🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
23. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 21
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 23 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 21

  • 1 Oct 2026
  • 101 reads
  • ★ 5.0 (2)
  • 11 min read

Epi -21 

அதர்வன் அகிம்சாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

சூர்ய நாராயணன் கூட அதே நேரத்தில்தான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தார். காரை நிறுத்திய அதர்வன், “பார்த்து இறங்கு…” என அகிம்சாவைக் கவனமாக இறக்கிவிட… “பேக் எல்லாம் எப்படி?” என்று அவள் தயக்கத்துடன் கேட்டாள்.

“நான் பார்த்துக்கிறேன்… நீ உள்ளே போ,” என அவன் டிக்கியிலிருந்த அனைத்துப் பைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பும் காட்சிகளை, தூரத்திலிருந்து சூர்ய நாராயணன் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அதர்வன் காரைப் பூட்டிவிட்டுத் திரும்பிய அந்த நொடி, தனது தந்தையை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டது.

அவர் ஏற்கனவே மகன் மேல் ஏகப்பட்ட ஆத்திரத்தில் இருந்தார்; இப்போது கேட்கவா வேண்டும்?

“ரொம்ப நல்லாருக்கு… ரொம்பவே நல்லாருக்குடா! நீ திருந்தவே போறதில்லை. உனக்காக ஒரு சாம்ராஜ்யம் காத்துட்டு இருக்கு; ஆனா, அதெல்லாம் உனக்கு முக்கியமாவே படல! ரெண்டு பொண்ணுங்க கூட வெட்கமே இல்லாம சுத்திட்டு இருக்க? எனக்கு உன் மேல இருந்த நம்பிக்கை மொத்தமும் போயிடுச்சு… இனி என்னோட காலத்துக்குப் பிறகு இந்த பத்திரிகை என்னாகப் போகுதோ தெரியல!” என்றவர், அவனது மனதை ஈட்டியாய் துளைக்கும் அந்த வார்த்தையைக் கூறினார்:

“உன்னை ஏன்டா பெத்தேன்னு என்னை வருத்தப்பட வச்சுட்ட நீ!”

மனம் நொந்துபோய் கூறிவிட்டு, அவர் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றார்.

அதே நேரம், சமையலறையில் ஆர்த்தி அங்கும் இங்கும் பதற்றத்துடன் நடந்தபடி, “என்னம்மா பண்ற நீ? அவனை எதையுமே கேள்வி கேட்க மாட்டியா? அவன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கான்… வெளியே தலைகாட்ட முடியல! என் மாமியார் வீட்ல எனக்கு எவ்ளோ அவமானம் தெரியுமா? இங்க நடக்குற கூத்தையெல்லாம் பார்த்தா, இங்கிருந்து பேசாம லோகேஷ் கூடவே என் மாமியார் வீட்டுக்குப் போயிடலாம்னு இருக்கேன்!” என்று அவள் முடிப்பதற்குள்…

“தாராளமா போ… உன்னை யாரு இங்க சகிச்சிட்டு இருக்க சொன்னா?” என அதர்வனின் கம்பீரமான குரல் சமையலறை வாசலில் ஒலித்தது.

உஷா ராணியும், ஆர்த்தியும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

அதர்வன் கடுமையான பார்வையோடு, “நீ இங்கே எதுக்கு வந்த? டெலிவரிக்குத் தானே இங்கே இருக்க? அந்த வேலையை மட்டும் பாரு!” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டுத் திரும்பினான்.

“டேய்! நான் உன்னோட அக்காடா!” என்று கோபமாக ஆர்த்தி கத்த…

“யாரா இருந்தாலும் எனக்கு இதுதான் பதில்!” என்றவன், “ஹாட் வாட்டர் ரெடி பண்ணுங்க மாம்,” என விறைப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

தனது தாய்மாமன் அத்தனை கோபமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த குழந்தை ரிஷி, பயந்துபோய், “மம்மி… தூங்கலாம் வா,” என ஆர்த்தியின் கையைப் பிடித்து இழுத்தான்.

