்க அதை பார்த்த கிருஷ்ணன் திருப்தி பட்டு கொண்டு அந்த டீ முழுவதும் குடித்து விட்டு

அவர் பாவை அதை நான் சொல்கிறேன் வா  இப்போ இங்கே ஒரு சிறப்பான தரமான சம்பவம் நடக்க போகுது..நம்ப அப்படியே ஜாலியாக சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்..  என்று சொல்லி தன் மனைவி பதில் சொல்வதற்கு முன் அவளை கையோடு அழைத்து கொண்டு விவேகா யூ ஆர் அ ப்ரேவ் கேர்ல் என்று சொல்லி டீ சூப்பர் மா சரி தாத்தா உன்னை இனி காலேஜ் ல தான் மீட் பண்ண முடியும் சீ யூ சைல்டு என்று சொல்லிட.

விவேகா, ரொம்ப தேங்க்ஸ் தாத்தா என்று சொல்லி இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள். அவர்கள் வெளியே செல்ல இன்பா, ஓல்ட் மேன் உங்களை நான் அப்புறம் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அவன் விவேகா அருகில் செல்ல அவள் கைகளை நீட்டி கிட்ட வர வேண்டாம்… பேபி… என்று சொல்லிட அவள் இரு காதுகளையும் பொத்தி கொண்டாள். என்னை கூப்பிடாதே பிளீஸ்… என்று கோபத்தில் வேக மூச்சு எடுத்தாள். 

பேபி பிளீஸ் டி… என்று அவன் சொல்லி கொண்டே அருகில் வர ஹலோ சார் வாசல் இந்த பக்கம் என்று கதவின் அருகில் போய் நின்று கொண்டு வெளியே போங்க.. கெட் அவுட்…

இன்பா, ஓவரா பண்ணாத டி… விவேகா, நான் அன்னிக்கே சொன்னேன் தான உனக்கு அவ தான் என்று என்னை ஏமாற்றி உன்னை எதிர்த்து பேசியதர்க்கு பழி வாங்குற… 

ஹே என்ன டி இப்படி எல்லாம் பேசுற சத்தியமா இல்ல டி நான் உன்னை அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் என்று அவன் அருகில் வர விவேகா கண்களில் இப்போது கண்ணீர் வந்து விட்டது. விவேகா, அன்னிக்கு என் கிட்ட என்ன சொன்ன… சொல்லு.. இன்பா, எப்போ தெரியலையே டி… இப்போ எதுக்கு அழற… உனக்கு எப்படி நியாபகம் இருக்கும் அந்த இனியா, கவ்யா பற்றி அவங்க வருவாங்க ஆனால் நீ சந்தேக பட கூடாது அப்டின்னு சொன்ன தானே… ஆமா இப்போது கூட அதை தான் சொல்றேன்.. 

விவேகா, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் நீ ஒரு ஃப்ராடு என் கிட்ட இருந்து வார்த்தையை வாங்கி கொண்டு அந்த கவ்யா கூட நீ டேடிங் பண்றியா… இன்பா, பேச்சு எங்கோ செல்கிறது என்று அவள் அருகில் வர… ஹே கிட்ட வராதே இன்னிக்கி மட்டும் தாத்தா என் கிட்ட சொல்லன்னா நீ என்னை மொத்தமா ஏமாற்றி இருப்ப போடா என்னை விட்டு போடா… என்று அவள் அழுது கொண்டே கீழே அமர்ந்தாள். 

இன்பா, அவள் அருகில் அமர்ந்து ஹே நான் உன்னை ஏமாற்றுவேனா.. டேய் என்னை தொடாதே தள்ளி போ வீட்டை விட்டு போ… என்று விசும்பி கொண்டே சொல்ல இப்போது மீண்டும் கவ்யா போன் செய்தாள். இன்பா, அதை அட்டேன்ட் செய்து நம்ப நாளைக்கு மீட் பண்ணலாமா… என்று கொஞ்சம் தள்ளி நின்று அவள் முன்னால் பேசினான். 

கவ்யா, இட்ஸ் ஓகே என்று சொல்லி போன் வைக்க விவேகா இப்போது முடிவு செய்து விட்டாள். இன்பா வீட்டை விட்டு வெளியே செல்ல வில்லை என்று தெரிந்து கொண்டவள். நாமே சென்று விடுவோம் என்று சொல்லி வேக வேகமாக உள்ளே சென்று ஒரு துப்பட்டா மட்டும் எடுத்து கொண்டு கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெளியே செல்ல இன்பா அவளை ஒரே பிடியில் தூக்கி கொண்டான். 

விவேகா, அழுது கொண்டே என்னை விடு டா… என்னை விடு.. என்னை விட்டு போ.. ஐ ஹேட் யூ… லீவ் மீ… விவேகா முதலில் நான் பேச என்னை எக்ஸ்பிலைன் பண்ண விடு டி.. இன்பா சொல்வது எதுவும் அவள் காதில் போட்டுக் கொள்ள வில்லை. அவன் மார்பில் அடித்தாள். அவன் அவளை தூக்கி கொண்டு படுக்கையில் போய் தொப்பென்று போட்டான். 

ஹே முதலில் வீட்டை விட்டு வெளியே போடா.. இன்பா அவளின் இதழ் நோக்கி குனிய அவள் முகத்தை இட வலமாக திருப்பி கொண்டே ஹே டிஸ்கஸ்டிங் தள்ளி போ..  என்று கண்களில் வழிந்து ஓடும் கண்ணீருடன் சொல்ல..

இதற்கு மேல் அவன் பொறுமை இழந்து அவளின் துப்பட்டாவை எடுத்து இரு கைகளையும் பின்னால் கட்டில் கம்பியோடு கட்டி விட்டு கால்கல் இரண்டையும் கையில் பிடித்து பிடித்து அவள் அந்த இடத்தை விட்டு நகர முடியாத படி அமர்ந்து கொண்டு இப்போது அவளை பார்த்தான். 

அவள் அவன் முகத்தை பார்க்காமல் அழுது கொண்டே இருக்க ஹே ஹே இங்கே பாரு டி.. பாரு என்று மிரட்டும் தொனியில் சொல்ல அவள் அவனை பார்க்க அவன் தன் தலையை கோதி கொண்டே ஒரு சில நொடிகள் கழித்து அவ கிட்ட நான் பேசினேன் அது உண்மை தான்…

இதை கேட்டதும் அவள் விம்மி விம்மி அவனை பார்க்க ஆனால் ,

அதுக்கு காரணம் இருக்கு… இன்பா, என்னான்னு கேளு டி… கேளு…

விவேகா, எனக்கு தேவை இல்லை இதை தான் நான் எதிர் பார்த்தேன்… உன்னை விட்டு நான் போகனும்… 

இன்பா, இப்படியே பேசின உன்னை கொன்றுவேன்… என்று சொல்லி அவள் முகத்துக்கு அருகில் வந்து அவனை பார்க்குமாறு செய்து இன்னிக்கு உன்னை அவ கிட்ட ஐ மின் நான் உன்னை லவ் பண்றதா சொல்ல போலாம் அப்டின்னு இருந்தேன். அதுக்கு தான் அவளை தனியா வர சொன்னேன் புரியுதா… 

விவேகா, பொய் நீ பொய் சொல்ற நான் நம்ப மாட்டேன். இன்பா, ஹே முதலில் நான் சொல்றதை கேளு டி.. அவ கிட்ட போய் நான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லணும் ஆனால் உன்னை அவளுக்கு காட்டிட மாட்டேன் உன்னை அவள் எதுவும் செய்து விட்டால் என்ன செய்வது கொஞ்சம் பொறுமையா அவ கிட்ட சொல்லலாம் அப்டின்னு நினைத்தேன். அங்கே எங்க வீட்டில் இருக்க எல்லாரும் இருந்தார்கள். சோ அதனால் தான் நேரில் பார்த்து சொல்ல அவளை வர சொன்னேன் டி சத்தியமா வேற ஒன்னும் இல்லை டி… 

விவேகா, போன் ல சொல்லி இருக்கலாமே… நீ தானே சொன்ன அவ மருந்து எல்லாம் உனக்கு கொடுக்கிறாள் அப்டின்னு சொல்லிட்டு இப்போ போய் இதை ஒரு சாக்கை வைத்து அவ கூட போய் என்று நிறுத்திட…

இன்பா, ஏன் டி உன் மூளை இப்படி தப்பு தப்பா யோசிக்குது…  எனக்கு இது பெரிய விஷயம் டி தெளிவா சொல்லி விட வேண்டும் அப்டின்னு தான் ஒரு பொதுவான இடத்துக்கு வர சொன்னேன் வேற ஒன்னும் இல்லை.. என்னை நம்பு டி.. விவேகா, இல்ல நான் நம்ப மாட்டேன் நீ என்னை விட்டு போ என் தகுதிக்கு நீ செட் ஆக மாட்ட…

இன்பாக்கு இதை கேட்டு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. ஒரு சில நொடி கழித்து நான் எந்த பொண்ணை பார்த்தாலும் பின்னாடி சுற்றும் ஆள் இல்ல அந்த மாதிரி தப்பான பையனா என்னை ப்ரொஜக்ட் பண்ணி பேசாதே… என்று வேறு புறம் திரும்பி கொண்டு எனக்கு எந்த பொண்ணை பார்த்தாலும் உன் முகம் தான் என் மனசில் என் நினைவில் என் சுயத்தில் இருக்கும் இதுக்கு மேல எப்படி நான் உனக்கு புரிய வைக்கட்டும்… என்று ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பின் அவளை பார்க்க அவள் எதோ தீவிர சிந்தயில் இருப்பது தெரிய இன்பா, விவேகா ஹே இங்கே பாரு என்று சொல்ல அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். என் மாம் அண்ட் நீ உங்க ரெண்டு பேர் மேலே பிரமிசா நீ மட்டும் தான் என் வாழ்க்கையில் ஒரே பொன்னு… என்று அவன் சொல்லிட அவள் முகம் மற்றும் மனநிலை மாரியது…ஒரு சிறிது நேரம் கழித்து அவள் பேசினாள்.

விவேகா, நிஜமாவா… இன்பா அவளை பார்த்து என் பேபி பிராமிஸா நீ மட்டும் தான் என்று சொல்ல அப்போ சரி ஆனால் என்று நிறுத்த…

இன்பா, இப்போ என்ன டி…விவேகா, ஆனாலும் நான் உன் மேல கோபமா இருக்கேன். தாத்தா மட்டும் சொல்லல நீ எனக்கு தெரியாம  நாளைக்கு அவளை பார்க்க போற… இன்பா அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான். நீ நாளைக்கு ரெடியா இரு நீயும் நானும் சேர்ந்து வெளியே போலாம்…

விவேகா, நானா நான் எல்லாம் வரல நீயே போ போயிட்டு வா… இன்பா,நான் உன்னை நம்ப மாட்டேன் டி நாளைக்கு நான் போயிட்டு வந்ததும் நீ என் கிட்ட புதுசா ஒரு கன்டன்ட் கண்டு பிடித்து  சண்டை கூட போட வாய்ப்பு இருக்கு… 

விவேகா, அம்மா விட மட்டாங்க இப்போ அதிதி இருக்கா வருண் எல்லாரும் இருக்காங்க என்னால் வர முடியாது…  இன்பா, நீ அதை விடு நான் ஆதி கிட்ட சொல்லி உன்னை கூட்டி வர சொல்றேன் நீயும் நானும் போலாம்… விவேகா, அப்போ ஆதி.. அவன் மறுபடியம் வந்து விடுவான் . விவேகா, அதெல்லாம் முடியாது..

இன்பா, ஹே நீ நாளைக்கு வர அவ்ளோ தான்… 

 விவேகா, அப்போ நீ வெண்பாவை கூட்டி வா நம்ப நாலு பேரும் போலாம்..  யாரு அந்த இன்னொரு ஆள்.. ஆதி தான்… அவன் எதுக்கு அவன்க ரெண்டு பேரும் எதுக்கு நான் உன் பக்கதில் சரியா பேச முடியாது கிஸ் ஹக் எல்லாம் அவங்க முன்னாடி எப்படி கொடுக்க முடியும்.. 

ஹே அவங்க ரெண்டு பேரும் வந்தால் நான் வருவேன். இல்ல வர மாட்டேன். வெண்பா ஓகே ஆதி எதுக்கு நீங்க ரெண்டு பொண்ணு இருக்கும் இடத்தில் அவனுக்கு என்ன வேலை… விவேகா, டேய் நடிக்காத டா நீ யாரு உன் வேலை என்ன அப்டின்னு எனக்கு தெரியும் ஆதி பற்றி பேசாதே டா… அவனை என் முன்னாடி உயர்த்தி பேசாதே டி… சரி நம்ப நாலு பேரும் போலாம்.. என்று சொல்லி கொண்டே விவேகாவின் அருகில் வந்தான்.

விவேகா இப்போது தான் அவன் அருகில் வந்து நெருக்கமாக வந்து இருப்பதை உணர்ந்தாள். ஹே என்ன பண்ற என்று அவள் கைகளை அசைக்க முடியாமல் தன் கைகள் கட்ட பட்டு இருப்பதை உணர்ந்து ஹே கையை கட்ட அவிழ்த்து விடு டா… 

இன்பா, முடியாது டி இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க டி உன் மேல் குட் ஸ்மெல் அதிகமா இருக்கு சோ அதை நான் கொஞ்சம் ப்ரீத் பண்ணிக்கிரென்.. என்று  அவள் களுததில் முகம் புதைத்து கொண்டான். அவளால் கை கொண்டு தடுக்க முடியாமல் அவள் நெளிய

அவன் அவள் இதழை அவன் வசமாக்கி கொண்டான். மூச்சு முட்டி அவளை விடுவிக்க ராகவ் தள்ளி போ நான் இன்னும் குளிக்கல.. இன்பா அவள் களுததில் முத்தமிட்டு கொண்டு நானும் குளிக்க ஹெல்ப் பண்றேன் வா போலாம்… விவேகா, ஆசை தான் முதலில் நீ கையை அவிழ்த்து விடு என்று சொல்ல… அவன் கையை அவிழ்த்து விட்டான் .

ம்ம் சரி நீ வீட்டுக்கு போ… என்ன வாய் பேசின உன்னை சும்மா விட்டு நான் போய் விடுவேனா..  என்று அங்கு அவளிடம் முத்த மழை பொழிந்து விட்டு தான் கிளம்பினான். இன்பா நேராக ராமுக்கு கால் செய்து பார்க்க வருவதாக சென்று விட்டான். 

இங்கே சுபா அனைத்து கதையும் பேசி சிரித்து விட்டு வெளியே வர சரவணன் அதற்கு முன்பே அவள் கார் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தான்.

சுபா அவனை கண்டு கொள்ளாமல் காரின் உள்ளே எற செல்ல 

சரவணன், சுபா… என்று அழைக்க 

சுபா…?

