Episode 131,
அவர்களுக்கு டீ கொடுத்ததும் விவேகா நேராக வெண்பா, ஆதி இருக்கும் இடத்துக்கு சென்றாள். அங்கே வெண்பா, டேய் ஸ்பீடா தள்ளி விடு.. ஆதி, இதுக்கு மேல் சொன்ன உன்னை மலையில் இருந்து தள்ளி விட்டு விடுவேன்… என்று ஆதி அவளை ஊஞ்சலில் ஆட்டி விட்டான்.
அங்கே விவேகா வர ஆதி அவளின் முகத்தை பார்த்ததும் எதோ சரி இல்லை என்று தெரிந்து கொண்டான். எப்படியும் மனம் தாங்காமல் இன்னும் சிறிது நேரத்தில் கொட்ட போகிறாள். என்று நினைத்து கொண்டு இருக்க விவேகா அமைதியாக நிர்ப்பதை பார்த்து அவன் வெண்பாவை விட்டு விவேகா விடம் வந்தான்.
ஆதி, என்னாச்சு டி உனக்கு என்று கேட்க வீட்டுக்கு போய் சொல்றேன் என்று சொல்லி விட்டு அப்படியே நின்றாள். ஆதி அவளின் மன நிலையை மாற்ற ஹே வெண்பா நீ எழு விவேகா நீ உட்காரு நான் ஆட்டி விடுகிறேன்.. விவேகா, வேண்டாம் டா.. ஹே உட்காரு டி உனக்கு இது ரொம்ப பிடிக்குமே நம்ப அம்மாயி ஊரில் அந்த ஆல மரத்தில் விழுதில் கட்டி விளையாடுவோம் இதுக்கு நீ அத்தை கிட்ட ஒரு தடவை அடி கூட வாங்குன..
வெண்பா, எதுக்கு அடி வாங்கினா.. ஆதி சிரித்து கொண்டே அந்த விழுதுல தொங்கி கிட்டு வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பிடித்தாள் வருண் மாமா கூப்பிட்ட அப்பவும் வாடா பொடான்னு எல்லார் முண்ணவும் பேசிட்டா உடனே மாமா அத்தை கிட்ட போய் சொல்லிட்டாங்க எங்க அத்தை குச்சி எடுத்து கிட்டு இவளை அடிக்க வர இவ உடனே காட்டுக்குள்ள ஓடி போயிட்டா.. என்று சொல்ல உடனே அதை கேட்டு வெண்பா சிரித்தாள்.
விவேகாவும் அதை கேட்டு மெலிதாக சிரித்தாள். அவள் அப்புறம் என்னாச்சு.. எங்க அப்பா கிட்ட போயிட்டா எங்க அப்பாவுக்கு எங்களை விட இவள் தான் ரொம்ப பிடிக்கும் எங்க அத்தையை திட்டி விட்டாங்க.. என்று சொல்லி அவளை வலு கட்டாயமாக அதில் அமர வைத்தாள்.
ஆதி, கண்ணை மூடி கொண்டாயா.. விவேகா, மம்.. அவன் இதோ விவேகா இப்போ பறவை போல பறக்க போறா என்று அவன் ஆட்டி விட விவேகாவின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. வென்பாவுக்கு இதை பார்த்து மிகவும் ஏக்கமாகவும் பொறாமையாகவும் இருந்தது. எல்லார் விடவும் இவளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறான் அதை கேட்டால் அதுக்கு என்ன என்னவோ வார்த்தை ஜாலம் பேசி மயக்கி விடுகிறான். பிசாசு..
இன்பாவுக்கு விவெகாவின் இந்த சோகமான முகம் மிகவும் வருத்தத்தை தந்தது ஆனால் அவள் மேல் உள்ள கோபம் மட்டும் துளி கூட குறைய வில்லை.
அவன் எழுந்து செல்ல கிருஷ்ணன் கூப்பிட போக பாவை அதற்குள் அவரை வேண்டாம் என்று தடுத்தார். விவேகா இருக்கும் இடத்துக்கு நடந்தான். அங்கே வெண்பா நின்று கொண்டு இருக்க ஆதி அவளை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விட்டு கொண்டே அவளிடம் சிறு வயது நினைவுகளை சொல்ல அவள் சிரித்தாள்.
வெண்பா கடுப்பாக திரும்ப அங்கே இன்பா இவர்களை நோக்கி வர உடனே அவள் அண்ணா என்று அழைக்க போக அவன் அமைதியாக இருக்கும் படி சைகை செய்தான். விவேகா இப்போது அவனிடம் ஆதி இன்னும் வேகம்.. மம் இப்போ ஓகே வா.. வெண்பா மனதில் நான் சொன்னா என்னை மலையில் இருந்து தள்ளி விட பார்ப்ப ஆனால் அவ சொன்னா அவ் கிட்ட சாஜசன் கேட்கிறாய்.. இரு டா உங்க ரெண்டு பேரையும் தள்ளி விட இங்கே ஆள் வந்து கிட்டு இருக்கு..
இன்னும் வேகம் நான் இப்போ மேல போக போறேன்.. ஆதி, இப்போ என்று அவன் ஆட்டி விட அவள் கண்களை மூடி கொண்டு சிரித்து கொண்டே ரசித்தாள். இன்பா அருகில் வந்து முன்னால் சென்று அவளின் முகத்தை பார்க்க இப்போது தான் அவளின் விவேகா தெரிந்தாள். சிறிது நேரம் அப்படியே ரசித்தவன். ஆதி அவன் வந்ததும் இன்பா வை பார்த்து சிறு பயம் வந்து விட்டது. ஆட்டுவதை நிறுத்த விவேகா, ஆதி பிளீஸ் பிளீஸ் இன்னும் ஒரே ஒரு ஆட்டம் டா.. என்று அவனிடம் சொல்ல அவன் பதில் எதுவும் பேசாமல் இருக்க விவேகா என்னாச்சு என்று கண்களை திறக்க அவள் முன்னால் இன்பா கடுமையான முகத்துடன் நிற்க அந்த நொடி வேக வேகமாக அதில் இருந்து எழுந்து கொண்டாள்.
விவேகாவின் முகம் பயத்தை தத்து எடுத்து கொண்டது. கைகளை பிசைந்து கொண்டு எதுவும் பேசாமல் அவன் பார்வையை தவிர்த்து கீழே குனிந்து நின்றாள். விவேகாவின் நடத்தையை பார்த்து வெண்பா எதோ நடந்து இருக்கிறது என்று கண்டு கொண்டாள்.
இன்பா, வெண்பா போலாமா.. என்று வார்த்தை ஆனால் பார்வை விவேகாவிடம் தான் இருந்தது. ஆதி, முன்னே செல்ல வெண்பா, இன்பா, கடைசியில் விவேகா பாவை, கிருஷ்ணன் இருவரிடமும் சொல்லி கொண்டு வெளியே வந்தனர்.
இன்பா காரில் ஏறியதும் உடனே விவேகா வேக வேகமாக அவனுடன் முன்னால் அமர்ந்து கொண்டாள். ஆதி, வெண்பா இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர். கோட்ரெஸ் வரும் வரை யாரும் எதுவும் பேச வில்லை விவேகா அவன் புறம் திரும்பவே இல்லை.
கோட்ரஸ் வெளியே கார் நின்றது. வெண்பா, ஆதி இருவரும் இறங்க விவெகாவும் கார் கதவை திறக்க செல்ல இன்பா க்கும், தொன்டையை சிறும உடனே விவேகா அவனை புரிந்து கொண்டவளாய் அப்படியே அமர்ந்தாள். 3 மணி இருக்கும் வெயில் பட்டை கிளப்பி கொண்டு இருந்தது.
ஆதி திரும்பி விவேகாவை பார்க்க வெண்பா, டேய் அங்கே என்ன பார்வை அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் உன் கூட ஆட்டு குட்டி மாதிரி இப்போ அவ உடனே ஓடி வர மாட்டா வா நம்ப மெதுவா நடக்கலாம்..
இன்பா சிறிது நேரம் எதும் பேசாமல் அப்படியே அமைதியாக இருந்தான். விவேகா அவன் புறம் பார்க்காமல் வெளியே பார்த்து கொண்டு இருந்தாள். அவன் இன்னும் எதுவும் பேச வில்லை என்று தெரிந்து அவள் தைரியத்தை ஒன்று திரட்டி பேச போகும் நேரம் விவேகாவின் மனம் ஒரு நிமிடம்.. இப்போ என்ன சொல்லி கூப்பிட ராகவ் அப்டின்னு சொன்னா விட்டால் இங்கேயே என்னை அரக்கன் போல் எதுவும் கழுத்தை நெரித்து டிராகுலா மாதிரி கடித்து விடுவானோ அவனை பார்த்தாலே பயமா இருக்கே.. சார்ன்னு சொன்னா என்ன பண்ணுவான்..
நேரா அரக்க கோட்டையில் இருந்து வந்தவன் போல் இருக்கிறான்.எல்லாம் என் நேரம் என்னோட தப்பு தான் இவனை சாதாரணமா நினைத்து விட்டேன் இவன் சரியான டெரர் பீஸ் இப்போ நல்லா மாட்டிக்கொண்டேன்.
என்று நினைத்தவள் இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் என்று அந்த சுட்டெரிக்கும் வெயிலை பார்க்க சிறிது நேரம் கழித்து திரும்பி பார்க்க இன்பா காரில் தலையை சாய்த்து கண்களை மூடி இருந்தான். இப்போது அவள் மனம் என்ன இவன் தூங்குறான்.. நான் வெளியே போகவா இல்ல இருக்கவா..என்று நினைத்து கதவை திறந்து பார்க்க முயற்சி செய்தாள் அது வழக்கம் போல் லாக் ஆகி இருந்தது.
இப்போ இப்போ என்ன பண்றது.. என்று யோசித்து கொண்டு இருந்தாள்.
இப்போது விவேகா, ராகவ்.. என்று பழக்க தோஷத்தில் கூப்பிட்டு விட்டு அய்யோ செத்த விவேகா போச்சு போச்சு என்று கண்களை மூடி கொண்டாள். அவன் கண்களை மெதுவாக திறந்து இன்பா, இப்போ கூப்பிட்டாயா…
விவேகா, ஹான் ஆமா.. இல் இல்ல…. கூப்பிட்டியா இல்லையா… அ ஆமா கூ கூப் கூப்பிட்டேன்… இன்பா, மம் டெல் மீ..வீட்டுக்கு போக… போகனும்.. அவன் சில நிமிடம் யோசித்தான் மம் சரி போ…
விவேகா, கதவு லாக் ஆகி இருக்கு… அவளது படபடக்கும் விழிகளை பார்த்து அவன் மனம் காலையில் இருந்து எத்தனை பிரச்சனை பண்ணிட்டா இப்போ என்னை குற்றவாளி ஆக்கி விட்டு கிளம்ப போறா சண்டைகாரி… என்று நினைத்து கொண்டே அவளை பார்க்க விவேகா அவன் அமைதியாக பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து கதவு லாக் ஆகி இருக்கு ஓபன் பண்ணுங்க…
இன்பா, இப்போ வேகமா போய் என்ன பண்ண போற.. விவேகா இதை கேட்டதும் அமைதியானாள். அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு கைகளை பிசைந்து கொண்டு இருந்தாள் விரல்கள் எல்லாம் அந்த ac காற்றிலும் வியர்க்க ஆரம்பித்தது.
நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல.. நான் நான் சும்மா தான் சொன்னேன்.. ஆதி முன்னாடியே போயிட்டா வீட்டில் கேட்பாங்க.. இன்பா, இன்னிக்கு உன் மாம் ஆபீஸ் போயிருபாங்க சரி தானே… விவேகா, இவனை… எல்லாம் என் நேரம் என்று நினைத்து கொண்டு ம்ம் நான் அண்ணா வீட்டுக்கு போகனும் அதிதி வீட்டில் இருப்பா..
இதை கேட்டு சிறிது நேரம் எதுவும் பேச வில்லை. அவன் மனம் இங்கே இருந்து என்னை விட்டு போகனும் அப்டின்னு தான் ஒவ்வொரு நிமிடமும் யோசிப்பா போல இவளை இப்படியே சும்மா விட கூடாது. என்று நினைத்தவன். அவனை பயத்தொடு பதட்டத்தில் கண்களை சிமிட்டி கொண்டே இருந்தாள்.
அவன் சற்றும் தாமதிக்காமல் அவளை இழுத்து இதழில் முத்தமிட்டான். விவேகா மனம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இதில் மட்டும் கரெக்டா இருக்கான் இடியட் இடியட் என்று நினைத்து கொண்டாள். கழுத்தில் வேண்டும் என்றே கடித்து வைத்தான். ஸ்ஸ்.. என்று அவள் சத்தமிட வாட் ஹப்பென் என்று காந்த கண்களோடு அவளை பார்க்க அவன் கண்களை பார்க்க முடியாமல் தலையை குநிது கொண்டே ஒன் ஒன்னும் இல்லை.. அப்போ ஓகே என்று அவள் அசறும் நேரம் மீண்டும் அவள் உதடுகளை கொஞ்சம் தின்று விட்டு தான் விட்டான்.
இப்போது காரின் லாக் எடுத்து விட்டான். அவள் வெளியே இறங்க போக.. ஹே.. உடனே அவள் திரும்பி பார்க்க நான் உன்னை போக சொல்லவே இல்லையே… விவேகா தலையை குனிந்து கொண்டே மீண்டும் கதவுகளை சாத்தினாள். இன்பா, லிசன் மீ.. விவேகா உடனே அவனை பார்க்க நாளையில் இருந்து சரியா காலையில் வந்து எனக்கு கிஸ் கொடுத்து விட்டு தான் நீ காலேஜ் போகனும் ஈவ்னிங் அதே போல் வந்து கொடுக்கணும் சரியா…
விவேகா அதிர்ச்சியாகி அவனை பார்க்க என்ன நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா.. ஹான் சரி.. இன்பா, இப்போ எதுக்கு மொட்டையா வரேன், சரி, அப்டின்னு தேர்ட் பர்சன் சிங்குளர் ல பதில் சொல்ற என்னை பார்த்தால் உனக்கு அனிமல்ஸ், பேர்ட்ஸ் மாதிரி தெரியுதா..
அவள் அவனை பயத்துடன் பார்க்க ஹே நடிக்காத டி.. பேர் சொல்லி கூப்பிடு.. நீங்க தானே பேர் சொல்லி கூப்பிட கூடாது அப்டின்னு சொன்னீங்க.. அவன் இன்பா சொல்லு விவேகா, வேணாம் சார் ன்னு எப்பவும் போல கூப்பிடுறேன்.. அவன் அவளை முறைக்க ச சரி நான் அப் அப்படியே கூப்பிடுறேன்..
இப்போ நான் போகட்டுமா… ஹே என்னடி இப்போ உன் கிட்ட சொன்னேன்.. சாரி தெ தெரியாமல் மறந்து விட்டேன். இன்பா நான் போகட்டுமா..
வெளியே வெயிட் பண்ணு நானும் வரேன்.. விவேகா வெளியே போய் நிற்க அவன் காரை லாக் செய்து விட்டு வெளியே வந்தான். அவள் முன்னால் நடக்க இன்பா அவளின் பின்னால் சில அடிகள் தள்ளி அவளை பார்த்து கொண்டே நடந்தான்.
விவேகா மனதில் எப்படி இவனை பழைய மாதிரி மாற்றுவது. என்று யோசித்து கொண்டே மெதுவாக நடந்தாள். இன்பா, வேகமா நடந்து போ கால் நல்லா தானே இருக்கு…
மம் ச சரி.. ஹேய்.. சரி இன்பா இதோ வேகமா போறேன் என்று சொல்லி வேகமாக நடந்தாள்.
இன்பா கொஞ்சம் தொலைவில் இருந்தான். அவன் மனதில் இவளை… இவ கிட்ட எப்பிடி ரொம்ப நாள் கோபத்தோடு இருப்பது. இன்பா வின் அறிவு, இல்ல ராகவ் நீ இதையே மெயின் டைன் பண்ணு இப்போ தான் அவ சரியா இருக்கா..
தொடரும்…
Today வெண்ணிலா ud பண்ணி இருக்கேன் போய் படித்து விட்டு கமென்ட் பண்ணுங்க drs
Episode 132,
இன்பா அங்கு அவளை பார்த்து கொண்டே நடந்தான். விவேகா வருண் வீட்டு வளைவு வரும்போது அவனை திரும்பி பார்க்க இன்பா அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவள் ஒரு ஏக்க பார்வை பார்த்து கொண்டே நடக்க அவன் ஹே கீழே விழுந்து விடாதே என்று மிரட்டும் தொனியில் சொல்ல அவள் சரி சார் என்று சொல்லி ஓடி விட்டாள்.
இன்பா மனம் அவ அடங்கமாட்டாள் டா.. என்று ஒரு சிறு சிந்தி கொண்டே அவன் வீட்டுக்கு சென்றான். உள்ளே வசு சோபாவில அமர்ந்து இருந்தார்.
என்ன ராகவ் சிரித்து கொண்டே வர.. இன்பா, எல்லாம் அவ தான் மா… யாரு அது.. காலேஜ்ல உங்க பெட்டு.. வசு ஆச்சர்யமாக விவேகாவா அவ எங்கே இங்கே வெண்பா வீட்டுக்கு வந்தாளா… இன்பா மனதில் ஒரு திட்டம் தீட்டினான்.
மாம் நீங்க நல்லா ஏமார்ந்து போயிட்டீங்க.. என்ன சொல்ற டா… அவ யார் தெரியுமா.. யாரு அவ என்று அவர் கேட்க எல்லா விஷயமும் இன்பா சொல்ல ஓ நான் கூட அவளை சாதாரணமா நினைத்து விட்டேன். எவ்ளோ பெரிய உண்மை நீ ஏ ன் ராகவ் என் கிட்ட இருந்து மறச்ச நான் இப்போவே அவளை பார்க்கனும் பேசணும்.. நீ வெண்பா வுக்கு கால் பண்ணி அவளை இங்கே கூட்டி வர சொல்லு…
இன்பா மனதில் பேபி வாடி இன்னிக்கி இருக்கு டி உனக்கு இந்த நாளை எப்பொதும் உன்னால் மறக்கவே முடியாது. என்னைய எப்படி சுற்ற விட்ட.. ஆதிக்கு அவன் போன் செய்தான்.
சார் சொல்லுங்க.. இன்பா, போனை அவ கிட்ட கொடு.. விவேகா அப்போது தான் குளித்து முடித்து வெளியே வந்தாள். ஆதி அவள் ரெடி ஆகி வெளியே வந்ததும்.. ஹே அவர் என்று சைகை காட்டி விட உடனே விவேகா அதிதி என்ன செய்கிறாள் என்று பார்த்து விட்டு பின் உள்ளே சென்று ஹலோ… ஹே உடனே என் வீட்டுக்கு வா.. விவேகா, இப்போ இப்போ உடனேவா.. மம் இப்போ கிளம்பிட்டியா.. இல்ல நான் அங்கே வரவா..
விவேகா, நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி பின் இன்பா என்று போன் வைத்தாள். கொஞ்ச நேரத்தில் வீட்டு வாசலுக்கு வெளியே வந்து நின்றாள். கைகள் பிசைந்து கொண்டே சொடுக்கு எடுத்து கொண்டே அருகில் உள்ள காலிங் பெல் தட்டினாள்.
இன்பா போய் கதவை திறந்தான். பின் அவளை கண்டு கொள்ளாமல் மாம் அவ வந்து விட்டாள். விவேகா உள்ளே தயங்கி கொண்டே சென்றாள்.அவள் மனதில் அப்போ வசுமதி மேம் தான் கூப்பிட்டார்களா. அப்போ இவன் ஏன் போன் செய்து வர சொன்னான் ஒரு வேளை என்னை பற்றி சொல்லி விட்டானா…
என்று பயந்து கொண்டே உள்ளே சென்றாள்.அவள் சார் எதுக்கு என்னை வர சொண்ணிங்க.. மேம் என்னாச்சு… என்று அவள் சமாளிக்க
இன்பா எழுந்து அவள் அருகில் போய் நின்று “மாம் எல்லார்த்துக்கும் இவள் தான் மா காரணம்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. இவ ரொம்ப மோசமான பொன்னு பிளான் பண்ணி என்னையும் உங்களையும் ஏமாற்றி இருக்கிறாள்”.
விவேகாவிக்கு இதை எல்லாம் கேட்டு உள்ளுக்குள் பயம் உண்டாக கண்களில் தானாக கண்ணீர் வர வசுமதி, விவேகா நீ எவ்ளோ பெரிய உண்மையை என் கிட்ட இருந்து மறைத்து விட்டாய்.. என்று அவர் சொல்லவும் விவேகாக்கு கண்கள் எல்லாம் இருட்டி கொண்டு வர அவள் கஷ்ட பட்டு நான் என்று அவர் எதோ சொல்ல வர விவேகா அப்படியே மயங்கி விழுந்தாள்.
இன்பா பதறி அடித்து கொண்டு அவளை தூக்கி சோபாவில கொண்டு வந்து அவன் படுக்க வைத்து கொண்டே மாம் தண்ணி எடுத்து வாங்க என்னாச்சு இந்த பொண்ணுக்கு என்று ஒரு நிமிடத்தில் குப்பென்று அவனுக்கு வியர்டக்து போனது. வசுமதி உள்ளே செல்ல இன்பா, பேபி என்னாச்சு டி.. டார்ஜலிங் சாரி டி என்னாச்சி கண்ணை திற என்று இதழில் முத்தம் பதித்தான். அவள் கன்னம் இரண்டையும் தட்டி விட அவள் முழிக்க வில்லை.
வசுமதி தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளிக்க அவன் விவேகா.. விவேகா.. என்று பதட்டத்தில் கூப்பிட வசுமதி, டேய் எதுக்கு டா அவ்ளோ ஹார்ஷா பேசின இப்போ பாரு நீ பேசிய விதத்தில் அவள் மயங்கி விட்டாள். என்று தண்ணீர் தெளிக்க இன்பா, மாம் நான் டாக்டர் க்கு போன் பன்னட்டுமா.. என்று சொல்லி கொண்டே அவன் போன் எடுக்க மெதுவாக கண்களை திறந்தாள். அவள் இன்பா அருகில் இருப்பதை பார்த்து சட்டென்று எழுந்து நின்று கொண்டாள். கண்களில் கண்ணீர் வற்றாமல் ஓட அவள் நடுங்கும் குரலில் மேம் சாரி மேம் நான் வேணும்ன்னு பண்ணல இனி இந்த தவறு நடக்காது நான் அவரை என்று சொல்ல வர
இன்பா,ஸ்டாப் இட் ஓவரா பண்ணாத இத்தனை நாள் என் மாம் கிட்ட நீ வருண் தங்கை அப்டின்னு சொல்லாமல் மறைத்து இருக்க அதனால் என் மாம் உன் மேல ரொம்ப கோவமா இருகாண்க..
விவேகா இதை கேட்டதும் இன்னும் தேம்பி தேம்பி அழுதாள். வசு, விவேகா என்ன இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல இதுக்கு போய் யாராச்சும் அழுவார்களா.. நான் சும்மா உன்னை கிண்டல் பண்ண தான் அப்படி பேசினேன் அதுக்கு போய் நீ இப்படி அழற எனக்கு இந்த அழு முகம் விவேகா பிடிக்கல எப்போவும் வாயாடிட்டு இருக்கும் பொன்னு தான் பிடிக்கும் நீ பேட் கேர்ல் உன் கூட நான் பேச மாட்டேன்.. நீ சீட் பண்ற…
விவேகா இப்போது அழுவதை நிறுத்தி விட்டு வசுவை பார்த்தாள்.சாரி மேம் நான் வேணும்ன்னு மறைக்கல ஏற்கனவே நாங்க உங்களுக்கு தொந்தரவா இருக்கோம் அதனால் தான் நான் சொல்லல..
இன்பா கோபம் கொண்டு ஷீ ஸ் காலிங் யூ மேம் அண்ட் டூ பில்ட் மெல்டிங் வாய்ஸ் மாம் ஐ கான் ட் டைஜஸ்ட்.. ஷீ இஸ் சம் ட்ரிக் டூ யூ
ராகவ் என் கிட்ட இப்போ அடி வாங்க போற,நீ மிரட்டியதில் தான் அவள் மயங்கி விட்டாள். என்று அவளை அருகில் அமர வைத்தார். அவள் கைகள் இப்போதும் நடுங்கி கொண்டு இருந்தது. வசுமதி, ஹே என்னாச்சு ஏன் உன்னோட கை இப்படி வியர்த்து கொட்டுது..ஒன்னும் இல்லை மேம் என்று அவள் சொல்ல அவர் அவள் தலையை வருடி விட்டு கொண்டே நீ பயப்பட வேண்டாம் அவன் எப்பவும் அப்படி தான் அவன் பேசியதை எதுவும் மனதில் வைத்து கொள்ளாதே என்று அவளுக்காக மாதுளை ஃப்ரெஷ் ஜுஸ் போட சென்றார்.
இல்ல மேம் நான் இப்போ தான் சாப்பிட்டேன் எனக்கு வேண்டாம்.. ஹே ஓவரா நடிக்காத.. அவள் அவன் பேசுவதை பொறுத்து கொண்டே இருந்தாள. விவேகா, மேம் நான் வீட்டுக்கு போறேன்.. வசுமதி, இன்பா இன்னொரு முறை எதுவும் நீ பேசின அப்புரம் நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டி விட்டு அவர் விவேகா நீ உட்காரு நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி அவர் சென்றார்.
விவேகா அவர் சென்றதும் குனிந்த தலை நிமிராமல் அமைதியாக அப்படியே இருந்தாள். இன்பா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். இப்போது பேசினான் ஹே இது வெறும் டிரெயிலர் தான் என்னை மட்டும் நீ சீட்டிங் பண்ண மெயின் பிச்சர் ரொம்ப பயங்கரமா இருக்கும்.. என்று அவளை மீண்டும் மிரட்டிட விவேகா அவனை நிமிர்த்து கூட பார்க்க வில்லை… அவள் அவன் செய்வதையும் பொறுத்து அமைதியாக தன்னை கட்டு படுத்தி கொண்டு இருந்தாள்.
இன்பா, இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு என்னோட ஜீப் கிட்ட வந்திடு.. அவள் புருவம் சுருக்கி அழுது கொண்டே யோசிக்க இன்பா, நியாபகம் இருக்கு தானே டெய்லி வந்து கிஸ் தர.. விவேகா அவன் மேல் மிகவும் கோபமாக இருந்தாள். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை .. அதற்குள் வசுமதி ஜுஸ் எடுத்து வர அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவளிடம் கொடுத்து அருகில் அமர்ந்து குடிக்க வைத்தார்.
இன்பா, மாம் அவ ஒன்னும் குழந்தை இல்ல.. நீங்க பிட் பன்றதுக்கு இதை கேட்டதும் விவேகாவுக்கு கோபம் வர இப்போது அவள் இதற்கு மேல் அவளின் பொறுமை காற்றில் பறக்க அவரிடம் மேம் நான் ஒரு விஷயம் சொன்னால் தவறா நினைக்க கூடாது. என்ன விவேகா சொல்லு டா.. நீங்க உங்க குழந்தைக்கு ஊட்டி விடுங்க… நீங்க என் கிட்ட இப்படி இருப்பது சில பேருக்கு ஜலஸ்ஸா இருக்கு.. வசுமதி இதை கேட்டதும் சிரித்து விட இன்பா அவளை முறைத்து பார்த்து ஹே வாட் டிட் யூ சே? உங்களுக்கு ரொம்ப பொறாமையா இருக்கு போல கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.. வசுமதி, என்ன விவேகா என் முன்னவே என் பையனை மிரட்டுற..
விவேகா, மேம் அவருக்கு ஒன்னும் பெரிய கொம்பு இல்லையே நான் எதுக்கு பயப்படனும்.. மேம் சாரி டூ சே திஸ் உங்க பையனை நீங்க சரியா வளக்கவில்லை.. எல்லார்துக்கும் ஒரு லிமிட் இருக்கு ஓவரா பேசுறாரு இங்கே வேணா பெரிய டானா இருக்கலாம் ஆனால் காலேஜ்ல நான் தான் டான்… எனக்கு எல்லா deptலயும் ஆள் இருக்கு..
வசுமதி, அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தார். இன்பா, ம்மா அவ ஓவரா பேசுறா நீங்களும் பார்த்து கொண்டு இருக்கீங்க.. மா.. விவேகா அவரை பார்க்க வசுமதி சிரித்து கொண்டே விவேகா உனக்கு வாய் அதிகம் ஆகிடுச்சு.. ஆனால் நீ சொன்னது எல்லாம் சரி தான் அவன் அப்படி தான் நான் என்ன பண்ணட்டும் இது வரை யாருமே இப்படி என் கிட்ட சொன்னதே இல்ல சொல்லி இருந்தால் நான் அவனை திருத்தி இருப்பேன்.
அவரே மேலும் தொடர்ந்தார். அவன் இப்படி முகத்தை வைத்து கொண்டும் பேசி கொண்டும் இருப்பதால் தான் எந்த பொன்னும் இவன் பக்கமே வர மாட்டிங்குது. விவேகா, அப்படியே இருந்தால் கூட விட்டு ஓடி போயிடும்.. ஹேய் உன்னை.. மேம் நான் இவர் எதுவும் என்னை திட்டி விட்டால் நான் இவர் மேலே கம்ப்லைன்ட் கொடுத்து விடுவேன் நீங்க என்னை தப்பா எடுத்து கொள்ள கூடாது. என்று சொல்லி விட்டு அவள் எழுந்து மேம் நான் வீட்டுக்கு போறேன்..
இன்பா, அது என்னோட வீடு.. விவேகா, மேம் அது கவர்மென்ட் கோட்ரெஸ் என்று சொல்லி விட்டு அவள் அவனை பார்க்காமல் ஓடி விட வசுமதி சிரித்தார். இன்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் வசுமதி சிரிக்க அம்மா அவளை நான் சும்மா விட மாட்டேன் என்னை இப்படி யாருமே பேசியது இல்ல.. வசுமதி, டேய் பிச்சிடுவென் அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும் பாரு அவள் மனதில் நினைத்ததை எதுவும் மறைக்காமல் பேசி விட்டு போகிறாள். இதுவே அங்கே வேற ஒரு பொண்ணா இருந்தால் இப்படி எல்லாம் பேசாது உன்னை பற்றி இன்னும் மோசமா திட்டி இருக்கும். நல்ல புத்தி கூர்மை சின்ன வயதில் எவ்ளோ பொறுப்பு தெரியுமா..அவங்க அம்மா பத்திரிக்கை வைக்க வந்த போது பேசினாங்க ஆனால் அப்போ விவேகா தான் எனக்கு வருண் தங்கை அப்டின்னு தெரியாது. சின்ன வயதில் கணவன் இல்லாமல் அவங்க அம்மா வேலை செய்து கஷ்டபடுகிறார்கள்.
வருண், விவேகா ரெண்டு பேரும் அப்பா இல்லாமல் கஷ்ட பட்டு மேலே வர முயற்சி செய்து அதை முடித்து காட்டுகிறார்கள். அவளுக்கு உள்ளே எவ்ளோ ஏக்கம் கவலை இருந்தாலும் அவள் இருக்கும் இடம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒரு நாள் கூட யாரு கிட்டயும் அவ ஹெல்ப் கேட்டது இல்ல அதனால் தான் அவ இங்கே இருப்பதை மறைத்து இருப்பாள்.
இன்பா இதை எல்லாம் கேட்டு அவளை கொஞ்சம் புரிந்து கொண்டான். அவன் அம்மா நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் என்று வேக வேகமாக வெளியே அவளை பிடிக்க எண்ணி சென்றான். அவள் அவன் பேசியது நினைத்து கொண்டே கோபமாக நடந்து சென்றாள். ஹே விவேகா… விவேகா உடனே நின்றாள்.
இன்பா அவள் இன்னும் பயத்தில் தான் இருக்கிறாள் என்று நினைத்து கொண்டு என்ன டி ஓவரா பேசுற.. விவேகா, என்ன டா எதுக்கு நிற்க சொன்ன… இன்பா ஒரு நிமிடம் திடுக்கிட்டான். விவேகா அவனை பார்க்காமல் சுற்றியும் ஒரு முறை பார்வையை சுழல விட்டு இப்போது அவனை பார்த்து டேய் இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்கு என்னால வர முடியாது டா… இன்பா இதை கேட்டு என்ன வர மாட்டியா.. டேய் வாய மூடு பேசாதே எனக்கு நிரம்ப டென்ஷன் ஆகுது.. எ என்னடி ஓவரா பேசுற… என்று அவன் ஒரு நிமிடம் ஷாக் அடித்தது போல் பேசிட…டேய் இப்போ நான் பேசுவது மட்டும் தான் நீ கேட்கணும்.. என்னால் 6மணிக்கு வர முடியாது. நீ 5.30 க்கு வெளியே போலீஸ் கிரவுண்ட்க்கு வர.. இன்பா இதை கேட்டு இன்னும் திடுக்கிட்டு என்ன சொன்ன நான் வரணுமா.. விவேகா தெனாவெட்டாக டேய் உனக்கு காது கேட்குமா இல்ல கேட்காதா நீ தான் வரனும்…
இன்பா, என்னால் வர முடியாது.. சரி நான் உன் வீட்டுக்கு வரேன்.. ஹே என்னடி வாய் ஓவரா பேசுற.. விவேகா, நீ வர சரியா 5.30க்கு வர நான் உன்னை அங்கே பார்த்து கொள்கிறேன். என்று சொல்லி ஒரு சிறிது தூரம் சென்றவள். நின்று அவனை பார்த்து டேய் நான் வரேன்டா இன்பா.. என்று சொல்லி விட்டு வேக வேகமாக சென்று விட்டாள்.
இன்பா வுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று ஒரே குழப்பமாக இருந்தது சிறிது நேரம் அங்கேயே நின்றான். இப்போது அவன் வீடு நோக்கி சென்றான்.
இங்கே வேக வேகமாக வீட்டுக்கு வந்த விவேகா ….?
தொடரும்…
அடுத்து இன்பா – விவேகாவின் அதிரடி சந்திப்புக்கு காத்திருங்கள்..
விவேகாக்கு என்னாச்சு?
கவ் யா என்ன செய்கிறாள்?
Episode 133,
விவேகா அவ்வாறு சொல்லி விட்டு சென்றதும் இன்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இவ நம்மள மிரட்டி விட்டு செல்கிறாள். அவன் மூளை இன்பா நீ அவளை பார்க்க போக கூடாது …. ஆனால் மனமோ ராகவ் நீ பேபியை பார்க்க போடா… என்று இரண்டும் சண்டையிட்டு கொண்டே அவன் அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
வசுமதி, ராகவ் எங்கே போன.. நத்திங் மாம்.. டேய் சும்மா சொல்லு.. இன்பா சிறிது தயக்கத்துடன் அவ மீண்டும் மயங்கி விழுந்து விட்டால் நம்ம மேல் தான் தவறு வரும் ஏன்னா நம்ம வீட்டுக்கு வந்து தானே மயங்கி விழுந்தா சோ வீட்டுக்கு போயிட்டாளா அப்டின்னு பார்க்க போனேன்.. இதை கேட்டு வசு ஓ நிஜமாவா… மாம் பிராமிஸ்… வேற ஒன்னும்இல்ல அவள் சரியான அடங்காதவள்.. டிஸ்கஸ்டிங் என்று அவன் அவர் முகத்தை பார்க்காமல் வேக வேகமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.
இங்கே விவேகா வீட்டுக்கு வந்ததும் கதவு அடைத்து விட்டு நேராக கண்ணாடி முன் போய் நின்றாள். இதயம் வெளியே குதித்து விடும் அளவுக்கு துடித்தது. விவேகா அவர் சொன்னதை நினைத்து பார்த்தாள். யார் அவர்? கிருஷ்ணன் தான்.. விவேகா கிளம்பி வரும் நேரம் அவர் அவளை அழைக்க தாத்தா… வாட் ஹப்பென் மை ஆம்பீசியஸ் கேர்ல்? ஒன்னும் இல்லை தாத்தா… பாவை என் கிட்ட எல்லாம் சொன்னா இதுக்கு போய் நீ ஃபீல் பண்ணலாமா.. இல்ல தாத்தா எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு.. கிருஷ்ணன், நீ அவன் கிட்ட தைரியமா பேசணும். அதை விட்டு இப்படி அழுது பயபட்டால் அவன் உன்னை இன்னும் சீண்டி கிட்டு இருப்பான்.. எப்படி தாத்தா நான் எப்படி பேசறது… பார்த்தியா இப்போவே உன்னை மாற்றி விட்டான்.நல்லா யோசி நீ ரொம்ப போல்ட் சரி தானே.. சரியான சந்தர்ப்பம் வரனும் அது வரை வெயிட் பண்ணு.. என் பொன்னு வசுமதி,வெண்மதி, என் மருமகள் சுரமஞ்சரி எல்லாருகிட்டயும் நான் இதே தான் சொல்லி இருக்கேன். தப்புக்கு மன்னிப்பு தண்டனை இது ரெண்டும் உடனே பேசி முடித்து விட வேண்டும் அதை இழுத்து கொண்டு மீண்டும் சண்டை முகம் தூக்கி வைப்பது எல்லாம் நல்லாவா இருக்கு இன்னும் சண்டை தான் வரும்..
நான் பாவை கிட்ட கொஞ்ச நேரம் கூட கோபமா இருக்க முடியாது.. விவேகா, இப்போ என்ன சொல்ல வரீங்க.. அவன் ஆக்ட் பண்றான்.சோ நீ அதுக்கு எல்லாம் ஃபீல் பண்ண கூடாது.. ராகவ் ஓவரா எதுவும் செய்தால் நீ அவனை சும்மா விட கூடாது.. தாத்தா உங்களுக்கு இராகவை ரொம்ப பிடிக்கும் தானே.. கிருஷ்ணன், நீயும் என் ராகவ் மாதிரி தான் அதை விட நீ என்னோட பேத்தி உன்னையும் தான் எனக்கு பிடிக்கும் இந்த வீட்டு கடை குட்டி நீ தானே.. இதை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வந்து விட கிருஷ்ணன், ஆனால் இன்னொரு ரெக்வஸ்ட்… என்ன தாத்தா நீங்க என் கிட்ட போய் இப்படி ஒரு வார்த்தை சொல்லி விட்டீர்கள்.. நீ எப்பொதும் ராகவ் விட்டு போறேன்னு சொல்ல கூடாது, அவனால் அதை தாங்கி கொள்ள முடியாது.. இதை கேட்டதும் விவேகா அவள் தவறு உணர்ந்து தாத்தா சாரி இனி நான் அப்படி சொல்ல மாட்டேன் ராகவ விட்டு எப்போதும் போக மாட்டேன்.. என்று சொல்லி அவள் அழ அவர் அழ கூடாது.. என்று கூறினார்.
இப்போது விவேகா கண்ணாடியில் வேற லெவல் டி எப்படியோ தைரியம் வரவைத்து பேசி விட்டாய். அவன் முகத்தை பார்கணுமே அப்படியே உறைந்து போய் விட்டான். இனி நீ மீண்டும் அவனை கஷ்ட படுத்துவது போல் பேச கூடாது. அவனை விட்டு பிரித்து செல்வது இதை எல்லாம் நினைக்க கூடாது. ஆனால் இப்போ அவனை சும்மா விட கூடாது.. “ஏய் சண்டைக்காரா” ,”இனி நம்ப சண்டை செய்வோம்” என்று அவள் படுக்கையிள் விழுந்தாள்.