“ரிஷிக்குட்டி, அம்மாச்சிகிட்ட வாடா…” என உஷா ராணி அவனைத் தூக்கிக்கொண்டு, “விடு ஆர்த்தி… இதை பெருசுபடுத்தாதே. அவனே நொந்துபோயிருக்கான்… பாவம் அவன்!” என்றார் சமாதானமாக.

“அவனை சும்மா விடமாட்டேன்மா! அக்கான்ற துளிகூட மரியாதை இல்லை அவனுக்கு. அப்பா வரட்டும்… அவனை என்ன செய்யுறேன்னு பாரு!” என ஆர்த்தி ஆத்திரத்துடன் கூறிவிட்டு நகர்ந்தாள்.

“அம்மா… மாமா!” என ரிஷி ஏதோ மழலையில் கூற வர… “அவன் உனக்கு மாமாவே இல்லை! உனக்கு ஸ்ரீதர் மாமா மட்டும்தான் மாமா!” என உஷாவிடமிருந்து மகனை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு சென்றாள் ஆர்த்தி.

‘அய்யோ… ஏன்தான் இந்தப் பொண்ணு இப்படிப் பண்றாளோ தெரியலையே!’ என உஷா ராணி தலையில் கைவைத்து நொந்துகொண்டார்.

மாடி அறையில், அகிம்சா அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.

“ம்ம்… மாத்திரை போடு,” என அனைத்தையும் எடுத்துப் பார்த்து, பிரித்து அவளிடம் நீட்டினான் அதர்வன். எதுவும் பேசாமல் அவள் அதை வாங்கிக் குடித்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“எல்லாமே ஓகே தானே? நான் சர்வன்ட்டை வரச் சொல்றேன்…” என்றுவிட்டு அதர்வன் நகர முயல…

“எதுக்கு நீங்க பிரஸ் ஆபீஸுக்குப் போறதில்லை?” என காலையில் கேட்ட அதே கேள்வியை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள் அகிம்சா.

அதர்வனுக்கு அத்தனை கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘தன்னையே கேள்வி கேட்கிறாளா? இதுவரை இந்த வீட்டில் யாரும் தன்னை இப்படித் தட்டிக்கேட்டதில்லை… தனக்குத் தோன்றுவதைத்தான் தான் செய்வான்!’

“உங்களைத்தான் சார் கேட்கிறேன்?” என அகிம்சா மீண்டும் விடாப்பிடியாகக் கேட்க…

“என்னோட இஷ்டம்!” என்று அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

“அப்போ நானும் இந்த வீட்டை விட்டுப் போறேன்… அது என்னோட இஷ்டம்!” என அகிம்சா தீர்க்கமாகக் கூறி முடித்தாள்.

“ஜஸ்ட் ஷட் அப், யூ இடியட்!” எனக் கட்டுக்கடங்காத கோபத்தில் கத்தினான் அதர்வன்.

அகிம்சா துளிக்கூட அசராமல் அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவளது முகத்தில் அசைக்க முடியாத சுயமரியாதை ஒளிர்ந்தது.

“என்ன… திமிரா?”

“அப்படின்னு கூட வச்சுக்கோங்க! நாளைக்கு உங்க வேலையை நீங்க பார்க்கப் போனால் மட்டும்தான் நான் இந்த வீட்டுல இருப்பேன்; நான் சொல்றதையும் செய்வேன். எனக்கு யாரை நினைச்சும் பயமில்லை… முடிவை நீங்களே எடுத்துக்கோங்க! எனக்கு ஒன்னும் உங்களைத் திருத்தணும்னு ஆசையில்லை, அது எனக்குத் தேவையும் இல்லை. உங்க அன்றாட வேலைகளை நீங்க எப்பவும் போலப் பாருங்க. எனக்குக் காயம் ஆறியதும் நான் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன்; அதுதான் எல்லாருக்கும் நல்லது. இத்தனை வருஷம் ஆசிரமத்துல வளர்ந்த எனக்கு, என்னை எப்படிப் பார்த்துக்கணும்னு நல்லாவே தெரியும்!” என்று கறாராகக் கூறிவிட்டு, அவனது பதிலை எதிர்பார்க்காமல் மெல்ல நகர்ந்து சென்றாள்.

