🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
6. LOVE UNDER ARREST PART 6
LOVE UNDER ARREST
📖 LOVE UNDER ARREST · Chapter 6 of 10

LOVE UNDER ARREST PART 6

  • 1 Feb 2026
  • 689 reads
  • ☆ No ratings yet
  • 263 min read

 Episode 176,

வெண்பாவுக்கு ஆதி மிட்டாய் கொடுக்க அதை பார்த்த விவேகா.. மாமா.. மாமா ஆதி மாமா எனக்கு தேன் மிட்டாய் வேணும்..

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

உனக்கா.. 

ம்ம் எனக்கு தான்.. அதெல்லாம் என் கிட்ட இல்ல இப்போதைக்கு ஆரஞ்சு மிட்டாய் தான் இருக்கு.. அவள் முகம் இதை கேட்டு வாடி போக.. 

அவள் கண்கள் உடனே கலங்கி போனது. விவேகா ஜன்னல் பக்கம் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க.. ஆதி அவள் அமைதியாக இருக்கிறாளா என்று ஆச்சர்யம் ஆகி திரும்பி பார்க்க.. 

அவள் முகம் வாடி போய் இருக்க ஆதிக்கு அதற்கு மேல் மனது தாங்க வில்லை. அவன் மனம் மிகவும் பாரமாக இருக்க அவள் அருகில் போய் அமர்ந்தான். 

விவேகா அவன் பக்கம் திரும்பவே இல்லை. ஹே விவி செல்லம்.. சின்ன குட்டி.. 

வெண்பா மனதில் நாய் குட்டி, பண்ணி குட்டி இதில் சின்ன குட்டி இவனை என்று காற்றில் புக மட்டும் தான் வர வில்லை அந்த அளவுக்கு பார்த்து கொண்டு இருந்தாள். 

விவேகா, நீங்க போங்க ஆதி உங்களுக்கு உங்க ஆரஞ்சு மிட்டாய் இருக்கே.. இதை கேட்டதும் ஆதிக்கு மனம் மிகவும் வலிக்க அவள் முன் கீழே அமர்ந்தான். 

வெண்பாவுக்கு இதை எல்லாம் பார்க்க பார்க்க ஒரு பக்கம் வெறி ஏறி கொண்டே இருந்தது. வேகமாக ஆதி விவேகா முன் மண்டி யிட்டு அமர்ந்து இருப்பதை ஒரு ஃபோட்டோ எடுத்து அதை இன்பாவுக்கு அனுப்பினாள். 

அண்ணா எங்கே இருக்க என்னால் இதை எல்லாம் பார்க்க முடிய வில்லை. சீக்கிரம் வா என்று செய்தியை தட்டி விட.. 

ஆதி, ஹே சாரி டி, பிளீஸ் டி, நீ அந்த ராஜ் கிட்ட பேசிய விஷயத்தை என் கிட்ட மறைத்தது எனக்கு எவ்ளோ கோபம் தெரியுமா.. அவன் ரொம்ப மோசமானவவன் அதனால் தான் நான் உன் கிட்ட எதோ கோபத்தில் பேசி விட்டேன். 

விவி குட்டி.. என் செல்லம் உனக்கு மாமா தேன் மிட்டாய் வாங்கி தரட்டுமா.. விவேகா, எனக்கு வேண்டாம் போடா.. ஹே விவேகா நான் சொல்றத புரிந்து கொள் மா.. என்று அவள் கைகளை எடுத்து அவன் உள்ளங்கையில் வைத்து கொண்டான். 

நீ என்னோட உரிமை அது உன்னை அவன் உரிமை கொண்டாடுவதை என்னால் பொறுக்க முடியாது டி.. என்று சொல்ல சரி சரி போதும் நிறுத்து.. 

ஆதி, அப்போ என் செல்ல குட்டி சமாதானம் ஆகி விட்டாய் தானே..

ம்ம் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைக்கிறேன். 

ஆதி அவளுக்காக ஒரு பாக்ஸ் நிறைய தேன் மிட்டாய் வாங்கி வந்து அவள் முன் நீட்ட விவேகா ஆசையாக எடுக்க வர… 

 ஆதி, ஹே எனக்கு ஊட்டி விடு.. வெண்பா, அண்ணா நீ எப்போ தான் வருவ வின்னை தாண்டி வருவாயா ரேஞ்சுக்கு பெர்ஃபர்ம் பண்ணிட்டு இருக்குதுங்க.. 

விவேகா அவனுக்கு எடுத்து ஊட்டி விட.. ஆதியும் அதே போல் அவளுக்கு ஊட்டி விட்டு இருவரும் சிரித்து கொண்டே திரும்ப அங்கே இன்பா ஒயிட் சர்ட், காக்கி பேண்டில் நின்று கொண்டு இருந்தான். 

வெண்பா மனதில் அண்ணா நீ இப்போ வந்து எந்த பிரயோசனமும் இல்ல.. நீ எல்லா போலீஸ் மாதிரியும் லேட் தான்.. என்று மிகவும் வருத்தப்பட்டாள். 

விவேகா, ஆதி இருவரும் திரு திரு வென முழிக்க இன்பா அவளை முறைத்து விட்டு சிபியை பார்க்க சென்றான்.

அவள் மனதில் டேய் எப்படி டா எங்கே டா இருக்க சரியா வந்து விடுகிறாய்.. எங்கே இருந்து  டா வருகிறாய்.. இப்போ நான் கொலை குத்தம் பண்ண மாதிரி என்னை ட்ரீட் பன்னுவானே.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

இன்பா சிபி யின் அருகில் போய் டென்ஷனாக அமர்ந்து கொள்ள.. என்ன இன்பா என்ன ஆச்சு உன்னோட முகம் சரி இல்லை.. 

ம்ம் ஓகே சிபி என்று சொல்லி விட்டு அவன் கதவுக்கு அருகில் நிற்க விவேகா அவன் எங்கே இருக்கிறான் என்று பார்த்து கொண்டே ஃப்ரெஷ் அப் ஆகி வருவதாக சொல்லி எழுந்து சென்றாள். 

விவேகா வாஷ் ரூம் பக்கம் வெளியே செல்ல அங்கே இன்பா கதவு அருகில் நின்று கொண்டு இருந்தான். இவளை பார்த்ததும் முகத்தை சுழித்து கொண்டு திரும்ப.. 

ஹலோ இன்பா.. மிஸ்டர் இன்பா உங்களை தான்.. என்று அவன் வழியை மறைக்க அவன் உட்சி கொட்டி கொண்டு அந்த பக்கமும் இந்த பக்கமும் நகர விவேகா, ஹே ஓவரா பண்ணாத..  என்று அவன் சட்டையை அவள் பக்கம் பிடித்து இழுக்க 

இன்பா, ஹே விடு டி.. 

அவள் இன்பா என் செல்லம் ஹான் என்னோட டார்ஜ்லிங்க் ஐ லவ் யூ.. 

இன்பா, ஐ hate you…

என்ன நீ என்னை வெருக்கிராயா.. 

ம்ம் ஆமா அது தானே அதிற்கு அர்த்தம்.. 

விவேகா, அப்பாடா என்று நெற்றியில் வழிந்து ஓடும் வியர்வயை துடைப்பது போல் செய்து ம்ம் இப்போ போங்க சார்.. 

இன்பா அவள் திடீென்று இப்படி சொல்வாள் என்று எதிர் பார்க்க வில்லை. அவன் திடுக்கிட்டு நிற்க.. 

அவள் அவனை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல அவன் அவளின் கைகளை பிடித்து இழுத்தான். 

என்ன சொன்ன உடனே விட்டு போயிடுவியா.. விவேகா, நீ அப்படியே என்னை விட்டு விடுவாயா என்ன.. இன்பா அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டு நான் எதுக்கு டி விடணும்.. என்று கழுத்தில் முத்தமிட.. 

விவேகா, டேய் விடு டா இங்கே மனுசங்க வருவாங்க.. என்று சொல்லும் நேரம் டீ, காபி, தண்ணீர் என்று சொல்லி கொண்டே அந்த வண்டியில் வேலை செய்யும் உணவு விற்பவர்கள் வர இன்பா அவளை விட்டு தள்ளி நின்று கொண்டான். 

விவேகா அவனின் ஏமாற்ற முகத்தை பார்த்து சிரிக்க அவன் அவளை முறைத்தான். விவேகா, சரி இப்போ சார் சமாதானம் ஆகியாச்சு தானே.. 

இல்ல.. 

ஹே போடா என்னால் இதுக்கு மேலே முடியாது.. 

இன்பா அப்போ கீழே வந்திடு.. 

என்ன.. 

இல்ல கஷ்ட பட வேண்டாம்ன்னு சொல்ல வந்தேன்.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நீ என்ன சொல்ற.. 

அது உனக்கு புரியாமல் இருப்பதே நல்லது… என்று ஒரு பெரு மூச்சை விட்டவன். சரி உள்ளே போடி யாரும் வந்து விட போரார்கள் என்று சொல்ல அவள் நேராக அவள் இடத்துக்கு சென்றாள். 

அப்பா என்று சொல்லி கொண்டே அவள் வந்து அமர 

ஆதி அவளை பார்த்து சிரித்து கொண்டே சாரை சமாதானம் பண்ணியாச்சா மேடம்.. 

விவேகா அட ஏன் ஆதி நீ வேற என்று சொல்ல வந்தவள். உடனே நாக்கை கடித்து கொண்டு ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்காங்க.. என்று அவள் அவனுடன் பேசி கொண்டு வர வெண்பா.. அதை இயலாமையுடன் பார்த்து கொண்டு இருந்தாள். 

விவேகா, ஆதி.. ஆதி.. 

ம்ம் என்ன டி.. 

இல்ல நம்ப இப்படி இருப்பது சில பேருக்கு வயிறு எல்லாம் எரியும் போலவே.. என்று அவனை பார்த்து கண் அடிக்க.. 

ஹே கம்முனு இரு டி என்று அவன் அதட்டினான். 

வெண்பா ஆதியை முறைத்து பார்த்து விட்டு மேலே போய் அவள் இடத்தில் படுத்து கொண்டாள். 

ஆதி, ஹே பாவம் டி அவள்.. அப்போ நீ அவள் கிட்ட பேசு நான் படிக்க போறேன்.. என்று புத்தகம் எடுக்க.. 

ஆதி அவன் தைரியத்தை ஒன்று திரட்டி பேச வர அதற்குள் அங்கே விவேகாவை பார்க்க அருண் வந்து விட்டான். 

ஹே டியர்.. அய்யோ இவன் வேற வந்துட்டானா.. என்று நினைக்க இதை எப்படி சமாளிக்க என்று முழித்து கொண்டு இருந்தவள் அந்த ac காற்றில் உடல் எல்லாம் குளிர் எடுக்க உடனே சோம்பல் முறித்து கொண்டே எனக்கு தூக்கம் வருது சீனியர் நம்ப நாளைக்கு பேசுவோமே.. 

அருண் அவன் கைகளில் சில உணவு பண்டத்தை எடுத்து கொண்டு ஹே இது எங்க மம்மி செய்தது ரொம்ப நல்லா இருக்கும் உனக்காக நான் எடுத்து வந்து இருக்கிறேன் சாப்பிட்டு விட்டு தூங்கு என்று அவன் சொல்ல அதை அவளால் மறுக்க முடியாத நிலையில் இருந்தாள். அதை வாங்கி கொள்ள ஆதி, ஹே இது என் அம்மா உனக்கு பூரி பிடிக்கும் அப்டின்னு செய்தாங்க வாங்கு.. 

விவேகா இது என்ன டா சோதனை என்று மேலே பார்க்க வெண்பா இவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள். 

ஹே நீ ஜாலியா இருக்க எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருவரிடமும் அதை வாங்கி கொண்டு வெண்பாவை கீழே இறங்க சொன்னாள். 

அருண், ஹே வெண்பா உனக்கு பூரி பிடிக்கும் தானே என்று சொல்லி கொண்டே விவேகா கையில் உள்ள அந்த பாக்ஸை பிடுங்கி வெண்பா கைகளில் கொடுத்து சாப்பிடு டி.. 

வெண்பா அதை ஆசையாக திறந்தாள். அவள் வருங்கால மாமியார் தேவி சமைத்தது அதுவும் முதன் முதலில் சாப்பிட போகிறாள். 

விவேகா, ஒரு சின்ன சிரிப்புடன் பார்த்து விட்டு கண்டு கொள்ள வில்லை. ஆதி வெண்பாவை பார்க்க அதை எடுத்து அவள் வாயில் வைத்து மெதுவாக சாப்பிட வெண்பா சாப்பிடும் அழகை ஆதி ரசித்து கொண்டு இருந்தான். 

க்கும்.., என்று விவேகா தொண்டையை சிறும்ப தன்னிலைக்கு வந்த ஆதி  இன்னொரு பூரி பாக்ஸ் எடுத்து விவேகா கைகளில் கொடுத்து சாப்பிடு என்று அதட்ட அவள் மனம் இன்பா சாப்பிட்டு இருப்பானா என்று அவனை தான் தேடியது. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

விவேகா வெண்பா போனை எடுத்து கொண்டு அதில் இருந்து செய்தி அனுப்ப அந்த செய்தியின் தோரணையே சொன்னது அதை அவள் தான் அனுப்பி இருக்கிறாள். 

இல்ல.. 

நீ.. 

நான் இப்போ சாப்பிட்டு கொண்டு இருக்கேன்.. 

சரி நீ சாப்பிட்டு முடித்து விட்டு எனக்காக காத்திரு.. 

என்ன டா சொல்ற,எதுக்கு டா…

 இன்பா,நீ என் கூட டைம் ஸ்பென்ட் பண்ற.. 

இதை கேட்டதும் விவேகா…?

தொடரும்…

Episode 177,

இங்கே கவ்யா, சோனா இருவரும் பிளைட்டில் ஏறினர். கவ்யா மினிஸ்டர் மகள் என்பதால் மிகவும் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அவளுக்கு ரயில் பயணம் எல்லாம் பிடிக்காது. ஒரு வேளை இன்பா வருகிறான் என்று தெரிந்து இருந்தால் அவள் நிச்சயம் ரயிலில் போயிருப்பாள். அதுவும் அவளுக்கு தெரிய வந்தது. போர்டிங் பாஸ் எடுத்துக்கொண்டு அவள் உள்ளே அமர்ந்ததும் தான் இந்த விஷயம் தெரிந்தது.

கவ்யா, ஹே சோனா உன்னை வைத்து கொண்டு நான் என்ன செய்வது. என்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும் கொள்ளி கட்டையை போல் பேச.. 

இல்ல கவி இப்போ தான் எனக்கு சங்கவி ஜூனியர் பொன்னு கால் பண்ணா அப்போ தான் தெரியும்.. அவள் முறைத்து விட்டு என்ன செய்வது என்று யோசித்தாள். 

ஆனால் இப்பொழுது வேறு வழி இல்லை என்று தெரிந்தவள். கடுப்பில் பயணம் செய்தாள். 

இங்கே விவேகாவுக்கு இன்பா போன் செய்தான் அதான் வெண்பா போனில்.. ஹலோ.. ஆர் யூ பினிஷ் யுவர் டின்னர்… ம்ம் நீ சாப்பிட்டியா என் செய்தி பார்த்தியா..

நான் இன்னும் சாப்பிடல.. 

ஹே நான் சப்பாத்தி கொண்டு வந்து இருக்கிறேன் டா.. என்று மிகவும் மெதுவான குரலில் ஜன்னல் ஓரம் சாய்ந்து கொண்டே அவள் சொல்ல.. 

யாரு செய்தா.. ம்ம் அதி சூப்பரா செய்வா.. அதில் பால் அப்புறம் கொஞ்சம் சக்கரை எல்லாம் போட்டு செய்வா ஆனால் அது அடுத்த நாள் வரை அப்படியே மிருதுவாக இருக்கும். வருண் க்கு வெண்ணெய் தடவி கொடுப்பா… 

இன்பா, ம்ம் சொல்றதோட சரியா எப்ப டி எனக்கு செய்து தருவ.. 

விவேகா, கள்ள புன்னகை சிந்தி கொண்டே மிகவும் மெதுவாக அதாவது அவளுடைய குரல் இன்பாவுக்கு மட்டுமே கேட்கும் அருகில் இருக்கும் யாருக்கும் அவள் பேசுவது கேட்காது இது தான் காதல் பாசை அது காதலிப்பவர்களால் மட்டுமே பேச முடியும்.

வெண்பா விவேகா பேசுவதை பார்த்து கொண்டு இருக்க.. ஆதி, ஹே அவளை என்ன அப்படி பார்க்கிற.. இல்ல அவள் பேசுவது எனக்கு சுத்தமா கேட்கவே மாடிங்கிது எனக்கு கொஞ்சம் லிப் ரீடிங் தெரியும் ஆனால் விவேகா என்ன பேசரா அப்டின்னு பார்த்தால் அதையும் கண்டு பிடிக்க முடியல அப்படி என்ன தான் பேசுவா.. 

ஆதி, எனக்கு தெரியாது..  வெண்பா எதையோ யோசித்து கொண்டே டெய்லி அண்ணாவை பார்க்கிறாள். போன் இல்லாத அப்போவே இவளோ பேசுறா இன்னும் போன் வைத்து இருந்தால் எவ்ளோ பேசுவா அதை விட இந்த இன்பா அண்ணா இவள் பின்னாடி சுற்றி கொண்டு இருக்கானே.. 

ஆதி, என் விவேகாவுக்கு என்ன குறை உன் அண்ணா எதோ செய்த புண்ணியம் அதான் எங்க வீட்டு பொன்னு லவ் பன்றாறு.. அண்ட் அவங்க பேசறது எல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு நீ இன்னும் வளர வில்லை. அதெல்லாம் காதலிக்கிறவங்க மட்டும் தான் பேச முடியும். 

என்ன நீ சொல்றது எனக்கு புரியல.. ஆதி அவன் தலையை நீவி கொண்டே அது உனக்கு புரிய வாய்ப்பு இல்ல.. 

என்ன சொல்ற.. 

அது நீயும் யாரையாவது லவ் பண்ணா அவங்க கிட்ட பேசிட்டே இருக்க தோணும்.. 

வெண்பா, இது எல்லாம் எப்படி உனக்கு தெரியும் அப்போ நீ லவ் பண்ற.. ஆதி, நானா வாய்ப்பே இல்ல நான் என்று சிரித்து கொண்டே IQ அதிகமா இருக்க பசங்க லவ் சொல்ல மாட்டாங்க சோ நான் லவ் பண்ணல.. என்று சொல்லி சிரித்து கொண்டே அவன் வேலையை செய்ய ஆரம்பித்தான். 

 இங்கே இன்பா அவளிடம் , ஹே எனக்கு நீ தான் ஊட்டி விடனும்.. ஹே என்ன விளையாட்டு இது சிபி சார், தீபா மேம், தார்ஷனா மேம் எல்லாம் இருக்காங்க என்னால் வர முடியாது… 

அதை பற்றி உனக்கு என்ன பேபி கவலை உன்னை எப்படி தூக்கி வரேன்னு மட்டும் பாரு.. என்று சொல்லி அவளை இரவு  10.00 மணிக்கு தயாராக இருக்க சொன்னான். 

அவளோ நான் மாட்டேன்..

வாட்..

டேய் நான் வர மாட்டேன் போடா.. 

சரி நீ வர வேண்டாம் நான் வரேன் பேபி உன்னை தூக்கி செல்ல என் கிட்ட நிறைய பிரதான் மந்திர் யோசனா இருக்கு டி.. டேய் எதுக்கு டா இப்படி எனக்கு பிரச்னை கொடுக்கவே வசுமதி மேம் உன்னை ரிலீஸ் பண்ணி இருக்காக போல.. 

இன்பா, பேபி இன்னிக்கி நைட்டு என் கூட தான் தங்க போற அது மட்டும் நடக்க தான் போகுது.. 

விவேகா, நான் மாட்டேன் மாட்டேன் மாட்டேன்.. இன்பா, நிச்சயம் நீ வருவ… போடா..

போய் சாப்பிடு டி.. என்று சொல்லி விட்டு அவன் வைத்து விட 

விவேகா, ஹே போக கூடாது! போக கூடாது ! என்று அவள் சொல்லி கொண்டு இருக்க 

மணி ஒன்பது ஆனது ஆதியிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு 

விவேகா போர்வைக்குள் அவளை நுழைத்து கொண்டாள்.  மணி 10.00 ஆக அதில் சிலர் அதற்கு முன்னவே தூங்கி விட்டனர். அருண் வெண்பா விடம் பேசி எப்படியாவது விவேகா இருக்கும் இடத்துக்கு அருகில் தூங்க  வேண்டும் என்று இரவுக்  கனவு நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை சூரியா போல் கனவு காண ஆரம்பித்தான். பின் தண்ணிலைக்கி வந்து அதை செயல் படுத்தும் நேரத்தில் சிபி ஆட்டத்தை களைத்து விட்டான். 

விவேகா போர்வைக்குள் விழித்து கொண்டே வருவானா.. வந்து இருப்பானா.. எங்கே இருக்கிறான்.. சரியான 420 என்று சொல்லி கொண்டு அந்த போர்வையில் கொஞ்சம் திறந்து பார்த்து உள்ளே வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். 

சிறிது நேரத்தில் இன்பா அங்கே வருவது தெரிய அவள் இதயம் வேகமாக துடிக்க உடனே உள்ளுக்குள் மறைத்து கொண்டாள். இன்பா அவளுடைய இடத்துக்கு வந்து பார்த்தவன் அவள் உண்மையாகவே தூங்கி விட்டாள் என்று நினைத்து ஒரு புன்னகை செய்து விட்டு அவன் படுக்கை கோச் 1AC மொத்தம் 7 இருக்கைகள் மொத்தத்தையும் இவன் புக் செய்தான். ரவி, வசுமதி, சுபா, மித்ரன், பாவை, கிருஷ்ணன் என மொத்தமும் செய்தான். அவனுக்கு இது போல் தொடர் பயணம் எல்லாம் தனிமையாக செல்ல தான் பிடிக்கும் எப்பொழுதும் விமானத்தில் பறந்து விடுவான் அப்படி இல்ல என்றால் இது போல் புக் செய்து பயணம் செய்வான். அவனுக்கு பணம் முக்கியம் இல்லை பயணம் நன்றாக இருக்க வேண்டும். 

விவேகா எழுந்து அவன் சென்று விட்டானா என்று பார்க்க அங்கே இன்பா இல்லை மனதுள் குட்டியாக ஒரு கவலை எட்டி பார்த்தது. சரி என்று தன்னை நிலை படுத்தி கொண்டு நேராக ரெஸ்ட் ரூம் சென்றாள். அவள் உள்ளே சென்று விட்டு வெளியே வந்து கைகளை கழுவ அங்கே இன்பா நின்று கொண்டு இருந்தான். 

ஹே எனக்காக நீ வெயிட் பண்ணாமல் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டாயே.. விவேகா அவனை ஆச்சர்யமாக திரும்பி பார்த்து நீங்க இன்னும் கிளம்ப வில்லையா.. நான் சிபி கிட்ட பேச போயிருந்தேன்.

விவேகா, பேசியாச்சா.. 

ம்ம்…

சரி ஓகே குட் நைட் என்று சொல்லி அவள் கிளம்ப.. 

இன்பா, ம்ம் இன்னிக்கி நமக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் என்று சொல்லி அவளை இடையோடு கட்டி கொண்டே இழுத்து  சென்றான். அவளுக்கு உடல் எல்லாம் கூச ஹே விடு டா யாரும் பார்க்க போறாங்க என்ன பண்ற சிபி சார்க்கு தெரிந்தால் என்ன ஆவது.. 

இன்பா அவள் உதட்டில் கை வைத்து உஷ் என்று சொல்லி எனக்கு பசிக்குது டி.. விவேகா, என் இடத்தில தான் இருக்கு விடு நான் எடுத்து வருகிறேன். ஓ அதுக்கு நீ ஒன்னும் ஒர்ரீ பண்ணிக்க வேண்டாம் நான் எடுத்து வருகிறேன் என்று சொல்லி அவன் அந்த இரண்டு பொட்டலமும் எடுத்து வர விவேகா அவனை பார்த்து எப்படி டா இதுக்கு எல்லாம் தனியா ரூம் போட்டு யோசிப்பியோ…

இன்பா, மீசையை முறுக்கி கொண்டே நான் எதுக்கு ரூம் போடணும். அப்படியே போட்டாலும்  தனியா இல்ல என் கூட நீயும் தான் சோ அதுக்கு பேரு கப்பில்ஸ் ரூம்.. 

விவேகா எப்படி பேசினாலும் சுற்றி வளைத்து என்னோடு வந்து இணைத்து விடுகிறான். இல்ல இணைந்து கொள்கிறான். இவன் பேச்சு வசிய மருந்து விட ரொம்ப போதை என்று நினைக்க அதற்குள் அவன் 1AC கோச்சுக்கு கூட்டி வந்து விட்டான். 

விவேகா சுற்றியும் நோட்டம் விட அங்கே யாரும் இல்லை. இன்பா அவள் கைகளை பிடித்து இழுக்க.. விவேகா, இத்தனை இடம் இருக்கே சோ அதுக்கு ஆள் வருவாங்க.. நான் கிளம்புறேன்…

இன்பா, ம்ம் சரி முதலில் எனக்கு ஊட்டி விடு.. விவேகா அவனை அமர வைத்து ஊட்ட ஆரம்பிக்க அதை ஒரு வாய் சாப்பிட்ட இன்பா, பேபி உன் அண்ணா கொடுத்து வைத்தவன் டி.. என்ன சொல்ற.. ம்ம் அதி சூப்பரா சமைக்கிறா.. 

விவேகா, பின்ன எல்லாம் என் கை வண்ணம் தான்.. இன்பா அவளை முறைக்க.. இப்போ எதுக்கு டா முறைத.. நீயும் அவளும் ஒன்னு இல்ல.. ஆமா அவளுக்கு நான் மெனு கொடுப்பேன் அவள் சமைப்பா டா ஃபர்ஸ்ட் ஆப் ஆல் நான் எதுக்கு சமைக்கணும்.. 

இன்பா ஏன் எனக்கு சமைக்க மாட்டியா  என்று அதை பொறுமையாக வாயில் மென்று கொண்டே கேட்க.. 

விவேகா, உனக்கு தான் என்னை விட என் அம்மா சமையல் பிடிக்குமே அதனால் நான் என் அம்மாவை உனக்கு சமைத்து போட சொல்லி விடுவேன். 

இன்பா, அப்போ மேடம் என்ன பண்ணுவீங்க.. நானா ம்ம் நான் வேலைக்கு போகனும் ஒரு நல்ல இடத்துக்கு முன்னேறனும்.. 

அவ்ளோ தானா.. 

விவேகா வேற என்ன இருக்கு என்று ஊட்டி முடித்தவள் கைகளை கழுவ எழ 

இன்பா அவளை பார்த்து…?

தொடரும்… 

 Episode 178,

இன்பா, அப்போ மேடம் என்ன பண்ணுவீங்க.. நானா ம்ம் நான் வேலைக்கு போகனும் ஒரு நல்ல இடத்துக்கு முன்னேறனும்.. 

அவ்ளோ தானா.. 

விவேகா வேற என்ன இருக்கு என்று ஊட்டி முடித்தவள் கைகளை கழுவ எழ 

அவளை அமர வைத்து அருகில் உள்ள பாத்திரத்தில் கையை கழுவ வைத்தான். ஹே நான் வெளிய போய் வாஷ் பண்ணி இருப்பேனே.. 

அவன் எதுவும் பேசாமல் அவள் கையை கழுவியதும் அதை வெளியே சென்று டஸ்ட் பின்னில் போட்டான். பின் உள்ளே வந்து அவளை பார்க்க விவேகா குளிரில் நடுங்கியபடி அமர்ந்து இருந்தாள். இன்பா கதவை சாத்தி விட்டு கைகளை துடைத்து கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான். 

விவேகா, சரி இன்பா நான் கிளம்பட்டுமா.. என்று கொஞ்சம் குரல் குளிரில் நடுங்கிய படி சொல்ல… 

இன்பா அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு என்ன ஆச்சு ஒரு மாதிரி இருக்க.. கொஞ்சம் குளிருது என்று அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே இது நீ மட்டும் தான் இருப்பியா…

அவன் அவளை உற்று பார்க்க ஐ மின் உனக்கு மட்டும் இந்த ரூமா இல்ல வேற யாரும் வருவான்களா.. 

என் கூட இன்னொரு பேர் தங்குவாக.. 

யாரு அது… 

இன்பா, நீ தானே இப்போ போற,உனக்கு எதுக்கு டி நான் சொல்லணும,என் கூட யார் தங்கினால் உனக்கு என்ன.. 

சரி ந நான் போறேன்.. என்று விவேகா சொல்ல அவன் ம்ம் போயிட்டு வாங்க என்று போன் நோண்டி கொண்டு இருந்தான். 

அவன் அறை கதவு திறந்து கொண்டு வெளியே சென்றவள் டப் என்று சாத்தி விட்டு ஒரு இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள்  ஒரு நிமிடம் நின்றாள். அவள் மனம் இடியட் இன்பா.. இனி உனக்கு… நீ நீ மட்டும் என்னை தேடி வந்து பார் பேசவே மாட்டேன் டா பப்பி நாயே.. இடியட் பப்பி என் பின்னால் சுற்றி கொண்டு இருப்ப ஆனால்  இப்போ என்னையே டென்ஷன் பண்ணிட்ட தானே என்று அவள் நினைத்து முடித்து அவள் மனம் விவேகா அவன் நினைவை இதே இடத்தில விட்டு வா டி இனி டெல்லியில் கூட பேச கூடாது.. 

ம்ம் என்று சிணுங்கி கொண்டே அவள் சீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வெளியே வந்தது அதே இடத்தில் நின்றது என அனைத்தையும் அவள் பின்னால் விவேகாவுக்கு தெரியாமல் அருகில் வந்து நின்று அவளை பார்த்து கொண்டு தான்  இருந்தான். விவேகா அதே இடத்தில் அவள் கைகளை இறுக்கி மடக்கி தலைக்கு அருகில் வைத்து கண்களை இறுக்கி மூடி இன்பாவை திட்டி விட்டு செல்ல… 

அவள் துப்பட்டாவை இன்பா இழுத்தான். விவேகா கோபத்தில் திரும்பி அவனை முறைத்து விட்டு நடந்தாள். இன்பா சிரித்து கொண்டே அவளை தொட போக ஹே யார் நீ டோண்ட் டச் மீ , யூ இர்ரிடேடிங்.. அவள் பேசுவதை காதில் போட்டு கொள்ளாமல் இன்பா விவேகாவை தூக்கி தோல்களில் போட்டு கொண்டு செல்ல.. 

டேய் விடு டா.. யாராவது பார்த்தால் என் நிலை என்ன ஆவது.. அய்யோ என்னை யாரும் காப்பாற்றுங்கள் என்று சொல்ல இன்பா அவளின் பின் பக்கத்தில் ஒரு அடி கொடுத்தான். அவன்  சட் அப்.. ஸ்ஸ்ஸ் வலிக்குது டா என்று அவனை முதுகில் அடித்தாள்.அவன் மீண்டும் அதே அடி கொடுக்க அவன் தோல் பட்டையில் ஒரு கடி கடித்து விட்டாள்.அவன் உள்ளே சென்றதும் அவளை சீட்டில் தொப்பென்று  போட்டு விட்டு கதவை சாத்தி விட அவள் உடனே வேகமாக எழுந்து கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல முற்பட்டாள். இன்பா அவளை இடை மறித்து சீண்டி கொண்டு இருந்தான். 

விவேகா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க டேய் பப்பி நாயே என்னை வெளியே விடு இல்ல இப்போவே கத்திடுவென் அப்புறம் இந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்க எல்லாரும் வந்து விடுவார்கள். இன்பா அவளை சீட்டில் தள்ளியவன்  அவள் மேல் விழுந்து கத்து டி என்று அவளின் கைகளை பிடித்து கொள்ள 

நிஜமா கத்திடுவென்.. 

ம்ம் கத்து.. 

சத்தியமா கத்திடுவேன் டா.. 

ம்ம் இன்னும்  லவ்டா கத்து.. 

விவேகா யாரும் வாங்களேன் இங்கே ஒருத்தன் என்னை தூக்கி வந்து என்னை டார்ச்சர் பண்றான்.. என்று கண்களை மூடி கொண்டு அவள் மொத்த சக்தியும் செலவு செய்து கத்தி விட இன்பா அவளை விட்டு எழுந்து அருகில் அமர்ந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டி கொண்டே இந்த கம்பார் ட் மெண்ட் ல இப்போதைக்கு நீயும் நானும் மட்டும் தான் அண்ட் நீ கத்தும் சத்தம் இந்த கதவை விட்டு வெளியே போகாது என்று சொல்ல.. அதை கேட்டதும் 

 விவேகா கண்களை திறந்து பார்க்க இன்பா தண்ணீரை குடிக்க சொல்லி காட்ட அவள் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தாள். ஹே இப்போ குடிக்கல அப்புறம் நீ தான் ரொம்ப கஷ்டப் படுவ.. அவளுக்கு லைட்டாக இருமல் வர உடனே அவனிடம் இருந்து தண்ணீரை வாங்க முயற்சி செய்தாள். 

இன்பா அவன் கைகளை அங்கும் இங்கும் ஆட்டி அவளை இன்னும் சீண்ட ஹே என்று எழுந்து செல்ல போக சரி சரி இந்தா என்று கொடுக்க அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்து தன்னை அசுவாச படுத்தி கொண்டாள். 

இப்போ ஓகே வா மேடம்.. என்று அவள் அருகில் வந்து நெருக்கமாக அமர்ந்து கொண்டான்.

விவேகா, அவனை பார்த்து முறைத்து கொண்டே எதுக்கு டா என்னை தூக்கி கொண்டு வந்த.. யாரும் வந்து இருந்தால் என்ன ஆவது. இன்பா டெல்லி வரை யாரும் இதில் ஏற மாட்டாங்க.. ஏன்  இது மொத்தமும் உன்னோட சீட்டா… ம்ம் ஆமா என்று அவன் அசராமல் பதில் அளிக்க விவேகா ஷாக் ஆகி என்ன என்ன சொன்ன மொத்தமும் புக் பண்ணிட்டியா.. ம்ம் ஆமா அதுக்கு இப்போ என்ன… 

விவேகா ஒரு சில நொடிகள் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரிய வில்லை. இவன் என்ன சொல்கிறான். மொத்தமும் புக் செய்து விட்டானா.. இன்பா அவளின் முகத்தில் உள்ள அதிர்ச்சியை பார்த்து என்ன பேபி இதை நீ எக்ஸ்பக்ட் பண்ணி இருக்க மாட்ட சரி தானே.. 

விவேகா, அது எப்படி ஒரு ஆள் இத்தனை புக் பண்ண முடியும்.. இன்பா நன்றாக அவள் மேல் சாய்ந்து கொண்டு என் மாம், சுபா, சுபா டாட், மித்ரன், அண்ட் நான் , என்னோட டார்ல்ஸ், தாத்தா இவங்க நேம்ல புக் பண்ணி விட்டேன். தட்ஸ் ஆல் எதுக்கு இப்படி பண்ண எவ்ளோ காசு வேஸ்ட் தெரியுமா.. எனக்கு பிரய்வசி அண்ட் ஃப்ரீயா டிராவல் பண்ணனும் கூட்டமா போறது எல்லாம் பிடிக்காது. 

விவேகாவுக்கு அதற்க மேல் என்ன பேசுவது என்று தெரிய வில்லை. சிறிது நேரம் கழித்து எதோ நினைவு வந்தவளாய் சரி யாரோ உன் கூட சேர்ந்து வர போறாங்கன்னு சொன்னியே நான் கிளம்புறேன் நீ அவங்களை பாரு.. என்று அவனிடம் இருந்து விலகி போக..

இன்பா, அதான் அவங்களை தான் இப்போ பார்த்து கொண்டு இருக்கேன். என்று அவளை ஒரு புருவம் தூக்கி ஒற்றை கண் அடிக்க விவேகாவின் கன்னம் இரண்டும் சிலிர்த்து போனது. ந நான் போகனும்.. இன்பா, என் கூட இருன்னு சொல்ல மாட்டேன். நான் உன் கூட இருக்க தான் வந்தேன். சமத்து பொண்ணா இங்கே வா என்று சொல்லி அவளை இழுத்து அமர வைத்து  மடி மேல் தலை வைத்து படுத்து கொண்டான். 

விவேகா மனதில் நம் வாழ்வில் எப்படி இவ்வளவு மாற்றம் எவ்வளவு மாறி விட்டேன் இதுக்கு காரணம் எல்லாம் என் மடியில் படுத்து இருக்கும் இவனால் தான் என்று நினைத்து கொண்டு இருக்க இன்பா அவளை தான் பார்த்து  கொண்டு இருந்தான். 

விவேகாவின் கைகள் எல்லாம் கொஞ்சம் அந்த குளிர்ந்த காற்றில் நடுங்க இன்பா என்ன ஆச்சு.. ஒன்னும் இல்ல.. சொல்லு டி.. எனக்கு கொஞ்சம் குளிறுது.. என்று கைகளை இரண்டும் தேய்த்து கன்னத்தில் வைத்து கொண்டாள். 

இன்பா இத கம்மி பண்ண என் கிட்ட ஒரு வழி இருக்கு பேபி.. என்ன சீக்கிரம் சொல்லு டா எனக்கு ரொம்ப குளிருது.. இன்பா அவள் மடியில் படுத்து கொண்டே 

பேபி கொஞ்சம் கீழே குனி..

ம்ம் என்ன.. 

இன்னும் குனி.. 

சொல்லு.. 

இன்பா அவள் தலையை பிடித்து இதழை சிறை செய்தான். விவேகா, ஃப்ராட் பயலே இது தான் உன் ஐடியாவா.. என்று சொல்லி கொண்டே அவனிடம் இருந்து அவள் பிரிய

இன்பா என்ன டி பண்ற என்று எழுந்து அமர்ந்தவன் இப்பொழுது திடீர் என்று அவளை தூக்கி மடியில அமர்த்தி மீண்டும் அவளின் இதழை சிறை செய்தான். அதற்கு மேல் விவேகா அவனை தள்ளி விட வில்லை. அவன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்று கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து விட்டவன் இப்போ எப்படி இருக்கு.. 

என்ன எப்படி இருக்கு.. 

அதான் குளிருதுன்னு சொன்ன.. 

இப்போது கூட தான் குளிரிது.. இன்பா மேலே இருந்து பெட் சீட் எடுத்து அவன் போர்த்தி கொண்டு அவளை மடியில் அமர்த்தி கொண்டான். இப்போ ஓகே வா.. ம்ம் ஓகே என்று மெல்லிய குரலில் சொன்னாள். 

அவளுக்கு இப்பொழுது என்ன பேச என்று தெரிய வில்லை. இன்பாவும் அதே போல் தான் இந்த மாதிரி அமைதியான சூழல் எப்பொழுதும் அவர்கள் சந்தித்தது இல்ல. இன்பா வின் மூச்சு காற்றும் அவன் மீசையும் அவளின் பின் முதுகில் மோதி எதோ செய்ய அவள் நெளிந்தாள். இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. 

இன்பாவுக்கு அவள் அருகில் இருப்பது உடல் எல்லாம் எதோ செய்தது.  ஆனால் எதுவும் செய்ய முடியாதே என்று ஒரு பெரு மூச்சை விட்டான். அவன் மூளை மெயின் கோர்ஸ் தான் சாப்பிட முடியாது கொஞ்சம் ஸ்டார்டர் அப்புறம் டெஸ்ஸர்ட்ஸ் எல்லாம் சாப்பிடலாம் டா என்று மனத கட்டுக்குள் கொண்டு வந்தவன். 

பேபி என்று அழைக்க.. அவள் ஒரு பக்கம் மட்டும் கழுத்தை திருப்பி இன்.. இன்பா நான் என் சீட்டுக்கு போகவா.. 

அவன் ஏன் என்ன ஆச்சு டி..?

தொடரும்.. 

 Episode 179,

விவேகா கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து அவனை ஒரு சிறு வெட்கத்துடன் தரையை பார்த்து கண்கள் படபடத்து கொண்டே இன்.. இன்பா.. நான் என்.. என்னோட  சீட்க்கு போறேன்.. என்று சொல்லி அவள் எழ போக இன்பா அவள் கழுத்தில்  முத்தமிட்டான். 

அவளுக்கு உடல் எல்லாம் ரெக்கை முளைத்து பறப்பது போல் தோன்றியது. அவள் மூச்சு சூடாகி கன்னம் எல்லாம் சிலிர்த்து சிவப்பேரியது.  இன்பா அவளை அவன் பக்கம் திருப்பி நான் ஒன்னும் செய்ய மாட்டேன் என் கூட இரு டி ஜஸ்ட் கட்லிங் மட்டும் என்று அவள் காதில் ஊதிட விவேகா அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 

இன்பா, அவள் தலையை நிமர்த்தி அவள் இதழை சுவைக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான்  விவேகா கண்கள் எல்லாம் சொக்கி அவனுள் கொஞ்சம்  இல்லை முழுவதுமாக கரைந்து தான் போனாள் அவன் தான் இன்பாவாயிற்றே இனிக்காமல் இருப்பானா என்ன… அவன் முத்தங்கள் அவளுக்கு இனிக்க தான் செய்தது அதை விட அவனுக்கு அவள் தேன் போல் இருந்தாள். 

மொத்தத்தில் விவெகாவை அவன் விட சிறிது நேரம் பிடித்தது. அவளுக்கு அவன் முத்தததுள் மூச்சு முட்ட பொறுத்து பார்த்தாள். அவன் விடாமல் அவன் இதழில் குறியாக இருக்க சிறிது நேரத்துக்குப் பிறகு அவளால் மூச்சு விட முடியாமல் போக அவனை தள்ளி விட முயற்சி செய்ய அப்பொழுது தான் இன்பா அவளை விட்டான். 

அவள் மூச்சு வாங்கி கொண்டே அவனை கண்கள் சொருக பார்க்க இன்பா தன் கண்களை இறுக்கி மூடி கொண்டு ஒரு பெரு மூச்சை விட்டு தலையை கோதி கொண்டு இருந்தான். 

விவேகா இதற்கு மேல் இங்கு இருப்பது நல்லது இல்ல இவன் போக்கு சரி இல்லை என்பதை உணர்ந்து அவள் எழ வெளியே செல்ல போக.. இன்பா ஹே எங்க போற.. நான் போறேன் என்னை தேடுவாங்க.. ப்ச்ச.. இரு டி என்று அவளை இழுக்க..

உன் போக்கு சரி இல்ல நான் போறேன் டா என்னை விடு.. பேபி..

 இன்னும் கொஞ்சம் விட்டால் நான் அவ்ளோ தான் டா மூச்சு நிண்ணு இருக்கும்.. அவன் 

விவேகா உன்னை அதுவும் இப்படி பக்கத்தில் வச்சுட்டு என்னால சும்மா இருக்க முடியல அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா.. 

ம்ம் எப்போ பார்த்தாலும் உனக்கு என் மேல் ஒட்டி கொள்வது மட்டும் தான் வேலையா டா. ஹே ஓபனா சொல்றேன் கேட்டுக்கோ ஒரு பையன் ஒரு பொன்னு கிட்ட இப்படி அப்பப்ப ஒட்டிக்கிட்டு இருந்தால் தான் அவன் அவள் மேல் தீவிரமா இருக்கான் அப்டின்னு மீனிங் சொல்ல போனால் அது தான் உண்மை…

அப்போ இது மட்டும் தான் முக்கியமா… 

இன்பா அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டே அடி மக்கு பேபி நான் சொல்றத முழுசா கேளு டி.. 

ம்ம் சொல்லு டா பப்பி.. 

அவன் என்ன என்பதை போல் இரு புருவமும் உயர்த்தி விட்டு பிறகு கூற ஆரம்பித்தான். நான் உன் கிட்ட சரியா பேசாமல் போனாலும் இப்படி எல்லாம் பண்ணாமல் இருந்தால் நீ என்ன நினைப்ப.. 

விவேகா, நீ என்னை சீட் பண்றன்னு நினைப்பேன். இன்பா அவளின் காதை வலிக்கும் படி கடிக்க.. ஹே வலிக்குது டா இடியட்.. 

இன்பா அதானே பார்த்தேன் எனக்கு வொர்க் லோட் இருக்கு அப்டின்னு நினைக்க மாட்ட உன் புத்தி சந்தேகத்துக்கு தான் முதலில் போகுது ம்ம்ம்… 

சரி சரி நீ சொல்லு..

போ டி…

ஹே சொல்லு இல்ல இப்போவே நான் என் இடத்துக்கு போய் விடுவேன். 

இன்பா சரீ.. சொல்றேன். ஒரு பையன் ஒருத்தி கிட்ட மட்டும் தான் உண்மையா இருப்பான் இருக்க முடியும் அப்படி இல்லன்னா அவனுக்கு அவள் மேல இன்டர்ஸ்ட் இல்லன்னு அர்த்தம் அண்ட் இந்த கட்லி கிஸ் இல்லன்னா அந்த பையனுக்கு வேற ஒரு பொண்ணு மேல் நாட்டம் ரெலேஷன்ஷிப் இது எல்லாம் இருக்க சான்ஸ் 100 பெர்சென்ட் இருக்கு.. 

இதை கேட்டதும் அவள் அப்போ அப்போ உனக்கு வேற பொன்னு கூட அஃபெர் இருக்கா 

என்ன டி சொல்லிட்ட விவேகா வர வர ரொம்ப முட்டாள் ஆகி விட்டாள்.அவள் முகத்தை திருப்பி கொண்டு இருக்க.. 

எனக்கு எப்பவும் உன் நினைப்பா இருக்கு டி..  என்று அவளின் இதழில் மென்மையாக ஒரு முத்தம் கொடுக்க அவளுக்கு அது திகட்டவே இல்லை வேண்டும் என்றே கோபமாக அவனை பார்த்து போதும் போதும்… 

அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டு பேபி… பேபி… 

ம்ம்.. 

உன்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்கவா உன்னை சீக்கிரமா என் வீட்டுக்கு தூக்கிட்டு போயிடனும்.. 

 இதை கேட்டதும் அவள் உடலில் எல்லாம் ஆயிரம் மலர்கள் பூக்க.. 

எதுக்கு சீக்கிரமா அதான் நான் உங்க வீட்டு பக்கத்தில் தானே இருக்கேன் ஒன்னும் தேவையில்லை.. 

அவன் அவள் கழுத்தில்  ஒரு குட்டியாக கடித்து விட அவள் நெளிந்தாள். நீ என் பக்கத்தில் இருக்கணும், அண்ட் நான் உன்னை பார்க்கனும் அதுக்கு தான்.. 

என்னை பக்கத்தில் வைத்து அழகு பார்க்க போறியா என்ன அந்த அளவுக்கு இங்கே ஒர்த் இல்ல.. 

யாரு சொன்னது.. உன்னை பார்க்க போறேன்னு.. 

பின்ன.. 

உன்னை.. 

என்னை..  என்று அவள் சொல்வதற்கும் அவன் அவளை தூக்கவும் சரியாக இருந்தது. 

ஹே இன்பா என் என்ன பண்ற.. 

சத்தம் போடாத டி என்று வாய் மேல் விரல் வைத்தவன் முதலில் அவன் படுத்து கொண்டு அவளை அவன் மேல் போட்டு கொண்டான். 

ஹே என்ன டா பண்ற.. 

பேசாமல் தூங்கு.. டேய் விடு நான் போகனும்.. 

விவேகா சமத்து பொண்ணா இரு நானே கஷ்ட பட்டு கன்ட்ரோல்ல இருக்கேன் நீ எதுவும் ஓவரா சீன் போட்ட உன்னை அப்புறம் என்று அவன் சொல்ல வர.. 

அவள் அவன் வாயின் மேல் கை வைத்து சரி போதும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவள் சாயிந்ததும் இருவரும் பார்த்து கொள்ளாமல் சிரித்து கொண்டனர். இந்த இரவு இப்படியே நீண்டு கொண்டு போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

அவளுடன் அவன் செலவிடும் முதல் இரவு இருவருக்கும் தூக்கம் சிறிது நேரம் வரவே இல்லை. அவள் மனதில் விவேகா இப்படி மாறி விட்டாய் டி என்று மனம் சொல்ல ஒரு நிமிடம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் இது ராகவ் ஹான் என் ராகவ்  அவன் கை அணைப்பில் இருப்பது ஒரு மிக பெரிய பாதுகாப்பு போல் என்று நினைத்தவள் அவனது சட்டை பொத்தானை நோண்டி கொண்டு இருக்க.. 

அதே போல் தான் இன்பாவின் மனதில் அவனுடையவள் இதை விட வேறு என்ன வேண்டும்  சீக்கிரத்தில் இல்ல ரொம்ப சீக்கிரமா விவேகாவை அபீஸியலா சொந்தம் ஆக்கி கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவனின் கன்னகுழி இரண்டும் புன்னகைத்து கொண்டே இருந்தது. எதோ நினைவு வந்தவன். அவள் தூங்கி விட்டாளா என்று பார்க்க அவளிடம் அசைவு தெரிந்தது. 

பேபி… 

ம்ம்.. 

தூக்கம் வரலயா.. 

ஆமா.. 

என்னாச்சு என் பேபிக்கு என்று அவள் தலையில் முத்தமிட அவனின் இந்த கனிவான முத்தம் அவளுக்கு சிலிர்ப்பாக இருந்தது. 

ஹே போதும் போதும் எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் தூங்க போறேன் என்று சொல்லி அவள் கண்களை மூடி தூங்க… 

அவனின் உடல் சூட்டில் சிறிது நேரத்தில் தூங்கி போனாள். இன்பாவும் அவளை அணைத்தபடியே தூங்கி போனான். 

ஒரு பார்வையில் இரு தூக்கமாக இரண்டு சண்டை கோழிகளும் களைப்பில் தூங்கி கொண்டு இருந்தது. 

இதை களைக்கவே வந்து விட்டான் சிபி.. அதிகாலை மணி 3.00 இருக்கும். அவன் ரெஸ்ட் ரூம் செல்ல எழுந்து போய் விட்டு வரும் போது அனைவரையும் ஒரு முறை செக் செய்து கொண்டு வர விவேகா அவள் இடத்தில் இல்லை. 

அவள் ரெஸ்ட் ரூம் சென்று இருக்க கூடும் என்று நினைத்தவன். அவள் வரும் வரை காத்து கொண்டு இருக்கலாம் என்று நினைத்து அப்படியே அவன் இடத்தில் போய் அமர்ந்தான். 

சிறிது நேரம் கழித்து மணி பார்க்க அது 3.30 என காட்டியது. நடுவில் ட்ரெயின் கிராசிங் என்பதால் அவர்கள் செல்லும் ரயில் கொஞ்ச நேரம் நிறுத்து வைக்க பட்டு இருந்தது. 

சிபி அவன் போனை நோண்டி கொண்டே அவள் இடத்தை வந்து பார்க்க இன்னும் விவேகா வர வில்லை. அந்த ஒரு நிமிடத்தில் சிபிக்கு குப்பென்று வியர்த்தது. 

எங்கே இருக்கிறாள் என்று இரண்டு பக்கமும் ரெஸ்ட் ரூம் இடத்தில் போய் பார்க்க அங்கே எப்படி தட்டி கேட்பது என்று ஒரு வித சிரமமாக இருந்தது. 

இந்த பொன்னு எங்கே போயிருப்பாள் இப்போ இப்போ என்ன பண்றது என்று படபடத்து கொண்டே அவன் யோசித்து கொண்டு இருக்க 

இன்பாவின் நினைவு வந்தது. சற்றும் தாமதிக்காமல் அவனின் எண்ணுக்கு கால் செய்தான். முதல் அழைப்பு தவற விட மீண்டும் அழைத்தான். 

இங்கே இன்பாவும் விவேகாவும் இதமாக தூங்கி கொண்டு இருக்க அங்கே சிபி பதட்டமாக விவேகாவை தேடி கொண்டு இருந்தான். 

மீண்டும் அவன் அழைக்க இந்த முறை இன்பா போன் எடுத்தான். ஹலோ.. 

ஹலோ இன்பா.. 

ம்ம் வாட் ஹப்பன்.. 

டேய் விவேகா அந்த கேர்ல காணோம் டா.. 

என்ன டா உளருற அவள் இங்கே தானே இருக்கா என்று அவன் விவேகாவின் தலையை வருடி கொண்டு பேசி கொண்டு இருக்க..

தூக்கத்தில் இருந்து எழு ராகவ், நான் சீரியசா சொல்லிட்டு இருக்கேன் டா,அவளை  எல்லா இடத்திலும் தேடி விட்டேன் டா காணோம் இப்போ என்ன பண்றது. 

இன்பா இப்பொழுது தன்னிலைக்கு வந்தவன். சிபி டென்ஷன் ஆகாத அவள் அங்கே தான் இருப்பா நீ போய் படு நான் இப்போ தேடி பார்க்கிறேன். 

இல்ல இன்பா நான் உன்னை பார்க்க வந்துட்டு இருக்கேன் நாம் நேரில் பேசலாம்  என்று சொல்லி அவன் உடனே வைத்து விட

இதை கேட்டதும் இன்பாவுக்கு  அதிர்ச்சி.. 

அவன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நேரம் ….?

தொடரும்… 

எல்லோர் வாழ்விலும் ஒரு சரிவு இருக்கும் அது போல் ஒரு சின்ன என்று சொல்ல முடியாது மிகப்பெரிய சரிவு.. எதிர்பாராத உடல் உபாதை அதை விட எதிர்பாராத உறவுகளால் மன நோய்… 

 “கடினமான காலங்களில் புரட்சி கரமான முடிவுகள் உருவாகும்” 

இத்தனை நான் பதிவு போடாததற்கு மன்னித்து விடுங்கள்.. முடிந்த வரை எனக்காக வேண்டி கொள்ளுங்கள்.. இனி பதிவுகள் வரும்.. 

Pray for me🙏

 Episode 180,

சிபி இன்பாவிடம் பேசி விட்டு அவன் இடத்துக்கு வருகிறேன் என்று சொல்லி போனை வைக்க.. 

அவன் மீண்டும் சிபிக்கு போன் செய்தான். ஹே சிபி be calm அவள் இங்கே தான் இருப்பாள் நீ இன்னொரு முறை தேடு நானே வருகிறேன். 

சிபி, இல்ல இன்பா நான் நல்லா தேடி விட்டேன் அவள் இல்ல டா.. நீ அங்கேயே இரு நான் உடனே வரேன் என்று சொல்லி இன்பா போனை வைத்து விட்டு விவேகாவை பார்க்க அவள் மார்பில் நன்றாக இதமாக சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருக்க இன்பாவுக்கு அவளை எழுப்ப மிகவும் சங்கடமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை என்று அவளை எழுப்ப ஆரம்பித்தான். 

அவள் தலையில் மென்மையாக முத்த மிட்டு பேபி.. விவேகா வேக் அப்.. அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. 

இன்பா அவளை உசுப்பினான். விவேகா.. பேபி எழு டி.. அவள் கொஞ்சம் அசைந்து மீண்டும் தூக்கத்தை தொடர.. அவன் என்ன செய்வது என்று யோசித்து விட்டு  அவளை இறுக்கி அணைத்து கொண்டு அவளை லாவகமாக கீழே கொண்டு வந்தவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட ஆரம்பிக்க விவேகா சட்டென்று கண்களை அகல விரித்தாள். 

அவனுக்கு முத்தத்தை ஆரம்பித்து பாதியில் விட மனம் இல்லை அதனால் அதை தொடர்ந்து கொண்டு இருக்க விவேகா அவனை முழு பலம் கொண்டு தள்ளி விட்டு ஓ காட்! என்ன நடந்தது!நான் எப்படி உன் பக்கத்தில் இருக்கிறேன்?

இன்பா அவள் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளை எழ சொல்ல உடனே அவள் அதிர்ச்சி ஆகி கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து சடென்று எழுந்து நின்றாள். 

ஹே நான் என் பிளேஸ்க்கு போறேன் என்று அவள்  துப்பட்டாவை எடுத்து போட்டு கொண்டு அவள் கூந்தலை கொண்டை போட்டு விட்டு இன்பாவை கண்டு கொள்ளாமல் செல்ல..

போ எனக்கு என்ன அங்கே சிபி உன்னை பார்க்க காத்து கொண்டு இருக்கிறான். என்று சொல்லி கொண்டே அவன் சட்டையை மடித்து விட என்ன சொல்ற இன்பா சிபி சார் என்னை பார்க்க  வெயிட் பன்றாறா.. 

ம்ம் ஆமா போடி.. 

விவேகாவுக்கு தூக்க கலக்கம் எல்லாம் ஒரு நிமிடத்தில் தெளிந்து போனது. இப்போ இப்போ என்ன பண்றது என்று கைகளில் சொடுக்கு எடுத்து கொண்டே அவர் அவரு எதுக்கு என்னை பார்க்க வெயிட் பன்றாரு…

இன்பா தெரியல.. 

ஹே பிளீஸ் பிளீஸ் சொல்லு டா.. 

அதான் என்னை கண்டுக்காமல் நீ போற போடி.. 

விவேகா , உன்னை தேடி வந்தேன் பாரு என்னை சொல்லணும் போடா இடியட் என்று திட்டி கொண்டே அவள் செல்ல 

அவள் சொன்னது சரி தான் அவள் தானே தேடி வந்தாள். அவள் மனம் கொஞ்சம் கசங்கினால் கூட அவனால் தாங்க முடியாது இன்பா அவளை பின்னால் இருந்து அணைத்து சரி சரி விடு பேபி நீ என்னை கண்டுக்காமல் போன அதான் எனக்கு கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு இனி இப்படி நடக்காது என்று அவள் கழுத்தில் முத்தமிட்டு சமாதானம் செய்து கூட்டி சென்றான். 

அவள் சரி இப்போ எப்படி சாரை மீட் பண்றது எனக்கு பயமா இருக்கு டா.. இன்பா அவன் மீசையை தடவி கொண்டே பேபி நீ என் கூட இருக்கும் போது பயம் எதுக்கு.. அவள் மனதஉள் ம்ம் என்னோட பிரச்சனையே நீ தானே டா என்று நினைத்து கொண்டு ஒரு பெரு மூச்சை விட்டவள். 

டேய் என்ன செய்ய போற சொல்லிட்டு செய் டா நெஞ்சு பதருது.. இன்பா, நீ என்னை எப்படி இம்ப்ரெஸ் பன்றதுண்ணு மட்டும் யோசி அந்த சிபிய நான் பார்த்து கொள்கிறேன் என்று நெட்டி முறித்து கொண்டே கூட்டி சென்றான். 

சிபி அவன் இடத்தில் இருக்க அவன் இடம் வருவதற்கு முன்பே இன்பா அவளிடம் நீ எதுவும் பேசாதே நான் பார்த்து கொள்கிறேன். என்று சொல்லி அங்கே செல்ல.. 

சிபி டென்ஷனாக முகத்தை வைத்து கொண்டு இருந்தான். இன்பா, சிபி.. அவன் நிமிர்ந்து இன்பா அவள் இல்ல டா.. என்று சொல்ல.. 

ஷி ஈஸ் தேர் என்று சொல்ல விவேகா இன்பாவின் பின்னால் நின்று கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்த அடுத்த நொடி சிபியின் முகம் கடுமையாக மாறி விவேகா எங்கே போயிருந்த.. அவள் பொய் சொன்னது இல்லை இப்பொழுது கஷ்ட பட்டு  திணறி கொண்டே சார் ந.. நான்..என்று திக்க 

சிபி, உனக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா ஓவரா பண்ணுவ போல உன் விளையாட்டு தனம் எல்லாம் என் கிட்ட வைத்து கொள்ளாதே என்று அவன் சொல்ல 

ஸ்டாப் இட் சிபி.. என்று சொன்னது இன்பா தான்… விவேகா கண்கள் கலங்க ஹே அவள் பேன்ட்ரி போய் டீ வாங்கிட்டு வந்துட்டு இருந்தா டா இதுக்கு எதுக்கு திட்டுற.. இதை சொன்னதும் சிபி அமைதியாகி விட.. 

இன்பா,  அவள் கேன்டீன் போயிருக்கா நீ ரெஸ்ட் ரூம்ல போய் தேடி இருக்க அண்ட் ஒன் திங்க் மாம் சொல்லி இருக்காங்க இவள் ரொம்ப நல்ல  பொன்னு சோ நீ அவளை பேச விடாமல் குதிக்காத என்று சொல்ல 

விவேகா தலையை குனிந்து கொண்டு நிற்க சிபி அவன் தலையை கோதி கொண்டே எனக்கு எப்படி தெரியும் அவள் எப்பொதும் இப்படி திக்க மாட்டா எனக்கு அவள் தவறு செய்தது போல் தொனிச்சு..

உனக்கு தோணும் டா நான் போலீஸ்காரன்  முகத்தை பார்த்தாலே தெரியுது இவள் அவ்ளோ வொர்த் இல்ல டா நீ தேவை இல்லாமல் டென்ஷன் ஆகுற..

இதை கேட்டதும் விவேகா எல்லாம் உன்னால் தான் டா என்று  இன்பாவை முறைக்க அவன் அவளை பார்த்து கண் அடித்தான். 

சிபி என்ன சொல்வது என்று யோசித்து கொண்டு இருக்க இன்பா அவன் அடுத்து எதுவும் யோசிக்கும் முன் அவளை அனுப்பி விட வேண்டும் என்று நினைத்தவன். சரி பேபி உன்  பிளேஸ்க்கு போ என்று எப்பொழுதும் பழக்க தோஷத்தில்  சொல்ல அவள் அவனை முறைத்து கொண்டே சென்றாள். 

சிபி , இன்பா வாட் டிட் யூ சே! என்ன டா.. இப்போ நீ என்ன சொன்ன ? நான் என்ன சொன்னேன் அவளை போக சொன்னேன். இல்ல இன்பா நீ எதோ அவளை பேபி ன்னு… நான் அவளை.. அவள் அப்படியே சின்ன பப்பா போடா போய் தூங்கு என்று சொல்லி விட்டு அவன் கிளம்ப விவேகா நேராக அவள்  இடத்துக்கு சென்று அவனை திட்டி கொண்டே  போர்வை போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க தொடங்கினாள். 

சிபி, ராகவ்.. ம்ம் என்று அவன் போன் நோண்டி கொண்டே கேட்க.. நான் அவளை ரொம்ப திட்டி விட்டேனா.. என்று மனம் வருந்தி கேட்க.. விடு சிபி இனி அவள் உன் கிட்ட பேசவே மாட்டா.. ஹே எனக்கு கில்ட்டியா இருக்கு டா பாவம் அந்த பொண்ணு..

என்ன உன் பேச்சு சரி இல்லையே..  என்று விவேகா பற்றி சிபி பேசுவதை மனம் தாளாமல் கேட்க 

சிபி, ஹே நீ நினைக்கிற மாதிரி இல்ல அவள் என்னோட ஸ்டூடண்ட் அதுவும் அவள் ரொம்ப ப்ரெவ் அண்ட்  அடாரபில்.. இன்பா மனதுள் ம்ம் அப்படி கூட நினைக்க வேண்டாம் அவள் என்னுடையவள் என்ன பண்ண எல்லார் கிட்டயும் எதோ பேசி மயக்கி வச்சு இருக்கா வசியகாரி என்று இரவு நடந்த சில முத்தங்களை நினைத்து கொண்டு இருக்க.. 

