Episode 151
இன்பா விவேகாவை பார்க்க சில திட்டதிடதோடு காத்திருந்தான்.
வசுமதி மிகவும் சந்தோஷமாக ரவியை பார்க்க சென்றார். ரவி.. ரவி என்று அவள் கத்திகொண்டே உள்ளே சென்றாள். அவர் பேப்பர் படித்து கொண்டே என்ன என்பதை போல் பார்த்தார். அவள் அருகில் வந்து கேக் ஊட்டி விட்டாள்.
ரவி, என்ன டி பாசம் பொங்கி வழியுது இந்நேரம் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பியே.. வசுமதி, நீங்க நீங்க என்னைய விட ராகவை எப்படி உங்களுக்கு தெரியும்.. அவன் என் பையன்.. மம் வரம் கொடுத்தது நான் தானே.. என்று சொல்லி அவர் சிரிக்க.. அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
என்ன ஆச்சு அதை சொல்லு இன்பா சொன்ன அனைத்து விஷயத்தையும் அவள் கூறினாள். இப்போ உனக்கு சந்தோஷம் தானே அவன் உன் பையன் போதுமா.. அவள் அவன் பன்றது எல்லாம் உங்களை போல் தான் இருக்கு.. அவர் நல்ல விஷயம் எல்லாம் என் கிட்ட இருந்து வந்து இருக்கும் சில கெட்ட விஷயம் எல்லாம் உங்க வீட்டில் இருந்து வந்து இருக்கும். அவள் முறைத்து கொண்டே அவன் முழுக்க உங்க சைடு தான்..
ரவி, யாரு சொன்னா அவன் செய்யரா கிறுக்கு தனம் எல்லாமே உன் அண்ணன் பண்ற மாதிரியே இருக்கு டி.. என் அண்ணாவை பற்றி சொன்னா நான் உங்க தங்கச்சி இருக்காளே அவளை பற்றி சொல்லுவேன். அவளும் அவள் திமிரும்.. அவர் உடனே என் கிட்ட வரிந்து கட்டி கொண்டு வந்துவிடுவ என் தங்கை தேவதை டி.. சரி அப்போ கிளம்புங்க உங்கள் தங்கை வீட்டுக்கு இது என் ராகவ் வீடு.. ரவி நான் இல்லாமல் அவன் உனக்கு எப்படி கிடைத்து இருப்பான். என்று அவளை அருகில் இழுக்க என்னங்க! விடுங்க..ராகவ் வீட்டில் இருக்கான். என்று சொல்லி அவர்கள் இருவரும் கொஞ்சிக் கொண்டு இருந்தனர்.
இங்கே சுபா ஆபீஸ் வந்தாள். அன்று மாலை நடந்ததை நினைத்து அவளுக்கு சரவணனை மூக்கில் ஒரு குத்து விட வேண்டும் என்று தோன்றியது அதையும் செய்து விட்டு தான் வந்தாள். இப்போது அவன் சரியாகி இருப்பானா இல்ல வலிக்குமா என்று யோசித்து கொண்டு இருந்தாள்.
அப்படி அன்று என்ன தான் நடந்தது. சரவணன் ஒயிட் ஷர்ட், பிளாக் பேண்ட் என்று ஃபார்மலாக உடை அணிந்து கொண்டு தேவகி சொன்ன பெண்ணுக்காக சைனீஸ் ரெஸ்டாரன்ட் ல காத்து கொண்டு இருந்தான். சுபா கருப்பு நிற புடவையில் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடுகள் அதிகம் கொண்ட அந்த புடவையை கட்டி கொண்டு சரவணனுக்கு நீளமான கூந்தல் மிகவும் பிடிக்கும் ஆனால் அவனை வெறுப்பேற்றும் நோக்கத்தில் முடியை பாதியாக வெட்டி கொண்டாள். முகத்தில் மிதமான ஒப்பனை ஒரு வெண்ணெய் கட்டி போல் இருந்தாள். அவளுடைய கட்ட படாத முடியை எடுத்து முன்னே போட்டு கொண்டாள். டக் டக் என்று ஒரு குதிரை போல் நடந்து வந்தாள். அவள் சரவனணுக்கு இணையான உயரம் ஜைஜாண்டிக் பொண்ணு…
சரவணனுக்கு கருப்பு நிறம் தான் மிகவும் பிடிக்கும். அதனால் இன்று இந்த தரிசனம். அவள் அந்த ரெஸ்டாரன்ட் உள்ளே நடந்து வர மொத்த ரெஸ்டாரன்டும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தது. இவன் எதட்சயாக திரும்ப ஒரு நிமிடம் அவன் கண்கள் இமைக்க மறந்தது. அவன் மனம் அய்யோ இப்படி இருக்காளே இவளை எப்படி எனக்கு சுற்ற விட மனசு வந்தது. அவளை மேல் இருந்து கீழ் வரை அப்பட்டமாக ரசித்தான். சுபா அவன் அங்கு இருப்பது தெரிந்தாலும் அதை காட்டி கொள்ள வில்லை. அவளது இடை அந்த கருப்பு புடவையில் உள்ள செதுக்கி வைத்த பகுதி போல் மின்னியது அவன் பார்வை அவளின் இடையில் செல்ல சரவணா எழுந்து கொள் டா அங்கே பார்க்காதே என்று மூளை சொல்ல மனது மூக்கோடு சேர்ந்து ஒரு பெரு மூச்சை வெளி விட்டு போனை எடுத்தான்.
ஹலோ எங்கே இருக்கீங்க.. மம் சாரி ஃபர் தி டிலே மிஸ்டர் சரவணன் ஜஸ்ட் 5 மினிட்ஸ் என்று சொல்லி அந்த புதிய பெண் போனை வைத்தாள். வினய் இன்னும் வர வில்லை. அந்த புதிய பெண் வந்து விட்டாள் உள்ளே நுழைந்தாள். சாதாரண பெண் தான் அவள் பெயர்.. ஹான் பெயர் அதை அப்புறம் சொல்றேன். அவள் உள்ளே வந்ததும் போனை எடுத்து சரவணனுக்கு போன் செய்ய அவனுக்கு அவளை தெரியும் அதனால் அவனே அவளை அழைக்க சென்றான். சுபா அவன் என்ன செய்கிறான் என்று ஒரு ஹாட் சாக்லேட் காஃபி ஆடர் செய்து அதை அழகாக ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டு கொண்டே அவனை பார்த்தாள்.
ஹாய் மிஸ்டர் சரவணன் என்று அந்த பெண் சொல்ல மம் நீங்க உங்க பேர்.. என்று அவன் இன்னும் சுபாவின் மயக்கத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. அந்த பெண்ணோ என்ன சரவணன் என் பேரை உங்களுக்கு தெரிய வில்லையா உங்க பேரோட pair பர் நான் தானே என்று அவள் சிரித்து கொண்டே பேச இப்போது அவன் சிரிக்க இங்கே அவளுக்கு புகைந்தது. ஓ சாரி மீனாட்சி.. அவள் மம் அதானே பார்த்தேன் நீங்க மட்டும் சொல்லல நான் இப்போவே போயிருப்பேன். என்று அவள் சொல்ல சரவணன் புன்னகைத்தான். சுபா, கைகளை இறுக்கி மடக்கினாள். கண்களில் கோபம் நெருப்பாக கொதித்தது ஆனால் அதை வெளிக்காட்ட வில்லை. எங்கே டா நீ போக போற கடைசியில் நீ என் கிட்ட தான் டா வந்தாகனும் அப்போ இருக்கு டா.. என்று நினைத்து கொண்டு தன்னை கட்டு படுத்தி கொண்டாள்.
சரவணன், மீனாட்சி இருவரும் அவர்கள் புக் செய்த உணவு மேஜைக்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் இங்கே ஒரு சலசலப்பு கேட்டது அந்த உணவகத்தில் இருந்த அனைவரும் என்ன நடக்கிறது என்று ஆச்சரியமாக பார்க்க ஒருவன் கைகளில் பூங்கொத்து எடுத்து கொண்டு நேராக சுபா இருக்கும் உணவு மேஜைக்கு வந்தான். மீனாட்சி என்ன என்பது போல் ஆவலாக திரும்பி பார்த்தாள்.
சுபா தலையில் கை வைத்து கொண்டே என்ன என்பதை போல் நிமிர அவன் அவளிடம் ரெட் ரோஸ் கொத்து நீட்டினான். அவள் ஆச்சரியமாக அதை வாங்கி கொண்டாள். வினய் மம் பக்கா மாஸ் வாடா இங்கே ஒரு சிறப்பான தரமான சம்பவம் காத்து கொண்டு இருக்கு என்று மனதில் புன்னகை சந்தோஷம் ததும்ப காத்து கொண்டு இருந்தாள். ஒரு எட்டு பரிசுகள் எடுத்து கொண்டு ஒவ்வொருவராக வந்து அவளிடம் நீட்ட அவள் வெட்கம் கொண்டு வாங்கிகொண்டாள்.
இப்போது அவள் வினய் க்கு கால் செய்தாள். வினய் பிளீஸ் இது எல்லாம் டீன் ஏஜ் சென்ஸ் ல இருக்கு சீக்கிரம் வாங்க என்று அவனிடம் கொஞ்சம் கடுமையாகவும் ஆனால். பார்ப்பவர்களுக்கு அவள் கொஞ்சி பேசுவது போல காட்டி கொண்டாள். இப்போ இப்போ வந்திடுவென் சுபா என்று பிளாக் கோட் ஷூட்டிள் ஒரு ஹார்ட் வடிவ கேக் அதை முன்னால் ஒருவர் வண்டியில் வைத்து தள்ளி கொண்டே வர வினய் ஒரு வைர கற்கள் பதித்த ப்ரேஸ் லெட் கைகளில் எடுத்து கொண்டு வந்தான்.
மீனா (மீனாட்சி) என்னங்க அவங்க ரெண்டு பேரும் லவ் கப்பில் போல இருக்காங்க அந்த பொண்ணு செம்மையாக இருக்காங்க ரெண்டு பேரும் நல்ல பொருத்தம் என்று சொல்ல சரவணன் இதற்கு மேல் இந்த வார்த்தையை கேட்க முடியாமல் ஒரு நிமிடம் என்று வாஷ் ரூம் சென்றான். அவனுக்கு இப்போது குடிக்க வேண்டும் பொல் தோன்றியது. அவனுடைய இந்த இயலா நிலை கோபத்தை அங்கு இருக்கும் கண்ணாடியில் காட்டினான். டேய் நீ குத்து விட்டு உடையும் அளவுக்கு நான் வீக் இல்ல ஸ்ட்ராங் என்று அது முறைத்தது.
இங்கே அவன் வெளியே சென்றதும் சுபா முகத்தை கோபமாக வைத்து கொண்டாள். உங்களுக்கு நான் எவ்ளோ நேரம் வைட் பன்றது என்று அவள் சொல்லு கோபித்து. கொள்ள வினய் அவளை சமாதானம் செய்ய முயன்று கொண்டு இருந்தான். சரவணன் சிறிது நேரத்தில் வர அவன் பார்க்கும் நேரம் சுபா ஒரு டிஸ்யூ எடுத்து அதை வினயின் உதடுகளில் ஒட்டி இருக்கும் உணவு பண்டத்தை துடைத்து கொண்டு இருந்தாள்.
அவன் எதுவும் காட்டி கொள்ளாமல் நேராக மீனாவை பார்க்க சென்றான். மீனா இப்போது பேச ஆரம்பித்தாள். சரவணன் என்று அவள் அழைக்க அவன் அவளை பார்த்து நான்.. நான்.. என்று ஒரே நேரத்தில் இருவரும் பேச மீனா சிரித்து விட்டாள். மீண்டும் நீங்க .. நீங்க.. என்று ஒரே நேரத்தில் சொல்ல மீனா, சாரி சாரி சரவணன் ஒரு நிமிடம் நானே உங்க கிட்ட சொல்லி விடுகிறேன் என்று அவள் எதோ அவனிடம் பேச அதை கேட்டதும் சரவணன் முகம் ஒரு நிமிடம் மாறி அவன் அவளை பிரமிப்பாக பார்த்தான் அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று சுபா தெரிய வில்லை.
இருவரும் ஒரே மாதிரியாக ஆடர் செய்து விட்டு காத்திருக்க சரவணன் எதுவும் பேச வில்லை ஆனால் மீனா தொண தினவெனா பேசி கொண்டு இருக்க இவன் நடுவில் உதடு நோகும் சிரிப்பு சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்ப சுபா அங்கேயே தான் இருந்தாள்.
அதன் பின் என்ன நடந்தது. எப்படி மூக்கு உடைந்தது. அதேயே தான் சரவணன் நினைத்து கொண்டு இருந்தான். மீனாட்சியை அனுப்பி விட்டு திரும்ப அங்கே வினய் கொண்டு வந்த புல்லட் இருக்க அதை யாருக்கும் தெரியாமல் பஞ்சர் செய்து விட்டு கிளம்பி விட்டான்.
அவன் காவலர் குடியிருப்பில் சுபாவுக்காக காத்து கொண்டு இருந்தான். அவள் ஆடி அசைந்து கொண்டு இரவு 10.00 க்கு வந்தாள். அவன் நின்றுகொண்டு இருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்ல சுபா.. சுபத்ரா.. அவள் தன் கூந்தலை காதுக்கு ஒதுக்கி விட்டு யாரா எவரோ என்பது போல் திரும்பிட..
சரவணன், நீ பன்றது கொஞ்சம் கூட சரி இல்ல.. அவள் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் அடுத்த அடி வைக்க இப்போது வேக வேகமாக அவள் அருகில் வந்தவன் என்ன ஓவர் திமிரா மேடம்க்கு மணி 10ஆகுது இவளோ நேரம் வெளியே என்ன பண்ணிட்டு இருக்க..
அவள் என்னோட future பார்ட்னர் வண்டியை யாரோ பஞ்சர் பண்ணிட்டாங்க அதை பன்சர் கடையில் விட்டு அவரை வீட்டில் கொண்டு விட்டேன். இன்னிக்கு அந்த பஞ்சர்ரால எங்களுக்குள்ள நிறைய மாற்றம்.. அவன் உதடு மடித்து கடித்து கொண்டு நான் அவ்ளோ சொல்லியும் நீ ஏன் இப்படி இருக்க..
சுபா, உன் வேலையை போய் பாரு டா வந்துட்டான் கருத்து பேச பெரிய புடுங்கி மாதிரி என்று அந்த மீனாவுடன் இவன் பேசி கொண்டு இருந்த விரக்தியில் அவள் சொல்ல அவனுக்கு இப்படி மரியாதை இல்லாமல் அவள் சொன்னது கோபத்தை தூண்ட அவளின் கையை பிடித்து இழுக்க உள்ளுக்குள் அவளுக்கு கொஞ்சம் கோபம் எட்டி பார்க்க அவள் திரும்பி பேச வர அவன் கட்டு பாட்டை இழந்து என்ன டி ஓவரா பேசுற ரொம்ப திமிர் கூடி போச்சு போல மரியாதையா சொன்னால் புரியாதா… டேய் கையை விடு டா.. ஹே வாய மூடு டி.. சரவணன் அவளின் வாயை பொத்தினான். என்ன டி புடவை இது என்று அவளை பார்த்து கேட்க அவள் அவன் கைகளை கடித்து விட உடனே சரவணன் கையை எடுத்து கொண்டான் அவள் கடித்ததும் அவன் கட்டு பாட்டை இழந்து அவளது இடையை அழுத்தி பிடித்து இனி நீ என்னமோ பண்ணிக்கோ டி உன் நல்லதை நான் நினைத்து சொன்னேன் பாரு இனி அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது. என்று சொல்ல அவள் கண்கள் கலங்கியது. அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும் உடனே அவன் பிடி தளர்த்திட சுபா அவன் பிடித்த அவளது இடையை குனிந்து பார்க்க அது சிவந்து இருந்தது. சரவணனுக்கு இப்போது தான் மிகவும் கடுமையாக நடந்து கொண்டோம் என்று தோன்ற சுபா சாரி என்று அவன் அவளின் சிவந்த இடையை வருட உடனே அவள் எரிக்கும் பார்வை பார்த்து அவன் மூக்கில் ஒரு குத்து விட்டு அவனை திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள். சரவணன் அந்த ஒரு வாரம் வீட்டு பக்கம் வரவே இல்ல ரகுவின் கெஸ் ட் ஹவுஸ் சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்தால் மித்ரன், வெண்பா, தேவகி என அனைவரும் எப்படி அடி பட்டது என்று கேட்டால் அவன் என்ன சொல்வான். அதனால் அவன் நடந்ததை நினைத்து கொண்டு இருக்க அவனுக்கு அவள் மூக்கில் குத்து விட்டது வலிக்க வில்லை. அவளின் இடையை தொட்ட விரல் எதோ செய்தது. அவன் அவளின் நினைவில் உழன்று தவித்தான்.
சுபா மனதில் அவன் அந்த பெண்ணிடம் என்ன பேசி இருப்பான் என்று மூளை குடைந்து கொண்டே இருந்தது. அவளுக்கு அவன் இப்படி அருகே இவ்வாறு நடந்து கொள்வது எதோ செய்தது. மீண்டும் இது போல் நடக்க கூடாது அவனிடம் இன்னும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் அவள் குத்து விட்டு வந்தாள். என்ன புடவை இது அப்டின்னு எதுக்கு கேட்டான் அப்போ என்னை தின்பது போல் எதுக்கு டா பார்க்கனும் அகங்காரம் பிடித்தவன் . அவனின் தொடுகை அவளை தொந்தரவு செய்ய திட்டி கொண்டு இருந்தாள். இப்படியே ஒருவரை ஒருவர் மாறி மாறி நினைத்து கொண்டு இருந்தனர்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா அவளை நினைத்து கொண்டே தயாரானான். கிட்ட தட்ட பேக் டூ காலேஜ் டேஸ் ல எப்படி இருந்தானோ அது போல் ரெடி ஆகினான். விவேகா சோக கீதம் வாசித்து கொண்டே பஸ்ஸில் ஏறியதும் தலை கவித்து தூங்க ஆரம்பிக்க வெண்பா இது திருந்தாது என்று நினைத்து கொண்டே போன் நோண்டி கொண்டு வர சிறிது தூரத்தில் வண்டி நின்றது.
அதுவரை பஸ்சில் கத்தி கொண்டு இருந்த அனைவரும் இப்போது அமைதியாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்க வெண்பா ஜன்னல் வழியே வாயை பிளந்து கொண்டு பார்த்தாள். விவேகா இப்போதும் முழிக்க வில்லை. இப்போது கதவு சாத்த பட்டது பஸ்சில் அவன் ஏறி கொண்டான். வெண்பாவின் போன் உடனே ரிங் ஆக ஹலோ அண்.. ஹே சைலண்ட வெண்பா.. அவள் முன்னால் பார்த்து கொண்டே பேசிட
விவேகா, ஹே என்ன ஆச்சு பஸ் இன்னிக்கு இவளோ அமைதியா வருது என்று தலையை தூக்கிட வெண்பா, ஹே ஹே தூங்கு டி எல்லார்க்கும் உன்னை மாதிரி தூக்கம் வருது போல என்று அவள் தலையை வலு கட்டாயமாக கீழே படுக்க வைத்தாள்.
அவள் ஹே விடு எருமை என்று சொல்லி நிமிர பஸ்சே அவளை திரும்பி பார்க்க அய்யோ என்று தலையை குனிந்து கொண்டாள். வெண்பா, நான் சொன்னா கேட்கணும் தூங்கி தொலை.. விவேகா சரி என்று கண்களை மூடியவள் அவளிடம் ஹே அவன் ஆபீஸ் போயிறுப்பான்ல.. வெண்பா உதடு மடித்து கடித்து கொண்டே மம் ஆமா டி நீ தூங்கு என்று சொல்ல அவள் கனவில் இன்பாவை தேட ஆரம்பித்தாள்.
அவன் எங்கே இருக்கிறான்.. உங்க கெஸ் என்ன… Readers comment me..
தொடரும்…
Episode 152,
விவேகா கனவில் இன்பாவை தேடி கொண்டு இருக்க வெண்பா சிரித்து கொண்டே இன்பாவுக்கு செய்தி அனுப்பினாள்.
அண்ணா அவ இன்னிக்கு உன் லுக் ல பிளார்ட் ஆகி விடுவாள். எப்போ பாரு உன்னை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறாள் என்று தட்டி விட அதை படித்த இன்பா முகத்தில் நிறைவான புன்னகை. அவன் சில விஷயத்தை அவளுக்கு செய்தியாக அனுப்ப அதை படித்த அவள் மம் சிறப்பா செய்து விடுவோம் என்று சொல்லி போன் வைத்தாள்.
காலேஜ் வருவதற்கு ஒரு பத்து நிமிடதிற்கு முன் வெண்பா அவளை எழுப்பினாள். ஹே காலேஜ் வந்து விட்டது எழு டி எருமை… அவள் ஹே நான் பஸ் ல யே இப்படியே தூங்கி விடுகிறேன் இன்னிக்கி முதல் ஹவர் சிபி சார் நடத்தியே கொள்ளுவாரு… சீக்கிரம் எழுந்து போ எனக்கு டைம் ஆகுது என்று சொல்ல அவள் சோம்பல் முறித்து கொண்டும் கெட்டாவி விட்டு கொண்டே எழுந்தாள்.
அனைவரும் பசில் இருந்து இறங்கினர். இவள் சிறிது நேரம் அந்த பஸ் ஜன்னலில் தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்க்க இன்பா நடந்து செல்வது போல் அவனின் பின் பக்கம் கொஞ்சம் சைடாக கொஞ்சம் தெரிந்து இருக்க..
விவேகா, ஹே வெண்பா… டீச்சர்.அது! அவனை? அங்கே பாரு டி !அது அவன் தான்! என்று வேக வேகமாக பஸ்ல இருந்து இறங்க உடனே வெண்பா, அவரு சஸ்பென்டை கேன்சல் பண்ணிட்டு இப்போ டியூட்டில ஜாயின் பண்ணிட்டாரே.. நீ தானடி சொன்ன அப்புறம் எப்படி அண்ணா இங்க இருப்பாங்க…
விவேகா, இல்ல டி அது இன்பா தான் எனக்கு நல்லா தெரியும் பின்னாடி இருந்து பார்க்கும்போது அது அவன் மாதிரி தான் தெரிஞ்சது என்று கண்களை தேய்த்துக்கொண்டு அவள் மீண்டும் மீண்டும் பார்த்து சொல்ல
அவள் எங்கே காட்டு பார்க்கலாம் என்று பார்க்க அங்கே நிறைய மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். ஏய் லூசு இங்க நிறைய பசங்க இருக்காங்க ,உனக்கு ஒரே மாதிரி தெரிந்திருக்கும், பின்னாடி இருந்து பார்க்கும்போது எல்லாரும் ஒரே மாதிரி தான் தெரிவாங்க. நீ அதை பார்த்து அது அண்ணா தான் அப்டின்னு தப்பா நினைச்சுட்டு இருக்காத போ. முதல்ல இன்பா அண்ணாவை நினைச்சுட்டு சுத்திட்டு இருக்காத.. என்று சொல்லி அவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டே கீழே இறங்கினாள்.
விவேகா அவனது நினைவாக மெதுவாக நடந்து வர “உன்னை இங்கே யாரும் பொன்னு பார்க்க வர வில்லைையே, எதுக்கு இவளோ மெதுவா நடந்து வர சீக்கிரம் வாடி எருமை” என்று திட்ட அவள் அவன் நினவுகளில் இருந்து மீட்டுக் கொண்டு அவள் வேக வேகமாக அவழுடன் வந்து சேர்ந்து கொண்டாள். அவளிடம் இருந்து விடை பெற்று அவள் வகுப்பை நோக்கி செல்ல வெண்பா சிரித்து கொண்டே இன்பாவுக்கு செய்தி அனுப்பினாள்.
விவேகா நேராக ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவி கொண்டு வகுப்புக்கு செல்ல ஆதி, மைதிலி, சிவா என மூவரும் அதற்கு முன்னே வந்து இருந்தனர்.
ஆதி அவளை பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு விவேகா இப்போ நீ என்ன கேட்க போகிறாய் என்று எனக்கு தெரியும் ஒரு நிமிடம் என்று சொல்லி இன்பா சார் இப்போ ஆபீஸ் போயிருப்பாரு ஒரு வேளை நைட்டு டூட்டியாக இருந்தா வீட்டுக்கு வந்து தூங்கி இருப்பாரு.. போதுமா..
ஹே போடா நீ வேற என்று அவள் தொப்பென்று இடத்துள் அமர்ந்தாள். சிவா, என்னாச்சு மேடம் ஒரே போலீஸ் கனவா வருதா… ஆதி, இல்ல எங்கே பார்த்தாலும் ips தெரியுறாரா என்று சொல்லி இருவரும் மாறி மாறி கை தட்ட விவேகா ஆதி கொன்றுவேன் அப்டின்னு சொல்ல மாட்டேன் ராட்சசி கிட்ட எதாவது புதுசா சொல்லி விடுவேன். மறுபடியும் உன்னை வச்ச கண் வாங்காமல் யாழினி பார்த்துட்டே இருக்கான்னு சொல்லவா… சிவா, ஹே யார் அது என்ன விஷயம்.. உடனே ஆதி ஹே ஏ ன் டி உனக்கு இந்த கொலை வெறி என்று பேச சிவா எதட்சயாக முன்னால் பார்க்க யாழினி விவேகா சொன்னது போல் ஆதியை பார்த்து கொண்டு இருக்க..
டேய் விவேகா சொன்னது போல் அவ உன்னை திங்கிற மாதிரி பார்க்கிறாள் டா மச்சான்.. அவன் திடுகிட்டு பார்க்க யாழினி அதற்குள் திரும்பி கொண்டாள். ஆதி, டேய் என்னை டென்ஷன் பண்ணாத மச்சி நானே இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா கிளாஸ்க்கு வரேன் டா.. சிவா, சரி அதை விடு யாரு அந்த ராட்சஸி.. ஆதி, அது என் அக்கா டா.. என்று சமாளித்தான்.
மாணவர்கள் அனைவரும் வகுப்புக்கு வர வகுப்பு ஆரம்பித்தது. விவேகா கண்ணத்தில் கை வைத்து கொண்டு சிபி எடுக்கும் பாடத்தை கவனித்து கொண்டு எழுதி கொண்டு இருக்க சிபி நடத்தி கொண்டே அவள் அருகில் வந்தவன். இரண்டாவது ஹவர் ஆரம்பித்தது. அவன் அவள் அருகில் வந்தான்.
ஹலோ மேடம் எனக்கு இப்படி கிளாஸ் எடுக்கும் போது கண்ணத்தில கை, குப்புற படுத்து தூங்குவது எல்லாம் பிடிக்காது நீ வெண்பா ப்ரெண்ட் ஆகி விட்ட அதுவும் இல்லாம நீ ரொம்ப ப்ரேவ் கேர்ல் அதனால தான் விட்டேன் சோ இப்போ கொஞ்சம் எடென் மா…
விவேகா, சார் உங்க கண்ணுக்கு நான் மட்டும் தான் தெரியுரெனா எதுக்கு உங்க கூட இருக்க எல்லாரும் என்னையவே வந்து சீண்டுகிரீர்கள். என்று எழுதி கொண்டே பதில் அளித்தாள்.
சிபி அவள் சொல்வது புரியாமல் அதை பற்றி கேட்க போக அப்போது அவனுக்கு போன் வந்தது.
போங்க சார் போங்க போய் போன் பேசிட்டு வாங்க அது வரை நான் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று தலை கவில்த்தாள்.
சிபி, ஹலோ என்ன சார் எனக்கு போன் பண்ணி இருக்கீங்க.. நீ அங்க என்ன டா பண்ணிட்டு இருக்க.. டேய் நான் கிளாஸ் எடுத்துட்டு இருக்கேன். மம் அதை தான் நான் பார்த்தேனே.. இப்போ நான் அங்கே வர போறேன். எதுக்கு.. அது உனக்கு தேவை இல்லாத ஒன்னு அண்ட் ஒரு முக்கிய மிஸன்காக சில ஸ்டூடண்ட்ஸ்ச செலக்ட் பண்ணி கோச்சிங் கொடுக்கணும்..
சிபி, அப்போ உன்னோட டூட்டி.. நான் என்று இன்பா அவன் இடை நிறுத்தத்தை இரண்டு வரியில் கூறினான். சிபி இதை கேட்டதும் ஐ ம் சாரி டா நீ வா நான் உனக்கு வெயிட் பன்றேன் என்று சொல்லி போன் வைக்க சிபி என்று சத்தம் கேட்க அங்கே இன்பா அவனை நோக்கி ஒவ்வொரு அடிகளாக வந்து கொண்டு இருந்தான்.
அவன் உன்னை பார்த்தால் அந்த சஸ்பென்ட்க்கு வருத்தபடுவது போல தெரியலையே இன்னிக்கு எல்லா பொண்ணுங்களையும் மயக்க தான் டிப் டாப்பா வந்து இருக்க போல இன்பா அவனது கூலர்ஸ கலட்டி கொண்டே வாட் ஆர் யூ டாகின் லைக் திஸ்.. சில்லி கொஸ்டீன்.. உனக்கு என்னை பற்றி தெரியாதா என்ன.. என்று சொல்லி அந்த கிளாஸ்க்குள் உள்ளே நுழைந்தான்.
அவனை பார்த்து மாணவிகள் எல்லாம் அவனின் இந்த புதிய தோற்றத்தில் மயங்கி பார்க்க மாணவர்கள் எல்லாம் பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். மைதிலி, ஹே விவி சாரு..! உடனே இவள் நிமிர்ந்து பார்க்க அங்கு இன்பா, சிபி இருவரும் நின்று கொண்டு இருக்க உடனே அவள் மனம் அய்யோ எங்கே பார்த்தாலும் அவனே தெரிகிறானே… என்று நினைத்து கொண்டு அவள் லிதி எனக்கு எங்கே பார்த்தாலும் இன்பா இருப்பது போல் தோணுது இதுக்கு நான் என்னடி பன்றது.. விவேகா அவர் நிஜமா தெரிகிறார் டி இல்ல எனக்கு புரியல..
அனைவரும் அவனுக்கு விஸ் பண்ண உடனே விவேகா, ஹே உனக்கும் அவன் தெரிகிறானா அப்போ நீயும் அவனை நினைத்து கொண்டு இருக்கிறாயா என்று அவள் உளர
ஆதி, ஹே ஆர்வம் அவர் எல்லார் கண்ணுக்கும் தெரிகிறார் அவர் உன் முன்னாடி தான் நிக்குறார்.. என்று சொல்ல விவேகா இதை கேட்டு உரைந்து போனாள். கண்களை தேய்த்து கொண்டு மீண்டும் பார்க்க அவன் அவள் முன் நிதர்சனமாக நின்று கொண்டு இருக்க அவள் கண்களில் சந்தோஷம் கண்ணீராக வந்தது. இன்பா (பிரியமானவளே படத்தில் விஜய் ஒரு கியூட் லுக் வாயில் சாக்லேட் அடக்கி வைப்பது நாக்கை கண்ணத்தில அடக்கும் அந்த லுக் விட) அவளை பார்த்து ஒரு லுக்கு விட்டான் அவள் கண்கள் இரண்டும் வெளியே வருவதை போல் பார்த்து கொண்டு இருந்தாள்.
இன்பா சிபியுடன் பேசி கொண்டே என்ன மிஸ்டர் சிபி எல்லாரும் எனக்கு விஸ் பண்றாங்க அந்த லாஸ்ட் பெஞ்ச் பொண்ணு அப்படியே என்னை தென வெட்டா பார்க்கிறாள். சிபி யார் என்று பார்க்க அது விவேகா தான் உடனே விவேகா அவனை பார்த்து முறைத்தாள். மைதிலி, ஹே சார் செம்மையாக இருக்காரு.. மீனா காலேஜ் பையன் மாதிரி செம்மையாக இருக்காரு டி என் கண்ணு அங்கே இருந்து எடுக்க முடியல..
சிபி, வாட் ஸ் திஸ் விவேகா.. அவள் எழுந்து நின்று அவர் உங்களை தானே பார்க்க வந்து இருக்கிறார் நான் எதுக்கு சார் விஸ் பண்ணனும். அவர் இங்க கிளாஸ் எடுக்க வந்த மாதிரி பேசுறீங்க.. அவர் என்ன ஸ்டாபா.. என்று சொல்ல சிபி அவளை அதிர்ச்சியாக ஆச்சர்யமாக பார்த்தான்.
விவேகா, அவர் யாரா வெனா இருக்கட்டுமே என்று அவள் சொல்லும் போது காலை இடைவேளை பெல் அடிக்க மாணவ மாணவிகள் விருப்பம் உள்ளவர்கள் ப்ரேக் சென்றனர் விவேகா இப்போது சிரித்து கொண்டே சிபியா பார்த்துப் உங்களுக்காக உங்களுக்காக மட்டும் தான் இப்போ விஸ் பண்றேன் என்று அவள் ஒரு வணக்கத்தை போட.. இன்பா அவளை கண்டு கொள்ளாமல் மிஸ்டர் சிபி நான் யாருன்னு தெரியும் போது அந்த கேர்ல்க்கு அப்போ இருக்கு என்று சொல்லி அவன் பார்வை இனியாள் பக்கம் திரும்பியது.
அவள் இதற்காகவே காத்து கொண்டு இருந்தவள் போல் சார் இன்னிக்கு நீங்க வேற லெவல் என்று பனி கட்டிகளை அள்ளி வீசினாள். சிபி மனம் இனியாள் இன்பாவிடம் பேசுவது ஏனோ சங்கடத்தை கொடுத்தது. ஆனாலும் அதை வெளி காட்டி கொள்ள வில்லை.
விவேகாவுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிய அவள் சார் சீக்கிரம் கிளாஸ் எடுங்க நமக்கு டைம் வேஸ்ட் ஆகுது… இன்பா,ஹலோ இது இன்டர்வல் ஓவர் சீன் வேண்டாம்
சிபி, அவள் அருகில் வந்து இவர் காலேஜ் சேர் பெர்சன் மா.. அது இவர் இல்ல வசு மேம் தான்.. நீங்க கூட தான் என்று சொல்ல சிபி அவள் பேச்சில் சிரித்து விட்டான். நீ இருக்கியே என்று அவளிடம் பேச இன்பா, மிஸ்டர் இது ஒன்னும் பீச் இல்ல .. விவேகா மெதுவாக சார் அதை அவர் சொல்றாரு பாருங்க..
கவ்யா அவள் வகுப்பில் இருக்க இன்பா காலேஜ் வந்து இருக்கும் செய்தி கேட்டதும் அவள்…?
தொடரும்…
Episode 153,
விவேகா, சிபியிடம் சார் யாரு இங்கே ஸீனா வந்து சீன் கிரிஏட் பண்ணிட்டு இருக்காங்க அப்டின்னு உங்களுக்கு தெரிந்து இருக்குமே… என்று கொஞ்சம் சத்தமாக சொல்ல
சிபி, நீ யாரை சொல்ற.. அவள் கண்கள் குறும்பாக இருக்க.. வேண்டாம் விவேகா அவன் என்ன மாதிரி இல்ல மா ரொம்ப கோவம் வரும்.. விவேகா எந்த பக்கமா வரும் அப்டின்னு சொல்லுங்க நான் ஒரு கை பார்த்து விடுகிறேன்.
இன்பா, மிஸ்டர் சிபி என்னை இங்கே கவனிக்காமல் அங்கே என்ன வெட்டி பேச்சு.. சிபி, மம் இதோ வரேன் சார் என்று அவன் சென்றான்.
இனியாள், சிபியிடம் நீங்க எதுக்கு அவரை சார்ன்னு கூப்பிடுகிறார்கள். நான் இங்கே வொர்க் பண்ற ஸ்டாப் அவ்ளோ தான் எனக்கும் அவர்க்கும் இருக்க ரிலேசன்ஷிப்.. இன்பா விவேகாவை காதலாக பார்த்து கண் சிமிட்டிட அவள் அவனை பார்த்து முறைத்தாள்.
அவர்கள் இருவரும் வெளியே சென்றனர். சிறிது நேரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து மாணவ மாணவியர் ஆடிட்டோரியம் வர வேண்டும் என்று செய்தி வர அனைவரும் என்ன வாக இருக்கும் எதுவும் கல்ச்சரல்ஸ்சா இருக்குமா என்று அவர்களுக்குள் பேசி கொண்டு அங்கே சென்றனர்.
வெண்பா, அவள் வகுப்பு தோழிகளுடன் அமர்ந்து இருந்தவள். கண்களால் இருவரை தேடினாள். விவேகா அவள் வகுப்பு மாணவிகளுடன் அமர்ந்து இருக்க அவளுக்கு நேராக ஆதி மாணவர்கள் வரிசையில் அமர்ந்து இருந்தான். இவனை என்று மனதில் அர்ச்சனை செய்தவள். விவி யை கூப்பிடு என்று சொல்ல ஒருவர் பின் என கடைசி வரிசையில் இருந்து அவள் முன்னே பார்க்க
வெண்பா, மரியாதையா முன்னாடி என் பக்கத்துல வாடி.. ஹே போ வர மாட்டேன்… பிளீஸ் வா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்.. ஒரு சில நொடிகள் யோசித்தவள் எழுந்து அமர்ந்திருக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.
அவள் ஆதி அப்பொழுதும் அங்கிருந்து வரவில்லை அங்கு எல்லா இடங்களிலும் சலசலப்பு சட்டம் கேட்டது.உடனே திரும்பி பார்க்க டோரி கல்லூரி முதல்வர்,சிவில் மெக்கானிக்கல், கெமிக்கல், சி எஸ், ஐ டி ,என அந்த கல்லூரியில் இருக்கும் துறை என அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்.
அங்கே சலசலப்பு சத்தம் வாயிலில் ஒருவர் நடந்து வர அனைவரும் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.
கல்வியாளர்கள் மாணவர்களிடம் அமைதியாக இருக்கும் படி சொல்ல… அவன் வந்தான் அவன்தான் இன்பா உடனே பக்கத்தில் இருந்த
சுகன் ( சுகன்யா), வாவ் சான்சே இல்ல…
சுமி, ஏய் சரண் (சரண்யா) செமையா இருக்காரு.. அங்கே பாரு என்று சுமி சொல்ல
அய்யோ என்னால் கண்ணை எடுக்க முடியல இப்போவே ips க்கு படித்து அட்லீ ஸ்ட் ஒரு கான்ஸ்டபிள் ஆகி அவர் பக்கத்திலே இருக்க படிக்க போறேன்..
சுமி, ஹே நான் தான் என்று அவர்கள் இன்பா வை சைட் அடிக்க.. விவேகம் முறைத்துக் கொண்டு வெண்பாவை திரும்பி பார்க்க அவள் மீது அரசியலில் இதெல்லாம் சாதாரணம் விடு டி…அப்படியா…
விவேகா ஓ என் பிரெண்ட்ஸ் எல்லாரும் அவன இப்படி சைட் அடிப்பதையும் கொஞ்சத்தையும் பார்க்கத்தான் என்ன ஒரு விஷயம் சொல்லணும் அப்படின்னு கூப்பிட்டியா அதுவும் உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்ன சொல்றா பாத்தியா அந்த சரண்யா செமையா இருக்கான்னு சொல்றா அந்த சுகன்யா ஐபிஎஸ் படிக்க போறாலாம் அட்லீஸ்ட் கான்ஸ்டபில் ஆக போறலாம் அந்த சுமி என்று சொல்லி
எல்லாம் என் நேரம் அவன வு என்ன பண்றதுன்னு தெரியல அதுக்கு அவன் சஸ்பென்ஸ் கேன்சல் பண்ணாம ஒழுங்கா டியூட்டிக்கு போய் இருக்கலாம் இங்கே வந்து இப்பொழுது எல்லாம் அவனை தான் வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாாளுக பாரு டி… என சொல்ல வெண்பா அந்த ஆடிட்டோரியத்தை நோட்டம் விட்டாள்.அவர்களுக்குள் மாணவிகள் அவர்களுக்கும் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்போது அந்த இப்போது கல்லூரி முதல்வர் பொதுவாக பேச ஆரம்பித்த இன்பாவை வரவேற்று அவரை பேச சொல்ல இன்பா எழுந்து மைக் அருகில் வர மாணவிகள் அனைவரும் ஓ..ஓ.. ஓ… என்று கத்தினார்.
விவேகா வெண்பாவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஹே இப்போ என்னை எதுக்கு டி முறைக்கிற அங்கே அவனை அண்ணாவை பார்த்து முறை.. அவன் ஹலோ இன்பா மைக்கை பிடித்து ஹலோ ஸ்டுடென்ட்ஸ் என்று சொல்ல மாணவிகள் கைகளை தட்டி விசில் அடித்துக் கொண்டிருக்க,
இன்பா ஒரு புன்னகை புரிந்தான்.
உடனே சுமி அந்த கண்ணக்குடி தாடியில கொஞ்சம் மறைஞ்சு போச்சு நான் மிஸ் பண்றேன்… என்று சொல்லி தொடையில் அடிக்க விவேகா அவள் பிடித்து கிள்ளி விட்டாள்.
வெண்பா, ஹேய் கொஞ்சம் கம்முனு இரு சுமி இங்கே எனக்கு தான் டி சேதாரம் ஆகுது.. ஹே போடி டுபுக்கு என்று சொல்லி அவர்கள் கவனம் எல்லாம் இன்பா பேச்சில் இருந்தது.
இப்போது பேச ஆரம்பித்தான் லெட்ஸ் கம் டு த பாயிண்டுக்கு வரேன் அதாவது
செகண்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் ரெண்டு செம்ம முடிச்சிட்டு செகண்ட் இயர் வந்து இருப்பீங்க…
அதே போல் தேர்டு இயர் மைடியர் ஸ்டுடென்ட்ஸ் நாலு செம்ம முடிச்சிட்டு தேர்டு இயர் வந்திருப்பீங்க…
பைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் ஆறு செம முடிச்சிட்டு பைனல் இயர் வந்திங்க சரியா…
சோ இப்ப எதுக்கு நான் உங்களை வர சொல்லி இருக்கேன் அப்படின்னா நீங்க பிரிவியஸ்ல முடிச்சா செமஸ்டர்ல இருக்குற எல்லாத்தையும் இப்ப ஒன் மந்த்குள்ள ரிவைஸ் பண்ணி ஒரு டெஸ்ட் நாங்க இங்க காலேஜ்ல கண்டக்ட் பண்ணுவோம் அதுல வந்து எல்லாரும் பார்ட்டிசிபேட் பண்ணனும். அதுக்கு தான் உங்களை வர சொன்னேன்… என்று இன்பா சொல்ல
இதை கேட்டதும் அனைத்து மாணவர்களும் சோ என்று சோகமாக கட்டினார் மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் சோகமாக இருக்க
இன்பா இது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் உங்க வில் பவர் அவங்களோட நாலெட்ஜ் அவங்களோட கெபாசிட்டி என்ன எப்படி இருக்கு அப்படின்னு தெரிஞ்சுக்க தான் இந்த டெஸ்ட் வைக்கிறோம்.
இந்த டெஸ்ட்ல யார் யார் நல்ல ஒரு நல்ல ஒரு பெர்ஃபார்ம் பண்ணி நல்ல ஒரு பொசிஷனுக்கு வரிங்களோ அவங்கள நாங்க சூஸ் பண்ணி இன்னொரு கோச்சிங் கொடுப்போம் அந்த கோச்சிங்ல பெஸ்ட் ஆப் பெர்ஃபார்ம் பண்றவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு…
இத வந்து நீங்க எப்படி எடுத்துக்குறீங்க நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்றத பத்தி சொல்லுங்க என்று அவன் கூறி முடித்தான்.
சில மாணவ மாணவிகள் சில கேள்விகளை கேட்டனர் அதற்காக அதற்கு அவன் அழகாக எளிமையாக பதில் கூறினான். இறுதியாக உங்களால முடியும்னு நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க என்று சொல்ல அனைவரும் எஸ் என்று கத்த இன்ப நிறைவாக புன்னகைத்தான்.
அதோடு அந்த மீட்டிங் முடிந்தது அனைவரும் அவரவர் வகுப்புக்கு சென்றனர்.
அடுத்த மீட்டிங் எம் பி ஏ பி ஜி கிராஜுவேட் படித்துக் கொண்டிருக்கும் போஸ்ட் கிராஜுவேட் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு அடுத்த மீட்டிங் என்று சொல்ல அவர்கள் வர அங்கே கவ்யா வந்தாள்.