தொடரும்… 

இன்னிக்கு வெண்ணிலா ஸ்டோரி upload பண்ணி இருக்கேன் சோ அதை read பண்றவங்க கொஞ்சம் read பண்ணிட்டு comment பண்ணிடுங்க 

 Episode 125,

இங்கே சுபா அவர்களிடம் பேசி கொண்டு இருக்க சரவணனின் எண்ணம் முழுவதும் நேற்று இரவு நியாபகத்துக்குள் சென்றது. சரவணன் அங்கு இருந்து அந்த ஒரு பாட்டில் விஸ்கியை ஒரே மூச்சில் குடித்து விட்டு வெளியே வந்தது. காரில் சென்றது நியாபகம் இருந்தது ஆனால் எப்படி சென்றோம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அவனது போனில் கேப் புக் செய்து சென்றதற்கான் பதிவு இருக்க இருந்தும் அவன் மனம் சுபா அருகில் இருந்தது போலவே தோன்றியது. 

இன்று காலையில் இருந்து அவளின் இந்த பாரா முகம் மனதில் இன்னும் ரணத்தை கொடுத்தது. எப்பொதும் சரவணா சரவணா என்று ஆசையாக ஒரு பூனை குட்டி யைப் போல் பின்னால் சுற்றி கொண்டும் அவனை ஏக்க பார்வை ஒரு தடைவை நான் பார்க்க மாட்டேனா என்று ஏங்கி கொண்டு இருப்பவள் இன்று அவளுடைய அலட்சிய பார்வை அவனை பாடாய் படுத்தியது..என்னை இப்போது ஒரு பார்வை கூட பார்க்க மாட்டிக்கிரா.. இது போல் தான் அவளுக்கும் வலித்து இருக்கும் 

நேற்று எனக்கு முத்தமிட்டது அவள் தானே அப்படி இருந்தால் நான் அவளுடன் இருந்து இருக்க வேண்டும் ஆனால் நான் காரில் புக் செய்து வந்து இருக்கிறேன். அப்போ அவளுக்கு அந்த **** வினய் அவனை தான் பிடித்து இருக்கா..அவன் மனம் நீ தான் அவளை வேண்டாம் என்று சொல்லி விட்டாயே அவளுக்கு யாரை பிடித்து இருந்தால் உனக்கு என்ன என்று அவன் மனம் கேட்க அது நடக்க கூடாது என்று ஒரு முடிவு எடுத்தவனாய் வெளியே சென்றான்.

தேவகி சமையல் அறையில் இருந்து கொண்டே டேய் எங்கே டா போற என்று குரல் மட்டும் வர அவன் எந்த பதிலும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான். சுபா அவன் சென்ற சிறிது நேரத்தில் அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினாள். 

அவள் வெளியே செல்வதற்கு முன் வினய்க்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டாள். அவள் நேராக கார் பார்க்கிங் செல்ல அவள் எதிர் பார்த்தது போலவே சரவணன் அங்கு நின்று கொண்டு இருந்தான்.. அவள் மனம் ஒரு குத்தாட்டம் போட்டது.. வாடா சண்டைக்காரா இதை தாண்டா நான் எதிர் பார்த்தேன் என்று நினைத்து கொண்டு உதடு மடித்து கடித்து கொண்டு முகத்தை கடுமையாக வைத்து கொண்டே அவளின் காரை நோக்கி சென்றாள்.

அவள் அவனை கடந்து காரை திறக்க செல்ல சரவணன் மனதில் நான் ஒருத்தன் இங்கே நிற்பது இவளுக்கு தெரியுதா இல்லையா என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் செல்கிறாள்.. என்று இப்போது சரவனன், சுபா.. சுபா என்று அவன் இரு முறை அழைக்க யாரோ எவரோ என்பது போல முகத்தை வைத்து கொண்டு அவனை பார்த்து கால் மீ மிஸ் சுபத்ரா ரவிச்சந்திரன்.. என்று ஒரு மிடுக்குடன் அவள் பேசிட அப்படியே ரவி பேசுவது போல் இருந்தது. அவன் ஒரு நிமிடம் உறைந்து போனான். அவளின் அலுவலக ஆளுமை பற்றி கேள்வி பட்டு இருக்கிறான் ஆனால் பார்த்தது இல்லை.. அவனிடம் சாந்தரூபம் கொண்டு தானே பேசுகிறாள்… 

சுபா அவன் முன் சொடிக்கிட்டு ஹலோ மிஸ்டர் உங்களுக்கு என்ன வேணும்.. என் பிரீசியஸ் டைம் வேஸ்ட் ஆகுது.. என் கிட்ட பேச ஒரு சில தகுதி வேணும் ஆபீஸ் விஷயம் இருந்தால் ஆபீஸ் வாங்க மற்ற படி உங்களுக்கும் எனக்கும் பேச ஒன்னும் இல்லை என்று சொல்லி கொண்டு இருக்க…

சரவணனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஒரு நிமிடம் அவன் தன்னிலை பெற்று பேச ஆரம்பித்தான். அவனும் அவளுக்கு சலைத்தவன் இல்லையே உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. மம் சொல்லுங்க…முக்கியமா பேசணும் கொஞ்சம் வெளியே வரயா… உங்களை நம்பி நான் எப்படி வெளியே வரது எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லிட்டு போங்க எனக்கு முக்கியமான மீட்டிங் இறுக்கி … சுபா டோண்ட் பிளே வித் மீ நீ என்ன பண்ணிட்டு இருக்க.. நான் எதுக்கு உங்க கூட விளையாட போறேன் எனக்கு முக்கியமா மீட்டிங் போன் கால் இருக்கு சோ நான் கிளம்புகிறேன்.. என்று அவள் நகர உடனே அவன் அவளின் கையை பிடிக்க சுபா மனதில் ஹே கையை பிடித்து விட்டான் ஃபர்ஸ்ட் டைம் பிடிக்கிறான் வேஸ்ட் பெல்லோ என்று நினைத்து கொண்டு ஹே கோபமா பாரு டி.. என்று அவனை கோபமாக எரிக்கும் பார்வையில் அவ்னையும் அவன் பிடித்து இருந்த கைகளையும் மாறி மாறி பார்த்தாள்.அவன் அவளின் முக மாறுதலை கண்டு ஒரு நிமிடம் பயந்து போனான். யூ ராஸ்கல் என்று அவள் திட்ட ஆரம்பிக்கும் நேரம் 

சரியாக வினய் கால் செய்தான் அவள் பாதியில் நிறுத்தி விட்டு போனை எடுக்க அதில்” காதல் கணவா” என்று பதிவு செய்து வைத்து இருந்தாள். வேறு வழி இல்லாமல் அடி மட்டம் வரை சென்று அவனை டார்ச்சர் செய்ய வேண்டும் என்ற உயரிய கொள்கை மட்டுமே வேறு ஒன்றும் இல்லை அதை பார்த்த சரவணுக்கு பற்றி எரிந்தது அந்த இடத்தில் நிற்க முடிய வில்லை அந்த வினையின் கழுத்தை நெறிக்க வேண்டும் என்றும் இந்த சுபாவின் கைகளை உடைத்து தூக்கி செல்ல வேண்டும் என்று தோன்றியது.. 

சரவணன் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு இரு அடிகள் எடுத்து வைத்தான். பின் இருந்தும் மனம் கேட்க வில்லை . கைகளை இறுக்கி மடக்கி கொண்டு நின்று கொண்டு இருந்தான். சுபாவுக்கு ஒரு நிமிடம் எங்கே சென்று விடுவானோ என்று தோன்றியது. இப்போது போன் எடுத்து காதில் வைத்தாள். ஹலோ வினய் ஆபீஸ் போயிட்டீங்களா.. நான் இப்போ தான் உங்களை நினைத்தேன். அவள் சரவணனை ஒரு பார்வை பார்த்து விட்டு இங்கே நான் கொஞ்சம் வெளியே இருக்கேன் சோ அப்புறம் பேசட்டுமா.. என்று சொல்ல அவன் சரி என்று  போன் கட் செய்து வைத்து விட இவள் அப்படியே அவன் லைநில் இருப்பது போல் பேச்சை தொடர்ந்தாள். என்ன லஞ்ச்க்கு நீங்க வரலயா ஐ மிஸ் யூ என்று அவள் சொல்ல அவன் அவளை திரும்பி பார்த்தான். சுபா, கொஞ்சம் கள்ள புன்னகை சிந்தி இன்னும் எட்டு மாசம் காத்து இருக்கணும் வினய்… என்று சொல்ல சரவணன் கோபமாக அவளை நோக்கி நடந்து வந்தான். சுபா அவனிடம் பேசி கட் செய்வது போல் வைத்தாள். 

உங்களுக்கு கொஞ்சம் கூட மெனர்ஸ் இல்ல இப்படி ஒட்டு கேட்டு கொண்டு இருக்கீங்க.. சரவணன், போதும் நிறுத்து சுபா… என்று அவன் கத்தி விட உடனே அவள் அவனை கோபமாக பாத்தாள். நீ பண்றது சரி இல்லை.. சுபா, அதை சொல்ல நீ யாரு உன் வேலையை நீ பாரு வினய் என்னை பிடித்து இருக்கு அப்டின்னு சரியான முறையில் என் அப்பா கிட்ட சொல்லி இப்போ இது நிச்சயம் வரையில் வந்து இருக்கு சோ அவங்க அவங்க வேலைய போய் பார்த்தால் நல்லா இருக்கும்.. என்று சொல்லி விட்டு அவள் வேக வேகமாக காரை ஸ்டார்ட் செய்து சென்று விட்டாள். 

சரவணன் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே அப்படியே நின்றான். அவன் மனம் நீ செய்வது தவறு என்று சொல்ல அவள் நன்றாக இருக்க வேண்டும் அவன் நல்லவன் இல்லை என்று நினைத்து கொண்டு இவ்வளவு நேரம் நம்மிடம் பேசிய சுபா அவனுக்கு புதிது அவளை நினைத்து கொண்டே வீடு நோக்கி சென்றான். 

இங்கே இன்பா நேராக ராம் கீதா தங்கி இருக்கும் இடத்துக்கு வந்தான். ராம், வாடா இப்போ தான் எங்களை பார்க்க தோணிச்சா.. இன்பா சுற்றியும் மிற்றியும் பார்க்க கீதா, யாரை தேடுற.. எங்கே ராம் உன்னோட க்ளாஸ் மேட் ( ரகு)..  ராம் சிரித்து கொண்டே ஏ ன் டா இப்படி அவனை ரெண்டு பேரும் கஸ்ட படித்துறீங்க… இன்பா, அது யாரு இன்னொருத்தர்… ராம் , டேய் நடிக்காத டா.. இன்பா, உன் உயிர் நட்பு எப்படி இருக்காரு(சூர்ய தேவ்).. கீதா, அதை அவன் கிட்ட கேளு என் புருஷன் கிட்ட எதுக்கு டா கேட்கிற.. இன்பா, சட் அப் டி.. என்று சொல்லி விட்டு ராமை பார்க்க.. ராம், அவனுக்கு என்ன கல்யாணம் ஆகி விட்டது ஒரு நிமிடம் கூட அவ மனைவி மகியை விட்டு பிரிவதே இல்ல அவனுக்கு சத்ய தேவ்ன்னு ஒரு பையன் மூணு வயசு ஆகுது.. என் பொன்னு ஹரிணி பின்னால் தான் சுற்றி கொண்டு இருக்கிறான்.

இன்பா, இதை கேட்டு அவன் புத்தி அப்படியே அவன் பையனுக்கு இருக்கும் தானே.. ராம், டேய் ரொம்ப ஓவரா பேசுற.. சிிறிதுநேரம் அமைதிக்கு பின் இன்பா, என்னை பற்றி எதுவும் என்று நிறுத்தி விட.. ராம், கீதா இருவரும் சிரித்து விட்டு உன்னை பற்றி எதுவும் பேசி நான் பார்த்தது இல்ல மச்சி.. இதை கேட்டதும் அவன் முகம் இறுகி போக ராம், ஆனால்..

இன்பா, ஆனால் என்ன சக்தி கிட்ட நீ IPS ஆபீசரா ஆகனும் அப்டின்னு சொல்லுவான்… இன்பா, யாரு அந்த சக்தி.. ராம் ஐ மின் சத்ய தேவ் இதை கேட்டதும் இன்பா கன்ன குழி தெரிய ஒரு சிறு புன்னகை.. கீதா, மம் இப்போ நம்ப இடியட் இன்பா ஒரு வழியா சிரித்து விட்டார் என்று சொல்லி பேசி சிரித்தனர்.. 

இன்பா, ராம் நேற்று இங்கே சுபா வாந்தாலா.. கீதா, மம் வந்தா வந்துட்டு கொஞ்ச நேரத்தில் உடனே கிளம்பி விட்டாள். நீங்க எல்லாம் பார்ட்டிக்கு போகலயா.. ராம், நான், ரகு, சரவணன் மூனு பேரும் தனியா பார்ட்டி மச்சி, இன்னும் ரகு போதை தெளியாமல் ரூமில் தூங்கி கொண்டு இருக்கான் . நான் இனி தான் போய் அவனை கூட்டி வரனும் இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடித்து விட்டு கிளம்பி விடுவோம்.  இன்பா, ராஜி.. கீதா, நீ அவ கிட்ட பேசல அப்டின்ற கடுப்பில் நேற்றே கிளம்பி போயிட்டா டா.. ஒரு சில நொடிகள் எதையோ யோசித்தான்  பின் அது எந்த ஹோட்டல் .. ராம் ஹோட்டலின் பெயரை சொல்ல உடனே கிளம்பினான். 

இன்பாவின் கெஸ் சரியாக இருந்தால் நேற்று நிச்சயம் சுபா சரவணன் இருவரும் சந்தித்து இருக்க வேண்டும். நேராக ஹோட்டல் சென்றான். ரகு பெயரை சொல்லி அறையின் எண் கேட்க அவர்கள் அறையின் எண் சொன்னதும் உடனே அறையை நோக்கி சென்றான் அங்கே ரகு நன்றாக உறங்கி கொண்டு இருக்க தன் நண்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு இப்போது அந்த ஹோட்டலின் கண்காணிப்பு அறைக்கு சென்றான். 

இன்பா போலீஸ் என்பதை சொல்லி ஒரு ரெய்டு என்று கூறி ரகு எப்போது வந்தான் என்ற நேரத்தில் இருந்து வெளியே வைக்கப்பட்டு இருந்த கண்கானிப்பு கேமராவில் பார்க்க ஆரம்பித்தான். அந்த வீடியோவை வேகமாக ஓட விட சரியாக9.30 மணிக்கு அவனுக்கு பழக்கப்பட்ட கார் பார்க்கிங் ஏரியாவில் நுழைந்தது. அது சுபா தான் அங்கு இருந்த பணியாளர்களை போகுமாறு சைகை செய்ய அவர்கள் பயந்து கொண்டே சென்று விட்டனர்.

