🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
12. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 11
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 12 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 11

  • 1 Oct 2026
  • 94 reads
  • ★ 5.0 (2)
  • 7 min read

Epi -11

எதிர்பாராதவிதமாக அவளது ஸ்கூட்டி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான சொகுசுக் காரின் பின்னால் பலமாக மோதியது!

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஐயோ!” என்று பதறியபடி அகிம்சா வண்டியை நிலைநிறுத்த… அடுத்த நொடி, காரின் கதவு ஆவேசமாகத் திறக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு சிங்கம் போல வெளியே வந்தான் அதர்வன்.

ஆறடி உயரம், வெள்ளை நிற பார்மல் சட்டை, ஆத்திரத்தில் சிவந்த கண்கள் என கம்பீரத்தோடு வந்தவன், காரின் பின் பகுதியில் விழுந்த சிறு கீறலைப் பார்த்துவிட்டு அவ்விடமே அதிரும்படி கர்ஜித்தான்.

“அய்யய்யோ!” என அகிம்சா ஒரு நொடி பதற்றமானவள், ‘சரி சமாளிப்போம்’ என பெருமூச்சுடன் அவனைப் பார்த்துப் பேச முயன்றாள்.

ஆனால் அதற்குள் எதிரில் இருந்த ஆடவனின் வாய் அதிகமானது. “ஹேய்! யூ இடியட்… கண்ணு என்ன பொடனிக்கு பின்னாலயா இருக்கு? – காரின் கீறலைத் தடவியபடி – ப்ச்! வண்டி ஓட்டத் தெரியலன்னா எதுக்குடி வண்டிய எடுத்துட்டு ரோட்டுக்கு வர? என் கார் எவ்ளோ ஒர்த் தெரியுமா உனக்கு?” என வார்த்தைகளைக் கண்டபடி வீசினான் அதர்வன்.

அகிம்சா தன் தவறுக்காக முதலில் மன்னிப்புக் கேட்கத்தான் நினைத்தாள். ஆனால், அவன் ஆணாதிக்கத் தோரணையில் ‘டி’ என்று சொன்னதும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதும் அவளது சுயமரியாதையைச் சுண்டி இழுத்தது.

தன் கூர்மையான விழிகளை உயர்த்தி அவனையே நிமிர்ந்து பார்த்தவள், கைகளை இறுக்கி மடக்கியபடி, “யோவ்! இப்போ எதுக்கு கத்துற? நிஜமாவே இந்த கார் உன்னோடது போல தெரியலையே… எனக்கு டவுட்டா இருக்கு!” என்றாள்.

“ஹே! ஒண்ணு விட்டேன்னு வை… செவுள் பிஞ்சிக்கும்!” என அதர்வன் கைமுஷ்டியை மடக்கினான்.

அகிம்சா சிரித்தபடி, “அதேதான்! இத்தனை பெரிய கார் வச்சிருக்கவே நல்லா படிச்சவனா, பண்பான ஒருத்தனா இருப்பான்னு பார்த்தேன். ஆனால், உன்னோட மரியாதை இல்லாத பேச்சுலயே தெரியுது… நீ தப்பான ஆள்! அதனாலதான் எடுத்ததும் இப்படித் தரக்குறைவா பேசுற. உன்னோட பலத்தை உன்னை விட பலவீனமான ஒருத்தங்ககிட்ட நிரூபிக்கப் பார்க்கிற!” என பொரிந்து தள்ளினாள்.

‘தவ்றை அவள் மீது வைத்துக்கொண்டு என்னென்ன பேசுறாள்? பொண்ணா இவள்?’ என அதர்வன் ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனான்.

அவன் அடுத்து யோசிப்பதற்கு முன்னதாகவே அவள் பர்ஸிலிருந்து நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்து காரின் மேல் வைத்துவிட்டுத் திரும்ப…

“What the hell!! இந்த காரோட ரிப்பேர் சார்ஜ் எவ்ளோ ஆகும் தெரியுமா? உன் ஆயுசுச் சம்பளத்தைக் கொடுத்தாலும் கட்ட முடியாது!” என அதர்வன் எள்ளலாக நகையாட…

“உன் பணக்காரத் திமிரை உங்க வீட்டுக்குள்ள வச்சுக்கோ, மிஸ்டர்! எவ்ளோ விலையா இருந்தா எனக்கென்ன? எந்த கார்ல போனாலும் சரி, கடைசியில நம்மள தூக்கிட்டு போய் ஆறடி…” என்று சொல்ல வந்தவள், “இல்ல இல்ல… இப்போ காஸ்ட்லியா கரண்ட்ல வச்சு பவுடர் ஆக்கி கரைச்சு விடுவாங்க! பெரிய பிரஸ் ஓனரா இருந்தா கொம்பு முளைச்சிருக்கா என்ன? ரோட்டுல இறங்கிட்டா எல்லாரும் ஒன்னுதான்!” என்று அவனை மொத்தமாக இறக்கிப் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தாள்.