அவளுக்கு ஏற்கனவே தெரியும் அவன் வந்து இருக்கிறான் என்று வகுப்பு தோழிகள் சொல்ல அவள் ஒருபுறம் கோபமாகவும் ஒரு புறம் எதற்கு இவன் தேவையில்லாமல் இங்கு வந்திருக்கிறான் என்றும் தோன்றியது. மனதுக்குள் கட்டுக்கடங்காத வெறுப்பு கோபம் என அனைத்தும் இருந்தது. அவளை பார்க்கத்தான் வந்திருக்கிறான் இங்கு தானே படித்துக் கொண்டிருக்கிறாள் அவனுடைய காதலி அவள் கிடைக்கட்டும் அவளை… என்று பற்களை நரநுறத்துக் கொண்டே வந்தாள்.
அங்கே இன்பா வந்து இருக்கும் தோரணையைப் பார்த்து ஒரு நிமிடம் ஜிவ்வென இருந்தது. f*** கொல்ற டா என்று கண்களில் காதல் அவளுக்கு ஆனால் பைத்தியமாக பார்த்து கொண்டு வந்து அமர்ந்தாள்.
இன்பா அவள் வருகிறாள் என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டான். அவன் சொல்ல வந்ததை சீக்கிரமாக சொல்லி முடித்தான். கவ்யா, அவன் அருகில் நடந்து சென்றாள். ஹாய் ராகவ் உன்னோட காதலியை பார்க்க வந்தியா என்ன.. அவன் எந்த பதிலும் அவளுக்கு சொல்ல வில்லை.. அப்போ இந்த மூணு மாசமும் என் பக்கத்திலய இருக்க போற.. அவன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.. சரி இன்னிக்கு செம்மயா இருக்க இன்னிக்கு ஒரு நாள் உன் காதலியை மறந்திடு நம்ம ரெண்டு பேரும் ஜாலியா பீச் போலாம் அங்கே எனக்கு ஒரு பீச் ஹவுஸ் போலாம் வரியா.. ஹே சொல்லிட்டு போடா.. உன்னை பார்த்தால் நான் காசிக்கு தான் போகணும் என்று சொல்லி விட்டு அவன் வேக நடையிட்டான்.
அவன் சொன்னதை கேட்டு அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்துவிட்டு கொண்டாள் அவளுக்கே அது வலித்தது அவன் பின்னால் திரும்பி அவளை எழனமாக புன்னகைத்து விட்டு சென்றான்.
அவன் அறைக்கு வந்த இன்பா ச்ச்ச.. என்று நினைத்தான்..எல்லாரும் என்னையவே பாத்துட்டு இருக்காங்க இவ என்னடான்னா என்ன பார்த்து முறைக்கிறாளே.. நான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்லி அவனுடைய ஃபோனில் உள்ள கேமராவில் பிரண்ட் கேமரா வைத்து அவன் முகத்தைப் பார்த்தான்.. ராகவ் சும்மா சொல்லக்கூடாது நீ இன்னைக்கு அழகா தான் டா இருக்க.. அவளுக்கு திமிர் டா அவளை நீ சும்மா விடக்கூடாது என்று இவளை இன்னைக்கு கவனிச்சு விட்டா தான் எல்லாமே சரியா வரும் என்று நினைத்தான்..விவேகா இரு டி உன்னை இன்னிக்கி தூக்குறேன்..
மதிய உணவு இடைவேளை வந்தது. இன்பா அவளை தேட அங்கே அவளின் நண்பர் பட்டாளங்களுடன் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை எல்லோரும் அனைவரும் அவனைப் பார்க்க ஐயோ இங்கேயும் வந்துட்டானா என்று நினைத்துக் கொண்டு தலையில் கை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க
ஆதி, ஹே விவேகா அவர் உன்ன பாக்க தாண்டி வந்திருக்காரு ஒரு தடவை பாரேன் பார்த்து தொலையேன்
நீ போடா நான் பார்க்க மாட்டேன் அவன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல கண்ணு முன்னாடி வந்து நிற்கிறான்..
ஆதி சிரித்துக்கொண்டே சர்ப்ரைஸ் அப்படித்தான் இருக்கும்..
மண்ணாங்கட்டி… என்று அவள் சொல்ல..
இன்பா மனம் வாடி.. இன்னிக்கு உன்னை கோட்ரெஸ் கிட்ட வைத்து கொள்கிறேன் என்று சொல்லி கொண்டே மீண்டும் ஒரு முறை அவளை பார்த்து விட்டு சென்றான்.
விவேகா…?
தொடரும்…
Episode 154,
இன்பா அவளை வீட்டில் போய் பார்த்து கொள்கிறேன் என்று நினைத்து விட்டு வீட்டிற்க்கு கிளம்பினான் .
இங்கே விவேகா வகுப்புக்கு வந்ததும் அவன் மட்டும் தான் அவள் நினைவுகளில் இருந்தான்.
அவனின் இந்த பரிமானம் அவளுக்கு புதிது முகத்தில் புன்னகை தவழ்ந்தது மனதில் ஒரு வித சந்தோஷம் அவள் மனதில் இந்த சஸ்பெண்ட் கேன்ஸல் செய்து விட்டான் என்ற சந்தோஷம் அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை பட்டாள் .
ஆனாலும் இத்தனை நாள் நம்மை ஆழ வைத்து விட்டான் என்று மனதில் அவன் மீது சிறு கோபம் இருந்தது .
ஆதயே நினைத்து கொண்டு இருந்தவள் சிறிது நேரம் கழித்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் .
மாலை ஆனது ஆதி “என்ன டி ரொம்ப அமைதியா இருக்க ,இப்போ என்னை என்ன பண்ண சொல்ற ….
ஹே ஓவரா பண்ணாத..
யாரு நானா ?
மம் நீ தான்..
சரி நீயா என கிட்ட வந்து எவும் சொல்லுவா தானே அப்போ பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவன் விட ஹே ஆதி பிளீஸ் இப்படி கோவித்து கொள்ளாதே.. நான் எதுக்கு உன் கிட்ட கோவப்படனும் உனக்கு நான் யாரு ? ஹே அழுது விடுவேன் டா என்று அவள் அவன் முன் நின்று சமாதானான் செய்ய அவன் சிரித்து விட்டான்.. ஆதி, தேன் மிட்டாய் உனக்காக தான் அவர் சஸ்பெண்ட கேன்ஸல் பண்ணி இருப்பாரு.. மம் அப்படி மட்டும் நீ தப்பு கணக்கு போட்டு விடாதே அவர் எனி டை மம் போலீஸா தான் தினக் பண்ணுவான் இதுக்கு பின்னாடி ஒரு பெரிய காரணம் இருக்கும் பாரு டா .. ஆதி சிரித்து கொண்டே அந்த அளவுக்கு மேம் கக்கு சாரை பற்றி அத்து படி போல அவள் வெட்கபட்டு மம் கொஞ்சம் தெரியும் சொல்ல ஆதி, மைதிலி இங்கே பாரு யாரோ ஒருத்தவங்க கண்ணத்துல சிவப்பா இருக்கே ஹேய் அடி வாங்க போறீங்க என்று அவர்களுடன் விளையாடி விட்டு மாலை வீட்டுக்கு கிளம்பினாள் . பேருந்தில் வந்து அமர்ந்து கொண்டாள் . வெண்பா வர அவளை கண்டு கொள்ள வில்லை .. அவள் பாரு டா மேடம் கக்கு ஓவர் திமிரு போல அவள் திரும்பி முறைக்க ஹே இப்போ நான் என்ன பணனேன் என்னை எதுக்கு முறைக்கிற .. உனக்கு அவன் வராது முன்னவே திகேரியும் தானே .. ஹே நிஜமா இல்ல டி இங்கே பஸ்சில் தான் டி எனக்கு தெரியும் மற்ற படி எனக்கு தெரியாது நம்பு டி.. .. அவள் அதற்கு மேல் எதுவும் சொல்ல வில்லை.
வெண்பா பேருந்தில் இருந்து இறங்கும் வரைக்கும் அவளை சீண்டிக்கொண்டே வந்தாள்.விவேகா கோபப்பட்டு கொண்டே வந்தாள். கீழே இறங்கியதும் ஹே சரவணன் அண்ணா வீட்டில் இருக்காங்களா.. வெண்பா இல்ல விவேகா அண்ணா வந்து வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகுது இது முக்கியமான ப்ராஜெக்ட் அதனால வர்றதில்லை இந்த வாரம் சனி ஞாயிறு வரும் நினைக்கிறேன்.
ஏன் கேக்குற இல்ல ஏதாவது ஒர்க் இருக்கா அப்படின்னு கேக்குறதுக்கு தான் கேட்டேன் சரி ஓகே பார்க்கலாம் என்று இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது இன்பாஏதோ ஒரு வேலையாக அவனது வீட்டில் இருந்து வெளியே நடந்து கார் பார்க்கிங் வந்து கொண்டிருக்க அப்பொழுது சரியாக வருண் தனது வண்டியை அங்கே நிறுத்திவிட்டு எதிர் பக்கம் வந்து கொண்டிருந்தான்.
இன்பாவை பார்த்ததும் அவன் சஸ்பண்டான விஷயம் எல்லாம் அனைத்தும் அவனுக்கு தெரியும். இப்பொழுது பேசாமல் செல்ல சங்கடமாக இருக்கும் என்று நினைத்தவன். இன்பாவுக்கு அருகில் சென்று வணக்கம் சொன்னான்.
வணக்கம் செய்தான் என்று ஒரு சிரிப்பு சிரிக்க சார். வீட்டுக்கு வாங்களேன் சும்மா ஒரு காபி சாப்பிடலாம் என்று அவன் பயந்து பயந்து கொண்டே கூப்பிட
உடனே மம் போலாம் என்று சொல்லி வருண் வீட்டுக்கு அவனோடு கிளம்பினான்.
விவேகா அவளது வீட்டுக்குச் சென்றவள் நேராக சென்று முகம் கழுவி உடைய எல்லாம் மாற்றி தன்னை பிரஷ் செய்து கொண்டு அதிதியை பார்க்க வருண் வீட்டுக்கு கிளம்பினாள்.
அவளுக்கு இன்பா அங்கே இருக்கிறான் என்று தெரியாது .இவள் ஜாலியாக என்னடி டீ போட்டியா என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய அங்கு இன்பா வருன் அதிதி மூவரும் இருந்தனர் அவர்கள் இருவரும் இருக்கையில் அமர்ந்திருக்க அதிதி நின்று கொண்டிருந்தாள்.
விவேகா இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நாக்கு கடித்துக் கொண்டு நெளிந்து கொண்டே நின்றாள்.
வா வா டீ போட்டுட்டேன் வந்து குடி என்று சொல்லி அவள அழைத்துச் சென்றாள். அவன் அதற்கு மேல் அவளை பார்க்க வில்லை. என்ன டி அவர் இங்கே வந்து இருக்கிறார். உனக்கு என்ன.. இல்ல சும்மா கேட்டேன். இன்பா, நான் பார்க்கும் பார்த்து கொண்டு இருக்கும் கேஸ் எல்லாம் கொஞ்சம் கலெக்ட் பண்ணி எடுத்து வந்து விட்டு எனக்கு கால் பண்ணு நான் வந்து உன் கிட்ட வாங்கு கொள்கிறேன்.
வருண், சார் அப்போ ஸ்டேஷன் வர மாட்டிங்களா.. இன்பா ஒரு வெற்று புன்னகை சிந்தினான். அதற்குள் கங்கா வந்தார். அவர் வந்ததும் விவேகா மிகவும் பவியமாக நடந்து கொண்டாள். கங்கா, தம்பி எதோ சஸ்பென்ட் அப்டின்னு வருண் சொன்னான்..
இப்படி கவலைப்பட்டு தாடி எல்லாம் வளர்த்துக்கொண்டு இருக்கிறது ரொம்ப முகத்தை பார்த்தா பொக்குன்னு இருக்கு..
இதை சொன்னதும் விவேகா விழுந்து விழுந்து சிரித்தாள் வருண் அம்மா என்று பயந்து கொண்டே முறைக்க
இன்பா அவரிடம் வெகு சாதாரணமாக பேசினான். ஆன்ட்டி உங்களுக்கு இது பிடிக்கலையா…
அவர் கொஞ்சம் சிரித்துக் கொண்டே நீங்க முன்ன கம்பீரமா இருப்பது தான் எனக்கு பிடிச்சது. என்று சொல்ல விவேகா அம்மா நீ இருக்கியே என்று நினைத்து உதடு கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
அதிதி, ஹே இப்போ எதுக்கு சிரிக்கிற.. என்று காதுக்கு அருகில் சொல்ல உனக்கு புரியாது போடி.. என்று சொல்ல கங்கா விவேகாவை பார்க்க அண்ணி நான் அம்மா வுக்கு டீ எடுத்து வருகிறேன் என்று சொல்லி உள்ளே ஓடி சென்று சிரித்தாள்.
இன்பா, மம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நான் அப்படியே மாறி விடுகிறேன் என்று சொல்ல கங்கா ஒரு புன்னகை சிந்த.. ஆன்ட்டி உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு என்று சொல்ல கங்கா உடனே வெட்க பட வருண் இங்கே என்ன நடக்குது என்று யோசித்து கொண்டு அமர்ந்து இருந்தான்.
விவேகா முறைத்து கொண்டே வெளியே டீ எடுத்து கொண்டு வந்தாள். இன்பா, ஓகே வருண் நான் சொன்னது எல்லாம் ரெடி பண்ணிட்டு கால் பண்ணு.. அதிதி வரேன் மா.. ஆண்ட்டி நான் போயிட்டு வரேன் என்று சொல்லி அவன் எழுந்து வெளியே செல்ல கங்கா தம்பி இதோ சாவி பாரு விட்டுடு போறீங்க.. ஓ ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி என்று சொல்லி அவன் வாங்கி கொண்டு வெளியே சென்றான்.
அaதிதி, அச்சோ.. கங்கா என்னாச்சு.. இல்ல அத்தை அந்த பாத்திரம் எல்லாம் இன்னும் அவங்க வீட்டில் கொடுக்கவே இல்ல.. கங்கா, என்ன அதி மா நீங்க போயிட்டு வந்து கிட்ட தட்ட ரெண்டு வாரம் ஆக போகுது இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கலாமா..
அதிதி, அத்தை இப்போவே நான் இன்பா அண்ணாவை கூப்பிட்டு கொடுத்து விடுகிறேன். என்று அவள் செல்ல போக வருண், கங்கா இருவரும் அதிதி.. என்று கத்த என்ன ஆச்சு.. ஹே அவர் எவ்ளோ பெரிய பையன் பதவியில் இருக்காரு இப்படி பண்ணா அது மரியாதை குறைவு என்ன மா அதி இன்னும் பொறுப்பு இல்லாமல் பேசிட்டு இருக்க..
சாரி அத்தை என்று அவள் முகத்தை தொங்க போட.. கங்கா, விவேகா இத எல்லாம் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்திடு.. இதை கேட்டதும் அவள் அதிர்ச்சி ஆகி நானா.. நீ தான்.. நான் மாட்டேன் நான் படிக்கணும் எனக்கு தனியா போக பயமா இருக்கு.. வருண் இதை கேட்டு உனக்கு தனியா போக பயம் இதை என்ன நம்ப சொல்ற..
விவேகா, அண்ணா அண்ணா நீ போய் கொடுத்து வா நான் எனக்கு நிறைய வேலை இருக்கு.. கங்கா, ஹே நீ என்ன அவனுக்கு வேலை சொல்ற.. அம்மா அப்போ நீ போ.. வருண், விவேகா நீ பன்றது சரி இல்ல.. அண்ணா உனக்கு நான் எப்படி சொல்லுவேன் அவன் எப்போ டா அப்டின்னு என்னை லாக் பண்ண காத்து கொண்டு இருக்கான் என்று மனதுள் அவள் நினைத்து கொண்டு இருக்க…
வருண், விவேகா.. விவேகா உன் நினைப்பு எங்கே இருக்கு.. இப்போது தன்னிலைக்கு வந்தவள். ம்ம் சொல்லுங்க.. போ இதை எல்லாம் கொண்டு கொடுத்து விட்டு வா… என்று சொல்ல போறேன்.. போய் தொலையிரென்.. கங்கா, ஹேய் வந்தேனா.. என்று அவள் குரல் கொடுக்க இவள் ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
அவள் முகத்தை தொங்க போட்டு கொண்டு இன்பா வீட்டை நோக்கி நடந்தாள்.கங்கா அவனிடம் பேசிய விஷயத்தை நினைத்து சிரித்து கொண்டே சென்றாள். அவன் வீட்டிற்கு அருகில் வந்ததும் இப்போது அவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டே ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தாள்.
விவேகா அழைப்பு மணி அடிக்க இன்பா ஒரு கையில் போன் நோண்டி கொண்டே கதவை துறக்க விவேகா அவன் முன்னே அந்த பாத்திரத்தை நீட்டி அம்மா இதை கொடுத்து விட்டு வர சொன்னாங்க.. அவன் எதுவும் சொல்லாமல் கதவை திறந்து விட்டு சோபாவுல போன் நோண்டி கொண்டே அமர்ந்தான்.
விவேகா ஒரு சில நொடிகள் அங்கேயே நின்றவள் இப்போது உள்ளே சென்று அதை வைத்து விட்டு திரும்ப அப்போதும் அவன் அவளை பார்க்கவே இல்லை.
அவள் வெளியே செல்ல கதவு வரை செல்ல இன்பாவுக்கு புரை ஏறியது. உடனே அவள் வேகமாக தண்ணீர் போய் எடுத்து அவனிடம் நீட்டிட அவன் அவளை மதிக்காமல் உணவு மேஜையில் இருந்து எடுத்து குடித்தான்.
விவேகா, போடா எனக்கு என்ன.. என்று மனம் சொன்னாலும் வேறு வழி இல்லாமல் அவன் அருகில் சென்று தலையை தட்டினாள். இன்பா அவள் தட்டிய கைகளை பிடித்து கொண்டு தண்ணீரை குடித்தான்.
அவள் அவன் விடுவதற்கு நின்று கொண்டு இருக்க இன்பா…?
தொடரும்..
Episode 155,
இன்பா அவள் தட்டிய கைகளை பிடித்து கொண்டு தண்ணீரை குடித்தான்.
அவள் அவன் விடுவதற்கு நின்று கொண்டு இருக்க இன்பா தண்ணீர் குடித்து முடித்தவன் அவனை நிலை படுத்தி கொண்டு அவளை பார்க்க அவள் கீழே பார்த்து கொண்டு இருந்தாள்.
அவன் அந்த க்ளாஸ கீழே வைத்து விட்டு அவளை பார்த்து உன்னோட எக்ஸ்டிரா கரிகுளர் ஆக்டிவிடீஸ் எல்லாம் என் கிட்ட காட்ட வேண்டாம் என்று சொல்லி அவளை விட்டான்.
அவள் மம் போடா என்று கோபம் ஒரு பக்கம் என்ன அவ்ளோ தானா என்று வருத்தம் ஒரு பக்கம் மனம் நினைத்தது. மீண்டும் போனை நோண்டி கொண்டு இருக்க அவளுக்கு இப்போது கோபம் வர அதை பிடுங்கி அருகில் உள்ள சோபாவில் தூக்கி எறிந்தாள்.
இன்பா, அதான் வந்த வேலை முடிந்து விட்டது தானே இப்போ எதுக்கு இங்கேயே இருக்க கிளம்பு.. விவேகா மம் அதுவும் சரி தான் நான் போறேன் என்று சொல்லி நடந்தாள். அவனும் அவள் பின்னால் நடந்தான். இப்போ எதுக்கு என் பின்னாடி வரீங்க…
வீட்டில் நான் மட்டும் தான் இருக்கேன் யாராவது எதுவும் செய்து விட்டால் அதுக்கு தான் நீ போனதும் கதவை லாக் பண்ணனும்..
அச்சச்சோ! அப்பப்பா! என்ன ஒரு நடிப்பு ! இவன் எதையும் செய்யாமல் இருந்தால் போதாதா என்று நினைத்து கொண்டே அவள் வாசலில் ஒரு அடி வைக்க
அவள் வெளியே சென்றதும் அடுத்த நொடி திரும்புவதற்குள் கதவை டப் என சாத்தி விட்டான்.
யூ ராஸ்கல் என்று அவள் மனதில் திட்டி கொண்டே அடுத்த அடியை வைக்க மீண்டும் கதவை திறந்து கண் இமைக்கும் நொடிகளில் அவளை உள்ளே இழுத்து கொண்டு அவளை கதவின் மேல் ஒட்டி வைத்தான்.
ஹே என்ன பண்றீங்க என்று அவள் சொல்ல வருவதற்கு முன் அவள் இதழ்களை கவ்வி கொண்டான். அப்படியே கதவினை தாளிட்டவன் அவளின் இதழை விட்டு பிரிய வில்லை. அவள் இந்த இரண்டு நாட்கள் அவள் பட்ட மொத்த கஷ்டமும் ஒரு நிமிடத்தில் காணாமல் போக செய்தான் அவளும் அவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டு கொண்டாள். சிறிது நேரம் இப்படியே இருந்தனர். அவளுக்கு மூச்சு முட்டி புரை ஏற
ஹே இடியட் தண்ணி வேணும் விடு டா..என்று சொல்ல அப்பொழுது தான் அவளை விட்டான். அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டே உணவு மேஜைக்கு சென்றான். விவேகா தண்ணீர் எடுத்து குடித்தவள் இப்போது அவனிடம் உன்னோட எக்ஸ்டிரா கரிகுளர் ஆக்டிவிடீஸ் எல்லாம் என் கிட்ட வேண்டாம் என்று சொல்ல என்னோட ஆக்டிவிட்டிச நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லடி.. என்று சொல்லி அவள் கழுத்தில் ஊரிட ஹே தள்ளி போடா நான் கிளம்புறேன்..
இன்பா உனக்கு ரொம்ப திமிரு அதிகமாயி போச்சு இரண்டே இரண்டு அன்னைக்கு பாஞ்சு வந்து என்னை கட்டி கிட்ட இன்னைக்கு பார்த்தா என்ன எங்கே பார்த்தாலும் எல்லா இடத்திலும் முறைக்கிற
அவள் பின்ன முறைக்காமல் உன்னை தூக்கி கொஞ்ச சொல்றியா…
உன்னால என்னை தூக்கி கொஞ்ச எல்லாம் முடியாது நீ அப்படியே கொஞ்சு அது போதும் எதுக்கு உன்ன கொஞ்ச சொல்ற…
இருக்கா எல்லா எல்லாரும் என்ன எப்படி பார்க்கிறார்கள் தெரியுமா நீ மட்டும் தான் டி என்னைய பார்க்கல…
ஆமா அதையேதான் நானும் சொல்றேன் எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணிட்டு திரிய எதுக்குடா இப்படி வந்த…
எப்படி வந்தேன்..
என்ன இது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் எப்படி வந்து நிக்கிற எல்லாரும் உன்னை அப்படி பார்க்கிறார் திங்கிற மாதிரி பாக்குறாங்க தெரியுமா…
என்று அவள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொல்ல
உடனே அதை பார்த்து சிரித்தவன். விவேகா, ஆமா இப்போ அதுக்கு என்ன.. மம் இது எனக்கு பிடிச்சு இருக்கு… என்று அவளை கன்னத்தில் உரச விவேகா கூச்சத்துள் நெளிந்தவள்.. நீ.. நீ… முதலில் உன் முகத்தை கிளீன் ஷேவ் பண்ணி மீசையை மட்டும் விட்டு வை சரியா..
ஏன் உனக்கு இது பிடிக்கலையா! அது.. அது வந்து எனக்கு புடிக்கல.. பொய் சொல்லாத டி அவள் சிறிது நேரம் அமைதியாக விட்டுப் பின் எனக்கு புடிச்சிருக்கு ஆனா இது வேண்டாம் நான் சொல்றத மட்டும் செய்..
ஏன் வேண்டாம் காரணம் சொல்லு அதெல்லாம் சொல்ல முடியாது சொல்லு அது நீ பக்கத்துல இருக்கும்போது எனக்கு குத்துது என்று சொல்லி அவள் வேறு புறம் திரும்பி கொள்ள.. இன்பா கண்ண குழி தெரிய சிரித்தவன் மம் ஓகே என் மாமிக்கு அண்ட் என் பேபி க்கு பிடிக்காத விஷயத்தை நான் நெவர் டு தட்.. இப்போது அவள் அவனை பார்த்து சிரிக்க..
ஏய் ஒய் ஆர் யூ லாஃபிங்.. அவள் அப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்க… சொல்லுடி இப்ப சிரிச்ச உதட்டை கடிச்சு வச்சுருவேன்..
அப்புறம் மாமி கிட்ட நீ தான் மாட்டுவ விவேகா. அப்போதும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க..
ஹே சொல்லுடி.. ஹேய் என்று அவன் அவளை நெருங்க சரி சரி சொல்றேன்..
மம் சொல்லு…
அதுவா நீ ஒரு ஆன்ட்டி ஹீரோ டா
வாட் ஆன்ட்டி ஹீரோவா!அப்படின்னா என்ன..
விவேகா அதுவா எங்க அம்மா கிட்ட போயி பிளர்ட் பண்ண ட்ரை பண்ற அதனாலதான் உன்னை ஆன்ட்டி ஹீரோன்னு சொல்றேன்…
எங்க அம்மாவுக்கு உன்னை போய் பிடிச்சிருக்கு பாரு.. ஆன்ட்டிஸ்க்கு எல்லாம் உன்ன புடிச்சிருக்கு அதனால தான் நீ ஒரு ஆன்ட்டி ஹீரோ அவளை சிரிக்க இருக்கும் டி இருக்கும்… என்ற அவன் அவள் வயிற்றை பிடித்துக் கிள்ள அப்போது சரியாக கதவு தட்டும் சத்தம் கேட்டது.
போச்சு போச்சு.. நான் நல்லா மாட்டிகிட்டேன் என்று அவள் பயந்து கொண்டே அவனை விட்டு தள்ளி நிற்க…
இன்பா சாதாரணமாக இது கூட நல்லதுக்கு தாண் டி இப்பவே நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன் எக்ஸ்ட்ரா கறிக்குலர் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ட்ரை பண்ணலாம்..
உன்னை கொன்றுவேன் டா எதுவும் செய் என்க்கு பயமா இருக்கு…
ஐயோ யார் வந்திருக்காங்கன்னு தெரியலையே…அப்பவே நான் நெனச்சேன்,இன்னைக்கு நான் வசமா எங்கேயும் மாட்ட போறேன்.. போச்சு போச்சு…
எனக்கு பயமா இருக்கு செத்த டி விவேகா அழுக அழுகையா வருது என்று அவள் கண்களில் கண்ணீர் பூக்க..
இடியட் கொஞ்சம் அமைதியா இரு ஓவரா பண்ணாத நான் யாருன்னு போய் பார்க்கிறேன்… என்று அவன் கதவுக்கு அருகே சென்று துவாரம் வழியாக பார்த்து விட்டு விவேகாவை பார்த்து கிச்சன்ல போய் ஒளிஞ்சுக்கோ… ஹே சொல்லுடா எனக்கு வேற பயமா இருக்கு பாத்ரூம் வேற வருது..
சரி பாத்ரூம் போ.. அவள் அதே இடத்தில் ஏன் இருக்க மாமி இல்லடி நீ போனு சொல்றேன்ல… உடனே அவள் கீழே உள்ள ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றாள்.
உடனே அவன் கதவை திறக்க டேய் உனக்கு எதுக்கு இவ்வளவு நேரம் என்று சொல்லிக் கொண்டே சுபா உள்ளே வர…
சுபா.. சுபா.. ஒரு முக்கியமான இம்பார்டன்ட் விஷயம்..
என்ன சொல்லு என்ற அவள் ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல…
ஒரு நிமிஷம் நில்லு போகாத என்று அவள் கையை பிடித்து வெளியே கூட்டி வந்தான். கதவுக்கு வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தான்
என்ன விஷயம் சொல்லு…
எனக்கு நான் ரெஸ்ட் ரூம் போகணும்…
இன்பா, சுபா ப்ளீஸ் எனக்காக நீ மித்ரன் வீட்ல இருக்கானான்னு மட்டும் போய் பார்த்துட்டு வாயேன்,அங்க சரவணன் இருப்பான்…
சரவணன் என்ற பெயரைக் கேட்டதும் சுபவரிடம் ஒரு நிமிடம் தன்னிலை மறந்தால் மீண்டும் நிதானித்துக் கொண்டு இன்பாவிடம்
ஏன் நீ போயிட்டு வாயேன்…
உனக்கு தெரியாதா என்ன.. சரவணனுக்கும் எனக்கும் எப்பவும் ஆகவே ஆகாது அவன் ஓவரா சீன் போடுவான் கொஞ்சம் பைட்டிங் அதான் உனக்கு தெரியும் இல்ல எப்பவும் போல ஓவரா சீன் போடுவான்..
சுபா எதையும் யோசிக்காமல் சரி நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். ஹே ஹே எங்க போற நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு போறேன் டா.. ஹே முதலில் போய் பார்த்து விட்டு வா உன் தம்பிக்காக இது கூட செய்ய மாட்டியா.. என்று சொல்லி அவளை அனுப்ப சரி
என்னமோ சரியில்ல ஓவரா பண்ற…
நான் இல்ல நீ தான்.. என்று சொல்லி அவளை வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்த போக இப்ப எதுக்கு கதவை சாத்துற…
நீ ஃபர்ஸ்ட் போ நான் மேல போறேன் நீ வந்த உடனே காலிங் பெல்லடி நான் உனக்கு உன்னை கதவை திறந்து விடுகிறேன்.
சுபா சென்றதும் இன்பா ஒரு பெரு மூச்சை வெளி விட்டு ஹே வெளியே வாடி.. என்று சொல்லி கொண்டே ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றான். பேபி யாரும் இல்லை வெளியே வா..என்று சொல்லி கதவை தட்டினான். விவேகா பயந்து கொண்டே கதவை திறந்தாள்.
சுற்றியும் முற்றிலும் பார்த்து கொண்டே யாரு வந்தா… சுபா… அவள் ஒரு வேளை உன் அம்மா அப்பா யாராவது வந்து இருந்தால் என்ன பண்ணி இருப்ப…
இன்பா, விவேகா தப்பு பண்ணிட்டா மாம் அப்டின்னு சொல்லி இருப்பேன்.. டேய் ஏன் டா இப்படி பச்சை பொய் சொல்ற.. இன்பா சோபா வில் அமர்ந்து வெண்பா வுக்கு போன் செய்து கொண்டே பேபி பொய் இல்ல நிஜம் தான்..
அவள் மேம் என்னை தான் நம்புவார்கள்.. சான்சே இல்ல டி என் மாம் என்னை தான் நம்புவாக.. எப்படி.. நீ இப்போ எங்கே இருக்க எங்க வீட்டில் இருக்க அதுக்கு என்ன.. அவன் நீ தான் என்னை தேடி வந்து இருக்க.. என்று சொல்லி ஒற்றை புருவம் உயர்த்தி மமம் நான் தனியா இருக்கேன்னு தெரிஞ்சு கிட்டு வந்து அதுவும் நான் வேற ரொம்ப அழகா இருக்கேன்னு என் மேல பாயின்து விட்டாள். அப்டின்னு நான் சொல்லிடுவேன்..
விவேகா உடனே.. டேய் நான் அடுத்த தடவை கிட்ட வா உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி அவள் கிளம்ப எத்தணிக்க அவன் அவள் கைகளை பிடித்து கொண்டான்.
அவள்…?
தொடரும் ..
Episode 156,
விவேகா இன்பாவிடம்” நீ அடுத்த முறை என் பக்கத்துல வந்து பாருடா உன்னை நான் என்ன பண்றேன்னு “என்று சொல்லிவிட்டு வேக வேகமாக அந்த இடத்திலிருந்து கிளம்ப வெளியே சென்றாள் .
உடனே எழுந்தவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு எங்கடி போற… என்று கேட்க
நான் வீட்டுக்கு போறேன் அதான் நீ சொல்லிட்ட.. இனி யாராவது வந்தா நான் தான் உன்ன ஏதோ பண்ணிட்டேன்னு பச்சை பொய் சொல்லுவ வர வர நீ ரொம்ப அதிகமா பண்ற ஒன்னும் சரி இல்லை..அதனால நான் இனிமேல் வரமாட்டேன் டா என்று சொல்லிக் கொண்டே அவள் அவன் கைகளை விட்டு பிரிக்க முயல…
இன்பா,நீ இப்ப கூட டேஞ்சர் zone ல தாண் இருக்க..என்ன நானு என்று கேட்க..
ஆமா இப்போ எங்க அக்கா வருவா வந்து இந்த பாத்திரம் எல்லாம் எப்படி வந்தது என்று கேட்டால் என்ன பண்ணுவ? என்ன சொல்லுவ? சொல்லு பாக்கலாம் ?
இந்நேரம் வந்து உங்க வீட்ல உன்ன தேட யாராவது வந்து இருந்தா இவளோ நேரம் என்ன பண்ண அப்டின்ன என்ன சொல்லுவ… விவேகா, இப்போது இதை எப்படி சமாளிப்பது என்று கைகள் வியர்க்க யோசித்தாள். அச்சோ ஆமா இப்ப நான் என்ன பண்றது எல்லாம் உன்னால தான் டா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க
இன்பா, நீ இதில் இருந்தே சேஃபா தப்பிக்க உனக்கு போக ஒரு வழி இருக்கு… என்ன சொல்லு சொல்லு டா சீக்கிரம் சொல்லு..
நீ எனக்கு முத்தம் கொடுத்தால் நான்.. என்று அவன் இழுக்க சொல்லுடா விளையாடாத தயவு செய்து சொல்லுடா..
இங்கே சரவணன் வீட்டிற்கு மித்ரனை அழைக்க வந்த சுபா கதவை தட்டினாள். உடனே வெண்பா கதவை திறந்தாள்.
அக்கா உள்ள வாங்கக்கா… சொல்லுங்க என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது வந்து இருக்கீங்க என்று அவள் கேட்க
ஒன்னும் இல்ல வெண்பா மித்ரன் இருக்கானா…
அவன் டூட்டிக்கு போய்ட்டான் அக்கா..
அப்படியா அவன் இருக்கானா இல்லையான்னு பார்க்கிறதுக்கு தான் வந்தேன்…
இன்பா கேட்டான் அதனாலதான்..
வெண்பா இதை கேட்டு சிரித்துக்கொண்டே அக்கா இதுக்கு நீங்க ஒரு போன் மித்திரனுக்கு பண்ணி இருக்கலாம்.. இவ்வளவு தூரம்…
வெண்பா அவளை பார்த்தது நீங்க இப்பதான் ஆபீஸ்ல இருந்து வந்திருப்பீங்க போல முகம் எல்லாம் களைப்பா இருக்கு..
நான் என்று நினைத்தவள் வீட்டை ஒரு முறை நோட்டம் விட்டாள் சரவணன் அங்கு இருப்பதாக தெரியவில்லை.
சுபா , ஆன்ட்டி எங்கே..
அம்மா கிட்சன்ல இருக்காங்க.. உன் உன் அண்ணன் எங்கே.. சுபா கேட்க
அவள் சரவணன் ஒரு வாரமா வீட்டுக்கு வரவே இல்ல..
அப்படியா என்ன ஆச்சு என்று அவள் தெரிந்து கொண்டே தெரியாதது போல் கேட்டாள்.
ஏதோ முக்கியமான ப்ராஜெக்ட் அப்படின்னு சொன்னான் இன்னைக்கு வருவதாக அம்மா சொல்லி இருக்காங்க, இன்னும் வரல அப்படின்னு சொல்லி கொண்டு இருந்த வெண்பா அவளின் முகத்தை பார்த்து என்னக்கா ஒரு மாதிரி இருக்கீங்க…
எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும் டா..என்று சொல்ல உடனே வேகவேகமாக அப்படியே இதுக்கு எதுக்கு நம்ம வீடு வாங்க என்று சொல்லி அவள் அழைத்து செல்ல
சுபா உள்ளே சென்றாள் உள்ளே சென்று முகத்தை கழுவிக்கொண்டு இருக்க வெண்பா கிச்சென் சென்று அவளுக்கு குடிக்க எதுவும் டீ போடசென்றாள்.
சரவணன் அப்போதுதான் வந்துu சேர்ந்தான். வீட்டு வாசல் திறந்து இருக்க என்ன கதவு திறந்த மாதிரி இருக்கு என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான்.
நேராக அவன் பாத்ரூம் செல்ல அங்குதான் சுபா இருந்தாள். ஒரு வழியாக அவள் முகத்தை கழுவி கொண்டு உள்ளே இருந்து சரியாக கதவை திறக்கவும்
இவன் வெளியே இருந்து கதவை இழுக்கவும் சரியாக இருக்க வேகமாக சரவணன் கதவை வேகமாக கதவை இழுக்கும் நேரம்
சுபா கதவை இழக்க அவள் ச சரவணனின் மேல் சுபா மோதிக்கொண்டாள் இருவரது தலையும் முட்டிக்கொள்ள.
நீ எங்க இங்க என்று சரவணன் கேட்க
நான் மித்ரன பார்க்க வந்தேன் என்று அவள் அவன் முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்து சொல்லிவிட்டு செல்ல
சரவணன் அவள் செல்கிறாள் என்று தெரிந்ததும் அவள் கைகளைப் பிடித்து என்ன மன்னிச்சிட்ட தானே சாரி நான் அன்னைக்கு தெரியாம பண்ணிட்டேன் என்று மீண்டும் அவளது இடை இருக்கும் இடத்தை பார்க்க இன்று அவள் லாங் லாங் டாப் போட்டு இருந்ததால் தெரியவில்லை.
டேய் எங்கே பாக்குற உன் சாரி ஒன்னும் எனக்கு தேவையில்லை போடா என்று சொல்லிவிட்டு அவள் வேக வேகமாக வெளியே சென்றாள்.
சரவணன் மனதில் ஐயோ மறுபடி மறுபடி எனக்கு அவள் இடுப்பு தான் வந்து நிக்குது. இப்படியே எனக்கு தோணுது என்று அவன் நினைத்துக் கொண்டான்.
இன்பா இங்கே நான் சொன்னது புரியலையா முத்தம் கொடு என்று சொன்னேன்…
அவ்வளவுதான் உன் பேச்சை நான் கேட்க மாட்டேன் நான் போறேன் டா…
சரி போ கதவு வரை சென்றவள் மீண்டும் திரும்பி வந்து சரி கொடுத்து தொலையுறேன் கன்னத்தை காமி கண்ணமா சரி இவ்வளவு கெஞ்சி கேட்கிற ம்ம் கொடு என்று சொல்ல..
அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க வர அவன் அப்படியே சாய்து இதழ்களை பிடித்துக் கொண்டான்.சிறிது நேரம் கழித்து விட்டவன் டேய் ராஸ்கல் உனக்கு இதே வேலை தான் டா எப்ப பார்த்தாலும்….
சீக்கிரம் எதாவது பண்ணுடா…
எனக்கு என்னென்னமோ தோணுதடி…
டேய் கொலை காண்டுல இருக்கேன் கொன்றுவேன் டா உன்ன என்றுஅவள் சொல்லி இப்ப பண்றியா இல்ல நான் கிளம்பட்டுமா…
ஓகே ஓகே என்று வெண்பாவுக்கு கால் செய்தவன் …
ஹலோ வெண்பா சுபா அங்க இருந்து கிளம்பிட்டாளா என்று கேட்க
அண்ணா இப்பதான் அக்கா கிளம்பினார்கள் என்று சொல்ல சரி ஓகே அதுக்கு தான் கால் பண்ணேன் என்று சொல்லி அவன் கட் செய்து விட்டு விவேகாவிடம் சுபா இப்ப அங்க இருந்து கிளம்பிட்டா நீ என்ன பண்ற இதுல இருக்குற பாத்திரம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வெளியே போயிட்டு அவ அவ வரும்போது சரியா அப்படிய இப்பதான் நடந்து வர மாதிரி நடந்து வா..
நான் எப்பவும் போல மாடிக்கு போயிடுறேன் சோ அவ வரும்போது நீயும் ஜாயின் பண்ணிக்கோ ஜாயின் பண்ணிட்டு வீட்டுக்கு வா பாத்திரத்தை வச்சிட்டு டாட்டா சொல்லிட்டு உன்னால முடிஞ்சா அப்போ ஒரு கிஸ் கொடுத்துட்டு கிளம்புடி சொல்ல அவள் முறைத்து கொண்டே சரி ஓகே…
சுபா மெதுவாக அங்கு இருந்து நடந்து வந்து கொண்டு இருந்தாள். அவள் சரவணை நினைத்து கொண்டே சிரித்து கொண்டும் வந்தாள். திருட்டு பயலே உன் பார்வை எங்கே டா போகுது.. என்று புன்னகை சிந்தி எனக்கும் ஆசை தான் உன்னை இப்போவே கட்டி அணைத்து என்று சொல்லி ஒரு குதி குதித்தாள். விவேகா கொஞ்சம் எட்ட நின்று கொண்டு அவளை பார்த்தாள். இந்த அக்கா என்ன ஆச்சு தனியா சிரிச்சு கிட்டு வருது.. சரி சரி சீக்கிரம் வாங்க அக்கா என்று அவள் காத்து கொண்டு இருந்தாள்.
சுபா நடந்து வரும் வேகத்தை பார்த்து விவேகா, இது சரிப்பட்டு வராது இந்த அக்கா நடந்து வரதுக்குள்ள இன்னைக்கு நைட்டு முடிஞ்சு நாளைக்கு பகலே வந்துடும்.
விவேகா நீ தாண்டி ஏதாவது பண்ணனும் என்று நினைத்துக் கொண்டே அவள் சுபாவின் அருகில் நடந்து சென்றாள்.
அக்கா என்று சத்தம் போட யார் என்று அவள் திரும்பி பார்க்க என்ன மா விவேகா என்று அவள் சரவணன் மயக்கத்தில் இருந்து தண்ணிலைக்கு வந்தாள்.
விவேகா,அன்னைக்கு உங்க வீட்ல பாத்திரம் ஒன்னு மட்டும் கொடுத்துட்டு வந்துட்டேன் இது எல்லாம் அண்ணா வீட்டில் இருந்தது அண்ணி உங்க கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்து விட்டாங்க..
ஓ அப்படியா சரி வா போகலாம் என்று வேகமாக நடந்தாள். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
சுபா கோபமாக காலிங் பெல் அடிக்க அவன் உடனே போனை நோண்டி கொண்டு இருப்பது போல் கதவு திறந்தான்.
ஹே ஏ ன் டா என்னை டென்ஷன் பண்ண.. இப்போ இப்போ நான் என்ன பண்ணேன். டேய் இன்பா நீயே மித்ரனுக்கு கால் பண்ண வேண்டியது தானே.. அட ஆமா.. சுபா, நீ ஒரு மர மண்டை டா.. இன்பா, என்ன சுபா ஓவரா பேசுற உன் கெஸ்ட் முன்னாடி என்னை அவமான படுத்துகிராய…
அவளுக்கு அப்போது தான் விவேகா அங்கு இருப்பது நினைவு வர இப்போது அமைதியானாள். வா விவேகா உள்ளே வா.. அக்கா என்று சொல்லி அந்த பாத்திரம் எல்லாம் வாங்கி வைத்தாள். சரி அக்கா நான் போறேன்.. சுபா, ப்ச்ச போறேன்னு சொல்ல கூடாது மா போயிற்று வரெண்ணு சொல்லு..
ம்ம் சரி அக்கா வரேன் என்று சொல்ல இரு மா டீ சாப்பிடு.. இல்ல அக்கா வேண்டாம்…
இல்ல நீ சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி அவள் விடாப்பிடியாக அமர வைத்து விட்டு கிச்சன் சென்றாள்.
இன்பா, ஹே எப்போ டி வர போற.. என்ன.. என் அக்கா சொன்னது உனக்கு புரியலயா எப்போ உன் மாமி வீட்டுக்கு வர போற.. அவள் முறைக்க.. அவன் சிரித்து கொண்டே உன்னை எப்படி தூக்கிட்டு வரனுன்னு அதை நான் பார்த்து கொள்கிறேன். நாளைக்கு எனக்கு சமைத்து எடுத்து வா டி.. முடியாது போடா.. நீ எடுத்துட்டு வர.. எடுத்து வரனும் நான் சாப்பிடாமல் வெயிட் பண்ணுவேன் என்று சொல்லி அவன் அவள் கையை பிடித்து முத்தம் வைக்க டேய் டேய் அக்கா அக்கா வந்து விடுவார்கள்.. அவ வர மாட்டா இந்நேரம் அந்த சிடுமூஞ்ச நினைத்து கொண்டு இருப்பா…
யாரு ?யாரது ?இனியாள் அண்ணனா! ச்சி.. ச்சீ..பின்ன.. இப்போ கூட உன் அக்கா லூசு மாதிரி சிரிச்சு என்று அவனை தயக்கத்தொடு பார்க்க.. இன்பா, ம்ம் சொல்லு.. இல்ல சிரிச்சு கிட்டு குதிச்சு கிட்டு வந்தாங்க..