இங்கே இன்னொருவள் படுக்கை அறை முழுவதும் கைகளில் என்ன கிடைக்கிறதோ அதை எடுத்து ராகவ்.. ராகவ்.. ராகவ் என்று அந்த அறை முழுவதும் எழுதி கொண்டு இருந்தாள் அது கவ்யா தான் இன்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது. கவ்யா மனதில் யார் அவள் அவளை பற்றி பேசும் போது அவன் முகம் அதில் எவ்வளவு மென்மை, எவ்வளவு காதல்.. அது எனக்கு சொந்தமாக வேண்டும் ராகவ் என்று அழைக்கிறாள். இன்பாவும் எனக்கு தான் ராகவும் எனக்கு தான் மொத்தமாக இன்பராகவன் எனக்கு மட்டும் தான் என்று நினைத்து கொண்டே உன்னை முதலில் கண்டு பிடிக்கிறேன் டி.. நீ எப்படி ராகவ் என்று கூப்பிடலாம் அவன் என்னுடையவன் அவ்வளவு சீக்கிரத்தில் அவனை நான் எவளோ ஒருத்திக்காக விட்டு கொடுத்து விடுவேனா..
நீ என் இன்பராகவன் காலேஜ்ல தான் படிக்கிராயா இதோ வருகிறேன் டி இந்த ரெண்டு வருஷத்தில நான் MBA முடித்து வெளியே வரும் போது மிசஸ் இன்ப ராகவனா தான் வருவேன்.. என்று சொல்லி கொண்டே கவ்யா போனில் கேட்ட குரலை மனதில் பதிதது கொண்டு இருந்தாள்.
கவ்யா ஒரு கோர புன்னகையை சிந்தி ஐ மிஸ் யூ தானே டா அவளை பார்த்து சொன்ன அவளை நிஜமாவே மிஸ் பண்ண போற நான் தான் உனக்கு.. நீ எனக்கு மட்டும் தான் ராகவ் என்று சொல்லி கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமானாள்.
இங்கே இன்பா சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தான். அப்படி என்ன பண்ண போறா இவ கிட்ட ஒன்னு கூட ட்ரை பண்ண முடியல.. என்று நினைத்தான். ஒரு வேளை ரொம்ப கோவமா இருப்பாளோ பிரேக் அப் பண்றேன்னு சொல்ல கூப்பிடுவாளோ.. அப்படி மட்டும் சொன்னா நீ அவளை காருக்குள்ள தூக்கி போட்டு நேரா மாமி கிட்ட கூட்டி வந்து அவளை அடிக்க சொல்லி பார்க்கனும். அப்புறம் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கனும்.. இப்போவே பண்ணிக்கலாம் அப்போ தான் இந்த லூசு (இனியாள்) அந்த சைக்கோ ஜங்கிள் ஃபாக்ஸ் (கவ்யா) கிட்ட இருந்து தப்பிக்க முடியும் அண்ட் நாளைக்கே டார்ஜலிங் போக ரெடி ஆகிடலாம். எப்படியும் அவ இந்த ரெண்டு வருஷம் படித்து முடிக்கும் வரை அப்படியே அவளை ஜாலி பண்ணிட்டு அடுத்த கட்டம் அவள் படித்து முடித்ததும் நம்ப நெக்ஸ்ட் ஜெனரேசன் பிளானிங் தான்..
இப்போது அவன் டேய் இது இன்னிக்கு காலையில் யோசித்து இருந்தாள் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்.. என்று அவன் ஒரு கோட்டை கட்டிட அங்கே விவேகா குப்புற படுத்து நன்கு தூங்கி கொண்டு இருந்தாள்.
இன்பா மணியை பார்க்க அது மாலை 5 என காட்டிட உடனே அவன் வேலைக்கு தயாராக ஆரம்பித்தான். காக்கி உடையில் எப்பொதும் அந்த கம்பீரம் குறையாமல் தன்னை தயார் படுத்தி கொண்டு கீழே வந்தான். வசு, இன்னிக்கு நைட்டு டூட்டி யா ராகவ்.. மம் யெஸ் மாம்.. அண்ட் உங்களுக்கு எப்போ லீவ் முடியுது… இன்னும் மூன்று நாள் இருக்கு.. வருணை வீட்டுக்கு கூப்பிட்டு விட்டாயா… ம்ம் அன்னிக்கே மாமி கிட்ட சொல்லிட்டேன்.. சரி.. ஹான் ஒரு நிமிடம் இப்போ என்ன சொன்ன… இன்பா யோசித்தான் இப்போது சமாளித்து கொண்டே என்ன மா.. நீங்க தானே வருண் அம்மா கிட்ட சொல்ல சொன்னிங்க அதான் சொல்லிட்டேன்.. இப்போ அதில் என்ன பிரச்சனை… வசு, இல்ல டா எனக்கு மாமி அப்டின்னு கேட்டது… இன்பா எதுவுமே தெரியாதது போல் யாரு மாம் மாமி… எனக்கு தெரிந்து சுரமஞ்சரி மாமி மட்டும் தான் தெரியும் உங்க ஹஸ்பன்ட் சைடில் யாருமே தெரியாதே.. இதை சொல்லி கொண்டு இருக்கும் போதே ரவி ஒரு மீட்டிங் முடித்து விட்டு அசதியாக உள்ளே வந்தான் அவர் காதுகளில் விழ.. உன் பையனுக்கு என்னைக்கு சொந்த குடும்பம் எல்லாம் நினைவு இருக்குது இரவல் குடும்பம் உன்னோட குடும்பத்தை தானே டி தலையில் வைத்து சுற்றி கொண்டு இருக்கிறான்…
வசு இப்படியே விட்டால் இருவரும் சண்டை போட ஆரம்பித்து விடுவர் என்று வாங்க ரவி.. ராகவ் நீ கிளம்பு உனக்கு டைம் ஆகுது பாரு…என்று சொல்ல இன்பா எதுவும் பேசவில்லை. அதற்கு பதிலாக ஓகே மாம் இன்னிக்கு காலையில் இருந்து என் மைண்ட் உள்ளே இந்த பாட்டு தான் என்னோட உதடு ஒரே மர்மரிங்கா இருக்கு.. என்ன அது என்று அவர் கேட்க வான்மதி அப்டின்னு ஸ்டார்ட் ஆகுமே சோபனா மேம் ஆக்ட் பண்ணி இருப்பாங்களே …. என்று சொல்ல ரவி டேய் நல்லா ஆடிக்கோ இதுக்கு எல்லாம் உனக்கு இருக்கு ராஸ்கல் எனக்கும் டைம் வரும் உன்னை நான் பார்த்து கொள்கிறேன்.
இன்பா, இப்போ எனக்கு டைம் இல்ல சீ யூ மாம் என்று அவன் சென்றான். வசுமதி, ஏ ன் ரவி எப்போ பார்த்தாலும் என் பையனை எதுவும் சொல்லிகிட்டே இறுக்கீங்க.. அம்மா அப்பா எதுவும் சொன்னா அது பலிக்குமாமே.. ரவி, அப்படி ஒன்னு இருந்தால் நல்லா இருக்கும்.. அவனோட பேச்சு எல்லாமே தெனாவெட்டு தான் அலட்சிய பார்வை எவ்ளோ மோசமான குணம் எப்படி பேசுகிறான் பாரு டி என்னை சொல்ல வந்து விட்டாள்.
வசுமதி, ரவி இந்த பார்வை முதன் முதலில் என்னை இப்படி தானே பார்த்தீங்க…. என்று கொஞ்சம் ஏக்க குரலில் அவர் பேசிட அவர் மனதில் இன்பா ராஸ்கல் கிட்ட மதி பக்கத்தில் இருக்கும் போது வச்சுக்கவே கூடாது அப்படியே உரிச்சு வச்சு பொறந்து இருக்கான் இப்போ இவள் வேற பார்த்து கொண்டு இருக்காளே..
ரவி, மதி யாரு டி சொன்னா உன்னை பார்த்ததும் எனக்கு ரெக்க மட்டும் தான் இல்லை. வசு, இருந்தால் என்னை விட்டு பறந்து போயிருப்பீங்க.. ரவி அவள் அருகில் ஒவ்வொரு அடிகலாக வைத்து கொண்டே “என் கிளியை கொத்திட்டு போயிருப்பேன்”… வசுமதி, போதும் போதும் கையை எடுங்க இன்னிக்கு ஒரு விஷயம் நடந்தது. ரவி அவளை பின்னால் இருந்து கட்டி கொண்டு என்ன அது? அவள் விவேகா வந்தது இன்பாவிடம் பேசியது என அனைத்தும் சொல்ல ரவி முகம் புன்னகையில் விரிந்தது. கண்ணகுளி இரண்டும் தெரிய அவர் சிரித்திட அவள் இப்போ எதுக்கு சிறிக்கிரீங்க.. நீ அந்த பொண்ணை பற்றி முன்னாடியே சொல்லி இருந்தால் நான் அந்த பொண்ணை வைத்து ரிவன்ஜ் பண்ணி இருப்பேன் டி.. அவன் எதுவும் பேசலயா.. இந்நேரம் பழிவாங்க கிளம்பி இருப்பானே..
அவள் உங்களை மாதிரி இல்ல அவன் என் பையன் அந்த பொன்னு மயங்கி விழுந்து விட்டால் என்ன செய்வது அப்டின்னு பார்க்க போனான். ரவி, ஒரு அசட்டு புன்னகை சிந்தி எப்படி மதி எனக்கு நீ ஒரு மக்கு பொண்டாட்டி டி அவன் எது சொன்னாலும் நம்பிட்டு சுத்தாத.. அந்த பொண்ணு யாரு சொல்லு அவளை நான் ப்ரெண்ட் ஆக்கி இவனை சும்மா விட மாட்டேன். மதி, இதுல ஒரு விஷயம் இருக்கு அவளும் கிட்ட தட்ட உங்களை போல் தான் போலீஸ் சுத்தமா பிடிக்காது… ரவி இது போதுமே ஆனால் உன்னை எனக்கு பிடிக்குமே என்று சில பனி கட்டிகளை அள்ளி கொட்டினார்.
இங்கே இன்பா சரியாக 5.20 க்கு வந்தான். என்ன தான் அறிவு வேண்டாம் செல்லாதே என்று சொன்னாலும் அவன் கால்கள் கேட்க வில்லை நடந்து வந்து விட்டது. மணி 5.30 ஆனது.. அப்படியே 5.40 இன்பாக்கு கோபம் வர ஆரம்பித்தது. என்ன பண்றா ஒரு பஞ்ச்வல் இல்ல வாய் மட்டும் தான் நீளம் என்று அவன் திட்டி கொண்டு இருக்க மணி 6.00 ஆனது இன்பா காரை எடுக்க செல்ல அவள் பூனை நடை போட்டு கொண்டு ஆடி அசைந்து வந்தாள்.
இன்பா அவளை பார்த்து முறத்து கொண்டு நின்று கொண்டு இருக்க டேய் இதுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று அவள் அவனை தெனாவெட்டாக பார்த்து கொண்டு அருகில் வந்தாள்.
விவேகா அவன் அருகில் வந்து குட் ஈவ்னிங் ACP சார்.. ஹே என்னடி ஆடி அசந்து வர மணி இப்போ 6 ஆகுது உன் கிட்ட என்னால் பேச முடியாது என்று அவன் ஏற செல்ல
ஹலோ ஒரு நிமிடம்.. நில்லுங்க…சும்மா நில்லுங்க பாஸ்.. என்று அவன் முன்னால் போய் நின்றாள். இன்பா அவளை கொஞ்சம் விறைப்பாக பார்க்க.. விவேகா அவள் கூந்தல் எடுத்து முன்னே போட்டு நீவி கொண்டே உன்னை தான் 5.30 மணிக்கு வர சொன்னேன் நான் 5.30 மணிக்கு வரேன்னு உன் கிட்ட சொல்லவே இல்லையே..இதை கேட்டதும் இன்பா மனம் இப்படி இன்சல்ட் பன்றாள்..
ஹலோ என்று சொல்லி கொண்டே அவன் காரில் உள்ள பின்னால் இருக்கை அருகில் போய் நின்று டேய் கதவை திறந்து விடு.. உன் கை என்ன பண்ணுது.. டேய் சொன்னா செய் கதவை திற டா.. இன்பா அமைதியாக திறந்து விட்டான். அவள் ஏறி அமர்ந்து கொண்டாள். பின் அவனை பார்த்து மம் அந்த சைடு வந்து உட்கார் சீக்கிரம் கம் ஃபாஸ்டஎனக்கு டைம் இல்ல..
இன்பா வேறு வழி இல்லாமல் அந்த பக்கம் சென்று இன்னொரு கதவை திறந்து உள்ளே அமர்ந்தான். இன்பா எதையோ சொல்ல வர டேய் வாயை மூடு சத்தம் வர கூடாது.. என்று சொல்லி அவள் கழுத்தில் மாலையாக போட்டு இருந்த துப்பட்டாவை எடுத்து கைகளில் வைத்து கொண்டு என் கிட்ட சார் என்ன கேட்டிங்க.. வாட்.. டேய் உன் ஸ்பொகென் இங்கிலீஷ் புக்கை கொஞ்சம் மூடி வை.. என் கிட்ட என்ன கேட்ட.. ஐ டோண்ட் நோ.. டேய் இடியட் இப்போ என்ன சொன்னேன்.. எனக்கு தெரியாது..
காலையில் மாலையில் சாருக்கு கிஸ் வேணுமோ.. இன்பா கடுமையான முகத்துடன் மம் வேணும்.. அப்போ பக்கத்தில் வா.. இன்பா அவளை ஒரு மாதிரி பார்க்க.. ஏலியனை பார்ப்பது போல் பார்க்கிற வாடா.. அவன் அவள் அருகில் வர கண்ணை மூடு.. எதுக்கு.. டேய்.. அவன் கண்களை மூடி கொள்ள விவேகா அவள் துப்பட்டாவை அவன் அருகில் முத்தம் கொடுப்பது போல் சென்று அவன் கழுத்தை சுற்றி போட்டு நெறிப்பது போல் செய்ய.. இன்பா கண்களை துறக்க அவள் கோப பார்வையில் என்னை கொல்லுவியா நீ நான் உன்னை இப்போ கொன்றுவென் டா.. இன்பா இதை எதிர்பார்க்கவில்லை.. அவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வர அதை வெளிக்காட்டி கொள்ளாமல் டு இட்.. என்று சொல்ல அவள் அவன் கழுத்தை இறுக்கினாள்.
அவன் கல் போல் இருக்க அவள் சோர்ந்து போய் அவனை விட்டு அமர்ந்து கொண்டாள். இன்பா கொஞ்சம் இரும்பி கொண்டே தன்னை அசுவாச படுத்தி கொண்டு அந்த துப்பட்டாவை எடுத்து அவள் கழுத்தில் போட்டு அந்த துப்பட்டாவால் அவளை அவன் புறம் இழுத்தான்.
தொடரும்…
இனி வரும் ud ல
கவ்யா, அருண், சிபி, மூவரும் காலேஜ் செல்கிறார்கள். யாழினி புது கணக்கு ஒன்று போட்டு வைத்து ஆதிக்காக காத்து கொண்டு இருக்கிறாள்.
கவ்யா விவேகாவை கண்டு பிடிப்பாளா?
அருண் எண்ணம் நிறைவேறுமா?
சிபி என்ன செய்ய போகிறான்?
குரு பிரகாஷ் ஒரு தரமான திட்டத்தோடு இன்பாவை அதில் சிக்க வைக்க காத்து கொண்டு இருக்கிறான்? இன்பா அதில் இருந்து தப்பிப்பானா?
Keep reading drs…
Episode 134,
விவேகா இன்பாவின் கழுத்தை தன் மொத்த பலம் என்று சொல்ல முடியாது. காலையில் இன்பா செய்தது போலவே செய்தாள். அவன் கல் போல் இருந்தான் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அதை விட்டு அப்படியே அமர்ந்தாள்.
அவள் விட்ட அடுத்த நொடி வேக வேகமாக மூச்சை கொஞ்சம் உள் இழுத்தான். இருமல் வந்து விட்டது. இன்பா மனதில் சும்மா சொல்ல கூடாது இவ வெறும் உப்மா சாப்பிட்டே இவளோ வலு கொடுக்கிறாள். நாளைக்கு மீன், மட்டன், சிக்கன் எல்லாம் சாப்பிட்டால் என்னை என்ன பண்ணுவா.. என்று நினைத்து அவளை பார்க்க அவள் அந்த பக்கம் திரும்பி அமர்ந்து இருந்தாள். அவன் அவளின் துப்பட்டாவை எடுத்து அவளின் கழுத்தில் போட்டு விட்டு துப்பட்டாவோடு சேர்த்து அவளையும் இழுத்தான். விவேகா திரும்பி அவனை எரிக்கும் பார்வை பார்த்து டேய் கையை எடு.. முடியாது.. எடு டா என்று அவனை அறைய கைகளை உயர்த்த அவள் கைகளை ஒரு கையில் பிடித்து கொண்டான் அவள் துப்பட்டாவொடு சேர்த்து அவளை அவன் இதழுக்கு அருகில் கொண்டு வந்தான். டேய் தள்ளி போ என்னை விடு டா.. அவள் அவனிடம் மல்லுக்கு நிற்க அவனுக்கு அவள் மிகவும் சுவாரசியமாக தெரிந்தாள். விவேகா மூக்கு புடைக்க நீ இப்போ மட்டும் எதுவும் பண்ண உன் கண்ணத்தில நான் அறைந்து விடுவேன்..
இன்பா அவ்ளோ தானே அப்போ ஓகே என்று அவளை இழுத்து முத்தமிட அவளுக்கு அது பிடித்து இருந்தாலும் அவன் வசுமதி கிட்ட இன்று சொல்லியது அவளை பயமுறுத்தியது எல்லாம் இன்னும் கோபத்தை கொடுத்தது. அவன் முத்தமிட்டு விலகியதும் அவள் அவன் கன்னத்தில் அறைய போக என்ன டி மாமி உனக்கு சொல்லி தரலயா உனக்கு மேல் வளர்ந்து இருக்க என்னை போய் அதுவும் கண்ணதில் அறைய வருகிற..
விவேகா, சரி உன்னை அடிக்கல ஆனால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி அவள் பாக்கெட்ல இருந்து தலை வாரும் சீப்பு எடுத்து அவனை அடிக்க
இன்பா, விவேகா ஸ்ஸ்ஸ் வலிக்குது டி.. அதுக்கு நீ slap பண்ணிடு என்று அவன் அவளின் கைகளை பிடிக்க வர..
விவேகா அடிப்பதை நிறுத்தினாள். அவள் இப்போ கொஞ்சம் உன் கிட்ட பேசணும்.. சொல்லு.. நீ மோசம் உன்னை மாதிரி நான் யாரையும் பார்த்ததே இல்ல.நீ என்னோட ராகவ் இல்ல. இனி நான் உன்னை அப்படி கூப்பிட மாட்டேன்..
உடனே அவன் இப்போது கொஞ்சம் தீவிரமாக ஹே நீ அதை விட மோசம் டி எப்போ பார்த்தாலும் விட்டு போறேன் விட்டு போறேன்னு குதிக்குற..நீ என் பேபி இல்ல..
விவேகா, நீ சரி இல்ல.. நீ தான் டி சரி இல்ல.. விவேகா, உன் மேல தான் டா தப்பு.. அதை நீ சொல்ற.. அவள் நீ இன்னிக்கு என்ன பண்ணின உனக்கு தெரியல உங்க அம்மா கிட்ட போய் தனியா என்னை மாட்டி விட்டு இருக்க டா என்னை ஓவரா கொடுமை படுத்துற.. எனக்கு அந்த பதட்டத்தில் கண்ணு எல்லாம் கட்டுச்சு..
அவன் சிரித்து கொண்டே ஓ அது என் பெர் ஃபார்ம்மென்ஸ்ல வரலயா.. விவேகா மீண்டும் சீப்பு எடுத்து ஓ உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா கிட்ட வந்த கொன்றுவேன்.. இன்பா, உனக்கு எப்பவும் தப்பான நினைப்பு தான் டி நான் உன்னை கிஸ் ஹக் பண்ணது பற்றி சொல்லல … பின்னே என்று அவள் சொல்ல நான் சொன்னது என்னோட கோபத்தை பற்றி.. டேய் நீ உன்னை நம்பி வந்த பொண்ணை இப்படி தான் மாட்டி விடுவியா..
இன்பா, இன்னிக்கு காலையில் நீ என்ன டி பண்ண என்னை விட்டு போறேன்னு சொன்ன தானே அதுக்கு தான் நானும் பண்ணேன்..
விவேகா, நாளைக்கு அவ என்னை கண்டு பிடித்து எதுவும் செய்து விட்டால் நான் என்ன பண்ணட்டும் நீ சுமார் மூஞ்சி குமார் இல்ல நீ ரித்திக் ரோஷன் மாதிரி இருக்க சிங்கம் சூர்யா மாதிரி இருக்க . அது தான் இங்கே பிரச்னை எனக்கு ஏற்ற பையன் நீ இல்ல..
இன்பா, நான் உன் கூட இருக்கும் போது முதலில் இந்த மாதிரி உனக்கு இன்செக்யூரிட்டி ஃபீல் வருதுன்னு சொல்லாத எனக்கு அவமானமா இருக்கு……நீ வாய அடக்கு டி உன் வாய் கடலை விட பெருசு.. முதலில் நீ என் கிட்ட அப்படி பேசியது தப்பு அண்ட் ஒன் திங்க் நான் இன்னும் உன் மேல் கொலை பண்ற கோபத்தில் இருக்கேன்.
விவேகா, நான் பண்ணது எனக்கு தப்பா தோணல என் உயிர் எனக்கு அக்கறை இருக்கு நீ பண்ணது மட்டும் சரியா உன் அம்மா கிட்ட தனியா மாட்டி விட்ட.. உன்னை நம்பி தானே நான் வந்தேன்..
இன்பா, நீ தான் நானு அந்த அளவுக்கு உன் மேல் நம்பிக்கையா இருந்தேன் . அதனால் தான் அவ கிட்ட உன்னை பற்றி சொன்னேன் நீ ஏன் டி விட்டு போறேன்னு சொன்ன.. நான் தப்பு பண்ணிட்டேன் டி என் மாம் கிட்ட உன்னை கூட்டி போயிருக்க கூடாது உன்னோட மாம் அண்ட் வருண் ரெண்டு பேர் முன்னே உன்னை கூட்டி போய் விட்டு இருக்கணும் அவங்க சொன்னா நீ கேட்ப நான் காலையில் வில்லன் ரேஞ்சுக்கு பெர்ஃபார்ம் பண்ணி நீ பயப்படுவ அப்டின்னு பார்த்தால் அது உனக்கு ஒரு எரும்பு கடித்த மாதிரி கூட இல்ல சண்டைக்கோழி மாதிரி என்னை திரும்ப கொத்த வர..
விவேகா, சரி இப்போ முடிவா என்ன சொல்ல வர.. அதை நீ சொல்லு டி.. விவேகா ஒன்னும் பிரச்சனை இல்ல நீ என் கிட்ட ஒரு தடவை மன்னிப்பு கேளு இதோட இந்த பிரச்சினையை முடித்து கொள்ளலாம்.. இன்பா ஒரு எழன புன்னகை சிந்தி ஹே அதை நீ தான் என் கிட்ட கேட்கணும்..
விவேகா நீ தான் .. இல்ல நீ தான் டி.. அவள் நான் எந்த தப்பும் பண்ணல.. நானும் எதுவும் பண்ணல உன் கிட்ட நான் எதுக்கு கேட்கணும். விவேகா, அது தப்புன்னு உனக்கே தெரியும் நடிக்காத டா நீ மன்னிப்பு கேளு..
இன்பா, ஐ கான் ட்.. விவேகா, அப்போ இனி சண்டை டா.. ஹே நீ தான் கேட்கணும்.. உனக்கு ஈகோ அதிகம் டி.. விவேகா சிரித்து கொண்டே இந்த கதை படிக்கிற எல்லார்க்கும் தெரியும் உனக்கு தான் டா அது அதிகம்…
இன்பா சிறிது நேரம் யோசித்தான். சரி டி சண்டைக்கு நான் தயார் ஆனால்.. ஆனால் என்ன…
இன்பா, முதலில் யார் வந்து மன்னிப்பு கேட்கிறார்களோ.. அவங்க தோல்வி ஒத்துக்கனும் …. விவேகா, அது நிச்சயம் நீ தான்..
இன்பா, அதுக்கு என்ன ட்ரிக் வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம் முதன் முதலில் எந்த காரணமா இருந்தாலும் சரி மன்னிப்பு யாரு கேட்கிறார்கலோ அவங்க தான் லாசர்… அண்ட் நீயா என் கிட்ட வந்து ராகவ் நான் செய்தது தப்பு அப்டின்னு கெஞ்ச போற கட்டாயம் இது க நடக்கும்.
சரி ஓகே மிஸ்டர் இன்பா கட்டாயம் நீ தான் என் கிட்ட கேட்க போற தயாராக இரு என்று அவள் சொல்லி விட்டு இறங்க போக..
இன்பா, ஹே எங்க போற.. அவ்ளோ தான் வந்த வேலை முடிந்து விட்டது உன்னை எப்படி என் கிட்ட கெஞ்சி மன்னிப்பு கேட்க வைப்பது அப்டின்னு நான் பிளான் போட போறேன்..
இன்பா, ஒரு 5 நிமிடம் இரு அப்புறம் வீட்டுக்கு போய் என்னமோ யோசி.. அவள் எதுக்கு இருக்கணும்.. ஹே கிஸ் கொடுத்து விட்டு போடி.. அவள் ஹலோ நம்ப இப்போ சண்டையில் இருக்கோம்.. அவன் சிரித்து கொண்டே அது வேற dept இது வேற dept சோ ரெண்டையும் மிங்கில் பண்ணாத உன் கிட்ட மட்டும் தான் என்னால் கிஸ் கேட்க முடியும்.. விவேகா முடியாது போடா.. நீ என்ன டி பண்றது நானே உன்னை கிஸ் பண்ணிக்க போறேன் என்று சொல்லி அவளை இழுத்து முத்தமிட்டான்.
அவள் இறங்கும் போது அவன் உன் கிட்ட இருந்து தேவையான அளவு பூஸ்ட் நான் எடுத்து கொண்டேன் நிச்சயம் இந்த பெட்ல நான் தான் டி வின் பண்ண போரன்…இதை ஆல் தி பெஸ்ட் கிஸ்ஸா எடுத்துக்கொள்கிறேன் அடுத்து நான் ஜெயித்து விட்டு வந்து உன்னை இன்னும் டேஸ்ட் பண்ணாமல் விட்டு வைத்தது எல்லாம் மொத்தமா டேஸ்ட் பண்ண போறேன்.. சீ யூ சண்டைக்கோழி
டேய் போடா என்று சொல்லிட அவன் சிரித்து விட்டு அவளிடம் சொல்லி கொண்டு அலுவலகம் கிலம்பினான். அங்கே சென்றதும் பெங்களூரில் ரமேஷ் கண்ணா கொடுத்து இருந்த அனைத்து தகவலும் எடுத்து கொண்டு இன்பா அவன் தலைமையை சந்திக்க சென்றான்.
அங்கே என்ன இன்பா இது யாரு உங்களை ஹேண்டில் பண்ண சொன்னது. அவங்க யாரு தெரியுமா.. சார் நீங்க proof சரியாக இருக்கான்னு மட்டும் பார்த்து விட்டு எனக்கு பெர்மிஷன் கொடுங்க சார் அவங்க யாரா இருந்தால் எனக்கு என்ன..
அங்கே உயர் அதிகார்கள் மூவரும் அவர்களுக்குள் பேசி விட்டு இதை நாங்க வெரிபை பண்ணணும் அண்ட் இதில கொஞ்சம் தவறு நடந்தால் உங்களுக்கு இந்த வேலைக்கும் பிரச்னை வந்திடும்.. சார் நான் பார்த்து கொள்கிறேன். என்று சொல்ல சரி ஒரு நிமிடம் வெளியே வெயிட் பண்ணுங்க..
இன்பா வெளியே சென்றதும் அதில் ஒரு அதிகாரி குரு பிரகாஷ்க்கு போன் செய்தார்.
குரு, இந்த காலுக்கு தான் நான் வெயிட் பண்ணேன்.. அவன் வந்து விட்டானா.. அவர் வந்து விட்டார் சார்..
குரு, மம் இன்னும் கொஞ்சம் கேம் சூடு பிடிக்கட்டும் அவன் இந்த ரெண்டு நாள் சந்தோஷமா சுத்தட்டும் நீங்க மண்டே அவனை ப்ரோசீட் பண்ண சொல்லுங்க..
அவர்கள் இந்த வீக் வேண்டாம் மண்டே நீங்க உங்க ப்ரோசிஜர் ஸ்டார்ட் பண்ணிக்கோங்க.. இன்பா கையோடு கொண்டு வந்த அந்த கோப்புகளை எல்லாம் எடுத்து சென்று விட்டான்.
அந்த தலைமை அதிகாரிகள் மூவரும் அதில் ஒருவர் சார் இது நம்ப பண்றது சரியா dept இதுல கெட்ட பேரு வந்திடும்.. நீங்க அதை பற்றி யோசிக்க வேண்டாம். அந்த வசுமதி ஓவர் ஆட்டம் போடுறா இவன் சொல்லவே தேவை இல்ல.. அதில் இன்னொருவர் மம் ஆமா சார் இப்போ புரொமோஷன் ல அவள் பேரு இருக்கு.. பையனுக்கு டிபுரொமோஷன் அவளுக்கு புரொமோஷன் எப்படி இருக்கும் அவள் இப்போ மட்டும் இப்படி இல்ல வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து இவளும் அந்த சேகரும் பண்ற ஆட்டம் தாங்க முடியாது. ஒரு பைசா கூட வாங்காமல் அந்த சேகர் என்ன சாதித்தான். மேலே போய் சேர்ந்தது தான் மிச்சம் என்று பேசினர்.
இன்பா வெளியே வந்ததும் அவன் மனம் இன்று எதோ சரியாக படவில்லை காலையில் இருந்து ஒரே பிரச்னை ஆனாலும் ஒரே யோசனையாகவே சென்றான். அடுத்த நாள் அழகாக விடிந்தது.
அடுத்த நாள் சர்ரென்று ஓடியது. இன்று சன்டே விவேகா வருண் அதிதி வீட்டுக்கு வர சொல்லி இருந்த நாள் வந்து விட்டது..
இன்பா வீட்டுக்கு வந்து தூங்கி ரெஸ்ட் எடுக்க அவனுக்கு ஒரு அழைப்பில் இருந்து கால் வந்தது. முதலில் அதை அவன் நம்ப வில்லை. மீண்டும் அதே எண்ணில் இருந்து வர எடுத்து காதில் வைத்தான்.
ஹலோ whose this?
ஹலோ நான் சரவணன் பேசறேன்..
யார் அது எனக்கு அந்த பேரில் அக்யூஸ்ட் கூட தெரியாது.
இன்பா நான் மித்ரனோட அண்ணன் சரவணன் பேசுகிறேன்..
ஓ சரவணன் சார் சொல்லுங்க வாட்ஸ் தி மேட்டர்… அவன் சொல்ல வரும் நேரம்.. ஒன் மினிட் மிஸ்டர் சரவணன் இப்போ என் கிட்ட பேச உங்களுக்கு அப்பாயின்ட்மெண்ட் இல்லை..
அவன் இப்போ என்ன பண்ணிட்டு இருக்க நான் உன் கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்.. நான் வீட்டில் வெட்டியா இருக்கேன் இப்போ சொல்ல போனால் என் கிட்ட நீ பேச கொஞ்சம் தகுதியை வளர்த்து கொள்..
சரவணன் இதை கேட்டதும் கடுப்பாகி இன்பா நான் சொல்றத கேளு நான் முக்கியமா பேசணும் நீ இப்போ விளையாடிட்டு இருக்காதே..
சரி அப்படி என்ன சொல்லு கேட்போம்.. அது அது அந்த வினய்.. இன்பா, ம்ம் மாமாவா சொல்லு.. சரவணன், வாட் மாமா வா.. பின்ன அக்கா புருஷன் மாமா தானே.. இதை கேட்டதும் சாரவனுக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது. ஹலோ சரவனன் லைன்ல இருக்கிங்ளா இல்ல எதுவும் மலைக்கு போயிடீங்களா..
சரவணன்,வாட் ரஃபிஸ் டாக்.. டேய் நீ முதலில் வந்த விஷயத்தை சொல்லு.. எனக்கு பேசி வாய் வலிக்குது.. சுபாவுக்கு அந்த வினய் என்று சொல்ல வர இன்பா சோம்பல் முறித்து கொண்டே ஓ எங்களுக்கு நல்லா தெரியும் அவங்க ஜோடி பொருத்தம் சும்மா நச்சுனு இருக்கு தான.. இதை கேட்டு கடுப்பான சரவணன் இன்பா நேரில் பார்த்து உன் கிட்ட பேசணும்..
ம்ம் அதை அப்புறம் சொல்றேன் எனக்கு இப்போ தூக்கம் வருது அதனால் உன்னை கட் பண்றேன் என்று கட் செய்தான்.
அவன் போன் வைத்ததும்.சரவணா பார்க்கிறேன் டா உன்னை இந்த எட்டு மாசமும் எப்படி அலைய விடுகிறேன் அப்டின்னு மட்டும் பாரு இது கொஞ்சம் தான் டா..
இன்பா இன்னிக்கு நாள் நல்லா இருக்கே மம் இன்னிக்கி என் பேபி வீட்டுக்கு வர போறா..
தொடரும்…
Episode 135,
இன்பா காலை தான் வீடு வந்தாலும் இன்று அவள் வருகிறாள் என்பதால் கொஞ்ச நேரம் மட்டும் ஓய்வு எடுத்து விட்டு தன்னை தயார் செய்து கொண்டான்.அவள் வரும்போது இன்னும் அழகாக கம்பீரமாக இருக்க வேண்டுமே.
வசுமதி அசைவ உணவுகள் அனைத்தும் அவரே தயார் செய்தார். ரவி வீட்டில் இல்ல முக்கியமான மீட்டிங் இருப்பதால் பெங்களூர் சென்று விட்டார். சுபா, இன்பா, வசுமதி மூவர் மட்டும் இருந்தனர்.
இன்பா மித்ரனுக்கு அழைத்தான் மச்சி வீட்டுக்கு வாயேன்.. மித்ரன், டேய் எனக்கு அங்க என்னடா வேலை உன் மச்சான் வருண், விவேகா, அதிதி இவங்க வராக தானே.. இன்பா, அவன் மச்சான் அப்டின்னா நீ எனக்கு கூடிய சீக்கிரத்தில் மாமா ஆக போற டா…மித்ரன் அதிர்ச்சியாய் என்னடா சொல்ற விவேகாவை என்ன பண்ண… டேய் அறிவு கெட்டவனே நான் சும்மா சொன்னேன் அவள் கிட்ட இது எல்லாம் அவ என்னை குரல் வளைய நசுக்கி கொன்றுவா மச்சி நீ இப்போ வர போறியா இல்லையா… நான் வரல டா.. இன்பா, நீ வர தட்ஸ் ஆல் என்று சொல்லி போன் வைத்தான்.
இங்கே விவேகா கங்காவிடம் அம்மா நான் போகல நீ வருண் அதி மூனு பெரும் போயிட்டு வாங்க.. அவர், விவேகா காலேஜ் போனதில் இருந்து இன்னும் அடி வாங்கவே இல்ல அதனால் சொல் பேச்சு கேட்காமல் எதித்து பேசுகிறாயா… மா நான் எதுக்கு போகனும் நீ ஆதியை அதிக்கு துணையா அனுப்பு அப்படி இல்லை நீ போயிட்டு வா இன்னும் ரெண்டு நாளில் காலேஜ் ஓபன் ஆகுது எனக்கு சரவணன் அண்ணா நிறைய வேலை கொடுத்து இருக்காங்க என்னால் போக முடியாது.
கங்கா, நான் இப்படி இருப்பதால் தான் போகலன்னு சொல்றேன் முதன் முதலாக உன் அண்ணியை கூப்பிட்டு இருக்காங்க யாரும் கூட வராமல் தனியா போனால் என்ன நினைப்பாங்க சொல்லு அவ சுமங்கலி பொன்னு இப்படி இருக்குற நான் எப்படி என்று அவர் கண்களில் கண்ணீர் வர உடனே சரி சரி அழ வேண்டாம் நானே போறேன்.. என்று சொல்லி அவள் கிளம்ப தயாராக சென்றாள்.
வருண், அதிதி இருவரும் கிளம்பியதும் நேராக கங்காவை அழைத்து செல்ல வந்தனர். வருண், அம்மா கிளம்பி விட்டீர்களா.. அதிதி, அத்தை நானும் மாமாவும் ரெடி சீக்கிரம் வாங்க காலையில் இருந்து ரெண்டு தடவை இன்பா அண்ணா கால் பண்ணி விட்டார்கள்.விவேகா இதை கேட்டு கொண்டே தலையை உலர்த்தி கொண்டே வந்தாள்.
அதி, ஹே என்ன இன்னும் நீ கிளம்ப வில்லையா.. விவேகா, ஹே அது இருக்கட்டும் டி என் அண்ணா ஆபீஸ் போனதுக்கு அப்புறமும் நீ அதுக்கு அப்புறம் மெதுவா தான் தூங்கி எழுந்து வரயாமா.. இதை கேட்டதும் வருண் அங்கு இருந்த சோபாவில அமர்ந்து செய்தி தாலை படிப்பது போல் வைத்து கொண்டான் எங்கோ பார்க்க அதிதி கன்னம் எல்லாம் சிவக்க என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு முழிக்க உடனே கங்கா ஹே விவேகா சீப்பு எடுக்கவா இல்ல தோசை திருப்பி கரண்டி எடுத்து வரவா வாய மூடு டி அதியை மரியாதையா கூப்பிடு… என்று உள்ளே இருந்து சத்தம் வந்தது.
அம்மா நான் தூங்கினால் மட்டும் என்னை திட்டுர இவள் மாமியார் வீட்டிலும் ஜாலியாக தூங்குகிறாள். எல்லாம் என்னோட நேரம் என்று உதட்டை சுழித்து கொண்டே உள்ளே சென்றாள். கங்கா வெளியே வந்து எதுவும் கேட்காதது போல் அதி நான் உனக்கு பூ கட்டி வச்சு இருக்கேன் இந்தா வச்சுக்கோ.. ஃப்ரிட்ஜ் ல இருக்கு போய் எடுத்து வா.. மம் சரி அத்தை என்று அவள் மனம் கொஞ்சம் அமைதியாகி சென்றாள்.
வருண், அம்மா நீங்க இன்னும் ரெடி ஆகலயா.. நான் எதுக்கு நீங்க போயிட்டு வாங்க விவேகாவை கூட்டி போ.. அவன் கோபமாக என்ன மா வாங்க மா போயிட்டு வரலாம்.. இல்ல தம்பி சொல்றத கேளு நீயும் அதிதி யும் போயிட்டு வாங்க நான் எனக்கு வர சங்கடமா இருக்கு இதுக்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் அம்மா சொன்னா கேட்கணும்.. அதிதி, அத்தை கிளம்புங்க போலாம்..
இல்ல அதி நான் ஆதியை வர சொல்லி இருக்கேன் நீங்க நாலு பேரும் போயிட்டு வாங்க..
அதி, அத்தை வாங்க.. நான் சொல்றதை கேளு என் செல்லம் தானே.. அத்தை அப்போ நான் போகல மாமா சொல்லுங்க.. கங்கா, அதி நான் இப்படி எல்லாம் போக கூடாது அவங்க பெரிய இடம் நீ சுமங்கலி பொண்ணு நீயும் வருணும் போயிட்டு வாங்க.. அத்தை சொல்றதை கேளு மா.. அதி கண்களில் கண்ணீர் வர.. கங்கா, என் செல்லம் எதுக்கும் அழ கூடாது நான் இங்கே தான் இருக்க போறேன்.
விவேகா வெளியே வரும்போது அவர்கள் இருவரும் கட்டி கொண்டு இருப்பதை பார்த்து அம்மா நான் பேசாமல் மாமச்சி வீட்டுக்கு போயிடறேன் இங்கே என்னால் நீங்க பண்றது எல்லாம் பார்க்க முடியல..