சுபா உள்ளே வருவது லிஃப்ட் ல ஏறுவது இது மட்டும் தெரிந்தது அவள் ரகு மற்றும் சரவணன் இருக்கும் தளத்த்தின் எண் அழுத்துவது மட்டும் தெரிந்தது ஆனால் அதன் பின் அவள் இறங்க வில்லை சிறிது நேரத்தில் சரவணன் போதயுள் தள்ளாடி கொண்டே லிஃப்ட் அருகில் வந்து நிற்பது மட்டும்  தெரிய இன்பாவின் மூளை அப்போ லிஃப்ட் க்கு உள்ளே என்று நிறுத்தி வேறு வழி இல்லாமல் லிஃப்ட் உள்ளே வைக்கப்பட்ட கேமரா காட்சியின் ஆரம்பத்தினை பார்த்ததும் தெரிந்து கொண்டான் அங்கே என்ன நடந்து இருக்கும் என்று இருவரும் அணைத்து கொண்டு இருக்கும் காட்சி தான் ஒரு சில நொடிகளில் அவர்கள் இருவரும் பார்க்கிங் வந்து விட சுபா அவனை காருக்குள் ஏற வைக்கும் காட்சி தெரிந்தது. அந்த விடியோ பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்தான். 

இப்போது அவன் மனநிலை மிகவும் கடுமையாக இருந்தது. மிகவும் கோபத்தில் இருந்தான். நேராக கிருஷ்ணன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். அங்கே சென்றதும் கிருஷ்ணன், என்னடா கொஞ்ச நேரத்தில் என் பேத்தியை சமாதானம் செய்து விட்டாய் உன் அப்பாவை விட நீ ரொம்ப பாஸ்ட் ராகவ் என்று சொல்ல

 இன்பா , தாத்தா அதை அப்புறம் பார்த்து கொள்ளலாம் அதை விட ஒரு முக்கியமான விஷயம் நடந்து இருக்கு எனக்கு அப்படியே இப்போ என்று. அங்கு இருந்த தூணில் ஒரு குத்து விட்டான்.

பாவை ஓடி வந்து ராகவ் என்று பதறி கொண்டே அவன் கைகளை பார்க்க இன்பா அவன் தாத்தாவை ஒரு பார்வை பார்க்க அவர், பாவை நீ உள்ளே போ.. இல்லங்க ராகவ் கயில் என்று கண் களஙஇட.. உள்ள போ மா நான் வரேன் அவனும் வருவான் என்று சொல்ல அவர் உடனே உள்ளே சென்று விட்டார்.. 

வாட் ஹெப்பன்.. தாத்தா அவனை நான் சும்மா விட மாட்டேன்… என்று இன்பா சொல்ல 

அவரோ யாரு? அவன் தான் சரவணன்… 

தொடரும் ….. 

 Episode 126,

இன்பா மிகவும் கோபமாக கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றான். 

கிருஷ்ணன் அவன் முகத்தில் உள்ள கடுமையை பார்த்து விட்டு வாட் ஹெப்பன் ராகவ்…

தாத்தா அவனை நான் சும்மா விட மாட்டேன்… என்று இன்பா சொல்ல 

அவரோ யாரு?

அவன் தான்  அந்த சரவணன் ராஸ்கல்… என்னாச்சு ராகவ், அவன் என்ன பண்ணினான்….

இன்பா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே இன்னும் என்ன நடக்கணும்.. 

நீ தெளிவா சொல்லு… தாத்தா இந்த சுபாவும் அவனும் என்று நிறுத்திட என்ன சொல்ற ராகவ்..

ம்ம் ஆமா தாத்தா இந்த சுபா அவனை லவ் பண்றா இது நான் இன்னிக்கு தான் கண்டு பிடித்தேன். 

அப்புறம் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு அவ ஓகே சொன்னா.. அதுக்கு அவன் தான் காரணம் என் கெஸ் சரியா இருந்தால் அவன் இவளை வேண்டாம் அப்டின்னு சொல்லி இருப்பான். 

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். கிருஷ்ணன், இப்போ என்ன பண்ண போற.. இன்பா, நான் எதுவும் பண்ண மாட்டேன் ஆனால் அவனை சும்மா வுட மாட்டேன் தாத்தா.. இந்த சுபா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை நான் எவ்ளோ தூரம் கேட்டேன் வாய் திறக்கவே இல்ல.. 

கிருஷ்ணன், நான் ரவி கிட்ட பேசட்டுமா.. அவன்  டோண்ட் டூ திஸ், இதை அவள் பார்த்துகொள்வாள். ஐ கான் ட் பிலீவ் திஸ் ராகவ் சரவணன் எப்படி இப்படி இருக்கிறான்.

இன்பா, இப்போ தான் எனக்கு எல்லாமே புரியுது நான் ஒவ்வொரு முறை மித்ரன் வீட்டுக்கு போகும் போதும் ஒரு மாதிரி பேசுவான் அதை கேட்டு இந்த விவேகாவும் அவன மாதிரியே பேசி என்னை டார்ச்சர் பண்ணுனா ஆனால் நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளல ஆனால் இப்போ தான் எனக்கு புரியுது சுபாவை பேசி பேசி ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்கான் தாத்தா… நான் இது கூட தெரியாமல் இருந்து இருக்கிறேன். டாட் அவளோட விருப்பம் கேட்காமல் வினய் கூட இப்போ நிச்சயம் செய்து வைத்து விட்டார். அவர் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாமல் இவளும் ஓகே சொல்லிட்டா… 

கிருஷ்ணன், என் சுபா குட்டி வசுவை விட இந்த லவ் ல ரொம்ப கஷ்டப் படுகிறாள்..

இன்பா, நான் அந்த சரவணனை என் கிட்ட எப்படி கெஞ்ச வைக்கிறேன் அவன் என் கிட்ட சுபா வேணும்ன்னு கெஞ்சனும் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை நான் விட மாட்டேன்… அப்டின்னு மட்டும் பாருங்க தாத்தா என் அக்காவுக்கு நான் எதுவும் செய்தது இல்ல… ஆனால் அவனை சும்மா விட மாட்டேன்… 

கிருஷ்ணன், வசுமதி, ரவி இவங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்க போற… அது எனக்கு தெரியல.. அவர் இதுல ரொம்ப தீவிரமா இருக்காரு எப்படி இது நடக்கும் சுபா என்ன நினைத்து கொண்டு இருக்கான்னு தெரியல.. 

அவனே தொடர்ந்தான். அப்பாவுக்கு சுபா விஷயத்தில் எதுவும் நடந்தால் அவரால் அதை டேக்கில் பண்ண தெரியாது பர்ஸ்ட் ஆகி விடுவார்… இது ரொம்ப சிக்கலான ஒன்னு… 

கிருஷ்ணன், கல்யாணத்துக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு நீ விடு ராகவ் சுபா வசு மாதிரி அவ நிச்சயம் அவள் நினைத்ததை பிடிவாதம் கொண்டு அடைந்து விடுவாள். உன் அத்தை நந்தினியொட குணம் அவளுக்கு கொஞ்சம் இருக்கு சோ சரவணன் நல்லா மாட்டி கொண்டான். எனக்கு கூட சரவணனை நம்ப வீட்டில் யாருக்கும் கட்டி வைக்கும் எண்ணம் இருந்தது. வருனிக்கு கட்டி கொடுத்தால் நல்லா இருக்கும் அப்டின்னு நினைத்தேன்… 

இன்பா, சுபா நான் நினைத்ததை விட பயங்கரமா இருக்கா.. அவ கூட இருந்தும் அவளை பற்றி நான் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன் ஐ ஃபீல் கில்ட்டி.. என்று சிறிது நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு 

இப்போது கிருஷ்ணன், மம் பாப்பாவை எப்படி கன்வின்ஸ் பண்ண… உங்களை நான் சும்மா விட மாட்டேன் இப்போவே டார்ல்சை எங்க வீட்டுக்கு கூட்டி போறேன்.. டேய் நீ பண்ணது சரியா… 

நான் என்ன பண்ணேன்… ஹே நடிக்காத டா காலையில் என் பொண்ணை அழ வைத்த… அது நான் இல்ல என் அம்மாவோட ஹஸ்பென்ட்… கிருஷ்ணன் சிரித்து கொண்டே ரவி என் கிட்ட உன்னை ரிவஞ்ச் எடுக்க சொன்னாரு… இதை கேட்டு இன்பா கோபம் கொள்ள.. இந்த ஆண் பிள்ளைங்க பொண்ணுங்களை சமாதானம் செய்வது ரொம்ப கஷ்டம் அதை உங்க ராகவ்க்கு நீங்க தான் மாமா புரிய வைக்க வேண்டும்  இனி அவன் என் வழியில் வர கூடாது.. என்று என் கிட்ட சொன்னாரு… இப்போ உனக்கு அந்த கஷ்டம் புரிந்து இருக்குமே… 

இன்பா, மம் ரொம்ப கஷ்டம் என்னை கெஞ்ச வைக்கிறா அவளை சமாதானம் பண்றதுக்குள்ள நான் சோர்ந்து போயிட்டேன்…

கிருஷ்ணன், டேய் எல்லை மீறி நடந்து கொள்ளாதே டா…

இன்பா,   இனி எல்லாம் மீற போறேன் அவ கிட்ட சீக்கிரம் எல்லை மீற போறேன்..

டேய், ஸ்கவுன்ட்ரல்.. தப்பு ராகவ்.. என் அகராதியில் கிடையாது… என்று பேசி விட்டு பாவையை பார்த்து விட்டு  அங்கு இருந்து கிளம்பினான். 

வீட்டுக்கு வந்ததும் அவன் அறைக்கு சென்று ஆதிக்கு போன் செய்து அவனை நாளை விவெகாவை வெளியே கூட்டி செல்வது பற்றி சொல்லி நீயும் வர வேண்டும் என்றும் கூறினான். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா காலையில் உடற் பயிற்சி செய்ய வரும் நேரம் அதற்கு முண்ணவே ரவி அங்கு இருந்தார். இன்பாவை பார்த்து அவர் ஒரு அசட்டு புன்னகை சிந்தினார். வொய் ஆர் யூ லா ஃபிங்.. நேற்று நீ நீல் டவுன் போட்டியாமா.. இதை கேட்டு அவனுக்கு கோபம் வர

 ரவி, ACP சார் அதிக கோபம் உடம்புக்கு ஆகாது கொஞ்சம் உன் திமிர் கோபம் இது ரெண்டையும் குறைத்து கொள்..

இன்பா, சிரித்து கொண்டே உங்களோட ஒரு தலை காதல் பட  ரீல்ஸ் எல்லாம் கைவசம் என் கிட்ட நிறைய இருக்கு தேன் மொழி, மம் பூங்கொடி, ஹான் வான் மதி, அண்ட் லாஸ்ட் பைந்தமிழ் இவங்க எல்லாரும் உங்க பின்னாடி சுத்துன இவிடென்ஸ் லெட்டர்ஸ் எல்லாம் அப்படியே ஒரு மெயில் மாம்க்கு அணுப்பட்டுமா.. அனுப்பினேன்னு வைங்க அப்புறம் நீங்க பேக் பண்ணிட்டு மொத்தமா உங்க மாம் வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நிலை வந்திடும்..  

ரவி, ஏன் டா உனக்கு இந்த கொலை வெறி….

இன்பா, அது அப்படி இல்ல நான் கொஞ்சம் திங்க் பண்ணி பார்த்தேன் என் பேபி ய சமாளிக்க ஐடியா தேவை நீங்க தான் காதல் மன்னன் ஆச்சே..உங்களுக்கு கொஞ்சம் மூளை இருக்கு அன்னிக்கு நீங்க சொன்ன உடனே கன்வின்ஸ் ஆகிட்டா சோ என் பேபி ய கன்வின்ஸ் பண்ண எனக்கு உங்க ஐடியா தேவை உங்க குடும்பம் மொத்தமும் சரியான சீன் பார்ட்டிஸ் சோ உங்களை என் கைக்குள்ள வைத்து இருக்கணும் தட்ஸ் ஆல்… 

ரவி, ஒரு பெரு மூச்சு விட்டு எல்லாம் என் நேரம் உனக்கு பதிலா ஒரு பொன்னு பொறந்து இருக்கலாம்.. 

இன்பா, எனக்கு வேணும்னா பொன்னு பிறக்கும் இனி உங்களுக்கு எல்லாம் என்று சிரிக்க உடனே சட்டென்று ரவி அங்கு இருந்த ஒரு பொருளை எடுத்து வீஸிட அது சத்தத்துடன் கீழே விழுந்தது அந்த சத்தம் கேட்டு வசு ஓடி வர பின்னால் சுபா வும் கண்களை தேய்த்து கொண்டே ஓடி வந்தாள். 

சுபா, வாட் ஹெப்பன் டாடி.. வசு, என்னாசுங்க… ரவி அவனை முறைத்து விட்டு உன் பையன் அவனை எங்கே இருந்து டி தூக்கி வந்த இவனை என்று எதோ சொல்ல வர இன்பா, மான் விழி, தேன் மொழி என் கிளி… என்ற அந்த பாடல் வரிகளை முணுமுணுக்க ரவி அந்த கதவினை படார்  என்று சாத்தி விட்டு வேக வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றார். வசு தன் கணவரின் பின்னால் சமாதானம் செய்ய போக.. சுபா, இன்பா இப்போ உனக்கும் டாடிக்கும் தான் அதிகமா சண்டை வருது, ஏன் டா  டாடிய கஷ்ட படித்துற..

 இன்பா, மற்றவர்களை விட நான் ஒன்னும் அதிகமா கஷ்ட படுத்துல என்று சொல்லி விட்டு அவன் பயிற்சியில் ஈடுபட்டான்… பின் நேராக சென்று தன்னை விவேகாவுக்கு இணையாக தயார் படுத்தி கொண்டு ஒரு முறை திருப்தி பட்டு கொண்டான். 

இங்கே கவ்யா நேரமே எழுந்து அதிகமான ஒப்பனை இல்லாமல் மிதமான ஒப்பனையாக தெரிய வேண்டும் என்று அழகுகலை நிபுணர்களை வர வைத்து இன்பாவுக்கு இணையாக தன்னை தயார் படுத்தி கொண்டாள்.