இன்பா, ஓ இது வேறயா.. ஏன் என்னாச்சு எதுவம் விஷயமா..
அவன் சாதரணமாக அவ லவ் பண்றா..
என்ன? யாரு?
இன்பா, சரவணன் தான்..
இதை கேட்டு விவேகா…?
தொடரும்…
Episode 157,அவன் சாதரணமாக அவ லவ் பண்றா..
என்ன? யாரு?
இன்பா, சரவணன் தான்..
இதை கேட்டு விவேகா அதிர்ச்சி அடைந்தாள். இப் இப்போ.. என்ன சொன்னீங்க … அவ லவ் பண்றா..
யாரை
சரவணன்…
யா யாரு…
சரவணன் டி…என்று அவன் சொல்ல உறைந்து போய் நின்றாள். அவன் இது தான் சாக்கு என்று அவள் இதழில் மீண்டும் ஒற்றி எடுத்து விட்டு அமர்ந்து கொண்டான்.
அதற்குள் சுபா டீ எடுத்து வந்தாள். என்ன விவேகா நின்ணு கிட்டு இருக்க.. ஹலோ மேடம்.. என்ன ஆச்சு.. இப்போது சுய நினைவுக்கு வந்தவள். ஒன் ஒன்னும் இல்ல அக்கா என்று டீயை வாங்கி கொண்டு இன்பா சொன்ன விஷயத்தை நினைத்து கொண்டே அந்த சூடான டி ஒரு மிடுக்கு குடிக்க அது அவள் உதட்டை இன்னும் சுட்டு விட்டது. ஸ்ஸ ஆ.. என்று அலறினாள். ஏற்கனவே அவன் அவளின் இதழை பாதி தின்று விட்டான். இப்போது இது இன்னும் வலித்தது.
என்ன என்ன ஆச்சு.. ஒன்னும் இல்ல அக்கா டீ சுட சுட குடித்து விட்டென்.. இன்பா, கொஞ்சம் கனவில் இருந்து கண்ணை முழிச்சு பாரு இல்லனா எங்கேயும் போய் விழுந்து வுடுவ.. இதை கேட்டு அவள் முறைத்தாள்.
டேய் எப்போ பார்த்தாலும் அவளை எதுவும் சொல்லிகிட்டே இருக்க.. உன் கெஸ்ட் அப்படி தானே இருக்கா நான் சொல்வதை போல் தான் நடந்து கொள்கிறாள்.
விவேகா அந்த டீ ய வேகமாக குடித்து விட்டு அக்கா நான் கிளம்புகிறேன் என்று சொல்லி எழுந்தாள். இன்பா, சொன்னது நினைவில் இருக்கட்டும் சுபா, என்ன என்பது போல் பார்க்க.. இல்ல இப்படியே கனவில் மிதந்து கொண்டு கீழே விழுந்து விட போகிறாள் அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்து தான் அவளுக்கு இப்படி ஆகி விட்டதுண்ணு அவள் அண்ணன் என் சட்டையை பிடித்து நாளைக்கு கேட்பான்.
விவேகா, நீங்க அவ்ளோ கவலை பட வேண்டாம் சார் என்று சொல்லி முறைத்து கொண்டே வெளியே சென்றாள். அவளுக்கு தெரியும் அவன் சமைத்து எடுத்து வர சொல்வதை தான் இப்படி சொல்லி இருக்கிறான்.
அவள் சென்ற சிறிது நேரத்தில் இன்பா மேலே சென்று அவன் தாடியை பழைய படி கிளன் ஷேவ் செய்து முடிய திருத்தி கொண்டான். குளித்து முடித்து கீழே வர அங்கே சுபா, ரவி இருவரும் இருந்தனர். சுபா, இப்போ தான் டாடி நான் டீ போட்டேன் கொஞ்சம் முன்னாடி வந்து இருக்கலாம்.
இன்பா உடனே அவர்களை பார்க்காதது போல் மேலே செல்ல போக ரவி, யாரு வீட்டுக்கு வந்தா.. சுபா, விவேகா தான் வந்துட்டு போனா இந்த முறையும் நீங்க மிஸ் பண்ணிட்டீங்க .. ரவி, இங்கே தானே இருக்க நான் எப்போ வெனா பார்க்கலாம். என்று சொல்லி திரும்ப இன்பா அவர்கள் பேசுவத கேட்டு கொண்டு இருந்தான்.
ரவி, உன் தம்பி எப்போ பொறுக்கில இருந்து போலீசா மாறினான். சுபா நிமிர்ந்து பார்க்க அங்கே இன்பா நின்று கொண்டு இருந்தான். இப்போது எதுவும் நடக்காதது போல் கீழே வந்தான்.
சுபா, என்ன டா திடீர்ண்ணு கெட் அப் சேன்ஜ் பண்ணிட்ட.. இன்பா, என் மாமிகும் என் பேபிகும் பிடிக்கல அதனால் தான்.. சுபா, என்ன மாமியாரா.. மம் ஆமா.. ரவி, திருட்டு தனம்… இன்பா, நான் இல்ல உங்க பொண்ணு என்னை விட திருடி என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே கிளம்பினான்.
ரவி, என்ன மா சொல்லிட்டு போறான்…அவன் அவன் லூசு டாடி… சரி.. டாடி அவன் பேபி மாமின்னு சொல்லிட்டு போறான். ரவி , இது எனககு எப்படி தெரியும் உன் அம்மா கிட்ட கேளு ஏஞ்சல்.. சான்சே இல்ல டாடி அவன் மாம் கிட்ட.. அவன் அம்மாவுக்கு ரொம்ப பயம்.. அவர் சிரித்து கொண்டே அவன் நான் இங்கே இருக்கேன்னு வெனுண்ணு சொல்லிட்டு போறான். அப்புறம் அந்த பொண்ணு எதுக்கு வந்தது.. அதுவா இந்த பாக்ஸ் எல்லாம் கொடுக்க வந்தாள். என்று அவள் வந்த கதை அத்தனையும் இன்று காலையில் இருந்து நடந்த அனைத்து விஷயமும் சொல்லி கொண்டு இருந்தாள். ரவி அவள் பேசுவதை ரசித்து கேட்டு கொண்டு இருந்தார். உயிர் மகள் தன் அம்மா தங்கை இருவரையும் ஒத்து பிறந்தவள்.
ஆனால் சுபா செய்த மிக பெரிய தவறு சரவணன் பற்றி மட்டும் அவள் சொல்ல வில்லை. அது பின்னால் ரவிக்கு மிகப்பெரிய ஒரு பெரு வெடிப்பாக வெடிக்க போகிறது அந்த தீவிரம் பற்றி அவள் அறிய வில்லை.
விவேகா வீட்டுக்கு வந்தவள் அவனுக்கு என்ன சமைக்கலாம் என்று புரண்டு புரண்டு படுத்து யோசித்து கொண்டு இருந்தாள். அம்மா இந்த அம்மா கிட்ட கேட்டால் பிரச்னை தான் அதி கிட்ட கேட்கலாம்.. இல்ல வேண்டாம் ஹான் தேவி அத்தை கிட்ட கேட்கலாம். என்று நினைத்து ஆதிக்கு கால் செய்தாள். ஹலோ என்ன டி வெள்ளை கொடியா எப்படி கண்டு பிடிச்ச…. நீ எங்கே இருந்தாலும் எனக்கு தெரியும் டி…
விவேகா, டேய் இத அவள் முன்னாடி சொல்லி விடாதே இதயமே வெடித்து விடும்.. அவ ஒரு தத்தி விவேகா.. சரி சரி நீ அத்தை கிட்ட கொடு.. என்ன எங்க அம்மா கிட்ட எல்லாம் பேசற.. டேய் அவங்க என் வருங்கால மாமியார் டா.. மம் எனக்கும் ஓகே தான்.. ஓ அப்படியா.. எனக்கும் ஓகே.. ஆனால் என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல..
ஹே நீ சொல்லு.. நீ சொல்லு டி.. நீ அவளை தானே நினைத்த.. நீ இன்பா தானே.. அவனா அவனை எதுக்கு நான் நினைக்கனும். ஹே நீ அவர் கிட்ட லவ் சொல்லிட்ட டி… நீ மட்டும் என்ன.. நான் அவளை லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையே.. எப்போ சொல்ல போற.. நான் எதுக்கு சொல்லணும் அவள் வந்து சொல்லட்டும்…
விவேகா, அப்போ நீ என்ன தான் ஐடியா.. நான் போலீஸ் ஆகனும் டி இனி அவ கிட்ட அதிகமா பேச மாட்டேன் எனக்கு கொஞ்சம் கான்சன்திரேட் மிஸ் ஆகுது.. விவேகா, அட் லீஸ்ட் உன் விருப்பத்தை சொல்லிடு டா பாவம் அவள்.. ஆதி, என்ன பாவம் நான் மட்டும் இப்போ போயி சொன்னா அவள் படிப்பில் கவனம் இருக்காது..அப்புறம் தேவை இல்லாத பிரச்னை கண்டத மனசுல நினைத்து கொண்டு இருப்பா என்னால் அவளுக்கு எந்த பிரச்னையும் வர கூடாது.
நான்க ரெண்டு பேரும் இன்னும் சின்ன பசங்க தான் இது இப்போ தேவை இல்லாத ஒன்னு டி…
விவேகா, அப்போ நானு.. நானும் தானே… ஆதி சிரித்து கொண்டே நீ நீயும் ரொம்ப சின்ன பொண்ணு…
ஆனால்..
ஆனால் என்ன..
அவர் உன்னை விட பெரியவர் சோ அவர் வெல் செட்டில்ட் நான் அவர் செய்யும் வேலையை சொல்கிறேன்..
விவேகா, ஒரு வேளை அவள் வந்து சொன்னா என்ன பண்ணுவ..
ஆதி, அது நான் இப்போதைக்கு எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லன்னு சொல்லி விடுவேன்.. டேய் லூசு அப்படி சொன்ன அவ அவ்ளோ தாம்…
முதலில் அவள் வந்து சொல்ல மாட்டா டி.. சொன்னா என்ன பண்ணுவ.. ஹான் நான் காலேஜ் முடிச்சு சொல்றேன்னு சொல்லி விடுவேன். ம்ம் இது சரியான பதில்.. சரி சரி நீ அத்தை கிட்ட கொடு..
மம்… மம் விவேகா உங்க கிட்ட பேசணுமாம்.. என்ன மா அத்தை நியாபகம் வந்து இருக்கு எப்பவும் மாமச்சிகு தானே போன் பண்ணுவ இல்ல அத்தை உங்க நியாபகம் வந்தது அது தான் போன் பண்ணேன். ம்ம் சொல்லு என்ன வெனும்.. சும்மா தான் இன்னிக்கு என்ன சமையல் என்று கேட்டு கொண்டே அவள் பேச்சை ஆரம்பித்தாள்.
அத்தை ரொம்ப ஈசியா ரொம்ப டேஸ்ட்டா சமைக்கிற மாதிரி ஒன்னு சொல்லுங்க.. என்ன மா திடீர்ன்னு.. இல்ல அத்தை நாளைக்கு வீட்டில் சமைத்து பார்க்க போறேன். ப்ரெண்ட் கிட்ட பெட் கட்டி இருக்கேன். கங்கா அக்கா கிட்ட கேட்டு இருக்கலாமே.. இல்ல அத்தை ஆதி, எனக்கு எல்லாம் உங்க சமையக் தான் பிடிக்கும் அதனால் தான்.. அவள் ஆதி என்று சொன்னதும் தேவி ஆதிக்கு பிடித்த உணவை சொன்னாள். இது மதியத்துக்கு சாப்பிடவா…
இல்ல அத்தை காலையில் சாப்பிட.. மம் என்று ஒரு டிஷ் சொல்ல விவேகா, அத்தை இது சரி வருமா… ம்ம் நிச்சயம் பிடிக்கும் நீ செய்து கொடுத்து பாரு அதுக்கு கூட சில சைட் டிஷ் சொல்ல விவேகா சரி அத்தை என்று சொல்லி போன் வைத்தாள்.
அடுத்த நாள் காலை விவேகா நேரமே எழுந்து தேவி சொன்னதை சமைத்து அதற்கு கூட சாப்பிடுவதற்கு எல்லாம் தயார் செய்து விட்டு குளிக்க சென்றாள். கங்கா என்ன என்பதை போல் பார்த்து அதை சுவைத்து சில திருத்தம் செய்தாள். அவள் வந்ததும் கங்கா, என்ன இன்னிக்கி திடீர்ண்ணு இல்ல மா ப்ரெண்ட்ஸ் கேட்டாங்க அதான் செய்து கொண்டு போறேன் என்று சொல்லி அதற்கு மேல் அவள் வேக வேகமாக கிளம்பினாள்.
நேராக வெண்பா வீட்டுக்கு சென்றாள். மித்ரன் அப்பொழுது தான் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தான். சரவணன் உள்ளே இருந்து வர விவேகாவுக்கு இன்பா சொன்னது நினைவு வந்தது. அதை காட்டி கொள்ளாமல் பேசினாள்.
வெண்பா போன் வாங்கி அவனுக்கு ஒரு செய்தி தட்டி விட்டு அவர்கள் வீட்டில் வைத்து விட்டு வெண்பா கூட காலேஜ் சென்றாள். இன்பா மித்ரன் வீட்டுக்கு வந்தான். என்ன மச்சி காலையிலேயே உனக்காக எதோ சமைத்து எடுத்து வந்து இருக்கிறாள். இந்த சஸ்பெண்ட நீ ஜாலியா என்ஜாய் போடுற போல..
இன்பா, அதை கொடு டா.. மித்ரன், இரு டா அது உப்மா மாதிரி எனக்கு தோணுது என்று சிரிக்க.. டேய் கொடு…
இல்ல நான் தான் பார்ப்பேன் என்று சொல்லி முதலில் மித்ரன் துறந்தான். அதில் இருந்ததை பார்த்து விட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இன்பா நீயே பாரு..
அவன் என்ன இருக்கு… நீ பாரு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு டா.. அவள் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்ல அவ டாக்டர்க்கு படித்து இருக்கனும்..
இன்பா அப்படி என்ன தான் இருக்கு என்று பார்க்க அதில் வெண்பொங்கல், கடலை சட்னி, மெது வடை என இருக்க அதை பார்த்ததும் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரிய வில்லை.
மித்ரன் சிரித்து கொண்டே ஒன்னு உப்மா செய்யறா இல்ல வெண்பொங்கல் செய்யுற… இன்பா அதை சாப்பிட ஸ்பூன் எடுக்க மித்ரன் மேலும் தொடர்ந்தான், டேய் இன்பா ஃப்யூச்சர்ல விவேகா உனக்கு காலையில் வெண்பொங்கல் , வடை நைட்டு உப்மா செய்து போட்டால் உன் நிலைமை எப்படி இருக்கும் என்று விழுந்து விழுந்து சிரித்தான்.
மித்ரன், இன்பா நான் சொல்றத கேளு அதை சாப்பிட வேண்டாம் டா.. கிட்ட தட்ட ஒரு 20 தூக்க மாத்திரைக்கு சமம். நீ மட்டும் சாப்பிட்டு போன அவ்ளோ தான்…
பரவாயில்லை எனக்காக சமைத்தது. நான் சாப்பிட போறேன் என்று அவன் சாப்பிட்டான்.
தொடரும்…
Episode 158,
இன்பா அவள் செய்து வந்த வென் பொங்கலை எடுத்து ஒரு வாய் சாப்பிட மித்ரன், மச்சி நெனைச்சு பாரு அவளை நீ மிசஸ் ஆக்கினதுக்கு அப்புறம் காலையில் வெண்பொங்கல் நைட்டுக்கு உப்மா செஞ்சு கொடுத்தா எப்படி இருக்கும் என்று அவன் இன்பாவை கிண்டல் செய்ய அவன் மித்ரணை ஒரு பார்வை முறைத்தான்.
டேய் கோவுச்சுக்காத மச்சி நீ காலயில் எழுந்து அவ கிட்ட போய் உன் சமையலறையில் நான் உப்பா?சக்கரையா? அப்டின்னு பாட கூடாது.. உன் சமையலறையில் நான் உப்புமாவா? இல்ல பொங்கலா?அப்படின்னு பாடனும் டா…
இதை கேட்டதும் அதற்கு மேல் இன்பா பொறுக்காமல் அந்த ஸ்பூன் எடுத்து வந்து avn விரல்களை குத்த வர சாரி சாரி டா பிளீஸ் இனி அவளை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
இன்பா, அப்போ மூடிட்டு போய் உன் வேலைய பாரு டா.. டேய் இது என் வீடு.. இன்பா அவனை மீண்டும் முறைக்க சரி சரி நீங்க சாப்பிடுங்க சார் என்று அவன் அம்மாவை பார்க்க சென்றவன் ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்தான். அவன் கையில் இட்லி உப்மா, இட்லி பொடி இருக்க இன்பா அருகில் வந்து மச்சி கொஞ்சம் அந்த சட்னி கொடென்…
டேய் ***, பிளீஸ் டா பசியில் காது அடைக்குது கொஞ்சம் மட்டும் அப்படியே விவேகா சுட்ட வடைய நான் கொஞ்சம் சுட்டு கொள்ளட்டுமா.. இப்போ தான் பெரிய *** மாதிரி பேசின இப்போ எதுக்கு டா கேட்கிற.. மித்ரன் அவனிடம் இருந்து வென் பொங்கல், வடை, சட்னி என அனைத்தும் வாங்கி போட்டு கொண்டு அத ஏன் டா கேக்குற நேற்று நைட்டு வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டேன் அம்மா இட்லி செஞ்சு வைத்து விட்டார்கள். திடீர் ன்னு ஒரு வேலை வந்து விட்டது. அதனால் என் பங்கு இட்லி இப்போ உப்மா ஆகி போச்சு.. இன்பா, சாப்பிடு என் பேபியையும் என்னையும் எவ்ளோ கிண்டல் பண்ண.. டேய் பிளீஸ் டா.. என்று வாங்கி சாப்பிட மித்ரன், டேய் நிஜமாவே விவேகா நல்லா தான் சமைக்குறா மச்சி நீ கொடுத்து வச்சவன் டா டெய்லி தூங்கலாம்.. டேய் உன்னை என்று சாப்பிட்டு விட்டு இன்பா ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றான்.
மித்ரன் அதன் பின் உறங்கினான். விவேகா வழக்கம் போல் காலேஜ் சென்றாள். இன்பா சொன்னது போல் வகுப்புகள் மிகவும் கடுமையாக நடத்த தொடங்கினார்கள். அவள் குழப்பமாக எதுக்கு இவளோ படிக்கிறோம் என்று யோசித்து கொண்டே படிக்க ஆரம்பித்தனர்.
ஒரு மதிய வேளையில் இன்பா காலேஜ் சென்றான். அனைவரும் லேப் சென்று இருந்தனர். அவளை ஆபீஸ் ரூம் வர சொன்னான். அவன் கரஸ்பான்டென்ட் அறையில் இருக்க இவள் சென்றாள். இன்பா, எதுக்கு இவளோ டெஸ்ட் கொடுத்து இருக்க என்னால் படிக்க முடியல ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆ இருக்கு… இன்பா, கொஞ்சம் கிஸ் கொடு ஸ்ட்ரெஸ் எல்லாம் போய் விடும்..
விவேகா, இங்கே அடிக்கடி இனி என்னை கூப்பிடாத டா.. ஏன்.. அந்த கவ்யா இங்கே தான் இருக்கா.. அதனால் என்ன.. என்று அவளை அருகில் இழுத்து மடியில் அமர்த்தி கொண்டான்.டேய் என்னை கண்டு பிடித்தால் நான் என்ன செய்யறது அவள் சைக்கோ மாதிரி இருக்க இந்நேரம் நீ வந்ததை மோப்பம் பிடித்து இருப்பாள் டா.. ஹே கீப் சைலன்ட.. விவேகா அவனை தள்ளி விட்டு இன்னிக்கு ப்ரேக் பாஸ்ட் எப்படி இருந்தது அதை சொன்னதும் இன்பா முகம் மாற.. உனக்கு பிடிக்கலயா உனக்காக நான் கஸ்ட் பட்டு வேலை செய்த காசுல முந்திரி வாங்கி நெய் என்று சொல்லி மூக்கு பிடித்து நெய் விட்டு வறுத்து செய்தேன் தெரியுமா…
அது மட்டுமா அந்த வடை அதில் நடுவில் ஹோல் வர ரொம்ப கஸ்ட் பட்டேன்.. இன்பா அவள் சொன்ன விதத்தை பார்த்து கண்ணகுழி தெரிய சிரித்தவன். அவள் கைகளை எடுத்து முத்த மிட்டு நீ எனக்கு ரொம்ப பிடிச்சது. நீ எனக்காக எது செய்தாலும் நான் அதில் குறை சொல்ல மாட்டேன் டி சும்மா முகத்தை அப்படி வச்சு இருந்தேன்.
நிஜமாவா… ம்ம் நிஜமா… என்று அவளை கட்டி கொண்டு கழுத்தில் முகம் வைத்து கொண்டான். ம்ம் ஹே ஒரு மினிடம் பாரு.. என்ன.. ஹே பாரு டா.. அவன் நிமிர.. எங்கே தாடியைக் காணோம்.. அதான் மாமிக்கு பிடிக்கலயே சோ மாற்றி விட்டேன்.. என்ன அப்போ எனக்காக நீ செய்யல… உனக்காக யாரு செய்வா.. போடா என்று அவள் எழ போக.. ஹேய் மாமி கிட்ட நான் நல்ல பேரு வாங்கினால் தான் அவங்க கிட்ட இருந்து உன்னை வாங்க முடியும்.. இதை கேட்டு அவள் உள்ளுக்குள் சிரிக்க.. உனக்காக தான் சேன்ஜ் பண்ணேன். போதுமா.. என்று மீண்டும் அவள் கழுத்தில் மீண்டும் முகம் வைத்தவன். உன் கிட்ட ஒன்னு கேட்கணும்.. என்ன.. உனக்கு நெய் பிடிக்காதா.. ச்சீ என்று முகத்தை ஒரு மாத்ரி வைக்க இன்பா அவளை பார்த்து ஏன் டி நெய் சாப்பிட மாட்டின்ர.. அண்ட் மட்டன், சிக்கன் அதுக்கு ஒரு கதை சொல்ற அப்போ என்ன தான் சாப்பிடுவ எவ்ளோ லீனா இருக்க தேவையான இடத்தில் பிளஷ் இருந்தால் தானே தொட என்ற வார்த்தையை விழுங்கி விட்டு சிறிது நிறுத்தி சீக்ஸ், சின் எல்லாம் நல்லா இருக்கும்..
ஹே இப்போ கன்னம் எல்லாம் சதை வேணுமா, அப்புறம் நான் குண்டாகி விடுவேன். தொப்பை எல்லாம் வந்திடும். அப்புறம் யாரு என்னை பார்ப்பார்கள். ஹே அப்போ தான் உன்னை கட்டிக்கும் போது மெது மெதுன்னி இருக்கும்.. உன்னை மொத்தமா பார்க்க தான் நான் இருக்கேனா நான் மட்டும் பார்த்தால் போதும் டி.. என்று அவளின் இதழை சிறை செய்ய அவள் அவன் பேச்சில் சொக்கி போனாள்.
சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன். இன்பா, அந்த டெஸ்ட் ல நல்லா ஸ்கோர் பண்ணனும். விவேகா, அப்போ நான் உன்னை காலேஜ்ல பார்க்க மாட்டேன் நீ என்னை கூப்பிட கூடாது. ஏன்.. நான் தீவிரமா படிக்க போறேன்.. அப்போ ஓகே.. நிஜமாவே உனக்கு ஓகே வா.. ம்ம்..ஆனால் கோட்ரஸ்ல டெய்லி பார்த்து கொள்கிறேன்.. இதை கேட்டதும் அவள் திருப்தியாக புன்னகை செய்தாள்.
விவேகா, சரவணன் அண்ணாவை உங்க அக்கா நிஜமாவே லவ் பண்றாங்களா.. ம்ம்.. என்னால் நம்பவே முடியல அப்புறம் எதுக்கு இனியா என்று சொல்ல வர ஹேய் ஸ்டாப் இட் அது அவள் லவ் என்னமோ பண்றா நமக்கு என்ன.. நீ என்னை பற்றி மட்டும் யோசி டி.. ஏன் டா இப்படி இருக்க.. இன்பா, நான் இப்படி தான் அண்ட் இது உனக்கும் எனக்கும் உள்ள சில விஷயம் இதை என்று சொல்ல வர.. அவள் நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். போதுமா.. மம் தட்ஸ் மை பேபி என்று சில முத்தம் பதித்து அவளை விட்டான்.
அவள் வெளியே வந்து வகுப்பு செல்லும் வழியில் கவ்யா புட் கோர்ட்டுல இருந்து அவளது பட்டாளங்கள் கூட வெளியே வந்தாள். விவேகா ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு சென்றாள்.
அதில் ஒரு பெண், கவ்யா இன்பா சார் வந்து இருக்கிறார்.. எங்கே? காரஸ்பான்டென்ட் ரூமில் இருக்கிறார். ஓ அப்படியா.. என்று கேட்டு விட்டு அவனை பார்க்க உடனே சென்றாள். அவன் அவளை பார்க்க அனுமதிக்க வில்லை. அவளை அலட்சியம் செய்து கடந்து விட்டான்.
அந்த கோபம் அவன் அவளை அலட்சியம் செய்தது எல்லாம் நினைத்தவள் , சத்ய மூர்த்திகு போன் செய்தாள். டாடி என்று அவள் சில விஷயம் சொல்ல சரி என்று அவர் சொல்லி வைத்து விட்டார். இன்னிக்கு நான் உன்னை என் வீட்டில் பார்க்கிறேன் டா.. என்று சொல்லி கொண்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினாள்.
வசுமதி, இன்பாவுக்கு கால் செய்தார். ம்ம் மாம்.. ராகவ் அந்த மினிஸ்டர் உன்னை பார்க்கணுமா.. யாரு சத்ய மூர்த்தியா.. மம்ம் ஆமா பா நான் வேறு நீ வருவாய் என்று சொல்லி விட்டேன் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வந்து விடேன்..
சரி என்று வைத்து விட்டு கிளம்பினான்.இன்பா சத்ய மூர்த்தி வீட்டை நோக்கி செல்ல.. இங்கே கவ்யா அவளது தோழிகளிடம்.. அனைவரையும் வர வைத்து எல்லா dept லயும் முக்கியமா IT,CS இந்த ரெண்டு dept ல அதிகமா யாரு இன்ப ராகவன் கூட பேசுகிறார்கள் அப்டின்னு உங்களுக்கு தெரிந்த, கூட படிக்கும் ஜூனியர்ஸ், அண்ட் சிப்ளிங்ஸ் எல்லார் கிட்டயும் சொல்லுங்க அதுல யாரு சரியா கண்டு பிடித்து என் கிட்ட சரியான தகவல் சொல்றீங்களோ அவங்களுக்கு ரிவார்ட்..
சோனா, கவ்யா இது கொஞ்சம் கஷ்டம் எல்லா இயர்லயும் பொண்ணுங்க பேசுவாங்க… முடியும் அப்டின்னு சொல்றவங்க தான் என் கூட இருக்கணும் எனக்கு பேவர்ரா இருப்பவங்க மட்டும் அவங்க மட்டும் தான் எனக்கு வேணும் யூஸ் லெஸ் எல்லாம் தேவை இல்ல இப்போவே போயிடுங்க.. என்று கர்ஜனையுடன் சொல்ல
சோனா, சாரி கவ்யா கண்டிப்பா நாங்க செய்வோம் என்று அவள் குரலில் பயந்து கொண்டே கூறினாள். அனைவரும் சரி என்று சொல்ல அந்த நாள் முடிய பேருந்தில் இந்த செய்தி காட்டு தீயாக பரவியது.
அந்த மினிஸ்டர் பொன்னு கவ்யா யாரோ ஒருத்தரை தேடி தான் இந்த காலேஜ் வந்து இருக்கிறாள். விவேகா இன்பாவுடன் பேசிய நினைவுகளை நினைத்து கொண்டு சிரித்து கொண்டே வர கவ்யா வீட்டுக்கு சென்றதும் இன்பாவை சந்திக்க போகிறோம் என்று நினைத்து ஒரு கர்வ புன்னகையை சிந்தி அவன் கை வளைவில் இருப்பது போல் நினைத்தவள் விவேகாவின் மேல் மோதிட அவள் கைகளில் இருந்த புத்தகம் தடுமாறி கவ்யாவின் கால் மேல் விழுந்தது.
கவ்யா, ஹே யூ டோண்ட் ஹேவ சென்ஸ்.. இப்படி என் பூட் வலிக்குது..
விவேகா புத்தகத்தை எடுத்து கொண்டு நிமிர்த்து பார்த்து நீங்க தான் என் மேல மொதினீங்க..
கவ்யா, சாட் அப் கேர்ல் நான் நல்ல மோட்ல இருக்கேன் ஒழுங்கா ஸாரி சொல்லிட்டு கிளம்பி போ..
நானா நான் எதுக்கு கேட்கணும் என் மேல் மோதி விட்டு என் புக்ஸ் எல்லாம் கீழே விழுந்து விட்டது நீங்க தான் என் கிட்ட சாரி கேட்கணும்..
கவ்யா, அவள் பேச்சில் மிகவும் கோபம் கொண்டவள். ஹே என்ன ஓவரா பேசுற நான் யார் தெரியுமா.. விவேகா. நீங்க யாரா இருந்தால் எனக்கு என்ன படிக்க தானே வந்து இருக்கீங்க… அவள் அருகே நின்று கொண்டு இருந்த சோனா ஹே கேர்ல் சண்டை வேண்டாம் சாரி சொல்லிட்டு போ…
கவ்யா, ஹே சோனா அவ கிட்ட கெஞ்சிட்டு இருக்க இவள் எல்லாம்… என்று ஏதோ சொல்ல வர ஹலோ மைண்ட் யூர் வேர்டஸ்… கவ்யா, ஹே என்ன டி செய்வ என்று விவேகாவின் அருகில் அவளை மிரட்டிய படியே வர அங்கே கூட்டம் கூடியது.
வாட் தி எர்த் ஸ் கோயிங் ஆன்? என்று ஒரு குரல் கேட்க உடனே அவர்கள் அனைவரும் சத்தம் வரும் பக்கம் திரும்பி பார்த்தனர்.
தொடரும்… .
Episode 159,
கவ்யா விவேகாவை நெருங்கி என்ன பண்ண போற என்ன விட்டால் ரொம்ப ஓவரா பேசிட்டே போற என்னடி.. என்னடி செய்வ.. என்று சொல்லிக் கொண்டு
அவள் விவேகாவின் அருகில் செல்ல அங்கே அவளின் சத்தம் கேட்டு மாணவ மாணவிகள் அனைவரும் கூட்டம் கூடினர்
உடனே அங்கே ஒரு குரல் இங்கே என்ன நடக்குது… என்று ஒரு கம்பீரமான ஆதிக்கமான குரல் கேட்க மாணவ மாணவிகள் அனைவரும் திரும்பி பார்க்க
கவ்யா, விவேகா இருவரும் திரும்பி பார்த்தனர் அங்கே சிபி சக்கரவர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தான். அவனது பார்வை நேராக இருந்தது. மிகவும் கோபமாகவும் ஆளுமையாகவும் வந்து கொண்டிருந்தான்.
அவன் என்ன ஆச்சு என்று கேட்க சோனா கவ்யாவின் காதுக்கு அருகில் அவர் சிபி இன்பாவின் சொந்தம் என்று அவளுக்கு முன்னவே தெரியும்.
அதனால் அவள் அவனிடம் அமைதியாக பேச தொடங்கினாள் சார் இந்த பொண்ணு என் மேல மோதி ரூடா என்று சொல்ல
விவேகா, சார் நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது உங்களுக்கே தெரியும் இவர்கள் ரொம்ப தேவையில்லாம பேசுறாங்க இவங்கதான் என்கிட்ட சாரி கேட்கணும் .
விவேகா அப்படி சொல்லவும் கவ்யாவுக்கு மிகவும் கோபம் வந்தது சிபி இருவரையும் வெறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இபோதி பேசினான் இப்போ இங்கு என்ன பிரச்சனை நடக்குது அப்படின்றது எனக்கு தேவையில்லாத ஒண்ணு .
நீங்க இப்படி இந்த இடத்தில் கூடி இருக்கிறதால பின்னாடி இருக்குற பஸ் எல்லாம் நின்னுட்டு இருக்கு .அத முதல்ல பாத்தீங்களா… நீங்க எல்லாம்…என்று அவன் நிறுத்தி அவன் கோபம் கொண்டு பேச
விவேகா,சார் ஐ அம் சாரி என்று சொல்லி சொல்லிவிட
கவ்யா, சார் அவளை என்கிட்ட சாரி கேட்க சொல்லுங்க அவளால தான் இந்த பிரச்சனை பஸ் எல்லாம் லேட்டா போக காரணம் அவதான் என்று சொல்ல…
விவேகா சார் நான் செஞ்சது தப்பா சரியா அப்படின்னு அங்க கேமரா இருக்கு அதுல வேணா பாக்கலாமா என்று சொல்ல
உடனே சோனா, கவ்யா வேண்டாம் விடு இதை விட்டுடு நம்ம போயிடலாம் அவளை நம்ம இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்ல
கவ்யா சார் எங்களால என்னால யாருக்கும் எந்த லேட் ஆககூடாது என்று சொல்லி அவள் அந்த இடத்திலிருந்து நகர போக போகும் போது கவ்யா அவளை அப்படியே எரித்து விடும் பார்வையில் பார்த்துவிட்டு சென்றாள்.
சிபி என்ன விவேகா என்ன ஆச்சு அவள் சென்றதும் மிகவும் அமைதியாக பேசினான்.
அவள் சார் நான் ஒன்னும் சொல்லல.. செய்யல அவதான் என் மேல மோதினாள்.
சரி சரி கோபப்படாதே மூக்கு சிவப்பாகுது பாரு என்றவன் மிகவும் இயல்பாக பேச ஆர்ம்பித்தான். அதை சொல்லவும் அவள் புன்னகைத்தாள். சிபி, இன்னும் கொஞ்சம் சிரிங்க மேடம்
அங்கிருந்த மாணவ மாணவிகள் கூட்டம் அப்படியே கலைந்தது.
சிபி,அந்த பொண்ணு ஒரு மாதிரி நீ தேவையில்லாம வைத்து கொள்ளாதே. சரி வீட்டுக்கு போயிட்டு வா பத்திரமா வீட்டுக்கு போ பாய் என்று சொல்லி
சிபி அந்த இடத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் சரியாக செல்கிறதா என்று பார்க்கச் சென்றான்.
விவேகா நேராக பஸ்க்கு சென்றாள். அவள் அங்கே சென்றதும் வெண்பா அவளை அருகில் வர சொல்லி ஹஸ்க்கி வாய்ஸில் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா என்று அவளை அருகில் இருந்து கவ்யா ஸ்பை வைத்தது முழுவதும் கூற விவேகா ஷாக் ஆகாமல் அமைதியாக அவளை பார்த்தாள்.
வெண்பா நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்கேன். அதுவும் உன்ன பத்தி சொல்லி இருக்கேன் .
விவேகா கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவள் இப்போ தான் டீச்சர் அவகிட்ட சண்டை போட்டு வந்தேன் அவள மாதிரி ஒருத்திய நான் பார்த்ததே இல்ல டி என்று சொல்ல
என்ன சண்டை போட்டியா…
ம்ம் என்று கண்களை மூடினாள்.
என்ன என்ன நடந்தது.
விவேகா அனைத்தும் கூறி முடிக்க அவள் ஹே அவ ரொம்ப டேன்ஜர் டி என்று இருவரும் பேச பஸ் அவர்கள் இல்லம் நோக்கி கிளம்பியது.
இங்கே இன்பா சத்யமூர்த்தி வீட்டில் சோபாவில் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தான்.
சத்தியமூர்த்திக்கு அவனிடம் இன்பாவிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை ஆனாலும் அவன் மகள் சொல்ல ஒரு காரணத்திற்காக பேச ஆரம்பித்தார் என்ன சஸ்பெண்டை கேன்சல் பண்ண சொல்லி நான் சொல்லி இருந்தேன் நீங்க வேண்டாம்னு சொல்லிட்டீங்க ஏன் எதுவும் பிரச்சனையா இல்ல நான் கேன்சல் பண்ணது உங்களுக்கு பிடிக்கலையா…
இன்பா அவரை நிதானமாக பார்த்து எனக்கு ஓகே சார் நோ ப்ராப்ளம் ஐ டி சர்வ் இட் எதுக்கு கேன்சல் பண்ணனும் என்று சிம்பிளியாக பேசி முடித்தான்.
சரி இன்பா ம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி அவர் உள்ளே சென்றார்.
மணி நான்கு காட்டியது ஆறு மணி வரை வரவே இல்லை ஆறு மணிக்கு கவ்யா அவளுடைய தனிப்பட்ட காரில் வீடு வந்து சேர்ந்தாள். தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து விட்டு திருப்தி பட்டு கொண்டவள் உள்ளே சென்றாள். அவன் அங்கே அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் காய்ச்சல் வந்தவள் போல் அவன் அமர்ந்து இருக்கும் சோபாவில் நெருங்கி மயக்கம் வருவது போல விழ இன்பா அவள் விழுவதற்கு முன் அருகில் இருக்கும் ஒற்றை இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
ஹே ராகவ் எனக்கு ஃபீவர் அதான் கொஞ்சம் தடுமாறி விட்டேன். இன்பா, நான் 108, க்கு கால் பண்றேன் இல்ல போஸ் என்று நிறுத்தி விட்டு அவளை பார்க்க அவள் அவனை தின்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள். இப்போது சத்ய மூர்த்தி அங்கு வந்தார். கவ்யா மாலா என்று ஒரு சத்தம் போட அவளுக்கு, இன்பாவுக்கு, சத்ய மூர்த்தி என மூவருக்கும் சாப்பிட டீ, காபி, பால் என எடுத்து வர
கவ்யா ,மிஸ்டர் எடுத்துக்கோ என்று அவள் அவனை தின்பது போல் பார்க்க அவன் சத்ய மூர்த்திய பார்த்து.. சார் எனக்கு வேணாம்.. பாருங்க டாடி.. எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார். இன்பா, அவரிடம் சார் ஐம் இன் டயட் சோ சுகர் கண்டன்ட் ஐ மின் ஹஸ்கா சுகர் எல்லாம் சாப்பிட மாட்டேன். என்று சொல்ல அந்த பெயரை கேட்டதும் சத்ய மூர்த்திக்கு குப்பென்று வியர்த்தது. சார் வாட் ஹபன்… ஒன்னும் இல்ல.. மம் ஒகே சார் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான்.. என்று சொல்லி அவன் எழுந்து கிளம்ப ம்ம் ஓகே இன்பா நீங்க பாருங்க என்று அவனை உடனே அனுப்பி வைத்தார்.
இன்பா அங்கு இருந்து சென்றது கூட தெரியாமல் அவன் அமர்ந்து இருந்த இடத்தை வெறித்து பார்த்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தாள். சத்ய மூர்த்தி அவன் சென்றதும். வேகமாக அவனது ஆட்களுக்கு போன் செய்து இன்பா எதுவும் அவன் வழியில் தலையிடுகிரானா என்று விசாரிக்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் போன் வந்தது. அந்த காலில் அப்படி எல்லாம் இல்லை அவன் எதத்சையாக தான் சொல்லி இருக்கிறான் என்று தெரிந்தது. இருந்தாலும் போலீஸ் dept லயும் அவனை பற்றி முழுதாக விசாரிக்க சொன்னார்.
இன்பா சத்ய மூர்த்திக்கு ஒரு தனி கணக்கு போட்டு வைத்து இருந்தான். இப்போதைக்கு அவன் செய்யும் வேலையை தடுக்க வேண்டும். குரு இன்பா இதில் முழு கவனமும் அவன் பக்கம் செலுத்துவதால் அவன் சில ஆராய்ச்சி எல்லாம் நிறுத்தி வைத்து இருந்தான். இது போதும் இனி பொறுமையாக அனைத்தும் கண்டு பிடித்து கொள்ளலாம் என்று விட்டான்.
கவ்யா கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்தவள். ச்ச அதுக்குள் போய் விட்டானா என்று நினைத்து கொண்டு அவள் சென்றாள்.
இன்பா நேராக வீட்டுக்கு வந்தான். வெண்பா அவனிடம் இன்று நடந்த சண்டையை பற்றி சொல்ல அவன் நேராக அவள் வீட்டுக்கு சென்றான் அவள் அங்கு இல்லை. அதிதி வீட்டுக்கு செல்ல டீ குடித்து கொண்டு இருந்தாள். அவள் வாங்க அண்ணா.. வருண் இல்ல.. அவர் இனி தான் வருவார் அண்ணா.. மம் சரி நான் கிளம்புகிறேன் என்று சொல்லி அவளுக்கு கண் ஜாடை காட்டி விட அவள் உடனே சரி அதி நான் கிளம்புகிறேன் என்று அவள் வெளியே வந்தாள்.
என்ன டி உனக்கும் அந்த ஜங்கிள் ஃபாக்ஸ்க்கும் சண்டையா.. உனக்கு யாரு சொன்னா .. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. ஆமா.. நான் இல்லாமல் போய் விட்டேன். இருந்தால் என்ன பண்ணி இருப்ப.. உங்க சண்டையை பார்த்து இருப்பேன். நீ அது தான் பண்ணி இருப்ப ஆனால் சிபி சார் என்று சொல்லி அவள் நிறுத்த…
என்ன அவன் என்ன பண்ணான்.. ஒன்னும் பண்ணலயே.. ஹே இப்போ நீ சொல்றியா இல்ல அவனுக்கு கால் பண்ணவா.. அவர் சண்டையை தடுத்தாரு.. இன்பா, அப்புறம்
அவ்ளோ தான்..
நீ அவன் கிட்ட பேசினியா.. மம் அவர் என் கிட்ட என்னை கன்வின்ஸ் பண்ணாரு அப்புறம் என்று அவனை பார்க்க அவன் மிகவும் கோபமாக முகத்தை வைத்து இருக்க.. ஹே இப்போ எதுக்கு டா கோபம்.. எனக்கு இன்பா மட்டும் தான் பிடிக்கும்.. இப்படி முகததை வைத்து இருக்காத.. சாரி கேளு.. எதுக்கு.. இனி என் முன்னாடி என்னை பற்றி மட்டும் தான் பெசனும் , நினைக்கனும் இனி நீ அவன் கிட்ட பேச கூடாது.
விவேகா இன்னும் நமக்குள்ள அந்த பெட் அப்படியே தான் இருக்கு உன் கிட்ட நான் சாரி கேட்க மாட்டேன் நான் எந்த தப்பும் பண்ணல.. நான் உன்னை மட்டும் தான் பிடிக்கும் அப்டின்னு சொல்லி விட்டேனே இதுக்கு மேல் உனக்கு என்ன வேணும்..
இன்பா, ஒரு ஹக் கொடு.. விவேகா அவன் முகத்தை பார்க்க அவன் விளையாடுகிறான் என்று தெரிந்து கொண்டாள். டேய் போடா.. நீ கொடுக்கிர எனக்கு வேணும்.. முடியாது.. நீ தானே சொன்ன என்னை மட்டும் தான் பிடிக்கும் அப்டின்னு அதை நான் எப்படி நம்பரது..
அதுக்கு என்ன பண்ண சொல்ற.. அதான் ஒரு டைட் ஹக் கொடு…
நான் நாளைக்கு தரேன்.. பக்கா.. ம்ம் பக்கா என்று சொல்லி அவள் அவனை பார்த்து கண் அடித்து விட்டு வீட்டுக்கு ஓடினாள்.
அந்த இரண்டு மாதமும் வகுப்புகள் மிகவும் கடுமையாக இருந்தது அனைவரும் படித்து படித்து கலைத்துவிட்டனர் அவர்கள் எதிர்பார்த்த அந்த தேர்வு வந்தது கிட்டத்தட்ட அனைவரும் எழுதினர். நெகடிவ் மார்க் வைத்து அந்த கேள்வி தாள்கள் மிகவும் கடினமாக இருந்தது. எல்லாம் முடித்து விட்டு அதன் ரிசல்ட்க்காக காத்து கொண்டு இருந்தனர்.
ரிசல்ட் நாளை பார்ப்போம்..
தொடரும்…
Episode 160,
அடுத்த நாள் அனைவரும் பரபரப்பாக காலேஜ் வந்தனர். இன்று தான் அந்த தேர்வின் ரிசல்ட் இவ்வளவு பதட்டத்திருகு காரணம் அந்த வினா தாள் அவ்வளவு கஷ்டம்..