என்ன சார் ரெண்டு பேரும் எப்போவும் சண்டை போட்டு கிட்டு இருப்பீங்க இன்னிக்கு அவளுக்கு ரொம்ப சப்பொர்ட் பண்ற.. இன்பா தன் தலையை கோதி கொண்டே அவள் சண்டை போடுறது கூட நல்லா இருக்கு அழுதா சகிக்கல அதான்.. 

இதை கேட்டு அவன் சிரித்து கொண்டே இன்பா இதை மட்டும் அவள் கேட்டா நீ அவ்ளோ தான்.. 

அங்கு இருந்து எழுந்து கொண்டே போடா அவளை நான் ஈசியா அடக்கி விடுவேன் என்று சொல்லி கொண்டு கிளம்பினான். 

மணி 8.00 ஆனது ஆதி அவள் அருகில் வந்து அமர்ந்து விவி எழுந்து பிரஸ் பண்ணு மணி 8.05 ஆகி விட்டது. அவள் சிணுங்கி கொண்டே போடா எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. 

நைட்டு எங்கே போன.. இதை கேட்டதும் அவள் அவனை பார்த்து விட்டு முகத்தை மறைத்து போர்த்தி கொள்ள.. சரி ஓகே அவ்ளோ தானா.. விவேகா, ஹே நடிக்காத டா நான் தான் போகும் போது நீ என்னை பார்த்திட்டு இருந்தியே அப்புறம் என்ன.. 

அதை நீயே சொன்னா தான் நல்லா இருக்கும் என்று அவள் முன் டீ நீட்ட விவேகா அவள் முடியை ஒதுக்கி கொண்டே இல்ல அவர் அதி செய்த சாப்பாடு வேணும் அப்டின்னு சொன்னாரு அதை கொடுக்க போயி.. என்று அவள் நிறுத்த..

ம்ம் கொடுக்க போயி அப்புறம் என்ன ஆச்சு என்று இரு புருவம் உயர்த்த ம்ம் அதான் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் பேசி விட்டு என்று அவள் சொல்ல 

வெண்பா, கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம் கொஞ்சி பேச கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் என்று அவளை கிண்டல் செய்து பாட

விவேகா ஆதி கிட்ட இருந்து டீ வாங்கி கொண்டு வெண்பா விட்ட இடத்தில் இருந்து அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போதாதா.. என்று ஆதியின் மேல் சாய்ந்து பாட வெண்பா முகம் உடனே மாறியது புருவத்தை நெருக்கி கொண்டு பார்க்க.. 

விவேகா சிரித்து கொண்டே ஆதி இந்த லவ் அது எப்படி இருக்கு தெரியுமா.. வெண்பா பாடுறது கன்றாவியா இருந்தால் கூட காதில் தேன் வந்து பாயுது டா.. இந்த கொடுப்பணை எல்லாம் எனக்கு மட்டும் தான் அவள் அண்ணா என் ஹான் அவனை என் காதில் கம்மல் செய்து மாட்டி இருக்கேன். 

வெண்பா முறைத்து கொண்டே அவர்கள் இருவரின் எதிரே அமர ஆதி, ஹே ஓவரா கிண்டல் பண்ணாத டி பாவம் அவள்.. விவேகா, நீ கம்முனு இரு டா அப்போ தான் சீக்கிரம் வந்து உன் கிட்ட லவ் சொல்லுவா நல்லா என்டர்டைன்மெண்டா இருக்கும். என்று விவேகா பேசி சிரித்து கொண்டு சென்றனர். 

அங்கே இவளின் மன நிலையை மாற்றி அவளை மனதை குழப்ப இவர்களுக்கு முன்னே அங்கு spr காலேஜ் ல இருந்து ராஜ் அவர்களின் காலேஜ் மாணவ மாணவிகள் கூட வந்து இருந்தான். 

விவேகா என்ன செய்ய போகிறாள். 

தொடரும்…

 Episode 181,

அந்த தொடர் வண்டி ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லி போய் சேர விவேகா, ஆதி, வெண்பா , சதீஷ், அருண் என அனைவருக்கும் அந்த பயணம் ஏனோ பிடித்து தான் போனது களைப்பு தெரியாமல் வந்து சேர்ந்தனர். 

அந்த மொத்த குழுவும் இறங்கியதும் போட்டி நடக்கும் அந்த ஹோட்டல் செல்ல பஸ்கள் அந்த குழு ஏற்பாடு செய்து இருந்தது. விவேகா அது வரையிலும் இன்பாவிடம் பேச வில்லை. ஆனால் சிபி கிட்ட பேசி விட்டாள். 

அதுவும் அவன் முன் தான் பேசினாள். சிபி இறங்கியதும் அவள் அருகில் நடந்து செல்ல இன்பா ஹே என்ன டா ரொம்ப வேகமா நடக்கிற.. இன்பா கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்லி கொண்டே அவன் விவேகா அருகில் செல்ல தூரத்தில் வந்து கொண்டு இருந்த அருண் என்ன என்பதை போல் சிபியை பார்த்தான். 

சிபி அவள் அருகில் சென்று ஹலோ மேடம்.. விவேகா குரல் வரும் பக்கம் திரும்பி பார்த்து அது சிபி என தெரிய அவள் அமைதியானாள். ம்ம் சொல்லுங்க சார் என்று மிகவும் பவுயமாக பேசினாள். ஹே விவேகா பர்கிவ் மீ மா.. சார் நீங்க என்ன பண்ணீங்க நான் தான் உங்க கிட்ட சாரி கேட்கணும் என்று அவள் யாரோ ஒருவரிடம் பேசுவது போல் பேச.. விவேகா என்ன மா அப்போ நீ என் கிட்ட இப்படி தான் பேசுவியா.. சார் அப்படி எல்லாம் இல்ல.. அருண், டியர் என்ன ஆச்சு என்று அவளுக்கு மிக அருகில் உரசி கொண்டே அவன் வர ஆதி அவளை சட்டென்று  இழுத்து கொண்டான். 

சிபி, அப்போ எப்போவும் போல மேடம் என் கிட்ட பேசுவீங்கக தானே… இன்பா, மிஸ்டர் சிபி நீங்க போய் ஒரு ஸ்டூடண்ட் கிட்ட கெஞ்சி கொண்டு இருக்கீங்க விட்டால் நீல் டவுன் பண்ணுவீங்க போல.. மிஸ்டர் கொஞ்சம் அமைதியா இருங்க அவங்க என் ஸ்டூடண்ட் கொஞ்சம் ரஸ்பெக்ட் பண்ணுங்க.. இதை கேட்டதும் விவேகா இதழ் விரிய குட்டி புன்னகை உதிர்த்தாள். 

இதை பார்த்ததும் இன்பா, சிபி என இருவருக்குமே சந்தோஷம்.. ஆனாலும் சிபி மேல்  இன்பாவுக்கு பொறாமையாக தான் இருந்தது. இன்பா, சிபி வெயிட் அண்ட் வாச் நான் உன்னை ஓல்ட் மேன் கிட்ட சொல்றேன். சிபி, என் டார்ல்ஸ் இருக்காங்க போடா என்று அவன் விவேகா கிட்ட இரு வார்த்தை பேசி சிரித்து விட்டு நகர அதில் இன்னும் கொஞ்சம் காண்டாக சுற்றி கொண்டு இருந்தான். 

அவர்களுக்கு என்று ஒதுக்கி இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றனர். எல்லாரும் அவரவர் தங்கும் இடத்துக்கு செல்ல இன்பா அங்கே யாரும் அவள் அருகில் இல்ல என்பதை உறுதி படுத்தி கொண்டு அவள் அறைக்கு செல்லும் முன் ஹே 420.. ஹேய் கேடி என்று அழைத்து கொண்டே அவள் பின்னால் செல்ல.. 

விவேகா அவனை பார்த்து அஷ்டகோணலாக முகத்தை வைத்து கொண்டே ரொம்ப கருகும் வாசனை வருது மிஸ்டர் பப்பி.. சாரி ஆன்டிஹீரோ, ம்ம் இல்ல என் பின்னாடி சுத்தும் பப்பி நாயே போடா என்று சிரித்து கொண்டே அவள் வேகமாக ஓட

இன்பா, அவளை வேக நடை போட்டு பிடிக்க முயற்சி செய்து அது முடியாமல் அவன், விவேகா அடுத்த முறை என் கையில் நீ மாட்டு டி உன்னை உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு டி என்று அவன் மீசையை முறுக்கி கொண்டே கூற.. ஹேய் யூ இடியட் போடா என்று ஓடி விட்டாள். அவள் இடியட் என்று சொல்லி செல்ல அந்த வார்த்தையில் அவன் எத்தனை முறை வேண்டுமானாலும் அவளுக்காக முட்டாள் தனமான எதையும் செய்யலாம் என்று தோன்ற கண்ணகுழி தெரிய சிரித்து கொண்டே சென்று விட்டான். 

மாலை ஆனது அந்த போட்டிக்காக வேறு வேறு மாநிலங்கள் மற்றும் இடங்களில் இருந்து கலந்து கொள்ள வந்த அனைத்து காலேஜ் மாணவர்களையும் அந்த தேர்வு குழு அழைத்து சில வார்த்தைகள் பேசி மாணவ மாணவிகலுக்கு ஊக்கம் கொடுத்து விட்டு இன்று அவர்களுக்காக  உணவுகள் சாப்பிட தயார் செய்து இருந்தது. 

விவேகா, ஆதி, வெண்பா, சதீஷ், இனியாள், சோனா, கவ்யா, அருண், பாரதி, அகல்யா, தேவி, அசோக், ஆசிக், ஜான் என இன்னும் சில மாணவர்கள் சிபி, தீபா, அர்ஜுன் மற்றும் என அவர்களின் கட்டு பாட்டுக்கு கீழ் நடந்து கொண்டு இருந்தனர். 

ஆதி ரெஸ்ட் ரூம் சென்று இருக்க விவேகா அவனுக்கும் சேர்த்து உணவு எடுத்து கொண்டு  இருக்கும் நேரம் அவளின் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க சட்டென்று எடுத்த உணவு பண்டத்தை அப்படியே போட்டு விட்டு திரும்ப அங்கே ராஜ் நின்று கொண்டு இருந்தான். 

ராஜ், வாட் அ பேட் பிளாசன்ட் சர்பிராய்ஸ்.. விவேகா ஒரு வித பதட்டத்துள் அந்த இரண்டு தட்டுகளையும் அங்கேயே வைத்து விட்டு  அத்.. அத்தான் என்று திக்கி திணற 

ராஜ் சுற்றிலும் ஒரு பார்வை விட்டு அவளை நோக்கி அழுத்தமாக ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தான். இது என் என்னோட விவே குட்டியா என் வாசு மாமச்சியோட விவே குட்டியா அப்டின்னு எனக்கு குழப்பமா இருக்கு என் கண்ணை என்னால் நம்ப முடிய வில்லை.. 

விவேகா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க அவன், இந்த வருண்  மச்சானுக்கு  மூளை இருக்கா இல்லையா  .  இவளோ தூரம் தனியா அனுப்பி வைத்து இருக்கான் . அவனுக்கு சுத்தமா அறிவு இல்ல சரி  அது விடு விவேகா.. அவள் படபடக்கும் விழிகளில் பயந்து கொண்டே அவனை பார்க்க

ராஜ் முகம் இன்னும் கடுமையாக மாறி  உன்கிட்ட நான் தனியா பேசணும் சோ  என் ரூம் நம்பர் J002  இன்னிக்கு நைட்டு 8.00 மணிக்கு  வந்திடு என்று சொல்லி விட்டு அவளை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான். 

அவன் சென்றதும் விவேகா வேகமாக அங்கு இருந்து எதையும் வெளி காட்டாமல் வெண்பா கிட்ட சொல்லி விட்டு அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று விட்டாள். அங்கே சென்றதும் கதவு பூட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள். இப்போ இப்போ என்ன செய்ய  ராஜ் அத்தான் இங்கே வருவாருண்ணு ந நான் நினைக்கவே இல்லையே என்ன பண்றது என்று அவள் யோசித்து கொண்டு அழுது கொண்டு இருக்க.. 

ஆதி, வெண்பா இருவரும் இவளை தேடி வந்தனர். கதவு தட்டும் சத்தம் கேட்க வெண்பா தான் தட்டினாள். ஆதி, உன் கிட்ட கீ இருந்தா ஓபன் பண்ணி பாரு.. அவள் சரி என்று கீ எடுத்து போடும் முன் கதவு திறந்தது. இருவரும் அவளை பார்க்க முகம் எதோ சரி இல்லை என்று தெரிந்து கொண்டனர். 

என்ன ஆச்சு விவேகா.. அவள் தலை குனிந்து கொண்டே ஒன்னும் இல்ல.. வெண்பா, என்ன ஆச்சு உனக்கு எங்கே டி போன நாங்க ரெண்டு பேரும் இந்த இடம் முழுக்க தேடினோம் முன்னாடியே சொல்ல வேண்டியது தானே என்று அவள் அறைக்கு உள்ளே செல்ல ஆதி அது பெண்கள் தங்கி இருக்கும் அறை என்பதால் அங்கேயே நின்று கொண்டான். அவள் கைகளை பிடித்து தலையில் கை வைத்து என்ன ஆச்சு விவேகா உடம்புக்கு முடியலையா.. இல் இல்ல ஆதி நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு சோர்வாக இருக்கு வேற ஒன்னும் இல்ல.. 

அவள் முகம் ஒன்றும் சரி இல்லை என்று கண்டு கொண்ட ஆதி சரி நான் கிளம்புகிறேன் நீ பத்திரமா இரு என்று கிளம்ப அவன் சென்றதும் கதவை சாத்திட்டு வந்து படுக்கையில் விழுந்தாள். 

ஆதி வெண்பா எண்ணுக்கு கால் செய்தான். ஹலோ.. ம்ம் சொல்லு.. கொஞ்சம் அவள் கிட்ட இருந்து தள்ளி வா.. வந்து விட்டேன். ஆதி, அவளை கண் காணித்து கொண்டே இரு வெண்பா அவள் அப்படி இருக்க காரணம் நான் கண்டு பிடித்து விட்டேன். நீ தான் அவளை விட்டு பிரியாமல் இரு அண்ட் எதுவா இருந்தா எப்போ வேணாலும் கால் பண்ணு வெண்பா  நான் வைக்கிறேன் என்று அவன் வைக்க.. 

வெண்பா அவன் சொன்னத தீவிரமாக தான் எடுத்தாள். ஆனால் மனதில் இப்போ மட்டும் எவ்ளோ அக்கறையா பேசுறான். ஆனால் என் கிட்ட மட்டும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வைத்து இருப்பான் பிசாசு என்று திட்டினாள். 

மணி சரியாக 8.00 ஆக 10 நிமிடம் இருக்கும் போதே விவேகா வுக்கு குப் என்று வியர்க தொடங்கியது. அவள் கடிகாரத்தையே பார்த்து கொண்டு இருக்க வெண்பா எதுவும் கண்டு கொள்ளாமல் படுத்து கொண்டு போன் நோண்டி கொண்டு இருக்க எதிர் பாராமல் சோனா அங்கே வந்தாள். 

சோனா, விவேகா உன்னை கவ்யா வர சொன்னா

விவேகா, அவளிடம் வெண்பா நான் கவ்யாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்ப 

ஆதிக்கு போன் செய்து விசயத்தை கூறினாள். அவன் நீயும் போ.. நான் அங்கே போகல டா எனக்கு யாரையும் தெரியாது. ஆதி, நீ எதுக்கு தான் லாயக்கு நல்லா சாப்பிட மட்டும் தான் நீ லாயக்கு என்று அவளை திட்டி விட்டு போன் வைக்க நீ என் கூட பேசாத பிசாசு என்று சொல்ல வரும் முன் போன் கட் செய்தான். 

விவேகா பாதி தூரம் வந்தவள். சோனா நான் இப்போ முக்கியமா என் ரூமுக்கு போய் ஆகனும்.. சோனா, விவேகா கவ்யாவை பற்றி உனக்கு தெரியாதா.. இல்ல அக்கா நான் என்று மூன்று விரல் காட்ட சரி சீக்கிரம் வந்திடு என்று சொல்லி விட்டு அவள் செல்ல விவேகா தன்னை சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அந்த இரண்டு தளத்தில் இருந்து spr காலேஜ் குழுக்கள் தங்கி இருக்கும் j தளத்துக்கு சென்றாள். 

அவள் ராஜ் அறைக்கு வெளியே நிற்க ராஜ் அவளை பொது இடம் கருதி உள்ளே அழைக்க வில்லை. அவன் அவளிடம் பத்து நிமிடம் பேசி இருப்பான் அவள் முகம் அவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் மாறி கண்களில் கண்ணீர் வர அவள் என்னால் முடியாது அத்தான் என்று அழுது கொண்டே கெஞ்ச அவன் அதை நீயே முடிவு எடு விவே குட்டி என்று அவள் தலையை வருட உடனே அவள் ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.

பாரு டா என் வருங்கால பொண்டாட்டிக்கு எவ்ளோ கூச்சம் அவன் முத்தம் கொடுக்கும் போது அப்படியே நின்ன இப்போ  நான் உன் தலையை தானே தடவ வந்தா நகர்ந்து போறா நான் வாசு தேவன் வளர்ப்பு டி அவனை மாதிரி இல்ல 

 பார்க்கிறேன் டி நான் சொல்றத மட்டும் நீ செய்யாமல் இரு அதுக்கு அப்புறம் உனக்கு இருக்கு டி அவன் என்ன உன்னை தூக்குவது நான் தான் உன் கழுத்தில் முடிச்சு போட போறேன். 

நீ எப்படியும் என் பேச்சு தான் கேட்டு ஆக  வேணும் இந்த ட்ரிப் தான் உனக்கு கடைசி அடுத்து நீ spr காலேஜ் ல உன்னை சேர்க்க போறேன் என்னால் இதுக்கும் மேல் உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாது. இந்த போட்டியின் வெற்றியோடு உன்னை கட்டிக்க போறேன் டி.. என் முன்னால் உனக்கு முத்தம் கொடுக்குறான் என்று அருகில் உள்ள கதவில் ஒரு குத்து விட்டவன். இருக்கட்டும் 

அதுக்கு அப்புறம் அந்த ஆதி, அந்த *** இன்பா இவனுங்க ரெண்டு பேருக்கும் இருக்கு.. என்று சொல்லி விட்டு அவன் உள்ளே செல்ல 

விவேகா அவன் சொன்ன  அனைத்தும் மனதில் பூட்டி கொண்டு வெடித்து சிதறும் மனத கட்டு படுத்தி கொண்டே அவள் அறைக்கு எதுவும் நடக்காதது போல் வந்து குளியலறை புகுந்தாள். 

அவள் அங்கு இருந்து யாருக்கும் தெரியாமல் திரும்ப வர அதை இரு கண்கள் பார்த்து கொண்டு இருந்தது. 

விவேகா உள்ளே வந்ததும் வெண்பா ஆதிக்கு போன் செய்தாள். ஹே பிசாசு.. ம்ம் அவள் திரும்பி வந்து விட்டாள். என சொல்ல உடனே போன் கட் ஆனது. 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. அனைவரும் அவரவர் போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் செய்து கொண்டு இருக்க இன்பா, தீபா, சிபி என இன்னும் சில ஆசிரியர்கள் மாணவர்களை கலந்து கொள்ள எல்லா விதமான ஃபார்மாலிட்டி அனைத்தும் முடித்து விட்டு அழைத்து செல்ல வந்தனர். 

ஆதி அவளிடம் எதுவும் பேச வில்லை. சதீஷ், வெண்பா, அருண் என இவர்கள் மூவரும் ஒரு பக்கம் செல்ல ஆதி, கவ்யா, இனியாள் ஒரு பக்கம் மற்றும் விவேகா, தாரணி, தினேஷ் என மூவரும் அவர்கள் போட்டி நடக்கும் இடத்துக்கு செல்ல அங்கே விவேகா வருவாள் என அவளுக்காக ராஜ் இன்று மிகவும் அழகாக தன்னை தயார் படுத்திக் கொண்டு காத்து கொண்டு இருந்தான். 

கவ்யா மினிஸ்டர் பெண் என்பதால் அவளுக்கு மட்டும் தனியாக நான்கு பாதுகாவலர் மற்றும் போலீஸ் நியமித்து இருந்தனர். 

தீபா தான் அவர்கள் மூவரையும் அழைத்து சென்றாள். ராஜ், விவே குட்டி என்ன கண்ணு எல்லாம் வீக்கமா இருக்கு என்ன ஆச்சு.. தீபா அவளை விசித்திரமாக பார்க்க விவேகா, மேம் இவர் என் அத்தை பையன் என்று தலையை குனிந்து கொண்டே அவள் சொல்ல தீபாவுக்கு எதோ தவறாக பட்டது. ராஜ் அங்கு இருந்து போவதற்கு  முன் நான் சொன்னது நினைவு இருக்கு தானே என்று சொல்லி விட்டு அவளை பார்த்து புன்னகைத்து கொண்டே சென்றான். 

சோனா அங்கு நடப்பதை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தாள். எதுவும் தலையிட்டால் தேவை இல்லாத பிரச்னை ஆகுமே. 

தீபா அவர்களை சரியான இடத்துக்கு போய் நிற்க வைத்து விட்டு அவள் இன்பாவுக்கு போன் செய்தாள். சார்.. ம்ம் எனி திங்க் பிராப்ளம்.. அது.. வாட் ஹப்பன்.. தீபா அங்கு நடந்த அனைத்து விஷயமும் சொல்ல.. நீங்க அவள் கூடவே இருங்க தனியா விட வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவன் போன் வைத்தான். 

அந்த நாள் அனைவருக்கும் ஒவ்வொரு அனுபத்தை கொடுத்தது. ஆனால் விவேகா போட்டியில் முழு ஈடுபாட்டோடு செயல் படாமல் இருந்ததால் அவள் குழு பின் தங்கி இருக்க.. மாலை எல்லா மாணவர்களும் கூடி இருக்க சிபி அனைவரிடமும் பேசி சில தீர்வுகள் மாற்றங்கள் என செய்து கொண்டு இருக்க.. 

விவேகா ராஜ் சொன்னது போல் தன்னை சரி செய்து கொள்வதாகவும் இந்த ஒரு முறை மட்டும் கொஞ்சம் தடுமாறி விட்டதாக சொல்ல சிபி அவள் மேல் இருந்த கண் மூடி தனமான நம்பிக்கையில் சரி என்று ஒத்து கொண்டான். 

ஆனால் என்ன நடக்குமோ  விவேகா என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள்.

தொடரும்… 

 Episode 182, 

தீபா சொன்னதை எல்லாம் யோசித்து கொண்டு இருந்த இன்பா இங்கு விவேகா நடந்து கொள்ளும் நடவடிக்கை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் விட்டான். பார்ப்போம் இன்னும் எவ்வளவு தூரம் தான் இவளும் செல்வாள் என்று அவள் மேல் அவ்வளவு ஆத்திரம் ஆனால் இந்த முறை அவளை வேறு விதமாக கையாள வேண்டும். 

இன்பா எதுவும் பேச வில்லை அங்கே நடப்பதை மட்டும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். அதே போல் தான் ஆதியும் இருந்தான். அடுத்த நாள் அதே போல் தொடங்க இங்கே நடக்கும் அனைத்தையும் ராஜ் விவேகா விஷயத்தை மட்டும் தவிர்த்து விட்டு குரு கிட்ட சொல்ல அவனை மிகவும் பாராட்டி விட்டு கடைசி நாள் பைனல் அன்று வருவதாக சொல்லி வைக்க ராஜ் ரெக்கை இல்லாமல் வானத்தில் பறந்தான். 

அடுத்த நாள் அதே போல் செல்ல அன்று சிபி மிகவும் டென்ஷனாக இருந்தான். ஒரு நாள் விட்டு அடுத்த நாள் தான் போட்டிக்கு தளர்வு இருந்தது. 

சிபி, என்ன இன்பா எதுவும் சொல்லாமல் இருக்க லீட் பண்ணு இன்பா.. ம்ம் பார்க்கலாம் என்று எதுவும் சொல்ல வில்லை.

இனியாள், சார் என்று பேச வர ம்ம் என்று இன்பா அவளை பேச சொல்ல அவள்,  விவேகா இருக்க டீம் ல தான் நமக்கு மார்க் அண்ட் வீக் இருக்கு சோ அதை செஞ்ச் பண்ணனும் அண்ட் என்னால் முடியும் என்னை செஞ்ச் பண்ணி விடுங்க.. 

சோனா, சார் நான் என்னால் முடியல அதனால் நான் இதில் இருந்து விலகி கொள்கிறேன். விவேகா, இல்ல சார் என்னால் தான் சோ கண்ணுக்கினியாள் எனக்கு பதிலாக வரட்டும் என்று கண்களில் கண்ணீர் கோர்க்க அது சிந்தாமல் பதில் பேசிட.. 

சிபி, ஆ யூ மேட் விவேகா இது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா நம்ப லிஸ்ட்ல இல்ல மூன்றாவது இடத்தில் தான் இருக்கோம். இன்பா, யென் ஆப்… உடனே அந்த இடம் அமைதியாகி விட எழுந்து நின்று இன்னிக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் இருக்கு அது தான் லாஸ்ட் சான்ஸ் என்று சொல்லி அவன் செல்ல.. 

அதன் பிறகு யாரும் பேச வில்லை. அங்கு இருந்த மாணவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்தனர். மாலை இதோ வந்து விட்டேன் என்று வர அனைவரும் அமைதியாக இருக்க கவ்யா தன் முழு நேரம் இன்பாவை சைட் அடிப்பதிலேயே இருக்க இன்பா, சிபி, அர்ஜுன், தீபா, அகிலா என அனைவரும் வந்தனர். 

சிபி எவ்வளவு சொல்லியும் விவேகா ஒத்து கொள்ளாமல் போக முடிவில் இனியாழ் இரு போட்டிகளிலும் பங்குகொள்ள போகிறேன் என்று மிகவும் உற்சாகமாக இருந்தாள். முதல் முறையாக சிபிக்கு அவள் மேல் சிறு வெறுப்பு வந்தது இப்படி ஒரு பெண்ணா என்று நினைத்து கொண்டான். 

மற்ற மாணவர்கள் அனைவரும் இனி யாள் இன்பாவின் சொந்தம் ஆக போகும் காரணத்தால் இந்த முன்னுரிமை என்று பேச இதை கேட்டதும் கவ்யா கொஞ்சம் கொந்தளித்தாள். இட்ஸ் நாட் ஃபயர் மிஸ்டர் இன்பா அண்ட் சிபி சார் கொஞ்சம் சொல்லுங்க..இன்பா, உங்க பாலிடிக்ஸ் எல்லாம் இங்கே வேணாம் என்று மிரட்டும் தொனியில் சொல்ல கவ்யாவுக்கு மிகவும் அவமானமாக இருக்க அவள் பார்வை இனியாள் பக்கம் சென்றது. இரு டி உன் அண்ணா எப்படி இவன் அக்காவை கல்யாணம் செய்கிறான் என்று பார்க்கிறேன் டி என் கிட்டயே உன் வேலையை காட்டுகிராயா என்று ஒரு தீர்மானத்துடன் இருந்தாள். 

சிபி அமைதியாக இருக்க அனைவரும் அடுத்த நாளை நோக்கி காத்து கொண்டு இருக்க அங்கு நடந்த அந்த செய்தி ராஜ் காதுகளுக்கு செல்ல நிச்சயம் நமது காலேஜ் தான் முதல் இடத்தை பிடிக்கும் அதற்கு முன் விவேகாவை பார்த்து பேச வேண்டும் என்று அவளை காண சென்றான். 

இந்த தருணத்துக்கு தான் இன்பாவும் காத்து கொண்டு இருந்தான். விவேகா இங்கே யார் என்று அந்த ஹோட்டல் பணிப்பெண் வந்து கேட்க அவள் சொல்ல உங்களை பார்க்க வர சொன்னார்கள் லென்று சொல்ல விவேகா யாராக இருக்கும் இந்த இன்பா அவனாக இருப்பானோ இனி பேச என்ன இருக்கிறது இந்நேரம் என் மேல் அவனுக்கு வெறுப்பு வந்து இருக்குமே நான் அப்படி தானே நடந்து கொண்டேன் என்று கணத்த இதயத்துடன் நடந்து செல்ல..

அங்கே ராஜ் நின்று இருந்தான். விவேகா அமைதியாக நின்று கொண்டு இருக்க இது போதும் விவேகா இந்தா உங்க வீட்டு பத்திரத்தின் காப்பி அண்ட் இது தாத்தா அம்மாயி வாப்ஸ் வாங்க போற கேஸ் பேப்பர் இது போட்டி முடிந்ததும் கையோடு நான் வருண் மச்சானுக்கு அனுப்பி விடுவேன். இதை எல்லாம் கேட்க அவளுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று இருந்தது. 

ராஜ் அவளிடம் உனக்கு உன் வீடு முக்கியமா இல்லை இந்த காலேஜ் போட்டி அந்த இன்பா முக்கியமா என்று சொல்லி தான் அவளை பலவீனம் ஆக்கி வைத்து இருந்தான். அவள் எதுவும் பேசாமல் கசந்த புன்னகையை சிந்த அதன் பின் விவேகா அங்கு இருந்து கிளம்பி விட்டாள். ராஜ் வெற்றி புன்னகை சிந்தி ஊருக்கு வந்து உங்களை பார்த்து கொள்கிறேன் டா என்று நினைத்து கொண்டு சென்றான். 

விவேகா போகும் வழியில் இன்பா இருக்க அவன் அவளை தீர்க்கமாக ஒரு பார்வை தான் பார்த்தான் மற்ற படி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அது அவளுக்கு எதோ போல் ஆகி விட்டது. இவன் ஏ ன் இப்படி இருக்கிறான் நம்மிடம் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லையே என்று நினைத்து அவள் இதயம் எதோ மிகப்பெரிய பாரத்தை சுமப்பது போல் இருக்க.. 

நேராக அவள் அறைக்கு சென்றாள். அவளுக்கு முன்பு ஆதி வெண்பா இருவரும் பேசி கொண்டு இருந்தனர். இவள் வருவதை பார்த்ததும் அவன் வெண்பா கிட்ட சரி நாளைக்கு பார்க்கலாம் வெண்பா என்று சொல்லி கிளம்ப இன்னும் அவளுக்கு இடி இறங்கியது போல் இருந்தது. 

தான் நேசிக்கும் இருவரின் இந்த மௌனம் அது கொல்லாமல் கொன்றது. வெண்பாவும் அவளிடம்  எதுவும் பேச வில்லை. 

இரவு முழுவதும் விவேகா மனதில் ஒன்று மட்டும் தான் ஓடி கொண்டு இருந்தது. அவளது மனசாட்சி” நீ சுயநலக்காரி விவேகா எனக்கு வெட்கமா இருக்கு, என் ராகவ நீ ஏமாற்றி விட்டாய், உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தான். ஆனால் நீ உனக்கு காலேஜ் முக்கியம் இல்லை உன் வீடு தானே முக்கியம்”..  

மேலும் அப்படி இருந்து இருக்க ராகவ் உனக்காக அவன் தங்கி இருக்கும் வீட்டில் வருனுக்கு வேலை கிடைக்கும் முன்பே அடைக்கலம் கொடுத்து இருக்கிறான். எல்லா வகையிலும் உன்னையும் அம்மாவையும் பாதுகாப்பாக வைத்து இருந்து இருக்கிறான் ஆனால் அது உனக்கு இப்பொழுது பெரிதாக படவில்லை. நம் அப்பா இறந்ததில் இருந்து ஒரு முறை கூட உன்னை பார்க்காமல் சொத்துகளை அபகரிக்க நினைக்கும் அத்தை, தாத்தா, பாட்டி, உன்னை பலவீனம் அடைய வைத்து உன் மேல் ஆசை படும் உன் அத்தை பையன் இவர்கள் எல்லாம் எங்கே இன்பா எங்கே என்று நெஞ்சு பொறுக்காமல் கொட்டி கொண்டு இருக்க.. 

கண்களில் மட்டும் நீர் வழிந்து கொண்டு ஓடியது. நாளை விடியல் உன் கைகளில் தான் இருக்க போகிறது. நீ யார் பக்கம் செல்ல போகிறாய். என்று மனம் கேட்க தீர்க்கமான முடிவு எடுத்து கொண்டு கண்களை துடைத்தவள் நாளை விடியல் நோக்கி உறங்க தொடங்கினாள். 

நாமும் நாளை  விடியலுக்காக காத்திருப்போம்.

 இன்பா என்ன செய்து கொண்டு இருக்கிறான். 

விவேகா அங்கு இருந்து அழுது கொண்டே சென்றதை பார்த்த ராஜ் போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்தான். அவன் பேசி கொண்டே வெளியே வர அங்கு இன்பா இருப்பதை பார்த்ததும் வெற்றி களிப்பில் அவனை நோக்கி வர… இன்பா அமைதியாக இருந்தான். 

என்ன மிஸ்டர் இன்பராகவன் ips சரி தானே உங்க வேலை என்ன.. இன்பா அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து செல்ல அட என்ன சார் பேச பேச போறீங்க ஒரு வேளை பொண்ணுங்க முன்னால் தான் சீன் போட்டு போலீஸ் டைலாக் எல்லாம் விடுவீங்கலோ என்று வழி மறித்து கொண்டே முன்னால் போய் நின்றான். 

இன்பா அவனை எதோ இட் போல் அதாவது ஐந்து அறிவு இருக்கும் உயிர் போல் பார்க்க ராஜ், சார் எனக்கு ஒரு சந்தேகம் நீங்க என்ன வேலை தான் செய்றீங்க.. இன்பா அவனை கேவலமான ஜந்து போல் பார்க்க

ஏன் கேட்கிறேன்னா நீங்க போலீஸ் வேலையை தவிர மற்ற வேலை எல்லாம் நல்லா பார்க்கிரீங்க என்று சிரித்து கொண்டே அவன் ஏளனமாக கூறினான். இன்பா அவன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டு கொண்டு கைகளை முறுக்கினான். ராஜ், சரி அதை விடுங்க இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம் இதோ இப்போ உங்களை பார்த்தும் பார்க்காதது போல்    போனாளே என் பொண்டாட்டி சாரி உங்களுக்கு தெளிவா சொல்லணும் தானே என்  மாமன் எனக்காக பெத்த பொன்னு விவேகா தான் என்று அவன் சொல்ல 

இன்பா எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தான். ராஜ், என்ன ஹீரோ சார் அன்னிக்கு அவ்ளோ பேசுநீங்க இன்னிக்கு நிசப்தம் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு மிஸ்டர்.. என்று சொல்லி விட்டு இதற்கு மேல் அவனிடம் பேச எதுவும் இல்லை என்று நினைத்து விட்டு இன்னும் சில நாட்கள் கழித்து  விடியல் எனக்கு விவேகா கூட தான் இருக்கும் என்று சில வார்த்தைகளை அள்ளி தெளித்து விட்டு சென்றான். 

இன்பா எதுவும் சொல்லாமல் அவன் அறைக்கு செல்ல அவனுக்கு முன்னவே சிபி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான். இன்பா அவனை கண்டு கொள்ளாமல் நேராக குளியலறை சென்று விட்டான். அரை மணி நேரம் கழித்து வெளிய வர சிபி, ராகவ் நான் இங்கே எவ்ளோ டென்ஷனா இருக்கேன் நீ எதுவும் நடக்காதது போல் இருக்க.. 

இப்போ என்ன நடந்தது நீ இங்கே உனக்கு டெலிவரி மாதிரி வாக் பண்ணிட்டு இருக்க.. டேய் என்ன டா இவளோ கூலா பேசுற நம்ப வெற்றியை தீர்மானிப்பது எல்லாமே தினேஷ், சோனா, விவேகா இருக்க  டீம் தான் ஆனால் இப்போ என்ன பண்றது அதில் மட்டும் கொஞ்சம் சருக்குச்சு மொத்தமா ஸ்கோர் மாறி போய் விடும் டா விவேகா எவ்ளோ பாஸ்டா அன்சர் பண்ணுவா ஆனால் நீ ஏன் அந்த இடத்தை இனியாள்க்கு கொடுத்த.. என்று இன்பாவை பார்க்க அவன் எதுவும் சொல்ல வில்லை. 

சிபி ஒரு சில நிமிடம் எதோ யோசித்து விட்டு ராகவ் உன் கிட்ட ஒன்னு கேட்கவா.. அவன் போன் நோண்டி கொண்டே என்ன என்பது போல் பார்க்க நீ அந்த இனியாளை விரும்புகிறாயா  அதனால் தான் அவளுக்கு ஃபேவரா பேசினாயா என்று அவன் முழுவதும் சொல்லி முடிக்கும் முன்பே 

இன்பா,  ஒரு இரண்டு தலையணை எடுத்து அவன் மேல் வீசினான். இது பதில் இல்ல இன்பா.. என்று அவன் அதை கைகளில் பிடித்து கொள்ள.. 

இன்பா, அந்த மேக் அப் கேர்ல நீ வேனா லவ் பண்ணு எனக்கு அவங்க மொத்த குடும்பத்தையும் சுத்தமா பிடிக்காது அண்ட் அவங்க எனக்கு சொந்தம் இல்ல சுபா,அண்ட் ரவிசந்திரன் ரிலசன்… சிபி, அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா.. டேய் நீ என்ன லூசா நானா அந்த வினயை கல்யாணம் பண்ணிக்க போறேன் நீ போய் அந்த சுபா கிட்ட கேளு தோஸ் ஆர்  நான்சென்ஸ் பீபில்ஸ் என்று சொல்லி விட்டு அவன் திரும்பி கொள்ள.. 

இங்கே வெண்பா ஆதிக்கு மெசேஜ் செய்தாள். ஹே எனக்கு ஒன்னு தோணுது… என்ன.. நீ பேசாமல் அந்த ராஜ் கிட்ட பேசி பார்க்கிறாயா.. அதற்கு ஆதி, என்ன பேச சொல்ற… வெண்பா தலையில் அடித்து கொண்டே டேய் விவேகா கிட்ட என்ன சொன்ன எதுக்கு அவள் இப்படி நடந்து கொள்கிறாள் etc… அப்படி இப்படி நாக்கை பிடுங்குவது போல் கேளு டா… அவன் சலித்து கொண்டே அவனும் என்னை திருப்பி நாக்கை புடுங்குவது போல் கேட்டால் நான் என்ன பண்ணட்டும்.. 

வெண்பா, அப்போ இதுக்கு வேற வழியே இல்லையா..  ஆதி, எல்லாம் உன் பக்கத்தில் இருக்காளே அவளால் வந்தது ஏற்கனவே அவன் எக்க சேக்கனா ஆடுவான் இப்போ இவள் போக்கு இனி சொல்லவே வேண்டாம்.. அவள் சரி ஒரு வார்த்தை விவேகா கிட்ட பேசென்..

ஆதி, உன் வேலையை நீ பாரு அவள் இத்தனை நடந்தும் அங்கே அவன் பேச்சை கேட்டு கொண்டு ஆடும் அவளிடம் நான் எதுக்கு பேசணும் இனி அவள் தான் என்னிடம் வந்து கெஞ்ச வேண்டும் அவள் ஒரு முட்டாள் பெரிய புடுங்கி மாதிரி அவளே தானா முடிவு எடுத்து கொண்டு ஆடுகிறாள் தானே எனக்கு என்ன வந்தது என்று ஆஃப் லைன் சென்று விட்டான்.

வெண்பா, திமிர் பிடித்த பிசாசு இவனை என்று சலித்து கொண்டு அவள் தூங்க ஆரம்பித்தாள்.

விவேகா இரவு முழுவதும் தூங்கவே இல்லை அவளது நினைவில் இன்பாவின் அந்த வெற்று பார்வை அவன் கண்கள் அது  கொல்லாமல் கொன்றது. கண்களில் கண்ணீர் வேறு ஒரு பக்கம் வழிந்து கொண்டே இருந்தது. 

விவேகா மனம், எதுக்கு டி இப்படி செய்கிறாய் என்று கேட்க மாட்டியா டா, நான் எது செய்தாலும் ஏற்று கொள்வாயா, இல்லை என்னை மிகவும் கேவலமான பொன்னு அப்டின்னு நினைத்து கொண்டு இருக்கிறாயா! என்னை யார் தவறாக நினைத்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் நீ! அது தான் உனக்கு வேண்டுமே அவன் உன்னை வெறுக்க வேண்டும் என்று தானே இதை எல்லாம் செய்தாய்.ராகவ் என்னால் எனக்கு என்னை செய்வது ஒண்ணுமே புரியல இதயம் ரொம்ப வலிக்குது ராகவ் உன்னையும் என் அத்தான் சொன்னதையும் என்னால் சுமக்க முடிய வில்லையே நான் செய்வது சரியா? இல்லை தவறா?

இதற்கு எதுவும் செய்து ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

தொடரும்… 

Episode 183,

விவேகாவுக்கு இங்கு இருந்து சீக்கிரம் சென்று விட வேண்டும் என்று தோன்றியது. தன்னால்  எந்த பிரச்னையும் வர கூடாது இங்கு இருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால் நேரம் தான் நகர மாட்டேன் என்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர்.

இதோ அடுத்த நாள் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை சந்திக்க வேண்டும் என்று சீக்கிரம் விடிந்தது ஆனால் விவேகா வுக்கு தான் அதுவே மெதுவாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் உண்மை என்ன என்றால் எந்த உவமையும் இல்லாமல் சரியாக சூரியன் அவரது வேலையயை தொடங்கினார்.

விவேகா மணியை பார்க்க அது அதிகாலை 4.30 என்று காட்ட விவேகா தன் முகத்தை கழுவி கொண்டு இன்னும் விடியும் வரை  காத்திருப்போம் என்று நினைத்தாள்.  6.00  மணிக்கு செல்லலாம் என்று நினைத்தாள். ஆனால் அவள் இருக்கும் மனநிலையில் மனம் முழுவதும் பாரமாக இருக்க அதற்கு மேல் இந்த வேதனையை தாங்க முடிய வில்லை. 

விவேகா கண்களை துடைத்து கொண்டு சிபி அறையை நோக்கி சென்றாள். கதவை தட்ட அது திறக்க வில்லை. கொஞ்ச நேரம் தட்டி பார்த்தாள். பதில் இல்லாமல் போக உள்ளே யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டாள். இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவள் இன்பா அறைக்கு சென்றாள். சிபி இன்பா வின் அறையிலேயே நைட் தங்கி விட்டான். 

கொஞ்சம் தயக்கமாக கதவினை தட்ட முதலில்  இன்பா எழுந்து கொண்டான். சிபி அருகில் படுத்து கொண்டு இருப்பதை பார்த்து அவனை எட்டி உதைக்க சிபி எழுந்தவன் மணி பார்க்க இன்பா, யாருன்னு பாரு என்று சொல்லி விட்டு ரெஸ்ட் ரூம் செல்ல சிபி கண்களை தேய்த்து கொண்டே கதவை திறக்க முன்னால் நின்று கொண்டு இருந்தவரை பார்த்து ஒரு நிமிடத்தில் அவனுக்கு கோபம் ஏறியது. 

அவன் தன்னை நிதானித்து கொண்டு இன்பா உன்னை பார்க்க வந்து இருக்கிறார்கள். விவேகா, சார் சார் நான் உங் உங்களை பார்க்க தான் வந்தேன் உங்க ரூமில் நீங்க இல்ல அதான் தேடிட்டு வந்தேன். 

சிபி அவன் தலையை கோதி கொண்டே இப்போ இந்த நேரத்தில் உங்களுக்கு என்ன வேணும். என்று அவன் கேட்டு கொண்டு இருக்க இன்பா அப்பொழுது தான் உள்ளே இருந்து வெளியே வர வாசலில் விவேகா நின்று கொண்டு இருக்க இன்பா ஒரு நிமிடம் அவளை பார்த்தான்.  அவள் சிபி கிட்ட தீவிரமாக பேசி கொண்டு இருந்தாள். 

பின்பு தன்னிலைக்கு வந்த இன்பா தன்னை சரி செய்து கொண்டு வெளியே செல்ல கிளம்பினான். அவன் போன் , ரூம் கீ எடுத்து கொண்டு வெளியே வர

சிபி, என்ன விவேகா உனக்கு இது விளையாட்டா போச்சா என்று அவளிடம் பேசி கொண்டு இருக்க விவேகா கீழே குனிந்து இருந்தவள் நிமிர்ந்து பதில் அளிக்க அப்பொழுது தான் இன்பாவை பார்த்தாள். இன்பா அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் சிபி கொஞ்சம் மூவ் பண்ணு.. என்று சொல்லி கொண்டே அவன் அறையை லாக் செய்ய போக.. 

ஹே  இங்கே என்ன நடக்குது ஆனால் நீ அதை கண்டு கொள்ளாமல் நீ பாட்டுக்கு எங்கே கிளம்பி விட்டாய்.. இது என் ரூம் உனக்கு ரூம் இருக்கு தான சோ அங்கே போய் உன் பஞ்சாயத்து எல்லாம் வைத்து கொள் என்று போன் நோண்டி கொண்டே சொன்னான். 

ஒரு நிமிடம் டா இப்போ இந்த நேரத்தில் எங்கே போற.. அவன் அறையை லாக் செய்து விட்டு அவனை பார்த்து இப்போ என் மோட் நல்லா இருக்கு சோ இந்த டெல்லி வெதர்க்கு சும்மா ஜாலியா என்று சொல்லி கொண்டே அவன் நடந்து செல்ல.. 

இதை கேட்டு கடுப்பான சிபி டேய் இங்கே எதுக்கு வந்து இருக்கோம் நீ என்ன பண்ணிட்டு இருக்க இந்த பொன்னு விவேகா..  ஸ்டாப் இட் asshole  என் மோட ஸ்பாயில் பண்ணாத..

விவேகா அவன் இவளை கண்டு கொள்ளாமல் சென்றது இப்பொழுது அவன் பேசுவது எல்லாத்தையும் அழுது அழுது சிவந்த முகத்தில் பார்த்து கொண்டு இருந்தாள். 

அவளால் என்ன பேச முடியும். சிபி, ஹே ஒரு நிமிடம் நில்லு டா இந்த பொன்னு.. இன்பா நடந்து கொண்டே நீ தான் காலேஜ்ல வொர்க் பண்ற சோ எனக்கும் இதுக்கும் என்ன சம்மதம் என்று சொல்லி கொண்டே அவன் சென்றான். 

விவேகா சிபியிடம் சார் பிளீஸ் என்று அழுது கொண்டே கெஞ்ச…

விவேகா சிபியிடம்  அப்படி என்ன தான் கேட்டாள். 

இன்பா லிஃப்ட் அருகில் செல்ல இங்கே விவேகா சிபியிடம் பிளீஸ் சார் என்று அழுது கொண்டே கெஞ்ச.. அவன் ஒரு நிமிடம் இரு மா என்று வேகமாக இன்பா அருகில் நடந்து அவனை உள்ளே செல்ல விடாமல் தடுத்தான். 

ஹே இப்போ உனக்கு என்ன வேணும்.. டேய் அந்த பொன்னு.. அவளை பற்றி நான் எதுக்கு கேட்கணும் நீ எதுவா இருந்தாலும் தாத்தா கிட்ட பேசிக் கோ இல்ல மாம் க்கு கால் பண்ணு நான் என் கேஸ் மீட்டிங் அண்ட் முக்கியமா ஒரு இன்வெஸ்ட்டிகேசன்  பண்ண தான் வந்தேன் தட்ஸ் ஆல்.. என்று அவன் செல்ல… 

விவேகா அவன் பேசுவது எல்லாம் கேட்டு விட்டு சிபி அருகே வந்தவள். சார் எனக்காக நீங்க யார் கிட்டயும் கேட்க வேண்டாம் அண்ட் உங்க கிட்ட தான் நான் கேட்க வந்தேன் நீங்க சிரம பட வேண்டாம் நான் போறேன் என்று அவள் அழுது கொண்டே நடை பிணமாக செல்ல…

இன்பா மனதில் இந்த திமிர் பிடித்தவள என்ன பண்றது. சிபி நீ நல்லா பார்த்துக்கிட்டே இரு அவள் இப்போ செம்ம டிராமா பண்ண போறா.. அண்ட்  இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…  இவளை எல்லாம்  தூக்கிட்டு போய் என்று அவன் மூளை எது எதோ நினைத்து கொண்டு இருக்க 

டேய் டேய் இன்பா கொஞ்சம் நான் சொல்வதை கேளு.. அதான் அவள் பெரிய இவள் மாதிரி போயிட்டாலே இப்போ எல்லாம் பிரச்னையும் சால்வ்..  

விவேகா ஒரு நிமிடம் நில்லு மா.. அவள் நின்றாள் ஆனால் திரும்ப வில்லை. இன்பா, இப்போ என்ன சொல்றா புதுசா ஒரு பிரச்சனையை தூக்கிட்டு வந்து இருப்பாலே.. அது நீ சொல்றது சரி தான் டா.. 

என்ன சொன்னா… அவள் அந்த போட்டியில் கலந்து கொள்கிறாளாம்..

இன்பா இதை கேட்டு சிரித்தான். எதுக்கு டா சிரிக்கிற.. இன்பா, டேய் இது அவள் மாமியார் காலேஜ் அப்டின்னு நினைத்தாளோ அவள் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கா நீயும் அதுக்கு ஜதி தட்டுற சரியான ஆடுகாலி டா சிபி நீ மறுபடியும் ஃப்பூலிஷ் ஆகாத.. இதை சொன்னதும் அவன் யோசிக்க..

அவன் மாமியார் காலேஜ் அப்டின்னு சொன்னதும் விவேகா கண்கள் ஒரு நிமிடம் மின்னியது ஆனால் அதன் பின் அவன் பேசியது தான் அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 

இன்பா, அவள் என்ன நினைத்து கொண்டு இருக்கா நேற்றே அவளோட டைம் முடிந்து போச்சு அண்ட் நல்ல வேலை இதை வந்து இப்போ சொன்னா இல்ல போட்டிக்கு போறதுக்கு முன்னாடி எந்த குட்டையும் குழப்பாமல் இருந்தால் சரி நான் சொல்வதை கேளு சிபி இவளுக்கு திமிர் ஜாஸ்தி அண்ட் எப்போ வேணாலும் பச்சோந்தி மாதிரி மாறுவா என்று அவன் மொத்த ஆதஙத்தையும் கொட்ட.. 

சிபி, இன்பா பிளீஸ் ரில்லாக்ஸ்.. அப்புறம் அந்த பொண்ணை இப்படி அவள் இவள் அப்டின்னு பேசுற.. இன்பா, ஏ ன் எப்படி கூப்பிட சொல்ற வாங்க மேடம் அப்டின்னு சொல்ல சொல்றியா..  பச்சோந்தி என்று காதில் கேட்டதும் கண்களை துடைத்து கொண்டு அவள் சிபி அருகில் வந்து சார் என்னால் உங்களுக்கு சிரமம் வேண்டாம் நான் போறேன்.. 

பாரு சிபி நல்லா பார்த்துக்கோ அவள் வரும்போது டைம் 4.40 இப்போ டைம் 5. 10 அதுக்குள்ள மாறி விட்டாள் இப்போ தெரியுதா.. சிபி மனதில் என்ன இவன் எப்படி  டைம் கான்சியசா நோட் பண்ணி  இருக்கான் எங்கேயோ இடிக்குதே என்று நினைத்து என்ன இன்பா இப்படி இருக்க..

விவேகா, சார் நீங்க சொல்லுங்க நான் என்ன பண்ணட்டும் நான் செய்தது தப்பு தான் தெரியாமல் பண்ணி விட்டேன். 

அவனுக்கு கோபம் தலைக்கு ஏற என்ன டி உன் விளையாட்டு எல்லாம் இங்கே வேணாம் ஒழுன்கா ஓடிடு என் கண்ணில் பட்ட உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

விவேகா அவனை உருத்து பார்க்க சிபி அவனை பிடித்து கொண்டு என்ன ராகவ் டி போட்டு பேசுற… 

ஹே போடா என்று சொல்லி விட்டு அவன் அங்கும் இங்கும் நடக்க விவேகா, இப்போ நான் இருக்கவா இல்ல போகவா.. இன்பா, போடி நான் உங்க கிட்ட ஒன்னும் கேட்கல நீங்க யாரு நான் சிபி சார் கிட்ட கேட்டேன் என்று கண்களை துடைத்து கொண்டு அவள் சொல்ல கண்ணை நோண்டி எடுக்கணும் முட்ட கண்ணி என்று நினைத்து கொண்டான். 

சிபி, ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க.. இருவரும் வேறு வேறு புறம் திரும்பி கொள்ள சிபி, விவேகா நீ எதுக்கு இப்படி செய்த.. அவள் கீழே குனிந்து கொண்டு எனக்கு கொஞ்சம் ஃபேமிலி பிராப்ளம் சோ என் மைண்ட்ல அது கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருந்தது.ஆனால் இப்போ ஓகே என்னால் முடியும் நான் நிச்சயம் என்னோட பெஸ்ட்ட கொடுப்பேன் என்று அவள் உறுதியாக சொல்ல.. 

சிபி ஒரு சில நிமிடம் யோசித்தான். பின்பு ஒரு பெரு மூச்சை விட்டு பக்கா.. விவேகா அவனை நிமிர்ந்து பார்த்து தீர்க்கமாகவும் தெளிவாகவும் சார் நீங்க என் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையை நான் ஒரு போதும் விட்டு விட மாட்டேன் உங்களுக்காக  பக்கா சார்..அவள் கண்களில் உள்ள அந்த நேர்மறை எண்ணங்கள் அது சிபிக்கு புரிந்தது. 

உடனே அவன் இன்பாவிடம் திரும்பி ராகவ் இந்த பொண்ணை என்று அவன் ஆரம்பிக்க இன்பா, அப்போ ஸ்வீட்டிக்கு என்ன பதில் சொல்றது.. 

ஸ்வீட்டியா யார் அது? ஹே சிபி குட் ஜோக் அதான் வினய் மாமாவொட தங்கை டோண்ட் ஆக்ட் வித் மீ…

சிபி ஒரு நிமிடம் அதிரிச்சியில் பார்க்க விவேகா கண்களில் நெருப்பு பற்றி எறிய பார்த்தாள்.

இன்பா, இப்போ கூட நீ find பண்ணலயா நீ வேஸ்ட் சிபி அது இனியாழ் சுவீட்டி தான.. 

விவேகா அடுத்து பேச வரும் முன் சிபி, விவேகா நீ காம்பிடீசன்க்கு ரெடி ஆகு மா என்று சொல்ல அவள் சரி சார் என்று சொல்லி விட்டு இன்பாவை முறைத்து கொண்டே சென்றாள். ஹே இதெல்லாம் பார்த்தாச்சு  போடி என்று நினைத்து கொண்டான். 

அவள் சென்றதும் இன்பா, ஹே சிபி அந்த கேர்ல்.. எந்த கேர்ல்? அதான் மேக் அப் கேர்ல் கண்ணுக்கினியாள்.. சிபி, உன் சுவீட்டு சரி தானே… 

ஹே சிபி வாட் ரப்பிஸ் அந்த பொண்ண தயவு செய்து நீ டீல் பண்ணிக்கோ என் கிட்ட அனுப்பி வைத்து விடாதே.. நான் நேற்று என்ன சொன்னேனோ அதான் என்று சொல்லி விட்டு அவன் வேகமாக லிஃப்ட்ல ஏறி கீழே சென்றான். 

சிபி மனதில் அப்புறம் எதுக்கு இவன் இப்படி பேசிட்டு போறான். அவளை நான் டீல் பண்ணட்டுமா.. அப்போ எதுக்கு இவன் என்று யோசிக்க இந்த ராகவ்  எதோ பண்றான் ஆனால் அது என்னன்னு தான் தெரியல … சரி அடுத்து அந்த மேனா மினுக்கிய எப்படி சமாளிக்க ம்ம் நல்லா இருக்கே இந்த பேர் கூட சூப்பர் சிபி  என்று  அவளை நினைத்து கொண்டு அவன் அறைக்கு சென்றான். 

இங்கே விவேகா அவள் அறைக்கு வந்தாள். வெண்பா இழுத்து போர்த்தி தூங்கி கொண்டு இருக்க அவள் நேராக குளியலறை சென்று தலைக்கு  குளித்து முடித்து வெளியே வந்தவள். அவள் பையில் இருந்து அப்பா படத்தையும் கூடவே அவள் இஸ்ட தெய்வ படத்தையும் எடுத்தாள். அவளது அப்பா படத்தை தொட்டு பார்த்து நான் எப்போவும் உங்க செல்ல பொன்னு தான் பா என்னை பலவீனம் செய்து நம்ப வீட்டை பகடையாக வைத்து அத்தான் செய்வது சரி இல்லை பா இங்கு என்னை நம்பி அழைத்து வந்தவர்களுக்கு நான் ஒரு போதும் திரோகம் செய்ய மாட்டேன். இது நீங்க சொல்லி கொடுத்தது அதை தான் செய்ய போகிறேன் என்று சொல்லி அந்த படத்தை கட்டி அணைத்து கொண்டாள். 

பிறகு அவள் இஸ்ட தெய்வத்தை வணங்கி விட்டு பேக்ல இருந்து லேப் டாப்பை எடுத்து அவள் வைத்து டாங்க் கனெக்ட் செய்து கொஞ்ச நேரம் சும்மா ஓரலாக பார்த்தாள். மணி 7.30 ஆனது உடனே வெண்பாவின் அலாரம் அடிக்க வேகமாக எழுந்தவள். கண்ணை தேய்த்து கொண்டு பார்க்க அங்கே தெய்வ கடாட்சம் நிறைந்து முன்னால் விவேகா லேப் டாப்ல எதோ செய்து கொண்டு இருக்க வெண்பா அவளிடம் பேச அவள் கண்டு கொள்ளாமல் அவள் வேலைய பார்க்க போடி சீன் போடுறா..

விவேகா ஏற்கனவே செய்து வைத்து இருந்த சில புரோகிராமிங் ஃபைல் எல்லாம் பார்த்து படித்து ஒரு புதிய கோப்பு ஒன்றை தயார் செய்தாள் ஆனால் அது அவள் தலை எழுத்தை மாற்றி அமைக்க போகிறது. 

இப்படி அவள் அதில் கவனமாக இருக்க ஹே நான் பேசுவது உனக்கு கேட்குதா இல்ல அப்படி என்ன பண்ணிட்டு இருக்க என்று வெண்பா எட்டி பார்க்க வர 

விவேகா, அது நீ தான் ஆதி கூட அப்படியே ஒட்டி கிட்டு திரியுற.. இதை கேட்டதும் அவள் கன்னம் சிவந்தது. ஹே நான் ஒன்னும் அவன் கிட்ட பேசல அவன் தான் என் கிட்ட பேசினான். ரொம்ப ஓவரா பண்ணாதீங்க மிஸ் வெண்பா அவன் என் மாமா பையன்.. பிளீஸ் போய் ஃப்ரெஷ் ஆகுங்க.. வெண்பா, இரு டி கூடிய சீக்கிரத்தில் அவனை கொத்திட்டு போறேன் என்று நினைத்து கொண்டு அவள் குளிக்க சென்றாள். 

மணி 8.30 ஆக சோனா விவேகாவின் அறைக்கு வந்தாள். விவேகா.. ம்ம் சொல்லு கா.. உன்னை கவி வர சொன்னா… விவேகா சிரித்த முகத்துடன் செல்ல அங்கே கவ்யா, என்ன விவேகா நீ இப்படி இருக்க அந்த இனியாழ் இதை என்னால் ஐ கான் ட் என்ன கவி சொல்ற.. ம்ம் ஆமா டி.. சரி இப்போ என்ன பண்றது.. அந்த இனியா அவள் ரெண்டு காம்பிடீசன்ல பார்டிசிபேட் பண்ணவே கூடாது அதுக்கு எதுவும் செய்து ஆக வேண்டும். 

விவேகா, என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. அதுவும் உனக்காக மட்டும் தான்.. என்ன என்று அவள் கேட்க நீ உன் ஆளு கிட்ட கேளு.. இதை கேட்டு சோனா திடுக்கிட.. 

கவ்யா…?

தொடரும்… 

 Episode 184,

இன்பா கிட்ட கேளு என்று விவேகா கவ்யாவிடம் சொல்ல

சோனா மனதில் இந்த கவ்யாவை டம்மி பீஸ் ஆக்கிட்டாளே இது எதுவும் தெரியாமல் இந்த கவி அவள் கிட்ட ஒட்டிட்டு இருக்கா பின்னாடி ஆப்பு தொங்கிட்டு இருக்கே… இதை என்னால் சொல்லவும் முடியல பார்த்திட்டு சும்மாவும் இருக்க முடியல எதுவும் செய்து தெரிய படுத்தனும். 

அவனா அவன் கிட்ட யாரு பேச முடியும் நோஸ் கட் பன்றதயே வேலையா வைத்து கொண்டு சுற்றுகிறான்  எப்படி நான் போய் சொல்லட்டும் என்று யோசித்தாள். விவேகா, சரி விடு கவி ஃபீல் பண்ணாத… கவ்யாவுக்கு இனியாழ் இதில் கலந்து கொள்ள கூடாது அது மட்டுமே அவள் எண்ணம் இந்த இடத்தில விவேகா இல்லாமல் இருந்து இருந்தால் கூட அவள் இதை தான் செய்து இருப்பாள். ஒரு முறை யோசித்து பார்த்து விட்டு சரி நான் ஒரு முறை அவன் கிட்ட பேசி பார்க்கிறேன். 

ம்ம் சூப்பர் கவி என்று சொல்லி சிரித்து கொண்டே கவ்யா, சோனா, விவேகா மூவரும் இன்பா இருக்கும் இடத்துக்கு சென்றனர். அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு ஹாயாக நன்கு சாய்ந்து கொண்டு அந்த பிரைவேசி ac ரூமில் எந்த தொந்தரவும் இல்லாத ஒரு இடத்தை தேர்ந்து எடுத்து அவனுக்கு பிடித்த சில காலை உணவுகளை ஆடர் செய்து கொஞ்சம் சாப்பிட்டு கொண்டும் போன் நோண்டி கொண்டும் இருந்தான். 

கவ்யா அவனை பார்வையில் தின்று கொண்டு அருகில் செல்ல விவேகா இதை பார்த்து கடுப்பாகி கவி… தண்ணிலைக்கு வந்தவள் க்கும்.. யார் என திரும்பி பார்க்க கவ்யா, சோனா, விவேகா இருக்க இரு புருவமும் நெருக்கி பார்த்தான். 

உங்க  கிட்ட கொஞ்சம் பேசணும்.. கேரி ஆன்.. விவேகா அந்த காம்பிடீசன்ல என்று அவள் ஆரம்பிக்க சோனா, இது எங்கே போய் முடியுமோ என்று நினைக்க.. அவன் ஸ்டாப் இட்.. அவன் சொன்ன விதத்தில் கொஞ்சம் பயந்த கவி என்ன ஆச்சு.. இன்பா அவளை ஒரு மாதிரியாகவும் விவேகாவை கூசுவது போல் ஒரு பார்வையும் பார்த்து விட்டு நீங்களும்  இவளும் சரியான திமிர் பிடித்த என்று இடை நிறுத்தி அவளுக்கு நீங்க பாலிடிக்ஸ் பண்ணி சப்போர்ட் பண்ண வந்து இருக்கீங்க.. 