இங்கு விவேகா மிதமான ஒப்பனை செய்து கொண்டு ஆதிக்காக காத்து கொண்டு இருந்தாள். ஆதி விவேகா வீட்டுக்கு வர இன்பா மித்ரணின் வீட்டுக்கு சென்றான். வெண்பா… வெண்பா… சொல்லுங்க அண்ணா… கொஞ்சம் என் ப்ரெண்ட் க்கு கல்யாணம் சோ வெளியே போய் கொஞ்சம் ட்ரெஸ் வாங்கணும் நீ வரயா… அவள் சரவணன் அங்கு இருப்பதை பார்த்து விட்டு அப்படியே நிற்க்க.. இன்பா, சரவணனை முறைத்து விட்டு ஆன்டி ஆன்டி.. மம் சொல்லு இன்பா.. அவன் வந்த விஷயத்தை சொல்லி விட்டு நான், மிதர்ன், வெண்பா மூணு பேரும் போறோம் அவளை கூட்டி போகட்டுமா…

சரவணன், அவ எங்கேயும் வர மாட்டா… இன்பா, அதை நீ சொல்ல வேண்டாம் அவ சொல்லட்டும்… தேவகி, நீ கூட்டி போ பா.. அவனோ, நீ போக கூடாது வெண்பா, அவள் இன்பாவை பார்த்து அண்ணா நான் வரல… இதை கேட்டதும் இன்பா, அப்போ இனி நான் உன் கிட்ட எப்பவும் பேச மாட்டேன்.  இங்கே வரவும் மாட்டேன் என்று சொல்லி அவன் கிளம்ப வெண்பா கண்களில் கண்ணீருடன் ஆண்ணா என்று அழைக்க தேவகி, இன்பா நீ கூட்டி போ வெண்பா நீ கிளம்பு என்று சொல்ல அவள் அண்ணா நான் வருகிறேன் என்று சொல்லி அவள் சரவணனை பார்க்காமல் இன்பாவுடன் கிளம்பினாள். மித்ரன், இன்பா, ஆதி, வெண்பா, விவேகா 5 பேர் இருக்க 

இன்பா, டேய் மித்ரா உனக்கு இன்னிக்கி டூட்டி தானே.. நீ தானே டா கூப்பிட்ட..  டேய் என் பேபி வெண்பா வந்தால் தான் வெளியே வருவேன் அப்டின்னு சொல்லிட்டா சோ அதனால் தான் கொஞ்சம் பொய் சொல்லிட்டேன் அது எல்லாம் ஒயிட் லைஸ் மச்சி உனக்கு டைம் ஆகும் நீ ஆபீஸ் போ மச்சி… மித்ரன் இன்னிக்கி நைட்டு உனக்கு டூட்டி மைண்ட் இட்… டேய் போடா என்று சொல்லி விட்டு இவர்கள் நால்வரும் கிளம்பினர். 


இன்பா அருகில் உள்ள இருக்கையில் வெண்பா அமர்ந்து இருக்க விவேகா ஆதி இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டு வர விவேகா ஆதி அமைதியாக இருந்தாலும் கூட அவனிடம் தொன தினவெண்டரு பேச இங்கே வெண்பா, இன்பா இருவருக்கும் காதில் புகை மட்டும் தான் வர வில்லை ஒரே கடுப்பாக இருந்தது. 

வந்ததில் இருந்து ஆதி ஒரு முறை கூட இவளை பார்க்க வில்லை அதனால் வெண்பா, அண்ணா நான் பின்னால் போய் உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்ல இன்பா, மம் சரி என்று சொல்லி கார் நிறுத்திட வெண்பா விவேகா அமர்ந்து இருக்கும் இடத்தில் வந்து ஹே முன்னாடி போயு உட்காரு… விவேகா இன்பா வை பார்த்து முறைத்து விட்டு நான் வரல பா… 

வெண்பா, டென்ஷன் பண்ணாம போடி என்று அவளை வலு கட்டாயமாக இழுத்து வெளியே விட்டு வெண்பா அமர்ந்து கொண்டு ஆதியை பார்த்து , ஹாய் ஆதித்யா என்று வேண்டும் என்றே கேட்க.. அவன் ஒரு பார்வை மட்டும் அவளை பார்த்து விட்டு உடனே வேறு புறம் திரும்பி கொண்டான். 

இன்பா, ஹே சீக்கிரம் ஏறு டைம் ஆகுது.. விவேகா, கோபமான முகத்துடன் முன்னால் சென்று அமர்ந்து கொண்டு அவளை பார்க்க அப்படியே பறக்குற…  இன்பா அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஹே அப்படி எல்லாம் இல்லை டி நான் பொதுவாக சொன்னேன்.

வெண்பா, ஹே ஹல்லோ அங்கே என்னடா பார்க்கிற..  

ஆதி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி விட..  

டேய் எதுவும் சும்மாவாச்சும் பேசு டா… 

ஆதி, என்ன பேச… 

வெண்பா, ஐ லவ் யூ சொல்லு… 

இதை கேட்டு ஆதி…?

தொடரும்… 

 Episode 127,

விவேகா முன்னே வந்து அமர்ந்து கொண்டு அவனை முறைத்து கொண்டும் மிரட்டி கொண்டும் வந்தாள். 

வெண்பா ஆதியிடம் ஹே எதுவும் பேசு டா..  

என்ன பேச… 

லவ் யூ சொல்லு என்று அவள் சொல்ல ஆதி திடுக்கிட்டு ஹே இப்போ என்ன சொன்ன?

வெண்பா, ஒன்னும் இல்ல நீ ஒரு தத்தி… 

மைண்ட் யூர் வோர்ட்ஸ்.. வெண்பா, உனக்கு என் கிட்ட மட்டும் பேசாத அவ கிட்ட மட்டும் அப்படியே பேசி கொண்ஜிட்டு திறி அங்கே பாரு அவ என்ன வாய் பேசிட்டு வரா நீ ஏன் டா இப்படி இருக்க…

ஆதி, உன் கிட்ட நான் என்ன பேசட்டும் எனக்கு பேச ஒன்னும் இல்ல… இன்பா சார் முன்னாடி இருக்கிறார். 

வெண்பா, அவ கிட்ட பேச உனக்கு என்ன இருக்கு அது தான் பிறந்ததில் இருந்து கூடவே இருக்கிங்கலே ஆனாலும் ஓயாமல் அவ கிட்ட பேசுற..  

ஆதி, அவளும் நீயும் ஒன்னு இல்லை 

வெண்பா, இதை கேட்டதும் எதோ கவலையாக மனம் வலித்தது. 

அவள் அமைதியாக வருவதை பார்த்து ஆதி திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க அவள் முகம் கொஞ்சம் சோகமாக இருக்க.. 

ஆதி, வெண்பா… அவள் பதில் பேச வில்லை. 

ஹே ராட்சசி என்னாச்சு, அவள் அப்போதும் எதுவும் பேசாமல் இருக்க அவன் இங்கே நிலைமை சரி இல்லை இறங்கியதும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான். 

அவர்கள் இறங்கும் இடம் கிட்ட தட்ட வந்து விட்டது. இன்பா, விவேகா… ம்ம் சொல்லு .. என்று முகத்தை தூக்கி கொண்டு சொல்ல ஹே இப்படி முகத்தை வைத்து கொண்டு இருக்காதே டி… ஹே போடா என்னை வைத்து கொண்டு அவளிடம் கடலை போட போற… என்னால் பக்கத்தில் இருந்து பார்க்காவா முடியும் என்று ஒரு பெரு மூச்சு விட… 

இன்பா, பார்க்க முடியாது நான் பேசுவதை கேட்க முடியும்… என்று சொல்லி கார் நிறுத்தி விட்டு இன்பா , ஆதி , வெண்பா இருவரையும் பார்க்க அவர்கள் கீழே இறங்கி கொண்டனர். விவேகா இறங்க செல்ல ஹே இரு டி ஒரு நிமிடம் என்று சொல்லி அவனுடைய பெர்சனல் போனை அவளிடம் கொடுத்து விட்டு அவனுடைய ஆஃபீஸ் போனில் போன் செய்து ப்ளூ டூத் காதில் மாட்டி கொண்டான். 

விவேகா, இப்போ என்ன பன்ற நீ… அவனோ நீ தானே சொன்ன அந்த ஜங்கில் ஃபாக்ஸ் கிட்ட நான் பேசுவது உன்னால் கேட்க முடியாது அப்டின்னு சொன்னியே இப்போ இதில் நான் அவளிடம் என்ன பேசுகிறேன் அப்டின்னு உனக்கு கேட்கும் எனக்கு உன்னோட டார்ச்சர்ல இருந்து நிம்மதி… 

இப்போது அவ்னை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்தாள். இன்பா, இப்போ எதுக்கு டி முரைக்கிற.. நான் நான் நீ எப்படி சொல்லலாம் ..இப்போ என்னடி சொன்னேன்… விவேகா, நான் உனக்கு டார்ச்சரா என்று கேட்க இன்பா சாரி பேபி நீ அந்த டார்ச்சர் இல்லை டி லவ் டார்சர் என் பேபி டோண்ட் be angry சமத்து பொண்ணு தானே…  ஆமா… சரி அதோட இந்த கார்டு இது என்னோட டெபிட் கார்டு சோ அங்கே உனக்கு வாங்க யூஸ் பண்ணிக்கோ… என்ன டெபிட் கார்டு கொடுக்குற கிரெடிட் கார்டு வச்சு இருப்ப தானே… இன்பா, இது என் காசு என்னோட பணம் சோ டெபிட் கார்டு முதல் முறையா என்னோட இன்கம்  மொத்தமும் என்னோட ஃப்யூச்சர் கிட்ட உன் கையில் கொடுத்து விட்டேன் இனி எல்லாம் நீ தான்… இதை கேட்டதும் விவேகா வுக்கு ஒரு மிக பெரிய அன்பு சுமையை தலையின் மேல் வைத்தது போல் இருந்தது. ராகவ் என்னடா என்னை நீ இவளோ நம்புறியா… ம்ம் யெஸ் பேபி என்று அவன் கைகல் அவள் மேல் ஊறியது. 

 இங்கே வெளியே இறங்கியதும் ஆதி, ஹே வெண்பா… அவள் கண்டு கொள்ளாமல் வேறு புறம் திரும்பி நின்று கொண்டு இருக்க இப்போ மேடம் க்கு என்ன கோபம்… இதை சொன்னதும் அவள் அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள். ப்பா நீ பார்த்தாலே அந்த இடம் பத்திகும் போலயே… அவள் புருவம் நெரித்து கொண்டே என் முன்னாடி நிக்காதே… ஆதி, சரி சரி நான் நிக்கல உனக்காக ஆரஞ்சு  மிட்டாய் எடுத்து வந்தேன் உனக்கு வேண்டாமா என்று ஒற்றை புருவம் தூக்கி அவன் கேட்க… அதை எதுக்கு எனக்கு கொடுக்குற எனக்கு ஒன்னும் தேவை இல்ல… ஆதி, இப்போ டென்ஷன் பண்ணாம சொல்லு இல்லை நான் போயிடுவேன்…

வெண்பா, நீ தானே சொன்ன பேச என்ன இருக்கு ஒன்னும் இல்ல அதே போல் நானும் விவேகாவும் வேற வேற அப்டின்னு சொன்னியே அப்புறம் எதுக்கு என் கிட்ட வந்து இப்போ பேசுற… 

இதை கேட்டு ஆதி, சரியான மக்கு மக்கு… வெண்பா, உன்னை… உன்னை… உன்னை நான் என் சரவணன் கிட்ட சொல்றேன் இரு டா.. ஆதி, சிரித்து கொண்டே ஆமா அவ கிட்ட பேச எனக்கு நிறைய இருக்கு ஆனால் உன் கிட்ட பேச ஒன்னும் இல்லை இதை கேட்டதும் அவள் திரும்பி நடக்க ஆதி, இதையும் கேட்டு விட்டு போ… அவளும் நீயும் எபவும் ஒன்னு இல்லை சோ இதுலயே உனக்கான பதில் இருக்கு.. 

இதை கேட்டு வெண்பா நின்றாள். புரிந்து கொண்டாள் என்று ஆதி மெலிதாக சிரிக்க வெண்பா அவன் அருகில் வந்து தலையில் ஒரு குட்டு வைத்து கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு டா… ஆதி, நீ இருக்கியே சரியான மாங்கா போ உனக்கு புரியும் போது புரியட்டும்…

வெண்பா, ஹே சொல்லு டா பிளீஸ் என்று அவள் கெஞ்சிட..  ஆதி, அவ கிட்ட நான் ஃப்ரீ யா பேச முடியும் ஆனால் உன் கிட்ட அது கொஞ்சம் கஷ்டம் தட் மீன்ஸ் நீ வேற இடத்தில இருக்க விவேகா அந்த இடத்துக்கு வர முடியாது… வெண்பா, எந்த இடம்… ஆதி, டென்ஷன் பண்ணாத… ஹே பிளீஸ் டா… ஆதி, “ஹே போடி”… என்று சொல்லிட அந்த வார்த்தையில் அவள் சொக்கி போய் நின்று விட்டாள். ஆதி மனதில் போச்சு இதுக்கு வாயை வாடகை எடுத்து திட்டுவாலோ என்று நினைத்து கொண்டு அவள் முகத்தை பார்க்க அவள் இந்த உலகத்தில் இருந்தால் தானே… 

இங்கே இன்பா, பேபி போகட்டுமா… இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை என்று சொல்லி சரி ஓகே போயிட்டு வா… ஹே என்னடி ஒன்னும் சொல்லாம போற… என்ன சொல்ல சொல்ற… சொல்ல வேணாம் எதுவும் கொடுக்கலாம்..  என்ன கொடுக்கணும்..  பேபி நான் கொடுக்கிறேன் நீ திருப்பி கொடு என்று அவள் இதழில் ஒற்றி எடுத்தான். விவேகா உடனே கண்களில் கோபம் உதட்டில் புன்னகை கொண்டு ராகவ் டென்ஷன் பண்ணாத ஒழுங்கா ஓடிடு.. அப்போ நீயும் வா நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஓடி போலாம்… விவேகா நான் தனியா கூட போவேன் உன் கூட வர மாட்டேன் போடா.. என்று சொல்லி அவள் போன் வாங்கி கொண்டு  இறங்கி கொண்டாள். 

அவள் இறங்கிய அடுத்த நொடி இன்பா காரை பார்க்கிங் செய்து விட்டு விவேகாவுக்கு கால் செய்தான்.அவனது முகம் இப்போது பாறையாக இருந்தது.

ஹலோ ராகவ் நாங்க படத்துக்கு போறோம்..

இன்பா,ஹே கொன்றுவேன்… என் கண்ணு முன்னாடியே இரு  ஹே என்னை விட்டு தூரமா சுத்தாத.. டேய் இப்போ தானே இறங்கி வந்தேன் நீ எங்கேயும் போக கூடாது அப்டின்னு சொல்ற… 

நீ அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணு நான் இங்கே சினிமா பார்க்க போரன்… நான் அவளை நாளைக்கு கூட மீட் பண்ணிக்கிரேன் இப்போ அங்கே வரேன்…

விவேகா, சரி வராத நீ உன் வொர்க் பாரு நான் படத்துக்கு போகல..  அவள் போன் வைத்து விட இப்போது கவ்யா போன் செய்தாள். இன்பா எங்கே இருக்க… ஐ ம் ஆன் தி வே… ஓகே சீக்கிரம் வந்திடு… ம்ம் இப்போ நீ அங்கே இருந்து xyz ரெஸ்டாரன்ட் வந்திடு… ஓகே என்று அவள் போன் வைத்து விட இன்பா அவர்களையும் அங்கே வர சொல்லி விட்டான். 