ஒவ்வொரு ஆண்டு அதாவது இரண்டாம் ஆண்டு படிக்கும் அனைத்து துறைகளில் மூன்று இடகள் மட்டும் யார் யார் பிடித்து இருக்கிறார்கள் என்று பார்த்தனர். ஒவ்வொரு துறையில் பார்த்தால் மொத்தம் ஒன்பது துறைகள் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு என அதில் மொத்தமாக 100 மாணவ மாணவிகள் மட்டுமே இன்பா வைத்த தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்தனர். MBA அதே போல் 10 மாணவர்கள் பிடித்து இருந்தனர்.
இங்கே விவேகா வகுப்பில் மாணவர்கள் நம்ம கிளாஸ் ல ஆதி முதல் மதிப்பெண், அடுத்து விவேகா, அப்புறம் இனியாள் ஆனால் ரொம்ப கஷ்டம் என்று பேசி கொண்டு இருக்க விவேகா, ஆதி இருவரும் எப்பொழுதும் போல் சாதாரணமாக இருக்க இனியாள் எப்படி மார்க் குறைந்தது என்று அந்த வினா தாளை பார்த்து வருத்தப்பட்டு பதில் தேடி கொண்டு இருக்க அவள் தோழிகள் ஹே ஃபீல் பண்ணாத டி என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தனர். அது பார்ப்பதற்கே கொஞ்சம் சீனாக இருந்தது.
வெண்பா வகுப்பில் பானு, சதீஷ்மூன்றாம் இடம் இரண்டு பேர் வெண்பா, அர்ஜுன் அதே போல் MBA ல முதல் இடம் அருண் இரண்டாம் இடம் கவ்யா மூன்றாம் இடம் சுகன், சோனா இருவரும் பிடித்து இருந்தனர். கிருஷ்ணன் இந்த தேர்வு முடிவுகள் வெளியீடு வந்ததும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தார். அனைத்து மாணவர்களையும் ஆடிட்டோரியம் வர சொன்னார். அவர்கள் அனைவரையும் பாராட்டி விட்டு இது போல் ஒவ்வொரு செம் தொடக்கததிலும் ஒரு தேர்வு வைத்து கொள்ளலாம் என்றும் முயற்சி செய்த மாணவர்கள் அனைவரையும் ஊக்க படுத்தி பேசி விட்டு அவர் சென்றார்.
கவ்யா மிகவும் கோபத்திலும் இரண்டாம் இடம் பிடித்த வருத்ததுள் இருந்தாள். அவள் வீட்டில் உள்ள பொருள் எல்லாம் உடைத்து நாசம் செய்தாள். அடுத்த நாள் இன்பா அந்த 120 மாணவர்களையும் சந்திக்க ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய பட்டது. அனைத்து மாணவ மாணவிகளும் அங்கு வந்து இருந்தனர். வழக்கம் போல் கவ்யா, சோனா, இனியாள் இவர்கள் எல்லாம் முன்னால் அமர்ந்து இருக்க அதற்குள் இன்பா, சிபி, லில்லி மேம், தீபா மேம், சௌந்தர் சார் என அனைத்து துறைக்கு ஒருவர் என ஒன்பது பேர் வந்து இருந்தனர்.
இன்பா உள்ளே வந்ததும் வழக்கம் போல் அந்த இரு பெண்களும் அவனை பார்வையில் தின்று கொண்டு இருக்க இன்பா அந்த இடத்தை நோட்டம் விட்டான் அவன் பார்வை ஆதியில் போய் முடிய
எல்லாம் வந்தாச்சா என்று சுந்தர் கேட்டு கொண்டு இருக்க இனியாள் எங்க கிளாஸ் ல இன்னும் ஒரு பொன்னு வரல என்று சொல்லும் நேரம் விவேகா மூச்சு வாங்கி கொண்டே கைகளில் நோட் பேனா வுடன் வந்து நிற்க இன்பா அவளை கோபமாக ஒரு பார்வை பார்த்தான். அய்யோ முறைக்குறான் என்ன பண்ணேன் வரும் போது கீழே விழுந்து விட்டேன் கை எரியிது அதை விட இவன் பார்வை ரொம்ப உக்கிரமாக இருக்கு இவளோ ஒருததி டைல்ஸ் ல தண்ணி ஊற்றி வைத்து இருக்கிறாள். என்று நினைத்து கொண்டு இருக்க சிபி உள்ள வா மா.. என்று சொல்ல கவ்யா சிபிய முறைத்தாள். அவள் உள்ளே வரும் நேரம் இன்பா, நில்லு.. அவள் என்ன என்பதை போல் பார்க்க மேடம் வந்ததே லேட் அதுலயும் உள்ளே வர பெர்மிஷன் கேட்க மாட்டீங்களா.. கவ்யாவுக்கு இப்பொழுது மிகவும் குளுமையாக இருந்தது. விவேகா பற்களை கடித்து கொண்டு மே ஐ கம் இன் சார் என்று கொஞ்சம் சத்தமாக சொல்ல இன்பா காதை தேய்த்து கொண்டு அறாம்சே கொஞ்சம் மெதுவா பொலைட்டா கேளுங்க.. இதை கேட்டதும் மாணவ மாணவிகள் எல்லாம் அவர்களுக்கும் பேசி சிரிக்க
மே ஐ கம் இன் சார்.. என்று கேட்க மம்ம் இப்போ தான் ஒரு பொன்னு கேட்ட மாதிரி இருக்கு உள்ளே வாங்க.. என்று சொல்ல
தீபா உள்ளுக்குள் ரெண்டு பேரும் இப்படி நடிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டாள்.
இன்பா, அந்த பொண்ணு இன்சார்ஜ் யாரு? நான் தான் சார் என்று தீபா வர IT dept டிசிப்ளின்ல ஜீரோ கொஞ்சம் ஒழுக்கத்தை கத்து கொடுங்க.. என்று சொல்லி விட்டு அவளை ஒரு பார்வை பார்க்க அவள் கண்களில் நீர் கோர்க்க அவனை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
இன்பா பேச தொடங்கவும் சிபி விவேகா இருக்கும் இடத்துக்கு சென்று நின்று கொண்டான். அருன் அவள் என்ன செய்கிறாள் என்று திரும்பி திரும்பி பார்க்க
இன்பா, ஹலோ மிஸ்டர்.. அருண் பின்னால் திரும்பி பார்க்க என்ன சொன்னேன் ரிபிட் பண்ணு.. அருண் என் கிட்ட பிரச்னை பன்றதுக்கே இவனுக ரெண்டு பேரும் கிளம்பி வந்து விடுகிறான்கள் என்று நினைத்து கொண்டு சார் என்று நெளிந்து கொண்டு எழுந்தான்..
ம்ம் சொல்லு..
நீங்க பேசியது எனக்கு கேட்கவே இல்ல சார் என்று சொல்ல மாணவர்கள் அனைவரும் சிரிக்க
இன்பா, இன்னொரு தடவை எதுவும் செய்து பாரு அப்புறம் கிரவுண்ட இன்னிக்கி முழுக்க சுற்ற வேண்டியது தான்.. என்று சொல்லி பேச ஆரம்பித்தான்.
இன்பா பேச ஆரம்பித்தான் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் எல்லாருக்கும் கங்கிராஜுலேசன்,நீங்க எல்லாம் நல்லா பெர்ஃபாம் பண்ணி இருக்கீங்க, வெரி குட் , பட் இதுக்கு மேல தான் நம்மளோட சேலஞ்ச் அதாவது மெயின் டாஸ்கே ஸ்டார்ட் ஆக போகுது..
இனி டெய்லி இந்த செம்பு ஃபுல்லா லாஸ்ட் ஹவர் இந்த மீட்டிங் ஹால்ல இந்த 120 மெம்பர்ஸ் வந்துடனும்.. அதேபோல அதிலிருந்து காலேஜ் முடிஞ்சு அடுத்த ஒன் அவர் டெய்லி டூ ஹவர்ஸ் நீங்க இங்க டைம் இங்கே தான் ஸ்பென்ட் பண்ண போறீங்க…
இனி இன்னும் படிக்க இருக்க எல்லாத்தையும் ரிவைஸ் பண்ண போறோம் உங்க எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்
ஏன்டா நாம இப்படி படிக்கிறோம் அப்படின்னு உங்களுக்கு தோணும் அதை மைண்ட்ல இருந்து எடுத்துடுங்க..
நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்யுங்க இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு
நீங்க இதையெல்லாம் முடிச்சிட்டு லாஸ்ட் டெஸ்ட் முடிச்சதுக்கு அப்புறம் நான் அது என்னன்னு சொல்ல போறேன்…
சோ அது வரை உங்களோட கோல் இது மட்டும் தான் கிளாஸ்ல உங்களோட படிப்ப பாக்கணும் இந்த லாஸ்ட் ரெண்டு ஹவர் இது அண்ட் வீட்ல போய்ட்டு ஒன் ஹவர் இதை மட்டும் நீங்க படிக்கணும்.
உங்களுக்கு இனி இந்த ரெண்டு ஹவர் மிஸ்டர் சிபி IT dept அவர் வருவாரு அண்ட் இன்னொருத்தர் தர்ஷனா அவங்க வர போறாங்க அவங்க gate மெறிட் லிஸ்ட் சிபி ஸ்டேண்போர்ட் ல படிச்சு இருக்காரு சோ அவர் அறிவை யூஸ் பண்ணிக்கோங்க.. என்று சொல்லி முடித்தான். சிபி, விவேகா.. சொல்லுங்க சார் என்று அவள் கண்களை கைகளில் துடைக்க அவள் கையில் கீழ விழுந்ததால் கண்ணி சிவந்து இருக்க ஹே என்ன ஆச்சு மா.. ஒன்னும் இல்ல சார்.. என்று அவள் அமர்ந்து இருக்க அதற்குள் அனைவரும் செல்லலாம் என்று சொல்ல வெளியே சென்றனர்.
சிபி, விவேகா நில்லு.. ஐ சே ஸ்டாப் இட் என்று சொல்ல அவள் நிற்க ஆதி கடைசியாக அவள் வர வில்லை என்றதும் திரும்பி பார்க்க வெண்பா அவள் அருகில் வந்து என்ன டி ஆச்சு.. ஆதி அதற்குள் ஹே என்னாச்சு டி என்று கேட்க அவள் கீழே விழுந்தது. இன்பா பேசியதில் அவள் கண்களில் கண்ணீர் வர இப்போது அழுது விட்டாள்.
கவ்யா இனியாள் கிட்ட மம் பரவாயில்ல கேர்ல் அங்க தண்ணி ஊற்றினது நீ தானே.. இதை கேட்டதும் அவள் இல்ல இல்ல அக்கா.. என்று அவள் பயந்து கொண்டே சொல்ல கவ்யா எனக்கும் அவளை ஐ ஹேட் ஹர் என்று சொல்ல அங்கே ஒரு குரோத நட்பு தொடங்கியது.
நீ வினய் தங்கை சரி தானே என்று இருவரும் சிரித்து கொண்டே பேசி வர இன்பா வெளியே சென்றவன் அவள் இன்னும் வெளியே வர வில்லை என்று தெரிந்து கொண்டு உள்ளே வர.. அங்கே வெண்பா அவள் கைகளை பிடித்து நீவி விட ஆதி அவள் கைகளை பிடுங்கி ஊதி கொண்டே ஹே வலிக்குதா..இல்ல இல்ல இப்போ பரவாயில்லை.. சிபி, விவேகா நீ கிளாஸ் ல போய் ரெஸ்ட் எடு மா.. இல்ல சார் என்று அவள் சொல்லி கொண்டு இருக்க இன்பா வாட் ஹபென் ..
விவேகா உடனே எழுந்து நின்று கொண்டு சிபியை பார்த்து சார் நான் க்ளாஸ் போறேன் என்று அவள் கிளம்ப ஆதி வெண்பா அவள் பின்னால் செல்ல..
இன்பா, நான் சொன்னது உன் காதில் விழ வில்லையா.. விவேகா அவன் அருகில் கண்டு கொள்ளாமல் “ஐ ஹேட் யூ” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி சென்றாள். சிபி, அவன் அருகில் வந்து இன்பா நீ எதுக்கு டா அன்னிக்கு நடந்ததை மனசில் வைத்து இப்படி அவளை எல்லார் முன்னாடியும் சீண்டி பேசின.. இன்பா இப்போ என்ன ஆச்சு.. அவள் வரும்போது வழுக்கி விழுந்து கையில் கொஞ்சம் இரத்தம் கட்டி போய் விட்டது. நீ இப்படி இன்டென்ஷனா பண்ணுவ அப்டின்னு.. இன்பா அதற்கு மேல் கேட்காமல் ஹவ் டூ ஐ know.. என்று அவன் சொல்லி சென்றான்.
விவேகா அவள் இடத்துக்கு போய் அமர்ந்து கொண்டாள். ஆதி, சரி விடு ஃபீல் பண்ணாத டி உனக்கு என்ன வேணும்.. எனக்கு ஒன்னும் வேணாம் என்று அவள் டெஸ்க் ல சாய்ந்து கொண்டு படுத்து கொண்டாள். இன்பாவுக்கு இப்பொழுது அவளிடம் பேச செல்ல பயமாகவே இருந்தது. நிஜமாவே ஓவரா போய் விட்டோமோ.. என்று தோன்றியது. நேராக அவள் வகுப்புக்கு சென்றான் அங்கே பார்க்க அவள் கீழே குனிந்து கொண்டு படுத்து கொண்டிருந்தார் கட்டாயம் இப்பொழுது பேசினால் அவள் அருகில் சென்றால் அவள் பயங்கரமாக கோபத்தில் இருப்பாள் என்று தெரிந்து கொண்டு திரும்ப வந்து விட்டான்.
இப்போ எப்படி அவளை கன்வின்ஸ் பன்றது. என்று யோசித்து கொண்டு இருந்தான்.
மாலை வீடு வரும்போது வரும்போது அவளும் வெண்பாவும் நடந்து கொண்டே வர இன்பாங்கி நிற்பதை பார்த்து அவள் வேகவேகமாக அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள் இன்பா அவளிடம் வெண்பா எப்படி இருக்கா அவ என்னாச்சு ரொம்ப வலிக்குதா அண்ணா அவ உங்க மேல செம கோபத்தில் இருக்கா நீங்க எல்லாரும் முன்னாடியும் அதுவும் அந்த காவ்யா இனியாள் முன்னாடி அவளை இப்படி நீங்க பேசுனது அவ உண்மையாலுமே ரொம்ப ஹாட் ஃபீல் பண்றா ஏன்னா நீங்க இப்படி பண்றீங்க என்று வெண்பாவம் சொல்ல அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கரைந்து போனது காற்றோடு கரைந்து போனது.
இப்படியே இரண்டு நாட்கள் சென்றது. அந்த வாரத்தின் இறுதி நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை வர ஞாயிற்றுக்கிழமை அவளைப் பற்றி நினைத்துக் கொண்டு இன்பா தவித்து தான் போயிருந்தான். என்ன பண்றது இன்று குப்புற படுத்து புரண்டு யோசித்தான். சரி அவளை போய் பார்த்து விட்டு வரலாம் என்று அவள் வீட்டுக்கே சென்றான்.
அங்கே கங்கா, அவளை வலு கட்டாயமாக அமர வைத்து கொண்டு இருக்க விவேகா, அம்மா பிளீஸ் மா.. பிளீஸ் மா எனக்கு வேணாம் வேணாம் மா என்று அவள் சிணுங்கி கொண்டு இருக்க வருண் விவேகா இன்னிக்கி நீ மாட்டின..
அம்மா என்று அவள் அழ ஆரம்பிக்க.. உடனே அங்கே இன்பா வந்து நிற்க அதி கைகளில் அந்த கப்பை எடுத்து கொண்டு அவள் வாய்க்கு அருகில் செல்ல அதி அண்ணா!..என்று அதி சொல்ல உடனே விவேகா யாரு கடவுள் ரூபத்தில் நம்மை காப்பாற்ற வந்து இருப்பது என்று நினைத்து திரும்ப அங்கே விவேகா பார்த்தது..
அவன் தான் இன்பா..
தொடரும்…
Episode 161,
இன்பா அங்கே விவேகாவை பார்க்க முதலில் வருண் வீட்டுக்கு சென்றான். அங்கே யாரும் இல்லாமல் வீடு பூட்டி இருக்க.. விவேகா வீடு நோக்கி அவளை எப்படி பார்த்து பேசுவது என்று நினைத்து கொண்டே செல்ல அங்கே அவன் கண்ட காட்சி அவள் அம்மா அவளை அழுத்தி பிடித்து உட்கார வைத்து அவளை மிரட்டி கொண்டு இருக்க அதிதி கைகளில் உணவு கப்புடன் நின்று கொண்டு அவளுக்கு ஊட் ட செல்லும் காட்சி தான் அவன் வீட்டுக்குள் நுழையும் போதே ஒரு புதுவித நெய் வாசனை அவன் மூக்கை துளைத்தது.
அதி அவள் வாய்க்கு அருகில் கொண்டு செல்லும் நேரம் வேண்டாம் டி பிளீஸ் விட்டு விடு நான் மாமசசி கிட்ட என்று இவள் தடுத்து கொண்டே இருக்க அங்கே இன்பா வந்து இருப்பதை பார்த்து அத்தை! அண்ணா! என்று அவள் சொல்ல விவேகா, கங்கா, வருண் மூவரும் பார்க்க உடனே கங்கா விவேகாவை விட அவள் வேகமாக உள்ளே சென்றாள். வருண் ச சார் நான் நீங்க சொன்னது எல்லாம் எடுத்து வந்து விட்டேன் இன்னிக்கு ஈவ்னிங் கொடுக்கலாம் அப்டின்னு தான் நினைத்தேன் என்று அவன் பேசி கொண்டு இருக்க இன்பா அதியை பார்க்க அவள் கைகளில் உள்ளது என்ன என்று பார்க்க அண்ணா, இது இது நெய் சாதம்.. கங்கா இன்பாக்கு குடிக்க காபி போட்டு எடுத்து வந்தவள் அது ஒன்னும் இல்ல தம்பி எங்க பாப்பாவுக்கு இத ஊட்டி விட்டு கிட்டு இருந்தோம் அதான்..
இட்ஸ் ஓகே ஆன்டி அதோட அரோமா குட்.. என்று சொல்ல விவேகா அவனை கதவில் உள்ள துவாரததின் வழியாக பார்த்து கொண்டு இருந்தாள். அவள் மனம் அய்யோ கிருஷ்ணா போயும் போயும் இவன் முன்னாடியே இது நடந்து இருக்கே இனி இதை வச்சு என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவானே என்று அவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். இன்பா உடனே அங்கு இருந்து கிளம்பி விட்டான். வருண் நேராக அம்மா வீட்டில் வேலை இருக்கு என்று சொல்லி கிளம்ப அதி அவனுடன் கிளம்பினாள். என்ன வருண்.. அதான் மா இன்பா சார் கொடுத்த வேலை இருக்கு அவரை பார்த்து கொடுக்கணும் என்று சொல்லி அவன் கிளம்பினான்.
அவன் சென்ற சிறிது நேரத்தில் விவேகா யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு வெளியே வந்தாள். கங்கா, ஹே.. அம்மா.. இதை போய் வருண் கிட்ட கொடு என்று ஒரு பாக்ஸ் நீட்ட.. என்ன இது என்று அவள் திறக்க போக.. அது தான் நெய் சாதம் அந்த தம்பிக்கு.. விவேகா கேள்வியாக எந்த தம்பி? இன்பா தம்பிக்கு தான்.. என்ன தம்பி மேல இவளோ கரிசனம்.. ஹே அடி வாங்க போற அந்த தம்பி நல்லா இருக்குன்னு சொன்னது நம்ப சாப்பிட்டு அது பொக்குண்ணு போயிடுச்சுனா..விவேகா, அம்மா இது உட்சகட்டம்.. ஹே உனக்கு அந்த தம்பி பற்றி என்ன தெரியும் நான் உன்னை தனியா வச்சு இருக்கேன்னு அவங்க அம்மா வீடு கொடுத்து இருக்காங்க உன் அத்தை சித்ரா வருண் கல்யாணத்துக்கு என்ன செய்தாள். ஆனால் அந்த தம்பி கூட பழகியதுக்கு வருண்க்கு எவ்ளோ நல்லது பண்ணி இருக்கு தெரியுமா.. இது எல்லாம் உனக்கு தெரியாது அவங்களுக்கு நம்ப நன்றியோட இருக்கணும் நல்ல பையன் அவங்களுக்கு அடுத்தவங்கலுக்கு உதவும் எண்ணம் அதுக்கே நம்ப மரியாதை கொடுக்கணும் டி..
சரி சரி போதும் விட்டால் நீ நல்ல தம்பி, தங்க கம்பி எல்லாம் கட்டி விடுவ நான் போறேன் என்று சொல்லி வருண் வீட்டுக்கு சென்றாள்.
அங்கு வருண் வீட்டுக்கு சென்றதும் அவனிடம் இந்தா அம்மா. உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க…
என்ன இது என்பது போல் அவன் பார்க்க
இது அந்த நெய் சாதமா அது வந்து உன்னோட சாருக்கு கொண்டு போய் கொடுத்திடு ..சொல்லி
சரி நான் கிளம்புறேன் என்று அவள் வெளியே செல்ல போக..
வருண் விவேகா நில்லு
என்ன என்று அவள் திரும்பிப் பார்க்க ஒன்னும் இல்லம்மா இந்த டிபன் பாக்ஸ் அண்ட் ஃபைல் இது எல்லாம் இன்பா சார் வீட்டில் கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடேன்…
ஹே என்ன டா என்னை கொடுக்க சொல்ற…
எனக்கு முக்கியமான வேலை இருக்கு நீ போயிட்டு வா…
வருண், முடியாது எனக்கு அவரைப் பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு நீ சரியான பயந்தாங்கோலி அப்புறம் எதுக்குடா போலீஸ் வேலைக்கு போன அவரை பார்த்து பயந்துட்டு இருக்க….
ஹே பயம் இல்ல ஒரு மரியாதை தான் போனால் என்னை நிறைய கொஸ்டின் எல்லாம் கேட்பாரு…
நீ போனா வாங்கிட்டு உடனே அனுப்பிவிடுவார் ப்ளீஸ் போமா என்று வருண் கெஞ்ச…
அதி போயிட்டு வா…
ஏய் போடி நான் போக மாட்டேன்
அவள் என்ன விவேகா நீ என் செல்ல சின்ன குட்டி தானே..
ஆமா இப்படி சொல்லி தானே இப்ப எனக்கு அந்த சாப்பாட்டை ஊட்ட சொன்ன, எங்க அம்மா கிட்ட மாட்டிவிட்ட..
அதிதி, இல்லம்மா என் செல்லம் இனிமே நான் அத்தை கிட்ட சொல்றேன் இனிமே அத்தை உனக்கு இது எல்லாம் ஊட்ட மாட்டாங்க..
ஐந்து நிமிடங்கள் விவேகா ஒரு ஐந்து நிமிடங்கள் அங்கேயே நின்று யோசித்துக் கொண்டிருந்தவள்.
விவேகா இதுக்குத்தான் இந்த வீட்டில குடும்பத்திலும் சரி கடைசியா பொறந்தாலும் இந்த தொல்லை தான் கடைக்கா இருந்தாலும் சரி வெளியே போறதா இருந்தாலும் சரி எல்லாம் நம்மளையே டார்ச்சர் பண்றாங்க… என்று அவள் சலித்துக் கொண்டே போக சலித்துக் கொண்டே வருணிடம் சரி குடு போறேன் என்று அந்த ஃபைலையும் அந்த பாக்ஸையும் பிடுங்கிக் கொண்டு சென்றாள்.
அவள் சென்றதும் வருண் அவள் பேசிய தோரணையை நினைத்து இருவரும் சிரித்தனர்.
விவேகா மனதில் ஒவ்வொரு முறையும் என்னை அவன்கிட்ட போட்டு விடுவதே இதுகளுக்கு வேலையா போச்சு… என்று நினைத்து கொண்டே அவள் சென்று அவன் வீட்டுக்கு வந்து விட்டாள்.
கதவை தட்ட சுபா திறந்தாள். அக்கா.. மம் வா மா விவேகா.. அவள் அக்கா இன்பா சார் இல்லையா..
மேம் எங்க ?
ஒரு முக்கிய வேலையை தாத்தா வீட்டுக்கு அம்மாவும் ,அப்பாவும் போய் இருக்காங்க.
இன்பா மேல தான் இருக்கான்.
என்ன விஷயம்?அவனைத் தேடி வந்திருக்க…
நான் ஒன்னும் அவர தேடி வரல எங்க அண்ணா இத கொடுத்துட்டு வர சொன்னாங்க அதுக்கு தான் வந்தேன். என்று சொன்னவள் சுபாவிடம் அந்த பைலை நீட்டி அக்கா இத அவர்கிட்ட கொடுத்துடுங்க. நான் கிளம்புறேன். என்று சொல்ல
மேலே இருந்து சுபா யார் அது? என்று சத்தம் வர
வருண் தங்க ஏதோ பைல் என்கிட்ட கொடுத்து இருக்கா…
அதை எடுத்துட்டு அவளை மேல வர சொல்லு எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணனும்..
விவேகா அக்கா இத பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது எங்க அண்ணனுக்கு தான் தெரியும் நான் வேணா என் அண்ணாவை வர சொல்லவா …
இதை சொன்னதும் அவன் மாடியில் இருந்து எட்டி பார்த்து நீ வந்தா என்கிட்ட IT பாரின் ஆர்த்தர் புக் ஒன்னு இருக்கு.. அதுக்கு தான் கூப்பிட்டேன்.. சரி விடு.. பாரின் ஆர்த்தர் என்ற அந்த வார்த்தையை கேட்டதும் சுபா கைகளில் இருந்த ஃபைல் எல்லாம் பிடுங்கி கொண்டு சார் இதோ எடுத்து வருகிறேன் என்று அவள் மேலே செல்ல
சுபா, என் கிட்ட அவனை விட நிறைய இருக்கு.. விவேகா திரும்பி சுபாவை பார்க்க இன்பா, அவள் உனக்கு தர மாட்டா, நான் உனக்கு வச்சுக்க தரேன் என்று ஒற்றை புருவம் உயர்த்த விவேகா இன்பா பக்கம் திரும்ப சுபா, டேய் இப்போ ரொம்ப ஓவரா பண்ற..
விவேகா அவனிடம் அந்த ஃபைல் எல்லாம் கொடுத்து விட்டு புக் புக் வேணும்.. அது என்று அவளை பார்க்க ஹே ஐ ஹேட் யூ மைண்ட் இட் புக் கொடு நான் கிலம்பனும்.. இன்பா ஹே பேபி என்று ஒரு அடி வைக்க.. ஹே கொன்றுவேன்.. சரி சரி வா எடுத்து தருகிறேன் என்று சொல்லி அருகில் ஒரு பழைய பொருட்கள் இருக்கும் அறைக்கு கூட்டி சென்றான். அவள் உள்ளே வந்ததும் ஹே பேபி நான் இன் டென்ஷனா தா பண்ணேன் எனக்கு எப்படி தெரியும் நீ கீழ விழுந்து இருப்பன்னு..
விவேகா நீ புக்கு மட்டும் கொடு உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை.. ஹே என்ன டி.. அவள் இப்ப என்ன சொன்னார் பண்ணியா எதுக்கு இன்டென்ஷனா பண்ண அதுக்கு ரீசன் சொல்லு..
அந்த கவியா அவ ஏற்கனவே உன் மேல கோவத்துல இருந்தா இனியாளும் அதே மாதிரி தான் அவங்க ரெண்டு பேரையும் லூசராக்குறதுக்கு தான் உன்கிட்ட அப்படி பேசினேன்.
அவளுக்கு தெரியாது நம்மள பத்தி நீ அதை பெருசா எடுத்துட்டு கோபம் பட்டு விட்டாய் ஆமா எங்கே அடிபட்டது எந்த இடத்தில் கீழே விழுந்த என்று அவன் அவள் கைகளை பிடிக்க வர…
விவேகா டேய் தள்ளி போ புக்கு கொடு நான் கிளம்பனும் உன்கிட்ட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல…
ப்ளீஸ் ப்ளீஸ் பண்ணாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..
விவேகா ரொம்ப கஷ்டமா இருக்கா..
ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு அதுவும் நீ என்ன பாக்காம போனியே அதைவிட கஷ்டமா இருந்தது..
அப்படியா சரி பனிஷ்மென்ட் இருக்கு உனக்கு என்ன சொல்லு நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்..
விவேகா யோசித்துக் கொண்டே சேர் முட்டி போடு நான் உன் மடியில உட்காரனும் அது மாதிரி பத்து நிமிஷம் இருக்கற
இது தான் உன் பனிஷ்மென்ட்..
இன்பா அதை கேட்டு சாதரணமாக நினைத்து விட்டான். ஓகே நான் சேரில் உட்கார்ந்து இருக்கிறேன் என் மடியில நீ உட்கார்ந்துக்கோ. இவ்வளவு தானா பேபி இது பனிஷ்மென்ட் இல்ல டி வரம நான் என் வாழ்க்கை ஃபுல்லா கூட உன்ன மடியில உட்கார வச்சுட்டே இருப்பேன் டி …
டேய் பிளர்ட் பண்றது கப்பல் விடுவது இது எல்லாம் கொஞ்சம் நிறுத்தி வை டா.. என்று சொல்லி அவள் அந்த தண்டனையை பற்றி விளக்க அதை கேட்டதும் அவன் அதிர்ந்தான். எதுவும் தெரியாதவன் போல் என்ன சொல்ற நான் கேள்விப்பட்டதே இல்லையே…
டேய் நடிக்காதடா ஷேர் மாதிரி இப்படி உட்காரு நான் உன் மடியில உட்காரனும் கால் மேல கால் போட்டு உட்கார போறேன். என்று இரட்டை புருவம் உயர்த்த
இன்பா, என்ன செய்ய, என்ன செய்ய என்று யோசித்தவன் மம்ம் சரியாக ஒரு யோசனை வர அக்கா வந்தால் என்ன பண்றது..
நீ திருடனா உங்க அக்கா அதுக்கு மேல கேடி சரியா தான்டா இருக்கீங்க ரெண்டு பேரும் என்று சொன்னவ
எனக்கு தெரியாது சேர் முட்டி போடுற உன் மேல நான் உட்கார்றேன் பனிஷ்மென்ட் முடிக்குறோம் அது எப்பனாலும் ஓகே.
ஆனால் அதை மட்டும் நீ செய்யல நான் நெஜமா உன்கிட்ட பேசவே மாட்டேன். என்று சொல்ல அவன் யோசிக்ககாமல் மன்டே வச்சுக்கலாம் உனக்கு ஓகே வா..
அவள் சிரித்து கொண்டே ஜாலியாக வரேன் டா இன்பா என்று ஒரு நிமிடம் திரும்பியவள்.. ஆன்டி ஹீரோ சார்.. எங்க அம்மா உனக்கு நெய் சோறு கொடுத்து விட்டு இருக்காங்க இந்தா.. என்று நீட்ட இன்பா அதை வாங்கி திறந்து பார்த்தான். ஒரு குட்டி புன்னகை. ம்ம் இதோட அரோமா வித்தியாசமா இருக்கு..
விவேகா, அது நெய் உருக்கும் போது முருங்கை கீரை, அதோட பூ போட்டு செய்யும் போது இப்படி ஒரு ஸ்மெல் வரும் என்று மூக்கை பிடித்து கொண்டே அவள் சொல்ல விவேகா ஒரு வாய் சாப்பிடுகிறாயா.. டேய் பின்னிடிடுவென் தண்டனைக்கு தயாரா இரு.. ஹே ஒரு கிஸ் என்று அவன் அருகில் வர நீ தண்டனையை சரியா பினிஷ் பண்ணி முடி..
இன்பா, அப்புறம் நீ தருவியா.. இல்ல அதை பற்றி யோசிப்பேன் டா இடியட் என்று சொல்லி செல்ல அவன் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து நீட்டி விட அவள் வாங்கி கொண்டு ஓடி விட்டாள்.
இன்பா அந்த பாக்ஸ் எடுத்து கொண்டு கீழே வந்தவன் சாப்பிட அமர அவனுக்கு ஒரு போன் கால் வர அதை பேச சென்றான்.
அந்த நேரம் ரவி, வசுமதி இருவரும் உள்ளே வர சுபா டாடி தண்ணி என்று கொடுக்க அவர் வாங்கி குடித்து விட்டு மேஜையில் வைக்க அந்த டிபன் பாக்ஸ் இருக்க வசு அதை ஓபன் செய்ய என்ன இது நெய் சாதம் மாதிரி இருக்கு யாரு செய்தது என்று முகத்தை துடைத்து கொண்டே ஒரு வாய் சப்பிட்டவ உடனே மம் என்று ரவி ஆ காட்டுங்க நல்லா இருக்கு சுபா நீ தான் செய்தியா.. அவள் சமையல் அறையில் டீ போட்டு கொண்டே என்ன என்று வெளியே வர என்ன மா.. இது தான் என்று அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட மம் ஸ்மெல் சூப்பரா இருக்கு..
ஹான் இது இது என்று யோசிக்க ரவி மதி ஸ்பூன் எடுத்து கொடு என்று வாங்கி போன் நோண்டி கொண்டே அவர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டு முடிக்க இன்பா உள்ளே வர வசு, ராகவ் எங்கே இங்கே தான் இருந்தியா.. மம் மாம் என்று அந்த டிபன் பாக்ஸை அவன் தேட..
ரவி, என்ன டா தேடுற.. அவன் பதில் சொல்லாமல் சுற்றி பார்த்து கொண்டே ஒரு ஸ்பூன் எடுக்க சுபா, டேய் என்ன தேடுகிறாய் சொல்லு டாடி கேட்டாங்க தானே… இல்ல சுபா இங்கே ஒரு டிபன் பாக்ஸ் இருந்தது அது தான் தேடிட்டு இருக்கேன்…
சுபா, அதுவா இப்போ தான் நானும், டாடி, மம்மி மூணு பெரும் என்று அவள் சொல்லி கொண்டே அவன் முகத்தை பார்த்தவள் ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.
இன்பா..?
தொடரும்…
Episode 162,
இன்பா அந்த டிபன் பாக்ஸை தேடிக்கொண்டே இருக்க …சுபா ,என்னாச்சுடா என்ன தேடிட்டு இருக்க டாடி கேட்டாங்கல்ல சொல்ல வேண்டியது தானே…
அவன் மறுபடியும் அந்த இடத்தை மேஜையை தேடிக்கொண்டே அது ஒன்னும் இல்ல சுபா இங்கே ஒரு டிபன் பாக்ஸ் இருந்தது அதுதான் தேடிட்டு இருக்கேன் என்று சொல்லி கொண்டிருக்க
சுபா, அந்த டிபன் பாக்ஸா அதில் நெய் சாதம் சூப்பரா இருந்தது டாடி ,மம்மி நாணு நாங்க மூணு பேரும் இப்போதான் சாப்பிட்டோம் என்று டீ ,காபி ட்ரேயை எடுத்துக்கொண்டு அவனை திரும்பி பார்க்க..
இன்பா அவளை முறைத்துக் கொண்டு அப்படியே பார்வை ரவி வசுமதி மீது திரும்பியது. தண்ணிர் குடித்து கொண்டு அவனை பார்க்க இன்பா முறைத்து கொண்டு இருக்க அதை பார்த்து அடக்க முடியாமல் சிரிப்பு வர அவர் சிரித்து விட்டார். வசு ராகவ், ரவி.. என்று இருவரையும் அழைக்க இப்போ எதுக்கு ரவி சிரிக்கிரீங்க.. அவரோ அவனை பார்த்தால் எனக்கு ஐ கான் ட் கன்ட்ரோல் என்று சிரிக்க..
இன்பா, மாம் வாட் ஸ் திஸ் என்று கோபத்தில் அந்த ஸ்பூன் எடுத்து வீசினான் அருகில் இருந்த பொருட்கள் எல்லாம் தள்ளி விட சுபா, இன்பா ஓவரா பண்ற அது நெய் சாதம் தானே நான் செய்து தரேன்.. நீ செய்தது யாருக்கு வேண்டும் ரவி, சுபா நீ டாடிக்கு செய்து தா.. என்று சிரிக்க ரவி? மதி இது manufacturing defect டி என்று சொல்லி மீண்டும் சிரிக்க
அவன் மாம் என்று கத்தி விட்டு அவன் அறைக்கு செல்ல ரவி, மதி நெய் சாதம் எங்கே ஆடர் பண்ணான்னு கேளு இன்னொரு ஆடர் கொடுக்கலாம் என்று கேட்க உங்களை என்று சொல்லி கொண்டே மீண்டும் படி இறங்கி வர டேய் என்ன ஓவரா பண்ற.. பார்த்துக்கோ டி இதுக்கு ஆடு தலையை வெட்டின மாதிரி துள்ளி கிட்டு வரான். நாளைக்கு இவன் நமக்கு சோறு போட மாட்டான் டி.. ரவி கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொல்லி கொண்டே வசுமதி, ராகவ் எனக்கு தெரியாதுடா அது நீ கொண்டு வந்தது அப்டின்னு நான் சுபா சமைச்சு இருக்கா அப்படின்னு நினைச்சுட்டு நான் தான் ஃபர்ஸ்ட் எடுத்து சாப்பிட்டேன். அப்பா கூட சாப்பிடல நிஜமா..
இன்பா,நிஜமாவா என்று இன்பா கேட்க இதற்கும் ரவி சிரித்தான்.
மாம் அவரை சிரிக்க வேணாம்னு சொல்லுங்க மாம்
டேய் இப்ப நீ போலீஸ் கூட இல்ல என் பொண்டாட்டி தான் போலீஸ் தெரிஞ்சுக்கோ.. இன்பா அதற்கு மேல் அங்கே நிற்காமல் வேக வேகமாக படி ஏறி சென்று விட்டான்.
வசுமதி, சுபா யார் செய்தது யாரு வந்துட்டு போனா இது யார் செஞ்சு கொண்டு வந்தது உனக்கு இதை பத்தி ஏதாவது தெரியுமா..
சுபா,அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் விவேகா வந்துட்டு போனா ஏதோ பைல்ஸ் ஒரு அஞ்சு பையில எடுத்துட்டு வந்துட்டு இந்த டிபன் பாக்ஸ் அவளோட அண்ணி வருண் மனைவி அதிதி செஞ்சான்னு சொல்லி கொடுத்துட்டு போனா. அதுக்கு தான் அவன் இப்படி குதித்து விட்டு போறான்… சுபா மேலும் தொடர்ந்தாள் அந்த பொண்னு அதிதி மேல் என்ன விட அந்த அளவுக்கு பாசமா எப்படி பேசிட்டு போறான் பாருங்களேன்.. நம்மளை விட அந்த நெய் சாதம் அவனுக்கு முக்கியமா போச்சு பொருளை எல்லாம் எப்படி உடைச்சிருக்கா இருக்கான்..
இடியட், ராஸ்கல் என்று சுபா திட்ட.. வசுமதி அந்த இடத்தை விட்டு நேராக கிச்சன் நோக்கி சென்றார் எனக்கு மனசே கேட்கல அதனால நான் போய் நெய் சாப்பாடு செய்யலாம் அப்டின்னு போறேன்
இதைக் கேட்டு ரவி சிரித்துக்கொண்டே அவனுக்கு இப்போ நீ செய்ற சாதத்தை விட அந்த சாதத்து மேல தான் அவனுக்கு ஈர்ப்பு அதிகம் அதுதான் ரொம்ப புடிக்கும் என்று சிரிக்க..
உடனே இதைக் கேட்டு வசுமதி என்ன சொல்றீங்க ஒன்னும் இல்ல போ போய் உன் பையனுக்கு சாதத்தை செய் போ என்று சொல்ல அவர் செய்து கொண்டு இன்பாவின் அறைக்கு செல்ல சென்றார் கதவைத் தட்ட அவன் திறந்ததும் என்னடா கண்ணா இதுக்கு போய் இவ்ளோ கோபப்படலாமா அம்மா கிட்ட சொன்னா நான் செஞ்சு தரப் போறேன் இல்லம்மா அவ ஆசையை எனக்காக செஞ்சா அதை போய் எல்லாம் எனக்கு கொடுக்காம சாப்பிட்டீங்க என்று குழந்தை போல் அவன் சொல்ல ரவி சொன்னது நினைவு வந்தது
வசுமதி இன்பாவிடம் ஓ அதிதி மேல அந்த அளவுக்கு உனக்கு பாசமா.. இதை கேட்டதும் தன்னிலைக்கு வந்தவன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாம் குடுங்க எனக்காக நீங்க செஞ்சு இருக்கீங்க நான் சாப்பிடுறேன் என்று சொல்லி அதை வாங்கி இரண்டு ஸ்பூன் மட்டும் சாப்பிட்டு அருகில் வைத்தான்.
வசு, அதிதி உனக்கு பாசத்தோடு செஞ்சு கொடுத்திருக்கா அது உண்மையாகவே ரொம்ப டேஸ்டா இருந்தது. இன்பாவுக்கு அதைக் கேட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
சரி கீழே வா காபி சாப்பிடலாம் என்று அவர் கூப்பிட
உடனே இன்பா, நான் இப்போ வந்தா உங்க ஹஸ்பண்ட் என்ன ரொம்ப கிண்டல் பண்ணுவாரு..
நான் வரல நீங்க போங்க என்று சொல்லி அவன் படுத்துக்கொள்ள வசுமதி சிரித்துக் கொண்டே கீழே சென்றார்.
அடுத்த நாள் மிகவும் வேகமாக சென்றது.ஞாயிற்று கிழமை மாலை மித்ரனை பார்க்க போன் செய்தான். எங்க இருக்க.. இன்னைக்கு எனக்கு லீவு…
அப்படியா சரவணன் இருக்கானா….
அவன் வீட்ல இல்ல..
அப்ப ஓகே நான் வீட்டுக்கு வரேன் என்று சொல்லி போன் வைத்துவிட்டு நேராக மித்ரன் வீட்டுக்கு சென்றான்.
அங்கே சென்றதும் சுற்றியும் பார்த்துவிட்டு உள்ளே அவனை அழைத்து சென்று குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
மித்ரன்,என்னடா ஆச்சு…
அதை ஏண்டா கேக்குற என்ன சேர் முட்டி போட சொல்றா டா..அது எப்படி அவதான்டா எதோ என்று இன்பா செய்து காட்டிட அதை பார்த்து மித்திரன் சிரித்தான்.
செம்ம காமெடி இதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன் மச்சான்..
டேய் கால் மேல கால் போட்டு உட்காருவாளா எப்படித்தான் நான் அவளை தாங்க போறேன்.
மித்ரன் இப்படி எல்லாம் நீ பேசவே கூடாது ஏதாவது டிரிக் பண்ணி அவள பிளர்ட் பண்ணு அவளை உட்கார வைக்கிற மாதிரி உட்கார வைத்து ஏதாவது சொல் இல்ல உன் கால் எல்லாம் ரத்தம் கட்டி நம்ம நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல போலீஸ் டிரெய்னிங்கில் இருந்ததை விட இது கொஞ்சம் கஷ்டம் தான் என்ஜாய் பண்ணுடா..
இன்பா,சரி இரு மச்சி நான் ஒரு தடவை ட்ரை பண்றேன் என்று சொல்லி அவன் அவள் செய்வதைப் போல் உட்கார் என் மடியில வந்து உட்காரு டா
டேய் போடா நான் வரமாட்டேன்..
டேய் போடா
ப்ளீஸ் டா.. என்று அவர்கள் இருவரும் ஒக்காந்து அவன் அதற்காக பயிற்சி எடுத்தான் அடுத்த நாள் வேகமாக விடிந்தது.
விவேகா மிகவும் சந்தோஷமாக காலேஜ் சென்றாள். அடுத்தடுத்து வகுப்புகள் என மிகவும் உற்சாகமாக அனைத்தையும் முடித்துவிட்டு. மாலை சிபியின் அந்த ஸ்பெஷல் கிளாஸ் இரண்டு வகுப்புகளையும் முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள்
யாரைப் பற்றியும் அவன் நினைக்கவில்லை இன்றுதான் அவன் முட்டி போட போகிறானே. அதை பார்க்க வேண்டும். அவனை கிண்டல் செய்ய வேண்டு.ம் என்று நினைத்துக் கொண்டு சென்றாள்.
இன்பா கார் பார்க்கிங் செய்து விட்டு பஸ் ஸ்டாப்பில் அவள் இறங்கும் இடத்தில் காரில் காாத்திருந்தான்.
விவேகா சுற்றி முற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு யாரையோ தேடுவது போல் பார்த்துக் கொண்டிருக்க
வெண்பா, என்னடி இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்க போல, ஆமா யாரை தேடுகிறாய்..