கங்கா, இப்போ என்ன டி உன்னை பண்ணேன்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க அவளை கொஞ்சிட்டு இருக்க நான் அங்கே போனால் மாமச்சி அத்தை எல்லாம் உன்னை விட என்னை கொஞ்சுவாங்க அப்புறம் முக்கியமான விஷயம் இவள் அங்கே இல்ல எனக்கு ஜாலி தான்..
அதிதி, மாமா அவள் என்னை என்ன சொல்றா பாருங்க .. என் அண்ணாவையும் என்னையும் பிரிக்க பார்க்கிரியா டி.. கங்கா அவளின் காதை பிடித்து திருகி ஹே அண்ணி சொல்லு பிச்சிடுவென் அங்க போறியா நீ எங்கேயும் போக கூடாது என்று சொல்லி சீப்பில் ரெண்டு அடி வைக்க வர உடனே
அதி, அத்தை விடுங்க அவ சின்ன பொன்னு விவேகா உடனே அழுவது போல் முகம் வைக்க..
வருன், அம்மா விடுங்க சொன்னால் சொல்லிட்டு போறா..
கங்கா, அது என்ன பழக்கம் இவளை கேட்க ஆள் இல்லன்னு துளிர் விட்டு போச்சு இப்போ இருந்து இனி அதியை அண்ணின்னு தான் கூப்பிடனும். இல்ல அடுத்து சூடு வைப்பேன்..
விவேகா அவள் அம்மா மிகவும் கோப படுவதை பார்த்து சரி நான் இனி அண்ணின்னு கூப்பிடுறேன். என்று சொல்ல இங்கே திரும்பி நில்லு பூ வைத்து போ.. விவேகா கோபமாக எனக்கு ஒன்னும் வேண்டாம் நீ உன் மருமகளுக்கு வைத்து விடு என்று சொல்ல ஹே இந்த திமிர் அப்படியே உன் அத்தை கிட்ட இருந்து வந்து இருக்கு டி.. இதை கேட்டதும் கண்கள் கலங்கி விட அதி, அத்தை சும்மா திட்ட வேண்டாம் கொடுங்க வா சின்ன குட்டி என்று சொல்லி அவளுக்கு பூ வைத்து மனம் தேற்றி மூவரும் சொல்லி கிளம்பினர்.
அவள் சென்றதும் கங்கா நல்ல வேளை இவங்க ரெண்டு பேரையும் தனி குடித்தனம் வைத்தேன். இந்த விவேகாவுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லயே எப்படி நாளைக்கு கட்டிகிட்ட இடத்தில இவளை சமாலிப்பாங்க.. அய்யோ நல்ல வேலை நம்ப அண்ணா வீட்டுக்கு தான் போக போறா இவள் வாய் மட்டும் ஓய மாட்டிங்குதே..
விவேகா அவர்கள் இருவரிடமும் பேசாமல் முகத்தை தூக்கி கொண்டு வர வருண் ஆதிக்கு போன் செய்தான். மாமா நான் கேட் கிட்ட இருக்கேன் இன்னும் 5 நிமிடத்தில் வந்து விடுவேன் என்று சொல்ல அதி, விவேகா செல்ல குட்டி நம்ப வீட்டு சின்ன குட்டி அத்தை சொன்னால் சொல்லிட்டு போறாங்க நீ எப்பவும் போல கூப்பிடு.. அவள் பேசவே இல்லை.. அதற்குள் ஆதி வந்து விட்டான். அதி ஆதியிடம் அங்கு நடந்த விஷயம் அனைத்தும் சொல்ல
ஆதி, ஹே இந்தா உனக்காக அப்பா தேன் மிட்டாய் வாங்கி வந்தாங்க.. எனக்கு வேண்டாம் உன் அக்கா ரொம்ப நல்லவங்க நான் கெட்டவள். என் அண்ணா என் கிட்ட முன்ன மாதிரி பேசவே மாட்டிகிறான்.. வருண், விவேகா நீ தான் வீட்டு பக்கம் வராதே இல்ல.. அது நீ தான் டா .. என்னை விடு ஆதி நான் போறேன்..
வருண், இரு நான் அம்மாவுக்கு இப்போ போன் பன்றேன்..
ஆதி, மாமா நீங்க முன்னே போங்க பின்னே நான் அவளை கூட்டி வருகிறேன் என்று சொல்லி விட வருண் அதி இருவரும் முன்னே சென்றனர் .
இன்பா ஹாலில் அவளுக்காக டிப் டாபாக தயாராகி காத்து கொண்டு இருந்தான். ஆனால் அங்கே வருண், அதிதி இருவர் மட்டும் உள்ளே வர இன்பாவுக்கு புஷ் என்று காற்று போன பலூன் போல் ஆகி விட்டான். அதிதி வருணின் பின்னால் பயந்து கொண்டே வர உள்ளே இருந்து வசுமதி வந்தார். அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு உள்ளே கூட்டி வந்தார். இன்பா வுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இப்போது என்ன செய்ய முடியும். வருண்… என்று அழைத்தான் அவன் பழக்க தோஷத்தில் சல்யூட் அடிக்க இன்பா, இது வீடு கிரவுண்ட் இல்ல அண்ட் ஸ்டேஷன் இல்ல சோ நார்மலா இருக்கலாமே.
அதிதி உடனே அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். வசுமதி, வருண் எங்கே உன் அம்மா வரல… அம்மாவுக்கு கொஞ்சம் முக்கியமா வேலை அதனால் தான் வரல மேம்..
அவர், அப்போ வாயாடி எங்கே? இன்பா ஆவலாக அவன் என்ன சொல்ல போகிறான் என்று பார்க்க யாரு மேம்..
வசு சிரித்து கொண்டே சாரி எங்க உன்னோட தங்கை விவேகாவை காணோம்..
இதை கேட்டதும் வருண் அதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள வெளியே இருந்து உள்ளேஆதி, விவேகா இருவரும் வந்தனர்.
வசு, விவேகா இங்க இருக்க வீட்டில் இருந்து இந்த வீட்டுக்கு வர உனக்கு இவளோ நேரமா… அவள் இல்ல மேம் கொஞ்சம் லேட் ஆகி விட்டது.
அதி, மேம் உங்களுக்கு ஏற்கனவே விவேகாவை தெரியுமா. இன்பா, வருண் தான் என் மாம் கூட வேலை செய்கிறான். மேம் சொல்றான் நீங்களும் என் மாம்மை மேம் சொல்றீங்க என்று அவன் அதியை பார்த்து சொல்லிட அவள் வருண், இன்பா, வசு மூவரையும் மாறி மாறி பார்த்து கொண்டே இப்போ எப் எப்படி கூப்பிடறது..
அம்மா சொல்லி கூப்பிடலாம் தானே என்று மேலே இருந்து குரல் வர திரும்பி பார்க்க அங்கே சுபா சிரித்து கொண்டே கீழே வந்தாள்.
ஆதி விவேகா காதில் இன்னிக்கு இன்பா சாரு பாண்ட் பார்மேஷன் பண்றாரு டி.. ஹே வாய மூடு டா…
உடனே வருண் எழுந்து நிற்க, வசு, மம் என் பொண்ணு சொல்றது சரி தான் நீ அம்மா சொல்லி கூப்பிடலாம் இப்போ எதுக்கு வருண் எழுந்து நிற்கிற அவள் உங்களுக்கு அக்கா மாதிரி தான் முதலில் உட்காரு என்று சொல்ல அவன் அமர்ந்தான்.
வசு விவேகாவை பார்த்து மேம் எப்போ உள்ளே வர போறீங்க புதுசா வந்த மாதிரி அங்கேயே நிர்க்கரீங்க.. அவள் அப்படி இல்ல மேம் என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தாள் பின்னால் ஆதி வந்ததும் வசுவை பார்த்து வணக்கம் சொல்ல.. வசு, அப்போ உன் அக்கா தான் அதிதியா… மம் ஆமா மேம்..
ஆதி, அதி, வருநிடம் மேம், இன்பா சார் ரெண்டு பேரும் கிளாஸ் எடுக்க காலேஜ் வந்து இருக்காங்க..
வசு, சரி இன்னும் ஒரு கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க நான் உங்களுக்கு குடிக்க எதுவும் எடுத்து வருகிறேன் என்று உள்ளே சென்றாள்.
ஆதி, விவேகா இன்பா சார் உன்னை தான் பார்க்கிறார். டேய் கம்முன்னு இரு.. வசு ஜுஸ் எடுத்து வந்து எல்லாருக்கும் கொடுத்து கொண்டே விவேகாவை பார்த்து காலேஜ்ல தான் ரெண்டு பேரும் ஒன்னா சுத்துவீங்க வீட்டில் கூட ரெண்டு பேரும் பிரியவே மாட்டிங்க போல.. என்று ஆதி விவ்காவை பார்த்து சொல்லிட விவேகாவின் மனம் அய்யோ போச்சு இவன் முன்னாடி இவன் அம்மாவே சொல்லிட்டாங்கலே இப்போ என்ன செய்ய போறான்னு தெரியலயே…!
இப்போது இன்பா கோபத்தில் அவன் அம்மா கொடுத்த ஜூசை ஒரே மூச்சில் குடித்து விட்டு எழுந்து செல்ல எழ.. சுபா, இன்பா எங்கே டா போற இங்கே கம்பனி கொடு என்று அவனை அமர வைத்தாள்.
சுபா, ஹாய் விவேகா என்னை நியாபகன் இருக்கா அப்புறம் காலேஜ் எல்லாம் எப்படி போகுது.. இல்ல மேம் இப்போ செம் லீவு.. ஓ அன்னிக்கே சொன்னேனே அக்கா சொல்லின்னு நீ ஒன்னும் என் கிட்ட வேலை செய்யலயே..
வசு, இன்பாவிடம் என்ன ராகவ் இன்னிக்கு அமைதியா இருக்க.. இன்பா, நம்ம பேசுற பேச்சும் ஒரே ஆளா பேச தான் இவள் வந்து விட்டாளே இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க.. இப்போ நான் என்ன பேசட்டும்.. இன்பா பேசியது சுபா, ஆதிக்கு நன்றாக கேட்க இருவரும் சிரிக்க…
வசு, டேய் அவளுக்கு மட்டும் இது கேட்டது உன்னை உண்டு இல்லன்னு பண்ணி விடுவாள்.
இன்பா, மாம் இன்னிக்கு எல்லாம் அவள் ஆட மாட்டா ஏன் என்று சுபா கேட்க அதான் அவளோட அண்ணன் இருக்கானே.. சுபா, அந்த பையன் உன்னை பார்த்து பயப்படுறான்.அவனை பார்த்து இந்த பொன்னு பயப்படுதா என்னால் நம்ப முடியல.. உனக்கு அவள் பயப்ப்படுற மாதிரி தெரியல டா.. நான் சொன்னதை யோசித்து பார்த்தியா.. என்ன.. லவ் தான்.. யாரை.. இவளை தான்
இன்பா, அவளை அமைதின்னு மட்டும் நினைக்காதே உள்ளே பல உருவம் இருக்கு அவ ஒரு ஜந்து என்று சொல்ல டேய்
இன்பா, மச்சி வாடா என்று அழைக்க வசு, வெண்பா குட்டியை கூட்டி வந்து இருக்கலாமே.. இல்ல மேம் அவ வீட்டில் தூங்கிட்டு இருக்கா.. விவேகா, என்ன தூங்கிராலா அவ மட்டும் ஜாலியாக தூங்குகிறாள் ஆனால் நான் இன்னிக்கு காலையில் இருந்தே எனக்கு நேரம் சரி இல்ல.. என்று அவள் யோசித்து கொண்டு இருக்க மித்ரன், என்ன தங்க்ச்சி எப்படி இருக்க… ம்ம் ஓகே அண்ணா.. என்று சொல்ல
வசு, என்ன விவேகா இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்க.. ஒன்னும் இல்ல மேம் என்று அவள் சொல்ல வருண் ஆச்சரியமாக பார்த்தான் இவளை முன்னாடியே தெரியும் போல நம்ப கிட்ட விவேகா சொல்லவே இல்ல இப்போ நான் இங்கே இருக்கேன்னு ஆக்ட் பண்றா என்று நினைத்து புன்னகைத்தான்
அதிதி, என்னாச்சு விவேகா.. அவள்” ஒன்னும் இல்ல அண்ணி நான் நல்லா இருக்கேன்”.. இதை கேட்டதும் இன்பா, மித்ரன், ஆதி மூவரும் ஷாக் ஆகி பார்த்தனர்.
இன்பா இப்போது கேட்டே விட்டான். என்ன வருண் உங்க தங்கை இவளோ அமைதியா இருக்காங்க இதுக்கும் மேல பேச மாட்டாங்களா.. வருண் உடனே எழுந்து நின்று பதில் சொல்ல வர “வருண்” என்று இன்பா அழைக்க சாரி சார் என்று மீண்டும் அமர்ந்து கொண்டு அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல சார் இன்னும் ரெண்டு நாளில் காலேஜ் அதனால் சோகமா இருக்கா அப்படி தானே மா.. விவேகா, மனதில் நான் எப்போ டா அப்படி சொன்னேன் உங்க கூட இருப்பதற்கு காலேஜ் போறது மேல் என்று நினைத்து கொண்டு மம் ஆமா அண்ணா..
மித்ரன் , மரியாதை எல்லாம் பயங்கரமா இருக்கு.. இதை கேட்டதும் அதி சிரித்து விட விவேகா அவளை கொஞ்சம் முறைத்தாள். என்னாச்சு உன் பேச்சை கேட்க தான் நான் வீட்டில் இருந்து வந்தேன் பேசு விவேகா என மித்ரன் கேட்க
விவேகா அப்போதும் எதுவும் பேசாமல் இருந்தாள். அதி, அவ மனசு சரி இல்ல அப்படி தானே டி..
இன்பா மித்ரனை பார்க்க என்னாச்சு அடி பயங்கரமா. அதி, அப்படி சொல்ல முடியாது ஆனால் அடி இல்ல சீப்புல விவேகா இதை கேட்டதும் அண்ணி கொஞ்சம் அமைதியா இருந்தா நல்லது டேய் உன் அக்கா கிட்ட சொல்லி வை.. என்று ஆதியை பார்த்து சொல்ல இன்பா அவள் பேசிய விதத்தை பார்த்து கண்ணகுழி தெரிய சிரித்தான்.
வசு, சரி வாங்க சாப்பிடலாம்.. வருண், அதிதி இருவரையும் அழைத்து சென்று அமர வைத்து வசு பரிமாறினாள.
மித்ரன், உன் அண்ணா சாப்பிட போயிட்டான்.. நீ கொஞ்சம் பொண்ணா நடிக்க தேவை இல்ல.. இதை கேட்டதும் விவேகா வருண் எங்கு இருக்கிறான் என பார்த்து விட்டு அவள் முகம் சட்டென்று மாறியது.
சுபா, அண்ணன்னா அவ்ளோ பயமா.. என் அண்ணனை பார்த்து எனக்கு என்ன பயம் இவன் அக்கா வந்ததில் இருந்து என்னை யாருமே கவனிக்க மாட்ராங்க அவளை தலையில் தூக்கி வச்சுட்டு சுத்துறாங்க.. அதனால் நான் வீட்டை விட்டு போறேன்..
ஆதி, ஹே அமைதியா இரு என்பது பொல் அவன் கைகளை பிடிக்க இன்பா அதை பார்க்க உடனே சட்டென்று கைகளை எடுத்து கொண்டான்.
அவள் பேசுவதை பார்த்து இன்பா சுபாவிடம் பார்த்தியா அவ வாய் எவ்ளோ பெருசுன்னு.. அவளோ ஆமா இன்பா நான் கூட சாதரணமா நினைத்து விட்டேன்.
உடனே விவேகா இன்பாவை முறைத்து பார்த்து கொண்டு மேம்… சுபா, உடனே அவளை பார்க்க என்ன மேம் ACP சார் என்னை பற்றி தானே உங்க கிட்ட சொல்லிட்டு இருக்காரு..
இல்ல மா.. இன்பா உடனே ஆமா இப்போ அதுக்கு என்ன செய்வ.. வசு மேம் க்காக உங்களை விடுகிறேன் இல்ல சேதாரம் உங்களுக்கு தான் சொல்லிட்டேன்..
சுபா வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள். இன்பா, நானும் உன்னை வருண்க்காக தான் பார்க்கிறேன் இல்லை என்னோட ரிவெஞ் ரொம்ப மோசமா இருக்கும் தெரியும் தானே…
ம்ம் பார்க்கலாம் உங்களுக்கு நியாபகம் இல்லை போல அன்னிக்கு அந்த no comments simply word நான் தான் எழுதினேன். ஆடிட்டோரியம் மொத்தமும் கெத்து காட்டினேன் தெரியும் தானே உங்க ப்ரெண்ட்க்கு ஈகோ ஜாஸ்தி சோ தேவையில்லாமல் என் கிட்ட வைத்து கொள்ள வேண்டாம்.
சுபா, என்ன டா இன்பா அவ சொல்றது எல்லாம் உண்மையா.. மம் ஆமா சுபா அவ வாய் பாரு அது ஸ்கின் ல இல்லாமல் சண்ட் மண்ணுல இருந்தததுண்ணு வச்சுக்கோ இந்நேரம் என்ன ஆகும் ஆதி நீ சொல்லு..
விவேகா ஆதியை முறைப்பது போல் பார்க்க இன்பா டேய் சொல்லு நீ தானே அன்னிக்கு மேடம்க்கு காளர் தூக்கி விட்டு மென்னாடி வந்தீங்க..
சார் அது வந்து இன்பா கோபமாக இப்போ சொல்லு ஆதி இல்ல ரெண்டு பேரும் ராஜ ராஜ சோழன் பாட்டு பாடிகிட்டி கிரவுண்ட சுற்றி வர வேண்டியது தான்..
ஆதி விவி என்னை மன்னித்து விடு என்று சொல்லி சார் மண்ணு வாயாக இருந்தால் கொட்டி போயிருக்கும் இல்லை கரைந்து போயிருக்கும்..
இதை கேட்டதும் சுபா , மித்ரன், இன்பா மூவரும் சிரிக்க விவேகா அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டாள்.
அவள் மித்ரனை பார்த்து அண்ணா…?
தொடரும்…
வெண்ணிலா ud பண்ணிட்டேன் read பண்றவங்க கொஞ்சம் read பண்ணுங்க drs
Episode 136,
இன்பா ஆதியை சொல்ல சொன்னவுடன் ஆதி விவேகாவிடம் சாரி விவி..
இன்பா, டேய் அங்கே என்ன டா மர்மரிங் சொல்லு..
ஆதி அவளை பார்த்து எட்சிலை விலுங்கியவன்.. அதுவே மண்ணில் செய்ததா இருந்தால் இந்நேரம்..
இன்பா, இந்நேரம் சொல்லு..
இந்நேரம் அப்படியே கொட்டி போயிருக்கும் அப்படி இல்லன்னா தண்ணி பட்டால் கரைந்து போயிருக்கும்.. என்று அவன் சொன்னதும்
மித்ரன் உதட்டை கடித்து கொண்டு சிரிப்பை அடக்கிட, சுபா, வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க இன்பா கண்ணகுளி தெரியும் அளவுக்கு இதழ்கள் வளைந்து இருந்தது.
விவேகா, முகத்தை வைத்து கொண்டு மம் நீங்க சொல்றது சரி தான் அவருக்கு ஹீரோயின தானே பிடிக்கும் anti ஹீரோயின பிடிக்க வாய்ப்பு இல்ல..
சுபா, அது யாரு ஹீரோயின் டேய் இன்பா என்ன விஷயம் இவளுக்கு இவளோ விஷயம் தெரிந்து இருக்கு யாரு டா அந்த பொண்ணு..
இன்பா விவேகாவை முறைக்க அவள் அவனை பார்த்து ஒற்றை புருவம் தூக்கி சொல்லவா சார்..
என்ன என்ன சொல்ல போற அப்படி எதுவும் இல்ல சுபா இவ சொல்றது எல்லாம் நம்பாத..
சுபா மனதில் இவளோ உரிமையா அவ இவ அப்டின்னு பேசுகிறான். என்று நினைத்து கொண்டே அவள் விவேகாவை பார்த்து நீ சொல்லு விவேகா..
விவேகா அவள் காதை தேய்த்து கொண்டே அக்கா அதை நான் சொல்றத விட மித்ரன் அண்ணா சொல்லுவாங்க..
இன்பா மித்ரனை பார்க்க டேய் எனக்கு ஒன்னும் தெரியாது அவ என்னை வேணும்ன்னு கோர்த்து விட்டுட்டா.. அண்ணா நீங்க எனக்கு ஃபேவரா இருந்தால் பல நன்மை வந்து சேரும் நல்லா யோசி்ன்க..
அவன் என்னமா நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரியல..
அந்த லவ் லெட்டர் பற்றி சாரோட அக்காவுக்கு சொல்லுங்க.. ஓ அதுவா.. என்ன மித்ரன் என்ன லவ் லெட்டர்..
இன்பா உடனே அங்கு இருந்து எழ விவேகா,”டேய் உட்காரு டா” அப்படி தானே அக்கா சொல்ல வந்தீங்க..
இதை கேட்டு நால்வரும் அதிற்சி ஆகி பார்க்க
விவேகா சுபாவை பார்த்து அக்கா நீங்க இப்போ அதை தானே சொல்ல போறீங்க சொல்லுங்க அக்கா என்று பேச்சை மாற்ற..
சுபா, ஹேய் என் என் தம்பியை டா சொல்லிட்ட அக்கா நான் சொல்லல உங்களை சொல்ல சொன்னேன் நான் போய் எப்படி என்னை விட 6 வயசு பெரிய வயசான பையன் வேணாம் ஆள் சரி தானே மம் சரி தான் அவரை போய் நான் எப்படி மரியாதை இல்லாமல் கூப்பிட முடியும்.
இன்பா வேறு வழி இல்லாமல் அமர என்னடா நீயும் எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்க..
மித்ரன் , என்ன மச்சி விவேகா ஃபுல் ஃபார்ம் ல இருக்கா போல..
என் வயச பத்தி பேசிட்டா டா என்று சொல்லி இன்பா, ஹே கொஞ்சம் அடங்கு டி … என்று சொல்ல
சுபா, ஆதி, மித்ரன், விவேகா மூவரும் ஷாக் ஆகி பார்க்க சொல்லு ஆதி இப்போ இதை தானே சொல்ல வந்த சரி தானே..
ம்ம் ஆமா சார் ஹே கொஞ்சம் அமைதியா இரு டி என்று ஆதி வேறு வழி இல்லாமல் சொல்ல..
சுபா, இன்பா இது நீ தானா இப்படி எல்லாம் நீ பேசுவியா..
இன்பா, வாட்ஸ் கோயிங் ஆன்?
விவேகா, என்ன டி யா!
இன்பா அவன் தலையை கோதி கொண்டே ஆமா டி நீ தான் என்னை விட 6 வயசு சின்னவள் அப்டின்னு சொல்லிட்டு இருக்க இனி உனக்கு எதுக்கு டி மரியாதை என்னை விட பெரியவங்களுக்கும் அமைதியான என்று நிறுத்தி அதாவது அவங்க பொண்ணா இருக்கணும் என்று சொல்லி இனி நான் இப்படி தான் டி கூப்பிட போறேன்..
சுபா இன்பா பேசுவதை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தாள். இவன் நம்ப கிட்ட எதோ மறைக்கிறான். என்று அவளுக்கு தோன்றியது.
சுபா, என்ன டா வார்த்தைக்கு வார்த்தை டி சொல்ற…
இன்பா, அவ என்னை எப்படி டா சொல்லலாம் நீ கேட்க மாட்டியா டா சொன்ன வாயை நான் சும்மா விட மாட்டேன் உனக்கு இருக்கு டி…
விவேகா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்து கொண்டே அக்கா அந்த லவ் லெட்டர் சொல்லட்டுமா வேனாவா!
சுபா, சொல்லு.. விவேகா, இதை விட இன்னும் நிறைய தெரியும் அக்கா நான் சொல்றேன் நம்ப எதிரி ய பற்றி நம்ப இன்ச் இன்ச்சா தெரிந்து வைத்து இருக்கணும்… சோ இன்னும் நிறைய ஸ்டோரி தெரியும் அக்கா அதில் முதலில் ஸ்வீட் ல இருந்து ஆரம்பிக்கிறேன்.
அவங்க பேரு ஸ்வீட்டி நான் தான் அந்த லவ் லெட்டரை படித்தேன்.. அப்டியா..
இன்பா, விவேகா கொஞ்சம் அமைதியா இரு இல்ல உன் அண்ணா என் கிட்ட தான் வேலை செய்கிறான் அப்புறம் பின் விளைவு மோசமா இருக்கும்.
விவேகா, அப்போ ஒத்துக்கோங்க…. வாட்.. நீங்க தோர்த்து போயிட்டீங்க நான் தான் வின் பண்ணேன்..
ஐ கான் ட்… அப்போ நான் சொல்லுவேன்.. சுபா, என்ன ஒத்துக்க சொல்ற என்ன டா இன்பா ரெண்டு பேரும் புதிரா பேசிட்டு இருக்கீங்க..
மித்ரன், அது ஒன்னும் இல்ல சுபா எப்போ பார்த்தாலும் இவங்க ரெண்டு பேரும் சண்டை தானே போடுறாங்க அதை தான் சொல்றா..
இன்பா, முடியாது சொல்லிக்கோ இதுக்கு நான் எப்படி ரிவென்ஜ் எடுக்கிறேன் அப்டின்னு மட்டும் பாரு என்று சொல்லி அவன் சுபாவை பார்த்து மம் ஆமா சுபா அந்த சுவீட்டி அது வேற யாரும் இல்ல அந்த இனியாள் தான் எனக்கு லவ் லெட்டர் எழுதினா.. அதை இவள் தான் ஆடிட்டோரியம்ல எல்லார் முன்னவும் படித்து காட்டினாள். போதுமா…
சுபா, அப்போ ஏன் டா என் கிட்ட சொல்லவே இல்ல.. இன்பா, நீ எல்லாமே என் கிட்ட சே ர் பன்றியா நான் ஏன் பண்ணனும்
விவேகா, அப்புறம் அந்த கவ்யா பற்றி சொல்லுங்க.. சார் இதை விட அது ரொம்ப இன்டர்ஸ்டா இருக்கும் மித்ரன் அண்ணா நீங்க பாப் கான் அதுவும் இன்பா சாரு அதனால் ஸ்வீட் பாப் கார்ன் வாங்கி வந்து விடுங்கள் அவரு அந்த கதையை சொல்லட்டும் நம்ப சாப்பிட்டு கிட்டு கேட்போம் போர் அடிச்சா தூங்கிடலாம்…
இன்பா, சுபா அழகா என்னை மாதிரி இருந்தால் ஆயிரம் புரோபோசல் வர தான் செய்யும் அதை அப்படியே தூசி மாதிரி தட்டி விட்டு போயிடனும்..
விவேகா, ச்சீ அப்போ அழகு அப்டின்னா அது இவர் முகம் தானா என்று சொல்ல மித்ரன் சிரித்து கொண்டே
மித்ரன், இது நல்லதுக்கு இல்ல ரெண்டு பேரும் ஓவரா உண்மைய பேசுறீங்க அப்புறம் வேற உண்மை வந்திட போகுது..
சுபா, இன்பா இன்னும் என்ன என்ன மறைத்த சொல்லு டா இதுக்கு தான் காலேஜ் சும்மா சும்மா போறியா..
விவேகா, இப்போது சரி சார், மேம், நாங்க கிளம்புரோம் வந்த வேலை சிறப்பா முடிந்தது. என்று அவள் எழ.. இன்பா, ஆதி அவளை உட்கார சொல்லு இங்கே இருந்து அவ இன்னிக்கு இந்த இடத்தை விட்டு நகர கூடாது.. விவேகா எழுந்து நின்று உங்க பேச்சுக்கு அவன் வேனா பயப்படுவான் நான் ஏன் பயப்படனும் நான் எழுவென் இப்போ கிலம்புவேன்… என்று அவள் செல்ல
வருண் என்று இன்பா அழைக்க விவேகா இங்கு என்ன நடக்கிறது என்பதை போல் அமைதியாக அமர்ந்து கொண்டு பவ்யமாக இருந்தாள்.
அவன் மீண்டும் அட்டென்சன் போட்டு விட சாப்பிட்டு முடிச்சாச்சா.. ஹான் சார் இதோ என்று அவன் சொல்ல வசுமதி, வருண் இனி நீ எழுந்த என் கிட்ட அடி வாங்க போற என்று மிரட்டினார்.
சுபாவுக்கு விவேகா, இன்பா மேல் கொஞ்சம் அவர்கள் பேசுவது வித்தியாசமாக இருந்தது. வருண், அதி இருவரும் சாப்பிட்டு முடித்து வர விவேகா , மித்ரன் , சுபா, இன்பா மூவரும் அமர்ந்து கொண்டனர். ஆதி, விவேகா இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட
இன்பா, என்ன ஆதி உங்க வீட்டில் இன்னிக்கு காலையில் உப்மா வா.. அவன் ஆமா சார்.. மித்ரன், அப்போ நீயும் உப்மாவா என்று விவேகாவை பார்த்து கேட்க அவள் இன்னிக்கு இட்லி உப்மா, பொடி தோசை என்று சொல்ல
வசுமதி, ஹே விவேகா எனக்கு செஞ்சு தரேன்னு சொன்ன..
மித்ரன் , ஆன்டி அதுக்கு என்ன இனி நீங்க டெய்லியும் சாப்பிடலாம்.. இதை கேட்டதும் விவேகாவுக்கு புரை எறிட மித்ரனை இன்பா முறைத்து விட்டு நீயே சமாளி டா என்று சொல்ல
வசுமதி, என்ன..
அது அது வந்து இப்போ நான் என்ன உங்க கிட்ட சொல்றது. இன்பா நீயே சொல்லிடு..
இன்பா, நான் என்ன சொல்றது நீ தானே சொன்ன எனக்கு உப்மாவே பிடிக்காது அதை சாப்பிடரவங்கள சுத்தமா பிடிக்காது…
விவேகா, அது ஒன்னும் இல்ல மேம் நான் இங்கே தானே இருக்கேன் அதுக்காக அண்ணா அப்படி சொல்லி இருப்பாங்க உங்களுக்கு உப்மா நான் செய்து கொண்டு வரேன்.. என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள்.
வசுமதி, ஓ அப்படியா அப்போ சரி ராகவ் அப்பாவுக்கு பிடிக்கும் நீ எப்டின்னு சொல்லு நான் செய்து பார்க்கிறேன்.
இன்பா, மாம் இவள் பெரிய குக்கா நீங்க யூ டியூப் பார்த்து செஞ்சு போடுங்க..
வசுமதி, நீ இப்படியே பேசிட்டு இரு டா நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து செய்தால் நீ அடங்குவ..
மித்ரன் , ஆன்டி அதுவும் உப் என்று அவன் எதோ சொல்ல வர அதற்குள் இன்பா அவன் கால் விரலை மிதித்து இருந்தான்.
இன்பா, டேய் தயவு செய்து என்னை நிம்மதியா சாப்பிட விடுடா நான் அவ கிட்ட பேசியே பாதி டையர்டு ஆகிட்டென்..
சுபா, விவேகா எனக்கும் சொல்லி கொடு.. இன்பா, ஏன் வினய் உப்மா தான் சாப்பிடுவாரா.. அவள் டாட்க்கு பிடிக்கும் அதனால் எனக்கும் பிடிக்கும்.. என்று அவள் தலை குனிந்து கொண்டே சாப்பிட்டாள்.
இன்பாவுக்கு அதற்கான காரணம் தெரியும் ஆனால் வேண்டும் என்றே கேட்டு வைத்தான். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் விவேகா வசுமதியை அமர வைத்து அவருக்கு உணவு பரிமாறினாள்.
வசுமதி, உனக்கு எல்லாம் பிடித்து இருந்ததா.. மம் சூப்பர் மேம் செம்மையாக சமைக்ரீர்கள். என்று சொல்லி கொண்டே அவள் மேம் நான் நேற்று இன்பா சாரை பேசியது தவறா இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் பேசி விட்டேன்.
வசுமதி சிரித்து கொண்டே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவன் அப்படி தான் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது நீ பேசும் போது அவன் அமைதியா இருந்ததே அதிசயம் அவன் அப்பா இருக்கும் போது ரெண்டு பேரும் சரிக்கு சரியா சண்டை போடுவாங்க.. நான் ஒன்னும் நினைக்கல நீ எதுவும் அவனை தவறா நினைக்க வேண்டாம்.
இன்பா, டேய் எங்கே டா அவளை காணோம். மித்ரன், அவ மாமியார்க்கு சர்வ் பண்ணிட்டு இருக்கா டா.. இன்பா உணவு மேஜையை எட்டி பார்க்க இருவரும் சிரித்து பேசி கொண்டே விவேகா அவர்க்கு பரிமாறினாள். இன்பா அதை அப்படியே போட்டோ எடுத்து கொண்டான்.
வசுமதி சாப்பிட்டு முடித்ததும் வெளியே வந்து வருண் , அதிக்கு எடுத்து வைத்து இருந்த புது துணிகளை ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதோடு கொடியில் கோர்க்க லட்சுமி தங்க நாணயம் இரண்டு கிராம் மொத்தம் நான்கு காசுகள் இருந்தது.
அதை அவர்கள் ஒரு வித தயக்கமாக பார்க்க வசுமதி அவர்களிடம் கொடுத்து இருவரையும் வாழ்த்தி அனுப்பினார். இன்பா, வருண் என்று அழைத்து அவனுக்கு தன் மச்சான் என்ற மறைமுக உரிமையில் அவன் பெயர் பதித்த ஒரு தங்க காப்பை கொடுக்க சார் வேண்டாம் சார் என்று அவன் தயங்கி செல்ல இதுல உன் பேரு போட்டு வாங்கியாச்சு சோ இப்போ நீ வாங்கி தான் ஆகனும் என்று சொல்லி அவன் கைகளில் போட்டு விட்டான்.
இன்பா, மித்ரன் இந்தா இது உனக்கு என்று வருண்க்கு கொடுத்தது போலவே அவன் கைகளில் போட்டு விட அவன் இதை எதிர்பார்க்க வில்லை உடனே இன்பா வை அணைத்து கொண்டான். வசுமதி ஒரு சம்படத்தில(பாத்திரம்) அந்த உணவுகளை எடுத்து வைத்து கங்காவுக்கு கொடுத்து விட்டார்.
விவேகா அவர்களின் உபசரிப்பு பார்த்து விட்டு அவரிடம் மேம் ரொம்ப அதிகமா இருக்கு இது எல்லாம்…. இதுக்கு நாங்க என்ன செய்ய போறோம்ன்னி தெரியல….என்று முகத்தை சங்கடமாக வைத்து கொண்டு பெரிய பெண்ணை போல் பேசிட அவர், நீ இதே போல் எப்பவும் பேசு வாயாடி பொன்னு மாதிரி அது தான் எனக்கு வேணும்..
வருண், சார் நாங்க கிளம்புகிரோம்.. அவர்கள் மூவருக்கும் இவ்வளவு நேரம் இருந்த கலகலப்பு இப்போது செல்வதை போல் தோன்ற வசுமதி, வருண் நீ தவறா நினைக்க வில்லை என்றால் விவேகா, ஆதியை விட்டு போயேன் அவங்க சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமே.
தொடரும்…
Episode 137,
வருண் கிளம்புகிறோம் என்று சொன்னதும் வசுமதி அவனிடம் விவேகா ஆதி இங்கேயே இருந்து விட்டு சாயங்காலம் வரட்டுமே என்று சொல்ல சுபா, மம் விட்டு போ பா இங்கே தானே வீடு இருக்கு வருண் விவேகாவை பார்க்க.. அவள் மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு இருக்க
மித்ரன், டேய் என்னமா பெர்ஃபார்ம் பண்றா பாரேன்… அவன் அவ நடிப்பு கள்ளி டா சரியான கேடி.. சரி தான் மச்சி.. என்று இருவரும் முணுமுனுத்து கொண்டு இருக்க வருண், இல்ல மேம் உங்களுக்கு சிரமமா இருக்கும்.. விட்டு போ வருண் என்று வசுமதி மீண்டும் சொல்ல உடனே விவேகா இருந்துட்டு வரியா.. அவள் நீ எது சொன்னாலும் எனக்கு ஓகே அண்ணா.. இதை கேட்டு அவர்கள் அனைவரும் அசட்டு புன்னகை சிந்தினர். அதிதி, சரி மா நாங்க போயிட்டு வரோம்.. ஆதி வீட்டுக்கு வந்துட்டு போ விவேகா பாய் டி.. மம் சரி அண்ணி போயிட்டு வாங்க.. என்று சொல்ல.. வருண் விவேகாவை திரும்பி பார்க்க அண்ணா வரட்டுமா… என்று சொல்ல இல்ல நீ ஈவ்னிங் வா என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
வசுமதி, விவேகா உங்க அண்ணா மேல அவ்ளோ பயமா.. இல்ல மேம் அவன் என் அம்மா கிட்ட போய் சொல்லிடுவான். அப்புறம் யாரு திட்டு வாங்கறது அவனுக்கு என்னை விட்டு போக மனசே இல்ல அது தான் திரும்பி திரும்பி பார்த்து கிட்டு போறான். சரி உள்ளே வா இன்னிக்கு சாயங்காலம் தானே போக போறீங்க.. என்று சொல்லி அழைக்க ஆதி, உனக்கு உன் மாமியார் வீட்டில் வேலை எனக்கு இங்கே என்னடி வேலை நான் வீட்டுக்கு போறேன்.
விவேகா மித்ரன் கிட்ட அண்ணா வெண்பாவை வர சொல்லுங்க அவ மட்டும் ஜாலியாக தூங்குகிறாள். உடனே மித்ரன் கால் செய்ய அவள் எடுக்க வில்லை. நான் பண்ணா எடுக்க மாட்டா மா.. விவேகா ஆதி உன் போன் கொடு.. ஹே என்னை எதிலயும் மாட்டி விட்டு விடாதே.. என்று காதுக்கு அருகில் சொல்ல சரி நான் போய் கூட்டி வரேன்.. இன்பா , நான் பண்ணா எடுப்பா பண்ணட்டுமா.. மம் பண்ணுங்க சார்.. அப்போ நீ சாரி சொல்லு.. அவ வர தேவையே இல்லை நான் மேம் கிட்ட வாங்கி பண்றேன். மித்ரன், என்னடா எதுக்கு சாரி.. நாங்க ரெண்டு பேரும் இப்போ சண்டையில் இருக்கோம் டா சோ யாரு சாரி சொல்றாங்களே அவங்க லூசர்..
சுபா, ஹே அங்கே என்ன பேச்சு இங்கே உள்ள வாங்க.. விவேகா, மேம் வெண்பா வுக்கு கால் பண்ணி வர சொல்லுங்க மேம் அவள் வந்தால் இங்கே எல்லார்க்கும் ஜாலியா இருக்கும். வசுமதி, ராகவ் வெண்பாக்கு கூப்பிடு.. மம் சரி மாம் என்று உடனே அழைத்தான். வீட்டுக்கு வாயேன் வெண்பா.. இல்ல அண்ணா எனக்கு ரொம்ப தூக்கமா வருது.. விவேகா, மேம் போனை என் கிட்ட கொடுக்க சொல்லுங்க மேம் நான் பேசுகிறேன். இன்பா, அவ வரலன்னு சொல்லிட்டா.. நான் கூப்பிட்டால் நிச்சயம் இப்போ வருவா.. வர மாட்டா.. வருவா என்று இன்பா விவேகா இருவருமம் மாறி மாறி சொல்லிட ராகவ்.. என்று வசுமதி சொன்னதும் இருவரும் அமைதியாகி விட இன்பா, மாம் இவளுக்கு வாய் மட்டும் இல்லன்னா நாய் தூக்கிட்டு போயிடும்.. மேம் அவரு ரொம்ப டூ மச்சா பேசுகிறார்.