இன்பா வெளியே போன் வைத்து கொண்டு இருக்க கவ்யா வந்தாள். சரியாக அதே நேரம் விவேகா, வெண்பா, ஆதி மூவரும்  அவளுக்கு பின்னால் உள்ளே வந்தனர். ஆதி பின்னால் இருந்து நடந்து வரும்போது இன்பாவை பாவமாக பார்த்தான்  ஒரே நேரத்தில் ரெண்டு பேரு  வராளுக…ஒருத்தி சிரிக்கிறா இன்னொருத்தி முறைக்குறா இப்போ அவரு  சிரிப்பாரா இல்லை முறைப்பாரா.. என்று நினைத்து இவன் சிரித்தான்.

இன்பா புன்னகை சிந்தாமல் அவளை பார்கக ஹே இன்பா டூ டே யூ லுக் ஹன்ட்சம் என்று சொல்ல இங்கே விவேகா இவன் பிளான் பண்ணி ட்ரெஸ் பண்ணிட்டு வந்து இருக்கான்.. இதையெல்லாம் பார்க்க என்னை வேற கூட்டி வந்து இருக்கிறான் இரிட்டேடிங் இடியட்… ஆதி, வெண்பா இருவரும் அவள் சொல்வதை கேட்டு சிரிக்க 

இன்பா அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளிடம் லெட்ஸ் கோ என்று சொல்லிட ஒன் மிநிட்… என்ன என்பது போல் பார்க்க நான் எப்படி இருக்கேன்னு நீ இன்னும் சொல்லவே இல்லயே… விவேகா இங்கே நீ நீன்னு சொல்ட்ராளே அவளுக்கு எவ்ளோ தைரியம் இருக்கும்… ஆதி, நீ எப்படி அவர கூப்பிடற… விவேகா, நான் எப்படி வேனா கூப்பிடுவேன்… வெண்பா, மேடம் அவ அண்ணாவை லவ் பண்றா சோ அவளுக்கு பிடிச்ச மாதிரி தானே கூப்பிடுவாள்… அவள் கோபத்தில் ஆதி…. என்று கத்திட என்னாச்சு என் தேன் மிட்டாய்க்கு..இவளை வாயை மூட சொல்லு டா… ஹே போடி உண்மை அது தானே… 

 இங்கே இன்பா கவ்யாவை பார்த்து

” நாட் பேட்” அவள் இதை கேட்டதும்… ம்ம் பட் ஐம் இம்பிரஸ்டு… 

வெண்பா, எப்படி சுற்றினாலும் கோல் போடுரா… என்று சொல்லி கொண்டே விவேகாவை பார்க்க அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்தில் எரிந்து கொண்டு இருக்க… 

என்னாச்சு உன் தேன் மிட்டாய்க்கு அவ முகம் பார்க்க சகிக்கள… 

அவன் என்னாசசு டி… ஒன்னும் இல்ல… சொல்லு டி… அவன் என்னை பார்த்து கூட இந்த டைலாக் தான் சொன்னான்…. இதை கேட்டு ஆதி அவள் சொன்ன விதத்தை பார்த்து உதடு மடித்து சிரிப்பை கட்டு படுத்த வெண்பா சிரித்து விட்டாள்…. பின் அண்ணா நீ இவளை இங்கே கூட்டி வந்து உனக்கு நீயே ஆப்பு வைத்து கொண்டாய் இவ எப்படி உன்னை பனிஸ் பண்ணனும் அப்டின்னு லிஸ்ட் போடுறா என்று இன்பாவுக்கு ஒரு மெஸேஜ் தட்டி விட்டாள்… 

பின் எவ்ளோ நேரம் தான் இங்கேயே இருப்பது வா உள்ளே போகலாம்… என்று சொல்லி அவர்கள் மூவரும் உள்ளே சென்றனர். அந்த உணவகம் மிகவும் பிரபலமான மற்றும் உயரிய உணவு வகை மேலை நாட்டு உணவுகள் கிடைக்கும். அங்கு அதிகமாக பணம் படைத்தவர்கள் மட்டுமே அதிகமாக வந்து போவார்கள்… 

வெண்பா, ஆதி, விவேகா மூவரும் ஆச்சரியமாக அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே ஒரு டேபிள் வந்து அமர்ந்தனர். ஆனால் அங்கு இன்பா, கவ்யா இருவரும் இல்லை… உள்ளே தனி தனி அறைகள் போன்று தடுக்கப்பட்ட குட்டி குட்டி இடம் இருக்க கவ்யா அந்த இடத்தை தேர்வு செய்து அங்கே இன்பாவை கூட்டி சென்றாள்.

இவர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் இடத்துக்கு வந்து ஒரு மேஜையிள் மூவரும் அமர்ந்து கொண்டனர். அங்கு இருக்கும் பணியாள் வந்து மெனு கார்ட் வைத்து விட்டு போக அதை வாங்கி ஆதி, பார்த்து விட்டு எனக்கு பசிக்கள நீ சாப்பிடு என்று விவேகா விடம் தள்ள விவேகா வாங்கி பார்த்து விட்டு எனக்கு காலையில் சாப்பிட்ட உப்மா வே இன்னும் கரையல சோ நீ ஆடர் பண்ணிக்கோ என்று வெண்பா கிட்ட சொல்ல அவள் வாங்கி பார்க்க எல்லாம் முரட்டு விலையாக இருந்தது. வெண்பா எல்லாம் பார்த்து விட்டு விவேகாவை பார்த்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள். அதை கேட்டு இருவரும் வாய் பிளந்து கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பிரமிப்பாக பார்த்தனர். 

அப்படி என்ன கேட்டாள். வெண்பா, ஹே கார்ட் இருக்கா.. என்ன கார்டு?… சாப்பிட்டால் பில் பே பண்ண பணம் வேனும் தானே… ஆதி, அப்போ நீ சாப்பிட போறியா..  பின்ன சாப்பிடாமல் இங்கே சாப்பிடரவங்களோட வாயை பார்க்க சொல்றியா.. இங்கே சாப்பிட தானே வந்து இருக்கோம்..  

ஆமா… சோ நான் சாப்பிட போறேன் நீங்க…என்று இருவரையும் பார்த்து விட்டு சாப்பிடற என் வாயை பார்க்க வேண்டாம் எனக்கு வயிறு வலிக்கும்.. ..

விவேகா, ஆதி என்னடா நீ இவள் சாப்பிடுவதற்கு தனியா ஷிஃப்ட் போட்டு ஆபீஸ் போகனும் போலயே பாவம் டா நீ… வெண்பா ஆடர் செய்து கொண்டு இருப்பதை பிரமிப்பாக பார்த்து கொண்டு இருந்தனர். ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், நடுவில் ஸ்நாக்ஸ் கொஞ்சம் , ப்ரூட் செலட், லைம் ஜுஸ், என்று வெளுத்து வாங்கி கொண்டு இருந்தாள். இவர்கள் வேடிக்கை பார்க்க வெண்பா அவளுடைய போன் எடுத்து இன்பாவுக்கு போன் செய்தாள். 

டெல் மீ… அண்ணா இதுங்க ரெண்டும் தண்ணி கூட குடிக்கள மெனு கார்டு மட்டும் தான் திறந்து பார்த்து விட்டு இப்போ என்னோட வாயை பார்த்து கொண்டு இருக்குதுங்க… 

ஓகே ஐ ம் ஹாண்டலிங்.. என்று சொல்லி போன் வைத்து விட விவேகா, இப்போ எதுக்கு டி போன் பண்ணி அவன் கிட்ட சொன்ன… ஏன் டி உன் லவ்வரை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா… போடி என்று முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தாள். 

இங்கே கவ்யா உணவுகளை ஆடர் செய்தாள். எல்லாம் கொஞ்சம் ஆந்திரா உணவு வகைகளாக இருந்தது. அவளின் அம்மா ஆந்திர மாநிலம்… 

 இன்பா, ஆதிக்கு போன் செய்தான். என்னாச்சு மிஸ்டர்.. சார் ஒன்னும் இல்ல சார். கொஞ்சம் மேடம் கிட்ட போன் தாங்க… விவேகா இந்தா பேசு… முடியாது… ஹே இந்தா என்று அவள் கைகளில் கொடுத்து விட அவள் வாங்கி காதில் வைத்தாள். 

இன்பா பேசி கொண்டே ஒரு வாய் எடுத்து வைக்க கவ்யா பரிமாறி கொண்டு இருக்க நோ தேக்ஸ் என்று சொல்ல அவள் சிரித்து கொண்டே வைக்க அந்த நேரம் 

முக்கியமான வேலையாக அங்கு வந்த குரு பிரகாஷ் ரெட்டி இன்பா ஒரு பொண்ணோடு அமர்ந்து உணவு உண்பதை பார்த்து விட்டான்… அவன் உதவியாளரிடம் யார் அந்த பொண்ணு… ?  சார் இந்த பொன்னு மினிஸ்டர் சத்ய மூர்த்தி மகள்.. இவங்களை தான் இவரு அந்த மாபியா கும்பலில் இருந்து காப்பாற்றினார்.. ரெண்டு பேருக்குள்ள எதோ இருக்குன்னு எல்லாரும் பேசி கொள்கிறார்கள்…இதை கேட்டதும் குரு கண்கள் கவ்யாவை படம் எடுக்க தொடங்கியது… ஓ இன்டர்ஸ்டிக் நல்லா இருக்கா ஆனால் இருக்கும் இடம் தவறா இருக்கே.. கொஞ்சம் அவளை நோட் பண்ணி வை இதை கேட்டதும் அந்த உதவியாளர் சார் அது மினிஸ்டர் பொன்னு… என் அப்பா கூட மினிஸ்டர் தான்… அந்த போலீஸ்காரன் கிட்ட என்ன இருக்கோ அதெல்லாம் எனக்கு வேணும்… 

தொடரும்…

எந்த டைம் upload pandren Apdinnu கேட்டின்க But சரியான டைம் சொல்ல முடியல ஆனால் டெய்லி up load பண்ணிடுவேன் வொர்க் ல இருக்கேன் சோ particular டைம் afternoon dhaan 

 Episode 128,

குரு கவ்யாவை பார்த்து கொண்டே அவள் யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல ஜஸ்ட் ஒன் டைம் மட்டும் எனக்கு அவ வேணும் என்று சொல்லிட அந்த உதவியாளர் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க அவன் அவளை தின்பது போல் பார்த்து விட்டு இன்பாவை முறைத்து விட்டு என் அண்ணாவுக்கு அந்த சூரியா தொல்லை பண்றான்.. அவனோட ப்ரெண்ட் இவன் என் வழியில் ரொம்ப கிராஸ் பண்றான் இவனை சும்மாவே விட மாட்டேன்.. என்று சொல்லி ஒரு தந்திர புன்னகை சிந்தி விட்டு சென்றான்.

இங்கே இன்பா விவேகாவிடம் மேம் ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட மீ.. விவேகா, ஹே இது எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு டா எனக்கு வேண்டாம்.. அவன் அப்போ நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது உங்களுக்கு என் கிட்ட இருந்து என்று அவன் நிறுத்திட.. 

விவேகா, சரி சரி ஆடர் பண்ணி தொலையிறேன்… ஆனால் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல டா…

இன்பா, அந்த பெங்களூர் மீட்டிங் உங்களுக்கு நினைவு இருக்கா அந்த  எல்லா ஒகே வா.. விவேகா, அவ்ளோ என்னால் முடியாது டா நான் காலையில் உப்மா சாப்பிட்டு வந்துட்டேன். இன்பா, இதுக்கு மேல நான் பேச மாட்டேன் மொத்தமா என் செயலில் காட்டுவேன்.. இனி பேச ஒண்ணுமில்ல.. உங்களை கண்காணிக்க என்னோட காப்ஸ் பக்கத்தில் இருப்பாங்க.. நான் யாரு கிட்டயும் இவளோ நேரம் பேசியது இல்ல… சரி சரி வைக்கட்டுமா…

இன்பா, நோ வே.. என்று சொல்லி அப்படியே போனை வைக்க 

இவ்வளவு நேரமும் அவன் பேசுவதை கேட்டு கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு கொண்டு இருந்த கவ்யா அவன் பேசுவதை நிறுத்தியதும் யாரு போன் ல உன்னை சாரி உங்களை இவளோ டென்ஷன் பன்றது. அவங்க  VIP கொஞ்சம் நான் சொல்றதை கேட்க கஷ்டம் அது தான் கொஞ்சம் நான் பக்கத்தில இருந்து கவனித்தால் சரி ஆகிடும்.. கவ்யா, அது யாரு அக்யூஸ்ட்டா இந்த சினிமாவில் வர மாதிரி அடிப்பிங்களா..

இன்பா, அப்படி சொல்ல முடியாது  ஆனால் அவங்களுக்கு கொஞ்சம் என்னோட ட்ரீடிங் ஸ்டைல் வேற.. ரிவென்ஜ் கூட கொஞ்சம் மோசமா இருக்கும்  அவங்களால் ப்ரீத் கூட பண்ண முடியாது  என்று ஒரு புன்னகை சிந்திட..

விவேகா, ஹே காது கூசுது கொஞ்சம் சட் அப் பண்ணு…  

கவ்யா, அவன் சிரித்ததும்  அவன் பேசியதை மறந்து அவளது கைகள் அவன் கண்ணகுழி தொட நோக்கி கைகள் வர அவன் புருவம் நெருக்கி முறைப்பது போல் ஒரு பார்வை பார்க்க

விவேகா, என்னாச்சு டா இவளோ நேரம் பேசிட்டு இருந்த இப்போ அமைதியாகி விட்டாய்..

கவ்யா, உன் கன்ன குழி ரொம்ப அழகா இருக்கு உங்க டாடிக்கு இது இருக்கு தானே.. என்று கைகளை அப்படியே கீழே இறக்கி கொண்டாள்.

விவேகா, இப்போ எதுக்கு டா அவ இதை பற்றி சொல்றா உன் பல்லை காட்டினாயா இடியட் ராஸ்கல்… 

இன்பா, சாரி சாரி சாப்பிடும்போது பேச கூடாது..  சாப்பிடுங்கள்… என்று சொல்ல கவ்யாவின் உடையில் கொஞ்சம் உணவு கறை ஒட்டி கொள்ள அதை பார்த்து அவள் முகம் மாறி இன்பா ஒன் மினிட் என்று சொல்லி கைகள் கழுவ சென்றாள்.

அவள் சென்ற அடுத்த நொடி ஹே ஃபிஷ் தானே சாப்பிடுற… ம்ம் ஆமா.. அப்போ உடனே அதை பிக் எடுத்து எனக்கு வாட்ஸ் அப் பண்ணு கட கடன்னு எல்லாம் ஃபினிஷ் பண்ணனும் காட் இட்.. ஓகே..