விவேகா,ஆமா இன்னைக்கு ஒரு சம்பவம் நடக்க போகுது சரி சரி நீ கெளம்பு நான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு …நீ சின்ன பொண்ணு உனக்கெல்லாம் இது புரியாது
என்று அவளிடம் சொல்ல என்ன நானா நான் சின்ன பொண்ணா!
ஆமா நீ தான்.. பின்ன நானா நானும் இன்பாவும் லவ் பண்ரோம் …அப்ப நீ சின்ன பொண்ணு தானே என்று என்கிட்ட பேசு வெண்பா, நீ ரொம்ப ஓவரா போற…
விவேகா,நீ யாரையாவது லவ் பண்றியா…வெண்பா, இல்ல
அப்போ உனக்கும் எனக்கும் பேச்சு இல்ல.. அப்புறம்..
அப்போ உன்னை பெரிய பொண்ணா கன்சிடென்ட் பண்ண முடியாது என விவேகா இஷ்டத்துக்கு பேசிவிட்டு சரி சரி போ கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று சொல்ல
வெண்பா இருடி உன்னை வைத்துக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவள் கிளம்ப..
விவேகா,அவன் காரில் காத்துக் கொண்டிருக்க
இன்பாவின் காருக்கு அருகில் சென்றாள்..
இன்பாவுக்கு அவளை பார்த்ததும் இன்னிக்கு ஒரு மார்க்கமா வருகிறாளே..போச்சு டா நம்ம முட்டி போட வைப்பலோ.. என்று நினைத்து கொண்டு இருக்க..
அவள் ஹாய் ஆன்டி ஹீரோ.. என்று அவள் கைகளை உயர்த்தி காட்ட..
ம்ம் கம் பேபி..
ம்ம் ரெடியா என்று கண்கள் மின்ன கேட்க
பேபி நான் கார்ல ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்…
இங்க நான் சேர் முட்டி போடுகிறேன் நீ என் லேப் ல உட்கார்ந்துக்கோ என்று சொல்ல அவள் அவனை முறைத்து விட்டு என்ன சொன்ன..
காரில் ட்றை பண்ண போறியா.. ம்ம் என்று சிரிக்க சரி நான் கிளம்பறேன் உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல என்று சொல்லி அவள் செல்ல போக..
சரி சரி நான் சும்மா சொன்னேன் வா வந்து உட்காரு என்று அவன் அது போல் முட்டி போட டேய் உன் போன் கொடு என்று அதை பிடிங்கி ஒரு சில போட்டோ எடுக்க போக இன்பா அதை அப்புறம் டெலிட் செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.
விவேகா அந்த போட்டோஸ் அனைத்தும் அவளுடைய மெயிலுக்கு செண்ட் செய்தாள். ம்ம் இப்போ பண்ணு டா என்று சொல்ல இன்பா அது போல் அமர விவேகா அவனை பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.
ராகவ் என்று பேச்சு வாக்கில் சொல்லி இன்னிக்கு நீ அழகா இருக்க அதுவும் இந்த தண்டனை அய்யோ no comments daa என்று வயிற பிடித்து கொண்டு அவள் சிரிக்க இன்பா அவளை முறைத்து பார்க்க
டேய் இப்போ எதுக்கு முறைக்கிர சிரி என்று சொல்ல அவன் அப்பொழுதும் அப்படியே இருக்க சரி அடுத்த கட்டத்துக்கு போலாம். என்ன என்று அவன் கேட்க..
இப்போ நான் உன் லேப் ல வந்து உட்கார போறேன் வெறும் 54 கிலோ தான் கவலை படாதே ஆன்டி ஹீரோ என்று சொல்லி கொண்டே அருகில் வர இன்பா கண்களை மூடி கொண்டான்..
விவேகா அவன் அருகில் வந்து…?
தொடரும்…
Episode 163,
விவேகா காருக்கு உள்ளே அமர்ந்து கொண்டு அவனை பார்த்து சிரிக்க அவன் வெளியே சுற்றியும் முற்றிலும் பார்த்து கொண்டே சங்கடத்துடன் அவள் சொல்வதை போல் நின்று கொண்டு இருந்தான். அங்கு நிறைய கார்கள் பார்க்கிங் செய்ய பட்டு இருக்க அதில் ஒன்றாக இதுவும் இருந்தது. அங்கு இருவர் இருப்பது அருகில் வந்து பார்த்தால் அதாவது மற்ற காரின் உரிமையாளர்கள் வந்தால் மட்டுமே அவர்களை பார்க்க முடியம் மற்ற படி அந்த இடத்தில் யாரும் இல்லை.
இன்பா முகத்தை முறைத்து கொண்டே வைத்து கொண்டு இருக்க விவேகா அவனை பார்த்து சிரித்து கொண்டே ராகவ் என்று பின் இன்பா இப்போ வர போறேன்.. டேய் உன் மடியில் அமர போறேன் என்று சொல்லு கொண்டே அவள் அவன் அருகில் வர இன்பா கண்களை மூடிக் கொண்டான். அவனை அசையாமல் அவள் முழு பலம் கொண்டு உள்ளே இழுக்க அவன் புருவத்தை நெரித்து கொண்டே கண்களை துறக்க.. விவேகா அவன் புருவத்தில் ஒரு முறை சுண்டி விட்டவள். மூச்சு வாங்கிட..
இன்பா, இப்போ எதுக்கு என்னை உள்ளே இழுத்த.. என்று முகத்தை திருப்பி கொண்டு கேட்க.
விவேகா, ம்ம் இதுக்கு தான் என்று அவன் முகத்தை திருப்பி முத்தமிட்டாள். இன்பா அதிர்ந்து போனான். இது மூன்றாம் முறை அவளாகவே வந்து முத்தமிடுகிறாள்.அவள் இரு கைகளையும் அவன் சட்டையை பிடித்து கொண்டு கண்களை மூடி கொண்டு ஒற்றி ஒற்றி எடுத்தாள். அவளுக்கு தெரிந்த கொஞ்ச முத்தத்தை கொடுத்து விட்டாள். ஒரு சில நொடிகள் அதன் பின் அவனிடம் இருந்து சிரித்து கொண்டே விலகி ஜன்னல் ஓரம் போய் அமர்ந்து கொண்டாள்.
இருவரும் வேறு வேறு புறம் பார்த்து சிரித்து கொண்டனர். இன்பா நிம்மதியாக இருந்தான். அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டு அந்த கண்ணி சிவந்த கைகளை பார்க்க இப்பொழுது காயம் இல்லை. இன்பா இப்பொழுது பேசினான்.
பேபி அந்த இடத்தில தண்ணி ஊற்றியது அந்த இனியாள் தான் நீ விழனும் அப்டின்னு பிளான் பண்ணி ஊற்றி இருக்கா..
விவேகா உனக்கு எப்படி தெரியும் கேட்க.. எல்லா ஸ்டூடெண்ட்ஸும் வெளிய போனப்ப நான் அவங்க பின்னாடி போகும்போது இனியாலும் அந்த கவியா இரண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க… நீ உள்ளே வரும் போது அவங்க ரெண்டு பேரும் உன்னை பார்த்த பார்வை அது தான் எனக்கு கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருந்தது.
நீ எங்கன்னு நான் பின்னாடி வரும்போது உன்னை சுத்தி சிபி, வெண்பா, ஆதி மூணு பேரும் நின்னுட்டு இருந்தாங்க சோ அப்பயும் எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்தது. அப்புறம் உன்னை பார்க்கும் போது தான் ஏதும் நடந்திருக்கு அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.என்று சொல்லி அவள் கைகளை பிடித்து முத்தமிட்டான்.
விவேகா, உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா.. என்ன பேபி நீ ரெண்டு பேபி கூட கேளு நான் தரேன் என்று அவளை போல் ஒற்றி எடுக்க டேய் பிச்சிடுவேன்… சரி சரி நீ விட மாட்ட நான் தான் ட்ரை பண்ணனும்.. இப்போ என்ன வேணும்..
இந்த டெஸ்ட் எதுக்கு நீ வொர்க் விட்டு விட்டு இப்போ எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்து கிட்டு இருக்க இன்பா சிரித்து கொண்டே மேடம்க்கு என்னை பற்றி தெரியாதா, இல்ல ஆக்ட் பண்றீங்களா…
இல்ல இன்பா கொஞ்சம் தெரியும் இதுக்கும் உன் வொர்க்கும் எதோ லிங்க் இருக்கு சரியா… ஹான் ஓகே.. ஹே சொல்லு டா பிளீஸ் நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கல உன்னை போலீஸ் டிரேஸ்ல பார்க்கனும்..
இன்பா, மேடம்க்கு தான் போலீஸ் பிடிக்காதே.. அதான் நீ மாற்றி விட்டாயே என்று மனதில நினைத்து கொண்டு அது அது வந்து அந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கும் கெத்தா இருக்கும்.. என்று சொல்லி கொண்டே டைம் பார்த்தவள் சரி டா நான் கிளம்புகிறேன் இன்னும் கொஞ்சம் லேட் ஆனால் அதி வீட்டுக்கு தேடிட்டு வந்து விடுவாள். சரி இன்னும் 5 நிமிடம் இரு..
இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு இது ஒரு காரணத்துக்கு தான் செய்கிறேன். சில பேரோட கவனத்தை திசை திருப்ப குட்டையை குழப்பி விட்டு இருக்கேன் டி.. என் பேபி ஆசை பட்டு இருக்க இன்னும் 2 மாசம் அவ்ளோ தான் நான் ஜாயின் பண்ணிடுவேன் ஹேப்பி தான.. ம்ம் என்று புன்னகைக்க..
இன்பா, நெக்ஸ்ட் வீக் ஸ்டேட் லெவல் quiz compition இருக்கு அதை பற்றி நாளைக்கு காலேஜ் ல கிட்ட சொல்லுவாங்க.. சோ நல்லா உன்னை தயார் படுத்திக்கோ.. ம்ம் சரி இப்போ கிலம்பவா.. ம்ம் என்று கட்டி அணைத்து அவளை விட உடனே அவள் நெய் பூவா எப்படி இருந்ததுன்னு இன்பா சார் சொல்லவே இல்ல…
அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு அதை நீ என் மாம், அவங்க ஹஸ்பண்ட், சுபா கிட்ட தான் கேட்கணும்.. என்ன டா சொல்ற.. அவன் ரெண்டு வரிகளில் சொல்லி முடிக்க அதை கேட்டு விவேகாவுக்கு இன்பாவை பார்க்க பொக்கென்று இருந்தது.
மீண்டும் அவன் மேல் தாவியவள் சரி சரி இப்படி முகத்தை தொங்க போடாதே நாளைக்கு என் அம்மா கிட்ட சொல்லி உனக்கு செய்து எடுத்து வரேன். இன்பா, நீ தான் ஊட்டி விடணும் … போடா முடியாது. அப்போ வேண்டாம் .. சிறிது நேரம் யோசித்தாள் மம் சரி சரி ஊட்டி தொலையிறேன்..
இன்பா எனக்குள்ள தொலைந்து போ டி.. போதும் டா உன் பிளர்ட் பண்ற வேலையை கொஞ்சம் தூர போடு என்று சொல்ல சரி இப்போ ஒரு முத்தம் பதித்து கொள்கிறேன் என்று சொல்லி அதன் பின் அவளை விட்டான்.
விவேகா நேராக வீட்டுக்கு சென்றாள். அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா சொன்னதை போல அந்த போட்டி விஸ்யம் சொல்ல அதற்காக அனைவரும் கடுமையாக உழைத்தனர்.
போட்டிக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் யார் யார் அதற்கு பங்கு கொள்ள போகிறார்கள் என்று தேர்வு செய்தனர்.
ஒரு பத்து நபர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். விவேகா, கவ்யா, அருண், ஆதி, இனியாள், சோனா, சதீஷ் மட்டும் வந்து இருக்க சிபி அவர்களை அழைத்து சென்றார்.
விவேகா அங்கும் இங்கும் நடந்து கொண்டே அவள் அனைத்தும் ஒரு முறை மனதில் திருப்பி பார்த்து கொண்டு இருந்தாள். அருண், என்ன மேடம் என் கிட்ட பேசவே மாட்ரிங்க.. அப்படி இல்ல சீனியர்.. உன் மேல நான் கோபமா இருக்கேன் விவேகா.. அவள் அவனிடம் சாரி சீனியர் பேசுங்க என்று கேட்டு கொண்டே செல்ல அப்போ இன்னிக்கு இந்த quiz முடிந்ததும் வெளிய வரயா.. ஹான் அது முடியாது அய்யோ மேடம் உன்னை கடத்தி எல்லாம் கூட்டி போக மாட்டேன். என் பாட்டியை பார்க்க இங்கே தான் அவங்க வீடு இருக்கு அதை கேட்டதும் அவள் திடுக்கிட்டு வசு மேம் அம்மா வீட்டுக்கா.. ம்ம் என் பாட்டியை தான் பார்க்க போறோம்.
சோழி முடிஞ்சது என்று நினைத்து கொண்டு
ம்ம் அது முடியாது… நான் சொன்னால் தானே வர மாட்ட இதுவே சிபி சொன்னால் வருவ..
இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்லையே..
அப்போ வருவ தானே.. அது போட்டி முடிந்து பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி தப்பித்து விட்டாள்.
அந்த இரண்டு நாட்களும் அருண் அவளை பின்னால் ஃபாலோ செய்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். ஆதி விவேகா கிட்ட பேசவே இல்லை எல்லாம் அருணால தான்.. அவனை சட்டென கஷ்ட படுத்தி பேச அவளுக்கு சங்கடமாக இருந்தது. அங்கு வந்து படிக்கும் மாணவர்கள் அனைவரும் அவளையும், அருணையும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தனர். ஏற்கனவே அருண் இங்கு வந்து அவள் பின்னால் சுற்றி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இப்பொழுது அதை உறுதி செய்து கொண்டனர்.
கவ்யா வுக்கு விவேகா மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் அருண் செய்கை, அன்று இன்பா திட்டியது எல்லாம் வைத்து கவ்யா அது வேறொரு பெண் என்று நினைத்து அவளது சந்தேகம் இப்பொழுது இனியாள் மீது வந்து நின்றது.
ம்ம் அவள் தானே இப்பொழுது அவனுக்கு சொந்தம் வாய்ப்பு இருக்கிறது கொஞ்சம் விசாரித்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
போட்டிக்கு அனைவரும் சென்றனர். ஆதியை எப்படியும் சமாதானம் செய்துவிட வேண்டும் என்று நினைத்து கொண்டே சென்றாள். இன்பா அவளை உற்சாக படுத்த வந்தான். அவள் சுற்றியும் முற்றிலும் பார்த்து விட்டு அவனை தனியாக சந்திக்க சென்றாள். ஆனால் அதை ஒருவர் பார்த்து விட்டார் என்பதை இன்பா பார்த்து விட்டான்.
விவேகா கொஞ்ச தூரம் சென்று யாரும் பார்க்காத நேரத்தில் அவனை அணைத்து பின் பிரிந்தவள். இன்பா இந்த அருண்.. என்ன பண்றான்… என்னை பாவை அம்முச்சியைப் பார்க்க கூட்டி போவெண்ணு கிட்ட தட்ட இந்த ஒரு வாரம் என்னை டார்ச்சர் பண்ணி விட்டான். அதை கேட்டு அவன் முகம் இறுக ஹே பிளீஸ் கோபப்படாத நான் எதுவும் பண்ணல அவன் தான் என் பின்னாடி சுற்றி கொண்டே இருக்கான். பிளீஸ் என்று அவள் கெஞ்சிட இன்பா, இப்போ கூட அவன் உன் பின்னால் சுற்றும் காரணம் புரியுதா இல்ல.. விவேகா தலை குனிந்து கொண்டே இப்போ புரியுது எனக்கு அருணை பார்த்தால் உன் நியாபகம் வருது என்னால் தூக்கி எறிந்து பேச முடியல டா..
இதனால் ஆதி என் கூட பேசவது நிறுத்தி விட்டான். இன்பா, அதை நான் தான் டி செய்யணும்..
சரி இப்போ என்ன பண்றது.. பிளீஸ் என்று அவள் உண்மையாகவே வருத்த பட உடனே இன்பா நான் பார்த்து கொள்கிறேன். நீ quiz ல கான்சன்டிரேட் பண்ணு என்று அவள் இதழில் ஒற்றி எடுக்க… ம்ம் என்று அவள் திரும்ப அவன் அவளை தலையை வருடி விட்டு அனுப்பினான். அவள் அங்கு இருந்து செல்லும் போது யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்து கொண்டே செல்ல அவள் சென்ற அடுத்த நொடி இன்பா வேகமாக ஒருவரை பின்னால் ஃபாலோ செய்தான்.
இன்பா தன்னை ஃபாலோ செய்து கொண்டு வருவது தெரியாமல் அவள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இந்த விஷயத்தை கவ்யா கிட்ட சொல்லி விட வேண்டும் என்று கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் வேகமாக நடந்தாள். இன்பா அதற்குள் அவள் முன்னால் போய் நின்றான்.
ஹலோ எங்கே மேடம் இவளோ ஃபாஸ்ட்டா போறீங்க என்று குரல் வர அவள் யார் என்று பயந்து கொண்டே திரும்ப அங்கே இன்பாவை பார்த்ததும் ஒரு நிமிடம் அவள் இதயம் நின்று துடித்தது.
அவள் சார் என்று தயங்கி கொண்டே சொல்ல..
இன்பா அழுத்தமான காலடியில் அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
அவன் முகம் மிகவும் கடுமையாகவும், பனி பாறை போல் உயிரை உறைய வைக்கும் பார்வையுடன் அவளை நோக்கி வந்தான்..
தொடரும் ….
Episode 164,
விவேகா அங்கு இருந்து செல்லும் போதே சோனாவுக்கு எதோ வித்தியாசமாக பட்டது. அதனால் அவளை பின் தொடர்ந்தாள். கவ் யா இன்னும் வர வில்லை. அவள் வருவதற்குள் என்ன செய்வது தெரியாமல் அந்த இடத்தை நோட்டமிட்டு கொண்டிருக்கும்போது தான் விவேகா தனியாக சென்றது சோனாவுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது அவள் விவேகாவை பின் தொடர்ந்து செல்ல
விவேகா அங்கு இன்பாவை ஓடிச் சென்று கட்டி அணைத்தது . அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று கல்லூரியில் விவேகாவை இன்பா திட்டிய காட்சியும், இங்கு இப்பொழுது நடைபெறும் அவர்கள் இருவரும் கட்டி கொண்டு இருப்பது இன்பா அவளை காதலாக பார்க்கும் காட்சியும் அவளால் இரண்டையும் நம்பவே முடியவில்லை.
இது உண்மைதானா? இவர்கள் இருவருமா அந்த பெண் இவள் தானா! இன்பா விரும்பும் பெண் அது கவ்யா தேடும் பெண் இவள் தானா! என்று ஒரு நிமிடம் அவளுக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது.
சோனா மனதில் இதை எப்படியும் கவ்யாவிடம் சொல்லிவிட வேண்டும். இதை மட்டும் சொன்னால் நம்மளை வெகுவாக கவனிப்பாள். இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டு வேக வேகமாக அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று எட்ட நின்று பார்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து அவள் கிளம்ப, இன்பா அதற்கு முன்னரே அவளை கண்டுபிடித்து விட்டான்.
வேகமாக கண்ணிமைக்கும் நொடிகளில் சோனாவை பின் தொடர ஆரம்பித்தான். அவன் அவளுக்கு அருகில் சென்றதும் ஹலோ என்ன மேடம் இவ்ளோ வேகமா எங்க போறீங்க… இந்த வார்த்தைகளை கேட்டதும் சோனா அப்படியே நின்று பின்னால் திரும்பிப் பார்க்க இன்ப ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி உயிரை உறைய வைக்கும் பார்வையோடு நடந்து வந்து கொண்டிருந்தான்.
ச… சார் என்று திக்கி திணறி அவள் பேச ஆரம்பிக்க.. இன்பா சாதரணமாக ஓ நீங்க தான் அந்த பொண்ணுக்கு spy சரி தானே.. வாட்ஸ் யூர் நேம் என்று கணீர் குரலில் கேட்க..அவள் பயந்து கொண்டே கண்களில் கண்ணீர் கொண்டு சோ சோனா சார்.. வாட் எவர் மிஸ் சோனா போங்க.. சார் என்று அவள் திடுக்கிட்டு கேட்க.. ம்ம் அந்த கேர்ல் கிட்ட சொல்லி தான் பாருங்களேன்.. என்று அவன் நிதானமாக பார்க்க..
சோனா இல்ல சார் ந நான் சொல் சொல்ல மாட்டேன்.. இல்ல போய் சொல்லுங்க.. ஆனால் அதுக்கு அப்புறம் என்ன நடக்க பொகித்துண்ணு நான் சொல்லவா.. சோனா அவனை படபடக்கும் பார்வையில் பார்க்க.. இன்பா, இது ஸ்ப்ரேட் ஆகும் எனக்கும் அது தான் தேவை அண்ட் அவள் அப்படியே அரை மெண்டலா சுற்றி கொண்டு இருக்கா இது தெரிந்தால் இன்னும் ஃபுல் மெண்டல் அடுத்து விவேகாவை பக்கத்தில் நெருங்க கூட முடியாது. அண்ட் இதை எல்லாம் உன் கிட்ட சொல்லணும் அப்டின்னு எந்த அவசியமும் இல்லை துளி கூட அறிவு இல்ல காலேஜ் ல வந்து பாலிடிக்ஸ் பண்ணிட்டு இருக்கா என்று அவன் பேசி விட்டு இப்போ என்ன பண்ண போறீங்க மிஸ் சோனா..
அவள் இன்பா சொன்னதை யோசித்து பார்த்து நமக்கு எதுக்கு வம்பு தெரியாதது போல் காட்டி கொள்வோம். உண்மையாவே அவள் சைக்கோ தான் நாளைக்கு நமக்கு எதுவும் ஆகி விட்டால் என்ன செய்வது என்று யோசித்து விட்டு இல்ல சார் எனக்கு இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாது. என்று சொல்ல..
ம்ம் அப்படியே இருந்தால் நல்லது. இல்ல என் பேபிக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இல்ல சார் நான் சொல்ல மாட்டேன் என்று அவள் உருதியாக சொல்ல ம்ம் தெரிந்தும் தெரியாதது போல் இனி நீங்க இருக்க போறீங்க சரி தானே என்று சொல்ல அவள் தலையை குனிந்து கொண்டாள். கெட் அவுட் என்று சொல்ல அவள் வேக வேகமாக ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினாள்.
சிறிது நேரத்தில் சோனா எதுவுமே நடக்காதது போல் அங்கு வர அப்பொழுது கவ்யா வந்தாள் எங்க டி போயிருந்த என்ன ஆச்சு..
ஒன்னும் இல்ல ரெஸ்ட் ரூம் போயிருந்தேன் அதான் என்று சொல்லி சமாளித்து
நீ எப்போ வந்த என்று இயல்பாக பேசினாள் இப்பொழுது அந்த இடத்திற்கு இன்பா வர அனைவரும் அவனை பார்த்தனர்.
கவியா அவன் அருகில் வழியே சென்று ஹலோ ராகவ் சார் என்று கூப்பிட இங்கே விவேகா அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
கவ்யா, ஹலோ ராகவ் சார். என்று கூப்பிட அவன் எதுவும் பேசாமல் போனை பார்த்து கொண்டு இருக்க
அவள் எனக்கு ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா..
இன்பா அவளை பார்த்து better luck next time என்று சொல்ல உடனே விவேகா, ஆதி அனைவரும் சிரிக்க அங்கே கவ்யாவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் என்ன டா திமிரா.. ஓவரா பேசுற..
இல்ல இப்போ தான் வரும் போது என் பேபி கிஸ் பண்ணா சோ அதனால் கொஞ்சம் ஸ்வீட் அதிகமா சாப்பிட்டு விட்டேன் அதான் உங்களை பார்த்ததும் டயட் பண்ணனும் அப்டின்னு நினைவு வந்தது. இனி என் பேபி லிப்ஸ்ச பார்த்து பேசவே கூடாது என்று சொல்ல..
விவேகா இப்பொழுது என்ன செய்வது என்று திரு திரு வென முழிக்க ஆதி, அதுக்குள்ள போய் கிஸ் பண்ணிட்டு வந்திட்டியா.. நான் பேசாமல் இருந்ததுக்கு நீ கொஞ்சம் கூட வருத்த படவில்லையா டி..
அய்யோ இந்த இன்பா என் மானத்தை வாங்குகிறானே என்று நினைத்தவள். டேய் இல்ல டா அவன் பொய் சொல்றான். நான் போய் அதுவும் பப்ளிக் பிலேஸ்ல இப்படி செய்வேனா.. அவன்கிட்ட போய் அருணை பற்றி சொன்னேன் வேற எதுவும் நடக்கள நம்பு ஆதி.. என்று கெஞ்ச அவள் சொல்வது கேட்டு சிரித்து கொண்டே சரி இருந்தாலும் டேய் என்னடா இருந்தாலும் அப்போ பேச மாட்டியா.. இல்ல என் தேன் மிட்டாய் கிட்ட பேசுவேன். விவேகா, ஆதி எனக்கு ஒரு தேன் மிட்டாய் வேணும். இல்ல டி… ஹே இப்போ எதுக்கு நியாபகம் படுத்தின எனக்கு சாப்பிடணும் போல் இருக்கு அதுவும் இந்த போட்டியில் ஜெயிக்க உன் தேன் மிட்டாய் வேணும்.
ஆதி, ஹே நான் சும்மா சொன்னேன் என் கிட்ட இருக்கு என்று சொல்லி அவன் எடுத்து நீட்ட ஒன்றை எடுத்து ஆதிக்கு ஊட்டி விட்டாள். இன்னொன்று ஆதியை ஊட்ட சொல்ல அவன் வேண்டாம் என்று சொல்ல வலு கட்டாயமாக அவனை ஊட்டி விட சொல்லி வாயில் போட்டு சிரித்து கொண்டே அவள் திரும்ப அங்கு இன்பா அவள் இப்படி கொஞ்சி கொண்டு இருப்பதை பார்த்து முறைக்க அய்யோ அதுக்குள்ள இவன் மலை எரி கொள்கிறான். எதுக்கு டா இவன் இங்கே வந்தான் என்று நினைக்க கவ்யா அவனை முறைத்து கொண்டு உன்னை ஜெயித்த பின் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி சென்றாள். அவளோடு சோனா, அருண் செல்ல அருண் விவேகாவை கண்களால் வர சொல்லி விட்டு செல்ல சதீஷ், விவேகா, ஆதி மூவரும் அவர்கள் போட்டி நடக்கும் இடத்துக்கு சென்றனர். விவேகா இன்பா முகம் இப்படி இருப்பதை பார்த்து கண்களால் கெஞ்சி கொண்டே செல்ல அவன் அவளை மீண்டும் முறைத்தான்.
அங்கே போட்டி நடக்கும் இடம் பரபரப்புக்கு பஞ்சம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. முதல் ஒரு இரண்டு சுற்றுகளிலேயே சோனா கவ்யா இருவரும் வெளியேறினர். அருண் மூன்றாவது சுற்று சென்று வெற்றி பெற்றான். இங்கே விவேகா ஆதி, சதீஷ் மூவரும் மூன்று சுற்றுகளிலும் வென்று வெற்றி கோப்பையுடன் வெளியே வந்தனர் ஆதி மிகவும் சந்தோஷமாக இருந்தான்.
இவர்களை அழைத்துச் செல்ல சிபி அங்கு வந்து இருந்தான்.விவேகா இன்று நடந்தது மிகவும் உற்சாகத்துடன் சொல்ல அவனுக்கும் உற்சாக ஒட்டிக்கொண்டது. அவள் சிபியிடம் இயல்பாக பேசவும் அதை பார்த்து அருணுக்கு மிகவும் பொறாமையாக இருந்தது.
ஆதிக்கு இயல்பாக தான் தோன்றியது. ஏனென்றால் சிபி அருண் போல் கிடையாது. அவன் ஒரு நண்பனைப் போல் ஒரு லிமிட்டோடு பேசிக்கொண்டு செல்ல ஆதியையும் அது மிகவும் பிடித்திருந்தது.
சதீஸ் ஆதி இருவருமே உங்களுக்கு தான் தெரியுமே ஆதிக்கு சதீஷு துளி கூட பிடிக்காது அந்த இடத்தில் சதீஷ் ஆதியிடம் பேசவில்லை. போட்டிக்காக மட்டுமே இருவரும் ஒன்று சேர்ந்து இருந்தனர்.
இப்பொழுது உற்சாகமான முகத்துடன் ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்திற்கு வந்தான். என்ன மேடம் better luck next time அப்படி தானே என்று கேட்டுக் கொண்டே வர..
அவள் அவனை முறைத்து விட்டு வேகமாக அவளுடைய காரில் ஏறிக்கொண்டாள் ஆம் அவள் வரும்போது அவளுக்கு சொந்தமான காரில் தான் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தாள். அவளுக்கு இது முதல் தோல்வி எப்பொழுதும் இது போல் நடந்ததே இல்லை. இன்பா சொன்ன வார்த்தை அவளை எதோ செய்தது. அவள் ஒரு அரக்கியை போல் அங்கு இருந்து விவேகா, ஆதி, அருண், சதீஷ என முறைத்து விட்டு செல்ல சோனா அவள் பின்னே சிபி கிட்ட சொல்லி விட்டு சென்றாள்.
அருண் பேச வருவதற்கு முன் இன்பா பேசினான் போட்டியில் ஜெயித்த இவர்களை தாத்தா கிட்ட கூட்டிட்டு போய் காட்டிட்டு அதுக்கப்புறம் காலேஜ் கூட்டி போ..என்று சொல்ல அருன் முகம் என்னடா இது அவளை நாம் தனியாக எங்குமே செல்ல முடியாதா என்று தோன்றியது.
இன்பா விவேகா பக்கம் திரும்பவே இல்லை. அவள்தான் ஆதியிடம் கொஞ்சி கொன்டு சாக்லேட் சாப்பிட்டாலே..அந்த கோபம் தான் கிருஷ்ணன் வீட்டின் முன் இறங்கியதும் அனைவரும் உள்ளே செல்ல விவேகா இன்பாவை ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
அவர்களை சந்தித்து ஃபார்மலாக பேசி விட்டு அங்கு அனைவரும் இருப்பதால் எப்பொழுதும் போல் ஒரு மாணவர்கள் ஆசிரியர் என்ற தொனியில் பேசி செல்ல கிருஷ்ணன் கல்லூரிக்கு போன் செய்து மாநில அளவில் வெற்றி பெற்றதற்காக நாளைக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்தார் .
இன்பா சிபி இருவரும் அவர்களை கல்லூரி கூட்டிச் சென்றனர். கல்லூரிக்கு வெளியே நால்வரையும் இறக்கிவிட சிபி அவர்கள் நால்வரையும் உள்ளே கேட்பாஸ் கொடுத்து உள்ளே அழைத்து செல்ல..
விவேகா, அச்சோ.. சிபி, என்ன ஆச்சு..சார் என்னோட id அதை காரில் மிஸ் பண்ணி விட்டேன் கொஞ்சம் போன் பண்ணி சொல்லுங்க சார் அவனை பார்க்க சிபி உடனே இன்பாவுக்கு கால் செய்ய விவேகா வெளியே இன்பா காரை நோக்கி சென்றாள்.
இங்கே கவ்யா , ஹே யாரு டி அந்த**** என்று சில கெட்ட வார்த்தைகள் பேசிட என்ன கவ்யா.. அந்த இன்பா லவ்வர் எப்போ கண்டு பிடிக்க போறீங்க என்று அவள் அருகில் உள்ள கண்ணாடியை குத்தி கொண்டே பேச..
சோனா பயந்து கொண்டே நீ கவலை பட வேண்டாம் சீக்கிரம் கண்டி பிடித்து விடலாம் என்று அவள் சொல்ல நாளைக்கு நம்ப ரெடி பண்ண எல்லோரையும் நான் பார்க்கனும். என்று அவள் சொல்ல சோனா அவளின் இந்த பரிமாணத்தை பார்த்து பயந்து கொண்டு என்ன நடக்க போகுதோ எண்டு சரி என்றாள்.
இங்கே விவேகா காரின் கதவை திறக்கும் முன் அவள் வாயில் எதோ போட்டு கொண்டு கதவை திறந்தாள்.
உள்ளே இன்பா…?
தொடரும்…
Episode 165,
விவேகா வேகமாக id யை காரில் விட்டு வந்து விட்டேன் என்று சொல்லி கொண்டே அவளது கை பையுடன் வெளியே கேட் திறந்து வெளிய செல்ல அங்கே அவன் உர் ரென்று முகத்தை வைத்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்து நின்று கொண்டு இருக்க
அவள் பையில் இருந்து ஒரு மிட்டாய் எடுத்து வாயில் போட்டு கொண்டு இன்னொரு மிட்டாய் எடுத்து ஹலோ ஆன்டி ஹீரோ சார் இப்போ எதுக்கு இவ்லோ கோபம் என்று சொல்லி டிரைவர் இருக்கை பக்கம் சென்று அவன் வாய்க்கு அருகில் கொண்டு போய் நீட்ட வாட் இஸ் திஸ்?
டே ஓவரா நடிக்காத… இப்போ உங்களுக்கு என்ன வேணும்..
பார்த்தேனே டா நான் மிட்டாய் சாப்பிடும் போது என்னை அப்படி கொள்வது போல் பார்த்தியே அதான் உனக்கு ஊட்டி விட்டு போலாம் ன்னு வந்தேன்.. இன்பா அவளை ஒரு பார்வை பார்க்க அவள் அவனை அதட்டி சீக்கிரம் சிபி சார் வந்திட போறாரு
விவேகா, ம்ம்ம் ஆ காட்டு…இன்பா அவள் கையில் உள்ள மிட்டாய் எடுத்து அவளுக்கு ஊட்டி விட அவள் திகைத்து கொண்டே வாயில் வாங்கி கொண்டு அவள் பையுள் இருந்து இன்னொரு மிட்டாய் எடுக்க திரும்ப இன்பா ஹே என்ன பண்ற.. உனக்கு இன்னொன்று எடுக்க போறேன் என்று அவள் தேட..
அவள் தலையை மட்டும் அப்படியே கார் ஜன்னலுக்கு கொண்டு வந்தவன் அவள் வாயில் இருந்து அந்த மிட்டாயை முத்தம் கொடுத்து கொண்டே எடுத்து அவள் இதழோடு சேர்த்து சுவைத்து கொண்டான்.
விவேகா இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை. இந்த இன்பா இருக்கானே என்று நினைத்து கொண்டாள். ஒரு சில நிமிடம் கழித்து அவளை விட்டவன். இனி எனக்கு ஸ்பெசலா இப்படி ஊட்டி விடனும் என்று சொல்லி காரை ஸ்டார்ட் செய்ய அவள் அவன் மார்பில் செல்லமாக ஒரு குத்து விட ஹே அடுத்த முறை உன் லிப்ஸ் இருக்காது ஜாக்கிரதை என்று அவன் இதயத்தை தேய்த்து கொண்டே சரி போய் படிக்கிற வேலைய பாரு நமக்கு இனி தான் பெரிய டாஸ்க் இருக்கு…
விவேகா, என்ன அது என்று சோகமாக அவள் கேட்க நேஷனல் லெவல் க்விஸ் காம்பெடிஷன் என்று சொல்லி ம்ம் போடி.. போய் சின்சியரா படி என்று சொல்லி அவன் பறந்து விட்டான். விவேகா அதை பற்றி நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.
இங்கே SPR காலேஜ் ல.. குரு அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டு எப்படி இப்படி மட்டமா செலக்ட் பண்ணி கூட்டி போனீங்க.. என்று அவன் ஒரு சத்தம் போட அங்கே உள்ள ஆசிரியர்கள் அனைவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பயந்து கொண்டு முழிக்க
எந்த காலேஜ் ஃபர்ஸ்ட் பிளேஸ்?
இன்பாவுடயை காலேஜ் என்று தெரிந்ததும் ஹவ் இட்ஸ் பாசிபில்? அப்போ நம்ப ஸ்டூடண்ட்ஸ விட அங்கே இருக்கும் ஸ்டூடண்ட்ஸ் அங்க இருக்க ஸ்டூடண்ட்ஸ் திறமையானவர்களா! இல்ல பாட நடத்துற பேராசிரியர்கள் திறமையானவர்களா !என்று ஒரு ஏளன புன்னகை சிந்திக் கொண்டே அவன் கண்களை சுழல விட அனைவரும் நடுங்கிக் கொண்டு நின்று இருந்தனர்.
குரு இதனை இன்பாவோடு தொடர்பு படுத்தி பார்க்கவில்லை. அவன் சாதாரணமாக நடந்து இருக்கும் என்று நினைத்து விட்டு விட்டான். அவன் அங்கு உள்ள அனைவரையும் பார்த்து என்ன செய்வீங்களோ! ஏது செய்வீர்களோ! எனக்கு தெரியாது !நெக்ஸ்ட் வர நேஷனல் லெவல் காம்பெட்டிஷன்ல நம்ம காலேஜ் தான் ஃபர்ஸ்ட் பிளேஸ்ல இருக்கணும். அது உங்க கைல அப்படி இல்ல என்ன நடக்கும்னு தெரியுமில்ல! என்று ஒரு கோர பார்வையை அணுவின் மீதும் வீச ஓகே சார் கட்டாயம் செய்வோம் என்று நடுங்கிக்கொண்டே அங்கிருந்த அவர்கள் கிளம்பினார்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது இங்கே சரவணன் வீட்டில் தேவகி, என்னடா அந்த பொண்ண போய் பாத்துட்டு எந்த பதிலும் சொல்லாமல் இருக்க …என்று சொல்ல சரவணன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவன் அம்மாவை ஆழ்ந்த பார்வை பார்த்தான்.
தேவகி, இப்போ நான் உன்கிட்ட என்னத்த கேட்டுட்டேன்னு இந்த பார்வை பாக்குற புடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு, பிடிக்கலன்னா வேற பொண்ண பாக்கலாம். அதை விட்டு இப்படி ஒரு பார்வை பாக்குற…
வெண்பா அங்கு நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
சரவணன் இப்போது பேசினான் எனக்கும் அந்த பொண்ணு மீனாட்சிக்கும் ஓகேவா தான் இருக்கு, ஆனா கொஞ்சம் டைம் வேணும்.
இதை கேட்டது தேவ்கி முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு மட்டும்தான் எரியவில்லை மிகவும் சந்தோஷமாக இருந்தார். சரவணா உனக்கு அந்த பொண்ணு புடிச்சிருக்கா !
அம்மா அந்த சத்தம் போட அவர் திகைத்தார். நான் புடிச்சிருக்குன்னு சொல்லல ஒத்து போகுதுன்னு தான் சொன்னேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இன்னும் கொஞ்சம் பேசணும், பழகணும் என்று அவன் முதல் முறையாக திக்க
தேவகி உடனே பேசு,பழகு இந்த மாசம் விட்டு அடுத்த மாசத்துல போய் நிச்சியம் பண்ணிட்டு வந்துருவோம்.
அம்மா!!!! என்று மறுபடியும் அவன் கத்த டே என்ன ஓவரா பண்ற உனக்கு தான் ஒத்துப் போகிறது என்று சொன்ன அதான் நிச்சயத்தை மட்டும் பண்ணிட்டு வந்துடலாம்.
அவன் அதுக்கும் எனக்கு டைம் வேணும் இன்னும் ஒரு மூணு மாசம் போகட்டும் அதுக்கப்புறம் பாத்துக்கலாம். அவன் மேலும் தொடர்ந்தான் ஜாதகம் பார்க்கிறேன் இல்ல நிச்சயம் புடவை எடுக்கிறேன் அதை பண்றேன் இதை பண்ற அப்படின்னு நீ எந்த வேலையிலயாவது இறங்கின .
நான் அப்புறம் வீட்டுக்கே வரமாட்டேன் இந்த பொன்னையும் வேண்டாம் என்று சொல்லிடுவேன். என்று சரவணன் கோபமாக கூறி கைகளை கழுவிக்கொண்டு வேகமாக அலுவலகத்திற்கு செல்ல கிளம்பினான். தேவகி அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அவன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறானே என்று ஒரு பெருமூச்சு விட்டு அவர் வேலைகளை பார்க்கச் செல்ல.
வெண்பா யோசனையாக காலேஜ் கிளம்பினாள். அவள் பேருந்தில் மிகவும் அமைதியாக வர விவேகா பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அன்று மாலை ஆனது அவள் அந்த ஸ்பெஷல் கிளாஸ்சுக்கும் அப்படியே வர விவேகா இப்பொழுது வேண்டாம் மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
சிபி ,தர்ஷனா இருவரும் சேர்ந்து அந்த வகுப்பை எடுத்து முடிக்க அனைவரும் கிளம்பினர் .இப்பொழுது விவேகா என்னாச்சு ஒரு மாதிரியா இருக்க…
ஒன்னும் இல்லடி..
சொல்லு டீச்சர் ஓவரா பண்ணாத …
வெண்பா ஒரு சில மணி நேரம் கழித்து கூற ஆரம்பித்தாள் சரவணன் தேவகி இருவரும் பேசிய அனைத்து விஷயத்தையும் அவள் விவேகாவிடம் கூற..
அப்படியா சரி விடு எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதலாக சொல்லிவிட்டு அவள் இவை அனைத்தும் இன்பாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் இன்பாவுக்கு gmail address க்கு செய்தி அனுப்ப அவன் எப்பொழுது சந்திக்கலாம் என்று தட்டி விட
விவேகா நீ சொல்லு…
நீயே சொல்லு டி..
நாளைக்கு ?
நாளைக்கு காலேஜ் உனக்கு தான் பாராட்டு விழா..
டேய் கடுப்ப கிலப்பாத..
சரி சரி கோபம் வேண்டாம் பேபி நாளைக்கு அந்த பங்ஷன் முடிந்து கார் செட் க்கு எப்பொழுதும் போல் வந்திடு..
ம்ம் ஓகே.. என்று சொல்லி அவள் வைக்கப் போக
உடனே இன்பா ஹே எப்படி டி உனக்கு இந்த மெயில் அட்ரஸ் கிடைச்சது..
அவள் டேய் நீ சேர் முட்டி போட்ட அப்போ அந்த போட்டோஸ் எடுத்து உன் போனில் இருந்து அதை என் மெயில்க்கு சென்ட் பண்ணிட்டேன்…
அப்போதான் உன் போன்ல இருந்து இதை எடுத்தேன் ..
இதை கேட்டதும் இன்பா அதிர்ச்சி அடைந்தான்.. என்ன! உன்னோட மெயில் அட்ரஸ்க்கு அந்த போட்டோஸ் எல்லாம் சென்ட் பண்ணிட்டியா.. அந்த போட்டோ இன்னும் உன்கிட்ட இருக்கா ஒழுங்கா டெலிட் பண்ணுடி.. என்று அவன் ஆதங்கமாக பேசிட விவேகா சிரித்து கொண்டே இன்பா இது வரலாற்றில் ஒரு முறை தான் நடக்கும் பேபி சோ நாளைக்கு இதை எடுத்து பார்க்கும் போது ஒரு குட் மெமரி இருக்கும் டா..
இன்பா, ம்ம் உன்னை நான் நேரில் பார்த்து கொள்கிறேன் டி என்று சொல்லி அவன் வைத்து விட விவேகா அந்த போட்டோஸ் எடுத்து ஒரு முறை பார்க்க பார்த்து விட்டு சிரிக்க தொடங்கினாள். அதில் அவன் மிகவும் கோபமாக முகத்தை வைத்து கொண்டு இருக்க அவளுக்கு ஒரு குட்டி குழந்தை போல் இருந்தது. கியூட் டா நீ லவ் யூ என்று அந்த லேப் டாப் display வை தூக்கி முத்தமிட்டாள்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது விவேகா இன்று எப்பொழுதும் போல் தான் காலேஜ் கிளம்பி சென்றாள். அவள் பேருந்தில் ஏறியதும் அனைவரும் ஓ வென்று கத்தினர். விவேகாவுக்கு அவள் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்களை கூறி அவளை உள்ளே வரவெற்றனர். அங்கே காலேஜ் சென்றதும்
வெண்பா, ம்ம் விவேகா கலக்கிற டி எல்லாரும் உன்னை தான் பார்க்கிறார்கள். விவேகா, நீயும் வர வேண்டியது தானே சிபிசார் கூப்பிட்டதுக்கு நீ வர மாட்டேன் அப்டின்னு ஏன் டி சொன்ன.. வெண்பா, இல்ல எனக்கு இப்போ ஒரு மாதிரியா இருக்கு மனசு எல்லாம் இரு மாதிரியா இருக்கு அது என்னன்னு சொல்ல தெரியல அதான்..