வசுமதி, ராகவ் நீ போனை விவேகா கிட்ட கொடு அவள் கூப்பிடட்டும்.. இன்பா வெண்பாக்கு மீண்டும் அழைத்து வெண்பா நீ தூங்கி ரெஸ்ட் எடு வர வேண்டாம் என்று சொல்லி விவேகா கிட்ட போன் கொடுக்க விவேகா, ஹே இங்கே மேம் வீட்டுக்கு வாடி.. வெண்பா, வாய்ப்பே இல்ல டி ராசாத்தி எனக்கு பயங்கர தூக்கதில் இருக்கேன் காலேஜ் போகும் வரை பெட்டில் இருந்து எழ மாட்டேன்..
விவேகா, ஓகே டி நான் ஆதி , மித்ரன் அண்ணா.. வெண்பா, ஹே ஹே ஒரு நிமிடம் இப்போ என்ன சொன்ன.. நானும் மித்ரன் அண்ணா, சுபா அக்கா, மேம், ACP ஸார் எல்லாம் இருக்கோம்.. வெண்பா, ஆதி உன் கூட தான் இருக்கானா.. விவேகா, விவேகா எவ்வழியோ என் சிசியனும் அவ்வழி.. என்று சொல்ல அங்கு உள்ளவர்கள் அவள் பேசும் விதத்தில் சிரிக்க.. ஓகே நான் 5நிமிடத்தில் அங்கே இருப்பேன்.
சரவணன், வெண்பாவுக்கு விவேகா போன் செய்ததை எல்லாம் கேட்டு அப்போ இன்பா வீட்டில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டான். இன்னிக்கு இப்போவே போய் அவனை பார்த்து பேசி விட வேண்டும் என்று நினைத்தான்
விவேகா,மம் சீக்கிரம் வா மா மின்னல் என்று சொல்லி போன் வைக்க.. மித்ரன், அவ வரண்ணு சொல்லிட்டாளா… விவேகா சொன்னா சும்மாவா.. மித்ரன், இல்ல விவேகா அவ வரன்னு சொல்லிட்டு குப்புற படுத்து தூங்குவா..இதை கேட்டு இன்பா சிரிக்க
சுபா, சரி விடுங்க இன்பா நீ நைட்டு டூ ட்டி தானே பார்த்த போய் தூங்கு நாங்க அப்படியே ஜாலியா பேசிட்டு இருக்கோம் அப்புறம் விவேகா நீ கதைய ஆரம்பி நான் கேட்கணும்..
இன்பா, எனக்கு தூக்கம் வரல நான் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை..என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வெண்பா ஹே விவேகா உன்னை பார்த்து ஒரு நாள் ஆச்சு அது தான் உன்னை பார்க்க வந்து விட்டேன் டி ஐ மிஸ் யூ என்று ஆதி, விவேகா இருவரையும் பொதுவாக ஒரு பார்வை பார்க்க..
விவேகா, மித்ரணிடம் அண்ணா நான் ஒரு தடவை சொன்னா ஒரே தடவையே ஓடி வருவா அவ தான் வெண்பா… இது தான் என் கூட்டம்..
இன்பா, ஸ்ட்ரேந்த் ரொம்ப வீக்கா இருக்கு..மேம் அவரை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க இல்ல நான் கிளம்பி விடுவேன். வசுமதி, டேய் எதுக்கு டா அவ கிட்ட வம்பு பண்ற.. இனி நான் எதுவும் சொல்லல மாம் என்று அவன் போன் நோண்ட ஆரம்பித்தான்.விவேகா விக்கு அவன் போன் நிண்டினால் பிடிக்காது அதனால் அவள் முன்பு வேண்டும் என்றே நோண்டி கொண்டு இருந்தான்.
மித்ரன், ஹே என்ன டி காலையில் குளிக்காமல் தலை விறி கோலமா படுத்து இருந்த இப்போ அப்படியே டிப் டாபா வந்து நிக்கிற இதை கேட்டதும் ஆதி உதடு நோகாமல் சிரிக்க ஹே யாரு சொன்னது நீ இங்கே வந்ததும் நான் குளித்து முடித்து ரெடி ஆகி தான் தூங்க போனேன்.மித்ரன், இல்லயே எனக்கு சந்தேகமா இருக்கு பெர்ஃயூம் வாசனை அதிகமா இருக்கு ஒரு வேளை குளிக்காமல் மேக் அப் போட்டு வந்துட்டிட்யா.
வெண்பா, இல்ல டா முதலில் மானத்தை வாங்குவதை நிறுத்து இன்பா அண்ணா கூப்பிட்டு வராலன்னா நல்லா இருக்காது அதனால் தான் வந்தேன். சுபா, விவேகா உன் தோழி உன்னை கவுத்து விட்டாள். இன்பா, அப்போ நீ நான் சொல்லி தான் வந்தேன்னு அவ கிட்ட சொல்லு.. விவேகா வெண்பாவை முறைக்க வெண்பா அசடு வழிந்து கொண்டே என்ன செய்வது என்று முழிக்க விவேகா துரோகம்” பச்சை துரோகி” டி நீ என்று சொல்லி வெண்பாவை பார்க்க… அவள் இல்ல டி அண்ணா.. அப்பொழுது விவேகா சரி எனக்கு எப்பவும் ஃபேவர் என் ஆதி மட்டும் தான் சரி தானே டா.. மம் சரி தான் டி.. என்று சொல்லி நிமிர வெண்பா , இன்பா இருவரும் அவனை முறைக்க அவன் தலை குனிந்து கொண்டான்.
சுபா, மம் உன் நேம் ஆதியா.. இல்ல மேம் ஆதித்யா.. விவேகா உனக்கு என்ன வேணும்.. அதற்கு அவனை முந்தி கொண்டு விவேகா, அவன் கைகளை கோர்த்து கொண்டு எனக்கும் ஆதிக்கும் நான் ஆதிக்கு அத்தை பொண்ணு அவன் எனக்கு மாமா பையன் சொல்ல போனால் என்னோட மாமா சின்ன வயசில் இருந்து நாங்க எப்பவும் ஒன்னா தான் இருப்போம் இப்போ காலேஜ் கூட ஒரே கிளாஸ் லாஸ்ட் பென்ச் எல்லாமே எனக்கு ஆதிமயம் தான்….
சுபா, அப்போ அடுத்த கப்பில் நீங்க தான் போலயே என்று சொல்லி கொண்டே இன்பாவை பார்க்க அவன் விவேகா வை முறைத்து கொண்டு இருந்தான். விவேகா, மம் சரி தான் மேடம் எனக்கும் அவனுக்கு மம் ஒரே மேடையில் தான் கல்யாணம்.. ஆதி அவள் கைகளை கோர்த்து இருந்ததை பிரித்து விட்டு அது அப்படி இல்ல மேம் அவ லூசு மாதிரி இப்படி தான் எதுவும் சொல்லுவா நாங்க எங்களுக்கு உள்ள அப்படி எல்லாம் இல்ல ஹே ஏன் பொய் சொல்ற விவேகா அடி வாங்க போற..
சுபா, அப்போ பொய் சொல்றியா நீ…. விவேகா, இல்ல மேம் அவனுக்கும் எனக்கும் ஒரே மேடையில் தான்..
ஆதி, ஹே தெளிவா சொல்லு டி மேம் அவளுக்கு அவள் ஆள் கூடவும்
விவேகா, ஆதிக்கு அழகான ஒரு பொன்னு கூடவும் கல்யாணம்..
சுபா, ஓ சாரி நான் கூட தப்பா நினைத்து விட்டேன்.
ஆதி, பரவாயில்ல மேம் எங்க வீட்டில் இவ தான் கடைசி குட்டி அதனால் பாசம் அதிகம் சோ ரொம்ப செல்லம்..
இன்பா, இந்த பெட்டு மாதிரி நாய் குட்டி மாதிரியா..
வெண்பா, அண்ணா வேற லெவல் போங்க அவளை பார்த்தால் அப்படி தான் தோணுது..
வசுமதி, வெண்பா நீயும் அவன் கூட சேர்ந்து கொண்டு அவளை கிண்டல் பண்றீங்களா..
வெண்பா, ஆன்டி என்ன நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க…
வசுமதி, மம் ஆமா விவேகா வை தான் நான் சப்பொட் பண்ணுவேன் என்று சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்க வசுமதி அப்படியே காலையில் இருந்து வேலை செய்த அசதியிள் தூங்கி விட்டாள்.
இன்பா தன் அம்மாவை பார்த்து விட்டு அவரை அப்படியே தூக்கி கொண்டு போய் அவர் அறையில் படுக்க வைத்து விட்டு வந்து மீண்டும் அமர்ந்து கொண்டான். இன்பா அவரை தூக்கி சென்றதில் இருந்து விவேகா இன்பாவை ஒரு நொடிக்கு ஒரு முறை பார்க்க இன்பா அவன் இடத்தில் வந்து அமர்ந்து யாரும் பார்க்காமல் இருக்க அவளை பார்த்து கண்களால் என்ன என்று கேட்க விவேகா ஒன்னும் இல்ல என்று சொல்லி கண் சிமிட்டினாள்.
வெண்பா, ஹே இப்போ எதுவும் விளையாடலாம் மித்ரன் ஜாலியாக இருக்கும். சுபா, கார்ட்ஸ் விளையாடலாமா.. விவேகா எனக்கு அது எல்லாம் தெரியாதே.. ஆதி உனக்கு தெரியுமா.. மம் தெரியும் அப்போ நீ விளையாடு நான் சியர் அப் பண்றேன். வெண்பாவுக்கு இதை பார்த்து பொறாமையாக இருக்க ட்ருத் ஆர் டெர் விளையாடலாமா.. இதை கேட்டதும் விவேகா,
இன்பா, சுபா மூவரும் நோ என்று சொல்ல.. “ஹே என்னாச்சு” என்று மித்ரன் கேட்க
விவேகா, அது அது எல்லாம் வேண்டாம் வெறி போர் சுபா உடனே மம் ஆமா அவ சொல்றது சரி தான்..
அப்போ என்ன விளையாடுவது அப்போ மித்ரன் ஹைடன் சிக் விளையாடலாம்.. இன்பா, டேய் நீ இன்னும் வளரவே இல்லையா டா…
தொடரும்…
வெண்ணிலா படித்து விடுங்கள் இனி தொடர்ந்து ரெண்டு ஸ்டோரியும் எழுத போறேன்
Episode 138,
அப்போ மித்ரன் ஹைடன் சிக் விளையாடலாம்.. இன்பா, டேய் நீ இன்னும் வளரவே இல்லையா டா…
சுபா, இதை கேட்டதும் அவள் நினைவுகள் பின்னோக்கி ஒரு நிமிடம் சென்றது. அவன் வர மாட்டான் மனதுள் ஆசை இருந்தாலும் அந்த திமிர் பிடித்தவன் காட்டி கொள்ள மாட்டான் என்று சரவணனை நினைத்து கொண்டு இப்போது ம்ம் ஆமா அதுவே விளையாடலாம்..
இன்பா, சுபா இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு மேரேஜ் யூ நோ.. அதுக்கு என்னோட இயல்பை மாற்றி கொண்டு என்னால் இருக்க முடியாது. எனக்கு இன்னிக்கு விளையாட தோணுது தட்ஸ் ஆல்..
மித்ரன், இன்பா நம்ப ரெண்டு பேரும் ஆர்மி ஸ்கூல்ல லீவுக்கு வீட்டுக்கு வரும்போது தானே விளையாடுவோம். எப்போ லீவ் வரும் அப்டின்னு நான் வெயிட் பண்ணுவேன். இதை கேட்டு கொண்டு இருந்த இன்பா நீ விளையாடு நான் வரல இப்ளோ பெரிய வேலையில் இருந்து கொண்டு நான் விளையாடினேன் அப்டின்னு யாருக்காவது தெரிஞ்சது என்னோட இமேஜ் என்ன ஆவது என்று சொல்லி விவேகாவை பார்த்து, அவ கூட எல்லாரும் சேர்ந்து சொப்பு விளையாடுங்க என்று சொல்லி கொண்டே அவன் அறைக்கு நடந்தான்.
விவேகா, அக்கா என்னை இன்சல்ட் பண்ணிட்டாரு நான் வரல வீட்டுக்கு போறேன் ஆதி வாடா.. சுபா, ஹே விவேகா விடு அவன் ஒரு சைக்கோ இப்படி தான் பேசுவான். அதனால் தான் இன்னும் சிங்கிலா சுற்றி கொண்டு இருக்கான். இவனை அடக்க ஆள் கிடைக்காதா அப்டின்னு இங்கே எல்லாரும் ப்ரே பண்ணாத குறை தான்…
விவேகா , அக்கா அப்டின்னா அவரு கடைசி வரை சிங்கிள் தான்.. என்று சொல்ல மேலே இருந்து ஒரு பொருள் பறந்து வந்து விவேகாவின் மேல் வந்து விழுந்தது. அக்கா என்று அவள் இன்பா தூக்கி போட்ட பொருளை எடுத்து விட்டு மேலே விழுந்த இடத்தில் தேய்க்க சுபா சரி சரி விடு அவனை என் டாடி கிட்ட சொல்றேன் அவரு பார்த்து கொள்வார் என்று சொல்லி சமாதானம் செய்தாள்.
வெண்பா, அண்ணா நீ இதை விட பெருசா தூக்கி போட்டு இருக்கணும் இவளை சும்மா விட கூடாது. என்று சொல்ல இன்பா மித்ரனுக்கு போன் செய்தான்.. அவன் யோசனையாக போனை எடுத்து கொண்டு எட்ட வர சொல்லி சில விஷயங்களை கூறி உனக்கு எல்லாம் புரிந்ததா.. சரியா செய்து விடுவாயா இன்னிக்கி எவ்ளோ வாய் பேசினாள் அவளை சும்மா விட கூடாது அவ வாயை அடக்க போறேன் டா..
ஒரு பச்சை புள்ளை கிட்ட சொல்ற விஷயமா டா இது.. மச்சி உன் கிட்ட தான் டா சொல்ல முடியும்.
மித்ரன், டேய் எப்படி டா இதுக்கு எல்லாம் தனியா பிளான் பொடுவியா இல்ல ஆள் வச்சு இருக்கியா.. நான் சொல்றத மட்டும் செய் டா.. மம் நீ நல்லா பண்ற டா… இன்பா, மச்சி செய்வியா மாட்டியா.. ம்ம் செஞ்சு தொலைக்கிரென்.. என்று சொல்லி விட்டு அவன் போனை வைத்து விட்டு உள்ளே வந்தா.
ஹே அப்போ நம்ப 5 பேரும் விளையாட போறோம் என்று சொல்லி முதலில் வெண்பா அவுட் ஆக உடனே மித்ரன் அவனுக்கு மெஸேஜ் செய்தான். சுபா, ஆதி, விவேகா, மித்ரன் நால்வரும் ஒளிந்து கொள்ள ஆதி விவேகா இருவரும் ஒரே இடத்தில் ஒளிந்து கொள்ள மித்ரன் அவர்கள் இருவரையும் பிரிந்து தனி தனியாக போக சொல்ல ஆதி வேறு இடம் விவேகா வேறு இடம் சென்றதும் மித்ரன் இன்பாவுக்கு மெசேஜ் செய்தான். நோட்டட் என்று அவன் அனுப்பி விட்டு வசுமதி நன்றாக தூங்கி கொண்டு இருக்க அறையை வெளி பக்கமாக சாத்தி விட்டு அவன் விவேகா இருக்கும் இடத்துக்கு சென்று அவளை பின்னால் இருந்து அணைக்க விவேகா சத்தம் போட வாயை திறக்க இன்பா அவள் வாயினை பொத்தி கொண்டு “ஹே கத்தாதடி நான் தான் “என்று அவளை இன்பா வின் அறைக்கு அப்படியே தூக்கி சென்றான்.
விவேகா,இன்பா முதலில் விடு.. ப் ச்ச.. ஹே விடு டா என்று உன் கூட நான் பேச மாட்டேன் என்னை தொடாதே.. என்னை முதலில் இறக்கி விடு என்று சொல்லி கொண்டே அவள் அவனை அடிக்க அவன் துளி கூட அசையாமல் அவளை உள்ளே அவன் படுக்கையில் போட்டு கதவை தாழிட்டு திரும்ப அதற்குள் அவள் எழுந்து கதவுக்கு அருகில் வந்து விட்டாள்.
ஹே எங்கே டி போற.. நீ முதலில் கதவை திற நான் வெளியே போனும்.. முடியாது என்று அவன் சொல்லி கொண்டே ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி எடுத்து வைக்க ஹே விளையாடத இன்பா என்னை டென்ஷன் பண்ணாத ஒழுங்கா என்னை போக விடு..
நீ பேசி பேசி ரொம்ப சோர்ந்து போயிருப்ப டி என்று அவன் அவள் அருகே வந்து கொஞ்சம் உன்னோட இந்த லிப்ஸ்க்கு ரெஸ்ட் கொடு என்று சொல்லி அவளின் கழுத்தை சாய்த்து முத்தமிட தொடங்கினான். அவள் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிய இன்பா ஹே க்ளோஸ் யூர் ஐஸ்.. என்று அவள் இன்று வைத்து இருந்த ஜதி மல்லியின் வாசம் அவனை இன்னும் மயக்கியது.அவன் கைகள் அவளின் முன் பின் பக்கங்களில் ஊரிட அவள் கண்கள் தானாக மூடி கொண்டது. அவன் கைகள் போகும் இடம் எல்லாம் பெண்ணவலுக்கு கூசிட அவள் பாம்பை போல் நெளிய அவன் அவளை பிரிய விடாமல் முத்தமிட்டான். இப்போது அவளை பிரிந்தவன் அவள் கழுத்தில் ஈரமிட்டு என்ன வாய் டி என்னால் உன் அளவுக்கு பேசி ஜெயிக்க முடியாது சோ பேசாமல் உன்னை ஜெயிக்க போறேன் இப்போ தான் உன் லிப்ஸ் ரெஸ்ட்ல இருக்கு.. என்று சொல்லி கொண்டே அவளை பார்க்க அவள் கண்கள் மூடி கொண்டே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிட இன்பா அவள் மாலையாக போட்டு இருந்த துப்பட்டாவை கழுத்தில் இருந்து எடுத்து வீசியவன். இறுக்கி அணைத்து கொண்டு மீண்டும் இதழில் விழுந்தான்.
அவனது செயல்கள் இந்த முறை மிகவும் மென்மையாக இருக்க அவளால் அவனிடம் இருந்து மீள முடியவில்லை. அவளை அறியாமல் ராகவ் என்னை விடு த் தள் தள்ளி போ.. விவேகா இன்னிக்கு ஐ கான்ட்.. அவள் மூச்சு விடும் வேகத்தில் நெஞ்சு கூடு ஏறி இறங்குவதை பார்த்த அவன் அவளின் பெண்மையின் மேல் கண்கள் செல்ல டேம்ன் என்று அவன் அவளின் கண்கள்,கன்னம், மூக்கு, இதழ் என்று முத்தம் பதித்து கழுத்து பகுதியில் அவன் விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்க விவேகாவுக்கு அவன் விரல்கள் செல்லும் இடங்கள் இந்த வேதனை தாங்க முடியாமல் சட்டென்று அவனை தள்ளி விட ஹே டோண்ட் லீவ் மீ என்று சொல்லி மீண்டும் அவன் அவள் இதழ்களை வன்மையாக முத்தமிட கண்கள் எல்லாம் அவளின் மோகத்தில் சிவந்து விட்டது. விவேகாவின் இதழில் தோல் உறிந்து எறிய ஆரம்பித்தது. அவள் ஸ்ஸ்ஸ் என்று முனக அவனால் கட்டு படுத்த முடியாமல் அவளின் இதழை வேகத்தில் கடித்து விட்டு
இதற்கு மேல் முடியாது என்று அவளை விட்டு வேக வேகமாக குளியலறை சென்றான். விவேகா அவன் சென்றதும் அவள் வேகமாக அவன் அறையில் இருந்து வெளியே வந்து வேக வேகமாக மூச்சு விட்டு தன்னை அசுவாச படுத்தி கொண்டாள். அவள் கழுத்தில் துப்பட்டா இல்லாமல் இருப்பதை பார்த்து அவன் அறைக்கு செல்ல அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இன்று அவன் கொஞ்சம் அதிகமாகவே எல்லை மீறி விட்டான். அவன் வருவதற்குள் வேகமாக எடுத்து வந்து விடலாம் என்று அவள் உள்ளே சென்று துப்பட்டாவை எடுத்து கொண்டு வெளியே வரவும் பாத் ரூமில் இருந்து வெளியே வரவும் சரியாக இருக்க அவள் வெளிய செல்வதற்கு முன் அவளை பிடித்து அவள் நெற்றியில் முத்தம் பதித்தான். அவள் அவன் முகத்தை கூட பார்க்காமல் எந்த உணர்ச்சியும் இன்றி வெளியே சென்று விட்டாள்.
விவேகா தன் தலை மற்றும் உடையை சரி செய்து கொண்டு அருகில் உள்ள கண்ணாடியில் பார்க்க முகம் எல்லாம் சிலிர்த்து உதடுகள் வீங்கி சிவந்து இருந்தது. அவள் அங்கே நின்று கொண்டு இருப்பதை பார்த்து சுபா, ஹே அவுட் என்று அவள் சொல்ல விவேகா, அக்கா எனக்கு ஃபேஸ் வாஷ் பண்ணனும் என்று அவள் சொல்ல சுபா, ஹே இதுக்கு எதுக்கு இவளோ பதட்டமா இருக்க என்று சொல்ல ஒன்னும் இல்ல என்ன பண்றது அப்டின்னு தெரியல அவள் உடனே அவளை அவள் அறைக்கு அழைத்து சென்றாள். என்னாச்சு விவேகா ஒரு மாதிரி இருக்க ஒன்னும் இல்ல அக்கா என்று தலையை குனிந்து கொண்டே போய் முகம் கழுவி ரெஸ்ட் ரூம் சென்று வந்தாள்.
இன்பாவுக்கு புத்துணர்வாக இருந்தது.அவன் அறையில் அவளின் பூ வாசம் சில பூக்கள் அவள் வந்த அடையாளதிருக்கு சிதறி கிடக்க இன்று ஏனோ கொஞ்சம் அவளை எப்படி சந்திப்பது இந்த முறை அதிகம் உரிமை எடுத்து கொண்டு விட்டோம் என்று யோசித்து கொண்டு இருந்தான். விவேகா முகம் கழுவி வெளிய வந்தவள். நேராக சுபாவுடன் கீழே சென்றாள். அங்கே மித்ரன், ஆதி, வெண்பா மூவரும் இருக்க வெண்பா, ஹே எங்கே போன உன்னை வீடு முழுக்க தேடினேன். சுபா, அவள் என் கூட தான் இருந்தா.. என்று சொல்ல அவளுக்கு யாரையும் நிமிர்ந்து பார்க்க சங்கடமாக இருந்தது. இருந்தாலும் அவள் சுபாவிடம் அக்கா வீட்டுக்கு போகட்டுமா.. சுபா ஹே இன்னும் கொஞ்ச நேரம் கூட ஆகள அதுக்குள்ள போறேன்னு சொல்ற.. வெண்பா, ஹே நீ தானே டி என்னை வர சொன்ன இப்போ என்ன கிளம்புகிறேன் அப்டின்னு சொல்ற… விவேகா, எனக்கு சரவணன் அண்ணா வொர்க் கொடுத்து இருக்காங்க நான் அதை செய்யணும்.. வெண்பா அதெல்லாம் முடியாது நீ ஆன்டி எழுந்ததும் தான் போகணும் என்று சொல்லி வெண்பா வற்புறுத்த அவள் அப்போ இந்த விளையாட்டு வேண்டாம் வேற எதுவும் செய்யலாம் என்று கொஞ்சம் கஷ்ட பட்டு பேசினாள். கார்ட்ஸ் விளையாடலாம் என்று சொல்ல விவேகா சுபாவுடன் அமர்ந்து கொண்டாள். ஆதி, வெண்பா, மித்ரன் மூவரும் விளையாடினார் ஒரே பேச்சு சத்தம் சிரிப்பு கும்மாளமாய் அந்த இடம் கலகலப்பாக சென்றது இந்த முறை விவேகா பேசவில்லை. அதற்கு பதிலாக வெண்பா பேசி கொண்டு இருந்தாள்.
இன்பா விவேகா என்ன செய்கிறாள் என்று மேலே இருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தான். அவன் மனம் இனி பக்கத்தில் கூட விட மாட்டாளா முகத்தை எதுக்கு இப்படி வைத்து இருக்கா என்று சொல்லி அவன் யோசித்து பார்த்து கொண்டு இருக்க டேய் இங்கே என்ன பண்ற . இன்பா திரும்பி பார்க்க…?
தொடரும்…
Episode 139,
இன்பா மேலே இருந்து விவேகாவை பார்த்து கொண்டு இருக்க அப்பொழுது தான் தூங்கி எழுந்த வசுமதி, வெளியே வர அங்கே இன்பா நின்று கொண்டு இருப்பதை பார்த்து அவர் மனதில் நைட்டு ஷிஃப்ட் பார்த்து விட்டு வந்து ஒரு நாள் கூட ரூம் விட்டு வெளியே வர மாட்டான் எதுவும் முக்கிய கேஸா இருந்தால் மட்டும் தான் வருவான் இன்னிக்கி காலையில் இருந்து முழித்து கிட்டு இருக்கானே என்று நினைத்து கொண்டே அவன் அருகில் சென்றார்.
அவன் நினைவு முழுவதும் விவேகா மட்டுமே இருந்தாள். அதனால் அருகில் அவன் அம்மா வந்து நின்றது அவனுக்கு தெரிய வில்லை. டேய் இங்கே என்ன பண்ற.. என்று குரல் கேட்க சட்டென்று திரும்பி பார்த்தான். அங்கே ஆ பார்த்ததும் இப்போது என்ன சொல்ல என்ன செய்ய என்று தெரியாமல் மாம் நீங்க எப்போ எழுந்தீங்க.. என்று சொல்லி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர” ராகவ்”என்று கொஞ்சம் கடுமையாக அழைக்க அவன் அப்படியே நின்றான்.
வசுமதி, அவன் முன்னால் போய் நின்று அவன் முகத்தை பார்க்க கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது. அவர் பார்வை உடனே மாறி என்ன டா கண்ணா எப்பவும் வேலை முடித்து தூங்கி ரெஸ்ட் எடுப்ப இன்னைக்கு ஏன் தூங்கள கண்ணு எல்லாம் பாரு கொஞ்சம் சிவப்பா இருக்கு என்று சொல்ல அவனுக்கு இதை கேட்டு இன்னும் சங்கடமாக இருந்தது. அது ஒன்னும் இல்ல மாம் எனக்கு இன்னிக்கு தூக்கம் வரல என்று எது எதோ சொல்லி பேசி சமாளிக்க அவனின் பேச்சு அவர்க்கு புதுமையாக இருந்தது.
அவர் ராகவ் எதுவும் பிரச்னையா.. இல்ல மாம் எதுவும் இல்ல நான் நல்லா இருக்கேன் நீங்க போங்க நான் வரேன் என்று சொல்ல அவர் யோசனையாகவே கீழே சென்றார். வசுமதி கீழே வந்ததும் விவேகா ஆதியை ஒரு பார்வை பார்க்க அவளை சகலமும் அறிந்த அவன் அந்த பார்வையின் அர்த்தத்தை அறிந்து கொண்டு மேம் வந்து விட்டார்கள். என்று சொல்லி சுபாவை பார்த்து அக்கா நாங்க இப்போ கிளம்பலாம் தானே.. என்று சொல்லி உடனே ஆதி எழுந்து நிற்க அடுத்த நிமிடம் விவேகாவும் எழுந்து கொண்டாள்.
வசுமதி, என்ன இது நான் வந்த அடுத்த நிமிடமே கிலம்பரேன்னு சொல்றீங்க.. விவேகா, மேம் டைம் ஆகி விட்டது அது தான் வேற ஒண்ணும் இல்ல.. என்று சொல்லி கொண்டு இருக்க இன்பா மேலே இருந்து அவளை பார்த்து கொண்டே கீழே வந்தான். விவேகா அவனின் பார்வையை தவிர்த்தாள்.
சுபா, விவேகா திஸ் ஈஸ் டூ மச் கொஞ்ச நேரம் இரு இங்கே தானே வீடு இருக்கு.. அது அது வந்து.. என்று அவள் கீழே குனிந்து கொண்டு முழிக்க,
வசுமதி, சரி போலாம் டீ குடித்து விட்டு போயேன்.. ஆதி சொல்லு டா அவ கிட்ட டீ குடித்து விட்டு போலாம் தானே…
ஆதி இன்பா வை பார்க்க அவன் ஆதியை மிரட்டும் தொனியில் பார்த்து கொண்டு இருக்க இருக்கலாம்ன்னு சொன்னா இவள் முறைப்பாள் இன்னும் நான் வாய் திறந்து போலாம் அப்டின்னு சொல்லவே இல்ல அவர் என்னை முறைக்கிரார் எரித்து விடுவது போல் பார்க்கிறார். இப்போ என்ன செய்வது என்று அவன் வெண்பாவை பார்க்க அவள் அவனின் தவிப்பை உணர்ந்து வெண்பா, விவேகா டீ குடித்து விட்டு நம்ப எல்லாரும் போலாம் அம்மா கிட்ட நான் வந்து சொல்லி கொள்கிறேன் என்று சொல்ல இப்போது ஆதிக்கு நிம்மதியாக இருந்தது. விவேகா சரி என்று வேறு வழி இல்லாமல் கீழே குனிந்து கொண்டே அமர்ந்தாள்.
விவேகாவின் இந்த அமைதி வசுமதிக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவர் நேராக கிட்செண் சென்றார். இன்பா நேராக அவளை பார்த்தவாறு மித்ரன் அருகில் அமர்ந்து கொண்டான்.
மித்ரன் டேய் அவளை என்ன டா பண்ண.. இன்பா அவன் பேசுவது எதையும் காதில் போட்டு கொள்ளாமல் அவளையே பார்த்து கொண்டு இருக்க.. டேய் இன்பா என்று அவனை உலுக்க.. எதுக்கு மித்ரன் இப்போ டிஸ்டர்ப் பண்ற.. டேய் அவளை நீ என்ன பண்ண.. இன்பா நானா நான் ஒன்னும் பண்ணல மச்சி என்னன்னு தெரியல அவ முகத்தை இப்படி வைத்து இருக்கிறாள். இதை மித்ரன் உண்மை என்று நம்பி ஒ அப்போ ஓகே என்று சொல்ல..
இன்பா, கொஞ்சம் கிஸ் பண்ணும் போது கொஞ்சம் போர்ஸா முத்தம் கொடுத்து விட்டேன் டா.. இதை கேட்டதும் மித்ரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. டேய் ராஸ்கல் நீ அவ கிட்ட பேசனும் அப்டின்னு தானே என் கிட்ட சொல்லி கூப்பிட சொன்ன நான் உன்னை நம்பி இருக்க கூடாது.. நீ வேற எதோ சேட்டை எல்லாம் செய்து இருக்க உன்னை நம்பினேன் பாரு என்னை சொல்லணும் டா என்று மித்ரன் பதட்டமாக விவேகாவை பார்த்து இன்பாவிடம் பேசி கொண்டு இருக்க..
சுபா, ஹே என்ன ரெண்டு பேரும் லவ்வர் ஸ் மாதிரி பேசிட்டு இருக்கிங்க.. இன்பா பதில் எதுவும் சொல்லாமல் விவேகாவை பார்த்து கொண்டு இருக்க..
சுபா அவன் விவேகா வை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு டேய் இன்பா என்ன அந்த பொண்ணையே பார்த்துட்டு இருக்க.. மித்ரன், என்ன சுபா எங்களுக்கு முன்னாடி அவள் தானே இருக்கிறாள் வேற யாரை பார்க்க முடியும் என்று அவன் சமாளித்தான்.அதற்குள் வசுமதி டீ கொண்டு வந்து விட வெண்பா அதை வாங்கி எல்லாருக்கும் கொடுத்தாள்.
விவேகா எதோ ஒன்று எடுத்து கொள்ள அது இன்பாவுக்கு போட்டு வைத்த லெமன் டீ வசுமதி ராகவ் உனக்கு லெமன் டீ எடுத்துக்கோ.. அதற்குள் விவேகா ஒரு மிடுக்கு குடித்து விட்டு என்ன இதில் இணிப்பே இல்ல என்ன இது என்று அந்த கோப்பையை திருப்பி பார்க்க
வெண்பா, அச்சோ சாரி அண்ணா அதை விவேகா எடுத்து விட்டாள். விவேகா குடித்ததை இன்பா பார்த்து கொண்டு தான் இருந்தான். வெண்பா, ஹே அதை சிப் பண்ணுட்டியா… விவேகா பதில் சொல்ல வரும் முன்
இன்பா, மாம் அவ கிட்ட இருந்து என்னோடத வாங்கி கொடுங்க…
வசுமதி, டேய் அவளுக்கு கொடுத்து விட்டாச்சு நான் இன்னொரு டீ போட்டு தரேன்.. விடேன் ராகவ்..
விவேகா தலையை கீழே குனிந்து கொண்டு இருக்க மாம் எனக்கு அது தான் வேணும்.. வசுமதி, விவேகா வை பார்க்க அவள் இதை நான் குடித்து விட்டேன் என்று வாய் திறந்து சொல்ல வர
இன்பா, விவேகா கிவ் மீ.. என்று அவள் பேச்சை நிறுத்தினான். அவள் வேறு வழி இல்லாமல் அவனிடம் கொடுத்தாள். வசுமதி அவளுக்கு டீ கப் எடுத்து கொடுக்க அவள் அமைதியாக வாங்கி கொண்டாள்.
இன்பா ஒரு சிப் பருகி விட்டு மாம் இன்னிக்கு கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கே என்று புன்னகை பூக்க சொல்ல விவேகா இதை கேட்டதும் இன்னும் தலை குனிந்து கொண்டாள்.
வசுமதி , டேய் நான் இன்னிக்கு சக்கரையே போடல அப்புறம் எப்படி சுவீட்டா இருக்கும்.. இன்பா, மாம் இன்னிக்கி சம்திங் ஸ்பெஷலா இருக்கு என்று சொல்லி அவள் பருகிய இடத்தில் இதழ் வைத்து பருகினான்.
வசுமதி, விவேகா அமைதியாக இருப்பதை பார்த்து விவேகா என்ன இன்னிக்கி இப்படி தலையை குனிந்து உட்கார்ந்து இருக்க நல்லா தாராளமா உட்காரு.. அவள் வசுமதியை பார்த்து மம் மேம் என்று சொல்லி நெளிந்து கொண்டே அமர்ந்தாள். வசுமதி, உன் கழுத்தில் அந்த மாலை.. விவேகா , இது முத்து மாலை செட் மேம்.. சுபா, மம் இதே போல் நானும் வைத்து இருக்கேன். எங்க அம்மா கிட்டயும் இருக்கு… எங்கே வாங்கின..
விவேகா இதை கேட்டு திரு திரு வென முழிக்க ஆதி, அது எங்க அம்முச்சி வாங்கி கொடுத்தாங்க..
வசுமதி, இது மாதிரி என் அம்மா கிட்ட இருக்கு என் அம்மா வாங்கி தந்தாங்க.. எங்க வீட்டுப் பொண்ணுங்க எல்லார் கிட்டயும் இது இருக்கும்.
இதை கேட்டு இன்பா திருப்தியாக புன்னகைத்தான். விவேகா மெதுவாக ஊதி ஊதி குடித்து கொண்டு இருக்க.. வசுமதி, விவேகா சூடா குடிக்க மாட்டியா ஒரு கப் எடுத்து வரவா ஒரு தடவை ஆற்றி கொடுக்கட்டுமா..
விவேகா, அது.. அது வந்து… ஒன்னும் இல்ல மேம் கொஞ்சம் உதடு உள்ளே வெடிப்பா இருக்கு அதனால் குடிக்க முடியல இதை கேட்டதும் இன்பாவை மித்ரன் டேய் என்னன்ன வேலை பண்ணி வச்சு இருக்க.. சுபா, அது எப்படி மதியம் சாப்பிடும் போது நல்லா தானே சாப்பிட்ட அதுக்குள்ள எப்படி இப்படி ஆச்சு..
இதை கேட்டதும் இன்பாவுக்கு புரை ஏறியது.மித்ரன், பார்த்து பார்த்து கொஞ்சம் உன் ஆட்டத்தை குறைத்து கொள் டா…. இவள் வேற குறுக்கு விசாரணை பண்ணிட்டு இருக்கா என்று நினைத்து கொண்டு அவளை முறைத்தான். அவர்கள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க இவளுக்கு உள்ளங்கை கால் எல்லாம் வியர்க்க தொடங்கியது.
விவேகா, அது சாப்பிடும் பொழுது நாக்கு கடித்து கொண்டேன் அதனால் தான் இப்படி இருக்கு.. சுபா, ஹே இப்போ என்று எதோ சொல்ல வர
இன்பா, சுபா விடேன் சும்மா போலீஸ் மாதிரி கொஸ்டின் பண்ற.. டீ குடிக்கும் போது அமைதியா குடிக்கணும் அப்டின்னு உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல.. keep silence
சுபா, டேய் அது சாப்பிடும் பொழுது தான் அமைதியா இருக்கணும்.. நம்ப வீட்டில் இனி இது புது ரூல் ஒபே பண்ணு இல்ல நாளைக்கே கல்யாணம் பண்ணிகிட்டு உன் புருசன் வீட்டுக்கு போயிடு..
சுபா, அம்மா பாருங்க இவன் ஓவரா பேசுறான்.
வசுமதி, ராகவ் அமைதியா இரு..
அதற்கு மேல் அவன் எதுவும் பேச வில்லை. இன்பா அவ்வப்பொழுது விவிகாவை பார்த்து கொண்டு இருந்தான்.
இன்பா மனதுள் இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி முகத்தை வைத்து கொண்டு இருக்கா.. எப்படியும் இன்னிக்கு இல்லன்னா நாளைக்கு இனி future ல அவள் மொத்தமும் நான் எனக்காக தானே எதோ கொஞ்சம் இன்னிக்கு டெம்ப்ட் ஆகி விட்டேன். என்னோட மீல்ஸ் என் கண்ணு முன்னாடி இருக்கு நான் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிட்டேன் இதுக்கு இவளோ பில்ட் அப் கொடுக்கிறாள். நீ விடு ராகவ் அவள் பேசாமல் மட்டும் வீட்டுக்கு போகட்டும் அப்புறம் அவளுக்கு இருக்கு ….
தொடரும்…
Episode 140,
இன்பாவின் மனம் அவளை பற்றி நினைத்து கொண்டு இருக்க அவளோ அவனை திரும்பி கூட ஒரு பார்வை பார்க்க வில்லை வேகமாக டீ குடித்து விட்டு ஆதியை பார்க்க அவன் அவளுக்காக தயாராக இருந்தான்.
வெண்பா மெது மெதுவாக ரசித்து ருசித்து குடித்து கொண்டு இருக்க விவேகா, ஆதி நம்ப கிளம்பலாம். வெண்பா ஹே நானு நானும் வரேன் என்னை விட்டு போற.. ஆதி, விவேகா உன் தோழி இப்படி ரசித்து ருசித்து குடித்தால் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கூட இந்த இடத்தில இருந்து வர மாட்டா.. இதை கேட்டதும் விவேகா கொஞ்சம் சிரிக்க ஆதி சொன்னது மித்ரனின் காதுகளில் விழ உடனே அவன் ஆதியை பார்க்க வெண்பா, என் அண்ணன் டா.. என்னை பார்த்து என்ன டா சொன்ன.. இப்போ சொல்லு டா..
ஆதி, மித்ரனிடம் சார் நான் தெரியாமல் என்று எதோ சொல்ல வர மித்ரன், கையை கொடு ஆதித்யா உண்மையில் நீ சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தை இவள் சரியான சோம்பேறி, அகம் புடிச்ச கழுதை.