கவ்யா, நீங்க செய்வது மட்டும் சரியா.. இன்பா, நான் என்ன செய்தேன்.. அந்த இனியாழ் உங்க சொந்தம் அதனால் தானே இப்படி செய்றீங்க.. லுக் கவ்யா எனக்கும் இதுக்கும் துளி கூட சம்மந்தம் இல்ல அண்ட் என்னோட டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் உங்க வேலையை பார்த்திட்டு போங்க… 

விவேகா, கவி நீ வா எனக்காக நீ யார் கிட்டயும் கெஞ்ச வேண்டாம் என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றாள். போகும் அவளை தான் கண்ணக்குளி வலிக்காமல் பார்த்து சிரித்து கொண்டு இருந்தான். கவ்யா அவள் அறை கதவை டம் என்று சாத்த கவி நீ டென்ஷன் ஆகாத நான் உனக்காக நிச்சயம் இதில் கலந்து கொள்வேன். 

எப்படி.. அருண் சீனியர் அப்படி இல்லன்னா சிபி சார் கிட்ட பேசறேன் என்று சொல்லி அவள் கிளம்ப கவ்யா உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் என்று சொல்ல விவேகா கிளம்பினாள். சோனா, கவி இந்த விவேகா கிட்ட நீ அதிகமா வச்சுக்காத.. என்ன ஆச்சு.. இல்ல அவளை பார்த்தால் எனக்கு சரியா படல..

கவ்யா, சோனா அவள் தான் என் பகடை காய்.. என்ன சொல்ற.. ம்ம் ஆமா அவளை வைத்து தான் நான் அந்த இனியாழ கன்ட்ரோல் பண்ண போறேன்… நீ நினைப்பது போல் அவள் இல்ல டி.. கவ்யா, சோனா ரொம்ப புத்திசாலி ஒன்னு நம்ம இருக்கணும் இல்ல நம்ம கூட இருக்கணும் ஆனால் நம்மல சுற்றி இருக்க கூடாது. அந்த இனியாழ் அவளை விட விவேகா புத்திசாலி அவள் தனியா இருந்தால் தான் ஆபத்து.. சோனா, உன் பிளான் எல்லாம் சரி தான் ஆனால் எப்படி இருந்தாலும் நஸ்டம் உனக்கு தான் டி என்று நினைத்து கொண்டாள். 

போட்டி சரியாக 10.00 மணிக்கு ஆரம்பித்தது. அனைவரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். விவேகா கண்களில் ஒளியுடன் மிகவும் உற்சாகமாக வர வெண்பா, இனியாழ்,ஆதி என அனைவரும் கேள்வியாக பார்த்தனர். இனியாழ், ஹே என்ன உனக்கு இங்கே வேலை.. அவள் பதில் பேசும் முன் சிபி, சாரி மிஸ் கண்ணுகினியாள் விவேகா பிளேஸ நான் ரிப்லெஸ் பண்ணல..  என்று சொல்லி கொண்டே அவள் அருகில் அவளுக்கு துணையாக வந்து நின்றான். 

அங்கு உள்ள அனைத்து கண்களும் விவேகா, சிபி இருவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தது. ஆதி, வெண்பாவுக்கு அவர்கள் நிற்பது  சாதாரணமாக தான் தெரிந்தனர் ஆனால் மற்றவர் கண்களுக்கு அவர்கள் நிற்பது தவறாக தெரிந்தது. இனியாழ் இருவரையும் உற்று பார்க்க விவேகா கண்களால் சிபி கிட்ட பாவமாக பார்க்க சிபி, நான் இருக்கிறேன் என்பதை போல் பார்த்தான். 

ஓ இவள் இந்த சிபியை விரும்புகிறாள் போல எப்படி மயக்கியாக இருக்கிறாள். நானும் தான் இருக்கிறேன் இவளை விட எந்த விதத்தில் குறைந்து விட்டேன். அந்த இன்பாவுக்காக நான் என்ன என்ன செய்து கொண்டு இருக்கிறேன் ஆனால் அவன் என்னை பார்க்கவே மாட்டேன் என்கிறான். இவள் யாரும் அறியாமல் இவன் தம்பி கூட சுற்றி கொண்டு அண்ணனை மயக்கி விட்டாளே.. என்று அவள் மூக்கு கோபத்தில் துடித்தது. கண்கள் எல்லாம் கொஞ்சம் சிவப்பாக மாரியது. 

இனியாழ் அந்த இடத்தை சுற்றி பார்க்க அனைவரும் சிபி, விவேகா இருவரை பற்றி தான் பேசி கொண்டு இருந்தனர். நான் தான் பேசு பொருளாக இருக்க வேண்டும் ஆனால் இவள் ஒரு மட்டமான ரத்தம் இவளை பற்றி பேசி கொண்டு இருக்கிறாக இந்த சிபி இவன் கண்ணுக்கு நான் தெரிய வில்லையா என்று ஆதங்க பட்டாள்.

அவள் இருக்கும் சூழலில் அவளால் அதற்கு மேல் பேச முடிய வில்லை. அவள் உண்மையில் வருத்தம் கொள்வது சிபிக்கு எதோ செய்ய அவன் மிஸ் இனியாழ் நான் சொல்வதை கேளுங்கள் இந்த மாறுதலுக்கு சில விதி முறை இருக்கு அது எல்லாம் பண்ண இது சரியான நேரம் இல்ல அதனால் தான் நான் இந்த முடிவு எடுத்தேன். 

அவள் வெற்று புன்னகை சிந்த அவன் தொடர்ந்தான். நீங்க உங்களுடைய போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வின் பண்ணுங்க என்று சொல்லி விட்டு அவன் நகர அனைவரும் சென்றனர்.

கவ்யா, இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா சோனா.. என்ன கவி… உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை அப்டின்னு சிபி சார் சொல்லாமல் சொல்லிட்டு போறாரு டி..

ச்ச ரொம்ப பாவம் இனியாழ் என்று அவர்கள் இருவரும் மேலும் கொளுத்தி போட்டனர். 

அங்கு உள்ள அனைவரும் சென்று விட அவள் மட்டும் அங்கேயே நின்றாள். சிபி விவேகாவை கொண்டு விட்டு இனியாழ தேடி வந்தான். அவனுக்கு மிகவும் பாவமாக இருந்தது. அவள் போட்டிக்கு செல்ல அதற்கு இன்னும் நேரம் இருந்தது. அருண், தாரணி, கோகுல் என இவர்கள் குழு வொர்க் ஷாப் எக்ஸ்போல இடத்தில் அவர்களின் கண்டு பிடிப்புகள் அதை விவரிக்க ஆரம்பித்தனர். 

இங்கே சிபி அவளை எல்லா இடங்களிலும் தேடினான். ஒரு இடத்தில அவள் மேக் அப் கலையாமல் அழுது கொண்டு இருக்க சிபி, இனியாழ்.. அவள் திரும்பி அவனை பார்த்து முறைத்து விட்டு நடக்க ஹே ஸ்டாப் இட் நான் பேசிட்டு இருக்கேன் உனக்கு அவ்ளோ திமிரா.. நீங்க எதுக்கு என் கிட்ட பேசணும் உங்க வேலையை நீங்க பாருங்க.. ஹே நீ செய்தது தப்பு

 இனியாழ், அப்போ அவள் செய்தது மட்டும் சரியா..  நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்.. சிபி, உனக்கு எதுக்கு பண்ணணும்.. ஏன்னா நீங்க எனக்கு ரிலேசன்.. சிபி, என்ன ரிளேசன்.. ம்ம் நீங்க சுபா அண்ணியோட தம்பி…சிபி, உங்களுக்கு இப்போ தான் நினைவு இருக்கா என் கிட்ட பேசியதே இல்லையே என்று இரு புருவம் உயர்த்தி கேட்க..  இன்று தான் அவள் கண்களுக்கு அவன் ஏனோ புதிதாக தெரிந்தான். அவளுக்கு எப்பொழுதும் தோன்றும் விவேகா கூட அவன் பேசுவது சுத்தமாக பிடிக்காது. இப்பொழுது தண்ணிளைக்கு வந்தவள். 

 அச்சோ உங்களுக்கு என்னை யார் என்று தெரியுமா.. இது என்ன கேள்வி.. இல்ல உங்களுக்கு எப்போவும் விவேகா தான பிடிக்கும் என்னை நீங்க பார்த்து சிரித்தது கூட இல்லயே என்று அவள் ஆதங்கத்தில் பேச அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

சிபி, இது காலேஜ் சோ வீடு இல்ல.. சரி என்று அவள் செல்ல ஹே நில்லு.. இது காலேஜ் வீடு இல்ல.. சிபி இதை கேட்டதும் சிரிப்பு வர அதை கட்டு படுத்தி கொண்டு உனக்கு விவேகாவை பிடிக்காது சரி தானே.. அவள் அவனை திரும்பி பார்க்க சிபி, அவளை நோக்கி வந்தான். அது உன் தனிப்பட்ட விஷயம் நான் அதை கேட்க மாட்டேன் இப்போ எல்லா முன்னாடி உன்னை கஷ்ட படுவது பொல் பேசி இருந்தால் என்னை மன்னித்து விடு அண்ட் ஆல் தி பெஸ்ட் என்று சொல்லி அவன் நகர.. 

அவள் எனக்கு எதுக்கு சொல்றீங்க உங்க லவ்வர்க்கு போய் சொல்லுங்க.. சிபி திடுக்கிட்டு திரும்பி பார்க்க.. அவள் அவனிடம் இருந்து உண்மை எதிர் பார்த்து இருந்தாள்.  அது யாரு எனக்கே தெரியாமல் எனக்கு லவ்வர்.. நடிக்காதிங்க அதான் விவேகா.. ஹே இது டூ மச்.. பொய் சொல்ல வேண்டாம். சிபி, உனக்கு என்ன அண்ட் இதுக்கு இவளோ ரியாக்ட் ஆக தேவை இல்லையே இனியாழ், அப்போ நீங்க அவளை லவ் பண்றீங்க உண்மையை ஒத்துக்கொங்க..

சிபி, உனக்கு என்ன நான் யாரை லவ் பண்ணா என்ன அவள் ரொம்ப நல்ல பொண்ணு தான்.. இதை கேட்டதும் அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவள் அவன் பேச்சு கண்டு கொள்ளாமல் நடக்க உனக்கு பொறாமையா இருக்கா.. எனக்கு எதுக்கு பொறாமை.. நீ எதுக்கு டென்ஷன் ஆகுற.. 

நான் நீங்க எனக்கு தெரிந்தவர் அதனால் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல. அப்போ உனக்கு நான் யாரை விரும்புகிறேன் அப்டின்னு தெரிய வேண்டாமா.. இது கேட்டதும் அவள் நின்றாள்.

சிபி, அது எனக்கே இன்னும் நிச்சயமா தெரியல ஆனால் கூடிய சீக்கிரத்துள் அந்த பொண்ணு கிட்ட சொல்ல போறேன் என்று சொல்லி கொண்டே அவள் முன்னால் சென்றவன் இனியாழ் கைகளில் தண்ணீர் பாட்டிலை கொடுத்து விட்டு ஒரு சின்ன சாரி சொல்லி விட்டு  மீண்டும் ஆல் தி பெஸ்ட் சொல்லி விட்டு அவளை பார்த்து மயக்கும் புன்னகை சிந்தி விட்டு சென்றான்.  நீ யார லவ் பண்ணா எனக்கு என்ன நான் இன்பாவை லவ் பண்றேன் என்று தனக்கு தானே பொய்யாக சொல்லி கொண்டு சென்றாள். 

அனைவரும் வெற்றியை நோக்கி ஓட தொடங்கினர்.‌ராஜ் குருவை கூட்டி வர சென்றான். அவன் விவேகா மேல் முழு நம்பிக்கை வைத்து இருந்தான். நிச்சயம் அவள் கலந்து கொண்டு இருக்க மாட்டாள். என்ற நினைப்பில் மற்ற போட்டிகளில் உள்ள மாணவர்களை வழி நடத்த சென்று இருந்தான். 

எதற்காக அவன் இப்படி செய்தான். உண்மையில் அந்த ஸ்டேட் லெவலில் வந்த வெற்றியாளர் பட்டியலில் விவேகா பெயர் இருந்தது. இந்த அளவுக்கு அவள் புத்தி சாலி அதுவும் தமிழ் வழி கல்வி தான் அதனால் அவள் மேல் மேலும் எப்படியும் அவளை தனக்கு சொந்தம் ஆக்கி கொள்ள எண்ணம்  கூடியது. அதுவும் அவள் இங்கே வந்தது அதுவும் அந்த இன்பா வந்ததை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை. 

இங்கே விவேகா புகுந்து விளையாடி கொண்டு இருந்தாள். சோனா, ஹே இதை நேற்றே நல்லா பதில் சொல்லி  விளையாடி இருக்கலாமே. அட போங்க அக்கா ஒரு திகில் வேணும் அப்போ தான் சுவாரஸ்யமா இருக்கும்.. என்று அவள் அந்த கேள்விகளில் கவனம் செலுத்தினாள். அவள் தேர்ந்து எடுத்த அனைத்து பிரிவுகளிலும் முழு மதிப்பெண் எடுக்க 

இங்கே இனியாளும் எதோ ஒரு உத்வேகத்தில் நன்றாக முன்னேறி இருந்தாள். அந்த அனைத்து போட்டியின் முடிவுகள் எல்லாம் மதியம் 3.00 மணிக்கு என அறிவிக்க பட்டது. அது வரை கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் போட்டி நடத்தும் அந்த குழு மட்டுமே அந்த இடத்தில் இருக்க வேண்டும் இங்கு கொடுக்க படும் முடிவுகள் எந்த ஒரு அரசியல் மற்றும் செல்வாக்கு தலையீடு இல்லாமல் வரும் அதனால் இந்த போட்டியின் முடிவுக்கு  அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் முக்கியமாக அந்த சாம்பியன் ஷிப் கப் எந்த காலேஜ் பெற போகிறது என்பது தான் ஹாட் டாபிக்.. 

 அந்த ஆடிடோரியத்தில் ஒவ்வொரு காலேஜாக அவர்களது குழுக்கலோடு இருக்க  விவேகா அவர்கள் கல்லூரி குழுக்கள் ஒன்றாக அமர்ந்து இருக்க விவேகா கடைசியில் ஒரு சேர் இழுத்து போட்டு இரு சேர் இழுத்து அதில் கால் வைத்து அவள் துப்பட்டாவை முகத்துக்கு மறைத்து உறங்க ஆரம்பிக்க.. 

சதீஷ்  விவேகா இருக்கும் இடத்துக்கு சென்றான். ஹலோ மேடம்.. விவேகா யார் என்று பார்க்க சதீஸ் இருக்க அவள் கொஞ்சம் புன்னகைத்து கொண்டே வா சதீஸ்.. நேற்று இருந்த விவேகா எனக்கு பிடிக்கல இன்னிக்கி தான் என் டார்லிங் விவேகா மாதிரி இருக்க.. 

அது கொஞ்சம் ஃபேமிலி பிராப்ளம் அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகி விட்டேன். சரி பட் இப்போ இந்த விவேகா தான் நல்லா இருக்கு இனி அழ வேண்டாம் சரியா.. ம்ம் நிச்சயமா.. சதீஸ், சரி நீ ரொம்ப சோர்வாக இருக்க மாதிரி இருக்கு நீ ரெஸ்ட் எடு விவேகா என்று அவன் சொல்லி கொண்டு இருக்க அப்பொழுது அவன் பின்னால் ஆதி நின்று கொண்டு இருந்தான். 

விவேகா, இல்ல சதீஸ் எனக்கு உன் கிட்ட பேசணும் போல் இருக்கு நான் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன்.. இதை கேட்டதும் ஆதி அவள் அருகில் வந்து காது பிடித்து எதுக்கு டி இப்படி எல்லாம் செய்து டார்ச்சர் பண்ற.. சதீஸ், டார்லிங் அவள் டார்லிங் என்று திரும்ப அவனை கூப்பிட ஆதி அவளின் வாயை பொத்தினன். சதீஸ் அருகில் வர விவேகா, சரி சரி நீ போ டார்லிங் நான் உனக்கு மெயில் பண்றேன் பேசுவோம் என்று சிரித்து கொண்டே சொல்ல அவன் ஆதியை முறைத்து கொண்டே சென்றான். 

சதீஸ், இவன் வந்து ஒட்டி கொண்டானா இனி பிரிய என்ன பேசவே வுட மாட்டான். 

ஆதி, கோபத்தில் அவனை முறைத்து கொண்டு இருக்க ஹே போடா என்று சதீஸ் அவனை எழனமாக பார்த்து விட்டு சென்றான். 

ஆதி அவள் முன் நிற்க விவேகா அவனிடம் எதுவும்  பேசாமல் அமைதியாக இருந்தாள். 

தொடரும்…. 

 Episode 185, 

ஆதி அவள் அருகில் வந்து காது பிடித்து எதுக்கு டி இப்படி எல்லாம் செய்து டார்ச்சர் பண்ற.. சதீஸ், டார்லிங் அவள் டார்லிங் என்று திரும்ப அவனை கூப்பிட ஆதி அவளின் வாயை பொத்தினன். சதீஸ் அருகில் வர விவேகா, சரி சரி நீ போ டார்லிங் நான் உனக்கு மெயில் பண்றேன் பேசுவோம் என்று சிரித்து கொண்டே சொல்ல அவன் ஆதியை முறைத்து கொண்டே சென்றான். 

விவேகா மீண்டும் பழைய படி துப்பட்டாவை போர்த்தி கொண்டு தூங்க ஆரம்பிக்க ஆதி, ஹே ரொம்ப ஓவரா போற.. யாரு நானா இல்ல நீங்களா.. என்ன டி மாமாவுக்கு மரியாதை பலமா இருக்கு  என்று அவள் காலை எடுத்து ஆதி  கீழே போட்டு விட்டு அந்த சேறை இழுத்து போட்டு அவன் உட்கார.. ஹே ஒழுங்கா போயிடு அதான் உனக்கு அவள் இருக்கிறாளே அந்த ராட்சஸி கூட போ.. என்று மீண்டும் போர்த்தி கொண்டு தூங்க

ஆதி, அவன் தான இதுக்கு காரணம்.. யாரு.. அதான் உன் அத்தான்.. விவேகா கண்களை மூடி கொள்ள.. ஹே தெரியும் டி அவன் தான் இதுக்கு காரணமா இருப்பான் எப்டியும் உன் மனசு குரங்கு மாதிரி தாவும் அதான் அது சீக்கிரமா நடக்கணும் அப்டின்னு தான் உன் கிட்ட பேசல.. 

விவேகா, ஹே நீ பொய் சொல்ற இப்போ நீ எந்நேரமும் அவள் கூட தான் பேசிட்டு இருக்க போ போய் அவள் கூட ஒட்டிக்கோ.. ஆதி, நிஜமா போகட்டுமா.. போ போ எழுந்து போ.. ஒரு சில நிமிடம் எந்த சத்தமும் வராமல் இருப்பதை பார்த்து அவள் துப்பட்டாவை கொஞ்சம் விலக்கி பார்க்க…

ஆதி சிரித்து கொண்டே  சரி இனி உன்னை விட்டு போக மாட்டேன் போதுமா..

விவேகா கண்களில் கண்ணீர் கோர்க்க அதை மறைத்து இப்போ இப்போவெல்லாம் நீ ரொம்ப மாறிட்ட, எல்லாம் அவளால் தானே, இன்னும் கொஞ்ச நாளில் அவள் வீட்டுக்கு வந்தால் சுத்தமா மறந்து விடுவ ,அண்ட் உன் அக்கா என் அண்ணா வை மயக்கி உங்க வீட்டுக்கு கூட்டி போய் வைத்து கொள்வ அப்புறம் மாமச்சி, அத்தை யாரையும் இங்கே விட மாட்ட நானும் அம்மா வும் மட்டும் தனியா கஷ்டபடுவோம்.. இது எல்லாம் அவளால் தானே.. ஆதி அவளை அதிர்ச்சியாக பார்த்து எப்படி டி இப்படி எல்லாம் யோசிக்க தோணுது விவேகா உனக்கு எதுவும் பிரச்சினையா உன் கற்பனை குதிரை தறி கெட்டு ஓடுது…  அதி மேலே இவளோ வன்மமா!அவளுக்கு என்னை விட உன்னை தானே பிடிக்கும்… விவேகா, நடிக்காத டா இத்தனை நாள் என் கிட்ட பேசாமல் இருந்து இருக்க உனக்கு எவ்ளோ தைரியம்…  

ஆதி சலித்து கொண்டே சத்தியமா சான்சே இல்ல டி ரெண்டு நாள் கூட முழுசா ஆகல விவேகா முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு ரெண்டு நாள் சும்மாவா… ஆதி மனதில் உன்னை எப்படி தான் இன்பா சார் சமாளிக்க போராரோ… சரி சரி விடு என் சின்ன குட்டி உனக்காக நான் தேன் மிட்டாய்  ஸ்பெஷலா வாங்கி வச்சு இருக்கேன் என் செல்லம் ஆ காட்டு..

இது மட்டும் தானா இல்ல அவளுக்கு ஆரஞ்சு  மிட்டாய் கூட வாங்கி வச்சு இருக்கியா… ஆதி, டென்ஷன் பண்ணாத நான் அவள இன்னும் லவ் பண்ணவே இல்ல… 

விவேகா கண்களை துடைத்து கொண்டு பார்க்க ஆதி இனி தேவை இல்லாமல் நீ அழ கூடாது… 

அது நீ நடந்து கொள்வதில் தான் இருக்கு.. சரி இந்தா ஆ காட்டு.. ம்ம் என்று அவள் வாங்கி கொள்ள.. ஆதி, எனக்கு… விவேகா அவனுக்கு ஊட்டி விட… வெண்பா அவர்கள் கொஞ்சி கொண்டு இருப்பதை பார்க்க.. விவேகா, என்ன பா இங்கே யாருக்கோ பற்றி எரியுது போல.. ஆதி கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசை டா.. சாரி தேன் மிட்டாய் ஊட்டு.. 

ஆதி சரி ஆ காட்டு என்று ஊட்டி விட்டான். அவள் வெண்பா வுக்கு பழிப்பு காட்டி விட்டு சாப்பிட அவள் முறைத்து கொண்டே சென்றாள். அதற்குள் மணி 2.30 என காட்ட அனைவரும் அந்த இடத்தில் கூடினர். அனைத்து காலேஜ் பேராசிரியர்கள் என அனைவரும் வந்து இருக்க சிபி, தீபா, அர்ஜுன்.. என இன்னும் ஆசிரியர்கள் அனைவரும் அந்த முடிவுக்கு ஒரு வித பதட்டத்துடன் காத்து கொண்டு இருக்க.. 

மொத்தம் 10போட்டிகள் பாடம் வாரியாக ஆனால்  ஒரு கல்லூரி 6போட்டிகளில் தான் பங்கு கொள்ள வேண்டும். ஆறு போட்டிகள் அதில் விவேகா, அருண், ஆதி பங்கு கொண்ட நான்கு போட்டிகளில் முதல் பரிசு கவ்யா, சதீஸ் பங்கு கொண்ட போட்டிகள் இரண்டாம் பரிசு.. இதில் மிகவும் முக்கியமான ஒன்று அந்த பொறியியல் வொர்க் ஷாப் அதில் அருண் சிறப்பாக திறமையை காட்டி இருந்தான். Spr காலேஜ் மாணவர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்க இந்த முடிவுகளை அந்த தேர்வு குழு அறிவிக்க தொடங்கியது. 

குரு, ராஜ், தேஜு, மெர்சி, மனோஜ், என காலேஜ் ஆசிரியர்கள் முடிவுகளுக்கு காத்து கொண்டு இருக்க ஒவ்வொரு துறையில் இருந்தும் முடிவுகள் சொல்ல பட்டது. முடிவுகள் வெளியிட குரு முகம் மாறியது. அவன் அங்கு இருக்கும் ஊழியர்களை கொல்லும் பார்வை பார்க்க அதில் தானாக வந்து சிக்கியது ராஜ் தான் அவன் துளியும் இதை எதிர் பார்க்க வில்லை. 

விவேகா படிக்கும் காலேஜ் தான் முதலில் வந்ததை அறிவிக்க அடுத்த நொடி குரு எழுந்து வெளியே செல்ல ராஜ் அவனிடம் கெஞ்சி கொண்டே பின்னால் சென்றான். சார் இது எவ்ளோ ஸ்ட்றிக்ட் காம்படீசன் இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. அவன் வெளியே வந்து அவன் கழுத்தில் கைகளை வைத்து தூக்க ராஜ் ஒரு நிமிடம் திணறி போனான். ச.. சார்.. என்று திக்கி திணற இன்பா  எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் நடந்து வந்தான். 

பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அது இன்பா தான் இருவருக்கும் கோபம் கொழுந்து விட்டு எரிய அதில் குளிர் காயவே இன்பா வந்து இருந்தான். ஹாய் குரு சார் என்னோட டிம்பிள் ரெண்டும் வலிக்குது.. அவன் ராஜை ஒரு பார்வை பார்க்க அவன் அங்கு இருந்து மெதுவாக நகரினதான். 

 டேய் ***  இங்கே என்ன டா பண்ற.. காது கூசுது குரு சார்.. டேய் என்று ஒரு அடி முன்னால் வர இன்பா, பாருங்க  நீங்க தானே சொன்னீங்க போலீஸ் வேலையை விட்டு காலேஜ்ல பாடம் நடத்தும் வேலையை பாரு.. குரு அவனை கொல்லும் பார்வை பார்க்க இன்பா, அப்படி பார்க்க வேண்டாம் நான் நீங்க சொன்னத தான் செய்து இருக்கேன். என்று கொஞ்சம் சிரித்து கொண்டே சொன்னவன் இப்பொழுது முகம் இறுகி  உனக்கு எதுவும் ஒரு வகையில் பிரச்னை வந்து கிட்டே இருக்கும் டா அண்ட் இப்போ எனக்கு பயந்து தான அந்த dna ரிசர்ச் இந்த குழந்தை விஷயம் எல்லாம் நிறுத்தி வச்சு இருக்க… 

குரு, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல இப்போ கூட நடந்து கொண்டு தான் இருக்கு.. இன்பா ஒரு புன்னகை சிந்தி ம்ம் நான் நம்பி விட்டேன். குரு, டேய் என்னையே நீ சீண்டி பார்த்து விட்ட தானே.. ம்ம் ஆமா டா இனி உன் அடுத்த கிறுக்கு தனமான வேலைக்கு நான் வெயிட்டிங் மிஸ்டர் குரு பிரகாஷ் ரெட்டி என்று சொல்லி விட்டு அவன் நகர அப்பொழுது கவ்யா சிரித்து கொண்டே இன்பாவை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். இதை எல்லாம் மறந்து இருந்து ராஜ் அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தான். 

குரு அவளை தான் பார்த்தான். ஓ இவளும் இங்கு தான் இருக்கிறாளா.. என்று நினைத்தவன். அங்கு வந்து இருக்கும் அவைவரின் விவரன்களை சேகரிக்க கட்டளை யிட்டான். ஹே ராகவ் நான் வின் பண்ணி விட்டேன். என்று அவன் வழியை மறிக்க அவன் அவளை முறைத்தான். அவன் எந்த பக்கம் அடி எடுத்து வைத்தாலும் இவள் வர கவ்யா என்னை டென்ஷன் பண்ணாதீங்க..சுற்றி நிறைய பேர் இருக்காங்க அதனால் தான் நான் அமைதியா இருக்கேன். 

ஹே நான் வின் பண்ணி இருக்கேன் ட்ரீட் கிடையாதா என்று ஒட்ட வர அவன் எதையோ யோசித்தான். ம்ம் வச்சுட்டா போச்சு.. நிச்சயம் இன்னிக்கி ட்ரீட் இருக்கு.. என்று சொல்ல சோனா அங்கே வந்தாள். ஹே கேர்ல் உன் பிரென்ட் கொஞ்சம் கான்சியஸ்ல இல்ல கொஞ்சம் கை பிடித்து கூட்டி போ.. என்று சொல்லி கொண்டே அவன் வேக நடையிட கவ்யா டேய் இன்னிக்கி ட்ரீட் வைக்கிற… என்று அவள் கத்தி சொல்ல 

இன்பா தன் போனில் சிபிக்கு அழைத்தனர்.

இங்கு உள்ளே போட்டியின் முடிவுகளை சொல்ல பத்து போட்டிகளின் முடிவை சொல்லி முடித்து  விட்டு

இறுதியில் ppt presentation பற்றி ஆரம்பிக்க விவேகா வின் கண்கள் அருணை தேடியது அதே போல் தான் அருண்.. அங்கு இருக்கும் யாரும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்பொழுது தான் இன்பா அந்த இடத்தின் நுழைவு வாயிலில் நுழைந்தான். 

ஆம் விவேகா  ஒரு போட்டியில் கலந்து கொள்ள வில்லை. இரண்டு போட்டியில் இருந்தாள்.

அன்று… 

இனியாழ் பேசிய பேச்சில் அவள் மனம் உடைந்து  அழுது கொண்டு  இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும் என்று எழுந்து செல்லும் நேரம் திடீர் என்று அவள் செல்லும் வழியில் அருண் வந்தான். 

டியர் என்ன ஆச்சு.. ஒன்னும் இல்ல சீனியர்..  ஹே எதோ பிரச்னை இருக்கு ஆனால் என் கிட்ட சொல்ல மாட்டின்ற.. அவள் அழுகை மட்டுமே பதிலாக இருந்தது. பிளீஸ் அழாத விவேகா… அவள் விசும்பி கொண்டு இருக்க அருண், ஹே அவள் யார் உன் இடத்தை பிடிக்க இந்த போட்டியில் நான் முதலாம் ஆண்டில் இருந்து கலந்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் எனக்கு அத்து படி அண்ட் உனக்கு ஒரு விஷயம் சொல்லவா.. 

அவள் வழியும் கண்களோடு அவனை பார்க்க இங்கே  ppt presentation submission இருக்கு அதில் யாரு வேணாலும் கலந்து கொள்ளலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. என்ன சொல்றீங்க ம்ம் ஆமா விவேகா இது உனக்கு முதல் தடவை அதனால் பதட்டம் பயம் இருப்பது சாதரணம் தான் ஆனால் இங்கே கொஞ்சம் நம்ம அறிவை யூஸ் பண்ணனும்.. 

என்ன சொல்றீங்க.. 

இப்போ நீ க்விஸ்ல கலந்து கொண்டால் தான் கொஞ்சம்  டைமர் இருக்கும் மிகவும் பதட்டமா இருக்கும் எக்ஸ்போ,ppt presentation எல்லாம் நம்ப அறிவை வைத்து சொல்வது அண்ட் திரைமையா கையாள்வது.

விவேகா, இப்போ என்ன சொல்ல வரீங்க.. நீ ppt ல கலந்து கொள் அது இந்த போட்டியின் முக்கிய விஷயம் எக்ஸ்போ, ppt இது ரெண்டுள யார் முதலில் வராங்களோ அதை மாதிரி cd செய்து அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவாங்க நிறைய பெனிபிட் இருக்கு.. 

விவேகா, இப்போ எப்படி கலந்து கொள்வது. நான் உனக்கு அந்த போட்டியின் id ரெடி பண்றேன் நீ அதுக்கு உன்னை தயார் படுத்து என்று சொல்லி அவளை ஊக்க படுத்தி விட்டு சென்றான். 

இப்பொழுது மேடையில் விவேகாவின் பெயர் காலேஜ் என அனைத்தும் சொல்லி அவள் முதலில் தேர்வு செய்த விஷயத்தை சொல்ல ஆதி, சிபி, தீபா, அர்ஜுன், இனியாழ், சதீஸ், கவ்யா, வெண்பா, சோனா இறுதியில் இன்பா என அனைவரும் அதிர்ச்சி ஆகி பார்க்க அருணும் விவேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்ள

 அருண், டியர் மேலே போய் அந்த மெடல், சர்ட்டிஃபிகேட்டு எல்லாம் வாங்கிட்டு  கெத்தா வா என்று சொல்ல.. 

அவள் சந்தோஷமாக மேலே சென்று அதை வாங்கி கொண்டு கீழே வந்தாள். வந்தவள் நேராக அருண் கிட்ட கொடுக்க அவன் அவள் கைகளை குலுக்கினான். இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இங்கே இருவருக்கு இதை பார்த்து தாங்க முடியல ஒன்று இன்பா அந்த இன்னொண்டரு ஆதி தான்.. சைக்கிள் கேப்பில் எல்லாம் செய்து விட்டானே.. 

இனியாழ் சிபி யை முறைத்து கொண்டு இருந்தாள். அவள் அவன் அருகில் சென்று எப்படி நடந்தது நீங்க ஒரு பொய்காரண் என்னை நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணாமல் அவளுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.. இல்ல இது எனக்கு தெரியாது இனியா என்னை நம்பு.. அவள் இரண்டு போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறாள். அதுவும் ppt இது எல்லாம் உங்க வேலை தானே.. என்று கோபத்தில் அவனிடம் சண்டைகிட்டு அங்கு இருந்து செல்ல 

சிபி, அய்யோ இவள் இப்படி ஜலசியா இருக்காளே.. என்று நினைத்து கொண்டு அவன் விவேகாவை நோக்கி செல்ல அதற்குள் அந்த தேர்வு குழு அந்த டிராஃப்பிய வாங்க வர சொல்ல சிபியின் குழுவை மேடைக்கு அழைக்க அங்கு கூடி இருந்த மற்ற கல்லூரி மாணவர்கள் கைகளை தட்ட இவர்கள் மேலே ஏறினர். ஒரு நிமிடம்!

ஒரு நிமிடம்!…

என்ன ஆச்சு, எல்லாரும் வந்து விட்டார்களா.. என்று சிபி அவன் மாணவ குழு அனைவரையும் தேடினான். ஒரு ஆள குறைந்தது. 

இதுல ஒரு ஆள் மிஸ்ஸிங் யார் அது.. 

அது நம்ம விவேகா தான்.. பரிசு அவர்களது காலேஜ்க்கு தான் கிடைத்தது என்று தெரிந்த அடுத்த நொடி மாணவிகள் பயன் படுத்தும் ரெஸ்ட் ரூம் பக்கம் இருக்கும் எக்சிட் வழியாக ஆடிடரியத்தில் இருந்து வெளியே வந்தாள். 

சிபி அனைத்து மாணவர்களும் இருக்கிறார்களா என்று பார்த்து கொண்டே இன்பாவுக்கி கால் செய்தான். சீக்கிரம் இங்கே வாடா.. இன்பா அவளை தேடி கொண்டே அந்த மேடைக்கு அருகில் வர அவள் அங்கு இல்லை. சிபி, ஹே மேலே வா.. இல்ல நீயே வாங்கு என்று சொல்ல அதை spr காலேஜ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கஷ்ட பட்டு பார்த்து கொண்டு இருந்தனர். இன்பா ஒரு பார்வை குருவை பார்த்தான்.  அங்கு இருக்கும் அனைவருக்கும்  தெரியும் இரு கல்லூரிக்கு இடையில்  தான் போட்டி அதிகம் அது spr college மற்றொன்று விவேகா படிக்கும் காலேஜ். 

சிபி, அருண், வெண்பா, ஆதி என அனைவரும் விவேகாவை தேட அவள் அங்கு இல்லை. இனியாளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவள் சிரித்து கொண்டே மேடையில் போஸ் கொடுத்து விட்டு கீழே வந்தனர். 

சிபி, வெண்பா எங்கே அவள்.. தெரியல சார்..

இன்பாவின் கண்களும் அவளை தான் தேடியது. எதுவும் தெரியாதது போல் இன்பா, யாரை தெடுர

 ஹே விவேகா தான் டா..

இன்பா, இவள் பெரிய தியாகி மாதிரி சீன் போடுறா இவள் இல்லை என்றால் வின் பண்ணி இருக்க முடியாதோ திமிர் பிடித்தவ என்று அவன் வாய் மொழியாக சொல்ல.. 

சிபி அவனை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தான். இந்த ட்ராப்பி கிடைக்க முக்கிய காரணம் அருண், விவேகா தான் டா.. அவன் முறைத்து பார்க்க முறைத்தாலும் அது தான் உண்மை அந்த எக்ஸ்போ ல தான் நமக்கு அதிக பாயிண்ட் கிடைச்சது அண்ட் விவேகா கலந்து கொண்ட அந்த ppt சாய்ஸ்ல சமமா மூன்று போட்டியில் தான் முதல் இடம் அதை ஃபுல்ஃபில் பண்ண விவேகா கெட்டதிளும் நல்லது பண்ணி இருக்கா டா.. இல்ல spr காலேஜ் கு இந்த ட்ராபி போய் இருக்கும். ஜஸ்ட் ல தான் நமக்கு கிடைத்ததும் ரொம்ப டஃப் காம்பிடீசன் ராகவ்…

இன்பா எதுவும் பேச வில்லை இது எல்லாம் அவனுக்கே தெரியுமே.. அதனால் அவன் அறையை நோக்கி நடக்க மாணவர்கள் எல்லாம் இந்த வெற்றியை கொண்டாட ரெஸ்டாரன்ட் பக்கம் சென்றனர். ஆதி, வெண்பா இருவரும் விவேகாவை அழைத்து செல்ல சென்றனர்.

அடுத்த சந்திப்பு 

ராஜ் – இன்பா தான்… இன்பா அவனை பார்த்ததும் நேராக அவன் அருகில் சென்று ஒரே ஒரு வாக்கியம் மட்டும் தான் சொன்னான். அதை கேட்டதும் ராஜ் முகம் அவமானத்தில் மாரியது.

தொடரும்…. 

Episode 186,

இன்பா நடந்து கொண்டே கிருஷ்ணனுக்கு போன் செய்து இந்த  போட்டியின் வெற்றியை சொல்ல கால் செய்தான்.  அவனுக்கு எதிரே ராஜ் வந்து கொண்டு இருந்தான். ராஜ் இன்பா இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ராஜ் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அவமானதில் திணற… இன்பா அவனை பார்த்து புன்னகை மட்டுமே செய்தான். அது அவனுக்கு இன்னும் அவமானம் ஆகி போனது.

இன்பா அவனை தாண்டி செல்லும் முன் இப்போ பதில் தெரிந்து இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன் மிஸ்டர் தேவ ராஜ்.. உங்க கிட்ட வலவலனு பேச என்னால் முடியாது லாட் ஆப் எனர்ஜி வேஸ்ட் என்னைக்கும் அவள் எனக்கு தான், நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ அவளோட முற்று புள்ளி அது நான் தான்..

புரியலயா அவள் v. விவேகா தான் அதில் இனி இன்ப ராகவன் சேர்ந்த ஸீன் இப்போ உங்களுக்கு கண் கூடாக தெரிந்து இருக்கும். அண்ட் இறுதியாக அவள் என்னுடையள். என்று சொல்லி விட்டு சென்றான். 

அவன் அறைக்கு சென்றதும் அவன் தாத்தாவுக்கு போன் செய்ய அதற்கு மெண்ணவே செய்திகளில் அவர்கள் வெற்றி பெற்ற விஷயம் வர தொடங்கியது. அவர்கள் காலேஜ்க்கு பாராட்டுகள் வாழ்த்துகள் வந்து குவிய தொடங்கியது. அவன் எண்ணத்தில் அவள் தான் இருந்தாள். 

இங்கே விவேகா அவள் அறைக்கு வந்ததும் படுத்து உறங்க ஆரம்பிக்க ஆதி,வெண்பா அவளிடம் இருக்கும் கீ வைத்து திறக்க அவள் படுத்து கொண்டு இருந்தாள். ஆதி, விவேகா எதுக்கு டி என் கிட்ட இருந்து மறைத்த.. என்ன.. ஹே அந்த அருண் அந்த அருண் என்று அவன் உதடு துடிக்க பேச

விவேகா, நீ என்னை பற்றி இவள் கிட்ட பேசியதுக்கு பதிலா என் கிட்ட பேசி இருந்தால் நான் சொல்லி இருப்பேன். ஆனால் என் சீனியர் தான் எனக்கு ஹெல்ப் பண்ணி இந்த மெடல் இந்த நேசனல் லெவல் வெற்றி எள்ளர்ததுகும் காரணம் அருண் தான் என்று சொல்ல அதற்கு மேல் ஆதியால் அதை கேட்டு கொண்டு இருக்க முடியாமல் வேகமாக அவன் தவறு செய்து விட்டோமோ..  என்று நினைத்து கொண்டு சென்று விட்டான். 

வெண்பா, ஹே உன்னால் பார் அவன் கோபமாக செல்கிறான். ஹே உனக்கு என்ன டி எனக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும்.. இவளோ பேசுற சரி இல்ல விவேகா இரு நான் இன்பா அண்ணா கிட்ட சொல்றேன். இந்த வார்த்தையை கேட்டதும் அவள் காதுகளில் கைகளை வைத்து அடைத்து கொள்ள ஹே என்ன டி செய்யுற

விவேகா, என் கிட்ட யாரு பற்றியும் பேச வேண்டாம்.. வெண்பா, என்ன ஆச்சு இந்த ஆதி கிட்ட பேசுற என் அண்ணா உன்னை என்ன செய்தான். விவேகா ஒரு தலையணை எடுத்து அவள் மேல் வீசியவள்  என் கிட்ட யார் பற்றியும் பேசாதே என்று வேறு புறம் திரும்பி கொண்டாள். எனக்கு ஆதியும் ஒன்னு தான் அந்த பப்பி நாயும் ஒன்று தான்  என்று சொல்லி அவள் திரும்பி கொண்டாள். 

3.30 மணிக்கு அவள் தூங்க ஆரம்பிக்க வெண்பா, வெளியே சென்று விட்டாள். கிட்ட தட்ட இரவு முழுவதும் தூங்காமல் இருந்தது அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இன்று தான் நிம்மதியாக தூங்குகிறாள். 

 மாலை 6.45 இருக்கும் மாணவர்கள் அனைவரும் கூடி இருக்கும் இடத்துக்கு  இன்பா வர அங்கே அவள் இல்லை. அவன்  அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே இருக்க

வெண்பா, அண்ணா என்ன தேடுகிறாய்.. 

அவள் எங்கே?

அவள் ரூமில்  தூங்கிட்டு இருக்கா.. சரி என்று அவன் திரும்ப இன்னொரு முக்கிய உளவு செய்தி.. 

என்ன? 

அவள் உன் மேல் செம்ம செம்ம கோபத்தில் இருக்கிறாள். ஜாக்கிரதை..

இன்பா எதையோ யோசித்தவனாய் அப்படியே நின்றான். 

இன்பா நடந்து கொண்டே கிருஷ்ணனுக்கு போன் செய்து இந்த வெற்றியை சொல்ல எடுக்க அவனுக்கு எதிரே ராஜ் வந்து கொண்டு இருந்தான். ராஜ் இன்பா இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ராஜ் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அவமானதில் திணற… இன்பா அவனை பார்த்து புன்னகை மட்டுமே செய்தான். அது அவனுக்கு இன்னும் அவமானம் ஆகி போனது.

இன்பா அவனை தாண்டி செல்லும் முன் இப்போ பதில் தெரிந்து இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன் மிஸ்டர் தேவ ராஜ்.. உங்க கிட்ட வலவலனு பேச என்னால் முடியாது லாட் ஆப் எனர்ஜி வேஸ்ட் என்னைக்கும் அவள் எனக்கு தான், நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ அவளோட முற்று புள்ளி அது நான் தான்..

புரியலயா அவள் விவேகா தான் உன் மாமா பொன்னு தான் ஆனால் அதில் இனி இன்ப ராகவன் சேர்ந்த ஸ்ஸீன் இப்போ உங்களுக்கு கண் கூட தெரிந்து இருக்கும். அண்ட் இறுதியாக அவள் என்னுடையள். என்று சொல்லி விட்டு சென்றான். 

அவன் அறைக்கு சென்றதும் அவன் தாத்தாவுக்கு போன் செய்ய அதற்கு மெண்ணவே செய்திகளில் அவர்கள் வெற்றி பெற்ற விஷயம் வர தொடங்கியது. அவர்கள் காலேஜ்க்கு பாராட்டுகள் வாழ்த்துகள் வந்து குவிய தொடங்கியது. அவன் எண்ணத்தில் அவள் தான் இருந்தாள். 

இங்கே விவேகா அவள் அறைக்கு வந்ததும் படுத்து உறங்க ஆரம்பிக்க ஆதி,வெண்பா அவளிடம் இருக்கும் கீ வைத்து திறக்க அவள் படுத்து கொண்டு இருந்தாள். ஆதி, விவேகா எதுக்கு டி என் கிட்ட இருந்து மறைத்த.. என்ன.. ஹே அந்த அருண் அந்த அருண் என்று அவன் உதடு துடிக்க பேச

விவேகா, நீ என்னை பற்றி இவள் கிட்ட பேசியதுக்கு பதிலா என் கிட்ட பேசி இருந்தால் நான் சொல்லி இருப்பேன். ஆனால் என் சீனியர் தான் எனக்கு ஹெல்ப் பண்ணி இந்த மெடல் இந்த நேசனல் லெவல் வெற்றி எள்ளர்ததுகும் காரணம் அருண் தான் என்று சொல்ல அதற்கு மேல் ஆதியால் அதை கேட்டு கொண்டு இருக்க முடியாமல் வேகமாக அவன் தவறு செய்து விட்டோமோ..  என்று நினைத்து கொண்டு சென்று விட்டான். 

வெண்பா, ஹே உன்னால் பார் அவன் கோபமாக செல்கிறான். ஹே உனக்கு என்ன டி எனக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும்.. இவளோ பேசுற சரி இல்ல விவேகா இரு நான் இன்பா அண்ணா கிட்ட சொல்றேன். இந்த வார்த்தையை கேட்டதும் அவள் காதுகளில் கைகளை வைத்து அடைத்து கொள்ள ஹே என்ன டி செய்யுற

விவேகா, என் கிட்ட யாரு பற்றியும் பேச வேண்டாம்.. வெண்பா, என்ன ஆச்சு இந்த ஆதி கிட்ட பேசுற என் அண்ணா உன்னை என்ன செய்தான். விவேகா ஒரு தலையணை எடுத்து அவள் மேல் வீசியவள்  என் கிட்ட யார் பற்றியும் பேசாதே என்று வேறு புறம் திரும்பி கொண்டாள். எனக்கு ஆதியும் ஒன்னு தான் அந்த பப்பி நாயும் ஒன்று தான்  என்று சொல்லி அவள் திரும்பி கொண்டாள். 

3.30 மணிக்கு அவள் தூங்க ஆரம்பிக்க வெண்பா, வெளியே சென்று விட்டாள். கிட்ட தட்ட இரவு முழுவதும் தூங்காமல் இருந்தது அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இன்று தான் நிம்மதியாக தூங்குகிறாள். 

மாலை 6.45 இருக்கும் மாணவர்கள் அனைவரும் கூடி இருக்கும் இடத்துக்கு  இன்பா வர அங்கே அவள் இல்லை. அவன்  அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே இருக்க

வெண்பா, அண்ணா என்ன தேடுகிறாய்.. 

அவள் எங்கே?

அவள் ரூமில்  தூங்கிட்டு இருக்கா.. சரி என்று அவன் திரும்ப இன்னொரு முக்கிய உளவு செய்தி.. 

என்ன? 

அவள் உன் மேல் செம்ம செம்ம கோபத்தில் இருக்கிறாள். ஜாக்கிரதை..

இன்பா எதையோ யோசித்தவனாய் அப்படியே நின்றான். 

வெண்பா, அண்ணா ஒரு நிமிடம் இரு நான் போய் அவளை பார்த்து விட்டு வருகிறேன். 

உனக்கு எதுக்கு சிரமம்… இல்ல இல்ல அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல இரு வருகிறேன் என்று சொல்லி அவள் வேகமாக அறைக்கு ஓடினாள். 

இன்பா அருகில் உள்ள சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு இருக்க ஆதி ஒரு கப் அண்ட் சாசரில் ஒரு ஸ்பூன் கொண்டு டீயை கிண்டி கொண்டு இருந்தான்.

அவனுக்கு இன்று நடந்தது மனதில் எதோ கனத்து கிடந்தது. அவளை தனியாக விட்டு இருக்கிறோம். எவனோ ஒருவன் அவளுக்கு உதவி செய்து இருக்கிறான். என்று மனம் எல்லாம் ரணமாக இருந்தது. 

இன்னுமா அது ஆற வில்லை.. அவன் திரும்ப அங்கே இன்பா  இவனை ஒரு பார்வை பார்த்தான். 

ஆதி எழுந்து நின்று வணக்கம் சொல்ல சிட் டவ்ன்.. ஆதி தன்னை சரி செய்து கொண்டு அமர…

அவன், உன் கிட்ட பேசி விட்டாளா ஆதித்யா.. இல்ல சார் இப்போ எதோ மாதிரி இருக்கிறாள். என்னை யாரோ ஒருவர் போல் பார்க்கிறாள்.  எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் தவறு செய்து விட்டேன் அந்த அருண் பெல்லோ சைக்கிள் கேப்பில் ஹெல்ப் பண்ணி விட்டான். என்று மேஜையில் ஒரு குத்து விட 

இன்பாவுக்கு ஆதியிடன் அவள் பேசாமல் இருப்பது சந்தோஷமாக இருந்தாலும் அந்த அருண் நடுவில் வந்தது கோபத்தை ஏற்படுத்தியது. ஆதி தயக்கமாக சார் நான் உங்க தம்பியை பற்றி தெரியாமல் சொல்லி விட்டேன்.. 

இன்பா, யூ… எல்லாம் உன்னால் தான் டா..

ச சார்..

நீ அவள் கூடவே இருக்க வேண்டியது தானே இப்போ உன்னால் தாம் அந்த அருண் ஹீரோ ஆகி விட்டான்.. நான் என்னை வில்லன் ரேன்ஜிக்கு பார்க்கிறாள்.  இன்பா இப்படி பேசியதும் ஆதிக்கு ஒரு பக்கம் ஆச்சரியம் சிரிப்பு என இரண்டுமே வர சார் என்ன சொல்றீங்க.. 

அவன் தலையை கோதி கொண்டே என்னத்தை சொல்ல இப்போ நான் அவளுக்கு கெட்டவன் ஆகி விட்டேன். சார் என்னையும் அப்படி தான் பார்க்கிறாள். என்று அவர்கள் பேசி கொண்டு இருக்க வெண்பா வந்தாள். 

 என்ன சொல்றா! அவள் வரவில்லையா… வெண்பா அவன் அருகில் வந்து அமர்ந்து சுற்றியும் பார்த்து கொண்டே சொல்ல தொடங்கினாள். 

அவள் இன்பா கிட்ட பேசி விட்டு விவேகா வை பார்க்க சென்றாள். கதவு தட்டப்பட்டது ஆனால் திறக்க வில்லை ரொம்ப நேரம் தட்டியும் திறக்காமல் இருக்க வெண்பா அவளிடம் இருக்கும் சாவியை கொண்டு துறந்து உள்ளே செல்ல அங்கே இரண்டு கால்களையும் இஷ்டத்துக்கு ஒரபக்கம் தொங்க போட்டு கொண்டு குறட்டை விட்டு விவேகா  தூங்கி கொண்டு இருந்தாள்.

வெண்பா அவள் அருகில் சென்று விவேகா! விவேகா! எழு டி.. அவளிடம் துளி கூட அசைவு இல்லை.. ஹே எழு சாப்பிட போலாம் உன் மேல எல்லாரும் செம்ம காண்டா இருக்காங்க.. அப்பொழுதும் அசையாமல் இருக்க வெண்பா அவள் போர்த்தி இருக்கும் போர்வைய உருவி விட கோபத்தில் எருமை மாடே இப்போ உனக்கு என்ன டி வேண்டும் என்னை நிம்தியாவே இருக்க விட மாட்டீங்களா… 

வெண்பா, ஹே என்ன விவேகா இப்படி சொல்லிட்ட … விவேகா மீண்டும் அவளிடம் இருந்து போர்வையை உருவி போர்த்தி கொண்டு தூங்க ஆரம்பிக்க ஹே வா விவேகா நீ இல்லாமல் எனக்கு  போர் அடிக்குது.. என்னால் வர முடியாது போ.. வெண்பா, நிறைய ஐட்டம் எல்லாம் சாப்பிட இருக்கு நீ ஒன்னும் வர வேண்டாம் நான் ஜாலியா ஆதி கூட  என்று அவள் ஆரம்பிக்க இதை கேட்டதும் விவேகா முளித்தாள்.  வெண்பா, ம்ம் நான் வெஜ் எல்லாம் இருக்கு இன்பா அண்ணா கூட சாப்பிட போறேன்.. என்று சொல்லி விட்டு அவளை பார்க்க திறந்து இருந்த போர்வையை மீண்டும் மூடி கொண்டாள். 

வெண்பா ஆதி பற்றி சொன்ன விஷயம் மட்டும் தவிர்த்து அவன் கிட்ட கூறினாள். அண்ணா அவள் மறுபடியும் இழுத்து போர்த்தி கொண்டு தூங்குகிறாள்.

என்று சொல்ல  இன்பா சரி அதற்கு மேல் என்ன பேச என்று தெரிய வில்லை. அவன்  எழுந்து செல்ல

வெண்பா, அண்ணா நீ போய் அவள் கிட்ட பேசி பாரு என்று சொல்லி சாவியை கொடுக்க இன்பா வாங்கி கொண்டான். 

அவன் நேராக அவளை காண சென்றான். இன்பா ராகவை தட்டி எழுப்பி விடுடா எப்படி அவளை சமாதானம் செய்ய என்று நினைத்து கொண்டே அவன் நடக்க.. 

அவன் அறிவோ அவளை எதுக்கு சமாதானம் செய்யணும் நம்ப என்ன பண்ணோம் பண்ணது எல்லாம் அவள் ஆனால் அவள நான் சமாதானம் பண்ண வேண்டி இருக்கு எல்லாம் நேரம் இதுக்கு எல்லாம் காரணம் அந்த *** ராஜ் தான். என்று நினைத்து கொண்டு அவன் விரைந்தான். 

இங்கே விவேகா வெண்பா சென்றதும் அதற்கு மேல் தூக்கம் வர வில்லை. ஆனால் தூக்க கலக்கமாக இருந்தது. சரி என்று எழுந்தவள் ரெஸ்ட் ரூம் சென்றாள்.

அங்கே டேப்பை திறக்க போய் அது அவள் இருந்த சலுப்பில் சட்டென்று ஷவர் டேப் திறந்து கொள்ள அவள் உடை தலை என சில நொடிகளில் கொஞ்சம் நனைந்து போனது. ஆம் இந்த விவேகா லைட் கூட போடாமல் அப்படியே இருட்டில் சோம்பேறித்தனமாக கண்களை மூடி கொண்டே சென்றாள். 

அவள் தலையின் மேல் தண்ணிர் பட்டதும் ஹே ஹே அய்யோ என்று ஒரு நிமிடம் குதிக்க அவள் உடலில் உள்ள முடிகள் எல்லாம் அந்த தண்ணீரின் குளிரில் சிலிர்த்து நின்றது 

அவள் தூக்கம் சட்டென்று பறந்து போனது.

அய்யோ இதுகளும் சதி பண்ணுதே.. என்று நினைத்து கொண்டு ஹீட்டர் போட்டு விட்டு வெளியே வந்து உடையை எடுத்து வைத்தவள். சரி யார் குளிப்பது என்று நடுங்கி கொண்டே முகத்தை மட்டும் கழுவி கொள்ளலாம் என்று டவல் மட்டும் எடுத்து கொண்டு உள்ளே சென்றாள். 

தண்ணீரை திறந்து விட ஆவி பறக்க தண்ணிர் பறந்து கொண்டு இருந்தது. அதில் கைகளை விட இந்த டெல்லி வெதருக்கு அந்த சூடு இதமாக இருக்க அவளை மறந்து சரி குளித்து விடுவோம் டி என்று சொல்லி கொண்டையிட்டு கொண்டு குளித்து விட்டு டவல் எடுத்து துடைத்தவள். உடையை தேட உள்ளே நனைந்து போனது மட்டும் இருக்க..

அச்சோ இப்போ எப்படி வெளியே போறது. ச்ச நம்ம மட்டும் தானே இருக்கோம் நினைவு வர அவள் கதவை திறக்க கதவு உள்ளே தள்ளுவது தெரிந்தது. யாரோ வெளியில்  இருந்து கதவை தட்டி  திறப்பது போல இருக்க அது வெண்பா அவளை என்று திட்டி கொண்டே மீண்டும் கதவை இழுக்க இந்த முறை எதிர் பக்கம் அழுத்தம் இல்லாமல் போக விவேகாவின் டவல் கொஞ்சம் லூசாக இருக்க அதை ஒரு கையில் பிடித்து கொண்டு கோபமாக.. 

ஹே மாடே உன் கூட வந்து தொலைகிரென் டி என்று சத்தமிட்டு கொண்டே அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வர

அங்கே! அங்கே இன்பா நின்று கொண்டு இருக்க அவன் ஹே பேபி என்று வாய் திறந்தவன்! அவள் வந்து இருந்த தோரணையில் பேச்சு காற்றில் கரைந்து போனது. 

தொடரும்… 

Episode 187

ஹே யூ! என்று அதிர்ச்சி ஆகி பேச வர கொண்டை ஒரு பக்கம் அவிழ்ந்து முடி ஒரு பக்கம் விழ  அவள் முடியை பிடிக்கும் நேரம் 

கைகளில் இருந்த டவல் நழுவ அவள் இன்பாவை பார்க்க அவன் சட்டென்று ஹே பேப் என்று கூப்பட வந்தவன் வார்த்தை காற்றில் போய் விட்டது. அவன்  வாயில் கை வைக்க

 விவேகா அவளையே குனிந்து   பார்க்க அது அது கீழே விழுந்து விட்டது. 

டவல் கீழே நழுவி விட்டது. இன்பா அவளை மொத்தமாக பார்த்து விட்டான். அவளுக்கு அடுத்து பேச வார்த்தை இல்லாமல் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக மீண்டும் குளியலறை புகுந்து கொண்டாள். 

விவேகாவின் இதயம் அது குதிக்க உடலில் உள்ள அனைத்து முடிகளும் சிலிர்த்து கொண்டு எழுந்தது அது குளிரால் இல்ல அது அவனால் தான் முகம் எல்லாம் சிவந்து போனது.மனதில் ஒரு வித பயம்.. 

அய்யோ போச்சு போச்சு என் என்னை பார்த்து விட்டானே!.. இப்போ என்ன செய்ய என்று உதடுகள் இரண்டும் டைப் அடித்தது. உடல் நடுக்கம் எடுத்தது. 

இனி என் வாழ்க்கை என்ன ஆவது அப்போ இனி அவனை தான் நான் கட்டிக்க வேணுமா.. எப்படி இப்படி இதை போய் யாரிடமாவது சொல்வானா இல்ல என்னை இதை வைத்து மிரட்டுவானா நான் இதை யாரிடம் சொல்லி அய்யோ சொல்ல முடியாதே  என்று அவள் கண்டத யோசித்து கொண்டு இருக்க.. 

மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. என்.. என்ன… ட்ரெஸ் என்று மட்டும் சொல்ல அவள் கதவை கொஞ்சம் மட்டும் திறந்து கையை நீட்டி வாங்கி கொண்டு பட்டென்று சாத்தி கொண்டாள். 

இங்கே இன்பா முகத்தில் அந்த கன்ன குழி வலிக்கும் அளவுக்கு இதழ்கள் மட்டும் விரிந்தது. ஆனால் பற்கள் தெரியவில்லை. அவளுக்கு ஒரு மடங்கு  துடித்தது என்றால் இங்கு அவனுக்கு ஒரு ஓட்ட பந்தய குதிரை போல் துடித்தது.

அவன் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து கொண்டே வந்து கதவை தட்ட அவள் தூங்கி கொண்டு இருப்பது நினைவு வர அந்த சாவியை கொண்டு கதவை திறந்தான். 

உள்ளே படுக்கையில் அவள் இல்லை சுற்றிலும் அறையை பார்த்தான். அவள் வாஷ் ரூம் சென்று இருப்பாள் என்று தான் நினைத்தான். ஆனால் வாஷ் ரூம்ல இருந்து எந்த ஒரு சத்தமும் வர வில்லை. ஒரு சில நிமிடம் அமைதியாக இருந்தவன் கதவை தட்ட மறு பக்கம் இருந்து கதவை இழுக்கவும் அவன் விவேகாவை டென்ஷன் பண்ண வேண்டாம் என்று கதவை விட விவேகா வெண்பா என நினைத்து திட்டி கொண்டு வெளியே வந்தாள். அதுக்கு அப்புறம் தான் அந்த சம்பவம் நடந்து போச்சு..

அவள் கொஞ்சம் துடைத்தும் துடைக்காமலும் கழுத்தில் இருந்து முட்டி வரை அந்த டவலை கட்டி கொண்டே வெளியே வந்தாள். ஆனால் அது அவிழ்ந்து விழும் என்று அவனே எதிர் பார்க்க வில்லை. இது எல்லாம் படத்தில் மட்டும் தான் நடக்கும் என்று நினைத்தான். ஆனால் அப்படி நடக்கும் என்று அவன் நினைக்க வில்லை.  அவளை நினைக்க உள்ளுக்குள் இன்று மின்சாரம் டன் டன்னாக பாயிந்தது. பேபி நான் உன்னை ஏற்ளியா பார்த்து விட்டேன். யூ பப்பி ஷேம் டி பட் செம்மையாக இருக்க என்று பெரு மூச்சை விட்டு நினைத்து சிரித்தவன். 

சரி இதற்கு மேல் இங்கு இருப்பது சரி இல்லை இருவருக்கும் இது நல்லது இல்லை என்று நினைத்து அவன் எழுந்து வெளியே செல்ல விவேகா கதவை திறந்து கொண்டு வந்தாள். 

விவேகா அவனிடம் எப்படி பேச என்ன பேச என்று யோசித்து கொண்டு அவனிடம் தெளிவாக சொல்லி விட வேண்டும் இதை பற்றி எப்பொழுதும் பேச கூடாது. அவன் பார்த்ததை மறந்து விட சொல்ல வேண்டும். (அது மறக்க வேண்டிய விஷயமா) என்று நினைத்து கொண்டு வெளியே வந்தவள். தலை குனிந்து கொண்டே ஹே இத பற்றி இங்கே இந்த ரூம விட்டு வெளியே போகும் பொழுது மறந்து விட வேண்டும் என்று சொல்ல எந்த பதிலும் வர வில்லை. 