ஆம்! இந்த மாபெரும் பிரம்மாண்ட மாளிகையில் ஏகப்பட்ட வேலைக்காரர்களும், சொந்தங்களும் இருக்கும்போது அதர்வன் ஏன் தன் வேலைகளை விட்டுவிட்டு அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்? அதற்கான எந்த அவசியமும் அவளுக்குத் தெரியவில்லை. தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு உண்டு. தவிர, காலையும் மாலையும் செவிலிப் பெண் வந்து மருந்திட்டுச் செல்கிறார். இன்னும் பதினான்கு நாட்கள் முடிந்தால் காயம் ஓரளவுக்குக் குணமாகி, கட்டையும் அவிழ்த்துவிடுவார்கள்; அதன் பிறகு அவளது வேலைகளை அவளே சுலபமாகப் பார்த்துக் கொள்வாள்.

அடுத்த நாள் காலையிலேயே, அதர்வன் அமைதியாகத் தனது பிரஸ் ஆபீஸுக்குக் கிளம்பிவிட்டான். அவனால் அகிம்சாவிடம் மேற்கொண்டு என்ன பேசிவிட முடியும்? அவனை முதன்முதலாக எதிர்த்து நின்ற பெண் அவள்! அவனது பிடிவாதத்தை அடிபணிய வைத்தவள். தன் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கும்போது, யாரிடமும் அஞ்சாமல் வாதாடி வெல்லும் துணிச்சல் அகிம்சாவுக்கு மட்டுமே இருந்தது.

மதிய வேளையில், அகிம்சாவின் அறைக்கு வெளியே மெல்லிய மழலைச் சத்தம் கேட்டது. வலியைப் பொறுத்துக்கொண்டு, மெல்ல அறைக்கதவை எட்டிப் பார்த்தாள். அங்கே ஒரு சிறுவன் சின்னச் சின்ன பொம்மை கார்களை வரிசையாக அடுக்கி வைத்து, ‘வ்ரூம்… வ்ரூம்…’ என வாயால் சத்தமிட்டபடி உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

அவன் யார் என்று அகிம்சாவிற்குத் தெரியவில்லை. சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்தபடி, அவனது மழலை விளையாட்டையே சிறிது நேரம் ரசித்து நின்றாள்.

“ஹேய் குட்டி… உன் பேர் என்ன?” என்று அவள் மென்மையான குரலில் கேட்டாள்.

திடீரெனக் கேட்ட குரலில் திடுக்கிட்ட சிறுவன், படபடக்கும் விழிகளுடன் அவளைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

“பயப்படாதே கண்ணா… என் பேர் அகிம்சா. நான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட். உன் பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கனிவாகக் கேட்டாள்.

சிறுவன் உடனே உதட்டைப் பிதுக்கி, “நீங்க ஒன்னும் கெஸ்ட் இல்ல… நீங்க அத்தை! என் மாமாவைக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க. நீங்க யாருன்னு எனக்கு நல்லாத் தெரியும்,” என்று மழலை மாறாமல் பேசினான்.

அகிம்சாவிற்கு வியப்பில் புருவங்கள் உயர்ந்தன. “உனக்கு எப்படிடா தெரியும்?” என்று கண்களை விரித்துக் கேட்டாள்.

“நான் உங்க கல்யாணத்துல இருந்தேனே! எங்க மாமா கல்யாணத்துக்கு நீங்கதானே வந்தீங்க?” என்றான் மழலைச் சிரிப்புடன்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அகிம்சா மெலிதாகச் சிரித்தபடி, “அதுவா… அது ஒரு விளையாட்டு கல்யாணம்! சும்மா பிராங்க் பண்ணோம். உங்க உண்மையான அத்தை சசிரேகா, சரியா? நான் உங்க அத்தை இல்லை,” என்றாள் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக.

“அப்போ நீங்க யாரு? உங்களை நான் எப்படி கூப்பிடணும்? எங்க அம்மா, ‘மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் பேசக் கூடாது’ன்னு சொன்னாங்களே…” என்று தன் பிஞ்சு விரல்களை ஆட்டிக் காட்டினான்.