அவ எங்கே… 

அவ ஹேன்ட் வாஷ்…

நீ நேரில் வாடா உனக்கு இருக்கு என்று சொல்லி போன் வைக்கிறேன்.. என்று வைத்து விட்டாள்.

கவ்யா வந்ததும் அவன் அவளை நிமி்ந்து கூட பார்க்க வில்லை… அவள் மனதில் எப்படியும் இம்பிரஸ் பண்ணிடரானே..என்று நினைத்து கொண்டு மீண்டும் சாப்பிடுவதை தொடர்ந்தனர்.. 

இன்பா அதன் பின் எதுவும் பேச வில்லை. விவேகா அவன் சொன்னது போலவே போட்டோ எடுத்து மெசேஜ் செய்தாள். அதை பார்த்ததும் இன்பா ஒரு சிறு புன்னகை..

கவ்யா அவனிடம் வந்ததில் இருந்து நான் தான் உங்களிடம் பேசுகிறேன் நீங்க என் கிட்ட பேசவே இல்லை.நீங்க யார் கிட்டயும் பேச மாடிங்களா… அவன் என் கிட்ட நெருக்கமா இருக்கிறவங்க கூட மட்டும் தான் நான் இயல்பா இருப்பேன் அண்ட் பேசுவேன்.. என்று சொல்லி நான் முடித்து விட்டேன் நீங்க என்று அவன் அவள் கண்களை நேராக பார்த்தான்… 

நானும் முடித்து விட்டேன்… என்று சொல்ல இருவரும் கை களுவினர். பில் வந்ததும் அதை இன்பா வாங்கி கிரெடிட் கார்டில் ஸ்வைப் செய்தான்.

கவ்யா அவனை தின்பது போல பார்த்து கொண்டு இருக்க  இன்பா, இப்போ உங்க கிட்ட பேசலாமா… ம்ம் சொல்லு.. நான் எதுக்கு உங்களை வர சொன்னேன்னு ஐடியா இருக்கா.. கவ்யா கண்கள் மின்ன உன்னையும் என்னையும் பற்றி பேச என்று அவன் கைகளை பிடிக்க போக இன்பா சட்டென்று கை எடுத்து கொண்டான். 

ஐ ம் ஆல்ரெடி ஃபாள் இன் லவ் வித் மை பேபி.. வாட்?.. யெஸ் நான் ஒரு பொண்ணை  லவ் பண்றேன்.. டபிள் சைடு லவ்..

கவ்யா யூ ஆர் லையிங் நான் நம்ப மாட்டேன்.. 

அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது. 

கவ்யா, அன்னிக்கு என் கிட்ட நான் அழகா இருக்கேன் ன்னு சொன்ன உன்கிட்ட நீயும் நானும் மட்டும் அப்டின்னு சொன்ன… பொய் சொல்லாத இன்பா… என் கிட்ட விளையாதாதே நான் உன் மேல் தீவிரமா இருக்கேன் அது உனக்கே தெரியும்… 

இன்பா, உன்னை நானு சான்சே இல்ல நான் சொன்னதை நீ சரியா புரிந்து கொள்ள வில்லை.. 

கவ்யா,  அந்த ஹாலில் இருக்கும் எலார் கண்ணும் உன் மேல் தான் அப்டின்னு சொன்னியே.. 

இன்பா, கரெக்ட் தான் பட் என்னோட கண்ணு  உன்னை பார்க்கவே இல்லையே… யார் அவ? அவள் என்னை விட அவ்ளோ அழகா! எங்கே இருக்கா?நான் இப்போவே அவளை தீர்த்து கட்டுகிறேன்.. நீ எனக்கு தான்… எனக்கு மட்டும் தான்.. அவளை நான் சும்மா விட மாட்டேன் என்று அங்கு இருந்த முள் கரண்டஇயை டேபிள் மீது குத்தி கொண்டே அவனிடம் பேசிட.. 

நான் உன் கிட்ட பொறுமையா சொல்ல தான் உன்னை இங்கே வர சொன்னேன். சோ உன்னோட மனசில் தேவை இல்லாமல் எண்ணம் வளர்த்து கொண்டு இருக்க வேண்டாம்.

அவளுக்கு நான் தான்.. எனக்கு எப்போதும் அவ மட்டும் தான்.. என் லைஃப்ல என்னை எதிர்த்தது ரெண்டு பொண்ணுங்க  என் பேபி அடுத்து நீ தான் அவ கிட்ட எனக்கு பிடித்ததே திமிர் தான் அவள் எல்லார் கிட்டயும் அமைதியா இருப்பா எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்றது தான் அவளுக்கு வேலை பட் தவறு நடக்கும் போது தான் திமிர் தலை தூக்கும்.. ஆனால் நீ உன் கிட்ட உன் அப்பாவோட பதவியை யூஸ் பண்ணி எல்லா வேலையும் வயசு வித்தியாசம் இல்லாமல் இஸ்டத்துக்கு ஆடுற.. எந்த ரகததில் உன்னை வைக்க.. 


கவ்யா, என்னோட பிடிவாதம் உனக்கு தெரியாது… அவ யாரா இருந்தால் எனக்கு என்ன அவளை தூக்கி குப்பையில் போட்டு விடு நான்  கவ்யா டா நானே உன்னை விரும்புகிறேன் அவளை பற்றி இனி நீ நினைக்க வேண்டாம் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லு அவளை நான் ஒன்னும் செய்ய மாட்டேன் இல்ல அவ யார் அப்டின்னு கண்டு பிடித்து அவளை அழித்து விடுவேன் நீ எனக்கு வேணும் டா… 

இன்பா ஸ்டைலாக அவனுடைய கண்ணாடியை போட்டு கொண்டு நீ அவள் நிழலை கூட தொட முடியாது என் பக்கத்தில் தான் அவள் எப்போதும் இருப்பாள். ஒரு நிமிடம் என்று அவள் முன்னால் விவேகாவுக்கு போன் செய்து அதை ஸ்பீக்கரில் போட்டான் ஹலோ பேபி… ராகவ் அவ கிட்ட பேசிட்டியா.. கவ்யா விவேகா பேசுவதையும் அவள் பெயர் சொல்லி அழைப்பது கேட்டதும் உடல் எல்லாம் பற்றி கொண்டு எரிந்தது.

கவ்யா, ஹே யாரு டி நீ எங்கே இருக்க.. நான் கவ்யா தெரியும் தானே.. உன்னை கொன்றுவிடுவேன். இவன் எனக்கு வேணும் என்று பைத்தியகாறி போல் அவள் கத்திட விவேகா ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்தினாள். ஹே உன்னை சீக்கிரம் கண்டு பிடித்து விடுவேன்  டி அதுக்குள்ள நீயே அவனை விட்டு போயிடு.. 

இன்பா, பேபி நான் சீக்கிரமே வந்து விடுவேன் நீ கட் பண்ணு ஹலோ  ராகவ்.. என்று அவள் பதட்டம் கொண்டு பேச நான் இருக்கேன் மிஸ் யூ என்று சொல்லி போன் வைத்தான். 

அப்போ உனக்கு என் மேல் பயம் அதனால் தானே அவ  யார் என்று சொல்ல மாடின்ற.. உனக்கு எதுக்கு சொல்லனும் சரி இவலோ தூரம் வந்தாச்சு.. அவ என் காலேஜ்ல தான் படிக்கிரா முடிந்தால் கண்டு பிடித்து கொள்.. அவளை நான் அணு அணுவாக துன்புறுத்துவென்.. 

அவளை பார்த்தால் என்னோட ஒவ்வொரு அணுவும் என்னோட மொத்தமும் அவ பின்னாடி எப்போவோ போயிடுச்சு.. இதை கேட்டதும் கவ்யா கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஆத்திரம் அகங்காரம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது… 

இன்பா இப்போது அவள் கண்களை பார்த்து நீ இப்படி இருக்க உன் அப்பா அம்மா தான் காரணம் முதலில் பொண்ணுக்கு இல்லை ஆணுக்கும் பொறுமை இருக்கணும்… ஆனால் உனக்கு துளி கூட அது இல்லை முதலில் பெண்மை இருக்கணும் உன் கிட்ட அதிகாரம் ஆணவம் மட்டும் தான் இருக்கு நான் ஏற்கனவே லவ் பண்றேன்னு சொல்லியும் எதுக்கு என்னை இப்படி டென்ஷன் பண்ற… என்னை அதிகம் பேச வைத்த அப்புறம் என்னோட டஃப்பான முகத்தை பார்த்த தாங்க மாட்ட… என்று சொல்லி எழுந்தவன்.

இனி உன்னோட கேவலமான ட்ரிக்ஸ் எல்லாம் செய்து உன்னை அணைத்து தூக்கி போற வைக்கிற மாதிரி எல்லாம் சீன் க்ரீயேட் பண்ணாத

இனி உன்னை தூக்க நான் வர மாட்டேன்  ஆம்புலன்ஸ் வரும்..  உன்னை அணைக்க தீயனைப்பு துறை வண்டி வரும்..  நான் இவளோ நேரம் பேசினது தான் நீ பார்த்த அது என்னோட பொறுமை இனி எதுவும் பண்ண அப்புறம் பின் விளைவு மோசமா இருக்கும் என்று சொல்லி அவன் கிளம்பி விட்டான்.

கவ்யா கண்களில் இப்போது அழுகையும் உதட்டில் சிரிப்பும் வந்தது. ஆனால் அமைதியாக கிளம்பினாள்.(இது புயலுக்கு முன் அமைதி) அவள் காதில் ராகவ்.. ராகவ் என்ற அந்த குரல் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்க கவ்யா குரோத எண்ணத்துடன் ராகவ்.. ராகவ் என்று சொல்லி கொண்டே காலையில் இருந்த அந்த மன நிலை மாறி இப்போது மனம் எல்லாம் அப்படியே ரணமாக அடி பட்ட ஒரு பாம்பை போல் அங்கு இருந்து சுரத்தே இல்லாமல் கிளம்பினாள்.

விவேகா அவள் அந்த கவ்யாவின் குரல் அதை கேட்டு ஒரு நிமிடம் பயந்து தான் போனாள். அவள் அதிர்ச்சியாகி அமர்ந்து இருப்பதை பார்த்த ஆதி, விவேகா என்னாச்சு உன் முகம் ஏன் இப்படி இருக்கு.. வெண்பா அந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டே ஹே என்னாச்சு இந்தா ஐஸ் கிரீம் சாப்பிடு.. 

விவேகா, ஆதி அந்த பொன்னு… ஆதி, யாரு கவ்யாவா? ம்ம் ஆமா அந்த பொன்னு என் கிட்ட என்று விவேகா எல்லாம் சொல்லி முடிக்க 

வெண்பா, என்ன டி சொல்ற… ம்ம் அவள் என்னை தேடி கண்டு பிடிப்பேன் அப்டின்னு சொல்லி இருக்கா..

ஆதி, விடு இன்பா சார் இருக்கிறார் நீ கவலை பட வேண்டாம்..

வெண்பா, இல்ல ஆதி அவ அன்னிக்கு போன்ல ஒரு சூனிய காறி மாதிரி பேசினாள் அவளை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் அவ பொண்ணே இல்ல பேயு… 

வெண்பா சொல்லி கொண்டு இருக்கும் போதே கவ்யா வெளியே வந்தாள். ஆதி மெதுவான குரலில் ஹே அவ வரா அங்கே பாரு என்று சொல்ல வெண்பா அவளை திரும்பி அவள் முகத்தை பார்த்து பயந்து   ஸ்பூன் கீழே போட்டு விட்டாள். 

விவேகா, ஆதி, வெண்பா மூவரும் அவளின் முகத்தில் அவ்வளவு வெறுப்பு ,  ஏமாற்றம், வலி அந்த அளவுக்கு கோபம் இருந்தது. விவேகா அவளை பார்த்து ஒரு நிமிடம் பயந்து போக ஆதி அவளின் கைகளை நான் இருக்கிறேன் என்பது போல் பிடித்து கொண்டான். 

வெண்பா, ஹலோ இங்கே நானும் இருக்கேன் அதனால் ரொம்ப பயப்பட வேண்டாம் அண்ட் நீ என்று ஆதியை பார்த்து அவளை கேர் பண்ண ஆள் இருக்கு சோ இந்த ஓவர் வழியல் எல்லாம் பப்லிக் பிளேஸ்ல பண்ணிட்டு இருக்காதிங்க.. என்று சொல்லும் நேரம் இன்பா போன் செய்தான்.

விவேகா போனை வெண்பாவிடம் கொடுத்து விட்டாள்.

தொடரும்… 

 Episode 129,

அந்த நேரம் இன்பா போன் செய்ய விவேகா அதை வெண்பாவிடம் கொடுத்து விட்டாள். ஹே இப்போ எதுக்கு என் கிட்ட தர நீ பேசு… இல்ல நீயே பேசு ஆதி வா நம்ப பில் பே பண்ண போலாம்.. 

வெண்பா ஹே லூசு அவங்களே இங்கே பிளேஸ்க்கு வருவாங்க நீ பன்றது சரி இல்லை… இல்ல எனக்கு கொஞ்சம் மனசு சரி இல்லை ஆதி நம்ப வீட்டுக்கு போலாமா என்று கொஞ்சம் சோகமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டாள். 

இங்கே இன்பா திரும்ப திரும்ப கால் செய்தான். வெண்பா போனை எடுத்து அண்ணா அவ ரெஸ்ட் ரூம் போயிட்டா.. சரி வெண்பா நீங்க வாங்க நம்ப கிளம்பலாம்.. ஆதி, ஹே என்னாச்சு டி இப்போ எதுக்கு  ரொம்ப சோகமா முகத்தை வைத்து இருக்க.. 

விவேகா, நான் தப்பு பன்றனோ அப்டின்னு எனக்கு தோணுது ஆதி… வெண்பா, என்ன டி இதுல தப்பு இருக்கு.. ஆமா நான் உண்டு என் வேலை உண்டு அப்டின்னு இருந்து இருந்தால் இன்பா, கவ்யா இவங்க எல்லாம் என் லைஃப் ல வந்து இருக்க மாட்டாங்க என்று உதடு மடித்து கடித்து கொண்டே மீண்டும் தொடர்ந்தாள். என் படிப்பை முடித்து விட்டு என்னோட காரியர் அதை நோக்கி போயிருப்பேன்.  ஒரு ஆன்சைட் புராஜக்ட்க்கு செலக்ட் ஆகனும் அம்மாவை நல்லா பார்துக்கனும் அண்ணா கூட இருக்கணும் நல்லா சம்பாதுக்கனும் என் அம்மாவை பாரின் கூட்டி போய் என் கூட வச்சுப்பேன். என் அண்ணா குழந்தைகள் கொஞ்சிட்டு அப்படியே என்னோட ட்ரீம் அவ்ளோ தான்…

ஆதி, அப்போ கல்யாணம் உனக்கும் எனக்கும் ஒரே மேடையில் தான்..  