மித்ரா டேய் இரு நான் உன்னை சரவணன் கிட்ட சொல்றேன். என்று இன்பாவை பார்த்து அண்ணா அண்ணா இங்கே பாரேன் இவனும் இவனும் சேர்ந்து கொண்டு என்னை இப்படி சொல்லி விட்டார்கள்.
இன்பாவுக்கு இப்போது தான் அவன் சுயநினைவுக்கு வந்தான். வாட் ஹாப்பென் வெண்பா என்னாச்சு..
வசுமதி, ராகவ் இவளோ நேரம் இங்கே என்ன நடந்ததுண்ணு தெரியாதா.. மாம் கொஞ்சம் திங்க் பண்ணிட்டு இருந்தேன். என்று சொல்லிட ஆதி எழ விவேகாவும் எழுந்தாள். வெண்பா, மித்ரன் இருவரும் சுபா, வசுமதி, இன்பா என சொல்லி விட்டு வெளியே வர இன்பா அவளை பார்த்து கொண்டே இருந்தான் அவள் சுபா, வசுமதி இருவரிடம் மட்டும் சொல்லி விட்டு வெளியே வர இதை அவர்கள் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. இன்பாவுக்கு கோபம் வந்தது எவ்ளோ திமிர் டி என் கிட்ட சொல்லாமல் என்னை பார்க்காமல் போறியா… என்று மனம் அவள் பாராமுகத்தை நினைத்து துடித்தது.
ஆதி, ஹே விவேகா அவர் உன்னை தான் பார்க்க விரும்புகிறார். போயிட்டு வரேன்னு சொல்லு.. விவேகா, என்னால் சொல்ல முடியாது. ஹே தப்பு விவேகா அவர் வீட்டுக்கு வந்துட்டு சொல்லாமல் போவது நல்லாவா இருக்கு.. விவேகா மனம் அவனா அவன் பண்ண வேலைக்கு அவனை சப்பு சப்புன்னு நாலு கொடுக்க தோணுது இதில் சொல்லிட்டு வேற போகணுமா பண்றது எல்லாம் 420 வேலை இவனுக்கு யாரு போலீஸ் வேலை கொடுத்தது என்னை கேட்டால் இவனை சஸ்பென்ஸ் பண்ணி விடுவேன். என்று மனதில் நினைத்து கொண்டாள்.
ஆதி, விவேகா பாவம் டி அவரு உன்னை பார்த்து கொண்டு இருக்கிறார் அட்லீஸ்ட் ஒரு தடவை திரும்பி பார்த்து விடு.. டேய் நீ கொஞ்சம் கம்முன்னு வா என்று இன்பாவை திரும்பி கூட பார்க்காமல் சென்றாள். அவள் சென்றே விட்டாள். இன்பா அவள் சொல்லாமல் சென்றதை பார்த்து கோபம் தீயாய் எழ உடனே முகத்தை கடுமையாக வைத்து கொண்டு வேகமாக படிகளில் ஏறிட
வசுமதி, என்னாச்சு ராகவ் எதுக்கு இவளோ கோபம் யாரும் மேல் திடீர்னு இவளோ கோபம் வந்தது. யாராவது எதுவும் சொல்லி விட்டார்களா. இன்பா, நத்திங் மாம் நான் ரூமுக்கு போறேன்.. சுபா, அம்மா எனக்கு தெரியும் என்று சிரித்து கொண்டே உள்ளே வந்தாள். அவன் என்ன என்ன உனக்கு தெரியும். அவள் அம்மா விவேகா அவனிடம் சொல்லாமல் அவனை ஒரு பார்வை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் போய் விட்டாள் சோ இன்பா கோபமா இருக்கான்.
வசுமதி சிரித்து கொண்டே அதுக்கு எதுக்கு உனக்கு இவளோ கோபம்.. இன்பா, அவளுக்கு எவ்ளோ திமிர் என் வீட்டுக்கு வந்து விட்டு என் வீட்டில் தங்கி கொண்டு என்னிடம் சொல்லாமல் போகிறாள். என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டா. மரியாதை அப்டின்னா என்னன்னு அவளுக்கு புரிய வைக்க போறேன் .. என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போது வினய், இனியாள் இருவரும் வாசலுக்கு வெளியே நின்று காலிங் பெல் அடிக்க வசுமதி உடனே கதவை திறக்க அங்கே வினய், இனியாள் இருவரும் இருக்க இன்பா அவன் அம்மா பின்னால் மாம் யாரு அது என்று சொல்லி கொண்டே வந்தவன் இவர்கள் இருவரையும் பார்க்க அவன் பார்த்த அடுத்த நொடி முகம் கடுமையாய் பேச்சு இன்னும் குறைந்தது போனது.
வினய், இன்பா எப்படி இருக்கீங்க.. இன்பா, மம் என்று ஒரு ஒற்றை பதில் மட்டுமே கொடுத்தான். இனியாள் அவனை பார்த்து சார் எப்படி இருக்கீங்க… என்று ஆர்வத்தில் அவள் பேச ஆரம்பிக்க அவன் உள்ளே வந்ததும் சுபா உங்க ரிலெசன் வந்து இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு வேக வேகமாக அவன் அறைக்கு சென்றான். சுபா யார் என்று பார்க்க அங்கே வினய், இனியாள் இருவரும் அமர்ந்து இருக்க இனியாள் சுபாவை பார்த்ததும் ஹாய் அண்ணி என்று சொல்ல அவளுக்கு இவர்கள் ஏன் இங்கே வந்தனர் என்று இருந்தது. இன்பா நேராக படுக்கையில் போய் விழுந்தான்.
இன்று காலையில் இருந்து நடந்த அவளுடனான நினைவுகளை நினைக்க இதழ்கள் தானாக வளைய சிரித்த முகத்துடன் கண்கள் எல்லாம் தூக்கத்திறுக்கு ஏன்கியது. இன்பா அப்படியே கண்களை மூடி கொண்டே கேடி என்னை விட்டு எங்கேயும் போக முடியாது. என் மேல் கோபமா இருக்க மம் ஓகே அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டான்.
இனியாள், சுபாவுடன் பேசி கொண்டு அப்படியே வசுமதி கூட எப்படி ஒட்டி கொள்வது என்று அவருடன் பேசி சிரித்து கொண்டே அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். வினய், சுபா நாளைக்கு வெளியே போலாமா நீயும் நானும்.. சுபா, என்ன வொர்க் நாளைக்கு எதுக்கு வெளியே போகனும். வினய், நிச்ச்யத்தில் இருந்து உன் கூட என்னால சரியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியல.
சுபா வேறு வழி இல்லாமல் சிரித்து கொண்டே ஓ அப்டியா அதை நான் நாளைக்கு சொல்றேன் எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. வினய் அங்கே அருகே இனியாள், வசுமதி இருவரும் இருக்க உடனே கொஞ்சம் தனிமையில் அவளுடன் பேச எண்ணி சுபா இந்த வீட்டை சுற்றி காட்டேன். சுபா, இந்த வீட்டில் ஒன்னும் இல்ல வாங்க நம்ப வெளியே போலாம். என்று அவனை வெளியே அழைத்து சென்றாள். வினய், நடந்து கொண்டே இன்னிக்கு ஏன் உன்னை பார்க்க வந்தேன்னு உனக்கு எதுவும் தோனுதா.. சுபா வேறு வழி இல்லாமல் ஏன் நான் உனக்கு ஒரு சர்பிரய்ஸ் வச்சு இருக்கேன் என்று அவள் கைகளை பிடித்து கொண்டான்.
சுபாவுக்கு இப்போது அவன் மூக்கில் ஒரு குத்து வுட வேண்டும் என்று தோன்றியது ஆனால் வெளியே நடந்து கொண்டு இருக்கிறோம் என்று கருதி அவள் அமைதியாய் விட்டு விட்டாள். என்ன அது சொல்லுங்க…
இங்கே வெண்பா, மித்ரன் இருவரும் வீடு வந்தனர். சரவணன், வெண்பா… அண்னா.. இன்பா வீட்டில் இருக்கானா.. மித்ரன், நீ எதுக்கு அவனை பற்றி கேட்கிறாய்.. சரவணன் மித்ரனை முறைக்க
உடனே அவன் மனதில் நீ அடுத்த ஜென்மத்தில் எனக்கு தம்பியா பிறக்கணும் டா உன்னை என்ன செய்கிறேன் என்று பார் ஒரு நான்கு வயது முன்னால் பிறந்து விட்டால் இப்போ என்ன வீட்டில் எப்பவும் குரங்கு மாதிரி முகத்தை வைத்து கொண்டு சுற்றி கொண்டு இருக்கான்.
சரவணன், என்ன பார்வை உள்ளே போ.. மித்ரன் அவனை எதிர்த்து பேச முடியாமல் உள்ளே சென்றான். வெண்பா நீ சொல்லு.. அவள் மம் ஆமா அண்ணா அவர் வீட்டில் தான் இருக்கிறார். என்று சொல்லி அவளை எதாவது கேட்கும் முன் உள்ளே ஓடி விட்டாள். சரவணன் இது தான் அவனை பார்க்க சரியான தருணம் இந்நேரம் தூங்கி எழுந்து இருப்பான் என்று இன்பாவின் வீடு நோக்கி கிளம்பினான்.
வினய் சுபாவை மோக கண்களால் பார்த்து பேசி கொண்டே வர சுபா இவனிடம் இருந்து எப்பிடி தப்பிப்பது என்று யோசித்து கொண்டே நடந்தாள். நான் புதுசா ஒரு கார் வாங்கி இருக்கேன் நம்ப கல்யாணத்துக்கு முன்னாடி நீ என் காரை இப்போவே யூஸ் பண்ணனும். சுபா ஆல்ரெடி எங்க வீட்டுல ரெண்டு கார் இருக்கு சோ எனக்கு வேணாம் அதை கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம். என்று சொல்லும் நேரம் சரவணன் இவர்களுக்கு முன்னால் கொஞ்சம் தொலைவில் வர அவனை பார்த்த சுபா.. உடனே வினயிடம் ஹே இப்போ என்ன சொன்னீங்க..
வினய்,உனக்காக கார் வாங்கி இருந்தேன் அதை காட்ட தான் வந்தேன் இப்போ நீ தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டியே..
சுபா, சீரியஸ்லி என்று அவன் கைகளை கோர்த்து கொண்டு நான் சும்மா உங்க கிட்ட விளையாடினேன். சரி இப்போ எனக்கு ஈகரா இருக்கு அந்த கார் எங்கே இருக்கு.. அவன் பார்க்கிங்ல இருக்கு.. வினய்! வினய்! இப்போவே போலாம் வாங்க என்று அவன் கைகளை பிடித்து கொண்டு அவள் இழுத்தே சென்றாள். அவள் வினய்! வினய்! என்று இருமுறை கூப்பிடும் போதே சரவணன் அவளையும் வினயும் சேர்ந்து ஒன்றாக போவதை அதுவும் சுபா அவன் கைகளை கோர்த்து கொண்டு சிரித்து கொண்டு போவதை பார்த்து இங்கு சரவணனால் தாங்க முடிய வில்லை. F**** என்று சில வார்த்தகள் சொல்லி விட்டு தன் கோபத்தை கட்டு படுத்த மூச்சை இழுத்து அறிவு கெட்டவள் நான் அவ்வளவு அவனை பற்றி சொல்லியும் இவள் அவன் கைகளை கோர்த்து கொண்டு செல்கிறாள். என்று மிகவும் கோபம் வர உடனே அவளுக்கு அழைத்தான். அவள் கட் செய்தாள். மீண்டும் அழைத்தான். சுபா போனை சைலன்டில் போட்டு விட்டாள். வினய், யாரு சுபா.. இதுவா ஒரு கிளைன்ட் புராஜக்ட் பற்றி நீங்க வாங்க நம்ப போலாம்.. என்று அவள் அவனோடு சென்றாள்.
சரவணன் இப்போது பார்க்கிங் நோக்கி சென்றான். வினய் அந்த காரை அவள் முன் காட்டி மண்டி யிட்டு அந்த சாவியை கொடுக்க சுபா, சோ ஸ்வீட் ஆப் யூ வினய் ஐ ம் வெறி லக்கி என்று சொல்ல இங்கே இவனுக்கு வெறி பிடித்தது. வினய், ஒரு ரவுண்ட் போலாம் வரையா சுபா.. இதென்ன கேள்வி கண்டிப்பா உங்க கூட வராமல் நான் வேறு யார் கூட போக முடியும்.. வினய் கைகளை நீட்டிட அவள் கைகளை பிடித்து கொண்டாள்.
சுபா, ஆனால் ஒரு நிமிடம் … என்ன சுபா.. இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு நீங்களும் நானும் மட்டும் டின்னர்ல மீட் பண்ணலாம் அப்படியே ஒரு லாங் டிரைவ் போலாம் எனக்கு ரொம்ப நாள் ஆசை..
வினய் இதற்காகவே காத்து கொண்டு இருந்தவன் போல் மம் எனக்கு டபிள் ஓகே..
சுபா, இன்னும் ஒரு நிமிடம்.. வினய் இப்போ என்ன..
சுபா, டூ வீலர் இருக்கா.. வினய், ஏன் சுபா.. இல்ல எனக்கு டூ வீலர்ல நீ ஓட்டனும் நான் பின்னாடி எப்படி இருக்கும் வினய் நினைத்து பார்க்கவே ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு தானே…
இங்கே சரவணன்…?
தொடரும்…
Episode 141,
சுபா, டூ வீலர் இருக்கா.. வினய், ஏன் சுபா.. இல்ல எனக்கு டூ வீலர்ல நீ ஓட்டனும் நான் பின்னாடி எப்படி இருக்கும் வினய் நினைத்து பார்க்கவே ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு தானே..
வினய், உனக்காக நான் எதுவும் செய்வேன் டூ வீலர் தான நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து போலாம்
இங்கே சரவணன் வினய் சுபாவை விழுங்கும் கண்களோடு பார்த்து பேசுவதை அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எவ்ளோ தைரியம் அவனுக்கு எல்லாம் இவளால் வந்தது. கண்டதை கண்டவனிடம் பேசுகிறாள். என்று நினைத்தவன் மீண்டும் மீண்டும் அவளுக்கு போன் செய்தான்.
சுபா, ச்ச… என்று முகம் சுருங்க வினய், வாட் ஹப்பன்.. அது ஒன்னும் இல்ல ராங் கால் வினய் நீங்க பேசுங்க எனக்கு நீங்க பேசுவதை நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கணும் போல தோணுது.
வினய், எனக்கு உன்னை பார்த்துகிட்டே உன் பக்கத்தில் எப்பொதும் இருக்கணும் போல இருக்கு ஒரு நொடி கூட உன்னை விட்டு பிரிய தோனள சுபா நீ ரொம்ப அழகா இருக்க..
சுபா, மனதில் உள்ளே டேய் சரவணா தண்டம் மாடு எல்லாம் உன்னால் தான் டா இந்த ஸ்லம் டாக் பேச்சை எல்லாம் கேட்க வேண்டி இருக்கு.. என்று வேறு வழி இல்லாமல் சிரித்து வைத்தாள்.
சரவணன் மனதில் இது நிஜமாவே நம் பின்னால் சுற்றி கொண்டு இருந்த சுபா தானா அவள் தான் இப்படி எல்லாம் பேசுகிராளா என்று தோன்றியது. அவனுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. அவன் கிளம்ப திரும்ப சுபா வினய் கிட்ட நாளைக்கு அந்த சைனீஸ் ரெஸ்டாரன்ட் ல டின்னர் புக் பண்ணட்டுமா..
வினய், நான் பண்றேன் சுபா டால்.. சுபா, ஐ ம் இம்ப்ரெஸ்ட் வினய்.. என்று சொல்ல டால் டாலா எவ்ளோ தைரியம் அந்த நாய்க்கு என்று சரவணன் குமுறினான். அவன் மனதில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் பதிந்து போனது.
சரவணன் அங்கு இருந்து நேராக அவன் வீடுக்கு சென்றான். அவன் சென்று விட்டான் என்று தெரிந்ததும் சுபா, வினய் எனக்கு ரொம்ப தலை வலிக்குது வீட்டுக்கு போலாம் என்று அவனிடம் இருந்து விலகி நடந்தாள். வினய் சுபா இருவரும் வீட்டுக்கு உள்ளே வர உடனே வினய்க்கு சாக்லேட் ஃபேக்டரியில் இருந்து போன் வந்தது. வினய், இனியா எனக்கு முக்கியமான வேலையா நான் ஃபேக்டரி போகனும் நீ இங்கேயே இரு நான் வந்து உன்னை கூட்டி செல்கிறேன்.
இதை கேட்டதும் அவளுக்கு மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள். சரி அண்ணா என்று சொல்லி அந்த வீட்டை சுற்றி பார்த்தாள். சுபாவுக்கு அந்த வினய் கிட்ட பேசியது மிகவும் எரிச்சலாக இருந்தது. அவள் தங்கை ஓவராக புகழ் பாடி கொண்டு சுற்றுகிறாள்.
சரவணன் விடாமல் இன்பாவுக்கு கால் செய்தான். அவன் எடுக்கவே இல்ல. அவன் தூக்கத்தில் இருந்தான். சரவணன் வினய் பற்றிய தகவல் அனைத்தையும் ஒரு முறை புரட்டி பார்த்தான்.
சுபா முன்ன பக்கத்தில் இருந்து கொண்டு பேசி என்னை டார்ச்சர் பண்ண, இப்போ என்னை தூக்கி போட்டு விட்டு திறத்துள் இருந்து கொண்டு என்னை கொல்ற டி உனக்கு அந்த வினய் பற்றி ஒண்ணுமே தெரியாது. அவன் மிகவும் மோசமான குணம் கொண்டவன் உன்னை எதுக்கு வேணாலும் யூஸ் பண்ணுவான் அய்யோ இதை நான் யார் கிட்ட சொல்றது ரவி சார் அவர் கிட்ட நான் சொன்னால் இவளோ நாள் கழித்து இப்போ வந்து பேசுகிறாய் அதுவும் சுபா பற்றி சொல்வதற்கு என்னை தவறா நினைத்தால் நான் என்ன செய்வது. இல்ல இல்ல வேண்டாம் அந்த இன்பா கிட்ட தான் சொல்லனும். என்று வீட்டுக்கு உள்ளே வந்தான்.
தேவகி முகம் டன் கணக்கில் கவலையாக இருக்க அம்மா என்னாச்சு உங்க முகம் ஏன் இப்படி இருக்கு.. உன்னை விட சின்ன பையன் வருண் அவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது. சுபத்ரா அவளுக்கும் கல்யாணம் ஆக போகுது.. ஆனால் நீ இன்னும் எத்தனை நாளைக்கு தான் டா இப்படி ஒண்டி கட்டையாக சுற்றி கொண்டு இருப்ப…. எனக்கு தெரிஞ்ச சொந்தத்தில் ஒரு பொன்னு இருக்கு நல்லா படிச்சு இருக்கு ஒரு எட்டு அந்த பொண்ணை பார்க்குறயா…
இதை கேட்டதும் சரவணனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு சில நொடிகள் அங்கேயே நின்றான். தேவகி கண்களை துடைத்து கொண்டு அவள் வேலையை செய்ய போக அம்மா அந்த பொண்ணை நான் பார்க்கிறேன்… தேவகிக்கு அவன் சொன்னது கனவு போல் இருந்தது. ம்மா.. என்ன டா எதுவும் சொன்னியா.. மம் ஆமா நான் அந்த பொண்ணை பார்க்கிறேன் அந்த பொண்ணு நம்பர் கொடு..
தேவகிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி டேய் நிஜமாவா.. மம் நிஜம் தான்.. நீ நம்பர் கொடு.. வெண்பா கிட்ட இருக்கு நான் வாங்கி தரேன் அந்த பொண்ணு எவ்ளோ அழகு தெரியுமா உங்க ஜோடி பொருத்தம் என் கண்ணுக்குள்ளே என்று சொல்ல வர.. மா முதலில் உன் கற்பனை கோட்டையை நிறுத்து நான் அந்த பொண்ணை பார்க்க தான் போறேன்னு சொன்னேன். இதை கேட்டதும் அவர் அமைதியாகி விட பின் சரி சரி நீ முதலில் போய் பாரு அப்புறம் பிடிக்கும்.
சரவணன் அதை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி அவன் அறைக்கு சென்றான். சரவணன் ஒரு திட்டத்தோடு தான் இருந்தான்.இங்கே இனியாள் இன்னும் வினய் வருவதற்காக காத்து கொண்டு இருந்தாள். மணி இரவு 8.00 ஆனது. ரவி மீட்டிங் எல்லாம் முடித்ததும் அடுத்த பிளைட்ல வந்தார். இன்பாவுக்கு கொஞ்சம் பசிக்க அவன் எழுந்து கீழே வர அங்கு இனியாள் இருப்பதை பார்த்து விட்டு நேராக எதுவும் பேசாமல் கிசென் சென்றான்.
வசுமதி அவன் பின்னால் சென்றாள். என்ன ராகவ் கிட்ச்சென் குள்ள வந்து இருக்க.. மாம் அந்த பொண்ணு எதுக்கு இன்னும் இங்கே இருக்கு வீட்டுக்கு அனுப்பி அந்த பொண்ணோட வீட்டுக்கு வைங்க. இதை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சுபா ஹே உனக்கு என்ன டா அந்த பொண்ணு தான் உனக்கு என்று சொல்ல வர
இன்பா, ஜஸ்ட் சட் அப் இடியட் அவள் சொல்வது எல்லாம் நம்பி கொண்டு இருக்காதே.. என்று சொல்லி ஒரு கோப்பையில் சுடு நீர் ஊற்றி கொண்டு உணவு மேஜைக்கு சென்றான். வசுமதி, என்ன சுபா எதுக்கு உன்னை திட்டி விட்டு போறான். சுபா சிரித்து கொண்டே நத்திங் மாம் அவன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கான். ரவி வீட்டுக்கு உள்ளே வந்ததும் இனியாள், ஹாய் அங்கில் எப்படி இருக்கீங்க.. மம் குட்.. நீங்க என்று அவர் கேட்க இனியாள் அவள் வந்த கதையை கூறினாள். சரி ஓகே மா என்று சொல்லி அவர் உள்ளே சென்றார். மதி மதி சுபா..என்று அனைவரையும் கூப்பிட இன்பா அவன் தந்தை வந்த சத்தம் கேட்டதும் அவன் அறைக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறினான்.
வசுமதி தன் கணவர் வந்த சத்தம் கேட்டு உடனே அவரை பார்க்க சென்றார். இனியாள் டீவியில் பாட்டு கேட்டு கொண்டு இருக்க சுபா அவளுக்கு கொரிக்க தீனி கொடுக்க அவள் இன்பா மேலே செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். ஹலோ இனியாள்.. ஹான் அண்ணி.. இந்தாங்க கொஞ்சம் ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க என்று கொடுத்து விட அவள் சார்க்கு என்னாச்சு வீட்டில் யார் கிட்டயும் பேச மாட்டாரா.. அவன் நைட்டு டூட்டீ பார்த்து விட்டு வந்தான் சோ சோர்வாக இருக்கிறான். நீங்க சாப்பிடுங்கள் என்று சொல்ல அவள் கொஞ்சம் மட்டும் எடுத்து கொண்டாள். நிறைய சாப்பிட்டால் குண்டு தொப்பை வர கூடாது அதனால் கொஞ்சம் எடுத்து கொறித்தாள்.
ரவி, மதி அந்த பொண்ணு இங்கே என்ன பண்ணுது டைம் ஆகி விட்டது வினய் வரலயா.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுபா உள்ளே வந்தாள். என்னங்க ராகவ் கூட இப்போ தான் சொன்னான். அவனை பற்றி என் கிட்ட பேசாதே.. என்று சொல்லி சுபா வினய்க்கு கால் பண்ணு எப்போ வருவார் அப்டின்னு கேளு.. ஒகே டாடி என்று சொல்லி அவள் போன் செய்து பேசி விட்டு டாடி அவர்க்கு முக்கியமா வேலை இருக்காம் அதனால் அந்த பொண்ணை இன்பாவைக் கூட்டி போய் வீட்டில் விட சொன்னாரு..
சுபா, நிச்சயமா போக மாட்டான். ரவி அவனுக்கு இப்போ வெட்டி முறிக்கும் வேலை எதுவுமே இல்லையே.என்று சொல்லும் நேரம் இன்பா, என்ன பேசிட்டு இருக்கீங்க.. ரவி, மதி அவன் கிட்ட சொல்லு போய் அந்த பொண்ணை அவங்க வீட்டில் விட சொல்லு.. இன்பா கண்ணகுழி தெரிய சிரித்து விட்டு. மாம் என்னால் போக முடியாது நேற்று எனக்கு நைட்டு டூட்டி.. ரவி இன்னிக்கு நைட்டு.. இன்னிக்கு இல்ல.. அப்புறம் என்ன போக சொல்லு.. இன்பா, நான் எதுக்கு போகனும் ஐ கான்ட் உங்க பொண்ணு ரிலேசன் எனக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஃபர்ஸ்ட் அப் ஆல் எனக்கு சுபா கல்யாணத்தில் எந்த விருப்பமும் இல்ல..
வசுமதி, ராகவ் தேவை இல்லாமல் பேசிட்டு இருக்க.. இன்பா, மாம் அந்த பொண்ணை சீக்கிரம் அனுப்பி வைங்க. உங்க ஹஸ்பண்ட்க்கு இப்போ வெட்டி முறிக்கும் வேலை எதுவுமே இல்லையே சோ அவர் போய் விட்டு வரட்டும். இதை கேட்டதும் அவருக்கு கோபம் வர அவன் அருகில் செல்ல போக உடனே என்னங்க விடுங்க.. ஹே நீ எப்போ பார்த்தாலும் அவனை தலையில் தூக்கி வைத்து ஆடு டி அது தான் என்னை இப்படி பேசிட்டு போறான்.
சுபா, டாடி விடுங்க சண்டை வேணாம் நான் போய் விட்டு வருகிறேன். இன்பா, சுபா பேசாமல் கேப் புக் பண்ணி அனுப்பி விடு இல்ல அவங்க வீட்டில் உன் மாமனாரை வந்து கூட்டி போக சொல்லு.. ரவி, மதி அவனை போக சொல்லு டி இல்ல நான் இப்போவே கிளம்பி விடுவேன். இன்பா, சுபா அப்போ இன்னொரு கேப் உங்க டாடிக்கும் சேர்த்து புக் பண்ணிடு என்று சிரித்து கொண்டே அவன் சொல்லி விட்டு ஒரே எட்டில் அவன் அறைக்கு சென்று விட்டான்.
மம் வந்ததும் என்னை டென்ஷன் பண்ணிட்டான் ராஸ்கல் என்று திட்ட சரி விடுங்க பிளீஸ் எனக்காக என்று வசுமதி சமாதானம் செய்தாள்.
ம்ம் நம்ம விவேகா என்ன செய்கிறாள்…
அதை நாளைக்கு பார்க்கலாம்.
தொடரும்..
Sat, sun, two days ud konjam late aagum but confirm ud upload panniduven
Episode 142,
இங்கே விவேகா வீட்டுக்கு வந்ததும் அவள், ஆதி, கங்கா மூவரும் வருண் வீட்டுக்கு சென்றனர்.
அங்கே சென்றதும் விவேகாவின் எண்ணம் முழுவதும் இன்பா தான் இருந்தான். வருண், விவேகா எப்படி உன்னை அவங்களுக்கு தெரியும்.
ஆதி, மாமா வசு மேம் எங்களுக்கு டிரெய்னிங் கிளாஸ் எடுக்க வந்து இருக்காங்க. உங்களுக்கு முன்னாடியே எனக்கும் விவேகாவுக்கும் தெரியும். வருண், விவேகா இதை ஏன் முன்னாடியே என் கிட்ட சொல்லவே இல்ல எல்லாமே சேர் பண்ணுவ ஏன் இதை ஏன் சொல்லல…
விவேகா, அண்ணா இது அவ்ளோ பெரிய விஷயமா எனக்கு தோணல..
கங்கா, என்ன ஆச்சு வருண் அங்கே போய் எதுவும் சேட்டை செய்தாளா.விவேகா அவள் அம்மாவை முறைக்க.. வருண் , இல்ல மா விவேகாவை அங்கே எல்லார்க்கும் தெரிந்து இருக்கு நல்ல பொண்ணு அப்டின்னு சர்ட்பிக்கேட் கொடுப்பாங்க அந்த அளவுக்கு என் தங்கை சும்மாவா..
விவேகா, அண்ணா கொஞ்சம் அம்மா கிட்ட சொல்லிவை என்றும் எனக்கு இப்போ தலை வலிக்கிற மாதிரி இருக்கு அதனால் வீட்டுக்கு போறேன்.. ஆதி சீ யூ.. என்று சொல்லி அவள் கிளம்பினாள்.
விவேகா வீட்டுக்கு வந்ததும் நேராக உள்ளே சென்று கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடம் அவளையே உலுக்கி கொண்டாள். இன்பா அவளை சீண்டிய இடம் எல்லாம் ஏதோ செய்தது. எதுக்கு டா என்னை இப்படி டார்ச்சர் பண்ற இப்போ நீ என் பக்கத்தி்லேயே இருக்க மாதிரி எனக்கு தோணுதே.. என்று வாய் விட்டு சொல்லியவள் நேராக குளியலறை சென்று குளித்து வந்தாள். பின் படுக்கையில் படுத்து கொண்டாள். இன்பா வசுமதியை அக்கறையாக தூக்கி செல்வதை பார்த்த விவேகாவுக்கு இன்பாவின் கைவளைவில் அவள் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டாள். அவனுடைய அக்கறை அரவணைப்பு அது இவளுக்கு விலை மதிப்பற்றது. உண்மையில் விவேகாவின் சிந்தையில் இன்பா தான் நிறைந்து இருந்தான். அவனையே நினைத்து கொண்டு இருந்தாள்.
அப்போது தான் இன்பா அவன் வேலையை காட்டிட ஆரம்பித்தான். இவள் எதிர் பார்க்க வில்லை அவன் வந்து தூக்கி செல்வான் என்று அது அவளுக்கு பிடித்து தான் இருந்தது. ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள் அதை நினைத்தால் இப்பொழுதே குறு குருக்கிறது. ஆடவனுக்கு மட்டும் தான் உணர்ச்சிகள் இருக்குமா பெண்ணுக்கும் இருக்கும். ஆண்கள் அதில் இருந்து சிறிது நேரத்தில் வெளியே வந்து விடுவர். ஆனால் பெண்கள் அவர்களுக்கு அது அப்படியே தான் இருக்கும் இவ்வாறு இன்பா இவ்வாறு செய்ததும் அவளால் அதில் இருந்து உடனே வெளியே வர முடிய வில்லை. அதுவும் அவனது வீட்டில் அம்மா , அக்கா என அனைவரும் இருக்கும் போது இவளிடம் எல்லை மீறி இருக்கிறான். இவள் பேசாமல் அவனை தவிர்த்தும் கூட சிறிது குற்ற உணர்ச்சி இல்லாமல் மீண்டும் சீண்டி கொண்டே இருந்து இருக்கிறான். அது மட்டும் இல்லாமல் விவேகாவினால் அதன் பிறகு அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேச முடியவில்லை அவளுக்கு வெட்கமாக இருந்தது. இப்படியே அவனை பற்றியே நினைத்து கொண்டு இருந்தவள் அவன் தொட்ட இடங்களுக்கு எல்லாம் கைகள் செல்ல அவன் பக்கத்தில் இருந்தால் மட்டும் சாக் அடிக்குது இப்போ நமுத்து போன பட்டாசு மாதிரி எந்த உணர்ச்சியும் இல்லயே என்று நினைத்து அவளாகவே சிரித்து கொண்டு இருந்தாள்.
ராகவ் நீ என் கிட்ட சாரி சொல்ற வரை நான் இதையே மெயின் டைன் பண்ண போறேன். அதுக்கு அப்புறம் நான் தான் வின் பண்ணுவேன். ஜாலி ஜாலி என்று அவள் நினைத்து கொண்டு இருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கங்கா விவேகா என்று கூவி கொண்டே வர உடனே அவள் தூங்குவது போல் கண்களை மூடி கொண்டாள். கங்கா உள்ளே வந்ததும் அவளது பெண்ணை பார்க்க அவள் தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்ததும் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தார். பின் கண்களில் கண்ணீர் வந்து வுட்டது என்னங்க நம்ப பொன்னு இப்போ ரொம்ப அறிவா பேசுறா பொறுப்பா நடந்து கொள்கிறாள். இதை எல்லாம் பார்க்க நீங்க இல்லையே நீங்க இருக்கும் போது அவளை கொஞ்சி கிட்டு இருப்பீங்க இப்போ நானும் வருண் மட்டும் தான் இருக்கிறோம் அவன் ஒரு வார்த்தை கூட சொல்றது இல்ல அதே போல் நானும் இருந்தால் உங்க பொண்ணுக்கு வால் கூட முளைத்து விடும் என்று வாய் மொழியாக சொல்லி அவள் தலையை வருடி விட்டு நெற்றியில் முத்தம் பதித்தாள். பின் எழுந்து சென்றார். .
கங்கா சென்றதும் விவேகா கண்களை திறந்து பார்த்து அவள் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அவளுக்கு அவள் அப்பாவின் நியாபகம் வந்தது அதை நினைத்து கொண்டே சில கண்ணீர் துளிகளை தலையணையில் மறைத்து விட்டு தூங்கினாள்.
இங்கே ரவி கோபமாக இருக்க சுபா இனியாளை காரில் கொண்டு அவள் வீட்டில் விட்டு வந்தாள். இனியாளு க்கு அங்கு இருந்து செல்ல விருப்பமே இல்லை இங்கு இருந்தால் தான் இன்பா, வசுமதி, ரவி மனதுள் இடம் பிடிக்க முடியும் என்று நினைத்தாள் ஆனால் வேறு வழி இல்லாமல் கிளம்பி சென்றாள்.
வசுமதி, ரவி.. ரவி.. உங்களுக்கு நான் பொண்டாட்டியா இல்ல அது பொண்டாட்டியா.. ரவி எனக்கு இது தான் டி முதல் பொண்டாட்டி அதுக்கு அப்புறம் தான் நீ.. அப்டியா இப்போ என்ன செய்கிறேன் பாருங்க என்று அவர் கையில் இருந்து லேப் டாப்பை மூடி அருகில் வைத்தாள். ரவி இப்போதும் கோபம் குறையாமல் அமர்ந்து இருக்க இப்போ என்ன கோபம்.. உனக்கு நானா முக்கியம் அவன் தானே முக்கியம்.. வசுமதி அவர் அருகில் அமர்ந்து இப்படி சின்ன குழந்தை மாதிரி அவன் கூட போட்டி போடுவதை நிறுத்துங்க ராகவ் நம்ம பையன்.. ரவி, உன் பையன் என்னை தான் இந்த 7வருடத்தில் ஒரு தடவை கூட சொன்னதே இல்லையே.. உங்களுக்கு இப்போ என்ன பிரச்னை.. ரவி, அவன் சுபா கல்யாணத்தை பற்றி இப்படி ஒரு வார்த்தை சொல்லுவான் அப்டின்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல டி.. நான் அவசர பட்டேன் தான் அதை ஒத்து கொள்கிறேன் நம்ம பொண்ணுக்கும் வயசு ஆகிட்ட் போகுது அப்டின்ர ஒரே காரணத்திள் தான் எனக்கு தெரிந்த வரை வினய் பொறுப்பான பையன் அதனால் தான் நான் எல்லாம் செய்தேன்.
ஆனால் இப்போ அவன் பேசுவது எனக்கு உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு இதை கேட்டதும் வசுமதி மனம் இன்பாவின் மேல் கொஞ்சம் கோபம் வந்தது.
ரவி, மதி அவன் சொல்வது போல் நான் தவறு செய்து விட்டேனா நான் எதை வேணாலும் தாங்கி கொள்வேன். ஆனால் சுபா என் உயிர் அவ விஷயத்தில் ஒரு தவறு அதுவும் என்னால் அப்டின்னா என்னால் அதை தாங்க முடியாது டி…
வசுமதி, இல்லன்க அப்படி எதுவும் நடக்காது நீங்க எது செய்தாலும் அது சறியா தான் இருக்கும். என்று அவரை இடையில் கட்டி கொண்டாள். ரவி எனக்கு என்ன கோபம் தெரியுமா அவன் என் மேல் தப்பு இருக்கு அப்டின்னு மட்டும் தான் சொல்றான் ஆனால் அது என்ன எப்படி சரி செய்வது இதை பற்றி சொல்ல மாட்டின்றான்.. நீங்க விடுங்க அவன் சொல்வது போல் எதுவும் இருக்காது நீங்க கவலை பட வேண்டாம். இல்ல மதி என்று சொல்ல வர.. நீங்க கவலை பட கூடாது என்னால் அதை தாங்க முடியாது சுபா கல்யாணத்துக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு அப்புறம் என்ன நாம் பார்த்து கொள்ளலாம் அண்ட் அவன் சும்மா இருக்க மாட்டன் உங்களை போல் சுபா மேல் அவனுக்கு பாசம் பார்க்கலாம் என்ன நடக்குது ஏன் இப்படி பன்றான்னு தெரியல நான் அப்பா கிட்ட சொல்றேன் அவர் பேசினால் எதுவும் சொல்வான் இப்போ அதிகமா அப்பா, அம்மாவை தான் அடிக்கடி பார்க்க போகிறான்.
என்று பேசி முடித்து அவள் ரவி வாங்க சாப்பிடலாம். இல்ல எனக்கு வேண்டாம். சும்மா முரண்டு பிடிக்க வேண்டாம். இன்னிக்கு உங்களுக்கு பிடித்த நாட்டு கோழி குழம்பு அண்ட் லாப் ஸ்டார் பொரித்து வைத்து இருக்கிறேன். பொய் சொல்லாத இது அவனுக்காக தானே செய்த.. ரவி என்னை டென்ஷன் பண்ணாத.. என்ன டி உனக்கு துளி கூட என் மேல் பயம் இல்ல.. நான் எதுக்கு பயப்படனும்… நீ நினைத்து கொண்டு இருக்காத அவன் உன் கூட எப்பவும் இருக்க மாட்டான் அவன் பொண்டாட்டி மட்டும் வந்து விட்டாள் அவன் நம்ம ரெண்டு பேரையும் யாரு அப்டின்னு கேட்பான். என் ராகவ் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். ம்ம் கனவு காணு என்று சொல்லி அவர்கள் இருவரும் பேசி கொண்டே கீழே வந்தனர்.
வசுமதி, ராகவ் சாப்பிட வா.. அதற்குள் சுபா வும் வந்து விட நால்வரும் சாப்பிடும் மேஜையில் அமர்ந்து இருந்தனர். வசுமதி அனைத்தும் சூடு செய்து பரிமாறிட மாம் எனக்கு அந்த ஃபிஷ் ஃப்ரை வேணும்..
வசுமதி ராகவ் அது அப்பாவுக்கு மட்டும் தான் இருக்கு.. மதியம் சாப்பிடும் பொழுது நிறைய இருந்ததே. அவ்வளவும் இவர் சாப்பிடுவா ரா என்னோட ஃபிஷ் சாப்பிட தான் இவர் கிளம்பி வந்து இருக்கிறார்.
சுபா, டேய் ஓவரா பண்ற அது விவேகா அம்மாவுக்கு மம்மி சாப்பிட போட்டு கொடுத்து விட்டார்கள். என் டாடிக்கு கம்மியா தான் இருக்கு நீங்க சாப்பிடுங்க டாடி.. இதை கேட்டதும் இன்பா முதல் முறையாக ஸாரி மாம் ஐ டோண்ட் நோ என்று சொல்ல வசுமதி ஒரு நிமிடம் ஆச்சர்யமாக பார்த்தாள். ரவி எதுவும் சொல்ல வில்லை. அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தார். .