அவள் நிமிர்ந்து பார்க்க அங்கே இன்பா இல்லை.. அய்யோ எங்கே போய் விட்டான் இந்த இடியட்.. ஒரு வேளை இது கனவா இருக்குமோ.. இல்லையே அவன் வந்தானே எவ்ளோ நேரம் என்னை பார்த்து இருப்பான் இல்ல அப்படி இருக்காது நான் உடனே உள்ளே போய் விட்டேன். சரி சரி போதும் இதுக்கு மேல் அதை பற்றி நினைக்க வேண்டாம் அவன் கூட சண்டை சண்டை தான் என்று நினைத்தவள் பெட் சீட் எடுத்து உடல் முழுவதும் மூடி படுத்து கொண்டாள். இனி இப்படி மூடி என்ன பயன் அவன் தான் மொத்தமும் பார்த்து விட்டானே…

அவளுக்கு அவன் மேல் தான் எண்ணம் இருந்தது.தூக்கம் அது வருமா ஆனால் வேறு எதோ ஒரு உணர்வு பசி தான் வயிற்றை கிள்ளி கொண்டு இருந்தது. படுக்கையில் இருந்து எழுந்தவள் நேராக கண்ணாடி முன் நின்றாள். ஒரு சில நொடிகள் அவளையே உற்று பார்த்தவள்.. அய்யோ எப் எப்படி இப்போ நான் வெளியே போறது. மனசு அவனே வெளியே போய் விட்டான் உனக்கு என்ன டி என்று சொல்ல 

தன் உடையை சரி செய்தவள். மீண்டும் தன்னை பார்த்து கொள்ள அவள் அள்ளி முடிந்த கொண்டை உட்ச தலையில் ஒரு பன் போல் இருக்க விவேகா அதை அவிழ்த்து விட்டு ஜடை போட சென்றவள். இன்பா பார்ப்பது போலே மீண்டும் மீண்டும் தோன்ற ஒரு நிமிடம் தலையை குனிந்து பார்த்தவள் கூந்தலில் ஒரு கிளிப் மட்டும் போட்டு அதை முன்னால் எடுத்து ஒரு பக்கமாக போட்டு கொண்டாள். ஒரு பக்கம் மட்டும் துப்பட்டா தொங்க போட்டு விட்டு ஒரு குட்டி பொட்டு வைத்தவள் கன்னம் இரண்டும் புல்லரித்து நிற்க அய்யோ அய்யியோ என்று இரு கன்னத்திலும் அடித்து கொண்டாள். பின் 

அந்த அறையை அவளிடம் இருந்த ரூம் கார்டு வைத்து லாக் செய்து விட்டு வெண்பா இருக்கும் இடத்துக்கு விரைந்தாள். அவள் வர அங்கு இருந்த சிபி அவளை பார்த்து விட்டு அனைத்து மாணவர்களையும் அவளுக்கு கிளாப் செய்ய சொல்ல விசில் அடித்து கை தட்டி வரவெற்றனர்.

விவேகா சிபி அருகில் செல்ல அவன் முறைத்து விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டான். சார் இப்போ இப்போ என்ன ஆச்சு.. அவன் பதில் பேச வில்லை. ஹலோ ஓவரா பண்ண வேண்டாம்.. சிபி l, அது நீங்க தான்.. நான் என்ன பண்னேன்.. எதுக்கு ஃபைனலா விட்டு போன இன்பா சொன்னது சரி தான்.. 

விவேகா, என்ன சொன்னான்.. சிபி, வாட் வாட் டிட் யூ சே… இல்ல அது என்ன சொன்னாரு அப்டின்னு கேட்டேன். ஹே டோண்ட் லையிங் மீ.. இல்ல சார் என்னை நீங்க நம்ப மாட்டீங்களா.. என்று கண்களை பாவமாக இமைக்க சரியான ஃப்ராடு என்று இருவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். 

விவேகா இன்று மிகவும் அழகாக இருந்தாள். அதுவும் முடியை ஒரு பக்கம் போட்டு கொண்டு அவள் ஒயிலாக இருக்க சிபியைப் யாரோ முரைப்பது போல் இருக்க அது இனியாழ் தான் இதுக்கு மேல் இவள் கிட்ட பேசினால் அவ்ளோ தான் என்று நினைத்தவன் அவளை சாப்பிட சொல்ல அருண் அவளை அழைத்தான். 

இனியாழ், சார் முகத்தில் அவளை பார்த்ததும்  பல்ப் எரியுது போல.. சிபி, உனக்கு பல்ப் ஃப்யூஸ் ஆகிடுசா என்ன.. ஏன்.. இல்ல உன் முகத்தில் கொஞ்சம் பிரைட் கம்மியா இருக்கே.. உடனே அவள் கை பையில இருந்து முகம் பார்க்கும் சிறிய அளவு கண்ணாடி மற்றும் ஒப்பனை பொருள் எடுக்க 

அவன் மேனா மினுக்கி அப்படின்றது சரியா இருக்கு என்று நினைத்து சிரிக்க இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க என் முகம் நல்லா தான் இருக்கு என்று முறைத்து கொண்டே திரும்பினாள். 

ஆதி அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். வெண்பா, ஹே என்ன அவளை அப்படி பார்க்கிற.. லூசு கண்ணுக்கு எல்லாம் கொஞ்சம் லூசா தான் தெரியும்.. அப்போ அப்போ நான் உனக்கு லூசா.. இதில் என்ன சந்தேகம்.. அவள் ஃபோர்க் ஸ்பூன் எடுத்து தட்டில் குத்தி கொண்டு இருக்க

ஆதி, ஹே அவளே என்னை ஒதுக்குவது போல நடந்து கொள்கிறாள் இது மாதிரி எப்பவும் நடந்தது இல்ல தெரியுமா எனக்கு ரொம்ப கஷ்டமா மனசு எல்லாம் பாரமா இருக்கு அவள் இல்லாமல் லோன்லியா இருக்கு அவள் பேசாமல் இருப்பது எதோ ஒரு மாதிரி இருக்கு… 

வெண்பா, அப்போ நீ அவளை லவ் பண்றயா.. ஹே   நிஜமா நீ பைத்தியமா டி..  இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம் அப்படி தான.. ஆதி, ஒரு நிமிடம் அமைதி காத்து விட்டு உனக்கு எங்க ரெண்டு பேரை எவ்ளோ நாளாக தெரியும்.. அவள் அமைதியாக கண்களில் கண்ணீர் கோர்க்க பார்க்க.. 

அவன் முகத்தை அழுத்தி தேய்த்து கொண்டே சீ வெண்பா நானும் அவளும் பிறந்ததில் இருந்து ஒன்னா வளர்ந்தோம். அவள் எங்க வீட்டில் தான் அதிகம் இருப்பாள், எங்க அப்பா அவள் மேல் அவ்ளோ பாசம், எங்க அம்மா அவளை வேற வீட்டு பொன்னு  எங்க அப்பா தங்கை பொண்ணா பார்க்க மாட்டாங்க, நிறைய சண்டை எல்லாம் வந்து இருக்கு. ஆனால் ஒரு தடவை கூட என் மம்மி எங்க அத்தை வீட்டை ஒதுக்கியது இல்ல, எங்க அத்தையும் அப்படி நடந்துக்க மாட்டாங்க.. சரி அதை விடு இப்படி அவள் பேசாமல் ஒதுக்குவது முதல் முறை அது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்லி அவன் வேறு புறம் திரும்பி கொள்ள… 

வெண்பா எதுவும் பேசாமல் எழ ஆதி, இதுக்கு பேர் நீ சொன்னது இல்ல நான் அவள மிஸ் பண்றேன்,  அவளோட இடத்தை மிஸ் பண்றேன் அவ்ளோ தான் என்று சொல்ல வெண்பா  வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவள் நேராக விவேகா இருக்கும் இடத்துக்கு சென்றாள். 

அவள் அருண் கூட பேசி கொண்டு இருக்க.. ஹே எருமை வா உன் கிட்ட பேசணும்.. ஹே போடி.. ஹே வா என்று கையை பிடித்து கட்டாயமாக கூப்பிட அருண், வெண்பா என்ன பன்ற விடு அவளை.. 

வெண்பா, உன் வேலையை பாரு டா நான்சென்ஸ் என்று அவளை தர தர வென்று இழுத்து சென்றாள். இப்படி பொசுக்குண்ணு எல்லார் முன்னாடியும் சொல்லி விட்டாளே என்று அருண் சுற்றியும் பார்க்க அங்கு இருக்கும் அவனது நட்புகள் சிரித்தது. 

ஹே எங்க டி கூட்டி போற.. உன் மனசில் என்ன நினைத்து கொண்டு இருக்க.. இப்போ உனக்கு என்ன வேண்டும்.. வெண்பா, போய் ஆதி கூட பேசு அவன் பாவம்.. அவள் ஆச்சரியமாக என்ன என்ன சொன்ன.. ஆதி கூட பேசு எதுக்கு அந்த அருண் கூட பேசுற.. விவேகா, அது என் இஷ்டம்.. உனக்கு என்ன… வெண்பா, ஹே உன்னை கொலை பண்ண போறேன் எதுக்கு அவனை அவாயிடு பண்ற அவன் ரொம்ப பாவம்.. விவேகா உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டே உனக்கு என்ன மா அதை பற்றி, அவன் பாவமா! நீ எதுக்கு அவனை அதுவும் என் அத்தை மகனை பற்றி எவ்ளோ கவலை படற.. 

அவள் இப்படி கேட்டதும் வெண்பா, தன் கூந்தல் கற்றையை காதுக்கு ஒதுக்கி அது அப் அப்படி எல்லாம் இல்ல சும் சும்மா தான் என்று அவள் கழுவும் மீனில் நழுவி செல்ல திருத்த முடியாது டி உன்னை திருத்தவே முடியாது ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.. என்று சிரித்து கொண்டே அவள் செல்ல   ஹே என்ன இப்போ எங்கே போற.. என்று கொஞ்சம் மட்டும் புன்னகைத்து கொண்டே அவள் கேட்க மேடம் நான் ஆதியை தான் பார்க்க போறேன் போதுமா.. ம்ம் என்று சிரித்து கொண்டே  சரி என்றாள். 

விவேகா அவன் அருகில் சேர் இழுத்து போட்டு அமர ஆதி அவளை பார்த்ததும் உடனே எழுந்தான். ஆதி இப்போ உட்காரல நான் இப்போவே தேவி அத்தைக்கு போன் பண்ணுவேன். ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக அமர இப்போ எதுக்கு என் மாமா குட்டிக்கு கோபம்.. 

வெண்பா, என்ன மாமா குட்டியா!.. ம்ம்.. அவள் அது என்ன நீ பேசுவது வித்தியாசமா இருக்கு மாமாச்சி அப்புறம் அம்மச்சி இப்போ மாமா குட்டி.. கேட்கவே சகிக்கள.. வியாக் என்று நாக்கை வெளியே தள்ளி எதோ போல் செய்ய இப்போ நான் இருக்கவா! போகவா!  வெண்பா,சரீ பேசு.. 

விவேகா, நீ அதை விடு ஆதி இப்போ என்ன கோபம்.. ஒன்னும் இல்ல உங்களுக்கு தான் என்னை விட நிறைய முக்கியமா இருக்கே போங்க மேடம்.. 

விவேகா, ஆதி எனக்கு எல்லார் விடவும் நீ தான் முக்கியம் நான் எங்கே போனாலும் கடைசியில் உன் தோள் அதில் நான் தானே சாய்வென்.. வெண்பா, ஹே இங்கே எல்லாம் அப்படி பண்ணாத எல்லாரும் இருக்காங்க.. இதை கேட்டு இருவரும் சிரிக்க ஹே ஹே எதுக்கு ரெண்டு பேரும் சிறிக்கிரீங்க.. என்று அவர்களுடன் பேசி சிரித்து கொண்டு இருக்க 

சிபி அனைவரையும் சாப்பிட சொன்னான். எல்லோரும் அவர்களுக்கு பிடித்ததை இஷ்டத்துக்கு ஆடர் செய்து சாப்பிட ஆதி, விவேகா வழக்கம் போல் சைவ உணவை தேர்ந்து எடுத்து சாப்பிட வெண்பா, ஒரு அசைவ உணவு ஓடுவது , பறப்பது, நீந்துவது என அனைத்தும் அவள் தாழியில் இருந்தது. வெண்பாவை அவர்கள் இருவரும் ஆ வென பார்த்து கொண்டு இருக்க 

ஹே என்ன அப்படி பார்கரீங்க.. அப்பொழுது அருண் விவேகாவுக்கு அருகில் உள்ள சேரை இழுத்து போட்டு அவன் கொண்டு வந்த உணவோடு அமர்ந்தான். ஹாய் சீனியர்.. ஆதி அவனை முறைக்க விவேகா, ஹே விடு பிளீஸ் ஆதி எனக்காக சீனியர் மட்டும் இல்லன்னா சட் அப் டி என்று சொல்லி அவன் உணவை சாப்பிட விவேகா அவனை சமாதானம் படுத்தும் பொருட்டு ஆதிக்கு பரிமாற அவன் முறுக்கி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆனான். 

விவேகா வின் கண்கள் ஒரு நிமிடம் அந்த இடத்தை அலசியது. வேற யாரு நம்ப இன்பா சார் இருக்காரா என்று மேடம் தேடுகிறார்கள் அவ்ளோ தான். அவள் செய்கை ஒவ்வொன்றையும் அறிந்த ஆதி கொஞ்சம் சிரித்து கொண்டே… 

ஆதி, யாரை கண்ணு தேடுது.. நானா நான் யாரை தேட போறேன்… நிஜமா! என்று கைகளை நீட்ட அவள் இரு புருவமும் நெருக்கி ஹே இதுக்கு எல்லாம் யாராவது சத்தியம் செய்வார்களா.. உலறாத கம்முன்னு சாப்பிடு என்று அவள் கூந்தலை ஒரு முறை நீவினாள். அய்யோ அவன் வருவதற்குள் எப்படியாவது சாப்பிட்டு கிளம்பி விட வேண்டும். என்று அவள் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். 

அந்த நேரம் சிபி இன்பாவை சாப்பிட அழைக்க போன் செய்தான் . ஹலோ ராகவ்.. ம்ம் 

தொடரும்… 

Episode 188

அருண் விவேகாவின் பிளேட்டில் அவனுக்காக ஆடர் செய்த சில அசைவ உணவுகள் இறால் ஃப்ரை எடுத்து வைக்க ஆதி மர்ம புன்னகையை சிந்தினான். விவேகா அடுத்த வாய் சாப்பிட போக அவள் தட்டில் இருந்த அந்த இறால் ஃப்ரை பார்த்து விட்டு 

வாட் ஈஸ் திஸ்.. ச்சீ.. ஆதி, விவி என்ன ஆச்சு… அவள் உடனே எழுந்து கைகளை கழுவி கொள்ள செல்ல  அருண் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி டியர் என்ன ஆச்சு இது நல்லா இருக்கும் அண்ட் sea பூட்ஸ் அதிகமா சாப்பிடணும்.. 

விவேகா, அய்யோ பெருமானே என்று வேண்டி கொண்டவள் சீனியர் இது புரட்டாசி மாசம் நான் இது எல்லாம் மாட்டேன் என்று தலையை ஆட்ட.. ஆதி, விவி உனக்கு நான் இன்னொரு வெஜ் சொல்றேன் என்று அவன் சிரித்து கொண்டே சொல்ல அருணுக்கு எதோ போல் ஆகி விட்டது. 

வெண்பா இது எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தாள். அருண், வெண்பா வை ஒரு பார்வை பார்க்க அவளோ என்ன.. என்ன லுக்கு… அருண், ஹே நான் போடும் போது ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தானே டி ஏன்  டி சொல்லல… அதுக்கு காரணம் இருக்கு டா அருண்… என்ன வேற எதுக்கு உன் முகம் இப்போ தேவாங்கு மாதிரி இருந்தது அதை பார்க்க தான் என்று நண்டின் காலை வாயில் வைத்து கடிக்க…

அருண், நான் உனக்கு சாபம் வுடுறேன் டி பொட்டை கழுதை.. எல்லா நாளும் சாமி கும்பிடுற மாமியார் இருக்கும் வீட்டில் தான் நீ கல்யாணம் பண்ணி போக போற உனக்கு பக்தி பழம் வாழை பழம், இல்ல லெமன் சோறு இல்ல பொங்க சோறு மட்டும் தான்..

வெண்பா, ஹே உனக்கு ஒரு மக்கு பொண்டாட்டி தான் கிடைக்க போறா.. நீ சொல்றது எல்லாம் நடக்காது.. அவள் சொல்லி முடிக்க விவேகா, க்கும்.. என்று தொண்டையை கனைத்து கொண்டே என்ன ரெண்டு பேரும் எதோ தீவிரமா பேசிட்டு இருக்கீங்க.. 

அருண், அது ஒன்னும் இல்ல டியர் இந்த வெண்பா கழுதையை கல்யாணம் பண்ணிக்க போறவன் பற்றி பேசிட்டு இருந்தேன். அவள் ஒரு நல்ல இந்த மசாலா வாசனையே வராத வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போகனும் அப்டின்னு கடவுள் கிட்ட வெண்டிட்டு இருந்தேன். 

ஓ அப்படியா பாவம் அந்த பையன் இவ திங்கவே அவன் டே நைட் வேலைக்கு போகனும் போலயே.. ம்ம்ம் எனக்காக  ஒன்னும் யாரும் கஷ்ட பட வேண்டாம் நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு சாப்பிடுவேன். உன் மாமி நோ சொன்னால் என்ன பண்ணுவ.. அதை என் புருஷன் பார்த்து கொள்வான். ஆதியை பார்க்க அவன் இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் சாப்பிட்டு கொண்டு இருந்தான். 

வெண்பா, டேய் இவனே உன்னை ஒன்னும் பண்ண முடியாது ஒரு பார்வை பார்க்கிறானா பாரு தண்ட மாடு இதுவே இவளா இருந்தால் பறந்து கொண்டு இருப்பான் ஆதி அமேசான்.. என்று மனதில் அவனை நினைத்து பார்த்து கொண்டு அடுத்து லாப்ஸ்டாரை சுவைக்க ஆரம்பித்தாள். 

விவேகா, டேய் என்ன ஓவரா ஆக்ட் விடுற ரொம்ப பவியமா இருக்க.. ஆதி, நான் என்ன பண்ணேன்.. ஹேய் சீன் போடாத அவள் அப்படியே உன்னையும் சேர்த்து சாப்பிடுவது போல் பார்க்கிறாள். ஆனால் நீ  எதுவும் நடக்காதது போல் இருக்க.. ஆதி, அவளுக்கும் எனக்கும் என்ன இருக்கு ஒன்னும் இல்ல  என்று சிரித்து கொண்டே அவர்கள் பேசி கொண்டு இருக்க

இங்கே சிபி இன்பாவுக்கு கால் செய்தான். ஹே வா ராகவ் டின்னர் உனக்காக வெயிட்டிங்.. வாணி, சார் இன்பா சார் எங்கே அவர் சாப்பிட வர வில்லையா.. அந்த சத்தம் அனைவருமகிகும் கேட்டது. உடனே அனைவரும் ஆமா இன்பா சாரை வர சொல்லுங்க என்று கத்த இங்கு விவேகாவுக்கு பக் பக் என்று இருக்க வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். 

ஆதி, என்ன டி ஆச்சு வேகமா சாப்பிடுற அவள் கண்களை மூடி கொண்டே எனக்கு ரொம்ப ரொம்ப தூக்கம் வருது அதனால் நான் சீக்கிரம் தூங்கனும்…அதான் வேகமா சாப்பிடுரேன்.. 

சிபி, ஹலோ காய்ஸ் இதோ இன்பா வந்து விட்டான். விவேகா வேகமாக தினித்ததிள் புரை எறிட அவள் இரும்பினாள். ஆதி அவளின் தலையை தட்டி விட்டு தண்ணிர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு அவள் கைகளை கழுவ எழுந்து செல்ல 

இன்பா சிபியை ஒரு பார்வை பார்க்க ஹே விவேகா சிட் டவுன் எங்கே இவளோ அவசரமா போறீங்க.. சார் அது நான் சாப்பிட்டு விட்டேன். கை கழுவ போறேன்.. இருங்க…அப்புறம் இன்னிக்கி  ரொம்ப டயர்டா இருக்கு.. இன்பா,மனம்  அந்த அளவுக்கு நம்ப எதுவுமே பண்ணலயே என்று நினைத்து கன்ன குளி தெரிய கொஞ்சம் தான் சிரித்தான். அது அவளுக்கு தெரிந்ததோ என்னவோ முகத்தை முறைப்பது போல் வைத்து புருவத்தை நெருக்கி பார்க்க.. 

சிபி, ஆர் யூ ஹியர் விவேகா.. சார்.. ம்ம் கொஞ்சம் உட்காரு… அவள் வேறு வழி இல்லாமல் கொஞ்சம் உடலை குறுக்கி கொண்டே அமர்ந்தாள். அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.. தலையில் கைகளை வைத்து அமர.. 

சிபி, அவ்ளோ கஷ்டமா இருக்கா.. என்ன ஆச்சு.. இன்பா, உன் ஸ்டூடண்ட ஹாஸ்பிடல் கூட்டி போய் ஒரு செக் அப் பண்ணிடு

 சிபி.. டேய் இது மட்டும்  அவளுக்கு கேட்டது இங்கே பூகம்பம் வெடிக்கும் டா.. அட போடா.. 

சிபி, லிசன் ஸ்டூடண்ட்ஸ் இன்பா சார் உங்க கிட்ட பேசணுமா.. இன்பா கவ்யாவை பார்த்து கொண்டே இந்த காம்பிடீசன் நினைத்ததை விட ரொம்ப சூப்பரா இருந்தது. சில எதிர்பாராத நான் கனவிலும் கூட நினைக்காதது எல்லாம் நடந்தது. இது ஒரு புது அனுபவம் ஹஹஹ.. என்று ஒரு பெரு மூச்சை விட இங்கே விவேகா வேக மூச்சு அதுவும் அனல் பறக்க கோபத்தில் கைகளை சொடுக்கு எடுத்து கொண்டு இருந்தாள். 

இது ஆரம்பத்தில் அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு ஃபையரா இருந்தது. என்று சொல்லி( பிரியமானவளே படத்தில் நம்ம விஜய் ஒரு லுக் விடுவாரு ) ஒரு லுக் விட அனைத்து பெண்களும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

இன்பா அதோடு விட வில்லை. ம்ம் என்ன சொன்னேன்.. இனியாள், சார் அதான் ஃபயரா… விவேகா வின் கைகள் எல்லாம் வியர்க்க டேய் ஐ வில் கில் யூ இன்பா நாயே என்றுசொல்லி கொண்டாள். 

ஹப்பா இப்போ இது போதும். இப்போ டார்ஜ்லிங்ல இருக்க மாதிரி இருக்கு.. இது போதும் அப்டின்னு நினைக்கிறேன். 

ஓகே இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா நம்ம காலேஜ் ல மாஸ்டர்ஸ் பண்ற கவ்யா இன்னைக்கு ட்ரீட் கேட்டாங்க சோ இன்னிக்கு என்னோட ட்ரீட் எல்லாரும் உங்களுக்கு பிடிச்சது சாப்பிடுங்க என்ஜாய் அண்ட் ஸ்பேசல்லா நாளைக்கு டெல்லியை சுற்றி பார்த்து விட்டு அடுத்த நாள் தமிழ் நாடு போறோம் அது தான் என்னோட மெயின் ட்ரீட்.. என்று சொல்ல அனைவரும் விசில் அடித்து உஉஉ ஒ ஓ ஹே என்று கத்தினர். சிலர் கைகளை தட்டினர். இங்கே குழப்பத்தில் இருவர் இருந்தனர். ஒன்று விவேகா, இன்னொண்டரு சோனா, அண்ட் கவ்யா மனம் சந்தோஷத்தில் குதித்தது. இது இவன் தானா முதல் முறை அதுவும் பொது வெளியில் சொல்லி இருக்கிறானே ஒரு வேளை நம்மை பிடித்து விட்டதா இருக்கும் இருக்கும் என்று அவள் ஆனந்தத்தில் திலைத்தாள். 

இன்பா, மிஸ் கவ்யா உங்களுக்கு ஓகே வா.. ஹான்.. ஓகே வா ட்ரீட் கேட்டிங்கள் தானே.. ம்ம் ஓகே சார் என்று புன்னகை ததும கூறினாள். இனியாழ், அப்போ எனக்கு எல்லாம் வைக்க மாட்டீங்களா.. என்ன இனியாழ் உனக்கு என்ன வேணும் சொல்லு வைத்து விட்டால் போச்சு.. இனியாழ், நாளைக்கு வாங்களேன் அப்படியே ஆக்ரா போயிட்டு வரலாம்.. இதை கேட்டதும் சிபி, கவ்யா இருவரும் இன்பாவை பார்க்க ஆதி, வெண்பா இருவரும் விவேகாவை பார்த்தனர். வெண்பா, என்ன டி ரொம்ப அமைதியா இருக்க இந்நேரம் தையா தக்கா அப்டின்னு குதித்து இருப்ப இங்கே உன் ரியாக்ஷன் அங்கே அண்ணா பேசுவது எதுவமே பிடி பட மாடிங்குதே என்ன நடக்குது.. ஹே வாயை மூடு டென்ஷன் பண்ணாத.. என்று அவளை கிள்ளி வைக்க 

அருண்,  விவேகா டியர் நாளைக்கு வாயேன் நம்ப ஆக்ரா போலாம் அது காதல் சின்னம். வெண்பா, என்ன..

அவன்,இல்ல டி எல்லாரும் போறாங்க.. அதான் கேட்டேன்..

கேட்ப டா கேட்ப… 

இன்பா, விவேகா அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி வந்தான். அண்ணா வா வந்து சாப்பிடு எல்லாம் உனக்கு பிடித்த வகை.. இன்பா விவேகாவை பார்த்து கொண்டே  இல்ல வெண்பா எனக்கு பார்த்ததே ஃபுல்லா இருக்கு.. என்று கன்னகுழி தெரிய மெலிதாக சிரிக்க.. 

விவேகா, சீனியர் நம்ப அப்புறம் பார்க்கலாம் என்று அவள் எழ.. 

டியர் உக்காரு என்று கையை பிடித்து அமர வைத்தான். 

வெண்பா, அண்ணா ட்ரீட் எல்லாம் வைக்கிற கொஞ்சம் டேஸ்ட் பண்ணு.. விவேகா கண்கள் அங்கும் இங்கும் அலை பாய உள்ளங்கை வியர்த்து போனது. இன்பா, அதுக்கு விவேகா ஓகே சொல்லனுமே.. அவள் கண்களை இறுக்கி மூடி கொண்டாள். என்ன அண்ணா சொல்ற.. 

இல்ல நீ, ஆதித்யா, அண்ட் அருண் எல்லாம் விவேகா ப்ரெண்ட்ஸ் சோ உன் தோழி என் மேல் ரொம்ப கோபத்தில் இருப்பாங்க இப்போ கூட எதுவும் கிடைத்தால் என்னை அடித்து விடுவாங்க அதற்கு அவள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க

அருண், என்ன ப்ரோ கோபம் அவளை நான் கன்வின்ஸ் பண்ணிட்டேன் 

ஆதி,சார் அப்படி எல்லாம் இல்ல நீங்க வாங்க சார்.. 

இன்பா, அதை சொல்ல வேண்டியவங்க சொல்லவே இல்லையே என்று அவளை மேலும் மேலும் சீண்ட.. விவேகா, ஆதி நான் போறேன் என்று அவள் எழ.. 

இன்பா, அருண் உன் டியர்க்கு சொல்லு உட்கார சொல்லி.. அருண், ஹே உட்காரு விவேகா.. அவள் கொஞ்சம் குறுகி அமர்ந்தாள். அருண் இன்பாவுக்கு பிடித்த அனைத்தும் ஆடர் செய்ய.. ஹே என்ன பண்ற.. ப்ரோ இது தானே உனக்கு பிடிக்கும்.. 

அவன் தலையை கோதி கொண்டே இது புரட்டாசி மாதம் சோ நான்வேஜ் சாப்பிட மாட்டேன் டா..

வெண்பா, அண்ணா வேற லெவல்..கிடைக்கும் கேப்பில் எல்லாம் கோல் போடுற..என்று இருவரும் ஹைபை போட்டு கொண்டனர். அருண் திகைத்து நின்றான். வாட் என்னை விட நம்ம வீட்டில் நீ, வசு மாம் எல்லாம் பின்னி எடுப்பீர்கள்  இன்னிக்கு இப்படி சொல்ற.. 

இன்பா, என் பேபிக்கு இது எல்லாம் பிடிக்காது. டா விவேகா அவனை அவளது கண்கள் வெளியே வந்து விடும் அளவுக்கு பார்க்க…

ஆதி, வெண்பா பேபி பேபி என்று கிண்டல் செய்ய அவள் தனக்கும் இதுக்கும் தொடர்பும் இல்லை என்பது போல் முகத்தை வைத்து கொண்டாள். 

 அருண், யாரு அந்த பேபி நீ உன்னை ஒரு பொன்னு என்று அவன் ஆரம்பிக்க.. இன்பா, ஹே பாவையை தான் பேபின்னு சொன்னேன். என் டார்ல்ஸ்க்கும் பிடிக்காது. 

விவேகா இதற்கு மேல் இங்கு இருந்தால் இவன் நம்மை எதுவும் சீண்டி டென்ஷன் செய்து கொண்டே இருப்பான் என்று நினைத்தவள். சரி ஆதி, சீனியர் நாளைக்கு பார்க்கலாம் எனக்கு டயர்டா இருக்கு என்று வேகமாக எழுந்து கை கழுவ சென்று விட்டாள். 

விவேகா வேகமாக அவள் அறைக்கு சென்றவள். குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அந்த நாய்.. பப்பி நாய் அந்த கவ்யா அவளுக்கு ட்ரீட் தருகிறான்.. அந்த இனியாழ் கூட வெளியே அதுவும் தாஜ் மஹால் கூப்பிடுகிறாள்.இவனும் பல்லை இளித்து கொண்டு இருக்கிறானே..

என்னை ஃப்ரீ ஷோ பார்த்து விட்டு இப்போ இப்போ அவள் கூட பேசுகிறான். என்று நெஞ்சு பொறுக்காமல் பேசி கொண்டு இருக்க.. 

இங்கே இன்பா அங்கு சென்றது கவ்யா கிட்ட பேசியது அவளுக்கு ட்ரீட் வைக்கிறேன் என்று சொன்னது அவள் இன்பாவை தின்பது போல் பார்த்தது இதை எல்லாம் குரு வீடியோவில் பார்த்து கொண்டு இருந்தான். இவள் இவளை எதுவும் செய்ய வேண்டும் அப்பொழுது தான் அந்த இன்பா சுக்கு நூறாக நொறுங்கி போவான் என்று நினைத்து விட்டு தேவராஜை அழைத்தான். 

ராஜ் பயந்து கொண்டே அவனை பார்க்க சென்றான். நான் சொன்ன வேலை என்ன ஆச்சு அந்த போலீஸ் நாய்  பொண்ணு பின்னாடி சுற்றி கொண்டு இருக்கானே நாளைக்கு அந்த பொன்னு எங்கே போகுது  அந்த செய்தி எல்லாம் கலெக்ட் பண்ணிட்டீங்க தானே.. ராஜ் இதை கேட்டதும் ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது. சார் அது அது வந்து.. குரு ஊருக்கு போனதும்  அந்த பொண்ணு எனக்கு  வேணும் சும்மா சொல்ல கூடாது செம்மையாக இருக்கிறாள். 

சார் சார் இது தவறு சார்.. குரு அவனை உற்று பார்த்து விட்டு நான் சொன்னதை போய் செய் இல்ல உன்னை என்று சிரித்து கொண்டே சென்று விட்டான். ராஜு க்கு இப்பொழுது என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. இதற்கு மேல் விவேகாவை நாம் தான் பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனுக்கு குரு கவ்யாவை பற்றி தான் சொல்கிறான் என்று தெரிய வில்லை. 

இங்கே இன்பா அவள் சென்றதும் சாப்பிட்டு விட்டு நேராக அவன் அறைக்கு வர அங்கே சிபி அமர்ந்து கொண்டு இனியாழ் இன்பா கிட்ட பேசியதை பற்றி நினைத்து கொண்டு இருக்க ஹே இங்கே என்ன பண்ற.. டேய் உன்னை தான்..

சிபி, அண்ணா அப்டின்னு உனக்கு மரியாதை இருக்கா டா.. யாரு.. நான் தான்.. அப்போ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க.. ஏன்? அப்போ தான் மாம் கிட்ட சொல்லி சீக்கிரமா நான் கல்யாணம் பண்ண முடியும்.. இதை கேட்டதும் சிபி அதிர்ச்சி ஆகி பார்க்க.. 

டேய் இப்போ எதுக்கு இப்படி பார்க்கிற…யார் அந்த பொன்னு.. அது உனக்கு எதுக்கு நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணு.. டேய் நீ நாளைக்கே கல்யாணம் பண்ண சொல்லுவ போல.. ம்ம் சூப்பர் சிபி இப்போ தான் டா நீ அண்ணா மாதிரி பேசிர என்று சொல்லி அவனை வலு கட்டாயமாக எழ வைத்து வெளியே தள்ள.. 

டேய் ஒரு நிமிடம் இரு.. என்ன டா வேணும்.. அந்த பொண்ணு அந்த இனியாழா! ச்சீ அந்த மேக் அப் கேர்ல சுத்தமா பிடிக்காது. அவளும் அந்த வினயும் கிட்டத்தட்ட ஒன்னு.. இப்போ எதுக்கு அவளை பற்றி நீ சும்மா சும்மா கேட்கிறாய்.. சிபி தன்னை நிதான படுத்தி கொண்டு ஹே நீ தானே அவளை தாஜ்மஹால் கூட்டி போறேன்னு சொன்ன.. ஆமா சொன்னேன்… 

அதற்கு இன்பா…?

தொடரும்… 

Episode 189

சிபி இன்பாவிடம் கேள்வியாக கேட்க.. 

அப்போ நாளைக்கு கூட்டி போரயா.. கூட்டிட்டு போரன்னு தான் சொன்னேன் நாளைக்கு நான் வருவேன் அப்டின்னு சொல்லவே இல்லையே.. ஹே தெளிவா சொல்லி தொலை.. நான் சும்மா சொன்னேன் டா.. நீ சீக்கிரம் கிளம்பி போடா.. ஹே ஹே ஒரு நிமிடம்.. இப்போ என்ன டா வேணும்.. அப்போ அந்த பொண்ணு அந்த கவ்யாவா!  இன்பா அவனை பார்த்து முறைத்து எதுக்கு டா உனக்கு இந்த கொலை வெறி நான் நல்லா இருப்பது உனக்கு பிடிக்களயா.. ஒன்னு அந்த மேக் அப் கேர்ல் பற்றி சொல்ற அப்படி இல்லன்னா அந்த சைக்கோ கேர்ல் கிட்ட கோர்த்து விடுற.. எனக்கு ஒரு தேவதை மாதிரி ஒரு பொண்ணை வைத்து சேர்த்து பேச உனக்கு தோணவே தோனாதா.. 

அப்படி யாரு இருக்கா எனக்கு அந்த மாதிரி தெரியலை.. சரி போதும் போடா.. சிபி, லாஸ்ட் ஒன் மிநிட் டா.. ம்ம்.. சிபி இன்பாவின் அறையை மீண்டும் நோட்டம் விட என்ன டா எதையோ தேடுற.. சிபி, என்னை போ போன்னு விரட்டி விடுற உள்ளே  பெண்ணை மறைத்து வைத்து இருக்கிறாயா.. 

இன்பா, என்னை இப்படி நினைத்து விட்டாய்.. சாரி டா.. நான் இன்னும் எதிர் பார்க்கிறேன் நீ கல்யாணம் பண்ற மாதிரி தெரியல நான் சுபா வுக்கு அடுத்து கல்யாணம் பண்ணிக்க போறேன்.. சிபி இதை கேட்டு சிரித்து கொண்டே அவன் அறையை நோக்கி நடந்தான். இப்பொழுது அவன் மனம் தெளிவாக இருந்தது. இன்பா மனதில் இனியாழ் இல்லை அப்போ அப்போ சிபி நீ அவளை விருபிகிராயா.. என்று நினைத்து கொண்டே சென்றான். 

சிபி சென்றதும் இன்பா அவனது உடைகளை மாற்றி கொண்டு தூங்குவதற்கு தயாராகி படுக்கைக்கு வந்தவன். படுக்கையில் விழுந்தான். அவனது போனை எடுத்து அருகில் வைத்தவன். கண்களை மூட விவேகா தான் தெரிந்தாள். இதழ்கள் தானாக வளைய அவளது கழுத்துக்கு கீழே இடுப்புக்கு மேலே  நெஞ்சு குழியில் ஒரு பர்த் மார்க் இருக்க அய்யோ என்று இருந்தது. 

ஒன்னும் இல்லாத போதே சுற்ற விட்டாள். இப்போ எல்லாம் பார்த்து விட்டு வந்து விட்டேன் இனி கிட்ட நெருங்கவே விட மாட்டாள் போலயே..அவளது முடியின் மேல் கோபமாக இருந்தான். அவளின் கூந்தல் இரு பக்கமும் பிரிந்து பாதி மறைத்து கொண்டது. இடுப்பு அது தான் என்ன இடுப்பு ஒவ்வொரு முறை அவன் எப்பொழுது எல்லாம் அவளை முத்தமிடுகிறானோ அந்த இடையை அவனை நோக்கி இழுக்க அவள் வளைந்து அவன் மேல் ஒட்டி கொள்வது மிகவும் பிடிக்கும். அவளது இடை மிகவும் வளைந்து இருக்கும். அவளை பற்றியே நினைக்க அவனுக்கு கீழே சில வேளை செய்தது. அதை எல்லாம் முடித்து விட்டு மீண்டும் படுக்கைக்கு வந்தவன்.  இந்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பாள் என்னை பற்றி நினைப்பு வருமா என்னால் டிஸ்டர்ப் ஆகி இருப்பாளா நார்மல் டேஸ்ல யே சீன் போடுவா இப்போ ஹஹ என்று ஒரு பெரு மூச்சை விட்டு  அவளது காலேஜ் போட்டோஸ் எல்லாம் எடுத்து அதற்கு சில முத்தமிட்டு விட்டு அப்படியே உறங்கி போனான். 

ஆனால் அங்கே அவளுக்கு தான் தூக்கம் வர வில்லை. எல்லாம் அவனால் தான் ஷாக் ஆகி பார்த்தது மட்டும் தான் ஓடி கொண்டு இருந்தது. விவேகா குப்புற படுத்து கொண்டு தலை முதல் கால் வரை போர்த்தி புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருக்க

வெண்பா, ஹே எதுக்கு டி சும்மா ஆடிட்டே இருக்க.. 

போடி என்று சொல்லி விட்டு இதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தவள்.. இதழில் வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. அதிகாலை தான்  தூங்கி போனாள். அடுத்த நாள் இன்பா நேரமே தமிழ்நாடு கிளம்பி விட்டான். 

அது தெரிந்ததும் முதலில் உற்சாகம் அடைந்தது விவேகா தான். இனியாழ் மிகவும் ஏமாற்றமாக ஆகி போனது. கவ்யாவுக்கு அவன் முன்னேறி இருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள். அவள் மனதுக்கு இப்பொழுது அதீத நம்பிக்கை வந்தது. இன்பா எனக்கு தான் என்று நினைத்து கொண்டாள். அங்கு இருக்கும் இடத்தை எல்லாம் சுற்றி பார்த்து விட்டு அவர்கள் ஊருக்கு கிளம்பினர். விவேகா வுடம் ராஜ் பேச முயற்சி செய்தான். ஆனால் அவள் அவனை ஒரு பொருட்டாக கூட நினைக்க வில்லை. அவன் மேல் வெறுப்பு மட்டுமே இருந்தது. 

டெல்லியில் இருந்து வரும் பொழுது ட்ரெயின்ல வெண்பா தான் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தாள். ஆதி தான் அருகில் இருக்கிறானே வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டு இருப்பது போன்ற வேலையை செய்து கொண்டு இருந்தாள். 

விவேகா, ஹே என்ன அவனை அப்படி பார்க்கிற.. அப்படி தான் பார்ப்பேன்.. அவள் ஷாக் ஆகி பார்க்க..  வெண்பா, நடிக்காத அவன் என்னை பற்றி உன் கிட்ட எதுவும் சொண்ணானா என்று ஆர்வமாக கேட்க.. இல்லயே.. இல்லையா… விவேகா, சரி அதை விடு நீ வந்த விஷயத்தை சொல்லு.. ஒன்னும் இல்ல என்று முகத்தை திருப்பி கொள்ள.. விவேகா, சொன்னான்.. அவள் முகம் மலர்ந்து என்ன சொன்னான் பிளீஸ் சொல்லு சொல்லு.. ஹான் அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும்.. ஹே விவேகா பிளீஸ் விளையாடாத டி சொல்லு டி.. 

நீ கொஞ்சம் சொன்னால் நான் கொஞ்சம் சொல்வேன்.. வெண்பா, நடிக்காத அதான் உனக்கு தெரியுமே.. என்ன தெரியும் எனக்கு ஒன்னும் தெரியாது. ஹே பொய்.. உன் வாயால சொல்லு.. அவள் ஒரு பெரு மூச்சை விட்டு எனக்கு.. உனக்கு.. எனக்கு..  சகிக்கல வெண்பா சீக்கிரம் சொல்லு… நான் அவனை.. விவேகா , யாரை.. ஹே இப்படி நீ கேட்ட நான் சொல்ல மாட்டேன்.. சரி சரி சொல்லு.. எனக்கு அவன் கூட சண்டை போடணும் டி… என்ன.. வெண்பா கொஞ்சம் கன்னம் சிலிர்க்க நான் இப்போ சொல்லல என் வாழ்க்கை முழுக்க என் பக்கத்தில் என்று சொல்லி புன்னகையை சிந்த விவேகா அவளை தான் முறைத்து கொண்டு இருந்தாள். 

 வெண்பா ஒரு வித தயக்கடதுடன் பார்க்க.. ஹே என்ன ஆச்சு எதுக்கு இப்படி பார்க்கிற.. அப்போ என் ஆதி கிட்ட சண்டை போடுவது அதுக்கு மட்டும் தான் உனக்கு வேணுமா.. அடி பாவி நீயெல்லாம் ரெண்டு வருஷமா ரிலேஷன் ஷிப் ல இருக்கேன் அப்டின்னு சொல்லிடடு திரியாத என் அண்ணாவுக்கு தான் அவமானம்.. 

விவேகா, யாரு யாரு கூட ரெலேஷன ஷிப் கண்டத பேசாத இப்போ நம்ப விஷயத்துக்கு வருவோம்.. என்ன.. என் ஆதியை நீ லவ் பண்ற அப்படி தான.. வெண்பா ம்ம் என்று சிரிக்க உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தது. ஹே ஒரு நிமிடம் அவன் என்னை பற்றி உன் கிட்ட என்ன சொன்னான்னு நீ சொல்லவே இல்லையே.. 

விவேகா, என் கிட்ட ஒன்னும் சொல்லல நீ என்னோட ப்ரெண்ட் அதனால் உன் கிட்ட கொஞ்சம் உரிமையா பேசுவானாம்.. அப்புறம்.. அப்புறம் அவ்ளோ தான்.. நிஜமாவா வேற எதுவும் சொல்ல வில்லையா..  ம்ம் ஆமா டீச்சர்.. அவள் முகம் வாடி போக சரி விடு நீ போய் அவன் கிட்ட சொல்லிடு.. வெண்பா, மாட்டேன்.. என்ன ஆச்சு.. அவன் வந்து என் மேல் விருப்பம் அப்டின்னு சொன்னால் தான் நான் சொல்லுவேன்.. விவேகா, ம்ம் விளங்கின மாதிரி தான்.. என்று நினைத்து கொண்டாள். 

விவேகா, ம்ம் ஒரு விதத்தில் நீ லவ் பண்ற விஷயத்தை என் கிட்ட தான் முதல்ல சொல்ற அதனால் கட்டாயம் வெற்றி நிச்சயம் டி.. என் ஆதிக்கு ஏற்ற ஜோடி தான்.. இதை கேட்டதும் அவள் விவேகாவை பார்க்க, வெண்பா என்ன லுக்கு உன் ஆதியா… விவேகா, அமைதியாக இருக்க உடனே அவள் தோலின் மேல் கைகளை போட்டு கொண்டு உன்னால் தான்டி அவன் எனக்கு கிடைத்து இருக்கிறான்.  உன் இடம் எப்பொதும் மாறாது ஆனால்.. 

விவேகா, ஆனால் என்ன.. இல்ல அவன் மனசில் நான் இருக்கேனா அப்படியே இருந்தாலும் நான் போய் அவன் கிட்ட சொல்ல மாட்டேன் என்று விவேகாவின் தோலின் மேல் சாய்ந்து கொண்டே அவள் சொல்ல… ம்ம் பார்க்கலாம் என்று இருவரும் அவர்களுக்குள் பேசி கொண்டும் சிரித்து கொண்டும் வெண்பா ஆதியின் சிறு வயது குறும்புகள் அவனின் குணம் என அனைத்தும் விவேகா கிட்ட கேட்டு கொண்டே இருந்தாள். ஆதி அவர்கள் இருவரும் ஒட்டி கொண்டு இருப்பதை பார்த்து அதை அப்புறம் கேட்டு கொள்ளலாம் என்று விட்டான். 

எந்த வித பிரச்னையும் இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தனர். வெண்பா, ஹே எனக்கு இன்னும் ஆதி என்று ஆரம்பிக்க விவேகா, பிளீஸ் டி என்னை விடு தயவு செய்து வீட்டு பக்கம் அவனை பற்றி கேட்கிறேன் என்று வந்து நிறக்காத எனக்கு பேசி பேசி சோர்வா இருக்கு.. வெண்பா, ஹே அப்புறம் நான் யார் கிட்ட தெரிந்து கொள்வது.. 

விவேகா சோம்பல் முறித்து கொண்டே நீ அவன் கிட்டயே கேளு அப்படி இல்ல அதி கிட்ட கேளு அவளுக்கு தெரியும் இல்ல மாமி கிட்ட கேளு.. வெண்பா, யோசனையாக இருக்க.. ஹே உன் மாமி தான்.. வெண்பா இதை கேட்டு சிரித்து கொண்டே எங்க வீட்டில் எல்லாம் அத்தை என்று தான் கூப்பிடுவோம்.. 

இன்பா அண்ணா வீட்டில் தான் மாமி.. அப்போ நீ என் அண்ணா மேல்.. என்று நிறுத்த… 

இன்பா அண்ணா வீட்டில் தான் மாமி.. அப்போ  அண்ணா மேல் உனக்கு கோபம் இல்ல தானே .. என்று நிறுத்த… 

விவேகா ச்ச அவன் சொல்லி சொல்லி இப்போ என் நினைவு அவனுக்கு சொந்தம் ஆகி விட்டது ஃப்ராடு பைய இர்ரிடேடிங் இடியட் என்று நினைத்து கொண்டே 

 அவள் அப்படி எல்லாம் இல்ல எதோ ஒரு நினைவில் சரி சரி அதை அப்படியே விட்டு விடு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு தயவு செய்து வீட்டு பக்கம் வந்து விடாதே..

என்று சொல்லி கொண்டே அவள் நழுவ ஹே  எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாது டி என்று சொல்லி அவரவர் வீட்டை நோக்கி சென்றனர். 

விவேகா மிகவும் சந்தோஷமாக அவள் வீட்டை அடைந்தாள். அம்மா அம்மா நான் வின் பண்ணி விட்டேன்.. நான் ஜெய்த்து விட்டேன் என்று கத்தி கொண்டே உள்ளே வர… ஹே என்ன நீ மட்டும் வந்து இருக்க எங்க ஆதி.. அவனா அவன் வீட்டுக்கு போய் விட்டான் என்று அருகில் உள்ள சேரில் அமர்ந்தாள். 

ஆதி கண்ணா என்று உடனே கங்கா போன் செய்து பேச அம்மா என் கிட்ட பேசுவதை விட்டு அவனோடு உனக்கு என்ன பேச்சு.. விவேகா வந்தேன்னு வை அடி தான்.. ஒழுன்கா போய் குளித்து விட்டு வாடி.. அவள் சிணுங்கி கொண்டே அவள் உள்ளே சென்று குளித்து முடித்து விட்டு வெளியே உடையை மறந்து வந்தவள். துண்டு எடுக்க அவன் தான் நினைவில் வந்தான். ச்சி ச்சீ.. என்று நினைத்து கொண்டு உடையை போட்டு கொண்டு வந்தவள். அவளது அம்மா செய்து வைத்த உணவை ஒரு பிடி பிடித்து விட்டு தூங்க செல்ல.. 

கங்கா, ஹே வருணை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்ல.. அம்மா நான் அப்புறம் போய் பார்க்கிறேன் இப்போ தூக்கம் வருது.. அதி தனியா இருப்பா நீ அங்கே போ நான் மாவு ஆட்டி விட்டேன் அதை கலக்கி வைத்து விட்டு அவளுக்கும் எடுத்து கொண்டு வருகிறேன். விவேகா, நான் ஏன் சண்டேல வரனும் இந்த அம்மா ஆபீஸ் போன டைமில் வர கூடாதா என்று நினைத்து சிணுங்கி கொண்டே வருண் வீடு நோக்கி சென்றாள். 

அங்கே அதிதி இருக்க அவளிடம் கதை பேசி கொண்டே அப்படியே அங்கு இருந்த சோபாவில் தூங்கி போனாள். இங்கே வருண் ஒரு சிறு பிரச்னையில் மாட்டி கொண்டு இருந்தான். ஆம் காவலர் பணியில் இருக்கும் போலிஷ்க்கு என்று சில கடமைகள் உண்டு லத்தி, அவர்கள் அணியும் காவலர் பெல்ட் அதில் உள்ள முத்திரை அவர்கள் சட்டையில் உள்ள நட்சத்திரம் மற்றும் தொப்பியில் இருக்கும் அரசு முத்திரை தொலைந்து போனால் ஒரு மாதம் சஸ்பென்ட் மற்றும் அதற்கான காரணம் அப்படி இப்படி என்று பல சட்ட சிக்கல் இருக்கிறது.அதே போல் துப்பாக்கியை சுத்தமாக துடைத்து வைத்து இருக்க வேண்டும் அதை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள் போடும் காலணிகள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கும் தண்டனை. கிட்ட தட்ட ஒரு சரியான இந்திய குடிமகனுக்கு சிறந்த உதாரணமாக ஒழுக்கமாக இருக்க வேண்டும். 

அதே போல் தான் வருண் ஒரு திருடனை பிடிக்க போகும் பொழுது லத்தியை தொலைத்து விட்டான். அது இன்பாவின் காதுகளுக்கு வர அவன் அதை சாதாரணமாக விட்டு விட்டான். ஆனால் இப்பொழுது தொலைந்து கிட்ட தட்ட ஒரு வாரத்துக்கு மேல் ஆகி போக இன்பா அவனை ஆபீஸில் அனைவருக்கும் முன்னாடி திட்டி விட்டால் சங்கடமாக இருக்கும் என்று அவனை வீட்டில் பார்க்க போலீஸ் உடையோடு அப்படியே வர… 

வீட்டின் வெளியே காலடி சத்தம் கேட்கவும் அதிதி, ஹே மாமா வந்து விட்டார்கள் என்று சமையல் அறைக்குள் இருந்து  சொல்ல  அவள் குட்டி குரட்டையில் இருந்தாள். இன்பா வரும் பொழுது முகம் கடுமையாக தான் இருந்தான்.

ஏன் என்றால் அவனுக்கு இந்த மாதிரி வேலையில் சிறு தவறு நடந்தாலும் அது சுத்தமாக பிடிக்காது. 

இன்பா கதவை தட்ட விவேகா அப்பொழுதும் எழ வில்லை. அதிதி வேகமாக ஹான் வந்து விட்டேன் என்று சொல்லி கொண்டே வந்தாள். இன்பா, அதிமா… அவள் கைகளை துடைத்து கொண்டே அண்ணா வாங்க உள்ளே வாங்க.. இட்ஸ் ஓகே… அண்ணா வாங்க அண்ணா… அவன் உள்ளே வர அங்கே விவேகா அசந்து தூங்கி கொண்டு இருப்பதை பார்த்த அவனுக்கு ஓ வந்து விட்டாளா.. ம்ம் இப்போ உன்னை கவனிக்க எனக்கு நேரம் இல்ல டி அப்புறம் பார்த்து கொள்கிறேன்  என்று மனதில் சொல்லி கொண்டே அவன் நின்றான். 

அதிதி அவன் பார்வை சென்ற திசையை பார்த்து விட்டு ஹே விவேகா எழு.. என்று அருகில் போய் தட்ட.. விடு மா என்று சொல்லி விட்டு வருண் எங்கே.. இன்னும் அவர் வர வில்லை அண்ணா.. நான் 3 தடவை கால் பண்ணேன் எடுக்கவே இல்ல .. தெரியல அண்ணா அவர் வரும் நேரம் தான் இது நான் இப்போவே கால் பண்றேன்.. 

இல்ல விடு மா எதுவும் வேலையாக இருப்பான். என்று சொல்லி கொண்டே அவன் வந்ததும் எனக்கு உடனே கால் பண்ண சொல்லு அண்ட் அப்படி இல்லன்னா உடனே என் வீட்டுக்கு வர சொல்லு என்று கிளம்ப..

அண்ணா இருங்க டீ சாப்பிட்டு போங்க.. இல்ல மா எனக்கு வேண்டாம்.. அண்ணா இல்லனா என்னை அவர் திட்டுவார் அதுவும் இல்லாமல் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க 5 நிமிடம் இப்போவே போலாம்.. என்று அவன் மறுக்க மறுக்க உள்ளே ஓடினாள். அவள் உள்ளே போகும் போது ஹே எழுந்து உள்ளே போய் படு விவேகா என்று அவளை கிள்ளி விட்டு அதி உள்ளே செல்ல 

ஸ்ஸ் ஹா வலிக்குது டி என்று கன்னத்தை தேய்த்து கொண்டே எழ அங்கே அவள் முன் கம்பீரமாக இன்பா அமர்ந்து கொண்டு போனை நோண்டி கொண்டு இருக்க இவனா இவன் எப்படி இங்கே வந்தான்.

விவேகா….?

தொடரும்….

Episode 190

இவன் வந்தது  கூட தெரியாமல் தூங்கி கொண்டு இருந்து இருக்கிறோம் என்று எழுந்து தன்னை சரி செய்து கொண்டு அமர அவள் அவனை ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு மீண்டும் போனில் யாருக்கோ போன் செய்து பேசி விட்டு போனை வைத்து அவளை பார்க்க திரும்ப அதற்குள் வருண் கால் செய்தான். 

எங்கே இருக்க.. என்று பயமுறுத்தும் தொனியில் பேச ஆரம்பித்தான். சார் புதுசா ஒரு ஸ்பெசல் சைல்டு மிஸ்ஸிங் கேஸ் அவங்க பேரன்ஸ் வந்து சில தகவல் அந்த பொன்னு தொலைந்து போன அப்போ போட்ட ட்ரெஸ் மற்றும் அவளை பற்றி தகவல்  கொடுத்து விட்டு போனாங்க அதான் சார் கொஞ்சம் வேலையில் இருந்தேன். இதோ கோட்ரஸ் பக்கத்தில் வந்து விட்டேன் என்று சொல்லி விட உன் கேஸ் என்ன ஆச்சு.. வருண் அமைதியாக இருக்க.. ஹே ஃபூல் மேன் பொறுப்பு இல்லாமல் இருக்க இந்த வீக் மட்டும் தான் டைம் இல்லன்னா அடுத்து என்னன்னு தெரியுமா.. வருண் இதை கேட்டு மிகவும் உடைந்து போனான். ஆனால் அதை வெளிக்காட்ட வில்லை. 

அவன் அமைதியாக இருப்பதை பார்த்து ஆர் யூ ஹியர் வருண்.. விவேகா இவளோ நேரம் என் அண்ணாவை தான் இப்படி மிரட்டி கொண்டு இருந்தியா டா என்று நினைத்து கொண்டே அவனை முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்றாள். அதன் பின் சில மணி துளிகளில் வருண் வீட்டுக்கு வர அதி டீயை எடுத்து கொண்டு வந்தாள். 

வருண் முகம் மிகவும் சோகமாக இருக்க இன்பா, அந்த டீயை ஒரு மிடுக்கு பருகி விட்டு இப்போ என்ன பண்ண போற.. சார் என்று வருண் அவனை பார்க்க.. இன்பா அதியை பார்த்தான். வருண், அதிதி நீ உள்ளே போ.. அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். இன்பா, நீ ஒன்னும் சின்ன பையன் இல்ல எவ்ளோ பெரிய பதவியில் இருக்க அது நினைவு இருக்கா.. 

இன்பா, இன்னொரு முக்கியமான விஷயம் உன்னோட ஸ்டார்  அந்த டாஸ்மாக் பக்கத்தில் இருந்து கிடைத்து இருக்கு. உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல வருண்.. சார் என்று அவன் தலை குனிந்து நிற்க.. 

இன்பா உடனே எழுந்து சரி இன்னும் அரை மணி நேரத்தில் தயாரா இரு என்று சொல்லி விட்டு அவன் கிளம்ப சரி சார் என்று அவன் சல்யூட் அடித்தான். இன்பா, கவலை படாதே பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு  கிளம்பினான். 

வருண் சோர்வாக தன்னை சரி செய்து கொண்டு உள்ளே சென்றவன் குளித்து விட்டு வெளியே வந்து வெளியே செல்லும் உடைக்கு மாறினான். விவேகா அவன் முகத்தை பார்த்து என்ன ஆச்சு வருண்.. ஒன்னும் இல்ல விவேகா.. ஹே சொல்லு உன் முகம் சரி இல்ல.. வருண் அவன் பிரச்சனையை சொல்ல எப்படி வருண் நீ இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்க இப்போ என்ன பண்றது உன்னை அவர் அப்படி திட்டி விட்டு செல்கிறார்.  

இல்ல விவேகா இது கொஞ்சம் தான் என் இடத்தில் வேறு யாரும் இருந்தால் அவ்ளோ தான்.. இப்போ அடுத்து என்ன செய்ய போற.. இதோ இப்போ என்னை வர சொன்னார் அதனால் நான் இப்போ உடனே கிளம்ப வேணும் நீ இங்கேயே அதி கூட இருந்து கொள் என்று சொல்லி விட்டு அவன் கிளம்பினான். 

விவேகா அச்சோ நான் தான் தவறாக நினைத்து விட்டேன்.  அவன் எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருக்கிறான். என்று நினைத்தவள்  வருண் சீக்கிரமாக இந்த பிரச்னையில் இருந்து விடு பட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டாள். 

வருண் நேராக இன்பாவை காண சென்றான். இன்பா, மித்ரன், வருண் மூவரும் இந்த பொருள் காணாமல் போவதற்கு முன்  வருண் கடைசியாக சென்ற இடத்துக்கு சென்றனர். 

இன்பா, வருண் , மித்ரன் மூவரும் அவன் சென்ற இடத்துக்கு சென்றனர். அது ஒரு மதுபான கடை அதற்கு எதிரே ஒரு பெரிய பிரபலமான கேக் ஷாப் இருந்தது. ஆளுக்கு ஒரு இடத்தில தேடி கொண்டு இருக்க

டேய் இன்பா உன் மச்சானுக்கு நீயே தனியா ஹெல்ப் பண்ண வேண்டியது தானே இப்போ தான் நான் அந்த டீச்சர்ஸ் ஸ்ட்ரைக் டூட்டி முடித்து விட்டு வந்தேன். என்னையும் எதுக்கு டா வர சொன்ன.. சரி நீ கிளம்பு.. ஒகே ரொம்ப சீன் போடாத என்று தேட கிட்ட தட்ட ஒரு அரை மணி நேரம் ஆனது. மித்ரன் தான் முதலில் கண்டு பிடித்தான்.

ஹே வருண் இங்கே பாரு என்று சொல்லி கொண்டே அந்த லத்தியை காட்ட சார் என்று அவன் ஓடி வந்து அதை கையில் வாங்கி கொண்டான். ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்லி கொண்டே இன்பாவை பார்க்க அவன் யாரிடமோ போன் பேசி கொண்டு இருந்தான். 

மித்ரன் இன்பா கிட்ட செல்ல வருண் அருகில் இருக்கும் பேக்கரிக்கு சென்று மூவருக்கும் சேர்த்து  சில ஸ்நாக்ஸ் வாங்கினான். அதற்கு  அவன் பணம் செலுத்தி விட்டு அந்த பணியாள் கிட்ட ரெடி ஆனதும் கொடுத்து விட சொல்லி விட்டு அவன் ஓரமாக நின்று கொண்டு இருக்க அப்பொழுது அவன் கண்ணில் தான் அது பட்டது. ஒரு   கிழிந்த துண்டு ஆடையில் சில இரத்த கரைகள் இருக்க வருண் சட்டென்று அந்த இடத்தில் அமர்ந்து அதை ஆரயிந்தவன் நினைவில் அந்த சிறப்பு குழந்தை இளம் வயது பெண் காணாமல் போனது நினைவு வந்தது. ஏன் என்றால் அந்த பெண் பிறந்த நாள் அன்று அணிந்து இருந்த ஆடை தான் அது.. 

வருண், சார் என்று கத்த இன்பா, மித்ரன் இருவரும் என்ன என்பதை போல் ஓடி வந்தனர். சார் அந்த ஸ்பேசல் சைல்ட் மிஸ்ஸிங்  கேஸ் ல இருக்க சில அடையாளம் அவர்கள் காட்டிய ட்ரெஸ் இது தான் சார் இதில் கொஞ்சம் இரத்தம் பட்டு இருக்கு பாருங்கள் என்று காட்ட இன்பா உடனே அதை போட்டோ எடுத்து கொண்டு இன்வெஸ்டிகேசன் ஆரம்பிக்க சொன்னான். வருணை பாராட்டி விட்டு இந்த கேஸ நீயே ஹேண்டில் பண்ணு இது நீயா தனியா கண்டு பிடிக்க போற.. அண்ட் நானும் இதில் ஒரு பக்கம் இன்வெஸ்டிக்கேட் பண்றேன். என்று சொல்லி விட தடவியல் நிபுணர்கள், மற்றும் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் அங்கு உள்ள கேமராக்கள் என்று சல்லடை போட்டு இந்த கேசை தேட ஆரம்பித்தனர். 

 இன்பாவின் குழுவில் இருக்கும் லோகேஷ் ஒரு முக்கிய விஷயம் காரணமாக வேறு மாவட்டத்துக்கு சென்று இருந்தான். இங்கே விவேகா காலேஜ் சென்றதும் பயங்கர உபசரிப்பு அனைவரும் பாராட்டினர். அது மட்டுமா இன்பா அந்த குருவை தோற்கடித்த விஷயத்தை வசு கிட்ட கூற மிகவும் சந்தோஷபட்டு இனி தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

கிருஷ்ணன் இன்பாவை அழைத்தார். ராகவ் காலேஜ் சாம்பியன் ஷிப் வின் ஆனதுக்கு ஒரு பங்ஷன் ஏற்பாடு பண்ணி இருக்கேன் நீ வரயா.. நானா..

ம்ம் நீ தான் இந்த வெற்றிக்கு காரணம்..

இல்ல மேன் நான் வரல அண்ட் இதுக்கு காரணம் சிபி, அருண், அண்ட் அந்த மொத்த டீம் தான்..

இதை கேட்டு கிருஷ்ணன் சிரித்து கொண்டே என்ன டா” அடாரப்ல் கேர்ல்” பற்றி எதுவும் சொல்ல மாட்டிக்கிற.. 

ம்ம் அவளா ரொம்ப மோசகாரி என் கிட்ட சண்டை போட்டு விட்டாள். என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்க்கிறாள் மேன் வாட் அ டூ..

கிருஷ்ணன், அவள் உன் பக்கத்தில் தானே இருக்கா இன்னும் சமாதானம் ஆக வில்லையா.. அதை ஏன் கேக்கறீங்க அவன் அண்ணா கிட்ட கொஞ்சம் கோபமா பேசி விட்டேன் அவன் கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல அதை அவள் பார்த்து என்னை கண்களால் எரித்து விடுவாள் போல என்னால் முடியல மேன்.. 