விவேகா, என்ன சரவணன் அண்ணா பற்றி நினைக்காதே ஃப்ரீயா விடு.. இல்ல டி அது இல்ல வேற டி.. விவேகா, என்ன மனசு தீடீர் ன்னு கஷ்டம் திடீர்னு பட்டாம் பூச்சி மாதிரி எதுவும் பறக்குதா.. வெண்பா, அது அது எனக்கு சொல்ல தெரியல.. விவேகா இதை கேட்டு சிரித்து கொண்டே சரி சரி ஃப்ரீயா விடு சரியா போய்டும் என்று சொல்லி அவர்கள் நடந்து செல்ல அங்கே கவ்யா காரில் வந்து இறங்கிய பின் அவள் பட்டாளங்களுடன் நடந்து வர அவள் கண்ணில் விவேகா சிரித்து பேசி கொண்டு போவதை பார்த்ததும் உள்ளுக்குள் பற்றி கொண்டு வந்தது.
கவ்யா, ஹே அவளை சுத்து விடுங்க டி.. சோனா பயந்து கொண்டே ஹே வேணாம் கவி இங்கே எல்லா ஸ்டாப்சும் இருக்காங்க.. நான் சொல்றத செய் போ என்று மிரட்ட அவர்கள் அனைரும் விவேகா அருகில் சென்றனர்.
அடுத்து என்ன நடக்குமோ…
நாளை பார்க்கலாம்…
தொடரும்…
Episode 166,
வெண்பா விவேகா இருவரும் அவர்களது பிளாக்குக்கு சேர்ந்து நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த கவியா அவளது தோழிகளிடம் அவர்களிடம் சீண்ட சொல்ல வேணாம் கவ்யா என்று அவர்கள் சொல்ல அதுள் கோபமான கவ்யா சொன்னதை செய்ங்க என்று மிரட்ட அவர்கள் அனைவரும் விவேகா, வெண்பா இருக்கும் இடத்திற்கு நடந்து கொண்டே ஜாடை பேசிக்கொண்டே அருகில் சென்றனர்.
விவேகா எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக வர வெண்பாவுக்கு அவர்கள் பேசுவது மிகவும் கோபத்தை தந்தது. ஹே யாரு இப்படி பேசராக உன்னை பற்றி பேச எனக்கே இவளோ பயங்கரமா கோவம் வருது அவங்க என்ன டிபார்ட்மெண்ட் நான் இப்பவே சிபி ஷார் இல்லனா இன்பா அண்ணா கிட்ட சொல்றேன். என்று அவள் சொல்ல
விவேகா,அமைதியா வாடி பிரச்சனை வேணாம். என்று அவள் ஒதுங்கிக் கொண்டே போக கவியா இவ்வளவு வம்பு இழுத்தும் விவேகா அமைதியாக செல்வதை பார்த்து கோபம் வர அவள் அருகில் சென்றாள். ஏய் என்ன கேர்ல் உனக்கு அவ்ளோ திமிரா! அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க நேத்து என்ன பாத்து பல்லு இருக்காது தெரிஞ்சுக்கோ.. விவேகா அவளை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாளே தவிர வேறு எதுவுமே பேசவில்லை. என்ன இந்த காம்பட்டீசன்ல வின் பண்ணிட்டா நீ பெரிய ஆள் ஆகி விடிவாயா..
விவேகா, அக்கா நான் அப்படி சொல்லவே இல்லையே.. இதை கேட்டதும் கவ்யா என்ன பேசுவது என்று தெரியாமல் பார்க்க வெண்பா கவ்யாவின் தோழிகள் சோனா அதற்கு மேல் அதிர்ந்து பார்த்தாள்.
விவேகா என்ன அக்கா நீங்க யாருன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்ததுனா உங்ககிட்ட நான் வச்சிருந்திருக்க மாட்டேன். சத்தியமா அக்கா !என்று அவள் தொண்டை பிடித்து கொண்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பேச கவ்யா உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அக்கா! அக்கா! கவ்யா,ஹே ஹே என் என்ன இப்படி பேசினால் உன்னை விட்டு விடுவேனா..
அக்கா இப்போ உங்களுக்கு நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க.. இப்போ நான் என்ன பண்ணனும் சொல்லுங்க என்று நானும் ரவுடி தான் படத்தில் வரும் விஜய் சேதுபதி போல் பேசிட
கவ்யா நேற்று எதுக்கு என்னை பார்த்து அங்கே சிரிச்ச.. அய்யோ அக்கா எப்போ என்று தலையில் கை வைக்க ஹே பொய் சொல்லாத..
அக்கா நான் இல்ல அக்கா.. ஹே உன் கூட இன்னொரு பாய் நீயும் அவனும் சேர்ந்து என்னை பார்த்து என்று சொல்ல வர விவேகா, அக்கா சத்தியமா இல்ல அவன் என் அத்தை பையன் நாங்க எங்க வீட்டில் ஒரு நாய் குட்டி வழக்கிரோம் அதை பற்றி சொல்லிட்டு இருந்தான் நான் அதுக்கு தான் சிரித்து கொண்டு இருந்தேன்.
கவ்யா அவள் பேச்சில் உண்மையா பொய்யா என்று யோசித்து கொண்டு இருக்க அக்கா என்று கண்களை ஒரு மார்க்கமாக சிமிட்டி கொண்டே சொல்லுங்க என்று கேட்க.. அக்கா நீங்க நம்ப நான் என்ன பண்ணட்டும்.
கவ்யா, சோனா அவளை எதுவும் செய்ய சொல் ஹான் அது அது நீயே சொல்லு கவி… வெண்பா விவேகாவின் கால்களை மிதிக்க அவள் முறைத்து கொண்டே அக்கா சொல்லுங்க இனி எதுவா இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள் நான் உங்களுக்காக ஓடி வருவேன். என்று சொல்லி அவளையே பார்த்து கொண்டு நிற்க கவ்யா, இப்போ எதுக்கு நிக்கிற கிளம்பு.. அக்கா விவேகா உங்களுக்கு என்ன வேணுமோ ஒரே வார்த்தை ஓடி வந்து நிற்பேன் என்று சொல்லி கொண்டு இருக்க அங்கே கவ்யா விவேகா இருவரும் பேசி கொண்டு இருப்பதை பார்த்த சிபி, வாட்ஸ் திஸ் அகை ன் அண்ட் அகைன் எத்தனை முறை சொல்வது. என்று அந்த இடத்துக்கு சிபி வர உடனே சார் என்று வணக்கம் வைத்து விட்டு என்ன விவேகா இது சார் நாங்க பழகரோம்.. சிபி, வாட்.. நான்க ப்ரெண்ட்ஸ் சார் ஆமா தானே க்கா என்று கவ்யாவை பார்க்க ம்ம் ஸார் என்று அவள் தலையாட்டி விட விவேகா, சரி அக்கா நான் போயிட்டு வரென் என்று சொல்லி அவள் வெண்பா வின் கைகளை கோர்த்து கொண்டு செல்ல கவ்யா அவளை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.
ராதிகா, கவி அவள் ஒரு டம்மி பீசு டி நீ யாருன்னு தெரிந்ததும் எப்படி பம்புகிறால் பாரேன்… சோனா, நமக்கு எதுக்கு தேவை இல்லாத பிரச்னை என்று மம் கொட்டினாள். கவ்யா, இருந்தாலும் அவளை சும்மா விட என் மனசு ஒத்துக் கொள்ள வில்லை எதுவும் செய்வேன் என்று நினைத்து கொண்டே சென்றாள்.
வெண்பா விவேகா வை பார்த்து கொண்டே வர அவர்கள் லைப்ரரி பக்கம் உள்ள ரெஸ்ட் ரூம் சென்றனர். அங்கே சென்றதும் விவேகா கண்ணாடியை பார்த்தின்கொண்டு இருக்க வெண்பா அவளை விநோதமாக பார்த்தாள். என்ன டி எதுக்கு அப்படி பார்க்கிற.. வெண்பா , இங்கே என்ன நடக்குது எதுக்கு அவள் கிட்ட இப்படி.. என்று திக்கி திக்கி பேச விவேகா அவளை ஒரு நிமிடம் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.
இப்போ எதுக்கு சிரிக்கிற.. விவேகா தன்னை நிலை படுத்தி கொண்டு மீண்டும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள். வெண்பா, ஹே சொல்லு டி..
விவேகா, அது அது வந்து இந்நேரம் அந்த கவ்யா என்னை பற்றி தான் நினைத்து கொண்டு இருப்பா டீச்சர்..
என்ன சொல்ற..
ம்ம் ஆமா நான் அவளை எதிர்த்து பேசி இருந்தால் இந்நேரம் என் மேல் கோபம் அதிகமாகி விகாரஸ் ஆ மாறி இருப்பா ஆனால் இப்போ அவளை குழப்பி விட்டு வந்து இருக்கேன் இனி ஒவ்வொரு தடவை என்னை பார்க்கும் போதும் குழப்பமா தான் இருப்பாள். அந்த குட்டையை இன்னும் குழப்பி மீன் பிடிக்கலாம் அவ்ளோ தான் என்று சொல்ல வெண்பா அவள் யுக்தியை நினைத்து வியந்து அவளும் விவேகா பேசியதை நினைத்து சிர்க்க ஆரம்பித்ததாள்.
விவேகா நேராக நல்ல மன நிலையில் வகுப்புக்கு சென்றாள். மாலை அந்த பாராட்டு விழா என்று இருக்க மதியம் யாழினி வெண்பாவை பார்க்க சென்றாள். வெண்பா, அவள் பட்டாளங்களுடன் அமர்ந்து இருக்க யாழினி தயங்கி கொண்டே அங்கு வந்து நிற்க சரண்யா, ஹே யாரு அந்த பொண்ணு இங்கே வந்து இருக்கு..
வெண்பா யார் என்பதை போல் பார்க்க அவள் முகம் மிகவும் பவியமாக இருந்தது. அவள் மிகவும் பாவமாக பார்க்க வெண்பா அவள் வேறு யாரையும் பார்க்க வந்து இருப்பாள் என்று கண்டு கொள்ளாமல் இருக்க பானு, ஹே வெண்பா அந்த கேர்ல் உன்னை தான் பார்க்கிறாள்.
வெண்பா மனதில் என்ன நம்மை பாக்கிறாள் என்று திரும்பி அவளை பார்க்க அவள் வெண்பா என்று மிகவும் மெல்லிய குரலில் அழைத்தாள். யாழினியாள் தனியாக வந்து இருந்தாள். அவள் தன் தோழிகளிடம் சொல்லு விட்டு ம்ம் என்ன யாழினி சொல்லுங்க..
அவள் கண்களில் கண்ணீர் கொண்டு ரொம்ப தேங்க்ஸ் வெண்பா.. இப்போ எதுக்கு அழறீங்க.. அன்னிக்கு ஆதி என்று சொல்லி பாதியில் நிறுத்தி விட ஓ அதுவா நீங்க அன்னிக்கு கொஞ்சம் வீக்கா இருந்தீர்கள் அவன் அடித்து உங்களுக்கு எதுவும் ஆகி விட்டால் என்ன செய்வது மற்ற படி இது பெரிய விஷயம் இல்ல…
அவள் சிரித்து கொண்டே சொல்ல இல்ல எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்தது அதனால் தான் உன் கிட்ட பேச வந்தேன். இப்போ எனக்கு எது சரின்னு புரியுது.. ஓகே யாழினி.. சரி ஓகே அப்புறம் பார்க்கலாம் யாழினி.. அவள் மீண்டும் வெண்பா வை பார்த்து என் கிட்ட பேசுவீங்க தானே.. அவளுக்கு விநோதமாக இருந்தது. யாழினி, எனக்கு ப்ரெண்ட்ஸ் யாருமே இல்ல என் கிட்ட என்று அவள் பார்க்க .
வெண்பா ஹான் இதை நீ சொல்ல தேவை இல்ல நம்ப எல்லாம் ஒன்னு தான் என்று சொல்ல அவள் சந்தோஷமாக சரி என்று வெண்பா கைகளை பிடித்து குலுக்கி விட்டு நான் உன்னை அப்புறம் பார்க்கிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.
வெண்பாவுக்கு அவள் பேசியது மனம் எல்லாம் எதோ பாரமாக இருந்தது. அவள் இதை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் தவித்தாள். அன்று மாலை ஆனது கிருஷ்ணன், இன்பா, மதிவாணன், வருனி, என அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். சிபி அங்கு அனைத்து வேலைகளையும் சரியாக இருக்கிறதா என நிர்வகித்து கொண்டு இருக்க
மதிவாணன், அப்பா சிபி எவ்ளோ பொறுப்பா இருக்கான் பேசாமல் வருணியை நான் சிபிக்கு கட்டி வைக்கலாம் அப்டின்னு இருக்கேன். இன்பா இவருக்கு யாரை பார்த்தாலும் இதே வேலை தான் போல என்று நினைக்க அன்று ரவி பேசியது நினைவு வந்தது. அப்போ நான் அவரை மாதிரி தான் இருக்கேனா என்று no way இன்பா இதை திங்க் பண்ணாத என்று அவன் விவேகா எங்கே இருக்கிறாள். தேட ஆரம்பித்தான்.
முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் மட்டும் அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். அதே போல் MBA முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் வந்து இருக்க அதோடு அந்த போட்டி தேர்வுக்கு 100 மாணவர்களும் அங்கு இருந்தனர்.
ஆதி கொஞ்சம் படபடத்து கொண்டே இருக்க.. விவேகா இப்போ எதுக்கு இப்படி டென்ஷனா இருக்க.. ஹே உனக்கு என்ன உன்னோட மொத்த குடும்பமும் இங்கே இருக்கு என்று இன்பா, கிருஷ்ணன், சிபி அவர்களை காட்டி சொல்ல விவேகா சிரித்து கொண்டே உனக்கும் தான் அங்கே ஒருத்திக்கு மனசு எல்லாம் பட்டாம் பூச்சி பறக்குதாம். அப்புறம் என்று அவனை பார்க்க ஆதி, என்ன..?
ம்ம் ஆதி முழுசா சொல்லு.. ஹே போதும் அங்கே பாரு உன்னை தான் பார்த்து கொண்டு இருக்கா.. என்று இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க..
அந்த நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.. நன்றாக தான் சென்றது இன்பா,அவர்கள் அனைவரையும் இரண்டே வரியில் அவர்களை மோடீவெட் செய்து பேசி அமர்ந்து கொண்டான். அந்த விழா இனிதே முடிந்தது.
அடுத்த இரண்டு மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் அதனால் அவர்கள் ஆதி, ஹே சொல்லு டி.. முடியாது..
விவேகா பிளீஸ் சொல்லிட்டு போடி.. அதை அவ கிட்ட கேளு என்று சிரித்து கொண்டே செல்ல ஒரு பக்கம் இன்பா, சிபி இருவரும் பேசி கொண்டே வந்து கொண்டு இருக்க.. இன்னொரு பக்கம் விவேகா ,ஆதி இருவரும் வந்து கொண்டு இருக்க..
கவ்யா அவள் பட்டாளத்துடன் இன்பாவை தின்பது போல் பார்த்து கொண்டு வந்தாள். கவ்யா விவேகாவை அழைத்தாள்.
ஹே விவேகா… அவள் ஆதியுடன் சிரித்து கொண்டே யார் என்று திரும்பி பார்க்க
தொடரும்…
Episode 167,
ஹே விவேகா… அவள் ஆதியுடன் சிரித்து கொண்டே யார் என்று திரும்பி பார்க்க
அங்கே கவ்யா இவளை தான் அழைத்தாள். இன்பா சிபியுடன் அப்பொழுது தான் அந்த க்ளாஸ் உள்ளே முன்னால் சென்றான்
விவேகாவை பார்க்க ஆதி, அவள் கைகளை பிடித்து கொண்டு ஹே இங்கே என்ன நடக்குது.. நீ வேடிக்கை மட்டும் பாரு டா நான் வந்து சொல்கிறேன் என்று சொல்லி முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு அக்கா.. இதோ வருகிறேன் என்று வேகமாக கவ்யா அருகில் சென்றாள்.
அக்கா.. என்று சொல்லி கொண்டே அருகில் சென்றாள். கவ்யா, அது யாரு என்று ஆதியை பார்த்து கேட்க.. அவள் சிரித்து கொண்டே என்னோட மாமா பையன் நானும் அவனும் ஒரே கிளாஸ் தான்… அப்படியா ரெண்டு பேரும் குரூப் ஸ்டடி பண்ணுவீங்க போல..இதை கேட்டதும் ஆதி கோபம் கொள்ள…
என்ன அக்கா? இல்ல நீயும் அவனும் ஒரே படிப்ஸ் சரியான, மண்டை தான…
விவேகா, அக்கா ஓவரா புகழாதீங்க.. சரி அதை விடு அந்த இன்ப ராகவன்.. என்று சொல்லவும் விவேகா முகம் மாற அந்த நேரம் இன்பா அங்கே வந்தான்.
விவேகா, அவனை பத்தி எதுக்கு கா என் கிட்ட கேட்கறீங்க.. கவ்யா, சோனா இருவரும் வெவ்வேறு அதிர்ச்சியில் இருந்தனர். என்ன அவனா? ம்ம் ஆமா அவனுக்கு என்ன மரியாதை ஓவரா சீன் போடுவான் என்னால் இந்த காலேஜ்அ நடுவில் டிஸ்கன்டின்யூ பண்ண முடியல ரொம்ப தலை கணம் ஜாஸ்தி அவன் கையில் தான் இந்த உலகம் இருப்பது போல சீன் போடுவான்.
கவ்யா, ஹே மரியாதை கொடுக்க தெரியாதா.. அவரை அப்படி எல்லாம் பேசாத.. நீங்க சொன்னால் சரி தான் அக்கா.. அவள் சரி அவர் உங்க கிளாஸ் வந்து இருக்காரா யார் கிட்ட அதிகமா பேசுவாரு… விவேகா கொஞ்சம் மூளையை கசக்கி என்ன அக்கா தெரிந்து கொண்டே என் கிட்ட கேட்கறீங்களா..
சோனா, ஹே என்ன சொல்ற என்று படபடத்து கொண்டே கேட்க.. விவேகா, எல்லார்க்கும் தெரியுமே.. என்ன என் என்ன தெரியும்..
கவ்யா, என்னை அக்கா சொல்லாத பேர் சொல்லி கூப்பிடு.. அக்கா உங்களை போய் எப் எப்படி நான் மரியாதை இல்லாமல் கூப்பிடுவது. ஹே சொன்னத மட்டும் செய்.. சரி..
ம்ம் சொல்லு அது வந்து அக்கா ஸாரி ஸாரி கவ்யா அந்த கண்ணுகினியாள் அப்டின்னு தோணுது.. என்ன அவளா.. மம் ஆமா அவன் கிட்ட என்ன இருக்குன்னு இப்படி என்று சொல்ல வர உடனே கவ்யா ஹே நான் தான் சொல்கிறேன் தானே என்று கோபம் கொள்ள விவேகா, சரி சரி சாரி கா இனி சொல்ல மாட்டேன் நீங்களும் அவரும் ரிலேசனா என்று கேட்க அவள் கொஞ்சம் சிரித்தாள்.
விவேகா, சாரி கவ்யா அவரு உங்க அண்ணான்னு தெரியாமல் உங்க முன்னாடி உங்க அண்ணா பற்றி.. இதை கேட்டு அவள் தோழிகள் எல்லாம் உதடு கடித்து சிரிப்பை அடக்க என்ன அண்ணாவா.. என்று கவ்யா ஷாக் ஆக
அதற்குள் சிபி அங்கே வந்தான். இங்கே என்ன வெட்டி பேச்சு என்று கேட்க சாரி சார் என்று சொல்ல வேகமாக கவ்யா அப்புறம் பார்க்கலாம். சிபி, விவேகா! என்று கத்த சார் என்று அவள் அவனை பார்க்க அவன் உடனே நமக்கு ஒவ்வொரு நிமிடமும் எவ்ளோ முக்கியம் தெரியுமா என்று கிளாஸ் எடுக்க ஆரம்பித்தான்.
விவேகா, சார் பிளீஸ் பிளீஸ் கெஞ்சி கேட்கிறேன் விட்டு விடுங்கள் என்று சொல்ல அவன் கையில் உள்ள காகித கட்டை அவள் தலையில் ஒரு அடி வைக்க அவள் சிரித்து கொண்டே சார் வலிக்குது அய்யோ அம்மா என்று சொல்ல சிபி சிரித்து கொண்டே நீ இருக்கியே ரௌடி பொன்னு என்று சொல்ல இன்பா, மிஸ்டர் சிபி இது காலேஜ் தான என்று சொல்ல விவேகா அவனை முறைப்பது போல் முகத்தை வைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
இன்பா, சிபி , தர்ஷனா, மூவரும் உள்ளே சென்றனர். ஆதி, விவேகா இருவரும் ஒன்றாக உள்ளே வந்து அமர்ந்தனர். இன்பா, சில பேர நான் எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல.. என்று விவேகாவை கவ்யா கிட்ட பேசுவது குறித்து அவன் சொல்ல அதை மற்றவர்கள் இன்பா விவேகாவை மட்டம் தட்டி பேசுகிறான் என்று நினைத்து கொண்டனர். விவேகா அவன் பேசுவதை சிரித்து கொண்டே கேட்டாள். அவனை பார்த்து நடுவில் ஒற்றை கண் சிமிட்டினாள். .
இன்பா, ரொம்ப ஓவரா பண்ண வேண்டாம் இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர் பார்க்கிறேன் என்று சொல்லி ம்ம்ம் அப்புறம் அந்த கம்படீசன்ல பார்ட்டிசி பேட் பண்ண மற்ற ஸ்டுடேன்ஸ்கு better லக் நெக்ஸ்ட் டைம் இல்ல அதுக்கு மண்டை வேணும் அது இங்கே இருக்க ஒரு சில பேருக்கு கம்மி என்று போகும் போது கவ்யாவை கொஞ்சம் ஜாடை பேசி விட்டு அமர அவள் கண்களில் கோபம், வெறுப்பு என அனைத்தும் தெரிந்தது. உன்னை நான் சும்மா விட மாட்டேன் டா என்று கைகளை இறுக்கி மூடினாள்.
வெண்பா அவ்வப்பொழுது ஆதியை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இருந்தாள். அருண் நேராக விவேகா அருகில் மாணவர்களுக்கு போட பட்ட இருக்கை பக்கம் வந்து அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தான். அவள் பாடத்தில் கவனம் செலுத்த அருண் அவள் நோட்டில் ஒரு கோடு போட்டு விட அவள் யார் என்று திரும்பி முறைத்து பார்க்க அங்கே அவன் இருக்க முன்னால் இன்பா பார்த்து விட்டான்.
அவன் முன்னால் இருந்து ஒரு சால்க் பீஸ் எடுத்து அவள் மேல் வீசிட அனைவரும் பயந்து கொண்டே திரும்பி பார்க்க விவேகா மாட்டி கொண்டாள். இண்பாவுக்கு அவள் மேல் கோபம் இல்லை அருண் மேல் தான் கோபம் வந்தது.அவன் இருவரையும் முறைத்து பார்க்க விவேகா ச சார் நான் நான் ஒன்னும் பண்ண பண்ணல..
இன்பா, அருண் கெட் அவுட்.. என்று மிகவும் மெதுவான குரலில் சொல்ல அவன் ஹே வெளியே வந்திடு நம்ப புட் கோர்ட் போலாம் என்று சொல்லி கொண்டே ஓகே சார் என்று வெளியே சென்றான்.
விவேகா அப்படியே நிற்க இன்பா, ஹே இதை வந்து சால்வ் பண்ணு.. வேகமாக முன்னால் சென்றவள் அவனிடம் இருந்து அந்த மார்கர் பென் வாங்கி கடகடவென்று போட கவ்யா ஒரு முறை அவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.
இது வழக்கம் போல தான் என்று ஆதி அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. அவள் அருகில் உள்ள மேஜையில் அந்த பென் வைத்து விட்டு போக உடனே ஹே நில்லு.. அவள் என்ன என்பதை போல் பார்க்க இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உனக்கு மேனர்ஸ் துளி கூட இல்ல டிஸ்ப்லின்ல ஜீரோ..
சோனா, அய்யோ எனக்கு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கே ரெண்டு பேரும் இப்படி நடித்து தள்ராங்க நல்ல வேளை சோனி நீ போய் இந்த கவி கிட்ட எதுவும் சொல்லல இல்லை நீ தான் இவள் கிட்ட மாட்டி இருப்ப என்று சொல்லி கொண்டாள்.
கவ்யா, ஹே இவள் என்ன இப்படி பேசுறா.. ம்ம் ஆமா கவி இந்த பொன்னு சரியான வாயாடியாம்.. என்று சமாளித்தாள்.
விவேகா, இப்பொழுது என்ன பண்ண சொல்றீங்க.. என்று தெனாவட்டாக் கேட்க இன்பா, உன் id யை கலட்டு.. அவள் அவனை பார்க்க.. இன்பா, ம்ம் என்று அதட்டி பேச.. அவள் கழட்ட அவன் கைகளை நீட்டினான். அவள் கைகளில் கொடுக்காமல் அருகில் உள்ள மேஜையில் வைத்தாள். அவன் அதை எடுத்து பக்கெட்டில் வைத்து கொண்டு நடத்த ஆரம்பித்தான்.
விவேகா போய் அமர்ந்து கொள்ள.. ஹே உன்னை யாரு உட்கார சொன்னது. அவள் எழுந்து நின்றாள். ம்ம் என்று பார்த்து அவன் நடத்த ஆரம்பித்தான். பின்னால் திரும்பி அவன் சிரித்து கொண்டே அந்த கணக்கை போட.. விவேகா தண்ணீர் குடித்தாள் அவன் நடத்துவதை வேடிக்கை பார்த்தாலே தவிர அதை நோட்டில் எழுத வில்லை..
கிளாஸ் முடியும் நேரம் வந்தது. ஆதி, ஹே id வாங்கு டி எப்படி லைப்ரரில புக் வைப்ப அப்புறம் ஃபைன் பே பண்ணனும். டிஸ்பஸ் என்று சொல்லி அவன் வெளியே செல்ல விவேகா சார் id.. என்று அவள் கேட்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் வேகமாக செல்ல..
விவேகா, சார் சார் கொடுத்துட்டு போங்க என்று பின்னால் அவள் கேட்டு கொண்டே போக கொஞ்ச தூரம் வந்ததும் டேய் id கொடு ஹே உன் கிட்ட நான் பேச மாட்டேன்..
டேய் அதை நான் தான் சொல்லணும்.. நான் என்ன பண்ணேன். நீ எதுக்கு என்னை எல்லார் முன்னாடியும் திட்டின.. ஹே நீ அருண் கிட்ட எதுக்கு பேசின..டேய் எங்க பார்த்தாலும் நீங்கதான்டா என்ன வந்து டார்ச்சர் பண்றீங்க. நீ ஆல்ரெடி என் கிட்ட பிரச்னை பண்றது மட்டும் தான் உன் வேலை , அருண் பக்கத்துல உக்காந்துட்டு என் நோட்ல எழுதி கிறுக்கி டென்ஷன் பண்றான். சிபி சார் ஒரு பக்கம் கிளாஸ் எடுத்து கொல்றாரு என்னை என்ன பண்ண சொல்ற..
இன்பா இதை கேட்டு சிரித்து பேபி அப்ப நான் பண்றது உனக்கு டார்ச்சர் மாதிரி இருக்கா பின்ன நீ பண்றது என்னடா நான் சொல்லட்டும்.. இன்பா கோவித்து கொண்டு சரி போடி என்று சொல்ல விவேகா சிணுங்கி கொண்டே id கொடு நான் போறேன்..
இன்பா, முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவளிடம் ஐடி கார்டை நீட்ட அவள் அவனை உற்றுப் பார்த்தாள்.
விவேகா,அவனது அரை வர அவனை இறுக்கி கட்டிக் கொண்டு சரி கோபப்படாத இதுக்கு தானே சீன் போட்ட அதுதான் வாங்கிட்டு போ என்று அவனை விலக
இன்பா இப்பொழுதும் உன் id வாங்கிட்டு போடி என்று இன்னும் கோபப்பட இரண்டு கன்னத்திலும் ஒரு முத்தம் வைத்தவள் இப்போ ஓகேவா….
வாங்கிட்டு போ ஐடி வாங்கிட்டு போனு சொன்னேன்…
டேய் ரொம்ப ஓவரா போற கைகளை நீட்டி அவள் வாங்க அவன் கொடுக்கவில்லை.இப்பொழுது சிரித்தான்
பிராடு என்று சொல்லி அவள் சொல்ல போக நான் கார் ல வெயிட் பண்ணுவென் வந்துடு அதான் உனக்கு எல்லாம் கொடுத்துட்டேனே..
ஹே என்ன நீ தானடி பேச வர சொன்ன நீ. ஒன்னும் பேச வேண்டாம், நீ வர வேண்டாம் என்று சொல்லி ஐடியை நீட்ட விவேகா, சரி சரி இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. வரேன் டா என்று கை நீட்ட
நாளைக்கு தரேன்டி போயிட்டு வா
கொஞ்சம் ஃபன் பண்ணலாம்..
விவேகா, எல்லாரும் கேட்டால் நான் என்ன பண்ணட்டும்.
இன்பா, பேபி எனக்கு ஒரு லவ் லெட்டர் எழுதி கொண்டு வா நான் id கொடுக்கிறேன்.
டேய் இத நான் எப்படி மற்றவங்க கேட்டால் சொல்ல முடியும்.
இன்பா, நீ id என் கிட்ட இருக்குன்னு மட்டும் சொல்லு லெட்டர் எழுத சொல்லி இருக்காருன்னு சொல்லு..
ம்ம் வரேன் டா.. ஹே காருக்கு..
ம்ம் வரேன் இப்படியே வரட்டுமா.. என்று கோபம் கொண்டு கேட்க…
சரி சரி போ..
அங்கே சரவணன் இன்று இன்பாவுடம் வினய் பற்றி எல்லா தகவலும் கொடுத்து விட அவனுக்காக கார் செட்டில் காத்து கொண்டு இருந்தான்.
தொடரும்…
Episode 168,
விவேகா வருவதற்காக கவ்யா காத்து கொண்டு இருந்தாள். அவள் அங்கு இருப்பதை பார்த்ததும் உடனே விவேகா முகம் மாறியது. முகத்தை சோகமாக வைத்து கொண்டு வர.. கவ்யா, ஹே என்று அழைக்க அவள் திரும்பினாள்.
அவள் அக்கா உங்க அண்ணா கிட்ட சொல்லி என் id கார்டை வாங்கி கொடுங்க.. கவ்யா கண்களை இறுக்கி மூடி கைகளையும் இறுக்கி கொண்டு ஹே அவன் என் அண்ணா இல்ல என்று ஒரு பேயை போல் சொல்ல.. விவேகா பயந்தது போல் அக்.. அக்கா.. ஹே கால் மீ கவ்யா.. கவ்யா..
ஹான் கவ்யா.. அவனை எனக்கு அவனை லவ் பண்றேன்.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போது இன்பா வெளியே வந்தான். விவேகா அவனை பார்த்து முறைக்க.. இவள் நம்மள பற்றி என்ன சொல்லி இருக்கானு தெரியலயே இவள் முறைக்கிரா.. என்று எதுவும் காட்டி கொள்ளாமல் கிளம்பினான்.
விவேகா, ஓ அப்படியா ம்ம் சரி.. இனி நான் அவரை பற்றி தவறாக பேச மாட்டேன். என்று சொல்லி அவள் திரும்ப ஹே.. அவள் உடனே திரும்ப நாளைக்கு நீ என்னை வந்து பார்க்கனும் என்று சொல்ல சரி கவ்யா என்று அவள் இன்பனை அர்ச்சித்து கொண்டே கிளம்பினாள்.
அவள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் வந்ததும் நேராக வீட்டுக்கு போகும் பாதைக்கு சென்றாள். இன்பா அங்கு முன்னவே வந்து காத்துக்கொண்டிருந்தான். ஆனால் அவள் நேராக வீட்டுக்கு செல்லும் வழியில் செல்ல போக இன்பம் உடனே காரை எடுத்துக் கொண்டு அவள் அருகில் செல்ல அதற்குள் முன்னால் சரவணன் நேராக இன்பாவின் காரை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
விவேகா அவனை பார்த்து அண்ணா… சரவணன் மம் விவேகா எப்போ காலேஜ் முடிந்தது.. அண்ணா ஸ்பெசல் கிளாஸ் அதனால் தான் லேட் ஆகி விட்டது. வெண்பா எங்கே.. அவள் இன்னிக்கு முன்னாடியே வீட்டுக்கு போயிட்டா.. அவர்கள் இருவரும் காருக்கு முன்னால் பேச கடுப்பானவன். ஹாரன் அடிக்க டைம் ஆச்சு வீட்டுக்கு போ அப்புறம் உன் கிட்ட புராஜக்ட் பற்றி பேசலாம் என்று சொல்ல
விவேகா, சரி அண்ணா என்று அவள் திரும்பி பார்க்க இன்பா வெயிட் பண்ணு என்பது போல் கண் ஜாடை காட்ட இவள் முடியாது என்று தலை அசைத்தாள். அவன் மிரட்டும் தொனியில் பார்க்க ஓரமாக மறைந்து நின்று கொண்டாள்.
சரவணன் இன்பா எங்கு பார்க்கிறான் என்று திரும்ப விவேகா உடனே ஒளிந்து கொண்டாள். இன்பா, ஹலோ மிஸ்டர் எதுக்கு என் கார் முன்னாடி நினனு டிராஃபிக் ஜாம் பண்ணீங்க..
சரவணன், இன்பா உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.. இப்போ அதை விட முக்கியமா எனக்கு வேலை இருக்கு.. அவன் உனக்கு உங்க அக்கா வாழ்க்கை விட முக்கியமா.. இன்பா அலட்டி கொள்ளாமல் இதை சொல்றதுக்கு நீங்க யாரு சார்?
இது ஒன்னும் விளையாட்டு இல்ல இன்பா இட்ஸ் சீரியஸ் என்ன ஆச்சு எங்கேயும் விழுந்து விட்டாயா.. என்று காரில் ஏற போக.. சரவணன் அவன் முன்னே சென்று தடுத்தான். இன்பா பிளீஸ் டா ஒரு நிமிடம் நில்லு நான் சொல்றத கேட்டு போ டா..
இன்பா சிரித்து கொண்டே என் அக்காவை பற்றி உனக்கு என்ன கவலை எங்க மாமா அவளை தாங்கு தாங்கு தாங்குன்னு தாங்குவாரு… இதை கேட்டதும் கடுப்பாணவன் டேய் என்று அவன் சட்டையை பிடித்து இந்தா இதை படித்து பாரு அந்த வினய் ரொம்ப மோசமானவன்.. என்று அவன் கைகளில் ஒரு கோப்பு திணிக்க..
இன்பா அதை வாங்கி கீழே போட்டு விட்டு இதை எதுக்கு டா என் கிட்ட சொல்ற போய் சுபா கிட்ட சொல்லு.. அவள் வாழ்க்கை டா அவ கொஞ்சம் சின்சியரா இருக்க வேகத்தை பார்த்தால் நாளைக்கே கூட கல்யாணம் பண்ணுவாங்க…
இதை கேட்டதும் அவனுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் கோபத்தில் கொடுத்தான். இதோ பாரு சரவணன் என் சட்டையை பிடித்து இதை என் கிட்ட சொல்றத விட்டட்டு உனக்கு எதுவும் வேலை இருந்தா போய் பாரு அப்படி இல்ல சுபா டாடி, சுபா, அவங்க கிட்ட போய் சொல்லு.. உனக்கு பதில் கிடைக்கும் நான் இதை இந்த ஆதாரத்தை எல்லாம் என் முடி கூட திரும்பி பார்க்காது என்று மிகவும் அவமான படுத்தி பேச சரவணன் அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல இன்பா காரில் ஏற செல்ல விவேகா சரவணன் போய் விட்டானா என்று பார்த்து விட்டு இன்பா தூக்கி எறிந்த அந்த கோப்புகளை எடுத்து கொண்டு அதை தட்டி துடைத்து கொண்டே இன்பா அருகில் வந்தாள்.
அவன் அதை வாங்கி வெளியில் தூக்கி எறிய செல்ல டேய் நீ பன்றது துளி கூட சரி இல்லை.. என்ன சரி இல்லை.. அவர் மனச நீ ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டாய் அண்ணா பாவம் என்று அவள் வருத்த பட ஹே நீ என் கூட இருக்கும் போது என்னை பற்றி மட்டும் தான் நினைக்கணும் பேசணும் அண்ணா ஆட்டு குட்டி இதுக்கு எல்லாம் இடம் இல்ல காட் இட்..
விவேகா, இன்பா ஐ ஹேட் யூ.. பேபி ஐ நீட் யூ.. உன்னை கொன்று விடுவேன்.. இப்போ நான் உன் கிட்ட சரவணன் அண்ணா பற்றி பேச தான் வர சொன்னேன் அப்போ போகவா.. ஹே சரி சரி சொல்லு.. அவள் வெண்பா சொன்ன அனைத்து விஷயமும் சொல்ல இன்பா இதை கேட்டதும் ம்ம் ஒகே இதில பெருசா ஒன்னும் இல்லையே..
அந்த மீனாட்சி அவங்களால் எந்த பிரச்னையும் வராது தானே என்று இல்லாத நகத்தை கடித்து கொண்டே கேட்க இன்பா அவள் கடித்த விரலை வாங்கி அவன் கடிக்க ஹே விடு வலிக்குது.. என்று சொல்ல இன்பா சிரித்து கொண்டே விவேகா சரவணன் உன்னை மாதிரியே கேடி டி என் அக்கா சுபா என்னை விட மோசமானவள்..
என்ன டா சொல்ற.. ம்ம் சுபா இவனை ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே லவ் பண்ணிட்டு இருந்து இருக்கா, அவள் அவனை மட்டும் ஒரு மாதிரி ட்ரீட் பண்ணுவா எனக்கு அப்போ அது பெருசா படல ஸ்டார்டிங் ல அண்ணா ன்னி கூப்பிட்டு சுத்தினாள் திடீர்னு சரவணன் அப்டின்னு கூப்பிட ஆரம்பித்தாள். அப்புறம் என்று விவேகா கேட்க..
இன்பா என்ன அப்புறம் சொல்லேன் கேட்போம்.. no way.. ஹே பிளீஸ் டா.. சரி என்னை எதுக்கு முறைத்து பார்த்த.. இதை சொன்னதும் அவன் கைகளை அவள் தட்டி விட ஹே என்னடி… உன்னை அவள் லவ் பன்றாளாம் அதுவும் ராகவ் ராகவ லவ் பண்றேன் அப்டின்னு அதை என் கிட்டயே சொல்றா.. இன்பா, நீ போடி அது என் ராகவ் ன்னு சொல்லு.. ச்சி.. ச்சீ.. நீ என் ராகவ் இல்ல
விவேகா, ஹான் நான் சொன்னதும் அவள் சரி அப்டின்னு விட்டு போய் விடுவாளா.. என்னை சும்மா விட மாட்டா சண்டை போடுவா நாங்க ரெண்டு பேரும் உனக்காக சண்டை போடுவதை நீ ஜாலியா வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம் அப்டின்னு நினைக்கிறீ்களோ..
அப்போ நீ எனக்காக ஃபைட் பண்ண மாட்டியா டி.. போடா நானே ஒரு நமித்து போன பட்டாசு.. இல்ல விவேகா நான் உன் பக்கத்தில இருந்தேன்னு வை நீ அப்படியே என்று சொல்ல வர போதும் சார் நிறுத்துங்க.. இன்பா, என்னை மாதிரி அழகா இருந்தால இது தான் இப்படி தான் நிறைய பொண்ணுங்க சுத்திவாங்க.. உனக்காக நான் சண்டை எல்லாம் போட மாட்டேன்.. அவன் முகத்தை திருப்பி கொள்ள நான் எதுக்கு இன்பா வுக்கு சண்டை போடணும் நீ தான் என்னோட ஆளாச்சே.. சோ நீ என் சாலில் இன்பா, அது என்ன ஷால்.. நான் இப்போ சுடி தானே போட்டு இருக்கேன் உன்னை ஷாலில் முடிந்து வைத்து இருக்கேன் என்று சொல்ல
அவன் கன்னகுழி தெரிய ஒரு புன்னகை சிந்தி அவள் மேல் விழ ஹே விடு டா நான் போகனும் உனக்கு கிஸ் ஹக் ரெண்டும் கொடுத்து விட்டேன்.. ஹே என்ன டி கணக்கு வச்சு சொல்ற.. ம்ம் தந்தேன் தானே..
சரி அந்த கவ்யா கிட்ட அதிகம் பேசாத எனக்கு பிடிக்கல.. என்னை வேற நாளைக்கு பார்க்கனும் அப்டின்னு சொல்லி இருகா.. ஹே be careful பேபி …
என் இன்பா இருக்கும் போது எனக்கு என்ன கவலை…
எனக்கு எப்போவும் நீ என் கூட இருக்கணும் என் கண் முன்னால் இருந்தால் தான் எனக்கு நிம்மதியா இருக்கும்..
சரி சரி போதும் நான் கிளம்புறேன்.. இன்பா, நாளைக்கு நெய் சாதம் மாமி கிட்ட சொல்லி எடுத்து வா.. ஹான் ஓகே.. ஹே லவ் லெட்டர் எழுதி கொண்டு வர..
ஹே போடா..
ஹே எனக்கு ஆசை டி.. விவேகா எனக்கும் ஆசை தான் நீயும் எனக்கு ஒரு லெட்டர் எழுதி கொண்டு வா..
நானா நான் எப் how என்று கேட்க..
டேய் நீ எழுதி கொண்டு வர அதை நான் படிக்கணும்..
என்ன டி..
விவேகா, அப்போ நீ என்னை லவ் பண்ணல..
இன்பா, விவேகா கஷ்டம் டி நான் ஒன்னும் poet இல்ல..
அப்போ நானும் அதே மாதிரி தான்..
சரி நீயும் எழுத வேணாம் நானும் எழுத மாட்டேன்..
இன்பா, சரி ஓகே நான் உனக்காக எழுதி கொண்டு வரேன்..
நிஜமா..
ம்ம் இதுக்கு சத்தியம் எல்லாம் பண்ண முடியாது..
அப்போ ஓகே டன் என்று அவள் எழ போக..
ஹே கிஸ் மீ க்ளோஸ் யூர் ஐஸ்..
சிறிது நேரம் கழித்து விட்டவன்.. இப்போ போ என்று அவள் உதட்டை துடைத்து வி்ட..
விவேகா வெளியே சென்று மீண்டும் எட்டி பார்த்தவள்…
இன்பா நீ எழுதி கொண்டு வர நான் கூகிள் ல பிளாஜியாரிசம் செக் பண்ணுவேன் என்னை ஏமாற்றின அடுத்து ப்ரேக் அப் தான்
இன்பா இதை கேட்டு.. ?
தொடரும்…
Episode 169,
விவேகா காரை விட்டு வெளியே வந்தவள். ஒரு நிமிடம் என்று அவனை பார்த்து நீ அன்னிக்கு என் அண்ணா கிட்ட கொடுத்து ஸாரி சொல்லி ஏமாற்றியது போல் இதை செய்த நீ அவ்ளோ தான்..
இன்பா நான் போய் இப்படி எல்லாம் செய்வெனா பேபி.. டேய் நீ யாரை வேணாலும் ஏமாற்றலாம் பட் என் கிட்ட முடியாது டா.. உன் லெட்டர காபி பேஸ்ட் பண்ணி கூகிள் ல பிளாஜியரிசம் செக் பண்ணுவேன் ஒரு வேளை நீ எழுதியது சுட்ட கதையா இருந்தது. அப்புறம் அதோட எல்லாம் முடிந்தது.
ஹே இட்ஸ் நாட் ஃபெர் பேபி.. விவேகா அவனை பார்த்து முறைத்து கொண்டே ஓ அப்படி ஒரு பிளான் சாருக்கு இருந்து இருக்கா.. அவன் வேறு எங்கோ பார்க்க போடா உன் பிளர்டுங எல்லாம் இதில் காட்டு என்று சொல்லி அவள் அவனை பார்த்து டாட்டா நான் உன் லெட்டர்க்கு வெயிட் பண்றேன் என்று சொல்லி சிரித்து கொண்டே வந்தவள் சரவணன் இன்பாவுடம் கொடுத்த அந்த கோப்பை நியாபக மறதியில் எடுத்து வந்து விட்டாள். அச்சோ இதை நான் எடுத்து வந்து விட்டேனே என்று யோசித்தாள். சரி இதை இன்பா விடம் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்தாள்.