அவள் விறுவிறுவெனத் தன் ஸ்கூட்டியில் கிளம்பிச் செல்ல, காரின் மீது வைக்கப்பட்டிருந்த அந்த நான்கு ஐந்து நூறு ரூபாய் தாள்களைப் பார்த்தபடி, ஆத்திரத்தில் பற்களை நறநறவெனக் கடித்தான் அதர்வன்.

அவனது இருபத்தொன்பது வருட வாழ்க்கையில் ஒரு பெண் தன்னை இப்படித் துச்சமாக மதித்துப் பேசிவிட்டுச் சென்றது இதுவே முதல்முறை!

அதேநேரம், அவனது ஐபோன் ‘என்னை எடு, என்னை எடு’ என குதித்துக் கொண்டிருந்தது; உரக்க அதிர்ந்தது. திரையில் ‘சசி பேபி’ என்ற பெயர் மின்னியது.

கோபத்தை மனதிற்குள் அடக்கிக்கொண்டு அழைப்பை ஏற்றான். “சொல்லு சசி…”

“அதர்வா! எங்கே இருக்க நீ? மணி என்ன ஆச்சு தெரியுமா? வெட்டிங் கார்டு செலக்ட் பண்ணக் கடையில உனக்காக அரை மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்! உனக்குக் கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லையா?” எனக் கடுப்புடன் கத்தினாள் சசிரேகா.

“பேபி, இதோ வந்துட்டேன். இங்கே ஒரு சின்ன பிரச்சனை… நீ சில்லுன்னு எதுவும் சாப்பிட்டுட்டு இரு. நான் ஒரு டூ மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்!” எனத் தன் சட்டையைச் சரிசெய்தபடி, அந்த ‘Trending Timewood’ சாம்ராஜ்யத்தின் அதிபதி தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு காரில் ஏறிப் புறப்பட்டான்.

இன்னொரு பக்கம், அகிம்சா – கோபி கிருஷ்ணா இருவரின் திருமண வேலைகளும் படுஜோராக நடந்து கொண்டிருந்தன.

கோபி போன் செய்து, “அகிம்சா! கல்யாணத்துக்கு இன்னும் நாலே நாள்தான் இருக்கு. நீ முதல்ல ஹாஸ்டலை வெக்கேட் பண்ணிட்டு, நம்ம அத்தை வீட்டுக்கு வந்துடு. அங்கே இருந்து மண்டபத்துக்குப் போக வசதியா இருக்கும். அப்புறம் மேரேஜ் ஆனதுக்கு பிறகு நம்ம வீட்டுக்கு நீ முறையா வந்துடலாம்” என்று அன்பாகக் கட்டளையிட்டிருந்தான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இல்ல கிருஷ்ணா… அவங்க வீட்டுக்கு எப்படி?” என அவள் தயக்கத்துடன் கேட்க, கோபி கிருஷ்ணா அவளைப் பொய்க்கோபம் கொண்டு முறைத்தான்.

அகிம்சா சின்ன புன்னகையை உதிர்த்தபடி, “சரி, கோபி கிருஷ்ணாவே சொன்னதுக்கு பிறகு மறுத்து பேச முடியுமா என்ன?” எனத் திருமணப் பெண்ணுக்கான பூரிப்போடும், தன் கனவு வாழ்க்கை நனவாகப் போகிறது என்ற மகிழ்ச்சியோடும் தன் வேலைகளை முடித்தாள். மருதாணி வைப்பது, ஃபேஷியல் செய்வது என அனைத்து அலங்காரங்களும் முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.

கோபி மீண்டும் அழைத்து, “மணி ரொம்ப ஆயிடுச்சுடி, நான் வந்து உன்னை பிக்-அப் பண்ணிக்கவா?” எனக் கேட்க…

“ஐயோ! அதெல்லாம் வேண்டாம் கோபி, நான் பார்த்துக்குறேன். நீ போய் தூங்கு,” என உறுதியாகச் சொல்லிவிட்டுத் தன் போனில் பேசியபடியே ஸ்கூட்டியை இயக்கினாள்.

இரவின் நிசப்தத்தில், போன் உரையாடலில் கவனம் முழுவதையும் செலுத்தியபடிச் சென்ற அகிம்சா, அந்த இருண்ட சாலையில் இருந்த உயரமான வேகத்தடையைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.