அவர் மீசையை முறுக்கி விட்ட படி இந்நேரம் ரவி இருந்தால் ஒரு நாள் கூட அதிகம் தான்.. இன்பா முகத்தை கோபமாக வைத்து கொண்டு அப் அப்படி என்ன பண்ணுவாரு.. அதை  உன் அப்பா கிட்ட கேளு டா… அது அது முடியாது. என்று சொல்லி கொண்டே ஒரு நான்கு அடிகள் சென்றவன். திரும்ப வந்து அவர் முன் நிற்க அவர் சிரித்தார். மாம் உடனே கன்வின்ஸ் ஆகி விடுவார்களா.. என்று கண்களில் விவேகாவை சமாதானம் செய்யும் தீவிரத்தில் கேட்டான். 

உடனே அவர் கூற ஆரம்பித்தார். 

இல்ல ராகவ்  காலையில் சண்டை போட்டால் வசு போன் பண்ணி வீட்டுக்கு வரேன் அப்டின்னு சொல்லுவா உன் மாமா போய் ஸ்டேஷன்ல இருந்து கூட்டி வருவான். அப்புறம்.. அப்புறம் என்ன நைட்டு ஒரு 8.00 மணிக்கு ரவி வருவாரு.. ம்ம் அடுத்து.. அடுத்து பாவை கிட்ட ஒரு டீ போட சொல்லுவாரு.. அப்புறம்..  பாவை டீ போட்டு கிட்டு வரதுக்குள்ள மாப்பிளை வசுமதியை சமாதானம் பண்ணி விடுவார். 

இன்பா இதை கேட்டு அது எப்படி டீ போட்டு வருவதற்குள் ஹைவ் இட்ஸ் பாசிப்ல் புரியாமல் திகைத்து விழித்தான். அவ்ளோ தானா.. ம்ம் அவ்ளோ தான்.. எப்படி.. என்று மண்டையை குடைந்து கொண்டு கேட்க 

அதை நீ ரவி கிட்ட போய் கேளு.. ஒரு நாள் கூட உன் அம்மா இங்கே தங்க மாட்டாள் ஸ்டேஷன் போவாள் கோட்ர்ஸ் அப்படி இல்லன்னா உன் தாத்தா வீடு.. அது நீங்க தான்..

டேய் நான்  நலன் தமயந்தி வீட்டை சொல்றேன்.. 

இன்பா அதற்கு மேல் நிற்காமல் போதும் நான் கிளம்புகிறேன். கிருஷ்ணன் ஒரு பெரு மூச்சை விட்டு சரி வரயா இல்லையா.. நான் வரல..

கிருஷ்ணன், அப்போ இந்த டிப்ஸ் இனி அருண்க்கு சொல்றேன் உனக்கும் அவளுக்கும் ப்ரேக் அப் என்று சொல்ல வர… 

இன்பா வேகமாக வந்தவன் தாத்தா!! என்று கத்தி விட்டு நான் வருவேன். நீங்க ரெடியா இருங்க என்று சொல்லி விட்டு சென்றான். அவர் சிரித்து கொண்டே சரியான கோபக்காரன் என்று நினைத்து கொண்டார்.

காலேஜ்ல கிருஷ்ணன் தலைமையில் ஒரு மீட்டிங் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அந்த மீட்டிங் ல அந்த வாரம் வரும் ப்ரெண்ட் ஷிப் டே மற்றும் இந்த பாராட்டு விழா பங்ஷன் இரண்டும் ஒன்றாக வைத்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர். 

விவேகா, ஆதி என அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தினர். இந்த போட்டியின் காரணமாக அவர்கள் கவனிக்காமல் இருந்த அனைத்து குறிப்புகள் லேப் நோட்ஸ் என அனைத்தும் ஒன்று சேர்ந்து விவேகா லைப்ரரி லேப் டாப் கையுமாக ஆதியுடன் சுற்றி கொண்டு இருந்தாள். 

அன்று வகுப்பில் ஒரு சர்க்குலர் வந்தது. வரும் வாரததுள் ப்ரெண்ட் ஷிப் டே கொண்டாட்டம் அதற்கான போட்டிகள் நடனம் , பேச்சு ,பாட்டு, தனி திறமை , குழு பாட்டு, தனி பாட்டு  என இருக்க விவேகா எதிலும் கலந்து கொள்ள வில்லை. 

ஆனால் இனியாழ், மைதிலி, ஆதி, யாழினியாள், அருண், வெண்பா, சதீஸ், கவ்யா, சோனா என அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆதி, ஏன் டி எதிலும் கலந்து கொள்ள வில்லை.. இல்ல டா நான் பார்ட்டிசிபேட் பன்னாலே  எதாவது பிரச்னை வந்திடுது அதனால் வேண்டாம் இந்த முறை நான் பார்வையாளராக இருக்க போறேன். 

ம்ம் ஆனால் நீ இல்லாமல்.. விவேகா வெட்க படுவது போல் முகத்தை வைத்து கொண்டு நான் இல்லனா என்ன உன் ராட்ச்சசி இருக்காளே.. விவேகா என்று அவன் அதட்ட.. ஹே போடா.. என்று இருவரும் பேசி சிரித்து விளையாடி கொண்டு இருந்தனர். 

அந்த நாளும் வந்தது. அன்று பாரம்பரிய உடை, உணவு திருவிழா என நிறைய போட்டிகள் கல்லூரியில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். விவேகா ஒரு கேரளா சாரி பாணியில் இருக்கும் தாவணி பாவாடை அது செட் ட்ரெஸ் அவள், பச்சை வண்ண ப்ளவுஸ், வெள்ளை மற்றும் தங்க ஜரிகை என வனப்பாக இருந்தாள்..  மைதிலி, வெண்பா மூவரும் அதே போல் உடை அணிந்து இருந்தனர். 

இன்று ஏனோ மனம் உற்சாகமாக இருந்தது. ஒரே ஒரு குறை தான் அந்த சண்டக்காரனை பார்த்து கிட்ட தட்ட ஒரு வாரம் ஆகி விட்டது. இன்று மாலை வீட்டின் அருகில் எப்படியும் பார்த்து விட வேண்டும் பேச கூடாது. விவேகா பேச மாட்டாளாம் அவன் தான் வந்து பேச வேண்டும் சனாதானம் செய்ய வேண்டும். அதனால் அவள் இப்படி நினைத்து கொண்டு காலேஜ் கிளம்பினாள்.

அவளும் வெண்பாவும் பேருந்தில் ஏற அங்கு உள்ள தோழர்கள் ஓ என கத்தி கொண்டு இந்த எக்ஸ்ட்ரா அழகை இவளோ நாள் ரெண்டு பேரும் எங்கே ஒளித்து வைத்து இருந்தீர்கள்.. அவர்கள் இல்லையே இன்னிக்கி கொஞ்சம் கம்மி தான் என்று ஆண் பிள்ளை போல் கையை வைத்து கொண்டு பேச.. 

அதில் ஒருவன் டேய் நீங்க சொல்லி வாயை மூடல அவள் பையனா மாறி விட்டாள் டா.. என்று சொல்ல வெண்பா அவன் தலையில் மெதுவாக கொட்டி விட்டு சில ரகளை ஆட்டம் போட்டு கொண்டே இடத்தில் அமர்ந்தனர். 

வெண்பா, ஹே இன்னிக்கி நான் நல்லா இருக்கேனா.. இத்தனை பேர் சொல்லிட்டாங்க அப்புறம் என்ன என் கிட்ட கேட்கிற.. அது அவனுக்கு பிடிக்குமா என்னை பார்ப்பானா என்று முதன் முதலாக எதிர் பார்த்து கேட்க.. விவேகா இரு புருவத்தையும்  யாருக்கு ? ஹே ஓவரா பண்ணாத.. யாரு நானா இருக்கும் டி எதோ பிழைத்து போ என் மாமா பையன நீ பாவம்ன்னு விட்டு கொடுக்கிறேன்…

ஓ அதை அப்படியே ஓரங்கட்டி வை என்று அவள் இரு தோள்களையும் பற்றி இன்னிக்கு என்ன சும்மா கும்முன்னு ஜம்முண்ணு வந்து இருக்க  யாருக்கு இந்த தரிசனம்.. 

நீ நினைக்கிற மாதிரி யாருக்கும் இல்ல.. 

ஹே பொய் சொல்ற… 

நான் உன் கிட்ட பொய் சொல்லி என்ன பண்ண போறேன்..  அப்புறம் முக்கிய விஷயம் யாரை பற்றியும் தேவை இல்லாமல் என் கிட்ட பேச வேண்டாம் புரியுதா.. 

இல்ல புரியல.. ஹேய் என்ன டி கொன்றுவேன்.. 

வெண்பா, ம்ம் திருந்த மாட்ட டி நல்லா நடிக்கிற உன் கிட்ட எல்லாம் கஷ்ட படனும் அப்டின்னு சில பேருக்கு எழுதி இருக்கு.. 

விவேகா, என் ஆதி கஷ்ட படுவன்னு தெரிந்தும் சரி சின்ன பொன்னு ஆசை பட்டு இருக்க பாவம்ன்னு  எதோ நான் என்ன விட்டு தரதுனால என் ஆதியை நீ லவ் பண்ண கொடுத்து வச்சு இருக்கு… 

இதை கேட்டதும் வெண்பா….?

தொடரும்… 

Comment konjam உங்களுக்கு இந்த கதை எவ்ளோ பிடிச்சு இருக்கு அப்டின்னு reviews ல ratings கில்லி போடாமல் அள்ளி போட்டு ஒரு நாலு வரியில் எழுதி விட்டு போங்க…🙏🙏

Episode 191

வெண்பா,  ம்ம் அப்படி ஒன்னும் நீங்க விட்டு தர வேண்டாம்  என்று எதையோ யோசித்தாள்.  பின் விவேகாவிடம் என்ன இத்தனை நாள்  அண்ணா உன்னை கண்டு கொள்ளாமல் இருக்கிறான்.. அவன் பெயரை கேட்டதும்”தேவை இல்லாமல் பேசாதே வேற எதுவும் பேசு”.. ஹே இல்ல டி நான் என்ன சொல்ல வருகிறேன்னு கேளு… 

இப்போ நீ எதுவும் தேவை இல்லாமல் பேசின நான் இப்போவே பின்னாடி நிவேதா கிட்ட போய் உட்கார்ந்து கொள்வேன் என்று சொல்லி அவள் எழுந்து சென்றாள்.

சரி தான் போடி நீ என் கிட்ட தான வருவ அப்போ உன்னை பார்த்து கொள்கிறேன்… அதற்குள்  அவர்கள் காலேஜ் வந்தது. 

விவேகா, வெண்பா இருவரும் கீழே இறங்க அவர்கள் எதிர்பாராமல் இருக்க  அங்கு இருந்து அப்படியே ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். டெல்லிக்கு சென்ற அனைத்து மாணவர்களும் அங்கு இருந்தனர். ஆதி விவேகா, வெண்பா இருவரையும் பார்க்க.. அருண் விவேகாவை தான் பார்த்து கொண்டு இருந்தான். 

ஆதி, ஹே எங்கே பூ.. அவன் தந்திர புன்னகை சிந்த ஹெய் இப்போ எதுக்கு சிரிக்கிற.. இஸ்டமா! இல்ல கஷ்டமா!..  என்ன நீ சொல்றது ஒன்னும் புரியல.. ஹே நடிக்காத டி இந்த பூ..  என்று காட்டி அவள் கைகளுக்கு எட்டாமல் மேலே தூக்கி தூக்கி விளையாட ஹே அடி வாங்க போற என்று சொல்லி 

அவன் வாயின் மேல் கை வைத்து கொஞ்சம் கம்முனு இரு டென்ஷன் பண்ண அப்புறம் சீனியர் என்று வாய் திறக்கும் முன் அவன் அவள் காதை பிடித்து திருகினான். 

விவேகா, ஹே தெரியாமல் சொல்லி விட்டேன் விடு என்று சிரித்து விளையாடி செல்ஃபி எடுத்தனர். 

விவேகா அழகாக உடை அணிந்து ஆதி கிட்ட சொல்லி வீட்டில் இருந்து மகிழம் பூ அத்தை கிட்ட  கோர்த்து கொடுக்க சொல்லி தலைக்கு குளித்து கொஞ்சம் மட்டும் முடி எடுத்து பின்னி ஃப்ரீ ஹேர் விட்டு நடுவில் அந்த பூவை சூடி கொண்டாள். 

வெண்பாவை ஆதி கண்டு கொள்ளாமல் இருக்க அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

அருண் வைத்த கண் வாங்காமல் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். ச்ச இன்னுக்கி எவ்ளோ அழகா இருக்கா இன்னிக்கு எதுவும் செய்து எல்லாருடைய மொத்த கவனம் என் மேலயும் விவேகா மேலயும் வர மாதிரி எதுவும் செய்யணும் என்று நினைத்து கொண்டான். 

நேரம் ஆக அந்த பங்ஷன் வேலைகள் ஒரு புறம் முடிந்து அனைத்தும் தயாராக இருக்க இனியாழ் எப்பொழுதும் போல் முகத்தில் வாட்டர் ப்ரூப் hd மேக் அப் போட்டு வந்து இருந்தாள். இன்று நடனம், பாட்டு என அனைத்து போட்டியிலும் கலந்து இருந்தாள். 

கவ்யா சொல்லவே தேவையில்லை அந்த முகத்தில் பெரிய பணக்கார திமிர் தன்மை கொண்ட தோற்றத்தில் வந்து இருந்தாள். வருனி, வசுமதி, கிருஷ்ணன், மதிவானன்,  அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் என அனைவரும் வந்து இருக்க சிபி தான் அந்த பங்ஷனின் மொத்த பொறுப்பு ஏற்று இருந்தான். 

வசு மிகவும் பெருமையாக சிபியைப் பார்த்தாள். அப்பா சிபி மிகவும் வளர்ந்து விட்டான். கிருஷ்ணன் இதை கேட்டு புன்னகைத்தார். வருணி, அத்தை இது என் தாத்தா  காலேஜ்.. ம்ம் உன் காலேஜ் தான் உன் அண்ணன் என்ன டி பண்றான். அண்ணா முக்கிய விஷயமா கொஞ்சம் வேலையா இருக்கான். ம்ம் விட்டு கொடுக்க மாட்டியே.. வருணி அழகாக சிரித்தாள். அவள் பாதி வசுமதி ,வெண்மதி கலந்த கலவை.. மதிவானன், அப்பா பேசாமல் மொத்த பொறுப்பும் சிபி கிட்ட கொடுத்து வர்ணிய கல்யாணம் பண்ணி வைத்து விடலாமா!

 அவள் டாடி உங்களுக்கு வேற வேலையே இல்லையா ரவி மாமா சொல்வது போல் எப்போ பார்த்தாலும் உங்களுக்கு இதே வேலை. எப்போ பாரு இதே பேச்சு தான்..

மதிவானன், அப்பா நம்ம சிபி சொந்தம் விட்டு போகாது அண்ட் ரொம்ப பொறுமை ,நிதானம் அதனால் சொன்னேன். என் பெண்ணை நான் வேற இடத்துக்கு தர முடியாது  என் தங்கை ரெண்டு பேர் இருக்காங்க… நான் எதுக்கு வெளியே கட்டணும்..

கிருஷ்ணன், டேய் அன்னிக்கு ராகவ பார்த்து என்ன சொன்ன.. என்ன சொன்னேன்.. அவனுக்கு கட்டி வைக்கணும் அப்டின்னு சொன்ன.. மதிவானன் அமைதியாக இருக்க.. இன்னிக்கு சிபியைப் பற்றி சொல்ற.. என் கவலை உங்களுக்கு புரியாது பா என் பொண்ண நல்ல பையனுக்கு கட்டி வைக்கணும்.. 

கிருஷ்ணன், அது தவறு இல்ல மதிவாணா அதில் வருணிக்கு இஷ்டம் இருக்கணும். இதை கேட்டதும் அவள்  ஐ லவ் யூ சோ மச் தாத்து யூ ஆர் மை ஃபேவரட்.. மதிவாணன், இப்போ என்ன சொல்ல வரீங்க.. அய்யோ அண்ணா நீ ரொம்ப கவலை பட வேண்டாம் விடு நாங்க இருக்கோம் என்று வசு சொல்ல அவர் அமைதியானார்.. 

வருணி, அத்தை எங்கே அவனை காணோம்.. யார டி கேட்கிற.. அதான் ராகவ்.. அடி பிச்சிடுவென் கழுதை.. அட போங்க அத்தை.. சரி நீயே கால் பண்ணி கேளு.. ம்ம் என்று அவள் இன்பாவுக்கு கால் செய்ய அவன் ஹே நீயும் வந்து இருக்கியா.. ம்ம் ஆமா நான் டாடி, அத்தை, தாத்து எல்லாம் நீ சீக்கிரம் வாயேன் இந்த சிபி இங்கே ரொம்ப பிஸியா இருக்கான் டா எனக்கு கம்பனிக்கு ஆளே இல்லை.. வா டா..ராகவ்..

 இன்பா, அந்த அருண்? 

வருணி,  அருண் என் கிட்ட ஒரு விஷயம் சொல்லி இருக்கான் இன்னிக்கு கிட்டார் பெர்பர்ம் பண்ண போரானாம்.அதனால் கிட்டார் எல்லாம் எடுத்து வந்து இருக்கான் டா என் கிட்ட ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னான்..

இன்பா இதை கேட்டு அதிர்ச்சி ஆகி என்ன டி சொல்ற.. 

அவள், முதலில் கிட்டார் அடுத்து கப்பில் பெர்ஃபார்ம் அதை விடியோ எடு அப்டின்னு சொல்லிட்டு போயிருக்கான். 

அவன் கப்பில் பெர்பார்ம் பண்ண போரானா! அது என்ன.. 

ஹான் சிங்கிங் என் கிட்ட பாட்டு லிஸ்ட்டே வாங்கிட்டு போயிருக்கான். 

இன்பாவுக்கு இதை கேட்டதும் மிகவும் சோர்வாக இருந்தது. இதில் எதோ  இருக்கோ.. அய்யோ என்னை டென்ஷன் பன்றதுககே பிறந்து இருக்கான். எல்லாம் அவளை சொல்லணும் அன்னிக்கு எவ்ளோ சீன் போட்டாள். 

இதுக்கு மேல என்னால இங்கே இருக்க முடியலையே என்று உடனே வேகமாக கிளம்பினான். 

வரேன் டா.. விவேகா அது நீயா மட்டும் இருந்த இன்னிக்கு இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்.. என்று நினைத்து விட்டு வரு(வருணி) அங்கே எதுவும் நடந்தால் எனக்கு உடனே கால் பண்ணு.. 

ம்ம் சீக்கிரம் வா என்று பேசி விட்டு போன் வைத்தாள். 

அவன் காக்கி சட்டையை மட்டும் மாற்றி விட்டு மப்டியில் காலேஜ் கிளம்பினான். 

முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் அந்த விழா தொடங்கியது. வரவேற்பு உரை காலேஜ் மாணவ மாணவிகளில் ஒவ்வொரு ஆண்டில் இருந்தும் ஒருவர் வந்து அனைவரையும் வரவேர்க்க காலேஜ் முதல்வர், சிறப்பு விருந்தினர் மற்றும் காலேஜ் தாளாளர் என அனைவரையும் அங்கு இருக்கும் பணி அனுபவம் பெற்ற விரிவுரையாளர் ஒருவர் வரவேற்றார். 

அதன் பின் கிருஷ்ணன் இரு வார்த்தை, காலேஜ் முதல்வர் இரு வார்த்தை, சிறப்பு விருந்தினர் என ஆளுக்கு 5 நிமிடங்கள் என பேசி முடிக்க விழா துவங்கியது. 

முதலில் வரவேற்பு நடனம் அது இனியாள், மற்றும் திவ்யா இரண்டாம் ஆண்டு மாணவி, பவித்ரா மூன்றாம் ஆண்டு மாணவி, சத்யா முதலாம் ஆண்டு மாணவி என அனைவரும் சேர்ந்து ஆடினர். 

“காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா”! என்று ஆடி முடிக்க அந்த நடனம் உண்மையாகவே அவ்வளவு அருமையாக இருந்தது. சிபிக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் இவ்வளவு அழகாக ஆடுவாலா என்று ஆச்சரியம் தான்.. 

அடுத்ததாக கவ்யா, சோனியா இருவரும் சேர்ந்து” நீ எனக்கு வேனுமடி தங்கமே தங்கம் தங்கம்” என்ற பாடலுக்கு ஆட வசுமதி அவளின் நடனததை பார்த்து உண்மையாகவே ஆச்சரியம் அடைந்தார். 

அடுத்ததாக முதலாம் ஆண்டு மாணவிகள் ஒரு டிராமா செய்து காட்டினார்கள். அடுத்து என்று மைம், மிமிக்ரி என அனைத்து நிகழ்ச்சியும் நடந்து கொண்டு இருக்க.. 

இப்பொழுது அடுத்ததாக அருண்  கிட்டார் வாசிப்பதற்கு தயார் ஆனான். வருணி, அத்தை டாடி தாத்து இப்போ அருண் கிட்டார் வாசிக்க போறான்.  இப்போ வென்மதி அத்தை நல்ல வேலை இந்த இடத்தில் இங்கே இல்ல..

வசு, ஏன் டி இல்லன்னா  என்ன…

 வருணி,அத்தை மூச்சுக்கு முன்னூறு தடவை அருண் புகழ் பாடி இருப்பாங்க ஒரே கிரிஞ்சா இருக்கும்… 

வசு, அப்பா பாருங்க ப்பா இவளுக்கு வாய் ரொம்ப அதிகம் ஆகி போச்சு.. என்று அவர்கள் பேசி கொண்டு இருக்க..

இங்கே அருண், விவேகா.. விவேகா.. ம்ம் சொல்லுங்க சீனியர்.. இப்போ நான் கிட்டார் பர்ஃபார்ம் பண்ண போறேன். இதை கேட்டதும் அவள் ஆச்சரியம் ஆகி என்ன கிட்டாரா! ம்ம்.. சூப்பர் சீனியர்.. அருண் அவளை எதிர் பார்ப்புடன் பார்த்து நீ என்னோட பர்பாமென்ஸ முன்னாடி இருந்து பார்க்கனும் வருவியா.. விவேகா, இங்கே இந்த அறையை விட்டு வர கூடாது அப்டின்னு சிபி சார் சொல்லி இருக்காரே.. 

நீ அவனை விடு நான் பார்த்து கொள்கிறன். அவள் ஒரு சில நொடிகள் யோசித்து விட்டு ம்ம் ஓகே டன் என்று சொல்ல நாங்களும் வரலாமா! என்று பின்னால் இருந்து குரல் கேட்டது. அருண் யார் என்று பார்க்க ஆதி, அதன் பின் வெண்பா இருக்க ஆதி விவேகா அருகில் வந்து நின்றான். 

அருண் வேறு வழி இல்லாமல் சரி என்றான். ஆதி சிரித்து கொண்டே உன்னை அவள் கிட்ட விட மாட்டேன் டா என்று சொல்வது போல இருந்தது. அனைவரும் முன்னால் சென்றனர். அருண் முன்னால் ஒரு மைக் வைத்து இருந்தது ஒரு சேர் என இருக்க அந்த மேடையில் ஒரே ஒரு லைட் மட்டும் எறிய அருண் கண்களை ஒரு நிமிடம் மூடியவன் திறந்து பார்க்க அங்கு உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் ஆவலுடன் பார்க்க அருண் கண்களுக்கு விவேகா மட்டும் தான் தெரிந்தாள். 

அவள் ஆல் தி பெஸ்ட் என்று சொல்ல அவள் உதடுகள் அசைவில் புன்னகைத்தவன். முதலில் கிட்டாரை சரி செய்தான். சிபி மனதில் இவன் என்ன எதோ புதுசு புதுசா ட்ரை பண்றான் ஆனால் எதோ பண்ணிட்டு இருக்கான் என்று பார்க்க தொடங்கினான். 

அருண், “நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை” என்ற பாடலை அந்த கம்பிகளில் மீட்ட அங்கு இருக்கும் மாணவிகள் கூட்டம் கத்த ஆரம்பித்தது. அடுத்து” லூசு பெண்ணே லூசு பெண்ணே”.. சொல்லவே தேவையில்லை பெண்கள் பட்டாளத்தில்  அவன் தான் ஹீரோவாக இருந்தான். “எங்கேயோ பார்த்த மயக்கம்” விவேகா கூட கத்த ஆரம்பித்தாள். 

விவேகா, வெண்பா அருண் செம்மையாக வாசிக்கிறார் ச்ச சான்சே இல்ல.. நான் நினைத்து கூட பார்க்கல டி..

வெண்பா அவளை பார்த்து சிரிக்க.. ஹே இப்போ எதுக்கு சிரிக்கிற.. அதை நினைத்தேன் சிரித்தேன். போடி லூசு.. 

அடுத்து “அருண் என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன். ” என்று இறுதியில் என்ன சொல்ல போகிறாய் பாட்டில் முடிக்க.. 

சரியாக அந்த நேரம் இன்பா உள்ளே வந்தான். அந்த அரங்கம் முழுவதும் ஆரவாரமாக கத்திக் கொண்டு கைகளை தட்ட வருனிக்கு போன் வந்தது. அவள் எடுத்து பேசி விட்டு  அத்தை ராகவ் வந்து விட்டான்… என்று சொல்ல 

அருண் அங்கு இருந்து எழும் போது இருதஇயில் விவெகாவை தான் பார்த்து விட்டு சென்றான். விவேகா, ஆதி, வெண்பா என அனைவரும் மீண்டும் அவர்கள் இதற்கு முன் இருந்த இடத்துக்கு சென்றனர். அவள் செல்லவும் இன்பா உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

கிருஷ்ணன், வசு, மதிவாணன் மூவரும் பார்க்க இன்பா மித்ரணுடன் உள்ளே வந்து கொண்டு இருந்தான். 

அருண் அவளிடம் விவேகா டியர் என்று மூச்சு வாங்க அருகில் வந்தான். சீனியர் வேற லெவல் என் கிட்ட இதுக்கு முன்ன சொல்லவே இல்ல.. என்ன என்று அவன் படபடப்புடன் கேட்க.. அவள், உங்களுக்கு கிட்டார் வாசிக்க தெரியும்ன்னு அதை சொன்னேன். 

அவ்ளோ தானா.. வேற என்ன என்று அவள் சிரித்து கொண்டே பேச உன் கிட்ட.. உன் கிட்ட என்று தயங்கி கொண்டே சொல்ல வர அந்த நேரம் சரியாக அனைவரையும் மேடைக்கு வர சொன்னார்கள். அருண் விவேகா கிட்ட பேசுவதை பார்த்த ஆதி 

ஆதி, ஹே விவேகா வாடி என்று அருணை மதிக்காமல் அவளை இழுத்து சென்று விட்டான். அப்புறம் பார்க்கலாம்  சீனியர் என்று அவள் சொல்லி கொண்டே சென்று விட்டாள். 

அருண், ச்ச இவனை இவனை எப்படியாவது இவளிடம் இருந்து பிரிக்க வேண்டும். எல்லாம் ஸ்பாயிள் ஆகி போச்சே என்று வருத்த பட்டு கொண்டு அவன் காலை தரையில் வேகமாக ஊன்றினான். 

மித்ரன், இன்பா முன்னாடியே சொல்லி இருந்தால் கொஞ்சம் நான் டச் அப் பண்ணிட்டு வந்து இருப்பேன். நான் கொஞ்சம் உன்னை டச் அப் பண்ணட்டுமா.. சரி விடு விடு கண்டு கொள்ளாத.. 

வருணி, ராகவ் அந்த அருண் என்று மொத்தமும் சொல்லி முடிக்க மித்ரன், மச்சி காம்படீஸன் அதிகமா இருக்கே.. ஷட் அப்.. சரி விடு அவள் உன் லவ்வர் டா.. 

இங்கே மேடையில் அவர்கள் வெற்றி பற்றி பேசி அதற்கான பாராட்டுகளை பற்றியும் ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் முதல்வர் புகழ்ந்து சொல்லி கொண்டு இருக்க.. 

விவேகா, ஹே வெண்பா  உன் வாய் எதுக்கு இப்படி இளிச்ச மாதிரி இருக்கு..

இப்படி இருந்தால் தான் டி நம்மள சீன் பார்ட்டியா நினைக்க மாட்டார்கள் இல்ல கழுவி கழுவி பேசுவார்கள். அவளே மேலும் தொடர்ந்தாள்.

 அந்த கவ்யா, இனியாள் முகத்தை பாருடி விவேகா பார்க்க அவர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பது போல் முகத்தை வைத்து இருந்தனர். 

விவேகா அவர்களையே பார்த்து கொண்டு இருக்க அவர்கள் பார்வை சென்ற இடத்தை பார்த்தாள். போச்சு.. என்று சுவற்றில் சாய்ந்தாள்.இவன் இங்கே வந்து விட்டானா.. முதல்வர் சரியாக உரையை முடித்து விட்டு அவர்களுக்கு உண்டான பரிசு தொகை மற்றும் சான்றிதழ் கொடுக்க கிருஷ்ணன், மதிவாணன் இருவரையும் அழைக்க.. 

கிருஷ்ணன், மதி போடா.. அவர், வசுமதி நீயே போ இப்போ நீ தானே பொறுப்பில் இருக்க 

வசுமதி,  அண்ணா,அப்பா நீங்க போங்க.. 

வருணி, அத்தை ஓவரா பிகு பண்ணாதீங்க..அவர் சரி அப்போ நீயே போ டி.. இன்பா, சரி வா நம்ப ரெண்டு பேரும் போலாம்.. டேய் ராகவ் நிஜமா வா.. வசு, மித்ரன், மதிவாணன், கிருஷ்ணன் என அனைவரும் ஆச்சர்யமாக பார்க்க.. 

இன்பா கிருஷ்ணனை பார்த்து கண் அடித்தான். ம்ம் இதோட பின் விளைவு ரொம்ப மோசமா இருக்க போகுது ராகவ்.. ம்ம் அதையும் பார்க்கலாம். என்று  கருப்பு கண்ணாடியை ஸ்டைலாக எடுத்து போட்டு கொண்டான். 

இன்பா அவளின் காதை பிடித்து திருகினான். டாடி பாருங்க இவன் காதை பிடிக்கிறான். வசுமதி, ராகவ் அடி வாங்க போற என் தங்க புள்ளை காது சிவந்து போச்சு.. 

இன்பா எழுந்து சரி மாம் அவள் வளர்ந்ததும் இனி என் காதை திருகட்டுமே.. உடனே அவள் அவனின் இடையை பிடித்து கிள்ளி விட

இன்பா, ஹே கம்முனு இரு டி.. போடா என்று இருவரும் பேசி கொண்டே மேடை ஏற அவர்களின் வருகையை அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்லி வரவேற்க்க.. 

மித்ரன், ம்ம் நல்ல எண்டர்டெயின்மெண்ட் என்று அவனுக்கு கொண்டு வந்த தீனிகளை எடுத்து சுவைத்து கொண்டே பார்க்க ஆரம்பித்தான். 

விவேகா ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். யார் இந்த பொன்னு.. 

வெண்பா, அவள் மைன்ட் வாய்ஸ் கேட்டது போல இது வருணி… அண்ணாவுடைய மாமா பொன்னு கிட்ட தட்ட உன்னையும் ஆதியையும் போல் என்று சொல்ல.. 

விவேகா கோபமாக  நான்! நான் உன்கிட்ட கேட்டேனா.. கேட்டேனா! என்று கோபத்தில் அவள் கேட்க சரியாக அப்பொழுது ஒரு சம்பவம் நடக்க.. 

வெண்பா சரி சரி இப்போ கொஞ்சம் அங்க பாரு செல்லம்.. 

விவேகா மட்டும் இல்ல அந்த அரங்கம் முழுவதும் பார்த்தது. 

விவேகா உதடு துடிக்க பொறாமையில் பொங்கி  கண்கள் இரண்டும் வெளியே வந்து விட்டது போல் பார்க்க அங்கே இன்பா…?

அதை நாளை பார்க்கலாம்…

தொடரும்… 

 Episode 192

இன்பா, வருணி இருவரும் நடந்து வரும் போது அவள் அந்த மேடையின் படிகளில் தடுமாற அவன் உடனே அவளை பிடிக்க மொத்த அரங்கமும் அதை பார்த்து ஓ என்று கத்தியது.. இன்பா அவளை நிற்க வைக்க அவள் அவன் கைகளொடு கோர்த்து கொண்டு ராகவ் தங்க்ஸ் டா.. என்று சொல்ல அவன் எந்த உணர்வும் காட்டாமல் வந்தான். 

ஹே செம்ம ரொமான்டிக்கா இருக்கே who is she?என்று அனைவரும் கேட்டு கொண்டு இருக்க விவேகா வாயில் நெருப்பு மட்டும் தான் வர வில்லை வந்து இருந்தாள்.  அவர்களை ஊதி எரித்து இருப்பாள். உதடு துடிக்க அவர்களை இயலாமை கண்களால் பார்க்க.. 

வெண்பா, என்ன டி கண்ணு கலங்குதோ.. எனக்கா எனக்கா.. இந்த காலேஜ்ல சந்திரமுகியா முழுசா மாறின விவேகாவை கொஞ்சம் பார்… 

கவ்யா, இனியாள் இருவரும் அதே நிலையில் தான் இருந்தனர். விவேகா மனதில் இவன் கெட்ட கேட்டுக்கு நானே அதிகம் இப்போ இவள் என்று வருணியையும், கவ்யா, இனியாள் உனக்கு எல்லாம் மோசமான பொன்னு கிட்ட மாட்டிக்க வேண்டும் கவ்யா தான்  டா உனக்கு சரியான ஆள் டா என்று வெம்பி கொண்டே அவள் முனகி கொண்டு இருக்க.. 

சிபி அவர்கள் இருவரையும் அறிமுக படுத்தி விட்டு பேச சொல்ல வருணி, ஹே மாம்ஸ் நீ லேசா லேசா மாதவன் மாதிரியே இருக்க டா..

இன்பா ,சிபி இவள் உனக்கு ஓகே வா சொல்லு டா நான் இப்போவே மாமா கிட்ட சொல்றேன். 

வருணி, டேய் அதெல்லாம் முடியாது நான் ஒன்லி சைட்டின் மட்டும் தான் இப்போ பாரு மொத்த காலேஜ் கூட்டமும் என்னை தான் பார்க்குது எவ்ளோ கெத்து.. 

சிபி, வாய் டி உனக்கு… ஹே போடா.. அப்பொழுது முதல்வர் மைக்ல பேசி விட்டு அவர்கள் இருவரையும் பேச சொல்ல.. 

வருணி, ராகவ் நீ பேசு.. கவ்யா அவள் ராகவ் என்று கூப்பிடுவது பார்த்து அந்த குரலை யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் மனதில் அந்த குரல் அது அது மிகவும் பழக்கப்பட்ட குரல் போல் இருக்கே.. எங்கே இவனுடைய காதலி நம் அருகில் தான் இருக்கிறாளோ என்று யோசித்தாள். 

இன்பா மைக் வாங்கி இரண்டு வார்த்தைகள் பேச அரங்கமே கத்தியது. வருணி, ராகவ் மாஸ் ஹீரோயிசம்.. அவன் அவள் கைகளை பிடித்து நசுக்க அவள் வலியில் நெளிந்தாள். இதை எல்லாம் அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர். 

இப்பொழுது பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நேரம் வர இன்பா கிருஷ்ணனை மேலே அழைத்தான். அவரும் வர பரிசு ஒருவர் சான்றிதழ் ஒருவர் என மாற்றி மாற்றி வழங்க விவேகா வாங்கும் நேரம் வந்தது. பொறாமை இயலாமை என்று மொத்தமும் அவளை வாட்டி வதைக்க கிருஷ்ணன், ஹலோ விவேகா.. கன்கிராட்ஸ் மா.. தேன்க் யூ ஸார்.. என்று தலையை குனிந்து கொண்டே பதில் சொன்னாள். 

வருணி, தாத்து இந்த கேர்ல் ட்ரெஸ் நல்லா இருக்கு யார் இந்த பொண்ணு உங்களுக்கு தெரியுமா ஹாய் என்று அவள் பேசிட.. 

விவேகா, மேம்.. என்று புன்னகைத்தாள். அவளிடம் இருந்து பரிசு வாங்கி கொண்டு அவள் கண்கள் அவனை மட்டும் பார்க்காமல் மீண்டும் அவளுடைய இடத்துக்கு வந்து சாதுவாக நின்று கொண்டாள். 

வருணி, என்னை பார்த்தால் மேம் மாதிரி தெரியுதா ராகவ்.. இன்பா, அவளுக்கு பொறாமை டி.. கிருஷ்ணன், ராகவ்!!! அடுத்து அருண் வாங்க கிருஷ்ணன் அவனை கட்டி அணைக்க வருணி கைகளை குலுக்கினாள். வரு ஆர் யூ ரெடி.. ம்ம் என்று சொல்லி சிரித்தாள். சான்சே இல்ல அருண் செம்மையாக வாசித்த டா.. 

அடுத்து இனியாள் வர கிருஷ்ணன்,  குட் மா.. ம்ம் தேங்க்ஸ்  தாத்தா என்று 32 பற்களும் தெரிந்தது. இனியாள், ஹாய் மிஸ் வருணி யு லுக் பிரிட்டி.. வருணி, உதட்டை மட்டும் சிரிப்பது போல் வைத்து கொண்டாள். அடுத்து அவள் பார்வை இன்பாவிடம் செல்ல அவள் சார் எப்பொழுதும் நீங்க அழகு தான் என்று ஜொள்ளு ஊற்றி கொண்டு சொல்லி சென்றாள். 

வருணி, ராகவ் தள்ளி நில்லு டா… என்ன ஆச்சு.. அவளுடைய மொத்த ஜொல்லும் உன் மேல் தான் இருக்கு வியாக் டூ பேட் உன்னை தின்பது போல் பார்க்கிறாள். அவன் மனதில் யாரு பார்க்கணுமோ அவள் பார்க்க வில்லை எல்லாரும் என்னை பார்த்து என்ன ஆக போகுது.. 

அனைவரும் சேர்ந்து நின்று ஒரு குரூப் போட்டோ ஒரு புறம் ஆதி மறு புறம் அருண் நடுவில் விவேகா.. அருண் அருகில் வெண்பா, இன்பாவுக்கு அருகில் வருணி இன்னொரு புறம் இனியாள் போய் நின்று கொள்ள சிபி அவளை வித்தியாசமாக பார்த்தான்.

ஆதி அவள் காதுக்கு அருகில் நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல அவன் ஓவரா பண்றான். என்ன டா சொல்ற.. இரு போட்டோஸ் முடிந்து பிளேஸ்க்கு போனதும் சொல்றேன். அவள் சரி என்று தலை அசைக்க அந்த தருணம் அழகாக படமாக்க பட்டது. 

விவேகா உள்ளுக்குள் மன கவலை டன் எடையுள்ள கவலை இருந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் இருந்தாள். அவர்கள் புகைப்படம்  எடுத்து முடித்ததும் அனைவரும் கீழே இறங்கி செல்ல அடுத்ததாக  நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க விவேகா, வெண்பாவுடன் கீழே இறங்கி செல்ல அருண் அவளை ஒரு நிமிடம் என்று அழைத்தான். ஆதி முன்னே செல்ல இது அவனுக்கு தெரிய வில்லை. என்ன சீனியர் சீக்கிரம் சொல்லுங்க.. நீயும் நானும் சேர்ந்து.. விவேகா அவனை இரு புருவம் நெருக்கி பார்க்க.. 

அருண், ஹே நீ நினைப்பது போல் ஒன்னும் இல்ல நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடலாமா.. இல்ல நான் எதிலும் எனக்கு விருப்பம் இல்லை.. அவ்ளோ தானா இது தானா உன் நன்றி கடனை திருப்பி செலுத்துவது … 

விவேகா, எப்படி எல்லாரும் இருக்கிறார்கள். பாட்டு தானே பாட கூப்பிட்டேன். விவேகா யோசிக்க.. அவ்ளோ கஸ்டபட்டு வர வேண்டாம்.என்று சொல்லி அவன் திரும்பி இரு அடிகள் வைக்க சரி ஓகே நான் வருகிறேன். அருண் திரும்பி அவளை பார்த்து புன்னகை செய்தான். 

விவேகா ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு கீழே இறங்க அருண், உன் நேம் சொன்னதும் நீ மேலே வர.. விவேகா சரி என்று சொல்லி விட்டு நேராக ஆதி அருகில் சென்றாள். எதுக்கு உனக்கு இவளோ நேரம்.. அது ஒன்னும் இல்ல ஆதி நானும் அருணும் சேர்ந்து.. நீயும் அவனும் சேர்ந்து… என்று அவளை எரிப்பது போல் பார்க்க.. 

விவேகா கண்களை மூடி கொண்டு பாட்டு தான் பாட கூப்பிட்டான் வேற ஒன்னும் இல்ல. அதுவும் அந்த டெல்லியில் ஹெல்ப் பண்ணதுக்கு ஒரு நன்றி கடன் வேற ஒன்னும் இல்ல பிளீஸ் இப்படி என்னை முறைத்து பயமுறுத்த வேண்டாம் டா.. ஆதி இதை கேட்டு என்ன பாட்டு.. அச்சோ அதை நான் கேட்க மறந்து விட்டேன். 

ஒரு நிமிடம் இரு என்று விவேகா மேலே சென்று அவனிடம் என்ன பாட்டு அதை இன்னும் நீங்க சொல்லவே இல்ல.. “சந்திப்போமா இருவரும் சந்திப்போமா”.. ஓ சரி என்று அவள் ஆதி கிட்ட சொல்லலாம் என்று செல்ல அதற்குள் அங்கே மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் குழு பாடல் முதலில்  1st MBA அருண் மற்றும் பைனல் இயர் விவேகா B.E என்று சொல்ல.. 

விவேகா போச்சு செத்தோம் என்று ஆதியை பார்க்க அவன் திரும்பி வா அதுக்கு அப்புறம் உனக்கு இருக்கு டி இன்னிக்கி அத்தை கிட்ட உன்னை சொல்லி என்ன செய்கிறேன் என்று பார்.. 

ஆதி ஆதி பிளீஸ் டா போ நீ என் காலில் விழுந்தால் கூட இது தான் என்று சொன்னான். 

அவர்கள் இருவரும் மேடையில் ஏற மித்ரன், சபாஷ் சரியான சீன் ச்ச.. ஸ்ஸஸ் ஹா.. என்று அவன் கால் வலியில் துடிக்க.. வருணி,ஹே மித்து என்ன ஆச்சு.. ஒன்னும் இல்ல வருணி ஒரு பெரிய ஜலஸ்.. சாரி சாரி நான் இடித்து கொண்டேன். சரி இன்னும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் இருக்கா எனக்கு சொல்லேன்.. ம்ம் இப்போவே சொல்றேன் உனக்கு இல்லாமலா ஆனால் ஒரு நிமிடம்.. 

என்ன மா.. அது இந்த பெர்ஃபார்ம் மட்டும் வீடியோ எடுத்து விட்டு சொல்லட்டுமா.. இன்பா, எதுக்கு டி.. இல்ல நம்ம  அருண் இதை விடியோ எடுக்க சொன்னான். மித்ரன் சத்தம் வராமல் சிரித்து விட்டு நீ பொறுமையா சொல்லு எனக்கு பிரச்னை இல்ல.. 

இன்பா மனம்  வெறுப்பில் விவேகா எவ்ளோ தைரியம் என் முன்னாடியே அவன் கூட ஜோடியா பாட்டு பாட போறியா.. இதுக்கு அப்புறம் இன்னும் இத்தனை நாள் ஒண்ணுமே கண்டுக்காமல் இருந்தது எல்லாம் சேர்ந்து உன்னை என்ன செய்கிறேன் பாரு டி.. 

இருவரும் மேலே ஏறி நின்றதும் அனைத்து கண்களும் அவர்களை தான் பார்த்தது. சில வாய்கள் பொராமையிலும் சில வாய்கள் சில புறம் பேச்சிலும் பேசி கொண்டு இருக்க.. 

வருணி, சோ கூல் இந்த பொண்ணா.. என்று சொல்லி கொண்டே விடியோ ஆன் செய்தாள். 

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா என்ற கரோக்கி கேட்டதும்… அனைவரும் கத்த தொடங்கினர். 

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒரு முறை சந்திப்போமா.. 

மித்ரன், ச்ச கிடைக்கிற கேப் ல எல்லாம் ஆப்பு, ச்ச தப்பு தப்பா வருதே கோல் போடுறான். சாரி பாட்டு பாடுறான். 

என்ன மித்து சொல்ற.. 

ஒன்னும் இல்ல நீ கிளியரா வீடியோ கவர் பண்ணு.. 

இன்பா வெறுப்பில் வேறு எங்கோ பார்த்து கொண்டு இருக்க.. 

கிருஷ்ணன், ராகவ்.. 

அவன் அமைதியாக இருக்க.. 

வசு, ராகவ் தாத்தா கூப்பிடிராக என்ன பண்ற.. 

 அவர் சிரித்து கொண்டே இல்ல மா நான் எதுவும் கூலா ட்ரிங்க் சொல்லவா ராகவ்  குடித்து கொண்டே பார்த்தால் நல்லா இருக்குமே.. 

மித்ரன், தாத்தா வேற லெவல் அப்படியே எனக்கும் சொல்லுங்க.. 

ஹே *** , போதும் டா..  இன்பா விறைப்பாக இருக்க.. 

மித்ரன், நீயும் எதுவும் பண்ண மாட்டின்டிர அட்லீஸ்ட் பன்றவங்களை பார்த்தாலும் தப்பு, என்ன தான் டா செய்ய.. 

வெயிட் அண்ட் வாச் உனக்கும் அவளுக்கும் எல்லாம் இருக்கு.. 

சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா.. காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா… 

அந்த மெரினா பீச் சிறு படகடியில் என்ற வரிகள் வர விவேகா இன்பாவை முதன் முதலாக சந்தித்த அந்த பீச் சண்டை நினைவு வந்தது. 

ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கிரீம் பாதி பாதி தின்னலாம் எப்ப டா என்று விவேகா உண்மையாகவே ஏக்கம் கொண்டு அவனை பார்த்து  பாட சட்டென்று இன்பா நிமிர்ந்தான். 

உடனே பார்வையை மாற்றி கொள்ள இன்பா,மித்ரன் அவள் என்னை இப்போ பார்த்தாளா.. 

ம்ம் சத்தியமா இந்த பக்கம் பார்த்தாள் ஆனால் உன்னை பார்த்ததாக எனக்கு தெரியல.. 

மித்ரன் உன்னை..

டேய் முதலில் போய் அவளை அடக்கு டா.. 

அடுத்து யார் புன்னகையும்..  விவேகா இன்பா இருக்கும் பக்கம் திரும்பி உன் போல் இல்லையடா என்று அந்த அரங்கத்தை பார்த்து சுட்டு விரல் நீட்டி சொல்ல கத்தினர். அவள் உண்மையில் இன்பாவின் கண்ணகுளி புன்னகை போல் அவளுக்கு இது வரை அவ்வளவு அழகு வேறு எதுவுமே இல்லை. 

யார் வாசனையும்.. உன் போல் இல்லையடா என்று கண்கள் அவனை ஒரு நொடி தொட்டு மீண்டது.. 

இந்த முறை அவன் பார்த்து விட்டான்.. அவள் நாக்கை கடிப்பது போல் செய்ய.. 

போடி வராதே… மனம் போனால் வராதே.. என்று முறைப்பது போல் பாவனை வைத்து பாடினாள். 

அதோடு ஒரு சில வரிகளில் பாடல் நிறைவு செய்ய அனைவரும் ஆரவாரம் செய்தனர். கைகளை தட்டி விசில் அடிக்க அவள் கீழே இறங்கினாள். நேராக ஆதியை தான் பார்க்க சென்றாள். 

அடுத்தபடியாக இனியாள் அவளுக்கு தீ பற்றி கொண்டு இருந்தது. ஏன் என்றால் அனைவரும் இன்று விவேகா பற்றி பேசுவது தான்.. 

அடுத்து இனியாள் பெயர் சொல்ல அவள் சர சர சார காத்து வீசும் போது சாரை பார்த்து பேசும் போது என்ற பாடல் பாட இன்பாவுக்கு விவேகா பாடுவது போல் இருந்தது. அவன் ரசித்து அதை கேட்டு கொண்டு இருக்க விவேகா அதையும் பார்த்தாள். கவ்யா கண்டு கொண்டாள் அவள் பாடுவது இன்பாவை நினைத்து தான்.

அடுத்து கவ்யா விவேகாவைப் போல் உடனே வீட்டுக்கு போன் செய்து அவள் தந்தையிடம் சொல்லி ஒரு தாவணி பாவாடைஉயர்ந்த விலையில் வாங்கி வர வைத்து மாற்றி கொண்டாள். கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாாலே கிறுக்கேத்தும்  என்ற பாடலை பாட அங்கு இருக்கும் அனைவருமக்குமே தெரிந்தது. 

இனியாள்,கவ்யா இருவரும் இன்பாவ பார்த்து தான் பாடுகிறார்கள். 

விவேகா, ஹே ஆதி இப்படி கோவமா இருந்தால் என்ன அர்த்தம்.. 

நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல அப்டின்னு அர்த்தம்.. 

சரி இப்போ அதுக்கு நான் என்ன செய்வது.. நீ போ முன்பு போல் இல்ல ரொம்ப மாறி விட்டாய். 

ஹே இல்ல டா, நான் என்ன செய்ய வேற வழி இல்லாமல் தான் பாட வேண்டியதா போச்சு.

ஆதி அமைதியாகி இருக்க.. விவேகா அவன் கையை பிடித்து கொண்டு இப்போ அருண் கூட பாடியது தானே தப்பு வா நீயும் நானும் பாடலாம். 

வா..  ஆதி சில நிமிடம் யோசித்தான். ம்ம்… அப்போ நீ தான் காம்பெயரின் பண்றவங்க கிட்ட போய் சொல்லணும். 

சரி சொல்லி தொலையுறேன். விவேகா அதே போல் போய் சொல்ல அவரும் சரி என்று அவர்கள் பெயரை சொல்ல.. 

பெண்கள் அனைவரும் ம்ம் அவள் கூட தான் எல்லா அழகான பசங்க சுத்துறாங்க  அப்படி என்ன தான் பன்றாளோ.. 

ஆண்கள் , இந்த ஆதி கூட தான் சுத்துவாள் இப்போ அது அருணா மாறிச்சு ஆனால் இப்போ கன்பார்மா தெரிந்து போச்சு ஆதி தான்.. 

(என் டார்லிங் (அசோக் செல்வன்) பாட்டு அதை விட எங்க ஊரு பையன் ஈரோடு சோ)

ஆதி, விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் என்று அவள் கைகளை பிடித்து கொண்டே பாட 

வெண்பா, என்ன சொல்ல என்று இதை பார்த்து கொண்டு இருந்தாள். 

பெண் மீன் விழியில் எனையே தொலைத்தேன். என்று ஆரம்பித்து இருவரும் பாட( இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து ) வருவதற்கு முன் இன்பா எழுந்து சென்று சென்றான்.  கரன்ட் கட் செய்து விட்டான் இதற்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடிய வில்லை.

அதற்கு பின் ஒரு சில நொடிகள் அங்கேயே நின்றனர். கரன்ட் வர வில்லை. பின் கீழே சென்றனர். இப்போ சந்தோஷம் தானே.. 

சிறிது நேரம் கழித்து இன்பா உள்ளே வந்தான். அதன் பிறகு யாழினி “என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் என்னை கேட்டெனே”என்று ஆதியை பார்த்து கொண்டே பாடி முடித்தாள். 

அடுத்து மைதிலி ஒரு பாடல், அடுத்து மற்ற குழு நடனம், நாடகம், ஷார்ட் பிலிம் என்று அனைத்தும் முடிய அடுத்து பரிசு வழங்கும் நேரம் வர.. 

வெற்றியாளர்கள் பெயரை சொல்ல இன்பா, மாம் நான் அன்னௌன்ஸ் பண்றேன். வருணி, ராகவ் சின்கிங்ல அருண்க்கு கொடு நான் அதை விடியோ எடுக்கணும். 

இன்பா, போடி.. என்று சொல்லி விட்டு ஒன்றுமே தெரியாதது போல் மேலே ஏறினான். பின்னால் வருணியும் சென்றாள். 

தொகுப்பாளர் மைக்கில் வாசிக்க ஆரம்பிக்க இன்பா ஒரு பார்வை தான் பார்த்தான். உடனே அவர் மைக்கை இன்பா கிட்ட கொடுத்தார். அனைத்து போட்டிகள். ஒவ்வொன்றும் சொல்லி பரிசுகள் கொடுத்தான். 

இறுதியில் பாட்டு பாடியவர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க அனைவரும் ஆவலாக காத்து கொண்டு இருக்க..

 ம்ம் என்ன நடக்கும் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. 

நாளை பார்க்கலாமா… 

தொடரும்..

Episode 193

இன்பா அந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்று சொல்ல மைக்க வாங்கி விட சரியாக அந்த நேரம் அவனுக்கு கால் வர ஒரு நிமிடம் என்று சொல்லி நகர்ந்தான். 

விவேகா ஆதியிடம், உன் கிட்ட ஒரு விஷயம் என்று சொல்ல ஆதி அவளை நம்ப முடியாமல் பார்த்தான். 

இன்பா போன் பேசி விட்டு வந்து அந்த பெயர் பட்டியலை பார்த்து விட்டு அருகில் இருந்த தொகுப்பாளரிடம் சில விவரம் கேட்க அவர் திடுக்கிட்டு பார்த்தார். 

அவன், இப்போ சொல்லுங்க.. அவரோ வழிந்து கொண்டு இருக்கும் வியர்வையை துடைத்து கொண்டு சார் உங்க விருப்பம் எப்படி வேணாலும் shuffle பண்ணுங்க change பண்ணுங்க.. 

இதை கேட்டதும் இன்பா தந்திர புன்னகை சிந்தி சொல்ல ஆரம்பித்தான். ஆதி விவேகாவை பார்க்க நீ அங்கே பாரு டா என்று சொல்ல.. 

இன்பா மைக்க பிடித்து பேச ஆரம்பித்தான். இந்த போட்டி பற்றி சொல்றத விட அதோடு இடம் யாருக்கு அப்டின்னு சொல்றேன். 

இன்பா, மொத்த ரெண்டு வின்னர்.. ஆனால் முதல் பிரைஸ் மட்டும் ரெண்டு வின்னர்.. எல்லோரும் ஒரு கணக்கு போட விவேகா கண்களை மூடி கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா டார்லிங் நான் நினைத்த மாதிரி நடக்கணும். என்று வேண்டி கொண்டு இருக்க இன்பா ஒரு பார்வை அவளை பார்த்தான். 

இதில் ஒரே கிளாஸ்ல ஒரே dept ல இருந்து ரெண்டு பேர் வந்து இருக்காங்க.. அண்ட் இன்னொரு பிளேஸ் MBA முதலாம் ஆண்டு சரி இப்போ சொல்ல போறேன். 

எல்லோரும் அது விவேகா, ஆதி மற்றும் அருணை நினைத்து கொண்டு இருக்க பாதி பேர் கத்த ஆரம்பித்தனர். 

 இன்பா,கீப் சைலண்ட்ஸ்.. உடனே அனைவரும் அமைதியாக இருக்க 

முதலில் செகன்ட் பிளேஸ் யாருன்னு சொல்றேன்… இன்பா, கவ்யா சத்ய மூர்த்தி! என்று சொல்ல அந்த அரங்கத்தில் உள்ள அனைவரும் கைகளை தட்டினர். 

கவ்யா இதை துளி கூட நம்ப வில்லை. அனைவரும் கவ்யா கவ்யா என்று கத்த, அவள் நேராக விவேகா அருகில் சென்று கட்டி அணைத்து விட்டு மேடை ஏற இன்பா அவளுக்கு வேண்டா வெறுப்பாய் தான் அந்த பரிசை கொடுத்தான். 

கவ்யா மிகவும் மெதுவாக ராகவ் மைக் கொடு.. இன்பா அவளிடம் நீட்ட அதை வாங்கி என்னை சியர் அப் பண்ண விவேகாக்கு நன்றி என்று சொல்ல இன்பா விசித்திரமாக பார்த்தான். 

ஆதி உதடு கடித்து சிரிக்க அடுத்தது முதல் இடம் என்று இன்பா கூறி விவேகா இருக்கும் திசையை பார்க்க விவேகா மைதிலி என்று அவளுக்கு கைகளை குலுக்கி போ உனக்கு தான் முதல் பரிசு.. 

ஹே விவி என்ன விளையாடுரியா அவர் உன்னை தான் பார்க்கிறார். விவேகா, ஹே நீ தான் அது என்று சொல்ல அவள் நம்பாமல் இருக்க ஒரே நேரத்தில் இருவரை அவன் மைதிலி என்று இன்பா சொல்ல அடுத்த பெயர் யாழினி என்று  விவேகா கத்தினாள்.அவள் சொல்லவும் இன்பா சொல்லவும் சரியாக இருந்தது. 

யாழினி! மைதிலி! … யாழினி!, மைதிலி! என்று விவேகா சொல்ல ஆரம்பிக்க அந்த தொகுப்பாளர் மற்றும் வருணி இன்பா என அனைவரும் ஆச்சரியமாக பார்க்க கிருஷ்ணன் she is smart ராகவ் என்று நினைத்து சிரித்தார். 

விவேகா, யாழினி! யாழினி! என்று கத்த யாழினி விவேகாவை பார்க்க ம்ம் போ யாழினி உனக்கு தான் இந்த பிளேஸ் என்று அவளிடம் சிரித்த முகத்துடன் சொல்ல அவள் இது கனவா நினைவா என்று யோசித்து கொண்டே நிற்க விவேகா, லிதி கூட்டி போ.. வா யாளினி என்று மைதிலி அழைத்து மேடை ஏற உண்மையில் அவர்கள் இதை எதிர் பார்க்க வில்லை. 

அதை விட இன்பாவுக்கு பேச்சே வர வில்லை. How it’s possible! வருணி ஹே ராகவ் எப்படி அவள் சரியா சொல்றா நீ எதுக்கு அருணுக்கு பதில் இவங்களை செலக்ட் பண்ண.. என்று சொல்லி அவனை கில்லி விட அப்பொழுது தான் தன்னிலைக்கு வந்தவன். 

கொஞ்சம் திக்கி தடுமாறி பின் தன்னை சம படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தான். ஆதி, எப்படி டி இப்படி பின்னுற.. அது அப்படி தான் நீ நோட்ஸ் எடுத்துக்கோ அங்கே அவன் முகத்தை பாரேன். ஆதி இன்பாவை பார்க்க சிரிப்பு தான் வந்தது. 

இன்பா, யாழினி பாடும் பொழுது ரொம்ப ஃபீலிங் ல பாடினார்கள் இட்ஸ் பேபுலஸ் அண்ட் அதே போல் தான் மைதிலி அவங்களும் நல்லா பாடினார்கள். சோ இந்த சின்கிங் காம்பட்டீசன்ல வின்னர் இவங்க ரெண்டு பேரும் தான் கன்கிராட்ஸ் போத் ஆஃப் யூ.. வருணி, டேய் யூ ச்சீட்டர்.. போடி..அருண் பேபி பாவம் அவன் என்ன என்ன செய்தான் நீ ஒண்ணுமே செய்யல பிராட்.. சீக்கிரம் கொடுத்து விட்டு வாடி.. ஹே இரு  என்று சொல்ல நீ கொடு என்று சொல்லி இன்பா இறங்கினான். 

அதன் பின் நிகழ்ச்சி தொகுப்பாளர் மூன்றாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, முதல் ஆண்டு மாணவ மாணவிகள் பெற்ற மூன்று இடங்களை படிக்க அவர்கள் அனைவருக்கும் வருணி பரிசுகளை கொடுத்து விட்டு கீழே சென்றாள். 

கீழே இன்பா ஒரு வித அதிர் ச்சியில் அமர்ந்து இருந்தான். அவள் கோபமாக தாத்து இந்த ராகவ் மோசம் என்று சொல்லி கொண்டு இருக்க அது எல்லாம் அவன் காதுகளில் விழ வில்லை. 

அப்படி என்ன தான் நடந்தது. 

விவேகா, ஆதி பாரேன் இந்த வின்னர் லிஸ்ட்ல நம்ப இருக்க மாட்டோம் டா.. இல்ல டி உன் சாரு எனக்கு கொடுக்க வில்லை என்றால் கூட நிச்சயம் உனக்கு தருவாரு.. விவேகா, அட நீ வெற நான் அந்த அருண் கூட பாடியதில் அவனுக்கு மட்டும் நெற்றி கண் இருந்தால் என்னை எரித்து இருப்பான். சோ நிச்சயம் நான் நினைப்பது தான் நடக்கும். இரு வரேன் என்று சொல்லி கவ்யாவை தேடி சென்றாள். 

கவ்யாவுக்கு தெரியும் அவன் எப்படியும் அவளுக்கு கொடுக்க மாட்டான் அதனால் அவள் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க விவேகா, ஹே கவி ஆல் தி பெஸ்ட்.. இப்போ தான் நான் உன் கண்ணுக்கு தெரியுரனா அண்ட் எனக்கு எதுக்கு ஆல் தி பெஸ்ட்?

விவேகா நீ தான் இந்த பாட்டு போட்டியில் என்னை விட சூப்பரா பாடின இப்போ அவர் உன் நேம் தான் சொல்ல போறாரு… அவள் திடுக்கிட்டு பார்க்க.. 

என்ன கவி நான் சொல்றத நீ நம்ப வில்லையா இல்ல உன் மேலயே உனக்கு நம்பிக்க இல்லையா… 

கவ்யா, அப்படி மட்டும் நடக்கல என்று கைகளை முறுக்க… நிச்சயம் நீ தான் உனக்கு தான் அந்த பரிசு..

கவ்யா, அவள் சொல்வதையும் நம்ப வில்லை. விவேகா, நான் சொன்னது நடந்தால் எனக்கு ஒன்னும் மட்டும் செய்யணும். அப்படி நான் சொல்றத நடக்கல அப்டின்னா நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். 

கவ்யா, என்ன செய்யனும்.. 

நீ அவர் கிட்ட இருந்து மைக் வாங்கி தேங்க்ஸ் ஃபார் யோர் சியர் அப் விவேகா அப்டின்னு சொல்லணும். 

பக்கா.. 

ம்ம் பக்கா என்றாள். பின் மீண்டும் அவளது இடத்துக்கு  வந்தாள். இது தாங்க நடந்தது. அந்த function இனிதே முடிந்தது.

இப்போ food festival ஆரம்பித்தது. படிக்க மற்றும் பணம் தேவைப்படும்  குழந்தைகள் மற்றும் அவர்களின் படிப்புக்காக பணம் funds சேகரிக்க நடத்தப்படும் festival. 

கிருஷ்ணன் ,இன்பாவை பார்த்து சிரிக்க மித்ரன், டேய் நீ டம்மி பாவா விவேகா உன்னை தான் வச்சு செய்யுறா டா.. இன்பா ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்தான். 