அவள் வீட்டுக்கு வரும் போது இன்று என்றும் இல்லாமல் கங்கா அதற்கு முன் வீட்டில் இருக்க என்ன மா இன்னிக்கி சீக்கிரம் வந்து விட்டீர்கள் போல.. ஆமா நீ வர இவளோ நேரம்… அது நான் ஒரு கம்படீசன்ல ஜெயித்தேன். நானும் ஆதியும் அதுக்கு ஒரு பக்சன் அப்புறம் அதுக்கு இன்னொரு லெவல் போக கோச்சிங் கொடுக்கறாங்க அதனால் தான் நான் , வெண்பா, ஆதி, அப்புறம் இன்னும் ஒரு 100 பேரு என்று கதை கூற
சரி போதும் டி இது இந்த நெட் வொர்க் ஆக மாட்டிங்குது ஒரு சமையல் பார்க்கலாம் அப்டின்னு வந்தேன். விவேகா, எனக்கு ஒரு போன் வாங்கி தர மாட்டின்ற உனக்கு சமையல் குறிப்பு பார்க்கணுமா என்று சொல்லி wifi சுவிட்ச் ஆன் செய்தாள். கங்கா அதுக்கு தான் மாசம் மாசம் 500 கட்டுகிறேன் உனக்கு எதுக்கு டி போனு.. அதான் எப்பவும் அந்த லேப் டாப் கையுமா சுத்துர என்று அவளை சொல்லி விட்டு அவள் அம்மா சமையல் குறிப்பை பார்க்க விவேகா சலித்து கொண்டு உள்ளே சென்றாள்.
இங்கே இன்பா வீட்டுக்கு வந்தவன் நேராக தலையை பிடித்து கொண்டு சோபாவுல அமர்ந்தான் அவன் பக்கெட்டில் இருந்த அவளது id டிஸ்டர்ப் செய்ய அதை எடுத்து டேபில் மேல் வைக்க வசுமதி டூட்டிக்கு கிளம்பி கொண்டு இருந்தார். வெளியே வர அங்கே இன்பா இருப்பது தெரிய அவனுக்கு லெமன் டீ போட்டு எடுத்து கொண்டு ராகவ் இந்தா என்று கொடுக்க அவன் வாங்கி thanks மாம் என்று சொல்லி ஒரு மிடுக்கு குடித்து கொண்டு இருக்க அவர் கண்களில் விவேகா id இருக்க அதை எடுத்து பார்த்தவர்.
என்ன ராகவ் விவேகா id எப்படி உன் கிட்ட வந்தது. அது மாம் அவள் இருக்காளே நான் கிளாஸ் நடத்தும் பொழுது அந்த அருண் பெல்லோ கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்கா அதான் பணிஷ் பண்ண வாங்கிட்டு வந்து விட்டேன். இல்ல ராகவ் அவள் நல்ல பொண்ணு டா அப்படி எல்லாம் பப்ளிக்ல பிகேவ் பண்ண மாட்டா.
இன்பா புருவம் நெருக்கி அவள் இல்ல அந்த அருண் தான் காரணம் நான் அவளை சுற்ற விட தான் பிடுங்கி விட்டு வந்தேன். சரியான போக்கிரி தனம் பண்ணுட்டு திரியுறா.. வசுமதி, எப்படி இருந்தாலும் அவள் வேலையில் சரியா தானே இருக்கா.. என்று அவர்கள் பேசி கொண்டு இருக்க ரவி, எப்போ பார்த்தாலும் எதோ ஒரு விஷயத்தில் இந்த கேர்ல் பற்றி டெய்லி எதாவது டாபிக் கிடைத்து நீ, இவன், சுபா யாராவது பேசுறீங்க அது எப்படி மதி என்று சொல்லி கொண்டே அவள் கைகளில் இருந்து விவேகா id ய அவர் பிடுங்கி பார்க்க இன்பா அதை பிடுங்க எழ
ரவி, மதி இது தற்செயல் மாதிரி இருக்கா இல்ல எதோ என்று அவர் இன்பாவைப் பார்க்க.. என்னங்க சொல்றீங்க.. இன்பாவின் இதயம் வேகமாக துடிக்க ரவி ம்ம் இது தற்செயல் இல்ல எதோ என்று சொல்லி இன்பா முகத்த பார்க்க அவன் முகம் ஒரு மாதிரியாக மாற வசுமதி அவர் முகத்தை பார்த்து எதோ யோசித்து கொண்டு இருக்க..
ரவி, மதி அந்த பொண்ணு அண்ணா இங்கே தான இருக்கான் சோ அதனால் வீட்டு பக்கத்தில் இருப்பதால் அது மட்டும் இல்லாமல் அந்த பொன்னு உன் அப்பா காலேஜ் சுற்றி சுற்றி நம்ப தான் இருக்கோம் அதனால் எப்படியும் அந்த கேர்ல் டாபிக் வந்து விடுகிறது என்று அவள் போட்டோவை பார்க்க வசு, ம்ம் ஆமாங்க.. இதில் சந்தேக பட எதுவும் இல்ல என்று சொல்லி அவள் ரொம்ப நல்ல பொண்ணு சரியான வாய் என்று சிரித்து கொண்டே கிளம்ப இன்பா அப்பொழுது தான் மூச்சை சீராக விட்டவன் வேகமாக அவன் அப்பாவிடம் இருந்து id யைப் பிடுங்க..
ரவி,டேய் எப்படி.. அப்படியே இன்னிக்கு இன்னும் கொஞ்சம் விட்டால் கதறி இருப்ப.. ந நானா நான் எதுக்கு என்று அவன் பேச வர.. டேய் கொஞ்சம் வழிகிறது துடைத்து கொள்.. வாட்? வேர்வை என்று சொல்லி சிரிக்க அவன் முறைத்தான்.. ம்ம் நல்லா இருக்கா, பட் அவள் அன்லக்கி.. அவன் ஏன் என்பதை போல் பார்க்க உன்னை போய் பிடித்து இருக்கே பாவம்.. அவன் அவர் கைகளில் இருந்து பிடுங்கி கொண்டு செல்ல.. அவளை நான் ஓகே சொன்னால் தான் உன் அம்மா சரி சொல்லுவா.. அவன் திரும்பி பார்க்க பெருசா ஒண்ணும் இல்ல என் காலில் விழு.. நானா.. ம்ம் நீ தான் சான்சே இல்ல.. ம்ம் பார்க்கலாம் என்று சொல்ல அவன் வேகமாக அவன் அறைக்கு சென்றான்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா, ரவி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க வசு அப்பொழுது தான் வீட்டுக்கு வந்தார். இன்பா, மா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்.. ம்ம் சொல்லு ராகவ்.. சுபா.. என்று அவர் அழைக்க அவள் கைகளில் காபி கொண்டு வந்தார்… ம்ம் என்ன ராகவ்.. இந்த சரவணன் இருக்கானே.. என்று சுபா, ரவி இருவரையும் ஓர கண்ணால் பார்த்து கொண்டே சொல்ல ஆரம்பித்தான்.
அவனுக்கு பொன்னு பார்த்து இருக்காங்களாம்.. ம்ம் நல்லது தாத்தா கூட அன்னிக்கு போய் பார்த்திட்டு வரும் போது சொல்லிட்டு வந்தாங்க.. ம்ம் அது விட இன்டர்ஸ்டிங் நியூஸ் என்ன தெரியுமா.. ம்ம் என்ன அது என்று கேட்க சுபா முகம் ஒரு நிமிடம் சந்திரமுகி போல் மாரியது. இன்பா, அந்த பொண்ணு பேரு மீனாட்சி எப்படி பார்த்தாலும் நல்லா இருக்கு சரவணன் மீனாட்சி how is it!
வசு, ம்ம் இருந்தாலும்.. வாட் மாம்… வருணியை அவனுக்கு கட்டி கொடுக்கணும் அப்டின்னு அப்பா ஆசை பட்டாங்க.. இதை கேட்டதும் ரவி, சுபா இருவரும் அதிர்க்சி ஆகினர். ரவிக்கு புரை ஏறிட வசு தண்ணீர எடுத்து அருகில் வைத்து இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு..
ரவி, இந்த மாதிரி ஐடியா எல்லாம் உன் அண்ணன் தான் யோசிப்பான்.. ஒன்னு அந்த இளவழகன், வருனிக்கு பொண்ணு மாப்பிள்ளை தேடுவது மட்டும் தான் வேலை பேசாமல் காலேஜ் மூடி விட்டு திருமண தகவல் மையம் ஓபன் பண்ணிடுங்க..
வசு, என் குடும்பத்தை குறை சொல்வது மட்டும் தான் உங்களுக்கு வேலை.. இன்பா, மாம் நீங்க விடுங்க.. மாமாவுக்கு அவங்க ரெண்டு பேரும் மேலயும் பாசம் ஜாஸ்தி..
இப்போ என்ன பண்ண சொல்ற.. நீங்க சுபாவுக்கு தான எல்லாம் செய்வீங்க..
ரவி, இப்போ இன்பா சாருக்கு கல்யாணம் பண்ணனுமா.. அவன் அமைதியாக இருக்க
ரவி, அதான் உன் பின்னாடி கண்ணுக்கு இனிமையாக(கண்ணுக்கினியாள்) அண்ட் மதி சார் ஹீரோயிசம் பண்ணி ஒரு பொண்ணை காவியமான ஹான் (கவ்யா) தூக்கி வந்து இன்பா, சாப்பிடும் பொழுது பாதியில் எழுந்தவன் மாம் என்று கத்திட…
அவர் ரவி! கொஞ்சம் அமைதியா இருங்க.. நீ உட்காரு ராகவ்.. ரவி சிரிக்க அவன் ஸ்பூனை தட்டில் தட்டி கொண்டு இருக்க வசுமதி, ராகவ் இப்படி செய்ய கூடாது.. என்று அவர் சொல்ல உடனே அவன் எழ போக.. ஹே அடி வாங்க போற உங்களுக்கு வேற வேலையே இல்லையா ரெண்டு பேரில் யாராவது கிளம்புங்க… நானே போறேன் என்று சொல்லி இன்பா மேலே கிளம்ப சென்றான்.
அவர் சிரிக்க ஏன் ரவி எப்போ பார்த்தாலும் அவனை டென்ஷன் பண்றீங்க.. எனக்கு நல்லா இருக்கு டி.. என்று சொல்லி அவர் மெதுவாக சாப்பிட்டு கொண்டே சுபா எங்கே என்று பார்க்க அவள் அங்கே இல்லை அவள் அறைக்கு சென்று விட்டாள்.
சரி நான் ஃப்ரெஷ் ஆகுறேன் என்று சொல்லி அவர் கிளம்ப இன்பா தயாராகி கீழே வந்தான். கதவு வரை சென்றவன் மீண்டும் அவன் தந்தைக்கு அருகில் வந்து எனக்கு விவேகம்(விவேகா) இருக்கு சோ நீங்க கவலை பட வேண்டாம். இவளோ பேச்சுக்கு தரமா உங்களுக்கு ரிவன்ஜ் காத்து இருக்கு வெயிட் அண்ட் வாச் ஓல்ட் மேன் என்று சொல்லி அவன் கிளம்பினான். ரவி சிரித்து கொண்டே கிளம்பினார்.
விவேகா, அம்மா அந்த நெய் சாதம் சீக்கிரம் எனக்கு பஸ்க்கு டைம் ஆச்சு.. ஹே இப்படி காலில் சுடு தண்ணீர் ஊற்றினது மாதிரி குதிக்காத.. என்று சொல்லி கொண்டே டிஃபன் பாக்ஸ் எடுத்து கொண்டு வந்தார். ம்ம் சூப்பர் மா என்று அவள் அம்மாவை கட்டி முத்தம் வைத்து அவள் கிளம்பினாள்.
தொடரும்…
Episode 170,
விவேகா அவள் அம்மாவிடம் இருந்து அந்த டிபன் பாக்ஸ் வாங்கி கொண்டு நேராக பேருந்து ஏறும் இடத்துக்கு செல்ல அங்கே வெண்பா நின்று கொண்டு இருந்தாள்.
டீச்சர்….
ம்ம் சொல்லு டி என்ன எக்ஸ்ட்டிரா தேஜஸ்… நான் ராகவ்க்கு என்று ஆரம்பிக்கும் போதே அங்கே இன்பா காரில் வந்தான்.
வெண்பாவுக்கு போன் செய்ய அவள் சிரித்து கொண்டே ஹே உன் ராகவ் க்கு 100ஆயிசு என்று போனை அவளிடம் நீட்ட.. சிரித்து கொண்டே
அவள் வாங்கி ம்ம் சொல்லுங்க… ஹே என் கூட காலேஜ் வா.. முடியாது.. ஹே வாடி காலேஜ் தான கூப்பிடுறேன் அவுட்டிங் போற மாதிரி சீன் போடுற.. காலேஜ்
புதுசா வர மாதிரி வேண்டாம்னு சொல்ற…
யாராவது பார்த்து விட்டால் நான் க்ளோஸ் டா.. விவேகா வான்னு சொன்னேன். நான் கேட்க்கு முன்னாடி இறக்கி விடுறென்.. போடா நான் மாட்டேன் பா.. என்று அவள் சொல்லி கொண்டு இருக்க வெண்பா போன் வாங்கி, அண்ணா அவ வருவா நீங்க வைங்க என்று சொல்லி கட் செய்தாள்.
வெண்பா அவளை ஹே போ என்று அவளை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கி அனுப்ப… அவள் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்து கொண்டே அவன் காருக்கு அருகில் செல்ல அவனே அவளை சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டான்.
ஹே என் என்னடா பண்ற என்று சொல்வதற்குள் அவளுக்கு சீட் பெல்ட் போட்டவன் அவளது பேக் புக் எல்லாம் வாங்கி பின் சீட்டில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அவள் யாரும் பார்க்கிறார்களா என்று பார்க்க ஹே நீ உள்ளே இருப்பது யாருக்கும் தெரியாது. நிஜமா.. ம்ம்.. டேய் உன் கூட சேர்ந்து நான் வர வர ரொம்ப மாறி போய் விட்டேன். அவன் ஒரு சிரிப்பு அதன் பின் அமைதியாக காரை கொஞ்சம் வேகமாக ஒட்ட விவேகா அவனை பார்த்தாள்.
உனக்கு என்ன ஆச்சு.. சுபா டாட் என்னை காலையிலே ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாரு.. அப்போ நீ யாரு… நான் என் மாம் பையன்..
விவேகா, இன்பா எனக்கு உன் அப்பாவை பார்க்கனும் போல் இருக்கு.. எதுக்கு.. சும்மா தான் அவர் எப்படி இருப்பாரு..
எதுக்கு அவரை எல்லாம் நீ பார்க்க கூடாது. இப்போ எதுக்கு உனக்கு இப்படி தோணுது. இல்ல உன் டாடி உன்னை விட அழகா இருப்பருண்ணு எனக்கு தோணுது அண்ட் I think he is very clever.. அவன் சட்டன் பிரேக் போட்டு முகத்தை திருப்பி கொண்டு இந்த வழியில் B25 வரும் நீ ஏறிக்கோ என்று லாக் ரிலீஸ் செய்ய
விவேகா, இப்போ இப்போ என்ன ஆச்சுன்னு என்னை இறங்க சொல்ற.. அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… அவள் சீட் பெல்ட் கலட்டியவள் அவளது பேக் ல இருந்து அந்த டிபன் பாக்ஸ் எடுத்து நீட்டினாள்.
இந்தா இது உனக்கு தான் என்று சொல்லி திறந்து வைத்து விட்டு அவள் புக் எடுத்து கொண்டு இறங்க போக சரி சரி நான் எதோ கோபத்தில் சொல்லி விட்டேன் போகாத..
விவேகா அவனை பார்த்து முறைக்க ஹே அப்புறம் ஊட்ட சொல்லுவேன். ச்சீ போடா என்று சொல்லி மீண்டும் இறங்க சென்றாள். விவேகா போகாத டி என்று அவளை பிடித்து அமர வைத்தான். ஸ்பூன் அவள் நீட்ட அவன் அதை வாங்கி அருகில் வைத்து விட்டு இப்போ நீ தான் பீட் பண்ணனும் என்று சொல்ல அவள் முகத்தை ஒரு மாதிரி வைக்க ஹே லவ் லெட்டர் வேண்டுமா வேண்டாமா..
வேண்டாம்.. சரி சரி ஊட்டி விடுறேன் என்று சொல்லி அவள் கைகளால் அவனுக்கு முகத்தை திருப்பி கொண்டே ஊட்ட அதை பார்த்த அவன் இரு டி உனக்கு இருக்கு சும்மா சொல்ல கூடாது மாமி செம்மையாக சமைக்கிராங்க, நெய் சாதமே இவளோ டேஸ்டா இருக்குன்னா நான்வெஞ் எப்படி இருக்கும்..
விவேகா, டேய் இது வெறும் நெய் சாதம் மட்டும் தான் ஜீரகம் தாளிச்சு கொட்டி இருக்கு இதுக்கு ஓவரா பில்ட் அப் கொடுக்கிற அன்னிக்கு உனக்கு கஷ்ட பட்டு வடை தட்டி வென் பொங்கல் செய்தேன் ஆனால் நீ இதுக்கு கொடி பிடித்து சுத்துர என்று முகத்தை திருப்பி கொண்டு ஊட்ட.. பொருமையாக சாப்பிட்டு முடித்து .. பேபி தண்ணி வேணும்.. ம்ம் இந்தா குடி என்று கொடுக்க அவன் அவளை அருகில் இழுத்து இதழில் முத்தம் பதித்தான். விவேகா அவனை தள்ளி விட அவன் சிரித்து கொண்டே அவளை இழுத்து முகம் எல்லாம் முத்தமிட்டான். டே.. டேய்… வேண்டாம் வேண்டாம் டா போச்சு போச்சு.. என்று அவனை தள்ளி விட அவள் துள்ளி கொண்டு இருக்க
அவள் கைகளை இரண்டையும் பிடித்து கொண்டு இப்போ உன் பக்கத்தில் வந்தாலே நெய் வாசம் கும்ன்னு அடிக்கும் டி என்று அவள் உதட்டை வருடி விட அவள் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்து தன்னை தானே அருவருப்பாக உணர்ந்தாள்.
அந்த நெய்யின் வாசம் அவளுக்கு குமட்ட அவள் வாய் பொத்தி கொள்ள இன்பா வாட் ஹெப்பன் டி.. நீ கதவை திற என்று சொல்ல அவன் திறந்த அடுத்த நொடி வெளியே சென்று வாந்தி எடுத்தாள். இன்பா கீழ இறங்க அந்த இடம் கொஞ்சம் ஆள் நடமாட்டம் கடை எதுவும் இல்லாத பகுதி அவள் செய்து முடித்ததும். தன்னை அசுவாஸ படுத்தி கொள்ள..
இன்பா, பேபி மயக்கம் வருதா..அய்யோ என் ப்ராடெக்ட் உள்ளே என்ன பண்ணுதுண்ணு தெரியலையே.. நான் பிரேகனன்ஸி கிட் வாங்கி வரட்டுமா.. டேய் ஒழுங்கா ஓடி போயிடு.. என்று அவள் காரில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தை கழுவினாள்…
இன்பா அவளை பார்க்கும் பொழுது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. டேய் சிரிக்காத சிரிக்காத எனக்கு கோபமா வருது உன்னை அடித்து விடுவேன் எதுக்கு இப்படி பண்ண..
இன்பா, இது கொஞ்சம் தான் உன்னை கட்டி கிட்டேன்னு வை உன்னை எல்லாம் சாப்பிட வைப்பேன் நீ என்ன பண்ணாலும் பரவாயில்லை.. அவள் அவன் மார்பில் அடிக்க.. ம்ம் அடி போடி போய் ஏறு என்று சொல்ல அவள் பின் சீட்டில் ஏறினாள்.
இன்பா, நீ மட்டும் இப்போ முன்னாடி வரல நான் காரை எடுக்க மாட்டேன். அண்ட் அதுவும் 10 மினிட்ஸ் தான் அதுக்கு அப்புறம் நேரா கார் பெங்களூர் நம்ம iv போன ஹோட்டல் இப்போவே இப்படியே போறோம் என்னோட ரூம் போறோம் உன்னை என்று அவன் வாய் திறக்க அவள் அடுத்த நொடி காரை திறந்து கொண்டு முன்னால் வந்து அமர்ந்தாள்.
அவள் அவனை உன்னை என்று கழுத்தில் கை வைத்து நெறிக்க அட போடி என்னை கார் ஓட்ட விடு என்று சொல்லி அவன் ஓட்ட ஆரம்பித்தான். விவேகா, டேய் எனக்கு பசிக்குது … சாப்பிடு… எல்லாம் உன்னால் தான் இடியட்.. இடியட்.. இரிட்டேடிங்..
இன்பா இதை கேட்டு உதடு கடித்து சிரிக்க இப்போ எதுக்கு சிரிக்கிற.. நீ சின்ன பொண்ணு உனக்கு புரியாது… ஹே சொல்லு.. வேண்டாம் டி.. டேய் சொல்லு டா.. அப்போ இப்போ வேண்டாம் ஈவ்னிங் சொல்றேன் அது தான் சரியான டைம் என்று அவன் காலேஜ் கேட் அருகில் அவளை இறக்கி விடும் நேரம் அங்கே மாணவர்கள் , ஆசிரியர்கள், மாணவிகள் என வந்து போய் கொண்டு இருந்தனர்.
விவேகா, போச்சு போச்சு நான் எப்படி போறது டா எல்லாம் பார்க்க போறாங்க.. இன்பா நீ காரை விட்டு இறங்காத நான் செகண்ட் கேட் பக்கம் போறேன் என்று செகண்ட் கேட் செல்ல அங்கே யாரும் இல்லை. விவேகா இறங்கி கொண்டு அவளது புக் பேக் எல்லாம் அவனிடம் இருந்து வாங்கி கொண்டாள். அங்கே ஒரு கேமரா இருக்க..
அவள் திடுக்கிட்டு டேய் நீ என் கிட்ட பேசுவது நான் உன் கூட வரது காலேஜ்ல மீட் பன்றதu இது எல்லாம் cctv ல பதிவு ஆகி இருக்குமே.. இன்பா சிரித்து கொண்டே நான் போலீஸ் திருடனா மாறலாம் அதனால் அப்பப்போ மாறி உன்னை சீக்ரட்டா பாதுகாப்பேன். விவேகா ஒரு பெரு மூச்சு விட்டவள் பிராட் பிராட் என்று சொல்லி கொண்டு இருந்தவள் திடீர் என்று..
சார் பிளீஸ் எப்போ id கார்டு தருவீர்கள்.. என் புக் எல்லாம் லைஃப்ரரியில் வைக்கணும். சொல்றது புரியுதா இல்லையா.. நீங்க என்னை ரொம்ப அலைய விடுறீங்க சரி இல்ல என்று அவள் சொல்ல..
இன்பா அவன் கவனத்தை ஒரு சுத்து விட்டான். கவ்யா விவேகாவை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். ஹே லெட்டர் எழுதி கொண்டு வந்து கொடுத்து விட்டு போ என்று சொல்லி கதவை டப் என்று ஸாத்தி கொண்டு அவன் காரை எடுத்து கதவுக்கு அருகில் கொண்டு சென்று ஹாரன் அடிக்க கதவு திறந்தது.
இங்கே வெண்பா பஸ்சில் இருந்து இறங்கி நடக்க ஆதி விவேகா கூட செல்லலாம் என்று அவள் பேருந்து பக்கம் வர அங்கே வெண்பா மட்டும் நடந்து செல்வது தெரிந்தது.
வெண்பா.. வெண்பா.. அவள் பின்னால் திரும்பி ஒற்றை பார்வை பார்க்க ஆதி ஓரங்ககட்டுறா டா.. அவள் கொஞ்சம் திடுக்கிட்டு திரும்ப என்ன.. ?
அது அது ஹான்.. ம்ம் என்று அவன் தடுமாற… ஹே என்ன என்று இரு புருவமும் நெருக்கி கேட்க ம்ம் விவி எங்கே..?
அவள் இந்நேரம் கிளாஸ் போயிருப்பா.. என்று அவள் கீழே குனிந்து நடந்து கொண்டே சொல்ல..
ஆதி, கொஞ்சம் நிமிர்ந்து பேசலாம் என்று சிரித்து கொண்டே பேச..
அதான் சாருக்கு விவேகா பற்றி தெரிந்து விட்டதே அப்புறம் என்ன..
யாரோ ஒரு மேடம் வெண்பா என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்கிறார்களாம் அது யாருன்னு உனக்கு தெரியுமா…
அவள் இதயம் வேகமாக துடிக்க…
தொடரும்…
Episode 171,
ஆதி, என்னை வைத்த கண் வாங்காமல் ஒருத்தர் பார்த்து கிட்டெ இருக்காங்க..
அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. யாரு அந்த ரசனை இல்லாத பொன்னு என்று அவள் தன்னை சமன் செய்து கொண்டு கேட்க…
ம்ம் அதுவும் சரி தான் என்று அவன் உதடு கடித்து சிரிக்க.. வெண்பா, அந்த பொண்ணு உன்னை பார்க்குதுண்ணு உனக்கு எப்படி தெரியும் நீயும் அந்த பொண்ணை பார்த்தியா என்று இரு புருவமும் தூக்க அவள் கேட்க..
ஆதி அவன் தலையை கோதி கொண்டே ஒரு பொண்ணா என்னை பார்க்குது அதுக்கு எல்லாம் கணக்கே இல்லை பட் எனக்கு தான் யாரையும் பார்க்க நேரம் இல்ல என்று கொஞ்சம் சீன் போட்டு பேச… ஆமா போற வர ஆன்டி, பாட்டி எல்லாருக்கும் பார்க்க தோணும் என்று அவள் சிரிக்க.. உன் கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல..என்று ஆதி முன்னே நடக்க..
வெண்பா, ஹே நில்லு டா.. என்று அவள் அவன் வேகத்துக்கு நடக்க ம்ம் சொல்லுங்க மேடம்… அது அந்த பொண்ணு உன் கிட்ட வந்து பேசினாளா.. எந்த பொன்னு… அதான் உன் கிளாஸ்.. ஹே யாருன்னு கொஞ்சம் தெளிவா சொல்லு.. அந்த யாழினி.. ஆதி, என்ன திடீர்னு இந்த கேள்வி…
வெண்பா, அந்த பொண்ணு என் கிட்ட வந்து என்று அவள் பேசிய அனைத்து விஷயமும் சொல்ல ஆதி ஒரு நிமிடம் திகைத்து போனான். அதை அவளிடம் காட்டி கொள்ளாமல்.. ம்ம் சரி.. என்ன டா சரின்னு சொல்ற அந்த பொன்னு வந்து என்று அவள் கோபம் கொண்டு பேச.. ஆதி அவளை பார்த்து சிரித்தான்.
இப்போ இப்போ எதுக்கு சிரிக்கிற… இப்போ மேடம்க்கு என்ன பிரச்னை.. எனக்கா எனக்கு என்ன பிரச்னை ஒன்னும் இல்லையே என் கிட்ட வந்து அவள் பேசினாள் அதனால் உன் கிட்ட கேட்டேன். ஆதி, சரி அவள் என் கிட்ட பேசினால் உனக்கு என்ன என்று இரு புருவமும் தூக்க.. எனக்கா எனக்கு என்ன நீ யார் கூட வெனா பேசு.. என்று அவள் கோபம் கொண்டு முன்னே செல்ல..
ஆதி, வெண்பா.. அவள் திரும்பி பார்க்க வில்லை.. ஹே வெண்பா உன்னை தான் நில்லு.. ராட்சஸி.. அவள் திரும்பி முறைக்க ஒன்னும் இல்ல பவா எனக்கு கால் பண்ணா என்னால் எடுக்க முடியல சோ நீ என்று பேச வர அவள் அவனை முறைத்து கொண்டே அடிக்க வர ஆதி அங்கு இருந்து சிரித்து கொண்டே ராட்சஸி கொம்பு மட்டும் தான் முளைக்கல என்று சொல்லி அவன் அங்கு இருந்து ஓடி விட்டான். அவள் சிரித்து கொண்டே கிலம்பினாள்.
இங்கே விவேகா, அக்கா சாரி கவ்யா என்று சொல்லி கொண்டே அவள் அருகில் சென்றாள். ம்ம் id வாங்கி விட்டாயா.. அவர் என்னை லெட்டர் எழுதி கொண்டு வர சொன்னாரு… என்று அவள் சொல்ல ம்ம் என்று அவள் பேக் விவேகாவிடம் கொடுக்க.
அவள் மனதில் இந்த இடியட் பண்ண வேலையால் இவளுக்கு நான் சர்வன்ட் வேலை பார்க்க வேண்டி இருக்கே இப்போ லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு.. என்று வாங்கி கொண்டு சென்றாள்.
கவ்யா, ம்ம் நேற்று அந்த இனியாள் பற்றி எதோ சொன்ன.. எனக்கு ஒருத்தர் பற்றி தவறா பேச பிடிக்காது.. உங்க லவ்வர நிறைய பேர் பார்க்கிறார்கள். எங்க க்ளாஸ் ல அவ கிட்ட மட்டும் தான் அதிகமா பேசுவாரு நீங்க இதை யாரு கிட்டயாவது கேட்டு கொள்ளுங்கள். என்று சொல்ல அவள் அதற்கும் மேல் தொந்தரவு செய்ய வில்லை.
அவள் லெட்டர் எழுதி கொண்டு வந்தாள். அவனும் அதே போல் எழுதினான் என்று சொல்வதை விட சுட்டு போட்டான் சுடுவதில் போலீஸ் புத்தியை காட்டி விட்டான்.
இன்பா மனதில் சூர்யா நீ மட்டும் இருந்து இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என் பேபியை கவிதஐ மழையில் நனைய வைத்து இருப்பேன்.. என்று நினைத்து கொண்டான்.
அன்று மாலை அவள் கிளாஸ் முடிந்து செல்லும் போது கைகளில் லெட்டர் எடுத்து கொண்டு சென்றாள். கவ்யா, அதை வாங்கி பார்க்க அதில் எப்பொழுதும் போல கடிதம் மட்டுமே இருந்தது. ம்ம் சரி சீக்கிரம் போ ஓவரா பண்ணா என் கிட்ட சொல்லு
விவேகா, கவி நீயே போய் வாங்கி கொடேன்.. இல்ல என் கூட வரியா.. கவ் யா மனதுள் இவள் முன்னாடி அவமான் படுத்தினால் ரொம்ப அவமானமா இருக்குமே என்று நினைத்தவள இல்ல விவேகா நீ போ என்று அவள் அவன் மேல் இருக்கும் பயத்தில் சொல்ல அவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டே சென்றாள்.
இன்பா அவளை உள்ளே அழைக்க டேய் பத்து நிமிடம் தான் டைம் சீக்கிரம் காட்டு.. ஹே நீ காட்டு..
விவேகா,
பொதுவாக லவ் பண்ற எல்லாரையும் அந்த பொண்ணு அவங்க அப்பா கூட ஒப்பிடும் ஆனால் எனக்கு நீ அது நீ மட்டும் தான்
உன் கையை பிடிக்கும் பொழுது நான் என் அப்பா கிட்ட இருக்கும் பாதுகாப்பை உணரல ஏன்னா உண்மையாகவே உன்னை மட்டும் தான் உணர்ந்தேன்.
உன் கூட கையை பிடித்து செல்ல ஆசை தான் அது என் கையில் இல்ல.. ஆனால் எனக்கு உன்னை பிடிக்கும் ஏன்னா நீ தான் என்னோட ரிதம் என்று ஒரு இதய வடிவம் வரைந்து இருக்க.. இன்பா இதை படித்ததும் ஒரு நிமிடம் அவன் இதயம் துடித்தது. அவ மனசுல நீ தான் ராகவ் .. என்று அவன் உடல் எல்லாம் சிலிர்த்தது.
அவளை அருகில் இழுத்து இதழோடு இதழ் சேர்த்து முத்த மழை பொழிந்தான். ஒரு இரண்டு முத்தம் மட்டுமே கொடுக்க விட்டவள். டேய் போதும் உன்னோடது கொடு நான் பார்க்கனும் என்று கேட்க..
அய்யோ போச்சு செத்த டா இன்னிக்கு இவள் வேற ரொம்ப ஆர்வமா இருக்காளே தேவை இல்லாமல் பேசி விட்டாய் என்று நினைத்து கொண்டு அவளிடம் நீட்ட அவள் அதை பிரித்தாள்.
I Love it when you call me raagav and ….etc
And every touching .. விவேகா அதை படித்ததும் கொஞ்சம் குழம்பி தான் போனாள். இன்பா அவள் கண்டு பிடித்து இருப்பாளோ என்று கண்களை சுருக்கி கொண்டு பார்க்க…. அவள் என்ன இது.. ? உனக்கு இது புரியலையா நான் படித்து காட்டவா.. ஹே அது எனக்கு புரியுது இருந்தாலும் கவிதை தமிழில காதல் கடிதம் எல்லாம் அது தமிழி ல இருந்தால் தான் அதை படிக்கும் பொழுது ஒரு தனி ஃபீல் கிடைக்கும் டா…
இன்பா, சரி பின்னால் திருப்பு.. அவள் திருப்பி பார்க்க அதில் I love you.. I like you.. and I waana be with you என்று எழுதி இருக்க அதை பார்த்து அவள் மனம் உண்மையாகவே அந்த ரிதம் துடிக்க தான் செய்தது.
இன்பா அவளை பார்த்து உன்னை போல் எனக்கு எழுத தெரியாது பட் இந்த காதல் மொழிகள் யார் கிட்ட இருந்து வருது, அது யாரை போய் சேரனும் என்று ஒன்று இருக்கு என்னோட எனக்கு தெரியாத காதல் மொழிகள் எல்லாம் உனக்கு மட்டும் தான் டி பசங்க அவ்ளோ எக்ஸ்பிரஸிவ் கிடையாது. அப்படின்னு சொல்லுவாங்க அதே போல் தான் ரெண்டு வரியில் சொல்லணும் அப்டின்னா உன்னை விரும்புகிறேன். உன்னை எனக்கு பிடிக்கும் என் ஜோடி நீ மட்டும் தான்.. என்று. அவள் இதழ்களை மீண்டும் எடுத்து கொண்டான். அவள் கன்னம் இரண்டும் சிவந்து போனது.
சரி போதும் விடு நான் கிளம்புறேன். என்று சொல்ல அவனும் அவளை விட்டான் கதவு வரை சென்றவள் அவனை பார்த்து. I love it when you call me senorita என்று இரு புருவமும் தூக்க இன்பா ஒரு நிமிடம் அதிற்க்சி ஆகி பார்த்தான்.
விவேகா இந்த ஆல்பம் ரிலீஸ் ஆகி 3டேஸ் தான் ஆகுது அதுக்குள்ள இவள் பாடுறாலே அப்டின்னு பார்க்கிராயா இன்பா.. என்று கேட்க.. இன்பா உதடு கடித்து அவளை பார்க்க.. விவேகா, நாம் அதிகமா tom Ronson, Ketty berry, and இந்த ஆல்பம் எல்லாம் கேட்கும் தமிழ் பொன்னு மிஸ்டர் இன்ப ராகவன். என்று சொல்ல அவன் அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
உன் மேல கோபம் ஒன்னும் இல்ல . எனக்கு தெரிஞ்ச விஷயம் எல்லாருக்கும் தெரியணும்னு அவசியம் ஒன்னும் இல்ல இல்ல..
ஆனாலும் ஒரு சின்ன வருத்தம் தான் உன் மேல் ஆனா நீ அந்த பேப்பரை பின்னாடி திருப்பி பார்க்க சொன்ன னா போது ம் அதை படிக்கும்போது எனக்கு உண்மையாவே ரிதம் என்று சிரித்துக் கொண்டே அவன் கண்களை பார்த்து நேராகச் சொன்னவள்.
நீ சொன்னது சரிதான் யாரு வேணாலும் ஐ லவ் யூ சொல்லலாம் ஆனா அந்த ஐ லவ் யூ சொல்றவங்க யாருன்னு ஒன்னு இருக்கு இல்ல .
அது சரிதான் இன்பா என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவள் வெளியே செல்ல போக
அவன் அவள் கைகளை பிடித்து இழுத்தான் சரி சரி இந்த பாட்டுக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா விஷுவல் பாத்திட்டியா. என்று கேட்க ஹேய் ஒழுங்கா ஓடிப் போயிடு டா
பேபி எனக்காக ரெண்டு லைன் மட்டும் பாடேன் ப்ளீஸ் …
முடியாது எனக்கே இந்த பாட்டு தெரியாது ஹே நடிக்காத டி
அந்த செகண்ட் லைன் பாடு எவ்ரி டச்சிங் உல்லா லா…லா அதை மட்டும் பாடு ப்ளீஸ் டி.. போ இன்பா என்று அவள் தலை குனிந்து நிற்க…
இப்படியே மூன்று மாதம் சென்றது. இன்பா மீண்டும் வேலைக்கு ஜாயின் செய்யும் நாளும் வந்தது.
அவன் விவேகாவுக்காக வழக்கமாக சந்திக்கும் இடத்திள் காத்து கொண்டு இருந்தான்.
தொடரும்…
Episode 172,
இன்பா அவளுக்காக காத்து கொண்டு இருக்க அவள் அவனை வழக்கம் போல் சந்திக்கும் இடத்துக்கு வந்தாள்.
இன்பா, பேபி நான் நாளையில் இருந்து டூட்டில ஜாயின் பண்ண போறேன்.. விவேகாவுக்கு இதை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. விவேகா, நிஜமாவா.. ம்ம் பக்கா.. என்று முகத்தை தொங்க போட்டு கொண்டே அவன் சொல்ல ஹே இப்போ எதுக்கு உன்னோட முகம் இப்படி இருக்கு..
எனக்கு ஒன்னும் இல்ல டி… ஹே முகத்தில் பச்சையாக தெரியுது… என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள். நீ கவலை படாத இன்பா எல்லாம் சரி ஆகி விடும் என்று சமாதானம் செய்தாள். ம்ம் ஒழுங்கா படி அடுத்து செம் எக்ஸாம் அது முடிந்து அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் தெரியும் தானே… ம்ம் அதுக்கு தான் படித்து கொண்டு இருக்கிறேன். என்று சொல்லி அவள் அவனிடம் இருந்து விடை பெற்றாள்.
கவ்யா இனியாள் கிட்ட ஹே நீ அந்த இன்பாவை லவ் பண்ற அப்படி தானே அவள் ஆச்சரியமாக ம்ம் ஆமா அக்கா அவர் எனக்கு மாமா முறை என் அண்ணா சுபா அண்ணியை கல்யாணம் பண்ணி கிட்டா அடுத்து நான் ips ஆகி இன்பாவை என்று சொல்லி கொண்டு இருக்க கொஞ்சம் கொஞ்சமாக கவ்யாவின் முகம் மாறியது.
வாட்… உனக்கு இப்படி ஒரு எண்ணம் இனி வர கூடாது.. அக்கா என்ன சொல்றீங்க.. என்ன நொன்ன உன்னை கொன்றுவிடுவேன் இன்பா அவன் ராகவ் அவன் எனக்கு மட்டும் தான் நீ இனி அவனை மனதில் நினைப்ப்பதை அடியோடு மறந்து விடு எனக்கு தேவை பட்டால் உன் அண்ணா கல்யாணத்தை கூட என்னால் நிறுத்த முடியும். என்று கவ்யா சொல்ல சொல்ல இனியாள் முகம் உடனே மாறியது. அவள் கொஞ்சம் வலியில் சரி அக்கா நான் இனி அப் அப்படி நினைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு அவள் செல்ல கவ்யா போகும் அவளையே உற்று பார்த்து கொண்டு இருந்தாள்.
இனியாள் மனதுள் அடி போடி இன்பா எனக்கு தான் அதுக்கு நான் என்ன வென செய்வேன் நேற்று வந்த உனக்கு விட்டு கொடுத்து விடுவேனா.. என்று இவளும் விவேகா போல safe game ஆட முடிவு செய்தாள். அதற்குள் விவேகாவுக்கு கொஞ்சம் மட்டும் பைத்தியம் பிடித்து விட்டது. இதை சரி செய்ய இன்பா தானே வர வேண்டும்.
இன்பா மீண்டும் டூட்டியுள் போய் ஜாயின் செய்தான். எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது. ஆனால் இந்த முறை பிரச்னை விவேகாவுக்கு வந்தது. அந்த செம் முடிந்து வந்த விடுமுறையில் முழு மூச்சுடன் அந்த போட்டிக்கு தயார் செய்து கொண்டு இருந்தனர்.
அந்த போட்டிக்கு குழுக்களாக செல்ல முடிவு எடுத்தனர். விவேகா வழக்கம் போல் காலேஜ் முடித்து வீட்டுக்கு வெண்பா கூட நடந்து சென்று கொண்டு இருக்க அவளுக்கு மிகவும் பழக்கபட்ட முகம், உருவம் அவளை பின் தொடர்வது போல் இருக்க அங்கே திரும்பி பார்க்க அவன் நின்று கொண்டு இருந்தான்.
வெண்பா கிட்ட ஹே நீ முன்னால் போடி நான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்ல என்ன ஆச்சு விவேகா.. ஒன்னும் இல்ல நீ போ நான் வருகிறேன் என்று சொல்லி அவளை அனுப்பி வைக்க அவள் யோசனையுடன் அங்கு இருந்து சென்றாள்.
விவேகா, ராஜ் அத்தான்… என்று அழைக்க அவன் உடனே வெளியே வந்தான்.
தேவ ராஜ், என்னை இன்னும் நினைவு இருக்கா விவேகா.. என்று எழன புன்னகையுடன் சொல்லி கொண்டே அவள் அருகில் வந்தான்.
அவனுடய பேச்சு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. என்ன அத்தான் எப்படி இருக்கீங்க என்று அவள் இயல்பாக பேசிட..
ராஜ், உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் வெறும் 5 நிமிடம் என்று சொல்ல அவள் யோசித்தாள்.
உடனே அவன் என் இரத்தம் அதில் பாதி என் மாமா அதாவது உன் அப்பா இரத்தம் எனக்கு ஓடுது அதனால் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் என்று அவன் சொல்ல இல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று அவள் சரி என்று சொல்ல ராஜ் ஒரு புன்னகை சிந்தி கையில் உள்ள அந்த பத்திரத்தை அவளிடம் நீட்டி சில வார்த்தைகள் சரியாக 5 நிமிடம் பேச விவேகா முகம் மாறியது.
ராஜ் அங்கு இருந்து செல்லும் முன் இனி முடிவு உன் கையில் தான் இருக்கு அண்ட் இனி உன்னை நான் அந்த இன்ப ராகவன் கூடபார்த்தேன்னு வை அப்புறம் என்று நிறுத்தி விட்டு அவன் அவளை அர்த்தமுள்ள பார்வையில் பார்த்து விட்டு செல்ல..
விவேகா கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.அப்படி என்ன தான் இந்த ராஜ் அவளிடம் பேசி இருப்பான். அடுத்து வந்த ஒரு வாரம் விவேகா அந்த ஸ்பெஷல் கிளாஸ் ல ஒழுன்காக இல்லை… அவளது கவனம் வேறு எங்கோ இருந்தது.
அவள் முகமும் சுத்தமாக சரி இல்லை. இப்பொழுது அந்த போட்டிக்கு தகுதி தேர்வு வைத்து தேர்ந்து எடுத்து செல்லலாம் என்று இறுதியில் முடிவு எடுத்தனர். தேர்வு வைக்க பட்டது அந்த 110 பேரும் அதில் கலந்து கொண்டனர். அதில் இருந்து முதல் 15 பேர் டெல்லி அந்த போட்டி டெல்லியில் தான் நடக்கிறது அங்கு அழைத்து செல்லலாம் என்று முடிவு எடுத்தனர். அந்த பெயர் பட்டியல் அதாவது போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் பெயர்கள் அவர்கள் யார் யார் என்று பார்த்து விசாரிக்க இன்பா காலேஜ் வந்து இருந்தான்.
அனைவரும் வழக்கம் போல் காலேஜ் வந்து கொண்டு இருந்தனர். விவேகா எதுவும் காட்டி கொள்ளாமல் வர இன்பா அவனது அறைக்கு சென்றான். சிபி அந்த பெயர் பட்டியலை எடுத்து கொண்டு இன்பாவ பார்க்க வந்து இருந்தான்.
இன்பா அதை எப்பொழுதும் போல் வாங்கி நோட்டமிட்டவன் திடீர் என்று மீண்டும் அதை வாசித்து பார்த்தான். மறுபடியும் வாசித்து பார்த்தவன். இப்பொழுது நேரடியாக கேட்டே விட்டான்.