“உங்க அம்மா பேரு என்ன?”

“அம்மா பேரு ஆர்த்தி… டாடி பேரு லோகேஷ்.”

“அப்படியா… சரி!” என்றவள், மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக அவனைப் பார்த்தாள்.

சிறுவன் ஆர்வத்துடன், “உங்க பேர் என்னன்னு திரும்பச் சொல்லுங்க?” எனக் கேட்டான்.

“அகிம்சா…”

“அ-கிம்-சா…” என்று அந்தச் சிறு நாக்கு உச்சரிக்கத் திணறியது.

அவளது முகம் புன்னகையில் மலர்ந்தது. “உனக்கு எப்படிக் கூப்பிடத் தோணுதோ அப்படி கூப்பிடு… ஒன்னும் தப்பில்லை!”

“நீங்க அத்தை இல்லைன்னா… அப்புறம் எனக்கு யாரு?” என்று அவன் அப்பாவியாகக் கேட்க… அகிம்சா தன் ஒரு கண்ணைச் சிமிட்டி, தீவிரமாக யோசித்துவிட்டு, “நான் உன்னோட ஃப்ரெண்ட்!” என்றாள்.

“நிஜமாவா? நீங்க என் ஃப்ரெண்டா?” என்று அவனது கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.

“ஆமா, நிஜமாத்தான்! சரி, நீ ஸ்கூலுக்குப் போகலையா?”

“எனக்கு தம்பியோ பாப்பாவோ பிறந்ததும் நாங்க ஃபாரின் போயிடுவோம். அங்கதான் என்னை ஸ்கூல்ல சேர்ப்பாங்களாம்!” என்று தன் மழலை உலகத்தின் பெரிய திட்டத்தை விவரித்தான்.

“ஓஹோ… அப்படியா விஷயம்!” என்று அவள் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, கீழேயிருந்து ஆர்த்தியின் குரல் ஒலித்தது.

“ரிஷி… எங்க இருக்கே?”

“அம்மா கூப்பிடுறாங்க!” என்று அவசரமாய் முணுமுணுத்த ரிஷி, தன் கார்களைக்கூட எடுக்காமல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். அகிம்சா அவனது மழலையை நினைத்துத் தன் உதடுகளில் மெல்லிய புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதுக்குள் ஒருவிதப் புத்துணர்ச்சியோடு அறைக்குள் சென்று அமர்ந்தவள், ரிஷி மீண்டும் வருவானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது உஷா ராணி!

அவர் சுற்றும் முற்றும் பார்த்து, யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சில தட்டுகளை எடுத்து வந்தார்.

அகிம்சா சிரித்தபடி, “என்னாச்சு மேடம்? இந்தப் பக்கம் யாரும் வர மாட்டாங்களே… பயந்து பயந்து எதுக்கு என்னைப் பார்க்க வரணும்?” எனக் கேட்டாள்.

உஷா ராணி மூச்சுவாங்கிக்கொண்டு, “பயமெல்லாம் ஒண்ணுமில்லையம்மா… இன்னைக்கு அல்வா புட்டு செஞ்சேன். அதான் உனக்குக் கொடுத்திட்டுப் போக வந்தேன். சாப்பிட்டுப் பாரு… உனக்குக் கண்டிப்பா பிடிக்கும்,” என அவள் எதிர்பாராத நேரத்தில் தன் கையாலேயே அவளுக்கு ஊட்டினார்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அகிம்சா கண்கள் விரிய அதைச் சாப்பிட்டாள். முகத்தில் அத்தனை திருப்தி பரவியது. “உண்மையாவே ரொம்ப சூப்பர் மேடம்!” எனப் பாராட்டினாள்.

உஷா ராணி உற்சாகமாக, “உனக்கு நிஜமாவே புடிச்சிருக்கா… இல்ல சும்மா சொல்றியா?” எனக் கேட்க…

“நிஜமாவே ரொம்ப அருமையா இருக்கு!” என்றாள்.