“டமார்…!” என்று வண்டி பலமாக ஏறி இறங்க, நிலைதடுமாறிய அகிம்சா ஸ்கூட்டியோடு கீழே விழுந்தாள். அவளது கைபேசி கையிலிருந்து விலகித் தார் சாலையில் விழுந்து, பேட்டரி கழன்று சுவிட்ச் ஆஃப் ஆனது! லேசான உராய்வுக் காயங்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்தவள், தன் வண்டியையும் போனையும் தூக்கிக்கொண்டு நிமிரும்போது…

அந்த இடமே கலவரமானது. அலறல் சத்தங்களாலும், காவல்துறையின் சைரன் ஒலிகளாலும் அதிர்ந்தது!

அது ஒரு சட்டவிரோத கேளிக்கை விடுதியின் (Pub) பின் பகுதி. நள்ளிரவில் அங்கே பெண்களை வைத்துத் தவறான தொழில் மற்றும் போதைப்பொருள் விநியோகம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அதிரடிக் காவல்படை திடீர் ரெய்டு நடத்தியிருந்தது!

விடுதிக்குள் இருந்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓட, தற்செயலாக அந்த வீதியின் வெளியே காயத்தோடு நின்று கொண்டிருந்த அகிம்சாவையும் அந்தப் போதைப்பொருள் கும்பலின் ஒருத்தியோ எனச் சந்தேகப்பட்டு, காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அகிம்சா அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்ப முற்பட, “ஹேய், நில்லுடி! எங்கே ஓடப் பார்க்கிறே?” எனப் பெண் காவலர் ஒருவர் அகிம்சாவின் கையைப் பற்றி ஆக்ரோஷமாக இழுத்தார்.

அகிம்சா அதிர்ந்துபோய், “அய்யோ மேடம்! நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல… நான் யாருன்னு தெரியாம பேசுறீங்க… நான் இப்போதான் வண்டியில இருந்து கீழே விழுந்தேன். எனக்கு இங்கே நடக்கிற விஷயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!” எனத் தன் வழக்கமான கூர்மையான குரலில் வாதாடினாள்.

“சம்பந்தம் இருக்கா இல்லையான்னு ஸ்டேஷன்ல வந்து சொல்லுடி! எல்லாரும் என்னைக்கு செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு இருக்காங்க?” என அவளது பேச்சைக் காதிலேயே வாங்காமல், வலுக்கட்டாயமாகப் போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதே சமயம்…

சம்பவ இடத்திற்குச் செய்தி சேகரிக்க வந்த ‘Flash Daily’ நாளிதழின் நிருபர்களும் புகைப்படக் கலைஞர்களும், போதைப்பொருள் கும்பலோடு அகிம்சாவும் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் காட்சிகளைப் பரபரப்பாகப் புகைப்படம் எடுத்தனர்! அன்று இரவே Flash Daily முகப்புப் பக்கத்தில் விடுதியில் பிடிபட்ட பெண்கள் கூட்டத்தில், தவறுதலாக அகிம்சாவின் படமும் அடுத்த நாள் காலை செய்தித்தாளில் வெளியாக பிரிண்ட் செய்யப்பட்டது.

இந்தப்பக்கம் அகிம்சா இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை அழகு நிலையத்தில் இருந்ததற்கான சாட்சிகள், அவளின் கையில் வைக்கப்பட்டிருந்த மருதாணி மற்றும் அவள் எங்கு பணிபுரிகிறாள் என அனைத்துக் காரியங்களையும் கூறி தன்னை குற்றமற்றவள் என நிரூபித்தாள்.

அந்தப் பெண் காவலர் அகிம்சாவிடம், “கல்யாணப் பொண்ணா இருக்க… எதுக்கும்மா தனியா அந்த நேரத்துல வண்டியில வர? இனிமேவாவது கவனமா இரும்மா,” எனச் சொல்லி அவளின் போனைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

அகிம்சா ஹாஸ்டலுக்கு வந்து சேர மணி இரண்டைத் தாண்டியது. ஹாஸ்டல் வார்டனிடம் வசை வாங்கியபடி சோர்வுடன் படுக்கையில் விழுந்தாள். கையில் சிராய்ப்புக் காயம் வேறு; போனில் டிஸ்ப்ளே உடைந்திருந்தது. ‘காலையில் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்’ என உறங்கிவிட்டாள்.

ஆனால், அடுத்த நாள் அவளது வாழ்க்கை மொத்தமாக தலைகீழாக மாறப்போகிறது என்பதைப் பெண்ணவள் அறியவில்லை!

(தொடரும்…)

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (2)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!