வசுமதி, ராகவ் ஏன் டா என் பையனுக்கு கொடுக்கள.. அருண் கோபத்தில் அங்கேயே வந்து விட்டான். மாம் ப்ரோ ரொம்ப மோசம்.. சரி விடு.. அத்தை ராகவ் சரியான ஃப்ராடு நீ விடு அருண் டார்லிங் உன்னை போல் அவனுக்கு எதுவும் செய்ய தெரியாது. இன்பா, ஹே போடி… அப்போ பெட்டு வைக்கலாமா.. என்ன டி.. நீ இப்போ இரு நான் மேல போய் உனக்கு டாஸ்க் கொடுக்கிறேன். என்று சொல்லி விட்டு அவள் ஏற மதிவாணன், வரு மா.. டாடி போங்க டாடி என்று ஏறியவள் அங்கு களைந்து செல்லும் கூட்டத்தை பார்த்து ஒரு நிமிடம் யாரும் போக வேண்டாம். 

அனைவரும் திரும்பி பார்த்து அப்படியே நின்றனர். வருணி, ஒரு நிமிடம் இப்போ நம்ப இன்பராகவன் சார் இந்த function காக ஒரு பாட்டு பாட போறாரு.. 

இதை கேட்டதும் சூப்பர் என்று அனைவரும் கைகளை தட்ட இன்பா அவளை முறைத்து கொண்டே நேராக மேடை ஏறியவன் . வருணிக்கு அருண் ஹபை போட்டு கொள்ள அவன் மைக் பிடித்து ஸாரி எனக்கு பாட தெரியாது. ஆனால்.. 

ஆனால் என்ன.. 

இன்பா, ஒன் மினிட் என்று சொல்லி விட்டு அருண் கிட்ட இருந்து கிட்டாரை கேட்க.. அவன் எதோ விளையாடுகிறார் என்று கொடுக்க இன்பா விளையாடினான். அவன் விரல்கள் நாட்டியம் ஆடியது. ஆதி, விவேகா முன்னவே வெளியே பாதி தூரம் சென்று இருந்தனர். 

அங்கே அவன் பாடலை இசைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு வேகமாக அந்த அரங்கத்துக்கு உள்ளே வர அவன் அப்படி என்ன தான் வாசித்தான். வசுமதி தன் மகனை ஆச்சரியமாகவும் பெருமையாகவும் அதிசயமாகவும் பார்த்தார். அப்படியே அவன் வாசிப்பதை வீடியோ எடுத்து கொண்டார் இதை ரவிக்கு காட்ட வேண்டும். 

அப்பா ராகவ்..

கிருஷ்ணன் அவனை பார்த்து புன்னகைத்தார். 

வேற என்ன ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆளும் காதல் தேசம் நீ தான்… இந்த பாடலின் இசையை தான் மீட்டி கொண்டு இருந்தான். 

அந்த அரங்கம் முழுவதும் அமைதியாக கேட்டு கொண்டு இருக்க இன்பா 5 நிமிடங்கள் வாசித்து இருப்பான். அந்த இசையை முடிக்கும் பொழுது இறுதியில் விவேகாவை பார்த்து முடித்தான். 

வசுமதி, கிருஸ்னன், எழுந்து கைகளை தட்ட அரங்கமே கைகளை தட்டியது. ஹே செம்ம நான் கூட என்னமோ நினைத்தேன் பட் இன்பா சார் how romantic he is.. அருண் வாசித்தத விட வேற லெவல் என்று சொல்ல.. 

அருண், தேவை இல்லாமல் நம்பலே ப்ரோவை பெரிய ஆள் ஆக்கி விட்டோமோ என்று தோன்றியது. 

இன்பா நேராக கீழே வந்தவன் வருணியின் காதுகளை பிடித்து மாம் இ்வளை ஒரு வார்த்தை சொல்லுவீர்களே.. ஹான் கழுதை.. ஹே ராகவ் வலிக்குது விடு டா.. ம்ம் அது.  என்று சொல்லி அவன் சட்டையின் கைகளை மடித்து விட்டு கொண்டே வசுமதிய பார்த்து என்ன மாம் அப்படி பார்க்கரீங்க.. 

 அவர், ராகவ் இந்த பாட்டு எப்படி சான்சே இல்ல எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் அப்பாவும் இந்த பாட்டை…  மாம் போதும்… 

சரி என் பிள்ளை மேல் தான் எல்லார் கண்ணும் அதனால் இன்னைக்கு சுற்றி போடணும். வருணி, அத்தை என் கண்ணு கூட ராகவ் மேல தான்.. ஹேய் என்று சிரித்து பேசி விட்டு அவர்கள் கிளம்பினர். 

மித்ரன், இன்பா எப்படி டா.. அது எல்லாம் அப்படி தான்.. அவன் சரி அதை விடு அவளை எப்படி சமாதானம் செய்வ.. 

இன்பா தன் சட்டை காலரை சரி செய்து கொண்டே இந்நேரம் என் பேபி என்னை தான் நினைத்து கொண்டு இருப்பா டா ஆல்ரெடி என் பர்ஃபார்ம்ல இந்நேரம் மயங்கி கிறங்கி இருப்பா.. 

மித்ரன், எப்படி மச்சி அவள் கிட்ட நீ இன்னும் பேச கூட இல்லையே.. அது உனக்கு புரியாது மச்சி நோட்ஸ் எடுத்துக்கோ அதுக்கு முன்னாடி கொஞ்சம் வாய் பேசுவதை கொறை என்னை மாதிரி செயலில் காட்டணும். 

சரி இனி நம்ம வேலை முடிந்தது. இனி டார்ஜ்லிங்க அடுத்து வீட்டில் மீட் பண்ணிக்கிறேன். ஹே உங்க வீட்டிலா… இல்ல என் மாமி வீட்டில் போடா..  

வெண்பா, அண்ணா செம்மையாக வாசித்த.. ம்ம் அந்த சாதா கண்ணு உன் தோழிக்கு முட்டை கண்ணா மாறி இருக்குமே.. அண்ணா நீ வேற அவ வாய் திறக்கவே இல்ல… 

சரி மா நான் கிளம்புகிறேன்.. அண்ணா! அண்ணா!அடுத்து food festival வாயேன் ஜாலியாக இருக்கும். அப்பொழுது அருகே வந்த வசுமதி, என்ன வெண்பா எங்கே வாயாடி.. அவளா அங்கே இருக்கா ஆன்டி என்ன ஆச்சு… இல்ல எப்பொழுதும் எங்கே இருந்தாலும் என் கிட்ட பேசாமல் போகவே மாட்டாள் இன்னிக்கி காலையில் இருந்து மேடம் ஒரு தடவை கூட வரவே இல்ல.. 

இன்பா, மாம் அவள் பெரிய இவளோ நீங்க எதுக்கு அவளை பற்றி பேசறீங்க… என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே விவேகா ஆதியுடன் கைகளில் எதோ எடுத்து கொண்டு வந்தாள். 

குட் மார்னிங் மேம்.. என்று அவர் அருகில் வந்து நின்றாள். என்ன மேடம் டெல்லி போனதில் இருந்து பெரிய ஆள் ஆகி விட்டீங்க. இல்ல மேம் இன்னிக்கு food festival நான் வீட்டில் இருந்து கஷ்ட பட்டு traditional foodல ஆரிய புட்டு செய்து கொண்டு வந்து இருக்கேன்.. அவளை அனைவரும் வித்தியாசமாக பார்க்க.. ஆதி, ராகி புட்டு என்று திறந்து நீட்ட…. அதை வசுமதி பார்த்து விட்டு ம்ம் நல்ல அரோமா.. ம்ம் டேஸ்ட் பண்ணுங்க என்று ஸ்பூனை நீட்டினாள். 

அந்த நேரம் வருணி அத்தை என்ன சாப்பிடுற.. என்று சொல்லி கொண்டே வந்தாள். அவள் வெண்பா வை பார்த்து ஹே வெண்பா எப்டி இருக்க.. ம்ம் குட் அக்கா… ஹேய் கால் மி வருணி, அருண மட்டும் பேர சொல்லி கூப்படுற நான் அக்காவா.. 

வசுமதி, சரி  இது வேணுமா வெனாவா.. என்ன இது.. சொன்னால் தான் சாப்பிட்டுவ இல்லன்னா சாப்பிட மாட்டியா.. நான் ரவி மாமா கிட்ட சொல்றேன் என்று திரும்ப சரி போய் சொல்லு முதலில் ஆ காட்டு.. அவள் வாயில் போட்டு கொள்ள ம்ம் நல்லா இருக்கே.. என்ன இது? 

வெண்பா, இது ஒரு traditional டிஷ்.. நேம் சொல்லு வெண்பா… ராகி புட்டு..யார் செய்தது… வசுமதி, விவேகா.. ஓ அது நீ தானா ம்ம் ஆமா மேம்.. என் அத்தையும் உனக்கு மேம் நானும் உனக்கு மேமா..  அவள் அமைதியாக நிற்க.. அத்தை ராகவ்க்கு ஊட்டு.. ராகவ் ஆ போட்டு கோடா நல்லா இருக்கு.. 

எனக்கு வேண்டாம்.. வசுமதி, எப்படி செய்த சொல்லு விவேகா.. அது ராகில தான் மேம்.. அதான் ரெசிப்பி சொல்லு.. விவேகா ஆதியை பார்க்க… எதுவும் சீக்ரெட் இருக்கா என்ன.. ஆதி அப்படி இல்ல மேம் அது..

இன்பா, மாம் அதி செய்து இருப்பா இல்ல வருண் அம்மா செய்து இருப்பாங்க,  இவளுக்கு எதுவும் செய்ய தெரியாது. 

வசுமதி, அப்டியா அப்போ நீ செய்யலயா.. ஆமாம்  இல்ல மேம்  என்று சிரித்து கொண்டே இன்பாவை முறைத்து கொண்டும் தலை ஆட்ட..

வருணி, who is அதி? ஆதி, என் அக்கா மேம்… ராகவ் உனக்கு எப்படி தெரியும், என் கிட்ட சொல்லவே இல்ல..

வசுமதி, இந்த பொண்ணோட அண்ணா கோட்ரஸ்ல நம்ம வீட்டு பக்கத்தில தான் இருக்கான். இன்பா கூட தான் ஸ்டேஷன் ல வேலை செய்கிறான். ஓ இன்டர்ஸ்டிங்..   அப்புறம் விவேகா எப்போ நான் டிரை பண்றது எப்போ உப்மா செய்து தர போற.. 

கிருஷ்ணன், என்ன வசு கிளம்பலாம் தானே.. என்ன விவேகா மேடம் சார் கிட்ட பேச மாட்டிங்கலோ..

அவள் திருதிருவென முழிக்க இன்பா வேறு எங்கோ பார்த்து கொண்டு இருக்க..

கிருஷ்ணன்,அதான் என்னை சார்ன்னு சொல்லிட்ட..

இல்ல தாத்தா நீங்க இந்த காலேஜ் சேர்மேன்..

அவர்,அப்போ பாவை என்ன உனக்கு மேம் அப்படி தானே.. 

 அப்படி இல்ல தாத்தா அம்மச்சி எப்படி இருக்காங்க.. வசுமதி, வருணி இருவரும் ஒரே நேரத்தில் ஷாக் ஆகி வசு, அப்பா அம்மாவுக்கு எப்டி இவளை தெரியும்.. வருணி, தாத்து இந்த பொன்னு  டார்ல்ஸ மீட் பண்ணி இருக்கா!

கிருஷ்ணன், ஹான் ஆமா வீட்டுக்கே வந்து இருக்கா.. 

இதை கேட்டு இன்பா போச்சு ஓல்ட் மேன் நான் வசமா மாம் கிட்ட  ஓ காட்.. என்று சொல்லி விட்டு 

இன்பா, மாம் எனக்கு அடுத்து முக்கிய வேலையா ரைட்டர மீட் பண்ணனும் கேஸ் விஷயமா நான் போறேன் பாய் வாடா மித்ரன்.. 

வருணி, தாத்து சீக்கிரம் சொல்லுங்க எப்படி வந்தாள். யார் கூட்டி வந்தது. 

கிருஷ்ணன், அதை ராகவ் கிட்ட கேளு.. சொல்லிட்டு போ ராகவ்..  

வருணி, ஹே ராகவ் நில்லு எங்கே ஓட பார்க்கிற.. 

அத்தை அவன் போறான் பாருங்க.. 

விவேகா, மேம் அது வந்து என்று கண்கள் கலங்க கைகள் நடுங்க நிற்க.. 

மித்ரன்,மச்சி என் கண்ணில் ஒரு காட்சி தெரியுது டா.. 

என்று சிரிக்க  ப்ளடி f**you trash. என்று சொல்லி கொண்டே… 

இன்பா, திரும்பி நின்றான்.. 

தொடரும் …

 Episode 194

 மித்ரன், மச்சி உன் சட்டையை வருண் பிடிப்பது போல் எனக்கு தோனிக்கிட்டே இருக்கே.. 

இன்பா, என் கண்ணிலும் ஒரு காட்சி தெரியுது… 

என்ன அது… 

வருண் உன்னை கன் எடுத்து சுடுவது போல் தோனிகிட்டே இருக்கு என்று சொல்லி இன்பா வசுவின் அருகில் வந்து நின்றான். ஆனால் மித்ரன் வர வில்லை. 

அவன் அதே இடததில் நின்றான். விவேகா எதோ பேச வர வருணி, ஹே ராகவ் இந்த பொண்ணை நீ எதுக்கு கூட்டி வந்த .. இன்பா அவள் தலையில் கொட்ட.. 

சிபி என்ன ஆச்சு..  கிருஷ்ணன், வா சிபி நீயே சொல்லு.. என்ன சொல்லணும்.. மாம்ஸ் ராகவ் இந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து இருக்கான் எனக்கு சொல்லவே இல்ல.. 

அதை எதுக்கு டி உன் கிட்ட சொல்லணும்.. என்ன மாம்ஸ் இப்படி சொல்லிட்ட அத்தை!! என்று அவள் கத்த…

சிபி, நான், ராகவ்,அருண், விவேகா, வெண்பா, ஆதி, அண்ட் இங்கே டெல்லி வந்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் தாத்தா வீட்டுக்கு வந்தோம். இத உன் கிட்ட எதுக்கு டி சொல்லணும். 

வசு மாம் இப்போ என்ன ஆச்சு..  ஒன்னும் இல்ல சிபி என்று சொல்லி விட்டு அவர் விவேகாவை பார்த்து வாயாடி எதுக்கு அமைதியா இருந்த இதை  முண்ணவே சொல்லி இருக்கலாம் தானே.. 

இன்பா, மாம் உங்களுக்கு டைம் ஆகளையா எதுக்கு வெட்டி பேச்சு… என்று சொல்லி கிருஷ்ணனை முறைக்க..

ஹலோ மிஸ்டர் ACP இப்போ எதுக்கு என்னை ஷூட் பண்ற மாதிரி பார்க்கரீங்க..

அவன் பேசாமல் செல்ல ஐ சே ஸ்டாப் இட் ஃபூல்..

வசுமதி அவர்கள் எப்பொழுதும் இப்படி தான் என்று எதுவும் கண்டு கொள்ளாமல் கிளம்ப.. 

 உடனே விவேகா சிபியிடம் சொல்லி விட்டு ஆதியுடன் கிளம்பினாள். 

வருணி, மாம்ஸ் வாயேன்  எனக்கு கம்பெனிக்கு ஆள் இல்ல இந்த அருண் பெல்லோ விட்டு போய் விட்டான்.  ஸ்நாக்ஸ் வாங்கி  தா.. சிபி, நான் வாங்கி தரேன் பட் எனக்கு நிறைய வேலை இருக்கு டி நீ தாத்தா கூட சேர்ந்து போ.. 

என்ன மாம்ஸ் சோ போரிங்.. என்று அவள் சொல்லி கொண்டு இருக்க சிபி யோசித்தான். நீ பேசாமல் இங்கே யார் கூடவும் ஜாயின் பண்ணிக்க.. எனக்கு இங்கே யாரை தெரியும்.

சிபி,ம்ம் இனியாழ் கூட..

வருணி முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு who ? ஹே சுபாவோட சிஸ்டர் இன் லா ரெண்டு பேர் இருக்காங்களே யு டோன்ட் னோ !

வருணி, ச்சீ பேட் கேர்ல் அவளை சுத்தமாக பிடிக்கிள ராகவ அப்படியே முழிங்குவது போல் பார்க்கிறாள். அண்ட் ஸ்டேஜ் மேனர்ஸ் இல்ல மேக் அப் சென்ஸ் இல்ல.. 

இதை கேட்டதும் சிபிக் கு எதோ போல் ஆகி விட்டது. மேலும் அவள் மாம்ஸ் அவள் ஸ்டேஜ்ல தாத்தா அண்ட் ராகவ் கிட்ட சீன் போடுரா… இங்கே வந்து ரிலேஷன் அப்டின்னு காட்டி கொள்கிறாள். சிபி, சரி போதும் நீ வீட்டுக்கு கிளம்பு… 

வருணி, ஹே பிளீஸ் சிபி இன்னும் 2 டேஸ் தான் அப்புறம்  ஹாஸ்டல் போயிடுவேன் எனக்கு போர் அடிக்குது டா.. 

சிபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. வெண்பாவை பார்த்த வருணி சிபி நீ என்னை வெண்பா கிட்ட சொல்லி அனுப்பி விடு.. 

அவன் சரி என்று விவேகா, வெண்பா, ஆதி என அனைவரிடமும் அவளை இன்னொரு முறை அறிமுகம் செய்து அனுப்பி வைக்க அவர்கள் தயக்கதுடன் அவளை அழைத்து சென்றனர். 

இங்கே கிருஷ்ணன், ஹே ஸ்டாப் இட் மேன்.. இன்பா வேகமாக நடக்க.. ராகவ் இப்போ நீ நிற்கள நான் இப்போவே வசுமதி கிட்ட எல்லா விஷயமும் சொல்லி விடுவேன். 

இப்போ உங்களுக்கு என்ன வேணும்.. அவர் சிரித்து கொண்டே அருகில் வந்து சீக்கிரம் அவளை மேரேஜ் பண்ணிக்கோ.. இதை சொல்ல தான் கூப்பிட்டேன்.

இன்பா, என் என்ன சொல்றீங்க..

கிருஷ்ணன், நான் சும்மா சொன்னேன்.. 

இன்பா மீண்டும் கிளம்ப.. டேய் நில்லு டா.. என்று அவர் அவனை தடுப்பது போல் நிறுத்தி விட்டு சீக்கிரம் வசுமதி கிட்ட சொல்லி விடு.. இன்பா, அதுக்கு என்ன அவசியம் இருக்கு.. இல்ல ராகவ் ரொம்ப நாள் மறைத்து அது வேற யாரும் மூலமாக அவள் காதுக்கு தெரிய வந்தால் உடைந்து விடுவா டா.. இதை கேட்டு அவன் அமைதியாக இருக்க.. 

கிருஷ்ணன், உனக்கு சுபா மேரேஜ் வரைக்கும் தான் டைம் இல்ல நானே சொல்லி விடுவேன். வசுமதி உன் மேல ஓவர் பொசசிவ் அண்ட் நீ அவள் கிட்ட இவளோ பெரிய விஷயத்தை திடீர்னு சொன்னால் அதை அவளால் டைஜஸ்ட் பண்ண முடியாது. 

இன்பா, தாத்தா மாம் இதுக்கு ஓகே சொல்லுவார்களா.. அவளை மாம்க்கு பிடிக்குமா.. என்று குழந்தை போல் அவன் கேட்க.. 

அவர் சிரித்து கொண்டே அவன் தோள் மேல் தட்டியவர். அவளை வசுவுக்கு  ரொம்ப பிடிக்கும் ஆனால் உனக்கு இணையா உன்னோட ஜோடியா பிடிக்குமா அப்டின்னு உன் அம்மா கிட்ட தான் கேட்கணும்.

இன்பா இதை கேட்டதும் எதையோ யோசிக்க உடனே அவர்,முதலில் சொன்னால் தானே அதுக்கு என்ன ரியாக்ஸன் நடக்குது அப்டின்னு தெரியும் அதை நினைத்து இப்போவே கவலை பட கூடாது அண்ட் இதை போட்டு குழப்பி கொண்டு இருக்க வேண்டாம் ஃப்ரீயா விடு ராகவ் .. ம்ம் என்று சொல்லி விட்டு அவரிடம் இருந்து விடை பெற்று நேராக மித்ரன் அருகில் சென்றான். 

மித்ரன் ஒரு இடத்தில அமர்ந்து யோசித்து கொண்டு இருந்தான்.  இன்பா,ஹே என்ன யோசிக்கிற வா போகலாம்.. டேய் என்னை எதுக்கு வருண் கன் எடுத்து போடணும்..

அவன் மித்ரணை பார்த்து ஒரு கள்ள புன்னகை சிந்த..

டேய்  இன்பா பதில் சொல்லிட்டு போடா நீ அவள் பின்னாடி சுத்துறதுக்கு…

இன்பா அவனை முறைக்க

 இப்போ எதுக்கு முறைக்கிற அது தான் உண்மை நீ அவள் பின்னடி சுத்திறதுக்கு அவள் உன்னை லவ் பன்றதுக்கும் நியாயபடி பார்த்தால் உன்னை தானா டா போடணும் இதில் எப்படி நான் வந்தேன். 

இல்ல மச்சி நான் அப்ரூவராக மாறி விடுவேன் டா.. என்ன சொல்ற இன்பா.. ம்ம் ஆமா மச்சி நான் விவேகாவை லவ் பண்ண ஹெல்ப் பண்ணதே நீ தான் டா சோ சரி பாதி உனக்கு பங்கு இருக்கு டா..

“நானா நான் என்ன ஹெல்ப் பண்னேன் இது மட்டும் அந்த சரவணனுக்கு தெரிந்தது நான் சட்னி தான் டா என்னையை எதிலும் மாட்டி விடாத டா… வருண் பார்க்க தான் அமைதியா இருக்கான் அவனுக்குள்ள ஒரு காட்டாறு இருக்கு டா.. “

அதுக்கு நான் என்ன பண்ணட்டும் யாராவது என்னை கேட்டால் உன்னை தான் சொல்லுவேன். உண்மையாகவே உன்னால் தான் டா விவேகா எனக்கு கிஸ் என்று நிறுத்தி கிடைத்தாள் என்று மாற்ற.. 

ஹே இப்போ என்ன சொன்ன இன்பா ஃப்ராடு.. நாயே சொல்லு டா.. அவன் மீசையை முறுக்கி கொண்டே நீ கேளு நான் சொல்றேன் அதுக்கு என்னை டாக் எல்லாம் சொல்லாத.. அப்போ சொல்லு..  அன்னிக்கு அவளை என் கூட காரில் அனுப்பி வைத்தியே நினைவு இருக்கா..

மித்ரன் யோசிக்க, டேய் spr காலேஜ்ல இருந்து வரும் போது பஸ் மிஸ் பண்ண வச்ச அது நினைவு இருக்கா…

டேய் அது நடந்து கிட்ட தட்ட 1 வருஷத்துக்கு மேல இருக்கும் டா.. ம்ம் அந்த சம்பவம் தான் அப்போ ஒரு fire accident நடந்தது. அச்சோ அப்புறம் என்ன ஆச்சு.. இன்பா, அதுக்கு அப்புறம் நான் fire அ அணைத்தேன்.

அப்புறம் இன்பா, விவேகா என்னை அணைத்து கொண்டாள். அவ்ளோ தான் சென்சார்…

மித்ரன் அதிசயமாக டேய் எப்படி டா தேதி,  வருஷம்,கிழமை, நேரம் எல்லாம் துல்லியமாக நினைவு வைத்து இருக்க.. 

இன்பா, ரொம்ப கஷ்டம் ஆனால் என்னால் முடியும்… இந்த பொண்ணுங்க கான்சியசா இருப்பதே அதில் தான்டா நம்ம அவளுங்களுக்கு  என்ன எல்லாம் செய்தோம் அப்டின்னு பார்க்க மாட்டாலுக சரியா இந்த இடத்தில தான் வந்து நிற்பாலுங்க.. 

மித்ரன்,  அது என்ன டா எனக்கும் சொல்லேன். இன்பா தன் மீசையை முறுக்கி கொண்டே வேற என்ன போன் நம்பர், முதல் தடவை i Love you சொன்ன நாள் வருஷம்,  outing போன நாள் வருஷம், பிறந்த நாள், பிடித்த கலர் இந்த மாதிரி எக்க சக்க விஷயம் இருக்கு அது எல்லாம் உனக்கு புரியாது. 

இத்தனை இருக்கா.. இது கம்மி தான் டா ஆனால் மொக்க விஷயத்துக்கு தான் சண்டையே வரும் அப்போ எனக்கு அவளை குச்சி எடுத்து அவங்க அம்மா கிட்ட விட்டு  அடி பின்ன வைக்கணும் அப்டின்னு தோணும்..  என்ன பண்றது கஷ்ட பட்டு என் ஐம்புலன்களை அடக்கி வேற வழி இல்லாமல் சமாதானம் பண்ணுவேன்.

அதுவும் நானா தான்  கன்வின்ஸ் பண்ணனும் அவள் பண்ண மாட்டா இது வரை தப்பு அவள் மேல் என்றாலும் நான் தான் என் மேல் என்றால் அவள் space ல தான் சுற்றி கொண்டு இருப்பா அதே கோபத்தில் திரிவா இப்படியே சண்டை போட்டு அவள் ஃபைனல் இயர் வந்து விட்டாள். நான் அதே ACP ல தான் இருக்கேன் எந்த புரொமோஷனும் இல்ல மச்சி… 

மித்ரன் இதை கேட்டு மலைப்பது போல் பார்த்தான். உனக்கு என்ன புரொமோஷன் வேண்டி கிடக்கு.. அவன் அவளுக்கு புருஷன், என் மாமிக்கு மருமகன், உனக்கு மச்சான் வருணுக்கு மச்சான். மித்ரன், அதென்ன எனக்கு மச்சான்.. 

இன்பா தன் கண்ணாடியை போட்டு கொண்டே இப்போ உனக்கு புரியும் அளவுக்கு நீ வளர வில்லை வா போகலாம். என்று கிளம்பினர். 

இன்பா, மித்ரன் இருவரும் பேசி கொண்டே வெளியே வர அங்கே வருணி, ஹே ராகவ் வாயேன் அப்படியே ஒரு ரவுண்ட் இந்த புட் பெஸ்டிவல்ல நிறைய வெரைட்டி இருக்கு டா என்று அவள் கைகளில் இருந்து உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விட எதிரில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் விவேகா நின்று இவர்களை பார்த்து கொண்டு இருப்பது தெரிய

 இன்பா, ம்ம் உனக்காக சாப்பிட்டால் போச்சு வாடி உனக்கு என்ன வேணும்.. 

வருணி, யோசித்து கொண்டே ஹே அது இது என்று சொல்லி கொண்டே செல்ல அவனும் அவளுக்கு பணம் கட்டி வாங்கி கொடுத்தான். அங்கே மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கும் இங்கும் வண்ண வண்ண புது உடைகளில் அனைவரும் அழகாக இருந்தனர். சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டே உணவுகளை சுவைத்து பார்த்து வாங்கி சாப்பிட்டனர்.

வருணி, மித்து என் கிட்ட இருந்து வாங்கி மட்டும் தான் சாப்பிட்டுவியா எனக்கு எதுவும் வாங்கி தர மாட்டியா… 

உனக்கு என்ன வேணும் சொல்லு இப்போ உடனே வாங்கி தரேன். சரி வா போகலாம் ராகவ் இங்கேயே வைட் பண்ணு நான் மித்து கூட போயிட்டு வரேன்.. என்று அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு செல்ல.. 

வெண்பா, அண்ணா !இன்பா அண்ணா…  அவன் யார் என்று திரும்பி பார்க்க அங்கே விவேகா நின்று கொண்டு இருக்கும் குழு அருகில் வெண்பா குழு இரண்டும் கடை இருக்க.. 

இன்பா சிரித்து கொண்டே ம்ம் வெண்பா என்று நடந்து அருகில் வந்தான். அண்ணா டேஸ்ட் பண்ணி பாரு இது வாழை இலையில் செய்த இதோட அரோமா வேற லெவல் மீன் செம்மையாக இருக்கும்.. 

இன்பா, ஓ கொடென் இப்போவே டேஸ்ட் பண்றேன்.. அவர்கள் பேசி கொண்டு இருந்தது விவேகாவுக்கு காதில் விழ உடனே அவனை முறைத்து பார்த்தாள். 

அவன் இப்பொழுது அவளை முழுதாக அருகில்  பார்த்தான். கண்ணு , மூக்கு, உதடு, அந்த அருவி போல் கூந்தல் இன்பாவுக்கு பிடித்த அவளின் கழுத்தில் கூந்தல் கற்றை முடிகள்  தஞ்சம் அடைய அதை ஒதுக்க அவனது கைகள் பரபரத்தது.

வெண்பா, அண்ணா இதை பாரு என்று அந்த வாழை இலை மீனை பிரித்து காட்ட அவன் அவளை நினைத்து கொண்டே நல்லா சிவந்து போய்டுச்சே ஹாட்டா இருக்கு மா.. இதை கேட்டதும் அவள் உதடுகள் முன்முனுக்க 

ப்பா பார்த்து சுளுக்கிக்க போகுது..

விவேகா,அன்னிக்கு நாண் வேஜ் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு இன்னிக்கு ஜொள்ளு ஊற்றி கொண்டு சாப்பிடுகிறாயா டா.. ஃப்ராடு பயலே, பப்பி நாயே.. பப்பி நாயே என்று அவள் வாயில முனக.. 

வெண்பா டெல்லி அனுபவம் எப்படி இருந்தது. ம்ம் சூப்பர் அண்ணா உங்களுக்கு?

அதை ஏன் வெண்பா கேட்கிற என் கண்ணுக்குள் நிக்குது கண்ணை மூடினால் அது தான்  ஹன் no comments.. விவேகா இதை எல்லாம் கேட்டதும் முகம் எல்லாம் த்டீர் என்று வியர்த்து போக அவளது கூந்தலை எடுத்து முன்னே போட்டு கொண்டு உடையை சரி செய்து நெளிந்தாள். 

விவேகாவின் தோழி மீனா, ஹே விவி இந்தா இது புது டிஷ் டேஸ்ட் பண்ணி பாரேன் நல்லா இருக்கு… உடனே அவள் பக்கம் திரும்பி வாயில் போட்டு சுவைத்து விட்டு.. 

ம்ம் சூப்பர் நல்லா இருக்கு இது என்ன?

மீனா, இது நான்வேஜ் சிக்கென்ல ஒரு டிஷ்… இதை கேட்டதும் விவேகா, என்ன சிக்கனா! ம்ம் ஆமா டி இன்னும் இருக்கு.. விவேகா அய்யோ பெருமானே என்று தலையில் அடித்து கொண்டு அய்யோ பெருமானே நான் முழுங்கி விட்டேனே என்று கண்களில் கண்ணீர் வர.. 

 இன்பா, கன்கிரட்ஸ் வெண்பா இன்னிக்கு ஒரு சிறப்பான சம்பவத்தை பார்த்து இருக்கேன்.. பட் சின்ன வருத்தம்.. என்ன அண்ணா.. விடியோ எடுத்து சில பேருக்கு அனுப்பினால் பட்டை பட்டையாக சிப்பில் அடி வாங்கற காட்சி என் கண்ணுக்குள் ஓடுதே.. என்று சொல்ல வெண்பாவும் சேர்ந்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். 

இன்பா, வெண்பா இருவரும் மீனா வைத்து இருக்கும் ஷாப்க்கு வந்தனர். மீனா இன்பாவை பார்த்ததும் குட் மார்னிங் சார் என்று சிரித்து கொண்டே உங்களுக்கு எது வேண்டும் சார்.. என்று உணவுகளை காட்டி கேட்க.. 

இன்பா, இது ஸ்வீட் தான மா.. ஸாரி சார் இது எல்லாம் கார உணவு.. இட்ஸ் ஓகே பட் இப்போ ஸ்வீட் சாப்பிட்டே ஆகனும் அதுவும் உங்க ஷாப்ல எதுவும் வாங்கணும் அப்டின்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருக்கே.. 

விவேகா ஒரு சேரில் அமர்ந்து அழுது கொண்டு இருக்க.. 

வெண்பா வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க.. மீனா கன்னம் சிவக்க சார் ஒரு நிமிடம் என்று சொல்லி விவேகா ஷாப்ல ஒரு இருந்து சில ஆரஞ்சு மிட்டாய் எடுத்து கொடுக்க.. சார் இது எல்லாம் உண்மையாகவே ஆரஞ்சு பழத்தில் இருந்து ரெடி பண்ணது. டேஸ்டா இருக்கும்.. 

அங்கே ஆதி வந்தான். ஹே என்ன ஆச்சு எதுக்கு அழற.. ஆதி !ஆதி! நான் பாவம் பண்ணி விட்டேன் டா.. என்ன டி சொல்ற.. ஆதி நான் சிக்கன் தெரியாமல்  சாப்பிட்டேன் அந்த மீனா என் கிட்ட ஏமாற்றி கொடுத்து விட்டாள் அம்மாவுக்கு தெரிந்தால் அவ்ளோ தான் என்று மூக்கை துடைத்து கொண்டே சொல்ல… 

இன்பா, பாரு வெண்பா நாளைக்கு சாமி கும்பிட்டு விட்டு அடுத்த நாள் கறிகடையவே எடுத்து குடும்பமே பிரியாணி போட்டு வெட்டும். இவள் பாவம் பண்ணி விட்டேன் அப்டின்னு சீன் போடுரா.. 

ஆதி, சரி விடு தெரியாம தானே செய்த ஒன்னும் தப்பு இல்ல டி.. விவேகா, ஆதி நீ அம்மா கிட்ட சொல்லி விடாத.. 

 இன்பா வெண்பா கிட்ட எதோ சொல்ல  ஹே நான் சொல்லுவேன் டி என்று சொல்லி கொண்டே அவள் வந்தாள். ஹே எதுக்கு சொல்லுவ… 

டேய் அங்கே பார் எங்க அண்ணா இருக்கான் மரியாதை கொடு… 

ஆதி இன்பாவை பார்க்க அவன் கண்களில் மிரட்ட விவேகா இப்போ என்னால் எதுவும் பண்ண முடியாது அவர் என்னை பார்த்து முறைக்கிரார்.. சரியாக அந்த நேரம் அருண் வந்தான். 

விவேகா… டியர்.. டியர்.. உன் கிட்ட முக்கியமா பேசணும் என்று அவள் முன் மூச்சு வாங்க நிற்க.. விவேகா இன்பாவை முறைத்து கொண்டே  சொல்லுங்க சீனியர்… வாயேன் அப்படியே ஒரு வாக் போய்கிட்டே பேசலாம்.. என்று அவள் அருகில் வர..  அவள் அழுது இருப்பதை பார்த்து 

என்ன ஆச்சு எதுக்கு அழுத.. 

சிக்கன் சாப்பிட்டு விட்டேன் நான் பாவம் பண்ணிட்டேன் சீனியர்.. 

அருண், யார் சொன்னது அப்படி எல்லாம் இல்ல உன் கை பட்டதும் சிக்கன் சொர்க்கம் போயிருக்கும் நீ அழ வேண்டாம் வா.. 

இதை கேட்டதும் ஆதி, வெண்பா, இன்பா மூவருக்கும் கோபம் வர அடக்கி கொண்டு இருந்தனர். 

விவேகா, நீங்க முன்னால் போங்க நான் பின்னால் வரேன் ஏ ன் அப்படி.. 

சீனியர் எவ்வழியோ ஜூனியரும் அவ்வழி.. அருண் அவளை பார்த்து இனி நீ சீனியர் சொல்ல வேண்டாம்… 

என்ன ஆச்சு.. கால் மி அருண்… 

அப்போ நீங்க போங்க நான் சொல்றேன். ஆதி எங்கே டி போற..  இரு ஆதி வருகிறேன் என்று கண்களில் இன்பா வை ஜாடை செய்து விட்டு தன் பாவாடையை ஒரு கைகளிலும் தூக்கி பிடித்து கொண்டு நடந்தவள். 

ஒரு நிமிடம் என்று அவளுடைய இடத்துக்கு வந்து ஆரஞ்சு மிட்டாய் எடுத்து கொண்டு செல்ல இன்பா அவளை முறைத்தான்.அவன் கேட்க நினைத்த கேள்வியை மீனா கேட்டு விட்டாள். 

மீனா, ஹே எதுக்கு இவளோ ஆரஞ்சு மிட்டாய்… 

விவேகா,…?

அவள் சொன்ன பதிலை கேட்டு இன்பா…!?

தொடரும்…

கன்மெண்ட் பண்ணுங்க 

And ratings la indha story eppdi இருக்கு எந்த அளவுக்கு பிடித்து இருக்கு அப்டின்னு ratings  உங்களுக்கு பிடித்த ஸ்டார் கொடுத்து oru 4 lines

Episode 195

மீனா, ஹே எதுக்கு இவளோ ஆரஞ்சு மிட்டாய்… 

விவேகா, சம் ஸ்பெசல் பர்சன்.. அதை இன்னும் ஸ்வீட்டா ஆக்க இந்த ஆரஞ்சு  மிட்டாய் இது எல்லாம் உனக்கு புரியாது டி…

இதை கேட்டதும் அருணுக்கு பனி மழையில் நனைவது போல் இருக்க முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு… அவன் மனதில், இன்னிக்கே இப்போவே உன் கிட்ட என்னோட லவ்வ சொல்லிடுவேன் விவேகா என்று படபடப்புடன் கைகளை தட்டி கொண்டும் மிகவும் வேகமாகவும்  கால்கள் தரையில் நிற்க வில்லை… 

அவள் சொன்ன பதிலை கேட்டு இன்பாவுக்கு இருப்பு கொள்ள வில்லை. எவ்ளோ திமிர் டி உன்னை அன்னிக்கே எதுவும் செய்து இருக்கணும் இல்லனா இவளோ வாய் அதுவும் என் முன்னாடி பேசிட்டு இருக்க என்று நினைத்து அவன் அடுத்த நிமிடம் அங்கு நிற்க வில்லை. வேகமாக மித்ரன அழைத்து இல்ல இழுத்து கொண்டு சென்று விட்டான். 

இங்கே ஆதி அவளிடம் பேச வர இன்னிக்கு மட்டும் இதுவே லாஸ்ட் பிளீஸ் டா.. என்று சொல்லி அருணுடன் சென்றாள். 

அருண் தன் தலையை கோதி கொண்டு துள்ளலான நடையில் அவளுடன் நடந்து சென்றான். விவேகா அருண் பேசும் நிமிடத்துக்காக காத்து இருந்தாள். அதே போல் அவனும் பேச தொடங்கினான். விவேகா என்று அவன் அழைக்க.. பின்னால் இருந்து சத்தம் வர திரும்பி பார்த்தாள். 

ம்ம் என்ன சீனியர்.. அவன் அவள் அருகில் நடந்து வந்தான். 

விவேகா வின் இதயம் வேகமாக படபடத்தது உடனே அவள் இரண்டு எட்டு பின்னால் வைத்து சீனியர் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்… 

என்ன… 

நான்.. 

அருண் இதயம் வேகமாக துடிக்க… 

விவேகா, நான் love பண்றேன்… அவன் சிரித்து கொண்டே நானும் உன்னை லவ் பண்றேன் “yes I’m fall in love with you” என்று அவள் கைகளை பிடிக்க வர 

விவேகா பின்னால் நகர்ந்து ஆனால் நான் உங்களை லவ் பண்ணல in fact நீங்க சொல்றது எனக்கு அதிர்ச்சியா இருக்கு.. இதை கேட்டதும் அவன் முகம் ஒரு நொடியில் மாறி என்ன சொல்ற… 

ம்ம் ஆமா நான் உங்களை லவ் பண்ணல, வேற ஒருத்தரை 2 வருஷமா லவ் பண்றேன்.. இதை கேட்டதும் அவன் இதயம் நொறுங்கி போனது.. 

அருண், நீ பொய் சொல்ற நீ விளையாடுற தானே.. 

விவேகா, என் அப்பா ப்ராமிஸ்.. அவன் இதை கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

அருண், இதை ஏன் என் கிட்ட முன்னாடியே நீ சொல்லல.. 

விவேகா, நான் அவர் கிட்ட புரோப்போஸ் பண்ணல இப்போ தான் என் அண்ணாவுடைய மேரேஜ் டைம்ல தான் லவ் சொன்னேன்.. அண்ட் உங்களுக்கு என் மேல் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் அப்டின்னு நான் நினைத்து பார்த்ததே இல்ல..

அருண், அது யாருன்னு தெரிந்து கொள்ளலாமா என்னால் இப்போ கூட நம்ப முடியல நீ பொய் சொல்ற விவேகா.. 

அது யாருன்னு சொல்ல முடியாது அது என் பர்சனல் நான் என் அப்பா மேல் பொய் சொல்ல மாட்டேன். இத்தனை நாள் இந்த மொடிவ்ல தான் என் கிட்ட நீங்க பேசிட்டு இருந்தீர்களா..  

அருண் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க.. விவேகா, இந்த மாதிரி ஒரு எண்ணம் அதுவும் என்னால் உங்க மனசு எந்த விதத்தில்  சஞ்சலம் ஆச்சு அப்டின்னு தெரியல பட் சாரி… 

அருண், அது ஆதியா! நிச்சயமா இல்ல கனவில் கூட என்னையும் அவனையும் அப்படி தவறா  நினைக்க வேண்டாம். அண்ட் இந்த விஷயம் ஆதி, உங்களை தவிர வேற யாருக்கும் தெரியாது. 

அருண், எந்த விதத்தில் அவர் என்னை விட அப்படி  உனக்கு என்ன விஷயம் பிடித்து இருக்கு..

விவேகா, இந்த கேள்வியே முதலில் தவறு உங்களையும் அவனையும் கம்பேர் அவசியம் இல்ல எனக்கு அவனை மட்டும் சாரி அவரை மட்டும் தான் பிடிக்கும். விவேகா இப்படி பேசுவது அருணுக்கு ஷாக் ஆக இருந்தது. அவன் என்று சொல்வதே அவ்வளவு உரிமையாக சொல்கிறாள் யார் அவன் இவளை கொத்தி கொண்டு போய் விட்டான். 

அவள் மனதில் இன்பா மட்டும் தான் இருந்தான். என் கிட்ட எந்த எதிர் பார்ப்பும் வைக்க மாட்டார். அண்ட் என்னை எல்லா இடத்திலயும் பாதுகாத்து கொண்டே இருப்பாரு,இப்போ இந்த நிமிடம் இந்த நொடி கூட..விவேகா சிரித்து கொண்டே நான் அவர் கிட்ட மட்டும் ரொம்ப பைத்தியக்கார தனமா என்னோட தனி இயல்பில் இருப்பேன். இன்னும் சொல்ல போனால் எனக்கு எல்லாமே அவர் தான் அவரை விட பெரிய இடத்தில் நான் இருக்கணும் அப்டின்னு என்னை எனக்கே தெரியாமல் மாற்றி விட்டார். I love him… என்று கண்கள் ஒரு பக்கம் சிரிக்க உதடு அழகாக சொல்லி கொண்டு இருந்தது. 

 அவள் உதடு சிரித்தால் அருண் மனம் வலிக்கும்.  விவேகா, சாரி சீனியர் என்னை மன்னித்து விடுங்கள்… என்று அவள் திரும்பி நடக்க விவேகா பிளீஸ் கொஞ்ச நேரம் இங்க நின்று விட்டு போ.. விவேகா அவனை கேள்வியாக பார்க்க அருண், என்னோட லைஃப் ல முதல் சறுக்கல்  என்னால் இதை என்று அவன் திரும்பி நின்று கொண்டு இருக்க.. 

விவேகா அதே இடத்தில் சிறிது நேரம் நின்றாள். சிறிது நேரம் கடந்தது அருண்,  லாஸ்ட் அண்ட்  ஃபைனல்  ஒரு வேளை அவர நீ லவ் பண்ணாமல் இருந்து இருந்தால் என்னை லவ் பண்ணி இருப்பியா..

விவேகா, நிச்சயமா இல்ல அவன் வலி நிறைந்த கண்களுடன் பார்க்க.. இது என்னால் தான் ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் என்னால் என்று அவள் கண்கள் கலங்க அவள் வருத்தம் கொள்வதை பார்த்து ஹே விவேகா டியர் நான் நல்லா இருக்கேன் நல்ல வேலை இது கொஞ்சம் லேட் தான் பட் ஓகே.. 

விவேகா அப்பொழுதும் ஒரு வித தயக்கத்துடன் இருக்க.. ஹே டியர் பிளீஸ் இப்படி இருக்காத…என்று சொன்னவன்.. சரி என்னை பற்றி சொல்லி இருக்கியா… அவள் யார் கிட்ட என்பதை போல் பார்க்க.. அவர் கிட்ட உன் லவ்வர் கிட்ட… விவேகா கண்களை துடைத்து கொண்டு அவர் தான் நீங்க என்னை விரும்புறீங்க அப்டின்னு சொன்னாரு.. அதான் நான் உங்க கிட்ட சொல்லி விட்டேன். என்று அவள் சொல்லி விட சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. அருண் அப்போ இந்த ஆரஞ்சு மிட்டாய்! இது அவர்க்கு என்று சொல்லி உங்களுக்கு வேற இருக்கு என்று சொல்லி  அவன் கைகளில் தேன் மிட்டாய் கொடுத்தாள். 

இதை எல்லாம் ஒருவர் மறைந்து இருந்து கேட்டு கொண்டு இருக்க விவேகா பேசிய அனைத்தும் அந்த நபருக்கு வானததில் பறப்பது போல் இருந்தது. யார் அது..? அது இன்பா இல்ல..

அருண் மீண்டும் விவேகாவிடம் இன்னும் சில விவரம் கேட்க போதும் சீனியர் அவனை பற்றி பேச வேண்டாம் இப்போ டைம் ஆகுது என்று சொல்லி அவள் செல்ல அருண் அவள் சென்ற அடுத்த நொடி வேகமாக அவன் பேக் திங்க்ஸ் எடுத்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு செல்ல கிளம்பினான்.விவேகா கொடுத்த அந்த தேன் மிட்டாயை தூக்கி வீசினான். 

அங்கே கேட் செக்யூரிட்டி, தம்பி பெர்மிஷன் வேணும்.. நான் யாருன்னு தெரிந்து கொண்டே பெர்மிஷன் கேட்க தோணுது.. 

அவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு ஒரு நிமிடம் என்று உள்ளே சென்று சிபிக்கு கால் செய்து விஷயம் சொல்ல அவன் உடனே அருணுக்கு அழைத்தான்.

 சிபி,அருண் காலேஜ் டைம் ல எங்கே டா போற.. 

டேய் முதலில் என்னை வெளியே விட சொல்லு நான் இப்போவே வீட்டுக்கு போகனும்… 

நீ பேசுவது சரி இல்ல என்ன ஆச்சு.. 

டேய் நான் சொல்றது புரியுதா இல்லையா என்னை விட சொல்லு.. அவன் பேச்சு சரி இல்லை என்பதை உணர்ந்த சிபி, சரி கிளம்பி போ.. அருண், நீ உடனே மம்மி க்கு கால் பண்ணி சொல்லி வைக்காத நான் தாத்தா வீட்டுக்கு போறேன். என்று சொல்லி வைக்க அந்த செக்யூரிட்டி கதவை திறந்து விட அருண் நேராக அவன் கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றான்.அவர் ஆர்மிமேன் என்பதால் அவரது வீட்டில் அவரது தனிப்பட்ட அறையில் மது இருக்கும் அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொண்டு அவனது வழக்கமான தங்கும் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டான். 

அருண் மனம் மிகவும் ரணமாக இருந்தது.அவனது அம்மா அப்பா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அதனால் காதலுக்கு அவ்வளவு எதிர்ப்பு இல்லை ஆனால் பிடித்த பெண்ணை பார்த்து அவளிடம் காதலை சொல்லி அதை அவள் நிராகரித்தால் அது எவ்வளவு வலி வேதனை… இதை நினைத்து நினைத்து அந்த மதுவை ஒரே மூச்சில் குடித்தான். பின் படுக்கையில் விழுந்தான். விவேகா என்று அவன் சிந்தை அவளை தேடியது. அருண் நினைத்து இருந்தான் இது வரை அவன் டெல்லியில் படிக்கும் பொழுது பல பெண்கள் அவனிடம் காதல் சொல்லி இருக்கின்றனர். அதை அவன் நிராகரித்து இருக்கிறான். அவனுக்குள் நாம் ஒரு பெண்ணை விரும்பினால் நிச்சயம் அவள் நிற்காரிப்பதி போல் எதுவும் நம்மிடம் இருக்காது என்ற பெருமையில் இருந்தான். ஆனால் இது விவேகா இப்படி சொன்னது அவனால் துளியும் ஏற்று கொள்ள முடியவில்லை. 

இங்கே விவேகா நேராக ஆதியிடம் வந்தாள். அவன் வேறு பக்கம் திரும்ப அருண் என் கிட்ட லவ் சொன்னான் டா… ஆதி இதை கேட்டதும் திரும்ப.. விவேகா, நான் வேற ஒருத்தரை விரும்பும் விஷயத்தை சொல்லி விட்டேன் அதுக்கு தான் in fact நான் போனேன்.

ஆதி, இப்போ தான் நிம்மதி அதுக்கு என்ன சொன்னான். அவர் யாருன்னு துருவி துருவி கேட்டு கொண்டே இருந்தான். ஆதி சிரித்து கொண்டே” சொல்ல வேண்டியது தானே அது உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்ன்னு”.. டேய் அடி..  என்று சொல்லி அமைதியாக இருக்க.. 

என்னடி ஃபீலிங்கா.. 

ம்ம் ஆமா… 

எனக்கு தான் டி ஃபீலிங்.. 

உனக்கு எதுக்கு ஃபீலிங் என்று அவள் கேட்க… 

என் அத்தை  பொண்ணு பின்னாடி எல்லாரும் சுத்துறாங்க.. 

அதில் என்ன பிரச்னை… 

என் அப்பா உன்னை கல்யாணம் பண்ணி பார்த்து கொள்ளணும் என்று சின்ன வயசில சொல்லி இருந்தால் எப்படி இருக்கும்… 

ம்ம் என்று அவள் பேசி கொண்டு இருக்க வெண்பா வந்து கொண்டு இருந்தாள்…

நல்லா இருக்கும் ஆதி… நம்மல கேட்க யாரு இருக்கா சொல்லு.. இல்ல விவேகா நல்லா இருக்காது… ஹேய் என்று கண்களால் சைக காட்ட.. 

விவேகா, ஆதி “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” எனக்காக பாடென்… 

வெண்பா ஆதி இருப்பதை கூட பொருட் படுத்தாமல்  அவளை அருகில் இழுத்து வந்து ஹே  அருண் உன் கிட்ட என்ன சொன்னான்… 

விவேகா, அப்போ உனக்கு முன்னாடியே இது தெரியுமா… வெண்பா ஹே அவன் என் கிட்ட பேச காரணமே நீ தான் உன்னை அவன் என்னைக்கு பார்த்தானோ அப்போ இருந்து லவ் பண்றான் டி.. விவேகா அவளை கோபமாக பார்த்து உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல முன்னாடியே என் கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே நீ ரொம்ப மோசம் வெண்பா ச்சீ… 

வெண்பா, ஹே பிளீஸ் டி இப்படி பேசாதே நான் இதை பற்றி இன்பா அண்ணா கிட்ட சொன்னேன் அவர் தான் உன் கிட்ட சொல்ல வேண்டாம் அப்டின்னு சொன்னாரு டி… என்னை நம்பு.. விவேகா கோபமாக, உன்னால் தான் டி இவளோ தூரம் பிரச்னை இது எல்லாம் அவனால் வந்தது உனக்கும் அறிவு இல்ல அவனுக்கும் அறிவு இல்ல ஒரு சொந்த தம்பி யைப் இப்படி நடத்துகிறான். சுயநலக்காரன் அருண் பாவம் தெரியுமா இது எல்லாம் தெரியாமல் நான் இந்த இன்பா நாயை பற்றி பில்ட் அப் எல்லாம் விட்டேன்.. என்று அவள் வருத்தம் கொண்டு பேசி விட்டு முறைத்து விட்டு செல்ல… 

ஆதி, நீ சொன்னதில் என்ன தப்பு இருக்கு அவனும் அவன் ஆளும் எரிச்சலா இருக்கு அவனை பார்த்தாலே நாலு விடனும் போல் இருக்கு… விவேகா, ஹே அருண் உன்னை என்ன பண்ணான்.. அவனா நீ என் கூட பேசாமல் இருந்ததுக்கு அவன் தானே காரணம்… விவேகா, இது தப்பு ஆதி இப்படி நினைக்க கூடாது பாவம் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று வருத்தம் கொண்டு அவள் அந்த இடத்தை விட்டு சென்றாள். 

மாலை வரை மனம் எதோ கஷ்டத்தில் இருக்க அவள் யாரிடமும் பேச வில்லை. வீடு செல்லும் நேரம் வர வருணி, ஹே வெண்பா இன்னிக்கு செம்ம ஜாலியா இருந்தது அண்ட் விவேகா இந்த நாளை மறக்கவே மாட்டேன் ஹேப்பி.. நான் என் அத்தை வீட்டுக்கு வரும்போது உன்னை வந்து பார்க்கிறேன். என்று சொல்லி விட்டு அவள் செல்ல வீட்டில் இருந்து காரில் அவளை அழைத்து செல்ல இளவழகன் வந்து இருந்தான். 

விவேகா அவளது பஸ் நோக்கி நடந்து செல்ல ஹே இப்படி இருக்காத டி.. அவள் முறைத்தாள். ஆதி, விவேகா எதுக்கு இப்படி ஃபீல் பண்ற விடு இப்போ சொல்லாமல் இருந்து இருந்தால் பின்னாடி பெரிய பிரச்னையா வந்து இருப்பான். 

அவள் அமைதியாக நடக்க.. வெண்பா, ஹே இப்போ நீ அவன் proposel அ அக்சப்ட் பண்ணலையே அப்டின்னு வருத்த படுறியா என் அண்ணா கிட்ட சொல்லவா.. விவேகா,கொன்று விடுவேன் போடி ஒரு நிராகரிப்பு எவ்ளோ வேதனை கொடுக்கும் தெரியுமா அருண் பாவம் அதுவும் அதுக்கு நான் காரணம் அப்டின்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு… 

வெண்பா, சரி விடு எல்லாம் நல்லதுக்கு அப்டின்னு நினைத்து கொள்.. ஹே போடி… ஆதி அவள் சொல்வதை யோசித்து பார்த்தான். ஓவரா ஃபீல் பண்ண வேண்டாம் லீவ் இட்… நீ வருத்த படாத எல்லாம் சரி ஆகி விடும் அருண் பாவம் தான் விடு விவேகா…. அவள், நீ என்னை புரிந்து கொண்டாய் தானே… ம்ம் ஆமா யாரு மனசையும் கஷ்ட படுத்த கூடாது…

விவேகா, ம்ம் சரி என்று அவனிடம் விடை பெற்று அவள் பஸ்சுக்கு நடந்து சென்றாள். வெண்பா அவளின் எண்ணத்தை கொஞ்சம் திசை திருப்ப எண்ணி விவேகா.. விவேகா..

இப்போ எதுக்கு சும்மா கூப்பிட்டு கொண்டே இருக்க… 

உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்… ம்ம் என்ன.. எப்டி அண்ணா யாழினி, மைதிலி ரெண்டு பேருக்கும் தான் முதல் பரிசு அப்டின்னு உனக்கு தெரிந்தது…. 

இதை கேட்டதும் அவள் எனக்கு தெரியும்… அதான் எப்படின்னு சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன். அதுவா அவனுக்கு ஆதி மேல் அருண் மேல் ரொம்ப பொறாமை அவங்க என் கூட இருப்பது அவனுக்கு ஒபனாவே பிடிக்காது. என்று கர்வமாக பேச..

வெண்பா, அப்போ உனக்கு இல்லையா.. எனக்கு என்ன பொறாமை… ஹே நடிக்காத டி.. நான் எதுக்கு நடிக்கணும்… அண்ணா வருணியைப் கீழே விழாமல் பிடிக்கும் போது அந்த நொடி நீ சந்திரமுகியா மாரியதை நான் பார்த்தேன். 

விவேகா அவளை பார்த்து முறைத்து விட்டு யாரு நீ தான் டி, எனக்கு என்ன அவன் யாரை பிடித்தால் என்ன கீழே போட்டாள் எனக்கு என்ன அவனை பற்றி பேச வேண்டாம். இதை கேட்டு வெண்பா சிரிக்க.. 

இப்போ என்ன டி இளிப்பு.. இல்ல அருண் கிட்ட இன்பாவை பற்றி தானே சொன்ன.. விவேகா நாக்கை கடித்து கொண்டு ச்ச இவள் கிட்ட வேற மாட்டி கொண்டேனே என்று நினைத்து மழுப்பி கொண்டே அது அது நான் அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லவே இல்லையே வா போலாம் என்று இருவரும் பஸ் ஏறினர். 

வெண்பா, ஹே உன் கிட்ட இன்னும் பேச நிறைய விஷயம் இருக்கு.. என்ன.. அன்னிக்கு என்று அவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டு சிரித்து பேசி கொண்டே அப்படியே வெண்பா தோலில் விவேகா சாய்ந்து தூங்க அதே போல் வெண்பாவும் தூங்கி விட்டாள். 

அப்பொழுது இன்பா அவளுக்கு போன் செய்தான். போன் அழைப்பு வர முதல் அழைப்பு தவற விட பட்டது.சரியாக வெண்பா அழைப்பு சத்தம் வரவும் எழுந்தவள் ஏற்கும் நேரம் அது கட் ஆனது. வெண்பா உடனே மீண்டும் கால் செய்ய ஹலோ சொல்லு அண்ணா… ஆர் யூ ரீச்ட்… ம்ம் இன்னும் 10 நிமிடத்தில் இறங்கி விடுவோம் அவள் தூங்குகிறாள். 

ம்ம்… அண்ணா எங்கே இருக்க… நான் டுட்டில இருக்கேன்.. நான் உனக்கு வீட்டுக்கு வந்து கால் பண்றேன் முக்கியமா பேசணும்… இன்பா, அந்த அருண்.. அதை பற்றி தான் அண்ணா… 

சரி என்று போன் வைத்தான். விவேகா எப்படி உன்னை தனியா வர வைக்க அப்போ தான் டி உன்னை நல்லா கவனிக்க முடியும்.. என்று யோசித்து கொண்டே போன் வைத்தான். 

தொடரும்.. 

எல்லார் கமென்ட்ஸ்ம் படிச்சேன் மனசுக்கு நல்லா இருக்கு.. என்னோட சூர்யா darling, என் மான் விழி deer antler ரை பிப்ரவரியில் இருந்து

My fav வெண்ணிலா ஸ்டோரி Febல ஸ்டார்ட் பண்றேன். 

Episode 196

விவேகா நேராக வீட்டுக்கு வந்தாள். கண்ணாடி முன் நிற்க இன்பா தான் நினைவுக்கு வந்தான்.மனதில் ஒரு சின்ன ஏக்கம் பேச வில்லை என்னை சமாதானம் செய்ய வில்லையே என்று உள்ளுக்குள் வருத்தம். எப்படி பேச வைப்பது.. என்று அதே தாவணியில் அப்படியே படுக்கையில் படுத்து கொண்டாள். 

குப்புற படுத்து கொண்டு யோசித்தாள். ரொம்ப நாள் ஆகி விட்டது அவன் அருகே இருந்தும் பேசாமல் இத்தனை நாள் இருக்கிறான். ஒரு வேளை அந்த கவ்யா, வருணி என்று அவள் நினைவுகள் முழுவதும் அதிலயே இருக்க இந்த பப்பி நாய்  என்னை இப்படி புலம்ப விட்டு போயிட்டானே… என்று அவள் உடையை மாற்ற எழுந்தாள். 

கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் உடனே கதவை திறக்க வெண்பா நின்று இருந்தாள். என்ன வேணும்.. இன்னும் ட்ரெஸ் மாற்றாமல் என்ன பண்ற… அது இப்போ தான் போறேன்.. சரி இந்தா உன் மம்மி கால் பண்ணி இருக்காங்க… என்று போனை நீட்டினாள். மா எதுக்கு இவளுக்கு போன் பண்ண அதிக்கு பண்ணி இருக்கலாம் தானே… 

அதி போன் ரீச் ஆகல அதனால் தான்… நான் நாளைக்கு சாமி கும்பிட பொருள் எல்லாம் வாங்க கடைக்கு வந்து இருக்கேன் வீட்டுக்கு வர லேட் ஆகும் நீ வருண் வீட்டுக்கு போயிடு… ம்ம் சரி மா.. ஹே ஒரு நிமிடம் ஃப்ரிட்ஜ் ல மாவு இருக்கு அதையும் எடுத்து கொண்டு போ… ம்ம் சரி மா என்று வைத்தாள். 

வெண்பா, அம்மா என்ன சொன்னாங்க.. வர கொஞ்சம் லேட் ஆகுமா.. ம்ம் அப்போ எங்க வீட்டுக்கு வா டி.. இல்ல நான் அதி வீட்டுக்கு போறேன்.. வெண்பா, ஹே நானும் வரவா.. எதுக்கு.. சும்மா தான்.. ஹே சொல்லு.. இப்போ இருந்தே அப்படியே ஒட்டிக்க வேணும்… ம்ம் நல்லா பிளான் போடுற… வெண்பா, நீ கூட சுபா அக்கா கிட்ட ஒட்டிக்க யாரு தடுப்பா.. விவேகா எதோ யோசித்தாள் பின் சிரித்து கொண்டே ம்ம் நீ கூட சுபா அக்காக்கு ரொம்ப வேண்டியவள். என்ன சொல்ற.. ஹ ஒன்னும் இல்ல என்று சொல்லி அவள் உள்ளே சென்று உடையை மாற்றி விட்டு நேராக வருண் வீட்டுக்கு சென்றனர்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது. காலை நேரமே எழுந்து வீட்டில் எல்லா வேலையும் நடந்தது. விவேகா மனதஇல் வேண்டி கொண்டே இருந்தாள். தெரியாமல் சிக்கன் சாப்பிட்டு விட்டேன் என்று ஒரு ஆயிரம் முறை  மனதுக்குல் சொல்லி  இருப்பாள். 

அதன் பின் பூஜைக்கு தேவையான அனைத்தும் தயார் செய்து விட்டு தலைக்கு குளித்து விட்டு ஒரு தாவணி பாவடையை போட்டு கொண்டு தன்னை அழகாக தயார் செய்து கொண்டாள். சாமி கும்பிடும் நேரம் வந்தது. அதிதி அனைத்தும் படைத்து பூஜை செய்தாள். இன்று வருண் விடுமுறை நாளை காலை தான் அவனுக்கு வேலை அதனால் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடும் நேரம் வந்தது இதற்காக தான் விவேகா காத்து கொண்டு இருந்தாள். 

விவேகா, அம்மா தேவகி அம்மா, சரவணன் அண்ணா, மித்ரன் அண்ணா இவங்களை கூப்பிட்டாயா… ம்ம் கூப்பிட்டு விட்டேன் வருவாங்க டி என்று சொல்ல அதிதி, மாமா இன்பா அண்ணாவை கூப்பிட்டீங்களா… ம்ம் ஆமா டா .. முன்னாடியே சொல்லி விட்டேன் இப்போ மறுபடியும் கால் பண்றேன் மா.. விவேகா சாப்பிடாமல் வருண் பதிலுக்கு காத்து கொண்டு இருக்க.. 

அவன், அம்மா அவர் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். கங்கா, ஹே விவேகா பசிக்குது பசிக்குது அப்டின்னு குதிச்ச வந்து சாப்பிடு டி.. நான் அப்புறம் சாப்பிடுறேன்.. வா டி.. இல்ல மா வெண்பா வரட்டும் அவள் கூட சாப்பிடுகிறேன்.. 