“அப்படியா? எனக்கு சமையல்ல ரொம்ப ஆர்வம்மா… நிறைய டிஷ் பண்ணுவேன். இதெல்லாம் எங்க அம்மாகிட்ட கத்துக்கிட்டேன். கங்கா கூட சூப்பரா ஊறுகாய் போடுவா… அவளுக்கும் நிறைய வெரைட்டி தெரியும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய சமையல் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுவோம்,” எனத் தன் உலகத்தை மெய்மறந்து பேசினார்.

“அப்போ இங்கேயே இருந்தா நான் நல்லா சாப்பிட்டு குண்டாயிடுவேன் போல!” என அகிம்சா சிநேகமாக நகைக்க… “அய்யோ! இதெல்லாம் வீட்டுல யாரும் சாப்பிட மாட்டாங்கம்மா… நாங்க ட்ரையல் பாக்குறது மட்டும்தான்,” என்றவரின் முகம் சட்டென வாடியது.

“என்ன சொல்றீங்க?!” என அதிர்ச்சியுடன் கேட்டாள் அகிம்சா.

உஷா ராணி குரலைத் தாழ்த்தி, மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார்:

“இந்த வீட்டுக்குன்னு சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருக்குமா. குறிப்பா சாப்பாட்டு விஷயத்துல தனி புரோட்டோகால் இருக்கு… அதுக்கு ஏத்த மாதிரிதான் சமைக்கணும். அதனால, இந்த மாதிரி விஷயங்களெல்லாம் எங்களோட ஆசைக்காகவும் மனத்திருப்திக்காகவும் ரகசியமா செய்றது… வெளியில தெரியவே கூடாது.”

“இப்படி கூடவா இருப்பாங்க?” யோசனையுடன் கேட்ட அகிம்சா, தன் வெள்ளந்தியான மனதோடு தொடர்ந்தாள், “நாம நம்ம வீட்லதானே இருக்கோம்? நீங்க சொல்றது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு… எல்லாக் குடும்பத்துலயும் இப்படித்தான் இருக்குமா என்ன? எனக்குக் குடும்பங்களைப் பத்தி பெருசா ஒண்ணும் தெரியாது…”

உஷா ராணி ஒரு பெருமூச்சை வெளிவிட்டபடி பேசலானார்:

“இந்த வீட்டுக்கு நான் கல்யாணமாகி வந்ததிலிருந்து நிலைமை இப்படித்தான் இருக்கு. அவங்க போட்ட சில சட்டதிட்டங்களை நாம கண்டிப்பா பின்பற்றிதான் ஆகணும். இது எங்க மாமனாரும் மாமியாரும் கொண்டு வந்தது. அதை அப்படியே என் வீட்டுக்காரரும் தொடர்றாரு… அவரைப் பத்தி நான் உனக்குத் தனியா சொல்ல வேண்டியதே இல்லைன்னு நினைக்கிறேன். அதேபோலதான் சின்னவரும்… அதர்வன் அதுக்கும் மேல! அதனால இங்கே யார்கிட்டயும் எதிர்த்துப் பேச முடியாது. பார்க்க எல்லாரும் அமைதியா இருக்கிற மாதிரிதான் தெரியும்… ஆனா சமயம் கிடைச்சா, ஊசியால குத்துற மாதிரி நாசூக்கா பேசிட்டுப் போயிடுவாங்க.”

உஷா ராணி சூர்ய நாராயணன் பற்றிய தன் மனக்குமுறல்களை மெல்லப் பகிர்ந்துகொண்டிருக்கையிலேயே, கீழேயிருந்து குரல் கேட்டது:

“அம்மா! எங்க இருக்கீங்க? ரிஷி இங்க ரொம்பக் குறும்பு பண்றான்…” ஆர்த்தியின் குரல் மாடி வரை எட்டியது.

உஷா ராணி சற்றே பதற்றமடைந்து, “சரிம்மா, நான் கீழ போயிட்டு வரேன். நாளைக்கு உனக்கு வித்தியாசமா புதுசா ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வரேன்… நீ சாப்பிடுவியா?” என்று வாஞ்சையோடு அகிம்சாவின் தலையை வருடிவிட்டு, விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தார்.

– தொடரும்.

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (2)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!