இன்பா, சிபி எல்லார் பேரும் சரியா இருக்கா யாருடையதும் விட்டு போகளையே! இல்ல இன்பா சரியா தான் இருக்கு என்ன ஆச்சு… ஹே பக்கா.. ம்ம் பக்கா இன்பா.. அவன் யோசித்து கொண்டே உன் dept வாயாடி நேம் எங்கே? என்று கேட்க
சிபி, ஒரு நிமிசம் ஆச்சர்யம் ஆகி மீண்டும் அது தான் எனக்கும் புரியல டா இந்த லாஸ்ட் ஒரு வாரம் அவளுக்கு என்ன ஆச்சு அப்டின்னு தெரியல எந்த ஒரு டெஸ்டும் சரியா பண்ணல…
இன்பா எதையோ யோசித்தான். பின் சிபி கிட்ட 16 வதா விவேகாவை சேர்த்து கொள் என்று சொல்லி விட்டு என்னவாக இருக்கும் என்ன ஆச்சு அவளுக்கு என்று யோசிக்க ஆரம்பித்தான்.
சிபி அவன் சொன்னதை போலவே இன்பா பெயரை சேர்த்து கொண்டான். அனைவரும் யார் அந்த 16 பேர் என்று ஆவலாக பார்க்க அதில் விவேகா பெயர் வராது என்று அதை நினைத்து சந்தோஷமாக இருப்பது போல் சுற்றி கொண்டு இருக்க காலேஜ் ல உள்ள எல்லா dept மற்றும் பெரிய நோட்டீஸ் போர்டில் அந்த செய்தி ஒட்ட பட்டது. அதில் ஆதி, அருண், சதீஸ், வெண்பா, வைபவ், கவ்யா, இனியாள், தாரா, என்று அனைவர் பெயரும் வர இறுதி யாக விவேகா பெயர் வரவும் அவள் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி விட்டாள். எப்படி எப்படி வந்து இருக்கும் என்று கீழே குனிந்து கொண்டே யோசித்து கொண்டே அவள் செல்ல அங்கே சிபி இருப்பதை பார்த்து சார் சார் நான் வெறும் 20/100 தான் எடுத்து இருக்கிறேன் என்னை எதுக்கு செலக்ட் பண்ணீங்க…
சிபி, அப்போ இதை நீ பிளான் பண்ணி செய்து இருக்கியா.. இல்ல சார் நான் அப்படி எல்லாம் ஒன்னும் பண்ணல டெல்லி எல்லாம் என்னால் வர முடியாது. என்று அவள் சொல்ல இன்பா, நீ வர வந்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி கொண்டே அங்கு வந்தான். அவள் இன்பாவின் குரல் கேட்டதும் உடனே அவள் அவனை பார்க்காமல் சென்றாள்.
இன்பாவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சிபி, என்ன இன்பா அவள் இப்படி சொல்லி விட்டு போகிறாள். அவள் வருவாள் டா நீ அடுத்த வேலையை போய் பாரு என்று சொல்லி அவன் அனுப்பி வைத்தான். அதற்கு மேல் அவளை அவன் தொந்தரவு செய்ய வில்லை வழக்கமாக அவளை சந்திக்கும் இடத்தில் அவளுக்காக காத்து கொண்டு இருந்தான்.
விவேகா அவன் அங்கு இருப்பான் என்று தெரிந்து கொண்டு மிகவும் எஸ்கேப் ஆகி ஆதி வீட்டுக்கு சென்று விட்டாள். இப்படியே இரண்டு நாட்கள் அவள் கண்ணா மூச்சி ஆட அவன் கொஞ்சம் கொஞ்சமாக பொறுத்து கொண்டு இருந்தான். அடுத்த நாள் அவனால் இதை சகித்து கொள்ள முடியாமல் இன்று அவளை சும்மா விட கூடாது இப்பொழுது என்ன வந்து தொலைந்தது எதற்கு இப்படி நடந்து கொண்டு என்னை உயிர் வாங்கி கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து அவனுக்கு கோபம் வர அவளை தேடி வகுப்புக்கு சென்று விட்டான்.
டக் டக் என்று சத்தத்துடன் கம்பீர காக்கி சட்டையில் அவளது வகுப்பில் நுழைந்தான். எல்லாரும் பயந்து கொண்டு அவனுக்கு மரியாதை செலுத்த விவேகாவும் அதே போல் செய்ய இன்பா, விவேகா…! என்று ஒரு அழுத்தமான குரல் அந்த வகுப்பு வரிசையில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் இன்பா கூவிய சத்தம் கேட்டு இருக்கும்..
விவேகா எழுந்து நின்றாள். இன்பா, உன் நோட் எடுத்து கொண்டு இப்போ உடனே வர.. என்று சொல்ல அவள் அப்படியே நின்றாள். ஹே ஆர் யூ ஹியர் என்று மீண்டும் இந்த முறை அவன் சத்தாமாகவே அழைக்க பயந்து போய் அவன் சொன்னதே கேட்டு அப்படியே இன்பாவின் பின்னால் நடந்தாள்.
தொடரும்…
Episode 173,
இன்பா, உன் நோட் அண்ட் பென் எடுத்து கொண்டு இப்போ உடனே வர.. என்று சொல்ல அவள் அப்படியே நின்றாள். ஹே ஆர் யூ ஹியர் என்று ஒரு கர்ஜனை செய்ய ஓகே சார் என்று சொல்லி கொண்டே அவள் பதட்டத்தில் நோட் பென் இரண்டையும் எடுத்து கொண்டு போகும் போது அந்த வகுப்பை ஒரு பார்வை பார்க்க.. இனியாள் தோழிகள் மிகவும சந்தோஷமாக பார்த்து கொண்டு இருந்தனர். இந்த விடயத்தை அவளிடம் சொன்னால் அவள் இன்னும் சந்தோஷமாக இருப்பாள் நம்மை நன்றாக கவனிப்பாள் என்று நினைத்தனர்.
அவர்கள் இருவரும் செல்லும் வழியில் சிபி வந்து கொண்டு இருக்க விவேகா, சிபிக்கு என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவது போல் சைகை காட்டிட.. அவன் இன்பாவின் அருகில் வந்தான். இன்பா.. டேய் என்ன ஆச்சு அந்த பொண்ணை எங்கே கூட்டி போற.. அவன் எந்த பதிலும் பேச வில்லை. அந்த ஸ்பெஷல் கிளாஸ் வகுப்பறை வந்ததும். அங்கே அனைத்து மாணவர்களும் அந்த போட்டிக்கு தர்சனா லேப் டாப்ல மோக் டெஸ்ட் வைத்து பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தாள்.
மிஸ் தர்ஷு… ம்ம் சொல்லுங்க இன்பா.. அந்த வகுப்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட 15 மாணவர்களும் நிமிர்ந்து பார்க்க அங்கே விவேகா இன்பா, சிபி மூவரும் நின்று கொண்டு இருந்தனர். ஆதி அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். விவேகா அவள் முகத்தை கைகளில் வைத்து இருந்த நோட்டில் மறைக்க இன்பாவுக்கு இருந்த கோபத்தில் அதை அவள் கைகளில் இருந்து பிடுங்கி வீசி எறிந்துவிட்டு விட அவள் ஒரு வித பயத்திலும் படபடப்பு குறையாமலும் நின்று கொண்டு இருந்தாள்.
அவன் ம்ம் என்று அதட்ட அவள் சார் என்று கண்களில் கண்ணீர் கோர்க்க நின்று இருக்க பார்க்கவே பாவமாக இருந்தது. இன்பா, இந்த பொண்ணுக்கு ஒரு லேப் டாப் ரெடி பண்ணி உங்க டெஸ்ட் அதை கன்டின்யூ பண்ணுங்க.. ஓகே சார் என்று அவள் விவேகாவை பார்க்க அவள் அதே இடத்தில் நிற்க அங்கு இருந்த அவன் வீசிய வீச்சில் ஃபோர்ட் ரேசர் பறந்து கீழே விழ சிபி, இன்பா என்ன பண்ற.. என்று அதட்டினான். அவனின் இந்த முகத்தை பார்த்து கவ்யா, இனியாள் எல்லோரும் ஒரு நிமிடம் ஆடி போனர்.
விவேகா அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்காமல் நேராக சென்று லாப் டாப் வாங்கி கொண்டு அமர்ந்தாள். இன்பா அவளை கோப பார்வை பார்த்து விட்டு அங்கு இருந்த சேரில் அமர்ந்தான். அவனுக்கு கட்டுக்கு அடங்காமல் கோவம் வர அதை அங்கும் இங்கும் நடந்து சரி செய்தவன் அவளை எரிப்பது போல் பார்த்து விட்டு எழுந்தான்.
ஆதித்யா… விவேகா ரெண்டு பேரும் மார்னிங் ப்ரேக்ல என் ரூம் க்கு வரனும் என்று சொல்ல அவன் எழுந்து நின்று பதில் சொல்ல விவேகா அப்படியே அமர்ந்து இருந்தாள். கைகள் எல்லாம் நடுங்கி போனது. இருந்தாலும் அவளுக்கு ராஜ் சொன்னது மட்டும் தான் நினைவில் இருக்க வியர்டக்து கொட்டியது.
வெண்பா, வெளியே செல்கிறேன் என்று சொல்லி வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து வர அனைவரும் விவேகாவை வித்தியாசமாக பார்த்தனர்.
அருண், டியர் என்ன பண்ண.. அவள் கண்களில் கண்ணீர் வர ஒன்னும் இல்ல சீனியர்.. ஹே அவர் சரியான டெரர் பீஸ் நீ ஒன்னும் ஒரி பண்ண வேண்டாம் நான் என் டார்ல்ஸ் கிட்ட சொல்லி பார்த்து கொள்கிறேன். என்று அவன் சனாதானம் செய்ய அதற்குள் ஆதி, உங்க வேலையை நீங்க பாருங்க மிஸ்டர் அவளை பார்த்து கொள்ள நான் இருக்கிறேன்.
அதற்குள் பெல் அடிக்க
Dear இவன் ஓவரா ஆடுறான் உணக்காக பார்க்கிறேன் இல்ல.. ஆதி, என்ன செய்வீங்க செய்யுங்க.. விவேகா ஆதியின் கைகளை பிடித்து கொண்டு பிளீஸ் ஆதி.. அருணை பார்த்து சீனியர் சண்டை வேண்டாம் என்று சொல்ல அருண் அவனை முறைத்து கொண்டே கிளம்பினான்.
ஆதி, அவளை கூட்டி கொண்டு இன்பா அறைக்கு செல்ல போக கவ்யா, என்ன ஆச்சு.. ஒன்னும் இல்ல கவி.. ஹே சொல்லிட்டு போ நீ எதுவும் தப்பு செய்தியா.. இல்ல நான் இந்த போட்டிக்கு வரல அப்டின்னு சொன்னேன் அதுக்கு போய் என்று அவள் கண்கள் கலங்க சரி நீ போய் என்னன்னு கேட்டு விட்டு வா..
சோனா, மனதில் இந்த கவ்யா சரியான லூசு கிறுக்கியா இருக்காளே ஒரு பக்கம் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருது இன்னொரு பக்கம் சைக்கோ மாதிரி இருக்கா அவங்க ரெண்டு பேரும் ஜாலியா இவள் முன்னாடி லவ் பண்ணிட்டு இருக்காங்க.. இது எல்லாம் எனக்கு தெரிந்தும் என்னால் சொல்ல முடியாமல் தெரிந்த அவளை தேடி கொண்டு இருப்பது போல் நடித்து கொண்டு இருக்கிறேன் என்று பெரு மூச்சை விட்டாள்.
ஆதி, என்ன டி இப்போ புதுசா பண்ணி வச்ச.. அவள் ந நான் எதுவும் பண்ணலயே.. ஹே பொய் சொல்லாத அப்புறம் எதுக்கு அவர் உன் மேல் இவளோ கோபமா இருக்காரு இதனால் தான் எங்க வீட்டுக்கு வந்தியா.. அவள் தலை குனிந்து கொண்டே வர.. அதற்குள் இன்பாவின் அறை வந்தது. இருவரும் உள்ளே சென்றனர். இன்பா அவன் தலையை கோதி கொண்டே அவன் என்ன சொன்னான்…
அவள் ஆதியின் கைகளை பிடித்து கொண்டாள். இன்பா பார்க்க உடனே ஆதி அவள் கையை பிரித்து விட்டான். ஹே கேட்கிறேன் தானே அவன் என்ன சொன்னான்.. விவேகா, யாரு.. ஹே நடிக்காத டி.. எல்லாம் எனக்கு தெரியும் அவனுக்கு என் கிட்ட நேரடியாக மோத தைரியம் இல்லாமல் உன் கிட்ட எதோ சொல்லி இருக்கான் நீயும் அதை பிடித்து கொண்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க சரி தானே…
ஆதி, யாரு சார்.. இன்பா, அதை அவள் கிட்டேயே கேளு.. யாரு விவேகா.. இன்பா, சொல்லு டி.. ஆதி, ஹே சொல்லு என்ன நடக்குது என்ன பண்ண எல்லாமே என் கிட்ட சொல்லிவியே இப்போ என்ன ஆச்சு.. விவேகா அப்பொழுதும் அமைதியாக இருக்க.. இன்பா, அவள் சொல்ல மாட்டா.. அதான் ராஜ் அந்த தேவ ராஜ மேடம் பார்த்து இருக்காங்க.. ஆதி, அத்தை கிட்ட சொல்லட்டுமா.. அன்னிக்கே நான் என்ன சொன்னேன்.. விவேகா அழுது கொண்டே இல்ல அவர் அவர் எதுவும் சொல்லல..
இன்பா அப்புறம் எதுக்கு உன்னை வீட்டுக்கு வந்து பார்க்காமல் வெளியே பார்த்து விட்டு போனான் அவன் கிட்ட எதுக்கு நீ பேசின.. அவரு என்னோட அத்தான் நான் பேசினேன்.. உடனே ஆதி கைகளை ஓங்கி விட அவள் கண்களை மூடி கொண்டாள். அவன் அடிக்க வில்லை.. எவ்வளவு சொன்னாலும் திர்ந்தாச ஜென்மம் டி நீ உன் அத்தை இரத்தம் தானே உனக்கும் ஓடும் கங்கா அத்தை சொல்வது சரி தான் என்று சொல்ல
விவேகா இதை கேட்டு அழுது கொண்டே பின்னால் நகர.. உன்னை நான் வருண் மாமா கிட்ட சொல்றேன் என்று சொல்லி ஆதி அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருக்க.. மூவரும் அமைதியாக இருக்க ஆதி உடனே வெளியே சென்று விட்டான். விவேகா சிறிது நேரம் கழித்து இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து நின்று பின் கதவு வரை செல்ல .
இன்பா, ஹே நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல.. என் என்ன சொல்லணும்.. அவன் உன் கிட்ட என்ன சொன்னான்.. என்று கேட்டு கொண்டே அவன் இடத்தில இருந்து எழுந்தான். அவள் அப்படியே எதுவும் பேசாமல் நிற்க ஹேய் சொல்லு டி வாயை திற.. எப்போ பார்த்தாலும் தட்டி கொண்டே இருக்கணும் போல என்று கேட்டு கொண்டே அவன் அவள் அருகில் வர அவள் பின்னால் நகர இன்பா அவளின் இரு பக்கமும் இரு கைகள் கொண்டு தடுத்தான். அவளின் முகவாய பற்றி என்ன சொன்னான்.. ம்ம் சொல்லு இப்போ நீ சொல்றியா இல்ல நான் வருண், மாமி ரெண்டு பேருக்கும் அதை விட என் மாம் க்கு கால் பண்றேன். உன்னை இதுக்கு மேல் என்னால் விட்டு வைக்க முடியாது.
விவேகா இல்ல வேண்டாம் பிளீஸ் அவரு அவரு என்று அவள் சொல்ல வர அந்த ராஸ்கல்ஸ்க்கு மரியாதை ம்ம் என்ன சொன்ன அத்தான்.. ம்ம் இன்டரெஸ்டிங் என்று சொல்லி அவள் முகத்தை பார்க்க அவள் தலை குனிந்து கொண்டு அவனிடம் பேச முயற்சி செய்தாள் ஆனால் வார்த்தை வர வில்லை.
இன்பா அவள் தலையை நிமி்த்தி இதழில் முத்தமிட்டான். அவள் கைகளை இறுக்கி மூடி கொண்டாள். கண்கள் இறுக்கமாக இருக்க அதை அவள் விரும்புவது போல் அவனுக்கு தோன்ற வில்லை. திடீர் எதோ நினைவு வந்தவள் போல் அவனை தள்ள முயற்சி செய்ய… உடனே அவன் முத்தம் தீவிரமானது.. அவனை அவனை சும்மா விட மாட்டேன். என்னை தடுக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டானே.. அந்த *** ராஜ் உனக்கு இருக்கு டா என்று நினைத்து கொண்டு அவன் முத்தத்தை மட்டும் கை விட வில்லை. கைகள் அவள் மேல் ஊற அவன் இதழ்கள் காது மடலை தீண்ட அவள் காதுகள் இதற்கு தான் காத்து கொண்டு இருப்பது போல் அவனிடம் சரணடைந்து கொண்டு இருந்தது.
விவேகாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் கை வர்ண கோலத்தில் கன்னம் சிவந்து மின்ன அவளும் அவனுக்கு இணங்கி எதிர் வினை ஆற்ற தொடங்கி இருக்க இப்பொழுது மீண்டும் இதழில் வந்து தஞ்சம் அடைந்தான். அவள் கைகள் பின் தலையை பிடித்து கொண்டு அவனிடம் அவள் இதழ் இரண்டும் சரணடைய இப்பொழுது அவளிடம் இருந்து பிரிந்தான்.
அவள் மூச்சு வாங்கி கொண்டே தன்னை அசுவாஸ படுத்தி கொண்டு இருக்க இன்பா அவளை சுவற்றில் ஒட்டி என்ன சொன்னான் சொல்லு டி.. உன் மேல எனக்கு அவ்ளோ கோபம் நான் கஷ்ட பட்டு அடக்கி கொண்டு இருக்கேன். ஒழுங்கா அவன் என்ன சொன்னான் அப்டின்னு சொல்லு..
விவேகா அவனை பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டவள். சொல்ல ஆரம்பித்தாள்.
தொடரும்…
Episode 174,
ராஜ் என்ன சொன்னான் என்று இன்பா அவளின் முக வாயை பற்றி கேட்க.. அவள் ம்ம் சொல்றேன் நீ கோப படாத..
நீ முதலில் சொல்லு டி.. அது வந்து அது வந்து .. ஹே இப்போ சொல்ல போறியா இல்லையா..
விவேகா, கூற ஆரம்பித்தாள்..
ராஜ் – விவேகா உரையாடல்
அன்று ராஜ் பேசியது. விவேகாவிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் அவள் சரி என்றாள். அவன் அவள் கைகளில் ஒரு பத்திரத்தை நீட்டி அந்த பத்திரத்தில் விவேகாவின் தாத்தா அவர்களது வீட்டின் மேல் போடப்பட்ட கேஸ் அதற்கான வாபஸ் கடிதம் மற்றும் பத்திரம் இருந்தது அதை ராஜ் அவள் முன் நீட்டி விட்டு பேச தொடங்கினான்.
ம்ம் விவேகா இப்போ மட்டும் மாமா உயிரோட இருந்து இருக்க நீ இப்படி ஒரு காரியம் செய்து இருப்பியா அது மாமாவுக்கு எவ்ளோ அவமானம் தெரியுமா..
இதை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வர அப்படியே நின்றாள்.
ராஜ்,எனக்கு உன் மேல் இஷ்டம் டி..இதை கேட்டதும் இன்பாவின் கைகள் முறுக்கு ஏறியது கண்களில் கோவம் கொழுந்து விட்டு எறிந்தது.
என்று விவேகா அவன் பேசியதை அப்படியே சொல்லி கொண்டு இருக்க..
ராஜ், இத்தனை நாள் நீ சின்ன பொண்ணு அப்படின்ற காரணத்துக்ககவே தான் உன் கிட்ட நான் எதுவும் சொல்ல வில்லை ஆனால் நீ அதுக்குள் என்று விவேகா நிறுத்த…
இன்பா, ம்ம் ம்ம் என்று அதட்ட
விவேகா, நீ அதுக்குள்ள இன்பாவை அவன் உனக்கு என் முன்னவே முத்தம் கொடுக்கிறான்.. எனக்கு எப்படி தெரியுமா இருந்தது. நீ என் மாமன் பொன்னு எனக்கானவள்.. வாசு மாமா இருந்து இருந்தால் எனக்கு உன்னை தான் கட்டி கொடுத்து இருப்பார். சரி அதை விடு அத்தைக்கு வருண் மச்சானுக்கு நீ லவ் பண்ற விடயம் தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா.. என்று ராஜ் நிறுத்து விட்டு..
விவேகா கடைசியாக சொல்றேன் இனி இந்த பாத்திரம் அதில் இருப்பது நடக்கணும் அப்டின்னா நீ அந்த இன்ப ராகவன் பின்னாடி சுற்ற கூடாது உன்னை நான் கண்காணித்து கொண்டே இருப்பேன். கூடிய சீக்கிரத்தில் எல்லாம் சரி செய்து விட்டு உன்னை நான் தான் டி கட்டிக்க போறேன் அதை முதலில் உனக்கு நினைவு படுத்த தான் வந்தேன். என்று விவேகா அவன் சொன்ன மொத்தமும் கூறி முடிக்க இன்பா கைகளை மூடி கொண்டு மூச்சை வேகமாக விட்டு கொண்டு இருந்தான்.
விவேகா அமைதியாக இருக்க ஹே இப்போ அவனை கல்யாணம் பண்ணிக்க போற உன்னால் முடியுமா என்று அவள் அருகில் வந்தவன் அவளது உதட்டை அவன் பற்களால் கொஞ்சம் கடித்து இழுத்து விட்டு அவள் கண்களை பார்த்து நான் உன்னை தொட்டது நீ எனக்கு கொடுத்த முத்தம் இது எல்லாம் வெறும் அற்றக்சன் அவ்ளோ தானா..
விவேகா அவன் கன்னத்தை பார்த்து அடிக்க கை ஓங்கியவள் தலை தலையாக அடித்து கொண்டு எப் எப்படி டா என்னை இப்படி கேவலமா நினைத்த எனக்கு நீ மட்டும் தான் எல்லாமே என்று அவள் கண்களில் கண்ணீர் வழிய இன்பா, சரி இப்போ என்ன பண்ண போற உன் அத்தான் சொண்ணத கேட்டு இங்க வீட்டு பத்திரத்துக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா..
விவேகா இப்படி என்னை வார்த்தையால் கொல்லாத இன்பா.. என்னை என்ன பண்ண சொல்றீங்க மேடம் அது தான் முடிவு எடுக்கும் இடத்தில் நீங்க தானே இருக்கீங்க..
விவேகா அழுது கொண்டே எனக்கு இப்போ இப்போ என்ன பண்றதுன்னு தெரியல பயமா இருக்கு டா.. இன்பா அவளை அணைத்து கொண்டு அவன் எல்லாம் ஒரு ஆளு அவன் சொல்றான்னு நீ அழுது உன்னை எதுக்கு டி வருத்தி எதுக்கு டி இப்படி பண்ற..
அவள் அவன் நெஞ்சில் முட்டி அழ மக்கு மக்கு அவனை நான் பார்த்து கொள்கிறேன் அவன் சொல்றது எதையும் கேட்காத அண்ட் யாராவது எதுவும் சொன்னால் அதை உடனே உன்னோட நெருக்கமான யார்கிட்டேயும் சொல்ல வேண்டும். இப்படி நீயா தப்பு தப்பா யோசித்து எவ்ளோ பிரச்னை பார்த்தியா.. விவேகா, எனக்கு பயமா இருக்கு இன்பா அம்மா, அண்ணா கிட்ட போய் அத்தான்.. ஹே என்னடி அத்தான் உன்னோட உதடு இருக்காது..
இன்பா, அடி மக்கு உன் அப்பா சாரி என்னோட மாமனார் நிச்சயம் அந்த ராஜ் க்கு உன்னை கட்டி கொடுத்து இருக்க மாட்டார்..
அவள் கண்களை துடைத்து கொண்டு எப் எப்படி சொல்ற.. இன்பா, உன் அத்தை சரியான வில்லி அது மாமிக்கு தெரியும் அதனால் நிச்சயம் கங்கா மாமி இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.. நீ வென ராஜ் பற்றி உன் அத்தை சித்ரா பற்றி உன் அம்மா கிட்ட சும்மா பேசி பாரு அப்போ உண்மை என்ன அப்டன உனக்கே தெரியும்..
அவனும் ஆளும் உன்னை எப்படி பிளாக் மைல் பண்ணி இருக்கான் அவன் மட்டும் என் கிட்ட கிடைத்தால் நல்லா லத்தி அடி எப்படி அண்ட் கம்பி எண்ண வைத்து விடுவேன். என்று அவளை அதையும் இதையும் சொல்லி சமாதானம் செய்தான்.
விவேகா, என் அப்பா மட்டும் இருந்தால் உன்னை நான் லவ் என்று நிறுத்த இன்பா, ம்ம் நீ லவ் பண்ணி இருக்க மாட்ட ஆனால் நான்.. நீ.. என்று அவள் ஆவலாக பார்க்க
இன்பா, நான் உன்னை நேரா கல்யாணம் பண்ணி இருந்து இருப்பேன் இவளோ நாள் உன்னை என்ன என்னமோ செய்து இருப்பேன் இந்த லவ் இதை பண்ணி தான் முத்தம் தவிர வேற எதுவும் கிடைக்க மாட்டிங்கிது..
விவேகா இப்போ அதுக்கு என்ன பண்றது.. இன்பா, பேபி நீ மட்டும் மனசு வச்சா எனக்கு எல்லாமே கிடைக்கும் என்று அவன் அருகில் வர விவேகா, ஹே இப்போ கிடைக்கும் வா டா என்று அவன் கன்னத்தை கடித்து வைக்க ஹே இது காலேஜ் .. ம்ம் அது இப்போ தான் நினைவு வந்ததா ஒழுங்கா தள்ளி போ என்று சொல்ல..
இன்பா அவளை இழுத்து இறுக்கமாக அணைத்து அவன் அதை சொன்னான் இவன் இதை சொன்னான் என் தாத்தாவுக்கு பிடிக்கல எங்க பாட்டி திட்டுவாங்க என் அண்ணா வெட்டுவான் அப்டின்னு எந்த கதையும் இனி சொல்ல கூடாது அப்படி மட்டும் எதுவும் சொன்ன உன்னை ஒன் நைட் ஸ்டான்ட் பண்ணிடுவேன் டி.. என்ன..
இன்பா அவளை கதவு வரை அழைத்து சென்று ம்ம் இதை பற்றி யோசிப்பதை நிறுத்தி விட்டு கொஞ்சம் போட்டிக்கு படிக்கிற வேலைய போய் பாரு என்று அவளை அனுப்பி வைத்தான்.
விவேகா இப்பொழுது தெளிவான மன நிலையில் அங்கு இருந்து சென்றாள். அதன் பின் ஆதியுடம் அவள் பேச சொல்லி காலில் விழாத குறையாக கெஞ்ச ஆதி அவளிடம் பேசவே இல்ல..
இப்படியே நாட்கள் செல்ல அவர்கள் அந்த போட்டிக்கு தயார் ஆகி டெல்லி செல்லும் நேரமும் வந்தது.
விவேகா வீட்டில் என்ன டெல்லி போறியா.. ம்ம் ஆமா மா.. உன்னை எப்படி டி நான் தனியா அனுப்பட்டும் எனக்கு பயமா இருக்கு விவேகா.. என்று கங்கா கூச்சல் போட
விவேகா, மா நான், ஆதி , வெண்பா, எல்லாரும் தான் மா போறோம்..
கங்கா, அவன் ஆண் பிள்ளை பையன் அவன் போவான் டி உன்னை நான் எப்படி தனியா அனுப்ப சொல்லு..
விவேகா, அம்மா கடுப்பை கிலப்பாத இப்படியே என்னை சொல்லிட்டு இருந்து அப்புறம் நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் போய் விடுவேன்..
அது அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது..விவேகா, எப்படி சொல்ற.. உன்னை கல்யாணம் கூட ரொம்ப பக்கத்தில் தான் கட்டி கொடுப்பேன்.. விவேகா, எப்படி முதுகு பின்னால் தான் உன் மாப்பிள்ளை இருக்கானா.. என்று சொல்லி கொண்டு இருக்க.. இன்பா விவேகாவின் முதுக்கு பின்னால் வந்து நின்றான். அதாவது வாசலுக்கு வெளியே இருந்தான்.
கங்கா, தம்.. தம்பி!
இன்பா காக்கி உடையில் ஆன்டி வருண் வீட்டில் இல்ல அதி கூட இல்ல என்ன ஆச்சு..
விவேகா உடனே உள்ளே ஓடி சென்று அவனுக்கு தண்ணீர எடுத்து வந்து நீட்ட அதை வாங்கி குடிக்க..
கங்கா, என் அப்பா அதான் வருண் தாத்தாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை தம்பி இன்னும் கல்யாணம் ஆகி என் அப்பாவை போய் பார்க்கவே இல்ல அதான் போயிருக்கான். நைட்டு டூட்டிக்கு வந்து விடுவான்.
ம்ம் சரி ஆன்டி.. கங்கா, ஒரு நிமிடம் தம்பி அடுத்த மாசம் புரட்டாசி வீட்டில் விசேசமா நான்க சாமி கும்பிட்டு கடவுளுக்கு விருந்து செய்வோம்..
இன்பா ஆவலாக ஓ மட்டன், சிக்கனா..
விவேகா சிரித்து கொண்டே இல்ல சைவ விருந்து தெளிவா சொல்லு மா சாரு தப்பா நினைக்க போறாரு..
இன்பா திரு திரு வென முழிக்க சாரி தம்பி உங்களுக்கு அசைவம் பிடிக்குமா.. இந்த வாரம் வாங்களேன் வீட்டில் எங்க வீட்டில் சாப்பிடுவன்க தானே..
இல்ல ஆன்டி சாப்பிட மாட்டேன்..
அவர் முகம் வாடி போக..
இது என்ன கேள்வி ஆன்டி நான் நிச்சயம் சாப்பிடுவேன்.. ஆனால் இந்த வாரம் முடியாது முக்கியமான வேலையா டெல்லி போறேன்.. என்று சொல்லிக்கொண்டே இன்பா விவேகா வை பார்க்க அவள் கண்கள் ஒரு நிமிடம் மின்னியது..
இவன் இந்த இன்பா இருக்கானே..
இன்பா, கொஞ்சம் வேலை இருக்கு ஆண்டி அடுத்த வாரம் ஓகே வா..
ம்ம்.. இன்பா, ஹான் அதான் எதோ வருதுன்னு சொன்னீங்க தானே..
கங்கா, என்ன தம்பி..
அதான் புரட்டா..
விவேகா, புரட்டாசி.. என்று சிரிக்க கங்கா அவளை பார்த்து முறைத்தாள்.
இன்பா, ஹான் அதே தான் இப்போ நான் கூட கொஞ்சம் கொஞ்சமா சைவமா தான் இருக்கேன் என்று அவன் விவேகாவை பார்த்து இரட்டை அர்த்தம் கொண்டு கூற அவள் இடியட்.. இடியட்.. என்று சொல்ல உடனே அவன்
ஆன்டி நான் நீங்க சாமி கும்பிடும் போதே வரேன உங்களுக்கு ஓகே வா..
கங்கா புன்னகைக்க..
இன்பா, உடனே இரும்ப கங்கா ஒரு நிமிடம் உட்காருங்க தம்பி என்று வேகமாக கிச்சன் சென்றாள்.
இதற்கு தான் காத்து கொண்டு இருந்தேன் என்பதை போல் இன்பா விவேகாவின் கைகளை பிடித்து…?
தொடரும்..
Episode 175,
கங்கா உள்ளே சென்றதும் இன்பா இதற்கு தான் காத்திருந்தேன் என்பதை போல் விவேகாவை இழுத்து இதழ் பதித்து கன்னத்தில் ஒரு வட்டம் போட டேய் இடியட் அம்மா வந்து விடுவார்கள் விடு டா என்று அவள் அவனை தள்ளி விட்டு கைகளை அவன் கடித்த இடத்தில் வைத்து மறைத்து கொண்டாள்.
இன்பா அவளை பார்த்து ஒற்றை கண் அடிக்க அதற்குள் கங்கா கைகளில் டீயுடன் வந்தாள். ஆன்டி உங்களுக்கு எதுக்கு சிரமம் என்று ஒன்றுமே தெரியாத குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு சொல்ல..
கங்கா, இல்ல தம்பி முகம் எல்லாம் சோர்ந்து போயிருக்கு அதான் வீட்டில் உங்க அம்மா ஆபீஸ் போயிருப்பார்கள் தானே லைட்டா இஞ்சி ஏலக்காய் டி குடிங்க கொஞ்சம் நல்லா இருக்கும் பெரிய பதவியில் இருக்கீங்க ஆயிரம் டென்ஷன் இருக்குமே…
இன்பா, ம்ம் ஆமா ஆன்டி ரொம்ப நாளாக ஒரு கேஸ் அந்த அக்யூஸ்ட் என்னை ரொம்ப டென்ஷன் பண்றா இதை கேட்டதும் விவேகா போச்சு போச்சு இவன் என்னை அடி வாங்க வைக்க தான் வந்து இருக்கான். தலையில் கை வைத்து கொள்ள
கங்கா, என்ன தம்பி இன்பா, அது ஒன்னும் இல்ல ஆன்டி கொஞ்சம் டென்ஷன்.. டீ வாசம் செம்ம.. உங்க கை பட்டால் எல்லாமே டேஸ்ட் தான்.. அன்னிக்கு நெய் சாதம் செம்ம ஆன்டி…
இதை கேட்டு கங்கா போங்க தம்பி என்று சங்கடமாக முகம் சிவக்க.. விவேகா, பளர்ட் பன்றதில் சரியான கேடி ஆள் மயக்கி கேடி இடியட் என்று அவள் கன்னத்தை பிடித்து கொண்டு முனக
இன்பா, அதை வாங்கி குடிக்க
கங்கா, அக்காவுக்கு எப்போ கல்யாணம்.. இன்னும் ஆறு மாசம் இருக்கு ஆன்டி..
ஓ அடுத்து உங்களுக்கு தான் என்று சொல்ல அவன் திரு திரு வென முழிக்க..
நான் கல்யாணத்தை பற்றி சொன்னேன் அக்காவுக்கு அடுத்து உங்களுக்கு தானே.. ம்ம் ஆன்டி.. என்று விவேகாவை பார்க்க.. கங்கா, தம்பி எனக்கு ஒரு ஆசை.. இன்பா, ம்ம் சொல்லுங்க மாமி இந்த கேடியை கல்யாணம் பண்ணிகட்டுமா.. என்று மனதில் நினைத்து கொண்டே பார்க்க..
கங்கா, நீங்க கல்யாணம் ஆனதும் ஒரு நாள் உங்க மனைவியா கூட்டி கிட்டு எங்க வீட்டுக்கு சாப்பிட வரனும்.. வருவீங்களா.. இதை கேட்டதும் விவேகா கண்களை மூடி கொண்டு அய்யோ இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா.. என்று பின்னால் திரும்பி கொள்ள.. இன்பா, மனதுள் ஒரு குத்தாட்டம் போட்டு கொண்டு இது என்ன கேள்வி நிச்சயமா உங்க கை பக்குவம் தான் எனக்கு பிடித்து இருக்கு சோ என் பொண்டாட்டியை உங்க கிட்ட எப்படி சமைக்க அப்டின்னு கத்துக்க அனுப்புவேன். அதுவும் இல்லாமல் நம்ப எல்லாம் ஒரே குடும்பம் அதிதி எனக்கு தங்கை மாதிரி வருண் என் தங்கை கணவன் என்று இன்பா முறை படுத்த கங்கா அவனை ஒரு கடவுள் போல் பார்த்தாள்.
விவேகா, கவுத்துட்டானே! கவுத்திட்டானே ! இப்போ இந்த அம்மா இவனை பாகுபலி பிரபாசை விட உயரத்தில் கொண்டு போய் வைத்து இருக்குமே.. இன்பா அதற்கு மேல் அங்கு இருக்க வில்லை சரி ஆன்டி நான் அப்போ கிளம்புறேன் என்று அவன் செல்ல கங்கா, தம்பி நிச்சயம் புரட்டாசிக்கு வந்திடனும்.. ம்ம் உங்க சமையல் என்னை வர வைத்து விடும் ஆன்டி என்று மீண்டும் ஒரு தூண்டில் போட்டு விட்டு விவேகாவை அந்த கேப்பில் சைட் அண்ட் ஒற்றை கண் அடித்து விட்டு கிளம்பி விட்டான்.
(பெண்களை நாம் அதிகம் சந்தோஷம் அடைய வைக்க பொன் பொருள் கூட இரண்டாம் பட்சம் தான் அவர்களின் சமையலையும் குணத்தையும் பாராட்டி விட்டால் போதும் மயங்கி விடுவார்கள் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து கொள்வார்கள்.)
அம்மா எதுக்கு மா அவன் கிட்ட சும்மா வலவலன்னு பேசிட்டு இருக்க சீக்கிரம் அனுப்ப வேண்டியது தானே..
கங்கா அருகில் உள்ள சீப்பை எடுத்து ஹே என்ன சொன்ன அவனா சூடு வைத்து விடுவேன்.. அவள் அடித்த இடத்தை தேய்த்து கொண்டே இப்போ எதுக்கு அடித்த.. பிச்சுடுவென் அந்த தம்பியை இப்படி பேசுற வேலை வைத்து கொள்ளாத என்ன நினைத்த உன் அத்தை மாதிரி தான் உன் பேச்சு இருக்கு யாருக்கும் மரியாதை கொடுக்க தெரியல
விவேகா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அழுதவள் நான் நான் எதோ ஒரு வேகத்தில் டங்க் ஸ்லிப் ஆகி சொல்லி விட்டேன் அதுக்கு நீ என்னை அடித்து விட்டாய் நான் நான் இப்போவே மாமாச்சி வீட்டுக்கு போறேன்.. நான் அப்படி என்ன தப்பா சொல்லி விட்டேன் நீ ரொம்ப மோசம் ரொம்ப ரொம்ப மோசம் என்று அவள் அழுது கொண்டே படுக்கைக்கு போய் படுத்து கொண்டாள்.
கங்கா அவளை கண்டு கொள்ள வில்லை. அடுத்த நாள் நேராக அவள் ஆதி வீட்டுக்கு சென்று விட்டாள். நாளை அவர்கள் டெல்லி செல்ல வேண்டும். விவேகா அவள் அம்மாவிடம் பேசவும் இல்லை.. தேவி, சின்ன குட்டி அம்மா கிட்ட சொல்லிட்டு போ டா.. போங்க அத்தை நான் இனி அங்க போகவே மாட்டேன், மாமாச்சி எதுக்கு எடுத்தாலும் உன் தங்கச்சி என்னை அடித்து கொண்டே இருக்கு அதை விட சித்ரா அத்தையும் நானும் ஒன்னாம் அப்படி சொல்லுது..
ஆதி, ம்ம் அத்தை சொல்றது சரி தான் இவள் ரொம்ப மோசமானவள்.. மாமா என்று அவள் அழ செல்வம் அவனை முறைத்து விட்டு டேய் என் குட்டியை எதுவும் சொன்ன உன்னை தோலை உரித்து தொங்க வைத்து விடுவேன்… மாமச்சி உன் தங்கச்சியை நீ அடிச்சு வளர்த்து இருக்கணும்.. ஹெய் என்னடி மாமாவை மரியாத இல்லாம பேசிட்டு இருக்க..
இதை கேட்டதும் அவள் வேகமாக ஓடி தேவிக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். ஆதி, அத்தை அவளை இன்னும் நாலு போடுங்க.. கங்கா, ம்ம் ஆமா ஆதி இவள் என்று சொல்ல வர
செல்வம், கங்கா போதும் போதும் இப்படி தோலுக்கு மேல் வளர்ந்த பொண்ணை இனி அடிக்க கூடாது.. அண்ணா அவள் செய்வது சரி இல்ல நீ அவளுக்கு சப்பொர்ட் பண்ணிட்டு இருக்காத.. விவேகா, மாமச்சி ஆதியை வென அங்கே அனுப்பி விடுங்கள் நான் இனி அங்கே போக மாட்டேன்.. தேவி சிரித்து கொண்டே அவள் வர வேண்டிய இடத்துக்கு தான் வந்து இருக்கிறாள். கங்கா, எல்லாம் நீங்க கொடுக்கும் செல்லம் தான்.. ஆதி, அவளை பார்த்து முறைத்து விட்டு அவன் அறைக்கு செல்ல விவேகா அவன் பின்னால் சென்றாள்.
ஹே ஹே பிளீஸ் பேசு டா இப்போ மட்டும் நீ பேசல நான் இப்போவே மாமா கிட்ட சொல்லி விடுவேன்.. என்று அவள் கைகளை பிடிக்க வர உடனே அவன் தட்டி விட்டான். விவேகா, நீ மட்டும் தான் இப்படி பண்ற அந்த ராகவ் என் கிட்ட பேசி விட்டான். ஆனால் நீ இப்போ அந்த ராட்சஸியோட லவ்வர் ஆகி விட்ட அதனால் நான் எல்லாம் உனக்கு எம்மாத்திரம்…
ஆதி, வாயின் மேல் கை வைத்து கொண்டே பச்சை பொய்காரி போடி.. அது நான் இல்ல நீ தான்.. இப்போ பேசல நான் இனி இனி என்று அவள் உதடு துடிக்க.. ஆதி, உன் கிட்ட ஒரு டாஸ்க் தர போறேன்.. என்ன… நான் டெல்லியில் உன் நடவடிக்கை பார்த்து விட்டு தான் பேசுவேன்.. அப்போ இப்போ ஒரு லெட்டர் கூட பேச மாட்டியா.. என்று பூனை குட்டி போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க..
ஆதி, இந்த நடிப்பு எல்லாம் angry bird நம்புவாரு நான் நெவர் போடி போ போய் கிளம்புற வழிய பாரு என்று சொல்லி அவன் கிளம்ப போடா மாடு என்று திட்டி கொண்டே அவள் கிளம்பினாள்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அந்த போட்டியில் பங்கு கொள்ளும் 15 பேரில் இனியாள், கவ்யா, சோனியா மூவர் மட்டும் அவர்களது சொந்த செலவில் விமானத்தில் வருவதாக சொல்லி விட்டனர். மற்ற அனைத்து மாணவர்களும் சென்ட்ரல் வந்து சேர்ந்தனர். மூன்று நாட்கள் அங்கு இருக்க வேண்டும் எல்லா செலவுகளும் காலேஜ் பார்த்து கொள்ளும். வெண்பா, விவேகா, ஆதி, அருண், சதீஸ், சிபி, தர்ஷனா, தீபா, மற்ற போட்டியாளர்கள் கவின், சங்கவி, தியா இன்னும் சிலர் என அனைவரும் சரியாக வந்து இருக்க அனைவரையும் சரியாக இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு சென்னையில் இருந்து ராஜதானி தொடர் வண்டியில் 2 AC யில் நிசாமுதீன் ஸ்டேஷன்க்கு 28 மணி நேரம் 30 நிமிடத்தில் அங்கு கொண்டு போய் சேர்க்கும். அவர்கள் அனைவரும் எற தயாராக இருந்தனர்.
அனைவரும் ஏறினர். வரிசையாக அவர்களுக்கு பதிவு செய்ய பட்டு இருந்தது. வெண்பா, அப்பர் பர்த், லோவர் பர்த் விவேகா என இருக்க ஒரு கோச்சில் பாதி மாணவர்கள் தான் இருந்தனர். விவேகா, வெண்பா இருவரும் ஆதியை பார்த்து கொண்டு இருக்க வெண்பா, ஹே என்ன அவனை அப்படி பார்க்கிற..
அவன் என் கிட்ட பேச மாட்டின்றான் டி.. இதை கேட்டதும் வெண்பாவுக்கு கொஞ்சம் சந்தோஷமாக தான் இருந்தது. இப்பொழுது அவள் ஆட்டத்தை ஆரம்பித்தாள்.
வெண்பா, ஆதித்யா மிஸ்டர் ஆதித்யா.. அவன் போன் நோண்டி கொண்டே திரும்பி பார்க்க இப்போ எனக்கு ஆரஞ்சு மிட்டாய் வேணும் கிடைக்குமா.. என்று கண்கள் மின்ன அவள் கேட்க அவன் இல்லை என்று சொல்ல தான் நினைத்தான். ஆனால் அருகில் விவேகாவை பார்த்ததும் ம்ம் அவ்ளோ தான என்று விவேகாவின் முன் வெண்பா வுக்கு எடுத்து நீட்ட அவளுக்கு ரெக்க மட்டும் தான் இல்ல…
விவேகா, ஆதி மாமா.. மாமா என்று சிணுங்கி கொண்டே கூப்பிட
ஆதி என்ன டி…
எனக்கு தேன் மிட்டாய் வேணும்..
அதற்கு ஆதி…?
தொடரும்…