அவளும் மதியம் வரை காத்திருந்தாள். தேவகி, வெண்பா இருவர் மட்டும் வந்தனர். அதன் பின் மித்ரன், சரவணா இருவருக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்ப அவர் சென்று விட வெண்பா அவர்களுடன் இருந்தாள். 

ஹே எங்கே அவன்? யார் என்று முகத்தை தூக்கி கொண்டே விவேகா கேட்டாள். அதான் ஆதித்யா.. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வருவான் நல்லா பார்த்துக்கோ என்று முகத்தை திருப்பி கொண்டு குப்புற படுத்து கொண்டாள். 

என்ன ஆச்சு.. ஒன்னும் இல்ல…  வெண்பா, காலையில் இருந்து சாப்பிடவே இல்ல போல முகம் எல்லாம் தொங்கி போச்சு… அப்படி எல்லாம் இல்ல என் அத்தை பலகாரத்துக்கு வெயிட்டிங்… வேற ஒன்னும் இல்லையா.. 

வேற என்ன இருக்கு என்று விவேகா சலிப்பாக கேட்க.. வெண்பா, ஹே நீ யாரையோ மிஸ் பண்ற போல.. யாரு யாரும் இல்லையே என்று உதடு துடிக்க சொன்னவள் அப்படியே தலையணையில் முகத்தை புதைத்து கொண்டாள். 

மாலை ஆனது இன்பா வரவே இல்லை. ஆதி, செல்வம் இருவரும் வந்தனர். தேவி அதி, வருண், விவேகாவுக்கு பிடித்த உணவுகள் எல்லாம் செய்து கொடுத்து அனுப்பினாள்.

மாலை ஆனது விவேகா வின் வயிறு கத்த தொடங்கியது. அதிதி, என்ன மாமா இன்னும் அவர் வரவே இல்லை.. இரு நான் போன் பண்றேன்.. என்று வருண் போன் செய்து கேட்க அவன் வர 7 மணிக்கு மேல் ஆகும் இன்னொரு நாள் பார்க்கலாம் என்று இன்பா சொல்லி விட்டான். 

கங்கா, ச்ச இப்படி ஆகி போச்சே… செல்வம், அதனால் என்ன நீ இரவு செய்து கொடுத்து அனுப்பி விடு மா.. வருண், மாமா அவரு நைட் வீட்டுக்கு வந்து விடுவார்.. 

ம்ம் சுலபம் தான் அத்தை நீங்க பலகாரம், பாயசம் எல்லாம் போட்டு கொடுங்கள். மாமாவும் நானும் போய் கொடுத்து விடுகிறோம்.  வருண், நானா நான் எனக்கு வேலை இருக்கு டூட்டிக்கு டைம் ஆச்சு இப்போ போனால் என்னை திட்டுவாரு  அதி நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க… 

கங்கா, அந்த புள்ளை திட்டுமா பேருக்கு ஏற்ற மாதிரி இன்பா தான் ரொம்ப நல்ல பையன்… வெண்பா, உன் அம்மாவுக்கு உன்னை விட ரொம்ப பிடிக்கும் போலயே.. ஹே வாய மூடு எங்க அம்மாவுக்கு வேலை இல்ல அவனுக்கும் வேலை இல்ல எங்க அம்மாவை முதற் கொண்டு பேசி மயக்கி வச்சு இருக்கான். 

வெண்பா, அப்போ நீ ஆல்ரெடி மயங்கி விழுந்து விட்டாய் சரி தானே…. ஹே கம்முனு இரு டி… 

கங்கா, அப்போ யார் போய் கொடுப்பது… வருண், விவேகா போகட்டும்… நானா நான் மாட்டேன் ( இப்போவே போறேன் ) என்று மனம் குதுகளித்தது. வெண்பா , அம்மா நீங்க கொடுங்க  அப்படியே நானும் வீட்டுக்கு போறேன்.. 

விவேகா வீட்டுக்குள் சென்று அவனுக்கு எடுத்து வைத்து இருந்த ஆரஞ்சு மிட்டாயை நான்கு எடுத்து கொண்டு அதை அவள் முந்தியில் முடிந்து கொண்டு எதுவும் தெரியாதது போல் வந்தாள். அவள் மனம் இப்போ எதுக்கு இதை எடுத்து போற.. அவன் சண்டை போட்டால் தர வேண்டாம் சமாதானமா போனால்.. மீண்டும் சமாதானமா போனால் என்ன? அப்போ ரெண்டு மட்டும் கொடுத்து விடுவோம். மீதி ?அது எனக்கு என்று நினைத்து சிரித்து கொண்டே வெண்பாவுடன் சென்றாள்.

இன்பா அப்பொழுது தான் களைப்பாக வீட்டுக்கு வந்து பார்க்க வீட்டில் யாரும் இல்லை. அவன் தன் அம்மாவுக்கு கால் செய்ய…

அவர், ராகவ், நான், டாடி, சுபா நாங்க எல்லாம் இங்கே உங்க தாத்தா வீட்டுக்கு வந்து இருக்கோம்… அப்போ டார்ல் கிட்ட சொல்லி எனக்கு டின்னர் ரெடி பண்ணி எடுத்து வந்து விடுங்கள்… 

அருகில் ரவி,என் அம்மா பேரு தமயந்தின்னு சொல்லு டி… இன்பா இதை கேட்டதும் மாம் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி போனை சட்டென்று கட் செய்தான். வசுமதி, என்னங்க கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டிங்களா இப்போ அவன் போன் கட் பண்ணி விட்டான். திமிர் அதிகம் அதனால் பட்னி கிடக்கட்டும் நீ வா நம்ப சாப்பிடலாம் இன்னிக்கி நை ட்டு இங்கேயே ஸ்டே பண்றோம்… வசுமதி, என்னால் முடியாது… 

ரவி, அதையும் பார்க்கிறேன் டி…. என்று சொல்லி விட்டு தன் அம்மாவிடம் எதோ பேச தமயந்தி, வசுமதி… அத்தை… சுபாவுக்கு கல்யாணம் ஆக போகுது இங்கே ரெண்டு நாள் தங்கிட்டு போங்களேன்… அது வந்து… தமயந்தி, எம் பேரன் தான் என்னை ஒதுக்கி வச்சு இருக்கான் நீயும் என்று அவர் சொல்ல வர… அத்தை நாங்க இருந்து போகிறோம். என்று சொல்லி ரவிய முறைத்து  விட்டு அவர் சமையல் அறைக்குள் சென்றார். 

சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வர ரவி அவள் பின்னால் சென்றார். வசுமதி முறைத்து கொண்டே விலக உனக்கு திமிர் உன் பையனுக்கு அதை விட.. ராகவ் பற்றி ஒரு வார்த்தை பேச வேண்டாம். 

ரவி, தாத்தா வீடு அப்டின்னா உன் அப்பா வீடு தான் சாருக்கு நினைவு வருது அப்போ என் அப்பா அம்மா யாரு அந்த அளவுக்கு பிரைன் வாஷ் பண்ணி வச்சு இருக்க.. 

இதை கேட்டதும் வசு உதடு துடிக்க நானா நான் எதுக்கு பண்ண போறேன் எனக்கு ஒன்னும் இந்த வேலை இல்ல இந்த மயக்கும் மற்றும் மூளை சலவை எல்லாம் நீங்க தான் செய்வீங்க என்று சொல்லி தன் கணவனை முறைத்து விட்டு செல்ல.. 

ரவி அவளது கைகளை பிடித்து மதி கோபப்பாடாத நான் சும்மா சொன்னேன் எங்க அம்மா எவ்ளோ பாவம் தெரியுமா ஆசையா என் கிட்ட வந்து கேட்டாங்க இன்னைக்கு மட்டும் இருந்து விட்டு போ ரவி அப்டின்னு எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா டி அதனால் தான் எல்லாம் எனக்கு வந்து பொறந்ததால் தான் இவளோ பிரச்னை.. 

வசுமதி,உங்களுக்கு பிறந்த பையனால் இல்லை உங்க கூட பிறந்து இருக்குமே ஒன்னு அதனால் தான் பிரச்னை சரியான ஸ்டேடஸ் பைத்தியம் என் பையனை எதுவும் சொல்ல வேண்டாம் என்று வேகமாக அந்த இடத்தை விட்டு நகர அந்த நேரம் நந்தினி வந்தார். 

நந்தினி, அண்ணா என்ன சொல்லிட்டு போறா போலீஸ் காரி உனக்கு அடங்கி இருக்காளா.. ரவி தன் தங்கையை சலிப்பாக பார்த்து எப்போ டா இவங்க மாறுவது என்று நினைத்து கொண்டார். 

விவேகா ,வெண்பா இருவரும் நடந்து செல்ல வெண்பா, ஹே இப்போ உன் முகம் 1000 வாட்ஸ் பல்பு போல் எரியுது.. 

ஹே இப்படி பொய் புழுகாத… சரி நான் பொய் தான் சொல்றேன் அதனால் நீயே போய் கொடுத்து விட்டு கிளம்பு நான் வீட்டுக்கு போறேன்… 

விவேகா, ஹே என்ன டி இப்படி சொல்லி விட்ட என்னால் எப்படி தனியா போக முடியும்…

இது வானந்தர காடு இல்ல ஒழுங்கா போடி, சரவணன் அண்ணா வீட்டில் இருக்கான் லேட் ஆனால் திட்டுவான். சொன்னா கேளு அண்ட் வீட்டில் வசு ஆன்டி சுபா அக்கா ஹான் இன்னிக்கு சுபாஅக்காவுடைய டாடி கூட இருப்பாங்க.. விவேகா இதை கேட்டதும் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சை விட்டு நேராக அவளிடம் இருந்து விடை பெற்று அவன் வீட்டை நோக்கி நடந்தாள். 

இன்பா களைப்பாக மேலே சென்று குளித்து முடித்து  வீட்டுக்கு அணியும் உடையை அணிந்து கொண்டு படுக்கையில் விழுந்தான்.இங்கே விவேகா  அவன் வீடு வந்ததும் இதயம் வேக வேகமாக துடிக்க தொடங்கியது. முதலில் காலிங் பெல்லை அழுத்தினாள். ஒரு இரண்டு முறை அழுத்தி இருப்பாள். அதன் பின் கதவை இரண்டு முறை தட்டினாள். எந்த பதிலும் இல்லாமல் இருக்க மனம் சோர்ந்தாலும் சரி கிளம்பலாம் என்று பின்னால் திரும்பி நடக்க கதவு திறந்தது. 

ஹலோ… விவேகா திரும்பினாள். 

What do you want?

இதை அம்மா கொடுக்க சொன்னார்கள்.. 

யாரு கிட்ட?

 தெரிந்து கொண்டே கேட்க்கிரான் திமிர் பிடித்தவனே என்று நினைத்தவலாய் வசு மேடம் கிட்ட…. 

ஓ அப்போ கொடுத்து விட்டு போ என்று அவன் எதுவும்  சொல்லாமல் உள்ளே சென்று விட

விவேகா வீட்டுக்குள் சென்றாள். அவள் சுற்றியும் முற்றிலும் தேடி பார்க்க அங்கே யாரும் இல்லை.. 

 அவள் கொண்டு வந்த அனைத்து உணவு பொருளையும் மேஜையில் வைத்து விட்டு வசு மேம்.. என்று அழைத்து கொண்டே நிற்க.. 

அவன் எந்த பதிலும் சொல்லாமல் டி வியை ஆன் செய்து விட்டு சோபாவில் அமர்ந்தான். 

விவேகா, மேம் வீட்டில் இல்லையா! 

ஹலோ உங்களை தான் கேட்கிறேன் மேம் வீட்டில் இல்லையா… 

இன்பா, இந்த வீட்டில் நான் மட்டும் தான் இருக்கிறேன், என்னை தவிர யாரும் இல்லை… 

இதை கேட்டதும் விவேகாவுக்கு சட்டென்று ஒரு சந்தேகம் அவன் உடையை பார்த்து விட்டு அப்போ நீங்க காலயில் இருந்து வீட்டில் தான் இருந்து கொண்டு என் அண்ணா கிட்ட எதுக்கு வரேன்னு சொன்னீர்கள்… 

இன்பா, என்ன உலருகிறாள் என்று நினைத்தவன் அப்படியே மெயின்டைன் பண்ணு டா என்று நினைத்து ஆமா இப்போ அதுக்கு என்ன…

அவள் கண்களில் ஏமாற்றம் கோபம் தெறிக்க.. எங்க அம்மா, அண்ணா எல்லோரும் உங்களுக்காக காத்து இருந்தார்கள் தெரியுமா… 

இன்பா மிகவும் சோகமாக “காத்திருக்க வேண்டிய ஆளு என்னை கூப்பிட இஷ்டம் இல்லையே அதனால் நான் எதுக்கு உங்களை டிஸ்டர்ப் பண்ணணும்”… 

இதை கேட்டதும் அவள் மனம் மிகவும் வருத்தம் கொள்ள.. எதுவும் பேசாமல் வெளியே செல்ல திரும்பினாள். 

அப்பொழுது இன்பாவின் போன் அடித்தது. மேடம் அந்த போனை கொஞ்சம் எடுத்து கொடுங்க… விவேகா  எதுவும் பேசாமல் போனை எடுத்து அவனிடம் நீட்ட அவன் வாங்கி காதில் வைக்க இவள் திரும்பினாள். 

ஹலோ… 

ராகவ் என் செல்லம்.. 

இப்போ என்ன விஷயம் சொல்லுங்க… 

கோவம் வேண்டாம் டா நான் காலையில் சீக்கிரமே வந்து விடுவேன்.  உனக்கு ஹாட் பாக்ஸில் சமைத்து போட்டு வைத்து இருக்கேன். அப்படி இல்லன்னா இப்போ சாப்பாடு அனுப்பி வைக்கவா.. 

இந்த வார்த்தையை கேட்டதும் அவன் கண்கள் பளிச்சிட no problem எனக்கு வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன்.  I will call back later என்று சொல்லி போனை வைத்து விட்டு.. 

மேடம்.. ஹலோ மேடம்… 

விவேகா என்ன என்பதை போல் பார்க்க.. 

உங்க பாத்திரம் எல்லாம் எடுத்து போங்க… மறுபடியும் வந்து டிஸ்டர்ப் பண்ண கூடாது. 

விவேகா அவனை முறைத்து விட்டு வேகமாக உணவுகளுடன் அப்படியே மீண்டும் எடுத்து கொண்டு செல்ல..

ஹே என்ன டி பண்ற… 

பார்த்தால் தெரியலயா அவ்ளோ கஷ்ட பட்டு நீங்க சாப்பிட வேண்டாம் என்று வேண்டும் என்றே சிரித்தவள் அந்த டிஃபன் பாக்ஸ் பையோடு மீண்டும் வெளியே செல்ல… 

இன்பா வேகமாக எழுந்தவன் அவள் முன்னால் போய் நின்று ஹே கொடு டி.. முடியாது… 

மாம் இந்த விவேகா வந்து இருக்கா… என்று கத்த… 

விவேகா அவனை பார்த்து  வீட்டில் யாருமே இல்ல அதனால் ஓவரா சீன் போட வேண்டாம்…. 

இன்பா அவள் கைகளில் இருந்து பிடுங்க.. விடுங்க வுடிங்கன்னு சொன்னேன்.. என்று அவனிடம் வலு காட்டி வெளியே செல்ல… 

இன்பா ஒரு வரி தான் சொன்னான் அவள் அதே இடத்தில் அப்படியே நின்று விட  

அவள் முன்னால் சென்று சிரித்தான். என்ன சொன்னான்?

என் பேபி  பர்த் பேபியா இருக்கும் போது மட்டும் தான் ரொம்ப சைலன்டா இருப்பா போலயே ..என்று  நிறுத்தி அவளை பார்த்து ஒரு கள்ள சிரிப்பு உதிர்க்க 

அவள் நின்று விட்டாள். இன்பா முன்னால் சென்று அவளை பார்க்க ஒரு நிமிடத்தில் குப்பென்று வியர்த்தது.

அவளுக்கு  இதயம் வேகமாக துடிக்க..  இன்பா,  ப்பா என்ன டி உன் ரிதம் இப்படி துடிக்குது விட்டால் வெளியே குதித்து விடும் போல.. 

அப் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்று வெளியே செல்ல ஒரு அடி எடுத்து வைக்க இன்பா தடுத்தான்.

ப்ச்ச.. வழி விடுங்க…

வழி விட முடியாது இப்போ என்ன டி செய்வ… அவள் கொஞ்சம் தடுமாற இன்பா ஒரு கையில் அவளையும் இன்னொரு கையில்  அவள் கையில் இருக்கும் அந்த டிஃபன் பாக்ஸ் அனைத்தும் வாங்கி அருகில் வைத்தவன். அவனின் குளிர்ந்த கைகளை அவளது இடைய பிடிக்க அவள் கூச்சத்தில் நெளிந்து விடுங்க நான் போனும்.. என்று கண்களை மூடி கொண்டு மெதுவாக சொல்ல

இன்பா அவள் காதில் கொஞ்சம் கடித்து கொண்டே அவள் கழுத்தில் முத்தமிட  அவள் அவனை கோபமாக தள்ளி அவனது நெஞ்சில் அடிக்க இப்போ என்ன ஆச்சு.. 

பேபி நிஜமா வலிக்குது டி..  விவேகா அவனை அணைத்துக் கொண்டாள். இன்பா அவளை அப்படியே தூக்கி கொண்டான்.

என்னை இறக்கி விடு ராகவ் என்று சொன்னவள் நாக்கை கடித்து கொண்டு இன்பா என்னை இறக்கி விடு அம்மா தேடுவார்கள் வீட்டுக்கு போகனும்… 

அவளை தூக்கி கொண்டு உணவு மேஜைக்கு வந்தவன். அதென்ன ராகவ் அப்புறம் என்று அவள் உதட்டை இன்பா  கடித்து விட்டு இன்பா அப்டின்னு சொல்ற… 

விவேகா, ஸ்ஸ் வலிக்குது டா.. ஹேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு டி… 

அதுவா எல்லாம் உன்னை ராகவ் அப்டின்னு கூப்பிட்ராங்க அதனால் உன்னை அப்படி கூப்பிட மாட்டேன்… பட் நீ கூப்பிட்டால் மட்டும் தான் எனக்கு பிடிக்கும்… என்று அவள் இதழில் முத்தமிட அவள் சிரித்தாள்.

சரி காலையில் வீட்டில் இருந்து கொண்டே  ஏன் வரல.. இல்ல டி நான் சும்மா சொன்னேன் இன்னிக்கு ஒரு கேஸ் விஷயமா பேப்பர் ரெடி பண்ண போயிட்டேன் அதில ரொம்ப லேட் ஆகி விட்டது.எத்தனை வேலை தெரியுமா வேலை சக்கை பிலியுது டி காலையில் இருந்து நான் இன்னும் தண்ணி கூட குடிக்கள அதுக்கு கூட நேரம் இல்ல, நீ வரதுக்கு முன்னால் தான் வந்தேன். என்று அவளை தடவி கொண்டு இருந்தான். ஒரு சில நிமிடம் கழித்து 

அவள் ,இன்பா நான் போறேன்… இரு டி அப்படியே பறக்காத என்று சொல்லி இருவரும் சாப்பிட ஆரம்பிக்க அவன் முதல் வாய் அவளுக்கு ஊட்டி விட்டான். 

நீ சாப்பிடு டா.. இல்ல நீ தான் சாப்பிடவே இல்ல போல கண்ணு எல்லாம் உள்ளே போய் விட்டது. நான் சாப்பிடாமல் இருப்பது உனக்கு எப்படி தெரியும்?

 அவன், என்னோட ஃபைனல் லிஸ்ட் மைதிலி, யாழினியாழ்ன்னு மேடம் க்கு எப்படி தெரியும்…

அதுவா அது தெரியும்..

அதான் எப்படி..

சொல்ல முடியாது.. அப்போ நானும் சொல்ல முடியாது போடி… 

விவேகா வீட்டை சுற்றி பார்த்து கொண்டே ஆமா எங்கே வீட்டில் யாரும் இல்ல வசு மேம், உன் அக்கா அண்ட் …அண்ட்… உங்க அப்பா எங்கே… 

அதென்ன ரெண்டு தடவை  அண்ட் …

இல்ல இன்னிக்கு அவரை எப்படியும் பார்த்து விட வேண்டும் அப்டின்னு தான் வந்தேன்.. 

அவரை எதுக்கு நீ பார்க்கனும்… 

ஏன் நான் பார்க்க கூடாதா…

கூடாது..

என்னை நோஸ் கட் பண்றது தான் அவருக்கு வேலை அப்புறம் உன்னை பற்றி அவர்க்கு தெரியும், எப்போ டா அப்டின்னு காத்து கொண்டு இருக்காரு.. 

ஹே என்ன சொல்ற.. 

வேற எதுக்கு என்னையும் உன்னையும் பிரிக்க தான் என்னை பற்றி ரொம்ப தப்பு தப்பா சொல்லுவாரு அதை எல்லாம் நீ நம்பவே கூடாது… 

டேய் முதலில் அவரை காட்டு அப்புறம் யாரு உண்மை சொல்றா பொய் சொல்றாங்க அப்டின்னு தெரியும்… 

அப்போ வாய்ப்பு இல்ல பேபி.. 

நான் பார்ப்பேன்… 

ம்ம் நானும் உனக்கு காட்டுவேன்.. 

எப்போ.. 

அது சர்பிரைஸ் அந்த மொமன்ட் நல்லா இருக்கும்.. 

அப்படியா.. என்று அவள் ஆர்வமாக கேட்க 

இன்பா மனதில் அதுக்குள்ள உன்னையை

விவேகா…?

தொடரும்….

Episode 197

 கல்யாணம் பண்ணி விடுவேன்… என்று சிரித்தான். 

அதன் பின் இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். சரி ஓகே எனக்கு டைம் ஆச்சு வீட்டுக்கு போறேன். அண்ட் உனக்கு நிறைய பனிஸ்மென்ட் இருக்கு அதை நாளைக்கு பார்த்து கொள்கிறேன்…. 

இன்பா,….? என்ன பனிஷ்மென்ட் 

அதுவா அது நிறைய இருக்கு டா இன்பா.. 

சரி அதை அப்புறம் சொல்லு இப்போ இந்த ஸ்கெட்யூல் எப்போண்ணு சொல்லிட்டு போடி.. 

என்ன விஷயம்.. 

இன்பா, பேபி அடுத்த ஷோ எப்போன்னு இப்போவே சொல்லிடு இந்த முறை முழுசா பார்த்து விட வேண்டும்… 

விவேகா, என்ன ஷோ…என்று அவள் புருவம் நெருக்கிட… 

எனக்கான ஷோ…

புரியல டா..

ஹே அன்னிக்கு பாதி மட்டும் தான  பார்த்தேன்.. அதுக்குள்ள வேகமா ஓடி விட்டாய்.. 

இன்பா யூ ராஸ்கல்  உன்னை  கொன்றுவிடுவேன் டா… 

அவன் இப்போ எதுக்கு இவலோ டென்ஷன் ஆகர நீ வேணா என்னை பார்த்துக்க என்று சொல்லி கொண்டே அவன் எழ.. 

ச்சீ… 

என்ன ச்சீ இந்த ச்சீ சொன்னதுக்கு உன்னை  அப்புறம் கவனிக்கிறேன் டி, ஆனாலும்   சும்மா சொல்ல கூடாது பேபி செம்மையாக இருந்த டி ரெண்டு கண்ணு போதாது பேபி..

அவள் கன்னம் ஒரு பக்கம் சிவக்க இன்னொரு பக்கம் கோவம் வர…அவள் அமைதியாக அவனை விட்டு விலக.. 

வாட் ஹேப்பன் இப்போ நான்  ஒன்னும் பார்க்கலயே… என்று அவள் கைகளை பிடித்து இழுத்தான். 

நீ சரி இல்ல.. அண்ட் மோசம்… 

இப்போ என்ன செய்யனும் சொல்லு… 

டேய் அதை அங்கேயே அப்படியே மறந்து விடு இனி ஒரு தடவை அதை பற்றி பேசின அப்புறம் இது தான் நம்ம பேசுற கடைசி பேச்சா இருக்கும்… 

அவன் ஒரு பெரு மூச்சை விட்டு இனி பேச ஒன்னும் இல்ல.. உன்னை பக்கத்தில்  வச்சுக்கிட்டு எதுவும் செய்யவும் முடியல.. சும்மா இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் இப்போ பாதி வேற பார்த்து விட்டேன் என்னால் கன்ட்ரோல் பண்ண முடியலயே என்று கண்கள் சிவப்பாக மாறியது.

அவள் காதுகளில் இது கேட்டாலும் எதுவும் கேட்காதது போல் முகத்தை வைத்து கொண்டு அவன் கண்களை பார்க்க அவன் கண்கள் இரண்டும் சிவப்பாக இருந்தது. 

ஹே என்னாச்சு டா உன் கண்ணு எதுக்கு இப்படி ரெட்டா இருக்கு…

அதான் நீ என் பக்கத்தில் இருக்கியே என்று  அவளை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி யூ ஆர் தி ரீசன்… 

எப்போ முழுசா பார்த்து தொட கொடுத்து வச்சு இருக்கோ தெரியலயே என்று அவன் மூச்சு சூடாக.. அதை வெளி விட்டு தலையை கோதி கொண்டான். 

 டேய் சொல்லு நான் என்ன பண்ணேன்.. 

அதான் ஒண்ணுமே பண்ண விட மாற்றியே என்று அவன் நினைத்து கொண்டு சரி நீ வீட்டுக்கு கிளம்பு.. 

ஹே எதுவும் பிரச்னையா.. 

உனக்கு புரியாது நீ கிளம்பு டி… ஹே என்ன டா கிளம்ப சொல்ற சரி அப்போ இங்கேயே இரு எனக்கும் நைட் கம்பனி வேணும்.

ச்சீ என்று அவள் காதுகளை பொத்தி கொள்ள எப்போ பார்த்தாலும் தப்பாவே நினைத்து கொண்டு இரு டி நீ நினைக்கும் அளவுக்கு நான் ஒன்னும் கெட்டவன் இல்ல.. உன்னை கட்டாமல் கட்ட மாட்டேன்.. 

விவேகா கேள்வியாக என்ன சொல்ற டா.. உன்னை கழுத்தில் கட்டாமல் உன்னை கட்டம் கட்ட மாட்டேன். 

ம்ம் அதையும் பார்க்கலாம்.. 

இன்பா, அப்போ இப்போவே ஓகே வா என்று அவளை தூக்க பாரு ஃப்ராடு பயலே சொல்லி வாய் மூடல அதுக்குள்ள உன் வேலையை காட்டுற.. 

விடு டி இப்போ கொஞ்சம் கிஸ் வேணும் என்று அவள் இதழில் சிறிது நேரம் மென்மையுடன் கையாள அவள் அவனிடம் கரைந்து போனாள். ஒரு சில நொடியில் அவளை விட 

சரி என்று அவள் பாத்திரம் எல்லாம் எடுத்து வைக்க… 

ஹே என்ன பண்ற.. 

அதான் நீ பினிஸ் பண்ணிட்ட தானே வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்… 

அதை இங்கேயே வைத்து விடு.. 

எதுக்கு.. 

இதை ஒரு காரணமா வச்சு கொஞ்சம் கிஸ் நிறைய ஹக் கிடைக்கும்… 

நீ சரியான கேடி டா…

அப்போ நீ… ஹே சீக்கிரம் கிளம்பு டி இல்ல உன்னை தூக்கிட்டு மேலே போயிடுவேன்.. 

 விவேகா சிரித்து கொண்டே ஓகே நான் போயிட்டு வரேன்.. சீ யூ… 

இன்பா தன் கைகளை கட்டி கொண்டு கதவின் மேல் சாய்ந்து அவளை பார்த்து கொண்டு இருக்க 

அவள் அவனை நோக்கி மீண்டும் வந்தாள். ஹே என்ன ஆச்சு.. 

தன்னை சுற்றி பார்வையை சுழற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அவன் அருகில் நெருங்கி வந்தவள். அவன் உயரத்துக்கு எக்கி அவன் இதழில் ஒற்றி எடுத்து விட இன்பா இதை எதிர் பார்க்க வில்லை.. 

அவன் கண்ண குழி தெரிய சிரிக்க.. இப்படி சிரிச்சே மயக்கு டா.. ஐ மிஸ் யூ லாட் என்று அந்த குழியில் முத்தமிட்டு விட.. 

அவன் அவள் கைகளை பிடித்து கொண்டான். 

ஹே பேபி போகாத டி இங்கேயே இரு.. 

அவனை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி இங்கே தான் இருக்கேன்… என்று சொல்லி அவன் கைகளை மெதுவாக பிரித்து விட்டாள். 

இன்பா, ஹேய் வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு.. 

டேய் இது உனக்கே ஓவரா இல்லையா என்று ஹஸ்கி வாய்ஸ் ல கேட்க.. 

என் அம்மா என்னை தோளை உரித்து தொங்க விட்டு விடுவாங்க டா… 

அப்போ மெயில் பண்ணு.. 

ம்ம் பண்றேன்.. 

பேபி நான் வெயிட் பண்ணுவேன்.. 

ம்ம் நான் ட்றை பண்றேன் பார்க்கலாம்.. பண்ண முடியாது ஆனால் பார்க்கலாம் டா என்று அவள் நடந்து செல்ல.. 

ஹே பண்ணு டி கொஞ்ச நேரம் பேசலாம்… 

ம்ம் இருக்கு பேச நிறைய இருக்கு அந்த கவ்யாவுக்கு ட்ரீட் வச்சது அண்ட் அந்த இனியாள் கூட ஆக்ரா போனது அண்ட் உன் மாமா பொண்ண ஹீரோயிசம் பண்ணி தூக்கி விட்டது இதுக்கு எல்லாம் ரீசன் சொல்லியே ஆகனும்… 

இன்பா, ஓ ஹோ நீ அப்படி வர

ம்ம்ஆமா.. அப்போ மாட்டுன டி மவளே என்று நெட்டி முறித்து விட்டு 

அப்போ நான் கொஞ்சம் இப்படிக்கா வரேன் என்று சிரித்து கொண்டே முகத்தை கடுமையாக வைத்தவன். மீண்டும்  கைகளை கட்டி கொண்டு வாசல் கதவில் நன்கு சாய்ந்து கொண்டு 

அந்த ராஜ் பேச்சை கேட்டு என்னை டென்ஷன் பண்ணது அண்ட் என் கூட பேசாமல் சுற்றியது.. இதை கேட்டதும் விவேகா முகம் கொஞ்சம் மாற.. 

இன்பா புருவத்தை நெருக்கி அந்த அருண் கூட ஆட்டம் போட்டது..எல்லா தப்பும் நீ பண்ணிட்டு எதோ நான் செய்த மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு சுத்தினது.. 

பெரிய தியாகி மாதிரி ஸ்டேஜ்ல இருந்து எஸ்கேப் ஆனது அண்ட் என்று பற்களை கடித்து கொண்டு.. 

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ஜுப்பிட்டரா! இல்ல நெப்டியூனா! என்று இரு புருவம் தூக்க..

அவள் போச்சு செத்த டி விவேகா இப்படி  புள்ளி விவரமா இருக்கானே.. 

இன்பா அதோடு விட வில்லை அப்புறம் என்ன பாட்டு அந்த ஆதி கூட என்று அவன் அவளை உருத்து பார்க்க 

 விவேகா அய்யோ நாமே இவனுக்கு ஹின்ஸ் எடுத்து கொடுத்து விட்டோமே நெளிந்து கொண்டே  அவனை பார்த்து ஒரு அசட்டு புன்னகை சிந்த.. 

இன்பா, இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து.. இதுக்கு எல்லாம் எப்போ பதில் சொல்ல போற..அண்ட் ஃபைனலா என் கூட பேசாமல் அவாய்ட் பண்ணதுக்கு என்று அவளை பார்த்து இதுக்கு! இதுக்கு எல்லாம் நீ பதில் சொல்லு…

விவேகா, ரா ராகவ் என்ன பதில் வேணும்.. என் ராகவ பற்றி எனக்கு தெரியும். என் கண்ணு எப்போவுமே உன்னை தப்பா பார்க்கவே பார்க்காது தெரியுமா நான் சும்மா காமெடி பண்ணேன்.. 

இன்பா, நாக்கை எடுத்து கண்ணத்தில் அடக்கி கொண்டு நான் நிஜமாவே கேட்டேன்.

அப்புறம் இப்போ என்ன ராகவ் அதுவும் இப்போ தானே கூப்பிட மாட்டேன்னு சொன்ன இப்போ இந்த ராகவ்க்கு பதில் சொல்லு டி என்று இரு புருவம் உயர்த்த… 

ஹே கோபப்படாத என்று அவள் சொல்ல இன்பா உடனே உள்ளே சென்றான். 

அய்யோ எல்லாம் என் நேரம் என்று மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து ஹே ராகவ் என் பப்பி தான, டார்ஜிலிங் போலாமா… என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தாள். 

இன்பா, ஹேய் நான் போலீஸ்காரன் டி என்னையவே ஏமாற்றி ஃப்லர்ட் பண்ண டிரை பண்ற ராகவ் ன்னு கூப்பிட்டு என்னை மயக்க பார்க்கிரியா.. என்று பின்னால் இருந்து அணைத்து கொள்ள… 

என்னை தான் நீ மயக்கி வச்சு இருக்க.. எங்கே யார் கிட்ட பேசினாலும் உன் ஸ்லாங் தான் வருது…இன்பா இதை கேட்டு ஆச்சரியமாகவும் அவள் காது மடலை மீசை வைத்து கூசி கொண்டே  அப்டியா..

ம்ம் அப்படி தான் போதும் இப்போ பிளீஸ் விடேன் டா, எனக்கு டைம் ஆகுது வீட்டுக்கு போகனும்.. அப்போ கிஸ் மி… என்று அவள் தோல்களில் முத்தமிட..

ம்ம் மாட்டேன்… 

அப்போ இனி சண்டை டி உன்னை  சீரியஸா நான் அவாய்ட் பண்ணவா..

இந்த வார்த்தையை கேட்டதும் உடனே அவள் அவனை பின்னால் திரும்பி கட்டி கொண்டு முகம் எல்லாம் முத்தமிட்டாள்.

அவனை பார்த்து “உன்னால் என்னை அவாய்ட் பண்ணிட்டு இருக்க முடியுமா என்று ஏக்கமாக” கேட்க.. 

இன்பா, ஒவ்வொரு முறையும் நீ நான் உன்னை கன்வின்ஸ் பண்ணனும் அப்டின்னு ஒரு எதிர்பார்ப்பு உன் முகத்தில்  நான் பார்ப்பேன்.. 

இதைக் கேட்ட அவள் சந்தோஷமாக ம்ம்மம் ஆமா எனக்கு நீ என்னை சமாதானம்  செய்யும் போது அத எப்படி define பன்றது அப்டின்னு தெரியல பட் அது நல்லா இருக்கும்.. இன்பா, ஒரு நாள் நீ என்னை கன்வின்ஸ் பண்ண கெஞ்சுவ டி.. 

வாய்ப்பே இல்ல நான் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்.. 

 ம்ம் பார்க்கலாம் ஆனால் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே.. 

என்ன… 

உன்னால் என் கூட பேசாமல் இருக்க முடியுமா என்னை பார்க்காமல் அவாயிடு பண்ணிடுவியா..  

இது என்ன சந்தேகம் நான் எதுக்கு உன்னை கண்டு கொள்ளாமல் இருக்க போறேன். விவேகா, அப்போ காலேஜ்ல வீட்டில வெளி இடத்தில் எல்லாம் பார்க்கும் போது கண்டுக்கவே மாட்டிங்கிற… 

 இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு யாரு சொன்னது முன்ன கூட பரவாயில்லை இப்போ எல்லாம்..

இப்போ என்ன..  என்று அவள் கேள்வியாக கேட்க 

இன்பா, போதும் டி நீ வீட்டுக்கு கிளம்பு… 

விவேகா என்ன வீட்டுக்கு போக சொல்ற.. சீக்கிரம் போ அப்புறம் உனக்கு தான் கஷ்டம்.. என்ன டா… 

ம்ம் போ விவேகா… 

அவள் இரண்டு அடி வைத்தவள் மீண்டும் வந்து மீண்டும் அவள் முந்தியல அவனுக்காக கொண்டு வந்த மிட்டாயை எடுத்து நீட்ட அவன் கேள்வியாக பார்க்க.. 

அன்னிக்கு காலேஜ் ல இந்த  ஆரஞ்சு மிட்டாய்க்கு அதுவும் உனக்கு கொடுக்காமல் எடுத்து போனதுக்கு தானே முகத்தை அப்படி வச்சுட்டு முறைத்து கொண்டு போன.. 

இல்லையே.. 

ஹேய் பொய் சொல்லாத டா… 

நான் எதுக்கு பொய் சொல்லணும்.. 

அப்போ உனக்கு வேணாவா.. 

ஆமா.. 

அப்போ இதை வேற யாருக்கு தரலாம்?  என்று பிரித்து வாயில் போட்டவள். சரி விடு உன் பங்கையும்  நானே சாப்பிடுறேன். என்று சொல்லி  அவன் கண்ணத்தில் குழியில் முத்தமிட்டு இப்போ கிளம்பரேன்.

இதற்கு மேல் பொறுமை இழந்த இன்பா பேபி என் மிட்டாய் எனக்கு வேணும் அவள் முகத்தை பிடித்து  இதழில் உரச அவள் வெட்கத்தில் திரும்ப..

 விவேகா இந்த ஃபேஸ்( face) இது தான் டி  இது இந்த முகம் என்று அவள் முகத்தை கைகளில் ஏந்தி எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா இது டிரக் டி இந்த முகத்தை தான் நான் இனி என்னோட லைஃப் முழுக்க  தூக்கத்தில் இருந்து எழும்போது பார்க்கனும்.. என்று அவள் இதழை மீண்டும் சிறை செய்தான்.

அவளும் அவன் முத்தத்தில் தன்னை மறந்தாள். அவன் கூறிய வார்த்தைகள் அவ்வளவு கெமிஸ்ட்ரியில் சொல்ல போனால் கண்டாமினேட் ஆகாத கான்சன்ட்ரெஸன் குறையாத ஆசிட் போல் இருந்தது. தெளிவா சொல்ல போனால் கலப்படம் இல்லாத செறிவு நிறைந்த அமிலம் என்று சொல்லலாம்.. இருவருக்கும் செரடோசின், ஆக்ஸ்டோசின், டோபமைன் எல்லாம் டன் கணக்கில் சுரக்க ஆரம்பித்தது. அது வேற ஒன்னும் இல்லங்க இது தான் காதல் ஹார்மோன்ஸ்.. 

முத்தம் ஒரு அஞ்சு நிமிடம் மற்ற சொச்சம் எல்லாம் இன்னும் ஒரு அஞ்சு நிமிடம் என்று அப்படியே அவன் கைகளை அவள் அங்கத்தில் கொண்டு செல்ல அவள் அவன் தீண்டலில் துவண்டு போனாள். அவள் இடையை தொட்டு கொண்டே அவனை நோக்கி இழுக்க விவேகா எதோ வித்தியாசம் உணர்ந்தாள். சட்டென்று கண்களை திறந்து ரா.. ராகவ்.. உன.. உனக்கு என்ன ஆச்சு என்று கேட்க அவள் இதழை வலிக்கும் படி மீண்டும் கடித்து முத்தமிட்டு விட்டு வேகமாக அவளை விட்டவன் இரு டி வரேன் என்று உள்ளே ஓடினான். 

அவன் 10 நிமிடங்கள் கழித்து வெளியே வர விவேகா அவனை விநோதமாக பார்க்க..அவன் கண்கள் இப்பொழுது தெளிவாக இருந்தது. முகத்தில் ஒரு புத்துணர்வு..

விவேகா, ஹே உனக்கு என்ன ஆச்சு..

இன்பா அவள் நெற்றியில் மட்டும் ஒரு முத்தம் பதித்து விட்டு   எனக்கு ஒன்னும் இல்ல நீ வீட்டுக்கு போ.. ஹே உள்ளே என்ன பண்ண.. நீ வீட்டுக்கு போடி எனக்கு தூக்கம் வருது… 

விவேகா, ராகவ் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லவா என்று ஹஸ்கி வாய்சில் கேட்க.. 

பேபி இப்போ நீ வீட்டுக்கு போகல அப்புறம் சேதாரம் உனக்கு தான்.. 

சரி போறேன் போயிட்டு போன் பண்ணட்டுமா.. 

வேண்டாம்.. 

அப்போ மெயில்… 

போட வேண்டாம்.. என்று அவளை தூக்க கலக்கத்துடன் பார்க்க 

சரி  அப்போ போறேன் டாடா பை என்று வெளியே சென்றவள். அவனை கதவின் அருகில் இருந்து எட்டி பார்த்து ராகவ் உள்ளே இருந்து.. அவன் புருவத்தை நெருக்கி என்ன?

உள்ளே இருந்து பர்த் babies சத்தமா கேட்குது என்று சிரிக்க…என்ன.. 

புரியலயா.. இல்ல என்று சிரிக்க 

அடி பாவி கெட்டவளே… கேடி ஓடி போயிடு அடிங்க.. என்று எழ… 

அச்சோ நான் ஒன்னும் பார்க்கள பா என்று ஓடி விட்டாள். 

அவள் சென்றதும் இன்பா உதட்டில் மெல்லிய புன்னகை இவளை நான் கூட சாதாரணமா நினைத்தேன் ஆனால் நீ என்று நினைத்து சிரித்து கொண்டே தூங்க சென்றான். 

அடுத்த நாள் நன்றாக விடிந்தது. இன்பா மிகவும் பிசியாகி விட்டான். விவேகா வழக்கம் போல் காலேஜ் சென்று விட்டாள். 

இங்கே ஒரு மீட்டிங் ஹாலில் பரபரபப்பாக அடுத்த கட்ட புராஜக்ட் யாருக்கு மற்றும் யாருடன் கூட்டணி என்பது  பற்றி ஒரு சில கம்பனிகளின் MD மற்றும் அவர்களின் PA என அதில் கலந்து கொள்ள வந்து இருந்தனர். அது ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனி அதன் இந்திய கிளையில் இருந்து முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அமர்ந்து இருந்தனர்.

அங்கே சரவணன், ரகு கம்பனி சார்பில் இருக்க ராம் ss குரூப்ஸ் சார்பில் வந்து இருந்தான். ரவி சந்திரன், சுபா இருவரும் வந்து இருந்தனர். வினய் வர வில்லை அவனுக்கு பதிலாக அவனது ஆபீஸ் ஸ்டாப் தீபிகா வந்து இருந்தாள். நவீன் குரூப் ஆப் கம்பனி( அதன் தலைமை இடம் விசாகபட்டினம்), சந்திர மௌலி குரூப்ஸ் அவர்களின் சார்பாக சதீஸ் வந்து இருந்தான். நவீன் குரூப் ல இருந்து MD  சுஜித் வந்து இருந்தான். நவீனுடைய PA சுஜித் க்கு கால் செய்தான். ஹலோ சார்.. PA, யாருக்கு வேணாலும் கிடைக்கட்டும் ஆனால் அந்த சந்திர மௌலி குரூப்ஸ்க்கு புராஜக்ட் போக கூடாது அப்டின்னு பாஸ் சொன்னாரு.. இல்ல பாஸ் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி வைத்தான். 

ரவி அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்து கொண்டு இருக்க சுபா பதட்டத்தில் இருந்தாள். டாடி எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு.. என்ன ஆச்சு சுபா.. இல்ல இது எனக்கு   ரொம்ப முக்கியமான ஒன்னு.. 

ரவி, என் ஏஞ்சல் கவலை பட வேண்டாம். இங்கே இருக்க எல்லாரும் நமக்கா உணக்கா யாருக்கு என்று காசிப் பேசிராங்க ஆனால் அங்கே பாரு இங்கே எதுக்கும் சம்மந்தம் இல்லாமல் ஒருத்தன் இருக்கான். 

சுபா, யார் டாடி.. 

வேற யாரு சரவணன் தான்… 

சுபா இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அவள் அமைதியாகி விட்டதை பார்த்து.. 

 ஏஞ்சல் இதை ரொம்ப சீரியஸா பார்க்காத ஜஸ்ட் இது புராஜக்ட் அவ்ளோ தான்.. 

இறுதி கட்ட முடிவுகள் அதற்கு தான் அனைவரும் காத்து கொண்டு இருந்தனர். ராமுக்கு திடீர் என்று சூரியா கால் செய்தான். யார் யார் போட்டி  என்ன நிலவரம்.. 

ராம், இன்பா, ரகு அப்புறம் வினய் என்று சொல்ல ம்ம்

சுபா, ஹேய் யார் கிட்ட பேசுற.. 

சூரியா.. 

ம்ம் என் கிட்ட கொடு.. என்று சுபா போனை வாங்கி பேச.. 

டேய் எதுக்கு டா என்கேஜ்மென்ட்க்கு வரல.. 

 சூர்யா, அதான் உன் தம்பி முறுக்கி கிட்டு நிக்கிறான். அங்கே வந்ததும் போடா ன்னு சொல்லிட்டா என்ன பண்றது. 

இரு டாட் கிட்ட போன் தரேன்.. 

ஹலோ சூரியா… ஹலோ மிஸ்டர் ரவிசந்திரன்.. உங்க பையன் எப்படி இருக்காரு.. 

கொஞ்சம் மரியாதை கொடு டா.. 

சூர்யா,  அங்கில் நான் சும்மா சொன்னேன். 

 ரவி, இல்ல நீ அப்படியே கூப்பிடு சூர்யா அதுவும் அந்த ராஸ்கல் முன்னாடி கூப்பிடு அப்போ தான் உன்னையும் என்னையும் கிளாஸ் மேட்டா நினைப்பாங்க.. 

சூர்யா, இது டூ மச் அங்கில்.. என்று சிரித்து பேசி விட்டு ம்ம் அப்புறம் அங்கே என்ன நிலவரம்.. 

ரவி,  என்னோட கெஸ் படி பார்த்தால் ரகு கம்பனிக்கு தான்.. 

சூர்யா,அப்போ இன்னொரு கம்பனி எது?

ரவி என்ன என்பதை போல் கேட்க சூரியா சொன்னதை கேட்டு திருப்தி பட்டு புன்னகைத்தார்.

சூரியா, ஓ இது ஓவரா காண்பிடன்ட்.. 

ரவி, என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயம் அவளுக்கு தான். ம்ம் ஓகே.. அப்போ எனக்கு…?

ரவி, யூ ஆல்வெஸ் வெல் கம் பட் நீ தான் வர மாட்டிக்கிர.. 

சூர்யா, யாரு நானா எல்லாம் இடியட் இருக்கானே அவனால் லவ் டை ம் பாஸ் க்கு பண்ண கூடாதாம் சின்சியரா இருக்கணுமாம் அப்புறம் யாரை லவ் பன்றமோ அவங்களையே தான் கல்யாணம் பண்ணனுமாம் சஞ்சுவுக்கு அந்த விக்ரம் மேல லவ் வந்ததுக்கு நான் என்ன பண்ண முடியும். ஒரு பொண்ணை உஷார் பண்றது எவ்ளோ கஷ்டம் அப்டின்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுனுமா ரவி.. 

ரவி, ம்ம் சரி தான் அந்த டாக் லவ் பண்றான்.. 

சூர்யா, எந்த ஸ்டேஷன்?

இல்ல காலேஜ் படிக்கிறா.. சுபா, யாரு டாடி.. நத்திங் ஏஞ்சல் 

வாட் ! வரட்டும் அந்த இடியட்.. ன்டரெஸ்டிங்.. 

எனக்கு ஒரு டவுட்டு

என்ன

நீங்க அவன் அப்பா மாதிரியா பேசுறீங்க.. 

சூர்யா நீயும் நானும் ஒரே காலேஜ்.. 

இது டூ மச்.. 

ரவி, என் முன்னாடி அவன் ஒரு ஆளா.. அண்ட் இப்போது கூட ஆல் பட்டர் பிளைஸ் சர்கில் மி.. 

சூரியா, வசுமதி கிட்ட சொல்லவா.. 

டேய் என்ன டா.. 

இன்னும் சண்டை தீரலையா.. 

 எல்லாம் அவனால் தான், அவனை அடக்க ஆள் இல்ல டா.. 

சூர்யா, டோண்ட் ஒரி ரவிசந்திரன் அந்த இடியட் எப்படியும் என்னை தேடி வருவான். அதுக்கு அப்புறம் பார்க்கலாம். 

சூரியா ரவியிடம் பேசி விட்டு ரகுவுக்கு கால் செய்தான். 

இங்கே முடிவுகள் அறிவிக்கபட்டது.

சரவணனுக்கு அதிர்ச்சி..?

தொடரும்… 

கொஞ்சம் கமென்ட் பண்ணுங்க share pannunga, 

Episode 198

ரவி நினைத்ததை போல் சரவணன் பணியாற்றி கொண்டு  இருக்கும் ரகு கம்பெனிக்கு தான் புராஜக்ட் கிடைத்தது. 

சரவணன் திருப்தியுடன்  எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் எழுந்து நின்றான். 

சுபா வருத்தம் கொண்டு டாடி என்று கண்கள் கலங்க

 உடனே ரவி புராஜக்ட் நமக்கு தான் நீ கவலை படாத அண்ட் உன்னோட எஸ்டிமேஷன் பட்ஜெட், அண்ட் கோடிங், டார்கெட் மேல் எனக்கு பிலிவ் இருக்கு  ஏஞ்சல் 

இதை கேட்டு அவள் எப்படி  டாடி இன்னும் சான்ஸ் இருக்கு மா.. 

ரவி, சூரியா பேசி விட்டான். 

இதை கேட்ட சுபா மனதில் கவலையான உணர்வு தோன்ற. சுபா, டாடி என்ன பண்ண போறீங்க.. இந்த புராஜக்ட் நம்ம கம்பெனிக்கு வேண்டாம் டாடி அந்த சரவணன் ஒரு மாதிரி.. 

இதை கேட்ட ரவி ஒரு புன்னகை புரிந்து ஏஞ்சல் உன் டாடி எது செய்தாலும் அது சரியா தான் இருக்கும்…  

சுபா பதட்டத்தில் இருக்க அந்த MNC கம்பனிய சேர்ந்த  ஒருவர் வெயிட் அ மினிட் இன்னொரு கம்பெனியையும் நான்க செலக்ட் பண்ணி இருக்கோம்.. 

இந்த ரெண்டு கம்பெனியும் சேர்ந்து பண்ணா தான் சீக்கிரமே எங்க புராஜக்ட் ஃபினிஸ் ஆகும். அந்த இன்னொரு கம்பனி என்று பெயரை வாசிக்க அனைவரும் ஆவலாக இருந்தனர். 

எந்த கம்பனி என்று ஆவலாக காத்திருக்க” IR global solutions ” என்று சொல்ல அனைவரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் , பொறாமையுடன் பார்க்க.. 

ரவிசந்திரன் ஒரு குட்டி புன்னகை அந்த கன்னகுளிக்கு வலிக்காமல் சிரித்து கொண்டே தன் மகளின் கைகளை பிடிக்க நீட்ட சுபா திகைத்து கொண்டே டாடி!.. 

ரவி, இது உன்னோட திறமைக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு அண்ட் உன்னோட கோடிங் சரியா இருக்கு ஏஞ்சல்.. 

அப்போ சரவணன் இடம்.. 

நம்ம யாரோட இடத்தையும் தட்டி பறிக்கல.. இதை கேட்டதும் சுபா பாயின்து அணைத்து கொண்டாள். 

சரவணன் மனம் இவளோட தான் வேலை செய்யணுமா.. எப்படி இவள் கூட அதுவும் ஒன்றாக ஏற்கனவே இவளை பார்த்தாலே இங்கே உதறல் எடுக்குதே, சரவணா ஜாக்கிரதையா இரு டா.. என்று சொல்லி கொண்டது. 

சுபா மின்னும் கண்களுடன் கம்பீரமாக முன்னே தன் அப்பாவுடன் முன்னே சென்றாள். ரவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதன் பின் சரவணன் கையெழுத்திட்டான். அதன் பின் சரவணனுக்கு ரகு போன் செய்து சில விவரம் சொல்ல அவனும் சரி என்று தலையசைத்தான். 

முடிவுகள் அனைத்தும் தெரிந்ததும் தீபிகா உடனே வினய்க்கு கால் செய்து சொன்னாள்.

சுஜித், தன் பாசுக்கு கால் செய்தான்.

உடனே அவனது PA அதை நவீனுக்கு சொல்ல.. என்ன ரவி சந்திரன் கம்பனிக்கா!

அவனோ, இல்ல சார் அது சித்தார்த் கம்பனி இல்ல இது வேற  IR global solutions..

அது யாரு என்பதை போல் நவீன் பார்க்க அவனது PA, ஸார் உங்களுக்கு இன்பராகவன் தெரியுமா..  

நவீன் அமைதியாக இருக்க அவர் தான் சார் அந்த குரு பிரகாஷ தூக்க காத்து கொண்டு இருக்காரு அவன் மட்டும் மாட்டி கொண்டால் ஈஸியா அந்த சித்தார்த்தை கீழே தள்ளி விடலாம்.. 

நவீன், அந்த ACP க்கும் இந்த கம்பனிகும் என்ன லிங்க்.. 

அவனது PA, சார் அந்த இன்பராகவனுடைய அப்பா தான் இந்த ரவிசந்திரன். ஓ.. 

ம்ம் கூடிய சீக்கிரத்தில் அந்த சித்தார்த்தை கீழே தல்லுவென்.. என்று சொல்லி கொண்டான். 

MNC கம்பனியுடைய முக்கிய நிர்வாகி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி சில வார்த்தைகள் பேசி சீக்கிரம் முடித்து விட்டு சக்சஸ் ல மீட் பண்ணுவோம் என்று சொல்லி விட்டு கிளம்ப சரவணன் ரகு சொன்ன விஷயத்தை பற்றி ராம் கிட்ட பேசி கொண்டு இருந்தான். ஆம் இந்த MNC புராஜக்ட் ல ரகு கூட ss company ஜாயின் பண்ணியாச்சு எல்லாம் சூர்யாவின் செயல். அதே போல் இங்கு ரவிக்கு வினய் கால் செய்தான். அவன் ir solutions கூட டை அப் செய்து கொண்டான். ரவி போன் பேசி முடித்து விட்டு திரும்ப அங்கே சரவணன் வந்து கொண்டு இருந்தான். 

ரவி அவனை நோக்கி வர இப்பொழுது தவிர்க்க முடியாது என்பதால் சரவணன் பேசியே ஆக வேண்டிய சூழ்நிலை அதனால் அவனும் பேசும் மன நிலையில் தான் இருந்தான். ரவி பேசும் முன்பே சரவணன் பேசினான். கன்கிராட்ஸ் சார்.. 

ரவி, ம்ம் அதை நான் சொல்லணும்.. 

பார்ப்போம் சார் என்று இரு அடிகள் எடுத்து வைக்க.. 

நீ இன்னும் மாறவே இல்ல சரவணன்.. 

அவன் அப்படி எல்லாம் இல்ல சார்.. 

உன் அப்பாவை பார்த்த மாதிரி இருக்கு, 

அவன் பெருமையாக புன்னகைத்தான். 

இனி நம்ம ஒன்றாக தான் இந்த புராஜக்ட் ல வொர்க் பண்ண போறோம். 

சரவணன், ம்ம் சார் அதை பற்றி என்னோட பாஸ் ரகு உங்க கிட்ட பேசுவார்.

இதை எல்லாம் அருகில் இருந்து கேட்டு கொண்டே சுபா வந்தாள்.

டாடி வாட் ஆர் யூ doing?

நத்திங் ஏஞ்சல் புராஜக்ட் பற்றி மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு இருந்தேன். 

இதை கேட்டதும் சரவணனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி சுபா ஒரு பக்கம் ஆச்சரியம்.. 

ரவி, வினய் கால் பண்ணாரு நம்ம கூட டை அப் பன்றாராரம் இந்த நியூ வொர்க் ல.. 

சரவணனுக்கு இந்த செய்தி கேட்டதும் வெறுப்பாக இருந்தது.உடனே அந்த இடத்தை விட்டு அவன் செல்ல 

ஹலோ சரவணன்  என்று ரவி அழைக்க.. 

சார்.. 

ரவி, இந்த புராஜக்ட்க்கு சுபா தான் இன்சார்ஜ் உங்களுக்கு அறிமுகம் தேவை இல்ல சோ எதுவா இருந்தாலும் உடனே காண்டாக்ட் பண்ணு.. 

சரவணன் பேச வர அதற்குள் சுபா, இனி நான் ரொம்ப பிசி ஏன்னா வினய் ஜாயின் பண்ணிட்டாரு சோ அவர் கூட சேர்ந்து வொர்க் பண்ணணும்.. 

அவன் முகம் இதை கேட்டதும் ஒரு நிமிடம் இறுகி போனது. இவள் இவளிடம் நான் எதுக்கு போய் நிற்கணும் எனக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம் என்று நினைத்து கொண்டு வேண்டும் என்றே

சரவணன், சுபா மேம் கிட்ட எதுவும் சொல்ற அளவுக்கு அவசியம் இல்ல அப்படி இருந்தால் என்னோட பாஸ் டீல் பண்ணுவாரு அண்ட் நான் அங்கே வொர்க் பண்ற சாதாரண ஒரு ஸ்டாப் தட்ஸ் ஆல் என்று சொல்லி விட்டு கிளம்ப.. 

ரவி, அவனை விநோதமாக பார்க்க சுபா, டாடி அவன் கிட்ட எதுக்கு நீங்க பேசிட்டு இருக்கீங்க அவன் எல்லாம் ஒரு ஆளா சரியான தலைகணம் பிடித்தவன். என்று கொத்து சேவலை போல் துள்ளி கொண்டு இருக்க விடு மா அவன் அடி பட்டவன் அப்படி தான் பேசுவான். நானும் அவனை புரிந்து கொள்ளாமல் பேசி விட்டேன் வீட்டிலே உன் தம்பி ஆடிட்டு இருக்கானே தெரியல.. 

சரி விடுங்க டாடி நம்ம போலாம் என்று இருவரும் கிளம்பினர். சுபா அவனுக்காக காத்து கொண்டு இருந்தாள். நீ வாடா தனியா மாட்டு உன்னை என்ன செய்கிறேன் என்று பார் டா என் டாடியை, என் டாடி கிட்ட எதிர்த்து பேசிட்டு போற திமிர் பிடித்த தண்ட மாடு என்று நினைத்து கொண்டாள். 

இங்கே காலேஜ்ல மதிய உணவு நேரம் வந்தது. யாழினி நேராக விவேகா அமர்ந்து இருக்கும் இடத்துக்கு வந்தாள். 

மைதிலி விவேகா கிட்ட சைகை காட்டிட விவேகா அமைதியா இருந்தாள். 

யாழினி, விவேகா.. விவேகா.. 

அவள் எதுவும் தெரியாதது போல் ம்ம் சொல்லு யாழினி.. 

அவள் தயங்கி கொண்டே சாரி விவேகா இந்த மூன்று வருஷத்தில் உன்னை பற்றி நான் தவறா நினைத்து விட்டேன் இப்போ தான் உன்னை பற்றி புரிந்து கொண்டேன் நம்ம ப்ரெண்ட்ஸ் ஆ இருக்கலாமா! என்று எதிர் பாட்புடன் கைகளை நீட்ட அவளுக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. 

யாழினி, விவேகா இது உண்மை தான் என் மனசில் உன்னை பற்றி தவறா நினைத்து இருந்தேன் நீ எல்லாரிடமும் ஒரே மாதிரி தான் இருக்க எனக்கு உண்மையான ப்ரெண்ட் யாருமே இல்ல  சோ என்னையும் உன் கூட சேர்த்துக்க என்று கேட்க.. 

விவேகா என்ன செய்வது என்று பார்க்க அந்த நேரம் வெண்பா வந்தாள். ஹே விவி எருமை என்று சொல்லி சிரித்து கொண்டே அருகில் வந்தவள் அங்கே யாழினி நின்று கொண்டு இருக்க உடனே அவள் முகம் மாறியது. 

ஹே வெண்பா என்று சிரித்து கொண்டே யாழினி பேச…  ஹாய் யாழினி என்று வேண்டா வெறுப்பாக சிரித்தாள். யாழினியே பேசினாள். விவேகா கூட சாப்பிட வந்தேன். என்று மைதிலியைப் பார்க்க அவள் என்ன செய்வது என்று விவேகாவைப் பார்த்தாள். 

ம்ம் வா யாழினி வந்து உட்காரு.. என்னை மன்னித்து விட்டாயா விவேகா.. மன்னிக்க என்ன இருக்கு நீயும் எனக்கு எல்லார் கிளாஸ் மேட் போல தான்.. வெண்பாவுக்கு  யாழினி வந்தது பேசுவது சுத்தமாக பிடிக்க வில்லை. 

சாப்பிட்டு முடித்து கிளாஸ் புட் கோர்ட் வெளியே வர ஆதி எதிரில் வந்து கொண்டு இருந்தான். அவனது பார்வை எதிரில் மீனாவை தவிர யாழினி, விவேகா, மைதிலி மூவர் மீதும் விழுந்தது. 

சிவா, மச்சி என்ன டா உன் யாழினி ஆளு விவேகா கூட வருது.. ஆதி, டேய் ***..  கெட்ட வார்த்தை! ஆதி, ம்ம் கெட்ட வார்த்தை தான் இன்னொரு தடவை இப்படி பேசாத.. சிவா, சரி  டா கெட்ட வார்த்தை பேசிட்ட இல்ல என்று மீண்டும் கிண்டல் செய்ய.. 

டேய் சும்மா இரேன் டா என்று சொல்லி கொண்டே வர யாழினி முன்னால் நடந்து வரும் ஆதியை தான் அப்படியே விழுங்கி விடுவதை போல் பார்த்து கொண்டு இருந்தாள். 

ஆதி வெண்பாவை பார்க்க  அவள் கண்களில் ஒரு வித பயம், ஏக்கம் இயல்பாக முகத்தை வைத்து கொண்டாள். அவன் மைதிலையை பார்க்க அவள் கண்களால் விவேகா தான் டா எனக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் கண்களை உருட்டினாள்.

விவேகா பேச வரும் முன் யாழினி, ஹாய் ஆதித்யா இது தான் கடைசி வருஷம் சோ எல்லாம் மறந்து ஒன்றாக இருக்கலாமே என்று அவனை ஏக்காமாக பார்க்க ஆதி விவேகாவைப் பார்த்தான். அவள் என்ன செய்ய என்பது போல் பார்க்க யாழினி கைகளை நீட்டினாள். 

அவள் என்னை நம்பு ஆதித்யா நான் மாறி விட்டேன். பிளீஸ் என்று உண்மையாகவே அவள் பேசிட இதை கேட்டதும் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க.. 

யாழினி, விவேகா கிட்ட கூட கேளு, வெண்பா சொல்லேன் பா.. 

ம்ம்.. ஆமா யாழினி… ரொம்ப நல்ல பொண்ணு தான்.. இல்ல விவேகா நீயே சொல்லு … 

விவேகா, ஹான் ஆமா ஆதி.. என்று ஒற்றை பதில் அந்த இடத்தில யாழினி அநியமாக இருப்பது போல் தோன்ற சரி உங்களால் என்னை ஏற்று கொள்ள முடியாது விடுங்க யாரையும் கம்பள் பண்ண கூடாது என்று சொல்லி செல்ல.. 