ரவி, எனக்கு வேணாம் மதி உன் பையனுக்கே வை என்று சொல்லி அவர் சாப்பிட
இன்பா, என்ன குற்ற உணர்ச்சி யில் தள்ள வேணாம் நீங்களே சாப்பிடுங்க… என்று சொல்லி வேகமாக சாப்பிட்டு விட்டு அவன் அறைக்கு சென்றான்.
அவன் சென்றதும் ரவி அந்த பொன்னு இன்னிக்கு வீட்டுக்கு வந்தாளா.. வசுமதி, மம் விவேகாவா.. மம் ஆமா.. நான் இல்லாமல் போய் விட்டேனே..
சுபா, டாடி நீங்க மிஸ் பண்னிட்டீங்க இன்பாவை நீங்க பார்த்து இருக்கணும் என்னமா மிரட்டுறா தெரியுமா.. ரெண்டு பேரும் ஒரே சண்டை இவன் அவளை பார்த்தாலே கொஞ்சம் பயப்படுறான். இன்பா இவளோ வாய் பேசி நான் பார்த்ததே இல்ல சரிக்கு சரியா அவ கூட பேசி சண்டை… வசுமதி, இது எப்போ நடந்தது… மாம் நீங்க வருண் க்கு சாப்பாடு சர்வ் பண்ணிங்க தானே அப்போ நடந்தது.
ரவி மனதில் அப்போ இவன் ஒரு பொன்னு பின்னாடி சுற்றுகிறானே அது இந்த பொண்ணா இருக்குமோ.. !
தொடரும்…
Episode 143,
அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பாவுக்கு அவன் தலைமையகத்தில் போன் வந்தது. இன்று காலை 10.30 மணிக்கு நேரில் வரும் படியும் கூறி செல்வகணபதி இன்பாவின் உயர் அதிகாரி கூறி இருந்தார்.
அவன் உடற் பயிற்சி செய்ய அறைக்கு செல்ல அதற்கு முன்பே ரவி அங்கு இருந்தார். வசுமதி, சிரித்த முகத்துடன் சந்தோஷமாக ரவி! ரவி! என்று சொல்லி கொண்டே வந்தார். என்ன இன்னிக்கி காலையிலேயே செம்ம ஆக்டிவா இருக்க என்ன டி… ரவி இன்னிக்கு எனக்கு புரொமோஷன் சொல்லிடுவாங்க. அது தான் முதலில் உங்க கிட்ட சொல்லலாம் அப்டின்னு வந்தேன் என்று அவர் அணைக்க ரவி முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லை.
உங்களுக்கு சந்தோஷம் இல்லையா நான் குட் நியூஸ் சொல்லி இருக்கேன் உங்க முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் இருக்கு. ரவி, இது அவ்ளோ பெரிய நியூஸ் இல்ல.. இதை கேட்டதும் அவர் தள்ளி போக.. ரவி ஒரு பிடியில் அவள் கைகளை பிடித்து இழுத்து நான் கூட நீ புரொமோஷன் அப்டின்னு சொன்னதும் நான் டாடி ஆகிட்டேன் அப்டின்னு சந்தோஷ பட்டேன் நீ என்னடான்னா ஆஃபீஸ்ல புரொமோஷன் பற்றி பேசிட்டு இருக்க..
வசுமதி அவரை பார்த்து முறைத்து கொண்டே ஓ சாருக்கு இப்படி ஒரு ஆசை வேற இருக்கா.. நம்ப ஒன்னும் யங் கப்பில் இல்ல நம்ப பொண்ணுக்கு கல்யாணம் ஆக போகுது தெரியும் தானே. ரவி, உனக்கு தான் வயசு ஆகி விட்டது இப்போ கூட நான் எத்தனை கல்யாணம் வேணாலும் பண்ணலாம் டி. இனி கிட்ட வந்தீங்க புடிச்சு ஜெயிலில் போட்டு விடுவேன். இப்போ உங்களுக்கு வயசு என்ன ஆகுது.. எனக்கா எனக்கு 30+ அவ்ளோ தான்.. அவள் முறைக்க 40+ மீண்டும் முறைக்க 51 போதுமா.. உன்னை விட ஒரு நாலு வயசு நான் கம்மி.. வசுமதி இதை கேட்டு அடிக்க வர சரி சரி விடு இப்போ சுபா கூட நான் வெளியே போனால் அவளுக்கு என்னை அண்ணா வா அப்டின்னு கேட்பாங்க டி.. இன்னும் நான் இன்றும் என்றும் 16 டி என்று சொல்லி வசுமதிக்கு முத்தமிட நெருங்க சரியாக யாரோ வரும் சத்தம் கேட்டது.
ரவி என்று சொல்லி அவள் தள்ளி நின்று கொண்டாள். இன்பா உள்ளே வந்ததும் இந்த முறை ரவி அவனை பார்த்து முறைத்தார். நான் நிம்மதியா இருந்தால் இவனுக்கு எப்படி மூக்கு வியர்ககுது அப்டின்னு தெரியல எங்களை பிரிக்க எங்கே இருந்தாலும் வந்து விடுகிறான். என்று மனதில் நினைத்து கொண்டு அவர் எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்து கொண்டார்.
வசுமதி இன்பாவிடம் அப்புறம் சர்பிரய்சாக சொல்லி கொள்ளலாம் என்று நினைத்தார். ராகவ் உனக்கு லெமன் டீ எடுத்து வருகிறேன் என்று சொல்லி உடனே அவர் அந்த இடத்தை விட்டு சென்றார். இன்பா அவரை பார்த்து விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வரலாம் என்று வெளியே செல்ல போக உடனே அவர் டேய் நில்லு.. அவன் என்ன என்பது போல் திரும்பி பார்த்தான். உன் கிட்ட கொஞ்சம் பேசணும். அவன் எனக்கு டைம் இல்ல சீக்கிரம் சொல்லுங்க..
எனக்கு நிறைய டைம் இருக்கு நான் பொறுமையாக தான் சொல்லுவேன். அப்போ நான் கிளம்புகிறேன்.
ரவி, அது டார்லிங் சாரி சாரி உன்னோட டார்ஜ்லிங் பற்றி நீ போ எனக்கு இனி டைம் இல்ல.. இதை கேட்டதும் இன்பா உடனே நின்றான். என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க.. ரவி ஒரு டவல் எடுத்து கொண்டு முகத்தை துடைத்து கொண்டே அவனை பார்த்து இப்போ தான் டைம் இல்லன்னு சொன்ன சொல்ல முடியாது போடா..
இன்பாவுக்கு உடனே கோபம் வர அவன் கதவுக்கு அருகில் செல்ல அவர் சரியான கேடி தான்டா நீ.. அவன் திரும்பி பார்த்தான். என்ன பார்க்கிற நீ ஒரு 420 டா.. இன்பா இரு புருவமும் நெருக்கி பார்த்து சொல்ல வந்தத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.. ரவி கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே அது விவேகா தானே.. அவன் ஒரு நிமிடம் திகைத்து பின் முகத்தில் எதுவும் காட்டாமல்
இன்பா, யாரு அது ஆக்டர் அஜித்குமார் நடிச்ச படம்..
ரவி சிரித்து கொண்டே இவளோ மொக்கையா இருக்க உன்னை போய் எப்படி அந்த பொன்னு லவ் பண்றா அப்டின்னு தான் தெரியல.. ஹான் அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணி இருக்க சான்ஸ் கம்மி தான்..
இன்பா தன் கைகளை இறுக்கி அந்த கதவுனை பிடிக்க டேய் அடங்கு டா.. உன் குடுமி இப்போ என் கையில்..
இன்பா, உங்களுக்கு உங்களுக்கு எப்படி தெரியும் யாரு சொன்னா..
ரவி சிரித்து கொண்டே கால் மேல் கால் போட்டு கொண்டு சும்மா சொல்ல கூடாது அந்த பொண்ணை ட்ரிக் பண்ணி இங்கே கூட்டி வந்து பக்கத்தில் வைத்து இருக்க அந்த பொண்ணோட அண்ணா அதான் உன் மச்சான் ஹான் வேண்டாம் வேண்டாம் வருங்கால மச்சான் இது சரியா இருக்கும் அவனையும் கூட்டி வந்து இங்கே வச்சு இருக்க அவள் உங்க அம்மா காலேஜ் ல தான் படிக்கிறா சார் எனிடைம் ஹீரோ யிசம் காட்டி கிட்டு இருக்கீங்க..
இன்பா இது எல்லாம் கேட்டு கொண்டே அருகில் உள்ள சேரில் நன்கு சாய்ந்து அமர்ந்து அவரை பார்க்க ரவி என்னடா திமிரா.. இன்பா தன் தலையை கோதி கொண்டே அதான் எல்லாம் தெரிந்து போச்சே இனி என்ன ஆமா நீங்க சொல்றது சரி தான் அவ தான் இங்கே தான் இருக்கா இப்போ அதுக்கு என்ன நீங்க ஒண்ணும் ஒழுங்கு இல்லையே.. ரவி நான் ஒன்னும் பண்ணலயே..
இன்பா, நீங்க என் மம்மியை எப்படி கல்யாணம் பண்ணீங்க.. ரவி நாங்க arrange marriage.. ஹான் அப்புறம் உங்க கதையை ஆல்ரெடி ரீல் அந்து போச்சு சோ.. ரவி, அதை விடு என்று எதோ சொல்ல வர இன்பா, நீங்களே 8அடி பாயிந்தால் நான் 16 இல்ல 24அடி பாயனும் சோ தட்ஸ் ஆல் நான் கிளம்பறேன்.
ஓவரா பாயிந்து விடாதே அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு..
இன்பா எழுந்து அவ தான் மிசஸ் இன்ப ராகவன்.. ஹோ அப்டியா அது இப்போ இல்ல தானே நில்லு டா.. சொல்லுங்க.. வீட்டுக்கு கூட்டி வந்து உன் மம்மி, சுபா, உன் மம்மி ஃபேமிலி எல்லாரையும் அவ கிட்ட இன்றோ கொடுத்து இப்போவே செட் அப் பண்ற டா. சும்மா சொல்ல கூடாது என்னோட ஜீன் உன் கிட்ட இருக்கு..
இன்பாவுக்கு விவேகா சொன்ன விஷயம் நினைவு வந்தது. இந்த கண்ணகுழி அவ்ளோ அழகு ராகவ் என்று அவள் இரு விரல்களை வைத்து தொட்டு கொண்டே இருப்பாள்.
இன்பா, யாரு சொன்னது அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. மம் சரி நான் அந்த பொண்ணை மீட் பண்ண போறேன்… உன்னை பற்றி நான் வசுமதி கிட்ட சொல்ல போறேன். …
இன்பா, மம் சொல்லுங்க நானே மாம் கிட்ட எப்படி இதை சொல்றதுன்னு தான் வெயிட் பண்ணேன் இப்போ நீங்க சொல்றது எனக்கு ரொம்ப நல்லது.
ரவி, நீயே என் கிட்ட சொல்லாத போது நான் எதுக்கு டா சொல்ல போறேன் உனக்கு எனக்கும் என்ன இருக்கு.. ஆனால் உன்னை நான் சும்மா விட மாட்டேன் தேன் மொழி, வானதி பற்றி எல்லாம் இனி பிளாக் மெயில் பண்ண வேணாம்.
இன்பா, இப்போ உங்களுக்கு என்ன வேணும். சுபா கல்யாணத்தில் உனக்கு என்ன தான் பிரச்சனை நாளைக்கு உன்னால் என் பொண்ணு கல்யாணத்தில் எந்த பிரச்னையும் வர கூடாது. இன்பா அவ தான் உங்க பொண்ணு சோ எந்த பிரச்னையும் வராது. நான் உங்க பையன் இல்ல நான் என் மாம் அவங்களுக்கு மட்டும் தான் பையன். நீங்க மோசமானவர் உங்களுக்கு நாங்க முக்கியம் இல்ல உங்க தங்கை தான் முக்கியம் சுபா அப்படியே உங்க ஒரே தங்கை பாதி உங்க அம்மா பாதி இருப்பதால் தலையில் தூக்கி வைத்து சுத்தரீங்க..
ரவி, எப்போதோ தெரியாமல் நடந்த தவறுக்கு என்னை பிளேம் பண்ணிட்டு இருக்காத உனக்கு எல்லார் கிட்டயும் அந்த பொண்ணை காட்டனும் அப்டின்னு தொனின உனக்கு என் கிட்ட காட்டனும் அப்டின்னு தோணல இல்ல. நான் செஞ்சது கொஞ்சம் தப்பு தான் டா அதுக்கு நான் நிஜமாவே ஃபீல் பண்றேன் என் மதி என்னை புரிது கொண்டாள். தேவகி புரிந்து கொண்டார் எனக்கு அது போதும் ஆனால் இனி நீயாகவே என்னை தேடி வருவ டா..உன்னை ரிவன்ஜ் பண்ண போறேன். அந்த பொண்ணை நீயாகவே எனக்கு இன்றோ கொடுப்ப.. இன்பா மீசையை முறிக்கி கொண்டே சான்சே இல்ல… ரவி அவனை தள்ளி விட இன்பா அவரை பார்த்து ஓவரா பண்ணாதீங்க… ரவி அவனை பின்னால் இருந்து களுததை நெரிப்பது போல் பிடித்து கொண்டு நான் உனக்கு அவளை இன்ட்றோ கொடுக்கிறேன் டா. அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் இருக்கும் வசுமதி சொல்லி இருக்கா.. இன்பா கஷ்ட பட்டு மூச்சு வாங்கி கொண்டே மம் பார்க்கலாமே என் பேபி நான் சொல்றத மட்டும் தான் கேட்பா.. ரவி இறுதியாக நீ எப்பவும் உன் அம்மா போல் லூசர் அண்ட் ஃபீலிங் இடியட் இதை கேட்டதும் அவன் அழுத்தமாக பிடிக்க வர டேய் நான் சும்மா தான் தூண்டில் போட்டேன் நீயே அந்த பொண்ணை பற்றி எல்லா விஷயமும் சொல்லி விட்டாய் அவளை மூலமாக உன்னை இன்றோ கொடுக்க வைப்பேன் டா..
இன்பா, அப்படி மட்டும் நடந்தது னா உங்களுக்கு சுபா கல்யாணம் பற்றி விஷயம் சொல்ல போறேன் எனக்கு தெரிஞ்சு அவளுக்கு அது ரொம்ப நல்ல விஷயம். உங்களுக்கு எப்படின்னு தெரியல..
ரவி, கல்யாணத்தை நிருத்தமும் என்னை அவமானம் படுத்தும் நோக்கத்தில் எதுவும் நடந்தது அப்புறம் நீ வேற ஒரு ரவிச்சந்திரனை பார்ப்ப , இன்பா ச்சீ..ச்சி.. நான் அந்த தவறு மட்டும் எப்பொதும் செய்ய மாட்டேன் சுபா என் அக்கா.. அண்ட் உங்க பேரு க்கு பன்ச் டைலாக் ரொம்ப கேவலமா இருக்கு சோ இனி என் கிட்ட ட்ரை பண்ண வேணாம் மாம் , இல்ல சுபா அப்படி இல்லன்னா உங்க தங்கை நந்தினி கிட்ட சாரி முழு பெயர் சொல்லி விடுகிறேன் ரவி சந்திரனின் அன்பு தங்கை சந்திர நந்தினி கிட்ட போய் சொல்லுங்க அவங்க வேணா ரசிப்பார்கள்..
ரவி, திமிர் டா நீ எங்கே போக போற என்று கழுத்து இன்னும் இருக்கிட இன்பா, மாம் வர மாதிரி இருக்கு நீங்க என்னை இப்படி செய்வதை பார்த்தால் அப்புறம் நீங்க போலீஸ் ஸ்டேஷன் இல்லன்னா உங்க மாம் வீட்டுக்கு போக வாய்ப்பு இருக்கு.. என்று சொல்ல ரவி அவனை விட்டார் இன்பா தம் தொண்டையை நீவி கொண்டே நீங்க ஓல்ட் மேனா இருப்பதால் உங்களை விடுகிறேன் இல்ல.. என்று இன்பா சொல்ல வர டேய் போடா என்று அங்கு இருந்த டம்பில்ஸ் எடுத்து அவன் மேல் வீசினார்.
இன்பா, உங்களை…
தொடரும்…
Episode 144,
இன்பா காலையில் சரியாக கிளம்பி சென்றான் அதே போல் வசுமதி இன்பாவிடம் சொல்லாமல் சென்றாள். இன்பா மித்ரணுக்கு கால் செய்தான். சொல்லு மச்சி.. டேய் விவேகா பற்றி என் டாட் ககு எல்லாமே தெரிந்து போச்சு.. மித்ரன் அப்புறம் இப்போ என்னடா பண்ண போற எதுவும் பிரச்னை இல்ல தானே.. இன்பா, இன்னக்கு காலையிலே என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாரு டா.. டேய் இப்போ அடுத்து என்ன பண்ண போற..
இன்பா, இல்ல மித்ரன் அவருக்கு என்ன பிரச்னை நான் உதாரிதனமா வேலை இல்லாமல் சுற்றி கொண்டா இருக்கேன். நான் படித்து இருக்கேன் நல்லா வேலையில் இருக்கேன் எனக்கு ஒரு பொண்ணை பிடித்து இருக்கு அவளுக்கும் என்னை பிடித்து இருக்கு என்னால் அவளை சந்தோஷமா பார்த்துக்க முடியும் இவளோ தான் டா யாரு என்னை என்ன சொல்ல போறாங்க அவருக்கு எந்த பிரச்னையும் இல்லாத மாதிரி தான் தோணுது.. மித்ரன், அப்புறம் என்ன டா பிரச்னை நீ தெளிவா சரியா தான் இருக்க.. இன்பா, இல்ல மித்ரன் எனக்கு மாம் நினைத்தால் தான் கொஞ்சம் பயமா இருக்கு அவங்க எப்படி இதை எடுத்துப்பாங்க எப்படி சொல்றது அப்டின்னு தெரியல டா.. இப்படி பேசி கொண்டு இருக்கும் போதே அவனிடம் மித்ரன் அந்த ரமேஷ் கண்ணா இந்த details கொடுத்ததுக்கு அப்புறம் ஒரு தடவை கூட என்னை காண்டாக்ட் பண்ணவே இல்ல டா நானும் அது எல்லாம் சரியா அப்டின்னு செக் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் எதோ ஒன்னு சரியா இல்லாத மாதிரி எனக்கு தொனிகிட்டு இருக்கு டா..
மித்ரன் , சரி இன்பா நீ உள்ளே போக எவ்ளோ நேரம் இருக்கு.. என்னை 10.30 க்கு வர சொன்னாங்க டா.. சரி நான் அந்த ரமேஷ் நம்பரை டிரேஸ் பண்ணி லோகேஷ் கிட்ட சொல்றேன் அவன் அங்க ஒரு கேஸ் விஷயமா போயிருக்கான் இன்னும் நமக்கு 20 மினிட்ஸ் இருக்கு நீ கவலை பட வேண்டாம்.
இங்கே விவேகா தூங்கி எழும் போதே இன்பாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. வலது கண் தாறுமாறாக துடிக்க அவள் அம்மா.. அம்மா… ம்ம் எதுக்கு டி கத்துற சீக்கிரம் பெட் சீட் எல்லாம் மடிச்சு வை அப்புறம் இன்னிக்கு அதி மாவு ஆட்ட போறேன்னு சொன்னா போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணு வீட்டில் சும்மா இருக்காது இன்னிக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆகும்..
அவள் ஏன்.. என் கூட வொர்க் பண்ற மேம் இன்னிக்கு retried ஆகுறாங்க அதனால் ஒரு சின்ன வழியனுப்பு விழா அதனால் என்று அவர் கிளம்ப.. அம்மா என்னை கொஞ்சம் பேச விடு.. சீக்கிரம் சொல்லு.. எனக்கு இந்த இடது கண்ணு ரொம்ப துடிக்குது அதுக்கு என்ன பண்றது. மம் நல்ல சகுனம் விவேகா அப்போ வலது கண்ணு அது கொஞ்சம் பேட் ஸ்டிங்ஸ் டி.. இதை கேட்டதும் விவேகாவுக்கு மனம் சரி இல்லை.. அவள் அப்படியே அமர்ந்து இருக்க இடது கண்ணு தான துடிக்குது கட்டாயம் நல்லது நடக்கும் நீ சீக்கிரம் வந்து டி குடி அப்புறம் அது ஆரி போயிடும் மறுபடியும் சூடு பண்ண உன்னை அடி பின்னிடுவென் ரெண்டு பேரு தான் இருக்கோம் 1மாசம் கூட கேஸ் வர மாட்டிங்குது என்று அவள் அம்மா அர்ச்சனை பாடி விட்டு ஆபீஸ் கிளம்பினார்.
விவேகாவுக்கு அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டே வேலையில் நாட்டம் இல்லாமல் வேக வேகமாக வீட்டு வேலைகள் எல்லாம் வீடு கூட்டி, பாத்திரம் கழுவி விட்டு துணி எல்லாம் தேக்க எடுத்து வைத்து இருந்தாள் நாளையில் இருந்து காலேஜ் அதனால் எடுத்து வைத்து விட்டு நேராக வெண்பா வீட்டுக்கு கிளம்பினாள்.
இங்கே இன்பாவை உள்ளே அழைக்க அவள் நேராக வெண்பாவின் போன் வாங்கி வேக வேகமாக மித்ரனுக்கு அழைத்தாள். ஹலோ நான் முக்கியமான வேலையில் இருக்கேன் டி சீக்கிரம் சொல்லு லூசு… அண்ணா நான் விவேகா பேசிறேன்.. ஹலோ சாரி சொல்லு மா.. அண்ணா அவர் அவர் எப்படி இருக்காரு ஒன்னும் பிரச்னை இல்ல தானே.. மித்ரன் என்னமா சொல்ற.. அண்ணா இன்பாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை தானே பக்கதில் இருக்காரா ஆபீஸ் வந்து இருக்கிறாரா.. மித்ரன் யோசனையாக இருந்து விட்டு மம் இன்பா நல்லா இருக்கான் மா அவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை போன் கொடுக்கட்டுமா.. விவேகா இல்ல இல்ல அண்ணா வேண்டாம் நான் போன் பண்ணேன் அப்டின்னு சொல்ல வேண்டாம். ஏன் விவேகா திடீர்னு போன் பண்ணி கேட்கிற.. அது ஒன்னும் இல்ல அண்ணா.. சொல்லு மா.. இல்ல கொஞ்சம் காலையில் இருந்தே மனசு சரி இல்ல இன்பா நினைப்பாவே இருந்தது அது தான் யார் கிட்ட கேட்பது என்ன பண்றதுன்னு ஒரே குழப்பம் என்று அவள் பேசு கொண்டு இருக்கும் போதே லோகேஷ் போன் வர மித்ரன் கால் கட் செய்தான்.
விவேகா ஹலோ! ஹலோ! என்று சொல்ல கட் செய்த சத்தம் மட்டுமே கேட்டது. இங்கே சொல்லு லோகேஷ்.. மித்ரன் சம்திங்க் ராங். அந்த ரமேஷ் கண்ணாவை டிரேஸ் பன்னதில் அந்த ஆள் மிஸ்ஸிங் ஏ ன் மித்ரன் எனி திங்க் சீரியஸ்.. அவன் இன்பா மாட்டிகிட்டான் டா என்று சொல்லி வேக வேகமாக போன் வைத்து விட்டு இன்பாவுக்கு அழைக்க அவன் அதற்கு முன்பே உள்ளே சென்று விட்டான். மித்ரன் விடாமல் போன் செய்து கொண்டே இருந்தான். இன்பா உள்ளே சென்று எல்லா விஷயமும் விலக்கி விட்டு அவர்களை பார்க்க யூ மே புரோசிட்.. சில முக்கிய செய்திசேனல்களின் செய்தி தொடர்பாளர்கள் அங்கு வந்து இருக்க இன்பா, சாதனா, கீர்த்தனா மூவரும் அங்கு நீலா மருத்துவ மனை பற்றிய குற்றங்கள் குறித்து விலக்கி அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து தடை விதிக்க வேண்டும் என்றும் அதன் உரிமையாளர் நீலா பிரகாஷ் ரெட்டியை கைது செய்ய அரெஸ்ட் வாரன்ட் காட்டி விட்டு வெளியே வர.. அங்கு வந்து இருந்த செய்தி t செய்தி தொடர்பாளர் சார் நீங்க சொல்வது எல்லாமே உண்மையா இவ்ளோ பெரிய இவ்ளோ பெரிய ஊழல் வந்து அந்த ஹாஸ்பிடலில் நடக்கிறதா…
இன்னொரு செய்தி தொடர்பாளர், இது இவ்வளவு பெரிய குற்றத்தை ஆந்திர எம்.பி அவரின் குடும்பத்தின் மீது சுமத்துகிறீர்களே இதனால் இரு மாநிலங்களுக்கும் எந்த பிரச்சனையும் வந்து விடாதா…
இன்பா, சட்டம் தன் கடமையை செய்யும் நிச்சயம் எந்த பிரச்சனையும் வராது . நாங்கள் எங்கள் தரப்பின் மீது இருந்த எங்கள் தரப்பின் கீழ் இருந்த அனைத்து தகவல்களையும் கொடுத்து விட்டோம் இனி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று சொல்லி முடிக்க.
அந்த இடத்திற்கு குரு பிரகாஷ் தேஜு இருவரும் அவரது தொழில் வக்கீல்கள் நால்வரை அழைத்துக் கொண்டு வந்தனர்.
குரு பிரசா பிரகாஷ் இரு கைகளையும் தட்டிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தான். நல்ல கதையை தான் கூறுகிறீர்கள் இதற்கு பதிலாக நீங்க வேணா ஒரு படத்தை எடுக்கலாம். என்று சொல்ல அவன் நானே உங்கள தேடி வரலாம் அப்டின்னு இருந்தேன் நீங்களே வந்து விட்டீர்கள் என்று சொல்லி அரஸ்ட் வாரண்ட்ட எடுத்து அவனது கைகளை கொடுக்க,
அவனோ என்ன ஒரு காமெடி என்று சொல்லி அவன் சிரித்துக் கொண்டே அந்த தகவல்களை எடுத்து அவனது வக்கில்களிடம் நீட்டினான் அதை வாங்கி படித்த அவர்கள் ஒரு சில நிமிடம் அதை படித்து ஆராய்ந்து விட்டு உண்மை சான்றிதழ் என அனைத்து ஆதாரங்களும் அவர்கள் முன் நீட்டி
இதில்இருப்பது அத்தனையும் பொய் இது இன்பா சேகரித்து வந்த அத்தனை தகவல்களும் பொய் குற்றச்சாட்டு சுமத்தி நீலா மருத்துவமனையின் மீது குற்றத்தை சுமற்றியுள்ளார் சோ இதற்கு அவரின் மேல் நாங்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்றும் அந்த வக்கீல்கள் கூட இன்பா அப்படியே நின்றான்.
செல்வகணபதி அவர்கள் என்ன இன்பா இப்படி ஆகிவிட்டது அப்போ நீங்க சரியா எந்த தகவலும் சேகரிக்கலையா என்ன பண்ணிட்டு இருந்தீங்க. இதனால் நம்ம ரெண்டு மாநிலத்துக்கும் பயங்கர பிரச்சனை வரப்போகுது. நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். இது எல்லாமே நல்லா யோசித்து செய்ங்க இதற்கும் இதற்கு மேல் எங்களால ஒன்னும் பண்ண முடியாது. அடுத்து விசாரணை மெமோ சஸ்பென்ட் இன்னும் நிறைய இருக்கு..
குரு, அச்சோ இப்படி ஆகி போச்சே இனி இன்பா என்ன பண்ணப் போறாரோ.. அது இவருக்கு தான் தெரியும் சரி சரி நீங்க என்ன பண்றிங்க என்று குரு வக்கீல்களை பார்த்து அவர் மேல கேஸ் எல்லாம் கொடுக்க வேண்டாம்
நீங்க நீங்க என்ன பண்றீங்க நான் எங்க அப்பா கிட்ட பேசுறேன். ஒரு அவர் பேசாம இங்க போலீஸ் வேலையை விட்டுட்டு போய் அவங்க காலேஜ்ல அவங்க தாத்தா கட்டி வச்ச காலேஜ்ல போயி லெக்சர்ரா ஜாயின் பண்ணிக்கலாம் . அப்படி இல்லன்னா அவர் அப்பா software solutions சொந்தமா தனியா நடத்தி கொண்டு கஷ்ட படுகிறார் அங்கே கூட எடுபிடி சாரி ஹெல்ப்க்கு போலாம் அதுதான் என்ன கேட்டா அவருக்கு சரியான வேலை அப்படின்னு நான் சொல்லுவேன் என்று ஏளனமாக புன்னகை செய்தான்.
அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க குரு அங்கே வந்த செய்தி தொடர்பாளர்கள் அனைவரிடமும் இந்த நியூஸ்ச இப்டியே விட்டு விடுங்கள் இல்லனா இன்பா சாருக்கு ரொம்ப அவமானமா போயிடும். இதை சொன்னதும் இன்பா அவன் கைகளை இறுக்கி மடக்கினான். செல்வ கணபதி, சார் அவருக்கு பதிலா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். இன்பா இபொது பேசினான் சார் சட்ட படி என் மேல் எந்த ஆக்சன் எடுக்கணுமோ எடுன்க தவறு என்னுடையது இதில் நான் மட்டுமே சம்மந்தபட்டு உள்ளேன்.
குரு சிரித்து கொண்டே இவளோ தூரம் நேர்மையா இருக்காரு அதனால் சைலண்ட நியூஸ் போட்டு விடுங்கள். சஸ்பென்ட் பண்ணி விடுங்கள் இன்னும் என்னை பற்றி அவர் எதுவும் கண்டு பிடிக்கட்டும். இன்பா அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் வெளியே செல்ல போக வசுமதி கதவை தட்டி கொண்டு உள்ளே வந்தார்.
அவர் உள்ளே வரவும் இன்பா வெளியே போகவும் அங்கு இருக்கும் அனைத்து அதிகாரிகளும் பேசி கொண்டு இருப்பதை கேட்டு வடுமதி…?
தொடரும்..
Episode 145,
இன்பா சரியாக அந்த அறை கதவை திறந்து கொண்டு வெளியே வரும் நேரம் வசுமதி உள்ளே வந்தார் அப்போது அங்கே அருகில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.
அது அவர் காதுகளில் விழ காலையில் இருந்த சந்தோஷ மனநிலை மறைந்து போனது. அங்கே பையனுக்கு சஸ்பென்ட் அம்மாவுக்கு புரொமோஷன் இப்போ மேடம் எப்படி இதை எப்படி செலிபிரேட் பண்ண போறாங்க..இந்த மாதிரி ஒரு நிலைமை யாருக்கும் வர கூடாது. இன்பா தன் அம்மாவின் முகத்தை பார்க்க கம்பீரமே உருவான அவர் முகத்தில் முதன் முறையாக கவலை மற்றும் கண்களில் சோகம் ஒரு துளி கண்ணீர் கோர்க்க உள்ளே வந்தார்.
இன்பா அதற்கு மேல் தன் அம்மாவை அந்த நிலையில் பார்க்க முடியாமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் சஸ்பென்ட் செய்ய பட்ட செய்தி காட்டு தீயாக பரவியது. உள்ளே குரு வாட் அ பிளசன்ட் சர்ப்ரைஸ் மேடம் எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்க புரோபோஷன் இது கொண்டாட பட வேண்டிய ஒன்னு வாழ்த்துக்கள் என்று சொல்ல வசுமதி பற்களை கடித்து கொண்டு எந்த உணர்சியும் காட்டாமல் அந்த ஆடர் காப்பியை வாங்கி கொண்டு வெளியே தன் தொப்பியை கலட்டி கொண்டே வந்தார்.
அவர் வெளியே வந்ததும் ரவி ஹே என்ன டி புரொமோஷன்க்கு ட்ரீட் எப்போ என்று போன் செய்ய.. என்னங்க ராகவ்.. ராகவ்.. என்னாச்சு.. அவனுக்கு அவனை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.. அதன் பின் அவர் எதுவும் பேசவில்லை உடனே சிறிது நேரம் கழித்து அவனை பாரு என்று சொல்லி வைத்து விட்டார்.
இன்பா நேராக கிருஷ்ணன் வீட்டுக்கு கார் புக் பண்ணி சென்றான். வீட்டில் பாவை மட்டுமே இருந்தார். இவன் கதவு தட்டி திறந்ததும் நேராக அவன் வழக்கமாக வந்து தங்கும் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டான்.பாவை உடனே வசுமதிக்கு அழைத்தார்.
பாவை, வசு என்று அழைக்க.. அம்மா ராகவ் அங்கே வந்தானா.. மம் ஆமா கண்ணு வந்ததும் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை நேரா ரூமுக்கு போயிட்டான். எதுவும் பிரச்னை இல்லயே ஒன்னும் இல்ல மா அப்பா எங்கே.. அவர் நாளைக்கு காலேஜ் ஓபன் ஆகுதே அது திடர்பா வேலையா college போயிருக்காரு மம் சரி மா நான் வருகிறேன் என்று போன் வைத்தார்.
பாவை கதவை தட்ட போக வசுமதி மீண்டும் போன் செய்தாள். மா நீங்க அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. என்று சொல்லி போன் வைத்தாள். வசுமதி, கிருஷ்ணன், பாவை என மூவரும் வந்து கதவை தட்டி பார்க்க அவன் கதவை துறந்தான். உள்ளே சென்றதும்
வசுமதி , ராகவ்.. மாம் பிளீஸ் என்னை விட்டு விடுங்கள் என்னால் உங்க முகத்தை பார்க்க தகுதி இல்ல நான் அங்கே வர மாட்டேன்.. வசுமதி கண்களில் கண்ணீர் கொண்டு பேச வர கிருஷ்ணன், வசு நீ அவனை தனியா விடு என்று அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தனர். விவேகாவுக்கு வெண்பா மூலமாக விஷயம் தெரிந்ததும் அய்யோ காலையில் நாம் நினைத்தது இப்போ இப்படி ஆகி விட்டதே அன்னிக்கு வேற அவரை நாம் பார்த்து பேச கூட இல்ல என்று கண்களில் கண்ணீர் வர அவள் அழுது கொண்டு இருக்க மித்ரன் கவலையான முகத்துடன் வந்தான். அண்ணா அவர் கிட்ட பேச முடியுமா இப்போ அவரை பார்க்கனும் போல் இருக்கு.. மித்ரன், இன்பா போன் எடுக்கல மா அவன் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வைத்து இருக்கான்.
விவேகா அழுது கொண்டே நீங்க வசு மேம் கிட்ட கேட்டு பாருங்க.. மித்ரன் அவன்க அதுக்கு மேல கவலையில் இருக்காங்க.. அவங்களுக்கு பிளான் பண்ணி அவமான படுத்தும் நோக்கத்தில் புரொமோஷன் இன்பாவுக்கு சஸ்பென்ட் கொடுத்து இருக்காங்க என்று அவன் சொல்ல இதை கேட்டு இன்னும் உடைந்து போனாள். விவேகா, அண்ணா இப்போ அவர் எங்கே இருக்கிறார் எனக்கு பார்க்கனும் போல இருக்கு என்று அவள் அழ வெண்பா ஹே அழாத விடு அண்ணா இங்கே தான் இருப்பாரு அவள் கண்களில் வற்றாமல் கண்ணீர் ஓட வெண்பா ஹே விவேகா நீ இப்போ அழுதா அம்மா உன் கிட்ட கேள்வி கேட்பாங்க அதுக்கு என்ன டி சொல்ல போற நான் சொல்றத கேளு டி..
விவேகா, இல்ல டி அன்னிக்கு நான் பேசாமல் பார்க்காமல் வந்து விட்டேன் டி. இன்னிக்கு இவளோ பெரிய விஷயம் நடந்து இருக்கு அவருக்கு எப்படி இருக்கும் என்னால் இதை தாங்கி கொள்ளவே முடியல டி..
வெண்பா,சரி விடு பார்த்து கொள்ளலாம் இப்போ நீ அழாமல் வீட்டுக்கு போ.. விவேகா வேறு வழி இல்லாமல் கண்ணீரை கட்டு படுத்தி கொண்டு வீட்டுக்கு சென்றாள். அடுத்த நாள் காலேஜ் சென்றதும் அதற்கு முன்பே ஆதிக்கு விஷயம் தெரிந்து இருந்தது. அங்கே புது பிரச்னையாக கவ்யா காலேஜ் முதல் நாள் ஜாயின் பண்ணி இருக்க அங்கே ஒரு புது விதமாக அவள் பாணியில் சில பிரச்னை செய்ய காத்து கொண்டு இருந்தாள்.
விவேகாவுக்கு அவள் ஒரு பெரிய விஷயமாக தெரிய வில்லை. இப்போதைக்கு அவள் இன்பா வை பார்க்க வேண்டும் அது மட்டுமே அவளுக்கு முக்கியம். மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைத்த முதல் நாளே கவ்யா பிரச்னையாக வந்து இருக்கிறாள்.
அனைவரும் வகுப்பில் இருக்க அந்தந்த பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் சிலபஸ் கொடுத்து விட்டு அடுத்த நாள் பாடம் எடுக்கலாம் என்று சொல்லி விட்டு கிளம்ப அந்த நாள் அப்படியே சென்றது. விவேகாவுக்கு வீட்டுக்கு வந்தால் இன்பாவின் நினைவு தான் தோன்றியது. சரியாக சாப்பிடாமல் விடிய விடிய தூக்கம் இல்லாமல் இரண்டு நாட்களில் காய்ச்சலே வந்து விட்டது. காலேஜ் ல இருந்து வீடு வந்ததும் அவளது அம்மா வந்த உடன் எப்படியும் ஒரு 50 முறை இன்பாவின் எண்ணுக்கு போன் செய்வாள் ஆனால் அவளுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டுமே..
அடுத்த நாள் விவேகாவுக்கு இந்த செமஸ்டருக்கு உண்டான மல்டிமீடியா லபரட்டரி என்னும் அந்த லேபுக்கு புதிய விரிவுரையாளர் வருவதாக சொல்ல மாணவர்கள் அனைவரும் ஆவலாக காத்திருந்தனர் யார் ஆக இருக்கும் அந்த புதிய விதிவிலையாளர் என்று அது வேறு யாருமில்லை நம் சிபிச் சக்கரவர்த்தி தான் அருணின் அண்ணன் விவேகாவின் வகுப்பிற்கு மல்டிமீடியா லபரட்டரி பாடம் எடுக்க புதிதாக வந்து சேர்ந்துள்ளான்.
அவனை அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது ஆனால் கண்ணுக்கினியாள், யாழினியாழ் இருவருக்கும் யார் என்று தெரியும். வருவான் ஆனால் அவன் தான் மல்டிமீடியா லேபுக்கு புதிதாக வந்துள்ள ஆசிரியர் என்று யாழினியால் கண்ணுக்குள் இருவரும் எதிர்பார்க்கவில்லை.