இதை கேட்டு வெண்பா முகம் மாற ஆதி,  அவளிடம் என் கூடவா…

வெண்பா மனதில் இரு டி இதை எல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்றேன் அப்போ தான் உன் திமிர் அடங்கும்.

விவேகா அதற்கு உன் கூட இல்லை ஒரே மேடையில் தான் ஆனால் நீ மாப்பிளை இல்ல பா… என்று சொல்லி சரி சரி எனக்கு தூக்கம் வருது வா வீட்டுக்கு போலாம்.

இந்நேரம் என்ன தூக்கம் உனக்கு என்று கேட்டு கொண்டு வெண்பா கிளம்ப உடனே விவேகா, ஹே நானும் ஆதியும் கிலம்புறோம் நீ இன்பா சார் கூட வந்திடு.. இதை கேட்டதும் ஆதி, வெண்பா இருவரும் என்ன சாரா!

விவேகா, மம் ஆமா பின்ன எப்படி கூப்பிட சொல்ற..  ஆதி, ஹே உனக்கு எதுவும் ஆகி விட்டாதா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ராகவ் அப்படி இப்படின்னு கூப்பிட்டு இருந்த இப்போ சாருன்னு சொல்ற… 

வெண்பா, சரி ஓகே இன்பா சார் தான் சரி தான் டா அவ வந்து சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி போங்க.. 

விவேகா, நான் வெளியே வெயிட் பன்றேன்  ஆதி நீ போய் சொல்லிட்டு வா.. நம்ப பஸ் ஸ்டாண்டு போகனும். 

அவள் குணம் தெரிந்தவனாய் சரி ஓகே நீ வெளியே வெயிட் பண்ணு வா வெண்பா நான் உன்னை விட்டு அவரிடம் சொல்லி வருகிறேன் என்று இருவரும் இன்பா இருக்கும் இடம் செல்ல அவர்கள் சென்றதும் விவேகா கண்களில் கண்ணீர் கொட்டியது. என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வேணாம் ராகவ் அவ உனக்காக எதுவும் செய்வாள் நீ கிடைக்கல உன்னையும் அவ சும்மா விட மாட்டா நான் உன்னை  விட்டு ஒதுங்கி போயிடனும். என்னால் உனக்கு தொல்லை வேண்டாம் . நான் போயிடரென் என்று  அவள் கண்களை துடைத்து கொண்டு வெளியே சென்றாள்.

இங்கே வெண்பா, ஆதி இருவரும் இன்பாவிடம் அவள் பேசிய அனைத்தும் கூற அவன் எதுவும் சொல்லாமல் இருவரையும் வண்டியில் ஏற சொல்ல ஆதி, சார் அவ அங்கே தனியா இருப்பா… இன்பா அவனை ஒரு பார்வை திரும்பி பார்க்க அவன் அமைதியானான். 

விவேகா அங்கே நின்று ஆதிக்காக காத்து கொண்டு இருந்தாள். ஒரு சில நொடிகள் கழித்து அவள் அருகில் கார் வந்து நின்றது. வெண்பா, ஆதி, இருவரும் பின்னால் அமர்ந்து  இருந்தனர். 

அவள் ஆதியை முறைத்து பார்க்க இன்பா, ஹே அங்கே என்ன பார்வை.. ஒன்னும் இல்ல சார்… இதை கேட்டதும் இன்பா வுக்கு இன்னும் கோபம் அதிகமானது. நான் ஏற்கனவே டென்ஷனா இருக்கேன் என்னை டென்ஷன் பண்ணாமல் உள்ளே  ஏறு… 

இதை கேட்டதும் விவேகா ஒரு சில நொடிகள் அப்படியே நிற்க அவன் காரை எல்ஸ்கேலட்டர் போட்டு முறுக்க அந்த சத்தத்தில் ஆதியின் பக்கம் போய் கதவை திறந்தாள். வெண்பா, ஹே இங்கே இடம் இல்ல.. விவேகா, நீ போய் முன்னாடி உட்காரு… என்னால் போக முடியாது.. அப்போ நான் வரல… ஹே ஓவரா பண்ற டி என்று வெண்பா சொல்லி விடா பிடியாக அங்கேயே அமர.. ஆதி, சரி நான் போறேன்… என்று சொல்லி அவன் இறங்கி கொண்டான். 

கார் நேராக பாவை வீட்டுக்கு சென்றது. விவேகா அங்கே இருந்து கிளம்பும் போதே கண்களை மூடி கொண்டு தான் வந்தாள். அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டாள். லீவு நாட்கள் என்பதால் வருண் கல்யாணத்தில் இருந்து அவளுக்கு வீட்டு வேலைகள் நிறைய இருந்தது. இப்போது வேறு வீடு வைத்ததால் அங்கும் வேலைகள் இருந்தது. 

இன்பாவுக்கு அய்யோ என்று இருந்தது. அந்த கவ்யா பிரச்னை இப்போது இவளின் தீடீர் மனமாற்றம், சுபா வின் பிரச்சனை, அலுவலகத்தில் இன்னும் இரண்டு நாளில் spr வழக்கு தொடர்பான ஆதாரங்கள் சமர்ப்பித்தல் என ஒரே சடுவாக இருந்தது. 

பாவை வீட்டுக்கு முன் கார் நிறுத்திட வெண்பா சந்தோஷமாக இறங்கினாள். ஆதி விவேகாவை திரும்பி பார்க்க

இன்பா, அவளுக்கு ஒன்னும் ஆகாது நீ கொஞ்சம் வீட்டுக்கு உள்ளே போறியா… ஆதி, ச.. சார்.. நான் சும்மா திரும்பி பார்த்தேன் என்று சொல்லி வேக வேகமாக காரில் இருந்து இறங்கினான்.

வெண்பா, டேய் இது இன்பா அண்ணாவோட தாத்தா பாட்டி வீடு.. ஓ என்று பிரமிப்பாக பார்த்து கொண்டே உள்ளே நுழைந்தான். வெளியில் நிற்க ஹே உள்ளே வா.. இல்லை நான் வரல.. இப்போ நீ வரல அப்புறம் நான் சேர் பெர்சன் கிட்ட சொல்லிடுவேன் .. ஆதி, என்ன சொல்ற.. மம் இது நம்ம சேர் பர்சன் வீடு… அப்போ நான் உள்ளே வரல… என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது கிருஷ்ணன் வெளியே சத்தம் கேட்டு யார் என்று பார்த்து விட்டு வெண்பா குட்டி… உள்ளே வா டா இது யாரு என்று பார்க்க ஆதி, குட் மார்னிங் சார்.. வெண்பா, தாத்தா இது விவேகாவின் என்று நிறுத்தி அவனை பார்க்க.. சார் நான் விவேஜாவின் கசின் என்று சொல்ல கிருஷ்ணன் சிரித்து விட்டு அவர்களை உள்ளே அழைத்தார்.

இங்கே இன்பா எழுந்து பின்னால் சென்று அமர்ந்து வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அவள் ஒரு குழந்தையை போல் தூங்கி கொண்டு இருந்தாள். அவளின் கூந்தல் காற்றில் பறக்க அதை ஒதுக்கி விட்டான். இப்போதே அவளுக்கு முத்தமிட வேண்டும் என்று தோன்றியது. தூக்கம் கெட்டு விட கூடாது என்பதற்காக அப்படியே கண்களால் அவளை கணம் கணம் தீண்டி கொண்டு இருந்தான். 

சிறிது நேரம் கழித்து அவள் தூக்கம் களைந்து  மெதுவாக கண்களை திறக்க அவளுக்கு முன்னால் இன்பா அமர்ந்து இருப்பதை பார்த்து மீண்டும் கண்களை மூடி கொண்டாள். பின் மறுபடியும் கண்களை திறந்து வேக வேகமாக கார் கதவின் பக்கம் திரும்பி திறக்க போக வழக்கம் போல் அது திறக்க வில்லை. 

இன்பா எதுவும் பேசாமல் அமைதியாக அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டு மட்டுமே இருந்தான். விவேகா இப்போது அவன் புறம் திரும்பி சார் கதவை திறந்து விடுங்க நான் போகனும்.. இன்பாவுக்கு இதை கேட்டு கோபம் வந்தது. அவளின் கழுத்தை வலிக்கும் படி பிடித்தான். ஏன் இப்போ அதுக்குள்ள என்னாச்சு உனக்கு வர வர அறிவு ரொம்ப மழுங்கி போச்சு விவேகாவினால் மூச்சு விட முடியவில்லை. 

வலிக்  வி விடுங்.. அவன் கொஞ்சம் பிடியை தளர்த்தி மெதுவாக பிடித்தான். அவள் விடு விடு டா என்னால மூ மூச்சு விட முடியல என்று சொல்ல உடனே அவன் அவளை விட அவள் இரும்பினாள  அவன் தொண்டையை நீவி விட்டு கொண்டே இப்போது அவளின் இதழில் வன்மையாக முத்தமிட்டான். அவள் அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய அவன் விடவே இல்லை. 

விவேகா என்னை விட்டு போகனும் அப்டின்னு நினைச்ச அப்புறம் நீ என்னோட இன்னொரு முகத்தை பார்ப்ப.. மைண்ட் மை வேர்ட்ஸ்.. என்று அவன் கோபத்தில் வேகமாக தலையை கோதி கொண்டு இருந்தான். 

அவள் கண்களில் கண்ணீர் துளிகள் வந்து கொண்டே என் எனக்கு பயமா இருக்கு.. அவ ரொம்ப கெட்ட பொன்னு மாதிரி தெரிகிறாள். உன்னை அவ அடைய என்ன வேண்டுமானாலும் செய்வாள். நானும் உனக்கு சிரமம் கொடுக்க விரும்பல அதனால் நான் உன்னை விட்டு போய் விடுகிறேன்.. இதை கேட்டு மீண்டும் அவளின் கழுத்தை வலிக்கும் படி பிடித்தான். 

என்ன சொன்ன இப்போ.. வாட் டிட் யூ சே… என்று கோபத்தில்  ருத்ர மூர்த்தியாக அவளை பார்த்து களுததை பிடித்து கொண்டு இருக்க இந்த முறை விவெகாவின் கண்களில் ஒரு பக்கம் கண்ணீர் வந்து கொண்டே இருக்க அவள் அவன் கைகளை விளக்கி விட போராடினாள்.

இன்பா, என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு சொல்லு டி… என்று அவளை எரிக்கும் பார்வை பார்க்க அவள் மூச்சு திணறினாள். அவன் கொஞ்சம் கூட பிடியை தளத்தவே இல்லை… விவேகா சிறிது நேரம் போராடி பார்த்து விட்டு உன்..னை… விட்டு… நா..ன்..போ..க மாட்..டேன்… என்று திக்கி திணறி சொல்ல… இனி இதை பற்றி மறுபடியும் பேசுவியா.. மாட்டேன் என்று சொல்லி முடித்ததும் தான் விட்டான். 

விவேகாவுக்கு இப்போது இன்பாவைப் பார்க்க மிகவும் பயமாக இருந்தது.  அவன் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டிட.. அவள் வேறு புறம் திரும்பி அழுது கொண்டு  இருந்தாள்.  ம்ம்ம்ம் என்று ஒரு கர்ஜனை அவன் குரல் கேட்டதும் கைகள் நடுங்க அதை வாங்கி கொண்டாள்.

சீக்கிரம் குடி… அவள் பயந்து கொண்டே கைகள் எல்லாம் வியர்த்து போக அந்த பாட்டிலை திறக்க முடியவில்லை. அவள் அதை முயற்சி செய்து திறப்பத பார்த்து இன்பா, என்னாச்சு… தி திறக் திறக்க முடியல… கொடு… அவள் கண்களில் வழிந்து ஓடும் கண்ணீரை துடைத்து கொண்டே அவனிடம் நீட்டிட உடனே அவன் வாங்கி திறந்து கொடுக்க அதை அவள் பயந்து கொண்டே குடித்தாள். 

இப்போது இன்பா பேசினான், முகத்தை கழுவி வர இப்போ நம்ப உள்ளே போகனும்… அவள் எதுவும் சொல்லாமல் இருக்க.. இன்பா என்ன… நானே பேசிட்டு இருக்கேன் வாயை திறந்து பதில் சொல்லு.. விவேகா, சரி  முகம் களுவுறேன் என்று சொல்லி கார் கதவினையும் அவனையும் மாறி மாறி பார்க்க ஓ மேடம் வாய் திறந்து பேச மாட்டிங்கள்லோ.. அவள் இன்வாவின் முகம் பார்க்க பயமாக இருக்க கண்களை மூடி கொண்டு இல்ல பேசுவேன் கதவு திறந்து விடுங்க.. 

அவன் கதவினை திறந்ததும் வெளியே இறங்கியவள் கொஞ்சம் தள்ளி போய் முகத்தை கழுவி விட்டு காரின் அருகில் வந்தாள். அவனும் கீழே இறங்கி அவளிடம் பாட்டிலை வாங்கி தண்ணிரில் முகத்தை கழுவி விட்டு அவளை பார்க்க அவள் வேறு புறம் திரும்பி நின்று கொண்டு இருந்தாள்.

இன்பா, ஹே இங்கே வாடி.. அவன் குரல் கேட்டதும் பதறி அடித்து கொண்டு அவன் அருகில் வந்தாள். அவளுடைய துப்பட்டைவையும் அவளையும் சேர்த்து அருகில் இழுத்து முகத்தை துடைத்தவன். அவளிடம் இனி என்னை விட்டு போறேன் அப்டின்னு சொல்லுவ… விவேகா தலையை குனிந்தபடி சொல்ல மாட்டேன் என்பது போல் தலையாட்டினாள். இன்னொரு தடவை இப்படி எதுவும் உன் மர மண்டை யோசித்தது உன்னை மொத்தமா..  என்று சொல்லி விட்டு அவள் முகவாயை பற்றி நிமிர வைத்து கொஞ்சம் சிரி..அவளுக்கு அழுகை தான் வந்தது.  இன்பா, ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழ கூடாது புரியுதா… ம்ம்  கொட்டினாள்.  இன்பா அவளது இடையோடு அணைத்த படி அவளை உள்ளே அழைத்து சென்றான்.

தொடரும்… 

 Episode 130, 

இன்பா அவளிடம் கொஞ்சம் சிரி என்று சொல்ல அவள் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நிற்க அவன் அவளை பார்த்து கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது நீ வேற ஒரு இன்பாவை பார்ப்ப.. 

விவேகா, மாட்டேன் அழ மாட்டேன் என்று தலை அசைத்தாள். அவன் அவளின் இடையோடு அணைத்தது போல் லெட்ஸ் கோ.. மம் என்று அவள் சொல்லி முகத்தில் சில வலியிள் இருப்பது போல் முகத்தை வைத்து கொண்டு வந்தாள். இன்பா அவளை பார்க்க அவளின் முக மாற்றம் கண்டு மீண்டும் கோபம் கொண்டவன். ஹே இப்போ உன் முகம் ஏன் இப்படி இருக்கு…

விவேகா, நீ நீங்க என் இடுப்பை அழுத்தி பிடித்து கொண்டு இருக்கின்க எ எனக்கு வலிக்குது.. 