விவேகா, இரு யாழினி என்று சொல்ல.. 

இல்ல விவேகா என்னால் யாரும் கஷ்ட பட வேண்டாமே ஏற்கனவே என்னால் நிறைய மனகஸ்டம் என்று அவள் சென்றாள். 

வெண்பா ஹப்பா போயிட்டா டா.. என்று பெரு மூச்சை விட 

விவேகா, ஹே ஆதி பாவம் டா.. அவள் பொய் சொல்லல அப்டின்னு எனக்கு மைதிலி, ம்ம் ஆமா ஆதி அவள் முன்பு போல் இல்ல ரொம்ப அமைதி ஆகி விட்டாள். 

வெண்பா இருவரையும் முறைத்து பார்த்து கொண்டு இருக்க.. 

ஆதி விவேகாவை பார்த்தான். ம்ம் ஆமா போ யாரையும் கஷ்ட படித்த கூடாது. 

ஆதி, வெண்பா உன் கிட்ட சொல்ல எதுவும் இருக்கா.. 

எனக்கா எனக்கு ஒன்னும் இல்ல.. 

சரி ஓகே.. என்று சொல்லி அவன் “யாழினியாள்” என்று அழைத்தான். அழைத்து கொண்டே அவளை நோக்கி நடக்க பின்னால் விவேகா, மைதிலி, சிவா அனைவரும் சென்றனர். வெண்பா அதே இடத்தில் நின்றாள். 

அவன் அழைத்த அந்த நொடி அவள் உள்ளே பல அதிர்வுகளும் மின்சாரமும் தாக்கியது. அவள் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. எத்தனை நாள் காத்தின்கொண்டு இருந்து இருப்பாள். இன்று இந்த மாற்றம் அவனுக்காக நான் தான் மாற வேண்டும் அவன் நமக்காக வர மாட்டான் ஆனால் என்னோட காதல் வர வைக்கும் என்று நினைத்து கொண்டு திரும்பினாள். 

ஆதி, சாரி உன்னை கஸ்டபடித்துற மாதிரி பேசி இருந்தால் அதை பெருசா எடுத்துக்காத.. 

அவள் கண்களை துடைத்து கொண்டே இல்லவே இல்ல நான் தான் உன் கிட்ட தப்பா நடந்து கொண்டேன் சாரி என்று சொல்ல.. 

ம்ம் ஓகே பார்ப்போம் என்று அவன் நகர.. 

ஆதித்யா…!

ம்ம் என்று திரும்ப.. 

இனிமே பேசுவ தான..

ம்ம் பேசலாம் என்று அவன் விவேகா கையில் டிஃபன் பாக்ஸ் கொடுத்து விட்டு நான் அப்புறம் வரேன் டி என்று சொல்லி விட்டு அவன் சிவாவுடன் உள்ளே செல்ல அங்கே

வெண்பாவை பார்த்து என்ன என்பதை போல் புருவம் உயர்த்தினான். அவள் ஒன்னும் இல்ல என்பதை போல் தலையாட்டி விட்டு அவள் தோழிகளை தேடி போக.. 

விவேகா, ஹே டீச்சர்.. 

நான் உன்னை ஈவ்னிங் பஸ் ல பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு வெண்பா சென்று விட்டாள். 

யாழினி முகத்தில் உள்ள அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விவேகா மைதிலியைப் பார்க்க அவள் யாழினி உன் அக்காவுக்கு எங்களை பிடிக்காதே உன்னை எதுவும் சொன்னால் உன் கிட்ட பேசாமல் போனால் என்று சொல்ல வர.. 

யாழினி, நீங்க என்னோட பிரெண்ட்ஸ் இதை அவள் கேள்வி கேட்க ரைட்ஸ் இல்ல அதே போல் இது என்னோட இஷ்டம் என்று சொல்லி கொண்டே அவள் அவர்களுடன் வகுப்புக்கு சென்றாள். 

விவேகா நினைத்ததை போல் இனியாள் வம்புக்கு இழுக்க யாழினி, நீ உன் பிரென்ட் கூட இரு இது என் இஷ்டம் இனியாள் என்று கூற   அவளே ஆச்சரியமாக பார்த்தாள். 

விவேகா மனம் கொஞ்சம் அவளை யோசிக்க தான் செய்தது. இன்னும் எத்தனை நாள் அவள் இப்படி இருப்பாள் நடுவில் போனால் விட்டு விடுவோம் என்று நினைத்தாள். 

அதன் பின் அவள் சென்று விவேகா அருகில் போய் அமர்ந்து கொண்டாள். இதை அந்த வகுப்பே வித்தியாசமாக பார்த்தது யாழினிக்கு இந்த உணர்வு பிடித்து இருந்தது.  இங்கு இருந்து ஆதியை பார்க்க மிகவும் வசதியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் இயல்பாக பேச ஆரம்பித்தாள். 

ஆதிக்கு தான் எதோ போல் இருந்தது. அவன் வீட்டுக்கு சென்று விவேகா கிட்ட பேசி கொள்ளலாம் என்று விட்டு விட்டான். இங்கே

யாழினி, நீ எந்த பஸ் விவேகா…

நான் B75.. 

ஓ அப்போ நீயும் வெண்பா ரெண்டு பேரும் ஒரே பஸ்சா.. 

ம்ம் எங்க அண்ணா போலீஸ் வேலை அதனால் என்று பேச உன் அண்ணாவும் ஆதி அக்காவுக்கும் கல்யாணம் சரி தானே.. 

ம்ம் ஆமா.. 

யாழினி, அப்போ சரி நான் இன்பா சார் வீட்டுக்கு வர சான்ஸ் இருந்தால் வரேன். ம்ம் வா.. என்று இருவரும் விடை பெற்று யாழினி அவளது பஸ்ல ஏறினாள். 

இனியாள், ஹே நீ பண்றது சரி இல்ல டி.  இல்ல இனியாள் உன் கூட இருப்பது தான் தவறு இனி எனக்காக என் கணவுக்காக நான் வாழ போறேன் இனி வீடு வரை மட்டும் தான் நீயும் நானும் அக்கா தங்கை இங்கே க்ளாஸ்ல நீயும் நானும் வேற என்று சொல்லி பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

இங்கே வெண்பா விவேகாவுக்காக காத்துக் கொண்டு இருந்தாள். விவேகா மனம் இவளை எப்படி சமாதானம் செய்வது என்று நினைத்து கொண்டே வந்து அமர..

வெண்பா எதுவும் பேச வில்லை. ஹலோ டீச்சர்.. டீச்சர்.. அவள் திரும்பி பார்த்தாள் எதுவும் பேச வில்லை. 

வெண்பாவின் மேல் கைகளை போட்டு கொண்டு ஹே என்னாச்சு என்னோட டீச்சர்க்கு.. 

எனக்கு எனக்கு இங்கே எதோ பண்ணுது தாங்க முடியல டி என்று அழுது கொண்டே அவளை கட்டி கொள்ள..

ஹே லூசா டி நீ, இப்போ நீ நினைப்பது போல் இங்கே எதுவுமே நடக்கள, என் ஆதி உனக்கு தான்,நீ தான் எங்க வீட்டு பொன்னு புரியுதா.. 

வெண்பா கண்களை துடைத்து கொண்டு அப்படியே மூக்கில் வரும் சளியை அப்படியே அவள் துபட்டாவுள் துடைக்க.. 

ஹே ச்சீ மாடு.. என்ன டி பண்ற.. 

வெண்பா, விவேகா விவேகா.. 

சொல்லி தொலை.. 

அவன் அந்த யாழினி கிட்ட பேசுறானே.. 

இப்போ பேசினால் என்ன 

வெண்பா என்னவா!

விவேகா, லவ் பண்ணல தான…

எனக்கு பயமா இருக்கு டி..

விவி, ஹே வெண்பா னா பயமா கெத்தா இரு டி.. பயம் வேண்டாம் பார்க்கலாம் என்ன நடக்குது அப்டின்னு என்று பேசி கொண்டே அவர்கள் வீட்டுக்கு சென்றனர். 

சுபா அவனுக்காக காத்து கொண்டு இருந்தாள். அவன் தான் சரவணன். 

இவள் கோபத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்க அவன் அந்த வழியாக வந்தான். 

அவன் பார்க் வழியாக லேப் டாப் பேக் இன்னொரு கையில் போன் நோண்டி கொண்டு போக.. 

ஹலோ சரவணன்.. 

அவன் காதில் விழ வில்லை.. 

டேய் சரவணா.. என்று கத்த.

எவ அவள் என்பது போல் திரும்ப.. 

அங்கு சுபா நின்று கொண்டு இருக்க அவன் கண்டு கொள்ளாமல் நடக்க தொடங்கினான். 

டேய் நில்லு டா.. 

தொடரும்… 

வெண்பா ஆதி கிட்ட தன்னுடைய காதலை சொல்வாளா,  யாழினி என்ன பண்ண போகிறாள் அவளை விவேகா ஏற்று கொண்டாளா!… தொடருந்து படிங்க… 

Episode 199

ஹலோ சரவணன்.. 

அவன் காதில் விழ வில்லை.. 

டேய் சரவணா.. என்று கத்த.

எவ அவள் என்பது போல் திரும்ப.. 

அங்கு சுபா நின்று கொண்டு இருக்க அவன் கண்டு கொள்ளாமல் நடக்க தொடங்கினான். 

டேய் நில்லு டா..  சரவணன் அவளை திரும்பி பார்க்க.. 

டேய் இப்போ இங்கே வர என்று கைகளில் சொடுக்கு போட்டு கூப்பிட.. 

அவன் சுற்றியும் பார்வையை சுழல விட்டு அவளை நோக்கி வந்தான். 

என்ன சாருக்கு அவ்ளோ திமிரா.. 

இப்போ மேடம்க்கு என்ன வேணும்.. 

சுபா மூச்சை வேகமாக விட்டு கொண்டே இடை நிறுத்தாமல் எங்க டாடி கிட்ட அவ்ளோ தெனாவட்டா பேசுற என்ன அவ்ளோ திமிரோ… 

சரவணனுக்கு இப்பொழுதெல்லாம் அவள் பேசுவது காதில் விழ வில்லை. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 

என்ன  கண்ணு, மூக்கு, அந்த உதடு, என்று எண்ணம் எங்கு எங்கோ சென்றது. எத்தனை முறை சொன்னாலும் இந்த மானம் கெட்ட மனசு அவள் பின்னாடி தானே போகிது என்று சலித்து கொண்டு அன்று பார்த்த அந்த இடையின் மேல் கண்கள் எதெட்சையாக செல்ல இன்று சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே போல் இருந்தாள். 

சுபா, டேய் சரவணா திமிர் பிடித்தவனே இனி என் டாடி கிட்ட மரியாதை இல்லாமல் பேசின அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. 

ம்ம் சரி மேடம் நான் யார் கிட்டயும் தேவை இல்லாமல் பேச மாட்டேன். உங்களுக்கும் எனக்கும் பேச ஒன்னும் இல்ல அதை தான் சொன்னேன் அதுக்கு நீங்க இங்கே வந்து இவளோ பெரிய பர்பார்ம் பண்ண தேவையே இல்லை. உங்க வழியில் நான் வர மாட்டேன் என் வழியில் தான் நீங்க ஓவரா கிராஸ் பண்றீங்க..

அண்ட் உங்க அப்பா மேல் எனக்கு எப்போதும் மரியாதை குறைந்தது இல்ல எப்பொழுதும் ஒரே இடததில் தான் இருக்காரு சோ வெட்டி சீன் போடாமல் போங்க.. 

நான் எதுக்கு உன்னோட வழியில் கிராஸ் பண்ணனும் என்னை வேண்டாம்ன்னு சொன்னவங்க கிட்ட எனக்கு என்ன இருக்கு உன் பின்னாடி நாய் மாதிரி சுற்றி கொண்டு இருந்த சுபா இல்ல இன்னும் என்று விரல் விட்டு எதோ எண்ணியவள் ஹான் இன்னும் 4 மாசம் தான் இருக்கு அதுக்கு அப்புறம் என்று என்று எதோ நினைத்தவள்.. 

ச்ச அதை எதுக்கு உன் கிட்ட சொல்லணும். இருந்தாலும் என் வினய்க்கு கொஞ்ச நாளில் சொந்தம் ஆக போகிறேன். என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அதற்கு மேல் அங்கு அவனால் நிற்க முடியாமல் இதை கேட்டதும் வேகமாக சென்றான். 

ஹலோ சார் இப்படி ஓடுனா என்ன அர்த்தம் மனசுல குற்ற உணர்வு குத்துதோ.. அவன் நின்றான். சுபா, அப்புறம் எதுக்கு டா ஓடுற.. என்று சொல்லி கொண்டே அவள் அவன் அருகில் நடந்தாள். 

டேய் இப்போ பேசடா.. சரவணன், திருந்தாத ஜென்மத்துகிட்ட பேச என்ன இருக்கு சொல்லுங்க.. 

சுபா, அதை உனக்கு நீயே சொல்லிக்கோ டா.. என்று சொல்லி விட்டு அவள் வந்த வேலை முடிந்தது என்பதை போல் கிளம்பினாள். 

சரவணன் இது பொது வெளி என்பதால் நேராக வீட்டுக்கு சென்று பேக் போன் அனைத்தும் வைத்தவன். நேராக குளியலறை புகுந்தான். என்னை டார்ச்சர் பன்றதுக்கே என் முன்னாடி வந்து நிக்கிறா இதை இப்படியே வுட கூடாது அவளை விட்டு இன்னும் தூரமா போகனும் ஆனாலும் கண்ணு முன்னாடி அவள் வாழ்க்கை சீரழிந்து போக என் மனசு ஒத்துக்க மாட்டிங்கிது.. இப்போது இது வேற பத்தாதுன்னு அவளை பார்த்தாலே என்ன என்னவோ தோணுது இவளோ நாள் கட்டுப்பாடாக இருந்த என் மனசு இப்போ அவ மேல எதுக்கு இப்படி என்னோட எண்ணம் தறி கெட்டு ஓடுது இதுக்கு எதாவது செய்தே ஆகனும் இனி கட்டுபாடா இருக்கணும் என்று தனக்கு தானே சொல்லி கொண்டு வெளியே வந்தான். 

இங்கே இனியாள் வீட்டுக்கு வந்ததும் யாழினி கிட்ட எவ்வளவோ பேசி பார்த்து விட்டாள் ஆனால் அவள் மாறுவது போல் தெரிய வில்லை. இதற்கு மேல் ஒன்னும் முடியாது என்று விட்டு விட்டாள். 

இப்படியே நாட்கள் சென்றது அடுத்த பிரச்னையாக  இன்பாவின்  பிறந்த நாள் வந்தது. 

எல்லாம் நன்றாக போய் கொண்டு இருந்தால் எனக்கு பிடிக்காது. அதான் இனியாள் கிட்ட எதுவும் செய்ன்னு சொன்னேன். (It’s me).. 

இன்பாவுக்கு அந்த சிறப்பு குழந்தைகள் கேஸ் அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள்  மட்டும் காணாமல் போவது தான் மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த வேலையில் அவன் நிற்க நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருக்க இதில் பிறந்த நாள் அதை எல்லாம் அவன் நினைப்பதும் இல்லை பெரிதாக கொண்டாடுவதும் இல்லை ஆனால் வசுமதி இன்னும் அந்த நாளுக்கு எப்பொதும்  காத்திருப்பாள். 

இன்னும் ரெண்டு நாளில் அவனுடைய பிறந்த நாள் இருக்க விவேகாவுக்கு அவனுடைய பிறந்த நாள் என்று தெரியாது. எல்லா நாளும் ஒரே மாதிரியாக தான் இருந்தது. 

அன்று எப்பொழுதும் போல் விவேகா காலேஜ் சென்றாள். அன்று ஒரு அதிசயம் நடந்தது எப்பொழுதும் இனியாழ் காலேஜ் வர வில்லை. 

விவேகா, ஹே யாழ் என்ன உங்க அக்கா காலேஜ் வரல எப்பொதும் என் கிட்ட சண்டை போடவே வந்து விடுவாள் என்ன ஆச்சு.. 

எனக்கே ஆச்சரியமா இருக்கு இரு விவேகா கால் பண்றேன் என்று போன் செய்து ஸ்பீக்கர் போட்டாள். 

ஹலோ இனி எங்கே இருக்க.. 

ஹேய் கால் கட் பண்ணு.. 

ஹே இப்போ சொல்ல போறியா இல்ல நான் அப்பா கிட்ட சொல்லவா.. 

நீ யார் கிட்ட வேணாலும் சொல்லு எனக்கு உன் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண விருப்பம் இல்ல என்று சொல்லி போன் கட் செய்தாள். 

விவேகா, என்ன யாழ் உன் அக்கா இப்படி பேசுரா.. 

ம்ம் அவள் எப்பொழுதும் இப்படி தான் நீ விடு விவேகா எனக்கு இது சொல்லி கொடு இந்த முறை நல்ல மார்க் எடுக்கணும்… என்ன பண்றது நானும் அவளும் ஒன்றா பிறந்து அவளை போல் என்னால் படிக்க முடியல என்று கவலை பட 

மைதிலி, ஹே கவலை வேண்டாம் இது ஒரு விஷயமா மூணு வருஷ University question paper செட் போதும் அப்புறம் page fill பண்ணா மார்க் தானா வந்திடும்.. 

அப்போ இந்த சம்.. 

அதுவும் அதே போல் தான் நாலு சம்மை பார்த்து மாற்றி மாற்றி போட்டு வச்சா முடிந்து போச்சு.. 

ச்ச இத்தனை நாள் தெரியாமல் போச்சே.. 

அந்த நேரம் ஆதி வர அவன் இடத்தில வைத்து இருந்த நோட் பார்த்தவள் நைசாக விவேகா, இந்த unit மீதி கொண்டு வந்தியா.. 

ம்ம் எடுத்து வந்தேனே என்று பார்க்க 

கொஞ்சம் கொடு.. 

விவேகா, யாழ் என் பேக்ல இருக்கும் பாரு.. 

ஹான் என்று தேடியவள்.. இல்லயே நீ தேடி பாரு.. 

அச்சோ எங்கே போச்சு.. என்று தேட சரி இப்போ எனக்கு அது தான் பார்க்கனும்.. 

மைதிலி, இந்தா பாரு என்று அவளுடைய நோட் கொடுக்க இது இதுல எனக்கு புரியவே இல்லை  அதுவும் நீ இன்னும் பெண்டின் வச்சு இருக்க 

மைதிலி, இங்கே கொடு அட ஆமா இப்போ காப்பி பண்ணனும் அடுத்த ஹவர் சிபி சார் தான் என்று சொல்லி 

ஹே ஆதி உன் நோட் கொடு.. என்று மைதிலி கேட்க.. 

ஆதி எதோ எழுதி கொண்டே நோட்டை நீட்டினான். யாழினி அவனிடம் இருந்து நோட்டை வாங்கி கொண்டாள். 

மைதிலி அவனது நோட்டை பார்த்து எழுதி விட யாழினி மிகவும் மெதுவாக எழுதி கொண்டு இருந்தாள். 

ஹே நான் முடித்து விட்டேன்.. என்று மைதிலி நெட்டி முறிக்க..

 யாழ், ஹே இரு நான் இன்னும் எழுதணும்.. என்று சொல்லி வாங்கி வைத்தவள்  அவனுடைய கையெழுத்தை வருடி கொண்டே எழுதினாள். 

அடுத்த ஹவர் பெல் அடிக்க… 

சிபி வந்து பாடம் எடுத்தான். அவனுக்கு இனியாழ் மேல் கோபமாக இருந்தது. முன்பு போல் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. இன்று அவள் வகுப்பும் வர வில்லை. 

ஆதி, மைதிலி நோட் கொடு.. 

யாழ், ஆதி நான் எழுதி விட்டு தரட்டுமா.. அவன் அவளை ஒரு பார்வை பார்க்க அவள் கண்கள் அவனை ஏக்கமாக பார்க்க.. ஆதி உடனே இந்த பொண்ணு ஒரு நோட்க்கு எதுக்கு இப்படி பார்க்குது என்று நினைத்து.. அவன் பார்வையை திருப்பி கொண்டு 

ம்ம் நீ எழுதிட்டு கொடு என்று சொல்லி திரும்பி கொண்டான். இதை கேட்டதும் யாழ் மனம் துள்ளலாக இருந்தது. நோட் எடுத்து பேக் ல வைத்து கொண்டாள். 

அன்று காலேஜ் முடிந்ததும் நேராக யாழ் அவனது நோட் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றவள் பையில் விவேகா நோட்டும் இருந்தது. தன்னை சுத்தம் செய்து கொண்டு படுத்தவள் விவேகா நோட்ட அவள் பைகளில் வேண்டும் என்றே எடுத்து வைத்து கொண்டாள். 

 யாழினி ஆதி நோட்டை பிரித்து அவன் எழுத்துக்கு முத்தம் வைத்து நெஞ்சோடு அணைத்து கொண்டாள். அதன் பின் மெதுவாக எழுத ஆரம்பித்தாள். எழுதி முடித்து விட்டு அப்படியே அதை கட்டி கொண்டே உறங்கினாள்.

விவேகா எப்பொழுதும் போல் காலேஜ் முடித்து வீட்டுக்கு வர அவளுக்கு தெரிய வில்லை நாளை என்ன நடக்க போகிறது என்று அவள் எப்பொழுதும் போல் சரவணன் கிட்ட லேப் டாப் ல வேலை செய்து விட்டு தூங்கினாள். 

அடுத்த நாள் ஆரவாரமாக விடிந்தது. யாழினி காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்து எளிமையாக தன்னை தயார் செய்து கொண்டு பூ வைத்து காலேஜ் கிலம்பியவள் தன் அப்பாவிடம் ஒரு டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுக்க சொல்ல அவரும் வாங்கு தந்தார் அதை எடுத்து ஆதியின் நோட்டுக்கு உள்ளே வைத்து விட்டு துள்ளலுடன் காலேஜ் கிளம்பினாள். அவளுக்கு இனியாழ் ஏன் வர வில்லை என்று தெரிய வில்லை.. அது அவளுக்கு இப்பொழுது தேவையும் இல்ல இப்பொழுது ஆதி மட்டுமே வேண்டும்.. 

இங்கே விவேகா வீட்டில் காலையில் நேரமே  ஆதி கால் செய்தான். கங்கா, hello சொல்லு கண்ணா.. அத்தை விவேகா கிட்ட கொடுங்க.. ம்ம் சொல்லு டா என்ன காலையில் கால் பண்ணி இருக்க.. ஹே விவேகா சும்மா தான் கால் பண்ணேன். 

ஹே சொல்லு என்ன விஷயம்.. 

இல்ல நீ காலேஜ் வா சொல்றேன் என்று வைக்க.. 

அவள் காலேஜ் தயாராகி பஸ் ஸ்டாப் சென்றாள். 

வெண்பா போனை ஷாக் ஆக பார்த்து கொண்டு இருந்தவள் விவேகா வருவதை பார்த்ததும் போனை ஆப் செய்து விட்டு அவளிடம் எதுவும் தெரியாதது போல் முகத்தை வைத்து கொண்டாள். 

ஒரு சிறிது நேரத்தில் ஆதி கால் செய்தான். ஹலோ.. 

சொல்லுங்க.. 

கொஞ்சம் தூரம் வா.. 

அவளும் அதே போல் வந்தாள். 

ஹே ராட்சஸி அவள் கிட்ட எதையும் சொல்லி காட்டி வைக்காத.. 

டோண்ட் கால் மி ராட்சஸி அண்ட் நான் அவள் கிட்ட சொல்ல மாட்டேன் என்று முறைத்து கொண்டே போனை வைத்தாள். 

விவேகா அதையும் இதையும் பேசி கொண்டே வர முன்னால் இருந்த மாணவ மாணவிகள் அவர்களுக்குள் எது எதோ பேசி சிரித்து கொண்டு இருந்தனர். 

அவள் பஸ்சில் இருந்து இறங்கியதும் சோனா நின்று கொண்டு இருந்தாள். ஹே விவேகா உன்னை கவி பார்க்கணுமாம் வா என்று நடக்க.. 

விவேகா, ஹே வெண்பா என்ன நடக்குது இங்கே எல்லோரும் எதோ பேசிக்கிராங்க என்ன விஷயம்.. என்ன நடக்குது.. 

வெண்பா, விவேகா நீ நேரா கிளாஸ்க்கு போடி ஆதி சொல்லுவான். 

ஹே என்ன டி ஆச்சு சொல்லி தொலை.. 

அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே இனியாழ், ஒரு தோரணையாக வந்தாள். அனைவரும் இனியாளை பார்த்து கொண்டு இருக்க.. 

அவள் மனம் ம்ம் சூப்பர் விவேகா நல்லா வொர்க் அவுட் ஆகுதே என்று பெருமையுடன் சென்றாள். 

விவேகாவும் வெண்பாவை ஒரு பார்வை பார்த்தாள். என்ன இவள் இன்னிக்கு இன்னும் கூடுதலாக சாயம் பூசி கிட்டு வந்து இருக்கா.. அதே நேரம் கவ்யா கோபமாக அந்த இடத்துக்கு சோனா, ஷீலா, கண் மணி என அவளுடைய வட்டாரத்துடன் வந்து கொண்டு இருந்தாள். 

இனியாழ், கவ்யா நேருக்கு நேராக எதிர் எதிர் திசையில் வந்து கொண்டு இருக்க கவி யைப் பார்த்து இனியாழ் இளனமாக புன்னகை சிந்தினாள். 

கவி மனம் இரு டி உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருவரும் சில நிமிடம் பார்த்து கொள்ள இனியாழ் உஃப்  என்று முடியை ஊதி கொண்டே சென்று விட்டாள். 

கவ்யா காலை வேகமாக தரையில் ஊன்ற விவேகா வெண்பா பேச வரும் முன் நேராக அவள் அருகில் சென்றாள். 

என்ன ஆச்சு கவி.. என்ன இன்னிக்கி அவள் வித்தியாசமா வந்து இருக்கா உன்னை பார்த்து சிரித்து கொண்டு போறா.. 

சோனா மனம் உலக மகா நடிப்பு கள்ளி என்று மனதில் நினைத்ததை ஹே ஒன்னும் தெரியாத மாதிரி ஆக்ட் விடாத.. எல்லாம் சீனு கவி நீ இவளை நம்பாத ரொம்ப சரியானவள்.

சோனா சாட் அப் என்று சொல்லி விட்டு விவேகாவைப் பார்த்தவள். அவளோ நீ சொல்றது புரியல கவி என்ன ஆச்சு.. உடனே வெண்பா அங்கே அவள் அருகில் வர.. 

ஹே இவளுக்கு தெரியாதா இல்லை நடிக்கிறாளா.. 

என்ன வெண்பா என்று விவி கேட்க.. 

வெண்பா ஒன்னும் இல்ல விவி அது உன் கிளாஸ் இனியாழ் பற்றி தான்.. 

என்ன விஷயம்?

சோனா வேகமாக போனை எடுத்து அந்த போட்டோஸ் டேக்ஸ் எல்லாம் விவேகாவுக்கு காட்டி பாரு என்று காட்ட.. 

அதில் இனியாழ் இன்பாவின் பிறந்த நாளுக்கு ஒரு காப்பகம் சென்று உணவு கொடுத்தது. அதன் பின் அவனுக்கு இவள் கை குலுக்கும் காட்சி அதற்கு கீழ் சில இலை மறை காய் மறையாக

“பயணிக்க ஆசை உங்களோடு “

 “உங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசை படுகிறேன்… கூடிய சீக்கிரத்தில் IPS க்கு படிக்க ஆசை தான்  ஆனால் இன்னும் ஒரு செம் இருக்கு நீங்க தான் என்னோட ரோல் மாடல்”etc.. 

அப்படி இப்படி என்று எழுதியவள்.. 

இன்னொரு போட்டோவில் இந்த இனியாளின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்பராகவனுக்கு என்று இருக்க.. 

இதை படிக்க படிக்க இங்கே விவேகாவுக்கு மூக்கு விடைக்க இதயம் தாறுமாறாக கோபத்தில் குதித்தது. அதில் அவன் அந்த காப்பக குழந்தைகளுடன் இன்பா, இவள் இருவரும் சேர்ந்து இருப்பது போல் ஒரு செல்ஃபி இதை எல்லாம் பார்த்த விவேகா மூக்கு சிவக்க தன்னை கட்டு படுத்தி கொண்டு போனை சோனாவிடம் கொடுத்தாள். 

இந்த படங்களை அவள் காலேஜ் ஃபேஸ் புக் group மற்றும் அவளுடைய நெருக்கமான தோழிகள் மற்றும் நட்பு வட்டங்கள் உதவியுடன் அதை வலை தளம் மற்றும் இன்ஸ்டா பக்கத்திலும் போட்டாள். 

அவ்வளவு தான் அது எல்லா பக்கமும் தீயாக பரவியது. அவனது பிறந்த நாளை இது வரை யாரிடமும் சொல்லியதும் இல்லை கொண்டாடியதும் இல்லை இந்த நிகழ்வு நடந்ததில் இருந்து அவனுக்கு வாழ்த்துகள் ஒருபக்கம் குவிய இன்னொரு பக்கம் சில கிசு கிசுக்கள் சேர்ந்து பரவியது.

சுபா நிச்சயத்தில் இன்பா, இனியாழ் இருக்கும் புகைபடங்கள் எல்லாம் வெளிவர இப்பொழுது அந்த செய்திகள் எல்லாம் உண்மையாகவே பேச பட்டது. 

இதை எல்லாம் பார்த்ததும் அவளுக்கு என்ன சொல்வது என்று வார்த்தைகள் வர வில்லை. சோனா, விவேகா இது பற்றி உனக்கு எதுவும் தெரியாதா.. 

கவ்யா, அந்த கண்ணுகினியாழ் எவ்வளவு திமிர் நான் அன்னிக்கு  அவ்ளோ தூரம் சொல்லியும் என்னை எதிர்த்து கொண்டு இத்தனையும் செய்து இருக்கிறாள். 

விவேகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. 

ஹே எதுவும் சொல்லு.. 

இதில் சொல்ல என்ன இருக்கு எனக்கும் இதுக்கும் என்ன சம்மதம் நீயே என்னமோ பண்ணு என்று சொல்லி விட்டு அவள் செல்ல.. 

ஹே நில்லு டி.. 

இப்போ என்ன பண்ண சொல்ற கவி… 

கவ்யாவுக்கும் என்ன செய்வது என்று தெரிய வில்லை. வேகமாக மனம் நொந்து போன கடுபில் அந்த இடத்தை விட்டு வேகமாக செல்ல விவேகா ஒரு பக்கம் சென்றாள். 

இங்கே யாழினி கிளாஸ் வந்ததும் நேராக அவள் இடத்துக்கு போய் அமர்ந்து கொண்டு ஆதியை பார்த்தவள் தன் பையில் இருக்கும் நோட் எடுத்து கொண்டு தைரியத்தை வரவளைத்து கொண்டு ஆதி கிட்ட பேச சென்றாள். 

ஆதித்யா.. 

ஆதித்யா.. 

ம்ம் சொல்லு.. 

உன்னோட நோட் என்று நீட்ட அதை வாங்கி அருகில் வைத்து விட்டான். 

அவளுக்கு புஷ் என்று ஆனது.. ச்ச என்று வந்து அமர்ந்தாள். 

அதற்குள் விவேகா வர கூடவே வெண்பாவும் வந்தாள்.  ஆதி அவளிடம் கண்களால் என்ன என்று கேட்க.. 

எல்லாம் தெரிந்து விட்டது.. என்று  கண்களால் பதில் சொல்ல.. 

போச்சு இவள் angry bird ஆ மாறி விட்டாளே என்று நினைத்து கொண்டு  விவேகாவை பார்த்தான். 

இன்பாவுக்கு அவன் நட்பு மற்றும் அலுவலக வட்டாரத்தில் இருந்து வாழ்த்து செய்திகள் வர.. 

அவனுக்கு கொஞ்சம் விநோதமாக இருந்தது. இப்பொழுது அவனிடம் அலுவலக போன் மட்டுமே இருந்தது. அதில் நிறைய செயலி வைத்து இருக்க மாட்டான். 

அனைவருக்கும் அவன் பதில் சொல்லி விட்டு அந்த கேஸ் தொடர்பான வேலையை செய்து கொண்டு இருக்க விக்ரம் கிட்ட இருந்து கால் வந்தது. 

ஹலோ.. 

ஹலோ இன்பா நான் விக்ரம் பேசறேன்.. 

ம்ம் தெரியும்.. 

எனக்கு சஞ்சனாவை பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் பெட் எல்லாம் இல்ல பிடிச்சது கட்டி கொண்டேன் ஒரு பொருள் எனக்கானது அப்டின்னு தெரிஞ்சும் என்னால் விட்டு கொடுக்க முடியாது தட்டி பரிக்கவும் தயங்க மாட்டேன் அண்ட் சூர்யாவுக்கு சஞ்சு மேல் அந்த அளவுக்கு விருப்பம் இல்ல.. 

இன்பா, இது ஸ்டோரி டைம் இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு உங்க கருத்து ஊசியை ரகு கிட்ட ஓட்டுங்க..

விக்ரம் , ஹே போன் வைக்காத.. 

இன்பா, ஸ்ட்ரைட் டூ தி பாயிண்ட் 

 விக்ரம், பெங்களூர்ல ஒரு பார்ட்டி இருக்கு நீ நிச்சயம் வரனும்.. 

நெவர்.. 

விக்ரம், சஞ்சனா ஆசை பட்டாள் ஒரு தடவை வந்து விட்டு போ.. 

அவன் வரானா! அவனுக்கு இதில் சம்மதமா..

யாரு..  

சும்மா நடிக்க வேண்டாம்..  

சூரியா வரான் போதுமா அண்ட் அவன் தான் எல்லா அரேஞச்மென்டும் பண்றான். நீ வருவ தான.. 

இன்பா,பார்க்கலாம்..  என்று சொல்லி வைத்து விட்டான். அவன் ஸ்டேஷன் உள்ளே நுழைய வருண், சாதனா அனைவரும் இன்பாவை வாழ்த்தி அவர்களுக்குள் பேசி கொள்ள.. 

இன்பா உள்ளே சென்றான். உடனே மித்ரணுக்கு கால் செய்து சில கேஸ் ஹிஸ்டரி எடுத்து வர சொல்ல.. 

அதற்குள் லோகேஷ் கால் செய்தான். 

என்ன டா.. 

“டேய் எப்போ கல்யாணம் ஜாலியா காலேஜ் போய் லவ் பண்ணிக்கிட்டு என்னை சுற்ற விடுற நான் இங்கே ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை னனு அலைந்து கொண்டு இருக்கேன்”

ஹே என்ன உளருற.. 

யாரு நானா! போய் FB, instaa போய் பாரு டா என்று சொல்லி சில விஷயம் விசாரித்து விட்டு வைத்தான். 

அப்பொழுது மித்ரன் உள்ளே வந்து சார் நீங்க கேட்ட டிடைல்ஸ் இருக்கு.. 

ஹே மச்சான் என்ன டா இந்த லோகேஷ் என்னன்னமோ  சொல்றான்.. என்ன டா நடக்குது.. 

தெரியல மச்சி இரு நான் சாதனா கிட்ட கேட்கிறேன்.. என்று அவன் கேட்க 

இங்கே அவன் insta, FB போய் பார்க்க.. 

மித்ரன், அந்த போட்டோல இருப்பது நீ தானா.. சொல்லு சொல்லு சொல்லு என்று உழுக்க.. 

நான் தான் டா ஆனால் இது இப்படி எப்படி மாறிச்சு.. 

வெண்பா கால் செய்தாள்.. 

அந்த நண்பரை பார்க்க 

மித்ரன், மச்சி விவேகா வைப் போய் தனிமையில் சந்தி பிறந்த நாள் பரிசு காத்து கொண்டு இருக்கிறது. 

தொடரும்… 

Episode 200

இன்பா அந்த செய்தி மற்றும் படங்களை பார்த்த அவனுக்கு தூக்கி வாரி போட்டது. இந்த பொன்னு நம்மல இப்படி மாட்டி விட்டு விட்டாளே.. என்று நினைக்க அப்போ இத எல்லாம் பார்த்து தான் எல்லாம் விஸ் பண்ணிட்டு இருக்காங்க என்று அவன் மனம் பதைக்க.. 

மித்ரன் வந்து சொல்ல தெரியும் டா என்பதை போல் தலையாட்டினான். வெண்பா கால் செய்தாள். அவன் போன் மற்றும் மித்ரன் இருவரையும் மாறி மாறி பார்க்க.. 

பிறந்த நாள் பரிசு காத்து கொண்டு இருக்கிறது. விவேகாவை தனிமையில் சந்தித்து விட்டு வாடா.. 

இன்பா, ஹே எதுவும் ஹெல்ப் பண்ணு டா அப்போ தான் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்.. எனக்கு என்ன ஹெல்ப்? 

நீ நீ அந்த மைதிலியை லவ் பண்ற தானே நினைவில் இருக்கா இல்லையா.. 

மித்ரன் , அட போடா எனக்கு இந்த லவ்வே வேண்டாம்.. 

டேய் விளையாடாத.. 

யாரு நானா அந்த பொண்ணு எல்லாம் என்னை விரும்பல இன்பா.. 

அவன் ஷாக் ஆகி என்ன டா சொல்ற.. 

மித்ரன் சோகமாக நகத்தை நோண்டி கொண்டே நான்.. 

நீ.. 

நான் அவள் கிட்ட.. 

ஹே சொல்லி தொலை.. 

நான் அவள் கிட்ட  உன் வாய்ஸ் நல்லா இருக்கு நல்லா பாடுற அப்டின்னு தான் டா சொன்னேன்.. 

அதுக்கு அவள் என்ன சொன்னா.. 

மித்ரன் மிகவும் சோகமாக அவள்.. 

ஹே சொல்லு.. 

மித்ரன், என்னை பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு நீங்க பேசுவது அதை விட பயமா உங்களை போலீஸ் ட்ரெஸ் ல பார்த்தால் இன்னும் பயமா  இருக்கு என்று  அழுது கிட்டு சொல்லிட்டே ஓடி போயிட்டா டா.. 

அவள் சாதாரணமா போனால் கூட பரவா இல்லை தேம்பி தேம்பி அழுதுட்டு போனாள் டா.. 

இன்பாவுக்கு இதை கேட்டு  உதடு கடித்து சிரிப்பை அடக்க அவனால் முடிய வில்லை.. 

மித்ரன், டேய் இப்போ உனக்கும் அதே நிலமை தான் கொஞ்சம் நியாபகம் இருக்கா.. 

இன்பா முகம் தீவிர சிந்தனைக்கு போக.. ம்ம் இப்போ நல்லா இருக்கு மச்சி எபடியும் விவேகா உன்னை லவ் டைவர்ஸ் கொடுத்திடுவா சோ நான் ஹேப்பி மச்சி.. 

என்ன லவ் டைவர்சா.. 

பின்ன கல்யாணம் ஆகி பிரிந்தால் டைவர்ஸ்.. 

ஆனால் நியும் அவளும் கிட்ட தட்ட ரெண்டு வருஷமா லவ் பண்றீஙக சோ கிட்ட தட்ட கல்யாணம் மாதிரி தான் அதுவும் உப்மா, வடை, வென் பொங்கல், அப்புறம் என்ன.. 

இன்பா அவனை முறைத்து பார்க்க.. 

இப்போ என்ன எதுக்கு டா முறைக்கிற போன் எடுத்து பேசு.. 

ஹலோ.. 

அண்ணா என்ன காரியம் பண்ணி வச்சு இருக்க.. 

என்னை பற்றி என்ன சொன்னா.. 

வெண்பா, அவள் உன்னை பற்றி எதுவும் சொல்லாதது தான் வித்தியாசமா இருக்கு.. 

என்ன மா சொல்ற.. 

ஆமா மனசுல வச்சு இருக்கா உன்னை வச்சு செய்ய போறா எப்படி இப்படி மாட்டின.. 

இன்பா சரி வுடு அவள் பாணியில் போய் பிடிக்கிறேன்.. 

வாய்ப்பு இல்ல ரொம்ப கஷ்டம்.. 

சரி உன் பாடு.. என்று சொல்லி விட்டு அவள் போன் வைக்க.. 

இங்கே விவேகா எந்த உணர்வும் இல்லாமல் தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்பது போல் இருந்தாள். 

யாழ், விவேகா உனக்கு என்ன ஆச்சு.. 

ஒன்னும் இல்ல டி என்று சிரித்து பேச ஆரம்பித்தாள். 

ஆதி விவேகா வை பார்த்து கொண்டே அந்த நோட்டை திருப்ப அதில் சாக்லேட் இருந்தது. 

இது எப்படி வந்தது என்று யோசித்தவனுக்கு அது யாழினி வைத்து இருக்கிறாள் என்று தெரிய இதற்கு மேல் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டான். 

யாழினி, அவள் வெடுக்கென்று.. 

ஆதித்யா.. 

என்ன இது என் நோட் ல வச்சு இருக்க.. 

அவள் உடனே டக் என்று யோசித்து அது உன்னோட நோட் ல இருக்கா நான் விவேகா நோட்டை மறந்து எடுத்து போய் விட்டேன் சோ அவளுக்கு வாங்கி வச்சேன் அது உன் நோட்டுள் வந்து விட்டது. என்று சொல்லி சாரி விவேகா உன் நோட் என் பேக் ல மறந்து எடுத்து போய் விட்டேன் அப்புறம் தான் ஆதி, அண்ட் உன்னோட நோட்டும் இருந்தது. 

இட்ஸ் ஓகே டி என்று சொல்ல… 

ஆதி, இந்த சாக்லேட் இதை என்ன பன்றது.. 

யாழ், அத நீ தான் சாப்பிடணும் அப்டின்னு எழுதி இருக்கு போல் சோ வச்சுக்க என்று அவனை பார்க்க.. 

ஆதி அந்த சாக்லேட்ட பார்த்தான். இது எனக்கானது இல்ல நீ விவேகா வுக்கு தானே வாங்கின சோ இந்தா ம்ம் நீயே கொடு யாளினியாள் என்று அவள் பெயரை முழுமையாக சொல்ல.. 

அவள் ம்ம் கொடு என்று சிரித்து கொண்டே கை நீட்டினாள். அவன் இந்த இனிப்பு சாப்பிடுவதை விட அவளிடம் பேசுவது மிகவும் பிடித்து இருந்தது. 

யாழினி விவேகா கிட்ட நீட்ட வேண்டாம் டி.. 

ஹே வாங்கு டி உனக்காக வாங்கினேன்.. 

அப்போ ஷேர் பண்ணிக்கலாம் என்று சொல்ல யாழினி சந்தோஷமாக தலை அசைத்தாள். 

ஆதி விவேகா வை விநோதமாக பார்த்தான். விவேகா.. விவேகா.. 

என்ன.. 

நீ எப்படி இவளோ இயல்பா இருக்க.. 

இப்போ என்ன பண்ண சொல்ற.. 

இல்ல எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு.. 

ஒன்னும் இல்ல என்று சொல்லி யாழினி கொடுத்த அந்த சாக்லேட் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். 

யாழினி ஆதிக்கும் கொடுக்க அவன் வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டான், சிவா, மீனா, மைதிலி என அனைவரும் சிரித்து சாப்பிட்டு கொண்டு இருக்க.. 

இன்பா ஆதிக்கு மெசேஜ் செய்தான்.. 

அவள் என்ன பண்றா.. 

ஸ்வீட் சாப்பிடறா.. 

என்ன.. 

டைரி மில்க் சாப்பிடறா சார்.. 

அதற்கு மேல் அவன் மெசேஜ் செய்ய வில்லை.. .

அடுத்த வகுப்பு சிபியின் வகுப்பு அந்த வீடியோ அந்த பதிவுகள் செய்திகள் என அனைத்தும் பார்த்த அவனுக்கு பற்றி கொண்டு வந்தது. இவள் இப்படி இருக்கிறாளே என்று நினைத்து கொண்டான். அவன் மனதில் எரிமலை வெடித்துச் சிதறியது. 

அதே கோபத்தில் வகுப்புக்கு வர இனியாழ் தோற்றம் அதை விட கொளுத்தி போட்டது.  அவன் வகுப்பு எடுக்க ஆரம்பிக்க பின்னால் மைதிலி பேனா கீழே விழ  விவேகா பேனா  அதை குனிந்து எடுத்து யாழ் கிட்ட கொடுக்க அதை அவள் மைதிலி கிட்ட கொடுத்தாள். . சிபி, வாட் ஆர் யூ  டூயிங் போத் ஆப் யூ என்று ஒரு கத்து கத்தினான். 

விவேகா பதில் சொல்ல வர கெட் அவுட் இன் மை கிளாஸ் என்று கத்த கிளாசே அவனின்  இந்த புதிய அவதாரத்தில்  பயந்து போனது. யாழ்,  விவேகா எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே செல்ல.. 

அதற்கு மேல் பின் ட்ராப் சைலண்ட்  ஆனது. யாழ் அவன் கத்திய கத்தில் அழுது கொண்டு இருக்க.. 

ஹே எதுக்கு டி அழற இது எல்லாம் ஒரு விஷயமா.. 

இல்ல விவேகா அவர் எல்லார் முன்னாடியும் எப்படி பேசி விட்டார். 

இந்த அவமானம் எல்லாம் இப்படி தட்டி விட்டு போகனும் விடு என்று தோல் மேல் கைகளை போட்டு தேற்ற அந்த ஹவர் முடிந்ததும் அவன் வெளியே சென்று விட்டான். 

யாழ் அப்பொழுதும் அழுது கொண்டு இருக்க.. 

ஆதி அடுத்த நிமிடம் வெளியே வந்து பார்க்க விவேகா யாழை தேற்றி கொண்டு இருந்தாள். 

ஆதி, என்ன ஆச்சு.. 

அவள் சார் திட்டியதுக்கு அளரா டா.. 

அழ வேண்டாம் யாளினியாள்.. சாக்லெட் வேணுமா.. 

அவள் ஆதியை இமை கொட்டாமல் பார்க்க.. விவேகா வா கிளாஸ் குள்ள போலாம்.. 

யாழ் வா போலாம்.. 

அந்த நேரம் இனியாழ், ஹே இரு உன்னை அண்ணா கிட்ட சொல்றேன் என்ன பண்ணிட்டு இருக்க பின்னால் போய் உட்கார்ந்து  இப்போ முழுசா தத்தி ஆகி விட்ட.. 

விவேகா பேச வரும் முன் ஆதி, மேடம் தான் IPS ஆபீசர் சொல்ல வந்து விட்டார்கள் கேட்டுக்கோ மா.. என்று சொல்ல 

யாழினிக்கு முதன் முதலாக மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இனியாழ் முறைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டாள். 

எதோ வேலையாக அந்த பக்கம் வந்த அருண் இவர்கள் இருவரும் வெளியே நிற்பதை பார்த்து விட்டு பார்க்காதது போல் செல்ல விவேகா பார்த்து விட்டாள். 

ஹலோ அருண்..அருண் ஐஸ் கிரீம் கொஞ்சம் நில்லுங்க.. 

அருண் அவளை திரும்பி பார்க்க.. 

என் கிட்ட பேச மாட்டிங்களா.. 

ஆதி, ஹே என்ன டி பண்ணிட்டு இருக்க… 

ஹே போடா.. என்று அவனிடம் சொல்லி விட்டு அருண் அருகில் சென்றாள். 

என்ன ஆச்சு உங்களுக்கு பேச சங்கடமா இருக்கும் அப்டின்னு தெரியும் சரி விடுங்க.. என்று சொல்லி விட்டு மீண்டும் வந்து நின்று கொண்டாள். 

அதன் பின் அவள் அதே இடத்தில் போய் நின்று கொள்ள ஆதி, யாழினி கிட்ட.. அழ வேண்டாம் நீ என்ன சின்ன குழந்தையா என்று கேட்க.. 

விவேகா, ம்ம் ஆமா அழ வேண்டாம் இது எல்லாம் ஒரு விஷயமா ஜாலியாக என்ஜாய் பண்ணனும் யாழ் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அருண் வேலையை முடித்து விட்டு வந்தான். 

அங்கே இன்னும் அவர்கள் வெளியே நின்று கொண்டு இருக்க மனம் கேட்காமல் விவேகா அருகில் வந்து நின்றவன்.

என்ன ஆச்சு எதுக்கு வெளியே நிக்கிற?  அந்த பொண்ணு எதுக்கு அழரா.. 

விவேகா அவனிடம் இனி பேசுவீங்களா… 

நீ முதலில் சொல்லு.. 

ஆதி அவனை பார்த்து முறைத்து விட.. 

விவேகா வெளியே நிற்கும் கதையை சொல்ல.. சரி என்று இரண்டு அடி வைத்தான். 

விவேகா, சீனியர் பேசுவீங்க தான.. 

அருண், உன்னை என்னோட லவ்வரா தான் பார்க்க முடியுது ஆனால் உனக்கு அது பிடிக்காது. சோ என் எண்ணம் எப்போ மாறுதோ அப்போ பேசறேன்.என்று சொல்லி அவன் செல்ல.. 

யாழினி அவன் சொல்வதை கண்டு கொள்ளாமல் இருந்து விட ஆதி, எவ்ளோ தைரியம் டி அவனுக்கு என் முன்னாடியே சொல்லிட்டு போறான்.. எல்லாம் உன்னால் வந்தது என்று சொல்லி விட்டு யாழினியை பார்க்க அவள் இதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை என்று தெரிந்து நிமதி மூச்சு விட்டனர். 

யாழினியின் இந்த மாற்றத்துக்கு காரணமே அருண் தானே அன்று விவேகா அறுநிடம் பேசிய அத்தனை விஷயமும் கேட்டது. யாழினி தான் அதனால் இன்னும் நம்பிக்கை இருந்தது. ஆதியை அவள் விரும்பவில்லை என்று தெரிந்து கொண்டாள். அதனால் எப்படியும் ஆதி மனதில் இடம் பிடித்து விட வேண்டும் சந்தோஷமாக அவனுக்கு பிடித்தது போல் மாற வேண்டும் என்று விரும்பினாள். 

அதன் பின் எப்படியோ சமாதானம் செய்து அவளை அழைத்து சென்றனர். அதற்கு பிறகு பிளேஸ்மெண்ட் டிரெய்னிங் ஆரம்பித்தது. அது இன்று தான் தொடக்க வகுப்பு விருப்பம் உள்ளவர்கள் அந்த வகுப்பு செல்லலாம். அதற்கென ஆசிரியர்கள் வர தொடங்கினர். 

அன்று மாலை யாழினி மிகவும் சந்தோஷமாக வீட்டுக்கு கிளம்பினாள். பேருந்துக்கு செல்லும் போது யாழினி, விவேகாவுடன் கைகளை கோர்த்து கொண்டு செல்ல வெண்பா அவள் பட்டாளத்திடம் இருந்து விடை பெற்று விவேகா அருகில் வர அங்கே அவள் கண்ட காட்சி விவேகா கைகளை கோர்த்து கொண்டும் அப்படியே ஓர கண்ணால் ஆதியை சைட் அடித்து கொண்டும் வரும் யாழினியை தான் பார்த்தாள். 

எதுவும் பேசாமல் அவள் அமைதியாக அவர்களை கண்டு கொள்ளாமல் நடக்க.. ஆதி அவள் முன்னே நடப்பதை பார்த்து விட்டு விவேகாவை அழைத்தான்.

ஹே விவேகா.. 

ம்ம் என்ன.. 

இல்ல சும்மா கூப்பிட்டேன்.. 

ஹே விவேகா என்று மீண்டும் அழைக்க…

என்ன டா.. 

சும்மா என்று சிரித்தவன் மீண்டும் அழைத்தான்.

ஹே அடிங்க.. 

இப்போ எதுக்கு ராட்சசி மாதிரி கத்திற என்று கண்களால் சைகை செய்ய.. 

ஓ என்று கண்டு கொண்டவள்.. அட அங்கே போறது வெண்பா மாதிரியே இல்ல.. 

யாழினி, ம்ம் அது வெண்பா தான்.. ஹே வெண்பா என்று அழைக்க.. 

அவள் கேட்காதது போல் நடந்து சென்றாள். 

விவேகா நீயே கூப்பிடு என்னால் கத்த முடியல.. விவேகா, டீச்சர் என்று கத்த அங்கே இருக்கும் மாணவ கூட்டம் ஹே டீச்சராம் டா டீச்சர் என்று அவர்களும் அருகில் இருந்து கத்த.. 

வெண்பா முறைத்து கொண்டே நின்றாள். 

ஆதி, யாளினியாள் உன் பஸ் நம்பர் என்ன.. 

அவள் முகம் புன்னகை பூக்க B15A..

ஹே அது இங்கே இருக்கு பாரு சீக்கிரம் போ இன்னிக்கு அது முன்னாடியே நிக்கிது பாரு.. 

ஓ ஓகே ஆதித்யா பை மிஸ் யூ..  என்று சொன்னவள் உதடு கடித்து கொண்டு அவனை பார்க்க.. 

ஆதி, என்ன.. 

சீ யூ ன்னு சொன்னேன் என்ன ஆச்சு.. 

ஒ ஒன்னும் இல்ல என்று சொல்லி அவள் குதுகலமாக கிலம்பினாள்.

வெண்பா, இப்போ எதுக்கு என் பேரை ஏலம் போடுற.. 

விவேகா, இல்ல எப்போதுமே என் கூட தானே வருவ இன்னிக்கி என்ன ஆச்சு.. 

எல்லா நாளும் வரனும் அப்டின்னு அவசியம் இருக்கா என்ன அதான் புதுசா பக்கத்தில நிற்க ஆள் இருக்கு தான அப்புறம் என்ன.. 

விவேகா, ஹே என்ன டி சொல்ற.. 

இப்போ என்னை விட உங்க யாழ் தானே முக்கியம் என்று ஆதிக்கும் சேர்த்து சொல்ல.. 

இதை கேட்டு உதடு மடித்து சிரிக்க, 

ஹேய் இப்போ எதுக்கு சிரிக்கிற.. 

ஆதி, நானா நான் எதுக்கு சிரிக்கணும்.. 

விவேகா மனம் நொந்து கொண்டு முகத்தை வைத்து கொண்டு வந்தாள். 

ஆதி, உனக்கு எதுக்கு மா இவளோ கோவம்.. 

எனக்கா எனக்கு என்ன கோவம்.. 

 ஆதி, அப்போ இல்ல தான எப்போவும் போல வா.. 

 வெண்பா, அதை அதை நீ ஒன்னும் சொல்ல தேவை இல்ல.. 

ஆதி, உன் கண்ணு ராட்ச்சசி மாதிரி இருக்கு அண்ட் உன்னோட மூக்கு சிவப்பா இருக்கு அண்ட் என்று அவளை வர்ணிக்க நினைத்த வார்த்தையை அதோடு நிறுத்தியவன். எதுவும் சொல்லாமல் சிரித்து கொண்டே  அவன் முடியை கோதி கொண்டே வர.. 

வெண்பா, ஹே உன் பஸ் அங்கே இருக்கு போ இப்போ எதுக்கு பின்னால் வர.. 

ஆதி, பார்ரா என் பஸ் கூட மேடம் க்கு தெரிந்து இருக்கு.. 

இந்த காலேஜ்ல நீ போற பஸ் தான் தகர டப்பா சோப்பு டப்பா மாதிரி இருக்கும் அதனால் நினைவு இருக்கு ஓவர் இமஜிநேஷன் பண்ணிக்க வேண்டாம்.. 

ஆதி தலையை கோதி கொண்டே நான் ஒன்னும் உங்க பின்னாடி வரல என் மாமி பொன்னு பின்னாடி வரேன். இதை கேட்டதும் விவேகா அவனை அடிக்க.. 

ஹே வலிக்குது டி.. 

வெண்பா முறைக்க.. 

ஆதி, சோ என் மாமி பொன்னு பின்னாடி வர எனக்கு உரிமை இருக்கு.. 

வெண்பா அதற்கு மேல் எதுவும் பேசாமல் வர ஆதி, இது உண்மை தானா இவளோ நிசப்தமாக இருக்கு.. 

வெண்பா கண்கள் கலங்கியே விட்டது ஏற்கனவே நொந்து போய் இருக்க இந்த ஆதி வேற வம்பு இழுக்கிரான். 

ஆதி, வெண்பா.. வெண்பா.. 

என்ன என்று அழுத்தமாக கேட்க

இன்னிக்கி பவா வந்தாளா.. 

ஹ ஹ ஹ என்று கண்களில் கண்ணீருடன் வாய் விட்டு அழ.. 

ஹே என்ன பண்ற..  .

ஒழுங்கா ஓடி போயிடு இல்ல உன்னை கொன்றுவேன்.. 

ஆதி, சரி சரி அழாத என் கிட்ட தேன் மிட்டாய் இருக்கு வேண்டுமா.. 

டேய் போடா என்று மீண்டும் அழ.. 

ஆதி அவன் பாக்கெட்டில் இருந்து மிட்டாய் எடுத்து விவேகா கைகளில் கொடுத்து இந்த அழும் குழந்தைக்கு கொடு டி அத்தை பொன்னு என்று சொல்லி திரும்பி வெண்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு ஓடி விட்டான். 

வெண்பா இப்பொழுது உண்மையாகவே அழ விவேகா, ஹே இப்போ எதுக்கு அழற..

அவன் தான் எல்லாம் அவனால் தான் என்று இன்னும் அழ 

இந்தா என்று அவள் கைகளில் ஷாக்லெட் கொடுக்க வர

எனக்கு ஒன்னும் வேண்டாம்… 

விவேகா, சரி நான் அவன் கிட்ட உன் மாமி பொண்ணுக்கு வேண்டாம் அப்டின்னு சொல்லி விடுகிறேன். 

வெண்பா கண்களை துடைத்து கொண்டு என்ன? 

அவன் சொன்னதை நல்லா யோசித்துப் பார் டி தத்தி என்று சொல்லி விட்டு பஸ்சில் ஏறினாள். 

வெண்பா அப்படியே நின்று அவன் சொன்னதை யோசிக்க..முகத்தில் புன்னகை தாண்டவம் ஆடியது. 

அத்தை பொண்ணு விவேகா அப்டின்னா அப்டின்னா அப்போ மாமி பொன்னு அது நான் தான் என்று ஒரு குதி குதித்தது. 

வெண்பா அந்த மிட்டாயை எடுத்து வாயில் போட்டு கொண்டு மேலே சந்தோஷமாக மேலே ஏறினாள். 

விவேகா அருகில் சென்று அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து கட்டி கொள்ள.. 

ச்சீ அவனுக்கே போய் கொடு.. 

வெண்பா, நான் கொடுத்தால் உனக்கு பிடிக்குமா இன்பா கொடுத்தால் தான் உளுக்குள் மின்னல் ஒரு கோடி பாயும்.. 

விவேகா அதற்கு எந்த பதிலும் பேசாமல் காதை அடைத்து கொண்டாள். ஹே என்ன டி இப்படி பண்ற..

விவேகா நான் என்ன பண்ணேன்.இதை பற்றி பேசி பேசி சலித்து போச்சு, என்னால் முடியல அவன் தானே  ஏற்கனவே IPS பாஸ் பொண்ண தான கல்யாணம்  பண்ணுவேன்னு சொல்லி வச்சு இருக்கான். சோ இதில் சொல்ல ஒன்னும் இல்ல இப்போ நான் அவன் கூட சுற்றுவது தெரிந்தால் நாளைக்கு எல்லாரும் நான் தான் அவனை மயக்கி அந்த இனியாழ் கிட்ட இருந்து பிரித்து வைத்ததா பேசுவாங்க.. என்று சொல்லி அமைதியானவள் ஒரு சில நொடி கழித்து.. 

உன் கிட்ட ஒரு விஷயம் வெண்பா நீ சீக்கிரமே ஆதி கிட்ட விருப்பத்தை சொல்லிடு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எதுக்கு.. என்று சொல்லி விட்டு அவள் ஜன்னல் ஓரம் சாய்ந்து கொள்ள.. 

வெண்பா, ஹே இன்னிக்கி அண்ணாவுடைய பிறந்த நாள் டி.. 

அவள் கண்களை மூடி கொண்டே எங்க வீட்டில் நாங்க இந்த பிறந்த நாள் எல்லாம் செளிப்ரெட் பண்ண மாட்டோம். 

அது உங்க வீட்டில் ஆனால் அண்ணா.. 

விவேகா, அவங்க பிறந்த நாள் அப்டின்ற காரணத்துகாக தான் நான் அமைதியா இருக்கேன்.. 

வெண்பா, இல்லன்னா என்ன பண்ணுவ.. 

விவேகா, அவன் ரெண்டு கன்னத்திலும்.. 

முத்தம் வைப்பியா.. 

இல்ல அரை விட்டு விடுவேன்.. 

வெண்பா, அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு..

விவேகா, அது எனக்கு தெரியாது என்னமோ பண்ணட்டும் அவனை பற்றி பேசாத, தயவு செய்து என் முன்னாடி வந்து அவன் நிற்க வேண்டாம். என்று சொல்லி விட்டு அவள் திரும்பி கொண்டாள். 

விவேகா சொன்னது அனைத்தையும் வெண்பா ஒன்று விடாமல் இன்பா கிட்ட கூறினாள். 

அவன் அமைதியாக இருக்க.. 

வெண்பா, அண்ணா தப்பு உன் மேல் தான் உன்னை யார் Ips படிச்ச பொண்ணை கல்யாணம் இது எல்லாம் சொல்லி வச்ச இப்போ அதை அவள் பிடித்து கொண்டாள். நீ தலை கீழாக தண்ணி குடித்தாலும் விவேகா போலீஸ் ஆக மாட்டா.. அண்ட் நீ முதலில் ஒரு டிவிட் போடு இந்த மாதிரி IPs பொண்ணு வேண்டாம். 

இதை எல்லாம் மித்ரன் மிச்சர் சாப்பிட்டு கொண்டே கேட்டு கொண்டு இருந்தான். இன்பா, இப்போ அவளை இங்கே வர வை வெண்பா.. 

மித்ரன் , அவள் உன்னை தூக்கி போட்டு விட்டாள் வர மாட்டா டா என்று சொல்லி அப்படியே வந்தாலும் உன் கன்னம் சிவந்தது விடும் உன் மேல வெறியா இருப்பா டா.. வெண்பா அதே போல் தலை ஆட்டி விட்டு நகர 

டேய் உன்னை..  

போடா முதலில் அவளை எப்படி சமாதானம் பண்றது அப்டின்னு யோசி.. அவள் காலில் விழுந்து சமாதானம் பண்ணு இல்ல முட்டி போடு.. 

இன்பாவுக்கு ராம் கால் செய்தான். டேய் நாளைக்கு பார்ட்டி வர தானே.. சூர்யா… 

வரான் அப்போ நாளைக்கு பார்ட்டி தான் டேய்*** போனை வை டா… 

மித்ரன் பேச வர.. 

டேய்*****..

மித்ரன் காதுகளை அடைத்து கொண்டு சரி இப்போ ஐடியாவுக்கு என்ன பண்ண போற… 

சூரியாவை பார்க்க போறேன்.. 

ம்ம் அப்போ பேச போற.. 

நிச்சயமா பேச போறேன் இந்த முறை இதுக்கு அப்புறம் சண்டையே வராது. என் மச்சான் எனக்கு ஹெல்ப் பண்ணுவான்.

வரேன் டா சூர்யா.. 

தொடரும்..  

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!