அவன் வகுப்புக்கு எப்பொதும் போல் சாதாரண உடை அணிந்து கொண்டு தனக்கும் இந்த காலேஜ்கிகும் தொடர்பு இல்ல நான் ஒரு சாதாரண lecturers என்பது போல் காட்டி கொண்டான். அவன் வகுப்பின் உள்ளே வந்ததும் அனைவரிடமும் அவனை பற்றி இரண்டு வரியில் கூறி அந்த வகுப்பை ஒரு நோட்டம் விட அங்கே இனியாள் இவனை மின்னும் கண்களில் பார்த்து கொண்டு இருக்க அவன் இரு புருவமும் தூக்கி அவளை ஒரு நொடி பார்த்தான். அவன் வகுப்பில் உள்ள அனைவரையும் அவரவர் பற்றி ஒரு முன்னுரை கொடுக்க சொல்ல அனைவரும் சொல்லி கொண்டு இருந்தனர். விவேகா வின் முறை வர அவள் அழுது கண்களில் நீர் கூட வற்றி விட்டது பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தாள். அவள் இரண்டு வரிகளில் அவளை பற்றி சொல்லி விட்டு சிபியின் அனுமதி கூட வாங்காமல் அமர்ந்து கொண்டாள். அனைவரும் லேப் சென்றனர். சிபி சொல்லி கொடுத்து கொண்டு இருக்க விவேகா தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள். இந்த முறை அவனுக்கு கோபம் வந்தது. ஹலோ நீங்க எழுங்க .. அவள் எழுந்து நின்றாள். நான் கிளாஸ் எடுத்து கொண்டு இருக்கேன் வந்த முதல் நாளே இப்படி இருந்தால் எப்படி என்று அவன் திட்ட விவேகா, சாரி சார் பட் நீங்க நடத்துவது எனக்கு முன்னாடியே கொஞ்சம் தெரியும் இப்போ எனக்கு ஃபீவர் அதான் என்னால் கவனிக்க முடியல.. சிபி அவளை எழனமாக பார்த்து என்ன உனக்கு முன்னாடியே தெரியுமா அப்டியா இதில் ஒரு program வேண்டாம் முதலில் உனக்கு என்ன தெரியும் சொல்லு பார்க்கலாம்..
விவேகாவுக்கு ஏற்கனவே சரவணன் சொல்லி கொடுத்து இருந்தான். அதனால் அவள் சிபியை விட அனைவருமகிகும் புரியும் ஆங்கிலத்தில் விலக்கி விட்டு அவனை பார்த்து சரியா சார்.. என்று கேட்க சிபி ஒரு நிமிடம் ஆச்சர்யமாக அவளை பார்த்தான். ம்ம் ஓகே சிட் டவுன் என்று ஒரு நிமிடம் அவளை பார்த்து கொண்டான். அவன் அமர சொன்னதும் வேகமாக இருக்கையில் அமர்ந்து இந்த முறை படுத்து கொண்டாள்.
இதோடு இன்பாவை பார்த்து 5 நாட்கள் ஆகி விட்டது. விவேகாவால் வீட்டில் இருக்க முடியவில்லை எதாவது காரணம் சொல்லி இன்று இன்பாவின் வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று பிளான் போட்டு கொண்டே அமர்ந்து இருந்தாள். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அன்று சாப்பிட கொடுத்த அனைத்து பாத்திரமும் கழுவி ஒரு கட்டை பையில் போட்டு வைத்து இருக்க அதில் ஒன்று மட்டும் எடுத்து கொண்டாள். மீதி இரண்டு பாத்திரதையும் இன்னொரு முறை இதை காரணம் காட்டி செல்ல வேண்டும் என்று வைத்து விட்டாள்.
விவேகா வசுமதி வீட்டுக்கு செல்ல அங்கே யாரும் இல்லை சுபா அப்பொழுது தான் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல சென்றாள். அவளுக்கு சுபாவுடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் அந்த பாத்திரத்தை அவளிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.
அடுத்த நாள் வகுப்புக்கு சென்றதும் வெண்பா மதிய உணவு வேளையில் இவளை பார்க்க வந்தாள். வழக்கம் போல் ஆதி சாப்பிடு விவேகா என்று கெஞ்சி கொண்டு இருந்தான். வெண்பா, ஹே இப்போ சாப்பிட்டால் நான் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன். விவேகா வற்றிய கண்களில் மீண்டும் கண்ணீர் வந்தது. ஹே இப்போ எதுக்கு இப்படி அழர இன்னிக்கு ஈவ்னிங் நான் அண்ணா கிட்ட கூட்டி போலாம் அப்டின்னு இருந்தேன் ஆனால் நீ இப்படி இருந்தால்.. என்று அவள் நிறுத்திட இதை கேட்டதும் விவேகா எழுந்து வந்து வெண்பாவை அணைத்து கொண்டு முத்தமிட்டாள். வெண்பா, ஹே ஹே என்ன பண்ற எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.. விடு டி.. விவேகா, ஹே நீ சொல்றது உண்மையா.. பொய் சொல்லல தானே.. ஹே சத்தியமா உண்மை டி இப்போ தான் மித்ரன் எனக்கு கால் பண்ணான். சோ நீ இப்போ சாப்பிட்டு முடி நான் ஈவ்னிங் அண்ணா கிட்ட கூட்டி போறேன். இல்ல நான் அவரை பார்த்து விட்டு தான் சாப்பிடுவேன். ஹே இப்போ சாப்பிடல நான் கூட்டி போக மாட்டேன்.
ஹே இரு நான் சாப்பிடுகிறேன் என்று வேக வேகமாக அள்ளி திணித்தாள். அது தொண்டைக்குள் அடைத்தது. அவள் திணற கண்களில் கண்ணீர் வந்தது. அப்போது அவள் தலையை தட்டி ஒரு கை தண்ணீர் கொடுத்தது. ஆதி தேங்க்ஸ் டா என்று அவள் கண்களை மூடி கொண்டு திறக்க உடனே நான் ஆதி இல்ல..
யார் அது.. ?
தொடரும்..
Today வெண்ணிலா ஸ்டோரி ud பண்ணி இருக்கேன் போய் படித்து விட்டு கமென்ட் பண்ணிடுங்க drs
Episode 146
விவேகா வேக வேகமாக உணவுகளை உள்ளே தள்ள ஒரு நிமிடம் புரை ஏறியது. உடனே அவள் தலையை தட்டி தண்ணீர் கொடுக்க ஆதி இன்னும் கொஞ்சம் தண்ணி.. உடனே நான் ஆதி இல்ல… இதை கேட்டதும் அவள் நிமிர்ந்து பார்க்க ஆதி அவனை முறைத்து கொண்டு நிற்க வெண்பா இவனும் வந்துவிட்டானா சுற்றி சுற்றி இப்படி அணை கட்டுகிறார்கள் என்று அவள் நினைத்து கொண்டு இருக்க விவேகா திகைத்து அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
அவள் நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க, என்ன பண்றீங்க .. அவன் ஒரு சீனியர்ரை பார்த்து கேட்கும் கேள்வியா இது நான் இங்கே MBA ஜாயின் பண்ணி இருக்கேன். இதை கேட்டதும் மீண்டும் அவளுக்கு புரை எரிட இந்த முறை ஆதி, அவளுக்கு தான் நான் இருக்கேன் உங்க வேலையே கொஞ்சம் நீங்க பாருங்க சீனியர் என்று சொல்லி தட்டி விட்டு மெதுவா சாப்பிடு டி இப்போ எதுக்கு இவலோ அவசரம்.. என்று அவன் சொல்ல விவேகா மனதில் ஒரு திட்டம் தீட்டினாள். நான் சாப்பிட்டு வருகிறேன் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்.. இதை கேட்டதும் அருண் ஓகே நீ சாப்பிடு செல்லம் என்று சொல்லி ஆதியை முறைத்து விட்டு அங்கு இருந்து சென்றான்.
வெண்பா, ஹே இப்போ என்ன பண்ற எதுக்கு டி அவன் கிட்ட பேசின… விவேகா, வெண்பா பிளீஸ் டி இப்போ என் கூட ராகவ பார்க்க வரியா.. அவள் எப்படி இப்போ போக முடியும். ஹே அருண் அண்ணா கிட்ட நீ சொல்லு வெண்பா எனக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லு அவர் மட்டும் ஹெல்ப் பண்ணா ஹாப் டே பெர்மிஷன் தந்து விடுவார்கள் நாம்ப இப்போவே போலாம் பிளீஸ் டி… வெண்பா ஆதியை பார்க்க அவள் ஹே அங்கே என்ன பார்வை… வெண்பா, எதுகும் உன் மாமா பையன் கிட்ட ஒரு வார்த்தை கேளு டி அப்புரம் கோபித்து கொள்ள போகிறான்.
விவேகா ஆதியை பார்த்து ஆதி பிளீஸ் டா நான் இப்போவே ராகவ பார்க்கனும் பிளீஸ் நான் இவள் கூட போகட்டுமா.. ஆதி, மம் ஆனால் ஒரு கண்டிசன்.. அவள் என்ன என்பதை போல் பார்க்க.. நீயும் அவளும் மட்டும் தான் போகணும் அந்த அருண் உங்க கூட வர கூடாது அப்படி ஒரு வேளை அவன் வருவது போல் இருந்தால் நிச்சயம் நீ போகவே கூடாது.
வெண்பா, அப்போ நான் போனால் பிரச்னை இல்ல.. ஆதி அவள் சொல்வதை கண்டு கொள்ளாமல் விவேகாவை பார்க்க மம் ஓகே சரின்னு சொல்லு சரின்னு சொல்லு என்று விவேகா கேட்க.. ஆதி, சரி போயிட்டு வா.. என் செல்லம் என்று சொல்லி அவள் கொஞ்சிட.. வெண்பா இதை கஷ்டபட்டு பார்த்து கொண்டு இருந்தாள். விவேகா, ஹே வா போலாம் சீக்கிரம் நான் என் ராகவ பார்க்க போறேன் வாடி… ஆதி, ஹே அவளை என்னால் அழு மூஞ்சியா பார்க்க முடியல சீக்கிரம் கூட்டி போ தேன் மிட்டாய் எப்பவும் அழவே கூடாது. வெண்பா கடுப்பாகி கொஞ்சம் வாயை மூடு அவள பற்றி கட்டுரை, கவிதை போட்டினா பக்கம் பக்கமா எழுத உடனே கிளம்பி விடுவ போல
ஆதி, கட்டுரை போட்டிக்கு அவள் ஓகே தான்.. ஆனால்… ஆனால் என்ன.. அவன் கவிதை போட்டிக்கு வேற ஒருத்தவங்க என்று சொல்லி அவளை பார்க்க யார் அது… ஆதி, மனதுள் இவளுக்கு சத்தியமா மூளை இல்ல என்று நினைத்து கொண்டு அது என் அத்தை பொன்னு என்று சொல்லி அவன் கிளம்பி விட்டான்.
வெண்பா முதலில் சென்றாள். அருண் கிட்ட ஹாய் அருண்.. ஹே நீ எப்போ வந்த எப்படி இருக்க.. டேய் இவளோ நேரம் நான் உன் கண்ணுக்கு தெரியலையா.. ஹே நான் கொஞ்சம் தின்கிங்ல இருந்தேன்.
வெண்பா, அருண் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா. என்ன சொல்லு.. அது ஒன்னும் இல்ல விவேகாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல.. அய்யோ என்னாச்சு.. டேய் சாக்கை கொறை பதராத… ஹே இப்போ நல்லா தானே இருந்தாள். வெண்பா, நீ சரியா பார்த்து இருக்க மாட்ட அருண் அவளுக்கு கொஞ்சம் முடியல.. சரி இப்போ நான் அவளை கொண்டு வீட்டில் விட்டு விடுகிறேன். டேய் டேய் நீ அதெல்லாம் பண்ண வேண்டாம் அதுக்கு நான் இருக்கேன். ஹே உன்னால் முடியாது டி நான் போய் விட்டு விடுகிறேன் முதலில் லீவ் லெட்டர் வாங்கணும்.. வெண்பா, சரி நீ வரன்னு சொன்னா ஆதியும் வருவான் என்னமோ பண்ணு உன்னால் விவேகா தான் கஷ்ட பட போகிறாள்.
அருண் ஒரு சில நொடிகள் யோசித்தவன் இப்போது வேண்டாம் வேண்டாம் எனக்கு இப்போ அவள் ஹெல்த் தான் முக்கியம் நீயே போய் விட்டு வா.. வெண்பா, மம் சூப்பர் நீ மட்டும் பெர்மிஷன் கேட்டால் எங்களுக்கு உடனே லீவ் கிடைத்து விடும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு டா..
மம் அவ dept ஸ்டாப் கிட்ட சைன் வாங்கணும், அடுத்து நம்ப dept என்று சொல்ல அருண் நீ உன் dept ல போய் வாங்கு அவ dept ல எனக்கு ஆள் இருக்கு.. டேய் எப்படி டா விவேகா dept எல்லாம் கொஞ்சம் சிடுமூஞ்சி எபொடு இது சாத்தியம்.. சிபி இங்கே தான் இருக்கான். ஒ மொத்த குடும்பமும் பிரச்னை பண்ண வந்து விட்டீர்கள் …. அருண், ஹே இப்போ என்ன சொன்ன.. வெண்பா, சிபி வந்து இருக்காரா பார்த்து பல வருசம் ஆச்சு… சரி சரி அவளை பத்திரமா கூட்டி போ நான் போய் என் பர்பாமன்ஸ் பண்ணிட்டு வந்துடறேன். என்று சொல்லி சிபியை பார்க்க சென்றான்.
சிபி அவன் இடத்தில் அமர்ந்து கொண்டு லேப்டாப்பை நோண்டிக்கொண்டு இருக்க அருள் உள்ளே வந்தான் யாரிடமும் அனுமதி கேட்காமல் நேராக சிறிய இடத்திற்கு வந்தான். க்கும், என்று தொண்டையை கரைத்துக் கொண்டு அவனைப் பார்க்க சிபி யார் என்பது போல் நிமிர்ந்து பார்த்தான் அப்பொழுது அருண் கைகளில் இருந்த வைத்திருந்த ஒரு காகிதத்தை நீட்டி மிஸ்டர் சிபி இதுல உங்களோட சைன் வேணும் … சிபி அவனிடம் இருந்து அந்த கடிதத்தை வாங்கி என்ன என்பது போல் பார்க்க அது அரை நாள் விடுப்பு கடிதமாக இருந்தது அக்ஷ அதில் பெயர் விவேகா என்று போட்டிருக்க யாரடா இந்த பொண்ணு… அதற்கு அருண், அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம் நீ முதல்ல இல்லாத சைன் பண்ண சைன் பண்ணுடா.. சிபி என்னால் பண்ண முடியாது நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ..
அருண்,பண்ணுடா…
சிபி,நான் ரீசன் தெரியாம சைன் பண்ண மாட்டேன், இப்ப என்ன பிராப்ளம் யாரு அந்த பொண்ணு ,அதெல்லாம் எனக்கு தெரிஞ்சாதான் நான் சைன் பண்ணுவேன்..
அருன் வேறு வழி இல்லாமல் சொல்லத் தொடங்கினான்.உங்க டிபார்ட்மெண்ட்டு தாண்டா இந்த பொண்ணு பேரு விவேகா, அண்ட் இந்த பொண்ணுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை அதனால வீட்டுக்கு போகணும். வெண்பா இருக்காளே அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட் டா…
சிபி வெண்பாவின் பெயரைக் கேட்டதும் என்ன வெண்பாவா! சான்சே இல்லையே உன்கிட்ட அவ பேசமாட்டாளே எப்படி இது நடந்துச்சு…
அருன்,தயவுசெய்து அதுல எல்லாம் தலையிட்டு என்னை பிரித்து விட்டுடாத நானே இப்பதான் அவகிட்ட வந்து மறுபடியும் காயா பழமா சொல்லி ஃபிரண்டாக்கி இருக்கேன் ப்ளீஸ் சைன் பண்ணு..
சிபி அப்போ நீ வெண்பாவோட லெட்டர் வாங்கிட்டு வா, நான் அதில் சைன் இருக்கா அப்டின்னு பாத்துட்டு நான் இந்த பொண்ணுக்கு சைன் பண்ரேன் ரெண்டு பேத்தையும் பாத்துட்டு தான் அனுப்புவேன் இந்த டீலுக்கு உனக்கு ஓகேவா…
அருன் சரி போய் தொலைகிறேன்.. என்று சொல்லி வெண்பாவை அழைக்க சென்றான் வெண்பா ,விவேகா, அருண் மூவரும் ஐடி டிபார்ட்மென்ட் வெளியே காத்துக் கொண்டிருந்தனர் சிபி உள்ளே இருந்து வெளியே வந்தான். அங்கு நின்று கொண்டிருந்த விவேகாவை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டான் இந்த பொண்ணு தான் அந்த பொண்ணா! இந்த பொண்ணு அருணுக்கு தெரிஞ்சிருக்கு வெண்பாவோட க்ளோஸ் ப்ரெண்ட் அப்படின்னா நிச்சயம் நல்ல பொண்ணா தான் இருக்கும் இந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் ரூடா நடந்துக்கிட்டோமே நிஜமாவே இந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்ல போல சரி இந்த பொண்ணு போயிட்டு வரட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே வந்தான்.
அவள் சிபியை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டாள் பின்பு எப்பொழுதும் போல் முகத்தை வைத்துக் கொண்டாள் ஹலோ நீங்க தானே விவேகா என்னுடைய நேம் சிபி நான் என்று அவன் பேசிக்கொண்டே வர அதற்குள் அருண், டேய் போதும் நிறுத்து..
விவேகா ஆச்சரியமாக பார்த்தாள் அவள் அருணிடம் என்ன சீனியர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறீங்க. அவர் யார் தெரியுமா எங்க டிபார்ட்மெண்ட்ல ஸ்டாப் அவரை போய் நீங்க இப்படி பேசுறீங்க.
அருண் ,சிரித்துக் கொண்டே உங்க டிபார்ட்மெண்ட்ல ஸ்டாப் அதற்கு நான் என்ன பண்ண முடியும் என்னோட அண்ணாவா போய்ட்டானே..
இதை கேட்டதும் அவள் அண்ணாவா என்று ஆச்சரியமாக பார்க்க சிபி சிரித்துக்கொண்டே அவளிடம் சாரி விவேகா அன்னைக்கு நான் ரூடா பேசிட்டேன் உனக்கு உடம்பு சரியில்லை என்று எனக்கு தெரியாது. விவேகா பரவாயில்ல சார் இட்ஸ் ஓகே..சிபிக்கு அவளுடைய இயல்பான பேச்சு அவனுக்கு பிடித்து போனது.
பின் சிபி ,வெண்பா எப்படி இந்த நாய் கிட்ட நீ பேசின நான் கூட நீ வந்து நல்ல பொண்ணு நெனச்சேன் என்ன பண்றது சிபி சாரி சிபி சார் வேற வழி இல்ல ரொம்ப கெஞ்சினான். கால்ல விழுகாத குறையா கெஞ்சுனான் அந்த ஒரே காரணத்துக்காக தான் பேசினேன்
அருண், ஓவரா பண்றாடி நீ என்று சொல்ல இருவரும் அவர்களிடமிருந்து விடைபெற்று விவேகா அவளுடைய இடத்திற்கு சென்று அவருடைய பேக் எல்லாம் எடுத்துக்கொண்டு நேராக கிளம்பினர்.
காலேஜிலிருந்து ஒரு 20 நிமிடத்தில் கிருஷ்ணன் வீட்டை அடைந்தனர். அவள் வெண்பா உனக்கு எப்படி தெரியும் என்று அவள் கேட்க.. வெண்பா, எனக்கு மித்ரன் சொன்னான் இந்த ஒரு வாரமும் அண்ணா ரூம விட்டு வெளியே வரல அப்படின்னு சொன்னாnr.. இன்னைக்கு மதியம் தான் தெரியும் அதனால தான் உடனே உனக்கு சொன்னேன். என்று இருவரும் நுழைவு வாயிலை அடைந்தனர் நுழைவு வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லிவிட்டு உள்ளே செல்ல அங்கே கதவை தட்டினர் பாவை உள்ளே இருந்தார் கதவை திறந்தார். விவேகா அவளது பொருட்கள் அனைத்தையும் கீழே போட்டுவிட்டு நேராக பாவையை ஓடி சென்று அணைத்துக் கொண்டாள்.
அவள் கண்களில் கண்ணீர் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்க என்னடா குட்டி எதுக்கு அழுகுற என்ற கேட்க ராகவ் எங்க இருக்கான் .நான் அவனை பார்த்து ஒரு வாரமாகுது எனக்கு அவன் ஞாபகமாவே இருக்கு என்னால பாக்காம இருக்கும்போது என்று சொல்லி திரும்பி திரும்பி அழுது கொண்டு இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா நான் செத்தே போயிருப்பேன்… என்று சொல்ல
பாவை அடி வாங்க போற நீ என்ன இப்படி பேசுற என்று விவேகாவை அங்கிருந்த சோபாவில் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்தார்.
அவள் தண்ணீரை வேண்டாம் என்று சொல்லி அம்மாச்சி ராகவ் எங்க இருக்கான்னு சொல்லுங்க நான் ராகவ பாக்கணும் ராகவ் ராகவ் ராகவ் என்று அவள் கத்தினாள். அவள் கத்தும் சத்தம் கேட்டு கிருஷ்ணன் வந்தார் கிருஷ்ணனை பார்த்ததும் அவள் அப்படியே நின்றாள் தாத்தா ராகவ் எங்கே தாத்தா என்று அழுது கொண்டு கேட்க நீ இப்போ அவனை பார்க்க முடியாது…
ப்ளீஸ் தாத்தா என்று கெஞ்சி கொண்டே அவர் கால்களின் வில செல்ல என்னம்மா இது அவர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து ராகவ் மேல தான் இருக்கான். அவன் கதவை திறக்க மாட்டின்றான் நீ வேணா முயற்சி பண்ணு முதல் நாள் கதவை திறந்து எங்க கிட்ட பேசினதோடு சரி அதற்கு அப்புறம் கதவையே திறக்கலமா…
விவேகா இதை கேட்டதும் அவளது கால்கள் துள்ளி வேகவேக மேகமாக படிக்கட்டுகள் ஏறினாள் ஏறும் போது ஒரு இடத்தில் விழுந்து விட்டாள் அப்படியும் வேகமாக எழுந்து சென்று எழுந்து சென்று இன்பா இருக்கும் அறைக்கு அருகே சென்றாள் ஒவ்வொரு நிமிடமும் இதயம் மிகவும் வேக வேகமாக துடித்தது.
அவள் கதவை தட்டினாள்.
தொடரும்….
நாளை இன்பா விவேகா சந்திப்புக்காக காத்திருங்கள்.
நீந்துகின்ற நிலா இன்று ud செய்து இருக்கிறேன் படித்துவிட்டு கமெண்ட் செய்து விடுங்கள்.
Episode 147,
விவேகா வேக வேகமாக இரண்டு இரண்டு படிகளை ஏறி மேலே சென்றாள்.அப்போது தடுமாறி கீழே விழுந்தாள்.
இன்பா இருக்கும் அறையின் பக்கம் சென்ற அவள் இப்போது கால்கள் எல்லாம் தள்ளாடின இதயம் வெளியே வந்து விடும் அளவுக்கு துடித்தது.
அவள் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சாப்பிட் ட அந்த கொஞ்ச உணவு கரைந்து போனது சக்தி எல்லாம் வடிந்தது போல காண பட்டாள்.
மெதுவாக ஒவ்வொரு அடிகளாக அவன் அறையை வந்தடைந்தாள். ஆனால் அவனிடம் என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை.
கதவை தட்டினாள்.இப்போது அவனை பார்க்க வேண்டும்.
அவன் குரலை கேட்க வேண்டும். அது மட்டுமே அவளுக்கு தேவை பட்டது.
டிக்.. டிக்.. டிக்..
என்று அவள் தட்டிட எந்த சத்தமும் வர வில்லை. மீண்டும் மீண்டும் அவள் தட்டினாள்.
அவள் இன்.. இன்பா.. இன்பா கதவை திற.. இன்பா நான் விவேகா வந்து இருக்கேன் கதவை திற.. எந்த பதிலும் இல்லை.. இப்போ கதவை துறக்க போறியா இல்லையா.. இன்பா கதவை திற.. என்று இப்படியே ஒரு பத்து நிமிடம் சொல்லி இருப்பாள். விவேகா கதவு தட்டுவதை நிறுத்தி விட்டு யோசித்தாள்.
பின் ஒரு சில நொடிகள் கழித்து அவள் அமைதியாய் இருந்தவள் மீண்டும் ஒரே ஒரு முறை மட்டும் தட்டி விட்டு
ஸ்ஸ்ஸ! ஹா!
வலிக்குது..
என்று கொஞ்சம் சத்தமாக சொல்லி விட்டு அப்படியே கீழே அமர்ந்து கொண்டாள்.
இப்போது காலடி சத்தம் கேட்டது.. கதவு திறக்கும் சத்தம் கேட்க அவள் அப்போது கால்களை பிடித்து கொண்டு அழுதாள். இன்பா அவளை பார்த்து டோண்ட் ஆக்ட் வித் மீ.. என்று சொல்லி அப்படியே உள்ளே சென்று விட்டான்.
விவேகா எழுந்து அந்த அறைக்கு உள்ளே சென்றாள்.
அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருக்க விவேகா அவன் அருகில் ஒவ்வொரு அடிகளாக வைத்து சென்றாள். இன்பா, இங்கே இருந்து போ.. லீவ் மீ அலோன்…
அவள் அவனை பின்னால் இருந்து கட்டி அணைத்து கொண்டாள்.
பிளீஸ் ராகவ் இப்படி சொல்லாத என்று அவன் முன்னால் சென்று அவன் முகத்தை பார்த்தாள். முகமெல்லாம் எப்பொதும் க்லீன் ஷேவ்ல இருப்பவன் இப்போது கொஞ்சமாக வளர்ந்த தாடியோடு இருந்தான். ஆனால் அவன் கம்பீரம் மட்டும் கொஞ்சம் கூட குறைய வில்லை.
அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்து வேறு எங்கோ பார்த்து கொண்டு இருந்தான்.
விவேகா, இன்பா இங்கே பாரு என்னை பாரு என்று உதடுகள் சொன்னது ஆனால் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
அவன் முன்னே அழ கூடாது என்று அவளை கட்டு படுத்தி கொண்டாள் ஆனால் இப்போது முடியவில்லை.
இன்பா எதுவும் பேசாமல் அவளை பார்க்க வில்லை. அவள் அவன் தலையை வலு கட்டாயமாக திருப்பி அவன் இதழ்களோடு இவள் இதழ்களை பொருத்தி கொண்டாள். அவன் கண்களை மூடி கொண்டான் கைகள் இறுக்கி மடக்கி கொண்டான்.விவேகா அவன் இரு கைகளையும் எடுத்து அவளை அணைத்துவாறு பிடிக்க வைத்தாள். அவன் கண்களை மூடி கொண்டு இருப்பதை பார்த்து ராகவ் கண்ணை திற என்னை பாரேன் டா.. என்று சொல்ல அவன் மூச்சு கொஞ்சம் சூடாக தொடங்கியது.
எப்போதும் அவன் கொடுக்கும் முத்தம் இப்போது இவள் திருப்பி கொடுக்கும் முறை ஆனது. இந்த இதழ் முத்தம் கொஞ்சம் நீண்ட நேரம் சென்றது. அவள் பிரியவே இல்லை. சிறிது நேரம் கழித்து அவனை விட்டவள்.இப்போது முகம் எல்லாம் முத்தமிட்டாள். அவன் கன்னங்களில் இரு கைகளையும் வைத்து கொண்டு மூக்கும் மூக்கும் உரச இதழும் இதழும் ஒட்டாமல் இருக்கும் இடைவெளியில் பேசினாள். ராகவ் நீ இப்படி இருப்பது எனக்கு இங்கே வலிக்குது.. அதை என்னால் தாங்க முடியல என்று அவன் வலது கையை எடுத்து அவளின் இதயத்தின் மேல் வைத்தாள்.
இங்கே கீழே கிருஷ்ணனுக்கு ரவி போன் செய்தார். ஹலோ.. சொல்லுங்க மாப்பிள்ளை..சும்மா தான் போன் பண்ணேன் எப்படி இருக்கீங்க மாமா.. அவர் சிரித்து கொண்டே டோண்ட் ஆக்ட் ரவி.. அது அது வந்து.. அவர் ராகவ் உங்க பையன் மாப்பிள்ளை.. இப்போது ரவி
இன்பா எப்படி இருக்கான்.. மம் ஓகே.. மாமா எப்போ வீட்டுக்கு வருவான் அவன் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்ல.. அங்கே நான் பார்க்க வருகிறேன். கிருஷ்ணன் சிரித்து கொண்டே அதுக்கு அவசியம் இருக்காது மாப்பிள்ளை.. என்ன மாமா சொல்றீங்க.. ராகவ் இன்னிக்கு நைட்டு வீட்டுக்கு வந்து விடுவான். ரவி, வசு சமாதானம் செய்து விட்டாளா.. அவர் சிரித்து கொண்டே அவனோட பார்னர் அவனை கன்வின்ஸ் பண்ணிடுவாள்.. ரவி, விவேகா அங்கே தான் இருக்காளா.. அவர் மம் ராகவ் உங்க கிட்ட சொல்லிட்டானா.. அந்த ராஸ்கல்ஸ் சொல்லல நானே கண்டு பிடித்தேன். இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தனர். ரவி நிம்மதியாக போன் வைத்தான்.
இன்பா இப்போது அவளை பார்த்தான். அவன் பார்த்த அடுத்த நொடி மீண்டும் அவன் இதழில் விழுந்தாள். இந்த முறை இன்பா எதிர்வினை ஆற்றினான் விவேகாவுக்கு அவன் எதிர்வினை தெரிய கண்களில் சந்தோஷ நீர் துளிகள் வந்தது. அவள் அவனுக்கு வாகாக அவளின் இரு கைகளையும் அவன் பின் தலையை கோதி கொடுத்தாள். இன்பா அவளின் பிரத்தியேக வாசனையை அவளின் கழுத்தில் நுகர்ந்து கொண்டே அங்கேயே எதுவும் செய்யாமல் கண்களை மூடி சாய்ந்து கொண்டு இருந்தான்.
விவேகா அவனிடம் இருந்து தள்ளி அருகில் உள்ள சோபாவில் அமர எத்தனிக்க ஹே தள்ளி போகாத.. அவள் நான் உன்னை விட்டு போகவே மாட்டேன் என்று சொல்லி கொண்டே அவனை அமர வைத்தாள். அவன் மடி மீது அமர்ந்து கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அரை மணி நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை அவள் அப்படியே சாய்ந்து கொண்டு அவனிடம் என்ன பேச எப்படி பேச என்று யோசித்து கொண்டு இருந்தாள். விவேகா, எனக்கு பசிக்குது நம்ப சாப்பிட கீழே போலாமா.. இன்பா, எனக்கு வேணாம்.. விவேகா, எனக்காக வாயேன்.. அவன் முகம் இறுகி இருக்க.. சரி நான் மேலே இங்கே எடுத்து வரவா உனக்கு நானே ஊட்டி விடறேன் நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாமா.. எனக்கு வேணாம்.. சரி ஓகே எனக்கு வேனும் நான் சாப்பிட போறேன் என்று சொல்லி கீழே வந்தாள். பாவை ராகவ் கதவை திறந்தானா.. மம் அம்முச்சி.. இப்போ பசிக்குது அப்டின்னு சொன்னான் அதான் என்று அவள் சொல்ல பாவை அவனுக்கு எல்லாம் எடுத்து வைக்க அவள் திரு திரு வென முழிக்க
கிருஷ்ணன், நீ எடுத்து போ மா என்று சொல்ல பாவை, நான் மேலே வந்து கொடுக்கட்டுமா.. அவர் இல்ல பாவை நீ விடு பாப்பாவே எடுத்து போகட்டும்.. வெண்பா, தாத்தா வாங்க நம்ப கொஞ்சம் சாப்பிடலாம். விவேகா அவளை முறைத்து பார்க்க ஹே போ போ உன் வேலையை பாரு.. விவேகா அவன் அறைக்கு சாப்பாடு எடுத்து கொண்டு அவன் மடியில் மீண்டும் அமர்ந்து கொண்டாள். ஒரு வாய் எடுத்து சாப்பிட்டாள். மம் செம்மயா இருக்கே.. அடுத்த வாய் அவனை பார்த்து டேய் ஆ காட்டு… அவன் வேறு புறம் திரும்பி கொள்ள இன்பா பிளீஸ் நல்ல பையனா ஆ காட்டு இல்ல எனக்கு தான் வயிறு வலிக்கும்.
விவேகா, அவன் இதழில் ஒற்றி எடுத்து ஆ காட்டென்.. என்று சொல்லி அவன் அதரங்களுக்கு அருகில் கொண்டு செல்ல இப்போது அவன் வாய் திறக்க உடனே விவேகா கொண்டு வந்த அனைத்து உணவுகளையும் ஊட்டி விட்டாள். தண்ணீர் கொடுத்து உதடுகளை துடைத்து விட்டு அந்த தட்டுகளை அருகில் வைத்தாள்.
அவன் முகம் அப்படியே தான் இருந்தது. அவள் அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வர மம் க்ளீன் சேவ் அதை விட இந்த ஸ்டைல் உனக்கு ரொம்ப அழகா இருக்கு.. என்று அவள் கன்னத்தை அவன் சவரம் செய்யப்படாத தாடியில் வைத்து தேய்க்க அவன் அவளின் இந்த புது அவதாரத்தை எதுவும் சொல்லாமல் பார்த்து கொண்டு இருந்தான்.
விவேகா, டேய் எதுவும் பேசு.. இன்பா, என்ன பேச.. மம் மம் ஹான் நான் எப்படி இங்கே வந்தேன் அப்டின்னு கேளு, இந்த ஒரு வாரம் என்ன பண்ண அப்டின்னு கேளு, நீ என் கனவில் என்ன என்ன பண்ண தெரியுமா அதை பற்றி கேளு..
இன்பா, இப்போ காலேஜ் டைம் தானே எப்படி இங்கே வந்த காலேஜ்ல இந்த மாதிரி யாருக்கும் பெர்மிஷன் தர மாட்டாங்கலே.. விவேகா, அதுக்கு ஆள் இருக்கு. எனக்கு காலேஜ் ல நிறைய அதிர்ச்சியான விஷயம் நடந்தது தெரியுமா.. அருன் சீனியர் என்று அவள் சொல்ல..
இன்பா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. அதுவா நாங்க ரெண்டு பேரு வந்தோம் சிபி சார் கிட்ட லெட்டர் எழுதி கொடுத்து தான் வன்தோம். யாரு அந்த இன்னொருவர்.. வெண்பா கூட வந்தேன்.
விவேகா, ஹான் உன் கிட்ட சொல்ல மறந்து விட்டேன் உன்னோட லவ்வர் கூட காலேஜ் ஜாயின் பண்ணி இருக்கா.. இன்பா, சரி அதை விடு இந்த உன் கனவில் நான் வந்தெனா.. விவேகா, டேய் உடனே பேச்சை மாற்றாத.. இன்பா, என் லவ்வர் தான் இங்கே இருக்கீங்கலே.. டேய் நடிக்காத அந்த கவ்யா காலேஜ் ஜாயின் பண்ணி இருக்கா.. இன்பா, ஓ அதனால் தான் ஒரு வாரம் கழித்து இப்போ வந்து என்னை பார்க்கிறாயா.. விவேகா, இன்பா திஸ் டூ மச் என்று சொல்லி அவள் அமைதியாக இருக்க அவனும் அமைதியாக இருந்தான். விவேகா, டேய் வந்ததில் இருந்து நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன் நீ சும்மா தான் இருக்க நான் இப்பவே கிளம்புகிறேன். என்று சொல்லு அவள் எழ..
இன்பா அவளை…?
தொடரும்…
Episode 148,
இன்பா எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து விவேகா, சரி வந்ததில் இருந்து நானே தான் உன் கிட்ட பேசிட்டு இருக்கேன். இதுக்கு மேல உன்னை நான் தொந்தரவு செய்யல நான் கிளம்புகிறேன்.என்று சொல்லி அவள் எழ
உடனே இன்பா ஹே என்னை தானே பார்க்க வந்த.. மம் அதான் பார்த்து விட்டேனே.. அப்போ என் கூட இருக்க வரலயா..
விவேகா, யாரு சொன்னது என் இன்பா கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் வந்தேன் என்று அவள் அவன் கன்னம் இரண்டையும் மெதுவாக கிள்ளிட அவன் அப்போ இங்கேயே இரு என்னை விட்டு தள்ளி போகாத டி..
விவேகா அவன் இதழில் முத்தம் பதித்தாள். இன்பா அவள் கைகளை வருடி கொண்டு இருக்க.. அவள் இமைக்க மறந்து அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
அவன் என்ன டி என்னை தின்பது போல பார்க்கிற.. என்று அவளை பார்க்காமலேயே அவன் சொல்ல இதை கேட்டு விவேகா மம் எனக்கு ஆசை தான் உன்னை உன் கண்ணகுழியை அப்புறம் இந்த மீசை, அண்ட் இந்த கீழ இருக்க லிப், மம் இந்த தொண்டையில் நீ பேசும்போது ஏறி இறங்கும் அந்த குட்டி குரல் வலை அதை அண்ட் உன் கழுத்தில் உன்னை உரசி கிட்டே இருக்கே இந்த செயின் இதை எல்லாம் என்று அவள் சொல்லி கொண்டே போக..
இன்பா அவளை அதிர்ச்சியாக பார்த்தான். விவேகா இது இது நீ தானா என் பேபி இப்படி எல்லாம் பேசுவாளா!
விவேகா, உங்களுக்கே இப்படி ஒரு முகம் இருக்கும் போது எனக்கு இருக்காதா.. என்று அவள் இப்போது அவன் இருக்கும் நிலையை நினைவு படுத்தி விட உடனே அவன் முகம் மாறியது.
விவேகா அவள் நாக்கை கடித்து கொண்டு இந்த ஒரு வாரம் இந்த ரூம் ல என்னடா பண்ண.. நத்திங்.. ஹே சொல்லு பிளீஸ் டா.. நான் கேம் விளையாடினேன்… இதை கேட்டு அவள் என்ன கேம் கேம் விளையாடிட்டு இருந்தியா என்று அவள் நொந்து போக..
ஏன் டி இப்போ என்ன ஆச்சு.. உன்னை நினைத்து நினைத்து நான் சரியா சாப்பிடாமல் தூங்காமல் என் கண்ணீர் எல்லாம் வற்றி போய் கிட்ட தட்ட ஒரு டிசாடர் வந்தவள் மாதிரி நான் இருக்கேன் நீ கேம்ன்னு சொல்ற..
இன்பா, நான் எப்போ ரொம்ப பலவீனமா மோசமா உணர்கிறேனோ.. அப்போ என்னை நானே அசெஸ் பண்ணிக்க விளையாடுவேன் அப்போ என்னோட கான்சென்றேசன் அதுல மட்டும் தான் இருக்கும் ஒரு வேளை அதில் நான் தோர்த்து போனால் எங்கே தப்பு அப்டின்னு கண்டு பிடிப்பேன் ஜெயித்தால் அடுத்த லவலை பிரச்சனையை எப்படி டேக்கில் பன்றதுன்னு யோசிப்பேன்.
விவேகா, சத்தியமா செம்ம.. சொல்ல வார்த்தை இல்ல நான் உன்னை வேற நினைத்து வைத்து இருந்தேன் ஆனால் நீ எங்கேயோ போயிட்ட டா..
இன்பா, என்ன என்னை நினைத்த.. ஒன்னும் இல்ல விடு டா.. ஹே சொல்லு டி.. அது .. மம் அது.. சீக்கிரம் சொல்லு.. நீ அப்படியே குடித்து விட்டு என்று அவனை பார்க்க என்னை இவளோ மோசமா நினைத்து விட்டாயா.. விவேகா அவனை ஆச்சரியமாக பார்த்து ராகவ் நீ வேற லெவல் டா சான்சே இல்ல உன்னை கட்டிக்க போற பொன்னு ரொம்ப கொடுத்து வைத்தவள்.
அவன் ஹே நான் இன்னும் பேசி முடிக்கல.. என்ன சொல்லு சொல்லு.. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் போது குடிப்பேன் டி.. இதை கேட்டதும் ச்சி.. ச்சீ.. ச்சீ…உன்னோட கொள்கை ரொம்ப கேவலமா இருக்கு டா.. என்று சொல்லி ஒரு நிமிடம் நிதானித்து என்ன நீ குடிப்பியா.. மம் ஆமா.. உனக்கு வேணும்னா சொல்லு ரெட் வைன் வாங்கி தரேன் அதுல கோஜிக் ஆசிட் இருக்கு ஹெல்த்க்கு ரொம்ப நல்லது. டெய்லி ஒரு ஷாட்ஸ் போட்டுக்கோ செம்மையாக இருக்கும்..