அவன்  இப்போது அவளின் வலியை உணர்ந்து பிடியை தளர்த்தி கொண்டான். இன்பா, என்னோட மென்மை நீ நடந்து கொள்வதை பொறுத்து தான் இருக்கு அண்ட் ஒன் திங்க் நான் தான் உன்னை முதன் முதலில் பிடிச்சு இருக்கு அப்டின்னு சொன்னேன். காலேஜ்ல ப்ரெண்ட் ஷிப் டே அன்னிக்கு   அந்த காரில் உன் கிட்ட உரிமை எடுத்தது என் தப்பு தான் நான் எதோ ஒரு வேகத்தில் செய்து விட்டேன்.

ஆனால் அதன் பின் உன்னை தேடி நான் வரவே இல்லை சரி தானே… அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து சொல்லு டி…

விவேகா, மம் ஆமா.. இன்பா, அதுக்கு அப்புறம் என்னை தேடி வந்தது நீ தானே நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணேனா.. இல்லை…

இன்பா,ஒரு வேளை அன்னிக்கு நீ என்னை தேடி வராமல் இருந்து இருந்தால் அதற்கு மேல் உன் பின்னாடி நான் சுற்றி இருக்க மாட்டேன் டி.. யாரையும் ஃபோர்ஸ் பண்ணி ஒரு ரிலேசன் ஷிப்ல வச்சு இருக்க முடியாது.

நான் தான் டி உன் பின்னால் சுற்றினேன். காதல் அப்டின்னா எனக்கு என்னன்னு சொல்ல தெரியாது. ஆனால் உன் மேல் எனக்கு சம்திங் ஸ்பெஷல் ஃபீலிங் இருந்தது. உன்னை எனக்கு மேட்லியா பிடித்தது. உன் மேல நான் தீவிரமா இருக்கேன் ஸ்டில் இப்போதும் இருக்கேன்.உன்னை கொல்ற அளவுக்கு கோபம் இருக்கு அந்த அளவுக்கு அன்பும், பாசமும், இருக்கு.. அதுக்கு அப்புறம் நீ என் கிட்ட போட்ட சண்டை எல்லாம் கோபம் பொறாமை இதில் தான் நடந்தது. சோ எப்படியும் அது சரி ஆகி விடும் நான் தான் சரி செய்வேன். உன்னை பூவை விட மென்மையாக நடத்தி இருக்கேன் சரி தானே.. விவேகா, மம்..

இன்பா, இதில் என்னோட தவறு இருக்கு ஆனால் எல்லாவற்றிலும் நானே தவறு செய்ய வில்லை அதுக்கு பொறுப்பு நீயும் தான்.. விவேகா  அமைதியாக இருந்தாள். 

இன்பா,  அவளை பார்த்து என்னோட மென்மைய மட்டுமே பார்த்த நீ இனி என்னோட வன்மையை பார்க்க போற.. நீ இனி இன்பாவை பார்க்க போற.. என்று சொல்லி அவளை பார்த்து அடி, மிரட்டலை விட அகிம்சை எப்பொதும் வெற்றி பெறாது அப்டின்னு இப்போ நீ மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்ட எனக்கு நேதாஜி வழி தான் மிகவும் பிடிக்கும்..  நான் உன்னை இப்படி நடத்துவேன் அப்டின்னு என் கனவில் கூட நினைத்தது இல்ல டி.. உன்னை நான் இப்போதும் உன் மேல் எவ்ளோ கோபம் இருக்கோ அது போல் அதை விட பாசம் இருக்கு..  

இதை கேட்டதும் விவேகா உதடு மடித்து கடித்து கொள்ள இன்பா, இனி ஒன்லி ஆக்சன் மட்டும் தான் டி.. இதையும் மீறி எதுவும் உன் மர மண்டையை வைத்து யோசித்த அடுத்து நேரா.. உன்னை உங்க வீட்டில் சொல்லி அவங்க முன்னாடி உன்னை கட்டிப்பேன்.. லெட் சீ வெயிட் அண்ட் வாச்.. 

விவேகா, கஷ்ட பட்டு அவன் மேல் பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் ராகவ்.. என்று அவள் கூப்பிட இப்போது இன்பா அவள் இடையை அவள் அவன் பெயரை  சொன்னதும்  கோபத்தில் அழுத்தி பிடித்தான். ஸ்ஸ்ஸ் என்று அவள் முணுமுணுக்க.. ஹே டோண்ட் கால் மீ ராகவ் என்னை இன்பான்னு கூப்பிடு இனி என்னை நீ ராகவ் அப்டின்னு கூப்பிடாதே எனக்கு பிடிக்கல.. …

இதை கேட்டதும் அவள்  கண்களில் கண்ணீர் வர.. உடனே இன்பா, ஹே இந்த வாட்டர் ஃபால்ஸ் எல்லாம் என் கூட இருக்கும்போது இது எல்லாம் வரவே கூடாது.. வீட்டில் போய் உன் வாட்டர் ஃபால்ஸ்சை ஓபன் பண்ணிக்கோ.. 

அவள்  இதை கேட்டதும் தலை கீழே குனிந்து கொள்ள உடனே இன்பா, அவள் காதுக்கு அருகில் விவேகா இதை நீ என் கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணல தானே.. அவள் இப்போதும் அவள் நிமிராமல் இருக்க.. அவள் முகவாயை நிமிர்த்து அவனை பார்க்குமாறு செய்ய அவளின் முகத்தில் அரவணைப்பும் ஏக்கமும் தேடும் பிள்ளை போல் அவனுக்கு தெரிந்தாள். 

அவன் சிறிதும் இந்த முறை தடுமாற வில்லை. அதே கடுமையுடன் இன்பா, ஹே ஐ வான்ட் கிஸ் யூ.. விவேகா கொடு என்பதை போல் தயக்கத்துடன் அவன் மேல் கைகளை கொண்டு போக அவன் அவள் கைகளை தயக்கம் இன்றி மேலே போட்டு இன்பா, அவளின் தலையை சாய்த்து  இதழில் வன்மையாக முத்தமிட்டான். அவள் அவனுடைய கோபம் இருந்தாலும். அவளுக்கு  அவனுடைய இந்த ஆறுதல் முத்தமும் தேவை பட்டது.

சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன். அவளின் இதழை துடைத்து விட்டு மீண்டும் இடையில் கொஞ்சம் வன்மையாக வேண்டும் என்றே பிடித்த படி உள்ளே சென்றான். 

இங்கே கிருஷ்ணன், பாவை இருவரும் ஆதி வெண்பாவிடம் பேசி கொண்டு இருந்தனர்.கிருஷ்ணன், ஹே யங் மேன் நீ பேசுவது அப்படியே விவேகா பேசுவதை போல் இருக்கு.. இல்ல சார் அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. அவர், சார் என் வயசை ரொம்ப கம்மியா காட்டுது சோ என் பாவை வயசான மாதிரி இருக்கும் நீ தாத்தா சொல்லு மேன்…

பாவை, மம் சொல்லு ஆதி வெண்பா, டேய் அதான் சொல்றாங்க தானே சொல்லு… பாவை, கிருஷ்ணன், இருவரும் சிரிக்க வெண்பா, என்னாச்சு தாத்தா ஏன் பாட்டி சிரிக்கிறீங்க… கிருஷ்ணன், ராகவ் இப்படி தான் விவேகாவை மிரட்டினான். என்று சொல்லி be bold ஆதித்யா.. 

ஆதி, இல்ல சார்.. பாவை ஆதி என்று அதட்ட அது அப்படி இல்ல தாத்தா வெண்பா சின்ன பொண்ணு அவளுக்கு முதிர்வா நடந்துக்க தெரியாது சோ அதான் நான் அவ கிட்ட ஆர்க்யூ பன்றது இல்ல விவேகா அப்படி இல்ல அவ எது சொன்னாலும் சமத்து பொண்ணா கேட்பா.. இதை சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் விவேகாவுடன் உள்ளே வர இன்பா,  இந்த ஆதி அவனை கவனித்தால் எல்லாம் சரியா போயிடும் உடனே விவேகா திரும்பி இன்பாவை பார்க்க என்ன டி கவனிக்கவா.. உடனே அவன் கோப பார்வையை பார்த்து விட்டு கீழே குனிந்து கொண்டாள்.

இங்கே ஆதி, சொன்னதை கேட்டு கிருஷ்ணன், ஐ ம் அட்மேர்ட் யூ யங் மேன் குட் பாய்.. வெண்பா, தாத்தா அப்போ நான் என்னை எனக்கு சப்போட் பண்ணாமல் அவனுக்கு பேசுறீங்க..  இல்ல வெண்பா அவன் சொல்வது சரி தானே பொண்ணுங்க முதிர்வா இருக்க மாதிரி ஒரு தோற்றம் மட்டும் தான் இருக்கும் ஆனால் அவங்க குழந்தை தணமா நடந்து கொள்வார்கள்..

க்கும்… என்று சத்தம் வர அவர்கள் திரும்பி பார்க்க இன்பா, ஹே சிரி டி.. உடனே அவன் சொன்னதும் கொஞ்சம் சிரித்தாள். பாவை அவளை அழைக்க இன்பாவை ஒரு பொருட்டாக கூட கவனிக்க வில்லை ஓடி சென்று பாவையை அணைத்து கொண்டாள். 

இன்பா மனதில் யாரை போய் கட்டி அணைக்கிறா.. நான் இவளோ நேரம் பக்கத்தில தானே இருந்தேன். திமிர் பிடிச்சவ.. என்று விவேகாவை முறைத்து பார்த்து கொண்டு இருக்க..  பாவை அவளை சமையல் அறை அழைத்து சென்று விட்டார்.

கிருஷ்ணன், டேய் இப்போ எதுக்கு டா பாப்பாவை முறைத்து பார்த்த.. இன்பா, என்னை கட்டிக்க மாட்டின்றா என் டாலை கட்டி கொள்கிறாள் தட்ஸ் ஆல்.. என்று சொல்லி கொண்டே அந்த சோபாவில் அமர்ந்தான். அவன் ஆதி என்ன சொல்றான் ஓல்ட் மேன்.. ஆதி, சார் நான் எதுவும் சொல்லல..  

வெண்பா, ஹே ஆதி இங்கே வா வெளியே ஒரு குட்டி ஊஞ்சல் இருக்கு அழகா இருக்கும் என்று அவள் அவனை கூப்பிட கிருஷ்ணன், அதான் வெண்பா கூப்பிடரா தானே போ என்று சொல்ல அவன் இல்ல சார் நான் இங்கேயே இருக்கேன்…

இன்பா, என்ன சார் சார்ன்னு கூப்பிடற அதிதி எவ்ளோ அழகா அண்ணா சொல்றாங்க உனக்கு என்ன டா… 

கிருஷ்ணன், யாரு ராகவ் அதிதி.. இவனோட அக்கா அவளோட அண்ணாவின் மனைவி கிருஷ்ணன், அந்த அவள் யாரு..  ஆதி நீ போ வெண்பா கூப்பிடறா பாரு.. உடனே அவன் எழுந்து சென்று விட்டான்.அந்த அவள் யாருன்னு கேட்டேன். இன்பா, டோண்ட் ஆக்ட் வித் மீ ஓல்ட் மேன்.. அவர் டேய் என்ன டா பண்ண பாப்பா முகமே சரி இல்ல..  

இங்கே பாவை, என்னாச்சு சின்ன குட்டிக்கு முகமே சரி இல்ல ராகவ்க்கும் உனக்கும் சண்டையா.. என்று அவர் கேட்க.. இல்ல அம்மச்சி நான் நல்லா இருக்கேன்.. பொய் சொல்ல கூடாது இது விவேகா இல்ல.. சொல்லு நான் உனக்கு உதவி செய்கிறேன்.. விவேகா அழுது கொண்டே அவர் என்னை திட்டி விட்டார்.. எனக்கும் அவருக்கும் சண்டை அம்மச்சி இனி என்னை ராகவ் அப்டின்னு சொல்லி கூப்பிட கூடாது இன்பான்னு சொல்லி கூப்பிடிற அப்டின்னு என்னை பார்த்து சொல்லிட்டாரு அம்மச்சி.. பாவை அவள் சொல்லும் விதத்தை பார்த்து சிரித்து விட்டு அப்போ ராகவ் கோபமா இருக்கான் போலயே.. 

இதை அவர் சொன்னதும் இன்னும் அழுதாள். ம்ம் ஆமா அம்மாச்சி எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு.. பாவை அவளின் கண்களை துடைத்து விட்டு எதனால் சண்டை வந்தது. காரணம் மட்டும் சொல்லு.. அவள் நான் அவர் பேச்சை கேட்க வில்லை.. அவர் யார் தப்பு பண்ணது.. விவேகா, என் மேலே தான் அம்மச்சி.. 

பாவை, கொஞ்சம் கஸ்டம்  விவேகா ராகவ் கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி.. அவள் பிளீஸ் அம்மாச்சி எனக்கு இப்போ என்ன பண்துன்னு தெரியல.. பாவை சரி சரி அழ வேண்டாம் என் செல்லம் தானே நான் சொல்றதை சரியா கேட்டுக்கோ.. விவேகா கண்களை துடைத்து கொண்டே அவரை பார்க்க பாவை, ராகவ் இனி என்ன சொல்றான் அப்டின்னு அதை நல்லா யோசி அவன் சொல்றதை தட்டாமல் கேளு அது தவறா இருந்தால் மட்டும் தைரியமா சொல்லு .. ராகவ் க்கு அழுவது எல்லாம் பிடிக்காது சோ ஆழாதே.. அவன் கோபத்தை குறைக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணு.. மம் சரி அம்மச்சி.. மம் முக்கிய விஷயம் என் கிட்ட சொன்னதா அவன் கிட்ட சொல்லி விடாதே சுத்தமா அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது கோபம் இன்னும் அதிகமா வரும்.. என்று பேசி விட்டு டீ, எடுத்து கொண்டு அவர்கள் இருக்கும் இடதுக்கு சென்றனர். 

பாவை கண் அசைக்க விவேகா அவனுக்கு போய் கைகள் நடுங்க டீயை கொடுக்க அவன் எந்த வெளிப்பாடும் இல்லாமல் வாங்கி கொண்டான். அவள் கிருஷ்ணனுக்கு கொடுத்து விட்டு பாவை அருகில் வந்தாள். என்ன அம்மச்சி..  நீ கவலை பட வேண்டாம் மா உன் கிட்ட ரொம்ப நாள் அவனால் கோபமா இருக்க முடியாது..விவேகா அவர் சொல்வதை நம்பினாள்.

ஆனால் இன்பா…?

தொடரும்… 

You may also like

Leave a Comment