விவேகா, டேய் நான் குடிக்கிரவங்கல பிடிக்காது அப்டின்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடான்னா என்னை குடிகாரி ஆக்குற..
ஒன்னு மட்டும் தெரிந்து கொள் டி ஒரு ஆண்பிள்ளைக்கு மூணு விஷயம் நிச்சயம் பிடிக்கும்..
என்ன அது..
முதல் விஷயம் பொன்னு, ரெண்டாவதுaddiction(போதை) , மூன்றாவது விளையாட்டு kind a cards (ரம்மி சீட்டுகள்), ரேசின்ங் etc.. நீ anything எது வேணுமோ வைத்து கொள் ஆனால் கட்டாயம் பசங்க ஒண்ணுக்கு நிச்சயம் அடிமையா தான் இருப்பாங்க.. தட்ஸ் இட்.. என்று அவள் இதழ்களை முற்றுகையிட்டான்..
விவேகா அவனை தள்ளி விட்டு அப்போ நீ இதில் எந்த ரகம்.. அவன் நான் மூனுமே தான்.. அவள் அப்போ நீ ட்ரக் வேற பண்ணுவியா.. என்று அவனிடம் இருந்து விலக முற்பட்டாள். இன்பா ஹே ஏன் டி எப்போ பார்த்தாலும் என்னை தப்பாவே பார்க்கிற.. அது மட்டும் தான் இருக்கா என்னை இவளோ கேவலமா யாருமே நினைத்தது இல்ல டி..
நீ தானே சொன்ன..
பொண்ணு அதுக்கு தான் நீ இருக்க என்று அவளை பார்த்து கண் சிமிட்டி விட
அடுத்து..
கொஞ்சம் குடிப்பேன்..
அடுத்து..
கேம் இதோ இப்போ விளையாடிட்டு இருக்கேன் என்று டிவியை காட்டினான்…
விவேகா சரி சரி நான் உன்னை நம்புறேன். என்று அவனை பார்க்க அவன் என்ன என்பது போல் பார்த்தான். அவன் முகத்தை பார்க்க அவளுக்கு ஏனோ மனம் வலித்தது. எவ்வளவு கம்பீரமானவன் இப்போது இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்து இப்படி என்று கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
அவள் அமைதியாக இருந்தாள். அவன் அவளை அங்கும் இங்கும் தொட்டு பார்த்து நோண்டி கொண்டு இருக்க இப்போது பேசினாள். ராகவ்.. மம்.. நீ நடித்தது போதும் எனக்காக சிரம பட வேண்டாம்.. என்று அவள் சொல்ல அவன் எதுவும் பேசவில்லை. அவன் அவளை திருப்பி முகத்தை கைகளில் ஏந்தி ஹவ் டூ யூ னோ? உன்னை பற்றி எனக்கு தெரியும் என்று கண்களில் கண்ணீர் கோர்க்க அவன் என் முன்னாடி நீ சந்தோஷமா பேசு சிரி ஆனால் இதை மட்டும் செய்யாத என் மாம், நீ , சுபா மூனு பேரும் அழுதா என்னால் அதை ஹேண்டில் பண்ண முடியாது.. நான் பிளாங்க் ஆகி விடுவேன்.
விவேகா, இனி மாட்டேன் அண்ட் உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா.. மம்.. உனக்கு பிரச்னை இல்லன்னா மட்டும் சொல்லு இல்ல வேண்டாம்.
என்ன விஷயம்.. நீ இப்போ சஸ்பென்ட் ஆனதுக்கு என்ன ரீசன் அதுக்கு யார் காரணம். இன்பா இதை கேட்டதும் உடனே அவன் முகம் கடுமையாக மாறி கோபத்தை பிரதிபலிக்க விவேகா உடனே அவன் இதழில் முத்தமிட்டாள். பிளீஸ் கோவம் வேண்டாம் ராகவ்.. இன்பா குரு பற்றி spr காலேஜ் பற்றிய அனைத்து விஷயமும் அவளிடம் கூறினான். இதை கேட்டதும் விவெகாவுக்கு ஒரு நொடி பயம் நடுக்கம் இரண்டும் வந்தது.
அவன் இதுக்கு தான் உன்னை நான் அந்த காலேஜ்க்கு போக கூடாது அப்டின்னு சொன்னேன். எல்லாம் செக் பண்ணி எதோ ஒரு பங்ஷன் செட் பண்ணி உங்களை மாதிரி இருக்க பொண்ணுங்க details எல்லாம் கலெக்ட் பண்ணி அப்புறம் உங்களுக்கே தெரியாமல் உங்க கையெழுத்து வாங்கி உங்க எக்ஸ்ஸ திருடி விடுவார்கள். விவேகா உடனே காதை பொத்தி கொண்டு வேண்டாம் ராகவ் சொல்லாத எனக்கு பயமா இருக்கு.. என்று சொல்லி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
இன்பா இது இதோட முடியல குரோமோசோம்ல சேன்ஜ் பன்றது இன்னும் நிறைய இருக்கு.. நான் எப்படி பிளான் போட்டாலும் தப்பித்து விடுகிறான்.
விவேகா, நான் எனக்கு தெரிஞ்ச சில விசயம் சொல்லவா..
நீ தோர்த்து கிட்ட இருக்க அப்டின்னா எதோ ஒரு இடத்துள் எதையோ மிஸ் பண்ற.. அண்ட்
நீ அந்த பெர்சனை இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தோற்கடிக்கனும் அப்டின்னு நினைக்காதே அவன் இதில் ரொம்ப கேர் ஃபுல்லா இருப்பான். அவனை வேற விஷயத்தில் தோர்க்கடி அவ்ளோ தான்..
ஜெயித்து கொண்டே இருந்தால் அதில் திரில் இருக்காது கொஞ்சம் தோர்க்க பழகி இருக்கணும். இப்போ உன்னை சுற்றி உள்ள நரி கூட்டம் யாருன்னு உனக்கு தெரிந்து இருக்கும். கடைசியாக நம்ப காட்டுக்கு சிங்கமா இருப்பது சரி தான் ஆனால் நம்மோட மூளை சின்கமா யோசிப்பதை விட. நரியா சிந்திக்கனும் அப்போ தான் நரியை தூக்க முடியும். என்று அவள் சொல்ல இன்பா அதை உண்மையாகவே யோசிக்க ஆரம்பித்தான். ம்ம் பரவாயில்லை டி நீ போலீஸ்காரன் பொண்டாட்டியா மாறி கிட்டே வர.. அவள் இல்ல நான் லவ்வர் மட்டும் தான் மம் ஹான் அது கூட இல்ல அதான் உன் லவ்வர் தான் அவள் இருக்காளே.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் ஆபீஸ் போனில் இருந்து கால் வந்தது. அது இன்பாவின் தலைமை செல்வ கணபதி தான் அழைத்து இருந்தார்.
இன்பா, பேபி ஒரு நிமிடம் என்று சொல்லி அதை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தான். சொல்லுங்க சார்.. மறுமுனை சில விஷயம் சொல்ல ஒரு நிமிடம் அவன் எதுவும் பேசாமல் பின் நான் நேரில் வருகிறேன் என்று சொல்லி வைத்தான்.
விவேகா அவனை பார்க்க எனக்கு சஸ்பென்ட் கேன்சல் பண்றேன்னு போன் பண்ணி இருக்காங்க.. விவேகா சிரித்த முகத்துடன் ஹே சூப்பர் டா இருந்தாலும் உன்னோட இந்த டிரான்ஸ்பார்மெசன் இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு பட் இதை விட நீ சொன்ன நியூஸ் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
எப்படி திடீர்னு என்று அவள் உற்சாகமாகி கேட்க.. அவன் தெரியல.. ஹே பொய் சொல்லாத டா சொல்லு வசு மேம் யாரு கிட்டாயவது சொல்லி.. ஹே ஸ்டாப் இட் என்று சொல்ல அவள் சரி சரி நான் தெரியாமல் சொல்லி விட்டேன். பிளீஸ் எப்படின்னு சொல்லு டா..
இன்பா, அந்த கவ்யாவோட அப்பா மினிஸ்டர் இன்வால்வ் ஆகி இருக்காரு.. இதை கேட்டதும் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் முகம் உடனே மாறி மம் சூப்பர் நீங்க போய் சீக்கிரம் ஜாயின் பண்ணிக்கோங்க என்று சொல்லி அவள் அவன் மடியில் இருந்து எழ..
இன்பா அவளை படித்தவன் ஆயிற்றே.. பேபி ஒரு நிமிடம் இரு அப்போ நான் இப்போவே போய் ஜாயின் பண்ணிக்குறேன்.. மம் சரி போயிட்டு வாங்க நான் கீழ போறேன் எனக்கு டைம் ஆச்சு வீட்டுக்கு போகனும் என்று அவன் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து சொல்லி அவள் எழ அவன் சரி என்று சொல்லி அவளை வெளியே அனுப்ப கதவு வரை சென்றான்.
விவேகா அவன் முகத்தை பார்க்கவே இல்லை. தன்னால் தன் குடும் பத்தால் அவனுக்கு சுமை மட்டுமே இருக்கும் இதுவே இணியாள், கவ்யாவாக இருந்தால் அவனுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். என்று நினைத்தாள் மனதில் இன்னும் வலிக்க ஆரம்பித்தது. அவள் அறியவில்லை இன்னும் அந்த அறையில் இருந்து வெளியே செல்லவே இல்லை. அவன் அவள் பின்னே சென்று கதவை தாளிட்டு விட்டு அவளை பார்க்க அவள் மெதுவாக கால் சுளுக்கி கொண்டு நடப்பவள் பொல் நடந்து வந்தாள்.
விவேகா ஒரு நிமிடம் தன்னை உலுக்கி கொண்டு கதவை திறக்க செல்ல இன்பா அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டான்.
அவள்….?
தொடரும்..
இன்பா இந்த சஸ்பெண்ட் கேன்சல் செய்வானா? இல்லை ஏற்று கொண்டு இப்படியே இருப்பானா?.. நீங்க என்ன நினைக்கிறீர்கள் அப்டின்னு கமென்ட் பண்ணுங்க drs keep reading..
Episode 149,
இன்பா அவளை பின்னால் இருந்து அணைக்க அவள் குரலில் சுரத்தே இல்லாமல் பிளீஸ் என்னை விடுங்க நான் போகனும்.
அவன் விவேகா நீ என் கிட்ட எதுவும் சொல்லனுமா.. அவள் அமைதியாக இருக்க ஹே உன்னை தான் டி உன் நினைப்பு எங்கே இருக்கு நான் உன் பக்கத்தில் தானே இருக்கேன் அப்புறம் எதுக்கு என்னை நினைத்து கொண்டு இருக்க..
அவள் நான் சொல்ல எதுவும் இல்ல.. ஓகே .. இப்போ என்னை விடுங்க.. அது எப்படி பேபி உன்னை விட முடியும். என்று சொல்லி அவளை திருப்ப அவள் கண்களில் குழப்பம் மட்டுமே இருந்தது. பேபி எனக்கு கிஸ் வேணும்.. அவள் கண்களை மூடி கொண்டாள். அவன் எதுவும் செய்யாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தான். அவன் முத்தமிட வில்லை என்று தெரிந்து கொண்ட விவேகா மீண்டும் கண்களை திறந்து பார்கக.. இன்பா அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
விவேகா உடனே திரும்பி செல்ல போக அவன் நான் கேட்டதை இன்னும் நீ கொடுக்கவே இல்ல டி.. அவள் கேள்வியாக அவனை பார்க்க நான் உன் கிட்ட கிஸ் வேணும் அப்டின்னு தான் சொன்னேன் கிஸ் கொடுக்கிறேன் அப்டின்னு சொல்லவே இல்ல.. என்று ஒற்றை புருவம் உயர்த்த அவள் ஒரு பெரு மூச்சு விட்டு ஓகே மிஸ்டர் இன்பா நான் கொடுக்க ரெடி என்று அவன் கையை பிடித்து ஒரு முத்தமிட்டு திரும்பி நடந்தாள்.
உடனே இன்பா அதிர்ச்சி ஆகி அவளை பார்க்க அவள் திரும்பாமல் நீ தானே வேணும் அப்டின்னு கேட்ட சோ எங்கே கொடுக்கணும் அப்டின்னு நீ சொல்லவே இல்ல அது என்னோட இஷ்டம் என்று அவனை திரும்பி பார்க்காமல் கீழே சென்றாள். அவன் முகத்தில் கண்ண குழி தெரிய புன்னகை தாண்டவம் ஆடியது. அவன் மனம் மூளை உடல் எல்லாம் இப்போது அமைதியாக இருந்தது.
விவேகா கீழே சென்றதும் பாவை கிருஷ்ணன் இருவரிடம் சொல்லி விட்டு இன்பா படி இறங்கி கீழே வருவதற்குள் கிளம்பி விட்டாள். கிருஷ்ணன் மேலே பார்க்க இன்பா அப்போது தான் கீழே இறங்கி வந்தான். கிருஷ்ணன் அவன் முகத்தை பார்த்து விட்டு நிம்மதி அடைந்தார். உன் முகம் இப்போ தான் பார்க்க நல்லா இருக்கு ராகவ் இப்ப தான் நீ என்னோட பேரன் டா.. உன்னை பாப்பா நல்லா புரிந்து வைத்து இருக்கிறாள்.
இன்பா, ஒரு புன்னகை மட்டுமே சிந்தி பாவையிடம் ஒட்டி கொண்டு சிறிது நேரம் இருந்து விட்டு தாத்தா நான் இப்போ கிளம்புகிறேன் என்று சொல்ல.. மம் போயிட்டு வா பா என்று அவனை அனுப்பி வைத்தனர்.
இங்கே விவேகா, வெண்பா இருவரும் நடந்து கொண்டு இருக்க வெண்பா, ஹே இப்போ எனாச்சு அதான் போய் பார்த்து முத்த மழை எல்லாம் பொழிந்து என்று சொல்ல உடனே அவள் திரும்பி முறைக்க வெண்பா, சாரி பாச மழை டி டன்க்கு ஸ்லிப் ஆகிடுச்சு.. ஒன்னும் இல்ல..விவேகா பிளீஸ் சொல்லி தொலை இல்ல என் கூட வராத உன் முகம் குரங்கு மாதிரி இருக்கு..
விவேகா, அது.. அது வந்து … ம்ம் சொல்லு.. என்னால் இன்பாவுக்கு எந்த யூசும் இல்லை டி என்று கண்களில் கண்ணீர் வர.. ஹே உன்னை கொன்று விடுவேன் டி.. விவேகா, இப்போ நான் என்ன தவறா சொல்லி விட்டேன். என்று விம்மி அழ.. வெண்பா, உன் வாட்டர் பால்ஸ் நிறுத்து அதுக்கு தான் ஒரு காரணம் வைத்து இருப்பியே அதை சொல்லு கேட்டு தொலையுறேன். விவேகா கூற ஆரம்பித்தாள். அந்த கவ்யா மினிஸ்டர் பொன்னு இப்போ அவளால் தான் இன்பா மறுபடியும் ஆபீஸ் போக போறாரு.. அந்த இனியாழ் பெரிய பணகாரங்க ஆனால் என்னால் இன்பாவுக்கு சிரமம் மட்டும் தானே . வெண்பா, உன் குடும்பத்தால் எந்த சிரமும் இல்ல டி ஆனால் உன்னை லவ் பண்றதால் என் அண்ணனுக்கு சிரமம் டி எப்போ பார்த்தாலும் டார்ச்சர் பண்ற ஒரு வாரமா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இங்கே வந்து பார்த்து விட்டு இப்போ மறுபடியும் முருங்கை மரம் ஏற தயார் அகிட்ட போல..
விவேகா எதுவும் பேசாமல் நடந்து கொண்டே வர வெண்பா, இப்போ வழக்கமா ஒன்னு சொல்லுவியே அதை சொல்லு.. என்ன.. நான் விட்டு பொர்.. அதானே அவள் இதை கேட்டு இன்னும் அழ.. கடசியா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ ஏற்கனவே அவர் இப்போ தான் பெரிய பிரச்னை யுள் இருந்து வெளியே வந்து இருக்கிறார். நீ இப்படி கெனதனமா பேசி மறுபடியும் அவரை இன்னும் கஷ்ட பட வைக்காத..
விவேகா, இல்ல மாட்டேன் அப்படி எல்லாம் நான் கஷ்ட பட விட மாட்டேன் என்று சொல்லி இருவரும் அவரவர் வீடு சென்றனர்.
இன்பா நேராக அவனது வீட்டுக்கு சென்றான். அவன் வீட்டுக்கு வந்த விஷயம் சுபா, வசுமதி, ரவி மூவருக்கும் தெரிய அவனாக பேசும் வரை அவர்கள் பேசவில்லை. வசுமதி சந்தோஷமாக தன் தந்தைக்கு போன் செய்தார். அப்பா எப்படி ப்பா ராகவ் இவலோ சீக்கிரம் மனசு மாறி வந்தான்.
அது வந்து என்று அவர் கொஞ்சம் தடுமாற உடனே ரவி போனை பிடுங்கி மாமா என் கிட்ட சொல்லுங்க நான் அவ கிட்ட சொல்றேன் என்று போனை வாங்கி கொண்டு வெளியே சென்றார். வசுமதி ரவி உங்களை என்று கோபம் கொண்டு அவள் படுத்து கொண்டாள்.
ரவி, சொல்லுங்க மாமா.. என்ன சொல்ல சொல்றீங்க மாப்பிள்ளை.. இல்ல பெரிய ஹீரோ மாதிரி சீன் போடுவான் இப்போ இவளோ சீக்கிரத்தில் வந்து விட்டான். அதுக்கு காரணம் தான் உங்களுக்கே தெரியு மே மாப்பிளை அப்புறம் என்ன ரவி… சும்மா தான் மாமா என்று இருவரும் பேசி விட்டு அவர் உள்ளே வந்தார்.
வசு, என்னங்க போன் கொடுங்க நான் அப்பா கிட்ட பேசணும்.. இப்போ அப்படி என்ன கேட்க போற… நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க நான் இன்பா பற்றி அப்பா கிட்ட பேசணும்.. ரவி,அப்போ அவன் எப்படி சீக்கிரமா வந்தான் அப்டின்னு உனக்கு தெரிந்து கொள்ள வேண்டாமா.. அவள் சொல்லுங்க சொல்லுங்க அதுக்கு தான் நான் அப்பாவுக்கு போன் பண்ண போனேன்.
ரவி, அந்த ராஸ்கல் லவ்வர் வந்து அவனை கன்வின்ஸ் பண்ணி இருக்காங்க என்று சொல்ல வசுமதி ஷாக் ஆகி பார்க்க.. அவர் உடனே அவன் பெரிய மந்திரி இவனை படை சூழ சாமதானம் பண்ணனுமா என்று பேசிட இதை கேட்டதும் வசு கோபம் கொண்டு என் பையனை பற்றி சொன்னால் தான் உங்களுக்கு நிம்மதியா இருக்குமே என் ராகவ் பற்றி இனி நீங்க எதுவும் சொல்லி பாருங்க என்று கோவித்தி கொண்டே திரும்பி கொண்டார். ரவி கஷ்ட பட்டு பேசி சமாதானம் செய்தார்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா அனைவரும் எழுந்து கீழே வரும் முன்னே அவன் எழுந்து கிளம்பி இருந்தான். வசு அவன் அறை கதவை தட்ட அறையில் யாரும் இல்லை. அப்போது வசுவிற்கு போன் வந்தது. அந்த போனை ஏற்று காதில் வைத்தவள் மறுமுனை சொன்ன செய்தி கேட்டு அவளுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
விவேகா ஒரு வித கவலையில் காலேஜ் கிளம்பி கொண்டு இருந்தாள்.
கங்கா, நானும் பார்த்து கிட்டு இருக்கேன் இப்போ எதுக்கு உன் முகம் இப்படி இருக்கு இந்த ஒரு வாரம் உன் நடவடிக்கை எதுவும் சரி இல்ல..
அம்மா நான் நல்லா தான் இருக்கேன். ஹே பொய் சொல்லாத எதோ என் கிட்ட இருந்து மறைக்கிராயா. எதுவும் தவறு செய்து விட்டாயா.. அவள் நான் என்ன செய்தேன் நான் ஒன்னும் செய்யல கொஞ்சம் டென்ஷனா இருக்கு இந்த வருஷம் எல்லா பேப்பரும் கொஞ்சம் கஷ்டம் வேற ஒன்னும் இல்ல.. கங்கா அருகில் வந்து யாரவது எதுவுmr மனசு சங்கடபடும் படி பேசி விட்டார்களா இல்ல என்னாச்சு சொல்லு விவேகா அப்போ தானே அம்மாவுக்கு தெரியும். இல்ல மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன் என்று சிரித்து முகத்தை மாற்றி கொண்டாள்.
இங்கே கவ்யா வீட்டில் அப்பா நான் சொன்னதை செய்தீர்களா அவன் ஒத்துகொண்டானா! என் ராகவ யாரும் கஷ்ட படுத்த கூடாது. சத்ய மூர்த்தி, மம் ஆமா மா எனக்கு செல்வா போன் பண்ணி சொல்ட்டாராம் இன்னிக்கி போய் ஜாயின் பண்ணிக்குவான்.
imperial College London ல நீ படிக்க அட்மிஷன் வந்தது ஆனால் அதை வேணாம் ன்னு சொல்லிட்டு இந்த காலேஜ் ல போய் ஜாயின் பண்ணி இருக்க அந்த அளவுக்கு நீ அவன் மேல் பைத்தியமா இருக்க..
அப்பா அவன் இல்ல மரியாதையா கூப்பிடுன்க.. அவர் சிரித்து கொண்டே மாப்பிள்ளை இப்போ ஓகே வா.. உனக்கு சந்தோஷம் தானே.. என் டாடி என்று போய் அவரை அணைத்து கொண்டாள் அவர் பாசமாக அவள் தலையை வருடி விட்டார்.
அப்பா ராகவ் ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் அந்த என்னை கடத்தி போன கேஸ் இருக்கும் தானே அதை காரணமா வைத்து அவனை எனக்கு பாடி கார்டா போட்டு விடுங்கள். ஒரு மினிஸ்டர் பொண்ணை கடத்தினால் அது எவ்ளோ பெரிய விஸயம் கட்டாயம் அதுக்கு பாதுகாப்பு கொடுக்க எதுவும் செய்யலாம்.
சத்ய மூர்த்தி, என்ன மா சொல்ற நீ சொல்றது மாதிரி ரொம்ப நாள் எல்லாம் செய்ய முடியாது.. அப்பா முதலில் நீங்க ஒரு மாசம் போடுங்க அவனை முழுதும் உங்க கட்டுபாட்டுக்கு உள்ளே கொண்டு வந்து விடுங்கள்.
அதற்கு என்ன ஸ்டெப் எடிக்கணுமோ அதை பண்ணுங்க.. நான் சொல்றத மட்டும் செய்யுங்க பா.. என்று அவள் சொல்லி கொண்டு இருந்தாள். அவர் யோசனையாக அந்த இடத்தை கடந்து விட்டார்.
கவ்யா, ராகவ் நீ எனக்கு தான் உன்னை யாரும் கஷ்ட படுத்த விட மாட்டேன் உன் உயிர் என்னோடது உன்னை உயிரை விட நான் நேசிக்கிறேன். என்று நினைத்தது நடந்து விட்ட மகிச்சியில் சந்தோஷமாக College சென்றாள்.
இங்கே இன்பா செல்வ கணபதியை பார்க்க அவர் அறைக்கு வெளியே காத்து கொண்டு இருந்தார். அவனை உள்ளே வர சொல்ல இன்பா உள்ளே சென்றான். சொல்லுங்க சார்.. என்று அவர் முகத்தை பார்க்காமல் அவரது உடையை மட்டும் இன்பா பார்த்து கொண்டு இருந்தான்.
செல்வா, என்ன மிஸ்டர் இன்ப ராகவன்.. இப்படி தான் ஒரு உயர் அதிகாரியை பார்க்க வருவீர்களா நீங்க எல்லாம் என்ன படித்தீர்களோ இதில் IPS வேறு அதுவும் மெரிட் என்று நக்கலடிக்க இப்போது இன்பா நிமிர்ந்து அவர் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தான்.
அவன் பேசிய விஷயத்தை கேட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக செல்வ கணபதியின் முகம் மாற தொடங்கியது.
அவன் என்ன பேசினான்.
கவ்யா நினைத்தது நடக்குமா..
தொடரும்…
Episode 150,
இன்பா அவர் பேசியதை கேட்டு மீண்டும் அவருடைய காக்கி சட்டையை பார்த்து நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கல இந்த காக்கி சட்டை அதில் இருக்கும் முத்திரை இதுக்கு தான் ஸ்டில் நான் ரெஸ்பெக்ட் பண்றேன்..
அவர் என்ன மிஸ்டர் ஓவரா பேசுற.. திமிரா.. அவன் இப்போது அவர் முகத்தை கண்களை நேராக பார்த்து மம் ஆமா திமிர் தான் எப்படி வேணா வைத்து கொள்ளுங்கள்… யூ ராஸ்கல்.. இன்பா சிரித்து கொண்டே அவனுடைய தாடியை வருடிக் கொண்டே மம் நான் ராஸ்கல் தான் என்று அவர் முன் ஒரு கோப்பினை நீட்டினான்.
இன்பா, மம் வாங்கி பாருங்க மிஸ்டர் செல்வ கணபதி என்று அவன் கூறினான். அவர் வாங்கி பார்த்ததும் பத்த்ட்டத்துள் அவர் முகம் வியர்க தொடங்கியது. அவர் நீ பண்ணது ஃபோர் ஜேர் இதுக்கு என்ன தண்டனை தெரியுமா..
இதுக்கு தான் நான் இந்த ஒரு வாரம் வீட்டில் நீங்க, உங்க கூட இன்னும் ரெண்டு பேரு பத்தி பிரித்து மெய்ந்ததில் உங்க வங்கி கணக்குக்கு எதோ ஒரு அனானிமஸ் கணக்கில் இருந்து பணம் வந்து இருக்கு இத எல்லாம் எனக்கு நீங்க கொடுத்த சஸ்பென்ட் ஆடர் அன்னிக்கே கண்டு பிடித்து விட்டேன். சரி கொஞ்சம் நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கட்டுமே அப்டின்னு தான் விட்டேன்.
எப்படி எப்படி இது நடந்தது உன்னை சும்மா விட க்சி ச்சீ ச்சீ இந்த டைலாக் போர் அடிக்குது கொஞ்சம் மாத்துங்க . அப்போ நீங்க பண்ணிட்டு இருப்பது இதுக்கு முன்னே பண்ணது எல்லாம் என்ன அப்டின்னு கொஞ்சம் சொல்றீங்களா..
அவர் அமைதியாக இருக்க இன்பா பேசினான். என்னை நீங்க மூணு பேர் அண்ட் அந்த குரு அவன் கையாள் தானே நீங்க account details சரியா இருக்கா கேவலம் இந்த பணத்துக்கு தானே என்று சொல்ல…
அவர் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நீ இதுக்கு மேல கூட பேசுவ.. அவன் சிரித்து கொண்டே என்னை என்ன ஐ டோண்ட் கேர்..
செல்வ கணபதி, நீ கொஞ்சம் யோசித்து பாரு இன்பா என்று அவர் பேச வர சார்! என்று அழுத்தமான குரல் அதில் அவர் ஒரு நிமிடம் பயந்து விட்டார்.
இப்போது இருவரும் அமைதியாக இருக்க இன்பா, எதுக்கு என்னை வர சொன்னீர்கள்.. மினிஸ்டர் உன் சஸ்பென்ட் ஆடர் கேன்சல் பண்ணிட்டாரு.. சோ நீ நாளையில் இருந்து ஜாயின் பண்ணிக்கலாம் என்று அந்த ஆடர் அவனிடம் நீட்ட அதை வாங்கியவன் அவர் முன்னே கிழித்து போட்டான்.
அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது ஆனாலும் அவர் குட்டு வெளிப்பட்டு விட்டது இப்போது ஒன்றும் செய்ய முடியாதே. இன்பா அதை கிழித்து அருகில் உள்ள டஸ்ட் பின் ல போட்டான். அவர் ஒரு பெரு மூச்சு விட்டு இப்போ உனக்கு என்ன தான் வேணும் என்னை பற்றி எதுவும் வெளியிட்டு விடாதே இந்த வேலை, என் மரியாதை எல்லாம் போய் விடும்…
இன்பா அவன் கண்ணாடியை போட்டு கொண்டே மம் இதை தான் நான் எதிர் பார்த்தேன். நீங்க நம்ப dept க்கு உண்மையா இருக்க வேண்டாம் அந்த குரு அவனுக்கே உண்மையா இருங்க… அவர் திடுக்கிட்டு இப்போ இப்போ நீ என்ன சொல்ல வர.. இன்பா, என்னோட சஸ்பென்ட நான் ஏற்றுக் கொள்கிறேன். மூனு மாசம் சொடுக்கு போடுவதற்குல் முடிந்து விடும்.
அவர் அப்போ என்னை பற்றி லீக் பண்ண மாட்ட தானே.. அவன் அது நீங்க நடந்து கொள்வதை பொறுத்து உங்களை திருத்துவது என் வேலை இல்ல அண்ட் ஒன் திங்க் இது வெறும் கொஞ்சம் தான் மொத்த இவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வைத்து இருக்கேன். இல்ல இன்பா நாங்க நீ சொல்வது போலவே நடந்து கொள்கிரோம்.
கதவு வரை சென்றவன். ஒரு நிமிடம் நின்று விட்டு அவரை பார்த்து சஸ்பென்ட் முடிந்ததும் மூணு மாசம் மெடிக்கல் லீவ் இல்ல எதோ ஸ்ட்ராங் காரணம் போட்டு ஒரு ரெண்டு மாசம் லீவ் ரெடி பண்ணிடுங்க.. அவர் என்ன என்பது போல் அதிர்ச்சி ஆக என்ன சார் இதுக்கு போய் இது நீங்க பண்ண பாவ கணக்கில் கொஞ்சம் என் பங்கு இருக்கணும் தானே என்று சொல்லி விட்டு அவன் கூலாக வெளியே வந்தான்.
அப்போது அங்கே முத்து, வேல் முருகன் இருவரும் கணபதியை பார்க்க கொஞ்சம் சிரித்து கொண்டே வர முத்து, அங்கே பாருங்க அந்த வசுமதியோட கொடுக்கு வருகிறான். அவன் வந்தால் நமக்கு என்ன யா அந்த சத்ய மூர்த்திய விட குரு சார் பெரிய கை என்று அவர்களுக்குள் பேசி கொண்டு அமைதியாகி அவன் அருகில் வரும்போது என்ன மிஸ்டர் இன்பா எப்படியோ எதோ ஒரு ஓட்டை வழியா மீண்டும் வந்துட்ட போல., அது சரி என்ன இந்த பக்கம் ஆடர் மெயில் பண்ணி இருப்போமே பார்க்க வில்லையா…
இன்பா, இல்ல சார் இந்த பக்கம் ஒரு மூன்று கிழட்டு நறி வந்தது. என் மாம் அதோட முதுகில் ஒரு முடி வெள்ளையா இருக்கும் அதை பிடுங்கி வர சொன்னாங்க ஒன்னு பிடுங்கி விட்டேன் இன்னும் ரெண்டு பாக்கி இருக்கு.. அவர்கள் மூவரும் புரியாமல் விழிக்க சார் ஒன்னும் யோசித்து மூளையை யூஸ் பண்ண வேண்டாம். நேரா கணபதி சாரை பார்க்க போங்க உங்களுக்கே எல்லாம் தெரியும் என்று சொல்லி அவர்களை கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினான்.
அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர். என்ன சார் இந்த இன்பா உங்களை வந்து பார்த்து விட்டு போகிறான். அவர் அவர்கள் இருவர் முன் ஒரு கோப்பை வீசினார். யோவ் நல்லா மாட்டிகிட்டோம் நம்ப ஜாதகம் மொத்தமும் இப்போ அவன் கையில்.. முத்து சார் நாம் அப்போவே சொன்னேன் கையில் பனமா வாங்கி இருந்தால் பிரச்சனையே இல்ல இப்போ பாருங்க.. என்ன பண்றது இது மட்டும் கசிந்தது அவ்ளோ தான்.
வேல் முருகன், சார் பேசாமல் குரு சார் கிட்ட சொல்லி விடலாமே.. யோவ் அதுகு இந்த இன்பா கிட்ட கூட மாட்டி கொள்ளலாம். அவருக்கு யூஸ் இல்லன்னு தெரிந்தால் அவரே நம்பலை போட்டு கொடுத்து விடுவார்.
சார் இப்போ இப்போ என்ன பண்றது… ஒன்னும் பண்ண முடியாது இவன் சொல்றத செய்யவதை தவிர வேறு வழி இல்லை..முருகன், சார் இப்போ கூட அவன் நறி நரை முடி அப்டின்னு சொல்லிட்டு போனான் அது நம்பல பற்றி இருக்குமோ.. முத்து, அப்புறம் எதுக்கு நம்மல கணபதி சாரை பார்க்க சொன்னான். என்று முத்து, முருகன் இருவரும் கணபதியை பார்க்க யோவ் என்ன ரெண்டு பேரும் என்னை பார்க்கிரீர்கள். ஒன்னும் இல்ல சார்… யோவ் இப்போ சொல்ல போறீங்களா இல்லையா முருகா நீ சொல்லு..
அவர் இன்பா சொன்னதை சொல்ல அம்கு இருக்கும் பேப்பர் வெயிட்டர் எடுத்து அவர்களின் மேல் வீசி கேட் அவுட் நான்சென்ஸ் என்று கத்திட அவர்கள் இருவரும் வெளியே வந்தனர்.
இன்பாவுக்கு இப்போது கொஞ்சம் மனது நன்றாக இருந்தது. அவன் நேராக வீட்டுக்கு சென்றான். வசுமதி இன்று ஆபீஸ் செல்ல வில்லை. காலையில் அவருக்கு அப்படி என்ன தான் போன் வந்தது. இன்பா மீண்டும் வேலையில் சேருவது பற்றிய செய்தி தான் அது மினிஸ்டர் சத்ய மூர்த்தி ரெகமன்ட் ல ஜாயின் பண்றான் என்று அவளின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் மூலம் தெரிந்தது.
அவன் சஸ்பென்ட் ஆனது கூட கவலையை தர வில்லை ஆனால் இது மிகவும் கவலையை தந்தது அதனால் இன்று நைட்டு செல்லலாம் என்று மாற்றி விட்டு விட்டார். ரவி இன்று அவளின் நிலையை பார்த்து அவருடன் இருந்து விட்டார். சுபா ஆபீஸ் சென்றாள்.
ரவி, இப்போ என்ன ஆச்சு நீ நினைப்பது போல் எதுவும் நடக்காது அவன் உன் பையன் மட்டும் இல்ல என் இரத்தம் கூட அவனுக்கு ஓடுது டி.. இல்லங்க என்னால் இதை ஏற்று கொள்ள முடியல..அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே இன்பா வீட்டுக்கு வந்தான்.
ரவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வசுமதி கூட அப்படியே இருந்தார். இன்பா, மாம்… மாம் என்று சொல்லி கொண்டு நேராக கிசெண் சென்று ஒரு சில நொடிகள் கழித்து வெளியே வந்தான் ரவி திரும்பி பார்க்க அவன் கைகளில் கேக் எடுத்து கொண்டு வந்தான்.
இன்னிக்கு எதோ நடக்க போகுது என்று நினைத்து கொண்டார். அதனால் அந்த இடத்தில் இருந்து அவர் எழுந்து உள்ளே செல்ல போக அவன் எங்கே போறீங்க… என்று அவன் ரவியை பார்த்து கேட்க அவர் அவனை முறைத்தார். அவர் பக்கத்தில வந்து கைகளை பிடித்து மாம் பக்கத்தில் உட்காருங்க.. என்று அவரை அமர வைத்தான்.
வசுமதி அவன் முகத்தை பார்க்காமல் வாட் ஆர் யூ டூயிங்.. அவன் வேண்டும் என்றே மாம் எதுக்குன்னு உங்களுக்கு தெரியாதா எவ்ளோ பெரிய விஸயம் நடந்து இருக்கு இதை கொண்டாடி ஆக வேண்டும். ரவி அவன் முகத்தை ஆராய்ந்தார் இன்னும் சவரம் செய்யப்படாத தாடிகள் என வேறு ஒரு பரிமாணத்தில் இருந்தான்.அவன் கண்களில் குறும்பு தெரிந்தது.
ரவி, மம் இந்த கெட் அப் ல நல்லா தான் டி இருக்கான் இனி இப்படி தான் இருக்க போறான்… இன்பா அதிர்ச்சி ஆகி எப்படி கண்டு பிடித்து இருப்பார் என்று அவரை முறைக்க..
ரவி, நான் உனக்கு அப்பன் டா என்று சொல்லி அந்த கேக்க வெட்டி முதல் துண்டை வசுமதிக்கு ஊட்ட போக அவர் விடுங்க.. ரவி உனக்கு வேண்டாமா அப்போ ஓகே நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி வாயில் போட்டு கொண்டே மதி உன் பையன் போலீஸ்ல இருந்து இனி பொறுக்கி ஆகி விட்டான் டி என்று சொல்லி சிரித்து கொண்டே அம்மா மகன் இருவருக்கும் பேச தனிமை கொடுத்து சென்றார்.
இன்பா வசுமதி முன்னால் மண்டியிட்டு அமர்ந்து அவரை பார்க்க அவர் கண்கள் கண்ணீர் கோர்க்க அமர்ந்து இருந்தார். மாம்.. ராகவ் நீ இப்போ டூட்டில ஜாயின் பண்ண தான் இந்த கேக் வாங்கி வந்தியா..
அவன் மாம் இது உங்க புரொமோஷன்க்கு என்று ஒரு பீஸ் எடுத்து ஊட்டி விட அவர் அப்போ உன்னோட சஸ்பென்ட் அந்த மினிஸ்டர் என்று தனி தனியாக வார்த்தை தந்தி அடிக்க.. இன்பா, மாம் நான் உங்க பையன்..
இதை கேட்டதும் அவர் கண்கள் துடைத்து கொண்டு அப்போ அப்போ நீ அதை அக்சப்ட் பண்ணலயா.. அவன் இல்ல.. என்று சொல்ல வசுமதி அழுது கொண்டே கட்டி கொண்டார். மாம் நான் என்னைக்கும் விலை போக மாட்டேன்.
இதை கேட்டதும் அவர் அவன் தலையில் முத்தமிட்டு ராகவ் நீ உன் அப்பா மாதிரி டா என்று சிரித்து கொண்டே அணைத்து கொண்டார். மாம் டோண்ட் கம்பேர் ஹிம்.. டேய் சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அதான் உண்மை நான் அவருக்கு கொண்டு செல்கிறேன் என்று வசுமதி உடனே ரவியை சந்தோஷமாக பார்க்க சென்றார்.
இன்பா, இப்போ அடுத்து நம்ப ஒரு முக்கியமான ஆளை சாரி என் டார்ஜ்லின்க பார்க்க போகணுமே.. என்னை பற்றி இந்நேரம் ஒரு புக் போடுற அளவுக்கு எதாவது யோசித்து வைத்து இருப்பாள் அது நல்லதா இருக்காது அது மட்டும் எனக்கு தெரியும்.
மம் இங்கே பார்க்க வேண்டாம் நேரா காலேஜ்ல போய் அவளை பார்க்கனும். இன்னொரு சர்ப்ரைஸ் என் பேபிக்கு இருக்கே.. வரேன் டி நாளைக்கு ஒரு சம்பவம் இருக்கு
தொடரும்..
1 comment
Mam when is the next part of love arrest . Pls